அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
522 views

Episode -58

சீற்றமும் கோபமும் சூழ்ந்து கொள்ள வேகமாக அவன் விலகும் சமயத்தில் கைகளை பிடித்தாள் நிலா. 

விட்ரி என ருத்ரன் உதற முற்பட.. மெதுவான்னா எனக்கு ஓகே என்றாள் மெல்லிய குரலில்.. 

தேவையில்லை என ருத்ரன் அவளின் கையை பிரித்து விட. அவனது தோல் பட்டையில் முத்தமிட்டாள் நிலா. 

ருத்ரன் விடா பிடியாக எழுந்து விட்டான். நிலா எழுந்து கொண்டு அவனை பார்க்க, முறுக்கி கொண்டு வெளியே சென்றான். 

எங்கே போறீங்க? 

படையப்பா படம் பார்க்க போறேன்.  என ருத்ரன் சொல்லி விட்டு செல்ல.. 

அங்கே ஓ ஓ கிக்கு ஏறுதே பாடலை spr மற்றும் தேஜு இருவரும் அருகில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்தார்கள். 

சிறிது நேரத்தில் திரும்ப வந்தான் ருத்ரன். 

நிலா உடையை மாற்றி கொண்டு திரும்பினாள். 

என்னாச்சு? நியாபகம் வந்திடுச்சா! ட்ரெஸ் கழட்டவா!! என நிலா கேட்க.. 

ருத்ரன் அவளை முறைத்து பார்த்து, உன் பின்னாடி நான் நாய் மாதிரி அலையற போல ஆக்கிட்ட அப்படி தான! இப்போ உனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குமே!! 

பதட்டத்துடன் நான் அப்படி எல்லாம் நினைக்கவே இல்லையே!! நான் தான் உங்க பின்னாடி வந்தேன் போதுமா? நீங்க தான் எனக்கு வாழ்க்கை பிச்சை போட்டிறுக்கீங்க! என்றாள் நிலா. 

“அடங்கு டி!! சீன் போடாத!!”

இல்லைங்க சத்தியமா!! நான் சொல்றத கேளுங்க என நிலா அருகில் நெருங்கினாள். 

“ம்ம் தைரியம் கூடி போச்சு! முன்ன எல்லாம் என்னை பார்த்தாலே பம்புவ! இப்போ அப்படி இல்ல நீ!! ஓ இங்கே இது உன்னோட இடம் அப்படின்றதால இப்படி நடந்துக்கிறயா!”

“நான் தான் சொல்லிட்டேன்ல! நீங்க பண்ணுங்க வந்து” என நிலா கூற.. 

ருத்ரன் விரக்தி சிரிப்பை உதிர்த்து என்னை மயக்கி இப்போ உன் கிட்ட கெஞ்சுற அளவுக்கு கொண்டு வந்துட்டல்ல நல்ல டெலன்ட்டு தான். என்ன? இது யாரோட ட்ரெயினிங்? நிதின் ஆ? நிவாசா? ஏன்னா அடுத்தவங்க ஆசை பட்ட பொருளை திருடுறதும் சொந்தமாக்கிக்க முயற்சி செய்யறதல உங்க குடும்பத்தை அடிச்சுக்க ஆள் இல்லையே!! 

நிலாவின் கண்களில் நீர் வழிய.. 

நாடகம் ஆரம்பிச்சுடுச்சு!! இது நீலி கண்ணீர் நாடகம். ம்ம் சூப்பர் என்றான் ருத்ரன். 

எங்க வீட்ல யாரும் நீங்க சொல்ற மாதிரி இல்ல. திரும்ப திரும்ப இதை சொல்லி கஷ்ட படுத்தாதீக! எனக்கு வேதனையா இருக்கு!! நான் தான் சரின்னு சொல்லிட்டேன்ல! என அழுதாள் நிலா. 

நீ சரியான சூனியகாரி டி! நாடகக்காரி! இந்த நடிப்புக்கு எல்லாம் அசரும் ஆளு நான் இல்ல! என ருத்ரன் சொல்லி கொண்டிருக்க என அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே பவன்யா வந்தாள். 

பவா பேபி என ருத்ரனின் பார்வை அப்படியே திரும்பியது. கார்ட்ஸ் விளையாடலாம் வரியா? என அவள் அழைக்க.. 

வரேன் போலாம் என இருவரும் சென்றார்கள். 

நிலாவுக்கு இன்னும் வேதனையாக இருக்க.. அறையில் முடங்கி இருந்தவள் இருப்பு கொள்ளாமல் நேராக அவனை தேடி சென்றாள். 

ஹே நிலா குட்டி வா என பவன்யா அழைக்க.. 

அக்காவுக்கு கார்ட்ஸ் விளையாட தெரியாதே என்றான் ஆதவ். 

விளையாடுறதுல கவனம் செலுத்துங்க! தேவையில்லாத பேச்சு எதுக்கு என ருத்ரன் சின்சியராக விளையாடினான். 

நிலா பாவமாக அவனையே பார்த்து கொண்டிருந்தாள். 

என்ன நிலா உன் புருசன் கிட்ட எதுவும் சொல்லனுமா? என பவன்யா கேட்க.. 

இல்ல கா!! என அதே இடத்தில் அமர்ந்தாள். 

ருத்ரன் அவளை ஒரு பொருட்டாகவே கண்டு கொள்ளவில்லை. நிலா அவனிடம் பேச எவ்வளவோ முயற்சி செய்தான். ஆனால் பலனில்லை. 

ஹே என்ன பண்றீங்க எல்லாரும்? அப்போ குழந்தைய பார்க்க வரல கார்டு விளையாட தான் வந்தீங்களா? என ஹரிணி கேட்க.. 

அண்ணி அது!! நாங்க என்ன பண்றது? குட்டி பையன் தூங்கிட்டு இருக்கான் அப்புறம் எப்டி அவன் கூட விளையாட முடியும் என்றாள் பவன்யா. 

அது மட்டுமா? எப்பவும் உன்னோட ஹஸ்பன்ட் உன் பக்கத்திலயே இருக்காரு!! எங்களுக்கு அங்க என்ன வேலை என்றான் ஆதவ். 

“என்ன என்னோட புருஷனா? டேய் மாமான்னு சொன்னால் குறைஞ்சு போயிடுவியா?”

ஹரிணி கா! எதுக்கு அவனை மிரட்டுறீங்க? டேய் ஆதவு உனக்கு எப்டி பிடிச்சிருக்கோ அப்படியே கூப்டு! என்றான் ருத்ரன். 

டேய் அவன் இன்னும் ஒரு தடவை கூட நித்தின மாமான்னு கூப்பிடவே இல்ல டா என ஹரிணி வருத்தப்பட.. 

கா அவனா உன் ஊட்டுகார் கூட இருக்க போறான். நீ தானே இருக்க போற! நீ ஃப்ரீயா விடு! என்றவன். ஆதவு காட்ல கவனம் செலுத்து என அனைவரும் விளையாடினார்கள். 

தேஜு மற்றும் spr இருவரும் கார்த்திக் மற்றும் மை விழி இருவருடனும் சிவன்யாவின் திடீர் திருமண வாழ்க்கையை பற்றி பேசி கொண்டிருந்தார்கள். 

என்ன பவா? உன் அக்காவுக்கு கல்யாணம் ஆகிடுச்சு!! நீ இன்னும் இப்படியே சுத்திட்டு இருக்க? என ருத்ரன் கேட்டான். 

பவன்யா திடுக்கிட்டு ஏன் அவளை மாதிரி நானும் கஷ்ட படனுமா? வேணாம் பா சாமி!! நம்ம வாழ்க்கைய என்ஜாய் பண்ணனும் அவ்ளோ தான்! கமிட்மெண்ட் எல்லாம் ஒத்து வராது டா! நான் கிரிக்கெட் பிளேயர் பதிரானா, ரச்சின் ரவீந்தர் போல யாராவது வந்தால் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாள இருக்கேன். 

ருத்ரன் முறைத்து பார்க்க.. பவன்யா சிரித்து கொண்டு பொறுமையா பண்ணிக்கலாம் இன்னும் ரெண்டு வருசம் போகட்டும்! ஆமா உனக்கென்ன என் கல்யாணத்தை மேல அவ்ளோ இன்டர்ஸ்ட்? 

சும்மா கொஞ்சம் சைட்டிங் தான்!! என்றான் ருத்ரன். 

போடா என கிண்டலுடன் பேசி கொண்டிருந்தார்கள். 

இப்போ உங்க அக்கா என்ன தான் பண்ண போறா? 

பவன்யா சாதாரணமாக நான் அவளை அங்கிருந்து கூட்டிட்டு வர சொல்லிட்டேன் வீட்ல.. அதை பத்தி டிஸ்கஸ் பண்ண தான் டாடியும் மம்மியும் பெரிமா பெரிப்பாவை பார்க்க வந்திருக்காங்க என்றாள் பவன்யா. 

அதற்குள் ஹரிணி வந்து விட அனைவரையும் சாப்பிட அழைத்து சென்றாள். 

நிலா அவனுக்கு பார்த்து பரிமாறினாள். அதே தந்தூரி சிக்கன் நான்கு பீஸ், வேஜ் சூப், வெள்ளரிக்கா என புரோபர் டயட் உணவுகளை  சாப்பிட்டு முடித்து விட்டு நேராக spr கிட்ட பேச காத்திருந்தான். 

ருத்ரன் சொல்லுங்க மாப்பிள்ளை.. 

மாமா நாளைக்கு நான் கிளம்பலாம்ன்னு இருக்கேன். கமிங் பிரைடே மெடிக்கல் டெஸ்ட் இருக்கு மெயின் ஆபிஸ்ல அதை முடிச்சிட்டு டூட்டியில ஜாயின் பண்ணனும். நாலு மாசம் ஆக போகுது என்றான் ருத்திரன். 

அப்படியா மாப்பிள்ளை! அதே வேலைக்கு தான் போகணுமா? என spr கேட்க.. 

இது தான் மாமா எனக்கு புடிச்சிருக்கு!! நான் டிரை பண்றேன் வேற ஜாப்க்கு! இப்போதைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க என்றான் ருத்ரன். 

அப்படி இல்ல மாப்பிள்ளை என spr விளக்கினார். கடைசியாக ருத்ரன், நிலாவை செக் அப் முடிச்சிட்டு நான் கிலம்பினதுக்கு அப்புறம் அவள் இங்கே வரட்டும். நான் நாளைக்கு கூட்டிட்டு போறேன். 

மாப்பிள்ளை இன்னொரு முக்கியமான விசயம் குழந்தை பத்தி பேசணும். 

இப்போதைக்கு பெருசா நினைச்சு கவலை படாதீங்க மாமா!! நீங்க வறுத்த படாதீங்க நான் இருக்கேன். எனக்கு விருப்பப்பட்டு தான் கல்யாணம் பண்ணேன். எந்த வற்புறுத்தலின் பேரில் இது நடக்கல என்றான் ருத்ரன். 

சரிங்க மாப்பிள்ளை என spr கூறிட ருத்ரன் படுக்கை அறைக்கு சென்றான். 

நிலா அவனுக்காக காத்திருந்தாள். 

ருத்ரன் அறைக்குள் நுழைந்ததும் நிலா கதவை லாக் செய்து விட்டு அவன் முன் வந்தாள். 

ருத்ரன் படுக்கையை சரி செய்ய.. என்னங்க!! என அவனை பின்னால் பிராண்டினாள். 

சொல்லுங்க என்ன விசயம்? 

நிலா அவன் முன்னால் சென்று எனக்கு சம்மந்தம். 

போதும் நிலா நான் என்னையே கட்டு படுத்திக்கி்டனும் உனக்கு என்னை விட உன்னோட காதல் ஓவியம் உனக்கு முக்கியம். என்ன தான் இருந்தாலும் அது உன்னோட உயிர்!! உனக்கு அது தானே முக்கியம்? நான் இனி உனக்கு தொல்லையா இருக்க மாட்டேன்.  நீ இனி நிம்மதியா இருக்கலாம். 

முழு சம்மந்தம்!! இதுக்கு மேலே என்ன பண்ணனும் என அவளின் உடையின் ஜிப்பை கழற்றினாள்

ஒன்னும் வேணாம்!! என ருத்ரன் சொல்லி முடிப்பதற்குள் அவனை கட்டி கொண்டாள். 

ஹே என்ன பண்ற நீ!! தள்ளி போடி!! என குரல் தான் கோபமாக துடித்ததே தவிர உதடுகள் புன்னகையால் விரிந்தது. 

என்னங்க என அவன் மார்பில் முகம் புதைத்தாள் நிலா. 

ஹே நகரு என வார்த்தைகள் கோபத்தில் இருக்க.. உள்ளுக்குள் ஆனந்தம் தான். Seventh heaven travelling.. 

ஹே சொல்லிட்டே இருக்கேன் விட்டா முத்தம் கொடுப்ப போல என ருத்ரன் சொல்லி முடிக்கவில்லை.. 

நிலா…? 

தொடரும்…

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment