மன்னவன் பூங்கொடி மார்பிலே

by Pradhanya kuzhali
429 views

Episode -51

அன்பு என கதவை தட்டும் சத்தம் கேட்க, அம்மா குரல் என மெதுவாக எழுந்த பூங்கொடி சென்று கதவை திறந்தாள் சோம்பல் முறித்து கொண்டே, மாமா எங்கே டி? என தனம் கேட்க, 

அவரு பாத்ரூம் போயிருக்காப்டி என்றவள். என்னாச்சு மா ஆறு மணிக்கு வந்திருக்க? என மேலும் கீழும் பார்த்தாள். 

அக்கா!! என அழைத்தபடி அதற்குள் அன்பு செல்வன் வந்து விட சட்டென நகர்ந்து கொண்டாள் பூங்கொடி. 

கண்ணு வெளியே வா தம்பி உன்ற கிட்ட கொஞ்சம் பேசணும். என்றார் தனம். 

சொல்லு கா என்றான் பெரிய வீட்டின் முன்னால். 

பூங்கொடிக்கு மார்னிங் சிக்நஸ் நன்றாகவே இருக்க, ஆனாலும் அவள் டீ காபி வைக்க சென்று விட்டாள். நேரமே எழுந்தவள் வீட்டை பெருக்கி விட்டு, தண்ணீர் தெளித்து கோலம் போட்டவள். அதை முடித்து உள்ளே சென்று டீ காபி வைக்க சென்று விட்டாள். 

அடுத்த சில மணி துளிகளில் காபி டீயுடன் வந்தாள். தனக்கொடி எடுத்து கொண்டு போன் பேசி கொண்டிருக்கும் தன் தம்பியை பார்க்க, உடனே வா சவுந்தர்யா என்று விட்டு போனை வைத்தவன் முன்னால் பூங்கொடி ப்ளாக் டீ நீட்ட, எதுவும் பேசாமல் வாங்கி கொண்டான். 

அடுத்த அரை மணி நேரத்தில் சவுந்தர்யா தனக்கொடியின் முன்பு நிற்க, உள்ளிருந்து அன்னம், சக்கரவர்த்தி என இருவரும் வந்தார்கள். 

சொல்லுங்க அண்ணா? என்ன விசயம் என சவுந்தர்யா கேட்க.. 

அன்பு பெரு மூச்சை விட்டபடி, எங்க அக்கா தான் உன்னை பார்க்க கூப்பிட்டாங்க பேசு என சைகை காட்டினான்..

சவுந்தர்யா விதிர்விதித்து பார்க்க, தனக்கொடி சாதாரண தொனியில் உனக்கும் மகிழுக்கும் இன்னிக்கி கல்யாணம். புறப்படு என்றார்.

என்ன பேசுறீங்க நீங்க? என அதிர்ச்சியுடன் சவுந்தர்யா கேட்க, அன்னம், சக்கரவர்த்தி இருவரும் அதே தொனியில் பார்த்தார்கள். 

தனக்கொடி ஆளுமையுடன் நான் சொல்றது உனக்கு அதிர்ச்சியா இருக்கலாம். ஆனால் நீ என் பையன தான் கட்டிக்கணும். 

என்ன பேசிட்டு இருக்கீங்க நீங்க? என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அதிர்ச்சியுடன் சவுந்தர்யா கேட்டு கொண்டே அன்பு செல்வனை பார்த்தவள் அண்ணா நீங்க பாட்டுக்கு பாத்துட்டு நிக்கிறீங்க? கேளுங்க!! என கண்களில் நீருடன் கதறினாள். 

அன்பு செல்வன் அமைதியாக நிற்க, தனக்கொடி அவளை பார்த்து, நான் சொல்றத முதல்ல கேளு.

சவுந்தர்யா கோபத்துடன் நிமிர்ந்து பார்க்க, தனக்கொடி அவளின் கையை பிடித்து நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு. உன்ற புருஷன் மனோகரன் தனம் பஸ்ல விழுந்து உயிரை விட்டுட்டான். 

அதுக்காக நீங்க வாழ்க்கை கொடுக்க வேணாமுங்க. எனக்கு வாழ்க்கை பிச்சை போட சொல்லி நான் யாருக்கிட்டையும் கேட்கல. தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க. இனி உங்க கண்ணு முன்னாடியே நான் வர மாட்டேன் என கையெடுத்து கும்பிட்டாள். 

தனக்கொடி சவுந்தர்யாவின் முன்னாள் வந்து என் பையனுக்கு நீ வாழ்க்கை பிச்சை போட முடியுமா? உன்கிட்ட நான் பிச்சை கேட்கிறேன் என்றார் அழுது கொண்டே.. 

அய்யோ என்ன பண்றீங்க? நீங்க? என சவுந்தர்யா வெடுக்கென நகர்ந்து கொள்ள.. 

தனக்கொடி அவளிடம் என்ற பையன் உன்னை ரொம்ப வருசமா விரும்புறான். எனக்கும் தெரியும். என்கிட்ட சொல்லிட்டு வீட்டுல பேச சொன்னான். அந்த நேரம் பார்த்து தான் திடுதிப்புன்னு உனக்கு கல்யாணம் ஆன விசயம் தெரிஞ்சதும் ரொம்ப உடைஞ்சு போயிட்டான். இந்த ஒன்றை வருடத்தில் குடிக்கு அடிமையாகிட்டான். நடைபினமாக வாழ்ந்துட்டு இருக்கான். நான் ஒரு அம்மாவா உன்கிட்ட கேட்கிறேன் கண்ணு. என் பையன கட்டிக்கோ!! 

சவுந்தர்யா கண்களில் நீர் கொட்ட, எனக்கு கல்யாணம் ஆனதே உங்க வீட்டுக்காரர் திட்டம் தான். உங்க பையன் என்னை கட்டிக்க கூடாதுன்னு, பணம் படைச்ச உங்க வீட்டுக்காரர் மொத்தமா என் வாழ்க்கைய அந்த மனோகரன் கூட இணைச்சு விட்டுட்டார். இப்போ வந்து உங்க பையன எந்த விதத்தில் கட்டிக்க சொல்றீங்க? அப்படியே கட்டிக்கிட்டாலும் என்னை வாழ விட்டுடுவாரா? உங்க பையன நான் பார்த்தது கூட இல்லை படிக்கும் போது, நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்தேன் என் வாழ்க்கைய இப்படி என வெம்பினாள். 

தனக்கொடி அழுது கொண்டே தப்பு தான் உன்கிட்ட மன்னிப்பை கேட்கிறது தவிர வேற எதையும் என்னால செய்ய முடியாது மா. சீரழிஞ்ச உன்னோட வாழ்க்கைய கண்டிப்பா மீட்டு கொடுக்க முடியும். என் பையன கட்டிக்கோ மா! உனக்கும் உன்னோட குழந்தைக்கும் பாதுகாப்பா இருப்பான். நான் உனக்கு சத்தியம் பண்றேன். விருப்பம் இல்லாம உன்கிட்ட நெருங்க மாட்டான் கண்ணு. அவனுக்கு உன் மேலே இருக்கிறது பரிசுத்தமான அன்பு மட்டும் தான் கண்ணு சொல்றத கேளு என அவர் எடுத்து கூற அன்னம் வந்து தனக்கொடியை ஆறுதல் படுத்தினார். 

அன்பு செல்வன் நேராக சவுந்தர்யாவின் பக்கம் வந்து உன்னோட வாழ்க்கை. உன்னோட முடிவு டா சவுந்தர்யா. ஆனாலும் என்ற மகிழ் மச்சான் இப்படி வாழ்க்கையே வெறுத்து சுத்தரது உனக்காக மட்டும் தான். கண்டிப்பா அவரு உன்னை நல்லா பார்த்துப்பார். அன்னிக்கு நான் மட்டும் பைனான்ஸ்ல கார்த்திக் கிட்ட பேசி உன்ற வீட்டுக்கு அனுப்புலன்னு வை அந்த புஷ்பராஜ் உன்கிட்ட அத்து மீறி அந்த வீட்லயே உன்னை.. என நிறுத்தியவன். உன்னை பாதுகாக்க ஒரு ஆள் வேணும். 

சவுந்தர்யா அவனை இயலாமையிடன் பார்க்க.. 

கண்ணு நான் உனக்கு எப்பவும் பாதுகாப்பா இருப்பேன். நீ எப்பவும் இதே வீட்ல இருக்கலாம். ஆனால் நாளைக்கு உனக்கு உன்னோட குழந்தைக்கு அப்பா அப்படின்ற ஸ்தானத்தில் ஒருத்தர் வேணும் தான.. 23 வயசுல தனியா வாழ்க்கைய ஆரம்பிக்கிறது எல்லோராலும் முடியும் ஆனால் நீ தனியா இங்கே வாழ முடியும். ஆனால் வயித்துல குழந்தை இருக்கே டா!! என அன்பு எடுத்து கூறினான். சக்கரவர்த்தி அன்னம் என அனைவரும் அவளிடம் எடுத்து கூற, ஒருவழியாக திருமணத்துக்கு ஒத்து கொண்டாள். 

அக்கா சவுந்தர்யா ஒத்துகிட்டா! என அன்பு செல்வன் வந்து கூற, தனக்கொடி சந்தோஷத்துடன் பூங்கொடி சவுந்தர்யாவை தயார் பண்ணு கண்ணு என்றவர். மகிழ் வேந்தனுக்கு அழைத்து கூறினார். 

மகிழ் அத்தனை சந்தோஷமாக இருந்தான். சக்கரவர்த்தி தன் மகளிடம், எப்படி கண்ணு கல்யாணம் பண்ண போற? யாருக்கும் தெரியாமையா? மாப்ளக்கு தெரிஞ்சா என கேட்க.. 

அவருக்கு தெரிஞ்சு அவரோட கண்ணு முன்னாடி தானுங்க பா கல்யாணம் நடக்கும். அவரால ஒன்னும் பண்ண முடியாது என்றவர். அதற்கான ஏற்பாடுகளை செய்தார். 

அக்கா சரி வருமா? என அன்பு கேட்க, 

எல்லாமே சரி வரும் தம்பி, நீ ஆக வேண்டியதை பாரு. எவ்ளோ நாள் பொறுத்து இருக்கிறது? எனக்கு என் பையன் விருப்பம் முக்கியம் அவனோட வாழ்க்கையை முக்கியம். உம்மட மாமாவுக்கு கவுரவம், தகுதி.தராதரம் ஜாதி மல்லி இது தான் முக்கியம். எனக்கு என் பையன் தான் முக்கியம். ஆனது ஆகட்டும் பார்த்துக்கலாம் ஒரு கை என உறுதியுடன் இருந்தார். 

வீட்டில் இருந்து சக்கரவர்த்தி, அன்னம், சங்கீதா, அனைவரும் கிளம்ப, பூங்கொடி வரவில்லை அங்கேயே இருந்து கொண்டாள். ஜெயக்கொடியும் கிளம்பினார். இன்று மேனகா சதீஷ் இருவருக்கும் திண்டல் முருகன் கோவிலில் திருமணம். சந்தனக்கொடி, முத்து சாமி இருவரும் நடுவில் வந்து சேர்ந்து கொண்டார்கள். அன்பு செல்வன் தான் அனைத்து வேலைகளையும் செய்தான். 

மனோரஞ்சிதம் குடும்பத்துடன் சிவராமன் வந்திருந்தார். சதீஷ் உற்சாகமாக இருந்தான். இருக்காதா பின்ன, ஈரோடு சுத்தி ஒரு இடத்தில் கூட பெண் சிக்கவில்லை. கட்ட பஞ்சாயத்து கட்சி இப்படி சுற்றி கொண்டிருந்தால் யார் கட்டுவார்கள். இப்பொழுது இருக்கும் டிரெண்ட். என்னவெனில் மாப்பிள்ளை ஐடியில் வேலை பார்க்க வேண்டும், மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்க வேண்டும், அவர் பெங்களூர், சென்னை, மும்பை ஹைதராபாத், இப்படி பிரபலமான சிட்டியில் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் வெளிநாடுகளில் பணியில் இருக்க வேண்டும்.  இப்படிப்பட்ட மாப்பிள்ளைகளை மட்டும் தான் சதீஷின் சுற்றுவட்டார உறவின பெண்கள் அனைவரும் விரும்பி கட்டிக் கொள்கிறார்கள். 

 ஒரு நாட்டுக்காரன் அப்படி என்றால் ஒருத்தியும் அவனைத் திரும்பிப் பார்ப்பதில்லை. அதற்கு எல்லாம் காரணம் கட்சி தகுதி கவுரவம் தராதாரம் ஜாதிமல்லி. சதீஷ் கல்லூ கல்லூரி படிப்பை முடித்ததுமே பஞ்சாயத்து சண்டை இப்படி இறங்கி விட்டான். அதனால் அவனுக்கு வேலையில் அனுபவம் என்றால் பூஜ்ஜியம் மட்டுமே.  இப்பொழுது அவனது படிப்புக்கு தகுந்த வேலையில் ஒரு லட்சம் சம்பாதிக்கலாம்.  ஆனால் படித்த அனைத்தும் மறந்து விட்டது.  இருக்காதா பின்ன அவன் படித்து பத்து வருடங்கள் ஆகப்போகிறது. பெயருக்கு டிகிரி எவைத்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்தான். இப்பொழுது அவனது மண்டையை சுற்றி வெள்ளை முடிகள் ஆங்காங்கே பச்சைப்புற்களைப் போல எட்டிப் பார்க்கிறது. 

அழகான பெண் ஆக்சிடன்ட்டில் கிடைத்து விட்டாள். அவள் தான் மேனகா. இனி அவளது மனதை மாற்ற வேண்டும். Long distance relationship love செய்ய போகிறான். ஒரு மாதத்தில் வெளிநாடு பறந்து விடுவான். 

மாப்ளை பொண்ணு ரெடியா என ஐயர் வந்து கேட்க, ரெடிங்க என அன்பு செல்வன் இன்னொரு பக்கம் கூற சிவராமனின் பார்வை தனக்கு எதிரில் இருக்கும் தனக்கொடியின் மீது படிந்தது. 

இதோ மாங்கல்யத்தை ஆசிர்வாதம் பண்ணுங்க என அனைவரிடமும் நீட்டினார் அர்ச்சகர். 

சதீஸ் மேனகாவின் அருகில் நின்றிருக்க, அனைவரும் ஆசிர்வாதம் செய்து கொடுத்தார்கள். கெட்டி மேளம் கெட்டி மேளம் என சொல்லிய படி அர்ச்சகர் தட்டை அப்படியே அன்பு செல்வன் பக்கம் நீட்ட, சதீஸ் அதிர்ச்சியில் தாலி எங்கே டா? எனக்கு கல்யாணம் டா? என்னும் ரீதியில் பார்க்க, அங்கு வந்த மகிழ் தாலியை எடுத்து கொண்டு உற்சவ சன்னதியின் முன் நின்றிருந்த சவுந்தர்யாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான் சிவராமனின் முன்னால்.. 

சதீஷ் வியர்க்க விறுவிறுக்க பார்க்க, 

மாப்ளை தம்பி தாலி இங்கே இருக்கு எடுத்து காட்டுங்க என நீட்டினார். 

சிவராமன் வேஷ்டியை மடித்து கட்டி கொண்டு நேராக மகிழ் பக்கம் பற்களை கடித்து கொண்டு சென்றார். 

தொடரும்.. 

You may also like

Leave a Comment