என் ஆசையெல்லாம் உன் நெருக்கத்திலே

by Pradhanya kuzhali
673 views

Episode – 2

“ஒரு புருஷனா உன் கிட்ட எல்லா உரிமையும் எனக்கு இருக்கு. அதே போல மனைவியா நீ என் கிட்ட எதிர்பார்க்கும் விசயத்தை நான் நிச்சயமா புல்ஃபில் பண்ணிடுவேன்.” என சொல்லிக் கொண்டே ஜீவா எழுந்து நின்றான். 

“என்ன ஜீவா இப் இப்படி பேசுறீங்க?”

“வேற எப்டி பேச சொல்ற? எனக்கு அதிகமா பேச பிடிக்காத. இன்னிக்கு நம்ம ரெண்டு பேருக்கும் ஃபர்ஸ்ட் நைட். சோ அந்த வேலையை பார்க்கலாமா” 

“என்ன?” என வானதி விதிர்விதிர்த்து பார்க்க, “என்னோட பொண்டாட்டியா உனக்கு என்னோட விரகதாபத்தை தீர்த்து வைக்கும் கடமை இருக்கு. என்னோட உணர்வுகளுக்கு வடிகால், அது கூடவே ஹியூமன் ரிப்ரோடெக்ட் ப்ராசஸ். என்னோட ஜெனரேசன் உன்னோட வயிற்றுக்குள் தானே வளரனும். அதுக்கு தானே இந்த கல்யாணம்” என ஊசியான வார்த்தைகளால் பேசினான். 

“ஜீவா நான் அது வந்து” என வானதி பேச, “நீ பேசுறதா இருந்தால் அப்படி தனியா போய் பேசு. எனக்கு தூக்கம் வருது” என்றான். 

துக்கம் தொண்டையை அடைக்க ஒவ்வொரு பெரு மூச்சாக இழுத்து விட்டவள். “சரி நான் ரெடி” என்றாள். 

“எதுக்கு ரெடி? இப்படி மொட்டையா சொன்னா எனக்கு எப்படி தெரியும்? தெளிவா சொல்லு?” என கண்ணாடியை மூக்குக்கு தள்ளினான் ஜீவா.

“உங்க கூட குழந்தை பெத்துக்க ரெடி”என்றாள் வானதி கண்களில் நீர் கோர்க்க, “உனக்கு விருப்பம் இல்லன்னா வேணாம் நீ தூங்கு..”

“இல்ல எனக்கு விருப்பம் தான் ஜீவா” என்றாள் மெல்லிய குரலில்..

“ஓ அப்படியா சரி ஸ்டார்ட் பண்ணு” 

“என்ன சொல்றீங்க புரியல ஜீவா?”

“என்னைய பார்த்தால் எப்படி தெரியுது? உன்னோட மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? இவ்வளவு காஸ்மெட்டிக் அது கூடவே இந்த ட்ரெஸ் ஜ்வல்ஸ் இது எல்லாம் யார் ரிமூவ் பண்றது?” என ஜீவா கூலாக கேட்டான். 

“அப்போ அதுக்கு அர்த்தம்?” 

“எல்லாமே நீ தான் கலட்டனும். எல்லா நாளும் நமக்குள் ஜஸ்ட் செக்ஸ் அவ்ளோ தான்” என்றான் ஜீவா. 

வானதி கண்களில் நீர் கோர்க்க நிலை கண்ணாடியின் முன் சென்றவள். கைகளில் வளையல், காதில் தோடு, கழுத்தில் அணிந்திருந்த ஆரம் நெக்லஸ் என அனைத்தையும் கழட்டி கொண்டிருந்தாள். 

“ஹே!!”

வானதி மெதுவாக திரும்பி பார்க்க, “முக்கியமா அந்த கொலுசு அதை கழட்டிடு என்னை கேட்டால் அதை நீ போடாத it’s top இரிட்டேடிங்” என்றான் ஜீவா. 

இவ்வளவு நேரமும் கொஞ்சம் கொஞ்சமாக கசிந்த கண்ணீர் துளிகள் ஜீவா பேசியதை கேட்டதும்  இப்பொழுது வானதியின் கண்களில் கண்ணீர் சரசரவென கொட்ட தொடங்கியது. 

தங்கக் கொலுசல்லி…

கொலுங் குயில்லல்லி…

மாரன மயில்லல்லி…

குங்குமம் ஏன் சூடினேன்…

கோலமுத்தத்தில் கலையத்தான்…

கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன்…

கூடல் பொழுதில் கசங்கத்தான்… என்ற வரிகள் நினைவுக்கு வந்தது மெதுவாக வெற்று புன்னகை சிந்தினாள் வானதி.

“அப்படியே இங்கே வந்து இந்த பிளவர்ஸ் எல்லாத்தையும் ரிமூவ் பண்ணு சச் அ இரிடேடிங். அண்ட் முக்கியமா உன் தலையில் இருக்கே அதையும் ரிமூவ் பண்ணு எனக்கு தலை வலிக்கும்.” என ஜீவா சொல்ல.. 

மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு…

கட்டில்மேலே நசுங்கத்தான்…

தீபங்கள் அணைப்பதே…

புதிய பொருள் நாம் தேடத்தான்…  பெண்களுக்கு உண்டான அனைத்து ஆசையை போல அவளது ஆசையும் மொத்தமாக இந்த நொடி கற்பூரமாக காற்றில் கரைந்து போனது. வானதி எதுவும் பேசாமல் அனைத்தையும் அவன் சொன்னதை போலவே செய்து முடித்தாள். 

ஜீவா எழுந்து உடலை நெளித்து சோம்பல் முறித்தவன். “என்ன சாரியில் இருக்க இதை யார் கலட்டுவா?”

“எப்படி? என்ன சொல்றீங்க?” என வானதி ஒரு வித தயக்கத்துடன் கேட்க, “போ அந்த கப்போர்ட்ல டர்கிஷ் டவல் இருக்கு. உன்னோட 8 முழம் புடவைய கழட்டி வச்சிட்டு அதை போர்த்திக்கிட்டு பெட்டுக்கு வா” என்றான் ஜீவா. 

“என்ன ஜீவா இது?” என வாய் விட்டு கேட்கத்தான் நினைத்தாள் வானதி. அப்படி கேட்டு விட்டால் அவனது சொற்கள் இன்னும் ஊசியை போல பாயும் என தெரிந்தவள் பாத் ரூம் சென்று மொத்த உடையையும் கழட்டி விட்டு மார்பில் சுற்றப்பட்ட துண்டுடன் வந்தாள் வானதி. 

அதற்குள் அவனது ஆடையும் காணாமல் போயிருக்க அந்த பறந்து விரிந்த படுக்கை அறையில் பால்கனியில் இருந்து வரும் வெளிச்சத்தில் அவர்களின் படுக்கையில் ஒரே ஒரு லைட் மட்டும் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தது. 

“வா சீக்கிரம் தூங்கனும் நாளைக்கு ஹாஸ்பிடல் போகனும் கம் கம்” என அழைத்தான் ஜீவா. 

வானதி அவனுடன் அருகில் நிற்கும் போது கொஞ்சம் குட்டை தான். அவளின் இடையை தாண்டி கூந்தல் பரந்து விரிந்திருக்கும். இப்பொழுது கூந்தல் மொத்தத்தையும் விரித்து விட்டிருந்தாள். ஜீவாவின் முன் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு போய் நிற்க அவளுக்கு திராணி இல்லை. அதனால் முடியையும் தொங்க விட்டு கவர் செய்து இருந்தாள். 

படுக்கையை பார்க்க முள் படுக்கை போல தோன்றியது. இன்னும் என்ன செய்ய காத்திருக்கிறான் என தெரிய வில்லை. உள்ளங்கை உள்ளங்கால் வியர்க்க அருகில் இருக்கும் AC ரிமோட்டை எடுத்து இன்னும் கொஞ்சம் குறைத்தான். அறையின் குளுமை 22ல் இருந்தது. 

இரையை கொத்தும் கழுகை போல அவளை பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா. இதோ படுக்கைக்கும் வந்தாயிற்று. “ஆரம்பிக்கலாமா?” என ஜீவா அவளுக்காக காத்திருக்க, “வேணாம் வேணாம்” என உள்ளுக்குள் ஒரு நடுக்கம். 

“ப்ச் உன்னோட முழிய பார்த்தால் பிடிக்கலன்னு தெரியுது. பிடிக்காம செஞ்சா வலிக்கும் im a doctor not அ” என அந்த வார்த்தையை அவன் சொல்ல விரும்ப வில்லை. 

“இல்ல எனக்கு பிடிச்சிருக்கு. உங்களை பிடிச்சிருக்கு அது உங்களுக்கே தெரி’ என வானதி சொல்லி முடிக்க விட வில்லை. 

“போதும் தேவையில்லாம பேச வேணாம்” என்றவன். அவளின் அருகில் நெருங்கினான். வானதி எதுவும் பேசாமல் படுக்கையில் அமர்ந்து கொள்ள.. 

“என்ன பண்ற நீ?” 

“என்ன ஜீவா?” 

“நீ நர்சிங் தானே படிச்சிருக்க? உனக்கு தெரியாதா? மிசினரி பொசிசன்” என கேட்டான் ஜீவா. 

வானதி புரியாமல் “ஜீவா என்ன பேசிட்டு இருக்கீங்க? உங்களுக்கே அபத்தமா இல்லையா?”

“இப்போ என்ன சொல்ல வர? எனக்கு அது மட்டும் தான் தெரியும்” என ஜீவா சொல்ல, வானதி அவனை பார்த்து முறைத்தாள். 

“என்ன?” என அதட்டினான். 

ஒரு பெரு மூச்சை விட்ட வானதி. “ஒரு கணவன் மனைவிக்குள் இது இப்படி ஆரம்பிக்க கூடாது. நீங்க இதை ஒரு வேலையா பார்க்கிறீங்க? டாக்டர் மூளை வேற எப்படி பார்க்கும்? நான் ஆப்பரேசன் தியேட்டரில் படுத்திருக்க மாதிரி உடனே மிசினரி பொசிசன் வான்னு சொல்றீங்க?” 

ஜீவா எகத்தாலமாக சிரித்துக் கொண்டு “ஆமா சரி தான். இப்போ அதுல உனக்கு என்ன பிரச்னை?” என தெரிந்து கொண்டே கேட்டான்.

“ஃபர்ஸ்ட் டைம் வலி.. வலிக்..  வலிக்குமே!” என தயங்கி கொண்டே கூறினாள். 

“பிடிக்காமல் செஞ்சா தான் வலிக்கும்” am I correct வானதி? அப்போ பிடிக்காம எதுக்கு கல்யாணம் பண்ண? எதுக்கு உங்க அண்ணன் கிட்ட சரின்னு சொன்ன? சொல்லியிருக்க வேண்டியது தானே! உனக்கு என்னை பிடிகாதுன்ற உண்மையான விசயத்தை.” என கேட்டான் ஜீவா. 

இதயத்தை யாரோ சம்பட்டியால் அடித்த வலியை உணர்ந்தாள் வானதி. இப்படியே நேரம் செல்ல..

“இப்போ முடிவா என்ன சொல்ற?”

“எனக்கு பிடிச்சிருக்கு.”

“ப்ச்”

“அதை ஆயிரம் முறை சொன்னாலும் அக்சப்ட் பண்ணிக்க நீங்க தயாரா இல்ல.” 

“இட்ஸ் ஒகே வாங்க” என அழைத்தாள். 

“ம்ம் படு” என்றான் ஜீவா. 

ஒரு வித தயக்கத்துடன் “அது அட்லீஸ்ட் ஒரு ஃபோர்பிளே! நீங்க கொடுக்கிற முத்தம் கூட இந்த ரிபுரடெக்ட்டிவ் சிஸ்டத்தில் ஒரு தொடக்கம் தான” என்றாள் ஏக்கத்துடன் வானதி. 

“ஃபோர்பிளே”  என புருவத்தை தூக்கினான். 

அவள் கன்னம் சிவக்க தலையை குனிந்து கொள்ள, “எனக்கு அதில் இஷ்டம் இல்ல” என்றான் வெடுக்கென..

அவள் வலியுடன் பார்க்க, ஜீவா அவளின் அருகில் நெருங்கி “நான் உன்னோட புருசன் சோ நீ என்ன வேணாலும் பண்ணிக்கலாம். அதுக்கு நான் எந்த தடையும் சொல்ல மாட்டேன்” என்றான் ஜீவா. 

‘ஓ இவன் முத்தம் கொடுக்க மாட்டானாம். ஆனால் இவனுக்கு அந்த புள்ளை வெட்கத்தை விட்டு முத்தம் கொடுக்கணும் கட்டிக்கனும். எல்லாமே பண்ணனும். டேய் யாரு டா நீ?’

அவன் சொன்ன அர்த்தம் அவளுக்கு புரிந்து விட அந்த வட்ட முகத்தில் உள்ள கண்ணகுழி வெட்கத்தில் கொஞ்சம் ததும்ப தான் செய்தது. ஜீவா திட்டினால் கண்ணீராய் கரைகிறாள். அவனது பார்வைக்கு உருகி இளைகிறாள். யாரு டி நீ? எதுக்கு இவன் கிட்ட இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கிற? 

“சாய்ஸ் உன் கிட்ட இருக்கு. உன்னோட விருப்பம்” என சொல்லாமல் சொல்லி விட்டான். அவளும் பெண் தானே அவளுக்கும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என அத்தனையும் இருக்க தானே செய்யும். இதோ நெருங்கி அவனது உதட்டுக்கு அருகில் வந்தாள். மெல்ல உதடுகளில் ஒற்றி எடுத்தாள் வானதி. 

அவளின் அருகில் தேகத்தில் படாமல் ஒரு கழித்து படுத்திருந்தான் ஜீவா. வானதி மெல்ல மெல்ல அவனது உதட்டில் முத்தமிட்டு கொண்டே கைகளை பிடித்து பின்னந்தலைக்கு கொடுத்தாள். 

உதடுகள் இரண்டும் வேகவேகமாக மோதி கொண்டது. அவளை விட வேகமாக இருந்தான் ஜீவா. அவள் வெடுக்கென முழித்து முத்தத்தில் திணற ஆரம்பித்தாள். ஆனால் அவனுக்கு வாகாக தலையை சாய்த்து கிறங்கி இளைந்தாள். இத்தனை வேகம்? மோகம், காதல் எல்லாமே வச்சுக்கிட்டு எதுக்கு ஜீவா இப்படி பண்றீங்க? என உள்ளுக்குள் மருகினாள். ஒரு கட்டத்தில் அவளால் முடியாமல் போக முத்தத்துக்கே சோர்ந்து விட்டாள் வானதி. 

‘ஜீவா கண்ட்ரோல் யுவர் செல்ஃப்’ என உள்ளுக்குள் அவனுக்கான அசரீரி ஒலிக்க மெல்ல அவளிடம் இருந்து விலகி படுத்தான். 

அவன் விலகும் நேரம் ஒட்டிக் கொண்டவள். “சாரி ஜீவா. பிளீஸ் தப்பா நினைச்சுக்காதீங்க” என அருகில் நெருங்கினாள் வானதி. 

“உனக்கு என்ன தோணுதோ அதை செய் வானதி. நான் உன்னோட புருசன்” என மீண்டும் கூறினான் ஜீவா. 

 நெருக்கம் தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment