Epi -11
சாந்தி சொன்ன விசயங்கள் மனதுக்குள் ஓடி கொண்டிருக்க, ஹே லூசு அன்பு. அவன் தான் உன்னோட ரூம் மெட் ஆச்சே? அவனோட அம்மா திட்டினா நீ எதுக்கு வருத்தப்படனும்? சோ இனி அவனை சார்ந்தவங்க யாரு என்ன சொன்னாலும் பாவமா மூஞ்ச வச்சுக்கோ என சொல்லியபடி இழந்த உற்சாகத்தை மீட்டெடுத்து கொண்டவளாக வீட்டுக்குள் நுழைந்தாள் அன்பரசி.
சோர்வுடன் பையை போட்டவள் நேராக குளிக்க சென்றாள். நைட்டியை போட்டு கொண்டு அறைக்குள் நுழைந்தவள். கண்களில் பட்டர் பன் 3D dimensions ல காட்சி கொடுத்து கொண்டிருந்தது. பக்கத்தில் ஆரி போன டீ கிளாஸ் இருக்க, மனமெங்கும் பட்டர் பன் எடுத்துக்கோ என துள்ளல் போட்டது.
மதியம் அன்பரசி வேலை செய்யும் முருகப்பா சில்க்ஸ் கேண்டீனில் சாப்பிட்ட உணவு தான்.. இரவு இப்பொழுது சாப்பிட எதுவுமில்லை. நேராக தண்ணீரை ஒரு சொம்பு மொண்டு கொண்டவள். தண்ணீரை குடித்தபடி பட்டர் பன்னை பார்த்தாள்.
மெல்ல வெளியே எட்டி பார்த்தாள். மணி இப்பொழுது தான் 10 காட்டியது. கண்டிப்பா தேவராட்சசன் வர 11 மணி ஆகிடும். வரும்போதே கட்டிங் போட்டு தான் வருவான். So no problem இதை நம்ம உள்ளே தள்ளிக்கலாம் என்று உற்சாகமாக பட்டர் பன் எடுத்து கொண்டாள்.
வாயில் வைத்து கடிக்கும் நேரம், ஒரு வேலை அவன் காலையில் எழுந்து பன் எங்கே அப்டின்னு கேட்டா? என்ன சொல்றது? என அன்பரசியின் சிந்தையில் கேள்வி உதிக்க, என்ன சொல்றது? ஹான் அவனே போதையில் வந்து பன்னை தின்னுட்டான்னு சொல்லிடலாமா? என யோசித்தவள். வேகமாக அதை எடுத்து மெல்ல பொறுமையாக சாப்பிட்டாள்.
அவளது வாய்க்குள் சென்ற நொடி கண்கள் விரிய பார்த்தவள். இது ஏற்கனவே சாப்பிட்ட பன் போலவே இல்லையே அதை விட ரொம்பவே டேஸ்டா இருக்கே? என நினைத்தபடி அரை மணி நேரம் பொறுமையாக ரசித்து ருசித்து சாப்பிட்டாள். ப்பா? எந்த கடையில இவன் இதை வாங்கினான்னு கேட்டு வச்சுக்கணும் என ஒவ்வொரு விரலாக சுவைத்து முடித்தவள் சோம்பலுடன் உடலை முறுக்கியபடி திரும்ப, அங்கே தேவ் நின்றிருந்தான்.
ஐயகோ!! என்று அவள் கண்கள் திருதிருவென முழிக்க, ராட்சசன் வந்துட்டானே? ஒரு வேளை நான் தின்னத பார்த்திருப்பானா? அய்யோ என்ன பண்ணுவேன்! எல்லாம் இந்த செல்லத்தாய் அம்மாச்சியால வந்தது? என முகத்தில் குப்பென வியர்வை சரிந்தது.
தேவின் கண்கள் சுவாரசியமாக அவளை பார்க்க, ஹான் அவன் குடிச்சிருப்பான்? அது வச்சு சமாளிச்சிடலாம் என்று நினைத்தவள். சட்டென மூக்கை பொத்தி கொண்டு குடிச்சிருக்கீங்களா? என முகத்தை திருப்பி கொண்டு அவள் வேகமாக செல்ல..
குடிக்கல.. என்றான் நிதானமாக..
அம்மேங்கோ? என்ன குடிக்கலையா? ஏன் குடிக்கல என்று கேட்கவா முடியும்? போச்சு செத்தடி நீ? என நினைத்து கொண்டு திரும்பினாள் கைகளை பிசைந்தபடி..
தேவ் அடக்கப்பட்ட சிரிப்புடன் புருவம் சுருக்கி அவளை ஏறிட்டான்.
உள்ளங்கை வியர்வையில் ஒரு தண்ணீர் குடம் நிறையும் போல… அந்த அளவுக்கு அவள் வெலவெலத்து நிற்க..
எதுவும் சொல்லணுமா? என கேட்டான் தேவ். அவளின் நிலையை பார்த்து..
ஹான் என்று ஹை பிட்சில் ஆரம்பித்தவள். இல்ல எனக்கு ரொம்ப சோர்வாக இருக்கு. டயர்டா.. அதான் தூங்க போறேன் என ஒரு எட்டு வைத்தாள் அன்பு.
குடிச்சிருக்கியா என்ன? என்றான் மார்புக்கு குறுக்காக கையை கட்டி கொண்டே..
அன்பு சட்டென கோபமாக, நான் குடிச்சிருக்கேனா? என்னை உங்களை மாதிரின்னு நினைச்சீங்களா? தேவையில்லாம பேசாதீங்க? என கோபமாக பேசினாள்.
தேவ் நிதானமாக, இல்ல நீ குடிச்சிருக்க..
நான் குடிக்கல என கத்தினாள்.
அப்படியா அப்போ ஓகே என அவனது தலையணையை எடுக்க சென்றான்.
தேவ் தாஸ் நான் நிஜமாவே குடிக்கல என அவள் அழும் நிலைக்கு சென்று விட, தேவ் நடந்து கொண்டே குடிச்சத கண்டுபிடிக்க சில அறிகுறிகள் இருக்கு. பயங்கரமா வியர்த்து வடியும்.
சட்டென அன்பு அவளது கைகளை பார்த்து கொண்டாள்.
அப்புறம் வாய் குளறும்… பயங்கரமா தூக்கம் வரும்.
நான் தெளிவா பேசறேன். நீங்க நினைக்கிற போல எதுவுமே இல்ல. என அவள் வேகமாக பாயை விரித்தாள்.
கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்லவா? என அவளின் அருகில் வந்தான் தேவ்.
ப்ச் என்ன? என அன்பு கடுப்புடன் பார்க்க, நான் குடிச்சா சைட் டிஷ்க்கு டைரி மில்க் சாப்பிடுவேன். But இம்சை butter bun சாப்பிட்டிருக்கீங்க.. என்றான்.
போச்சு கண்டுபிடிச்சிட்டான் ராட்சச பட்சி.. என இதயம் வேக வேகமாக துடித்தது. பெண்ணவளுக்கு. தேவ் அவளின் முகத்தை பார்த்தான். மிட்டாய் தின்று மாட்டி கொண்ட குழந்தையை போல தவித்து கொண்டிருந்தாள்.
ஆமாவா இல்லையா? என பெரு மூச்சுடன் நகர்ந்தான் தேவ்.
அவனது மூச்சு காற்று அவள் மீது பட்டு நெற்றியில் இருந்த முடிக்கற்றை வேகமாக ஒரு நொடி அசைந்தது.
என்ன ஆமா? என்று அன்பு முறைத்தபடி கேட்க..
பின்ன இல்லையா? என தேவ் தாஸ் பார்த்தான்.
நான் ஒன்னும் நீங்க வச்சிட்டு போன பன் சாப்பிடவே இல்ல. அதெல்லாம் சாப்பிட்டா காலையில் காட்டுபக்கம் கஷ்டம் தான் என மெல்லிய குரலில் கூறினாள்.
என்ன? என தேவ் தாசின் குரல் கேட்க..
நீங்க வச்சிட்டு போன பன்ன எறும்பு லைன் போட்டு தூக்கிட்டு போயிடுச்சு எனக்கும் உங்க butterக்கும் எந்த சம்மந்தமும் இல்ல என சொல்லி கொண்டு அவள் திரும்பி கொள்ள..
என்ன அந்த எறும்பு ஒரு 52 கிலோ இருக்குமா? நான் கூட அந்த எறும்ப தூக்கி இருக்கேன் என சொல்லியபடி அடக்கப்பட்ட சிரிப்புடன் திரும்பி கொண்டான் தேவ் தாஸ்.
அன்பரசி எதுவும் பேசாமல் வேறு புறம் திரும்பி கொண்டாள். அவமானத்தில் அழுகை பொங்கி வர கண்களை மூடி கொண்டவள். நாளைக்கு முதல் வேலையாக ஒரு butter bun வாங்கிட்டு வந்து அவன் வச்ச இடத்திலேயே வச்சிடனும். என நினைத்தபடி உறங்கி போனாள்.
அவள் எழுந்து கொள்ள மணி 7 தட்டியது. வேகமாக எழுந்து கண்களை தேய்த்தவளுக்கு முகம் ஆச்சரியத்தில் விரிந்தது. குட்டி ஸ்டவ் அடுப்பில் சின்ன குக்கரில் சுண்டல் வெந்து கொண்டிருந்தது. வெளியே ஒரு முழு கோழியை க்ரிலில் வைத்திருந்தான் தேவ் தாஸ்.
சாரு தான் பாக்சர் ஆச்சே? என வாய்க்குள் சொல்லி கொண்டு குளித்து வந்தாள். இதுல ரூம் மெட் சமைச்சு சாப்பிட்டுக்கலாம். இதுக்கும் சேர்த்து பணம் கொடுத்திடலாம் ஒன்னும் பிரச்னை இல்ல.. என தேவ் கூற…
உதட்டை சுழித்து முறைத்து கொண்டு திரும்பினாள் அன்பு. தேவ் தாஸ் அவளை கண்டு கொள்ளவில்லை.. அவனது வேலையில் கண்ணாக இருந்தான்.
அரக்கபரக்க கிளம்பியவள் வேகமாக நடந்தாள் இடையில் கை வைத்து கொண்டு செல்லும் அவளை பார்த்தான். நேற்று இருந்த இறுக்கம் இன்று காணாமல் போயிருந்தது.
****
வாங்க சம்மந்தி? வாங்க வாங்க என உற்சாகமாக வரவேற்றார் சாந்தி. ஆம் சுகாசினியின் பெற்றோர் சுதா ராணி , காசிநாதன் இருவரும் வந்திருந்தார்கள். சுதா ராணி தங்க நகையில் ஜொலித்து கொண்டிருந்தாள்.
சம்மந்தி நீங்க தான் வர சொன்னிங்கன்னு சுகா சொன்னா? என்ன விசயம் என கேட்டார்.
சாந்தி புன்னகையுடன் தாலி பிரிச்சு கோர்க்கும் சடங்கு இருக்குங்க..
சுதா சிரித்து கொண்டே அவ்ளோ தானா தாராளமா பண்ணிடலாம். எனக்கு ஒரே பொண்ணு என் பையன் விஷ்ணுவுக்கு கல்யாணம் simple ஆக நடந்ததில் விருப்பமே இல்ல.. அவனுக்கு சுகாசினி ரொம்ப செல்லம். இதையாவது ரொம்ப பெருசா கிராண்டா பண்ணலாம் என்றார்.
அப்படியே பண்ணிடலாம் என கூறியவர். வாங்க சம்மந்தி சாப்பிட்டு போங்க என சாந்தி அழைக்க..
இல்லை எனக்கு lines club போகணும். ஆல்ரெடி மெரிடியன் ல டிபன் முடிச்சிட்டு தான் வந்தோம் என சுதாராணி கூறியபடி பழ கூடையை நீட்ட வாங்கி கொண்டார் சாந்தி.
சம்மந்தி எங்கே என காசிநாதன் கேட்க, அவர் எம்பிராய்டரி மிஷன் விஷயமா ஜப்பான் போயிருக்கார் நாளைக்கு வந்திடுவார் என புன்னகையுடன் கூறினார் சாந்தி.
சிவதாசன் இருபது வருடங்களுக்கு முன்னால் ஒரு சாதாரண டெய்லராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். திருப்பூரின் சந்துகளில் அவர் கண்ட பல ஏற்ற இறக்கங்கள் அவருக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்தன. பொருளின் தரம் தான் நிறைய வாடிக்கையாளரை கொடுக்கும். சிவதாசனுக்கு இந்த டெய்லரிங் விசயத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல ஆசை..
ஆரம்பத்தில் பட்ஜெட் பற்றாக்குறையினால் சில பழைய சைனா மெஷின்களை வாங்கி ஜாப் ஒர்க் (Job Work) செய்ய ஆரம்பித்தார். உள்ளூர் மார்க்கெட் வேலைகளுக்கு அது உதவியது. ஆனால், வெளிநாட்டு ஆர்டர்கள் எடுக்கும்போது தையல் தரம் போதவில்லை என நிராகரிக்கப்பட்டது. ரிஸ்க் எடுத்து வங்கி கடன் மூலம் ஒரு Tajima 2500 மிஷினை வாங்கினார்.
அந்த ஒரு மிஷின் தந்த நேர்த்தியான அவுட்புட், திருப்பூரின் பெரிய எக்ஸ்போர்ட் நிறுவனங்களின் கவனத்தை அவர் பக்கம் திருப்பியது. “சிவதாசன் கிட்ட கொடுத்தா பினிஷிங் பக்காவா இருக்கும்” என்கிற பெயர் மெல்லப் பரவியது.
தனது தந்தைக்கும் கொஞ்சமும் சளைக்காமல் நேர்த்தியாக பெரிய பெரிய ஆர்டர்களை பிடித்தான் விஜய் தாஸ்.. அப்படி ஒரு நாளில் தான் திருப்பூர் அவினாசி ரோட்டில் மெரிடியன் ஹோட்டலில் international client கூட மிகப்பெரிய dealershipக்கான meeting இருந்தது. இருந்த அந்த பிரம்மாண்டமான ஹோட்டல் லாஞ்சில் விஜய் தாஸ் Tajima 2500 மெஷினின் லேட்டஸ்ட் அவுட்புட் டிசைன்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்தான். அவன் துல்லியமாக விவரித்து மிகப்பெரிய ஆர்டரை பெற்ற அதே நாளில் தான் சுகாசினியை சந்தித்தான். அது மிகப்பெரிய ஆர்டர் 50,000 பீஸ் லண்டன்க்கு ஷிப்பிங் பண்ணா profit மட்டும் கோடிகளில் கிடைக்கும்.. ஆர்டரை முடித்து விட்டு உற்சாகமாக கிளம்பிய விஜய் இன்னும் உற்சாகமானது சுகாசினியின் நெருக்கத்தில் தான்.. அப்போ தேவ் தாஸ்..? அவன் என்ன பண்ணிட்டு இருந்தான்? இனி வரும் கதையில் உங்களுக்கு தெரியும். சரி இப்பொழுது கதைக்கு வருவோம்.
சரிங்க அப்போ functionக்கு எவ்ளோ ஆகுதுன்னு சுகா கிட்ட சொல்லுங்க அனுப்பி விடறேன் என சொல்லி விட்டு அவர்கள் கிளம்பினார்கள்.
சாந்தி அவர்கள் இருவரையும் வாசல் வரை வழியனுப்பி வைத்து விட்டு வந்தார். உள்ளுக்குள் அத்தனை பெருமையாகவும் நிறைவாகவும் இருந்தது.
வேலை விசயமாக ஜப்பான் சென்றிருந்த சிவதாசன் வீட்டுக்கு வந்ததும் சாந்தி உற்சாகமாக தாலி பிரித்து கோர்க்கும் சடங்கை பற்றி கூற..
சரி நம்ம ரெண்டு மருமகளுக்களும் பெருசா பண்ணிடலாம் என்றார் உற்சாகமாக..
ரெண்டு பேரா? என சாந்தியின் முகம் சட்டென மாறி போனது.
சிவதாசன்..?
தொடரும்..