Episode 139
அதிகாலை எழுந்ததுமே நேராக ருத்ரன் சென்றது என்னவோ நிலாவின் அறைக்கு தான். ஆனால் நிலா? இரவு அவன் சொல்லி விட்டு சென்றதை ஒப்புக்கு சப்பானியாக கூறுகிறான் என விட்டு விட்டாள். நன்றாக தூங்கி எழுந்தாள். மகனுடன் நேரம் செல்வழித்தாள்.
ஹே நிலா!! என வேகமாக அறை கதவை தட்டினான் ருத்ரன்.
ரவுத்ரனை துடைத்தபடி கதவை திறந்தவள். இப்போ எதுக்கு இப்படி கத்துரீங்க? என்னாச்சு என சாதாரண தொனியில் கேட்டாள் மகனை கொஞ்சி கொண்டே..
நான் கேட்ட விஷயம் என்னாச்சு? என கடுமையாக அவன் பார்வை இருந்தது.
ஹாங் என விழித்தாள் நிலா.
நிலா ஆ!! என கோபத்தில் கத்தி விட்டான். உடனே ரவுத்ரன் அழ ஆரம்பித்தான் ருத்ரனை பயத்துடன் பார்த்து கொண்டு..
அமைதியா பேச தெரியாதா? எதுக்கு கத்திட்டு இருக்கீங்க? என கோபமாக பார்த்தவள். இல்ல டா தங்கம்!! அம்மா டா!! புஜ்ஜி பாபு? ஏமாய்ந்தி? செப்பண்டி என நிலா கொஞ்சி சமாதானம் செய்தாள். அருகில் ருத்ரன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் மகனின் அழுகை நின்றது.
மகன் சமாதானம் ஆகி சிரிப்பை உதிர்த்த வேளையில், ருத்ரன் நிலாவின் அருகில் வந்து கையை கட்டி கொண்டு பார்த்தான்.
சொல்லு டி பதில்..
என்ன பதில்? என நிலா சாதாரணமாக கேட்க..
நான் உன்னை விரும்புறேன்னு சொன்னேன். நீ சொல்ற பதில்ல தான் இருக்கு எல்லாமே.. இல்லன்னா நான் இதழ கல்யாணம் பண்ணிக்க போறேன்.
நிலா புருவத்தை சுருக்கியபடி பார்த்தவள். விவாகரத்து எதுக்கு வாங்கினீங்க? கல்யாணம் பண்ணிக்க தானே!!
அப்போ அவ்ளோ தானா?
ம்ம் என நிலா இயல்பாக கூறி விட..
ருத்ரன் வேக மூச்சுடன் அவளை பார்த்தவன். சட்டென அமைதியாகி போனான். நிலா மகனுடன் விளையாடிக்கொண்டே ருத்ரனை பார்க்க, இந்த வாரத்துல எனக்கும் அவளுக்கும் கல்யாணம். அண்ட் கல்யாணத்துக்கு நீ கண்டிப்பா வரணும். எனக்கு உன் கையில இருக்கான் பாரு அவனை கொடுத்திடு. வயித்துல இருக்கவனை நீயே வச்சுக்கோ!! என சாதாரண தொனியில் கூறியவன் ஒரு சொடக்கு போட்டு விட்டு வேகமாக வெளியேறினான்.
நிலா தனது மகனை இறுக்கமாக அணைத்து கொண்டாள். ருத்ரனோ தீவிரமாக இருந்தான். இவ்வளவு அழுத்தக்காரியாக இருக்கிறவள் முன் நான் யாரென்று காட்ட வேண்டும் என தோன்றியது.
எப்போ கல்யாணம் பண்ணிக்க போற? கல்யாண விஷயத்துல நீ சீரியஸா இருக்கியா இல்லையா? என இதழ் வந்து நின்றாள் கோபமாக..
கல்யாணத்துக்கு நான் ரெடி நாளைக்கு மருதாணி போடுற நிகழ்ச்சி வச்சுக்கலாம். அப்புறம் மஞ்சள் நீராட்டு விழா உனக்கு பிரம்மாண்டமா வைக்கணும். என்னோட கல்யாணம் ஒப்புக்கு தானே நடந்தது. ஆனால் இந்த கல்யாணம் அப்படி இருக்க கூடாது. மூணு நாளில் நீ எனக்கு சொந்தமாகி இருக்கணும் என கையை பிடித்து கூறினான்.
ம்ம் ஓகே அப்போ வீட்ல மாமி கிட்டயும், எங்க வீட்ல டாடி கிட்டயும் சொல்லலாம் என இதழ் அனைவரையும் ஒரே இடத்தில் வர சொன்னாள்.
அனைவரும் வந்து என்ன என்பதை போல பார்க்க, நிலா வயிற்றை நீவியபடி வந்தாள்.
இதழ் அனைவரையும் பார்த்து, வர வெள்ளிக்கிழமை எனக்கும் தீராவுக்கும் கல்யாணம். எல்லா சண்டையும் மறந்து எல்லாரும் ஹெப்பியா இதுல கலந்துக்கணும் என கூறினாள். ருத்ரன் அதை ஆமோதிக்கும் விதமாக தோளில் கை போட்டு கொண்டவன் இதழின் நெற்றியில் முத்தமிட்டான்.
மிதுன், சத்ய தேவ், மகி, என அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்க, இதழ் அவனது கையை கோர்த்து கொண்டாள் பற்றுதலுடன்.
விவேகா சிரித்து கொண்டே பார்க்க, மகி ருத்ரனிடம், தீரா அத்தை சொல்றத யோசிச்சு பாரேன் உனக்கு ரெண்டு குழந்தைங்க என அவர் ஆரம்பிக்க..
என்னமா பேசிட்டு இருக்க? எனக்கு தீரா தான் வேணும். எனக்காக தான் விவாகரத்தே வாங்கி இருக்கான். அதை விட நிலா அந்த சர்வேஸ்வரன் பேமிலிக்கு மருமகள் ஆக போறா! Infact சொல்ல போனால் அவளுக்கு தீரா மேலே விருப்பமே இல்ல. என கூறினாள் இதழ்.
அதற்கும் மேல் யாரும் எதுவும் பேசவில்லை. ருத்ரன் மருந்துக்கும் கூட நிலாவின் பக்கம் பார்வையை திருப்பவில்லை.
இதழ் உற்சாகமாக தனது தந்தையின் பக்கம் சென்றவள். டாடி 100 பேர் என்னோட கல்யாணத்தில் இருந்தால் போதும். 100 பத்திரிகை போதும். இங்கேயே வீட்ல மேரேஜ் நடக்கணும் என கூறி கொண்டிருந்தாள் உற்சாகமாக..
நிலா தன்னை எதுவுமே பாதிக்கவில்லை என்பதை போல முக பாவனையை வைத்து கொண்டவள் அவளது அறைக்கு சென்று விட்டாள்.
சத்ய தேவ் ருத்ரனை அழைத்து சென்று, என்ன டா பண்ற? நிலாவை லவ் பண்றேன்னு சொன்ன? இப்போ என்னடா பண்ணிட்டு இருக்க?
இல்ல மாமா!! என்னால கெஞ்சிட்டு இருக்க முடியாது.
டேய் அவளும் உன்னை லவ் பண்றா டா!! இப்போ உங்க அக்காவ நான் லவ் பண்றேன்னு துகிலுக்கு 40 வயசு ஆனாலும் உங்க அக்காகாரி ஒத்துக்க மாட்டாள். இப்படி தான்டா எல்லாரோட வாழ்க்கையும் ஓடிட்டு இருக்கு. அவள் சொல்லலன்னா என்ன நீ விடு டா!! என சத்ய தேவ் எடுத்து கூற..
ருத்ரன் சத்ய தேவின் கைகளை பிடித்து, மாமா இதழ் இந்த கல்யாணத்துல தீவிரமா இருக்கா? நானும் இந்த கல்யாணத்தை பண்ணிக்க போறேன் மாமா. நான் பின்வாங்க மாட்டேன் என்று விட்டு நகர்ந்தான்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. மருதாணி விழா சிறப்பாக நடந்தது. நிதின் பிரகாஷ் குடும்பம். கார்த்திக் மைவிழி குடும்பம் மற்றும் சித்தார்த் கிருஷ்ணன் குடும்பம் என அனைவரும் வந்திருந்தார்கள்.
இதழ் இதிகாச புராணங்களில் வரும் சகுந்தலையை போல இருந்தாள். ருத்ரனின் அருகில்..
சர்வேஸ்வரன்..?
நிலா…?
தொடரும்..