Episode-87
மேடம் இப்போ பல்ஸ் செக் பண்ணி பார்க்கலாம். இன்னும் ஒன் வீக் இருக்கு. அடிக்கடி செக் பண்றது நல்லதுன்னு தோணுது என்றாள் தீபனா.
தேஜூ சரியென சொல்லி கொண்டே நிலாவை fetal scan இன்னொரு முறை செய்ய அழைத்தார்.
தீபனா அருகில் அமர்ந்து வேலையை தொடர்ந்தாள்.
நிலா அமைதியாக படுத்திருந்தாள். ஒரு மணி நேரம் கழித்து ஸ்கேன் முடித்து வந்த தீபனா தேஜுவிடம் இன்னும் டைம் இருக்கு. மேம் பேபி நெக்ஸ்ட் வீக் வரைக்கும் தாராளமா டைம் இருக்கு என்றாள்.
ஓகே நிலா மா வா!! கொஞ்சம் நட.. டெலிவரிக்கு ஹெல்ப் பண்ணும் என்றார் தேஜு.
மேம் projesterone injection ஒண்ணு போடணும். இப்போ போட்டுகிறீங்களா? இல்லன்னா நைட்க்கு போடவா? என கேட்டாள் தீபனா.
நான் அதை டேப்லெட் ஆக வச்சுக்கிறேன் ஊசி வேணாம் என்றாள் நிலா.
இதை கேட்டதும் தீபனாவுக்கு கடுப்பு தோன்ற.. மேடம் இது குழந்தைக்கு எவ்ளோ முக்கியம்ன்னு தெரியும் தானே! நீங்களும் டாக்டர் தான! நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. சஸ்பென்ஷன் அந்த அளவுக்கு வேலை செய்யாது. இந்த ஒன் வீக் நீங்க இதை கட்டாயம் எடுத்துக்கணும். இல்லன்னா உங்க விருப்பம் என்று விட்டு சென்றாள்.
ஹே போட்டுக்கோ பாப்பா!! என்று நிலா கூற..
நைட்டு போட்டுக்கிறேன் என மெல்ல கொழுசொலியில் நடந்தாள். வயிறு அவ்வளவாக தெரியவில்லை.
****
குழந்தைக்கு பால் கொடுத்து கண்ணம் உரசி கொஞ்சிய ரிதம். டேய் துகில் மம்மிய டிஸ்டர்ப் பண்ண கூடாது. சமத்து குட்டியா தூங்கனும். இல்ல அடி வாங்குவ நீ! என படுக்கையில் கிடத்தினாள் ரிதம்.
முழுதாக மூன்று மாதம் முடிந்திருந்தது குழந்தைக்கு.
அந்த நேரம் போன் ஒலிக்க.. சத்ய தேவ் அழைத்திருந்தான்.
சொல்லு!!
நான் வர கொஞ்சம் லேட் ஆகும் டி!
சரி என போனை கட் செய்தாள்.
சத்ய தேவ் மீண்டும் அழைத்தான்.
என்ன டா! எனக்கு தூக்கம் வருது!..
இன்னிக்கி நீயும் நானும் சேர்ந்து தூங்கலாமா?
தொடப்ப கட்டை!!
ஹே ஒன்னும் பண்ண மாட்டேன்.
நான் நம்ப மாட்டேன் என ரிதம் கூற..
ஒரு தடவை மட்டும் பாதுகாப்பா பண்ணலாம் டி!!
டேய் வேலைய பாரு!!
நீ ஓகே சொல்லு!
முடியாது!!
ராவடி பிளீஸ் டி! இப்போ வேற கும்முன்னு இருக்க. என்னால கம்முன்னு இருக்க முடியல.
ரிதம் மவுனமாக சிரித்தாள் கண்ணக்குழி தெரிய..
சொல்லு டி!!
நீ சீக்கிரமா வந்தால் மட்டும் தான் இது நடக்கும்.
அப்படியா செல்லம் இதோ இப்போ உடனே வரேன் என சத்ய தேவ் வேகமாக புறப்பட்டான்.
ரிதம் சிரித்து கொண்டே படுக்கைக்கு சென்றாள். அதற்குள் மீண்டும் அழைப்பு வந்தது.
ரிதமின் கண்கள் கூறாக விரிய.. போனை எடுத்தாள்.
எங்கே டி அரிச்சந்திரா? என பிளாக் ஈகிளின் குரல் ஒலித்தது.
எனக்கு தெரியாது என ரிதம் கூற..
அப்டியா!! உன் அப்பன் வாரிசு முக்கியம் இல்லை அப்படி தான
அவன் ஒன்னும் என் அப்பனுக்கு பிறக்கலையே! என்றாள் ரிதம்.
உன் குடும்ப வாரிசு ஒண்ணு மினிஸ்டர் வீட்ல இருக்கே அது வேணுமா? வேணாமா?
டேய் உன்னை கொன்னுடுவேன். என ரிதம் பற்களை கடித்தாள்.
பிளாக் ஈகில் பொறுமையாக உன்னோட முறை முடிஞ்சிடுச்சு இப்போ உன் தம்பி முறை வந்திடுச்சு. டைம் starts now சொல்ல மாட்டேன் ஏன்னா அது ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆகி போச்சு.
ஹே என்னடா பண்ண போற? உன்னை கொன்னு கூறு போடுவேன் என ரிதம் பதட்டத்துடன் வெளியே வந்தாள்.
நான் உன்னை என்ன பண்ண சொன்னேன்? நீ என்ன பண்ணிட்டு இருக்க? என் தம்பி அரிச்சந்திரா எங்கே டி! இன்னிக்கி ஒரு காவு நிச்சயம் விழுகும் டி!!
டேய் நான் எனக்கு என் குழந்தை கூட இருக்கணும்.
பிளாக் ஈகில் சிரித்து கொண்டே நீயா எல்லாத்தையும் விட்டு போவ! இனி நடக்க போறதை உன்னால வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும். நீ அழ மாட்டேன்னு கேள்வி பட்டேன். இனி உனக்கு அழுகை வத்தி போற அளவுக்கு அழுவ!
என்னடா பண்ண போற? என ரிதம் கேட்க..
என் தம்பிய விட்டு இப்போ நான் வேதனை படுற போல நீ இனி பயங்கரமா வேதனை பட போற! என சொல்லி விட்டு போனை வைத்தான்.
ரிதம் தலையை பிடித்தபடி அமர்ந்தவள். இரண்டு மார்பிலும் மிஷன் வைத்து குழந்தைக்கு தேவையான ஆகாரத்தை எடுத்து ஃப்ரிட்ஜிசில் வைத்தவள். நேராக மகியின் அருகில் சென்று குழந்தையை படுக்க வைத்தாள். உள்ளுக்குள் ரணம் பரவியது. துகில் என் அழகா!! என் ஹீரோ! என் ஹனி பஞ்ச் என முத்தமிட்டு மவுனமாக அழுதவள் படுக்க வைத்து விட்டு புறப்பட்டாள்.
அவள் வெளியே சென்று அரை மணி நேரம் கழித்து சத்ய தேவ் வந்தவன் ஆசையுடன் நுழைந்தான். அங்கே அவள் இல்லை.
சக்தி வேகமாக அவளுக்கு அழைத்தான்.
எங்கே டி இருக்க?
நிலாவை பார்க்க தோணுச்சு அதான் புறப்பட்டேன். நீ துகில் கூட இரு.
ரிதம் என்ன மறைக்கிற? என சக்தி கேட்க..
உனக்கு தெரியும்னு எனக்கு தெரியும்.
ஹே எப்டி உனக்கு தெரியும்? என சக்தி கேட்க..
நான் பேசுற நிலையில் இல்ல. அவள் கிட்ட போகணும்.
ஹே லிஸன் ரிதம் அவங்க யாரு கிட்டயும் இதை பத்தி சொல்லாத டி பெரிய பிரச்னை ஆகிடும் என சத்ய தேவ் கூற..
பிளாக் ஈகில் அவனோட வேலைய ஆரம்பிச்சுட்டான். ஒன்னும் பண்ண முடியாது சக்தி. நிலா வயித்துல இருக்க பாப்பா முக்கியம். அதான் நான் போறேன். I know விசயத்தை சொன்னால் என்ன நடக்கும்னு எனக்கு தெரியும் அதை கண்டிப்பா செய்ய மாட்டேன். நீ துகில பாரு நான் அப்புறம் கூப்பிடுறேன் என கட் செய்தாள் ரிதம்.
***
மாப்பிள்ளை வந்திருக்கார்!! என தேஜி கூறினார்.
நான் போய் பார்த்திட்டு வரேன் என spr எழுந்திருக்க..
கம்முன்னு இரு அவங்களுக்கு பிரைவசி தேவை. தூங்கு sp என படுக்க வைத்தார்.
தீரா என அவனை பார்த்ததும் கட்டி கொள்ளும் ஆர்வம் எழுந்தாலும் அவள் கட்டு படுத்தி கொண்டு நிற்க..
எப்டி இருக்க? என கேட்டான்.
ம்ம் என அவள் ஒற்றை பதில் கொடுக்க..
அருகில் வந்தவன் அவளின் முகத்தை இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான்.
என்னாச்சு? அப்படி பார்க்கிறீங்க? என முகத்தில் வெட்கம் கூடவே பதட்டம் ஒட்டி கொள்ள..
அது கொஞ்சம் குண்டாகிட்ட!!
என்ன குண்டா என கண்ணாடியில் பார்த்தாள்.
ருத்ரன் சட்டையை கழட்டி ஹெங்கரில் மாட்டினான்.
டெலிவரி அப்புறம் ஒல்லி ஆகிடுவேன். என நிலா அவன் முன் சென்று கூற..
நான் ஒன்னும் சொல்லலையே!! என ருத்ரன் அவளை பார்க்க .
இல்ல நான் ஒல்லி ஆகிடுவேன் என்று மீண்டும் கூறினாள்.
ஓகே குளிச்சிட்டு வரேன் என அவன் சென்றான்.
என்னங்க டவல், என்னங்க சோப் என ஒவ்வொன்றாக சின்ன நடை போட்டு கொண்டே சென்றவள் அனைத்தையும் கொடுக்க.. புன்னகையுடன் வாங்கி கொண்டவன். குளிக்க வரியா சேர்ந்து குளிக்கலாம் என இரு புருவம் தூக்கினான்.
நிலாவுக்கு பழைய ருத்ரன் எட்டி பார்க்க.. ஒண்ணு வேணாம் குளிச்சிட்டு வாங்க என சென்று விட்டாள் புன்னகை கன்னக்குழி சினுங்க சினுங்க தோன்றியது. அவன் பத்து நிமிடம் கழித்து வெளியே வந்தான்.
நிலா வளையல்களை வருடியபடி அமர்ந்திருக்க..
தலையை துவட்டி விடு டி! என அருகில் சென்று நின்றான்.
அவன் அமர்ந்திருக்க அவள் நின்று கொண்டிருந்தாள். அவள் வயிற்று பகுதியில் கைவைத்து பார்த்தவன் அப்படியே முத்தமிட்டான். நிலா சிலிர்த்து நின்று கொண்டிருக்க.. அவனது கைகள் கொஞ்சம் கொஞ்சமாக அத்து மீறியது கொஞ்சம் மட்டுமே!!
நிலா சொக்கி போய் நின்றவள் மெல்ல அவனை பார்க்க.. ஹே இங்கே நானும் அப்புறம் இந்த பாப்பாவும் உன்னை டார்ச்சர் பண்ணா எப்டி இருக்கும் என ருத்ரன் சொல்ல..
ச்சீ போதும் விடுங்க!! என நகர்ந்தாள்.
பண்ணுவேன் கண்டிப்பா! அண்ட் இப்போ எதுக்கு தள்ளி போற!! பக்கத்தில வாடி என இழுத்து மடியில் அமர வைத்தான்.
கைகள் அங்கும் இங்கும் அலைபாய.. நிலா அவனது கைகளை பிடித்து கொண்டு நாளைக்கு மீனாட்சிக்கி சீமந்தம் பண்றாங்க.
ம்ம்!! என ஒற்றை பதில் கொடுத்தான்.
தீரா உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்.
ம்ம்!!
நீங்க எவ்ளோ லவ் பண்ணீங்க அவங்களை!!
இது தேவையில்லாத விஷயம் என்றான் ருத்ரன்.
நிலா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
நீ எந்த அளவுக்கு உன்னோட ஆளை லவ் பண்ண?
அது தேவையில்லாத விஷயம் என்றாள் நிலா.
இரு பக்கமும் அமைதி நிலவியது. சிறிது நேரம் கழித்து அவனே பேசினான். நீ நிஜத்தில் வாழ்ந்து குழந்தைய வாங்கி இருக்க. அந்த அளவுக்கு நான் நான் கனவில் வாழ்ந்தேன். நம்ம ரெண்டு பேரையும் ரெண்டு பேர் ஏமாத்திட்டு போய்ட்டாங்க. தட்ஸ் இட் அண்ட் லீவ் இட்!! என்னோட பாஸ்ட்டை நீ ஏத்துக்கிட்ட.. உன்னோட பாஸ்ட் விட்டுட்டு போன கிப்ட்ட நான் என நிறுத்தியவன். ஏத்துக்கிட்டேன் என முடித்தான்.
அவள் கண்களில் நீர் கோர்க்க வெளியே காட்டி கொள்ளாமல் அவன் மடியில் இருந்து எழுந்தாள்.
என்னாச்சு? என கைகளை பிடித்தான்.
ரெஸ்ட் ரூம் போகணும் என அவள் செல்ல..
ஹே ஆர் யூ ஓகே!! என ருத்ரன் கேட்க..
சிறு புன்னகையை பதிலாக கொடுத்தவள். பாத்ரூம் சென்றாள். கால் மணி நேரத்துக்கு மேல் சத்தம் வராமல் இருக்க கதவை தட்டினான்.
ஹே நிலா என கத்தினான்.
கதவை திறக்க முடியல பெயின் வந்திடுச்சு என அவளின் குரல் கேட்க..
அரண்டு விட்டான் ருத்ரன். உயிர் போவது போல வலி தோன்ற.. இதோ அனைவரும் எழுந்து விட்டார்கள்.
கதவை உடைத்து கொண்டு கையில் ஏந்தியவன் அவளை தூக்கி கொண்டு ஹாஸ்பிடல் புறப்பட்டான். Spr, தேஜு, ஹரிணி, நிவாஸ், என அனைவரின் கிளம்பி விட்டார்கள்.
ரிதம் அந்த நேரம் தான் ஹைதராபாத் வந்து சேர்ந்தாள்.
சத்ய தேவ் போனில் கேட்ட செய்தியுடன் அவனும் ஹாஸ்பிடல் நோக்கி புறப்பட்டான்.
இதோ நிலாவுக்கு குழந்தை பிறந்தது.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels