அத்தியாயம் – 11
நான் சொல்றதை கேளு! இந்த கல்யாணம் நமக்கு வேண்டாம். அவங்கள பத்தி உனக்கு தெரியாது. நம்ம என்னைக்குமே வெட்டின உறவ ஒட்டுனா அந்த அளவுக்கு அது நல்லா இருக்காது. தேவையில்லாம நீ அங்க போய் கஷ்டப்பட போறியா? நம்ம வீட்ல எப்படி இருந்த! வீணா அங்க போய் கஷ்டப்படாத. உங்க அத்தக்காரி பத்தி உனக்கு தெரியாது உன்னை கொடுமை பண்றதுக்காக தான் கல்யாணம் பண்ணிட்டு போறா! நான் சொல்றதை கேளு! என்று மல்லிகா அவளின் மனதை கரைக்க பார்த்தார்.
மான்வி யோசிப்பது போல தெரிய, உனக்கு என்ன வேணும்னு சொல்லு அம்மா நான் எல்லாமே பண்ணி தரேன். என் பக்கம் நில்லுடி என்று மல்லிகா அவளின் முகத்தை எதிர்பார்ப்புடன் பார்த்திருந்தார்.
ஒரு சில நொடிகள் கழிந்தது. மான்வி என மல்லிகா அழைக்க, “நான் முடிவு பண்ணிட்டேன்!”
“என்ன? அந்த கண்ணன் உனக்கு வேணாம் தான!”
“நான் அவனை தான் கட்டிக்க போறேன்.”
இனி எனக்கு ஒரு பொண்ணு தான் அது மைதிலி மட்டும் தான் என மல்லிகா வேகமாக உள்ளே சென்றாள்.
இந்த மாத இறுதியில் கோவிலில் திருமணம் அடுத்து பிரம்மாண்டமாக ரிசப்ஷன் என முடிவெடுக்க பட்டது.
மோகன் மற்றும் பொன்மலர் இருவரும் போனும் கையுமாக சுற்றி கொண்டிருந்தார்கள். ஆனால் அதற்கு எதிராக இருந்தது இன்னொரு ஜோடி. மோகன் போனை நோண்டி சிரித்த படி செல்ல “தங்கமே உன்னை தான் தேடி வந்தேன் நானே” என பாடல் வரிகள் கேட்க ஹை மலர் என அட்டன் செய்தான். அப்பொழுது தான் பள்ளியில் இருந்து வந்ததும் ஜானிடம் கொஞ்சி கொண்டிருந்த மான்வியின் கண்களில் விழுந்து விட்டான்.
“ஹே மோகா!!”
அய்யோ ராட்சஸி இருக்கிறத கவனிக்காம போய்ட்டேனே! என நினைத்துக் கொண்டே திரும்பியவன் “சொல்லு மான்வி!”
போன்ல யாரு? என புருவம் அவள் புருவம் சுருக்க…, “அது மலர்!!”
ஜானின் தலையை வருடி விட்ட படி அவனை முறைத்தாள்.
நான் கால் பண்றேன் தங்கம் என மோகன் போனை வைக்க, ஹோ தங்கமா! வாடா வா! என அழைத்தாள்.
“சொல் சொல்லு மான்வி”
“எனக்கு ரொம்ப முதுகு வலி அப்படியே வந்து பிடிச்சு விடு! அண்ட் காலில் சொடக்கு எடுத்து விடு”
மோகன் பரிதாபமாக பார்த்தான்.
‘என்ன டா? அப்படி பார்க்கிற வா! வந்து பண்ணு! இந்தா இந்த பேக்கை தூக்கிட்டு வா!”
“மான்வி நீ அநியாயம் பண்ற!” என மோகன் சொல்ல..
என்ன சொன்ன?
ஒன் ஒன்னும் இல்ல வா நான் பண்ணி விடுறென். உனக்கு பண்ணாம நான் வேற யாருக்கு பண்ண போறேன். என அவன் வேலையை ஆரம்பித்தான்.
“மோகா!”
சொல்லு!
“அப்படியே என்னோட தலைக்கு எண்ணெய் போட்டு விடு! அப்படியே மசாஜ் பண்ணு!”
இதோ என எண்ணெய் பாட்டிலை எடுத்தான். சரியாக அந்த நேரம் கோபியின் போன் சிணுங்கியது.
மீண்டும் மீண்டும் போன் அலறி கொண்டே இருந்தது. “அப்பா இங்கே இல்ல போலயே போன் அடிச்சுக்கிட்டே இருக்கு.”
அவரு வந்து பேசிக்கிவார் நீ வேலைய பாரு! என மான்வி வாகாக அமர்ந்தாள்.
இரு மானு என போனை பார்க்க மகேஷ் அக்கா என்று இருந்தது. அத்தை என புன்னகையுடன் போனை எடுத்தான்.
“சொல்லுங்க அத்தை!”
“மோகா அப்பா இல்லையா?”
“அப்பா வெளியே இருக்காங்க சொல்லுங்க அத்தை என்ன விசயம்?”
ஜவுளி எடுக்கறது பத்தி பேச தான் போன் பண்ணேன் கண்ணு. கண்ணனுக்கு அடுத்த வாரத்தில் வர முடியாதாம். இந்த ரெண்டு நாளில் பார்க்க சொல்லிட்டான். நான் நாளைக்கு பார்க்கலாம்ன்னு யோசிக்கிறேன். மலர நாளைக்கு கூட லீவ் போட வச்சிடுவேன். உங்களுக்கும் சரியா கண்ணு, மானுக்கு ஒகேவா? அப்பாவால வர முடியுமா? என கேட்டார் மகேஸ்வரி.
ஒன்னும் பிரச்னை இல்லங்க அத்தை! அப்படியே பண்ணிப்போம். ரொம்ப நல்லது கண்ணு! என மகேஷ் கூற, அவங்களுக்கு சரியாம் டா கண்ணா என கூறினார்.
அத்தை மச்சான் பக்கத்தில் தான் இருக்காரா? கொடுங்க நான் பேசுறேன். என கண்ணனிடம் பேசினான் மோகன். பொதுவாக கல்யாணத்தை பற்றி உரையாடி கொண்டிருந்தவன் தனக்கு எதிரில் நன்கு சேரில் சாய்ந்து கொண்டு ஜம்பமாக காலை ஆட்டிய படி இருக்கும் மான்வியை பார்த்தவன். தந்திரமாக புன்னகை செய்த படி மச்சான் அப்புறம் எந்த கடையில் புடவை எடுக்கலாம்?
“ஸாரி பத்தி அவ்ளோவா எனக்கு தெரியாது அம்மா கிட்ட மலர் கிட்ட கேட்டுகோங்க.”
ஆமா அதுவும் சரி தான் ஆனால் மான்வி இதுல செம்மயா choose பண்ணுவா இருங்க நான் அவள் கிட்ட கொடுக்கிறேன். என நேக்காக திருப்பி விட்டான்.
கண்ணன் கண்களை இருக்கி மூடி திறந்தான். மான்வி மான்வி! இந்தா!
யாரு? என காலை ஆட்டிய படி கேட்டாள்.
மச்சான் டி!
எந்த மச்சான்? என அவள் சாதாரணமாக கேட்க, “ஹே கண்ணன் மச்சான் லைன்ல இருக்காரு! உன் கிட்ட பேசனுமாம் ம்ம் சீக்கிரம் சீக்கிரம் போனை வாங்கு!”
ஒரு நிமிடம் புருவம் நெருக்கியவள். கருவாவா? கருவா என் கிட்ட பேச போன் பண்ணானா? என பார்த்தாள்.
ஹலோ என கம்பீர குரல் கணீரென ஒலிக்க, இருங்க மச்சான் மான்வி கிட்ட கொடுக்கிறேன் என அவளின் கையில் திணித்தான் மோகன்.
மான்வி ஒரு வித தயக்கத்துடன் போனை வாங்கியவள் தொண்டையை சரி செய்து ஹலோ என அழைத்தாள்.
அந்த நேரம் பார்த்து கோபி வீட்டுக்குள் என்னோட போன் எங்கே என அனைத்து இடத்திலும் தேடினார்.
ஹே அப்பா போனை தேடுறார். போனை கொடு என வாங்கியவன். மச்சான் நீங்க மான்விக்கு போன் பண்ணி பேசுங்க.
என் கிட்ட அவள் நம்.. என கண்ணன் இடை நிறுத்தினான் பேச்சை..
ஹே மோகா என மான்வி அதட்ட, மோகன் அவனது போனில் இருந்து மான்வியின் எண்ணை கண்ணனுக்கு அனுப்பி விட்டான். மச்சான் உங்களுக்கு அவளோட நம்பர் அனுப்பிட்டென். அவள் ஃப்ரீயா தான் இருக்கா தாராளமா பேசுங்க.. ஹே மச்சான் கிட்ட பேசு புடவை பத்தி கேட்கணுமாம் என இருவரையும் கோர்த்து விட்டு சென்று விட்டான்.
இருவரும் போன் பேசினார்களா? ம்ம் ஹிம் எண்ணை கொடுத்தவுடன் சரி அவளும் அழைக்க வில்லை. அவனும் கூப்பிட வில்லை. அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது.
இன்னிக்கி புடவை எடுக்க போறோம் வா மல்லிகா! என கோபி அழைக்க, மைதிலி நான் வீட்டுக்கு போகனும். உங்களுக்கு தான் முதல் பொண்ணு இருக்கிறதயே மறந்துட்டீங்க நான் அப்படி இல்ல என உதட்டை சுளித்த படி சென்றார்.
கோபி ஒரு பெரிய மூச்சை விட்ட படி பார்த்தார். எப்பொழுது தான் மாறுவாள் என தோன்றியது. விடுங்க பா என சமாதானம் செய்தான்.
அந்த நேரம் பார்த்து மான்வி பள்ளிக்கு கிளம்பி இருந்தாள்.
ஹே புடவை எடுக்க போறோம் மறந்துட்டயா?
எனக்கு எல்லாம் நியாபகம் இருக்கு. பதினொரு மணிக்கு மேல் தான! இன்னிக்கு முக்கியமான வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு வரேன். நீங்க கடைக்கு போங்க என்றாள் பரபரப்புடன் கிளம்பி கொண்டே..
மா புடவை எடுக்க நான் எதுக்கு மா! என கண்ணன் போனில் எரிந்து விழுந்தான் தாயிடம்.
உனக்கு புரியுதா இல்லையா? பொன்மலர் மோகன் ரெண்டு பேரும் சேர்ந்து செலக்ட் பண்ணுவாங்க. அங்கே மான்வி மட்டும் தனியா நிப்பா! என் தம்பி உன்னை பத்தி கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்.
நீ என்னமோ சொல்லு என்னைய ஆளை விடு பணம் உனக்கு அனுப்பிட்டேன். நான் மோகனுக்கு கோட் எடுத்து கொடுக்கும் போது நான் ட்ரெஸ் எடுத்துப்பேன் என போனை வைக்க போக, கண்ணா என அதட்டினார் மகேஸ்வரி.
ப்ச் என்ன?
நீ வந்து தான் ஆகணும்.
முடியாது.
அப்போ நான் என்ன பண்றேன்னு பாரு! இனி என்னை நீ என அவர் ஆரம்பிக்க, போதும் நிறுத்து என கர்ஜித்தான்.
நீ சொல் பேச்சு கேட்டு கிளம்பி வர வழிய பாரு! நான் போனை வைக்கிறேன் என கட் செய்தார் மகேஷ்.
கண்ணன் தலையை கோதிய படி அங்கும் இங்கும் நடந்தவன். ஒரு பெரு மூச்சை விட்ட படி கிளம்பினான்.
டேய் கிளம்பிட்டியா?
இப்போ தான் மா வெளியே வரேன் என்னை டார்ச்சர் பண்ணாத என பற்களை கடித்த படி பேசினான் கண்ணன்.
சரி சரி கோப படாதே! கிளம்பி வா என நிம்மதி பெரு மூச்சுடன் போனை வைத்தார்.
“முத்து வண்டிய கடை வீதிக்கு விடுங்க”
ஒகே சார் என ஜீப் சீராக சென்று கொண்டிருந்தது.
மீண்டும் மகேஸ்வரியிடமிருந்து அழைப்பு வந்தது.
ப்ச் இவங்க வேற என கடுப்புடன் போனை எடுத்தவன் இப்போ என்ன மா வேணும் உனக்கு? நான் வரவா? வேணாமா? என்றான் கோபத்துடன்..
“டேய் கோபப்படாத! ஒன்னும் இல்ல நீ வரும் போது அப்படியே மான்விய கூட்டிட்டு வா!”
என்னது? நானா? என அதிர்ச்சியுடன் கேட்டான் கண்ணன்.
மகேஷ் மனதில் அவளை கூட்டிட்டு வரதுக்கே எதுக்கு இவன் இந்த சாக் கொடுக்கிறான்? அய்யோ இவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பார்க்கிறதுக்குள் நான் போயி சேர்ந்திடுவென் போல என நினைத்தார்.
மா என்ன பண்ற? கனவில் போன் பண்ணிட்டியா? என கண்ணன் அதட்ட.. “தம்பி சொல்றத கேளு கண்ணு மான்வி ஸ்கூலில் இருக்கா! நீ வரும் வழி தான் அப்படியே அவளை கூட்டிட்டு வா!”
அவளோட school எனக்கு தெரியாது. அதே போல நான் ஜீப்ல வரேன் என்னால அவளை கூட்டிட்டு வர முடியாது.
மகேஸ்வரி உறுதியான குரலில் நீ வரும் போது மான்வியோட தான் வர! சொல்லிட்டேன். என் பேச்சுக்கு மறு பேச்சு பேசாதே! என சொல்லி கட் செய்தார்.
இங்கே மான்வி தான் அண்ணனுக்கு அழைத்தாள்.
டேய் என்ன டா பண்ற? நான் ஸ்டாப்பிங்ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.
“மானு உன்னை கூப்பிட மச்சான் வராரு”
யாரு? வரா? என இதயம் படபடக்க கேட்டாள் மான்வி..
“கண்ணன் மச்சான் டி! வந்திடு என கட் செய்தான் மோகன்.
கருவா என்னை கூப்பிட வரானா?.. என மான்வி அதே இடத்தில் கொஞ்சம் அதிர்ச்சியுடன் நின்றாள்.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels