Episode -52
உன்னை கொன்னு புதைப்பேன் டா!! என வேகமாக வந்தார் சிவராமன். மகிழின் சட்டையை பற்றி ஓங்கி அறைந்தார் கன்னத்தில்.
மாப்ளை!! என சக்கரவர்த்தி தடுக்க, சவுந்தர்யாவின் கண்களில் இருந்து நீர் கொட்டியது.
சிவராமன் இதை எதிர்பார்க்கவே இல்லை. மாமா என ஒரு பக்கம் அன்பு செல்வன் வர, அருகில் நின்றிருந்த தனக்கொடியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் கோபத்தில்..
யோவ் மரியாதை கெட்டிடும் என கழுத்தை இறுக்கி பிடித்தான் மகிழ்.
தம்பி மகிழு!! கண்ணு மகிழு விடு கண்ணு என அன்னம் ஒரு பக்கம் பிடித்து தடுக்க,
சிவராமனுக்கு மிகவும் அவமானமாகி போனது. சவுந்தர்யா என்ன செய்வதென தெரியாமல் கையை பிடித்து இழுத்தாள்.
மகிழ் கொஞ்சம் சுய நினைவுக்கு வந்தவன். அவரது சட்டையை விட்டு, எங்க அம்மாவை அடிக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத! நீ ஒரு பணவெறி பிடிச்ச மிருகம். உனக்கு தகுதி தராதரம் குலம் கோத்ரம் பேய் பிடிச்சிருக்கு. என்னோட வாழ்க்கைய முடிவு பண்ண நீ யாரு? இத்தனை வருஷமா நீ உழைச்சு என்னத்தை சம்பாதிச்ச? உன்கிட்ட இருக்கிற சொத்து எல்லாமே எங்க தாத்தாவுக்கு சொந்தம். நீ என்ன பண்ண? ஜாலியா பஞ்சாயத்து பண்ணிட்டு கலவரம் தூண்டி விட்டு குடும்ப அரசியல் பண்ணிட்டு… என அவன் பேசி கொண்டே செல்ல..
போதும் விடுங்க என சவுந்தர்யா மீண்டும் கூற..
வேகமாக விலகி இருந்தான் மகிழ். பெரும் அவமானமாகி போனது சிவராமனுக்கு. அதற்கு மேல் அவர் அங்கு நிற்கவே இல்லை. சவுந்தர்யாவின் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டவன் தன்னில் சரிபாதியாக ஏற்று கொண்டான்.
அனைவரும் வீடு வந்து சேர்ந்தார்கள். தனம், மகிழ், சவுந்தர்யா மூவரும் அவர்கள் வீட்டுக்குள் நுழைய, இந்த வீடு என்னோட பேரில் இருக்கு. இது என்னோடது. எனக்கு பொண்டாட்டி, மகன் ரெண்டு பேரும் இல்ல நீங்களே வீட்டை விட்டு வெளியே போங்க என கர்ஜித்தார் சிவராமன்.
இதுக்கு தான் நான் சொன்னேன். என் பேச்சை கேட்டீங்களா நீங்க என சவுந்தர்யா அழுது கொண்டே தனக்கொடியை பார்க்க, அவரோ இதையெல்லாம் பெரிதாக எடுத்து கொண்டதாக தெரியவில்லை. தனது மகனின் பக்கம் திரும்பியவர். மகிழு நம்ம கீழ் வளைவுள வீடு இருக்குல்ல. அங்கே உன்ற பொண்டாட்டிய கூட்டிட்டு போ கண்ணு. என கூறினார்.
இல்ல மா என மகிழ் அவளது கையை கெட்டியாக பிடித்து கொண்டவன். நான் வாடகை வீட்டுக்கு போறேன். இனி எனக்கு உன்னோட சொத்தும் வேணாம். உன் புருஷன் சொத்தும் வேணாம். வேலைக்கு போய் என் பொண்டாட்டியையும் குழந்தையையும் காப்பாத்துவேன். என கூறியவன் அவளின் கையை பிடித்து கொண்டு வெளியேறினான்.
சவுந்தர்யா அவனது கைகளை உருவி கொண்டு நடந்தாள். கண்களில் நீர் வழிய.. காலையில் நடந்த கலவரத்தில் பெரிதாக அவளை கவனிக்கவில்லை மகிழ். இப்பொழுது தான் முகத்தை பார்க்கிறான். கண்கள் சிவந்திருந்தது. மூக்கும் தான். கொழுக் மொழுக் கன்னத்தில் இருப்பவள் இன்று கொஞ்சம் கம்மியாக இருந்தாள். ஆனால் என்றும் இல்லாத நிம்மதி மகிழ் வேந்தன் மனதில் பரவியது. அதற்கு காரணம் அவன் கட்டிய தாலி இல்லை. அது இரண்டாம் பட்சம் தான். அவளின் நெற்றியில் இருக்கும் பொட்டு.. மகிழின் மனதை நிறைவுற செய்ய போதுமானதாக இருந்தது.
அவளுக்கு நிகராக நடந்தவன். எத்தனை மாசம் ஆகுது? என கேட்டு கொண்டே வந்தான்.
அவள் பதில் சொல்லவில்லை.
அம்மணி இப்போ சவுந்தர்யா மகிழ் வேந்தன். அதாவது அம்மணி மகிழ் வேந்தன் பொண்டாட்டி. அதனால் மகிழ் என்ன வேணாலும் செய்வான் என அவள் மேல் கைகளை போட வந்தான்.
பயந்து நடுங்கினாள் பெண்ணவள். அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்தவன். அவளின் கையை இறுக்க பற்றி கொண்டு நேராக அன்பு செல்வனின் வீட்டுக்கு நான்கு வீடு தள்ளி ஒரு வாடகை வீட்டில் முன்பணம் கொடுத்து வந்து சேர்ந்தான்.
வீட்டை சுற்றி பார்த்து கொண்டே அவனையும் பார்த்தாள் சவுந்தர்யா. ஒரே ஒரு கயிற்று கட்டில், சமையலறையில் பத்து பாத்திர பொருட்கள் மட்டுமே இருந்தது. ஒரு காற்றாடி ஓடி கொண்டிருந்தது இருவரிடமும் கட்டிய உடையை தவிர எதுவுமே இல்லை. அது தான் உண்மை. இரு வந்துடுறேன் என வெளியே சென்றவன் அரை மணி நேரம் கழித்து வந்தான்.
அவள் சக்கரவர்த்தியின் வீட்டில் வைத்து விட்டு சென்ற பெட்டி மற்றும் இரவு சாப்பிட இட்லி தோசையை கடையில் இருந்து வாங்கி வந்திருந்தான் மகிழ்.
எதுக்கு இத்தனை கஷ்டப்படுறீங்க? நீங்க நினைக்கிறது எதுவும் நடக்காது. உங்களுக்கு ஏத்த பொண்ணு நான் இல்ல. என சவுந்தர்யா கூற..
“உனக்காக உயிரையும் கொடுப்பேன். இது கஷ்டம் இல்ல வரம்” என்றவன். “சாப்பிடு” என கண்கள் சிரிக்க கூறினான். இந்த திருமணத்தில் யாருக்கு சந்தோஷமோ இல்லையோ மகிழுக்கு அத்தனை சந்தோஷம். அவன் ஆசைப்பட்டவள் இதோ அவன் பக்கத்தில் மனைவியாக..
இமை வெட்டாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான் மகிழ்.
சவுந்தர்யா அவனை ஒரு பார்வை கூட பார்க்கவில்லை. உணவை முடித்து படுக்கையில் படுத்து கொண்டாள். ஏழு மாத கருவை சுமந்து கொண்டிருக்கிறாள். இந்த வாழ்க்கையை எண்ணி எப்பொழுதும் அவளுக்கு வேதனை மட்டும் தான்.
***
அன்பு செல்வன் சோர்வுடன் அறைக்கு வந்தான். பூங்கொடி படுக்கை விரிப்பை சரி செய்து கொண்டிருக்க, என் மேலே பஸ் டிப்போவில் கொடுத்த புகாரை நீங்க தான் வாபஸ் வாங்க சொல்லி இருக்கீங்க? எதுக்கு மேடம் அப்படி செஞ்சீங்க? என வெகு சாதாரணமாக கேட்டான்.
பூங்கொடி கள்ள முழி முழித்தவள். அது வந்து என தயங்கினாள்.
அன்பு செல்வன் புன்னகையுடன் எந்த இடத்துலயும் நீங்க கன்டெக்டர் அன்பு செல்வனோட பொண்டாட்டியா வந்து நிக்க எந்த அவசியமும் இல்ல. அதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.
பூங்கொடி எதுவும் பேசாமல் அவனை பார்த்தாள்.
என்னை மாமான்னு கூப்பிடுற வேலைய இன்னையோட நிறுத்திக்கங்க. என் அம்மா கையில தான் நானு கல்யாணம் ஆனதுக்கு பிறகும் சாப்பிட்டுட்டு இருந்தேன். இதோ இது வரை அப்படி தான் நடக்குது. இப்போ இடையில் நீங்க குறுக்க திரும்புறது எனக்கு சரியா படல.. என்றான் அன்பு.
இன்னும் உடைந்து போனாள் பூங்கொடி. அவள் கைகளை இறுக்கி மடக்கியபடி நின்றிருக்க, எனக்காக எதுவும் நீங்க மாத்திக்க வேணாம். இப்படி உங்களையே நீங்க கஷ்டபடுத்திட்டு பண்றது எல்லாம் உங்க மேலே கோபத்தை தான் கொடுக்குது. சொல்லி கொன்ன வார்த்தைகளும் நிறைய இருக்கு. எதுவுமே சொல்லாம என்னை பஞ்சாயத்துல நிக்க வச்சிட்டு போனதுலயே உங்களோட நம்பிக்கை எந்த அளவுக்கு இருக்குன்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன். தயவு செஞ்சு எனக்காக அதை பண்றேன் இதை பண்றேன் அப்டின்னு கிறுக்கு தனம் பண்ணாம, படிக்கிற வேலைய பாருங்க என்று விட்டு படுத்து கொண்டான் கட்டிலில்..
அவள் ஒரு சில நொடிகள் கழித்து மீண்டும் அடுக்கி போட, கீழே படுக்கும் அளவுக்கு இங்கே ஒன்னும் நடக்காது. நடக்க போறதும் இல்ல. அவங்கவங்க இடத்தில வந்து படுத்துக்கங்க என்று விட்டு அவன் சுவற்றின் பக்கம் சென்று படுத்து கொள்ள, பூங்கொடி கண்ணீரை அடக்கி கொண்டு முன்னாள் படுத்தாள்.
உள்ளுக்குள் ரணமாக இருந்தது. காலேஜ் செல்ல வேண்டும் அவ்வளவு தானே. அவனுக்காக எது செய்தாலும் மாற மாட்டேன் என சொல்லி விட்டான் அப்படிதானே இனி எது செய்தாலும் அவன் மனம் மாற போவதில்லை என புரிந்து கொண்டவள். வேறு வழி இல்லாமல் பல யோசனைகளுடன் கண்களை மூடினாள்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிய, தூங்கி எழுந்த சவுந்தர்யா வலது பக்கம் திரும்பி பார்க்க, அங்கே மகிழ் இல்லை.
காலையிலேயே குடிக்க போயிருப்பான். என நினைத்து கொண்டவள். அவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என நினைத்தவள். அவளது வேலையை பார்க்க ஆரம்பித்தாள். சவுந்தர்யாவின் முன்னாள் மகிழின் தோற்றம் ஒரு குடிகாரன். பெரிய பணக்கார வீட்டு வாரிசு. பொறுக்கி இப்படி தான் சித்தரித்து வைத்திருந்தாள். அதே போல அன்பு செல்வனது உறவு மகிழ். இந்த அரக்க குணம் கொண்ட ஆண்களுக்கு மத்தியில் கூடவே ஒருவன் இருந்து விட்டால் கொஞ்சம் நிம்மதி பெரு மூச்சு வரும் என நினைத்தாள். ஆனால் மகிழ் வேந்தன் அந்த நிம்மதியை கொடுப்பான் என துளியும் அவளுக்கு நம்பிக்கை இல்லை.
அவளது அன்றாட வேலையை பார்த்தாள். சமையலறையில் அனைத்து உணவு பொருட்களும் இருந்தது. அன்பு செல்வன், அன்னத்துடன் வந்து தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து விட்டு சென்றான். மதிய உணவை முடித்தவள். அப்படியே உறங்கி போனாள். திவ்ய பாரதி வந்து சவுந்தர்யாவை அவளது பார்லருக்கு அழைத்து சென்று விட்டாள். மாலை கொண்டு வந்து விட்டு சென்றாள். மகிழ் வீட்டுக்கு வர எட்டு மணியை தொட்டது.
கதவை தட்டினான். யாரோ எவரோ எனும் ரீதியில் பயந்து கொண்டே திறந்தாள்.
நான் தான்!! என்றான் கண்கள் சிரிக்க, எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள்.
சவுந்தர்யா!! என்றான் உரிமைபட்ட குரலில்..
சொல்லுங்க என சலிப்புடன் பார்த்தாள்.
இந்தா என பணத்தை நீட்டினான் மகிழ்.
ஹாங் என சவுந்தர்யா பார்க்க, ம்ம் வாங்கிக்க வேலை செஞ்சு சம்பாதிச்ச பணம் தான். இது அட்வான்ஸ் வாங்கிட்டு வந்தேன் என்றான்.
சவுந்தர்யாவின் கண்களில் நீர் கோர்த்து கொண்டது. மனோகரனுடன் நரகத்தில் வாழ்ந்தாள் என்றே கூறலாம். அவன் நீட்டி கொண்டிருக்க, பணத்தை வாங்கி கொண்டாள்.
களைப்புடன் உடலை முறுக்கியவன். நீ சாப்பிட்டியா? கேட்க மறந்துட்டேன் என திடுக்கிட்டு பார்த்தான்.
ம்ம் என்றாள் ஒற்றை பதிலுடன்..
அப்போ சரி நான் குளிச்சிட்டு வந்து சாப்பிடுறேன். நீ படுத்துக்கோ என்று விட்டு பாத்ரூம் பக்கம் சென்றான்.
***
கல்லூரி சென்று விட்டு சோர்வுடன் வந்து படுத்தாள் பூங்கொடி.
நாளைக்கு ஹாஸ்பிடல் போலாம். செக் அப் பண்ண என அன்பு அவளை பார்க்க,
சரி என ஒற்றை பதிலுடன் முடித்து கொண்டாள் பூங்கொடி.
தொடரும்..