மன்னவன் பூங்கொடி மார்பிலே

by Pradhanya kuzhali
494 views

Episode -43

என்னங்க மாமா!! நம்ம பாப்பா மாசமா இறக்குறா! என தனம் உற்சாகத்துடன் கூற, அப்படியா என சிவராமனுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்க, திடீரென கவலை ஒட்டி கொண்டது. 

என்ன மாமா எதுவுமே பேச மாட்டின்றீங்க? என்னாச்சுங்க? என தனம் பதட்டத்துடன் கேட்க, இல்ல அமுலிய மாப்ளை அடிச்சத நினைச்சா எனக்கு ஜீரணிக்க முடியல தனம். என்றார் ஆதங்கத்துடன்.. 

மாமா சொல்றத கேளுங்க. ஏதோ நடந்தது நடந்து போச்சு. இனி ஆக வேண்டியத பார்த்துக்கலாம். உங்க பொண்ணுகிட்ட நீங்க பேசுங்க மாமா. சமாதான படுத்தி அனுப்பி வைப்போம். 

எப்படி உன் பொறந்தவன் வீட்டுக்கு அனுப்ப சொல்ற? எனக்கு துளி கூட விருப்பம் இல்ல. நான் என் பொன்னை அங்கே அனுப்ப மாட்டேன் தனம் என்றார் காட்டமாக.. 

தனம் ஒரு பெரு மூச்சுடன், மாமா ஒரே ஒரு நிமிசம் நான் சொல்றத கேளுங்க. 

என்ன? 

அமுலி நம்ம வீட்டுக்கு வந்து ரெண்டு வாரம் ஆக போகுது. இங்கே வந்ததில இருந்து எப்போ பாரு தனியா அவளோட ரூமுக்குள்ள படுத்து கடக்குறா. 

அவள் தான் மசக்கையா இருக்காளே அதனால அப்படி இருக்கா. என்ற பொண்ணு இப்போ அம்மா ஆக போறா! இது கொண்டாட வேண்டிய நேரம். அவள் இங்கேயே இருக்கட்டும். அவளோட அப்பா நான் இருக்கிறேன். என் அமுலிக்கு குட்டி பப்பா வர போகுது. இனி நம்ம உலகமே அவள் தான். எந்த குறையும் சொல்லாத அளவுக்கு பாத்துக்க போறேன் என சிவராமன் பாசத்தில் பூரிப்புடன் சொன்னார். 

தலையில் அடித்து கொண்ட தனம் மாமா சொல்றத முழுசா கேளுங்க. என குரலை உயர்த்தினார். 

என்ன கேட்கணும்? சொல்லு!! 

தனம் ஒரு பெரு மூச்சை விட்டபடி, அன்பு பண்ணது தப்பு தான். நான் நியாயம் அப்டின்னு சொல்லல. ஆனால் பூங்கொடி அவளோட வீட்டுக்கு போறது தான் மாமா நல்லது. 

ஹே என்னடி பேச்சிட்டு இருக்க? என சிவராமன் பொங்கி கொண்டு கேட்க, 

இருங்க மாமா நான் இன்னும் பேசி முடிக்கவே இல்ல. உங்க பொண்ணுக்கு இப்போ நம்மள விட அன்பு தான் முக்கியமா படுறான். 

என்னடி புரியாம பேசிட்டு இருக்க? கடுப்பை கிளப்பாத போனை வை தனம் என அவர் கட் செய்ய போக, 

மாமா மாமா நான் நேரடியாகவே சொல்றேன். இங்கே வந்த ரெண்டு வாரத்தில் எலும்பும் தோலுமாக மாறி இருக்கா. சரியா சாப்பிடுறது இல்ல. சரியான தூக்கம் இல்ல. யார் கிட்டயும் பேச மாட்டின்றா. அவளோட துடுக்கு போயிடுச்சு. இதுக்கு எல்லாம் காரணம் அன்பு தான். 

ஆமா எல்லாத்துக்கும் காரணம் அவன் தான். நானா போய் என் பொன்னை கட்டி கொடுத்து இப்படி மண்ணை அள்ளி போட்டுகிட்டேன் என சிவராமன் விரக்தியின் உச்சத்தில் சொல்லி கொண்டிருக்க, 

மாமா இதுக்கு அர்த்தம். நீங்க நினைக்கிறது இல்ல. அன்பு இல்லாம பூங்கொடியால இருக்க முடியல. அதை தான் நானும் சொல்ல வந்தேன். அவளோட மனசுல அவனை நினைச்சிட்டு இருக்கா! வெளியே சொல்ல முன் வர மாட்டின்றா. இதுக்கும் மேலே நீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க. என்று விட்டு போனை வைத்தார் தனக்கொடி. 

சிவராமன் போனை வைத்து விட்டு திரும்ப வெளியே செந்தில் வந்திருந்தான். 

“என்ன செந்திலு? என்றா விசயம்?” என கேட்டு கொண்டே அமர்ந்தார். 

ஐயா அந்த பொண்ணு!! என தலையை சொரிந்தான் செந்தில். 

எந்த பொண்ணு? என சிவராமன் கேட்க.. 

சமையல்காரன் பொண்ணு அந்த சவுந்தர்யா. அதான்கயா மனோகரன் பொண்டாட்டி. என செந்தில் விளக்கம் கொடுக்க..

அவளுக்கு என்ன? அவளை பத்தி இங்கே என்ன பேச்சு? என கோபத்துடன் கேட்டார். 

ஐயா அந்த பொண்ணு இப்போ சக்கரவர்த்தி ஐயா வீட்ல இருக்குது. 

என்ன? என சிவராமன் அதிர்ச்சியுடன் எழுந்தார். 

ஆமாங்கயா உங்க மாப்ளை? என நிறுத்திய செந்தில், உங்க மாப்ளை தான் அழைச்சு வந்து பின் வீட்டை சுத்தம் செஞ்சு கொடுத்திருக்கார். என கூறி முடித்தான். 

சிவராமன் கோபமாக நாற்காலியை தள்ளி விட்டபடி வேகமாக எழுந்தார்.

அறையில் வயிற்றை வருடியபடி அமர்ந்திருந்தாள் பூங்கொடி. அவளின் கண்ணில் நீர் கொட்டி கொண்டிருந்தது. ஆம் அவனுக்காக தான் இந்த குழந்தை. அவன் மேல் இருக்கும் விருப்பத்தின் பெயரில் தான் அனுமதி கொடுத்தாள். இருவரும் கணவன் மனைவியாக சந்தோஷமாக வாழ வேண்டும் என கனவு கண்டாள். ஆனால் அவளை அடித்து விட்டான். பெயருக்கு தான் கோபத்தில் அங்கிருந்து இங்கு வந்தாலே தவிர அவளது சிந்தை மொத்ததிலும் அன்பு செல்வனின் நினைவுகள் தான் ஆக்கிரமித்து இருந்தது.  எல்லாமே அந்த கிளவியால் வந்தது காலடி சத்தம் கேட்க வேகமாக கண்களை துடைத்து கொண்டவள். ஒரு புத்தகத்தை எடுத்து வைத்தாள். 

அமுலி அம்மா சொல்றத கேளு டி!! என தனம் வந்து அருகில் அமர, வெடுக்கென புத்தகத்தை மூடி வைத்தவள். நான் மாசமா இருக்குற விசயம் யாருக்கும் தெரிய கூடாது. எனக்குன்னு சில தனிப்பட்ட விஷயம் இருக்கு. அதுல நீ தலையிடாத! நான் இங்க இருக்குறது உனக்கு பிடிக்கலன்னா சொல்லு நான் வெளியே போயிடுறேன் என்று விட்டு திரும்பி கொண்டாள். 

தனம் கண்களில் நீர் கோர்க்க மகளை பார்த்தார். 

***

வெண்ணை திரண்டு வர நேரத்தில் பானைய உடைச்ச கணக்கா நீ எதுக்கு டி இங்கே வந்த? நானே வந்திருப்பேன்ல. என ஜெயா பேசி கொண்டிருக்க, அவன் என்னை மிரட்டுறான் மா! அவனுக்கு பூங்கொடி மட்டும் தான் பொண்டாட்டியாம் என விசும்பி கொண்டே கூறினாள் மேனகா. 

ஜெயக்கொடி கைகளை மடக்கியபடி அங்கும் இங்கும் நடந்தவர். முடியை அவிழ்த்து சிண்டு முடிந்து கொண்டு புறப்பட்டார். 

என்ன மா பண்ண போற? இப்போ? 

ஜெயக்கொடி தனது மகளை பார்த்து, அந்த அன்னலட்சுமி எப்படி என்ற அம்மா இடத்தை பிடிச்சாலோ அதே போல நீ இப்போ பூங்கொடி இடத்தை பிடிக்க போற! என்று உடனே அவளை அழைத்து கொண்டு விரைந்தார் தனக்கொடி வீட்டை நோக்கி.. 

மா!! மாமா எனக்கு கிடைக்கணும். எனக்கு மட்டும் தான் மாமா. என மேனகா சொல்ல.. 

இந்த உறுதி போதும் அன்பு உனக்கு தான் என உறுதியுடன் கூறினார் ஜெயக்கொடி.. 

**

என்ன அண்ணா? என்னை பார்க்க காலேஜ் வந்திருக்கீங்க? என மணிமேகலை கேட்க.. 

மணி உனக்கு விசயம் தெரிஞ்சிருக்கும் தான மா!! என தயக்கத்துடன் அவளை பார்த்தான் அன்பு. 

ம்ம் தெரியும் அண்ணா. அவள் எதுக்கு இப்படி பண்றான்னு தெரியல. கிறுக்கு பிடிச்சு போச்சு. அன்னம் அம்மாச்சி கிட்ட எதுக்கு இப்படி நடந்துகிட்டான்னு தெரியல. அன்னிக்கு அப்படி தான் கல்யாணத்துக்கு முன்னாடி நாள் நைட்டு அவ்ளோ தேள் கொடுக்கு மாதிரி கொட்டி பேசினா! என ஒரு வேகத்தில் மணி மேகலை சொல்லியவள் சட்டென அன்பு செல்வனை பார்க்க.. 

என்ன சொல்ற மணி? என்ன விசயம்? என புருவம் சுருக்கி கேட்டான். 

அது அது வந்து ஒண்ணுமில்ல ண்ணா என மணிமேகலை தயங்க.. 

இல்ல இப்போ நீ ஏதோ சொல்ல வந்த? அது என்னன்னு சொல்லு. கல்யாணத்துக்கு முன்னாடி நாள் என்ன நடந்தது? என அன்பு செல்வன் அதிகாரத்துடன் கேட்க.. 

மணிமேகலை வேறு வழி இல்லாமல் அனைத்தையும் கூறினாள். அன்பு செல்வன் கண்களில் நீர் கோர்த்து கொண்டது. தனது அம்மாவை ஒரு மனிதியாக கூட மதிக்காமல் கடும் சொற்களால் வதைத்து இருக்கிறாள் என நன்றாக புரிந்தது. இத்தனை நாள் மனதில் காதல் கோட்டை கட்டி அவளை தாங்கியவனுக்கு இந்த செய்தியை கேட்டதும் சுக்கு நூறாக உடைந்து போனான். திருமணத்துக்கு முன்பே அவள் மேல் காதலை வைத்து கொண்டு கண்ணாடி பாத்திரத்தை கையாள்வதை போல அவளை பொத்தி வைத்திருந்தான். ஆனால் அதை அவளே உடைப்பாள் என நினைக்கவில்லை. 

அண்ணா அவள் ஏதோ தெரியாமல் சொல்லிட்டா. ஆனால் ஒண்ணு நிச்சயமா சொல்றேன். பூங்கொடிக்கு ஒருத்தங்கள பிடிக்கலன்னா பக்கத்தில கூட போக மாட்டாள். பேச மாட்டாள் எட்ட நின்னுப்பா. ஆனால் ஊருல பேசிக்கிட்டத கேட்டால் எனக்கு விரமத்தியா இருக்கு. நாக்கு மேலே பல்லு போட்டு பேசற இந்த ஊருல எதை வேணாலும் போட்டு பேசுவாங்க. அவங்க சொல்றத என்னால ஏத்துக்க முடியாது. பூங்கொடி பத்தி எனக்கு தெரியும் அண்ணா. என்றாள் மணிமேகலை சரியாக.. 

அங்கிருந்து அன்பு செல்வன் வேதனையுடன் புறப்பட்டான். நேராக வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

என்னன்னா ஆச்சு? என காபியை நீட்டிய சவுந்தர்யா, அம்மா வேற பூங்கொடி நினைப்பில் இருக்காங்க. போய் சரி செய்யறேன்னு சொன்னீங்களே என கேட்டாள் சவுந்தர்யா. 

அன்பு செல்வன் மவுனமாக இருந்தான். பேச்சே வரவில்லை. சூனியத்தில் சிக்கிய போல ஒரு உணர்வு. 

அண்ணா என சவுந்தர்யா அழைக்க.. 

போய் பேசிட்டு வரேன். என புறப்பட்டான் அன்பு செல்வன். 

**

இந்த அநியாயத்தை யார் கிட்ட போய் சொல்லுவேன். அப்பன் மாதிரியே புள்ளை.. இல்ல இல்ல தாயை போல பிள்ளை நூலை போல சேலை தனக்கொடி என கத்தி அழுது கொண்டே வந்தார் ஜெயா. 

என்னாச்சு? ஜெயா? இப்போ எதுக்கு அழுகிற? என தனக்கொடி பதட்டத்துடன் வெளிய வந்தார். 

பெரிமா மாமா என்கிட்ட… மாமாவும் நானும்.. என இழுத்த மேனகா. மாமா என்னை ஏமாத்திட்டார் என சொல்லி முடிக்க மிகவும் அதிர்ச்சியாக இருந்தது ஜெயாவுக்குமே.. 

என்னடி சொல்ற? என அதிர்ச்சியில் ஜெயா பார்க்க.. 

அதே நேரம் வேகமாக வீட்டுக்கு வந்த சிவராமன் காதில் இந்த செய்திகள் விழ, பூங்கொடி வெளியே வந்தாள். அன்பு செல்வன் வண்டியை நிறுத்தி விட்டு திரும்ப மொத்த குடும்பமும் தனக்கொடி வீட்டில் இருந்தது. 

தொடரும்.. 

You may also like

Leave a Comment