நிலவில் மூழ்கும் சூரியன் PART 10

by Pradhanya kuzhali
319 views

Episode 306

சூர்யா முகம் கழுவி வெளியே வந்ததும் குழந்தைகளை தூக்கியவன் ஒரு முறை கொஞ்சி விட்டு “நான் கிளம்புறேன்!” என்று கூறினான். 

கார்த்திக் அவனிடம் “ஏன்டா உடனே கிளம்பி போறேன்னு சொல்ற உன் முகம் ரொம்ப கோபமா இருக்கே!”

ஆமா நான் ரொம்ப கோபமா கிளம்புறேன் என்று சொல்லிக் கொண்டே மாகியை ஒரு பார்வை பார்த்து கொண்டே சென்றான். 

உடனே மைவிழி “ மாமா என்ன ஆச்சு! இருங்க, சாப்பிட்டு போங்க!  நம்ம எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆகுது!”

மகிழினி அவனையே பார்த்தாள்.  உள்ளுக்குள் ஒரு படபடப்பு, பதட்டம் என தலையை கீழே குனிந்து கொண்டாள்.

மைவிழி அவளையும் சூர்யாவையும் மாறி மாறி பார்த்தாள்.‌“உங்க ரெண்டு பேருக்குள்ள எதுவும் சண்டையா ?;

மகி, ஆமாம் என்று தலையசைக்க சூர்யா இல்லை என்பது போல் தலையசைத்தான்! 

இருவரும் ஒரே நேரத்தில் பார்த்து கொண்டனர். 

மை விழி, ஆமா வா!.மாமா என்னாச்சு? 

இந்த முறை சூர்யா ஆமாம் என தலை அசைக்க மகி இல்லை என தலை அசைத்தாள்.

மை விழி இருவரையும் பார்த்து விட்டு “சண்டை கன்ஃபார்ம் எனக்கு தெரிஞ்சு போச்சு , இப்போ என்ன விஷயம் அப்டின்னு சொல்லுங்க!”

 கார்த்திக் அவர்களை பார்த்தானே தவிர எதுவும் பேச வில்லை. மகிளினி தான் எந்த விஷயத்திலும் தலையிட கூடாது என சொல்லி விட்டாள். அதனால் அமைதியாக பால் கனி சென்று விட்டான். 

மகி மனதில் “அய்யோ இவரை வேற சமாதானம் பண்ணனுமா!”என பின்னால் சென்றாள். 

சூர்யா மனதில் “கிராதகி! உனக்கு ஒரு டாஸ்க் வச்சிருக்கேன் நீ வாடி!”

மைவிழி  சூர்யாவிடம் வந்தாள்‌‌. என்ன ஆச்சு மாமா?

ஒன்னும் இல்ல  மா!..

சும்மா சொல்லுங்க! 

சூர்யா, “நான் எண்ணத்தை சொல்ல  உன் தங்கச்சிக்கு தயவு செய்து அட்வைஸ் பண்ணு!இங்க இருக்கறதிலேயே பெஸ்ட் pair நீயும் கார்த்திக் தான் தெரியுமா!” 

மை விழி, அந்த அளவுக்கு டிஸ்யூமா!. 

சூர்யா,“ எனக்கு செம்ம கடுப்பாக இருக்கு,  வயித்துல குழந்தையை வைத்துக்கொண்டு இந்த நேரத்துல ஆடிகிட்டு ப்ராஜெக்ட் எடுத்து இருக்கா!  நான் அத கேக்க போனதுக்கு,  என்கிட்ட சண்டை போடுறா, எதுக்கு இந்த வெட்டி வீராப்பு எல்லாம்!”

“புரோஜக்டா!”

சூர்யா, ம்ம் உன் தங்கச்சி  அமைதியாக இருக்கவே  மாட்டாளா!

“அதை நீங்க தான் மாமா சொல்லணும்!” என சிரித்தாள். 

“மை விழி!” என சூர்யா அதட்டினான். 

மை விழி, “அவளுக்கு எப்போதும் கோபம் திமிர் எல்லாம் ஜாஸ்தி! பட் இந்த கார்த்திக் கலண்ட கேஸ் இந்த மகி  கலண்ட கேஸ்க்கு என்ன சொல்லி கொடுக்க போறான்னு தெரியல! சரி மாமா  சாப்பிட்டு அவளை கூட்டிட்டு போங்க!”

சூர்யா தலையில் கோதிக் கொண்டே அவள் வந்தா தான் கூட்டிட்டு போவேன்!. 

“வரலனா!”

நான் பாட்டுக்கு கிளம்பிடுவேன் என்று கூறினான். 

மைவிழி, அவ வருவா மாமா! உங்கள விட்டு அவளால் இருக்கவே முடியாது!

சும்மா சொல்லாத மை விழி!..

மாமா அது எல்லாமே பொய் அவள் உங்கள் கூட வருவா!

இங்கே கார்த்திக் மற்றும் மான்விழி இருவரும் பால்கனியில் நின்று கொண்டிருந்தனர் .  பிரச்சனையா? 

கார்த்திக் அமைதியாக இரவு நட்சத்திரத்தை  பார்த்துக் கொண்டிருந்தான். 

 சாரி மாமா என்று கூறினாள் .

கார்த்திக் திரும்பி அவள் முகத்தை பார்க்காமல் வெளியே செல்லப் போக..

மாமா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, மாமா! 

மேடம் உங்க கிட்ட நான் என்ன பேச முடியும் 

மகிழினி , மாமா அது அது வந்து அப்படியெல்லாம் இல்ல மாமா!  அந்த சிச்சுவேஷன்ல நான் எதோ அப்படி விட்டேன்.

கார்த்திக்,  “நான் என்னன்னு தானே கேட்டேன்,  சூர்யா  உன்னை அடித்து விட்டனா என்று தானே கேட்டேன்!  ஆனா நீங்க ரொம்ப பெரிய பெரிய ஆளு தனியா ப்ராஜெக்ட் எடுக்கிற அளவுக்கு பெரிய ஆள் ஆகிட்டீங்க! உங்ககிட்ட நான்  பேச முடியுமா!” என்று கூறினான்

மகிழினி அமைதியானாள். 

கார்த்திக் எதுவும் பேசவில்லை, மகி ஒரு பெரு மூச்சை விட்டு “எனக்கும் அவருக்கும் கொஞ்சம் பர்சனலா ஒரு சின்ன விஷயத்துல சண்டை,  அதுக்குதான் அவரு என் பேச்சை கேக்கல , எனக்கு கோபம் வந்துடுச்சு,  அதனால இந்த சின்ன சண்டை, ஆனால் நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல…!”

கார்த்திக் , அதுக்கு சூர்யா உன்ன அடிப்பானா?  அப்ப ஏதோ பெரிய விஷயம் தானே! 

அவள் கீழே குனிந்து கொண்டு இல்ல தப்பு வந்து! என தயங்கி நின்றாள். 

கார்த்திக், அவன் மேலயா ? உன் மேலயா என்று கேட்டான் .

மகிழினி,  அவர் மேல தப்பு இல்ல…ஆனால்  அவர் மேலயும் தான் தப்பு இருக்கு!  என் மேல கூட தப்பு இருக்கு! 

கார்த்திக் , புரியலையே

நான் தப்பா பேசிட்டேன், அதுக்கப்புறம் அவர் என்ன அடிச்சிட்டாரு!  ஆனா நான் பேசுனது பெரிய தப்பு தான் ! 

கார்த்திக்,“இட்ஸ் ஓகே, இனி நான் தலையிட வேண்டாம்னு சொல்லிட்டல்ல,  இது உங்க குடும்ப பிரச்சனை, இதை நீங்களே நீங்களே சரி செஞ்சுக்கோங்க.  இப்போ வா சாப்பிட போலாம்.. சாப்பிட்டு தான் நீ கிளம்பனும்!”

மாமா ப்ளீஸ் என்கிட்ட பேசுங்க!” என்று  மீண்டும் ஒரு முறை கூறினாள். 

கார்த்திக் சிரித்துக் கொண்டே“ உன் மேல எதுக்கு நான் கோபப்பட போறேன் வா உள்ள போலாம்! நேரமே சாப்பிடணும் இல்லனா வாமிட் வந்திடும்.

அதன் பின்  மகி எப்பொழுதும் போல் சோபாவில் அமர்ந்து கொண்டாள். கார்த்திக் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். சூர்யா சமையலறை பக்கம் சென்றான்.

மைவிழி  என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். உனக்கு நான் ஹெல்ப் பண்ணவா? 

மை விழி, என்ன திடீர்னு காத்து இந்த பக்கம் அடிக்குது!..

சூரியா, சும்மா தான் உனக்கு என்ன பிடிக்கும் சொல்லு? நான் செஞ்சு தரேன்? என்று கேட்டான்.

மைவிழி வீட்டில் உள்ள  உணவு செய்ய தேவையான பொருட்களை பார்த்து இது செய்யலாம்! அது செய்யலாம். 

உடனே சூர்யா சரி எல்லாத்தையும் நானே செய்றேன்! நீ வெயிட் பண்ணு! என்று கூறி  அனைத்து உணவுகளையும் மகிக்கு பிடித்த உணவுகளாகவே செய்து வைத்தான்.

மை விழி, ஏன் மாமா இப்படி பண்றீங்க?  இதுக்கு நான் கார்த்திக்கை சமைக்க சொல்லி இருப்பேன்! 

இப்போ என்ன ஆச்சு? 

மை விழி, எல்லாமே உங்க பொண்டாட்டிக்கு புடிச்சதா சமைச்சு வச்சிருக்கீங்க! 

சூர்யா,  என் பொண்டாட்டியா நீ தவறா புரிந்து இருக்க மை விழி இது எல்லாம்   அவளுக்கு பிடிக்கறதுன்னு நான் சமைச்சு வைக்கல!. 

பின்ன! 

சூர்யா, அவளுக்குள் என் பேபி இருக்கு!  அதனால தான் சமைச்சு வச்சு இருக்கேன். 

கார்த்திக் வாசனையை முகர்ந்து கொண்டு  “இதெல்லாம் எனக்கு பிடிச்ச வாசனையா இருக்கு!”

மை விழிக்கு பிடிக்கும் அதனால நான் சமைச்சேன் புரியுதா உனக்காக ஒன்றும் சமைக்கல!.

கார்த்திக்,என்ன டி அப்படியா!. 

மை விழி கையை கட்டி கொண்டே டேய் குடிச்சியா! என்று சிரித்துக் கொண்டே கண்களில்  கோபம் பொங்க கேட்டாள்.

உடனே சூர்யா, “ஹலோ தயவு செய்து நாங்க கிளம்பினதுக்கு அப்புறம்,  என்னோட ரெண்டு ஏஞ்சல்ஸ தூங்க வச்சதுக்கு அப்புறம், நீங்க ரெண்டு பேரும் சண்டை போடுங்க! மை விழி நீ  அவன அடி, மிதி , என்ன வேணாலும் பண்ணு!  இப்போ உங்க சண்டையை கொஞ்சம் ஒத்தி வைங்க!”

 கார்த்திக் அவனிடம் “ஏன்டா நீ சண்டை போட்டு தப்பிச்சதனால மகி உன்னை கேள்வி கேட்க மாட்டா ஆனால் நானு!..

சூர்யா, “தெனாவட்டாக அவ என்ன கேள்வி கேப்பாளா?  கேட்டுடுவாளா? அவ்வளவு தைரியமா? சான்சே இல்ல? அவளால என்னை எல்லாம் கேள்வி கேட்க முடியாது..!”

 கார்த்திக்,  நீ என்னை நேக்கா கோத்து விட்டு போற… இரு டி நீ வசமா மாட்டும் நாள்  ஒரு நாளைக்கு  அன்னைக்கு இருக்குடா!  நான் கை கொட்டி சிரிக்க தான்டா போறேன் !

சூர்யா, முதலில் நீ இப்போ எப்படி தப்பிக்க போறேன்னு நானும் பாக்குறேன்!  சரி மா எனக்கு ரொம்ப போர் அடிக்குது, நானு, சிவி குட்டி, பவா பாப்பா மூணு பேரும் தியேட்டர்ல படம் பார்க்க  ரெடி ஆகி விடுகிறோம். நீங்க டக்குனு சண்டைய சரியா ஒரு 8 ஓ கிளாக் ஸ்டார்ட் பண்ணுங்க.  பொறுமையா ரசிச்சு பார்த்துட்டு அதுக்கப்புறம் நான் வீட்டுக்கு கிளம்புறேன். என்று சிரித்துக் கொண்டே கூறினான்..

உடனே கார்த்திக் ரே ரே!.

சூர்யா,  மைவிழி! 

என்ன மாமா!

இவன் பண்றதே சரியில்ல ,கேளு மா!

ரே ரே சூர்யா! என்ன டா!. 

அவன் உடனே சரி விடு மா!. 

அவள் கோபத்தில் கையை பிடித்து கொண்டு  மாமா உங்களுக்கு இந்த கார்த்திக் பற்றி தெரியாது.

 சூர்யா, விழி  மா! என கொஞ்சம் மென்மையுடன் அழைக்க..

கார்த்திக் திடுக்கிட்டு  என்ன டோன் மாறுது!.

டேய் அப்போ வாங்கி கட்டிக்க!  

டேய் இவள் என் பொண்டாட்டி! என கார்த்திக் கூறினான்.  ப்ளீஸ் டா காப்பாற்று!. 

 சூர்யா, சரி மா  நீ எனக்காக இந்த ஒரு தடவை விட்டுடு!. என் கூட தான் குடித்தான். நான் தான் காரணம். 

மாமா!.

சூர்யா, அடுத்த தடவ அவன் குடிச்சா நம்ம நல்லா சிறப்பா சம்பவம் பண்ணுவோம் .

உடனே மைவிழி  சிரிக்க சிவன்யா,  அப்பா அம்மா கிட்ட இப்போ அடி வாங்க போறாங்க!  அம்மா உனக்கு தோசை திருப்பி எடுத்துட்டு வரட்டுமா! என சொன்ன அந்த குட்டி வாண்டு

சிவி, நானு சூர்யா டாடி எனக்கு அதை எடுத்து குடுங்க, என்னை தூக்குங்க,  என்று கையை நீட்டினா..

கார்த்திக்,  எப்படி பெத்து போட்டு இருக்கா அவள மாதிரியே! என்று கூறினான்.

உடனே பவா, மம்மி டாடி அடிக்க கூடாது. உன்னை நான் பாக்யா அம்மா கிட்ட சொல்லிடுவேன். உன்னை அடிக்க சொல்லுவேன்!  இல்லனா கலை அம்மாச்சி கிட்ட மாட்டி கிட்ட சொல்லுவேன்! உன்னை அடிக்க சொல்லுவேன்! 

வா மா  என்  சக்கரக்கட்டி என்று கூறினான் உடனே அனைவரும் சிரித்தனர்.

சூர்யா அவர்கள் இருவரையும் பார்த்து விட்டு தன் மகவு பிறக்கும் போது இப்படித்தானே தன்னை கொஞ்சும் என்று நினைத்து சந்தோஷத்துடன் இருவரையும் துக்கி முத்தம் வைத்தான்.

 அப்படியே தூக்கிக் கொண்டே சூர்யா  ஹாலுக்கு வந்து  எதிரில் உள்ள சோபாவுக்கு சென்று அமர்ந்து குழந்தைகளிடம் விளையாட ஆரம்பித்தான்.

 மைவிழி கார்த்திக் கிட்ட  தட்ட எல்லாம் பீனிஸ் நீ பைனல் பண்ணு எனக்கு முக்கியமான வேலை இருக்கு!  என்று சொல்லிக்கொண்டே கைகளை கழுவியவள் வேகமாக போனை எடுத்துக் கண்டு படுக்கையறை சென்றாள்.

மகி சுற்றியும் பார்த்தாள்.  சூர்யா எப்படியும் தன்னை கண்டு கொள்ள மாட்டான். கார்த்திக் முக்கியமான வேலையில் இருக்கிறான். அவள்  ஃபோனை எடுத்துக் கொண்டு கொஞ்ச நேரம் படுக்கலாம், முதுகு வலிக்கிறது, காலையிலிருந்து நிறைய வேலை செய்து தான் முதுகு வலிக்கிறது என்று படுக்கை அறை பக்கம் சென்றாள்.

இங்கே மை விழி   உதயனுக்கு அழைத்தாள்.  இரண்டு மூன்று முறை ரிங்க் சென்றது.  எடுக்கவே இல்லை. மை விழி மனதில்“ என்ன செய்கிறான்? இத்தனை தடவை போன் பண்றோம்! எடுக்கவே இல்லையே! எதையாவது பண்ணி தொலைச்சுட்டானா? ஐயோ! என்று யோசித்துக் கொண்டிருந்தாள்

மை விழியின் கைகள் எல்லாம் நடுங்கியது. முகம் எல்லாம் வியர்த்துக் கொட்டியது.

என்ன பண்ணிட்டு இருக்க? என்று  பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது உடனே திரும்பியவள். வியர்வை அனைத்தும் துடைத்துக கொண்டே  ஒன்னும் இல்ல!

ஹே பொய் சொல்லாத ஏசி போட்டு இருக்கு உனக்கு எப்படி  வியக்குது!  என்ன பண்ணிட்டு இருக்க சொல்லு? 

உடனே மை விழி வெளியே செல்ல் முயற்சி செய்தாள். மான்விழி அவள் கைகளை பிடித்துக் கொண்டாள். 

இப்போ சொல்ல போறியா? இல்லையா? நான் அப்பாவுக்கு சொல்லுவேன் ?அம்மாவுக்கு சொல்லுவேன்? உங்க மாமிக்கு போன் பண்ணி சொல்லுவேன்? என்று கூறினாள் .

மை விழி , நீ வேற காமெடி பண்ணாத! எனக்கு வேற பயமா இருக்கு டி என்று கூறினாள்.

என்ன சொல்ற? 

நான் உதயனுக்கு போன் பண்ணேன் ஆனால் அவன் எடுக்கவே இல்ல டி!  

திமிர் டி நாயே! கொழுப்பு!. என சொல்லி கொண்டே  அவளும் உதயனுக்கு நான் இரண்டு மூன்று முறை முயற்சி செய்தாள்‌ 

இப்பொழுது உதயன் என்ன செய்கிறான்? அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். ஆனால் தூங்க வில்லை படுக்கையில் வந்து படித்து கொண்டான். அனைவரும் 10, 11 மணிக்கு கதைகள் பேசி நடுத்தர குடும்பத்தில் தான் அனைவரும் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு பொறுமையாக சாப்பிட்டு பல கதைகள் பேசி சிரித்து தூங்குவர்.. 

ஆனால் இங்கே!. 

ஆனால்  தாரா வீட்டில் ஒன்பது மணிக்கு எல்லாம் தூங்கி விட வேண்டும். உதயன் அவனுடைய மனதில் தேஜூவை பற்றி நினைத்து கொண்டு இருக்க அவனுடைய போன் வைப்ரேட் ஆகி கொண்டே இருந்தது. 

மை விழி நகத்தை கடித்து கொண்டே அவளை படபடக்க பார்த்து கொண்டு நின்றாள். 

ஹே எடுத்தானா! 

மகி, எடுக்கல டி! என கோபமாக கூறினாள். 

இன்னொரு முறை டிரை பண்ணு! என மை விழி கூறினாள். 

அதன் பின் மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய உதயன் இப்பொழுது சத்தம் கேட்டு போனை எடுத்தான். 

சின்ன பாப்பா! என வந்தது. 

உதயன் திடுக்கிட்டு போனை பதில் ஏற்றவன் என்ன மகி இந்த நேரத்தில் கால் பண்ணி இருக்க? 

மகி, அண்ணா! மணி ஒன்பது கூட ஆகல!  

உதயன் மணியை பார்த்தான். 

ஆமா! நாளைக்கு ஆபீஸ் போகனும் அதுக்கு தான் சீக்கிரம் தூங்க போனேன். 

மை விழி ஸ்பீக்கர் போடு என போனை பிடிங்கி ஸ்பீக்கர் போட்டாள். 

மகி, சரி அண்ணா சாப்பிட்யா!. 

உதயன், ம்ம் நீ! 

மகி, ஹான் மாமா சமைச்சாச்சு!. 

உதயன், அப்போ கார்த்திக் மாமா வீட்டில் இருக்கியா!. 

ஆமா!. 

அதற்கு மேல் என்ன பேசுவது என தெரிய வில்லை. 

மகி, சரி அண்ணி என்ன பண்றாங்க!. 

மை விழி, ஹே அவளை பற்றி எதுக்கு கேட்கிற! என ஹஸ்கி வாயிசில் கேட்டாள். 

உதயன், மகி! உன்னை மை விழி போன் பண்ண சொன்னாளா! பக்கத்தில் இருக்காளா!. 

மை விழி, இல்லைன்னு சொல்லு என கை அசைக்க 

மகி, ஆமாம் என சொல்லி விட்டாள். 

உதயன் ஒரு நிமிடம் திருப்தி புன்னகை சிந்தி கொண்டே ஹலோ மை விழி எருமை!  

மை விழி, நீ தான் நாயே எருமை!. 

உதயன், என் நினைப்பு எப்படி என்னோட தங்கச்சி எருமைக்கு வந்தது? 

மை விழி, இங்கே இருந்து அண்ணன் எருமை போகும் போது முகத்தை தொங்க போட்டுக்கிட்டே போச்சு அப்டின்னு மகி சொன்னாள். அவளே போன் பண்ணா! சரின்னு நான் பக்கத்தில் நின்றேன்! வேற ஒன்னும் இல்ல.. 

உதயன் நிறைவாக புன்னகைத்தான். ம்ம் சரி ஓகே!  

மை விழி, நான் சொன்ன எதையும் மனசில் வச்சுக்காத!. 

ம்ம் சரி!. 

மை விழி, ஹீரோயின் மேடம் என்ன பண்றாங்க! 

தூங்குறா! 

மகி – மை விழி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். “என்னைக்கு இதுங்க ரெண்டுக்கும் குழந்தை பிறந்து எங்க அம்மா மனசு மாறுவது. இந்த தாரா குப்புற படுத்து தூங்குறா!”

உதயன், என்ன ஆச்சு பேசு! 

மை விழி, ஒன்னும் சொல்றதுக்கு இல்ல இன்நேரத்தில் உன் பொண்டாட்டிக்கு என்ன தூக்கம்? 

என்ன பிரச்னை உனக்கு? 

மை விழி, ம்ம் நல்லா இருக்கு! அப்படி என்ன லவ் பண்ண? குப்புற படுத்து தூங்க தான் லாயக்கு! அம்மா எப்போ மனசு மாறுவது! நீயும் உன் பொண்டாட்டி கூட சேர்ந்து தூங்கு! என போனை மகி கிட்ட கொடுத்து விட்டு வெளியே சென்றாள். 

மகி அவளின் எண்ணத்தை புரிந்து கொண்டு சிரித்தாள். உதயன், அவளுக்கு என்ன ஆச்சு? 

ஒன்னும் இல்ல அதை விடு! 

உதயன், மகி சொல்லு! 

மகி, நாளைக்கு தூங்கி எழுந்ததும் அண்ணி கிட்ட கேளு! என சிரித்து கொண்டே போனை வைத்து விட்டாள். 

உதயன், “ரெண்டு பேரும் என்ன சொல்றாங்க? புரியலையே! என யோசித்தான். என்னவோ இருக்கும்!  சரி நாளைக்கு தாரா கிட்ட கேட்போம்!. என நினைத்தவன் நாளைக்கு ஶ்ரீ மதி கிட்ட பேசி கண்ணம்மா அம்மாச்சி கிட்ட பேசணும். இந்த தழும்பு எப்படி வந்தது அப்டின்னு தெரிந்து கொள்ள வேணும்!”

நால்வரும் உணவை சாப்பிட்டு முடித்தனர். இப்பொழுது வீட்டுக்கு கிளம்பும் நேரம் வந்தது. 

அவர்கள் சாப்பிட சாப்பிட கார்த்திக் குழந்தைக்கு உணவு ஊட்டி விட இருவரின் சாப்பிட்டு விட்டு சோபாவில் அப்படியே உறங்கி விட்டனர். 

மகி மற்றும் சூர்யா வீட்டுக்கு செல்லும் நேரம் வந்தது. 

சூர்யா, மை விழி, கார்த்திக் நான் கிளம்புகிறேன். 

மான் விழி…? 

தொடரும்.. 

Episode 307

சூர்யா ,கார்த்திக், மைவிழி மற்றும் மகிழினி அனைவரும் உணவு சாப்பிட தொடங்கினர்.

கார்த்திக் இரு குட்டி வாண்டுகளுக்கும் ஊட்டி விட்டு அவர்களை தூங்க வைத்துவிட்டு மைவிழியுடன் சாப்பிட ஆரம்பித்தான்.

சூர்யா ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தபடியே  மணியைப் பார்த்தான். நேரம் பத்தை தொட அவன்  எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டே  அவர்கள் இருவரிடமும் சரி ஓகே நான் கிளம்புறேன்,  கார்த்திக்! அண்ட்  மைவிழி நீ பாப்பாவ பார்த்துக்கோ!  அப்புறம்  இன்னொரு நாள் வரேன் என்று சொல்லிக் கொண்டே வாசல் பக்கம் நடையிட்டான். 

அவர்கள் இருவர் பார்வையும் மகி மேல் தான் இருந்தது. அவள் மனதில் உள்ளுக்குள் அவனுடன் செல்ல வேண்டும் என்று எண்ணம் இருக்கத்தான் செய்தது. ஆனால் தனியாக மாட்டிக் கொள்வோமே!  எப்படியும் நம்மிடம் பேசமாட்டான்!  மிகவும் கோபமாக இருக்கிறான்.

மகி மனம் அடி லூசு “அவன் ஏன் நம்மிடம் பேச வேண்டும்? ஆமா நான் ஏன் அவனிடம் பேச வேண்டும்?  அவன்தான் அந்த கபோர்டுக்குள்ள என்ன இருக்குன்னு சொல்லவே இல்லையே!  எல்லாம் என் நேரம்! மிதுன் என் கூட இருந்தா பிரச்சனையே இல்லை!

கார்த்திக், மகி நீ கிளம்பலையா?  எங்கேயோ ஸ்டே பண்றியா? 

மைவிழி,  தட்டை எடுத்துக் கொண்டே அவ இப்ப கிளம்புவா! என்று சொல்ல

மகி எதோ ஒரு உந்துதலில் எழுந்து நின்றாள்.

மைவிழி , “மாமா! மகி உங்க கூட வரா!.

சூர்யா வேண்டுமென்றே “நான் வரும் போது கார்த்திக்கை மட்டும் தான் கூட்டிட்டு வந்தேன்!  வேற யாரையும் கூட்டிட்டு வரலையே!  என்ற அவன் பாக்கெட் மட்டும் அனைத்தையும் செக் செய்தான் .

 அவன் செய்கையை மகிழினி அவனை முறைத்தாள்.  கார்த்திக் உதட்டுக்குள் சிரித்தான்.

மைவிழி “அவளை கூட்டிட்டு போங்க மாமா! ”

“நான் தான் யாரையும் கூட்டிட்டு வரலன்னு சொல்றேன்ல!  அவங்க அவங்க  எப்படி வந்தாங்களோ?  அப்படி போவாங்க?”

மகி, “கார்த்திக் சார்  நான் இன்னைக்கு இங்கேயே ஸ்டே பண்றேன்!  நான் பவா சிவி கூட இந்த பெட்ரூமில் படுத்துகிறேன்..!” 

 கார்த்திக் உற்சாகத்துடன் மை விழி அவள் பாப்பா கூட  இருக்கட்டுமே!

நம்ம ரெண்டு பேரும் இன்னைக்கு  டைம் ஸ்பென்ட் பண்ணலாம்! என்று கொஞ்சலுடன் கூறினாள். 

சூர்யா, என்னோட பேபி!  என் பொண்ணு! என் கூட வரணும்! சோ, யாரு வராங்களோ! சீக்கிரம் வர சொல்லு மை விழி என்று கூறினான். 

மைவிழி  இதை கேட்டு சிரிக்க..

கார்த்திக் மனதில் “நான் என் பொண்டாட்டி கூட சந்தோஷமா இருக்கிறது உனக்கு பிடிக்காதே நாயே! என அவனை முறைத்தான்.

சூர்யா மனதில் அவனைப் பார்த்து தெரியும் டா! நீ இந்த மாதிரி பிளான் பண்ணுவன்னு, நீ  உன் பேபிஸ் கூட நீ தூங்கு! என் பேபியொட நான் தூங்குறேன்! 

இப்பொழுது மகிழினியின் முறையானது.  பேபியா? அப்படி எதுவும் என்கிட்ட இல்லையே? என்று அவள் போன் மற்றும் அவள் கைப்பையை திறந்து பார்த்தாள். 

சூர்யா தலைய கோதிக்கொண்டே “அதுதான் முழு நிலா போல வளர்ந்து இருக்கே!  பேபி கொடுத்தது யாருன்னு இந்த உலகத்துக்கே தெரியும்!  இந்த வெட்டி சீனுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை!” என்று கூறினான். 

மை விழி அவளைப் பார்த்து “ஏன்  டி உனக்கு தேவையில்லாத வேலை பாரு நீயே லாஸ்ட்ல மாமா கிட்ட விழுந்துட்ட!”

மகி , கொஞ்சம் வாயை மூடுறியா என்று கோபமாக பேசினாள். 

அப்போ போடி முதலில்  கிளம்பு டி! 

 உடனே மகிழினி , மாமா! என்னை  திட்றா ஆனால்   நீங்க அமைதியா இருக்கீங்க! 

டேய் கார்த்திக் இப்போ நீ வாய் பேசின?  நீ வெளியே இல்லபக்கத்து பெட்ரூம் போகணும்!..

கார்த்திக்,  “ஒன்னும் இல்லடா  மகி மா நீ சூர்யா கூட போ!” என்று கூறினான். 

சூர்யா எதுவும் பேசாமல் முன்னால் நடந்தான். அவளும் வேறு வழி இல்லாமல் பின்னால் நடந்தாள். 

சூர்யா காரை எடுத்து கொண்டு அருகில் வந்து நிறுத்தினான். முன் சீட்டில் ஏறி கொண்டாள். 

அதன் பின் இருவரும் அவர்களது வீட்டை நோக்கி கிளம்பினார்கள். 

காரில் வரும் வழியில் மான் விழி எதையும் பேசவில்லை. மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தாள்.  சூர்யாவை கண்டு கொள்ளவில்லை. 

அவர்கள் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.  சூர்யா கதவைத் திறந்து உள்ளே சென்றான்.

அவளுக்கு வீட்டிற்குள் நுழைந்ததும் மகிக்கு தலை சுற்றுவது போல் இருக்க சாப்பிட்ட  அனைத்தையும் கக்கி விட்டாள். 

சூர்யா அவளுக்கு மிதமான சூட்டில் வெந்நீர் வைத்து அவள் அருகில் கொண்டு போய் வைத்துவிட்டு உள்ளே சென்றவன் பழங்களை வைத்து சில பிரஸ் ஜூஸ்கள் செய்து கொண்டு வந்தான் அதையும் அவள் முன் வைத்துவிட்டு குளிக்கச் சென்றான். 

மகிழினி அவன் சென்ற அறையையே வெறுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.  அந்த கபோர்டு இருக்கும் அறைக்கு அதாவது இன்னொரு படுக்கையறைக்கு தான், அவன் குளிக்கச் சென்றிருந்தான் .

அவள் மனதில் “அந்த கப்போர்ட்ல என்ன இருக்குன்னு சொல்ல மாட்டேங்குறாரே! அப்படிப்பட்ட இம்பார்ட்டண்டான விஷயம் என்னவா இருக்கும்? என்னை  விட அது ரொம்ப முக்கியமா?  கண்டுபிடிக்கிறேன்!” என்று மனதிற்குள் வெம்பிக் கொண்டிருந்தாள். 

சூர்யா குளித்து முடித்து உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தான்.

மகி அவனை முறைத்துக் கொண்டு அவள் எப்பொழுதும் படுக்கும் படுக்கையறைக்கு சென்றாள்.

“ஒரு நிமிஷம்!”

மகிழினி நிற்காமல் சென்றாள் .

ஹே உன்ன தாண்டி ஒரு நிமிஷம் நில்ட்ரி!. 

மகிழினி அவனை திரும்பி பார்த்தாள். சூர்யா தலையை துவட்டிக் கொண்டே “அவ்வளவு தைரியம்!…. மம்மம் இருக்கட்டும்! ரொம்ப நல்லது தான்!”

மகி அவனை எளனமாக பார்த்து நான் மான் விழி!..

சூர்யா சிரித்துக்கொண்டே மான் விழிக்கு கொம்பு இருக்கா ? என்று கேட்டான் 

அவள் திடுக்கிட்டு பார்த்தாள்.

சூர்யா சிரித்துக்கொண்டே உலகத்தில் உள்ள  எல்லா விலங்குகளுக்கும் கண்ணிருக்கும். அது தான் விழி!… அதே போல்  சரி பெண் ஆண் மானுக்கும் சரி  பெண்   மானுக்கும் சரி கண் இருக்கும்,  மான் விழி… நான்  அதை  ஒத்துக்குறேன்!  ஆனா அந்த மான்விழிக்கு கொம்பு இருக்குமா? 

மகி எதையும் பேசாமல் அமைதியாக நின்றாள் .

சூர்யா அவளுக்கு எதிரில் உள்ள சோபாவில் அமர்ந்தவன் “கொஞ்சம் உட்காருங்க!”

மாட்டேன்

ஹே உட்கார் டி!. என்று அதட்டினான்

உடனே அந்த பயத்தில் அமர்ந்து கொண்டாள். 

சூர்யா, அவ்வளவு பயம்!  இருக்கட்டும் அப்புறம் எதுக்கு இந்த வெட்டி சீனு! 

க்கும் என முறைத்தாள். 

சரி இப்போ நான் சொல்றத நல்லா கேட்டுக்க? 

என்ன!  என்று முறுக்கிக் கொண்டே அவனைப் பார்த்தாள்‌.

“மரியாதை குறைஞ்சுகிட்டே போகுது இருக்கட்டும் !”

மகி  தன்னை சுதாரித்து கொண்டு சொல்லுங்க என்று கூறினாள்.

சூர்யா உதட்டுக்குள் சிரித்துக் கொண்டான். இப்போ நீ ப்ராஜெக்ட் எடுத்து இருக்கியே!..

என்ன? 

எடுத்து இருக்கியா? இல்லையா?

“எடுத்து இருக்கேன் சொல்லுங்க!”

சூர்யா , அந்த ப்ராஜெக்ட் எப்படி பண்ண போற? 

எப்படி பண்ணுவாங்க? எப்பவும் போல தான்!  என்று கூறினாள்

“சூர்யா அது எனக்கு தெரியுது அதுக்குண்டான மேன் பவர் அத பத்தி பேசிட்டு இருக்கேன் !”

உடனே மகிழினி சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்து நின்றவள் . “அதை பத்தி உங்களுக்கு என்ன கவலை? நான் எப்படி வேணா செய்ய போறேன்! நான் உங்க கிட்ட செஞ்சு தான் காட்ட போறேன்!  நீங்க வேணா பாருங்க ! இந்த ப்ராஜெக்ட் முடியும்போது கூடவே உங்களோட அந்த கபோர்டுல மறைச்சு வச்ச அத்தனை விஷயத்தையும் நான் கண்டுபிடிப்பேன்!”

அப்படியா? சவாலா?

மகி, ஆமா சவால் தான்! 

நீ கண்டுபிடிக்க மாட்ட டி

நான் கண்டுபிடிப்பேன் என்று கோபத்தில் நடுங்கிக்கொண்டே கூறினாள். 

சூர்யா, “சரி நீ என்னமோ பண்ணு சப்போஸ் ப்ராஜெக்ட் முடிக்கிறதுக்கு  முடிந்து போச்சுன்னு வச்சுக்கோ அப்பவும் நீ கண்டுபிடிக்கலைன்னா அதோட என்கிட்ட சமாதானம் கொடி காட்டுற!”

மகி அவனை முறைத்து பார்த்தாள்‌ 

என்னடி முறைக்கிற இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன்! 

மகிழினி இப்ப கூட அதுக்குள்ள என்ன இருக்குன்னு , என்கிட்ட சொல்ல மாட்டீங்கல்ல..

சூர்யா, “நீ புடிச்ச முயலுக்கு மூணு கால் என்று பேசாத மகி!.. அது உனக்கு தேவையில்லாத விஷயம் அது என்னோட பர்சனல் , அதோட நீ விட்டுட்டு, போயிட்டே இரு , மத்தபடி வேற எந்த பிரச்சனையும் இல்ல…”

மகிழினி, எனக்கு அது தெரிஞ்சே ஆகணும்!  அதுதான் எனக்கு முக்கியம்! என்று ஒற்றைக்காலில் நின்றாள் .

சூர்யா, அதுக்கு நான் எதுவும் பண்ண முடியாது சரி நீ எப்படி தான் அந்த ப்ராஜெக்ட் பண்றேன்னு நானும் பாக்கறேன் டி

பாருங்க நான் பண்ணத்தான் போறேன் என்று கூறினாள்‌

ஓகே குட் நைட் இன்று அருகில் வந்தவன் அவளை வயிற்றை வருடினான்.அவள் கண்ணை மூடிக்கொண்டு பின்னால் நகர பார்க்க..

சூர்யா, உன்னை நான் தொடவே இல்லடி என் பேபியை தொடர ஓகே வா! என் பொண்ணு பொறக்கட்டும் அப்புறம் உன்னை ரெண்டுல ஒன்னு பாக்குறேன்!

பார்ப்பீங்க பார்ப்பீங்க என்று கூறினாள்.

உடனே சூர்யா, வாய்க்கொழுப்பு ஜாஸ்தியா போயிட்டே இருக்கே! இருக்கட்டும்! அதுக்கு ஒரு நாள் பாத்துக்கிறேன் !

மகி, யாருக்கு வாய் கொழுப்பு ? என்று அவனைப் பார்த்தாள்.

இப்ப நீ தூங்குறியா இல்ல நான் வரட்டுமா!..

நான் போறேன் என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

சூர்யா, சரி இப்போ என் கையை எதுக்கு புடிச்சிருக்க?

அதான் தூங்க சொன்னீங்கல்ல சூர்யா சிரித்துக்கொண்டே “அப்போ என் கூட தூங்கறயா வா! ” என்று  சட்டென தூக்கி கொண்டான் .

உடனே மகி  இல்லை! இல்லை! நான் உங்க கூட தூங்க மாட்டேன்! எனக்கு என்னை  கொண்டு போய் பெட்ல விடுங்க! உங்களை எனக்கு பார்த்தாலே எரிச்சலா இருக்கு ?

சூர்யா , இது எல்லாம்  என்னை நம்ப சொல்றியா? 

நீங்க நம்புனா என்ன ? நம்பாட்டி எனக்கு என்ன? என்று பொய் கூறினாள். மகி மனதில் அவன் இல்லாமல் அவளால் தூங்க முடியாது அவன் கைகளைப் பிடித்துக் கொண்டே தூங்க வேண்டும். 

சூர்யா அவளை பூப்போல் படுக்கையில் கிடத்தினான். அதன்பின் நடுவில் தலையணை வைத்து இன்னொரு புறம் அவன் படுத்துக்கொண்டான் .

என்ன இது? 

“ நீ தான் என் கூட தூங்க மாட்டேன்னு சொல்லிட்ட, ஆனா பாரு என் பேபி கூட நான் தூங்கணும்!  நான் உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்!” என்று கூறினான்

அவள் தூங்குவதற்கு முன் “ஒரு நிமிடம்!”

 என்ன ?

மகிழினி, “ எந்த காரணத்தை கொண்டும் நாம் சண்டை போட்டாலும், சக்திக்கு தெரியக்கூடாது.அதை முதலில் நினைவில் வெச்சுக்கோங்க!”

சூர்யா , தேவையில்லாத பிரச்சனையை கிரியேட் பண்றது நீ தாண்டி! சின்ன விஷயத்தை பெருசு படுத்திட்டு இருக்க!

அப்படியா ம்ம் அப்படி தான் பண்ணுவேன். சொல்லிக்கொண்டே திரும்பிக்கொண்டாள். அவள் கண்களில் கண்ணீர் துளிகள்.

சூர்யா கண்ணை மூடிக்கொண்டு “நான் இல்லாம உன்னால எதுவுமே பண்ண முடியாது!”

மகிழினி அதையும் பார்க்கலாம் என்று பற்களை கடித்துக் கொண்டு கூறினாள்.

அப்படியா! உனக்கு அது நாளைக்கு தெரியப்போகுது என்று கூறினான். 

மகிழினி மேலும் பேச வர!. 

போதும் தூங்கு என் பொண்ணுக்கு எனர்ஜி இருக்காது. 

அதற்கு மேல் அவள் எதுவும் பேச வில்லை. 

* * * * * 

கோவிந்த் அவருடைய அறையில் தூங்க தயாரானார். இன்று உதயன் பேசிய அனைத்தும் மண்டைக்குள் ஓடி கொண்டு இருந்தது. 

ம்ம் இருக்கட்டும்! பேசட்டும்! எல்லா உண்மையும் தெரிந்து போச்சு! தெரிந்தால் தெரியட்டுமே!என்ன வேணாலும் பண்ணட்டும் ஆனால் இந்த வீட்டை விட்டு வெளியே போக விட மாட்டேன். என நினைத்து கொண்டார். 

அந்த நேரம் அவரது எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. யாரென பார்க்க தேஜு என இருந்தது. 

அவர் புன்னகையுடன் என்ன இந்த நேரத்தில கால் பண்றா இந்த பொண்ணு! என போனை எடுத்தார். 

ஹலோ! 

அங்கில் நான் தேஜு பேசிரென்! உங்களை டிஸ்டறப் பண்ணலயே! 

இல்ல சொல்லு மா! 

ஒகே fine அங்கிள்! உங்க கிட்ட முக்கியமா ஒரு விடயம் பேசணும்! 

என்ன மா சொல்லு! 

எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்!..

கோவிந்த், இது என்ன மா நீ என்ன வேணும்னு சொல்லு! நாங்க இருக்கோம்! 

தேஜு, அது நீலா ஹாஸ்பிடல் மொத்தமும் இப்போ தான் லைசன்ஸ் ரினிவள் பண்ணி இருக்கேன். 

ம்ம் ஒகே!. 

எனக்கு ஒரு அட்வர்டைஸ்மெண்ட் பண்ணி கொடுக்கணும்! 

கோவிந்த் புரியாமல் என்ன சொல்ற மா! 

தேஜு, ஐ மின் தாரா எனக்கு ஹாஸ்பிடல் விளம்பரத்தில் நடிக்க வேணும்! அதுக்கு நாளைக்கே நான் அவளை மீட் பண்ணனும்!

கோவிந்த், இது ஒரு விஷயமா! கண்டிப்பா வருவா!.

தேஜு“ தாரா கூட உங்க மாப்பிள்ளையும் வரனும்!”

கோவிந்த் இதை கேட்டு ஒரு நிமிடம் அமைதி ஆனார். உடனே அவர் தேஜூ மா! நீ! என் மாப்பிள்ள அவர் spr கிட்ட எதோ ஒரு கோபத்தில் சட்டையை பிடித்து விட்டார். அதுக்கு நான் சாரி கேட்கிறேன்!. 

தேஜு, என்ன அங்கில்! இப்படி சொல்லிட்டீங்க! 

கோவிந்த், எங்க குடும்பத்தில் ஆயிரம் நடக்கும் மா! ஆனால் என் மாப்பிள்ளையை நான் எந்த இடத்திலும் விட்டு கொடுக்க மாட்டேன். அவர் அவமான பட்டால் என்னால் தாங்க முடியாது. 

தேஜு ஆச்சரியமாக “என்ன சொல்றீங்க! அந்த அளவுக்கு உதயனை பிடித்து இருக்கா!”

கோவிந்த், “நல்ல பண்புள்ள பையன்! ஒழுக்கம்! எல்லாமே இருக்கு! இத்தனை வருடம் பிஸ்னஸ் பண்றேன் ஒருத்தருடைய முகத்தை பார்த்தாலே அவரு என்ன ஏதுன்னு கண்டு பிடித்து விடுவேன்! என் மாப்பிள்ளை சொக்க தங்கம்! என் பொண்ணு மேல என்னை விட அக்கறை பாசம் எல்லாமே ஜாஸ்தி!”

தேஜு ஒரு நிமிடம் திடுக்கிட்டு கோபத்தில் பற்களை கடித்தவள். அப்போ உதயனுடன் தாறாவை அவங்க வீட்டுக்கு அனுப்பி வைக்க போறீங்களா!. 

கோவிந்த் சிரித்து கொண்டே “வாட் அ காமெடி! அது மட்டும் இங்கே நடக்காது! நிலத்தில் வெட்டி எடுக்கும் கருப்பு வைரம் போல என் மாப்பிள்ளை! மறுபடியும் நான் எதுக்கு திருப்பி அனுப்பனும்! என் மொத்த சொத்துக்கும் அவர் தான் வாரிசு! சொல்ல போனால் ஒரு வழி பாதை!”

இதை கேட்டதும் தேஜு நிம்மதி பெரு மூச்சை விட்டாள். அதன் பின் அவள் தன்னை சுதாரித்து கொண்டு “நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல அங்கிள் உதயனை நான் spr கிட்ட பிஸ்னஸ் விஷயமா ஒரு கான்வர்சேசன் மேக் பண்ண தான் கூப்பிட்டேன். நாளைக்கு கொஞ்சம் ஹெல்பா இருக்கும்! உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் வேணாம்! ஆனால் தாரா நடிக்க வரனும்!”

கோவிந்த் சந்தோசத்துடன் சூப்பர் மா நாளைக்கு கண்டிப்பாக வருவாங்க! 

“ம்ம் நல்லது அங்கிள்!” என போனை வைத்தாள். 

Spr அவளுக்கு முதுகு காட்டி தூங்குவது போல் கண்ணை மூடிக்கொண்டு இருந்தான். 

தேஜூ போனை அருகில் வைத்து விட்டு எழுந்து நிவாசை பார்க்க சென்றாள். 

அவன் நாதானுடன் நன்றாக ஒட்டி கொண்டான். ராகிங் சேரில் அவரது நெஞ்சில் சாய்ந்து உறங்கி கொண்டு இருந்தான். அவளுக்கு இருக்கும் வேலை பளுவில் எப்படியாவது அவளால் முடிந்த அளவு நிவாஸ் கூட நேரத்தை செலவிடுவாள். 

டாடி!. .

தேஜு மா!. என கஷ்ட பட்டு கண்ணை விழித்தாள். .

ரொம்ப சேட்டையா!. 

இல்ல மா! இவன் சமத்து குட்டி! என அவன் தலையை வருடி விட்டார். 

“சரி நான் தூக்கிட்டு போறேன். நீங்க உள்ளே போய் படுங்க!”

சரி என அவர் அறைக்கு சென்றார். தேஜு நிவாஸ தூக்கி கொண்டு உள்ளே வந்தவள் இன்று அவனுக்கு கொடுக்க வேண்டிய அமுதை பசி எடுக்கும் நேரம் எல்லாம் ஊட்டினாள். 

நிவாஸ் spr ஐ உதைத்து தள்ளி விட்டு கொண்டே விடிய விடிய எப்பொழுது பசி எடுக்குமோ அப்பொழுது அமுதை உண்டு அவளின் மேல் உறங்கி கொண்டே spr ஐ தான் உதைத்து கொண்டு இருந்தான். 

Spr மனதில் எல்லாம் நான் பண்ண தப்பு! நிதின் ரொம்ப அமைதியா இருப்பான்! ஆனால் இவன் வளர இப்படி டார்ச்சர் சேட்டை பண்றான்! ம்ம் பொம்மாயி கேட்டாலே அதுக்காக மட்டும் தான் இவன்!எனக்கு நிதின் தான் என்னோட அடுத்த சாம்ராஜ்ஜியம்!”என நினைத்து கொண்டே வேறு வழி இல்லாமல் அங்கேயே தூங்கினான். அதற்கு காரணம் தேஜூ அவனை இன்னும் விரும்ப வேண்டும்!

அடுத்த  நாள் அனைவருக்கும் பரபரப்பாக விடிந்தது.

உதயன் நேரமே எழுந்து யாருக்கு போன் செய்து என்ன கேட்பது என யோசித்தான். ஶ்ரீ மதி தான் நினைவுக்கு வந்தாள். 

பால் கனி பக்கம் சென்றவன் உடனே அவளுக்கு அழைத்தான். 

ஹலோ! மாமா!  

“சாரி டா மா! என்னை மன்னிச்சிடு!”

ஶ்ரீ மதி திடுக்கிட்டு இல்ல மாமா இது சரி தான்! 

உதயன், எப்டி இருக்காரு! 

ஶ்ரீ மதி, நாங்க நல்லா இருக்கோம்! இங்கே நம்ம வீட்டில்!..  என நிறுத்தி விட்டு இங்கே அப்பா வீட்டுக்கு வந்திருக்கோம்!. 

உதயன், ம்ம் பெரிய பொண்ணு மாதிரி பேசுற? அந்த குழந்தை தனம் கூட போயிடுச்சு!. 

ஶ்ரீ மதி, அப் அப்படி இல்ல மாமா!. 

உதயன்,“ சரி மா! இப்போ அம்மாச்சி என்ன பண்ணுது! போன் கொடு நான் பேசணும்!”

மாமா! 

ம்ம் என்ன மா! 

ஶ்ரீ மதி, அம்மாச்சி கிட்டயா! அதுக்கு நீங்க அத்தை கிட்ட பேசலாம்! அவங்க மனசு!. 

உதயன், பிளீஸ் மா அம்மாச்சி கிட்ட கொடு!. 

சரி இருங்க நான் போறேன்! என கன்னம்மா இருக்கும் இடத்துக்கு சென்றாள். 

அப்பத்தா!  ஆத்தா! 

கண்ணம்மா, என்ன காலங்காத்தால வாய் அதிகமா இருக்கு! அடக்க ஒடுக்கம் இருந்தால் தானே! 

ஶ்ரீ மதி, உன் கிட்ட உதயன் மாமா பேசனுமாம்! 

உதயன் பெயரை கேட்டதும் அவர் புன்னகையுடன் கொடு கொடு என் ராசா! அழகன்! என போனை வாங்கி கண்ணு! உதயா எப்படி இருக்க ராசா! 

ம்ம் நான் நல்லா இருக்கேன் உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்! 

கண்ணம்மா, இப்போவாச்சும் உனக்கு என்னோட நினைப்பு வந்ததே! சொல்லு!. 

உதயன், அம்முச்சி நான் பிறந்த நேரம் என் கூட பிறந்தது பொண்ணா? பையனா!

கண்ணம்மா, அதை பற்றி எதுக்கு ராசா கேட்கிற? 

அம்மாச்சி சொல்லு அப்போ என்ன ஆச்சு? 

ஶ்ரீ மதி அவனிடம் இருந்து போனை வாங்கி மாமா இதுக்கு என் கிட்ட கேட்டு இருக்கலாம்!

உதயன், என்ன? 

ஶ்ரீ மதி, “எத்தனை தடவை இது சொல்லி இருக்கு! நீங்களும் குட்டி பாப்பாவும் பிறந்த அப்போ அதுக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை மூணு நாளில் மாமாவுக்கு எதோ ஆக்சிடன்ட் ஆச்சு அப்போ பாப்பாவுக்கு உடம்பு சரி இல்லை இது குழந்தையை டாக்டர் கிட்ட கூட்டி போச்சு போக போகவே குழந்தை அவ்ளோ தான்  மாமா!”

உதயன், இது எனக்கே தெரியும் மா! அந்த குழந்தை என்ன ஆச்சு? வீட்டுக்கு எடுத்து வரலயா! 

ஶ்ரீ மதி, இவ்வளவு தான் மாமா! ஆத்தா சோறு ஊட்டும் போது சொல்லும்! 

என்ன? 

ஶ்ரீ மதி, சாப்பிடல உன்னையும் ஹாஸ்பிடல்ல விட்டிட்டு வந்துடுவேன் அப்டின்னு சொல்லும்! பாத் ரூம் கிட்ட போட்டு விடுவேன் அப்டின்னு சொல்லுமே!. உங்களுக்கு நினைப்பு இல்லையா! 

உதயன், இது எல்லாரும் சொல்றது தானே! 

ஶ்ரீ மதி, இப்போ எதுக்கு மாமா இதை பற்றி கேட்கிரீங்க!  

உதயன் எதையோ நினைத்து உடனே சரி மா நான் அப்புறம் பேசுரென்!. 

சரி மாமா! என வைத்து விட்டாள். 

உதயன் மனதில் குழந்தையை சோறு ஊட்ட இப்படி கதை கட்டி இருக்கு!  ஏன் அப்படி நினைக்கனும்! ஒரு வேளை நிஜமாவே இந்த கிழவி போட்டு இருக்குமா! அவள் தான் இப்போ தேஜு வா! ஆனால் அவள் எப்படி ஆந்திரா போனாள்? எப்படி கண்டு பிடிக்கிறது! ஒரு வேளை அந்த ஹாஸ்பிடலில் நாதன் வேலை செய்து இருந்தால்? அப்போ கன்ஃபார்ம் அவள் என் கூட என் கூட!.. என்னோட ….? 

என உதயன்….? 

இங்கே மகி எடுத்த அந்த அதிக பிரசங்கி எடுத்த புராஜக்ட் தொடர்பாக மீட்டிங் ரகு ஏற்ப்பாடு செய்து இருந்தான். 

அனைவரும் கூடி இருந்தனர். 

மகி, ரகு சார் இப்போ யாருக்கு வெயிட் பண்றோம்!.. 

ரகு…? 

தொடரும்.. 

Episode 308

காலையிலேயே ரகு மகிழினிக்கு போன் செய்தான்.  நேற்று அந்த டெண்டர் மீட்டிங் அட்டென்ட் செய்தது, அதன் பின் சில சண்டைகள் என அனைத்தும் அவளுக்கு உடல் அழுப்பை கொடுக்க, மிகவும் சோர்வுடன் தூங்கிக் கொண்டிருந்தாள்.‌

 ஒரு பக்கம் அவளுடைய போனின் ரிங்டோன் அவளை வா! வா!  என்று அழை த்தது.

மகி கண்களை இறுக்கி மூடிக்கொண்டே போனை தேடினாள். 

அதன் பின் எடுத்து ஹலோ என்று மிகவும் மெல்லிய குரலில் பேசினாள். 

ஹலோ!

“சொல்லுங்க சார் என்ன இந்த நேரத்தில் போன் பண்ணி இருக்கீங்க?” 

ரகு சிரித்துக்கொண்டே மணி எட்டாவது மா! அவள் உடனே கண்ணை  தேய்த்துக் கொண்டே மெதுவாக எழுந்தாள். 

சொல்லுங்க சார்? என்ன விஷயம் ? 

ரகு, ப்ராஜெக்ட் மீட்டிங்  அரேஞ்ச் பண்ணி இருக்கேன்! நீ தானே அதை லீப் பண்ற, அதனால கிளம்பி ஆபீஸ்க்கு வர முடியுமா ? 

மகிழினி மணியை பார்த்தாள். அவளையும் ஒரு முறை பார்த்தாள். “சார் மீட்டிங் எத்தனை மணிக்கு?”

ம்ம் ஷார்ப்பா 9.30 க்கு ஸ்டார்ட் பண்ணிடுவோம்! 

மகி எழுந்து நின்று  “மீட்டிங்கு யார் யார் வராங்க?”

முதலில் நீங்க கிளம்பி வாம்மா அதுக்கு அப்புறம் மற்றதை பார்த்துக் கொள்ளலாம் என்று ரகு கூறி வைத்தான்.

எட்டு தளத்தையும் அசால்ட்டாக  ஏறி கொஞ்சம்  மூச்சு வாங்கிக் கொண்டே சூர்யா படிக்கட்டில் இருந்து  படிக்கு வாசக்கதவை அடைந்தான்.

அவன் ஜிம்மிற்கு சென்றவன்  ஜாகிங் சென்று அப்படியே ஜிம் உடற்பயிற்சி என அனைத்தையும் முடித்துவிட்டு காலைக்கு காலை வேளைக்கு சாப்பிட தேவையான காய்கறிகள் மற்றும் பொருட்களை வாங்கி கொண்டு வந்தான்.

வீட்டுக்குள்  வேகமாக சென்றவன் முகத்தை கழுவி விட்டு கடகடவென காலைக்கு சாதாரணமாக காலை சிற்றுண்டி தயார் செய்தான்.

மகி பிரஷ்சை வாயில்  வைத்துக் கொண்டு வெளியே வந்தால்ள்.

 இருவர் பார்வையும் ஒருமுறை சந்தித்துக் கொண்டது. அதன் பின் அரக்கப் பறக்க வேகமாக பாத்ரூம்குள் நுழைந்து கொண்டாள்.குளித்து முடித்து வெளியே வர சூர்யா ஒய்யாரமாக சோபாவில் அமர்ந்து கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.

 மகி மனதில் அன்னிக்கி பெரிய ப்ராஜெக்ட் இருக்குன்னு நைட் அன்னைக்கு என்னை  விட்டுட்டு ஓடினவர் இன்னைக்கு உட்கார்ந்து  ஜாலியா டிவி பாத்துட்டு இருக்காரா என்று வாய்க்குள் முனகினாள்.

சூர்யா, உனக்கு பிரேக்ஃபாஸ்ட் ரெடி ஆயிடுச்சு! எங்க போறதா இருந்தாலும் சாப்பிட்டு போ!

மகி  நட்சத்திர கண்கள் மின்ன அவனைப் பார்த்தாள்.

சூர்யா தலையை கோதிக் கொண்டு “உனக்காக அப்டின்னு  மட்டும் கனவில் நினைக்காத டி! என் பேபிக்காக!”என குட்டி புன்னகை சிந்தினான். 

அதன் பின் கடுப்பானவள். ஒரு இரண்டடி வைத்தாள்.

“  சொன்னா புரியாதா அப்புறம் என்னோட ஆக்சன் வேற மாதிரி இருக்கும்!” என்று கூறினான்.

உடனே  வேகமாக வந்தவள். அருகில் உள்ள சோபாவில் அமர்ந்து கொண்டு உணவு உண்ண ஆரம்பித்தாள். அவசர அவசரமாக சாப்பிட்டாள்.

சூரியா, “எதுக்கு இப்படி பறக்கற மாதிரி சாப்பிடற ! மெதுவா சாப்பிட மாட்டியா! என் பொண்ணுக்கு ஒட்டாமல் போயிட போகுது!” 

ரொம்ப கரிசனம் தான் கவலைப்படாதீங்க!  நான் சாப்பிட்டேன் இல்ல அவனுக்கு வயிறு ஃபுல்லா ஆகிடும்! என்று சொல்ல சொல்லவே அவளுக்கு புரை ஏறியது.

சூர்யா தலையைத் தட்டி தண்ணீரை கொடுத்தான்.“ மெதுவா சாப்பிடனு சொன்னேன் இப்போ  மட்டும் வேகமா சாப்பிட்ட உன்னை வெளியே அனுப்பவே மாட்டேன்!”

சரி ஓகே என்று பொறுமையாக சாப்பிட்டாள்.

அதன் பின் ஒரு ஜூஸ் கொண்டு வந்து வைத்தான். அதையும் வேறு வழியில்லாமல் எடுத்து குடித்தாள்.அதன் பின் சில மாத்திரைகள் சாப்பிட்டாள்.

மகி, “ முடிந்ததா இப்ப நான்  கிளம்பலாமா!”

சூர்யா அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான். எங்க வேணாலும் போ லஞ்ச் டைம் நான் உனக்கு போன் பண்ணுவேன்! அப்ப நீ லஞ்ச பினிஷ் பண்ணி இருக்கணும்!”

மகி உள்ளுக்குள் “நான் பினிஷ் பண்றது உங்களுக்கு தெரியவா போகுது, நான் என்ன வேணாலும் பண்ணுவேன்!” 

சூர்யா,“ நீ லஞ்சு சாப்பிடலன்னு எனக்கு தெரிஞ்சதுன்னு வை நீ எங்க இருக்கான்னு பார்க்க மாட்டேன்! என்னோட ஆக்சன் தான்,  இந்த அடிக்கிறதுக்கு கை தூக்குவது, இந்த மாதிரியான வித்தை எல்லாம் என்கிட்ட வேண்டாம்!”

 சரி நான் போட்டோ எடுத்து உங்களுக்கு ஸ்டேட்டஸ் போடட்டுமா!

 “அதை பண்ணு!” 

சரி ஓகே என்று அவனிடம் சொல்லாமல் சென்றாள்.

“போடி போ கடைசியில் நீ எங்கே போனாலும் என்கிட்ட தான் வரணும்!”என்று நினைத்துக் கொண்டு அதன் பின் அவன் ஆபிஸ் கிளம்பினான்.


மகிழினி கீழே படிகளில் இறங்கவே வேகமாக மூச்சு வாங்கியது.

அவளுக்கு  மீண்டும் ரகுவரிடம் இருந்து போன் வந்தது. 

எங்கம்மா இருக்க? 

சார்  வந்துட்டு இருக்கேன் சார் என்று மூச்சிரைக்க பேசினால் 

உடனே ரகு “நீ மெதுவாவே வா மா! ஒன்னும் பிராப்ளம் இல்ல, பொறுமையா வா! 9.45 10.00 ஓ கிளாக் ஸ்டார்ட் பண்ணிக்கலாம்!”

 அதன் பின் மகி ஒரு பெருமூச்சியை விட்டு மெதுவாக நடக்க தொடங்கினாள். அங்கிருந்து ஒரு அரை மணி நேரம் ரகுவுடைய ஆபீஸ் வந்தது. 

மகி தெரியாத முகங்களுக்கு ஒரு சின்ன அறிமுகம் செய்து கொண்டாள்.தெரிந்த நபர்களிடம் கொஞ்ச நேரம் சிரித்து பேசினாள்.

அதன் பின் ஒட்டுண்ணியாக ஆதி வந்து ஒரு பக்கம் ஒட்டிக்கொண்டான்.

இன்னொரு பக்கம் ஜெனி வந்துவிட்டாள்.

ஏன் டி இந்த மாதிரி டைம் ல ஆபீஸ் வந்திருக்க?  என்று ஜெனி ஒரு பக்கம் கேட்க

 உடனே மகி அதை நீ சொல்றியா என்று ஜெனியுடைய 7 மாத வயிற்றைப் பார்த்து கேட்டாள்.

ஆதி , மகி எனக்கு ஒரு டவுட்டு?

என்ன விஷயம்? 

ஆதி, அது எப்படி மகி எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே மாட்டேங்குது?

 மகி, என்ன?  என்னடா கண்டுபிடிச்ச? 

ஆதி, “அது ஒன்னும் இல்ல சரியா நீ சூரிய தேவ விட்டு பிரியும்போது எப்படின்னு தெரியல நீ பிரக்நண்ட் ஆகிடுற!” 

ஜெனி இதைக் கேட்டு சிரிக்க மகி  பற்களை கடித்து கொண்டு ஆதி மானத்தை வாங்கி தொலையாத!  என்று திட்டி அடிக்க ஆரம்பித்தாள்.

ஆதி சிரித்துக்கொண்டே “இப்ப நான் தப்பா என்னடி சொன்னேன். ஃபர்ஸ்ட்  மிதுன் உன் வயிற்றில் இருக்கும்போது நீ கனடா போயிட்ட,  அங்க இருந்து திரும்பி வந்த, திரும்பி வந்து ரெண்டு பேருக்கும் சண்டை அப்புறம் திரும்ப கனடா போறேன்னு கிளம்புன அந்த நேரம் மறுபடியும் மாசமாகிட்ட அதுதான் எந்த இடத்தில் இந்த மாதிரியான விஷயம் நடக்குது?  அப்படின்னு எங்களுக்கு கொஞ்சம் குழு கொடுக்கறியா?”

மகி,“ இதுக்கு மேல ஏதாவது ஒரு கொஸ்டின் கேட்ட,  அப்புறம் ஜனனி இருக்காளே! அவளை கூப்பிடுவேன்!பரவாயில்லையா? 

ஆதி,  அவளா பாதி நேரம்  உங்க மாமியார் வீட்டில் தான் இருக்கா! 

என் மாமியார் வீடா?

ஆமா ஆவுன்னா  உமா மா கூட்டிட்டு போயிடறாங்க! உங்க மாமியாரு உனக்கு பதிலா அவளை ஜாலியா அங்க  வச்சு பார்த்து கொள்கிறார்கள். கூடவே எங்க அம்மா அப்பா, சிவா மாமா!  எல்லாரும் அங்கே தான் மீட்டிங்! பட்டைய கிலப்புறாங்க! டூர் போறாங்க கோவில் போறாங்க ஒரே என்ஜாய் தான்! என  ஆதி கூறினான்.


அதன் பின் அனைவரும் அவர்களுடைய சீட்டில் அமர்ந்தனர். ராம்,  கார்த்திக், ஆதி , ஹரிஷ் ஹரிஷிடம்  மகி சென்று அவனை நலம் விசாரித்தாள்.

அதன் பின்  கீர்த்தி என அனைவரும் இருந்தனர்.

கீர்த்தனாவிற்கு அடுத்த மாதம் தான் திருமணம் அதனால் அங்கே வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. என்று இங்கே ஆபீஸ் வந்து விட்டாள். 

ஏனென்றால் கீர்த்தியால் ஜெயியை பார்க்காமல் அவளால் இருக்க முடியாது. 

கீர்த்தி, யாரு வர போறா! என சொல்லி கொண்டு இருக்க ஜெய் வந்தான். 

ஹே ஹாய்! என சொல்லி கொண்டே நேராக கீர்த்தி அருகில் வந்து அமர்ந்து கொண்டான். 

கீர்த்தி, என்ன பண்றீங்க? என் அண்ணா இருக்கான், எங்க மாமா இருக்காங்க நீங்க பாட்டுக்கு வந்து பக்கத்தில் உட்காருரீங்க!. 

ஜெய், இது என்ன டி குத்தமா இருக்கு! இன்னும் கொஞ்ச நேரத்தில் என்ன நடக்க போகுதோ!

கார்த்திக், இப்போ யார் வர போறா? ஹே ஹரிஸ் அந்த ஜெய் கீர்த்தனா பக்கத்தில் பேசிட்டு இருக்கான் நீ பார்த்து கொண்டு இருக்க? 

ராம் சிரித்து கொண்டே இப்போ ஜெய் வால் வந்தால் யார் வருவா! சொல்லு!. 

மகி டென்ஷன் ஆகி ரகு சார்!. 

என்ன மா!  

“இப்போ யாரு வர போறா? எதுக்கு எல்லாரும் அமைதியா இருக்கீங்க? எவ்ளோ முக்கியமான விஷயம்! நீங்க அமைதியா இருக்கீங்க இப்படி தெரிந்து இருந்தால் நான் எங்க மாமா ஆபீஸ்ல ஜாயின் பண்ணி இருப்பேன்! என்ன மாமா!” என்று அனைவரை பார்த்தும் கேட்டாள். 

கீர்த்தனா, என்னங்க இப்போ சூர்யா சார் வர போறாரா! 

ஜெய் கொஞ்சம் அமைதியா இரு மா இது மகிக்கி தெரிய கூடாது. 

அந்த நேரம் ரகுவுக்கு போன் வந்தது. ஹலோ!. 

ம்ம் நான் வந்துட்டேன்! 

கொஞ்சம் சீக்கிரம் வாங்க!. 

மகி, வந்தாச்சா!.

கார்த்திக், நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லாம இருக்க ஹரிசு!. 

ஹரிஸ், மாமா இப்போ நான் இதை கேட்டால் அப்புறம் சூர்யா மாமா என்னை திட்டுவாறு! என சொல்லி மூட வில்லை. சூர்யா வந்தான். 

அனைவரும் திரும்பி பார்க்க ம்ம் இன்னும் கொஞ்சம் கெத்து காட்டணும்! என முகத்தை வைத்து கொண்டே உள்ளே நுழைந்தான். 

“ம்ம் யாருக்கு வைட் பண்ணமோ அவங்க வந்தாச்சு!” என ரகு கூறினான். 

ஹாய்! மீண்டும் நானே! என மகி பக்கம் திரும்பினான். 

கார்த்திக், இவனுக்கு தான் இத்தனை சீனா!. 

ரகு, பிளீஸ் கார்த்திக் கொஞ்சம் அமைதியா இரு டா இவன் எப்போ வேணாலும் குறுக்க திரும்புவான். 

மகி தலை மேல் கை வைத்து கொண்டே பார்த்தாள். 

சூர்யா நேராக அவனது இடத்துக்கு வந்து அமர்ந்தான். க்கும்..

சூர்யா, என்ன பா! எல்லாம் வந்தாச்சா! யாரும் விட்டு போகளையே! 

ஆதி மகி காதில் தூணில் இருப்பான் துரும்பிலும் இருப்பான் அப்டின்னு கேள்வி பட்டு இருக்கேன். ஆனால் மகி திரும்பும் இடம் எல்லாம் சூர்ய தேவன் இருப்பான் அப்டின்னு இப்போ தான் தெரியுது! 

மகி, கொஞ்சம் மூடு! 

ரகு, நீங்க ஆரம்பிங்க!. 

சூர்யா, இப்போ ஆல்ரெடி நம்ம எல்லாரும் சேர்ந்து அந்த பேங்கிங் பிராஜக்ட் டே அண்ட் நைட்டா செய்து கொண்டு இருக்கோம்! 

ம்ம்!. 

சூர்யா, “இப்போ அதுல புதுசா முளைச்ச காளான் மாதிரி இந்த ரகு ஆபீஸ்ல எக்ஸ்ட்றா பிட்டிங் இப்போ இந்த புராஜக்ட் எடுத்து இருக்காங்க!”

இதை கேட்டதும் மகி கடுப்பாகி ரகு சார் இதை நான் பண்றேன் அப்டின்னு உங்க கிட்ட சொல்லி விட்டேனே அப்புறம் எதுக்கு இப்படி! 

சூர்யா, நான் இன்னும் பேசி முடிக்கள.மிசஸ் மகிழினி வசந்தன் ஜிப் யுவர் மவுத்!. 

ஜெய், இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே! 

மகி உதடு துடித்து கொண்டே அவனை பார்த்தாள். 

ஆதி, அமைதியா இரு டி அவரை பற்றி உனக்கு தெரியாது. ரொம்ப டெரர்!.

சூர்யா, இப்போ விட்டத்தில் இருந்து ஆரம்பிக்கவா ஆதி! என கோபத்தில் மிகவும் மெதுவாக அழுத்தமாக கூறினான். 

ஹ!.. ஹான்!. சார்! என ஒரு நிமிடம் பயந்து கொண்டே உளறினான். 

சூர்யா ,“ இப்போ நம்ம அந்த பேங்கிங் புராஜக்ட் பண்ணனும்! அப்புறம் தான் இந்த சின்ன பட்ஜெட் எல்லாம் நம்ம செய்தால் அப்புறம் பேங்கிங் புராஜக்ட் ஸ்வாஹா!”

மகி மீண்டும் ஒரு கொஸ்டின்! என கையை தூக்கினாள். 

என்ன? என சூரியா அவளை பார்த்தான். 

மகி, நீங்க தான் புராஜக்ட் எடுக்க ஐடியா இல்லையே அப்புறம் எதுக்கு அங்கே வந்தீங்க! 

சூர்யா சிரித்து கொண்டே ரகு!. 

ம்ம் சூர்யா!. 

சூர்யா, மிசஸ் ரகு சொன்னாங்க அப்டின்ற காரணத்துக்காக நீங்க யாரை வேணாலும் வேலைக்கு எடுத்து கொள்ள வேணாம்! இது என்னோட ஹம்பில் ரெக்வஸ்ட!.

இதை கேட்டதும் மகி இன்னும் கோவமாக அவனை பார்த்தாள். 

சூர்யா, கார்த்திக் இதை நீங்க கொஞ்சம் எக்ஸ்ப்ளைன் பண்ணுங்க! டீச்சர் சொல்லும் போது இன்னும் கொஞ்சம் புரியும்! 

கார்த்திக் கொஞ்சம் தயங்கி கொண்டே “மகி இது ஒரு டேக்டிக்ஸ், யார் யாரு எவ்ளோ கோட் பண்றாங்க கூடவே அவங்க மோட்டிவ் இது எல்லாம் தெரிந்து கொள்ள லைக் எல்லாரோட மூவ் எல்லாம் தெரிந்தால் நம்ம பிளான் போட ஈசியா இருக்கும்!”

மகி ஒரு வித நடுக்கத்துடன் அமர்ந்து இருந்தாள். இப்படி ஆகும் என எதிர் பார்க்க வில்லை. 

அனைவரும் அமைதியாக இருந்தனர். சூர்யா மேலும் தொடர்ந்தான். இதுவே தெரியாம இந்த புராஜக்ட் எடுத்து சில பல சிக்கலை சமாளிக்க போறீங்களா!  அதை விட இப்போ மிசஸ் வசந்தன் கேரிங்கா இருக்காங்க நாளைக்கு குழந்த பிறக்கும் நேரம் வரும் அப்போ என்ன பண்ணுவீங்க! 

ரகு யோசிக்க ஆரம்பித்தான். கார்த்திக், சும்மா இதை பற்றி பேச வேணாம் அடுத்து என்ன பண்ண போற? 

சூர்யா, அதை ரகு சார் தான் சொல்லணும்! 

மகி இப்பொழுது எழுந்து நின்றாள். அவள் என்ன சொல்வாள்? இது இந்த புராஜக்ட் எடுத்தது ஐ மின் என்னோட ஃபோர்ஸ் ல தான் ரகு சார் என்னை நம்பி அனுப்பினார். இப்போ என்னால்! என அவளுக்கு கண்களில் கண்ணீர் முட்டி கொண்டது. 

கார்த்திக் , மகி!. என சொல்ல ஆதியும் , ஹே ஒன்னும் இல்ல டி விடு! 

சூர்யா, சட் அப் எவெரி ஒன்! அவங்க சொல்ல வந்ததை முழுசா சொல்லட்டும்!  

மகி, ம்ம் என்னால் முடியல! நான் பண்ணது தப்பு தான்!. 

சூர்யா, அவ்ளோ தான் கேம் முடிஞ்சு போச்சு! என சிரித்து கொண்டே அவளை பார்த்தான். 

ரகு, இப்போ இதுக்கு சொல்லுசன் சொல்லு சூர்யா! அதுக்கு தானே இந்த மீட்டிங்!..

சூர்யா, யெஸ் அப்சல்யூட்லி! என மகியை பார்த்தான்.  

அவளால் அதற்கு மேல் அங்கே நிற்க பிடிக்காமல் வேகமாக அந்த அறையை விட்டு வெளியே செல்ல எத்தனித்தாள். 

சூர்யா, ஒரு வேளை நான் சொல்ற டீலிங்க்கு இந்த புராஜக்ட் டீம் ஹெட் சம்மதம் சொன்னால் இதையும் சக்சஸ்ஃபுல்லா முடிக்கலாம். 

மகி அதே இடத்தில் நின்றாள். கார்த்திக், சூர்யா நீ ஓவரா பண்ற?

ரே கொஞ்சம் கம்முன்னு இரு டா! 

ரகு, என்னமா சொல்ற? 

மகி கண்களை துடைத்துக் கொண்டே திரும்பி “சரி சார் எனக்கு எந்த டீலிங்கா இருந்தாலும் சம்மதம்!”

அவ்ளோ தான் எல்லாமே சிறப்பா முடிந்தது. நீங்க எல்லாரும் அவங்கவங்க வேலையை பாருங்க நான் கொஞ்சம் டாக்கிங் மிசஸ் வசந்தன் கிட்ட பேணும்!. 

ஜெய், ம்ம் எப்படி எதுவும் செய்து அவளை அணை கட்டி விடுகிறான். பிராடு பையன்! 

கீர்த்தனா, அவங்கள எதுக்கு பார்க்கிற! 

என்ன டி மரியாதை குறையுது! 

சீக்கிரம் வெளியே போங்க! 

ராம், உன் ஆபீஸ்ல இருந்து கங்கணம் கட்டி கொண்டு இங்கே வந்து office romance பண்ற!  நடத்து டா! 

சூர்யா, என்ன மச்சி! நீ எல்லாம் பெரிய தலை கட்டு college romance தான் ஆல்ரெடி பண்ணிட்டியே! 

ம்ம் எதுவும் சொல்லி ஆஃப் பண்ணு டா சீக்கிரம் வா! பாவம் டா அவளை மிரட்டாத! என சொல்லி கொண்டே ராம் ரகு கூட வெளியே கிளம்பினான். 

கார்த்திக், ம்ம் ஒரே ஜாலி தான்! 

சூர்யா, என்ன உன்னோட சிரிப்பு எதுக்கும் சம்மந்தம் இல்லாம இருக்கு! 

மகி உன் கிட்ட சமாதானம் ஆகவே மாட்டாள். 

அது தான் டா எனக்கும் வேணும்! போடா!..

ஆதி, சரி சமாளி! உன்னை தனியா விட்டு போக மனசுக்கு கஷ்டமா இருக்கு! 

ஜெனி, நீ வா போலாம்!. அவள் எல்லாம் சமாலிப்பாள். மகி நீ ஒரு கிஸ் கொடுத்து விடு! 

போடி! என கோபத்துடன் நின்றாள். அனைவரும் சென்று விட்டனர். 

சூர்யா அவனுடைய இடத்தில் விழி! மான் விழி! இப்போ அழு விழி ஆகி போச்சே! 

மகி அவனை முறைத்து பார்த்தாள். 

சூர்யா, பாரு டா கண்ணு உருண்டை  கீழ் விழுந்து விட போகுது! 

என்ன பேசணும்? என கொஞ்சம் விரைப்புடன் கேட்டாள். 

சூர்யா, இப்போ தெரியுதா நீங்க எங்கே சுற்றினாலும் இங்கே என்னை தான் சுற்றி வரனும்! மான் விழி! என கண்ணை சிமிட்டினான். 

மகி, ஹான் வருவாங்க வேற யாராவது! நான் மான் விழி!. 

சூர்யா, “ஆண் மானுக்கு மட்டும் தான் கொம்பு இருக்கும், அதே போல் ஆண் யானைக்கு தான் தந்தம் இருக்கும், ஆண் மயிலுக்கு மட்டும் தான் அவ்வளவு பெரிய தோகை இருக்கும், அதே போல ஆண் சிங்கத்துக்கு தான் பிடரி இருக்கும்!”இதையெல்லாம் எதுக்கு உன் கிட்ட சொல்ல வரேன் என்றால்…

மகி, போதும் உங்க கிட்ட யாரும் இங்கே மயங்கி கிடக்கல! நான் கப்போர்ட் விஷயத்தை கண்டி பிடித்தே தீருவேன்.

சூர்யா, மயக்கமா! வாட் அ காமெடி! இதை வெளியே சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்! 

மகி அவனை பார்த்தாள். 

சூர்யா, “என் பொண்ணை சுமந்து கொண்டு நீ பேசுற பொய் எல்லாமே அந்த குட்டி குட்டன் பேசுவது போல இருக்கு!”

மகி, தேவையில்லாத பேச்சு வேணாம்! 

இப்போ பண்ணிட்டு இருப்பது எல்லாமே தேவையில்லாத விஷயம் தான்!  

மகி, நீங்க புராஜக்ட் விஷயத்துக்கு வாங்க! 

சூர்யா, ம்ம் ஓகே நீ அப்படி வரியா நான் கொஞ்சம் இப்படி வரேன்! 

மகி முகத்தை திருப்பி கொண்டாள். 

சூர்யா, 24 மணி நேரமும் இனி என் கூட இருக்க! இந்த புராஜக்ட் நம்ம கம்பனியில் செய்ய போறோம்! 

மகி, புராஜக்ட் செய்யலாம்! 24 மணி நேரமும் செய்யலாம்! ஆனால் நான் அங்கே வர மாட்டேன்! 

சூர்யா, புரியல! 

மகி, நீங்க இங்கே வாங்க! 

ஹே! 

மகி, என்னை தேடி வந்தது நீங்க தான்! 

சூர்யா, இதை இந்த புராஜக்ட் அதை நான் கேன்சல் பண்ண சொல்லுவேன்! 

மகி, சொல்லுங்க 

அதுக்கு பெனால்டி!  

மகி, “மாயா மம்மி வருண் அண்ணா இருக்காங்க! சோ எனக்கு ஒன்னும் பிரச்னை இல்ல! வேற யார் கிட்டயும் நான் போக மாட்டேன்! என் அண்ணன் கிட்ட சொன்னால் இப்போவே அபினவ் சார் கூடவே ஒரு புராஜக்ட் டீம்ம நான் இங்கே இருந்தே ஒன் மந்த்ல என்னோட கனடா டீம் வச்சு முடிக்க முடியும்!”

சூர்யா, இப்போ என்ன வேணும்! 

மகி சிரித்து கொண்டே என்னை தேடி நீங்க தான் வரனும்! நான் வர மாட்டேன்! என இரு புருவம் தூக்கினாள். 

சூர்யா அமைதியாக நின்று கொண்டு இருக்க மகி அருகில் வந்து அவனுடைய சட்டை பாக்கெட்டில் இருக்கும் கண்ணாடியை எடுத்து கொண்டு மம்ம்! 

அவ்ளோ தான் கேம் ஓவரா இல்லையா அப்டின்னு நீங்க தான் சொல்லணும்! என அதை போட்டு கொண்டே அவனை பார்த்து கண் அடித்தாள். 

சூர்யா அவளின் இடையை அவனை நோக்கி இழுத்தான். 

…….

இங்கே உதயன் ஒரு முடிவுக்கு வந்து இருந்தான் நேரில் போய் விசாரிக்க வேணும் என முடிவு எடுத்தான். 

அதற்குள் தாரா எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டே அவனை பார்த்தாள். 

உதயன் , தாரா! சீக்கிரம் குளித்து கீழே வா! பூஜை அறையில பூஜை பண்ணு இன்னிக்கு முதல் நாள் ஆபீஸ் போறேன்! 

தாரா, சாரிங்க இனி நேரத்தில் எழுந்து விடுவேன் என வேகமாக அவள் குளிக்க சென்றாள். அவர்கள் இருவரும் தயாராகி நேராக பூஜை அறை சென்றனர். எப்பொழுதும் சுத்தம் செய்வார்கள் இன்றும் அதே போல் சுத்தமாக இருந்தது. 

உதயன், கந்த சஷ்டி தெரியுமா! 

தாரா இல்லை என்பதை போல தலை அசைத்தாள். 

பாலும் தெளி தேனும்!. 

தமிழ் பாட்டு தெரியாது! .

உதயன், சரி சரஸ்வதி நமஸ்திப்யம்?  

தாரா, என்ன சொல்கிறான் என வாயை பார்த்தாள். 

உதயன், குரு பிரம்மா! 

பிளீஸ் எனக்கு சாமி வாசனையே இல்ல இனி கற்று கொள்கிறேன்! என கையை தூக்கினாள். 

அவன் சிரித்து கொண்டே சரி முதலில் என்ன சாமி கிட்ட வேண்டுவாய்! 

தாரா, நான் நல்லா இருக்கணும்! 

உதயன், எல்லாரும் நல்லா இருக்கணும்! அப்படி சொல்லணும்! நிறைய மாற்ற வேணும் போலயே!. 

அந்த நேரம் கோவிந்த் அழைத்தார். 

தொடரும்…

Episode 309

உதயன், எல்லாரும் நல்லா இருக்கணும்! அப்படி சொல்லணும்! நிறைய மாற்ற வேணும் போலயே!. 

தாரா ஒற்றை புருவம் தூக்கி கொண்டே  எல்லாமே மாற்றலாம்! என அவன் அருகில் வந்தாள். 

உதயன் கண்களில் கொஞ்சம் கடுமையுடன் அடி வாங்க போற! இது பூஜை அறை டி! 

தாரா திடுக்கிட்டு சாரி! சாரி! சாமி சாமி! என கையை கும்பிட்டாள். சரி சாமி கிட்ட நல்லா வேண்டி கொள்!. 

தாரா என் சாமி இங்கே இருக்கே! என உதயனை பார்த்தாள். 

உதயன் “உன் உருட்டை கொஞ்சம் நிறுத்து டி! கம்முன்னு இப்போ கண்ணை மூடி சாமி கும்பிடு!”

அதன் பின் இருவரும் சேர்ந்து சாமி கும்பிட்டனர். உதயன் மனதில் என் மனசில் உள்ள அனைத்து குழப்பமும் தீரணும்! அவள் யாரென எனக்கு தெரியனும் என வேண்டி கொண்டான். 

தாரா மனதில் சாமி நான் சீக்கிரம் என் அத்தை மாமா மனதில் ஒரு நல்ல இடத்தை பிடிக்கணும்! எனக்கு உதயன் போலவே ஒரு குழந்தை வேணும் அதை மட்டும் கொடுத்திடு!. 

அதன் பின் உதயன் அவளின் நெற்றியில் திரு நீற்றை பூசி விட்டான். தாரா எதையோ யோசித்தவள் என்னங்க! இங்கே என தாலி எடுத்து அவன் முன் நீட்டினாள். 

உதயன் ஆச்சரியத்துடன் என்ன இது? 

தாரா,“ நான் இதை நிறைய படத்துல பார்த்து இருக்கேன்! அப்புறம் நானே ஒரு படத்துல நடிச்சு இருக்கேன்! அந்த அனுபவம் தான்!” 

ம்ம் பரவாயில்லை டி! என சிரித்து கொண்டே அவள் மாங்கல்யத்துக்கு வைத்து விட்டான் நெற்றியில் வகட்டுக்கு வைத்து விட்டான். 

அதன் பின் இருவரும் வெளியே வர தாரா, “எனக்கு கண்ணுல ஊதி விடுங்க!”

உதயன் புருவம் நெருக்கி கொண்டே எங்கே காட்டு டி! என அவன் ஊதி விட தாரா அவன் சட்டையை பிடித்தவள். அவனை அருகில் இழுத்து இதழில் முத்தம் பதித்தாள். 

உதயன்,  ஹே என்ன டி பண்ற? அடி பாவி!. 

தாரா, என்னங்க இந்த குங்குமம் வச்சு இருக்கும் போது  எனக்கு எதோ புதுசா இருக்கு!  புதுசா கல்யாணம் ஆன மாதிரி அதனால் வாங்களேன் ஜாலியா அப்படியே மேலே போலாம்! என அவனை நெருங்கி பேசி கொண்டு இருந்தாள். 

உதயன், தாரா அடி வாங்க போற நீ! 

ம்ம் அப்போ இன்னும் நல்லா இருக்கும்! நீங்க என்னை திட்டி சண்டை போட்டால் எப்டியும் அதுக்கு அப்புறம் கொஞ்சுவது எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு என் அவனின் சட்டை பட்டனை திருகி கொண்டே நின்றாள். 

உதயன் பேச வர அதற்குள் கோவிந்த் சத்தம் கேட்டது. பாப்பு! மாப்பிள்ளை! என குரல் கேட்க வேகமாக உதயன் அவளிடம் இருந்து விலக தாரா அவளுடைய முடியை காதுக்கு ஒதுக்கி கொண்டே நின்றாள். 

கோவிந்த் புன்னகையுடன் பாப்பு என்ன டா சாமி கும்பிட்டு இருக்க! ம்ம் பரவாயில்லையே குட் ஹாபிட்!  

உதயன் அவர் பேசுவதை கண்டு கொள்ளாமல் அவரை தாண்டி நடந்தான். தாரா அவனின் பின்னால் நடந்தாள். 

கோவிந்த், “மாப்பிள்ளை, பாப்பு ரெண்டு பேரும் டைனிங் போங்க இன்னிக்கு முக்கியமா உங்க கிட்ட பேசணும்!”

தாரா அவனை பார்த்தாள். பதில் பேசாமல் உதயன் டைனிங் டேபிள் சென்று அமர்ந்தான். 

உதயன் மற்றும் தாரா இருவருக்கும் உணவு வைக்க உதயன் வேண்டாம் என்பது போல் தடுத்தான். 

தாரா, என்னாச்சு? 

அவர் வராமல் நம்ம எப்படி சாப்பிடுவது அது மரியாதையாக இருக்காது. 

தாரா அவனை நினைத்து மெட்சி கொண்டாள். உதயன் மேல் இன்னும் காதல் கூடியது. 

உதயன் நாளைக்கு எனக்கு மூணு வேலையும் நீ தான் சமைக்கணும்! உங்க வீட்டில் உள்ள வேலைக்காரர்கள் செய்ய கூடாது. 

தாரா, ம்ம் ஓகே 

உதயன், இனி எல்லா நாளும் நீ தான் செய்யணும்! அது தயிரா சாதகமாக இருந்தால் கூட நான் மூணு வேலை சாப்பிடுவேன்! 

ம்ம் சரிங்க! 

உதயன், “ஒரு நாள் விட்டு போனால் உனக்கு வேலை இருந்தால் நாம் அட்ஜஸ்ட் பண்ணி கொள்வேன். ஆனால் இங்கே சாப்பிட மாட்டேன். வெளியே தான் சாப்பிடுவேன். அதே போல் நீ சமைக்க அனைத்து பொருளும் எவ்ளோ செலவு ஆகிதுண்ணு நோட் பண்ணிக்க என்னோட காசுல தான் நீ சாப்பிட வேணும்! இது தான் ஆண்பிள்ளையாக எனக்கு மரியாதை!”

தாரா அவனின் கையை கோர்த்து கொண்டு “ம்ம் நாளையில் இருந்து உங்களுக்கு மூணு வேலையும் சமைக்கிரென்! நீங்க சொன்னது போலவே எல்லாம் செய்கிறேன்! இப்போ கொஞ்சம் சிரிங்க!”

கோவிந்த், கிகும் என தொண்டையை சிரும்பி கொண்டே அவர்கள் முன் வந்து அமர்ந்தார். மணியை பார்த்தார், அமிர்தா இன்னும் வர வில்லை. அவருக்கு கால் செய்ய போக வேகமாக அரக்க பறக்க வந்தார். 

அமிர்தாவின் பார்வை தாரா மற்றும் உதயனை தான் பார்த்து கொண்டு இருந்தது. 

கோவிந்த், ம்ம் சர்வ்வ் பண்ணுங்க! 

அனைவரும் உணவு பரிமாற தாரா எழுந்து கொண்டு அனைத்து உணவையும் உதயனுக்கு வாங்கி வைத்தாள். அனைத்தும் சைவ உணவுகள்! 

அமிர்தா, இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை! 

கோவிந்த் கடுமையான பார்வையை அமிர்தா மீது வீசிட..

தாரா, ”டாடி நாளையில் இருந்து எனக்கும் அவருக்கும் நான் தனியா சமைக்க போறேன்! அப்புறம் கிராசரி எல்லாம் அவருக்கு மந்திலி செலரி தருவீங்க தானே அதில் வாங்கி கொள்வோம்!”

பாப்பு! என அவர் பார்க்க..

தாரா, “நீங்க இங்கே இருக்க சொன்னீங்க? அவரை பிஸ்னஸ் பார்க்க சொன்னீங்க? எல்லாத்துக்கும் நாங்க ஒத்து கொண்டோம் அதே போல நீங்க ஒத்து கொள்ள வேணும்! அது தான் எனக்கு சந்தோசத்தை கொடுக்கும்!”

கோவிந்த் அவனை பார்க்க எந்த உணர்வும் இல்லாமல் சாதாரணமாக உணவை உண்ண ஆரம்பித்தான். அமிர்தா, இவ்வளவு வாய் பேசுவியா! நீ! டாடிய எதிர்த்து பேசுற! 

தாரா, என் புருசன் மரியாதை எனக்கு முக்கியம்! என் டாடி எனக்கு நல்லது தான் சொல்லி கொடுத்து இருக்காங்க என்ன டாடி! 

கோவிந்த், உன் இஷ்டம்! என சொல்லி விட்டு சாப்பிட ஆரம்பித்தார். 

தாரா அவளும் சாப்பிட்டு கொண்டு அவனுக்கு பார்த்து பார்த்து பரிமாறினாள். 

கோவிந்த், பாப்பு! 

ம்ம் சொல்லுங்க! 

கோவிந்த், ஒரு ஹாஸ்பிடல் அட்வர்டைஸ்மென்ட் இருக்கு!. 

தாரா உணவு உண்பதை நிறுத்தி விட்டு  தன் தந்தையை பார்த்து “நான் கல்யாணத்துக்கு அப்புறம் நடிக்க மாட்டேன் அப்டின்னு முடிவு எடுத்து இருக்கேன்!”

கோவிந்த் உணவை சாப்பிட்டு கொண்டே “இது முக்கியமான விளம்பர படம்  நீ வருவா அப்டின்னு சொல்லிட்டேன்! எனக்காக பாப்பு!”

தாரா எழன புன்னகையுடன் “இப்போ கூட எனக்காக வாழ முடியல என்னை இதே இடத்தில் என்னையே ஒரு காரணமா வச்சு அவரையும் சேர்த்து லாக் பண்ணி இருக்கீங்க! இதுக்கும் மேல உங்களுக்கு என்ன வேணும்!”

அமிர்தா, ரே  உனக்கு பிடிச்ச எல்லாம் பண்ணி இருக்காரு! நீ டாடிய அவமான படுத்தி பேசிட்டு இருக்க? 

தாரா, இதுல என்ன அவமானம் இருக்கு! 

கோவிந்த், மாப்பிள்ளை அவள் கிட்ட சொல்லுங்க என்னை விட நீங்க சொன்னால் கேட்பா! 

உதயன் தாராவை பார்த்தான். எதுவும் பேசாமல் சாப்பிட தொடங்கினான். 

அனைவரும் சாப்பிட்டு முடித்து எழ இது என்னோட முடிவு என்னால் எதிலும் நடிக்க முடியாது! 

கோவிந்த், இது ஹாஸ்பிடல் விளம்பரம் அதனால் நடித்து கொடு! 

தாரா, முடியாது என மேலே செல்ல போக! 

பாப்பு நான் தேஜு கிட்ட சொல்லி விட்டேன். இன்னிக்கு நீயும் மாப்பிள்ளையும் பெங்களூர்ல அவங்க ஆபீஸ்க்கு போகனும்! 

தாரா இந்த முறை கோபமாக என்னை “எதுக்கு டார்ச்சர் பண்றீங்க! இங்கே இந்த வீட்டில் இருக்க நரகமா இருக்கு! எனக்கு பிடிக்காது விஷயத்தை எதுக்கு வற்புறுத்துரீங்க!”

கோவிந்த் அவளை ஆச்சரியமாக பார்த்தார். 

உதயன், தாரா என்ன ஹேபிட் இது! என கொஞ்சம் கடுமையான குரலில் அழுத்தமாக பேசினான். 

தாரா, என்னங்க? என கண்ணை துடைத்து கொண்டே பார்த்தாள். 

“சார் உன்னை நம்பி சொல்லி விட்டார். சோ நம்ம ரெண்டு பேரும் இப்போ போலாம்!”

தாரா, “இல்லங்க நான் சொல்றத கேளுங்கள்!”

உதயன், நீ போய் கிளம்பு நான் வெயிட் பன்றேன்! 

கோவிந்த் இருவரையும் பார்த்தார். தாரா தன் தந்தையை முறைத்து கொண்டே மேலே சென்றாள். சிறிது நேரத்தில் ஒரு புடவையை கட்டி கொண்டு வெளியே வந்தாள். ஜடையை பின்னலிட்டு பூஜை அறையில் இருந்து ஒரு பூ வைத்து இருந்தாள். 

அமிர்தா, என்ன இது உன்னை பார்த்தால் பட்டி காடு மாதிரி இருக்கு! 

தாரா, இது என் இஷ்டம் நீங்க என்னை ரொம்ப ரூல் பண்றீங்க! 

கோவிந்த், அமிர்தா உன் வேலையை பாரு! அவள் போகட்டும்! இனி தாரா பற்றியோ முக்கியமா மாப்பிள்ளை பற்றியோ பேசின! அடுத்து  உன்னை கெஸ்ட் ஹவுஸ் அனுப்பி விடுவேன். 

அமிர்தா அவர்களை முறைத்து விட்டு சென்று விட்டார். 

தாரா முகத்தை தொங்க போட்டு கொண்டே உதயனை நோக்கி வந்தாள். 

உதயன், கொஞ்சம் சிரி டி பார்க்க சகிக்கல!. 

எனக்கு உங்க மேல கோபம்! என அவன் அருகில் வந்து நின்றாள்.

அதற்குள் உதயன் கோவிந்த் பக்கம் திரும்பி ”சார் நாங்க போயிட்டு வரோம்!”

கோவிந்த், ம்ம் போயிட்டு வாங்க மாப்பிள்ளை என அனுப்பி வைத்தார். 

உதயன் கைகளை பிடித்து கொண்டே அவனுடன் சின்ன சின்ன சண்டையுடன் சென்றாள். கோவிந்த் தன் பெண்ணை பார்த்தார். தனது கைகளை பிடித்து நடந்தவள் இன்று தன் மேல கோபம் கொண்டு அவளுடைய இணையுடன் நடந்து செல்கிறாள். ம்ம் உதயன் மரியாதை அதிகம் தெரிந்தவன் தான்! நல்லா தான் அந்த வசந்தன் வளர்த்து இருக்கார். என நினைத்து கொண்டார். 

தாரா அவனிடம் எதுக்கு நீங்க வரேன்னு ஒத்து கொண்டீர்கள்! எனக்கு நடிக்க பிடிக்கலயே? அதை விட அந்த நிதின் விஷயம் அப்புறம் spr, குரு பற்றி தெரிந்தும் எதுக்கு சம்மதம் சொன்னீங்க? 

இனிமே சம்மந்தம் படுத்திக் கொள்ள தான் சொன்னேன்! 

என்ன? என புரியாமல் அவனை பார்த்தாள். 

உதயன் சிரித்து கொண்டே நீ தான சொன்ன அந்த தேஜூ மகி மாதிரி இருக்காங்க அப்டின்னு அது தான் போய் பார்க்கலாம்! 

தாரா, உங்களுக்கு அவங்கள பற்றி தெரியாது அந்த தேஜூ குருவ விட கிரிமினல் தெரியுமா! சரியான பிளேயர் அவங்க என்ன நினைக்கிறார்களோ அதை எதாவது செய்து சாதித்து விடுவார்கள். அவங்க கல்யாணம் கூட அப்படி தான் நடந்தது. குரு ஜெயிலுக்கு கூட போனான். Spr யை பெல்லி பண்ணிக்க அவங்களோட அப்பாவை ஜெயிலுக்கு அனுப்பி இருந்தாங்க! சரியாக பிராடு! அவங்க அப்பா நிறைய ரிசர்ச் பண்ணி மாட்டி கொண்டார். அந்த தேஜு!. என இன்னும் சொல்ல வர 

உதயன் போதும் கொஞ்சம் நிருத்துகுறாயா! 

தாரா சாக் ஆகி திரும்பி பார்த்தாள். 

_______

சூர்யா அவளின்  இடையுடன் இழுத்தான். மகி முகத்தை சுருக்கி கொண்டே பார்த்தாள். 

சூர்யா கையை விட்டவன் வயிற்றை தடவ ஆரம்பித்தான்.  உங்களுக்கு கேட்டுச்சா தங்கம் எவ்ளோ உங்க அம்மா டர்ட்டி கேர்ள்! டாடிய அவமான படுத்த உங்க மாமா கிட்ட காசு கேட்க போறேன்னு சொல்றா! என கூறி கொண்டே குனிந்து இடையில் தொப்புள் அருகில் முத்தமிட்டான். 

சூர்யா மெதுவான குரலில் என் பேச்சை உன் அண்ணன் சத்ய தேவ் மட்டும் தான் கேட்கிறான். அந்த குட்டி குட்டன்!. 

ம்ம்ம்ம் என சத்தமிட்டாள். 

சூர்யா, “பாரு பேபி என்னை மிரட்டுகிறாள். நீங்க சீக்கிரமா வெளியே வாங்க நம்ம மூணு பேரும்! ” மகி அவனையே விழி விரித்து பார்க்க பேபி, நான் , சத்ய தேவ் நம்ம போலாம்!

மகி அவனை நகர்த்தி விட்டாள். சூர்யா ஒரு பெரு மூச்சை விட்டு சண்டை வேணாம் டி! 

அப்போ கப்போட்ல என்ன இருந்தது? இப்போ சொல்லுங்க! 

சூர்யா, சண்டை செய்யலாம்! ம்ம் நீ தாங்க மாட்ட! என சொல்லி கொண்டே அவளை பார்த்தான். 

மகி நாளையில் இருந்து இங்கே ஆபீஸ் ஐ மின் உங்களுக்கு என்னை பார்க்க வர மாதிரி இருந்தால் வந்து விடுங்கள். ஓகே பாய்!. 

அடங்காதவளே! 

ம்ம் நான் தான் அடங்கவே மாட்டேன்! பாய்! பாய் சி யூ! என வெளியே வந்தாள். 

ஆதி பதட்டத்துடன் என்ன டி ஆச்சு? 

மகி கண்ணாடியை கொஞ்சம் கலட்டி கொண்டே ஹே நாங்க யாரு  மான் விழி! அவ்ளோ தான் இனி என்னை தேடி ஒவ்வொரு நாளும் பாசு ஓடி வருவாரு! 

ஆதி கண்கள் மின்ன என்ன டி பண்ண? 

மகி அவன் காதை திருகி ஹே தப்பா பேசாத டா! 

சும்மா மகி சொல்லு என்ன நடந்தது. 

மகி, இனி நான் இந்த ஆபீஸ் ல தான் ஒர்க் பண்ணுவேன்! அங்கே வர மாட்டேன் அப்டின்னு சொல்லிட்டேன். எப்படி! 

அவ்ளோ தானா! 

மகி,  ஓவரா பேசுற அவர் கிட்ட உன்னை கோர்த்து விடட்டுமா! 

ஹே வேணாம் டி!  

சூர்யா ராம் அருகில் வந்து மச்சி! ராம் சிரித்து கொண்டே எதுக்கு டா இந்த விளையாட்டு! 

சூர்யா, சும்மா ஓவரா ஆடுரா! எல்லாம் என் பேபிகாக மட்டும் தான் 

ராம் கையெடுத்து கும்பிட்டு பிளீஸ் சூர்யா போதும் விடு டா! 

சரி சரி என அவர்கள் அந்த பேச்சை அப்படியே முடித்தனர். 

_____ 

மிதுன் குட்டி குட்டன் என்ன பண்றான் அதை பார்ப்போம்! 

வீடு முழுக்க ஒரே சிரிப்பு சத்தம் கேட்டது. மிதுன், தாத்து இப்படி என அவன் தலையை சீவி விட்டு காட்டினான். 

நிதின் உதட்டுக்குள் சிரிக்க வசந்தன், சக்தி பாரு மிதுன் என்னை என்ன பண்ணி இருக்கான்! 

சக்தி என்ற பெயரை கேட்டதும் நிதின் முகம் மாறியது. 

மிதுன், தாத்து மெனி  மெனி டைம் சொல்லி விட்டேன்! ப்ரோ பேரு நிதின்! நிதின் சொல்லுங்க! 

வசந்தன் இப்பொழுது சுதாரித்து கொண்டே அட ஆமா கண்ணா! நான் மறந்து விட்டேன்! 

நிதின், இட்ஸ் ஓகே என கூறி இப்போ என்னோட டர்ன்!. 

தொடரும்…

Episode 310

வசந்தன் இப்பொழுது சுதாரித்து கொண்டே அட ஆமா கண்ணா! நான் மறந்து விட்டேன்! 

நிதின், இட்ஸ் ஓகே என கூறி இப்போ என்னோட டர்ன்!. என அவருடைய தலையை சீவி விட்டு மீசையை முறுக்கி விட்டான். 

மிதுன், தாத்து இங்கே பாருங்க! ஸ்மைல் பண்ணுங்க! என போட்டோ எடுத்தான். 

கலை, என்னங்க வாங்க மிதுன் குட்டி வா சாப்பிடலாம்! 

அம்மாச்சி! நீங்க ஊட்ட வேணும் நாங்க தாத்துவுக்கு மேக் அப் பண்றோம்! என மிதுன் கூறினான். 

கலை உணவு எடுத்து கொண்டே வந்தவர் சிரித்து கொண்டே மிதுன் செல்லம் இங்கேயே எங்க கூட இருந்திடு ஸ்கூல் சேர்ந்துக்க நான் டெய்லி உனக்கு ஊட்டி விடுறேன். தாத்தா உன்னை ஸ்கூல் கொண்டு போய் விடுவார் என்ன சொல்ற செல்லம்! 

மிதுன், முதலில் ஆ போடுங்க!. 

கலை என்னங்க உங்களுக்கு போட்டு வச்சு இருக்கேன்! தம்பி உனக்கும் தான்! ஓடு போய் சாப்பிடு கண்ணு என நிதின் கிட்ட கூறினாள். 

இதையெல்லாம் பார்த்து நிதின் முகம் வாட்டமானது. அதை நினைத்து கொண்டே அவன் எழுந்து செல்ல போக அவனுடைய வாய்க்கு அருகே வசந்தன் நீட்டினார். ஆ காட்டு!  

நிதின் அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். வசந்தன், ம்ம் வேணாமா! 

நிதின் அடக்கி வைத்திருந்த பாசத்தை மொத்தமாக அவருடைய இடையை கட்டி கொண்டான். தாத்தா! ஐ லவ் யூ! என கூறி அவரின் வயிற்றில் முகத்தை புதைத்து கொண்டான். 

வசந்தன் சிரித்து கொண்டே “என்ன ஆச்சு கண்ணா! வீட்டு நியாபகம் வந்திடுச்சா!”

நிதின் ஒரு ஆ வைத்து கொண்டு மெதுவாக மென்று முழுங்கியவன். “இல்ல! எனக்கு இங்கே இருக்க உங்க கூட இருக்க ரொம்ப பிடிச்சு இருக்கு! ஆனால் அவங்களுக்கு என்னை பிடிக்கலயே!” என கலை வாணி பக்கம் கையை காட்டினான். 

வசந்தன் என்ன சொல்வது என யோசித்து  அப்படி இல்ல டா கண்ணு அவங்களுக்கு உன்னையும் பிடிக்கும் நீ பெரிய பையன் மிதுன்  சின்ன பையா அதான்! என ஊட்டினார். 

கலை, மிதுன் குட்டி கேட்டதுக்கு பதிலை காணோம்! 

மிதுன், அம்மாச்சி! இங்கே ஜாலி தான்! ஆனால் மகி பாவம்! அவளை நான் தான் பத்திரமா பார்த்து கொள்ள வேணும்! இந்தியா வந்ததில் இருந்து இவ்வளவு நாள் பிரிந்து இருக்கா! கனடா வில் என் மம்மியா இருந்தாள் இப்போ சக்தி க்கு மம்மியா இருக்கா! 

கலை, அப்படி சொல்ல கூடாது குட்டி சக்தி உனக்கு அண்ணன். 

மிதுன், “ம்ம் ஆமா அம்மாச்சி! ஆனால் பாருங்க மகி கூட யாரும் இல்ல நான் தானே கூட இருந்து பார்த்து கொள்ள வேணும்! அவளுக்கு ஒன்னும் தெரியாது. சோ அம்மா கிட்ட போறேன்!”

கலை அப்போ இருக்க மாட்ட சரி உங்க உமா ஆத்தாவும், நட்ராஜ் தாத்தாவும் கூப்பிட்டால் அங்கே இருப்பியா!. 

வசந்தன், ஹே என்ன டி பிள்ளைக்கு சொல்லி கொடுக்கிற? 

மிதுன் கலையின் கன்னத்தில் முத்தமிட்டு  “அம்மாச்சி எப்போ லீவ் விட்டாலும் நான் இங்கே தான் வருவேன். உங்களை பார்க்காமல் அதுவும் உங்க யம்மி டேஸ்ட் food இல்லாமல் என்னால் எப்படி அங்கே போக முடியும்! எனக்கு மகி விட உங்களை தான் ரொம்ப ரொம்ப புடிச்சு இருக்கு! நீங்க தான் என்னோட பெஸ்ட்!”

கலை அடேங்கப்பா என் பேரன் எவ்ளோ அறிவா பேசுறான். ம்ம் மாப்பிள்ளையவே மிஞ்சி விட்டான். என சொல்லி கொண்டே அவர் திரும்பினார். 

வசந்தன் நிதினுககு ஊட்டி கொண்டு இருக்க கலை, என்னங்க பண்ணிட்டு இருக்கீங்க? நேரத்துக்கு சாப்பிட்டு மாத்திரை போடணும் தெரியாதா! 

வசந்தன், நீ கம்முனு இரு டி எனக்கு தெரியும் சக்தி கண்ணா சாப்பிடுங்க! 

கலை, அந்த பையன் சக்தி இல்ல!.

வசந்தன், சாரி டா கண்ணா!..

நிதின் “இட்ஸ் ஓகே தாத்தா நீங்க சாப்பிடுங்க!”

இல்ல டா செல்லம் நீங்க சாப்பிடுங்க அப்புறம் நான் சாப்பிடுகிறேன். என முழுவதும் ஊட்டி விட்டான். 

அந்த நேரம் மகி போன் செய்தாள். கலை யார் என பார்க்க மான் விழி என்று இருந்தது. 

மானு!. 

அம்மா! என்ன பண்றான்? என்னை மறந்து விட்டானா! 

கலை சிரித்து கொண்டே வாய் பொரிஞ்சு தல்ட்ரான். ஒரு நாள் முழுக்க அவன் பேசுவதை கேட்டால் கூட சலிக்க மாட்டிக்குது! ஆசையா இருக்கு மானு! 

மகி சந்தோச புன்னகையுடன் சரி மா அப்பா எப்படி இருக்காரு? 

“ம்ம் அப்பாவுக்கு என்ன? நல்லா இருக்காரு! முன்ன மாதிரி இல்ல,  மிதுன் குட்டி மட்டும் இல்லன்னா! சொல்லவே கஷ்டமா இருக்கு டி!”

அந்த நிதின் எப்டி இருக்கான்? என மகி கேட்க போனை எடுத்து கொண்டே கலை வெளியே வந்தாள். 

“எப்போ டி அந்த பையன் அவங்க வீட்டுக்கு போவான்! நான் மிதுன கூட்டி கிட்டு திருச்செங்கோடு போலாம் அப்டின்னு இருக்கோம்! உங்க அப்பா சங்ககிரி இல்லன்னா சேலத்துக்கு டிக்கெட் போட இருக்காரு!”

என்ன மா திடீர்னு ஊருக்கு போறீங்க? 

கலை குலதெய்வ கோவிலுக்கு போலாம் அப்டின்னு இருக்கோம்! போகும் போது மிதுன கூட்டி போய் எல்லாருக்கும் என்னோட பேரனை காட்டணும்! 

மகி திடீர் யோசனையில் என்ன மா! இவன் எப்படி உனக்கு பேரன் ஆவான்! உதயனுக்கு பிறக்கும் குழந்தை தான் உனக்கு! 

கலை, “ச்ச எந்த நேரத்தில் எதை பற்றி பேசுற! என்னோட மொத்த சாபம் அவன் தான்! என்னோட மனசு துடிக்குது! அவருக்கென்ன ராசா கணக்கா அந்த ஒண்ட வந்த பிடாரி கூட இருப்பான் இங்கே நாங்க உயிரோட இருக்கோமா இல்ல செத்து விட்டானா என பார்க்கவோ கேட்கவோ நாதி இல்ல!”

என்ன மா இப்படி பேசுறீங்க! 

கலை வாணியின் நெஞ்சம் குமுறியது. எல்லாம் தலையெழுத்து அதை விடு என மூக்கை துடைத்து கொண்டே அப்புறம் சொல்லு மாப்பிள்ளை எப்டி இருக்காக நீ எப்படி இருக்க? 

ம்ம் நாங்க நல்லா இருக்கோம்!. 

கலை, அப்புறம் குழந்தை அசைவு தெரியுதா! 

அதெல்லாம் தெரியுது மா அப்புறம் அப்புறம் என தயங்கினாள். 

கலை, என்ன? 

ஒரு வேளை அன்னிக்கி குழந்தை பிறந்தால் கூட நீ ஏற்று கொள்ள மாட்டியா! 

கலை ஒரு கசந்த புன்னகையை சிந்தி கொண்டே அதை ஏற்று கொள்ளவும் வேணாம் என சொல்லவும் முதலில் நான் யாரு? சொல்லு மானு! 

அவள் அமைதியாக இருந்தாள். 

கலை வாணி, உங்க அப்பா கஷ்ட பட்டு வேலைக்கு போய் சம்பாதிச்சு நான் என்னால் முடிந்த அளவுக்கு சிக்கனமா உங்களை வளர்த்து நல்ல இடத்தில் கட்டி கொடுத்து இருக்கேன். அதே போல தான் அவனும்! என்னோட எண்ணம் போல் அந்த கடன்காரன் நல்லா இருப்பான் வாய் ஆயிரம் முறை திட்டினாலும் உள்ளுக்குள் நினைப்பு இருக்க தான் செய்யுது மானு இந்த பாழாய் போன மனசு கிடந்து துடிக்குது! 

இதை கேட்டு அவள் கொஞ்சம் சிரித்து கொண்டே அப்போ அண்ணாவை ஏற்று கொள்வாயா! 

கலை கண்ணீரை துடைத்து கொண்டு என் புருசன் யாருக்கும் எந்த துரோகமும் செய்யல! அப்படியே தெரியாமல் செய்து இருப்பதற்கு நான் நிறைய அனுபவித்து விட்டேன். ஆனால் என்னோட மனசை குறிப்பா உங்க அப்பா மனசை அந்த ஆளு காய படுத்தி கஷ்ட படுத்தி இருக்கான். 

மகி, என்ன மா! 

கலை, அதையெல்லாம் கிளற வேணாம் விடு! பெற்றவர்கள் சேர்ப்பது பிள்ளை தலை மேல் விடியும் மானு! அந்த நடிப்பு காரி தலையில் அவளோட அப்பன் செய்தது விடியும்! இது நடக்க தான் போகுது பாரு! 

மா இப்படி எல்லாம் பேசாதே மா! 

மிதுன், அம்மாச்சி என ஓடி வந்தான். அம்மாச்சி என்ன உங்க கண்ணு கலங்கி இருக்கு! யார் உங்களை திட்டினா! கொடுங்க அவங்கள நான் சும்மா விட மாட்டேன்! 

கலை, கேட்டுச்சா டி தங்க கட்டி மாதிரி எனக்கு என் பேரன் இருக்கும் போது யாரும் தேவையில்லை. 

மிதுன், அம்மாச்சி யாரு! 

மிதுன் குட்டி அம்மா! 

அம்மாவா! அவள் திட்டுவா! 

கலை, ஹே பிள்ளைய திட்டின உன்னை வெளூத்து போடுவேன் ராஸ்கொள்! திட்ட கூடாது! என போனில் கூறியவள். ம்ம் பேசு மிதுன்! என நீட்டினாள். 

அவன் தயங்கி கொண்டே போனை வாங்கி காதில் வைத்தான். 

ஹலோ! மா! 

மகிக்கு அவனுடைய குரலை கேட்டதும் அவனை அள்ளி அணைக்க கைகள் துடித்தது.  ஹலோ குறும்பு பண்றயா மிதுன்! 

மகி நான் ரொம்ப குட் நீ யாரு கிட்ட வேணாலும் கேளு! நான் ஹீரோ மம்மி! 

மகி சிரித்து கொண்டே ம்ம் சரி சாப்பிட்டயா! 

ம்ம் இப்போ தான் அம்மாச்சி ஊட்டி விட்டாங்க! 

மகி, தாத்தா என்ன பண்றாங்க! 

அண்ணா கூட இருக்காங்க! 

சக்தி!

மகி இங்கே நிதின் அண்ணா இருக்கான். 

சரி விடு!. 

மிதுன் கொஞ்சம் தள்ளி வந்து மகி எப்போ வர உன்னை பார்க்க வேணும்! ஒன் வீக் ஆச்சு! இல்ல 10 டே முடிந்து விட்டது. 

மகி, என்னோட நினைப்பு வந்ததா! 

மிதுன், மா வா! என்னை கூட்டி போ! எனக்கு தூங்கும் போது உன்னை கட்டி தூங்க தோணுது! ஆனால் நீ இல்ல! 

மகி மகனின் ஏக்கத்தை புரிந்து கொண்டாள். மிதுன் செல்லம்! இன்னும் ஒன் வீக் அப்புறம் நாம்ப ஆத்தா வீட்டுக்கு போலாம் கோவில் போவோம்! ஜாலியா இருக்கும்! .

மிதுன் மெதுவான குரலில் அப்போ என்னை வந்து கூட்டி போ! 

மகி, அங்கேயே இரு செல்லம்! அம்மா வரேன்! தாத்தா பாவம்! அம்மாச்சி பாவம்! இப்போ அவங்கள பார்த்து கொள்ள யாரும் இல்ல! 

மிதுன், அவங்க big ஆ இருக்காங்க! இப்போ என்ன? 

மகி, டேய் மாமா அவங்க கூட இல்லையே! 

மிதுன், வருண் மாமா எதுக்கு இங்கே இருக்கணும்! 

மகி,டேய் வருண் மாமா இல்ல உதயன் மாமா! தெரியாதா! கல்யாணம் ஆச்சே! 

மிதுன், ஹான் யெஸ் யெஸ் அந்த பியூட்டி ஆன்டி ஹீரோயின்! தாரா! 

மகி, அட பாவி! 

மிதுன், சரி அவங்க ஹீரோயின் எப்போ வருவாங்க! சொல்லு அது வரை நாம் இருக்கேன்! 

மகி, ஓவரா கொழுப்பு ஏறி போச்சு நாயே! 

மிதுன், டெய்லி மட்டன் தெரியுமா அம்மாச்சி சூப்பர் சமையல்! அப்புறம் என்னால் 6 பேக் டிரை பண்ண முடியாது! நீ சீக்கிரமே வந்து கூட்டி போ! 

மகி அவன் எண்ணத்தை புரிந்து கொண்டே நான் வரேன்! 

மிதுன் சரி உன் டாடி கிட்ட பேசு! என வசந்தன் கிட்ட கொடுத்தான். 

வசந்தன் வாங்கி பேசி விட்டு வைத்தார். நிதின்!..

 நிதின், தாத்தா! 

உங்க அம்மா கிட்ட பேச மாட்டீங்களா! நினைப்பு வரலயா! 

நிதின், “அம்மா பிசி! ஆபீஸ் ல இருப்பாங்க. கூடவே தம்பி இருக்கானா அவனை பார்த்து கொள்ள வேணும்!”

வசந்தன்,  அப்படி சொல்லக்கூடாதுப்பா! அம்மாவுக்கு உன்னோட நினைப்பும் வரும், நீ தான் அம்மாவுக்கு போன் பண்ணனும், அம்மா வேலையில மறந்து கூட போயிருப்பாங்க, உன்னோட நினைப்பு வரும்ல்ல, அதனால உங்க அம்மாவுக்கு போன் பண்ணி ரெண்டு வார்த்தை, அம்மா என்ன பண்றீங்க? சாப்டீங்களா அப்படின்னு பேசுப்பா!”

தேஜுவுக்கு போன் செய்து பேச  அவ்வளவாக நிதினுக்கு விருப்பம் இல்லை ஆனால் வசந்தன் சொன்ன வார்த்தைக்காக உடனே போன் செய்தான். தாத்தா இதோ போன் பண்ணி பேசுகிறேன் என அவளுக்கு அழைத்தான். 

தேஜு கடுமையான முகத்துடன் அமர்ந்து இருந்தாள். இப்போ உதயன் வருகிறான். அவனை எதுவும் செய்ய வேண்டும் கஷ்ட படுத்த வேண்டும்! என்ற எண்ணம் மட்டுமே! 

 ___ 

போதும் கொஞ்சம் நிருத்துரயா! என கோபத்துடன்  கர்ஜனை செய்தான். 

என்ன என்பதைப் போல் திரும்பி பார்த்தாள்.

இப்போ எதுக்கு அவங்கள பத்தி இப்படி பேசிட்டு இருக்க? 

“என்ன சொல்றீங்க?  இப்போ நான் தப்பா எதுவும் சொல்லவே இல்லையே!  அவங்களோட கேரக்டர் என்னன்னு உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கேன்! இப்போ நம்ம அவங்கள தானே பாக்க போறோம்!”

உதயன் எழன புன்னகை சிந்தி  கொண்டே “இவ்வளவு நாள் நீ அவங்க கூட தானே பழகிட்டு இருந்த,  அப்போ அவங்க பண்ணது தப்புன்னு உனக்கு தெரியலையா?  இப்போ நான் அதை சுட்டி காட்டியதுக்கப்புறம் நீ  அவங்கள தவறா பேசுற?  எப்பொழுதும் நாம பழகியவர்கள விட்டுக் கொடுக்கவே கூடாது!  ஒரே மனத்தோட இருக்கணும் அவங்க நல்லவங்களா இருந்தாலும் சரி, கெட்டவங்களா இருந்தாலும் சரி, நீ  சொந்த, உறவு, நட்பு அவங்களோட பழகள அப்டின்னு ஆகி விடுமா! இது என்னைக்குமே மாறாது சோ! அதனால ஒரு மனசோட இரு தாரா மாத்தி மாத்தி பேசக்கூடாது!” என்று கூறினான். 

தாரா அவனை வினோதமாக பார்த்தாள்.“ என்ன சொல்கிறார், இவர்?  ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு மாதிரியாக பேசுகிறாரே!  இவரை புரிந்து கொள்ளவே முடியலையே!  இந்த குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் அப்படித்தான் இருப்பாங்களா!  பசங்க ஒரு விதம்னா, பொண்ணுங்க வேற விதமா இருக்காங்க! அந்த மைவிழி எப்ப பார்த்தாலும் சண்டை போடறா ஆனா எனக்கு ஃபேவரா பேசுறா அப்படின்னு சொல்றாரு, மகி என்கூட நல்லாவே பேசுறா ஆனா சரியான நேரத்துல ஒரு பாயிண்ட்ட நச்சுன்னு போட்டு தள்ளுறா, இவரு எல்லா நேரமும் ஒட்டிட்டு இருக்காரு, தப்பு பண்ணாலும் திட்டுகிறார், நான் பீல் பண்ணாலும் என்ன கொஞ்ச கொஞ்சி பேசுறார். நான் மத்தவங்கள பத்தி தவறா பேசினா கூட அதுலயும் சரி எது தப்பு  எது என்று சொல்லிக் கொடுக்கிறார்!” என்று அவள் மண்டையை குடைந்து கொண்டாள். 

அதன் பின் தாரா மற்றும் உதயன் இருவரும் spr வீட்டை நோக்கி கிளம்பினர். 

Spr ஆபிசுக்கு கிளம்பி கீழே இறங்கி வந்தான்.அவள் எதோ தீவிர சிந்தனையில் அமர்ந்து இருக்க தேஜி நான் கிளம்புறேன்! 

 தேஜு அப்பொழுது தான் தன்னிலைக்கு இரு சூர்யா! ஒரு நிமிஷம்!..

Sp என்ன என்பதை போல் திரும்பி பார்த்தான்.

இப்போ  கெஸ்ட் வராங்க அதனால வெயிட் பண்ணு! 

யார் வரா ? என்று புருவத்தை நெருக்கிக் கொண்டே கேட்டான்.

தேஜு, வராங்கன்னு சொல்றேன்ல! எனக்காக வெயிட் பண்ண மாட்டியா!  என்று கொஞ்சலாக கேட்டாள்.

Sp  நீ சொன்னா நான் எவ்வளவு நாள் வேணாலும் காத்திருப்பேன்!  என்று ஒரு நங்கூரம் மீண்டும் போட்டு வைத்தான்.

இதை கேட்டதும் அவள்  முகம்  எல்லாம் சிலிர்த்தது.sp அவளுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தான்.

அவனுக்கு  தாரா மற்றும் உதயன்  இருவரும் வருகிறார்கள் என்று தெரியும்.  ஆனால் அதை அவளிடம் காட்டிக் கொள்ள முடியுமா? முடியாதே! அது தானே sp பிளான். அவன் அமர்ந்து கொண்டான் .

தேஜு மீண்டும் அதை யோசனையுடன் அமர்ந்திருக்க சட்டென அவளுக்கு போன் வந்தது.

அவள் எண்ணை பார்க்காமல் காதில் வைத்து  ஹலோ சொல்லுங்க!

நான் நித்தின் பேசுறேன் என்று மிகவும் மெதுவான மற்றும் கொஞ்சம் கனிவான குரலில் அந்த சத்தம் கேட்டது.

அவள் கைகள் நடுங்கியது. ஃபோனை பார்த்தாள். என்ன ஆச்சு? உனக்கு எதுவும் பிரச்சனையே! 

நித்தின், எனக்கென்ன பிரச்சனை? நான் நல்லா இருக்கேன் ? என்று கூறினான்.

உடனே எஸ் பி ஆர் பயந்து ஒரு நிமிடம் பதட்டத்துடன் என்னாச்சு தேஜு போன்ல யாரு? 

தேஜு நான் பார்த்துக் கொள்கிறேன்  கைகளை காட்டி விட்டு ம்ம் ஹலோ சொல்லு நித்தின்!

 நித்தின், நீங்க எப்படி இருக்கீங்க? என்று கேட்டான் .

தேஜு புரியாமல் விழித்தாள்.

மறுபடியும் நித்தின் வசந்தனை பார்த்துக் கொண்டே “நீங்க எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?”

தேஜு முகத்தில் புன்னகை கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டே நான்! நான் நல்லா இருக்கேன்! என்று கூறினாள்.

அப்படியா என்றவன் மீண்டும் அவளிடம் ஒரு சில நிமிடம் கழித்து  நீங்க சாப்டீங்களா? என்று கேட்டான்.

  தேஜு சிரித்துக்கொண்டே இல்ல இனிமே தான் நித்தின் சாப்பிடணும்!.. அப்புறம்  நீ சாப்டியா! என்று புன்னகையுடன் கேட்டாள்.

Spr க்கு ஒன்றுமே புரியவில்லை.என்ன?   என்னடா நடக்குது? இங்க? என்னோட நித்தின் எப்பவும் எனக்கு தான் கால் பண்ணுவான். இவளுக்கு பண்ணவே மாட்டான்!  அதை விட முதன்முதலாக என்கிட்ட பேசாம இவளுக்கு போன் பண்ணி இருக்கான்! என்று அதிர்ச்சியுடன் இருந்தான் .

உடனே நித்தின் நான் பிரேக்ஃபாஸ்ட் ஃபினிஷ் பண்ணிட்டேன். என்று கூறினான்.

தேஜு அப்படியா சரி ஓகே என்று அவளுக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை. அங்குமிங்கும் நடந்தாள்.

சரியாக உதயன் மற்றும் தாரா இருவரும் வாசல் படியில் காலடி எடுத்து வைக்கவும். இங்கே நித்தின் போனில் அந்த குரல் கேட்கவும் சரியாக இருந்தது.

என்ன நிதின் குட்டி மொட்டையா பேசுறீங்க ? அம்மாவுக்கு மரியாதை கொடுக்கணும்!  என்று குரல் கேட்டது.

நிதின், சரிங்க தாத்தா என்று கூறியவன். கஷ்டப்பட்டு அவளை அம்மா நீங்க சாப்டீங்களா? நீங்க ஆபீஸ் கிளம்பிட்டீங்களா? தம்பி என்ன பண்றான்? என்று கேட்டான் .

தேஜு ஒரு நிமிடம் ஆடிப் போனாள். யாரது? அந்த குரல் அது வசந்தனுடையது? ச்ச!  எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும் ? என்று அவள் ஒரு நிமிடம் உறைந்து நின்றாள்.

இப்பொழுது அவள் வாய் திக்கிக்கொண்டது. அடுத்து என்ன பேசுவது என தெரியவில்லை. நித்தின், நீங்க… என்கிட்ட… பேச… எதுவுமே இல்லையா… அம்மா! என்று விட்டு விட்டு கூறினான்.

தேஜு கொஞ்சம் குரல்கள் நடுங்க கண்ணா நான் அம்மா இப்போ வேலையா இருக்கேன் !நான் அப்புறமா கால் பண்ணவா? என்று கேட்டாள்.

நித்தின் மனதுக்கு இப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது. “சரிங்கம்மா நீங்க ஒர்க் பாருங்க? ஹாவ் எ நைஸ் டே மம்மி! மிஸ் யூ மம்மி!” என்று கூறினான்.

மிஸ்  யூ லாட் என சொல்லி போனை கட் செய்தாள். 

Spr எழுந்து நின்று தேஜு அவங்க வந்துட்டாங்க பாரு! என்று அவளை அழைத்தான். 

தேஜு திரும்ப அங்கே தாரா மற்றும் உதயன் இருவரும் நின்று கொண்டிருந்தனர்.

அன்னயா நமஸ்காரம் பாகுன்னாரா?  என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள்.

உதயன் அதே இடத்தில் நின்றான்.

Spr  பார்வை அவன் மீதும் தேஜுவின் மீதும் இருந்தது.

தேஜு அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். தாரா,  என்னங்க உள்ளே வாங்க ?

உதயன், உங்க அண்ணாவும் அண்ணியும் கூப்பிடாம நான் எப்படி உள்ளே வர முடியும்?  என்று கேட்டான்.

தேஜு தன்னை சுதாரித்து கொண்டு  உள்ளே வாங்க உதயன்!  என்று அழைத்தாள்.

அவன் எதையும்  காட்டிக் கொள்ளாமல் உள்ளே வந்தான்.

அங்கு spr நின்று கொண்டே உதயனை பார்த்து  எப்படி இருக்கீங்க என்று வேண்டுமென்றே கேட்டான்.

உதயன் நான் நல்லா இருக்கேன் மாமா! என்று கூறினான்.

இதை கேட்டதும் தாராவிர்க்கு  பக்கென  இருந்தது. அதை விட தேஜுவிற்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.

தாரா மற்றும் தேஜூ இருவரும் உதயனை ஷாக் ஆகி பார்க்க.. அதற்கு மேல் spr பார்த்துக் கொண்டிருந்தான். 

உதயன், “என்ன மாமா அதுக்குள்ள மறந்து போச்சா? நேத்து நீங்க தான சொன்னீங்க ? நீங்க என்னை மச்சான்னு கூப்பிட்டால் , நான் உங்களை மாமா என்று தானே கூப்பிடனும்!” என்று sprஐ நேக்காக வாரி விட்டான். 

தேஜுவின் பார்வை spr பக்கம் திரும்ப உதயன் அத்தோடு விடவில்லை,“ என்ன அக்கா? நான் சொல்றது சரியா?”என்று அவளைப் பார்த்தான். 

தேஜு கோபமான முகத்துடன் “யாருக்கு யாருடா அக்கா? அரை மணி நேரம் பின்னாடி பொறந்தா, நான் உனக்கு அக்காவா என்று மனதில் நினைத்தாள். உதட்டில் கூறவில்லை .

ஆனால் உதயன் அதைக் கூட எதிர்பார்த்தான். அவள் என்ன சொல்வாள்? என்று முகத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். 

உதயன்  ஐ அம் ஜஸ்ட் கிட்டிங்! ம்ம் இப்போ சொல்லுங்க எதுக்கு எங்கள வர சொன்னிங்க?  என்று தேஜூவை பார்த்துக் கொண்டே கேட்டான்.

அவன் பார்வையில் தேஜு கொஞ்சம் தடுமாறினாள். “எதுக்கு இவன் நம்மள இப்படி பாசமா பார்க்கிறான்?  ரொம்ப கேரிங்கா பார்க்கிறானே? ஒரு வேலை இவனுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்குமா?” என்று இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. 

 இல்ல அதுக்கு வாய்ப்பே இல்லை! அந்த  சூர்யா சொல்லி இருக்க மாட்டான்!  அவன் எப்படிப்பட்ட கேடி என்று எனக்கு தெரியும்!  அப்புறம் எதுக்கு இவன் நம்மள இப்படி பார்க்கிறான்?அவளுடைய முகத்திலேயே தொட்டு தொட்டு பார்த்தாள்.

உதயன் அவளிடம்…? 

தொடரும்…

Episode 311

இல்ல அதுக்கு வாய்ப்பே இல்லை! அந்த  சூர்யா சொல்லி இருக்க மாட்டான்!  அவன் எப்படிப்பட்ட கேடி என்று எனக்கு தெரியும்!  அப்புறம் எதுக்கு இவன் நம்மள இப்படி பார்க்கிறான்?அவளுடைய முகத்திலேயே தொட்டு தொட்டு பார்த்தாள்.

எதுக்கு என்னை வர சொன்னீங்க? என உதயன் கேட்டான். 

தேஜு, “அது ஒன்னும் இல்ல தாரா எங்களோட ஹாஸ்பிடல் விளம்பரத்தில் நடிக்க வேணும்!”

உதயன், “அதுக்கு என்ன அவள் கிட்டயே நேரடியாக கேட்டு இருக்கலாம்! தாரா உங்க அண்ணாவும் அண்ணியும் கேட்கிறார்கள் சோ சிறப்பா செய்யணும்!”

தாரா சிரித்து கொண்டே ம்ம் ஒன்னும் பிரச்னை இல்ல வதினா உங்களுக்கு எப்படி விருப்பமோ அதே போல செய்து தருகிறேன்! 

தேஜு, அப்புறம் அடுத்த படம் எப்போ பண்ண போறீங்க! 

“இப்போதைக்கு அந்த ஐடியா இல்ல உங்க விளம்பரம் தான் லாஸ்ட்!”

தேஜு உதயனை பார்த்து “அப்புறம் நீங்க அப்படியே உங்க மாமனார் வீட்டிலேயே செட்டில் போல!”

தாரா ஒரு வித தயக்கத்துடன் அவளை பார்க்க உடனே spr அவனை கேவலமாக பார்த்தான். 

உதயன் அவளின் பேச்சுக்கு எல்லாம் கலங்க வில்லை. சாதாரணமாக இருந்தான். 

தேஜு மீண்டும் என்ன உதயன் வீட்டோட மாப்பிள்ளையா! 

தாரா, வதின்னா! என கொஞ்சம் அதட்டலுடன் அழைத்தாள். 

உதயன் அவளை பார்த்து “தாரா மரியாதை இல்லாம பேச கூடாது. அவங்க நம்மள விட பெரியவங்க! என அதட்டியவன் ம்ம் நீங்க சொல்றது சரி தான் நான் வீட்டோட மாப்பிள்ளை சரி தான்! ம்ம் இங்கேயே செட்டில் ஆகி விட்டேன். 

தேஜு, “அப்போ வழக்கம் போல தான் போலயே! இந்த தமிழ் நாட்டில் கல்யாணம் முடிச்சு அப்பா அம்மாவை தண்ணி தெளிப்பது போல் விட்டு நல்ல ராஜா கணக்கா இப்போ இங்கேயே செட்டில் ஆகி விட்டாய்!”.

உதயன் அவள் பேசுவதை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை. ம்ம் அப்படி கூட வைத்து கொள்ளுங்கள்! என புன்னகை செய்தான். 

தேஜு அவனை பார்த்து “நான் இவ்வளவு பேசுவது உனக்கு கோபம் வரவே இல்லையா! உங்க அப்பா அம்மாவை யார் பார்த்து கொள்வார்கள் அக்கறை இல்லையா!”

உதயன் சிரித்து கொண்டே  பாருங்க “மாமா! எனக்கு உங்க மனைவி இப்போ இதோ என்னை எவ்ளோ திட்டினாலும் கோபமே வர மாட்டிங்குது! அவங்க என்னை கத்தியே எடுத்து குத்தினாலும் நான் வாங்கி கொள்வேன்!”

Spr எதுவும் பேசாமல் அவனை பார்த்தான். 

உதயன், “நான் சும்மா சொன்னேன்! என் அம்மா அப்பா ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க! என் அப்பா ரிடையர் ஆகி விட்டார். இப்போ என் தங்கச்சி பசங்க கூட இருக்காங்க! அவங்க பேர பசங்கலொட  இருக்காங்க!”

தேஜு, அப்டியா! 

உதயன், என்ன மாமா சாப்பிட சொல்ல மாட்டீர்களா! 

Spr ஒரு நிமிடம் சாக் ஆகினான். அதன் பின் எதையும் காட்டி கொள்ளாமல் பாப்பு வா சாப்பிடலாம்! 

அனைவரும் சாப்பிட சென்றனர். தேஜு அவனை எப்படியும் சண்டைக்கு இழுத்து எதுவும் பேச வைக்க வேண்டும் சண்டையிட வைக்க வேண்டும் என நினைத்தாள்.

அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர். கொஞ்ச நேரம் அமைதியாக சென்றது. தேஜு மீண்டும் ஆரம்பித்தாள். 

ம்ம் தாரா! 

சொல்லுங்க வதினா! 

தேஜு, எபடியோ இப்போ ஹெப்பியா! நீ நினைச்ச மாதிரி உன்னோட காதல் கை கூடி விட்டது. 

ம்ம் என புன்னகைத்தாள். 

உதயன்! 

அவன் எதிர் பார்த்தது போலவே “சொல்லுங்க” 

ஒரு எமர்ஜென்சி அப்டின்னா என்ன பண்ணுவ! 

உதயன், இப்போ உங்களுக்கு என்ன வேணும்! 

அவள் சாக் ஆகி பார்த்தாள். 

உதயன் கண்ணை அழகாக சிமிட்டி “சும்மா! என்று கூறியவன். நான் இல்லாத நேரம் எங்க அம்மா அப்பாவை என்னோட சூர்ய தேவ் மாமா, கார்த்திக் மாமா அப்புறம் என்னோட தங்கைகள் இருக்காங்க எங்க அப்பாவுக்கு என்னை விட அவங்க தான் ரொம்ப ஸ்பெசல் சோ ஊரே திரும்பி பார்க்கும் அளவுக்கு எங்க மாமா பார்த்து கொள்வார்!”

Spr இதையெல்லாம் கேட்டு கோபத்தில் இயலாமையால் கையை மடக்கினான். 

உதயன், “என் மாமனாரை நான் பார்த்து கொண்டால் என் மாமனுங்க ரெண்டு பேரும் பார்த்து கொள்வார்கள். சோ ஒன்னும் பிரச்னை இல்ல! எங்க வீட்டு மாப்பிள்ளை ரெண்டு பேரும் தங்கம்!இதை சொல்ல எனக்கு வெட்கம் இல்லை!”

தேஜு அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டாள். தாராவுக்கு அங்கு இருக்க துளி கூட விருப்பம் இல்லை. 

நால்வரும் உணவை சாப்பிட்டு முடித்தனர்.

அவர்கள் கிளம்பும் நேரம் வர உதயன் அவளிடம் தேஜு!. 

அவள் திரும்பி பார்த்தாள். 

எங்கே உங்க குட்டி sp!. 

யாரு? 

உதயன் sprஐ பார்த்தான். 

Sp, நிவாஸ் அவனை கேட்கிறீர்களா மச்சான்! 

ம்ம் ஆமா மாமா! 

தேஜு ஒரு நிமிடம் திக்கி கொண்டே அவ அவன் அது வந்து அவன் எங்க டாடி கூட இருக்கான்! என தலையை சரி செய்து கொண்டே கூறினாள். 

இட்ஸ் ஓகே! என அவர்கள் நகர்ந்தனர். 

Sp, மச்சான் இருங்க! என சொல்லி  வேலை ஆளிடம் அழைத்து வர சொன்னான். 

நிவாஸ் அனைத்து விரலையும் வாயில் வைத்து கொண்டு எட்ச்ல் ஒழுக ஒரு குட்டி முருகன் போல மிகவும் அழகாக வந்தான். 

அங்கு இருக்கும் அனைவரையும் பார்த்தான். நாதன் அவனை பார்த்ததும் முதல் முறை அவனை பிரசவத்தில் எடுத்த காட்சி நினைவு வந்தது. 

உதயன், டாக்டர் நீங்களா! 

தேஜு, spr, நாதன் என அனைவரும் சாக் ஆகி பார்த்தனர். 

நாதன் ஒரு நிமிடம் தடுமாறினார். தேஜு அதை சமாளிக்க நிவா! டாடி! பாருங்க!. என அவனை வாங்குவது போல சத்தமாக பேசினாள். 

உதயன், டாக்டர்!..

தேஜு, என்ன உதயன் இவரை உனக்கு தெரியுமா! 

உதயன், ம்ம் தெரியும்! மகிக்கு இன்ஃபெக்ஷன் இறுக்கி அதை ட்ரீட் பண்ணது இவரு தான். என சொல்லி தேஜு கிட்ட இருந்து நிவாசை வாங்கி கொண்டான். 

அவனுடைய பதிலை கேட்டதும் தான் அனைவருக்கும் மூச்சே வந்தது. 

தேஜு உடனே டாடி! நீங்க உள்ளே போங்க! என சைகை காட்டினாள். 

உதயன், வாங்க யாரு டா இது! ம்ம் எதோ உங்க மம்மி கிட்ட இருக்க அதே கள்ள முழி இருக்கே! என்ன பண்றீங்க! என அவனுடைய கையை பிடித்து பார்த்தான். 

நிவாஸ் கண்ணகுளி தெரிய சிரித்தான். கண்ணை அழகாக சிமிட்டி உற்று பார்த்தான். 

தேஜு உதயனை முறைத்து பார்த்தாள். உதயன், “நிவாஸ் குட்டி ம்ம் சில பேரு தெரியாமல் தப்பு பண்ணி இருக்கலாம்! அது நிஜமாவே சம்மந்தப்பட்டவங்களுக்கு இன்னும் தெரியாமல் கூட இருக்கலாம்! அதுக்காக எதுவும் தெரியாம இருப்பவர்களை கஷ்ட படுத்த கூடாது. அச்சோ ஹீரோக்கு பல்லு வந்திடுச்சு போல மாமா கையை கடிக்குறீங்க!”

Sp அவன் பேசுவதை கேட்டு என்ன மச்சான்! என் பையனை எனக்கு எதிராக திருப்புறீங்க போல! 

உதயன், நான் peace எதிர் பார்க்கிறேன்! ஆனால் கிடைக்குமா! இதுக்கு மேல தாங்க என் மனசு ரொம்ப பலவீனமா இருக்கு! என தேஜூவை பார்த்தான். 

அவள் அவனை கண்டு கொள்ளாமல் இருந்தாள். 

தாரா ஆர்வத்துடன் என்னங்க அவனை என் கிட்ட கொடுங்க! நல்லா அழகா கொழு கொழு! என சொல்ல வர 

உதயன், “தாரா என காதை திருகி கொண்டே அவன் மேல் கண்ணு வைக்காத! இப்படி எல்லாம் சொல்ல கூடாது உன்னோட கொஞ்சல் எல்லாம் ஓகே தான்! ஆனால் இப்படி ஓபனாக சொல்ல கூடாது!”

Spr புருவம் உயர்த்தி அவனை பார்த்தான். தேஜு அவளையும் மீறி தன்னுடன் பிறந்தவனை ஒரு முறை பார்த்தாள். 

சாரி! சாரி! வாடா கண்ணா! 

நிவாஸ் அவளை உற்று பார்த்து விட்டு உதயன் கழுத்தில் உள்ள செயினை பிடித்து கொண்டே மார்பில் சாய்ந்து கொண்டான். 

தாரா, அட பாவி! ரே நான் தான் டா உனக்கு ரொம்ப ரொம்ப க்ளோஸ் ரிலேசன் ஆனால் நீ என் கிட்ட வராமல் என்ன டா இப்படி பண்ற? 

நிவாஸ் உதட்டை அழகாக பிதிக்கி அழும் நிலைக்கு செல்ல ஹே குழந்தையை பயமுறுத்த வேணாம்! அவன் ஸ்பெசல் என் கிட்ட  மட்டும் தான் இருப்பான். என்ன நிவாஸ் குட்டி மாமாவுக்கு ஒரு முத்தா கொடுங்க! 

நிவாஸ் அவனுடைய  கன்னத்தின் மீது ஜொள்ளு ஊற்றி ஒற்றி எடுத்தான். 

தாரா, அச்சோ கியூட்டா இருக்கான்! என போனில் என்னங்க அப்படியே இருங்க! ஒரு பிக்! 

Spr நிவாசை ஆச்சரியமாக பார்த்தான். நிவாஸ் குட்டி spr தூக்கும் போது கூட இப்படி ஒரு நெருக்கம்! முத்தம் சிரிப்பு இருந்தது இல்லை! அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருப்பான்! ஆனால் அவ்வளவாக சிரிக்க மாட்டான். 

தேஜு, தாரா! என்ன பண்ற? 

வதினா ஒக்க போட்டோ!.. எடுத்து கொள்கிறோம்!

தேஜூ,  கூடாது  இன்னும் என் பையனை போட்டோ எடுத்தது இல்லை. 

உதயன், “ப்பா இவ்வளவு டென்ஷன் வேணாம்! எடுக்கல! குட்டி பையா உங்க அம்மாவுக்கு கோபம் கிலோ கணக்கில் வருது!”என சொல்லி அவள் பக்கம் நிவாசை நீட்டினான். 

நிவாஸ் தேஜுவை பார்த்தானே தவிர போக வில்லை. 

தாரா, அட குட்டி பையா உன் மம்மி வேனாவா!. 

நிவாஸ், மா.. மா.. மாமா! 

உதயன், அச்சோ அம்மா வெனாவா! மாமா கூட வரீங்களா! 

தேஜு கொஞ்சம் கோபத்தில் நிவாஸ் அம்மா கிட்ட வா டா! என கையை நீட்டினாள். 

நிவாஸ் அவளை பார்த்து சிரித்து விட்டு அப்படியே உதயனை பார்த்து இன்னும் சிரித்தான். 

தேஜு,என்ன இவன் என் கிட்ட வர மாட்டிக்கிறான்! என பார்த்தாள். 

உதயன், சரி அப்போ போலாமா! வாங்க அங்கே மிதுன் அண்ணா, நிதின் அண்ணா எல்லாம் அம்மாச்சி தாத்தா வீட்டில் இருக்காங்க! 

தேஜு வெடுக்கென அவனிடம் இருந்து குழந்தையை பிடுங்கி கொண்டாள். நிவாஸ் விரென்று அழ ஆரம்பித்தான். 

உதயன், என்ன தேஜு இப்படி தான் நடந்து கொள்வீர்களா! குழந்தை பாருங்க எப்டி அழுகிறான்! மாமா நீங்க கேட்க மாட்டீர்களா! 

Sp, என்ன தேஜு இது! 

தேஜூ, என் குழந்தை எதுக்கு உங்க வீட்டுக்கு வரனும்! Sp அவன் என்ன சொல்கிறான் என தெரிந்து கொண்டே இப்படி பேசுவீர்களா! 

உதயன், இப்போ உன்னோட பையன் நிதின் எங்கே இருக்கான் சொல்லு! 

தேஜு அமைதியாக நின்றாள் குழந்தை கத்த ஆரம்பித்தது. 

நாதன் பதட்டத்துடன் வெளியே வந்து அவளிடம் இருந்து வாங்கி கொண்டார். 

உதயன், கொஞ்சம் பொறுமையா இரு இவ்வளவு கோபம் ஆகாது! இதுவே மகி, மை விழியா இருந்தால் அதாவது என் தங்கையாக இருந்தால் கன்னம் பழுத்து இருக்கும்! டாக்டர் என்ன சொல்லி கொடுத்து வளர்த்து இருக்கீங்க! ஒர்ஸ்ட் என சொல்லி விட்டு கிளம்பினான். 

Spr க்கு உள்ளுக்குள் எதோ ஒரு மூலையில் நிம்மதி நல்லா கேட்டான். இவள் கூட வாயை மூடி கொண்டு இருக்காளே! இந்த மாதிரி ஒரு ஆள் தேவை அப்போ தான் அடங்கி இருப்பா! சீக்கிரம் அங்கே போனால் அவர்களுடன் சேர்ந்து கொண்டால் இவளும் அடங்கி விடுவாள். நானும் பொம்மையை அவள் கிட்ட எந்த பிரச்னையும் இல்லாமல் பேசுவேன்! அவளுக்கு தேவையான அனைத்தும் செய்வேன்! என நினைத்து கொண்டான். 

நாதன், என்ன தேஜூ மா எதுக்கு இப்படி நடந்து கொண்டாய்! பாரு நிவாஸ் குட்டி கன்னம் சிவந்து கிடக்கு!  

Spr, I’m totally upset தேஜு!.  என சொல்லி விட்டு அவன் ஆபீஸ் கிளம்பினான். 

தேஜு, ச்ச! என்னோட அவசர தனத்தில் இப்படி நடந்து விட்டேனே! என நொந்து போய் தலையை பிடித்து கொண்டே அமர்ந்தாள். 

உதயன் காருக்கு வந்து சேர்ந்தான். தாரா ஒரு நிமிடம் அதிர்ச்சியில் இருந்தாள்.“ உன்னை வீட்டில் விட்டு விட்டு நான் ஆபீஸ் கிளம்புகிறேன்!”என சொல்லி காரில் ஏறி கொண்டான். 

உதயன் மனதில் “சூர்யாவையும் கார்த்திக்கையும் மாமா அப்டின்னு கூப்பிட்ட வாயில் அந்த ஆள… ச்ச  அந்த ஆளை போய் மாமான்னு கூப்பிடுற மாதிரி ஆகி போச்சே! இது மட்டும் அவங்க ரெண்டு பேருக்கும் தெரிந்தது அவ்ளோ தான்! அதுவும் சூர்யா மாமா அன்னிக்கே சண்டை  போடுவாங்க! சரி அதை அப்புறம் பார்ப்போம்!”

தாரா அமைதியாக அமர்ந்து இருக்க உதயன், தாரா! உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்! உன் கவனம் எங்கே டி இருக்கு! 

அவள் தயங்கி கொண்டே உங்களை பார்த்தால் பயமா இருக்கு! 

உதயன் தலையை கோதி விட்டபடி மென்னகை சிந்தி கொண்டே ஹே எதுக்கு டி பயம்! 

தாரா, நிஜமாவே சிரிக்கிறீங்க தானே இல்ல கனவா! 

உதயன், என்ன டி பிரச்னை? சொல்லு என தோல் மேல் கையை போட வந்தவன் திடீரென கார் ஓட்டுநர் இருப்பதை பார்த்து உடனே கையை எடுத்து கொண்டான். 

தாரா, ஹலோ பிச்சு இப்போ எதுக்கு கைய எடுக்கிரீங்க! என அதை கோர்த்து கொண்டாள். 

உதயன், விட்ரி!. 

மாட்டேன்! உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்! 

என்ன? 

அந்த தேஜு அவ்ளோ பேசுறாங்க நீங்க ரொம்ப பொறுமையா பதில் சொல்றீங்க! 

உதயன், அது அப்படி தான்! நீ கண்டுக்காத! 

தாரா, எனக்கு பயங்கர கோபம் தெரியுமா! 

சரி விடு டி! 

தாரா, அதுவும் சரி தான் அப்படியே எனக்கு ஒரு கிஸ் கொடுங்க!  

உதயன் , தாரா! தள்ளு டி! என நகர்ந்தான். 

நீங்க தர வேணாம் நான் தரேன் என கன்னத்தில் ஒற்றி எடுத்தாள்.

இப்படியே மூன்று நாட்கள் ஓடியது. 

———

மகி வழக்கம் போல ஆபீஸ் கிளம்பினாள். இருவரும் அன்று முட்டி மோதி சண்டை போட்டதன் பின் இந்த மூன்று நாட்களும் அப்படியே சென்றது. 

சூர்யாவுக்கு இருக்கும் வேலை பழுவில் அவன் ரகு ஆபிஸ் பக்கம் வரவே இல்லை. அவ்வளவு வேலை மூன்று நாளில் ஒரு நாள் தான் வீட்டுக்கு வந்தான். 

அவளுக்கு மிகவும் கால் வலிக்க ஏனோ கீழே அமர வேண்டும் என தோன்றியது. உடனே கார்பெட் தரையில் அமர்ந்து கொண்டாள். 

மகி மனதில் நம்ம அவசர பட்டு விட்டோமோ! ஆபீஸ் வந்ததுக்கு பதிலாக வீட்டில் பேசாமல் இருந்து உண்மையை வர வளைத்து இருக்கலாம் என நினைத்தவள் அப்படியே அமர்ந்து கொண்டாள். 

மெதுவாக எழுந்து லேப் டாப் எடுத்து வைத்தவள் ஸ்கிரீனில் டெஸ்க் டாப்பில் பெயின்டிங் செலக்ட் செய்து அவனது படத்தை வரைய ஆரம்பித்தாள். 

இதயம் கனத்து போனது. மகி கண்களில் நீர் கோர்க்க அப்படியே நின்றாள். என் கிட்ட உங்களுக்கு மறைக்க கூட விஷயம் இருக்கா! நான் உங்களுக்கு முக்கியம் இல்லையா! என அவன் கோபமாக இருக்கும் படத்தை சர் சரென வரைய ஆரம்பித்தாள். 

அவள் கண்களை துடைத்து கொண்டே அந்த படத்தை பார்த்தவள். அப்படியே கீழே அந்த ஒற்றை மான் கொம்பை வரைந்தாள். 

அதன் பின் அதற்கு மேல் தொடர முடிய வில்லை. அப்படியே மூடி வைத்தாள். சூர்யா இது வரை செய்த அனைத்தும் சரி பார்த்தவன் சோர்வுடன் சேரில் சாய்ந்தவன் நினைவில் இப்பொழுது தான் சண்டைக்கோழி நினைவில் வந்தாள். 

சூர்யா கண்ணை தேய்த்து கொண்டே மணியை பார்த்தவன். இப்போ சாப்பிட டைம் ஆச்சே என்ன பண்றா! என நினைத்து கொண்டே வேகமாக போனை எடுத்தவன். அவளுக்கு அழைத்தான். 

அந்த மீட்டிங் அறையில் சாயுந்து கொண்டு இருந்தவள் போன் அலறியது. போனை எடுத்தாள். 

ஹலோ ஹே சாப்பிட்டியா? 

ம்ம்! 

என்ன சாப்பிட்ட? 

சாப்பிட்டேன்! இப்போ தூங்கிட்டு இருக்கேன் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க! என சொல்லி கொண்டே சொடுங்கி படுத்து கொண்டாள். 

அவன் மனம் கேட்க வில்லை. உடனே கார்த்திக்கு போன் செய்தான். 

ஹலோ சொல்லு டா! 

ரே என்ன பண்ற? 

கார்த்திக், என்னோட பத்து விரலும் வலிக்குது டா! 

சூர்யா, உன்னோட ராத்திரி லீலை எல்லாம் என் கிட்ட சொல்லாத! நானே சண்டையில் இருக்கேன். 

கார்த்திக், ரே! என்ன ரா இப்படி பேசுற! இந்த புராஜக்ட்!.  லேப் டாப்ல தட்டி தட்டி வேலை செய்து ஒயிந்தி போயிட்டேன். நீ என்ன சொல்ற? அதை விட என் ரெண்டு குட்டின்களுக்கு சாப்பாடு கொடுத்து தூங்க வச்சு விட்டு ஒயிந்தி அசர நடு சாமம் டா இதுல கிளுகிளுப்புக்கு எனக்கு நேரம் இருக்கா! இதுல உன் பொண்டாட்டி வேற புது புராஜக்ட் எடுத்து விட்டாள். 

சூர்யா, “டேய் அவள் என்ன பண்றா! அவளை நோட் பண்ணிட்டு இருக்கணும்!  உன்னை மாதிரியே கொஞ்சம் கிறுக்கு புத்தி! இப்போ சாப்பிட கூட இல்ல!”

கார்த்திக், என்ன ஆச்சு? 

சூர்யா, “நீ என்ன பண்ணிட்டு இருக்க அவள் இன்னும் சாப்பிட ல நாளையில் இருந்து அவளுக்கு பிடிச்சது சமைத்து எடுத்து வந்திடு! இல்ல இப்போ என குட்டி இருக்கு சோ எனக்கு பிடிச்சது எல்லாக் செய்து எடுத்து வா டா!”

உனக்கு கரி வேணும்! நான் டெய்லி கறி கடைக்கு போகணுமா! 

சூர்யா, அட போடா! இப்போ அவள் என்ன பன்றான்னு பார்த்து சொல்லு கார்த்திக்! 

கார்த்திக்,சரி இரு கூப்பிடுறேன்! என சொல்லி அவள் இருக்குமிடம் சென்றான். அவள் மீட்டிங் ஹாலில் கடைசி இருக்கையில் தலையை வைத்து கொண்டே தனியாக இருந்தாள். அதன் பின் ஜன்னலுக்கு அருகே போய் நின்றாள். 

அவளின் நிலையை பார்த்த கார்த்திக் வேகமாக சூர்யா எண்ணக்கு அழைத்தான். 

ஹலோ என்ன டா? 

கார்த்திக் கோபத்துடன் நீ மூடிக்கிட்டு கிளம்பி வா! 

என்ன டா ஆச்சு? 

கார்த்திக் அவனிடம் சூர்யா நீ சரி இல்ல இப்போ அவள் மாசமா இருக்கா முகம் எல்லாம் சுனங்கி போயிருக்கு! சோகமா இருக்கா! என்ன டா உங்க ரெண்டு பேருக்கு நடுவில்? இப்படி அவள் இருந்தால் அதை குழந்தைக்கும் ஆப்பெக்ட் ஆகும்! 

சூர்யா, நான் வந்தால் தான் பிடிக்காதே!

கார்த்திக், டேய் நீ வான்னு சொன்னேன்! வா! 

ரே! 

உனக்கு புரியாது! அவளுக்கு இப்போவே நீ பக்கத்தில் வரனும் அப்டின்னு நினைப்பு இருக்கும்! நீ வா! 

சூர்யா, அது!. 

கார்த்திக், டேய்*** உன்னோட சிசு நகல  சுமந்து கொண்டு இருக்கா வா! 

சூர்யா, சரி இப்போவே வரேன்! என கிளம்பினான். 

சூர்யா வேகமாக அங்கே வந்தான். ஆதி,ஹாய் அண்ணா! என கை ஆட்டினான். 

சூர்யா, **** என சில கெட்ட வார்த்தைகளை பேசி விட்டு அவன் நேராக கார்த்திக் இருக்கும் இடத்துக்கு சென்றான். 

ஆதி, என்னை பார்த்தால் மட்டும் இவருக்கு எப்படி தெரியுது! ஆள் ஆளுக்கு திட்டுறாங்க! என சொல்லி கொண்டே அவன் இடத்தில் அமர்ந்தான். 

வாடா! வந்திட்டியா! 

ம்ம் எங்கே அவள்? 

கார்த்திக், அவள் மீட்டிங் ஹாலில் இருக்கா! 

சூர்யா வேகமாக அந்த அறைக்கு சென்றான். 

கப்பல் கவிழ்ந்தது போல்  அந்த இடத்தில் இருந்தாள். 

சூர்யாவுக்கு அவளை பார்த்ததும் கோபம் தான் வந்தது. இந்த இடத்தில்  இப்படி வந்து அமர்ந்து இருக்கிறாள்! இது அத்தனையும் அவளே உருவாக்கி கொண்டது. 

யார் இப்படி வந்து இருக்க சொன்னது? திமிர் பிடித்தவள்! என திட்டி கொண்டே நின்றான். 

கார்த்திக், டேய் எவ்ளோ நேரம் இப்படியே பார்த்து கொண்டு இருப்ப! 

சூர்யா, அவளை பார்த்தாலே பொழுக்குண்ணு ஒன்னு விட தோணுது திமிர் பிடித்தவள்! 

போ போ! அவள் இன்னும் சாப்பிடல!  

நீ போ! என சொல்லி கொண்டே அவளை நோக்கி நடந்தான். 

மேடம்! இங்கே தான் புராஜக்ட் பண்றீங்களா! என குரல் கேட்டது. 

மகி ஆர்வத்துடன் திரும்பி பார்த்தாள். 

சூர்யா, லஞ்ச் என்ன சாப்பிட்ட! எவ்ளோ தண்ணி குடிச்ச! 

மகி, அது வந்து ம்ம் அரை லிட்டர் இப்போ தான் குடித்து பாத் ரூம் போனேன்!. 

சூர்யா…? 

தொடரும்..

. தேஜி என்ன பண்ண போறா? 

எப்போ இவங்க கண்ணா மூச்சு ஆட்டம் முடிவு பெறும்? 

இந்த deer antler கூடவே தூறிகை விஷயம் எப்போ தெரிய வரும்? 

காத்திருங்கள்!. 

அடுத்து என்ன நடக்கும்? 

Episode 312

சூர்யா, லஞ்ச் என்ன சாப்பிட்ட! எவ்ளோ தண்ணி குடிச்ச! 

மகி, அது வந்து ம்ம் அரை லிட்டர் இப்போ தான் குடித்து பாத் ரூம் போனேன்!. 

சூர்யா, பொய்! 

இல்ல உண்மை!. 

சூர்யா அவளை உருத்து பார்த்து “இதோ அந்த கேம் வழியா உன்னை வாச் பண்ணிட்டு இருக்கேன். நீ சாப்பிடல அதான் வந்தேன்! எதுக்கு டி என்னை டார்ச்சர் பண்ற! உனக்கு என்ன குறை வச்சேன்! சொல்லு! பீசா போயிட்டு இருந்த நம்ம ட்றேக்க ஸ்பாயில் பண்ற டி சரி இல்ல!”

மகி எழுந்து கொண்டு நேராக ஜன்னல் அருகில் சென்றாள். நீர் கோர்த்து கொண்டது. 

சூர்யா அவனுடைய சட்டையின் இரண்டு பட்டனை கலட்டி விட்டு கை சட்டையை மடித்து விட்டு இறுக்கமாக டக் இன் செய்ததை இலகுவாக வெளியே எடுத்து விட்டு தலையை கோதினான்! 

அவள் இன்னும் திரும்ப வில்லை. சூர்யா அவளின் அருகில் பின்னால் தோல் பட்டையை பிடித்தான். 

கையை தட்டி விட்டாள். 

சூர்யா ஒரு பெரு மூச்சை விட்டு “இப்போ உனக்கு அந்த கப்போர்ட் ல என்ன இருந்தது அப்டின்னு தெரியணும் அவ்ளோ தானே!”

மகி அவனை திரும்பி பார்த்தாள். சூர்யா அவளின் பார்வையை தவிர்த்து விட்டு உன்னோட baby சவர் முடிந்ததும் சொல்றேன். 

மகி, அவ்ளோ பெரிய விஷயமா! அப்படி என்ன பண்ணி இருக்கீங்க! 

சூர்யா புருவத்தை தேய்த்து கொண்டே இது பெரிய விஷயம் இல்ல கேட்டால் நீ ஆச்சரிய பட்டு என்னை கிண்டல் கூட பண்ணுவ! 

மகி கொஞ்சம் சிரித்து கொண்டே அப்படி பட்ட விஷயமா! 

ம்ம் ஆமா! 

மகி, சரி ஓகே நீங்க கட்டாயம் சொல்லி விடனும்! 

சூர்யா, ம்ம் பாப்பா பிறந்ததும் சொல்லட்டா!

மகி கடைசியாக அவனிடம் “நான் டெலிவரிக்கு போறதுக்கு முன்னாடி கட்டாயம் சொல்லி விட வேணும்!”

ம்ம் ஓகே கட்டாயம் சொல்லி விடுவேன்! 

இப்போ வந்து சாப்பிடுகிறயா! வா என அழைத்தான். அவன் கைகள் அவளை அணைப்பது போல் வைத்து இருக்க!. 

மகி அவன் கைகளை பார்த்தாள். சூர்யா, என்ன டி பார்க்கிற? 

உங்க கையை எடுங்க என தட்டி விட்டாள். 

சூர்யா, ஓவரா பண்ற டி ஆனால் இதுக்கு எல்லாம் நீ அனுபவிப்ப! நடக்க தான் போகுது! 

நான் ஒன்னும் உங்க பக்கத்தில் வரல நீங்க தான் என்னை தேடி வந்திருக்கீங்க! 

சூர்யா, அய்யோ இதை கேட்டு கேட்டு என் காதில இரத்தம் வருது ஒரு ஆயிரம் தடவை சொல்லி இருப்ப! நீ பொண்ணு தானே! 

உங்களுக்கு என்ன சந்தேகம்? 

சூர்யா, “பொண்ணு அப்டின்னு இருந்தால் தேடி வர தான் செய்வாங்க! அதுக்குன்னு இந்த உலகத்தில் நீ மட்டும் தான் அழகி அப்டின்னு வழிந்து கொண்டு எல்லாம் நான் வரல!”

இல்ல நீங்க தான் வந்தீங்க! 

சூர்யா, சரி நான் தான் வந்தேன்! ஆனால் இப்போ என்னை தேடி வந்தது நீ தானே! 

நானா!  நான் எங்கே உங்களை தேடி வந்தேன்! என மகி அவனை பார்த்தாள். 

சூர்யா, ஹே பொய் காரி! பொய் சொல்லாத! 

என்ன பொய்! யாரு பொய் நீங்க தான் பொய்!. 

சூர்யா அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன். அன்னிக்கி பார்ட்டி முடிந்து நீ தான் டி என்னை தேடி என் ரூமுக்கு வந்த!. .

மகி புருவம் நெருக்கி எந்த பார்ட்டி! எனக்கு ஒன்னும் நினைப்பு இல்ல!. 

ம்ம் பொய் சொல்லாத!. 

நானா இல்லையே என முடியை காதுக்கு ஒதுக்கினாள். 

சூர்யா, இந்த பேபி எப்டி வந்தது? சொல்லு! 

மகி போதும் எனக்கு பசிக்குது! வாங்க போலாம்! 

“நீ கேடின்னு எனக்கு தெரியும் டி சும்மா இருந்த என் மேல் விழுந்து நான் சுய நினைவில் இல்லாத நேரமா பார்த்து என்னை ரேப் பண்ணி இருக்க!”

மகி, வேணாம் தேவையில்லாம பேசுறீங்க! நான் நான் ஒன்னும் அப்படி பண்ணல நீங்க தான் என் மேல விழுந்தீங்க!  என்னை வுடவே இல்ல!  

சூர்யா, பேனா மூடி மாதிரி நீ தான் லாக் பண்ண நான் இல்ல! எனக்கு நினைவு இருக்கு! என கண்ணை மூடினான். 

இருவரும் அந்த நாளுக்கே சென்று வந்தனர். சூர்யா அவளிடம் இருந்து விலகி செல்ல மகி அவன் கையை பிடித்து கொண்டாள். 

சூர்யா, பிளீஸ் கைய விடு! அப்புறம் வற்புறுத்துகிறது போல கம்பி கட்டுவ!. 

மகி, நான் உங்களை உட்கார சொன்னேன்! 

எனக்கு இங்கே கொஞ்சம் ஹாட்டா இருக்கு வெளியே போறேன்! 

மகி அவனின் தவிப்பை மிகவும் ரசிக்க ஆரம்பித்தாள். 

நில்லுங்க! போக கூடாது. 

சூர்யா, இப்போ என்ன வேணும்! 

மகி, நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்! வாங்க! என அவள் சொல்லவும் கார்த்திக் உள்ளே வரவும் சரியாக இருந்தது. 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்று இருந்தனர். 

க்கும்!. என தொண்டையை சிறும்பி கொண்டே வந்தான். 

சூர்யா அருகில் உள்ள சேரை இழுத்து போட்டு அமர்ந்தான். 

கார்த்திக் அவளின் முன் உணவுகளை வைக்க.. 

சூர்யா அனைத்தும் ஓபன் செய்து சாப்பிடு! என கூறினான். உள்ளே வெண்டைக்காய் பொரியல், கீழே ராஜ்மா தடுக்கா இருந்தது. 

சூர்யா, சரி நீ இதை சாப்பிடு!  நான் ஆடர் போட்டு கொள்கிறேன். 

மகி, மாமா எனக்கு இது வேணாம்! 

வேற?  

எனக்கு கோக் கூடவே சூடா  வெஜ் பீட்ஸா வேணும்! 

கார்த்திக் மற்றும் சூர்யா ஒரே நேரத்தில் நொ! நோ!.. என சத்தமாக கூறினார்கள். 

மகி , எனக்கு வேணும்!. 

சூர்யா, ஆடர் போடுறேன்!  

ரே சூர்யா! என்ன பண்ற? 

இரு டா வரட்டும்!. உனக்கு என்ன வேணும் சொல்லு!  

பனீர்! ஸ்வீட் கார்ன் என கூறினாள். 

அப்டியா! இதோ இப்போவே போடுகிறேன்! என கூறி கொண்டு அனைத்தும் அவள் சொல்வதை போலவே ஆடர் செய்தான். 

கார்த்திக் கோபத்துடன் என்ன டா பண்ற? 

மகி, என்ன மாமா! அவரு இப்போ தான் என் பேச்சை கேட்டு இருக்கார். நான் கனடாவில் இருக்கும் போது அடிக்கடி மிதுன் வயிற்றில் இருக்கும் போது சாப்பிடுவேன். 

என்ன டா சூர்யா அமைதியா இருக்க எதுவும் பண்ணு! 

இரு டா உன் ஸ்டூடன்ட் ஆசை பட்டு  இருக்கா முதலில்  வரட்டும்! 

சூர்யா ஆடர் செய்தது சுட சுட வந்தது. ஆதி அதை எடுத்து கொண்டு உள்ளே வந்தவன். மகி எனக்கு? 

சூர்யா, டேய் கொண்டு வந்து இங்கே வச்சிட்டு போ! 

ஆதி, நீங்க தான் இதை ஆடர் போட்டீங்களா! 

ஆமா! 

இப்படின்னு தெரிந்து இருந்தால் நான் எடுத்திட்டு வந்திருக்கவே மாட்டேன்! 

சூர்யா, ஆதி! 

போங்க!. என அவன் வைத்து விட்டு செல்ல வேகமாக மகி அதை முகர்ந்து பார்த்து கொண்டே பிரித்தாள். 

உனக்கும் வேணுமா ஆதி! 

இதென்ன கேள்வி! உங்க மாமா தான் எனக்கும் மாமா! 

சூரியா, அப்டியா சரி இங்கே வா! 

அவன் வர உன் தோழிக்கு நீ தான் ஊட்டி விடனும்! சரியா!

ஆதி கண்கள் மின்ன சரி என்றான். 

மகி ஆதி வா! 

சூர்யா அவனுடைய சட்டையை கழட்டி கார்த்திக் அவள் கை ரெண்டையும் பிடி டா! என மகி அசருவதற்குள் கையை பிடித்து கட்டி போட்டனர்.

ஆதி, அண்ணா! கார்த்திக் சார் என்ன பண்றீங்க! 

என்னை கெட்ட வார்த்தை பேச வைக்காத மூடிட்டு உட்காரு!. 

மாமா! என்ன பண்றீங்க! என்னங்க! அய்யோ என்னை விடுங்க! என சிணுங்கினாள். 

சூர்யா சேர இழுத்து போட்டு அவள் முன் அமர்ந்து கொண்டு ஆதி பக்கம் tiffin பாக்ஸ் தள்ளி விட்டு டேய் அவளுக்கு feed பண்ணு!  

ஆதி, எனக்கு நிறைய வேலை இருக்கு! இன்னும் இன்னிக்கான ஒர்க் வெரிஃபை  பண்ணனும்! 

சூர்யா, அப்போ உனக்கு மகி முக்கியம் இல்ல சரி விடு! இனி உங்க வீட்டு பக்கம் வரவே மாட்டேன்! ஜனனி!. என ஆரம்பிக்க.. 

ஆதி, ஹே ஆ காட்டு டி! என அருகில் அமர்ந்து கொண்டான். 

சூர்யா அவளை பார்த்து கொண்டே கார்த்திக் டேக் இட்!. என கொடுக்க 

சாரி மகி என சொல்லி கொண்டே இருவரும் உண்டனர்! 

மகி,  கார்த்திக் மாமா இனி உங்க கூட பேசவே மாட்டேன்! 

 சூர்யா, அப்போ பாட்ரி 

கார்த்திக், ஆ போடு! டேய் தண்ணி கொடு! 

ஆதி, எல்லாம் என்னோட நேரம் உங்க கிட்டயே வந்து மாட்டி கொள்கிறேன்! என மொத்தமும் ஊட்டி விட்டான். 

சூர்யா, அட அட அட ச்சீஸ் கொஞ்சம் தூக்கலு!. 

கார்த்திக், கோக் கூலிங் கொஞ்சம் கம்மியா இருந்தது. பட் ஒரத்தா இருந்தது. 

அவர்கள் சாப்பிடுவதை எல்லாம் ஏக்கத்துடன் பார்த்து கொண்டு இருந்தாள்.  உதடு துடிக்க “உங்களுக்கு கான்ஸ்டிபேசன் ஆகனும்! இது என் சாபம்!”

போடி!. என சொன்னவன் அவளின் புடவை முந்தியில் கைகளை துடைத்து கொண்டு இருக்க.. ஹ ஹ ஹ என சிணுங்கினாள். ம்ம்  ம்ம் யம்மி டி என சொல்லி  உதட்டையும் துடைத்து கொண்டான். 

ஆதி, அவள் புவா ஃபினிஸ் பண்ணிட்டா! இப்போ நான் போலாமா!  என் பையனுக்கு கூட இப்படி ஊட்டி விட்டது இல்ல! 

கார்த்திக், டேய் பாக்ஸ் கழுவி கொண்டு வா! 

ஆதி வெற்று பார்வை பார்த்தான். 

சூர்யா, ரே என்ன பார்வை போ! போ!. 

ஆதி அதே போல கழுவி கொண்டு வந்து அவளின் வாயை துடைத்து விட்டான். 

மகி, thanks ஆதி! 

ஆதி அவளின் தலையை வருடி விட்டு உனக்கு டெய்லி நான் ஊட்டி விடுரென் செல்லம்! 

ஹே அதுக்கு நான் இருக்கேன்! கிளம்பு கிளம்பு! 

கார்த்திக், ரே கையை அவிழ்த்து விடு டா!. 

சூர்யா, நான் கட்டவே இல்ல சும்மா உருவான் சுருக்கு தான் போட்டு இருந்தேன். 

மகி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கையை எடுத்தாள். 

கார்த்திக் சிரித்து கொண்டே பார்த்தான்

சூர்யா, ஆனாலும் உன்னோட ஸ்டுடன்டு ரொம்ப சின்சியர்! ம்ம்!. 

மகி எழுந்து கொண்டு ரெஸ்ட் ரூம் சென்றாள். நடந்தது எல்லாம் சிரிப்பு தான் வந்தது. 

அவள் முகத்தை கழுவி கொண்டு வெளியே வந்தாள். 

சூர்யா, சரி நான் கிளம்புறேன் டி!. 

மகி, என்னமோ பண்ணுங்க! என சொல்லி விட்டு லேப் டாப் எடுத்து கொண்டு அமர்ந்தாள். 

ஹே நான் போறேன்னு சொல்றேன் நீ என்னமோ பண்ணுங்க அப்டின்னு சொல்ற! என அவளுடைய லேப் டாப்பை பிடுங்கி அருகில் வைத்தான். 

கார்த்திக் மறுபடியும் முதலில் இருந்தா! உங்க மனதில் என்ன நினைத்து கொண்டு இருக்கீங்க! நீங்க டீன் ஏஜ் லவ்வர்ஸ் இல்ல எப்போ பாரு ரெண்டு பேரும் கொத்தி கொண்டு இருக்கீங்க! எனக்கு நிறைய வேலை இருக்கு பேசாமல் ஒர்க் ஃப்ரம் ஹோம் செய்யலாம்.  நான் போறேன் டா சாமி என கிளம்பி விட்டான். 

மகி, இப்போ உங்களுக்கு என்னை வேலை செய்ய விடுங்க! நீங்க கிளம்புங்க! என முறைத்தாள். 

சூர்யா எதையும் பேசாமல் அவளையே பார்த்தான். 

மகி தலையை பிடித்து கொண்டே அவனை கீழ் பார்வை பார்த்தாள். 

சூர்யா, என்னை துறத்துற! என பேசி கொண்டே இருக்கும் போது மேக்னா கால் செய்தாள். 

ஹலோ! 

 தேவ் எங்கே இருக்கீங்க? நான் உங்க ஆபீஸ்ல தான் இருக்கேன்!

இப்போ என்ன சொன்ன? 

தேவ்! என மேக்னா கூறினாள். 

ம்ம் என சிரித்தவன். சூர்யா அப்டியா என டேபிளின் மேல்  இருந்து இறங்கினான். 

மகி அவனையே பார்த்தாள். 

லஞ்ச் முடிச்சிட்டியா!

மேக்னா ஆச்சரியத்துடன் இல்ல! தேவ் நீ!.. நீ வந்தால் கொஞ்சம் லஞ்ச் அப்படியே  நம்ம இந்த இது வரைக்கும் நடந்த எல்லாம் டிஸ்கஸ் பண்ணலாம். 

இப்போ வரேன்!. என நடந்தான். 

மேக்னா, போனை வைத்ததும் என்ன டா ஆச்சரியம்! இவனே வரேன்னு சொல்றான்! 

போனில் யாரு? 

ஹலோ உங்களை தான் போனில் யாரு? 

சூர்யா, ஹலோ என் போனில் யாரும் இல்லையே! 

என்னங்க நில்லுங்க! போனில் யாரு! 

சூர்யா, மேக்னா! 

அவள் எதுக்கு போன் பண்றா! 

எங்களுக்குள்ள என்ன பிஸ்னஸ் பற்றி ஆயிரம் பேசுவோம் உங்களுக்கு என்ன மிசஸ் வசந்தன். 

மகி எழுந்து நீங்க போக கூடாது. 

சூர்யா, ஹே அவள் லஞ்ச்க்கு வர சொல்லி இருக்கா! நான் போயே ஆகனும்! 

மகி, போக கூடாது என அவன் கைகளை பிடித்தாள். 

இப்படி கஷ்ட பட்டு உனக்கு எதுக்கு சிரமம்! 

நீங்க என் கூட தானே சாப்டீங்க! இப்போ அங்கே என்ன சாப்பிட போறீங்க! 

லைட்டா பசிக்குது! சோ ஃபுல் மீல்ஸ் சாப்பிட போறேன்! நீ உன் வேலையா பாரு! என சூரியா நகர முயற்சி செய்தான். 

மகி போக கூடாது! என அவனை இழுத்து அருகில் உள்ள சேரில் அமர வைத்தாள். 

சூரியா, ஹே என்ன பண்ற? 

மகி அவன் மடியில் அமர்ந்து கொண்டாள். நீங்க நகர கூடாது! புரியுதா! 

சூர்யா, உனக்கு மேக்னா மேல பொறாமையா! 

எனக்கு என்ன பொறாமை! நீங்க என் புருசன்! சோ என்னோட உரிமை! 

சூர்யா, இதையெல்லாம் கேட்டு எனக்கு இப்போ அன்கம்ஃபார்ட்டா இருக்கு!

என்ன? 

ஹே மகி இப்போ இந்த கை அதை எங்கே வைக்க! 

மகி, என்ன  அன்கம்ஃபார்ட்!

இப்படி என் மேல ஃபுல்லா நீ தான் இருக்க! சோ! கெமிஸ்ட்ரி கொஞ்சம் ஒர்க் ஆகுது!  

இதையெல்லாம் கேட்டதும் அவள் வெடுக்கென எழுந்தாள். 

சரி நான் இப்போவே கிளம்புகிறேன்! 

மகி அவன் மேல் மீண்டும் அமர்ந்து கொண்டு போக கூடாது. 

அப்போ! என அவன் அவளை பார்த்தான். 

மகி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க சூர்யா அதற்கும் மேல் முடியாமல் அவளின் கழுத்தில் முத்தம் பதித்தான். 

சூர்யா,  வற்புறுத்தலா இருக்கா! எனக்கும் கட்டாய படுத்த வேணாம்! தள்ளி  உட்காரு! அதை விட உன் புருசன் மேல கொஞ்சம் நம்பிக்கை வை டி! 

மகி அவன் பக்கம் திரும்பி வேகமாக இதழை கவ்வி இழுத்தாள். 

சூர்யா அவளின் கண்களை பார்த்து கொண்டே கழுத்தை சாய்த்து பிடித்தான். கடை இதழ் இன்னும் உணர்ச்சி ஏற்படுத்த மீசையுடன் உரசி கொண்டே முத்தமிட்டாள். 

சூர்யா கொஞ்சம் அவளை விலக்கி போதும் டி! பேபி இருக்கா! என அவளின் இதழில் ஒற்றி எடுத்தான். 

மகி அவன் உதட்டை துடைத்து விட்டு நான் ஒன்னும் வரல நீங்க தான் காரணம்! 

சரி நகரு டி நான் போறேன்! 

அவளை பார்க்க போறீங்களா! உங்களை சாப்பிட கூப்பிட அவள் யாரு! கொன்றுவிடுவேன்! 

சரி கொண்ணுக்கோ! என கட்டி அணைத்தான். 

மகி உங்களை பார்த்தாலே சண்டை போட தோணுது! 

சூரியா எனக்கும் சண்டை போட தோணுது ஆனால் வேற விதமா! 

மகி வெட்கத்துடன் சிரித்து கொண்டே முருகா! முருகா!

சூர்யா பிடியை இறுக்கி கொண்டே வீட்டுக்கு போலாமா! இப்போதைக்கு இந்த முத்தம் என் பேபிக்கு தான் கொடுத்து இருக்கேன். அடுத்து அவள் அம்மா சண்டைக்கோழி இப்போ வெட கோழி அவளை கன்சோல் பண்ணனும்! சோ! போலாமா! 

மகி புருவம் நெருக்கி கொண்டே அந்த மேக்னா வயிட் பண்றா! 

சூரியா, எனக்கு இங்கே தளப்பாகட்டி கிடைத்து இருக்கு! வா போலாம்! சண்டை செய்யலாம்! வா வா! என அழைத்தான். 

மகி லேப் டாப்பை எடுத்து மூடி கொண்டே புன்னகையுடன் வெளியே வர சூர்யா போனில் தீவிரமாக பேசி கொண்டு இருந்தான். 

அவன் முகத்தை பார்த்தாலே முக்கிய வேலை என தெரிந்தது. 

என்ன ஆச்சு? என்று அருகில் போய் நின்றாள். 

மகி முக்கியமா வேலை கொஞ்சம் டெக்னிக்கல் இஸ்யூ இருக்கு டி நான் இப்போ!.. 

சரி போயிட்டு வாங்க! 

நீ கார்த்திக் கூட மை விழி வீட்டுக்கு போயிடு இன்னிக்கி வர லேட் ஆகும் செல்லம்! 

சரி என தலை அசைத்தாள். 

சூரியா அவளை ஒரு முறை பார்த்தான். அவளுக்கும் இந்த முறை நிறையவே தோன்றி இருக்கிறது. தானாக கவ்வி கொண்டாள். இப்படி விட்டு செல்வதை மனம் கேட்க வில்லை. அவளின் கையை பிடித்து முத்தம் வைத்து சாரி டி! உன்னை விட்டு போக மனசே இல்ல! ஆனால் டெக்னிக்கள் இஸ்யூவ க்லியர் பண்ண முடியல! 

சரி போயிட்டு வாங்க! நான் மாமா கூட அக்கா வீட்டுக்கு போறேன்! 

சரி சரி லவ் யூ மகி என கூறி விட்டு சென்றான். 

மகி அவனை ஆச்சரியமாக பார்த்தாள். 

எனக்கு நிறையவே சொல்ல தோணும்! கொஞ்சம் வெட்கம் தான்! என ஓடி விட்டான். 

அந்த வாரம் வேகமாக ஓடியது. வீக் எண்ட் வந்தது. 

உதயன் சென்னை கிளம்பி விட்டான். தாராவை கஷ்ட பட்டு சமாதானம் செய்து இங்கேயே விட்டு சென்றான். 

வீட்டை நோக்கி நடந்து வந்தான். உள்ளுக்குள் ஒரு ரயில் வேகமாக ஓடி கொண்டு இருந்தது. பயம், பதட்டம், அழுத்தம், ஏக்கம், துக்கம், ஆசை, என அனைத்தும் பிசைந்து கொண்டு இருந்தது. 

 உதயன் நுழைவு வாயில் கதவை திறந்தான். 

தொடரும்.. 

Episode 313

உதயன் தன் வீட்டின் நுழைவு வாயிலை அடைந்தான்.

அப்பொழுது தான் கலைவாணி பால் வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்றார்.

மிதுன் மற்றும் நித்தின் இருவரும் வசந்தன் உறங்கிக் கொண்டிருக்க அவர் எழுந்து முகத்தை கழுவி விட்டு செய்தி தாளை புரட்ட ஆரம்பித்தார்.

அவர்கள் இருவரும் கட்டளில் ஆளுக்கு ஒரு பக்கம் படுத்திருந்தனர் மிதுன்  கண்களை தேய்த்துக் கொண்டே எழுந்தவன். அம்மாச்சி! அம்மாச்சி! என்று அழைத்துக் கொண்டே வெளியே வந்தான்.

கலைவாணி சமையலறையில் இருந்து கொண்டே  என்னடா கண்ணா! மிதுன் குட்டி கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க, உங்களுக்கு என்ன வேணும்? ஹார்லிக்ஸ் போட்டு தரவா! என்று கேட்டார்.

மிதுன், இல்ல  அம்மச்சி இன்னைக்கு சூப்பரா ஒரு டீ போட்டு குடுங்க எனக்கு குடிக்கணும் போல இருக்கு என்று கூறிக் கொண்டே சேரில் அமர்ந்தவன். டிவியை தட்டி விட்டு டிஸ்கவரி சேனலை போட்டு விட்டான்.

கேட் டின் கதவுகள்  திறக்கும் சத்தம் கேட்டது.

 கலைவாணி உள்ளே இருந்து யாரா இருப்பாங்க அதுவும் இந்த நேரத்துல கேட் திறக்கும் சத்தம் கேட்குது இப்போ வந்து இருக்காங்களே! 

மிதுன்,  அம்மாச்சி நான் பாக்குறேன்! என   என்று சொல்லிக் கொண்டே வெளியே எட்டிப் பார்த்தான்.

இவரா? இவர்தான் மகி அண்ணன் அம்மாச்சி! அம்மாச்சி!  மகி பிரதர் வந்திருக்காங்க!

யாருடா கண்ணு  என்று கலைவாணி புரியாமல் கேட்டார்.

அப்பொழுதுதான் நித்தின் முகத்தை கழுவி விட்டு எழுந்து வந்தான்.

வசந்தன் பின் பக்கம்  அமர்ந்து  பேப்பர் படித்துக் கொண்டே தன் அன்னை  மகிழம்மாவிடம் பேசி கொண்டு இருந்தார். 

கலைவாணி என்னங்க எங்கே இருக்கீங்க? யார் வந்திருக்காங்க என்று சொல்லிக் கொண்டே மித்துனுக்கு எடுத்துக் கொண்டு வந்தவர் நாட்டு சக்கரையுடன் இஞ்சி தட்டி போட்டு வசந்தனுக்கு கட்ட டீ  வந்தா எடுத்து வந்தார். 

வெளியே செருப்பு விடும் அரவம் கேட்டது. 

மிதுன், அம்மாச்சி  உங்களுக்கு புரியலையா!  மகியோட பிரதர் வந்திருக்காங்க! என்று கொஞ்சம் சத்தமாக பார்த்து கூறினான்.

வசந்தன் , அம்மா ஒரு நிமிஷம் இருங்க உங்களுக்கு டீ எடுத்துட்டு வரேன்!  என்று சொல்லிக் கொண்டு வந்தவர் யார் வந்திருக்கா? ஹாலுக்கு வந்தவர் அங்கு வந்து நின்ற நபரை பார்த்ததும் வசந்தன் அப்படியே நின்றார். 

கலைவாணி அப்படியே நின்றார்.  அவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவரின்  மூச்சிலும் கண்களிலும்  கூடவே உடலுக்குள் சூடு பரவியது.  அதற்கு ஆதாரமாக கண்களில் சூடான நீர் கன்னத்தை நனைத்தது. சுவாசம் சூடானது. 

பாருங்க அம்மச்சி நான் சொன்னேன்ல!  மகியோட அண்ணா?  இவங்க பேரு?  இவங்க மனைவி பேரு தான் ஹீரோயின்!  இவங்க பேரு என்று யோசித்தான்.

நிதின் , உதயன்! என்று கூறினான். 

உதயன் நேராக மிதுன்  அருகில் சென்று கன்னத்தில் முத்தமிட்டவன். டேய் பொடியா என் பேரு உனக்கு தெரியலையா! உன்னை இருக்கு டி மாப்ளை! என்ன பண்றேன் பாரு! 

மிதுன் அவனுடைய கன்னத்தை துடைத்து கொண்டு நிற்க.. உதயன் நிதின் அருகில் சென்று நிதின்! என் பேர் உதயன் இல்ல? 

அவன் உதயனை உற்று பார்க்க “மாமா சொல்லணும்! உதயன் மாமா சொல்லு!”

இதை கேட்டதும் நிதின் முகத்தில் பூரிப்பு மாமா! என மென்னகை சிந்தினான். 

உதயன், இனி நம்ம ரெண்டு பேரும் பெஸ்ட் ஃப்ரெண்ட்! டீலா! என கையை நீட்டினான். 

நிதின், ஓகே மாமா! என கூறினான். 

உதயன் இரு கையையும் நீட்டி அவனை கட்டி கொண்டு கன்னத்தில் முத்தம் வைத்தான். 

மிதுன், ப்ரோ! இவர் பாய் நீங்க பாய்! இது தப்பு! அதை விட இவர் மாமா இல்ல நம்ம மாமா வருண்! தெரியுமா! என் மாமாச்சி வருண் மட்டும் தான்! 

நிதின், எனக்கு ஒரே மாமா தான் அது உதயன் மாமா! 

உதயன், நீ தான் டா என் மாப்பிள்ளை! என ஆசையுடன் ஒரு அணைப்பு அவன் கன்னத்தில் முத்தம் பதித்தான். 

நிதின், today ஐம் சோ ஹேப்பி பிகாஸ் நீங்க என் பக்கத்தில் இருக்கீங்க! 

உதயன், எனக்கும் தான்! சரி நீங்க விளையாடுங்க நான் ஃபிரஷ் ஆகிட்டு வரேன்! 

நிதின் மிதுன கூட்டி கொண்டு சென்று விட்டான். 

கலை வாணி அவனை தவிர்க்க உடனே சமையலறை சென்று விட்டார். வசந்தன் அவனையே பார்த்து கொண்டு இருக்க!. 

உதயன் கொஞ்சம் புன்னகையுடன் ப்பா!. என கையை பிடித்தான். 

ம்ம் என்று அடி பட்ட குரல் மனதில் ஆழத்தில் இருந்து ஒலித்தது. 

உதயன் அருகே உள்ளே சோபாவில கையை பிடித்து அமர வைத்து அவனும் அருகில் அமர்ந்து கொண்டான். 

வசந்தன் கைகள் நடுங்கியது. உடல் வியர்த்து போனது. கலை வாணி வேகமாக அருகில் வந்து என்னங்க கொஞ்சம் குடிங்க என ஒரு முறை ஆத்தி கையில் கொடுத்து விட்டு அவனை பார்க்காமல் உள்ளே சென்று விட்டாள். 

உதயன், குடிங்க பா! என எடுத்து கொடுத்தான். 

வசந்தன், ம்ம் என சொல்லி கொண்டே வாங்கி ஒரு மிடுக்கு குடித்தார். 

உதயன் கையை பிடித்து கொண்டு ப்பா!  இது தான் ஸ்கூல் நல்லா படிக்கணும் ஒழுக்கமா இருக்கணும் படிக்கிற வேலையை பார்த்திட்டு  வீட்டுக்கு வரனும் அப்டின்னு நீங்க என்னை ஸ்கூல் சேர்த்து விட்டு வந்தீங்க! 

வசந்தன் அடுத்த மிடுக்கை குடித்தான். “அதே போல காலேஜ் கூடவே ஹாஸ்டல் சேர்த்து விட்டு ஒவ்வொரு லீவுக்கும் நான் இங்கே வந்தால் என்னை காரைக்குடி கொண்டு போய் விட்டு சொல்லிட்டு வந்தீங்க!”

கலை வாணி அவன் பேசுவது அனைத்தையும் உள்ளே இருந்து கேட்க கேட்க கண்களில் நீர் வற்றாமல் ஓடி கொண்டு இருந்தது. 

உதயன், “ப்பா! இங்கே கேம்பஸ்ல செலக்ட் ஆகி முதல் நாள் வேலைக்கு போகும் போது நீங்க தான் என்னை கொண்டு போய் விட்டீங்க! நீ வேலைக்கு போனால் அப்பாவுக்கு ஒத்தாசை, மானு மை விழி, ரெண்டு பேரையும் கட்டி கொடுக்கணும் அப்டின்னு சொன்னீங்க! அதே போல நானும் போனேன்! 

உதயன் அவரின் கையை அழுத்தி பிடித்து கொண்டு ப்பா! 

அவர் டம்ளரை வாங்க கலை என அழைத்தார். 

கலை கண்ணை துடைத்து கொண்டு தன்னை மிகவும் தைரியமான முகம் போல் வைத்து கொண்டு வந்தார். டம்ளரை வாங்கி கொண்டு திரும்பினார். 

உதயன், இப்படி எல்லாம் சொல்லி வளர்த்த நீங்க இப்போ என்னை ஒரேயடியாக கோவிந்த் சார் வீட்டில் வித்துட்டு வந்துட்டீங்க! 

வசந்தன், அவன் முகத்தை பார்க்காமல் தரையை பார்க்க கலை என்னங்க! என அருகில் வந்து அவரின் காலுக்கு அடியில் அமர்ந்து கொண்டார். 

கலை, டேய் என் புருஷனை கேள்வி கேட்க நீ யாரு டா! நாயே! உன்னால் தான் உன்னை பெற்ற பாவத்துக்கு தான்!.. என்னங்க என்னங்க! என கதற ஆரம்பித்தாள். 

உதயன் எழுந்து செல்ல அவன் கையை பிடித்து கொண்டவர். உதயா! என அவனை கட்டி கொண்டார். 

உதயன் நெஞ்சு குமுற தன் தந்தையை அணைத்து கொண்டான். 

வசந்தன் கண்களில் கண்ணீர் நிற்காமல் கொட்ட கலை, என் புருஷனை அவமான படுத்த அழ வைத்து வேதனை படுத்த என் வயிற்றில் பிறந்த கடன்காரன் நீ தான் டா!  என் வயிறு பத்தி எரியுது! என கலை ஒரு பக்கம் அழுது கொண்டே கதறினார். 

வசந்தன், காலை திட்டாத டி! அவன் என் இரத்தம் டி! எங்கே இருந்தால் என்ன நல்லா இருக்கட்டும்! 

எதுக்கு பா விட்டு வந்தீங்க! ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் நான் எல்லாம் தூக்கி போட்டு விட்டு உங்க கூட வந்து இருப்பேனே! 

வசந்தன், “அந்த பொண்ணு உனக்காக இங்கே நம்ம வீட்டில் உன்னை நம்பி வந்து இருந்தது. அவள் காதல் ரொம்ப விலை மதிக்க முடியாதது. ரெண்டு பேரும் மனசார விரும்பி இருந்தால் அது பாதி கல்யாணம் வாழ்க்கைக்கு சமம் நீ வந்து இருந்தால் அவள் செத்து இருப்பா! உன்னோட சந்தோசம் அவள் தான்! அதனால் தான் உன்னை விட்டு வந்தேன்! அவள் நம்ம வீட்டு பொண்ணு டா! நீ எங்கே இருந்தால் என்ன? என் பையன் நீ தான்! யாரால இதை மாற்ற முடியும் சொல்லு!”என அவன் நெற்றியில் முத்தம் வைத்தார் அவன் கையை வருடினார். 

அப்போ நான் முக்கியம் இல்லையா! 

வசந்தன், “பெண் பாவம் பொல்லாதது உதயா! அதை விட உன்னை தாரா நல்லா பார்த்து கொள்வாள் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு! அவளை நம்பி தான் உன்னை விட்டு வந்தேன்! இந்த பணம் காசு எல்லாம் எனக்கு தேவையே இல்ல! இப்போ கூட சொந்த ஊரில் வீடு இருக்குது! கடனை கட்டி விட்டு நானும் உங்க அம்மாவும் அங்கே போயிட முடியும்!”

உதயன், நான் இருக்கேன் பா! 

வசந்தன், இது தப்பு! உன் குடும்பத்தை நீ பாரு எனக்கு நீ கொடுக்க வேணாம்! 

உதயன், மாமா கொடுத்தால் வாங்கி கொள்வீர்கள் ஆனால் நான்!..

வசந்தன், “மருமகன் வீட்டில் சாப்பிடுவதை விட மருமகள் தாய் வீட்டில் இருந்து சாப்பிடுவது கொடுமை உதயா! உன்னோட சம்பாத்தியம் சரி தான் ஆனால் இப்போ நீ அவங்க வீட்டின் கட்டு பாட்டில் இருக்க உன்னோட சொந்த பணம் பத்து ரூபாய் கூட அவங்க காசு போல தான் இருக்கும்!”

உதயன், ப்பா என் கிட்ட பேச தொணவே இல்லையா! என் நினைப்பு வரலயா! 

வசந்தன், “இது என்ன கேள்வி அப்பாவுக்கு ஒவ்வொரு நிமிடமும் நீ, மகி, மை விழி என்ன பண்றீங்க எப்டி இருக்கீங்க அப்டின்னு தான் யோசிப்பேன்! பாரு மிதுன் குட்டி இருக்கான்! அவன் கூட பொழுதை ஓட்டி கொண்டு அப்பா நல்லா தான் இருக்கேன். எங்களை நினைச்சு நீ இலச்சு போய் விடாதே!”

உதயன் சரி என அவரின் நெஞ்சில் சாய்ந்து கொண்டான். 

வசந்தன், அந்த பொண்ணு!. .

உதயன், தாரா வரேன் வரேன் அப்டின்னு ஒரே ஆர்பட்டாம் சண்டை நான் தான் அடுத்த முறை கூட்டி வருகிறேன் அப்டின்னு விட்டு வந்து விட்டேன். 

வசந்தன், தாரா சவுக்கியமா! .

ம்ம் பாவம் எப்போவும் இங்கே வரலாம் அப்டின்னு ஆட்டம் கட்டுறா! 

கலை அப்படியே அசையாமல் இருக்க வசந்தன் எதோ மாற்றம் தெரிய! கலை! கலை வாணி! ஹே என உசுப்ப அவள் மயங்கி பத்து நிமிடத்திற்கு மேல் இருக்கும்! 

உதயன் பதட்டத்துடன் மா! அம்மா! 

வசந்தன், அய்யோ! என்ன ஆச்சு! இப்போ மணி என்ன? 

இன்னும் டீ குடிக்கல! சக்கரை கம்மியா இருக்கும் அப்டின்னு நினைக்கிறேன்! டேய் அவளை தூக்கி சோபாவில உட்கார வை! 

உதயன் துடிக்கும் உதடுகளுடன் மா! மா! அம்மா! என துடித்தான். 

மிதுன் மற்றும் நிதின் என இருவரும் வெளியே வந்து பார்க்க கலை கண்களை மூடி படுத்து இருந்தார். 

நிதின், வேகமாக அவனது போனை எடுத்தவன். உடனே டாக்டர வர சொல்லுங்க! நான் நிதின் பேசுகிறேன்! என வெளியே இருக்கும் அவனது பாடி கார்டுக்கு கூறினான். 

அவர்கள் கொஞ்சம் சிட்டியை ஒட்டி இருப்பதால் உடனே வந்தனர். அதற்குள் வசந்தன் சக்கரையை கொண்டு வந்து கலையின் வாயில் கஷ்ட பட்டு உள்ளே துறுத்தி தண்ணீர் ஊற்றினார்கள். 

டாக்டர் வரவும் கலை வாணி கண்களை திறக்கவும் சரியாக இருந்தது. 

வசந்தன், யாரு டாக்டர வர சொன்னது? 

நான் தான்! என நிதின் கலையின் அருகில் வந்தான். 

கலை எனக்கு ஒன்னும் இல்ல நான் நல்லா இருக்கேன். 

சட் யுவர் மவ்த்! என ஆளுமையுடன்  நிதின் கூறி கொண்டே செக் பண்ணுங்க! என கைகளை கட்டி கொண்டே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். 

கலை, என்னங்க! 

வசந்தன் சிரித்து கொண்டே வாயை அடக்கு டி சக்தி சொல்றான் தானே! 

உதயன், பா நிதின்! 

கண்ணு! மன்னிச்சு போடு கண்ணு!.  

நிதின், தாத்தா சைலண்ட்!. 

டாக்டர் அவரை செக் செய்து விட்டு சுகர் ரொம்ப லோவா இருக்கு! கூடவே பிரஸர் ஏறி இருக்கு பாருங்க கண்ணு எல்லாம் சிவந்து போச்சு! கொஞ்சம் டென்ஷன் பண்ணி உடம்பை அலட்டி கொள்ள வேணாம்! ரிலாக்ஸாக இருங்க! 

உதயன், டேப் லெட் டாக்டர்! 

டாக்டர், அவங்க இப்போ என்ன சாப்பிட்டு கொண்டு இருக்காங்களோ அதையே கண்டின்யூ பண்ண சொல்லுங்க! 

ஓகே டாக்டர்! 

டாக்டர் நிதின் பக்கம் திரும்பி மிஸ்டர் நிதின் நான் இப்போ கிளம்பலாமா! 

ம்ம் என ஒற்றை பதில் அளித்தான். 

அவர் சரி என கிளம்பி விட்டார். 

கலை வாணி அவனை ஆச்சரியமாக பார்த்தார். 

வசந்தன், ஹே இப்போதைக்கு இதை குடி! சக்கரை போட்டு இருக்கு! 

மிதுன், அம்மாச்சி அது வேணாம்! நீங்க டைரி மில்க் சாப்பிடுங்க! இந்தாங்க! 

கலை கொண்டையை போட்டு கொண்டே வேணாம் வேணாம் மிதுன் செல்லம் உனக்கு இன்னிக்கி என்ன வேணும்! தாத்தாவை கறி எடுக்க போக சொல்றேன்! ஈரல், நெராலி, நல்லி எல்லாமே செய்கிறேன்! சாப்பிடலாம்! நான் உனக்கும் உன்னோட ஃப்ரெண்ட் பையனுக்கு நிதின் உனக்கு! 

ம்ம் வேணும்! 

கலை, என்னங்க சீக்கிரம் போங்க இப்போ இட்லி ஊற்றி குடல் குழம்பு செய்ய போறேன்! போங்க! என தள்ளினாள். 

உதயன் தன் தந்தையை பார்த்தான். 

வசந்தன் அசட்டு புன்னகை சிந்தி கொண்டே உனக்கு தான் சமைக்கிரா! இப்போ பாரு இலை கூட வாங்கிட்டு வர சொல்லுவா! உனக்கு பிடிக்குமே!. 

என்னங்க வாங்க! 

இதோ வரேன்!.. 

உதயன் ஒளிந்து கொண்டான். கலை காசு மற்றும் சட்டை இரண்டையும் எடுத்து கொண்டு சீக்கிரம் போயிட்டு வாங்க! 

சரி பறக்காத! 

கலை, “ஹான் வரும் போது தலைவாழை இலை ரெண்டு நாளைக்கு ஆகுற மாதிரி வாங்கிட்டு வாங்க!”

வசந்தன், இலைல மிதுன் குட்டிக்கு சாப்பிட தெரியாது! அவனே பாரின்ல பிறந்து இருக்கான்! எனக்கு வட்டலில் ( தட்டு) போடு  

கலை , சொல்றத மட்டும் கேளுங்க என்னை கேள்வி கேட்க கூடாது! போங்க! போங்க! மிதுன் செல்லம் தாத்தாவை கூட்டிட்டு போயிட்டு வா! 

ம்ம் அம்மாச்சி பாய்! உங்களுக்கு ஸ்நாக்ஸ் வேணுமா! 

இளம் ஆட்டு கறி போதும் அழகா! பாம்பு கறி!. அது விற்க மாட்டாங்க! 

மிதுன் , அம்மாச்சி! அது அப்படி இல்ல அய்யோ எப்படி உங்களுக்கு புரிய வைக்க! தாத்தா! அம்மாச்சி பாருங்க! 

வசந்தன், அவளே படிக்காதவகள்! நீ வாடா தங்கம், நிதின் நீங்க!  

நானும்!  என இருவரும் அவர்களுடன் சென்றனர். 

உதயன் கண்ணை மூடி கொண்டான். அவன் கண்களில் ஆனந்த கண்ணீர்! 

கலை வாணி கறி சமைக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார் செய்ய சமையலறைக்குள் சென்றாள். 

உதயன் மனதில் உள்ளுக்குள் பயம் இருந்தாலும் அதை வெளி காட்டி கொள்ளாமல் தன் அம்மாவை பார்க்க சென்றான். 

கலை வாணி பாத்திரத்தில் தேவையான பொருட்கள் எடுத்து போட்டு கொண்டே கத்தியை கழுவி துடைத்து கொண்டு இருக்க உதயன் பின்னால் இருந்து தன் தாயை கட்டி கொண்டான். 

அவன் கண்ணில் உள்ள நீர் அவரின் கழுத்து பகுதியில் நனைய ஆரம்பித்தது. 

டேய் ராஸ்கல்! 

“மா! பிளீஸ் மா! என்னை மன்னித்து விடுங்கள்! பிளீஸ் மா! என அவரின் முன்னால் திரும்பி மா எவ்ளோ அடி வேணாலும் அடிங்க மா! பிளீஸ் மா பேசாமல் இருக்காதீங்க மா!”

கலை ஒரு எழன புன்னகையை சிந்தி கொண்டே நீ என்ன பண்ணாலும் என்னோட மன்னிப்பு உனக்கு ஒரு போதும்!. .உன்னை மன்னிக்க நான் யாரு! 

உதயன், மா! தப்பு தான் மா! பிளீஸ் மா! எதோ !. 

“பேசாத நீ பேசும் போது எனக்கு அப்படியே சாகர மாதிரி இருக்கு! என்னோட பிரசவ நேரத்தில் ஆறு கிலோ சுமந்து கொண்டு இருந்தேன். என்னோட மொத்த பலத்தையும் நீயும்  உன் கூட ஒன்றாக பிறந்து புள்ளையும் எடுத்து கொண்டீர்கள்! எல்லாரும் என்னை ஆச்சரியமா பார்ப்பாங்க! ஆறு கிலோ எப்டி சுமக்கிறாள்? அப்டின்னு அந்த பேச்சு கண்ணு எல்லாம் என் பொண்ணு பிள்ளைய தூக்கிட்டு போயிடுச்சு! பிறந்து மூணு நாளில் அவள் செத்து போயிட்டா! என்னால் அதை தாங்க முடியல ஆனால் உன்னை நான் எவ்ளோ பாசமா வளர்த்தேன் தெரியுமா! உனக்கு தெரியும் டா! நீ என்னை நம்ப வைத்து கழுத்தை அறுத்தவன் தானே!”

உதயன் பிளீஸ் மா! இனி நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்! மா! பிளீஸ்! தாரா கெட்ட பொண்ணு இல்ல நல்ல பொன்னு தான்! 

கலை பற்களை கடித்து கொண்டே உன்னை எதுக்கு தெரியுமா விட்டு வச்சு இருக்கேன்! எல்லாம் அந்த மனுசனுக்காக மட்டும் தான்! மற்ற படி என்னைக்கோ நீ என் மனதில் இருந்து இதோ அந்த குப்பைக்கு போயிட்ட! எப்போ வேணாலும் வா! போ! உன்னை எதுக்கு வந்த? ஏன் வந்த அப்டின்னு கேட்க மாட்டேன்! எனக்கு மூணு பொண்ணுங்க ஒருத்தி பிறந்ததும் மூணு நாளில் செத்து போயிட்டா! மீதி ரெண்டு பேரு!. 

உதயன், என்னை மட்டும் எதுக்கு மா வெறுக்குறீங்க! மை விழி கூட தான் காதல் கல்யாணம் செய்து கொண்டாள். 

கலை அவன் கன்னத்தில் ஒரு அரை விட்டு முறைத்து பார்த்தாள். 

உதயன், மா என கையை பிடித்தான். 

விடு டா! நாயே! 

உதயன் எதையும் பெரிதாக எடுத்து கொள்ளாமல் மீண்டும் அவர் அருகில் வந்து அவரின் கன்னத்தில் முத்தமிட்டு கையை பிடித்து மா! மா! பிளீஸ் மா! என கெஞ்ச ஆரம்பித்தான். 

கலைக்கி அவன் பக்கம் உள்ள பாசம் கொஞ்சம் எட்டி பார்க்க தான் செய்தது. ஆனாலும் மண மேடையில் கலை வாணியை சித்தார்த்தின் ஆட்கள் பிடித்து நிறுத்தியது நினைவுக்கு வந்தது. 

கலை அவனை தள்ளி விட்டார். 

உதயன் அப்பொழுதும் விடாமல் அவரை தூக்கி கொண்டு அருகில் உள்ள சோபாவில அமர வைத்து மடியில் வலுகட்டாயனாக படுத்து கொண்டான். 

கலை மனசு மாறுவாரா? 

அது நடக்காத ஒன்று!. 

இங்கே உமா சூர்யாவை ஊருக்கு வரும் படி அழைத்து இருந்தார். அவன் வேலை பலுவில் முடியாது என்று கூற!. 

உமா அவனை திட்டி விட்டு சக்தி மற்றும் மகி, மிதுன் மூவரையும் விட்டு செல்லும் படி கூறினார். குல தெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும்! 

அதனால் சூர்யா ஆபீஸில் புதிய மாற்றங்கள் செயல் படுத்த மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்தான். 

மகி கூட அதில் இருந்தாள். இது தேவ் கார்ப்பரேஷனில் நடை பெறுகிறது. அப்பொழுது தான் அந்த சம்பவமும் நடை பெற்றது. 

சூர்யா, உங்க எல்லாரையும் நான் ரெண்டு குழுவாக பிரித்து இருக்கேன்! ஒன் வீக் நைட் ஷிஃப்ட் பார்க்கும் எல்லோரும் ஒர்க் ஃப்ரம் ஹோம் டே ஷிஃப்ட் பார்க்கிறவங்க ஆபீஸ் வரனும்! அதே போல் உங்களோட லாக் இன் அவுட் எல்லாமே மானிட்டரிங்க பண்ண எல்லாரும் லேப் டாப்ல மீட்டிங் ல இருக்கணும்! கூடவே உங்களோட ஒர்கிங் பெர்பார்ம் எல்லாமே ஒரு டெக்னிக்கல் டீம் நோட் பண்ணிக்கிட்டே இருக்கும்! இதில் எதுவும் தவறு நடந்து டைம் இழுத்து கொண்டு போவது போல இருந்தால் எனக்கு கம்பிளைன்ட் வந்தால் நீங்க ஆபீஸ விட்டு போக வேண்டியது தான்! 

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். என்ன டா இப்படி ஒரு நிலை!. 

சூர்யா, வீக் ஆஃப் ல வேலை செய்பவர்களுக்கு, ஒர்க் பெர்பார்ம் எல்லாம் பார்த்து நாலு கேட்டகிரில அப்ரைசல் கொடுக்க போறோம்! P1,P2,P3,P4 கேட்டகிரி இருக்கு அதை பற்றி முழு விவரம் என பேசினான். 

அதை கேட்டதும் அனைவரும் கண்களில் ஒளி மின்ன பார்த்து கொண்டு இருந்தனர். 

அந்த நேரம் மகி வயிற்றை பிடித்து கொண்டு அமர்ந்து இருந்தாள். 

என்னங்க! 

என்னங்க!..

சூர்யா திரும்பி பார்த்து விட்டு என்ன ஆச்சு!. 

என்னங்க ஸ்டோமக் பெயினா இருக்கு! என அழுது கொண்டே கூறினாள். 

சூர்யா பதட்டத்துடன் சொன்னது நினைவில் இருக்கட்டும் அவங்கவங்க வேலையை பாருங்க என அவளை தூக்கி கொண்டு ஓடினான். 

5 மாசம் ஆகுது வயிறு வலிக்குது அப்டின்னு சொல்ற என்ன டி ஆச்சு! என கேட்டு கொண்டே சென்றான். 

இங்கே ஹாஸ்பிடலில்….? 

தொடரும்.. 

Episode 314

சூர்யா பதட்டத்துடன் சொன்னது நினைவில் இருக்கட்டும் அவங்கவங்க வேலையை பாருங்க  டிஸ்மிஸ் என கத்தி விட்டு அவளை தூக்கி கொண்டே ஓடினான். 

5 மாசம் ஆகுது வயிறு வலிக்குது அப்டின்னு சொல்ற என்ன டி ஆச்சு! என கேட்டு கொண்டே சென்றான். 

மகி உதட்டை கடித்து மடக்கி கொண்டே அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். சூர்யா வேக வேகமாக ஹாஸ்பிடல் அழைத்து சென்றான். 

சூரியா அவளின் கையை பிடித்து கொண்டு மகி எனக்கு பாப்பா வேணும்! நிறைய ஆசை வச்சு இருந்தேன்! என்ன டி இப்படி சொல்ற? 

மகி, அந்த மாதிரி வலி இல்லங்க இ!. இது!.  இது வேற மாதிரி இருக்கு! என கண்ணை மூடி கொண்டு கூறினாள். 

டாக்டர் கேசுவாலிட்டில் உடனே அவளை அட்மிட் செய்து செக் செய்து ஸ்கேன் மற்றும் குழந்தையின் அசைவு என அனைத்தையும் சரி பார்க்க ஆரம்பித்தனர். 

சூர்யா துடித்து கொண்டே வெளியே நடுங்கி போய் அமர்ந்து இருந்தான். விஷயம் தெரிந்து அனைவரும் வர ஆரம்பித்தனர். 

கார்த்திக், ராம், கீதா, ஆதி, ஜெய், கீர்த்தனா, மை விழி, வந்திருக்க இந்த விஷயம் spr க்கு தெரிய அவனால் ஒரு வேலையில் கூட கவனம் செலுத்த முடிய வில்லை. அனைத்து வேலையும் தூக்கி போட்டு விட்டு அவளை பார்க்க வந்து விட்டான். 

கீதா சூர்யாவின் அருகில் அமர்ந்து கொண்டு ஆறுதல் வார்த்தை பேசி கொண்டு இருக்க டாக்டர் வெளியே வந்தார். அங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்து விட்டு இது ஹாஸ்பிடல் எதுக்கு இத்தனை பேர் இருக்கீங்க என வாயை திறக்க spr அந்த மருத்துவரை முறைத்தான். 

எப்டி இருக்கா!. 

டாக்டர், மிஸ்டர் சூர்ய தேவ்! 

ஜெய், அவர் தான் என கையை நீட்டினான். 

டாக்டர், சார் பேபி! பேபிக்கி ஒன்னும் இல்ல! உங்க மனைவி!  

என்ன டாக்டர்!  

அவரோ சார் கொஞ்சம் கவனமாக பார்த்து கொள்ளுங்கள்! குழந்தைக்கு தண்ணி பத்தள ரொம்ப டிரை ஆகி போச்சு இன்னும் கொஞ்சம் விட்டு இருந்தால் கிரிட்டிகள் தான்! அவங்க வீக்கா இருக்காங்க! இது பத்தாது! இன்னும் நல்லா சாப்பிடணும் தூக்கம் பத்தல, பிளாட் கம்மியா இருக்கு, கூடவே இப்போ தான் யூரின் டெஸ்ட் எடுத்து இருக்கோம்! என அடுக்கினார். 

சூர்யா, இப்போ எப்டி இருக்காங்க! 

அவர் மூணு நாள் அட்மிட்ல இருக்கட்டும் ட்றிப்ஸ் போயிட்டே இருக்கணும்! அதுக்கு நடுவில் கோல்ட், காப் வரும் மற்ற படி ஒகே!  என சொல்லி விட்டு சென்றார். 

Spr, அவளை கொண்டு போய்  வசந்தன் வீட்டில் விட்டு விடு! உன்னால் தான்! அவள் இந்த நிலையில் இருக்கா! 

ஜெய், “யாரு டா நீ! உன்னை யார் இங்கே வர சொன்னது? உனக்கும் அவளுக்கு என்ன சம்மந்தம்! மகி அவனோட பொண்டாட்டி! நீ மூடிட்டு கிளம்பு!”

Spr அவன் பேசுவதை கண்டு கொள்ளாமல் “சூர்யா அவளுக்கு எதுவும் ஆச்சு! உன்னை….! இது எச்சரிக்கை! அவளோட சந்தோசம் எனக்கு ரொம்ப முக்கியம்!” என சொல்லி விட்டு சென்று விட்டான். 

அவன் வெளியே வர வேகமாக மாயா, வெங்கட், வருண், ஶ்ரீ மதி நால்வரும் வந்தனர். 

Spr மாயாவை பார்க்க அவரோ அவனை கண்டு கொள்ளாமல் உள்ளே சென்றார். 

சூர்யா! என்ன ஆச்சு அவளுக்கு என கண்களில் ஒரு நிமிடம் நீர் கோர்க்க வந்து நின்றார். 

அறையின் வெளியே அனைவரும். நிற்க ஶ்ரீ மதி, “அண்ணா! மகிக்கு என்ன ஆச்சு நான் உள்ளே போய் பார்க்கலாமா!”

கார்த்திக், பேபிக்கு வாட்டர் கம்மியா இருக்கு! அதனால் பெயின் வந்து விட்டது அவன் ஹாஸ்பிடல் கூட்டி வந்து விட்டான். இப்போ ஓகே மா! 

மாயா, இந்த பொண்ணு இவள் இப்படி தான்! மிதுன் வயிற்றில் இருக்கும் போது ரெண்டு தடவை இப்படி ஆகி இருக்கு சரியா சாப்பிட மாட்டாள். எனக்கு விஷயம் கேள்வி பட்டு கையும் ஓடலை காலும் ஓடலை! 

சூர்யா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். கீதா, டேய் அவள் நல்லா இருக்கா! நீ இப்படி இருக்காத சூர்யா! 

சூர்யா, பாரு டி எல்லாரும் முன்னாடியும் என்னை எந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டாள். என உதட்டை கடித்து கொண்டான். 

நர்ஸ் வெளியே வந்தார். 

ராம், நர்ஸ் உள்ளே போய் பார்க்கலாமா! 

இத்தனை பேரா!  

இல்ல மா பார்த்ததும் கிளம்பி விடுகிறோம்! என சொல்லி விட்டு இருவர் இருவராக சென்றனர். 

கீதா, சூர்யா முதலில் நீ போய் பாரு டா! 

இல்ல நீங்க போங்க! அண்ட் மை விழி!..

மாமா! 

வீட்டில் என ஆரம்பிக்க மாயா, சூரியா நான் பார்த்து கொள்கிறேன்! வீட்டில் இருந்து யாரையும் கூப்பிடாத பா! 

சூர்யா அவரை பார்க்க மாயா, “நான் கனடா கிளம்ப போறேன்! அவள், மிதுன்  இல்லாத வீடு! எங்களுக்கு ரொம்ப தனியா இருப்பதை போல இருக்கும்! பிளீஸ் சூர்யா!”

வருண், மாமா!  என்ன சொல்றீங்க! 

மை விழி, “மாமா இப்போ இருக்கும் சூழ்நிலைக்கு அங்கே வீட்டில் சொல்ல வேணாம் உமா அத்தைக்கு தெரிந்தால் பிரச்னை அதை விட அப்பா, அம்மாவுக்கு இன்னும் பிரச்னை! விடுங்க நடுவில் நான் வரேன்! ஶ்ரீ மதி இருக்கா!”

ம்ம் உங்க விருப்பம் என சொல்லி கொண்டே எழுந்து சென்றான். 

கார்த்திக், மை விழி, ராம், கீதா என அனைவரும் சென்று பார்த்தனர். ஜெய் ஒரு முறை பார்த்தான். வருண், வெங்கட், ஶ்ரீ மதி, மாயா என அனைவரும் சென்றனர் சூர்யா மட்டும் வர வில்லை. 

ஶ்ரீ மதி,  மகி கவனம் வேணாமா! தண்ணி நிறைய குடிக்கணும்! இது தேர்ட் பேபி! இப்படி இருக்கலாமா! 

மகி, அது கொஞ்சம் வேலை! அதான்! நீ எப்படி இருக்க? அண்ணா! டாடி எப்படி இருக்கீங்க! 

வருண், நாங்க நல்லா இருக்கோம்! என வருண் அவளின் அருகில் அமர்ந்து கொண்டான். 

மகி தன் அக்காவை பார்த்தாள். மை விழி அருகில் நின்று கொண்டு இருக்க மகி, சரி ஶ்ரீ மதி நான் நல்லா இருக்கேன்! நீங்க!  

மாயா அவளுக்கு ஜுஸ் எடுத்து கொண்டு வந்து “என்ன எங்களை கிளம்ப சொல்ற அப்படி தானே!” என அவளின் முன் நீட்டினார். 

மகி தலையை குனிந்து கொண்டே இருந்தாள். 

மை விழி, மகி நாங்க கிளம்புகிரோம்! 

மகி அவளை கேள்வியாக பார்த்தாள். 

மாயா, உன்னை நான் தான் பார்த்து கொள்ள போகிறேன்! 

மகி தரையை பார்த்து கொண்டே உங்களுக்கு எதுக்கு சிரமம்! நான் தனியாவே இருந்து கொள்வேன்! அண்ணா நீங்க கிளம்புங்க, டாடி!.  நீங்களும் தான்! 

மாயா, மகி! அவ்ளோ தானா! உன்னை நான் பெற்று மட்டும் தான் எடுக்க வில்லை. உன் உறவை தான் என் பையனுக்கு கட்டி இருக்கேன்! நீ அப்படியாவது என் பெண்ணாக வர வேணும் என்று எனக்கு தவம் டி! ஆனால்! என அவர் கண்கள் கலங்கியது. 

மை விழி கடுப்புடன் இந்த காட்சிகளை பார்த்து கொண்டு இருந்தாள். இவ்வளவு சீனு ஆகாது டா சாமி என நினைத்து கொண்டாள். 

கார்த்திக், உள்ளுக்குள் யாருக்கோ பற்றி எரியுதே!  

மை விழி, மூடிட்டு நில்லு! 

உனக்கு பொறாமை டி! .

மை விழி, “எனக்கு என்ன தோணுதோ அதை டப்புன்னு சொல்லி விடுவேன் செய்து காட்டுவேன். ஒருத்தர் கேரிங் பாசம் பருப்பு குழம்பு அப்டின்னு எனக்கு கிடைக்க தேவை இல்லை அதெல்லாம் பிடிக்காது. முக்கியமா இந்த டிராமா, லவ்சீனு, பில்ட் அப், கவிதை, இதெல்லாம் எரிச்சலா இருக்கும்! ஆனால் இவளுக்கு மட்டும் எங்கே இருந்து கூட்டம் சேருதுன்னு தெரியல!”

கார்த்திக், “நீ எக்ஸ்பிரஸ் பண்ணாத எல்லாத்தையும் மகி எக்ஸ்பிரஸ் பண்றா! அதையும் மற்றவர்கள் கஷ்ட படாத வண்ணம் பண்றா! வேற ஒன்னும் இல்ல!”

மை விழி, “இந்த சீன் எல்லாம் சுட்டு போட்டாலும் எனக்கு வராது! வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான்! எப்போவும்!”

கார்த்திக், ம்ம் அது எனக்கு பிடிச்சு இருக்கு! 

அடேங்கப்பா! அப்படியே உள்ளே தண்டர் பாயிது டா! 

வீட்டுக்கு வா! இன்னும் பாயும்!  

மை விழி, போதும் என முகத்தை திருப்பி கொண்டு அந்த சீரியல் காட்சிகளை பார்க்க ஆரம்பித்தாள். 

மகி, மா அப் அப்படி இல்ல!. என கண்களில் கண்ணீர் முட்டி கொண்டது மாயா அவளுக்கு அருகில் வந்து அவளின் காலுக்கு முத்தமிட்டாள். 

மா! என காலை இழுக்க முயற்சி செய்தாள். 

மை விழி விழி பிதுங்கி பார்த்து கொண்டு நின்றாள். 

கார்த்திக்,உன்னோட அம்மாவின் அன்பு அரவணைப்பு முழுமையா கிடைத்து இருக்கு! ஆனால் மகிக்கி அப்படி இல்ல! அதனால் தான் இவங்களுக்குள் இப்படி ஒரு பாண்டிங்! 

மை விழி, உன் கிட்ட என்ன கிடைத்தது? 

கார்த்திக் மனதில் அய்யோ போச்சே! என படபடத்தவன் இல்ல டி! அவள் அவள் தான் என்னை லவ் பண்ணவே இல்லையே! 

மை விழி, சரி அப்போ அவளை நீ எதுக்கு லவ் பண்ண உனக்கு தான் பாக்யா அத்தை, மதி மாமா, கூடவே கனி போல தங்கை எல்லாரும் இருக்கும் போது என்ன** க்கு டா அவளை லவ் பண்ண? 

கார்த்திக் வசமாக மாட்டி கொண்டான். அய்யோ என்ன சொல்வேன்! முறைக்கிரா! முறைக்கிறா! பயங்கரமா முறைக்குறா! முருகா என்னை காப்பாற்று! என நினைக்க

மை விழி, சொல்லு டா! இதுக்கு மட்டும் பதில் வரல! இந்த வருசத்துக்கு முழுசும் நீ தான் சமைக்கனும்! மூணு வேலையும்! 

கார்த்திக், அப்பாடா இப்போ கூட நான் தான் சமைக்கிறேன்! என வாய் மொழியாக சத்தமாக கூறி விட்டான். அவ்வளவு தான் அனைவரும் அவர்களை தான் பார்த்தனர். 

அப்பொழுது வெளியே இருந்து மான் விழி என குரல் கேட்டது. 

வந்த நபரை பார்த்து மை விழிக்கு கோபம் தலைக்கு ஏறியது. அத்தயா! என அழைத்து கொண்டே உள்ளே வந்தாள். 

வேறு யார் தாரா தான்! 

மான் விழி எப்டி இருக்கீங்க என் மூச்சு வாங்கி கொண்டே வந்து நின்றாள். 

அண்ணி! எனக்கு ஒன்னும் இல்ல நான் நல்லா இருக்கேன்! 

மகி!   என கடுமையான குரல் வேறு யார்! மை விழி தான்! 

சொல்லு கா! .

நாங்க கிளம்புகிரோம்! பாப்பாகள் கனி வீட்டில் இருக்காங்க டைம் ஆகுது ஒழுங்கா எல்லாமே சாப்பிடும் வேலையா பாரு! மாமாவை தொல்லை பண்ணிட்டு இருக்காத! என கூறினாள். 

தாராவின் பார்வை மை விழி மீது செல்ல அவளோ ஶ்ரீ அவளை பார்த்துக்க! வருண் கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள் என கிளம்பினாள். 

கார்த்திக் தாராவை பார்த்து விட்டு அப்படியே நிற்க அண்ணா!  

கார்த்திக் என ஒரு சத்தம் இதோ வரேன்! என சொல்லி கொண்டே அவன் சரி பாப்பா! என கையை ஆட்டி விட்டு கிளம்பி விட்டான். 

தாரா அவளின் அருகில் வந்து என்ன ஆச்சி? 

மான் விழி கொஞ்சம் நெளிந்து கொண்டு ஒன்னும் இல்ல அண்ணி! நான் நல்லா தான் இருக்கேன்! ஆமா உங்களுக்கு யார் சொன்னது? 

எனக்கு குரு சொன்னான்! 

குரு பெயரை கேட்டதும் மகி முகம் மாறியது. மகி அதை காட்டி கொள்ளாமல் அண்ணா! எங்கே? 

அவரு எங்க வீட்டுக்கு போயிருக்காரு! 

வீட்டில் இருக்கானா! என்னை பார்க்க வர வில்லையா! 

தாரா, சென்னையில் இருக்காரு! அத்தை மாமா மிதுன் எல்லாரையும் பார்க்க போயிருக்கார்!  

மகி, ஓ அது உங்க வீடா? 

ம்ம் ஆமா! அது எங்க வீடு என சிரித்து கொண்டே கூறினாள். .

அந்த நேரம்  வேகமாக உள்ளே வந்த  மை விழி தாராவை முறைத்து விட்டு ஹே மகி!  

தாரா ஒரு நிமிடம் பயந்து அதன் பின் அவளை பார்த்தாள். 

சொல்லு கா என இருவரையும் மாறி மாறி பார்த்தாள். 

மை விழி, அவன்( உதயன்) இப்போ எங்கே இருக்கான்னு எனக்கு தெரியும்! 

மகி, அவன் உன் கிட்ட  சொல்லிட்டு தான் போனானா! 

ம்ம் கொட்டியவள். இதை அவன் கிட்ட சொல்லி அது அப்பாவுக்கு தெரிந்தால் அவர் வருத்த படுவாரு கொஞ்சம் சொல்லி அனுப்பு என தாராவை முறைத்து விட்டு கிளம்பி விட்டாள். 

மாயா, சரி ஶ்ரீ மதி! நீயும் வருண் கூடவே கிளம்பு.. 

தாராவுக்கு அப்பொழுது தான் ஶ்ரீ மதி அங்கே இருப்பது நினைவுக்கு வந்தது. 

ஶ்ரீ மதி அவளிடம் பேச வில்லை. என்ன தான் இருந்தாலும் தன் அத்தை மகனை தன்னிடம்  இருந்து பிரித்து இருக்கிறாள். அதை விட நடிகை தலை கணம் கொஞ்சம் இருக்குமே! 

தாரா எழுந்து ஶ்ரீ மதி என அருகில் வந்தாள். 

ம்ம் சொல்லுங்க என புன்னகைத்தாள். 

தாரா அவளை கட்டி கொண்டு சாரி! என்னை மன்னித்து விடுங்கள்! 

ஶ்ரீ மதி இதை எதிர் பார்க்க வில்லை. இட்ஸ் ஓகே விடுங்க! என சிரித்தாள். 

தாரா, “அவர் ஒரு நாளில் ஒரு தடவையாவது மான் விழி, மை விழி, நித்யா, அண்ட் உங்க பேரை சொல்லாமல் இருக்கவே மாட்டார். ஆயிரம் தடவை உங்கள் கிட்ட சாரி சொல்லனும் அப்டின்னு சொல்லிட்டே இருப்பாரு!”

ஶ்ரீ மதி புன்னகையுடன் தெரியும்! எங்க மாமா அப்படி தான்!

வருண் அதற்கு மேல் பொறாமை தாங்காமல் ஶ்ரீ போலாம்! தாரு பாய்! என சொல்லி விட்டு மகி அருகில் வந்தான். 

அண்ணா!

மகி மாமா ரொம்ப வருத்தத்தில் இருக்காரு அதை விட உன் மேல் கோபத்தில் இருக்காரு! இப்படி கேர்லஸ்ஸா இருக்காத! 

ம்ம் சரி! 

ஶ்ரீ மதி, மகி நாளைக்கு உனக்கு சாப்பிட எடுத்து வருகிறோம்! 

ம்ம்! 

அவர்கள் சென்றதும் மகி, அண்ணி! 

ம்ம் சொல்லுங்க மான் விழி?. 

மை விழி அவள் அப்படி தான் நீங்க எதுவும் நினைத்து கொள்ள வேணாம்! 

தாரா கொஞ்சம் சிரித்தாள். 

மேலும் மகி, அண்ணி! இங்கே எனக்கு இப்படி இதை பற்றி அவன் கிட்ட சொல்லாதீங்க! மை விழி சொல்லிட்டு போயிருக்கா! வேற ஒன்னும் இல்ல! 

ம்ம் சரி நான் சொல்லல!  

அந்த நேரம் ஆதி வந்தான். மகி! என்ன டி ஆச்சு! 

தாரா அவன் உள்ளே வந்ததும் ஓரமாக சென்று அவள் அருகில் நின்று கொண்டாள். 

ம்ம் ஒன்னும் இல்ல டா! 

ஆதி, மகி உன் மீசை ரொம்ப கோவமா இருக்காரு! 

மகி என்ன டா சொல்ற? 

ம்ம் ஆமா என அருகில் அமர்ந்தான். 

மகி, டேய் ஜனனி கிட்ட எதையும் சொல்லி வைக்காத அத்தைக்கு தெரிந்து விடும்! 

ம்ம் சரி சரி! என அவன் பார்வை தாரா பக்கம் சென்றது. 

ஹே நீ நடிச்சிட்டு இருக்கியா! ஹீரோயின் இருக்காங்க! தாரா!..

மகி, ஹே அவங்க என்னோட அண்ணி டா! அண்ணி வாங்க இது என்னோட ப்ரெண்ட் ஆதி! 

ஹே நிஜமாவே ஹீரோயின் தான்! உதயன்  அண்ணா!..

தாரா, ஹலோ என கை நீட்டினாள். 

ஆதி, அய்யோ நிஜமாவே ஹீரோயின்! சூப்பர் என கையை நீட்டினான்.

தாரா, ஹாய் ஐம் தாரா!  

உங்களை பற்றி சொல்லவே தேவையில்லை! எங்களுக்கு தெரியும்! உங்க (a+b) படம் ஒர்த்!. 

தேங்க்ஸ்! 

ஆதி, ஆனால் எப்டி உதயன்! இது எங்கே ஒர்க் அவுட் ஆச்சு? 

ஆனாலும் அமுக்குளி கள்ளன் தான் உங்க அண்ணன்! குடும்பம் மொத்தமும் இப்படி தானா! 

டேய் வாய அடக்கு!  ஓவரா பேசுற!  

தாத்தா, ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் போல! 

ஆதி,ஆமா மேம் நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல், காலேஜ் மேட்!. 

மகி, இல்ல காலேஜ் மேட் தான்!  

போடி! என சொல்லி விட்டு கொஞ்சம் நேரம் பேசி விட்டு கிளம்பினான். 

அதன் பின் சிறிது நேரம் கழித்து தாரா கிளம்பினாள். 

மாயா, என்னங்க நீங்களும் கிளம்புங்க என வெங்கட்டையும் அனுப்பி வைத்தார். 

மகி, மா!  

மாயா, என்ன ஆச்சு மகி! டிரிப்ஸ் முடிஞ்சதா! 

இல்ல! ஓகே தான்! இங்கே என அவள் பார்வை அலை பாய்ந்தது. 

மாயா, என்ன மகி! 

இல்ல அவர் அவர் இன்னும் என்னை பார்க்க வரவே இல்ல! இங்கே இருக்காரா! இல்ல ஆபீஸ் போயிட்டாரா! 

மாயா, சண்டையா! 

இல்ல ஆனால் என்னன்னு தெரியல எதோ கோபமா இருக்காரு! இங்கே ஹாஸ்பிடல் வந்தது பிடிக்கல போல! 

மாயா, சரி இரு டா நான் போய் கூட்டி வரேன்! 

வேணாம் மா! அவருக்கு எப்போ தோணுதோ அப்போ வரட்டும்! என எதுவும் பேசாமல் படுத்து கொண்டாள். 

மாயா அவளிடம் சொல்லாமல் மெதுவாக வெளியே சென்றார். ஜெய் சூர்யாவின் அருகில் அமர்ந்து சமாதானம் செய்து கொண்டு இருந்தான். 

சூர்யா எதையும் பேசவில்லை. மாயா அருகில் வந்து நின்றார். 

அத்தை! 

சூர்யா, எதுவும் வேணுமா சொல்லுங்க!  

மாயா, என்ன ஆச்சு? 

ஜெய் கோபத்துடன் என்ன ஆகனும்! எல்லாம் அவனால்! அவன் எதுக்கு மகிய பார்க்க வரான்! நீங்க சொல்ல மாட்டீங்களா! முதலில் அவன் யாரு! 

மாயா,என்ன சொன்னான்! 

கம்முன்னு இரு ஜெய்! என் தப்பு தான்! என பேச விடாமல் தடுத்தான். 

மாயா, சரி உங்களை அவள் பார்க்க தவிக்கிரா! போங்க சூர்யா! 

ஜெய், டேய் போடா கிட்ட தட்ட நாலு மணி நேரம் ஆக போகுது! போடா பாவம் டா அவள்! 

சூர்யா எதுவும் பேசாமல் எழுந்து சென்றான். 

ஜெய், டேய் திட்டி விடாதே! என சொல்லி அனுப்பினான். 

மகி உள்ளே எழுந்து நிற்க முயற்சி செய்தாள். 

ஹே என்ன பண்ற? என கடுமையான முகத்துடன் உள்ளே வந்தான். 

ரெஸ்ட் ரூம் போகனும்! 

நீ நகராத என சொல்லி கொண்டே நர்சை அழைத்தான். 

அதன் பின் மாயாவை உள்ளே அழைத்தான். 

மகி அவனையே பார்த்தாள். எதுக்கு கோபமா இருக்காரு! என நினைத்து கொண்டே சென்று வந்தாள். 

மாயா இருவருக்கும் தனிமை கொடுக்க எண்ணி ஜெய் கிட்ட பேச சென்று விட்டார். 

சூர்யா அவள் முகத்தை பார்ப்பதை தவிர்த்தான். 

எதுவும் வேணும் என்றால் சொல்லு! என அவன் திரும்பினான். 

மகி, ஒரு நிமிடம் இங்கே வாங்க!

என்ன?  

மகி அவன் கையை பிடித்தாள். 

சூர்யா…? 

தொடரும்.. 

Episode 315

சூர்யா அவள் முகத்தை பார்ப்பதை தவிர்த்தான். 

எதுவும் வேணும் என்றால் சொல்லு! என அவன் திரும்பினான். 

மகி, ஒரு நிமிடம் இங்கே வாங்க!

என்ன?  

மகி அவன் கையை பிடித்தாள்! 

சூர்யாவுக்கு கோபம் தலைக்கேறியது. ஆனால் அவளின் நிலை கருதி எதுவும் பேசாமல் அப்படியே நின்றான்.

மகி அவனுடைய முகத்தை பார்த்தாள். என்னங்க!  

சரியாக அந்த நேரம் அவனுக்கு போன் வந்தது. கடுமையான முகத்துடன் போனை அட்டேன் செய்தான். 

ஹலோ! 

டேய் சூர்யா! 

அவனுடைய குரல் கொஞ்சம் ஆறுதல் கொடுக்க அவளின் கையை விட்டு போனை எடுத்து கொண்டு வெளியே சென்றான்.  

ஹலோ சொல்லு டா! என்ன பண்ற? என சூர்யா கேட்டான். 

ஒன்னும் இல்ல மச்சி சும்மா தான் உன் கிட்ட பேசணும் போல இருந்தது. 

சூர்யா, அப்புறம் கண்ணுக்குட்டி எப்டி இருக்கா! 

என் பொண்ணுக்கு என்ன நல்லா இருக்கா! உன் உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் மச்சி! கொஞ்சம் தண்ணி!. 

சூர்யா, இன்பா நான் இப்போ ஹாஸ்பிடலில் இருக்கேன் டா! எதுவும் முக்கியமான விஷயமா! 

இன்பா திடுக்கிட்டு என்ன ஆச்சு டா! 

சூர்யா, வேற என்ன எல்லாம் அவளால்! சரியா சாப்பிடாமல் தண்ணி குடிக்காமல் குழந்தைக்கு தண்ணி குறைந்து போய் இப்போ ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி இருக்கோம்! 

இன்பா கொஞ்சம் திடுக்கிட்டு நான் வரவா சூர்யா! 

இல்ல டா நீயே கல்யாண வேலையில் பிசியா இருப்ப நீ பாரு மச்சி ரெண்டு நாள் தான் முடித்து விட்டு அப்புறம் அவளை எங்க வீட்டில் விட போறேன்! என சூர்யா கூறினான். 

அப்டியா சரி மச்சி அப்போ கொஞ்சம் மகியை பார்த்துக்க! என சொல்லி இன்பா போனை வைத்தான். 

இங்கே உதயன் தன் அன்னை கலை வாணியை பொழுதும் சுற்றி வந்து எது எதோ செய்து கொஞ்சம் பேச வைத்தான். கலை வசந்தனுக்காக பேசினார். மற்ற படி எதுவும் இல்லை. 

உதயன்  ஸ்கூட்டி எடுத்து கொண்டு நிதின் குட்டி வரயா மாமா கூட அப்படியே ஒரு ரவுண்ட் போலாம்! 

மிதுன், ப்ரோ போகாதீங்க! 

நிதின் மின்னும் கண்களுடன் நிஜமாவா நான் என்னை தான் கூப்பிடுரீங்களா! 

ம்ம் நீ தான்! வாடா செல்லம்! 

நிதின் அவன் அருகில் சென்று வண்டியில் ஏறி கொண்டான். மிதுன் விரைப்புடன் அந்த இடத்தை பார்த்து கொண்டு இருந்தான். 

உதயன், நிதின் குட்டி அந்த மிதுன் வரனா அப்டின்னு கேளு! இல்லன்னா நம்ப கிலன்புவோம்!  

மிதுன் வா கம் ஹியர் மாமா உன்னை கூப்பொடுறாக!. .

மிதுன், ப்ரோ உனக்காக மட்டும் தான் வரேன்! என சொல்லி கொண்டே ஏறினான். 

உதயன், டைட்டா பிடிச்சுக்கிட்டு இருங்க! 

அதெல்லாம்!  

உதயன் அவர்களை கடைக்கு கூட்டி சென்று கொஞ்சம் தீனி மகி மற்றும் மை விழிக்கு வாங்கி கொடுப்பதை போல் வாங்கி கொடுத்து சாப்பிட வைத்தான். 

நிதின் அப்படியே அவளை போல் அது தான் தேஜூ! கொஞ்சம் தன்னை பார்ப்பது போலவும் தோன்றியது. ஆனால் உதயனை உரித்து வைத்து இருப்பது சத்ய தேவ் தான்!  

 உதயன் அவனை தொட்டு கொண்டே நிதின் கன்னத்தை கிள்ளினான். 

நிதின், உங்க கிட்ட ஒரு கொஸ்டின் கேட்கணும்! 

என்ன சொல்லுங்க! 

“உங்களுக்கு நிஜமாவே என்னை பிடிச்சு இருக்கா! என்னை யாருக்குமே பிடிக்காது எக்ஸப்ட் என் டாடி, மிதுன், இப்போ தாத்தா இவங்களுக்கு மட்டும் தான் பிடிக்கும்!”

உதயன் சிரித்து கொண்டே இப்படி எல்லாம் நினைக்க கூடாது. உன்னை பார்த்தால் அப்படியே என்னை பார்ப்பது போல இருக்கு டா! உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்! எல்லார்க்கும் உன்னை பிடிக்கும் தாரா அத்தை, தேஜு, மகி, அப்புறம் மிதுன், பவா குட்டி, சிவி குட்டி எல்லார்க்கும் பிடிக்கும் செல்லம் இப்படி எல்லாம் நினைக்க கூடாது. 

நிதின், ட்ரூ தானே! 

நிஜம் தான்! நீ எப்போவும் இங்கே வரலாம்! இது உன் தாத்தா வீடு! யாரும் உன்னை கேள்வி கேட்க மாட்டாங்க புரியுதா!

மிதுன், ப்ரோ என்ன சீக்ரெட்! என அருகில் வந்தான். 

உதயன், உன் கிட்ட சொல்ல மாட்டேன் போடா! 

மிதுன் சூர்யா போலவே புருவத்தை தூக்கி கொண்டு ஃபர்ஸ்ட் ஆப் ஆல் உங்களை பார்த்தாலே எனக்கு இரிடெட் ஆகுது! ஒன்லி தாரா டார்லிங்காக மட்டும் தான் விடுறென்! 

உதயன், அய்யோ இந்த வாய் ஓயுமா டா! மகி உன்னை மாதிரி பேசவே மாட்டாள். ஆனால் நீ! 

என்னை பொண்ணு கூட சேர்த்து வச்சு பேசாதீங்க! அதே போல பையன் கூடவும்! நான் ரொம்ப தனி தனியா தெரிவென்! 

சரி டா பெரிய மனுசா என புன்னகையுடன் திருப்ப அழைத்து சென்றான். 

வேற என்ன வேணும்! சொல்லு நிதின் குட்டி! 

நிதின், போதும்! 

உதயன் இருவரையும் வீட்டுக்கு அழைத்து சென்றான். 

வசந்தன் வெளியே அமர்ந்து இருக்க கலை அருகில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தார். 

உதயன் வண்டியில் வர அவர்களை பார்த்ததும் கலை கலை அங்கே பாரேன்! 

என்ன? என திரும்பி பார்த்தாள். 

வசந்தன், சக்தி! .

என்னங்க அது சக்தி இல்ல! அந்த பையன் நிதின்! நீங்க பண்றது சரி இல்ல அந்த பையன ஓவரா கொஞ்சுகிரீர்க!. 

வசந்தன், இது தப்பு கலை நீ எப்போ தான் திருந்த போரியோ!  

அதுக்கு அவசியம் இல்ல நான் மாறினாள் மட்டும் எல்லாம் மாறி விடுமா! மொத்தமா என்னை ஏமாற்றி விட்டு போயிட்டாங்க அப்புறம் என்ன? என அவள் எழுந்து உள்ளே சென்றாள். 

உதயன் வீட்டுக்கு வந்து அவர்களுடன் விளையாடினான். சாப்பிடும் நேரம் வந்தது. 

தலைவாழை இலை போட்டு உணவுகளை பரிமாறினார். உதயன் வாசனையை உள் இழுத்து கொண்டே சாப்பிட ஆரம்பித்தான். 

நிதின் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட உதயன், நிதின் குட்டி மாமா ஊட்டி விடவா! 

ம்ம்!  

ஆ காட்டு!  உங்களுக்கு என்ன பிடிக்கும்! என பேச ஆரம்பித்தான். 

கலை, மிதுன் நான் ஊட்டி விடவா டா கண்ணா! 

மிதுன், இட்ஸ் ஓகே அம்மாச்சி காலையில் இருந்து நீ எப்போவும் நிறைய வேலை நானே சாப்பிடுவேன்! 

உதயன், பா இவனை பார்த்தால் சக்திக்கு அண்ணன் மாதிரி தெரிகிறான். இவனை மகி அமேசான்ல இவனை கொரியர் போட்டாலா!. 

வசந்தன் சிரித்து கொண்டே டேய் கம்முன்னு இரு டா! 

கலை,மிதுன் குட்டி அவன் கிடக்கிறான்? அவனே ஒரு கடன்காரன்! என மிரட்டி கொண்டே சாப்பிட்டனர். 

உதயன் சாப்பிட்டு கை கழுவி கொண்டு அவன் அறைக்கு மேலே ஏறினான். 

கலை, ஹே எங்கே போற! 

மா பாத் ரூம் போயிட்டு வரேன்! என பொய் சொல்லி கொண்டே மேலே ஏறினான். 

வசந்தன் அவன் சென்றதும் என்ன கலை நிஜமாவே அவனை நீ மன்னித்து விட்டாயா! அவன் மேல் கோபம் இல்லையா! 

கலை, உங்களுக்காக தான் பேசிட்டு இருக்கேன் அவனை பார்த்தாலே எனக்கு அடித்து கொல்லும் ஆத்திரம் வருது! 

வசந்தன், கலை!  

சும்மா சொன்னேங்க! என சமாளித்தாள். 

உதயன் மேலே வந்து தாராவுக்கு அழைத்தான். 

இப்போவாச்சும் என் நினைப்பு வந்ததே! 

உதயன், உன் நினைப்பு தான் டி எப்போவும்! 

போதும் போதும்! இது எல்லாம் பொய் அப்டின்னு தெரியும்! நீங்க பழைய உதயன் ஆனது போல எனக்கு தோணுது! என தாரா சிரித்தாள். 

உதயன், லவ் யூ என கூறினான். 

ப்பா! கிஸ் யூ! ஹக் யூ! அப்புறம்!. என அவள் ஆரம்பிக்க 

உதயன், போதும் போதும் டி! நான் அப்புறம் கால் பண்றேன்! 

இருங்க ஒரு நிமிடம்! 

சரி சொல்லு! .

அப்புறம்  அத்தை சமாதானம் ஆஹியாச்சா! என தாரா கேட்டாள். 

உதயன், எங்க அம்மா மாற மாட்டாங்க! ஆனம் இப்போ பேசுறாங்க! 

என்ன? என அதிர்ச்சியுடன் கேட்டாள். 

உதயன் தலையை கோதி கொண்டே “என் அம்மாவுக்கு கோபம் வெறுப்பு எல்லாமே இருக்கு! ஆனால் எங்க அப்பாவுக்காக என் கிட்ட கொஞ்சம் பேசுறாங்க!”

தாரா, அப்போ என் கிட்டயும் பேசுவாங்கலா!. 

உதயன், தாரா டிரை டூ அண்டர்ஸ்டான்ட் மி அதை பற்றி தெரியல டி! ஓவரா எக்ஸ்பக்ட் பண்ணாத! 

தாரா, சரி சரி! 

உதயன், எங்க அம்மா அவங்கள பற்றி எப்படி சொல்ல உனக்கு புரியாது! 

சரி விடுக! மாமா நல்லா இருக்காங்களா! என்னை பற்றி எதுவும் தப்பா! 

உதயன் சிரித்து கொண்டே எங்க அப்பா உன்னை பற்றி பெருமை புராணம் தான்! 

தாரா சந்தோசத்துடன் என்ன சொல்றீங்க! 

ம்ம் ஆமா! உன் கிட்ட விட்டு வந்து இருக்காங்களாம்! நீ என்னை பத்திரமா பார்த்து கொள்வியாம்! 

என் அருமை அவருக்கு மட்டும் தான் தெரியுது! 

உதயன், அடேங்கப்பா! 

தாரா, சரி அப்போ நான் ஊருக்கு வந்து அவரை பார்க்கவா! 

உதயன், முதலில் போனில் பேசு அப்புறம் ஊருக்கு வருவ!. 

தாரா, ம்ம் அதுவும் சரி தான்! 

உதயன், அப்புறம் என் பொண்டாட்டி இன்னிக்கி என்ன பண்ணுனீங்க!  

நானா நான் மான் விழிய பா பார்க்!. என சொல்ல வந்தவள். சரி பெருசா ஒன்னும் இல்லங்க! நீங்க பாருங்க நான் வைக்கிறேன்! என தாரா கூறி கட் செய்ய போக! 

ஹே போன் வைக்காத! தாரா!. 

என்னங்க! சொல்லுங்க! 

உதயன், என்ன விஷயம் இப்போ முழுசா சொல்லு! 

ஒன்னும் இல்லங்க! நான் மான் விழி கிட்ட பேசினேன்! 

உதயன், நீ மறைக்கும் விஷயத்தை இப்போ சொல்லு! 

ஒன்னும் இல்லங்க! 

உதயன், தாரா என அழுத்தமாக அழைத்தான். 

தாரா ஒரு நிமிடம் திடுக்கிட்டு என்னங்க நான் உங்க கிட்ட சொல்றேன் ஆனால் அதை யார் கிட்டயும் சொல்ல கூடாது. 

உதயன் கடுப்புடன் நீ முதலில் சொல்லு டி! 

தாரா அனைத்து விஷயமும் கூறினாள். 

இதை கேட்ட உதயன் படபடப்பு நிறைந்த கவலையில் என்ன சொல்ற? இப்போ எப்படி இருக்கா! எனக்கு அப்போவே போன் பண்ணி இருக்கலாமே! 

தாரா, அய்யோ பதட்ட பட வேணாம்! அவங்க இப்போ நல்லா இருக்காங்க நான் போய் பார்த்திட்டு தான் வந்தேன்! 

உதயன், எங்க மாமா மட்டும் தனியா கஷ்ட படிறாங்க இப்போ கூட யாரும் இல்லாமல் அவளை வைத்து கொண்டு!. 

தாரா, இல்ல அங்கே மாயா அத்தை இருக்காங்க! 

உதயன் கோபத்துடன் அவங்களா! அவங்க எதுக்கு அங்கே இருக்காங்க! 

தாரா, அவளை பார்த்து கொள்ள தான்! வருண், வெங்கட் மாமா, ஈவன் ஶ்ரீ மதிய கூட பார்த்தேன்! 

உதயன், என் தங்கச்சிய அந்த வருண் பார்த்து கொள்வதா! நான் இப்போவே என் அம்மாவை கூட்டி வரேன்! 

தாரா என்னங்க நான் சொல்றத கேளுங்க! மை விழி என் கிட்ட சொல்லி அனுப்பி இருக்காங்க! உங்க கிட்ட அப்புறம் வீட்டில் யாருக்கும் தெரிய கூடாதாம்! பிளீஸ் பிரச்னை பண்ணாதீங்க! 

உதயன், தாரா! உனக்கு புரியலையா இது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா! எப்டி கம்முன்னு இருக்க சொல்ற! 

தாரா, என்னங்க அத்தை இங்கே வந்து விட்டால் மாமாவை யாரு பார்த்து கொள்வார்கள் அப்புறம் மிதுன்! இது எல்லாம் இருக்கே! பிரச்னை பெரிசு ஆகும் சூர்யா அண்ணாவுக்கு தான் லோட் அதிகம்! 

உதயன், அப்போ நான் கிளம்பி வரேன்! இப்போவே வரேன்! 

தாரா, இப்போ பறந்து கொண்டு நீங்க வர வேணாம்! அங்கே அண்ணா இருக்காரு! கூடவே ஜெய் அண்ணா இருக்காங்க நீங்க கவலை பட வேணாம் காலையில் கிளம்பி வாங்க! 

உதயன், சரி என போனை வைத்து விட்டான். உடனே மை விழி க்கு அழைக்க செல்ல 

தாரா அதற்குள் மீண்டும் போன் செய்தாள். 

என்ன டி? 

தாரா, தயவு செய்து மை விழிக்கு போன் பண்ணி எதையுமே விசாரிக்க வேணாம் பிளீஸ்! அப்புறம் அவள் என்னை துப்பாக்கி எடுத்து சுட கூட தயங்க மாட்டாள். 

உதயன், சரி! 

தாரா, அப்போ இப்போ உங்க தங்க தங்கைக்கு போன் பண்ண போனீங்க தானே! 

உதயன், தாரா நீ டயர்டா இருப்ப! தூங்கு!. 

தாரா, மறுபடியும் சொல்றேன்! அவள் அடுத்த தடவை என்னை திட்டினால் அப்புறம் உங்களை! உங்களை!  கடிச்சு முழுங்கி விடுவேன்! 

உதயன், சரி நான் பேசல!. என சொல்லும் போதே கதவு தட்டும் சத்தம் கேட்டது. 

உதயன், ஹே வைக்கிறேன் டி சத்தத்தை பார்த்தால் அம்மா மாதிரி இருக்கு! 

தாரா, டேய் நான் உன் பொண்டாட்டி! 

உதயன், அப்போ மாமியார் கிட்ட பேசுறியா!

வேணாம் பா என சொல்லி கட் செய்தாள். 

உதயன் தன்னை சரி செய்து முகத்தை துடைப்பது போல பாவனை செய்து கொண்டே கதவை திறந்தான். 

மா! என புன்னகையுடன் நின்றான். 

கலை கைகளில் பாட்டில் தண்ணீர் மற்றும் சூடான  சுண்ட காய்ச்சிய பாலில் பாதாம், பிஸ்தா போட்டு எடுத்து வந்தார். 

கலை இப்படி தான் டெய்லி அந்த நடிப்பு காரி கிட்ட போன் பேசி அவளை கூட்டிட்டு வந்துட்ட! 

உதயன் எதுவும் பேச வில்லை. 

கலை வாணி பாலை கொடுத்து விட்டு சரி தூங்கு என சொல்லி விட்டு இறங்கி கொண்டார். 

இங்கே உதயன் உள்ளே வந்ததும் அம்மா தானே! சொன்னால் சொல்லட்டும் என மீண்டும் மை விழிக்கு கால் செய்தான். 

ஹலோ என்ன இந்த நேரத்தில் கால் பண்ணி இருக்க! 

சும்மா நினைப்பு வந்தது. அழகின்க என்ன பண்றாங்க! 

தூங்குறாங்க! 

மகிக்கு போன் பண்ணேன்! அவள் எடுக்கவே இல்ல! 

மை விழி புருவம் நெருக்கி கொண்டே என்ன திடீர்னு தங்கை மேல் பாசம் கொட்டுது! இத்தனை நாள் கழிச்சு மகிய பற்றி கேட்கிற! 

உதயன், எப்டி இவள் மூளை இப்படி கிரிமினலா வேலை செய்யுது! கேடி தான்! என நினைத்து கொண்டு மை விழி சும்மா கேட்டேன் டி! 

மை விழி, இப்போ பேச என்ன இருக்கு போனை வைத்து விட்டு தூங்கு! 

உதயன், ஹே வைக்காத டி!  

மை விழி, இப்போ என்ன வேணும் சொல்லு! 

ஒன்னும் இல்ல ஹான் சூர்யா மாமா கூட போன் எடுக்கல! 

மை விழி கார்த்திக்கின் கையை விலக்கி விட்டு ஹே இப்போ உனக்கு என்ன வேணும்! 

உதயன் சும்மா கேட்டேன் டி! 

மை விழி, உன் பொண்டாட்டி கிட்ட போன் பேசினியா! 

இல்லையே! 

மை விழி, இதை நான் நம்பனும்!  சொல்லு என்ன சொன்னாள். 

ஹே ஒன்னும் இல்ல டி! 

மை விழி பெரு மூச்சை விட்டு உன் பொண்டாட்டிக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்ல மகி பெட்ல இருக்கா! அதை கூட உன் கிட்ட மறைத்து இருக்கா! 

உதயன், ஹே அவள் மறைக்கல எப்போவோ சொல்லி விட்டால் என்னால் மனசு கேட்கல! அதான் மகி எப்படி இருக்கா அப்டின்னு உனக்கு போன் பண்ணேன்! ஒன்னும் பிரச்னை இல்லையே! 

மை விழி, ச்ச தெரியும் டா அவள் எவ்ளோ நடிப்பு காரி! நான் அவ்ளோ தூரம் உன் கிட்ட சொல்ல வேணாம் அப்டின்னு சொல்லிட்டு வரேன் அப்பாவும் சொல்றான்னா எப்படியாபட்ட ஆளு! 

உதயன் மற்றும் கார்த்திக் இருவரும் சாக் ஆகினார்கள். 

உதயன், என்ன டி இப்படி பேசுற! 

நான் தான் சொல்ல வேணாம் என சொன்னேனே அப்புறம் எதுக்கு உன் கிட்ட சொன்னா! 

கார்த்திக், என்ன மை விழி அப்படி சொன்னால் இப்படி வர இப்படி சொன்னால் அப்படி வர! 

மை விழி, நீ கொஞ்சம் என வாயை பொத்தினாள். 

உதயன், கஷ்டம் டி! என் பொண்டாட்டி பாவம்! 

அப்போ மகி பாவம் இல்லையா! 

உதயன், “சாமி முடியல இப்போ அவள் கிட்ட பேச முடியுமா எனக்கு இப்போவே பார்க்கனும் போல இருக்கு!”

மை விழி, அங்கே இருக்கும் யாருக்கும் தெரியாமல் பேசு நல்லா தான் இருக்கா! 

சரி டி என போனை வைத்தான். 

கார்த்திக் பேய் அறைந்தது போல விழித்து கொண்டு இருந்தான். 

மை விழி, அவளை பார்த்ததும் அப்படியே பாசத்துடன் கூப்பிடுற ஒரு தடவை கூட கனி கிட்ட நீ இப்படி பேசி நான் பார்த்ததே இல்லையே! 

கார்த்திக் அய்யோ வில்லாதி வில்லியா இருக்காளே! என நினைத்து கொண்டு விழி இன்னிக்கு ரொம்ப அழகா இருக்க!  ஒரு கிஸ் என அவளின் இதழை கவ்வி கொண்டான். 

மை விழி, ஹே பதில் சொல்லு டா! 

இல்ல இல்ல சும்மா! 

மை விழி அவன் பனியனை இழுத்து இதழில் ஒட்டி கொண்டாள். 

கார்த்திக்! என காந்தமாக அழைத்தாள். 

என்ன இன்னிக்கி ஜதி பயங்கரமா இருக்கு! 

மை விழி, நீ மைட்டி பீம் பார்த்து இருக்கியா!  

பீமா! நம்ம குட்டீஸ் கூட சேர்ந்து நீயும் ரொம்ப டீவி பார்க்கிற! 

மை விழி, சொல்ல வரதை முழுசா கேளு டா! என கொஞ்சினாள். 

கார்த்திக் அவளின் நெஞ்சில் முகம் புதைத்துக் ம்ம் கொட்டினான். 

மை விழி கண்ணை மூடி கொண்டே அது Netflix ல ஓடுது டா! அந்த பீம் அவனை பார்த்தால் எனக்கு அதே போல ஒரு பையன் வேணும்! இப்போவே வேணும்! 

கார்த்திக் அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான். 

என்ன கொடுக்க மாட்டியா! 

குழந்தைக்கு என்ன அவசரம்! என கார்த்திக் தேடுதல் தொடங்கினான். 

மை விழி, வேணும் அவ்ளோ தான்! 

இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் டி! 

மை விழி அவனை தள்ளி விட்டு சரி எப்போ பேபி கொடுக்கிராயோ அன்னிக்கு வா! 

கார்த்திக், ஹே அநியாயம்! 

இல்ல எனக்கு என்னோட நியாயம் தான் முக்கியம்! 

கார்த்திக், என்னை டார்ச்சர் பண்ற மை விழி! 

மை விழி, உன் வேலையை பாரு நான் டிஸ்டர்ப் பண்ணல! நீ போ!  

கார்த்திக் அவள் மேல் உடனே படர்ந்து முத்தமிட ஆரம்பித்தான். 

மை விழி ஹே! என கைகளை தூக்கினாள். 

ம்ம் வரம் தரேன்! 

போடா! 

போடி! என அவள் இதழை கவ்வி கொண்டான். 

சிறிது நேரம் கழித்து கார்த்திக் அருகில் உள்ள டிராவை திறக்க.  

மை விழி, நீ தேடும் பொருள் இருக்காது எல்லாத்தையும் நான்! டஸ்ட் பின் ல போட்டு விட்டேன்! 

கார்த்திக், எதுக்கு டி இப்படி பண்ண! 

மை விழி, எனக்கு தெரியும் டா! இந்த செக்யூரிட்டி எல்லாம் வேணாம்! இப்போ எனக்கு வேணும் என அவனை கீழே தள்ளி மேலே ஏறி கொண்டாள். 

அதன் பின் சில நொடிகள் கால்கள் மடிய அவன் அருகில் சுருண்டு படுத்து கொண்டாள். 

***

இங்கே மூன்று நாட்களும் சூர்யா அவளிடம் பேச வில்லை. அவளை டிஸ்சார்ஜ் செய்து மாயா மற்றும் வெங்கட் ஶ்ரீ மதி என அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு அழைத்து வந்தனர். 

அவர்கள் வந்த சில மணி நேரத்தில் உமா வந்து இருந்தார். 

அவளின் நிலையை பார்த்து சூர்யா கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டார். 

தொடரும்.. .

அடுத்து இன்பா – விவேகா வர சீன்!  

பார்ப்போம் 

Episode 316 

உதயன் காலையிலேயே நேரத்தில் கிளம்பி விட்டான். கலைவாணி என்ன இந்த நேரத்துல கிளம்பி இருக்க என்ன விஷயம் என்று அவனைப் பார்த்து கேட்டார். 

உதயன் உடையை சரி செய்து கொண்டே மித்துன் மற்றும் நித்தின் அருகில் வந்தவன் “அம்மா இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு மா! அதனால, நான் போய் ஆகணும்! அதான் கிளம்பி விட்டேன்!” வந்து இப்போ ரெண்டு நாளாச்சு தானே

 கலைவாணி, கிளம்பி போ நீ இங்கே  இருக்கணும்னு எனக்கு ஒன்னும் ஆசை ஆசையில்ல என்று கூறினார்.

“பிள்ளை கிட்ட என்னடி பேசிட்டு இருக்க அவன் கிளம்பறேன்னு சொல்றான்.  சங்கடப்படாமல் வழி அனுப்பி வை!” என்று வசந்தன் அதட்டினார். 

உதயன் அங்கே  தூங்கும் இருவரையும் பார்த்து தூக்கம் கலையாமல் முத்தம் வைத்துவிட்டு  எழுந்து நின்றான். 

உதயன், அப்பா உடம்ப பத்திரமா பாத்துக்கோங்க அம்மா நீங்களும் நான் அடுத்த வாரம் வருகிறேன் என்று சொல்லிவிட்டு திரும்பினான்.

வசந்தன் , உதயா!

 அப்பா! 

வசந்தன், அந்த பொண்ணு பத்திரமா பாத்துக்கோ சங்கடப் படுத்த கூடாது கோபப்படக்கூடாது சரியான முடிவை எடுக்கணும் உன்னோட இயல்பை எப்பவும் மாற்றிக்கொள்ள கூடாது.  என கட்டி அணைத்தார். 

கலைவாணி மனதில் “அவளை பாத்துக்கணுமா அவளும் அவன் முகரையும் ஆட்டக்காரி குடும்பத்தை கெடுக்க வந்துட்டா!” என்ற மனதில் நினைத்துக் கொண்டாள். 

அப்பா , மா  சரி நான் கிளம்புறேன் என்று நகர…

நித்தின் மாமா என்று தூக்கத்தில் கண்களை தேய்த்துக் கொண்டே விழித்தான்.

உதயன் சிரித்துக்கொண்டேன் செல்லம் முழிச்சி இருக்கியா! 

 பத்திரமா போயிட்டு வாங்க என்று கூறினான்.

வசந்தனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி அவன் நெற்றியில் முத்தம் பதித்தார்.

உதயன்,“ சரிடா தங்கம் நான் அடுத்த வாரம் வரேன்!” என்று சொல்லிவிட்டு கிளம்பினான். 

சூர்யா லேப்டாப்புடன் அந்த அறைக்கு  வெளியில் அமர்ந்து கொண்டான்.

மாயா எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை விடிய விடிய வேலை பார்த்துக் கொண்டே இருந்தான்.

மகி அந்த குளுக்கோஸ் ட்ரிப்ஸ் இறங்கவும் அவளுக்கு கொஞ்சம் தூக்கமாக இருந்ததால் அவள் தூங்கிக் கொண்டே இருந்தாள்.

மாயா தான் அடிக்கடி எழுப்பி அவளை இயற்கை அழைப்புக்கு அழைத்துச் சென்றாள்.

அதன் பின் காலையானது சூர்யாவிற்கு துணையாக ஜெய் வந்துவிட்டான்.  இதுவரை மகியிடம் சூர்யா பேசவே இல்லை. 

சூர்யா அதே இடத்தில் அமர்ந்து இருந்தான். 

ஜெய், என்னடா சூர்யா இப்படி இருக்க? 

அவன் தட்டச்சு செய்வதை நிறுத்தினான்.

ஜெய் அவன் அருகில் அமர்ந்து  நேத்து நான் பார்த்துட்டு போனதிலிருந்து இதே இடத்தில அசையாம உக்காந்திருக்க!. ஒன்னுக்கு  ரெண்டுக்கு போனயா இல்லையா டா! 

சூர்யா, “ இப்போ உனக்கு என்னடா வேணும்!” என்று மெதுவான குரலில் கேட்டான் .

ஜெய் அவன் தோள் மேல் கை போட்டு ஜஸ்ட் லிசன் சூர்யா அந்த spr பேசிட்டு போனதுக்கு மகி என்ன பண்ணுவா?  நீ இப்போ சம்பந்தமே இல்லாம அவள்  மேல கோபப்படுவதில் என்னடா அர்த்தம்?  பாவம் அவ கேரிங்கா இருக்கா!  அது உனக்கு புரியுதா? இல்லையா? 

சூர்யா பற்களை கடித்து கண்ணை மூடியவன் ஒரு பெருமூச்சை விட்டு அப்படியே இருந்தான். 

ஜெய், சூர்யா!.. 

சூர்யா,“ உனக்கு புரியல ஜெய் நான் அவகிட்ட எதையும் மைண்ட் பண்ணிக்காம ரிலாக்ஸ்டா வீட்டிலேயே இருன்னு சொன்னேன்! என் பேச்சை கேக்காம ஆடிட்டு இப்போ வந்து.. என் குழந்தை!  என் குழந்தைய எந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கான்னு பார்த்தியா!”

ஜெய் மீண்டும் பேச வர

 சூர்யா விடாமல் “ஒன் மினிட்  இரு டா எத்தனையோ உமன்ஸ் ப்ரெக்னென்ட் டைம்ல நிறைய வர்க் பண்ணிகிட்டு இருக்காங்க! நான் அதை இல்லைன்னு சொல்லல, ஆனா இவளால முடியலையே எதுக்கு அதிகப்பிரசிங் தனமா இத பண்ணனும்!  எந்த இடத்தில் என்னை  கொண்டு வந்து நிக்க வச்சு இருக்கான்னு பாத்தியா!”

ஜெய் , உன் மேலேயும் தப்பு இருக்கு!  

சூர்யா கடுப்புடன் “ என் மேல தப்பு என்ன  இருக்கு? இவள் ஏன் என்னை விட்டு போனாள்!”

ஜெய் இப்போ கொஞ்சம் விடேண்டா அவ ஹாஸ்பிடல் இருக்கா அதுவும் பெட்ல இருக்கா அதை மைண்ட்ல வச்சு பாரு டா!  உன் பேபி உள்ள இருக்கே

சூர்யா அதைத்தான் நானும் சொல்றேன் இது மட்டும் எங்க அம்மாவுக்கு தெரிஞ்சது நான் அவ்வளவு தான்!  அதைவிட அவன் அந்த spr அவனெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணிட்டு போறான்!  அது தான் ஐ கான் ட்… தாங்க முடியல நான் எவ்வளவு கஷ்டப்பட்டு என்னால முடிஞ்ச அளவுக்கு அவளை நான் பார்த்துக்கிறேன்! 

சரி விடு டா!. 

சூர்யா, “அந்த அளவுக்கு அவ இருக்கணுமா இல்லையா ? இவளுக்கு எத்தனை தடவை தான் நான் சொல்றது கொஞ்சம் கூட மெச்சூரிட்டியே இல்ல மூணு குழந்தைங்களுக்கு அம்மா சொல்லிக்கிறா!  பெரிய இவள!.  என்னால முடியல, எனக்கு அவளை பார்த்தாலே கண்ணம் கண்ணம்மா நாலு கொடுக்கணும் போல இருக்கு!”

  அந்த சமயம் மாயா அறையில் இருந்து வெளியே வர சூர்யா எழுந்து கொண்டு அத்தை உங்களுக்கு என்ன வேணும்?  இப்போ சாப்பிட ப்ரேக்ஃபாஸ்ட் என்று கேட்க..

ஜெய்,  அதுக்கு ஒன்னும் அவசியமில்லை நான் எல்லாருக்குமே பிரேக்ஃபாஸ்ட் எடுத்துட்டு வந்து இருக்கேன்!  என்று சொல்லி கால் செய்தான் .

உடனே அவனது வீட்டு வேலையாட்கள் உணவுகளை எடுத்து வந்தனர். சூர்யா, அத்தை சாப்பிடுங்க! என மீண்டும் அமர்ந்து கொண்டான். 

மாயா அவனை ஒரு நிமிடம் பார்த்தாள். என்ன சொல்வது என தெரிய வில்லை மீண்டும் உள்ளே சென்று விட்டார். 

ஜெய் உள்ளே சென்று அவளை பார்த்தான். முகம் எல்லாம் கொஞ்சம் வீங்கி இருந்தது. ட்ரிப்ஸ்  ஏறி கொண்டு இருக்கிறது. நிறைய முறை இயற்கை அழைப்பு பல்ஸ் செக் என ஒரு மாதிரி இருந்தாள். 

மாயா சாப்பிட வைக்க வேணாம் மா!  

ஜெய், அவனுக்கு ஏற்ற மாதிரி நீயும் ஓவர் சேட்டை தான் பண்ற! ஒழுங்கா சாப்பிடு! 

வேணாம் ஸார்! 

மாயா, அவள் இப்படி சொன்னால் கேட்க மாட்டாள். நீ சூர்யாவை கூப்பிடு!. 

மா! நான் சாப்பிடுகிறேன் என கொஞ்சம் சாப்பிட்டாள். பசி இல்லை. நீர் உள்ளே இறங்கி கொண்டே இருக்கிறது. அதனால் இந்த நிலை!. 

ஜெய் வெளியே வந்தான். அவனை பார்த்தான். போனில் கண்ட படி யாரையோ திட்டி கொண்டு இருந்தான். 

சரி டா கிளம்புகிறேன்! 

ம்ம் கிளம்பு! என அவன் கவனம் வேலையில் இருந்தது. 

ஜெய்க்கு செல்ல மனது இல்லை முகத்தை கோட்டான் போல வைத்து இருக்கிறான். 

ராம் அந்த நேரம் சூர்யாவுக்கு கால் செய்தான். 

ம்ம் சொல்லு!  

எப்படி இருக்கா!  

அவள் கிட்டயே போன் பண்ணி கேளு டா! 

சூர்யா ஓவரா பேசுற! இனி உனக்கு கால் பண்ணவே மாட்டேன் என ராம் கடுப்புடன் போன் வைக்க..

உடனே சூர்யா, ஹே இரு சும்மா சொன்னேன் கொஞ்சம் டென்ஷனா இருக்கு வேற இன்னும் இல்ல பேசு ராம்!. 

சும்மா தான் வீட்டுக்கு வந்ததும் நானும் கீதாவும் வருகிறோம்! 

ம்ம் என வைத்து விட்டான். 

ஜெய், சூர்யா!  

ம்ம்!  

வரியா ஒரு கள்ப்!. 

சூர்யா முறைத்து பார்த்தான்.

வேணாம் என்றால் விடு! இப்போ எதுக்கு என்னை இப்படி முறைக்கிர!. 

வேணும் அதிகமா வேணும் ஆனால் இப்போ பண்ண முடியாது இது ஹாஸ்பிடல்! 

ஜெய் சிரித்து கொண்டே அருகில் அமர்ந்தான். இப்போ தான் சூர்யா வெளியே வரான். 

இதை கேட்டதும் அவன் மீண்டும் முகம் மாறி அமர்ந்து இருந்தான். 

ஜெய் அவனருகில் பேச்சு கொடுத்து கொண்டே சிரிக்க வைத்தான். 

சூர்யா, ரே* இங்கேயே இருக்க கீர்த்திய பார்க்க போகளையயா! 

மஹிய பார்க்க வரேன்னு சொல்லி இருக்கா! 

ம்ம் என வேலையில் கவனம் செலுத்தினான். 

மதியம் 12.00 ஆனது!  சூர்யாவுக்கு உமா கால் செய்தார். 

ஹலோ மா! 

என்ன பண்ற? எப்டி இருக்க? மகி என்னை மறந்து விட்டாள் போல ஒரு போன் பண்றது இல்ல! 

சூர்யா கஷ்ட பட்டு மா அவள் தூங்கிட்டு இருப்பா! டிஸ்டர்ப் பண்ணாதீங்க! 

சரி சக்திய கூட்டிட்டு வரணும் நினைப்பு இருக்கு தானே! 

ம்ம் சரி எனக்கு வேலை நான் அப்புறம் பேசுகிறேன் என போனை வைத்தான். 

அதன் பின் சிறிது நேரத்தில் வேக வேகமாக உதயன் வந்தான். 

மாமா!. 

சூர்யா திரும்பி பார்க்க உதயன் அவனை நோக்கி வந்து கொண்டு இருந்தான். 

எப்டி இருக்கா! 

நீங்களே போய் பாருங்க! என மீண்டும் அமர்ந்து கொண்டான். 

உதயன் அவளை பார்க்க சென்றான். இருவரும் சிறிது நேரம் பாசமழை பொழிந்தனர்.

என்ன மகி! இவ்வோவு கேர் லஸ் சரி இல்ல! 

தெரியல உதயா! எப்படி ஆச்சு என்னன்னு ஒன்னும் புரியல! 

உன் தப்பு தான்! எவ்ளோ பேர் இந்த வரத்துக்காக கஷ்ட படுறாங்க ஆனால் நீ!  

பிளீஸ் திட்டாத எனக்கு ரொம்ப லோன்லியா இருக்கு! என மிகவும் வருத்த பட்டாள். 

அதன் பின் உதயன் வெளியே வந்தான். மாமா! 

 சூரியா முறுக்கு காட்டிக்கொண்டான். 

மாமா! என்ன ஆச்சு!

சூர்யா , உன் தங்கச்சி ஒன்னும் சரியில்ல என்று இரண்டு வார்த்தைகள் மட்டுமே கூறினான். 

அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.  உதயன் கொஞ்சம் பதட்டத்துடன் அமைதியாக இருந்தான்.

சூர்யா,  கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல..  உதயா நீயே சொல்லு இப்படி இருந்தா நான் என்ன பண்ணட்டும்?  சொல்லு!  என்னை  தர்மசங்கடமான நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கா! 

உதயன் அமைதியாக இருந்தான்.

சூர்யா, சரி விடு அவ பண்ணதுக்கு நீ என்ன பண்ண முடியும் ?  மாமா எப்படி இருக்காங்க?  அத்தை எல்லாரும் நல்லா இருக்காங்களா? 

உதயன்,  எல்லாரும் நல்லா இருக்காங்க மாமா…

சூர்யா,  அதன் பின் அப்புறம் என்று கூறினான்.

உதயன்,  அப்புறம் ஒன்னும் இல்ல மாமா

சூர்யா,  அப்புறம் நீ சொல்லு

ஒன்னும் இல்ல மாமா என்று மறுபடியும் உதயம் கூறினான்.

சூர்யா அப்புறம் வீட்ல அந்த குட்டி குட்டன் நல்லா இருக்கானா! 

உதயன்  இதை கேட்டு சிரித்துக்கொண்டே மிதுன் நல்லா இருக்கான்.   கண்ணம் ரெண்டும் பண்ணு மாதிரி இருக்கு கடிக்க தான் விட மாட்டிக்கிரான். 

சரி! என இருவரும் பேசி விட்டு அதன் பின் உதயன் மீண்டும் மகியை ஒரு முறை பார்த்து விட்டு நாளை வருவதாக சொல்லி  கிளம்பினான்.  

ஜெய், சூர்யா வரா டா வரா டா!  என் கீர்த்தி!  

போ போய் ஒட்டிக்க. என சூர்யா வேலையை தொடர்ந்தான். 

ஜெய் தலையை கோதி கொண்டே சூர்யா சொன்னது போலவே அவளிடம் ஒட்டி கொண்டான். 

சூர்யா கண்டு கொள்ள வில்லை.. 

கீர்த்தி, என் மானத்தை வாங்காதீங்க சூர்யா சார் பார்க்கிறார். இப்போ எதுக்கு இப்டி ஒட்டிக்கிட்டு வரீங்க! .

ஜெய், அவன் தான் டி உன் மேல் ஒட்டிக்க சொன்னான் அதான் ஒட்டி கொண்டான். 

ஜெய் இப்போ தள்ளி நடங்க! இல்லன்னா இனி மீட் பண்ண ஒத்து கொள்ள மாட்டேன்! 

சரி சரி என தோல் மேல் கை போட்டு கொண்டான். 

அதன் பின் அவள் சென்று மஹியை பார்த்து பேசி விட்டு வந்தாள். 

ஜெய், மச்சி! பாய் டா நான் அவளை சென்ட் ஆஃப் பண்ணிட்டு வரேன்! 

திரும்பி வராத என சொல்லி சூர்யா கூறி கொண்டே வேலையில் கவனம் செய்தான். 

அதன் பின் இரண்டு நாட்கள் சென்றது. அன்று மாலை சூர்யா ராமுக்கு போன் செய்தான்.

சொல்லு டா! 

நாளைக்கு சத்ய தேவ போய் பிக் பண்ணி கூட்டிட்டு வா! 

ராம், நான் எப்டி டா போக முடியும்! 

சூர்யா, கார்டியன் இடத்தில் உன் பேர் தான் போட்டு இருக்கேன். கூட்டி வா டா! 

என்ன சொல்ற? 

சூர்யா, ஹரிணி கூட தான் என் பையன் சுத்தி கொண்டு இருக்கான். 

ராம், டேய் என் பொண்ணு பெரியவ டா! 

அதனால் என்ன என் காதல் கூடவில்லை. என் பையன் காதலாவது கூடட்டுமே! 

டேய் டேய் கொஞ்சம் நிறுத்து சாமி நான் போய் கூட்டி வரேன்!  என சொல்லி வைத்து விட்டான். 

அடுத்த நாள் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். வீடு திறந்து இருந்தது. மை விழி! என சொல்லி கொண்டே உள்ளே நுழைந்தான். 

மாயா அவளை கை தாங்களாக கூட்டி வர சூர்யா வாசலில் அப்படியே நின்றான். 

என்னங்க என்ன ஆச்சு? 

மாப்பிள்ளை என்ன ஆச்சு! என சொல்லி கொண்டே மாயா வந்தார். 

அங்கே உள்ளே நட்ராஜ் நின்று கொண்டு இருக்க உமா சூர்யாவை தான் பார்த்து கொண்டு இருந்தார். 

மகி, அத் அத்தை!.. 

மாயா, இப்போ அதனால் என்ன சூர்யா தள்ளுங்க அவளை உள்ளே கூட்டி போலாம்! 

சூர்யா, மா என உள்ளே நுழைந்தான். 

உமா அவனை கண்டு கொள்ளாமல் உள்ளே வாங்க! மகி உள்ளே வா! 

அத்தை நல்லா இருக்கீங்களா! 

உமா, ஹான்! நான் போன் பண்ணாலும் எடுப்பது இல்ல!  மேடம் கூட எனக்கு போன் கூட பண்றது இல்ல ரொம்ப அக்கறை தான்!  என அழைத்து அமர வைத்தார். 

மாயா வுக்கு அங்கு இருக்க கொஞ்சம் சங்கடமாக இருக்க மாப்பிள்ளை! 

ம்ம் சொல்லுங்க அத்தை! 

சரி நான் கிளம்புகிறேன்!.. என சொல்லி கொண்டே அவர் எழுந்தார். .

சூர்யா இருந்திட்டு போங்க அத்தை! என கூறினான். .

இட்ஸ் ஓகே சூர்யா நான் அவளோட சீமந்தத்துக்கு வரேன்!. சரிங்க வரேன்! வரேன் சார் என மாயா கிளம்பினார். 

மாயா கிளம்பிய அடுத்த நொடி உமா கதவை சாத்தி விட்டு நேராக சூர்யா அருகில் வந்தார். 

சூர்யா எழுந்து செல்ல போக!. 

சூர்யா உட்காரு! 

மா நான் பாத் ரூம் போயிட்டு வரென்!. 

உட்கார்! என கர்ஜனை செய்தார். 

சூர்யா அவரின் முகத்தை பார்ப்பதை தவிர்த்து அமர்ந்து கொண்டான். 

உமா, மகி இப்போ எங்கே இருந்து வந்தீங்க! என்ன ஆச்சு? 

அத்தை!  

சொல்லு! 

அவள் சூர்யாவை பார்த்தாள். 

உமா கோபத்துடன் நீ இப்போ வாயை திறக்கல இப்போவே உன் அப்பாவுக்கு போன் பண்றேன்! 

மகி பயந்து கொண்டு அத்த அத்த அது! என தயங்கி கொண்டே இருந்தாள். 

சூர்யா எழுந்து நின்று மா! அவளுக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல! அதனால் ஹாஸ்பிடலில்!. என சொல்லி முடிக்க வில்லை 

உமா கோபத்தில் ஒரு அரை விட்டார். சூர்யா எதையும் பேசாமல் அப்படியே நின்று கொண்டு இருந்தான். 

உமா, எவ்ளோ கொழுப்பு ராஸ்கொல்! என் கிட்ட சொல்லாமல் மறைத்து இருக்க! யாரை கேட்டு மறைத்த! நான் உசுரோட தானே இருக்கேன்! இல்ல செத்து போயிட்டெனே!. .

சூர்யா, மா!. 

சொல்லு டா வாயை திற! மகி கொஞ்சம் பயந்து கொண்டே அத்தை அது! 

ஹே வாய மூட்றி! உன்னை தலையில் தூக்கி கொண்டு இருக்கேன் பாரு என்னை சொல்லணும்! 

மகி கண்களில் கண்ணீர் கோர்க்க நின்று கொண்டு இருக்க.. 

உமா, உட்கார்! உட்கார் டி!. 

மகி ஒரு வித நடுக்கத்துடன் அமர்ந்தாள். 

சூர்யா, மா அவளை திட்டாதீங்க ஸ்ட்ரெஸ் ஆக கூடாது. 

உமா, ஆனால் உன் பொண்டாட்டிய ரொம்ப தாங்குற நாளைக்கு எங்களை பார்த்து கொள்வியா!. 

சூர்யா, மா என்ன இப்படி பேசுறீங்க! என்னை மன்னிச்சிடுன்க!. சாரி!  என அவரின் அருகில் நெருங்கினான். 

அந்த நேரம் கதவு காலிங் பெல் அடித்தது. நட்ராஜ் கதவை திறக்க அங்கே ராம் கூட சத்ய தேவ் நின்று கொண்டு இருந்தான். 

சக்தி கண்ணா! 

உமா சூர்யாவை முறைத்து விட்டு சத்ய தேவை பார்க்க சென்றார். 

தாத்தா! வாட் அ சர்ப்ரைஸ்!. 

வா வா டா தங்கம்!  

உமா எட்டி பார்க்க ராம், மா! அப்பா எப்டி இருக்கீங்க!  

ம்ம் நல்லா இருக்கேன் பா! உள்ளே வா! 

இல்ல பா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு சூர்யா! நான் கிளம்புகிறேன். என சொல்லி விட்டு கிளம்பினான். 

சத்ய தேவ் உள்ளே வந்து மகி! அம்மா எங்கே? என தேடி கொண்டே உள்ளே நுழைந்தான். 

சக்தி! என மகி கண்ணை துடைத்து கொண்டே எழுந்தாள். 

மகி என்ன ஆச்சு? உன்னை பார்த்தால் ஒரு மாதிரி இருக்கு!..மறுபடியும் ரெண்டு பேரும் சண்டை போட்டு கொண்டு தான் இருக்கீங்களா! 

இதையெல்லாம் நட்ராஜ், உமா இருவரும் அவர்கள் இருவரை பார்த்து கொண்டு இருக்க.. 

சூர்யா உடனே தன்னை சரி செய்து கொண்டே இல்ல டா அவளை ஆத்தா சாப்பிட சொன்னார்கள்! அதுக்கு முகத்தை வச்சு இருக்கா! மகி சொல்லு டி! 

ம்ம் அப்பா சொன்னது சரி தான்!. 

சத்யா தேவ் தாவி கொண்டு மகி அருகில் அமர்ந்தான். மா புசு புசுண்ணு இருக்க! மகி சிரித்து கொண்டே அவன் தலையை கோதி சக்தி! இன்னும் கொஞ்ச நாளில் என்னை வுட வளர்ந்து விடுவ போல! 

சத்ய தேவ் , அப்டி எல்லாம் இல்லை! மா! என அவளின் கையை இழுத்து முத்தமிட்டான். 

உமா புடவையை எடுத்து சொருகி கொண்டே சமையலறை சென்று சமைக்க தொடங்கினார். 

என்னங்க? என்னங்க? 

சொல்லு உமா! 

கிஸ்ஸனை எப்படி வச்சு இருக்காள். என சொல்ல சூர்யா, பா நான் தான் சமைத்து கொண்டு இருக்கேன் அவளுக்கு கொஞ்சம் குமட்டல் அதிகமா இருக்கு!  

உமா, கொஞ்சம் பொருளா வாங்கிட்டு வர சொல்லுங்க! 

சூர்யா, அதை நேரடியாக என் கிட்ட சொல்ல சொல்லுங்க! 

உமா, என்னங்க! 

நட்ராஜ் நொந்து கொண்டு இதுக்கு தான் நான்! உங்க ரெண்டு பேருக்கு நடுவில்.  .

சத்ய தேவ், அப்போ உமாமாவுக்கும் டாடிக்கும் சண்டையா!  

அதை நீயே கேளு டா சக்தி குட்டி தாத்தாவால முடியல உங்க ஆத்தா காரி வேலை வாங்குறா! 

உமா, மகி!..

அத்தை! 

போ போய் படுத்து ரெஸ்ட் எடு சாப்பிடும் போது கூப்பிடுறேன்! 

சரிங்க என சொல்லி கொண்டே அவள் உள்ளே சென்றாள். 

சத்ய தேவ் நட்ராஜ் கிட்ட பேசி கொண்டு இருந்தான். 

சூர்யா குளிக்க உடையெல்லான எடுத்து கொண்டு இருக்க உடனே ஆபீஸ் கால் வந்தது. பால் கனி சென்றவன் அரை மணி நேரம் பேசினான் அதற்குள் அவள் குளித்து முடித்து எளிமையான உடைக்கு மாறி இருந்தாள். 

சூர்யா ஒரு பெரு மூச்சை விட்டு ஓயிந்து கொண்டு உள்ளே செல்ல மகி! 

என்னங்க! 

சூர்யா அவளை ஒரு பார்வை பார்த்தான். 

இத்தனைக்கும் நீ தான் காரணம் என்பது போல அந்த பார்வை இருந்தது. 

மகி, என்னங்க நான் வேணும் என பண்ணல!  

சூர்யா, சட் அப் யூ இடியட்!. 

மகி தலையை குனிந்து கொண்டு பார்த்தாள். 

சூர்யா, இப்போ எதுக்கு தெரியுமா நான் நிற்க நேரம் இல்லாமல் சுற்றி கொண்டு இருக்கேன்! 

மகி அவனை தயக்கத்துடன் பார்த்தாள். 

சூர்யா, நீ அதிக பிரசங்கி தணமா ஒரு புராஜக்ட் எடுத்திட்டு பெரிய பில்ட் அப் விட்டியே அந்த வேலையையும் என் தலையில் தான் விடிந்து இருக்கு! 

மகி கண்களில் நீர் கோர்க்க! 

சூர்யா, ஹே ஹே ஹே ஆவுன்ன கண்ணில் காவிரி வந்திடுச்சு! என் முன்னாடி இப்படி நிண்ணு தொலையாத!  

மகி விசும்பி கொண்டே அவனை பார்த்தாள். 

சூர்யா, எல்லாம் என்னை சொல்லணும்! எங்க அம்மா இப்போ எனக்கு எதிரி ஆகி விட்டார்கள்! நீ எனக்கு ஆக்கி விட்டாய்! 

மகி கண்ணை துடைத்து கொண்டே நின்றாள். 

 சூர்யா, ஹே மகி! சண்டைக்கோழி! என சிரித்த முகத்துடன் அருகில் நெருங்கினான். 

அவள் விழி விரித்து அவனை பார்த்தாள். 

சாரி மகி!. டாடி! நான் உள்ளே வரேன்! என கொஞ்சம் திறந்த கதவை தட்டினான். 

சூர்யா, ஹோ என சட்டென விலகி நின்றான். 

சத்ய தேவ், என்னோட பேக் வைக்க வந்தேன் என வைத்து விட்டு வெளியே ஓடி விட்டான். 

சூர்யா உடனே விலகி கொண்டு எல்லாமே என் பையனுக்காக மட்டும் தான்! சோ நடி!. 

என சொல்லி விட்டு குளிக்க சென்று விட்டான். 

மகி…? 

தொடரும்.  

Episode 317,

சூர்யா உடனே விலகி கொண்டு எல்லாமே என் பையனுக்காக மட்டும் தான்! சோ நடி!. 

என சொல்லி விட்டு குளிக்க சென்று விட்டான். 

மகி அப்படியே அமர்ந்து கொண்டாள். கண்களில் கண்ணீர் துடைத்து கொண்டே படுத்து கொண்டாள். 

ஒரு மணி நேரம் கழித்து உணவு தயாரானதும் உமா அனைவரையும் சாப்பிட அழைத்தார்.  

சூர்யா வெளியே வந்து கொஞ்சம் புன்னகையுடன் மகி!. மகி! சீக்கிரம் வாடி! டைம் ஆச்சு நேரா நேரத்துக்கு சாப்பிடணும்!. 

மகி தூங்கி கொண்டு இருந்தாள். சத்ய தேவ், டாடி! நான் ஹெல்ப் பன்றேன்! மம்மிய வேக் அப் பண்ண போறேன்.. என சொல்லி கொண்டே சத்ய தேவ் சென்றான். 

மகி! 

மா!. 

அவள் மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள். உடனே எழுந்து கொண்டாள். 

கம் சாப்பிடலாம்! உன்னோட டிஷ் சாப்பிடணும் அப்டின்னு நினைச்சேன். 

மகி, ஊருக்கு போய் நான் செய்து தரேன்!  

சரி இப்போ வா என தன் அன்னையுடன் உரசி பாசத்துடன் ஒட்டி கொண்டே வந்தான். 

உமா, வா வந்து உட்காரு!. 

அத்! அத்தை! நான்!. என தயங்கி கொண்டே பேச ஆரம்பித்தாள். 

சூர்யா அவளின் கையை பிடித்து கொண்டே விடு டி சாப்பிடு! என கூறினான். 

சத்ய தேவ், மா என்ன ஆச்சு? 

ஒன்னும் இல்ல டா உங்க அம்மா என் கிட்ட பேசவே மாட்டிக்கிரா!. என கூறி கொண்டே பரிமாறினார். 

மகி, அத்தை! என்னை மன்னித்து விடுங்கள்! என்னால் தான் இவரு எதுவும் உங்க கிட்ட சொல்லல! இவர் மேல் எந்த தப்பும் இல்ல தப்பு எல்லாம் என் மேல தான்! 

சத்ய தேவ், மா போதும் சாப்பிடுங்க!. என அதன் பின் சாப்பிட ஆரம்பித்தனர். 

உமா அவளுக்கு பிடித்த அனைத்தும் எடுத்து வைத்தார். 

சூர்யா, மா இப்போதைக்கு இது எல்லாம் சாப்பிட மாட்டாள். நீங்க என சில விஷயம் கூறினார். 

அதை கேட்ட உமா சூர்யாவை முறைத்து விட்டு எனக்கு தெரியும் கொஞ்சம் அவனை கம்முன்னு இருக்க சொல்லுங்க!

சூர்யா, சத்ய தேவ்! அவங்க என் கிட்ட பேச மாட்டிக்கிராங்க! கேளுங்க! நீங்க கூட ஆத்தா கிட்ட பேச கூடாது. 

உமா, இராஸ்கொல் திமிர் தான் டா! என் பேரனுக்கு சொல்லி தரியா! 

மா பேசுங்க!. 

உமா அவர்களை கண்டு கொள்ள வில்லை. 

மகி கொஞ்சம் சாப்பிட்டதும் திணறினாள். 

என்ன பண்ணுது! என சூர்யா அவள் கைகளை பிடித்து கொண்டான். 

என் என்னால் சாப்பிட முடியல!  

சூர்யா, ஜுஸ் போட்டு தரவா!. 

எதுவும் வேணாம் வயிறு ஃபுல்லா இருக்கு!

சூர்யா கடுப்பாகி இந்த மூணு நாள் எங்கே இருந்தோம் அப்டின்னு நினைவு இருக்கா! 

மகி இல் இல்லங்க என்னால் முடியல!. 

உமா, உன் வேலையை பார்த்திட்டு இரு அவள் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடட்டும்!. 

சூர்யா அதற்கு மேல் எதுவும் பேச வில்லை..

உமா, மகி மிதுன் குட்டி எங்கே? 

அவன் அம்மா வீட்டில் இருக்கான். 

நட்ராஜ், இன்னும் வரலயா! அங்கேயே இருந்து கிட்டு கூட ஒரு எட்டு உங்க வீட்டில் கொண்டு வந்து விடவே இல்லை. 

உமா, எனக்கும் தெரிந்து இருந்தால் என் பேரனை கூட்டி போயிருப்பேன்!. 

சூர்யா, அவன் எதுக்கு பா அங்கே எல்லாம் சரியான இராவடி அவனால் சத்ய தேவ் மாதிரி வர முடியாது. 

உமா, வாய மூடு !. என்ன டா பேசுற!. 

இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன். 

நட்ராஜ், சூர்யா அடி வாங்க போற! சரி இல்ல டா! குழந்தையை பற்றி என்ன பேசுற! 

சரி எதுவும் சொல்லல போதுமா! 

சத்ய தேவ், சரி விடுங்க டாடி தெரியாமல் சொல்லி இருப்பாங்க! 

உமா, சரி நாளைக்கு காலையில் நானும் மாமாவும் ரயில்ல கிளம்புகிரோம்! நீங்க மூணு பேரும் எப்படி வர போறீங்க! 

சூர்யா, இவளையும் உங்களோட கூட்டி போங்க!  எனக்கு இங்கே நிறைய வேலை இருக்கு! 

உமா, எல்லா வேலையும் தூக்கி போடு! நீ வர அவ்ளோ தான்! 

சத்ய தேவ், டாடி! நான் எனக்கு ட்ரெயின்ல ட்ராவல் பண்ணனும்! சோ நான் ஆத்தா, அப்புறம் தாத்தா கூட போறேன். நீங்க அம்மா கூட வாங்க!. 

சூர்யா பதில் பேச வருவதற்குள் உமா, “அவளை ரயிலில் கூட்டி வர வேணாம்! நீ ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணிடு!”

சூர்யா மகியை ஒரு பார்வை பார்த்தான். அதன் பின் சரி என சொல்லி விட்டான். 

சாப்பிட்டு முடித்ததும் ஆபீஸ் கிளம்பி விட்டான். 

சூர்யா உள்ளே அவன் உடமைகளை எடுத்து வைத்து கொண்டு இருக்க 

மகி, ரெண்டு நாள் சரியா தூங்கல அப்டின்னு மாயா மா சொன்னாங்க! இன்னிக்கு நீங்க தூங்கி ரெஸ்ட் எடுங்கலேன்! 

சூர்யா முறைத்து விட்டு உன் வேலையை பாரு டி! உன்னோட சாஜசன் எல்லாம் நான் கேட்கல! புரியுதா!  

மகி அதன் பின் எதுவும் பேச வில்லை. சூர்யா, அருகில் வந்து அவளின் முகத்தை நிமிர்த்தி பார்த்து கொஞ்சம் ஜுஸ் குடி நல்லா தூங்கு! அப்போ தான் பேபி நல்லா ஹெல்த்தியா இருக்கும். 

ம்ம் என முகத்தை சுளித்து கொண்டே கூறினாள். 

சூர்யா அதன் பின் அங்கு நில்லாமல் வேகமாக கிளம்பி விட்டான். 

சத்ய தேவ் பள்ளி கதைகள் மொத்தமும் மகியிடம் பேச ஆரம்பித்தான்.அப்படியே மடியில் படுத்து கொண்டான். 

மகி மனதில் மனசு நிறைந்து இருந்தது. 

உமா, க்கும்! என தொண்டையை சிருண்பி கொண்டே வந்தார். 

மகி எழுந்து நிற்க முயற்சி செய்ய உட்காரு! 

உமா அவளின் தலையை வருடி விட்டு இப்போ எந்த தொந்தரவும் இல்ல தானே! 

இல்ல அத்தை! 

சத்ய தேவ் அவளின் மடியில் உறங்கி போனான். 

உமா, நீ பண்றது உனக்கு சரின்னு படுதா மகி!. 

மகி அழுது கொண்டே வீட்டில் ஏற்கனவே நிறைய பிரச்னை அத்தை அது தான் நீங்க அப்புறம் எங்க வீட்டில் யாரும் பதட்ட பட கூடாதுன்னு தான் சொல்லல! வேற ஒன்னும் இல்ல என்னை மன்னிச்சிடுங்க! அதே போல் அவர் மேல் எந்த தப்பும் இல்ல! இருந்தாலும் நீங்க அவரை அடித்து இருக்க கூடாது. 

உமா புன்னகைத்து கொண்டே “அடேங்கப்பா! அவ்ளோ பாசக்காரி தான் தவிக்க விட்டு நாலு வருடம் கழித்து வந்திருக்க சரி தானே!”

மகி என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாள். மனம் தறி கெட்டு குதிரை போல் ஓடியது. 

உமா அவளின் கன்னத்தை கிள்ளி விட்டு என் மிதுன் குட்டிய கூட்டி வந்ததால் உன்னை விட்டேன். இல்லன்னா பஞ்சாயத்து பண்ணிருப்பென் டி! 

மகி அமைதியாக தலை குனிந்து கொண்டு இருந்தாள். 

உமா, உனக்கு இடம் கொடுத்தால் நீ அதை ரொம்ப பயன் படுத்தி கொண்டு ஆட்டம் போடுற! நான் உன்னை மாமியாராக தான் உன் கிட்ட நடந்துக்க நினைக்கிறேன். 

மகியின் முகம் எல்லாம் சிவந்து நடுங்கியது. 

உமா, ஆனால் என்ன பண்ண? என் பேர பசங்க என் பையன் சந்தோசம் தான் முக்கியம்! சூர்யா! அவனால் உன்னை விட்டு இருக்க முடியாது! உன்னை கஷ்ட படுத்தினால் தாங்க முடியாது! அந்த ஒரு காரணம் தான்! அதனால் இனி என் பையனை கஷ்ட படுத்த கூடாது. 

இல்ல அத்தை! நான் வேணும்னு பண்ணல!  நான் என அழ ஆரம்பித்தாள். 

உமா, சரி விடு சும்மா மிரட்டி பார்த்தேன்! பயப்படாத நான் கொடுக்கும் சுதந்திரத்தை அட்வான்டெஜ் எடுத்துக்காத!. என கண்ணை துடைத்து விட்டார். சரி தூங்கு!. என சொல்லி விட்டு வெளியே சென்றார். 

மகி தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். உமா இப்படியெல்லாம் பேசுவார் என துளி கூட நினைக்க வில்லை. 

அப்படியே மாலை ஆனது. உமா அவளுக்கு வித விதமாக சமைத்து கொடுத்தார். ஆனால் எதுவும் அவளுக்கு இறங்க வில்லை மனதில் எப்பொழுது சூரியாவை பார்ப்போம் என தோன்றியது. 

உமா, சக்தி கண்ணா உங்க அம்மா சாப்பிடவே மாட்டிக்கிறா! 

சத்ய தேவ், மா என்ன இது சாப்பிடுங்க! 

போதும்! சக்தி அப்புறம் சாப்பிடுரேன்? என சொல்லி விட்டு இடுப்பு வலிக்கிற மாதிரி இருக்கு நான் கொஞ்ச நேரம் உள்ளே போறேன்!  

சத்ய தேவ், சரி போங்க ரெஸ்ட் எடுங்க! 

இரவு உணவு சாப்பிடும் நேரம் வந்தது. அவனுடைய எண்ணுக்கு அழைத்தாள். 

சூர்யா போனை கட் செய்தான். 

மீண்டும் மீண்டும் அழைத்தாள். எதுவும் பிரச்னை இருக்குமோ என ஒரு வித பதட்டத்தில் போனை எடுத்தான். 

எதுவும் பிரச்னையா! என்ன டி ஆச்சு? வயிறு வலிக்கிதா!. 

இல் இல்லங்க! எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்ல!  

அப்புறம் எதுக்கு கால் பண்ண? 

மகி, என்!. எனக்கு உங்களை பார்க்கனும் போல பேசணும் போல இருக்கு! வீட்டுக்கு எப்போ வருவீங்க! 

சூர்யா ஏற்கனவே இருந்த வேலையின் அலுப்பில் என்ன டி வேணும்! எவ்ளோ வேலை இருக்கு தெரியுமா! 

மகி உதட்டை கடித்து துக்கத்தை அடக்கி கொண்டே சரி வைக்கிறேன்! என சொல்லி போனை வைத்தாள். 

இரவு உணவு கொஞ்சம் மட்டுமே சாப்பிட்டாள். 

அவள் போன் செய்ததில் இருந்து அதன் பின் சூர்யாவுக்கு வேலையே ஓட வில்லை!. 

சத்ய தேவ் தன் அம்மாவின் அருகில் வந்து படுத்து கொண்டான். 

சக்தி என கட்டி கொண்டாள். 

மா என்ன ஆச்சு? உன் முகம் சரி இல்லையே! .

மகி, அம்மா கொஞ்சம் தப்பு பண்ணிட்டேன்! என அழுதாள். 

சக்தி, அப்போ உங்களுக்கும் அப்பாவுக்கும் சண்டையா! 

இல்ல! 

பின்னே?!  

ஆத்தா திட்டிடாங்க ரொம்ப லோன்லி ஃபீல் சக்தி!..

சத்ய தேவ், அப்போ நீங்க தாத்தா, அம்மாச்சி கிட்ட பேசுங்க. ம்ம் மிதுன் கிட்ட பேசுங்க.. 

மகி, என்ன சொல்ற? 

சத்ய தேவ், உங்க மைன்ட் இப்போ சரி இல்ல சோ நீங்க மிதுன் கிட்ட பேசுங்க! நமக்கு பிடித்த எல்லார் கிட்டயும் பேசும் போது ஃப்ரீயா இருக்கும்! 

மகி கண்ணை துடைத்து கொண்டு போனை பார்த்தாள். 

சத்ய தேவ் போனுக்கு மை விழி போன் செய்தாள். .

சித்தி! மை விழி சித்தி போன் பண்றாங்க!  நீங்க எல்லார் கிட்டயும் பேசுங்க நான் சித்தி கிட்ட பேசுரேன் l!. 

சக்தி சொன்னதை போலவே அனைவர்க்கும் போன் பேசினாள். மனம் லேசாக இருந்தது. 

அதன் பின் உதயன் போன் செய்தான். மாயா, வருண் என அனைவரும் பேசினர். 

மகி, மிதுன்!  

மா!. 

இன்னும் ரெண்டு நாளில் நாங்க அங்கே வந்திடுவோம்!. 

மிதுன் இதை கேட்டதும் உற்சாகமாக ஜாலி சீக்கிரம் வா மகி என்னால் முடியல தெரியுமா! டெய்லி உன் நினைப்பு ஒரு குட்டி பையன் விட்டு போயிட்ட 

மகி, எங்கே டா உன்னை விட்டு போனேன்! என் அம்மா டா அவங்க ரெண்டு பேரும் குட்டி வயசில் நான் என் டாடி மம்மி கூட தான் இருந்தேன். 

மிதுன், நீ பிராடு! 

என்ன ஆச்சு? 

நீ மட்டும் உன் மம்மி டாடி கூட இருக்க ஆனால் என்னை மட்டும்! இங்கே விட்டு வந்துட்ட!. 

மகி, வரேன் மிதுன் வரேன்! நம்ம ஆத்தா வீட்டுக்கு போலாம்! 

அந்த நேரம் சத்ய தேவ், மா இப்போ ஸ்லீப் பண்ணலாமா! 

மிதுன் அவனுடைய குரலை கேட்டு whose this? 

உன் பக்கத்தில் யாரு இருக்கா! 

மகி, சக்தி அண்ணா! 

மிதுன் உடனே கோபமாக எப்டி அவன் அங்கே இருக்கான்! எதுக்கு டி என்னை மட்டும் இங்கே விட்டு அவனை பார்த்து கொள்கிறாய்! 

மகி கோபத்துடன் வெளுத்து போடுவேன் ராஸ்கல்! அவன்  அண்ணா உனக்கு! மரியாதை கொடு!. 

சக்தி அங்கு என்ன நடந்து இருக்கும் என அனுமானித்து கொண்டே மா மிதுன்! ஒரு நிமிடம் கொடுங்க! அவன் நினைப்பா இருக்கு! 

மகி, ஹே மிதுன் இனி சக்தியை அண்ணா அப்டின்னு கூப்பிடுற இப்போ பேசணும்!. 

மிதுன் நான் போன் வைக்கிறேன்!. 

மகி, ஹே வைக்காத! இப்போ வச்ச அங்கே வந்து உன்னை வெளுப்பேன்!. 

சக்தி, மா லீவ் இட்!. 

இல்ல நீ பேசு சக்தி! ஹே மிதுன்!. 

என்ன? 

என்னவா! உன்னை சரி இப்போ அண்ணா கிட்ட பேசு!. 

மிதுன் கஷ்ட பட்டு எட்சிலை விழுங்கி கொண்டு ம்ம் என கூறினான். 

சக்தி, ஹலோ மிதுன்!. 

சொல்லுங்க அண்ணா! 

எப்டி இருக்க! 

எப்படியோ இருக்கேன்! 

மகி, டேய் நான் ஸ்பீகரில் போட்டு இருக்கேன் தெரியும் நாயே! வரேன் வந்து உன்னை என்ன செய்கிறேன் பார் டா!. 

மிதுன் கோபத்துடன் போடி என போனை வைத்தான். 

சக்தி புன்னகையுடன் எதுக்கு மா அவனை இப்படி திட்டுற! 

அவன் சரி இல்லை! நீ வா தங்கம் என இருவரும் படுத்து கொண்டனர். 

வந்து விட்டாள். ஹரிணி!. 

மகி சக்தி பக்கமாக திரும்பி படுத்து இருந்தாள். 

அவன் போனில் அவளுக்கு msg அனுப்ப ஆரம்பித்தான். 

யார் அந்த ஹனி? 

சக்தி, ஹரிணி மா! 

மகி சிரித்து கொண்டே இந்த வயசுல என்ன டா அவள் கிட்ட பேசுற!. 

சக்தி, மா! 

மகி மெதுவாக சிரித்து கொண்டு அந்த பக்கம் திரும்பி சரி நீ பேசு டா!. 

சக்தி , மகி மகி திரும்பு நான் குட் நைட் சொல்லிட்டேன்! ஆனால் பாரு அவள் தான் விட மாட்ரா!. 

மகி, இது உன் பெர்சனல் நீ பேசு! 

இது இப்போ உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ற நேரம்! .

மகி, பேசு சக்தி நான் சும்மா சொன்னேன்! நீ மெச்சூர் எனக்கு தெரியும்! ஐம் ஜஸ்ட் கிடிங்!. 

மகி திரும்பு!. இங்கே பாரு உன்னோட MSD கழுத்தில் போட்டு இருக்கேன்! 

சக்தி கண்ணா இந்த பக்கம் வா! அம்மாவால்  திரும்ப முடியல டா!. .

அதன் பின் சக்தி எழுந்து அவள் புறம் படுத்து கையை கட்டி கொண்டான். 

அதன் பின் சக்தி கதை பேச அதை கேட்டு கொண்டே அவள் தூங்கி விட்டாள். 

சூர்யா நடு இரவில் வீட்டுக்கு வந்தான். வேலையே ஓட வில்லை இருந்தாலும் அனைத்து வேலையும் அவனால் முடிய மட்டும் பாதி செய்து விட்டு வந்தான். 

வா டா!. .என உமா கதவை திறந்து விட்டார். 

சூர்யா, அவள் சாப்பிட்டாலா!  

ம்ம் சாப்பிட்டாள், 

சத்ய தேவ்! என அவன் கேட்க..

உமா அனைத்தையும் கூறி முடித்து விட்டு சாப்பிடுரயா!. 

வேணாம்! நான் லைட்டா சாப்பிட்டேன்! 

உமா, என்ன மொட்டையாக பதில் சொல்ற? 

சூர்யா, நீங்க எத்தனை நாள் அவளை அங்கே உங்க வீட்டில் வைத்து இருப்பீங்க! 

உமா, இனி குழந்தை பிறந்து எழு மாசம் வரை அங்கே தான் இருப்பா! 

சூர்யா, அதை கேட்கல கோவிலுக்கு எப்போ போகனும்! 

அடுத்த வாரம் வியாழன் கிழமை!  

சூர்யா, அப்போ அது வரை அவள் வசந்தன் மாமா வீட்டில் இருக்கட்டும்! 

உமா கோபத்துடன் நான் அவளை என்ன பண்ண போறேன்! எதுக்கு அங்கே அனுப்புற! 

சூர்யா, இன்னிக்கி அவளை நீங்க திட்டிநீர்களா!. 

உமா, அவள் போன் பண்ணி சொன்னாலோ! சும்மா நாலு வார்த்தை சாதாரணமா தானே கேட்டேன்! 

சூர்யா, எதுக்கு கேட்டீங்க! 

ஏன் கேட்க கூடாது! 

சூர்யா, மா அவளுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை நான் தான் அவள் போனை வைத்து இருந்தேன்! அவள் போனை எடுத்து பாருங்க யாருக்கும் பேசுவது இல்லை அவங்க அம்மா அப்பா கிட்ட கூட பேசுவது இல்லை! நீங்க பேச மாட்டிக்கிற பேச மாட்டிக்கிர அப்டின்னு எதுக்கு கேட்கிறீங்க! 

உமா அவனையே பார்த்தார். 

சூர்யா, அவளை எதுவும் சொல்லாதீங்க மா! 

அப்பா சாமி நீயா சூர்யா! இது! 

சூர்யா, நான் திட்டுவென் மா! ஆனால் நீங்க திட்டினால் அவள் தாங்க மாட்டாள். நீங்க அவளுக்கு அத்தை ஸ்தானம்! இப்போ எதுவும் சொல்லி விட்டால் வெளியே சொல்லாமல் புலம்பி கொண்டே இருப்பா!  

உமா, இனி உன் பொண்டாட்டிய நான் எதுவும் சொல்லல! என திரும்பி கொண்டார். 

சூர்யா, மா!. 

விடு டா! 

சூர்யா, மா உங்களுக்கு புரியல இப்போ கொஞ்சம் டாக்டர் கவனமா இருக்க சொல்லி இருக்காங்க!  

உமா கண்களில் கண்ணீருடன் நான் எதும் சொல்லல ஆனால் நீ என்னைய!..  என்ன தான் இருந்தாலும் உனக்கு அவள் தானே முக்கியம்! கைய எடு சூர்யா!   

மா யார் சொன்னது? இப்போ அவள் இருக்கும் சூழல் புரியுதா நீங்க கோபத்தில் நாலு வார்த்தை திட்டினால் கூட பிரச்னை இல்ல.. ஆனால் நீங்க சிரித்து கொண்டே எதுவும் சொல்லி விடுவீகள் எனக்கு தெரியும்! அதை அவள் ஃபீல் பண்ணுவா மா!  

உமா, என்னைய வில்லி ரேஞ்சுக்கு ட்ரீட் பண்ற! 

சூர்யா, நீங்க தவறா நினைத்து கொண்டால் நான் எதும் பண்ண முடியாது! ஆனால் நான் சொன்னது உங்க மனசை சங்கட படுத்தி இருந்ததால் மன்னித்து விடுங்கள் . என சொல்லி விட்டு அவர்கள் அறைக்கு சென்றான். .

தன் உயிரைக் கட்டி கொண்டு உறங்கி கொண்டு இருந்தாள். 

சூர்யா அவளின் முகத்தை பார்த்தான். என்ன நினைத்தானோ உதட்டோடு உதடு பொருத்தி ஒரு முத்தம்! 

அவளுக்கு அது கனவு போல இருந்தது. 

சூர்யா… ?

தொடரும்.. 

Episode 318

சூர்யா உள்ளே வந்தான். சக்தி அவளின் கையை கட்டி கொண்டு தூங்கி கொண்டு இருந்தான். அழகு ஓவியம் போல் இருந்தது. இந்த நான்கு நாட்களில் மிகவும் நொந்து போய் விட்டாள். 

சூர்யா அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான். உமா மகியிடம் பேசிய அத்தனை விஷயத்தையும் சக்தி மை விழி கிட்ட பேசியதும் உடனே போன் செய்து கூறி விட்டான். 

சூர்யா ஒரு பெரு மூச்சை விட்டு அருகில் அவளின் இதழில் ஒற்றி எடுத்தான். மகி மேல் அவனுக்கு கோபம் தான் ஆனால் கோபம் ஒரு பக்கம் இருக்கட்டும்! என உதட்டை வெடுக்கென இழுத்தான். 

ஸ்ஸஸ்!  என சிணுங்கி கொண்டே விழித்தாள். 

சூர்யா கண்டு கொள்ளாமல் எதிரில் நின்று கொண்டு இருந்தான். மகி எழுந்து கொண்டு என்ன பண்ணீங்க? 

சூர்யா அவளை எழன பார்வை பார்த்து கொண்டே யார் எப்படி போனால் எனக்கு என்ன? அப்டின்னு நல்லா சாப்பிட்டு நல்லா ஆன்னு வாய திறந்து குட்டி குறட்டை போட்டு தூங்கிட்டு இருக்க!. 

மகி கோபத்துடன் என்ன பண்ண சொல்றீங்க? 

சூர்யா, ஹே ஓவர் வாய்! நீ தானே சொன்ன? போன் பண்ணி! எனக்கு பேசனும் போல இருக்கு.. என சொன்னது நானா நீயா! 

மகி சொன்னதும் அப்படியே வந்துட்டீங்க போல! நீங்க பார்த்து கொண்டே இருங்க!  

ஹே போடி!  

மகி, போக தானே போறேன்! 

என்ன வாய் அதிகமா பேசுற!. 

அப்படி தான் பேசுவேன்! உண்மையாகவே நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்க தான் நினைத்தேன். ஆனால் தலை கனத்தில் ஆடி கொண்டு இருக்கும் உங்க கிட்ட என்னால் மன்னிப்பு கேட்க முடியாது. 

சக்தியின் அசைவு தெரிய சூர்யா இது தான் சாக்கு என மகி பேபி! என இரட்டை புருவம் தூக்கியவன். சக்தியை சைகை காட்டி அருகில் வந்து அமர்ந்து அவளின் இதழில் எதிர்பாரா முத்தம் வைத்து கீழ் உதட்டை கடித்து இழுத்தான். 

மகி, ஹே ஹே ஹே!. என மெதுவாக அதிர்ந்து போனாள். 

சூர்யா சத்ய தேவை பார்த்தான். அவன் இன்னொரு பக்கம் திரும்பி படுத்து கொண்டு அசரிக்கையில் கைகளை கீழே போட்டான். 

சூர்யா மெதுவாக சக்தியின் பக்கம் சென்று கையை சரியாக வைத்து விட்டு மகியை பார்த்து உஸ் என விரல் காட்டினான். 

மகி அவனை கண்டு கொள்ளாமல் எழுந்து பாத் ரூம் சென்றாள். அவளின் எண்ணத்தில் இந்த புராஜக்ட் தான் மண்டையை உருட்டி கொண்டு இருந்தது. தன்னால் யாருக்கும் சிக்கல் வர கூடாது! இதை தானே முடிக்க வேண்டும். அதே சமயம்  குழந்தைக்கு எதுவும் ஆக கூடாது. என வயிற்றை நீவினாள். 

சூர்யா கதவை தட்டி விட்டு எவ்ளோ நேரம் டி! வெளியே வா! 

ஹான் இதோ வரேன்!. என வெளியே வந்தாள். தன்னவனை பார்த்ததும் இப்பொழுது பசி கூட எடுக்க ஆரம்பித்தது. ஏற்கனவே அவனை மிகவும் தொந்தரவு செய்து விட்டோம் இப்பொழுதும் தொந்தரவு செய்ய கூடாது என நினைத்தாள். அதனால் நேராக சமையலறை சென்றாள். 

விளக்குகள் போட்டு எதுவும் சாப்பிட இருக்கிறதா என தேடினாள். சூர்யாவுக்கு எடுத்து வைத்த உணவுகள் அப்படியே இருந்தது. அவன் சாப்பிடுவான். என மனதில் தோன்றியது. உடனே முட்டை எடுத்து ஆம்லெட் செய்தாள். 

மூக்குக்கு கீழ் முத்து முத்தாக வியர்க்க ஆரம்பித்தது. அவளின் காட்டன் மிந்தியில் துடைத்து கொண்டே அதை திருப்பினாள். 

என்ன பண்ற? என பின்னால் குரல் கேட்டது வெடுக்கென திரும்பி பார்த்தாள். 

சூர்யா அவளின் மணி வயிற்றில் கையை வைத்து தாங்கி கொண்டான். 

ஒன்னும் இல்ல கொஞ்சம் பசித்தது. அது தான்! 

சரி சரி!  தண்ணி குடித்தயா!  

ம்ம்!. 

இருந்தாலும் ஜுஸ் குடி மொசாம்பி ஜுஸ் போடுகிறேன்! 

அவன் முனைப்புடன் ஜுஸ் போடுவதில் கவனம் செலுத்தி கொண்டு இருக்க மகி திரும்பியவள் வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள். 

அவனுடைய வெற்று உடலில் முத்து முத்தாக வியர்த்தது. மேலே போட்ட துண்டை எடுத்து முகத்தை துடைத்து கொண்டே ஜுஸ் போட்டான். 

மகி, உங்களுக்கு சாப்பாடு போடவா!. 

எனக்கு வேணாம்!  

என்ன ஆச்சு? 

நான் அங்கேயே சாப்பிட்டேன்!  

மகி இது தெரிந்து இருந்தால் நான் சாப்பிட்டு இருப்பேனே! 

சூர்யா, பசிக்குதா!. 

ம்ம் ஆமா!  

சூர்யா நீ போய் உட்காரு நான் போட்டு எடுத்து வரேன்!  

அனைத்தையும் போட்டு அவளுக்கு எடுத்து வந்து தந்தான். 

சூர்யா கொண்டு வந்து கொடுக்க அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டாள். 

அவன் அவளையே பார்த்து கொண்டு இருக்க உங்களுக்கு வேணுமா! 

ஆ! . என வாய் காட்டினான். 

அவள் புன்னகையுடன் ஊட்டி விட்டாள். சிரிப்பை ரசித்தவன். உன் மேல நிறைய கோபம் இருக்கு! சோ பல்லை காட்டாத!  

உதட்டை சுளித்து கொண்டு நீங்களே சாப்பிடுங்க! 

நீ முடித்து விட்டாயா! 

ம்ம் என எழுந்து கொண்டாள். அவள் சாப்பிட்டு வைத்த மிச்சத்தை சாப்பிட்டான். 

மகி, எதுக்கு இதை சாப்பிடுறீங்க! 

சூர்யா, உன் வேலையை பார்த்திட்டு போடி!. 

மகி முறைத்து விட்டு உள்ளே சென்றாள். 

அடுத்த நாள் அழகாக விடிந்தது.

உமா முகத்தை தூக்கி வைத்து கொண்டே கிளம்பினார். மகி எதுவும் கண்டு கொள்ள வில்லை. பேசவும் இப்பொழுது மிகவும் தயக்கமாக இருந்தது. 

சூர்யாவும் கண்டு கொள்ள வில்லை. நட்ராஜ்,  சூர்யா போலாம் டா! அவன் தன் மகனை பார்த்தான். 

ப்பா இப்போ கிளம்பலாம்!. 

சூர்யா, சரி என வெளியே கிளம்ப போக.. 

மகி, அத்தை போயிட்டு வாங்க நாளைக்கு நாங்க வந்து விடுவோம்!  

ஹான் இன்னும் மாற்ற என்ன இருக்கு மொத்தமா மயக்கி வச்சு இருக்க!  

சூர்யா எதுவும் சொல்லாமல் கோபமாக பார்த்தான். 

என்னை முறைக்கும்  வேலை வைத்து கொள்ளாத!. என சொல்லி கொண்டே கிளம்பினார். 

மகி வீட்டிலேயே இருந்து கொண்டாள். சூர்யா அவர்களை டிரெயினில் ஏற்றி விட்டு வந்தான். 

மனம் கேட்க வில்லை. 

சூர்யா வேகமாக வீட்டில் வந்து பார்க்க அவள் உள்ளே படுத்து இருந்தாள். 

சூர்யா, ஹே என்ன ஆச்சு? 

மகி எழுந்து அமர்ந்தாள். ஒன்னும் இல்ல! 

சூர்யா, மகி சீ நீ அம்மா சொல்வதை பெரிதாக எடுத்து கொள்ளாத!..

மகி அவன் கைகளை தட்டி விட்டாள். 

சூர்யா, என்ன டி!. 

மகியின் கண்ணீர் மூக்கில் சொட்டி கொண்டு இருக்க உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்! 

என்ன? 

மகி எழுந்து அமர்ந்து நீங்! நீங்க!. ஏன் ஒரு தடவை கூட எனக்காக அத்தை கிட்ட பேசவே இல்லையே! உங்க அம்மாவுக்காக தானே ஒவ்வொரு தடவையும்!. 

சூர்யா அவளை விட்டு உடனே பிரிந்தான். 

மகி அவனை பார்த்து கொண்டு இருக்க சூர்யா வேக வேகமாக மூச்சை இழுத்து தன்னை அசுவாச படுத்தி கொள்ள முயற்சி செய்தான். தலையை கோதி தாடியை நீவி விட்டான். பைத்தியம் பிடித்தது போல இருந்தது. 

மகி அவனுடைய செய்கையை பார்த்து என்னங்க? 

சூர்யா ஒரு புன்னகையை சிந்தி கொண்டு எங்க அம்மா! ம்ம் எங்க அம்மா! ஹான்! எங்க அம்மாவை நான் கேள்வி கேட்கணும்! 

மஹிக்கு உள்ளுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. சூர்யா அருகில் வைப்பட்டு இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கொஞ்சம் குடித்தான். கோபம் அடங்காமல் வர அதை தூக்கி அடித்தான். 

சுவற்றில் பட்டு அந்த நெகிழி பாட்டில் மூடி உடைந்து பாட்டில் வளைந்து விழுந்தது. 

சூர்யா, இப்போ உனக்கு என்ன வேணும்? இப்போ என் அம்மாவை உன் முன்னாடி திட்டி மன்னிப்பு கேட்க வைக்கணுமா! சொல்லு! சொல்லு சொல்லு டி! 

மகி அப்படியே திடுக்கிட்டு பார்த்தாள். 

சூர்யா அருகில் வந்து சொல்லு டி! 

இல் இல்லங்க அப் அப்படி சொல்லல! 

சூர்யா சிரித்து கொண்டே உன் கிட்ட மன்னிப்பு கேட்க வைக்கிறேன். 

மகி விசும்பி கொண்டே அவனை பார்க்க 

சூர்யா, நீ எங்க அம்மாவுக்கு ஆக்கி அரித்து கொட்டி இருக்க, எங்க அம்மா உன்னை கொடுமை பண்ணி இருக்காங்க, அப்புறம் உங்க வீட்டில் நகை பணம் கொண்டு வாடி அப்டின்னு அனுப்பி விட்டாங்க! அப்புறம் என பற்களை கடித்தவன். முக்கியமா எங்க அம்மா இது எல்லாம் கொடுக்கல அப்டின்னா உன்னை நாலு வருசம்! நாலு வருஷம் உன்னை கனடா போக சொன்னாங்க இதுக்கு எல்லாம் இங்க அம்மாவை கேட்கணும் சரி தானே! 

மகி, என் என்னங்க இல் இல்ல!  

சூர்யா, மகி நீ பேசாமல் நான் எனக்கு தெரிந்த ஹான் உனக்கு தெரிந்த இன்பாவுக்கு போன் பண்ணி தரேன்! எங்க அம்மா மேல கொடுமை, வரதட்சணை கொடுமை என ஒரு புகார் கொடு!. 

மகி, இல்ல இல்ல என கையை கூப்பி வணங்கினாள். 

சூர்யா, ஆனால் பாரு என் அம்மா இந்த ஒன்பது வருஷம் கல்யாண வாழ்க்கையில் நேற்று தானே கேள்வி கேட்டாங்க! அதையே நீ பெரிய புகாரா கொடு! 

மகி அழ ஆரம்பித்தாள். 

சூர்யா, “எங்க அம்மாவை தப்பு சொல்றதுக்கு முன்னாடி நீ எல்லாமே ஒழுங்கா சொல்லு டி!”

மகி இப்பொழுது கையறு நிலையில் இருந்தாள். 

சூர்யா, உங்க வீட்டில இருந்ததை விட எங்க வீட்டில் நீ ரொம்ப ரொம்ப சுதந்திரமா சந்தோசமா இருந்து இருக்க! ஆனால் எங்க அம்மாவை கேள்வி கேட்கிற! 

மகி, என்னை மன்னித்து விடுங்கள்!. 

சூர்யா, உன்னை மன்னிக்க நான் யாரு! இதுக்கு எல்லாம் உனக்கு நீ அனுபவிப்பதை விட உனக்கு வரும் அண்ணி உதயன் பொண்டாட்டி உங்க வீட்டில் தாண்டவம் ஆடி இருந்தால் தாண்டவமா! உன் அம்மா என்ன கொடுமை பண்றாங்க அப்டின்னு உனக்கே தெரியும்! ஆனால் நீ சொல்லு டி!. 

மகி இதற்கு மேல் பொறுக்க முடியாமல் எழுந்து பால்கனி பக்கம் சென்று விட்டாள். 

(என் மனசாட்சி, சூர்யா 100 percent perfect!)

மதியம் ஆனது இருவரும் அமைதியாக இருந்தனர். 

சூர்யாவின் மன நிலையில் இதற்கு மேல் என்ன வேலை! வேலையில் கவனம் வருமா!  சூர்யா நேராக அதே கோபத்தில் ஜுஸ் போட்டவன் கொண்டு வந்து நீட்டினான். 

மகி அவனுடைய முகத்தை பார்க்க திராணி இல்லாமல் வாங்கி கொண்டு குடித்தாள். 


சூர்யா மீண்டும் சோபாவில போய் அமர்ந்து கொண்டான். 

மகி குடித்து முடித்து முகத்தை கழுவி கொண்டு வந்து அமர்ந்து போனை நோண்டினாள். அவளது போனில் அலாரம் அடித்தது. இன்னிக்கி தேதி 15! 

கஜுராஹோ கனவிலே சிற்பம் கண்ணில்….!.. என ஶ்ரீ காந்த் பாடல் ஓடி கொண்டு இருந்தது. 

மனம் தனிமையுடன் கூடவே தூரிகையை தேடியது. எப்பொழுதும் இரவு 12 மணிக்கு தட்டும் செய்தி இப்பொழுது தட்டி விட்டாள். 

டிங் என சூர்யாவின் போனில் மணி அடித்தது. 

சூர்யா ஹலோ! Deer!.. என அழைத்தான். 

ம்ம் இப்போ எதுவும் ட்ரா பண்றது இல்லையா! 

சூர்யா ( தூரிகை) – உன்னை நேரில் மீட் பண்ணதுக்கு பிறகு ட்ரா பண்ணலாம்!. 

மகி உதட்டில் சிரித்தாள்.  மகி( deer antler) ஒகே சொன்னால்! 

தூரிகை – எங்கே இருந்தாலும் வருவேன் என சூர்யா தட்டி விட்டான். 

இந்தியா! – (Deer antler)  என மகி தட்டி விட்டாள். 

தூரிகை – கஜுராஹோ! என சூர்யா கூறினான். 

(Deer antler) – காதல் கோவில்!. அப்டின்னு நினைத்தா இல்ல கோவில் அப்டின்னு நினைத்து வறீங்களா! என மகி தட்டி விட்டாள். 

சூர்யா – உங்க விருப்பம் அரை மணி நேரம் காத்திருப்பேன்! அதுக்கு அப்புறம் அவரவர் பாதையில் செல்லலாம்! இது எல்லாம் வந்தால் மட்டுமே நடக்கும்!  

Deer antler – நான் ஏநே வரனும்! 

தூரிகை – நீங்க ஏன்  வர கூடாது! 

திரைகள் விலக்கப்படுமா!. இல்லை என்ன நடக்கும்! 


பார்ப்போம் 

தொடரும்.. 

Episode 319

Deer antler – நான் ஏன் வரனும்! 

தூரிகை – நீங்க ஏன்  வர கூடாது? 

இரு பக்கமும் அமைதி நிலவியது. அதன் பின் ஒரே நேரத்தில் ம்ம் அடுத்து!. 

நீங்க சொல்லுங்க என இருபக்கமும் தட்ட பட்டது. 

நான்!.. என இருவரும் ஒரே நேரத்தில் தட்டினர். 

சூர்யா உதட்டில் சிரித்து கொண்டான். மகி அதன் பின் இன்னும் சிரித்தாள். 

மகி, யூ நோ தூரிகை இன்னிக்கி இப்போ உங்க கிட்ட பேசும் போது ஐ ஃபீல்…!..

நோ வோர்ட்ஸ்!. 

சூர்யா,மீ டூ டியர்! .. டீர்!. 

இந்த டியர் என்னும் வார்த்தை உள்ளுக்குள் ஒரு வித பதட்டத்தையும் ஆறுதலையும் ஒரே நேரத்தில் வெளி படுத்தியது. 

மகி ஒரு நிமிடம் கோவமாக மாறினாள். 

சூர்யாவின் மனம் என்ன டா அவளுக்கு எதுக்கு டியர் அனுப்பின! நீ ஒன்னும் தனி ஆள் இல்லை.. என நினைத்தான். அதனால் உடனே சூரியா, ஸாரி ஃபார் தட் வேர்ட் “ டியர்” அந்த வேர்ட் எதோ ஒரு வேகத்தில் அனுப்பி விட்டேன். என  தட்டி விட்டான். 

மகிக்கி இப்பொழுது தான் மூச்சே வந்தது. உடனே அவள் இட்ஸ் ஓகே! 

சூர்யா, அப்போ கோவிலுக்கு deer வருவாங்கலா! 

மகி , அதுக்கு ஒரு கண்டிசன் இருக்கு! 

என்ன டீர்? 

நீங்க அதை கோவிலா பார்க்கிரீங்களா? காதலின் சின்னமா பார்க்கிரீங்கலா? என மகி தட்டி விட்டாள். 

சூர்யா, ரெண்டும் இல்ல ஒரு அன்பின் வெளிப்பாடு! ஆனால் என்னோட அன்பு வெறும் ஓவிய காதல் மட்டும் தான்! ஒவியத்தொடு விட்டு விட்டால் நன்று,  டீர்!. 

மகி இன்னும் சிரித்தாள். நான் வரேன்! உங்களை பார்க்கனும்? உங்கள் ஓவிய ரசிகையாக!..

சூர்யா சிரித்து கொண்டே அதே போல் நானும் ஒரு ஓவிய ரசிகனாக காத்திருப்பேன்! டீர் என சொல்லி இருவரும் அமைதி ஆகினார்கள். 

எப்போ? என இரண்டு பக்கமும் கேட்டது. 

இருவர் மனதிலும் கோவிலுக்கு செல்லும் நிகழ்வு தோன்றியது. 

அதனால் இருவரும் ஒரே நேரத்தில் இந்த மாதம் 30 என தட்டி விட்டனர். 

ஓ கூல்  டீர் என சூர்யா தட்டி விட்டான். 

ஓகே என்ன நேரம் அப்டின்னு இன்னொரு நாள் தட்டினாள். 

அத்தோடு இருவரின் பேச்சும் முடிவுக்கு வந்தது. 

மகி சிரிப்புடன் உள்ளே வந்தாள். உடனே பாத் ரூம் சென்று முகத்தை கழுவினாள். அதன் பின் சிரித்து கொண்டே வெளியே வந்தாள். 

அங்கே வெளியே சூர்யா நின்று கொண்டு இருக்க உடனே அவள் முகம் பழைய நிலைக்கு மாறியது. 

சூர்யா புருவம் நெருக்கி கொண்டே அவளை பார்த்தான். 

தன் கருத்துக்கள் தவறாக இருந்தாலும் அதை ஏற்று கொண்டாலும் சூர்யா மகியை விட மாட்டான். அதனால் இந்த மன்னிப்பு கெஞ்சல் எல்லாம் அவனிடம் பலிக்காது. விட்டு விடலாம். என நினைத்து கொண்டாள். 

அதனால் மகி தலையை குனிந்து கொண்டே அவள் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டாள். அவளின் மனதில் அந்த புராஜக்ட் தான் ஓடி கொண்டு இருந்தது. 

சூர்யா யோசனையுடன் சிரிக்க என்ன இருக்கு! சிரிக்கிறாள்! என ரெஸ்ட் ரூம் சென்று வெளியே வந்தான். இவள நினைத்து நாம் ஏன் டைம் வேஸ்ட் பண்ணனும் என அவன் நகர்ந்து சென்றான். 

ஒரு நிமிடம் இருங்க! என தலையை குனிந்து கொண்டே கூறினாள். 

என்ன? என சூர்யா கடுகடுத்தான். 

எனக்கு அந்த புராஜக்ட்! 

சூர்யா கோபத்துடன் உனக்கு ஒரு தடவை.. என அவன் ஆரம்பிக்க

மகி கையை நீட்டினாள். பேசாதீங்க! நிறுத்துங்க! 

சூர்யா கையையும் அவளையும் மாறி மாறி பார்த்தான். 

மகி, தண்ணி வற்றுவது எல்லா பெண்களுக்கும் சாதாரணமா நடப்பது. எனக்கும் அதே போல் தான்! 

இப்போ என்ன டி!.  சொல்ல வர!? 

மகி, இந்த டி எல்லாம் சக்தி இருக்கும் போது மட்டும் கூப்பிடுங்க! 

சூர்யா, இதுக்கு அர்த்தம்! 

மகி, அதுக்கு தகுதி எனக்கு இல்ல நான் ரொம்ப தப்பான எண்ணம் இருக்கும் பொண்ணு! 

சூர்யா,  சரி தான் சொல்லு!  

மகி, இந்த புராஜக்ட் முடிக்க எனக்கு டைம் கொடுங்க அதுக்குள் நான் முடித்து கொடுப்பேன்! அப்படி கொடுக்கல அப்டின்னா இனி இந்த கையால இனி லேப் டாப் எடுத்து தட்ட மாட்டேன்!. 

சூர்யா, நீயே சொல்லு உனக்கு எவ்ளோ நாள் டைம் வேணும்! 

மகி, இந்த புராஜக்ட் கால அவகாசம் எட்டு மாசம் எனக்கு டெலிவரிக்கு இன்னும் 5 மாசம் இருக்கு அதனால் இந்த நாலு மாசத்தில் டெலிவரிக்கு முன்னாடி உங்களுக்கு முடித்து தருவேன்! 

சரி என அவன் நகர்ந்தான். 

மகி, நான் இன்னும் பேசி முடிக்கல! 

சூர்யா அவளை திரும்பி பார்த்தான். .

மகி, எனக்கு மேன் பவர்! உங்க ஆபீஸ்ல இருந்து மேன் பவர் தேவையில்லை. 

சூர்யா, ம்ம் பார்க்கிறேன் மிஸஸ் வசந்தன். 

மகி, பாருங்க மிஸ்டர் என சொல்லி திரும்பி கொண்டாள். 

சூர்யா மனதில் கொழுப்பு அத்தனையும் கொழுப்பு! நாலு மிதி கொடுத்து இருக்கணும்! என நினைத்து கொண்டான்.

இங்கே  மிதுன், ப்ரோ! 

சொல்லு மிதுன்!  

நாளைக்கு அது அது வந்து.. 

என்ன விஷயம்? 

நாளைக்கு மகி, அண்ட் என்னோட டாடி எல்லாம் வரான்க அதனால் நான் எங்க உமா மா வீட்டுக்கு போகனும்! 

நிதின் முகம் இதை கேட்டதும் மாறியது. 

மிதுன், சாரி ப்ரோ என்னால் ஒன்னும் பண்ண முடியாது போயே ஆகனும்! 

நிதின், இட்ஸ் ஓகே நான் இன்னிக்கு பெங்களூர் கிளம்புகிறேன்! 

மிதுன், எதுக்கு ப்ரோ! 

எங்க டாடி அங்கே தான் இருக்காங்க என சொல்லி அவன் கிளம்பினான். நிதின்க்கு இங்கு இருந்து கிளம்ப துளி கூட விருப்பம் இல்லை வேறு வழி இல்லாமல் கிளம்பினான். 

அடுத்த நாள் காலை பத்து மணிக்கு மகி மற்றும் சூர்யா இருவருக்கும் விமானம் மகி அவனை யாரோ ஒருவர் போல பார்த்தாள். 

சூர்யா அதை விட மிச்சமாக இருந்தான். இருவரும் ஒருவர் மேல் பயங்கர வெறுப்பில் இருந்தனர். 

1.00 மணிக்கு வந்து சேர்ந்தனர். 

நட்ராஜ் மிதுனை வசந்தன் வீட்டில் இருந்து அழைத்து வந்து இருந்தார். சத்ய தேவ், மிதுன் தேவ் இருவரும் ஒரே வீட்டில் மிதுன் உமா கூட சேர்ந்து கொண்டான். 

சத்ய தேவ் மிகவும் அமைதியாக அவனுடைய வேலையில் இருந்தான். இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். 

சூர்யா வந்ததும் அன்று உமாவிடம் இரவில் வாக்கு வாதத்தில் ஈடு பட்டது நினைவுக்கு வர வேகமாக தன் தாயை கட்டி கொள்ளும் அதே நேரம் மிதுன் மகி யை வாடி போடி என மரியாதை இல்லாமல் பேசி சண்டையுட்டது நினைவு வர வேகமாக போய் மகி என காலை கட்டி கொண்டான். 

நட்ராஜ் இருவரையும் மாறி மாறி பார்த்தார். சூர்யா செய்வதை போலவே இருந்தது. சத்ய தேவ் இதையெல்லாம் கண்டு கொள்ள வில்லை. அவனுடைய வெளிப்பாடு கொஞ்சம் முதிருவு தன்மையுடன் இருக்கும் 

உமா அவனை தள்ளி விட்டு கைய எடு என்னங்க! என அவரை அழைத்தார். 

சூர்யா , மா என்ன கோபம்! 

மகி, மிதுன் குட்டி என கொஞ்ச ஆரம்பித்தாள்.  மிதுன் எப்பொழுதும் எது நடந்தாலும் சரி  அவன் எதாவது செய்து அவளிடம் திட்டு வாங்கி சமாதானம் செய்து கொஞ்சுவான். சத்ய தேவ் வேறு மாதிரி குணம் கொண்டவன். மிதுன் வேறு குணம் கொண்டவன். 

மிதுன், மகி நம்ம தாத்து வீட்டுக்கு போலாம் அங்கே ஜாலியா இருக்கும்! 

சூர்யா, தன் அம்மாவின் கழுத்தை கட்டி கொண்டு சத்ய தேவ் இது தான் நம்ம வீடு அவனுக்கு சொல்லு! இடியட் மாதிரி வளர்ந்து வருகிறான். 

சத்ய தேவ் அவனை பார்த்து சிரித்தான். 

மிதுன், மா இதுக்கு தான் சொன்னேன்! இங்கே எனக்கு பிடிக்கல வா போலாம்! 

உமா, என்ன மிதுன் குட்டி இது தான் டா நம்ம வீடு!  யாரு என் தங்க பையனை தொல்லை பண்றது! 

உமா மாம் எல்லாமே உங்க உங்க உங்களுக்கு ஹைட்டா ஒரு பிக் பையன் இருக்கார் அவர் மட்டும் தான் ரொம்ப தொல்லை! 

சூர்யா, டேய்! 

உமா! பாருங்க! 

மகி, மிதுன் அவங்கள பேர் சொல்லி கூப்பிட கூடாது. ஆத்தா சொல்லு! 

அது நல்லா இல்ல! 

மகி, அடி வாங்க போற! 

மிதுன், அப்போ அம்மாச்சி சொல்றேன் அது தான் பிடிக்குது! எனக்கு கலை அம்மாச்சி ரொம்ப பிடிக்குது! 

இதையெல்லாம் கேட்டு உமா முறைத்து கொண்டு உள்ளே சென்றார். 

சூர்யா, மா என்ன ஆச்சு? 

உமா நொந்து கொண்டு மொத்தமா என் பேரனை என் கிட்ட இருந்து பிரித்து விட்டாய் இதை கேட்டால் குத்தன் ஆகி விடும்! என்ன சொல்றான் பாரு! உன் மாமானார், மாமியார் தான் பிடிக்குமாம்! 

சூர்யா, மா! அப்படி இல்ல மா! அவனை நீங்களே இனி வைத்து கொள்ளுங்கள் போதுமா! 

என்னமோ பண்ணு நான் சொன்னால் குத்தம் என சொல்லிவிட்டு அவர் வேலைகளை பார்க்க சென்றார். 

சூர்யா மற்றும் மகி இருவருக்கும் வீட்டில் இருக்க மிகவும் கடியாக இருந்தது. அவர்களின் நினைவில் இருவர் வந்தனர். 

மூன்று நாட்கள் ஓடியது. அதற்கு மேல் அவர்களால் இப்படியே இருக்க முடிய வில்லை. 

உடனே சூர்யா அவனுக்கும் மகி அவளுக்கும் போன் செய்தார்கள்..

ஹலோ அறிவு?

அக்கா! 

நாளைக்கு மீட் பண்ணலாமா! 

அக்கா நான் சென்னையில் இருக்கேனே! 

நானும் இங்கே தான் இருக்கேன்! 

அப்டியா அப்போ சூப்பர் உங்களை பற்றி தான் ரித்து சொல்லி கிட்டே இருக்கா நாளைக்கே பார்க்கலாம்! 

ம்ம் ஓகே! 

விவேகா, அப்போ கூடவே சத்ய தேவ் கூட்டி வாங்க! மிதுன் ஹீரோ கூட வரனும்! என் டார்லிங்! 

ம்ம் என சிரித்து கொண்டே போனை வைத்தாள். 

அடுத்த நாள் அழகாக விடிந்தது. இன்பா வழக்கம் போல் விவேகா வீட்டுக்கு சென்றான். அங்கே ரிதம் கிளம்பி கொண்டு இருக்க.. 

என்ன பேபி  இன்னிக்கி ரொம்ப  அழகா இருக்கீங்க? 

ரிதம், டாடி இன்னிக்கி ஜாலி நான் மகி மாமியை பார்க்க போறேன். அதான் என சொல்லி கொண்டே அவள் கிளம்பி அமர்ந்து இருக்க.. 

இங்கே மகி ஹைலாஸ் பற்பாத் நார்த் இந்தியன் ஹோட்டல் லொக்கேஷன் அதை விவேகாவுக்கி தட்டி விட்டாள். 

தொடரும்.  

 Episode 320,

மகி மீண்டும் விவேகாவுக்கு கால் செய்தாள். 

அக்கா வரேன் இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கே இருப்பேன்! என சொல்லி போனை வைத்து கொண்டே கிளம்பினாள். 

ரிதம் டாடி நீ நீங்க எங்க ரெண்டு பேரையும் மாமி வீட்டில் ட்ராப் பண்ணுங்க.. என இன்பாவிடம் கூறினாள். 

விவேகா, வேணாம் ரிது நம்ம ரெண்டு பேரும் ஜாலியா போலாம்..  வா என கை பிடித்து அழைத்து சென்றாள். 

இன்பா, ஓவரா பண்ணாத டி என ரிதமை தூக்கி கொண்டான். “எப்படி என் ரிதம் டிம்பிளை கூட்டி போ!”

நீ ஒன்னும் கூட்டி போக வேணாம் என ரிதமை அவனிடம் இருந்து பிடுங்கி கொண்டாள். 

****

நிதின் மகியை தேடி வந்து கொண்டு இருந்தான். மூன்று நாட்களுக்கு மேல் அவனால் மிதுன் மற்றும் வசந்தன விட்டு இருக்க முடிய வில்லை.. அதனால் கிளம்பி வருகிறான். 

இங்கே  விவேகா மனதில் இன்பனை நினைத்து “நான் வரலன்னு சொன்னால் நீ பப்பி மாதிரி என் பின்னாடி வந்து கன்வின்ஸ் பண்ணி இருக்கணும் டா! ஆனால், ஆனால்!  அதை விட்டு என்னை கண்டு கொள்ளாமல் ஆடி கொண்டு சிரித்து கொண்டு போகிறாயா! நீ என் கிட்ட சூர்யா சாரை தானே பார்க்க போறேன்னு சொன்ன ஆனால் இப்போ இவள் கூட போரியா உன்னை…. !” என முனகி கொண்டே நின்றாள். 

ரிதம், பேபி நான் கார் ல தான் வருவேன் இப்போவே டாக்ஸி புக் பண்ணு!. 

விவேகா, இல்ல ரிதம் மணி வேஸ்ட் பண்ண கூடாது.. 

ரிதம், அது மணி வேஸ்ட் இல்ல நீ வேணா பஸ் ல போ ஒய் ஷுட் ஐ கோ! என் டாடிகிட்ட கார் இருக்கு! சோ நானும் காரில் தான் போவேன். 

விவேகா வேறு வழி இல்லாமல் கார் புக் செய்தாள். மகிக்கு போன் செய்தாள். கா எங்கே இருக்க? 

அடையார்ல இருக்கேன் நீ  kailash parbat வந்திடு! என மகி கூறினாள். 

விவேகா, அக்கா சூர்யா சார் உன் கூடவா இருக்காரு? 

இல்ல நானும் மிதுனும்‌ மட்டும் தான்  வந்து இருக்கோம். அவரும் சக்தியும் எங்களை ட்ராப் பண்ணிட்டு போயிட்டாங்க…

சரி வரேன் என்று போன் வைத்தாள். ரிதம், பேபி! பேபி! மாமி வந்தாச்சா!. 

ம்ம் மாமி, மிதுன் ரெண்டு பேரும் வந்து இருக்காங்க!. 

ரிதம், மாமு அப்புறம் அப்புறம் சக்தி!. 

விவேகா, அவங்க வரல.. 

ஏன் ஏன் வரல? 

எனக்கு எப்படி தெரியும் நீ உன் டாடி கூட போயிருக்க வேண்டியது தானே!. 

ரிதம் அமைதியாகி சரி விடு கோபம் வேணாம். என வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். 

இங்கே இன்பா காரில் இருந்த படியே சூர்யாவுக்கு கால் செய்தான். ம்ம் சொல்லு நானே கால் பண்ணனும் அப்டின்னு நினைத்தேன். நீயே பண்ணிட்ட!. 

இன்பா, எங்கே இருக்க? 

சேத் பட்டு பக்கம் போயிட்டு இருக்கேன். என சூர்யா கூறினான். 

சரி மீட் பண்ணலாம்! 

என்ன சுருதி குறையுது! என சூரியா கேட்க.. 

டேய் கடுப்ப கிலப்பாத நான் உடனே பார்க்கனும். 

ம்ம் சரி வா என சொல்ல nj, இன்பா சேத் பட் கீழ்ப்பாக்கத்தில் இருந்து கொஞ்சம் தூரம் டா மார்னிங் கொஞ்சம் டிராபிக் அதிகமா இருக்குமே!. 

இன்பா, ஹே பிளீஸ் டி முக்கியமா வேலை நான் போகனும். கொஞ்சம் மனசு சரி இல்ல.. 

NJ கோபமாக சரி இங்கேயே இறக்கி விடு!. 

ஹே லூசு இப்போ எதுக்கு இப்படி முகத்தை வச்சு இருக்க சகிக்கல…

நீ இறக்கி விடு காரை ஸ்டாப் பண்ணு.. 

இன்பா, ஃபர்ஸ்ட் ஆப் ஆல் நான் எதுக்கு உன்னை பிக் அப் ட்ராப் பண்ண வேணும். உன் பாய் பிரென்ட் இருக்கான் தானே இங்கேயே இறங்கு டி! என காரை நிறுத்தினான். 

ராஸ்கல் யூ! இனி உன் கிட்ட வந்து பேசினால் கேளு டா! 

இன்பா பஸ் ஸ்டாப் பக்கம் நிறுத்தி விட்டு பஸ் வரும் வரை காத்திருந்தவன். சரி உன் கிட்ட பேசல பட் அங்கே போய் ரீச் ஆனதும் மெசேஜ் தட்டி விடு.. 

தட்ட  மாட்டேன்!. 

ஹே போடி போ சீக்கிரம் ஏறிக்க என சொல்ல அவள் முறைத்து கொண்டே ஏறி விட பை பை என கை அசைத்தான். 

அதன் பின் இன்பாவின் கார் நேராக சேத்பட் சென்றது. சூர்யா அவனுக்கு மீண்டும் போன் செய்தான். 

இன்பா, மச்சி சரக்கு அடிக்கலாமா!. 

இல்ல டா முடியாது! 

மகி உன் கூட இருக்காளா! 

இல்ல சக்தி என் கூட இருக்கான். இன்பா, சரி நான் இப்போ எங்கே வரனும்? 

“Kailash parpat restaurent” வந்திடு!. 

இன்பா, வெஜ்ஜா! சோ சேட்…

சூர்யா, வைகாசியாம் டா அவங்க ஊரில் பண்டிகையாம்! சீக்கிரம் வா என சொல்லி போனை வைத்தான். 

அந்த நேரம் இன்பாவின் எண்ணுக்கு ரிதம் போட்டோஸ் அனுப்பினாள். அதே kailash parbat அடையார் ப்ராஞ்ச் ல இருந்து ரிதம், மகி, விவேகா, மிதுன் என அனைவரும் கூடவே நிதின் பிரகாஷ் இருந்தான். 

        ****

விவேகா, அக்கா இந்த நிதின் எப்படி ? 

எங்க கூட தான் இருக்கான். வீக் என்ட் இப்போ தான் அவங்க சித்தப்பா விட்டு போறாரு!

விவேகா ஒரு நிமிடம் திடுக்கிட்டு அக்கா குரு பிரகாஷா!. 

ம்ம் ஆமா என சொல்லி கொண்டே மகி ரிதமுக்கு பிடித்த சாட், கூல்சா, பானி பூரி மிட்டா, டிக்கா என வட இந்திய உணவுகளை ஆடார் செய்தாள். 

விவேகா, அக்கா கனடாவிலும் இங்கேயும் ஒரு விஷயம் மாறல.. 

என்ன என அவள் ரிதமுக்கு ஊட்டி விட 

விவேகா, வேற என்ன டொரன்டோவில்  உள்ள பிரான்சுல கூட  இந்த புட் expensive தான் ஆனால் அதை விட நம்ம ஊரில் அதிகம்.. 

மகி, அப்படி சொல்ல கூடாது என் ரிதம் மேலே கண்ணு படும்.. 

மிதுன், ஹே டார்லிங் உங்க வீட்டுக்கு போனதும் என்னை மறந்து விட்ட தானே இவள் இடியட் எனக்கு ஒரு போன் கூட பண்றது இல்ல..

விவேகா, இல்ல டா டார்லிங் நான் வேலையில் பிஸியாக இருக்கேன்.

நிதின் அமைதியாக சாப்பிட்டு கொண்டு இருந்தான். மகி, நிதின் இந்தா பானி பூரி ஆ காட்டுங்க . 

பொம்மாயி ஐ வான்ட் திக்கா இது ஸ்வீட்! என நிதின் சொல்ல அவள் உடனே காரம் கலந்த தண்ணீரை ஊற்றி அவனுக்கு ஊட்டி விட்டாள். 

விவேகா கப்பல் கவிழ்ந்தது போல் அமர்ந்து இருக்க மகி , அப்புறம் லைஃப் எப்படி போகுது? 

இங்கே… இன்பா சூர்யாவுடம்

மச்சி லைஃப் நரகமா இருக்கு டா!. என கூறி கொண்டே அருகில் ஹெட் செட் போட்டு விளையாடும் சக்தியை பார்த்தான்.

.சூரியா, நான் கிஃப்ட் அனுப்பியது எல்லாம் வேஸ்ட்டா!. 

இன்பா சக்தியின் ஏர்பேட் வாங்கி காதில் வைத்து சத்தம் வருகிறதா என செக் செய்து கொண்டே  மகி அடையார் ல இருக்க இதே பிராச்ல இருக்கா நீயும் அதே ரெஸ்டாரன்ட் வந்து இருக்க என செக் செய்தான்.

மாம்ஸ் வாட் ஆர் டூயிங்? ஒன்னும் இல்ல நீ சுடு என போனில் உள்ள எதிரிகளை சுட்டி காட்டினான். 

சூரியா, ம்ம் கொஞ்சம் நார்த் இந்தியன் புட் ல எனக்கும் அவளுக்கும் டேஸ்ட் மேட்ச் ஆகும் அங்கே அந்த நிதின் வராண்ணு சொன்னாள் அது தான் கூடவே அந்த மிதுன் ராஸ்கல் இருப்பான். ஏற்கனவே அவள் என் கிட்ட பேச மாட்டாள். கூட இன்னும் ரெண்டு ஆள் இருந்ததால் என்னை தண்ணீர் தெளித்து விட்டது போல் இருக்கும். அதான் இங்கே சக்தியை கூட்டி வந்துட்டேன். 

இன்பா, ஒரு மிடுக்கு தண்ணீர் குடித்தான். 

சூரியா, அப்புறம் இந்த இன்ப ராகவன் எப்போ மானம் கெட்டவன் ஆனான்!  

மச்சி பிளீஸ் மச்சி ஏற்கனவே அவள் என்னை கொடுமை படுத்துரா டா! 

டேய் கேட்ட கேள்விக்கு பதில சொல்லு? 

இன்பா, அவளை பார்த்த அன்னிக்கே கட்டு பாடு காற்றில் பறந்து போச்சு!.. 

சூர்யா, த்தூ தூ வெட்கம் கெட்டவனே! 

இன்பா, மச்சி ஒரு டவுட்டு  பிளீஸ் இதுக்கு பதில் சொல்லிட்டு அப்புறம் என்னை திட்டு டா.. நான் எல்லாம் வாங்கி கொள்கிறேன். 

சூர்யா, ம்ம் சொல்லு என்ன? 

இன்பா, மச்சி நீ எஸ்பீரியன்ஸ் ஹேன்ட் அதான் கேட்கிறேன்!. 

சொல்லு? எதுவும்! உடனே ..என நிறுத்த.. 

இன்பா, டேய் அது இல்ல ஒரு நாளைக்கு எத்தனை தடவை பண்ண முடியும்? 1 மணி நேரம்? இல்ல 4 மணி நேரம்? 24 மணி நேரம்? 

சூர்யா, இன்பா நீ மர்கயா டா!  செத்து போயுடுவ!. 

இன்பா, உதட்டை கடித்து கொண்டே 24 மணி நேரம் செய்யனுமாம்!.. .இதை கேட்ட சூரியா சிரிக்க ஆரம்பித்தான். What the f***!.. உனக்கு இப்படி ஒரு நிலையா!. 

இதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு!. 

இன்பாவின் கண்கள் மின்னிட  அதுக்கு தான் என் மச்சி சூர்ய தேவ் வேணும்!. தலைவன் வந்துட்டான். சொல்லு!  சொல்லு! 

சூர்யா, அதுக்கு முன்னாடி நீ எனக்கு ஒரு வேலை செய்யணும்!. 

இன்பா, போடா *** விஷயத்தை சொல்லுவன்னு பார்த்தால் என்னை ஏமாற்றுகிறாயா!. 

சூரியா, ஹே வேணாம் விடு போ! நீ காதல் கல்யாணம்! ஆனால் நான் அப்படி இல்ல கல்யாணம்! அப்புறம் சண்டை!  இப்போ காதல்! 

இன்பா, அதான் மூணு புரோடெக்ட் ! சரி சொல்லி தொலை….

இங்கே மகி – அந்த தூரிகை இந்தியால இருக்காங்க!.. 

இதை கேட்டதும் விவேகா புன்னகையுடன் அக்கா! என சிரித்து குதித்து கொண்டே எழ அங்கு உள்ள அனைவரும் அவளை ஒரு மாதிரியாக பார்த்தனர். 

மகி, ஹே என்ன டி பண்ற உட்காரு அங்க தான் ஒரு சிக்கல்.. 

விவேகா, என்ன சிக்கல்? 

        *****

இங்கே சூரியா இன்பாவிடம் – மச்சான் அந்த deer antler அ நான் கஜுராஹோல நெக்ஸ்ட் 15 வீக் மீட் பண்றேன்னு சொல்லிட்டேன் டா!. 

இன்பா புன்னகையுடன் மச்சி நான் போறேன் டா!. இது ஒரு வேலையா! உன்னை நாலு வருசம் சுற்ற விட்ட பொண்ணை நான் போய் பேசி விட்டு வரேன் டா! 

சூரியா, ஓவரா ஆட்டம் போடாத அன்னிக்கு தவிர்க்க முடியாத வேலை ஈரோடு எங்க குலதெய்வ கோவிலுக்கு வரனும் அப்டின்னு என் அம்மா கட்டாயமா சொல்லிட்டாங்க.. 

     *****

விவேகா, அக்கா ஜாலி அப்போ நான் பார்க்க போறேன்… 

மகி, நீ போக வேணாம் எனக்கு இது சரியா படல அண்ட் யாருன்னு தெரியாத ஒருவனை இந்த கண்ணா மூச்சி ஆட்டத்தில் போய் பார்க்க வேணுமா! விவேகா நீ யே இப்போ தான் உன் குடும்பத்தில் சேர்ந்து இருக்க.. அதே போல் எனக்கும் என்னோட வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கேன். 

விவேகா, அக்கா என்ன பேசுற நாலு வருஷம் எதுக்கு பேசின நம்ம மனதில் அவ்ளோ பெருசா ஒன்னும் இருக்க போறது இல்ல போறோம் ஹாய் சொல்றோம் வந்துட்டே இருக்கோம்!  அவ்ளோ தான்!.. 

மகி, இல்ல விவேகா வேணாம் டி!. 

அக்கா நீ கம்முன்னு இரு நான் போக போறேன். யாருன்னு தெரிந்தே ஆக வேணும்.. பார்த்து விட்டு வர போறேன். 

மகி, சரி அப்போ யாருன்னு எனக்கு ஒரு போட்டோ அனுப்பு.. 

விவேகா, அதென்ன கஜுராஹோ? தாஜ் மஹால் சொல்லி இருக்கலாம் தானே? எப்படி இந்த இடம் தேர்வு செய்தீர்கள்? 

        *******

சூர்யா கண்கள் காதலில் மிதக்க இன்பாவிடம் கஜுராஹோ காதல் கோவில் டா அதனால் தான் அதை சூஸ் பண்ணேன். 

இன்பா, கொன்றுவேன் மூணு குட்டி போட்டுட்டு சாருக்கு காதல் கோவில் போகணுமா!. 

சூர்யா, ஹே ஒரு கோ இன்சிடன்ட் என்ன தெரியுமா! Deer antler நானும்( தூறிகை) ஒரே நேரத்தில் இதை டைப் பண்ணோம் ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் மெசேஜ் வந்தது. 

இன்பா, சரி விடு மச்சி நான் பார்த்து கொள்கிறேன் எனக்கு ஐடியா சொல்லவே இல்லையே? 

சூர்யா, ஓவர் ஆட்டம் வேணாம். உன் சட்டையில் நான் கொடுக்கும் கேமரா வச்சிட்டு போற அந்த deer antler அ பார்க்கும் நேரம் நானும் பார்க்க வேணும்.. 

சரி சரி நீ கவலை படாத மச்சி உனக்கு பதில  நான் அங்கே இருந்து சிறப்பா செய்து விடுகிரேன். 

சூர்யா, எல்லாம் பெரிய விஷயம் இல்ல இங்கே பக்கத்தில் வா என சில விஷயம் சொன்னான். 

இன்பா, அவ்ளோ தானா! 

சூரியா, இதை மட்டும் ஃபாலோ பண்ணு ஆனால் 24 மணி நேரம் பண்ண முடியாது. 

ஆனால் முகத்தில் எதையும் வெளி காட்டி கொள்ளாத போதும் விவேகா விழுந்து விடுவாள். 

சக்தி, என்ன விவேகா விழுந்து விடுவாள்!. 

சூர்யா, உன் மாமி இன்பாவை ரொம்ப டார்ச்ர் பன்றாளாம் என் கண் அடித்தான். 

இன்பா, டேய் நாயே அவன் முன்னாடி இப்படி பேசாத.. 

சூர்யா, சரி அப்புறம் அதை விட்டு ரிவெஞ் என்ன என்ன பண்ண? 

இன்பா எல்லா வற்றையும் சொல்லி முடிக்க. 

சூர்யா, உன் வாய் தான்டா உன்னை கெடுக்குது.. 

இன்பா, என்ன டா சொல்ற? 

சூர்யா, மகி கிட்ட நான் கல்யாண டைம் ல என்ன சாக்ஸ் போட்டு இருந்தேன்னு இப்போ அவள் கிட்ட கேட்டன்னு வை இப்போ கூட எல்லாம் ஒப்பிபாள் ஆனால் கல்யாண நேரத்தில் அவள் பார்வை கூட என் பக்கம் திரும்பல ஆனால் நான் வைத்த கண் வாங்காமல் அவளை தான் பார்த்தேன் அவள் முகத்தை தவிர எதுவும் நினைவு இல்ல.. பொண்ணுங்க மனசு ரொம்ப ஆழம் மச்சி மகியே இப்படி இருக்கா!. 

மேலும் சூரியா, விவேகா வும் நீயும் கிட்ட தட்ட 8 வருசமா லவ் பண்ணி இருக்கீங்க அதை விட இப்போ இப்படி நீ சீண்டிய விஷயம் அத்தனையும் ஒன்னு விடாமல் ஸ்டோர் பண்ணி வச்சு இருப்பா எல்லா வற்றையும் உன் கிட்ட சொல்லி சொல்லி சாவடிப்பாள். எதுக்கு டா இப்படி பண்ண அதுக்கு தான் நான் கிஃப்ட் பண்ணத மட்டும் செய்து இருந்தால் ரிவெஞ் கூட சுவீட்டா  இருந்து இருக்கும் ஆனால் இப்போ!.  என ஒரு பெரு மூச்சை விட்டான். 

இன்பா, இப்போ இதுக்கு என்ன டா வழி! 

சூர்யா, இந்த பொண்ணுங்க மனச புரிந்து கொள்ள புக் இல்ல டா ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.. ஒரே ஒரு வழி தான் இருக்கு!  

இன்பா, என்ன அது ? 

சூர்யா, அவனை அருகில் அழைத்து ஒரு சில நிமிடம் விவரம் சொல்ல.. 

இன்பா, டிரை பண்றேன் மச்சி!. 

ம்ம் ஓகே அடுத்த வாரம் உனக்கு நினைவு படுத்துறேன். 

இன்பா, ஹே நான்  இப்போவே போப்பால்க்கு ஃப்ளைட் டீக்கெட் போட்டு விட்டேன். Love temple கட்டாயம் போவேன். 

சக்தி,மாம்ஸ் என்னையும் கூட்டி போயென்!. 

இன்பா, வேணாம்! 

சூர்யா அமைதியாக அமர்ந்து இருந்தான். இன்பா அவன் முகத்தை பார்த்து விட்டு சோல்ஜர்! நீங்க கொஞ்சம் விளையாடுங்க நான் டாடி கிட்ட பேசிரேன்!. 

ஓகே என சொல்லி சத்ய தேவ் போனில் விளையாட சென்றான். 

இன்பா சூரியாவின் தோல் மேல் கை போட்டு கொண்டு என்ன மச்சி! 

சூர்யா கண்ணை மூடி திறந்தவன். அவளுக்கு என்ன ஆகித்துண்ணு தெரியல டா இப்போ எங்க அம்மாவுக்கும் அவளுக்கும் நடுவில் மாட்டி கொண்டு முளிக்கிரென்! 

இன்பா, கேள்வியாக அப்படி என்ன பிரச்னை சொல்லு? 

சூர்யா, மகி மற்றும் உமா இருவருக்கும் இடையே உள்ள அனைத்து பிரச்னையும் கூறினான். 

இன்பா சாக் ஆகி இந்த மாதிரி எல்லாம் வருமா மச்சி! 

 சூர்யா பெரு மூச்ச விட்டு வருமாவா என்னை பிரட்டி எடுக்குது! உன்னை பார்க்க வந்ததுக்கு காரணமே கொஞ்சம் அப்படியே ஜாலியா அப்படியே ஜாலியாக பாண்டி போய் கொஞ்சம் குடிச்சு ரிலாக்ஸ் பண்ண நினைச்சேன். 

இன்பா கஷ்ட பட்டு எட்சிளை விழுங்கி கொண்டு எனக்கு பயமா இருக்கு டா! இந்த விவேகா வேற மாதிரி இப்போ விகரஸ்ஸா இருக்கா! நீ வேற என்னமோ சொல்ற? 

சூரியா, ஏன் மச்சி முன்ன நம்ம மீட் பண்ணும் போது வீட்டை பற்றியோ யாரை பற்றியோ பேசுவோமா! சொல்லு பார்த்ததும் பார்ட்டி கழ்ப், சைட் டிஷ் ஆட்டம் பாட்டம் அப்டின்னு இருப்போம் ஆனால் இப்போ இதையெல்லாம் சமாளிக்க நாக்கு தள்ளுது டா!. 

இன்பா…? 

**** 

இங்கே spr வீட்டில்!. 

நாதன், தேஜூ மா! 

சொல்லுங்க டாடி! என தேஜூ வேலை செய்து கொண்டே பதில் அளித்தாள். 

நாதன், மகி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருந்த விஷயம் உனக்கு தெரியுமா! 

தேஜூ தட்டச்சு செய்வதை நிறுத்தி விட்டு தன் தந்தையை பார்த்தாள்.அவள் பார்வை கொஞ்சம் புருவம் நெருக்கி இருந்தது. 

நாதன், அது அது வந்து என்னோட ப்ரெண்ட் சொன்னான்! அங்கே மாயா, ஜெய், எல்லாரும் வந்து இருந்தார்கள். 

தேஜு தட்டச்சு செய்து கொண்டே டாடி spr பேரை மறந்து விட்டீர்கள் போல!. 

நாதன்…? 

Spr…? 

மகி..? 

தொடரும்.. 

You may also like

Leave a Comment