Episode 371
கலைவாணி, நீ எப்படி என் பொண்ணாக முடியும்? எனக்கு ரெண்டு பொண்ணு மட்டும்தான்! என்று கூறினார்.
தேஜு , ம்ம் ஆமா உங்களுக்கு ரெண்டு பொண்ணு மட்டும் தான் நீ என்ன பெத்தவ அவ்வளவு தான் என்று கூறினாள்.
மகிழினி, அக்கா என்று அழைக்க..
ச்சீ வாய மூடு உன் குழந்தை எப்படி கத்துதுன்னு கேட்ட தான!..அதைக் கேட்கவே ரொம்ப இன்பமா இருக்கு! நீ என்னை மறுபடியும் அக்கான்னு கூப்பிட்ட அந்த குழந்தைக்கு இப்பவே நான் பீவர் இன்ஜெக்ஷன் போடுவேன்!.
சரியாக அந்த நேரம் உள்ளே ஆட்கள் நுழைவது போல் சத்தம் கேட்டது.
தேஜு ஜக்குபாயை பார்க்க..
மேடம் spr வந்து விட்டார்.
சூர்யா, இதுல அவனுக்கும் பங்கு இருக்கா? அவனும் கடத்தினானா?
ஜெய் திமிறி கொண்டே தேசஜு தான் எல்லாமே பண்ணா! யாருக்கும் இந்த விஷயம் தெரியாது! Sprக்கு இதை பத்தி தெரியாது! என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது spr உள்ளே நுழைந்தான்.
தேஜு, spr என்கிற சூரிய பிரகாஷ் வாங்க! உள்ளே வாங்க என்று சிரித்துக் கொண்டே அழைத்தாள்.
Spr அவளின் தோற்றத்தை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ச்சியாகினான். முகத்தில் ஒப்பனை இல்லை, கைகளில் வளையல் இல்லை, முகத்தில் பொட்டு இல்லை, அதை விட வெள்ளை புடவை! கழுத்தில் தாலி இல்லை
சூரிய பிரகாஷ் வேகமாக அவளை நோக்கி வந்து கொண்டே தேஜு ஏமாயிந்து! என்ன இது இந்த கோலத்தில் நின்னுட்டு இருக்க…
தேஜு, “ஆமா நீ இந்த கோலத்தில் என்னை பார்ப்பியோ? பார்க்க மாட்டியோ ? அதனால முன்னாடியே காட்டணும்னு தான்! உனக்காக மட்டும் இந்த காஸ்டியூம்ல எப்டி இருக்கேன்!”
வசந்தன் மற்றும் உதயன் , மகி இதையெல்லாம் மிகவும் சங்கடமாக பார்த்து கொண்டு இருந்தார்கள்.
Sprர்க்கு தூக்கி வாரி போட்டது. அவனது கண்கள் மகியை தேடியது!
தேஜு, ஐயோ! என்ன அவசரம்? காதலிய பார்க்க அப்படித்தானே…
சூரிய பிரகாஷின் பார்வை தேஜுவின் மீது பட..
தேஜூ என்னை பார்க்க வந்தியா இல்லை என சிரித்து கொண்டே அனைவரையும் பார்த்தாள்.
அவள் மாசமாக இருப்பது இன்னும் சூரிய பிரகாசுக்கு தெரியாது . இந்த இந்த ஒரு சில நாட்களாக அவனிடமிருந்து மறைந்து கொண்டே சுற்றிக் கொண்டிருக்கிறாள். இரண்டு மாதங்களாக அவனிடமிருந்து விலகி செல்ல வேண்டும் அப்பொழுது தான் அவனை கொல்ல முடியும் என மறைந்து கொண்டே சுற்றிக் கொண்டிருக்கிறாள்.
தேஜு அவனின் கையைப் பிடித்து அழைத்து வந்து வசந்தன் அருகில் கூட்டி வந்தவள். பாத்துக்கோங்க மிஸ்டர் வசந்தன்! நான் உங்க பொண்ணு! நீங்க எனக்கு பிராணன் கொடுத்தவா! அடுத்து கலை வாணி இவங்க என்னை பெத்தவா! உயிர் கொடுத்தவளா இருந்தாலும் என்னை கட்டிக்கிட்டவன்! இவன் தான்! இவன் பேரு சூரிய பிரகாஷ் ! உங்களுக்கு முறையா சொல்லப்போனால் இவன் தான் முதல் மருமகன் என்று சொல்லி கண்ணை சிமிட்டினாள்.
வசந்தனுக்கு இப்பொழுது என்ன சொல்வது என்று தெரியவில்லை. அப்படியே அமர்ந்து கொண்டிருக்க ..
Spr வேகமாக வசந்தன் அருகில் சென்று அவர் கைக்கட்டுகளை அவிழ்க்க முயற்சி செய்ய …
தேஜு, என்னடா பண்ற? நான் பேசிட்டு இருக்கேன்ல்ல! நீ பாட்டுக்கு சேவை செய்ய போயிட்ட! என்னோட தகப்பன் சாமி அப்படின்ற காரணத்துக்காக சேவை செய்றயா இல்ல? உன்னோட காதலி சாரி காதலி மகிளினியோட அப்பான்ற காரணத்துக்காக சேவை செய்ய போயிட்டியா?
இதை கேட்டதும் மகிழினிக்கு சங்கடமாகி போக அவள் கண்களை மூடி அழ ஆரம்பித்தாள்.
சூர்ய தேவ், அவள் என் பொண்டாட்டி? அவளை பத்தி பேசுற ரைட்ஸ் உனக்கு இல்லடி…
தேஜு, என்ன “ டி”
ஆமா டி வாய அடக்குடி என்று கத்தினான்.
Spr, சூர்யா இன்னொரு தடவை டி சொன்ன உன்னை!..என அவன் கோபத்துக்கு செல்ல..
தேஜு, பாவா! கூல்… டேய் அவனை அடிங்கடா !..என்று சொல்ல..
சூரிய பிரகாஷ், அர்ஜுன் நம்ம ஆளுங்கள வர சொல்லு என்று கூற வேகமாக அவனுடைய ஆட்கள் அனைவரும் வந்தார்கள்.
Spr தேஜூவை பிடித்து கொண்டு அர்ஜுன் சீக்கிரம் இவளை பிடி!.
தெஜூ, தப்பு பாவா!. அச்சோ எனக்கு பயமா இருக்கு! என்னை பிடித்து என்ன செய்ய போறீங்க என பயபடுவது போல் முகத்தை வைத்து கொண்டாள்.
அர்ஜுன் வேகமாக அருகில் வந்தார்கள்.
தேஜு, அர்ஜுன் எனக்கு பயமா இருக்கு பக்கத்துல வராத ப்ளீஸ் என்னை யாராவது காப்பாத்துங்க என்று அழுவது போல் முகத்தை வைத்துக்கொண்டே தள்ளி சென்றாள்.
அர்ஜுன் நேராக வந்து spr கைகளை பிடித்துக் கொண்டான்.
Spr, அர்ஜுன் ** என்ன பண்ற? அவளை பிடி!.
தேஜூ சிரித்து கொண்டே இங்கே இருக்கிற எல்லாரும் என்னோட ஆளுங்கடா! இது spr கோட்டை இல்ல சொல்ல போனால் உன்னோட ஹோட்டலில் இருந்து பெட்டி கடை வரைக்கும் எல்லாரும் என் ஆளுங்க! உன்னை சுத்தி இருக்கிற ஒவ்வொரு ஆளும் எனக்கு விசுவாசமானவங்க!..
Spr அனைவரையும் அதிர்ச்சியுடன் பார்க்க.
தேஜு அவளுடைய இருக்கையில் போய் அமர்ந்து கொண்டு சூர்யா என்கிற spr இப்போ நீ சொன்ன மாதிரியே பாரு உனக்கான அங்கீகாரத்தை நான் இங்கே வாங்கி கொடுத்துட்டேன்! சோ நீ தான் மூத்த மருமகன்! அர்த்தமாயிந்தா ராஜா!..
Spr, தேஜு என்ன பண்ற என கைகளை விடுவிக்க முயற்சி செய்தான்.
தேஜு, பாவா என்னை flow ல போக விடுங்க!. என சொன்னவள் இதுக்கு மேல இவங்க இருக்க வேண்டாம்! அதனால் இவங்கள என்ன பண்ணலாம் என்று சொல்லு!
Spr, அவங்கள விட்டுட்டு தேஜூ பாவம் அங்க பாரு உன் தங்கச்சி இங்க ரெண்டு பேரும் கஷ்டத்துல இருக்காங்க! உங்க அம்மா ,அப்பா அதைவிட கஷ்டத்துல இருக்காங்க.. அவங்க பாப்பா அழுதுட்டு இருக்கு! இது தப்பு!..
தேஜு, என்ன சொன்ன தப்பா? என நான்கு பக்கமும் eco அடிப்பது போல சொல்லி காட்டி comedy பண்ணாத எனக்கு ரொம்ப சிரிப்பா வருது! நீ எதையும் பண்ண வேணாம்! ஓரமா அப்படியே போய் உக்காந்துக்க.. இது என்னோட நேரம் என்று சொல்லிவிட்ட.. என்று அருகில் வந்து பிஸ்டலை நெற்றி பொட்டுக்கு நேராக வைத்தாள்.
Spr அவளை ஒரு வித பதட்டத்துடன் பார்த்தான்.
தேஜு, நான் இப்போ உன்னை கொல்ல சொன்னா கூட கொல்லுவாங்க! என்னோட ஆளுங்க! ஆனா பாரேன் எனக்கு தான் உன்ன கொல்லனும்னு ஆசை! இப்போ நீ என்னை இந்த மாதிரியான கோலத்தில் பார்த்துட்ட தானே! அதனால இப்ப நீ சாக வேண்டிய நேரம் நினைக்கிறேன். அதனால தான் நான் இந்த கோலத்தில் வந்திருக்கேன்.
வசந்தன், பூவிழி இப்படியெல்லாம் பண்ணாதம்மா! அவர் உன்னோட புருசன் உனக்கு குழந்தைக இருக்கு பூவிழி!..
தேஜூ, ச்ச்சீ என்ன பூவிழி! மைவிழி! மான் விழி! ம*று விழின்னுட்டு.. வாய மூடுங்க..என்று காதை தேய்த்துக் கொண்டே பிஸ்டலை ட்ரிகர் செய்து லோட் செய்து நேராகப் பிடித்தாள்.
கலைவாணி பயத்துடன் பார்க்க கார்த்திக், ஜெய், சூர்யா, மற்றும் உதயன் அனைவரும் “ தேஜு என்ன பண்ணிட்டு இருக்க? வேண்டாம் என்று கத்தினார்கள்.
தேஜு ஒரு முத்தத்தை கொடுத்து நான் உன்ன ரொம்ப லவ் பண்றேன்! எவ்ளோன்னு சொல்ல தெரியல சூரிய பிரகாஷ்! ஆனா பாரேன் உன்னோட சாவு கூட என் கையால தான் போகணும்னு எனக்கு ரொம்ப ஆசை! அதனால நீ போ! சரியா என் கையால… என்று தலையை சாய்த்து கொண்டே கூறினாள்.
Spr திடுக்கிட்டு எதுவும் பேசாமல் அமைதியாக பார்த்தான்.
தேஜு , spr!..சூரிய பிரகாஷ்!.. ஒரு லவ் யூ சொல்லு . ..
Spr, தேஜு இப்போ நீ என்னை கொல்லணும் அவ்வளவு தானே!; இவக எல்லாத்தையும் விடு! என்னை கொன்று விடு என்று கூறினான்.
தேஜு, இது feel பண்ணி dialogue பேச வேண்டிய நேரமே இல்ல! இப்ப நீ சாக வேண்டிய நேரம் தான் என்று கொஞ்சிக் கொண்டே கூறினாள்.
சூர்யா பிரகாஷ், எனக்கு சாக சந்தோசம்தான்! உன் கையால சாக உண்மையாகவே சந்தோசம் தான் என்று கூறி கொண்டே அவனுடைய காலில் உள்ள பிஸ்டலை எடுக்க முயற்சி செய்தான்.
தேஜு, அப்படியே ஆத்தாதே! இதெல்லாம் நடிப்புன்னு தெரியும்! என சொல்லி கொண்டே பக்கத்துல வந்து உன்கிட்ட இருக்க பிஸ்டல்ல புல்லட்ஸ் கிடையாது! அதனால நீ கவலைப்படாத! நீ என்ன வசனம் வேணும்னாலும் பேசலாம்! அதுக்கெல்லாம் நான் மயங்கமாட்டேன்! என்று நின்று கொண்டிருந்தாள்.
Sprக்கு இதுவும் அதிர்ச்சியாக இருந்தது. அர்ஜுனை முறைத்து பார்த்தான்.
அர்ஜுன், சாரி பாஸ் என்று சொல்லி திரும்பிக் கொண்டான். ஆனால் அவனை விடவில்லை.
தேஜு, ஐ லவ் யூ! நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்! ஆனா நீ சாகறதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒரு மூணு விஷயம் சொல்ல போறேன்!
Spr அவளை பார்த்தான்.
தேஜு, நான் இப்போ மாசமா இருக்கேன்! நாலு மாசம்! இதை கொல்ல try பண்ணேன். ஆனால் நேரம் தாண்டி விட்டது என வயிற்றை நீவி கொண்டே நின்றாள்.
வசந்தன் இதை கேட்டதும் மறுகி நின்றார். எப்படி என் பெண் இவ்வளவு கஷ்டத்தில் இருப்பது எனக்கு தெரியாமல் போனது! ஆனால் என் கைகளால் தானே என் பெண்ணை புதைத்தேன்! அப்போ அது என்னோட குழந்தை இல்லையா! கடவுளே என் பொண்ணு இப்போ உயிரோடு இருக்காள். ரொம்ப நன்றி! ஆனால் இத்தனை நாள் நான் அவளை உணராமல் ஏன் சென்றேன்! இத்தனை நாள் என்னோட பொண்ணை நீங்க ஏன் காட்டவே இல்லை!. என உள்ளம் மறுக அமர்ந்து இருந்தார்.
தேஜு சொன்னதை கேட்டதும் sprர்க்கு ஒரு பக்கம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவன் அடிபட்ட பார்வையுடன் மனம் நொந்து பார்த்து கொண்டு இருந்தான்.
தேஜூ, ஒன்றும் கவலைப்படாத இந்த குழந்தை எனக்காக வளர போகுது! அப்படி இல்லன்னா நானும் அடுத்து செத்துருவேன்! எப்படி இருந்தாலும் இந்த குழந்தையை நான் உன் பேர் சொல்லி வளர்க்க மாட்டேன்! நிவாஸையும் இந்த குழந்தையும் நான் என்னோட கட்டுப்பாட்டில் வளர்க்க போறேன்! நான் இருந்தாலும் சரி இல்லன்னாலும் சரி!.
Spr, தேஜூ இது தப்பு டி சொல்றத கேளு!. எல்லாமே என் குழந்தைகள் தான்! நம்ம குழந்தைகள்! உனக்கு என்ன ஆச்சு?
தேஜூ, அவங்களுக்கான பியூச்சர் என்னன்னு நான் கணித்து வைத்துவிட்டேன்! நீ சந்தோஷமா சாகு! உன்னோட சொத்து, உன்னோட ஆசைப்படியே நித்தினுக்கு போய் சேரும்…
Spr, no ப்ளீஸ் தேஜூ என்று கெஞ்ச ஆரம்பிக்க…
தேஜு final touch உன்னோட இதயத்தை touch பண்ற மாதிரி இருக்கணும் சோ என சிரித்துக் கொண்டே இப்போ இன்னொரு விஷயம் சொல்ல போறேன்!.
Spr அவளின் முகத்தை பார்க்க தேஜூ அவளுடைய போனில் projector திரையில் சில pdf அதாவது doctor certificate ஒளிர விட்டாள்.
Spr திரையையும் அவளையும் மாறி மாறி பார்க்க.
தேஜு, நீ நினைச்சிட்டு இருக்க மாதிரி நித்தின் பிரகாஷ் ரெட்டி உனக்கும் மகிக்கும் பிறந்தவன் என்று அப்படித்தானே!
வசந்தன் மிகவும் அதிர்ச்சியாக பார்க்க மகி அதிர்ச்சியுடன் தேஜூவை பார்த்தவள் அதன் பின் உடனே சூர்யாவை பார்த்தாள். தன் மேல் சந்தேகம் வருமோ தன்னை தவறாக நினைப்பார! இதை எல்லாம் கேட்க நான் செத்து இருக்கலாம் என அழுது கொண்டே கண்களை மூடி என்னங்க என தயங்கி கொண்டே அழைத்தாள்.
தேஜு சிரித்துக்கொண்டே அந்த குழந்தை எனக்கு உனக்கும் பிறந்தது தான்! டெஸ்ட் டியூப் பேபி! மகிழினியோட குழந்தை இல்ல! என இரு புருவமும் தூக்கினாள்.
Spr மிகவும் அவமானமாக உதட்டை அழுத்தி கடித்து கொண்டு நின்றான். எப்டி நடந்தது? என அவனுடைய மனதில் ஓடி கொண்டு இருக்க..
தேஜு, அவள் சத்ய தேவ சுமந்து கொண்டு இருந்த நேரம் ஆனால் நீ அதையும் மீறி எடுத்து கொடுத்த கருமுட்டைகளை என்னோட டாடி! ரங்கநாதன்! அவரு உன்னோட உயிரணுக்களையும், என்னோட கருமுட்டையும் தான் சேர்த்தார். மகி கருமுட்டைகளை அப்போவே அழித்து விட்டார்! ஐ லவ் மை டாடி! எப்போவும் என்னோட டாடி! என்னோட தோப்பனார் ரங்கநாதன் மாத்திரம் தான்!
இதையெல்லாம் வசந்தன் கஷ்ட பட்டு பார்த்து கொண்டு இருந்தாள். நான் யாருக்கு என்ன குறை வைத்தேன்! என் குழந்தை இத்தனை வருஷம் நான் தனியா விட்டேனே! என நீர் வழிந்தது.
தேஜு, அப்புறம் எப்டி நிதின் மகி போல இருக்கான்? உனக்கு டவுட் இது தானே!
Spr அவளை அடி பார்வை பார்த்தான்.
தேஜு, நிதின் மகி போல இல்லை. என்னை போலவும் அப்புறம் என சொல்லி கொண்டே உதயன் அருகில் வந்து இதோ இவனை போலவும் இருக்கான். இதோ இந்த உதய குமாரணுடைய சின்ன வயசு போட்டோ!. என projector திரையில் போட்டு விட்டாள். அனைவரும் அதை பார்க்க நிதின் மற்றும் உதயன் இருவரும் கிட்ட தட்ட ஒரே போல இருந்தார்கள்.
கலை வாணி மற்றும் வசந்தன் இமை வெட்டாமல் பார்த்து கொண்டு இருந்தார்கள்.
தேஜு, சோ இது உனக்கு மூன்றாவது அதிர்ச்சி! எப்படி நங்கூரம் மாதிரி நச்சுன்னு இருந்ததா!
இந்த நொடி sprக்கு உலகமே இருண்டது போல, அழிந்தது போல தோன்றத் தோன்றியது. அவன் நொந்து கொண்டு நின்றான். உடல்கள் தளர்வது போல இருந்தது.
தேஜு இப்ப ரொம்ப சந்தோஷம் எல்லா truth- reveal ஆகிடுத்து! இப்போ என்னோட பிராண நாதனுக்கு உண்டான எல்லா வகையான சந்தோசமும் காட்டி இருக்கேன்! சோ இப்போ happy தான நோக்கு!. ஒரு பொண்டாட்டிக்கு புருஷனை சந்தோஷமா வைத்திருக்கிறது ரொம்ப கடமைன்னு சொல்லுவாங்க! என் புருஷன் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்காருன்னு நினைக்கிறேன்! சோ அடுத்த கட்டத்துக்கு போவோம்!..
சூர்யா, கார்த்திக், உதயன், ஜெய் என ஆள் ஆளுக்கு அவளை அழைத்தார்கள்.
ஜெய், வேணாம் சொல்றத கேளு
சூர்யா, தேஜு அவசர படாத
கார்த்திக், இது தப்பான முடிவு!
உதயன், தேஜு நிறுத்து டி!. என கத்தினான்.
அவள் கண்களில் கண்ணீர் வழிய துடைத்து கொண்டவள். Spr I love you!. Happy death day!. அவனுடைய நெஞ்சை குறி வைக்க உடனே அருகில் இருந்த அர்ஜுன் மற்றும் ஆட்கள் என அனைவரும் நகர்ந்து கொண்டார்கள்.
தேஜு லோட் செய்து கைகளை உதறி கொண்டே சுடவும் சூர்யா அவளை தள்ளி விடவும் சரியாக இருந்தது. ஆனால் எதிர் பாரா விதமாக spr-ன் தோல் பட்டையை துளைத்து கொண்டு சென்றது.
அனைவரும் அந்த சத்தத்தில் கண்ணை இறுக்கி மூடிக்கொள்ள… தேஜுவே ஒரு நிமிடம் அந்த துப்பாக்கி சத்தத்தில் அவனைப் பார்த்தாள்.
கலை அந்த சத்தத்தில் மயங்கி சரிந்தார்.
Spr குண்டு பாயிந்ததும் வழியில் அப்படியே சரிந்து விழுந்தான். இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. தேஜு, ஹே சூர்யா!. உன்னை என திட்டியவள். அவனை இழுத்து கட்டுங்க என ஆட்களுக்கு சொல்லி விட்டு மறுபடியும் அவள் சுட வர..
அந்த நேரம் இன்னொரு துப்பாக்கி சத்தம் இன்பா அவனுடைய படைகளுடன் உள்ளே வர “பாய் மூவ் கரோ!” என கத்தினாள்.
அங்கு இருக்கும் ஜக்கு பாயின் ஆட்கள் கண்ணீர் புகை குண்டுகளை போட்டு விட்டு தடதட என்று கண் இமைக்கும் நொடியில் தப்பித்து விட..
சூர்யாவை விட்ட வேகத்தில் அவன் தேஜூவை பிடித்து கொண்டான். அவளிடம் இருந்து துப்பாக்கியை வாங்கினான்.
அதற்குள் இன்பராகவன், யாரும் அசைய கூடாது! காவலர் படை லோகேஷ் என அனைவரும் அந்த இடத்தை சுற்றி வளைத்தார்கள்.
சூர்யா தேஜூவை நன்றாக பிடித்துக்கொண்டான். ஜெய் இன்னொரு பக்கம் நின்று கொண்டிருக்க…
குரு பிரகாஷ் ஒரு பக்கத்தில் இருந்து ஓடி வந்தான். அண்ணயா! என நெஞ்சு குமுற தன் அண்ணனை ரத்த வெள்ளத்தில் பார்த்தான்.
இன்பா, எல்லார் கை கட்டையும் அவிழ்த்து விடுங்க!.என உத்தரவிட்டான்.
வசந்தன் மற்றும் கலைவாணி கார்த்திக் என அனைவருடைய கட்டையும் அவிழ்த்து விட்டு இருக்க…
தேஜு, அவனை முழு பலம் கொண்டு தள்ளி விட முயற்சி செய்ய சூர்யா தேஜுவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டான்.
என்ன பண்ணிட்டு இருக்க?
தேஜுவின் கண்களில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. இது என்ன கோலம் சொல்லு! இது என்னடி கோலம்!
Spr கண்களில் வலி தாங்காமல் நீர் கோர்த்து கொண்டது.
குரு, அண்ணா! என கலங்கிய விழிகளில் அருகில் வர..
Spr, நீ! உன்னை நான் செத்தாலும் மன்னிக்க மாட்டேன்!. என கைகளை தட்டி விட்டான்.
மகி அவனுடைய நிலையை பார்த்து அருகில் செல்ல…
Spr, பாப்பா அழுகிறாள். நீ இப்போ பாப்பா கிட்ட போ!.
மகி, சார் உங்களுக்கு ஒன்னும் ஆகாது!. என கூறினாள்.
வசந்தனுக்கு இப்பொழுது spr உயிர் தான் முக்கியம் தன் பெண் அந்த இடத்தில் யார் இருந்தாலும் எந்த ஒரு தகப்பனும் பார்க்க நினைக்காத ஒரு கோலத்தில் வந்து நின்றாள். அதனால் வேகமாக spr அருகில் சென்று உங்களுக்கு ஒன்னும் ஆகாது! ஆம்புலன்ஸ் வர சொல்லுங்க! உதயா வா வந்து மாமாவை தூக்கு!. என உடனே வந்தார்.
கலை வாணி, மகி! மை விழி வாங்க நம்ம வீட்டுக்கு போலாம்! என்னங்க என வசந்தனை அழைக்க… போடி என சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து spr அ தூக்கி கொண்டு சென்றார்கள்.
இன்பா அங்கு இருக்கும் அனைவரையும் கைது செய்ய சொல்லி விட்டு சூர்யா அருகில் சென்றான்.
சூர்யா, அறிவு இருக்கா தேஜு! உன்னோட குழந்தையை நினைத்து பார்த்தியா! அப்படி என்ன பழி வாங்கும் குணம்!
தேஜூ, உங்க ரெண்டு பேருக்கும் அவனை கொன்னால் நிம்மதி தானே! அப்புறம் ஏன் வருத்த படுறீங்க! நீங்க சந்தோச படனும்!.
சூர்யா, அவனை எங்கே வேணாலும் கொன்று இருக்கலாமே! எங்க முன்னாடி எதுக்கு இந்த கோலத்தில் வந்து நின்ற?
தேஜூ, வசந்தன் கலைவானி ரெண்டு பேரும் பார்த்து கஷ்ட படமும்! அதுக்கு தான்! சரி இதுவே போதும்! நான் எல்லாத்தையும் பார்த்து விட்டேன்! இப்போ சாக தயார் தான்!. என சொல்ல..
தேஜு கன்னத்தில் ஒரு அரை சூர்யா தான் அடிக்க கை ஓங்கினான். ஆனால் அடித்தது சூர்யா இல்லை…
யார் அது…?
கலை, வாய மூடு!. கழுத்தை திருகி போட்டு விடுவேன்!. இனி சாக போறேன் என் வார்த்தை வந்தது உன்னை…என திட்டி விட்டு வேகமாக சென்று விட்டார்.
இன்பா, சூர்யா! என அழைத்து கொண்டே கலை வாணி செல்லும் திசையை பார்த்தான்.
தேஜூ, ஜெய்யை கட்டி கொண்டாள்.
ஜெய் அவளின் தலையை வருடி விட்டு கொண்டே எதுக்கு இப்படி பண்ண தேஜு!.
தேஜு, அவன்! அவனுடைய கேரக்டர் உனக்கு தெரியும் இல்ல!..
சூர்யா, சாவு என்னைக்கும் solution இல்ல.. உன்னை நான் முதன் முதலில் பார்த்த நாள்! எனக்கு இந்த சந்திப்பு முன்னாடியே நடந்து இருந்தால் நல்லா இருக்கும் அப்டின்னு தோணுச்சு!.
தேஜூ நிமிர்ந்து அவனை பார்க்க..
இன்பா, டேய் ஓவரா பண்ற?
சூரியா அவளின் அருகில் வந்து “உன்னை நீ மகி கூட மை விழி கூட உதயன் கூட ஒப்பிட்டு பார்க்காத! நீ தேஜூ! ரொம்ப தனித்துவமான பொண்ணு! எல்லா இடத்திலும் நீ special தான்! நான் என்ன சொல்வெனோ? என பயந்து நாலு வருஷத்துக்கு முன்னாடி என்னை face பண்ண தைரியம் இல்லாமல் விட்டு ஓடி போன மகி நீ இல்ல! தன் காதலையே வீட்டில் சொல்ல படப்பட்டு பிளான் பண்ணி தன்னோட சொந்த தங்கை காதலனை லவ் பண்ண மை விழி நீ இல்லை! ஒரு பொண்ணை மனசார காதலித்து அதை சொல்ல கூட தைரியம் இல்லாமல் தன்னோட அம்மா வார்த்தைக்காக வேற ஒரு பொண்ணு பக்கத்தில் மண மேடையில் உட்கார்ந்த உதயன் மாதிரி நீ இல்ல…
தேஜு அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.
சூர்யா, நீ தேஜூ! பெண் சிங்கத்துக்கு பிடரி இல்லாமல் இருக்கலாம்! ஆனால் அது தான் அந்த காட்டையே lead பண்ணும் அது போல நீ! Spr ஆ சாய்த்து அவனை வீழ வைக்க அதாவ்து தைரியத்தில் வீழ வச்சு இருக்க! இனி உன்னை யாருக்கும் நீ proof பண்ணும் அவசியம் இல்லை உன்னோட குழந்தைக்காக நீ வாழனும்!.
இதையெல்லாம் கேட்ட தேஜு…?
இதை தேஜூ மட்டும் தான் கேட்டு கொண்டு இருந்தாலோ!
மகி….?
தொடரும்…
Episode 372
சூர்யா, நீ அவங்களுக்காக வாழ வேண்டாம்! நீ உனக்காக வாழனும் நீ ரொம்ப பிரீசியஸ் தெரியுமா? அது உனக்கு தெரியல! உன்னோட ஆட்டிட்யூட் அது ரொம்ப தனித்துவமானது! என்று அவளை உருக வைக்கும் வார்த்தைகளாக பேசிக் கொண்டிருக்க…
இன்பா அருகில் இருந்து “மச்சி போதும்டா ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்க!” என சொல்ல..
தேஜுவின் பார்வை இன்பாவின் மீது சென்றது.
இன்பா தன்னை சமன்படுத்திக் கொண்டு “இப்போ நீங்க ஷூட் பண்ணி இருக்கீங்க? அதுக்கு உங்களை அரெஸ்ட் பண்ண தான் வந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன்! போலாமா!”
ஜெய், “என்ன ஃபார்மாலிட்டி சொல்லுங்க? அவ பெருசா ஒன்னும் பண்ணல! ஜஸ்ட் shoot தான் பண்ணி இருக்கா!”
சூர்யா, அவ உன்னோட லவ்வர் இல்ல புரியுதா?
ஜெய் தேஜுவை பார்த்தான்.
உடனே தேஜு அவனிடம் இருந்து நகர்ந்து கொண்டாள்.
சூர்யா கங்கிராட்ஸ் என்றான்.
எதுக்கு என்று சிரித்துக் கொண்டே தேஜூ அவனைப் பார்த்தாள்.
சூர்யா , உனக்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்லையா? உன்னோட புருஷனை சுட்டு இருக்க! அது தெரியுமா?
ஜெய், நீ எதுக்கு கங்கிட்ரஸ் சொன்ன..
சூர்யா, இல்ல population increase ஆக போகுதே அதுக்கு தான் என்று கூறினான்.
ஜெய், என்ன சொல்ற? புறியுற மாதிரி சொல்லு!.
சூர்யா, அவள் மாசமா இருக்கா!.
தேஜு உதடு கடித்துக் கொண்டு தன்னை கட்டு படுத்த அதையும் மீறி கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. ஒரு பெருமூச்சு விட்டாள்.
சூர்யா, கவலப்படாத… நான் மிஸ் பண்ணிட்டேன்!. நீ கொஞ்சம் அவனைப் பார்க்கிறதுக்கு முன்னாடி என்னை பாத்து இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது!.
இன்பா, டேய்*** என்ன பண்ணிட்டு இருக்க…
சூர்யா கையை தட்டி விட்டு தன் தலையை கோதி கொண்டே தேஜு வை பார்த்தான்.
தேஜு, உன் பொண்டாட்டி கேட்டா இங்க ஒரு war நடக்கும்!.
ஹே சொல்லிட்டு போ!.
தேஜு, முக்கியமா ஒரு விஷயம் சொல்லணும்…
சூர்யா, என்ன விஷயம்?
தேஜூ, அது உன்னோட பாப்பாவ, உண்மையாவே எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு! எனக்கு ஏன் ஒரு பொண்ணு இல்லன்னு நான் அவளை பார்த்து நினைச்சேன்! அவ்ளோ அழகா இருக்கா! நான் அவளை வேணும்னு கஷ்டப்படுத்தல… என்னை மன்னிச்சிடு! அப்புறம் நான் ஜெயிலுக்கு போனதும் அவளை ஒரே ஒரு தடவை என்கிட்ட தூக்கிட்டு வர முடியுமா! அவளை கொஞ்சம் போல தோணுது!
சூர்யா, கண்டிப்பா கூட்டிட்டு வரேன்! அப்புறம் உங்களை இப்படி கஷ்டப்படுத்தியதற்கு சாரி! ஐ மீன் உன்ன கார்த்திக்க. மட்டும் ..
சூர்யா, அப்போ மகிழினி, உதயன், மை விழி, உங்க அம்மா அப்பா உங்க குடும்பம் எல்லாம்!..
தேஜு, அதுக்கு நான் ஏன் சாரி சொல்லணும்? அவங்கள கஷ்டப்படுத்த இப்ப கூட எனக்கு தோணுது!
சூர்யா, சீரியஸ்லி!..
நிஜமா தான்! என்னை விட்டது அவங்க தப்பு!.
சூர்யா, அவங்க விட்டது நல்லதுன்னு தோணுது!..
தேஜு, என்ன சொல்ற..
சூர்யா, அவங்க கூட இருந்திருந்தால் நீ இந்த அளவுக்கு போல்டா வந்து இருக்க முடியாது. உங்க அம்மா செம வில்லி!..
தேஜு, அதெல்லாம் என்கிட்ட செல்லுபடி ஆகாது!.. என சொல்லி கொண்டே இரண்டடி நடந்தாள்.
சூர்யா, நீ சொன்னது சரி தான் may be நீ உங்க வீட்ல இருந்திருக்கலாம்!..
தேஜு, ஏன்!.. என நின்றாள்.
இன்பா, * சூரியா உன்னை உதைப்பேன்!. டா என்று கத்தினான்.
போடா என்று தட்டி விட்டவன்.
சூர்யா, நீ மட்டும் இருந்திருந்தால் நான் உன்ன பார்த்திருப்பேன்! நீதானே முதல் பொண்ணு!.
தேஜு கொஞ்சம் சிரித்துக் கொண்டே ஓவரா பிளர்ட் பண்ற…
ஒரு நிமிஷம் இந்த வாழ்க்கை நெனச்சு பாரு தேஜூ! என்னோட பார்ட்னர் யாரா இருந்தாலும் அவங்க கிட்ட நான் எப்பவும் போல தான் இருப்பேன! பேசிக்குவோம், சிரிச்சுக்குவோம் அடிச்சுக்குவோம்! சண்டை போட்டுக்குவோம்! எந்த பொண்ணா இருந்தாலும் அவங்க கிட்ட நான் அதேதான் ஃபீல் பண்ணுவேன்! எ இது எனக்கு கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் தான் புரிஞ்சது!
இன்பா, டேய் நீ ரொம்ப ரொம்ப ஓவரா பேசிட்டு போற இது எங்கே முடியும் தெரியல!; தேவையில்லாம வாயை விடாத வாயை மூடிக்கோ!
தேஜு, மகி இடத்தில் யார் இருந்தாலும் இப்படித்தான் பிஹேவ் பண்ணுவியா!.
சூர்யா, ஒரு வேளை மகி இடத்துல வேற யாராவது இருந்திருந்தால் நாலு வருஷம் என்னை விட்டு போகாமல் இருந்திருப்பாங்க! நீ போய் இருப்பியா? என்னை விட்டு போய் இருக்கியா?
தேஜு, நான் மகி இல்ல…
சூர்யா ,அது தான் விஷயம்
சூர்யா, சீரியஸா சொல்றேன். உங்க வீட்ல நீ இருந்திருந்தால் அவங்க பொண்ணு நீ தான் ஃபர்ஸ்ட்!; சோ அப்படி பாத்தா இந்த டிராஜிடிக் எல்லாம் உனக்கு தான் நடந்திருக்கும்! நீ தான் அந்த ஹீரோயின் இருந்திருப்ப! அப்போ நான் தானே ஹீரோவா இருக்கணும்!
தேஜு, என்னை இப்படி பேசி ஹாப்பி பண்ண வைக்காதே இப்படித்தான் அவளை மயக்கினியா?
யாரை சொல்ற என்று சூர்யா புருவம் நிறுத்தினான்.
தேஜு, யாரை சொல்லணும்? லிஸ்ட் போடவா? என்று கேட்டான்
சூர்யா , அவளுக்கு என் மேல இஷ்டம் இல்லன்னு தோணுது!. அந்த அளவுக்கு நான் ஒர்த் இல்ல போல! நீ சொல்லு நான் ஒர்தா!.
தேஜு அவனை ஆச்சரியமாக பார்த்தவள். அப்படியா நம்பிட்டேன்! நீ ஒர்த் தான்! May be.. என்று சொல்லிவிட்டு இன்பாவின் பின்னால் சென்றாள்.
ஜெய், கல்யாணம் ஆன பொண்ணை உசார் பண்ற..
சூர்யா இப்பொழுது கோபமாக ஜெயின் பக்கம் திரும்பி அவளின் கழுத்தை நெரிக்க வந்தான்.
ஜெய், என்னடா பண்ற என்று தள்ளிப் போக..
சூர்யா, என்கிட்ட இதெல்லாம் சொல்லவே இல்ல! சொல்லி இருந்தா நான் ஏதாவது பண்ணி இருப்பேனே!
கழுத்த விடுடா வலிக்குது! வலிக்குதுடா ப்ளீஸ்! என்று கெஞ்சினான்.
சூர்யா, நான் கேட்டதுக்கு பதில் சொல்லு!
நீ விட்டா தானே சொல்ல முடியும்!
அவன் விட்டான்…
ஜெய் தனது கழுத்தை பிடித்துக் அசுவாசப்படுத்தி கொண்டவன். “அவ என் பின்னாடி ஆளுங்கள வச்சிருந்தாள். என்கிட்ட மைக்ரோபோன் செட் பண்ணி நான் யார் யார் கிட்ட என்ன பேசுறேனோ! அதைக் கேட்டுட்டு இருந்தாள். இந்த சூழ்நிலையில உனக்கு எப்படி நான் சொல்ல முடியும்? எனக்கு பின்னாடி இருக்கிற எல்லா ஆட்களும் அவளோட ஆட்கள் தான்!” என்று கூறினான்.
சூர்யா, இத்தனை பண்ணியும் நீ அவள் வந்து கட்டி கொண்டதும் உடனே கட்டி கொள்கிற!.
ஜெய், அவளோட நிலையை பார்த்தியா நீ! Share பண்ணிக்க கூட ஆள் இல்லை! என்னால் அதை digest பண்ணிக்க முடியல… ச்சா அவள் இத்தனை கஷ்ட பட்டு இருக்கா! வாழ்க்கையை வெறுக்கும் அளவுக்கு போயிட்டா! என்னால் இதை… என அதற்கும் மேல் எதுவும் பேச வில்லை.
சூர்யா, என் இதழ் பாப்பா என்ன கஷ்ட படுகிராளோ! உடனே போகனும்! என சொல்லி கொண்டு இருக்கும் போதே மை விழி மெதுவாக சூர்யாவை நோக்கி நடந்து வந்தாள்.
சூர்யா, என்ன மை விழி! நானே வருவேனே நீ சிரம பட்டு எதுக்கு வந்த!.
மை விழி, வாங்க மாமா வீட்டுக்கு போலாம்!
சூர்யா, ஹாஸ்பிடல் யார் யார் போனது?
கார்த்திக், உதயா, அப்பா எல்லாம் ஹாஸ்பிடல் போயிட்டாங்க!
சூர்யா, அத்தை!
அவங்க வெளியில் இருக்காங்க!.
சூர்யா, உன் தங்கை!. அவள் ஹாஸ்பிடல் போலயா!
மை விழி, அவள் எதுக்கு போகனும்! அவள் உங்களை தேடி வரலயா!.
சூர்யா, இல்லையே!. என நடந்தார்கள்.
கலை எதோ சிந்தனையில் அமர்ந்து இருக்க… அருகில் மகி எதையோ பறி கொடுத்தவள் போல அமர்ந்து இருந்தாள்.
சூர்யா நேராக அவர்களின் அருகில் சென்றான். பின்னால் ஜெய், இப்போ தான் என்னோட கார்ட்ஸ் கிட்ட பேசினேன்! இப்போவே கார் வரும் கிளம்பலாம்!.
சூர்யா, அத்தை!.
கலை அப்பொழுது தான் சுய நினைவுக்கு வந்தவர். மாப்பிள்ளை! என சொல்லி கொண்டே எழுந்து நின்றார்.
சூர்யா, என்ன யோசிக்கிரிங்க..
ஒன்னும் இல்ல!.
சூர்யா, அவளை தப்பா நினைக்காதீங்க! ரொம்ப நல்ல பொண்ணு! நிறைய கஷ்ட பட்டு இருக்கா!..
உடனே மகி நிமிர்ந்து தன் கணவனை பார்த்தாள்.
மை விழி, அவளை இங்கே யாரும் நினைக்க மாட்டார்கள்! கெட்ட எண்ணம் பிடித்தவள். கெட்ட புத்தி!..
சூர்யா பேச வரும் முன்!.
கலை, மை விழி! அவள் என் பொண்ணு நான் சுமந்த பொண்ணு! என அழ ஆரம்பித்தார்.
மை விழி, மா!.
கலை மறிகி கொண்டே என் பொண்ணு! எத்தனை நாள் தெரியுமா நான் நினைத்து இருக்கேன்! அவள் மட்டும் என்னோடு இருந்து இருக்க நீயும் மானுவும் வந்து இருக்க மாட்டீங்க!. பிறந்து உதயன் அழவே இல்லை ஜடம் போல இருந்தான். அவளை வெளி எடுத்து கத்தினதும் தான் உதயன் கத்த ஆரம்பித்தான்.
சூர்யா, விடுங்க அத்தை பழசை பற்றி பேசி என்ன பயன்!. இப்போ தான் தேஜூ இருக்காளே நீங்க பார்த்து கொள்ளலாம்!. என சொல்லி கொண்டு இருக்கும் போதே கார் வந்தது.
ஜெய் அவர்கள் அனைவரையும் அழைத்து கொண்டு வீட்டில் விட்டான்.
தங்க பொண்ணு யாரு டா மா! அழ கூடாது! அத்தை இருக்கேன்! இதோ பாரு சக்தி அண்ணா! மிதுன் அண்ணா! உனக்கு ரெண்டு அக்கா சிவன்யா, பவன்யா! எல்லாரும் இருக்காங்க! குரல் மங்கி போச்சு! எதுக்கு ராகம் பாடிரீங்க! அழ கூடாது என குழந்தையை தாரா சமாதானம் செய்து கொண்டு இருந்தாள்.
இது அனைத்தையும் கேட்டு கொண்டே எல்லாரும் உள்ளே வந்தார்கள். தாரா திரும்ப அங்கே அனைவரும் நின்று கொண்டு இருக்க..
தாரா சந்தோசத்துடன் குட்டி மா அம்மா வந்தாச்சு!. என எழுந்து நின்றாள்.
மகி அழுது கொண்டே தன் குழந்தை அருகில் செல்ல…
தாரா, இதழ் பாப்பாவை கையில் கொடுத்தாள்.
மிதுன் தன் அம்மா காலை கட்டி கொண்டான்.
சிவன்யா மற்றும் பவன்யா இருவரும் மை விழியை கட்டி கொண்டார்கள்.
சத்ய தேவ் நேராக தன் அப்பாவிடம் வந்தான்.
டாடி!. என்ன ஆச்சு?
சூர்யா, சத்ய தேவ் என் மேலே தான் பாசம் இருக்கு..
சத்ய தேவ், என்ன டாடி இது! இன்பா மாமா வந்தார்களா? மாமா சொன்னாங்க! நீங்க எல்லாரையும் கூட்டி வந்து விடுவீர்கள்!.
சூர்யா, ம்ம் மாமா வந்தாங்க என தன் மகனை கட்டி உச்ச தலையில் முத்தம் பதித்தான்.
மிதுன், எதுக்கு என்னை விட்டு போன! உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை! பாப்பா எவ்ளோ அழுகை தெரியுமா! அத்தை பாவம்!.
சிவன்யா மற்றும் பவன்யா, டாடி எங்கே? எங்க டாடி வேணும்! எதுக்கு டாடிய விட்டு வந்த? டாடி வேணும் என அழ ஆரம்பித்தார்கள்.
தாரா உள்ளே சென்று சில சாக்லேட் எடுத்து வந்தவள். அவர்களிடம் டாடி இப்போ வருவாங்க உங்க கிட்ட இதை கொடுக்க சொன்னாங்க என நீட்ட..
மை விழி எதுவும் சொல்ல வில்லை.
அவர்கள் இருவரும் வாங்கி கொண்டார்கள்.
தாரா, மை விழி உங்களுக்கு எதுவும் வேணுமா!.
மை விழி, தலையை குனிந்தபடி எனக்கு தண்ணி வேணும்!.
இப்போ காய்ச்சி எடுத்து வரேன்!. என உள்ளே சென்றாள்.
அந்த இடத்தில் கலை வாணி அழுது கொண்டே நின்று இருக்க.. உள்ளே வந்த தாரா செல்லலாமா? வேண்டாமா? என ஒரு நிமிடம் நின்றாள்.
கலை வாணி கண்களை துடைத்து கொண்டே அவளை பார்த்தார்.
எதுக்கு வந்த?
தாரா கொஞ்சம் பயந்து கொண்டே தண்ணி கெட்டில் ல சூடு பண்ண.. என தயங்கி கொண்டே கூறினாள்.
பண்ணு அப்படியே நிக்கிற?
இதோ அத்தை என சொல்லி கொண்டே தண்ணீரை பிடித்து ஊற்றி கொண்டு இருந்தாள்.
வேலை செய்து கொண்டு இருக்கும் தாராவை வைத்த கண் வாங்காமல் கலை பார்த்து கொண்டு நின்றார்.
நேற்று மாலையில் இருந்து இன்று மதியம் வரை ஒரு கை குழந்தை மற்றும் சத்ய தேவ், மிதுன் தேவ், சிவன்யா பவன்யா என அனைவரையும் சமாளித்து பார்த்து கொண்டு இருக்கிறாள். பாவம் விடிய விடிய குழந்தையை கையில் வைத்து கொஞ்சி பத்திரமாக பார்த்து கொண்டு இருக்கிறாள். இத்தனையும் செய்த தாரா மீது கோபம் வர வில்லை. மாறாக நல்ல அபிப்பிராயம் தான்!. எவ்வளவு கஷ்டம்!.
உன் பேர் வெறும் தாராவா!. என கேட்க..
டம்மென ஒரு சத்தம் தாரா பாத்திரத்தை தவற விட்டு விட்டாள்.
அத்! அத்தை! சாரி அத்தை!..
கலை, சரி சரி நகரு நான் வச்சு தரேன்!.
தாராவுக்கு ஆச்சரியமாக இருந்தது. நிஜமாலுமே நம்ம அத்தை தானா? நம்ம கிட்ட பேசுற மாதிரி இருக்கே! இது கனவா? இல்ல உண்மையா? ஐயோ! உதயா! என்று நினைத்துக் கொண்டு நின்றாள். .
அதன் பின் தன்னிலைக்கு வந்து அத்தை! ஏதோ என்கிட்ட கேட்டீங்களே? என்ன விஷயம் ? என்று தயங்கிக் கொண்டே கேட்டாள்.
கலைவாணி திரும்பிப் பார்க்க…
“அத்தை நான் எதுவும் தப்பா சொல்லி இருந்தால் என்னை மன்னிச்சிடுங்க!”
கலைவாணி உன்னோட பேர் என்னன்னு கேட்டேன்!.
என்னோட பேரு தாரா மட்டும் தான் அத்தை!..
சரி சரி போய் வெளியே இரு நான் செஞ்சு கொண்டு வரேன்! போய் உட்காரு! என கலை கூறினார்.
தாரா பேயறைந்தவள் போல் வெளியே வந்தாள்.
இவ்வளவு நேரமும் மகிழினிடம் இருந்த குழந்தை தன் அழுகையை அடக்கி சாதாரண நிலைக்கு வந்தது.
தன் தந்தையை பார்த்ததும் உடனே சூர்யாவிடம் எக்கி செல்ல முயற்சி செய்தது
மகி அப்படியே அமர்ந்து கொண்டிருக்க சூர்யா இருக்கும் பக்கம் ப்பா!.. ப்பா!. என்று மெதுவாக அழைத்துக் கொண்டு இருக்க…
தாராவ பார்த்து த். த்த.. என்று சொல்ல ஆரம்பித்தது.
அங்கு இருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது குழந்தை அம்மா சொல்லாமல் நேரடியாக அத்தை சொல்கிறாளே என்று ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்க…
தாரா, அண்ணா உங்களை தான் பாப்பா பாக்குது! வந்து தூக்கிக்கோங்க என்று கூற…
சூர்யா வேகமாக மகி என அருகில் வந்தவன். குழந்தையின் முன் கை நீட்ட தாவிக் கொண்டு அவன் முகத்தைப் பார்த்தது சந்தோஷம்! அவ்வளவு ஒரு புன்னகை சிரிக்க… சூர்யா அவளை அனைத்து ஆசை தீர முகம் எல்லாம் முத்தமிட்டான். உச்சந்தலைக்கு முத்தமிட்டான். அவளுடைய தலையை வருடிவிட்டான்.
மகிழினி அப்படியே அமர்ந்திருந்தாள். வெளியே வந்த கலைவாணி மை விழியிடம் தண்ணீர் கொடுத்துவிட்டு..
மகி போய் குளித்து விட்டு பாப்பாவுக்கு பால் கொடு.. வலிக்குதுன்னு சொன்னல்ல அப்பதான் கொஞ்சம் சரியாகும் என்று கலைவாணி கூறிட…
மகி எழுந்து கொண்டு குழந்தையை வாங்க சூர்யாவிடம் கைகளை நீட்டினாள். மற்றபடி பேசவில்லை.
சூர்யா குழந்தையை கொடுக்க வீரன அழ ஆரம்பித்தது.
கலைவாணி அப்பா தான் வேணுமா? அம்மா வேண்டாமா? அடேங்கப்பா அப்பாவை விட மாட்டேன்றாளே!. என்று கலைவாணி சொல்ல…
அப்பொழுதும் கூட இதழினி வரவே இல்லை!.
சூர்யாவை விட்டு சட்டையைப் பிடித்துக் கொண்டு கத்த ஆரம்பித்தாள்.
கலைவாணி, மாப்பிள்ளை நீங்களும் கூட போங்க
சூர்யா குழந்தையை எடுத்துக் கொண்டு முன்னாள் சென்றான். மகிழினி பின்னால் செல்ல.. மிதுன் அவர்களை பின் தொடர்ந்தான்.
தாரா, மிதுன் குட்டி இங்க வாங்க! என்று அழைக்க…
நாம் கூட போறேன்!..
அம்மா கூட அப்புறம் போலாம் நீங்க வாங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் முக்கியமா என்று அழைத்தாள்.
கலைவாணி மை விழி அருகில் சென்று கொஞ்சம் குளிச்சுக்கிறியா? ரெஸ்ட் எடுக்குறியா?
உடனே மைவிழி, என்னம்மா உன் மருமக கிட்ட எல்லாம் பேசுற போல
கலைவாணி ,உனக்கு என்னடி உன் வேலையை பார்த்துட்டு போ l!..
அப்ப நான் என் மாமியார் வீட்டு கிளம்புறேன் என்று மைவிழி கூறிட…
கலை, கிளம்பு நானே கொண்டு வந்து விட சொல்லட்டும!..
மைவிழி, உன்னோட பெரிய பொண்ணு வந்ததும் என்னை தூக்கி போடுறியா? அவளை நான் சும்மாவே விடமாட்டேன்! என்னை எவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கா! பழி வாங்கி இருக்கா புரியுதா! வரட்டும் நான் அவளை என்ன பண்றேன்னு பாரு என்று பற்களை கடித்தாள்.
ஓ நானும் பார்க்கிறேன்! என்ன பண்ணுவ!..
மை விழி, இது சரி பட்டு வராது! நீ பேசுறது ஒன்னும் சரி இல்லை…இது என் வீடு! இத முதல்ல நான்கு பங்கு போடுங்க! அதுல முதல் பங்கு எனக்கு தான் கொடுக்கணும்!..
இது யாருக்கும் இல்ல! அப்படியே ஓடி போயிடுங.. உனக்கு மகிக்கு நகை போட்டு கட்டி கொடுத்து இருக்கேன்! என் பையன் இளிச்ச வாயனா! இது உதயனுக்கு!.
மை விழி, அப்போ உன்னோட நகைய எங்க பாப்பா ரெண்டு பேருக்கும் இப்போவே பிரிச்சு கொடு!. .
கலை, அது பெரியவளுக்கு!. .
மை விழி, அது நான் தான் மா!.
கலை, நீ இல்ல!.
வேற யாரு?
கலை யோசித்து கொண்டு நிற்க.. அப்பொழுது தான் உதயன் கிட்ட பேசி விட்டு வந்த தாரா.. அவங்க பேரு தேஜூ! என்று கூறினாள். .
கலை சிரித்து கொண்டே ஹான் தேஜூ அவளுக்கு தான் கொடுப்பேன்!.
மை விழி , கலை மற்றும் தாரா இருவரையும் முறைத்து விட்டு உள்ளே செல்ல..
கலை, மை விழி இந்தா டி தண்ணி!
எனக்கு வேணாம் உன் பெரிய பொண்ணு வருவா அவள் கிட்ட கொடு! அப்படி இல்லனா உன் புது மருமக கிட்ட கொடு!. என சொல்லி கொண்டே அவளுடைய அறைக்கு சென்றாள்.
கலை, நில்லு டி!.
தாரா, இவள் மாறவே மாட்டாளா! அய்யோ மாமியாரை விட இவள் பயங்கர terror ஆ இருக்காளே! சாமி!. என நினைத்தாள்.
கலை அசரிக்கையுடன் திரும்ப…
தாரா அவரின் முகத்தை பார்த்து அத்.. அத்தை!
ம்ம் சொல்லு!.
நீங்க வேனா போய் ரெஸ்ட் எடுங்களேன் நான் சமைக்கிரென்!.
கலை அவளை பார்க்க…
தாரா, உங்களுக்கு சரி அப்டின்னா போறேன் இல்… இல்லன்னா… வே… வேணாம்!.
கலை, சரி செய்து விடுவாயா!.
ம்ம் செய்வேன் அத்தை!
சரி நீ செய்ய ஆரம்பி நான் குளித்து வரேன்! அப்புறம் நீ போய் குளிச்சிக்க…
ம்ம் சரிங்க அத்தை என வேகமாக மிகவும் சந்தோசமாக சமையலறை சென்றாள்.
மகி குளித்து முடித்து வெளியே வந்தவள் தன் மகவை பார்க்க சூர்யா கன்னத்தில் அடித்து கொண்டு விளையாடி கொண்டு இருந்தாள்.
மகி, ஹலோ மேடம்!. வாங்க வாங்க பசிக்குமே! இந்த குட்டி வயிறு!
இதழ் மகியை பார்த்து சிரிக்க.. மகி அருகில் அமர்ந்து குழந்தையை தூக்கினாள்.
சூர்யா அவள் அமர்ந்ததும் எழுந்து கொண்டான்.
இதழ் மீண்டும் கத்த ஆரம்பித்தாள்.
என்ன தங்கம்! யாரு? அப்பா இங்கே தான் இருக்கேன்! அழ கூடாது!. .என வேறு புறம் திரும்பி அமர்ந்து கொண்டான்.
மகி குழந்தையை சமாதானம் செய்து பால் கொடுக்க குழந்தை சூர்யாவின் கையை பிடித்து கொண்டது.
மகி குழந்தையின் தலையை வருடி விட்டு கொண்டே சூர்யாவை பார்த்தாள். அவன் சொன்ன வார்த்தைகள் காதில் விழுந்து கொண்டே இருந்தது. “குழந்தையை சுமந்து கொண்டு ஓடி விட்டேனாம்! தேஜு உன்னை நான் முன்னாடியே பார்த்து இருந்தால் நல்லா இருக்குமே! நீ தனித்துவ மற்றும் precious girl.. இன்னும் என்ன என்ன? என நினைக்க நினைக்க கண்களில் நீர் கோர்த்து கொண்டது.”
சிறிது நேரம் கழித்து இன்னொரு பக்கம் கொடுத்தாள் குழந்தை கொடுக்கும் வலியை விட சூர்யா பேசிய வார்த்தைகள் அவளின் மனதை குத்தியது.
சூர்யா கொஞ்சம் நேரம் கழித்து அவளின் பக்கம் திரும்பினான்.
உடனே கண்ணை துடைத்து கொண்டாள்.
என்ன ஆச்சு! என்று கேட்பான் என நினைத்தவளுக்கு ஏமாற்றம் மட்டுமே!.
சூர்யா கேட்க வில்லை.
மகி பிடிவாதத்தின் உச்சியில் இருக்கிறாள். அவளும் அவனிடம் பேச முயற்சி செய்ய வில்லை.
அனைவர் வாழ்க்கையும் முன்னேற இரு ஜோடி வாழ்க்கை மட்டும் குழப்பமாக இருந்தது.
SPR – தேஜு
சூர்ய தேவ் – மகிழினி
அடுத்து naming ceremony.. இதழ் பாப்பா!.
தொடரும்….
Episode 373,
அடுத்து வந்த நாட்களில் உடனே தேஜு வெளியே வந்து விட்டாள். நாதன் மற்றும் தேஜு இருவரையும் ஜீவி அழைத்து சென்று விட்டார்.
இத்தனை நாள் என் குட்டி மறைச்சு இருக்க? நான் உன்னோட சொந்த அப்பாவா இருந்து இருந்தால் இப்படி செய்து இருப்பியா? சொல்லு!
டாடி! என கத்தினாள்.
நாதன், என்ன தேஜு! நான் தான் உனக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வைத்து விட்டேனோ! வயிற்றில் குழந்தையை வைத்து கொண்டு அதை அழிக்க நினைச்சு இருக்க? நானும் திவ்யாவும் எவ்ளோ கஷ்ட பட்டு இருக்கோம் தெரியுமா!
தேஜு எதுவும் பேசாமல் ராகிங் செரில் சாயுந்து கொண்டு இருந்தாள்.
ஜீவி, பாரதி! கூப்பிடுறேன் காது என்ன செவுடா டி! கதம்ப சாதம், தயிர் சாதம், கொண்டை கொடலை ல தேங்காய் பூ போட்டு இருக்கேன் டி! கொஞ்சமா மாமி பண்ணி இருக்கா! நோக்கு பிடிக்குமே! வாடி செத்த சாப்பிட்டு போடி!
நாதன், கடங்காரா! எல்லாம் உன்னால்!.
ஜீவி, சண்டாளா நீ தான்டா காரணம் நான் இல்லையாக்கும்!
தேஜு( பாரதி) , மாமா கொடுங்கோ! என கேட்டு கொண்டே எழுந்தாள்.
நாதன் அவளை முறைத்து பார்க்க
தேஜூ( பாரதி), டாடி! இப்டியே முறைத்தால் நான் எங்கேயாவது கண் காணா இடத்துக்கு விட்டு போயிடுவேன்! மாமா பாருங்கோ!
ஜீவி, டேய் குழந்தைய முறைக்காதே! என அருகில் வந்து ஊட்டினார்.
தேஜு மெதுவாக சாப்பிட..
ஜீவி, எதுக்கு டி உன் ஆத்துகாரரை கொலை பண்ண பார்த்த!. எங்கே டி மாங்கல்யம்! பெருமானே!.
தேஜு, மாமா நேக்கு அவன் வேணாம்! உங்க பையனை கட்டினுண்டு உங்களோடயே ஆத்தை பாத்துண்டு இருந்திடுறேன்!.
அந்த நேரம் ஏன்னா ஏண்ணா! சூர்யா ன்னு ஒரு பிள்ளையாண்டா கையில் பொம்பனாட்டி குழந்தையை தூக்கிண்டு வந்திருக்கான்! கொழந்தை லட்சுமி கடாட்சம் மூக்கு முளியுமா லட்சணமா இருக்கா! என சொல்லி கொண்டே மாமி உள்ளே வந்தார்.
ஜீவி, யாராது டேய் ரங்கா குழந்தையை சாப்பிட வை நான் பார்த்திட்டு வந்துடுறேன்! என சொல்லி கொண்டே வெளியே சென்றார்.
அங்கே வசந்தன், சூர்ய தேவ் அவனுடைய கையில் இதழ் பாப்பா என வந்து இருந்தார்கள்.
என்ன டா! நீயா!.
சூர்ய தேவ், மாமி கையாள ஃபில்டர் காபி குடிக்க தான் வந்தேன் மாமா!.
சித்த நாழி பொரு டா அம்பி என மாமி உள்ளே ஓடினார்.
ஜீவி, யார் இந்த பொம்பநாட்டி குழந்தை உன்னை போல திருட்டு முழி இல்லையே!.
சூர்யா, இது என் பொண்ணு என்னோட குழந்தை!
ஜீவி புன்னகையுடன் குழந்தையை பார்த்தார்.
சூர்யா இதழ் தாத்தா!
அவள் பல் இல்லாத வாயில் சிரிக்க..
ஜீவி, என் சொத்தை எடுத்திண்டு குழந்தையை விட்டிண்டு போடா!
சூர்யா, போங்கோ மாமா போய் தேஜூ வை வர சொல்லுங்க!.
ஜீவி, தேஜூ வா அப்படி யாரும் இங்கே இல்லையே!
சூர்யா, மாமி! அமஞ்சிகரை போயிருக்கேலா!. என கொஞ்சம் கத்தினான்.
ஜீவி, டேய் கடன்காரா பேச்சை குறை! அவள் பேரு திவ்ய பாரதி! நான் வச்ச நாமம்! என சொல்லி கொண்டே பாரதி!.
மாமா! இதோ வரேன்!. என மெதுவாக நடந்து வந்தாள்.
சூர்யா அவளை பார்த்ததும் சிரித்தான்.
தேஜு புன்னகையுடன் வந்தவள் அருகில் வசந்தன் இருப்பதை பார்த்ததும் உடனே முகத்தில் உள்ள புன்னகை காணாமல் போனது! வேறு புறம் திரும்பி கொண்டாள்.
சூர்யா, தேஜு! நீ தானே பாப்பாவை கேட்ட!.
அப்போ கிளம்பவா!.
தேஜு உடனே திரும்பி சூர்யா அருகில் சென்றவள். ஹே லட்டு பொண்ணு! வாங்க! வாங்க!
சூர்யா, இதழ் உன்னோட பெரிய மம்மி! பெரிமா!.
வசந்தன் கண்களில் நீர் கோர்க்க தன் மகளை பார்த்தார்.
தேஜூ அவள் கன்னத்தில் முத்தம் வைக்க..
இதழ், மா! மா! மா!. ம்ம்மா! என சொன்னாள்.
தேஜு, சூர்யா பேச ஆரம்பித்து விட்டாள் போல!
சூர்யா, உன்னை தான் அம்மா சொல்லி இருக்கா! முதல் தடவை!
என்ன டா லட்டு அம்மா நினைப்பு வந்துடுச்சா!
சூர்யா, நீயும் அவளோட அம்மா போல இருக்க தானே அதனால் தான்!.
இதை கேட்டதும் தேஜு முறைக்க..
மாமி இருவருக்கும் காபி கொண்டு வந்தார்.
தேஜூ குழந்தையின் காலுக்கு முத்தம் வைத்தவள். என்னை மன்னிச்சிடு லட்டு! நான் ரொம்ப கெட்டவ!.
சூர்யா, அவளுக்கு அப்டின்னா என்னன்னு கூட தெரியாது!
தேஜு, சரி பாத்திட்ட தானே! நானும் லட்டு குட்டிய கொஞ்சிட்டென்! இப்போ நீ போலாம்!
சூர்யா, அரே! என்னை போக சொல்றயா?.
தேஜூ குழந்தையை அருகில் வந்து இப்போ நீ கிளம்பல! லட்டு கன்னத்தை கடித்து விடுவேன்!.
சூர்யா குழந்தையை பின்னால் இழுத்து கொண்டான்.
வசந்தன், பாப்பா!. என அழைத்தார்.
தேஜூ, சூர்யா இடத்தை காலி பண்ணுங்க! என அவர் சொன்னதை கண்டு கொள்ளாமல் கூறினாள்.
சூர்யா, அப்போ நீயும் வா!.
தேஜு புருவம் நெருக்கி கொண்டே என்ன? என்ன சொன்ன? என பார்த்தாள்.
சூர்யா எழுந்து கொண்டு ம்ம் நீயும் தான்!.
தேஜூ, நான் எங்கே வரனும்! சீக்கிரம் உன் பாப்பாவை கூட்டி போ! அவளுக்கு பசிக்கும்!. .
நாதன் மெதுவாக வெளியே வந்தார். தேஜு நேராக ப்பா! நம்ப ஆத்துக்கு போலாம்!. .
வசந்தன் வெளியே வந்த நாதனை பார்த்தார்.
அட வசந்தன் வாங்க!
வசந்தன் நேராக நாதன் அருகில் வந்து கையெடுத்து கும்பிட..
நாதன் உதட்டை கடித்து அவர் கண்ணீரை அடக்கி கொண்டு “தேஜூ மட்டும் இல்லன்னா என்னோட திவ்யா சீக்கிரமாவே இந்த உலகத்தை விட்டு போயிருப்பா! நான் தான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்! தேஜும் இல்லன்னா நானும் இல்ல, திவ்யாவும் இல்ல, பாவம் அவள் போய் சேர்ந்துட்டா! நான் இப்போ உயிரோட இருக்கிறது தேஜூக்காக தான்! எனக்கு இப்ப நிம்மதி! உங்களுடைய குடும்பத்தில் வந்து அவள் சேர்ந்துட்டா! அவளை நீங்க நல்லாவே பார்த்து கொள்வீர்கள். எனக்கு தெரியும்! உங்களோட ரெண்டு பெண்களையும் நான் பார்த்து இருக்கேன்! எந்த குறையும் வெச்சது இல்ல நீங்க!” என்று கூறினார்.
தேஜு, அப்பா என்ன பேசிடு இருக்கேள்! இது நேக்கு சரியா படல! நீங்க வாங்கோ நம்ம ஆத்துக்கு போலாம்!. சாவி மாமி! நாங்க.. என அவள் படபடவென பொரிய..
நாதன், தேஜு! தேஜூ!.
தேஜு, வாங்கோ!
வசந்தன் அவரின் கையை பிடித்து கொண்டு மகி ஒவ்வாமைய கூட நீங்க தான் குண படுத்தி ரொம்ப கிடையில் கிடந்த அவளை குண படுத்தி கொடுத்தீங்க! உங்களை நான் கடவுள் போல தான் பார்க்கிறேன்!
நாதன் சிரித்து கொண்டே இது தேஜு வுக்கும் இதே ஒவ்வாமை இருக்கு! அதனால் இவழுக்காக தான் நான் researchல இறங்கினேன்!.
தேஜூ வேகமாக வந்து அவர்களின் கையை தட்டி விட்டார். ப்பா வாங்கோ!. என கத்தினாள்.
பாரதி! என ஜீவி கத்தி கொண்டே வந்தார். .என்ன பழக்கம்!
தேஜு யார் சொல்வதையும் கேட்காமல் மாமா அவங்கள வெளியே போக சொல்லுங்கோ! சொல்லுங்கோ மாமா!.
நாதன், தேஜு! என கத்த..
வசந்தன் கண்களை கலங்கி கொண்டே சூர்யா பக்கம் பார்வையை திருப்பி மாப்ளை வாங்க போலாம்!.
சூர்யா, ஒரு பெரு மூச்சை விட்டு அனைவரையும் பார்த்தான்.
அரை மணி நேரத்துக்கு பின் முகத்தை தூக்கி கொண்டே நால்வர் நின்று கொண்டு இருக்க தேஜு கைய விடாதீங்கோ பா! நான் எங்கேயாவது ஓடி கிணத்தில் விழுந்துடுவேன்! அப்புறம் எனக்கு பத்து பண்ணிடுங்கோ!
நாதன், கைய விடு! நீ பண்றது நோக்கு சரியா படுதா! நம்ம வனாந்தர காட்டில் இல்ல டி!
தேஜு, எதுக்கு பா என்னை இங்கே அழைச்சிண்டு வந்தேள்!.
நாதன், வாய மூடி டி! என கூறினார்.
வசந்தன் சிரித்து கொண்டே சந்தோச மன நிலையில் நிற்க.. சூர்யா பாப்பாவை வைத்து கொண்டு நின்று இருந்தார்.
மை விழி மனதில் வந்துட்டா! எதுக்கு ஒத்து கொண்டாள்! இவள் இனி என்ன என்ன பண்ண பொராளோ! அவளுக்கு பிரச்னைகாரி ( தாரா) வேற ஆரத்தி சுத்துரா! ரெண்டும் ஜோடியா வந்து நுழையிது என என மெதுவாக எட்டி பார்த்தாள்.
உதயன், என்ன அப்படி பார்க்கிற? அடுத்து என்ன பிரச்னை பண்ணலாம் அப்டின்னு பார்க்கிரயா!. .
மை விழி, மூடிட்டு போயிடு! எல்லாம் உன்னால் வந்தது! எதுக்கு டா பொறந்து தொலச்ச!.
உதயன் சிரித்து கொண்டே போடி! என்று கூறினான்.
மகி ஒரு வித கவலை மற்றும் பதட்டத்துடன் பார்த்தாள். சூர்யா இது வரை ஒரு நான்கு முறை தேஜு வை பார்த்து இருப்பான்! அய்யோ! எவ்ளோ திமிர் இப்போ நான் என்ன சொல்லி திட்டுவேன்!. என மகி நின்று கொண்டு இருந்தாள்.
தாரா சந்தோச மன நிலையில் தேஜுவுக்கு ஆரத்தி எடுத்து கொண்டே வதினா நீக்கு சர்ப்ரைஸ் வையிடிங்! உள்ளே waiting!. .
மை விழி, உன் ஹீரோயின் அங்கே எதோ dialogue delivery பண்ணிட்டு இருக்கா என்ன?
உதயன், எனக்கு தெரியாது!
மை விழி, அப்போ என்ன டா பண்ணுவ!
உதயன், நீயும் மாமாவும் என்ன பண்ணுவீங்க! அதையே தான் நாங்களும் பண்ணுவோம்!.
மை விழி, டேய்! அப்போ கூட நான் மூணாவது! நீ என்ன பண்ற! அவளை டான்ஸ் ஆட சொல்லி ரசித்து கொண்டு இருக்கியா!
உதயன், உன் வேலைய பாரு டி!
மை விழி, போடா! நிக்காத! என சொல்லி விட்டு அவள் பார்த்து கொண்டு இருந்தாள்.
உதயன், மாமா எங்கே?
அவன்!
ஹே என்ன டி!
மை விழி, அவன் தான் அவன் அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கான். .
உதயன், நீயும் கிளம்பி போ!
மை விழி, அதை சொல்ல நீ யாரு டா! என இருவரும் சண்டையிட்டு கொண்டு இருந்தார்கள். .
தேஜு மற்றும் நாதன் வசந்தன் என அனைவரும் உள்ளே வர சூர்யா குழந்தையை தூக்கி கொண்டு வந்தான்.
மகி வேகமாக குழந்தையை போய் வாங்கி கொண்டாள்.
கலை உள்ளே இருந்து தண்ணீர், காபி, டீ, பூஸ்ட் என அனைத்தும் போட்டு கொண்டு வந்தார்.
அங்கே நாதன் அமர்ந்து இருக்க கலை, சார் நல்லா இருக்கீங்களா? என கேட்டு கொண்டே வந்தார்.
நாதன், நல்லா இருக்கேன் மா!.
கலை அனைவருக்கும் கொடுத்து விட்டு தேஜு அருகில் வந்தார்.
தேஜூ நாதனை பார்க்க..
நாதன், தேஜூ எடு டி!
ப்பா நேக்கு வேணாம்! நான் இப்போ தான் மதியம் சாப்ட்டு வந்தேன்!
நாதன், எடுத்துக்கோ டி!. .
தேஜூ கண்களில் நீர் கோர்த்து கொள்ள மாட்டேன்! என தலை ஆட்டினாள்.
அந்த நேரம் உள்ளே இருந்து கண்ணகுளி தெரிய ஒரு குட்டி உருவம் தாரா தூக்கி கொண்டு வந்தாள்.
வதினா! இக்கட சூடு!
தேஜு திரும்பி பார்க்க அங்கே நிவாஸ் தாரா கைகளில் இருந்தான்.
தேஜூ உதட்டை கடித்து தன் துக்கத்தை மறைத்தவள் வேகமாக தன் குழந்தை அருகில் சென்று அள்ளி அணைத்து முத்தமிட ஆரம்பித்தாள்.
நிவா குட்டி!. என் செல்லம்! என் உயிர் நீ தான் என் தங்கம்!. அத்தனை முத்தம் கொடுத்தாள். அவள் கண்களில் ஒரு பக்கம் நீர் விடாமல் ஊரி கொண்டே கொட்டியது.
அதை பார்த்த அனைவருக்கும் இதயம் வலித்தது. தேஜு அவனை அணைத்துக் கொண்டு எப்டி? என் தங்கம்! இங்கே!.
தாரா, நீலா பெத்தமா கிட்ட போய் சொல்லி நிதின், நிவாஸ் ரெண்டு பேரையும் இங்கே கூட்டி வந்தோம்!.
தேஜு, எதுக்கு கூட்டி வந்தீங்க!. அதுவும் இங்கே?
தாரா, வதிணா இனி உங்க கூட தான் இனி இவங்க இருப்பாங்க!
கலை, அதென்ன! பொதினா என்ன சொன்ன?
இதை கேட்டதும் உதயன், மை விழி, சூர்யா, வசந்தன், நாதன் என சிரிக்க..
தாரா உடனே பயந்து கொண்டு அத்! அத்தை அது அப்டின்னா! அது வந்து என பயந்து நடுங்கினாள்.
உதயன், மகி அப்டின்னா என்ன? உனக்கு தான் தெலுங்கு தெரியுமே!.
மகி தீவிரமாக முகத்தை வைத்து கொண்டு அண்ணி! அண்ணின்னூ அர்த்தம் மா!
கலை, அப்படி கூப்பிடு இனி புதினா வேணாம்!.
தேஜூ யாரையும் கண்டு கொள்ளாமல் நீ என்னை தாரா சொல்லு! நான் உனக்கு எப்டி அண்ணியாக முடியும்! என் தோப்பனார்க்கு நான் ஒரே குழந்தை! எனக்கு கட்டிகிட்டவன் இல்லை! இனி வாதினா சொல்லாத! அண்ணி அது கூட வேணாம்!.
இதை கேட்டதும் அனைவர் முகமும் மாறா நாதன், தேஜு என்ன இது!
நீங்க பொருங்கோ பா!
உடனே சூர்யா… ? சொன்ன விசயத்தை கேட்டு அங்கு இருக்கும் அனைவரும்..
ஆனால் மகி…?
தொடரும்…
Episode 374
தேஜூ பேசியதை கேட்ட அனைவர் முகமும் மாறியது. கலை கோபத்துடன் அவளை பார்க்க..
நாதன், தேஜு என்ன டி இது!.
பொறுங்கோ பா!. என பேச வர உடனே
சூர்யா, தாரா better you should calling “மண்ணி!” அப்டின்னு கூப்பிடு! என்ன பாரதி நான் சொல்றது சரி தான என இரு புருவம் தூக்கினான்.
தேஜு அவனை திரும்பி பார்க்க “மாமா நாம் சொன்னது சரியா தவறா! சொல்லுங்கோ!”
அனைவரும் சூர்யாவை ஆச்சரியமாக பார்க்க அவன் நாதன் பக்கம் சொல்லுங்கோ மண்ணி I mean மைணி! சரி தானே!. தேஜு ஐயங்கார் வீட்டு பொம்பனாட்டி!. சொல்ல போனால் ஐயங்கார் வீட்டு அழகி!.
மகி திடுக்கிட்டு ஐயங்கார் வீட்டு அழகியா? அத்திம்பர்! மண்ணி! எவ்ளோ திமிர் கொழுப்பு! நான் இங்கே குத்துகல்லு மாதிரி நினிட்டு இருக்கேன்! இந்த மனுசன்! என் கன்னம் உப்பி கொண்டே பார்த்தாள்.
இங்கே ஹாஸ்பிடலில் எல்லா இடமும் அமைதியாக இருந்தாலும் அவன் இருந்த இடம் இன்னும் கொஞ்சம் சலசலப்பு குரு பிரகாஷ் தன் அண்ணனை பார்க்க முடியாமல் தவித்து கொண்டு இருந்தான். அதை விட தேஜு செய்த ஏமாற்று வேலை! அதை விட அவள் அந்த மகி, மை விழியின் அக்கா! இந்த செய்தி இன்னும் பேரதிர்ச்சி! அதையெல்லாம் விட தேஜூ சொன்ன அனைத்து விஷயத்துக்கும் பூம் பூம் மாடு போல தலையாட்டி கொண்டு அனைத்தையும் செய்தது இன்னும் அவமானம்!.
டாக்டர் ஒரு முறை செக் செய்து விட்டு வந்தார்.
நீலா, மற்றும் பிரகாஷ் அப்பொழுது தான் வந்தார்கள்.
குரு, என்ன மா நீங்க வந்து இருக்கீங்க! நிவாஸ், நிதின் எப்டி இருக்காங்க நம்ம நிதின்கு இந்த விசயம் தெரியுமா!.
நீலா, தாரா வந்து நிதின், நிவாஸ் ரெண்டு பேரையும் கூட்டி போயிட்டா!
குரு, நீங்க எதுக்கு அனுப்பினீன்க! அறிவு இருக்கா மா! என கைகளை கோபத்தில் மடக்கி கொண்டு திரும்பினான்.
பிரகாஷ், நாங்க ஒன்னும் அவன அனுப்பல நிதின் தான் போறேன்னு சொன்னான்.
குரு பிரகாஷ், நித்தினுக்கு என்னப்பா தெரியும்? எதுக்கு அவனை அனுப்புனீங்க!நான் போய் கூட்டிட்டு வரேன்!
பிரகாஷ் , அவன் சின்ன பையன் மாதிரி பேசல! என்னை விட பெரியவன் போல பேசுறான்! அவனை எதிர்த்து என்னால ஒரு வார்த்தை கூட பேச முடியல! அப்படியே சின்ன வயசுல சூரிய பிரகாச பார்த்த மாதிரி இருந்துச்சு!
குரு, நாணா!.
பிரகாஷ், நீ போ! போய் அவன் கிட்ட அவமானம் பட்டுட்டு தான் வருவ! ஒரு சின்ன குழந்தை மாதிரி அவன் நடந்துக்கல.. என்று கூறினார்.
Spr அறையிலிருந்து டாக்டர் வெளியே வந்தார். குரு பிரகாஷ் வேகமாக ஓடி போய் டாக்டர் இப்போ அண்ணாக்கு எப்படி இருக்கு?
டாக்டர் நொந்து கொண்டே இப்பொழுது அவர discharge பண்ணலாம்! எல்லா டெஸ்டும் நார்மலா இருக்கு! கொஞ்சம் ஸ்ட்ரெயின் பண்ணிக்க வேண்டாம் !கை அசைக்க கூடாது !பெட் ரெஸ்ட் mandatry என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
ஏனென்றால் spr இங்கு அட்மிட் ஆனதிலிருந்து குரு பிரகாஷ் டாக்டரை தொந்தரவு செய்து கொண்டே இருந்தான்.
குரு பிரகாஷ் வேகமாக உள்ளே நுழைய…
பிரகாஷ், நம்ம ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிருக்கலாமே! எதுக்குடா கூட்டிட்டு வந்த! இந்த ஹாஸ்பிடல் கொஞ்சம் கூட நல்லா இல்ல! ஹைதராபாத்தில் இல்லாததா இங்கு இருக்கு!
நீலா, அவன் ரொம்ப கஷ்டப்பட்ட நிலைமையில் எப்படி அவன ஹைதராபாத் கூட்டிட்டு போக முடியும்! அர்த்தம் இல்லாத மாதிரி பேசாதீங்க..
குரு பிரகாஷ் சென்ற ஓரிரு நிமிடங்களில் வெளியே வந்தான்.
பிரகாஷ் , என்னாச்சுடா என்று கேட்க
குரு முகத்தை மிகவும் வருத்தமாக வைத்துக் கொண்டு அண்ணா என்னை பாக்க மாட்டேங்கிறான். என்ன துரத்துறான். என்று வெம்பிக்கொண்டே கூறினாள்.
நீலா, நான் போய் பாத்துட்டு வரேன்! என்று உள்ளே சென்றார்.
சூரிய பிரகாஷ், நான் அவரை பார்க்கணும்..
நீலா வெளியே வந்து என்னங்க உங்கள தான் கூப்பிடுறான்! வாங்க என்று உள்ளே சென்றார்கள்.
பிரகாஷ், இன்னிக்கு டிஸ்சார்ஜ்! நம்ம வீட்டுக்கு போலாம் ஹைதராபாத் போக ரெடி பண்ணிட்டேன்.
Spr அவனைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே அர்ஜுன் எங்கே? என்னோட ஆட்கள் எல்லாம் எங்கே?
பிரகாஷ் , அவங்க எல்லாம் தேஜூவோட ஆட்கள்! குரு பிரகாஸ் தான் எல்லாத்தையும் வேலை விட்டு தூக்கிட்டான். இப்போ நீ அடுத்து என்ன பண்ண போற ?
Spr கொஞ்சம் கடுமையான குரலில் எனக்கு இப்போ அர்ஜுன் வந்தாகணும்! இதுக்கு முன்னாடி யார் எந்தெந்த வேலையில் இருந்தாங்களோ அதே வேலையில் எல்லாரும் மறுபடியும் சேரனும்! உங்களுக்கு இன்னும் அரை மணி நேரம் தான் டைம்! அதுக்குள்ள ரெடி பண்ணுங்க!
நீலா, என்னடா பேசிட்டு இருக்க?
Spr கண்டு கொள்ளாமல் நித்தின் எங்கே இருக்கான்? வந்திருக்கானா?
நீலா, நித்தின தாரா கூட்டிட்டு போயிட்டா!
Spr, நிவாஸ்
நீலா, ரெண்டு பேரும் தாரா கிட்ட தான் இருக்காங்க அவங்க வீட்டுல!..அந்த மகி பொண்ணு இருக்கே! அந்த வீட்ல இருக்காங்க!
Spr ஒரு புன்னகை செய்தவன் தேஜூ எங்கே இருக்கா? என்று அவனுடைய பார்வை பிரகாஷின் மீது விழுந்தது.
பிரகாஷ், அவ நாதன் கூட இருக்கா! அவ்வளவுதான் தெரியும்! பட் இப்போ எங்கே இருக்காங்க தெரியாது! ஜெயில் இருந்து வெளியே வந்துட்டா! நீ தான் அவ மேல கம்ப்ளைன்ட் கொடுக்கவே இல்லையே! குரு தான் ஆடிட்டு இருந்தான். அவளை எதுவும் செய்ய போறான் போல..
Spr, அவ சுட்டது தப்பு இல்ல! என்னோட சாவு எப்பவுமே அவ கையால தான் இருக்கணும்!.
நீலா, உனக்கு என்ன பைத்தியமாடா? அவ எவ்வளவு பெரிய விஷயத்தை செஞ்சிருக்கா போட்டு தள்ளிட்டு போக மாட்டியா?
Spr,இப்போ உங்களை கூட பிடிக்கல! உங்கள வேணா ஷூட் பண்ணட்டுமா!
நீலா, நான் உங்க அம்மா டா !
Spr, அவ நித்தினோட அம்மா நிவாஸோட அம்மா என் குழந்தை வையித்தில் வளருது! என்று கூறினான்.
அதன் பின் யாரும் எதுவும் பேசவில்லை.
Spr , அத்தைக்கு தெரியுமா..
பிரகாஷ், அவளுக்கு பிளைட் கிடைக்கல! உன்ன தான் நெனச்சிட்டு இருக்கா! ஒரு தடவ போன் பண்ணி பேசிடு! என்று மாயாவை பற்றி கூறினார்.
அதன் பின் பிரகாஷ் சரி நான் கிளங்க புரோசஸ் பண்றேன் என திரும்பி வெளியே நோக்கி நடக்க..
Spr, நான்னா!.
பிரகாஷ் திரும்பி பார்க்க,
Spr, நீங்க ஆகாஷ் சித்தப்பா கூட பேச ஆரம்பிச்சிடுங்க..
பிரகாஷ் முறைத்துக் கொண்டே திரும்ப..
Spr,ஜெய் தான் என்ன அவகிட்ட இருந்து காப்பாத்த ட்ரை பண்ணான்! ஆக மொத்தத்துல நான் நீங்க யார விளக்கி வச்சீங்களோ! அவங்க எல்லாரும் எனக்கு நல்லது தான் பண்ணி இருக்காங்க! அதனால நீங்க என்ன செய்வீங்க என எனக்கு தெரியாது! ஆனால் ஒன்னு சேரனும்! என்னை பற்றி உங்களுக்கு தெரியும் தானே!.
பிரகாஷ் , பிளைட் சொல்லிட்டேன்! நீ இப்போ உடனே கிளம்பலாம் !என்று கூறினார்.
Spr, நம்ம இங்க சென்னையில் நம்ம வீட்டுக்கு போறோம்!
என்ன? என அவர் திரும்பி பார்க்க.
Spr, நீங்க முதலில் போங்க.. நான் தேஜூவை பார்க்க போகணும்! என்று கூறினான்.
பிரகாஷ் அவனை ஒரு பார்வை பார்க்க நீலா அவரை அழைத்து கொண்டே சென்று விட்டார்.
கலை, என்ன மாப்ளை! அப்போ இவள் அசைவம் சாப்பிட மாட்டாளா!.
நாதன், இல்ல மா! அவளை உங்க வீட்டு பொண்ணா தான் வளர்த்து இருக்கேன்! பறப்பது, ஓடுவது, தாவுவது, நீந்துவது எல்லாமே நல்லா சாப்பிடுவா! நல்லா சமைப்பா!.
மை விழி, அப்புறம் எதுக்கு இந்த சீனு!
தேஜு பார்வை மை விழியை தாக்க! அவளும் திரும்பி பார்த்தாள்.
மை விழி, என்ன முறைக்கிற?
தேஜு, “என்ன டி பார்க்கிற? இந்த வேலையெல்லாம் என் கிட்ட வைத்து கொள்ளாதே!.. என்ன வாய் பேசுற!. வாயை கிழித்து விடுவேன்!”
மை விழி அவளின் முறைப்பை பார்த்து அமைதி ஆகிட …
உதயன் சிரித்து கொண்டு இப்ப தான் என் மனசுக்கு முழுமையா நிறைந்து இருக்கு! நான் பேச நினைச்சதை எல்லாம் தேஜூ பேசுறா ரொம்ப சந்தோஷம்!
மை விழி அவனை முறைக்க.. கார்த்திக், “மச்சான்! நாளைக்கு மிஸ்டர் சூர்ய பிரகாஷ் வீட்டுக்கு வந்தால் நீ அத்திம்பெர் சொல்லணும் அதை கேட்டால் தேஜு சமாதானம் ஆகிடுவான்க என சொல்லி கொண்டே உள்ளே வந்தான்.
மை விழி , உள்ளே வாடா உன்னை என முனகி கொண்டே பார்த்தாள்.
டாக்டர் நீங்க என்ன சாப்பிடுவீங்க!. என கேட்டு கொண்டே கலை அவரை பார்த்தார்.
தேஜு, நாங்க இப்போ இப்போ கிளம்ப போறோம்! அதனால் யாரும் எதுவும் செய்ய வேணாம்!.
நாதன், இனி இங்கேயே தான் இருக்க போராய் டி!. நான் இப்போ கிளம்பிடுவேன்!.
தேஜு, என் டாடி இல்லாத வீட்டில் நானும் இருக்க மாட்டேன்! என் டாடி சொன்ன வார்த்தைக்காக தான் வந்தேன்! அதனால் இப்போ நாங்க கிளம்புகிறோம்! வாங்க டாடி நாம்ப போலாம்!.
வசந்தன், டாக்டர் நீங்களும் இங்கேயே இருங்க! எப்போவும்! என் பொண்ணு இப்போ நல்லா இருக்க காரணம் நீங்க தான்! உங்களுக்கு இங்கே ரூம் ஏற்பாடு பண்ணி இருக்கு! தவிர்க்க கூடாது!.
நாதன், அது சரி வராது! அவள் அப்படி தான் பேசுவா! நீங்க இதை பெருசா எடுத்து கொள்ளாதேல்!..
வசந்தன், இல்ல டாக்டர் நாங்க அசைவம் சாப்பிடுபவர்கள் வீட்டில் நீங்க இருக்க தயக்க ஓட வேணாம்! மாடியில் போற்ஷன் இருக்கு நீங்க அங்கே தங்கி கொள்ளலாம்.
நாதன் சிரித்து கொண்டே எனக்கு அது பிரச்னை இல்லை! ஆனால் தேஜூ தான் பிரச்னை!. நான் இருந்தால் உங்க கூட ஒட்ட மாட்டாள்! இப்படி தான் ஒதுக்குவாள்.
வசந்தன், அவள் ஒட்ட வேணாம்! நீங்க தான் அவளோட அப்பா! நாங்க அவள் கூட இருக்கணும்! இத்தனை நாள்! என அவர் கண்கள் கலங்கிட..
நாதன் வசந்தன் கைகளை பிடித்து கொண்டு அவள் கொஞ்சம் அடமெண்ட் பிடிவாதம் ஜாஸ்தி! நாங்க ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டோம்! ரொம்ப செல்லம்! அது தான் நினைத்ததை சாதிக்கும் ஒரு குணம் அதை நடத்தியும் காட்டுவா! என சொன்னவர் ஒரு பெரு மூச்சை விட்டு இப்போ நான் இங்கே தங்கனும் அவ்ளோ தானே ஒன்னும் பிரச்னை இல்லை நான் மேலே தங்கி கொள்கிறேன்! இப்போ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேணும் நீங்க ரூம காட்டுங்க!
உதயன், வாங்க சார்! போலாம் நான் கூட்டி போறேன்!
கலை, அதுக்கு முன்னே சாப்பிட்டு போங்க! உங்களுக்கு சைவம் செய்து இருக்கேன்! புது பாத்திரம் எடுத்து செய்து இருக்கேன்!. வாங்க டாக்டர் என அழைத்தார்.
நாதன், சரி சாப்பிடலாம்! என சென்றார்!
தேஜு தன் தந்தையை பிரிய வில்லை. அந்த நேரம் நிதின் வந்தான்.
தேஜுவை பார்த்ததும் வேகமாக அவள் அருகில் சென்றவன். உடனே அணைத்து கொண்டான். தேஜு அவன் தலையை வருடி விட்டாள். நிதின் அவளின் கையை பிடித்து தனியாக அழைத்து செல்வதற்கு முன் தாராவை பார்த்தான்.
தாரா நிவாஸ் குட்டியை நடக்க வைத்து தேஜு அருகில் கூட்டி வந்தாள். தன் அம்மாவை பிடித்து கொண்டான்.
அருகில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்றான். தேஜு, அவனிடம் எதுவும் பேச வில்லை.
நிதின் கண்கள் முகம் என அனைத்தும் சிரிக்க தேஜு, உன்னை நான் எவ்ளோ லவ் பண்றேன் தெரியுமா! நீ சான்சே இல்ல! இப்போ நம்ப சக்தி இருக்க அவனோட தாத்தா வீட்டில் இருக்கோம்! உதயன் மாமா என்னோட மாமா!. அதை விட தாத்தா எனக்கு எவ்ளோ பிடிக்கும் தெரியுமா! எனக்கு கடைசியாக நீ தான் ஊட்டி விட்டு இருக்க அதுக்கு அப்புறம் யார் எனக்கு ஊட்டி விட்டா ஒருத்தர் கூட இல்ல! ஆனால் தாத்தா எனக்கு ஊட்டி விடுவார். தாத்தா எனக்கு ரொம்ப பிடிக்கும்!.
தேஜூ, அவர் உன்னோட தாத்தா இல்லை! நாதன் தான் நம்ம தாத்தா! பிரகாஷ் தாத்தா!.
நிதின், மோசம் தேஜூ நீ! அவங்க எல்லாரும் சேடிஷ்ட்! எனக்கு ஹைத்ராபாத்ல ஹாப்பி யே இல்லை எனக்கு இங்கே தான் ஹாப்பி! அங்கே எல்லாரும் மனிக்காக பேசுற போல இருக்கு! ஆனால் இங்கே ஹாப்பி ஜாலி நான் டெய்லி தாத்தா கூட படுத்துக்குவென்!
தேஜு, அப்போ உன்னோட டாடி!.
நிதின் யோசிக்காமல் உடனே எனக்கு யாரும் வேணாம்! எனக்கு உன்னோட மம்மி அப்பா தான் வேணும்! எனக்கு ஹேப்பி!.
தேஜு, அந்த அளவுக்கு பிடிக்குமா!
நிதின், எனக்கு ரொம்ப பிடிக்கும்! அதுவும் அவங்க உனக்கு தான் ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் டாடி! அண்ட் மம்மி! சோ எனக்கு தான் முதல் தாத்தா அது கூடவே உன் கிட்ட குட்டி பப்பா இருக்கு அதுவும் எனக்கு infinity ஹேப்பி! You know என அப்படி பொரிந்து தள்ளினான்.
தேஜூ அவன் பேசுவதை ரசித்து கேட்டு கொண்டு இருந்தாள். இப்படி அவன் பேசி பார்த்ததே இல்லை.
நிதின், நீ ஆபீஸ் போனால் என்னை தாத்தா பார்த்து கொள்வர்! நான் ஜாலியாக இருப்பேன்! பாரு நிவாஸ் இங்கே வந்து தான் ஃபர்ஸ்ட் ஸ்டேண்ட் பண்ணி வாக் பண்றான்!.
தேஜூ, உங்க டாடி வீடு இதை விட பெருசு நிதின்!.
நிதின், எனக்கு பிடிக்கல தேஜு! எனக்கு இங்கே தான் பிடிக்குது அந்த வீடு வேணாம் தேஜூ!. என வருத்தமாக கூறினான். நிவாஸ் தேஜூ அருகில் வந்து தூக்கு தூக்கு என அவளிடம் அழுதான்.
தேஜூ முத்தமிட்டு ஒரு குட்டி கடியுடன் தூக்கி கொண்டாள். அவளுடைய மாரை அடிக்க ஆரம்பித்தான். இப்பொழுது பால் குடிக்க வேண்டும் பல் முளைத்து விட்டது. இருந்தாலும் ஊட்டுகிறாள்.
நிதின், சரி நீ தாத்தா கிட்ட போ நான் வரேன்!.
நிதின் அவளுடைய கன்னத்தில் முத்தம் பதித்து விட்டு ஓடி விட்டான்.
தேஜு தன் மகனுக்கு அமுது ஊட்டி அவனை தூங்க வைத்தாள். அதன் பின் அங்கு படுக்க வைத்து விட்டு அந்த அறையில் சிறிது நேரம் அமர்ந்து இருந்தாள். என்ன செய்வாள்? இனி தன் மகன்கள் இல்லாமல் இருக்க முடியாது. வயிற்றில் இன்னொரு குழந்தை இப்படி விட்டு சென்றால் அவர்கள் வாழ்க்கை வீணாகி விடும்! இனி அவனுடன் இருக்க மாட்டேன்! என் குழந்தையுடன் நான் இருக்க போகிறேன் என முடிவு எடுத்தாள்.
இங்கே நாதன் சாப்பிட்டு கொண்டு இருந்தார். உடனே தேஜுவை அங்கு வந்தாள்.
என்ன டாடி நல்லா இல்லையா?
நாதன் ஒன்றும் சொல்லாமல் புன்னகையுடன் சாப்பிட்டு கொண்டு இருக்க தேஜூ அருகில் வந்து அவர் தட்டில் இருந்து உணவுகளை எடுத்து சாப்பிட்டாள்.
தாரா, அங்கில் எதுவும் பிரச்சனையா!. அண்ணி!.
சூர்யா அவர்களின் அருகில் வந்து எங்க அத்தை சமையலுக்கு வளையல் போடலாம் குறை சொல்ற அளவுக்கு இருக்காது! இப்போ என்ன ஆச்சு மாமா!.
கலை, என்ன எதுவும் பிரச்சனையா! நல்லா இல்லையா டாக்டர்! மோர்குலம்பு எப்டி இருக்கு! இப்படி தானே செய்வாங்க! எனக்கு நீங்க அய்யங்கார் என தெரியாது! அவசரமா உருளைக்கிழங்கு தேங்காய் பூ பொரியல், பருப்பு உஷிலி, கூடவே மோர்குழம்பு செய்தேன்! இது பிராமண சமையல் தானே!..
நாதன் சிரித்து கொண்டே சூர்யா சொன்னது சரி தான்! எங்க ஆத்தில்!. சாரி எங்க வீட்டில் தேஜூ செய்ததை போல அப்படியே இருக்கு! பருப்பு உசிலி இன்னும் பிரமாதம்!. அப்போ தேஜூ கை பக்குவம் உங்க கிட்ட இருந்து தான் வந்திருக்கு!.
கலை கொஞ்சம் பெருமையுடன் நின்றார்.
நாதன், திருப்தி மா! ரொம்ப சந்தோசம்!. என இன்னும் கேட்டு வாங்கினார்.
தேஜு கைகளை கட்டி கொண்டே நாதனை பார்த்தாள்.
அந்த நேரம் வெளியே சலசலப்பு ஏற்பட உதயன் கொஞ்சம் பதட்டத்துடன் உள்ளே வந்தான். நேராக சூர்யா அருகில் வந்து நின்று எதையோ பேசினான்.
சூர்யா உடனே வெளியே செல்ல.. உதயன் அவனுடைய பின்னால் சென்றான். தாரா அவர்களின் பின்னால் சென்றாள்.
கலை, பாசிப்பருப்பு பாயசம் எடுத்து வரவா!
ம்ம் கொண்டு வாங்க!
தேஜு , டாடி நீங்க பண்றது சரி இல்லை.
நாதன், உனக்கு பசிக்கலயா உண்மையாவே நல்லா இருக்கு அது உனக்கே தெரியும்! வந்து சாப்பிடு வா!
தேஜு, எனக்கு இங்கே புடிக்கல.. நம்ம ஆத்து சமையல் போல இல்ல பா! எனக்கு திரட்டு பால் வேணும்!. மாமி வீட்டுக்கு போலாம்! நீங்க செஞ்சு தாங்கோ பா!…
உடனே நாதன், இனி நீ இங்கே தான் இருக்கணும்! என பேசி கொண்டு இருக்க வெளியே சத்தம் கேட்டது.
நாதன், என்ன வெளியே! என அவர் திரும்ப…
தேஜூ உடனே நீங்க இருங்க டாடி! நான் போய் பார்த்தின்டு வரேன்! நீங்க சாப்பிடுங்கோ என சொல்லி விட்டு வெளியே சென்றாள்.
சூர்யா, கார்த்திக் இதையெல்லாம் பார்க்க முடியாமல் பார்த்து கொண்டு இருக்க, வசந்தன், உள்ளே வாங்க! இப்போ உடம்பு பரவாயில்லையா! அதுக்குள் எப்டி நீங்க இவ்வளவு சிரமம்! உதயன் மாமாவைக் கூப்பிடு டா!.
தேஜு என்ன ஆச்சு என வெளியே வந்து பார்க்க? அங்கே spr நின்று கொண்டு இருந்தான். பின்னால் அர்ஜுன் என அவனுடைய பழைய ஆட்கள் அப்படியே இருந்தார்கள்.
சூர்யா மனதில் இனி இவன் இருக்கும் போது இனி நம்ம வரவே கூடாது. என நினைத்து கொண்டு இருந்தான்.
Spr அவளை பார்த்ததும் தேஜி! உன்.. உன்னை பார்க்க தான் வந்தேன்!. .
சூர்யா வேகமாக இதையெல்லாம் கேட்க முடியாமல் கடுப்புடன் கிளம்ப கார்த்திக் ம்ம் இரு! என நிறுத்தினான்.
வசந்தன், தேஜு மாப்ளை! வந்திருக்கார்! நீ அப்படியே நிக்கிற! உள்ளே கூப்பிடு!.
அங்கே ஒரே கூட்டமாக இருக்க மகி என்ன டா கூட்டமா இருக்கு என இதழ தூக்கி கொண்டே சென்றாள். அங்கே spr நின்று கொண்டு இருக்க..
தேஜு முறைத்து பார்த்து கொண்டு இருந்தாள். அதை விட இப்பொழுது அவனுடய கைகளில் கட்டு போட்டு கழுத்துக்கு கூட அசைவு கொடுக்காத வாறு என்ன என்னவோ செய்து இருந்தார்கள்.
மகி, ப்பா சார் வந்திருக்கார்! அதுவும் முடியாமல் நீங்க அப்படியே நிக்கிரீங்க! உள்ளே கூப்பிடுங்க!.
Spr மனதில் பொம்மாயி எப்போவுமே அழகு பொம்மை தான்! என நினைத்து கொண்டு அதே கடுமையுடன் நின்றான் ஆனால் அவன் பார்வை தேஜூவின் மீது தான் இருந்தது.
கார்த்திக் முதற் கொண்டு மை விழி, உதயன், தாரா என அனைவர் பார்வையும் மகி மீது இருக்க சூர்யா அவளை கண்டு கொள்ள வில்லை, தேஜூ கூட அவளை கண்டு கொள்ள வில்லை.
மகி தன் கணவனை பார்த்தவள் அப்படியே தேஜிவை பார்க்க அவளும் கண்டு கொள்ள வில்லை.
மகி ஏற்கனவே அதிச்சியாக இருந்தவள் இப்பொழுது இன்னும் அதிர்ச்சியாக பார்த்தாள். என்ன ஆச்சு? இவங்க ரெண்டு பேரும் பண்றது துளி கூட சரி இல்லையே! என வேக மூச்சு எடுத்தது.
என்ன பண்றது? ஒன்னும் சரி இல்லையே!.
வசந்தன் , உள்ளே வாங்க! நீங்க வாங்க!.
தேஜு அவனை கண்டு கொள்ளாமல் உள்ளே செல்ல திரும்ப..
சூர்யா அதற்கு முன் உள்ளே சென்று விட்டான்.
Spr, நீ சுட தான் வந்திருக்கேன்! Shoot me தேஜு! எனக்கு ஒன்னு உன் கூட வாழனும் இல்ல சாகனும்! முடிவு பண்ணிக்கோ தேஜூ அதுவரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்! என சொல்லி கொண்டே போய் அமர்ந்து கொண்டாள்.
நாதன் கையை துடைத்து கொண்டு ஹாலுக்கு வந்தார்.
சூர்யா மற்றும் தேஜூ எதிர் எதிரே அமர்ந்து கொண்டு இருக்க கார்த்திக் உள்ளே வந்தவன். என்ன சூர்யா வந்துட்ட!.
வசந்தன், மகி போய் கூட்டி வா! தேஜுவை கூட்டி வா!
நான் என்ன பண்ண போறேன்! இது பாரதி எடுக்க போற முடிவு! பாரதி! ரதி! சொல்லு!.
ரதி! ரதியா! பாரதியா! என சத்தம் கேட்டு அப்படியே நின்றாள். அவள்….? மகி தான்…?
நாளைக்கு பார்ப்போம்!.
தொடரும்…
Episode 375,
வசந்தன், மகி போய் கூட்டி வா! தேஜுவை கூட்டி வா!
சூர்யா, நான் என்ன பண்ண போறேன்! எதுக்கு கார்த்திக் என்னை வர சொல்ற? இது பாரதி எடுக்க போற முடிவு! பாரதி!
தேஜூ அப்படியே அமர்ந்து கொண்டு இருக்க…
சூர்யா, ரதி!.. ரதிதிதி சொல்லு!. என அவளை பார்த்தான்.
ரதி! ரதியா! பாரதியா! என சத்தம் கேட்டு மகி அதே இடத்தில் அப்படியே நின்றாள்.
கார்த்திக், அதென்ன பாரதி!
சூர்யா, அவள் பிராமண பொண்ணு வீட்டில் திவ்ய பாரதி!. வெளியே தேஜ ஶ்ரீ!. எனக்கு ரதி!.
கார்த்திக், என்ன?
தேஜு சூர்யாவை புன்னகையுடன் பார்க்க..
சூர்யா, ரே! அவள் பேரை சொன்னேன்!.
வசந்தன், மகி!..என கத்தி கொண்டே அழைத்தார்.
Spr, நீங்க போங்க நான் தேஜூ வரும் வரை வெயிட் பண்றேன்.
மகி உள்ளே செல்லவும் நாதன் சாப்பிட்டு முடித்து சோபா வந்து அமரவும் சரியாக இருந்தது.
என்ன ஆச்சு?
மகி, அக்கா! உங்களை அப்பா கூப்பிடுறாக!.
தேஜு கண்டு கொள்ளாமல் வேறு புறம் திருப்பி கொண்டாள்.
மகி சூர்யா அருகில் சென்று பாப்பாவை கொடுத்து விட்டு சமையலறை பக்கம் சென்றாள்.
நாதன், தேஜு என்ன நடக்குது? இப்படி respect இல்லாமல் நடந்து கொள்கிற?
டாடி!. என அவள் சினிங்கினாள்.
உதயன் உள்ளே வந்து அக்கா! உன்னை அப்பா கூப்புடுறார்!
தேஜு, kill you!. யாருக்கு யார் அக்கா! ஒழுங்கா போயிடு!
உதயன் நாதன் பக்கம் திரும்பி நான் சொல்றது சரி தானே இவள் தானே அக்கா!.
நாதன், சரி தான்!. இப்போ இங்கே என்ன விசயம் நடந்து கொண்டு இருக்கு…
தாரா உள்ளே வந்தவள் அங்கிள்! சூரிய பிரகாஷ் அண்ணா வெளிய வெயிட் பண்றாங்க! தேஜு அண்ணிய கூப்பிடுறாங்க! அவங்க வரலைன்னு சொல்லிட்டு உள்ள வந்துட்டாங்க! அதுதான் மாமா கூப்பிடறார்! என்று விளக்கம் கூறினாள்.
நாதன் ,தேஜு என்ன பழக்கம் இது? அவருக்கு உடம்பு சரியில்லை? நீ தான் அதுக்கு காரணம்! அவரை உள்ளே கூட்டிட்டு வா! போ எந்திரிச்சு போயிட்டு வா!
தேஜு, “என்னால போக முடியாது! எனக்கு யாரும் வேண்டாம்!”
நாதன்,“ என்ன தேஜூ இதை தான் நான் உனக்கு சொல்லிக் கொடுத்து இருக்கேனா? என்னை உங்க அப்பா அம்மாவும் என்ன நினைப்பாங்க! அவரு உனக்கு தாலி கட்டுன புருஷன்! அது நினைப்பு இருக்கா! நீ தனியா வாழ முடியும்! உன்னோட குழந்தைங்க … அவங்களுக்கு இந்த வயசிலேயே இதையெல்லாம் பாக்கணும்ன்னு என்ன தலைவிதி இருக்கு? இது தப்பு தேஜு போய் அவரை உள்ளே கூட்டிட்டு வா! போ!..”என்று கூறினார்.
தேஜு, என்னால போக முடியாது டாடி என்று அவள் சொல்லிவிட்டு எழுந்து நின்றாள்.
அப்போ இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான் கிளம்புறேன்! என்று எழுந்து செல்ல…
தேஜு, டாடி! டாடி! டாடி! என்று கத்திக் கொண்டு அவரை பின்னால் இருந்து கையை பிடித்துக் கொண்டு நின்றாள்.
நாதன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..
தேஜு, டாடி உங்களுக்கே புரியும் தானே! என்னால அவன் கூட வாழ முடியாது டாடி!
நாதன், அப்போ நிவாஸ என்ன பண்ண போற ? உனக்கு மூணு குழந்தைங்க! உன்னால தனியா வளர்க்க முடியும்! ஆனா அந்த குழந்தைகளுக்கு தகப்பன் பாசம் வேணும் தானே! சாதாரணமா 35 வருஷம் பிரிச்சு வச்சதுக்கே உன் அப்பாவையும் அம்மாவையும் பழிவாங்க நீ வந்துட்ட! ஆனா உன்னோட வயிற்றில் இருக்கும் குழந்தை இன்னும் அதோட தகப்பன பாக்கவே இல்ல! நிவாஸ் இப்போதுதான் நடக்கிறான். நிதின் கொஞ்சம் பெரிய பையன்! இந்த மாதிரி இருக்கும்போது நீ தனியா வளர்ந்தின்னா! அது ஃபெமினிசம் பேசுற மாதிரி இருக்காதா?
தேஜு, எனக்கு ஃப்மினிசம் பத்தி தெரியாது டாடி! ஆனா என்னால அவன் கூட வாழ முடியாது! என்னை விட்டு போகாதீங்க டாடி! என்று கையை பிடித்துக் கொண்டாள்.
நாதன் , நீ எனக்காக என்ன செஞ்சிருக்க!.. தேஜூ என்று கேட்டார்.
தேஜு எதுவும் பேசாமல் அமைதியாக அவரைப் பார்க்க…
நாதன், உன்ன நான் குழந்தையிலிருந்து வளர்த்து இருக்கேன்! நானும் திவ்யாவும் சேர்ந்து உன்னை சந்தோஷமா வளர்த்திருக்கோம்! உனக்கு என்ன கேட்டாலும் என்னால முடிஞ்ச எல்லாத்தையும் செஞ்சு இருக்கேன்? நித்தின் வரைக்கும் செஞ்சிருக்கேன்! உனக்கே தெரியும் தானே!…
தேஜு அமைதியாக பார்த்தாள்.
நாதன், சோ எனக்காக நீ எதுவும் செஞ்சது இல்ல! சரிதானே என்று கேட்டார் .
தேஜோ அமைதியாக இருக்க…
நாதன் , எனக்கு பதில் வேணும் டி ஐ அம் யுவர் ஃபாதர் ரைட்! என்று கர்ச்சனையுடன் பேசினார்.
தேஜு, ஆமாம் எதுவும் செய்யல..
நாதன், சரி எனக்காக நீ உன் ஆத்துகாரரை உள்ளே அழைசின்டு வா! அவர் கூட நீ சேர்ந்து வாழணும்! எனக்காக மட்டும் என்று கேட்டார்.
அவள் சோபாவில் போய் மீண்டும் அமர்ந்து தலையைப் பிடித்துக் கொண்டு கீழே பார்த்தாள்.
நாதன் அவளை ஐந்து நிமிடங்கள் பார்த்து சிரித்து விட்டு.. தாரா ரூம் எங்க இருக்கு ? எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்? என்று கேட்டார்.
தாரா, நாதனையும் தேஜுவையும் மாறி மாறி பார்த்தாள்.
பதில் சொல்லுமா!..
அங்கிள் இந்த பக்கம் வாங்க… இங்க மேல ஸ்டெப்ஸ்ல ஏறுன உடனே ரைட் என்று கூறினாள்.
அவர் மேலே சென்றதும் தேஜு ஒரு பெருமூச்சு விட்டு எழுந்து நின்றாள்.
என்ன நடக்கிறது? என்ன நடக்கிறது என்று மகி எட்டி பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.
தேஜு வெளியே வர..
வசந்தன், என்னமா பண்ணிட்டு இருந்த? அவர் எவ்ளோ நேரம் நின்று இருக்கிறார்! தெரியுமா? கை வலிக்கும் பாவம்!
தேஜு வசந்தனை முறைத்து விட்டு நேராக sprரின் அருகில் சென்றவள். அவனை பார்த்து ஒரு வார்த்தை கேட்டாள்.
Spr, தேஜு என்று அழைத்தான். .
தேஜூ, நீ இன்னும் சாகலையா! நான் அத்தனை ரகசியம் சொல்லியும் நீ அதெல்லாம் கேட்டு செத்து இருப்பன்னு நினைச்சேன்! என்று மேல் இருந்து கீழ் வரை பார்த்தாள்.
Spr , என்னோட சாவு இப்ப கூட உன் கையால தான் போகணும்! அதேபோல என் குழந்தையை விட்டுட்டு நான் சாக மாட்டேன்.
தேஜு, உன் கூட வாழ எனக்கு துளி கூட விருப்பமில்லை! ஆனா நீ நினைச்சதை சாதிச்சிட்ட இல்ல! சொன்ன மாதிரியே என்னை பேச இங்க வந்துட்ட! இனி மகிழினிய நீ சந்தோஷமா பார்க்கலாம்! எனக்கு உன் மேல துளி கூட இன்ட்ரஸ்ட் இல்ல! நான் யார் கூட வேணாலும் படுப்பேன்! சோ என்ன நீ பெருசா நெனச்சு சீன் போட வேண்டிய அவசியம் இல்ல! நீ யாரை வேணாலும் தேடிக்க! அத பத்தி எனக்கு கவலை இல்லை நீ மகியை சைட் அடிக்கிரியா அடிச்சுக்கோ! அதையும் நான் கவலைப்பட மாட்டேன்! என் டாடி சொன்னாங்க! அதனால உன்னை கூப்பிடுறேன் வா என்று அழைத்தாள்.
அவள் பேசுவது மிகவும் சங்கடமாக இருந்தது.
Spr அவள் கையை பிடித்துக் கொண்டான்.
தேஜு உதட்டை கடித்துக் கொண்டு ராஸ்கல் பொருக்கி நாயே!
Spr, நான் எந்த தப்பும் பண்ணல தேஜூ உண்மையாவே நான் உன்னை மட்டும் தான் நினைக்கிறேன்! நீ ஏன் இதை நம்ப மாற்ற! நீ என்னை நம்புவதற்கு நான் என்ன பண்ணனும்?
தேஜூ, அதாவது உன்னோட ரத்தத்திலேயே ஊறி இருக்கிற சில விஷயத்தை நீ மாத்தி பேசாத! நீ யாருன்னு எனக்கு தெரியும் டா!
Spr, சத்தியமா நான் உன்னை மட்டும்தான் விரும்புறேன் என்று கூறினான்.
இங்கு நடப்பதை மேலே இருந்து நாதன் பார்த்துக் கொண்டிருந்தார்.
தேஜு புன்னகையுடன் கொஞ்சம் உள்ளே வரையா! என்று அவன் கைகளை வேறு வழியில்லாமல் பிடித்துக் கொண்டே உள்ளே அழைத்து வந்தாள்.
சரியாக அவர்கள் உள்ளே வரவும் வசந்தன் அவரைப் பார்ப்பது போல் நின்று கொண்டிருக்க…
Spr வெற்றி களிப்புடன் பார்த்தான்“ இதே இடத்தில் தானே கிட்டத்தட்ட 9 வருஷத்துக்கு முன்னாடி என்னை வெளியே துரத்துன! இப்போ உன் பொண்ணு கைய புடிச்சுகிட்டு நான் உள்ள வரேன்! பாத்தியா! ”என்பது போல் அவன் பார்வை இருந்தது.
வசந்தன் , “என் பொண்ணு உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாள்! என்று எனக்கு வருத்தம் தான்! அவள் என் கூட இருந்து இருக்க நல்லா வாழ வைத்து இருப்பேன் ஆனால் என் தேஜு பொண்ணு மனசுல நீ இருக்க! அவளுக்காக மட்டும்!… அவளுக்காக மட்டும் தான், உன்னை நான் ஏற்றுக்கொள்கிறேன். என் பொண்ணோட மாங்கல்யம் எனக்கு முக்கியம் ! என் பேர பசங்களோட அப்பா என்கிற முறையில் உன்னை நான் ஏற்றுக்கொள்கிறேன்!” என்று மனதுக்குள் மருகிக் கொண்டே நின்றார்.
Spr உள்ளே நடந்தவன். அங்கே சோபாவில் சூர்யா மற்றும் கார்த்திக் உதயன் என அனைவரும் அமர்ந்திருக்க…
Spr முதலில் உதயணைப் பார்த்தான். அவன் மனதில் அன்னைக்கு என்னென்ன பேச்சு பேசின? இனி நான் உனக்கு மாமன்டா! என்று நினைத்துக் கொண்டான்.
சூர்யா மற்றும் கார்த்திக் இருவரையும் கேவலமாக பார்த்தவன் . உங்க ரெண்டு பேர விட இந்த வீட்ல மூத்த மருமகனே நான் தான்! என்று வெற்றிக் களிப்புடன் கர்வமாக ஒரு நிமிடம் பார்த்தான்.
அதன் பின் sprனுடைய பார்வை மைவிழியின் மீது சென்றது. அவள் வேறு புறம் திரும்பிக் கொண்டாள். ஏனென்றால் அவள் ஏதோ எச்சையை பார்ப்பது போல் பார்ப்பாள்! அது sprக்கு துளி கூட பிடிக்காது. இனிமேல் மரியாதையாக மாமா என்று அழைக்க வேண்டும்! என்பது போல பார்த்தான். ஒரே கொண்டாட்டமாக இருந்தது.
இது அனைத்துகும் தேஜூ தான் காரணம். அவனுக்கு ஒரு மரியாதை கிடைக்க வேண்டும்! இங்கு இருக்கும் அவனை உதாசினம் செய்து இருக்கிறார்கள். மகிழினியின் மேல் கூட அவனுக்கு கோபம் காதல் உதாசீனம் கொஞ்சம் கூட இல்லை..
ஆனால் வசந்தன் மீது முழு கோபம் உதயன் ,கார்த்திக், சூர்யா, மை விழி என அனைவர் மீதும் இருந்தது.
சூர்யா அப்படியே அமர்ந்து கொண்டிருக்க.. உதயன் வேறு வழியில்லாமல் எழுந்து நின்றான். கார்த்திக் தயக்கத்துடன் எழுந்திருக்கலாமா ?இல்லை உட்காரலாமா? இவனுக்கு மரியாதை வேறு கொடுக்க வேண்டுமா? என்று தடுமாறிக் கொண்டிருக்க …
வசந்தன் உள்ளே வரவும் கார்த்திக் எழுந்து நின்றான். சூர்யா மட்டும் அமர்ந்து கொண்டிருந்தான்.
சூர்யா எழ வர தேஜு அவன் அருகில் சென்று இதழினியை வாங்கிக் கொண்டு உட்காரு என்பது போல் சைகை காட்டினாள்.
அவளும் சூர்யாவுக்கு எதிரில் அருகில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
வசந்தன் தேஜூவை பார்த்துவிட்டு என்ன மா இது! மாப்பிள்ளை உட்காருங்க!.. இங்க உட்காருங்க! உதயா இரண்டு தலையணை எடுத்துட்டு வா! வாங்க வந்து உட்காருங்க! கலை டீ போடு! காபி போடு! உங்களுக்கு என்ன பிடிக்கும்? என்று கவனிக்க ஆரம்பித்தார்.
அங்கு இருக்கும் இருவர் மனதில் இவனுக்கு என்ன கேடு? என்று நினைத்தார்கள். வேறு யார் சூர்யா மற்றும் தேஜூவும் தான்!.
மகிழினி spr வந்ததை கவனிக்கவில்லை. சூர்யா மற்றும் தேஜு இருவர் பேசுவதையும் தான் கவனித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு மனதில் தேஜு எதுக்குடா என் கூட பிறந்தா? என்று இருந்தது.
மகிக்கு சூர்யா தேஜுவை பார்ப்பது சுத்தமாக பிடிக்கவில்லை . மகிழினியின் மனதில் இன்று இரவு எப்பொழுதடா வரும்? இவரை நான்கு கேள்விகள்வது நறுக்கன்று கேட்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.
அந்த நேரம் தேஜு குழந்தையை கொஞ்சி விட்டு அதை சூர்யாவிடம் கொடுக்க…
Spr, சூர்யா என்கிட்ட குடு தாரா நீ வாங்கிக்கொடு என்று கேட்க..
தாரா சூர்யாவையும் , சூரிய பிரகாஷ்யும், மாறி மாறி பார்த்தவள். தேஜுவைப் பார்த்தாள்.அதன் பின் மகிழினியை பார்த்தாள்.
வசந்தன் அங்கு வர சூர்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். என்ன மாப்ள? என்ன ஆச்சு ?என்று கேட்க ..
Spr, எனக்கு பாப்பாவ கொஞ்சனும்! என்று கூற..
வசந்தன், தாரா என்னம்மா இது ? குடு அண்ணா கிட்ட குடு என்று கூற..
தாரா சூர்யாவிடம் இருந்து குழந்தையை வாங்கி சூரிய பிரகாஷிடம் கொடுத்தாள்.
Spr குழந்தையை பார்த்தான். அப்படியே அந்த திமிர் பிடித்தவன் கண்கள் ஆனால் லட்சணமாக இருக்கிறாள்! ஒரு பெண் குழந்தைகள் இப்படித்தான் இருப்பார்களா? என்று நினைத்துக் கொண்டே தேஜூவை பார்த்தான்.
தேஜு ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தாள். கலைவாணி யார் வந்திருக்காங்க என்று புடவை முந்தியின் கையை துடைத்துக் கொண்டு எட்டிப் பார்க்க..
Spr, அமர்ந்திருந்தான் இவன் எதுக்கு இங்கே வந்திருக்கான்? என மெதுவாக முனகினாள்.
உடனே மகிழினி, அம்மா அவங்க தானே தேஜு அக்கா புருஷன்!
சரி பாசிப்பருப்பு பாயாசம் இருக்கு நீ எடுத்துட்டு போய் குடு என்று அருகில் வந்தவர்.மகிழினி கையில் கொடுக்க எதையும் யோசித்தவர். கலை, மகி நீ உள்ள போ நீ இருக்காத யாரு கண்ணாலையும் படாத! என்று சொல்லிவிட்டு நேராக எடுத்துச் சென்றார்.
கலைவாணியை பார்த்ததும் spr எழுந்து நிற்க..
பரவால்ல உட்காருங்க வாங்கிக்கோங்க பாயசம் பண்ணேன். கொஞ்சம் குடிக்கிறீங்களா? என்று கேட்க..
தேஜுவிற்கு சிரிப்பு வந்தது சூர்யாவும் சிரித்தான்.
எஸ் பி ஆர் அவர்கள் இருவரையும் பார்த்தான். அதன் பின் கண்டுகொள்ளாமல் பரவால்ல அத்தை என வாங்கிக் கொண்டான்.
கலை, நீங்க பாப்பாவ என்கிட்ட குடுங்க என்று வாங்கிக்கொண்டார் .
அதன் பின் பாயசம் குடித்தவன் அப்படியே அமர்ந்திருந்தான். நிவாஸின் அழுகை குரல் கேட்க தேஜு எழுந்து ஓடினாள். இது தான் சமயம் என்று spr தேஜுவின் பின்னால் மெதுவாக நடந்து கொண்டே சென்றான்.
சூர்யா, அப்பாடா போய்ட்டான்! என்று அவனுடைய அறைக்குச் செல்ல..
மகிழினி வேகமாக மேல வாங்க உங்களுக்கு இருக்கு என்று முனகி கொண்டே அவனை பின் தொடர்ந்து குழந்தையை தூக்கி கொண்டே சென்றாள்.
உதயன் தாரா அவர்களுடைய அறைக்கு செல்ல..
கார்த்திக் மைவிழி எல்லாரும் போயிட்டாங்க ! நம்மளும் கிளம்புவோம் என்று அவனுடைய அறைக்கு அழைத்து சென்று விட்டான்.
அங்கே சத்திய தேவ் அமர்ந்து போன் நோண்டி கொண்டிருந்தான்.
சூர்யா, எனி டைம் என்ன பழக்கம் சத்ய தேவ் இது ஒன்னும் சரியில்ல உனக்கு வேற ஏதாவது விஷயத்துல இன்ட்ரஸ்ட் காமி! இது பேட் ஹாபிட்!
சக்தி, டாடி! டாடி! நான் ஹரிணி கிட்ட சேட் பண்ணிட்டு இருந்தேன்! கேம் எல்லாம் விளையாட மாட்டேன்! அது என்னோட ஹாபிட் இல்ல! என்று கூறினான்.
மகி, உங்க மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கீங்க? என்று கோபமாக உள்ளே வந்தாள். அடுத்த வார்த்தை பேச வந்தவள். அங்கு சத்திய தேவ் இருப்பதை பார்த்துவிட்டு “உங்க மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கீங்க என்று சிரித்துக் கொண்டே முகத்தை மாற்றினாள்.
சூர்யா, நடிப்பு தாண்டி! பின்ன நீ நடிப்புக்கே பொறந்தவளாச்சே! குடும்ப மொத்தமும் நடிக்கிறீங்க! உங்க அம்மா ஒரு பக்கம் நடிப்பு !உங்க அக்காக்காரி ஒரு பக்கம் நடிப்பு! இப்போ பெரிய அக்காகாரி வந்திருக்கா! அதுக்கப்புறம் உன் அண்ணிக்காரி நடிகையர் திலகம்! உங்க அண்ணா அதைவிட நடிகன்! என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.
சக்தி மகிழினியின் பக்கம் பார்த்து என்னம்மா? என்ன சொல்லிட்டு வந்தீங்க ?என்று கேட்க..
மகிழினி சிரித்துக் கொண்டே ஒன்னும் இல்ல சத்யதேவ் சும்மா பேச வந்தேன்! என்று கூறினாள்.
சத்யதேவ் , ஆமா பாப்பாவுக்கு naming ceremony வைக்கணும்னு சொன்னேன்! என்ன ஆச்சு? எனக்கு 2 டேஸ் தான் லீவு இருக்கு சீக்கிரம் முடிவு பண்ணி பண்ணுங்க! நான் ஸ்கூலுக்கு கிளம்பனும் என்று கூறி விட்டு அவன் அறையை விட்டு வெளியே சென்றான்.
இப்பொழுது
மகி….?
சூர்யா…?
தொடரும்…
Episode 376,
மகி அவனை பார்த்து கொண்டு இருக்க.. சூர்யா கையில் இருந்து பாப்பாவை வாங்கி கொண்டு குக்கு!. அப்பா கிட்ட வாங்க!. கட்டிலுக்கு அருகில் சென்றான்.
மகி அவனையே முறைத்து பார்த்து கொண்டு இருக்க..
சூர்யா, வெளியே போறதா இருந்தால் கதவை சாத்திட்டு போயிடு!
நான் எதுக்கு வெளியே போகனும்? என அவனுக்கு அருகில் வந்தாள்.
சூர்யா, அப்போ பேசு!.
மகி, உங்க மனதில் நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க!
சூர்யா, என் பொண்ணை நினைக்கிறேன்! சத்ய தேவ் அவனை நினைக்கிறேன்! அவங்க future பற்றி! அப்புறம் உன்னோட extra லக்கேஜ் கனடாவில் இருந்து கூட்டி வந்தியே அவனை கூட நினைக்கிறேன்!. இப்போ உனக்கு என்ன வேணும்!.
மகி, நீங்க பண்றது சரியா?
சூர்யா, லூஸ் டாக் விடாதே! இப்போ உனக்கு என்ன வேணும்! சுற்றி வளைக்காத தெளிவா சொல்லு!
மகி என்ன சொல்வாள்? அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சூர்யா, உனக்கு ஏதாவது என்கிட்ட சொல்லனுமா? சொல்லு! நான் கேட்க தயாரா இருக்கேன்!
மகி ஒன்னும் இல்ல என்று சொல்லிவிட்டு குழந்தையின் அருகில் அமர்ந்து கொண்டாள். சூர்யா எழுந்து கொண்டு குழந்தையை கொடுத்தான்.
மகி, இப்போ எதுக்கு எழுந்து போறீங்க?
சூர்யா, “ உன்கிட்ட எதையும் எதிர்பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டல்ல! அதேபோல அந்த மாதிரியான தாட்ஸ் உன் மேல இல்ல! அதனால தான் எழுந்து போறேன்! இதுக்கு மேல என்ன இருக்கு? மூணு குழந்தைகள் ஆகிப்போச்சே! இதையும் நீதான சொன்ன!” என்று கேட்டான்.
மகிழினி ஐயோ என்று புலம்பியவள். நீங்க பண்றது ஒன்னும் சரியில்லை!
சூர்யா, என்ன பண்ணனு சொன்னாதானே தெரியும்!
மகிழினி ஒரு பெருமூச்சை விட்டு சரி அதை விடுங்க பாப்பாவுக்கு பெயர் வைக்கிற ceremony பண்ணிக்கலாம். அத பத்தி தான் உங்ககிட்ட பேச வந்தேன்! என்று பேச்சை மாற்றினாள்.
சூர்யா, அப்படியா சரி ஓகே நீ உன்னை யோசித்து வச்சிருப்பியே அதை முதல்ல சொல்லு!
நீங்கள் சொல்வது எனக்கு புரியல…
சூர்யா, நீ சொல்றது தான் சரின்னு ஒரு பிளான் பண்ணி இருப்பியே! அதை பஸ்ட் சொல்லு! அது சரியா என நான் சொல்றேன்.
மகிழினி , சக்தி ஸ்கூலுக்கு போறதுக்குள்ள நம்ம பங்க்ஷன் பண்ணிடலாம்! இதுதான் நல்ல டைம்!
சரி என்ன பெயர் வைக்க போற என்று கேட்டான்..
மகி, நீங்க தானே பெயர் வைக்கிறன் என்று சொன்னீங்க..
சூர்யா , என் பொண்ணுக்கு நான் தான் பேர் வைக்கணும்னு நினைச்சேன்! ஆனா நீ பேசறது சரி இல்ல தான்! இருந்தாலும் பொண்ணுக்கு மரியாதை கொடுக்க எங்க அம்மா சொல்லிக் கொடுத்து இருக்காங்க! அதனால உன்னோட பேரை நீ சொல்ற பேரையும் என்னோட பேரையும் குலுக்கி போடலாம் எந்த பேரை வைக்கிறது என்று நாளைக்கு சீட்டு எடுத்து முடிவு பண்ணிக்கலாம்!
மகிழினி சரி என்று தலையாட்டினாள்.
உடனே சூர்யா திரும்பி வெளியே செல்ல போக…
மகிழினி மீண்டும் இப்போ எங்க போறீங்க?
சூர்யா, நீ ஏதாவது என்கிட்ட எதிர்பார்க்கிறாயா ?
மகிழினி இல்லை என்பது போல் தலையசைத்தாள். அப்போ இங்க எனக்கு என்ன வேலை? நீ குழந்தைக்கு பால் கொடுப்ப தேவையில்லாத டிஸ்டர்பன்ஸ் நான்! அதனால தான் வெளியே போறேன்!
மகிழினி, உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்!
சூர்யா பேசு என்று திரும்பி அவளைப் பார்த்தான். இப்படி எந்த பக்கம் போனாலும் கேட்டு போடுபவனை என்னதான் செய்வது?அவளுக்கு ஒன்றும் புரியவில்லை! உள்ளுக்குள் மிகவும் பதட்டமாக இருந்தது.
அவள் நீங்க.. நீங்க.. பேசறது மத்தவங்க கிட்ட பழகுறது எனக்கு பிடிக்கல!
சூர்யா , உனக்கு ஏன் பிடிக்கணும்! உனக்கு தான் என்னை பிடிக்கலையே! வெறுப்பா இருக்கே! அப்போ நான் யார் கூட பேசினா உனக்கு என்ன? உனக்கு நான் எப்பவும் துரோகம் பண்ண மாட்டேன்! நீ வெனா எனக்கு துரோகம் பண்ணலாம்!
மகிழினி அப்போ நீங்க நித்தின் குழந்தை விஷயத்தை பத்தி பேசுறீங்களா? என்ன பத்தி இவ்ளோ தான் புரிஞ்சுக்கிட்டிங்களா?
அந்த மாதிரியான அற்ப புத்தி எனக்கு இல்ல என்று கூறினான்.
அப்போ நீங்க எதை பத்தி பேசுறீங்க?
சூர்யா, நான் எதைப் பத்தி பேசுறேன்னு உனக்கு தெரியலையா? என்று கேட்டான்.
மகிழினி எனக்கு நிஜமாகவே தெரியல சொல்லுங்க!.
சூர்யா உனக்கு அது தானா தெரியவரும் அப்ப பேசிக்கலாம்! என்று சொல்லிவிட்டு சூர்யா வெளியே சென்று விட்டான்.
இங்கே spr – தேஜு..
அவர்கள் உள்ளே வந்ததும் தேஜி நிவாசை தூக்கிக் கொள்ள…அவன் தன் அப்பாவை பார்த்து கண்ணகுழி தெரிய அழகாக சிரித்தான். அப்பா அப்பா என்று நன்றாகவே அழைக்க ஆரம்பித்து இருந்தான்.
எஸ் பி ஆர் அவனை ஆச்சரியமாகப் பார்த்தான்.
தேஜு, நீ எதுக்கு ஃபாலோ பண்ணிட்டு வர உனக்கு வெட்கமாக இல்லையா? போடா போய் அங்கேயே உட்காரு!
எஸ். பி .ஆர் தேஜுவின் அருகில் வந்து குழந்தையுடன் அவளை கட்டி அணைத்துக் கொண்டான்.
தேஜு அவனை தள்ளிவிட முயற்சி செய்ய spr ரொம்ப வலிக்குதுடி! இங்கே வலிக்குது! என்று இதயத்தை காட்டினான்.
அப்போ செத்துடு !
SPR, மாட்டேன்! எனக்கு வாழனும்! சந்தோஷமா வாழனும் !உன் கூட வாழனும் !என்று கூறினான்.
தேஜூ பெருமூச்சு விட்டு எனக்கு உன் கூட வாழ விருப்பம் இல்லையே!
சூரிய பிரகாஷ் , அன்னிக்கு சொன்ன? என்னை ரொம்ப லவ் பண்றேன்னு! உன்னோட லவ் இவ்வளவு தானா! என்று கேட்டான்.
தேஜு, என்னோட லவ்வோட சேர்த்து உன்னை கொன்னுட்டேனே!
Spr, எனக்கு உன் மேல இருக்கு!
இப்போ எனக்கு உன் மேல எந்த விருப்பமும் இல்லை! எனக்கு வேற உங்க மேல க்ரஷ் இருக்கு! சாஃப்ட் கார்னர் நிறையவே இருக்கு! என்று கூறினாள்.
SPR புருவம் நெருக்கி கொண்டே என்ன சொல்ற? யார் அவன்?
தேஜூ, சூர்யா மேல! எனக்கு சூர்யாவை பிடிச்சிருக்கு! உன்னை பார்க்கிறதுக்கு முன்னாடி நான் சூர்யாவை பார்த்திருந்தால் மிஸ் பண்ணி இருக்க மாட்டேன்! அவனோட ஆட்டிட்யூட் புடிச்சிருக்கு! அவனோட பேச்சு புடிச்சிருக்கு! எல்லாமே புடிச்சிருக்கு! உன்னை விட ஆயிரம் மடங்கு அவன் worth!.
SPR இன்னொரு கைகளை மடக்கி கோபத்துடன் அவளை பார்த்தான்.
தேஜு, ஆனா இப்போ என்ன பண்றது ஒன்னும் பண்ண முடியாது! என்னோட தோப்பனார் என்னோட டாடி என்னை தூக்கிட்டு போகாம இருந்திருக்கலாம்! நான் உதயனோட அப்படியே இங்கே வந்து இருக்கலாம்! அதுக்கப்புறம் சூர்யா என்ன பார்த்து இருந்து இருக்கலாம்! பார்த்ததும் அவனை நான் பிடிச்சிருக்குன்னு சொல்லி இருந்திருக்கலாம்! அவன் என்னை கட்டியிருந்திருக்கலாம்! அவனோட எனக்கு மூணு! என்ற அவள் ஆரம்பிக்க வாயை பிடித்தான்.
அவள் அவனை அதே விழிகளுடன் பார்க்க spr, I will kill you bluddy * f*…
தேஜு அவனை பார்த்து சிரித்து கொண்டே நின்றாள்.
Spr, நீ எனக்கு தான் பொண்டாட்டி உன்னோட மனசுல நான் தான் இருக்கணும்! என வலிக்கும் அளவுக்கு அழுத்தினான்.
தேஜு, இப்போ இதுக்கு எதுக்கு நீ டென்ஷன் ஆக்குற அப்படி நடந்தா நீ நெனச்ச மாதிரி மகிழினி கல்யாணம் பண்ணி இருக்கலாம் சோ நீ சந்தோஷம்தான் படனும்!
SPR, எனக்கு நீ தான் வேணும்! அவள் வேணாம்! நீ மட்டும் தான் வேணும்! அவளை என்னால் மனைவியாக பார்க்க முடியாது!.
ஏன்? என்ன டா கொடுமை!. இப்போ கூட நீ try பண்ணு!.
Spr அவளின் கழுத்தை நெறித்து bluddy f* idiot நான் உன்னை love பண்றேன்! நீ மட்டும் தான் அதை எந்த ஜென்மத்திலும் விட்டு கொடுக்க மாட்டேன்! நீ தான் என் பொண்டாட்டி! என கோபத்தில் படுக்கையில் தள்ளி விட்டான்.
எங்கே நிவாஸ் குட்டி? அவன் மெது மெதுவாக கட்டிலை பிடித்து நடந்து கொண்டே கதவுக்கு அருகில் சென்று விட்டு தன் தாய் தந்தை இருவரையும் திரும்பி பார்த்தான்.
Spr ஒரு பெரு மூச்சை விட்டு தேஜு! நீ என்னை விட்டு போக நினைக்காத நான் உன்னை விட மாட்டேன்!. அதை விட நீ என் பொண்டாட்டி!
தேஜூ எதுவும் சொல்லாமல் நேராக நிவாஸ் அருகில் செல்ல போக.. spr அவளின் இடையை வளைத்து பிடித்து என்னோட ஒவ்வொரு விடியலும் நான் தேடும் முகம் நீ மட்டும் தான்! என்னோட பக்கத்தில் நீ! உன்னோட நெஞ்சில் நான் சாய்ந்து கிடக்கணும்! அதை என்னோட இறுதி மூச்சு வரை நடத்தி காட்ட தான்! அதை நினைச்சு தான் உயிரோட திரும்ப வந்து இருக்கேன்!
தேஜூ அவனுடைய கையை தட்டி விட்டு சென்று விட்டாள். நிவாஸ தூக்கி கொண்டு அவள் செல்ல spr அதே இடத்தில் அமர்ந்தான்.
உதாசீனம்! வலியை கொடுக்கும்! ஒரு பெரு மூச்சை விட்டான்! அதை விட பெரும் வலி சூர்யாவை பிடித்து இருக்கிறது என்று சொல்லி விட்டாள். அவனுடைய இடத்தை பறிக்க தான் வந்தான். அதே போல் spr இந்த வீட்டில் சூர்யாவுக்கு மூத்தவனாக வந்து விட்டான். ஆனால் தேஜூ இப்படி சொல்லி விட்டு செல்கிறாள்.
தேஜு கடுப்புடன் வெளியே வந்தாள். சூர்யா போனை நோண்டி கொண்டு அமர்ந்து இருக்க குழந்தையுடன் எதிரில் அமர்ந்தாள். கலை வாணி அனைத்து வேலையும் முடித்தவர் வெளியே வர குழந்தை தேஜூ விடம் விளையாட அடிக்க அவள் ஜடம் போல அமர்ந்து இருக்கவும் கலை வாணி நேராக குழந்தையின் அருகில் சென்று வாடா! தங்கம் என கைகளை நீட்ட..
தேஜு ,ஒன்னும் தேவையில்லை! என கோபத்தில் கத்தினாள்.
கலை என்ன? என அவளை முறைத்து பார்க்க தேஜூ தன்னை சுதாரித்து கொண்டே பார்த்தாள்.
கலை அவளை முறைத்து விட்டு குழந்தையை தூக்கி கொண்டு உனக்கு சாப்பாடு ஊட்டி விடுறென் வாங்க தங்கம்! என தூக்கி சென்று விட்டார்.
நிதின், சத்ய தேவ், மிதுன் தேவ், சிவன் யா பவன்யா என அனைவரும் கொள்ளை பக்கம் விளையாடி கொண்டு கதை அடித்து கொண்டு இருந்தார்கள்.
சூர்யா, எதுக்கு இப்படி கத்தின!..
தேஜு, நீ எதுக்கு இங்கே வந்த? உன் பொண்டாட்டி எங்கே?
அதை நான் தான் உன் கிட்ட கேட்கணும்! உன் ஆத்துக்காரர் மேலுக்கு முடியாம இருக்கார் நீ இப்படி விட்டு வந்துட்ட…
தேஜூ, சூர்யா ஓவரா பேசாத! என அவர்கள் இயல்பாக பேசி கொண்டு இருந்தார்கள்.
அந்த நேரம் spr வெளியே வந்தான். தேஜு அவனை பார்த்ததும் சூர்யா! சூர்யா!
ம்ம்ம்!..
தேஜு, பாரதி சொல்லு! கால் மி பாரதி!. பெட்டர் ரதி!.
ரதி! என்ன ரதி!. என சூர்யா அவளின் முகத்தை பார்த்தான். கொஞ்சம் தினுசாக இருக்க…ஹே என்ன உன் பார்வையே சரி இல்லை! நான் பத்தினி புருசன்!
தேஜு, ஹான் பத்தினி புருசன் ஒற்றை கொம்பு பின்னாடி சுற்றிய கதை நேக்கு தெரிந்திடுத்து!
சூர்யா, ஹே அது மகி!.
தேஜு, ஹே ஒரு வேளை என்னை முதன் முதலில் பார்த்து இருந்ததால் கட்டி இருபியா!
காலில் விழுந்து இருப்பேன்! என்ன தேஜூ இது என அவளுடைய பார்வை சென்ற திசையை பார்த்தான். அங்கே spr இருவரையும் எரித்து விடுவது போல பார்த்து கொண்டு இருந்தான்.
சூர்யா, நான் என்ன பண்ணேன்! அவன் எதுக்கு என்னை முறைத்து பார்க்கிறான். அப்புறம் முக்கியமா உனக்கு அந்த deer antler எப்படி தெரியும்!.
தேஜூ, ஜஸ்ட் என் கூட flow ல வா! என சொல்லி விட்டு அவனை பார்த்து கட்டி இருப்பயா சொல்லு! என கேட்க..
SPR அவளை அடக்க முடியாமல் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
மகி, குக்குவை தூக்கி கொண்டே வந்தாள். தூங்கவே இல்லை.
சூர்யா அவளை பார்த்ததும் may be! நீ சொன்னது சரி தான்! நான் try பண்ணி இருப்பேன்! இப்படி இருக்க பொண்ணை யாருக்கு பிடிக்காது! எனக்கு ரொம்ப பிடிச்ச இருக்கு ரதி!.
அவன் பேசிய அனைத்தையும் கேட்ட spr, மகி இருவருக்கும் பற்றி கொண்டு வர..
தேஜு, என்ன உன் பேச்சு சரி இல்லையே!
சூர்யா, அதே flow! Just act பண்ணு ரதி!
அன்னிக்கு எனக்காக பேசுல அந்த ரணகளத்திலும் கூட உன் பொண்டாட்டிய வெறுபேற்ற தான் என் கிட்ட அப்படி பேசினாயா?
சூர்யா, ரதி இப்போ dedicated ஆ இரு!.
இதை கேட்டதும் தேஜூ மென்மையாக சிரித்தாள்.
மகி உதட்டை கடித்து துக்கத்தை அடக்கியவள். அப்படியே திரும்ப அங்கே spr பார்வை கூட சூர்யா மற்றும் தேஜூ இருவரையும் முறைத்து கொண்டு இருந்தான்.
மகி அதற்கு மேல் அங்கு நிற்காமல் சென்று விட்டாள்.
Spr மகி இருவர் மனதிலும் இதை எதிர் கொள்ள முடிய வில்லை. அன்று மாலை ஆனது அனைவரும் மாலை டீ குடிக்க ஒன்று சேர்ந்தார்கள்!
கார்த்திக் மை விழியை பார்க்க மா நான் நாளைக்கு காலையில் கிளம்புகிறேன்!
எங்கே டி?
என் மாமியார் வீட்டுக்கு போறேன். கார்த்திக் பெங்களூர் போறான். ச்ச போறார்!
மகி, அப்பா! அம்மா நாங்க பாப்பாவுக்கு பேர் வைக்க நாளைக்கு function பண்ண போறோம்! அதை முடித்து விட்டு கிளம்புங்க! கார்த்திக் மாமா! என பார்த்தாள்.
சூர்யா, தேஜூ function இருக்கு! So கட்டாயம் எல்லாரும் இருக்கணும்!.
மம்ம் என கண் சீமட்டி காட்டினாள்.
Spr அமைதியாக பார்த்தான்.
சூர்யா, டீவி போடு! என உதயணிடம் சொல்ல.. அவன் தட்டி விட்டான்.
மாலை 5.00 இருக்கும்! முதல் மரியாதை படம் ஓடி கொண்டு இருக்க… உதயன் உடனே மாற்ற போக!.
கலை, மாற்றாதே இரு டா! ரிமோட் கொடு! என வாங்கி கொண்டு சென்று விட்டார்.
உதயன் கடுப்புடன் பார்க்க.. தாரா, என்ன ஆச்சு?
பழைய படம்!.
கார்த்திக், மச்சான்! பேசாமல் தாராவை வச்சு படம் பண்ணி telecast பண்ணுங்க எல்லா சேனல்லயும் தாரா வருவா? அப்படி இல்லன்னா விளம்பர படம் பண்ணுங்க!
உதயன், மாமா!. என கொஞ்சம் சிரித்தான்.
சூர்யா, அதை விட romantic songs க்கு சுவிட்ஸ் போயிட்டு வாங்க! ஷூட்டிங் எடுத்த மாதிரியும் இருக்கும்! பத்து மாசம் கழிச்சு!..
தாரா, அண்ணா!. என அவள் சிரித்து கொண்டே கூற
படம் ரிலீஸ் ஆகும் பாப்பு!.
இதை கேட்டதும் அனைவரும் சிரிக்க.. கலை, என்னங்க!.
சொல்லு கலை!..
கலை, உதயன், அவனோட பொண்டாட்டி அப்புறம் பெரியவள் ரெண்டு பேரையும் குடும்பத்தோட கூட்டி கொண்டு குல தெய்வ கோவிலுக்கு போயிட்டு வரலாம்!
மை விழி, மா நான் மாசமா இருக்கேன்! எனக்கு டெலிவரிக்கு date கொடுத்துட்டாங்க..
உதயன், உன்னை யாருமே இங்கே சொல்லலையே! அது தேஜூ!
அசிங்க பட்டாள் ஒருத்தி!
மை விழி, செப்பல பிச்சு அடிக்க போறேன்!.
தேஜு, நான் எங்கேயும் வர மாட்டேன்!
கலை, என்ன? என்ன சொன்ன? திரும்ப சொல்லு! என அவளின் அருகில் வந்தார்!
தே ஜூ, என்னை அதிகாரம் பண்ண நீங்க யாரு! நோக்கு என்ன அதிகாரம்! கேள்வி கேட்கும் வேலை வச்சுகாதீங்கோ!.
சூர்யா, தேஜூ! என்ன இது! அத்தை கோவிலுக்கு தானே கூப்பிடுராங்க! இதுல என்ன இருக்கு!
அது இல்ல சூர்யா! என அவள் விளக்க வர.
கலை கண்கள் கலங்கி பார்த்தார்.
சூர்யா, தேஜூ! அவங்க கஸ்ட படுராங்க!
வசந்தன், வரேன்னு சொல்லு மா! பிளீஸ்! என எழுந்து அருகில் வந்தார்.
Spr இது அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க மகி கூட அதையே தன் செய்து கொண்டு இருந்தாள்.
சூர்யா, பாரதி! சரின்னு சொல்லு!
பாரதி என்ற பெயரை கேட்டதும் சிரித்து விட்டாள். .spr க்கு பற்றி கொண்டு வந்தது. மகி கன்னம் உப்பி போக அவர்களை பார்த்து கொண்டு இருந்தாள்.
தாரா, அப்பாடா அண்ணி சிரித்து விட்டார்கள். என அவள் தேஜூ அருகில் அமர்ந்து கொண்டாள்.
கலை முந்தியில் கண்களை துடைத்து கொண்டே டீ, காபி, பூஸ்ட் என யார் யாருக்கு என்ன பிடிக்குமோ அதை அனைத்தையும் எடுத்து வந்து கொடுக்க…
இங்கே விளம்பரம் முடிந்து படம் ஓட தொடங்கியது. சரியாக அந்த நிலாவை தான் நான் கையில புடிச்சேன்! என் ராசாத்திக்காக! என பாடல் ஒளித்து கொண்டு இருக்க..
மை விழி, டேய் ஆஃப் பண்ணு! இதை கேட்டு கேட்டு காது புளிக்குது!
கலை, மை விழி அடி வாங்க போற! ஒவ்வொரு வாரமும் விடாமல் இது ஓடுது சலிக்காமல் பார்க்கிறாங்க! நான் ஸ்கூல் படிக்கும் போது இருந்து இப்போ என் பிள்ளை ஸ்கூல் ககு போக போறா! மா! வேணாம்! டேய் உதயா! You tube போடு!.
உதயன், மா அவளுக்கு பிடிக்கல நான் மாற்ற போறேன்! என அவன் போனில் access கொடுக்க.. .
no.. வேணாம்! என இரண்டு சத்தம்!.
அனைவரும் அவர்கள் இருவரை தான் பார்த்தார்கள்.
சூர்யா, ஹே nice song! மாற்ற வேணாம் என தயங்கி கொண்டே கூற…
தேஜு, இது என்னோட play list! So ஓடட்டும்!.
மகி தேஜுவை கோப கண்களில் வெம்பி கொண்டே பார்த்தாள்.
சூர்யா, இது உனக்கு பிடிக்குமா!.
ம்ம்! Music புடிக்கும்!.
சூர்யா, அந்த நிலா nice தான!.
ம்ம் ஆமா! But படம் வேற லெவல் சூர்யா!. என இருவரும் டீ குடித்து கொண்டே பேச ஆரம்பித்தார்கள்.
மகி இதயம் படபடக்க அதற்கு மேல் அங்கு நின்று இதையெல்லாம் பார்க்க பிடிக்காமல் அழுது கொண்டே அவளுடைய அறைக்கு ஓடி விட்டாள்.
SPR வேறு வழி இல்லாமல் அமர்ந்து இருந்தான்.
வசந்தன், கொஞ்சம் படுங்க மாப்பிள்ளை! ஆனால் ரெண்டு ரூம்ல தான் ac இருக்கு! உங்களுக்கு வசதியா இருக்குமா! இன்னிக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க நாளைக்கு வாங்கி போட்டு விடுகிறேன்!. என spr கிட்ட பேசி கொண்டு இருந்தார்.
தேஜூ, உன் பொண்டாட்டி எங்கே? உனக்கும் அவளுக்கும் என்ன பிரச்னை?
சூர்யா எங்களுக்குள்ள இருக்கிற மனஸ்தாபத்துக்கு காரணமே உன்னோட புருஷன் தான்!
தேஜு புருவத்தை நெருக்கிக் கொண்டே அவன் என்ன பண்ணான்?
எங்களை நாலு வருஷம் பிரிச்சு வச்சானே! அவள வேண்டுமென்றே கனடா அனுப்பிச்சான்ல! அது தான் இந்த பிரச்சனையா வந்து நிக்குது! என்று பெருமூச்சு விட்டான்.
அவள போய் சமாதானம் பண்ண வேண்டியதுதானே!.
நானா? என்னன்னு சமாதானம் பண்ண சொல்ற? என்னோட கதையை விடு! உனக்கும் அவனுக்கும் என்ன ஆச்சு? இன்னும் சண்டைதான் போட்டுட்டு இருக்கியா? உனக்காக மூணு உயிரை கொடுத்திருக்கான். நித்தின் பிரகாஷ், நிவாஸ் பிரகாஷ், அதுக்கப்புறம் உன் வயித்துல ஒரு குட்டி இருக்கு. அது இல்லாம சேர்த்து அவனோட உயரையும் கொடுக்க துணிஞ்சு இருக்கான். நீயா உன் மேல கோபமா இருக்க? என்று சூர்யா கேட்டான்.
இந்த மாதிரி பேசுறதுக்கு கூட அந்த செய்தி வர்த்தில்ல சூர்யா விட்டுவிடு என்று கூறினாள்.
சூர்யா அமைதியாக அமர்ந்து கொண்டிருக்க.. கார்த்திக் , டேய் வா naming ceremony -உண்டான வேலையை பார்க்கலாம்!
தேஜு ஏதோ சொல்ல வர தயவுசெய்து எங்க ரெண்டு பேருக்குள்ளேயும் சண்டை மூட்டி விடாத என்று சொல்லிவிட்டு சூர்யா கிளம்பி விட்டான்.
அடுத்த நாள் மாலை நேரம் பெயர் சூட்டு விழா நடத்த திட்டமிட்டு இருந்தனர். வசந்தன் மற்றும் கலைவாணி இருவரும் கேட்டுக் கொண்டதன் பேரில தேஜிவை பற்றி இந்த பெயர் சூட்டு விழாவில் சொல்லிவிடலாம். என பேசி வைத்து.. அந்த விழாவை வசந்தன் வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டனர்.
அனைத்தும் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது பிரச்சனை செய்ய வந்துவிட்டாள்.
ஒரு சீட்டில் சூர்யா ரசித்து இதழினி என்று எழுதினான்.
இன்னொரு சீட்டில் மகிழினி ஒரு பெயரை எழுதிக் கொடுக்க… குலுக்கி போட்டதும் அதை நிவாஸை வைத்து எடுத்தார்கள்.
என்ன பெயர்? என்ன பெயர்? என அந்த சீட்டைப் பிரித்துப் பார்த்ததும் அதில் தூரிகை அதாவது தூரிகா என்று இருந்தது .
அதைக் கேட்டதும் சூர்யாவின் முகம்…?
மகி….?
தொடரும்…
Episode 377,
நீ பண்றது கொஞ்சம் கூட புடிக்கல…
அம்மா நான் சொல்றதை கேளுங்க மா ப்ளீஸ் இந்த ஒரு தடவை என்று என் தாய் உமாவிடம் சூர்யா கெஞ்சிக் கொண்டிருந்தான்.
உமா போனை கணவரிடம் கொடுத்து விட்டு தனியாக போய் நின்று கொண்டார்.
என்னடா சூர்யா ஆச்சு எதுக்கு உங்க அம்மா கோபத்தில் இருக்கா?
சூர்யா அங்கு நடந்த அனைத்து நிகழ்வுகளையும் கொஞ்சம் விவரமாக கூறியவன்.“ அப்பா இப்போதான் அந்த பொண்ணு இங்க வந்து சேர்ந்திருக்கு! அதனால நம்ம பாப்பா பங்ஷன்ல எல்லாருக்கும் சொல்லலாம்னு இருக்காங்க! நான் எப்படி தட்டி கழிக்க முடியும் ! நீங்களே சொல்லுங்க! அம்மா கோவிச்சுக்கிறாங்க!”என்று வருத்தப்பட்டான்.
நட்ராஜ் , அப்படியா இன்னொரு பொண்ணு இருக்கா?
சூர்யா, ஆமாம்பா அது உதயன் கூட பிறந்ததாமா! ரெட்ட பொறப்பு என்று கூறினான்.
நடராஜ், “ சரிடா நீ விடு நான் உங்க அம்மாவ சமாதானம் பண்ணி கூட்டிட்டு வரேன்!” என்று கூறிவிட்டு போனை வைத்தார்.
நீங்க என்ன சமாதானம் சொன்னாலும் சரி நான் வரமாட்டேன் என்று உமா கோபத்துடன் அமர்ந்தார்.
நட்ராஜ் , இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி பிரச்சனை பண்ணிட்டு இருக்க!..
உமா, நம்ம வீட்ல பிறந்த முதல் பெண் குழந்தை! என்னோட வீட்டு லட்சுமி! அதை எப்படி அவங்க வீட்ல பேர் வச்சு கொண்டாட முடியும்! கொஞ்சம் சும்மா விட்டா போதுமே! இந்த மருமகலுங்க தலைல உக்காந்துட்டு ஆடுவாளுங்க போல! சரியாத்தான் இருக்கு! அவளை நான் விட்டுப் பிடிச்சது தப்பு தான்! என்று புலம்பிக்கொண்டிருக்க..
நட்ராஜ், ஆமா நீ கூட்டிட்டு வந்த மருமகள் அப்படித்தான் இருக்கும்! நான் தான் தலை பாடா அடிச்சிக்கிட்டேன்! அமுத சுரபியும், சத்யாவையும் சூர்யாவுக்கு கட்டிவைத்து இருக்கலாம்! என்று வேலீட் பாய்ண்ட்டை கூறினார்.
உமா கோபத்துடன் எழுந்து எதுக்கு? மொத்தமா நீங்க அங்கேயே போய் உங்க தங்கச்சி வீட்டில் உட்கார்ந்து கொள்வதற்காக! அது மட்டும் நடக்காது! என் மருமக எப்பவும் தங்கமானவள் தான்! அவள் வேண்டாம் என்று தான் சொல்லி இருப்பா! இவன் தான் ஆடிட்டு இருக்கிறான்!
நட்ராஜ் சிரித்துக்கொண்டே யார சொல்ற?
வேற யாரு உங்களோட பையன் தான்! அப்படியே எப்ப பாரு அங்க மாமனார் வீட்டுக்கு போய் உட்கார்ந்துக்கிறான்!
சரி விட்டு தள்ளு உமா நம்ம பாப்பா தானே! நம்ம வீட்டு பாப்பா எங்கே கொண்டாடுனா என்ன? அவங்க வீட்ல புதுசா அவங்க பொண்ணு இத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்கு! அதனால அவங்க கொண்டாடணும்னு நினைக்கிறாங்க! விடு நம்ம எல்லாருக்கும் சொல்லுவோம். சிவாவுக்கு போன் பண்ணு! மச்சானுக்கு சொல்லலாம் என்று அவர்கள் பிஸியாகினார்கள்.
வசந்தன் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்ய சொல்லிவிட்டு அந்த இடத்தை சுத்தம் செய்து பந்தல் மற்றும் அலங்கார வேலைகள் என அனைத்தையும் செய்தார்கள் தாரா மற்றும் உதயன் இருவரும் ஒரு பத்து கிலோ ஐஸ் கேக் ஆர்டர் செய்து விட்டு வந்தார்கள் அவர்கள் கிளம்பும்போது நித்தின் சிவன்யா பவன்யா மிதுன் என படையே கிளம்பியது. அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள் எஸ் பி ஆர் அப்படியே இருந்தாள் அவ்வப்பொழுது அர்ஜுன் மட்டும் வந்து அவனுக்கான மாத்திரைகள் மற்றும் அவனுக்கு உண்டான தேவைகள் என அனைத்தையும் பார்த்துக் கொண்டு சென்றான் சூர்யா அவனுடைய நண்பர் பட்டாளங்கள் அனைத்தையும் அழைத்து இருந்தான்.
ராம் ,கீதா, ரகு, ஜெனி, ஹரிஷ், கனிமொழி, மேக்னா, ராஜி ,இன்பா, விவேகா, விக்ரம், சஞ்சனா, அபினவ், அஞ்சனா, ஜனனி, ஆதி, என சரவணன் சுபா, ஜெய், கீர்த்தனா, வருண், ஶ்ரீ மதி, மாயா, வெங்கட், அமுத சுரபி , தினேஸ் என அழைத்து இருந்தார்கள்.
சூர்யா நேராக உதயன் அருகில் வந்தான். என்ன மாமா சொல்லுங்க? எதுவும் வேலையா?
ஒன்னும் இல்ல உன்னோட மாமனார் கூப்பிடவா?
உதயன் கொஞ்சம் ஆச்சரியமாக இதென்ன கேள்வி? உங்களுக்கு தோணுச்சுன்னா கூப்பிடுங்க!..
சூர்யா , அப்படி இல்ல… எதுக்கும் முறை இருக்கு! அது உங்க மாமனார் அதனாலதான்! உன் கிட்ட கேட்டு கூப்பிடனும்னு தோணுச்சு! கூப்பிடட்டுமா? வேண்டாமா?
உதயன் சிரித்துக் கொண்டே கூப்பிடுங்க மாமா!.. அவளுக்கு அவங்க அப்பாவ பார்க்கணும்னு ஏக்கமா இருக்கு போல! என்கிட்ட சொல்ல மாட்டேங்குறா!
சூர்யா சிரித்துக்கொண்டே சரி நான் கூப்பிடுறேன் என்று கோவிந்தனுக்கு அழைத்து கூப்பிட்டார்.
மகிழினி மட்டும் அப்படியே இருந்தாள். அத்தனை கவலை உள்ளுக்குள் மிகவும் வேதனையாக இருந்தது அதே முகம் தான் சூரிய பிரகாசுக்கும் இருந்தது ஆனால் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
ரங்கநாதன், ஜீவி, விசாலம் மாமி என அவர்களையும் அழைத்து இருந்தான்.
அந்த மாலை நேரம் வந்துவிட்டது. அந்த இடங்கள் பூக்களால் மற்றும் கலர் வண்ண காகிதங்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஒரு பக்கம் உணவுகளின் வாசனையும் இன்னொரு பக்கம் சிறுவர்களின் ஆட்டங்களும் கழுத்தலுக்கு என்ற சிரிப்பும் அந்த இடத்தை ஆக்கிரமித்து இருந்தது கலைவாணிக்கு பூரண சந்தோஷம் வசந்தனுக்கு பூரண சந்தோஷமாக இருந்தது ஏதோ அந்த உதயம் பிறந்ததிலிருந்தே மனதில் அந்த குழந்தையை பற்றி நினைப்பு இருந்து கொண்டே இருக்கும் நம்ம பக்கத்துல இருந்திருந்தா அவ நம்மளை விட்டு போயிருக்க மாட்டாள் முதல் குழந்தை லட்சுமின்னு சொல்லுவாங்க அது இறந்து போயிடுச்சுன்னு மகிழம்மா சொல்லி புலம்பிக்கொண்டே இருந்தார் ஆனால் அந்த லட்சுமி கடாட்சம் நிறைந்தவள் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்து விட்டால் இனி அனைத்தும் நல்லதே நடக்கும் என்று வசந்தனுக்கு மனநிறைவு இது இப்படியே போய்க் கொண்டிருக்க மனமே இல்லாதவள் புலுங்கி கொண்டிருந்தாள்.
அவள் கண்ணாடியின் முன் நின்று அவளுடைய பிம்பத்தை பார்த்தாள். முகம் மட்டும் தான் கொஞ்சம் நன்றாக இருந்தது. உடல் எல்லாம் மெலிந்து கழுத்து எலும்புகள் இரண்டும் புடைத்துக் கொண்டு தெரிந்தது .அந்த அளவுக்கு ஒல்லியாக இருந்தாள்.
அவள் குழந்தைக்கு பால் கொடுப்பதனால் கொஞ்சம் ஒல்லியாகிறாள்! என்றால்! அதற்கு மேல் தேவையில்லாத எண்ணங்களால் அதை நினைத்து நினைத்து இன்னும் மெலிந்து விட்டாள்.
இரண்டு மூன்று சல்வார் மற்றும் அனார்கலி போன்ற உடைகளை எடுத்து வைத்தாள். எப்பொழுதும் இந்த மாதிரியான உடைகளை உடுத்த மாட்டாள். அவளுக்கு புடவை தாவணி இதுதான் மிகவும் பிடிக்கும். இன்று அதை எடுத்துப் பார்த்தாள்.ஆனால் அதை அணிந்தாள்.
இன்னொருவர் உள்ளே போகுவது போல் இருக்கும். அந்த அளவுக்கு ஒல்லியாக இருக்கிறாள். அதனால் என்ன செய்வது என்று யோசித்தாள்.
கலைவாணி வந்து எட்டிப் பார்க்க… என்னடி பண்ற?
இல்லம்மா இதை போட போறேன்!
கலைவாணி உனக்கு என்ன ஆச்சு? மூளை குழம்பிடுச்சா! எப்போதும் பட்டு பாவாடை சட்டை தான் பிடிக்கும் புடவை தான் பிடிக்கும்! இன்னிக்கு இந்த டிரஸ் போடுறேன்னு சொல்ற அழகா புடவை கட்டிக்க டி! நான் உனக்கு பூ கட்டி வச்சிருக்கேன்!”
சரி என நேராக உமா அத்தைக்கு போன் செய்து சொல்லு மகி!..
மகி , அத்தை வரும்போது என்னோட நிச்சய புடவை எடுத்துட்டு வரீங்களா?
மிம் எடுத்துட்டு வரேன் என்று வைத்துவிட்டார்.
சூர்யா இன்று கிரே கலர் சட்டை மற்றும் அதற்கு பொருத்தமான பாட்டம் என அழகாக இருந்தான்.
தேஜு ஒரு அனார்கலி டிரஸில் இருந்தாள். அவளது கூந்தல் ஒரு பக்கம் அலைபாய்ந்து கொண்டிருக்க… அதற்கு பொருத்தமாக.. அதற்கு ஏற்ப அணிகலன் போட்டு இருந்தாள்.
அவளின் உடைக்கு ஏற்ப spr உடைய தேர்வு செய்து கொண்டான். அவன் தன்னுடைய உடைக்கு ஏதுவாக உடை அணிவதை பார்த்து நான்கு முறை மாற்றி விட்டாள்.
ஆனால் சூரிய பிரகாஷ் விடுவானா? அந்த குண்டடி பட்ட கையை வைத்து கொண்டு சலிக்காமல் அவள் எத்தனை முறை மாற்றினாலும் அத்தனை முறை உடையை அவனும் மாற்றிக் கொண்டிருந்தான்.
தேஜு கொஞ்சம் வயிற்றை நீவி பிடித்துக் கொண்டு வந்து அமர்ந்தவள். அந்த இடத்தை தயார் செய்து கொண்டிருந்த சூர்யாவை பார்த்து “ஹே ஸ்மார்ட்டா இருக்க மூணு பசங்க பெத்த மாதிரியே தெரியல டா!” என்று கூறினாள்.
சூர்யா சிரித்துக்கொண்டே என்னோட காலேஜ் மேட்ஸ்லாம் இன்னிக்கு வராங்க!. அதனால…
தேஜூ, அப்படியா? இல்ல ரொம்ப brisk ஆ இருக்க அதை விட பிளஸ்சா இருக்க! அதனால கேட்டேன்.
கார்த்திக், அப்படி இல்லைங்க இன்னிக்கு சஞ்சனா வராங்க அதனால சாரு பிரஸ்கா இருக்காரு!
சூர்யா, டேய் கொஞ்சம் வாய மூடுடா மாமா எல்லாம் இருக்காங்க..
தேஜு கொஞ்சம் ஆச்சரியமாக யார் அந்த சஞ்சனா? இத்தனை போட்டியா சாருக்கு?
கார்த்திக் சிரித்துக் கொண்டே அத நீயே சொல்லு எனக்கு வேலை இருக்கு என்று போய்விட்டான்.
சூர்யா அவளுக்கு எதிரில் வந்து அமர்ந்தவன். ஒரு பெருமூச்சு விட்டு சஞ்சனா என்னுடைய.. ex என சிரித்துக் கொண்டே கூறினான்.
தேஜு கொஞ்சம் திடுக்கிட்டு எக்ஸா எப்படி கூப்பிடுற? மகி ஒத்துக்கிட்டாளா?
சூர்யா, ஏய் நீ நினைக்கிற மாதிரி இல்ல! என் குடும்பத்தில் வந்து கும்மி அடிச்சிட்டு போயிராத ! ஏற்கனவே நீ நேத்து பேசின பேச்சுக்கு அவ என்னை நேத்துல இருந்து பார்க்கவே மாட்டேங்குறா!
தேஜு , அரசியல இதெல்லாம் சாதாரண!
சூர்யா, நீயும் உன் புருஷனும் அரசியல் பண்ணுங்க! தயவுசெய்து இங்க பாலிடிக்ஸ் பண்ணிடாத மா! என்று கூறினான்.
தேஜூ, அதைவிட முதல்ல உன்னோட கதை சொல்லு!.. என்று ஆர்வமாக கேட்க..
சூர்யா ஆரம்பித்தான் அப்படியே பின்னால் சென்று சஞ்சனாவை பார்த்த கதைகளை கொஞ்சம் கொஞ்சமாக சந்தோஷத்துடன் கூறிக் கொண்டிருந்தான்.
உமா நடராஜ் என்று ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். தேஜு அவனுடைய கதையை கேட்டு “எப்படியோ உன்ன கழட்டி விட்டு போயிட்டாளா?”
சூர்யா, இட்ஸ் ஓகே!
தேஜு, அவ்ளோ வருத்தப்படுறியா? அந்த அளவுக்கு யார் அந்த ஃபிகர்னு நான் இன்னைக்கு பார்த்தே ஆகணும்!..
சூர்யா , அவ வருவா உனக்கு ஆல்ரெடி தெரியும் நினைக்கிறேன்! விக்ரம் தெரியுமா?
இல்ல..
சரி நான் காட்டுறேன் என்று அதன் பின் பிஸியாகி விட்டார்கள்.
கலைவாணி இதழினியை குளிக்க வைத்து எடுத்து வந்து கொடுக்க.. மகிழினி முதலில் அவளை தயார் செய்ய ஆரம்பித்தாள்.
மகி, இப்போ பாப்பாவ ரெடி பண்ணுவோம் என்று சொல்லிவிட்டு இலகுவான ஒரு உடையை முதலில் போட்டுவிட்டு அவளுக்கு தலையை உலர்த்தி அதன் பின் குழந்தைக்கு லோஷன், ஃபேஸ் க்ரீம் குட்டி பொட்டு என அனைத்தையும் போட்டுவிட்டு கைகளுக்கு தங்க வளையல், கழுத்துக்கு செயின், கால் கொலுசு என போட்டு விட்டாள்.
கலைவாணி அதை பார்த்துக் கொண்டே இது யார் வாங்கி கொடுத்தாங்க?
மகி குழந்தைக்கு போட்டு விட்டுக் கொண்டு அத்தையும் மாமாவு மா!.
கலைவாணி கொஞ்சம் வருத்தத்துடன் நான் தான் பாப்பாவுக்கு எதுவுமே செய்யல டி என்ற கவலையுடன் கூறினார்.
மகி, அம்மா இதுல என்ன இருக்கு? பாப்பா பெரிய பொண்ணு ஆகும்போது செஞ்சுக்கலாம்!
கலைவாணி அப்ப நான் உயிரோட இருக்கணும்! உங்க அக்காக்காரி என்ன பாத்தா முறைக்கிறா? எனக்கு சாபம் கொடுப்பா! நான் அவ்வளவு நாள் இருக்க மாட்டேன்! சீக்கிரம் செத்துருவேன்னு நினைக்கிறேன்! சரி எனக்கு இவளோட ஞாபகமா என்னோட மூணாவது பேத்திக்கும் நான் கண்டிப்பா செஞ்சுட்டு தான்! கண்ண மூடுவேன்!
மகி, மா! மா! என்ன இது எனக்கு இதுக்கு மேல தான் உங்க கூட ரொம்ப இருக்கணும்னு ஆசையா இருக்கு தயவு செய்து இப்படி எல்லாம் பேசாதீங்க! .
கலைவாணி கண்ணை துடைத்துக்கொண்டே சரி இரு நான் சுத்தி போடுறதுக்கு கொஞ்சம் மிளகாய் எடுத்துட்டு வரேன் பாப்பாக்கு சுத்தி போடலாம் ! இன்னைக்கு நைட்டு ஒரு தடவை சுத்தி போடணும்! உன்னையும் சுத்தி போடணும் என்று சொல்லிவிட்டு கலைவாணி கிளம்பி விட்டார்.
அதற்குள் மகி குழந்தையை தயார் செய்து உடை போட்டுவிட்டு பக்காவாக ரெடி செய்தாள். சத்ய தேவ் மிதுண், நித்தின் , சிவன்யா, பவன்யா அனைவரும் அவர்களுக்கு பொருத்தமான உடையில் அழகாக அண்ணன் தங்கைகள் என வரிசையாக நின்றார்கள்.
நிவாஸை வசந்தன் வைத்து கொண்டு இருந்தார்.
இதோ வந்து விட்டாள். ஹரிணி அதன்பின் இன்பா தன் பொன் ரிதம் மட்டும் அழைத்துக் கொண்டு வந்திருந்தான். ஏனென்றால் இப்பொழுது தான் விவேகாவிற்கு குழந்தை பிறந்து இருக்கிறது. அதனால் ரிதம் மட்டும் இன்பாவுடன் வந்திருந்தாள். சரவணன், சுபத்ரா பரணி என அழைத்து வந்திருந்தான். ரகு ,ஜெனி அவர்களுடைய குழந்தையை அழைத்து வந்தார்கள்.
அதன் பின் ஹரிஷ், கனிமொழி, தினேஷ் அமுத சுரபி ஸ்ரீமதி வரும் மாயா, வெங்கட் இருவரும் சந்தோஷத்துடன் வந்தார்கள் மொத்தத்தில் அங்கு அனைத்து பட்டாளமும் நிரம்பி இருந்தது.
சூர்யா அனைவரிடமும் பேசி அவர்களுக்கான உணவுகளை எடுத்து கொடுத்து கொண்டிருந்தான்.
கோவிந்த் கோவிந்த் உள்ளே வந்ததும் தாரா ஆசையாக ஓடி சென்று தன் தந்தையை அணைத்துக் கொண்டாள். அவள் முகத்தில் அத்தனை சந்தோஷம் கோவிந்துக்கு திருப்தியாக இருந்தது.
வசந்தன், வாங்க சார் உள்ள வாங்க வாங்க …என்று அமர வைக்க..
Spr இருந்தான் கோவிந்தன் சூர்யா நூவு என்று சொல்லிவிட்டு நேராக spr அருகில் சென்று அமர்ந்தான்.
என்ன ஆச்சு சூரிய பிரகாஷ்?
அவன் சுருக்கமாக அனைத்து விஷயங்களையும் கூற கோவிந்துக்கு இப்போ சாலா நிம்மதியா இருக்குடா! நீ இருக்க என் பொண்ணு ! எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்று நிம்மதி பெரும் மூச்சை விட்டு அவர் பேசிக் கொண்டிருந்தார்.
என்னுடைய அக்கா மற்றும் தங்கையின் வீட்டு சொந்தங்கள் கலைவாணியின் அண்ணன் செல்வத்தின் வீடு ஆட்கள் என அனைவரும் வந்து சேர்ந்தார்கள் அந்த இடமே கலகலப்பாக இருந்தது.
மாயா வந்ததும் உமா போய் ஒட்டிக்கொண்டு பேச ஆரம்பித்தார். ஸ்ரீமதி மைவிழியுடன் சேர்ந்து கொண்டாள். அனைவரும் பெயர் வைக்கும் விழாவிற்கு தயாராகினார்கள்.
சஞ்சனா மற்றும் விக்ரம் உள்ளே வர அவர்களை சென்று அழைத்து வந்தான். ரிதன்யா இப்பொழுது ஆறாம் வகுப்பு படிக்கிறாள் பெரிய பெண்ணாகி விட்டாள் அதன் பின் ஒரு lkg வகுப்பு படிக்கும் சின்னம் பையன்! அவர்களை சிரித்த முகத்துடன் அழைத்தான்.
சூர்யாவை பார்த்ததும் சஞ்சனா கட்டிக்கொண்டாள். சஞ்சனா, சூர்யா அப்படியே இருக்கடா!..
அவன் விக்ரமை பார்க்க அவன் கண்டு கொள்ளவில்லை..
ஏ உன் புருஷன் பக்கத்துல இருக்கார்டி! அவன் இருந்தா எனக்கு என்ன? கடக்காரன் வா என்று சொல்ல..
அடுத்து ராஜி மேக்னா இருவரும் ஒரே நேரத்தில் வந்தார்கள் ராஜீ, சூர்யா என்று சிரித்தாள்.
சூர்யா, அப்படியே இரு கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?
நீ தான் வாயேன் கட்டிக்கிறன்..
மேக்னா அவளை பார்க்க.. நீயுமா என்று இருவரும் மாறி மாறி பார்த்துக் கொண்டார்கள்.
மேக்னா அவளிடம் நீ அவரை லவ் பண்றியா? ராஜி நான் காலேஜ்ல இருந்து லவ் பண்ணிட்டு இருக்கேன்! கிட்டயே நெருங்க விட மாட்டான்! ஒருத்தியை பட்டிக்காட்டில் இருந்து போய் கட்டிட்டு வந்துட்டான். இப்ப கூட ட்ரை பண்றேன் முடியல..
மேகனா, அப்ப என்னோட நிலைமை..
ராஜீ ,நீயுமா?
ஆமா
ராஜி, தீர்க்கமாக நீ தலைகீழ நின்னாலும் அவன் கட்டிக்க மாட்டான்.
அதனால நீ வேற யாராவது கல்யாணம் பண்ணிக்க
மேக்னா, நான் நான் ட்ரை பண்ணுவேன்!
ராஜி, இப்படியே ட்ரை பண்ணி தான் எனக்கு வயசாயி போச்சு! இப்போ வயசு 33 மேட்ரிமோனியில் இப்பதான் பிளாட்டினம் கார்டு அளவுக்கு வாங்கி வச்சிருக்கேன்! ஆனா எதுவும் இன்னும் கிளிக் ஆகல! என்று இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ரிதம் கன்னக்குழி தெரிய மாமா மறந்துட்டீங்களா?..
சூர்யா, என் கண்ணு குட்டிய நான் மறப்பேனா? உங்களுக்காக நான் சாக்லேட் வாங்கி வச்சிருக்கேன்! அவளை தூக்கிக்கொண்டு கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
இன்பா, டேய் கேர்ள்ஸ கிஸ் பண்ணாத..
டேய் என் கண்ணு குட்டி டா கண்ணு குட்டி! மாமா கிஸ் பண்ணலாமா? பாச முத்தம் நெத்தியில..
ரிதம், இது என்னோட சூர்யா மாமா
சுபத்ரா, அப்போ நாங்க எல்லாம் யாரு? நீங்கள் எல்லாம் வேண்டாம் எனக்கு சூர்யா மாமா தான் வேணும்! மகி மாமி தான் வேணும்!.
சுபத்ரா, ஹே நான் தாண்டி உங்க அப்பன் கூட பிறந்தவ!.
இல்ல எனக்கு மகி மாமி தான் வேணும்!.
சுபத்ரா , எப்படியோ இப்பவே வளச்சி போட்டுட்ட! ஏன்டா?
சூர்யா நீ பண்ணாததையா நாங்க பண்ணிட்டோம் என்று சரவணன பார்த்து சொல்ல..
சுபா, சரவணா! வா நாம அந்த சைடு போலாம் என்று சென்று விட்டாள்.
ஆதி நேராக மகிளினியின் அறைக சென்று கதவைத் தட்டினான்.
ஜனனி என்ன பண்ணிட்டு இருக்கீங்க அக்கா வேலையா இருப்பாங்க!.
ஆதி, நீ உன்னோட கூட்டத்தோடு போய் சேர்ந்துக்க! இங்கே இந்த இடத்தில் நானும் மகியும் பிரண்ட்ஸ்! நம்ம புருசன் பொண்டாட்டி இல்ல..கிளம்பு!..
ஜனனி, பைத்தியமா டா நீ!. என அவனை முறைத்துப் பார்க்க..
ஆதி, உன்னை!.
ஜனனி, இப்போவே அத்தான் கிட்ட சொல்றேன்! நீ வீட்டுக்கு வாடா உன்னை பார்த்துக்கிறேன். என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.
ஆதி கதவை தட்ட போக திறந்தது. மகிழினி புடவையை மட்டும் கட்டி இருந்தவள். எந்தவித ஒப்பனையும் இல்லாமல் அழைத்தாள்.
ஆதி, எங்கே பாப்பா? ரெண்டு பேரும் ஏதாவது… நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா!..
மகிழினி, இல்லை பாப்பாவ மாமா எடுத்துட்டு போயிட்டாரு!. என்று அவனுக்கு எதிரில் அமர்ந்தாள்.
ஆத, உன் முகமே சரி இல்லை? என்னாச்சு? ஒட்டட குச்சி போல இருக்க? எதுவும் பிரச்சனையா?
மகிழினி, ஒன்னும் இல்ல..
ஆதி, சொல்லு அதுதான் பங்குனி வெயிலு பல்ல காட்டிட்டு அடிக்கிற மாதிரி உன் மூஞ்சில கவல கொட்டிக் கிடந்து அடிக்குது!..
மகி, தேச்சு இருக்காங்கல்ல அவங்க கிட்ட அவர் பேசுறாருடா!
ஆதி இப்பொழுது ஷாக் ஆகி ஹே மகி உங்க அண்ணன் உதயனும் தேஜவும் ஒட்டி பிறந்தார்கலாமே! அப்படியா? உண்மையா? அந்த கதை என்னனு கொஞ்சம் சொல்லேன்! 36 வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பி …
மகி ,ஏய் நான் எவ்ளோ கவலையில் இருக்கேன் நீ இப்படி பேசிட்டு இருக்க..
ஆதி, கிட்டத்தட்ட இந்த கதை ஆரம்பிச்சதிலிருந்து நீங்க ரெண்டு பேரும் சண்டைதான்டி போட்டுட்டு இருக்கீங்க ! இதுல புதுசா பஞ்சாயத்து பண்றதுக்கு என்ன இருக்கு!
மகி , அப்போ வெளிய போடா! போ! என்று முகத்தை தொங்க போட்டு கொண்டு கண்களில் நீருடன் இருந்தாள்.
ஆதி, சரி சரி சாரி!. என்ன பிரச்சனை? சொல்லு ?
மகி ,அவரு எங்க அக்கா கிட்ட பேசிட்டே இருக்கிறார்!
ஆதி, யார்கிட்ட மைவிழி கிட்டையா? அவ நார்மலா இரண்டு வார்த்தை கூட பேச மாட்டாளே!
மகி, அவங்க கிட்ட இல்ல.. தேஜூ கிட்ட ஏன் என்னாச்சு?
திடீர்னு!. நீ நீ நீ என்ன பண்ண?
அது அது அது வந்து!.
ஆதி, உண்மையை மறைக்காமல் சொல்லு!.
மகிழினி தூரிகை மற்றும் ஒற்றை மான் கொம்பு விஷயம் அனைத்தையும் கூறினாள்.
பிரண்ட்ஸ் படத்தில் கதாநாயகன் ஒரு இருட்டு அறையில் சேரில் அமர்ந்திருப்பது போல ஆதி அமர்ந்திருந்தான்.
மகிழினி, ஹே முகத்தை இப்படி வச்சுட்டு இருக்க? அரவிந்தா!.
ஆதி, என்னடி நினைச்சுட்டு இருக்க இவ்வளவு பெரிய விஷயத்தை பண்ணி இருக்கீங்க? ஆனா ரெண்டு பேரும் பயங்கர ஆளுங்க தாண்டி!.
மகிழினி இத மனசுல வச்சுக்கிட்டு அவர கோபமா திட்டிட்டேன் ரொம்ப பேசிட்டேன் அந்த மன கஷ்டம் தான்
ஆதி, அதனால தான் அவரு தேஜ் கிட்ட பேசுறாரா தெரியல என்று கண் கலங்கினாள்.
ஆதி , நீ பேர் வைக்கிற விழாவுக்கு தயாராகும்!. மகி இத விடு பாத்துக்கலாம்!
அவள் அழ…
ஆதி, சூர்யா அண்ணா அப்படிஎல்லாம் பண்ணமாட்டாங்க !
மகி, அவரு இப்ப ரொம்ப மாறிட்டாரு!.
ஆதி ,அதுக்கு காரணமே நீதாண்டி!..
மகி இன்னும் தேம்பி அழ..
சாரி அழாத தெரியாம சொல்லிட்டேன் நீ கெளம்பு! நான் வேணா உனக்கு மேக்கப் பண்ணி விடவா!.
மம் கொட்டினாள்.
ஆதி அமர்ந்து அவள் முகத்துக்கு அழகாக ஒப்பனை செய்து மகி அப்படியே கொஞ்சம் கண் மை வச்சுக்க!. கண்ணடிக்க..
மகி, அடி வாங்க போற நீ!.
வச்சுக்கோ டி…
சரி என மையிட்டு வகட்டு குங்குமம் வைத்து கொண்டு, கலைவாணி கொடுத்த பூவை சூடி கொண்டாள்.
ஆதி, நீ சரி இல்ல மகி ரொம்ப! ஏதோ பெரிய புயல்ல இருந்து மீண்டு வந்தவள் மாதிரி இருக்க.கொஞ்சம் சிரி…
ஹி போதுமா! என்று இருவரும் பேசிக்கொண்டே வெளியே வந்தார்கள்.
சூர்யா போன் செய்து கீழே வாங்க மேடம் எல்லாமே தயாரா இருக்கு! என்று கூறினான்.
மகி, ஆதி நீ முன்னாடி போடா! நான் வரேன் என்று சொல்ல ஆதி முன்னாடி சென்று விட்டான்.
மகிழினி அவள் வேலையை முடித்துவிட்டு மெதுவாக கீழே இறங்கி வந்தாள்.
தொடரும்…
Episode 378,
அவளது கூந்தலை அவிழ்த்து விட்டு கொஞ்சம் மட்டும் முடி எடுத்து ஒரு கேட்ச் கிளிப் போட்டவள், அந்த பூக்களை சூடிக்கொண்டாள்.புடவையை சரி செய்து அனைத்தும் ஒழுங்காக இருக்கிறதா? என்று பார்த்து கழுத்துக்கு ஒரு செயின் அவளது தாலிக்கொடி பார்ப்பதற்கே மிகவும் அழகாக அழகு பதுமையாக இருந்தாள். என்ன கொஞ்சம் ஒல்லியாக இருந்தாள். நடந்ததை நினைத்து ஒரு பெருமூச்சு விட்டவள். ஒரு கையில் இருந்து வளையலை கழட்டி எளிமையாக ஒரு வாட்ச் கட்டிக் கொண்டாள். மெல்ல வந்தாள். குக்கு வெண்ணெய் கட்டியாக அழகாக அந்த பிங்க் வண்ண உடையில் டிஸ்னி தேவதையை போல இருந்தாள்.
சூர்யா சஞ்சனா பேசிக் கொண்டிருக்க இன்பா அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். சஞ்சனா தேஜுவை பார்த்துக் கொண்டே உன் பொண்டாட்டி மறுபடியும் மாசமா இருக்காளா?
சூர்யா, ஹே ஃபேமிலி பிளானிங் பண்ணியாச்சுடி!..
ஏய் பொய் சொல்லாதடா!.. அந்த பொண்ணு?
இன்பா, போச்சு என்று அவன் கூற…
சூர்யா ,அது என் பொண்டாட்டியோட அக்கா!
சஞ்சனா, கார்த்திக் மனைவி தான் உன் பொண்டாட்டிக்கு அக்கா! இவள்?
இன்பா, உன்னை பிரச்சனையில் மாட்டி விடறதுக்கு சஞ்சனா கனடாவில் இருந்து கங்கணம் கட்டிட்டு கிளம்பி வந்து இருக்கா! அனுபவி மச்சி! என்று சொல்லிக் கொண்டே திரும்ப… அங்கே மகி வந்து இருந்தாள்.
இல்ல சஞ்சு அவள் மகியின் அக்கா!..
சஞ்சனா, மம் என்னடா பட்டிக்காட்டுத்தனமா இல்லாம ரொம்ப அழகா மாடலா இந்த மாதிரி டிரஸ் எல்லாம் போடுறான்னு எனக்கு தோணுச்சு!..
சூர்யா, எனக்கும் ஆசை தான்! ஆனா என்ன பண்றது அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு மூணு பசங்க…
இன்பா மகியை பார்த்து விட்டு சூரியாவிடம் “மச்சி போதுமே எல்லாரும் வந்தாச்சா கேக் வெட்டலாம்! பேர் வை! எனக்கு டைம் ஆச்சு நாளைக்கு பெங்களூர் கிளம்பனும்!”
சஞ்சனா, சூர்யா இங்கே என் கிட்ட பேசு இந்த பொண்ணு யாரு!. என விசாரித்துக் கொண்டிருக்க இந்த சஞ்சனா விசாரித்துக் கொண்டிருக்க..
இன்பா, மச்சி வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்காத! அது டெக்கரேஷனோட பின்னாடி நின்னுட்டு இருக்கு!..
சூர்யா, டேய் இருடா சஞ்சனாவுக்கு விளக்கம் சொல்லலனும்! அவள் பேரு பாரதி! பாக்கவே ரதி போல இருக்கா தானே!. ஆனால் உன்னை விட கம்மி தான்!
விக்ரம் , ஏன் மா அங்கேயே நிற்கிற!.. முன்னாடி வா!.. மகி..
சூர்யா, மிஸ்டர் விக்ரம் அது வந்து மகி இல்ல அவங்க பேரு தேஜு!.
விக்ரம், தேஜுவா உன் பொண்டாட்டி பேரு மகி தான…உன் பின்னாடி நிக்கிறாங்களே!.
சூர்யா திரும்பி பார்க்க…
மகிழினி உதட்டை கடித்துக் கொண்டு துக்கத்தை அடக்கியவள். சூர்யாவை முறைத்துக் கொண்டு நின்றாள்.
சூர்யா, இன்பா ஏண்டா சொல்லவே இல்ல!..
இன்பா, நான் எத்தனை தடவை சொல்றது? நீ சஞ்சனா கூட பேசினாலே! உனக்கு பிரச்சனை மட்டும்தான் வரும்! போய் கேக்கு வெட்டு சாப்பிட்டு போலாம் சரக்கு பார்ட்டி இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்!..
சூர்யா, ஏண்டா விவேகா உன்கிட்ட குடிக்க திட்ட மாட்டாளா?
இன்பா, அது எப்படி மச்சி அவ சொல்றது எல்லாம் நான் கேட்க முடியும்! என்று கூலாக கூறினான்.
விக்ரம், அப்புறம் மகி எப்படிம்மா இருக்க… எல்லாம் ஓகேவா?
சஞ்சனா இன்பாவிடம் அப்புறம் உன் பொண்டாட்டி எப்படி இருக்கா? என் கண் முன்னாடியே சுத்திட்டு இருந்து இருக்கா! ஆனா அவ தான் உன் பொண்டாட்டின்னு எனக்கு தெரியாம போச்சே டா!
இன்பா, அம்மா தாயே கொஞ்சம் கம்முனு இருக்கியா? இப்ப தான் கொஞ்சம் பிரச்சனையெல்லாம் சரியாகி ஸ்மூத்தா போயிட்டு இருக்கு! வந்து ஒரு ஆட்டம் போட்டுட்டு! நீ கிளம்பி போய்டுவ மாட்டுவது நான் தானே!.
சஞ்சனா, எனக்கு ரவி டார்லிங்கை பார்க்கணும் சோ உங்க வீட்டில் வந்து தான் ஸ்டே பண்ண போறேன்!
இன்பா, டேய் நான் சுபா கூப்பிடுறா என கலண்டு கொண்டான்.
விக்ரம் , அப்புறம் பாப்பா அழகா உன்ன போலவே இருக்கு!
சஞ்சனா, எதுக்கு இப்படி பொய் சொல்ற? அது சூர்யா போல இருக்கு! அழகா இருக்கு!
ரொம்ப தேங்க்ஸ் அது என்னோட பாப்பா தான் நான் தான் பத்து மாசம் சுமந்து பெத்த சஞ்சனா அதான் பார்த்தேனே நீ பத்து மாசம் சுமந்து பெத்தேன்.
சஞ்சனா, அது தான் சத்ய தேவ் அப்படியே சூர்யா போலவே மிதுன் கூட இப்போ பாப்பாவும்! சோ ஓகே ஹேப்பி..
மகி அப்படியா என்று சூர்யாவை முறைக்க…
சூர்யா, நீங்க பேசிட்டு இருங்க எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு! அவளை அவள் முறைப்பதை பார்த்துவிட்டு சென்று விட்டான்.
அனைத்தும் தயாராக இருக்க பெயர் சூட்டும் நேரம் வந்தது..
வசந்தன், மாப்பிள்ளை ஒரு நிமிஷம் இன்னும் என்னோட மச்சான் வரல! வந்துட்டாங்கன்னு ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க! அவங்க வந்திரட்டுமே!..
சரிங்க மாமா என்று சூர்யா காத்துக்கொண்டிருந்தான்.
மகிழினி நேராக கலைவாணி அருகில் சென்றவர்.“ அம்மா எல்லாம் சரியா இருக்கா? .”..
சரியா இருக்கு மானு! நீ மதியம் இன்னைக்கு காலையில இருந்து சரியாவே சாப்பிடலையே!..
பசிக்கல…வேணாம் மா..
என்ன ஆச்சு?
எனக்கு ஒன்னும் இல்ல நல்லா இருக்கேன் என்று கூறி சமாளித்தாள்.
அதற்குள் செல்வம், சாரதா என வர உடனே மாமா வந்தாச்சு என கலைவாணி தன் அண்ணனை அழைக்க சென்று விட்டார்கள்.
மகிழினி நின்று கொண்டிருக்க.. மாயா அருகில் வந்து “மேடம் அம்மாவை மறந்து போயிட்டீங்களா?”
மகி சிரித்துக்கொண்ட அம்மா நான் எதுக்கு மறப்பேன்! என்று கட்டிக்கொண்டாள்.
உமா குழந்தையை தூக்கிக் கொண்டு இருவரின் அருகிலும் வந்து நின்றார். ஒரு நாள். வீட்டுக்கு வாங்க! மகி அவங்களை வர சொல்லு!.
மாயா, நான் வந்துட்டேன் நீங்க தான் வரல! சம்மந்தி எங்க வீட்டுக்கு வரனும்..
சூர்யா ஒரு சில நிமிடங்கள் மகியை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருக்க..
கார்த்திக் மூவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
சூர்யா எதேட்சையாக என்ன மகிய அப்படி பார்த்துட்டு இருக்க?
உன் பொண்டாட்டியா நான் மூணு பேரையும் தான்!.
சூர்யா, எதுக்குடா என் பொண்டாட்டி பாத்துட்டு இருக்க? நீ இன்னும் மறக்கலையா?
கார்த்திக், டேய் நான் மூணு பேரையும் பார்த்துட்டு இருக்கேன்!
சூர்யா , எதுக்குடா மூணு பேத்தையும் பார்த்துட்டு இருக்க..
கார்த்திக், அக்கா தங்கச்சின்னு சொல்றாங்கல்ல அது பொருத்தமா இருக்கு எப்படி ரிசம்பில்ஸ் ஆகுதுன்னு பாத்துட்டு இருந்தேன்! எப்ப பார்த்தாலும் என்னை சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்காத! அதோ அந்த சூரிய பிரகாஷ் இருக்கான் பாரு! அவன் வேணா அப்படி பார்த்துக்கோ!
சூர்யாவின் பார்வை மகியின் மீது சென்றது…
கார்த்திக் மெதுவாக பேசி கொண்டே இந்த புடவை? இது எப்போ எடுத்தது? இதே போல மை விழி க்கு ஒன்னு வாங்கி தரணும்!
சூர்யா, இது நிச்சய புடவை!
கார்த்திக், எந்த கடை சொல்லு! நானும் மை விழி ஒரே போல காஸ்ட்யூம் வாங்கணும். என அவன் பேச்சு கொடுத்து கொண்டு இருக்க..
சூர்யாவிற்கு அவன் பேசுவதெல்லாம் காதில் விழவில்லை. மகிழினியை இமை வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அழகாக இருக்கிறாள்! அதுவும் அந்த கூந்தலில் குண்டுமல்லி அதன் அரோமா அவனை வா வா என்று அழைத்தது. அவனுடைய உணவாயிற்றே அவள்! என்ன வார்த்தை? நல்லா இருக்கு! மையிட்ட கண்களைப் பார்த்தான். இந்த மான் விழியோட கண்ணு மானுக்கே டப் தான்! மம் மூக்கு!….மோகம், நல்லா இருக்கு உதடு!…. ஸ்ஸ ஹப்பா! கன்னம்!…. இன்னும் கொஞ்சம் தேவை! காது… ஓகே!.. முடி போதுமான அளவுக்கு இருக்கு! பூக்கள்… மம் அவளே ஒரு பூ தான்! சோ குண்டுமல்லி அவளுக்கு இணை இல்ல… அவரோட வாசம் தனித்துவமானது ஹஹஹ!.. என ஒரு பெருமூச்சு விட்டவன். எப்ப தான்! என இளமை அவன இம்சை செய்தது.
இப்படி அவன் நினைத்துக் கொண்டிருக்க இதற்கு அடுத்து நடக்க போகும் நிகழ்வு அவனை எங்கோ கொண்டு செல்ல போகிறது!
இன்பா அருகில் வந்து நின்றவன் என்ன மச்சி உன் பொண்டாட்டிய அப்படி பாக்குற…
வார்த்தைகள் மட்டுமே மண்டையில் ஏற அவளோட அரோமா இங்கே வீசுது சாப்பிடணும் போல இருக்கு!. என்று கூறிவிட்டான்…
இன்பா இதைக் கேட்டு கன்னக்குழி தெரிய சிரித்தவன் அவன் கையில் கிள்ளி விட்டான்.
ஸ்ச ஹா என்று திரும்பிப் பார்த்தவன் என்னடா என்று முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டான்.
இன்பா, அறோமா இங்க வீசுதா! சாப்பிட போறியா!..
சூர்யா ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே எனக்கும் சாப்பிட ஆசைதான் ஆனா அதுக்கு முன்னாடி அவள் என்னை கஷ்டப் படுத்தியதற்கு இன்னும் கொஞ்சம் அனுபவிக்கணும்!.. ஆமா உனக்கு என்ன?
இன்பா, டேய் அவளுக்கு இப்ப தான்டா குழந்தை பிறந்து இருக்கு!..
சூர்யா, ஆமால்ல என்று சிரித்தவன் “மச்சி கவலைப்படாத இன்னும் கொஞ்ச நாள்! இனிமே நீ எந்த ஃபிளேவர்ஸும் யூஸ் பண்ண தேவையில்லை !ஜாலியா கொண்டாடு மச்சி!..
அது ஒன்னு தான் குறை! இப்போ பிறந்து இருக்கானே ஒருத்தன்! சரியான டார்ச்சர் பண்றான்! அதைவிட அதுக்கு மேல அவள் டார்ச்சர் பண்றா? எனி டைம் அவன தூக்கி வச்சுட்டே சுத்துறா! ஒரு நிமிஷம் கூட பிரியமாட்டா! ரெண்டு பேரும் ஒட்டி பிறக்காத ரெட்டை மாதிரி பண்ணிட்டு இருக்காங்க!
சூர்யா, டேய் குழந்தை பிறந்து இப்ப தான்டா அஞ்சு நாள் ஆகுது!.
இன்பா, அதுக்கு நான் என்ன பண்றது? ஹாரன் மாதிரி வாய் இருக்கு?.
சூர்யா, நீ ஒண்ணுமே பண்ணல..
இன்பா, விடு மச்சி! எனக்கெல்லாம் உன்னை போல குழந்தை பெத்துக்கறதுல அனுபவம் இல்ல!
சூர்யா, எதுக்குடா இப்படி பொய் புலிகிட்டு இருக்க! ரிதம் எங்கே இருந்து வந்தா?
இன்பா, அதான் அந்த சண்டக்காரி.. என ஆரம்பிக்க…
சூர்யா, சரி சரி விடு இது என் கதை அந்த கதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு அனைவரும் தயாராகினார்கள்.
எப்படி பெயர் வைக்க போறீங்க என்று தாரா கேட்க…
ரெண்டு பேர் செலக்ட் பண்ணி இருக்கோம்! அந்த பெயரை அவங்க அவங்க எழுதிக் கொடுப்பாங்க! அதை ஒரு குட்டி குழந்தை எடுக்கணும். அந்த பேர தான் குழந்தைக்கு வைக்க போறோம்!.
கலை, உதயன் தான் பெயர் வைக்கணும்!
உமா ஏன் நாங்க எல்லாம் வைக்க கூடாதா ?
நட்ராஜ், சூர்யாவுக்கு உன் தம்பி தான பேர் வச்சாரு!.
ஆமா! என உமா சிரித்தார்.
உடனே வருண், அப்போ நானு?…
மகி என்ன செய்வது என முழித்து கொண்டு இருக்க..
மாயா, வருண் கொஞ்சம் அமைதியா இரு!.
உதயன், சூர்யா மாமா எழுதுற பெயரை நான் வைக்க போறேன்!. மகி எழுதிய பேரு வந்ததுன்னா? அதை வருண் நீங்க வையுங்க..
பரவாயில்லையே இது கூட நல்லா இருக்கே என்று அனைவரும் கூறினார்கள்.
யாரோட பெயர் ரொம்ப யூனிகாக இருக்க போது என்று பார்க்கலாம்.
சூர்யா ஒரு சீட்டில் பெயரை எழுதி கொடுக்க அதில் தாரா சாக்லேட் காட்டினாள். அதே போல் மகிழினியும் ஒரு சீட்டில் பெயரை எழுதி கொடுக்க அதில் வருண் சாக்லேட் கட்டினான்.
தாரா அதை ஒரு கூடையில் போட்டு கொஞ்சம் தூரமாக வைத்து விட்டு வந்தாள்.
கலைவாணி, நிவா குட்டி அங்க இருந்து ஒரு சாக்லேட் எடுத்துட்டு வந்து அம்மாச்சிக்கு கொடுங்க பார்க்கலாம் என்று சொல்ல..
நிவாஸ் கண்ணக்குளி தெரிய சிரித்தவன் மிகவும் மெதுவாக ஒவ்வொரு அடிகளாக நடந்து சோபாவை பிடித்துக் கொண்டே மெதுவாக சென்றான். அனைவரும் அமைதியாக குழந்தை நடந்து செல்வதை பார்த்தார்கள். குழந்தை சென்று அதிலிருந்து இரண்டு சாக்லேட்டையும் தூக்கிக் கொண்டு வந்தது.
தாரா அவனை தூக்கி கொண்டு ரெண்டு சாக்லேட்டா! இரண்டு சாக்லேட்டையும் எப்படி ரெண்டு பெயரையும் எப்படி வைக்க முடியும்? என்று தாரா கேட்க..
உதயன் கைகளை நீட்டி மாமாவுக்கு எதை தர போறீங்க? வருண் கூட அருகில் வந்து யாருக்கு சாக்லேட் தரப்போறீங்க? என்று இருவரும் கைகளை நீட்ட..
நிவாஸ் இரண்டு சாக்லேட் கட்டிய பேப்பர்களையும் இருவர் கைகளிலும் கொடுத்தான். அங்கு இருக்கும் அனைவரும் சிரித்துக் கொண்டே பார்க்க …
இருவரும் வாங்கிக் கொண்டார்கள். உதயன், சரி அப்படி என்னதான் இருக்குன்னு பார்த்துடலாம்? என சொல்லி கொண்டே உதயன் அவனுடைய சாக்லேட்டை பிரித்தான். அதில் “இதழினி” என்று இருந்தது.
உதயன், இதழினி யாருடைய யார் எழுதியது இந்த பெயர்?
சூர்யா, இது நான் என்று கூறினான்.
உடனே அனைவரும் சிரித்து விட்டு பொண்டாட்டி மேல அவ்ளோ பாசமா? பொண்டாட்டியை விட்டுக் கொடுக்காமல் அப்படியே வச்சிருக்கீங்க போல! என்று அனைவரும் கூறிட..
Sprக்கு இதெல்லாம் கடுப்பாக இருந்தது.
மகிக்கு இப்பொழுது தான் கொஞ்சம் மனநிலை மாறி வெட்கம் பூசி கொண்டது. அவளும் நின்று கொண்டிருந்தாள்.
சூர்யா அப்படி எல்லாம் ஒன்னுமில்ல! என் பொண்ணு இந்த உலகத்துல இருக்குற எல்லாத்துக்கும் ரொம்ப தனித்துவமானவ! அதனால என் பொண்டாட்டிய விட தனித்துவமா இருக்கணும் அப்படின்னு தான்! இந்த பேரை சூஸ் பண்ணேன்! மகிழினி நல்லா இருக்கா? இதழின் நல்லா இருக்கா? தாரா நீ சொல்லு!. ஶ்ரீ நீ!.
இதழினி தான் அண்ணா!.
ஶ்ரீ மதி, இதழினி தான்!. என்று மெதுவான குரலில் கூற அனைவரும் சிரித்தார்கள்.
அடுத்த பெயர் என்ன கொஞ்சம் அதையும் பிரியுங்கள் பார்ப்போம் என்று கூற…
உடனே வருண் அதையும் பிரித்துப் பார்த்தவன். மகியை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே நின்றான்.
சூர்யா, மச்சான் என்ன பெயர்? சீக்கிரம் சொல்லுங்க! உங்க தங்கச்சி அப்படி என்ன பெயரை வைத்து எழுதி இருக்கா?.. என்று கேட்க …
வருண் “தூரிகா” என்று படித்தான். அனைவரும் ஆச்சரியமாக இது நல்லா இருக்கே! என்று கூற…
தமிழ் பெயர்!. மம் நல்லா இருக்கு!
இவ்வளவு நேரமும் இருந்த சூர்யாவின் மனநிலை அப்படியே மாறி போய் கடுமையை தத்தெடுத்துக் கொண்டது. அவன் மகிழினியை பார்க்க விரும்பவில்லை.
இன்பா , என்னடா சூர்யா என அவன் பார்க்க…
மகி சூர்யாவை தயங்கி கொண்டே பார்த்தாள்.
உமா, இப்பொழுது யார் யார் இப்போ எந்த பேர் வைக்கலாம் சொல்லுங்க? என்று கேட்க…
சூர்யாவிற்கு அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்கவில்லை கண்கள் எல்லாம் கொஞ்சம் சிவந்து போனது. உஷ்ண மூச்சை வழி விட்டான். எவ்வளவு திமிர் இருந்திருந்தால் இந்த பெயரை வைப்பாள்?. அப்போ இன்னும் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறாளா? அப்பொழுது நான் முக்கியமில்லை! அவன் தான் முக்கியமா ? என்று அவனுடைய மனம் கேட்டது.
உதயன், தேஜூ சொல்லு!.
இதழ் தான் நல்லா இருக்கு!. என்று கூற.. வசந்தன் தேஜுவிற்கு சப்போர்ட் செய்து இதழினி வைக்கலாம் என்று கூறினார்.
Spr, தூரிகா தான் நல்லா இருக்கு என்று கூறினான்.
இப்படியே ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரை கூறினார்கள் கடைசியில் இரண்டு பக்கமும் சண்டை வேறு வந்து விட்டது. ஆனால் மகிழினி அப்படியே நின்று கொண்டிருந்தாள்.
இன்பா, மச்சான் எதுக்கு முகத்தை வைத்திருக்கிறாய்? தயவுசெய்து சிரி எல்லாரும் உன்ன தான் பாத்துட்டு இருக்காங்க!.
சூர்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…
இன்பா, மச்சி கொஞ்சம் சிரி என்று சொல்ல…
சூர்யா,அவர் இதை ஞாபகம் வச்சு இருக்கா? அப்படின்னா என்ன அர்த்தம்?
இன்பா,சூர்யா! ஒன்னும் அர்த்தம் இல்ல…
சூர்யா, அவளுடைய எண்ணம் அந்த ஃபேக் ஐடி மேல தான இருக்கு! அவளோட குழந்தைக்கு இந்த பெயர் வைக்கிறா? அந்த அளவுக்கு அவ விரும்புகுறாள் என்று தானே அர்த்தம்! இதெல்லாம் பொய் தானே என்று உஷ்ணம் மூச்சை வெளியிட்டுக் கொண்டே கூறினான்.
இன்பா, அப்படி எல்லாம் இல்லடா இத பெருசா எடுத்துக்காத விடு!
சூர்யா, எப்படி அதை எப்படி சும்மா விட முடியும்!. இந்த பொண்ணுங்க எல்லாரும் இப்படித்தான்! எனக்கு இங்க இருக்க கொஞ்சம் கூட பிடிக்கல!.
நாதன் அங்கு வந்தவர். பேசாமல் “இதழின தூரிகா” வச்சிருங்க! நல்லா இருக்கும் ! சண்டை வேண்டாமே!.
தேஜு சிரித்துக் கொண்டே“ எங்க டாடி எப்பவுமே யுனிக்! ஃபர்ஸ்ட் கிளாஸ்! என்று சந்தோஷமாக கூற..
இதை வசந்தன் மற்றும் கலைவாணி இருவரும் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நாதன், தேஜு நீ உன் தோப்பனார் கிட்ட போய் நில்லு! அப்பா நீங்கதான் என்னோட தோப்பனர் தேவையில்லாம பேசாதீங்கோ!.
அந்த நேரம் கார்த்திக் வசந்தனின் அருகில் வந்து எல்லாருக்கும் சொல்லுங்க மாமா…
உடனே வசந்தன், சரிங்க மாப்பிள்ளை! என சொல்லி விட்டு.. உங்க எல்லார்கிட்டயும் ஒரு விஷயம் சொல்லப் போறேன்! அதுக்கு தான் இந்த பெயர் சூட்டு விழா! இங்கே நடந்தது !என்று சொல்லிவிட்டு..
வசந்தன், எனக்கு எனக்கு மூணு பசங்க இல்ல! எனக்கு நாலு குழந்தைகள் எல்லாமே இரட்டை குழந்தைகள்! ஆனால் நான் மகிழினி தான் முதல் குழந்தையா சொல்லி இருப்பேன்! என்னோட முதல் பெண் குழந்தை முதல் குழந்தை பூவிழி என்னோட தேஜு! அவதான் என்னோட முதல் பெண் குழந்தை இந்த வீட்டோட மூத்த பெண் வாரிசு அவதான்! என தேஜுவை கை காட்டினார்.
நாதன் மற்றும் தேஜுவின் கண்களில் கண்ணீர் கோர்த்துக்கொள்ள.. உதட்டை மடித்து கடித்துக் கொண்டே நின்றிருந்தாள்.
அனைவர் பார்வையும் அவள் மேல் இருக்க.. அனைவரும் அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
செல்வம் மற்றும் சாரதா இருவரும் கொஞ்சம் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்க…
கலைவாணி கண்கள் கலங்க தேஜூவை பார்த்துக் கொண்டிருந்தார்.
நாதன் ,தேஜூ என்னடா? தப்பு டா கண்ணா போ! அவங்க கூப்பிடுறாங்க!
தேஜூ, நான் போமாட்டேன் டாடி! அவாள நேக்கு பிடிக்கல டாடி
நாதன், பெத்தவா பற்றி அப்படி சொல்லாத தேஜு!. போடி மா!.
வசந்தன் , அவ என்னோட பொண்ணு! அவ கிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்! ஆனா அவளோட தகப்பனார்!. டாக்டர் தான்! ஒரு தகப்பனா, பெத்தவளா கலைவாணி நாங்க இருந்தாலும் , அவளை இந்த அளவுக்கு வளர்த்து ஒரு நல்ல இடத்தில கல்யாணம் பண்ணி கொடுத்து அவளை பாத்துக்கிட்ட டாக்டர் ரங்கநாதன்! சார்.. நான் என்னைக்கும் அவருக்கு நன்றி கடன் பட்டு இருக்கேன்!. என்று அவர் கண்களில் கண்ணில் கோர்த்துக் கொண்டது.
உடனே கலைவாணி அவரைப் பிடித்துக் கொண்டாள்.
நாதன், திவ்ய பாரதி! நோக்கு அம்மா அப்பா எங்க ரெண்டு பேர் ஆசியும் வேணும் என்றால் நீ திவ்யாவை உன் அம்மாவா நினைப்பது உண்மையா இருந்தால் போய் அவங்க கூட நில்லு! இதுக்கு மேல் நான் மூச்சு விட படாது.. நோக்கு புரியிதா?.
தேஜூ, பா!.
நாதன், பாரதி போடி!. நீ என் பொண்ணு அது என்னைக்கும் மாறாது!
வசந்தன் மற்றும் கலை இருவரும் கலங்கி நின்று கொண்டு இருக்க உதயன், மை விழி, மகிளினி மூவரும் தன் தாய் தந்தை அருகில் வந்து நின்று கொண்டார்கள்.
மகி அழுது கொண்டே கலை வாணி கைகளை பிடித்து கொள்ள.. மை விழி, பா விடுங்க.. என கையை கட்டி கொண்டாள். உதயன், எங்கே இருந்தாலும் அவள் நம்ம வீட்டில் ஒருத்தி தான்! இது சந்தோசமான நேரம்!. எதுக்கு வறுத்த படுரீங்க.
தேஜு நாதனை திரும்பி பார்க்க.. போ பாரதி!
அவள் கொஞ்சம் மருகி கொண்டே அவர்களின் அருகில் சென்றாள்.
அவள் கலை வாணியை பார்த்து தயங்கி கொண்டே ம.. மா! என மருகி கொண்டே அழைத்தாள்.
அவள் அழைத்ததும் கலை அந்த உணர்வுகளை கையாள முடியாமல் மயங்கி விழுந்தார்.
மகி உள்ளே சென்று கொஞ்சம் தண்ணீர் மற்றும் சக்கரை எடுத்து வர நாதன் வந்து செக் செய்தார்.
சரியா சப்பிடல.. கலை அம்மா! கலை அம்மா! எழுங்க!
மகி, டாக்டர் சக்கரை!
மை விழி, சாக்லேட் போட்டு விடுங்க.
நாதன் சாக்லேட் வாங்கி அவருடைய வாயில் போட்டு விட சொன்னார்.
ஒரு சில நிமிடங்களில் கண் முழிக்க.. அனைவருக்கும் அப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது.
கலை தேஜூ கன்னத்தில் முத்தம் முகம் எல்லாம் முத்தமிட்டு அணைத்து கொண்டார்.
அடுத்து கேக் வெட்டினார்கள்.
உணவு முடித்ததும் சூர்யா மற்றும் மகி அவர்கள் குடும்பத்துடன் சூர்யா வீட்டுக்கு கிளம்பினார்கள்.
சூர்யாவின் நட்பு வட்டங்கள் குழந்தை பிறந்ததற்கு மற்றும் பெயருக்கு பார்ட்டி get together கேட்க.. பெங்களூரில் வைக்கிறேன் என சொல்லி கிளம்பினான்.
மகி, ஏன் முகத்தை இப்படி வச்சு இருக்கீங்க? என கையை பிடித்தாள்.
சூர்யா….?
தொடரும்..
Episode 379,
மகி சூர்யா இருவரும் உமாவுடன் வீட்டுக்கு கிளம்பினார்கள். சத்ய தேவ் மட்டும் அவர்களுடன் வந்தான். மிதுன் தேவ் அங்கேயே இருந்து கொள்கிறேன் என்று சொல்ல அவர்கள் கிளம்பி வந்தார்கள்.
ராம், சரி சூர்யா நான் கிளம்புகிறேன்!..
சூர்யா, இத்தனை நாள் எப்டி லீட் பண்ணியோ அதே போல பார்த்துக்க நான் வரேன்!
சரி என்று சொல்லி விட்டு ராம் கீதா இருவரும் கிளம்பினார்கள். காரில் சூர்யா அதே இறுக்கத்துடன் வந்தான். வீட்டுக்கு வந்ததும் அவனை பார்த்த
உமா, சூரியா நில்லு!..
என்னம்மா?
உன் மாமியார் வீட்டில் இருந்து வரதுக்கு விருப்பம் இல்லையா?
ஏன் மா அப்படி கேக்குறீங்க?
உமா, அப்புறம் ஏன் உன் முகத்தை இப்படி வச்சுட்டு இருக்க!.
அது ஒன்னும் இல்லமா ஆபீஸ்க்கு போகணும் நிறைய ஒர்க் இருக்கு அப்படியே இங்கே கிட்டத்தட்ட ரெண்டு வாரம் இருந்துட்டேன்! என்று கூறினான்.
உமா அவ்வளவு கஷ்டப்பட வேண்டாம் நீ இன்னைக்கு நைட்டு கிளம்பு மகி இங்கேயே இருந்துட்டு வரட்டுமே!
மகிழினி தன் மாமியாரையும் சூர்யாவையும் பார்த்தாள்.
சூர்யா, எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லம்மா நான் கிளம்புறேன் என்று கூறினான் .
இதை அவள் எதிர்பார்க்கவில்லை
நடராஜ் என்னடி பிள்ளையை திட்டிட்டு இருக்க! இப்போ வந்து இதை கேட்டே ஆகணுமா? சூர்யா நீ காலைல போ!..
உமா சரி காலையில போ என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல..
நடராஜ் வாசலை பார்த்துக் கொண்டிருந்தார் .
என்ன? என்ன? இங்கேயே நின்னுட்டு இருக்கீங்க..
நட்ராஜ், நான் சுரபிய இங்க வர சொல்லி இருக்கேன். எனக்கு பாக்கணும் போல தோணுச்சு தனியா விட்டு வர தோணல!.
உமா சிரித்துக் கொண்டே சரி வரட்டும் நான் ஒக்காந்து இருக்கேன் இங்க இருந்துட்டு போகட்டுமே!. என்று கூறினார்.
மகிழினி சத்யதேவ் நேராக உள்ளே சென்று டிவியை ஆன் செய்தான்.
மகி தன் கணவனின் பின்னால் செல்ல.. சூர்யா எதுவும் சொல்லாமல் போய் படுக்கையில் அமர்ந்தான்.
மகிழினி அருகில் வந்து அமர அதற்குள் நடராஜ், பாப்பா!. பாப்பா!.. என்று அழைத்தார்.
மாமா என்று எழுந்து நின்றாள்.
சின்ன பொண்ணு தூங்கிட்டாளா?
இல்லைங் மாமா முழிச்சிட்டு தான் இருக்குங்!.
சரி குடு என குழந்தையை கொஞ்சி கொண்டே தூக்கி சென்று விட்டார்.
மகிழினி இது தான் சமயம் என்று கதவை தாளிட்டவள், சூர்யாவின் அருகில் வந்த அமர்ந்தாள்.
அவனுடைய கைகளைப் பிடித்துக் கொண்டாள் அவன் தட்டி விட்டான்.
மகி, என் கைய தட்டி விடுறீங்க! கார்ல வரும்போதும் இப்படித்தான் பண்ணுனீங்க! என்ன ஆச்சு?
சூர்யா, எனக்கு ஒன்னும் ஆகல!
மகி நான் பாப்பாவுக்கு பெயர் வைத்தது உங்களுக்கு பிடிக்கலையா?
சூர்யாவ வெறுத்து பார்த்தான்.
மகிழினி, இப்போ என்னதான் பிரச்சனை? சொன்னா தானே தெரியும்!
“நீ தான் பிரச்சனை”
மகிழினி, சரி சாரி நான் உங்ககிட்ட அப்படி நடந்து இருக்க கூடாது! உங்க கிட்ட பேசினது எல்லாமே தப்புதான்! என்னை மன்னிச்சிடுங்க!.
சூர்யா, உன்னோட மன்னிப்பு எனக்கு தேவையில்லை தயவு செய்து என்னை தொந்தரவு பண்ணாத! தள்ளிப்போ!..
மகி, இவ்வளவு கோபத்துக்கு என்ன காரணம்? ப்ளீஸ் சொன்னாதானே தெரியும்! என்று அவன் அருகில் நெருங்கியவள். சாரி என்று இதழில் முத்தமிட்டாள்.
சூர்யா, தள்ளிப்போன்னு சொல்றேன்ல இதுக்கு என் பக்கத்துல வந்து விழற..
“ஐயோ சாரிங்க நான்… நீங்க அன்னைக்கு நடந்ததை நினைத்து தானே சொல்லி பேசிட்டு இருக்கீங்க! நான் சொன்ன வார்த்தை எல்லாமே தப்பு! உங்க கிட்ட அப்படி நான் பேசி இருக்க கூடாது! என்னை மன்னிச்சிடுங்க” என்று அவனை கட்டி அணைத்துக் கொண்டாள்.
சூர்யா கண்களை மூடியவன் எனக்கு பிடிக்கல தள்ளிப்போ!.
மகிழினி, என்ன சொன்னீங்க! நான் கட்டிக்காம யார் கட்டிக்குவாங்க? நான் சொன்னது தப்புதான்! என்னை மன்னிச்சிடுங்க..
சூர்யா இப்போ நமக்கு மூன்று குழந்தை ஆகிடுச்சு மகிழினி! அதே போல எப்பவும் ஒட்டிக்கிட்டு இருக்கணும் என்கிற அவசியம் இல்லல்ல! உனக்கு தேவை இருக்கா? என்று குத்தலாக கேட்டான்.
மகிழினிக்கு காதுகள் எல்லாம் கூசியது. சூர்யா இதே போல தான் எனக்கு இருந்தது. ஆனால் உன்ன பழிவாங்கணும் என்ற எண்ணம் எனக்கு இல்ல. எனக்கு இப்போதைக்கு நீ பக்கத்துல வரது பிடிக்கல! சோ விட்டுடு!. என்று திரும்பி படுத்து கொண்டான்.
அவள் கண்களில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. “எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு உங்களுக்கு தேஜூவ தான பிடிச்சிருக்கு! அவளையே போய் கட்டிக்கோங்க! நா உங்களுக்கு பட்டிக்காடு தான் சஞ்சனா மாதிரி நான் ஒன்னும் மாடர்ன் இல்ல! தேஜு மாதிரியும் நான் பிரில்லியன்ட் கிடையாது! அவள போல என்னால எதையும் லீட் பண்ண முடியாது! நான் ஓடிப் போனவ தானே!”
சூர்யாவுக்கு கோபம் வர எழுந்து அவளின் கழுத்தை பிடித்தான்.“ இப்போ என்ன டி வேணும்? எதுக்கு என்னை டார்ச்சர் பண்ற?”
மகி, உங்களுக்கு நான் பொருத்தமே இல்லை! ரொம்ப வறுத்த படுறீங்! உங்க மூஞ்சியில் தெரியுது! உங்களுக்கு என்னை பிடிக்கல! என்னை தட்டி விடுரீங்!
சூர்யா கடுப்பானவன்!. இப்போ என்ன வேணும்! இதே போல தானே நீ பண்ண? ஆனால் நான் உன் கிட்ட போட்டி போடல நிஜமாவே எனக்கு தோணல! விடேன்.
மகி, அவ்ளோ கஷ்ட பட வேணாம்! உங்களுக்கு நான் பாரமா இருக்க விரும்பல… என திரும்பி கொண்டாள்.
சூர்யா அவள் அருகில் நெருங்கி மோவாயை பற்றி முத்தமிட ஆரம்பித்தான். முத்தம் நீண்டது! ரசனை இல்லையே! அவனுடைய உடையை கலைத்து கொண்டே அவளின் மேல் படர்ந்து கொண்டான். கோபமாக இருந்தாலும் அவன் தீண்டலுக்கு சிலிர்த்து எழுவாள் ஆனால் இன்று அவனுடைய தீண்டல் உயிரை தொட வில்லையே! மகி அவனுடைய கண்களை பார்த்தாள். தடுமாற்றம் தவிக்கிறான்.
மகி, வேணாம் என்று தடுக்க ஆரம்பித்தாள்.
சூர்யா மூச்சு வாங்கி கொண்டே பார்த்தான்.
மகி, வேணாம்!.. தள்ளி போங்க!.
சூர்யா எதுவும் பேச வில்லை தள்ளி கொண்டான்.
அடுத்த நாள் பரபரப்புடன் விடிந்தது. அவளின் பாதத்தை தடவி கொண்டு இருந்தான்.
ஹே ச்சீ கைய எடு! கடங்காரா இன்னும் எதுக்கு இங்கேயே இருக்க! அதான் மகி போயிட்டாலே! நீயும் மோப்பம் பிடித்து கொண்டு பெங்களூர் போ!.
Spr, please இப்படி பேசாதே தேஜூ எனக்கு அந்த மாதிரி எண்ணம் இல்லை என கால்களை பிடித்து விட ஆரம்பித்தான்.
தேஜூ, இங்கே எதுக்காக இருக்க.. வெளியே போ! உங்க வீட்டுக்கு போ! நோக்காடு வந்த கையை தூக்கிட்டு திரியுறான்! இதையெல்லாம் பார்க்க எரிச்சலா இருக்கு!
Spr அவளை வெற்று பார்வை பார்க்க..
தேஜூ, பிளான் பண்ணி நேக்கு பிள்ளைய கொடுத்திட்ட சண்டால பாவி! இதை சுமந்து கொண்டு இருக்கேன்! அழிக்க கூட முயற்சி பண்ணேன்! ஆனால் தப்பித்து விட்டது!.
Spr கண்கள் கோபத்தில் கலங்கியது. உதட்டை கடித்து இன்னொரு கைகளை மடக்கி கோபத்தை கட்டு படுத்தினான். அவன் மூச்சை இழுத்து பிடித்து “ என் குழந்தையை பத்தி தவறா ஒரு வார்த்தை பேசிடாத! எனக்கு பயமா இருக்கு! நானே உன்னை கொன்றுவேன்னு தோணுது! ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்க ட்ரை பண்ணு! நான் இன்னொரு குழந்தை வேணும்னு நினைச்சேன்! ஆனா இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு பெற்று கொள்ள ஆசைப்பட்டேன்! அதுவும் உன் மூலியமா தான் பெத்துக்கணும்னு நினைச்சேன்! நித்தின் உன்னோட குழந்தை அதை நான் என்னைக்கும் வருத்தமா நினைக்க மாட்டேன்! ஏன்னா என்னோட காதலுக்காக நீ உன்னோட கருப்பையே மறந்து எனக்காக கருப்புக்கு முன்னாடியே குழந்தை பெத்து கொடுத்திருக்க! அதனால உன் மேல காதல் தான் எனக்கு கூடுதே தவிர எப்பவும் குறையல! ஆனா என் குழந்தையை பத்தி இன்னொரு வார்த்தை பேசாத! உனக்கு நான் இங்கே இருக்கிறது பிடிக்கல! அவ்வளவு தானே நான் இப்பவே கிளம்புறேன்! என்று அருகில் வந்தவன் போறதுக்கு முன்னாடி உன் மனசு சங்கடப்படுத்துற மாதிரி நான் எதுவும் நடந்திருந்தால் என்னை மன்னித்துவிடு! என்று காலை பிடித்துக் கொண்டான்.
அவனது சூடான நீர் அவள நீர் காலில் பட்டது. அவனை ஏளனமாக பார்த்தாள். Spr அவளின் அருகில் வந்து “எனக்கு நீங்க நாலு பேருமே வேணும்! உன்னோட மூலமா இந்த உலகத்துக்கு நீ கொடுத்த என்னோட மூணு குழந்தைகளையும் தான் சொல்றேன்! இவங்க மூணு பேரும் நமக்கானவங்க!” என்று சொல்லி அவளை நெற்றியில் முத்தம் பதித்து விட்டு அவன் கிளம்பி விட்டான்.
நிவாஸ் கலைவாணியுடன் இருக்கிறான். அவன் இங்கு வந்ததிலிருந்து கலைவாணையுடன் தான் தூங்குகிறான்.அவரே உணவை ஊட்டி விடுகிறார் .குளிக்க வைக்கிறார். கொஞ்சுகிறார். விளையாடுகிறார். அப்படி இல்லையென்றால் அவர் வேலையாக இருக்கும் போது தாராவுடன் இருப்பான். வசந்தன் வைத்து இருப்பார்.
தேஜூ மெதுவாக எழுந்து வெளியே வந்தாள். அப்பொழுது மைவிழி மற்றும் கார்த்திக் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் உரையாடல் கேட்டது.
கார்த்திக், சூர்யாவும் மான் விழியும்…
ஹேய் என்று அவள் அதட்ட..
சாரி சூர்யாவும் மகிழினியும் நேத்து நைட்டே கிளம்பிட்டாங்கடி , இப்போ நாம மட்டும் தான் இருக்கோம்! கிளம்பலாமா?
மைவிழி , உனக்கென்னடா உன் அப்ப வீட்டு சொத்தா குறையுது! நான் இருந்துட்டு வருவேன்!
கார்த்திக் அவளிடம் மைவிழி என்று கொஞ்சம் மெதுவாக அழைத்தான்.
சொல்லு
கார்த்திக், அது ஒன்னும் இல்ல நம்மளும் பாப்பாவுக்கு பெயர் வைக்கிற பங்க்ஷன் வைக்கலாமா?
மைவிழி அந்த மகிக்கு தான் வேலை பொழப்பே இல்ல! அவ ஒரு சீன்காரி எதுக்கு இந்த ஃபங்ஷன் வச்சு நம்ப பணத்தை செலவு பண்ணணும்? நீயே சொல்லு! அவளுக்கு ரெண்டு பசங்க இருக்காங்க! ஆனா நமக்கு ரெண்டு பொண்ணுங்க! சோ அவங்கள நல்லா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் கார்த்திக்! நீ என்னடா இப்படி பேசிட்டு இருக்க! பேர் வைக்கிற பங்ஷனா அதுக்கெல்லாம் தண்ட செலவு கட்ட சொல்றியா? அதைவிட யாரு இவங்களை எல்லாம் கூட்டிட்டு வந்து சோறு போடுறது ? இதெல்லாம் யாருடா பண்ணுவா?
கார்த்திக் அவளை முறைத்து பார்த்தான்.
இப்போ எதுக்கு முறைக்கிற கார்த்திக்!
அவன் கடுப்பாக நீ என்னடி இவ்வளவு சோம்பேறியா இருக்க? ஒரு என்தூசியெஸ்டிக்கா பேச மாட்டியா?
மைவிழி இதுல என்ன என்தூசியாஸ்டிக்க கண்டுபிடிச்சிட்ட? அவள மாதிரி பில்டப் கொடுத்து, சீன் போடுவது தான் உனக்கு புடிச்சிருக்கா? நீயும் அவளோட ஒத்தவ தானே? என்று தன் தங்கையை திட்டிக் கொண்டிருந்தாள் .
உதயன், எப்ப பார்த்தாலும் உனக்கு அவளை திட்டுறதே தான் வேலையா? உன்னை திட்டறதுக்கு ஆள் இல்லாம தானே இப்படி பேசிட்டு இருக்க!ஏன் மாமா நீங்க இப்படி இருக்கீங்க? அவளை ஏதாவது சொல்லுங்களேன்?
கார்த்திக், நான் கடவுள் கிட்ட அப்படி வரம் வாங்கிட்டு வந்து இருக்கேன் மச்சான்!
மைவிழி வாயை மூடு உனக்கெல்லாம் நான் கிடைச்சதே பெருசு! இல்லன்னா எங்கேயாவது வர பட்டிக்காட்டில் சாணி தட்டுறவங்கள தான் நீ கல்யாணம் பண்ணி இருக்கணும்!
கார்த்திக், வரப்பட்டிக்காட்டில் இருக்கிறவங்களுக்கு ஆவதும் சாணி தட்ட தெரியும்! ஆனா உனக்கு?.. அது கூட தெரியாதே!..
உதயன் இதை கேட்டு சிரிக்க..
தாரா வெளியே வந்தவள் அவளும் சிரித்தாள்.
கார்த்திக் , நீ வீட்டுக்கு வாடா! உன்னை வச்சிக்கிறேன் !.
தேஜு இது அனைத்தையும் கேட்டு சிரித்துக்கொண்டே வெளியே வந்த அமர்ந்தாள்.
அவள் வந்ததை பார்த்ததும் தாரா, அத்தை என்று தேஜூ அண்ணி வந்துட்டாங்க..
கலைவாணி, அப்படியா வரேன் என்று சொல்லி வெளியே வந்தவர்.. உனக்கு என்ன வேணும் ?நீ காலையில என்ன குடிப்ப சொல்லு? உனக்கு என்னென்ன சாப்பாடு பிடிக்கும்? செஞ்சு தரேன்!
தேஜு , எங்க அப்பா சாப்பிட்டாரா ?
அவர் காலையில் எந்திரிச்சு குளிச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு வந்துட்டு டிபன் சாப்பிட்டார்.
தேஜு, நான் வந்து வசந்தனை கேக்கல.. என்னோட ரங்கநாதன் அப்பாவை கேட்கிறேன்!
கலைவாணி நானும் அவரை தான் சொல்றேன் என்று அவளுக்கு ஈடு கொடுத்து முறைத்தாள்.
தேஜு அப்படியா எனக்கு இப்போ காலைல பால் மாதிரி குடிச்சா வாமிட்டா வருது! எனக்கு அதெல்லாம் எதுவும் வேண்டாம்! நான் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுறேன்!..
கலைவாணி அப்போ சுக்கு காபி போட்டு தரட்டுமா? அது உனக்கு நல்லா இருக்கும்!
அதெல்லாம் எனக்கு பிடிக்காது..
கலைவாணி பிடிக்காதுன்னு சொல்லக்கூடாது குடிச்சு பாக்கணும்! புரியுதா? நான் செஞ்சு இப்ப கொண்டு வரேன்! நீ குடிக்கிற!. என்று மிரட்டி விட்டு சென்று விட்டார்.
மை விழி இதையெல்லாம் கேட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.
இப்போ எதுக்கு பல்ல காட்டுற..
மைவிழி, நீ எதுக்கு வரும்போது பல்ல காட்டிட்டு வந்த? நீ பெரிய டான்னு நினைப்பா? இந்த சீன் போடுற வேலை எல்லாம் இந்த வீட்ல வச்சுக்காத!
தேஜு, யாரு நானா சீன் போடறேன்?தாரா! நீ சொல்லு யார் சீன் போடறா?
கார்த்திக் மற்றும் உதயன் இருவரும் போச்சு தாரா மாட்டிக்கிட்டா!
சொல்லு!. தாரா!..
தாரா பாவமாக உதயன் மற்றும் கார்த்திக் இருவரையும் பார்த்தாள்.
தேஜு , உன்ன பயமுறுத்தி வச்சிருக்காலா? இவளாம் இங்கே சீன் இல்ல! ஒரு வெட்டி பந்தா கேஸ்! ஒண்ணுமே பண்ண மாட்டா! சும்மாவே இங்கே இருக்கிறவங்களை எல்லாம் அதட்டி அதிகாரம் பண்ணிட்டு இருக்கா! மகி இவள எதுக்கு பேச மாட்டா அதனால அவளை அதிரடி வேலை வாங்கி இருக்கா
உதயன் , கரெக்டா சொன்னீங்க அக்கா! நீங்க சொன்ன மாதிரி தான் இவ பண்ணிட்டு இருப்பா!
தேஜு கடுப்பாகி யாருடா உனக்கு அக்கா? என்னை அக்கான்னு கூப்பிடற வேல வச்சுக்காத! எனக்கு முன்னாடி நீ தான் பிறந்த!..
மைவிழி, நீ மட்டும் என்னடி பண்ணிட்டு இருக்க! நீயும் அதுதான் பண்ணிட்டு இருக்க! வந்த உடனே சீன் கிரியேட் பண்ற! என்ன? அப்பா உனக்கு சப்போர்ட் பண்றாங்கன்னு ஆடிட்டு இருக்கியா! அப்படி ஒரு நெனப்புல இருக்காதே!..
தாரா உடனே வேகமாக உள்ளே சென்று அத்தை! அத்தை!
என்ன ஆச்சு மைவிழிக்கும் தேஜு அண்ணிக்கும் சண்டை நடக்குது. ரெண்டு பேரும் பயங்கரமா பேசிக்கிறாங்க வாங்களேன்!.
கலைவாணியே இது என்ன புது பிரச்சனை என்று வெளியே வந்தவர் என்ன சத்தம்?
மைவிழி “அம்மா இவ என்ன திட்டிக்கிட்டே இருக்காம்மா! ரொம்ப ஓவரா பேசுறா!”
கலைவாணியின் பார்வை தேஜுவின் மீது சென்றது.
நான் ஒன்னும் தேவை இல்லாம பேசல இவதான் என்கிட்ட சண்டை பண்ணிட்டு இருக்கா!
மைவிழி , அம்மா அவளை நம்பாதே! அவள் பேசுவதெல்லாம் ரொம்ப மோசமா இருக்கு! என் மனசு எவ்வளவு கஷ்டப்படுத்த தெரியுமா?
கலைவாணி, “மைவிழி என்ன பழக்கம்? அவ உனக்கு அக்கா உன்ன விட அஞ்சு வயசுக்கு மூத்தவ! அவள் இவள் என பேசிட்டு இருக்க! அக்கான்னு கூப்பிடு! இதெல்லாம் உனக்கு சொல்லிக் கொடுக்கணுமா? மானு எல்லாரையும் அண்ணா அக்கான்னு கூப்பிடுறா ஆனால் உனக்கு எவ்வளவு சொன்னாலும் நல்ல பழக்கமே வராதா? தயவுசெய்து குழந்தைகளுக்கும் இதை பழகி விடாதே! மாப்பிள்ளை கொஞ்சம் பாத்துக்கோங்க!”
கார்த்திக், உதயன், தாரா, தேஜு என அனைவரும் சிரிக்க..
தேஜு கெத்தாக நன்றாக சாய்ந்து கொண்டு கால் மேல் கால் போட..
கலைவாணி அதை பார்த்து “என்ன பழக்கம்? பொட்ட புள்ள கால் மேல கால் போட்டு உட்கார! அதுவும் நீ மாசமாய் இருக்க பிச்சிடுவேன்!” என்று மிரட்டி விட்டு சென்றார்.
மைவிழி இதை பார்த்து சிரிக்க..
தேஜு காலை எடுத்து விட்டு “இப்போ எதுக்கு டி சிரிக்கிற? என்று மறுபடியும் அவர்களின் சண்டையை ஆரம்பித்தார்கள்.
உதயன் , “ரெண்டு பேரும் தயவு செய்து சண்டை போடாதீங்க! சரியா போச்சு அம்மா அவளையும் திட்டிட்டாங்க உன்னையும் திட்டிட்டாங்க போதுமா!”
கலைவாணி தேச்சுவுக்கு உணவு கொடுத்து அவளை பார்த்துக்கொண்டு மை விழி என இரண்டு மகள்களுக்கும் தண்ணீர் ஊற்றிய கால்களை பிடித்து விட்டு எல்லா சேவகமும் செய்தவள். வியர்த்து வடிய “தேஜு இப்போ உனக்கு பரவாயில்லையா? எங்கேயும் வலிக்குதா? கடைசியா எப்போ செக்கப் போன? ஒரு தடவை டாக்டர பார்த்துட்டு வரலாமா? உங்க அப்பாவே டாக்டர் தானே ஒரு தடவை செக் பண்ணிக்கோ! இப்போ எத்தனை மாசம்? ஆறு இருக்குமா? என்று கேட்டார்.
நாலு! முடிய போகுது…
கலை முகத்தை துடைத்துக்கொண்டே “சரி உடம்ப அலட்டிக்க வேண்டாம்! இப்போ வாக்கிங் போறயா? இல்ல ஏதாவது சாப்பிட்டு போறியா? நிறைய சாப்பிடுவதை விட எப்ப எல்லாம் பசிக்குதோ அப்ப கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடணும்! அப்பதான் பிரசவத்துக்கு அப்புறம் உடம்பை குறைக்க முடியும்!” என்று கூறினார்.
தேஜு அவரின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
கலைவாணி அவளை பார்க்க..
தேஜு, மெதுவான குரலில் என்னால் சட்டுன்னு சில விஷயத்தை ஏத்துக்க முடியாது! அதே போல தான் நீங்களும்? என்னை தப்பா நினைக்க வேண்டாம்! அவருக்கும் சொல்லிடுங்க!.
கலைவாணி, எவரு?
அதுதான் உங்களோட புருஷன்!
கலைவாணி , உன்னோட அப்பா!.
தேஜு, என்னோட அப்பா ரங்கநாதன் தான் அவர் இல்லையாக்கும்!.
கலைவாணி பரவால்ல நீ எப்போ ஏத்துக்கறையோ அப்போ ஏத்துக்கோ! ஒன்னும் பிரச்சனை இல்ல! ஆனா உனக்கு செய்ய வேண்டியது கடமைக்கு மேல எனக்கு ஒரு திருப்தி! அது உனக்கு புரியாது! நான் சத்தியமா உதயன் இப்படி போயிருந்தா கூட எனக்கு கவலை இருக்காது. அவன் பையன் ஒரு பொண்ண தொலைச்சிட்டு நின்னு இருக்கேன்! நான் வருத்தப்படாமல் இருப்பேன்! அப்டின்னு நீ நெனச்சி இருக்கியா? நீ செத்துப் போய்விட்டாய் என்று நினைத்து நாங்க வருத்தப்பட்டு இருக்கோம்! அதேபோல மகிழினிய நான் வேணும்னு ஒதுக்கல… உங்களோட ஜாதகத்தை பார்க்கும்போது நான் ரெண்டு பெண் குழந்தை அதான் இரண்டாவது குழந்தையை எனக்கு எப்பவும் பிரச்சனையா அமையும்! அதேபோல அவ தானாவே எல்லா பிரச்சினையும் போய் சிக்கிபா! நீயே பாரு அவளோட வாழ்க்கையை! உங்க அத்தை பையன் தினேஷ்… அப்புறம் கார்த்திக் மாப்பிள்ளை பெரும்பாலான பிரச்சினை நடக்குற இடத்தில் அவள் இருப்பா! சின்ன வயசுல இருந்து ஏதாவது பண்ணிட்டே இருப்பா அவ ஒரு ஏமாளி யாராவது அவளை மாட்டி விட்டுட்டு போயிட்டே இருப்பாங்க! அந்த கோபம் மாறுச்சு! மத்தபடிக்கு யாருக்காகவும் எந்த சூழ்நிலையும் என் குழந்தைகளை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்.
தேஜு, மதிய பிரச்சினையில் மாட்டி விடற ஒரே ஆளு மைவிழி மட்டும்தான் அதனால நீங்க மகிமையை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கீங்க சரிதானே!
கலை வாணி சிரித்து கொண்டே அப்படி இல்ல மைவிழி ஒரு விஷயத்தை ரொம்ப தைரியமாக செய்வா! அது தப்பாவே இருந்தாலும் அந்த தைரியம் வேணும்! அவ பிழைச்சுக்குவா! ஆனால் மகிழினி அப்படி கிடையாது. அப்படியே அவங்க அப்பா மாதிரி! எதையும் நியாயம் தர்மம் என்று பேசிட்டு இருக்கறதுனால தான் இதுவரைக்கும் நாங்க இப்படியே இருக்கோம்! எதிர்த்து பேச முடியல ! உங்க பெரியப்பா வீடு நம்மள ஏமாத்தி நம்ம சொத்தை எல்லாம் அவங்க வச்சுட்டு இருக்காங்க! இதை எல்லாம் நான் கேட்க போனா கம்முனு இரு! விடு! விடு! அப்டின்னு சொல்றது. உங்க ஆத்தா! இத்தனை வருஷமா நான் பார்த்து கொண்டு இருக்கேன்! உங்க அத்தை காரிங் மட்டும். தான் அதில் ஒருத்தி மட்டும் தான் கூட்டி போவா! உன் பெரியக்கன் இருக்காளா இல்லையா என பார்க்க கூட வர மாட்டார். மான்விழிக்கு செல்லம் கொடுத்து உன் ஆத்தா கெடுத்து வைத்து… அவள் இங்கே என் பக்கம் ஒட்டவே மாட்டாள். உன் அத்தைக்காரிக கூஜா மாதிரி ரெண்டு பக்கமும் ச்சை சக்கா போட்டுட்டு கூடவே மான் விழிய சேர்த்து கொள்வது.
தேஜூ, சரி சரி விடுங்க…என சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள்.
அடுத்து வந்த நாட்களில் ஒரு வாரம் அப்படியே ஓடியது.
இன்பா சூரியாவிடம் ருத்ரன் (ரவுத்திரன்) பிறந்ததற்கு அனைவரும் பார்ட்டி கேட்கிறார்கள். என இருவரும் ஒன்றாக வைத்துக் கொள்வோமா? என்று கேட்க.. அவன் சரி என்று சுதி குறைந்த துணியில் பேசினான். அது அங்கு நடந்து கொண்டிருக்க…
சரியாக மை விழிக்கு குழந்தை பிரசவ நேரம் வந்தது.
அப்பொழுதுதான் முதல் மோதல் ஏற்பட்டது.
முதல் மோதலா யாருக்கு?
தொடரும்…
சத்திய தேவ்க்கும் நித்தின் பிரகாஷ்கும் தான் அடங்காத அதிகாரா இனி ஆரம்பம்!.
இன்னும் ஒரு எட்டு எபிசோட் ல ஸ்டோரி முடிஞ்சிடும்.
Episode 380,
ஒரு இரண்டு நாட்கள் இருந்து விட்டு மகி பெங்களூர் சென்றாள். அவளால் இருக்க முடிய வில்லை.
மை விழி மற்றும் கார்த்திக் இருவரும் பாக்யா வீட்டுக்கு செல்ல.. கார்த்திக் அவர்களை விட்டு பெங்களூர் சென்று விட்டான்.
தேஜூ மற்றும் உதயன் குடும்பம் மொத்தமாக வசந்தனுடய குல தெய்வக் கோவிலுக்கு சென்று வந்தார்கள்.
இப்படி எல்லாமே அவரவர்களுடைய போக்கில் இருந்தார்கள். கவர்னர் பொறுப்பில் இருக்கும் குரு பிரகாஷின் பாதுகாப்பு படையின் தலைவனாக இன்பா அவனுடைய வேலையை செய்து கொண்டு இருந்தான். விவேகா அவளுடைய அம்மா வீட்டில் இருக்கிறாள்.
இப்பொழுது விடுமுறைக்காக நிதின், ரிதம், மிதுன் மூவரும் வந்து இருக்கிறார்கள்.
சூர்யா மற்றும் இன்பாவினுடைய கல்லூரி தோழர்கள் மற்றும் தோழிகளுக்கு சொன்னதை போலவே ஒரு get together ஏற்பாடு செய்ய பட்டது.
இன்பா தான் முழு செலவையும் செய்தான். அவன் சூர்யாவிடம் எல்லார்க்கும் சொல்லிட்டேன்! உன்னோட தரப்பில் இருந்து வேறு யாரை கூப்பிடனும்!.
சூர்யா, இது எதுக்கு பண்றோம்?
என்ன டா எல்லா பண்ணி முடிச்சதும் இப்படி ஒரு கேள்வி கேட்கிற!
சூர்யா, ஒன் ஒன்னும் இல்ல எதோ ஒரு நினைப்பில் கேட்டு விட்டேன்!.
இன்பா கடுப்புடன் உனக்கு ஏஞ்சல் பிரந்ததுக்கும் விவேகாகுக்கு பையன் பிறந்ததுக்கும் தான் இந்த பார்ட்டி!. நீ எந்த உலகத்தில் இருக்க! எதுவும் பிரச்சனையா? என்ன ஆச்சு சொல்லி தொலை நானும் கிட்ட தட்ட ஒரு வாரமா பார்த்து கொண்டு இருக்கேன்! நீ ஒன்னும் சரி இல்லையே! என் கூட வந்து ஸ்டே பண்ற! மகி குழந்தையை வைத்து கொண்டு கஷ்ட படுவாள் அது உனக்கு தெரியும் தானே!.
சூர்யா, என் பொண்ணு ராவடி பண்ண மாட்டாள் சமத்து குட்டி!. என்று சொன்னவன் பேச்சை மாற்றும் விதமாக என்ன விவேகா பையன் அப்டின்னு சொல்ற? அப்போ உன்னோட பையன் இல்லையா!
இன்பா, ம்ம் எனக்கும் பையன் தான்! இன்னும் வேற யார்க்கு சொல்லணும்!
கார்த்திக்! .
ம்ம் இன்வைட் பண்ணிட்டேன்!
அஞ்சு! .
இன்பா, யாரு!.
ஹே சஞ்சனா sister!.
இன்பா, ம்ம் இப்போ பண்றேன் என அழைத்தான்.
சூர்யா, தேஜூக்கு சொல்லு!
இன்பா அவனது வேலையை நிறுத்தி விட்டு சூர்யாவை பார்த்தான்.
சூர்யா, டேய் சும்மா இன்வைட் பண்ணேன்! இதுல என்ன இருக்கு?
இன்பா, அடுத்து!..
சூர்யா, தாரா!.
இன்பா, ஹீரோயின் மேடம் க்கு நீயே சொல்லிட்டு!.
சூர்யா, டேய் முக்கியமா விவேகா வருவாளா!.
இன்பா, அவள் வர மாட்டாள் மச்சி அது தான் எனக்கும் நல்லது! என்னை குடிக்க விட மாட்டாள்.
சூர்யா, சரி!..
இன்பா, மகி வருவாளா?
சூர்யா, அவள் எதுக்கு?
இன்பா, இது என்ன கேள்வி? அப்போ மகி வேண்டாமா?
சூர்யா, வேண்டாம்!. என்று கூறி விட்டான்.
சரி ஓகே என சொன்ன இன்பா அவளுக்கு தனிப்பட்ட முறையில் போன் செய்து பார்ட்டிக்கு வர சொல்லி அழைத்தான்.
மகி சரி என சொல்லி போனை வைத்து விட்டாள்.
அப்படியே நாட்கள் நகர்ந்தது. சூர்யா வீட்டுக்கு செல்வான்? குழந்தையை கொஞ்சுவான்! அவனுக்கான உணவுகளை அவனை செய்வான். மற்றபடி மகிழினிடம் எதுவும் பேச மாட்டான்.
மகிழினி அவன் பார்ட்டி பற்றி கூறுவான் என்று காத்துக் கொண்டிருக்க ஆனால் அதைப் பற்றி அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதை அனுபவித்து தான் ஆக வேண்டும்.தவறுகள் என்பது இருவருக்கும் பொருந்தும்.
மகி இன்பாவிற்கு அழைத்தாள்.
சொல்லுமா. உன்கிட்ட பார்ட்டி பத்தி எதுவும் பேசினானா ?
மகிழினி சிரித்துக்கொண்டே அதெல்லாம் எதுவும் சொல்லல!.
இன்பா, என்ன விஷயம்? வரலன்னு மட்டும் சொல்லிடாத!. கண்டிப்பா நீ வரணும்!..
மகிழினி, கண்டிப்பா வரேன்னா பார்ட்டிக்கு யார் யார் வராங்க?
இன்பா , எங்களோட கிளாஸ்மேட் எல்லாரும் வராங்க!
மகிழினி, அது ஓகே உங்க கிளாஸ்மேட்ஸ்னா விக்ரம் அண்ணா சஞ்சனா அவங்களும் வராங்கலா?
இன்பா ஆமா மா சஞ்சனா 2 மந்த்ஸ் லீவுக்கு வந்திருக்கா சோ அவ கிளம்பறா அதனாலதான் டேட் பைனல் பண்ணோம். திரும்ப வரதுக்கு சிக்ஸ்த் 7 மன்த்ஸ் ஆகும்..
மகிழினி, சரி அண்ணா! என்று வைத்து விட்டாள்.
அதன் பின் மைவிழிக்கு அழைத்தாள்..மைவிழி உன்கிட்ட கவுன் போல டிரஸ் இருக்கா? அம்பர்லா கட்டிங் மாதிரி !
மைவிழி, ஏன் எங்க போற?
ஒரு பார்ட்டிக்கு போலாம்னு இருக்கேன்!
எந்த பார்ட்டி?
அதுதான் அந்த இன்பா அண்ணா குழந்தை பிறந்ததற்கு பார்ட்டி வைக்க போறாங்க! அதுக்கு கலந்துக்கலாம் என்று போறேன்!
மை விழி, கார்த்திக் வரானா? அவன் மட்டும் வந்தால் அவனை நல்லா வாட்ச் பண்ணு! ஏதாவது அதிகப்பிரசின் தனமா பொண்ணுங்க கிட்ட பேசினால் எனக்கு சொல்ற!.. ஓகேவா!
மகி சிரித்துக் கொண்டே நீ மாமாவ பத்தி தயவுசெய்து சந்தேகப்படாத! மாமா எல்லாம் அப்படி ஒன்னும் கிடையாது!
அது அவனை பத்தி உனக்கு தெரியாது என்று மைவிழி பேச வர…
மகிழினி நான் கேட்டதுக்கு பதில் சொல்லு! நீ தேவையில்லாம பேசிட்டு இருக்க…
மைவிழி யோசித்துக் கொண்டு “இப்போ உனக்கு டிரஸ் வேணுமா? சரி பாப்பாவ என்ன பண்ண போற?
மகி, பாப்பாவையும் கூட்டிட்டு போறேன்! எனக்கும் பாப்பாவும் ஒரே போல டிரஸ் வேணும்! உனக்கு தான் என்னை விட இந்த மாதிரியான டிரஸ்ல இன்ட்ரஸ்ட் அதிகம் ! அதனாலதான் கேட்டேன்! சிவன்யா பவன்யாவுக்கு நீ ஒரே போல டிரஸ் வாங்கி இருக்கியா? உனக்கும் சேர்த்து?
மைவிழி, அது போலவா அவங்க ரெண்டு பேருக்கும் எப்பவுமே ஒரே மாதிரி தான் எடுப்பேன்! நம்மள போல! ஆனா பெரியவங்களுக்கு தெரியல! நீ வெயிட் பண்ணு நான் உனக்கு சொல்றேன் என்று கூறி போனை வைத்தவள். மைவிழி உடனே ஆன்லைனில் செக் செய்து பெங்களூரில் இருக்கும் பிரத்தியேகமான ஒரு ஃபேஷன் டிசைன் கண்டுபிடித்தாள். அதன் பின் அந்த விவரங்கள் அனைத்தையும் மகிழினிக்கு ஷேர் செய்துவிட்டு ஃபோன் செய்தாள்.
சொல்லு கண்டுபிடிச்சிட்டியா?
மைவிழி , ஆம் கண்டுபிடித்து இருக்கேன்! பெங்களூர்ல உன் வீட்டுக்கு பக்கத்துல தான் ஒரு ஷோரூம் இருக்கு! அங்க டிரஸ் டிசைன் பண்ணி தருவாங்க நீ பாப்பாவ கூட்டிட்டு போனாலும் சரி அப்படி இல்லன்னா போன்ல இருந்து ஆர்டர் பண்ணாலும் சரி உன் பிரியம்!..
நான் பாப்பாவ கூட்டிட்டு போறேன்!..
மைவிழி, மிதுன் என்ன பண்றான்?
மகிழ் , அவன் அம்மா வீட்டில் இருக்கான்.
மை விழி, ஆமா சிவன்யாவும்பவன் அங்க தான் இருக்காங்க…
மகி, நான் அவனையும் கூட்டிட்டு வந்துரட்டுமா! அம்மாவுக்கு ரொம்ப வேலையா இருக்கும்ல்ல! எல்லாரையும் சமாளிக்கணும்! தேஜூ அங்க தான் இருக்காங்களா?
மைவிழி, அவ பிடிக்கல பிடிக்கலைன்னு சொல்லிட்டு அதிகாரம் பண்ணிட்டு இருக்கா
மகி , அக்காவ பத்தி தப்பா பேசாத என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.
அதன் பின் மகிழினி குழந்தையை அழைத்து தூக்கிக்கொண்டு அடுத்து வந்த நாட்களில் நேராக கடைக்கு சென்றாள். அவளுடைய அளவுக்கு ஒரு ஷோகேஸ் இல் பொம்மை போட்டுக் கொண்டிருந்தது. லைட்டான கலரில் ஊதா வண்ண உடை லாவண்டர் பூக்களிலிருந்து எழுந்து உருவாக்கிய உடை போல இருந்தது .அவ்வளவு அழகாக இருந்தது. அந்த உடையை பார்த்தவள் அதே இடத்தில் இரண்டு கொஞ்ச நேரம் நின்று ரசித்துக் கொண்டிருந்தாள்.
அவளை உள்ளே அழைக்க மகிழினி உள்ளே சென்று “எனக்கு இந்த டிரஸ் வேணும்!” என்று சொல்லி அதற்கான பணப்பரிவர்த்தனை அனைத்தையும் செய்தவள். அதே வண்ணத்தில் பாப்பாவுக்கும் ஆர்டர் செய்ய
அந்த கடைக்கார பெண்ணுக்கு இதழினியை மிகவும் பிடித்துப் போனது. அவர் தூக்கி ஒரு நிமிடம் கொஞ்சியவர் கண்டிப்பா டுடேஸ்ல உங்களுக்கு வீட்டிலேயே டெலிவரி பண்ணிடுறோம்!. என்று சொல்ல
மகிழினி சிரித்துக் கொண்டே கிளம்பினாள். பார்ட்டிக்கான நாளும் வந்தது .பார்ட்டி இரவு 8.00 மணிக்கு ஆரம்பித்தது .அனைவரும் வந்து கொண்டிருந்தார்கள்.
அஞ்சனா சூர்யாவிடம் என்ன மாம்ஸ் நீ மட்டும் வந்திருக்க!.. உன் பேபி எங்க? இதழின் பெயர் எல்லாம் சுமார் ரொமான்டிக்கா யோசிச்சு வச்சிருக்க!..
இன்பா, என்ன மாம்ஸ் சொல்ற வாய சூட் பண்ணிடுவேன்! இந்த மாம்ஸ் என்ற வேலையெல்லாம் இங்க வச்சுக்காத!
அஞ்சனா, கடங்காரா உனக்கு என்னடா நான் அவனை எப்படி வேணாலும் கூப்பிடுவேன்! எனக்கு அவன் எப்பவுமே மாம்ஸ் தான்!..
இன்பா, அவள வாய் மூடிட்டு இருக்க சொல்லு! இனிமே என் முன்னாடி உன்ன மாம்ஸ்னு கூப்பிடக்கூடாது!
சூர்யா சிரித்துக்கொண்டே அஞ்சனா இன்பாவையும் நீ மாமானு கூப்பிடு செல்லம் என்று கூற..
அஞ்சனா அருகில் வர வாய மூடுடி.. அக்காளும் தங்கச்சியும் பிரச்சனை பண்றதுக்கு கிளம்பி வரீங்க!.. எதுக்குடா இவளை கூப்ட!..
சூர்யா, டேய் கம்முனு இருடா என்று சொல்ல…
அபினவ், சூர்யா எப்படி இருக்கீங்க? மகி காணோமே! அவங்க வரலையா? பாப்பா எப்படி இருக்காங்க? என்று குழந்தையும் விசாரித்தான்.
சூர்யா சிரித்துக்கொண்டே அதுவா கொஞ்சம் முக்கியமான வேலை என்று சமாளித்தான்.
இன்பா என்ன அஞ்சனாவோட புருஷன் உன் பொண்டாட்டிய இந்த அளவுக்கு விசாரிக்கிறான்! என்ன விஷயம் ?
சூர்யா இந்த கடங்கார தான் அந்த குட்டி குட்டன் இருக்கான்னு தெரிஞ்சு கூட அவளை ஒன்சைடா லவ் பண்ணினாரு! ப்ரொபோசல் கூட வந்ததுனா பாத்துக்கோ!..
இன்பா, பரவால்லடா ஆனா உனக்கு கொஞ்சம் கூட பொறாமையே இல்லல்ல! நீ ரொம்ப மானஸ்தன் மச்சி! உனக்கு அந்த மாதிரி பழக்கமெல்லாம் கிடையாது! என்று சூர்யாவை வாரினான்.
மூடிட்டு அந்த சைடு போறயா என்று சொல்லிக் கொண்டிருக்க..
சரவணன் மற்றும் சுபா இருவரும் வந்தார்கள்..
இன்பா கொஞ்சம் கோபத்துடன் டேய் என்னடா பண்ணி வச்சிருக்க?
சூர்யா, என்ன ஆச்சு?
எதுக்கு சரவணன இன்வைட் பண்ண?
சூர்யா, உனக்கு என்னடா? சுபா என்னோட சீனியர்! அதனால இன்வைட் பண்ண!..
டேய் அவ என்னோட அக்கா இங்க வந்து என்னை ரூல் பண்ணிட்டு இருப்பா! அப்புறம் விவேகா கிட்ட போய் சொல்லுவா!..
பொய் சொல்லாதடா உங்க அக்கா எதுக்கு சொல்ல போறா…
இன்பா, உன்ன பாத்துக்குறேன் டா!. என்று சொல்ல..
அதற்குள் அங்கு வந்த மித்ரன் இன்பாவிடம் என்னடா? எதுக்கு சரவணன இன்வைட் பண்ணீங்க?
இன்பா, எல்லாம் இந்த சூர்யா தான்! சரி நீ வா உள்ள போ என்று அனுப்பி வைத்தார்கள்.
நேரம் சென்று கொண்டே இருந்தது சரியாக 8:30 மணிக்கு அவள் வந்தாள்.தன் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்தாள். அனைவரும் சூர்யா மற்றும் இன்பாவிற்கு வாழ்த்து சொன்னார்கள்… பரவாயில்லை இன்னும் அப்படியே இருக்கீங்க…
இன்பா , நானும் இவனும் பிரண்ட் இல்லை எப்பவும் நாங்க எதிரி தான்!..
ராம் மற்றும் கீதா இருவரும் விக்ரமிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். ரிதன்யா அழகாக வந்திருந்தாள்.
ராம் மற்றும் கீதா இன்பாவிடம் முதல்ல குழந்தை பிறந்ததற்கு ஒரு நம்ம குரூப்ல ஒரு மெசேஜ் போட்டியா டா?..
இன்பா, கொஞ்சம் சோகமாக எனக்கு ஒன்றும் குழந்தை பிறக்கல! விவேகாவுக்கு தான் குழந்தை பிறந்திருக்கு! ராம் மற்றும் ரகு இருவரும் செய்தார்கள்!
ரொம்ப பெரிய அதிசயத்தை கிளரிபை பண்ணி இருக்க மச்சி!
இன்பா ஐ அம் சீரியஸ்லி டெல்லிங் எனக்கு ஒன்னும் குழந்தை பிறக்கலேயே விவேகாவுக்கு தான் boy பிறந்து இருக்கான்!.
உடனே சரவணன் மீசையில மண் ஒட்டாத மாதிரியே பேசு!..அதனால் தான் உனக்கு பையன் பிறந்து இருக்கான்?.
இன்பா, ஆமா உன் மீசைல மண் ஒட்டாம காப்பாத்துனன் பாரு என்ன எதால அடிக்கிறது! என்று தான் தெரியல..
இதை கேட்டதும் சரவணன் நைசாக கலந்து கொண்டான் .
மகிழினி உள்ளே வந்து கொண்டிருந்தாள் அங்கு இருக்கும் சில பேருக்கு மகிய தெரியும்! ஆனால் அவள் நேராக ராம் மற்றும் கீதா அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள் .
சூர்யா சட்டென திரும்பி பார்க்க ராம் மற்றும் கீதா இருவரிடமும் மகி பேசிக் கொண்டிருப்பதை பார்த்து…
சூர்யா யார்கிட்ட பேசிட்டு இருக்காங்க? நம்ம பாப்பா மாதிரியே இருக்கே? என்று நன்றாக பார்த்தவன்.
மகிழினி இதழ் பாப்பாவை கையில் வைத்துக் கொண்டிருப்பது தெரிய… கோபம் வந்தது. நான் கூப்பிடவே இல்லையே? எதுக்கு வந்தா?..
இன்பா என்ன மச்சி உன் பொண்டாட்டிய அப்படி பார்த்துட்டு இருக்க?
சூர்யா, இது உன்னோட வேலை தானா? எதுக்குடா அவளை இன்வைட் பண்ண? என சண்டைக்கு வர..
இன்பா கொஞ்சம் சட்டரை சாத்திட்டு இருக்கியா? அவளை ரொம்ப தரக்குறைவா நடத்திட்டு இருக்க? வீட்டுக்குள்ள ஆயிரம் சண்டை வைத்திருந்தாலும், அதை எல்லா இடத்திலும் என்னமோ நீ உத்தமராசாவாட்டம் பேசிட்டு இருக்க!.. அன்னைக்கும் அப்படித்தான் சஞ்சனா அவளை பட்டிக்காடுன்னு சொல்றா! நீயும் அதை கேட்டுட்டு இருக்க ? என்ன அவ மேல இருக்கிற லவ்வுல அமைதியா இருக்கியா? அப்போ இந்த மூணு குழந்தை எப்படி டா வந்தது?
சூர்யா, அது வேற அதை பெருசு பண்ண தேவ இல்ல… சஞ்சனா பத்தி உனக்கு தெரியாதா?
இன்பா, உன் பொண்டாட்டி பத்தி உனக்கு தெரியாதா? இந்த மாதிரி தேவையில்லாத பேச்சை எல்லாம் பேசிட்டு இருக்காத!.. அவளை கஷ்டப்படுத்துற வேல வச்சுக்காத இதை பர்சனலா சொல்றேன்! ஆயிரம் சண்டை இருந்தாலும், அத அப்படியே அந்த பெட்ரூமுக்கு உள்ளேயே வச்சுட்டு வெளியே எப்பவும் போல சுத்திட்டு இருக்கணும் புரியுதா!
எனக்கு மட்டும் சொல்லாத உனக்கு தான்..
எனக்கு தெரியும் மச்சி நான் நிறைய பட்டுட்டேன் அதேபோல விவேகா பத்தி எனக்கு தெரியும்!.
சூர்யா அமைதியாக இருந்தான்.
இன்பா, நான் ரொம்ப ஓவரா அட்வைஸ் பண்ணிட்டேனோ?
அவள பத்தி எனக்கு தெரியும்!
இன்பா, அப்ப தெரிஞ்சுகிட்டே எதுக்கு இப்படி சங்கடப்பட்டு தவிப்போட தடுமாற்றமா நின்னுட்டு இருக்க?..அவ எந்த தப்பும் பண்ணியிருக்க மாட்டா! தப்பு அவ மட்டும் பண்ணலையே நீயும் தான பண்ணிருக்க! யாருன்னு தெரியாம என்ன ம*த்துக்குடா ஒரு பொண்ணு கிட்ட பேசுற? அவ உன் பொண்டாட்டின்னு தெரிஞ்ச உடனே ரொம்ப கஷ்டமா இருக்குல்ல!..அந்த இடத்துல வேற யாராவது இருக்கணும்னு நினைச்சியா? நான்
சூர்யா, அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல…
அப்ப மூடிட்டு ரொம்ப இயல்பா இரு புரியுதா! ஓவரா ஆடிட்டு திரியாத போ! போய் உன் குழந்தையை பாரு குழந்தையை தூக்குறது கூட இல்லையாம்! அந்த குழந்தைக்கு நீ தானே காரணம்?
சூர்யா அவனை முறைத்தான்..
என்ன முறைச்சு பார்க்கிறாய்?
சூர்யா, நான் இல்லைன்னு சொல்லலையே! அந்த குழந்தைக்கு நான் தான் காரணம்!
இன்பா, அந்த குழந்தை மட்டும் இல்லைனா மகி உன் கூட இருக்கவே மாட்டா! அது தெரிஞ்சுக்கோ அந்த குட்டி குட்டன் அவளை கூட்டிட்டு போயிட்டே இருப்பான்!
சத்ய தேவ் வெனால் டாடி டாடி என்று அவன் பின்னாடி சுத்திட்டு இருப்பான். குட்டி குட்டன் உன் கூட இருக்க மாட்டான்! அவனும் நீயும் கிட்டத்தட்ட ஒன்னு! உன்னோட எதிர பிரதிபலிக்கிறவன் தான் அவன்? தப்பு அதனால மூடிக்கிட்டு போய் அவகிட்ட பேசுற வழியை பாரு..
சூர்யா, எனக்கு மட்டும் பேச தான் ஆசை! ஆனா அவ என்ன? என்ன? சொன்னா தெரியுமா? உனக்கு அது தெரியாது? எப்படி கஷ்டப்படுத்தினார தெரியுமா ? பக்கத்தில் போகும்போது என்ன வார்த்தை தெரியுமா சொன்னா?
இன்பா, சிரித்தான்..
இப்போ எதுக்கு பல்ல காட்டுற எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது. தெரியுமா? என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டே கூறினான் .
இன்பா இதெல்லாம் சாதாரணம் மச்சி! ஆனால் அதுக்காக கோபத்தை வச்சிட்டு இருக்கலாமா? உனக்கு கல்யாணம் ஆகி இப்பயா ஒரு வருஷம் நடக்குது! கிட்டத்தட்ட உனக்கு கல்யாணம் ஆகி 12 வருஷத்துக்கு மேல ஆகுது! இப்ப போய் இப்படி சண்டை போட்டுட்டு இருக்கலாமா?
சூர்யா, எனக்கு அட்வைஸ் மழையை கொட்டாத நீயும் தான் சண்டை போடுற எனக்கு எல்லாமே ரவி போன் பண்ணி சொல்லிட்டு தான் இருக்காரு!
அவருக்கு வேற வேலை இல்ல நீ அவர் போன எல்லாம் இனிமேல் எடுக்காத என அந்த இடத்தில் நிற்காமல் வேகமாக இன்பா நடையை கட்டினான்.
சூர்யா ஒரு சில நிமிடங்கள் நின்றவன் கீதா மகிழினியின் அருகில் செல்ல..
அவள் அதற்குள் கீதாவிடம் இதழ கொடுத்துவிட்டு ரெஸ்ட் ரூம் சென்று விட்டாள். சூர்யா நேராக கீதாவின் அருகில் சென்றான் கீதா கொஞ்சிக் கொண்டிருக்க.. என்கிட்ட குடுடி என்று குழந்தை வாங்கிக் கொண்டான்.
என் செல்ல குட்டி இதழ் பாப்பா என்னடா அழகி என்று கொஞ்சம் ஆரம்பித்தான்.
கீதா, இப்போ மட்டும் எதுக்கு வந்த இதனால் அவளைப் பார்க்கிறதே இல்லையாமா?
சூர்யா, உனக்கு யார் சொன்னாங்க
கீதா, யார் சொல்லணும் எல்லாம் எனக்கு தெரியும்! மகி என் வீட்டுக்கு தான் வர்றது இல்ல ஆனா டெய்லி என்கிட்ட தான் போன் பண்ணி பேசிட்டு இருக்கா!
சூர்யா, கீதா அவ பொய் சொல்றா? அதையெல்லாம் நீ நம்பாதே!.
அடங்குடா என்று ராம் வந்தான்.
சூர்யா என்ன எல்லாத்துக்கும் தண்டோரா போட்டு இருக்கா இந்த விஷயம் அவ்வளவு பெரிய விஷயம் இல்லையே! இது எங்களுக்குள்ள இருக்கிற பர்சனல் போ!
கீதா, அப்படியா ராசா அதனாலதான் நீ அவளை இன்வைட் பண்ணவே இல்லையா. ஏன் ரெண்டு பேரும் சேர்ந்து வரல? ஏன் தனித்தனியா வந்தீங்க ? என்று அனைவரும் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்…
சூர்யா, ஹே .. ஓவரா பண்ணாதடி என்று கூறினான்.
கீதா சிரித்துக்கொண்டே என்னமோ பண்ணுங்க என்று சொல்லிவிட்டு அவரவர்கள் வேலையை பார்த்தார்கள்.
சூர்யா மனதில் இதில் புது பிரச்சனை ஆரம்பித்தது எல்லாத்துகிட்டையும் என்ன பத்தி சொல்லி இருக்கா? என் ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி நான் அவமானப்படுத்திட்டாளே!..என்று சூர்யா நினைத்து கொண்டு இருக்க..
பாப்பாவ குடுங்க!.. என்று சத்தம் வந்தது.
பின்னால் திரும்பி பார்த்தான்.
யாரு இவ?
மகி, பாப்பாவ குடுங்க என்று மறுபடியும் கேட்க
சூர்யா அவளை இமை வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கைகளில் இருந்து குழந்தையை வாங்கியவள் தூக்கிக்கொண்டு ரெஸ்ட் ரூம் பக்கம் சென்றாள்.
குழந்தைக்கு அவளை போலவே போட்டுவிட்டு கூட்டி வந்தாள்.
அனைவரது கண்களும் இருவரும் தான் இருந்தது .அந்த குழந்தை எவ்ளோ அழகா இருக்கு ! அதைவிட அந்த பொண்ணு அவ்ளோ அழகா இருக்காளே? ஒரு பொண்ணுக்கு அம்மா மாதிரியே தெரியலையே? யார் அந்த குழந்தை அவங்க ரெண்டு பேரு ரொம்ப பழக்கப்பட்ட முகமாக இருக்கே என்று அனைவரும் பேசிக் கொண்டிருக்க…
சஞ்சனா திரும்பிப் பார்த்தாள். அங்கே மகிழினி தான் அந்த லாவண்டர் பண்ண டிஸ்னி பிரின்சஸ் உடையில் அழகாக இருந்தாள். முடியை விரித்துவிட்டு பின்னால் அது அவளுடைய முதுகு பக்கத்தை மறைத்துக் கொண்டிருக்க, முன்னாள் ஒரு நெக்லஸ் போட்டு பாதி முடியை முன்னால் விட்டவள், குழந்தையை தூக்கிக் கொண்டிருக்க..
பார்க்கவே ரம்யமான காட்சியாக இருந்தது.
இன்பா தொண்டையை கணைத்துக் கொண்டே யாரோ பட்டிக்காடு! பட்டிக்காடுன்னு சொன்னாங்களே? இப்போ யாரு பட்டிக்காடா வந்துருக்காங்கன்னு தெரியுதா? என்று கூறினான்.
விக்ரம் சஞ்சனாவை பார்க்க அவள் கீழே குனிந்து கொண்டாள்.
எப்பவும் உன்னோட வாய் மட்டும் அடங்காதுல்ல! பாத்தியா? யாரையும் குறை சொல்லாத!.. அவளா தான் இருக்கா! உன் பேச்சைக் கேட்டு இங்கே நானும் என்னை நிரூபிக்க நினைச்சா இப்படித்தான் போய் முடியும்! அதனால தயவு செய்து உன் வாய மூடிட்டு இரு… முடிஞ்ச வரைக்கும் குதர்க்கமா பேசுவதை தயவு செய்து நிறுத்து அதை மட்டும் எப்பவும் மாற்ற மாட்டேங்கறியே! என்று கூறினான்.
கீதா அவர்களின் அருகில் வந்து ஹே டிரஸ் செமையா இருக்குடி! எங்க வாங்குன? சொல்லு நானும் இதே போல வாங்கணும்!
நானும் ஹரிணியும் இது மாதிரி ட்ரை பண்ணலாம்னு இருக்கோம்?..என்று கூற..
ராம், அதுக்கு நீ ஒல்லியா இருக்கணும் சொல்லிவிட்டு அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டார்கள்.
இன்பா , இங்கே இருக்கும் எல்லாத்துக்குமே டஃப் கொடுக்கிற அளவுக்கு வந்திருக்கா! உன் பொண்டாட்டிய நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாமும் யார்ரா அந்த பொண்ணு? யாருடா அந்த பொண்ணுன்னு ?நம்ம கிளாஸ்மேட்ஸ் எல்லாம் கேக்குறாங்க? சொல்லு மச்சி! போ அதுதான் உன் பொண்டாட்டின்னு சொல்லு! அவ கூட அவ பக்கத்துல போய் நீ நில்லு ! அவளுக்கு நீ மேட்ச் ஆகமாட்ட அந்த அளவுக்கு நீ மொக்கையா இருக்க..
சூர்யா, என்னை பழிவாங்கறியாடா?
இன்பா, நீ தான் பண்ணிட்டு இருக்க… நான் ஒன்னும் இல்ல!..
சூர்யா, இப்போ நான் என்ன பண்ணனும்?
ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்காதடா…
சூர்யா அருகில் இருந்த மதுவை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்.
இன்பா, டேய் என்ன பண்ணிட்டு இருக்க..
நான் என்ன பண்ரேன்? குடிக்கிறேன் அதுக்குத்தான் இந்த பார்ட்டியே என்று குடிக்க ஆரம்பித்தான்.
இன்பா , நீ எப்பவும் திருந்த மாட்ட போ!
சூர்யா, நான் மாறிட்டேன் மச்சி! என்னை என்ன நம்பு!
இன்பா, அப்ப போய் பேசு போ
சூர்யா நேராக அவளின் அருகில் சென்றான்.
மகிழினி!. என அழைத்தான்..
அவள் திரும்பி பார்க்க…
சூர்யா…?
தொடரும்….
1 comment
Lovely…