Episode-26
அவர் போகட்டும் நேரமாகுது. நீங்க விளையாடுங்க என்றாள் பூங்கொடி.
அண்ணா வாங்க அண்ணா!! என மணிமேகலை அழைக்க,
அனுசுயா அன்பு செல்வனிடம், அன்பு வாங்க!! ஜாலியா இருக்கும். இன்னிக்கி ஒரு நாள் குட்டி வயசுக்கு போயிட்டு வந்திடலாம். என உற்சாகமாக கூறினாள்.
அன்பு பூங்கொடியை பார்க்க, என்னோட கண்ட்ரோலில் சாரு இருக்க போல என்னை பார்க்கிறாப்டி? என்ன? என அதட்டலுடன் கேட்டாள்.
ஹே அம்ப கைக்குள்ள வச்சிருக்க!! அன்புக்கு அம்பு விடுற நீ? என அனுசுயா சொல்ல..
அண்ணாவ மிரட்டுற நீ!! என மணிமேகலை சப்பை கட்டு கட்டினாள்.
ஆமா உன்ற அண்ணனை மிரட்டி அடிச்சுட்டேன் பாரு! போடி வந்துட்டா என சொல்லி கொண்டு நகர்ந்தாள்.
அன்பு செல்வன் சிரித்து கொண்டே, அமுலிய எதுவும் சொல்லாதீங்க! நான் வரேன். எனக்கு ட்ரெயினுக்கு ரெண்டு மணி நேரம் இருக்கு என்றவன் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.
முதலில் மணிமேகலை அவுட் ஆகினாள். அனுசுயா பூங்கொடியின் கையை பிடித்து இழுத்து சென்று விட்டாள்.
இப்படியே மாறி மாறி உற்சாகமாக விளையாடினார்கள். ஹே செம்ம ஜாலி இல்ல!! என அனுசுயா பேசி கொண்டே செல்ல, அவளை சட்டென இழுத்து கொண்டான் ஜெகன்.
ஹே அணு எங்கே டி இருக்க? என பூங்கொடி திரும்பி பார்க்க அவளின் கையை பிடித்து இழுத்தான் அன்பு.
டேய் என கோபத்தில் பொங்கினாள் பூங்கொடி.
ஹே ஹே அமுலி அங்கே பாரு அனுவோட தம்பி சுதாகர் வர்றான். அவன் தானே அவுட். அதான் என கையை பிடித்து கூறினான்.
ஓகே ஓகே!! என பூங்கொடி பெரு மூச்சுடன் திரும்ப அவர்களுக்கு எதிரில் ஸ்டோர் ரூம் வளைவில் ஜெகன் மற்றும் அனு இருவரும் ஒட்டி கொண்டு நின்றார்கள்.
பூங்கொடியின் கண்ணில் பட தனக்கு அருகில் சுதாகர் வருகிறானா? என பார்த்து கொண்டிருக்கும் கணவன் அன்பு செல்வனை பார்த்தாள்.
ஹே ஹே இந்த பக்கம் வர்றான் அமுலி என அவளை கையை பிடித்து இழுத்தவன் அருகில் இருக்கும் பெரிய கடிகாரத்தின் பின்னால் இழுத்து சென்றான்.
பட்டி காட்டான் மிட்டாய் கடைய பார்க்கவே மாட்டானா? இவனுக்கு நான் வேணாமா? என்று கூட பூங்கொடிக்கு திடீரென தோன்ற..
அன்பு அவளை பார்த்தான். அவர்களுக்கு பின்னால் ஜெகன் மற்றும் அனுசுயா வந்து நின்றார்கள். ஒரு பக்கம் அன்பு இன்னொரு பக்கம் ஜெகன். இரவு என்பதால் அனைத்து இடங்களிலும் கொஞ்சம் இருள் பூசி இருந்தது. சின்ன பல்ப் வெளிச்சத்தில் நிழல்கள் தெரிய, அவன் சட்டையை பிடித்து அருகில் இழுத்தாள் பூங்கொடி.
ம்ம் என்னாச்சு!! என அன்பு செல்வன் கேட்க..
அவனது உஸ்! என அவனது உதட்டின் மேல் விரலை வைத்தவள். மெல்ல அவன் பாதங்களில் ஏறி நின்றாள்.
அன்பு செல்வனின் முகம் ஒரு நொடியில் மாறி விட இருவரும் ஒட்டி நின்றார்கள் காற்றுக்கும் இடைவெளி இல்லை.
அவள் விழக்கூடாது என பின் பக்கம் அணைத்து பிடித்தான்.
அவள் அவனது முகத்தை அன்னாந்து பார்க்க, I’m angry with you என்று உதட்டை பார்த்தாள்.
உதட்டுக்குள் சிரிப்பை அடக்கி கொண்டவன் மெல்லிய வெளிச்சத்தில் பூங்கொடியின் முகம் இன்னும் அழகு சேர்க்க மின்னியது. கன்னத்தை மெதுவாக வருடினான் ஆசையுடன்..
முகத்தை திருப்பி கொண்டாள். பச்சக் என முத்தமிட்டான் கன்னத்தில்..
அவள் புருவம் சுருக்கி பார்க்க, இன்னொரு கன்னத்திலும் கொடுத்தான் ஆசையில்..
பூங்கொடியின் உதட்டில் மெல்லிய புன்னகை எட்டி பார்க்க, அவன் சட்டை காலரை பற்றி இழுத்தவள் அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.
ஆச்சரியம் தான் அன்பு செல்வனுக்கு. இப்போ தான் முத்தம் கொடுத்து விளையாடுற மோட்க்கு வந்திருக்காங்க ரெண்டு பேரும்.
இப்பொழுது அவன் முறையாகி போக, அவளின் கழுத்தை பற்றி கண்கள், மூக்கு, மோவாய், நெற்றி, புருவம் என அனைத்து இடத்திலும் முத்தமிட்டான்.
இதோ இருவரின் கண்களும் ஒன்றுடன் ஒன்று கலக்க, உதட்டில் வந்து நின்றது.
தயக்கத்துடன் அருகில் நெருங்கியவன் அவளை பார்த்து பயத்தில் பின் வாங்க,
அய்யோ இப்படி இருக்கானே!! என நொந்து கொண்டு பார்த்தவள். அய்யோ பல்லி என மெல்ல கூறி கொண்டே அவன் உதட்டில் முத்தமிட்டாள்.
என்ன பல்லி இப்படி சத்தம் போடுது? இச் இச்ன்னு சத்தம் கேட்குது? என அனுசுயா வாய்மொழியாக கூற..
ஆமா என ஜெகன் கூறி கொண்டே கொஞ்சம் சாய்ந்தான். கொஞ்சமே தெரிந்த இடைவெளியில் அன்பு மற்றும் பூங்கொடி இருவரும் முத்தமிட்டு கொண்டிருக்கும் காட்சிகள் தோன்ற,
அங்கே என்ன தெரியுது? என அனுசுயா எட்டி பார்த்தவள் உறைந்து நின்றாள். இந்த பூங்கொடி சாதாரண ஆள் இல்ல. எப்படி கிஸ் பண்றா!! என அனுசுயா ஏக்கத்துடன் பார்க்க, அவளின் தோல் மேல் அழுந்த பற்றினான் ஜெகன்.
எச்சில் கூட்டி விழுங்கி கொண்டே திரும்பி பார்த்தாள் அணு. இதோ அடுத்த நொடி கள்ள முத்தத்தை வருங்கால கணவனாக வழங்க ஆரம்பித்தான்.
மூச்சு வாங்கி கொண்டே வேகமாக பூங்கொடி விலகியவள் அவர்களது அறையை நோக்கி சென்றாள். அன்பு செல்வன் அவளின் பின்னால் சென்றான். என்று சொல்வதை விட ஓடினான்.
அறைக்குள் வந்ததும் வேக மூச்சுடன் நின்றாள் பூங்கொடி. அவனுடன் எப்படி சிந்தை மறந்து ஒட்டி நின்றோம். என நினைக்கையில் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தான். உதட்டில் குட்டி புன்னகை எட்டி பார்க்க, அமுலி என அறையை தாழிட்டான்.
பூங்கொடி அவன் கிட்ட விழுந்திடாத பைத்தியமே!! என தனக்கு தானே சொல்லி கொண்டவள் எதுவுமே நடக்காதது போல திரும்பி ம்ம் சொல்லு!! என்றாள்.
அவளின் முகத்தை பார்த்தான். மிகவும் இயல்பாக முகத்தை வைத்திருந்தாள். ஒரு பெரு மூச்சை விட்டவன். சரி நான் புறப்படுறேன். என பையை எடுத்து கொண்டான்.
இத்தனை நடந்தும் கிளம்புறேன்னு சொல்றானே? அவனுக்கு நான் முக்கியம் இல்ல. போடா எனக்கு தேவையே இல்ல மயிராண்டி!! என கைகளை கட்டியபடி அமர்ந்திருந்தாள் படுக்கையில், அவளை விட்டு செல்ல மனமே இல்லை. கதவு வரை சென்றவன்.
அமுலி நீயும் என் கூட வரியா? என கேட்டான்.
சட்டென திரும்பி பார்த்தவள். என்ன? என்றாள் புருவம் உயர்த்தி..
ம்ம் நீ திட்டாத!! உன்னை இங்கே விட்டு போக தோணல!! நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஊருக்கு போலாம். எனக்கு தோணுச்சு. உன்னை கம்பல் பண்ணல! என்றான்.
இல்ல வரல!! சார் தாராளமா போயிட்டு வாங்க!! என்றவள் திரும்பி கொண்டாள்.
ஒரு பெரு மூச்சை விட்டவன் பையை எடுத்து கொண்டு சென்றான்.
போய்ட்டானா? இவனுக்கு எதுக்கு என்னை கல்யாணம் பண்ணி வச்சாரு டாடி என பற்களை கடித்து கொண்டு அமர்ந்தாள். கோபம் தாறுமாறாக வந்தது.
மீண்டும் கதவை திறந்து கொண்டு வந்தான்.
கோபத்துடன் திரும்பியவள் என்னடா? என்று கத்தினாள்.
அது தண்ணி குடிக்க வந்தேன். தாகமா இருக்கு என கெட்டில் ஆன் செய்து தண்ணீரை சூடு செய்தான். அவனுக்குமே அவளை விட்டு செல்ல மனமில்லை.. ஆனால் நாளை முக்கியமான வேலை இருக்கிறது.
உனக்கு என அவள் பக்கம் நீட்டினான்.
எப்பா ஆளை விடு நீ!! என கோபத்துடன் முகத்தை திருப்பி கொண்டாள்.
எதுக்கு என் மேலே கோபமா இருக்க? என்ன காரணம்? அதை தெரிஞ்சுக்காம ஊருக்கு போக தோணல!! என்ன விசயம்? சொல்லு திட்டுறதாக இருந்தாலும் என்னை திட்டிடு!! என்றவன் அவளை பார்க்க,
முகத்தை திருப்பி கொண்டாள். அருகில் அமர்ந்தவன் ஒரு பெரு மூச்சுடன் தோலில் கை போட்டு அவளை திருப்பினான். ப்ச் என கையை விலக்கினாள்.
ஹே அமுலி!! என கையை பிடித்தான்.
வான்னு சொன்னபோது வேலை மயிறு மட்டை அது இதுன்னு சொல்லி என்னை அழைச்சு வரல நீ! என் டாடி கொண்டு வந்து விட்டுட்டு போனார். அப்புறம் நீயாகவே கிளம்பி வந்த!!
அன்பு செல்வன் அவளின் கோபத்தை பிரமித்து பார்த்தான். உள்ளுக்குள் புது ரத்தம் பாயும் உணர்வில் சிலாகித்து போனான்.
ஆனால் அவளோ அவன் நிலையை அறியாமல் விடாமல் கோபத்தில் பொருந்தி கொண்டிருந்தாள். “இப்போ எல்லாரும் ஜாலியா எஞ்சாய் பண்ற நேரத்தில் இப்போ கிளம்புறேன்னு சொல்ற!! போடா!” என அவள் கடைசியாக உச்சரித்த எழுத்துக்கள் அன்பில் போய் முடிந்தது.
ஆம் அவனது உதடுக்குள் அவளின் உதடுகள் சிக்கி கொண்டது. அவளும் கோபத்தை பிடித்து வைத்து அவனை வதைக்க முயன்றவள். அவனது முத்தத்தில் தோற்று சிகையை பிடித்து கொண்டாள்.
இருவரின் முத்த பரிமாற்றமும் எல்லை கடந்து சென்று கொண்டிருக்க, கைகள் தானாக சென்றது அவளின் வதனத்துக்கு. சொக்கி போனாள்.
இதோ படுக்கையில் உணர்வுகளை பரிமாற்ற வந்து விட்டார்கள்.
அமுலி என அழைத்தவனை ப்ச் பூங்கொடி சொல்லு மாமா!! என்றாள்..
மாமா!! என்றாலா? ம்ம் மாமா என்று தான் அழைத்தாள். தன் பெண்மையை ஆள வருபவனுக்கு தன்னை கொண்டாடுபவனுக்கு மரியாதை..
ம்ம் முத்தங்களில் எண்ணிக்கை அதிகமானது.
மாமா என ஆசையுடன் தான் அழைத்தாள். இதோ இருவரும் அடுத்த கட்டம் செல்லும் நேரம் அழைப்பு வந்தது.
மேனகா அழைத்திருந்தாள். வில்லங்கம் தேடி வந்து வந்து விட்டது.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels