மன்னவன் பூங்கொடி மார்பிலே

by Pradhanya kuzhali
572 views

Episode-40 

அடுத்தநாள் காலை முதலில் எழுந்தது என்னவோ பூங்கொடி தான். அன்பு செல்வன் அவளை இறுக்கி கட்டி கொண்டு உறங்கி கொண்டிருந்தான். நேற்று காலையில் இருந்தே ஏகப்பட்ட அலைச்சல் ஒரு பக்கம் அரசுப்பணி வேலை தொடர்பாக அலைந்தான். இன்னும் ஒரு வாரத்தில் பயிற்சி ஆரம்பிக்க போகிறது. ஒரு மாதம் பயிற்சி வகுப்பபில் ஓட வேண்டும் அந்த டென்ஷனில் இருந்தவனுக்கு அன்னத்தின் போன் வர இன்னுமே பதட்டமாகி போயிருந்தான். இடையில் பூங்கொடியை படத்துக்கு அழைத்து செல்வதை பற்றி மறந்து போனான். 

வைத்த கண் வாங்காமல் தன் கணவனை ரசித்து பார்த்தாள் பூங்கொடி. நேற்று இரவு அவன் அவளை பார்த்து கொண்ட விதம், அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தது, திருட்டு தனமாக சினிமா அழைத்து சென்றது. அந்த இரவு உணவு, அதை விட குளுமையான இரவு பயணம் அவனது அணைப்பு, முத்தங்கள் என ஒவ்வொன்றையும் உள்வாங்கி சிலாகித்து சிதறினாள் அவன் மேல். அய்யயோ நெஞ்சு அலையுதடா!! அந்த நிலையில் தான் இருக்கிறாள் பூங்கொடி. இப்பொழுது கூட அவள் சீக்கிரம் எழவில்லை. அவனது மார்பு சூட்டில் அந்த இறுக்கமான அணைப்பில் உறங்கி கொண்டிருந்தாள். அவளது போன் மணி அழைப்பில் தான் எழுந்தாள். 

மீண்டும் மீண்டும் போன் சினுங்க..

ப்ச் இந்த அம்மா!! என சிணுங்கி கொண்டே அவனது கன்னத்தில் முத்தமிட்டவள். சட்டென விபரீத ஆசை தோன்றியது. கண்ணக்குழியை இமை வெட்டாமல் பார்த்தவள் மெதுவாக நெருங்கி நுனி நாக்கில் வருடி விட்டு எழுந்தாள். அவள் சென்றதும் 

ம்ம் சொல்லு மா? என கொட்டாவி விட்டு கொண்டே பதில் கூறினாள். 

“நைட்டு அரக்க பறக்க போனீங்க ரெண்டு பேரும். அதான் போன் பண்ணேன். ஒன்னும் பிரச்னை இல்லையே கண்ணு.”

“பிரச்னை இங்கே இல்ல. மகிழுக்கு என்னமா பிரச்னை?”

மகிழ் வேந்தனை பற்றி கேட்டதும் தனத்தின் முகம் சடுதியில் மாறி போக, இதை அன்பு கேட்டானா? என்றார் கேள்வியுடன்.. 

எதுக்கு அவனை இழுக்கிற? நான் உன்கிட்ட கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்லு? என்ன பிரச்னை அவனுக்கு? தண்ணி வண்டியா இருக்கான் என பூங்கொடி மேலும் மேலும் கேள்வியை கேட்க, 

அப்பா கூப்பிடுறார் நாங்க அங்கே வரோம். அன்னத்தை பார்க்க,

அந்த பொம்பளைய பார்க்க நீங்க எதுக்கு வரீங்க? அவளுக்கு என்ன அவள் நல்லா தான் இருப்பா என கரித்து கொட்டினாள் பூங்கொடி. 

சரி சரி நான் அப்புறம் கூப்பிடுறேன். என சொல்லி விட்டு போனை வைத்தார். 

அன்பு இன்னும் அசந்து தூங்கி கொண்டிருக்க, ஹீட்டர் போட்டவள் குளித்து முடித்து டீ போட பெரிய வீட்டுக்கு சென்றாள். 

தங்கம் எப்போ வந்தீங்க? நேரமே வந்திருக்கலாம்ல? என சக்கரவர்த்தி கேட்க.. 

கொஞ்சம் லேட் ஆகி போச்சு தாத்தா. என்றவள் உள்ளே செல்ல டீ ரெடியாக இருந்தது. அன்னம் அவளை பார்த்து சிரிக்க, எதுவும் பேசாமல் டீயை எடுத்து கொண்டு அவர்கள் அறைக்கு சென்றாள். 

இப்போ என்ன? முகத்தை அட்டாலி மேலே வச்சிருக்க? என்றார் சக்கரவர்த்தி தன் மனைவியை பார்த்து. 

பாப்பா இன்னும் என்னை ஒதுக்கி வச்சிருக்கு மச்சா! எனக்கு மனசெல்லாம் ரொம்ப ரணமா இருக்குங்க. எப்போ என்கிட்ட பேசும். எனக்கும் ஆசையா இருக்கு. நான் சாகுறதுக்கள்ள பாப்பா என்கிட்ட பேசுமா என கண்களில் நீர் கோர்த்து கொண்டது அன்னத்துக்கு..

அடி கழுதை வாயில அடி! காலங்காதத்தால என்ன பேசுற நீ!! கண்டிப்பா அமுலி புரிஞ்சுக்கும் அதுக்கு கொஞ்சம் காலம் புடிக்கும் அன்னம். என்னைய இங்கேயே விட்டுட்டு நீ சாக போறியா? என்னை யாரு பார்த்துப்பா? என் மேலே உனக்கு அவ்ளோ தான் பிரியமா ( காதலா என்பதை தான் இந்த முதிர் மனிதன் பிரியமா என கேட்டிருக்கிறார்) 

இல்லங்க மச்சான் நான் அதுக்கு சொல்லல! 

பின்ன நீ எதுக்கு சொல்ற? சொல்லு? எதுக்கு சொல்ற? ஒன்னும் பேசாத என துண்டை தோளில் போட்டு கொண்டு வெளியே சென்றார். 

மச்சான் என அன்னம் அவரின் பின்னாலேயே சென்றார். 

எழுந்துக்கோ மாமா என அவன் முன் டீயை நீட்டினாள் பூங்கொடி. 

குட் மார்னிங் கொடி இடையாள் என சிரித்தான் கண்ணக்குழி தெரிய.. 

போதும் சுக்கு டீ ஆறுட போகுது எழுந்துக்கோங்க என துண்டை தூக்கி அவன் மேல் போட்டாள். 

அதெல்லாம் இருக்கட்டும் என்ன என்னை விட்டுட்டு நீ குளிச்சிட்ட? வா கம்பனி கொடு என கையை பிடித்தான். 

மாமா அடி வாங்க போறீங்க? ஒழுங்கா போங்க என்று அவனை சிரித்து கொண்டு அனுப்பி வைத்தாள். 

பாப்பா இதை போட்டு விடேன் என சட்டையை காட்டினான். 

அடேங்கப்பா! என அருகில் வந்தவள் போட்டு விட, ஒரு மாசம் உங்க வீட்டுக்கு போறியா? என தலையை துவட்டி கொண்டே பார்த்தான். 

என்னாச்சு? 

ஒரு மாசம் எனக்கு ட்ரெயினிங். அதான் அங்கே இருந்துக்குரியா? 

இல்ல நான் இங்கேயே இருந்துக்கிறேன். அப்போ என்னை போக சொல்ட்ரயா? என்று நகர்ந்தாள். 

அச்சோ இல்ல டி அழகி! நான் எதுக்கு அப்படி சொல்ல போறேன்? இங்கே இருந்தால் நீ பொக்குன்னு தனியா இருப்ப! அங்கே போயிட்டா உனக்கு ஓகே தான அதான் கேட்டேன். உனக்கு எங்கே இஷ்டமோ அங்கே இரு என்றவன் அவளை அழைத்து கொண்டு காலை உணவை முடித்து புறப்பட்டான். 

இப்பொழுது வீட்டில் அன்னம், சக்கரவர்த்தி, பூங்கொடி மூவர் மட்டுமே இருக்க, அந்த நேரம் மேனகா, ஜெயா,  இருவரும் வீட்டுக்கு வந்தார்கள். 

வா ஜெயா! மாப்ளை வரலையா? என சக்கரவர்த்தி கேட்க, 

சித்திக்கு கண்ணுல பிரச்னை அப்டின்னு தனக்கொடி சொன்னா! ஏன் பா என்கிட்ட போன் பண்ணி சொல்ல மாட்டீங்களா? நான் சித்திய பார்த்துக்க வர மாட்டேனா? ஒரு வாரம் நான் இங்க இருக்கிறதா வந்திருக்கேன். இனி மேனகாவை இங்கிருந்து காலேஜ் அனுப்புறதாக இருக்கேன் என்றார் ஜெயா. 

பாப்பாவுக்கு எதுக்கு சிரமம் கொடுக்குற? நீ எதுக்கு வயசுக்கு வந்த பிள்ளைய அங்கே விட்டுட்டு இங்கே வந்த? மாப்ளைக்கு யாரு ஆக்கி போடுவா? என முகத்தில் அடித்தார் போல சக்கரவர்த்தி கேட்க.. 

மேனகாவின் பார்வை தன் அன்னையின் மீது கேள்வியாக படிந்தது. 

அப்போ என்னை போக சொல்ற அப்படி தான! இனி இந்த வீட்டுக்கே வர மாட்டேன் என எழுந்து கொண்டாள் ஜெயா. 

கண்ணு இரு கண்ணு! அவர் அப்படி தான். பிரியா பொண்ணு பத்தி கேட்டாரு? இப்போ தானே வயதுக்கு வந்திருக்கு அதனால என்றார் அன்னம் சமாதானப்படுத்தி கொண்டே.. 

அவங்க அத்தையும் ஆத்தாவும் வந்திருக்காங்க. அதனால அவங்க கிட்ட விட்டுட்டு சித்திய பார்க்க தான் ஓடி வந்தேன். ஆனால் நல்ல மரியாதை கிடைச்சிருக்கு எனக்கு என கூறி விட்டு சேலையின் தலைப்பால் அழுவதை போல பாவனை செய்தாள். 

இல்ல கண்ணு. இது உன்ற வீடு அவரு கடக்குறாப்டி நீ வா கண்ணு என உள்ளே அழைத்தார். 

மா பிளான் ஒர்க் அவுட் ஆகிடுச்சு என மேனகா கூற..

அப்படி எல்லாம் இல்ல. ஒரு வாரத்துக்கு மேலே நம்ம இங்கே இருக்க முடியாது. ஒரு வாரம் தான் டைம். அதுக்குள்ள ஏதாவது பண்ணனும். திரும்ப ரெண்டு வாரம் கழிச்சு வரலாம். அது தான் நம்ம மேலே சந்தேகம் கொடுக்காது. என சொல்லி விட்டு அவர்கள் திட்டத்தை தீட்டினார்கள். 

அன்பு செல்வனுக்கு தினமும் குறுஞ்செய்தி அனுப்பி கொண்டே இருந்தாள் மேனகா. அவனை நேரில் பார்க்க ட்ரெயினிங் நடக்கும் இடத்துக்கு சென்று வந்தாள். 

இன்னொரு பக்கம் அன்னத்துக்கும் பூங்கொடிக்கும் எப்படி சண்டை மூட்டி விடுவது என தீவிரமாக யோசித்த ஜெயா அவரது நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்தாள். 

சித்தி ஒரு முட்ட ஆம்லெட் போட்டு கொடுங்க என சொல்லி கொண்டே சாப்பிட்டாள் பூங்கொடி. 

இதோ கண்ணு!! என உள்ளே சென்ற ஜெயா வெறும் தோசையை ஊற்றி வந்து போட்டு கொடுத்தாள். 

சித்தி ஆம்லெட் என பூங்கொடி கேட்க, முட்டை எல்லாத்தையும் அடையில வச்சிடுச்சு உங்க மாமியா என்று விட்டு சென்றார் ஜெயா. 

எதுவும் பேசாமல் சாப்பாட்டில் கவனம் செலுத்தினாள் பூங்கொடி. 

அடுத்த நாள் வாஷிங் மிஷின் ரிப்பேர் செய்து விட்டாள் மேனகா. 

சித்தி இதை துவைச்சு போடுங்க நாளைக்கு மிஷின் ரிப்பேர் பண்ண ஆளை கூட்டிட்டு வர சொல்றேன் அப்பாவ என துணியை கொடுக்க அதை சுடு நீரில் வெளுக்க கொடுத்து விட்டாள் ஜெயா. அந்த மொத்த பழியும் அன்னத்தின் மீது வரும்படி செய்து விட்டாள். 

துணியை மடித்த அன்னத்துக்கு வெளுத்து போன உடையை பார்த்ததும் ஏதோ சரியாக படவில்லை.. மேனகா!! இது யாரோடது கண்ணு? என அன்னம் கேட்க.. 

அம்மாச்சி அது என்னோடது தான் வெளுத்த ட்ரெஸ் தான் விடுங்க அம்மாச்சி என சொல்லி விட்டு சென்றவள் அனைத்து உடையையும் பூங்கொடியின் கட்டிலின் மேல் வைத்து விட்டு வந்தவள். அன்னத்திடம் அம்மாச்சி அது என்னோடது இல்ல. அக்காவிது என கூறி விட்டாள். 

சக்கரவர்த்தி கோவில் நோம்பி விசயமாக வெளியே சென்றிருக்க அந்த நேரம் பார்த்து முளைப்பாரி எடுப்பது பற்றி ஊர்கார பெண்மணிகள் வந்தார்கள் அன்னத்தை பார்க்க.. 

வேகமாக உடையை அள்ளி கொண்டு வந்த பூங்கொடி அன்னத்தின் முகத்தில் அனைத்து துணிகளையும் வீசியவள் அறிவு இருக்கா உனக்கு? என்னோட மொத்த துணியும் இப்படி பண்ணிட்டியே என கோபமாக சென்று விட்டாள். அன்னத்துக்கு கிடுகிடுவென வர, கண்களில் நீருடன் அவமானத்தில் அப்படியே அமர்ந்து விட்டார். 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment