Episode 361,
சூர்யா, எனக்கு தெரியுமே! நீங்க யாருன்னு தெரியும்.. அமெரிக்காவில் இருந்து அமைஞ்சிகரைக்கு என்ன வேலைன்னு கூட தெரியும்! அம்புஜா மாமிய பத்தியும் எனக்கு தெரியும்! என ஒவ்வொரு வார்த்தையும் மிக தெள்ளத் தெளிவாக கூறினான்.
அதைக் கேட்ட ஜீவிக்கு ஒரு நிமிடம் பதட்டம் ஆகிப்போனது. உனக்கு என்ன தெரியும்? நீ இப்போ யார்கிட்ட பேசிட்டு இருக்கான்னு தெரியுமா? ஜீவி கார்ப்பரேட்-சோட என்று அவர் ஆரம்பிக்க…
சூர்யா, “நீங்க யாருன்னு தான் எனக்கு தெரியும்! எனக்கு தெரிஞ்ச விஷயம் இங்க யாருக்கும் தெரியாது! சரிதானா? சோ இப்போ எனக்கு தேவையான விஷயத்தை மட்டும் நீங்க சொல்றீங்களா? இல்ல! உங்கள பத்தி எல்லா விஷயத்தையும் எல்லாருக்கும் தெரியிற மாதிரி நான் சொல்லவா?
என்ன ஓவரா பேசிட்டு இருக்க! நீ பேசறது ஒன்னும் சரியில்ல..
சூர்யா, “சார் நான் உங்ககிட்ட பிரச்சனை பண்றதுக்கு வரல, எனக்கு தேவையான விஷயத்தை மட்டும் சொல்லுங்க, உங்கள பார்ட்டி ஆர்கனைஸ் பண்ண சொன்னது யாரு? ”
இந்த நேரம் ஜீவி வேறு வழி இல்லாமல் spr-ஐ போட்டுக் கொடுக்க எண்ணி.. “அது வந்து என்னை பார்ட்டி ஆர்கனைஸ் பண்ண சொன்னது spr தான்..sprக்கும் உன் பொண்டாட்டிக்கும் ஏதோ அப்படின்னு கேள்விப்பட்டேன்? ஆனா எனக்கு சத்தியமா எனக்கு தெரியாது!
சூர்யா, என் பொண்டாட்டிய விடுங்க. Spr பொண்டாட்டி பற்றி பேசலாம்!.
என்ன சொல்ற!.
உடனே சூர்யா , உங்களுக்கும் தேஜூவுக்கும்… ஐ மின் உங்களோட உயிருக்கு உயிரான நண்பன் பொண்ணு தான் தேஜுன்ற விசயம் எனக்கு தெரியவே தெரியாது! என சிரித்து கொண்டே கூறினான்.
இப்போ உனக்கு என்ன வேணும்!.
சூர்யா, உண்மைய மட்டும் சொன்னால் போதும்!.
ஜீவி என்ன சொல்வது என தெரியாமல் இதை பண்ண சொன்னது யாருன்னு எனக்கு தெரியாது!
என்ன சொல்றீங்க!..
ஜீவி, “என்னோட அமெரிக்கா அமஞ்சிகரை விசயத்தை பற்றி யாரோ பிளாக் மெயில் பண்ணி என்னை இதை உங்க வீட்டில் இருக்கும் ரெண்டு பொன்னையும் பண்ண சொன்னாங்க ஒரு வேளை அவங்க spr haters யாரோ பழி வாங்க பண்ணி இருக்கலாம்!”
சூர்யா அவரை அமைதியாக பார்த்தான்.
ஜீவி, உன் கிட்ட பொய் சொல்லி எனக்கு என்னை கிடைக்க போகுது! சீரியஸா எனக்கு தெரியாது! நீ யாருன்னு தெரிஞ்சா சொல்லு!.
சூர்யா அதற்கு மேல் எதுவும் பேச வில்லை. ஜீவி அவனையே பார்த்து கொண்டு இருந்தார்.
ஓகே சார்!. என சூர்யா எழுந்தான்.
ஜீவி அதோடு நில்லாமல் உனக்கு futureல எதுவும் என் கிட்ட டை அப் பண்ண ஐடியா இருந்தால் ஒரு போன் பண்ணு!.
சூர்யா, ம்ம் உங்க offer மிஸ் பண்ண மாட்டேன் சீக்கிரமா ஜாயின் பண்ணலாம் என சொல்லி விட்டு கிளம்பினான்.
ஜீவி அவன் செல்லும் வரை பார்த்து கொண்டு இருந்தவர். உடனே அவருடைய மேனேஜருக்கு போன் செய்தார்.
சார்!.
இந்த அப்பாயின்ட்மென்ட்க்கு சிபாரிசு பண்ணது யாரு?
அவருடைய மேனேஜர், சார் ஜெய்.. ஜெய் ஆகாஷ்!..
ஜீவி எதுவும் சொல்லாமல் கட் செய்து விட்டார். அதன் பின் அவர் மாலை கோவிலுக்கு செல்லலாம் என கிளம்பினார்.
சாமியை கும்பிட்டு விட்டு திரும்ப தேஜு திவ்யமாக நடந்து வந்தாள். ஜீவி முகம் கொஞ்சம் பதட்டத்துடன் நின்றார்.
தேஜு, என்ன மாமா? உங்க முகம் சரி இல்லையே!.
ஜீவி, அந்த சூரிய தேவ்! என அனைத்தையும் கூறினார்.
தேஜு அவரின் அருகில் வந்து கையை பொடித்து கொண்டு மாமா நோக்கு என்ன கவலை! சஞ்சலபடாதீங்கொ நான் இருக்கேனோ!
ஜீவி, இல்ல டி! அவன்!.
தேஜு, அவன் கிடக்கிறான் சண்டாளன். நீங்க இதை நினைச்சு பிதட்ட வேணாம் மாமா!.
ஜீவி, குழந்தை இன்னொரு விசயம்!
மாமா அதை அப்புறம் பேசுவோம்! இன்னிக்கி நோக்கு பிடிக்கும்னு தோப்பனார் அக்காரவடைசல் செய்ய சொன்னர். எடுத்துண்டு வந்தேன். மாமிக்கு கொண்டு போங்கோ!.
ஜீவி, தேஜு!. இதுக்கு பின்னாடி அந்த ஜெய் கடன்காரன் தான் இருக்கான் டி!.
தேஜு கொஞ்சம் மென்மையுடன் சிரித்து கொண்டே அந்த கடங்காரணுக்கு இன்னும் ரெண்டு வாரத்தில் கல்யாணம் மாமா! அங்கே போய் என்னோட டிங்கரிங்க பார்த்துக்கிறேன்.
ஜீவி, எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
தேஜு, மாமா! கொஞ்சம் சிரிங்கோ!.
ஜீவி கொஞ்சம் சிரித்து கொண்டே எங்கே நிவா கண்ணன்!. களுக் களுக் என சிரிப்பான் டி எனக்கு ஆசையா இருக்கு!.
தேஜு, வரோம் மாமா! நானும் அப்பாவும் அவனை தூக்கின்டு வீட்டுக்கு வரோம்!. என சொல்லி கொண்டே அக்காரை வடைசலை ஊட்டி விட்டாள்.
ஜீவி, அப்படியே திவ்யா பண்ணத போல இருக்கு டி பட்டு!.
தேஜுவுக்கு கொஞ்சம் கண்கள் கலங்கியது.
ஜீவி, அட கண்ணை கசக்காத டி! என்னால் தாங்க முடியாது!
தேஜு, சரி மாமா எனக்கு help பன்னதுக்கு thanks இனி கவலை பட வேணாம்!
ஜீவி, சரி டி மா!. என்ன வந்ததும் போற போய் பெருமாளை தரிசனம் பண்ணு டி!
தேஜு, நான் உங்களை பார்க்க தான் வந்தேன் மாமா! என சொல்லி கொண்டே கிளம்பி விட்டாள்.
பெருமாளே! என் தேஜூ குழந்தைக்கு சந்தோசத்தை கொடு! என நினைத்து கொண்டே வீட்டுக்கு கிளம்பினார்.
இங்கே spr அனைவரையும் நிற்க வைத்து கேள்வி கேட்க வில்லை துப்பாக்கியை சுழற்றி கொண்டு இருந்தான். .
பாஸ்!.
உங்களுக்கு பேச வேற தைரியம் இருக்கா!. ரொம்ப இடம் கொடுத்து விட்டேனா!.
எல்லாரும் நடுக்கத்தில் பார்த்து கொண்டு இருந்தார்கள்.
Spr, இன்னும் எத்தனை நாள் கிட்ட தான் இப்போவே பத்து நாளுக்கு மேலே ஆகிடுச்சு! எப்போ கண்டு பிடிப்பீங்க!
அதற்கு யாரும் பதில் பேச வில்லை.
Spr, இனி என்ன பண்ணுவீங்க ன்னு எனக்கு தெரியாது! ரெண்டு நாள் டைம் அதுக்குள் கண்டு பிடித்து சொல்லணும் இல்லை.. உங்கள் எல்லாரையும் நம்ம கல் குவாரி கிரானைட் க்கு மாற்றி விடுவேன்.
ஓகே பாஸ் என அவர்கள் திரும்ப ஒரு நிமிடம் என சொல்லி கொண்டே தேஜு உள்ளே வந்தாள்.
Spr அவளை பார்த்ததும் புது இரத்தம் பாய எழுந்து நின்றான்.
தேஜு, சூர்யா!.
ம்ம் என அவளை நெருங்கி வந்தான்.
அங்கேயே நில்லு!. என கொஞ்சம் புருவம் சுருக்கி கொண்டே கூறினாள்.
Spr அவளை உஷ்ன மூச்சுடன் பார்த்து கொண்டு இருக்க..
தேஜு, பெட்டர் இந்த பொறுப்பை குரு கிட்ட கொடுத்தால் அவனால் சீக்கிரம் கண்டு பிடிக்க முடியும்ன் தோணுது என்ன நினைக்கிற!
Spr, அப்டியா!.
தேஜு, அர்ஜுன் உனக்கு என்ன தோணுது!
Spr, அர்ஜுன் வாறு அந்தரையும் மன கல்குவாரிக்கு பம்பண்டி!.
அங்கு உள்ள அனைவரும் திரும்பி பார்க்க spr, அங்கே இருக்கிற எல்லாரையும் இங்கே வர வை!. இப்போவே எல்லாத்தையும் முடி!. என கூறினான்.
அர்ஜுன், ஓகே பாஸ் என சொல்லி கொண்டே அவர்களை அழைத்து கொண்டு வெளியே சென்றான்.
Spr பார்வை இப்பொழுது தேஜு மீது படிந்தது. இத்தனை அழகா! ஒவ்வொரு நாளும்! அழகு அதிகம் ஆகி கொண்டே போகுது! எங்கே பார்த்தாலும் இவளை எனக்கு கீழே கொண்டு வர தோணுது! என நினைத்து கொண்டே உணர்வுகளை கட்டு படுத்த திரும்பி கொண்டான்.
தேஜு அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள். இவ்வளவு நேரம் ஆகியும் பக்கத்தில் வர வில்லையே! என்ன டா அதியம்!. ம்ம் வருவ டா! நீயே வருவ என சமையலறை பக்கம் சென்றாள்.
Spr திரும்பி அவளை பார்க்க அங்கே தேஜு இல்லை. ஏனோ வெறித்து காண பட்டான். .
தேஜு உள்ளே சென்று கேசர், பாதாம் மற்றும் பிஸ்தா போட்டு பாலை சுண்ட காய்ச்சி சரியான பாதத்தில் ஆர வைத்து அலமாரியில் இருந்து ஒரு பாக்ஸை திறந்தாள். அதில் இருந்து ஒரு மாத்திரையை எடுத்து பாலில் கலக்கினாள். ஸ்பூனில் ஸ்டிர் செய்து கொண்டே இருந்தவள் ஏற்கனவே உணர்வுகளை அடக்க முடியாத மிருகமா தான் இருப்ப டா! என்னை பார்த்தாலே நாய் போல வருவ! ஆனாலும் நான் எதுக்கு இந்த மாத்திரையை கலக்குகிறேன்? அதுக்கு காரணம் என்ன? என நினைத்தவள். ஒரு குட்டி புன்னகை சிந்தி கொண்டே நான் இல்லாத போகும் போது நீ என்னை நினைத்து பைத்தியமா அலையனும் என காந்தமாக கண்ணை சிமட்டினாள். உன்னை சித்ரவதை செய்வேன்! ஆனால் பக்கத்தில் இருந்து இல்ல.. நான் இல்லாமல் நீ ஒவ்வொரு நாளும் தவிக்கணும்! ஒரு கிறுக்கன் போல நீ அலைவ!. உன்னை சித்ரவதை செய்ய எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு அதுவும் பாரு உனக்கு இன்பமான சித்ரவதை நாளைக்கு இது தான் இன்னும் உன்னை.. என நினைத்து சிரித்து கொண்டாள்.
Spr சோபாவில் அமர்ந்து குருவுக்கும் போன் செய்தான்.
அண்ணயா!.
ம்ம்!
எமாயிந்து!.
Spr, ஒன்னும் இல்ல.. அந்த போட்டோ விசயம்!. அதை பற்றி உன் கிட்ட பேசணும்!.
குருவுக்கு நடுக்கம் ஏற்பட்டது.
Spr, ஹே லைன்ல இருக்கியா!
சொல்லு அண்ணா!. என கொஞ்சம் பதட்டத்துடன் கூறினான்.
Spr, அது யாருன்னு நீ தான் கண்டு பிடிக்கணும்! யாரு செய்தார்களோ அவங்க என் கையில் கிடைக்கட்டும்! அப்புறம் இருக்கு!. என பேசி கொண்டு இருக்க மயக்கும் நடையுடன் தேஜூ முடியை ஒரு பக்கம் எடுத்து போட்டு கொண்டு வந்தாள்.
குரு, அமைதியாக இருக்க..
Spr, பதில் பேசு!. .என சத்தமாக கூறினான்.
தேஜு அவன் கையில் இருந்த போனை வெடுக்கென வாங்கி ஹலோ! என வாங்கி பேசினாள்.
குரு, தேஜு இப்போ என்ன பண்றது!
தேஜு,spr கிட்ட டம்ளரை நீட்டி கொண்டே கண்டு பிடி அவன் கிடைக்கும் வரை கண்டு பிடி பொறுப்பை உன் கிட்ட கொடுத்து இருக்கார்!.
குரு, என்ன சொல்ற? நான் மாட்டி கிட்டாள்.
தேஜு, நீ தான் கண்டு பிடிக்கணும்! நீ சொல்ற ஆள் தான் இங்கே குற்றவாலி!. என சூசகமாக அவனிடம் பேசினாள்.
குரு ஒரு பெரு மூச்சை விட்டு thanks தேஜு! நான் பார்த்து கொள்கிறேன்.
தேஜூ, ம்ம் கனிரா என்ன பண்றா!.
குரு கொஞ்சம் புன்னகை செய்து கொண்டே இப்போ தான் தேஜு வீட்டுக்கு வந்தேன்! இதோ போய் பார்க்க போறேன்! ரெண்டு நாள் நிறைய வேலை ரொம்ப மிஸ் பண்ணேன்!
தேஜூ, ஒரு நாள் மீட் பண்ணலாம்! எனக்கு பார்க்கணும் போல இருக்கு!
குரு, கவ்யா சொன்னாள். நிவா குட்டிய கேட்டு கிட்டே இருக்கா! ஹைத்ராபாத் போலாம்! அங்கே தான் ரெஸ்ட்டா இருக்கும்!.
தேஜு ஓர கண்ணால் spr-ஐ பார்த்தாள். அந்த பாலை ஒவ்வொரு மிடுக்காக குடித்து கொண்டு இருந்தான்.
தேஜூ அவனுக்கு எதிரில் உள்ள சோபாவில குருவிடம் போன் பேசி கொண்டே அமர்ந்தாள். அதன் பின் spr குடித்து முடித்து விட்டு அருகில் வைத்தான்.
தேஜு பேசுவதை நிறுத்த வில்லை. தொடர்ந்து கொண்டே இருந்தாள். Spr போனில் நோண்டி கொண்டு இருந்தான்.அவனுடைய பிரத்யேக spyகளிடம் இருந்து ஃபோட்டோஸ் வந்தது. மகி தன் குழந்தையுடன் இருக்கும் காட்சிகள் அவளை விட குழந்தையை zoom செய்து பார்த்தான். அந்த குழந்தையின் கண்கள் அப்படியே மான் விழியின் கண்கள் போலஅந்த உதடுகள் அப்படியே அவள் தான்! மூக்கு அவனை போல அதான் சூர்ய தேவ்! அந்த குழந்தை தூங்கும் போது சூர்யாவின் இறுக்கத்தை கொண்டு இருந்தது.“தேவதை மாதிரி இருக்கு! அழகு குட்டி பொம்மாயி!. ஒரு பையனை விட பெண் குழந்தை எவ்ளோ அழகு!. என வைத்த கண் வாங்காமல் பார்த்தான் குழந்தையின் படத்தை வருடினான். குட்டி பொம்மாயி! என கண்ணகுளி தெரிய சிரித்தான். அதன் பின் மகியின் முகத்தை பார்த்தான். அவள் குழந்தையை ஆசையுடன் முத்தமிடும் காட்சி!. அத்தனை அழகு!. என பெரு மூச்சை விட்டான்.
காதலில் பலவகை அதில் இவனுடைய காதல் அவளின் சந்தோசத்தை பார்த்து காதல் கொள்கிறான். அவளை எந்த வித தொந்தரவும் செய்யாமல் ரசிப்பான். இதுவும் காதல் தான்! இருமனமும் இணைந்து அருகில் இருக்கும் பரவசத்தை விட இது வேறு மாதிரியான உணர்வு!.
தேஜு இன்னும் போன் பேசி கொண்டு இருந்தாள். அவளை நிமிர்ந்து பார்த்தான். தலை முதல் கால் வரை பார்வை சென்றது.
தேஜு ஓர கண்களால் அவனை பார்த்தாள். ஆக்டிவ் ஆகிடுச்சு! வேலை செய்ய ஸ்டார்ட் ஆகிடுச்சு! என புன்னகை முகத்துடன் பேசினாள்.
அவன் கண்களை இறுக்கி மூடி மூச்சை வேகமாக வெளி விட்டவன் தன்னை கட்டு படுத்த முயற்சி செய்தான். ஆனால் முடிய வில்லை. எழுந்து கொண்டான்.
தேஜூ, ம்ம் என சிரித்து கொண்டே அடுத்து பேச வர அதற்குள் போனை பிடுங்கி வீசினான்.
ஹே என்ன பண்ற? சூர்யா!.
Spr அவள் கைகளை பிடித்து அவன் பக்கம் இழுத்தவன். வா போலாம்!. என அவளை அணைத்து முத்தமிட்ட படியே இழுத்து சென்றான்.
அவ்ளோ தான் டா!
இங்கே சூர்யா வீட்டுக்கு வந்தான். ஜெய், ஹே என்ன டா சொன்னாரு!.
சூர்யா, எதோ சொன்னாரு நீ மூடிட்டு போ!. .
ஜெய், என்னோட கல்யாண வேலையை தள்ளி வச்சிட்டு வந்தேன் பாரு என்னை சொல்லணும் டா! போடா!.
சூர்யா, அப்போ first night கூட தள்ளி வச்சிட்டு வருவியா!.
ஜெய் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
சூர்யா, அப்போ மூடிட்டு போடா!. என சொல்லி போனை வைத்தான்.
அந்த நேரம் ரகு சூரியாவுக்கு போன் செய்தான்.
ஹலோ!
ரகு,மகி எடுத்த புராஜக்ட் அதோட எல்லா detailing கொஞ்சம் check பண்ணி அனுப்பு டா! நான் நாளைக்கு காலையில் சன்மிசன் பண்ண போறேன்!.
சூர்யா, இப்போ உடனே வேணுமா!.
ரகு, நாளைக்கு மார்னிங் தான்! அவங்க கிட்ட பேசிட்டேன்! அதான்!.
சூர்யா, சரி என போனை வைத்தவன். வீட்டுக்கு சென்றான். வழக்கம் போல் முகத்தை எட்டு ஊருக்கு தூக்கி வைத்து முறைத்து கொண்டு இருந்தாள்.
சூர்யா அவளை கண்டு கொள்ளாமல் தன் பெண்ணை தூக்கி கொஞ்சி முத்தமிட்டான். முதல் மாதம் முழுதும் அதிக தூக்கம்! எல்லா குழந்தையும் அப்படி தான்! அதிகமாக சோக்கை முடித்து தூங்கி கொண்டே இருந்தாள் இதழ் பாப்பா!.
சூர்யா, இதழ்! அழகு மூக்கு டா! சரியாக அந்த நேரம் சிணுங்கியது.
அட என் இதழ் குட்டிக்கு பசி வந்திடுச்சு போல! என சொல்லி அவளிடம் நீட்டினான்.
மகி அவனை கண்டு கொள்ள வில்லை. கதறும் குழந்தையை கூட பொருட் படுத்தாமல் பார்த்து கொண்டு இருந்தாள்.
சூர்யா அருகில் வைத்தான். அவன் வைத்த அடுத்த நொடி பாலை புகட்ட தூக்கி கொண்டு அவனுக்கு முதுகு காட்டி திரும்பி கொண்டாள்.
சூர்யாவுக்கு கோபம் உச்ச தலை முதல் உள்ளங்கால் வரை ஏறியது. அப்படியே நின்றான். அரை மணி நேரம் பால் குடித்ததும் உதட்டை துடைத்து தோலில் போட்டு தட்டி அதன் பின் படுக்க வைத்து விட்டு திரும்ப அங்கே சூர்யா இருந்தான்.
மகி கேவலமாக முகத்தை மாற்றி கொண்டு ச்ச என உச்சி கொட்டினாள்.
சூர்யா அவளை நெருங்கி கழுத்தை பிடித்தான்.
மகி இதை எதிர் பார்க்காமல் மூச்சு வாங்க பார்க்க.. ஒரு இரண்டு நிமிடங்களில் விட்டவன். இன்னொரு தடவை உன்னோட கோபத்தை என் பாப்பா கிட்ட அவளை நான் வைத்து இருக்கும் போது காட்டின உன்னை.. என குரல் வலையை நசுக்கினான்.
அந்த நேரம் பின்னால் சத்ய தேவ் பேச்சு சத்தம் கேட்க சட்டென விலகி கொண்டு சூரியா வெளியே செல்லவும் சத்ய தேவ் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
மகி மூச்சு வாங்கி கொண்டே கழுத்தை நீவி கொண்டும் அசுவாச படுத்தி கொண்டு நின்றாள்.
சூர்யா வேகமாக அவனுடைய ஆபீஸ் பேக் எடுத்து கொண்டு மீண்டும் கிளம்பினான்.
மாப்ளை!. என்ன உடனே கிளம்ப.. என கலை கேட்க வர..
சூர்யா, கொஞ்சம் வேலை இருக்கு அத்தை அம்மா கிட்ட சொல்லிடுங்க என சென்று விட்டான். நேராக ஆபீஸ் சென்றான்.
இங்கே ஆபீஸ்ல எல்லாரும் கொஞ்சம் ஜாலியாக மெதுவாக வேலையை செய்து கொண்டு இருக்க சூர்யா மறுபடியும் வருவது தெரிய வேகவேகமாக அவர்கள் இடத்துக்கு சென்று வேலையை ஆரம்பித்தனர்.
F* என கத்தி கொண்டே அவன் அறைக்குள் நுழைதவன். கொஞ்ச நேரம் கழித்து தன்னை அசுவாஷ படுத்த அவனுடைய அலமாரியில் இருந்து ஒரு ஒயின் கொஞ்சம் கோப்பையில் ஊற்றி பருகி கொண்டே மகியின் லேப் டாப் திறந்தான்.
அதில் file உள்ளே சென்றவன். முதலில் உள்ள file ஓபன் செய்ய உடனே குடித்து கொண்டு இருந்த ஓயின் துப்பி விட்டான்.
உடனே தண்ணி எடுத்து குடிக்க கூட நேரம் இல்லாமல் கணினி திரையில் கண் அகலாமல் பார்த்து கொண்டு இருந்தான்.
Deer!. Deer!
தொடரும்..
Episode 362,
Spr அவள் கைகளை பிடித்து அவன் பக்கம் இழுத்தவன். வா போலாம்!. என அவளை அணைத்து முத்தமிட்ட படியே இழுத்து சென்றான்.
அவ்ளோ தான் டா!
Sprருக்கு அவனை கட்டு படுத்த முடிய வில்லை அதனால் வேகமாக அவளை அழைத்து கொண்டு படுக்கை அறைக்கு சென்றான்.
தேஜு, என்ன பண்ற சூர்யா விடு என குலைந்து கொண்டே கூறினாள்.
Spr, முடியல என்னால்.. ஐ கான் ட்.. நீ இல்லாமல் நான் செத்து விடுவேன் டி! என சொல்லி கொண்டே இறுக்கி அணைத்தான்.
தேஜு, ஸ்ஸ் வலிக்குது விடு த.. தள்ளி போ!
Spr முடியாது என முத்தமிட தொடங்கினான். தேஜு அவனுடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவனை சமாளிக்க மிகவும் சிரம பட்டாள். இறுதி கட்டம் நெருங்க நெருங்க அவளால் தாங்க முடிய வில்லை.
ஆனாலும் கஷ்ட பட்டு spr, ட்ரால இருக்கு அதை எடு!
Spr மூச்சை வேகமாக விட்டு கொண்டே அருகில் உள்ள அலமாரியை திறந்தான். அங்கே எதுவும் இல்லை.
இல்ல இங்கே இல்ல டி!.
தேஜு, அப்போ என்னை விட்டு விடு போதும்!
இதை கேட்டதும் அவனுக்கு எதோ போல ஆனது! சட்டென குறுகி போனான். அவளிடம் இருந்து வேகமாக விலகினான்.
தேஜு தன் மூச்சை வேகமாக விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அசுவாஷ படுத்தி கொண்டவள். தன் நிலையை பார்த்தாள். புயலில் சிக்கிய பூ போல கசங்கி இருந்தாள். அவளுடைய கூந்தலை சரி செய்து கொண்டே திரும்பி அவனை பார்த்தாள். இந்நேரம் உறக்கத்துக்கு சென்று இருப்பான் என ஒரு வித தந்திரத்துடன் திரும்ப கண்களை விழித்து சீலிங் பார்த்து கொண்டு இருந்தான்.
இந்த நாய்க்கு என்ன கேடு வந்தது? இப்படி பார்த்திட்டு இருக்கான்! சரி நம்ப perform கொஞ்சம் போடுவோம்…என நினைத்து கொண்டே தன்னை சரி செய்தவள்.
சூர்யா! சூர்யா! எமாயிந்து! இக்கட சூடு! எந்திக்குறா முகத்தை இப்படி வச்சிருக்க…
Spr எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
சூர்யா! ஹே! உன்னை தான்!. என தேஜூ விடாமல் அழைத்து கொண்டு இருந்தாள்.
Spr, ஏன் அப்படி சொன்ன?
என்ன சொன்னேன்!
எதுக்கு அப்படி சொன்ன?
என்ன சூர்யா ஆச்சு என மறுபடியும் அவள் குலைந்து கொண்டே கேட்டாள்.
Spr அவள் பக்கம் திரும்பி கால் மி ஒன்லி spr…
தேஜு அமைதியாக அவனை பார்த்தாள்.
Spr எதுவும் அதற்கு மேல் சொல்லாமல் அவனுக்கு முதுகு காட்டி திரும்பி கொண்டான்.
தேஜு, இப்போ என்ன ஆச்சு நான் என்ன சொன்னேன்!. ஓவரா பண்ணாத! உன்னை எவளாலயும் தாங்க முடியாது. இப்போ நான் என்ன தான் சொன்னேன்!
Spr, அவள் பக்கம் திரும்பி நீ நிஜமாவே என்னை லவ் பண்றயா! ஆனால் உன்னோட வார்த்தை எனக்கு விசம் தடவி பேசுவது போக இருக்கு!.
தேஜு, அது விசமாகவே இருந்தாலும் அதில் கூட உனக்கான காதல் விஷம் மட்டும் தான் இருக்கும்.. உனக்கு இப்போ என்ன பிரச்னை! அதை சொல்லு!
Spr தலையை அழுத்தி கோதி உதட்டை மடித்து கடித்து கொண்டவன். என்னை எதுக்கு தள்ளி போக சொன்ன? ஏன் நான் உனக்குள்!.. உனக்குள் நான் இருக்க கூடாதா! அப்படி இருந்தால் என்ன ஆக போகுது! உன்னை இது வரை என்னால் புரிந்து கொள்ள முடியல.. நான் உன் புருசன்! ஆனால்.. நீ!. நீ… எப்போ என் கிட்ட வந்து சேர்ந்த பாரு அதில் இருந்து இது வரை பார்க்கிறேன்! ஆனால் உன்னை என்னால் புரிந்து கொள்ள முடியல..
தேஜு, இப்போ என்ன ஆச்சு? அதை நான் எதோ சொல்லிட்டேன். நாளைக்கு.. அப்புறம் எதாவது .
Spr அவள் பக்கம் திரும்பி இத்தனை நாள் இல்லாமல் இன்னிக்கி மட்டும் எதுக்கு சொன்ன? எனக்கு அவமானமா இருக்கு!
தேஜு, அப்போ எனக்கு பிரச்னை இல்ல ஆனால் இப்போ சரியா ஓவல் டைம் அதான் சொன்னேன்!
Spr, ஏன் என்னோட குழந்தையை நீ சுமக்க மாட்டியா! அப்படி ஆனால் என்ன?
தேஜு, ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
Spr, எனக்கு தெரியும்! நீ பொய்யா இருக்க!.. அப்போ இருக்க தேஜு என்னோட மூச்சு காற்றாக இருப்பாள் ஆனால் நீ!. எனக்காக என்ன வேணாலும் செய்வா! உண்மையாகவே நான் மகிய பார்ப்பதற்கு முன்னாடி என் வாழ்க்கையில் நீ வந்து இருந்தால் சின்ன பொண்ணு என கூட பார்த்து இருக்க மாட்டேன்! உன்னை இந்த உலகம் உருகும் வரை லவ் பண்ணி கட்டி இருப்பேன். என சொல்லி திரும்பினான்.
தேஜு இதை எதிர் பார்க்க வில்லை. அவள் அமைதியாக இருந்தாள். Spr திரும்பி நீ கஷ்ட பட வேணாம் போ! போய் தூங்கு இனி டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்!. என சொல்லி விட்டு திரும்பி கொண்டான்.
Spr!. Spr!. Spr! என மென்மையான குரலில் அழைத்தாள்.
அவன் திரும்பி என்ன? என்பதை போல பார்த்தான்.
தேஜு, இப்போ என்ன வேணும்? உனக்கு நான் வேணும் அவ்ளோ தானே எடுத்துக்க உன்னோட மிச்சமா தான் நான் இருக்க ஆசை படுறேன்! அது கூடவே ஒரு வேளை குழந்தை வந்தால் இந்த விசயம் நமக்குள் தள்ளி போய் விடும் அதான்! உனக்கு தான் இது இல்லாமல் இருக்க முடியாதே!
Spr, நீ என் பக்கத்தில் இருந்தால் போதும்! இந்த முத்தம் போதும்! இந்த spr அப்டின்னு கூப்பிடும் வார்த்தை போதும்!.
தேஜு, மம் என கூறினாள்.
சரி நான்! என அவளை மோகத்துடன் பார்த்தான்.
ம்ம் என ஒற்றை பதில் அளித்தாள்.
Spr அவளின் அருகில் நெருங்கி முகத்தை கையில் ஏந்தி முத்தமிட ஆரம்பித்தான். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்த விசயத்தை விட இது முற்றிலும் புதிது ஒவ்வொரு தொடுதலிலும் மோகத்தை மீறி ஒரு உணர்வு அவழுள் எழ பயந்து போனாள். இப்படி தொன கூடாது. இவனை பழி வாங்கணும் இது வேணாம்! இவன் கிட்ட இருக்க விசயம் எல்லாமே கெட்டது இவன் ஒரு அசிங்கம் என தனக்கு தான் சொல்லி கொண்டாள்.
Spr அவளிடம் கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த கட்டத்துக்கு சென்றான். ஆனால் அவனே எதிர் பார்க்காத விசயம்! அவளும் இது வரை நடந்து கொள்ளாத முறையில் வெட்கத்துடன் சிணுங்கி சிணுங்கி அவ்ன் மேல் விழுந்தாள்.
இன்று ஏனோ ஒரு புதிய உணர்வு இது போல எப்பொழுதும் அவனுக்கு ஏற்பட்டது இல்லை. அவள் இன்னும் வேண்டும் என தோன்றியது. அவளின் உள்ளே உயிருக்கு உயிராக போய் சேர்ந்தான்.
அந்த நொடி அவள் துடித்து சினுங்களுடன் அவனை அணைத்துக் கொள்ள spr அவனுடைய அகன்ற மார்பில் தூண் போன்ற கைகளில் அவளை தனக்குள் அடைத்து கொண்டான். அவளின் முகம் எல்லாம் முத்தமிட்டான். தேஜு வெட்கத்தில் நெளிந்து கொண்டு திரும்ப முயற்சி செய்ய!.
Spr, பிளீஸ் திரும்பாத! கொஞ்ச நேரம் என் பக்கம் இரு! இதுக்கு மேல உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்! என அவளின் காதுக்கு அருகில் மெதுவாக கூறினான் சரி என்று சொன்னவள். அவனுடைய விடுவிப்பிக்காக காத்திருந்தாள். அவள் காத்திருப்பு அப்படியே அதே waiting list தான் அதில் இருந்து விடுதலை கிடைக்க வில்லை. கொஞ்ச நேரம் பார்த்தவள் அப்படியே உறங்க எண்ணி அவனுடைய மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.
அவளுடைய சிந்தையில் நாளைக்கு காலையில கரு தடை மாத்திரை போட்டு வுட வேண்டும் என நினைத்து கொண்டே உறங்கினாள். Spr மனதில் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்த நினைவுகள் தான் ஓடி கொண்டு இருந்தது.
இத்த்னை நாட்கள் அவளிடம் இல்லாத வெட்கம் இன்று அவளின் முகத்தில் நினைக்க நினைக்க உள்ளுக்குள் என்னவோ செய்தது. ஆனால் இந்த உணர்வை நினைத்து அவனால் தேஜு தலையில் முத்த மிட்டு கொண்டே இருநதான். ஒரு ஆணுக்குண்டான அதிக பட்ச எதிர் பார்ப்பு தமக்கான ஒருத்தியிடம் இருந்து வரும் உணர்வு மட்டும் தான்..
Spr அதையே நினைத்து கொண்டு எப்படி உறங்கினான் என்றே தெரிய வில்லை. இந்த இரவு அடுத்த புதிய பாகத்தின் ஒரு சின்ன தொடக்கம் . இது இப்படியே போய் கொண்டு இருக்க அங்கே சூர்யா என்ன செய்கிறான்.
ச்ச மறந்து போய்ட்டேன். அந்த சூர்யா ரொம்ப ரொம்ப கோபத்தில் இருக்கான். என்னா! Spr இப்போ சந்தோஷமா இருக்கானே! அதனால் சூர்ய தேவ் இப்போ கோபமா இருக்கணும். தெரியல வாங்க போய் பார்க்கலாம்.
முதலில் உள்ள file ஓபன் செய்ய உடனே குடித்து கொண்டு இருந்த ஓயின் துப்பி விட்டான்.
உடனே தண்ணி எடுத்து குடிக்க கூட நேரம் இல்லாமல் கணினி திரையில் கண் அகலாமல் பார்த்து கொண்டு இருந்தான்.
Deer!. Deer! என சொல்லி கொண்டான்.
சிரித்துக் கொண்டே பார்த்து கொண்டு இருந்து அந்த கண்கள் இப்பொழுது சூரியனை போல வெப்பம் ஆக தொடங்கியது.
உள்ளுக்குள் ரவித்துரம், ரணம் கூடவே அவனுடைய hemoglobin எல்லாம் கொதித்தது. எதையாவது உடைத்து நொறுக்க வேண்டும் போல இருந்தது. அந்த கோபத்தை எதில் காட்டுவது! அதை விட அந்த மான்! ஒற்றை கொம்பு #tag இதையெல்லாம் நினைக்க நினைக்க உள்ளுக்குள் பற்றி கொண்டு கொழுந்து விட்டு எறிந்தது. அருகில் உள்ள தண்ணீர் பாட்டிலை எடுத்து ஒரே மூச்சில் குடித்தான். .
அவனுடைய கோபத்தை அடக்க தான் குடிப்பான். ஆனால் இந்த கோபம் அடக்குவதுக்கு இல்லை. இதை ஆர வைக்க வேண்டும் கூடவே அதற்கு காரணமாக இருப்பவளை.. என பற்களை கடித்தான். .
அந்த நேரம் மீண்டும் ரகு கிட்ட இருந்து போன் வந்தது. அதை எடுத்து பேசியவம். வேகமாக அவன் கேட்ட அனைத்து விவரங்களையும் அனுப்பி வைத்தான்.
அந்த நேரம் மகியின் gmailக்கு சில குறுஞ்செய்திகள் வந்தது.
Happy to hear this news! My dear little princess birth… and we are happy too! Project எப்டி இருக்கு உனக்கு ஓகேவா! என விக்ரம் கிட்ட இருந்து செய்திகள் வந்தது.
சூர்யா கைகளை மடக்கி கொண்டே அவனுடைய இருக்கையில் அமர்ந்தவன். என்ன பண்றது? என்ன பண்றது!
சும்மா விடாத சூர்யதேவ்!. என மூளை கூப்பாடு போட்டது.
நீ சொல்லு என தன் மனதிடம் கேட்டான்.
அவள் செய்தது பெரிய தப்பு! ஆனால் அவள் உன்னோட பெண் உன்னோட குழந்தளுக்கு அம்மா!
சூர்யா, அந்த மூன்று குழந்தைக்கு அப்பா நாம தான்! என தலையை கோதி சட்டையை மடித்து கொண்டே எழுந்து நின்றான்.
சொல்ல மாட்டேன்! எல்லாத்தையும் செய்து காட்டுகிறேன்! என மீசையை முறுக்கி கொண்டே வேலையை ஆரம்பித்தான்.
அடுத்த நாள் காலை பரபரப்பாக விடிந்தது. சூர்யா ஒரு பொட்டு கூட தூங்க வில்லை விடிய விடிய வேலை செய்த களைப்பில் வந்தான்.
வீட்டுக்கு வந்ததும் கலை வாணி அவனுக்கு காலை குடிக்க எடுத்து வர..
அத்தை நேரா சாப்பிடுகிறேன் என சொல்லி விட்டு அவனுடைய அறைக்கு சென்றான்.
மகி வெளியே உள்ள பால்கனியில் தன் பெண்ணை படுக்க வைத்து கொஞ்ச நேரம் எண்ணெய் பூசி மசாஜ் செய்தவள். வெயிலில் படுக்க வைத்தாள்.
மிதுன் தேவ் மற்றும் சத்ய தேவ் இருவரும் தன் குட்டி தங்கையை பார்த்து கொண்டு இருந்தனர்.
சூர்யா வெளியே தன் பெண்ணை தேடி பார்க்க பால்கனியில் இருந்தாள்.
கலை, மாப்ளை வாங்க சாப்பிடலாம்!
சூர்யா, மம் அத்தை என சாப்பிட அமர்ந்தான். அவன் சாப்பிட்டு கொண்டு இருக்க அந்த நேரம் அவனுடைய எண்ணுக்கு போன் வந்தது. .அதை எடுத்து பேசியவன். உதடுகள் புன்னகையில் வளைந்து ம்ம் ஒகே final பண்ணுங்க இப்போவே முடிக்கிறேன் என சொல்லி வைத்தான். .
மகி குழந்தையை எடுத்து கொண்டு உள்ளே வர..
சூர்யா, ஒவ்வொரு விரலையும் ரசித்து உண்டவன். அத்தை உண்மையாகவே ரொம்ப நாள் கழிச்சு நிம்மதியா சாப்பிடுரன்.. .
கலை சிரித்து கொண்டு நின்றார்.
சூர்யா, உங்களுக்கு கட்டாயம் வகைகள் வாங்கி போட தான் போறேன் என எழுந்து கை கழுவ சென்றான்.
மகி முகத்தை திருப்பி கொண்டு செல்ல சூரியா, ம்ம் வரேன் வரேன்!. .என சொல்லி கொண்டே அவள் பக்கம் சென்றான்.
தொடரும்.. .
Episode 363,
சூர்யா, அத்தை உங்களுக்கு கட்டாயம் வளையல் வாங்கி போட தான் போறேன்! என எழுந்து கை கழுவ சென்றான்.
கலைவாணி இதைக் கேட்டதும் போங்க மாப்பிள்ளை என்று சிரித்தார்.
சூர்யா, என்ன அத்த இப்படி சொல்லிட்டீங்க!.. நீங்க ஒரு தங்கத்தை பெத்து போட்டு இருக்கீங்….
அங்கு வந்த உமா இருவரையும் பார்க்க…
உடனே சூர்யா என்ன மா!..என சமாளிக்க ஆரம்பித்தான்.
என்ன டா!.
ஒன்னும் இல்லமா…
என்னடா பேசிட்டு இருக்க…
சும்மா!..
உமா, போ போய் வேலையை பாரு நைட்டு தான் வேலைக்கு போன தானே போய் தூங்கு போ..
மகி முகத்தை திருப்பி கொண்டு செல்ல
சூரியா, ம்ம் வரேன் வரேன்!. .என சொல்லி கொண்டே அவள் பக்கம் சென்றான்.
மகிழினியின் பின்னால் மிதுன் தேவ் மற்றும் சத்திய தேவ் இருவரும் செல்வதை பார்த்து… உமா எதுக்குடா கு ரெண்டு பேரும் உங்க அம்மா பின்னாடி சுத்துறீங்க ..
கலைவாணி சிரித்துக் கொண்டே வேறு எதுக்குங்க அண்ணி பாப்பாவை பார்க்கத்தான்.. பின்னாடி சுத்துறாங்க…
உமா சிரித்துக்கொண்டே சொல்லு கலை உன்னோட பேரங்களுக்கு பாப்பா இப்போ தூங்கிட்டு தான் இருக்கும் விளையாட இன்னும் டைம் ஆகும் என்று கூறினார்.
சத்திய தேவ், இல்ல ஆத்தா நாளைக்கு நான் ஊருக்கு போயிடுவேன்! எனக்கு பாப்பா நியாபகமா இருக்கும்ல்ல அதனால தான் நான் பாப்பா கூடவே இருக்கேன்…
உடனே மித்துன் புருவத்தை நெருங்கிக் கொண்டே “நானும் தான் ஊருக்கு போறேன்! அதுவும் இங்க ஒன்னும் இல்ல… ஜெர்மன் போறேன்! எனக்கு பாப்பா ஞாபகமா இருக்கும்ல்ல அதனாலதான்.. உமா மா… நான் பாப்பா கூட இருக்கேன் தெரியுமா உங்களுக்கு? என்று கொஞ்சிக் கொண்டே பேசினான்.
இதை கேட்டதும் இருவரும் சிரித்துக்கொண்டே சரி உங்க தங்கச்சி மேல ஓவர் பாசம் போலயே இருங்க… இப்படியே சந்தோஷமா இருந்தா எங்களுக்கு அதுவே போதும் என்று உமா கூறினார்.
கலைவாணி, மிதுன் கண்ணா வாடா தங்கம் அம்மாச்சி உனக்கு சாப்பாடு ஊட்டி விடுறேன். அம்மச்சி இன்னும் கொஞ்ச நேரம் பாப்பா முளிக்கிற போல இருக்கு, நான் பார்த்து அவ கிட்ட பேசிட்டு வரேன் என்று சென்றுவிட்டார்கள்.
சூர்யா அவர்கள் யாரையும் கண்டு கொள்ளாமல் உள்ளே நுழைந்தான். அங்கே மகிழினி குழந்தையை படுக்கையில் படுக்க வைத்து விட்டு பாத்ரூம் சென்று இருந்தாள்.
சத்ய தேவ் மற்றும் மிதுன் தேவ் இருவரும் கன்னத்துக்கு கை கொடுத்து அருகில் தூங்கும் தன் தங்கையை இரண்டு பக்கமும் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சூர்யா, சத்ய தேவ் பாப்பா தூங்குதுல்ல நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க.. போய் சாப்பிடுங்க போங்க…
இல்ல டாடி நான் மிஸ் பண்றேன்!. நாளைக்கு ஸ்கூல்…
சூர்யா, சத்ய தேவ் போங்க போயிட்டு அம்மாச்சி கூட இல்லன்னா ஆத்தா கூட சாப்பிடுங்க…
ஓகே டாடி என்று அவன் தன் தங்கையின் குட்டி காலுக்கு முத்தம் வைத்துவிட்டு, மெல்லிய கன்னத்தை தடவி பார்த்துவிட்டு கிளம்பிவிட்டான்.
மிதுன் மட்டும் அமர்ந்திருந்தான்.
சூர்யா, டேய் சொல்றது புரியல கெளம்புனு சொன்னேன்ல!..
மிதுன் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க…
சூர்யா, எதுக்கு இப்ப பாத்துட்டு இருக்க சொல்றது காதில் விழ வில்லையா! வளர்ப்பு சரியில்லை எல்லாம் உன்ன பெத்தவளை சொல்லணும்…
மிதுன் கடுப்பாகி, ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் எப்போ நீங்க என்னை போக சொன்னீங்க ? சத்ய தேவை தான் சாப்பிட போங்கன்னு, அவன தான சொன்னிங்க…
சூர்யா, என்ன சார தனியா வெத்தலை பாக்கு வச்சு அழைக்கணுமா?
ஆமா! ஸ்பெஷல் நான்… மிதுன் தேவ் அதுவும் பெக்கூலியரான பெயர் என்னோட மகி வச்சா! புரியுதா! இப்போ நீங்க என்கிட்ட மிதுன் தேவ் போய் சாப்பிடுங்கன்னு சொல்லணும்.. அப்படி சொன்னா தான் நான் போவேன்!.
சூர்யா சிரிப்பும் கோபமும் சேர்ந்து வந்தது. அவனை திட்ட மனம் வரவில்லை , இருந்தாலும் சீண்ட வேண்டும் என்று சீண்டிக்கொண்டிருந்தான் அதில் அவனுக்கு ஒரு ஆனந்தம்.
சூர்யா அவனை முறைத்துப் பார்த்தான். மிதுன் தேவும் சலிக்காமல் சூரியாவை கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
என்ன அப்படி பாக்குறீங்க எங்க அம்மா கிட்ட சொல்லுவேன்…
சூர்யா, போடா! வந்துட்டான்…
உங்கள என்ன செய்வேன் தெரியுமா என்று எழுந்தான்.
சூர்யா, நீ மட்டும் ஏதாவது ஓவரா பண்ண எல்லா கேர்ள்ஸ் முன்னாடியும் உன்னோட டிரஸ் எல்லாம் கழட்டி விட்டுடுவேன் ஜட்டியோட நிற்க வைப்பென்.
மிதுன் , இங்கே கேர்ள்ஸ் யார் இருக்காங்க எல்லாம் ஆன்ட்டிஸ் தான் இருக்காங்க…
சூர்யா, ரித்து டூ டேஸ்ல வரப்போறா அவ வந்ததும் பப்பி ஷேமா உன்னை நிக்க வைப்பேன். பரவாயில்லையா!
மிதுன் அவனுடைய தலையை கோதிக் கொண்டே பப்பி அவ நிறைய தடவை என்னை பப்பி ஷேமா பார்த்து இருக்கா! நானும் அவள பப்பி ஷேமா பார்த்து இருக்கேன். இது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல.. நான் நிறைய பேர பப்பி சேமா பாத்து இருக்கேன், வருண் மாமாவும் நானும் போய் பீச் போயிருக்கும் அங்க எல்லாம் பார்த்து இருக்கேன்.
சூர்யா , அடப்பாவி என்று பேச வர…
அதற்குள் மகி உள்ளே இருந்து மிதுன்!..
சொல்லு மகி என்று மெதுவாக அழைத்தான்.
பிராடு நாய் நான் கூப்பிட்டதுக்கு என்ன வாய் பேசினா அவ கொஞ்சம் சத்தம் போட்டதும் எப்படி பல்டி அடிக்கிறான். என்று நினைத்துக் கொண்டான்.
மகி, போய் சாப்பிடு போ மார்னிங் பிரேக்பாஸ்ட் டைம் ஆயிடுச்சு ஓடு!..
மிதுன் சரி மம்மி என்று சத்யதேவ் இடது காலில் முத்தம் வைத்தான். மிதுன் தேரவ் தன் தங்கையின் இடது காலை துடைத்து அதாவது சத்ய தேவ் முத்தமிட்ட காலை துடைத்து விட்டு வலது காலில் முத்தம் வைத்தான். அதன் பின் சத்ய தடவி பார்த்த கண்ணத்திற்கு எதிர் கன்னத்தில் அவனும் தடவி பார்த்துவிட்டு கிளம்பினான்.
சூர்யா அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருந்தான். என்ன இவன் இப்படி பண்றான்? அப்படியே சத்ய தேவ்க்கு ஆப்போசிட்டா பண்ணிட்டு இருக்கானே! என்ன பொறப்பு எல்லாம்!. என முறைத்து கொண்டே திரும்பினான்.
அங்கே மகிழினி இன்னும் கடுகடுத்த முகத்துடன் அப்படியே மிதுன் தேதி இவ்வளவு நேரம் இருந்தானே அந்த முகரை எங்கிருந்து வந்தது என்று இப்பொழுது சூர்யாவுக்கு தெரிந்தது.
எல்லாம் இவளிடமிருந்து தான் வந்திருக்கிறது. இவள் எதுக்கு முறைக்க வேண்டும் . நான் தானே நியாயமாக கோபப்பட வேண்டும்! என்னை தானே விட்டுச் சென்றாள். அங்கு சென்றதும் போனில் மாதம் மாதம் எவனுடனோ!. ச்ச… ச்ச… அந்த எவனோ ஒருவன்! அது !.அது!. நான் தானே!… எவ்வளவு திமிர் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு நின்றான்.
மகி அவனைக் கண்டு கொள்ளாமல் அவளுடைய இடத்தில் வந்து அமர்ந்தாள்.
சூர்யா இனிமே தாண்டி உனக்கு ஆட்டமே இருக்கு! கொஞ்ச நேரத்துல என்ன நடக்கப்போகுதுன்னு மட்டும் பாருடி என்று நினைத்தவன். நேராக தன் குழந்தையிடம் சென்று இரண்டு கன்னத்திலும் அந்த மீசைகள் குறுகுறுக்க முத்தமிட்டான். குழந்தை நெளிந்தது. எவ்வளவு அழகு கண்கள்! மூக்கு, இதழ்கள், என அனைத்தும் அழகு என்னுடைய இதழினி சூரிய தேவ் நாளை என் பெயரை நிலை நாட்ட போகிறாள்! என்னோட மொத்த பிசினஸ்ம் தேவ் கார்ப்பரேஷன் மொத்தமும் என் பொண்ணுக்கு தான்! யாருக்கும் தர மாட்டேன். என்று நினைத்தான்.
சத்ய தேவ் இந்த வேலையெல்லாம் செய்யமாட்டான். என தெரியும்! அவனுடைய இலக்கு முழுவதும் போலீஸ் ஆவதுதான்! மிதுன் தேவ்! அவனா! தர வேண்டும் திமிர் பிடித்தவன் அப்படியே மகி என்னும் ராட்சஸி போலஅவனுக்கு எதற்கு நான் தர வேண்டும்? எனக்கு எதுவும் என்னோட அப்பா தரலையே! நானே சொந்தக்காலில் சம்பாதித்தேன். சோ அவனும் சொந்த காலில் நிற்கட்டும். மகி என்னும் திமிர்காரி கொடுப்பாள். என் பொண்ணுக்கு தான் எல்லாமே! என்று இப்பொழுதே பாகம் பிரிக்க ஆரம்பித்தான்.
அதன் பின் ஆசை தீர கொஞ்சி விட்டு காலுக்கு முத்தமிட்டு அவளுடைய வாசனையை உள் இழுத்துக் கொண்டான். தன் உதிரத்தின் வாசனை அவளுடைய மேனியெங்கும் வீசியது தன் பெண் என்பதில் பெருமை ஆனந்த யாழை மீட்டிக் கொண்டவன் போல தன் பெண்ணை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த நேரம் சூர்யாவிற்கு ஃபோன் வந்தது சார் நீங்க சொன்ன வேலை எல்லாம் முடிஞ்சிடுச்சு இப்போ ரிஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ் வர முடியுமா!..
வரேன் என்று சொல்லிவிட்டு வேகமாக கிளம்பினான்.
மகிழினி ஓர கண்ணால் அவனை பார்த்தாள்.
வரேன்! வரேன்! வந்து உன்னை வைத்துக்கொள்கிறேன். தள்ளிவிட்டு சூர்யா சென்றான் அவனுடைய முதுகை பார்த்து போடா என சொல்ல வந்தவள் அப்படியே வார்த்தையை மாற்றிக் கொண்டாள். போடா என சொல்லியிருந்தால் ஒரு பிரளயமே நடந்திருக்கும். இருந்தாலும் இப்பொழுது கூட உள்ளுக்குள் சூர்யாவை பார்த்து அவளுக்கு ஒரு பயம் தான்.
சூர்யா நேராக ரிஜிஸ்டர் ஆபீஸ் சென்றான்.( ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம் நீங்க ஏன் ஒரு ரிஜிஸ்டர் ஆபீஸ் போறான் என்று கேட்க மாட்டீங்களா அவன் யாரையாவது கல்யாணம் பண்ண போறானா? மகி கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்க போறானா பண்ணுனாலும் பண்ணுவாயா இந்த பிராடுக்காரன் என்ன சொல்றீங்க? ஷாக் ஆகுறீங்கல்ல அப்ப ஏதாவது கேளுங்க படிக்கும்போது எதையாவது நினைச்சுட்டு படிங்க! சரி இப்ப கதைக்கு வரலாம் )
அங்கு ஏற்கனவே அட்வகேட் இருந்தார் வழக்கறிஞர் மற்றும் பத்திரபதிவாளர்கள் தயாராக இருக்க அதை வாங்கி பார்த்தவன்.உள்ளுக்குள் ஒருவித சாதனை செய்தது போல் பதிவு செய்து அவனுடைய அனைத்து விவரங்களையும் சரிபார்த்து பத்திரத்தை படித்து அதில் கையெழுத்து போட்டான்.
பயோமெட்ரிக் முறையில் அனைத்தும் ஆன்லைனில் ஏற்றப்பட்டது சட்டபூர்வமாக அவன் சார்பதிவு செய்து விட்டான்.
அந்த வழக்கறிஞர் சார் நீங்க சொன்னது போலவே எல்லாமே இதுல மென்ஷன் பண்ணி இருக்கேன்.
சூர்யா அந்த பத்திரத்தை புரட்டி பார்த்து கொண்டிருக்க… வழக்கறிஞர், சார் டாக்குமெண்ட்ஸ் சைன் ஆயிடுச்சு, 30 நாள்ல உங்களுக்கு ஒரிஜினல் டாக்குமெண்ட் வீட்டுக்கு வந்துடும், அதுக்கப்புறம், மத்த விஷயமெல்லாம் நம்ம போன்ல பேசிக்கலாம்! எந்த டவுட்டும் இல்லல்ல… நீங்க சொன்னது போல தான் எல்லாமே ரெடி பண்ணி இருக்கேன்!” என்று கூறினார் .
சூர்யா அதை திருப்பிப் பார்த்துவிட்டு ஓகே சார்… நான் பத்திரம் வந்ததுன்னு சொல்றேன்! மத்த வேலைகளை பண்ணிடலாம்!
ஓகே சார்…
சூர்யா, உங்களோட பேமெண்ட் நான் ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் பண்ணி விடுறேன்.ஓகே சார் என கிளம்பினான்
அதன்பின் சூர்யா நேராக அவனுடைய வீட்டுக்கு செல்லவில்லை. இப்பொழுது ஒரு வேலை செய்துவிட்டு வந்தானே அந்த பத்திரத்தை எடுத்துக்கொண்டு இன்னொரு பங்களாவிற்கு சென்றான். என்ன பங்களாவா இருக்கும்? ஒருவேளை அதுவா இருக்குமோ? ஒருவேளை இதுவா இருக்குமோ? பார்க்கலாம்!
சூர்யா நேராக கேட்டை திறந்தான். பெங்களூரில் காஸ்ட்லி ஏரியாவில் ஒரு தனி வில்லா அந்த வீட்டைச் சுற்றி பார்த்தான். உள்ளே சென்று அனைத்தையும் பார்த்தான். கிழக்கு வாசல் பார்த்து ,தோட்டத்துடன் அம்சமாக இருந்தது. இங்கிருந்து அனைத்தும் மிகவும் பக்கம் கிட்டத்தட்ட கோடிகளில் இந்த வீட்டை வாங்கி இருக்கிறான்.
வீட்டில் சென்று ஒரு நிமிடம் கண்களை மூடி அமைதியாக நின்றான் . ஒரு பத்து நிமிடங்கள் இருக்கும். அதன் பின் கேட்டை சாத்திவிட்டு நேராக அப்பார்ட்மெண்டில் இருக்கும் வீட்டை நோக்கி சென்றான்.
மதியம் 12 இருக்கும் இரவு முழுவதும் தன் பிள்ளை மகிய தூங்க விடுவதில்லை. ரொம்ப ரொம்ப சுட்டி …பசி வேற அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை , அது கூடவே உச்சா என கீழே செல்லவும் வயிற்றை நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் ஊசி குத்தியது போல கத்துவாள். அந்த அளவுக்கு குக்கூ கீச் குரல்காரி… அதனால் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
கலைவாணிக்கு தான் மிகவும் வேலை மைவிழி போன் செய்து அம்மா இங்கே வா! அம்மா எதுக்கும் அங்கேயே இருக்க அப்படின்னு எவ்வளவு கூப்பிட்டாலும் கலைவாணி இந்த தடவை மகிலினிக்காக கூடவே இருந்துவிட்டார். மை விழி மாமியார் பாக்கியா வந்துவிட்டார். இருந்தாலும் மகியை விட்டுப் பிரிய கலைவாணிக்கு எண்ணம் இல்லை.
சூர்யா உள்ளே வந்தான் மகினி மிகவும் பசியாக இருந்தது. கொஞ்சம் சாதம் செலவை ரசத்தில் பிசைந்து கொண்டிருந்தாள்.
சூர்யா அந்த நேரம் எதையும் மறந்தவன் போல் ச்ச எங்க வெச்சேன்! எங்க வெச்சேன் என்று யோசித்துக் கொண்டே அவர்களுடைய அறை முழுவதும் தேடிக் கொண்டிருந்தான்.
மகிழினி கண்டு கொள்ளவில்லை அதன் பின் போனை எடுத்து வழக்கறிஞரிடம் அந்த பத்திரம் எங்கே இருக்கு சார்? என்கிட்ட கொடுத்தீங்களா?
வழக்கறிஞர் சார் உங்ககிட்ட இரண்டு பத்திரமும் கொடுத்தேன் என்று கூறினார்.
இல்லையே சார்!
இங்கே இல்லையே சார்…
நல்லா தேடி பாருங்க சார் எனக்கு ஞாபகம் இருக்கு நான் கொடுத்து இருக்கேன் என்று கூறினார்.
சூர்யா, சரிங்க சார் என்ன சொல்லிவிட்டு மீண்டும் கீழே கார் பார்க்கிங் சென்றான். அவனுடைய காரில் அந்த பத்திரம் இருந்தது இரண்டையும் எடுத்து புன்னகைத்துக் கொண்டு அந்த பத்திரத்திற்கு முத்தமிட்டவன்.
மகிழினி சாப்பிட சாப்பிடவே குழந்தை அழுதது அதனால் கை கழுவிட்டு பால் புகட்ட சென்றாள். கலைவாணியை எழுப்ப அவளுக்கு மனம் வரவில்லை. ஏனென்றால் கலைவாணி தான் இரவு முழுவதும் மகிக்கு உதவியாக இருக்கிறார்.
சூர்யா அவளைப் பார்த்தான்.பால் புகட்டி கொண்டிருந்தால் கொஞ்ச நேரத்தில் குடித்து அவனுடைய குட்டி தூங்க ஆரம்பித்துவிட்டாள்.
அதனால் மெதுவாக அருகில் போட்டு விட்டு கண்ணை தேய்த்துக் கொண்டே தண்ணீரை குடித்தாள்.
க்கும்…என தொண்டையை கனைத்தான்.
மகி பார்த்தாள்.
உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்…
சொல்லுங்க என்று வேறு எங்கோ பார்த்து கொண்டு கூறினாள்.
சூர்யா அவ்ளோ திமிர் ஓவர் ஆயிடுச்சு இல்ல இருக்கட்டும் டீ!. என்று கதவை சாத்தினான்.
மகிழினி அவனை அதிர்ச்சியாக பார்த்து “எதுக்கு இப்ப கதவை சாத்துனீங்க.. இங்க என் பக்கத்துல…
சூர்யா, ப்ளீஸ் என்னை இப்படி கேவலப்படுத்துற மாதிரி பேசாத! புரியுதா ! என் பாப்பாவுக்காக பார்த்துட்டு இருக்கேன்! இல்லன்னா கன்னம் பழுத்திரும்டி!
மகிழினி , என்ன விஷயம் சொல்லுங்க
சூர்யா சிரிக்க ஆரம்பித்தான் .
எதுக்கு இப்படி சிரிக்கிறார் என்று அவனை பார்த்தாள்.
சூர்யா நீ சொன்னியே அந்த டீல்க்கு எனக்கு ஓகே…
மகி புருவத்தை நிறுத்திக்கொண்டு என்ன சொன்னன்? என்ன டீல்
சூர்யா , அந்த டீல் தான் செட் அப் சின்ன வீடு!.
மகிழினி ஒரு நிமிடம் அதிர்ச்சி காட்டினாலும் புரியல கொஞ்சம் தெளிவா சொல்லுங்க…
சூர்யா, “அதுதானே எப்படி புரியும் பாரு பாப்பா! உங்க அம்மாகாரிக்கு புரியலையா? மிஸ்சஸ் மகிழினி வசந்தன் நீங்க தானே சொன்னீங்க உங்களுக்கு விருப்பம்னா! என்ன வேணாலும் பண்ணலாம்ன்னு! சோ எனக்கு விருப்பம்! அதனால ஒரு செட்டப் வெச்சுக்கலாம்னு இருக்கேன்! புரியலையா சின்ன வீடு! ம்ம் வேண்டாம் நீ இருக்கிற வீடுதான் சின்ன வீடு! இப்போ ஒரு பெரிய வீடு.. சோ நான் ஒரு பெரிய வீடு வச்சுக்கலாம்னு இருக்கேன்! இப்போ கூட என்னால மூணு கல்யாணம் பண்ண முடியும் கல்யாணம் பண்ணலாம்ல்ல மூணு வீடு கூட வாங்கலாம்! என்ன சொல்ற?”
மகி எதுவும் பேசவில்லை.
சூர்யா அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். கோபம் இன்னும் தலைக்கேறியது. அந்த படங்களும் அவள் பேசிய அந்த கரைந்த மொழிகளும் தான் நினைவுக்கு வந்தது.
அதன் பின் மகிழினி அமைதியாக இருக்க…
சூர்யா , இப்படி அமைதியாக என்ன பண்றது? நீதானே பக்கத்திலேயே வரக்கூடாதுன்னு சொல்லிட்ட… அதை விட உன் பக்கத்துல வரதுக்கு எனக்கு விருப்பம் இல்ல… எனக்கு போர் அடிச்சு போச்சு! அதனால நான் ஒரு பெரிய வீட்டை வச்சுக்கலாம்னு இருக்கேன்!..
அவள் எதுவும் சொல்லவில்லை அமைதியாகிவிட…
சூர்யா, இது மட்டுமா இன்னும் மெயின் கோர்ஸ் ஒன்னு இருக்கு! மேட்டர் இப்பதான் ரிலீஸ் பண்ண போறேன்! என்று சொல்லிவிட்டு அவளை பார்த்தான்.
மகிழினி, என்ன விஷயம்?
சூர்யா, இது டைவர்ஸ் பேப்பர் இதுல சைன் பண்ணு…
மகி கொஞ்சம் அதிர்ச்சியுடன் பார்த்தாள். இதை அவள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.
சூர்யா ,கவலப்படாதம்மா உன்ன டைவர்ஸ் பண்ணிட்டு அப்படியே விட்டுட்டு போக மாட்டேன்! ஆக்சுவலா இந்த டைவர்ஸ் நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்கிறது மட்டும்தான். நம்ம ரெண்டு பேரும் ஒரே வீட்ல இருக்கலாம். ஒரே வீட்ல இல்ல… இங்க இருப்பேன் நைட் மம் சம் டைம்ஸ் மார்னிங் கூட பெரிய வீட்டுக்கு.. என நிறுத்தி கொண்டே அவளை பார்த்தான்.
மகியின் உதடுகள் எல்லாம் துடித்து போனது. முகம் கவலையில் அப்பிக்கிடந்தது. இன்னும் கொஞ்சம் விட்டால் கதறி அழுவாள் போல,
அதுதான் சூர்யாவிற்கு வேண்டும் அதை அவன் பார்க்க வேண்டும் அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சூர்யா அத்தோடு விடவில்லை. எப்படின்னு சொல்ல முடியல பட் இனிமேல் உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்க போகுது? அதனால இது ஹாஃப் டைவர்ஸ் என்று கூறினான்.
மகியின் மனதில் அழக்கூடாது. நீ அவர் முன்னாடி அழுதிடாதடி! அவமானமா இருக்கும்! யாரு எப்படி இருந்தா என்ன? நமக்கு நம்மளோட பையன் போதும்! அவரைப்பற்றி உனக்கென்ன ?என்ன என்னமோ பண்ணட்டும் !சொல்லாமல் ஏமாற்றினார். இப்போ சொல்லிக்கிட்டு ஏமாற்றுகிறார்.
சூர்யா இன்னைக்கு நான் பேச வேண்டிய நேரம் போலயே என்று நினைத்துக் கொண்டு“ நான் உன்ன டைவர்ஸ் பண்ணிட்டேன்! இந்த டைவர்ஸ் நம்ம ரெண்டு பேருக்குள்ள மட்டும்தான்! நம்ம இந்த அறைகுள்ள மட்டும் தான்! டைவர்ஸ் பண்ணி இருக்கோம்! இதை விட்டு வெளியே போகும்போது நீயும் நானும் நம்ம ரெண்டு பேரும் குழந்தைங்களுக்கு மட்டும் அப்பா அம்மாவா இருக்க போறோம்! இதுதான் இந்த டைவர்ஸ் ஓட அர்த்தம்! என்று கூறினான்.
மகிழினி உதட்டை கடித்துக் கொண்டாள். கைகளை இறுக்கி மடக்கிக்கொண்டு கால்களை தரையில் வலிக்கும்படி ஊன்றிக்கொண்டாள்.
சூர்யா, ஆமா இதுக்கு மேல என்னால மட்டும் என்ன பண்ண முடியும் சொல்லு பாக்கலாம் நான் ஆம்பள சோ எனக்குன்னு நிறைய தேவைகள் இருக்கும்ல உன்னையே நம்பிட்டு இருக்க முடியுமா அதனால இந்த அறைக்குள்ள மட்டும் உன்ன நான் டைவர்ஸ் பண்றேன். என்று கூறினான்
அதற்கு அவள் மறுப்பாள் என்று காத்துக் கொண்டிருந்தான். ஆனால் மேடம் தான் மறுக்கவில்லையே! “ சரி” ஏங்கே கையெழுத்து போடணும் என்று கேட்டாள்.
ரத்தம் கொதித்தது ரௌத்திரமும் சேர்ந்து ஹீமோகுளோபின் ஒரு பக்கம் என முற்றிலும் கோபம் தெரிந்து கொண்டிருந்தது.
சூர்யா அப்போ சைன் பண்ணு…
பேனா என்று கையை நீட்டினாள் பேனாவை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.
அவள் வாங்கி கையெழுத்து போட..
ரொம்ப நல்லது.
சூர்யா, சோ அந்த பெரிய வீடுன்னு சொன்னேன்ல அங்க நீதான் வந்து அதை ஓபன் பண்ணி கிரகப்பிரவேசம் பண்ணனும்! அதுக்கப்புறம் நானும் என்னோட பெரிய வீட்டுக்காரியும்! அந்த வீட்டுக்குள்ள போக போறோம்! சோ நாளைக்கு இந்த மூணு நாள்ல நம்ம பாப்பாவோட எல்லாரும் அந்த வீட்டுக்கு போக போறோம்! நீ வலது கால் எடுத்து வச்சு அதை ஆரம்பித்து வைக்கணும் என்று கூறினான்.
மகிழினிக்கு ஒரு நிமிடம் தலையை சுற்றியது.
ப நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ அமைதியா இருக்க பதில் சொல்லு! வருவியா? மாட்டியா? மேடம் பெரிய ஆளு கனடா எல்லாம் போயிருக்கீங்க… நிறைய பேர்த்த பார்த்திருப்பீங்க! நிறைய பேசி இருப்பீங்க! உங்களுக்கு கூட விருப்பம் இருந்தா யாரை வேணாலும் கட்டிக்கோங்க !என்று வேண்டுமென்றே குத்தலாக பேசினான்.
மகி, என்னை உங்கள மாதிரி நினைத்தீர்களா?
சூர்யா அவளை ஆள பார்த்தான். அப்போ நீ பத்தினின்னு சொல்ற அப்படித்தானே!..
மகி, ஆமா நீங்க சொன்னாலும் சொல்லலாம் என்றாலும் நான் பத்தினி தான் என்று கூறினாள்.
இதற்கு முன்னாடி சூர்யா அவளிடம் கேட்டிருந்தால் அவள் தயங்கி இருப்பாள்.ஏனென்றால் தூரிகை அப்போ யாரென்று அப்பொழுது மகிழினிக்கு தெரியாது. ஆனால்… இப்பொழுது தன் கணவன் தான் அது என்று தெரியும் அதனால் அவள் பத்னி தான்!.
அப்போ கிரகப்பிரவேசத்துக்கு ரெடியாயிரு என்று கூறிவிட்டு தூங்கச் சென்றான்.
மகிழினி, அவசரப்பட்டு விட்டோமோ என்று மனதில் தோன்றியது.
அடுத்த நாள் காலை இன்பா ஆர்வத்துடன் அவனுடைய ஆபீஸ் உள்ளே நுழைந்தான்.
இன்பா, மச்சி பார்ட்டின்னு சொன்ன!.. என்ன வாங்கி வச்சிருக்க… சீக்கிரம் வா! வா! கரெக்டா மதியம் வெயில் சுள்ளுன்னு அடிக்குது! இத குடிச்சா அப்படியே சொர்க்கத்துக்கே போலாம்!.
சூர்யா அவனுடைய பெல்ட்டை உறுதி கொண்டே “என்ன கேட்ட உனக்கு தா. வாங்கி வச்சு இருக்கேன். சொர்க்கத்துக்கு போலாமா! வா நான் சொர்க்கத்தை காட்டுறேன்!.
இன்பா, டேய்….?
சூர்யா….? .
தொடரும்..
Episode 364,
இன்பா, மச்சி பார்ட்டின்னு சொன்ன!.. என்ன வாங்கி வச்சிருக்க… சீக்கிரம் வா! வா! கரெக்டா மதியம் வெயில் சுள்ளுன்னு அடிக்குது!
சூர்யா அவனுடைய பெல்ட்டை உறுவி கொண்டே “என்ன கேட்ட உனக்கு தான் வாங்கி வச்சு இருக்கேன்! வாடா!. . சொர்க்கத்துக்கு போலாமா! வா நான் உனக்கு சொர்க்கத்தை காட்டுறேன்!.
இன்பா, மச்சி! பெல்ட் எதுக்கு கலட்டுற! மகி உள்ளே இருக்காளா! இப்போ தானே குழந்தை பிறந்து இருக்கு! அதுக்குள் எப்டி? சரி குழப்பமா இருக்கே!.. எனி வே நான் இதையெல்லாம் பார்க்க மாட்டேன்!. என அவன் திரும்பி நடக்க..
சூர்யா, காதல் கோவில பத்தி கதை சொல்லு ராகவ்!. என கூறினான்.
இதை கேட்டதும் இன்பா ஒரு நிமிடம் அதே இடத்தில் அப்படியே நின்றான்.
சூர்யா அவனுக்கு முன்னால் வந்து கைகட்டி நின்று கொண்டு “ நான் சொல்றது காது கேட்கலையா? அந்த காதல் கோவிலை பற்றிய கதை சொல்லு ராகவன்னு கேட்டேன்!” என்று கூறிவிட்டு கதவை சாத்தி அவன் முன்னால் நின்றான்.
இன்பா ,உடனே “காதல் கோவிலா? எனக்கு எதுவும் நினைப்பில்லயே!. நானும் சத்ய தேவும் போனோம் அங்கே யாரும் வரல அதனால அப்படியே திரும்பி வந்துட்டோம்!”
பொய் சொல்லாம உண்மைய மட்டும் சொல்றியா? இல்ல என்கிட்ட இந்த பெல்ட்ல அடி வாங்குறயா?என சூர்யா கேட்டான்.
டேய் போடா!.
“கண்டிப்பா அடிப்பேன் நிஜமா அடிப்பேன் டா!.” என கூறினான்.
இல்ல டா சூர்யா எனக்கு நிஜமா! தெரியாது! நீ சத்ய தேவ் கிட்ட கேட்டு பாரு!
சூர்யா, சரி அப்ப கிளம்பு! இனி என்னை தேடி எப்பவும் வந்துவிடாதே! என்று கூறினான்.
என்ன பேசிட்டு இருக்க சூர்யா!..
சூர்யா, “உனக்கு தெரியும்னு, எனக்கு தெரியும்! அதனால மூடிட்டு ஒழுங்கா எல்லாத்தையும் சொல்ற! நீ போலீஸ் காரன் இந்நேரம் புலன் விசாரணை பண்ணி இருப்ப ஒழுங்கா சொல்லிடு இல்ல அப்படியே ஓடி போயிடு!. ”
சூர்யா இன்பாவையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் இன்பா தடுமாறிக் கொண்டிருந்தான்.
இன்பா மனதில் “இவன் கிட்ட எப்படி சொல்றது? ஒருவேளை ரெண்டு பேருக்கும் முட்டி இருக்குமோ! மகி கிட்ட விஷயத்தை சொல்லி இருப்பானோ? அதனால தான் மச்சான் கேட்கிறான் போல. சரி சொல்லுவோம்!”
சூர்யா லேப் டாப் எடுத்து வைத்து கொண்டு சரி கிளம்புங்க மிஸ்டர் இன்ப ராகவன்!.
இன்பா ஒரு பெரு மூச்சை விட்டு மச்சி காதல் கோவில்ல இருந்து ரிட்டர்ன் வந்ததுக்கு அப்புறம்…..
சூர்யா, அப்புறம் என அவனை பார்த்தான்.
இன்பா, அங்கே எடுத்த அங்கே வந்து!.
சூர்யா, அங்க மகி வரலன்னு தெரியும்! சோ அவங்க யாரு வந்தா நீ யாரை பார்த்த? என்று கேட்டான்.
இன்பா, மச்சி அங்க விவேகா வந்தாள்! ஆனா நான் அவளை பார்க்கல…
சூர்யா , அப்போ எல்லா விஷயமும் உனக்கு முன்னாடியே தெரியுமா?
இன்பா, தெரியும் மச்சி!..
சூர்யா, அப்புறம் ஏன்டா என்கிட்ட சொல்லல…
இன்பா , நீயும் மகியும் சண்டை போட்டிங்களா? உங்க ரெண்டு பேருக்குள்ள எதுவும் பிரச்சனையா?
சூர்யா, நா கேட்டதுக்கு நீ பதில் சொல்லு! ஏன் ? என்கிட்ட சொல்லல
இன்பா, அது வந்து உங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வரக்கூடாது என்று தான் சொல்லல…
சூர்யா, உதட்டை கடித்து கொண்டு தலையை கோதி கொண்டான்.
இன்பா, இப்ப என்னடா ஆச்சு? எதுக்கு இப்படி பண்ற? நான் எவ்ளோ ஹேப்பியா வந்தேன் தெரியுமா?
சூர்யா, நா சந்தோஷமா இல்லடா இன்பா!..
இன்பா திடுக்கிட்டு என்ன டா சொல்ற? என்ன சூரியா நடந்தது!..
சூரியன் உதட்டை கடித்துக் கொண்டே ஒன்னும் இல்ல விடு! இனி நான் யாருன்னு அவளுக்கு காட்ட போறேன்! நான் ஒரு பெரிய வீடு செட் பண்ணலாம்னு இருக்கேன் டா!
இன்பா, தொடப்பக்கட்ட பிஞ்சிடும் என்று கூறினான் .
சூர்யா புருவம் தூக்கி கொண்டே “என்ன துப்பாக்கியில் சுற்றுவேன்ன்னு சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்! அதென்ன தொடப்பக்கட்ட பிஞ்சிடும்ன்னு சொல்ற.. அப்போ நீதான் எல்லா வேலையும் அவளுக்கு செஞ்சு கொடுத்துட்டு இருக்கியா!” என்று விவேகாவை பற்றி கேட்டான்.
இன்பா, நான் எதுக்கு வேலை செய்கிறேன்! நான் ஐபிஎஸ் ஆபிஸர் தெரியுமில்ல… அவளுக்கு எல்லா வேலையும் தெரியும்! அவ வந்து செஞ்சு கொடுப்பா! என்று விவேகாவை பற்றி பேசினான்.
சூர்யா ,“அதையும் தான் நான் பார்க்கிறேனே? சரி நீ போயிட்டு வா! இன்பா என்ன போன்னு சொல்ற! ஒழுங்கா எனக்கு பார்ட்டி கொடு! அதைவிட முக்கியமா இந்த சின்ன வீடு செட் பண்றேன் பெரிய வீட்ல செட் பண்றேன்னு தூக்கி நிக்க வைக்கிறேன்! என்ற கதை எல்லாம் பேசின எங்க இருந்தாலும் வந்து உதைப்பேன்!”
சூர்யா அதை பார்த்து சிரித்து கொண்டே “கல்யாணத்துக்கு முன்னாடி சும்மா சிறப்பான சம்பவம் பண்ணி இருக்க.!”கூறினான்.
இன்பா, நீயும் சண்டை போடறேன் சண்டை போடறேன்னு சொல்லி நல்ல சம்பவத்தை பண்ணி இருக்க… அப்புறம் என்ன? அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு!. ஆனால் ஒரே ஒரு வருத்தம் தான்!..
சூர்யா, என்ன வருத்தம் உனக்கு? என்று கேட்டான்.
இன்பா, மகி இப்போ ஒரு பையனை பெத்து போட்டு இருந்தாள்னா!. இப்போ விவேகா வயித்துள இருக்க என் பொண்ணுக்கும் உன்னோட பையனுக்கும் கல்யாணம் பண்ணி இருப்பேன்! ஆனால் இப்போ உனக்கு பாப்பா பிறந்து இருக்கே!. அவளும் ஏஞ்சல் மாதிரி தான் இருக்கா!. என்று கூறினான்.
சூர்யா, அதுக்கு என்ன அதான் அந்த குட்டி குட்டன் இருக்கானே! கண்ணு குட்டி பின்னாடியே சுத்திட்டு இருக்கான்!.
இன்பா, அது மட்டும் இங்க நடக்காது! அவன் மட்டும் என் வீட்டுக்கு வந்தான்! ரெண்டு பேரையும் கரெக்ட் பண்ணுவான்.
சூர்யா, நீ யாரை சொல்ற?
இன்பா, விவேகாவையும் ரிதமையும் தான் சொல்றேன்! அவன் வேண்டாம் சூர்யா! அவன் என்ன பண்றான் தெரியுமா? உன்னை விட பத்து சுழி கூட இருக்கு!.
சூர்யா சிரித்துக்கொண்டே பரவால்ல ரித்துவ கண்ணுக்குட்டிய எனக்கு அனுப்பி விடு!.
இன்பா, நீ இன்னொரு பையன் பெத்துக்கோ! நான் கண்டிப்பா ரிதம அனுப்புறேன்! இப்ப எப்படி அனுப்ப முடியும் ?
சூர்யா, இனி நடக்காது! Family planning பண்ணிட்டா!.
இன்பா, ஏன் ஜன தொகைய குறைக்க பிளான் பண்ணி இருக்கீங்க போல..
சூர்யா, எனக்கு தோணுது! நான் சாபம் விடுகிறேன்!
இன்பா, ஓ
இன்பா, எதுக்குடா இப்படி சொல்ற…
சூர்யா, எனக்கு ரெண்டு பையன்! சோ, உனக்கு ஒரு பையனாவது வேணும்!. இல்ல அத அப்ப பாத்துக்கலாம் சரி வா! ஜாலி பண்ணலாம்.. என்று இருவரும் போய் குடிக்க ஆரம்பித்தார்கள்.
(புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு இங்கே என் கதைக்கு தேவைப்பட்டால் எழுதிக் கொள்கிறேன்)
வந்த நாட்களில் அந்த தனி வீட்டு பில்லாவில் அனைத்து பொருட்களும் வாங்கி வைக்கப்பட்டு வண்ண பூச்சி அடிக்கப்பட்டது வீடு தயாரானது சூர்யா அனைவருக்கும் சர்ப்ரைஸ் என்று வசந்தன் கலைவாணி உமா நடராஜ் மகிழினி சத்யதேவ் மிதுன் தேவ் மற்றும் புதிதாக பிறந்துள்ள குழந்தை உதயன் கார்த்திக் குடும்பம் என அனைவரையும் அழைத்துச் சென்றான். ராம் கிதா, ஹரிணி, ரகு ஜெனி, ஆதி , ஜனனி, என மொத்த பட்டாளமும் வந்தது. ஜெய் மற்றும் கீர்த்தனா வர வில்லை. அவர்களுக்கு கல்யாணம் நேரம். சூர்யா அவளின் காதுக்குள் நீதான் இப்போ வலது கால் எடுத்து வச்சு அந்த வீட்டில் விளக்கு ஏத்த போற சோ இதுதான் என்னோட பெரிய வீடு என்று கூறினான் சரியாக அவர்கள் உள்ளே சென்று பூஜையை ஆரம்பிக்கும் நேரம் கரெக்ட் டைமுக்கு வந்துட்டேனா என்று வெளியே ஒரு குரல் கேட்டது யார் என அனைவரும் திரும்பி பார்க்க…
மேக்னா சிரித்த முகத்துடன் கையில் பூங்கொத்துடன் நின்று கொண்டிருந்தாள்.
எல்லாரும் அவளை பார்க்க…
சூர்யா சிரித்துக்கொண்டே கரெக்டான டைமுக்கு தான் வந்திருக்க சரியா வந்திருக்க.. என சொல்லி கொண்டே அவளை அழைக்க சென்றான்.
புது வீடு எப்படி இருக்கு? என கேட்க..
மகி அப்படியே நின்றாள். உமா, மகி! கைய சுட்டுக்க போற! பாரு பார்த்து மா!.
கலை, மானு! உன்னோட கவனம் எங்கே இருக்கு!..
ஒன் ஒன்னும் இல்ல மா! அத்தை எதோ மறந்தது போல இருந்தது. அதான் என சமாளித்தாள்.
சூர்யா பின்னால் மேக்னா வந்தாள். சத்ய தேவ் தன் தந்தையின் அருகில் போய் நின்று கொண்டான்.
மேக்னா, அவர்கள் குடுமத்தை பார்த்தாள். மிதுன் அப்படியே சூர்யா போல இருந்தான்.
ஹே உங்க பேர் என்ன? இங்கே வாங்க!.
மிதுன் அழகான பெண்ணை பார்த்ததும் men will be men என்பதை நிருப்பிப்பது போல சிரித்து கொண்டே அவளின் அருகில் சென்றான்.
மகி அவனை கண்ட படி முறைத்தாள்.
கலை, மானு! சீக்கிரம் விளக்கு மட்டும் ஏற்று! மற்றது எல்லாம் அண்ணி பண்ணட்டும்!.
மகி அதன் பின் திரும்பி கொண்டு விளக்கு அனைத்தும் ஏற்றி முடித்தாள்.
உமா வந்து அவர்களுடைய குல தெய்வ படத்தை வைத்து பூஜை செய்து அனைத்து தெய்வங்களையும் வேண்டினார்கள்.
அவர்கள் சாமி கும்பிட்டு கொண்டு இருக்கும் போதே இன்பா மற்றும் விவேகா ரிதம அழைத்து கொண்டு வந்தார்கள்.
ராகவ் வீடு பட்டாசா இருக்கு டா? என விவேகா கூறிட…
இன்பா, அப்போ உட்கார்ந்து வெடி நாங்க உள்ளே போறோம்!.
இதை கேட்டதும் ரிதம் கண்ணகுழி தெரிய சிரிக்க ஆரம்பித்தாள்.
விவேகா, என்ன டி உனக்கு கெக்க புக்கண்ணு சிரிப்பு! ராஸ்கல்!.
இன்பா, ஹே என்ன மிரட்டுற! பிச்சு!.
விவேகா, யாரு நீங்க? ரெண்டு பேரும் சேர்ந்து கிண்டல் பண்றீங்க! இருக்கட்டும். உங்க கிட்ட இனி பேசவே மாட்டேன்! You too.. mind it என மெதுவாக நடந்து வீட்டுக்குள் சென்றாள்.
Baby!. Baby! என இரண்டு குரல்கள் கேட்டது. ரிதம் இன்பா இருவரும் தான் அழைத்தார்கள்.
இடியட்ஸ்! என திட்டி கொண்டே உள்ளே நுழைந்தாள்.
அக்கா!.
மகி, அறிவு வா! வா!.
ரிதம், அவளுக்கு அறிவே இல்ல டாடி! ஆனால் மாமி அறிவு சொல்றாங்க!.
இன்பா சிரித்து கொண்டே ம்ம் சரி தான் டிம்பிள் அவள் காதில் கேட்டது! அப்புறம் அந்த உப்மா கூட செய்து தர மாட்டாள்.
ரிதம், வியாக் டாடி!. .
இன்பா, ஸ்ஸஸ் வேணாம்! அவள் காதுக்கு கேட்டுற போகுது! என சொல்லி விட்டு அவர்கள் புன்னகையுடன் சென்றார்கள்.
விவேகா மகியிடம் ஒரு காமாட்சி விளக்கு அது கூடவே ரெண்டு வெள்ளி குத்துவிளக்கு, மற்றும் குங்கும சிமில் என அனைத்தையும் ஒரு தாம்பூல தட்டில் வைத்து கொடுத்தாள்.
அக்கா வாங்குக்கொங்க!.
மகி, எதுக்கு இதெல்லாம்!. என சிரித்து கொண்டே கேட்டாள்.
சூர்யா, அவள் அப்படி தான் விவேகா நீ கொடு! இந்த வீட்டுக்கு பெஸ்டா நீ தான் கிஃப்ட் கொடுத்து இருக்க.
உமா சிரித்து கொண்டே இன்பா உன் பொண்டாட்டி லட்சுமியோட புது வீட்டுக்கு வந்து இருக்கா! எங்களுக்கு நல்ல சகுனம்!
இன்பா, ஆமா மம்மி! என சிரித்தான்.
கலை வசந்தன் அருகில் சென்று இதுக்கு என்னங்க சீர் செய்யரது? எவ்ளோ செலவு ஆகும்? அண்ணி மகிய எதுவும் சொல்ல போறாங்க!.
வசந்தன், சரி நம்ம வீட்டுக்கு போய் பார்த்து கொள்வோம்! எதுவும் பணம் இருக்கா அப்டின்னு பார்க்கலாம்.
அந்த நேரம் மாயா மற்றும் வெங்கட் இருவரும் வந்தார்கள். மாயா வெள்ளி குடம் மற்றும் டம்ளர் என அது கூடவே குபேரன் சிலை வாங்கி கொண்டு வந்தார்கள்.
மாயா, மாப்பிள்ளை வாங்க மகி வா! இது தான் நம்ம வீட்டு கிஃப்ட் வாங்கிக்க..
சூர்யா, என்ன அத்தை எதுக்கு இதெல்லாம் வாங்கிட்டு வந்தீங்க!.
மாயா, கேட்டாலும் கேட்க வில்லை என்றாலும் செய்வேன்! அவளுக்கு நாங்க செய்யாம வேற யார் செய்வா? வருண் வேற சொல்லி அனுப்பி இருக்கான். அவன் வரும் போது கிஃப்ட் வாங்கிட்டு வரானாமா!.
இதையெல்லாம் கலை வாணி இயலாமையுடன் பார்த்து கொண்டு இருந்தார். வசந்தன், இப்போ எதுக்கு அவங்கள பார்க்கிற!
கலை வாணி, எல்லாம் என்னோட நேரம்! இதையெல்லாம் பார்க்க எனக்கு தலையெழுத்து! யார் யாரோ சீர் வாங்கி வைக்கிறாங்க! இப்போ நான் எப்டி மகுக்கு சீர் செய்யர்து! நீங்க நம்ம நகைய கொஞ்சம் பேங்க்ல வையுங்க! மகிக்கி எதாவ்து நம்ம செய்தே ஆகனும்!.
வசந்தன், நீ ஓவரா பண்ற! மாப்பிள்ளை நம்ம கிட்ட கேட்டாரா! என இருவரும் பேசி கொண்டு இருக்க..
உதயன், அப்பா! என அருகில் வந்தான்.
கலை, எதுக்கு கூட பிறந்தவன் இருக்கான்? நான் எதுக்கு பெத்தென்! கண்டவங்க எது எதோ செய்யறாங்க! ஆனால் பிறந்தவன் என்ன செய்தான். என ஜாடை பேசினார்.
உதயன், மா முகத்தை பார்த்து சொல்லுங்க.. இப்போ என்ன ஆச்சு?
சூர்யா அனைவரையும் பார்த்து பேசி விட்டு அவர்களிடம் வந்தான். இப்போ என்ன ஆச்சு?
வசந்தன், ஒன்னும் இல்ல மாப்பிள்ளை நீங்க எப்போ கிரக பிரவேசம் செய்ய போறீங்க? .
சூர்யா, எதுக்கு மாமா தேவையில்லாத செலவு! பாருங்க எவ்ளோ செய்கிறார்களோ திருப்பி நானும் செய்யணும்! அதனால் வேணாம் மாமா!
உதயன், மாமா உங்களுக்கு என்ன வேணும்?
சூர்யா, ம்ம் ஒரு பொண்ணு பெற்று கொடு வேற ஒன்னும் வேணாம்!. மச்சான்.
உதயன், மாமா வீடு வாங்கியதுக்கு சீர்!.
சூர்யா, அதுக்கு தான் பொண்ணு கேட்கிறேன்! பெற்று கொடுத்திடு! அந்த குட்டி குட்டன கூட்டி போயிடு! பொண்ணு வேணும்!. என சிரித்தான்.
கலை கண்களில் நீர் கோர்க்க இல்ல மாப்பிள்ளை உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க! இப்போ கொஞ்சம் நிலைமை சரி இல்லை ஆனால் நான் கண்டிப்பா உங்களுக்கு செய்வேன்!.
சூரியா, அத்தை என்ன அத்தை ! உங்க பொண்ணை கொடுத்து இருக்கீங்க! இதுக்கு மேல எனக்கு என்ன வேணும்? அதெல்லாம் ஒன்னும் வேணாம்! வேணும்னா மச்சான் பெரிய கை அங்கே கேளுங்க!.
கலை, அந்த கொடுப்பணை எனக்கு எப்போவும் வேணாம் மாப்ளை! நமக்கு தரித்திரம் பிடிக்கும் என குத்தி காட்டினார்.
உதயனுக்கு முகம் மாறி போனது…
அடுத்து வந்த நாட்களின் சூர்யா என்ன செய்தான்? அதை நாளை பார்ப்போம்!
Next ஜெய் ஆகாஷ் மற்றும் கீர்த்தனா திருமணம்..
தேஜு வருகை தருகிறாள்?
அதை நாளை பார்ப்போம்!.
தொடரும்..
Episode 365,
சூர்யா அவனுடைய வீட்டிற்கு வந்த அனைவருக்கும் மதிய உணவை தயார் செய்தவன். சாப்பிட வைத்து அனைவரையும் வழி அனுப்பி வைத்தான்.
உமா மற்றும் நடராஜ் இருவரும் கிளம்பி விட சத்ய தேவ் மற்றும் மிதுன் தேவ் இருவரையும் வசந்தன் மற்றும் கலைவாணிவுடன் அனுப்பி வைத்தான்.
புது வீடு வாங்கியதற்கான பார்ட்டியை தன் ஆண் நண்பர்களுக்கு தனியாக தருவதாக கூறியிருந்தான். கடைசியாக அங்கிருந்து மேக்னா இருந்தாள்.அவளை வெளியே சென்று வழி அனுப்பியவன் ஒரு பெரு மூச்சை விட்டு உள்ளே வந்தான்.
அங்கே மகிழினி தன் குழந்தையை வைத்துக்கொண்டு காத்திருந்தாள்.
உமா போன் செய்து “என்னடா மகிய இன்னும் அனுப்பாம இருக்க…
சூர்யா, நானும் அவளும் சேர்ந்து வருவோம் நீங்க முன்னாடி போங்க..
சூர்யா அவளை நோக்கி நடந்து வர மகிழினி சோபாவில் குழந்தையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
நேராக அவள் அருகில் சென்றவன் கையில் இருந்து குழந்தையை வாங்கி முத்தம் பதித்தான்.
புது வீடு புடிச்சிருக்கா?
மஹிலினி சுற்றிலும் பார்த்தாள்.
சூர்யா உன்ன தான் கேட்கிறேன் பிடிச்சிருக்கா? என்று அவளைப் பார்த்தான்.
மகிழினி எதுவும் சொல்லாமல் அமைதியாக அவனைப் பார்க்க…
சூர்யா, உனக்கு பிடிச்சா என்ன? புடிக்கலைன்னா என்ன? இந்த வீட்ல நீ இருக்க போறதில்ல… இது எனக்கான வீடு!
அவளுக்கு உள்ளம் வெம்பி போனது இருந்தாலும் கூடவே கோபமும் சேர்ந்து கொண்டது. யாருடன் இருந்தால் எனக்கு என்ன? திருமணம் ஆகி இருந்தும் யார் என்றே தெரியாத ஒருவரிடம் போன் பேசி இருக்கிறான். இது எவ்வளவு பெரிய விஷயம்! அவளை நேரில் பார்க்க சென்றிருக்கிறான். இது அதைவிட கேவலமான விஷயம்.
அவளும் அவனுக்கு அசராமல் பதிலளித்தார் அதுவும் சரிதான் எனக்கு இந்த வீடு தேவையில்லை
சூர்யா, திமிர் மட்டும் உனக்கு குறையவே இல்லடி!
மகி, எனக்கு எதுக்கு குறையும்! நான் என்ன பண்ண..
சூர்யா, ஓ நீ எதுவுமே பண்ணல!.. ஆமா என் மேல இருக்க கோபத்துக்கு என்ன காரணம்?
மகிழினி தன்னை சுதாரித்துக் கொண்டே “நீங்கள் என் மேல இப்படி எரிஞ்சு விழறதுக்கு என்ன காரணம்?”
சூர்யா, நீ தான் முதன் முதலில் என் மேல கோபப்பட்ட என்று அவளைப் பார்த்தான்.
மகிழினி, பிடிக்கல…
சூர்யா, நீ பிடிக்கலைன்னு சொன்னது எனக்கு சுத்தமா பிடிக்கல… அதைவிட இப்ப எனக்கு உன் கூட வாழவே எனக்கு பிடிக்கல டி!..
அவள் கண்களில் கண்ணீர் தான் வந்து சேர்ந்தது. இருந்தாலும் என்ன செய்வாள் எதுவும் சொல்லவில்லை!.
சூர்யா, இனிமே இதுக்கு பழகிக்க என்ன நான் எப்பவும் உன் கிட்ட வர மாட்டேன்.
மகிழினி என உங்களைப் போல் உணர்வுகளை அடக்க தெரியாத ஆள் போல என்னை நினைக்காதீங்க நான் மனுஷி!
சூர்யா, எனக்கு 24 மணி நேரமும் இதுதான் நெனப்பு என ஆத்திரமாக வந்தது. உதட்டை கடித்துக் கொண்டான்.
தன் பெண்ணை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டவன். நீ போதும்டா செல்லம்! நீ புரிஞ்சுக்குவ அப்பாவ… என்று சொல்லிவிட்டு பார்க்கிறேனே? யார் மிருகம்? யாரும் மனுஷன்னு? என்று சொல்லிவிட்டு அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு அவன் கிளம்பி விட்டான்.
தன் ஆண் நண்பர்கள் தனக்காக காத்திருக்கிறார்கள் அவர்களுடன் சேர்ந்து அந்த நாளை செலவழித்தான்.
மகிழினி மனதில் பாரத்துடன் சுற்றிக் கொண்டிருந்தாள்.
அப்படியே அடுத்ததாக ஜெய் மற்றும் கீர்த்தனாவின் திருமணம் அவர்களுடைய குலதெய்வ கோவிலில் எளிமையாக நடைபெற்றது.ஆகாஷ் குடும்பத்தினர் வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக வைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டனர்.
திருமணத்திற்கு தேஜு வந்தாள். அப்பொழுது மிகவும் பவ்யமாக நடந்து கொண்டாள். அடுத்த நாள் பிரம்மாண்டமாக ஜெய் ஆகாஷ் மற்றும் கீர்த்தனாவின் வரவேற்பு ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
ஏனென்றால் ஜெய் ஆகாஷ்ன் பூர்வீகம் ஹைதராபாத்! அதனால் அனைவரும் அங்கு சென்றார்கள்.
கீர்த்தனாவின் வீட்டிலிருந்து பெற்றோர்கள் செந்தில், தணம் , ஹரிஷ், கனிமொழி பாக்யா, மதிவாணன், கார்த்திக், மை விழி அனைவரும் கிளம்பியினார்கள் .
ஜெய் மிகவும் உற்சாகமாக இருக்க தேஜு கீர்த்தனாவிற்கு இணையாக தயாராகி வந்திருந்தாள்.
அங்கு இருக்கும் அனைவரும் பார்வையும் தேஜுவின் மீதுதான் இருந்தது. இவள் ஏன் இங்கு வந்திருக்கிறாள்? அதுவும் எதிராளி வீட்டிலிருந்து எஸ். பி .ஆர் வீட்டில் இருந்து இவள் மட்டும் வந்திருக்கிறாள். என்று பிரகாஷ் குடும்பத்தை நினைத்து அனைவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
சில உறவினர்கள் ஆகாஷிடம் “ஆகாஷ் உங்க அண்ணா பிரகாஷ் கிட்ட நீங்க சேர்ந்து கொண்டீர்களா?
ஆகாஷ் புரியாமல்“ எதுக்கு அப்படி கேக்குறீங்க?” அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே! எப்பவும் போல தான் இருக்கிறோம்!
அங்கு ஒரு சிலர் “இல்ல பிரகாஷோட மருமகள் தேஜுசூர்யாபிரகாஷ் வந்திருக்காங்க. அதனால தான்!
ஆகாஷுக்கு இவள் எதுக்குடா இங்கு வந்திருக்கிறாள் என்று தோன்றியது.
ஆகாஷ் நேராக ஜெயிடம் போய் கேட்டார். உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு! அவள எதுக்கு நீ இந்த ஃபங்ஷனுக்கு கூப்பிட்ட! இதெல்லாம் கீர்த்தனாவுக்கு தெரியுமா?
ஜெய், எக்ஸ் லவ்வர் மட்டும் இல்ல… அவ என்னோட பிரண்டு ஜெய் கூறினான்.
ஆகாஷ், நீ பண்றது ஒன்னும் சரியில்ல.. அந்த spr குடும்பம் பத்தி உனக்கு தெரியாது! அவங்களை விட ரொம்ப மோசமான பொண்ணு இவள் தான்! கிட்டத்தட்ட அந்த பிரகாஷ் குடும்பத்திலேயே spr-அ விட அந்த பொண்ணு ரொம்ப டேஞ்சர் தேவையில்லாத வேலை எதுவும் பண்ணிக்காத.. கீர்த்தனா கூட ஏதாவது பிரச்சனை வந்துவிட போகுது! என்று ஆகாஷ் எச்சரித்து விட்டு சென்றார்.
ஜெய் அதெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாமல் “போங்க டாடி அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல! நான் பார்த்துக் கொள்கிறேன்! என்று சொல்லிவிட்டான்.
அனைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொழிலதிபர்கள் அவனுக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து அனைவரையும் புன்னகை முகத்துடன் கீர்த்தனா மற்றும் ஜெய் இருவரும் அழைத்தார்கள்.
அந்த இடம் மிகவும் சந்தோஷமாக இருந்தது வருன் ,ஸ்ரீமதி, மாயா வெங்கட் இன்று அனைவரும் இருந்தார்கள்.
ஜெயிக்கு ஒரே ஒரு வருத்தம் தான் உடனே சூர்யாவிற்கு அழைத்தான். டேய் என்னடா பண்ணிட்டு இருக்க?எல்லாரும் வந்துட்டாங்க! நீ மட்டும் தான் வரல!..
சூர்யா கிளம்பிக்கொண்டே எதுக்கு ரொம்ப வருத்தப்படுற அதான் சாதிஷ்டல்ல, கீர்த்தனாவை கல்யாணம் பண்ணிட்ட ,அதுவும் லவ் மேரேஜ் பண்ணி இருக்க… எனக்காக எதுக்குடா வெயிட் பண்ற !.
ஜெய் சிரித்துக்கொண்டே “நீ இல்லாம எனக்கு கீர்த்தனா கிடைச்சிருப்பாளா? உன்னை பார்த்து உன் கூட பிரெண்டான அதனாலதான் கீர்த்தனா எனக்கு கிடைச்சிருக்கா!
சூர்யா , அவ்ளோதானா அதுக்கெல்லாம் என்னால வர முடியாது! ஜெய் சிரித்துக்கொண்டே சூர்யா நான் மிஸ் பண்றேன்! நீ வாடா முதல்ல நெருக்கமான பிரெண்ட்ஸ் யாருமே இல்ல உன்ன மாதிரி யாரும் ஓபன் டைப் கிடையாது. அதனால எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் .
ம்ம் என போன் வைத்தான்.
அந்த நேரம் பார்த்து இன்பராகவன் போன் செய்தான். மச்சி என்ன பண்ற? இன்னிக்கு விவேகா வீட்டில் இல்ல? வரியா நம்ம ரெண்டு பேரும் பார்ட்டி பண்ணலாம்?
சூர்யா, இல்லடா எனக்கு முக்கியமான வேலை இருக்கு!..
இன்பா முக்கியமான வேலையா என்னை விட உனக்கு முக்கியம் யாரு? மகி கூட இருக்கியா! குட்டி பிங்கி கூட இருக்கியோ? இட்ஸ் ஓகே!
சூர்யா, அவள் கூட நான் எதுக்கு இருக்க போறேன்! அவள் ஒரு திமிற்காரி!.
அப்போ என்ன முக்கியமான வேலை?
சூர்யா, ஹைதராபாத் போயிட்டு இருக்கேன்! மோஸ்ட்லி ரீச் ஆயிட்டேன்!
இன்பா, ஹைதராபாத்தில் உனக்கு என்ன வேலை புடுங்குற வேல?
சூர்யா, ஜெய் ஆகாஷ் தெரியுமா?
இன்பா, உன் பின்னாடியே சுத்திட்டு, எப்போ பாரு சிரிச்சுகிட்டே இருப்பானே! அவனா! .
சூர்யா, உனக்கு அவன் மேல என்னடா பொறாமை!..
இன்பா, எனக்கு அவனைப் பார்த்தாலே எரிச்சலா இருக்கு!.. சுத்தமா பிடிக்கல… அதுவும் உன் கூட சேர்ந்து சுத்தறது நினைச்சா! அதைவிட கடுப்பா இருக்கு!..
சூர்யா, சரி சரி விடு விடு எனக்கு நேரம் ஆகுது… நான் அப்புறம் கூப்பிடுறேன்!.
இன்பா, சரி போ! போற இல்ல விடு…இனி பாத்துக்குறேன்!..
சூர்யா, ரிட்டன் டிக்கெட் புக் பண்ணிட்டேன்! இன்னும் ஒன் ஹார்ல நான் அங்கே வந்துடுவேன் நீ கவலைப்படாத! நம்ம ரெண்டு பேரும் இன்னைக்கு நைட்டு பார்ட்டி பண்ணலாம்! எதுவும் கொஞ்சம் ஹாட்டா! கண்ணுக்குள் குளிர்ச்சியாக கிடைக்குமா?
இன்பா, ஹாட்டா அடுப்பு கறி கூட இங்க இல்ல… இந்த மாதிரி பெரிய வீடு! சின்ன வீடு! அப்டின்னு நீ ஏதாவது ஓவரா பில்டப் விட்ட உன்னை கொன்றுவேன் நாயே! என போன் வைத்தான்.
தேஜு அனைவரிடமும் நேர்த்தியாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டு ஜெய்யை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கீர்த்தனா இதை எதர்ச்சியாக கவனித்தவள் ஜெயிடம் என்னங்க?
கீர்த்தி கீர்த்தி என்று காதலுடன் ஜெய் பார்த்தான்.
அந்த தேஜூ!.
ஜெய், அவ என்னோட பிரண்டு அதனால நான் இன்வைட் பண்ணேன்!.
கீர்த்தனா, இந்த கதையெல்லாம் எனக்கு வேண்டாம்! அவ பாக்குற பார்வையே சரியில்லையே!
ஜெய், தெரியலையே கீர்த்தனா!
அவள் தலையைப் பிடித்துக் கொண்டே “எனக்கு இப்போ அவ இங்க இருக்க கூடாது! எப்படியாவது அவளை வெளியே அனுப்புங்க! எனக்கு பிடிக்கல!
ஜெய், அவளுக்கும் எனக்கும் நடுவுல எதுவும் இல்லை! உனக்கே தெரியும்! சும்மா பாக்குறா! நீ இதை சீரியஸா எடுத்துக்காத…
கீர்த்தனா, அவள் உங்களுடைய ex நானே இப்ப தான் ஹேப்பியா இருக்கிறேன் மொமெண்ட் சோ எனக்கு அவளை பிடிக்கவில்லை! நீங்கள் வெளியே அனுப்புங்க!
ஜெய் ,அப்படி பார்த்தா அந்த கார்த்திக தான் வெளியே அனுப்பனும்!..
கீர்த்தனா முறைத்துக் கொண்டே என்னோட கார்த்திக் மாமா அந்த மாதிரி டைப் கிடையாது! அதைவிட அவர் என்னை லவ் பண்ணவே இல்ல! நான் தான் அவர லவ் பண்ணேன்! இப்போ அவர் என்னையவா பாத்துட்டு இருக்காரு! அறிவு கெட்டவனே ஒழுங்கா அவளை அனுப்புற! இல்லன்னா இன்னைக்கு நைட்டு என்ன இப்போவே நான் உன்ன டைவர்ஸ் பண்ணிடுவேன்!
ஜெய், என்ன டி இப்படி பேசுற!.
கீர்த்தனா, அப்போ ஒழுங்கா மூடிட்டு வெளியே அனுப்பு என்று கூறினார்.
அதன்பின் ஜெய் அவளுக்கு போன் செய்தான்.
தேஜூ எடுத்த எடுப்பில் “இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க!..”
ஜெயிக்கு தூக்கி வாரி போட்டது. எதுக்கு தேஜூ! இப்படி பேசிட்டு இருக்க…
அவள் நடந்து கொண்டே எப்டி பேசிரன்!.
ஜெய், உன்னை நான் இப்பவே பாக்கணும்!..
தேஜு, நானும் அதுக்காக தான் காத்துட்டு இருக்கேன் என்று கூறினாள்.
சரியாக சூர்யா உள்ளே வரவும் ஜெய் போன் பேசிக்கொண்டே ரெஸ்ட் ரூம் செல்கிறேன் என்று தேஜூ சென்ற பக்கம் போய் நகரவும் சரியாக இருந்தது.
சூர்யா நேராக சிவன்யா மற்றும் பவன்யா இருவரையும் தூக்கிக்கொண்டு முத்தம் பதித்தான்.
சிவன்யா, டாடி மிதுன் அண்ணாவ கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல்ல குட்டி பாப்பா எங்கே!.
சூர்யா, குட்டி பாப்பா ரொம்ப குட்டியா இருக்காங்களா! அதனால சித்தி கூட வீட்ல இருக்காங்க… நம்ம வீட்டுக்கு வந்ததும், நான் உங்களை கூட்டிட்டு போறேன். என்று பேசிவிட்டு நேராக மேடை பக்கம் சென்றான்.
தேஜு நேராக ஜெய் அருகில் நெருங்கி கட்டிக் கொண்டாள்.
ஜெய் அவளை ஒரு நிமிடம் விலகி விட்டு என்ன தேஜூ பண்ற…
தேஜு, நான் உன்னை மிஸ் பண்ணிட்டேன் ஜெய்!..
அவன் திடுக்கிட்டு எனக்கு உன் மேல அப்படிப்பட்ட எண்ணம் எல்லாம் எதுவும் இல்லை. நீ spr பொண்டாட்டி அவ்ளோதான்! நான் உன்ன லவ் பண்ண நேரம் நீ என்ன புடிக்கலைன்னு சொல்லிட்ட …நான் மாறிட்டேன்.
தேஜு எதிரில் உள்ள சோபாவில் நன்றாக சாய்ந்து கொண்டு கால் மேல் கால் போட்டுக் கொண்டே ஒரு ராட்சசியை போல் சிரிக்க ஆரம்பித்தாள்.
ஜெய் அவளை அதிர்ச்சியுடன் வினோதமாகவும் பார்த்தான்.
தேஜு, என்ன அப்படி பார்க்கிறாய்
ஜெய், என்ன ஆச்சு? உனக்கு ?
தேஜு , எனக்கு ஒன்னும் ஆகல உனக்கென்ன ஆச்சு என்று கோபமான விழிகளில் கேட்டாள்.
ஜெய் எனக்கென்ன நான் நல்லா தான் இருக்கேன்.
தேஜு, சரி அதைவிட உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்..
ஜெய் , என்ன முக்கியமான விஷயம் எனக்கு அஞ்சு நிமிஷம் தான் அங்க கீர்த்தனா மேடையில் தனியா இருப்பாள்! போகணும்…
தேஜு, என்னை விட உனக்கு அவ ரொம்ப முக்கியமா போயிட்டாளா?
என்ன பேசுற?
ஜெய், இது விளையாட்டு இல்ல நீ வேற அவ வேற… ஆனால் அவ என்னோட பொண்டாட்டி !
தேஜு, என்னை பற்றி என்ன நினைச்ச இப்போ நான் உன்கூட… என்று நிறுத்திவிட்டு பார்த்தாள்.
அவன் சாக் ஆகி அவளை பார்த்தான்.
தேஜு, நீ நினைக்கிற மாதிரி அவ்ளோ கேவலமான ஆள் நான் கிடையாது. ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் உன்னை எனக்கு பிடிக்கும்! நீ நினைக்கிற மாதிரியான எண்ணமெல்லாம் உன் மேல எனக்கு இல்ல! அது கனவில் கூட வராது! என்னுடைய எண்ணம் ஒருத்தனுக்கு மட்டும்தான்! அது சூரிய பிரகாஷ் மட்டும் தான்!
ஜெய், உன்னோட நடவடிக்கை ஒன்றும் சரியில்லையே !.
தேஜு, என்ன புரியல!.
ஜெய், நான் உன்னோட வழியிலும் கிராஸ் பண்ணல உன் புருஷன் வழியிலும் கிராஸ் பண்ணல
தேஜு, என்னோட வழியில் நீ கிராஸ் பண்ணலையா? என்று அவனைப் பார்த்தாள்.
ஜெய், ஆமா…
தேஜு, நீ என்னோட வழியில் கிராஸ் பண்ணல… ஆனால் அந்த சூர்யா கூட உனக்கு என்ன வேலை? ஓவரா ஒட்டி உரசிட்டு இருக்க…
என்ன பேசுற தேஜூ என்னோட இஷ்டம்!..
தேஜு, யார் எப்படி போனா எனக்கு என்ன? எனக்கு உன்னால ஒரு காரியம் ஆகணும்!
என்ன விஷயம் சொல்லு
தேஜு, அதுவா முதல்ல கதவை சாத்திட்டு வா…
ஜெய், முடியாது, நீ முதல்ல கிளம்பு!
தேஜு, போய் கதவை சாத்துடா என்றும் மிரட்டினாள்.
அவன் கோபமாக வெளியே செல்ல தேஜூ அவனது கையைப் பிடித்து உள்ளே இழுத்து தள்ளி விட்டாள்.
அவன் ஒரு நிமிடம் தள்ளாடிக் கொண்டே நின்றான். தேஜு! என்ன பண்ணிட்டு இருக்க…
அவள் காதை குடைந்து கொண்டே அனைத்து விபரங்களையும் கூறினாள்.
இதைக் கேட்க கேட்க ஜெய் ஒரு நிமிடம் சிலையாக மாறிவிட்டான்.
தேஜு, கல்யாண வாழ்த்துக்கள்! நீ நிஜமாகவே என்னை உண்மையா லவ் பண்ணி இருந்தேனா! இந்த ஒரே ஒரு வேலையை மட்டும் பண்ணிடு.. வேற ஒன்னும் எதிர்பார்க்கல …ஏன்னா? என்னை யாருமே ட்ரூவா லவ் பண்ணது இல்ல.. என்று சிரித்துக் கொண்டே கூறினாள்.
ஜெய், உனக்கு என்ன பைத்தியமா? இதெல்லாம் பண்ண முடியாது! எவ்வளவு பெரிய விஷயத்தை தெரியுமா சொல்லி இருக்க…
தேஜு, நான் கீர்த்தனாவை உன்கிட்ட இருந்து fraction செகண்ட்ல பிரிச்சு காமிப்பேன்! குடும்பத்தையே சின்னாபின்னமாக்குவேன். பரவாயில்லையா ஜி!
ஜெய், இத்தனை வருஷம் கழிச்சு இவ்வளவு பெரிய உண்மை உனக்கு தெரிஞ்சிருக்கு! போய் சேர்வதை விட்டுட்டு எதுக்கு இந்த பழி வாங்கற குணம் எல்லாம்!.
தேஜு, அட்வைஸ் பண்ற விளக்கெண்ணெய் வேலையெல்லாம் எனக்கும் தெரியும் டா!. நான் சொல்ற வேலையை மட்டும் தான் நீ பண்ணனும்!..
ஜெய், சத்தியமா என்னால முடியாது!..தேஜு…. என்னால சூர்யாவுக்கு துரோகம் பண்ண முடியாது. ப்ளீஸ்?..
தேஜு, உன்கிட்ட இருந்து கீர்த்தனாவை பிரிச்சு என்ன பண்றேன்னு மட்டும் பாரு!..
ஜெய் கோபமாக தேஜுவின் கழுத்தை பிடித்து நெரிக்க வந்தான் தேஜி சிரித்துக்கொண்டே பண்ணுடா! நான் இங்க இருந்து வந்தது உன்னை கட்டியணைத்தது எல்லாமே இங்கே இருக்கிற ஒவ்வொரு மூலையிலும் அதுல கேமரா.. ஆல்ரெடி ரெக்கார்டர் தான்! ஒன்ஸ் நான் அதை போய் டீஆக்டிவேட் பண்ணல எல்லாமே சுடச்சுட உன்னோட பிசினஸ் பார்ட்னர்ஸ், அண்ட் இங்க இருக்கிற ஒவ்வொரு ஆளுங்களுக்கும் போகும் பரவாயில்லையா? நான் யாருன்னு உனக்கு தெரியாதா டா கண்ணா!.. மறுபடியும் தெரிஞ்சுக்கோ நான் தேஜு!..
ஜெய், அவள் மேலிருந்து கையை எடுத்தான்.
தேஜு, அந்த எஸ் பி ஆர் வேற என் மேல இப்போ ரொம்ப பைத்தியமா சுத்திட்டு இருக்கான் எதுவும் நீ பண்ணனு வச்சுக்க உன்ன துண்டு துண்டா வெட்ட கூட தயங்க மாட்டான் என்று அவனைப் பார்த்து கண்ணடித்தாள்.
ஜெய் , ஒரு நிமிடம் முகத்தை மூடினான்.
தேஜு அவளுடைய கழுத்தை பிடித்து பிடித்து அசுவாசமாக தேய்த்துக் கொண்டே “என்னை விட இப்போ வந்த சூர்யா முக்கியமாக போய்ட்டான்ல்ல! இருக்கட்டுமே! சோ உன்னோட முடிவு என்ன? உன்னை நான் சும்மா விடமாட்டேன்! என் லைன்ல கிராஸ் பண்ணிட்டல்ல… இருந்தாலும் உன் மேல கொஞ்சம் சாப்ட்கார்னர் இருந்தது. இனிமேல் அது கூட இல்லை…
ஜெய், எதுக்கு இப்படி பண்ற ப்ளீஸ் அவங்க எல்லாரும் உனக்கு நெருக்கமானவங்க… நீ அவங்களுக்கு இப்படி நினைக்கலாமா? நீ spr பற்றி நினைத்து பார்த்தியா!.
சிரித்துக்கொண்டே எவன்டா அவன் எஸ்பி யாரு எனக்கு அவனே இங்க முக்கியம் இல்ல புரியுதா spr ல இருந்து எங்க அப்பன் வரைக்கும் எவனும் எனக்கு முக்கியம் இல்ல…. இப்போதைக்கு தேவை ரிவெஞ் அத பண்ணிட்டா நான் ஹாப்பி சோ நான் என்ன பதில் சொல்ல போற…
ஜெய், எனக்கு கொஞ்சம் டைம் கொடு என்று கூறினான்.
தேஜு சிரித்துக்கொண்டே டைம் என்று யோசித்தவள். உன் பொண்டாட்டி இன்னும் சரியா 45 நாள் கழிச்சு பிரக்னண்டாவா! அதுவரைக்கும் உனக்கு நேரம் இருக்கு சோ! யோசிச்சுக்கோ!
ஜெய் அவளை திட்டிக்கிட்டுப் பார்த்தான் சிரித்துக் கொண்டே அனைத்து விஷயமும் கூறியவள்.“ கொஞ்சம் யோசிச்சுக்கோ நான் கிளம்புறேன்!” என்று அழகாக கண்ணை சிமிட்டு கொண்டே சென்றாள்.
ஜெய் தன்னை அசுவாசப்படுத்திக் கொண்டு முகத்தை கழுவியவன். என்ன செய்வது? என இப்பொழுது அவனுடைய மனநிலை மிகவும் மோசமாக மாறியது. தன்னை சரி செய்ய நினைத்தவன் .ஒவ்வொரு முறையும் தோற்றுப் போனான். அப்படியே நேராக எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் மேடைக்கு வந்து சேர்ந்தான்.
சூர்யா ஏய் ஃபிராடு எப்படியோ கொஞ்சி கொஞ்சி பேசி அவளை கல்யாணம் பண்ணிட்ட…
இதையெல்லாம் கேட்டதும் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் ஜெய் பேய் அறைந்தது போல் நின்று கொண்டிருந்தான்.
கீர்த்தனா என்னங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க சூர்யா மாமா பேசிட்டு இருக்காங்க நீங்க வேற ஏதோ உலகத்துல இருக்குற மாதிரி நின்னுட்டு இருக்கீங்க என்ன அவளோட நெனப்போ அவ போயிட்டாளா என்று கேட்டாள்.
ஜெய் உடனே சாரி சாரி மச்சி!.. ஆமாண்டா நீ வரதுக்கு இவ்ளோ லேட்டு! என்று ரொம்பவும் கஷ்டப்பட்டு பேசினான்.
சூர்யா ,நான் நல்லா இருக்கேன் கல்யாண வாழ்த்துக்கள் என்று கைகளை குலுக்கினான்.
ஜெய் என்ன கைகுலுகிற…
சூர்யா, அப்ப என்னடா பண்ண சொல்ற..
ஜெய் அவனே கட்டி அணைத்துக் கொண்டான் .ஜெய் உடம்பில் நடுக்கமாக இருந்தது.
சூர்யா ஏதோ உணர்ந்தவன் என்னடா நடுங்கிட்டு இருக்க… ஃபர்ஸ்ட் நைட் நெனச்சு நடுங்கறியோ!
கீர்த்தனா ,மாமா என்ன பேசிட்டு இருக்கீங்க!. என்று சூர்யாவை அதட்டினாள்.
ஜெய் உடனே சூரியதேவ் என்று கைகளைப் பிடித்துக் கொண்டான்.
சூர்யா, எங்க ஊர் பொண்ணை கட்டி இருக்க! அவள் நல்ல பொண்ணு ஓவரா சீன் போடாத! கீர்த்தி அவனை உன்னோட அடுத்த முறை பார்க்கும் போது ஜெய உன்னோட முந்திய பிடிச்சுட்டு தான் சுத்தணும்! அந்த அளவுக்கு நீ பண்ற சரியா!..
அவள் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே போங்க மாமா . என்று திரும்பிக் கொண்டாள்.
சூர்யா , கன்கிராஜுலேசன் ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்கணும்! அவனோட மொத்த காதலும் உனக்கு தான்! அதேபோலத்தான் கீர்த்தனா! ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு என்று இருவர் கையிலும் அந்த டிக்கெட் களை கொடுத்தான். கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் paris க்கு டிக்கெட்ஸ்…
ஜெய், என்னடா இது!
சூர்யா, எனக்கு நீ ரொம்ப ஸ்பெஷல் டா எனக்கு ராம், இன்பா எப்படி பிரண்ட்டோ அதேபோல தான் நீயும்!.
ஜெயிக்க இதையெல்லாம் கேட்டு உள்ளுக்குள் மிகவும் குற்ற உணர்வாக இருந்தது.
சூர்யா, சரி நான் கிளம்புறேன் என்று சொல்லி விடை பெற்றான் .போகும் சூர்யாவை ஜெய் பார்த்துக் கொண்டிருந்தான் .
ஜெய் என்ன முடிவு எடுக்கப் போகிறான்? அப்படி தேஜு ஜெயிடம் என்ன சொல்லி இருப்பாள்? அடுத்து மான் விழி மற்றும் சூரியதேவ் இருவரும் என்ன செய்கிறார்கள்? என்று நாளை பார்ப்போம்.
அதே போல உதயன், தாரா இருவரும் என்ன செய்கிறார்கள்? மைவிழிக்கு சீமந்த நிகழ்வு வருகிறது தேஜு வரப் போகிறாள்! தொடரும்..
Episode 366,
சூர்யா வரவேற்பை முடித்துவிட்டு நேராக இன்பராகவனை பார்க்கச் சென்றான். மிதுன் தேவ், ரிதம் மற்றும் நித்தின் ஆகிய மூவரும் ஜெர்மனி செல்கிறார்கள். அங்கே ரிதம் மற்றும் மிதுன் தேவை பார்த்துக் கொள்ள ஃப்ரியாய் இருக்கிறாள். பிரியா என்பவள் சண்டைக்காராவில் வரும் பிரியா! இன்பாவின் அத்தை மகள்.. நிதினை spr அனுப்பி வைக்கிறான்.
ரிதம் ஜெர்மனி செல்வதை பிடிக்காமல் தான் விவேகா தன் அம்மாவின் வீட்டுக்கு சென்று விட்டாள் . ரிதம் மிதுன் வீட்டில் இருக்கிறாள்.
மகிழினியின் மனதில் அந்த சாமி குறி சொல்லும் பெண் சொன்னது தான் நினைவில் வந்து கொண்டிருக்க அவள் மிதுன் ஜெர்மனி செல்வதில் பெரிதாக கவலை இருந்தாலும் அதை காட்டிக் கொள்ளவில்லை இங்கு தன் குழந்தையுடன் தனியாக இருக்க வேண்டும் ஏனென்றால் சூர்யா பேச மாட்டான் அதற்கு காரணம். மகி தான்! சூரியா தன்னை நிராகரித்தாலும் பிரச்சனை அவன் பேசாவிட்டாலும் பிரச்சனை அப்படி ஒரு சூழலில் மகிழினியின் மனம் இருக்கிறது.
அத அன் மூவரும் ஜெர்மனி செல்லும் நாளும் வந்தது சூர்யா, மகிழினி, நட்ராஜ், உமா, இன்பராகவன், விவேகா வசந்தன், கலைவாணி, spr, தேஜு உதயன், தாரா, வசுமதி, ரவிச்சந்திரன் கங்கா, வருண் என அனைவரும் வந்து வழி அனுப்பி வைத்தார்கள். பிரியா அவர்களை அழைத்துச் சென்றாள்.
விவேகா இன்பாவிடம் “இது எங்க போய் முடியும்னு தெரியல! ஆனா உன்னோட அதிக பிரசங்கத்தனம் யாருக்குமே இல்லடா! நீ பண்றதுல எனக்கு துளி கூட விருப்பமில்லை!.”
இன்பா, “உன் வேலையை பாருடி! உனக்கு என் பொண்ணு மேல பொறாமை! அவ இந்த உலகத்தையே சுத்தி வரவேண்டும்! அதுதான் என்னோட ஆசை!..”
சூர்யா மஹியிடம் “பாத்தியா எப்படி வளர்த்து வச்சிருக்கேன்னு! உன்ன மாதிரியே சுத்த கிளம்பிட்டான். என்னடி சொல்லிக் கொடுத்த? என்னோட பையன் மாதிரி கொஞ்சம் கூட தெரியலடி…
மகிழினி, அவ உங்க பையன் இல்லை..
சூர்யா, பின்ன..
மகி , அவன் என்னோட பையன் எனக்கு விருப்பமானவன்.. என் பேச்சை கேட்கிற பையன்!. சோ உங்களோட வேலையை நீங்க பாருங்க..
சூர்யா , “உன்கிட்ட என் பொண்ண விடவே மாட்டேன்! கெடுத்து வச்சுருவ! என் பொண்ணு என் கண் பார்வைல தான் வளரணும்! அப்பதான் அவ ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணா இருப்பா! சொல்லாம எதையும் செய்ய மாட்டா! அப்பா பேச்சை கேட்கிற பொண்ணா வளருவா!” என்று குத்தி காட்டினான்.
கலை வாணி மிதுன் தேவை அனைத்து முத்தமிட்டு சின்னப்பையா சேட்டை பண்ண கூடாது. நான் தான் சொன்னேன்ல இங்கே அம்மாச்சி வீட்ல வந்து ஸ்கூல் சேர்த்துக்கோங்க… அவ்வளவு தூரம் தனியா போக முடியுமா டா? தங்க குட்டி!
மிதுன், “அம்மாச்சி நீ ஒன்னும் கவலைப்படாதீங்க! நான் உங்களையும் சேர்த்து கூட்டிட்டு போயிடறேன்!” என்று கூறினான்
வசந்தன், “விடுடி அவனுக்கு எல்லாம் தெரியும்! நமக்கு தான் ஒன்னும் தெரியாது! இப்போ இருக்கிற குழந்தைகள் எல்லாம் ரொம்ப அறிவாளி பாத்தியா என் பேரன் எவ்ளோ புத்திசாலியா பேசுறான்! இந்த வயதிலேயே ஃபாரினுக்கு போய் படிக்கப் போறான்!.”
நிதின் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க spr நிதின் அப்பா என்று திரும்பிப் பார்த்தான். நான் உன்ன நல்லா படின்னு சொல்ல மாட்டேன் எல்லா விஷயத்தையும் கத்துக்கணும் அதுதான் முக்கியம் சரியா நிதின் சரிங்க டாடி!..
தேஜு அவனை கொஞ்சம் கவலையுடன் பார்த்தாள்.
நித்தின் அவளின் அருகில் சென்று அம்மா என்று அழைத்தான்.
தேஜு அவனை கட்டி அணைத்து அழ தொடங்கினாள்.
Spr, இப்போ எதுக்கு அழற அவன் படிக்கத்தான போறான்! நீ எதுக்கு கவலைப்படுற..
நிதினுக்கு அசவுகரியமாக இருந்தது. இப்படி பண்றாங்க கொஞ்சம் கூட அறிவே இல்ல! என்ன பார்த்து அழறாங்க… மகி ஹாப்பியா டாட்டா காட்டுரா! ஆனா இந்த தேஜு அழறாங்க.. என்று எல்லாம் இந்த டாடியாள தான்! அவர் சொன்னதால தான் நான் அம்மானு கூப்பிட வேண்டிது இருக்கு! என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
தேஜு அவன் கன்னத்தில் முத்தமிட்டு நீ உன்னை பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.ஆனா உன்ன பாக்காம இருக்கறது தான் எனக்கு கஷ்டம் நீ நல்லா இரு! நல்லா படிக்கணும் பெரிய ஆளா வருவ அதுல சந்தேகமே இல்லை. நான் உன்னை மிஸ் பண்றேன். என்று சொல்லி தள்ளி நின்று கொண்டாள். கண்களில் நிற்காமல் கண்ணீர் வந்து கொண்டிருந்தது.
நிதின் அவளுடைய கவலையான முகத்தைப் பார்த்தான். ஏதோ இனம் புரியாத உணர்வு… என்ன ஒரு மாதிரி இருக்கே! என்று நினைத்தவன்.
தேஜு என்று அழைத்தான். அவள் கண்களை துடத்துக் கொண்டே என்ன நித்தின்?
பக்கத்துல வா!..
தேஜு அருகே சென்றாள்.அவளுடைய கன்னத்தில் முத்தமிட்டு ப்ளீஸ் அழாதே! நீ அழுதா எனக்கு பிடிக்கல! ஹேப்பியா இரு! என்று கூறிவிட்டு கையைப் பிடித்து கொண்டு…“ நிவாஸ பத்திரமா பாத்துக்கோ! நான் போயிட்டு வரேன்!” என்று கூறினான்.
தேஜு, ஒரு தடவை உன்னை கட்டிக்கவா!.
நிதின், சீக்கிரம் கட்டிக்கோ டைம் ஆச்சு!. தேஜு என்று கூறினான்.
தேஜு அவள் மகனை ஆசை தர அனைத்து கொண்டாள். நித்தின் அவனை அறியாமலேயே அந்த குட்டி கைகளை வைத்தும் கட்டிக்கொண்டான். அந்த நிமிடம் இருவர் மனமும் மிகவும் அமைதியாக இருந்தது.
மிதுன் ப்ரோ டைம் ஆச்சு என்று அழைத்தான். நித்தின் சட்டென விலகி பாய் தேஜு என்று கூறினான்.
மிதுன் தேவ் என்ன ப்ரோ? உங்க மம்மியை தேஜு சொல்றீங்க…
எனக்கு அம்மா சொல்ல பிடிக்கவே இல்லை… தேஜு தான் எனக்கு புடிச்சிருக்கு..
அவள் சிரித்து கொண்டே நீ என்ன தேஜு சொல்லு ஒன்னும் பிரச்சனை இல்ல..
அப்போ நான் தேஜு! என மிதுன் கேட்டான்.
சூர்யா இதையெல்லாம் பார்த்துக் கொண்டே பாரு உன் பையன் அப்படியே உன்ன மாதிரியே எங்க போய் ஒட்டுறான் பாரு என்று கூறினான்.
மகி திரும்பிப் பார்க்க அங்கே மிதுன் நித்தின் கூடவும் தேஜு கூடவும் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.
தேஜு சிரித்துக் கொண்டே நீயா! உங்க அப்பா முறைச்சு பார்க்கிறான். அப்புறம் வந்து கூப்பிடலாம்.. இப்போ கிளம்புடா..
மிதுன் தலையில் கை வைத்துக் கொண்டே அவருக்கு வேற வேலை இல்ல.. என்னையும் மதியையும் திட்டுவது மட்டும் தான் அவருக்கு வேலை! ஆனா எப்படி இந்த மகி அவர் கூட இருக்கான்னு தெரியல… அடுத்த தடவை வரும்போது என் மகி என் குட்டி பாப்பாவையும் கூட்டிட்டு போய்டுவேன்.
தேஜு சிரித்துக் கொண்டே கை ஆட்டினாள். மிதுன் கொஞ்ச தூரம் சென்றவன். மனம் எல்லாம் பாரமாக இருக்க.. மகி திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றான்.
அதன் பின் ஓடிவந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு.. அம்மா டாட்டா! பாப்பாவ காட்டுங்க என்று இதழ் கன்னத்தில் முத்தமிட்டு டாடி மகிய திட்ட வேணாம். அவளை முறைக்க வேணாம்! அவ ரொம்ப பாவம்.. என்று சொல்லி சூர்யா கன்னத்தில் முத்தமிட்டு ஓடி விட்டான்.
ரிதம் இன்பாவையும் விவேகாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே சென்றாள்.
அவள் அழும் நிலைக்கு வர மிதுன் அவளின் கைகளை கோர்த்துக் கொண்டான்.
ரிதம், மித்து எனக்கு அழுக வர மாதிரி இருக்குடா என்ற மிகவும் சோகமாக கூறினாள்.
நித்தின் கொஞ்சம் கோபமாக இவளை எதுக்கு கூட்டிட்டு வர? அவ ஒரு அழுமூஞ்சி கொண்டு போய் அவங்க அப்பா கிட்டையும் விட்டுவிடு!.
மிதுன், ப்ரோ என்னால ரிதம் இல்லாமல் இருக்க முடியாது.உங்களுக்கு தெரியும் தானே! அவ சின்ன பொண்ணு! அவளுக்கு ஒன்னும் தெரியாது! அங்க விட்டுட்டு வந்தா அவங்க அப்பா எங்க அப்பாவ விட ரொம்ப மோசம்.. அவங்களால பார்த்துக்கவே முடியாது! ரிதம் என் கூட இருந்தா தான் ஹாப்பியா இருப்பா!
ரிதம் கொஞ்சம் விசும்பிக் கொண்டே வித்து பாத்தியா நித்தின் எப்படி திட்டறான்!.
நித்தின் ஹே பேர் சொல்லாத அண்ணா சொல்லு..
மிதுன் அவளின் கையைப் பிடித்து ரிதம் நான் இருக்கேன்ல்ல…உன்ன நான் ரொம்ப ஹேப்பியா பாத்துக்குவேன் தெரியுமா! அதுக்கு தான் நான் பிறந்து இருக்கேன்! மாமி சொன்னா!..
ரிதம் கொஞ்சம் விசும்பலை நிறுத்தி பேபி என்ன சொன்னா?
மிதுன், உன்னை ஹேப்பியா பார்த்துக்க தான் நான் பஸ்ட் பிறந்தன் அதுக்கு அப்புறம் தான் நீ பிறந்தியாம் அதனால் நீ கவலைப்படாத! நான் உன் கூட இருக்கேன்! உன்ன ஹேப்பியா பாத்துக்குவேன்! நீ வேணா பாரேன்! என்று கூறினான்.
(இந்த விதி இருக்கே எந்த துருவத்தை யார் கூட இணைக்கும்னே தெரியாது! அதை ஃபிரஷ்ஷா இனி வரும் ரெண்டு மூணு பகுதியில பார்க்கலாம். அப்படி இல்லன்னா நேராக அடங்காத அதிகாராவில் பார்க்கலாம். இப்போ வெண்ணிலா ஸ்டோரி வரலாம்!)
வசந்தன் திரும்பி தேஜூ மற்றும் எஸ் பி ஆர் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்.
தாரா மற்றும் உதயன் இருவரும் இதழ் பாப்பாவை வைத்து கொண்டு இருந்தார்கள். இன்னும் அந்த பெண் குழந்தைக்கு பெயர் சூட்டப்படவில்லை (அப்போ எத்தனை பிரச்சனை இருக்கோ எல்லாத்தையுமே இந்த பத்துஎபிசோட்ல சொல்லிடுவேன்) அதை அப்புறம் பார்க்கலாம். இதழ் அப்படியே சூர்யாவை போல கொழுக்கு மொழுக் என்று அழகாக தேவதையாக இருந்தாள். இப்பொழுது கண்களை உருட்டி பார்க்கிறாள்.
மகிழினி விவேகாவிற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
இன்பா, அவள் அப்படித்தான் அடங்காதவ! நீ விடு மகி! இதெல்லாம் ரொம்ப ஸ்போட்டிவா எடுக்கும் விஷயம்.. இப்போ ரிதம் எல்லா இடத்தையும் சுற்றினால் தானே நாளைக்கு தைரியமா வர முடியும்!
விவேகா, எந்த நாட்டை சுற்றுனா என்ன? நாளைக்கு எப்படியும் கல்யாணம் தானே பண்ணிக்க போறா!
இதை கேட்டு மகி சிரிக்க
இன்பா, விவேகா இதுதாண்டி உன்கிட்ட எனக்கு பிடிக்காத விஷயம்!.
விவேகா, என்னடா பேசுற நானும்தான் கனடா . லண்டன் போனேன்.கடைசியில் எங்க வந்தேன் உன் கூட தான் வாழ்கிறேன்! நாளைக்கு அவ கூட அப்படித்தானே! எதுக்குடா தேவையில்லாம ரிஸ்க் எடுக்கிற? அவளுக்கு மட்டும் ஏதாவது ஆப்போசிட்டா ஆட்டம் போட்டாள்.உன்ன தோல உரிக்கிறனா இல்லையா பாரு!.
இன்பா அதையும் பார்க்கிறேன் டி!
மகிழினி, கொஞ்சம் ரெண்டு பேரும் நிறுத்துறீங்களா.
விவேகா, இவன்கிட்ட பேசாதீங்க வாங்க நம்ம போலாம் என்று இழுத்துக் கொண்டு நடந்தாள்.
ஹே பாப்பா இருக்குடி!. விவேகா மெதுவாக ஒரு அடி எடுத்து வைக்க…
மகி, பாப்பா என்னோட பாப்பா அங்க இருக்கு என்ன சிரித்துக் கொண்டே கூறினாள்.
சூர்யா அனைவரிடமும் பேசிவிட்டு இன்பாவிடம் வந்து சேர்ந்து கொண்டான்.
எங்கடா உன்னோட சகலைய காணோம்..
யாரு? கார்த்திக், மைவிழி, சிவன்யா பவன்யா!.
சூர்யா சிரித்துக்கொண்டே அவங்க ரெண்டு பேரும் இங்க வந்தா அவனை குட்டிக்குட்டன விட மாட்டாங்க..
இன்பா சிரித்துக் கொண்டே என்ன சொல்ற?
சூர்யா, ஆமா அவன அனுப்ப சிவனியா பவன்யா சேர்ந்து அழுவாங்க நானும் போறேன்னு சொல்லுவாங்க ! அந்த கார்த்திக் தான் விடமாட்டேன்னு சொல்லிட்டான்.
இட்ஸ் ஓகே விடு என்று அனைவரும் கிளம்பினார்கள் அப்படியேமூன்று மாதங்கள் ஓடியது அதற்கு நடுவில்
(உதயன் மற்றும் தாரா இருவர் காட்சிகள்)
திருமணம் முடிந்து ஒரு வருடம் மூன்று மாதம் ஆகப்போகிறது. ஆனால் இன்னும் தாரா கர்ப்பமாகவே இல்லை இந்த பக்கம் ஸ்ரீமதி மற்றும் வரும் இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது அவருக்கு அந்த பெண்ணுக்கு ஸ்ரீமதி மாயா குடும்பத்தினர் “மிர்திலா ஶ்ரீ ”என்று பெயர் வைத்தார்கள்.
ஆனால் இப்பொழுதும் தாரா மற்றும் உதயன் அப்படியேதான் இருந்தார்கள். தாராவுக்கு பவானி கைனகாலஜிஸ்ட் மிகப்பெரிய கருத்தரிப்பு நல மருத்துவர் அவரும் வந்து பார்த்து விட்டார்.அவர் வேறு யாரும் இல்லை சித்தார்தினுடைய அம்மா தான் ! தாராவுக்கு கூடவே அவளுக்கு மன அழுத்தம் வேறு அதிகமாக இருந்தது.
உதயன் வேலை என்று ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தான். அவ்வப்போது தாராவை பார்த்துக் கொண்டாலும் அவன் வரும்போது அவள் மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்டிக் கொள்வாள்.
இதையெல்லாம் பார்த்த கோவிந்தனுக்கு மிகவும் மனது வேதனைப்பட்டது. நேராக தன் பெண்ணை பார்க்க சென்றார்.
பாப்பு!.
சொல்லுங்கப்பா என்று சிரித்துக்கொண்டே எழுந்து அமர்ந்தாள்.
என்னடா உன்னோட முகமே சரியில்ல ரொம்ப வருத்தமா இருக்கிற மாதிரி இருக்கே! எந்த படத்திலும் நடிக்கலயா வீட்டில் அடைந்து கிடக்கிற..
தாரா கண்களில் கண்ணீருடன் என்னால வெளிய தல காட்ட முடியல டாடி…
என்னடா ஆச்சு? என்ன பாப்பு எதுக்கு வருத்தப்படுற?
தாரா அழுது கொண்டே மாயா அத்தையா அதான் அந்த ஸ்ரீமதி அவ குழந்தை பெத்துக்கிட்டா! மகிக்கு நான் கல்யாணம் ஆகும் போது குழந்தை இருந்தது. மைவிழி அவளுக்கும் இப்போ வளைகாப்பு நடக்க போகுது! ஆனா நான் மட்டும் தான் அப்படியே இருக்கேன் டாடி!
கோவிந்த், இதுக்கு எதுக்குடா வருத்தப்படுற உனக்கு வயசு இன்னும் இருக்கு… நம்ம பொறுமையா..
தாரா,“ இல்ல டாடி நானும் சித்தார்த்தும் அவன் என்னை விட ஒரு வயசுக்கு தான் பெரியவன்! அதை விடுங்க குரு பிரகாஷ் எடுத்துக்கோங்க இரண்டு குழந்தை அதையும் விடுங்க, உதயனோட தங்கச்சி எல்லாத்துக்குமே குழந்தை இருக்கு! ஆனா எங்களுக்கு தான் இன்னும் குழந்தையே இல்லை!” என்று அழ ஆரம்பித்தாள்.
கோவிந்த் கொஞ்சம் மனம் உடைந்து நீ வருத்தப்படாத நான் பார்த்துக்கிறேன் நம்ப உலகத்துல எந்த டாக்டர் கிட்ட வேணாலும் போகலாம் இப்போ நிறைய முறைகள் வந்துடுச்சு நாம ட்ரை பண்ணலாம் நீ கவலைப்படாத நான் மாப்பிள்ளை கிட்ட சொல்றேன்.
தாரா, “செயற்கையா எனக்கு குழந்தை வேணாம் டாடி! எனக்கு இயற்கையா தான் பொறக்கணும்! நான் காதல் கல்யாணம் பண்ணி இருக்கேன்! ஆனா பாருங்க எங்களோட காதல நிருபிக்கறதுக்கு இதுவரைக்கும் கடவுள் எனக்கு ஒரு குழந்தையை கூட கொடுக்கல.. நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்க டாடி! அதவிட இந்த வீட்டில் இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு நரகமா இருக்கு டாடி! எனக்கு ரொம்ப தனியா இருக்குறத போல இருக்கு!”
கோவிந்த் அருகில் வந்து நடுக்கத்துடன் “என்னடா பாப்பு உனக்கு கவலை அப்பா நான் இருக்கேன்! அம்மா இருக்கா! மாப்பிள்ளை இருக்காங்க! இதுக்கு மேல உனக்கு என்ன வேணும்? என்னடா குறை வச்சிருக்கேன்! மாப்பிள்ளை நிறைய வேலைக்கு போறாங்க அப்படித்தானே ஒன்னும் கவலைப்பட வேணாம் இனி அப்பா பாத்துக்குறேன் மாப்பிள்ளை உன் கூட இருக்கட்டும் நீங்க எங்கேயாவது வெளியே போயிட்டு வாங்க!
தாரா, இவ்வளவு பெரிய வீட்ல நான் தனியா இருக்கேன் டாடி! அவரு அப்படியே இருந்தாலும்! என்ன ஒன்னும் இல்ல.. அதை விட நீங்க நமக்குள்ள என்ன பேச போறோம்? என்னோட வீட்டுக்காரருக்கு வேலையே சரியா இருக்கு! அம்மா பத்தி உங்களுக்கு தெரியாத டாடி! நான் யார்கிட்ட பேசட்டும்!
கோவிந்த், நீ எதுக்கு கவலைப்படுற நான் இப்பவே உன்னை சித்தார்த் வீட்ல கொண்டு போய் விடுறேன்! அப்படி இல்லன்னா வீரசிம்மா வீட்டுக்கு போ உங்க மாமனுங்க ரெண்டு பேர் இருக்காங்க டா!
தாரா கொஞ்சம் சிரித்துக் கொண்டே நான் எதுக்கு டாடி அவங்க வீட்டுக்கு போகணும்? முதல்ல இப்போ நான் இருக்கிற வீடு என்னோட வீடு இல்ல டாடி!”
கோவிந்த், இப்போ நீ என்ன சொல்ல வர உனக்கு எங்க இருந்தா சந்தோஷம் சொல்லு! நான் உன்னை கொண்டு போய் விடுகிறேன்! உன்னோட சந்தோஷத்துக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்!
தாரா, நீங்க அதை செய்ய மாட்டீங்க டாடி
கோவிந்த் என்ன பாப்பு சொல்ற? எனக்கு என்னோட மாமியார் வீட்டுக்கு போகணும்!
கோவிந்த் அமைதியாக பார்த்தார்.
தாரா, உங்க பெருந்தன்மைக்கு நீங்க உதயனை ஏற்றுக் கொண்டீர்கள்… ஆனால் இந்த இந்த ஊர்ல எல்லாரும் வியந்து பார்க்கிற அளவுக்கு நான் ஒரு நடிகையா இருந்தாலும், நீங்க பெரிய பிசினஸ்மேனாக இருந்தாலும், என் மாமியார் அதை எல்லாமே பார்க்கலையே! என்னை இன்னும் ஏத்துக்கலையே! அவங்களோட சாபம் தான் என்னவோ இன்னும் என் வயித்துல ஒரு குழந்தை கூட வரல என வெம்பி கொண்டே அழ ஆரம்பித்தாள்.
கோவிந்த் எதுவும் பேசாமல் வெளியே சென்றார். அவர் சென்றதும் உடனே உதயனுக்கு அழைத்தார்.
சார் கொஞ்சம் வேலையா இருக்கேன்..
கோவிந்த், நீ நீங்க உடனே வாங்க மாப்ள உங்ககிட்ட முக்கியமா விஷயம் பேசணும்…
உதயன், சார் நான் ஈவினிங் வரேன்!
கோவிந்த் எனக்கு இப்போ பேசுறத விட பிசினஸ் எல்லாம் முக்கியம் இல்ல நீங்க எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு இப்போ உடனே வாங்க!.
உதயன் சரி என்று போனை வைத்துவிட்டு அரை மணி நேரத்தில் கோவிந்து முன் நின்றான்.
சொல்லுங்க சார்…
கோவிந்த் நீங்க தாராவை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் விடுங்க!. அப்புறம், வாரத்துல சனி ஞாயிறு மட்டும் இங்கே பெங்களூர்ல இருக்குற நம்ம பிசினஸை வந்து பாத்துக்கிட்டா போதும்! மத்த நாள்ல உங்களுக்கு அங்க ரெடி பண்ணி தரேன்! தர்மன் கிட்ட பேசிட்டேன்! அவரு தயார் பண்ணி வச்சிருப்பாரு சோ திங்கள் முதல் வெள்ளி வரை நீங்க அங்க இருக்கலாம். சனி ஞாயிறு மட்டும் இங்க வந்து பார்த்துட்டு திரும்ப ரிட்டன் போயிடுங்க.
உதயன் புரியாமல், அங்கே என்ன? புரியல எங்க சார் தங்கணும்!. என்று கேட்டார் .
கோவிந்த் கொஞ்சம் சிரித்துக் கொண்டே தாராவை உங்க வீட்டு கூட்டிட்டு போங்க! நீங்க உங்க அம்மா அப்பா கூட இருங்க..
உதயனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் எத்தனை நாள் அங்க இருக்கணும்!. என்று கேட்டான்.
கோவிந்த் சிரித்துக்கொண்டே இப்பதான் நீங்க ப்ராப்பர் பிசினஸ் மேனா இருக்கீங்க..என்னோட மருமகன் உங்களை சொல்ல எனக்கு கர்வம் தான்!
உதயன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க …
கோவிந்த் “தாராவுக்கு மனசு சரியில்ல அவ ரொம்ப அழுத்தத்துல இருக்கா! நான் பவானி கிட்ட பேசின வரைக்கும் அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. ஆனா நீங்களும் உங்கள செக் பண்ணி இருக்கீங்க! அதுல நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன்! உங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்ல …ஏதோ ஒரு விஷயம் தடுக்குது! அவளோட ஆசைப்படி நீங்க உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க…எத்தனை நாள் வேணாலும் இருங்க… ஆனா திரும்ப இங்க வந்துடனும்!..
உதயன் அவரைப் பார்த்தான்.
கோவிந்த், உங்களுக்கே தெரியும் திரும்ப திரும்ப இதை சொல்றேன்னு நினைக்க வேண்டாம்! எனக்கு பையன் இல்லை.. ஒரே ஒரு பொண்ணு தான்! அவளை நான் வரம் வாங்கி பெற்றிருக்குன்னு சொல்லலாம்.என் பொண்ணு தான் என்னோட உலகம்! என் பொண்ணோட சார்ந்த எல்லாமே என்னோட உலகத்துக்குள்ள அடக்கம்!அதனால அவளுக்கு குழந்தை பிறந்ததும் ஒரு உடனே இங்கே வரணும்னு சொல்ல மாட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு வந்துடுங்க. அதுக்கப்புறம் நீங்க எப்ப வேணாலும் தாராளமா அவள உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்!தங்கலாம்! வரலாம் !இதுதான்!” என்னோட ஆசை என்று கூறினார்.
உதயன், ஆனா இதுல ஒரு விஷயம் இருக்கு!..
கோவிந்த், என்ன விஷயம் ?
உதயன், நீங்க உங்களோட முடிவுக்கு சொல்லிட்டீங்க ! சரி ஆனா நான் அங்க போய் தங்கறதுக்கு…எங்க அப்பாவோட பர்மிஷன் கேக்கணும்ல்ல!
கோவிந்த் , அப்படியெல்லாம் இருக்கா! என்று கிண்டலுடன் கேட்டார்.
உதயன், ஆமா சார் அது என்னோட வீட்டுல எங்க அப்பாவோட வீடு! அவர்கிட்ட பர்மிஷன் கேட்டு தான போகணும்! என்று பதிலுக்கு பதில் பேசினான்.
கோவிந்த் சிரித்துக்கொண்டே சரி உங்க அப்பா கிட்ட பர்மிஷன் கேளுங்க! அப்படி இல்லன்னா கூட பரவால்ல.. அதே இடத்தில் அந்த வீட்ட கூட நான் வாங்க தயங்க மாட்டேன். என்று அவருடைய ஆளுமையை காட்டினார்.
உதயன், சரிங்க சார்! நான் கேட்டுட்டு வரேன்! என்று போன் எடுத்துக்கொண்டு சென்று தன் தந்தையிடம் கோவிந்து கூறிய அனைத்தையும் கூறினான்.
வசந்தன், நீ என்னடா இப்படி சொல்ற? எதுக்கு அவர்கிட்ட அப்படி பேசின? நமக்கு எதுக்கு தேவையில்லாத வேலை! நீ பாப்பாவ கூட்டிட்டு வா பாவம் எவ்வளவு மனசு வேதனை பட்டுருப்பாள். நானும் வேண்டாத சாமி இல்ல தெய்வம் இல்ல அவ்ளோ கஷ்டத்துல… எதுக்கு அவள அங்க வச்சிருக்கணும்! நீ கூட்டிட்டு வா! பாப்பாவுக்கு குழந்தை பிறந்த உடனே அது எத்தனை நாள் ஆனாலும் சரி, உன்னோட வாரிசு நல்ல நிலைமையில் வரும்! நீ ஒன்னும் கவலைப்பட வேண்டாம் நீ கூட்டிட்டு வா என்று கூறினார்.
உதயன் பேசி விட்டு உள்ளே வர கோவிந்த் சார் என்ன சொன்னாரு வசந்தன் சார் ஒத்துக்கிட்டாரா!. மாப்ள!..
உதயன், சார் எங்க அப்பா ஒத்துக்கொண்டார். நாங்க போறோம்..
கோவிந்த், போறோம் இல்ல.. போயிட்டு என் பேர குழந்தையோட வரிங்க!.
உதயன் ஆமா வரோம் என்று நடந்தான்.
கோவிந்த் ஒரு நிமிஷம் மாப்ள!..
சொல்லுங்க..
இது எதுவும் தாராவுக்கு தெரியக்கூடாது! நீங்க அவ கிட்ட எதையும் சொல்லாதீங்..இது மாமனார் மருமகனுக்கு உள்ள இருக்குற விஷயம்.. புரியுதா மாப்ள
ஓகே சார் என்று தாராவை அழைத்துக் கொண்டு உதயன் வசந்தன் வீட்டுக்கு சென்றான்.
மீதி நாளை பார்க்கலாம்!.
நாளைக்கு மை விழிக்கு சீமந்தம் எல்லாரும் வந்துருங்க..
தொடரும்…
Episode 367,
கொஞ்ச நேரம் அமைதியா இருக்க மாட்டீங்களா குக்கு! எதுக்கு இப்படி அப்பா பின்னாடி தவள்ந்து வரீங்க! குட்டி கால் வலிக்கும் பொண்ணு! என சூர்ய தேவ் தன் பெண்ணிடம் கூறி கொண்டு இருந்தான்.
ப்பா!. ப்பா! என சொல்லி கொண்டே வழிசல் ஒழுக தலையை மட்டும் உயர்த்தி பார்த்தாள் அந்த தேவதை! இதழினி!. .
சூர்யா சிரித்து கொண்டே குக்கு! என சொல்லி கொண்டே தூக்க வர அதற்குள் மகி அவளை தூக்கி கொண்டாள்.
ப்பா என குழந்தை கையை நீட்ட மகி, மேடம் இப்போ பசி நேரம் நீங்க சாப்பிட்டு எங்கே வேணாலும் போங்க! என சொல்லி கொண்டே தூக்கி சென்று விட்டாள்.
சூர்யா கோபத்துடன் பற்களை கடித்து கொண்டு திட்ட வந்தவன். கையில் இதழ் இருந்ததை பார்த்து தன்னை கட்டு படுத்தி கொண்டே அவளை முறைத்து பார்த்தான்.
மகி அவனை இளனமாக பார்த்து ஒரு புன்னகை சிந்தியவள் குழந்தைக்கு ராகி சத்து மாவு களியை ஊட்ட ஆரம்பித்தாள். இதழின் கன்னம் இரண்டும் உதட்டை இடிக்கும் அளவுக்கு இருக்கும்.. இரண்டு கடி கடித்தால் என்ன என்பது போல இருப்பாள்.
உதயன் சனி ஞாயிறு இரண்டு நாட்கள் வந்து இரண்டு கன்னத்தையும் வட்ட மிட்டு தான் செல்வான். சூர்யா சண்டை சேவல் போல அவனுடன் சண்டைக்கு சென்று விடுவான்.
பாப்பா மகி ஊட்டுவதை பார்த்து கொண்டே ஒரு கையில் தாலி கொடியையும் மறு கையில் அவளின் கன்னத்தில் அடித்து கொண்டே ப்பா! ப்பா! என கூறி கொண்டே இருந்தாள்.
சூர்யா மீசையை முறுக்கி விட்டு வயிற்றில் இருக்கும் போதே அப்பா என்ன நினைக்கிறேன் என புரிந்து கொண்டது நீ தான் குக்கு! என சிரித்தான்.
மகி, ஹே துப்ப கூடாது பாப்பா! கெட்ட பழக்கம்! உன்னோட சேர்க்கை சரி இல்லை!.
சூர்யா, அடங்கு டி! என் பொண்ணை திட்டும் வேலை வைத்து கொள்ளாதே!. என சொல்லி கொண்டே சாப்பிட அமர்ந்தான்.
மகி அனைத்தையும் எடுத்து உணவு மேஜையின் மீது வைத்தாள். ஆனால் அவனுக்கு பரிமாற வில்லை..
இதழ் மகியின் இடையில் இருந்து தன் தந்தையின் மீது எப்போ செல்லலாம் என காத்து கொண்டு கைகளை இரண்டையும் அவனை தூக்க சொல்லி காட்ட..
சூரியா வேகமாக அருகில் வந்து வாங்க குக்கு!. என தூக்கி கொண்டான்.
மகி, அவள் இன்னும் சாப்பிடல…
சூர்யா, ஹே மரியாதை! மரியாதை!.
மகி, அவங்க இன்னும் சாப்பிடல.. என்று உதட்டை கடித்து கொண்டே கூறினாள்.
சூர்யா அவனே கஷ்ட பட்டு உணவுகளை போட்டு கொள்ள மகி இன்னொரு தட்டை எடுத்து கொண்டு அவளுக்கு உணவை போட்டு கொண்டாள்.
இதழ் சூர்யா செய்வதை பார்த்து கொண்டு அவளும் கைகளை நீட்டினாள்.
சூர்யா, குக்கு இருங்க வேணாம் டா!.
மகி அவர்கள் இருவரையும் கண்டு கொள்ளாமல் சாப்பிட்டு கொண்டு இருக்க
சூர்யா தட்டில் போட்ட சாதத்தை மிகவும் வேகமாக குட்டி கைகளில் அள்ளி பிசைந்தாள்.
சூர்யா, குக்கு என்ன டா இது!
இதழ் வாய்க்கு கொண்டு செல்ல…
சூர்யா, சரி சாப்பிடுங்க..
மகி, மசித்து சாப்பிடணும் இல்லன்னா!..
சூர்யா, உன் வேலையை பாரு!.
மகி அவனை முறைத்து விட்டு சாப்பிட்டாள்.
சூர்யா, குக்கு அப்பாவுக்கு ஊட்டுங்க..
இதழ் மெதுவாக கைகளில் இருந்து உனவை எடுத்து ஒவ்வொரு படுக்கையாக அவன் வாயில் ஊட்டி விட்டாள். அவள் ஊட்டி விட சூர்யாவின் சட்டை கூட சேர்ந்து சாப்பிட்டது.
அவனுடைய வேலைகளை எதுவும் மகி செய்ய மாட்டாள். சமைத்து தருவாள். சில நாட்களில் அதையும் செய்ய மாட்டாள். பால் குடித்து விடுவாள். ஏன் என்றால் இரவில் இதழ் குட்டிக்கு பால் கொடுக்க வேண்டும்! தனக்காகவும் எதையும் செய்வது இல்லை. தன் கணவனுக்காகவும் எதையும் செய்வது இல்லை. அவன் கோபம் அவளை எடை குறைய செய்தது. கழுத்து எலும்பு இரண்டும் வெளியே தெரிய.. கழுத்து நீண்டு கொண்டது. அவளுடைய புடவை பிளவ்ஸ் எல்லாம் மிகவும் லூசாக பெரிதாக இருந்தது.
மிதுன் தேவ் மை விழியின் வளைகாப்புக்கு வர போகிறான். இப்பொழுது சத்ய தேவை அழைக்க செல்ல வேண்டும்.
அப்பொழுது சூர்யாவுக்கு அழைப்பு வந்தது.
ஹலோ!. என சொல்ல மறுமுனையில் கேட்ட செய்தியை கேட்டதும் உதட்டில் புன்னகை பரவ.. ம்ம் ரொம்ப சந்தோசம்! எதுக்கு கவலை படுர…என சூர்யா பேசினான்.
எனக்கு பெரிய பிரச்னை!. நீ சொன்ன மாதிரியே நடந்து விட்டது.
சூர்ய தேவ், எனக்கு இன்னும் ஹேப்பி! இனி சப்போர்டுக்கு ஆள் கூட சேர்ந்து கொண்டது! இனி உன்னை என்ன செய்கிறேன் பார்! சும்மாவே விட மாட்டேன்!.
மகி அவன் பேசுவதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்தாள்.
சூர்யா, இதுக்கு ஸ்பெஷலா கவனிக்க வேணும்!.
மறு முனை, என்ன வேணும்!.
சூர்யா, உனக்கு தெரியாதா!.
சரக்கா!.
மம்ம் உன்னை விட என்னை கட்டினவ கூட புரிந்து கொள்ளள.. .
மகி இரும்பி கொண்டே அவனை பார்க்க..
மரும்னை, எங்கே எப்போ!.
சூர்யா, நம்ம வழக்கமா சந்திக்கும் இடம் தான்!. இன்னிக்கு விட மாட்டேன்! நான் கேட்டதை கொடுத்தே ஆகனும்!.
மகிக்கு உணவு உள்ளே இறங்க மறுக்க தடுமாறி கொண்டே சாப்பிட்டாள். அதிகமாக இப்பொழுது அவன் குடித்து விட்டு வருகிறான். அதுவும் அந்த புது வீட்டுக்கு யாருடனோ அதிகமாக செல்கிறான். அந்த மேக்னா கிட்ட பேசுவானா? அய்யோ! கடங்காரி என் புருஷனை மயக்க சுற்றி கொண்டு இருக்கிறாளே!
இதழ், ப்பா! ப்பா!. என அவனை பார்க்க..
சூர்யா, குக்கு உனக்கு விளையாட ஆள் வந்தாச்சு! கூடிய சீக்கிரம் இங்கே கூட்டி வர போறாங்க! ஜாலி தான்!. .
மகி துக்கம் தொண்டையை அடைக்க அவனை பார்த்து கொண்டே போனில் யார் கிட்ட பேசினீங்க!. .
சூரியா, உனக்கு எதுக்கு சொல்லணும்? உனக்கே உண்மை தெரிய வரும்!.
மகி, அப்போ நான் இந்த வீட்டை விட்டு போயிடுவேன்!
சூர்யா, என்ன சொல்ற? .
மகி, அடிக்கடி கண்டவள் கூட புது வீட்டுக்கு போய் இப்போ இந்த வீட்டுக்கு எதையாவது குட்டி அப்படி இப்படின்னு வந்தது உண்மையாகவே உங்களை விட்டு போய் விடுவேன்!.
சூர்யா அவளை விநோதமாக பார்த்தான்.
மகி, என்ன அப்படி பார்க்கிறீர்கள்!.
சூர்யா கொஞ்சம் அவளையே உற்று பார்க்க ஓ வாழ்க்கை மேல பயம் வந்துடுச்சா! இடியட் இன்பா! சரியான நேரத்துக்கு போன் பண்ணி இருக்க நாயே! உன்னை வச்சு இவளை ஆட்டி வைக்க போறேன்!. .என நினைத்தவன்
தொண்டையை சரி செய்து கொண்டே இப்படி சொன்னால் என்ன அர்த்தம் நீ தானே எனக்கு பெர்மிஷன் கொடுத்த! அப்போ எனக்கான ஒருத்தரை தேடி கொண்டேன். பாரு என் கஷ்டத்தில் என் கூட என்னோட சந்தோசத்தில் சொல்லவே தேவையில்லை நான் துவண்டு போகும் போது என் கூட இருக்காங்க! இப்போ துணைக்கு ஒரு ஆள் கூட வந்தாச்சு!
மகி, யார் அந்த அதிஷ்ட சாலி என்னோட வாழ்க்கையில் பங்கு போட.. .அந்த மேக்னா தானே!. .என கன்னங்கள் உப்பி கொண்டே கேட்டாள்.
சூர்யா, இன்பா!
மகி, என்ன?
சூர்யா, என்னன்னு தெரியல அந்த இன்பா அப்டின்ற பேரில் எனக்கு கொஞ்சம் கிரேசி அதை விட இப்போ இன்ப வதணி!. ப்பா!.
சூர்யா, மராத்தி! கன்னட காரிங்க மாட்டுவாளுங்கன்னு பார்த்தேன் எனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு அதான் தமிழ் பொண்ணு! கண்ணகுளி கூடவே செதுக்கி வச்ச சிலை! உசார் பண்ண ரொம்ப கஷ்ட பட்டென்! பார்த்ததும் பத்தி கிச்சு! ஸ்டைலிஸ் தமிழச்சி என் கூட குடிப்பா! என்னை அவளோட நெஞ்சில் போட்டு தாங்கி கொள்கிறாள்.
மகி அழுது விட்டாள். ஆனால் அவனுக்கு காட்ட வில்லை.
சூர்யா, நீ இழுத்து பிடிக்க வேண்டிய நேரத்தில் என்னை பிடிக்கல! இப்போ அவள் இல்லாமல் எனக்கு தூக்கமே வராது!
மகி வேகமாக எழுந்து கையை கழுவி கொண்டு அவன் கையில் இருந்து இதழினிய பிடுங்கி கொண்டு செல்ல..
சூர்யா, ஹே என்ன பண்ற? குக்குவை கொடு!.
மகி, என்னை என் வீட்டில் கொண்டு போய் விடுங்க. இங்கே இருக்க முடியாது.
சூர்யா கையை கழுவி கொண்டு காரணம் என்ன? சொல்லு!
மகி, அது உங்களுக்கு தேவை இல்லை. முதலில் நீங்களே கொண்டு வந்து விடுக டைவர்ஸ் பண்ண வேணாம்! நீங்க யார் கூட எப்படி இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. ஆனால் இந்த கண்றாவி எல்லாம் என் கண் முன்னாடி நடக்க வேணாம்! .
சூர்யா, இல்ல நீ எனக்கு வேணும்!.
மகி அவனை உடனே திரும்பி பார்க்க சூர்யா, அது இன்பாவுக்கு ஐ மின் இன்ப வதனிக்கு நம்ம ஊர் சாதம் ரொம்ப பிடிக்கும் நீயும் என் கூட ஐ மின் இங்கே இருந்தால் எங்களுக்கு சமத்து போட சாப்பிட ஈசியா இருக்கும்!.
மகி, நான் உங்களுக்கு வேலைக்காரி இல்ல…
சூர்யா, உன்னை நான் அப்படி சொல்லவே இல்லையே! உன் முன்னாடி அவள் டீசெண்டா தான் நடப்பா! உன்னை பற்றி சொல்லி இருக்கேன்.
மகி, பிளீஸ்! நீங்க என்னமோ பண்ணுங்க என் கிட்ட சொல்லாதீங்க! பிடிக்கல! இந்த தூரம் வந்த நீங்க வீட்டுக்கு வராதீங்க!
சூர்யா, அவளுக்கு சமைக்க தெரியாது மகி அதான் உன் கிட்ட வரேன்! அவளை எனக்கு சேவை செய்யவும் உன் கிட்ட சாப்பிடவும் வந்து இருக்கேன்!
மகிக்கு இதை கேட்டதும் அழுகை வந்து விட்டது. சூர்யா அவளின் முகத்தை பார்த்து இன்னும் வேணும் டி! பக்கத்தில் வந்தால் பிடிக்கலன்னு சொன்ன தானே! என ரசித்து பார்த்தான்.
மகி தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். இதழ் தன் அம்மாவின் முகத்தை பார்த்து உதடு இரண்டும் பிதுங்க..
சூர்யா, குக்கு அப்பா கிட்ட வாங்க!
மகி, குழந்தையை தொடும் வேலை வைத்து கொள்ளாதீங்க!
சூர்யா, மகி ஒழுங்கா கொடு!
மகி, மாட்டேன் என பின்னால் நடந்தாள். இதழ் தன் அம்மா முகத்தை பார்த்து ம்மிம் மம் என ராகம் பாட ஆரம்பிக்க…
மகி, நான் செத்து போயிருக்கனும் என் குழந்தையை எப்டி நான்! உன்னை நான் கருவில் என ஆரம்பிக்க….
சூர்யா, ஹே மகி! என கன்னத்தில் ஒரு அரை விட்டான்.
இதழ் அதை பார்த்து பயந்து வீரென கத்த ஆரம்பித்தாள். .
மகி, பிளீஸ் என் குழந்தையை என் அம்மா கிட்ட கொடுத்து விட்டு யார் கூட வேணாலும் நீங்க இருங்க! என தலையில் அடித்து கொண்டாள்.
சூர்யா, ஹே நான் சும்மா சொன்னேன்! அது இன்பா! ஐ மின் இன்ப ராகவன்! அவனுக்கு பையன் பிறந்து இருக்கு! அதுக்கு ட்ரீட் கேட்டேன்! எந்த பொன்னும் இல்லை.. இதோ இங்கே பாரு!. எதுக்கு இப்படி எல்லாம் பேசுற..
மகி அவன் அருகில் வந்து மூச்சு வாங்க சூர்யாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டாள்.
சூர்யா இதை எதிர் பார்க்க வில்லை. அடித்து விட்டாள்! சூர்யா உன்னை அடித்து விட்டாள்! எப்டி அடித்தாள்! என்னையவே கை ஓங்கி அடித்து விட்டாள். என கன்னத்தை பிடித்து கொண்டே கேட்டான்.
மகி கோபத்துடன் மூக்கை உரிந்து கொண்டு தன் குழந்தையை தூக்கி கொண்டு என்ன டா தங்கம்! சரி டி அழ வேணாம் செல்லம் என கொஞ்சி கொண்டே படுக்கை மெத்தைக்கு சென்றவள். அவளை சமாதானம் செய்ய பால் கொடுத்தாள்.
சூர்யா அதே இடத்தில் அப்படியே நின்று கொண்டு இருந்தான். மகி பால் கொடுத்து கொண்டே இதழின் தலையை வருடி கொண்டே விவேகா எண்ணுக்கு அழைத்தாள்.
கங்கா தான் போனை எடுத்தார்.
மகி, அம்மா நான் மகி பேசுறன் விவேகா எப்டி இருக்கா என்ன குழந்தை!
கங்கா சிரித்து கொண்டே பையன் பொறந்து இருக்கான் கண்ணு! எல்லாருக்கும் இப்போ தான் போன் பண்ணி சொல்லிட்டு இருக்கோம்! மறந்து விட்டேன் கண்ணு!
மகி, அப்டியா ரொம்ப சந்தோசம் மா! சும்மா தான் நீங்க பாருங்க.. ஊருக்கு வந்தால் நான் வந்து பார்க்கிறேன்! என சொல்லி போனை வைத்தவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. உஷ்ன மூச்சுடன் கொஞ்சம் சிரித்தாள்.
சூர்யா, எவ்ளோ திமிர் டி! செக் பண்றயா!
மகி, ஆமா! இப்போ என்ன? என அவனை எரிப்பது போல பார்த்தாள்.
உடனே பால் குடித்து கொண்டு இருந்த குழந்தை குடிப்பதை விட்டு வீரேன கத்த ஆரம்பித்தது.
சூரியா, குக்கு சாரி டா செல்லம் சாரி மா! பொண்ணு அழ கூடாது! சும்மா டாடி play பண்ணேன் தங்க பட்டு!.
மகி அவனை முறைத்து கொண்டே அவனை பார்த்தாள்.
சூர்யா மெதுவான குரலில் ஹே என்ன? எதுக்கு டி அடிச்ச? இதுக்கு உன்னை.. என அவன் ஆரம்பிக்க..
காலிங் பெல் அடித்தது.
மகி, போங்க போய் கதவை திறங்க!..
சூர்யா, என்ன டி மிறட்டுற…
மகி, போங்க! இல்ல நான் இப்போவே கிளம்பி போயிடுவேன்! குக்கூ இனிமேல் இங்கே கத்த மாட்டாள். நான் எங்க வீட்டுக்கு போவேன்!.
சூர்யா, போடி! நீ போ!.
மகி, நான் பாப்பாவை வச்சு இருக்கேன் பால் கொடுத்திட்டு இருக்கேன்!. கண்ணு தெரியலையா!.
சூரியா, நீ மட்டும் தான் குழந்தை பெற்று இருக்கியா! இந்த உலகத்தில் யாருமே பெற்று கொள்ள வில்லையா! யாரை கேட்டு டி அடிச்ச!
மகி, கதவை திறந்து விடுங்க.. போங்கன்னு சொன்னேன்!.
சூர்யா, ஓவரா பன்ற என சொல்லி கொண்டே சென்றான். கதவை திறந்ததும் கோபத்துடன் உள்ளே நுழைந்தான் சத்ய தேவ்!..
சத்ய தேவ்!. .
இவ்வளவு நேரம் என்ன பண்ணீங்க? என தன் பைகளை எல்லாம் எடுத்து கொண்டு உள்ளே வந்தான்.
சூர்யா, அது பாப்பா ஒரே அழுகை! அதான்!. எப்டி இருக்க!.
சத்ய தேவ், குட் என ஒரு வார்த்தையுடன் முடித்து கொண்டவன். மகி! மகி! என அழைத்தான்.
மகி, சக்தி பாப்பா கிட்ட இருக்கேன்! வரேன் செல்லம்!. .
சூர்யா தன் மகனின் அருகில் அமர்ந்து என்ன கோபமா இருக்க! அப்பா கிட்ட பேச மாட்ற! உன் அம்மா தான் முக்கியமா!.
சத்ய தேவ், நீங்க எனக்கு எத்தனை தடவை போன் பண்ணீங்க!. .மகி எனக்கு வாரத்தில் ஒரு தடவை லஞ்ச் கொடுத்து விட்டாள்.
மகி திருப்தியுடன் தன் பெண்ணுக்கு முத்த மிட்டு உதட்டை துடைத்து உடையை சரி செய்து வெளியே தூக்கி வந்தாள்.
சூர்யா மகியை முறைக்க அவள், தங்கம் அண்ணா வந்தாச்சு! பாருங்க சக்தி அண்ணா! இதழ் கண்ணை தேய்த்து கொண்டு பார்த்தாள்.
சத்ய தேவ் சிரித்து கொண்டே ஒன் மினிட் ஹேன்ட் வாஷ் பண்ணிட்டு வரேன் என சென்று குளித்து வந்தவன் தன் தங்கையை வந்து தூக்கி கொண்டு கன்னத்தில் முத்தம் பதித்தான்.
ஹே குட்டி பொண்ணு! தங்க குட்டி!. என சத்ய தேவ் கொஞ்சி கொண்டே மகி! மகி!. .
சக்தி கண்ணா!.
சத்ய தேவ், மா சித்தி baby shower முடிந்ததும் பாப்பாவுக்கு naming ceremony வைக்கலாமா!. .
சூர்யா, சூப்பர் சத்ய தேவ்!. பரவாயில்லை டா! நல்லா யோசிக்கிற!.
சத்ய தேவ், மகி என்ன சொல்றீங்க?
மகி, ஹான் வைக்கலாம்!..
சூர்யா, சத்ய தேவ்! இதழினி எப்டி!. .
மகி, எனக்கு பிடிக்கல.. .
உனக்கு எதுக்கு பிடிக்கணும்! என் பொண்ணுக்கு நான் தான் பேர் வைப்பேன். என சூர்யா அவளை முறைத்தான்.
மகி, என் பொண்ணு எனக்கு பிடிச்ச பேரை தான் வைப்பேன்!
அது எப்படி டி! என்னால் ஒத்துக்க முடியாது!
மகி, அதுக்கு நான் எதும் பண்ண முடியாது.
சத்ய தேவ், ஸ்டாப் இட்! என கொஞ்சம் சத்தத்துடன் கூறினான்.
இதழ் சத்ய தேவை மிரட்சியுடன் பார்க்க.. சத்ய தேவ் தங்கம்! குட்டி மா! என கைகளில் முத்தம் வைத்தான்.
இதழ் சூர்யாவை பார்த்து கையை நீட்டிட சூர்யா தூக்கி கொண்டு சத்ய தேவ் உனக்கு யார் பேர் வச்சா!. கேளு!.
சத்ய தேவ் மகி பக்கம் திரும்ப.. அவள். அமைதியாக இருந்தாள்.
சூர்யா, சரி அதை விடு அந்த குட்டி குட்டன் அடங்காத நாய்க்கு யார் பேர் வச்சா! கேளு!.
மகி வேறு எங்கோ பார்க்க..
சத்ய தேவ், என்ன மா!.
சூர்யா தன் பெண்ணுக்கு முத்தம் வைத்து அவள் எப்டி சொல்லுவா! அவள் தான் வைத்தாள். சோ என் தேவதைக்கு நான் தான் பேர் வைப்பேன்!.
மகி, ஒத்துக்க முடியாது!
சூர்ய தேவ், அவள் சீட் பண்றா! பாரு சத்ய தேவ்!
மகி, சக்தி கண்ணா! நான் நினைக்கும் பேரை அண்ட் உங்க அப்பா நினைக்கும் பேரை ஒரு காகிதத்தில் எழுதி போடலாம்! சோ அதில் இருந்து குலுக்கி போட்டு ஒரு பேரை எடுத்து கொள்ளலாம்.
சூர்யா, இது சரி இல்ல..
சத்ய தேவ், ஓகே!
மகி சிரித்து கொண்டே ஓகே டன்!.
சூர்யா, சத்ய தேவ்! அவளுக்கு சப்பொர்ட் பண்ற! அவள் மோசமானவள் உனக்கு தெரியாதா!.
மகி, சக்தி எனக்கு என்னோட situation…
சூர்யா, பிராடு! விடு சத்ய தேவ்! அவள் அவளை! .
இதழ் அவனுடைய மூக்கை பிடித்து திருப்பி மீசைய தொட்டு கன்னத்தில் எட்சில் படிந்தது.
சூர்யா, இதழ் நீ பேரழகி! என் பொண்ணு யாரும் வேணாம் டா! அப்பாவுக்கு நீ மட்டும் போதும்!.
மகி தன் பெண்ணை பார்க்க கொஞ்சம் பொறாமையாக தான் இருந்தது. அவன் கண்கள் மற்றும் இதழ் கண்கள் இரண்டும் மின்னியது! காலையில் இருந்து இரவு எல்லா நேரமும் என்னுடன் தான் இருக்கிறாள். ஆனால் சூர்யா கொஞ்ச நேரம் தான் அவளை தூக்கி கொஞ்சுகிறான். இரவு எப்பொழுது வந்தாலும் அவனுடைய நெஞ்சில் தான் இதழுக்கு தூக்கம். மகி கூட இருந்தால் மானாவாரியாக இஷ்டத்துக்கு ஒண்ணுக்கு போய் விடுவாள். ஆனால் சூர்யாவுடன் இருக்கும் போது அதுக்கு வாய்ப்பே இல்லை அந்த சிறு வண்டு இறங்கி மேட் மீது அமர்ந்து இயற்கை அழைப்பை விட்டு செல்லும்! அவ்வளவு உசத்தி அவங்க அப்பன்.
சத்ய தேவ் தன் அம்மாவை பார்த்து மா! என்ன கண்ணு! அப்படியே வெளியே வரும் அளவுக்கு லுக்கு!.
மகி, ஒன்னும் இல்ல என்று செல்ல சத்ய தேவ், டாடி! .
ம்ம் சொல்லு டா சத்ய தேவ்!
நீங்களும் அம்மாவும் சண்டையா!
சூர்யா, ஏன்!.
சத்ய தேவ், இல்ல வந்ததில் இருந்து சண்டை தான் போடுறீங்க! அதான்!
சூர்யா, கொஞ்சம் அப்பா கிட்ட பேசுற மரியாதை கொஞ்சம் கொடு டா!.
சத்ய தேவ், பா! சாரி டாடி!
சூர்யா இதலுடன் விளையாட.. சத்ய தேவ்!
டாடி!
ம்ம்!
சத்ய தேவ், டாடி நீங்க சொன்ன பேர் சூப்பர் ரொம்ப யுனிக்கா இருக்கு!
சூர்ய தேவ், அப்போ இதழ் பாப்பா தான்! என இருவரும் சிரித்து பேசி விட்டு மகி வந்ததும் மாலையாக அனைவரும் கிளம்பி சென்னை கிளம்பினார்கள்.
இங்கே அவள் ஹாஸ்பிடலில் இருந்தாள்.
ஷீலா அமைதியாக தேஜுவை பார்த்தாள்.
தேஜு, என்ன சீக்கிரம் சொல்லு இந்த குழந்தையை அபாட் பண்ண முடியுமா முடியாதா! .
ஷீலா, அந்த ஸ்டேஜ தாண்டி போயிடுச்சு! எதுக்கு நீ இப்படி பேசற! குழந்தை எல்லாம் வரம் தெரியுமா!
தேஜு, என் வயிற்றில் பிறக்கும் குழந்தைப் பாவம் பண்ணது அதை விட சாபம் டி! எதுக்கு கஷ்ட பட்டு இந்த உலகத்துக்கு வரனும்! அது தான்! சரி அதையும் மீறி பண்ணா என்ன ஆகும்!.
ஷீலா, தேஜு அது கஷ்டம் டி! பிளீஸ்! இதை விடு! விட்டு விடு!
தேஜு, சரி இது தான் விதி போல! இந்த குழந்தையை உன்னோட குழந்தையுடன் சேர்த்து வளர்த்து விடு!
ஷீலா, என்ன தேஜூ சொல்ற!.
தேஜு உதட்டை கடித்து கொண்டு தன் வயிற்றை நீவி கண்களை மூடியவள் கடை கண்ணில் நீர் வழிய தொடங்கியது.
ஷீலா, பிளீஸ் தேஜு பைத்தியக்காரி மாதிரி எதையும் பண்ணாத! நான்!
தேஜூ, ஹே வாயை மூடு! என அவளுடைய பேக்ல இருந்து பிஸ்டலை எடுத்து வைத்தாள்..
ஷீலா…?
தொடரும்..
Episode 368,
தேஜு தன் வயிற்றை நீவி கொண்டு இருந்த அதே நேரத்தில்….
இங்கே கீர்த்தனா புன்னகையுடன்! பாவா! பாவா! என அழைத்து கொண்டே ஜெய் இருக்கும் இடத்துக்கு சென்றாள்.
என்ன கீர்த்தி!
கீர்த்தி சிரித்து கொண்டே அவன் அருகில் நெருங்கி கையை எடுத்து வயிற்றில் வைத்தாள்.
ஜெய் என்னடி சொல்ற? எனக்கு ஒன்னும் புரியல…
கீர்த்தனா இப்ப கூட புரியலையா உங்களுக்கு? எப்படி புரிய போகுது! நானே சொல்றேன்! என்ன சிரித்துக் கொண்டே நமக்கு குட்டி பாப்பா வரப்போகுது! என்று கூறினாள்.
ஜெய் அப்படியே நின்றான்.
கீர்த்தி, இப்போ ரண்டு மாசம் ஆகுது! எனக்கு இப்பதான் கன்ஃபார்ம் பண்ணுனேன்!
இதை கேட்டதும் ஜெயிக்கு சந்தோஷமாகவும் இருந்தது. அவன் அவளை தூக்கி சுற்றி மணி வயிற்றில் முத்தமிட்டான்.“ சத்தியமா இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டி! உன்ன மாதிரி எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்ல! என்று கன்னத்தில் முத்தமிட்டான்.
கீர்த்தனா, போதும் விடுங்க! நான் போய் அத்தை கிட்ட சொல்றேன். மாமா கிட்ட அம்மா, அப்பாவுக்கு, அண்ணனுக்கு போன் பண்ணி சொல்லணும்! என்று சிரித்துக் கொண்டே கூறினாள்.
எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு இப்படி கொஞ்சம் வெட்கம் இல்லாமல் சொல்ற!
கீர்த்தனா, எனக்கு என்ன வெட்கம் அதுவும் உங்ககிட்ட…
ஜெய் ரொம்ப சந்தோஷமா இருக்கு அப்ப வெட்கம் இல்லையா! உன்னை வெட்கப்பட வைக்கணும் போல தோணுது என்று கூறினான்.
கீர்த்தனா அடி வாங்க போறீங்க என்று சொன்னவள். நான் சொல்லிட்டு வரேன் என்று எழுந்தாள்.
அவள் சென்றதும் உடனே போனை எடுத்து தன் நண்பர்களுக்கு பகிர நினைத்தவன். மனதில் திக்கென்று இருந்தது.
ஐயோ இதை எப்படி மறந்து போனேன் தேஜு சொன்ன மாதிரியே கீர்த்தனா மாசமாக்கிட்டாளே! ரெண்டு மாசம் ஆகுது! இப்போ என்ன பண்றது? என்று விக்கித்து நின்றான் .
தன் வரவேற்பு நிகழ்ச்சியின் இரவில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் நினைத்த ஜெய் ஆகாஷ்க்கு இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை…
அப்படி தேஜு என்ன கூறினாள்.
மூன்று மாதங்களுக்கு முன்பு;அந்து இரவு ஜெய் தேஜுவை பேச அழைக்க அதன் பின் அவர்கள் உரையாடல்..
தேஜு அவன் அருகில் வந்ததும் கட்டிக்கொண்டாள்.
ஜெய் ,என்னடி பண்ற தள்ளி நில்லு! எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு!
தேஜு, யாரு இல்லன்னு சொன்னது! வதினா சொல்லு டி சொல்லாத! உன் மேல எனக்கு எந்த தப்பான எண்ணமும் இல்லை…
ஜெய், இப்போ எதுக்கு என்ன வர சொன்ன தேஜூ!
தேஜு, உன்கிட்ட ஒரு சீக்ரெட் சொல்ல போறேன்!.
என்ன?
அதாவது நான் வசந்தனோட பொண்ணு! அண்ட் என்கூட ஒட்டி பிறந்தது உதயன்! என்னோட எனக்கு ரெண்டு தங்கச்சி இருக்காங்க.. ஒன்னு மைவிழி அண்ட் மான் விழி!
இதை கேட்டதும் ஜெய் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்து சிரிக்க வர
தேஜு, தயவு செய்து சந்தோஷ படாத முக்கியமான விஷயத்தை இனிமே தான் சொல்ல போறேன்! .
என்ன?
நீ அவங்களை கடத்தல் பண்ணனும்!
பைத்தியமாடி நீ!
தேஜு , ரே வாய அடக்குடா!.
ஜெய் ஆகாஷ், நான் யாருன்னு தெரியும்ல. உன் வீட்டுக்காரர் மாதிரியே ஈக்குவலான ஸ்டேட்டஸ் இருக்க ஒரு ஆளு! எனக்கு தெரியாதவர்கள் யாருமே இல்ல!
தேஜு சிரித்துக்கொண்டே நான் இப்போ போனதுக்கப்புறம் கீர்த்தனா கிட்ட போய் இந்த காமெடி எல்லாம் பண்ணு! அவ சிரிப்பா இப்போ முக்கியமான விஷயத்துக்கு வரேன்!
ஜெய், ஆகாஷ், ஓவரா பண்ற உன்னை என்ன பண்ணுவேன் தெரியுமா !
தேஜு அத்தனை பார்த்தேன் நீ முன்னாடியே இப்படி எல்லாம் பண்ணுவேன் என்று தான்! சுட சுட உங்களோட ஃபர்ஸ்ட் நைட் ரூம்ல ஃபுல்லா கேமரா வச்சு ஷூட் பண்ணி இருக்கேன்! கீர்த்தி அவளோட ஓவலேசன் பீரியட்ல சரியா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கீங்க! அதனால இன்னும் மூணு மாசத்துல கீர்த்தனா கன்சீவ் ஆயிடுவா! எதோ பேசிட்டு இருந்த போல இப்போ பேசு!.. என்று கால் மேல் கால் போட்டு கொண்டு அமர்ந்தாள்.
ஜெய் படபடத்துக் கொண்டே இப்போ உனக்கு என்ன வேணும்!
தேஜு சிரித்துக் கொண்டே“ நீ அவங்கள கடத்துவதற்கு ஹெல்ப் பண்ணனும் அவ்வளவுதான் சிம்பிள் பாவா!”
ஜெய் தேஜு உன்னை விட மாட்டேன்! இட்ஸ் ஓகே இப்போ சூர்யா கிட்ட சொல்றேன் என யோசித்து தலையை உழுக்கியவன் இப்போ என்ன பண்றது என சூர்யா எண்ண டயல் செய்ய முடிவு எடுத்தான்.
**
இங்கே தேஜு பிஸ்டலை எடுத்து ஷீலாவின் முன்பு வைத்தவள். என் பொண்ண நீ தான் பத்திரமா பாத்துக்கணும்! யாரா இருந்தால் என்ன இப்போதைக்கு நான் யாரையும் நம்புற நிலையிள் இல்ல.. அந்த spr பத்தி நான் சொல்ல விரும்பல… எங்க அப்பா அப்புறம் நான்!. எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா எங்க அப்பாவ நீ தான் ஷீலா பார்த்துக்கணும்! இதை நான் ரிக்வெஸ்ட் பண்ணல… கோபத்தோட அதிகாரத்தோட சொல்றேன். என்று கூறினாள்.
ஷீலாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை… ஹே தேஜு பிளீஸ் சூரிய பிரகாஷ் சார் இப்ப மாறிட்டாரு! உனக்கு பாப்பா பொறக்க போகுது மூணு குழந்தைகளை விட்டுட்டு நீ தனியா என்னடி பண்ண போற? எதுக்குடி இந்த பழிவாங்கற உணர்ச்சி எல்லாம்! அதை முதலில் தூக்கி போடு! இப்போ உனக்கு நல்ல குடும்பம் கிடைச்சிருக்கு! மகி எப்படிப்பட்ட கேரக்டர் உனக்கு தெரியுமா? உன் மனசாட்சியை தொட்டு சொல்லு! உனக்கு மகிய வாங்கணுமா? அவள பாத்தா அப்படியே உன்ன மாதிரி இருக்கா! என்னால் அவகிட்ட கோவமா கூட பேச முடியாது! தெரியுமா? பழிவாங்கும் எண்ணம் அவள உனக்கு பாத்தா வருமா டி!
மகி மகி மகி! இந்த அப்பாவின்ற முகத்த வச்சுக்கிட்டு தான் ஏமாத்திட்டு மயக்கிட்டு இருக்கா!
ஷீலா அப்போ நீ மகிய ஏதாவது பண்ண போறியா? மை விழி, அப்புறம் உன்கூட ஒட்டி பிறந்திருக்காண்டி உதயன் அவனை ஏதாவது உன்னால பண்ண தோணுதா!
தேஜு சிரித்துக்கொண்டே நான் யாரையும் எதுவும் பண்ண மாட்டேன்! நான் sprஅ கொலை பண்ண போறேன்.
என்னடி சொல்ற? என்று அதிர்ச்சியுடன் பார்த்தாள் .
தேஜூ , அவங்கள எல்லாம் நான் வேற விதமா கஷ்டப்படுத்த போறேன்! அவங்கள கஷ்டப்படுத்தும் போது என்னையே அவங்களுக்கு ஞாபகத்துக்கு வரும்! அந்த அளவுக்கு நான் கஷ்டப்படுத்த போறேன்!அடிக்க மாட்டேன்! அவங்கள டச் கூட பண்ண மாட்டேன்! ஆனா அவங்க கண்ணுல இருந்து ரத்தம் வர அளவுக்கு கண்ணீர் வரும்! அந்த அளவுக்கு என்னால பழி வாங்க முடியும்!
ஷீலா இதுல spr எங்கே இருந்துடி வந்தார்! ஏண்டி இப்படி சொல்ற?
தேஜு அவன் எல்லாம் ஒரு ஆளா? நான் இருக்கும் போதே இன்னொரு பொண்ண லவ் பண்றான்! அவளை அடைய இன்னும் முயற்சி செஞ்சுட்டு இருக்கான்! எல்லாமே மாயை..இந்த உலகத்துல எதுவும் நிரந்தரம் இல்லை! எனக்கு அவன முக்கியமா பழி வாங்கணும்!
தப்பு தேஜு இப்போ கூட நீ உன் குடும்பத்துக்கு கூட சேர வாய்ப்பு இருக்கு சொல்றத கேலு!.
தேஜு, எனக்கு அவனும் ஒன்னு தான் அந்த வசந்தன் குடும்பமும் ஒன்றுதான் மொத்தத்துல என்ன கஷ்டப்படுத்தின எல்லாரையும் நான் பழிவாங்க போறேன். என் குழந்தையை பார்த்துக்க… அவன லவ் பண்ணிட்டேன்ல என் கையால கொன்னா! அதுல ஒரு சந்தோஷம்! எழுந்து சென்றாள்.
அவள் செல்லவும் ஜெய் ஆகாஷின் வீட்டில் இருக்கும் தேஜுவின் ஆட்கள் அவளுக்கு போன் செய்து கீர்த்தனா கருவாகி இருக்கும் விஷயத்தை கூறினார்கள்.
இதை கேட்டதும் “கடவுள்னு ஒன்னு இருந்தா அவன் என் பக்கம் தான் இப்போ இருக்கான்!” என்று ஒரு முத்தத்தை பறக்க விட்டாள்.
இங்கே ஒரு வழியாக ஜெய் முடிவெடுத்து சூர்யாவிற்கு அழைக்கும் நேரம் அதற்கு முன் தேஜு அழைத்தாள்.
ஹலோ!.
“எப்படி நான் சொன்ன மாதிரி ரொம்ப தீவிரமா வேலை செஞ்சு இருப்பீங்க போல இருக்கு!”
என்ன சொல்ற?
தேஜு, அன்னைக்கு நான் சொன்னது எல்லாமே பொய்! நான் உங்க ரூம்ல எந்த ஒரு ரெக்கார்டிங்ம் பண்ணல அதெல்லாம் நான் உன்ன பயமுறுத்த சொன்னேன்! ஆனா அதையும் மீறி நீ ஹார்டுவர்க் பண்ணி இருக்க… சோ கீர்த்தனா மாசமாயிட்டா!! ரொம்ப சந்தோஷம் இனிமேதான் உங்க பாதுகாப்பு அதிகரிக்க போகுது!
ஜெய் மனதில் அய்யோ இப்படி ஏமாந்துட்டேனே! நான் ஒரு முட்டாள்! அன்னைக்கே சூர்யா கிட்ட சொல்லி இருக்கணும்! என்ற மனதில் நினைக்கத் கொண்டு இருக்க
தேஜு, இனிமே நீ யார்கிட்டயும் சொல்ல முடியாது.கீர்த்தனாவுக்கு தனியா கண்காணிக்க ஆள் போட்டு இருக்கேன். அந்த மைவிழிக்கு சீமந்தம் வச்ச அன்னைக்கு பிளான் பண்ணுவேன்! அப்படி இல்லன்னா அவளோட டெலிவரி டைம்ல உனக்கு போன் பண்றேன்! ரெடியா இரு!
ஜெய், தேஜு..
தேஜு, “இதுக்கு நடுவுல சூரிய பிரகாஷ் கிட்ட ஏதாவது அண்ட் உங்க அப்பாகிட்ட ஏதாவது சொல்லலாம்? கீர்த்தனா கிட்ட ஏதாவது சொல்லலாம்? சூர்யா கிட்ட ஏதாவது சொல்லலாம்? அப்படி இல்லன்னா வேற யார்கிட்டய ஏதாவது பண்ண அடுத்த நிமிஷம் கீர்த்தனா அவள் வயிற்றில் இருக்கும் குழந்தை இருக்காது! உன்ன நான் குடும்பத்தோட அழிச்சிடுவேன்! எனக்கு ஒன்னும் கவலை இல்லை! என் குழந்தைங்க அதை சூரிய பிரகாஷ் பாத்துக்குவான் நான் ஜெயில்ல போய் உட்கார்ந்துக்குவேன்! தூக்கு தண்டனை கொடுத்தாலும் சந்தோஷமா ஏத்துக்குவேன்! ”என்று கூறினாள்.
ஏண்டி இப்படி இருக்க? உனக்கு புரியலையா என்று கெஞ்ச ஆரம்பித்தான்.
“ரொம்ப நல்லா பாத்துக்க.. அடுத்து என்னோட போன் காலுக்காக வெயிட் பண்ணு, நான் சொல்ற இன்ஸ்ட்ரக்சன் அப்படியே ஃபாலோ பண்ற, சரியா பாவா! அப்படித்தானே உன் பொண்டாட்டி சொன்னா! ”என்று கூறினாள்.
ஜெய் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..
தேஜு, டாட்டா அண்ட் முக்கியமா வாழ்த்துக்கள். ஜெய் ஆகாஷ் என்னோட முன்னாள் காதலன்… என்னை உருகி உருகி காதலிச்சவனுக்கு இப்போ குழந்தை பிறக்க போகுது! ரொம்ப சந்தோஷமா இருக்கேன் கூறிவிட்டு போன் வைத்தாள்.
தேஜு சிரித்துக்கொண்டே “கல்யாணம் ஆன அன்னிக்கு நைட்டே நீங்க ரெண்டு சேர்ந்து இருப்பீங்க! அது எனக்கு தெரியும்!”
ஜெய் சாக் அடித்தவன் போல அவளை பார்த்தான்.
தேஜு, “ம்ம் இப்போ அவளுக்கு கரெக்டா ஓவலேசன் பீரியட்ல நீங்க ரெண்டு பேரும் ரிலேஷன்ஷிப் வச்சிருக்கீங்க… இதுல கிளிக் ஆச்சுன்னா உனக்கும் அவளுக்கு குழந்தை தான் என்னோட கெஸ் படி பார்த்தால் நீ பிரிகாசன் யூசே பண்ணி இருக்க மாட்ட! உன்னோட வயசுக்கு இப்போ குழந்தை பிறந்தால் தான் அதோட வாழ்க்கையை நீ பார்க்க முடியும்!”
என்ன தேஜு இது எல்லாம்!.
தேஜு, என்ன டா பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி சொல்றாலே அப்டின்னு பார்க்கிற சரி தானே!
ஜெய், அப் அப்படி நீ!.
தேஜு, உங்க first night அன்னிக்கு மட்டும் தான் என்னோட பாதுகாப்பை கொஞ்சம் தளர்த்தி வச்சேன்! மற்ற படிக்கு கிட்ட தட்ட ரெண்டு மாசமா உங்க ரெண்டு பேரையும் தீவிரமா கண்காணித்து இருக்கேன்! என கன்னத்தில் கை வைத்து கொண்டே கூறினாள்.
ஜெய், எதுக்கு இப்படி பண்ற இதுல உனக்கு என்ன கிடைக்க போகுது!.
தேஜு, எனக்கா! அதை உன் கிட்ட எதுக்கு சொல்லணும்! இப்போ ஜெய் சார் அந்த சூர்ய தேவ் பக்கம் இருக்காரே!.
ஜெய் தன்னை சரி செய்து கொண்டு இல்ல தேஜு எப்போவும் நான் உனக்கு…
“இதை நம்ப நான் கீர்த்தனா ஜெய் ஆகாஷ் ரெட்டி காரு லேது ரா!”
ஜெய் கவலையான முகத்தில் தேஜுவை பார்த்தான்.
தேஜு, உங்களை வாச் பண்ண காரணம் என்ன தெரியுமா! எப்படியும் நீ எனக்கு ஒரு விநாயகருக்கு எலி போல எனக்கு ஏதாவது ஒரு இடத்துல யூஸ் பண்ணுவேன் யூஸ் ஆவேன்னு உன்ன கண்காணிச்சுக்கிட்டே இருந்தேன். உன்ன மட்டுமா கண்காணிச்சேன்! அதுக்கு பலன் இப்போ கிடைக்க போகுதே!”
ஆனால்!…என ஒரு புன்னகையை உதிர்த்தவள் “உன்னை மட்டுமா வாச் பண்ணேன் உதயன், தாரா, மைவிழி கார்த்திக், கலைவாணி, வசந்தன் மகிழினி, லாஸ்ட்டா சூர்யா எல்லாரையும் இன்ச் பை இஞ்சா நோட் பண்ணன்.. அவங்கள நோட் பண்றது எல்லாம் தானா டெய்லி டிங் டிங் என whatsapp சொல்லி விடும்!.பட் உன்ன மட்டும் ஸ்பெஷலா கவனிச்சேன் ஏன்னா நீ தானே!” அந்த சூர்யாவுக்கு கூஜா வேலை பார்த்துட்டு திரியுறவன்.
ஜெய் வியர்க்க விறுவிறுக்க நின்றான்.
தேஜு , நான் உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்! நான் சொல்றத மட்டும் நீ செய் அவ்வளவுதான்! உன்னோட கீர்த்தனா உன் கூட இருப்பா! உன்னோட குழந்தையும் உன் கூட இருக்கும்!
ஜெய் ஆகாஷ் எதுவும் பேசாமல் சென்றான்.
தேஜு கண்டிப்பா நீ ஒத்துக்குவ சோ பொறுமையா உன் பொண்டாட்டி மாசமானது அப்புறம் என்கிட்ட வந்து சொல்லு!
ஜெய் எங்களுக்குள்ள எதுவுமே நடக்கல…
தேஜு இனிமே நடக்கும்ல்ல என்னை என்ன நெனச்சிட்டு இருக்க உனக்கு இது ஒரு எச்சரிக்கையாக சொல்கிறேன்! என்கிட்ட நீ தப்பிக்கவே முடியாது உன்னோட ஒவ்வொரு movementம் தெரியும்.
ஜெய், “தேஜு மகி உன் கூட பிறந்தவள்! அதை விட மை விழி மாசமா இருக்கா! உதயன் பாவம் டி!”
அட பாவத்த! அச்சோ சரி வேணாம் ஜெய்! என சொல்லி கொண்டே சிரித்தாள்.
ஜெய் மனதில் இதை சூர்யா கிட்ட சொல்லலாமா! என யோசித்து கொண்டு இருக்க…
தேஜு, மாவா! இதையெல்லாம்…. அதுக்கு மேல பிரண்ட்ஷிப் தான் சொத்து எனக்கு! அப்படின்னு அந்த சூர்யா கிட்ட சொல்ற வேலையெல்லாம் வச்சுக்கிட்டு இருந்தா! அவ்வளவுதான் உன்ன சுத்தி என்னோட கண் பார்வை இனி எண்ணிக்கை அதிகமா இருக்கு! போ உனக்கு இன்னைக்கு டைம் ஸ்டார்ட் நவ் சீக்கிரமா எனக்கு பதில் சொல்ற!. என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.
ஜெய் மண்டையை குடைந்து யோசித்துக் கொண்டிருந்தான் அவ்வப்பொழுது தேஜு போன் செய்து “பாத்ரூமில் ரொம்ப நேரம் இருக்க? அங்க இருந்து யாருக்காவது போன் பண்றியா!”….“ ஜிம்மிலேயே ரொம்ப நேரம் டைம் ஸ்பென்ட் பண்ற!” என்று துருவித் துருவி கேள்வி கேட்டு போன் செய்வாள்.
ஜெயிக்கு நன்றாக தெரிந்து விட்டது. அவள் நிறைய பாதுகாப்பு காவல்களையும், ஸ்பை கேமரா, ஸ்கை ஆட்கள் வைத்திருக்கிறாள் .இனி என்ன செய்வது? என்று கடவுளை வேண்டிக் கொண்டிருந்தான்.
இங்கே சூர்யா, மான்விழி சத்ய தேவ், மிதுன் தேவ் அவர்களின் தங்கப் புதல்வி என அனைவரும் மைவிழியின் வளைகாப்புக்கு ஊருக்கு சென்றார்கள்.
உமா தன் பேத்தியை கொஞ்சி கொண்டிருக்க… மிதுண் , மகி நம்ம எப்போ அம்மாச்சி வீட்டுக்கு போக போறோம்?
மகி, அங்கே இருந்து வரும்போது சொல்லி தான் கூட்டிட்டு வந்தியா? உன் பையன் உங்க வீட்டுக்கு போறேன்னு சொல்றான்!
அத்தை இல்லங்க அத்தை
மிதுன், உமா…மா நீங்க திட்ட வேண்டாம்! எனக்கு தாத்தாவை பார்க்கணும் போல இருக்கு!
உமா இன்னைக்கு ஒரு நாள் இருங்க நாளைக்கு போவீங்க என்று கூறினார்.
பாக்யா மற்றும் மதிவாணன் அதாவது கார்த்திக்கின் பெற்றோர் அவர்களுடைய வீட்டில் கொஞ்சம் கிராண்டாகவே அனைவரிடமும் இந்த வளைகாப்பு நடத்த வேண்டும் என்று மை விழி கூறிக் கொண்டிருந்தாள்.
கார்த்திக் ஏ என்னமோ முதல் குழந்தைக்கு வளைகாப்பு மாதிரி, ஓவரா சொல்லிட்டு இருக்க… இது மூன்றாவது குழந்தை…
மைவிழி, டேய் நாயே இது எனக்கு முதல் குழந்தை மாதிரி தான் அதைவிட சொல்லப்போனால் இது எனக்கு இரண்டாவது பிரசவம்!
கார்த்திக், உனக்கு இது மூணாவது பிரசவம்..
லூசு பையா எனக்கு ஒரே பிரசவத்துல ரெண்டு குழந்தைங்கடா அப்போ இது எனக்கு இரண்டாவது பிரசவம் தானே! எல்லாம் உன்னால வந்தது!
கார்த்தி, நீதாண்டி காரணம் ஆனால் என்னை மட்டும் சொல்லிடு என அங்கு கலகலப்புடன் அனைவரும் கூடி இருந்தார்கள்.
அந்த நேரம் ஹரிஷ் வந்தவன். கீர்த்தனா மாசமாக இருக்கும் விஷயத்தை கூறினான். அனைவருக்கும் மிகவும் சந்தோஷம் எல்லாம் நன்றாகவே சென்று கொண்டிருந்தது.
அடுத்த நாள் சூர்யாவின் குடும்பம்,, வசந்தன் கலைவாணியின் குடும்பம் வசந்தன்டைய இரண்டு அக்காக்களின் குடும்பம் ,நித்தியா தினேஷ் என அனைவரும் வந்தார்கள்.
தாரா மற்றும் உதயன் சிரித்துக் கொண்டே சீமந்தத்தில் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தார்கள்.
மைவிழிக்கு தாராவை சுத்தமாக பிடிக்கவில்லை. அவள் முகத்தை இழுத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
கனிமொழி, ஹரீஷ் கார்த்திக் என அனைவரும் சந்தோஷமாக இருந்தார்கள். முதலில் சீமந்தம் ஆரம்பித்தது .
அப்படியே மகிழினியின் சீமந்தம் போல நலங்கு வைத்தல், அரிசி ஆசீர்வாதம்,வளையல் போட்டு விடும் நிகழ்வு, கலவை சாதம் கட்டுச் சோறு ஊட்டி விடுதல் என வசந்தன் அனைத்தையும் தயாராக எடுத்து வந்தார்.
தாரா இதழினியை தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சி கொண்டு இருந்தாள். இது என்னடா அதிசயம் ஜெய் மற்றும் கீர்த்தனா இருவரும் வந்திருந்தார்கள் .
ஜெய் வழக்கத்தை விட மிகவும் அமைதியாக இருந்தான். சூர்யா அவனை வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
தேஜு அவ்வப்பொழுது போன் செய்து எதுக்கு இப்படி உம்மென்று நின்னுட்டு இருக்க! கொஞ்சம் ஃப்ரீயா இரு இல்லனா அந்த சூர்யா நாய்க்கு சந்தேகம் வரும்! என்று அவ்வப்பொழுது இன்ஸ்ட்ரக்ஷன் கூறிக் கொண்டிருந்தாள் .
மாலையானது தேஜு, ஜெய் ரெடியா இரு…
அவன் எதுவும் பதில் சொல்லாமல் இருக்க…
பதில் சொல்றியா இல்லையா?
ஜெய், தேஜு வேண்டாம்…
தேஜு , அப்படியா வேண்டாமா! ஜெய் நீ சொல்றது கூட சரிதான்! என்று மெதுவான குரலில் பேசியவள். நீ அப்படியே திரும்பி உன் பொண்டாட்டி இருக்கலான்னு பாரேன்…
ஜெய் விசுக்கென திரும்ப கீர்த்தனா நான்கு காவலாளிகளுக்கு நடுவில் நின்று கொண்டிருந்தாள்.
ஜெய் அந்த ஸ்பெஷல் நாலு போர்சையும் அரேஞ்ச் பண்ணது நீதானே!
அவன் எட்சிளை விழுங்கி கொண்டு ப்ளீஸ்!. தேஜு… எதுவும் பண்ணாத என்று கெஞ்சினான்.
தேஜு சிரித்துக்கொண்டே அந்த நாலு பேரும் உன்னோட ஆள் இல்லை பாவா
ஜெய், சரி இப்ப நான் என்ன பண்ணனும்?
ம்ம் அது ஜெய்! இப்போ நான் சொல்றத நல்லா கேளு! பாக்யா அப்புறம் மதிவாணன் இவங்க ரெண்டு பேரும் கார்ல கொண்டு வந்து மை விழியை விட்டதும், அவங்கள சுத்தி இருக்கிற மத்த ரிலேஷன் எல்லாரையும் நீ கலச்சி அனுப்பிடனும்! மொத்த குடும்பமும் வீட்டில் இருக்கும்போது நான் சொல்றத செய்ற …
ஜெய், அமைதியாக இருக்க..
தேஜு, அதே போல கீர்த்தனா இப்போ உன் கூட வரமாட்டா! அவளை கார் வச்சு நான் இங்க என் வீட்டுக்கு கொண்டு விடுவேன்!.
ஜெய், திடிக்கிட்டு வேண்டாம்! அவளை எதுவும்…
தெஜு, அவளை எதுவும் பண்ண மாட்டேன்! ஆனால் அது உன் கையில் தான் இருக்கு!.
ஜெய், நீ மனுஷியா டி! எதுக்குடி இப்படி என்னை கொடுமை பண்ற…
தேஜு, டேய் * உன்ன பார்க்க சூர்யா வரான்! வாய மூடிட்டு நான் சொல்றத செய்.. அவன்கிட்ட எதுவும் சொல்ற வேலை வச்சுக்க வேண்டாம் என்ன உன்னை சுத்தி எல்லா இடத்திலும் என்னோட ஆளுங்க தான் இருக்காங்க என சொல்லி கட் செய்தாள்.
சூர்யா ஜெய் ஆகாஸ் ரொட்டி ரொம்ப பிஸி போலயே! என்னை பார்த்ததும் பார்க்காத மாதிரி நின்று கொண்டிருக்கிறார்.
ஜெய் , புன்னகையுடன் அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடா சும்மாதான்
சூர்யா, உன்னோட முகம் சரியில்லையே!
ஜெய் எப்படியாவது அவனிடம் விஷயத்தை கூறி விட வேண்டும் என்று முயற்சித்தவன்.“ இந்த சூரியா பொண்டாட்டி சரியான கிரிமினல்!”
சூர்யா, அது எனக்கே தெரியுமே! என்று மகி இருக்கும் இடத்தை பார்த்தான்.
(இருவருக்கும் இன்னும் சண்டை ஓயவில்லை ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் பக்குவம் வேறெங்கோ போய்விடும்.)
(ஆனால் எப்படி மகிழினி சூர்யாவை சமாதானம் செய்யப் போகிறாள்? என்பது தான் அடுத்து வரும் பாகம்!)
ஜெய் மீண்டும் அவனிடம் “இந்த சூரியா பொண்டாட்டி சரியான கிரிமினல்! அவளை மாதிரி ஒரு ஃபார்ஜெரியை பார்த்ததே இல்லை! இப்போ நீ என்ன பண்ண போற சூர்யா!” என்று தீவிரமாக அவனை பார்த்து கூறினான்.
சூர்யா….?
தொடரும்…
Episode 369,
ஜெய் மீண்டும் அவனிடம் “இந்த சூரியா பொண்டாட்டி சரியான கிரிமினல்! அவளை மாதிரி ஒரு ஃபார்ஜெரியை பார்த்ததே இல்லை! இப்போ நீ என்ன பண்ண போற சூர்யா!” என்று தீவிரமாக அவனை பார்த்து கூறினான்.
என்ன டா சொல்ற? என சூர்யா கேட்க..
அதற்குள் பின்னால் இருந்து ஒரு குரல் அது ஜக்கு பாய் தான்!. பாஸ்! என வந்து நின்றான்.
சூர்யா அவனை திரும்பி பார்க்க ஆனால் ஜக்கு பாய் ஜெய் ஆகாஷ பார்த்து கொண்டு நின்றான்.
ஜெய் யாரென புரியாமல் பார்க்க ஜக்கு பாய், “உங்களை மேம் வர சொன்னாங்க!.”என கடும் பார்வையில் பார்த்தான்.
அவன் வேறு வழி இல்லாமல் சூர்யாவை திரும்பி பார்த்து கொண்டே செல்ல ஜக்கு பாய், உங்க மனைவிய சென்ட் ஆஃப் பண்ணுங்க! அண்ட் இந்த மைக்அ உங்க சட்டையில் பின் பண்ணுங்க.. என்று நீட்டினான்.
ஜெய், யார் நீ!..
ஜக்கு பாய், தேஜு மேம் உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க! என சொல்லி விட்டு அவன் காருக்கு அருகில் அழைத்து சென்றான்.
ஜெய் துக்கம் தொண்டையை அடைக்க கீர்த்தனாவைப் பார்த்தான்.
கீர்த்தனா, என்னை எங்கே அனுபுறீங்க! அம்மா வீட்டுக்கு போக தோணுது! திடீர்னு எதுக்கு பாதுகாப்பு அதிக படுத்தினீங்க!
ஜெய், பாப்பா இருக்கே! அதை விட உன்னோட பாதுகாப்பு முக்கியம்! நீ கிளம்பு நான் உன்னை வந்து கூட்டிட்டு போறேன்!.
கீர்த்தனா, எப்ப வருவீங்க? நீங்க நானும் உங்க கூடவே வரவா!
ஜெய், நீ இப்போ மாசமா இருக்க கீர்த்து, நீ பத்திரமா வீட்டுக்கு போ, நான் நைட் வந்துடுவேன். என்று கூறினான்.
கீர்த்தனா, சரி ஓகே இப்போ எங்க கெஸ்ட் ஹவுஸ் போறோமா! அதுக்கு நான் எங்க வீட்டுக்காவது போயிருப்பேன்! என்று கொஞ்சிக் கொண்டே அவனைப் பார்த்தாள்.
ஜெய், நான் வந்து கூட்டிட்டு போறேன்! நம்ம எவ்வளவு நாள் வேணாலும் உங்க வீட்ல இருக்கலாம். சரியா..
கீர்த்தனா சிரித்துக்கொண்டே சரி நான் நீங்க வர வரைக்கும் வெயிட் பண்றேன்! ஜெய் நீ சாப்பிட்டு படுத்து தூங்கி ரெஸ்ட் எடு நான் சூர்யா கிட்ட பிசினஸ் விஷயமா பேசிட்டு வந்துருவேன்.
கீர்த்தனா சரி என்று அமர்ந்து கொண்டாள். கார் நேராக அவளை சென்னையில் இருக்கும் ஜெய் ஆகாசின் கெஸ்ட் ஹவுஸ்க்கு கூட்டி சென்றது .
ஜக்குபாய் ஜெயிடம் சார்! என்று அழைத்தான்.
ஜெயி திரும்பி பார்க்க…
இந்த ப்ளூடூத்தை நீங்க எப்பவும் ரிமூவ் பண்ண கூடாது! மேம் கொடுத்தாங்க! சோ இத இன்சர்ட் பண்ணிக்கோங்க! என்று சொல்லி அவன் கையில் கொடுத்து விட்டு ஒரு பக்கம் போய் நின்று கொண்டான்.
ஜெய் வேறு வழியில்லாமல் அதை எடுத்து காதில் சொருகினான்.
தேஜு, பரவால்லையே! ரொம்ப சமாதானம் பண்ணி உன் பொண்டாட்டிய அனுப்பி வச்சிட்ட… வெரி குட் சூர்யா கூட கிளம்பி அவங்க வீட்டுக்கு போ!.
ஜெய் எதுவும் சொல்லாமல் சூர்யாவின் அருகில் சென்றான்.
தேஜு, இப்போ எதுக்கு முகத்தை இப்படி வச்சிட்டு இருக்க… சிரிச்சுகிட்டே எப்பவும் பேசுறது போல பேசு..
ஜெய்ய் வேறு வழியில்லாமல் சிரித்தான் அதன் பின் சூர்யாவின் அருகில் சென்றான். அனைவரும் மைவிழி கார்த்திக் குழந்தைகள் என பாக்கியா, மதிவாணன் இருவரும் அவர்களை அழைத்துக் கொண்டு வசந்தன் வீட்டுக்கு சென்றார்கள்.
போகும் வழியில் பாக்யா, “இது இரண்டாவது குழந்தை இதுக்கு பிரசவம் எல்லாமே நம்ம தான் பாக்கணும்! ரெண்டுக்குமே நாமதான் பார்த்தோம் ஆனால் சடங்கு சம்பிரதாயத்துக்காக மட்டும் தான் உங்க மாமனார் வீட்டுக்கு அனுப்புறேன்! நீங்க ரெண்டு நாள் இருந்துட்டு மைவிழிய கொண்டு வந்து நம்ம வீட்ல விட்டுடனும் கார்த்திக் சரியாடா…!”
கார்த்திக் சிரித்துக்கொண்டே சரிமா என்று கூறினான்.
மைவிழி என்னால் இரண்டு நாள் எல்லாம் எங்க வீட்ல இருக்க முடியாது!
கார்த்திக் , அப்போ இப்பவே நம்ம வீட்டுக்கு போலாம்ங்கறியா?
மைவிழி, “அப்படின்னு நான் சொல்லவே இல்லையே! பிரசவம் வரைக்கும் நான் எங்க வீட்ல தான் இருப்பேன்! உங்க அம்மா கிட்ட சொல்லி சம்மதிக்க வச்சிடு!” என்று சொல்லிக்கொண்டு திரும்பிக் கொண்டாள்.
கார்த்திக், என்னடி பேசுற எங்க வீட்ல நீ இருக்கவே மாட்டேங்குற! உங்க வீட்டுக்கு வந்து உக்காந்துக்குற… எங்க அம்மாவுக்கும் ஆசை இருக்கும் தானே!
மைவிழி , எனக்கு இப்போ பிரசவ நேரம் அதனால எனக்கு எங்க வீட்ல இருக்கணும்! அதுவும் இல்லாம எனக்கு ஆபரேஷன் பண்ணி தான் ரெண்டு குழந்தையும் எடுத்தாங்க! எனக்கு எப்படி முதுகு வலிக்குது தெரியுமா? உங்க அம்மாவே எல்லா வேலையும் செய்வாங்களா ?சொல்லுடா?
கார்த்திக், இப்போ எங்க அம்மா தானே எல்லா வேலையும் செஞ்சுட்டு இருக்காங்க! நீ சும்மா தானே வந்து அதிகாரம் பண்ணிட்டு இருக்க…
மைவிழி, கார்த்திக் இது கூட பண்ண மாட்டியா… எனக்கு நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா?
கார்த்திக், இரண்டு மாசம் டூ மச் அட்லீஸ்ட் ஒரு வாரத்தில் கிளம்பி எங்க வீட்டுக்கு வந்து விடு! அப்புறம் அம்மா கிட்ட பேசி சமாதானம் பண்ணி நான் உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்.
மை விழி சிரித்துக் கொண்டு உனக்காக மட்டும் தான் நான் இதை ஒத்துக்குறேன்! சரியா என்று இருவரும் பேசிவிட்டு பேச பேச வீடு வந்ததே தெரியவில்லை.
சூர்யா மான் விழி அதே விரைப்புடன் இருந்தார்கள்.
மகி, சக்தி உங்க அப்பாவோட மூஞ்சி மங்கி மாதிரி இருக்கு…
மிதுன், மம்மி இன்னைக்கு மட்டும் தான் நீ கரெக்டா பேசுற…
சூர்யா தன் குழந்தையும் முத்தம் வைத்துக் கொண்டு ரொம்ப வாய் நீளுது நினைக்கிறேன்!..
இன்று மகிழினி கை நீலுது இது சரியா இருக்கும்! என்னங்க சரி தானே!
சூரியா வாய அடக்குடி.. என்று பேச வர.
சத்ய தேவ் அப்போ ரெண்டு பேரும் சண்டையா? .
சூர்யா உடனே குரலை மாற்றிக்கொண்டு இல்லடா அந்த பேர் வைக்கிறதுக்கு தான்! மத்தபடி நான் எதுக்கு சண்டை போட போறேன். நீ சொல்லி நான் கேட்காம இருப்பேனா? என மனம் உருக வைப்பது போல் பேசினான்.
ஜெய் மிகவும் அமைதியாக கார் ஓட்டிக்கொண்டு வந்தான்.
சூர்யா, என்னடா ரொம்ப அமைதியா இருக்க… எதுவும் பேசு 24 மணி நேரமும் பேசிட்டே வருவ. இன்னிக்கு அமைதியா இருக்க?
ஜெய் ஒன்றும் இல்லை சூர்யா சும்மாதான்!
தேஜு, உன்னோட ஆக்டிங் ரொம்ப டூ மச்சா இருக்கு! கொஞ்சம் பேசு!
ஜெய் என்ன பேசுவது என்று தெரியாமல் “சூர்யா இப்போ வர வர நீ ரொம்ப மாறிட்டன்னு நினைக்கிறேன்!”
சூர்யா, என்ன சொல்ற நீ தான் டா!..
ஜெய், ஆமா நீ கொஞ்சம் மாறிட்ட.. அது ஏன்னு தெரிஞ்சுக்கலாமா? எதுவும் பிரச்சனையா?
தேஜு புரியாமலேயே அமர்ந்து கொண்டிருந்தாள்.
சூர்யா, என்னடா சொல்ற? நீ உனக்கு தானடா பிரச்சனை! முகத்தை ஒரு மாதிரி வச்சிட்டு இருக்க? உனக்கு ஏதாவது பிரச்சனையா?
ஜெய் அப்படியெல்லாம் இல்லடா என்று தலையை செய்தவன் ஆமாம் என்று கண்களால் அவனிடம் ஏதோ பேச முயற்சி செய்தான்.
சூர்யா திரும்பிக் கொண்டான் ஒன்றும் புரியாமல் திரும்பிக் கொண்டான். அதன் பின் என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஜெய்யை திரும்ப திரும்ப பார்த்தான்.
தேஜு, திரும்பி திரும்பி அவனை எதுக்கு பார்க்கிற?
ஜெய், திக்கென பார்க்க.
தேஜு, கேமரா லைவ் telecast போயிட்டு இருக்கு… அதனால் எதும் try பண்ணாத!
மைா விழியை தாரா ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தாள். ஜெய் சூர்யாவிடம் அருகில் அமர்ந்து கொண்டிருந்தான்.
தாரா இதழினியை வாங்கி முத்தம் பதித்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
உடனே அங்கிருக்கும் சில வயதான பாட்டிகள் கலைவாணி கிட்ட “உதயனுக்கு கல்யாணம் ஆகி கூட கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேலாக போகுது தான கலை!”
கலைவாணி, ஆமாம்
அதில் இருக்கும் ஒரு பெண்மணி ஓட மை விழிக்கு தான வளகாப்பு முடிஞ்சிருச்சே! அவள் கையில இருந்து ரெண்டு வளையலும் அவ ஆசீர்வாதம் பண்ண அரிசியை தூவி உன்னோட மருமக பொண்ண மைவிழிய ஆசீர்வாதம் பண்ண சொல்லு , சீக்கிரம் குழந்தை பிறக்கும் என்று ஒரு ஐதீகம் என்று கூறினார்.
கலை, அதெல்லாம் வேண்டாம் சித்தி நம்மள மாதிரி அவங்க சாதாரண ஆள் இல்ல! பெரிய ஆளு இதையெல்லாம் மதிக்க மாட்டாங்க! அதைவிட அவங்க பிரச்சனையை அவங்க பாத்துக்குவாங்
இதையெல்லாம் உதயன் கேட்டுக்கொண்டு தன் அம்மாவின் முன் வந்து நின்றான்.
கலை எதுவும் பேசாமல் திரும்பிச் செல்ல…
அங்கிருக்கும் பெரியவர்கள் பேசிக்கொண்டே இனிப்புகளை பலகாரங்களை அமர்ந்து சாப்பிட்டு கொண்டு நியாயமடித்தபடி புரணி பேசிக் கொண்டிருந்தார்கள்.
உதயன் தன் அம்மாவை பின் தொடர்ந்து சென்றான்.
கலை , இப்போ எதுக்கு என் பின்னாடி வர
உதயன், உங்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? என் பொண்டாட்டி என்ன தப்பு பண்ணா? உங்களை சமாதானம் பண்ணனும்னு அவங்க குடும்பத்தை தூக்கி போட்டுட்டு வந்து உங்க காலடியில் கிடக்கிறாளே? அப்ப கூட உங்களுடைய மனசு குறையாதாமா?
கலைவாணி, நான் உன்ன இங்க இருந்து போக சொன்னானா? உங்கள வரக்கூடாதுன்னு சொன்னனா? உங்கள துரத்தினேனா? உங்கள கொடுமைப்படுத்தினேனா? நான் உண்டு என் வேலை உண்டுன்னு தான இருக்கேன்! அப்புறம் எதுக்கு தப்பு பண்ண மாதிரி, கொடுமைப்படுத்துற மாமியார் மாதிரி என்னை காட்டுற.
உதயன், அதுதான் ஏன் பண்ண மாட்டேங்கறீங்க?
கலைவாணி, அப்போ என்ன கொடுமைப்படுத்த சொல்றியா?
உதயன், “அம்மா ப்ளீஸ்மா அவ ரொம்ப நல்ல பொண்ணுமா உங்களுக்கு தெரியாது! இங்கு இருக்க தான் அவளுக்கு ரொம்ப புடிச்சிருக்கு! அவளுக்கு குழந்தைங்க எல்லாம் ரொம்ப பிடிக்கும்! நீங்க நினைக்கிற மாதிரி சினிமா நடிகை எல்லாம் மோசமானவங்க இல்லம்மா… நமக்கு அவங்களோட வாழ்க்கையை பத்தி தெரியல! தாரா உண்மையாகவே நல்ல பொண்ணுமா! ”
கலைவாணி “உன்னோட இந்த வாதத்தை என்கிட்ட வைக்காத, எனக்கு பிடிக்கல ,உங்கள நான் தொந்தரவு செய்யல, என்னையும் நீ தொந்தரவு செய்யாதே! என்று சொல்லிவிட்டு அவர் சென்று விட்டார்.
உதயன் மனம் நொந்து தாரா இருக்கும் திசையை பார்த்தான். தன் தங்கை குழந்தைகளுடன் அவ்வளவு சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கிறாள். அவள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டுமே அவளுக்கு என்று பிள்ளை வரம் கிடைக்கும்? என்று கடவுளிடம் வேண்டினான்.
மாலை 6:00 மணி ஆனது அனைத்து உறவினர்களும் கிளம்பி விட்டார்கள்.
பாக்யா மதிவாணன் அவர்களை விட்ட கொஞ்ச நேரத்திலேயே கிளம்பி விட்டார்கள். உமா , நட்ராஜ் இருவரும் வீட்டிற்கு வந்து மைவிழியை வாழ்த்திவிட்டு சென்றார்கள்.
இப்பொழுது அங்கு கார்த்திக் குடும்பம் சூர்யாவின் குடும்பம் உதயம் வசந்தன் கலைவாணி அதற்கு மேல் ஜெய் மட்டும் தான் இருந்தான்.
சூர்யா, என்னடா இவ்வளவு நேரம் டைம் ஸ்பென்ட் பண்ற? அதுவும் மாசமா இருக்குற பொண்டாட்டியை விட்டுட்டு என் கூட வந்து உட்கார்ந்துட்டு இருக்க?
ஜெய், உன்னிடம் பிசினஸ் பத்தி கொஞ்சம் பேசணும்…
சூர்யா , ஆம் பேசலாமே!.
தேஜு சரியாக “இதுதான் சரியான நேரம் நீ சூர்யாவை வெளியே கூட்டிட்டு வா! நான் என்னோட வேலை ஆரம்பிக்கிறேன்! எல்லா இடத்திலும் கேமரா இருக்கு! என்கிட்ட இருந்து தப்பிக்கணும், தில்லாலங்கடி வேலை பார்த்து காப்பாத்தணும்னு, மட்டும் கனவுல நெனச்சிட்டு இருக்காத!
சரியாக தேஜூ மற்றும் சூர்யா இருவரும் வெளியே வந்து பேசிக் கொண்டிருக்க…
உள்ளே கலைவாணி அனைவருக்கும் மாலை நேரத்திற்கு டி , காபி என அனைத்தையும் தயார் செய்து கொண்டிருந்தாள் .
அங்கு இருக்கும் அனைவரும் போனில் நோண்டிக் கொண்டிருக்க தாராவும் உதயனும் குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
தேஜு அவளுடைய ஆட்களிடம் “சரியான சந்தர்ப்பம் உங்க வேலை ஆரம்பிங்க…!”
அந்த தெருவிற்கு கொசு மருந்து அடிக்க வந்த ஆட்கள் ஒரு விதமான கண்ணீர் புகைவடி போன்று ஒரு புகை மூட்டத்தை உருவாக்கினார்கள்.
அந்த புகையில் மெதுவாக வசந்தன் வீட்டில் காம்பவுண்ட் ஏரி குதித்த ஒரு நான்கு ஐந்து பேர் வீட்டுக்குள் தடதடவென நுழைந்து, புகையை உண்டாக்கினார்கள்.
சூர்யா மற்றும் ஜெய் இருவரும் இரும்பிக் கொண்டே என்ன ஆச்சு! இந்த இடம் புகையா மாறிடுச்சு! ஜெய் இது அந்த கொசு மருந்துன்னு நினைக்கிறேன்! என்று சொல்லிக் கொண்டே இரும…
சரி உள்ள போலாமா என்று சூர்யா வீட்டு பக்கம் திரும்ப…
ஒரு 10 நிமிடத்தில் மயங்கி அப்படியே சரிந்தார்கள். சூர்யா ஜெயை திரும்பி பார்க்க ஜெய் கண்ணை தேய்த்துக் கொண்டே சூர்யா எனக்கு மயக்கம் வர மாதிரி இருக்கு என்று சொல்லிக்கொண்டே அனைவரும் பொத்து பொத்து என்று விழுந்தார்கள்.
அந்த நேரம் தேஜு, ஜக்குபாய் கிட்ட தாரா அப்புறம் குழந்தைங்க எல்லாத்தையும் விட்டுட்டு… மகி உதயன் மைவிழி கார்த்திக் வசந்தன் கலைவாணி சூர்யா ஜெய் இவங்கள மட்டும் தூக்கிட்டு வந்துடுங்க..
சரி மேடம் என குழந்தைகள் மற்றும் தாராவை விட்டுவிட்டு மற்ற அனைவரையும் 10 நிமிடத்தில் அள்ளிக்கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத நகரத்திற்கு வெளிப்புறத்தில் உள்ள தொழில்சாலை பகுதிக்கு அழைத்து வரப்பட்டார்கள்.
கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வசந்தன் மற்றும் கலைவாணி இருவரும் அருகருகே அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு முன்னால் ஒரு டிவி திரை ஓடிக்கொண்டிருந்தது.
அதேபோல் சூர்யா கார்த்திக் ஒரு பக்கமும் அவர்களுக்கு ஒரு டிவி ஓடிக்கொண்டிருக்க…
மான்விழி, மைவிழி இருவருக்கும் கை கால்கள் கட்டப்பட்டு இன்னொரு இடத்தில் ஒரு டிவி ஓடிக்கொண்டிருந்தது.
உதயன் மட்டும் நடுவில் அமர வைக்கப்பட்டு இருந்தான்.சுற்றிலும் சவுண்ட் ப்ரூப் கண்ணாடிகள். அனைவரையும் பார்க்கும் விதமாக கலைவாணி மற்றும் வசந்தனுக்கு ஒரு திரை ஓடிக்கொண்டிருந்தது.
மயக்கம் தெளிந்தவர்கள் என்னாச்சு உடம்பெல்லாம் அடிச்சு போட்ட மாதிரி வலிக்குதே! என்று சொல்லிக் கொண்டே எழுந்தார்கள்! வசந்தம் தான் முதலில் எழுந்தார்.
அவர் கலைவாணியை பார்த்து “அய்யோ நம்ம எங்க இருக்கோம்? கலை! கலை! என்னாச்சு? எங்க இருக்க? இது நம்ம வீடு மாதிரி தெரியலையே? என்று சுற்றிலும் பார்த்தார்.
யார் நம்மள இப்படி கட்டிப்போட்டது என கலைவாணி தன்னுடைய நிலையை பார்த்ததும் கண்களில் கோபமும் ஆத்திரமும் ஒரு வித பயமும் வந்து குடி கொண்டது.
அதேபோல் சூர்யா, கார்த்திக் ,உதயன் மைவிழி என அனைவரும் திட்டிக்கிட்டு சுற்றிலும் பார்த்தார்கள்.
நம்மள கடத்தியது யார் இருக்கா என்று யோசித்துக் கொண்டே திரும்ப அங்கே ஜெய் நின்று கொண்டிருந்தான்.
தேஜுவல் நின்னுட்டு இருக்க போய் சூர்யா கிட்ட பேச்சு குடு…
ஜெய் கெஞ்சி கொண்டே “ப்ளீஸ் என்னை விட்டுட்டு.. தேஜு! தயவு செய்து உங்க எல்லாத்தையும் விட்டுட்டு” என்று கெஞ்சினான்.
தேஜு நான் கொஞ்சம் நல்லவ சோ அதையும் கெடுத்துடாத போ போய் அவங்க கிட்ட பேசி கொடு!..
ஜெய், முடியாது என்று நின்றான்.
அப்போ இத பாரு உன் முன்னாடி இருக்கிற திரையில கீர்த்தனா தெரியுறாளா? அதில் கீர்த்தனா ஜெய் வருவானா என்று காத்துக் கொண்டிருக்கும் ஒரு வீடியோ தான் ஓடிக்கொண்டிருந்தது.
ஜெய் பதற்றத்துடன் ப்ளீஸ் எதுவும் செஞ்சுடாத என்று கெஞ்சினான்.
அப்படின்னா போ போய் எல்லாத்துகிட்டையும் உன்னோட முகத்தை காட்டி பேசு பார்க்கலாம்!..
ஜெய் நேராக சூர்யாவை பார்க்க சென்றான்..
தேஜு அதற்குள் திரையில் அனைத்து குழந்தைகளையும் சமாளிக்கும் ஒரு வீடியோவை போட்டு விட்டாள்.
மகிழினி அந்த நேரம் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வந்து எழுந்து தன் குழந்தையையும் தன் கணவனையும் அனைவரையும் தேடினாள். பக்கத்தில் மைவிழி அமர்ந்து கொண்டிருக்க…
அக்கா! என்னாச்சு நம்ம எப்படிங்க வந்தோம்? ஐயோ பாப்பா! பாப்பாவுக்கு எங்கே? யார் இப்படி எல்லாம் பண்ணாங்க.. என்று தொடர்ந்து பேசிக்கொண்டே பதட்டத்துடன் கத்தி அழ ஆரம்பித்தாள்.
மைவிழி, கார்த்திக் சூர்யா மாமா யாராவது இருக்கீங்களா?.. இன்று இன்னொரு பக்கம் கத்திக் கொண்டிருந்தாள்.
திரையில் வசந்தன் மற்றும் கலைவாணி அமர்ந்திருக்கும் அந்த அறையில் உள்ள திரையில் ஐந்து பாக்ஸ்கள் ஒரு இதில் ஒரு இடத்தில் உதயன் கட்டப்பட்ட அமர்ந்திருக்க, இன்னொரு இடத்தில் மைவிழி மற்றும் மகிழினி கட்டப்பட்டிருந்தார்கள்.
அதேபோல் கார்த்திக் சூர்யா கட்டப்பட்டிருந்த அந்த காட்சிகள் ஓடிக்கொண்டிருக்க அதற்கு கீழே தாரா அனைத்து குழந்தைகளையும் சமாளிப்பது இதில் நீ ஓயாமல் அழுது கொண்டிருப்பது.
தாரா அவளுக்கு எப்படி பால் கொடுப்பது? எப்படி சாப்பிட வைப்பது என்று பார்க்க? சிவன்யா மற்றும் பவனியா இருவரும் அழ ஆரம்பித்தார்கள் . மிதுன் அம்மா எங்கே? அம்மா எங்கே என்று எல்லா இடத்திலும் தேடினான். சக்தி என்ன ஆச்சு அத்தை? சக்தி என்று அழைத்திடத்திலும் தேடிக் கொண்டிருந்தார்கள் குழந்தையின் அழுகை குரல் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தது இங்கு மகிழினிக்கு நெஞ்சமெல்லாம் வழி எடுத்தது.
கலைவாணி இந்த காட்சிகளை எல்லாம் பார்த்து அழ ஆரம்பித்தார்.என்னங்க? யாருங்க இப்படி பண்ணி இருப்பாங்க?
தேஜு, ஜெய் நில்லு …
சொல்லு!
தேஜு, நீ போக வேண்டாம் வந்து அவங்கள கேமராவில் கண்காணி வா… உடனே கண்ட்ரோல் ரூமுக்கு வா !
ஜெய் வேறு வழியில்லாமல் சென்றான் இப்பொழுது உதயன் ,சூர்யா , ஜெயிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. தாரா அனைவரையும் சமாளித்து “அழாதீங்க! அம்மா வந்துடுவாங்க! கவலைப்படாதீங்கடா! கண்ணா என்று அனைவரையும் சமாதானம் செய்யும் காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது.
சூர்யாவுக்கு மகிழினி அமர்ந்து கொண்டிருப்பது ஓடியது. இப்படியே விடிய விடிய அந்த காட்சிகள். ஓடிக்கொண்டிருந்தது. கலைவாணிக்கு என்ன செய்வது? என்று தெரியவில்லை யார் இப்படி நம்ம அழுது கொண்டே பார்த்தார்.
வசந்தனுக்கு நெஞ்சு வலிப்பது போல் இருக்க கலை எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு? நம்ம யாருக்கு என்ன கெடுதல் செய்தோம்! எதுக்கு? நம்மளை இப்படி பண்றாங்க? என்று புழுங்கி அழ ஆரம்பித்தனர். .
கார்த்திக் சூர்யாவிடம் என்னடா ஆச்சு? நம்முடைய எதிரிங்க யாராவது கடத்திருப்பாங்களா? அந்த அளவுக்கு யாரும் இல்லையே ?இந்த எஸ் பி ஆர் பண்ணி இருப்பானா? இந்த குரு பிரகாஷ்? யார் பண்ணி இருப்பாங்க? குழந்தை வேற அழுகிறாள்! என்னால் முடியல சூர்யா! பாப்பா எல்லாரும் கஷ்ட படுறாங்க! என்ன பண்றது? சூர்யா கலங்கிய நிலையில் கோபத்துடன் சுற்றிலும் பார்வையை சுழல விட்டான். ஆனால் ஒன்றும் பிடி பட வில்லை. இப்படியே அடுத்த நாள் காலை ஆனது
அனைவரும் ஒரு சில நிமிடங்கள் சொக்கி விட சூர்யா தனது கட்டப்பட்ட கைகளை அவிழ்க்க முயற்சி செய்தான்.
அந்த நேரம் தேஜு , ஜெய் சூர்யா கைகட்ட அவிழ்க்க பாக்குறான்! போ போய் எதுவும் செய் m..
ஜெய், ப்ளீஸ் தேஜு இப்போவாச்சும் விடுட! அந்த குழந்தை அழுகிறது என்னாலயே கேட்க முடியல… எல்லா குழந்தைகளும் எப்படி கஷ்டப்படுறாங்க? பாரு? என்று கெஞ்சினான்.
ஜெய் தேஜு ஊராம் வீட்டு குழந்தையை ஊட்டி வளர்த்தால் தன் குழந்தை தானா வளரும்னு ஒரு பழமொழி இருக்கு… ஆனா இந்த பழமொழி இந்த தேஜு கிட்ட செல்லாது! நீ அந்த குழந்தைகளுக்கு பாவம் பாத்தா உன்னோட குழந்தையோட சேர்த்து உன்னோட பொண்டாட்டி வேணும் இப்போ ஏதாவது பண்ணிடுவேன்? உனக்கு ஓகேவா?
ஜெய் வேறு வழியில்லாமல் மைக் ஆன் செய்து சூர்யா தப்பிக்க முயற்சி பண்ணாத…
அந்த குரல் சூர்யா அமர்ந்திருக்கும் இடத்தில் எதிரொலித்தது.
கார்த்திக் , ராஸ்கல் அது யாரோட குரல் என்று தெரியுதா அந்தச் ஜெய் தான் நம்மள கடத்தி இருக்கான்!
சூர்யா, ஜெய் என்னடா இது? எதுக்கு எங்கள கடத்தின? என் குழந்தை அழுகுறா தயவு செய்து விடு! ஜெய் பேசு டேய் ஜெய் என்று கத்தினான்.
ஜெய் அமைதியா இரு அவ்வளவுதான் சொல்லிட்டேன்! வேற எதுவும் என்னை கேட்காதே ! என்று ஆப் செய்து விட்டான்.
சூர்யா ஜெய் ஆகாஷ் என்று கத்திக் கொண்டே இருந்தான்! ஆனால் அதற்கு மேல் எந்த பதிலும் இல்லை .
அந்த நேரம் தேஜு ஒரு காட்சிகளை ஒளிபரப்பினாள்.விடிய விடிய தன் அம்மாவுக்காக தேடி தேடி அழுது ஏங்கி இதழினியின் முகம் வீங்கி போய் சிவந்திருந்தது. சிவன்யா மற்றும் பவன்யா இருவரும் அழுது கொண்டே தூங்கினார்கள் .காலையில் அப்பா!. அம்மா!. என்று கத்த ஆரம்பித்தார்கள்.
தாரா என்ன செய்வது? என்று தடுமாறிக் கொண்டிருந்தாள்.
சத்தியதேவ் இருவரையும் சமாளிக்க மித்துன் உதட்டை பிதுக்கி கொண்டே சக்தி அம்மா எல்லாம் எங்க போயிட்டாங்க? யாருமே இல்லையே? பாப்பா ரொம்ப cry பண்றா பாரு!. Pink ஆ மாறிட்டா பாரு!.
சத்ய தேவ், அழ வேணாம் மிதுன் நீ அத்தை கூட இரு நான் எதுவும் செய்கிறேன். டாடி எல்லாரையும் கூட்டி வருவாங்க! என உடனே இன்ப ராகவனுக்கு அழைத்தான். அனைத்து விஷயமும் கூறினான்.
தாரா அவர்களை சமாதானம் செய்ய எண்ணி! சிவன் குட்டி நம்ம இப்போ இப்போவே அத்தை டீவியில் வர போறேன்! அதே போல அம்மா அப்பா எல்லாரும் டீவியில் வருவாங்க பாருங்க என சொல்லி அவர்களின் கல்யாண வீடியோ அனைத்தும் போட்டு காட்டி கொஞ்சம் சமாதானம் செய்தாள்.
சத்ய தேவ் தங்கையை பார்க்க இதழ் உதடு புதுக்கி கொண்டே சக்தியை பார்த்து கை நீட்டியது.
சக்தி தன் தங்கையை அணைத்து கொண்டான். தாரா, சக்தி நான் பாப்பாவுக்கு சாப்பிட கூல் செய்கிறேன் என வேகமாக உள்ளே ஓடினாள்.
மிதுன் இதையெல்லாம் பார்த்துக்கொண்டே போய் ஏதாவது பண்ணி ஆகணுமே! யார்கிட்ட சொல்றது? நித்தின் அண்ணா கிட்ட சொல்லலாம்? என்று வேகமாக சென்றவன் தனியாக சென்று நித்தின் அழைத்து விவரங்களை கூறினான்.
ஓ demn god… பொம்மாயி காணுமா? பாப்பா எப்படி இருக்கா?
மிதுன், பாப்பா அழுது pink ஆ மாரிட்ட்டா! மஹிய காணோம்! டாடி கூட காணோம்! இங்கு யாருமே இல்ல.. தாத்தா அம்மாச்சி கூட காணோம்! என்று மிதுன் அழுது கொண்டே கூறினான்.
நித்தின் கவலைப்படாத மிதுன் நான் இருக்கேன்! நான் வரேன்! சொல்றேன் என்று போனை வைத்தவன் sprக்கு அழைத்து அனைத்து விசயமும் சொல்ல போக அதற்குள்..
spr முன்னால் இருந்த நபர்கள் ;.. “பாஸ் நீங்க மகிளினி மேம் இருந்த போட்டோஸ் லீக் பண்ணது மினிஸ்டர் குரு பிரகாஸ்!”
Spr எழுந்து நிற்க நிதின் போன் செய்தான்.
அந்த நேரம் வெளியே ஜீப் கார்கள் சத்தம் கேட்க இன்பா வேகமாக வீட்டுக்குள் வந்தான்.
தொடரும்…
Episode 370,
தாரா குழந்தைக்கு உணவு ஊட்டி விட்டு கொண்டு இருக்க அந்த நேரம் வெளியே ஜீப் கார்கள் சத்தம் கேட்க இன்பா வேகமாக வீட்டுக்குள் வந்தான்.
சத்ய தேவ் ஓடி சென்று மாமா! என அனைத்து விசயமும் சொல்ல..
தாரா இதழ் பாப்பாவை தூக்கி கொண்டே இன்பாவின் அருகில் வந்தாள்.
சத்ய தேவ் சொன்ன விஷயத்தை கேட்டவன் தாராவிடம் என்ன ஆச்சு?
தாரா நேற்று என அங்கு நடந்தான் அனைத்து விசயமும் கூற ஆரம்பித்தாள். புகை வந்துச்சு! அதுக்கப்புறம் இங்கே என்ன நடந்ததுன்னு தெரியல! எல்லாரையும் காணோம்! என்று கூறினாள்
நீ போலீஸ்க்கு inform பண்ணியா? என்று கேட்டான்.
நான் போலீஸ் inform பண்ணல பட் குரு பிரகாஷ்க்கு ட்ரை பண்ணேன்! அவன் ரீச் ஆகல! அப்புறம் எனக்கு தெரிந்து யார்கிட்டயும் சொல்ல முடியாதுல்ல ஏன்னா இப்போதான் வளைகாப்பு முடிஞ்சிருக்கு! வெளியில் நியூஸ் தெரிஞ்சா எல்லாரும் வந்துடுவாங்கன்னு, நான் யார்கிட்டயும் சொல்லல!.
இன்பா, குரு பிரகாஷுக்கு சொன்னியா? அவன் என்ன ரெஸ்பான்ஸ் பண்ணானா!..என்று இன்பா கேட்டான்.
அவனுடைய நம்பர் பிஸினு வருது எடுக்க மாட்டேங்குது! ஆனா நான் கூப்பிட்ட உடனே ரிப்ளை பண்ணுவான்! இந்த தடவை என்ன ஆச்சுன்னு தெரியல!..
இன்பா, நீ உண்மைய தானே சொல்ற…
தாரா, நீங் அவரோட ப்ரொடெக்ஷன்ல தான் வோட் பண்றீங்கன்னு சொன்னாங்க! நிஜமாவே நான் அவருக்கு கால் பண்ண டைம் அவன் எடுக்கல…
அவள் கலங்கி இருந்தது முகத்தைப் பார்த்தவுடன் தெரிந்தது.
இன்பா, உங்க ஹஸ்பண்ட் எங்கே அவரையும் காணும்?
அவள் என்று உதட்டை கடித்துக் அவரையும் காணோம் என அழுது கொண்டே கூறினாள்.
உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா? என்று கேட்டான்.
அப்படி யாரும் தெரியல…இது எப்படி நடந்தது? என்று ஒன்றும் புரிய மாட்டேங்குது? ஏன் நடந்ததுன்னு தெரியல? தனிப்பட்ட முறையில் யார் மேலயும் எனக்கு சந்தேகம் இல்லையே? என்று படபடத்து கொண்டே கூறினாள்.
இன்பா மோப்ப நாய்களை வர வைத்தான். இதழ் அழுக ஆரம்பிக்க.. முகம் எல்லாம் வீங்கி இருந்தது.
இன்பா தயக்கத்துடன் கையை நீட்டினான் .குழந்தையை அவன் கொஞ்சி பழக்கம் இல்லை குழந்தை அவனை பயந்து பார்த்துக் கொண்டிருந்தது.
சத்ய தேவ், மாமா! இப்போ என்ன பண்றது? என்று கேட்டான்.
இன்பா, நீ கவலைப்படாத அப்பா இருக்காங்க! கண்டிப்பா அப்பா அம்மாவ தாத்தா பாட்டி எல்லாத்தையும் கூட்டிட்டு வந்துடுவான். என்று கூறினான்.
மோப்ப நாய்கள் வருவதற்கு கொஞ்சம் நேரம் இருந்தது.
இன்பா , பாப்பாவ என்கிட்ட குடுங்க என்று கேட்டான்.
இதழ் உதட்டைப் பிரித்துக் கொண்டே இருக்க…
உடனே இன்பா கண்ணக்குழி தெரிய சிரித்தவன் அம்மு குட்டி! அழக்கூடாது டா செல்லம்! அம்மா! அப்பா வந்துடுவாங்க! கவலைப்படாதீங்க! அழகு தங்க பொண்ணா நீங்க! என்று கொஞ்ச…
ஒரு நிமிடம் தான் அவன் முகத்தை உற்றுப் பார்த்தது.அதன் பின் அமைதியாக சத்திய தேவை பார்த்து தாவ சென்றாள்.
இன்ப சத்யதேவிடம் நீ பத்திரமா பிடி டா சத்திய தேவ் என்று சொல்லி குழந்தையை கொடுத்தவன். சிவன்யா மற்றும் பவன்யா மற்றும் அனைவரையும் பார்த்தான்.
மிதுன் மிகவும் சோகமாக அமர்ந்திருக்க.. இன்பா, குட்டிக்குட்டன் என்று அழைத்தான்.
மிதுன் அதே முகத்துடன் திரும்பி பார்க்க…
இன்பா, கவலைப்படாத நான் கூட்டிட்டு வந்துருவேன்! சரியா தைரியமா இருக்கணும்! நீங்க போல்ட் தானே!.
மிதுன் , அம்மாவுக்கு எதுவும் ஆகாது தான…
இன்ப அப்பா இருக்காங்க அம்மாவை பத்திரமா கூட்டிட்டு வந்துடுவாங்க! நீங்க கவலைப்படக்கூடாது! சரியா! என்று கூறினான்.
மிதுன் சரி என்று தலையசைத்தான். அதன் பின் வீட்டில் விட்டு மோப்ப நாய்களை விட்டு செக் செய்து இன்பா வீட்டை நோட்டம் விட்டான். அனைத்து இடங்களையும் தேடினான். ஏதாவது முக்கியமான விஷயம் தெரிஞ்சதா என்று அந்த வட்டாரங்கள் அனைத்தையும் தேட ஆரம்பித்தான். அவனுடைய காவல் நண்பர்கள் அதன்பின் லொகேஷன் அனைவரையும் வரவைத்து அந்த இடத்தை ஆராய்ந்தான். அதன் பின் அங்கிருக்கும் கேமராவில் விவரங்களை பார்க்க ஒரு அரை மணி நேரத்தில் செய்திகள் வந்து சேர்ந்தது.
அப்பொழுது ஜெய்டமிருந்து அவனுக்கு போன் வந்தது.
இன்பா நான் ஜெய் ஆகாஷ் பேசுறேன்!..
உடனே இன்பா கோபத்துடன் ராஸ்கல் எங்கே சூர்யா? எங்கே டா கிடனாப் பண்ணிட்டு போன.. உன்னோட மொத்த குடும்பத்தையும் தூக்குவேன்! என்று இன்பா பேச வர…
ஜெய் “நீ ஏதாவது ஸ்டெப் எடுத்தா இவங்களை ஏதாவது பண்ணிடுவேன்! யாரும் உனக்கு கிடைக்க மாட்டாங்க! என்று கூறிவிட்டு போனை கட் செய்தான்.
இன்பாவிற்கு இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை.
அந்த நேரம் லோகேஷ் அவனை தனியாக அழைத்தான்.
லோகேஷ், இன்பா இங்க வெளியில் கொஞ்சம் வா! உன்னிடம் முக்கியமா பேசணும்! என்று அவனை கொஞ்ச தூரம் அழைத்து சென்றான்.
என்ன லோகேஷ்?
இங்க பாரு உன் இந்த கடத்தல் spr ஆட்கள் தான்!
என்ன சொல்ற!
லோகேஷ், ஆமா இங்க பாரு spr ஆட்கள் தான் இருக்காங்க!
இன்பா, ஆனா எனக்கு போன் பண்ணது ஜெய் ஆகாஷ்!
லோகேஷ், நல்லா பாருடா இது spr காரு நம்பர் பிளேட் அண்ட் இது spr ஆளுங்க பாரு குருப் பிரகாஷ் கூட இவங்கள பார்த்து இருக்கேன்! முக்கியமா இவங்க அந்த சித்தார்த் கிருஷ்ணா ப்ரொடெக்ஷன் போர்சில இருக்காங்க! இவங்கள பார்த்து இருக்கேன்! என்று கூறினான்.
இன்பராகவன் உடனே லேப்டாப்பை வாங்கி அங்கிருந்த அனைத்து படங்கள் மற்றும் வீடியோ புட்டேஜ் என அனைத்தையும் பார்த்தான்.
இன்பா, அப்போ இப்போ கடத்தினது குரு பிரகாஷ் என்று சொல்ல வரியா?
லோகேஷ், கண்டிப்பா அவனா இருக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு அதுதான் அந்த ஹீரோயின் போன் பண்ணி எடுக்கலன்னு சொன்னாங்கல்ல… சோ நீ அவன தான் காண்டாக்ட் பண்ணனும்! மை விழி function முடிந்ததும் கடத்தி இருக்கான். உனக்கு புரியலையா? என்று கேட்டான்.
இன்ப ராகவன் எதையோ யோசித்தவன் இப்போ அந்த நாயை என்ன பண்றேன்னு பாரு! என் பாப்பா எப்படி அழுது கொண்டு இருக்கா! என்று சொல்லிவிட்டு வேகமாக காவியா கவ்யா இருக்கும் வீட்டிற்கு கிளம்பினான்.
கிளம்புவதற்கு முன் சத்ய தேவ “கவலைப்படாத சக்தி அப்பாவ நான் வரும்போது கூட்டிட்டு தான் வருவேன்! என்று சொல்லிவிட்டு கிளம்பினான்!”
இங்கே spr கிட்ட அந்த spy ஆட்கள், மகிழினி அப்புறம் நீங்க உங்களோட நிச்சய தார்த்த படங்கள லீக் பணணது குரு பிரகாஷ் தான்! என்று கூறினார்கள்.
இதை கேட்டதும் sprக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவன் அவேசமாக நிஜமாகவே இந்த நியூஸ் உண்மைதானா? என்று அவர்களின் சட்டையைப் பிடித்தான்.
சார் இந்த நியூஸ் உண்மை தான் பாருங்க! நீங்களே நல்லா செக் பண்ணிக்கோங்க என்று சொல்லிவிட்டு அதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் அவன் முன் வைத்தார்கள்.
அதே நேரம் நித்தின் சூரிய பிரகாசுக்கு அழைத்தான். அவன் இரண்டு முறை போனை கட் செய்ய… மீண்டும் மீண்டும் அழைத்தான். என்னமோ ஏதோ என்று spr அழைப்பை பதில் ஏற்க…
நித்தின், இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? இங்க என்ன நடக்குது தெரியுமா? மகி பொம்மாய யாரும் கடத்திட்டு போயிட்டாங்க? அவங்களோட அம்மாச்சி தாத்தா உதயன் மாமா எல்லாரையும் கிட்நாப் பண்ணிட்டு போயிட்டாங்க டாடி! பாப்பா அழுதுகிட்டே இருக்கா!.
சூர்ய பிரகாஷ் அதிர்ச்சியாகி என்ன சொல்ற? என்ன நிதின் எப்டி நடந்தது?
நித்தின், ஆமா டாடி இப்பதான் எனக்கு மிதுன் கால் பண்ணான் நேத்து நைட்டே கிட்னாப் பண்ணி இருக்காங்க! பாப்பா நேத்துல இருந்து அழுதுட்டு இருக்கு! மகி அங்க எவ்வளவு கஷ்டப்படுறான்னு தெரியல! யாரு இதை பண்ணாங்களோ அவங்கள சும்மா விடாதிங்க டாடி! அவங்கள சூட் பண்ணனும் டாடி! நான் ஷூட் பண்ண போறேன்! என்று ஆவேசமாக பேசினான்.
சூர்ய பிரகாஷ் ,“நான் பார்த்துக்கொள்கிறேன் விடு!” என்று சொல்லி ஃபோனை வைத்தவன்.
உடனே இங்கே இன்பா நேராக குரு பிரகாஷின் வீட்டுக்குச் செல்ல..
அங்கே யாரும் இல்லை கவியா மட்டும் தான் இருந்தாள். அவளை விசாரிக்க அவளுக்கு எதுவும் தெரியவில்லை என்று கூறிவிட்டாள்.
உடனே இன்பராகவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
உடனே sprக்கு அழைத்தான்.
ஹலோ என spr கடுமையான குரலில் பேச…
இன்ப ராகவன் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? சூர்யா எங்கே? மகி எங்கே?
Spr, என்னை கேட்டா எனக்கு என்ன தெரியும்?
இன்பா, என்ன உங்களுக்கு என்ன தெரியுமா? நீங்கதான் கடத்தி இருக்கீங
Spr, அவங்களை கடத்துவதற்கு எனக்கு என்ன அவசியம் வந்தது?
இன்ப ராகவன், சும்மா நடிக்காதீங்க! நீங்கதான் கடத்தி இருக்கீங்க! உங்களோட ஆட்கள் தான் கடத்தி இருக்காங்க! இதுல அந்த ஜெய் ஆகாஷ் கூட்டு போல!. என்று கூறினான்.
Spr புரியாமல் நீ என்ன சொல்ற?
இன்ப ராகவன் என்று கடுமையாக பேசினான்.
உடனே இன்பா நான் சொல்றது பொய்யில்ல நீங்கதான் கடத்தி இருக்கீங்க! எனக்கு ரெண்டு மணி நேரத்துல நீங்க இதுக்கு பதில் சொல்லியே ஆகணும்! அவங்களை பத்திரமா கொண்டு வந்து சேர்க்கணும்! இல்லனா நீங்க எங்கே இருந்தாலும் அங்கேயே உங்களை வந்து தூக்க என்னால முடியும்! நான் ஸ்டேட் போர்ஸ் கிடையாது. நான் சென்ட்ரல் ஃபோர்ஸ்! உங்க மேல கம்ப்ளைன்ட் என்னால கொடுக்க முடியும்! என்று மிரட்டி விட்டு போனை வைத்தான்.
Spr ருக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னடா ஆளுக்கு ஒன்று சொல்கிறார்கள். என்று குழப்பத்துடன் இருந்தான்.
அந்த நேரம் தேஜு ஒருவருக்கு அழைத்தாள்.
ஹலோ சொல்லுங்க!..என்று மறுமுனை பதில் சொன்னது.
அவனுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிடுச்சா?
அந்த மறுமுனையில் உள்ள ஆள், ஆமாம் அவருக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சுடுச்சு!..
தேஜூ, ஓகே அப்போ இந்த அட்ரஸ்க்கு அவனை வர சொல்லு! அதேபோல குரு பிரகாஷ்க்கு போன் பண்ணி வர சொல்லிடு என்று சொல்லிவிட்டு தேஜூ வைத்து விட்டாள்.
அர்ஜுன் வேகமாக ஓடி வந்தான்.
பாஸ்! பாஸ்! என்று கத்திக்கொண்டே வந்தான்.
என்ன அர்ஜுன் என்று spr கேட்க..
பாஸ் எல்லாத்தையும் குரு பிரகாஷ் தான் செஞ்சிருக்காரு! சூரியா பேமிலிய மொத்தமா கடத்தி இருக்காரு என்று கூறிவிட்டான்.
Sprக்கு கோபம் தலைக்கேறியது. அவனுடைய தனிப்பட்ட பிஸ்டலை எடுத்துக்கொண்டு உனக்கு இப்போ எந்த இடம்னு தெரியுமா?
அர்ஜுன், பாஸ் இப்பதான் பாஸ் கண்டுபிடிச்சோம்! என்று சொல்லிவிட்டு அனைவரும் அங்கு கிளம்பினார்கள்.
அவன் டெல்லியில் இருந்தான் அங்கிருந்து சென்னை வரவேண்டும். அதனால் உடனே சாட்டர் ஃப்ளைட் ல கிளம்பினான் .
இங்கே சூர்யா எதையெதையோ யோசித்துக் கொண்டிருந்தான். ஜெய் எப்படி இதை பண்ணி இருப்பான்! வாய்ப்பே இல்லையே! என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க…
கார்த்திக்கு என்னடா யோசிச்சிட்டு இருக்க…அந்த ஜெய் மட்டும் என் கைல கிடைச்சான் அவனை கொன்றுவேன்! என்று கார்த்திக் புலம்பி கொண்டிருக்க…
சூர்யா எதையெதையோ ஒர்க்கார்ந்து இதுவரை நடந்த விஷயங்கள் அனைத்தையும் யோசித்தான். அதன் பின் ஜெய் கடைசியாக பேசிய அனைத்து விவரங்களையும் யோசித்தவன். மனதில் சூர்யாவோட பொண்டாட்டி? சூர்யாவோட பொண்டாட்டி? என்று அவன் திரும்பத் திரும்ப ஜெய் கூறியது நினைவுக்கு வந்தது.
எப்படி இதை மறந்தேன் கண்டிப்பா அவளாக தான் இருக்க முடியும்! என்று பற்களை கடித்து கடித்தவன் “ஹே தேஜு! முன்னாடி வாடி! எதுக்கு டி எங்கள கடத்தின? தைரியம் இருந்தால் முன்னாடி வாடி என்று கத்த ஆரம்பித்தான்.
கார்த்திக், என்னடா கத்திட்டு இருக்க?
சூர்யா அவனை கண்டுகொள்ளாமல் முன்னாடி வாடி!.. வாடி என்று சொன்னேன்.இப்போ நீ வரல என் வாயில் இருந்து அந்த வார்த்தையை சொல்ல வைத்து விடாதே! என்று இஷ்டத்துக்கு கத்த ஆரம்பித்தான் .
ஜெய் திடுக்கிட்டு சுற்றிலும் முற்றிலும் பார்த்தான்.
சூர்யா, எனக்கு இதையெல்லாம் யார் பண்றாங்கன்னு தெரியும் ஒழுங்கா என் முன்னாடி வாடி! இல்லனா உன்ன பத்தின விஷயத்தை இங்கே நானே சொல்லிடுவேன்! என்று சத்தமாக கத்தினான்.
ஜெய் அடுத்து பேச வர தேஜு ஒரு புன்னகையுடன் பரவாயில்லையே எல்லா விஷயத்தையும் 24 மணி நேரத்துக்கு முன்னாடியே கண்டுபிடிச்சிட்ட.. என்று சொல்லிக் கொண்டு தேஜூ குரல் கொடுத்தாள்.
ஜெய், சூர்யா ப்ளீஸ் டா என்னை மன்னித்துவிடு டா! என்று கெஞ்ச..
தேஜு, வாய மூடு என்று சொல்லிவிட்டு ஆமாண்டா நான் தாண்டா கடத்தினேன்! இப்ப என்னங்கற? என்று சொல்லிவிட்டு அவனுடைய இடத்தில் அனைத்து டிவிகளையும் செய்தாள்.
ஜெய் அருகில் உள்ள ஆட்கள் அனைவரும் நின்று கொண்டிருக்க
தேஜு, இவன கைய கட்டி இழுத்துட்டு வாங்க என்று சொல்ல அனைவரும் இழுத்துக் கொண்டு வந்தார்கள்.
தேஜூ, அந்த ஃபேமிலி மொத்தத்தையும் ஒரே இடத்துக்கு கொண்டு வா ஜக்குபாய்!
மேம்!.
தேஜு, சூர்யா பேமிலி, வசந்தன் கலைவாணி மைவிழி,மகிலினி, உதயன், கார்த்திக் என மொத்த பேரையும் ஒரே இடத்துக்கு கொண்டு வந்து பெரிய ப்ரொஜெக்டர் வச்சு விடு! நம்ம எல்லாரும் சேர்ந்து குழந்தை அழுகுறத பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு அவள் சுழல் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
அவர்கள் அனைவருக்கும் குளோரோஃபார்ம் மூக்கில் வைத்து அடைத்து பத்து நிமிடங்கள் கழித்து அனைவரையும் ஒரே இடத்திற்கு மயக்க நிலையில் கொண்டு வந்தார்கள். முன்னாள் ஒரு பெரிய திரை ஓடிக்கொண்டிருந்தது. ஒரு வெள்ளை நிற புடவையில் அனைத்தும் வெள்ளையாகவே ஒரு புடவையில் வந்து நின்றாள்.
ஜெய் அவளை விசித்திரமாக பார்த்தான் எதுக்கு அப்படி பாக்குற? கீர்த்தனாவ இந்த நிலைமையில் உனக்கு பார்க்க ஆசையா? என்று கேட்டாள்.
எதுக்கு டி இப்படி பண்ற? என்றவன் கெஞ்சினான்.
ஹே வாயை மூடு! என்று சொன்னவள் அனைவரையும் பார்த்து… ஜக்குபாய் எல்லார் முகத்திலேயும் தண்ணி தெளி என்று கட்டளையிட்டாள்.
அனைவரும் மெதுமெதுவாக மயக்கத்தில் இருந்து சுயநினைவுக்கு வந்தார்கள்.
சூர்யா கையை அவிழ்க்க முயற்சி செய்து கொண்டே எதுக்கு டி! இப்படி பண்ணிட்டு இருக்க? என் குடும்பத்தை எதுக்கு பழி வாங்கிட்டு இருக்க? நீ யாரை பழி வாங்கணுமோ? அவங்கள பழிவாங்கிட்டு போக வேண்டியது தானே! என்று மிரட்டினான்.
தேஜு அது எப்படி விட முடியும் எனக்கு உன்னையும் பழி வாங்கணும்! உன் குழந்தை கஷ்டப்படுறத அவங்க ரெண்டு பேரும் பார்க்கணும்! என்று வசந்தன் மற்றும் கலைவாணியை பார்த்தாள்.
வசந்தன், என்னம்மா எதுக்கு மா இப்படி பண்ணிட்டு இருக்க? நாங்க உங்களுக்கு என்ன பாவம் செஞ்சோம்!..
கலைவாணி, யாரடி நீ மரியாதையா என் குடும்பத்தை விட்டு விடு என்று சொல்லிக் கொண்டிருக்க…
தேஜு கொஞ்சம் கலங்கியவள். சிரித்துக்கொண்டே அவர்களை பார்த்தாள்.
சூர்யா, இவள் எதுக்கு கடத்தி இருக்கான்னு அந்த விஷயத்தை நான் சொல்லட்டுமா! என்று தேஜூ பார்த்தாள்.
ஜெய் வாயைத் துறந்து பேச வர… அதற்குள்
தேஜு, ஜெய் போயி உன் பிரண்ட அடி! அவனோட முகத்தில் இரத்தம் வரணும் அதை வசந்தன் கலை வாணி பார்க்கணும் போடா போ! என்று அனுப்பிவிட்டாள்.
ஜெய் நின்று கொண்டிருக்க.. இப்போ நீ செய்யறியா? அடுத்து அங்கே இருக்கும் மொத்த குழந்தையும் கடத்தி தனித்தனியா ஒரு ஐஸ் க்யூப்ஸ் மேல நிக்க வைக்கட்டுமா? சத்ய தேவ் சிவன்யா , பவன்யா, மிதுன் தேவ் அந்த குட்டி குழந்தை அதுக்கு பீவர் இன்ஜெக்ஷன் போட்டு விடவா!. என்று தேஜு கேட்டாள் .
சூர்யா ஹேய் என்று கெட்ட வார்த்தை வரிசையாக பேசினான்.
மகிழினி அப்பொழுதுதான் மயக்கம் தெளிந்து முகத்தை சுருக்கி கொண்டே எழுந்து கண்களை திறந்தாள். அவளுடைய மார்பு பகுதிகள் அனைத்தும் வலிக்க ஆரம்பிக்கக் அழுது கொண்டே விசும்பினாள்.
சூர்யா அவளை திரும்பிப் என்னடி ஆச்சு? என்று மைவிழி சூர்யா இருவரும் கேட்க… ஒன்னும் இல்லை என்ற தலை ஆட்டினாள்.
சூர்யா, என்னாச்சு சொல்லு?
எனக்கு நெஞ்சு வலிக்குதுங்க பாப்பாவுக்கு பால் கொடுக்காததனால எனக்கு நெஞ்சு வலிக்குது என்று கூறினாள்.
உடனே தேஜு, ஹா இத கேக்குறதுக்கே ரொம்ப நல்லா இருக்குல்ல!. என்று அவளுடைய குரல் கேட்டதும் மகிழினி அக்கா எதற்காக இப்படி பண்ணிட்டு இருக்கீங்க? என்று சொல்ல
தேஜூ, ச்சீ வாய மூடு! யாரு யாருக்கு அக்கா!. உதயன் அண்ணா ரொம்ப அமைதியா இருக்காரு! பேசுங்க அண்ணா எடுத்து உதயன் பக்கம் சென்று துப்பாக்கி எடுத்து நெற்றியில் வைத்தாள். .
கலைவாணி, ஹே! ஹே! விடு! விடு தயவு செய்து ஒன்னும் பண்ணிடாதிங்க! என் பையன விடுடி என்று கத்தினார்.
பாசம் பாயாசம் எல்லாம் ஓவர் பாசமா எல்லாம் இருக்கு! சூரியவம்சமே தோத்திடும் போலையே! என்று அவள் கமெண்ட்ரி எடுத்து சிரித்துக் கொண்டிருந்தாள் .
சூர்யா, தேஜு விடு அப்புறம் பின் விளைவு மோசமா இருக்கும்.
தேஜு, ஜக்குபாய் நம்ம ஆட்களை விட்டு இவர்கள் மூணு பேரையும் அடிக்க சொல்லு! அத நான் பார்த்து ரசிக்கணும்! அதை பார்த்து நீங்க எல்லாம் அழ வேணும். மகிழினி அப்புறம் மை விழி அழுவதை பார்த்து வசந்தனும் கலைவாணியும் கஷ்டப்படணும் !. சீக்கிரம் இங்கே செய் பார்ப்போம்!..
உடனே ஜக்குபாய் ஓகே மேம் என்று இரண்டு மூன்று ஆட்களை வர சொல்ல அவர்கள் உதயன் மற்றும் சூர்யா கார்த்திக் மூவரையும் அடிக்க ஆரம்பித்தார்கள்.
மகிழினி அழ ஆரம்பிக்க, மைவிழி கார்த்திக்! என சொல்லி கொண்டே அமைதியாக அழுது கொண்டே பார்த்துக் கொண்டிருந்தாள்.
கலைவாணையால் பார்க்கவே முடியவில்லை ஒரு சில நிமிடங்களில் கலைவாணி மயங்கி மயங்கி சரிந்தார்.
உடனே வசந்தன் கலை என்னாச்சு கலை அய்யோ ஏமா இப்படி பண்ற? உனக்கு நாங்க என்ன பண்ணோம்! உன் பையனுக்கு கூட நான் நல்லது தானே நினைச்சோம் என் பேர பசங்க போல தானே பார்த்து கொண்டோம்! எங்களை எப்படி கஷ்டப்படுத்துற ? என்று வசந்தனும் அழ ஆரம்பித்தார்.
சூர்யா, யாரோ பண்ணதுக்காக எங்களை கஷ்டப்படுத்துறதெல்லாம் எந்த ஒரு அர்த்தமும் இல்லை! என்னால இது தடுக்க முடியாதுன்னு நினைக்கிறாயா? இந்த நிமிஷம் நான் இவங்களை அடிக்க முடியும் டி!என்று கூறினான்.
தேஜு, அடிச்சு தான் பாரேன் டா !என்று கூற …
சூர்யா வேகமாக அவனுடைய ஒரு கையில் இருந்து முன்னால் இருக்கும் ஆளை எட்டி உதைத்தான் எட்டி உதைத்துக்கொண்டே தன் கட்டப்பட்ட கைகளை முன்னால் வாய்க்கு கொண்டு வந்து அவிழ்க்க முயற்சி செய்ய…
அதற்குள் இரண்டு ஆட்கள் பிடித்தார்கள்.
ஜெய் சூர்யாவிற்கு உதவி செய்ய வர அதற்குள் அவனையும் பிடித்தார்கள்.
சூர்யா ஹே விடுவ்க டா! என்று சொன்னேன் என்று திமிறிக்கொண்டே நின்றான்.
அதன் பின் தேஜு கலைவாணி மயங்கி கிடக்க அங்கு சென்று கன்னத்தில் தண்ணீர் தெளித்து அடிக்க ஆரம்பித்தாள்!
அதன் பின் கலைவாணி மெதுவாக மயக்கம் தெளிய அவருடைய முகவாயை அழுத்தி பற்றினாள்.
இப்போ பரவால்லையா உங்களுக்கு என்று கேட்டாள்.
கலைவாணி அவளுடைய கண்களை இமை வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தேஜு என்ன ஆப் ஆயிட்ட? எதுவும் பேசு? என்று கூறினார் .
சூர்யா, மாமா இவ யாருன்னு தெரியுமா என்று மூச்சு வாங்கிக் கொண்டே பேச..
தேஜு, ஜக்குபாய் அவனோட வாய மூடு என்று வாய் மேல் கை வைக்க வர
சூர்யா அவ… உங் உங்க உங்களோட என்று தயங்கி கொண்டு சூர்யா பேச வர..
அதற்குள் வாயை பொத்தினர்கள்.
சூர்யா கார்த்திக் நாற்காலியை எட்டி உதைக்க கார்த்திக், “இவள் உங்களோட பொண்ணு!” என்று கூறிவிட்டான்.
இதை கேட்டதும் கலைவாணி ஸ்தம்பித்து தேஜுவை பார்க்க…
வசந்தன் அவளையே வார்த்தை வராமல் பார்த்தார்.
உதயன் , அவ என்கூட பிறந்தவ! என்கூட.. நம்ம வீட்டோட முதல் பொண்ணு அவள் தான் பா என்று கூறிக் கொண்டே உதடு கடித்து அழுகையை அடக்கினான்.
இதை கேட்டது மை விழி புருவம் நெருக்கி ஒருவித தீவிரமாகவும் பார்க்க…
மகிழினி அழுவதை நிறுத்தி விட்டு தேஜூ வைய் பார்த்தாள்.
தேஜு“ என்ன சப்புனு சொல்லி முடிச்சிட்டிங்க! இத நான் tragedies ஆ சொல்லணும்னு நினைச்சேனே! ஏண்டா இப்படி பண்றீங்க?” என்று சொல்லிக் கொண்டே நேராக மேஜைக்கு அருகில் வந்தவள். அங்கு ஒரு கோப்பையில் ஒயினை ஊற்றி கொஞ்சமாக பருகிக் கொண்டே அவர்களை பார்த்தாள்.
கலைவாணி, என்ன சொல்றீங்க மாப்பிள்ளை! என்று தாங்கிக் கொண்டே பார்க்க…
ஆமா இவ உங்களோட பொண்ணுதான்!. உதயன் கூட ஒட்டி பிறந்தவ என்று சூர்யா கூறினான்.
வசந்தன் அடுத்து பேச வர…
தேஜு, ஸ்ஸ்ஸ்!…. நீங்க யாரும் எதுவும் நீங்க பேசக்கூடாது! உங்கள எனக்கு பழி வாங்கணும்னு தோணுச்சு! அதனாலதான் தூக்கிட்டு வர சொன்னேன்! என்ன குப்பைத்தொட்டியில் போட சொன்ன இரண்டு கைகள் … பாத்ரூமுக்கு கீழ என்னை வீசிய அந்த கைகள் எனக்கு இப்போ வேணும்! என்னை பெத்தவளும், எனக்கு உயிர் கொடுத்த தகப்பனும் வேணும்! அவங்கள என் கையால கொல்லனும் அதுக்கு தான் நான் வந்தேன்!”
அந்த நேரம் அவளுக்கு அர்ஜுன் கிட்ட இருந்து போன் வர! ம்ம் சீக்கிரம் happy death day பாடனும் வரும் போது ஒரு கேக் வாங்கிட்டு வந்திடு!.
சூர்யா…?
மகி…?
வசந்தன்…?
மை விழி…?
கார்த்திக்…?
உதயன்…?
தொடரும்…
1 comment
Superb