உறவே உயிரே

by Pradhanya kuzhali
350 views

உயிரே8

செவ்வந்தி தன்னை விளக்கும் பொருட்டு, “ஹலோ, நான் செவ்வந்தி பேசுகிறேன்!” என்று கூறினாள்.

அன்பு ஒரு முறை இருமித் தன் தொண்டையைச் சரிசெய்தவன், “தெரியும் மேடம்! நான் உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை, சோ, போனை கட் பண்றேன்!” என அணைத்துவிட்டு தலையைக் கோதினான்.

செவ்வந்தி அதிர்ச்சியுடன், “எப்படி? எப்படித் தெரியும்? இப்போதானே முதல் முதலாக அழைக்கிறேன். அதுவும் இது நர்சரி நம்பர் கூட இல்லையே! எப்படி கண்டுபிடித்தான்?” என யோசித்தாள். அதன் பின் மீண்டும் அழைத்தாள்.

அன்பு வேண்டுமென்றே, “என்ன மேடம், என்ன வேணும்?” என்றான்.

அவள் மெதுவாக, “உங்களைப் பார்க்கணும்!” என்றாள்.

அன்பு சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தான். அதை அவளிடம் காட்டாமல், “நான் சைட்டுக்கு போறேன்!” என்று சொல்ல…

செவ்வந்தி அவன் சொல்வதைக் காதில் போட்டுக்கொள்ளாமல், “நான் இப்போ நீங்க தங்கி இருக்கும் வீட்டுக்கு முன்னாடி நிற்கிறேன்!” எனச் சொல்லி இணைப்பைத் துண்டித்தாள்.

அன்பு உற்சாகத்துடன் மியூசிக் பிளேயரை இயக்கினான். ‘லூசு பொண்ணே! லூசு பொண்ணே! லூசு பொண்ணே!’ என ஓட, அவன் கண்களில் செவ்வந்தி தெரிய ஆரம்பித்தாள். கன்னக்குழி சுருங்கும் அளவுக்குப் புன்னகைத்தான். அவனது காய்ச்சல் எந்தப் பக்கம் சென்றது என அவனுக்கே தெரியவில்லை. உட்காய்ச்சல் சூட்டில், அவள் சூடும் சேர்ந்து கொண்டது.

அன்புசெல்வன் உத்வேகத்துடன் வீடு வந்து சேர்ந்தான். தண்ணீர் தெளித்த பன்னீர் ரோஜா போல, செவ்வந்தியின் மேல் வியர்வை முத்துக்கள் வெயிலில் வடிய, சுற்றிலும் யாராவது வருகிறார்களா எனப் பார்த்துக்கொண்டே நின்று இருந்தாள். அவன் வந்த சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள்.

அன்பு அவளைக் கண்டுகொள்ளாமல் கதவைத் திறந்தான்.

செவ்வந்தியின் மனதில், ‘என்ன, கண்டுகொள்ளாமல் போறான்?’ எனத் தோன்ற, “ஹலோ சார்!” என்றாள்.

அன்பு வேண்டுமென்றே, “யாரது?” என சுற்றியும் பார்வையைச் சுழலவிட்டான்.

அதனால் கடுப்பானவள், “ஹலோ, டென்ஷன் பண்ணாதீங்க!” என்றாள்.

அன்பு அவளைப் பார்த்து, “இட்ஸ் மீ! என்னை கூப்பிட்டீங்களா? நீங்க என்னைத் தேடி வந்திருக்கீங்களா! என்ன ஒரு அற்புதம்!” என்றான்.

செவ்வந்தி முறைப்புடன், “உங்களைப் பார்க்க வந்திருக்கேன்னு தெரிஞ்சும் எதுக்கு இப்படி நடிக்கிறீங்க?” என்றாள்.

அன்பு அதைத் தவிர்த்து, “சரி, உள்ளே வாங்க மேம்!” என்றான்.

“இல்லை, இதைச் சாப்பிடக் கொடுக்கத்தான் வந்தேன்!” என்றாள் செவ்வந்தி.

அன்பு திரும்பி அவளைத் தலை முதல் கால் வரை பார்த்தான்.

அதில் கொஞ்சம் நெளிந்தவள், “என்ன, அப்படிப் பார்க்குறீங்க?” என்றாள்.

அன்பு சாதாரணப் பார்வையில், “நான் உங்ககிட்ட சாப்பிடக் கேட்டேனா?” என்றான்.

செவ்வந்தி என்ன சொல்வது எனத் தெரியாமல், “அது, அது வந்து… மாமாதான் சாப்பிடக் கொடுக்கச் சொன்னாங்க!” என்றாள்.

“அப்படியா?” எனச் சொல்லிவிட்டு, அவளைக் கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றான்.

செவ்வந்தி கடுப்பாகி, “ஐயோ முருகா! என்னங்க! நில்லுங்க!” எனச் சொல்லிக்கொண்டே சுற்றிலும் பார்வையைச் சுழற்றி உள்ளே சென்றாள்.

அன்பு தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவன் முன், செவ்வந்தி அனைத்து உணவுகளையும் வைத்தாள்.

“என்ன பண்றீங்க? எனக்கு வேண்டாம்! இப்போ எதுக்கு உள்ளே வந்தீங்க?” என்று அன்புசெல்வன் கேட்டான்.

செவ்வந்தி எதுவும் சொல்லாமல் எதிரில் அமர்ந்துகொண்டாள்.

அன்பு அவளையே பார்த்தான்.

“அப்படிப் பார்க்காதீங்க!” என முடியைக் காதுக்கு ஒதுக்கியவள்,

அன்பு, “என் முகத்தைப் பார்க்காமலேயே நான் பார்த்ததை எப்படி கண்டுபிடிச்ச?” என்று கேட்க,

செவ்வந்தி, என்ன சொல்வதெனத் திணறிக்கொண்டே அமர்ந்திருக்க…

அன்பு உணவுகள் அனைத்தையும் திறந்து எடுத்துச் சுவைக்க ஆரம்பித்தவன், “இதேபோலத்தான் எனக்குத் தெரியாமல் என்னை இந்த ஒரு மாசமும் பார்த்தயா?” என்றான்.

செவ்வந்தியின் இரண்டு கண்களும் வெளியே வருவதுபோல் பார்த்தாள். “நா… நான் ஒன்னும் பார்க்கல!” என்றாள்.

“என்ன?”

அன்பு புருவத்தை உயர்த்தி, “அப்படியா!” என்றான்.

செவ்வந்தி பதட்டத்துடன், “நீங்க எதுக்கு என்னைப் பார்க்கணும்?” என்றாள்.

அன்பு வேண்டுமென்றே, “அதுதான் ஏன் நான் உன்னைப் பார்க்கிறேன்? உனக்குத் தெரியாதா?” என்றான்.

செவ்வந்தி, “அதான் ஏன்? சொல்லுங்க!”

அன்பு, “நான் உன்னைப் பார்த்த விஷயத்தைத் தெரிந்து கொண்டே தெரியாத மாதிரி நடிக்க உனக்குத் தெரியும். ஆனா எனக்கு நடிக்கத் தெரியாது,” என்று சொல்லிக்கொண்டே உணவுகளைச் சுவைத்துச் சாப்பிட்டான்.

செவ்வந்தி உடனே எழுந்துகொண்டாள். “எனக்கு நர்சரிக்கு டைம் ஆச்சு, நீங்க சாப்பிடுங்க! நான் போறேன்!” என்றாள்.

அன்பு சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்.

செவ்வந்தி வேகமாகச் செல்ல, அன்பு, “நீ போகும்போது இதை எல்லாம் எடுத்துட்டுப் போ! எனக்கு வேண்டாம்!” என்றான்.

அவள் அவனைத் திரும்பி முறைத்தாள்.

அன்பு அவளுக்கு முன்னால் வேகமாகச் சென்று கைகளைக் கழுவச் சென்றவன், அப்படியே ஒரு நிமிடம் தள்ளாடினான்.

செவ்வந்தி உடனே அவனைப் பிடித்துக்கொண்டாள். “என்னங்க! என்னங்க!” என்றாள்.

அன்பு அவளை விலக்கி, “ஐம் ஆல்ரைட். நீங்க கிளம்புங்க!” என அவளது கையை எடுத்துவிட்டான்.

செவ்வந்தி பதட்டத்துடன், “சாப்பிடுங்க! வாங்க!” என அழைத்துச் சென்றாள்.

“நீ கிளம்புகிறாயா?”

செவ்வந்தி, “இல்ல வாங்க! உங்களை எப்படி உங்க அம்மா சமாளிச்சாங்க?” என்றாள்.

அன்பு, “என் மம்மி இப்போ நட்சத்திரங்களிடம் இருப்பாங்க!” என்றான்.

செவ்வந்தி, “உங்க அம்மா இல்… இல்லையா?” என்றாள்.

அன்பு எந்த உணர்வையும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல், “என் மம்மிக்கு யூட்ரஸ் கேன்சர். அதுவும் கடைசி ஸ்டேஜ்லதான் கண்டுபிடிச்சோம்! என் மம்மி கொஞ்சம் கஷ்டப்பட்டுட்டு போயிட்டா!” என்றான்.

செவ்வந்தி வருத்தப்பட்டு, “சாரி, நான் தெரியாமல் கேட்டுவிட்டேன்! மன்னிச்சிடுங்க!” என்றாள்.

அன்பு உதட்டைக் கடித்துக்கொண்டு தலையைக் கோதியவாறு, “இட்ஸ் ஓகே!” என்றான்.

செவ்வந்தி அவனிடம், “அப்போ சாப்பிடுங்க!” என்றாள்.

அன்பு மெதுவாக உணவைச் சாப்பிட ஆரம்பித்தான்.

செவ்வந்தி எதை எதையோ யோசித்து, “நீங்க ஃப்ரெண்டு அப்படிதானே என்னைப் பார்க்க வந்தீங்க?” என்றாள்.

அன்பு அவளைப் பார்த்து, “என்ன?” எனக் கேட்டான்.

“ஆமா, அப்படித்தானே! நீங்க என்னோட ஃப்ரெண்டு!” என செவ்வந்தி சமாளிக்க…

உடனே அன்புசெல்வன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.

செவ்வந்தி அவனை கண்டுகொள்ளவில்லை.

அவன் உணவை முழுவதும் சாப்பிட்டுவிட்டு, கைகழுவிக்கொண்டு அவள் முன் வர, அதற்குள் வேகமாகப் பாத்திரங்களை எடுத்து அடுக்கினாள்.

“நான் உன்கிட்ட பேசணும்!” என்றான்.

“எனக்கு டைம் ஆகுது! நர்சரி போகணும்!” என அனைத்தையும் பேக் செய்துகொண்டு அவள் திரும்ப, அங்கே வழியை மறைத்துக்கொண்டு, கைகளைக் கட்டி நின்றான்.

“என்ன பண்றீங்க?” என அவள் திடுக்கிட்டுப் பார்க்க…

“நான் பேசுறதைக் கேட்டுட்டுப் போ!” என அன்பு சொல்லிக்கொண்டே அருகில் நெருங்கினான்.

“எனக்கு ஒண்ணும் கேட்க வேண்டாம்! தள்ளுங்க!” என அவனுக்கு எதிரில் நின்றாள்.

அன்பு சட்டென அவளை ஒரே பிடியில் சுவற்றில் கொண்டு வந்தான்.

செவ்வந்தியின் கண்கள் பெரிதாக விரிய, அவனைப் பார்த்தாள். “விடுங்க!” என கையை ஆட்டித் தடுத்தாள்.

அன்பு, “ஐ காண்ட்! உன்னைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியல, புரியுதா!” என்றான்.

“நீங்க எதுக்கு என்னைப் பார்க்கணும்!” என அவள் விலகப் போராட…

அன்பு இதற்கு மேல் பொறுமை இல்லாமல், “செவ்வந்தி, ஸ்ட்ரைட் டூ தி பாயிண்ட்… ஐ லவ் யூ! உன்னை முதல்முதலில் பார்த்த அந்த நிமிஷம்தான்டி என் நினைப்பை மாற்றி தொலைச்சது!” என கன்னத்தில் முத்தமிட வந்தான்.

செவ்வந்தி கன்னத்தை மறைத்துக்கொள்ளத் தூக்க, அவள் கையில் இருந்த பையை கீழே போட்டாள். “எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை! ப்ளீஸ், என்னை விடுங்க!” என்றாள்.

அன்பு அவளிடம் இருந்து பிரிந்து வழிவிட்டவன், கன்னக்குழி தெரிய சிரித்துக்கொண்டே, “நீ என்னைப் பார்க்க வராமல் இருந்து, அப்போ இதைச் சொல்லி இருந்தா நான் நம்பி இருப்பேன். சோ, இப்போ நம்ப மாட்டேன்! செவ்வந்தி… செவ்வி ரைட்!” என்றான்.

செவ்வந்தி கோபமாகப் பார்த்தவள், “இல்லைன்னு சொன்னால் விடுங்களேன்! எதுக்கு என்னைத் தொந்தரவு பண்றீங்க!” என்றாள்.

அன்புசெல்வன் அவளை நெருங்கி அருகில் வந்தவன், சட்டென மிகவும் நெருங்கி, அவள் கையை எடுத்து வாயைப் பொத்தி, அவளின் கையின் மேல் அதாவது அவளின் இதழ்களுக்கு மேல் வைக்கப்பட்ட அவளின் கையில் முத்தம் பதித்தவன், கொஞ்சம் கொஞ்சமாகக் கையை எடுத்துக்கொண்டு முத்தமிட்டான்.

செவ்வந்தி கோபமும் பதட்டமும் சேர்ந்து கொள்ள, அவனை வேகமாகத் தள்ளிவிட்டாள்.

அன்பு வேக மூச்சுடன், “ம்ம், பரவாயில்லையே!” என்றான்.

செவ்வந்திக்குப் பதட்டத்தில் கோபம் வர, கண்கள் எல்லாம் சுழல ஆரம்பித்தது. அவள் அப்படியே ‘பொத்தென’ பாத்திரங்களைக் கீழே தவறவிட்டு மயங்கினாள்.

அன்பு இதைச் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. அவன் பயந்துபோய், கீழே விழப் போனவளைக் கைகளில் தாங்கிப் பிடித்துக்கொண்டான்.

அவளை வேகமாகப் படுக்கையில் தூக்கிச் சென்றான். கைகளைத் தேய்த்துவிட்டு தண்ணீரைத் தெளித்தான்.

அவள் மெதுவாகக் கண்களைத் திறந்தாள். முகம் எல்லாம் வியர்க்க ஆரம்பித்தது.

அன்புசெல்வன் அவளின் முகத்தைப் பார்த்து, “என்ன ஆச்சு?” என்று கேட்டான்.

செவ்வந்தி வேக மூச்சுடன் உடல் நடுங்க, அவன் முன் அமர்ந்தவள், “காக்க காக்க கனகவேல் காக்க, நோக்க நோக்க…” என வாய் முணுமுணுக்கத் தொடங்கியது.

“ஹே, என்ன ஆச்சு?”

செவ்வந்தி அவனைப் பார்த்து, கண்ணை மூடிக்கொண்டு, “ப்ளீஸ் என்னை விடுங்க!” என்றாள்.

அன்பு பதட்டத்துடன், “நான் ஒண்ணும் பண்ணலடி! நீ பண்றதைப் பார்த்தால் எனக்கு பயமா இருக்கு! முதல்ல என்ன ஆச்சுன்னு சொல்லு!” என்றான்.

செவ்வந்தி அழுதுகொண்டே, “எனக்கு அதிகமா பயமும் அழுகையும் ஒரே நேரத்தில் வந்தால் மயக்கம் வந்திடும்! சோ, ப்ளீஸ் என்னை விடுங்க!” என்றாள்.

அன்பு அவனது இயல்பான கோப முகத்தை மறந்து, கனிவுடன், “என்னை உனக்குப் பிடிக்கலையா? நான் உன்னை லவ் பண்றேன்னுதானே சொன்னேன்! ஏமாற்ற மாட்டேன் செவ்வி, நாம மேரேஜ் பண்ணிக்கலாம்! அதுக்கு முன்னாடி உன்னை நான் எதுவும் செய்ய மாட்டேன்!” என்றான்.

செவ்வந்தி கண்ணை மூடிக்கொண்டே, “ப்ளீஸ் என்னை விடுங்க, நான் போகணும்!” என்றாள்.

அன்புசெல்வனுக்கு அவளின் இந்தச் செயல்கள் அனைத்தும் கோபத்தைக் கொடுத்தது.

“சரி, போ!” எனச் சொல்லி ‘பொத்தென’ அமர்ந்தான். உள்ளுக்குள் வலி ஒட்டிக்கொண்டது.

செவ்வந்தி வேகமாக அவளது பாத்திரங்களை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.


அருண் அவனுடைய புல்லட்டில் வந்துகொண்டிருக்க, ஆற்றுப் பாலம் அருகே சத்யா கையை காட்டினாள்.

“என்னங்க, கொஞ்சம் என்னைக் கணபதிபாளையத்தில் இறக்கி விட்டுடுங்க!”

அருண், “முடியாது! இப்போ பஸ் வரும், அதுல போங்க!” என்றான்.

“ஹே, இப்போ ஏத்திட்டுப் போவியா மாட்டியா!” என புத்தகப் பை மற்றும் ஊரிலிருந்து கொண்டு வந்த பெட்டியுடன் சத்யா கேட்டாள்.

அருண், “முடியாதுன்னு சொல்றேன்ல, தள்ளுங்க!” என்றான்.

சத்யா, “சரி நான் போறேன்! நேரா முத்த மாமா வீட்டுக்குப் போய், என்னை வாய்க்கால் துணி துவைக்க கூட்டிப் போன கதை, கூடவே கூட்டாஞ்சோறு ஆக்கிப் போட்ட கதை எல்லாத்தையும் சொல்லி நியாயம் கேட்காமல் விட மாட்டேன்!” என்றாள்.

அருண், “ஹே, பொய் சொல்லாதடி! நீதான் கூட்டிட்டுப் போன, நான் இல்லை! ராங்கி வாடி! சும்மா சொன்னேன்!” என அருகில் சென்றான்.

சத்யா சிரித்துக்கொண்டே, “மாமா, ஏமாற்ற மாட்டியே! காலேஜ் போன நாளில் இருந்து உன் நினைப்புதான்! எப்போ மாமா கட்டிக்கலாம்?” என வண்டியில் ஏறிக்கொண்டே கதை பேச ஆரம்பித்தாள்.

அருண், “செவ்வந்தியின் கல்யாணம் முடிஞ்சதும் கட்டிக்கலாம்!” என்றான்.

சத்யா, “அக்காவுக்கு எப்போ கல்யாணம்? நீ கட்டிக்கிற மாதிரி நான் கேள்விப்பட்டேனே! என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா?” என்றாள்.

அருண், “ம்ம், எனக்கு ஓகேதான்!”

“கொன்னு போடுவேன் மாமா! என்னை இறக்கிவிடு!” என்றாள்.

“ஹே, சும்மா சொன்னேன்!” என்றான்.

சத்யா, “என்னதான் இருந்தாலும், செவ்வந்தி அக்கா போல உனக்கு வருமா? நான் இரவல் அத்தை பொண்ணுதான!” என்றாள்.

இதை கேட்டதும் அருண்…?

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment