மன்னவன் பூங்கொடி மார்பிலே

by Pradhanya kuzhali
607 views

Episode-62 

அன்னத்துக்கு அழைத்தவள் போனை காதில் வைத்து கொண்டே வெளியே வந்தாள் பூங்கொடி. 

ஹலோ அமுலி? என அன்னம் அழைக்க.. 

அம்மாச்சி!! என உருக்கமாக அழைத்தாள் பூங்கொடி. 

என்ன தங்கம்? பயணம் சவுக்கியமா? குமட்டல் இருக்குதா கண்ணு? எல்லாமே நல்லாருக்கு தானே எந்த பிரச்னையும் இல்லையே? என தவிப்புடன் கேட்டார் அன்னம். 

அம்மாச்சி!! நான் நல்லாருக்கேன். என்றவள் இடைவெளி விட்டு அன்னிக்கு நான் வேணும்னு அப்படி செய்யல அம்மாச்சி!! 

அய்யோ தங்கம்!! நான் உன்னை எதுவுமே நினைக்கல டா கண்ணு!! என அன்னம் உருக்கமாக பேச, உன்ற பையன் என்னை அடிச்சுட்டான் அதுவும் கன்னத்துல.. என உதட்டை பிதுக்கினாள். 

அடி ராஸ்கல் அவன் வரட்டும் மரத்தில கட்டி வெளுத்து போடுறேன். நீ ஒன்னும் கவலை படாத கண்ணு.என அன்னம் பரிவுடன் கூற.. 

மேனகா விசயத்துல என் மேலே தப்பிரிக்கா அம்மாச்சி? அவன் என்னை பயங்கரமா திட்டிட்டான். என்னை ஒதுக்கி வச்சுட்டான். என்னால தாங்கிக்க முடியல. என தேம்பினாள். 

அன்னம் அவளின் சிறுபிள்ளை அழுகையை நினைத்து புன்னகை புரிய, என்னாச்சு? என சக்கரவர்த்தி போனை பிடுங்கி ஸ்பீக்கர் போட்டார். 

நீங்களே சொல்லுங்க அம்மாச்சி? அன்னிக்கு தான் நான் நாட்கள் தள்ளி போனது தெரியும். அதே நாள்ல மேனகா வந்து சொல்றா? அப்போ எப்டி எப்டி அம்மாச்சி நான் உன்ற பையனை நம்பி இருக்கணும்னு? நீங்களே சொல்லுங்க. உங்க பையனாபத்தி எனக்கு ஏதும் தெரியுமா? என்னோட அப்பா கழுத்தை நீட்ட சொன்னார். அன்பு செல்வன் தான் உன்னோட புருஷன் அப்டின்னு சொன்னார் நான் கட்டிக்கிட்டேன். எனக்கு அவ்ளோ தான் அம்மாச்சி தெரியும். ஆனால் நான் பண்ணது தப்பு தான். நீங்க என் மன்னிச்சிடுங்க. என்றாள் பூங்கொடி. 

சக்கரவர்த்தி சிரித்து கொண்டே அன்னத்தை பார்க்க, அமுலி தங்கம் நீ எதுக்கு சாமி அழுகிற? அவன் வரட்டும் அடி பின்னிபோடலாம் சரியா? நீ கவலை படாத பொண்ணு. என சமாதானம் செய்தார் அன்னம். 

சரிங்க அம்மாச்சி நான் போனை வைக்கிறேன் என கட் செய்தவள். சிரித்து கொண்டே வெளியே வந்தாள். அங்கே அன்பு செல்வனின் அருகில் பொள்ளாச்சி பிரசிடன்ட் மகள் சரண்யா பேசி கொண்டிருந்தாள். 

அனுசுயா மற்றும் மணிமேகலை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்ணடித்து கொண்டே நேராக பூங்கொடியின் அருகில் சென்றவர்கள். ஹே பூங்கொடி வா!! உனக்கு ஒரு முக்கியமான ஆளை இன்றோ கொடுக்கிறேன் என நேராக சரண்யாவின் அருகில் அழைத்து சென்றார்கள். 

என்னடி? நான் எங்கேயும் வரல!.. என சிணுங்கி கொண்டே கூறினாள் பூங்கொடி. 

ஹே வா என கையை பிடித்து இழுத்து சென்ற அனுசுயா சிரித்து கொண்டே, ஹாய் சரண்யா இது என்னோட பிரெண்ட் பூங்கொடி. என்றவள். பூங்கொடி இவங்க ஒரு பியூட்டிசியன். நம்ம எல்லாருக்கும் இவங்க தான் டிரெஸ்ஸிங், மெஹந்தி அண்ட் மேக் அப் பண்றது எல்லாமே என்றாள். 

ஹான் ஓகே என பூங்கொடி சுரத்தே இல்லாமல் பதில் கொடுத்தாள். 

ஹே பூங்கொடி இவங்க ஜெகனோட ஜூனியர். என்றாள் அணு.

அன்பு உங்களுக்கு ஜெகன் அண்ணாவை தெரியுமா? என சரண்யா புன்னகையுடன் கேட்டாள். 

ஹான் தெரியும்ங்க என்றான் அன்பு. பூங்கொடியின் பக்கம் அவன் பார்வை திரும்பவே இல்லை. 

ம்ம் சரி நான் என்னோட ரூமுக்கு போறேன். கொஞ்சம் டிசினஸ்சா இருக்கு கூடவே வாமிட் வருது என அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் பூங்கொடி. 

அப்புறம் அன்பு உங்களுக்கு எப்படி சரண்யாவை தெரியும்? என அனு சத்தமாக கேட்டு கொண்டே அமர்ந்தாள். 

அன்பு செல்வனுக்கும் எனக்கும் மேரேஜ் ஆக வேண்டியது என்றாள் சரண்யா. 

பாதி தூரம் சென்ற பூங்கொடி சட்டென திரும்பி பார்த்தாள். அதே நேரம் அன்பு செல்வனும் பார்த்தான். உதட்டை பிதுக்கியபடி அவளது அறைக்கு ஓடி விட்டாள் பூங்கொடி. 

அனுசுயா சரண்யாவிடம், மெஹந்தி போட ஸ்டார்ட் பண்ணலாம் டியர் என்றாள். 

அப்போ ஓகே இருங்க நான் அதுக்கு ரெடி பண்றேன் என சரண்யா நகர்ந்து சென்று விட்டாள். 

அண்ணா போங்க!! என மணிமேகலை கூற, 

என்ன மணி? அனு எதுக்கு மா இப்படி பண்றீங்க? என அன்பு செல்வன் தலையை நீவினான். 

அவளுக்கு இப்படி தான் அண்ணா டோஸ் கொடுக்கணும். என சிரித்த மணிமேகலை.. அண்ணா சரண்யாவுக்கு மேரேஜ் ஆனது கூட தெரியாம பொசசிவ்ல போயிருக்கா என்றாள் சிரித்து கொண்டே.. 

அன்பு அவள் வந்ததில் இருந்து உங்களையே தான் பார்த்திட்டு இருந்தாள். போங்க போங்க அந்த சிடுமூஞ்சி மூக்கை ஒழுக்கிட்டு அழுதிட்டு இருக்கும் என அடக்கப்பட்ட சிரிப்புடன் கூறினாள் அனு. 

அன்பு தலையை உலுக்கியபடி நேராக அவள் தங்கியிருக்கும் அறைக்கு விரைந்தான். அவன் செண்டு கொண்டிருக்கும் போதே அன்னலட்சுமியிடம் இருந்து அழைப்பு வந்தது. 

அன்னம்!! என அழைத்தான் அன்பு புன்னகையுடன்.. 

என்றா நினைச்சிட்டு இருக்க? தொலைச்சு போடுவேன் ராஸ்கல். 

மா!! நான் என்ன பண்ணேன்? என திடுக்கிட்டு கேட்டான் அன்பு. 

அன்னலட்சுமி கால் மணி நேரம் காச் மூச்சென கத்தினார். மா பொறுமை பொறுமை…. அம்மா நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல… அய்யோ அம்மா உன் அமுலிய நான் திட்டவே இல்ல. மா அவள் பொய் சொல்றா.. மா நான் மன்னிப்பு கேட்கணுமா? அவள் குழந்தையா மா? மா நான் என்ன சொல்ல வரேன்னு கேளு..  ரைட்டு விடு மா இப்போ நான் என்ன பண்ணனும்? என தலையை பிடித்து கொண்டு கேட்டான். 

நம்ம குடும்ப வாரிசை சுமந்திட்டு இருக்கா. அவளோட மனசு கோணுர மாதிரி நடந்துக்கலாமா சொல்லு? எந்த ஒரு பொண்ணா இருந்தாலும் அந்த நிலையில் அப்படி தான் யோசிச்சு இருப்பா? விருப்ப பட்டா கண்ணு உனக்கும் பாப்பாலுக்கும் கல்யாணம் நடந்தது? சொல்லு? வாழ்க்கை அப்படி முன்ன பின்ன தான் இருக்கும். நீ தான் அனுசரணையா நடந்துக்கணும். அதுவும் அவள் சின்ன புள்ளை நம்ம வீட்டுக்கு செல்ல புள்ளை. என்கிட்ட அம்மாச்சி மன்னிச்சிடுங்க மன்னிச்சிடுங்க அப்டின்னு குழந்தை குட்டி மாதிரி கேட்கிறா கள்ளம் கபடம் இல்ல. என்ன கொஞ்சம் கோபம் மூக்கு மேலே வரும். நீ தான் பொறுத்து போகணும் என்றார் அன்னம்.

ஒரு பெருமூச்சை விட்ட அன்பு செல்வன். சரி மா நான் உன்ற பேத்தியை எதுவும் சொல்லல போதுமா? 

அப்போ இப்போவே போய் பாப்பா கிட்ட குணமா நடந்துக்க.. சரி போறேன் வைக்கவா? என அன்பு கேட்டான். 

ம்ம் சரி என அன்னலட்சுமி கூறி விட்டு போனை வைத்தார். 

என்னோட அம்மாவை எனக்கு எதிரா திருப்பி விட்டியா டி!! அமுலி.. பூங்கொடி.. இர்ரி வரேன் என சட்டை கையை மடித்து விட்டு கொண்டே அறைக்கு விரைந்தான். 

அறைக்குள் குத்துக்காலிட்டு அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் பூங்கொடி. அறை கதவை தட்டினான். திறக்கவில்லை.. 

ரூம் சர்வீஸ் என ஒரு பிட்டு போட்டான். வேகமாக கண்களை துடைத்து கொண்டவள் மெல்ல எழுந்து கதவை திறந்தாள். 

எங்க அம்மா கிட்ட என்னடி சொன்ன? என சொல்லி கொண்டே அறைக்குள் கால் வைத்தான் அன்பு. 

நான் இப்போவே ஒண்ணுமில்லன்னு சொல்றேன் என கோபத்துடன் போனை எடுக்க சென்றவளை கிடுக்குபிடி கொடுத்து சுவற்றில் ஒட்ட வைத்தவன் அவள் உதட்டில் நச்சென்று முத்தமிட்டான். 

விடுறா போடா!! என அழுது கொண்டே பேசினாள். 

என்ன பிரச்னை? 

அதான் நீ ரெண்டாவது கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டியே? எல்லாரையும் மயக்கி வச்சிருக்க? 

ஆனால் மயங்க வேண்டிய யாருமே மயங்கி கிறங்கி விழுகளையே? என மீண்டும் முத்தமிட வந்தான். 

போடா!! 

என்னடி பிரச்னை? சொன்னால் தானே தெரியும்? 

உன்கிட்ட இனி நான் எதுவும் பேச போறது இல்ல என முகத்தை திருப்பினாள் பூங்கொடி. 

அந்த சரண்யாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. என அன்பு கூற.. 

அப்போ எனக்கு தெரியாமல் கல்யாணம் பண்ணிட்டியா? என வேக மூச்சுடன் பார்த்தாள். 

ஹே ஹே இருடி! நீ நினைக்கிற மாதிரி ஒண்ணுமில்ல.. சரண்யா அவங்க மாமா பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டா. எனக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நான் எல்லாம் அந்த அளவுக்கு ஒர்த் இல்லடி. என்றான் அன்பு உருக்கத்துடன்…

நான் நம்ப மாட்டேன். 

நான் என்ன பண்றேன்னு சொல்லு டி!! என்னை போய் அவ்ளோ பெரிய இடத்துல வைக்காத அமுலி. 

அந்த திவ்யா கிட்ட மாவிளக்கு அன்னிக்கி என்ன பேசின? அதுவும் தனியா கூட்டிட்டு போய்? என கோபமாக பார்த்தாள். 

அன்பு கண்கள் விரிய, ஹே என்னடி எதுவும் spy கேமரா வச்சிருக்கியா? எப்படி கண்டுபிடிச்ச? என கேட்டான். 

கேட்டதுக்கு பதில் சொல்லு டா!! 

அன்பு செல்வன் பெரு மூச்சுடன், நான் திவ்யா கிட்ட இனி தேவையில்லாம பேசாதன்னு சொல்லிட்டேன். எனக்கே அவள் பண்றது எல்லாம் வித்தியாசமா தோணுச்சு. ஆனால் பிரிச்சு பார்க்க தெரியல.. அவள் கிட்ட எப்படி சொல்றதுன்னு யோசனையா இருந்தேன். ஒரு பொண்ணு கிட்ட எப்படி போய் பேசாதன்னு சொல்றது? அது அந்த பொண்ணுக்கு அவமானம்.. ஆக்வெடா இருந்தது சொல்லவே. 

அப்போ நீ தான் என்கிட்ட வந்து அவளை பேச சொன்னியா? 

ஹே அதெல்லாம் எனக்கு சத்யமா தெரியாது டி!! என அன்பு செல்வன் அதிர்ச்சியுடன் கூறினான். 

அவனது தொனியை பார்த்து உள்ளுக்குள் சிரிப்பு தோன்ற அடக்கி கொண்டாள் பூங்கொடி. 

ஹே நம்பு டி! நீ நினைக்கிற மாதிரி நான் அவ்ளோ பெரிய ஆள் எல்லாம் இல்ல பூங்கொடி. என்னைக்கும் மன்னவன் மார்ல பூங்கொடி தான் என சட்டையை திறந்து காட்டினான். 

பூங்கொடி என பச்சை குத்தியிருக்க கண்களை விரித்து பார்த்தாள் பூங்கொடி. அவளின் கையை எடுத்து நெஞ்சில் வைத்தான். 

நெஞ்சில் முத்தமிட்டவள் அவனை நிமிர்ந்து பார்த்து, சாரி மாமா!! நான் அம்மாச்சிய வேணும்னு திட்டல என கண்ணீருடன் கூறினாள். 

இல்லடி அழகி!! உன்னை ட்ரிக்கர் பண்ணது எல்லாமே ஜெயா அக்கா தான். எனக்கு உன்னை பத்தி தெரியும். இருந்தாலும் மேனகா விசயத்துல நீ எனக்கு சப்போட்டா இருப்பேன்னு நினைச்சேன் அது மட்டும் தான் குறை என வருத்தத்துடன் பார்த்தான். 

சாரி மாமா!! என்னால அப்போ சரியா முடிவெடுக்க முடியல சாரி என மீண்டும் கூறினாள். 

சரி டி அமுலி செல்லம் என உதட்டில் முத்தமிட்டான். சட்டையை இறுக பற்றி கொண்டவள் அவனுடன் முத்தத்தில் கரைந்தாள். 

ஒருவாரம் உற்சாகமாக மன்னவன் நெஞ்சில் பூங்கொடி திகட்ட திகட்ட காதல் செய்தார்கள் கூடவே நிறைய கூடல் கொஞ்சம் ஊடல்… பூங்கொடி ஊடலை ஆரம்பிப்பாள். அன்பு கூடலில் முடிப்பான். ஜெகன் சொன்னதை போலவே தாலி கட்டும் முன் இளவட்டகல்லை தூக்கி வீரத்தை நிரூபித்து அனுசுயாவை திருமணம் செய்து கொண்டான். 

அன்பு செல்வன் – பூங்கொடி இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். மணிமேகலை வேகமாக வீட்டுக்கு ஓடி வந்தாள். 

என்னடி என்னாச்சு? என பூங்கொடி கேட்க.. 

அந்த திவ்ய பாரதி ரன்னிங் ஆகிட்டா டி!! கடை பூட்டி கடக்குது ஒரே பிரச்னை இப்போ தான் நியூஸ் கேதர் பண்ணேன் என்றாள் மணிமேகலை. 

என்ன? என அதிர்ச்சியுடன் கட்டிலில் அமர்ந்து நாயம் பொழந்தாள் பூங்கொடி. ஆமாடி அந்த குட்டபாளைத்து பையன் STB வண்டியில் ஓடுறான் அவன் பேரு தரணிதரன். இந்த காதல் ரெண்டு வாரத்துல நடந்திருக்கு என சொல்லி பேசி சிரித்து கொண்டிருந்தார்கள். 

பூங்கொடிக்கு ஏழாவது மாதம் தொடங்க போகிறது. சவுந்தர்யாவுக்கு டெலிவரி நேரம் வந்து விட அனைவரும் ஹாஸ்பிடல் சென்றார்கள். மகிழ் பரபரப்புடன் காணப்பட்டான். 

மாப்ளை ஒன்னும் ஆகாது ரெண்டு பேருக்கும். நீங்க என அன்பு செல்வன் ஆறுதலாக பேசி கொண்டிருந்தான். 

பூங்கொடி ஒரு வித பதட்டத்துடன் பார்த்தாள். 

என்ன அமுலி? என்னாச்சு? என அன்பு கேட்க.. மாமா எனக்கு பயமா இருக்கு. நீ பெத்துக்க வேண்டியது தானே? உனக்கு வயிறு பெரிசாகி இருக்கணும் எனக்கு பெரிசாகி போச்சு! எனக்கு பயமா இருக்கு டா!! என உதட்டை பிதுக்கினாள். 

எதே நான் வாங்கிக்கவா? நான் எப்டி? என அவளை திடுக்கிட்டு பார்த்தவன். அமுலி ஒண்ணுமில்ல சரியா போயிடும். பயப்படாத என சமாதானம் செய்தான். 

இல்லடா என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போ! பயமா இருக்கு என பூங்கொடி கூற.. சரி வா போலாம் என இருவரும் கிளம்பினார்கள். 

இதோ குழந்தையின் அழு குரல் கேட்டது. சவுந்தர்யாக்கு சுகபிரசவம் நல்லபடியாக நடந்தது. பூந்துண்டில் சுழற்றியபடி அழகான ரோஜா மலர் போல பெண் குழந்தையை தூக்கி வந்து கொடுத்தார் செவிலி பெண். தாயும் சேயும் நலம்.

மகிழ் குழந்தையை வாங்கி கொஞ்சினான். இது சவுந்தர்யாவின் உதிரம். 

சவுந்தர்யா மயக்கம் தெளிந்து படுக்கையில் கிடக்க குழந்தை மாலை போல பயங்கர அழுகை பசிக்கு சிணுங்கினான். 

என்னாச்சு? என மகிழ் சவுந்தர்யாவை பார்க்க.. 

அது வந்து கட்டிக்கிச்சு என திணறினாள். 

கட்டி இருக்கா? ஆப்பரேஷன் பண்ணி எடுக்கணுமா? என மகிழ் முகம் பீதியில் உறைய, அய்யோ என தலையில் அடித்து கொண்டவள். உதட்டை கடித்து கொண்டு திரும்பினாள். 

என்னாச்சுன்னு சொல்லு சவுந்து? என குழந்தையை ஆற்றுபடுத்தி கொண்டே கேட்டான். 

ரெண்டு நிமிசம் கதவை சாத்திட்டு இப்படி வாங்க என அழைத்தாள். 

ஹே பட்டு கத்திட்டே இருக்கா? என தோளில் போட்டு கொண்டான். 

நீங்க வாங்க என பற்களை கடித்து கொண்டு அழைத்தாள். 

என்ன என அருகில் வந்தவனின் கண்களோ ஒரு நொடி அப்பட்டமாக விரிந்தது. ஆம் புதிதாக பார்த்தான். சுகித்தான். கட்டிய இடங்கள் கரைந்து போக டிஸ்யூ கொண்டு துடைத்தவள் தனது மகளுக்கு அமுதை ஒரு பக்கம் ஊட்டினாள். 

மகிழ் உதட்டை துடைத்து கொண்டு வேறு புறம் திரும்பி கொண்டான். 

பிடிக்கலையா? என தயங்கி கொண்டே கேட்டவள். எனக்கு வேற வழி தெரியல.. என்று சவுந்தர்யா கண்களை மூடி கொண்டு சொல்ல, இன்னொரு பக்கம் ஓகேவா?  இல்ல அங்கேயும்… என்று நிறுத்தினான். 

சவுந்தர்யா வெட்கத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் அவனை பார்க்க, அருகில் நெருங்கியவன் உதட்டில் முத்தமிட்டு, பிடிக்கும் டி உன்னை.. இனி இப்படி கேட்காத என முட்டினான். 

வலிக்குது மெதுவா!! என உதட்டை கடித்து கொண்டாள். 

சவுந்தர்யா.. 

ம்ம்.. 

நான் உன்னை லவ் பண்றேன் டி!! நீயும் என்னை லவ் பண்றையா? என தயங்கியபடி கேட்டான். 

அடிப்பேன் மகிழ் என மூக்கை விடைத்து கொண்டு பார்த்தாள். 

ஓகே ஓகே நான் என்னோட வேலைய பார்க்கிறேன் பாப்பாவுக்கு பசிக்கும் என நெஞ்சில் முட்டினான். 

***

பூங்கொடி வயிற்றை நீவியபடி நிற்க, ரெடியா என அறைக்குள் நுழைந்தான் அன்பு. 

ம்ம் ரெடி என திரும்பினாள். 

என்னாச்சு முகமே சரி இல்ல.. என அன்பு கேட்க.. 

சவுந்தர்யா வயிறு டெலிவரிக்கு முன்னாடி பெருசா இருந்தது. ஆனால் எனக்கு அப்படி இல்லையே? குட்டியா இருக்கு. 

அதெப்படி இப்போ தானே ஏழு மாசம். இன்னும் ரெண்டு மாசம் பாக்கி இருக்கு மேடம் வாங்க.. என வெளியே அழைத்து சென்றான். 

அம்மாச்சி வயிறு குட்டியா இருக்கு என பூங்கொடி கேட்க, அன்னம் சிரித்து கொண்டே அன்பு வயித்துல இருக்கும் போதும் இப்படி தான் இருந்தது கண்ணு என கூறினார். 

No எனக்கு பொண்ணு தான் வேணும்? என அன்பு செல்வன் கூற.. 

எனக்கு பையன் தான் வேணும் என்றாள் பூங்கொடி. ரெண்டும் பெத்துக்கோங்க என மகிழ் கூற.. 

நீ பெத்துக்கோ டா!! என பூங்கொடி கூறி விட.. 

ஹான் பெத்துக்குவோம் என்றாள் சவுந்தர்யா. 

பொண்ணா இருந்தாலும் சரி பையனா இருந்தாலும் சரி நம்ம வீட்ல முதல் செல்ல குட்டி ரோஜா குட்டி தான் என தூக்கி கொஞ்சினார் சிவராமன்.

பூங்கொடி ரொம்ப நாளாக உங்கிட்ட ஒரு விசயம் சொல்லணும். 

என்ன? 

ஆக்சுவலி உன்னை நான் விரும்பி இஷ்டப்பட்டு தான் கட்டிக்கிட்டேன். லவ் யூ அப்படின்ற வார்த்தைய விட, அக்கா பொண்ணா நீ எனக்கு அதுக்கும் மேலே டி என்றான் அன்பு. 

சரிங்க மாமா என வெட்கத்துடன் தலை குனிந்தாள் பூங்கொடி. 

அபலை பெண்ணாக இருந்த சவுந்தர்யாவின் வாழ்க்கையை வசந்தமாக்க வந்தான் மகிழ் வேந்தன். 

அன்பு செல்வன் – பூங்கொடி, சவுந்தர்யா – மகிழ் வேந்தன். இருவரும் மன்னவன் தான் 

மன்னவன் பூங்கொடி மார்பிலே 

– சுபம்  

You may also like

Leave a Comment