நிலவில் முழ்கும் சூரியன் part 11

by Pradhanya kuzhali
180 views

 Episode 321, 

தேஜு தட்டச்சு செய்து கொண்டே டாடி spr பேரை மறந்து விட்டீர்கள் போல! என தன் தந்தையை சிரித்து கொண்டே பார்த்தாள். 

நாதன் கொஞ்சம் அதிர்ச்சி ஆகி ஆனால் அதை வெளி காட்டாமல் “உனக்கு ஏற்கனவே தெரியுமா?”

தேஜூ லேப் டாப்பை மூடி வைத்து விட்டு எல்லாமே தெரியும்!..

நாதன் புருவம் நெருக்கி கொண்டே இதை பற்றி spr கிட்ட கேட்டியா? 

தேஜு அந்த நாற்காலியில் சாய்ந்து கொண்டே ம்ம் இந்த விஷயத்தை சொன்னது அவன் தான்! 

நாதன், அப்போ உங்க ரெண்டு பேருக்குள் சண்டை இல்ல தானே! எந்த பிரச்னையும் இல்லன்னா ஓகே தான்! எனக்கும் அது தான் வேணும்! இப்போ தான் உன் முகத்தில் நான் ஒரு நிம்மதியை பார்க்கிறேன்! Spr மாறி விட்டதில் எனக்கு ரொம்ப சந்தோசம்! 

தேஜு, ஆனால் எனக்கு இப்போ தான் டாடி ரொம்ப குழப்பமா இருக்கு! 

என்ன சொல்ற மா! 

ஆமா டாடி!.. 

நாதன், தேஜு மா! நான் ஒன்னு சொன்னால் நீ கேட்கணும்! இனி இந்த பழி வாங்குவது எல்லாம் விட்டு விடு! Spr மாறி விட்டான். அவன் கூட சேர்ந்து நீ சந்தோசமா வாழணும்! அதை நான் பார்க்கனும் இது மட்டும் தான் வேணும்! 

தேஜு, அது மட்டும் என்னால் முடியாது! 

இன்னும் என்ன பிரச்னை மா இருக்கு சொல்லு! 

தேஜு, sprயை என்னால் மனசார ஏற்று கொள்ள முடியல டாடி! எதோ உறுத்தி கொண்டு இருக்கு! அவனை பார்த்தால் நடிப்பது போல இருக்கு என்னால் ஃபீல் பண்ண முடியல!  

நாதன், என்ன மா பேசுற? அப்படி எல்லாம் இல்லை! நீ வர அவன் கிட்ட தட்ட 24 மணி நேரம் ஒரே இடத்தில் காத்து கொண்டு இருந்து இருக்கிறான். மகிக்காக கூட அப்படி அவன் காத்திருந்தது இல்லை. அவன் மனசுல நீ மட்டும் தான் இருக்க!. நீ அவனோட சந்தோசமா ஹைத்ராபாத் கோட்டைக்கு போகனும் சந்தோசமா உங்க வாழ்க்கையை நீ வாழணும் இது தான் என்னோட ஆசை! 

தேஜி, இல்ல டாடி! இது நடக்காது! நான் அந்த குடும்பத்தை பழி வாங்காமல் விட மாட்டேன்! 

வசந்தன் குடும்பமா! 

ஆமா! என்னை தவிக்க விட்டு தூக்கி போட்டு போன அவங்கள நான் சும்மா விட மாட்டேன். 

நாதன், தேஜு வேணாம் டா கண்ணா! ஏற்கனவே அவங்க கஷ்டம் தான் பட்டு கொண்டு இருக்கிறார்கள். நமக்கு பாவம் வேண்டாம் டா! 

அப்போ நான் பாவம் இல்லையா டாடி! 

நாதன், உனக்கு ஒரு விஷயம் தெரியாது! அதை இது வரை நான் சொன்னது இல்ல ஆனால் spr க்கு தெரியும்! 

தேஜு, என்ன விஷயம்? 

நாதன், வசந்தனுக்கு கடன் பிரச்னை அப்புறம் வசந்தனோட  அண்ணன் மூலமாக பிரச்னை கொடுத்தது எல்லாமே spr தான்!  மகி 12 படிச்சு முடித்த அந்த லீவ்லயே spr அவளை எங்கேயோ பார்த்து இருக்கான். சோ அப்போ இருந்து அவளை தட்டி தூக்க எல்லா இடமும் தேடி இருக்கான். இது தெரியுமா? 

தேஜூ அமைதியாக இருந்தாள். 

நாதன் மேலும் அப்போ இருந்து வசந்தன் கஷ்ட படுறார். Spr மறைமுகமாக அவரை பலவீன படுத்தி மகிய கேட்டால் கொடுத்து விடுவார்கள் என நினைத்தான். ஆனால் அப்போதும் வசந்தன் அதை பண்ணல… மிடில் கிளாஸ் வாழ்க்கை கஷ்டம் மா அந்த நேரத்தில் தான் சூர்யா வந்தான். அவருக்கு உறுதுணையாக இருந்து ஹெல்ப் பண்ணான் அவளையும் கட்டி கொண்டு போய்ட்டான். 

தேஜூ, இதை எல்லாம் spr என் கிட்ட சொல்லவே இல்லையே! 

நாதன், ஒரு வேளை நீ சங்கட படுவ அப்டின்னு சொல்லாமல் இருந்து இருப்பான்! ஆனால் spr கண்ணில் உனக்கு உண்டான உணர்வுகளை நான் பார்த்தேன். சோ அவர்கள் மேல் உள்ள பழி உணர்வை விட்டு விடு மா!. 

மாட்டேன் அவங்க யாரையும் நான் சும்மா விட மாட்டேன்! 

நாதன், தேஜு சொல்றத கேளு! உதயன் உன் கூட பிறந்தவன் உன்னோட இரத்தம் அவனை எப்படி கஷ்ட படுத்த தோணுது! அன்னிக்கி என்னை பார்த்து எப்டி கேட்டு போறான்! ஒழுக்கம் பண்பு இருக்க பையன் தான் அப்படி பேசுவான். நீ தேவையில்லாமல் அவங்கள கஷ்ட படுத்தாத பண்ணது வரைக்கும் போதும் டா! 

தேஜு வில்லி போல சிரிக்க ஆரம்பித்தாள். அது எப்படி முடியும்? இன்னும் அவங்க துடிப்பதை நான் பார்க்கனும்! மொத்த குடும்பத்தையும் தூக்கிவேன! அதுக்காக தான் வெயிட் பன்றேன்! 

நாதன், தேஜூ என்னோட வளர்ப்பு தப்பா போய்டும் மா! இப்போ நிதின் கூட உன் கிட்ட இயல்பா நடந்து கொள்கிறான். அதுக்கு காரணம் அவங்க தான்! உனக்கு அது புரியுதா! 

தேஜூ, நீங்க ஆயிரம் காரணம் சொன்னாலும் இங்கே அது பலிக்காது டாடி அவங்கள நான் சும்மா விட மாட்டேன். என சொல்லி விட்டு எழுந்து சென்றாள். 

அவள் அறைக்கு சென்றதும் பழத்தை அறுக்கும் கத்தியை எடுத்தவள் எதிரில் அழகாக தொங்கி கொண்டு இருக்கும் spr படத்தின் மீது குறி பார்த்து வீசினாள்.

**

இதுக்கு என்ன காரணம்? பார்ப்போம் விரைவில் உங்களுக்கு விடை தெரிய வரும்!. 

விவேகா மகியிடம் பேசி கொண்டே  இருக்க நேரம் போனதே தெரிய வில்லை. இருவரும் ஒரு மணி நேரம் அங்கு இருந்தனர். அதன் பின் கிளம்பும் நேரம் வர.. 

விவேகா, அக்கா  எப்போ பெங்களூர் போவ!. குட்டி பாப்பா பிறக்கும் வரை இங்கே தானா!. 

மகி , இப்போ தான் 6 மாசம் இப்போ தான் தொடங்கி இருக்கு.  அடுத்த மாசம் எங்க அப்பா வீட்டில் சீமந்தம் செய்கிறார்கள் அது முடிந்ததும் பெங்களூர் போயிடுவேன். 

விவேகா, இது என்ன புது கதையா இருக்கு! காப்பு முடிந்து தான் அம்மா வீட்டுக்கு அனுப்புவான்க நீ காப்பு முடித்து  புருசன் வீட்டுக்கு போற!. என்ன சூர்யா சாரை விட்டு இருக்க முடியலயா!. 

மகி கொஞ்சம் கோபத்துடன் உங்க சூர்யா அண்ணாவுக்கு நான் முக்கியம் இல்ல இதோ இந்த பேபி இல்லாமல் இருக்க முடியாதாம். 

விவேகா சிரித்து கொண்டே இப்படி சொல்லியே ஒரு புதிய  புரோடக்ட்ட லாஞ்ச் பண்ண போறீங்க.. 

மகி, ஹே அறிவு ஓவரா பேசாத! அப்புறம் நானும் பேசுவேன். 

என்ன? என்ன பேசுவீங்க? 

நீயும் சும்மா இல்லையே! என மகி சொல்ல ரிதம், மாமி என்னை தூக்கு!. என கைகளை நீட்டிட

மிதுன், ஹே எங்க அம்மா ஸ்டோமக்ல குட்டி பேபி இருக்கு!. இன்னும் சரியா 5 மந்த் அப்புறம் வெளியே வந்து விடும். அப்புறம் மகி மாமி உன்னை தூக்க மாட்டாள். எங்க குட்டி பாப்பாவை தான் வைத்து இருப்பாள். 

மகி, மிதுன் ராஸ்கல் பிச்சிடுவேன். ரித்து குட்டி வாங்க டி என் செல்லம். நீங்க தான் எனக்கு முதல் தங்க புள்ளை.. 

ரிதம், நானுக்கும் இந்த குட்டி பப்பா தருவீர்களா ! 

மிதுன், ஹே அது என் பேபி உனக்கு தர மாட்டேன். நான் நிதின் அண்ணா, நிவாஸ் எல்லாம் பிளே பண்ணுவோம். 

விவேகா, ஆமா மிதுன் டார்லிங் இவளுக்கு தர வேணாம். ரொம்ப பேட் கேர்ல்! சில இடியட் கூட சேர்ந்து கொண்டு உன்னை மறந்து விட்டாள். என அவனை அணைத்து கொண்டே பேசிட.. 

மகி, ரித்து குட்டி உனக்கு குட்டி பப்பா வேணுமா!.

ம்ம் வேணும்!. 

மகி சிரித்து கொண்டே நீ உங்க டிம்பிள் டாடி கிட்ட கேட்டால் இன்னும் 10 மந்த்ல குட்டி பாப்பா கிடைக்கும். நீயும் ஜாலியா பிளே பண்ணலாம். நீ, குட்டி பேபி, நானு எல்லாம் பண்ணலாம். 

விவேகா, அக்கா! என்ன கா சொல்லி கொடுக்கிரீங்க!.  இது எல்லாம் எப்போவும் நடக்காது. 

மகி, ம்ம் அதை நீயே ரிதம் கிட்ட சொல்லி புரிய வை! பாரு டா ரித்து குட்டி உன் அம்மாவுக்கு குட்டி பேபி வேணாமா என்னாச்சு அப்டின்னு கேளு!. 

ரிதம், இல்ல மாமி நாம் டிம்பிள் கிட்ட கேட்டால் எனக்கு குட்டி பப்பா கிடைக்கும். இவள் ரொம்ப கெட்டவ  என்னை திட்டி கொண்டே இருக்கா!… 

மகி சிரித்து கொண்டே ம்ம் சூப்பர்.. 

அக்கா! ஹே ரித்து நீ மாமி சொல்றத எல்லாம் கேட்க கூடாது. புரியுதா! 

ரிதம், நீ சொல்றத நான் கேட்க மாட்டேன் மாமி, அண்ட் டிம்பிள், கங்கா அம்மாச்சி, வாசு மாம், ரவி தாத்தா, வருண் மாமாசி சொல்றத தான் நான் கேட்பேன். நீ ஒரு கெட்டவள் மோசம்…

மகி இதை பார்த்து சிரித்து கொண்டு இருக்க மிதுன், விவேகா இருவரும் முறைத்து பார்த்தனர். 

நிதின், பொம்மாயி இட்ஸ் எண்ட் ஆப் வாங்க வீட்டுக்கு போலாம். இந்த டைம் ல இப்படி நிற்க கூடாது. அண்ட் அந்த ரித்துவை இறக்கி விடுங்க பேபிக்கு உள்ளே அண் காம்பார்ட்டா இருக்கும். 

மகி, மிதுன் அப்படி எல்லாம் பேச கூடாது. இப்போ கிளம்பும் நேரம் தான் என அவள் சக்திக்கு கால் செய்தாள். 

ஹலோ சக்தி! என மகி பேச 

விவேகா புன்னகையுடன் அக்கா அவனை பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு இங்கே வர சொல்லு கா நான் பார்த்திட்டு வீட்டுக்கு போறேன். 

மகி அவனிடம் இங்கே இருப்பதாக சொல்ல சரி மாம் நான் பிக் அப் பண்ண வரோம் என சொல்லி போன் வைத்தான். .

ரிதம், மாமி சக்தி அண்ணா வராங்களா! என புன்னகையுடன் அவள் கேட்க.. 

நிதின் மிதுன் கிட்ட சீ மிதுன் அவளுக்கு சக்தி வேணுமாம் நீயும் அண்ட் நானும் இருப்பது அவளுக்கு பிடிக்கல பாரேன் வந்ததில் இருந்து என் கிட்ட ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்கா! இப்போ சக்தி அப்டின்னு சொன்னதும் கண்ணகுளி தெரிய கண் ப்ளஷ் ஆகுது ஹஹஹ…  இவளுக்கும் சரி, என்னோட பொம்மாயிக்கும் சரி,  என்னோட அருமை தெரிய மாட்டிங்குது.. என நிதின் சொல்லி விட்டு அமைதியாகி விட்டான். 

மிதுன் கோபமாக இதையெல்லாம் கேட்டவன். ஹே ரித்து உன்னை குட்டி வயசில் இருந்து யார் பார்த்து கொண்டார்!

ரிதம், என்ன சொல்ற மித்து  எனக்கு புரியல.. 

மிதுன், நிதின் அண்ணா பார்த்த தானே அவர் கிட்ட பேசினாயா! அவர் ஹைத்ராபாத்ல இருந்து வந்து இருக்கார். ஆனால் ஒரு வார்த்தை அவர் கிட்ட நீ பேசல அந்த சக்தி வேணுமா உனக்கு என மிரட்டி கொண்டு இருக்க.. 

கொஞ்ச தூரத்தில் மகி, விவேகா இருவரும் நின்று சிரித்து பேசி கொண்டு இருந்தனர். 

மிதுன் மேலும் இனி உன் கிட்ட பேச என்ன இருக்கு போடி இடியட் நான்சென்ஸ்.. 

ரிதம் கண்களில் கண்ணீருடன் இப்போ என்ன செய்ய வேணும் சொல்லு நீ தான் என்னோட பெஸ்ட் என்னை பத்திரமா பார்த்து கொண்டு இங்கே கூட்டி வந்து என் டிம்பிள் கிட்ட விட்ட.  

நிதின் இதையெல்லாம் புன்னகை முகத்துடன் பார்த்து ரசித்தான். 

மிதுன், அப்டியா இனி உன்னை விளையாட்டில் சேர்த்து கொள்ள வேணும் என்றால் நீ மிதுன் அண்ணா கிட்ட போய் பேசி சேக் ஹேன்ட் பண்ண வேணும்.  

ரிதம், சரி என சொல்லி விட்டு நிதின் அருகில் சென்றாள். நிதின் அவளை பார்த்ததும் ரித்து டியர்!.  என்னோட ஃபேஸ் கொஞ்சம் டெரர் போல் இருக்கும் மற்ற படி உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீ ஒரு குட்டி ஏஞ்சல்!. 

ஹான் நிதின் அண்ணா!. என அவள் சிரித்தாள். 

நிதின், உன்னோட டிம்பிள் எங்க டாடி கிட்ட இருப்பதை போல் இருக்கு ரொம்ப அழகா இருக்கு!. இனி என்ன பிரச்னையா இருந்தாலும் நீ என் கிட்ட வந்து சொல்லு டியர்.  

ம்ம் சரி!. என அவள் சொல்ல நிதின் கைகளில் இருந்த டார்க் சாக் லேட் ஸ்பூன் மிட்டாயை அவளிடம் நீட்டினான். .

ரிதம் கொஞ்சம் புன்னகையுடன் அதை வாங்கி கொள்ள மிதுன், ஹே இடியட் என் அண்ணா உனக்கு சாக்கி தந்து இருக்கான். நீ எங்க அண்ணாவுக்கு என்ன தருவ!. 

ரிதம், என்ன தரணும்?

.மிதுன், எனக்கு ஒரு கிஸ் அதே போல் அண்ணாவுக்கு ஒரு கிஸ் கொடு!. 

சரி மிதுன் என அவள் மித்துனுக்கு முத்தம் தந்து விட்டு நிதின் அருகில் முத்தமிட செல்ல.. 

ரிதம்!.. என ஒரு குரல்.. 

அவள் முத்தமிட செல்வதை  நிறுத்தி விட்டு  திரும்பி பார்க்க சக்தி என்கிற சத்ய தேவ் தான் அழைத்தான். 

சக்தி! என அவளும் அழைக்க.. 

 இரு எரிக்கும் பார்வை அனல் போல் வீசி கொண்டு இருந்தது. 

சக்தி, வாட் ஆர் யூ டூயிங்? 

மிதுன் ரிதமுக்கி முன்னால் வந்து நின்று அவள் சாக்லேட் கொடுத்ததுக்கு thanks சொல்ற உனக்கு என்ன.. நீ டாடி கிட்ட போ!. 

சக்தி அவன் பேசுவதை கண்டு கொள்ளாமல் ரித்து பேபி சாக்லேட் கொடுத்தால் அதுக்கு சேக் யுவர் ஹேன்ட் தான் கொடுக்கணும். இப்படி பாய்ஸ் க்கு கிஸ் பண்ண கூடாது அண்ட் பாய்ஸ் கூட உன்னை கிஸ் பண்ண விட கூடாது. இது பேட் டச்!. 

நிதின் கோபமாக மிதுன் கிட்ட ஹே மிதுன் ,அண்ட் ரிதம் நீங்க ரெண்டு பேரும் பார்ன் இன் ஃபாரின் நாட் பட்டி காடு ரைட்.. அவளை பத்திரமா பார்த்து கொண்டது. நானும்,மிதுனும் இதுக்கு நடுவில் நீ யாரு வேஸ்ட் லேண்ட் மாதிரி.. 

சக்தி, நான் யார் கிட்டயும் பேசல காட் இட் மை பாயிண்ட் அண்ட் ரித்து மா இனி இப்படி செய்ய கூடாது ஓகே வா!. .

ரிதம் அவன் கண்களில் உள்ள மென்மையை பார்த்து விட்டு சரி சக்தி!  என கூற.. .

மிதுன், ஹே என்ன டி சக்தி சொல்ற.. அவனை வெறும் அண்ணா சொல்லு!. 

டேய் குட்டி குட்டா!.. என ஒரு சத்தம் வர ரிதம் டாடி! என புன்னகையுடன் சென்றாள். 

என் பொண்ணு உனக்கு டி ஆ உன்னை சூரியாவுக்காக விட்டு வைக்கிறேன். 

மிதுன் தலையை கோதி கொண்டே ஹலோ மேன் நான் என் டார்லிங்காக விட்டு வைக்கிறேன் இல்ல அவ்ளோ தான்! என சொல்லி விட்டு நிதின் ப்ரோ யூ ஆர் ரைட்  வேஸ்ட் ஆப் டைம் வாங்க போலாம் என கையை பிடித்து செல்ல. 

நிதின், ஓகே ரித்து ஏஞ்சல்! பாய் சொல்லுங்க!. 

அவள் ஒரு வித பதட்டத்துடன் கைகளை அசைத்தாள். பாய் என சொல்லி கொண்டே நிதின் கிளம்பினான். 

சக்தி செல்லும் அவர்களை தான் பார்த்து கொண்டு இருந்தான். இந்த நிதின் ஒரு புரியாத புதிர்! 

இங்கே விவேகா, சூர்யா, மகி மூவரும் நின்று பேசி கொண்டு இருக்க அந்த இடத்துக்கு சக்தி, இன்பா, ரிதம் மூவரும் சென்றனர். 

இன்பா வருவதை பார்த்த விவேகா, ரிதம் வா வீட்டுக்கு போலாம் டைம் ஆகுது.. 

சூரியா, அட இரு மா! சக்தி அம்மாவுக்கு நெக்ஸ்ட் மன்த் சீமை.. ஹம்  என மகிய  பார்த்து என்ன டி அது? .

மகி, ஒன்னுமே தெரியாத பச்சை குழந்தை! ஓவரா பண்ணாதீங்க! அதுக்கு பேர் வளைகாப்பு! 

சூரியா, அப்போ சீமந்தம் வேறயா!  .

மகி, ரெண்டும் ஒன்னு தான்! 

உடனே அவன் ஓவரா பிகு பண்ணாத எதோ நினைவில் இல்ல அப்படியே சண்டைக்கோழி மாதிரி குதிக்கிர… .

நான் ஒன்னும் குதிக்கல நீங்க தான்! என அவள் முறைக்க சூர்யா, ஹே ஹே எதுக்கு இவ்வளவு டென்ஷன்… இப்போ என்ன சாப்பிட்ட? உனக்கு மட்டும் சாப்ட்டியா! இல்ல என் பேபிக்கு சேர்த்து கொஞ்சம் தின்னியா! என் குட்டிக்கு  ஃபுல் எனர்ஜி இருக்குமா! என அவன் சுற்றம் மறந்து நெருங்கி அவளின் கொஞ்சம் வளர்ந்த   பிறை வயிறை தடவ போக….

விவேகா புன்னகையுடன் காதல் ததும்ப அந்த காட்சியை பார்த்து கொண்டு இருந்தவள் கண்ணில் ஏக்கம் எள் அளவு எட்டு வைத்தது. 

இன்பா, சூர்யா! சூரியா! இது பெட் ரூம் இல்ல வீடும் இல்ல ரெஸ்டாரன்ட் அன்ட் உனக்கு பக்கத்தில் கொஞ்சம் பாரு டா  எதுவும் தெரியாத பச்சை புள்ளையா நான் நின்னுட்டு இருக்கேன் டா! என கொஞ்சம் கத்திட.. அப்பொழுது தான் இருவரும் சுய நினைவுக்கு வந்தனர். 

விவேகா இன்பாவை ஒரு கேவல பார்வை பார்க்க. ..இன்பா, நீ தான சொன்ன உனக்கு தேவை அதான் யூஸ் பண்ண.. 

சூர்யா, மச்சி நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல டா சும்மா! என சொல்லி விட்டு வளைகாப்புகு கண்டிப்பாக வந்து விடு கூடவே என் கண்ணு குட்டிய கூட்டிட்டு வா! முடிந்தால் இன்னொரு ஆட்டு குட்டி, முயல், சிங்கம் எதுவும் என அவன் சொல்ல.. 

மகி சிரிக்க விவேகா, அண்ணா அது எல்லாம் எங்க வீட்டில் இல்லையே! 

இன்பா, ஹே வாயை மூடு டி அவன் கிண்டல் பண்றான். என சொல்ல விவேகா என்ன என வாயை மூடி கொண்டாள். 

சூரியா, இல்லன்னா என்ன இனி வரும்…. என்ன டா இன்பா நான் சொல்றது சரி தானே!. .

ரிதம், மாமா! எனக்கு ரேபிட், கோட், லயன் எல்லாம் வேணாம்!. 

சூரியா, வெற என்ன வேணும்!. 

நானுக்கு  அச்சோ எனக்கு மகி மாமி அங்கே ஸ்டோமக்ல பேபி இருக்கே அதே போல் குட்டி பேபி வேணும்! டிம்பிள் டாடி எனக்கு குட்டி பேபி வேணும்!.  என அவள் சொல்ல.. விவேகா, ஹே சாட் ஆப் ரித்து!. 

இன்பா, அவ்ளோ தான நான் தாராள பிரபு  நீ என் டிம்பிள் குட்டி கட்டாயம் வாங்கி தரேன். 

ரிதம், டன் டாடி அவளுக்கு வேணாம் என் கிட்ட கொடுங்க நான் பார்த்து கொள்வேன். 

இன்பா, அப்படியா அப்போ பிரச்சனையே இல்ல புதுசா ஒரு ஆளை நீ செலக்ட் பண்ணி கொடு பேபி அவங்க கிட்ட இருந்து உனக்கு நான் வாங்கி தரேன். 

சக்தி, எல்லாரும் என்ன பேசுறீங்க? கொஞ்சம் எனக்கு புறியுர மாதிரி பேசுங்க.. .

விவேகா, சக்தி கண்ணா நீங்க வாங்க இங்கே சரி இல்ல நம்ம போய் பேசுவோம்!. 

வரேன் விவி என அவனும் சென்று விட சூர்யா ரிதமை தூக்கி கொண்டு கொஞ்ச ஆரம்பித்தான். 

அதன் பின் அவரவர் வீட்டுக்கு சென்றனர். 

மிதுன், மா பிளீஸ் மா! மா இப்போவே போகனும்! 

எனக்கு தெரியாது மிதுன்! என் கிட்ட கேட்க்காதே! 

மகி! இதுக்கு மேல உன் கிட்ட கேட்க மாட்டேன் நான் நேரா கிளம்பி விடுவேன். 

சத்ய தேவ், மா என்ன ஆச்சு? 

மகி, அவனுக்கு அம்மாச்சி வீட்டுக்கு போகணுமாம்! 

அதுக்கு என்ன அனுப்பி விடுங்க மா! 

மிதுன், டேய் உன் வேலை மட்டும் பாரு நான் எங்க அம்மா கிட்ட பேசிட்டு இருக்கேன்! 

மகி, என்ன மிதுன் என் கிட்ட அடி வாங்க போற! ராஸ்கல்!. அண்ணா அவனை போய் இஸ்டத்துக்கு பேசுற!. 

மிதுன் கோபத்துடன் அவளை விட்டு பிரிந்து ஒரு பக்கம் போய் நின்று கொண்டான். சூர்யா ஆபீஸ் கால் பேசி முடித்து விட்டு வந்தவன் மிதுன் தனியாக நின்று கொண்டு இருப்பதை பார்த்தான். 

டேய் வரலயா! 

மிதுன், ஹலோ பிளீஸ் என்னை அம்மாச்சி வீட்டில் விடுங்க! அவள் என்னை விட மாட்டிக்கிரா!. 

சூர்யா, உங்க ஆத்தா திட்டுவாங்க! நம்ம எல்லாரும் கோவிலுக்கு போகனும்! 

மிதுன், அய்யோ உங்களுக்கு புரியல அங்கே அம்மாச்சி தாத்தா ரெண்டு பேரும் ரொம்ப தனியா இருக்காங்க நான் தான் பார்த்து கொள்ள வேணும் பிளீஸ் என்னை விடுங்க! கெஞ்சி ரொம்ப கெஞ்சி கேட்டு கொண்டேன். 

சூர்யா அவனது பேச்சில் சிரித்தவன் தூக்கி கொண்டான். 

மிதுன் இதை எதிர் பார்க்க வில்லை. ஹலோ என்னை அனுப்பிவீங்களா? 

சூர்யா அவனது கன்னத்தில் முத்தம் பதித்தான். ஹே! எனக்கு கேர்ள்ஸ் தான் கிஸ் பண்ணனும்! இப்போ தான் ரிதம் கொடுத்தா நீங்க நீங்க பாய்! 

சூர்யா கடுப்பாகி இரு டா உன்னை மகி கிட்ட அனுப்புறேன்! கேர்ள்ஸ் கிஸ் மாதிரி கேர்ள்ஸ் கிட்ட அடி கூட வாங்கலாம் வா! என தூக்கி கொண்டே சென்றான். 

தொடரும்.. 

Episode 322

சூர்யா கடுப்பாகி இரு டா உன்னை மகி கிட்ட அனுப்புறேன்! கேர்ள்ஸ் கிஸ் மாதிரி கேர்ள்ஸ் கிட்ட அடி கூட வாங்கலாம் வா! என தூக்கி கொண்டே சென்றான். 

மிதுன், “வேணாம் டாடி! பிளீஸ் விடுகக! அவள் ரொம்ப மோசம் விகரஸ்சா இருக்கா! சமாளிக்க முடியல!”

சூர்யா இதை கேட்டு சிரித்து கொண்டே அதை வெளி காட்டாமல் அவ்ளோ வாய் பேசுற உன்னை சும்மா விட மாட்டேன் பாரு டா!. 

“ஹே!”

மகி அவனை திரும்பி பார்த்து விட்டு நேராக அமர்ந்தாள். 

மிதுன் சூர்யாவை பார்த்து சிரித்து விட்டு “என்னை விட உங்களை ஒரு இன்செக்ட்டா கூட ட்ரீட் பண்ண மாட்ரா!”

சூர்யா சட் அப்!. ஹே உன்னை தான் டி? என மீண்டும் அழைத்தான். 

மகி சூர்யாவிடம் பேசாமல் சத்தியதேவை பார்த்தாள் . “சக்தி உங்க அப்பா பாரு என்னை ஹேன்னு கூப்பிடுறாரு!  என்னை பாத்தா தேர்ட் பெர்ஸன் சிங்குளர் மாதிரி இருக்கா உள்ள மாதிரி இருக்கா இல்ல ப்ளுரல் மாதிரி இருக்கா! அதுவும் சக்தி இப்போ நான் என்னோட வயித்துல பேபி இருக்கு!  என்னை போய் goat , hen, cat  இது மாதிரி!…ச்ச அதுக்கு கூட  பெட் நேம் வச்சு அழகா கூப்பிடுறாங்க!  ஆனா என்னை பாத்தா மட்டும் உங்க அப்பாவுக்கு இப்படித்தான் கூப்பிடனும்ல்ல! நான் மட்டும் உங்க அப்பாவ வாங்க, போங்க, என்னங்க, என்ன பண்ணிட்டு இருக்கீங்க, சாப்பிடுறீங்களா? அப்படின்னு மரியாதையோடு கூப்பிடுறேன், ஆனா எனக்கு!… எனக்கு  மரியாதையே இல்ல!” என்று சோகமாக முகத்தை வைத்து கொண்டாள். 

மிதுன் சூர்யாவிடம் “உங்களை பத்தி ஏதோ அவன் கிட்ட பெருசா சொல்லி இருக்கா!  அவன் உங்களை பார்த்து முறைக்கிறான்! போச்சு இப்போ அவ!ன் கிட்ட, நீங்க திட்டு வாங்க போறீங்க எனக்கு இதையெல்லாம் பார்க்க ஜாலியா தான் இருக்கு!”

சூர்யா பற்களை கடித்துக் கொண்டு உன்ன உங்க அம்மாச்சி வீட்டுக்கு விட மாட்டேன் போடா!..

உடனே மிதுன் no டாடி அப்படி சொல்ல கூடாது என இருவரும் காதுக்குள் கதை அடித்து கொண்டு இருந்தனர். 

 உடனே சத்ய தேவ் டாடி எதுக்கு அம்மாவை ஹே சொல்றீங்க!  அம்மாவுக்கு அழகா மகிழினி அப்படின்னு பேர் இருக்குல்ல, பேர் சொல்லி உங்களுக்கு கூப்பிட முடியாதா! எங்க அம்மா ஒன்னும் goat கிடையாது, hen கிடையாது, cat கிடையாது. அதனால மகிலினி வாங்க…. போங்க…. அப்படி இல்லன்னா மான் விழி இங்க வா அப்படின்னு கூப்பிடுங்க!”

சூர்யா சிரித்துக்கொண்டே “மான்விழி!.  மானே ஒரு அனிமல் தான டா அப்போ அனிமல் நேம் வச்சு தானே உங்க அம்மாவ கூப்பிடனும்!  ஆனா ஹே கூப்பிட்டா தப்பில்லை ஹே என்று கூப்பிட்ட தப்பா!  அவ பேச்ச கேக்காத டா அவ ரொம்ப கெட்டவ!.”

சத்ய தேவ்,  இப்போ மகி கிட்ட மன்னிப்பு கேட்கணும்!  ஐ மீன் என்னோட அம்மா கிட்ட நீங்க சாரி கேக்கணும்! இனிமேல் அவங்கள பேர் சொல்லி தான் நீங்க கூப்பிடனும்! 

சூர்யா, என்னால அப்படி கூப்பிட முடியாது.

“அப்போ அம்மா உங்களை  ஹே சூர்யா இங்க வாடா! ஹே சூர்யா இங்க போடா! அப்படின்னு கூப்பிட்டா உங்களுக்கு ஒகே வா! ”

சூர்யா கடுப்பாகி “சத்யதேவ் நான் உன்னோட அப்பா டா!”

சக்தி அவனிடம் “ஆமா டாடி மகி என்னோட அம்மா!  சோ அவங்களுக்கு நீங்க மரியாதை கொடுக்கணும் தானே!”

மகி முகத்தை  மிகவும் பாவமாக வைத்துக் கொண்டு“ சக்தி கண்ணா யார் கிட்டயும் நீ கெஞ்சிட்டு இருக்க வேண்டாம் அவங்களோட பிஹேவியர் அப்படித்தான் அதுக்கு நம்ம என்ன பண்ண முடியும்! யாரு அப்படி பாரு அப்படியே உரிச்சு வச்சு ஒருத்தன் பிறந்து இருக்கிறான் . கெட்ட எண்ணம் புடிச்சவன்!” என்று மிதுன் கூடவே சூர்யாவையும் சேர்த்து ஜாடை பேசினாள். 

மிதுன்  சூர்யாவிடம் இருந்து மிதுன் பாய்ந்து கொண்டு கோபத்தில் “யாரடி சொன்ன? நான் ஒன்னும் உரிச்சு வச்சு பொறக்கல, நீ என்னை தேவையில்லாம பேசிட்டு இருக்க,  உன்ன நான் அம்மாச்சி கிட்ட சொல்லுவேன் , தாத்தா கிட்ட சொல்லி உன்னை அடிக்க சொல்லுவேன் டி!, அம்மாச்சி!.. ஹன் அம்மாச்சி என்கிட்ட சொல்லித்தான் அனுப்பினாங்க, நீ என்ன பண்ணாலும் அப்படியே  அவங்க கிட்ட வந்து சொல்ல சொன்னாங்க, உன்னை பாரு நான் எப்படி மாட்டிவிடுகிறேன்! என்று நீ அடி வாங்கும் போது நான் உன்னை பார்த்து சிரிப்பேன் டி!”

சத்ய தேவ் கொஞ்சம் கோபத்துடன் என்ன வார்த்தைக்கு, வார்த்தை அம்மாவ டி சொல்ற ?உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா! மேனர்ஸ் தெரியல!  என்று மிரட்டினான். 

மிதுன், அவரும் டி தானே சொல்றாரு நானும் டி சொல்லுவேன். சூர்யாவை கை காட்டினான்.

மகி சிரித்துக்கொண்டே “இப்ப தெரியுதா சக்தி இவனோட ஹாபிட் எல்லாம் எங்கிருந்து வந்திருக்குன்னு , எல்லாம் என்ன சொல்லணும் நாய் வாலை நிமிர்த்தவே முடியாது , ரெண்டு பேரு நாய் வால் மாதிரி!”

மிதுன் , என்னை அவள் வால்  சொல்றா! சொல்றா வால்!  சொல்றா நீங்க அமைதியா இருக்கீங்க !.

சூர்யா , என்னையும் தாண்டா சேர்த்து சொல்றா! 

“அவளை அடிங்க அவள உங்க மம்மிகிட்ட மாட்டி விடுங்க!”

மகி, சரி இப்போ தேவையில்லாத வெட்டி பேச்சு எதுக்கு ? இப்போ உங்க ரெண்டு பேருக்கும் என்ன வேணும்?  சக்தி கேட்டு சொல்லு தங்கம் !

சத்யதேவ் , டாடி உங்களுக்கு என்ன வேணும்? இனிமே ஒரு தடவை கூட அம்மாவை மரியாதை இல்லாம பேசாதீங்க,

சூர்யா, சரிடா!… சரிங்க மேடம்!.. என பற்களை கடித்துக் கொண்டே கூறினான்.

சத்ய தேவ்,  அவன் கிட்டயும் சொல்லி வைங்க!  நீங்க பண்றத அப்படியே பண்றான்! 

மகி இதைக் கேட்டு சிரித்தாள்.

மிதுன், என்னை போய் இவர் கூட கம்பேர் பண்றீங்க! நான் அப்படி ஒண்ணுமில்ல!. என்னை பார்த்து தான் அவர் பண்ணிட்டு இருக்காரு! 

சூரிய தேவ், டேய் குட்டி குட்டா! உனக்கு சப்போர்ட் பண்ண போய்தான் நான் இந்த நிலைமை!. 

மிதுன்,  நீங்க இப்ப மட்டும் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க, அவளோட மொத்த ரகசியம் ,எனக்கு தான் தெரியும் உங்களுக்கு எல்லாமே சொல்லுவேன்!. 

சூர்யா ஷாக்காகி அவனை பார்த்தான்.

மிதுன்,ஆமா எனக்கு அவளை A to Z தெரியும்!. 

“சரி இப்போ ABCD சொல்லு டா!” என்று சூர்யா கேட்டான்.

“அது உனக்கு எதுக்கு மேன்! நான் சொல்றதை மட்டும் நீ கேளு! மத்த கதையை எதுக்கு பேசுற டைம் வேஸ்ட் மேன்! உன் கூட போய் என்னை  கம்பேர் பண்றாங்க!”

சூர்யா, டேய் நான் உனக்கு அப்பா டா! அந்த நெனப்பு இருக்கா! 

“ஓகே நீங்க இப்போ ஹெல்ப் பண்ணுங்க? அவளை  அது ஹான் சாரி அம்மாகிட்ட கேளுங்க! என்னை  அம்மாச்சி வீட்டுக்கு மட்டும் அனுப்ப சொல்லுங்க! ப்ளீஸ் எனக்கு freedom வேணும்!  என்ன அடிக்குறா?”

சூர்யா, அஞ்சு வயசு பையன் மாதிரியா  டா பேசுற!

மிதுன் , சொல்றத செய்யுங்க!  அவளோட எல்லா ரகசியமும்  நான் உங்களுக்கு சொல்லுவேன்! நீங்க அவளை ஜட்ஜ் மாதிரி கேள்வி கேட்கலாம். தெரியுமா!  உங்களுக்கு எல்லா பவரும் இருக்கு! நான் உங்களுக்கு சொல்லி தரேன்!

சூர்யா சரி என மிதுன் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொண்டான்.

ஆனால் மித்துனுக்கு இந்த தூரிகை, மான் கொம்பு அனைத்து விஷயமும் தெரியும். ஆனால் அதற்கு பின்னாடி யார் இருக்கிறார்கள் என்று தெரியாது. மகிழினி படங்கள் வரைவது, பொருட்காட்சி என அனைத்து விஷயமும் மிதுனுக்கு நன்றாகவே தெரியும்!

சூர்யா மகியிடம் இப்போ மிதுன் அங்க உங்க அம்மா வீட்டுக்கு போகட்டும் அதனால அவனை அனுப்பி வெச்சிடு! 

மகி புருவம் நெருக்கிக்கொண்டே அதாவது சத்ய தேவுடய பாட்டி, சாரி ஆத்தா , ஐ மின் அத்தைக்கு என்னோட அத்தைக்கு அவனை அங்க அனுப்புவதற்கு விருப்பமில்லை,  அதனால தான் நான் அவனை அனுப்ப மாட்டேன்னு சொன்னேன். 

சூர்யா மிதுணை பார்த்தான். 

மகி, “நீங்க உங்க அம்மாகிட்ட பேசுறதா இருந்ததுனா, உங்க அம்மா என் மேல கோப பட கூடாது. சமாதானம் பண்ண வைக்கிற மாதிரி இருந்ததுனா நீங்க தாராளமா அவனை எங்க வீட்டுக்கு அனுப்பலாம். நான்  எதுவும் சொல்ல மாட்டேன்!” என்று  கூறினாள். 

சத்ய தேவ், அம்மா பதில் சொல்லியாச்சு! இனி நீங்க தான் முடிவு பண்ணனும்! 

மிதுன், டெல் மி! டெல் மி! பிளீஸ் ஐ பெக் யூ! என மின்னும் கண்களில் கேட்டான். 

மகி, முன்ன எல்லாம் என்னை விட்டு பிரிய மாட்ட! வா வந்து கூட்டி போ அப்டின்னு சொல்லிட்டே இருந்த! இப்போ அம்மாச்சி வீட்டுக்கு போறேன்னு சொல்ற! 

மிதுன் அவனுடைய முகத்தை சூர்யாவின் நெஞ்சில் முகம் புதைத்து கொண்டு சொல்லுங்க! பிளீஸ்!. 

சூர்யா, இட்ஸ் ஓகே அவன் போகட்டும்! 

சத்ய தேவ், பிராப்ளம் சால்வ்வ் என கூறினான். 

மகி, நீங்க பேசி விட்டால் எனக்கு பிரச்னை இல்லை இப்போ கிளம்பலாம்!. ஆனால் அதுக்கு முன்னாடி இப்போவே அத்தைக்கு போன் பண்ணி சொல்லிடுங்க! 

சூர்யா அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். 

மகி, சக்தி நான் தப்பா எதுவும் சொல்லி விட்டேனே!. என சூர்யாவை கண்ணால் சைகை காட்டினாள். 

சத்ய தேவ், இப்போ எதுக்கு அம்மாவை முறைக்கிரீங்க! 

மிதுன், ஹே அவள் தான் முறைக்குரா பாரு! உடனே பாரு!. 

சத்ய தேவ், அம்மா உன்னை விட பெரியவங்க! நீ அவள் சொல்ற! 

மிதுன், அவள் என் அம்மா! நான் எப்டி வெனா சொல்லுவேன்! 

மகி, சக்தி அவன் அப்படி தான் நீ விடு செல்லம் உங்க டாடியை அவங்க அம்மா கிட்ட பேச சொல்லு! 

மிதுன், டாடி பண்ணுங்க!.

சூர்யா உடனே தன் அம்மாவுக்கு கால் செய்து போனை எடுத்து கொண்டு தள்ளி சென்றான். 

ம்ம் சொல்லு! 

மா மிதுன்!. என சூர்யா தயங்கினான். 

என்ன விஷயம் சீக்கிரம் சொல்லு இன்னிக்கு சிவா மாமா, உன் அத்தை ஜனனி சஞ்சய் குட்டிய கூட்டி கிட்டு வரேன்னு சொல்லி இருக்கா! 

சூர்யா, எப்போ வராங்க? ஏன் என் கிட்ட சொல்லவே இல்லை!. 

உமா கொஞ்சம் கோபத்துடன் இப்போ நீ எதுக்கு போன் பண்ண? அதை சொல்லு! 

சூர்யா, ஒன்னும் இல்ல மா! அது மிதுன் அவங்க தாத்தா வீட்டுக்கு போயிட்டான். 

மிதுன் நிமிர்ந்து தன் தந்தையை பார்த்தான். சூர்யா உஷ் என கையை காட்டினான். 

உமா கோபத்துடன் யாரை கேட்டு நீ அவனை அனுப்பின! உன் பொண்டாட்டி சொல்லி கொடுத்தாளோ! 

இல்ல மா அப்படி எல்லாம் இல்லை! மகிய இதில் இழுக்காதீங்க!  

மிதுன் சூர்யாவின் முகத்தை பார்த்தான். உமா பேசுவது நன்றாகவே கேட்டது. 

உமா, நீ வீட்டுக்கு வரும் போது நாலு பேரா தான் வரனும்! அப்படி மிதுன அங்கேயே விட்டு வர மாதிரி இருந்தால் நீ இங்கே வராத! என படபடவென பொரிந்து விட்டு வைத்து விட்டார். 

சூர்யா என்ன செய்வது என தெரியாமல் மிதுன பார்த்தான். 

இட்ஸ் ஓகே நான் போகல! மகிய என் மம்மிய உங்க அம்மா ரொம்ப திட்டுராங்க! நான் எனக்கு கோபம் அவளுக்காக மட்டும் தான்! என சொல்லி விட்டு இறக்கி விட சொல்லி நேராக மஹியின் இன்னொரு பக்கம் வந்து அமர்ந்து கொண்டான். 

மகி, அவன் கைகளை பிடித்து கொண்டாள். 

முன்னாடி சூர்யா மட்டும் அமர்ந்து இருந்தான். காரை ஸ்டார்ட் செய்து சத்ய தேவ் நீ முன்னாடி வாயேன்! அப்டியே பேசிட்டு போலாம்! 

அவன் எடுத்த எடுப்பில் நான் வரல டாடி! இங்கே கம்ஃபார்ட் என கூறினான். 

மகி சிரித்து கொண்டே அவனின் தலையில் முத்தமிட்டாள். 

சூர்யா கண்ணாடி வழியாக அவளின் முகத்தை பார்த்தான். மகி இரு புருவம் உயர்த்தி காட்டினாள். 

சூர்யா, குட்டி குட்டா! நீ வரயா! 

மாட்டேன்! என தன் அன்னையின் மேல் சாயிந்து கொண்டான். 

சூர்யா, “இவ்வளவு தூரம் வந்தாச்சா! சரி இருக்கட்டுமே இந்த இடம் எப்போவும் என் குட்டி பேபிக்கு மட்டும் தான்!”

மகி, இட்ஸ் இரிடேட்டிங் என பெரு மூச்சை விட்டாள். 

அதன் பின் அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர். 

சூர்யா உள்ளே சென்றான். மகி அசறிக்கையாக வந்தாள். உமா, மகி வந்து கொஞ்சம் இங்கே வேலை பண்ணு வா! 

அவன் தன் அத்தையை திரும்பி பார்க்க அதற்குள் சூர்ய தேவ், மிதுன் தேவ், சத்ய தேவ் மூவரும் என்ன வேலை என சொல்லி கொண்டே உமா வை நோக்கி வந்தனர். 

உமா மற்றும் மகி இருவரும் சாக் ஆகி பார்த்து கொண்டு இருக்க.. 

சூர்யா, என்ன மா வேலை நீங்க சமைக்க கூட வேணாம்! நான் எல்லாம் பண்றேன் அவளை எந்த வேலையும் சொல்லாதீங்க! 

சத்ய தேவ், உமா மா உங்களுக்கு என்ன ஆச்சு? நீங்க வேற மாதிரி இருக்கீங்க! 

மிதுன் தேவ், நீங்க எனக்கு உங்களை பிடிக்கும் ஸ்வீட் நீங்க ஆனால் என் மம்மிக்கு வேலை சொல்றீங்க! 

உமா, வாடா சாமி வக்காளத்து வாங்க வந்திட்டீங்க! உங்க அம்மாவுக்கு எந்த வேலையும் கொடுக்கல! போதுமா! 

மிதுன், மா எனக்கு கொஞ்சம் தூக்கம் வருது என்னை தூங்க வை வா என கையை பிடித்து அழைத்து சென்றான். 

**

நிதின் வெகு நேரமாக வசந்தன் வீட்டுக்கு அருகில்  மிதுனுக்கு காத்திருந்தான். 

என்ன மிதுன் இப்படி லேட் பண்றான் எவ்ளோ நேரம் காரில் வெயிட் பண்றது என காத்திருந்தான். ஆனால் மிதுன் வரவே இல்லை. இப்பொழுது வேறு வழி இல்லாமல் போன் செய்தான். 

ஹலோ மிதுன் வாட் ஹேப்பன்?

மிதுன் போனை எடுத்து கொண்டு தள்ளி வந்தவன். சாரி ப்ரோ என்னால் வர முடியாது! என்னை ஃபர்கிவ் பண்ணுங்க!

நிதின், என்ன ஆச்சு? 

மிதுன் நடந்த அனைத்து விஷயமும் கூறி சோ இது தான் நடந்தது. இப்போ நாங்க உமா ஆத்தா வீட்டுக்கு வந்து விட்டோம்! 

நிதின், இட்ஸ் ஓகே நீ பொம்மாயை பத்திரமா பார்த்து கொள் என சொல்லி போனை வைத்தான். இப்பொழுது என்ன செய்வது என தெரிய வில்லை. 

ஒரு சிறிது நேரம் கழித்து அவன் சிந்தையில் உதயன் தோன்றினான். உடனே உதயனுக்கு போன் செய்ய நினைத்தான். 

இரு கைகளையும் தட்டினான் . இரண்டு காவலாளிகள் எட்டி பார்த்தனர். 

எனக்கு உதயன் மாமா நம்பர் இப்போ உடனே வேணும் என நிதின் ஆளுமையிடன் கூறினான். 

யெஸ் பாஸ் என சொன்னவர்கள் 5 நிமிடத்தில் எண்ணுடன் வந்தனர். 

நிதின், எண்ணை டயல் செய்தான் 

***

Spr அவனது ஆபீஸில் அமர்ந்து இருந்தான். 

ஒரு வேலையும் ஓட வில்லை. அர்ஜுன்! அர்ஜுன்!. 

பாஸ் என அவன் ஓடி வந்தான். 

மகி எப்டி இருக்கா? இப்போ எங்கே இருக்கா! 

பாஸ் மேடம் சென்னையில் அவங்க மாமியார் வீட்டில் இருக்காங்க! 

Spr, நிதின் யார் கூட இருக்கான்! நான் எவ்வளவோ சொன்னேன் என் பேச்சை கேட்காமல் போய்ட்டான். 

அர்ஜுன், பாஸ் அவரு வசந்தன் வீட்டில் இருக்காரு! 

இதை கேட்டதும் spr ஆச்சரியமாக புருவம் வளைத்தான்.

ம்ம் என்ன சொல்ற? 

ஆமா பாஸ் அங்கே தான் இருக்காரு! 

Spr மனதில் சந்தோசம் குடிகொண்டது. அவனது எண்ணத்தில் சீக்கிரம் தனக்கு அந்த வீட்டில் கிடைக்க போகும் மரியாதையை எண்ணி பூரித்து போனான். 

அர்ஜுன் திரும்பி செல்ல போக! ஒக்க நிமிடம்!. 

பாஸ் என திரும்பி பார்த்தான். 

Spr புருவம் நெருக்கி கொண்டே தீவிரமான முகத்துடன் தேஜூ எதாவது மூவ் பண்ணாலா! அதை பற்றி எதுவும் தெரியுமா! 

அர்ஜுன், எதை பற்றி கேட்கிறீர்கள் பாஸ்! 

Spr, இடியட் நான் அதை பற்றி கேட்கல ஐ மின் வசந்தனுக்கு அவங்க குடும்பத்துக்கு எதிராக எதுவும் மூவ் பண்ணி இருக்காளா! அப்டின்னு கேட்டேன்! 

அர்ஜுன் ஒரு நிமிடம் நிதானித்து இல்ல பாஸ் மேம் அந்த மாதிரி எதுவும் இது வரை செய்யவே இல்லை! ஈவன் நாதன் சாருக்கு கூட தனியா வீட்டில் இருந்து ஸ்பை வச்சு இருந்தேன். ஆனால் சந்தேக படும் படியாக இது வரை எதுவுமே மாட்டல! நான் தொடர்ந்து கண்கானித்து கொண்டு தான் இருக்கிறேன். 

Spr, சரி போ! என அனுப்பி விட்டான். 

அவன் மனதில் குழப்பமாக இருந்தது. எதற்கு அமைதியாக இருக்கிறாள்! என்ன காரணமா இருக்கும்! ஒன்னுமே புரியல! என யோசித்து கொண்டு இருந்தவன் திடுக்கிட்டு மீண்டும் அர்ஜுனை அழைத்தான். 

பாஸ் என அர்ஜுன் பதட்டத்துடன் மீண்டும் உள்ளே வந்தான். 

Spr, உடனே மகிகு பாதுகாப்பை கொஞ்சம் அதிக படுத்து தேஜூ எப்போ எதை செய்வா அப்டின்னு தெரியாது. அவளுக்கு மகிய சுத்தமா பிடிக்காது.சோ எனக்கு மகி பாதுகாப்பு ரொம்ப முக்கியம்! 

அர்ஜுன், ஒகே பாஸ் என வெளியே சென்றான். 

தொடரும்.. 

Episode 323, 

நிதின் உதயன் எண்ணை அழைத்து விட்டு அவன் பதில் ஏற்க காத்திருந்தான். 

உதயன் போனை எடுத்தான். ஹலோ!. 

“ஹலோ!” என நிதின் கூறினான். 

உதயன் அந்த குரலை கேட்டதும் நிதின்! நிதினா!. என சந்தேகத்துடன் கேட்டான். 

நிதின் ஆச்சரியமாகவும் அதே சமயம் அதிர்ச்சி ஆகி ஹவ்!.. 

உதயன் சிரித்து கொண்டே அப்போ நிதின் தான்! சரியா செல்லம்!. 

நிதின், “நிஜமாவே எப்டி உங்களுக்கு என்னை இந்த அளவுக்கு பிடிச்சு இருக்கு! உண்மையாகவே நீங்க தான் என் மாமா! எனக்கு எங்க டாடிய தான் முதலில் பிடிக்கும்! ஆனால் இப்போ உங்களை பிடிக்குது!”

உதயன் சிரித்து கொண்டே போதும் நிதின் குட்டிக்கு என்ன வேணும்! 

நிதின், எனக்கு தாத்தாவை பார்க்கனும் போல இருக்கு! 

உதயன் கொஞ்சம் யோசித்து கொண்டே சரி நான் உங்க டாடி அப்புறம் உன் அம்மா கிட்ட சொல்லிட்டு உன்னை கூட்டிட்டு போகவா!. 

நிதின், இல்ல மாமா நான் இங்கே தாத்தா வீட்டுக்கு கொஞ்ச தூரத்தில் தான் நின்று கொண்டு இருக்கேன். 

உதயன், “நிதின் குட்டி மாமா என்ன சொல்லி இருக்கேன்! அது நம்ம வீடு நீ எப்போ வேணாலும் வரலாம்! போகலாம்! யாராவது எதுவும் சொன்னால் என் கிட்ட சொல்லு! அது உன்னோட மாமா வீடு! புரியுதா!”

நிதின், சரி மாமா! 

உதயன், வெரி குட் பாய் நீ அங்கேயே இரு நான் தாத்தாவை வர சொல்றேன். என உடனே வசந்தனுக்கு கால் செய்து விவரத்தை கூறினான். 

வசந்தன் எதுவும் பேசாமல் சிறு யோசனையுடன் அமைதியாக இருந்தார். 

என்ன பா யோசிக்கிரீங்க!. 

வசந்தன்,  நிதின் குட்டி அந்த spr காலேஜ் அந்த spr பையன் டா! ஏற்கனவே சூர்யா மாப்பிள்ளைக்கும் அவங்களுக்கும் பிரச்னை அதான்! 

உதயன், அப்பா! நிதின் உங்க பேரன்!  

வசந்தன் திடுக்கிட்டு என்ன சொல்ற? 

உதயன் தன்னை சுதாரித்து கொண்டு பா அப்படி இல்ல இப்போ சத்ய தேவ், சிவன்யா, பவன்யா, மிதுன் எல்லாம் உங்களுக்கு எப்டியோ அதே போல் தான் நிதின் குட்டி சோ அவனை வேற ஒருவனா பார்க்காதீங்க! அவனோட அப்பா மாதிரி நிதின் இல்ல! என் கிட்ட ஆசையா உங்களை பார்க்கனும் போல இருக்கு அப்டின்னு சொல்லி இருக்கான். தெரியுமா! 

வசந்தன், உதயன் நிஜமா வா!. 

உதயன், அவனை கவனிக்க யாரும் இல்ல பா பணம் காசு இருந்தா பத்தாது. தாத்தா பாட்டி அன்பு இது எல்லாம் வேணும்! உங்களை நினைப்பா சொல்றான். அது எவ்ளோ பெரிய விசயம்!  

வசந்தன் உண்மையாகவே மனதில் நிதின் மீது இன்னும் பாசம் வந்தது. சரி சரி விடு டா! நான் இப்போவே போய் தங்க பையனை கூட்டி வரேன்!  

உதயன், பா ஒரு நிமிடம்! 

என்ன? 

அம்மா!. 

வசந்தன் நினைவு வந்தவாராய்! நல்ல வேளை நியாபக படுத்தின! நான் பார்த்து கொள்கிறேன். நிதின் எப்போ வேணாலும் வரட்டும் எப்போ வேணாலும் போகட்டடும்!

சரி என உதயன் வைத்து விட்டான். 

வசந்தன் சட்டையை அணிந்து கொண்டிருக்க என்னங்க எங்கே கிளம்பி விட்டீர்கள்? 

அது நிதின் குட்டி வந்திருக்கான். அதான் போய் கூட்டிடு வந்துடுறேன். 

கலை கடுப்பாகி அவன் எதுக்கு வரான்? அதுவும் நம்ம வீட்டுக்கு? இப்போ மிதுன் கூட இல்லையே! பள்ளி கூடம் எதுவும் அனுப்ப மாட்டார்களா!

வசந்தன் கொஞ்சம் கடுமையுடன் இப்படி பேசாதே கலை!. அந்த சின்ன பையன் பாசமா வந்திருக்கான். அவன் இங்கே வந்ததும் புள்ளை மனசு கஷ்ட படுற மாதிரி பேசுற வேலையை விட்டு விடு!  

கலை எதுவும் பேசாமல் வாய்க்குள் முனகி கொண்டு இருக்க வசந்தன், நான் சொல்றது புரியுதா! இதுல மட்டும் எதுவும் அதிக பிரசங்கி வேலை பண்ணுன கன்னம் பழுத்து விடும் டி! என சொல்லி விட்டு வசந்தன் கிளம்பினார். 

அதன் பின் நிதின் இருக்கும் இடத்துக்கு சென்று அவனை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தார். 

அவன் முகத்தில் அத்தனை சந்தோசம்!. 

**

மிதுன் மகியிடம் சிரித்து கதை பேசி கொண்டு படுத்து இருந்தான். 

மகி அவனை கட்டி அணைத்து முத்தம் பதித்தவள். அப்புறம் எப்டி அப்பா கூட க்ளோஸ் ஆன! 

மிதுன் அவனது கொஞ்ச முடியை கோதி கொண்டே நானா? அப்படி இல்ல அவரு தான் எனக்கு கிஸ் பண்ணாரு! நான் தெளிவா சொல்லிட்டேன். 

மகி அவன் முகத்தை பார்த்து எந்த இடத்தில் டாடி கிஸ் பண்ணாங்க? 

மிதுன், இங்கே தான்!. 

மகி அதே இடத்தில் முத்தம் பதித்து கடித்தாள். 

ஹோ மகி வலிக்குது டி!.

மகி, நான் அம்மா டா!. 

மிதுன், எனக்கு உன்னை பார்த்தால் அம்மா போல இல்ல மா!. எனக்கு உன்னை பார்த்தால் ஒரு how to I tell you!. 

மகி, நீ என்னை அம்மான்னு கூப்பிடு மிதுன்!  அப்புறம் வாடி போடி சொன்ன சத்ய தேவ்! உன்னை பிச்சிடுவான். 

மிதுன் புருவம் நெருக்கி கொண்டே அவனுக்கு நான் எதுக்கு பயபடனும்!. 

மகி அவனை பார்த்து எனக்கு அப்பாவை விட சத்ய தேவ் பார்த்தால் பயப்படுவேன் மிதுன்!. 

மிதுன், அவனுக்கு நீ எதுக்கு பயப்படனும்! அவன் உனக்கு வெறும் சன் மட்டும் தான்! 

மகி, உனக்கு சத்ய தேவ் பற்றி ஒன்னும் தெரியாது. அண்ணா சொல்றத தான் நீ கேட்கணும்! 

மிதுன், அவன் ஒன்னும் உனக்கு அண்ணா இல்ல!. .

மகி, ஆனால் உனக்கு அண்ணன்! அது தெரியுதா! 

மிதுன், it’s not fair மகி!. .

மகி, சத்ய தேவ் எது சொன்னாலும் நான் நம்புவேன்! 

மிதுன், அவன் தப்பு கூட செய்வான். .

மகி, அவன் செய்ய மாட்டான். மிதுன் நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ நீ சக்தி அண்ணா கூட தான் இருக்கணும்! அண்ணா சொல்றத தான் கேட்கணும்! நீ அதில் எதுவும் தப்பு பண்ண! அப்பா  உன்னை மன்னிக்க மாட்டாரு பனிஸ்மென்ட் கிடைக்கும் அடி கூட வாங்குவ!  நான் கேட்டுக மாட்டேன். 

மிதுன் அப்படியே அமர்ந்து இருந்தான். இந்த அளவுக்கு சத்ய தேவ் மகி மனதில் இருக்கிறான். இப்படி இருக்க கூடாது.எதுவும் செய்ய வேணும்! என்ன செய்யலாம்? நிதின் அண்ணா கிட்ட சொல்லணும்! என நினைத்து கொண்டான். 

அடுத்த நாள் அழகாக விடிந்தது. சூர்யா லேப் டாப் கையுமாக அமர்ந்து கொண்டான். வேலையில் இருந்தான்.

மகி சத்ய தேவ், மிதுன் என வரிசையாக படுத்து இருந்தனர். அவளை நடுவில் வைத்து கட்டி கொண்டு இருவரும் தூங்கினார்கள் சூர்யாவுக்கு தான் பயமாக இருந்தது. மகியின் வயிற்றில் காலை, கையை போட்டு விட்டால் என்ன ஆவது! என ஒவ்வொரு முறையும் பார்த்து கொண்டு இருந்தான். 

உமா, சூர்யா! சூர்யா!. 

மா!. 

உமா ஒரு சொம்பில் இளநீரை எடுத்து கொண்டு அவளை எழுப்பி இதை குடிக்க சொல்லு குழந்தை நல்லா ஊரும் ரொம்ப நல்லது. 

நீயே கொடு மா! 

உமா முறைத்து பார்த்தார். 

சூர்யா, மா கொடுங்க நானே கொடுக்கிறேன். 

உமா, நான் யாருக்கும் வேலைக்காரி இல்ல! இப்படி எழு மணி வரைக்கும் எந்த மாமியார் வீட்டில் தூங்க விட்டு இருப்பாக!. 

சூர்யா, ச்ச தெரியாமல் கேட்டு விட்டேன். இதுக்கு இத்தனை சண்டையா! இவங்க நடுவில் நான் தான் மாட்டி கொண்டேன். இவள் எல்லாம் பண்ணிட்டு என் கிட்ட முறுக்கி கொண்டு இருக்கா! என நினைத்து கொண்டான். 

நண்பகல் பதினொரு மணி அளவில் சிவாவின் குடும்பம் வந்து சேர்ந்தது. மாமா!  என சூர்யா அழைத்தான். 

சுமதி சஞ்சையை தூக்கி கொண்டு வந்தார். அவரின் பின்னால் ஜனனி வந்தாள். அத்தான்!

சூர்யா, ஜானு!. 

மிதுன், உங்களுக்கு அன்னிக்கு ஸ்டோமக் பெருசா இருந்தது. நான் பார்த்தேன். 

சுமதி, குட்டி சூர்யா இங்கே பாரு குட்டி தம்பி!. 

ஜனனி, மாமா வாய் பயங்கரமா பேசுறான். 

ம்ம் உட்காருங்க கேளு வந்து அவன் பேசுவதை!.

மகி அனைவருக்கும் தண்ணீர் கொடுத்து விட்டு வரவேற்று கொண்டு சஞ்சயை வாங்கி கொண்டாள். 

சஞ்சய் கண்ணா! வாங்க பெரிமா கிட்ட வாங்க அப்படியே ஆதி மாதிரியே இருக்கான். அழகு குட்டி சக்தி பாரு ஆதி சித்தப்பா மாதிரி இருக்கான் தான. 

ஆமா!. .

சூர்யா, ஜானு அப்டியா! பாரு பச்சையா பொய் சொன்றா! அவன் உன்னை மாதிரி இருக்கான்! 

ஜானு, அக்காவுக்கு என்னை எப்போவும் பிடிக்காது. 

அவளுக்கு பிடிக்காட்டி போகுது. எனக்கு உன்னை பிடிக்கும் செல்லம்!. 

மிதுன், எனக்கு கூட உங்களை பிடிக்கும்! நீங்க பிரிட்டியா இருக்கீங்க!. 

ஜனனி, வாடா தங்கம் சித்தி கிட்ட வா! 

மகி மற்றும் சக்தி இருவரும் சஞ்சய தூக்கி கொண்டு நம்ம உன்னோட டாடிக்கு வீடியோ கால் பண்ணலாம் என ஆதிக்கு போன் செய்தாள். 

அவர்கள் இருவரும் ஐக்கியம் ஆகி சஞ்சயிடன் நேரம் கழித்தனர். அங்கே மிகவும் சோகமாக இருந்தது நட்ராஜ் மட்டும் தான்! 

உமா பம்பரம் போல் சுழற்றி கொண்டு வேலையை செய்தார். தன் தம்பி வந்து விட்டான். பாச மலர்!  

சூர்யா, என்ன பா உங்க முகம் சோகமா இருக்கு!. 

உங்க அம்மா ஆட்டம் தாங்கவே முடியல உங்க அத்தைக  வந்தால் இப்படி இருப்பாளா உங்க அம்மா! உன் மாமன் வந்ததும் என்ன ஆட்டம் போடுறா ஒன்னும் தாங்க முடியல! .

இதை கேட்டு சூர்யா சிரித்தான். 

என்ன டா சிரிக்கிற!  

ஒன்னும் இல்ல!. அப்புறம் அமுத சுரபி கல்யாணத்துக்கு என்ன சீர் செய்ய போறீங்க!. 

நட்ராஜ் கொஞ்சம் சிரித்து கொண்டே இப்போ தாம் டா உனக்கு அத்தை வீடு நினைப்பு வருது! அமிதுக்கு பெருசா செய்யணும்! எனக்கு அமுது என் செல்ல புள்ளை!. 

சூர்யா, எப்போ கல்யாணம்! 

இன்னும் ரெண்டு மாசத்தில் நம்ம ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே போயிடனும்! அமுது கல்யாணம் திருவிழா தான்! 

சூர்யா, அம்மா கிட்ட சொல்லிட்டீங்கலா! 

என்ன? .

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி போறது பற்றி!. 

நட்ராஜ் கொஞ்சம் கோபத்துடன் சூர்யா உன் அம்மா கிட்ட சொல்லிடு அங்கே நான் ரொம்ப முக்கியம் இதுல எதுவும் பண்ணா நான் டைவர்ஸ் பண்ணிட்டு ஊருக்கு கிளம்பி விடுவேன்!. 

சூர்யா, பா காமெடி பண்ணாதீங்க! 

டேய் நான் சீரியஸா சொல்லிட்டு இருக்கேன்! 

***

தேஜு ரொம்ப நாட்கள் கழித்து இது வரை கலை வாணி வீட்டில் நடந்த விஷயங்களை போட்டு பார்க்க ஆரம்பித்தாள். 

கொஞ்ச நேரம் கழித்து குருவுக்கு கால் செய்து சில விஷயங்களை கூறினாள். 

இங்கே சூரியா இன்பாவின் போனுக்கு காத்திருந்தான். 

தொடரும்..

Episode 324, 

அப்படியே ஒரு வாரம் சென்றது. சூர்யா இரண்டு நாட்கள் மட்டும் தங்கி விட்டு பெங்களூர் சென்று விட்டான். ஏனென்றால் ப்ராஜெக்ட் வேலைகள் நிறைய இருந்ததால் அவன் கிளம்பி விட்டான்.

சத்ய தேவ் , மிதுன் தேவ், நடராஜ், உமா மகிழினி  ஆகிய ஐவரும் ஈரோடு கிளம்பினார்கள்.

உமா ஏற்கனவே ஒரு சில வேண்டுதல்களை வைத்திருந்தார். அதனால் மகிழினியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றார் .

அங்குதான் அடுத்த பிரச்சனை காத்திருந்தது. 

 அனைவரும் கோவிலுக்கு கிளம்பினார்கள் சூர்யா  சென்றதிலிருந்து மகிழினி அவனிடம் பேசவே இல்லை.

அதனால் சூர்யாவிற்கு குழந்தையை பற்றியும் அவளுடைய உடல் நலனை பற்றியும் அக்கறை இருந்தது. அடிக்கடி சத்ய தேவ்க்கு அழைத்து விசாரித்து கொள்வான்.

ஏற்கனவே உமா மற்றும் மகிழினி இருவருக்கும் மனக்கசப்பு வேறு இருக்கிறது. அதனால் எப்படியாவது அவளிடம் தன் உமாவிடம் பேசும் படி சொல்ல நினைத்தான் .

ஆனால் அவன் சொன்னது வேறு விதமாக இருந்தது.  அவள் புரிந்து கொண்டாளா? இதோ பார்ப்போம்!.

அனைவரும் சென்னையில் இருந்து ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு செகண்ட் ஏசி புக் செய்து கிளம்பினார்கள்.

அங்கிருந்து அவர்களது ஊருக்கு ஒரு மணி நேர பயணம் அங்கே நடராஜுக்கு சொந்தமான வீடு மற்றும் கொஞ்சம் நிலபுலங்கள் இருக்கிறது. ஏற்கனவே நட்ராஜ் அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் கூறி சுத்தம் செய்து வைத்திருந்தார். கூடவே எழுதுங்கள் சீர் நடைபெற இருக்கிறது. அதற்காகவே உமா மகிழினியை அழைத்துக் கொண்டு சென்றார் .

சரியாக அவர்கள் ஈரோடு ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்கு செல்லும் நேரம் சூர்யா அவளுக்கு அழைத்தான்.

மகிழினி போனை எடுத்துப் பார்த்தாள். என்ன நமக்கு போன் பண்ணி இருக்காரு? ஞாபகம் வந்திருக்குமா? என்று இதயம் படபடக்க போனை எடுத்து அழைப்பை ஏற்று பதில் பேசினாள் .

மிதுன் மற்றும் சத்ய தேவ் இருவரும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் இடங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தார்கள். அவர்கள் அதிகமாக டவுன் ,சிட்டியில் வளர்ந்ததால் இயற்கை காட்சிகள் இங்கு அதிகமாக இருக்கும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தார்கள்.

மகிழினி, ஹலோ!

 சூர்யா, மேடம்க்கு நானே தான் போன் பண்ணி கேட்கணுமோ? ஏன் ஒரு கால் பண்ணா குறைஞ்சு போயிடுவீங்களா!

அவள் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தாள்.

சூர்யா ஒரு பெருமூச்சை விட்டு “நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல, உன்னோட கோபம் ரொம்ப அர்த்தமில்லாம இருக்கு! ஆனா எனக்கு வேற வழியில்லை!”என்று பற்களை கடித்துக் கொண்டே பேசினான்

மகி மெதுவான குரலில் என்ன திட்றத்துக்கு தான் போன் பண்ணீங்களா? 

சூர்யா, “உன்னை திட்டி எனக்கு என்ன மகி வரப் போகுது! நமக்குள்ள ஆயிரம் சண்டை இருக்கலாம்! ஆனா இப்போ அத பத்தி பேச வரல, உனக்கு என் மேல கோபம் இருக்கா? நீ அப்படியே இருந்துட்டு போ! ஆனா இப்போ வேற விஷயத்தை பத்தி பேச தான் உனக்கு போன் பண்ணேன்!”

சொல்லுங்க என்று சுறத்தே இல்லாத குரலில் பேசினாள்.

சூர்யா ,“இந்திரா நூயி ”அவங்கள பத்தி கொஞ்சம் சர்ச் பண்ணி படிச்சு எனக்கு சொல்றியா ?

மகிழினி புரியாமல் புருவம் நெருக்கி என்ன கேட்கிறீங்க? நீங்க சொல்றது புரியல?

சூர்யா, “ இந்திரா நூயி கேள்விப்பட்டிருக்கியா ?”என்று கேட்டான்.

ம்ம் பெப்சி ceo! என மகிளினி பதில் அளித்தாள். 

சூர்யா, ஓகே அவங்களை பத்தி நிறைய ஆர்டிக்கல்ஸ் இருக்கு அத படிச்சிட்டு அவங்களோட  புரொபஷனல்,  ஃபேமிலி லைப் பத்தி அதுல சில ஆர்டிகிள்ஸ் இருக்கு அத படிச்சு எனக்கு என்னன்னு இன்னும் அரை மணி நேரத்தில்  போன் பண்ணி எக்ஸ்ப்ளைன் பண்ண முடியுமா? 

மகிழினி புரியாமல் “என்ன திடீர்னு அவங்களை பத்தி படிக்க சொல்றீங்க!” என்று கேட்டாள். 

சூர்யா ,எல்லாம் ஒரு காரணமாகத்தான்! நீ படிச்சிட்டு அவங்கள பத்தி எனக்கு எக்ஸ்பிளைன் பண்ணனும்! அதுக்கு தான் கால் பண்ணேன்! உடனே பண்ணு! என்று போனை கட் செய்தான்.

அதன் பின் மகிழினி அவன் சொன்னதைப் போலவே இந்திரா நூயி அவர்களைப் பற்றி விக்கிபீடியாவில் சேர்ச் செய்து படிக்க ஆரம்பித்தாள்.

அவர்களது முழு வாழ்க்கை வரலாறு மற்றும் குடும்பம் வேலை என அனைத்தையும் படித்தாள். இந்திரா நூயி முதன் முதலாக சீப் எக்ஸிக்யூட்டிவ் ஆபிசராக  பெப்சி நிறுவனத்தின் முதல் பெண் சி.இ.ஓ ஆவார். கடந்த 2019 இல் தான் ஓய்வு பெற்றார். அது மட்டுமில்லாமல் இந்திய பெண் இன்னும் அவர் அவரைப் பற்றி பல சாதனைகள் அதில் போட்டிருந்தது.

மகிழினி அதை படித்துக் கொண்டே பிரமித்து போனாள்.

அப்படியே குடும்ப வாழ்க்கையை பற்றியும் படித்தாள். சிறிது நேரம் கழித்து சூர்யாவிற்கு அழைத்தாள்.

மகி, ஹலோ நீங்க சொன்ன மாதிரி நான் படிச்சிட்டேன்! 

சூர்யா, படிச்சிட்டியா சொல்லு பாக்கலாம்! என்று கேட்டான்.

மகிழினி சொல்ல ஆரம்பிக்க..

சூர்யா, ஒரே ஒரு நிமிஷம் இரு!..

சொல்லுங்க என்று கூறினாள்.

சூர்யா அதாவது இந்திரா நோயி சிஇஓ வா செலக்ட் ஆன அந்த டைம்ல 1994 சம்திங் அந்த ரேஞ்சுல அவங்க பெப்சி சி.இ.ஓ கரெக்ட்டா!. 

ஆமாங்க என்றாள்.

சூர்யா, அவங்க முதன் முதலில் பெப்சி சிஇஓ வேலையை ஏத்துக்கிட்டு அவங்க வீட்டுக்கு கார்ல  வராங்க அந்த டைம்ல அவங்க வீட்டு நுழைவு வாயில இறங்கி அவங்க எங்க இருக்காங்க ஃபர்ஸ்ட் வந்த உடனே அவங்க என்ன பண்ணி இருப்பாங்கன்னு நீ நினைக்கிற ?என்று கேட்டான்.

என்ன பண்ணி இருப்பாங்க?

 சூர்யா சிரித்துக்கொண்டே அவங்க எப்போ அந்த நுழைவு வாயில் உள்ளே  அதாவது பெப்சி சிஇஓ  தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டு கார்ல வந்தவங்க.. அவங்களோட வீட்டு கேட்  வந்ததும் நேரா அவங்க எங்க போனாங்கன்னு சொல்லு?

மகிழினி, எனக்கு தெரியல!. 

 சூர்யா அவங்க நேரா கிட்சன் போயி அவங்க மாமியாருக்கு டீ போட்டு கொடுத்தாங்க என்று கூறினான்.

இதை கேட்டதும் மகிழினி கடுப்பானாள்.

இத சொல்றதுக்கு தான் இவ்வளவு பெரிய எக்ஸ்பிளநேஷன் கொடுத்தீங்களா?

சூர்யா, பக்குவப்பட்டவங்க, ரொம்ப புத்திசாலிங்க, முதிர்வு உடையவங்களுக்கு நான் சொல்றது புரியும்!என்று கூறினான்.

மகிழினி அமைதியாக இருந்தாள்.

இப்பொழுது சூர்யா பேசத் தொடங்கினான்.“ அதாவது வேர்ல்டிலேயே ஃபர்ஸ்ட் கம்பெனி பணக்கார கம்பனி பில்லியன் டாலர் கிடைக்கும் கம்பனி பெப்சி தான்! நீ உலகத்தில் எங்கே போனாலும் உனக்கு பெப்சி கிடைக்கும் அந்த அளவுக்கு அதோட பிஸ்னஸ்!.அது நம்ம எல்லாத்துக்குமே தெரியும்! அந்த பெப்சியோட சிஇஓ  இந்திரா நூயி  அவங்க வீட்டுக்கு வந்ததும் அந்த பதவியை அப்படியே அந்த கேட்டுக்கிட்டே  நிறுத்தி வச்சிட்டு அவங்க அந்த வீட்டோட மருமகளா போயி அவங்க மாமியாருக்கு டீ போட்டு கொடுத்திருக்காங்க சோ, இதுல இருந்து என்ன தெரியுது? 

மகி இன்னும் அமைதியாக இருந்தாள். 

சூர்யா, “நீ எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும்,உன்னோட மகன் நாளைக்கு  கலெக்டராக இருந்தாலும் அவங்களோட அம்மாவுக்கு அவன் பையனா இருக்கணும்! ஒருத்தி எவ்ளோ சாதனை செய்தாலும் அவங்களோட மாமியாருக்கு அவன் மருமகளா இருக்கணும்! அப்படின்னு தான் நான் சொல்ல வரேன்!”

மகிக்கு இதை கேட்க எரிச்சலாக இருந்தது. ஆனாலும் சூர்யா சொன்னது சரி!. 

சூர்யா, “இதுக்கு மேல உனக்கு பெரிய எக்ஸ்பிளநேஷன எக்ஸாம்பிள்லா  நான் கொடுக்க விரும்பல,  எங்க அம்மாவுக்கும் உனக்கும் நடுவுல இருக்குற இந்த விரிசல் எனக்கு சுத்தமா பிடிக்கல! நீ என்னமோ நெனச்சிட்டு போ என்னுடைய எக்ஸாம்பிள நான் சொல்லிட்டேன்! இதுக்கு மேல உன்னோட விருப்பம்!” என்று கூறியவன் ஃபோனை வைத்து விட்டான்.

மகிழினி அதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள்.சூர்யா சொன்னது உண்மையா? இல்லை பொய்யா ?என்று அவளுடைய போனில் ஆராய ஆரம்பித்தாள். 

சூர்யா சொன்னது போலவே அனைத்து செய்திகளும் இருந்தது மகிழினிக்கு இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக புரிய வந்தது.தேவையில்லாமல் ஒரு பிரச்சனையை பெரிது படுத்துகிறோமோ என்று தோன்றியது.

உமாவுடைய பேச்சு ஆதிக்கமாகவும், அதிகாரமாகவும் இருந்தாலும் கூட தவறு செய்தது தான்,  எத்தனை தவறு கொஞ்சம் தவறா? மித்துன் வயிற்றில் இருக்கும் போது சென்றது. இங்கு வந்ததிலிருந்து நிறைய மறைத்தது. அவரிடம்  சரியாக போன் பேசாமல் இருப்பது.

இது தவறு தான் எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? இந்த பார்மல் வார்த்தைகளை கூட மகிழினி பேசியதில்லை. ஏனென்றால் அவளுக்கு உமா என்றால் மிகவும் பயம்.

எங்கே அவர்  மிதுன் பற்றியோ அப்படி இல்லை யென்றால் ஏன் கனடா சென்றாய்? என்று கேட்டு விட்டால் என்ன செய்வது என்று பயம்தான். அதனால் அவரிடம் பேசுவதை  நிறுத்தினாள். 

இப்படி இவள் நினைத்து கொண்டு வரிகையில் முக்கால் மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தார்கள் நாளை தான் அந்த கோவில் வேண்டுதல் மற்றும் எழுதுங்கள் சீர் அனைத்தும் நடக்கப் போகிறது. அதற்கு உண்டான வேலைகளை வந்ததும் ஆரம்பித்தார்கள்.

மகிழினி ஒருவித தயக்கத்தில் இருந்தாள்.

சத்ய தேவ் ,அம்மா என்னாச்சு?ஓகே தானே! 

அவளோ ஒன்னும் இல்ல சக்தி என்று கூறிவிட்டாள்.

உமா பரபரப்புடன் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தார் .

மகி நேராக அவர் அருகில் சென்றாள்.   

அத்தை!

உமா பரபரப்பாக  வேலையை செய்து கொண்டு “சொல்லு மகி!”என்று எப்பொழுதும் போல் இயல்பாக பேசினார்.

மகிழினி அத்த என்று மறுபடியும் கூப்பிட்டாள்.

என்ன எதுவும் சாப்பிட வேண்டுமா? ஏதாவது குடிக்க ,ரெஸ்ட் எடுக்கிறியா? என்ன வேணும்? என்று கேட்டார்

மகிழினி, ஒன்னும் இல்ல தப்பு என் பேர்ல தான்! நான் உங்ககிட்ட எந்த விஷயத்தையும் மறைச்சிருக்க கூடாது!  எங்க வீட்ல ஏற்கனவே பிரச்சனை அப்படின்ற காரணத்தை தான் நான் நினைச்சேன் . உங்ககிட்ட சொல்லணும்னு நான் நினைக்கல. அது என்னோட தப்பு தான் இனிமேல் அப்படி இருக்க மாட்டேன்!  எனக்கு பயமா இருந்தது. நான் நிறைய தப்பு பண்ணிட்டேன் அதை மனசுல வச்சுட்டு நீங்க பேசுவிங்களோ? இல்ல பத்தி கேள்வி கேப்பீங்களா? அப்படின்னு நினைச்சு தான் எதுவும் பேசல என்று கூறினான்.

உமா சிரித்துக் கொண்டே உன் மேல எனக்கு என்ன மகி கோபம்?

இல்ல அத்தை அது!  என மகி தலை குனிந்து நின்றாள். 

உமா, எனக்கு அடுத்து இந்த வீட்ல நீ தான் எல்லாமே ! உன் மேல கோபம் இல்லை, என்னை பகைச்சுக்கிட்டு நான் எப்படி இருக்க முடியும்! இது எல்லாமே என் நாம ரெண்டு பேரும் யாருக்காக இருக்கொம் சூர்யாவுக்காக  தான் சோ எனக்கு என் பையன் முக்கியம்! அவனுக்கு நீ முக்கியம்! அதே போல தான் ரெண்டு பேரும் எனக்கு ரொம்ப முக்கியம், இப்போ  எனக்கு  பேர பசங்க அதைவிட முக்கியம். சோ உன் மேல எனக்கு கோவம் இல்லை.வருத்தம் தான் மத்தபடி எதுவும் இல்லை. நீ ஃப்ரீயா இரு. அதை பற்றி எல்லாம் நினைச்சுட்டு இருக்காத! 

 உமா, ஜாலியா இரு,  சரியா  எதா இருந்தாலும் கேளு!  உனக்கு எப்போ என்கிட்ட பேசணும்னு தோணுதோ நீ அப்போ பேசு என்று கூறினார் .

சரிங்க அத்தை  என்று புன்னகையுடன் தலைசைத்தாள்.

உமா, சரி போ இவ்வளவு நேரம் டிராவல் பண்ணி உனக்கு டயர்டா இருக்கும். கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுக்குறியா? என்று கேட்டார்.

இல்ல அத்தை எனக்கு கொஞ்சம் குளிக்கணும் போல இருக்கு!.

உமா, அதுவும் நல்லது தான் அப்போ தான் மேலு வெடுக்கிநு இருக்கும்  நான் சுடுதண்ணி வைக்கவா? என்று கேட்டார்.

இல்லத்த நானே பச்சைத்தண்ணி என்று…

 உமா, பச்ச தண்ணி எல்லாம் ஆகாதுமா அதுவும் நம்ம ஊரு விட்டு ஊரு வந்து இருக்கோம்! அதனால வெதுவெதுப்பா உனக்கு வச்சு கொடுக்கிறேன். நீ  ஊத்திக்கோ! வேணும்னா சொல்லு நான் மேலுக்கு ஊற்றி விடுகிறேன்! என்று கூறினார்.

மகிழினி, சாரிங்க அத்த என்னை மன்னிச்சிடுங்க என்று சமாதானமாக மீண்டும் கூறினாள்.

உமா அதனால என்ன அதை விடு பசங்கள பாரு அவனுங்கள குளிக்க சொல்லு தேவையான திங்ஸ் எல்லாம் அங்க இருக்கு எடுத்துக்கோங்க என்று கூறினார்.

மகிழினி அங்கு அவர்கள் எப்பொழுதும் தங்கும் அறைக்கு சென்றாள். மனம் கொஞ்சம் இளகியது போல் இருந்தது. ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல் இருந்தது.

உடனே சூர்யாவுக்கு அழைத்தாள்.

ஹலோ சொல்லு என்று கரகரத்த குரலில் கடுமையாக பேசினான்.

மகிழினி, ஒன்னும் இல்ல

சூர்யா, அப்போ போன வைக்கட்டுமா?

மகிழினி, ரொம்ப தேங்க்ஸ் என்று கூறினாள்.

சூர்யா புருவம் உயர்த்தி  சரி என்றான்.

அவன் எந்த கேள்வியும் கேட்காமல் இருப்பதை பார்த்து மகிழினி அவளாகவே நான் அத்தக்கிட்ட பேசிட்டேன்! அது எல்லாம் உங்களால தான் நடந்தது. அதுக்கு தான் தேங்க்ஸ்!

சரி!. 

மகிழினி ,அடப்பாவி என்று மனதில் நினைத்துக் கொண்டவள். அதேபோல உங்ககிட்ட நான் சமாதானம் ஆகும்னு மட்டும் நீங்க நினைக்க வேண்டாம்! உங்க மேல எனக்கு கோபம் தான்!

சூர்யா, வாட் அ காமெடி! யார்? யார் மேல கோபப்படுவது? என்று கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாம இருக்கு ! பண்ற தப்பு எல்லாம் நீ!  ஆனா நீ  எவ்ளோ தைரியம் இருந்தால் என் மேல கோபப்படுவ ? போடி என்று கோபத்துடன் போனை வைத்தான். அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

அவளும் சிரித்துக்கொண்டாள். உமா மிகவும் உற்சாகமாக இருந்தார். மகி அவளாகவே வந்து பேசியதில் சந்தோசம்! 

சூர்யா, சத்ய தேவுக்கு கால் செய்தான்.

டாடி!  

ஆத்தா! எப்படி இருக்காங்க? அம்மா அவக கிட்ட பேசினார்களா! 

ம்ம் இப்போ ரெண்டு பேரும் ஓகே! பேசி கொள்கிறார்கள்!. 

சூர்யா நிறைவாக புன்னகைத்தான்.உமா சாமி கும்பிட அனைத்து வேலையும் செய்து முடித்தார். சூர்யா போன் செய்தான். 

சொல்லு சூர்யா!. 

ஒரே குஷி போல ஜாலியா இருக்கீங்க! 

உமா, என்ன ஜாலி! ஒன்னும் இல்ல நாளைக்கு சாமி கும்பிட போறோம்! நீ தான் வர மாட்டேன்னு சொல்லிட்ட!..

சூர்யா, மா வேலை மா! உங்களுக்கு ஒரு பையன் மட்டும் தான் ஆனால் எனக்கு மூணு குழந்தை! 

உமா இதை கேட்டு சிரித்தார். 

மா! 

உமா, நான் மகிய தப்பா நினைத்து விட்டேன் டா! என் மருமகள் எப்போவும் தங்கம்! 

அடேங்கப்பா!. 

உமா, அவளே என் கிட்ட  வந்து பேசினாள். நானும் கொஞ்சம் ஓவரா பேசி விட்டேன். இனி இப்படி நடக்க கூடாது. இத்தனை வருடத்தில் எப்போவும் இது மாதிரி எங்களுக்கு நடுவில் இப்படி நடந்தது இல்ல! அதனால் இனி  அதுக்கு எந்த அவசியமும் இல்லை!. 

சூர்யா, இதுக்கு என் தலையை போட்டு உருட்டி விளையாடின்க?.

உமா, உனக்கு என்ன டா பிரச்னை! 

சூர்யா சிரித்து விட்டு சரி மா! எல்லாம் சேர்ந்து இருந்தால் சரி என சொல்லி வைத்து விட்டான். 

அடுத்த நாள் அழகாக விடிந்தது. சத்ய தேவ்,மிதுன் தேவ் இருவரும் கோவிலுக்கு கிளம்பினர். மகி மஞ்சள் நிற சில்க் காட்டன் புடவையில் ஜம்மென தயாராகி கொண்டு இருந்தாள். 

மிதுன் உடையை நீவி கொண்டே உள்ளே வந்தவன். 

மகி! எப்டி இருக்கேன்!. என கேட்டு கொண்டே உள்ளே வந்தான். 

ம்ம் அழகா இருக்க மிதுன்?

மிதுன் தன் அம்மாவை பார்த்து மா நீ இந்த மாதிரி எதிக் ட்ரஸ்ல ரொம்ப அழகா இருக்க? வா செல்ஃபி எடுப்போம்! 

மகி, ஒரு நிமிடம் இரு அண்ணா வரட்டும்! 

மிதுன், உங்க அண்ணா வராங்களா? 

மகி அவனை முறைத்து பார்த்தாள். 

ஹே சொல்லு மா! முறைக்காத!. 

மகி, நான் சத்ய தேவை சொன்னேன்!. 

மிதுன் கடுப்பாகி அவன் கூட நான் போட்டோ எடுக்க மாட்டேன். 

மகி, நீ எடுக்க வேணாம்! இங்கே இருந்து கிளம்பும் போது நான், சக்தி, ஆத்தா, அப்புறம் தாத்தா மட்டும் தான் கிளம்புவோம் உன்னை இங்கேயே ஃபார்ம் இருக்கு அங்கே cow boy வேலை இருக்கு சோ விட்டு போயிடுவேன். 

மிதுன் அதிர்ச்சியுடன் பார்த்தான். 

மகி, நிஜமா!. பண்ண தான் போறேன்!. 

மிதுன் அவளை முறைத்து பார்த்து கொண்டே வெளியே சென்றான். 

மகி சிரித்து கொண்டே ஹே மிதுன்! கண்ணா!. 

அவன் நேராக நட்ராஜ் கிட்ட சென்று தாத்தா!. 

சொல்லு கண்ணா! 

தாத்தா எனக்கு ஒன் கொஸ்டின் அதுக்கு ஆன்சர் வேணும்! 

என்ன? சொல்லு சொல்லி விடுவோம்! 

Duck நேம் தமிழ் என்ன? 

புரியல டா!. 

அந்த பக்கம் சத்ய தேவ் வந்தவன் அதுக்கு பேர் வாத்து!. 

மிதுன்,  ஃபர்ஸ்ட் நான் உன் கிட்ட கேட்கல!. 

சத்ய தேவ்,போடா குட்டி குட்டா!..

நட்ராஜ் சிரித்து கொண்டே என்ன சக்தி இப்போ என்ன சொன்னீங்க? 

சத்ய தேவ் சிரித்து கொண்டே டாடி அவனை அப்படி தான் சொல்லுவார்! 

மிதுன் வேகமாக மகி பக்கத்தில் சென்று நீ!.. நீ!..நீ வந்து… வாத்து!.  வாத்து! கேர்ள் i மின் நீ வாத்து! குவாக்! குவாக்! அப்படி கத்தும் இனி நீ அதை தான் மெய்ப்ப!..என முறைத்து கொண்டே கூறினான். 

அப்படியா! போடா!. அது மெய்ப்ப இல்ல மேய்ப்ப!. 

மிதுன் உதடுகள் பிதுக்கி கொண்டு எப்படி நீ சொல்லலாம்! என்னை கவ் பாய்!. 

மகி அவனுடைய செய்கையை பார்த்து சிரிப்பு வந்தது. 

சத்ய தேவ் உள்ளே வந்தான். அவன் தன் அம்மாவை பார்த்து மா! இன்னிக்கு எக்ஸ்ட்றா அழகுக்கு என்ன காரணம்? 

மகி அழகாக சிரித்து விட்டு என் சக்தி குட்டி கூட இருக்கிறேன். அதான் இன்னும் அழகு!  

மிதுன் மனதில் எப்டி  அம்மா அவன் கிட்ட எவ்ளோ சுவீட்டா பேசுறா! இதே போல தான் அந்த ரித்து கூட இவன் பின்னால் சுற்றி கொண்டு இருக்கா! அதே போல் தான்  இந்த  அறிவு பேபி அறிவு டார்லிங் (விவேகா) எனக்கு  பெட் ஆனால் என் கூட இருக்கும் எல்லா ஆட்களையும் இவன் ப்ரெண்ட் ஆக்கி கொள்கிறான். என பார்த்து கொண்டு இருந்தான். 

சத்ய தேவ், மா வாங்க ஒரு போட்டோ எடுப்போம்!  

மகி, ஒரு நிமிடம் சக்தி குட்டி என மிதுன பார்த்தாள். 

வரேன்! என பற்களை கடித்து கொண்டு அருகில் வந்தான். 

மிதுன் முகம் கோவமாக முறைத்து கொண்டே இருக்க சக்தி மற்றும் மகி இருவரும் சிரித்து கொண்டே செல்ஃபி எடுத்தனர். 

ஆனால் இது தான் அவர்கள் மூவரும் சேர்ந்து இருக்கும் சிரித்த படம் என்பது தெரியாமல் போனது.

மகி கோவிலில் வேண்டுதல் முடித்து பரவளை, சோலி உருட்டும் இடம் வந்தது. 

அடுத்து என்ன நடக்கும்? 

தொடரும்.. 

Episode 325, 

மகிழினி, சத்ய தேவ், மிதுன் தேவ், உமா மற்றும் நட்ராஜ் என அனைவரும் கோவில் சென்றனர். 

சூர்யா மற்றும் மான் விழி இருவரும் பிரிந்த நேரம் உமா தன் மகன் வாழ்க்கை என்ன ஆகுமோ என வேண்டி கொண்டு சோழி போட்டு பார்த்தார். அதில் அவள் உயிருடன் இருக்கிறாள் என வாக்கு செய்தி வந்தது. 

அந்த விமான விபத்தில் மகிக்கு எதுவும் ஆகவில்லை என்று தெரிந்து கொண்ட பின்பு தான் நம்பிக்கையுடன் இருந்தார். அதே போல் உமா மகி பத்திரமாக வீட்டுக்கு வந்தால் கோவில் புனரமைக்கும் வேலையுடன் பூஜையும் செய்கிறேன் என வேண்டி இருந்தார். 

 உமா கோவில் சென்று தன் குடும்பத்துடன் கோவில் சென்றார்.“ மகி நீ பிரகாரத்தில் இருக்கும் எல்லா சாமியையும் கும்பிட்டு பூ வச்சிட்டு வா மா! கூடவே ரெண்டு பேரையும் கூட்டி போ!”

மகி தன் அத்தை சொன்னதற்கு சரி என சொல்லி விட்டு மூவரும் சாமி கும்பிட சென்றார்கள். 

சத்ய தேவ் அனைத்து சிலைகளுக்கும் பூ வைக்க மிதுன் மகி மற்றும் சத்ய தேவ் இருவரையும் பார்த்து கொண்டு இருந்தான். அவனுக்கு சாமி கும்பிட தெரியாது. அதை விட நம்பிக்கை இல்லை. 

மகி, “மிதுன் அப்படியே நிற்காத கண்ணா கை எடுத்து கும்பிட்டு சாமி கும்பிடு நமக்கு கிடைக்கும் எல்லா விஷயத்துக்கும்  தேங்க்ஸ் சொல்லணும்!”

மிதுன், “எனக்கு எல்லாமே பண்றது நீ தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லனும்! ஆனால் இங்கே வந்து நான் எதுக்கு தேங்க்ஸ் சொல்லணும்! என கருவறையில் உள்ள கணபதியை பார்த்து இவரை இப்போ தான் முதன் முதலில் பார்க்கிறேன்!”

சத்ய தேவ் முதன் முதலில் மிதுனுடைய புத்தி கூர்மையை பார்த்து அவன் மீது ஈர்ப்பு வந்தது. மகியின் மீது அவன் வைத்திருக்கும் பாசத்தை தெரிந்து கொண்டான். 

மகி கோபத்துடன் என்ன பேச்சு இது? ஒன்னும் சரி இல்ல மிதுன்! அம்மா சொன்னால் கேட்கணும்! என இன்னும் திட்ட ஆரம்பித்தார். 

மிதுன் முகம் வாடி போய் விட்டது. 

உடனே சத்ய தேவ், மா அவனை திட்ட வேணாம்! எதையும் நம்ம திணிக்க ஐ மின் டம்ப் பண்ண கூடாது. மிதுன் சரியாக தான் சொல்கிறான். 

மகி புருவம் நெருக்கி கொண்டே அப்போ நீயும் அவனை போல பேச போரியா!. 

“இல்ல அப்படி சொல்ல வரல!. எனக்கு நம்பிக்கை இருக்கு! என்னை சுற்றி பாசிடிவ் எனர்ஜி இருக்கு அதோட உருவமாக நான் கடவுளை பார்க்கிறேன். ஆனால் மிதுன் சின்ன பையன்! அவனுக்கு என்ன தெரியும்! மிரட்ட கூடாது மா!” என சத்ய தேவ் மிதிருவுடன் கூறினான். 

மகி அதன் பின் எதுவும் பேச வில்லை. சத்ய தேவ் மிதுன பார்த்து ஸ்நேகமாக புன்னகைத்தான். 

மிதுன் முதன் முறையாக சத்ய தேவை நல்ல மன நிலையில் பார்த்தான். அதன் பின் அங்கு இருக்கும் அனைத்து சாமியையும் இருவரும் ஒன்றாக கும்பிட்டார்கள். 

உமா சாமிக்கு பொங்கல் செய்தார். அதன் பின் சாமிக்கு அபிசேகம் செய்து புது புடவை ஸாத்தி பூஜை செய்யும் நேரம் வந்தது. உமா , மகி, நட்ராஜ் மூவருக்கும் சூர்யா வந்திருந்தால் நன்றாக இருந்து இருக்குமே! என தோன்றியது. ஆனால் அவனால் வர முடிய வில்லை. 5வரும் திருப்தியுடன் சாமி கும்பிட்டார்கள். 

பூஜை செய்பவர். அம்மா நான் தட்டோடு வருகிறேன். என பிரசாதம் எடுத்து வைத்து கொண்டு இருந்தார். 

உமா வாங்கி மஹிக்கு கொடுத்து சாப்பிடு மகி நீ காலையில் இருந்து சாப்பிடல வீட்டுக்கு போய் தான் சாப்பிடணும் இப்போதைக்கு கொஞ்சம் சாப்பிடம்மா!. 

சரிங்க அத்தை! கூடவே இன்னும் ரெண்டு கொடுங்க! நான் சக்தி மிதுன் ரெண்டு பேருக்கும் ஊட்டி விடுகிறேன் என மூன்று தொண்ணையில் வாங்கி கொண்டு அவர்கள் இருக்கும் இடம் சென்றாள். 

மகி, சக்தி கண்ணா! ஆ போட்டுக்க!. 

ம்ம் என வாங்கி கொண்டான். 

அதே போல் அவள் மிதினுக்கு ஊட்டினாள். 

மிதுன் எடுத்த வார்த்தையில் இது வேணாம் பிடிக்காது என கூறி விட்டான். 

மகிக்கு கோபம் தலைக்கு ஏறியது. சத்ய தேவ், மிதின் இது தப்பு அம்மா கொடுத்தால் இப்டி சொல்ல கூடாது. வாங்கிக்க. ஆத்தாவுக்கு தெரிந்தால் அம்மாவை தான் திட்டுவாங்க சாமி பிரசாதம் வேணாம் என சொல்ல கூடாது. 

மிதுன், சரி என வாங்கி கொண்டான். 

நட்ராஜ், என்ன மா மகி சின்ன துறைக்கு பிடிக்கல போல! 

மகி, ஆமாம் மாமா! 

நட்ராஜ், இதே இடத்தில் சூர்யா எட்டு வயதில் இருக்கும் போது உமா நாலு அடி கொடுத்து அவனை உட்கார வச்சு மொத்த பொங்கலையும் ஊட்டி விட்டு தான் வீட்டுக்கு கூட்டி வந்தாள். 

மகி ஆச்சரியமாக என்ன மாமா சொல்றீங்க? 

ம்ம் ஆமா அவனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! அதனால் தான் இப்போ கூட கோவில்க்கு வரல!  

சத்ய தேவ், எதனால் தாத்தா! 

அது என தயங்கினார். 

மகி, சொல்லுங்க மாமா! 

நட்ராஜ், சூர்யா காலேஜ் படிக்கும் போது எனக்கு ஹார்ட் சார்ஜர் நடந்தது. அதுக்கு முன்னாடி அமுத சுரபி அப்பா, அப்புறம் அருண் அப்பா ரெண்டு என்னை பார்க்கவும் வரல பணம் காசு எந்த உதவியும் செய்யல அப்போ மூணு நாள் கெடு கொடுத்தாங்க! உமா நம்பிக்கையை விட்டு விட்டாள். அந்த நேரம் ரகு, இன்பா, கீதா எல்லாரும் பண உதவி செய்து தான் காப்பாற்றி என்னை அதை விட சூர்யா நம்பிக்கையுடன் மீட்டு வந்தான். அப்போ இருந்து எனக்கு உதவி செய்த மனுசன விட இந்த கடவுள் முக்கியம் இல்லை அப்டின்னு வரத விட்டு விட்டான். 

மிதுன், டாடி கரெக்ட்!. 

மகி, மிதுன்! அடி வாங்க போற! எதுக்கு மாமா சொன்னீங்க! இனி ஓவரா ஆட்டம் போடுவான்! 

நட்ராஜ் சிரித்து கொண்டே அது அவங்க விருப்பம் விடு மா!. 

மிதுன், மகி பிளீஸ் கம்பள் பண்ணாத! 

மகி அவனை முறைத்தாள். 

உமா, மகி பிரசாதம் சாப்பிட்டாச்சு தானே! போலாமா!. 

ஹான் அத்தை!. 

நட்ராஜ், கொஞ்ச நேரம் உட்கார்ந்திட்டு போகனும்!. 

ஹான் மாமா முன்னால் போலாம்! என கொடி மரத்தின் முன்னால் அமர்ந்தார்கள். 

மிதுன் நட்ராஜ்கிட்ட அங்கு இருக்கும் மிக பெரிய யானையை பார்த்து விட்டு தாத்தா இவ்வளவு பெரிய எலேபெண்ட் கூடவே இந்த big ஹார்ஸ் எப்படி வந்தது? இதை தூக்க முடியாதே!. 

மகி இதையெல்லாம் பார்த்து சிரித்து கொண்டே அமர்ந்து இருந்தாள். 

அந்த நேரம் சோலி பரவலை உருட்டுபவர் கோவிலுக்கு வந்தார். 

அந்த நேரம் பூசாரி, என்ன மா! சோலி பார்க்கிறீங்களா? 

உமா என்ன சொல்வது என பார்க்க நட்ராஜ்! வேணாம் உமா வீட்டுக்கு போலாம்!. 

மகி, என்ன அத்தை!. 

ஒன்னும் இல்ல மா!. 

பூசாரி, சரி மா! அப்போ நான்!. என அவர் திரும்பினார். 

உடனே உமா நட்ராஜ பார்த்தார்,  இன்னிக்கு மட்டும் பிளீஸ் என பார்த்தார். 

நட்ராஜ் கோபத்துடன் என்னமோ பண்ணு வீட்டுக்கு வந்து புலம்பி பாரு அப்போ உன்னை வைத்து கொள்கிறேன். என திட்டி விட்டு சென்று விட்டார். 

மகி, அத்தை என இருவரையும் பார்த்தார். உமா அந்த பெண்மணி வருகைக்காக காத்திருந்தார். 

அவர் சாமி கும்பிட்டு அமர்ந்தார். உமா, சாமி என அவர் முன் அமர்ந்தார். 

அந்த பெண் மணி சோலி உருட்டி கொண்டே உன் வாழ்க்கையில் எல்லா பேரு பெருமையும் பெற்று விட்டாய்!  பண காசுக்கு குறைவு இல்ல! பிள்ளை செல்வத்துக்கு கூடவே குழந்தை செல்வம் கூடிய சீக்கிரத்தில் லட்சுமி வர போறா! 

இதை கேட்டதும் உமாவுக்கு சந்தோசம்! மகியின் கையை பிடித்து பொண்ணு பிறக்க போகுது! என உற்சாகத்தில் பேசினார். 

வேற எதுவும் என அந்த பெண் மணி சோலி எண்ணிக்கையை பிரித்து விட்டு கேட்க.. 

இல்ல சாமி! நான் காணிக்கை எடுத்து வருகிறேன் என நகர்ந்தார். 

மகி, அம்மா நான் கேட்கவா! 

அந்த பெண் மணி சிரித்து கொண்டே எல்லாத்தையும் தாங்கி தாண்டி வந்திருக்க இப்போ இதை தாங்கி கொள்வாயா? 

மகி ஒரு நிமிடம் திடுக்கிட்டு பார்த்தாள். அதன் பின் தன்னை சரி செய்து கொண்டு தாங்கி கொள்வேன்!. சொல்லுங்க மா!. 

அந்த பெண் மணி! யாருக்கு பார்க்க போற? 

என் பையன் சக்தி!. 

அந்த பெண் மணி “அதிகாரமானவன்” பொறுமையான குணம் எல்லா செல்வமும் தேடி வரும்!. 

மகி புன்னகையுடன் மிதுன் தேவ்! என கூறினாள். 

 அந்த பெண் சோலி பிரித்து விட்டு கொண்டே எடுத்த வார்த்தையில் “கோபக்காரன், அடங்காதவன்!” 

மகி சரி தான் மா!. 

அடுத்து என அந்த பெண் கேட்டவள். ஹான் முக்கியமா நீ ஒரு பையனோட மட்டும் தான் இருக்க முடியும்! அடுத்து மிகப்பெரிய பிரச்னை காலம் வர போகுது!  

மகி திடுக்கிட்டு உயிருக்கு ஆபத்தா! என கண்களில் கண்ணீருடன் கேட்டாள். அவள் திரும்பி கொண்டே சத்ய தேவ் மற்றும் மிதுன் தேவ் இருவரையும் பார்த்தாள். 

அந்த பெண் சிரித்து கொண்டே ரெண்டு பேரும் அவங்களோட அப்பன போல கெட்டி ஆயுள் கொண்டவனுங்க ஆனால் பிரிவு நிச்சயம்! உன்னால் தான் நடக்க போகுது! நீ யாரை தேர்ந்தெடுக்க போற? உன்னோட வாயில் இருந்து தான் சொல்ல போற!. 

மகி ஒரு விஷயத்தில் நிம்மதி அடைந்தாள். உயிருக்கு ஆபத்து இல்லையே மற்றதை பார்த்து கொள்வோம்!. 

வேற என அந்த பெண் உருட்டி கொண்டே குலுக்கி போட்டாள். 

மகி, எங்க அண்ணா!. 

அந்த பெண் கண்களை மூடி வேகமாக பிரித்து வைத்து கொண்டே வேதனை மட்டும் தான்!. 

மகி படபடத்து கொண்டே குழந்தைகள்!. அண்ணிக்கு!..

வரம் தள்ளி போகும்! 

மகி கிடைக்குமா!. 

அந்த பெண் மணி கண்ணை மூடி கொண்டு பெத்தவள் மனசு குளிர ஆசிர்வதிக்கணும்! குல தெய்வ கோவிலில் பில்லு முளைச்சு கிடக்கு!. மொத்தத்தில் மனசு குளிர வைக்கனும்!. 

மகி, எங்க அக்காவுக்கு? 

அந்த பெண் மணி உருட்டி கொண்டே ரெண்டு பையன்!  இப்போ அடுத்து ஒரு பொண்ணு! வர போகுது! 

மகி புருவம் நெருக்கி இல்ல மா என்னோட அக்காவுக்கு ரெட்டை பொண்ணு பையனுக்கு வாய்ப்பு இருக்கா? 

அந்த பெண் மணி புருவம் சுருக்கி இல்ல உன்னோட அக்காவுக்கு ரெண்டு பையன் தான் என்னோட சோலி சரியா கணிக்கும்!. 

மகி இல்ல மா என் கூட பிறந்த பொண்ணு நானும் எங்க அக்காவும் இரட்டை குழந்தைகள்! அவளுக்கு ரெண்டு பொண்ணு தான் நீங்க சொல்றது! என மகி கூறிட.. 

அந்த பெண் மணி கோபத்துடன் இல்ல என்னோட சோலி என்னைக்கும் பொய்யா கணிக்காது!. 

மகி, என் கூட பிறந்தது ஒரு பொண்ணு தான்!. நீங்க தவறா!. என சொல்ல வந்தாள். 

அதற்குள் அந்த பெண் மணி நிறுத்து என கோப விழிகளில் உங்க அப்பா அம்மா பேரு சொல்லு? 

மகி, வசந்தன் – கலை வாணி!. 

அந்த பெண் மணி வேகமாக சோலிகளை பிரித்து இரட்டை படையில் அடுக்கி கொண்டே மீண்டும் களைத்து களைத்து அடுக்கினார். 

மகி அவரை சந்தேகமாக பார்த்தார். 

அந்த பெண் மணி, என்னோட சொல் உண்மை! என்னோட கணிப்பு சரி அப்டின்னா உங்க வீட்டில் நாலு பேர் இரண்டு ரெட்டை குழந்தைகள், முதலில் பையன், அடுத்து பொண்ணு, அதுக்கு அப்புறம் பொண்ணு, கடைசி நீ தான்!. 

மகி சாக் ஆகி அமர்ந்து இருந்தாள். 

அந்த பெண், என் பேச்சை நம்பலன்னு தெரியுது! ஆனால் இதை சொல்ல கூடாதுன்னு நினைச்சேன். 

ஆனால் என அந்த பெண் சொல்ல.. 

மகி அதை கேட்டு…?

தொடரும்.  

Episode 326, 

அந்த சோழியை உருட்டி கொண்டே அந்த பெண் மணி கொஞ்சம் கோபத்தில் “இத்தனை வருடத்தில் ஒருவர் கூட என்னோட வாக்கை பொய் அப்டின்னு சொன்னது இல்ல நீ தான் முதன் முதலில் சொல்லி இருக்க!” என கூறினார். 

மகி இதற்கு என்ன சொல்வது என தெரியாமல் தடுமாறி என்னை மன்னித்து விடுங்கள் மா! நான் என அவள் பேச வர!..

 உடனே அந்த பெண் மணி, புள்ளை வயிற்றுகாரியை என் சொல் சங்கட படுத்த கூடாது. என சொன்னவர் ஒரு நிமிடம் பொறு மா! என சொல்லி விட்டு உள்ளே சென்றார். 

மகி பதட்டத்துடன் அமர்ந்து இருந்தாள். அந்த அம்மா சொல்வது ஒன்றும் புரியில்லை. உள்ளே சென்ற அந்த பெண்மணி கையில் ஒரு பிடி திறுநீட்ரை எடுத்து வந்தார். 

இந்தமா! 

மகி கண்களை துடைத்து கொண்டே அவரை பார்த்தார். என் கையில் ஒரு பிடி திறுநீரு இருக்கு! இதை வாரம் வெள்ளி கிழமை நெற்றியில்யிட்டு கொள்! தூரமா இருக்கும் போது இட கூடாது. சரியா இந்த நீட்ரை நீ கடைசியாக பூசி முடிக்கும் அந்த நாள் உனக்கு எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

மகி அவரிடம் இருந்து வாங்கி கொண்டாள். 

நான் வருகிறேன்! என கிளம்ப.. மகி மா இருங்க காணிக்கை!. 

அந்த பெண் மணி சிரித்து கொண்டே என்னோட வாக்கு உண்மை அப்டின்னு தெரிந்த பின் தான் உன் கையில் நான் காணிக்கை வாங்குவேன்! என சொல்லி கொண்டு விறு விருவென கிளம்பி விட்டார். 

உமா ஒரு படியில் அரிசி, கூடவே பணம் 1001 ரூபாய்! ஒரு புடவை என தாம்பூல தட்டில் எடுத்து கொண்டு உள்ளே வந்தார். எங்கே மகி? அந்த அம்மா எங்கே?

அவங்க! இப்போ இப் இப்போ தான் போனார்கள் அத்தை!  

உமா, எதுக்கு மா போக விட்ட! காணிக்கை கொடுக்கணும்! அவங்க சக்தி வாய்ந்த ஆட்கள் விரதம் இருந்து பரம்பரை பரம்பரையா இதை செய்து வருகிறார்கள். 

மகி முகத்தில் குழப்பத்துடன் அத்தை அவங்க சொல்றது உண்மையா இருக்குமா!  

உமா, நம்ம குல தெய்வ கோவிலில் இருந்து சொல்கிறேன்! இது வரை அந்த அம்மா சொன்னது அப்படியே பலிச்சு இருக்கு! உள்ளதை சொல்லும்! ஆனால் பொய் சொல்லாது! என்ன மகி ஆச்சு? உன் முகம் சரி இல்லையே! 

மகி தன்னை சரி செய்து கொண்டு ஒன்னும் இல்ல அத்தை என சமாளித்தாள். 

உமா நேராக உள்ளே சென்று கொண்டே மகி காருக்கு போ மா நான் இதை பின்னாடி இருக்கும் பன்டாரம் கிட்ட கொடுத்திட்டு வரேன்! என சென்றார். 

மகி சரி என கார் இருக்கும் பக்கம் நடந்தாள். மனத்தில் கவலை ஒட்டி கொண்டது. சத்ய தேவ் மற்றும் மிதுன் தேவ் இருவரும் அருகில் செல்லும் வாய்க்காலில் கற்களை வீசி விளையாடி கொண்டு இருந்தார்கள். தன் மகன்களை பார்த்தாள். 

மகியின் மனதில் கவலை ஒட்டி கொண்டது. இதை யாரிடம் சொல்வது? என்ன செய்வது? என ஒன்றும் புரிய வில்லை. அவளுக்கு இந்த குழந்தை விஷயம் பற்றி ஒன்றும் தெரியாது. உதயனுக்கும் இவர்களுக்கும் ஆறு வருடங்கள் வித்தியாசம்! அதனால் இந்த இறந்த குழந்தையை பற்றி அதிகமாக பேசி கேள்வி பட்டது இல்லை. 

மகி அதிகமாக அவளின் அத்தை வீட்டுக்கு சென்று விடுவாள். மை விழி, மற்றும் உதயன் இருவரும் தான் கண்ணமா வீட்டுக்கு செல்வார்கள். அதனால் இந்த மாதிரியான விஷயம் அவளுக்கு தெரியாது. அதை விட இரட்டை குழந்தை என்பது இன்னும் தூக்கி வாரி போட்டது. எதை நம்புவது? எதை விடுவது? என கையில் இருக்கும் விபூதியை பார்த்தாள். நெற்றியில் பூசி கொண்டாள். 

சக்தி, மிதுன் குட்டி வாங்க வீட்டுக்கு போலாம்! 

ஓகே மா என இருவரும் ஓடி வந்தார்கள். 

நட்ராஜ் உள்ளே அமர்ந்து இருந்தார். உமா வந்து விட்டார். கார் எடுத்தனர். உமா, “இன்னிக்கு மனம் நிறைந்து இருக்குங்க! அந்த குறிகாரம்மா உச்சி குளிர வாக்கு சொன்னது! இத்தனை வருடத்தில் இன்னிக்கி தான் எனக்கு நல்ல குறி சொல்லி இருக்கு!”

இதையெல்லாம் ஓவரா நம்பிட்டு இருக்காத! 

உங்க வேலைய பாருங்க! என சொல்லி திரும்பி கொண்டார். 

உமா!  உமா!  

கம்முன்னு வாங்க! என முகத்தை தூக்கி வைத்து கொண்டார். 

அவர்கள் வீட்டுக்கு சென்றதும் உணவு தயாராக இருந்தது. 

உமா, மகி கை, கால் கழுவ கூடாது அப்படியே நேரா பூஜை ரூமுக்கு போ சக்தி, மிதுன் குட்டி அம்மா கூட போங்க! 

மூவரும் பூஜை அறை சென்று மீண்டும் ஒரு முறை மகி கண்களை மூடி  சாமி கும்பிட்டாள். 

உமா ஒரு கிண்ணத்தில் பிரசாதம் எடுத்து வந்து மகி இதை ஒரு வாய் போட்டுக்க, சக்தி, மிதுன் ஆளுக்கு ஒரு வாய்!  என ஊட்டி விட்டார். 

அவள் வாங்கி கொண்டாள். உமா, மகி உனக்கு தண்ணி வச்சு இருக்கேன். நீ குளித்து முடித்து துணி மாற்றி கொண்டு இந்த விபூதிய கொஞ்சம் வயிற்றில் பூசிக்கோ! சாமி பாதத்தில் வச்சு பூஜை செய்தேன். கூடவே இந்த எலுமிச்சை, அப்புறம் இந்த பூ தலைமட்ல வச்சுக்க! 

ம்ம் சரிங்க அத்தை என அனைத்தையும் வாங்கி கொண்டவள் குளித்து முடித்து வந்தாள். உடை மாற்றி கொண்டு உமா சொன்னது போல அனைத்தையும் செய்தாள். 

மிதுன் மற்றும் சக்தி இருவரும் காத்திருந்தனர். 

மகி எந்த வெளிப்பாடும் இல்லாமல் வெளியே வந்தாள். 

மா! சீக்கிரம்!  

தன் மகன்கள் இருவரையும் பார்த்தாள். இன்னும் சாப்பிடலயா! என கேட்டு கொண்டே அருகில் வந்தாள். 

உங்களுக்காக வெயிட் பண்ணனும்!. 

நட்ராஜ், எவ்ளோவோ சொன்னோம் ஆனால் ரெண்டு பேரும் நீ வராமல் சாப்பிட மாட்டேன் அப்டின்னு சொல்லிட்டாங்க!. 

உமா, நான் ஊட்டி விடவான்னு கேட்டேன். அதோ அந்த சின்னவன் அப்படியே ஒரு வார்த்தையில் நம்ம வாய அடக்கி விடுகிறான்! எங்க அம்மா வேணும்! எங்க அம்மா வேணும்! இதை தான் மந்திரம் போல சொல்லிட்டு இருக்கான். 

மகி சிரித்து கொண்டே சரி விடுங்க அத்தை நான் ஊட்டி விடுகிறேன். என அருகில் உணவுகளை போட்டு கொண்டாள். 

சக்தி, மா நீ முதலில் சாப்பிடு! 

மகி, அம்மாவுக்கு பசி இல்ல! 

நீ சாப்பிடு மா! என வர்புறுத்தி சாப்பிட வைக்க மகி, நம்ம சேர்ந்து சாப்பிடுவோம்! 

மகி இருவருக்கும் ஊட்டி விட்டு கொண்டே அவளும் சாப்பிட!  

மிதுன், இன்னும் கொஞ்சம் விட்டால் எனக்கு கிராவிங்ல எல்லாம் 2 டூவா தெரியுது! 

மகி, அதுக்கு தான் நான் காலையில் பால் குடிக்க சொன்னேன் நீ கேட்கவே இல்லை! ஆ போடு!. 

மிதுன், எனக்கு தோணல! 

நீ பெரிய மனுசன் உனக்கு தோனனுமா! சக்தி ஆ போடு! 

அவன் மென்று கொண்டே நீயும்! சாப்பிடு மா!  

மிதுன் போனை நோண்டி கொண்டே மா எனக்கு போதும்! 

மகி, டேய் இப்போ தானே மயக்கம் வருதுன்னு சொன்ன ஒழுங்கா இன்னும் நாலு வா போடுற! 

மிதுன், நீ கொஞ்சமா ஊட்டு பெருசா போட்டால் என் மவ்த் பாரு! 

நீ சாப்பிட்டதும் துடைத்து விடுகிறேன். இப்போ போடு! 

எனக்கு வேணாம்! 

மகி, என் கிட்ட மிதி வாங்க போற ஒழுங்கா சாப்பிடு! 

மிதுன் , மா நீ ரொம்ப மோசம் டி!. இங்கே பாரு என்னோட ஸ்டமக் தாத்தா போல பிக்! முடியல!  

மகி சிரித்து கொண்டே இந்த வாய் மட்டும்!  எனக்காக! பிளீஸ்! 

மிதுன், இதுக்கு மேல வேணாம்!  

ம்ம் சரி என் செல்லம்! 

ம்ம் போதும் என அவளுடைய புடவையை இழுத்து உதட்டை துடைத்தான். 

மகி, சக்தி! 

சத்ய தேவ், மா இன்னும் ஒரு ஆ போதும் எனக்கு ஃபுல்! 

சரி என ஊட்டி விட்டாள். அதன் பின் இரண்டு வாய் சாப்பிட்டாள். அதற்கு மேல் இறங்க மறுத்தது. வேகமாக சாதத்தை தாழியில் கொட்டி விட்டு தட்டை கழுவி கொண்டு உள்ளே வந்தாள். 

உமா, மகி!  

அத்தை!. 

இந்தா இதை குடி! என ஜுஸ் நீட்டினார். 

மகி,அத்தை போதும் என வயிற்றை நீவி காட்டினாள். 

உமா, இப்போ தான் சூர்யா போன் பண்ணான். இப்போ ஜுஸ் குடிக்கும் நேரமாம் நீ குடிக்கல என்னை தான் திட்டுவான். குடிச்சிட்டு என்ன வேணாலும் செய்! 

மகி எதையும் பேசாமல் எடுத்து குடித்து விட்டு கழுவி வைத்தவள். அத்தை நான்!. 

நீ போய் தூங்கி எழு டா!  

ம்ம் சரிங்க என சென்று விட்டாள். 

இரவு வந்தது மனதில் சஞ்சலம் அதிகனானதே தவிர குறைய வில்லை. தன் மகன்களை பார்த்தாள். 

உமா, வெளியே போய் நடந்திட்டு வாங்க! மகி நீயும் போ மா! 

மூவரும் நடக்க சென்றனர். மிதுன், மா இங்கே டாமினோட்ஸ் வருமா! மா இங்கே மெக்டொனால்ட் இருக்கா! மா இங்கே தியேட்டர் இருக்குமா! அம்மா இங்கே ஸ்கூல் இருக்கா! என கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டே சென்றான். 

மகி அவன் கைகளை பிடித்து கொள்ள சத்ய தேவ் இன்னொரு கையை பிடித்து கொண்டான். அவன் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் சத்ய தேவ் பதில் கூறினான். 

இரவு வந்தது உணவுகளை முடித்து கொண்டார்கள். 

உமா, மிதுன் வரயா நீயும் நானும் தூங்கலாம்! 

இல்ல உமா! 

மகி, டேய்!  

இல்ல உமா மா நான் மகி மா கூட தூங்குவேன்! 

நட்ராஜ், சக்தி கண்ணா! நீ! 

மகி, மாமா இன்னிக்கி ரெண்டு பேரும் என் கூட இருக்கட்டும்!  

உமா, என்ன ஆச்சு மா! 

ஒன்னும் இல்ல அத்தை! 

நட்ராஜ், மகிக்கு சூர்யா நினைப்பு வந்திருக்கும் சரி பசங்க அவங்க அம்மா கூடவே தூகட்டும்!  சூரியா போன் பண்ணானா? 

உமா, உங்க கிட்ட பேசாமல் எப்போ தூங்கி இருக்கான்! என சொல்லும் போதே அழைப்பு வந்தது. 

என் பையனுக்கு நூறு ஆயிசு! 

இங்கே மகி கதவை சாத்தி இருவர் முன் அமர்ந்தாள். 

மிதுன் மற்றும் சத்ய தேவ் இருவரும் அவளை பார்த்தனர். 

மகி அவர்களிடம் கையை கோர்த்து கொண்டு சத்ய தேவ், மிதுன் தேவ் அம்மா இப்போ உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்க போறேன்! 

என்ன மா? 

மகி…? 

தொடரும்.. 

Episode 327, 

இங்கே மகி கதவை சாத்தி இருவர் முன் அமர்ந்தாள். 

மிதுன் மற்றும் சத்ய தேவ் இருவரும் அவளை பார்த்தனர். 

மகி அவர்களிடம் கையை கோர்த்து கொண்டு சத்ய தேவ், மிதுன் தேவ் அம்மா இப்போ உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்க போறேன்! 

என்ன மா! என சத்ய தேவ் பார்த்தான். 

உடனே மகி மிதுன் முகத்தை பார்த்தாள். 

நீ எதுவும் கேட்காமல் அமைதியா இருக்க? மிதுன் கண்ணா! 

மிதுன், என்ன விஷயம் சொல்லுங்க! 

மகி கைகளை நீட்டி கொண்டு இருவரையும் பார்த்தாள். உடனே சத்ய தேவ் தன் அன்னையின் கையில் கோர்த்து கொண்டான். 

மிதுன் மற்றும் அப்படியே இருந்தவன். சத்ய தேவ் செய்கைகளை பார்த்து அவனும் அதே போல கையை கோர்த்து கொண்டான். 

மகி புன்னகையுடன் தன் மகன்கள் இருவரையும் பார்த்து கோர்த்து முத்தம் வைத்தாள். 

என்ன மகி பண்ற? என மிதுன் கேட்டான். 

மகி, சத்ய தேவ், மிதுன் தேவ் நீங்க ரெண்டு பேரும் ஆயிரம் சண்டை போட்டாலும் எப்போவும் பிரிய கூடாது! 

மிதுன், நீ தப்பா பேசுற! சண்டை போட்டால் பேச மாட்டாங்க! 

மகி, “மிதுன் அம்மா சொல்றத கேட்பியா மாட்டியா! இப்போ கையை எடுத்து விட்டால் அவ்ளோ தான் அம்மா உங்க ரெண்டு பேருக்கும் வெறும் அம்மா மட்டும் தான்! உங்க கூட ப்ரெண்ட்டா ஜாலியா இருக்க மாட்டேன்! எப்போவும் பேச மாட்டேன்!”.

சத்ய தேவ், இப்போ என்ன ஆச்சு மா! 

மகி, நான் கேட்டதுக்கு பதில் சொல்லு! 

மிதுன் மனதில் இவனுடன் எப்படி சேர்ந்து கொள்வது! இவனும் ஆளும்!  

சத்ய தேவ் உண்மையாக “மா! எனக்கு நிஜமாவே மிதுன ரொம்ப பிடித்து இருக்கு! என அவன் முன் கையை நீட்டினான். சக்தி அவனது கழுத்தை பிடித்து கொண்டே சாரி மிதுன்! நான் உன்னை ஹர்ட் பண்ணி இருந்தால் சாரி!  ஆனால் உன்னை எனக்கு பிடித்து இருக்கு! நீ டாடி போல இருக்க! எனக்கு டாடிய ரொம்ப பிடிக்கும்! ”

மிதுன், பொய் சொல்லாத! எனக்கு பொய் பிடிக்காது! நீ நடிக்க வேணாம்! 

மகி அவன் காதை பிடித்து திருகி அண்ணா எவ்ளோ பாசமா சொல்றான்! உனக்கு என்ன டா! 

மிதுன், ஹே என் காது ரெட் ஆகி போச்சு! விடு!  

மகி, நீ சக்தி கூட ஃப்ரெண்ட் ஆகு!. 

சத்ய தேவ் கையை நீட்டி நம்ம ஃப்ரெண்ட்ஸ் அதை விட நீ என்னோட தம்பி! ஹீரோ போல! 

மிதுன், ஓகே என் கிட்ட ரொம்ப ரெக்வஸ்ட் பண்ற அதனால்! என கையை குலுக்க சத்ய தேவ் அவன் கன்னத்தை பிடித்து மெதுவாக கில்லியவன். ஃபர்ஸ்ட் டைம் உனக்கு கிஸ் பண்ண போறேன்! என சொல்லி முத்தம் பதித்தான். 

மிதுன் இதை சற்றும் எதிர் பார்க்க வில்லை. அவன் அதிர்ச்சியுடன் பார்க்க சத்ய தேவ், அம்மாவ நீ தான் பத்திரமா பார்த்து கொண்டு இருக்க! உனக்கு என்ன வேணும் சொல்லு! என் கிட்ட இருந்து எல்லாமே நீ பிளே பண்ணலாம்! புதுசா வேணும் ஏன்றா நான் டாடி கிட்ட சொல்லி வாங்கி தரேன்! 

மிதுன், சரி என தலை அசைத்தான். இத்தனை மாற்றம் நடக்கும் என எதிர் பார்க்க வில்லை. 

மகி கண்களில் கண்ணீர் கோர்க்க அவள் கண்ணில் நீர் வழிந்தது. அவள் அழுது கொண்டே உங்க ரெண்டு பேரையும் நான் சண்டையில் பார்க்கவே கூடாது! அண்ணாவுக்கு எதுவும் என்றால் நீ வரனும் மிதுன்! அதே போல தான் சக்தி மிதுன் குட்டிய பத்திரமா பார்த்து கொள்ள வேணும்! எனக்கு பிராமிஸ் பண்ணுனுக!. 

எதுக்கு பிராமிஸ்! 

மகி அவளின் கழுத்தில் உள்ள சத்ய தேவ், மிதுன் தேவ் ,சூர்ய தேவ் என அனைத்தையும் குறிக்கும் பெண்டன்ட் எடுத்து நீட்டி கொண்டே இது மேல பிரமிஸ் பண்ணுங்க! எப்போவும் பிரிய கூடாது சேர்ந்து தான் இருக்கணும்!”

ம்ம் சரி என சத்ய தேவ் அவளின் கையில் வைத்தான். ஆனால் மிதுன் தேவ் அப்படியே இருந்தான். 

மகி, மிதுன்! என்ன? 

ஒன்னும் இல்ல!  

அப்போ கை வை! 

மிதுன் தயங்கி கொண்டே கையை வைத்தவன். ஒன்றும் புரியாமல் பார்த்தான். 

மகி அவர்களைத் அணைத்து கொண்டே என் செல்லம்! நீங்க ரெண்டு பேரும் தான்! நான் எப்போவும் பிரிய மாட்டேன்! என அவர்களை அணைத்தாள். 

மிதுன் மற்றும் சக்தி இருவரும் தன் அம்மாவை கட்டி கொண்டனர். மகி மனதில் இன்னும் சஞ்சலம் மற்றும் குறைய வில்லை இன்னும் பயமாக இருந்தது. என்ன செய்ய? என்ன செய்ய? எப்படி கேட்க? என யோசனையுடன் இருந்தாள். 

அடுத்த நாள் அழகாக விடிந்தது. தேஜு குருவை அழைத்தாள். 

ஹலோ! 

தேஜு, உன் பொண்ணை போய் பார்த்தியா இல்லையா! 

குரு, என்ன ஆச்சு? 

தேஜு, நான் சிவன்யா பற்றி பேசுகிறேன்! ஆனால் நீ கொஞ்சம் கூட பொறுப்பாக இல்லாமல் இருக்க? 

என்ன சொல்ற தேஜு! இப்போ என்ன நடந்தது? 

எல்லாமே உனக்கு நான் சொல்லு கொடுக்க வேணுமா! என தேஜூ சில விஷயத்தை கூறினாள். 

குரு ஒரு நிமிடம் திடுக்கிட்டு இது பிரச்னை ஆகாது தானே! 

தேஜு அவனை உசுப்பி விடும் விதமாக இதை குரு பிரகாஷ் சொல்றாரு அய்யோ உனக்கு மை விழி மேல ரொம்ப பயமா இருக்கு போல!. 

குரு உடனே அப்படி இல்ல! இப்போ என்ன பண்ணனும்? நீ சொல்றத நான் செய்து காட்டுகிறேன் என போனை வைத்தான். 

அடுத்த நாள் அழகாக விடிந்தது. மகி, மிதுன், சத்ய தேவ் என மொத்த குடும்பமும் ஊருக்கு வந்து சேர்ந்தார்கள். 

அந்த love temple செல்லும் நாளும் வந்தது. 

இங்கே இன்பா நேராக சூர்யாவை பார்க்க சென்றான். மகியின் வயிறு கொஞ்சம் மேடிட்டு இருந்தது. 6 மாதம் முடியப்போகிறது. அதனால் வளைகாப்பு செய்யலாம் என்று மகியின் தந்தை வீட்டில் முடிவெடுத்திருந்தனர். அதைப்போலவே அனைத்து வேலைகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க மகி அன்றுதான் அவர்களின் குலதெய்வ கோயிலுக்கு கிளம்ப வேண்டும் என்று உமாவுடன் மகிழினி மிதுன் கூடவே நித்தின் சிவன்யா, பவன்யா என படைச்சூழ ஈரோட்டுக்கு கிளம்பினர்.

சூர்யாவும் அவர்களுடன் கிளம்புகிறான். இன்பாவுடன் சத்திய தேவை அனுப்பி வைப்பதற்காக காத்திருந்தான்.

என்னடா சூர்யா ரொம்ப பிசியா இருக்க போல..

அவன் கடுமையாக” முதல்ல உனக்கும் அந்த குருவுக்கும் நடுவுல இப்ப என்ன போயிட்டு இருக்குன்னு சொல்லு?

ஒன்னும் இல்லடா!

சொல்ல போறியா? இல்லையா? என்று வயிற்றில் ஒரு குத்து விட்டான்.

இன்பா வயிற்றைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவன். சற்று இரும்பிகொண்டு அனைத்து விஷயத்தையும் கூறினான்.

சூர்யா அதிர்ச்சியுடன் திடுக்கிட்டு எழுந்தவன். ஏண்டா? இதை என்கிட்ட இருந்து மறச்ச? முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல்ல, என்னடா இப்படி பண்ணிட்ட? எதுக்குடா நீ ஒத்துக்கிட்ட? என்று அடுக்கடுக்காக கேள்விகள் அனைத்தையும் தொடுத்தான்.

இன்பா விடு மச்சி இதுவும் ஒரு வகையில நல்லதுன்னு தான் தோணுது. இப்போ நான் இருக்கிற நிலைமை கொஞ்சம் கிரிட்டிக்கலா இருக்கு.

சூர்யா புருவம் முடிச்சுடன் என்னாச்சு?  நான் இருக்க மச்சி! உனக்கு என்ன நம்ம என்ன வேணாலும் பண்ணலாம்! யார்கிட்ட பேசணும்னு, சொல்லு..

இன்பா சிரித்துக் கொண்டே “அப்படி இல்லடா சூர்யா இப்போ என்ன சுத்தி நிறைய எதிரிங்க இருக்காங்க விவேகா ரிதம் எல்லாத்துக்குமே கொஞ்சம் பாதுகாப்பு அதனாலதான் நான் இதை பல்ல கடிச்சுக்கிட்டு ஒத்துக்கிட்டு இருக்கேன்.”

சூர்யா, புன்னகையுடன் புலிக்கு பூனை பாதுகாப்பா என்று கேட்க…

“இப்போ அந்த பூனை கவர்னர் பூனை ப்ளாக் கேட்ஸ்  சோ நாம அங்க இருக்கிறது தான் ஒன்னும் பிரச்சனை இல்ல. பெங்களூர்ல தான் இருக்க போறேன்.அவன் ஒரு இடத்தில் இருக்க போறான், நான் ஒரு இடத்தில் இருக்க போறேன், நீ ஒன்னும் கவலைப்படாத.”

ம்ம்…

சரி எங்க என்னோட சத்யதேவ்? என்று அழைக்க..

அவன் உள்ளே ரெடியாயிட்டு இருக்கான்.

அப்படியா வர சொல்லு கிளம்பனும் என்று இன்பராகவன் அவனுடைய உடைகளையும், தலையையும் கோதி கொண்டே சரி செய்தான்.

சூரியா அவனை மேலும் கீழுமாக பார்த்து “என்ன டிப் டாப்பா கிளம்பற அங்க யாரையும் நீ மயக்கம் தேவை இல்லை. பார்த்துட்டு வரதோட வச்சுக்க”.. என்று கோபத்துடன் கூறினான்.

இன்பா, ஏன் நீ மயக்க போறியா!..

டேய் அடங்குடா உனக்கு கல்யாணம் ஞாபகம் இருக்குல்ல என்று சூர்யா கேட்டு விட

 உடனே இன்பா சிரித்துக் கொண்டே அவனுடைய மீசையை முறுக்கி விட்டான்.” உனக்கு இப்போ குழந்தை பிறக்க போகுது தெரியுமில்ல அதுவும் மூன்றாவது ரிலீஸ் பண்ண போறேன். ஞாபகம் இருக்கா மச்சி?”

எல்லாம் ஞாபகம் இருக்கு என்று சோபாவை குத்தியவன் எப்படி இருக்க போறாளோ? என்று உள்ளுக்குள் ஏதோ ஒரு மூலையில் பரவசம் இருக்கத்தான் செய்தது.

இன்பா டேய் ஓவரா கனவு காணாத எதுவும் இங்க நடக்காது, நிலைக்காது.

சூர்யா,”அதே தான் மச்சி உனக்கு ஓவரா கனவு காணும் அதை இல்ல நான் சண்டக்காரி கிட்ட போட்டு கொடுத்துடுவேன.”

அதன்பின் சத்திய தேவ் என சூர்யா அழைக்க அவன் ஒரு சோல்டர் பேக்குடன் அவனுக்கு தேவையான உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

டாட் என்று கம்பீர நடையுடன் வந்து நின்றான்.

இன்பா அவனை ஆசையாக பார்த்து “சூர்யா நீ பண்ணதிலேயே உருப்படியான விஷயம் என்ன தெரியுமா? இவன ரிலீஸ் பண்ணது மட்டும் தான் டா இன்னொன்று  பண்ணி வச்சிருக்கியே! அது என் உயிரை எடுக்குது டா!”

சூர்யா சிரித்துக்கொண்டே அது என் உயிரையும் சேர்த்து எடுக்குது என்ன மகி பக்கத்துல போகவே விட மாட்டிக்கிறான் டா என்று மிதுன்  என இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

 என்ன பேசுறீங்க? கேட்டுக் கொண்டே வந்தான்..

ஒன்னும் இல்ல சத்யதேவ் பத்திரமா இன்பா கூட போயிட்டு வரணும் சரியா!  அவன தொந்தரவு பண்ணக்கூடாது.

அவன் சிரித்துக் கொண்டே” உங்க வீட்ல தொந்தரவு பண்ற ஒரே ஆள் அந்த குட்டி குட்டன் மட்டும் தான் இது சக்தி அவன் பண்ண மாட்டான், அவன் என்னோட ஆளு! என்று அவனை கட்டிக் கொண்டான்.

மாமா என்று சத்தியும் கட்டிக் கொண்டான்.

சரி பத்திரமா போயிட்டு வாங்க என்று இருவரையும் வழி அனுப்பி வைத்தான்.

உடனே சரி சரி போடா என்று இன்பராகவும் சொல்லிவிட்டு கிளம்ப..

சூரியா ,சத்யதேவ் உன் மாமாவ நல்லா கண்காணி எதுவா இருந்தாலும் எந்த பொண்ணு கிட்டயாவது பேசுறதா இருந்தாலும் உடனே….

சத்யதேவ், டாடி உங்களுக்கு சொல்லனுமா?

எனக்கு சொல்ல வேண்டாம் விவிக்கு போன் பண்ணி சொல்லிடு அவ பார்த்துக்குவாள்.

இன்பா மற்றும் சத்யதேவ் இருவரும் சென்னையில் இருந்து மத்திய பிரதேசத்திற்கு செல்லும் பிளைட்டுக்கு ஏர்போர்ட்டில் காத்திருந்தனர். அதேபோல் அவர்களுக்கான நேரம் வர ஏறிக்கொண்டனர். இருவரும் போர்டிங் பாஸ் எடுத்துக்கொண்டு உள்ளே இருவரும் மத்திய பிரதேசம் கஜுராஹோ செல்ல பயணப்பட்டனர்.

தொடரும்..  

Episode 328, 

சூர்யா மற்றும் மகி இருவரும் அந்த காதல் கோவில் சென்றவர்களை எதிர் பார்த்து காத்திருந்தார்கள். உள்ளுக்குள் ஒரு வித பதட்டம்! இந்த கண்ணாமூச்சி எங்கு போய் முடியுமோ! எனக்கு ஒன்றும் புரியில்லை…

இன்பா சூர்யாவுக்கு போன் செய்யவே இல்லை… ஆனால் விவேகா மகிக்கு போன் செய்து விவரத்தை கூறினாள். 

மகி, ஹலோ! 

அக்கா! 

மகி ஒரு வித பதட்டத்துடன் என்ன ஆச்சு? 

விவேகா, யாருமே வரல கா!  

மகி மனதில் ஒரு பக்கம் கவலை இருந்தாலும் இன்னொரு பக்கம் மிகவும் சந்தோசமாக இருந்தாள். இது பெரிய பிரச்னையில் ஆகி விட கூடாது அதனால் நிம்மதியாக இருக்கிறாள். 

விவேகா,அக்கா லைனில் இருக்கியா! 

ம்ம் நான் எனக்கு சந்தோசம்! 

விவேகா, போ கா! நான் ரொம்ப க்ஸ்பக்ட் பண்ணேன் அந்த தூரிகை என்னை ஏமாற்றி விட்டார். 

மகி, மேடம்! உங்களுக்கு கல்யாணம் அது நினைப்பு இருக்கா! அதை விட சாரு தூறிகையை முழுங்கி சாப்பிடும் அளவுக்கு ஹீரோ! என இன்பா பற்றி பெருமையாக கூறினாள். 

விவேகா, அட போ கா! நீ வேற! தூரிகை பேச்சு அத விட அவரோட பெயின்டிங் எவ்ளோ டெலன்ட் அந்த இன்பா நாய்க்கு பொண்ணுங்கள பேசி மயக்க தான் தெரியும்! இந்த படம் எல்லாம் எங்கே தெரியும்! 

மகி, கொஞ்சம் ஓவரா போற! சீக்கிரம் கிளம்பி வா! 

ம்ம் ஓகே என போனை வைத்தாள். 

அதன் பின் மகி ஒரு பெரு மூச்சை விட்டாள். நீண்ட நாட்களுக்கு பிறகு கைகள் பரபரத்தது. சக்தி கிட்ட இருந்து சில நோட்டு பெண் புத்தகங்கள் வாங்கி கொண்டாள். அவள் அமர்ந்து டீவி பார்க்கும் தன் இரண்டு கம்பீர ஆண் மகன்களின் படத்தை வரைய ஆரம்பித்தாள். 

மகி வரைய வரைய அவளின் நினைவில் அந்த சோலி உருட்டும் பெண் சொன்ன விஷயங்கள் காதில் ஒளித்து கொண்டு இருக்க நட்ராஜ், சக்தி கண்ணா! 

தாத்தா! 

எப்போ டா கண்ணு ஸ்கூல்! 

சத்ய தேவ், இன்னும் ரெண்டு நாள் தாத்தா! அப்புறம் நான் ஸ்கூல்! 

உடனே நட்ராஜ், மிதுன் குட்டி! 

சொல்லுங்க! 

நீ ஸ்கூல்!. 

மிதுன், நான் யார் சொன்னாலும் போக மாட்டேன் நானாக போவேன்! என்னை யாராலும் கட்டு படுத்த முடியாது. 

இதை கேட்டு உமா சிரிக்க.. நட்ராஜ், இங்கே ஸ்கூல் சேர்ந்துக்க கண்ணா! 

மிதுன், வாய்ப்பே இல்ல என்னால் இங்கே! சான்சே இல்ல! தனியா எப்டி இருக்க முடியும்! 

சக்தி, என்னோட ஸ்கூல் சூப்பரா இருக்கும் வா போலாம்! 

மிதுன், என்னோட ஸ்கூல் நான் தான் சூஸ் பண்ணுவேன்! இல்லனா என்னோட மொத்த லைஃப் காலி! நான் சொன்னால் தான் நீங்க செய்யணும்! 

மகி உடனே கண்கள் மூடு கொண்டு இருக்க மிதுன் சொன்னது திரும்ப திரும்ப கேட்டது. கூடவே அந்த சோலி உருட்டும் பெண் சொன்னதும் கேட்டது. 

மகி நிம்மதி பெரு மூச்சுடன் கண்ணை  திறந்து பிரச்னை வருவதற்கு munnaafi நம்ம வரும் முன் காத்து விட்டால்! என்ன? இவங்க ரெண்டு பேரையும் தனித்தனி ஸ்கூலில் சேர்த்து விட்டால் பிரச்னை இல்லையே! ஆனால் இந்த சின்ன வயசில் எப்டி ஹாஸ்டல்! என யோசித்தாள். 

உடனே அவள் நினைவில் மிதுன் சொன்ன ஜெர்மனி ஸ்கூல் நினைவு வந்தது. 

மகி உடனே, மிதுன் நீ ஜெர்மனி போரயா! 

மிதுன் சாக் ஆகி தன் அம்மாவை பார்த்தான். 

போரயா! 

மிதுன் மின்னும் கண்களில் ம்ம் ரெடி தான்! 

மகி, அப்போ போ! என சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். 

சத்ய தேவ் அவளின் பின்னால் சென்றான். 

என்ன மா அவனை அவ்ளோ தூரம் அனுப்புகிறார்கள்! மிதுன் கூட நான் பழக வேணும்! 

மகி, இல்ல சக்தி எனக்கு பயமா இருக்கு நீங்க ரெண்டு பேருக்கும் எதோ ஆபத்து இருக்கு! மிதுன் சமத்து பையன் அவன் எங்கே போனாலும் இருந்து கொள்வான்! அவன் போகட்டும்! 

சத்ய தேவ், என்ன மா ஆச்சு யாரு சொன்னது! 

மகி, எனக்கு அவனை அனுப்ப துளி கூட விருப்பம் இல்லை ஆனால் பெருசா எதோ நடக்க போவது போல தோணுது அதுக்கு தான் அவனை அனுப்பி வைக்கிறேன். 

சத்ய தேவ், எப்படி மா அவன் தனியா இருப்பான்! 

மகி, சக்தி செல்லம் நீங்க ரெண்டு பேரும் என்னோட பக்கத்தில் ஒரே நேரம் இருக்க கூடாதாம்! எதோ ஆகும் என சொல்றாங்க! 

சத்ய தேவ், இதுக்காக குட்டி பையன அவ்ளோ தூரம் அனுப்புறீங்க! 

மகி, நீ போனாலும் எனக்கு ஓகே தான் ஆனால் உன்னை விட்டு என்னால் இருக்க முடியாது செல்லம்! 

சக்தி, அப்போ அவன்!  

மகி, அவன் உன்னோட அப்பா போல்! சரியான வாய்! அவ்ளோ உஸ்தியா கனடாவில் இருந்து மாயா அம்மாச்சிய பொய் சொல்லி கூட்டி வந்து இருக்கான். 

சரி சரி!  விடுங்க! 

மகி அதற்கு மேல் எதுவும் பேச வில்லை. மேலும் அவள் உதயன் கிட்ட பேச நினைத்தாள். 

மிதுன் மிகவும் உற்சாகத்தில் நிதினுக்கு போன் செய்து விஷயத்தை கூறினான். இன்னும் மகிழ்ச்சி அவன் சந்தோசமாக இருந்தான். 

சூர்யா வீட்டுக்கு வந்து விட்டான். நேராக அறைக்கு சென்றான். 

உமா, சூர்யா! மா ட்ரெஸ் மாற்றி வரேன் என உள்ளே புகுந்தவன் அவளை தேட பாத் ரூமில் இருந்து வெளியே வந்தாள். 

சூர்யா, யாரை கேட்டு அவனை ஜெர்மனி அனுப்ப முடிவு பண்ண? 

மகி, யாரை கேட்கணும்! என் பையன நான் படிக்க வைக்க அனுப்புரென்! 

சூர்யா, பால் வாடி அனுப்ப வேண்டிய வயசுல விசா எடுத்து அந்த குட்டி குட்டனுக்கு பாரின் ஒரு கேடா!  அதை விட எப்டி அவன் வந்தான்? அமேசானில் ஆர்டர் போட்டயா! 

மகி கோபமாக பத்து மாதம் பெற்று எடுத்து இருக்கேன். 

சூர்யா, அடேங்கப்பா எப்டி வந்தான்! உனக்கு! நீயே உயிரணு, நீயே உட்கரு அப்போ நான் யார் டி! 

மகி, எனக்கு தெரியல!. 

சூரியா, கொழுப்பு கொஞ்ச நஞ்சனா இருக்கு! அதனால் நீ இதுக்கும் மேல கூட பேசுவ! அவனோட குணம் பற்றி உனக்கு தெரியும் சரியான பாதை இல்லன்னா கெட்டு விடுவான். இப்போவே சொல்லி விட்டேன். நாளைக்கு மட்டும் அவன் அந்த மிதுன் அடங்காத பையனா வந்தால் உனக்கு அப்புறம் இருக்கு டி! என சொல்லி கொண்டே குலிக்க  உள்ளே சென்றான். 

மகி அவன் சொல்வதை யோசித்து பார்த்தாள். ஆனால் பெரிதாக அலட்டி கொள்ள வில்லை. இப்படியே இரண்டு நாட்கள் சென்றது. 

சக்தி, டாடி! லீவ் முடிந்தது நான் ஸ்கூல் போகனும்! 

சூர்யா, இன்னும் மூணு நாள் லீவ் போட்டுக்க சத்ய தேவ்! 

உமா, எதுக்கு டா லீவு! 

சூர்யா, மா அவளுக்கு சீமந்தம் பற்றி கொஞ்சம் பேசணும்! 

உமா, அப்டியா இப்போவே நான் வசந்தன் கிட்ட பேசுகிறேன்! 

சூர்யா, மா ஒரு நிமிடம்! 

மகி அப்பொழுது தான் மேலே இருந்து கீழே வந்தாள். 

சூர்யா தன் அம்மாவிடம் மா இது மாயா செய்ய போறாங்க! 

மகி சாக் ஆகி என்ன சொல்றீங்க? 

உமா, யாரு அவங்க? 

சூர்யா, இவளை வீட்டில் கொண்டு வந்து விட்டார்கள் தானே! அண்ணிக்கு! ம்ம் மிதுன் வயிற்றில் இருக்கும் போது இவளை பார்த்து கொண்டது அவர்கள் தான் இப்போ என் கிட்ட வந்து செய்ய கேட்கிறார்கள்!  

உமா, இதை பற்றி மகி அவங்க அப்பா கிட்ட தான் பேசணும்! இன்னும் சொல்ல போனால் முதல் சடங்கு தான் வசந்தன் பொறுப்பு இது மூன்றாம் பிள்ளை நம்ம விருப்பம் தான் ஆனால் எதற்குக் ஒரு வார்த்தை சொல்ல வேணும்! 

சூர்யா, சரி என கூறினான். 

மகி அமைதியாக இருந்து விட்டு அதன் பின் சூரியா பின்னால் சென்றாள். 

இப்போ எதுக்கு டி என்னை ஃபாலோ பண்ற? 

மகி, எனக்கு இதுல!. 

சூர்யா, இதை பற்றி நீ என் கிட்ட எதுக்கு பேசுற நீ தான் ரொம்ப பெரிய மனுஷி உனக்கு நான் தேவையில்லையே! அதனால் எதுவா இருந்தாலும் நீயே பார்த்துக்க! முக்கியமா உங்க வீட்டில் நீ தான் சொல்ல போற! 

மகி, என்ன சொல்லணும்! 

சூர்யா, மாயா சீமந்தம் பண்ண போகும் விஷயத்தை உங்க அப்பா கிட்ட சொல்லி விடு! 

மகி இன்னும் திடுக்கிட்டு போனாள். இதை எப்படி சொல்ல? ஏற்கனவே அவள் ஒரு சில விசயத்தில் குழப்பமாக இருக்கிறாள். அதும் இல்லாமல் இப்போ மாயா! ஶ்ரீ மதியின் மாமி! இதை தன் அம்மாவிடம் எலோடு சொல்வது என குழப்பமாக இருந்தது. 

மகி வசந்தன் வீட்டுக்கு கிளம்பினாள். சூர்யா தான் அழைத்து வந்தான். 

மொத்த குடும்பமும் அங்கு இருந்தது. சத்ய தேவ் உதயன் அறைக்கு சென்று விட்டான். இனி அது அவனுடையது! உதயன் திருமணம் ஆகாமல் இருந்த சமயத்தில் அங்கு தான் இருப்பான். 

சத்ய தேவ் சிந்தையில் காதல் கோவில் கூடவே அவளது சிந்தனையும் அதிகமாக தோன்றியது. 

மகி விஷயத்தை பொறுமையாக சொல்ல அதற்கு ஒரே நேரத்தில் இருந்து எதிர்ப்பு கலை வாணி, இவ என் பொண்ணு மாப்பிள்ளை எப்டி இதை என் கிட்ட பேசலாம்! என் பொண்ணை நான் யாருக்கும் இரவல் தரல! நான் பெற்று எடுத்து இருக்கேன். கடனை உடன்சு வாங்கி கூட அவளுக்கு சீமந்தம் நான் பண்ணுவேன் ஆனால் யாரும் என் பொண்ணுக்கு செய்ய கூடாது. 

சூர்யா என்ன சொல்வது என யோசித்து கொண்டு இருக்க மகி எதையும் கண்டு கொள்ளாமல் உதயனுக்கு போன் செய்ய சென்றாள். 

ஹலோ! 

ம்ம் சொல்லு மகி! 

உன்னை நேரில் பார்க்க முடியுமா! உன் கிட்ட முக்கியமா கொஞ்சம் பேசணும் 

என்ன மகி! 

டேய் நான் நேரில் பேசணும்! நீ இங்கே வரயா! 

உதயன் , சரி பேசலாம்! இந்த வாரம் வரேன்! 

மகி, எனக்கு வளைகாப்பு பண்றாங்க! அதை பற்றி உன் கொட்ட கொஞ்சம் பேசணும்! 

என்ன? 

மகி, எனக்கு வருண் அண்ணா தான் இதை எடுத்து செய்ய போறாங்க!  

உதயன்.. 

தொடரும்.. 

Episode 329, 

உதயன் , சரி பேசலாம்! இந்த வாரம் வரேன்! 

மகி, எனக்கு வளைகாப்பு பண்றாங்க! அதை பற்றி உன் கொட்ட கொஞ்சம் பேசணும்! 

என்ன? 

மகி, எனக்கு வருண் அண்ணா தான் இதை எடுத்து செய்ய போறாங்க! 

உதயன் இதை கேட்டதும் சாக் ஆகி என்ன சொல்ற? அவங்க எதுக்கு உனக்கு இது எல்லாம் செய்யணும்! சொல்லு உனக்கு!. 

மகி, கொஞ்சம் பொறுமையுடன் உதயா கோபம் வேணாம் நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு டா!  

“என்ன பொறுமை! அவன்! அவன் முதலில் யார்! நீ என்னோட தங்கை அவனுக்கு உன் மேல் எந்த உரிமையும் இல்ல! இதுக்கு எல்லாம் மாமா எப்படி சம்மதிக்கிறார்கள் அது தான் எனக்கு ஒன்னும் புரியல!”என காட்டமாக பதில் அளித்தான். 

மகி அவனை சமாதானம் செய்யும் பொருட்டு இல்ல உதயா உனக்கு இந்த பாண்டிங் புரியாத ஒன்னு! 

உதயன் கோபமாக என்ன டி புரியாத விஷயம் எனக்கு எல்லாமே தெரியும்! 

மகி கோபமாக அப்போ ஶ்ரீ உன் மேல எவ்ளோ காதலில் இருந்தா அப்புறம் எதுக்கு டா அவளை விட்டு இப்போ புதுசா ஒரு லவ் அப்படி இப்படின்னு சொல்லிட்டு இருக்க இங்கே நம்ம வீட்டில் கிடைக்காது அப்டின்னு எந்த விஷயம் இருக்கு சொல்லு! 

உதயன் இப்பொழுது அமைதியாக இருக்க மகி அவனிடம் சரி எனக்கு தெரியாது நீ வரனும் உன் கிட்ட கொஞ்சம் பெர்சனல் என சொல்லி போனை வைத்தாள். 

இங்கே சூரியா கலை வானிக்கி முடிந்து அளவுக்கு கொடுக்க போகிறான். ம்ம் என்ன நடக்குமோ! 

உதயன் அந்த வார இறுதியில் மகியு பார்க்க வந்தான். 

அப்படியே ஒருவாரம் சென்றது. 

உதயன் புன்னகையுடன் 

பூஜா அவர்களுக்குள் நடந்த விஷயத்தை சொல்லி முடித்தாள். ஆனால் இது அவள் பக்க கருத்து மட்டும் தான் ஆனால் பிரியா பக்கத்தில் இருந்து என்ன நடந்தது? என இவளுக்கு தெரியாதே! சதீஷ்க்கு அந்த கேனயன் சாரி கேசவன் மீது கோபம் கொழுந்து விட்டு எறிந்தது. என் பிரியாகிட்ட ஒருத்தன் மாமா ன்னு கூப்பிட சொல்லி இருக்கான்? எவ்ளோ காட்டானா இருப்பான்! “மாமா!” என்ற அந்த வார்த்தையை நினைக்க நினைக்க பற்றி கொண்டு வந்தது. 

பூஜா தன்னை சமன் படுத்தி கொண்டு அப்போ நானே முடிவு பண்ணிட்டேன். எப்படியும் அவள் ஏற்று கொள்ள மாட்டாள். இதன்யா மீது அவளுக்கு ஓவர் போசசிவ் அதனால் அவங்க ரெண்டு பேருகிட்ட இருந்து நானே விலகி விட்டேன். 

சதீஷ், அப்போ பிரியா கெட்ட பொண்ணு போலயே! என பூஜாவை பார்த்தான். 

பூஜா, யார் சொன்னது? பிரியா நல்ல பொன்னு அவள் கூட இருக்கும் போது சந்தோசமா இருக்கும்! என் பிரென்ட் சார்! 

சதீஷ் ஒரு வித ஆச்சரியமாக பார்த்தான். எப்டிங்க உங்களை ரொம்ப கஷ்ட படுத்தி இருக்காள்! நீங்க அவளுக்கு!. 

பூஜா, “அவள் என்னை தூக்கி எரிந்து இருக்கலாம் ஆனால் எனக்கு பிரியா எப்போவும் பெஸ்ட் ப்ரெண்ட் தான்!” 

சதீஷ் அவளின் குணத்தை நினைத்து பிரமித்து போனான்.

பூஜா, இதன்யா வேற டைப் யாரையும் கஷ்ட படுத்துற மாதிரி பேச தெரியாது. பிரியாவும் அதே போல  அதனால் தான் என் கிட்ட பேசுவதை தவிர்த்து விட்டாள். நான் மிஸ் பண்றேன்! எங்க மூணு பேரையும் பார்த்து எல்லாரும் பொறாமை தான்! எப்படி ஒன்றாக இப்படி இருக்க முடியும் அப்டின்னு பேசுவாங்க! பிரியா வரலன்னா நானும் இதன்யாவும் வர மாட்டோம்! அந்த அளவுக்கு ரொம்ப நெருக்கம்!” என முகத்தில் அவ்வளவு உணர்ச்சிகளை காட்டி பேசி கொண்டு இருந்தாள். 

சதீஷ், சரி விடுங்க! என அவளிடம் கூறினான். 

பூஜா ஒரு பெரு மூச்சை விட்டு சரிங்க சார் உங்க பணம்! 

சதீஷ் அவளை புருவம் நெருக்கி பார்த்தவன்.“எப்படி போனாலும் கடைசியில் இங்கே வந்து விடுகிறீர்கள்! உங்க கிட்ட நான் வாங்க மாட்டேன் போங்க!”என சொல்லி திரும்பி கொண்டே நடந்தான். 

பூஜா சிரித்து கொண்டே சார் வாங்கி ஆகனும்! தந்தே தீருவேன்! 

சதீஷ், நான் வாங்க மாட்டேன்! என வேகமாக நடந்தான். 

நில்லுங்க என அவன் பின்னால் கொஞ்சம் ஓடினாள். 

சதீஷ், பார்ப்போம்! அதையும் பார்ப்போம்! என அவனும் வேகமாக நடந்தான். 

பூஜா, ஒரு நிமிடம் நில்லுங்க என மூச்சு வாங்க நின்றாள். 

என்ன ஆச்சு? என சதீஷ் நின்றான். 

பூஜா, நீங்க இவ்வளவு பேசுவீர்களா! எங்கிட்ட ரெண்டு வார்த்தை கூட பேச மாட்டீர்கள்! ஆனால் இன்னிக்கு! 

சதீஷ் மனதில் நீங்களும் நானும் ஒன்னு! இந்த பிரியா மனசுல இடம் பிடிக்க வேணுமே! அதுக்கு தான் என நினைத்து கொண்டான். 

சார்!  

சதீஷ் தன்னிலைக்கு வந்து என்ன சொல்வது என தெரியாமல் அது எனக்கு அதாவது எனக்கு தெரிந்த ஒரே பொண்ணு நீங்க தான்! ஐ மின் இதன்யா மேம் அதுக்கு அப்புறம் நீங்க!  கிட்ட தட்ட உங்க ஸ்டேட் என்னை போலவே இருக்கு அதான் என கண்ணை சிமிட்டினான். 

பூஜா அவனை விழி விரிய பார்த்தாள். சதீஷ் அவளிடம் தவறாக எதுவும் பேச வில்லை. ஆனால் பூஜாவிடம் இப்படி யாரும் பேசியது இல்லை. அவளுக்கு இப்பொழுது சதீஷ் மேல் எதோ ஒரு மூலையில் ஈர்ப்பு! இருக்கும் அவ்வப்பொழுது அவனின் வேலை திறமையில் வியந்து பார்த்து இருக்கிறாள். ஆனால் அவனாக அவளிடம் பேசுவது உள்ளுக்குள் எதோ ஒரு புத்துணர்வு! ஒரு உணர்வு ஆனால் அதை சொல்ல தெரிய வில்லை. 

பூஜா அவனை இமை வெட்டாமல் பார்த்து கொண்டு இருந்தாள். 

ஹலோ மேம்! என கையை அசைத்தான். 

பூஜா தன்னிலைக்கு வந்து அத்! அது வந்து ஒன்னும் இல்ல என முடியை காதுக்கு ஒதுக்கினாள். 

சதீஷ், உங்களுக்கு இந்த பணத்தை கொடுத்தே ஆகணுமா! 

“ம்ம்!”

அப்போ எனக்கு ட்ரீட் வையுங்க! 

என்ன ட்ரீட்! 

எதுவும்  ஸ்நாக்ஸ் ட்ரீட்! என சதீஷ் கேட்டான். 

எதுக்கு என பூஜா மீண்டும் கேட்டாள். 

சதீஷ், உங்களுக்கு ஹெல்ப் பண்ணி இருக்கேன். சோ அதை பணமா உங்க கிட்ட வாங்கி கொள்ள எனக்கு மனசு வரல அதனால் நீங்க ட்ரீட் வைக்கலாம். நான் கண்டிப்பா வருவேன். 

பூஜாவுக்கு இதை கேட்டதும் உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்கியது. அவன் மேல் அவளுக்கு க்ரஸ் crush!.. இதில் ஆச்சரியம் என்ன என்றால் சும்மா போகும் சாத்தானை என் மேல் எறிக்கொள் என்பது போல அவளின் மனதில் இருப்பதை அறியாமல் சதீஷ் அவனை பற்றிய எண்ணங்களுக்கு பூஜா மனதில் ஒரு புகைச்சலை கூட்டி இருக்கிறான். ஆனால் கடைசியில் கோகுலம் ( கோகுல பிரியா)தீ பிடித்து எறிய போகிறது சதீஷ் வேடத்தில் இருக்கும் சதீஷ் என்னும் இரட்டை வேட கிருஷ்ணன் யாரை ஆராதிக்க போகிறான். என்ன நடக்கும் பார்ப்போம்! 

பூஜா, ம்ம் வைச்சா போச்சு! எப்போ சொல்லுங்க சார்! 

ம்ம் இப்போ ரெண்டு நாள் போகட்டும் அதுக்கு அடுத்த நாள் வைப்போம்! சாரி வைத்து கொள்வோம் என சொல்லி விட்டு கிளம்பினான். 

பூஜா ஒரு முறை பறந்தே விட்டாள். சதீஷ் யார்? சாதாரணமானவனா! ஃபேமஸ் கன்னட நடிகர் சித்தார்த் கிருஷ்ணாவின் அசிஸ்டன்ட்! சதீஷ் சார்! என சொல்லி கொண்டாள். 

பூஜா மனதில் சதீஷ நினைத்து கனவு கண்டு கொண்டே சென்றாள். 

சதீஷ் பூஜாவிடம் நட்பாக பேச முக்கியமான காரணம் பிரியா தான்! இப்படியே அவளிடம் பேசி பிரியா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். என நினைத்து தான் பேசினான். 

இங்கே ரோஸ் மற்றும் இதன்யா இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். ரோஸ் மிகவும் அமைதியாக வந்தாள். 

இதன்யா இன்று நடந்த அனைத்து விசயங்களையும் எண்ணி நொந்து போனாள். ஆனால் அதை ரோஸ் கிட்ட காட்டி கொள்ள வில்லை. 

ரோஸ் வேகமாக அவளது அறைக்கு செல்ல இதன்யா, மேம்! நில்லுங்க! 

ரோஸ், சொல்லு தனு எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு! 

இதன்யா, ட்ரெஸ் மாற்றி விட்டு வாங்க லைட்டா டீ காபி குடிக்கலாம்.

இல்ல எனக்கு வேணாம்! 

இதன்யா, நீங்க வரனும் என கோபமாக சொல்லி விட்டு மேலே நடந்தாள். 

உடனே ரோஸ், அப்போ நீ என்னை மேம் சொல்ல கூடாது. 

அவள் சிரித்து கொண்டே திரும்பியவள் இதுக்கு தான் இவ்வளவு பில்ட் அப்? 

ரோஸ், அப்போ நீயும் என்னை வேறு ஒரு ஆள் போல தானே பார்க்கிற! 

இதன்யா, கொஞ்சம் ஓவரா போறீங்க! 

ரோஸ், அப்போ பேர் சொல்லி கூப்பொடு!. 

இதை கேட்டதும் அவள் ஒரு நிமிடம் தயங்கி விட்டு அதன் பின் சரி ரோஸ் இப்போ போதுமா ரோஸ்! போங்க ரோஸ் சீக்கிரம் ரெடியாகி வாங்க நான் உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்! 

ரோஸ், சரி என சிரித்து கொண்டே உள்ளே சென்றாள். 

அவள் சென்ற அடுத்த நிமிடம் பிரியா முகத்தில் கவலை ஒட்டி கொள்ள கண்ணீர் கொட்ட தொடங்கியது. இதே போல தான் ரோஸ் அவளும் அழ ஆரம்பித்தாள். 

இதன்யாவுக்கு பிரியா இனி பேச மாட்டேன் என சொன்னதை ஏற்று கொள்ள முடிய வில்லை மனம் சொல்ல முடியாத வலியை உணர்ந்தது. அதை நினைத்து கொண்டே தவித்தவள் குளித்து முடித்து எப்பொழுதும் போல வீட்டுக்கு அணியும் உடையை அணிந்து கொண்டு ஜடையை இறுக்கி பின்னி போட்டு கொண்டு கீழே வந்தாள். 

மதி இவர்கள் இருவருக்கும் ஸ்நாக்ஸ் எடுத்து கொண்டு அவர்கள் அருந்தும் டீ, காபி விஷயத்தை தனித்தனியாக  எடுத்து கொண்டு வந்தார். 

இருவரும் வேறு வேறு மன நிலையில் இருந்தார்கள். கொஞ்சம் மட்டும் டி அருந்தி கொண்டே கதை பேச ஆரம்பித்தார்கள். 

இதன்யா அப்படியே அமர்ந்து கொண்டு தன் அம்மா, அக்கா, மற்றும் செல்வம் மாமா என அனைவரிடமும் போனில் ஒரு முறை பேசினாள். 

அதன் பின் சிறிது நேரம் கழித்து மதி உணவுகளை தயார் செய்து விட்டு இருவரையும் அழைத்தார். 

ரோஸ்னி சாப்பிட வேண்டும் என எண்ணத்தில் இதன்யா சாப்பிட்டாள். அதே போல் இதன்யா பாதியில் எழ கூடாது என நினைத்து கொண்டே இருவரும் எதோ கொஞ்சம் சாப்பிட்டார்கள். 

அதன் பின் இருவரும் கை கழுவி விட்டு திரும்ப ரோஸ் அவளின் அறையை நோக்கி சென்றாள்.

இதன்யா, என்ன என்னை விட்டு போய் தூங்குறீர்கள்!. 

ரோஸ் சிரித்து கொண்டே நான் எதுக்கு தூங்க போறேன் சோபாவில் உன் பக்கத்தில் உட்கார வந்தேன்! 

அப்போ வாங்க வந்து பேசுங்க என இருவரும் எதிரெதிர் திசையில் அமர்ந்து கொண்டனர். 

இருவரும் பேச ஆரம்பிக்க கண்ணை கட்டி கொண்டு தூக்கம் வேறு வந்தது. 

ரோஸ், தூக்கம் வருதா! 

இல்லையே உனக்கு ரோஸ்! என இதண்யா கேட்டாள். 

எனக்கும் இல்லையே! என அவழும் சமாளித்தாள். 

அப்போ சரி என இருவரும் கொஞ்ச நேரம் பேசினார்கள். 

இதன்யா அப்படியே சோபாவில சாயிந்தி பார்க்க வாட்டமாக தெரிய வில்லை அப்படியே சோபாவில படுத்து கொண்டாள். 

என்ன தனு! 

ஒன்னும் இல்ல சும்மா என சொல்லி கொண்டே இதன்யா பேச ஆரம்பித்தாள். 

ரோஸ், உன்னை மாதிரி நானும் டிரை பண்றேன் என சொல்லி அவளும் எதிரே உள்ள சோபாவில படுத்து கொண்டே கதை பேசியவர்கள் சிறிது நேரத்தில் சொக்கி போய் அப்படியே குட்டி குறைத்தையுடன் தூங்க ஆரம்பித்தனர். 

மதி அவர்கள் இருவரையும் பார்த்தவர் சிரித்து கொண்டே அவர்களுக்கான வேலையை பார்த்து கொண்டு இருந்தார். 

சித்தார்த் இரவு 9 மணிக்கு தான் வீடு வந்து சேர்ந்தான். 

வீடே மிகவும் அமைதியாக இருந்தது. 

மதி மா! என அழைத்தான். 

உள்ளே இருந்து மதி ஓடி வந்தார். 

சித் அவனுடைய கோட்டை கலட்டி கையில் வைத்து கொண்டே என்ன இன்னிக்கி ரொம்ப அமைதியா இருக்கு என்ன ஆச்சு மதி மா! 

இவ்வளவு நேரம் சின்ன பாப்பா கூட இதன்யா பாப்பாவும் சேர்ந்து பேசி சிரித்து கொண்டு இருந்தார்கள் அப்படியே ரெண்டு பேரும் தூங்கி விட்டார்கள். அதோ அங்கே பாருங்க சோபாவில் இருக்கும் அவர்களை கை காட்டினார். 

சித், சாப்பட்டாச்சா! 

ம்ம் ரெண்டு பேரும் சாப்பிட்டு தூங்குகிறார்கள்! 

சித் அவர்களின் அருகில் சென்றான். 

இதன்யா …? 

தொடரும்.  

Episode 330, 

உதயன் அந்த வார இறுதியில் மகியை பார்க்க வந்தான். 

ம்ம் மேடம் எப்டி இருக்கீங்க? என்னோட மருமகன் என்ன சொல்றான்? என அவளை பார்த்து புன்னகையுடன் கேட்டான். 

மகி, இது பொண்ணு பொண்ணு அப்டின்னு அவரு உசுறே வச்சு இருக்காரு டா! நீ பையன் வேணும் அப்டின்னு சொல்ற? 

உதயன், உன் வீட்டில் கட்டி கொடுக்க என் பொண்ணுக்கு கொடுத்து வைக்கணும் இப்போவே சொல்லி வைக்கணும்! சோ நீங்க அடுத்து பொண்ணு பெற்று கொள்ளுங்கள் இப்போதைக்கு எனக்கு பையன் வேணும்! 

மகி அந்த சோலி உருட்டிய பெண் சொன்னது அனைத்தும் நினைவு வர உதயா நீ எப்டி இருக்க? 

எனக்கு என்ன நான் நல்லா இருக்கேன்! 

அண்ணி எப்படி இருக்காங்க! 

ம்ம் அவளும் நல்லா இருக்கா! உனக்கு என்ன ஆச்சு மகி! 

மகி கொஞ்சம் தயங்கி கொண்டே நீங்க நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சேர்ந்து!  

உதயன், நானும் தாராவும் சந்தோசமா இருக்கொம்! 

மகி, நீங்க குழந்தைக்கு பிளான்!. 

தாரா வுக்கு இப்போவே குழந்தை வேணுமாம் அதனால் ஒரே சேட்டை அடக்க முடியலே டீவி, லேப் டாப், சாப்பாடு எல்லாமே குழந்தை பிறக்க முன் என்னன்ன வச்சு வீட்டை ஒரு வழி ஆக்குவார்களோ அதே போல தான் இருக்கு! 

மகி முகம் மிகவும் சோகமாக இருப்பதை கண்டு கொண்ட உதயன், என்ன மகி ஆச்சு வந்ததில் இருந்து உன்னோட முகம் சரி இல்லையே! 

மகி, எனக்கு சாமி கனவில் வந்தது உதயா! 

எந்த சாமி! 

நம்ம குல தெய்வம்! 

உதயன், உங்களுடையது அப்டின்னா இப்போ என்ன ஆச்சு? 

மகி, சக்தி தேவ் அப்பா குடும்ப குல தெய்வம்!  

உதயன், சரி இதுக்கு தான் என்னை கூப்பிட்டயா? 

மகி, டேய் சொல்றத கேளு! 

என்ன? 

மகி, நம்ம கோவிலில் ஆதாவ்து உன்னோட குலதெய்வ கோவில் எடப்பாடி  பக்கத்தில் கல்வடங்கத்தில் இருக்கும் அங்காளம்மன்!  

உதயன், ஆமா! 

மகி, உனக்கு அதிகமா மனவேதனை மட்டும் தான் மிஞ்சும் கூடவே கோவிலில் என அனைத்து விவரமும் கனவில் வந்தது போல நீ ஒரு தடவை அன்னிய கூட்டி கிட்டு கோவிலுக்கு போயிற்று வாங்க!..

உதயன், இப்போ என்ன சொல்ல வர? 

மகி , நீயும் அண்ணி ரெண்டு பேரும் சேர்ந்து கோவிலுக்கு போயிட்டு வாங்க அத்காவ்து நம்ம குல தெய்வம் சொன்ன மாதிரி கனவு கண்டேன்! 

உதயன், எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். 

மகி, நம்ப மாட்டயா!  

ம்ம் சரி டிரை பண்றேன்! என கூறினான். 

மகி உடனே சரி இன்னொரு விஷயம்? 

என்ன? 

மகி, இதை எப்படி உறுதி செய்தி கொள்வது அப்டின்னு எனக்கு தெரியல அதான் உன்னை தேடி வந்தேன். 

உதயன், சொல்லு மகி!. என்ன விஷயம். 

மகி, நீ ஒரே ஒரு பையன் மட்டும் தானா! இல்ல நமக்குள் அதாவது எனக்கு தெரியாமல் உன் கூட யாராவது பிறந்து இருக்காங்களா? எல்லாரும்

உதயன் சாக் ஆகி ஆனால் அதை முகத்தில் காட்டி கொள்ளாமல் என்ன மகி! 

மகி, இல்ல எனக்கு இப்படி தோணுது !  உனக்கு எதுவும் தெரியுமா! 

உதயன் பதட்டத்தை துளி கூட வெளி காட்டாதவன் நீ இன்னிக்கி கொஞ்சம் வித்தியாசமா நடந்து கொள்கிற? என்ன என்னவோ கேட்கிற!  

மகி, என் கனவில் வந்து இருக்கு ! எனக்கு என்னமோ உண்மை போல தோணுது! 

ஒரு உண்மையம் இல்லை நீ தூங்கி ரெஸ்ட் எடு! கண்டதை போட்டு நினைத்து கொண்டு வருத்த பட வேணாம். 

மகி, நான் சொன்றது உண்மை தான் எனக்கு நம்பிக்கை இருக்கு என மனதில் சொல்லி கொண்டாள். இதற்கு மேல் இவனிடம் என்ன பேச முடியும். 

உதயன், சரி நான் கிளம்புகிறேன். 

மகி, உதயா!. 

சொல்லு இப்போ புதுசா என்ன சொல்ல போற! என அவளை கிண்டல் செய்யும் தொனியில் பேசினான். 

மகி, உனக்கு நான் சொல்றது எல்லாமே சிருப்பா தான் தெரியும்! பாரு டா என சொல்லி கொண்டே எழுந்தாள். 

உதயன், பிளீஸ் மகி எதோ ஒரு கிண்டலில் பேசி விட்டேன். என்ன விஷயம்? 

மகி , ஒன்னும் வேணாம்! நான் எல்லாருக்கும் நல்லது நினைத்தால் அதுக்கு பதிலாக என்னை திட்டி மனசு வேதனை படுத்துவது தான் உங்க வேலை என சொல்லி கொண்டே எழுந்தாள். 

உதயன், சாரி சாரி பிளீஸ் மகி சொல்லு!. நான் இனி இப்படி பேசவே மாட்டேன். என கெஞ்ச அதன் பின் சரி என ஒத்து கொண்டாள். 

மகி, நீ அம்மா மனசுல கொஞ்சம் இடம் பிடி டா! 

உதயன், “நானும் அதுக்கு உண்டான எல்லா வேலையும் செய்து கொண்டு தான் இருக்கேன்!”என கூறினான். 

மகி, அதை தான் கேட்க நினைத்தேன்! வேற ஒன்னும் இல்ல!. 

உதயன், சரி என அவளை பத்திரமாக வீட்டில் விட்டு கிளம்பினான். 

***

இங்கே தேஜு கோவிந்தனுக்கு அழைத்தாள்.

அவர் வீட்டில் கொஞ்சம் பொழுதுபோக்கைதான் கழித்துக் கொண்டிருக்கிறார் ‌.

அனைத்து வேலைகளையும் உதயனே  பார்த்துக் கொள்கிறான் சும்மா சொல்லக்கூடாது மிகவும் திறமையானவன்.  

ஹலோ அங்கிள் எப்படி இருக்கீங்க

“எனக்கு என்னம்மா நான் உண்மையாகவே ரொம்ப நல்லா இருக்கேன் என்னோட மாப்பிள்ளை அவ்வளவு தங்கம் உன்னால தான் இது எல்லாம் சாத்தியமாச்சு !”என்று சந்தோச மன நிலையில் தேஜு விடம் பதில் அளித்தார். 

அப்படியா எனக்கும் அதுதான் வேணும் என்று பேச்சு கூறினாள். 

அதன் பின் கோவிந்தன் இப்போ என்னம்மா? சொல்லுங்க எதுவாயிருந்தாலும் உங்களுக்காக எது வேணாலும் நான் செய்வேன்! என்று கூறினார்.

தேஜு பெருசா ஒன்னும் இல்ல அங்கிள் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? 

கோவிந்தன் எதுவும் புரியாமல் என்ன விஷயம்? 

தேஜு, அவள் அவரிடம் ஜஸ்ட் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்றதுக்கு தான் போன் பண்ணேன்! இந்த வாரம் வெள்ளிக்கிழமை உங்க மாப்பிள்ளையின்  தங்கச்சி அதாவது உதயனோட தங்கை மகிககு சீமந்தம் நடக்கப்போகுது!  அதை பத்தி உங்ககிட்ட சொல்லத்தான் போன் பண்ணேன்!

இதுல என்னமா இருக்கு என்று கோவிந்த் அவளிடம் கேட்டார்.

தேஜு சுழல் நாற்காலியில் நன்கு சாய்ந்து கொண்டே “ஒன்னும் இல்ல  இந்த சீமந்தத்துக்கு மட்டும் உதை உங்க மாப்பிள்ளய நீங்க அனுப்பினால் கொஞ்சம் சிக்கல்!” என்று கூறினாள்.

கோவிந்த் ஒன்றும் புரியாமல் என்னம்மா சிக்கல்? நீங்க சொல்றது எனக்கு ஒன்னும் புரியலையே? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க? என்று கேட்டார்.

உடனே தேஜு  “இந்த வளைகாப்புக்கு அவங்க மத்த குடும்பமும் கூட போகுது!  சூர்யா பற்றி உங்களுக்கு நல்லாவே தெரியும்!  அந்த சூர்யா உங்க கிட்ட இருந்து தாரா மற்றும் உதயன் ரெண்டு பேரையும் பிரிக்க பிளான் போடுவான்!  அதுக்கு நீங்க ஜாக்கிறதையா இருக்கணும்னு சொல்றதுக்கு தான் போன் பண்ணு நான் போன் வைக்கட்டுமா?”

கோவிந்தனுக்கு தேசஜு சொன்ன  அனைத்து விஷயமும் தூக்கி வாரி போட்டது! என்ன காரணம்? தாரா என்னிடமிருந்து பிரிய போகிறாளா?  என்று அந்த வயது முதிர்ந்த மனிதனுக்கு கொஞ்சம் கோபமும் அதிகார அகங்காரமும் கொஞ்சம் உயர்ந்து எழுந்தது. 

தேஜுவுக்கு இப்போதைக்கு அதுதான் வேண்டும்.

உடனே கோவிந்த் அவளிடம் ஒரு நிமிஷம் இரும்மா போன் வைக்காதே!  இப்போ நான் என்ன பண்ணனும்? என்று கேட்டார்.

தேஜு மனதில் அப்படி வாங்க என்னோட வழிக்கு!   பற்களை நாரணத்து கொண்டாள். 

ஒன்னும் இல்ல ரொம்ப சுலபம்  நீங்க இந்த சீமந்தத்துக்கு உதயன அனுப்பக்கூடாது. 

 அது எப்படிம்மா அவரை அனுப்பவும் அனுப்பாமல் இருக்க முடியும் கட்டாயம் அவர் கிளம்பறேன்னு சொல்லுவாரு கோவிந்த் கூற 

தேஜு,   அதுதான்  அங்கிள் இந்த விஷயத்தை நீங்க பண்ணி தான் ஆகணும்! உதயனுக்கு பதிலா தாராவை அனுப்பி வைக்கலாம்.

 கோவிந்த் புரியாமல் என்னம்மா என் பொண்ண? அதுவும் அந்த சூர்யா கிட்ட கொஞ்சம்!… எனக்கு என்ன சொல்ல! 

 உடனே தேஜி, நீங்க உதயண வசந்தன் மற்றும் கலைவாணி ரெண்டு பேர் கூடவும் சமாதானப்படுத்தி வச்சுட்டாலே அவங்க எல்லாரும் ஒன்று சேர்ந்து விடுவாங்க! அதன் பின்  சீக்கிரத்தில் உதயன் , தாரா கிட்ட இருந்து அப்புறம் முக்கியமா உங்ககிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போய்டுவாங்க! அதனால நீங்க இப்போதைக்கு தாரவை அனுப்பினால்,  அது சரியா வரும்! 

கோவிந்த், அவங்க என் பொண்ணை   கஷ்டப்படுத்தினால் என்ன பண்றது என்று கேட்டார்.

தேஜு அதை பத்தி நீங்க கவலையே பட வேண்டாம்  தாராவை கஷ்டப்படுத்தினால் அதை கேட்க உதயன் இருப்பான்.

அந்த இடத்தில் விரிசல் ஆரம்பிக்கும் போது உதயன்  அவங்க அப்பா வீட்ட பத்தி நினைக்கவே மாட்டான் உங்களுக்கு விசுவாசமா கடைசி வரைக்கும் உங்க கூடவே இருப்பான் இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?  என்று போட்டு வைத்தாள். 

 கோவிந்த் தேஜு சொல்வதை யோசித்து பார்த்தார். அதுவும் மனதுக்கு சரியாகப்பட்டது, தன் பெண் எங்கும் போகக்கூடாது, தன்னுடன் தன் இறுதி காலம் முடிந்த வரை கூட இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இது தவறான ஆசையே!  தாரா அவளது வாழ்க்கையை வாழ வேண்டும்! அவளது பிரச்சினைகளை சந்திக்க வேண்டும் என்று தான் நினைக்கிறாள்.

ஆனால் கோவிந்தின் எண்ணம் “தன் பெண் எந்த இடத்திலும் கஷ்டப்படக்கூடாது! என்று நினைக்கிறார். ஆனால் அதைவிட அவர் ஒன்றை உணரவில்லை தாராவின் வாழ்க்கையில் அவர் சுதந்திரமாக வாழ விட வில்லை அதுதான் முக்கிய அதுதான் முக்கியமான ஒன்று!”

தேஜு போனை வைக்க போக உடனே கோவிந்த் “இந்த விஷயத்தை என்கிட்ட சொன்னதுக்கு ரொம்ப நன்றிமா! நீ சொன்னது போலவே அந்த சீமந்தத்துக்கு நான் தாராவை அனுப்பி வைக்கிறேன்! என்று ஒரு ஃபோனை வைத்தார் .

தேஜு பற்களை கடித்துக் கொண்டு அப்படியே சுழல் நாற்காலியில் சாய்ந்தவள் அவளது முடியை முன்னாடி போட்டு நீவி கொண்டு அந்த நாற்காலியில் ஒரு சுழற்று சுற்றிக்கொண்டு அமர்ந்தாள்‌. 

இங்கே சீமந்தத்துக்கான வேலைகள் வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மகிழினி மனதுக்குள் ஒரு சிறிய படபடப்பு இருந்து கொண்டே இருந்தது. எல்லாமே அந்த சோலி உருட்டும் பெண் சொன்னது போல எதுவும் பிரச்சனைகள் நடக்குமா? 

அவள் இவ்வாறு நினைத்து கொண்டிருக்க பட்டு வேஷ்டி மற்றும் பட்டுச் சட்டையில் ஜம்முன அந்த அறைக்குள் சூர்யா நுழைந்தான். 

அடுத்து என்ன நடக்கும்? 

தொடரும். … 

You may also like

Leave a Comment