EPI 155
AAA -155
அந்த கடிதத்தை படிக்கும் போது அவனே நேரடியாக அவளின் முன்னால் அவன் குரல் மென்மையாக, ஆனால் உறுதியாக ஒலிப்பது போல ஒரு உணர்வ. அவளால் நம்ப முடியவில்லை. இது அவன்தான் பேசி இருக்கிறானா? இவ்வளவு நாட்களாகப் பேசாத காதல் மொழியா இது?
மகனை தோளில் தட்டி கொடுத்து கொண்டு வெளியே வந்தவள். அங்கே அமர்ந்திருக்கும் சத்ய தேவை பார்த்தாள்.
இரு புருவங்களை தூக்கியபடி என்ன என கேட்டான். வேகமாக அவனது அருகில் நெருங்கியவள். அந்த லாஸ்ட் லைன் அது எப்படி தோணுச்சு? இதையெல்லாம் சொந்தமா எழுதினியா? இல்ல AI software யூஸ் பண்ணி எழுதினயா? என கேட்டாள் ரிதம்.
இதுல ஒருத்தன் பிட்டு அடிச்சானா? அவன் லவ் பண்றதுக்கு தகுதியே இல்லாதவன்னு அர்த்தம். லவ் லெட்டர் மத்தவங்களுக்கு கிறுக்கலா தெரியலாம். அது ஒரு art என்றவன். உங்களை நினைச்சதும் எனக்கு தோன்றின முதல் லைன் தான் இந்த லெட்டரோட கடைசி லைன்ங்க என்றான்.
ப்பா இவன் எது பேசினாலும் கவிதை மாதிரி இருக்கே! இவனோட வார்த்தை இதயத்தை மீட்டுது என கீழ் உதட்டை அழுத்தி கடித்து கொண்டு ஈர படுத்தினாள்.
சத்ய தேவ் அருகில் நெருங்கினான். அவளும் இந்த தருணத்துக்காக காத்து கொண்டிருந்தாள். இஷ்டப்பட்டு இந்த நான்கு மாதத்தில் ஒரு உம்மா கூட அவன் கொடுக்க வில்லையே? அதுவே பெரிய சோகம் அவளுக்கு..
இருவரும் மிகவும் அருகருகே அமர்ந்திருந்தார்கள். சத்ய தேவ்வின் கையில் தேவ் ஆதித்யா. ரிதமின் கையில் தேவ் சாகித்யா அவனது கண்களில் காதல் மிகுத்து பெய்து கொண்டிருந்தது. அவளது கண்களில் இன்னும் திகட்ட திகட்ட சிலாகிக்க வேண்டும் என்ற ஏக்கம் தெரிந்தது.
இருவரும் மெல்ல நெருங்கினார்கள்.. ஒற்றை முத்தத்துக்கு.. பெண்மை கண்கள் அங்கும் இங்கும் அலைபாய, ஆணவன் அவளின் கன்னம் பற்றினான். ஒற்றை தோலில் இறுக்கமாக சத்ய தேவ் தனது மகனை பற்றி கொண்டு இன்னொரு கையில் ரிதமின் கன்னத்தை பற்றினான். உதடுகள் நெருங்கியது. உள்ளமும் நெருங்கியது. காமமே இல்லாத காதல் முத்தம் ஒற்றி எடுத்தான்.
என்ன ஒன்னு தர என்னும் ரீதியில் ரிதம் பார்க்க, மகனை தட்டி கொண்டு அடக்கப்பட்ட சிரிப்புடன் சத்ய தேவ் திரும்பி கொள்ள, அவளின் சட்டையை பற்றி இன்னொரு முத்தம் கொடுத்தாள் ரிதம். ஆழ முத்தம்..
அதன் பின் கண்ணாமூச்சி காதல் ஏக்க பெரு மூச்சுடன் மாறி மாறி இருவரும் பார்த்து கொண்டார்கள். இருவருக்கும் நடுவில் காதல் மவுனம் கரைஇல் பிரித்து வைத்திருந்தது. ஆதி, சாகி இருவருக்கும் நான்கு மாதம் முடிந்து ஐந்தாவது மாதம் தொடங்கி இருந்தது.
சத்ய தேவ் மகன்கள் இருவரையும் பெற்றோர் கையில் திணித்து விட்டு அவளை அழைத்து கொண்டு புறப்பட்டான். அவள் ஆச்சரியம் தாங்காமல் பேசாமல் நிற்க, அவளைக் கட்டாயப்படுத்தி விமான நிலையத்திற்குக் கூட்டிச் சென்றான்.
மியாமி! சூரியனும், கடலும், இசையும் நிறைந்த அந்தப் பட்டணம்.
சத்யதேவ், அவளை ஒரு பைக் ஷோரூமிற்கு அழைத்துச் சென்றான். அங்கே பளபளக்கும் ஒரு ஹார்லி டேவிட்சன் பைக் நின்றிருந்தது.
சத்ய தேவ் இதெல்லாம் என ரிதம் ஆரம்பிக்க..
“நீ இதை accept பண்ணிக்கணும். இது என்னோட பைத்தியக்காரத்தனம்,” என்றவன், ஒரு கறுப்பு லெதர் ஜாக்கெட் மற்றும் ஹெல்மெட்டைக் கொடுத்தான்.
ரிதம் தயங்கியபடி நிற்க, “இனிமே நீ என் பொண்டாட்டி இல்ல… என் காதலி. உன்னோட முதல் டேட் ஆரம்பிக்குது.”
அவளுக்குத் தயக்கம். “சத்யதேவ், நான்… எனக்கு பைக் ஓட்டத் தெரியாது.”
“நீ தான் ஓட்டனும். என்னோட love குயின் ஓட்டுவா. நான் உனக்கு பின்னாடி, உன் இடுப்ப இறுக்கிப் பிடிச்சு, என் காதலை வெளிப்படுத்தணும். கம் ஆன்!” என்று கண்ணைச் சிமிட்டினான்.
ரிதமின் முகம் சிவந்தது. அவள் மனதுக்குள் காதல் என்னும் வார்த்தையே அவளை கூச செய்தது. இது தீராத ஆசை சிறு வயதில் இருந்து அவள் தவம் கிடந்த ஒரு ஆசை. இதை ஆசை என்று சொல்லி விட முடியாது. பேராசை. இத்தனை வருடங்களுக்கு பிறகு அணுஅணுவாக தான் ரசித்து காதலித்த ஒருவன் இன்று தன்னை அணுஅணுவாக காதலிக்க போகிறான்.
அவன் பைக்கின் பின்னால் ஏறினான். ஹெல்மெட் அவளது முகத்தை மூடிக்கொண்டது. “சத்யதேவ் அவளிடம், கொஞ்சம் மெதுவா ஓட்டுங்க,” என்றான் மெல்லிய குரலில்.
“விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!” எனப் பெரிய சத்தத்துடன் பைக் சாலைகளில் பறந்தது.
என்னடி பண்ற? என சத்ய தேவ் அவளின் இடுப்பைப் பிடித்து இறுக்கிக்கொண்டான். பைக்கின் வேகம் கூடக்கூட, அவளது இதயம் அவனது உடலுடன் ஒட்டியது. கடலோரச் சாலையின் குளிர் காற்று முகத்தில் அடிக்க, ரிதமுக்கு ஒருவிதப் பரவசம் உண்டானது.
அவன் இடுப்பைப் பற்றியிருந்த கைகள், மெல்ல மெல்ல அவளது வயிற்றைச் சுற்றிக்கொண்டன. அவனுக்கு பதற்றம் போய், மகிழ்ச்சியில் மெலிதாகச் சிரித்தான்.
சட்டென பைக்கை நிறுத்தினாள்.
என்னாச்சு?
இப்போ உன்னோட turn என இறங்கி அவனுக்கு பின்னால் ஏறிக்கொண்டாள்.
போலாமா?
ம்ம்!!
“சத்யதேவ்! இது சூப்பரா இருக்கு டா!” என்று கத்தினாள்.
அவன் அவளை பின்னால் உட்கார வைத்து, Ocean Drive-ஐ கிழித்துக் கொண்டு பைக்கை விரட்டினான்.
காற்று அவள் முடியைப் பறக்க விட்டது.
சூரிய உதயம் கடலைத் தொடும் போது அவன் பைகை நிறுத்தினான். அதன் பின் மீண்டும் அவர்களின் பயணம் ஆரம்பமானது. அவன் பைக்கின் வேகத்தைக் குறைத்து, “இதைவிடப் இன்னும் நிறைய experiance உனக்கு வெயிட் பண்ணுது டி, ரிதம். உன் கழுத்தில் நான் இன்னொரு முறை நான் காத்துகிட்டு இருக்கேன்,” என்றான் மெல்லிய குரலில்.
ரிதமுக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவளுடைய நெற்றியில் அவனது ஹெல்மெட் லேசாக உரச, சத்யதேவின் அருகில், அந்த பைக்கின் மீது, அவளது காதல் அவளுக்குள்ளே பொங்கத் தொடங்கியது. அவன் மீது இருந்த மரியாதை எப்போதோ ஆழமான காதலாக மாறியிருப்பதை இப்போது உணர்ந்தாள்.
மியாமி பயணம் இரண்டு நாட்களில் முடிந்தது. அதற்கு காரணம் மூன்று குட்டிகளை வீட்டில் விட்டு வந்திருக்கிறார்கள்.
அவன் அவளது காதலன். அவள் அவனது காதலி. ஒரு வார்த்தையில் சொல்ல முடியாத காதலை, இருவரும் மெளனத்திலும், சிறு சைகையிலும் வெளிப்படுத்தினர்.
இத்தோட நிறுத்திக்கலாம். எனக்கு அவனுங்களை பார்க்காம இருக்க முடியல சத்ய தேவ் என ரிதம் கூற.. இது அவர்களுக்கான நேரம் தான் நான் இல்லன்னு சொல்லலையே! பட் என்னோட லவ்வ எக்ஸ்பிரஸ் பண்ண இதை விட பெஸ்ட் ஆன நேரம் அமையாது என்றான் சத்ய தேவ்.
பிளீஸ் டா சக்தி!! வீட்டுக்கு போலாம் எனக்கு என்னால முடியல என உருக்கமாக பேசினாள் ரிதம்.
ஓகே போலாம் போலாம் என வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
****
எப்போ போலாம்? எப்போ போலாம்? என பின்னாலேயே சுற்றி கொண்டிருந்தான் சத்ய தேவ்.
டேய் போதும் இதெல்லாம் ரொம்ப அசட்டு தனமாக இருக்கு என ரிதம் நழுவுவதிலேயே குறியாக இருந்தாள்.
நீ வர்ற அவ்ளோ தான் என ஒரு வாரத்தில் இழுத்து கொண்டு சென்று விட்டான்.
என்னங்க பண்றீங்க? அவன் மொசன் போயிட்டான் என நிலா கோபத்துடன் பார்க்க..
ஹே இல்ல இல்லடி இவன் அழுவதை பார்த்து பசின்னு நினைச்சுட்டேன் என்ற ருத்ரனோ ஆதிக்கு வாயில் பால் புட்டியை சொருகி விட்டு, சாகியை தூக்கி கொண்டு 2 க்ளீன் செய்ய சென்றான்.
நிலா தன் இரண்டாவது மகன் இன்ப வேதவனை கொஞ்சி கொண்டு இருந்தவள். ரவுத்ரனின் நினைவு வர வீட்டுக்கு அழைத்து அவனை வீடியோ காலில் பேசினாள்.
ஆம் துகிலனை இன்பா பார்த்து கொள்கிறார். ருத்ரன் தான் தனது இரண்டு மருமகன்களையும் கூடவே, தன் மகன் இன்ப வேதவனையும் பார்த்து கொள்கிறான்.
சத்ய தேவ் – ரிதம் ரெண்டு பேரும் காதல் போதையில் இருக்காங்களே! இது அவங்களுக்கான நேரம் அதனால் மைத்துனனின் கடமையாக பார்க்காமல் பாசத்துடன் செய்து கொண்டிருக்கிறான்.
தொடரும்..