ஈகோ பிடிச்சவனின் இதய தேவதை

by Pradhanya kuzhali
303 views

Epi -15 

சத்யமூர்த்தியின் சொகுசு கார், ஈரோடு மாநகரத்தின் புறநகர்ப் பகுதியில் இருந்த அந்தச் சிறிய மருத்துவமனையின் வாசலில் வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய சத்யமூர்த்தியின் முகம், எப்போதும் போல விறைப்பாக இல்லாமல், ஒருவிதத் தவிப்பையும் அவசரத்தையும் பிரதிபலித்தது.

நேராக டாக்டர் சுமதி பத்மநாபனின் அறைக்குச் சென்றவன், அங்கே விவானின் மருத்துவக் குறிப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்த சாவித்திரியைக் கண்டதும் அவனது நடை சற்றே நிதானித்தது.  சாவித்ரி அவனை பார்த்ததும் எதுவுமே தெரியாததை போல ஒரு பாவனையுடன் நடந்து கொண்டாள். 

“மிஸ் சாவித்ரி…” என்று சத்யமூர்த்தி அழைத்தான்.

Little steps விஷ்வ விகாஸ் பள்ளி சாம்ராஜ்யமே அவனது குரலின் அதிகாரத்திற்கு முன்னால் நடுங்கும். ஆனால், இன்று அவனது குரலில் அசாத்தியமான ஒரு மென்மையும் கனிவும் இழையோடிருந்ததைச் சாவித்ரி சட்டென்று உணர்ந்தாள். அவளது காந்தக் கண்கள் அவனது முகத்தை ஆச்சரியத்துடன் ஏறிட்டுப் பார்த்தன.

“சார்… நீங்க என்ன இங்கே? விவானுக்கு ஒன்னுமில்லையே” என்று தன்மரியாதை குறையாமல் கேட்டாள் சாவித்ரி.

“விவான்… வீட்டுல அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருக்கான். நீங்க இல்லாததுனால சாப்பாட்டைத் தொட மாட்டேன்னு அடம் பிடிக்கிறான். பழையபடி பொருள்களையெல்லாம் உடைக்கிறான்.  நான் அன்னைக்கே சொன்னேன்..  ஓவர் அட்டாட்ச் ஆகிட்டான். இப்போ நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்க” என்று கோபத்தையும் வெளிப்படுத்தி இருந்தான். 

சாவித்ரி நேர் கொண்ட பார்வையுடன், நான் நிறைய குழந்தைகளை ஹேண்டில் பண்ணியிருக்கேன் சார். அவங்க கூடவெல்லாம் பேரன்ஸ் இருப்பாங்க.. குழந்தைகளுக்கு யார் டீச்சர் யாரு அம்மா அப்பா அப்டின்னு தெளிவு இருக்கும். என்னை அன்போட வழியனுப்பி இருக்காங்க..  ஆனால் விவானுக்கு அங்கே உங்க வீட்ல அரவணைக்க ஆள் இல்ல அதனால தான் அவன் என சாவித்ரி அடுத்த வார்த்தை பேசுவதற்குள் stop it you bluddy என கத்தியிருந்தான். 

சத்தம் கேட்டு நோயாளிகள் மற்றும் மருத்துவமனையில் இருப்பவர்கள் அனைவரும் ஒரு நொடி என்னவென பார்த்தார்கள். சத்ய மூர்த்திக்கு கோவம் தலைக்கு ஏறியது. இவள் என்னை எதிர்த்து பேசுகிறாளா? அந்த அளவுக்கு இடம் கொடுத்துட்டேனா? என உள்ளுக்குள் தீ பரவியது. 

சாவித்ரி!! என்ன நடக்குது இங்கே? மிஸ்டர் சத்ய மூர்த்தி நீங்க என்ன பண்றீங்க இங்கே? என கேட்டு கொண்டே சுமதி அவ்விடத்துக்கு வந்தார். 

சத்ய மூர்த்தி கைகளை இறுக்கி மடக்கி கொண்டு தனது கோபத்தை கட்டு படுத்தியவன். என்கிட்ட attitude காட்டி பேசுறாங்க உங்களோட ஸ்டாப்.. பார்த்துக்கிறேன் என்று விட்டு கோவமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்திருந்தான். 

சுமதி அவளின் அருகில் வந்து என்ன நடக்குது சாவித்ரி? அவர் அழைச்சதும் போறேன்னு சொன்னியே? இப்போ எதுக்கு இப்படி பேசின? அவர் கோவமா பேசிட்டு போறார். என தோல் பற்றினார். 

சாவித்திரியின் கண்களில் நீர் கொட்ட, டாக்டர் நீங்க சொல்றது புரியுது. எனக்கும் இப்போவே விவான பார்க்க போகனும்னு நெஞ்சு துடிக்குது. ஆனால் நான் அவர் வந்து கூப்பிடும் போது உடனே போயிருந்தால் என் மேலே அவருக்கு சந்தேகம் வந்திடும். நான் விவான் மேலே அதிகமா அட்டாச்ல இருக்கிறேன்னு எதுவும் சந்தேகம் வந்துட்டா என்ன பண்றது? அதான் நான்? என கேவினாள். 

சுமதிக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது.  இப்போ எப்படி போக போற? என கேட்டார். 

புறங்கையால் கண்களை துடைத்து கொண்ட சாவித்ரி, அவர் மறுபடியும் வருவார் எனக்கு நம்பிக்கை இருக்கு என்று விட்டு உள்ளே சென்றாள். 

சாவி சாவி சாவித்ரி என சொல்லி அடம் செய்து அழுது விசும்பி கொண்டே சாப்பிடாமல் படுத்து உறங்கி விட்டான் விவான். 

சத்ய மூர்த்தி வீட்டுக்கு வர இரவு ஆனது. கலாவதி குழந்தையின் அருகில் இருக்க, மகன் வந்ததும், என்னாச்சு டா? சாவித்ரி எங்கே என கேட்டார். 

சத்ய மூர்த்தி பற்களை கடித்து கொண்டவன். அவள் ஓவரா பேசுறா!! திமிர் பிடிச்சு ஆடுறா என்னை கேள்வி கேட்க அவள் யாரு? என தாம் தூம் என்று பேசியவன். விவானை தூக்கி கொண்டு அவனது அறைக்கு சென்று விட்டான். 

ராஜேஷ் கலாவதியின் முன் வந்து, அம்மா நீங்க ஒரு தடவை பேசி பார்க்கிறீங்களா? நம்ம சின்ன தம்பி இப்போ தான் சமத்து பையனாக ஸ்கூல் போறான். இன்னும் கொஞ்ச நாள் அந்த டீச்சர் நம்ம வீட்ல இருந்தால் இன்னும் விவான் சரியாகிடுவான் என்று எடுத்து கூறினான். 

கலாவதி தீவிரமாக யோசித்தவர். சரி ராஜேஷ் நாளைக்கு காலையில் நம்ம போய் சாவித்ரிய பார்த்து பேசி கூட்டிட்டு வருவோம் என்று சொல்லி விட்டு நகர்ந்தார். 

அப்பா சாவி வருவேன்னு சொன்ன? அவள் எங்கே? என்னை யார் பார்க் கூட்டி போவா? யார் என் கூட விளையாடுவா? நான் நீச்சல் கத்துக்கிட்டேன். நான் நிறைய கலர் போட்டு அது பண்ணேன். நான் நிறைய கதை வச்சிருக்கேன். எனக்கு சாவித்ரி வேணும் என குழந்தை அழுதான். 

சத்ய மூர்த்திக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. சாவித்திரியின் மேல் கோவம் அதிகமானது. மறுநாள் காலை… விஷ்வ பவனத்தின் பிரம்மாண்டமான நுழைவாயில் வழியே சாவித்ரி தன் சிறிய பையுடன் கம்பீரமாக உள்ளே நுழைந்தாள். விவான் அவளைப் பார்த்த அடுத்த நொடியே, “சாவி!!” என்று கத்தியபடி ஓடிவந்து அவளது புடவை முந்தானையைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டான். அவளது தாமரை முகத்தில் தாய்மையின் புன்னகை அரும்பியது.

அவளை பார்த்ததும் சத்ய மூர்த்தி ஆத்திரத்துடன் உன்னை யார் இங்கே வர சொன்னது? நேத்து பெரிய இவள் மாதிரி பேசின? என கோவமாக வாய்க்கு வந்ததை அவன் பேசி கொண்டிருக்க, நிறுத்து டா!! என சொல்லி கொண்டு சாவித்திரியின் பின்னால் வீட்டுக்குள் நுழைந்தார் கலாவதி. 

அம்மா!! நீங்களா? இதுக்கு காரணம்? என அவன் ஈகோ இன்னும் தலை தூக்கியது. 

கலாவதி கோபத்துடன், விவான் இனிமே சாவித்ரி பொறுப்பு. அதே போல நம்ம ஸ்கூலில் அவளுக்கு வேலை போட்டு கொடு. விவான அவள் கொஞ்ச நாளைக்கு பார்த்துக்கட்டும். என்று சொல்லியபடி வந்தார். 

சத்ய மூர்த்தியின் பார்வை அழுத்தமாக சாவித்ரியின் மீது படிய முடி கற்றையை காதுக்கு ஒதுக்குவதை போல பாவனை செய்தாள்.

“திமிர் பிடிச்சவ!!” என சத்ய மூர்த்தி கைகளை மடக்கி கொண்டு பார்க்க, கலாவதி அவளின் கையை பற்றி உள்ளே வா மா என்று அழைத்து வந்தார். 

விவான் சாவித்திரியை விட்டு ஒரு நொடி பிரியவில்லை. அவர்கள் மூவரும் சோர்வுடன் ஷோபாவில் அமர்ந்தார்கள். 

அதே விநாடி… வீட்டின் பிரதான தேக்குமரக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் மீரா!

அவளுக்குப் பின்னாடியே அவளது அம்மா அம்பிகாவும் பட்டுப் புடவை மடிப்பு குலையாமல், கர்வத்துடன் நடந்து வந்தார்.

ஆமாம்… சத்யமூர்த்தி கொடுத்த அந்த ‘நரக புரோட்டோகால்’ வேலைகளால் பயந்து ஓடிய மீராவை, அவளது அம்மா அம்பிகா அக்குவேறா ஆணிவேறா மூளைச்சலவை செய்து, மீண்டும் இந்த  சாம்ராஜ்யத்தின் மகாராணியாக்கப் பயிற்சி கொடுத்து அழைத்து வந்திருந்தார்.

“அத்தை! நாங்க வந்துட்டோம்!” என்று அம்பிகா ஹாலில் அமர்ந்திருந்த கலாவதியைப் பார்த்துச் சத்தமாகக் குரல் கொடுத்தார்.

மீரா பக்கா மாடர்ன் உடையில், தன் கைகளில் ஒரு புதிய டைரியை வைத்தபடி, சத்யமூர்த்தியின் புரோட்டோகால் விதிகளைத் தகர்க்கும் தோரணையில் வந்து நின்றாள். அவளது கண்கள் நேராக விவானைக் கொஞ்சிக் கொண்டிருந்த சாவித்திரியின் மீது விழுந்தன.

கலா என அம்பிகா அழைத்தவர், மீரா பண்ணது தப்பு தான் அதுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். இந்த ஒரு முறை அவளுக்கு வாய்ப்பு கொடுங்க என்றார். 

கலாவதி புன்னகையுடன், என்ன அண்ணி இப்படி சொல்லிட்டீங்க? இது அவள் வீடு எப்போ வேணாலும் அவள் வரலாம் போகலாம். நான் எதுக்கு சொல்ல போறேன் என பூரித்தபடி உள்ளே அழைத்து சென்றார். 

சத்ய மூர்த்திக்கு இன்னும் கோவம் அதிகமாக சென்றதே தவிர குறைந்த பாடில்லை… அவனும் அங்கிருந்து சென்று விட்டான். விவான் சாவித்திரிடம் தனது பள்ளி புத்தகத்தை காட்ட வேண்டும் என வேகவேகமாக உள்ளே ஓடினான். 

சாவி இருக்கணும்.. நான் வருவேன் நான் வருவேன் என சொல்லி கொண்டே சென்றான். 

அவள் சிரித்தபடி திரும்ப, “அடேங்கப்பா! வேலைக்காரி மறுபடியும் பெட்டியத் தூக்கிட்டு வந்துட்டாளா?” என்று மீரா தன் நீண்ட நகங்களை ரசித்துப் பார்த்தபடி ஏளனமாக கூறியவள். “என்ன மிஸ் சாவித்ரி… போன இடத்துல போதிய அளவுக்கு பிச்சை கிடைக்கலையா? இல்ல இந்த விஷ்வ பவனத்தோட comfort zone உங்களை விடலையா? கிளம்புன அடுத்த நாளே ஓடி வந்துட்டீங்க?” என்று விஷத்தைக் கக்கினாள்.

சாவித்ரி மீராவின் கண்களைத் தீர்க்கமாகப் பார்த்தாள். அவளது பார்வையில் இருந்த அசாத்திய துணிச்சல் மீராவை ஒரு படி பின்வாங்கச் செய்தது.

“நான் இங்கே பிச்சை எடுக்க வரலை. அந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போகல..  அதே போல நான் எதுக்கு வந்திருக்கென்னு உங்ககிட்ட explain பண்ண எனக்கு எந்த அவசியமும் இல்ல!” என்று நெற்றியடி அடித்தார் போலக் கூறி விட்டு நகர்ந்தாள். 

இத்தனை களேபரத்தில் சத்ய மூர்த்தியால் சரியான நேரத்தில் பள்ளிக்கு கிளம்ப முடியவில்லை தாமதமாகவே புறப்பட்டு கீழே வந்தான். மாடியில் இருந்து தன் நீல நிற ஆல்பைன் சூட்டுடன், கம்பீரமான சிங்கத்தைப் போல இறங்கி வந்தான் சத்யமூர்த்தி. அவனது கதிர்வீச்சுப் பார்வை அங்கிருந்த சாவித்திரியின் மீது ஒரு நொடி தொட்டு மீண்டது. 

மாமா நான் உன்கூட ஆபிஸ் வர ரெடி!! என ஆர்பாட்டத்துடன் வந்து நின்றாள் மீரா. 

சத்ய மூர்த்தி அவளை தீர்க்கமாக பார்த்து, உன்னோட எட்டு அரியறையும் கிளியர் பண்ணிட்டு வந்து கேளு எப்போ ஆபீஸ் போகலாம்னு அது வரைக்கும் ஆபிஸ் பக்கம் வந்துடாத என கோவமாக கூறி விட்டு அவன் உணவில் கவனம் செலுத்த, அங்கே எதிரில் இருந்த சாவித்திரியின் உதட்டில் நமட்டு சிரிப்பு தோன்றி மறைந்தது. 

மீரா ஆத்திரத்துடன் …

தொடரும்.

You may also like

Leave a Comment