Episode- 46
என்னப்பா ஆதாரம்? என ஊரில் உள்ள மூத்தோர் அனைவரும் கேட்க,
அந்த நேரம் பார்த்து பொத்தென்று மயங்கி விழுந்தாள் மேனகா.
தனக்கொடி அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க, ஊர்கார பெண் அவளை பரிசோதனை செய்து விட்டு, மேனகா மாசமா இருக்குது என்று கூற, அங்கிருக்கும் அனைவருக்கும் தூக்கி வாரி போட்டது.
பூங்கொடியின் கண்களில் நீர் கொட்டியது. வாழ்க்கையே வெறுத்து போனவள். சிவராமன் பக்கம் திரும்பி, அப்பா நானு வீட்டுக்கு போறேன். இதுக்கு மேலே இதையெல்லாம் என்னால பார்த்திட்டு இருக்க முடியாது என புறப்பட்டு விட்டாள்.
அன்பு செல்வன் பூங்கொடியை ஏக்கத்துடனும் வேதனையுடனும் பார்த்தான். இது இப்படி போகும் என எதிர்பார்க்கவில்லை. தன்னை இந்த அளவுக்கு நம்பவில்லையா? உறவின் மேல் நம்பிக்கையே இல்லாமல் தான் தன்னுடன் உறவு வைத்து கொண்டிருக்கிறாளா? என கைகளை இறுக்கி மடக்கினான். இப்போது இந்த பிரச்சினையை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என தோன்றியது.
முருகேசன் அவமானத்துடன் பார்க்க, ஜெயக்கொடி உறுதியாக, என் பொண்ணோட வாழ்க்கைய சீரழிச்சத்துக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்! தனம் நீயும் அவங்க கூட சேர்ந்துக்கிட்டு ஆடுறல்ல.. உங்களுக்கு
அன்பு செல்வன் மேனகாவை வேதனையுடன் பார்த்தான்.
ஒரு நிமிசம் இருங்க!! என்றவன் போனில் அனைத்தும் ரெடியா என கேட்டான்.
வாங்க என மறுமுனையில் இருந்து பதில் வர, எல்லாரும் கோவிலுக்கு போலாம் என அனைவரையும் அழைத்து சென்றான் அன்பு.
அப்பன் புத்தி அப்படியே இருக்குது. என் பொண்ணுக்கு நியாயம் கிடைக்கணும் என ஜெயக்கொடி கூறினார். அவரது கண்ணில் அஞ்சு கோடி மதிப்புள்ள வீடு உறுத்தி கொண்டே இருந்தது.
என்ன இது அன்பு? என அங்கிருக்கும் அனைவரும் கேட்க,
அவனோ மேனகா மற்றும் தனக்கொடியை பார்த்து கொண்டே, இவங்க டாக்டர் அது தான் மேனகா மாசமா இருக்காளே அத செக் பண்ண தான் இந்த டெஸ்ட் என்றான்.
செக் பண்ணி என்னத்தை கண்டு பிடிக்க போற? என அங்கிருக்கும் அனைவரும் பார்க்க, அன்பு செல்வன் அனைவரையும் பார்த்து விட்டு மேனகாவின் பக்கம் திரும்பியவன் அது என்னோட குழந்தை தான செக் பண்ணி பார்க்கிறதுல என்ன தப்பு? என பார்த்தான்.
ஜெயா புரியாமல் பார்க்க,
மேனக்காவோட குழந்தை என்னோடதாக இருக்கும் பட்சத்தில் நான் ரெண்டு பேரையும் ஏத்துக்கிறேன். அதை கோவில் முன்னாடியே சொல்றேன். என அன்பு செல்வன் உறுதியுடன் பார்த்தான்.
மேனகா முன்னாள் வந்து செக் பண்ணிக்க நான் ரெடி என்றாள் உறுதியுடன்..
லாஸ்ட் பீரியட் எப்போ வந்தது? என ஸ்கேனிங் இடத்தில் அனைத்தையும் செக் செய்தார் மருத்துவர்.
ஜெயா கைகளை பிசைந்து கொண்டு நிற்க, டாக்டர் வெளியே வந்து விசயங்களை கூற, மேனகா வெளியே வந்தாள் தெளிவான முகத்துடன் சிவராமன் கொல்லும் வெறியில் நின்றிருக்க,
சரி சொல்லு எப்போ நான் உன் கூட இருந்தேன்? என்னைக்கு இது எல்லாம் நடந்தது? என கேட்டான்.
அது போன மாசம்.
என்ன தேதி? அதை சொல்லு என அன்பு செல்வன் கேள்வி கேட்க, அது வந்து என மேனகா தயங்க..
சொல்லு மேனகா? என கையை முறுக்கி கொண்டு பார்த்தான் அன்பு.
அது போன மாசம் பத்தாம் தேதி என மேனகா கூறி விட..
எங்கே நம்ம போன மாசம் சந்திச்சோம்? அதை சொல்லு! என கேட்டான்.
அது நீ என்னை ஹோட்டல் கூட்டிட்டு போன மறந்து போச்சா? என மேனகா கேட்க..
எந்த ஹோட்டல்? என அன்பு கேட்டான்.
கார்னிஷ்.
அப்போ நம்ம எப்போ மீட் பண்ணோம்? என அன்பு கேட்க..
காலையிலேயே!! என மேனகா வாய்க்கு வந்ததை அடித்து விட்டாள். இன்னும் சிறிது நேரத்தில் அவளது மொத்த கிட்டும் வெளி வர போகிறது என்பதை அவள் அறியவில்லை.
அப்படியா? என அன்பு கிண்டலுடன் பார்த்தான்.
மேனகா இயலாமையுடன் திணறி கொண்டே, தப்ப மறைக்க மாமா ஏதாவது ஆதாரத்தை எல்லாம் அழிச்சு இருப்பார். அவர் கோவில்ல நின்னுட்டு பொய் சொல்றார் என கத்தி அழுதாள்.
இன்னும் என்ன வேடிக்கை. அவனை சும்மா விடக்கூடாது என விஸ்வாவின் குரல் கேட்க..
ஆமா!! ஆமா!! என அங்கும் இங்கும் சத்தம் கேட்க..
அன்பு செல்வன் அங்கிருக்கும் அனைவரையும் பார்த்து, போன மாசம் பத்தாம் தேதி நான் மனோகரன் பொண்டாட்டி சவுந்தர்யாவை பார்க்க போனேன். அதுக்கான ஆதாரம் மனோகரன் அண்ணன் தான். என் கூட வந்தது திவ்ய பாரதி என்றான்.
ஆமா!! நான் கூட பார்த்தேன். என அங்கிருக்கும் ஒருவர் கூற..
அன்பு செல்வன் நேராக சிவராமின் பக்கம் சென்றவன். கொஞ்சம் இதை பாருங்க சார் என்றான்.
சிவராமன் வாங்கி பார்க்க அதில் இருக்கும். இருவரது மொத்த குட்டும் வெளிப்பட்டது. யார் அந்த இன்னொருவர்?
ஜெயக்கொடி பதட்டத்துடன் மேனகாவின் பக்கம் சென்று அடிக்க கை ஓங்கிட, அன்பு செல்வன் நேராக சென்று ஜெயாவின் கையை பிடித்து தள்ளி விட்டு ஓங்கி கன்னத்தில் அறைந்தான்.
அனைவரும் அதிர்ந்து பார்க்க, முருகேசன் பாய்ந்து கொண்டு முன்னாள் வந்தவர். என்னடா என் பொண்டாட்டிய அடிக்கிற வப்பாட்டி பையனுக்கு அவ்ளோ தைரியமா? என அம்பு செல்வனின் சட்டையை பிடித்து கீழே தள்ளி விட்டார்.
சிவராமன் பதட்டத்துடன் அருகில் வந்து அன்புவை தூக்கி விட, அன்பு செல்வன் சிரித்து கொண்டு, திங்களூர் பஸ் ஸ்டாப்புக்கு பின்னாடி இருந்த குடிசை இன்னிக்கு எப்படி பங்களா ஆச்சுன்னு ஒரே அதிசயமா இருக்கு. அந்த வீட்ல இருக்க பையன் அஞ்சாவது படிக்கிறான். இந்த வயசுலயே அவன் பேருல சொத்து இருக்குதாமே என்றான்.
முருகேசன் முகம் வியர்த்து கொட்டி போக, அன்பு செல்வன் அனைவரையும் பார்த்து விட்டு நேராக சதீஸ் பக்கத்தில் சென்றவன். சட்டையை பிடித்து இழுத்து சரமாரியாக அடித்தான்.
எதுக்கு அடிக்கிறீங்க? என அங்கிருக்கும் அனைவரும் கேட்க..
மேமகாவோட குழந்தை வேங்கியபாளையம் மனோரஞ்சிதம் பையன் சதீஷ் தான் வரம் கொடுத்தாப்டி என்றான்.
இல் இல்ல!! என மேனகா கத்தி விட, அருகில் சென்று அவளின் கன்னத்தில் அடிக்க கையை ஓங்கியவன் உண்மைய சொல்லு இல்லன்னு வை!! என மிரட்டினான்.
ஆமா!! எல்லாத்துக்கும் காரணம் சதீஸ் தான். எனக்கு உங்களை கட்டிக்க விருப்பம் மாமா. உனக்கு நான் ஐடியா கொடுக்கிறேன்னு சதீஸ் கூட்டிட்டு போய் என்னை…? என அழுதாள் மேனகா.
இல்ல பொய்!! என கூற..
சிவராமன் வேகமாக சதீசின் பக்கம் சென்று கன்னம் கண்ணமாக அறைந்து கையை முறுக்கி விட்டவர். உன்னை என்ன பண்றேன் பாரு டா! என் பொண்ணு வாழ்க்கைய சீரழிக்க திட்டம் போடுறியா ராஸ்கல் என கழுத்தை பிடித்து நெருக்கினார்.
மேனகா மேலும் அழுது கொண்டே, எனக்கு சதீஸ் மேல் விருப்பம் இல்ல. என் மனசுல இப்போ கூட நீ தான் மாமா இருக்க. உன்னை கல்யாணம் பண்ணிட்டு வாழ ஆசை பட்டேன். அதுக்கு இந்த குழந்தைய பயன்படுத்திக்க நினைச்சேன். உன்னை எனக்கு சின்ன வயசுல இருந்து பிடிக்கும். இப்போவும் பிடிக்கும் மாமா!! என அழுதாள் மேனகா.
அப்போ சக்கரவர்த்தி பையன் எந்த தப்பும் பண்ணல அதானே!! அப்பாவி அன்னத்து மேலே எத்தனை பழி பேச்சு? இதுக்கு மேலேயும் சக்கரவர்த்தி அமைதியா இருக்குறது எனக்கு சரியா படல! என சுப்ரமணி, நடேசன், பெரிய சாமி என அனைவரும் பார்த்தார்கள்.
வேண்டாம் எதுவும் வேண்டாம் எந்த விளக்கமும் வேணாம் என முன்னால் வந்த அன்னம். என் பையன் மேலே தப்பு இல்லன்னு எனக்கு முன்னாடியே தெரியும். அதை எல்லார் முன்னாடியும் அவன் நிரூபிச்சிட்டான். இனி எந்த விளக்கமும் வேணாம். இது எங்க குடும்ப விசயம் நாங்க பார்த்துக்கிறோம் என்று கூறி கையெடுத்து கும்பிட்டார் அன்னம்.
ஜெயக்கொடி முருகேசனின் சட்டையை பிடித்து இழுத்து எதுக்கு யா என்னை ஏமாத்தின? என நெஞ்சு நெஞ்சாக கத்தி கொண்டு அழுதார்.
அன்பு செல்வன் சளைக்காமல் ஜெயக்கொடியும் முன்னால் வந்து, அவரோட ரெண்டாவது மனைவி பத்தி அவரோட மொத்த குடும்பத்துக்கும் தெரியும். அவருக்கு ஆண் வாரிசு வேணுமாம் அதுக்கு தான் தன்னோட சிறு வயது காதலிக்கு புருஷன் இறந்ததும் இவரே வாழ்க்கை கொடுத்து இரண்டாம் மனைவியா வச்சுகிட்டார். என தெளிவாக கூறினான்.
ஜெயக்கொடி அதிர்ச்சியுடன் அப்படியே மயக்கத்தில் சரிந்தார்.
தனக்கொடி அழுதபடி ஜெயாவின் பக்கம் ஓடினார். என்ன இருந்தாலும் கூட பிறந்தவள். அந்த பாசம்ம் தான்.
அனைவரும் சக்கரவர்த்தியின் வீட்டில் கூடி இருக்க, முருகேசன் அவமானத்தில் தலை குனிந்து நின்றார். கூடவே குட்டு வெளிப்பட்டு விட்டது. மனோரஞ்சிதம் அரக்க பறக்க ஓடி வந்தார். சதீஷ் மற்றும் அவனது கூட்டாளியை கட்டி போட்டு வைத்திருந்தார்கள்.
மேனகா அழுதபடி நின்றாள். தனது தந்தை இத்தனை பெரிய வேலையை செய்திருப்பார் என கனவிலும் நினைக்கவில்லை அவள்.
அன்பு செல்வன் கையை கட்டியபடி வேடிக்கை பார்த்தான். சிவராமன் தனது அக்காவிடம் அனைத்து விசயத்தையும் கூற, அவரோ திருமணத்துக்கு ஒத்து கொள்ளவில்லை.
எனக்கும் அவன் வேணாம். அவனோட குழந்தையும் வேணாம். எனக்கு யாருமே வேணாம். நான் இனி என்னோட வாழ்க்கைய பாத்துக்கிறேன் என மேனகா எழுந்தாள்.
மேனகா மாமா சொன்னா கேளு. நீ உட்காரு என அன்பு செல்வன் கூறி விட்டு சதீசை பார்த்தவன். இதுக்கும் மேலே உனக்கு கல்யாணம் நடக்காது. உனக்கு யாரும் பொண்ணும் கொடுக்க மாட்டாங்க. வேலை வெட்டி இல்லாத ஒருத்தன் என் அக்கா பொண்ணுக்கு வேணாம். இதை கெட்ட கனவா நினைச்சு விட்டுடலாம் பாப்பா உன்னை நான் படிக்க வைக்கிறேன். நீ பாரின் போ! படி இந்த குழந்தை வேணாம். இது விளையாட்டு வினையாக போன கதை தான். என்றான்.
இல்ல எனக்கு மேனகாவை கட்டிக்க விருப்பம் நான் அவளை கட்டிக்கிறேன். என சதீஸ் கூற..
நான் அவனை கட்டிக்க மாட்டேன். வேலை வெட்டி இல்லாத ஒருத்தன் எனக்கு வேணாம். எனக்கு அன்பு மாமா என தேம்பி அழுதாள்.
சதீஷ் பெரு மூச்சுடன், நான் பாரினுக்கு காண்ட்ராக்ட் வேலைக்கு போறேன் மேனகா. உன்னை வச்சு அந்த அன்புவயும் என் மாமனையும் பழி வாங்க நினைச்சு தான் அப்படி பண்ணேன். ஆனால் அப்புறம் எனக்கு உன்னை..
எனக்கு நீ வேணாம் என மேனகா முன்னாள் சென்றாள்.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels