அன்பானவன் அடங்காதவன் அசாராதவன்

by Pradhanya kuzhali
213 views

EPI 150

மகி ஆனந்த புன்னகையுடன் விவேகாவை பார்க்க, எனக்கே தெரியாது. அப்போ இஷ்டப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாலா? என முனுமுணுத்தவர். இன்பாவின் பக்கம் திரும்பி, உன் பொண்ணு லவ் மேட்டர் தெரியுமா உனக்கு? என கேட்டார். 

ருத்ரன் சிரித்து கொண்டே, அவருக்கு தெரியாது மா. அவரோட முகத்த பாருங்க எப்படி உறஞ்சு போன மாதிரி இருக்கார்னு. என்றான். 

இன்பா கண்ணக்குழி தெரிய சிரித்தவர். அதை என் daughter in law சொல்லட்டுமே என நிலாவின் பக்கம் திரும்பி, நீ சொல்லு நிலா? ருத்ரன் அவனோட மீனாட்சி லவ்வ அவங்க அம்மா கிட்ட ஷேர் பண்ண போல, ரிதம் என்கிட்ட ஷேர் பண்ணல. இது எனக்கு பெரிய வருத்தமா இருக்கு. என கூறினார். 

நிலாவின் முகத்தில் சட்டென பொறாமை பரவியது. இன்பா இவ்வளவு நேரமும் சொல்லி கொண்டிருப்பது தங்க மீனாட்சி கண்மணி பற்றி.. 

போச்சு டா!! என ருத்ரன் நிலாவின் பக்கம் செல்ல, இன்பா சின்ன சிரிப்புடன் நகர்ந்தார். 

நிலா லவ் யூ!! என ருத்ரன் அவளின் பின்னால் சென்றான். 

ஹே வீட்டுக்கு போலாம் என நிதின் ஹரிணியின் பின்னால் கெஞ்சும் தொனியில் நின்று கொண்டிருக்க, இப்போதைக்கு வர முடியாது நிதின். நான் இங்கே தான் இருப்பேன் என விடாப்பிடியாக மருத்து விட்டு இதழின் அறைக்குள் நுழைந்து கொண்டாள் 

நிதின் நெற்றியை நீவியப்படி நின்றிருந்தான். ரிதம் குழந்தைக்கு இரண்டுக்கும் பால் புகட்டி விட்டு ஒருவனை தூக்கி கொண்டு வெளியே வந்தாள். 

மிதுன் அமர்ந்திருக்க, அவனுக்கு அருகில் சென்று அமர்ந்தாள். சட்டென மிதுன் எழுந்தான். 

இப்போ எங்கே போற? உன்கிட்ட பேச தானே வந்து உட்கார்ந்தேன். இப்போ என்னாச்சு? கிளம்பி போற? என கையை பிடித்து அமர வைத்தாள். 

சொல்லு என்ன விசயம்? என மிதுன் வெகு இயல்பாக கேட்டான். 

ஒரு பெரு மூச்சை விட்ட ரிதம், நீயும் உன்னோட அண்ணன் மாதிரியே என்னை டார்ச்சர் பண்ணாத டா மிதுனு என சலித்து கொண்டே கூறினாள். 

உங்க ரெண்டு பேருக்கு நடுவில் நான் வரலையே என மிதுன்  பிடிக்கொடுக்காமல் பேசினான். 

ரிதம் தனது மகனை தோல் மேல் போட்டு தட்டியவள். எல்லார் முன்னாடியும் லவ்வை சொன்னா ஒத்துக்க மாட்டான்னு அவனை தேடி போய் நேரா கல்யாணம் பண்ணிக்க கேட்டேன். என் மேலே அப்படி ஒரு பீலிங் இல்லவே இல்லன்னு சொல்லிட்டா. என்னை எனக்காக கட்டிக்கலையாம். மகி மாமி கேட்டதுக்காக மட்டும் தான் கட்டிக்கிட்டானாம். 

மிதுன் அவளை திரும்பி பார்த்தான். 

இது ஒரு சிங்கிள் விசயம் தான். இப்போ பாரு? ஆக்சிடன்ட்ல என்னைய மறந்து போய் உட்கார்ந்து இருக்கான். நான் என்ன பண்ணட்டும்? என சோகமாக பார்த்தவள். நான் என்ன பண்ணட்டும் எனக்கு அவனை பார்த்தால் உன்னை பார்க்கிற போல பீலிங் இல்ல மித்து பையா? இதுக்கு எதுக்கு நீ கோபமா இருக்க? என கேட்டாள். 

எனக்கு என்ன கோபம்? அப்படியெல்லாம் ஒன்னுமே இல்ல.. என்றான் மிதுன் 

இல்ல நீ பொய் சொல்ற! என ரிதம் அவனை முறைத்து பார்த்தாள். 

கையில் இருக்கும் சாகியை வாங்கி கொண்ட மிதுன் புன்னகையுடன், நான் எதுக்கு உன்கிட்ட பொய் சொல்லணும். ஆனால் சின்ன வருத்தம் தான். அவன் மேலே உனக்கு எப்படி லவ் வந்ததுன்னு தான் தெரியல.. 

ரிதம் அடக்கப்பட்ட சிரிப்புடன், வீகன் ஜீவகாருண்யம் அப்படி இப்படின்னு சொல்லி ரொம்ப நல்லவன் போல ஒரு ரீல் ஓட்டினான். நான் may be அதுல ஸ்லிப் ஆகி இருக்கலாம். 

சின்ன வயசுல இருந்து லவ்ன்னு சொன்ன? இது எப்படி? 

அது ஹரிணி அப்டின்னு ஒருத்தி இருக்காளே அவள் கூட அவன் இருக்குறது எனக்கு பிடிக்கல.. லவ் பண்ணிட்டேன். 

மிதுன் சிரிப்புடன் அவளை பார்த்தான். சோர்வாக அவன் தோளில் தலை சாய்த்து கொண்டவள் இப்போ எப்படி இவனை பழைய நினைவுகளை ஞாபகத்துக்கு கொண்டு வரது? என கேட்டாள் ரிதம். 

இனி அவனுக்கு ஞாபகம் வந்தால் என்ன வரலன்னா என்ன? இன்னும் மூணு ரேஷன் கார்டு உருவாக்க மூணு குட்டி போட்டுட்டானே என்றான் மிதுன். 

என்ன மிதுன்? என அவள் காதை பிடித்து திருகினாள். 

ஹே நான் என்னடி தப்பா சொன்னேன்? இப்போ நியாபக மறதியில் வேற இருக்கான். அதை நியாபக படுத்த மறுபடியும் என அவன் பேச வர, டேய் உன்னை கொன்னுடுவேன். என முடியை பிடித்து ஆட்டினாள் ரிதம். 

அதே நேரம்டாடி!! என சத்ய தேவ்வின் அறையில் இருந்து சத்தம் கேட்டது. சூர்ய தேவ் அரக்க பறக்க அறைக்குள் ஓடினார். 

ரிதம் எழுந்து செல்ல, அட நீ இங்கேயே இரு. என்னன்னு அவர் வந்து சொல்லுவார்  என்று கூறிவிட்டு பார்த்தான் மிதுன். 

அரக்க பறக்க வெளியே வந்தார் சூர்யா. என்னாச்சு? என இன்பா கேட்க, அவன் ராமையும் கீதாவையும் பார்க்கணும்னு சொல்றான் டா!! என்றார் சூர்யா. 

மிதுன் ரிதமை சிரித்து கொண்டு பார்க்க, அவ்ளோ தானே மாமா நான் இப்போவே அம்மாவையும் அப்பாவையும் வர சொல்றேன் என்ற ஹரிணி புன்னகையுடன் போன் செய்து அழைத்தாள். 

இன்பா தன் மகளை பெருமூச்சுடன் பார்த்தார். ரிதம் கோபத்துடன் நடக்கும் விசயங்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள். 

ராம் கீதா இருவரும் வந்து விட, ராம் தனது பேத்தி ஹாசினியை தூக்கி கொஞ்சி கொண்டிருக்க, ஹரிணி கீதாவை அழைத்து கொண்டு சத்ய தேவ் அறைக்கு செல்ல அவளை தொடர்ந்து, நிதின், ரிதம், ருத்ரன், மிதுன் என நால்வரும் பின் தொடர்ந்தார்கள். 

சக்தி!! என்னை பார்க்கணும்னு சொன்னியா? என கீதா கேட்டு கொண்டே சென்றாள். 

கீதா அத்தை!! என உற்சாகமாக எழுந்தவன். அவரின் கைகளை பிடித்து கொண்டான். 

கீதா அத்தை உங்களை பார்த்து ரொம்ப நாள் ஆன ஃபீல்.. ஹரிணியை நான் ரொம்ப மிஸ் பண்றேன். அவள் எங்கே? உங்க கையால நீங்க போடுற சாதாரண சுடு தண்ணி கூட divine என்றான். 

போச்சு!! என ருத்ரன், மிதுன் வாயை பொத்தி கொண்டு பார்த்தார்கள். 

வல்லவன் படத்தில் கீதா கீதா என சிம்பு அழைப்பதை போல கீதா அத்தை கீதா அத்தை என சத்ய தேவ் அழைத்தான். 

வேகமாக அருகில் சென்ற நிதின் அவனை பிரித்து விட்டு, அத்தை நீங்க கீழே போங்க இனி இந்த பக்கமே வர கூடாது. என உத்தரவிட்டான். 

சரிங்க மாப்ளை!! என கீதா புரியாமல் திரும்பி நடக்க, சத்ய தேவோ, அத்தை ஹரிணி எங்கே? என்றவன் பார்வையோ நிதின் பிரகாஷின் மீது விழுந்து, இது யாரு? அங்கே ரெண்டு பேர் இருக்காங்களே? அது யாரு? அந்த பொண்ணு அவரோட wife ஆ? என கேட்டான். 

Wife ஆவா? கிழிஞ்சுது கிருஷ்ணகிரி.. இல்லல்ல கிழிஞ்சுது கிருஷ்ணராஜபுரம். என்றான் மிதுன். 

கீதா வித்தியாசமாக பார்க்க, ஹரிணி புன்னகையுடன் சத்ய தேவ் நான் தான்டா ஹரிணி. என்றாள். 

இதுக்கு மேலே தாங்காது ரிதம். நீ உண்மைய உடை டி! எதுவும் பண்ணு டி! என மிதுன் கூற.. 

ரிதம் வேகமாக அவன் முன்னால் சென்றவள். கீதா ஆன்டி நீங்க கிளம்புங்க. என்று விட்டு சத்ய தேவை பார்த்தாள். 

மேம் என்ன பண்றீங்க? உங்க ஹஸ்பன்ட் என்னை முறைச்சு பார்க்கிறார். என மிதுனை பார்த்தான் சக்தி. 

தீரா நீ துகில தூக்கிட்டு வா!! மிதுன் நீ ஆதி சாகிய தூக்கிட்டு வா என்று ரிதம் எதிரில் இருக்கும் சத்ய தேவை முறைத்து பார்த்தாள். 

ரிதம் என்ன பண்ணிட்டு இருக்க நீ? அவனுக்கு அதிர்ச்சி கொடுக்க கூடாது. உனக்கு புரியுதா இல்லையா? என்று ஹரிணி முன்னால் வந்து தடுத்தாள். 

எனக்கு தெரியும் உன்னோட வேலை dash பாரு டி என்றாள் ரிதம். 

சக்தி அவர்கள் இருவரையும் புரியாமல் பார்த்து கொண்டிருக்க, மூன்று சில் வண்டுகளையும் தூக்கி வந்தார்கள் ருத்ரன், மிதுன் இருவரும். 

நிதின் ஓரிடத்தில் நின்று கொண்டான். ரிதம் என்னமா பண்ற? என இன்ப ராகவன் கேட்டு கொண்டே வர, சூர்யாவும் வந்தார். 

இதுக்கு மேலே என்னால பொறுக்க முடியாது டாடி என்றாள் ரிதம். 

அங்கில் உங்களுக்கு பொண்ணு இருக்கா? என சத்ய தேவ் கேட்க.. 

டேய் கொன்னுடுவேன் உன்னை. நான் உன்னோட பொண்டாட்டி!! என் பேரு ரிதம். இதோ உன்னோட மூணு பசங்க. அவன் பேர் துகிலன், தேவ் ஆதித்யா, தேவ் சாஹித்யா. மூணு பசங்க டா உனக்கு? என சட்டை காலரை பற்றியிருந்தாள் ரிதம். 

ரிதம்!! கண்ணு!! என சூர்யா அழைக்க.. கண்களில் நீர் கோர்க்க தனது மாமனாரை பார்த்தவள். என்ன மாமா? இவன் கிட்ட கெஞ்ச சொல்றீங்களா? கொஞ்ச சொல்றீங்களா? அவனுக்கு எல்லாமே மறந்து போனாலும் எனக்கு கவலை இல்லை என கோபமாக முன்னால் இருப்பவனை பார்த்தாள். 

மூன்று மகன்களும் முட்டை கண்களை உருட்டி கொண்டு பார்க்க, துகில் வாயில் வழிசல் ஒழுக பார்த்தான். 

அப்பாடி என்றிருந்தது நிதினுக்கு. 

டேய் பேசு டா? என ரிதம் அதட்ட… சத்ய தேவ்..? 

தொடரும்..

You may also like

Leave a Comment