ஈகோ பிடிச்சவனின் இதய தேவதை 40

by Pradhanya kuzhali
268 views

Epi -40 

ஒரு சில நொடிகள் கழித்து, “தப்பு பண்ணிட்டீங்க ரோஜா!! I think… He’s got his eye on you.”

“இல்லை, நான் வந்து…” என்று ரோஜா சொல்ல வர…

“இன்னைக்கு நாங்க மீட் பண்ணது தற்செயல் இல்லை. இப்போ எந்த ப்ராஜெக்ட்டும் சத்யமூர்த்தி பண்ற ஐடியாவே இல்லை; பட் இன்னைக்கு…” என்றவன், “நீங்க கவனமா இருங்க… சத்யமூர்த்தி டேஞ்சரான ஆளு,” என்றுவிட்டுப் போனை வைத்தான்.

ரோஜா வெடித்து அழும் நிலைக்கு வந்திருந்தாள். வேகமாகத் தன் கண்களைத் துடைத்தவள், சத்யமூர்த்தி கேட்ட ஜூஸை வாங்கிக்கொண்டு சென்றாள்; உள்ளுக்குள் பதட்டமாகவே காணப்பட்டாள்.

வீட்டுக்கு வந்ததும், “என்னாச்சு? உன்னோட முகம் சரியில்லையே?” எனக் கேட்டபடி அவளை இழுத்து முத்தமிட்டான்.

“ஒன்… ஒண்ணுமில்லை,” என்று மழுப்பினாள்.

“இன்னைக்கு அசைவம் சாப்பிடணும் போல இருக்கு, கூடவே உன்னையும்!” என வாய்மொழியாகவே கூறினான்.

“என்ன வேணும்னு சொல்லுங்க, உடனே சமைக்கிறேன்,” என அவள் கூற… அனைத்து உணவுப் பதார்த்தங்களையும் வரிசையாக லிஸ்ட் போட்டுக் கூறியவன், குளிக்கச் சென்றான். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் சமைத்தாள்.

“வாசனையே ஆளத் தூக்குது!” என்று சொல்லிக்கொண்டே வெளியே வந்தவன், “ம்ம்… சமைச்சது யாரு? ஆளையே முழுங்குற ஆளு!” என்றான். தலைவாழை இலையில் அவள் செய்த அனைத்து உணவுகளையும் திருப்தியாக ருசிக்கத் தொடங்கினான்.

“எப்படி இருக்கு?” என்று அவள் மெல்லிய குரலில் கேட்க… “எல்லாமே சூப்பரா இருக்கு, உன்னைத் தவிர!” என்றான்.

“ஹாங்…” என்று அவனைப் பார்த்தாள்; இதயம் கனத்துப் போனது.

“ம்ம்… இன்னைக்கு நீ… நேத்து மாதிரி இல்லையே?” என்று தன் காந்தக் கண்களால் பார்த்தான்.

“அது… அது ஒன்னும் இல்லை, கொஞ்சம் டயர்டா இருக்கு,” என்று முடியைக் காதுக்கு ஒதுக்கிக்கொண்டு பார்த்தாள்.

“அப்போ இன்னைக்கு முடியாதா உன்னால?” என்று ஒவ்வொரு விரலாகச் சப்புக்கொட்டிக்கொண்டே பார்த்தான்.

சட்டென்று பெண்ணவள் இடைமறித்து, “இல்லை, அப்படிச் சொல்லலை… என்னால முடியும் சத்யா. உங்களுக்காக… இல்லை, இல்லை, எனக்காக!” என்று திருத்தினாள்.

இதோ ஆரம்பித்தது; விடிய விடிய அவளை வாட்டி எடுத்துவிட்டான்! மொத்தமாக விருந்து முடித்தான்; மிச்சசொச்சம்கூட விட்டு வைக்கவில்லை. அவள் மிகுந்த கலைப்பாக உணர்ந்தாள்.

அதே களைப்புடன் பள்ளிக்குக் கிளம்பினார்கள். காரில் செல்லும்போது சத்யமூர்த்தி அவளின் கைகளைப் பிடித்துக்கொண்டான்.

‘இல்லை… நிச்சயமாகக் குரு சொன்ன மாதிரி இருக்காது. சத்யாவுக்கு எதுவுமே தெரியலை. என்னைப் பத்தின விஷயம் தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லை. குரு தேவையில்லாமல் காம்ப்ளிகேட் பண்றான். சத்யா என்னை சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்க்கலை,’ என்று தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொண்டாள்.

“ஹே ரோஜா!” என்றான்.

சாவித்திரியின் முகம் குப்பென வியர்க்க, “என்ன சொல்றீங்க?” என்றாள்.

“உனக்கு ரோஜா பிடிக்குமா?” என வெளியில் கையைத் காட்டினான். பூ விற்கும் கடையில் சிவப்பு ரோஜாக்கள் வரிசையாகத் தண்ணீர் தெளிக்கப்பட்டு, பார்க்கவே அத்தனை அழகாக இருந்தன.

“அது… சத்யா, பூக்கள் எல்லாருக்கும் பிடிக்குமே!” என்று அவள் தயக்கத்துடன் பதில் கொடுக்க…

“எனக்கு மல்லிகைப்பூ பிடிக்கும்! முல்லைப்பூ பிடிக்கும்! ஜாதிமல்லி பிடிக்கும்! ஆனா… இந்த ரோஜாவை மட்டும் பிடிக்காது!” என்றான்.

“எதனால?” என்று நலிந்த குரலில், சாவித்ரி பதட்டத்துடன் கேட்க… “ஏன்னா, பறிக்கிறதுக்கு முன்னாடியே நம்மளைக் காயப்படுத்திடும், இல்லையா?” என்றுவிட்டு அவளை ஒரு பார்வை பார்த்தான்.

ரோஜா என்னும் சாவித்ரி மொத்தமாக உடைந்து போனாள்!

இதோ, பள்ளியும் வந்துவிட்டார்கள். ரோஜாவின் சிந்தனை இங்கு இல்லை; முழுக்க முழுக்கக் காலையில் சத்யமூர்த்தி சொன்ன வார்த்தையிலேயே இருந்தது. உணர்வுகள் அவ்விடத்தை விட்டு வரவில்லை; நேரம் போனதுகூடத் தெரியவில்லை. மதிய உணவு இடைவேளை தொடங்கியது.

மதிய உணவு இடைவேளை முடிந்த சில நிமிடங்களில், சத்யமூர்த்தியின் அறைக்கு அடுத்த ஆளுமையாக வந்து சேர்ந்தான் திவ்யன்! இந்தியாவின் டாப் ஐடி (IT) மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவன், நியூயார்க் ரிட்டர்ன்ஸ்… அதாவது இன்னும் சரியாகச் சொல்லப்போனால், ரோஜாவின் கடைசித் தங்கை சம்பூர்ணாவின் கணவன்!

சத்யமூர்த்தி அவசரமான ஒரு மென்பொருள் தேவைக்காக இவரை அழைத்திருப்பது போலப் பாசாங்கு செய்திருந்தான். மீண்டும் ஒரு ஃபைலைக் காரணம் காட்டிச் சாவித்திரியைத் தன் அறைக்கு அழைத்தான் சத்யமூர்த்தி. உள்ளே நுழைந்த ரோஜா, இந்த முறை தன் கடைசித் தங்கையின் கணவன் திவ்யனைக் கண்டதும் அடியோடு உறைந்து போனாள்.

சத்யமூர்த்தி வேண்டுமென்றே அவளது பதற்றத்தை ரசித்தபடி, “மிஸ் சாவித்ரி, இவர் திவ்யன் சார். நம்ம ஸ்கூல் டேட்டா மேனேஜ்மென்ட் பண்ணப்போறார்,” என்றவன், திவ்யனின் பக்கம் திரும்பி, “இது என்னோட ஸ்கூல் ஸ்டாஃப்… இன்னும் சொல்லப்போனால், என்னோட அசிஸ்டென்ட், என்னோட நலம் விரும்பி! இவங்க பேர் சாவித்திரி,” என ஒற்றைப் புருவத்தை உயர்த்திப் பொறிவைத்தான்.

திவ்யன் வெளியே சிரித்தபடி இருந்தாலும், உள்ளுக்குள் பதட்டத்துடன் அமர்ந்திருந்தான்; ஏனென்றால், ரோஜாவிடம் கன்னத்தில் பொளேர் என வாங்கியிருக்கிறானே! அந்தப் பயம்தான்; இவள் தான் பொம்பளை ஜாக்கிச்சான் ஆச்சே! அவன் அவள் பக்கம் திரும்பவே இல்லை; எந்த ஒரு இடத்திலும் ரோஜாவைத் தெரிந்தது போலக் காட்டிக்கொள்ளவில்லை.

ரோஜா மொத்தமாக உடைந்து போனாள். இந்த அளவுக்குச் சத்யமூர்த்தி செல்வான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. தன்னைப்பற்றி அனைத்து விவரங்களும் அவனுக்குத் தெரிந்திருக்கும்; அடுத்து என்ன செய்யப்போகிறான்? கர்ணன் மாமனை அழைத்து வரப்போகிறானா? துளசியை அழைத்து வரப்போகிறானா? செம்பருத்தியை அழைத்து வருவானா? தாமரையை அழைத்து வருவானா? என்று உள்ளுக்குள் கோபமும், அழுகையும், தவிப்பும், துடிப்பும் எனப் பல்வேறு உணர்வுகள் கலந்த நிலையில் நலிந்த முகத்துடன் நின்றிருந்தாள்.

சத்யமூர்த்தி சுழல் நாற்காலியில் சுற்றியபடியே, “ஓகே சாவித்திரி, நீ கிளம்பு; நம்ம ஈவினிங் மீட் பண்ணலாம்,” என அவளை அனுப்பிவைத்தான்.

உயிரற்ற ஜடம் போல நடந்து சென்றாள். சத்யமூர்த்தியின் கண்கள் கத்தி போலக் காத்திருந்தன, தனது இரையை வேட்டையாட! ‘ஆனால், ரோஜா இந்த அளவுக்குச் செல்கிறாள் என்றால் நாமும் செல்வதில் தவறில்லை,’ என அவனது ஆட்டத்தைச் சிறப்பாக ஆட முடிவு செய்தான் அவன்.

அவளது கபட நாடகத்தின் குட்டிகளை ஒட்டுமொத்தமாக அம்பலப்படுத்த, அவன் ஒரு மாபெரும் அதிர்ச்சி அஸ்திரத்தை விஷ்வ பவனத்தில் தயார் செய்து வைத்திருந்தான்.

மாலை ஐந்து மணி ஆனது.

“மிஸ் சாவித்ரி, போலாமா?” எனப் புன்னகையுடன் முன்னால் நடந்தான்.

ரோஜா எதுவும் பேசாமல் காரில் ஏறிக்கொண்டாள். கார் வேறு பாதையில் சென்றுகொண்டிருக்க, ‘எங்கே போறோம்?’ என்பதைப் போல அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

“நம்ம விஷ்வ பவனத்துக்குப் போறோம்; விவான் குட்டியைப் பார்த்து ரொம்ப நாள் ஆனப்போல இருக்கு,” என்றுவிட்டு ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.

ரோஜா அவளது அனைத்து உணர்வுகளையும் கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்தாள். இதோ, கார் விஷ்வ பவனத்தின் அந்தப் பிரம்மாண்ட இரும்புக் கேட்டின் முன்னால் வந்து நின்றது. கேட் உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. காரை நிறுத்திய சத்யமூர்த்தி, ஸ்டீயரிங் வீலில் கைகளைத் தட்டியபடி, “என்னாச்சுன்னு பாரு சாவித்ரி,” எனக் காவலாளியைத் தேடினான்.

“இதோ போறேன்,” எனிக் காரிலிருந்து இறங்கியவள், சுற்றிலும் பார்த்தபடி காவலாளியைத் தேட… ‘3… 2… 1…’ எனச் சத்யமூர்த்தி உதட்டில் வஞ்சகக் குறும்பு மின்ன, நடக்க இருக்கும் கண்கொள்ளாக் காட்சியைக் பார்க்க உற்சாகமானான்.

“செக்யூரிட்டி, கொஞ்சம் கேட்டைத் திறங்க…” என்று அவள் அதிகாரக் குரலில் சொல்லும்போது…

அங்கிருந்த காவலாளி நாற்காலியிலிருந்து விறைப்பாக எழுந்து வெளியே வந்த அந்த மனிதனைப் பார்த்த ரோஜாவுக்கு, காலடி மண் மொத்தமாக நழுவுவது போன்ற ஒரு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது! அங்கே செக்யூரிட்டி உடையில், தலையில் தொப்பியுடன் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தது… வேறு யாருமில்லை, அவளது சொந்தத் தந்தை பாரிவேந்தன்!

ரோஜாவின் கண்களிலிருந்து மளமளவெனக் கண்ணீர் சரிந்தது. பாரி எதுவும் பேசாமல் கேட்டைத் திறந்துவிட்டார். பின்னால் இருந்து ஹாரன் சத்தம் கேட்க, ரோஜா நகர்ந்து நின்றாள்; கார் உள்ளே வந்திருந்தது.

பாரி ரோஜாவைப் பார்த்துப் புன்னகையுடன், “இங்கே என்ன கண்ணு பண்ற?” எனக் கேட்டார்; அவருக்குத் தெரியவில்லை.

“நீங்க இங்கே என்னப்பா பண்றீங்க?” எனத் ரோஜா அழுகையுடன் கேட்க…

பாரி அசட்டுப் புன்னகையுடன், “எனக்குத்தான் சித்தாள் வேலையில் கை உடைஞ்சு பிரச்சினை ஆகிப்போச்சே! அதனால அங்கே கஷ்டமான வேலைக்கு எப்படி போறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். இது என்னைத்தேடி வந்த வேலை அதான். முதலாளி ரொம்பத் தங்கமான மனுஷன்; செக்யூரிட்டி வேலைதான். அதான் ஒரு மாசம் வேலை செய்ய நினைச்சேன் ரோஜா,” என்றார்.

“சாவித்ரி!” எனச் சத்யமூர்த்தியின் குரல் அவ்விடத்தில் தனித்துத் தெரிய… ரோஜா மொத்தமாக உடைந்து போனவள், அவனிடம் உண்மையை ஒப்புக்கொள்ள முன்வந்தாள்!

**- (தொடரும்…) -**

You may also like

Leave a Comment