மன்னவன் மயங்கும் மலரவள்

by Pradhanya kuzhali
1.5K views

அத்தியாயம்- 33

“எனக்குக் கொஞ்சம் கால் வலிக்குது, பிடிச்சு விடுங்க,” என செம்பருத்தி கூறினாள்.

“இதோ வர்றேன்,” என அனைத்துப் பணிவிடைகளையும் செய்தான்.

“எப்படி இத்தனை நேரம் என்கூட இருக்கீங்க? உங்களுக்கு ஒரு கண்ணு உங்க மம்மின்னா இன்னொரு கண்ணு உங்களோட எம்.ஜி. கன்ஸ்ட்ரக்சனாச்சே? எப்படி விட்டு இருக்க முடியுது? அன்னிக்கு சொன்னீங்களே, என்னோட மனசு சிமெண்ட், செங்கல், டைல்ஸ், மொசைக், கிரானைட்ல ஆனதுன்னு…” என்றாள் அவனைப் பார்த்துக்கொண்டே…

“அதை ஸ்ரீராம் பார்த்துப்பான்.”

“இட்ஸ் மிராக்கில்! எப்படி இது நடந்தது? அதுவும் மூணாவது மனுஷன் கிட்ட இவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுக்கிறீங்க? உங்க அம்மாவுக்கு அன்னிக்கி நான் ‘வெஜ் சிக்கன் பிரியாணி’ செஞ்சு கொடுத்ததுக்குச் சண்டைக்கு வந்தீங்களே?” என செம்பருத்தி கேட்க…

“அவன் ஒண்ணும் வெளியாள் இல்லை.”

“பின்ன?”

“அவன் என் அம்மாவோட அண்ணன் பையன். அதனால பார்த்துப்பான். ஒண்ணும் பிரச்னை இல்லை.”

செம்பருத்தி வாயைப் பிளந்தபடி பார்த்தாள். ‘டேய், யாருடா நீ?’ என்னும் ரீதியில் பார்த்தாள்.

“என்னாச்சு?”

“அத்தையை ஒரு தடவை கூட ஸ்ரீராம் அண்ணா உறவுமுறை சொல்லி கூப்பிட்டத நான் பார்த்ததே இல்லையே?” என செம்பருத்தி அதிர்ந்து கேட்க…

“அது வந்து…”

“ம்ம், என்ன வந்து? சீக்கிரம் சொல்லு.”

“எனக்கு எங்க அம்மா கூட யார் நெருக்கமா இருந்தாலும் பிடிக்காது.”

“நாசமா போச்சு! சத்தியமா நீ சைக்கோடா!!” என்றாள் வெளிப்படையாக.

சட்டென அந்த பேச்சை மாற்றும் விதமாக, “சரி, இப்போ உனக்கு நான் கால் பிடிச்சு விடுறேன். நீ உங்க வீட்டுக்குப் போயிட்டா யார் இதைச் செய்வா?” எனக் கேட்டான் குரு.

“எம்.ஜி. கன்ஸ்ட்ரக்சன்ஸ் குடும்பத்தோட வாரிசுக்கு ஒரு ‘மெய்ட்’ கிடைக்காதா என்ன? என்னைப் போல…” என செம்பருத்தி கூற… அவளை உற்றுப் பார்த்தவன், “இப்போ உனக்கு என்ன வேணும்? நான் ‘beg’ பண்ணனுமா? என் கூட இருக்க வைக்க? சரி, ‘beg’ பண்றேன்,” என குரு கோபமாகக் கூறினான்.

“எனக்கு சாரி வேணும்.”

“உனக்காக எவ்ளோ புடவை எடுத்து வச்சிருக்கேன்.”

“டேய் கங்குவா, என்கிட்ட சாரி கேளு,” என்றாள் செம்பருத்தி.

“சாரி!! ஆனால் எதுக்கு?”

“இல்லை, நீ தமிழில் கேளு. கெஞ்சு. அப்போ நான் உன்கூட இருக்கேன்.”

“எதுக்கு?”

“என்னை ‘லவ்’ பண்றியா நீ?”

“ஆமா!”

“அப்புறம் ஏன்டா என்கிட்ட ‘லவ்’ சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்ட?” என செம்பருத்தி அதிர்ந்து கேட்டாள்.

“நான்… எனக்குப் பயமா இருந்தது.”

“என்ன பயம்?”

“எனக்குத் தெரியும். நான் உன்கிட்ட ‘லவ் யூ’ சொன்னா நீ என்னை வேணாம்னு சொல்லுவ. அதான் சொல்லல!” என்றான் குரு.

“என்ன சொல்ற? புரியல!” என செம்பருத்தி அவனைப் பார்த்தாள்.

“உனக்குத் தான் என்னைப் பிடிக்காதே!”

“எப்படி உனக்குத் தெரியும்?”

“உன்னோட போன்ல தான் மலைக்குரங்குன்னு ‘சேவ்’ பண்ணிருக்கியே! அப்புறம் என்ன?” என்றான் குரு.

“சரி, அதை விடு! உன்னோட அந்த ‘டிஸ்சார்ட்டர்’ பத்தி ஏன் என்கிட்ட சொல்லல?” என கேட்டாள் செம்பருத்தி.

“என்னோட ‘டிஸ்சார்டர்க்கு ட்ரக்கே நீ தான். உன்னைக் ‘கிஸ்’ பண்ணதுல இருந்து என்னோட கோபம் அது அப்படியே குறைஞ்சு போச்சு. அதுக்கான ரீசன் தேடிட்டே இருந்தேன். கிடைக்கல. உன்னை வெறுக்கக்கூட ‘ட்ரை’ பண்ணேன். ஆனா முடியல. அப்புறம் கண்டிப்பா உனக்கு என்னைப் பிடிக்காதுன்னு உறுதியா தெரிஞ்சது. அதான் என் மம்மி கிட்ட சொன்னேன். உடனே கல்யாணம் பண்ணிட்டேன்,” என்றான் குரு.

“சத்தியமா?” என செம்பருத்தி அவனது கையை எடுத்துத் தலையில் வைத்தாள்.

“அதுதான் உண்மை! கண்டிப்பா உனக்கு என்னைப் பிடிக்காது. அதான் உங்க வீட்ல ‘அப்ரோச்’ பண்ணா நீ கல்யாணத்துக்கு ஒத்துக்குவேன்னு தான் வீட்ல பேசினேன்,” என்றான் குருசேத்ரன்.

“ம்ம், ஓகே!” என்றவள் கண்களை மூடிக்கொண்டாள்.

குரு அவளின் கையைப் பிடித்து, “திவ்யன் பத்தி வீட்ல பேசினியா?” எனக் கேட்டான்.

“எங்க அம்மா ரொம்பப் பிடிவாதமா இருக்காங்க. என்னால ஒண்ணும் சொல்ல முடியல! அவளும் போனும் கையுமா இருக்கா! அவளுக்குத் திவ்யனப் பிடிச்சிருக்கு போல. என்னால எதுவும் பண்ண முடியல,” என்றாள் செம்பருத்தி.

“சரி, நான் வேணும்னா பேசவா? எனக்கு கீர்த்தனா பத்தி பிரச்னை இல்லை.”

“ம்ம், உங்களைப் போல இருக்கா அப்படியே! அதனால தான பிரச்னை இல்ல?”

“இல்லை! எங்க வீட்ல இருக்குற ஒரே பொண்ணு அவள் தான். எனக்கு அவளைப் பிடிக்கும். ஆனால் ‘எக்ஸ்பிரஸ்’ பண்ண மாட்டேன்,” என்றான் குரு.

“சரி.”

“எதுக்கும் ஒரு தடவை நான் பேசவா?”

“ஒண்ணும் வேணாம். முக்கியமான விஷயம் உங்ககிட்ட கேட்கணும்.”

“என்ன?”

“‘ஆல் இந்தியா டூர்’ எதுக்கு எங்க அம்மாவையும் சேர்த்து அனுப்பினீங்க?”

“உங்க வீட்லயே என்னை ரொம்பப் பெருமையா பேசினது உங்க அம்மா தான். அதனால அனுப்பினேன்,” என்றான் குரு புருவம் சுருக்கிக்கொண்டே…

“சம்பூர்ணாவுக்கு எதுக்கு புது போன் வாங்கிக்கொடுத்தீங்க?”

“நீ ‘இம்ப்ரெஸ்’ ஆகணும்னு வாங்கி கொடுத்தேன்,” என்றான் குரு.

“அவளுக்கு போன் வாங்கிக் கொடுத்தால் நான் எப்படி ‘இம்ப்ரெஸ்’ ஆவேன்?” என செம்பருத்தி முறைத்துப் பார்த்தாள்.

“நான் வாங்கிக் கொடுத்த போனை இங்கேயே வச்சுட்டுப் போயிட்ட. அதுல சம்பூர்ணா மெசேஜ் பண்ணிருந்தா உனக்கு. அப்போ தான் தோணுச்சு. அவளுக்கு போன் வாங்கிக் கொடுத்தேன். நீயா என்னை ‘லவ்’ பண்றேன்னு சொல்ல வைக்க எல்லாமே பண்ணேன். ஆனா நான் ‘expect’ பண்ணாத விஷயம் நீ அங்கே நித்யாவோட கிளினிக் போனது தான்,” என்றான் குரு.

“நல்ல வேளை நான் அங்கே போனேன்.”

“போகாம இருந்திருந்தால் என்கிட்ட நீ ‘லவ் யூ’ சொல்லிருப்பியா?” என்று பாவமான கண்களுடன் பார்த்தான்.

“சான்ஸே இல்ல! சொல்லியிருக்க மாட்டேன்,” என்றாள் செம்பருத்தி வேண்டுமென்றே.

குரு எதுவும் பேசாமல் கால்களைப் பிடித்து விட்டான்.

அவனது முகத்தைப் பார்த்தவள் அடக்கப்பட்ட சிரிப்புடன் உறங்கி விட்டாள்.

இதோ, நாட்கள் கிடுகிடுவென ஓடியது. ஒரே மேடையில் தீட்சண்யன், நித்யா மற்றும் சம்பூர்ணம், திவ்யன் என இரண்டு ஜோடிகளின் திருமணமும் நடைபெற்றது.

குருசேத்ரன் மேடையை முறைத்தபடி அமர்ந்திருந்தான்.

“எதுக்கு அப்படி பார்த்திட்டு இருக்கீங்க?”

“ஒண்ணுமில்ல…”

“இப்போ சொல்லணும். இல்லைனா நான்…” என செம்பருத்தி எழுந்தாள்.

“அந்த நித்யா அண்ட் தீட்சண்யன் ரெண்டு பேரும் பார்த்தாலே பிரம்புல வெளுக்க தோணுது.”

“அதான் என்ன காரணம்?”

“எனக்குப் பிடிக்கல. அவ்ளோதான்,” என்றான் குரு.

“நான் சொல்லவா? காரணத்த?”

“என்ன? என்ன தெரியும் உனக்கு?”

“அந்த நித்யா தானே உங்களைப் பத்தி என்கிட்ட போட்டுக்கொடுத்தாங்க? அந்த கடுப்பு தான?” என செம்பருத்தி சிரித்தாள்.

“இல்லையே,” என சமாளித்தான் குரு.

செம்பருத்தி அவனை கிண்டல் செய்துகொண்டிருந்தாள் வீட்டுக்கு வரும் வரை. திருமணம் நல்லபடியாக முடிந்தது.

“அத்தை,” என ஸ்ரீராம் அழைத்தபடி பேசிக்கொண்டிருக்க, மணியம்மை ஒருவிதப் பதட்டத்துடன் தன் மகனைப் பார்த்தார்.

குரு வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தான்.

“அண்ணா, நீங்க வாங்க. வந்து உங்க அத்தை கூட ‘டைம் ஸ்பென்ட்’ பண்ணுங்க.”

“அது மேடம், அது வந்து மச்சான்…”

“உங்க மச்சான் எதுவும் சொல்ல மாட்டாரு,” என செம்பருத்தி பார்க்க… குரு வேறு பக்கம் திரும்பிக்கொண்டான்.

இதோ, வளைகாப்பு ஏற்பாடு பிரம்மாண்டமாக நடந்துகொண்டிருக்க…

“வாழ்த்துக்கள் செம்பருத்தி!” என வந்து நின்றார் மணியம்மை.

“எதுக்கு? நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறதுக்கா?” என செம்பருத்தி கேட்க…

“இதோ பாரு,” என நீட்டினார் போனை…

குரு என்ற பெயரைத் தூக்கி விட்டு எம்.எஸ். கன்ஸ்ட்ரக்ஷன் என்று பெயர் மாற்றம் செய்துவிட்டான் குருசேத்ரன்.

அவளின் பெயருக்குக் கம்பெனியை உயில் எழுதிவிட்டான்.

வயிற்றைப் பிடித்துக்கொண்டு எழுந்தவள் அவனுக்குப் போன் செய்ய… இதோ வீட்டுக்கு வந்திருந்தான்.

“என்ன பண்ணி வச்சிருக்கீங்க?” என செம்பருத்தி கேட்க…

“நீ ‘மெய்ட், மெய்ட்’னு இனி சொல்லக் கூடாது. அதுக்கு தான் இதைச் செஞ்சேன். நீ முதலாளியாக இருக்கணும். எனக்கும் மேல,” என்றான் குரு.

“இப்படி வேற சொல்றாளா? எதுக்குடி ‘மெய்ட்’னு சொன்ன?” என மணியம்மை கேட்க…

“இல்ல அத்தை, அது சும்மா சொன்னேன்,” என செம்பருத்தி கூற…

“உனக்கு சில திங்ஸ் வாங்கி வச்சிருக்கேன். வா,” என அழைத்துச் சென்றான்.

“எதுக்கு என் பேரில் மாத்தினீங்க அது உங்களை கஷ்டப்படுத்த வேணும்னு சொன்னேன் மத்தபடிக்கு எனக்கு இந்த பொருள் பணம் மேலே பெருசா ஆசை இல்லை எனக்கு அந்த மாதிரி தோணுனதும் இல்ல” என முறைத்து பார்த்தாள்.

” எனக்கு தெரியும். பட் இது என்னோட ஆசை. அண்ட், நான் உன்னை அப்படின்சொல்லவே இல்லையே!!” என்றவன் கதவை தாளிட்டான்.

“எதுக்கு?” என செம்பருத்தி கேட்டுக்கொண்டே சென்றாள்.

“உங்க வீட்டுக்குப் போகும் போது எடுத்திட்டுப் போக,” என காட்டினான்.

“பேசாமல் இதுக்குப் பதிலாக ஒரு வீடு வாங்கிக் கொடுத்திருக்கலாம்,” என செம்பருத்தி முறைத்துப் பார்க்க…

“இன்னொன்னு காட்டணும்,” என படுக்கையறைக்கு அழைத்துச் சென்றான்.

“என்ன?”

“இதோ, சிக்ஸ்பேக்,” எனக் காட்டினான் குருசேத்ரன்.

“அங்கே கடிச்சுக்கவா?” என்று ‘ஆம்ஸை’ பார்த்தாள் செம்பருத்தி ஆவலுடன்…

“ம்ம்,” என குரு புன்னகையுடன் கூற…

குட்டி கடி ஒன்றை பரிசாகப் பெற்றுக்கொண்டான் குரு.

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிய, சீமந்தம் விமர்சையாக நடந்தது.

குருசேத்ரன் முகம் சோகத்தில் இருக்க… அதை மறைத்துக்கொண்டு பிசியாக ஆட்டினான்.

செம்பருத்தி பெண்மையின் பூரிப்புடன் அழகாக இருந்தாள்.

“நீ அதைச் சொன்னா நான் இங்கேயே இருந்துப்பேன்,” என அவனது காதில் கூறினாள்.

“என்ன சொல்லணும்? ப்ளீஸ்? ‘ஐ லவ் யூ ‘? ‘சாரி? ‘தேங்க்ஸ்’? இதுல எது?”

“மலைமாடே! என் பேரைச் சொல்லி இதுவரைக்கும் கூப்பிட்டியாடா?” என முறைத்தாள்.

“செம்பருத்தி!! நீ தப்பா எடுத்துக்கலன்னா ஒண்ணு சொல்லவா? உன்னோட நேம் ‘ஓல்டா’ இருக்கு.”

“குருசேத்ரன் ரொம்ப ட்ரெண்டா இருக்கா?” என அவள் புருவம் தூக்க…

“ஹைபிஸ்கஸ், ரோசா அப்படின்னு கூப்பிடவா?”

“எப்படியோ கூப்பிட்டுக ‘லவ்’,” என்றாள் செம்பருத்தி.

“ஓகே,” என்றவன். சட்டெனத் திரும்பி, “என்ன சொன்ன?”

“‘லவ்’ கங்குவா,” என்றாள் சிரித்துக்கொண்டே…

“சொல்லு,” என அவளின் முகத்தையே பார்த்தான்.

அவள் சிரித்து கொண்டே பார்த்தாள். எப்படியும் நீ சொல்ல மாட்ட.. நான் சொல்றேன். ஐ லவ் யூ!!

“டேய், ‘ஐ லவ்’…” என்றவளுக்கு முகம் மாறி வலி எடுக்க ஆரம்பிக்க…

“என்னங்க வலிக்குது,” என அழுதாள்.

“என்னாச்சு,” என அனைவரும் பரபரப்பானார்கள்.

“‘ஸ்டிட்ச் ரிமூவ்’ பண்ணியாச்சு தானே?” என ரோஜா கேட்க…

“நேத்து தான் போய் பண்ணிட்டு வந்தான்,” என மணியம்மை சொல்லிக்கொண்டே குருசேத்ரன் பின்னால் சென்றாள்.

இதோ, அரை மணி நேரத்தில் ஹாஸ்பிடலில் குருசேத்ரன் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருக்க…

இதோ பிறந்தான் ஒருவன். மீண்டும் இன்னொருவன். இரண்டு மகன்கள். குரு செந்தூரன் மற்றும் குரு துரோணன்.

“என்ன குழந்தை?” என உற்சாகமாக செல்வியும் மணியம்மையும் கேட்டார்கள்.

“ரெண்டு பையன்,” என சுப்ரியா சொல்லிக்கொண்டே வந்தாள்.

“பையனா?” என சோகத்துடன் மணியம்மை கேட்க…

“பேரனா?” என உற்சாகமாகக் கேட்டார் செல்வி.

மணியம்மை ‘மைண்ட் வாய்ஸ்’ ‘மாட்டிக்கிட்டாலே செம்பருத்தி’ என்று தான் தோன்றியது. “குருசேத்ரன் ஒரு பாசப் பேர்வழி. அதில் இன்னும் இரண்டு குருக்கள்? சம்மந்தி, நான் ரெண்டும் பொண்ணா வரும்னு நினைச்சேன்,” என கூறினார்.

“அய்யோ, சம்மந்தி! எனக்குப் பேரன் தான் வேணும்னு நினைச்சேன். எனக்கு மூணு பேர் பசங்க,” என உற்சாகமாகக் கூறினார்.

இங்கே குருசேத்ரன் செம்பருத்தியைப் பார்க்க…

“என்னாச்சு? எதுக்கு இப்படி கேவலமா முகத்தை வச்சிருக்கீங்க?”

“எனக்குப் பசங்களைப் பிடிக்காது.”

“எனக்குப் பசங்களை தான் பிடிக்கும். அழகுக்குட்டிகளா? உங்களுக்கும் அம்மாவைப் பிடிக்கும் தான?” என கொஞ்சி பால் புகட்டினாள்.

“இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா நான் ‘பிரிகாசன் யூஸ்’ பண்ணிருப்பேன்.

வீணாக்கப்பட வேண்டிய வி…” என அவன் சொல்ல வர வாயைப் பொத்தினாள் செம்பருத்தி.

“விஷயம்னு சொல்ல வந்தேன்,” என்றான் குரு.

“முதல்ல வெளியே போ!” என கிள்ளி அனுப்பினாள்.

குரு கடுப்புடன் வெளியே செல்ல… “ஹே, குருசேத்ரன்!”

அந்த நேரம் பார்த்து அவர்களை பார்க்க “நித்யா மற்றும் தீட்சண்யன் இருவரும் வந்தார்கள். இரண்டு மகன்களை பார்த்து விட்டு தீட்சன்யன் சிரித்து கொண்டே சேலஞ்ல ட்வின்ஸ விட்டுட்ட” என தன் தம்பியை பார்த்து சொன்னான். 

‘ப்ளடி ராஸ்கல்!! கஷ்டபட்டு அவளை சமாதானம் பண்ணி வச்சிருந்தேன். பெரிய கழட்டி மாதிரி பேசி ஒரே நிமிசத்தில விவாகரத்து வரைக்கும் கொண்டு வந்துட்டான்.’ என கோபத்துடன் பார்த்தான் குரு. அவள் இன்னும் தன்னை விரும்புகிறேன் என்று கூட சொல்லவில்லை. 

“கொஞ்சம் சைலண்ட்டா இருக்கீங்களா?”என நித்யா அதட்ட.. 

“சரி நான் வெளியே வெயிட் பண்றேன்.” என தீட்சண்யன் சிரித்து கொண்டே சென்று விட்டான். போகும் போது குருசேத்ரனை பார்த்து கண்ணடித்தான். 

‘உன்னை வச்சுக்கிறேன் டா’ என பற்களை கடித்து கொண்டு வெளியே சென்றான். 

இங்கே நித்யா செம்பருத்தியிடம் “அவர் சொல்றத நீங்க பெருசா எடுத்துக்க வேண்டாம் செம்பா..!”

“இல்லைங்க!!” என்றாள் செம்பருத்தி. 

நித்யா சிரித்து கொண்டே “உங்க ஹஸ்பன்ட் உங்களை வெறுக்கல.., ஆனால் வெறுக்கிற அளவுக்கு நேசிக்கிறார். அவரோட அம்மாவை நீங்க பாசமா பார்த்துகிட்டது அவருக்கு பொறாமைய கொடுத்திருக்கு. அதனால உங்களை பங்கு போட்டுக்க நினைச்சிருக்கார். அதாவது, வெறுக்கிற ஒருத்தவங்கள பத்தி தான் நம்ம அதிகமா திங்க் பண்ணுவோம். அப்படி தான். ஆனால் உங்க மேலே அவருக்கு இருந்தது வெறுப்பு இல்ல. அது அன்பு! அவங்க அம்மாவுக்கு நீங்க காட்டின பாசத்தை, உங்க கிட்ட எதிர்பார்த்து இருக்கார். அவ்ளோ தான்” என்றாள். 

செம்பருத்தி சின்ன சிரிப்புடன் “ஓகே டாக்டர் நான் எதையும் தப்பா நினைச்சுக்க மாட்டேன்” என்றாள். 

நித்யா குழந்தையை கொஞ்சிவிட்டு புறப்பட.. அரக்க பறக்க உள்ளே வந்தான் குருசேத்ரன். 

செம்பருத்தியின் முகம் வாடியிருந்தது. செந்தூரனை கையில் வைத்து கொண்டிருந்தாள். 

“என்ன சொல்றான்? பையன்” என குருசேத்ரன் கேட்க.. 

“உங்களை வெளியே போக சொல்றான். பார்க்க பிடிக்கலையாம்” என்றாள் செம்பருத்தி. 

ஹே அவன் சொன்னதை நம்பாத! என காலை பிடித்து கொண்டான் குரு. 

செம்பருத்தி அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்தவள். “இப்போ எதுக்கு காலை பிடிக்கிறீங்க? கைய எடுங்க எரிச்சலா இருக்கு.”

“மிசஸ் குருசேத்ரன் நான் சொல்றத கேளுங்க.” 

“நான் என்னைக்கு செம்பருத்தி பாரி வேந்தன் தான்!” என முகத்தை திருப்பினாள். 

ஹே நான் உன்னை நிஜமாவே லவ் பண்ணேன். இது தான் உண்மை அவன் சொன்னது பொய். 

சேலஞ் உண்மை தான? எதுக்கு பொய் சொல்றீங்க? 

“நீ வேலைய விட்டு போனதும் என்னால வீட்ல இருக்க முடியல.அந்த நாலு மாசமும் நீ வீட்ல என்னென்ன பண்றேன்னு நான் புட்டேஜ் வீடியோல பார்ப்பேன். உன்னை பார்த்து பார்த்து லவ் பண்ணேன் டி! அது தான் உண்மை!! அது லவ்வுன்னு எனக்கு தெரியல. நீ பக்கத்தில இருக்கணும்னு தோணுச்சு அதான் உடனே கல்யாணம் பண்ணிட்டேன். இது தான் உண்மை!! நம்பு டி!!” என்றான் உருக்கமாக.. 

ம்ம் பார்ப்போம் என செம்பருத்தி அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. 

குழந்தைகளுக்கு நான்கு மாதங்கள் ஆகி இருந்தது. திங்க் அவ்வப்பொழுது அழகியின் வீட்டுக்கு சென்று வருகிறான். அவனுக்கும் மாமியார் வீடு குழந்தைகள் என குருசேத்ரன் போலவே அமைந்து விட்டது. அதில் குருசேத்ரன் ஒரு குட்டியை வீட்டுக்கு தூக்கி வந்து விட்டான். 

இதோ இன்று ஶ்ரீராம் சுப்ரியாவின் திருமணம். 

டயப்பர் எடுத்தாச்சா? என்பது செம்பருத்தியின் குரல். 

ஒரு பாக்கெட் 16 பீஸஸ் எடுத்து வச்சிருக்கேன். இது குருசேத்ரன். 

ரெண்டு ட்ரெஸ் செட்? 

அதுவும் ரெடி! டயப்பர் கிரீம் ரெடி, உன்னோட பால் பிளாஸ்க்ல வச்சிருக்கேன். எல்லாமே ரெடி இப்போ போலாமா? கல்யாணத்துக்கு? என அக்மார்க் குடும்பஸ்தனாக கேட்டான் குரு. 

வைப்ஸ்? 

ஹான் அதுவும் இருக்கு என்றான் குரு. 

செம்பருத்தி சிரித்து கொண்டே குருசேத்ரன் சாரோட இதயம் செங்கல் மண் சிமெண்ட் etc ல ஆனதாமே? அப்படியா? என கிண்டல் தொனியில் கேட்டாள். 

இல்ல இல்லவே இல்ல.. என்னோட இதயம் இப்போ டயப்பர், பால் பாட்டில், இதை சுத்தி தான் இருக்கு என்றான் குரு. 

“ஹான் அது!!” என்றவள். இப்போ கிளம்புங்க 

ம்ம் என குருசேத்ரன் முன்னால் சென்றான். 

“ஹலோ, மிஸ்டர்!!”

“ம்ம், சொல்லுங்க?”

“ஐ லவ் யூ! கங்குவா.”

“நான் கூட ‘லவ்’ யூ,” என்றவன் ஒரு பொண்ணு என முத்தமிட வந்தவனின் உதட்டை கையில் பிடித்திருந்தாள் செம்பருத்தி.

“லவ் யு என குருசேத்ரன் காதலுடன் சொல்ல.. அந்த வெடிக்கும் கோபம் என்னாச்சு?” என செம்பருத்தி புருவம் சுருக்கி பார்க்க.. 

நமித்து போன பட்டாசு ஆகிடுச்சு உன்னால!! என்றான் சிரித்து கொண்டே.. 

ம்ம் அது என அவனை கட்டி கொண்டாள் செம்பருத்தி..

மன்னவன் மயங்கும் மலரவளாக… செம்பருத்தி… என்றும் அவனை மயக்க வைத்து மலர்வாள்.

சுபம்.

You may also like

1 comment

Suheera Nusry March 7, 2026 - 6:11 am

Very interesting story

Reply

Leave a Comment