Episode-30
அன்பு செல்வனின் கையை பற்றி கொண்டு தனியாக வந்தார் அன்னலட்சுமி.
என்னமா? என்ன ரகசியம்? என கண்ணக்குழி தெரிய அன்பு சிரித்தான்.
அடி வாங்க போற நீ!! ராஸ்கல் என அன்னம் மிரட்ட..
சரி சொல்லுங்க என புருவத்தை சுருக்கி கேட்டான்.
மணி இப்போ தான் 7 ஆகுது. நீ நேரா பாப்பாவ கரூர் கூட்டிட்டு போய் அவளுக்கு வளையல் வாங்கி கொடு என்றவர் தனது சுருக்கு பையில் இருந்து 10,000 பணத்தையும் அதனுடன் அவர் கையில் போட்டிருந்த வளையலையும் கழட்டி கொடுக்க..
என்ன மா பண்ற நீ? என அன்பு அதிர்ச்சியுடன் கேட்டான்.
பின்ன? எல்லார் முன்னாடியும் நீ ஆசையா வாங்கி கொடுத்த அந்த பிரேஸ்லெட்ட கழட்டி கொடுத்திடுச்சு. எனக்கு மனசே மேவல. அமுலி பாப்பாவுக்கு நீ நல்லா அவளுக்கு பிடிச்ச போல நேரில் கூட்டிட்டு போய் எடுத்து கொடு. எனக்கு எதுக்கு இந்த வளையல்? இது கூட அமுலிக்கு தான! அவளோட கை நிறைஞ்சு இருக்கணும் அன்பு என்றார் அன்னம்.
அன்பு செல்வன் தன் அன்னையின் தோல் மேல் கையை போட்டு கொண்டு, நீ முதல்ல கையில வளையல போடு மா! நான் அவளுக்கு வாங்கி கொடுத்துகிறேன். இந்தா காசு! இதை நீயும் அப்பாவும் தட்டில் வச்சு அக்காலுக்கு கொடுங்க என கூறினான்.
இல்ல அப்பா கிட்ட ஏற்கனவே காசை கொடுத்து வச்சிருக்கேன். இத சீட்டு போட்டு நான் சேர்த்து வச்சது. நீ அமுலிக்கு வாங்கி கொடு அன்பு. நீ இப்போவே புறப்படு!
அப்போ நீங்க? என அன்பு கேட்க,
நாளைக்கு கிடாய் கறி இருக்குது கண்ணு. அக்கா ஒண்டியா எத்தனை வேலை பார்த்துக்கும்? அதான் நான் இங்கேயே இருந்து ஒத்தாசையா வேலை செஞ்சு கொடுக்கணும்ல என்றார்.
அப்படியா? சரி என்றவன் பணத்தை மீண்டும் சுருக்கு பையில் திணிக்க, சொல்றத கேளு டா! அம்மா சொல்றத கேட்க மாட்டியா? என அவர் மிரட்ட..
மா அவளுக்கு நான் வாங்கி கொடுத்துக்கிறேன் என சொல்லி கொண்டிருக்கும் போதே அம்மாவும் பையனும் என்ன ரகசியம் பேசிக்கிறீங்க? என கேட்டு கொண்டே வந்தார் சக்கரவர்த்தி.
ஒன்னும் இல்ல பா! என அன்பு சிரித்து கொண்டே பார்க்க,
டேய் சொல்றத கேளு! என அன்னம் மீண்டும் கூறினார்.
புறப்படலாமா? என பூங்கொடி வந்தாள்.
இப்போவே கிளம்பிட்டியா பூங்கொடி? நாளைக்கி லீவ் போடு! விருந்து இருக்குது. அதுவும் தாய்மாமன் விருந்து, நீங்க தான் இங்கே முக்கியமே என ஜெயக்கொடி அன்பு செல்வனை பார்த்தார்.
இல்ல சித்தி நாளைக்கு காலேஜ் போயே ஆகணும். நான் பாதியில் வர பார்க்கிறேன் என பூங்கொடி கூற,
அக்கா எனக்கு முக்கியமான வேலை இருக்கு. இப்போவே நான் பாப்பாவை வீட்ல விட்டுட்டு போகணும். என அன்பு இன்னொரு பக்கம் கூறினான்.
அப்போ உங்களுக்கு எங்களை விட வேலையும் காலேஜும் தான் முக்கியமா? என ஜெயக்கொடி கேட்க..
அக்கா நான் போய் ஆக வேண்டிய கட்டாயம். புரிஞ்சுக்கோங்க. நான் நேராக இங்கே வந்துடுறேன் என அன்பு கூற,
அப்போ பாப்பாவை இங்கேயே விட்டு போறியா? என ஜெயக்கொடி ஆர்வமாக கேட்டார்.
இல்ல சித்தி நான் எனக்கு முக்கியமான கிளாஸ் இருக்கு. நான் காலேஜ் முடிச்சுட்டா அப்பா என்னை கூட்டிட்டு வரதாக சொல்லிட்டார். நான் கிளம்புறேன். நாளைக்கு வந்துடறேன். பாப்பாவுக்கு இந்த வாரம் ஞாயிறு ஆக்கி போடுறோம் என பூங்கொடி அன்புவை பார்க்க, ம்ம் அதுவும் சரி தான் என்றான் அன்பு.
அப்படியா? அப்போ அப்பா நீங்க? என ஜெயக்கொடி கேட்க..
நானும் அம்மாவும் இங்கே தான் இருக்க போறோம் என்றார் சக்கரவர்த்தி.
சித்தி! நான் எதோ தெரியாம அப்படி பேசிட்டேன். மனசுல வச்சுக்காத என அன்னத்தின் பக்கம் சென்றார் ஜெயா.
இல்ல கண்ணு அப்படி எதுவும் இல்ல! எப்பவும் தப்பா நினைக்க மாட்டேன் என சிரித்து கொண்டே கூறினார் அன்னம்.
கிளம்பிட்டியா? என தனக்கொடி அவ்விடத்துக்கு வந்தார்.
ம்ம் மா என ஒற்றை பதில் கொடுத்தாள் பூங்கொடி.
சரி அக்கா நாங்க கிளம்புறோம் என அனைவரிடத்திலும் சொல்லி விட்டு புறபட்டார்கள் இருவரும்.
அன்பு என அன்னம் அவனது கையை பிடித்து விவரம் கூற..
அன்னம் போ மா!! நான் பார்த்துக்கிறேன் என சொல்லி அனுப்பி வைத்தான் அன்பு. அவர்களின் பாச சம்பாசனைகளை பார்க்க பார்க்க பூங்கொடிக்கு கோபமாக வந்தது. இருவரும் வண்டியில் புறப்பட்டார்கள்.
முகமே சரி இல்லையே? என்னாச்சு பாப்பா? என அன்பு கேட்க..
அது ஒண்ணுமில்ல.. என ஒற்றை வார்த்தையில் முடித்து கொண்டு வேறு புறம் திரும்பி கொண்டாள்.
அன்பு அவளின் கையை பிடித்து இடையில் கட்டி கொள்ள வைத்தான்.
ப்ச் விடு!!
நீயா தானே பிரேஸ்லெட் கழட்டி கொடுத்திட்டு வந்த? என அன்பு கூற.
ஹோ நான் நகைக்கு அலையிறேன்னு நினைச்சியா? என அவள் சொல்லும் போதே வானம் பலத்த சத்தத்துடன் இடித்தது. அப்படியே மழை தூறல் போட..
அய்யோ நனைஞ்சுட்டேன். என அவள் சினுங்க..
அமுலி நான் ஓரமா வண்டிய நிறுத்துறேன் என இருவரும் வண்டியை நிறுத்தி விட்டு ஓரமாக வந்தார்கள்.
பூங்கொடி!! என அருகில் நெருங்கினான்.
ப்ச் தள்ளி போ என வேகமாக அவள் விலகி போக, அவளின் கையை பிடித்து கொண்டவன். உண்மைய சொல்ல போனால் எனக்கு நீ பண்ணது பிடிக்கல என்றான்.
என்ன பண்ணேன் நான்? என் பூங்கொடி கோபத்துடன் பார்த்தாள்.
எதுக்கு நீ கழட்டி கொடுத்த? அதை நான் உனக்காக வாங்கிட்டு வந்தேன். அவளுக்கு வேற கூட புதுசா வாங்கி கொடுத்திருக்கலாம். ஆனா நீ கையில் போட்டிருந்ததை அப்படி கழட்டி கொடுக்கும் போது, எனக்கு சுத்தமா அதுல உடன்பாடு இல்ல என்றான் நேரடியாகவே..
பூங்கொடி அவனை திகைத்து விழித்தாள்.
ஒரு பெரு மூச்சை விட்டவன். உனக்காக நான் முதன் முதலில் ஆசையா பார்த்து தேர்வு செஞ்சது அது தான். அதனால என அவளை பார்த்தான்.
மழை நின்னுடுச்சு போல போலாம் வா!! என கையை பிடித்து இழுத்து சென்றாள்.
தூறல் இருக்கு பூங்கொடி!! என அன்பு வண்டியை எடுத்து கொண்டே கூறினான்.
இல்ல வீட்டுக்கு போலாம் நேரமாகிடும் என அவள் கூற,
பேசாமல் வாங்கிட்டு அவளுக்கு வேற வாங்கி கொடுத்திடலாமா? என கூறினான்.
நீ பேசுறது காதுல விழுகல டா என்ன சொன்ன? என அவள் அருகில் நெருங்கி கேட்டாள்.
வேற வாங்கி கொடுத்துடவா? அவளுக்கு!! என வண்டியை நிறுத்தி விட்டு திரும்பி அன்பு கூறினான்.
அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீ வீட்டுக்கு வண்டிய விடு என பூங்கொடி கூற,
ம்ம் சரி என சுரத்தே இல்லாத குரலில் பதில் கூறினான் அவன் சொன்ன விஷயங்கள் அனைத்தும் பூங்கொடிக்கு காதல் கேட்டுக் கொண்டே இருந்தது ஏனோ மனமெல்லாம் மிகவும் சந்தோஷமாக இருக்க, இப்பொழுது மழை பெய்தால் கூட அவள் நனைவாள்.
அந்த அளவுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தாள். அதற்கு காரணம் அன்புச்செல்வன் சொன்ன அந்த விஷயம் அப்படிப்பட்டது. தன் மேல இவ்வளவு பிரியம் வச்சிருக்கானா? என திரும்ப திரும்ப தோன்றியது.
மனதில் நினைத்தவற்றை சொன்ன அன்புச்செல்வன் கூடவே தனது அம்மா அன்னலட்சுமி பூங்கொடிக்காக பணத்தை எடுத்துக் கொடுத்தது, வளையலை கழட்டி கொடுத்து புது பிரேஸ்லெட் வாங்கி கொடு என்று கூறிய அந்த விஷயங்களையும் கூறி இருந்தால் என்னவோ? வரப்போகும் அசம்பாவிதத்தை தடுத்து இருக்கலாம். ஆனால் அன்புச்செல்வன் அதை சொல்லாமல் விட்டுவிட்டான்.
இருவரும் ஒருவழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
வீட்டுக்குள் நுழைந்ததும் டவலை எடுத்து கொண்டு துடைக்க ஆரம்பித்தாள். அன்பு செல்வன் சட்டையை கழட்டி வெளியே உள்ள துணி கொடியில் போட்டு விட்டு உள்ளே நுழைந்தான்.
இந்தா டவல் என நீட்ட, ம்ம் என வாட்சை கழட்டி கொண்டு கையில் வாங்கியவன் துடைக்க, அவளோ புடவையில் இருக்கும் ஹூக்கை கழட்ட சிரமபட்டாள்.
அன்பு ட்ரையரை எடுக்க நகர, ஹே இதை கழட்டி விடு! என அவன் முன் நின்றாள்.
ம்ம் என அருகில் நெருங்கி அவள் உடையில் இருக்கும் ஹூக்கை கழட்ட முயற்சி செய்தவன் மெல்ல எடுக்க, ஸ்ஸ் வலிக்குது என திரும்பி அவனை முறைத்தாள்.
ஹே சாரி என மீண்டும் பிடித்து இழுத்தான். ஒரே நொடியில் மாராப்பு சரிய, இரண்டு கைகளால் மூடி கொண்டவள். அவனை பார்க்க,
நான் டிரையர் எடுக்க வந்தேன் என திரும்பி கொண்டான்.
அய்யோ இவன் எதுக்கும் லாயக்கு இல்ல!! என புலம்பி கொண்டே அவள் உதட்டை பிதுக்கியபடி ஈரமான ரவிக்கையின் பக்கம் அவிழ்க்க சென்றாள்.
பூங்கொடி என கரகரத்த குரல் கேட்க,
என்ன என புருவம் சுருக்கி கொண்டு திரும்பியவள் கண்களோ சட்டென அகல விரிந்தது. இதழுடன் சேர்த்து இதழ் பதித்திருந்தான் அன்பு.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels