Episode-58
அவன் கிட்ட என்ன உனக்கு பேச்சு? அப்படி என்ன ரகசியம் பேசிட்டு இருந்தீங்க என அவ்விடத்துக்கு வந்தாள் பூங்கொடி.
அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்த அனுசுயா, அது ஒண்ணுமில்ல. நீ தான் அவரை வேணாம்னு சொல்லிட்டியே! அதான் நான்..
ஹே ஹே கொன்னிடுவேன் உன்னை.. ஜெகன் அண்ணா பேபிய வச்சுட்டு, அவன் உனக்கு வேணுமா? என முறைத்து பார்த்தாள்.
அப்போ பூங்கொடியின் மனதில் மாமன் இன்னும் இருக்கிறார் அப்படி தானே? என அனு கிண்டலுடன் கேட்க..
நான் நிறைய தப்பு பண்ணிட்டேன். என்னோட லைஃப் ஸ்டைல் வேற அவனோட லைஃப் ஸ்டைல் வேற அதனால நான் என பேச தயங்கினாள்.
அப்போ திவ்ய பாரதிய அவருக்கு செட் பண்ணி விட்டுடலாம் பா!! என அனுசுயா கிண்டலடிக்க.. அவளை முறைத்தபடி வேகமாக சென்று விட்டாள் பூங்கொடி.
***
பம்பை முழங்கும் சத்தம் மேளம் கொட்டும் சத்தம் கோவில் ரேடியோவில் கேட்டு கொண்டிருக்க, அன்னம் முளைப்பாரி எடுத்து வைத்து அடுக்கினார். அம்மாச்சி அழகா இருக்கு எனக்கு கொஞ்சம் செடி வேணும் என சங்கீதா, பிரியா, பரணி என சுற்றி வந்தார்கள்.
கண்ணு கண்ணு!.. இது சாமிக்கு கொண்டு போகணும். பொறுங்க கண்ணு. முளைப்பாரி முடிஞ்சதும் நான் வந்து உங்களுக்கு கட்டி தாரேன் கண்ணு என்று எடுத்து வந்தவர். தனம் இது உனக்கு, சந்தனக்கொடிக்கு, ஜெயாவுக்கு, அமுலிக்கு என நான்கு முளைப்பாரி எடுத்து வைத்தார்.
மா பூங்கொடிக்கு கொஞ்சம் கிறுகிறுப்பா இருக்குதாம் அதனால நீங்களே எடுத்திட்டு போங்க. அடுத்த முறை அவள் எடுக்கட்டும். என்றவன் அக்கா அம்மாவுக்கு சொல்லு என கூறி விட.. சரி என முகம் சுனங்கி போனது அன்னத்துக்கு.
தனக்கொடி அவரின் கையை ஆதரவாக பற்றியவர். அவள் வேணும்னு பண்றா சித்தி. இங்கே ஊரே சேர்ந்து அவங்க அப்பாவ எதித்தாலும் அவள் எதுக்க மாட்டா. இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன் என்று சமாதானம் செய்தார்.
அனைவரும் புறப்பட்டார்கள் உற்சாகத்துடன்.. வேட்டு சத்தம் ஒரு பக்கம் கேட்டு கொண்டிருக்க, திவ்ய பாரதியின் முகம் வாடியிருந்தது.
என்னாச்சு திவ்யா? என சவுந்தர்யா கேட்க..
ஒண்ணுமில்ல என மறுத்து விட்டாள்.
“சொல்லு! சொன்னால் தானே தெரியும்.”
அது வந்து என தயங்கியவள் தேம்பி தேம்பி அழுதாள்.
ஹே திவ்யா!! என்னாச்சு? என சவுந்தர்யா பதட்டத்துடன் பார்க்க, அவ்விடத்துக்கு அன்பு செல்வன் வந்தான். திவ்ய பாரதியை பார்க்க..
சவுந்தர்யா!! என வெளியில் இருந்து அழைத்தான்.
கண்களை துடைத்து கொண்டு திவ்யபாரதி எழுந்தாள்.
இரு வரேன் என அவள் வெளியே சென்று என்னவென கேட்க, திவ்ய பாரதி கிட்ட பேசணும். அது தான் என அன்பு சொல்லி கொண்டிருக்க, சொல்லுங்க என வெளியே வந்தாள்.
சவுந்தர்யா அவர்கள் இருவரையும் புரியாமல் பார்க்க, நான் வரேன் நீ உள்ளே இரு டி என்று விட்டு அன்பு செல்வனின் பின்னால் நடந்தாள் திவ்யா.
என்னவா இருக்கும்? இவள் நம்ம கிட்ட எதுவுமே சொல்ல மாட்டின்றாலே என நினைத்து கொண்டே கட்டிலில் அமர்ந்தாள் சவுந்தர்யா. அடுத்த பத்து நிமிடத்தில் கதவு தட்டப்பட.. அதுக்குள்ள வந்துட்டாளா!! என்ன விசயம்ன்னு சொல்லாம இரு! அப்போ இருக்கு டி உனக்கு என கதவை திறந்தவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.
மச்சிநிச்சி எப்படி இருக்கீங்க? என புஷ்பராஜின் குரல் கேட்டது.
சவுந்தர்யாவின் முகம் சடுதியில் மாறி போக, அவள் கதவை சாத்தும் முன் உள்ளே நுழைந்திருந்தான் புஷ்பராஜ். அவனுடன் இரண்டு அல்லக்கைகள் வேறு நத்தைமேடு கிருபா, தயாளன் இருவரும் சேர்ந்து சிரித்தபடி வந்தார்கள்.
ஒழுங்கா வெளியே போயிடுங்க மரியாதை கேட்டுடும். என சவுந்தர்யா பயத்துடனும் கோபத்துடனும் கூற, அவளின் கழுத்தில் தொங்கி கொண்டிருக்கும் புது தாலி கொடியை பார்த்தவன்.
ரொம்ப ஷோக்கா இருக்கு டி!! புருசன திட்டம் போட்டு கொன்னுட்டு கள்ளக்காதலன் கூட சொகுசா வாழர? ஹான் ரொம்ப நல்லாருக்கு. உன்னை நல்லா வாழ விட்டா என் தம்பி ஆத்மா சாந்தி அடையுமா டி! என வில்லத்தனமாக சிரித்தான் புஷ்பராஜ்.
நீ பேசுற எல்லாமே அபத்தம்ன்னு உனக்கே தெரியும். பிரச்னைய வாங்கி கட்டிக்காத. மானம் கெட்டவனே! என சவுந்தர்யா வேக மூச்சுடன் கூற, அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்த புஷ்பராஜ். தாலியை கழுத்தில் இருந்து கழட்ட முயற்சி செய்தான்.
டேய் விடுடா!! விடு!! என சவுந்தர்யா கத்தி கொண்டே யாராவது வாங்களேன் என கூச்சலிட்டாள்.
யாரும் வர மாட்டாங்க. எல்லாரும் கோவில்ல இருக்காங்க. திட்டம் போட்டு தாண்டி வந்தேன். கோவிலையே உன்னை மொத்தமா அசிங்க படுத்த நினைச்சேன் என புஷ்பராஜ் சிரித்து கொண்டே கூற, எங்க விட்டான் இவளோட ரெண்டாவது புருஷன். அவனுக்கு மனசுல பெரிய ஹீரோ அப்டின்னு நினைப்பு யாருக்கும் தெரியாமல் புடவையில பத்தவச்ச நெருப்பை கையிலேயே அணைக்கிறானாம் என தயாளன் ஏகத்தால குரலில் கூறினான்.
சவுந்தர்யாவுக்கு உள்ளம் நடுங்கியது. அவள் கண்களில் நீர் வழிந்து கொண்டிருக்க, தலை முடியை கொத்தாக பிடித்த நத்தைமேடு கிருபா சட்டை பட்டனை கழட்டியபடி, அதுவும் நல்லதுக்கு தான் பங்காளி. இவள் பளிங்கு சிலை போல இருக்கிறா! இப்படி ஒரு வாய்ப்பு நமக்கு கிடைக்குமா என்ன? மூணு பேரும் சொர்க்கத்துக்கு போயிட்டு வரலாம். இவள் நமக்கு சொர்க்கத்தை காட்ட மாட்டாளா என்ன? என சவுந்தர்யாவின் காதை பிடித்து முத்தமிட்டு எச்சில் படுத்தினான்.
என்னை விட்டுடுங்க என சவுந்தர்யா கையெடுத்து கும்பிட.. விடவா வந்திருக்கோம். எல்லாரும் வந்து பார்க்குவாங்க. மொத்த பழியும் உன் மேலே தாண்டி போட போறோம். அரிப்பெடுத்த கழுதையா உன்னை சித்தரிச்சு அந்தபுர அழகியாக மாத்த போறோம். யாரும் உன்னை நம்ப மாட்டாங்க. எவ்ளோ நேக்கா திட்டம் போட்டு பெரிய வீட்டு மருமகள் ஆகிட்ட நீ!! என புஷ்பராஜ் அவளின் புடவையில் கையை வைக்க..
கதவு தட்டப்படும் சத்தம் கேட்க..
யாரு டா அது? இந்த கோவிந்தன காவலுக்கு போட்டிருந்தேனே? என புஷ்பராஜ் வாய்மொழியாக கூற..
கிருபா நான் தான் டா கோவிந்தன் கதவை திறங்க என சத்தம் கேட்க,
பங்காளி நான் கதவை திறக்கிறேன். நீ அவளை கவனி என்று விட்டு கிருபா கதவை திறக்க, அவனது நெஞ்சில் எட்டி உதைத்தபடி உள்ளே நுழைந்தான் மகிழ்.
சவுந்தர்யா அவனை பார்த்ததும் என்னங்க என மயங்கி சரிந்தாள்.
மகிழை பார்த்ததும் புஷ்பராஜுக்கு பயம் தொற்றிக் கொள்ள, உன் பொண்டாட்டி தான் எங்களை வர சொன்னா! அவள் சொத்துக்காக தான் உன்னை கட்டிக்கிட்டா. உனக்கு எச்சரிக்கை கொடுக்க தான் வந்தேன் என கூறி முடிப்பதற்குள் வாயில் ஒரு குத்து விட்டான் மகிழ்.
ஹா!! என கத்தியபடி வாயை பார்த்தான். முன்னால் இருந்த இரண்டு பற்களும் உடைந்து ரத்தம் வர ஆரம்பித்தது. கழுத்தை இறுக்கி வயிற்றில் குத்து விட்டான் மகிழ். அவனுக்கு அத்தனை ஆத்திரம். அவ்விடத்துக்கு வந்து சேர்ந்த அன்பு செல்வன் கொலை வெறியுடன் புஷ்பராஜெய் அடித்து கொண்டிருக்கும் மகிழ் வேந்தனை தடுத்து நிறுத்தினான்.
மாப்ளை சொன்னா கேளுங்க!! மாப்ளை சொல்றத கேளுங்க. சவுந்தர்யா மயங்கி கிடக்குறா அவளை தூக்குங்க என அன்பு செல்வன் விலக்கி விடவும் தான் சுய நினைவுக்கு வந்தான் மகிழ்.
சவுந்தர்யா என பதட்டத்துடன் தண்ணீரை கொண்டு முகத்தில் தெளித்தாள் திவ்ய பாரதி.
மகிழ் அவளின் அருகில் அமர்ந்து கொண்டவன். வைத்த கண் வாங்காமல் நடுக்கத்துடன் பார்த்தான். அன்பு செல்வன் புஷ்பராஜை வெளியில் இழுத்து வந்து உடனே போலிசுக்கு அழைத்தான்.
மெல்ல கண் விழித்தாள் சவுந்தர்யா. அவளின் முகத்தில் பயமும் அழுகையும் சேர்ந்து வர, இதயம் படபடக்க மகிழை தேடினாள்.
சவுந்தர்யா!! ஹாஸ்பிடல் போலாமா? என திவ்ய பாரதி கேட்க..
மெல்ல எழுந்து அமர்ந்தவள். அன்பு அண்ணாவ வர சொல்லு! என கையை காட்டினாள்.
மகிழ் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்தான்.
சவுந்தர்யா என்னமா ஆச்சு? என அன்பு கேட்க..
அந்த புஷ்பராஜை விட்டுடுங்க அண்ணா.
மகிழ் அதிர்ச்சியுடன் திரும்பி பார்க்க, அன்பு செல்வன் கூட அதே அதிர்வில் தான் இருந்தான்.
சவுந்தர்யா கண்களை துடைத்தபடி, என்னால இவர் குடும்பத்துக்கு எந்த அவமானமும் வர கூடாது. அவனுக்கு குழந்தை குட்டி இருக்கு. இங்கே என் கிட்ட அத்துமீற வந்தான்னு பிரச்னை பெருசு ஆச்சுன்னா!! எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்த உங்களுக்கும் தனக்கொடி அத்தைக்கும் தான் அது மன சங்கடத்தை கொடுக்கும். அவனுக்கான தண்டனை நிச்சயம் கிடைக்கும். எனக்கு இந்த வாழ்க்கை முக்கியம் என கூறி முடித்தாள்.
மகிழ் எழுந்து வெளியே வந்து விட்டான். அன்பு செல்வன் அவனது பின்னால் சென்று, என்ன பண்றது மாப்ளை? என பணிவுடன் கேட்டான்.
“என்ன சொல்றதுன்னு தெரியல மாமா!”
இல்ல மாப்ளை அப்படி எதுவும் நடக்காது. அதுக்குள்ள தான் நீங்க வந்துட்டீங்களே. இங்கே தனியா சவுந்தர்யாவும் நீங்களும் இருக்கிறது நக்கத்தில்லைன்னு தோணுது. என அன்பு செல்வன் மனதில் பட்டதை உடனே கூறினான்.
அதை பத்தி யோசிக்கிறேன் மாமா!! என மகிழ் வாசற்படி திண்ணையில் அமர்ந்து விட, திவ்ய பாரதி சிறிது நேரம் தனது தோழிக்கு ஒத்தாசையாக இருந்து விட்டு புறப்பட்டாள். அன்பு செல்வன் மகிழின் தோளை தட்டி, அவள் கிட்ட பேசுங்க!! பயத்துல இருக்கிறா. எல்லாம் நல்லதாக நடக்கும் என சொல்லி விட்டு எழுந்தான்.
அம்மாவ வர சொல்லவா? இல்லன்னா நீ என மகிழ் தயங்கியபடி பேச..
பக்கத்துல வாங்க என அழைத்தாள் சவுந்தர்யா.
ஒரு பெருமூச்சுடன் அருகில் சென்றான். சொல்லு என்ன விசயம் என அவனது தலை தரையை பார்த்து கொண்டிருக்க, சவுந்தர்யா அவனது கையை பிடித்து கொண்டவள் தப்பா பேசியிருந்தால் மன்னிச்சிடுங்க என அவனை அணைத்து கொண்டாள் அழுதபடி..
சவுந்து இல்ல மா!! அப்படி இல்ல. நீ எப்பவும் தப்பே இல்ல அழாத என அவளின் முகத்தை நிமர்த்தினான்.
என்னை மன்னிச்சிடுங்க என அவனது காலில் விழுந்தாள் சவுந்தர்யா.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels