PROMO
ஊட்டியில் ஒரு மாண்டிச்சேரி பள்ளியை வெற்றிகரமாக வாங்கி முடித்து ஹோட்டலில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தான். Little steps school founder என்பதை விட ஈகோ பிடிச்ச சத்யமூர்த்தி. சத்யா எல்லாமே ரெடி ஒருமுறை நீங்க செக் பண்ணிடுங்க.. என கோப்புகளை எடுத்து கொண்டு அவனது அறைக்குள் நுழைந்தாள் சாவித்ரி. நாளைக்கு இன்னொகரேஷன் பள்ளியில் விழா இருக்கிறது.
ஃபைல்ல அங்கே வச்சிடு என்றான் சத்ய மூர்த்தி கம்பீர தோரணையில்.. சாவித்ரி அங்கிருந்து செல்ல திரும்ப, ஒரு காஃபி வேணும் என சத்ய மூர்த்தி கூற..
இதோ எடுத்து வரேன் என உடனே இரண்டு கோப்பையில் காபியுடன் வந்தாள். அவனுக்கு எதிரில் அவள். காஃபி கோப்பையை வாங்கி அருகில் வைத்தான். சாவித்ரி அவனை ஏறிட்டு பார்க்க அவளும் நிமிர்ந்தாள்.
“இந்த Schoolல நீ மேனேஜ் பண்ணிக்கோ. நான் நாளைக்கு ஈரோடு கிளம்புறேன்.” என ஒரு மிடுக்கு குடித்து கொண்டே பதில் கொடுத்தான்.
முடியாது என்னால இங்கே தனியா!!.. அது கஷ்டம்.. என சாவித்ரி மறுத்து விட.. ஏன்? என கேள்வி கணைகளை தொடுத்தான் சத்ய மூர்த்தி.
ஏன்னு உங்களுக்கு தெரியாதா? என அருகில் நெருங்கினாள் சாவித்ரி. ஏன் என அவனது புருவம் இடுங்கியது. சாவித்ரி பொறுமையிழந்து அவனது உதட்டில் முத்தமிட்டாள்.
சத்ய மூர்த்தி அவளை விலக்கி விட, பிடிக்கலையா? சத்யா? என அவள் கலங்கிய விழிகளில் கேட்க, அவளின் உதட்டை ஆவேசமாக கவ்வி கொண்டான் சத்ய மூர்த்தி. இருவரும் ஒருவரை ஒருவர் பின்னி கொண்டார்கள்.
இரவு முழுவதும் ஒட்டுதல் உரசுதல் என அனைத்தும் விடிய விடிய நடந்தது. அவன் இன்னும் காதலிக்கிறேன் என பிரகடனப்படுத்தவில்லை.. அடுத்த நாள் காலை ஆரவாரத்துடன் விடிந்தது.
அவளுக்கு முன்னால் சத்ய மூர்த்தி அமர்ந்திருந்தான். கண்கள் சிவந்திருந்தது. சாவித்ரி வெட்கத்துடன் எழுந்து அமர்ந்தவள். வெட்கத்தை மறைத்து விட்டு வேகமாக உடையை அணிந்து கொண்டாள்.
ரோஜாவுக்கு இப்போ என்ன வேணும்? பணமா? இல்ல என்னோட மொத்த propertyயூமா? என சத்தியமூர்த்தியின் குரல் தனித்து ஒலித்தது.
எதிரில் இருக்கும் பெண்ணவளின் முகம் வியர்த்து கொட்டியது.
சாவித்ரியா? இல்ல ரோஜாவா? தாமரையோட தங்கச்சி? என்றவன் புருவம் சுருக்கி பாரிவேந்தன் பொண்ணு? என அடுக்கடுக்காக கேட்டு கொண்டே சத்ய மூர்த்தி அவளின் பக்கம் நெருங்கினான்.
ரோஜா..?
விரைவில்..