நிலா இரண்டடி பின்னால் சென்றவள். எனக்கு விருப்பம் இல்லன்னா வற்புறுத்த மாட்டேன்னு சொல்லியிருக்கீங்க!
உனக்கு விருப்பம் இல்லையா? என ருத்ரன் கேட்க..
ம்ம் விருப்பம் இல்ல!! பிடிக்கல வெறுப்பா இருக்கு! என்றாள் நிலா. It’s ok என கூறினான் ருத்ரன். நிலா பெரு மூச்சை விட்டபடி பார்க்க.. அதற்குள் மூச்சு முட்டியது. அவளை ஒட்டி நெருக்கி இருந்தான். இதோ கைகள் இரண்டையும் பிடித்து ஹேன்ட்ஸ் அப் செய்ய வைத்து அவனது ஒரு கையில் பிடித்து கொண்டான்.
ப்ச் என்ன பண்றீங்க?
நான் என்ன சொன்னேன்னு புரியலையா? பிடிக்கல!! என நிலா முகத்தை திருப்ப..
எனக்கு புடிச்சிருக்கு!! ரொம்ப!! என்றான் ருத்ரன். நிலா அதிர்ந்து அவனை பார்க்க..
“ம்ம் எனக்கு பிடிச்சிருக்கு!! உன்னை பிடிச்சிருக்கு!! ரொம்ப பிடிச்சிருக்கு
.”வெறுக்கிற ஒருத்தரை எப்டி புடிக்கும்? அதை விட ஆல்ரெடி உங்க மனசுல மீனாட்சி இருக்காங்க!!
“ஹே தப்பா பேசாத! அவள் வேற ஒருத்தனோட பொண்டாட்டி! உன் அண்ணன் பொண்டாட்டி! அவள் எனக்கு தங்கச்சி!!” என்றான் ருத்ரன்.
நிலா எகத்தால பார்வையுடன் உங்களோட குழந்தைய காரணம் காட்டி பிடிச்சிருக்கு அப்டின்னு உருக வேணாம். பிளீஸ் லீவ் மி கை வலிக்குது என்றாள். அவன் என்னோட குழந்தையா இல்லேன்னாலும் உன்னை எனக்கு பிடிக்கும் டி!! என்றான் ருத்ரன்.
Disgusting என நிலா கூற.. ருத்ரன் புன்னகையுடன் நான் என்னென்ன பண்ணேனோ அதை எனக்கே திருப்பி பண்ற! ம்ம் புரியுது!!
கைய எடுங்க வலிக்குது!! முதல்ல வெளியே போங்க! கோர்ட்ல மீட் பண்ணுவோம்!! என நிலா கூற..
நிலா என் கூட வந்திடு! என மீண்டும் ஆரம்பித்தான் ருத்ரன். நான் உங்களை bottom of the heart ல இருந்து வெறுக்கிறேன். நீங்க பண்ண காரியம் என அவனை விட்டு வேகமாக விடுபட முயற்சி செய்தாள்.
ருத்ரன் அவளை விடுவித்து பாக்கெட்டில் இருந்து கொலுசை எடுத்து நீட்டினான். இது தான உன்னோடது!! I mean honey baby!!
ச்சீ காது கூசுது!! ஒண்ணுமே பண்ணலயே!! என ருத்ரன் கூற..
தேவையில்லாம பேசாதீங்க வெளியே போயிடுங்க!! ஹே நீ இல்லாம தூக்கம் வரல டி!! நான் திமிர் பிடிச்சவ! என் அண்ணனுக ரெண்டு பேரும் பிராடு! என் குடும்பம் ஏமாற்று குடும்பம். நிதின் பிரகாஷ் ஃபோர்ஜர். நிவாஷ் பிரகாஷ் பிசினஸ்னு சொல்லி கொள்ளையடிச்சு சம்பாதிக்கிறான். என்னோட அப்பா வில்லன். சோ இவங்க என்னோட குடும்பம் இப்படிபட்ட குடும்பத்தில் இருந்து ஒருத்தி உங்களுக்கு எப்டி? என இரு புருவம் தூக்கியவள். வேற பொன்னை பார்த்து கட்டிக்கோங்க! வித விதமா வாழுங்க என சொல்லி கொண்டே படுக்கைக்கு சென்றாள்.
ருத்ரன் பெருமூச்சுடன் முகத்தை அழுந்த துடைத்தான். இவள் எல்லாம் என்னை கேள்வி கேட்க வந்துட்டா! அதுவும் எதிர்த்து பேச வந்துட்டா! இதெல்லாம் நான் எப்போ சொன்னேன்? எனக்கு நியாபகமே இல்லையே அப்டின்னு பொய் கூட சொல்ல முடியாது. எல்லாத்தையும் ஒண்ணு விடாமல் நியாபகம் வச்சிருக்கா! பாவி! படு பாவி!! என நினைத்தான். நிலா தண்ணீரை குடித்து கொண்டிருக்க அவளிடமிருந்து பிடுங்கி குடித்தான்.
அச்சச்சோ அபச்சாரம்! அழுக்கு என்னடி? என்னோட கைய குலுக்கி அதை சாநிடைசர் போட்டு கழுவி டிஷ்யூ போட்டு துடைச்சு விடுவீங்க! இப்போ தண்ணி குடிக்கிறீங்க? காலரா! ஜான்டிஷ் வந்திட போகுது. ஐயோ டைபாய்ட் வர கூட வாய்ப்பு இருக்கு. போங்க போய் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிக்கோங்க!! ஏன்னா நான் ஒரு அழுக்கு!! என நிலா சர்வ சாதாரண குரலில் கூற.
. உதட்டில் முத்தமிட்டான் ருத்ரன் வேகமாக.. அந்தோ பரிதாபம் இது அவள் முறை.. வேகமாக அருகில் இருக்கும் டிஸ்யூ கொண்டு துடைத்தாள் நிலா. ஹே ரொம்ப ஓவரா போற டி!! நல்லா இல்ல சொல்லிட்டேன். என்றான் ருத்ரன்.
அதை தான் நானும் சொல்றேன். ஒழுங்கா போயிடுங்க என்றாள் நிலா. நிலா டென்ஷன் பண்ணாத!! என அருகில் நெருங்கினான். இழுத்து அணைத்தான் இறுக்கமாகஐயோ சாமி!! நான் டென்ஷன் பண்ணல! நீங்க தான் பிரச்னை பண்ணிட்டு இருக்கீங்க!! என்னைய கேவலமா பேசின ஒருத்தர்! என்னை வெறுக்கும் ஒருத்தர்! என்னை பிடிக்காத ஒருத்தர். என் கூட fantasy காக இருந்த ஒருத்தர். Hypothetical feelingல என் கூட இருக்கவும் வேணாம். எனக்கு தேவையும் இல்ல. முக்கியமா உங்களை புடிக்கல என்றாள் நிலா.
Fantasy அப்டின்னு நான் சொல்லவே இல்லையே!! என ருத்ரன் கூற..
எந்த episodeல சொன்னீங்க எத்தனாவது லைன் ல சொன்னீங்கன்னு சொல்லவா? என நிலா கேட்க.. ஹே என்னை சாவடிக்கிற! ருத்ரன் யாருன்னு தெரியும்ல!! ம்ம் தெரியுமே!! நீங்க மீனாட்சியோட லவ்வர்.
ஹே நான் உனக்கு புருஷன் டி!! அவளை எதுக்கு நடுவில கொண்டு வர!! என சோர்வுடன் பேசினான் ருத்ரன்.
நிலா அவனை அசால்ட்டாக பார்த்து கொண்டே நீங்க எவ்ளோ நேரம் இங்கே இருந்தாலும் இப்படி தான் பேசுவேன். இதை விட அதிகமா கூட பேசுவேன். என்றாலே பார்க்கலாம். ஹே ரெண்டு வார்த்தைக்கு மேலே நீ அதிகமா பேசி நான் பார்த்ததே இல்ல. இன்னிக்கி என்னடி non stop ஆ பேசிட்டே இருக்க!! நீங்க இங்கிருந்து போற வரைக்கும் பேசுவேன். என்றாள் நிலா.
நிலா விளையாடிட்டு இருக்காத! நான் உன்கிட்ட சீரியஸா பேசிட்டு இருக்கேன். அய்யோ மிஸ்டர் ருத்ரன்!! நானும் உங்ககிட்ட சீரியஸா தான் பேசிட்டு இருக்கேன். என்னால உங்க கூட வாழ முடியாது. இத்தனையும் நடந்ததுக்கு பிறகு! என்னோட வெர்ஜின் உங்க கிட்ட போனதுக்காக நான் சொல்லல. டெலிவரிக்கு போறதுக்கு முன்னாடியே முடிவெடுத்துட்டேன். உங்க கூட வாழ கூடாதுன்னு.
ருத்ரன் திடுக்கிட்டு என்ன சொல்ற? அப்படி நான் உன்னை என்ன பண்ணேன்? என கேட்டான் வாய் கூசாமல்.. நிலா அவனை இமை வெட்டாமல் பார்க்க.. ஹே சொல்லு லுக் விடாத!! எனக்கு மூடு மாறுது என்றான்.
ராஸ்கல்!! என நிலா கொந்தளித்தாள். நீ மனசுக்குள் நினைக்கிறேன் அப்டின்ற பேர்ல சத்தமா சொல்ற!! என்றான் ருத்ரன்.
ராஸ்கல் என்றாள் சத்தமாக..
சரி சொல்லு என்ன காரணம்? என ருத்ரன் மீசையில் ஒட்டிய மண்ணை துடைத்து கொண்டே பேச.. அன்னிக்கு கடைசியா என்ன சொன்னீங்க? என்ன சொன்னேன்? எனக்கு உன்னை பார்த்ததும் மொத்தமா மறந்து போச்சு!! என்றான்.
நிலா பற்களை கடித்து கொண்டு பழைய காதலை மறக்க முடியல! எப்போவும் அழியாது அப்டின்னு சொன்னீங்களே!! மனசுல இன்னும் உங்க காதல் இருக்கும் போது, என்னை ஊருக்காக தான் கல்யாணம் பண்றேன்னு சொன்னீங்க! கல்யாணம் கூட பண்ணிக்கிட்டீங்க!! ஊருக்காக இந்த உறவு வேணாம்.
ஐயோ! ருத்ரன் நீ பேசாமல் ஊமையா பிறந்திருக்கலாம் என தனக்கு தானே கூறி கொண்டான். ரீஷன் கேட்டீங்க சொல்லிட்டேன். கிளம்புங்க என்றாள் நிலா.
ருத்ரன் அவளை பார்த்து, நிலா என்னோட அமைதியான முகத்தை தான் பார்த்திருக்க என்னோட கோபம் உனக்கு தெரியும் தானே!! நான் உங்க கூட வாழ விருப்பம் இல்லன்னு சொல்லிட்டேன். உங்க கோபமான முகத்தை பார்த்து நான் ஏன் நடுங்கணும். நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில் எதுவும் இல்ல. என்றாள் நிலா.
ஹே நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில் அவன் இருக்கான். என்றான் ருத்ரன். எவன்? அதோ அவன் தான்! என்றான் ருத்ரன். அவன் என் பையன்!! ருத்ரன் அவளை பார்க்க..
போங்க!! எனக்கு தூக்கம் வருது.
நிலா love you!! என்றான் ருத்ரன். செம்ம காமெடி!! இதை எழுதி வச்சுட்டு தாஜ்மகால் பக்கத்தில் நீங்க உட்கார்ந்துக்கோங்க நல்லாருக்கும் என்றாள்.
ஹே நம்பு டி!! லவ் பண்றேன் உன்னை!..
அப்டியா? லவ் பண்றீங்க தான!! ம்ம் என அவளருகில் நெருங்கினான்.
அப்போ என்னை நீங்க லவ் பண்றது உண்மை அப்டின்னா வெளியே போங்க இப்போவே என்றாள் நிலா.
ருத்ரன்…?
தொடரும்..