மன்னவன் பூங்கொடி மார்பிலே

by Pradhanya kuzhali
687 views

Episode-25

இல்ல அமுலி என சொல்லி கொண்டே அருகில் வந்தான் அன்பு. 

கிளபுறேன்னு சொன்னல்ல கிளம்பு டா!! என்றவள் வேகமாக எழுந்தாள். 

சட்டென அவளின் கையை பிடித்து கொண்டான். 

கைய விடு அன்பு செல்வன் என முழு பெயரையும் அழைத்தாள். 

அமுலி என் மேலே கோபமா? நான் இங்கிருந்தால் அது சரி வராது உனக்கு தான் என்னால தேவையில்லாம பிரச்னை வரும். அதுக்கு தான் கிளம்புறேன்னு சொன்னேன். அப்புறம் முக்கியமான விஷயம். 

என்ன? என முகத்தை திருப்பி கொண்டு நின்றாள். ஆனால் அவன் கையில் இருந்து உருவி கொள்ள முயற்சி செய்யவில்லை. 

வாடா போடாவ விட இப்படி பேர் சொல்லி கூப்பிட்டது பிடிச்சிருக்கு என்றான் அன்பு. 

அவளின் உதட்டுக்குள் புன்னகை எட்டி பார்க்க அதை வெளிக்காட்டி கொள்ளாமல் திரும்பியவள். இதுக்காகவே வாடா போடான்னு கூப்பிடுவேன் போடா!! என்றாள் வேண்டும் என்றே.. 

ப்ச் என வருத்ததுடன் உச்சி கொட்டினான். 

அவனது முகத்தை ஆசையுடன் ரசித்தாள். இத்தனை அழகானவனாக இவன் மட்டுமே நம் கண்களுக்கு தெரிகிறான். அதான் ஏன்னு இப்போ வரைக்கும் தெரிய மாட்டிக்கிது. என தனக்கு தானே சொல்லி கொண்டாள். 

அமுலி!! என மெல்லிய குரலில் அழைத்தான். 

சொல்லு டா!! என பார்த்தாள் பூங்கொடி. 

பாரின்க்கு எக்ஸ்போர்ட் பண்ண வேண்டிய சரக்கு பொருள் எல்லாம் பெண்டிங்ல நிக்கிது. கொஞ்சம் டாக்ஸ் வேலை, GST வேலை எல்லாம் இருக்கு. நாலு பக்கம் போகணும். அலையனும் அதுக்கு தான் சொல்றேன் கிளம்பவா? என கேட்டான். 

தீவிரமாக யோசித்தவள். ஒரு பெரு மூச்சுடன் ம்ம் கிளம்பு என்றாள். 

அன்பு செல்வனின் முகம் பிரகாசிக்க, நிஜமாவா? 

ம்ம் என கையை எடுத்து கொண்டாள். 

என் மேலே கோபம் இல்லையே? என அன்பு அவளை ஆசையுடன் பார்த்தான். 

இல்ல நான் டாடிய வர சொல்லிக்கிறேன். அவர் வந்து பிக் அப் பண்ணிட்டு போவாரு. நீ உன்னோட வேலைய பாரு என படுக்கையில் சென்று போனை நோண்டினாள். 

ஒரு பெரு மூச்சுடன் அவனது பையை எடுத்து அமர்ந்து கொண்டான். 

என்னாச்சு கிளம்பலயா? 

நான் நைட்டு புறப்படுறேன். இப்போ லேப் டாப்ல வேலை பார்த்துக்கிறேன் என கூறி விட்டு வேலையை ஆரம்பித்தான். சிறிது நேரம் அவனையே ஓர கண்ணால் பார்த்தவள். நன்றாக அவன் பக்கம் திரும்பி பார்த்து கொண்டே உறங்கி விட்டாள். 

கதவு தட்டும் சத்தம் கேட்டது. வெளியே அனுசுயாவும் ஜெகனும் நின்றிருந்தார்கள். 

யாரு? என கண்களை தேய்த்து கொண்டே எழுந்தாள் பூங்கொடி. 

நான் தான் டி! வா வெளியே போலாம். அன்பு நீங்களும் வரணும் என அனுசுயா அழைக்க, 

நாங்களா? என அன்பு தயக்கத்துடன் கேட்டான். 

மாமா சொல்லு மாமா!! என அனுசுயா ஜெகனை உசுப்ப!!

வாங்க ஜி போயிட்டு வரலாம் என ஜெகன் அழைத்தான். 

அன்பு ஏக்கத்துடன் பூங்கொடியை பார்க்க, போலாம் டா!! என்ன அப்படி பார்க்கிற? என உதட்டில் சிரித்து கொண்டே அவர்களுடன் சென்றாள். 

வெளியே சுற்றினார்கள் நால்வரும். அப்படியே காலாற நடந்தார்கள். 

மாமா கால் வலிக்குது தூக்கு!! என அனுசுயா சொல்ல, 

ஜெகன் ஆயாசமாக பார்க்கப்

டேய் என்ன பண்ற வா எனக்கு கால் வலிக்கல ஆனால் நீ தூக்கனும் என பூங்கொடி மிரட்டினாள். 

இதோ தூக்குறேன் என அன்பு அவளை தூக்கி கொண்டு நடந்தான். 

ஜெகன் அனுசுயா இருவரும் அன்பு செல்வனை பார்த்து சிரித்தார்கள். 

என்ன ஜி இப்படி அடிமையாகிட்டீங்க? என ஜெகன் கேட்க, 

பூங்கொடி வைத்த கண் வாங்காமல் அன்புவை பார்த்தாள். அவன் என்ன சொல்ல போகிறான் என்று. 

அடிமை நல்லாருக்காது ஆயுள் கைதி சரியா இருக்கும். அமுலி கிட்ட ஆயுள் கைதி ஆக ரெடி தான் என்றவன் அவளை பார்க்க நெஞ்சில் முகம் புதைத்து கொண்டாள் பூங்கொடி. 

அதுவும் சரி தான் என ஜெகன் சிரித்து கொண்டே என்னையும் கொடுமை பண்ணுவியா? அணு என கேட்டு கொண்டிருந்தான். 

இங்கே பூங்கொடி அவனது தோல் மேல் கைகளை போட்டு கொண்டவள். என்னடா மயக்க பார்க்குறயா? என கேட்டாள். 

Am just kidding.. 

ஓ இங்கிலீஷ்!! வடக்கு புதுப்பாளைய வர பட்டிகாட்டான் இங்கிலீஷ் பேசுராப்டி!! என கிண்டலடித்தாள் பூங்கொடி. 

அப்படி இல்ல அமுலி என சமாதானம் செய்தான். 

நால்வரும் ஹோட்டல் வந்து சேர்ந்தார்கள். என்ன சாப்பிடலாம். என ஜெகன் கேட்க.. 

எனக்கும் அன்புவுக்கும் நான் ஓடர் பண்றேன். என அசைவ உணவுகளை வரிசையாக கூறினாள். 

இன்னிக்கு நான் நான்வேஜ் சாப்பிட மாட்டேன் அமுலி என்று அன்பு செல்வன் விடாப்பிடியாக கூறி மறுக்க, 

எதனால? என அனுசுயா கேட்டாள். 

இன்னிக்கி சனிக்கிழமை அதை விட இன்னிக்கி பிரதோஷம். என்றான் அன்பு புன்னகையுடன்.. 

ஓ அப்படியா? என பூங்கொடி அவனை முறைத்து பார்க்க, 

நான் உன்னை வேணாம்னு சொல்லல 

என்ன? என்னையும் சாப்பிடுவயா? என்று பூங்கொடி பற்களை கடித்து கொண்டு பார்த்தாள். 

ஹே இல்ல!! 

என்னடி பூங்கொடி அன்புவ இப்படி மிரட்டுற? என அனுசுயா அதிசயத்து பார்த்தாள். 

அச்சோ இல்லையே!! என கழுத்தை தேய்த்தவள். அவ்ளோ ஆச்சாரமா மிஸ்டர் அன்பு செல்வன் என புருவம் உயர்த்தி கேட்டாள். 

கொஞ்சமா என புன்னகைத்தான். 

அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் மெனு கார்டை அருகில் தள்ளி உணவை சுட்டிக் காட்டியவள். இத்தனை ஆச்சாரமா இருக்கவன் ஒருத்தன் என்னை கதவில் தள்ளி திணற திணற கிஸ் அடிச்சுட்டான். அவனை பார்த்தீங்களா மிஸ்டர் அன்பு செல்வன் என அப்பாவி போல கண்களை சிமட்டினாள். 

சட்டென அவனுக்கு புரை ஏறிட..  என்னாச்சு என்ற மாமனுக்கு உங்க கூட சாப்ட்டு போட்டு வரலாம்னு ஆசையா ஓடி வந்த என்னை ஏமாத்தி போடாதீங்கோ மாமா!! என கொங்கு தமிழில் பேசி கொண்டே பார்த்தாள். 

அட தண்ணி குடுங்! ஏனுங்கோ தண்ணிய மொல்ல குடிங்கோ புரை ஏறிட புகுந்துங்க.. என நக்கலுடன் பேசியபடி பதில் சொல்லுங்கோ மாமா என அவனை பார்த்தாள். 

அனுசுயா சிரித்து கொண்டே ஹே பூங்கொடி நீ பேசுறது அழகா இருக்கு டி என ஆசையுடன் பார்த்தாள். 

பதில் சொல்லுங்கோ மாமா? 

இல்லைங் அம்மணி என அன்பு செல்வன் வேறு புறம் திரும்பி கொண்டான். கன்னக்குழி புன்னகை ததும்பியது. 

மாமா!! அசைவம் சொல்லட்டுங்களா? என பூங்கொடியும் சிரித்து கொண்டே கேட்க.. 

அம்மணி விருப்பம்ங்!! என்றான் அன்பு. 

இங்க நாங்களும் இருக்கோமுங்க!! என ஜெகன் ஆரம்பிக்க.. 

ஜெகன் மாமா என்ற மச்சான்!!  என இன்னொரு பக்கம் அனுசுயா ஆரம்பித்தாள். அனைவரும் ஒரே நேரத்தில் பார்த்து கொண்டு களுக் களுக் என சிரித்தார்கள். 

சிக்கனை திகைத்து பார்த்தான் அன்பு. 

டேய் மூடிட்டு எடுத்து தின்னு! அப்படியே வந்துட்டான். சீன் போட்டுட்டு இருக்காத. இந்த பூனையும் பால் குடிக்குமா அப்டின்னு முகத்தை வச்சுட்டு பீர் அடிக்கிற வேலை பண்ற நீ!! 

இல்ல அமுலி நான் ட்ரிங்க்ஸ் பண்ண மாட்டேன். 

டேய் நல்லா நடி டா ராஸ்கல் என அன்புவை மிரட்டி கொண்டே ஏதாவது வம்பிழுத்தாள் பூங்கொடி. 

கடைக்கு அழைத்து சென்றார்கள் இருவரும். அங்கே பூங்கொடி அனுசுயா இருவரும் ஒன்று சேர்ந்து கொண்டார்கள். அவ்விடத்தை சுற்றி இருக்கும் பொருட்களை வாங்கி கொண்டு அவர்கள் கிளம்பும் நேரம் பயங்கர மழை.. 

அன்பு அவளை கையணைப்பில் வைத்து கொண்டான். 

பாப்பா தண்ணில கை வைக்காத ஜுரம் வந்திடும். அப்புறம் குளிரும் என அன்பு கோபத்துடன் கூற.. 

சரி பண்ணல போதுமா? அண்ட் என்னை அதிகாரம் பண்ற வேலை வச்சுக்காத என அதிலும் எதையாவது கண்டு பிடித்து அவனை சீண்டி திட்டினாள். 

ஜீ இப்போ தூறல் தான் போடுது புறப்படலாம் வாங்க என ஜெகன் அழைக்க வேக வேகமாக காருக்குள் எரிகொண்டார்கள். ஜெகன் ஸ்டார்ட் செய்து ஓட்டினான். 

ஓகே வா? எதுவும் பண்ணுதா? இந்தா இதை போட்டுக்கோ என ஜெர்கின் கழட்டி அவளுக்கு போட்டு விட்டான் அன்பு. 

அவர்கள் வந்து சேர இருட்டி கொண்டது. நல்ல வேளை ரிசார்ட் பக்கம் மழை இல்லை. 

அங்கே ப்ளாக் தண்டர் போன கூட்டம் மொத்தமும் கேம்ப் fire சுற்றி அமர்ந்து கொண்டிருந்தார்கள். 

ஹே பூங்கொடி அனுசுயா என சாந்தினி கத்தி கொண்டே அழைத்தவள். பார்த்தியா மணி நம்மள இந்த பக்கம் அனுப்பிட்டு அவளுங்களோட ஆளுங்க கூட அவுட்டு போயிட்டு வராலுங்க என்றாள். 

ஹே கடுப்ப கிளப்பாதீங்க போன இடத்துல சரியான மழை அங்கிருந்து வரவே போதும் போதும்னு ஆகி போச்சு என்றாள் அனுசுயா. 

சரி ட்ரெஸ் மாத்திட்டு வாங்க விளையாடலாம். என ஒரே ஆர்ப்பாட்டம் செய்தார்கள் அனைவரும். 

நான் வரல!! என பூங்கொடி செல்ல,

நீ வந்து தான் ஆகணும் என வம்படியாக இழுத்து வந்தார்கள். 

குளிரில் அமர்ந்து அவர்கள் விளையாடுவதை பார்த்து கொண்டிருந்தாள் பூங்கொடி. அடுத்து ஹைடன் சீக் விளையாட தயாரானார்கள். 

இதோ முதல் ஆளாக ஜெகன் வந்து நான் வரேன் என அணுசுயாவை பார்த்து கண் சிமட்டினான். 

அவளும் வெட்கத்துடன் தலை கவிழ்த்து கொண்டாள். 

என்ன கண்றாவி ரொமான்ஸ் இது என பூங்கொடி தலையில் அடித்து கொண்டாள். இதோ அன்பு செல்வன் ஊருக்கு செல்ல புறப்பட்டு வந்து நின்றான்.

ஜீ ஹைடன் சீக் விளையாடிட்டு போங்களேன் என ஜெகன் அன்பு செல்வனையும் கூட்டு சேர்த்தான். 

பூங்கொடி ..? 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment