மன்னவன் பூங்கொடி மார்பிலே

by Pradhanya kuzhali
697 views

Episode -21

நிச்சயமாக, நீங்கள் கொடுத்த பத்திகளில் நிறுத்தற்குறியீடுகள் மற்றும் மேற்கோள் குறிகளைச் சரிசெய்து தருகிறேன்.

“அய்யோ பாப்பா!! இதுக்குதான் சொன்னேன், எனக்கு டிரஸ் வேணாம்னு. இந்தப் பனியில் போனதாலதான் இப்படி ஆகிப்போச்சு!” என்றவன் வேகமாக அவளைப் படுக்கையில் அமர வைத்து, பெரிய கம்பளிப் போர்வையைப் போர்த்தி விட்டான். அவளின் பாதத்தை மடியில் வைத்துச் சூடு பறக்கத் தேய்த்து விட்டான்.

“இப்போ ஓகேவா?” என அன்பு கேட்க…

“இ…இல்ல…ல்ல…” என நடுங்கிக் கொண்டே கூறியவள் கண்களில் நீர் கோர்க்க… வேகமாக ஃபயர்ப்ளேஸ் (fireplace) அதாவது நெருப்பறைக்குச் சென்றவன், பற்ற வைத்துவிட்டுப் பூங்கொடியை அழைத்து வந்து அமர வைத்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக அவள் இயல்பு நிலைக்குத் திரும்ப, அவளின் பாதத்தைச் சூடு பறக்கத் தேய்த்து, வெதுவெதுப்பான நீரை அவளிடம் கொடுத்தான். தன்னிலைப்படுத்திக் கொண்டு அவள் பருகினாள்.

“இப்போ எப்படி இருக்கு? ஓகேவா?” என அன்பு கேட்க…

“ம்ம்…” என ஒற்றைப் பதில் கொடுத்தாள்.

“சரி, நீ படுத்துக்கோ!” என அவளைப் படுக்கைக்கு அழைத்துச் சென்றான்.

“நீ எங்கே படுக்கிற?” எனத் தயக்கத்துடன் பூங்கொடி கேட்க…

“சோபாவில்.”

“வேணாம், நீ பெட்ல படு!”

“இல்லை, வேணாம்” என அன்பு மீண்டும் கூற…

“என்னை டென்ஷன் பண்ணாதடா!” என முறைத்துக் கொண்டு போய் படுத்துக் கொண்டாள்.

“பின்னாடி எதுவும் வில்லங்கம் பண்ண மாட்டியே? நான் உன்னைக் கட்டாயப்படுத்தின போல, வேணும்னு வந்து மோதின போல கதை கட்ட மாட்டியே!”

“நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட, வந்து படுடா!” என அவள் திரும்பிக் கொண்டாள்.

“எதேய், சரிப்பட்டு வரமாட்டேனா?” என அன்புசெல்வன் முகம் வாடிப்போனது. “இப்படி அவமானப்படுத்துகிறாளே” என்று. எப்படிப் பேசினாலும், என்ன செய்தாலும் அவள் அவனை ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கிறாள், இதுவரை.

மெல்லத் திரும்பிப் பார்த்தாள். அன்புசெல்வனின் முகம் வாடிக் கிடந்தது. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே கண்களை மூடினாள்.

அதிகாலை மிகவும் பாவமாய்ப் போனது அவன் நிலை. அனைத்துத் தலையணைகளையும் தூக்கி வீசிவிட்டு அவன் மேல் கால்களைப் போட்டுக் கொண்டவள், அவனது நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டு குளிரில் இறுக்கி அணைத்தாள்.

“பாப்பா! கொஞ்சம் தள்ளிப் படு!” என அன்பு அவளிடம் இருந்து விலக முயற்சி செய்ய… இன்னும் நெருங்கி அணைத்துக் கொண்டாள் இறுக்கமாக.

“போச்சு! எல்லாமே நட்டுக்கிட்டு நிக்குதே!” அவனது கையில் இருக்கும் ரோம முடிகள் அனைத்தும் சிலிர்த்து எழுந்து கொண்டது. அவளின் முகம் பளிச்சென மின்னியது. பூங்கொடி மிகவும் அழகாகத் தெரிந்தாள். குளிர்பகுதி என்பதால் அனைவரும் தாமதமாகத்தான் எழுவார்கள். அவளின் உதட்டைப் பார்த்தான் அன்பு. இரவு சொன்னாளே! “என்னை பார்த்து அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேனா?” இவளுக்குத் தெரியுமா? “எவ்ளோ கஷ்டப்பட்டு உணர்வுகளை அடக்கிக் கொண்டு இருக்கிறேன் நான்!” என ஆண்மகன் எண்ணம் தலை தூக்க… இதோ அவளின் உதட்டை வருடிப் பார்த்தவன் சட்டெனக் கவ்விக்கொண்டான்.

“தன்னோட பொண்டாட்டி” என்னும் எண்ணம்தான் இந்த அத்துமீறலுக்குக் காரணம். பூங்கொடி அவனுடன் இன்னும் நெருங்கிப் போனவள், கழுத்தைக் கட்டிக் கொண்டாள். கழுத்தில் முகம் புதைத்தவளை இழுத்து முத்தமிட்டான். “பூங்கொடி! அக்கா பொண்ணு!” என மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. பன்னிரண்டாம் வகுப்பு அவன் படித்துக் கொண்டிருக்கும் வேளையில் “பூங்கொடி பெரியப் பெண் ஆகிவிட்டாள்” என அக்கம் பக்கத்தினர் சொல்ல, சக்கரவர்த்தி தனக்கொடி வீட்டுக்குச் சென்று கோபத்தில் சத்தமிட்டு வந்தார். ஆம், அதற்குக் காரணம் அன்று அவளுக்குத் தாய்மாமன் சீர் செய்தது அனைத்துமே மனோரஞ்சிதம் குடும்பம்தான். சதீஷ்தான் அவளுக்குக் குடிசை கட்டிச் சடங்கு செய்தான். ஊரில் இருக்கும் அனைவரும் அவளின் சீர் பற்றித்தான் பேசினார்கள். பிரம்மாண்டமாகச் சீர் விழா நடந்தது.

அன்புடன் படிக்கும் நண்பர்களில் சசி, பாலாஜி, பரணி, வைபவ் என அனைவருமே பூங்கொடி பற்றிப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டான்.

“டேய், பூங்கொடி சின்னப் பொண்ணா இருந்தாள். ஆனால் அந்தச் சீர்ல ஹீரோயின் மாதிரி இருக்கா” என பாலாஜி கூற… சசி கடுப்புடன் “அந்தச் சதீஷ்க்கு வந்த வாழ்வைப் பார்! வேஷ்டி சட்டையில் எங்கே பார்த்தாலும் அவள் கூட இருக்கான். அந்த தனம் பஸ் ஓனர் சிவராமன் பூங்கொடிய அவனுக்கே கட்டி வைப்பார் போல” என்றான்.

“இதுல துரதிஷ்டம் அன்புசெல்வனுக்குத்தான். நல்லாப் படிச்சு நல்ல பேர் எடுத்து என்ன பிரயோஜனம். என்ன பண்ணாலும் அவங்க அப்பா பண்ண விஷயத்தைப் பத்தி இன்னும் பேசுறாங்க. ஆனால் பூங்கொடி… ப்பா, அப்படி இருக்குது! அந்தச் சதீஸ் நாய்க்கு கிடைக்கவே கூடாது” எனப் பரணி, பிரசாந்த் என அனைவரும் பேசிக் கொண்டார்கள்.

அப்பொழுது அன்புசெல்வனின் மனதில் ஓடிய ஒரே விஷயம், “பூங்கொடியைப் பார்க்கணும்” என்பதுதான். அவள் ஈரோட்டில் உள்ள கிறிஸ்தவப் பள்ளியில் ஆங்கிலவழி படிக்கிறாள். “ஸ்கூல் வேனில் போவாள், வருவாள். எங்கும் வந்ததில்லை. எப்படியாவது பார்க்கணும்” என மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருந்தது.

அந்த நேரம் கோவில் கும்பாபிஷேகம் நடக்க… அப்போதே செய்தி வந்தது அன்புக்கு. வடக்கு புதுப்பாளையத்தில் சிவராமன் தான் தர்மகர்த்தாவாகக் கும்பாபிஷேகம் நடக்க எடுத்துக்கட்டிச் செய்தார். அவர்தான் அனைத்தையும் தலைமை தாங்குகிறார் என்று.

அன்பு அரசுப் பள்ளியில்தான் படித்துக் கொண்டிருந்தான். என்சிசி கேம்ப் இயக்கம் என கல்லூரியில் மாணவப்படையில் இருந்தான். அங்கே குடமுழுக்கு அன்று குங்கும கலர் தாவணியில், ஜிமிக்கி கம்மல் என வந்தவளைப் பார்த்த மாத்திரத்திலேயே மொத்தமாகச் சரிந்து விட்டான் அன்புசெல்வன். அத்தனை அழகு பூங்கொடி.

மீசை அரும்பிய பருவத்தில் அவள் மேல் ஈர்ப்பு தோன்றியது. வைத்த கண் வாங்காமல் பார்த்தான், அவனையே மறந்து. கொழு பொம்மை போல இருந்தாள் பூங்கொடி. அப்பொழுதே உள்ளுக்குள் ஒரு ஆசை தோன்றியது. “அவளைக் கட்டிக் கொள்ள வேண்டும்” என்று. பூங்கொடியை அவனுக்குப் பிடித்திருந்தது. அவள் சாத்வீகம் இல்லை, படபடவெனப் பொரியும் சரவெடி. பிடித்திருந்தது.

அதற்குள் தன் தகுதியை வளர்த்துக் கொள்ள விரும்பினான். எப்படி இருந்தாலும் சிவராமனிடம் அவளைப் பெண் கேட்டால் நிச்சயமாகத் தரமாட்டார் என அன்புவுக்குத் தெரியும். அதைவிட “அன்னம் மகன்” எனத் தன் அன்னையை வைத்து ஒதுக்கும் இடத்தில் இப்படி ஒரு ஆசை தேவையா என்றும் தோன்ற… மூன்றாவது ஒன்று தோன்றியது. “அவள் சதீஷை விரும்பலாம். அவளுக்குத் தன்னைப் பிடிக்குமா?” என்ன என்று தோன்றியது. அன்பு தன் ஆசைகளை அப்படியே புதைத்துக் கொண்டான். அன்றிலிருந்து பூங்கொடியைப் பார்ப்பான். அவள் காலேஜ் செல்வதற்கு முன் ஆசீர்வாதம் வாங்க சக்கரவர்த்தியைப் பார்க்க வந்தாள். வீட்டுக்கு வரவில்லை, “கோவிலுக்கு வா” சொன்னாள். அன்று அன்புதான் சக்கரவர்த்தியை அழைத்துச் சென்றான்.

தன் தந்தையின் ஆசைக்காகத்தான் பஸ் கண்டக்டராகச் சென்றான். ஆனால், உள்ளுக்குள் “அவள் கல்லூரி செல்லும் வழித்தடம் இது, கண்டிப்பாக அவளைப் பார்க்கலாம்” என எட்ட நின்று எவ்வளவு தனது அக்கா மகளை ரசிக்க முடியுமோ அவ்வளவு ரசித்தான். பூங்கொடி என்றால் பிடிக்கும் அவனுக்கு. கொள்ளை ஆசை அவள் மேல். பகையைத் தாண்டி ஒரு பேராசை! ஒவ்வொரு முறை ஈரோடு டிப்போவில் சிவராமனைப் பார்க்கும் போதும் அவனது பூங்கொடியின் மேலிருக்கும் ஆசை வடிந்து விடும்.

எப்படியாவது முன்னுக்கு வர அரும்பாடு பட்டான். எங்கு சென்றாலும் அவனை ஒதுக்கினார்கள். “அன்னம் பையன்”, “சக்கரவர்த்தியின் வைப்பாட்டி மகன்” என கொச்சைப்படுத்தினார்கள். துவண்டு போனான் அன்பு. மனம் தளராமல் போராடினான். அவனுக்கு மூன்று ஆசைகள். அதில் முதல் ஒன்று, தன் அம்மாவுக்கு மரியாதை, பெருமை வாங்கித் தர வேண்டும். அதற்காகத்தான் அன்னம் பெயரில் அக்ரோ ப்ராடக்ட்ஸ் (Agro Products) தொடங்கினான். தன் அப்பாவின் ஆசை, கனவு, அதாவது சக்கரவர்த்தியின் அத்தனை ஆசையும், ஈரோடு டிப்போவில் தனக்கொடி பேருந்துகள் கொடிகட்டிப் பறந்தது ஒரு காலத்தில். அது அனைத்தும் சிவராமனிடம் போய்விட்டது. சொத்து அனைத்தையும் தாரை வார்த்துக் கொடுத்த இடத்தில் மதிப்பாக இருக்க வேண்டும், அதற்கு கவர்ன்மெண்ட் வேலைக்குச் செல்ல வேண்டும் என நினைத்தான். மூன்றாவது ஆசை நிராசையாகப் போகும் என நினைத்தான். அந்த ஆசை இதோ இன்று அவனது கழுத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு, மார்பில் முகம் புதைத்துக் கொண்டிருக்கிறாள்.

ஆம், பூங்கொடிதான்.

அன்புசெல்வனின் கைகள் அங்கும் இங்கும் அலை பாய்ந்தது தேகக் கூட்டில். அவளும் அவனது தேடுதலுக்கும், தொடுதலுக்கும் மறுப்புச் சொல்லாமல் குழைந்து உருகினாள்.

“அமுலி!” என ஆசையாக அழைத்தான் மோகத்தில், முத்த வேகத்தில்.

பூங்கொடி…?

தொடரும்…

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment