Episode-16
அவன் பெரிய வேலை செஞ்சா எனக்கென்ன? என் முன்னாடி அவன் ரவுடி பய தான். பொண்ணுங்களை ‘ஜொள்ளு விடும் நாயி’. பொண்ணுங்களை மயக்க என்ன வேணும்னாலும் செய்வான் இந்த அன்பு செல்வன் ராஸ்கல்! என தனக்குத்தானே சமாதான மொழிகளைத் தேடி, தொகுத்து வழங்கிக் கொண்டாள்.
“அப்போ நான் புறப்படுறேன் மாமா!” எனக் கையெடுத்து வணக்கம் வைத்தார் சிவராமன்.
“நல்லதுங்க மாப்பிள்ளை,” என்று சக்கரவர்த்தியும் கையெடுத்து வணக்கம் வைத்தவர், “அதுதான் அமுலுக்குக் கல்யாணம் முடிஞ்சிடுச்சு இல்ல, மகிழ்க்கும் சீக்கிரமா ஒரு நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைங்க மாப்பிள்ளை! ஏன்னா அவனைப் பாக்கும்போதெல்லாம் குடிச்சுக்கிட்டு சுத்திட்டு இருக்கான். மனசே ஒரு மாதிரி இருக்குது. நம்ம வீட்ல முதல் பையன் அவன்தான், மாப்பிள்ளை,” என்றார்.
மகிழ்வேந்தனின் பெயரைக் கேட்டதுமே சிவராமனின் முகம் மாறிப்போனது.
தனக்கொடி அந்த இடத்தை இயல்பாக்கும் பொருட்டில், “சரிங்கப்பா கொஞ்சம் பார்த்துக்கோங்க! பூங்கொடி செல்லமா வளர்ந்தவ. அப்பப்போ துடுக்குத்தனமா ஏதாவது பேசுவா! மனசு கஷ்டப்பட்டாலும் அதை வெளியில காட்டிக்க வேண்டாம். என் பொண்ணை யாரும் திட்டக்கூடாது, சொல்லி வையுங்க உங்க பொண்டாட்டிகிட்ட,” என்று மிரட்டிவிட்டுச் சென்றார்.
“நான் எதுக்கு மச்சான் பூங்கொடியைத் திட்டப் போறேன்?” என அன்னம் கேட்க,
“அதுதானே, பூங்கொடி உன்னைய மிரட்டாமல் இருந்தால் சரி,” என நையாண்டி பேசினார். உண்மையில் அதுதானே நடக்கிறது.
“மச்சான்” என அன்னம் அதட்ட,
“இன்னிக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அன்னம்,” என்றார் சக்கரவர்த்தி.
“நம்ம மாப்பிள்ளைகிட்ட, தனக்கொடிகிட்ட எதுக்கு அப்படிப் பேசுறீங்க? அன்புசெல்வனை மாப்பிள்ளை கேட்டு வந்த விஷயத்தை, எல்லாம் நீங்க எதுக்கு மச்சான் அவங்ககிட்ட சொன்னீங்க? மாப்பிள்ளை முகமே சரியில்ல. இதை பூங்கொடி கேட்டா அவ வருத்தப்படுவா,” என்றார்.
“சில விஷயங்களை கண்டிப்பா சொல்லிடனும்! நம்மளோட பையனை அவங்க ரொம்பத் தரக்குறைவா நினைச்சுட்டு இருக்காங்க. நான் என் பொண்ணுங்களை பத்தி யாருகிட்டயும் தப்பா பேசலையே? எல்லாரையும் நான் ஒரே போல தான் பாக்குறேன். அவளுக்குக் கொழுப்பு அதிகமாகி போச்சு. என் பையனையும் என் பொண்டாட்டியையும் யாரும் எதுவும் சொல்லக்கூடாது. எனக்கு நீயும் அன்புச்செல்வனும் என்னோட கண்ணு மாதிரி. அதுக்காக என் பொண்ணுங்களை நான் குறைவா நினைக்கலையே! அவளுங்கதான் எதுக்கு எடுத்தாலும் சீட்டை கட்டிக்கிட்டு வந்துடுறளுங்க. நீ தான் புள்ள பூச்சியா இருக்க, உன்னை ஏச்சு பேசிட்டு போயிடறாங்க. அதேபோல நான் இருக்க மாட்டேன்,” என்றார்.
“போதும் போதும், உங்ககிட்ட பேசினா ஜெயிக்க முடியாது,” என அவர் திரும்ப, அங்கே அன்புசெல்வன் உணவுத் தட்டுடன் வந்தான்.
சக்கரவர்த்தி எழுந்து வேட்டியை கட்டியவர், “அன்னம், வாயேன் கொஞ்ச தூரம் நடந்து போயிட்டு வரலாம்,” என அழைத்தார்.
“ம்ம், இதோ வரேனுங்க” எனக் கூறியவர் உள்ளே சென்று, “அன்பு, நெய் இதுல வச்சிருக்கேன். ரெண்டு ஸ்பூன் போட்டுட்டு போ! பாப்பாவுக்கு அப்பளம் பொரிச்சுத் தரவா?” எனக் கேட்டார்.
“அவளுக்கு தோசைதான் பிடிக்குமாம். அக்கா சொல்லிட்டுப் போனாங்க. நீங்க அப்பா கூட போங்க மா, நான் பார்த்துக்கிறேன்,” என சொல்லிக்கொண்டே அன்புசெல்வன் சென்றான்.
அன்னமும் தன் கணவருடன் நடக்கச் சென்றுவிட்டார்.
பூங்கொடி கவிழ்ந்து படுத்தபடி இருக்க, “பாப்பா” என அழைத்துக்கொண்டே உள்ளே வந்தான் அன்பு. வேகமாக எழுந்து அமர்ந்தாள் அவனது குரலைக் கேட்டதும்.
“பாப்பா! இந்தா தோசை!”
“எங்க வீட்லயே சாப்பிட்டுட்டு தான் வந்தேன். எனக்கு ஒன்னும் வேணாம். அண்ட் என்னை ‘பாப்பா’ன்னு கூப்பிடும் வேலை வச்சுக்காத,” என முகத்தைத் திருப்பினாள்.
“சரி, எப்படி கூப்பிடனும்னு நீயே சொல்லு! இப்போ நீ சாப்பிடுற,” என நீட்டினான்.
சாம்பாரின் வாசனை மூக்கைத் துளைக்க, வேறு வழியில்லாமல் வாங்கிக்கொண்டாள்.
அன்பு அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்தான். மெதுவாக பூங்கொடி சாப்பிட…
அவளுக்கு அருகில் அமர்ந்தான்.
“டேய், எழுந்திரு! இப்படி பக்கத்தில் வந்து உட்காரும் வேலையை வச்சுக்காத என்கிட்ட,” எனக் கண்களை உருட்டினாள்.
“சரி நான் இங்கே உட்கார்ந்துகிறேன்,” என எதிரில் ஒரு சேரில் அமர்ந்துகொண்டான்.
அவள் சாப்பிடுவதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
“எதுக்கு அப்படி பார்க்கிற?” என பூங்கொடி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“இப்போ நம்ம ரெண்டு பேரும் புருஷன், பொண்டாட்டி,” என்றான் அன்பு.
“அதுக்கு? அதுக்கு என்ன பண்ணலாம்?”
“ஒரே வீட்டில் இருக்கப் போறோம். லைஃப் ஷேர் பண்ணிக்கிறோம்.”
“என்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்க நினைக்காத! அண்ட் நீ கீழேதான் படுத்துக்கணும். என் பக்கத்தில் வர்ற வேலை எல்லாம் வச்சுக்காத!” என்றாள் பூங்கொடி.
ஒரு பெருமூச்சுடன் எதிரில் இருப்பவளைப் பார்த்தான்.
பூங்கொடி சாப்பிட்டு முடித்துத் தட்டை நீட்டியவள். தண்ணீர் குடித்தபடி, அவனைப் பார்த்தாள்.
அன்பு அனைத்தையும் வெளியில் எடுத்துச் சென்றான். பூங்கொடி அவன் வருவதற்குள் உடை மாற்ற நினைத்தவள் பையைத் திறந்து ஒரு நைட்டியை எடுத்தாள். இதோ உடைக்கு மாறியிருந்தாள். பாவாடை கட்டவில்லை. உள்ளே அவளின் வாழைத்தண்டு கால்கள் பட்டவர்த்தனமாக அவளின் நெளிவு சுழிவுகள் அனைத்தையும் காட்டிக் கொடுத்தது.
‘என்னடா இது சோதனை’ எனும் ரீதியில் தன் பொண்டாட்டி பூங்கொடியைப் பார்த்தான்.
“ஹே, கீழே படு!” எனத் தலையணை, பெட்ஷீட் என அனைத்தையும் கீழே வீசினாள்.
‘அதுதான் எனக்கும் நல்லது. உனக்கு அந்த பெட் கூட பத்தாது,’ என அன்புசெல்வன் நினைத்துக்கொண்டு அடுக்கிப் போட்டான்.
பூங்கொடி அவனைப் பார்த்தவள், “நீ எவ்ளோ பெரிய ஆளாக இருந்தாலும் சரி! நீ எவ்ளோ சம்பாத்தியம் வாங்கினாலும் சரி! எனக்கு அன்னலட்சுமி பையனைப் பிடிக்காது. அவ்ளோதான்.”
“ஓகே,” என அன்புசெல்வன் சாதாரணமாகக் கூற.
பூங்கொடி அவனைப் புருவம் சுருக்கிப் பார்த்தாள். அன்புசெல்வன் விரக்தியான புன்னகையுடன், “என்னால முடிஞ்ச அளவுக்கு நல்லது செய்யறேன். நேர்மையா சம்பாதிக்கிறேன். என்னைச் சுத்தி இருக்கிற எல்லாரையும் சந்தோஷமா வச்சுக்கிறேன். இதுக்கும் மேலே என்ன பண்றதுன்னு எனக்கு சத்தியமா தெரியல,” என்றவன் நிறுத்திவிட்டு, “எனக்கு நம்பிக்கை இருக்கு. என் பொண்டாட்டி கண்டிப்பா ஒருநாள் என்னை விரும்புவா!”
அவன் கூறிய ‘பொண்டாட்டி’ என்னும் வார்த்தை உள்ளுக்குள் ஏதோ செய்தது. தலையை உலுக்கிக்கொண்டாள்.
இதோ படுத்ததும் உடனே உறங்கி விட்டான் அன்பு.
‘அய்யோ, இவன் என்னை டார்ச்சர் பண்றானே! எதுவும் எக்குத்தப்பா நடந்திடாதா? அவனைப் பார்த்திட்டே இருக்கணும் போல தோணுதே? அவ்ளோ வீக்கா நானு! எப்படி மயக்கிப் பேசுறான்! இதுதான் அவனோட தொழில். பொண்ணுங்களை மயக்கறது?’ என நினைத்துக்கொண்டிருந்தாள் பூங்கொடி. அவனிடம் இவள் அத்துமீறக்கூடாது என்பதற்காகவே அவளின் அம்மா வீட்டுக்கு ஓடியிருந்தாள்.
அவனது ஒவ்வொரு செய்கையும் பூங்கொடியைத் தடுமாற வைத்தது. அதுவும் அந்தக் கன்னக்குழி. ‘அய்யோ’ என நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் அனுசுயா மெசேஜ் செய்தாள்.
‘இந்த நாய் எதுக்கு கூப்பிடுது?’ எனக் கோபத்துடன் மெசேஜ் பார்த்தாள்.
“அன்பு நம்பர் செண்ட் மி டியர்,” என அனு அனுப்பி இருக்க…
‘எடு செருப்ப நாயே! அவன் நம்பர் உனக்கு எதுக்கு டி!’ என அனுப்புவாள் என அவளுக்குத் தெரியும்.
“என் புருஷன்கிட்ட போன் இல்ல, லேண்ட் லைன் வச்சிருக்கான்,” என அனுப்பி வைத்தாள் பூங்கொடி.
“Oh funny.. எனக்கு நம்பர் செண்ட் மி டியர்.”
‘நீ தான் டி பண்ணி. ஹிப்போபாட்டமஸ்!’ என நினைத்துக்கொண்ட பூங்கொடி வேகமாக ஆஃப்லைன் சென்றாள்.
விடிய விடிய தூக்கம் வரவில்லை. போனை நோண்டிக்கொண்டு படுத்திருந்தவள் காதுகளில் சில வார்த்தைகள்… “அன்பு மாமாதான் வேணும்னு ஒருநாள் என் பொண்டாட்டி சொல்லுவா!” என அன்பு தூக்கத்துல உளறினான்.
‘அய்யோ, நோ நோ நோ! அப்படி நடக்காது. நடக்கவும் விடமாட்டேன். அவன்கிட்ட விழக்கூடாது… நீ விஜயலட்சுமி பேத்தி டி! அன்னலட்சுமி பையன் உனக்கு வேணாம் டி,’ என குப்புறப் படுத்துக்கொண்டே சொல்லிக்கொண்டவள் எப்படித் தூங்கினாள் என அவளுக்கே தெரியவில்லை. ஆனால், என்று அவன் தாலி கட்டினானோ அன்றே அவள் அன்புசெல்வனின் மனைவி ஆகிவிட்டிருந்தாள்.
“பூங்கொடி! பூங்கொடி!” என எழுப்பினான்.
“டேய், ‘பூங்கொடி’ன்னு சொல்லாத!” எனப் பிரண்டு படுத்து உறங்கினாள்.
“ஹே, காலேஜ்க்கு நேரமாச்சு!” என அன்புசெல்வன் கூற.
“அய்யயோ” என அரக்கப் பறக்க எழுந்தவள். வேகமாக அவன் முன் சுடிதார் எடுத்து வைத்தவள், “ஹே, அயன் பண்ணு டா! எனக்கு லேட் ஆகுது,” என வேகமாக ஓடினாள் குளியல் அறைக்கு.
தலையை உலுக்கிக்கொண்டவன் வேகமாக உடையை எடுத்து அயன் செய்தான்.
“டேய்!”
“சொல்லு!”
“இட்லி வேணும். சாப்பிட…”
“கடையில் வாங்கிட்டு வரவா?”
“இல்ல எனக்கு சேராது. நீ சமைச்சு கொடு,” என்றாள் உள்ளிருந்து. அன்பு பெருமூச்சுடன் அயன் செய்தான்.
“நேத்து தோசை வாங்கின கடையில் இதையும் வாங்கி கொடு!” என்றாள்.
‘கொழுப்பு டி உனக்கு,’ என நினைத்தவன் அழகாக மடித்து வைத்துவிட்டு, வெளியே சென்றான் உணவை எடுத்து வர…
துண்டை கட்டிக்கொண்டு வெளியே வந்தவள். தலையை காய வைத்தபடி உள்ளாடையை அணிந்துகொண்டிருந்தாள்.
ஹூக் போட முடியாமல் திணறிக்கொண்டிருந்தவள். முடியை ஒதுக்கிக் கொண்டிருக்க… “மூணு இட்லி போதுமா?” எனத் தட்டுடன் உள்ளே வந்தான் அன்பு.
“ஹான் போதும்” என்றவள் அதிர்ச்சியுடன், “அன்புசெல்வன்!” எனத் திகைத்துப் பார்க்க… ஆளுயரக் கண்ணாடியில் அவளின் உடல் அவனுக்கு மொத்தமாகப் பரிமாறப்பட்டது.
“அன்பு…?”
“பூங்கொடி…?”
தொடரும்…
do like and share pradhanyakuzhalinovels