Episode-55
நிலா அவர்களை வழி அனுப்பி வைத்து விட்டு வீட்டின் கதவை தாழ் போட்டவள் நேராக அவளின் புதிய அறைக்கு வர, அங்கே ருத்ரன் படுக்கையில் படுத்த படி போன் கொண்டி கொண்டிருந்தான்.
நிலா சோர்வுடன் அவனை பார்த்தாள். வேதனை மென் மேலும் அதிகமானதே தவிர ஒரு மகிழ்ச்சியும் இல்லை அவள் வாழ்வில். விருப்பப் பட்டவனை தான் திருமணம் செய்து கொண்டாள் விருப்பமில்லாமல்..
கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்கள் வேறு ஆயிரம் mood swings கொடுக்கிறது அதில் இவன் வேறு படுத்தி எடுக்கிறான். எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். எனோ மிகவும் பசிப்பது போல ஒரு உணர்வு வேகமாக கிச்சன் சென்றாள்.
ஆட்டு கால் இப்பொழுது பிடிக்கவில்லை. தோசை கல்லை அடுப்பில் வைத்து சுட சுட தோசை ஊற்றினாள். கொஞ்சம் மிளகாய் தூள் அதனுடன் கமகமக்கும் கடலை எண்ணெய் உப்பு சேர்த்து சமையல் திண்டில் சாய்ந்து கொண்டு சாப்பிட்டு கொண்டிருந்தாள். தன் விரக்தியான வாழ்க்கையை எண்ணி.
எங்கே ஆளையே காணோம் என ருத்ரன் வெளியே வந்தான். கிச்சனில் அவள் நின்றிருப்பது தெரிய..
என்ன பண்ற? என கேட்டு கொண்டே வந்தான்.
“பசிச்சது அதான்” என கூறினாள். அவன் முகத்தை பார்க்க விருப்பம் இல்லை..
அது தான் குழம்பு இருக்கு, வறுவல், சாதம் இட்லி எல்லாமே என்னோட டாடி செஞ்சு வச்சிருக்கார். நீ எதுக்கு அதை சாப்பிட்டுட்டு இருக்க?
எனக்கு நாக்குக்கு இது தான் பிடிச்சிருக்கு. காலையில் இருந்து ரெண்டு முறை கறி குழம்பு சாப்பிட்டுட்டென். எனக்கு அது வேணாம். என ஒன் சைட் தோசையை தட்டில் போட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
என்ன அவ்ளோ டேஸ்டா இருக்கா? இங்கே எனக்கு கொடு!! என அருகில் நெருங்கினான்.
தட்டை நீட்டினாள்.
ஹே ஊட்டி விட்ரீ!! இதையெல்லாம் உனக்கு சொல்லனுமா? என அதட்டல் குரல்..
கொஞ்சம் பிட்டு ஊட்டி விட்டாள் நிலா. ருத்ரன் அவளின் முகத்தை பார்த்து கொண்டே இரண்டு வாய் சாப்பிட்டான்.
இன்னும் வேணுமா? என கல்லில் ஊற்ற சென்றாள். போதும் ஆனால் நீ இங்கே சாப்பிட வேணாம் வா அங்கே டைனிங் டேபில் என தோல் மேல் கைகளை போட்டு அழைத்து சென்றான்.
நான் சாப்பிட்டு முடிச்சிட்டேன். அண்ட் தூங்கறதுக்கு முன்னாடி வாக்கிங் போகனும் நான் வெளியே போறேன் என நிலா அவனது கைகளில் இருந்து விடுவித்து கொண்டு செல்ல..
ருத்ரன் அவளை விட்டு கிச்சன் சென்றான். நிலா தன் வாழ்க்கையை எண்ணி அழுது கொண்டே முன் பக்கம் நடை போட்டாள். இதை குடிச்சுகிட்டே நட என அவளின் முன் நீட்டினான்.
என்ன இது?
இது மாதுளை ஜுஸ் உனக்கு ஹெல்தி! என நீட்டினான்.
நிலா அவனை வெற்று பார்வை பார்த்து விட்டு வாங்கி கொண்டவள். வீட்டுக்கு அழைத்தாள். பொம்மாயி எப்டி இருக்க? என spr ன் உற்சாகமான குரல்..
“நான் நல்லாருக்கேன் நான்னா! வதினா எப்டி இருக்காங்க?”
மாடி படி ஏறி இறங்க சொல்லிருக்காங்க நிதின் நடக்க வச்சிட்டு இருக்கான். நாங்க எல்லாரும் ஹாஸ்பிடல்ல இருக்கோம்.
நானும் வரவா?
வேணாம் தங்கம். இந்த மாதிரி நேரத்தில் நீ அலைய வேணாம் என இரண்டு வார்த்தைகள் பேசி விட்டு போனை வைத்தார் spr.
அங்கிருக்கும் கல் மேடையில் அமர்ந்து கொண்டு அவள் நடப்பதை வேடிக்கை பார்த்தான்.
என் குழந்தைய சுமந்துட்டு இருக்க வேண்டியவ! எவனோ ஒருத்தன் கூட.. இப்போ அவள் வயித்துல வேற ஒருத்தன் குழந்தை.. என நினைக்க நினைக்க உள்ளுக்குள் ஏமாற்றமும் வேதனையும் அதிகமானது.
நிலா வெறித்து நிலாவை பார்த்தாள். அழகாக பிரகாசித்து கொண்டிருந்தது. நிலா!! என்ன தான் பிரகாசித்தாலும் ஒரு பக்கம் மட்டும் தானே நிலவு வெளிச்சம் தரும். இன்னொரு பக்கம் கருமை படர்ந்த இருட்டு. அதே போல தான் இங்கேயும் ஒருத்தி.. ஒரு பெரு மூச்சை விட்டவள். திரும்பி வீட்டை நோக்கினாள்.
ருத்ரன் அவளின் பின்னால் வந்து உணவுகள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி நேராக ரிதம் வளர்த்து இப்பொழுது நான்கு ஐந்து குட்டிகளுடன் பெரிய குடும்பமாக இருக்கும் நாய் குடும்பத்துக்கு உணவுகளை போட்டான். அனைத்து கூட்டமும் நன்றாக சாப்பிட்டது. அவர்களுக்கு தண்ணீர் வைத்து விட்டு பின் பக்கம் பூட்டி விட்டு முன்னால் வந்தான்.
நிலா கொஞ்சம் தண்ணீரை குடித்தவள். பாட்டிலில் தண்ணீரை நிரப்பி கொண்டு டம்லரை கழுவி வைத்து விட்டு திரும்ப..
ருத்ரனின் தேகம் உரசியது அவள் மேல். என்ன பண்றீங்க?
“ப்ச் இப்படி கேட்காதன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன். என்னடி கொழுப்பா?”
“உங்க கிட்ட ஒரு விசயம் சொல்லணும் அதை பேசிட்டு அப்புறம் இதெல்லாம்” என நிலா கூற..
“என்ன அப்படியே சொல்லு!”
நான் எனக்கு என்றவள் வயிற்றை தடவி கொண்டு… பாப்பாவுக்கு எதுவும் ஆக கூடாது.
நான் என்ன பண்ணேன்?
இல்ல நீங்க என் கிட்ட ரொம்ப போர்சா நடந்துக்குறீங்க!!
ருத்ரன் விழிகள் சிவக்க அவளை விட்டு நகர.. சொல்றத முழுசா கேளுங்க.. நான் இப்போ இருக்க நிலமைக்கு நம்ம ரெண்டு பேரும் ரிளேசன் ஷிப்ல இருக்கிறது அவ்ளோ சரி இல்லை. யூட்ரஸ் அங்கே தான் இருக்கு. உங்களோட ஃபோர்ஸ் அதிகமா இருக்கு. உங்களை பண்ண வேணாம்னு சொல்லல. கொஞ்சம் நாள் போகட்டுமே!! மாமி என்னை கீழே அனுப்ப ரீசனே இது தான். இந்த மாதிரி நேரத்தில் கொஞ்சம் கேர்டுள் உங்களை ஹர்ட் பண்ண சொல்லல!! நீங்க எனக்கு வாழ்க்கை பிச்சை போட்டிருக்கீங்க என்றாள் நிலா.
ருத்ரன் எதுவும் பேசாமல் நேராக அவனது அறைக்கு சென்றான்.
நிலா அவனை பெரிதாக கண்டு கொள்ள வில்லை நேராக அவளது அறைக்கு வந்தவள் துக்கம் தாளாமல் அழுதாள். அப்படியே படுத்து கொண்டவள் எப்படி தூங்கினாள். இரவு ஒரு மணிக்கு முட்டி கொண்டு வந்தது இயற்கை அழைப்பு. மெல்ல கண் விழித்து பார்த்தவள் முகம் அதிர்ச்சியில் உறைந்தது.
அவளின் மார்பில் முட்டி கொண்டு இருக்கிறான் கன்று குட்டி மடியில் முட்டுவது போல.. இந்த உணர்வு கூட தெரியாமல் உறங்கி கொண்டிருந்திருக்கிறேனே!! என உள்ளுக்குள் தன்னை தானே அசிங்கமாக உணர்ந்தாள் நிலா.
எட்சில் சத்தம் வேறு அதிகமாக கேட்டது.
வெட்கமும் வேதனையும் ஒன்று சேர்ந்தது.
என்னங்க என அழைத்தாள்.
ம்ம் என தலையை அண்ணார்ந்து பார்த்தான்.
எனக்கு ரெஸ்ட் ரூம் போகனும் என அவள் கூற..
சீக்கிரம் வா! என விடுவித்தான். நிலா வேகமாக உடையை சரி செய்து கொண்டு சென்றாள்.
இன்னும் என்ன பண்ற?
வரேன்!! என நிலா வெளியே வந்தாள்.
நாளையில் இருந்து சாரி கட்டாத! வேற ட்ரெஸ் போடு!
நிலா ஒரு முடிவுடன் நான் அவ்ளோ தூரம் சொல்றேன் நீங்க மறுபடியும்..
அதை தான பண்ண கூடாதுன்னு சொன்ன? இதை பண்ணுனா கூட உன்னோட காதல் ஓவிய குழந்தைக்கு எதுவும் ஆகுமா என்ன?
நிலா கண்களில் நீர் கோர்த்து கொள்ள அவனை பார்த்தாள்.
அந்த குழந்தை மேலே எனக்கும் அக்கறை இருக்கு டி! உன்னோட இடுப்புக்கு கீழே இனி எதுவும் பண்ண மாட்டேன். நீ என்னை நம்பலாம். உன்னோட குழந்தை உனக்கு மட்டும் சொந்தம் இல்ல. எனக்கும் தான். ஏன்னா நீ என்னோட பொண்டாட்டி. என்றான் தீர்க்கமாக..
நிலா எதுவும் பேசாமல் நிற்க.. பக்கத்தில் வா என அவளையே பார்த்தான். வதனத்துக்கு வாய் இருந்தால் கத்தி கூச்சல் போடும். அந்த அளவுக்கு அட்டூலியம் செய்து கொண்டிருந்தான்.
மெதுவா!! என நிலா உதட்டை கடித்து கொண்டாள்.
தலையை கோதி விடு என அவளின் கையை இழுத்து தலைக்கு வைத்தான். வருடி விட்டாள். அவன் அவளின் மார்பில்.. நிலாவின் தூக்கம் அதன் பின் போனது வாய் மட்டும் வேலையை செய்து கொண்டிருந்தது. இப்படியே விடிய விடிய படுத்தி எடுத்தான். இதுக்கு இல்லையா ஒரு எண்டு!! இன்னும் ரெண்டு எபிசோட் கழிச்சு இவனது வேலைத்தனம் முடியும்.
அடுத்த நாள் காலை ஆரவாரத்துடன் விடிந்தது. நிலா நிலா நிலா தான் எந்நேரமும் ஒட்டி கொண்டே திரிந்தான் அவளிடம். நிதின் மற்றும் ஹரினிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
அனைவருக்கும் சந்தோஷம் ஆனால் தேஜுவுக்கு வருத்தம்.
என்னாச்சு அத்தை? என ஹரிணி கேட்க..
பொண்ணு பிறக்கும்ன்னு ஆசையா இருந்தேன். நீ பையன பெத்துட்ட என முகத்தை தூக்கி வைத்து கொண்டார்.
பொண்ணு தான பிறக்கும் தேஜூ என சொல்லி கொண்டே நிதின் வந்தான்.
ரெண்டு வருசம் ஆகட்டும் போடா என தேஜு சொல்லி விட்டு அழகு பையனை அள்ளி கொஞ்சினார்.
சத்ய தேவ் மற்றும் ரிதம் இருவரும் வந்தார்கள்.
ஹரிணி குழந்தையை காட்டினாள். பார்த்துக்கோ பந்தயத்தில் நான் தான் ஜெயிச்சென். சோ இந்த வீட்டுக்கு மூத்த பேரன் நான் தான். என்னோட குழந்தை தான் முதல் கொள்ளு பேரன். என்றான் நிதின்.
அப்படியா உனக்கு அவார்ட் கொடுக்கணுமே என சத்ய தேவ் சொல்ல.. குட்டி குழந்தை யூரின் பாஸ் செய்தது சரியாக அது நிதின் முகத்தில் அடித்தது.
டேய் உன் மகன் உனக்கு கிஃப்ட் கொடுத்திட்டான் என சத்ய தேவ் சிரிக்க.. ஹரிணி கூட சிரித்தாள்.
ஹரிணி இவன் நமக்கு வேணாம் டி! நீ தேஜு சொன்ன மாதிரி ஒரு கேர்ள் பேபி வேணும் என்றான் நிதின்.
நிதின் என் கிட்ட மிதி வாங்காத என ஹரிணி பல்லை கடிக்க..
சத்ய தேவ் காதல் சைக்கோ ரிதமின் தோல் மேல் கைகளை போட்டு கொண்டு உள்ளே ஒரு பொண்ணு ரெடியாகிட்டு இருக்கு என்றான்.
ரிதம் அவனது கைகளை தட்டி விட்டாள். அனைத்து உறவினர்களும் வந்து பார்த்து விட்டு சென்றார்கள்.
ஹரிணியை வீட்டுக்கு அழைத்து வந்ததும் நிதின் தனது தாத்தா அம்முச்சி கலை வாணி, வசந்தன் இருவரையும் அழைத்து வந்து காட்டினான். அனைவருக்கும் சந்தோசமே..
ரிதம் தீவிரமாக நகத்தை கடித்து கொண்டிருந்தாள்.
ஹே என்ன பண்ற? அப்படி என்ன யோசனை? என கையை தட்டி விட்டான் சத்ய தேவ்.
நீ!!… நீ ஏன் அப்படி சொன்ன?
எப்படி?
அதான் பொண்ணு வேணும்னு? என ரிதம் கேட்க..
அதற்கு சத்ய தேவ்..?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels