Episode 256
சூர்யா யாரையும் கண்டு கொள்ளாமல் மகி அருகில் வந்து நின்றான்.
அவள் எதையோ தீவிரமாக யோசித்து கொண்டு அமர்ந்து இருந்தாள்.
சூர்யா அவளின் முகத்தை பார்த்தான். இதுக்கு மேல் போனால் சரி இல்ல என நினைத்து வந்து கை பிடித்து அமர்ந்தான்.
மகி அவனை முறைத்து பார்த்து விட்டு கையை உறுவி கொண்டாள்.
சூர்யா, மகி பிளீஸ் டி சாரி! இப்போ என்ன உனக்கு அந்த பீரோ உள்ளே பார்க்கனும் அவ்ளோ தானே! உன்னை கூட்டி போறேன்.
மகி கண்கள் மின்னிட நிஜமா! எப்படி திடீர்னு! என அவள் அவனை பார்த்தாள். எல்லாம் உனக்காக நீ என்னை சந்தேக படுவது நல்லா தெரியுது! சோ நமக்குள் மிஸ்அண்டர்ஸ்டண்ட் இருக்க கூடாது.
மகி, எனக்கு ஒன்னும் உங்க மேல் சந்தேகம் இல்ல!
சூர்யா, பொய் சொல்லாத மகி! உன் முகம் சொல்லுது இந்த அளவுக்கு வந்ததுக்கு அப்புறம் தள்ளி போட முடியாது.
மகி, அப்போ நீங்க என் மேல் தப்பு சொல்றீங்க!.
என்ன டி அப்படி சொன்னா இப்படி வர இப்படி சொன்னால் அப்படி வர!
மகி, நீங்க தானே காட்டுகிறேன் என சொல்றீங்க காட்டுங்க! இப்போ போலாம்!.
ஓகே!
கார்த்திக் அவர்கள் இருவரும் பேசி கொள்வதை பார்த்து விட்டு எபடியோ சண்டை முடிந்தது போல் சூர்யா MNC project எப்டி போயிட்டு இருக்கு!
ம்ம் போகுது நான் மஹியை வீட்டில் விட்டு நேரா ஆபீஸ் வரேன். ஏற்கனவே விட்ட பெண்டிங் வொர்க் எல்லாம் இந்த ஒரு வாரம் முடிக்க வேணும்!.
மகி எழுந்து கொண்டு சரி வாங்க போகலாம்!
மை விழி, ஹே போறியா!
தாரா, என்னங்க deer கிலம்புறாங்க!.
இதை கேட்டதும் மான் விழி, சூர்யா இருவரும் தாராவை பார்த்தனர்.
தாரா அவர்களின் பார்வையை பார்த்து “என்ன நான்! எத் எதுவும் தவறா சொல்லி விட்டேனா!”
கார்த்திக், அப்படி இல்ல மான் விழிய இப்படி யாரும் கூப்பிட்டது இல்ல !.
மான் விழி வியர்வை வழிய துடைத்து கொண்டே சூரியா, மை விழி, கார்த்திக் என அனைவரையும் பார்த்தாள்.
சூர்யா கண்களில் ஒரு வித தடுமாற்றத்துடன் மான் விழியை பார்த்தான்.
உதயன், மாமா! மாமா! என சூர்யாவை அழைத்தான்.
ம்ம் சொல்லுங்க மச்சான்!.
அதற்குள் மகி, என்னங்க வாங்க போலாம் என சூர்யா அருகில் சென்றாள் .
உதயன், மகியை விட்டு போங்க!
சூர்யா அவளை பார்க்க நம்ம வீட்டுக்கு போலாங்க! மிதுன்! நிதின் வாங்க போலாம்!.
சூர்யா அவளை பார்க்க உதயன், மாமா அவளை விட்டு போங்க!
என்னங்க நம்ம போலாம்! என அவள் கதவு வரை சென்றாள்.
மை விழி ஒரு பக்கம் மகி என அழைக்க உதயன், கூடவே சேர்ந்து மகி! என அழைத்தான்.
மகி, மாமா நான் போயிட்டு வரேன்!
மை விழி, ஓவரா பண்ணாத!
சூரியா உதயனை பார்த்து மச்சான் நான் என்ன செய்வேன் அவள்!
உதயன் மகியின் அருகில் சென்று மகி என் செல்ல குட்டி தங்கச்சி! அதுவும் என்னோட கடைசி தங்கை குட்டி பொண்ணு இப்படி கோப படலாமா! சாரி மகி!
சூர்யா அவர்களின் உரையாடலை பார்த்து விட்டு நேராக கார்த்திக் அருகில் வந்தான்.
கார்த்திக், முக்கிய விஷயம் பேசணும் அப்டின்னு சொன்ன?
சூர்யா, மை விழி எதுவும் உன் கிட்ட சொன்னாலா?
கார்த்திக் புரியாமல் பார்த்தான்.
உதயன் மகி கிட்ட கெஞ்சி கொண்டு இருக்க அவள் வேறு புறம் திரும்பி கொண்டு” நீ பண்ணது தப்பு அண்ட் இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல! இது உன் வாழ்க்கை இதில் சொல்ல என்ன இருக்கு!”
தாரா இது எல்லாம் என்னால் தானே! என அவர்கள் அருகில் வந்தவள். சாரி deer!.
மகி தலையை குனிந்து கொண்டு பிளீஸ் என்னை deer antlerன்னு கூப்பிடாதீங்க!
“என்ன deer antler ஆ!”என தாரா ஆச்சரியத்துடன் deer antler! ஹான் தி ஃபேமஸ் பெயிண்டிங் ஆர்டிஸ்ட் அவங்க பெயின்டிங் ல நான் கூட ஒன்னு வச்சு இருக்கேன்!
மகி திடுக்கிட்டு யார் அது எனக்கு தெரியாது. அதை விட இப்போ தேவையில்லாத பேச்சு எதுக்கு ?
சூர்யா, பாப்பா deer antler ஆ!. யார் அதை சொன்னது?
மகி அவர்களின் பேச்சை களைக்க என்னங்க வாங்க வீட்டுக்கு போலாம்!.
உதயன், மகி இங்கே இருப்பியா மாட்டியா! எல்லாரும் என்னை ரொம்ப வெறுக்கிறார்கள். நான் செய்தது தப்பு தான் எப்போவும் இப்படியே இருக்க போறியா!. அம்மா அதை விட சங்கட படுத்துகிறார்கள்!.
மகி உதயனை பார்த்து உனக்கு தெரியாதா! என்ன? அம்மாவுக்கு இப்போ தான் உதயன் அம்மாவுக்கு என்னை பிடித்து இருக்கு! என் கிட்ட பாசமா இருக்காங்க! என மகி கண்களில் அத்தனை ஆசை கனவு கூடவே இத்தனை நாள் கலை வாணியின் ஒதுக்கம் இப்பொழுது உள்ள அரவணைப்பு இன்னும் சேர்ந்து கொண்டது.
மகி ஆர்வத்துடன் ஆசையாக அம்மா பாசத்தை நான் கெடுத்துக்கக விரும்பல அதை விட சத்ய தேவ் மிதுன் தேவ் டெலிவரி அப்போ அம்மா அந்த அளவுக்கு என்னை பார்க்காத விஷயம் எல்லாம் இப்போ அவங்க கண்ணில் தெரியுது! அதனால் இந்த டெலிவரி நான் நம்ம வீட்டில் நடக்க ஆசை படுறென்!.
உதயன் தன் தங்கையின் கையை பிடித்து கொண்டு “அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்! மான் விழி எதுக்கு நீ வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்க! நான் உன்னை என் கூட எப்பவும் போல பேசத்தானே சொன்னேன்! வேற என்ன சொன்ன! நாங்க ரெண்டு பேரும் இங்க இருக்கும்போது நீ விட்டுட்டு போறியே அதுதான் மன சங்கடமா இருக்கு மான் விழி !” என்று உதயன் இயலாமையுடன் இயக்கத்துடனும் தன் தங்கையிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
” நான் சொல்றது உனக்கு இப்ப கூட புரியலையா உதயா! நான் ஒருவேளை உன்கிட்ட பேசினேன்னு வச்சுக்கோங்க, அம்மாவோட இந்த பாசம் எனக்கு கிடைக்காமல் போகும். உனக்கும் தெரியும் ! மைவிழிக்கும் தெரியும்! மை விழியையும் உன்னையும் அம்மா எப்படி பாத்துக்கிட்டாங்கன்னு, நம்ம குடும்பம் மொத்தத்திற்கும் தெரியும்!”
உதயன் இயலாமையுடன் இப்போ “என்ன தான் சொல்ல வர? நான் செஞ்சது தப்புதான்! இல்லைன்னு சொல்ல வரல, அம்மா இங்கே இல்லையே! இவ்வளவு கேவலமா தான் நீ!..என்னை!…என்னை!..நினைத்துக்கொண்டு இருக்கிறாய்!.”
தாரா உதயன் கைகளை பிடித்து கொண்டு விடுங்க அவங்க போகட்டும்! ரொம்ப கஷ்ட பட்டு இருக்காங்க!.
மகி உதயன் மற்றும் தாராவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே செல்ல போக..
சூர்யா அவள் முன் வந்து நின்றான் .
மகி என்று உரைக் அழைத்தான்.
அவள் என்னங்க என்று திரும்பி பார்த்தாள்
சூர்யா, அவங்க இவ்வளவு தூரம் சொல்றாங்கல்ல, நீ தான் பெரிய காவிய தலைவி! ஆச்சே; இந்த காதல் கவிதை கட்டுரை இதெல்லாம் ரொம்ப எல்லாத்துலையும் ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கி இருக்கியாமே! சோ இப்படி இருக்கிற உனக்கு இந்த காதல் பத்தி நான் சொல்லி தான் தெரியுமா என்ன!”
அவள் அமைதியாக இருக்க சூர்யா, மச்சான் அவனோட லவ்வுக்காக அவன் போராடி கட்டி இருக்கான். இதுல அத்தை கோவமா இருக்காங்க அது நியாயம் தான்! நீ கோபமா இருக்கிறதுல என்ன அர்த்தம் இருக்கு?
மகி, எங்க அம்மா என்கிட்ட பேச மாட்டாங்க உங்களுக்கு புரியுதா! இல்லையா?
சூரியா, இப்போ உங்க அம்மா இல்ல இல்ல அது நடக்கும் போது பாத்துக்கலாம்!
உடனே அவள் சூர்யாவை மேலும் கீழும் பார்த்தாள்.
சூர்யா அவளிடம் சாவியை கொடுத்து உன்னை நான் ஏமாத்த மாட்டேன்! டி! ஆனாலும் நீ எவ்ளோ மோசக்காரி ! சும்மா ஓவரா பண்ற , என்ன கேவலமா நினைச்சிட்டு இருக்காத , இந்தா வீட்டு சாவி நீயே வச்சுக்கோ! இது ஒரே ஒரு சாவி தான் இருக்கு வாங்கிக்கோ நீயே முதலில் வீட்டுக்கு போ ! உனக்கு என்ன பார்க்கணுமோ பார்த்துக்க என்று சொல்லிவிட்டு அவன் கார்த்திக்குடன் அவள் சூர்யா முன்னால் சென்றான்.
கார்த்திக், மைவிழி இங்கே கொஞ்சம் வா என்று அழைத்தான்.
மகி அதே இடத்தில் என்ன செய்வது என யோசனையுடன் நின்றாள்.
தாரா அவளின் அருகில் வந்து இப்போ நீங்க போறீங்களா!
உதயன் உதட்டை கடித்து கொண்டு தலையை கோதி கொண்டே சோபாவில அமர்ந்தான்.
மகி, நான் இங்கேயே இருக்கேன்! சாயங்காலம் போறேன்!. என சொல்லி கொண்டே உதயன் அருகில் வந்து அமர்ந்தாள்.
உதயன் அவளை ஏக்க பார்வை பார்த்தான். .
மகி ஒரு பெரு மூச்சை விட்டு அவன் முகத்தை பார்த்தாள்.
தாரா அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுக்க எண்ணி குழந்தைகளுடன் விளையாட சென்றாள்.
உதயன் மகிழினிடம் என் மேல ரொம்ப கோபமா இருக்க போல நான் பண்ணது தப்புதான்!
மகி ஒரு கசந்த புன்னகை சிந்தி தன் தந்தை வசந்தன் மற்றும் கலைவாணி இருவரும் எவ்வளவு வருத்தப்படுகிறார்கள் என்று அவளுக்கு தெரியும்.
உதயன் எதுவும் பேச மகி!.
மகிழினி தன் அண்ணனை பார்த்து “உனக்கும் எனக்கும் ஒரு ஆறு வருஷம் வித்தியாசம் இருக்குமா! ஆனா நீ! என்கிட்ட ஒரு தடவ கூட நல்ல முறையில் பேசியதே கிடையாது, சரி தானே!
உதயன் அவளை அடிபட்ட பார்வை பார்த்தான் .
மகி மேலும் நீ உனக்கு எப்பவுமே மைவிழி அப்புறம் அம்மா, அப்புறம் நம்ம அம்மாச்சி, செல்வ மாமா இவங்க மட்டும் தான் உனக்கு முக்கியம் ! இவர்களை சுற்றி மட்டும் தான் இருப்ப..
மகி, “இப்போ உன்கிட்ட இத சொல்ல எந்த அவசியமும் இல்ல ஆனா போறேன், நீ பண்ண எந்த வேலையும் இப்போ உன்னால் மாற்றி அமைக்க முடியாது.!”
உதயன் அதுக்காக நான் லவ் பண்ண பொண்ணு விட்டு விட சொல்றியா! அது எவ்வளவு பெரிய துரோகம் தெரியுமா நீ என்ன புரிஞ்சு பண்ணு நினைச்சேன் நான் பண்ணது தப்பு தான் உன்ன சின்ன வயசுல இருந்து நான் பெருசா கவனிச்சது இல்லை உனக்கு கல்யாணமான பிறகு தான் நான் உன்னை உண்மையாகவே மிஸ் பண்ணேன் ரொம்ப மிஸ் பண்ண மகி எனக்கு உன்ன புடிக்கும் அம்மா நினைச்ச பயம்.
மகிழினி சரி ஓகே முடிஞ்சத பத்தி பேச என்ன இருக்கு உதயன் அப்போ என்கிட்ட பேசுவதானே மா மயிலினி ஒரு குட்டி புன்னகை சிந்தி நான் பேசி ஒண்ணுமே மாறப் போறதில்லை ஆனா நீ பண்ண காரியம் எவ்வளவு பெரிய விஷயம் உனக்கு தெரியல உதயன் இத சொல்றதுக்கு எனக்கு
இப்போ பேசுறதுக்கு…. அதை விட நான் பெருசா பேசினா இங்கே என்ன மாறப் போகுது விடு!.
உதயன், சரி நீ போ!.
அதை நீ சொல்லணும் ராஸ்கள்!
மகி தெளிவுடன் பார்த்தாள்.
அதன் பின் உன்னை இனி கஸ்ட படுத்த மாட்டேன்.
மகி, நீ இனிமே தான் பெரிய கஷ்டத்தை கொடுத்து விட்டு போற!
உதயன் தன் தங்கையை பார்த்தான்.
மகி, நீ நீ! ரெஸ்ட் எடு!.
இங்கே தேஜூ கலை வாணி கிட்ட பேச ஆயத்தமானார்.
கலை எப்பொழுதும் அவர் வேலையை செய்ய ஆரம்பித்தார்.
தேஜு அழைப்பு விடுத்தால்.
கலை படபடத்து கொண்டே போனை எடுத்தாள்.
ஹலோ கலை வாணி! இது கேட்டதும் கலை நிறைத்து ரொம்ப நன்ட்!
கலை,…?
தேஜி, ஒரு முக்கிய விஷயம்?.
கலை அதை கேட்டு!.
தொடரும்..
Episode 257
இங்கே சூர்யா மற்றும் கார்த்திக் இருவரும் மை விழிக்காக காத்திருக்க அவள் உள்ளே வந்தாள்.
என்ன விஷயம் மாமா!
அதை நீ தான் சொல்லணும் மை விழி!.
நான் என்ன சொல்லணும்!.
கார்த்திக், என்ன டா நடக்குது என்னை எதுக்கு வர சொன்ன? எனக்கு ஆஃபீஸ்க்கு டைம் ஆகுது சீக்கிரம் சொல்லு..
சூர்யா, கார்த்திக் மற்றும் மைவிழி இருவரையும் மாறி மாறி பார்த்தான்.
மைவிழி கைகளைக் கட்டிக் கொண்டே என்ன மாமா?
சூர்யா, அப்ப எதுவுமே இல்லையா?
“புரியவில்லை நீங்கள் கேட்கிறது எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லுங்க நான் உடனே சொல்றேன்..!”
சூர்யா, இந்த அளவுக்கு ரொம்ப ஃபார்மலா பேசுற! எதுவுமே நடக்காதது மாதிரி, பேசுற, நீ யாரு சாதாரண பொண்ணா ? அமுக்கு கள்ளியோட அக்கால்ல அதனால அப்படித்தான் நீ பேசுவ ,பண்ணுவ,
மைவிழி மாமா விளையாடாதீங்க
சரி ஓகே என உடனே சூர்யா கதவு வரை சென்றவன்
திரும்பி குரூப பிரகாஷ் எதுக்கு வந்தான்! ச்ச மறந்தே போயிட்டேன் நித்தின பார்க்க வந்திருப்பான்! அப்படித்தானே! என்று சொல்லிவிட்டு கதவை திறந்தான்.
கார்த்திக் வேகமாக சென்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு கதவை மீண்டும் சாத்தியவன்.
மை விழியை திரும்பி பார்த்தான்.
மைவிழி அப்படியே நின்றாள். கார்த்திக், சூர்யா! என்ன சொல்ற ?;குரு பிரகாஷ் வந்தானா? எதுக்கு வந்தான்? ஏன் வந்தான்?
சூர்யா, அதை உன் பொண்டாட்டி கிட்ட கேளு எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்று கூற
மைவிழி சூர்யாவ முறைத்து கொண்டே மாமா என்ன பண்றீங்க?
சூர்யா,” நான் என்ன பண்ற நீ தானே எதையும் சொல்லாம மறைச்சுக்கோ மறைச்சிட்டு இருக்க என்ன விஷயம் என்று சொன்னால் தானே எனக்கு தெரியும் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்க போறீங்களா!”
கார்த்திக் அவளை வெப்பம் உமிழும் கண்களுடன் பார்த்தான்.
மைவிழி, ஐயோ ஏன்டா எனக்கு மட்டும் இப்படி நடக்குதோ! இப்போ உண்மைய சொன்னா அந்த பிரைவேட் நம்பர்ல இருக்கிறவர் என்ன பண்ணுவா? இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னென்ன பிரச்சனை பண்ணுவாங்கன்னு தெரியலையே? என்று யோசித்துக் கொண்டே மைவிழி நின்றாள்.
சூர்யா அமைதியாக இருவரையும் பார்த்தான் பற்றவைத்து விட்டான். இனி இருவரும் பத்தி எரியப் போகிறார்கள்!
அதை அவன் கை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பான். அவனுடைய வேலை அவ்வளவே!
கார்த்திக் அவள் அருகில் நெருங்கி என்ன சொல்ல போற ? சொல்ல போறியா! இல்ல, மறக்க போறியா?இனி உன் கிட்ட பேச என்ன இருக்கு! நமக்குள்ள எல்லாமே முடிஞ்சது!
மைவிழி” தயவு செய்து இப்படியெல்லாம் பேசாதீங்க , உளறிட்டு இருக்காதீங்க! நான் உங்ககிட்ட சொல்லனும்னு தான் நினைச்சேன் . உதயனும் தாராவும் போனதுக்கப்புறம் சொல்லலாம் என்று நினைத்தேன் .இப்போ சொல்லணும் அவ்வளவு தானே எல்லா விஷயமும் சொல்றேன்.”
சூர்யா உடனே சொல்லு என்ன விஷயம் என்ன சொன்னா?
மைதிலி கார்த்திகை பார்த்து தயங்கிக் கொண்டு நின்றிருக்க
சூர்யா, அப்போ கார்த்திகை பற்றி எதுவும் சொன்னானா?
மைவிழி, மாமா கொஞ்சம் கம்முனு இருக்கீங்களா! என்ன பேச விடுங்களேன்!
சூர்யா சிரித்துக்கொண்டு சரி சொல்லு! என்ன விஷயம் ?
மைவிழி ,கார்த்திக் ப்ளீஸ் கோபப்படாத நான் சொல்ற விஷயத்தை கேட்டு!..
கார்த்திக், முதலில் நீ விஷயத்தை சொல்லு டி!
உடனே மைவிழி அது! அது வந்து! என்று குரு பிரகாஷ் போன் செய்தது மற்றும் அவர்களின் வசந்தன் வீட்டில் அவன் வந்து இவளிடம் சிவன்யா டி.என்.ஏ ரிப்போர்ட் பற்றி கூறியது. என அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள். அவள் பிரைவேட் நம்பரில் இருந்து வந்த அழைப்பை மட்டும் சொல்லாமல் மறைத்து விட்டாள்.
சூர்யா இதைக் கேட்டு ஷாக் ஆகி அதன்பின் உதடுகளில் சிரிப்பை அடக்கினான்.
கார்த்திக் நரம்புகள் புடைக்க கோபத்துடன் கண்கள் சிவக்க யாருக்கு யார் அப்பா? என் குழந்தைக்கு அவன் அப்பனா? எவ்வளவு கொழுப்பு இருந்தா இப்படி ஒரு விஷயத்தை சொல்லிட்டு திரிவான். அவனுக்கு வெட்கமாகவே இல்லையா? அவன் உண்மையாகவே ஒரு எந்த மாதிரியான ஜென்மம்!
கார்த்திக் பார்வையை மைவிழி பக்கம் திருப்பி இது எல்லாம் நீ என்கிட்ட மறைக்கிறனா? நீ எவ்வளவு பெரிய ஆளா இருப்ப? என்று உதடு கடித்து கொண்டு அவள் அருகில் வர
சூர்யா, ஹேய் கார்த்திக் என்ன பண்ற?
கார்த்திக் கோபமாக தலையை அலுந்து கோதிக்கொண்டு” இன்னும் என்ன நடக்கணும்னு நினைக்கிற! சூர்யா! பாரு எவ்ளோ பெரிய விஷயம் நடந்திருக்கு.!”
சூர்யா, நீ மை விழியை பத்தி என்ன நினைச்சுட்டு இருக்க? மகி ஒரு பயந்த சுபாவம் கொண்டவ ஆனா மைவிழி அப்படி இல்ல, அவனை தனியா சமாளிக்க கூடிய திறன் உடையவள். ஆனால் அப்படி இருந்தாலும் உன்கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணிட்டு தான் நினைச்சிருப்பாலே தவிர இந்த மாதிரி ஒரு விஷயத்தை மறைக்க அவளுக்கு என்ன இருக்கு முதலில் புரிஞ்சுக்கோ டா.!”
கார்த்திக், “என்ன புரிஞ்சுக்க சொல்ற? இப்படி என் மேல அவருக்கு துளி கூட நம்பிக்கையே இல்லை, நாலு வருஷத்துக்கு முன்னாடி இதே தப்பு பண்ண தப்பு தானே இது திரும்பவும் பண்றா எப்பவுமே திருந்தாத ஜென்மம் தான் டா இந்த பொண்ணுங்க..!”
மை விழி எதையும் பேசாமல் அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கார்த்திக், “போடுறேன் டா கொலை கூட பண்ண தயங்க மாட்டேன் என் பொண்ணு சிவன்யா அவனுக்கு பொண்ணா ?DNA ரிப்போர்ட் வேற தூக்கிட்டு வரானாம்! வெட்கங்கெட்டவன்! பாஸ்டர் என்று கெட்ட வார்த்தையை அள்ளி வீசினான்!”
மைவிழி அதையெல்லாம் அவனை அவன் முகத்தை பார்த்துக் கொண்டே அப்படியே நின்றாள்.
சூர்யா, டேய் வாடா சொல்றதை கேளு! ச்ச நான் சொல்றதை கேளு ஒரு நிமிஷம் ! நிதானமா இரு! நிதானமா யோசிக்க பழகிக்கோ கார்த்திக், இப்படி இருக்காத,
கார்த்திக் ,” இன்னும் என்ன நிதானம் வேண்டி இருக்கு ! எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா! இன்னும் ஆக்சுவலா அவ முழுசாவே என்கிட்ட விஷயத்தை சொல்லி இருக்க மாட்டாள். இன்னும் ஏதாவது இருக்கும்!” என்று கார்த்திக் தன் மனைவியை பற்றி அக்குவேராகவும் ஆணிவேராகவும் தெரிந்து வைத்திருக்கும் தன் கணவனை நினைத்து மைவிழி முகத்தில் புன்னகை பரவியது.
கார்த்திக் சூர்யாவிடம்” பார்ரா! சிரிக்கிறாள் பாருடா! அப்ப ஏதோ இருக்கு! சரியான கேடிடா இவ கிட்ட போய் நான் ஏமாந்துட்டேனே!”
இதைக் கேட்டதும் மை விழி இன்னும் சிரித்துக் கொண்டே சூர்யா இருப்பதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் கொஞ்சம் உறக்க “கார்த்திக் ஐ லவ் யூ! என்று கூறினாள்.
கார்த்திக் அவளை முறைத்துக் கொண்டு “இப்போ என்ன சொன்ன?’
மைவிழி மீண்டும் ஒரு தடவை இல்ல, எத்தனை தடவை வேணாலும் சொல்லுவேன். ஐ லவ் யூ கார்த்திக்! நிஜமாகவே ஐ லவ் யூ கார்த்திக்!
அவன் கோபமாக “எதை மறைக்க ஐ லவ் யூ சொல்ற? என்ன டி! உன்னை வரேன் என்று கார்த்திக் அவள் மேல் பாய வர
மைவிழி நீ சாயங்காலம் வந்து கொஞ்சி பேசு நா நிஜமாவே லவ் பண்றேன். உன்னோட கோபம் கூட எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு தெரியுமா! என்று கொஞ்சலாக பார்த்தாள்.
சூர்யா ச்ச ச்ச இது எல்லாம் என் கண்ணில் பார்க்க வேண்டியதா இருக்கு! என்று நினைத்துக் கொண்டே அவன் கார்த்திக்கை இழுத்து கொண்டு வெளியே சென்றான். .
தாரா மற்றும் உதயன் இருவரை சுற்றியும் குழந்தைகள் அனைவரும் இருக்க..
கார்த்திக் கோவமாக வெளியே வருவதையும், சூரியனை சமாதானம் செய்து கொண்டு வருவதையும் அங்கு இருப்பவர்கள் அனைவரும் பார்த்தனர்.
அந்த நேரம் புன்னகையுடன் மை விழி வெளியே வந்தாள்.
சூர்யா நேராக தன் மனைவியின் அருகில் சென்றான்.
மகிழினி தன் அக்காவின் முகத்தையும் கார்த்திக் முகத்தையும் பார்த்துவிட்டு கேள்வியாக நகர
சூர்யா அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு “ஒழுங்கா நேரத்திற்கு சாப்பிடு, அப்புறம் எப்போ வேணாலும் வீட்ல போய் செக் பண்ணிக்கோ! நான் வரதுக்கு லேட் ஆகும் ,அப்படியே வந்தாலும் உன்கிட்ட தான் சாவி இருக்கு, நீ வீட்டுக்கு போனால் தான் என்னால போக முடியும், நான் அந்த அரைப்பக்கம் சாரி நான் வீட்டு பக்கம் போகவே மாட்டேன் என்கிட்ட ஒரு சாரி தான் இருக்கு இன்னொரு சாவி அம்மா கிட்ட இருக்கு போதுமா!
அவள் அவனை இமை வெட்டாமல் பார்த்தாள்.
சூர்யா மேலும் அவளிடம் “அப்புறம் இந்த அனைவருக்கும் சமைக்கிற வேலை இந்த பொறுப்பு பறுப்பை எல்லாம் கொஞ்சம் தள்ளி விட்டு ரெஸ்ட் மட்டும் தான் எடுக்கிற! சொல்றது புரியுதா! ரெஸ்ட் மட்டும் தான் எடுக்கணும்! நான் உன்ன போன் பண்ணி கண்காணித்துக் கொண்டே இருப்பேன். புரியுதா என்று கூறினான்.
மகிழினி, சரி போயிட்டு வாங்க என்று தலையாட்டினாள்.
சூர்யா கொஞ்சம் யோசனையுடன் சென்றான். மகிழினி பற்றிய விஷயம் அல்ல தேஜூ என்ன திட்டம் தீட்டி இருக்கிறாள்? என யோசித்துக் கொண்டே சென்றான்.
அவன் மனதில் இது அனைத்தும் அவளுடைய வேலையாக தான் இருக்கும் என்று நன்றாக யூகித்து வைத்திருந்தான்.
கார்த்திக் கடுகடு முகத்துடன் சூர்யா பின்னால் சென்றான். அவனுடைய காரில் சூரியா ஏறி கொண்டான்.
ஹே என்ன டா ***?
சூர்யா, இல்ல நீ ரொம்ப டென்ஷனா இருக்க உனக்கு எதுவும் ஆகி விட்டால் அப்புறம் andh குருவுக்கு வேலை இன்னும் சுலமா போயிடும் அதுக்கு தான்!
கார்த்திக் பாய்ந்து கொண்டு சூர்யாவின் சட்டையை பிடித்தான்.
சூர்யா புன்னகையுடன்” நிறுத்தடா இங்கே தானே மறுபடியும் வரப்போரேன். ஐ மின் மகி இங்கேதான் இருக்கா , சோ அவளை பிக்கப் பண்றதுக்கு தான் காரை விட்டு வச்சிருக்கேன். புரியுதா நீ அவ்வளவு சீக்கிரம் போயிட மாட்ட உன்ன தொல்லை கட்டுறதுக்கு நான் இருக்கேன் புரியுதா!”
கார்த்திக், “ப்ளீஸ் சூர்யா தயவு செய்து இப்படி பேசி என்ன டென்ஷன் பண்ணாத உண்மையாகவே நான் ரொம்ப அப்செட்டா இருக்கேன்.”
சூர்யா கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டே” கார்த்திக் ஐ திங்க் இது எல்லாம் அவளோட வேலையாக இருக்கும்!”
யாருடைய வேலை?
வேற யாரு எல்லாமே! அந்த தேஜூ தான்
கார்த்திக் புருவத்தை நிறுத்திக் கொண்டே என்ன சொல்ற? அந்த க குரு பிரகாஷ் தானே அவள் கிட்ட பேசினான். இதுக்கும் அந்த தேஜூவுக்கும் என்ன சம்பந்தம்?
“இருக்கலாம்! இத்தனை நாள் சும்மா இருந்தவன் இன்னிக்கி புதுசா நிதுன வச்சு பிளாக் மெயில் பண்ணாமல் சிவன்யாவை வைத்து பிளாக் மெயில் செய்கிறான்!” என்ன சூர்யா விளக்கம் கொடுத்தான்.
கார்த்திக் இதையெல்லாம் யோசித்து விட்டு இப்போ இதுக்கு என்ன தான் வழி? இன்னும் எத்தனை நாள் தான் இதையெல்லாம் பொறுத்து கொள்வது? நீயே ஒரு நிமிடம் யோசி சூர்யா!.
சூர்யா, என்ன பண்ண சொல்ற?
ஒரு வேளை அந்த அந்த தேஜு இந்த டி.என்.ஏ விஷயத்த நித்தின் (ஆர்) சிவன்யா இரண்டு பேர்ல யாரா இருந்தாலும் அவங்கள பத்தி விஷயத்த மைவிழி கிட்ட சொன்னதுனால அவ சாதாரணமா எடுத்துக் கொண்டா!
ஆனால்
ஆனால் என்ன?
கார்த்திக், “இதே விஷயத்தை அந்த குரு பிரகாஷ் , எஸ். பி. ஆர், இல்லனா தெஜுவே வந்து மான் விழி கிட்ட சொன்னால் என்ன நடக்கும்னு யோசிச்சு பாத்தியா? உண்மையாகவே எல்லாத்தையும் மனம் நம்புவா, அவள் இப்போ இருக்கிற , ஐ மின் இப்போ சாதாரணமா இல்ல,மகி வயிற்றில் குழந்தையை வைத்துக் கொண்டிருக்கிறா, இப்படி ஒரு மாசமாக இருக்கிற ஒரு பொண்ணு கிட்ட இந்த மாதிரியான விஷயம் கேட்டால் என்ன நடக்கும்!. “
சூர்யா, இந்த அளவுக்கு நான் யோசிக்கவே இல்ல?
கார்த்திக் தீவிரமாக “சரி இப்போ என்ன பண்ணலாம்னு சொல்லு! இப்போ அடுத்து என்ன பண்ண போறோம்! இது இப்படியே நின்று கொண்டு இருந்தால் அது சரி வராது!
சூர்யா, கார்த்திக் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் மீ! ஒரே ஒரு வாரம் இந்த உதயன் தாரா ரெண்டு பேரோட வரவேற்பு முடியற வர வெயிட் பண்ணுவோம். அதுக்கப்புறம் நம்ம மாமா குடும்பம் , அதாவது வசந்தன் மாமா, கலைவாணி அத்தை ,எல்லோரும் முன்னாடியும் மொத்த உண்மையையும் நம்ம சொல்லிடலாம். அதுக்கப்புறம் ஆனது ஆகட்டும் பார்த்துக் கொள்ளலாம்!”
கார்த்திக் ஒருவித தவிப்புடன் “அப்போ அந்த குரு பிரகாஷ் எஸ். பி .ஆர் ரெண்டு பேரும் நமக்கு ரிலேஷன்லே வந்துட்டா என்ன பண்றது? என்று கேட்டான்.
சூர்யா புன்னகையுடன் “அந்த அளவுக்கு நீ யோசிக்க வேண்டிய அவசியம் இல்லன்னு ,எனக்கு தோணுது! பாத்துக்கலாம் டா! உன்னோட லவ் மேல உனக்கு நம்பிக்கை இருக்குல்ல, அவ்வளவுதான் .
நம்ம வாழ்க்கை இது ரெண்டும் மகி அண்ட் மைவிழி கையில் இருக்கு. நம்ம பொண்டாட்டிகளை பத்தி நமக்கு தெரியும்! நீ இதை பெருசா ஓடி பண்ணிக்காத இந்த ஒரு வாரம் போகட்டும்!.
கார்த்திக் சூர்யா சொல்வதும் சரி என்று தோன்ற அவன் இந்த ஒரு வாரம் பார்த்துவிடலாம் என முடிவெடுத்தான்.
இங்கே தேஜு வீட்டுக்கு வந்த பிறகு நிவாசை கொஞ்சி அவனுக்கு உணவுகளை ஊட்டி விட்டு அந்த இரவு பொழுதை கழித்தாள்.
அடுத்த நாள் காலையில் கைகள் பரப்பர வென்று இருக்க, தன் தாயின் குரலை கேட்க வேண்டும் என்று தோன்றியது.
உடனே அழைத்து விட்டாள் ஆனால் வேறு விதமாக…
கலைவாணி மற்றும் வசந்தன் இருவரும் ஒரு நண்பகல் நேரத்தில் வீடு வந்து சேர்ந்தனர்.
அந்த வீடே வெறிச்சோடி கிடந்தது. கலைவாணி மனதில் கொஞ்சம் கவலையாக இருந்தது இந்த ஒரு வாரமும் வீடு களைகட்டி இருந்தது தன் உறவுகளால் அல்ல தன் பேரக் குழந்தைகளால்…. சூரிய தேவ், சத்தியதேவ்,மிதுன் தேவ், கார்த்திக் சிவன்யா, பவன்யா, மை விழி, மான் விழி, இங்கேதான் இருந்தது இப்பொழுது அனைவரும் இல்லாமல் இந்த வீடு வெறிச்சோடி காண அவள் கண்களில் கண்ணீர் வந்தது.
வசந்தனும் அதே மனநிலையில் தான் இருந்தார் கலைவாணி உள்ளே வந்ததும் உடனே மான் விழிக்கு அழைக்கலாம் என்று போனை எடுத்தாள்.
ஆனால் அதற்கு முன் அழைத்தது முதல் குழந்தை அதாவது அவளின் முதல் பெண் குழந்தை தேஜு!
கலைவாணியின் கைகள் நடுங்கியது சுற்றிலும் பார்வையை பதித்துக் கொண்டே நேராக போனை எடுத்துக் கொண்டு சமையலறை சென்றாள்.
வசந்தன் பின் தொடர்ந்தார். என்ன பண்ணுற? எனக்கு கொஞ்சம் டீ போடுறியா! தலை வலிக்கிற மாதிரி இருக்கு!
உடனே கலைவாணி பதட்டத்துடன் என்னங்க ஒரு நிமிஷம் இருங்க! எனக்கு பாத்ரூம் வர மாதிரி இருக்கு நான் போயிட்டு வந்துடறேன் என்று சொல்லிக் கொண்டு கொள்ள பக்கம் சென்றாள்.
வசந்தன் சரி என்று சொல்லி விட்டு தன் தாய் மகிழம்மாவை காண சென்றார்.
கலை வாணி பதட்டத்துடன் போனை எடுத்து காதில் வைத்து ஹலோ!
தேஜூ உடனே” நான் சொன்ன வேலையா முடிச்சிட்டீங்களா!”
கலைவாணி, நீங்க சொன்னது போல தான் எல்லாமே செய்து இருக்கேன். இன்னும் என்ன செய்யணும்? என் பொண்ணுங்க ரெண்டு பேரும் வாழ்க்கையும் தயவு செய்து கெடுத்து விடாதீர்கள். ப்ளீஸ்! என்று கெஞ்சினாள்.
தேஜு, அது நீங்க நடந்து கொள்வது பொறுத்து. நான் சொல்றதை எல்லாம் சரியா செய்தால் , எந்த தொந்தரவும் பண்ண மாட்டேன் நீங்களும் சரி உங்க புள்ளைங்களும் சரி ரொம்ப சந்தோஷமா இருக்கலாம் என்று கோர புன்னகையை சிந்தினாள்.
கலைவாணி அவள் சொல்வதற்கெல்லாம் சரி சரி என்று கூறினாள்.
தேஜு ஒரு திருப்தியான மனநிலையுடன் சரி ஓகே நான் அடுத்தடுத்து உங்களுக்கு போன் பண்ணி என்ன செய்யணும்னு சொல்லிக்கிட்டே இருப்பேன். கவனமா இருங்க, எதுவும் என்னை பத்தி யார் கிட்டயும் டிஸ்கஸ் பண்ணீங்க!.
கலை வாணி வேகமாக இல்ல நான் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன்.
சரி சரி என கட் செய்தாள்.
கலைவாணி ஒரு பெருமூச்சை விட்டு நேராக வசந்தன் அருகில் வந்து டீ போட்டுக் கொடுத்தா
உதயன் மற்றும் தாரா இருவரும் மைவிழி வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி விட்டு அதன் பின் மான் விழி வீட்டிற்கு செல்லலாம் என்று திட்டம் தீட்டினார்கள்.
அன்று இரவு சூர்யா கார்த்திக் வீட்டிற்கு வந்து மகிழினியை அழைத்துக் கொண்டு அவன் வீட்டுக்கு சென்றான். கூடவே நிதின் மற்றும் மிதுன் தேவ் இருவரும் வந்தனர்.
மான் விழி வீட்டிற்கு வந்ததும் அவளின் பார்வை அந்த அறையின் மீது இருந்தது. அதைவிட அந்த வீட்டில் முழுவதும் அதிக கவனம் இருந்தது. சூர்யாவும் அதை கவனிக்க தவறவில்லை.
அவள் மிதுன் மற்றும் நித்தின் இருவரையும் தூங்க வைத்து விட்டு அந்த அறையை திறந்து பார்க்கலாம் என்று முடிவு செய்தால் உடனே அவள் அவர்கள் இருவருக்கும் உணவை தயார் செய்து ஊட்டினான் மிதுன் மிகவும் சந்தோஷமாக சாப்பிட்டான் அவனது அம்மா இப்பொழுது பாசத்தை பங்கு போட கூட ஆள் இல்லை.
மிதுன் அவள் கைகளை பிடித்து கொண்டு படுக்கை அறைக்கி சென்றான்.
மகி பார்வை சூர்யா மீது இருக்க அவன் சலித்து கொண்டே இப்போ என்ன பண்ணனும்?
மகி எதையும் கண்டு கொள்ளாமல் இங்கே என் கண் முன்னாடி உட்காருங்க!
சூர்யா, நீ ஓவரா பண்ற டி!
மிதுன் அவர்கள் இருவரையும் பார்த்து விட்டு மகி இங்கே என்ன நடக்குது?
உடனே அவள் கோபமாக மிதுன் மீது பார்வையை செலுத்தினாள்.
மிதுன் , சரி சரி என்னை முறைக்காத!
மகி அப்பொழுதும் முறைத்து பார்த்தாள்.
மிதுன், மகி இப்படி பண்ணாத என் குட்டி ஹார்ட் ஹர்ட் ஆகுது!
சூர்யா, ராஸ்கல் என மெதுவாக கூறினான்.
மகி இருவரையும் முறைத்து பார்க்க மிதுன் இப்போ என்ன செய்யனும் சொல்லு இப்படி பார்க்காத!
மகி, go to your bet!.
மிதுன் சரி என நிதுன் கூட உறங்க சென்றான். மகி இரவு உணவை முடித்துவிட்டு, நேராக வேகமாக அந்த அறைக்கு சென்றாள்.
சூர்யா எதிர்பார்த்தது போல் அவள் பின்னால் செல்லவில்லை. சோபாவில் அமர்ந்து கொண்டான்.
மகி கிட்ட தட்ட சந்திரமுகி படத்தில் வரும் கங்கா போல அந்த அறைக்கு கண்களில் ஒளியுடன் வேகமாக சென்றாள். அறையை திறந்து கொண்டு உள்ளேன் நுழைந்தாள்.
அதன் பின் நேராக அந்த பீரோவின் அருகில் சென்று அதை தொட்டுப் பார்த்தாள்.
அந்த அறையின் வாசத்தை உள் இழுத்து பார்த்தாள். பொதுவாகவே கருவுற்று இருக்கும் பெண்களுக்கு இந்த ஹார்மோன் சேஞ்சஸ் வரும் மாற்றங்களில் வாசனை மோப்பம் பிடிக்கும் சக்தி மிகவும் அதிகமாக இருக்கும்.
அதனால் மான் விழி கண்களை மூடிக்கொண்டு அந்த அறையில் புதிய வாசம் எதுவும் மாற்றி வைத்திருக்கிறதா? இல்லை! சூர்யாவின் மனம் அந்த இடத்தில் வீசுகிறதா என்று முகர்ந்து பார்த்தாள்.
எதுவும் மாற்றம் தெரிகிறதா என்று சூர்யா பிரம்மிப்புடன் அடுத்து என்ன நடக்கும் என பார்த்துக் கொண்டிருந்தான் .
சூர்யாவின் மனதில் இவள் இப்படிப்பட்ட கேடியா! என்ன என்ன செய்கிறாள் எவ்வளவு சந்தேக புத்தி ஐயோ என்று நினைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.
மான்விழி மெதுவாக அந்த பீரோவில் சாவியை நுழைத்து திறக்க…அவள் மனம் ஆயிரம் யோசனைகளுடன் வந்தாள். உள்ளே அப்படி என்னவாக இருக்கும்? கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை மறைத்து வைத்திருக்கிறான். ஒரு மாதமா ?
இங்கு மான் விழி இந்த வீட்டில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து இந்த அறை பூட்டித்தான் இருந்தது. அப்பொழுதே அவளுக்கு இதை திறக்க வேண்டும். என்று ஆர்வம் எக்க சக்கமாக இருந்தது.
ஆனால் சூர்யா எந்தவித சுவடும் இல்லாமல் திறந்து உள்ளே செல்லும்போது பெரிதாக எதுவும் இருக்காது என்று நினைத்தாள்.
டிக் டிக் என இதயம் வேகமாக துடிக்க அவள் கைகள் அந்த பீரோவை திறந்தது. அது ஒரு வித கிரீச்! கிரீச்! என்று சக்கத்துடன் திறந்தது.
சூரியா கண்களை ஒரு வித தயக்கத்துடன் மூடி கொண்டான்.
அவள் கண்களில் அத்தனை எதிர்ப்பார்ப்பு கூடியிருக்க அந்த பீரோவில் உள்ள அப்படி என்ன இருந்தது.
அப்போ உள்ளே என்ன இருந்தது!
மான் விழி யின் பார்வை உடனே மாறி போனது!.
அவள் சூர்யாவை திரும்பி….?
தொடரும்..
Episode 258
மான் விழி கண்களில் அத்தனை எதிர்ப்பார்ப்பு கூடியிருக்க அந்த பீரோவில் உள்ள அப்படி என்ன இருந்தது.
அப்போ உள்ளே என்ன இருந்தது!
மான் விழி யின் பார்வை உடனே மாறி போனது!. அங்கே அந்த பீரோவில் எல்லாம்! எல்லாம்!..
பெண் குழந்தை பிறந்தால் என்ன என்ன தேவையோ அது அத்தனையும் ஒரு குமித்து இருந்தான். உடைகள், ஹிமாலயா products, mamma health products, மற்றும் உடைகள், சாக்ஸ் என அனைத்தும் இருந்தது.
மான் விழி சாக் ஆகி திரும்பி பார்த்தாள். சூர்யா கெத்தாக கால் மேல் கால் போட்டு கையை முகவாய்க்கு முட்டு கொடுத்து அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்.
மகி இன்னும் தேடினாள்.
சூர்யா, பாவி! பாவி! இன்னும் சந்தேகம் போகலயே திமிர் டி! ஜெய் ஹோ ஜெய் ஆகாஷ் என நினைத்து கொண்டான்.
சூர்யா அவனது முழு திறனையும் வெளி படுத்த ஆரம்பித்து இருந்தான்.
அந்த அறைக்குள் நுழைந்தான். மகி அதை பார்த்து விட்டு என்ன சொல்வது என்று தெரியாமல் நின்று கொண்டு இருக்க
சூரியா, இன்னும் சந்தேகம் போகள அப்படி தானே!
மகி அந்த பீரோ பொருட்களை பார்த்து கொண்டே அவனை பார்த்தாள்.
சூர்யா, நான் உத்தம புத்திரன் டி ஒரு பொண்ணை கூட என் கண்ணு தப்பா பார்க்காது தெரியுமா!.
மகி அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.
சூர்யா மிகவும் சோர்வு உள்ளவன் போல் அருகில் உள்ள படுக்கையில் அமர்ந்தான்.
எவ்ளோ சந்தேகம்! அப்போ என்ன dashக்கு என்னை விட்டு போன!.
மகி மிகவும் பாவமாக இல்லங்க அப்படி எல்லாம் இல்ல என அருகில் வந்தாள்.
சூர்யா ,”விடு மகி நாளைக்கு யாராவது எனக்கு மெசேஜ் பண்ணா கூட நீ என்னை தானே சந்தேக படுவா!. இந்த பொண்ணுங்க எல்லாம் இப்படி தான் மண்டைக்குள் எதாவது ஓடி கொண்டே இருக்கும் போல!. ஐம் சோ சேட்! என் மோட் டோட்டல் ஸ்பாயிள்! நான் பெரிய புராஜக்ட் எடுத்து ரொம்ப உழைத்து கொண்டு இருக்கேன். எனக்கு தூங்க கூட நேரம் இல்ல அதையும் மீறி உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ண வந்தென்.”
மகி அவனை அணைத்துக் கொள்ள “விடு மகி போ! அந்த குட்டி குட்டன் இருக்கான் போ என் கிட்ட வராத! “என சூர்யா ஹெவி பெர்ஃபார்ம் செய்து கொண்டு இருந்தான்.
மகி, “இல்லங்க! உங்க மேல் எனக்கு எவ்ளோ நம்பிக்கை இருக்கு நான் ஒரு வித ஆசையில் கேட்டு விட்டேன். நம்ம ரெண்டு பேரும் இந்த அறையில் தானே நம்முடைய அதீத ஒட்டுதல், புரிதல் நெருக்கத்துடன் இருப்போம். அதான் என்ன இருக்கு அப்டின்னு கேட்டு கொண்டே இருந்தேன். இங்கே வந்ததில் இருந்து நீங்க என் கிட்ட இதை திறந்து காட்டவே இல்லையே!. அதான்!”
சூர்யா, “இல்ல மகி! நான் உனக்கு எக்ஸ்பிளைன் பண்ணி தான் என்னை நீ புரிந்து கொள்ள அவசியம் இல்ல மகி நான் ஆபீஸ் கிளம்புகிறேன்.”என உடனே எழுந்தான்.
மகி இதை எதிர் பார்க்க வில்லை. அவன் முன்னால் போய் நின்றாள். சூர்யா சட்டையை எடுத்து கொண்டு போட ஆரம்பிக்க..
மகி அவன் முன் சென்று என்னங்க! பிளீஸ்! இனி இந்த மாதிரி நடக்காது! பிளீஸ் என்னங்க! என சொல்லி அவனை அணைத்துக் கொண்டாள்.
சூர்யா, விடு மகி! போ மகி!. எனக்கு என் பேபி மட்டும் எனக்கு கொடுத்து விடு!.
மகி விடா பிடியாக அவனை அணைத்துக் கொண்டு சொன்னா புரியாதா! ஓவரா பண்ண வேணாம்! நான் தான் சாரி சொல்றேன் அப்புறம் எதுக்கு சீன் போடுறீங்க!.
சூர்யா அப்படியே நின்றான். மகி அவன் மார்பில் சாய்த்த தலையை மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள்.
சூர்யா அவளை கண்டு கொள்ள வில்லை. மகி, என்னங்க!
என்னங்க!.
அவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க ஹே சூர்யா!
பேரை சொல்லி கூப்பிட்டதும் அவன் அவளின் தோல் பட்டையை பிடித்து என்ன டி சொன்ன!. என சூரியா அவளை நிமிர்த்துனான்.
மகி உடனே ஐ லவ் யூ! நான் உங்களை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன்னு இந்த என்னோட குட்டி சொல்லுது!.
சூர்யா முகத்தை ஒர்ரென வைத்து இருந்தான்.
மகி, கொஞ்சம் சிரிக்க கூட கூடாதா! நான் பண்ணது தப்பு தான்! இனி கோபிக்க மாட்டேன் சண்டை போடுறேன்!.
சூரியா, என்ன பண்ணுவ!.
மகி, என் சூர்யா IIT gold அதை விட லவ்வர் பாய்! எல்லார் கண்ணும் உங்க மேல் தான் எல்லார்க்கும் பொறாமை!. என் அத்தை எனக்காக கஷ்ட பட்டு பெற்று கொடுத்த கிஃப்ட் நீங்க தானே! இப்போ பிஸ்னஸ் மேக்நட் கம்ப்யூட்டர் மூளை மொத்தத்தில் நீங்க எனக்கு புருசன்! இனி எவழும் வந்தால் சட்னி தான்!. அவளுகள சாந்து அரைத்து எலும்பு குழம்பில் ஊற்றி விடுவேன்.
சூர்யா சிரித்து விட்டான்.
இப்போ எதுக்கு சிரிக்கிரீங்!.
அப்போ அவ்ளோ பிடிக்குமா!.
ரொம்ப பிடிக்கும் முதலில் இங்கே எனக்கு மட்டும் தான் எனக்கு மட்டும் தான் இடம் இருக்கணும்! இந்த குட்டி எல்லாம் கடைசியாக இருந்தால் போதும்!. என மகி கூறினாள்.
சூர்யா புன்னகையுடன் பொறாமை வேற! சரி சரி போதும் என்னை மட்டும் ஈசியா சமாதானம் செய்து விடுற .. என சொல்லி கொண்டே கிளம்பினான்.
மகி, இப்போ எங்கே போறீங்க!.
சூர்யா, ஆபீஸ் போகனும்
அப்போ நானு!.
நீயும் வரயா வீட்டுக்குள் ஒரு குட்டி குட்டன் இருக்கான் தானே!.
மகி அவனை அணைத்துக் கொண்டு நீங்க போயே ஆகணுமா! என இதழில் முத்தம் பதித்தாள்.
ஆமா போயே ஆகனும்!. என சூர்யா விடா பிடியாக நின்றான்.
மகி ஏக்கத்துடன் சரி போயிட்டு வாங்க!. என முகத்தை தொங்க போட்டு கொண்டு கூறினாள்.
சூரியா அவனுடைய வாசனை திரவியத்தை எடுத்து போட்டு கொண்டு சீப்பை எடுத்து தலை வாரியவன். அவள் முகத்தை பார்க்க மகி சோகமாக அமர்ந்து இருந்தாள்.
சூர்யா தன்னை தயார் படுத்தி கொண்டு சில கோப்புகள் மற்றும் அவனுடைய லேப் டாப் பேக் என அனைத்தும் எடுத்துக் கொண்டு வந்தான்.
மகிளினி அவன் செய்வதை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தாள். அவள் மனதுள் நம்ம தான் தப்பு செய்து விட்டோமோ! அவரை தவறாக நினைத்து விட்டோம். என் தேவ் பற்றி எனக்கு தெரியும்! அவரு என் கிட்ட எதையும் மறைக்க மாட்டாரு!. நான் தான் ஓவரா பண்ணிட்டேன்! என வருத்தத்துடன் அமர்ந்து இருந்தாள்.
சூர்யா, மான் விழி! மகி! என அவள் பெயரை கூவி சொல்லி கொண்டே வாட்ச் கட்டி கொண்டு வந்தான்.
சொல்லுங்க! என எழுந்து நின்றாள்.
சரி நான் கிளம்புறேன்!.
மகி, எப்போ வருவீங்க?
சூர்யா ஆச்சரியமாக என்ன மேடம் புதுசா கேட்கிறீங்க இன்னும் சந்தேகம் போகலயா!.
மகி முகத்தை கோபமாக வைத்து கொண்டு ந நான்! எதுக்கு உங்களை சந்தேக படனும் உங்களை நான் மிஸ் பண்றேன்!.
சூரியா ஹாலுக்கு அனைத்து பொருளையும் எடுத்து கொண்டு வந்தான். என்ன! மிஸ் பண்றியா! இது எல்லாம் கேட்க ரொம்ப புதுசா இருக்கு!.
மகி, உங்கள் கிட்ட சொன்னேன் பாரு என்னை சொல்லணும்!. உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ வாங்க என சொல்லி விட்டு அவள் நின்று கொண்டாள்.
சூர்யா அவளை நோக்கி வந்தவன். புதுசா இருக்கு அப்டின்னு சொன்னேன் ஆனால் பிடிக்கல அப்டின்னு சொன்னேனா! எதுக்கு டி சண்டைக்கோழி எப்போ பாரு குத்தம் தான் கண்டு பிடிக்கிற!.
மகி, அப்போ புடிச்சு இருக்கா!.
சூர்யா அவள் நெற்றியில் முட்டி நீ ஆயிரம் சண்டை போட்டால் கூட பிடிக்கும் ஆனால் அது எல்லாம் என் கூடவே இருந்து செய்யணும். அதை விட்டு இங்கே இருந்து கிளம்பினால் தான் ஐ மின் என்னை விட்டு போனால் தான் எனக்கு கோபம் வரும்.
மகி, இனி நமக்குள் என்ன சண்டை இருக்க போகுது ஃபர்ஸ்ட் ஆப் ஆல் உங்களை விட்டு நான் எதுக்கு போகனும்.
சூர்யா, பேபி சவர் பண்ணதும் போறேன்னு உன் அம்மா கிட்ட சொல்லிட்டு இருந்த!.
மகி உதட்டை கடித்து அது சும்மா ரெண்டு நாள் மட்டும் அங்கே போவேன் அப்புறம் என் அம்மாவை இங்கே வர சொல்லி விடுவேன்.
சூர்யா, அப்போ எங்க அம்மா!
அத்தை கூட வரட்டும். அவங்க கிட்ட மிதுன கொடுத்து விட்டு விடலாம்.
சூர்யா இதை கேட்டு புன்னகையுடன் நீ சொன்னதில் உருப்படியா ஒரு விஷயம் இது தாண்டி அவன் எங்க அம்மா கூட இருக்கட்டும் என சொல்லி அவள் இதழில் ஒரு முத்தம் பதித்தான்.
மான் விழிக்கு அந்த முத்தம் தேவையாக இருந்தது. அவன் ஒரு நிமிடத்தில் பிரிய மகி எனக்கு ஒரு கிஸ் வேணும்!.
சூர்யா கடை இதழ் சிரிக்க இரு புருவம் தூக்கினான்.
இப்போ வேணும்!.
சூர்யா சுற்றிலும் பார்வையை சுழல விட்டு மிதுன், நிதின் இல்லை என்பதை தெரிந்து கொண்டு இதற்காகவே காத்து கொண்டு இருந்தவன் போல அவள் இதழில் முத்தமிட ஆரம்பித்தான்.
மகி அவளின் நுனி விரலில் நின்று கொண்டு அவனுக்கு எக்கி நிற்க அவளை பூ போல் சோபாவில அமர வைத்து முத்தமிட்டான்.
மகி அவன் சட்டைய பிடித்து கொண்டு மென் முத்தத்தில் கரைந்து கொண்டு இருந்தாள்.
சூர்யா முத்தம் வருடல் என படிப்படியாக உணர்வுகள் அதிகரிக்க அவன் விரல் கைகள் பயணம் ஆரம்பித்தது.
ஒரு சில நிமிடத்தில் அவனிடம் வித்தியாசம் கண்டு கொண்ட மகி அவனிடம் இருந்து விலக முயற்சி செய்தாள்.
என்னங்க விடுங்க!. என்னங்க! என உழுக்க..
சூர்யா அவளின் கழுத்தில் முகம் புதைத்து அந்த எலும்பு மச்சத்துள் ஒரு முத்தம் பதித்து மான் விழி இப்போ பெட்க்கு போலாம்!
அவள் கண்ணை வெடுக்கென திறந்து ஆபீஸ் போகனும்!.
சூர்யா, அதை நான் பார்த்து கொள்கிறேன் டி என சொன்னவன் நேராக அவளை தூக்கி கொண்டு படுக்கைக்கு சென்றான்.
அவளை படுக்கையில் கிடத்தி விட்டு பாத் ரூம் சென்றவன். ஜெய்க்கு மெசேஜ் தட்டி விட்டான். எப்படியோ மறைத்து விட்டேன் என நினைத்து தப்பித்து விட்ட மன நிலையில் அதை அவளுடன் கொண்டாட முடிவெடுத்தான்.
சூர்யா எதற்கு ஜெய்க்கு கால் செய்தான்?
கார்த்திக் – மை விழி என்ன பண்றாங்க?
அடுத்தபடியாக உதயன் – தாரா வரவேற்பு தான்!
தேஜு தயாராக இருக்கிறாள். கலை வாணி கிட்ட புதிய டிமேன்ட்ட வைக்கிறாள். இதை அவர் எப்படி எதிர் கொள்வார்?
.பார்ப்போம்!.
தொடரும்.
Episode 259
சூர்யா மான் விழியை நோக்கி வந்தவன். அவள் முகத்தை ரசிக்க ஆரம்பித்தான். மகி கண்களை மூடி கொண்டு “சரி ஆபீஸ் கிளம்புங்க!”
சூர்யா அவளருகில் வந்து படுத்து கொண்டு நீ தானே டி கண்ணு குட்டி மாதிரி முகத்தை வைத்து கொண்டு அழுத!.
மகி, நான் ஒன்னும் ரிதம் இல்ல அதே போல் ரிதம் அழவே மாட்டாள்.
சூர்யா, “ரிதம்! இந்த பொண்ணு விவேகா நேம் செம்மையாக வச்சு இருக்கா! நம்ம பாப்பாவுக்கு நான் தான் பேர் வைப்பேன்!..”
மகி, நான் தான் வைப்பேன்!.
சூர்யா, என் பையன் சத்ய தேவ் க்கு நீ தான் பேர் வச்ச அப்புறம் என்னோட வேஸ்டேஜ் ஒன்னு தெரியாமல் உருவாச்சே!.
மகி அவனை முறைத்து உங்க கிட்ட என்ன சொல்லி இருக்கேன்? மிதுன் பற்றி எதுவும் சொன்னீர்கள்! உங்களை!. என அவள் அவனுடைய கழுத்தை பிடித்து கொண்டாள்.
சூர்யா, அந்த வேஸ்டேஜ் கூட நான் தான் வரம் கொடுத்து இருக்கேன்! சரியான கேடி! என்னமா பேசுறான்! எப்டி அவனை வைத்து சமாளிக்கிறது? நல்ல வேளை படிக்க போறான்!.
மகி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முறைத்து பார்க்க சூர்யா!..
மானு! மானு!.என கலை வாணி போல் அழைத்தான்.
அவள் புருவம் நெருக்கி கொண்டே என்னை கிண்டல் பண்றீங்களா! உங்களை!.
சூர்யா சிரித்து கொண்டே என்ன பண்ணுவ உன்னை இப்போ நான் எதுவும் செய்ய விட்டு விடுவேனா! என அவளின் பின் பக்கத்தில் கைகள் சென்று பிடிக்க மகி விடுங்க! என நெளிந்து சிரித்து கொண்டே நகர்ந்தாள்.
சூர்யா மகி வர வர இன்னும் அழகா போற டி பாரு இப்போவே என்னால் என அடுத்த வார்த்தை பேசுவதற்கு முன் அவன் வேலையில் இறங்கி இருந்தான்.
மகி அவனிடம் பாகு போல உருகி கொண்டு இருந்தாள். அவன் காதலில் கரைந்து கொண்டு இருந்தாள். எப்பொழுதும் போல் அவளை கலைத்து விளையாடி வெற்றி கொண்டவன் அவளுக்கு பசித்தால் சாப்பிட உணவு தயார் செய்து கொண்டு வந்து வைத்து விட்டு வேகமாக குளிக்க சென்றான்.
சூர்யா தூங்கும் அவளை பார்த்து இதழில் மென் முத்தம் கொடுக்க மெதுவாக முழித்து பார்த்தவள். “பசிக்குது!” என கூறினாள்.
சண்டைக்கோழி இதோ எல்லாம் ரெடி! என அருகில் உள்ள டேபிள காட்டினான்.
மகி கண்ணை தேய்த்து கொண்டே எழுந்து அமர்ந்து அவனை பார்த்து “இப்போ ஆபீஸ் போறீங்களா!”
“ஆமா மகி என் செல்லம் தானே சமத்து பொண்ணா ரெஸ்ட் எடு! நான் மார்னிங் வரேன்!”
மகி அவனுடன் எழுந்து கொண்டு வெளியே வர சூர்யா, ட்ரெஸ் சரி பண்ணிட்டு வா!
நான் இப்போ குளிக்க போறேன்!.
சூர்யா, அடி வாங்க போற மணி 11.00 ஆக போகுது! ஒழுங்கா தூங்கு! பெரிய சுத்தக்காரி!
இல்லங்க குளிக்க வேணும்!
சூர்யா, டென்ஷன் பண்ணாத டி போ போய் தூங்கு அதையும் மீறி குளிச்சு என் பேபிக்கு எதுவும் ஆச்சு! உன்னை!.
மகி, சரி சரி குளிக்கல!. என சொல்லி விட்டு அவள் அவனை பார்த்தாள்.
சூர்யா அவள் அருகில் வந்து ஒரு முத்தம் பதித்து சரி போய் தூங்கி எழு நான் காலையில் வருகிறேன். என சொல்லி விட்டு அவன் வெளியே சென்றான்.
மகி, ஆபீஸ் போயிட்டு போன் பண்ணுங்க!.
இதை கேட்டதும் அவன் உதட்டில் புன்னகை படர்ந்து கொண்டது. சிரித்து கொண்டே தலை கோதியவன் “போய் தூங்கு டி!” என வழி அனுப்பி வைக்க..
இல்ல நீங்க போன் பண்ணா தான் நான் தூங்குவேன்!.
சரி பண்றேன் என சொல்லி விட்டு கிளம்பினான்.
அதன் பின் நேராக சூர்யா காரை எடுத்து கொண்டு அவன் ஆபீஸ் சென்றான்.
மும்முரமாக MNC project கம்பனியின் வேலைகள் நடந்து கொண்டு இருந்தது. அவனது அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு “இல்ல கீர்த்து இப்போவே எதுக்கு இத்தனை கோபம்! ஹே சத்தியமா நான் வெளியே இல்ல டி சூர்யா ஆபீஸ்ல வேலை விஷயமா இருக்கேன்! என ஜெய் கீர்த்தி கிட்ட பேசி கெஞ்சி கொண்டு இருந்தான்.
கீர்த்தனா, அப்புறம் எதுக்கு என்னை பார்க்க வரேன்னு சொன்னீர்கள் நீங்க இனி உங்க கிட்ட பேசவே மாட்டேன் வந்து பாருங்க என சொல்லி கட் செய்தாள். ஹே கீர்த்தி! கீர்த்! கீர்! கீ! என அவன் கத்திட அதற்குள் போன் கட் ஆனது சூர்யா உள்ளே நுழைந்தான்.
சூர்யா, என்ன சத்தம் மிஸ்டர் ஜெய்! இந்த நேரத்தில் இங்கே என்ன பண்றீங்க!.
ஜெய் அவள் கட் செய்த போனை பார்த்து கொண்டே அதே கொலைவெறி கோபத்துடன் சூரியாவை பார்த்தான்.
என்ன முறைப்பு!.
ஜெய், என் கிட்ட எப்போ டா வரேன்னு சொன்ன இப்போ வந்து நிக்கிற?
சூர்யா, மகி யால் என்னை விட்டு தூங்க முடியல அதான் தூங்க வச்சுட்டு வந்தேன் இப்போ எதுக்கு டா கிராஸ் கொஸ்டின் பண்ற!
ஜெய், உனக்கு நான் எடு புடி வேலை செய்ய போய் இப்போ கீர்து என் கிட்ட சண்டை போட்டு விட்டாள் டா இன்னிக்கு நான் அவளை மீட் பண்ண பிளான் போட்டு இருந்தேன்!.
சூர்யா ஒய்யாரமாக அவன் இடத்தில் போய் அமர்ந்து கொண்டு ஒரு லாலி பாப் வாங்கிட்டு போய் கொடு அவள் கன்வின்ஸ் ஆகி விடுவாள். சின்ன புள்ளை!.
ஜெய் கோபத்துடன் பார்க்க.. சூர்யா, அச்சோ இப்படி அவளை போய் பார்க்காத ரொமான்டிக் லுக்கு விடு சகளை!
ஜெய், “பேசுவ டா நீ இன்னும் பேசுவ இதுக்கு மேலயம் பேசுவ!”
சூரியா “சரி சரி விடு நான் சொன்ன வேலை என்னாச்சு!”
இதில் ஒன்னும் குறைச்சல் இல்லை எல்லாமே அந்த லாக்கர் ரூமில் இருக்கு!.
சூரியா அவனை தள்ளி கொண்டு லாக்கர் ரூம் சென்றான். அங்கே அனைத்து படங்களும் எந்த சேதாரமும் இன்றி வந்து சேர்ந்தது. சூரியா அதை பார்த்து பெரு மூச்சை விட்டான்.
ஜெய், எதுக்கு டா இதை எடுத்துட்டு வர சொன்ன?
ஒன்னும் இல்ல!.
சொல்ல போறியா இல்லையா!
சூர்யா, மகிக்கு தெரிய கூடாது அதுக்கு தான்!.
ஜெய், அவளுக்கு தெரிந்தால் நீ பெரிய பெயின்டர் அப்டின்னு சந்தோச படுவாள்!.
சூர்யா அந்த வண்ண படங்களை ரசித்து கொண்டு” இத்தனை நாள் எதுக்கு மறைத்த அப்டின்னு கேட்டால் நான் என்ன சொல்றது?”
ஜெய், அதில் மறைக்க என்ன இருக்கு!
சூர்யா, நீ போய் தேஜூ வை லவ் பண்ணத உன்னோட கீர்த்தி கிட்ட சொல்லி பாரு அப்போ தெரியும்!
ஜெய், அய்யோ அவள் பயங்கரமானவள் இப்போவே என்னை டைவர்ஸ் பண்ணிடுவா!. நிச்சயம் கூட இன்னும் ஆகல!.
சூர்யா, இங்கே அது நடக்காது! என்னை கொன்று விடுவாள்! ரொம்ப விகரசா இருக்கா!
ஜெய், இதில் அவ்ளோ பெரிய விஷயம் என்ன டா இருக்கு!.
சூர்யா, உனக்கு பக்குவம் பத்துல நீ எல்லாம் லவ் மேரேஜ்! எல்லாம் கால கொடுமை!.
ஜெய், என்னை எங்கே டா லவ் பண்ண விடுறீங்க!
சூர்யா, நான் என்ன பண்ணேன்! போய் லவ் பண்ணு!
ஜெய், அதான் வருண் இருக்கானே! என்னை கீர்த்தனா கிட்ட பேச விடுறது இல்ல இழுத்துட்டு அந்த ஶ்ரீ மதியை எப்டி உசார் பண்றதுன்னு கேட்டு என்னை சாவடிக்கிரான்! இன்னொரு பக்கம் நீ அப்புறம் இன்னொரு பக்கம் கீர்த்தனா! என பேசி கொண்டு இருக்கும் போதே ஜெய்க்கு தேஜு போன் செய்தாள்.
அவளின் எண்ணை பார்த்ததும் சிறு புன்னகையுடன் ஜெய் எடுத்தான்.
ஹலோ!
தேஜு, நாளைக்கு டாடி ரிலீஸ்!.
“ஹேப்பி தேஜு!”
சூர்யா அவளின் பெயரை கேட்டதும் புருவம் சுருக்கி ஜெய்யை பார்த்தான்.
தேஜு, அவரை பிக் அப் பண்ண வரியா!
ஹான் நாளைக்கே வரேன்! நீ எப்டி இருக்க!.
தேஜு, ம்ம் எனக்கென்ன! என விரக்தியுடன் பதில் அளித்தாள்.
இரு பக்கமும் அமைதி நிலவியது. ஜெய் என்ன பேசுவது என யோசித்து கொண்டு இருக்க..
தேஜு, ஓகே ஜெய் நாளைக்கு மீட் பண்ணுவோம்!.
ம்ம் ஒரு நிமிடம் என ஜெய் கூறினான்.
என்ன?
ஜெய், எதுவும் பிரச்னை இல்லையே உன்னோட குரல் ஒரு மாதிரி இருக்கு!
அவள் விரக்தி சிரிப்பை உதிர்த்து ஐம் குட்! என சொல்லி வைத்தாள்.
சூரியா அதற்குள் அவன் அருகில் வந்து அப்படியே சேரில் அமர வைத்தான்.
ஜெய், என்னடா பண்ற? என திடுக்கிட்டு அமர்ந்தான்.
சூர்யா, இப்போ யார் கிட்ட பேசின? அப்படியே கண்ணில் ஒரு பக்கம் பல்ப் எரியுது!.
ஜெய், என்ன டா சொல்ற?
சூரியா, இப்போ யார் கிட்ட பேசின!.
ஜெய், தேஜூ கிட்ட தான் இதில் என்ன தப்பு இருக்கு! பெரிய பல்ப் அவள் மேல் எனக்கு எப்போவும் ஒரு சாப்ட் கார்னர் இருக்கும் மற்ற படி லவ் இல்ல அவள் ஹாப்பியா இருக்கணும்!
ப்பா புல் அடிச்ச ஃபீலிங்!. சரி சரி அவள் என்ன சொன்னாள்?
நாதன் அங்கில் நாளைக்கு ரிலீஸ் ஆகுறார் சோ என்னை பிக் அப் பண்ண வர சொன்னாள்.
சூர்யா, தேஜு டாட்!.
ம்ம் ஆமா!
சூர்யா எதையோ யோசித்து விட்டு ஜெய்யை பார்த்து பார்ட்னர்!.
ஜெய், என்ன ஒரு மார்க்கமா கூப்பிடுற?
நாளைக்கு உன் கூட நானும் வருவேன்!
நீ நீ எதுக்கு டா!
சூர்யா, “நான் வரேன்னு சொல்லல வருவேன் அப்டின்னு சொல்றேன்! இட்ஸ் ஜஸ்ட் இன்ஃபார்மேசன்!.சோ நாளைக்கு தயாரா இரு உன்னோட முன்னாள் காதலியின் தந்தையை மீட் பண்ணலாம்!”
ஜெய், சூர்யா உன் பேச்சு சரி இல்லையே என்ன ஆச்சு?
சூர்யா, சும்மா தான்!
டேய் பொய் சொல்லாத!.
சூர்யா, சும்மா தான் டா வா போலாம் வேலை இருக்கு!.
ஜெய், சூர்யா சொல்லு டா!
ஒன்னும் இல்ல வா! என அவனை இழுத்து சென்றான்.
அடுத்து என்ன நடக்கும்?
தொடரும்..
Episode 260
சூரியா அவனிடம் ஒன்னும் இல்ல வா என இழுத்து சென்று விட்டான். அதன் பின் வேலையில் கவனம் செலுத்தினார்கள். சூர்யா ஜெய்யை கீர்த்தனாவிடம் பேச விடவே இல்லை.
சூர்யா, ஹே வேலை டைம் ல என்ன டா பண்ணிட்டு இருக்க?
டேய் அவள் என் பொண்டாட்டி ஆக போகிறவள் டா நான் போன் பேச கூடாதா!.
சூர்யா, பேசலாம்! பட் இப்போ டைம் பாரு நைட் 12 மணிக்கு மேல ஆகுது. அவளை தூங்க விடு என வேண்டும் என்றே ஜெய் கிட்ட விளையாடினான். சூரியா அவன் முகத்தை பார்த்து உள்ளுக்குள் சிரித்தான்.
ஜெய் வேறு வழி இல்லாமல் அவனிடம் வசமாக சிக்கி கொண்டான். அதன் பின் வேலையில் மூழ்கி போனார்கள்.
இங்கே மை விழி – கார்த்திக் என்ன செய்கிறார்கள்?
கார்த்திக் இரண்டு குட்டிகளையும் தூங்க வைத்து விட்டு அவர்களுக்கு நடுவில் படுத்து கொண்டான். மை விழி அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தாள்.
என்ன டி ஒரு மார்க்கமா பார்க்கிற? உன் கண்ணை பிச்சு போட்டு விடுவேன்!.
அவள் புன்னகையுடன் அப்படி தான் டா பார்ப்பேன்! இங்கே வந்து பிச்சு போடு பார்க்கலாம்!.
கார்த்திக் அவனது இரவு சட்டையை கை முட்டி வரை மடித்து கொண்டே எழுந்தவன். இதோ வரேன் டி பாரு உன்னை என்ன செய்கிறேன் என்று பார்! திமிர் பிடித்தவளே! பொய் காறி!. என அவன் பேசி கொண்டே எழுந்து நிற்க
மை விழி ஒரு சிரித்து கொண்டே வாடா! உன்னால் என்னை என்ன செய்ய முடியும்! வெறும் பேச்சு தான்! இப்போ என்ன பண்ண போற என்னை அடிக்க போறியா! அதையும் பார்க்கிறேன் டா என வம்புக்கு இழுத்தாள்.
கார்த்திக் இதற்கு மேல் முடியாமல் அருகில் வந்தவன். என்ன டி சொன்ன? எதோ ஒரு வேகத்தில் அருகில் வந்தவன். அவளின் பின் தலையை பிடித்து கன்னத்தில் ஓங்கி அறைந்தான். இதை அவனே எதிர் பார்க்க வில்லை.
மை விழி திகைக்காமல் தான் நின்று இருந்தாள். அவள் கண்களில் கண்ணீர் கொட்டியது. கார்த்திக் அறைந்த பின் தன்னையே ஒரு நிமிடம் சுதாரித்து கொண்டு கண்ணை மூடி கொண்டவன். ச்ச ஒரு வேகத்தில் அடித்து விட்டேனே பொண்ணுங்களை அடிக்க கூடாது அப்டின்னு கொள்கை உடையவன் நான் ஆனால் இப்போ இன்னிக்கு!. ச்ச என்னோட டிக்நிட்டி எல்லாம் போச்சே என மெதுவாக கண்ணை திறந்து அவளை பார்த்தான்.
மை விழி கண்ணீரை துடைத்து கொண்டு அவனையே பார்த்தாள்.
கார்த்திக் அவளிடம் என்ன பேசுவது என தெரியாமல் அப்படியே நின்றான். நிச்சயமாக சாரி கேட்க மாட்டான். தவறு அவள் தான் செய்து இருக்கிறாள். அதனால் ஒரு சில நிமிடம் அவனையே உருத்து பார்த்து கொண்டு இருந்தாள்.
கார்த்திக் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் அங்கு இருந்து நகர உடனே மை விழி அவனை அணைத்து கொண்டாள். கார்த்திக்! என அவன் நெஞ்சில் முகம் புதைத்து கொண்டாள்.
ஹே நகரு டி!
மை விழி, ஓ நகர வேணுமா! இதோ இப்போ நகருகுறேன்! என சொல்லி கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தாள். முகத்தை விரைப்புடன் வைத்து இருந்தான்.
மை விழி அவன் உயரத்துக்கு எக்கி இதழில் ஒரு முத்தம் பதித்தாள். அவன் கல் மரம் போல் நின்று கொண்டு இருக்க..
ஹே திருப்பி கிஸ் பண்ண மாட்டியா! என மனதில் நினைத்தவள். இரு டா உன்னை! என நினைத்து கொண்டு இன்னும் முத்த நேரத்தை அதிக படுத்தினாள்.
இந்த மாதிரி நேரத்தில் அவன் தட்டி விட மாட்டான். அது கணவன் மனைவிக்குள் எழுத படாத காதல் விதி இந்த ஒட்டுதல் இருவருக்கும் நடுவில் பொது விதி அதை தான் இப்பொழுது செய்து கொண்டு இருக்கிறாள்.
மை விழி அவன் கண்ணத்துடன் கன்னம் உரசி சாரி என் தப்பு தான்! அவனை நான் கொல்ல விரும்பல நீங்க இதை கேட்டு கோப பட்டு உங்களுக்கும் அவனுக்கும் நடுவில் சண்டை பிரச்னை வருவது நான் விரும்பல என சொல்லி கொண்டே அவனை இறுக்கி கட்டி கொண்டாள்.
மேலும் அவள் சிவன்யா உங்க பொண்ணு உங்களை போலவே இரவில் இதோ பவா கையை கோர்த்து பிடித்து கொண்டு தூங்குது நீங்க ஆயிரம் சண்டை போட்டாலும் இப்டி தான் தூங்குவீங்க அவளோட ரிசம்பல் நீங்க தான் எவனோ ஒருத்தன் சொன்னால் எல்லாம் மாறி விடுமா அவன் ஒரு லூசு! இதுக்கும் மேல் உங்களுக்கு என் மேல் கோபமா இருந்தால் ஓகே! என அவள் கைகள் அவன் மேல் ஊரிட இறுக்கி கட்டி கொண்டாள்.
கார்த்திக் சாயாத டா இவள் இப்படி தான் உன்னை பேசி மயக்குகிறாள். என சொல்லி கொண்டே இருந்தான். மனதில்! ஆனால் ஆனால்! அவன் கைகள் அவளின் இடையை பற்றி கொண்டத அவன் அறிய வில்லை.
மை விழி அவன் பற்றி கொண்ட சந்தோசத்தில் லவ் யூ கார்த்திக்! உங்களை எனக்கு அவ்ளோ பிடிக்கும்! என மோன நிலையில் அவனுள் புதைந்தாள்.
உடனே சிறிது நேரத்துக்கு பின் தன்னிலைக்கி வந்தவன். ஹே தள்ளி போடி நான் உன் மேல் ரொம்ப கோபமா இருக்கேன்!
மை விழி, என்ன கோவமா இருக்கியா!
ம்ம் ஆமா இனி இந்த ஜென்மத்தில் உனக்கு மன்னிப்பு கிடையாது!.
அவள் சிரித்து கொண்டே அப்டியா சரி அப்போ என் ஹிப்ல இருந்து கையை எடு நான் தூங்க போறேன்.
கார்த்திக், என்ன உலருர!.
ஹலோ நான் ஒன்னும் உலருல அது நீ தான் உன் கை என் கிட்ட எல்லை மீற பாக்குது நீ தான் ரொம்ப மானஸ்தன் ஆச்சே! என அவன் அணைத்து பற்றி இருந்த கையை காட்டினாள். இதோ பாரு என கீழே குனிந்து காட்டினாள்.
கார்த்திக் மனம் இவ்வளவு வீக்கா இருக்கியே டா! உன்னை என அவனே திட்டி கொண்டு அவளிடம் இருந்து விலக முயற்சி செய்ய!.
மை விழி அவனை இழுத்து எப்படியும் நீ ரொம்ப மானஸ்தன் சூடு சொரணை உனக்கு அதிகம் அதனால் என அவனின் இதழில் முத்தமிடாமல் இதலும் இதழும் உரசி விட்டு உஷ்ணத்தை அவனுக்கு ஏற்றி விட்டு சரி தூங்கு போ என உடனே பிரிந்து அருகில் உள்ள படுக்கை வசதி கொண்ட ராயல் ஓக் சோபாவில படுத்து கொண்டாள்.
கார்த்திக் அப்படியே திண்டாடி போனான். இவள்! இவளை! ராட்சசி! என்னை இந்த நிலைக்கு தள்ளி விட்டாலே என்ன செய்வது!. என தலையை வேகமாக கோதினான். அவளையே பார்த்தான். காலை நன்கு பறந்து விரித்தபடி சொகுசாக படுத்து இருந்தாள்.
கார்த்திக் தண்ணீரை குடித்து விட்டு தலையை கோதி கொண்டே ரெஸ்ட் ரூம் சென்றான்.
அவன் வெளியே வர அங்கே மை விழி நின்று கொண்டு இருந்தாள். .
கொஞ்சம் தள்ளுங்க என சொல்லி உள்ளே செல்ல போனவள இடையுடன் இழுத்து பிடித்தான்.
மை விழி புன்னகையை காட்டி கொள்ளாமல். கொஞ்சம் விடுங்க எனக்கு ரெஸ்ட் ரூம் போகனும் என சொல்லி கொண்டே பார்வையை எங்கோ பதித்தாள்.
கார்த்திக் கைகள் அதற்குள் உள்ளே மேய தொடங்கியது. என்ன டி என்னை பிளான் பண்ணி கவுக்க பார்க்கிறயா!
மை விழி, அச்சோ நான் எதுக்கு பண்ணனும் எனக்கு வேற வேலை இல்ல! நாளைக்கு என் அண்ணன் கூட ஊருக்கு போக போறேன்! ரிசப்சன் வேலை நிறைய இருக்கே! நீங்களும் இனி என் பக்கத்தில் வரவே மாட்டீர்கள் அப்புறம் எதுக்கு!. அத்தை கூட வீட்டுக்கு வா ஒரு வரலட்சுமி பூஜை இருக்குன்னு சொல்லிட்டே இருக்காங்க சோ நான் என் மாமியார் வீட்டுக்கு போறேன்!
கார்த்திக் புருவத்தை பெரிதாக விரித்தான். மை விழி அவனிடம் இருந்து நகர்ந்து கொள்வது போல் தள்ளி வர முயற்சி செய்ய உடனே அவன் அவளின் வெளிப்பாடு இல்லாத முகத்தை பார்த்து அதை பார்க்க பிடிக்காமல் மோவாயை நிமிர்த்தி விட்டான்.
அவன் கண்கள் என்றும் இல்லாமல் இன்று மேலும் மோகத்துடன் அவளை ஏறிட்டது.
மை விழி, உங்க பார்வை சரி இல்ல! கார்த்திக் எங்கே? அவர் உள்ளே இருக்காரா! எனக்கு கோபக்கார கார்த்திக் தான் இப்போ வேணும்!.
அவளின் இந்த லொட லொட பேச்சை கேட்க முடியாமல் வேகத்துடன் செவ்வரி இதழை கவ்வி கொண்டான்.
மை விழி அவனை ஆதரிக்காமல் அப்படியே நின்று கொண்டு இருந்தாள். அவள் முகத்தை பார்த்தான். கண்கள் கிறங்கி இறுக்கி மூடி கைகளை இறுக்கி கதவுடன் ஒட்டி கொண்டு நின்று இருந்தாள். அவளின் நெஞ்சு கூடு ஏறி இறங்கி கொண்டு இருந்தது.
கார்த்திக் மீண்டும் அவளின் இதழில் அழுத்தி முத்தம் கொடுத்து கொண்டே அவளை தள்ளி கொண்டு சோபாக்கு சென்றான். இந்த சண்டையில் மட்டும் கோபம் கூட வில்லை மோகம் தான் மேன் மேலும் கூடுகிறது.
அவளை மெதுவாக தள்ளி மேலே படர்ந்து கொண்டான். மை விழி, கொஞ்சம் நகருண்க நான் ரெஸ்ட் ரூம் போகனும்!
கார்த்திக், போலாம்! போலாம் என அவன் வேலையை ஆரம்பிக்க சிறிது நேரத்தில் அவனுடன் சொக்கி சோர்ந்து போனாள்.
மை விழி, கார்த்திக்! என மூச்சு பிடித்து கொண்டே நான் உன்னை மட்டும் தான் நேசிக்கிறேன்! இது என்னை விட உனக்கு தெரியும்! பிளீஸ் என்னை சந்தேக படாத! அவன் பிரச்சனையை வளர்த்தால் அது வேறு விதமாக முடியும் அதில் மகி!. என அவள் ஆரம்பிக்க அவள் முழுதாக பேச வருவதற்குள் அவளின் இதழை மூடி இருந்தான்.
ஒரு வேளை கார்த்திக் மை விழி பேச ஆரம்பித்த விஷயத்தை முழுதாக கேட்டு இருந்தால் இனி பூதா கரமாக வெடிக்க இருக்கும் பிரச்னையில் இருந்து தப்பித்து இருக்கலாம்! ஆனால் கார்த்திக்கு அவள் பேசியது எதுவும் காதில் விழ வில்லை அவன் மோகத்தில் இருந்தான்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது.
உதயன் மற்றும் தாரா இருவரும் சூரியா வீட்டுக்கு கிளம்பினார்கள்!
அதே போல் வருண் மான் விழி வீட்டுக்கு வந்து இருந்தான்.
சூர்யா மற்றும் ஜெய் இருவரும் நாதனை பிக் அப் செய்ய சென்று இருந்தனர்.
அதற்குள் தேஜூ தாராவின் அப்பா கோவிந்த்துக்கு போன் செய்து சில விஷயங்களை கூறுகிறாள்.
கோவிந்த் அவள் சொல்வதை கேட்டு உடனே வசந்தனுக்கு போன் செய்கிறார்!.
அப்படி தேஜு என்ன கூறினாள்?
அடுத்தடுத்து கேள்விகள்!
பார்ப்போம்!
தொடரும்..
Episode 261
கார்த்திக் மை விழியிடம் தேவையான அளவு சண்டையிட்டு அதை ஆற்றும் வழியையும் அளவுக்கு அதிகமாகவே ஆற்றி கொண்டான். இதில் சோர்ந்தது மை விழி தான்! ஆனாலும் அவளுக்கு மகிழ்ச்சியே!.
மை விழி முகத்தில் கார்த்திக்கை முதன் முதலில் பார்த்த நாள் நொடி அவள் முகத்தில் பூத்த வெட்கம் இன்று குடி கொண்டது. அவளது கார்த்திக் ஸ்போர்ட்ஸ் டேல பள்ளியில் புட் பால் மேட்ச் ஆடி முடித்து சோர்வுடன் அவனது பேக் ஒற்றை பக்கத்தில் மாட்டி கொண்டு தலையை கோதி கொண்டு கை சட்டையை மடித்து விட்டு தலை கோதி கொண்டே கீர்த்தனா கிட்ட இருந்து தண்ணீரை வாங்கி குடித்தான். முகம் கழுவி விட்டு கைகளை அவன் உதற அது சாரல் போல் மை விழி மீது பட்டதும் அவளின் ரோமங்கள் சிலிர்த்து எழுந்தது.
அந்த சிலிர்ப்பு இப்பொழுது மை விழி முகத்தில் மீண்டும் அவனை அழைத்தாள். கார்த்திக்!.
“நான் இன்னும் கன்வின்ஸ் ஆகள டி!”
மை விழி, “உன் கிட்ட ஒரு விசயம் சொல்ல வந்தேன் இட்ஸ் ஓகே ஒன்னும் தேவையில்லை!.”
கார்த்திக் புருவம் நெருக்கி என்ன விஷயம்!
பேசிவியா? மாட்டியா?
மாட்டேன் டி!.
அப்போ போ சொல்ல மாட்டேன்! என எழுந்து செல்ல கையை பிடித்து இழுத்தான். அவன் மார்பில் விழுந்தாள்.
கார்த்திக், சொல்லிட்டு போ!.
மை விழி, அப்போ பேசுவியா!.
நீ சொல்லும் விஷயத்தை பொறுத்து இருக்கு!
மை விழி கண்கள் மின்ன ஐ திங்க் நீ அப்போ 11 th படிச்சிட்டு இருக்கும் போது ஸ்கூல் புட் பால் டீம்ல ஆடுவியே அந்த முகம் என் கண்ணுக்குள் இருக்கு தெரியுமா! செம்ம அழகா இருப்ப! செம்ம ஆண்ட்சம் நான் உன்னை ஒளிந்து ஒளிந்து பார்ப்பேன். அந்த டைம்ல என் கனவில் உன்னை கட்டி கொள்வது போல் நினைச்சு நினைச்சு தூங்குவேன்! அப்படியே உள்ள சாக் அடிக்கும் தெரியுமா! அப்போ எனக்கு தெரியல நீ ஸ்கூல் பீனிஸ் பண்ணிட்டு போய்ட்ட! தெரிந்து இருந்தால் அப்போவே லவ் சொல்லி இருப்பேன். என சொல்லியவள் எழுந்து ஐ லவ் யூ கார்த்திக்! என சொல்லி விட்டு வேகமாக ஓடி விட்டாள்.
கார்த்திக் முகத்தில் ஒரு திருப்தி புன்னகை பரவ கண்கள் எல்லாம் மின்னியது. கதவு வரை சென்றவள் “உன்னை பார்க்கும் போது எனக்கு ஒரு பாட்டு நினைப்பு வரும் அதிகமா அதை தான் கேட்பேன்.!” என சொல்லி ஓடி விட்டாள்.
மை விழி புன்னகையுடன் வெளியே ஓடி வர அங்கே உணவுகளின் வாசம் அவளை வரவேற்றது. அவள் புருவம் சுருக்கி கொண்டே சமையலறை பக்கம் சென்றாள்.
உதயன் சோபாவில அமர்ந்து டீ குடித்து கொண்டு இருக்க தாரா அனைத்து சமையலும் முடித்து பாத்திரம் கழுவி வைத்து கொண்டு இருந்தாள்.
க்கும்.. என தொண்டையை சிரும்பி கொண்டே அவன் நின்றாள்.
தாரா யாரோ என திரும்ப அங்கே மை விழி நின்று கொண்டு இருந்தாள்.
தாரா புன்னகையுடன் வாங்க என அழைத்து கொண்டே அவளுக்கு ஃபில்டர் காபி எடுத்து நீட்டிட..
மை விழி கோபத்தில் முகத்தை சுளித்து பேச வர அதற்குள் என்ன வாசம்! வீடே மணக்குது! சம் திங்க் டிஃபர் என குரல் கேட்டது.
மை விழி கோபமான முகத்தை மாற்றி கொண்டு கைகளை இறுக்கி மடித்தாள். வேறு யார் கார்த்திக் தான் இப்பொழுது மை விழி தாராவை திட்டுவது போல் பேசினால் கார்த்திக் ருத்ர தாண்டவம் ஆடி விடுவான். என நினைத்து கொண்டு நின்று இருந்தாள்.
உதயன் எதேட்சையாக திரும்ப தாரா தயங்கி கொண்டே கார்த்திக் முன் பூஸ்ட் நீட்டியவள். அண்ணா நான் தான் சமைத்தேன்!. என சொல்லி கொண்டே மை விழி முன் அவளுக்கான காபியை நீட்டினாள்.
கார்த்திக் மற்றும் உதயன் இருவரும் மை விழியை பார்க்க கஷ்ட பட்டு உதட்டை கடித்து கொண்டு காபி கப்பை வாங்கி கொண்டாள்.
கார்த்திக், உங்களுக்கு எதுக்கு மேடம் வீன் சிரமம்!
தாரா, அண்ணா!.
அவன் திடுக்கிட்டு ச சாரி மா! எதோ நியாபகம் இல்ல.. என கஷ்ட பட்டு அது நீ சமைப்பது சரியா!.
மை விழி, டேய் உதயா நீங்க இந்த வீட்டுக்கு கெஸ்ட் தான் உங்களுக்கு சமைக்க நாங்க இருக்கோம்! இந்த வேலையெல்லாம் யாரு செய்ய சொன்னது.
உதயன், நான் உன் சமையலை சாப்பிட வரல மாமா சமையல சாப்பிட வந்தேன்!.
மை விழி கோபமாக” உதயா!”என சண்டைக்கு வர!.
உதயன், மாமா நீங்க வேஸ்ட் இவளுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சு இருக்கீங்க நாலு கொடுக்க வேண்டியது தானே!
மை விழி, இதுக்கு தான் வந்தியா! வீட்டை விட்டு வெளியே போடா!.
தாரா அவர்கள் இருவரையும் வாயை பிளந்து பார்த்து கொண்டு இருக்க
உதயன், ஹே முடியாது நீ சொன்னால் நான் போய் விடுவேனா! இது கார்த்திக் மாமா வீடு!.
அந்த நேரம் சிவி, பவா இருவரும் எழுந்து வந்து மாமச்சி! என உதயன் அருகில் வந்தனர்.
மை விழி, ஹே ரெண்டு பெரும் வாங்க டி உன் மாமன போக சொல்லுங்க!.
உதயன், பவா குட்டி மாமா போகட்டுமா!.
பவா, மாமா நீ வேணாம் அவள் போகட்டும்! என இரு தொடையிலும் ஆளுக்கு ஒருவர் ஏறி அமர்ந்து கொண்டனர்.
உதயன் சிரித்து கொண்டு போடி நான் இங்கே தான் இருப்பேன்!
உதயா என் கிட்ட வாங்கி கட்டிக்காத!.
உதயன், மாமா இவளுக்கு பொளுக்குண்ணு ஒன்னு கொடுங்க!.
அங்கே கலவர பூமியாக மாறி கொண்டு இருக்க கார்த்திக் பார்த்து சிரித்தான். தாரா அவர்களின் நெருக்கத்தை பார்த்து கொண்டு அப்படியே நிற்க..
கார்த்திக், என்ன மா ஆச்சு?
தாரா, நான் அவரை இப்படி பார்த்ததே இல்ல அண்ணா!. அவர் இவ்வளவு பேசுவாரா!
கார்த்திக், அவங்க ரெண்டு பேரும் இப்படி தான் ஆனால் ரொம்ப பாசம்! என் பொண்டாட்டிக்கு உதயன் கூட பேசாமல் தூக்கமே வராது!
தாரா புன்னகையுடன் சந்தோசமாக பார்த்தாள். இந்த மாதிரி நமக்கு ஒரு அண்ணாவும் இல்லை தம்பியும் இல்லை..
ஒரு வழியாக இருவரும் சண்டை முடித்து மீண்டும் அந்த காபி சூடு செய்ய பட்டது. மை விழி தாரா கிட்ட எதுவும் பேச வில்லை. தன் அம்மா இப்பொழுது கஷ்ட படுவது கூடவே கம்பீரமான தன் அப்பா இப்பொழுது கஷ்ட படுவது என அனைத்துக்கும் காரணம் தாரா தான்!
மை விழி காபியை எடுத்து கொண்டு பால் கனி பக்கம் சென்றாள். கார்த்திக் இரு குழந்தைகளையும் பார்த்தான். இருவரும் தாரா மற்றும் உதயனிடம் இருந்தனர்.
கார்த்திக் மெதுவாக பால் கனி பக்கம் சென்றான். மை விழி தன் அப்பா, அம்மா என அனைவர் சந்தோசமும் போய் விட்டதே என நினைத்து கவலையில் அந்த காபியை ஒவ்வொரு மிடுக்காக குடித்து கொண்டு இருக்க
க்கும்.. என சத்தம்!
மை விழி தண்ணிலைக்கி வந்தாள். ஆனால் திரும்பி பார்க்க வில்லை.
கார்த்திக், ம்ம் உன் கோபத்தை கஷ்ட பட்டு அடக்கி இருக்க போல!.
மை விழிக்கு சட்டென கோபம் வர ஒரே மூச்சில் குடித்து விட்டு அவள் நகர போக கார்த்திக் அவளை அணை கட்டி நின்று கொண்டான்.
பாரு டா பொண்ணுக்கு கோபம் வருதா!.
மை விழி முடியை ஒதுக்கி கொண்டு இப்போ உங்களுக்கு என்ன வேணும்!.
கார்த்திக் பூஸ்ட் ஒரு மிடுக்கு குடித்து விட்டு நான் வந்ததால் சொல்லடக்கம் கூடவே இந்த நாவடக்கம் இல்லையென்றால் தாரா கண்ணில் கண்ணீர் வர வைத்து இருப்ப!
மை விழி, தெரியுதுள்ள மூடிட்டு போ!.
கார்த்திக், ஹே மரியாதை கொடு டி!. நான் உன் புருசன்!.
மை விழி, சேலத்து பொண்ணுங்க கொஞ்சம் ரக்கட் ஆன ஆளுங்க!.
கார்த்திக், அப்போ மான் விழி!.
அவள் ஈரோடு! சோ கொஞ்சம் சாப்ட்!.
கார்த்திக் அவள் சொன்ன பதிலை யோசித்து பார்த்து முத்து பற்கள் தெரிய சிரித்தவன். ம்ம் பரவாயில்லையே நான் கூட நாமக்கல் உங்க ஊரை சொல்லுவ அப்டின்னு பார்த்தேன்!.
மை விழி, அது என் அப்பா ஊரு! எதோ என் நிலைமை சேலத்தில் போய் கட்டி வச்சுட்டாங்க!.
கார்த்திக், ஹலோ என்ன சேலத்தை பற்றி என்ன தெரியும்! எல்லா ஊரையும் கனெக்ட் பன்றதே சேலம் தான்! வந்தவரை வாழ வைப்பது தமிழ் நாடு தான் ஆனால் அது சேலத்துக்கும் பொருந்தும்!.
மை விழி காதை பொத்தி கொண்டு போதும் போதும்! என சொல்லி கொண்டே அவள் நகர கார்த்திக் கைகளை பிடித்து கொண்டான்.
மை விழி, நீ தான் என் மேல் கோபமா இருக்கியே என்னை விடு!.
கார்த்திக் ஆமா கோபம் தான் அது இப்போ நீ சொல்ல போற பதிலில் குறைய சான்ஸ் இருக்கு!
மை விழி, என்ன கேட்க போற?
கார்த்திக், என்னை ஸ்கூலில் பார்க்கும் போது எதோ பாட்டு கேட்பேன் அப்டின்னு சொன்ன? அது என்ன பாட்டு?
மை விழி, அதை சொன்னால் தான் கோபம் குறைய வேணுமா போ நான் சொல்லல!
கார்த்திக், மை விழி!.
அவள் உதட்டை சுளித்து கொண்டே கதவுக்கு அருகில் சென்றவள். “ஒரு நாளுக்குள் எத்தனை கனவு உன் பார்வையில் விழுகிற பொழுது” பாட்டை பாட்டு புக் வாங்கி என்னோட சயின்ஸ் புக் ல மறைச்சு வச்சு படித்து இருக்கேன். உன் பேரை லட்ச தடவை என் நோட்டில் எழுதி இருக்கேன்! என சொல்லி ஓடி விட்டாள்.
கார்த்திக் முகத்தில் அவ்வளவு சந்தோசம் அவன் மனம் முழுவதும் குத்தாட்டம் போட்டது. உஃப் என வேகமாக துடிக்கும் இதயத்தை அசுவாசம் செய்ய ஊதி கொண்டே தலையை கோதினான்.
அதன் பின் அனைவரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்தனர். இருவரும் பார்வையை பரிமாறி கொண்டனர். வார்த்தைகள் அனைத்தும் உள்ளுக்குள் சிக்கி கொண்டது.
அதன் பின் உதயன் தாரா இருவரும் மகி வீட்டுக்கு கிளம்பினர்.
சூர்யா ஜெய் கூட நாதனை பிக் அப் செய்ய கிளம்பினான்.
தொடரும்..
Episode 262
அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடிக்க மை விழி சிவி பவா இருவருக்கும் ஊட்டி விட்டு கொண்டு இருந்தாள்.
கார்த்திக் ஆபீஸ் கிளம்பி கொண்டு இருந்தான். உதயன், மாமா!.
ம்ம் சொல்லுங்க மச்சான்!
உதயன் மை விழி மூக்கை பிடித்து இழுத்து விட்டு அவளின் ஜடை ரப்பர்பேண்ட் கலட்டி விட்டு நானும் தாராவும் மகி வீட்டுக்கு போறோம்!.
மை விழி, உதயா உன்னை கொன்றுவேன்! ஒழுங்கா போயிடு! நாயே! உன்னை!.
உதயன் நகர்ந்து கொண்டு தாரா பின்னால் வந்து நின்று மறைந்து கொண்டு இப்போ வா மை விழி!.
கார்த்திக் கிளம்பி வெளியே வந்தவன். என்ன மச்சான் இப்போவே கிளம்புரீங்க!
உதயன், மகி வீட்டுக்கு போனால் அவளும் சமைப்பா சூரியா மாமாவும் சமைப்பார்கள் சோ ஜாலியா சாப்பிட்டு இருக்கலாம் சில எலி தொல்லை இல்லை..
நீ தான் டா பெரிய தொல்லை! என மை விழி பருப்பு கடையும் மத்து எடுத்து கொண்டு அவனை அடிக்க வந்தாள்.
உதயன் தாரா பின்னால் வந்து இப்போ அடி டி வாடி!.
மை விழி தாராவை பார்த்து விட்டு உதயனை பார்த்து முனகி கொண்டே எவன் என்னை அடித்தானோ என சத்தமாக சொல்லி அடுத்து வந்த வார்த்தையை வாயில் முனகி கொண்டே நின்றாள்.
உதயன், மாமா! இவளை நாலு கொடுங்க இவளுக்கு திமிர் உங்களை ஸ்லேவ் மாதிரி ட்ரீட் பண்றா!.
தாரா, என்னங்க கம்முன்னு இருங்க!.
உதயன், நீ சும்மா இரு அவள் சரியான முசடு!.
தாரா வேகமாக நகர்ந்து தள்ளி செல்ல
உதயன், தாரா! என கத்தி கொண்டே தள்ளி செல்ல
மை விழி, உதயா நீ சட்னி மகனே! என்னையேவே டென்ஷன் பன்றியா என அவன் காதை பிடித்து திருக கூடவே மத்து எடுத்து அடிக்க ஆரம்பித்தாள்.
கார்த்திக், மை விழி!. என கொஞ்சம் சத்தமாக அழைத்தான்.
என்னை அதட்ட வேணாம் இவனை திட்டுங்க! இரு டா உன்னை நான் அம்மா கிட்ட சொல்றேன்!.
அவனின் சிரித்த முகத்தில் கொஞ்சம் கவலை எட்டி பார்க்க ஆரம்பித்தது.
கார்த்திக் அதற்குள் சரி சரி நீங்க சின்ன குழந்தை இல்ல மை விழி அவர் உனக்கு அண்ணன்!
மை விழி, நான் பாவம் ன்னு அவனை ஏற்று கொண்டேன் டா மவனே இப்போ மகி வீட்டுக்கு போரியா போ நீ தலை கீழாக நின்றாலும் உன் கிட்ட அவள் பேச மாட்டாள்.
உதயன் முகம் வாடி போனது. தாரா அவன் அருகில் வந்து நின்றாள்.
கார்த்திக், மச்சான் நீ கவலை படாதே நான் மான் விழி கிட்ட பேசி பார்க்கிறேன்!.
மை விழி சோபாவில் அமர்ந்து கொண்டு கார்த்திக் காம்டி பண்ணாத சான்சே இல்ல மகி அப்பா பேச்சை கேட்பாள் அதுக்கு அப்புறம் நான் சொல்வது தான் கேட்பா! உனக்கே இது தெரியும்!
கார்த்திக், மச்சான் அவள் சொல்வதை நீங்க கேட்காதீங்க!. மகி அப்படி எல்லாம் இல்லை!. அவள் உங்க கிட்ட பேசுவா!.
மை விழி, நீ என்னமோ பண்ணு உதயா ஆனால் சீக்கிரம் அங்கே இருந்து கிளம்பி விடு!.
ஏன்?
மை விழி, “மகி மாசமா இருக்காள்! உனக்கும் உன் பொண்டாட்டிக்கு வடிச்சு கொட்ட அவளுக்கு தெம்பு இருக்காது. அதை விட இப்போ தான் மாமாவும் அவளும் சேர்ந்து இருக்காங்க அதனால் அவங்களுக்கு கொஞ்சம் பிரைவசி வேணும்!.”
தாரா உதயனிடம் அப்போ நம்ம வீட்டுக்கு போலாம். அத்தையும் மாமாவும் தனியா இருப்பாங்க!.
மை விழி, உதயா உன் பொண்டாட்டிக்கு நீ தங்கச்சி கூட சேர்வது பிடிக்கல போல காதல் கல்யாணம் இப்படி தான் இருக்கும் எவ்ளோ தகுடுதத்தம் பண்ணி மறைத்து இருக்க!. பிராடு நாயே!.
தாரா திடுக்கிட்டு மை விழி நீங்க தானே சொன்னீங்க அவங்கள டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு தான் நான் போறேன்னு சொன்னேன்!. எங்களுக்கு மான் விழி வீட்டுக்கு போறதுக்கு இஷ்டம் தான்!
மை விழி, நான் எப்டி வேணாலும் சொல்வேன்! நீங்க பதில் பேச கூடாது! டேய் உன் பொண்டாட்டி கிட்ட சொல்லி வை இங்கே நாத்தனார் கொடுமை கூட இருக்கு! .
கார்த்திக் அவள் காதை திருகி அப்போ கனி மொழியை கிளம்பி வர சொல்லவா!
மை விழி, அவள் என் தோழி! வலிக்குது விடு கார்த்திக்!
தாரா, அண்ணா விடுங்க!. அவரோட தங்கை தானே கொடுமை பண்றாங்க அவங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு
அப்பப்பா உங்க சக்கரை பேச்சுக்கு என் அண்ணன் , மான் விழி மயங்குவாங்க நான் நெவர்!.
தாரா அப்படியே நின்றாள். அவள் மனதில் எப்படி தூண்டில் போட்டாலும் மாட்ட மாட்டிக்கிது இந்த பொண்ணு! என் வீட்டுகாரர் உதயன் வாயில் லவ் கூட கல்யாணத்துக்கு முன்னாடி நாள் தான் அந்த மூணு வார்த்தை சொன்னாரு! எப்டி இவங்க எல்லார் மனதிலும் இடம் பிடிப்பது.
உதயன் அவள் அருகில் வந்து நான் இருக்கிறேன் என பிடித்து கொண்டு சரி வா தாரா நம்ம கிளம்பி போகலாம்! மாமா நாங்க வருகிறோம்!
மை விழி, ஹான் போடா நாயே! திரும்பி வராதே!.
உதயன், ரிசப்சன் முடிச்சு உன்னை டார்ச்சர் பண்ண கண்டிப்பா வருவேன். கவலை படாத தொங்கச்சி!.
மை ஆர்மிஸ்!.
மாமாச்சி! என இருவரும் கத்திட!
உதயன், உங்க ரெண்டு பேர் வேலை என்ன?
அம்மாவை ராவடி பண்ணனும்! டன் மாமு! என கையை நீட்டுனார்ள்.
மை விழி, ஹே போடா ராஸ்கல்!.
கார்த்திக் அவர்களின் பின்னால் சென்று மூவருக்கும் டாடா வைத்து விட்டு கீழே இறங்கினார்கள். தாரா வெளியே வந்ததும் முகத்துக்கு மாஸ்க் அணிந்து கொண்டாள். அவளை ஒரு குறிப்பிட்ட தூரம் தள்ளி காவலர்கள் பின் தொடர்ந்தனர்.
தாரா புன்னகையுடன் கொஞ்சம் பிரம்த்து கொண்டே வந்தாள்.
உதயன், என்ன ஆச்சு முகம் சோகமா இருக்கும் அப்டின்னு பார்த்தால் பளிச் பளிச்ன்னு இருக்கு!
தாரா, இங்கே இருக்க ஜாலியா இருக்கு அதை விட உங்க தங்கை கூட நீங்க வெற ஒரு பெர்சன் போல இருக்கீங்க!. அப்போ என் கிட்ட உர்ரென முகத்தை வைத்து கொண்டு இருந்தீர்கள் அதெல்லாம் பொய்யா!..
உதயன், ஹே தாரா அவள் என் கூட பிறந்தவ சின்ன வயசில் இருந்து ஒன்றாக இருக்கொம் அவள் கிட்ட இருப்பது போல் உன் கிட்ட எப்டி இருக்க முடியும் அவள் என் தங்கச்சி நீ என் பொண்டாட்டி!. உன் கிட்ட எப்டி அவள் கிட்ட இருப்பது போல் இருக்க முடியும்!.
“சரி தெரியாமல் சொல்லிட்டேன்!. போதுமா!”என இருவரும் புது மாப்பிள்ளை பெண் போல் உரசி பேசி கொண்டு வந்தனர்.
கார்த்திக், க்கும்.. என தொண்டையை சிரும்பினான்.
இருவரும் உடனே தன்னிலைக்கு வந்தனர். கார்த்திக், சரி வாங்க நானும் உங்க கூட வரேன்! உங்களை ட்ராப் பண்ணிட்டு வரேன்!.
உங்களுக்கு எதுக்கு மாமா சிரமம்!.
கார்த்திக், இல்ல நான் அப்படியே சூரியா கூட ஆபீஸ் கிளம்பி விடுவேன்.
உதயன், இல்ல மாமா!.
கார்த்திக், உதயன் கொஞ்சம் கம்முன்னு வா தாரா வை என்னால் எப்டி தனியா அனுப்ப முடியும்!
உதயன், கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே அப்டியா மாமா!.
கார்த்திக், ஆமா அப்படி கூட வச்சுக்க மான் விழிய பார்க்க தான் வருகிறேன்!.
தாரா கார்த்திக்கை பார்க்க அவன் என்னை தப்பா நினைக்காதீங்க தாரா மகி என்னோட ஸ்டூடன்ட்!.
உதயன், இல்ல அவரு பொய் சொல்றாரு!.
டேய் போடா என அனைவரும் மகி வீட்டுக்கு கிளம்பினர்.
சூர்யா வீட்டுக்கு வந்து வாசலில் காலிங் பெல் அடிக்க கதவை திறந்தது வருண் தான்!.
இருவர் பார்வையும் கோபத்தில் பற்றி எரிந்தது. வருண், தாரா கம் பேபி!. மாறன் மாமா உள்ளே வாங்க என அழைத்தான்.
உதயன் அவனை முறைத்து பார்க்க கார்த்திக் புன்னகையுடன் மான் விழிய தவிர என்னை இப்படி அழைத்தது நீங்க மட்டும் தான்!.
உதயன் கார்த்திக்கை முறைத்து பார்த்து அது என்ன மாறன்!.
வருண் நகர்ந்து கொண்டு அது கார்த்திக் மாமாடைய செல்ல பேர் இது எல்லாம் என் தங்கை என் கிட்ட எல்லாமே சேர் பண்ணி இருக்கா!
உதயன் கடுப்புடன் உள்ளே வந்தான். தாரா புன்னகையுடன் வீட்டுக்குள் வர வருண் அவளிடம் தெலுங்கில் பேச ஆரம்பித்தான். .
உதயன் அவர்கள் அனைவரையும் கோபத்துடன் பார்க்க மான் விழி மெதுவாக உள்ளே இருந்து வந்தாள். தாராவை பார்த்து விட்டு அவர்களுக்கு தண்ணீர் குடிக்க எடுத்து வந்தவள் உதயனை தவிர்த்து மற்ற அனைவருக்கும் கொடுத்தாள்.
உதயன் தன் தங்கையை பார்க்க அவள் கை பிடித்து வருண் அமர வைத்தான். மகி தெலுங்கில் பேச தாரா இன்னும் சந்தோசத்துடன் பேச ஆரம்பித்தாள்.
உதயன், மகி சூர்யா மாமா எங்கே?
அவள் தாரா கிட்ட தெலுங்கில் பதில் அளிக்க கார்த்திக் அதை புரிந்து கொண்டு உதயன் கிட்ட கூற
உதயன், மாமா நீங்களுமா!
கார்த்திக், ஹான் எனக்கும் நல்லா பேச தெரியும்!
தாரா, சூப்பர் அண்ணா!
உதயன், ஹே தமிழ் பையனை கட்டி இருக்க உன் வாயில் தமிழ் தவிர வேறு மொழி வர கூடாது டி!
தாரா என்ன சொல்வது என முழித்து பார்க்க
கார்த்திக், என்ன மச்சான்! பாப்பாவை மிரட்டுரீங்க! சண்டை வேணாம்!. என சொல்லி கொண்டே அவன் எழ..
வருண், நான் வீட்டுக்கு வரேன் ஈவ்னிங் இன்வுடேசன் வைக்க வேணும்!.
ம்ம் வாங்க மச்சான் என கார்த்திக் சென்று விட்டான்.
வருண், தாரா நூவு என அவன் ஆரம்பிக்க!.
தாரா, பிளீஸ் மாவா! என அழைத்தாள்.
மகி, மாவா வா!.
தாரா, குரு பிரகாஷ்க்கு என்ன முறையோ எனக்கும் அதே முறை தான்!.
உதயன், மாவா அப்டின்னா என்ன தாரா!.
வருண், மாமா அப்டின்னு அர்த்தம்! ஒரு வகையில் தாரா எனக்கு அத்தை பொண்ணு!.
உதயன், கோபத்துடன் தாராவை முறைத்து கொண்டு வருணை பார்க்க..
வருண் அடுத்து சொன்ன பதிலில்…?
மகி…?
தாரா…?
இங்கே சூர்யா மற்றும் ஜெய் இருவரும் தேஜூ முன்னால் போய் நிற்க நாதன் ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகி வந்தார்.
அடுத்து என்ன நடக்கும்?
தொடரும்..
Episode 263
உதயன், மாவா அப்டின்னா என்ன தாரா!.
வருண், மாவா அப்டின்னா! அப்டின்னா!
உதயன், தாரா சொல்லு!
ஹே ச்சில் ப்ரோ அப்டின்னு அர்த்தம்! ஒரு வகையில் தாரா எனக்கு அத்தை பொண்ணு!. என வருண் கூறினான்.
உடனே உதயன் தாராவை முறையோ முறை என முறைத்து தள்ளினான்.
வருண், தாராவை எனக்கு சின்ன வயசில் இருந்து தெரியும் ஐ திங்க் கனடாவில் என்னோட ஹயர் ஸ்டடில ஜூனியர்! நானு, தாரா எல்லாம் ஒரே டீம் மேட்!. என புருவம் உயர்த்தி காட்டினான். ஆனால் பாரேன் அவளுக்கு அறிவு கம்மி உண்ணையெல்லம் லவ் பண்ணி!.
இதை கேட்டதும் மான் விழி, “அன்னயா இந்தக்கு முன்னு நூவு நாக்கு செப்ப லெது!”
உதயன் பார்வை மான் விழி மீது இருக்க தாரா கைகளை இறுக்கி பிடித்தான். என்ன டி இத்தனை நாள் என் கிட்ட சொல்லவே இல்லை!.
தாரா, நீங்க என்னை எப்போ பேச விட்டீர்கள் நீங்களும் பேசியது இல்லை உங்க முகத்தை பார்த்ததும் எனக்கும் எதுவும் சொல்ல தோணல!.
போடி உன்னை அப்புறம் பார்த்து கொள்கிறேன் உனக்கு இருக்கு டி அவனை மாமா அப்டின்னு கூப்பிடுற!. என உதயன் கோபமாக கூறினான்.
வருண், தாராவிடம் என்ன தாரு சொல்றார் உன் புருஷர்!.
ஒன்னும் இல்ல மாவா!
உதயன் மீண்டும் முறைக்க தாரா அய்யோ என சலித்து கொண்டு ஒன்னும் இல்ல வருண்!.
ஓ என்னை மாமா அப்டின்னு கூப்பிடுவது பொறாமையா இருக்கா!
தாரா, ஆமாம் என்பது போல் தலை ஆட்டிட. .
உதயன், ம்ம்ம்ம் என முறைத்தான்.
உடனே தாரா அப்படி எல்லாம் இல்லையே!.
வருண், அப்படி இருந்தால் என்ன?
உதயன், மகி கொஞ்சம் தேவையில்லாத ஆட்களை வீட்டை விட்டு போக சொல்லு!
மான் விழி, உங்களுக்கு என்ன வேணும் அண்ணி!. வருண் அண்ணயா தான் எனக்கு எல்லாம்! எந்த பிரதி உபகாரமும் இல்லாமல் அவர் மனதில் நான் இப்போ கூட இருக்கேன். ஶ்ரீ மதியை கட்டுவதுக்கு முன்னாடி என் கிட்ட கேட்டு தான் தாலி கட்டினார் அந்த அளவுக்கு நான் வருண் அண்ணா வாழ்க்கையில் முக்கியமான ஒரு ஆள்! என் மிதுன் குட்டிக்கு தாய் மாமன் அது என் வருண் அண்ணா தான்! அதனால் உங்க புருசனுக்கு உரிமை இல்லன்னு சொல்ல வரல அதே நேரத்தில் என் வருண் அண்ணாவை யாரும் எதுவும் சொல்ல கூடாது.
வருண் கால் மெல் கால் போட்டு மகி குட்டி விடு டா நீ என் இரத்தம் டா! சரி இந்த நல்ல தருணத்தில் மோட் அவுட் ஆகாத செல்லம் என் மருமகளுக்கு நல்லது இல்ல!.
உதயனுக்கு அவர்கள் இருவரும் பேசுவது சுறுக்கென இருந்தது. மை விழி கிட்ட இருப்பது போல் மான் விழி கிட்ட ஒரு நாளும் பேசி பழகியது இல்லை. அதற்காக பாசம் இல்லையென சொல்ல முடியாது.சில உணர்வுகளை அவன் வெளிபடுத்த வில்லை.
தாரா அவன் அருகில் அப்போ மை விழி கிட்ட மட்டும் தான் நீங்க பாசம் போல!. மான் விழி மேல் நீங்க!.
கொஞ்சம் கம்முன்னு இரு டி என சொன்னவன் கண்கள் கலங்கி போனது. அவன் பார்வை மான் விழி மேல் பதிந்தது.
தாரா, சரி விடுங்க கவலை படாதீங்க என கூறி ஆதரவாக கையை பிடித்து கொண்டாள்.
உதயன் உடனே எழுந்து மான் விழி அருகில் வந்தான்.
மிதுன் மற்றும் நிதின் இருவரும் கிளம்பி வெளியே வந்தனர்.
மகி!. என உதயன் அவளின் அருகில் சென்றான்.
வருண் அதற்கு முன் முந்தி கொண்டு மான் விழி! என அருகில் சென்று கையில் உள்ள பத்திரிக்கையை நீட்டினான்.
மகி அவன் கையில் இருந்த பத்திரிக்கையை வாங்க செல்ல உதயன் அவளின் கையை பிடித்து கொண்டான்.
மகி!
அவள் தாராவை பார்த்து கொண்டு அண்ணி கையை விட சொல்லுங்க!
வருண், மகி இங்கே என்னை பாரு எனக்கும் ஶ்ரீ குட்டிக்கும் இந்த வாரத்தில் வீக் எண்ட் சண்டே பெரிய ரிசப் சன் அதுக்கு இன்வைட் பண்ணிட்டு அப்படியே என் மிதுன் ஹீரோவை கூட்டி போலாம் அப்டின்னு தான் வந்தேன்! சூர்யா மாமா கிட்ட பெர்மிஷன் கேட்கணுமா!.
அதே நேரம் வசந்தன் உதயன் மற்றும் தாரா இருவரின் வரவேற்பு நிகழ்ச்சியின் நாள் அதே சன்டே என சொல்ல போன் செய்தார்.
உதயன் போனை எடுத்து கொண்டு பேச ஆரம்பிக்க மிதுன் மற்றும் நிதின் இருவரும் அருகில் வந்தனர்.
வசந்தன் போனில் சொன்ன விஷயத்தை கேட்டதும் உதயன் வேகமாக மகி அருகில் வந்து என் தங்கச்சி எங்கேயும் வர மாட்டாள் அன்னிக்கு எனக்கும் தாராவுக்கும் ரிசப்ஷன்! என வந்து நின்றான்.
வருண் முகம் வாடி போக அப்போ வர மாட்டியா மகி!.
மகி புன்னகையுடன் அவன் கையில் உள்ள பத்திரிக்கையை வாங்கி கொண்டு எனக்கு நீங்க தான் முக்கியம் அதை விட ஶ்ரீ மதி நான் ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் அதனால் அங்கே தான் முதலில் வருவேன்!.
வருண் இதை கேட்டு சந்தோசத்தின் உச்சிக்கே சென்று விட்டான். மகி பக்கத்தில் அவன் வர உடனே உதயன் அவனை தள்ளி விட்டு மகி நான் உன் அண்ணன் மா! எங்கோ இருந்து ஒருத்தன் வருகிறான் அவன் கிட்ட பேசுற!
மகி, என்னை பற்றி உனக்கு என்ன தெரியும்! அப்பா மேல் உனக்கு என்ன அக்கறை அம்மா மேல் உனக்கு பாசம் இருக்கா மரியாதை இருக்கா! எங்களை எல்லாம் நினைத்து இருந்தால் இப்படி ஒரு வேலை செய்து இருப்பியா! அண்ணனா! யாருக்கு யார் அண்ணா! என்னை பற்றி உனக்கு என்ன தெரியும் எத்தனை நாள் என் கிட்ட முகம் கொடுத்து பேசி இருப்ப ? எனக்கு என்ன செய்து இருக்க? இப்போ உறவு கொண்டாட வந்து விட்ட! உனக்கு எப்போவுமே மை விழி யை தானே பிடிக்கும்!
உதயன் மனம் நொந்து இல்ல மகி எனக்கு உன்னையும் பிடிக்கும். நீ கல்யாணம் ஆன நேரம் தான் நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா! சின்ன வயசில் பயம் அதான்!
மகி சிரித்து கொண்டே நீ காமெடி பண்ணாத உதயன் நீ என் வாழ்க்கையில் வெறும் பெயருக்கு மட்டும் தான் அண்ணன்! என்னோட இரத்த பந்தம் சக்தி, மிதுன் ரெண்டு பேருக்கும் மாமா!
உதயன் , அவ்ளோ தானா!. என உதடு துடிக்க கேட்டான்.
மகி, என்னை பற்றி உனக்கு ஒன்னு எதாவது ஒன்னு தெரியுமா! சொல்லு!
உதயன் அப்படியே நின்றான். மை விழி பற்றி சகலமும் தெரியும் ஆனால் மான் விழி பற்றி ஒன்றுமே தெரியாது.
மான் விழி அழுது கொண்டே யாருமே என்னை எதுக்கும் சேர்த்து கொள்ள மாட்டீங்க! நீ , மை விழி, சதீஷ், தினேஷ் மாமா, எல்லாரும் இருப்பீங்க! யார் கிட்டயும் எதுவும் சேர் பண்ணிக்க முடியாது எவ்ளோ தனியா ஃபீல் பண்ணி இருக்கேன் தெரியுமா!
உதயன் தப்பு தான் மகி சாரி மகி!
மான் விழி, சரி அதை விடு லவ் பண்ணி இருக்க! உனக்கு என் கிட்ட சொல்லணும் அப்டின்னு தோணல அப்படி தானே!
உதயன் இதற்கும் அப்படியே நின்றான். தாராவுக்கு மான் விழிய பார்க்க பாவமாக இருந்தது.
****
சூர்யா அமைதியுடன் காரில் லேப் டாப்ல வேலை செய்து கொண்டே வந்தான்.
ஜெய், சூர்யா!
சூர்யா!.. .
சூரிய தேவ்!
ம்ம் என்று ஒற்றை பதில் அளித்தான்.
நீ எதுக்கு கங்கணம் கட்டி கொண்டு வர!.
சூர்யா லேப் டாப்ல இருந்து கண் எடுக்காமல் அவள் எதுக்கு உன்னை கூப்பிடுறா! கீர்த்தி என்னோட p.A அவள் வாழ்க்கை எனக்கு ரொம்ப முக்கியம் ஒரு வேளை நீ தேஜு மேல் எதுவும் interest வந்தால் என் p.a வாழ்க்கை என்ன ஆவது?
டேய் இது உனக்கே அடுக்குமா டா! எதுக்கு டா இப்படி கலர் கலரா பொய் சொல்ற?
சூர்யா, அப்போ மூடிட்டு கார் ஓட்டும் வேலையை மட்டும் பாரு!
ஜெய், அது வந்து இத்தனை வேலை வைத்து கொண்டு அவசியம் வந்தே ஆகணுமா அப்டின்னு கேட்டேன் வேற ஒன்னும் இல்ல சூர்யா!
சூர்யா, நீயும் அந்த MNC கம்பனி புராஜெக்ட்ல இருக்க தானே!
ஆமா!
அப்போ நீ என்ன டேஸ்க்கு போய் பிக் அப் பண்ண போற!
ஜெய், என்ன சூர்யா இப்படி பேசுற!
சூர்யா கடுப்புடன் உனக்கும் சேர்த்து நான் தானே வேலை செய்கிறேன் அதனால் மூட்டு கார் ஓட்டும் வேலையை மட்டும் பாரு!
ஜெய் அதற்கு மேல் வேறு எதுவும் பேச வில்லை கார் நேராக அந்த சிறை சாலை பக்கம் சென்றது. ஜெய் ஆகாஷ் கம்பனியின் சிவில் மற்றும் லீகல் அட்வைசர் நல்ல ஒரு வக்கில் வைத்து எழு வருட தண்டனையை நான்கு வருடமாக குறைத்து இன்று கடைசியில் ரங்க நாதனை வெற்றி கரமாக வெளியே அழைத்து வந்து விட்டாள்.
ஜெய் கையில் பூங்கொத்து வைத்து கொண்டு நாதனுக்கு காத்திருக்க சூர்யா, கீர்த்தி ய பார்க்க போகும் போது கூட இந்த பொக்கே இல்ல இன்னிக்கு ஒரு அர கிழவனை பார்ப்பதற்கு பூங்கொத்து அதுவும் சிவப்பு ரோஜா! ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்!
ஜெய், சூர்யா தயவு செய்து கீர்த்தி கிட்ட எதுவும் சொல்லி வைக்காத! எனக்கும் தேஜூ ரெண்டு பேருக்கும் நடுவில் ஒன்னும் இல்ல ஜஸ்ட் ப்ரெண்ட் மட்டும் தான்!
சூர்யா வேணும் என்றே! மச்சி எனக்கு என்னமோ தேஜூக்கு உன் மேல் எதோ சம்திங்!.
ஜெய்,அப்பா மகாராசா என்னை ரெண்டு பொண்ணுக்கு நடுவில் சிக்க வைத்து கொண்ணு விடாதே டா அப்படி எதுவும் இல்ல!. இப்போ தான் எதோ கடவுள் புண்ணியத்தில் லவ் ஒகே ஆகி அது கல்யாணத்துக்கு போய் இருக்கு!
சூர்யா, சரி உன் திருவாயை க்ளோஸ் பண்ணு தேஜூ வராள்!
ஜெய், ஹான் பின்னாடியே நாதன் அங்கில் வராரு!
சூர்யா…?
தேஜு…?
இங்கே உதயன் மகி…?
தொடரும்.
Episode 264
ஜெய் மற்றும் சூரியா இருவரும் காரில் வந்து இறங்கினார்கள்.
ஜெய் அவளுக்கு போன் செய்தான். அதை பதில் ஏற்ற தேஜூ, நான் டாடிய பிக் அப் பண்ணி இப்போ வெளியே வந்து கொண்டு இருக்கேன்.
சரி வெயிட் பன்றேன்!. என சொல்லி போன் வைத்தான்.
தேஜு ஒரு வித கலவையான உணர்வுடன் தன் இரவல் தந்தை வெளியே வருவதை பார்க்க ஆவலாக நின்று கொண்டு இருந்தாள்.
நாதனுக்கும் உள்ளுக்குள் அதே தவிப்பு இருவர் மனதிலும் உண்மை தெரியும் ஆனால் அதை ஏற்க மனம் ஒப்ப வில்லை. தெய்வ திருமகள் படத்தில் வரும் காட்சி போல் துடிப்புடன் இருந்தது. தேஜு மனதுக்கு நன்றாக தெரியும். இந்த ஜெயில் வாழ்க்கை எல்லாம் நாதன் அவளுக்காக மட்டுமே ஏற்று கொண்டார். வசந்தன் பார்த்து கொண்டு இருந்தால் கூட இந்த அளவுக்கு ஒரு பாசம் அவளுக்கு கிடைத்து இருக்காது.
தன் தந்தையை பார்த்ததும் தாவி அணைத்து கொண்டாள்.” நானா! நானா! ப்பா! “என கண்களில் கண்ணீருடன் கட்டி கொண்டாள். நாதனுக்கு இப்பொழுது தான் உயிரே வந்தது. தத்து எடுத்து வளர்க்கும் பெற்றோர் அனைவருக்கும் மனதில் பாரம் இருந்து கொண்டு தான் இருக்கும் அது எப்பொழுதும் மாறாது. எங்கே தன் குழந்தை விட்டு சென்று விடுமோ என்ற பயம் தான்!
நாதன் தன் பெண்ணின் தலையை நீவி விட்டு என்ன டா செல்லம்! எதுக்கு அழற உன் கண்ணீர் அப்பாவை பலவீன படுத்துது! நீ சந்தோசமாக இருக்க தானே இத்தனை நாள் விட்டு போனேன்! இப்படி அழலாமா!.
தேஜு கண்ணை துடைத்து கொண்டு டாடி! நான் அழ மாட்டேன் இப்போ பாருங்க என முகத்தை காட்டினாள்.
நாதன் அவளுடைய முகத்தை பார்த்து என்ன முகம் எதோ கவலையில் இருப்பது போல் இருக்கே!
இல்ல டாடி! நான் நல்லா இருக்கேன்! இப்போதைக்கு நீங்க வந்ததை செளிப்ரெட் பண்ண வேணும்!. என புன்னகையுடன் அவர் கைகளை கோர்த்து கொண்டு வெளியே வந்தாள்.
நாதன், தேஜு மா குட்டி பையன் எப்டி இருக்கான்!
யாரு டாடி என இருவரும் பேசி கொண்டே வந்தனர். அது தான் நிவாஸ் குட்டி!. அன்னிக்கி நல்லா பார்க்கவே இல்ல அவன் சிரிப்பு கண்ணுக்குள்ள நிக்கிது!. என இருவரும் உற்சாகத்துடன் பேசி கொண்டு வந்தனர்.
தேஜூ டாடி உங்க தாடி எல்லாம் சேவ் பண்ணுங்க! கூடவே ஹெர் கட் கொஞ்சம் டை!.
நான் என்ன கல்யாணம் பண்ணிக்க பொறேனா எதுக்கு இது எல்லாம்!
டாடி என சிரித்த தேஜு வின் முகம் அப்படியே கொஞ்சம் புருவ முடிச்சுடன் மாறியது. நாதன் தேஜூவின் முக மாற்றத்தை பார்த்ததும் உடனே என்ன ஆச்சு மா! என நேராக பார்த்தார்.
அங்கே ஜெய் புன்னகையுடன் பூங்கொத்து வைத்து நின்று கொண்டு இருக்க அவன் பின்னால் சூர்யா நின்று கொண்டு இருந்தான்.
நாதன், தேஜூ அந்த பையன் அது மகி புருசன் தானே!. அவன் எதுக்கு இங்கே வந்து இருக்கான்! நீ அவன் கூட பேசுவியா! நீங்க ப்ரெண்ட்ஸ் ஆ!.
தேஜு உடனே “டாட் ஒன்னும் இல்ல இது நம்ம அப்புறம் பேசி கொள்ளலாம்!” என சொல்லி கொண்டே அவள் முகத்தில் உள்ள அனைத்து உணர்ச்சிகளையும் மாற்றி கொண்டு வந்தாள்.
சூர்யா வின் பார்வை தேஜூவின் மீது தான் இருந்தது அவனும் முகத்தில் எதுவும் காட்டி கொள்ள வில்லை.
ஜெய் முகத்தில் சந்தோசத்துடன் அங்கிள்! வாழ்த்துக்கள்! என அந்த செண்டை நீட்டினான்.
நாதன் ஒரு சின்ன புன்னகையுடன் வாங்கி கொண்டார்.
ஜெய், தவறே செய்யாமல் நீங்க கிட்ட தட்ட நாலு வருஷம் உள்ளே இருந்து இருக்கீங்க!
சூர்யா, நாலு வருஷம் இருந்ததுக்கு கன்கிராஜுலசன்ஸ் சார்! என சொல்லி கொண்டே சூரியா வந்தான்!.
தேஜு முகம் இதை கேட்டதும் உடனே மாறி என் டாடி நாலு வருஷம் ஜெயிலில் இருந்ததுக்கு வாழ்த்துக்கள் சொல்கிறாய் போல!
சூர்யா, என்ன மிசஸ் spr உங்க புருஷனை போலவே உங்களுக்கு ம் வார்த்தை கோளாறு ஆகி போச்சு போல!.
ஜெய், என்ன சூர்யா இது கொஞ்சம் அமைதியா இரு!.
சூர்யா அவன் பேசுவதை கண்டு கொள்ளாமல் தேஜூ ஐ திங்க் உங்க கண்ணோட்டம் சரி இல்ல! சில பேர் சரியே செய்தாலும் அது தப்பா தான் தெரியும்! உங்க மனதில் தவறா உருவக படுத்தி இருப்பீங்க உங்க எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள்!.
தேஜூ, உன் பீடிகையை நிறுத்து! நேராக பேசு, சுற்றி வளைக்க வேணாம்!.
சூர்யா தலையை கோதி கொண்டே இது என்ன டா கொடுமையா இருக்கு யாரோ செய்த தவறை கஷ்ட பட்டு ஏற்று கொண்டு தண்டனை காலம் குறைந்து தப்பு இல்லாமல் எழு வருசத்துக்கு பதிலாக இப்போ நாதன் சார் வந்ததுக்கு வாழ்த்துக்கள் சொன்னேன்.
ஜெய் சூரியா பேசுவதை கேட்டு கொண்டு இருக்க
தேஜூ அவன் பேசுவதை உன்னிப்பாக கவனித்து கொண்டு நின்றாள்.
நாதன் சிரித்து விட்டு “சரி விடுங்க எதோ மிஸ் அண்டர்ஸ்டெண்டிங் ஆகி போச்சு !”என சொல்லி விட்டு அவர் பார்வை சூர்யாவின் மீது திரும்பி தம்பி என்னை அழைக்க வந்ததுக்கு ரொம்ப நன்றி பா!.
சரிங்க சார்! என சொல்லி விட்டு அவர்கள் கிளம்பினார்கள். தேஜுவின் எண்ணம் முழுவதும் சூர்யாவின் மேல் மட்டுமே இருந்தது. எதற்கு வந்தான்? சும்மா வர மாட்டான்! இவனுக்கு கண்டிப்பாக எதோ தெரிந்து இருக்க வேண்டும்! அவனுடைய பேச்சு எல்லாம் மாறுதலாக இருக்குதே! என நினைத்தவள் மனதில் தெரிந்தால் என்ன? நான் தேஜூ என்னை எதிர்க்க யார டா இருக்கிறார்கள் பார்க்கிறேன் டா! இனி என்னுடைய திட்டத்தை வேகப்படுத்த போகிறேன்!. என நினைத்து கொண்டு அவள் இருந்தாள்.
நாதன் அவளின் யோசனையாக இருக்கும் முகத்தை பார்த்து என்ன ஆச்சு மா!.
ஒன்னும் இல்ல டாடி! என புன்னகைத்தாள்.
சூர்யா மனதில்!…?
*****
மகி, என்னை நீ தங்கச்சியா நினைத்து இருந்தால் உன்னோட லவ் அதை என் கிட்ட சேர் பண்ணி இருப்ப! அது போல் நீ எதும் பண்ணவே இல்லையே! அப்புறம் எப்டி நான் உனக்கு தங்கச்சி ஆவேன்! எந்த உரிமையில் கூப்பிடுற!. என அழுது கொண்டே கூறினாள்.
உதயன் கண்களில் நீர் கோர்க்க இல்ல மகி இது பெரிய விஷயம்! நான் தாரா கிட்ட என்னோட காதலை சொன்னதே இல்ல மகி நேரா கட்டி கொண்டேன்.
வருண் அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான். தாராக்கு இதற்கு மேல் பொறுமை இல்லாமல் அவர்கள் அருகில் சென்றாள்.
மான் விழி கைகளை பிடித்து கொண்டாள். உடனே அவள் திடுக்கிட்டு பார்க்க
தாரா, பிளீஸ் அவரை கஷ்ட படித்தாதீங்க! உங்க அண்ணா மேல் எந்த தவறும் இல்லை! எல்லாம் என் மேல் தான்! சொல்ல போனால் நான் அவர் பின்னாடி நாலு வருஷம் சுற்றி இருக்கேன்! என் பின்னாடி ஒரு நாள் கூட வந்தது இல்ல ஒவ்வொரு தடவையும் நானாக வர வைத்து இருக்கேன். இப்படி பட்ட பையனை யாருக்கு தான் பிடிக்காது! சொல்லுங்க!
உங்களுக்கும் இதுக்கும் எந்த சம்மதமும் இல்லை நீங்க தள்ளி போங்க!.
தாரா, ஒரு வேளை ஶ்ரீ மதியை அவர் கட்டி இருந்தால் அத்தை, மை விழி, நீங்க முதல் கொண்டு யாருமே அவர் கிட்ட கோப பட்டு இருக்க மாட்டீங்க சரி தானே! இப்போ என்னை! என சொல்லும் போதே கண்ணீர் கோர்த்து கொண்டது.
மான் விழி அவள் கையை பிடித்து என் அண்ணாவை லவ் பண்ணி கட்டி இருக்கும் உங்களுக்கும் அவனை போல் தானே எண்ணம் இருக்கும்!.
இதை சொன்னதும் உதயனுக்கு கோவம் வர மகிழினி! என குரலை உயர்த்தி அழுத்தமாக அழைத்தான்.
வருண்,உதயன்! என அவன் பங்குக்கு அழைத்தான்.
மகி, காதலிக்கும் பொண்ணை கை பிடிக்காமல் விட்டு செல்வது தான் தப்பு கல்யாணம் பண்ணி கொண்டது தப்பு இல்ல ஆனால்!.
தாரா கண்ணை துடைத்து கொண்ட பார்க்க மான் விழி, இத்தனை நாள் உங்களை பற்றி மறைத்தது தப்பு! என் அம்மாக்கு பொய் நம்பிக்கை கொடுத்தது தப்பு! மணமேடை வரை ஒரு பெண்ணை ஆசை கனவுடன் கூட்டி வந்து ஏமாற்றியது தப்பு! அவர்கள் குடும்ப நிலையை நினைத்து பார்த்தாயா! அதை விட அவளை வார்த்தையால் கஷ்ட படுத்தி இருக்க இதை எல்லாம் எப்படி நியாய படுத்த முடியும் சொல்லுங்க!.
உதயன், இப்போ என்னை என்ன செய்ய சொல்ற? நான் செய்தது தப்பு தான் மகி! எனக்கு ஶ்ரீ மதி பக்கத்தில் உட்காரும் போது தான் எனக்கு உள்ளுக்குள் ஒரு வித பயம் வந்துச்சு!. சரி விடு எல்லாம் என் தப்பு தான் வா தாரா நம்ம போகலாம் இஷ்டம் இல்லாத உறவை யார் நினைத்தாலும் ஒட்ட வைக்க முடியாது. இனி யாரையும் நான் கட்டாய படுத்த விரும்ப வில்லை. என சொல்லி தாராவின் கைகளை பிடித்து கொண்டு அழைத்து சென்றான்.
மிதுன், நிதின் இருவரும் நின்று பார்த்து கொண்டு இருக்க
மான் விழி, அண்ணி! அண்ணி! என மீண்டும் அழைத்தாள்.
தாரா அவளை திரும்பி பார்க்க மான் விழி, அவன் மேல் எனக்கு கோபம் தான் ஆனால் உங்க மேல் இல்ல! அவன் செய்ததற்கு நீங்க என்ன செய்வீங்க! நீங்க பாவம்! அதனால் இங்கே இருந்து போக வேணாம்!. நில்லுங்க வாங்க!.
தாரா, அவரை விட்டு நான் தனியா எப்படி இருக்க முடியும்!.
மான் விழி, உங்களுக்கு முக்கியம் அப்டின்னா இங்கேயே நீங்க இருக்கும் வரை ஒரு ஓரமா இருக்கட்டுமே எனக்கு எந்த பிரச்னையும் இல்லை..
உதயன் இதை கேட்டதும் திரும்பாமல் புன்னகை செய்தான்!
வருண், மகி!
அண்ணா!
ஓரம் கட்டுவதை அப்புறம் பாரு இப்போ நான் மிதுன் ஹீரோவை கூட்டி போகவா!.
உதயன், தாரா நீ இங்கே இரு நான் வெளியே ஹோட்டலில் தங்கி கொள்கிறேன்!. என கூறி கொண்டே அவன் சென்றான்.
மான் விழி….?
தொடரும்..
Episode 265
உதயன் தாராவிடம் ” நீ இங்கே இரு நான் வெளியே ஹோட்டலில் தங்கி கொள்கிறேன்!. என கூறி கொண்டே அவன் சென்றான்.”
தாரா மான் விழி மற்றும் உதயன் இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.
மான் விழி கோபமாக அண்ணி உங்க புருஷன் வெளியே போய் தங்கினால் என் வீட்டு காரர் என்னை திட்டுவார் சோ நான் திட்டு வாங்கணும் அப்டின்னு நினைத்தால் தாராளமா யார் வேணாலும் வெளியே போலாம்.
மிதுன் மாம் இங்கே என்ன நடக்குது? நான் இப்போ!.
மகி அவனை திரும்பி முறைத்து பார்க்க மகி ஜஸ்ட் ச்சிள் நான் இப்போ சைலன்ட் ஆகி விடுகிறேன்.
உதயன் அதே இடத்தில் நின்றான். அவன் திரும்பி கொண்டு எதுவும் சொல்லாமல் சோபாவில் வந்து அமர்ந்தான்.
வருண், “மகி நீ கோபமா இருக்கியா இல்ல அவன் கோபமா இருக்கானா! எனக்கு என்னமோ நீ தான் அவனை கன்வின்ஸ் பண்ற மாதிரி தெரியுது!”
உதயன் பார்வை கடுமையாக வருனை முறைக்க ஆரம்பித்தான். தாரா, மாவா பிளீஸ் ஏற்கனவே இங்கே எவ்ளோ பிரச்னை இதில் நீங்க இவங்களை இன்னும் தூண்டி விடுரீங்க!.
தாரா! என உரக்க அழைத்தான்.
சாரி சாரி தெரியாமல் கூப்பிட்டு விட்டேன்.
உதயன், எனக்கு தாகமாக இருக்கு தண்ணி எடுத்து வா!
மகி உடனே எழுந்து உள்ளே செல்ல போக உடனே தாரா, இருங்க நான் போறேன். நீங்க மாசமா இருக்கீங்க என அவளை அமர வைத்து விட்டு உள்ளே சென்றாள்.
வருண் மகியின் கைகளை பிடித்து “மகி பேபி எவ்ளோ நேரம் நிற்ப அப்புறம் என் மருமகள் உள்ளே கஷ்ட படுவா!” என சொல்லி அருகில் அமர வைத்தான்.
இதையெல்லாம் உதயன் எரிச்சலுடன் பார்த்து கொண்டு இருந்தான். எல்லாம் என் நேரம் என் தங்கை ஆனால் எவனோ ஒருவன் உரிமை கொண்டாடி கொண்டு இருக்கிறான். என தகித்து கொண்டு இருந்தது.
அந்த நேரம் அவளின் முந்தியை கையில் சுழற்றி கொண்டே நின்று கொண்டு இருந்தான்.
நிதின், மிதுன் வாட் ஆர் யூ டூயிங் மகி ஈஸ் டூ ஆங்கிறி!.
முந்திய இழுத்ததும் உடனே மகி வேகமாக திரும்பி அவனை முறைக்க மிதுன், “நீ வர வர ரொம்ப மோசம் ஆகிட்ட! உனக்கு பயம் இல்ல மகி இப்போ எதுக்கு உன்னோட ஐ பால்ஸ் வெளியே விழும் அளவுக்கு முறைத்து பார்க்கிற! நான் எதுவுமே பண்ணலயே!.”
மகி, சட் அப் யுவர் மவுத் ராஸ்கல்!
மிதுன் உதடுகள் துடிக்க எல்லாம் என் டைம் சரி இல்ல இந்த ஓல்ட் இந்தியாவில் நான் மாட்டி கொண்டேன். ச்ச!. என அவன் காலை தரையில் எட்டி உதைத்தான்.
மகி , டேய்!
வருண் சிரித்து கொண்டே விடு ஹீரோ! என அவனை அழைத்தான். மகி சொல்லு நான் கூட்டி போகவா!.
மிதுன், ஹீரோ இப்போவே போலாம் என்னால் இங்கே ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது.
வருண் அவள் முகத்தை பார்க்க மிதுன், மாமு நீ யார் கிட்ட பெர்மிஷன் கேட்கிற நான் இந்த ஊர் இல்ல நான் பார்ன் இன் கனடா! சோ நீ வா நம்ம போகலாம் என சொல்லி அவன் சின்ன டிராலியை தள்ளி கொண்டு செல்ல..
மகி வருணை பார்த்து கண் அசைத்தாள். அவன் ஓகே இனி ஶ்ரீ மதி இன்னும் சிரித்து கொண்டே இருப்பாள்!. என சொன்னவன் எழுந்து நின்றான்.
உதயன் இருந்தாலும் ஒரு வார்த்தை சூர்யா மாமா கிட்ட கேட்டு அனுப்பலாம்!.என கூறினான்.
மான் விழி உடனே சூர்யாவுக்கு போன் செய்தாள்.
ஹலோ சண்டைக்கோழி!
என்னங்க வருண் அண்ணா வீட்டுக்கு வந்து இருக்காங்க!
ம்ம் என்ன விஷயம்!
மான் விழி ஸ்பீக்கர் போட்டு அனைவர் முன் போனை வைத்து அது வந்து வருண் அண்ணா ஶ்ரீ மதி வரவேற்பு இருக்கு!
ம்ம் சூப்பர்!
அதுக்கு நம்ம மிதுன கூட்டி போக பெர்மிஷன் கேட்கிறார்.
சூர்யா, இது என்ன கேள்வி! உனக்கு என் கிட்ட போன் பண்ணி கேட்கணுமா என்னோட பதில் என்னன்னு உனக்கு தெரியாது!
என்னங்க சொல்றீங்க அனுப்ப வெனாவா!
சூர்யா, அடி மண்டு தயவு செய்து அந்த தப்பை பண்ணிடாத அவனை இப்போ உடனே அனுப்பி வை!
இதை கேட்டதும் மான் விழி சிரித்து விட்டு பொய் கோபத்துடன் என்ன?
இல்ல டி அனுப்பி வை அவனுக்கு அங்கே நிறைய வேலை இருக்கும்!
உதயன் மிதுன பார்க்க அவனோ டிஷ்கஸ்டிங் என நினைத்து கொண்டு சிடு சிடுப்புடன் நின்று கொண்டு இருந்தான்.
வருண், டோண்ட் ஃபீல் ஹீரோ நம்ம ஜாலி பண்ணுவோம்! அங்கே மாயா அம்முச்சி, வெங்கட் தாத்தா எல்லாரும் இருக்காங்க உனக்காக தான் வெயிட்டிங்!
எனக்கு கம்பனி!
வருண், நிதின் இருக்கான் கூடவே நான் ரிதம் குட்டிய வர சொல்றேன்!
ஹான் ஓகே மாமு!. என கிளம்பி நின்றான்.
நிதின் நேராக மாகியின் அருகில் சென்று கட்டி முத்தம் வைத்து விட்டு பாய் பொம்மாயி! என சொல்லி விட்டு வருண் அருகில் போய் நின்றான்.
மகி, மிதுன் குட்டி!.
அவன் விரைப்புடன் ஹீரோ நமக்கு டைம் ஆச்சு வாங்க போலாம்!
வருண், அம்மா கிட்ட பேசிட்டு வா!.
மிதுன், இட்ஸ் வேஸ்ட் ஆப் டைம் அவள் என்னை ரொம்ப ஹர்ட் பண்றா! என்னால் டைஜஸ்ட் பண்ணிக்க முடியல!
மகி அவன் அருகில் சென்று காதை திருகுவது போல் வந்தாள். உடனே அவன் கண்களை இறுக்கி மூடி கொண்டான்.
மிதுன் ஒரு சில நிமிடம் கழித்து திறந்து பார்க்க மகி புன்னகையுடன் அவனை அணைத்துக் கொண்டே முகம் எல்லாம் முத்தம் கொடுத்தாள்.
மிதுன், போதும் போதும் உன் கிசஸ் எல்லாம் எனக்கு வேணாம்! என்னை கன்வின்ஸ் பண்ண டிரை பண்ணாத! நீ ரொம்ப மாறி விட்டாய்! உன்னை இந்தியா விட்டது என்னோட பெரிய தப்பு!
மகி அவனை பார்த்து முறைத்து வாயை குறை டா அங்கே போய் மாமாவை இராவடி பண்ணாத நான் என் அப்பாவை வந்து பார்க்க அனுப்புவேன்.
இட்ஸ் டூ மச்!
அட போடா! என சொல்லி மூவரையும் வழி அனுப்பி வைத்தாள்.
தாரா சமையலறைக்குள் சென்று சமைக்க ஆரம்பிக்க மான் விழி அவள் பின்னால் சென்று விட்டாள்.
அவள் வருவதை கண்ட தாரா, நீங்க உட்காருங்க போய் ரெஸ்ட் எடுங்க!
மகி, இது எல்லாம் நாம் தான் உங்களுக்கு செய்து போடணும் ஆனால் நீங்க பார்த்து கொள்கிறீர்கள்!
தாரா, இது எனக்கு ஆத்மார்த்தமாக பிடித்து இருக்கு!.
என்ன சொல்றீங்க? என அவர்களின் கதையை ஆரம்பித்தனர்.
உதயன் டீவியை ஆன் செய்து பார்த்து கொண்டு இருந்தான்.
மகி, இவனை எப்டி பிடித்தது? நீங்க எவ்ளோ பெரிய நடிகை இவனை எப்டி?
தாரா சிரித்து கொண்டே அவர் ரொம்ப அமைதி அதிகமா பேசவே மாட்டாரு!
இது தான் உங்களுக்கு பிடித்த விஷயமா!
இல்லை என்னை யாருன்னு தெரிந்தும் ரொம்ப சாதாரணமா ட்ரீட் பண்ண அவரோட பிகேவியர், பெர்சனாலிட்டி என்னை ரொம்ப அற்றக் பண்ணிடுச்சு! என தாரா சொல்லி கொண்டு இருக்க சூர்யா கிட்ட இருந்து போன் வந்தது.
மகி, சொல்லுங்க!
ஹே அந்த நிதின் இருக்கானா!
இல்லங்க!
சூர்யா, அவங்க ரெண்டு பேரும் கிளம்பி விட்டார்களா?
வருண் அண்ணா ரெண்டு பேரையும் கூட்டி போய்ட்டாரு!
சூர்யா துள்ளால் குரலில் குதுகளித்து கொண்டே ஹே இன்னிக்கி சீக்கிரம் வீட்டுக்கு வரேன் டி உனக்கு ஒரு சர்பிரைஸ் இருக்கு டி! மகி யூ! என எது எதோ சொன்னவன் அவள் பேசும் முன் போனை வைத்து விட்டான்.
மகி மனதில் அய்யோ என்ன பேச்சு ஒரு மார்க்கமா இருக்கு டெய்லி எதாவது அவதாரத்தில் வர போறாரு அப்டின்னு தெரியலயே!. இவங்க ரெண்டு பேரும் இங்கே நம்ம வீட்டில் இருக்காங்க என நினைத்து கொண்டே முகத்தில் வியர்வை துளிகள் மின்ன அவள் மீண்டும் சூர்யாவுக்கு அழைத்தாள்.
அவன் தான் எடுக்க வில்லையே! சூர்யா அவன் வேலைகளில் பிசியாகி விட்டான்.
மான் விழி கீழே குனிந்து போனை நோண்டி கொண்டே வெளியே வந்து மீண்டும் மீண்டும் முயற்சி செய்தாள். ஆனால் சூர்யா எடுக்கவே இல்லை.
தாரா சமைத்து கொண்டே மான் விழிக்கு ஜுஸ் போட்டு எடுத்து வந்தாள்.
என்ன ஆச்சு?
ஒன்னும் இல்லங்க!. என அவள் அவனுக்கு குறுஜெய்தி அனுப்பி விட்டு போன் வைத்தாள்.
தாரா, ஹலோ மேடம் கொஞ்சம் இதை வாங்கி குடிங்க இல்லன்னா உங்க அண்ணன் என்னை தான் முரைப்பார்!.
மகி திரும்பி அவளை பார்த்து கையில் உள்ள ஜுஸ் வாங்கி குடித்தாள்.
தாரா, வேற எதுவும் வேணுமா சொல்லுங்க நாண் வேஜ் வாங்கிட்டு வர சொல்லவா!.
மகி ஆச்சரியமாக இந்த அளவுக்கு எப்டி ஒருத்தரால் மாற முடியும்! உங்களை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கு!
தாரா புன்னகையுடன் எனக்கு அந்த அளவுக்கு அதாவது என்னையே மறக்கும் அளவுக்கு உங்க அண்ணன பிடிக்கும்!.
மகி சிரித்து கொண்டே ஒரே லவ் போல! ஆனால் அவனை இது மாதிரி பார்க்க எனக்கு சகிக்கள எல்லாமே புதுமையாக இருக்கு!.
அவருக்கு என்ன குறைச்சல்!
மகி சிரித்து கொண்டே அது உங்களுக்கு எப்டி சொல்ல அது உதயனை நான் இப்படி பார்த்ததே இல்ல உங்க கிட்ட அவன் இப்படி இருப்பது ஹேப்பி தான் ஆனால் எங்களுக்கு இது புதுசு! அதை பற்றி சொல்ல வந்தேன்! அதை விட முக்கியமா எங்க அம்மாவை எதிர்த்து இவ்வளவு வேலை செய்வான் அப்டின்னு நான் கனவில் கூட நினைத்தது இல்ல! ஆனால் நிஜத்தில் நான் யோசிக்காத பல விஷயம் நடக்குது அதில் நீங்களும் ஒன்னு தி சேண்டல் வுட் ஆக்டர் ஹீரோயின் என்னோட அண்ணி!.
தாரா, நீங்க அந்த அளவுக்கு எல்லாம் சொல்லும் அளவு நான் வர்த் இல்ல! என அவர்கள் இருவரும் பள்ளி தோழிகள் போல் ஒட்டி கொண்டனர்.
அப்படியே மாலை ஆனது. அவன் நேராக அவளுக்கு இன்ப அதிர்ச்சி தர அனைத்தும் தயாராக வாங்கி இருந்தான். அதே துள்ளல் சிறிதும் குறையாமல் வீட்டை அடைந்தான்.
சூர்யா கதவை திறக்க …?
மகி…?
தொடரும்.
Episode 266
இங்கே சூரியா முகத்தில் புன்னகையுடன் தனிஸ்க் நகை கடைக்கு சென்றான். அவனுக்கு ரத்தன் டாட்டா மேல் எப்பொழுதும் ஒரு ஈர்ப்பு உண்டு அதனால் அவன் அதிகம் வாங்கும் பொருட்கள் அனைத்தும் டாட்டா என்ற பெயரே அவனுக்கு இன்ஸ்பிரேசன் தான்!
இந்த முறை சூர்யா அவளுக்கு (எமரால்ட் )மரகத பச்சையில் ஆன்டிக் வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு அழகான நெக்லஸ் அதோடு ஒற்றை பெண்டன்ட் மரகத கல்லில் வேலைபாடுடன் ஒற்றை மான் கொம்பு ஆடர் செய்து வாங்கி இருந்தான். கைகளில் எளிமையாக மரகத கல் பதித்த வளையல் பார்க்கவே அவ்வளவு அழகு! சூர்யா நினைவில் அனைத்தும் மான் விழி தான் இருந்தாள். அவன் சிந்தையில் அவளை நிறைத்து அனைத்தும் தேர்வு செய்தான். ஆனால் ஒன்றை தவிர!.
அந்த கடையில் வேலை செய்யும் பணிப்பெண் சார் இதை ரிசெல் பண்ணும் போது கல்லு மதிப்பு இல்ல சார்! கிட்ட தட்ட நீங்க 25 லட்ச மதிப்புக்கு நகை வாங்கி இருக்கீங்க! எனக்கு இதை சொல்ல தோணுச்சு அதான்!
சூர்யா ஒரு குட்டி புன்னகையை உதிர்த்து இது டாட்டா புரோடெக்ட் உலகத்தில் எங்கே போய் மாற்றினாலும் இந்த பெயருக்கு தனி மதிப்பு இருக்கு அதை விட இதை நான் எப்பொழுதும் விற்கும் எண்ணம் இல்லை! என கூறினான். அந்த பெண்ணுக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஓகே சார் எங்க கடையின் மேல் நீங்கள் வைத்து இருக்கும் நம்பிக்கைக்கு ரொம்ப நன்றி!..
சூரியா இட்ஸ் ஓகே! என சொல்லி கொண்டு அதை திருப்தியுடன் ஒரு முறை பார்த்தவன் நேராக வெளியே வந்தான்.
கடையை விட்டு வெளியே வந்ததும் காற்றில் மல்லிகை மனம் வீசியது. சூர்யா மனதில் ம்ம் உன்னையும் வாங்கி விடுகிறேன் என காந்த புன்னகை சிந்தி கொண்டே அவளின் கூந்தலுக்கு ஏற்ப இரட்டை சரம் வைக்க வேண்டும் என்று ஒரு ஆறு முழம் வாங்கினான்.
அதன் பின் உற்சாகத்துடன் சரி ஓகே இப்போ நேரா வீட்டுக்கு போறோம் ஆன்லைனில் நாண் வெஜ் ஆடார் பண்றோம் அவன் டோர் டெலிவரி பண்ணதும் என் சண்டைக்கோழி க்கு பிடித்த சிக்கன் இல்ல சூரியா இப்போ அவள் வயிற்றில் இருக்கும் என்னோட குட்டி மான்க்கு தான் சிக்கன் கேட்குது போல அந்த மகி எப்போ நாண்வெஜ் சாப்பிட்டு இருக்கா! சரி அதை ஆடர் பண்ணி சமைத்து அழகா ஒரு கேண்டில் டின்னர் அதுக்கு அப்புறம் எனக்கு மகி தான் டெஸர்ட் என பல கனவுகளுடன் வீட்டுக்கு கிளம்பினான்.
காரில் பயணிக்கும் போது ஸ்டியரிங் பிடித்தானோ என்னவோ அடிக்கடி அந்த மல்லிகை தான் கண்ணுக்குள் வந்து நின்றது. எப்படியோ இந்த ஒரு வாரம் நமக்கு எந்த தொல்லையும் இல்ல! அந்த மிதுன் ராஸ்கல் ஊருக்கு போய்ட்டான்! என நினைத்து கொண்டு வந்தான். ஆனாலும் மனதில் “இப்படி ஆடி கொண்டு ஊருக்கு போறான் இதுக்கு என்னத்தை சொல்ல!”
இங்கே உதயன் சோபாவை விட்டு நகரவே இல்லை அவன் பார்வை முழுவதும் இரு பெண்களின் மீது தான் இருந்தது. அவ்வப்பொழுது தன் காதல் மனைவி ஆனால் அதிகமாக மான் விழி மீது தான் இருந்தது.
தாரா,இத்தனை முறை உங்க அண்ணா கெஞ்சுகிறார் தானே பிளீஸ் அவர் கிட்ட பேசுங்கள் பிளீஸ்!
மகி, உங்களுக்கு எங்க அம்மாவை பற்றி எதுவும் தெரியுமா!
தாரா அமைதியாக பார்க்க மகி, எனக்கு இப்போ வயசு 27 இந்த 26 வருசம் எங்க அம்மாவுக்கு என்னை பிடிக்காது. வெறுப்பு தான் ஆனால் அந்த பிடிக்காத விஷயத்துக்கு காரணம் ஒன்னு தான் நான் அப்படியே என்னோட ஆத்தா ஐ மின் என் அப்பாவுடைய அம்மா போல! 26 வருசம் என்னை மோசமா ஒதுக்கல பட் எங்க அம்மாவுக்கு பிடிக்காது அப்டின்னு தெரியும் பாசம் ஒரு மூலையில் இருக்கும் தான் அதை சில நேரத்தில் வெளி காட்டி இருக்காங்க!.
இப்போ என்ன சொல்ல வரீங்க!.
மகி புன்னகையுடன் இந்த 27 வருசம் கழித்து தான் எங்க அம்மா என் கூட ஒட்டி இருக்காங்க. ஆனால் உதயன்! உதயன் அப்படியே எங்க மாமா போல!.
யாரு?
ம்ம் ஶ்ரீ மதி அப்பா!
தாரா, ஹான் அவரோட ரிசெம்பெல் கொஞ்சம் இருக்கு!.
மகி ஆமாம் இல்லை என்று தலை அசைத்து எங்க அப்பா போலவும் இருப்பான்.
ஹான் சரி தான்!.
மகி, எங்க மாமாவை உரித்து பிறந்த அவனை இந்த 33 வருஷமும் தாங்கு தாங்கு என தாங்கி இருக்காங்க ஆனால் இந்த ஒரு விஷயம் இந்த கல்யாண விஷயத்தில் உடனே தூக்கி போட்டு விட்டார்கள்!
தாரா சோகமாக அவங்க மனசு மாறாதா! என ஏக்கத்துடன் கேட்டாள்.
மகி, உங்களுக்கு உண்மையை சொல்லவா!
தாரா, கொஞ்சம் எதிர் பார்புடன் பார்க்க
மகி முகத்தை திருப்பி கொண்டு உங்களுக்கு குழந்தையே பிறந்தாலும் எங்க அம்மாவுக்கு ஆயிரம் சேவை நீங்க செய்தாலும் எங்க அம்மா மாற மாட்டார்கள்!
தாராவின் இதயம் வேகமாக துடித்தது. மகி, ஆனால் மாற கூட வாய்ப்பு இருக்கு!
அவள் கண்ணீர் வழிய என்ன சொல்றீங்க?
மகி, எங்க அம்மா என் விஷயத்தில் 27 வருசம் கழித்து மாறி இருக்காங்க அதே போல் இன்னும் நிறைய வருசம் ஆகலாம்!
தாரா அழுதே விட்டாள். மகி, பிளீஸ் உங்களை கஷ்ட படுத்த சொல்லல நீங்க கேட்டீங்க நான் சொல்றேன்! எங்க அம்மா வைத்தது தான் சட்டம்! இதில் யாரும் தலையிட முடியாது. நீங்க வீணாக கவலை பட கூடாது அப்டின்னு தான் சொன்னேன்.என் அம்மாவுடைய மனசில் அடி ஆழத்தில் ஶ்ரீ மதி தான் உதயன் பொண்டாட்டி அப்டின்னு பதிந்து போச்சு! அதனால் கொஞ்சம் என நிறுத்தி விட்டு சொந்த பொண்ணு என் கிட்டயே இப்படி என்றால் உதயன் அண்ட் நீங்க! கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு!
தாரா அவளை வெற்று பார்வை பார்த்தாள். மகி உங்க பார்வைக்கு அர்த்தம் புரியுது எதுக்கு நான் உங்க கிட்ட பேசுகிறேன் என நீங்க நினைக்கலாம்.
தாரா இல்லை என்பது போல் தலை அசைத்தாள். .
மகி, மை விழி என் அம்மா போல! அவள் அதுக்கும் மேல் ஆனால் நீங்க எந்த தப்பும் பண்ணல அண்ணா கொஞ்சம் அம்மா கிட்ட உங்களை பற்றி சொல்லி இருக்கணும்!
தாரா தேம்பி அழ ஆரம்பித்தாள்.
மகி அவள் கையை பிடித்து கொண்டு இது உதயனுக்கு தெரியும் அதான் இப்படி இருக்கான்! ஆனால் காதல் கல்யாணம் என்றால் இது சாதாரணம் எங்க வீட்டில் எல்லாமே எங்க அம்மா நிச்சயிக்கும் முடிவு கல்யாணம் தான் அவங்க ஆதிக்கம் செலுத்தும் உதயன் இப்படி செய்து இருப்பது..
தாரா கண்களை மூடி கொண்டாள். மகி, நீங்க இதுக்கு ஒன்னும் பண்ண முடியாது அண்ணி நான் இங்கே நடக்கும் நிதர்சனத்தை தான் சொல்கிறேன். பொய் நம்பிக்கை என்னால் கொடுக்க முடியாது!..
தாரா, இட்ஸ் ஓகே மான் விழி!. என அவள் அழுது கொண்டே கூறிட மான் விழி அவளை அணைத்து கொண்டாள். அவளுக்கும் கண்ணீர் வழிந்தது.
தாரா, உங்க அண்ணா கஷ்ட பட நான் தானே காரணம் நான் அவரை விட்டு என முழுதாக சொல்ல திராணி இல்லாமல் அவள் தேம்பி அழுதாள்.
மகி, அடி வாங்க போறீங்க! நான் இருக்கேன், என் வீட்டு காரார் இருக்கார், கார்த்திக் மாமா, முக்கியமா எங்க அப்பா உங்களுக்கு தான் சப்பொர்ட் அதை விட உதயன் உங்களை விட்டு தர மாட்டான்.
தாரா அவளை நிமிர்ந்து பார்த்து மான் விழி எனக்கு குற்ற குற்ற உணர்ச்சியா இருக்கு!
மகி, இதை சொல்கிறேன் என தவறா நினைத்து கொள்ள வேணாம்!
என்ன?
நீங்க படம்! ஐ மின் குழந்தை பெற்று கொண்டால் கொஞ்சம் மாற்றம் வரும்! எங்க அம்மா அதில் மாறா வாய்ப்பு இருக்கு ஆனால் 100 பெர்சன்ட் என்னால் சொல்ல முடியாது.
தாரா வழியும் கண்ணீரை துடைத்து கொண்டு அதுக்கு நான் ரெடி மான் விழி!.
மகி, உங்களை நடிக்க வேணாம் அப்டின்னு சொல்ல எனக்கு உரிமை இல்ல! ஆனால்!.
தாரா, இல்ல மான் விழி என் கழுத்தில் எப்போ தாலி ஏறியதோ அப்போவே முடிவு செய்து விட்டேன்!.
மான் விழி அவள் கையை பிடித்து அப்போ பிரச்னை இல்ல! இனி எல்லாம் மாறும் என பொய்யாக கூறினாள். அவளுக்கு தெரியும் இந்த இரண்டு விஷயமும் கலை வாணி மனதில் இருக்கும் கோபத்தை குறைக்கும் ஆனால் மனம் அது எப்போதும் மாறாது.
தாரா அவள் கையை பிடித்து நிச்சயம் அத்தை ஏற்று கொள்வார்கள் தானே!
மகி, நீங்க கவலை பட வேணாம் அண்ணி எடுத்ததும் எல்லாம் மாறாது கொஞ்சம் கொஞ்சமாக தான் படிய வைக்க முடியும்!
தாரா, எனக்கு இது போதும் மகி! இது போதும்!.
மகி, சரி நீங்க சாப்பிடுங்க!
இல்ல நீங்களும் வாங்க!
மகி, நான் அவர் வந்ததும் சாப்பிடுகிறேன். கொஞ்சம் லேட் ஆகும்!
தாரா, நீங்க உங்க அண்ணா கிட்ட!.
மகி, என் அம்மா தவறே செய்தாலும் என்னை வெறுத்தாலும் என் அம்மா தான்! இப்போ நான் உதயன் கிட்ட பேசினால் என் அம்மா என் கிட்ட பேச மாட்டார்கள். எல்லாருக்கும் குழந்தை வயிற்றில் இருக்கும் போது அம்மா கூட இருக்க தோணும் ஆனால் நான் என் மாமி கூட தான் இருந்தேன். இந்த பிரசவம் என் அம்மா என் கூட இருக்க ஆசை படுறேன் அண்ணி!
தாரா அதற்கு மேல் எதுவும் பேச வில்லை. மகி படுக்கை அறை செல்ல
உதயன், ஹே அவளுக்கு பசிக்கும் இப்போ பாத் ரூம் போயிருக்கா அதனால் போய் ஜுஸ் கொடு!
தாரா, ஹான் தங்கச்சி பாசம்!
ம்ம் ஆமா பேசினாலும் பேசலன்னாலும் என் தங்கச்சி!
தாரா போறேன் சார் என சிரித்து கொண்டே கூறியவள் அந்த அறைக்குள் நுழைந்ததும் அவள் கண்கள் ஆச்சரியம் ஆகி போனது! அங்கே மான் விழி புகை படங்கள் இருக்க உதயன் , தாரா! தாரா! என அழைக்க அவள் வராமல் இருந்ததும் உள்ளே சென்றான்.
என்ன பண்ற?
தாரா, இது! என முதல் முறையாக அவள் மன கண்ணில் தேஜு தோன்றினாள். கொஞ்சம் வித்தியாசமாக தோன்றியது. இங்கே சூரியா வீடு வந்து சேர்ந்தான். காலிங் பெல் தட்டினான்.
தொடரும்.
Episode 267
தாரா அந்த அறையை ஆச்சரியமாக பார்த்து கொண்டு நின்று இருக்க உதயன் அங்கு உள்ள படங்களை பார்த்து அவளுக்கு பின்னால்” எங்க மாமாவுக்கு மான் விழி மேல் எவ்ளோ இஷ்டம் அப்டின்னு பார்த்துக்க!”
தாரா சட்டென திரும்பி பார்த்தாள். “ம்ம் உண்ம தான் புதிதாக யார் என்றே அறியாத ஒருவர் மேல் எந்த அறிமுகமும் இல்லாமல் திருமணம் செய்த பின் இத்தனை காதல் வருமா! உங்க தங்கை எவ்ளோ அழகா இருக்காங்க! இவங்க ஜோடி ஆன் ஸ்கிரீன்ல கூட சூப்பரா இருக்கும்!”
உதயன், “உன் புத்தியை காட்டி விட்டாய்! ஆக்டரா யோசிக்க கூடாது நாத்தனாராக யோசிக்க வேண்டும் டி!”
தாரா, ம்ம் எப்படி யோசித்தாலும் பொறாமையா இருக்கு! சூர்யா அண்ணாவுக்கு அவங்க மேல் எவளோ பிரியம்! காதல்!..
கண்ணு வைக்காத!..
க்…கிகும்!. என முகத்தை திருப்பி கொண்டாள்.
உதயன், என்ன ஆச்சு?
நீங்களும் என்னை லவ் பண்ணி இருக்கீங்க எனக்காக நீங்க!
உதயன், என்ன தாரா!
ம்ம் உதயன் தாரா!.
உதயன் கண்கள் கூட சிரித்தது. உடனே தாரா, உங்களுக்கு பொண்ணுங்களுக்கு இருப்பது போல் கண்ணு அதில் தானே விழுந்தேன்!
உதயன், என்ன சொல்ற?
தாரா அவன் கைகளை அழைத்து கொண்டு மகியின் திரட்டு புகைப்படம் அருகில் அழைத்து சென்றாள். ம்ம் இங்கே பாருங்க என அவளின் முகம் அனைத்தும் மறைத்து மகி கண்ணு அப்படியே உங்களை போலவே இருக்கு!
உதயன், அப்படி இருக்க வாய்ப்பு இருக்கு நானும் அவளும் கொஞ்சம் அமைதி!
தாரா, ஹான் அது பொய் பார்த்தேன் பார்த்தேன் உங்க அமைதி எல்லாம் மை விழி கிட்ட பேசி சிரித்து என்ன ஆட்டம் போட்டீங்க!.
உதயன் அவன் போனில் முகத்தை பார்த்து ஒரு படம் எடுத்து கண்களுக்கு ஜூம் செய்தான்.
தாரா, என்னை நம்புங்க உண்மையாகவே உங்க கண்ணு அப்புறம் சக்தி கண்ணு நிதின் கண்ணு எல்லாம் ஒரே மாதிரி இருக்கும்!.
உதயன் படத்தில் கவனம் செலுத்தி கொண்டே சக்தி தான் என் மாப்பிள்ளை, யார் அது நிதின்?
தாரா” ச்ச ஆமா நான் எதுக்கு நிதின் பேரை சொன்னேன்!” என யோசித்தாள். உடனே அவளின் போனில் இருந்து நிதின் படத்தை எடுத்தாள்.
அவள் சாதாரணமாக நான் பொய் சொல்லல இது கோஇன்சிடென் தான் இங்கே பாருங்க நிதின் குட்டி கண்ணு , சக்தி கண்ணு, அந்த புருவம் அப்புறம் மகி அப்புறம் நீங்க அச்சு வார்த்தது போல் இருக்கு சரி தான!.
உதயன் பார்வையை கூறாக்கி அருகில் உள்ள மகி மற்றும் சக்தி இருவரும் இருக்கும் படத்துக்கு அருகில் நிதின் படம் மற்றும் உதயன் அவனுடைய புகை படம் என வைத்து பார்த்தான். ஒரு நிமிடம் சாக் ஆகி போனான்.
தாரா, நான் சொன்னது சரி தானே பாருங்க! அப்படியே இருக்கு!
உதயன் முகம் இறுகி போனது. தாரா ஒரு சில நிமிடத்தில் அதை கவனித்து என்ன ஆச்சு!
“உனக்கு புரியலயா! எப்டி இது சாத்தியம் என் தங்கை மகன், நமக்கு பிறக்கும் மகன் என்னை போல் இருந்தால் ஆச்சரியம் இல்லை ஆனால் இந்த நிதின்! இந்த நிதின் அந்த spr பையன் இவன் எதற்கு என்னை போல் இருக்க வேண்டும்!. எல்லா இடத்திலும் இந்த நிதின் என் தங்கை பின்னால் சுற்றி கொண்டு இருக்கிறான். உன்னை தவிர்க்க முக்கிய காரணமே அந்த குரு பிரகாஷ் spr குடும்பம் தான்! ” என உதயன் கடுமையான முகத்துடன் கூறி கொண்டு இருந்தான்.
தாராவுக்கு இப்பொழுது தான் குரு சொன்ன விஷயம் நினைவுக்கு வந்தது. தாரா மனதில் “குரு சொன்னானே மகி அப்புறம் spr இவங்க ரெண்டு பேருக்கும் பிறந்தது தான் நிதின்!” என நினைக்கையில் முகம் குப்பென வியர்க்க தொடங்கியது.
உதயன் தாராவின் போனில் நிதின் படங்களை ஸ்குரோல் செய்து பார்த்து கொண்டு இருந்தான். தாராவுக்கு இதயம் வேகமாக துடிக்க உதயன், ஹே ராட்சசி!
தாரா ஒரு வித பதட்டத்துடன் திரும்பி பார்த்தாள். இங்கே வா மண்டு!.
என் !. என்னங்க!..
உதயன் சிரித்து கொண்டே அடி மண்டு குட்டி இங்கே பாரு என தேஜூ மற்றும் நிதின் இருவரும் இருக்கும் படத்தை நீட்டினான்.
தாரா கைகள் வியர்க்க அதை வாங்கி பார்த்தாள்.
உதயன் ஒரு நிம்மதி பெரு மூச்சுடன் இந்த நிதின் அப்படியே அவனுடைய அம்மாவை போல் இருக்கிறான். பாரு நிதின் அம்மாவுக்கும் அவனுக்கும் ஒரே கண்ணு! நான் கூட ஒரு நிமிடம் பயந்து விட்டேன். என் தங்கை மற்றும் சக்தி நாங்க எல்லாம் ஒரே இரத்தம் இந்த பையன் யாரு டா என நினைத்தேன்.
தாரா அந்த படத்தை பார்த்து விட்டு அப்படியே உதயனை பார்த்தாள். “என்னங்க தேஜூ கண்ணு உங்களை போலவே இருக்கு அப்போ நீங்களும் தேஜுவும்!.” என அவள் கேட்டு கொண்டு இருக்க
என்ன பார்க்கிறீக அண்ணி இது எல்லாம் நான் தான்! என சொல்லி கொண்டே மான் விழி வந்தாள்.
தாரா உதயன் கிட்ட என்னங்க நான் சொல்றது புரியுதா!
உதயன், லூசு மாதிரி உலறாத! எனக்கு ரெண்டு தங்கச்சி தான் அக்கா இல்ல அப்புறம் இதுங்க ரெண்டையும் சமாதானம் பண்ணவே எனக்கு பாதி ஆயிசு முடியும் போல அந்த பொண்ணு என்னை விட பெரியவள் போல இருக்கா!. என வெளியே அழைத்து சென்றான்.
தாரா கொஞ்சம் குழப்பமாக மான் விழி யை பார்த்து புன்னகையுடன் நடந்தாள். மான் விழி, அண்ணி நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க!
உதயன், தாரா அவங்களை சாப்பிட சொல்லு குட்டி பாப்பாவுக்கு பசிக்கும்!.
மகி, அண்ணி அவரு வந்ததுக்கு அப்புறம் தான் நான் சாப்பிடுவேன்!
உதயன் நான் மாமாவுக்கு கால் பண்ணி கேட்கிறேன். தாரா அவளை உட்கார சொல்லு என இருவரும் தாராவை இடை தரகர் ஆக்கி விட்டனர்.
தாரா, நீங்க என்னமோ பண்ணுங்க நான் எல்லாம் சூடு செய்து எடுத்து வருகிறேன் என சொல்லி கொண்டு அவள் கிச்சன் சென்றாள்.
உதயன் போனில் சூர்யா எண்ண டயல் செய்து கொண்டு இருக்க அவன் எடுத்த பாடில்லை..
தாரா எடுத்து வைத்து கொண்டு இருக்க மான் விழி டீவி போட பிளக் ஆன் செய்ய போக காலிங் பெல் அடித்தது.
திரும்ப திரும்ப அடிக்க
நான் பார்க்கிறேன் என மான் விழி கதவை திறக்க” சண்டைக்கோழி!” என கொஞ்சலுடன் அழைத்து அவளை பாயுந்து கட்டி கொண்டான்.
என்னங்க! விடு விடுங்க!.
சூர்யா, மகி! மகி இன்னிக்கி நான் ஹேப்பி டி you know உனக்கு எங்கே தெரிய போகுது! உனக்கு நிறைய சர்பிரைஸ் இருக்கு!. என அவன் வேகமாக அவளை ஒரு கை பிடியில் வைத்து கொண்டு if I like ula la la.. என சொல்லி கொண்டே அவளின் கன்னத்தில் முத்தம் பதித்து இன்னொரு கையில் இருந்து அந்த நகை பெட்டியை நீட்டினான்.
மான் விழி விழி பிதுங்கி அண்! அண்ணி! என தலையை தாரா மற்றும் உதயன் பக்கம் திருப்பினாள்.
சூர்யா அண்ணியா! யாரு டா அது! என பார்வையை திருப்பி பார்க்க
அங்கே தாரா அவர்களின் காதல் சம்பாஸனைகள் பார்த்து தயக்கத்துடன் சிரித்து கொண்டே தலை கவிழ்த்து நின்றாள்.
உதயன் புன்னகையுடன் நின்று கொண்டு இருந்தான்.
சூர்யா அப்பொழுதும் நகராமல் அப்படியே நின்றான்.
மகி வார்த்தையை அழுத்தி கொண்டே என்னங்க இப்போவாச்சும் என்னை விடுங்க!
சூரியா அவளின் காதுகளில் “உன் அண்ணன் ஹனி மூன் போகாம இங்கே என்ன டி பண்றான்! என்னை நிம்மதியாக இருக்க விட மாட்டீங்களா! “
மான் விழி வலுக்கட்டாயமாக அவனிடம் இருந்து விலகி எனக்கு ரொம்ப புழுக்கமா இருக்கு அண்ணி நீங்க சாப்பிட்டு இந்த பெட் ரூமில் தூங்குங்க நான் குளித்து விட்டு வருகிறேன். என அவள் தலை குனிந்து கொண்டே உள்ளே ஓடி விட்டாள்.
தாரா உதடு கடித்து சிரித்து கொண்டே அண்ணா உள்ளே வாங்க! என அழைத்தாள்.
ம்ம் வரேன் மா! என தலையை கோதி கொண்டே வந்தான்.
உதயன், சரி தாரா நம்ம சாப்பிட்டு ஊருக்கு கிளம்புவோம்!
சூர்யா, என்ன மச்சான்! வந்ததும் போறீங்க!
இல்ல மாமா! தேவையில்லாத இடைஞ்சல் எதுக்கு!.
என்ன?
இல்ல மாமா அது வந்து இது உங்க டைம் மகி கூட நீங்க டைம் ஸ்பென்ட் பண்ணனும்!.
சூர்யா, “அதை நான் சொல்லணும் மச்சான்! இங்கே வந்திருக்க பாப்பாவை கூட்டி சுவிட்சர்லாந்து, பாரிஸ், வெனிஸ் லண்டன் அப்டின்னு பறப்பது விட்டு இங்கே உன் தங்கச்சிக்கு சமைக்க கூட்டி வந்திருக்க.. அவள் ஏற்கனவே ஓவரா ஆடுவா இதில் நீங்க இன்னும் கொஞ்சினா தாங்காது!.”
தாரா ஆச்சரியமாக பார்க்க உதயன் புன்னகையுடன் பார்த்தான்.
தாரா, “ம்ம் அதுவும் சரி தான்! சூர்யா அண்ணா போல் கொஞ்ச முடியாதே!”
சூர்யா நாக்கை கடித்து கொண்டான். உதயன், என் தங்கச்சி மேல் கண்ணு வைக்காத!.
“பெரிய தங்கச்சி!” என ஒரே நேரத்தில் சூர்யா மற்றும் தாரா இருவரும் கூறினார்கள்.
ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு ஹைபை அடித்து கொண்டனர்.
சூர்யா,இவனை எப்படி உனக்கு பிடிச்சது. சரியான சிடு மூஞ்சி யா இருப்பான் அதை விட ஓவரா சீன் போடுவான் வானத்தில் இருந்து குதித்த மாதிரி!..
தாரா, அது தான் எனக்கும் தெரியல!
உதயன், நாங்க யார் பின்னாலும் போகல எங்க பின்னாடி தான் எல்லாரும் வருவாங்க நீங்க முதற் கொண்டு நினைப்பு இருக்குமே!.
சூர்யா, என்ன டா!
என்ன மாமா! அது தானே உண்மை! நீங்க தானே மகிய பெண் கேட்டு வந்தீங்க!
தாரா, “இதென்ன கொடுமையா இருக்கு கல்யாண வயதில் பொண்ணு இருந்தால் நாலு பேர் கேட்க வருவாங்க தான!”.
சூர்யா, தாரா பின்ற மா! அய்யோ இதை அவள் முன்னாடி சொல்லணும். ஒரு ஆயிரம் தடவை சொல்லி காட்டுவா! எதுக்கு என்னை பொன் கேட்டு வந்தீங்க வேண்டாம் அப்டின்னு சொல்ல வேண்டியது தானே அப்டின்னு சீனா போட்டு தள்ளுவா! மொத்த குடும்பமும் சீனு பார்ட்டி!
உதயன், மாமா ஓவரா பேசிரீங்க!.
டேய் உலகத்தில் இவள் மட்டும் தான் பொண்ணா வேற பொண்ணு இல்லையா! நான் சொடுக்கு போடும் நேரத்தில் ஆயிரம் பொண்ணை உசார் பண்ணுவேன் டா! சூர்ய தேவ் தெரியுமல்ல!.
உதயன், ஓ அப்டியா!.
சூர்யா, இல்லங்கறயா தாரா இப்போ ட்ரெண்ட் ஹீரோயின் நம்பர் இருக்கா சொல்லு ஜஸ்ட் 5 மினிட்ஸ் போதும் பிளர்ட் பண்ணிடுவேன்.
உதயன், ஹான் இப்போதைக்கு ட்ரெண்ட் ல எனக்கு ஒரு ஹீரோயின் தெரியும்!
யாரு? சிங்கிலா? கமிட்டா?
அது இனி தான் தெரியும்!
சூர்யா, டைம் வேஸ்ட் பண்ணாத சொல்லு டா பெட் டா!.
உதயன், உங்க முதுகுக்கு பின்னாடி தான் இருக்கா ஓவர் ஓவர்!.
எவ அவ?
சூர்யா..?
மான் விழி ..?
தாரா…? உதயன்…?
தொடரும்..
Episode 268
சூர்யா, டைம் வேஸ்ட் பண்ணாத சீக்கிரம் ஒரு பொண்ணு பேர் சொல்லு உடனே பிளர்ட் பண்றேன் பெட் கூட வச்சுக்கலாம்.
உதயன், ம்ம் சொல்லிட்டா போச்சு உங்க முதுகுக்கு பின்னாடி தான் இருக்கா ஓவர் ஓவர்!.
தாரா, அண்ணா பின்னாடி மான் விழி!.
சூரியா, எனக்கு இப்போ புழுக்கம் தாங்கல நான் போய் குளித்து விட்டு வருகிறேன். நீங்க சாப்பிடுங்க!. என எதையும் கண்டு கொள்ளாமல் எழுந்து அவன் ஆபீஸ் பேக் மற்றும் மல்லிகை பூ என அனைத்தும் எடுத்து கொண்டு தலையை குனிந்து கொண்டே உள்ளே செல்ல
அவனுக்கு எதிரில் முறைத்து கொண்டு கைகளை இடையில் வைத்து கொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பார்த்து கொண்டு இருந்தாள்.
உதயன் இது தான் சமயம் என்று “மாமா ஜனனில இருந்து அப்படியே அமுது அப்புறம் சஞ்சனா அப்புறம் கொஞ்சம் அஞ்சனா இப்போ கடைசியாக எதோ ஒரு மீட்டிங்ல மேக்னா அப்டின்னு ஒரு பொண்ணு வழிய வந்து பேசிச்சாமே!” பார்த்து மாமா லிஸ்ட் பெருசா போகுது!.
சூர்யா அச்சோ என கண்ணை இறுக்கி மூடி திறந்தவன். அட ஆமா மச்சான் உன்னை போலவா வீட்லயே ரெண்டு பொண்ணு ஊட்டி விட ஶ்ரீ மதி தாகத்தை தீர்க்க நித்யா! இப்போ ரெண்டும் பண்ண தாரா! நான் அறேஞ்ச் மேரேஜ்! சாரு லவ் மேரேஜ்!
தாராவுக்கு இதையெல்லாம் தெரிந்து இருந்தாலும் கூட முகம் சினங்கி பொறாமை எட்டி பார்க்க தான் செய்தது. உதயன் ஓர கண்ணால் தாராவை பார்த்தான்.
இரண்டு பெண்களும் வெடுக்கென அவரவர் பாதைகளில் சென்றனர். மாமா!.
சூர்யா, இதுக்கு காரணம் நீ! போ உன் ஹீரோயின சமாதானம் பண்ணு!.
உதயன் தாரா அசால்ட்டா சமாதானம் ஆகி விடுவாள். மகி அப்ட்டி இல்லையே!
சூர்யா, மச்சான் அவள் உன் தங்கச்சி இல்ல என் பொண்டாட்டி! என சொல்லி கொண்டே இருவரும் அவரவர் இணைகளின் திசைகளுக்கு சென்றனர்.
சூர்யா கதவை சாத்தி விட்டு அவளை பார்த்தான். மான் விழி பால் கனி பக்கம் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தாள்.
ககும்!.
அவள் அப்பொழுதும் திரும்பாமல் அப்படியே நின்றாள். சூர்யா அவளுக்கு வாங்கி வந்த அந்த நகைகளை எடுத்து கொண்டு அருகில் சென்றான்.
ச்ச தள்ளி போங்க!
சூர்யா, நான் ஏன் தள்ளி போகனும்! தாலி கட்டி இருக்கேன்!. மூணு வரம் கொடுத்து இருக்கேன். என சொல்லி கொண்டே கழுத்தில் அந்த மரகத கல் பதித்த அட்டிகை போட்டு விட்டான்.
ஓ அப்படியா! அப்போ அந்த மேக்னா யாரு!
சூர்யா, ஹே என்ன டி?
“நான் உங்களுக்கு கழுத்தை நீட்டி இருக்கேன். உங்களோட மூணு வார்த்தை பெற்று அதில் ரெண்டு சுற்றி கொண்டு இருக்கு மூன்றாவது இப்போ என்னோட வயிற்றின் உள்ளே இருக்கு!”என சூர்யாவை திரும்பி பார்த்தாள்.
சூர்யா, உன் அண்ணன் சும்மா சொல்றான்!
“இல்ல நீங்க பொய் சொல்றீங்க!”
சூர்யா, சொல்றேன்! அது அவ்ளோ பெரிய விஷயம் இல்ல டி!
மகி, அப்போ அந்த சின்ன விஷயத்தை சொல்லுங்க!
அது வந்து MNC புராஜக்ட்ல நாங்க ரிப்போர்ட் ஐ மின் நம்ம கம்பனி அந்த மேக்னா தான் GM சோ ஆபீஸ் விஷயமா பேசி இருக்கேன்!
மகி, அவ்ளோ தானா!
சூர்யா, “ராட்சசி!” என சொல்லி விட்டு அந்த பொண்ணு என் கிட்ட சிங்கிலா அப்டின்னு கேட்டது.
அதுக்கு சார் என்ன சொன்னீங்க?
நான் உண்மையை சொன்னேன்!
இந்த டயலாக் சீன் எல்லாம் வேண்டாம். என்ன பேசினீங்க அதை மட்டும் சொல்லுங்க!
சூர்யா ஒரு பெரு மூச்சை விட்டு “அந்த பொண்ணு கிட்ட நான் தெளிவா சொல்லிட்டேன். எனக்கு கல்யாணம் ஆகி பத்து வருசம் ஆகுது. ரெண்டு பையன் இப்போ என் மனைவி கெரிங்கா இருக்காங்க!” போதுமா!
மகி, அதுக்கு அவள் என்ன சொன்னா!
சூரியா, அவள் சரின்னு சொல்லிட்டா!
மகி, ஓகே என திரும்பி கொண்டாள்.
சூர்யா அவளின் வயிற்றை தடவி கொண்டே நின்றான். கம்முன்னு நில்லுங்க!.
என்ன டி? எவ்ளோ ஆசையா வந்தேன் தெரியுமா! என அவளின் பின் கழுத்தில் முகம் புதைத்தான்.
நான் உதயன் ரிசப்சன் முடிந்ததும் நம்ம ஆபீஸ் வர போறேன்!.
சூர்யா, வா செல்லம் உனக்காக தான் அந்த சீட் காத்து கொண்டு இருக்கு!. என சொல்லி கொண்டே அவளை அவன் பக்கம் திருப்பினான்.
அவள் அமைதியாக இருந்தாள். இன்னும் கோபமா!
மகி, எனக்கு கால் வலிக்குது!.
சூர்யா நான் தூக்கி வச்சுக்கவா!
நீங்க தள்ளி போங்க நான் உட்காரணும் என சொல்லி கொண்டே அவள் சென்று அமர்ந்தாள்.
சூர்யா, அவளின் கைகளில் அந்த மரகத வளையல் மற்றும் கழுத்துக்கு அட்டுகை என ஆசையாக போட்டு விட்டான்.
அவள் அப்படியே அமர்ந்து பார்த்து கொண்டு இருக்க ஹே ரெஸ்பான்ஸ் பண்ணு ஆசையா வாங்கிட்டு வந்து இருக்கேன்.
“ம்ம்!”
சூர்யா, அவ்ளோ தானா இதை மேக்னாவுக்கு கொடுத்து உஷார் பண்ணனும்!
மகி, போடா! போ!. என கோபத்தில் சொன்னவள் அவனை பார்க்க சூர்யா முறைப்பது போல் வைத்தான். அவள் திரும்பி கொள்ள என்ன டி சொன்ன? என கோபமாக பேசி வந்து அணைத்து கொண்டான்.
மகி, சாரி தெரியாமல் சொல்லிட்டேன்!
சூரியா, எப்போவாச்சும் சொன்னால் பிடிக்கும் அதுவும் நம்ம தனியா இருக்கும் போது சொன்னால் அதை விட அந்த நேரத்தில் சொன்னால் இன்னும் நல்லா இருக்கும்! சொல்லுவியா!
எந்த நேரம்? என கண்ணை சிமிட்டி கொண்டே கேட்டாள்.
“ஹே சீன் போடாத டி!”என அவளுக்கு வாங்கி வந்த மல்லிகை பூவை வாங்கி முகர்ந்து கொண்டே அவளிடம் நீட்டினான்.
அவளுக்கு பூவை பார்த்ததும் கண்கள் விரிந்தது. சூப்பரா இருக்கு! .
“ஹே உனக்காக டாட்டா புரொடெக்ட் வாங்கிட்டு வந்து இருக்கேன்! ஆனால் நீ இந்த மல்லிகை பூவில் சேட்டிஸ்வை ஆகிற!.”
மகி, “எனக்கு இந்த மாதிரி நகை எல்லாம் பிடிக்கும் ஆனால் உங்களுக்கு செலவு வைப்பது போல் எனக்கு தோணுது!”
“லூசா டி நீ! எவ்ளோ ஆசையா வாங்கி கொடுத்து இருக்கேன். ஐ திங்க் ரொம்ப நாள் கழிச்சு இப்போ நான் வாங்கி கொடுத்து இருக்கேன். பிடித்து இருக்கா!”
மகி கண்ணாடி பார்க்கனும் அப்போ தான் தெரியும் சொல்ல சூர்யா அவளை வெடுக்கென தூக்கினான்.
“இப்போ எதுக்கு தூக்குனீங்க!”
“நீ தான டி கால் வலிக்குது அப்டின்னு சொன்ன அப்புறம் என் சின்ன குட்டிக்கும் வலிக்கும்!”
“நான் சும்மா சொன்னேன்!”
இருந்தாலும் ஓகே என அவளின் முகத்தை பார்த்தான்.
நமக்கு கல்யாணம் ஆகி 10 வருசம் ஆக போகுது எதுக்கு இப்போது கூட வச்ச கண்ணு வாங்காம எதையோ மிட்டாய் கடைய பார்ப்பது போல் பாற்கிரீங்க!
சூர்யா, “அது சொன்னா புரியாது! ஆயிரம் வருசம் ஆனாலும் உன்னை பார்த்திட்டு தான் இருப்பேன்!”
கண்ணாடியின் முன் நிற்க வைத்தான். சூர்யா “எப்டி இந்த செலக்சன்!”
ம்ம் என புன்னகையுடன் கீழே குனிந்து கொண்டாள்.
“கொஞ்சம் உன்னோட முத்து பற்களை காட்டு டி! ஆசையா இருக்கு!”
அவள் மெதுவாக புன்னகையுடன் நிமிர்ந்தாள். ம்ம் செம்ம போதை!
உடனே அவள் புருவம் நெருக்கி பார்க்க சூர்யா சும்மா சும்மா டி!
“பிராடு!”
அது நீ தான் என பூவை சூட சென்றவன்.
மான் விழி, என்ன ஆச்சு?
பாப்பா இருக்கு அதனால் அவளுக்கு ஒரு ரெண்டு முழம் கட் பண்ணி வச்சு விடுவோம்!
மகி நிறைவான புன்னகையுடன் அவன் பக்கம் திரும்பி அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள்.
சூர்யா இங்கே! என உதட்டை காட்டினான்.
மகி அவன் கழுத்தை இழுத்து ஒரு முத்தம் மட்டும் ஒற்றி எடுத்தாள்.
சூர்யா அதை பிடித்து கொண்டான். மகி கண்ணை மூடி கொண்டு அவன் முத்தத்தில் கரைந்து கொண்டு இருக்க சூர்யா மெதுவாக இதழ் பிரித்து அவளை விட்டான்.
மகி கொஞ்சம் மூச்சு பிடித்து கொண்டே அவனை பார்க்க சூர்யா, ம்ம் என மீண்டும் ஒரு ஒட்டுதல் கொடுத்து விட்டு சரி வா சாப்பிடலாம்! என அவளை வெளியே கூட்டி சென்றான்.
*******
தேஜூ நேராக வீட்டுக்கு வந்ததும் சூர்யா பேசிய அனைத்தையும் நினைக்க நினைக்க உள்ளே தகித்து கொண்டு இருந்தது.
பெங்களூரில் இருக்கும் அவர்களின் கெஸ்ட் ஹவுசில் இருந்தனர். நாதன் தயக்கத்துடன் உள்ளே வந்தார்.
“டாடி இப்போ எதுக்கு தயங்கி தயங்கி வரீங்க இந்த நாலு வருடத்தில் உங்க பொண்ணு நிறைய சம்பாதித்து இருக்கிறாள். அதனால் நீங்க தயங்க வேணாம் இது உங்க பொன்னு வீடு!”
நாதன், அப்படி இல்ல மா!
தேஜூ நாதனுக்கு அறையை காட்டி விட்டு டாடி நீங்க ஃப்ரெஷ் ஆகுங்க எனக்கு இப்போ முக்கியமா கால் பேசணும் என சொல்லி விட்டு அவள் செல்ல நாதன் குளித்து ஃப்ரெஷ் ஆகிட அறைக்கு சென்றார்.
தேஜூ அடுத்த திட்டத்தை செயல் படுத்த ஆரம்பித்தாள். .
“ஹலோ அங்கில்! நான் தேஜூ பேசிறேன்!”
சொல்லு மா என கோவிந்த் பதில் அளித்தார்.
தேஜூ, ரிசப்சன் ஐ மின் உதயன் – தாரா ரிசப்சனுக்கு உங்க பிஸ்னஸ் சர்க்கில் ல இருந்து எல்லாரையும் இன்வைட் பண்றீங்களா!
இதை பற்றி நான் யோசிக்கவே இல்லையே மா!
தேஜு, ஒன்னும் இல்லை நீங்க கூப்பிடுவது போல இருந்தால் அவங்க தமிழ் நாட்டில் வைக்க வேணாம். இங்கே பெங்களூரில் வைத்தால் நீங்களும் உங்க சர்க்கிலில் எல்லாரையும் இன்றோ கொடுக்க முடியும் அப்டின்னு தோணுச்சு இட்ஸ் ஓகே அங்கில் என அவள் போனை வைக்க போக..
கோவிந்த், ஒரு நிமிடம் மா!
“சொல்லுங்க அங்கிள்! யூ ஆர் ஆல்வெஸ் பிரிலியன்ட் அப்படி இல்லன்னா spr சாம்ராஜ்யம் இந்த அளவுக்கு பெருசு ஆகி இருக்க பாதி காரணம் நீ தான்!”
என்ன சொல்றீங்க?
கோவிந்த், நீ சொல்வதை போலவே நான் அந்த வசந்தனுக்கு போன் பண்ணி என்னோட மாப்பிள்ளை மற்றும் தாரா வரவேற்பை இங்கேயே செய்ய சொல்றேன்!
தேஜி, அங்கிள் இன்னொரு விஷயம்!
சொல்லு மா!
தேஜூ, அவங்க கிட்ட அந்த அளவுக்கு பணம் இருக்காது அதே போல் உங்க மாப்பிள்ளையின் அப்பா சாதாரண ஒரு ரிரையர்ட் பெர்சன் பெட்டர் நீங்க உதயனுக்கு தெரியாமல் மிஸ்டர் வசந்தன், கலை வாணி, சூர்ய தேவ், கார்த்திக், நாலு பேரையும் கூப்பிட்டு இதை பற்றி பேசி வரவேற்புக்கு பணத்தை கொடுத்து செய்ய சொல்லுங்கள்.
கோவிந்த், ஹான் நல்ல யோசனை மா நான் அப்படியே செய்கிறேன்.
தேஜு, சரின்க அங்கிள் நான் வைக்கிறேன் என போன் வைத்தாள்.
கோவிந்த் உடனே காசந்தனுக்கு போன் செய்தார்.
இங்கே சூர்யா – மான் விழி , உதயன் – தாரா மூவரும்..
தொடரும்.
Episode 269
உதயன் ஒரு வித தயக்கத்துடன் தாராவின் பின்னால் சென்றான்.” இந்த மாமா! என நினைத்து கொண்டே சென்றான்…
தாரா சமையல் அறையில் இருந்து அவள் வேலைகளை செய்து கொண்டு இருந்தாள்.
உதயன்,” தாரா! ஸ்மைலி கில்லர்!” என்னடி பண்ற?
தாரா பதில் பேசாமல் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு” வாங்க சாப்பிடலாம்!”
உதயன் வீட்டை சுற்றி பார்வையை பத்திதவன் பார்வை இறுதியாக அவள் மெல் வந்து நின்றது. வேகமாக அருகில் வந்தான்.
வாங்க வந்து சாப்பிடுங்க!
உதயன் மனதில் இந்த கல்யானத்தை கூட அசால்ட்டா பண்ணிட்டோம். ஆனால் இவளை சமாதானம் பண்ண சம்பவம் பண்ணனும் போலயே!
அவள் அவனுக்கு பரிமாறி கொண்டு இருக்க உதயன் அவளின் கையை பிடித்து கொண்டான்.
தாரா எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க உதயன், மகி வரட்டுமே மாமா வரட்டும் ஒன்றாக சாப்பிடலாம்.
ம்ம் சரி என அமர்ந்து கொண்டாள். மற்ற படி எதுவும் பேச வில்லை.
உதயன் விட்டு பார்த்தான். மான் விழி அந்த நகையை கலட்டி வைத்து நகை பெட்டிக்குள் வைக்க அதில் இன்னொரு பெட்டி இருந்தது.
இதுல என்னங்க இருக்கு!
சூர்யா, ஓபன் பண்ணி பாரு இட்ஸ் சர்ப்ரைஸ்!.
அவள் ஓபன் செய்ய போக அதே நேரம் அவள் எண்ணுக்கு மிதுன் அழைத்தான்.
மகி அந்த ரிங் டோன் காதில் கேட்கவும் உடனே அதை பீரோவில் வைத்து விட்டு போனை எடுக்க சென்றாள்.
சூர்யா, அப்படி எந்த VIP கால் பண்றது?
என் பையன் VIP தான்!. என ஆசையுடன் பதில் ஏற்றாள்.
என் நினைப்பு உனக்கு இருக்கா! இல்ல மறந்து விட்டாயா!
டேய் மிதுன்!
“இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல!” நான் இங்கே ஶ்ரீ வீட்டுக்கு வந்தாச்சு!
என்ன ஶ்ரீ வீடா!
ம்ம் பின்ன!
மகி கொஞ்சம் காடுமையுடன் மிதுன் இப்போ நான் சொல்றத நல்லா கேட்டுக்க டா!
“என்ன மா!”
“நீ ஶ்ரீ அப்டின்னு கூப்பிடாத கண்ணா! ஶ்ரீ மதிக்கும் எனக்கும் ஒரே வயசு நீ அவங்களை அத்தை சொல்லணும். அங்கே என்னோட அப்புறம் வசந்தன் தாத்தா, கலை அம்மாச்சி ரிளேசன் எல்லாம் வருவாங்க அவங்க கிட்ட மரியாதையா நடந்து கொள்ள வேணும் பிளீஸ் டா அம்மா உன்னை கெஞ்சி கேட்கிறேன்!”
சரி சரி இனி அத்தை சொல்றேன்!.
ம்ம் என் தங்க பட்டு!
மிதுன், மகி!
ம்ம்!
“எனக்கு நடிக்க பொய் சொல்ல தெரியாது. ஆனாலும் இன்னிக்கு ஒரு நாள் மட்டும் ஶ்ரீ சொல்லிக்கவா! நான் ஶ்ரீ மதி அத்தை கூட தான் தூங்க போறேன்!”
அவளுக்கு என்ன சொல்வது என தெரிய வில்லை என்னமோ செய் என விட்டு விட்டாள்.
மகி, நைட் டின்னர்!
ஶ்ரீ ஊட்டி விட்டாள்.
நிதின் அண்ணா என்ன பண்றான்? என மகி கேட்டு விட்டு பின் நாக்கை கடித்து கொண்டு சூர்யாவை பார்த்தாள். அவன் பெரிதாக கண்டு கொள்ள வில்லை.
அண்ணா சாப்பிட்டு அவங்க டாட் கூட போன் பேசுறான்.
மகி, ரிதம் வராலா!
மிதுன், வருண் மாமா நாளைக்கு அந்த போலீஸ் வீட்டுக்கு கூட்டி போறேன்னு சொல்லி இருக்காங்க!
டேய் அவரு உனக்கு மாமா! அப்பாவோட ப்ரெண்ட்!.
எல்லாரும் டெவில் தான்!.
மகி, நீ டாடி கிட்ட பேசுறயா!
சூர்யா அவளை பார்க்க.. மகி மிதுன் என்ன சொல்ல போகிறான் என கவனித்தாள்.
ஒரு சில நிமிடம் அமைதியாக இருக்க சூர்யா அவளிடம் இருந்து போனை வாங்கி “ஹலோ!”
மிதுன் சிரிப்புடன்” டாடி!”
உன் அம்மா சொல்வதை அப்படியே கேளு குறும்பு பண்ணாம இரு!
ம்ம் சரி!
சரி அவள் கிட்ட தரேன் என போனை கொடுத்து விட்டு அவன் எழுந்தான்.
மகி சிரித்து போன் பேசி விட்டு இருவரும் வெளியே வந்தனர்.
அந்த இடம் மிகவும் அமைதியாக இருக்க சூர்யா அவளின் காதில் “ஹே உன் அண்ணன் ஹீரோயின இன்னும் சமாதானம் பண்ணல தாரா முகத்தை பாரு!”
உங்களுக்கு அவ்ளோ சந்தோசமா! அவங்க லவ் மேரேஜ் உதயா ஈசியா அவங்களை கவுத்து விடுவான்.
ரொம்ப பெருமை தான்! மண்டை மூக்கி என சொல்லி கொண்டே இருவரும் வந்து அமர்ந்தனர்.
தாரா அவர்களை பார்த்ததும் சிரித்து பேசி பரிமாற மான் விழி நீங்களும் உட்காருங்க என அமர வைத்து அனைவரும் சாப்பிட்டனர்.
சூர்யா, ம்ம் சூப்பர் நல்லா குக் பண்ற மா!
தாரா புன்னகையுடன் தேங்க்ஸ் அண்ணா என சாப்பிட ஆரம்பித்தாள்.
தாரா, மான் விழி உங்களுக்கு என்ன பிடிக்கும்!
அவளுக்கு வெஜ் எல்லாமே புடிக்கும் அதிகமா பாவக்கா பிடிக்கும்!
.தாரா ஆச்சரியமாக “பிட்டர் காட்!”..
மகி, எங்க அம்மா சூப்பரா செய்வாங்க எங்க வீட்டில் எல்லார்க்கும் பாவக்கா பிடிக்கும் இவருக்கு கூட பிடிக்கும்!
தாரா, “இன்டர்ஸ்டிங்!”
உதயன் முகம் ஏக்கம் கொண்டது தன் தாயின் நினைவு அதிகம் வந்து செல்ல அதே நேரம் மான் விழிக்கு குமட்டி கொண்டு வந்தது.
சூர்யா அவளின் முகத்தை பார்த்தே கண்டு பிடித்தான். கொஞ்சம் கோபத்துடன் வா மிட் வருதா!.
ம்ம் என வயிற்றை நீவி கொண்டே முகம் எல்லாம் வியர்க்க அமர்ந்து இருந்தாள்.
சூர்யா உடனே வேகமாக கையை கழுவி விட்டு இதுக்கு தான் டி சொன்னேன் எப்போவும் நேரமே சாப்பிடு அப்டின்னு படித்து படித்து கூறினேன். என அவளை திட்டி கொண்டே வாஸ் பேசன் அழைத்து சென்றான்.
மகி, திட்டாதீங்க! என சொல்லி கொண்டே வந்தாள்.
உதயன் எழுந்து கொண்டு மாமா இப்போ ஒகே வா! .
சூரியா, என்ன பண்ணுது!
வாமிட் வருது என சொல்லி கொண்டே சிங்கிள் மொத்தமும் கக்கினாள்.
தாரா பதட்டத்துடன் நிற்க உதயன், கொஞ்சம் தண்ணி சூடா வச்சு எடுத்திட்டு வா!.
அவள் சாப்பிட்ட மொத்தமும் கக்கி விட்டாள். சூரியா மனதில் இத்தனை கக்கி விட்டால் வயிற்றில் ஒன்னும் இருக்காதே! எப்டி இவளுக்கு ஊட்டுவது என யோசித்து கொண்டு இருக்க
.மகி, என்னங்க!
ம்ம் என்ன ஆச்சு?
பினிஷ் பண்ணிட்டேன்!.
சூரியா அவளை முறைத்து தள்ளினான். அதற்குள் தாரா தண்ணீருடன் வந்தாள். நான் பார்த்து கொள்கிறேன் நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க!.
உதயன் என்ன மாமா பேசுறீங்க!
மகி, என்னங்க கொஞ்சம் காற்று வாங்க வேணும்!.
சூர்யா, இன்னிக்கி வாக்கிங் போனியா!
இல்ல என தலை குனிந்து கொண்டே கூறினாள்.
தாரா, அண்ணா திட்டாதீங்க!
சூரியா, இப்போ மணி 10.30 ஆகுது மா அவள் வயிற்றில் ஒன்னும் இல்ல அவ்ளோ சாலாக்கு ஆகி போச்சு!
மகி, உங்களுக்கு தான் சாளாக்கு என சொல்லி கொண்டே அவள் பால் கணிக்கி சென்று விட்டாள்.
தாரா, அண்ணா போய் அவங்கள பாருங்க!. நான்!.
சூர்யா உடையை சரி செய்து கொண்டு அது என் குழந்தை மா! இது என் உரிமை என சொல்லி அவள் கக்கிய அனைத்தும் சுத்தம் செய்து கிரமி நாசினி தெளித்து வாசனை திரவியம் எல்லாம் போட்டு சுத்தம் செய்தான். தாரா அவனை விழி விரிய பார்த்து கொண்டு இருந்தாள்.
இப்படி ஒரு கணவன் யாருக்கு கிடைக்கும்! அவ்ளோ காதல் அவ்ளோ பாசம்! என உறைந்து நின்றாள். சூர்யா மற்றும் மகி இருவரும் அவளின் மனதில் iconic pair ஆகி போனார்கள். சித்தார்த் கூட இப்படி இதன்யாவை பார்த்து கொண்டது இல்லை. அவன் கொஞ்சுவான் அவள் மிஞ்சி பயந்து கொண்டு போவாள். இந்த கண்டிப்பு குட்டி குறும்பு எல்லாம் தாராவின் கண்களுக்கு புதிது
சூர்யா அனைத்தும் முடித்து விட உதயன் , மாமா இப்போ அவளுக்கு பசிக்கும் என்ன பண்றது?
சூர்யா, மாதுளை ரெண்டு உரித்து வையுங்க அப்புறம் ஆப்பிள் தோல் சீவி கட் பண்ணுங்க ஸ்ட்ரா பெரி இருக்கு அதை கழுவி எடுத்து வையுங்க நான் ப்ரெஸ் ஆகிட்டு வரேன்!.
தாரா அவன் சொன்னதை போலவே அனைத்தும் எடுத்து வந்து செய்ய ஆரம்பித்தாள்.
உதயன் அவள் கையில் இருந்து வாங்கி கொண்டு நீ பசி தாங்க மாட்ட நான் செய்கிறேன் கொடு என பிடிங்க.
ச்ச விடுங்க! என தட்டி விட்டு அனைத்தும் தயார் செய்தாள். சூர்யா குளித்து முடித்து வெளியே வந்ததும் மூவரும் பால் கனிக்கி சென்றனர்.
“மகி!”
அவள் திரும்பி அவர்களை பார்த்ததும் வெடுக்கென செல்ல சூரியா, சரி ஸாரி வா வந்து சாப்பிடு!
மாட்டேன்!.
ஹே என்ன டி வேணும்!.
எனக்கு தான் சாலாக்கா!
தாரா, whats mean by சாலாக்கு!..
உதயன், இப்டி கெஞ்சும் போது மிஞ்சி திமிர் காட்டுவது!
மகி தன் அண்ணனை பார்த்து முறைத்தாள்.
உதயன் கோபமாக” வாங்கி சாப்பிட மாட்டியா மாமாவை கெஞ்ச வைத்து கொண்டு இருக்க!”
மகி கண்களில் கண்ணீருடன் பார்க்க சூர்யா, “மச்சான்! என்ன டா பண்ற! இந்த நேரத்தில் அவங்க கொஞ்சம் ஃப்ரக்சுவேசன்ல இருப்பாங்க மிரட்ட கூடாது!”
உதயன் அவளை பார்த்து “சாரி மகி!”
மகி அவனை கண்டு கொள்ளாமல் அண்ணி உங்க கையில் என்ன?
தாரா அந்த பழங்களை காட்டிட அதை வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள்.
சூர்யா, பசிக்குதா!
மகி, எனக்கு ஆப்பிள் வேணாம்! மாதுளை வேணாம் ஸ்ட்ரா பெரி போதும்! அப்புறம் சாத்துக்குடி வேணும்!.
சூர்யா, அதுக்கு நான் தூத்துக்குடி போகனும்!
மகி, வேணும்!
சூர்யா, இன்னும் நடு சாமத்தில் சொல்லு டி. எத்தனை தரவை சொல்லி இருக்கேன். உனக்கு தேவையான திங்க்ஸ் தீர்ந்து போனால் வாட்ஸ் அப் ல அப்படி இல்லன்னா நார்மல் மெசேஜ் பண்ணுண்ணு சொல்லி இருக்கேன்
உதயன், மாமா நான் போய் வாங்கிட்டு வரட்டா! இது கொஞ்சம் தான் பசியை அடக்குமா! பத்தாது நைட்டு பசிக்கும்.
மகி, இட்ஸ் ஓகே அண்ணி இதுவே போதும் நீங்க போய் சாப்பிடுங்க நான் இங்கேயே இருக்கேன். ஏங்க நீங்களும் போங்க!.
தாரா, இல்ல பரவாயில்லை..
சூர்யா, பாப்பா நீ போ மா! மச்சான் போங்க! என அனுப்பி வைத்தான்.
கோவிந்த் வசந்தானுக்கு போன் செய்தார்.
“ஹலோ!”
“சொல்லுங்க!”
கோவிந்த், நான் தாராவுடைய அப்பா பேசுரென்!.
வசந்தன் திடுக்கிட்டு “சொல்லுங்க சார்!” என கூறினார்.
கோவிந்த் அவரின் மரியாதையை கண்டு வியந்து விட்டு நாளைக்கு உங்களை நேரில் பார்க்கனும்?
வசந்தன், இங்கே வரவேற்பு வேலை போயிட்டு இருக்கு சார்!
கோவிந்த், அதை பற்றி பேச தான் வர சொல்றேன்!
வசந்தன் பதட்டத்துடன்” என்ன ஆச்சு சார்!”
கோவிந்த், “எல்லாம் நல்ல விஷயம் தான் நீங்க பதட்ட படாதீங்க!” நாளைக்கு வரும் போது உங்க மனைவி அப்புறம் உங்க மருமகன்கள் ரெண்டு பேரையும் அழைச்சுட்டு வாங்க!”
வசந்தன்,” சரிங்க சார்!” என போனை வைத்தார்.
கலை எழுந்து கொண்டை போட்டு கொண்டே யாருங்க இந்த நேரத்தில்?
வசந்தன், நம்ம மருமகளின் அப்பா!
கலை இதை கேட்டதும் கடுப்பாகி அந்த ஆளை நீங்க எதுக்கு சார் சொல்றீங்க! நீங்க படிச்ச முட்டாகளாக நிருபிக்கிரீங்க!
வசந்தன், நம்ம சாதாரண இடம் டி அவங்களுக்கு மரியாதை கொடுத்து தான் ஆகனும்!
கலை முகத்தை கோபமாக வைத்து கொண்டு அந்த ஆளுக்கும் சரி நமக்கும் சரி வெறும் ஆறு அடி தான்! இப்போ அது கூட இல்ல கரெண்ட் ல வச்சா வெறும் பவுடர் தான்! என்னத்தை சொல்லி என்னத்தை பண்றது நம்ம வீட்டுக்கு வந்து வாய்த்தது அப்படி இருக்கு! என் தலை எழுத்து!
கலை எதுக்கு டி இப்படி பேசுற?
கலை குத்து காலிட்டு அமர்ந்து கொண்டு எல்லாம் விரக்தி தான் என் புருசன் நாட்டுக்கு தலைவனா இல்லன்னா கூட நம்ம குடுமத்துக்கு தலைவன் கூடவே என் மனசுலயும் தான் என மருகியவள். நம்ம பொண்ணை கட்டி கொடுத்த சம்மந்தி வீட்டில் கூட உங்களை இப்படி நடத்தல ஆனால் என் வயிற்றில் நான் பெத்த அந்த கடுவன் நாய் உங்களை இப்படி ஒரு நிலையில் தள்ளி விட்டு விட்டதை என்னால் தாங்க முடியல என கண்ணீர் விட்டார்.
வசந்தன் தன் இணையின் உயிரானவள் கவலை புரியாமல் இல்லை. மனது அவருக்கும் கலங்க தான் செய்தது. யாருக்கு என்ன தீங்கு செய்தோம் என நினைத்து கொண்டு இருந்தார்.
கலை கண்ணை துடைத்து கொண்டு இப்போ அந்த ஆளுக்கு என்னவாம்?
வசந்தன், “நாளைக்கு உன்னை, என்னை, நம்ம மாப்பிள்ளைகள் ரெண்டு பேரையும் வர சொல்லி இருக்காரு எதோ பேசணுமாம்!”
கலை, நம்ம சரி ஆனால் மாப்பிள்ளைகளை எதுக்கு வர சொல்லணும்!
வசந்தன்….?
தொடரும்..
Episode 270
தாரா மற்றும் உதயன் இருவரும் உணவு மேஜைக்கு வந்து அமர்ந்தார்கள். சூரியா உள்ளே வந்து அவனது உணவு தட்டில் இன்னும் கொஞ்சம் போட்டு கொள்ள வர
தாரா, அண்ணா வெயிட் பண்ணுங்க! சூடா போட்டு தரேன்!.
இட்ஸ் ஓகே மா நான் பார்த்து கொள்கிறேன். இதிலேயே போட்டு கொடு!
உதயன், உட்காருங்க மாமா!
உன் தங்கச்சி அங்கே தனியா இருக்கா நான் அங்கே போறேன்!.
தாரா அவன் கையில் உணவுகளை போட்டு கொடுக்க வாங்கி கொண்டு சென்றான்.
மான் விழி கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பித்தாள். சூர்யா அவளை உரசி கொண்டே வந்து அமர்ந்தான்.
மகி முறைத்து கொண்டே தள்ளி அமர்ந்தாள். சூர்யா ஓவரா பண்ணாத என மீண்டும் நெருங்கி அமர்ந்து இடையில் ஒரு கை பதித்து கொண்டே சாப்பிட்டான்.
என்ன பண்றீங்க?
சாப்பிடுறன்!.
மகி, இந்த கை!. என்ன பண்ணுது!.
சூர்யா அந்த சிக்கனை கடித்து கொண்டு அது கிரிப்க்கு வச்சு இருக்கேன். என மென்று கொண்டு அவளை பார்த்தான்.
என்னை எப்டி திட்டிநீர்கள்! உங்க கையை எடுங்க!.
முடியாது!
எடுங்க!.
சூர்யா, முடியாது போடி என அந்த அசைவ உணவு சாப்பிட்ட இதழ் கொண்டு அவள் கன்னத்தை கடித்தான்.
மகி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முகம் சுருக்கி முகத்தை துடைத்தாள்.
சூர்யா, கம்முன்னு சாப்பிடு இல்ல நெக்ஸ்ட் இரண்டு வரி கவிதை யை பபுள் மெல்வது போல் கடித்து முழுங்கி விடுவேன்!
மகி, முறைத்து கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள்.
******
தாரா முகத்தில் மென் புன்னகையுடன் சிரித்து கொண்டே சாப்பிட்டாள்.
உதயன், என்ன மேடம் சிரிப்பு எல்லாம் பயங்கரமா இருக்கு!.
கீ!. க்கும்!. என அவள் உதட்டை சுளித்து முறைத்து கொண்டே சாப்பிட்டாள்.
உதயன், தாரா!
தாரா! என அழைத்தான்.
அவள் திரும்பவே இல்லை. இரு டி! என நினைத்து கொண்டான்.
உதயன், ஹே தாரா!
எனக்கு பேச இஷ்டம் இல்லை ஐ மின் சாப்பிடும் போது பேச கூடாது.
“அப்போ சாப்பிடும் போது சிரிக்கலாமா! ரொம்ப ரொம்ப ஓவரா பண்ற டி எல்லாம் என் நேரம்!”
தாரா முடியை ஒதுக்கி கொண்டு சாப்பிடுவதில் கவனம் செலுத்தினாள்.
உதயன் அதன் பின் எதுவும் கண்டு கொள்ள வில்லை. அவர்கள் நால்வரும் சாப்பிட்டு முடித்தனர்.
தாரா சமையலறை சென்று பால் காய்ச்சி கொண்டு இருக்க உதயன் மகிக்கு நைட் பசித்தால் சாப்பிட வேணுமே என மாதுளை உரித்து கொண்டு இருந்தான்.
சூர்யா,தாரா!
ம்ம் சொல்லுங்க அண்ணா என்ன வேணும்! கொஞ்ச நேரம் இருங்க பால் காய்ச்சி கொண்டு இருக்கேன். மான் விழிக்கு கொடுங்க!
சூர்யா, அவளுக்கு பால் பிடிக்காது!
தாரா, அப்போ பூஸ்ட், ஹார்லிக்ஸ் எதுவும் புடிக்குமா!
சூர்யா, நான் கனவில் இருக்கேனா!
தாரா , என்ன சொல்றீங்க!
சூர்யா ஆச்சரியமாக” எப்டி இப்படி இருக்க முடியும் பழக்கமே இல்லாத அதுவும் அறிமுகம் இல்லாத நீங்கள் வளர்ந்த சூழல் எல்லாமே வேற இங்கே என் பொண்டாட்டிக்கு சமைத்து கொண்டு இருக்கீங்க!”
தாரா அவனை பார்த்து கண்கள் மின்ன என்னை சாதாரண மனுஷியாக ட்ரீட் பண்ற ஒரு குடும்பம் அதை விட நான் சமைத்தால் சாப்பிட எங்க வீட்டில் ஆள் இல்ல என் டாதிக்கு எப்போவும் பிஸ்னஸ் என் மம்மி மீடியா கிளப் அப்டின்னு ஆக்டிவ் ல இருக்கணும். நான் ஒரு பக்கம் நடிக்க போய் விடுவேன். ரொம்ப டிப்ரஸ்டா இருக்கும்.நாங்க குடும்பமா சாப்பிடுவது அரிது தான்! .
சூர்யா, இங்கே உங்களுக்கு கஷ்டமா இல்லையா!
“ஆனால் இங்கே நான் நானாக இருக்கேன். அதை விட உங்களை பார்த்தால் இது தான் வாழ்க்கை அப்டின்னு தோணுது! பேசாமல் இங்கே பக்கத்தில் ஒரு 1BHK வாங்கி செட்டுள் ஆகி விட தோணுது!.” என உற்சாகமாக கூறினாள்.
சூர்யா புருவம் நெருக்கி கொண்டே “பயங்கர பிளான் வச்சு கிட்டு தான் என் மச்சான கட்டி இருக்க போல!”
தாரா வெட்கத்துடன் புன்னகைத்தாள்.
சூர்யா, சரி இந்த பால் மச்சானுக்கு கொடுத்து விடு அவர் சரியா சாப்பிடவே இல்ல!
அதன் பின் தாரா அவனுக்கு பால் எடுத்து கொண்டு அறைக்கு சென்றாள்.
மகி தாராக்கு பூவை கட் செய்து இரண்டு முழம் எடுத்து வந்தவள். அண்ணி! அண்ணி!.
தாரா, சொல்லுங்க மான் விழி!.
இந்தாங்க பூ என அவளின் தலைக்கு ஜடை வரை வைத்து விட்டாள்.
“என்ன திடீர்னு பூ!”
மான் விழி சிரித்து கொண்டே இனி எப்போவும் உங்க பிரிட்ஜ்ல பூ வாங்கி வச்சுக்கோங்க!
எதுக்கு? என தாரா கேட்டாள்.
மான் விழி, ம்ம் சும்மா பூ வச்சா ஃப்ரிட்ஜ்க்கு ரொம்ப நல்லது என கிண்டல் அடித்தாள்.
தாரா அதை நம்பி அப்டியா பரவாயில்லை மான் விழி இந்த மாதிரி ஹேக்ஸ் எல்லாம் கொஞ்சம் சொல்லுங்க நான் நோட் பண்ணிக்கிரென்.
மான் விழி, அய்யோ டா! போங்க அண்ணி என சொல்லி அனுப்பி வைத்தாள்.
தாரா அந்த சரத்தை முகர்ந்து கொண்டே “எதுக்கு இந்த பொண்ணு இப்படி சிரித்து கொண்டு போகுது!”என நினைத்து கொண்டே அவர்களின் படுக்கை அறைக்குள் நுழைந்தாள்.
இங்கே கலை, அந்த ஆள் எதுக்குங்க நம்ம மாப்பிள்ளை ரெண்டு பேரையும் வர சொல்றான். எதுவும் வில்லங்கம் இருக்க போகுது!.
வசந்தன், நீ எதையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்காத கலை அவர் நல்ல விஷயம் தான் என கூறினார்.
கலை, சரி முன்னாடியே மாப்பிள்ளைக்கு போன் பண்ணி சொல்லுங்க!
வசந்தன் போனை எடுத்து கொண்டு இதோ என முதலில் சூரியாவுக்கு அழைத்தார்.
சூர்யா, ஹலோ மாமா! என்ன இந்த நேரத்தில்!
வசந்தன், ஒன்னும் பிரச்னை இல்ல மாப்பிள்ளை! மகி பக்கத்தில் இருக்களா! சாப்பிட்டாளா? நீங்க சாப்பிட்டீங்களா?
சூர்யா, ம்ம் நாங்க எல்லாம் சாப்பிட்டோம் மச்சான் கூட இங்கே தான் இருக்காங்க!.
வசந்தன் ஒரு நிமிடம் அமைதியாகி என்ன உதயா அங்கே தான் இருக்கானா!
கலை, அவனுக்கு என்ன கேடு வந்தது. என் பொண்ணு மாசமா இருக்காள். வேலை வச்சு அதுங்க ரெண்டுக்கும் ஆக்கி அரித்து கொட்ட என் பொண்ணு தான் கிடைத்தாளா!
வசந்தன், கலை என அதட்ட
க்கும். இதில் ஒன்னும் குறைச்சல் இல்லை முதலில் விஷயத்தை சொல்லுங்க!
சூரியா, என்ன மாமா!
வசந்தன், அது என ஆரம்பித்து அனைத்து விஷயமும் கூறினார்.
சூர்யா ஒரு சில நிமிடம் யோசித்து விட்டு சரி மாமா அதுக்கென்ன போயிட்டா போச்சு நீங்க ஒன்னும் கவலை படாதீங்க!
ம்ம் சரிங்க மாப்பிள்ளை இதை உதயன் அப்புறம் மகிக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள்.
சூர்யா, சரிங்க மாமா என சொல்லி போன் வைத்தான்.
உடனே வசந்தன் கார்த்திக்கு விஷயம் சொல்ல அழைத்தார்.
சூர்யா மனதில் என்னவாக இருக்கும்? இது அந்த தேஜூ வேலையா இருக்குமா! என யோசித்து கொண்டு நிற்க அவன் நாசியில் மல்லிகை மனம் வீசியது.
*******
அவள் கதவை சாத்திய அடுத்த நொடி பின்னால் இருந்து வலிய கரம் இடையை இறுக்கி கட்டி கழுத்தில் சூடான மூச்சுடன் அந்த மல்லிகை பூவின் வாசத்தை அவள் வாசத்துடன் சேர்த்து உள் இழுத்து கொண்டு இருந்தான்.
ச்ச! வி விடுங்க உதயன் என தாரா அவனை விலக்க போராடி கொண்டு இருந்தாள்.
என்ன டி உன் பிரச்னை! நான் என்ன பண்ணேன்!
தாரா, நீங்க என்ன பண்ணீங்க ஒன்னும் பண்ணல விடுங்க!
உதயன், எதுக்கு விடனும்! என சொன்னவன் தலை அவள் கழுத்து எலும்பில் மோகத்தீயுடன் பற்றி கொள்ள அவளின் கழுத்தில் உள்ள தாலி கொடியை தூக்கி காட்டி இது நான் கட்டியது! சோ நகர முடியாது.
தாரா கண்களை மூடி சொக்கி கொண்டே தள்ளுங்க என கம்மிய குரலில் கூறினாள்.
உதயன், இப்போ உனக்கு என்ன பிரச்னை? பட்டுன்னு சொல்லு அதை விட்டு இப்படி இருக்காத ஆல் ரெடி நான் ரொம்ப கஷ்டத்தில் இருக்கேன் எனக்கு ஆறுதல் நீ மட்டும் தான் டி!.
தாரா இந்த வார்த்தைகளை கேட்டதும் அவன் பக்கம் திரும்பி அவனை கட்டி கொண்டாள்.
உதயன் மனதில்” ம்ம் கூல் உதயன் அவ்ளோ தான் ஹீரோயின் அகைன் அன்ட் அகைன் விழுந்து விட்டாள்!” என நினைத்து பூரித்து கொண்டான்.
தாரா, சாரி இனி இப்படி நடந்துக்க மாட்டேன்!
உதயன், இட்ஸ் ஓகே நடந்துக்க!
தாரா, உங்க மேல் எனக்கு கோபம்!
என்ன கோபம்! நான் என்ன பண்ணேன்!
தாரா, நீங்க நீங்க என அவள் அவனுடன் இருந்து பிரிந்து பாவமாக முகத்தை வைத்து கொண்டு உங்களை ஶ்ரீ மதி, நித்யா! என ஆரம்பிக்க
உதயன், ஹே ஒரு நிமிடம் இரு டி!
என்ன?
எங்க மாமா சொல்றத நம்பாத ஃபர்ஸ்ட் ஆப் ஆல் என்னை பற்றி உனக்கு எல்லாமே தெரியும். ஹீரோயின் கிட்டயே எல்லை மீறி நான் நடந்து கொண்டது இல்ல அப்படி இருக்கும் போது நான் ஶ்ரீ மதி, நித்யா கிட்ட எப்டி தப்பா நடந்துக்க முடியும்! என இரு புருவம் தூக்கினான்.
தாரா அமைதியாக இருக்க உதயன், அப்போ மேடம்க்கு சந்தேகம் இருக்கா!
அது?
உதயன் வேண்டுமென மிஸ்டர் சித்தார்த் கிருஷ்ணன் என்னை டிடெக்டிவ் வச்சு உளவு பார்த்து இருக்கிறார். அப்படி நான் தப்பான பையனா இருந்தால் கல்யாணம் நடக்க விட்டு இருப்பாரா! என இழன புன்னகையுடன் அவளை பார்த்தான்.
தாரா அய்யோ என திடுக்கிட்டு இல்லங்க! யார் என்ன சொன்னாலும் நான் உங்களை சந்தேக பட மாட்டேன். நீங்க விடுங்க!
உதயன், அவளது இதயத்தை சுட்டி காட்டி உள்ளே கால் பங்காவது நான் இருக்கேனா!
எதுக்கு இப்படி எல்லாம் கேட்கிறீங்க!
உதயன், உன் இதயத்துக்கு உள்ளே சித்தார்த் கூடவே இந்த குரு பிரகாஷ் தானே இருப்பாங்க! என அவளிடம் இருந்து விலகி படுக்கையில் போய் அமர்ந்தான்.
தாரா அவன் அருகில் சென்று அமர்ந்து ஆமா அவங்களுக்கு தான் இடம் இருக்கு!
அப்போ போயேன் டி! என முகத்தை திருப்பினான்.
தாரா….?
தொடரும்..
Episode 271
தாரா அவன் அருகில் சென்று அமர்ந்து “ஆமா அவங்களுக்கு தான் இடம் இருக்கு!”
அப்போ போயேன் டி! என முகத்தை திருப்பினான்.
போகவா! என இன்னும் நெருங்கி அமர்ந்தாள்.
ம்ம் போ என உதயன் தள்ளி அமர்ந்தான்.
“அப்போ நிஜமாவே போகவா!” என இன்னும் நெருங்கி நெருங்கி அமர்ந்தாள்.
உதயன், ம்ம் நிஜமாவே போ!
தாரா ஹான் போறேன் என எழுந்து நின்றாள்.
போவியா! என அவள் முகத்தை பார்த்தான்.
ஹான் நான் போவேன் இங்கேயே இப்படி படுப்பென் உங்களுக்கு என்ன? இது சூர்யா அண்ணா வீடு! என ஒரு மார்க்கமாக சோம்பல் முறித்தாள்.
உதயன் அவளை பார்த்ததும் அவனுக்கு உள்ளுக்குள் முறுக்கேறியது.
அவன் திரும்பி கொண்டான். தாரா கொஞ்சம் நன்றாக பரப்பி கொண்டு “ச்ச இந்த புடவையை கட்டி கொண்டு எப்படி எல்லாரும் இருக்காங்க என்னால் இருக்க முடியல.. ரொம்ப சிரமமா ஒருக்கு!”
உதயன் அவள் பக்கம் திரும்பாமல் அப்படியே படுத்து கொண்டான். அவள் குரல் கொஞ்சம் அருகில் கேட்க நன்றாக அருகில் இருக்கும் தலையணை எடுத்து முகத்துக்கு புதைத்து படுத்து கொண்டான்.
கொஞ்ச நேரம் வளையல் குலுங்கள், கொலுசு சத்தம் என கேட்டு கொண்டே இருந்தது. அதன் பின் அந்த இடம் மிகவும் அமைதியாக இருந்தது. உதயன் மனதில் என்ன பண்றா! கிளம்பி போயிட்டாளா! சத்தத்தை காணோம் ஒரு வேளை தூங்கி இருப்பாளோ அதுக்குள் தூங்கி விட்டாளா! என யோசித்து கொண்டே தலையணையை எடுத்து அவனுக்கு எதிரில் உள்ள இடத்தை பார்த்தான். அந்த கிங் சைஸ் பெட் காலியாக இருந்தது.
உதயன் பார்வையை சுழல விட்டான் எங்கும் இல்லை!.
க்கும்! என குரல் கேட்டது. அதுவும் மிக அருகில் கேட்டது.
உதயன் புருவம் நெருக்கி கொண்டே பின்னால் திரும்பி பார்க்க தாரா மின்னும் கண்களுடன் இரு புருவம் தூக்கி கொண்டே அவனை பார்த்தாள். அதுவும் மிக அருகில் அவன் அருகில் அவனுக்கு பின்னால் படுத்து இருந்தாள்.
உதயன் கொஞ்சம் நகர்ந்தால் கூட தாரா கீழே விழுந்து விடுவாள். அந்த அளவுக்கு அந்த படுக்கையில் எட்ஜில் இருந்தாள்.
ஹே என் என்னடி பண்ற? எதுக்கு இப்போ என் பக்கத்தில் அதுவும் இவலோ ஒட்டி படுத்து இருக்க? ஃபர்ஸ்ட் நீ எழுந்திரு!
“நான் எதுக்கு எழ வேணும்! “என அவனை படுக்க வைத்து அவளின் கால் ஒன்றை எடுத்து உதயன் மேல் போட்டாள்.
“ஹே கால் எடு டி!”
எதுக்கு எடுக்கணும்!
உதயன், தள்ளி போடி!
ஏன் போகனும்! இதோ என தாரா அவளின் கழுத்தில் இருக்கும் தாலிய அவனை போலவே காட்டி இந்த தாலி கொடி நீங்க கட்டினது. என சொன்னவள் அந்த மல்லி சரத்தை முகர்ந்து கொண்டே சோ நீங்க என்னோட ஹஸ்! ஹஸ்பண்ட்! சோ முடியாது. இப்போ முழு உரிமை இருக்கு என கூறி அவன் இதழுக்கு கீழே குனிந்தாள்.
உதயன் கண்கள் பெரிதாக விரிய அவள் முத்தத்தை எதிர் நோக்கி காத்து கொண்டு இருந்தான்.
தாரா புன்னகையுடன் இதழில் உரசி கொண்டே என்ன ஓவரா பண்றீங்க! ம்ம் என்ன சீனா!.
உதயன் அவளை தள்ளி விட முயற்சி செய்ய தாரா அவன் சட்டையை பிடித்து ஹே எங்கே போறீங்க!
என்னை விட்றி!.
தாரா, இந்த மனதில் இதோ இந்த இடத்தில் என் ப்ரெண்ட்ஸ் இருக்காங்க அது எமோஷனல் மட்டும் தான் ஆனால் என்று அவன் இதழில் ஒற்றியவள் இந்த லிப் இதில் நீங்க இருக்கீங்க! இந்த முத்தத்தில் என்னோட மூச்சில் கலந்து இருக்கீங்க என தாரா கண்களை இறுக்கி மூடி சூடான முத்தத்தை அவனுக்கு பரிமாற ஆரம்பித்தாள்.
உதயன், அதுக்கு அர்த்தம் கூட இல்லன்னு அர்த்தம் தான் ஹீரோயின் மேடம் நல்லா நடிக்கிரீங்க!
தாரா கண்ணை சுருக்கி கொண்டே இதோ என் கழுத்தில் நீங்க தான் தொங்கி கொண்டு இருக்கீங்க! இந்த இதயம் துடிப்பு மட்டுமே இருக்கும் ஆனால் இந்த நாடி இந்த மூச்சு காற்று அது இல்லன்னா இதயம் இல்லையே அது நீங்க தான்! Love you உதயன்! உங்களை love பண்றேன் அதை விட மான் விழி, மை விழி, கூடவே சிவி, பவா, சக்தி, மிதுன் எல்லாரையும் love பண்றேன். உங்க மேல் ஓவரா போசசிவ்ல இருக்க என்னோட அத்தைய கூட லவ் பண்றேன். மொத்தத்தில் என்னோட லவ் அது உங்க கிட்ட கூடவே உங்களை சுற்றி இருக்கு!
உதயன், அப்போதும் உன்னோட இதயத்தில் நான் இல்லையே! போடி!.
தாரா, இதுக்கும் மேல் என்ன சொல்லட்டும்!
உதயன், நீ என்னை உணர வைக்கணும்! என சொல்லி படுத்து கொண்டான்.
தாரா, அதுக்கு english ல சொல்லுங்க!.
உதயன், feel பண்ண வைக்கணும்!.
தாரா எப்டி எப்படி feel பண்ண வைப்பது என யோசித்து கொண்டே இருக்க அவனும் அவளுக்காக காத்திருந்தான்.
ஆனால் பதில் வர வில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தாரா யோசித்து கொண்டே தூக்கத்தில் சொக்க ஆரம்பித்தாள்.
உதயன் போனை நோண்டி கொண்டே எதேட்ச்சையாக பார்க்க அவள் கண்கள் சொக்க நன்றாக படுத்து கொண்டு போர்வையை தேடினாள்.
உதயன் திடுக்கிட்டு “என்ன டி தூங்குற!”
தாரா கண்ணை மூடி கொண்டே “நான் நாளைக்கு உங்க கேள்விக்கு பதில் சொல்றேன் இப்போ தூக்கம் வருது!”
உதயன், ஹே ஹே முழி தூங்காத!
“போங்க டிஸ்டர்ப் பண்ணாதீங்க!”
ஹே ஹே தூங்காத டி! என போனை ஆஃப் செய்து விட்டு அவள் அருகில் வந்தான்.
ஹே தாரா! தாரா! என அவள் கன்னத்தை தட்டினான்.
தாரா, டிஸ்டர்ட் பண்ணாதீங்க உங்கள் கிட்ட சரியாக பதில் சொல்லிட்டு தான் பேசுவேன்! .
உதயன், உன் மூளை இதில் தத்தி நீ ஒரு பதிலும் சொல்ல வேணாம் ஹே எழுந்திரு டி கண்ணை திற!
தாரா புருவம் நெருக்கி கொண்டே என்ன?
உதயன், நான் என்னோட காதலை feel பண்ண வைக்கிறேன்!
ஒன்னும் வேணாம்! என்னோட காதலை சொல்லி தான் உங்களை ஃபர்ஸ்ட் feel பண்ண வைக்கணும்.
உதயன் அவளை சட்டென அருகில் இழுத்தான். அவள் கண்கள் பெரிதாக விரிய அவள் இதழில் குனிந்து முத்தமிட்டான்.
அவள் கண்ணை மூடி கொண்டாள். இப்போ இன்னும் கொஞ்சம் கொஞ்சமா feel பண்ண போற என அவன் லீலையை ஆரம்பித்தான்.
தாரா அவன் முத்தத்தில் மெய் சிலிர்த்து கைகள் தலையை கோதி பிடிக்க ஏற்கனவே உதயன் அவளின் கழுத்துக்கு இறங்கி இருந்தான். அவன் சேட்டையிள் சின்ன ஈர கடிதளுக்கு வேக மூச்சு எடுத்தாள்.
“ம்ம் என்னால் வேகமெடுக்கும் இந்த மூச்சு அதில் நீ என்னை ஃபீல் பண்ணுவ!” என அவளின் இதழை இழுத்து தின்ன தொடங்கினான்.
அதை கேட்ட அவளின் உதடுகள் மென் புன்னகை சிந்து அதையும் விட்டு வைக்க வில்லை கொள்ளை கொண்டு களவாடி விட்டான்.
அப்படியே உதயன் பயணம் அவளின் கணக்கில் அடங்காமல் நீண்டு கொண்டே இருக்க உதயன் வசீகரிக்கும் குரலில் feel பண்றியா டி!. என மூச்சு வாங்கிட கேட்க.
ம்ம் என கண்கள் கிறங்க முனகினாள். உதயன் வேகத்துடன் அவளின் முகத்தை வருடி கொண்டே வர வர ஆளை தூக்குற டி சரி இல்ல பாடாய் படுத்துற தாரா! என அவளின் பூவை இழுத்தான்.
அவள் முகம் சுருக்கி பார்க்க உன் வாசம் அதோட இந்த ஜாஸ்மின் தூக்குது டி! என அவளின் பத்து விரலில் கோர்த்து மோக கதவுக்கு சென்றான்.
********
Sprயை பற்றி அனைத்து விஷயமும் தெரிந்ததும் தவிர்க்க ஆரம்பித்தாள். ஆனால் அவள் கண்களில் ஒளி மட்டும் மின்னி கொண்டு இருந்தது.
Spr தன் மகனை தோலில் போட்டு தட்டி கொண்டே மெதுவாக படுக்க வைத்தான்.
நிவாஸ் தலையை அந்த பக்கமும் இந்த பக்கமும் ஆட்டி கொண்டே பால் குடிக்கும் நினைவில் உதடுகளை குவித்து உறிஞ்சுவது போல் அசைத்து கொண்டு இருந்தான்.
Spr முகம் கோபத்தில் சிவந்தது. உடனே அவளுக்கு அழைத்தான்.
தேஜூ அவளது கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே கொஞ்சம் பாப் கார்ன் சாப்பிட்டு கொண்டே டீவியில் தன் தந்தையுடன் breaking bad series பார்த்து கொண்டு இருந்தாள்.
அவளின் போனில் அழைப்புகள் வரிசை கட்டி நின்று கொண்டு இருந்தது. அனைத்தும் தவற விடப்பட்ட அழைப்புகள் தான்.
Spr, என்ன ஆச்சு இவளை! என கோபம் தலைக்கு ஏறியது.
Spr குருவுக்கு அழைத்தான்
செப்பண்ணா!.
Spr, அவள் எங்கே போன் பண்ணா கோடா எடுக்க மாட்டிக்கிரா!.
எவரு அண்ணா?
Spr, குரு! உன்னை!.
குரு, அண்ணா புரியல கொஞ்சம் தெளிவா சொல்லு!.
Spr, தேஜூ தான்!.
குரு, தேஜூ இப்போ பெங்களூரில் இருக்கா! அவங்க டாடி இன்னிக்கி ரிலீஸ்!
Spr, எப்படி? இவ்வளவு சீக்கிரம்!.
குரு, அது அந்த ஜெய் தான் காரணம்!.
Spr எதுவும் பேச வில்லை.
குரு, அண்ணா நிவாஸ் தூங்கிட்டானா!
Spr அவன் கூறியதை கண்டு கொள்ளாமல் “இப்போ உடனே நான் அவள் கிட்ட பேசணும் எனக்கு போன் பண்ண சொல்லு!”
குரு, நீயே ஒரு தடவை பண்ணி பாரேன்!.
Spr, நான் சொல்றத மட்டும் செய்!.
குரு அதை போலவே தேஜூ விக்கு அழைத்தான்.
தேஜூ உடனே பதில் ஏற்றாள்.
குரு, அண்ணா உன் கிட்ட பேசனுமாம் அதனால் கால் பண்ணி பேசு!
தேஜூ சரி என சொல்லி விட்டு போனை வைத்தாள்.
Spr நீண்ட நேரம் அவள் போன் செய்வாள் என காத்திருந்தான். ஆனால் அவள் போன் செய்யவே இல்லை.
ஒரு சில நொடிகளில் அழைக்க ஆரம்பித்தான்.
நாதன், தேஜூ மா!.
டாடி!
“விடாமல் போன் அடிக்கிதே யாருன்னு எடுத்து பேசு மா!”
சரி டாடி என அழைப்பை ஏற்றான்.
அவள் அழைப்பை ஏற்றதும் மறு பக்கத்தில் உஷ்ன மூச்சுடன் கெட்ட வார்த்தை வர ஆரம்பித்தது.
தேஜூ போனை காதில் வைக்காமல் எடுத்து கொண்டு கொஞ்ச தூரம் சென்றவள். போனை காதில் வைத்தாள்.
Spr, ஹலோ! ஹலோ!.
ஸ்ஷ்ஷ்! எதுக்கு இப்படி கத்துர!
Spr, ஹே என்ன டி!.
ஷ்ஷ! கொஞ்சம் நிறுத்து! உன்னோட அதிகாரம் என் கிட்ட செல்லு படி ஆகாது. என சொல்லி கொண்டே ஊஞ்சலில் அமர்ந்தாள்.
Spr தன் பல்லை கடித்து மருகி கொண்டு “உன் கிட்ட நான் நேரில் பார்த்து பேசணும்!”
தேஜூ,….?
தொடரும்..
Episode 272
Spr தன் பல்லை கடித்து மருகி கொண்டு “உன் கிட்ட நான் நேரில் பார்த்து பேசணும்!”
பேசு! என தேஜூ தெனா வெட்டாக கூறினாள்.
Spr ஒரு நிமிடம் திடுக்கிட்டான். அதன் பின் தன்னை சமன் படுத்தி கொண்டு எங்கே இருக்க?
தேஜூ தன் தந்தை அருகில் இருப்பதை பார்த்து எழுந்தவள். போனை எடுத்து கொண்டு வெளியே சென்றாள்.
ஹே உன்னை தான் எங்கே இருக்க?
நான் பெங்களூரில் இருக்கேன்.
Spr, எப்போ இங்கே வர போற! நிவாஸ் உன்னை நினைத்து ஏங்கி போயிட்டான்.
தேஜூ ஆச்சரியமாக புருவம் வளைத்து விட்டு அது இனி வர முடியாது.
என்ன?
ம்ம் இனி அடிக்கடி வர முடியாது. இன்னும் கொஞ்ச நாளில் மொத்தமா வரவே மாட்டேன்.
Spr, என்ன சொல்ற?
தேஜு, புதுசா ஒன்னும் இல்ல எல்லாம் தெரிந்த விஷயம் தான் உன்னோட முதல் கொடுக்குக்கு என்ன சொல்லி கொடுத்தியோ! அதே போல் உன்னோட ரெண்டாவது கொடுக்குக்கும் சொல்லி கொடு!
Spr டென்ஷன் ஆகி என்ன டி சொல்ற? எனக்கு ஒன்னும் புரியல உன்னை நேரில் பார்க்கனும்!
தேஜூ, நான் சொல்றது உனக்கு புரியலயா! மறுபடியும் தெளிவா சொல்றேன் கேட்டுகோ அதாவது நிதின் கிட்ட மகி தான் அவனோட அம்மா அப்டின்னு சொல்லி கொடித்தியே அதே போல் நிவாஸ்கும் சொல்லி கொடு!.
Spr திடுக்கிட்டு எழுந்து இதுக்கு என்ன அர்த்தம்?
தேஜு, எனக்கு நீயும் வேணாம் அண்ட் உன் பையனும் வேணாம் அப்டின்னு அர்த்தம்! உன் வாழ்க்கையை விட்டு எனக்கு சீக்கிரம் விடுதலை வேணும் அப்டின்னு அர்த்தம் இப்போ நோக்கு விளங்குதா!
Spr, என்ன டி என்னை பிளாக் மெயில் பண்ட்ரியா!
தேஜு இதை கேட்டு வாய் விட்டு சிரித்தாள்.
இப்போ எதுக்கு சிரிக்கிற!
நான் யாருன்னு உனக்கு எப்படி தெரியும் நீ வெறும் லஸ்ட்க்காக தானே இத்தனை வருஷமும் என்னை வச்சு இருந்த!
Spr க் கு அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஊசி இறக்குவது போல் இருந்தது. ஆனாலும் அவன் அவளுக்கு சலைத்தவன் இல்லையே!
அதுவும் சரி தான் தேஜூ இத்தனை நான் இது எனக்கு தோன்றாமல் போச்சே! ஒன்னும் பிரச்னை இல்ல இனி என்னோட நிவாஸ் குட்டிகு நான் மகியை அம்மா என சொல்லி வளர்த்து பலகுகிரென்.
தேஜு, ஹான் அது! இப்போ வேற ஒண்ணும் இல்ல தானே!
Spr எதையோ யோசித்து விட்டு உடனே அவளிடம் இப்படி தனித்தனியா ஒவ்வொன்றையும் செய்வதற்கு பதிலா எதுவும் டைவர்ஸ் வாங்க டிரை பண்ணு நான் அதை காரணம் காட்டி மகி கிட்ட இன்னும் சிம்பத்தி கிரியேட் பண்ணி கொள்வேன்.
தேஜு பற்களை கடித்து கொண்டு நீ ஆயிரம் தடவை கலர் கலரா ரீல் விட்டாலும் மகி திரும்பி கூட பார்க்க மாட்டாள். சரி அது எனக்கு எதுக்கு நீ அவள் கிட்ட செருப்படி கூடவே சூர்யா கிட்ட வாங்கி விட்டால் அடங்குவ! இப்போ இருக்கும் சூர்யா முன்பை போல் இல்லை நீ சொல்லும் கட்டு கதையை அவனும் நம்ப மாட்டான். மகி சுத்தமாக நம்ப மாட்டாள்.
Spr, அது உனக்கு எதுக்கு டி ! இன்னும் என் மேல் உனக்கு எதோ ஒட்டி கொண்டு இருக்கு போல வரயா ரெண்டு பேரும் தீர்த்து கொள்வோம்!
தேஜு, ம்ம் வரேன் கூடிய சீக்கிரம் வரேன் கடைசியாக உன்னை*** பண்ணிட்டு போகனும் அதுக்கு அப்புறம் நமக்குள் எல்லாமே முடிந்து விடும்.
Spr சிரித்து கொண்டே அவ்ளோ சீக்கிரம் உன்னை விட்டு விடுவேனா!
தேஜூ அதற்கு மேல் புன்னகை செய்து நான் எதிர் பார்த்ததை விட நீ மொக்கையா இருக்க சோ செருப்படி கொஞ்சம் தள்ளி போகும்!
இப்பொழுது ஒரு சில நிமிடம் இரு பக்கமும் அமைதி ஆனது.
Spr, நீ சாகும் வரைக்கும் நான் தான் டி உனக்கு புருசன்! சோ இது எப்போதும் மாறாது! எனக்கு நீ தேவை அதே போல் என் நிவாஸ் பிரகாஷ் க்கி நீ மட்டும் தான் தேவை! சோ வந்து சேரும் வழிய பாரு!
தேஜு, நிவாஸ் பிரகாஸ் கிகு நான் தேவை என்றால் கொண்டு வந்து கொடுத்து விட்டு போங்க என்னால் வர முடியாது.
Spr, என்ன திமிர்!
தேஜூ, இது திமிர் இல்ல நான் வந்தாலும் ஒன்னு தான் நீங்க அவனை கூட்டி வந்தாலும் ஒன்னு தான் புரியுதா!.. இதுக்கு மேல் எனக்கு பேச எனர்ஜி இல்ல சோ மிஸ்டர் spr நான் போனை வைக்கிறேன்.
*******
அவன் போன் பேசி முடித்து விட்டு திரும்ப காற்றில் மல்லிகை மனம் வீச மூக்கு மோக வாசனை பிடித்து கொண்டது.
மகி ஜெக ஜோதியாக கதவை தாழிட்டு கொண்டு திரும்பினாள்.
சூர்யா போனை எடுத்து ஸ்விட்ச் ஆப் செய்தவன். அருகில் உள்ள சோபாவில போட்டு விட்டு வேகமாக அவள் அருகில் சென்றான்.
அவள் முன்னால் போய் நின்று கையை கட்டி கொண்டு மேலிருந்து கீழ் வரை பார்த்தான்.
மான் விழி, கீழே இருந்து மேல வரை பார்கிறீங்க!.
என் பொண்டாட்டியை நான் பார்க்க கூடாதா!
சாருக்கு சொடக்கு போடும் நேரத்தில் பிளர்ட் பண்ண பவர் இருக்கும் போது இங்கே என்னை எதுக்கு பார்க்கனும் போங்க சார்! கூடவே இப்போ மேக்னா வந்திருக்காக!.
சூர்யா, ஹான் இதையெல்லாம் மட்டும் இவள் மண்டை நினைவில் வைத்து இருக்கு சரியான ரவுடி!.
மகி அவன் முன் ஹலோ என சொடக்கு போட்டு காட்டிட சூர்யா, இல்ல டி நான் சும்மா சொன்னேன். லட்டு மாதிரி நீ இருக்கும் போது யாரும் பூந்திகு அலைவார்களா!
என்ன லட்டு?
நீ தான் லட்டு சும்மா நச்சுன்னு இருக்க!
மகி முகத்தில் கவலை பரவ என்னங்க நான் குண்டாகி விட்டேனா!
சூர்யா, அதை செக் பண்ணி தான் கண்டு பிடிக்கணும்! அதை விட புருசன் நல்லா பார்த்து கொண்டால் அந்த பூரிப்புலயே குண்டாகி விடுவார்கள்.
மகி, அப்பா சாமி முடியல என சொல்லி கொண்டே படுக்கை பக்கம் சென்றாள்.
சூரியா, அப்போ இல்ல அப்படி தானே! நான் உன்னை நல்லா கவ்னிக்க இல்லையா!
மகி, நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்லையே!
அப்புறம் எதுக்கு டி இந்த அர்த ராத்திரியில் உங்க அப்பாவை கூப்பிடுற இப்போ நீ சூரியா சூர்யா இன்னும் இன்னும் அப்டின்னு கூவனும்!.
மான் விழி புருவம் நெருக்கி என்ன இன்னும் இன்னும்?
சூர்யா, மான் விழி சீன் போடாத நமக்கு மூணாவது பேபி அது நினைவில் இருக்கா சும்மா எதுவும் தெரியாத மாதிரி கேட்ப நானே ஆரம்பிச்சு நானே எல்லாம் பண்றேன்!.
என்ன எல்லாம்?
சூர்யா, ஹே விளையாடாத!
மகி, என்னன்னு தெளிவா சொல்லுங்க என்னை குழப்ப வேணாம்!
சூர்யா கடுப்பாகி ஒன்னும் இல்ல போ! என சொல்லி படுக்கையில் படுத்து கொண்டான்.
மகி, சரி போங்க என அவளும் இன்னொரு பக்கம் வந்து படுத்து கொண்டாள்.
ஒரு சில நிமிடங்கள் ஆனது. சூர்யா போர்வையை போர்த்தி கொண்டான். எப்பொழுதும் போர்வை போர்த்தி தூங்குவது அவனுக்கு பிடிக்காது. ஆனால் இன்று அவளை அவாய்ட் செய்ய போர்த்தி கொண்டான்.
மகி அவன் பக்கம் திரும்பி சிரித்து கொண்டே பார்த்தாள்.
சூர்யா அவள் பக்கம் திரும்பவே இல்லை. மகி மெதுவாக அவளின் கையை எடுத்து அவன் மேல் போட்டாள்.
சூர்யா, ஹே கையை எடு!
நான் ஒன்னும் போடல உங்க பாப்பா தான்! குட்டி பாப்பா! .
இதை சொன்னதும் அவனால் எதுவும் பேச முடிய வில்லை அதன் பின் அவள் மெதுவாக காலை போட்டு போர்வையை கொஞ்சம் விலக்கி விட்டாள்.
ஹே மகி என்ன டி பண்ற?
அச்சோ நான் இல்லாங்க உங்க பாப்பா தான்!
மகி மெதுவாக பாதத்தின் மேல் பாதம் வைத்து உரச ஆரம்பித்தாள்.
சூர்யா, ஓ என்னை என்ன செய்கிறாள் என நினைத்து கொண்டே அவள் பக்கம் திரும்பி என்ன டி பண்ற?
மகி, நான் பண்ணல குட்டி பாப்பா தான் அப்பாவை கட்டி கட்டி தூங்க வேணுமாம் கூடவே கால் கூட போட்டு கொள்ள வேணுமாம்.
சூர்யா டென்ஷன் ஆக முகத்தை வைத்து கொண்டு இருக்க மகி அவன் அருகில் நெருங்கி அவன் இதழில் முத்தம் பதித்து அவளின் இரு கைகளையும் கழுத்தை சுற்றி போட்டு தலை கோதி கொண்டே முத்தமிட ஆரம்பித்தாள்.
அவன் அவள் கண்களையும் அவளின் முகத்தையும் ஆசையுடன் பார்த்து கொண்டு உதட்டில் மட்டுமே ஒத்துழைப்பு வழங்கினான்.
ஒரு சில நிமிடம் கழித்து வெட்கி நானி பிரிந்தாள். சூர்யா, இது கூட பாப்பா கொடுக்க சொன்னதா!
மகி வெட்கத்துடன் அவனுக்கு முதுகு காட்டி கொண்டு இது பாப்பா இல்ல நான் என் தேவ்க்கு கொடுத்த முத்தம்.
சூர்யா அப்படியே அவளின் கழுத்தில் முத்தம் பதித்து கொண்டே பின்னால் இருந்து அவன் கைகள் அவளின் இடைக்கு இறங்கியது. அவள் கண்ணை மூடி கொண்டாள்.
சூர்யா, என்னை பிடிச்சு இருக்கா மகி!
அவள் கண்ணை மூடி கொண்டு சொக்கி கொண்டே “என் அப்பா தேடி கண்டு பிடித்த வரம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்! நீங்க என்னோட அது define பண்ண முடியல ஆனால் உங்க மேல் பயமும் மரியாதையும் இருக்கு! எதுவும் சண்டை வந்தால் சில நேரம் பயமா இருக்கும்!”
சூர்யா, ம்ம் இது போதும் சண்டைக்கோழி உன்னை எனக்கு எவ்ளோ பிடிக்கும் தெரியுமா!
மகி, இந்த நாலு வருடத்தில் நீங்க எந்த பொண்ணு கிட்டயும் பேசியது இல்லையா என்னைய மட்டும் தான் நினைத்து கொண்டு இருந்தீர்களா?
சூர்யா புருவம் சுருக்கி என்ன திடீர்னு இப்படி கேட்கிற?
மகி, கேட்க தோணுச்சு!.
சூர்யா, நீ!
மகி, நானா! நான் என்ன?
சூர்யா, எதுக்கு டா இவனை கட்டி கொண்டோம் வேற யாரையும் கட்டி இருக்கலாம் அப்டின்னு நினைச்சியா! இல்ல யார் கூடயாவது இவகளை கட்டி இருந்தால் நல்லா இருக்கும் அப்டின்னு நினைச்சியா!
மகி, இல்லையே! அது நான் செத்தாலும் இப்டி ஒரு எண்ணம் வராது!
சூர்யா, அதே போல் தான் நானும்! என இருவரும் இல்லற இனிமையை சுகபோகத்துடன் அனுபவித்து கொண்டு இருந்தனர்.
கூடவே மான் கொம்புகள் பட்டையை தீட்டி கொண்டும் . வண்ண தூரிகை இவர்கள் வாழ்க்கையில் வண்ணத்தை மாற்ற தயாராக இருந்தது.
யாருக்கு முதலில் உண்மை தெரிய வர போகிறது? தெரிந்தால் என்ன நடக்கும்?
பார்ப்போம்!
தொடரும்..
Episode 273
சூர்யா மான் விழி இருவரும் என இருவரும் இல்லற இனிமையை சுகபோகத்துடன் அனுபவித்து கொண்டு இருந்தனர்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. உறக்கத்தில் கூட இரு பெண்களின் முகத்திலும் பூரிப்பு அவர்வர்களின் இணைகள் உள்ளே ஒற்றுமை எதிலும் குறைவில்லை.
தாரா காலை உணவுகளை அனைத்தையும் தயார் செய்தாள். இங்கே கார்த்திக் மை விழி வீட்டுக்கு வசந்தன் மற்றும் கலை வாணி இருவரும் வந்து சேர்ந்தனர்.
மை விழி , என்ன மா ஊருக்கு போய் மூணு நாள் கூட ஆகள அவ்ளோ வேலையை வைத்து கொண்டு எதுக்கு வந்தீங்க?
கலை, மாப்பிள்ளை உன் கிட்ட எதுவும் சொல்லலயா?.
மை விழி புரியாமல் பார்க்க கார்த்திக், அது நீ நைட் தூங்கிட்ட டி அந்த நேரம் மாமா போன் பண்ணாங்க என அனைத்து விஷயமும் கூறினான்.
மை விழி, அப்பா இன்னிக்கு நீங்க சூர்யா மாமா, இவர் எல்லோரும் போறீங்களா!
ம்ம் ஆமாம் என்பது போல் தலை அசைத்தார்.
மை விழி, ஒரு முக்கியமான விஷயம்!
கலை, என்ன!
மை விழி, மகி மாசமா இருக்கா. ஏற்கனவே கண்டதை மனசில் போட்டு இஷ்டத்துக்கு யோசித்து கொண்டு இருப்பா! நீங்க உதயன் வீட்டோட மாப்பிள்ளை விஷயத்தை கூட அவள் முன்னாடி சொல்லி இருக்க கூடாது பா!
கார்த்திக், மாமா மை விழி சொல்றது சரி தான் இனி அவளுக்கு எதுவும் தெரியாதது போல் வைத்து கொள்ளலாம். சட்டுன்னு எதையும் சேர் பண்ணிக்க மாட்டாள்.
வசந்தன், சரிங்க மாப்பிள்ளை இனி அப்படியே செய்வோம் என முடிவு எடுத்து கிளம்பி இருந்தனர்.
இங்கே சூர்யா கிளம்பி கொண்டு இருந்தான்.
மான் விழி அப்பொழுது தான் எழுந்து இருந்தாள். முகம் எல்லாம் வாட்டமாக இருந்தது.
சூர்யா அவளின் முகத்தை பார்த்து என்ன ஆச்சு டி! எதுவும் செய்யுதா! முகமே சரி இல்ல!
மகி கண்களில் கண்ணீருடன் இனி அண்ணா எங்க வீட்டுக்கு வரவே மாட்டானா! அங்கேயே இருப்பானாங்க!
சூர்யா கண்ணாடியில் இருந்து முகத்தை திருப்பி அவளை பார்த்தவன் வேகமாக அருகில் வந்தான். என்ன மகி!
மகி, எங்க அப்பா பாவம்ங்க! எங்க அம்மாவிற்கு உதயன் இல்லாமல் இருக்க முடியாது! எங்க குடும்பத்துக்கு மட்டும் எதுக்கு இவ்வளவு கஷ்டம் அந்த கடவுள் கொடுக்கிறார் என நினைத்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.
சூர்யாவுக்கு அவளின் மன நிலை புரிந்தது. இப்பொழுது கர்ப்ப கால மன குழப்பத்தில் இருக்கிறாள். மோட் ஸ்விங் அதிகமாக இருக்கும்.
சூரியா அவளை மென்மையுடன் அணைத்து இல்ல மகி எல்லாமே சரியா போயிடும் கவலை படாதே!
மகி அழுவதை நிறுத்தவே இல்லை. சூர்யா, ஹே அப்படி எல்லாம் இல்ல டி நீ ஓவரா feel பண்ணாத அப்புறம் பேபிக்கு கஸ்டமா இருக்கும்! என சமாதானம் செய்து வெளியே கூட்டி வந்தான். காலை அவளுக்கு சத்து மாவு கஞ்சி ரெடியாக இருந்தது.
சூர்யா அவளை அமர வைத்து முகத்தை துடைத்து விட்டு சுடு நீர் கொஞ்சம் கொடுத்தான். வெறும் தண்ணிரை போய் கக்கி விட்டு வந்தாள். மிகவும் பலவீனமாக இருந்தாள். அதன் பின் அவளை கொஞ்சம் கொஞ்சமாக சத்து மாவு கஞ்சி குடிக்க வைத்தான்.
உதயன் அவனுடைய லேப்டாப்பில் ஆபீஸ் வேலைகளை செய்து கொண்டு இருந்தான். சூர்யா, சரி மகி எது வேணும் என்றாலும் போன் பண்ணு!.
உதயன், மாமா நாங்களும் கிளம்புகிறோம்!
தாரா கிசனில் இருந்து வேகமாக வந்தாள். சூர்யா, என்ன மா கிளம்ப வேணுமா!
தாரா உதயனை பார்த்தாள். கிளம்ப வேணுமா! என்பது போல் அந்த பார்வை இருந்தது.
சூர்யா எதையோ யோசித்து விட்டு ஈவ்னிங் வந்து பேசி கொள்ளலாம். இப்போ நான் கிளம்புகிறேன் மச்சான்.
மகி, என்னங்க யாரையும் காட்டாய படுத்தி இருக்க சொல்ல வேணாம். போனால் போகட்டும்!
தாரா, அப்போ கிலம்பவா மான் விழி!
மகி, நீங்க எதுக்கு அண்ணி கிளம்ப வேணும் இங்கேயே இருங்க!.
அவர்களின் பேச்சை கவனிக்க அந்த நேரம் கார்த்திக் போன் செய்தான்.
சூர்யா, சரி சரி எனக்கு டைம் ஆச்சு நான் வரேன் என சொல்லி கிளம்பினான்.
இங்கே spr வீட்டில் பரபரப்புடன் இருந்தது. குரு ஒரு வித பதட்டத்துடன் அமர்ந்து இருந்தான்.
என்ன அண்ணா! இப்போ என்ன ஆச்சு?
Spr அவனை முறைத்தான். அதற்குள் குரு வர சொன்னதாக பிரத்யேக உளவாளிகள் வந்தனர்.
குரு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க spr பேச தொடங்கினான். அவர்கள் முன் தேஜூ புகை படத்தை வைத்து இவங்க இப்போ என்ன பண்றாங்க? என்ன ஒர்க் என மொத்த ஹிஸ்டரியும் எனக்கு வேணும்!.
அந்த உளவாளிகள் திடுக்கிட்டு பார்க்க அதற்கு மேல் குரு பார்த்தான்.
குரு, அண்ணா இது தேஜூ அவளை கண்காணிக்க எதுக்கு ஆளுங்க!
Spr அவனை கண்டு கொள்ளாமல் நான் சொன்னதை சீக்கிரம் செய்து முடிங்க என அனுப்பி வைத்தான்.
குரு, இதை எதுக்கு அண்ணா அவங்க கிட்ட சொல்ற எனக்கே எல்லாமே தெரியுமே!
Spr தீவிர பார்வையுடன் குரு பிரகாஷ பார்த்தான்.
குரு, அண்ணா நீ தேஜு வை தவறா நினைப்பதை விட்டு விடு அவள் இப்போ பெங்களூருல இருக்கா!
Spr அருகில் இருக்கும் அர்ஜுனை ஒரு பார்வை பார்த்தான். அர்ஜுன் அவன் பார்வையை உணர்ந்து கொண்டு குரு பிரகாஷ் முன் சில வெளிநாட்டு பயணங்களின் இரண்டு பயண முன் பதிவு டிக்கெட்ஸ் இருந்தது. அதன் பின் தேஜூ சொந்தமாக சுயத்தில் சம்பாதித்த சொத்துக்கள் எல்லாம் விற்க ஏற்ப்பாடு செய்து இருக்கும் ஏலத்தின் விவரங்கள் இருந்தது.
குரு, என்ன அண்ணா இது எல்லாம்!
Spr, நீ முதலில் அவளை பற்றி சொல்லு பார்ப்போம்! என்ன தெரியும் உனக்கு அவளை பற்றி!.
குரு, அண்ணா உனக்கு ஒன்னும் தெரியாது. தேஜு நம்ம அமிர்தா ஆன்டி பொண்ணு அதான் என்னோட ப்ரெண்ட் தாராவுக்கு ஹெல்ப் பண்ணி கொண்டு இருக்கா! அந்த தாரா உன்னோட பொம்மையின் அண்ணனை கட்டி கொண்டாள். என கலை வாணி மற்றும் மை விழி பேசிட அத்தனை விவரத்தையும் கூறினான். அதன் பின் குரு, உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா நம்ம வீட்டுக்கு வெளியே இன்னொரு வாரிசு இருக்கு!
Spr புருவம் சுருக்கி பார்க்க குரு மின்னும் கண்களுடன் சிவன்யா பற்றி கூறினான்.
Spr இதற்கு மேல் பொறுக்க முடியாமல் இதை எல்லாம் நீ போய் நம்புற நீ ஒரு முட்டால் என கூறினான்.
குரு, அண்ணா! தேஜு பற்றி எனக்கு நல்லா தெரியும்!
Spr அர்ஜுனை ஒரு பார்வை பார்க்க அர்ஜுன் வெளியே சென்று விட்டான்.
Spr, உனக்கு புரியாது குரு அவளுக்கு மான் விழிய பழி வாங்கணும். அதுக்கு தான் இப்படி எல்லாம் செய்து கொண்டு இருக்கா!
குரு, அவளை எதுக்கு தேஜூ பழி வாங்க வேணும்!
Spr, என் மனசில் உள்ள எல்லாவற்றையும் தெரிந்து கொண்டாள்.
குரு, புரியல!
Spr, இப்போ நிதின் சூர்யா வீட்டில் இருப்பது அவளுக்கு சந்தேகம் வந்து விட்டது. அதை விட என் மனசுல இன்னும் பொம்மாயி இருக்கிறாள் என தெரிந்து கொண்டாள்.
குரு அவனை உற்று பார்த்து அண்ணா தேஜூவுக்கு என்ன குறை நீ எதுக்கு அந்த*** என ஆரம்பிக்க.. spr அதற்குள் குரு கழுத்தை பிடித்து இருந்தான்.
குரு, கொஞ்சம் திணறி நின்றான். தன்னை சமன் செய்து கொண்டு அப்புறம் எதுக்கு விட்டு வச்சு இருக்க அவளை தூக்கிட்டு வந்து விட வேண்டியது தானே!
Spr, இராவணன் அவனுக்கு பிடித்த பெண்ணை கவர்ந்து வந்தானே தவிர அவளை எதற்கும் வற்புறுத்தி வாழ கட்டாய படுத்த வில்லை. சீதாவின் காதலுக்கு கெஞ்சினான். அதே போல் தான் எனக்கு மகி வேணும் என் உயிர் நரம்பில் கூட அவள் தான் இருக்கிறாள். ஆனால் அவளுக்கு என் மேல் இஷ்டம் இல்லையே! காதல் இல்லையே!
குரு, அப்போ எதுக்கு தேஜூ கூட வாழ்கிற!
Spr, மகி என்னை தப்பா நினைக்க கூடாது! அதுக்கு தான்!.
குரு புன்னகையுடன் அப்புறம் எப்டி நிவாஸ் வந்தான். நீ மகியை நினைத்து தான் அவள் கூட .. spr கோபம் கொண்டு குரு முகத்தில் குத்து விட்டான்.
குரு சிரித்து கொண்டு அண்ணா காதல் ஒரே ஒருத்தர் மேல மட்டும் வராது. பார்க்கும் எல்லாரையும் லவ் பண்ண சொல்லும் இந்த மனம்! ஆனால் ஒருத்தர் கூட மட்டும் தான் அந்த காதலே இல்லாமல் கூட வாழ தோணும்! நீ ஆயிரம் சொல்லி உன் மனதை தேற்றி பாரு ஆனால் உன் மனதில் இருப்பது தேஜூ தான்! ஹான் மகிழினி கூட இருக்கிறாள். மகி எப்போதும் இருப்பாள்! ஒரு ஓரமாக…. ஆனால் உன்னை சுற்றி அணுவிலும் நினைவிலும் எல்லா இடத்திலும் தேஜூ தான் இருக்கா!
Spr அமைதியாக இருக்க குரு மேலும் அதை விடு அண்ணா உன் தோரணைக்கு நீ கண் அசைத்தால் போதும் ஆயிரம் அழகிகள் உன் படுக்கைக்கு வருவார்கள். ஒரு தடவை நீ அவங்க கூட முயற்சி பண்ணி பாரேன். தேஜூ இடத்தில் நீ வேற பொண்ணை வைத்து பாரு உண்மை உனக்கே தெரியும்!
Spr, சட் வெளியே போ!
குரு, சரி அண்ணா கோபம் வேணாம். நான் போறேன்! என கிளம்பினான்.
இங்கே சூர்யா, கார்த்திக், கலை வாணி, வசந்தன் நால்வரும் கோவிந்த் வீட்டின் முன் வந்து இறங்கினார்கள்.
கோவிந்த் தேஜுவுக்கு அழைத்தார். சொல்லுங்க அங்கில்!
கோவிந்த், நீ எங்கே மா இருக்க?
என்னாச்சு அங்கில்!”
“அப்படி இல்ல மா நீ பக்கத்தில் இருந்தால் கொஞ்சம் எனக்கு பாசிட்டிவ் எனர்ஜி நீ என் தாரா போல!”
தேஜூ, அவ்ளோ தானா இதுக்கு என்ன தயக்கம் நான் வரேன் அங்கில் என கூறி போன் வைத்தவள் நேராக கோவிந்த் வீட்டுக்கு கிளம்பினாள்.
அவர்கள் நால்வரும் உள்ளே வந்தனர்.
கார்த்திக், என்னவா இருக்கும் சூர்யா! மாமா பதட்டத்தில் இருக்கிறார்!
சூரியா, பார்ப்போம்! எனக்கு மட்டும் என்ன டா தெரியும்!
கோவிந்த் படிகளில் நடந்து வர வசந்தன் எழுந்து நிற்க போக கலை மற்றும் சூர்யா இருவரும் ஒரே நேரத்தில் ஆளுக்கு ஒரு பக்கம் கையை பிடித்து அமர வைத்தனர்.
கலை பெருமிதம் கொண்டு சூர்யா வை பார்த்தாள்.
வசந்தன், மாப்பிள்ளை விடுவ்க!
சூர்யா, மாமா ! அவர் நமக்கு முதலாளி இல்லை. நாம் அவருக்கு வேலையாளும் இல்ல! எழ கூடாது.
வசந்தன், மரியாதைக்கு
சூர்யா, இதுவும் மரியாதை தான் மாமா!
கோவிந்த்….?
தொடரும்.
Episode 274
வசந்தன், மாப்பிள்ளை விடுவ்க!
சூர்யா, மாமா ! அவர் நமக்கு முதலாளி இல்லை. நாம் அவருக்கு வேலையாளும் இல்ல! எழ கூடாது.
வசந்தன், மரியாதைக்கு
சூர்யா, இதுவும் மரியாதை தான் மாமா என கையை பிடித்து கொண்டான்.
கலை, ஒரு விஷயத்தில் நான் புண்ணியம் பண்ணி இருக்கேன்.
வசந்தன் அமைதியாக இருக்க கலை பெருமித முகத்துடன் நம்ம ரெண்டு மாப்பிள்ளையும் நல்ல குணம் என் புள்ளைங்க ரெண்டு பேரும் கொடுத்து வைத்தவர்கள். என சூரியா , கார்த்திக் பற்றி நினைத்து கொண்டு இருந்தாள்.
கோவிந்த் பார்வை அவர்கள் மேல் வீசி கொண்டே அவர்களுக்கு முன்னால் போடப்பட்ட சோபா அருகில் வந்து நின்றார். அவர் பார்வையே மிகவும் எலான கேலி கிண்டல் நிறைந்து இருந்தது. வசந்தன் அவரின் பார்வையை பார்த்து விட்டு வேகமாக எழுந்து நிற்க..
சூரியா, மாமா! என கையை பிடித்து வலுக்கட்டாயமாக மீண்டும் அமர வைத்தான்.
கோவிந்த், மிஸ்டர் சூர்ய தேவ்! அண்ட் மிஸ்டர் கார்த்திக்!. இவங்க தான் உங்க மாப்பிள்ளை சரி தானே வசந்தன்! என கால் மேல் கால் போட்டு அமர்ந்தார்.
சூர்யா வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்து கொண்டு இருந்தான். கார்த்திக், நீங்க சொல்றது சரி தான்! என நிமிர்ந்து அமர்ந்தான்.
கோவிந்த், வசந்தன் உங்க கிட்ட உங்க மருமகன்கள் கிட்ட முக்கியமா பேசணும் அதுக்கு தான் வர சொன்னேன். பரவாயில்லை மரியாதை இருக்கு ஆனால் உங்க மாப்பி்ளைகளை பார்த்தால்!.
சூர்யா, அது ஒன்னும் இல்ல மிஸ்டர் கோவிந்த்! நாங்க எங்களுடைய சொந்த காலில் வளர்ந்து வரும் பிஸ்னஸ் மேன்ஸ்! ஆனால் பாருங்க நீங்க பரம்பரை பரம்பரையாக பிஸ்னஸ் மேன்ஸ்! சோ மரியாதை யார் யாருக்கு கொடுக்க வேணும் அப்டின்னு புதுசா வந்த எங்களுக்கு நீங்க தான் சொல்லியும் கொடுக்கணும் வழிய விட்டு நிக்கனும்!
கோவிந்த், பேச்சு வித்தை எல்லாம் பயங்கரமா இருக்கு! என புருவம் உயர்த்தினார்.
கார்த்திக், இது தான் எங்களுக்கு அடக்கமான பேச்சு!
கோவிந்த் முகத்தில் கோபம் மின்னியது. உங்களுக்கு தகுதி ஐ மின் என் பொண்ணு விருப்பமே நான் பெரிய தகுதியாக நினைக்கிறேன். வசந்தன் உங்க பையனை நல்லா வளர்த்து இருக்கீங்க! என்னோட பிஸ்னஸ் வாரிசே அவர் தான்!..
கலை வாணியின் கண்கள் கலங்கியது. அவர் அடிபட்ட பார்வையுடன் வசந்தபை பார்த்தார். மனிதன் உடைந்து போன மன நிலையில் கஷ்ட பட்டு நிலை நிறுத்தி கொண்டு அமர்ந்து இருந்தார்.
சூர்யா, ஹான் சும்மாவா உங்க பொண்ணை கூட நல்லா வளர்த்து இருக்கீங்க! என் மச்சான லவ் பண்ணி கட்டி இருக்கு!
கார்த்திக், எங்க மாமா வீட்டு வாரிசை சுமக்க பாக்கியம் வேணும்! எங்க குடும்பம் போல் ஒரு குடும்பம் கிடைக்க தாரா கொடுத்து வச்சு இருக்காங்க!
கோவிந்த் கேவல பார்வையுடன் நால்வரையும் பார்த்தார்.
சூர்யா, சரி இப்போ என்ன விஷயம் அதை பேசுவோம்!
கோவிந்த் போனை எடுத்து தேஜூவுக்கு அழைக்க செல்ல அதற்குள் காலடி சத்தம் கேட்டது. கார்த்திக் திரும்பி பார்த்து சூரியா அருகில் தேஜூ வரா டா!
சூர்யா, இன்டரெஸ்டிங்!.
வசந்தன் மற்றும் கலைவாணி இருவரும் பார்த்தனர்.
வசந்தன், இந்த பொண்ணு! அன்னிக்கு நம்ம வீட்டுக்கு
கலை மனதில் மை விழி குரு பற்றி சொன்னது நினைவு வர கூடவே தாரா தேஜூ இருவரும் நெருக்கம் என்பதை தெரிந்து கொண்டு ச்ச என் குடும்பத்தை நாசம் பண்ண வந்து விடுகிறார்கள். எங்கே தான் இருப்பாளிங்க! என திரும்பி கொண்டார்.
இங்கே குரு வெளியே வந்ததும் தேஜுவுக்கு உடனே போன் செய்தான். அதன் பின் எதையோ யோசித்து விட்டு போனை கட் செய்தான் .காரணமே இல்லாமல் தாரா விஷயத்தில் அதிகம் தலையீடு செய்கிறாள். என்ன காரணம்? என பல கேள்விகள் அவன் மண்டையில் ஓடியது. அவனுக்கு தேஜூவின் மேல் கொஞ்சம் சந்தேகம் வர ஆரம்பித்தது. அது தான் spr உளவாளிகளை அனுப்பி இருக்கிறானே வரட்டும் என்ன தான் செய்கிறாள் என தெரிந்து கொள்வோம்.
தேஜூ மனதுள் ஒரு நாள் போன் பண்ணாம ரெஸ்ட் கொடுத்தது தப்பா போச்சு இனி விடுவேனா! என நினைத்து கொண்டே வந்தாள்.
சூர்யா அமைதியாக அமர்ந்து இருந்தான். தேஜு சாரி கொஞ்சம் லேட் ஆகிடுச்சு அங்கில்!.
இட்ஸ் ஓகே மா! வா வா! என அமர இடம் காட்டினார்.
கோவிந்த், இப்போ சென்னையில் உங்க வரவேற்பு வேலை எப்டி போயிட்டு இருக்கு!
வசந்தன், ஆல்மோஸ்ட் எல்லாம் ஸ்டார்ட் ஆகி பாதி முடிந்து விட்டது சார் கேட்டரிங் அப்புறம் டெக்கரஸன் எல்லாம் கேட்லாக் கொடுத்து இருக்காங்க என அவர் அனைத்தையும் சொல்லி கொண்டு இருக்க தேஜு பார்வை தன் தந்தையின் மீது தான் இருந்தது.
ஒரு நிமிடம் அவர் பேசுவதை பார்த்து அதிர்ந்து கூட போனாள். வசந்தன் பேசும் போது அதிகமாக வலது கை கட்டை விரலை ஆள்காட்டி விரலுடன் தேய்த்து கொண்டே நெற்றியை ஒரு சில நொடி தேய்த்து கொண்டே பேசினார்.
இந்த மேனரிசம் அப்படியே தேஜூ கிட்ட இருக்கு அவளின் இதயம் வேகமாக துடித்தது. உதட்டை கடித்து தன் உணர்வுகளை அடக்கினாள்.அவர்கள் என்ன பேசினார்கள் என தெரிய வில்லை.
கோவிந்த், தேஜூ! என இரண்டு மூன்று முறை கூப்பிட்டது கூட தெரியாமல் அமர்ந்து இருந்தாள்.
சூர்யா, மிசஸ் spr!
வசந்தன் பேச்சை நிறுத்தி விட்டு பார்வையை தேஜூ மீது திருப்பி புருவம் சுறுக்கினார்.
தேஜு தன்னிலைகு வந்து பழக்க தோஷத்தில் நெற்றியை தேய்த்து கொண்டே சொல்லுங்க நான் எதோ ஒரு யோசனையில் இருந்தேன்.
கோவிந்த், இப்போ சொல்லவா மா!
ம்ம் சொல்லுங்க! இருங்க நான் ஆரம்பித்து வைக்கிறேன்.
தாரா, இந்த வரவேற்புக்கு எவ்ளோ செலவு பண்ணி இருக்கீங்க!
என்ன ஆச்சு மா!
சும்மா சொல்லுங்க! என தேஜூ சூர்யாவை ஒரு பார்வை பார்த்து விட்டு சொல்லுங்க!
வசந்தன் செலவுகளை பற்றி விவர்த்தார். அதாவது மொத்தம் என கூறினார். .
சரி என தேஜுவின் பார்வை சூரியா மற்றும் கார்த்திக் மேல் சென்றது.
தேஜு, சூர்யா நான் பெருசா சொல்ல ஒன்னும் இல்ல இவருக்கு ஒரே பொண்ணு அது உங்களுக்கே தெரியும் அங்கில் மனதில் தன் பெண் கல்யாணத்தின் மேல் பெரிய கனவுடன் இருந்தார்.
சூர்யா, straight to the point தேஜு!.
தேஜு, அவர்க்கு இந்த வரவேற்பு இங்கே நடக்க வேணுமாம்! வேற ஒன்னும் இல்ல! என சாதாரணமாக சொல்லி முடித்தாள்.
கலை வாணி கொந்தளித்து கொண்டே என்ன சொல்றீங்க! என கூறி விட்டார்.
கோவிந்த், புரியுது மா நீங்க பணம் செலவு பண்ணி இருக்கீங்க நான் அதை அப்படியே விட்டு விட மாட்டேன். நீங்க செலவு பண்ண பணம் உங்களுக்கு முழு தொகையாக அதுக்கும் மேல கூட இங்கே ரெடியா இருக்கு என சொன்னவர் மாதேஷ்! என அழைத்தார்.
கோவிந்த்துடைய P. A கையில் ஒரு பெட்டியுடன் வந்தார்.
வசந்தன் பேச வர சூர்யா இருங்க மாமா என்ன பண்ண போறாங்க அப்டின்னு பார்ப்போம்! கொஞ்சம் பொறுமை!.
மாதேஷ் அவர்கள் அமர்ந்து இருக்கும் மேஜையின் முன் அந்த பெட்டியை துறந்து காட்டினார். அதில் 2000 தாள் பண கட்டுகள் அடுக்கி வைக்க பட்டு இருந்தது.
கலை வாணி அதை துட்சமாக பார்த்தாள். பணம் என்றுமே அவர்கு பெரிதாக தெரியவில்லை. அவர் சொல் பேச்சை கேட்க வேண்டும் அவ்வளவே!
வசந்தன் கொஞ்சம் ஆவேசத்துடன் சார் நீங்க பண்றது உங்களுக்கே நல்லா இருக்கா!
கோவிந்த், என்ன மிஸ்டர் வசந்தன் இப்போ என்ன பண்ணி விட்டேன்! எல்லாம் என் மாப்பிள்ளை உதயன் பெற்றோர் என்பதால் தான் சும்மா இருக்கிறேன். .
தேஜூ, அங்கிள் டென்ஷன் வேணாம் நான் பேசி கொள்கிறேன் விடுங்க! என அவள் பார்வை சூர்யா மீது சென்றது.
லுக் சூரியா GTA குரூப் எவ்ளோ பெரிசு அப்டின்னு உங்களுக்கு நான் சொல்லி தான் தெரிய வேணுமா! ( GTA-கோவிந்த், தாரா, அமிர்தா)
இப்போ என்ன சொல்ல வர! உனக்கே எல்லாம் நியாயமா படுதா!
தேஜு, கார்த்திக் இவரோட பிஸ்னஸ் பார்ட்னர்ஸ் எல்லாம் ரொம்ப ரொம்ப அதிகம் அவங்களால் சென்னை வர கொஞ்சம் கஷ்டம் அவரோட ஒரே பொண்ணு வரவேற்பு பிரம்மாண்டமாக இங்கே செய்ய ஆசை படுகிறார். உங்களை ஒரு வார்த்தை சொல்ல வில்லை வசந்தன் நிறைய பணம் செலவு செய்து இருப்பார். அதுக்கு தான் பணத்தை கொடுக்கிறோம்! நீங்க செலவு செய்த பணத்தை எடுத்து கொள்ளுங்கள்.
கார்த்திக், இது அதிகமா இருக்கே! எங்கள் மாமாவை கூப்பிட்டு வச்சு அவமானம் செய்கிறீர்கள் அப்படி தானே!
தேஜூ, அப்படி இருந்தால் மட்டும் இப்போ என்ன?
கார்த்திக் கோபத்தில் தேஜூ!. என குரலை உயர்த்தி விட்டான்.
தேஜு, அவர் தகுதிக்கு உங்களை மதித்து பேசுகிறார் அதுக்கு நீங்க கொடுத்து வைத்து இருக்கணும்.
சூர்யா, உங்க motive என்ன! கார்த்திக் அவங்களை முழுசா பேச விடு!
கோவிந்த், இந்த பணத்தை எடுத்து கொண்டு இதோ இந்த இடத்தில் மிகப்பெரிய பிரம்மாண்டமாக வரவேற்பு ஏற்ப்பாடு செய்யணும்! அதுக்கு உண்டான மொத்த விவரங்கள் டிசைன், கேட்டரிங் எல்லாமே இதில் இருக்கு!
கலை வசந்தன் காதில் இதுக்கு தான் ஏஜென்ட் இருக்காங்க தான இந்த ஆளு எதுக்கு நம்ம கிட்ட தராரு!
கார்த்திக் , ரிசப்ஷன் சர்வீஸ் இருக்குமே அங்கே சொல்லி ஏற்ப்பாடு செய்ய வேண்டியது தானே! இதை எதுக்கு விளக்கம் கொடுக்கிரீங்க!.
கோவிந்த், இது என் மாப்பிள்ளை மனசு சங்கட பட கூடாது அதுக்காக!
மூவரும் புரியாமல் பார்த்தனர். ஆனால் சூர்யா அனைத்தையும் அனுமானித்து இருந்தான். அவன் உடனே இப்போ இந்த மொத்த பொறுப்பையும் நானும் கார்த்திக் ரெண்டு பேரும் செய்து கொடுக்கணும் அவ்ளோ தான!.
கோவிந்த், பிஸ்னஸ் மூளை! ஐம் இம்ப்ரெஸ்ட்! என சொல்லி எழுந்து நின்றார்.
சூர்யாவும் எழுந்து நின்று அந்த பண பெட்டியை எடுத்து கொண்டான்.
வசந்தன், கார்த்திக், கலை வாணி மூவரும் அதிர்ச்சியுடன் பார்க்க..
சூர்யா..?
என்ன செய்ய போறான்!
தொடரும்..
Episode 275
சூர்யாவும் எழுந்து நின்று அந்த பண பெட்டியை எடுத்து கொண்டான்.
கோவிந்த் அவனை கேவல பார்வையுடன் பார்த்தார்.
கார்த்திக், சூர்யா என்ன டா பண்ற?
கலை வாணி, மாப்பிள்ளை!
வசந்தன், கார்த்திக், கலை வாணி மூவரும் அதிர்ச்சியுடன் பார்க்க..
சூர்யா அந்த பண கட்டுகளை பார்த்து எண்ணிக்கொண்டே “என்ன கார்த்திக்? நான் என்ன பண்றேன்! ஒன்னும் பண்ணலையே ! என்ன அத்த? என்ன ஆச்சு என்று அதில் ஒரு சில கட்டுகளை எடுத்தான்.
கோவிந்த் எழுந்து நின்றார்.”அவ்வளவுதான் மிஸ்டர் வசந்தன் உங்க மாப்பிள்ளை ரொம்ப புத்திசாலி அப்படி இல்லன்னா தேவ் கார்ப்பரேஷன உருவாக்க முடியுமா என்ன! பெரிய MNC ப்ராஜெக்ட் எல்லாம் எடுத்து செஞ்சுகிட்டு இருக்காரு கிரேட் தான்!” என்று புகழ்வது போல பழித்துக் கொண்டிருந்தார்.
வசந்தன், கலை, கார்த்திக் என அனைவரும் அவமானத்துடன் நின்று கொண்டு இருந்தனர்.
சூர்யா அவர் முன்னால் சென்று நீங்க சொல்றது சரி தான் சார் என்னால இவ்ளோ பெரிய பிசினஸை எப்படி ரன் பண்ண முடியும்! அதுவும் தனியா என்று கூறிவிட்டு அந்த பணப்பெட்டியை அவர் முன் நீட்டினான்.
கோவிந்த் சூர்யாவின் கையில் இருக்கும் பணத்தையும் பணப்பெட்டியையும் மாறி மாறி பார்த்தார் . என்ன மிஸ்டர்! எதுக்கு பணத்தை என் கிட்டேயே திரும்ப காட்டுறீங்க!
சூர்யா மிடுக்குடன் என்னை என்ன நினைச்சீங்க! அவ்ளோ கேவலமான ஆளு நானு இல்ல! உங்க பணத்தை வாங்கி எங்க மச்சானுக்கு எங்க மாமா வரவேற்பு செய்வாரா? அத நீங்க காலம் முழுக்க சொல்லிக் காட்டணும்னு நினைச்சுட்டு இருக்கீங்களா ?
கோவிந்த் சூர்யாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தார்.
சூர்யா அவரின் முன் பணத்தை நீட்டி வாங்கிக்கொங்க! இந்த பணம் இது சென்னையில் நீங்க சொன்னதா எங்க மாமா வரவேற்புக்காக செஞ்ச செலவுன்னு ஒன்னு இருக்குல்ல! அதை எப்படி அப்படியே விட முடியும் ? அந்த பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டோம்.
மாதேஷ், பாஸ் என சொல்லி கொண்டு முன்னால் வர கோவிந்த் வேணாம் என்பது போல் சைகை செய்தார்.
சூரியா இருவரையும் பார்த்து விட்டு “நீங்க வேணும்னா பரம்பரை பணக்காரரா இருக்கலாம்! உங்களுக்கு இந்த பணம் சாதாரண விஷயமா இருக்கும்! ஆனா எங்களுக்கு இது பெரிய விஷயம்! ஒவ்வொரு காசையும் நாங்க உழைச்சு சம்பாதிக்கிறோம்! அதே போல தான் எங்க மாமாவோட உழைப்பு இந்த பணத்தில் இருக்கு அதனால நாங்க அங்க சென்னையில என்னென்ன செலவு பண்ணுமோ அதற்குண்டான பணத்தை நான் இருந்து எடுத்து இருக்கேன். அதேபோல இந்த வரவேற்பு நிகழ்ச்சியை மொத்த செலவையும் நாங்க தான் பண்ண போறோம்! நீங்களும் பார்க்க தான போறீங்க!” என்று கம்பீரமாக பேசினான்.
சூர்யா பேசிய ஒவ்வொரு விஷயமும் கோவிந்த் முகத்தில் அடித்தார் போல் இருந்தது.
வசந்தன் கலைவாணி இருவரும் பெருமிதத்துடன் நின்று கொண்டிருக்க.. கார்த்திக்கு அருகில் வந்து “அதேதான் நானும் சொல்றேன் மறுபடியும் ஃபர்ஸ்ட்ல இருந்து என்னால பேச முடியாது! சார் முக்கியமா இனி யாரையும் குறைவா எடை போட வேணாம்!”
கோவிந்த் அவமானத்துடன் நின்று கொண்டிருக்க தேஜு அவர் கையை ஆதரவாக பிடித்துக் கொண்டு ” அங்கிள் நீங்க எதுக்கு கவலைப்படுறீங்க! அதுதான் அவங்களே செய்றன்னு சொல்றாங்களே! இதுல என்ன இருக்கு? நீங்க பிசினஸ் மைண்ட் ,அதுவும் இல்லாம பொண்ண பெத்தவங்க, இந்த ஏக்கம் உங்க மனசுக்குள்ள இருக்கும்!
தேஜூ, இங்கே ஆசைப்பட்டது என்ன நம்ம பொண்ணு மட்டும் இல்லையே! அவங்க பையனும் தானே! நீங்க நிமிர்ந்து நில்லுங்க அங்கிள் என்று கூறினாள்.
அவளின் பேச்சில் கோவிந்த் கொஞ்சம் மனதை சரி செய்து கொண்டு அவர்களை பார்த்தார்.
சூர்யா, ம்ம் பரவாயில்லை மிசஸ் spr நல்லா வாதம் பண்றாங்க! இது ரத்தத்திலேயே ஊறி இருக்கும் என்ன அத்தை சொல்றீங்க!
தேஜூ திடுக்கிட்டு பார்க்க கலை வாணி, ம்ம் ஆமா மாப்பிள்ளை என தலை ஆட்டினாள்.
கோவிந்த், சரி நீங்க சொன்னது போலவே எல்லா விஷயத்தையும் செய்வீங்க அப்டின்னு நான் நம்புகிறேன். இந்த வரவேற்பு முடிந்ததும் என்னோட மாப்பிள்ளையை வீட்டோடு ஐ மின் என்னோட வீட்டில் விட்டு செல்லனும் அவர் என்ன நடந்தாலும் இங்கு இருந்து போக கூடாது. உங்க வாக்கை நீங்கா காப்பாற்ற வேண்டும்.
அனைவரும் மருகி கொண்டே சரிங்க சார் என சொல்லி கிளம்பினர். கோவிந்த் அப்படியே அமர்ந்தார்.
தேஜு,” அங்கிள்! அங்கிள்!”
அவர் திரும்பி தேஜுவை பார்க்க இவங்க பேச்சை எல்லாம் நீங்க பெருசா எடுத்து கொண்டு இருக்க வேணாம்!
கோவிந்த், என் அனுபவத்துக்கும் பிஸ்னஸ் மூளைக்கும் முன்னாடி அவன் ஒரு பொடி பையன் மா! ஆனால் என் முன்னால் பேசுவதை கூட எனக்கு பெருசா படல ஆனால் இந்த பணத்தை வைத்து என்னை அவமானம் படுத்தி விட்டான்.
தேஜூ, அங்கிள்! டோண்ட் ஃபீல் அவனுங்க ரெண்டு பேரும் முதலில் இந்த ரிசப்ஷன் வேலையை முடிக்கட்டும்.அப்புறம் அவங்களுக்கு இருக்கு!.
கோவிந்த், “எனக்கு பங்ஷன் பிரச்னை இல்லாமல் நடந்தால் போதும் ஆனால் இவங்க இருக்காங்களே! அது தான் கொஞ்சம் கவலை!”
தேஜூ, அவ்ளோ தானா இவங்க இல்லாமல் செய்ய வேண்டியது தான்!
கோவிந்த் புரியாமல் தேஜுவை பார்த்தார். அவள் குரோத புன்னகையுடன் என்னால் முடியும் அங்கிள் நீங்க என்ன நினைக்கிறீங்க?
அவர் புன்னகையுடன் இந்த பீப்பிள் பேச்சு எனக்கு டிஸ்கஸ்டிங்கா இருக்கு மா! பிடிக்கல! ஒரு ஸ்டேடஸ் இல்ல இட்ஸ் இரிடேடிங்! பட் how is this possible? இதுக்கு மாப்பிள்ளை சம்மதிப்பாரா!
தேஜு கையை மடக்கி கொண்டு இதுக்கு மாப்பிள்ளை சம்மதம் தேவையே இல்ல..
பின்ன?
மிஸ்டர் வசந்தன் அண்ட் மிசஸ் வசந்தன் சம்மந்தம் போதும்!
கோவிந்த், எப்டி மா இப்போ சாதாரணமா வேணாம் என சொன்னதர்கே எப்டி பேசிட்டு போறாங்க அது எப்படி முடியும்!
தேஜூ,” முடியும் என்னால் முடியும் அங்கிள்! ஆனால் அதுக்கு முன்னாடி அவனுங்க அந்த சூர்ய தேவ் ,கார்த்திக் ரெண்டு பேரும் இந்த வேலை எல்லார்த்தையும் முடிக்கட்டும் அவங்க இந்த வரவேற்ப நினைத்து கொஞ்சம் கனவு தான் காணட்டுமே!”
கோவிந்த், நீ இருப்பது எனக்கு தைரியமா இருக்கு மா என் பொண்ணை நான் பத்திரமா என்னோட மாப்பிள்ளையுடன் இங்கே வந்து விடனும்! அதில் எந்த தொந்தரவும் இருக்க கூடாது.
தேஜூ, அவ்ளோ தானே மற்றது எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன் என அவள் கிளம்பினாள்.
சூர்யா, கார்த்திக், வசந்தன், கலை வாணி மூவரும் கார்த்திக் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
கலை வாணி, நான் கொடுத்து வச்சு இருக்கேன் மாப்பிள்ளை என் பொண்ணுங்க ரெண்டு பேரும் நல்ல இடத்தில் பண்புள்ளவங்களை கட்டி இருக்காங்க.
சூர்யா, அத்தை இதை சொல்லி காட்டி எங்களை சங்கடத்துக்கு தள்ளாதீங்க இது எங்க கடமை!.
கலை கண்களில் நீர் கோர்க்க துடைத்து கொண்டாள். ஏனோ மனம் அடித்து கொண்டது.
என்னங்க! என வசந்தனை அழைத்தாள். அதற்குள் தேஜூ பிரைவேட் நம்பரில் இருந்து அழைப்பு வந்தது.
அவள் முகத்தில் அந்த எண்ணை பார்த்ததும் முத்து முத்தாக வியர்க்க ஆரம்பித்தது.
வசந்தன், என்ன ஆச்சு கலை எதுக்கு கூப்பிட்ட!.
மை விழி உள்ளே இருந்து தண்ணீரை எடுத்து வந்தாள். வந்ததும் கார்த்திக் அங்கே என்ன ஆச்சு? அம்மா அங்கே என்ன நடந்தது?
கலை போனை ஸைலன்டில் போட்டு கொண்டு “இரு நான் பாத் ரூம் போயிட்டு வரேன்!”என வேகமாக உள்ளே சென்றார்.
சூர்யா சோபாவில அமர்ந்ததும் பவா வந்து மடியில் அமர்ந்து கொண்டாள். வசந்தன்,அப்போ இனி ரிசப்சன் முடியும் வரை இங்கேயே தான் இருக்கணுமா!
மை விழி, எதுக்கு இங்கே இருக்கணும்? என்ன பா சொல்றீங்க? அங்கே நம்ம வீட்டில் எல்லா வேலையும் நடந்து கொண்டு இருக்க!.
கார்த்திக், தாராவுடைய அப்பா வரவேற்பு சென்னைல வேணாம் என சொல்லி விட்டார்.
மை விழி, அப்புறம்!
கார்த்திக், இங்கே பெங்களூரில் நடத்த அவருக்கு விருப்பமா இருக்காம் அப்படியே செய்ய சொல்லி விட்டார்.
மை விழி புருவம் நெருக்கி இதுக்கு எப்படி சம்மதிச்சீங்க? இப்படி ஒரு மோசமான ஜென்மம் இருப்பாங்களா? அப்பா உங்க மருமகளுக்கு இது எல்லாம் தெரியுமா! என்னமோ ஓவரா சீன் போட்டாள். எல்லாம் நடிப்பு! அது தானே அவளோட தொழில்!.
கார்த்திக், நீ எதையும் தெரியாமல் பேசிட்டு இருக்காத மை விழி! நாங்க நாலு பேர் மட்டும் தான் போனோம்! அந்த பொண்ணுக்கு தெரியாது!
மை விழி, இதையெல்லாம் நீங்க என்னை நம்ப சொல்றீங்களா!
சூர்யா, சரி கார்த்திக் இப்போ அடுத்து என்ன பண்றது! எனக்கு MNC புராஜக்ட் வேலை வேற இருக்கு அவர் கிட்ட வேற வீரமா மொத்தமும் பொறுப்பும் நானே செய்கிறேன் என சொல்லி விட்டேன்.
வசந்தன், மாப்பிள்ளை நான் இருக்கேன் நீங்க எதுக்கு வேலை செய்யணும்?.
கார்த்திக், சூர்யா நம்ம வேலையை பிரித்து கொள்ளலாம்! ஒன்னும் கவலை படாதே!
சூர்யா அவனது வெலட்டில் இருந்து பிளாட்டினம் கார்டை எடுத்து நீட்டினான். கார்த்திக் இதில் இருந்து பணம்!.
மை விழி, ஒரு நிமிடம் நீங்க எதுக்கு எல்லா பொறுப்பையும் கவனிக்கனும்? அவங்க தானே இங்கே வைக்க சொன்னார்கள்!.
கார்த்திக், அது மொத்த பொறுப்பையும் நாங்க தான் எடுத்து கொண்டோம்!.
மை விழி, சரி மாமா எதுக்கு பணம் கொடுக்க வேணும்!. நீங்க எதோ மறப்பது போல் இருக்கே முதலில் அங்கே என்ன நடந்தது! இப்போ எனக்கு தெரிந்தே ஆகனும்! அப்பா முகமே சரி இல்ல! அம்மா முகம் எல்லாம் வியர்க்க போயிட்டாங்க! அங்கே என்ன நடந்தது! சொல்ல போறீங்களா! இல்லையா!
வசந்தன் அங்கு நடந்த அனைத்தையும் நினைத்து கொண்டு அமர்ந்து இருக்க கார்த்திக் மற்றும் சூரியா இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்து கொண்டனர்.
மை விழி, சொல்லுங்க மாமா! நீங்க தான் உண்மையை சொல்லுவீங்க!
சூர்யா ஒரு பெரு மூச்சை விட்டு அங்கு நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறாமல் கொஞ்சம் விட்டு கூறினான்.
அதை கேட்ட மை விழி!.. ?
இங்கே கலை வாணி படபடப்புடன் போனை எடுத்து பேச ஆரம்பித்தாள்.
தேஜூ…?
தொடரும்.
Episode 276
சூர்யா ஒரு பெரு மூச்சை விட்டு அங்கு நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறாமல் கொஞ்சம் விட்டு கூறினான்.
அதை கேட்ட மை விழி” என்ன மாமா சொல்றீங்க இவ்வளவு விஷயம் நடந்திருக்கா! அந்த ஆளுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்! நம்ம முன்னாடி பணத்தை விட்டு எரிகிறானா ?என்று கோபத்துடன் கொந்தளித்தாள்.
கார்த்திக் ,விடு மைவிழி அதுதான் சூர்யா அவங்ககிட்ட மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிட்டு வந்துட்டான். நம்ம இந்த வரவேற்பை நல்லபடியா நடத்தி முடிப்போம்!
மை விழி, எதுக்கு இந்த தேவையில்லாத வேலை நம்ம எதுக்கு வரவேற்பு பண்ண வேணும். விடுங்க!
சூர்யா, இதை பண்ணி தான் ஆகனும் மை விழி!
மை விழி, அவ்ளோ பணத்துக்கு எங்க அப்பா எங்கே போவாரு மாமா! அவள் ஓடி வந்ததுக்கு நம்ம எதுக்கு அவளுக்கு சம உரிமை கவுரவம் எல்லாம் தரணும்!
கார்த்திக், இதை செய்து தான் ஆகனும் வேற வழி இல்ல மை விழி!
வசந்தன், மாப்பிள்ளை மை விழி சொல்றதும் சரி தான் நான் வேணும்னா இதெல்லாம் எங்களால் முடியாது அப்டின்னு போய் சொல்லிட்டு வந்து விடவா! என்னால் உங்க ரெண்டு பேருக்கும் சிரமம்!
சூர்யா எழுந்து நின்று என்ன மாமா பேசுறீங்க யார் இதையெல்லாம் சிரமம் என நினைத்தது அப்படியெல்லாம் இல்ல மாமா!
கார்த்திக்,” நாங்க இருக்கோம் மாமா இதை ஒரு கை பார்த்து விடுவோம்”
இங்கே கலை வாணி படபடப்புடன் போனை எடுத்து பேச ஆரம்பித்தாள்.
“ஹலோ!”
“மேடம் ரொம்ப ஜாலியா இருக்கீங்க போல!”
கலை வாணி வழியும் வியர்வையை துடைத்து கொண்டே “அப்படி எல்லாம் இல்ல!”
தேஜு( பிரைவேட் நம்பர்), அப்புறம் ரிசப்சன் வேலை எல்லாம் எப்டி போயிட்டு இருக்கு!
கலை, அது வந்து அது!
தேஜூ, எல்லாம் எனக்கு தெரியும் இப்போ பெங்களூர்ல தானே நடக்க போகுது!
கலை வாணி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
“அதுக்குள் கலை வாணிக்கு என்ன ஆச்சு?”
“ஒன்னும் இல்ல ஆமா ரிசப்சன் பெங்களூர்ல தான்!”
தேஜு, சரி அங்கேயே இருந்து எல்லா வேலையும் பாருங்க..
சரிங்க என கலை வாணி கூறிட உடனே தேஜு, ஹான் முக்கியமா சொல்ல மறந்து விட்டேன்!
என்ன? சொல்லுங்க!
தேஜு, நான் ரிசப்சனுக்கு வர போறேன். உங்களை பார்க்க வர போறேன்!.
கலை, என்ன சொல்றீங்க?
தேஜு, பின்னே உங்க குடும்பத்தோட மொத்த விஷயத்தையும் எல்லாரும் தெரிந்து கொள்ள வேணாமா!
கலை பயந்து கொண்டே வேணாம்! பிளீஸ்!.
தேஜூ, பெரிய உண்மையை மறைத்து கொண்டு இருக்கீங்க! உங்களுக்கு புரியுதா? இல்லையா? உங்க மான் விழி வாரிசு நிதின், இதை அந்த spr சொல்றதுக்கு முன்னாடி நான் சொல்ல வேணாமா!
பிளீஸ் அப்படி எல்லாம் எதுவும் செய்ய வேணாம்!
தேஜு, சரி அது வேணாம்! அப்போ உதயன் வீட்டோட மாப்பிள்ளை ஆன விஷயத்தை அவன் கிட்ட சொல்ல வரேன்! நல்லா இருக்கும்ல!. அப்போ தான் ரிசப்சன் கலை கட்டும் என்ன சொல்றீங்க!
கலை மனதில் இது எல்லாம் எப்படி இவளுக்கு தெரியும். அது அது வந்து வேணாம் பிளீஸ் அப்படி எல்லாம் பண்ணாதீங்க!
தேஜூ, சரி சரி எப்போ உங்க புதல்வர் கிட்ட விஷயத்தை சொல்ல போறீங்க?
என்ன விஷயம்?
தேஜூ, இந்த வீட்டோட மாப்பிள்ளை விஷயம்!
கலை எட்சில கஷ்ட பட்டு விழுங்கினாள்.
தேஜு, நான் எதுக்கு போன் பண்ணினேனோ நேரா அந்த விஷயத்துக்கு வரேன்!
கலை கலக்கத்துடன் கேட்டு கொண்டு இருந்தாள்.
தேஜூ, நீங்க வரவேற்பு நடப்பதற்கு முன்னாடி உங்க பையன் கிட்ட வீட்டோட மாப்பிள்ளை விஷயத்தை சொல்லணும்!
கலை, அப்படி சொன்னால் வரவேற்பு நடக்காதே! அவன் அங்கே இருந்து கிளம்பி விடுவான்.
தேஜு நக்கலாக சிரித்து கொண்டே அவனை அங்கே இருந்து போகவும் விட கூடாது. அந்த விஷயத்தையும் நீங்க பக்குவமா எடுத்து சொல்லணும். அது தான் உங்களுக்கு டாஸ்க்!.
கலை, நீங்க கூட ஒரு பொண்ணு தானே என்னோட கஷ்டம் உங்களுக்கு புரியலயா!
தேஜு, நீங்க கஷ்ட படுவது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு பாவம் அப்டின்னு உங்க மேல் பரிதாபம் கூட வருது ஆனால் பாருங்க என்னோட இன்னொரு மனசு அதை கேட்க மாட்டிங்குது இன்னும் டாஸ்க் கொடுண்ணு சொல்லுது எப்படி வசதி!
கலை கண்களில் கண்ணீருடன் வேணாம் மா பிளீஸ்! என கெஞ்சினார்.
தேஜு, என் மேல் உங்களுக்கு சந்தேகம் இருக்குன்னு நினைக்கிறேன் அதுக்கு சரி கட்ட ஆதாரமா உங்க பொண்ணு மான் விழி அந்த spr பையன் நிதின் ரெண்டு பேரோட DNA ரிப்போர்ட் கூடவே தாய் மாமன் போல ஐ மின் உங்க பையன் உதயன் போலவே அந்த நிதின்க்கு கண்ணு மூக்கு எல்லாம் இருக்கு இதையெல்லாம் சதோசமா பாருங்க என அனைத்தும் தட்டி விட்டாள்.
கலை வாணிக்கு அதை பார்க்க பார்க்க உள்ளுக்குள் புயலே வீசியது. அதுவும் அந்த படத்தில் நிதின் மற்றும் மகி இருவரும் அணைத்து முகத்தை கண்ணத்தொடு கன்னம் உரச வைத்து இருக்கும் காட்சி அப்படியே உதயன் மற்றும் மான் விழி ஜாடை தான் இல்லையென யாரும் சொல்ல முடியாது. அவருக்கு தலையெல்லாம் சுற்றியது.
தேஜூ ராகிங் சேரில் நன்றாக சாய்ந்து கொண்டு ஹான் இப்போ கொஞ்சம் அந்த மை விழி கிட்ட விளையாடுவோம்! என நினைத்தவள். உடனே அழைத்து விட்டாள்.
கலை வாணி வெளியே வரவும் மை விழிக்கு அழைப்பு வரவும் சரியாக இருந்தது.
வசந்தன், என்ன ஆச்சு கலை!..
ஒன்னும் இல்லங்க என முகத்தில் உள்ள வியர்வையை துடைத்து கொண்டு வந்தாள். அவள் மனதில் எப்படி அந்த உதயன் கிட்ட இந்த விஷயத்தை பற்றி அவனிடம் சொல்வது என யோசித்து கொண்டே வந்தாள்.
சூரியா மற்றும் கார்த்திக் இருவரும் எப்போதோ கிளம்பி விட்டனர்.
வசந்தன், மை விழி அம்மாவுக்கு டீ காபி ஜுஸ் எதுவும் போட்டு கொடு இந்த ஒரு வாரமும் சரியா சாப்பிடவே இல்ல..
மை விழி, ப்பா ஒரு நிமிடம் நான் வரேன் என போனை எடுத்து கொண்டு பால்கனி சென்றாள்.
கலை வாணி, நீங்களும் சரியா சாப்பிடவே இல்ல நான் சாப்பாடு செய்கிறேன்.
வேணாம் கலை எனக்கு பசிக்கள!
கலை, என்ன ஆச்சு ஏன் பசிக்க வில்லை.
வசந்தன் அமைதியாக இருந்தார்.
கலைவாணி அவரின் முகவாட்டத்தை பார்த்து மனசுல “ஆயிரம் பாரம் இருந்தா பசிக்காமல் தான் இருக்கும், அது உங்க முகத்தை பார்த்தாலே நல்லா தெரியுது! ” என்று கசந்த புன்னகையை சிந்தியவள்.
“சரி விடுங்க நான் உங்களுக்கு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வரேன் , அதையாவது கொஞ்சம் குடிங்க உடம்பு என்னத்துக்கு ஆகிறது. என்று சொல்லிக் கொண்டே சமையலறை சென்றாள்.
இங்கே மைவிழி அவள் போனை எடுத்துக் கொண்டு பால்கனி சென்றாள்.
தேஜு நன்றாக ராக்கிங் சாரில் ஆடிக்கொண்டே அவளின் பதிலுக்காக காத்திருந்தாள் .
மைவிழி ஃபோனை எடுத்து “ஹலோ!” என்று சொல்ல
தேஜு, “பேசி ரொம்ப நாளாச்சு சரி தானே!” என்று கூறினாள்.
அவளின் குரலை கேட்டதும் மைவிழி “யாரடி நீ எதுக்கு போன் பண்ற நீ மட்டும் என் கையில கிடைச்சா உன்ன என்ன செய்வேன்னு , எனக்கே தெரியாது!
தேஜு சிரித்துக் கொண்டே “என்ன செய்வது என்று உனக்கே தெரியாதா இப்போ நான் என்ன செய்யப் போறேன்னு உன்கிட்ட சொல்லவா! ”
மைவிழி அவள் பேசுவதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்க
உடனே தேஜு, இன்னும் உங்க உதயம் அண்ணா கிட்ட அந்த பாசமலர் கிட்ட அவனை வீட்டோட மாப்பிள்ளை போற விஷயத்தை பத்தி உங்க வீட்ல இருந்து யாருமே சொல்லல போல !
மை விழி திடுக்கிட்டு கவனிக்க தேஜு, “எனக்கு தெரியும் டி இப்போ நீ பேசறத நான் கேட்க போன் பண்ணல நான் என்ன சொல்றேன்னு நீ கேக்க தா நான் உனக்கு போன் பண்ணேன்!”
தேஜு அவளிடம் “என்ன சின்ன மேடம் பதிலையே காணோம் லைன்ல இருக்கீங்களா!ஏய் பதில் சொல்லு டி”
என்ன?
தேஜு, அவ்ளோ திமிர் தெனவெட்டி இருக்கு.. ஹான் இருக்கட்டும் இப்போ நான் சொல்றத நல்லா கேளு!
மை விழி அமைதியாக இருக்க தேஜு , ஆர் யூ ஹியர்!.
“சொல்லுங்க!”
தேஜு மைவிழியிடம் “இந்த வரவேற்பு தொடர்பான அனைத்து வேலைகளையும் நீயும் உன்னோட இரட்டை சகோதரி உன் கூட ஒட்டிக்கிட்டு ஒரே கருவில் பிறந்தாளே மான் விழி நீங்க ரெண்டு பேரும் தான் இந்த வரவேற்புக்கான அனைத்து வேலைகளையும் செய்யணும். எல்லாத்தையும் நீங்கதான் ரெடி பண்ணனும்!’
என்ன சொல்றீங்க என் தங்கச்சி மாசமா இருக்காளே!
தேஜு சிரித்துக்கொண்டே மாசமாய் இருக்காள்னா வயித்துக்குள்ள என்ன இப்பவே 10 கிலோ சுமந்துகிட்டு இருக்காளா? இல்ல! டெலிவரி ஆக போகுதா!
மைவிழி கோபமாக என்ன பேசுறீங்க? உங்களுக்கு மனசாட்சி இருக்கா?
“இந்த மாதிரி கேட்க உனக்கு எப்படி தைரியம் இருக்கு!”
மை விழி அமைதியாக இருக்க தேஜு, “உன் தங்கச்சி கல்லு மண்ணு சுமந்து வீடு கட்டல சாதாரணமா ஆர்கனைஸ் தான ரெண்டு பேரும் பண்ண போறீங்க அதுக்கு எல்லாம் ஒன்னும் ஆகாது! புரியுதா! நான் சொல்றத செய்ங்க! இல்லனா? நான் சொல்லாம ஏதாவது செஞ்சுடுவேன்!”
மைவிழி அமைதியாக இருக்க தேஜூ”என்ன சின்ன மேடம் இப்போ என்ன சொல்ல வரீங்க!”
ஆமா நான் உங்களை கண்காணித்து கொண்டே இருப்பேன் பார்ப்போம்.
மைதிலி மைதிலி தவிக்கும் கோபத்துடன் வெளியே வந்தால் வசந்தன் மற்றும் கலைவாணி இருவரும் நேராக கலைவாணியின் அருகில் சென்று அமர்ந்தாள்.
கலைவாணி,இந்தா டி ஜூஸ் குடி
மை விழி அதை வாங்கிக்கொண்டு வசந்தன் மற்றும் கலைவாணி இருவரிடமும்” இந்த ரிசப்ஷனுக்கு உண்டான எல்லா வேலையையும் நானும் மான் விழியும் பண்ணலாம் அப்டின்னு முடிவு எடுத்து இருக்கோம்!”
வசந்தன் மற்றும் கலை வாணி இருவரும்….?
இங்கே மான் விழி, உதயன், தாரா…?
தொடரும்…
உதயன் – தாரா
வரவேற்புக்கு காத்திருங்கள் எதிர் பாரா திருப்பம் காத்திருக்கிறது..
பார்ப்போம்!
Episode 277
“இந்த ரிசப்ஷனுக்கு உண்டான எல்லா வேலையையும் நானும் மான் விழியும் பண்ணலாம் அப்டின்னு முடிவு எடுத்து இருக்கோம்!” என மை விழி தன் பெற்றோர் இருவரையும் பார்த்து கூறினாள்.
இதை கேட்டதும் கலை வாணி, என்ன டி பேசிட்டு இருக்க? மானு மாசமா இருக்கா தெரியும் தானே இப்போ இது ரெண்டு கெட்டான் மாசம்! ஆறு மாசம் ஆனால் தான் கொஞ்சம் நிம்மதியா இருக்க முடியும்! அவளை எல்லாம் இதில் நுளைக்காத அந்த ரெண்டு கெட்ட நாயிங்களுக்கு இந்த ரிசப்சன் ஒரு கேடு!
மை விழி தன் தாயை பார்த்து “அவங்களுக்கு வரவேர்ப்பு வைப்பது பற்றி முதலில் பேச்சை ஆரம்பித்தது நீ தான் மா அது உனக்கு நினைப்பு இருக்கா! இப்போ வேற மாதிரி பேசுற! நீ அமைதியா இருந்து இருந்தால் இந்த பேச்சு வளர்ந்தே இருக்காதே”
கலை வாணி திடுக்கிட்டு அது அது வந்து எல்லாம் சரி தான் பெத்த கடமை ஒன்னு இருக்கே அதுக்காக தான் செய்யலாம் அப்டின்னு நினைத்தேன். ஆனால் இப்போ இது உங்களுக்கு நிறைய சிரமம் கொடுக்குது பணசெலவு எல்லாம் என நிறுத்தினாள்.
வசந்தன், மை விழி மகி இருக்கும் நிலையில் இது வேணாம் மா அம்மா சொல்றது சரி தான உனக்கு எதுவும் வேலை அப்டின்னா என்னை கூப்பிடு நம்ப ரெண்டு பேரும் போலாம்!
மை விழி, பா எல்லாம் எனக்கு தெரியும்! இது ஒன்னும் அவ்ளோ பெரிய வேலை இல்ல பா! உதயன் எங்களுக்காக நிறைய செய்து இருக்கான்! நாங்க ரெண்டு பேரும் அவனுக்கு எதுவும் செய்ய வேணும் தானே! மகி கூட நான் இருக்கேன். இன்னும் சரியா நாலு நாள் தானே இருக்கு நான் இப்போவே வேலையை ஆரம்பிக்க வேணும்! அப்பாவை அவமான படுத்தி அனுப்பிய அந்த ஆளை சும்மா விட கூடாது! என வாய் மொழியாக சொன்னவள் சரி நீங்க சிவி, பவா ரெண்டு பேரையும் பார்த்து கொள்ளுங்கள் நான் சூர்யா மாமா வீட்டுக்கு போறேன். என சொல்லி கிளம்பி வெளியே வந்தாள்.
கலை, மை விழி மானு கிட்ட கொஞ்சம் பக்குவமா சொல்லு டி மாசமா வேற இருக்கா!
என்ன சொல்லணும்?
கலை, அவள் ரிசப்சன் இங்கே நடப்பது பற்றி கேட்டால் என்ன சொல்லுவ அதுக்கு தான்!
“மா நான் பார்த்து கொள்கிறேன் இதுங்க ரண்டுக்கும் சோறு ஊட்டி விட்டு விடு!” என சொல்லி விட்டு கிளம்பினாள்.
இங்கே மான் விழி வீட்டில் தாரா மற்றும் உதயன் இருவரும் சென்னை கிளம்பி கொண்டு இருந்தனர். அவர்கள் மூவருக்கும் விஷயம் தெரியாது.
மை விழி கதவை தட்டினாள். உதயன், மாமாவே வந்து விட்டார் சொல்லி விட்டு கிளம்ப வேணும் தாரா! என சொல்லி கொண்டே கதவை திறந்தான்.
அங்கே கைகளை கட்டி கொண்டு மை விழி நின்று கொண்டு இருந்தாள்.
உதயன், என்ன என்னை பார்க்காமல் இருக்க முடியலயா! கண்ணு மை காரி!
டேய் பொத்து உன்னை பார்க்க ஒன்னும் வரல ஃபர்ஸ்ட் ஆப் ஆல் நான் உன் கிட்ட எதுக்கு பேசணும் என சொல்லி கொண்டே உள்ளே நுழைந்து சோபாவில அமர்ந்தாள்.
உதயன், ஹே எங்க ரெண்டு குட்டு குட்டீஸ்! மாமா இன்னிக்கு லீவா!
மை விழி, டேய் கொஞ்சம் பொத்து டா நசனசன்னு பேசிட்டே இருக்க! உண்ணையெல்லாம் ஒரு ஹீரோயின் மூஞ்சி லவ் கேடு வேற பண்ணி இருக்கு வியாக்!. வியாக்! என அவள் சொல்லி கொண்டு இருக்க
மான் விழி, ஹே மை விழி! என சத்தமாக கூறி கொண்டே வந்தாள். அவள் பின்னால் தாரா கொஞ்சம் முறைத்து கொண்டே வந்தாள். பின்ன அவளின் காதல் கணவனை தாரா முன்பே மட்டமாக பேசினால் எப்டி!
மை விழி பார்வையை வேறு புறம் திருப்பி கொண்டு மகி!
மான் விழி, என்ன விஷயம்!
உதயன் நேராக மை விழி அருகில் இடித்து கொண்டே அமந்தான்.
டேய் நாயே எதுக்கு டா இங்கே வந்து உட்கார்ந்த!
போடி! என இருவரும் சண்டையிட ஆரம்பித்தனர்.
மான் விழி, ரெண்டு பேரும் வெளியே போங்க என கத்தினாள்.
தாரா இருவரையும் பார்த்து சிரித்தாள். மான் விழி இருவரையும் முறைத்து கொண்டு இருக்க மை விழி, மகி உன் கிட்ட முக்கியமா பேசணும்!
தாரா அவர்களுக்கு தனிமை கொடுத்து தள்ளி செல்ல உடனே மிசஸ் உதயன் மற்றும் உதயன்! என அழைத்தாள்.
தாரா ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்க உங்க ரிசப்சன் சென்னையில் நடக்கல இங்கே பெங்களூரில் நடக்க போகுது!
என்ன? என மூவரும் குரல் கொடுத்தனர்.
மை விழி, ஆமா அதை பிளான் பண்ணி ஆர்கணைஸ் பண்ண போறது நானும் மகியும்!
மான் விழி திடுக்கிட்டு பார்க்க உதயன், என்ன திடீர்னு! என ஆரம்பிக்க!
ஷஷ்ஷ உன்னோட வெண்ணெய் விளக்கெண்ணை கேள்வி எல்லாம் கலை கிட்ட கேட்டுக!
உதயன், மை விழி எதுவும் பிரச்னையா!
மை விழி முகத்தை இயல்பாக வைத்து கொண்டு ஆமா உதயா எனக்கு பிறந்ததில் இருந்து ஒரு தொல்லை நீ தான் டா! அதான் உன்னை இப்டியே உங்க பொண்டாட்டி கூட அனுப்ப பிளான் போட்டு இருக்கேன்!
உதயன், உன்னை தொல்லை செய்வது மட்டும் தான் எனக்கு வேலை என அவன் பேசி கொண்டு இருக்க மான் விழி அவர்களின் இருவர் நெருக்கத்தையும் பார்த்து கொண்டு இருந்தாள்.
அதை பார்த்த தாரா உதயனுக்கு சைகை காட்டிட உடனே அமைதி ஆனார்கள்.
மகி மைவிழியிடம் தனியாக அழைத்துச் சென்று எதுவும் பிரச்னையா!
அதெல்லாம் ஒன்னும் இல்ல இது நீயும் நானும் அவனுக்கு செய்வது. உனக்கு சரி என்றால் செய்வோம் இல்லன்னா வேணாம்!
மகி , எனக்கு ஓகே தான்!. என இருவரும் வேலையை ஆரம்பித்தனர்.
வரவேர்ப்பின் தீம் இரவு வானம் அதாவது நீல வண்ணம் கொண்ட இரவு வானம் கூடவே மின்னும் நட்சத்திரங்கள், மற்றும் அதற்க்கு தகுந்த அலகங்கரிப்பை மை விழி மற்றும் மான் விழி இருவரும் ஏற்ப்பாடு செய்தனர்.
ஒரு மலர் மண்டபத்தின் நடுவில் இரண்டு பாரம்பரிய நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன, இந்த மேடையும் மண்டபமும் இணைந்த அமைப்பு அனைவரின் இதயத்தை ஈர்க்கும். உதயன் மற்றும் தாரா இருவருக்கும் பிடித்தமான பூக்களைத் தேர்ந்தெடுத்து, மேடையில் விழாவிற்குத் தேவைப்படும் சிறிய இருக்கைகளைச் சேர்க்க திட்டமிட்டனர். .
அதே போல் வரவேற்புக்கு வரும் பெரிய பிஸ்னஸ் மேன்ஸ் அவர்களின் குடும்பத்துக்கு பாப்சிகல்ஸ், பர்ஃபி, பீட்ரூட் லட்டு, சந்திரகலா, சாக் லேட் பர்ஃபி , கேசர் மோதக், பால் கேக், பேடா, மொட்டிச்சூர் லட்டு, அதன் கூடவே அதிரசம், குலாப் ஜாமுன் , ரஷ குல்லா என பனிரெண்டு வகையான இனிப்புகள் கொண்ட ஒரு கிஃப்ட் பாக்ஸ்.. வழங்க ஆடர் செய்தனர்.
அதே போல் இளம் ஜோடிகள் கூடவே தாரா மற்றும் உதயன் கூட பணிபுரியும் நண்பர்கள் குழுக்களுக்கு தனியாக காதல் கதை தொகுப்பு கிமிரிகா பிராண்டின் சிறந்த பரிசு. கார்டேனியா மற்றும் இரவில் பூக்கும் மல்லிகை போன்ற குறிப்புகளால் செறிவூட்டப்பட்ட தெய்வீக உடல் பராமரிப்பு பொருட்கள் பெட்டி முழுவதும் உள்ளன. அக்கறை கொண்டவர்களுக்கு இது சிறந்த பரிசு வழங்குவதாக திட்டமிட பட்டது.
மான் விழி மிகவும் ஆர்வமாக அனைத்தும் செய்தாள். மை விழி இந்த வரவேர்ப்புக்கான கேக் ஆடர் செய்தாள். அதுவும் பார்ப்பவர்களை கவரும் வண்ணம் இருந்தது. சூர்யா மொத்த பணத்தையும் அந்த MNC projectல இன்வஸ்ட் செய்து இருந்தான். அதனால் இந்த வரவேர்ப்பின் பாதி தொகையை மான் விழி அவளது பெயின்டிங் மற்றும் கேமிங் ஆப்ல சம்பாதித்த தொகையை செலவு செய்தாள்.
மை விழி மற்றும் கார்த்திக் இருவரும் ஆளுக்கு பாதி பாதி தொகையை கொடுத்தனர். மொத்தமாக ஒரு கோடிக்கு ஏற்பாடுகள் இருந்தது. அந்த இடம் முழுவதும் கண்ணாடிகள் தான் எல்லா பொருளும் அதற்கு ஏற்ப வாடகைக்கு எடுக்க பட்டது. இந்த வரவேற்பு பிரம்மாண்டமான மண்டபத்தில் ஏற்ப்பாடு செய்ய பட்டது.
வசந்தன் அவனது சொந்தத்தில் இருந்து யாரையும் அழைக்க வில்லை. சூர்யா குடும்பம், அதே போல் கார்த்திக் குடும்பம் மட்டும் தான் கலை வாணி விடாப்பிடியாக சொல்லி விட்டாள்.
கலை வாணிக்கு தினமும் தேஜூ போன் செய்வாள்.
அவள் பதட்டம் கொண்டு எடுத்து பேச சும்மா தான் கூப்பிட்டேன்! என சொல்லி வைத்து விடுவாள்.
மான் விழி சூர்யாவிடம் போனில் என்னங்க சக்திய கூட்டி வாங்களேன்!
கலை அவள் பேசுவதை கேட்டு விட்டு அருகில் வந்தாள். அவளிடம் மானு சொல்றத கேளு இதுக்கு எல்லாம் நம்ம சக்தி, மிதுன், சிவி குட்டி, பவா யாரையும் கூட்டி போக கூடாது. மாப்பிள்ளை வீட்டுக்கு வரட்டும்!
மான் விழி புரியாமல் என்ன மா சொல்ற? என்ன தான் இருந்தாலும் இது நம்ம வீட்டு பங்ஷன்!.
கலை, ஆமா யார் இல்லன்னு சொன்னது ஆனால் உன் அண்ணனுடய மாமனார் கண்ணு கொல்லி கண்ணு அதை விட நம்ம வீட்டுக்கு வந்து இருக்காளே அவள் பிள்ளையை பார்ப்பதே எனக்கு பிடிக்கல.
மான் விழி, என்ன மா இப்படி சொல்ற?
கலை, “உனக்கு ஒன்னும் தெரியாது . நீ வேற மாசமா இருக்க இத்தனை வேலை இந்த நாலு நாளில் எவ்ளோ கஷ்டம் நம்ம அப்பா கிட்ட சொத்து கூட இல்லையே இருந்து இருக்க உங்களுக்கு எழுதி வைத்து இருப்பேன் ஆனால் பிறந்த வீட்டுக்கு கோடி கணக்கில் எந்த மாப்பிள்ளை வீடு செய்வாங்க சொல்லு! இதோ உன் கூட பிறந்து இருக்கானே கேடு வந்தவன் அவனால் தான் என்னோட நிம்மதி எல்லாமே சூனியம் ஆகி போச்சு!”
மான் விழி, மா சக்தி இல்லாமல்!
கலை, நான் சொல்வதை கேளு மானு அவனுக்கு படிப்பு தான் முக்கியம்!
அதற்கு மேல் மறுக்க முடியாமல் அவளும் ஒத்து கொண்டாள்.
வரவேற்பு நாளும் வந்தது. வண்ண விளக்குகளில் அந்த இடம் தேவ லோகம் போல் காட்சி அளித்து கொண்டு இருந்தது.
அனைவரும் கிளம்பினர். அதே போல் இங்கே தேஜுவும் வரவேற்புக்கு கிளம்பினாள்.
தொடரும்.
Episode 278
தன் அம்மா சொன்ன அனைத்து விஷயத்தையும் கேட்ட மான் விழி வேறு வழி இல்லாமல் சரி என ஒத்து கொண்டாள்.
மை விழி வரவேற்பு நடக்கும் இடத்தில் அலங்கார வேலை மற்றும் பரிசு பொருட்கள் என அங்கே நிறைய வேலைகள் இருக்க அதை கண்காணிக்க வசந்தன அழைத்து கொண்டு சென்று விட்டாள்.
அதற்குள் மாயா, வெங்கட், மற்றும் வருண் ஶ்ரீமதி என மாறி மாறி மான் விழி க்கு அழைத்தனர்.
முடிந்தால் வரேன் மா, நிச்சயம் வரேன் பா! என மாறி மாறி பதில் அளித்தாள்.
கலை, யாரு டி போன்ல?
ஶ்ரீ மதியுடைய மாமி! மா!.. சரி நான் வீட்டுக்கு கிளம்புகிறேன்! நீயும் வா மா! என மான் விழி அழைத்தாள்.
நானா! அந்த ரெண்டு கிரகம் இருக்கும் இடத்துக்கு நான் வர மாட்டேன். நீ போயே ஆகணுமா மாப்பிள்ளையை இங்கே வர சொல்லி நீயும் இருந்து கொள்!
இல்ல மா நான் போறேன்! என சொல்லி கிளம்பினாள்.
அவள் வெளியே சென்று ஓலா கார் புக் செய்ய அந்த நேரம் கோவிந்த் அங்கே வந்தார். தாராவை பார்க்க வேண்டும் என தோன்றியது. அவள் போன் எடுக்க வில்லை.
அவர் காரில் வந்து கொண்டு இருக்க மான் விழி காத்திருப்பது தெரிந்தது. தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது அவருக்கு தேஜூ போல தெரிய இந்த பொண்ணு இங்கே நிக்கிரா என அருகில் கார் நிறுத்த சொன்னார்.
மான் விழி போனை நோண்டி கொண்டு வயிற்றை நீவி கொண்டே பார்க்க என்ன தேஜூ இங்கே நிக்கிற கார் எங்கே மா?
மான் விழி திடுக்கிட்டு சார் நீங்க! அண்ணி வீட்டில் இருக்காங்க!
கோவிந்த் அவளை உற்று பார்த்து விட்டு அண்ணியா! சாரி மா! நான் உன்னை எனக்கு தெரிந்த பொண்ணு போல் இருந்தது அதான் கேட்டேன்.
மான் விழி படபடத்து கொண்டு சார் நான் உதயனுடய தங்கை என் பேரு மகிழினி!
கோவிந்த் ஒரு கணம் அதிர்ந்து பின் ஓ அப்படியா மா! சரி சரி! தாரா எங்கே இருக்கா? அவளை பார்க்க தான் வந்தேன்!
மகி, அவங்க என் வீட்டில் இருக்காங்க நான் காரில் போறேன் என்னை ஃபாலோ பண்ணுங்க சார்!
இல்ல மா வாயேன் ஒன்றாக போலாம்!
இல்ல சார் இட்ஸ் ஒகே நான் புக் பண்ணிட்டேன். என காரில் ஏறி கொண்டாள்.
கோவிந்த் உதட்டில் நமட்டு புன்னகை குடும்பத்துக்கே தன்மானம் ரொம்ப அதிகம் தான் என நினைத்து கொண்டே சென்றார்.
மகி வியர்க்க விறுவிறுக்க அவர்களது அப்பார்ட்மென்ட் வந்து சேர்ந்தனர். அவள் யாருடைய மனைவி என கோவிந்த்துக்கு தெரிய வில்லை.
வாங்க சார்! என அழைத்து கொண்டே சென்றாள். அந்த இடத்தை பார்த்த கோவிந்த் கண்கள் ம்ம் நல்ல சொசைட்டி தான் என நினைத்து கொண்டார்.
இருவரும் லிஃப்ட் மூலம் அவர்களது அப்பார்ட் மென்டை அடைந்தனர். கதவு தட்டப்பட்டது. உடனே உதயன் திறந்தான்.
மகி, அண்ணா! அண்ணி எங்கே? என மிகவும் பணிவுடன் அழைத்தாள்.
அவளின் மரியாதையை பார்த்து மகி என ஆசையுடன் உதயன் அழைத்தான்.
“நானும் வரலாமா மாப்பிள்ளை!”என பின்னால் குரல் கேட்டது.
உதயன் அவளின் பின்னால் பார்க்க அங்கே கோவிந்த் புன்னகையுடன் நின்றார்.
தாரா இரண்டு கப்பில் டீயுடன் என்னங்க மான் விழி வந்தாச்சா! என சொல்லி கொண்டே அவள் வந்தாள்.
மகி ,” சார் உள்ளே வாங்க! வாங்க!”
கோவிந்த் பூட்ஸ் கால்களுடன் உள்ளே நுழைய மகி அவரை தயக்கத்துடன் பார்த்தாள்.
தாரா சந்தோச முகத்துடன் டாடி என வேகமாக வந்து டீ கப்புகளை மேஜையில் வைத்து விட்டு தன் தந்தையின் கைகளை கோர்த்து கொண்டு சிரித்தாள்.
உனக்கு நினைப்பு இருக்கா ஒரு போன் கூட பண்ணல! உன்னோட பாடி கார்ட் எல்லாம் எங்கே?
தாரா, ஹான் பொறுமையா பேசலாம் முதலில் நீங்க ஷூ கலட்டி விட்டு உள்ளே வாங்க!
கோவிந்த், இது வேற செய்ய வேணுமா!
தாரா, டாடி! என அதட்ட அவர் உடனே கலட்டி விட்டு உள்ளே நுழைந்தார்.
மகி சார் என்ன சாப்பிடுறீங்க? வாங்க வந்து உட்காருங்க!
கோவிந்த் தன் மகளுடன் சோபாவில அமர்ந்து கொண்டு எதுவும் வேணாம் மா! என அவர் பார்வை உதயன் மீது சென்றது “மாப்பிள்ளை வாங்க!”
ஹான் மாமா என சொல்லி கொண்டே அவர்கள் எதிரில் அமர்ந்தான்.
மகி, எதுவும் சாப்பிடுங்க!
“வேணாம் மா!”
தாரா, டாடி அட்லீஸ்ட் டீ என அவள் போட்டு இருந்த டீயை நீட்டினாள்.
“சீரியஸ்லி யூ மேக் இட்!”
எஸ் டாடி!
கோவிந்த் சந்தோசத்துடன் வாங்கி ஒரு மிடுக்கு குடித்தார். இன்னொரு டீயை உதயனுக்கு கொடுத்தாள்.
கோவிந்த் கண்ணை மூடி கொண்டு அதை பருக தாரா எழுந்து செல்ல
“எங்கே போற பாப்பு டாடி கிட்ட உட்காரு!”
“இல்ல டாடி மான் விழிக்கு எதுவும் பூஸ்ட் போட தான்!”
மகி, இல்ல அண்ணி நீங்க இருங்க நான் பார்த்து கொள்கிறேன்.
கோவிந்த் அவள் கைகளை பிடித்து வருடி கொண்டே அந்த டீயை பருகினார். தாரா தன் தந்தையை புதுமையாக பார்த்தாள். உதயனையும் பார்க்க அவளுக்கு சிரிப்பு வந்தது. மிகவும் கஷ்ட பட்டு அமர்ந்து இருந்தான்.
கோவிந்த் அதை குடித்து முடித்து விட்டு “ரியலி சூப்பர் பாப்பு எனக்கு ஒரு நாள் கூட இந்த மாதிரி போட்டு கொடுக்கல மேரேஜ் ஆனதும் மாப்பிள்ளையை கவனித்து கொள்கிற!”
தாரா சிரித்து கொண்டே வெட்கத்துடன் டாடி என சிணுங்கினாள்.
உதயன் இதற்கு சிரிப்பதா இல்லை என்ன உணர்வு வெளிப்படுத்துவது என அமர்ந்து இருந்தான்.
கோவிந்த், “பாப்பு இனி எனக்கு டெயிலி மார்னிங் போட்டு தரணும்!”
“போட்டால் போச்சு டாடி!”
ஒரு சில நிமிடம் மௌனத்தில் கழிய ஓகே தாரா இப்போ கிளம்பலாம்! மாப்பிள்ளை போலாம்.
தாரா எழுந்து “ம்ம் போயிட்டு வாங்க டாடி!”
“பாப்பு நான் உன்னையும் மாப்பிள்ளையையும் என்னோட கூட்டு போறேன் நாளைக்கு ரிசப்சன் நீங்க நம்ம வீட்டில் இருந்து நம்ம ஒன்றாக போலாம்!” என்ன மாப்பிள்ளை சொல்றீங்க! போலாம் தானே!
தாரா,” டாடி நீங்க போங்க நாளைக்கு பார்ப்போம் அங்கே அவ்ளோ பெறிய வீட்டில் தனியா இருக்க வேணும்!”
உதயன், நீங்க தாராவ கூட்டி போங்க சார் இங்கே என் தங்கச்சி தனியா இருப்பா! மாசமாக இருக்கிறாள்.
கோவிந்த், என்ன மாப்பிள்ளை என்னை பிரித்து பார்க்கிறீர்களா! உங்களை நான் உயர்ந்த இடத்தில் வைத்து இருக்கேன் ஆனால் நீங்க! என்னை சார் அப்டின்னு!.
“சாரி சாரி மாமா!”
தாரா அவனை முறைத்து விட்டு “டாடி அதான் நாளைக்கு மீட் பண்றோம் தான இப்போ போங்க இங்கே ஜாலியா இருக்கு!”
அப்போ 28 யியற்ஸ் உன்னை பார்த்து கொண்ட டாடி முக்கியம் இல்ல ஆனால் இப்போ வந்த மை விழி முக்கியம்!
தாரா, அவங்க மான் விழி! இவங்க தங்கை பேரு தான் மை விழி!.
“பாப்பு!”
“விடுகளேன் சார் பாப்பா தான் ஆசை படுதே இருந்திட்டு வரட்டும்! அவ்ளோ பெரிய மாளிகை கொடுக்க முடியாத நிம்மதி இங்கே இந்த வீடு என் மனைவி மச்சான் கூட இருக்கும் போது கிடைக்குது!”
கோவிந்த் அந்த சத்தம் கேட்டதும் சட்டென எழுந்து திரும்பி பார்த்தார்.
மகி உள்ளே இருந்து வெளியே வந்தாள். கோவிந்த் சூர்யாவை முறைத்து விட்டு இவர் தான் உன்னோட புருஷனா மா!
“ஆமா சார்!”என மகி கூறினாள்.
தாரா, அண்ணா என சிரித்து கொண்டே அழைத்தாள்.
சூர்யா அவர் முன் வந்து நின்று “என்ன சொல்றீங்க!”
கோவிந்த், இனி சொல்ல என்ன இருக்கு என வெற்று புன்னகை சிந்தி விட்டு அவர் கதவுக்கு அருகே செல்ல
தாரா, டாடி! நான் ரிசப் சன் முடிந்ததும் வந்து ரெண்டுக்கு மூணு நாள் வந்து இருந்திட்டு போறேன்! உங்களுக்கு மொத்த சமையலும் நான் தான்!
கோவிந்த், சரி பாப்பு எனக்கு உன் சந்தோசம் தான் முக்கியம்! என சொல்லி விட்டு கிளம்பினார்.
அவர் சென்றதும் உதயன் ஒரு எதிர் பார்ப்புடன் மகி! என அழைக்க அவள் முறைத்து பார்த்து விட்டு சென்றார்.
அப்போ அவர் வந்திருக்கார் அப்டின்னு நடிச்சியா ஆசையா அண்ணா அப்டின்னு கூப்பிட்ட..
மகி அவனை கண்டு கொள்ளாமல் சூரியா கிட்ட போய் ப்ரெஸ் ஆகுங்க…
உதயன் தாரா பக்கம் திரும்பி தாரா! என அழைக்க!
என்னை மட்டும் டாடி கூட கூட்டி போக சொல்லிட்டு இப்போ எதுக்கு தாரா அப்டின்னு கூப்பிட அவசியம் இல்ல என சிலுப்பி கொண்டு பால் கனி பக்கம் சென்றாள்.
மகி இதை பார்த்து வாய் விட்டு சிரித்தாள்.
“என்ன ரெண்டு பேரும் போறீங்க!”
தாரா, வாங்க மான் விழி நம்ம வாக்கிங் போலாம்! என இருவரும் கிளம்ப உதயன் இருவர் பின்னும் கிளம்பினான்.
ஹே மாஸ்க் போட்டுக்க!
எனக்கு தெரியும் யாரும் சொல்ல தேவையில்லை! என நால்வரும் அப்படி இப்படி பேசி சிரித்து உண்டு மகிழ்ந்து உறங்கி போனார்கள்.
காலையில் சூர்யா நேரமாக எழுந்து ரிசப்ஷன் வேலை நடக்கும் இடத்துக்கு சென்று விட்டான்.
கொஞ்ச நேரத்தில் தாரா மற்றும் உதயன் இருவரையும் ஒப்பனை கலைஞர்கள் ஃபேசியல் அப்படி இப்படி என அழைத்து சென்று விட்டனர்.
வீட்டில் மான் விழி மட்டுமே இருந்தாள். மை விழி வந்து அவளை அழைத்து சென்று அவர்கள் வீட்டில் விட்டாள். அவளும் வரவேற்பு நடக்கும் இடத்துக்கு சென்று விட்டாள்.
மணி மாலை நான்கு எட்டியது.
கலை கலக்கத்துடன் அமர்ந்து இருக்க மான் விழி தன் அன்னையின் அருகில் சென்றாள்.
“ம்மா!”
“கலை வழியும் கண்ணீரை துடைத்து கொண்டு என்ன மானு!”
“மா கிளம்ப வில்லையா! உன் முகம் என்ன ஒரு மாதிரி இருக்கு?”
“அது ஒன்னும் இல்ல!” என மலுப்பினாள்.
அனைவரும் ரிசப்ஷன் கிளம்பினார்கள்.
அங்கே மேடை காத்திருக்க ஆரவாறத்துடன் உதயன் குதிரையில் வந்து இறங்கினான்.
தாரா பல்லக்கில் வந்து இறங்கினாள்.
சோ இனி என்ன நடக்கும்?
நாளை பார்ப்போம்!
தொடரும்..
Episode 279
அந்த இடத்தை பார்த்தாலே வரவேற்ப்பு நடக்கும் ஒரு பெரிய விழாக்கோலம் போல காட்சி அளித்தது. அந்தி சிவக்கும் நேரம் மாலை ஆக ஆக அந்த இடத்தில் உள்ள அனைத்து விளக்குகளும் மின்ன ஆரம்பித்தது. வரவர்ப்புக்குக்கு அழைக்கபட்ட அனைவரும் ஒவ்வொருவராக வர தொடங்கினார்கள்.
கோவிந்த் மற்றும் அமிர்தா அவர்களின் உறவினர்கள் மற்றும் தொழில் வட்டாரங்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரையும் உபசரித்து அழைக்க முன்னாலேயே வந்து இருந்தனர். அமிர்தா காரில் இருந்து இறங்கியதும் அந்த இடத்தை பார்த்தவள். அவளது கூலரஸ் கண்ணாடியை கழட்டி கொண்டே “கோவிந்த் எந்த வெட்டிங் ஆர்கனைசிங் டீம் கிட்ட சொன்னீங்க? இட்ஸ் ரியலி அமேஸிங் உண்மையாகவே இனி இது தான் ஹாட் டாபிக் எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு “
கோவிந்த் வெளியே வந்து அந்த இடத்தை பார்த்தார். அவர் மனதில் “அந்த சூர்ய தேவ் சொன்னதை போலவே செய்து விட்டானே! எப்படி இருந்தால் என்ன? நமக்கு தாரா பங்சன் தான் முக்கியம். அதே போல என்னோட மாப்பிள்ளை வீட்டோடு வந்து விட்டால் போதும் மொத்த பொறுப்பையும் ஒப்படைத்து விட்டு என தாரா பாப்பாவுக்கு பிறக்க போகும் பேபிய பார்த்து கொண்டு அதுக்கு பிஸினஸ் சொல்லி கொடுக்க வேண்டும் இது தான் என்னோட ஆசை!”என நினைத்து கொண்டே உள்ளே சென்றார்.
கொஞ்ச நேரத்தில் அந்த இடத்தில் கூட்டம் வர தொடங்கியது. சூர்யா அந்த இடத்தில் அனைத்தையும் மேற் பார்வை செய்து கொண்டு இருந்தான் .உணவுகள் ,பரிசு பொருட்கள் மற்றும் அந்த இடத்தில் குளிர் பாணங்கள் என அனைத்தையும் பரிமாற ஆட்கள் அந்த இடத்தின் தீம் அதாவது நீல நிற வண்ணம் மற்றும் கருப்பு நிறத்துக்கு ஏற்ப உடை அணிந்து இருந்தனர். எல்லாம் சரியாக இருக்கிறதா என இறுதியாக ஒரு பார்வையுடன் முடித்தான். அவன் மனதில் மான் விழி மற்றும் மை விழி என இருவரையும் மெட்சி கொண்டான் .
இப்பொழுது அனைத்தும் ஆரம்பம் ஆனது. முதலில் சன்ட மேளம் முழங்க குதிரையில் வந்து இறங்கினான். அவனை பார்த்ததும் கோவிந்த்துடைய நட்பு வட்டங்கள் மற்றும் தொழில் வட்டங்கள் “கோவிந்த் உன்னோட சன்- இன்- லா உண்மையாகவே ராஜா போல இருக்கார் எங்கள் கிட்ட மறைத்து இருக்க!”
அவர் மிகவும் பெருமையாக மீசையை நீவி கொண்டு நிமிர்ந்த நன்னடையுடன் அனைவரையும் பார்த்து புன்னகைத்தார் . “அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல இந்த கல்யாணம் என் பொண்ணு விருப்பப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டா, என்னோட மாப்பிள்ளை ஒரு பெரிய கம்பெனியில் ஒர்க் பண்றாரு, என்கிட்ட வந்து சொன்னா, நான் பிரச்சனை எல்லாம் பண்ணல ஜென்டிலா என் மாப்பிள்ளை பத்தி நேரிலேயே அவர்கிட்ட பேசினேன். அவரும் ஒத்துக்கிட்டாரு! ரெண்டு பேர் இஷ்டப்பட்டுட்டாங்கன்னு கல்யாணம் பண்ணி வச்சுட்டேன். இப்போ கிராண்டா ரிசப்ஷன்! சோ சிம்பில்!”
அனைத்து நண்பர்களும் “பரவாயில்லையே! உன் பொண்ணு எப்படியோ இந்த சினிமா உலகத்துல இருந்து ஒரு பையனை லவ் பண்ணல, அதுவரை சந்தோஷமா, ஏன்னா ரெண்டு பேருமே நடிகர்களாக இருந்தால் நிறைய பிரச்சனை வரும் சில காசிப், பொசசிவ் இந்த மாதிரி மெச்சூர்டே இல்லாமல் லைஃப் இருக்கும் .ஆனால் இப்போ உன்னோட மாப்பிள்ளை நல்லா தான் இருக்காரு, உன் பொண்ணுக்கு ஒரு நல்ல துணையை தான் கட்டி வச்சிருக்க!” என்று கூறினார்கள்.
உதயன் இறங்கியதுமே அவன் கண்கள் தனது குடும்ப உறுப்பினர்களை தான் தேடியது. வசந்தன், கலைவாணி மைவிழி, மான்விழி, கார்த்திக், சூர்யா என அனைவரையும் தேடினான்.
ஏனென்றால் அவனது நட்பு பட்டங்கள் யாரையும் இந்த வரவேற்புக்கு அழைக்கவில்லை. அவன் திருமணம் செய்து கொண்ட பின் சாதாரண பெண்ணாக இருந்தால் ,ஒன்னும் பிரச்சனை இல்ல,ஆனால் தாரா ஒரு புகழ்பெற்ற வளர்ந்து வரும் நடிகை, அவளை திருமணம் செய்து கொண்ட விஷயத்தை சொன்னால் சிலர் நம்புவார்களா என்று தெரியவில்லை. அதனால் அவன் யாரையும் அழைக்கவில்லை.
உதயன் மனதில் “அம்மா , அப்பா யாரையுமே காணோமே ! ரிசப்ஷன் வேலையா தானே சூர்யா மாமாவும், கார்த்திக் மாமாவும் இங்கே இருக்கேன்னு சொன்னாங்களே! அவர்களையும் காணோமே! என்று மனது பதைபதைத்தது.
கோவிந்த் சைகை காட்ட அமிர்தாவும் அருகில் வந்து நின்றாள். உடனே மேள வாத்தியங்கள் முழங்க உதயன் கீழே இறங்கினான்.
கோவிந்த், ம்ம் போய் ஆரத்தி எடு!
நானா!
நீ தான்! என கூறினார்.
உதயன் இறங்கி நின்று அனைவரை பார்த்தும் வணக்கம் வைத்தான். அந்த வரவேற்பு தொகுப்பாளர் கிட்ட மான் விழி அனைத்தையும். முன்னாடியே சொல்லு இருந்தாள். அது போல் நடுவில் நிற்க வைத்தார்.
வீர சிம்மாவின் மனைவி சித்ரா தேவி மற்றும் தர்மனின் மனைவி உஷா இருவரும் வந்து நின்றனர். ஒதினா என அவர்களுடன் சேர்ந்து உதயனை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தார்.
போட்டோ கிராபர் மொத்தம் மூன்று குழுக்களாக இருந்தார்கள். மை விழி இப்பொழுது வளர்ந்து வரும் சினிமாவுக்கு முயற்சி செய்யும் சில சார்ட் பிலிம் கேமரா மேன்ஸ் என அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தாள். இது அவர்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் புதிதாக செய்பவர்கள் தங்களின் வரும்கால வாய்ப்பை மனதில் கொண்டு மிகவும் உண்மையாக வேலை செய்வார்கள். அதனால் இந்த ஏற்ப்பாடு!. அதே போல் அவர்கள் பணிகளையும் நன்றாக செய்து கொண்டு இருந்தனர். இந்த படங்கள் அனைத்தும் பாதுகாப்புக்கு உரியவை உதயனுடைய முகம் யாருக்கும் தெரியாத வண்ணம் அதாவது வெளி உலக மக்களுக்கு தெரியாத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும்.
அமிர்தா, உள்ளே வாங்க என அழைக்க அவர்களுக்கு முன்னால் நடன குழு வந்தது. இது மான் விழியின் ஏற்ப்பாடு! தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் இருந்து தேர்வு செய்து சில பாடலை கலந்து ஒரு பாடலை பரத நாட்டிய குழு ஆடியது. உதயன் ஒரு வித பதட்டத்துடன் நடுவில் நின்று கொண்டு இருந்தான். அவனுக்கு இது எல்லாம் புதிது! அவனை அழகாக அழைத்து அலங்கார மேடைக்கு கொண்டு சென்று விட்டனர்.
அதன் பின் தாரா வரும் நேரம் ஆனது ஒரு தங்க முலாம் வேலை செய்ய பட்ட ஒரு பல்லக்கில் தாமரை நிற பட்டு புடவையில் வந்து இறங்கினாள். பட்டுக்கு காஞ்சிபுரம் என சொல்வார்கள் ஆனால் இந்த பட்டு உதயனுடய சொந்த ஊரான சேலத்துக்கு அருகில் உள்ள சிந்தாமணியூரில் இருந்து இளம்பிள்ளை என்ற ஊரில் இருந்து கைத்தறி நெசவாளர்கள் பிரத்யேக வடிவமைப்பு செய்து உருவாக்கிய புடவையை அணிந்து இருந்தாள். அவளது புடவை சிந்தாமணியூரிலும், ஸ்கை ப்ளூ வண்ண ப்ளவுஸ் ஜாக்கெட் இளம்பிள்ளையில் வடிவமைக்க பட்டது.
அவள் நகைகள் அனைத்தும் பிரத்யேகமாக இல்லை அவள் அழகை அந்த நகைகள் குறைத்து காட்டும் என்பதால் மிகவும் குறைவாக வேலைப்பாடு செய்ய பட்ட நகையை அணிந்து இருந்தாள். இந்த ஒப்பனை ஏற்ப்பாடு அனைத்தும் மை விழி வேலை. அனைவர் கண்களும் அவளின் புடவை மற்றும் நகையின் மீது தான் இருந்தது.
தாரா அனைவருக்கும் வணக்கம் சொல்ல சித்ரா , உஷா, அமிர்தா என மூவரும் அதே போல் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தனர். அவர்களின் பின்னே ஆடவர் குழு சூழ்ந்து கொள்ள பாட்டு பின்னால் ஓட ஆரம்பித்தது.
உதயன் ஒரு நிமிடம் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான். தன் கையில் இருக்கும் போனில் நேரம் பார்த்தவன். ஒரு பார்வையை தாராவின் மீதும் இன்னொரு பார்வையை அந்த அரங்கத்தில் உள்ள அனைவர் மீதும் செலுத்தி சல்லடை போட்டான். அப்பா எங்கே? அம்மா எங்கே? இந்த மை விழி கூட காணோமே! என பள்ளி குழந்தையை மேடையில் ஏற்றி விட்டால் அதன் வெளிப்பாடு எப்படி இருக்குமோ இப்பொழுது அது போல உதயன் முகம் இருந்தது.
தாரா மெல்லிய புன்னகையுடன் மெதுவாக அந்த மேடையின் மீது ஏறி உதயனை நோக்கி வந்தாள். அந்த நேரம் விளக்குகள் அனைத்தும் மங்கிய ஒளியை வெளிப்படுத்துவது போல் மாற்றினர்.
அந்த இடத்த்ன் ஒரு பக்கத்தில் இசை கருவிகள் கொண்டு மெல்லிய இசை மற்றும் பாடல் நடன மேடை என ஒரு பக்கம் இருந்தது. ஆடல் வேலையை அனைவரும் ஆரம்பித்தனர்.
தாரா மேடையில் இருந்து அனைவரையும் ஒரு பார்வை பார்த்தாள். ஜானவி , தியா, அனீஸ் , விபாகர் , தேவ் கபூர், அனாமிகா, ரக்ஸனா, மற்றும் இன்னும் சில ஆர்டிஸ்ட்கள் வந்து இருந்தார்கள்.
தாரா அங்கே உள்ள அனைவரையும் பார்த்து விட்டு” இது கனவு மாதிரி இருக்கு உதயன் இன்னிக்கு நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா! என்னோட டாடி என்னை ஏற்று கொண்டார். இதோ என் பிரெண்ட்ஸ், கோ ஒர்க்கர்ஸ் எல்லார் முன்னாடி உங்க கையை சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டே இப்போ கோர்த்து இருக்கேன். இது என்னோட இறுதி மூச்சு காற்று வரை இப்படியே இருக்கும்!”
உதயன் சுறத்தே இல்லாமல் புன்னகை செய்தான். அப்பொழுது அந்த இடத்துக்கு ஒரு போர்ச்சியோ கார் வந்தது. கதவுகள் திறக்கப்பட லேவெண்டர் நிற புடவையில் நட்சத்திரத்தை வெட்டி எடுத்து தோடு போட்டது போல் கூடவே அந்த சூரியனை அவள் பொட்டாக வைத்து கொண்டு புயல் போல் அவளின் புதிய கட் செய்த முடி பரபரக்க டக் டக் என நடந்து வந்தாள். அவள் கையில் கூடவே தன் இரட்டையனுக்கு ஜோடி மோதிரம் எடுத்து கொண்டு தன் தந்தையின் கையை கோர்த்து கொண்டு வந்தாள்.
தேஜூ தான் அது அங்கே உள்ள கேமராக்கள் அவளையும் சில படங்கள் எடுத்தது.
தே ஜு நேராக கோவிந்த் கிட்ட பேசி கொண்டே மேடையை பார்த்தாள். உதயன் முகத்தில் அவ்வளவு கவலை தேஜூவிக்கு அதை பார்க்க பார்க்க அவ்வளவு சந்தோசம்! உனக்கு மட்டும் எல்லாம் கிடைக்க வேண்டுமா! உன்னோட தானே நானும் பிறந்தேன். நீ மட்டும் இத்தனை நாள் எல்லாம் அனுபவித்த தானே நான் தனியாக கஷ்ட பட்டேன் டா! என்னை தூக்கி போட்ட உன் குடும்பத்துக்கும் உனக்கும் இது தான் தண்டனை இது கொஞ்சம் தான்! என நினைத்தாள்.
அந்த நேரம் இரண்டு கார்கள் வந்தது. ஒன்றில் spr இன்னொன்றில் குரு பிரகாஷ் வந்து இறங்கினார்கள்.
தேஜு நேராக மேடைக்கு சென்றாள். உதயன் அருகில் சென்றாள். ஹலோ congrats தாரா அண்ட் உதயன்!
நன்றி என ஒற்றை பதில் அளித்தான்.
தேஜூ, தாரா உன்னை டாடி வர சொல்வது போல இருக்கே என்னன்னு கேளு!
ம்ம் சரி ஒதினா! என சொல்லி கொண்டே கீழே இறங்கினாள்.
தேஜூ,யாரை தேடி கொண்டு இருக்க?
உதயன் திடுக்கிட்டு பார்க்க..
தேஜு தந்திர புன்னகையை உதிர்த்து கொண்டே உங்க குடும்பத்தில் இருந்து யாரும் வர மாட்டாங்க!
என்ன சொல்றீங்க?
தேஜு, அப்போ உனக்கு எதுவும் தெரியாதா! அச்சோ பாவம்!
உதயன் , என்னங்க!.
தேஜு அவள் கூந்தலை ஒரு பக்கம் போட்டு கொண்டு நீ இப்போ இப்போ!
உதயன் அவளை பதட்டத்துடன் பார்க்க தே ஜு முகமெல்லாம் புன்னகையுடன் நீ இப்போ வீட்டோட மாப்பிள்ளை இன்னும் பச்சையா சொல்ல போனால் உன்னை உன் அப்பா கூடவே ஹான் முக்கியமா கலை வாணி அம்மா உன்னை! உன்னை! விட்டு போயிட்டார்கள்!
உதயன் கண்கள் சிவந்தது.
தேஜூ….?
தொடரும்..
Episode 280
தேஜு சொல்லி முடித்து கொண்டே அவனை பார்த்தாள். உதயன் கண்கள் சிவந்தது.
அவன் கோபத்தில் வேகமாக மாலையை கலட்ட போக தேஜூ, ஹலோ ஹலோ என்ன பண்ண போற?
உதயன், உன் வேலையை நீ பாரு!
தேஜு, போ இப்போ நீ போனால் இங்கே இருக்க எல்லாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க ஆனால் உன் அப்பா! என பாதியிலேயே நிறுத்தி விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.
உதயன், ஹே என்ன சொல்ற? என் அப்பா, அம்மாவுக்கு என்ன ஆச்சு? இது யார் பண்ண வேலை!
தேஜு, சிரி சிரின்னு சொன்னேன்! இது யார் வேலை? உன் வேலை தான்!
உதயன் கோபத்துடன் பல்லை கடித்து கொண்டே எங்க அப்பா பற்றி என்ன சொல்ல வந்த?
தேஜு, உங்க அப்பா! மம்மம் உங்க அப்பாவுடைய வளர்ப்பு சரி இல்லன்னு சொல்லுவாங்க அப்புறம் வசந்தன் கோவிந்தா ! கோவிந்தா! தான்!
உதயன் கண்கள் சிவக்க முகம் கோபத்தில் சிவந்து வெப்ப மூச்சை வாங்க ஹே வாய மூடு!
தேஜு, சரி உதயன் அமைதி அட அமைதியோ அமைதி பா!
உதயன் கண்களில் கண்ணீர் கோர்க்க உதட்டை அழுத்தி கடித்து கொண்டு நின்றான்.
தேஜு, சரி நான் நேரா விஷயத்துக்கு வரேன் உன்னை பார்த்தால் ரொம்ப பாவமா இருக்கு!
உதயன் அவளை அடிபட்ட பார்வை பார்க்க தேஜு, அதாவது உன் பொண்டாட்டி தாராவுடைய அப்பா உங்களை இங்கே வர சொன்ன போதே இந்த கண்டீசனுக்கு ஒத்து கொண்டு தான் வீட்டுக்கு வந்தார்கள். அண்ட் இது உன்னையும் தாராவையும் தவிர எல்லார்க்கும் தெரியும்!
உதயன் , என்ன கண்டிசன்!
தேஜு, நீ இந்த ரிசப்ஷன் முடிந்ததும் உதயணுடைய பொண்டாட்டி தாரா அப்டின்னு இல்ல தாராவுடைய புருசன் உதயனாக!.
உதயன் அவளை புருவம் நெருக்கி பார்த்தான்.
தேஜு, “அதாவது இந்த வீட்டோட மாப்பிள்ளையாக! தாராவுடைய புருசன் உதயன் என்ற பெயருடன் மிஸ்டர் கோவிந்த் துடைய மொத்த சொத்துக்களையும் கூடவே தொழில்களையும் சேர்த்து கவனித்து கொண்டு அவரையும் பார்த்து கொள்ளும் ஒரு வாரிசு!”
உதயனின் உதடுகள் துடித்தது. நான் என் அப்பா அம்மாவை பார்த்து கொள்ள வேணும்! நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன். ச்சீ என்னை பார்க்க எனக்கே அசிங்கமா இருக்கு! என அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
தேஜு காதை தேய்த்து கொண்டே உதயா உதயா! அவ்ளோ தான் உன்னை தத்து கொடுத்து விட்டார்கள் அதுக்கும் மேல நீ இதையெல்லாம் மாற்றி அமைக்க நினைத்தால் உங்க அப்பா கோவிந்தா, உன் அம்மா.. அதை விட கோவிந்த் பற்றி உனக்கு முழுசா தெரியாது தாரா வாழ்க்கையில் எதுவும் ஆச்சு! அவ்ளோ தான்! கூடவே தாரா விக்கு துணையாக சித்தார்த் கிருஷ்ணா, அப்புறம் குரு பிரகாஷ் அதை விட முக்கிய விஷயம் அந்த நிதின் ரகசியம் தெரியுமா!
உதயன் உடைந்து போய் அவளை பார்த்தான்.
தேஜூ, அந்த நிதின் உன்னோட மான் கொம்பு தங்கைக்கும் sprகும் பிறந்த பையன், அப்புறம் குரு – மை விழி லவ் என உங்க மொத்த குடும்பமும் உன் ஒருவனால் சந்தி சிரிக்கும் அந்த காட்சி ச்ச ச்ச சூப்பரா கிக்கா இருக்கு!
உதயன் , இப்போ உனக்கு என்ன வேணும் எதுக்கு என்னை இப்படி கொடுமை பண்றீங்க! நான் பண்ண தப்பு தாராவை உண்மையா நேசித்தது மட்டும் தான்!
தேஜு, தாரா உன் லவ்வை விட உன்னை நேசிக்கிறா! அவங்க அப்பா, குடும்பம், சொத்து, கரியர் எல்லாத்தையும் தூக்கி போட்டு உனக்காக வந்து இருக்கா! சோ என்ன பண்ண போற? நீ இல்லன்னா அவள் செத்திடுவா! அதுவும் இந்த அளவுக்கு வந்து எதுவும் பண்ண மொத்தமும் ஸ்பாயில்!
உதயன் மருகி நின்று கொண்டு இருந்தான். தேஜு திருப்தி பட்டு கொண்டு இப்போ உன்னோட டாஸ்க் என்ன தெரியுமா!
அவன் வாயில் வார்த்தை வர வில்லை. தேஜு, உங்க வீட்டில் நீ தாராளமா போய் கேட்கலாம் ஆனால் இது எதுவும் தாராக்கு தெரிய கூடாது. அண்ட் ஒரு வேளை அவள் உங்க வீட்டுக்கு போறேன் அப்டின்னு சொன்னாலும் நீ தான் அவளை convince பண்ணி இங்கே இருக்க வைக்கணும்!
உதயன், இதுக்கு நான் செத்து இருக்கலாம்!
தேஜு, இனி நீ கோவிந்த் வாரிசு இந்த ரிசப்ஷன்ல அதை அவர் அறிவிக்க போறாரு! ஆனால் இதை பார்க்க உன் குடும்பத்துக்கு கொடுத்து வைக்கள! அதுவும் நல்லது தான் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கலாம்.
உதயன் களவரத்துடன் காண பட்டான். தேஜு, அண்ட் இந்த வீட்டோட மாப்பிள்ளை, வாரிசு இது எல்லாம் உங்க மாமனார் ஆசை அதை ஜென்டிலா உங்க அப்பா கிட்ட சொல்லி சம்மதம் வாங்கி விட்டார்.
உதயன் கோவிந்த் இருக்கும் இடத்தை பார்த்து முறைக்க தேஜு, ஹான் இந்த விஷயத்தை அவர் கிட்ட போய் கேட்டு பிரச்னை பண்ண கூடாது! அதனால் பல அசம்பாவிதம் நடந்தால் அதுக்கு நீ தான் பொறுப்பு!
உதயன் அவளை கொன்று விடும் கொடூரத்துடன் பார்த்தான். தேஜு, ஹான் ஃபைனல் டச் கொடுக்கணும் அது நங்கூரம் மாதிரி இருக்கணுமே என வாய் மொழியாக கூறி விட்டு பாரு இந்த மொத்த டெக்கர், அண்ட் இங்கே உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் வயிற்று பிள்ளையை சுமந்து கொண்டு மான் கொம்பு காரியும், பேய் சாரி மை கண்ணு காறியும் செய்தார்கள் ஆனால் என்ன ஒரு துரதிஷ்ட ம்ம் நீ இங்கே அனாதை மாதிரி ஆள் இல்லாமல் தனியா நிக்கிற!
உதயன் கண்ணில் கண்ணீரே வந்து விட்டது. தேஜு, “இட்ஸ் ஓகே உன்னை பார்த்தால் பாவமா இருக்கு, உன்னை நான் என் கூட பிறந்தவனாக நினைத்து கொள்கிறேன். சரியா உதயன் அண்ணா! இதோ உங்களுக்காக ரிங் இது கொண்டாட்டத்துக்கான நேரம்!” என தாராவை அழைத்தாள்.
கோவிந்த் அங்கிள் அண்ட் அமிர்தா ஆன்டி வாங்க என சொல்ல அந்த நேரம் வெட்டிங் கேக் கட் செய்யும் நேரம் வர நிகழ்ச்சி தொகுப்பாளர் கேக் கொண்டு வர ஏற்ப்பாடு செய்தார்.
தாரா மேலே வந்ததும் உதயன் அருகில் நின்று கொண்டு சுற்றிலும் தேடினாள்.
தேஜூ, என்ன ஆச்சு தாரா! யாரை தெடுற?
அது ஒன்னும் இல்ல ஒதிணா இவரோட தங்கை, அத்தை, மாமா, அண்ணா எல்லாம் காணோம் அதான்!
தேஜு, அதை உன் புருசன் கிட்ட கேளு!
தாரா, என்னங்க எங்கே மான் விழி, மை விழி எல்லாம்!
உதயன் என்ன சொல்வான்? உன்னால் தான் நான் என் மொத்த குடும்பத்தையும் இழந்து இப்பொழுது அனாதையாக நிற்கிறேன் என சொல்வானா! சொன்னால் இவள் எதையும் செய்து கொள்வாள்.
தேஜு, அவங்க இங்கே தான் எங்கேயும் இருப்பார்கள் சரி வாங்க இந்த கேக் அப்புறம் இந்த கேக் ரெண்டையும் பார்ப்போம்!
தாரா, என்னங்க நீங்க முதலில் மாமாவுக்கு கால் பண்ணுங்க அவங்க வரட்டும் அதுக்கு அப்புறம் இதை கட் பண்ணுவோம்!
உதயன் கைகள் நடுங்க நின்று கொண்டு இருந்தான். துக்கம் தொண்டையை அடைத்தது.
தேஜு, “அவங்க உங்கள் ரெண்டு பேருக்கும் சர்ப்ரைஸ் பிளான் பண்ணி இருக்காங்க அப்டின்னு எனக்கு தோணுது அப்படி தானே மிஸ்டர் உதயன்!” என கூறினாள்.
அதற்குள் கேக் வர தேஜு, “சரி சரி இப்போ கேக் கட் பண்ண வேண்டிய நேரம் அப்புறம் உங்களுக்காக ஸ்பெசல் கிஃப்ட் இருக்கு!”
தாரா, என்ன? என்பதை போல் பார்த்தாள். அதற்குள் spr அனைவரிடமும் ஒரு சின்ன தலை அசைப்புடன் மேடையை நோக்கி வந்து கொண்டு இருந்தான்.
அவன் கண்களில் தேஜு தான் திமிருடன் நின்று கொண்டு இருந்தாள். அவள் கண்களின் கீழ் இமைக்கு மட்டும் மை பூசி இருந்தாள். மற்ற படி எந்த ஒப்பனையும் இல்லை!
குரு தன் அண்ணனை தான் பார்த்து கொண்டு இருந்தான். அங்கு இருக்கும் அனைவர் கவனமும் மேடையின் மீது தான் இருந்தது. உதயன் பார்வை spr மற்றும் குரு பக்கம் திரும்ப கண்கள் கோபத்தில் மின்னியது.
கோவிந்த் spr மேலே வந்ததும் அவரும் பின்னால் வந்தார்.
Spr தேஜு அருகில் வந்து நின்றான்.ஒரு கடுகளவு பார்வை கூட அவன் பக்கம் திரும்பவே இல்லை!
Spr, கன்கிராட்ஸ் தாரா அண்ட் உதயன்! பாப்பு உன்னோட செலக்சன் டூ குட்!
தேஜு தமது பெர்ஸ் பிடித்து கொண்டு திரும்ப spr அவளின் இடையின் மேல் கைகளை அழுத்தி பிடித்து கொண்டான். இருவரும் மிகவும் நெருக்கமாக நின்று கொண்டு இருந்தனர்.
கோவிந்த், எப்டி சூர்யா! (Spr) எல்லாம்!.
Spr, speechless மாவா இது மிஸ்டர் உதயனோட தங்கை மகிழினி வேலை சாலா பாகுந்தி!
உதயன் கண்களில் கோபம் அனல் தெறிக்க தாரா அதை கண்டு கொண்டாள்.
உதயன் பற்களை கடித்து கொண்டு மிஸ்டர் spr மைண்ட் யுவர் வேர்ட்ஸ்! என நெஞ்சை நிமிர்த்தி கொண்டு கூறினான்.
Spr புன்னகையை உதிர்த்து கொண்டே நின்றான். தேஜு கோப மூச்சை வெளி விட்டு கொண்டே நின்றாள்.
குரு, என்ன தாரா உங்க புருஷர் ஓவர் டென்ஷன் ஆகுறாரு!
கோவிந்த், மாப்பிள்ளை என்ன ஆச்சு?
உதயன், ஒன்னும் இல்ல சார் நான் நல்லா இருக்கேன்!
தாரா அனைவரையும் இயலாமையுடன் பார்த்தாள்.
குரு இந்த இடத்தை இன்னும் சுவாரஸ்யமாக ஆக்கும் பொருட்டு வேண்டும் என்றே ஹான் அண்ணா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா!
Spr தேஜூவின் மீது பிடியை இளகி கொண்டே அவளின் இடைக்கு மேல் கீழ் என கைகள் படற சொல்லு! என்ன விஷயம்?
குரு, அண்ணா நான் காட்டுகிறேன்! என சொல்லி போனை உதயன் மற்றும் தாரா இருவரும் பார்க்கும் வண்ணம் வைத்தவன். இதோ வருண் ரிசப்ஷன் பாரு அங்கே நிதின் கூட அப்படியே இந்த போட்டோஸ் என ஒவ்வொன்றையும் தள்ளி காட்டிட அதை பார்த்ததும் உதயன் முகம் இயலாமை மற்றும் ஏமாற்றம் என அனைத்தும் வெளி படுத்தியது.
அப்படி என்ன அந்த போட்டோவில் இருக்கும்?
நாளைக்கு பார்ப்போம்!
தொடரும்..