ராட்சச ராவணனின் சீதை அவள்

by Pradhanya kuzhali
625 views

Epi -5 

வீரா தீவிர முகத்துடன் இருந்தான். “யார் அந்த சீதா? சாதாரண ஒருத்தி… எங்கோ கடைக்கோடியில் இருந்தவள். இன்று வீராவை ஆட்டிப்படைக்கிறாள். ஆளாக்கு அளவுக்குக் கூட இல்லை… இதோ மீண்டும் மீண்டும் அவளைப் பார்க்கும் சூழல் ஏற்படுகிறது.”

பண்ணை வீட்டுக்கு வந்துவிட்டாள் சீதா. கைகளை பிசைந்து கொண்டு வாசல் பக்கம் நின்றாள்.

“ப்ச்… உள்ளே வர அழைக்கணுமா?” என வீராவின் குரல் காற்றைக் கிழித்துக்கொண்டு கேட்க, நடுக்கத்துடன் ஓட்டமும் நடையுமாக, “இதோ வரேன் சார்,” என்று நுழைந்தாள்.

“எதுக்கு வரச் சொன்னீங்க?” என வாய்விட்டுக் கேட்டுவிட்டாள்.

“என்ன?” என வீராவின் குரல் அவளைப் பயமுறுத்தியது.

“ஒண்ணுமில்ல சார்… நீங்க என்ன சொன்னாலும் கேட்பேன்,” என கைகளை பிசைந்து கொண்டு நின்றாள்.

“வா சீதா… உன்கிட்ட சில சோதனைகள் செய்ய வேண்டியிருக்கு,” என்றான் ஒரு அழுத்தமான குரலில். சீதா புரியாமல் திகைத்து நிற்க, வீராவின் அதிகாரமான கண்கள் அவளை ஊடுருவின.

“சார், அது…” என வியர்க்க விறுவிறுக்க நின்றவளின் கழுத்தைப் பார்த்தான். அவனது பார்வை சென்ற இடத்தைப் பார்த்ததும், அவனைப் பார்க்க முடியாமல் கீழே குனிந்து கொண்டாள்.

வீரா தொண்டையைச் செருமிபடி, “க்கும்… அந்த கழுத்துல என்னாச்சு? அதைக் காணோம்?” எனக் கேட்டவன் கைகள், அவளின் கழுத்தின் மேல் சென்றது. நெஞ்சுக் கூடு ஏறி இறங்க அவனையே அதிர்ச்சியுடன் பார்த்தாள். வீரா அதையெல்லாம் கண்டுகொண்டவனாகத் தெரியவில்லை; இதோ, அந்தப் பல்தடம் இருந்த இடத்தை அழுத்திப் பற்றினான்.

“அது… அது வந்து மேக்கப் போட்டு மறைச்சிருக்கேன்,” எனப் பேசுவதற்கே அத்தனை தயக்கமாக இருந்தது. அதை அருகில் இருந்த டிஷ்யூவை கொண்டு அழுத்தித் துடைத்து எறிந்தான்.

“ஹிஸ்…” எனச் சத்தமிட்டாள் பெண்ணவள்.

“என்னாச்சு?”

“அது… அது வந்து கொஞ்சம் வலிக்குது,” என்றாள் சீதா.

“அண்ணா!” என வெளியில் இருந்து சரவணனின் குரல் கேட்க, வீராவின் பார்வை சீதாவின் மீது படிந்து, “அன்னிக்கு நடந்ததுல நீ கன்சீவ் ஆகிட்டா என்ன பண்றது? அதுக்கு பிரிகாஷன் (Precaution) பண்ணனும்,” என்றவன் வேறு புறம் திரும்பிக்கொண்டு, “அப்புறம் கண்ட இடத்துல கடிச்சிருக்க…” என்றான்.

“ஹாங்!” என்று திடுக்கிட்டு நிமிர்ந்தாள் பெண்ணவள்.

வீரா பிடரியைக் கோதிவிட்டுக்கொண்டே, “அதுக்கு ரெண்டு பேரும் சேர்ந்து ஊசி போட்டுக்கலாம். இன்ஃபெக்ஷன் (Infection) எதுவும் ஆகக்கூடாது,” என்றான்.

அவளை மருத்துவர் சோதித்துவிட்டு, கர்ப்பத்தடை பிரிகாஷன் மாத்திரைகளைக் கொடுத்துவிட்டு, அதன் பின் டி.டி. (TT) போடத் தயாரானார். ஊசி குத்திய அந்த வினாடி, சீதா வலியில் “ஆ…” என முனகி, வீராவின் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள். அந்த ஒரு நொடி, அவளது மேக்கப் இல்லாத இயற்கையான வாசனையும், அவளது மென்மையும் வீராவின் இரும்பனைய இதயத்தை ஏதோ செய்தது. சீதா நிமிர்ந்து அவனது கண்களைப் பார்த்தாள். அந்த ‘ராட்சச’ மனிதனின் விழிகளில் அப்போது ஒரு மென்மை தெரிந்தது. அது ஒரு நொடி மட்டுமே!

அப்படியே நேரம் சென்றது. ஆறு மணிக்கு பண்ணை வீடு வந்து சேர்ந்தாள். இப்பொழுது இரவு மணி 9-ஐத் தாண்டும் நேரம். “சார், வேற எதுவும் வேலை இருக்கா?”

“என்னாச்சு?” என வீராவின் பார்வை கூராகப் படிய, “அது… என்னோட ஹாஸ்டல் 10 மணிக்கு மேலே க்ளோஸ் (Close) பண்ணிடுவாங்க, அதான். நான் எதுவும் தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சிடுங்க,” என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.

“ஒரு அஞ்சு நிமிஷம் இரு,” என்று உள்ளே சென்றவன், “சரவணன்!” என அழைத்தான்.

“அண்ணா, இதோ கிளம்புறேன். நான் போய் விட்டுட்டு வரேன்,” என ஓடியவனைத் தடுத்தான். சரவணன் ‘என்ன, ஏது?’ என்பதைப் போலத் திரும்பிப் பார்க்க, “நான்… நானும் வரேன்,” என்றான் வீரா.

இந்த வார்த்தைகள் சரவணனை ஒரு நொடி அசைத்துப் பார்த்தது. “அண்ணா எதுக்கு இந்த பொண்ணு விஷயத்துல இத்தனை தீவிரம் காட்டுறார்?” என்று தோன்றியது. ஆனால், வீரா என்ன செய்தாலும் அதற்குத் துணையாக நிற்பான் சரவணன். காரை ஸ்டார்ட் செய்து தயாராக வைத்திருந்தான்.

“நான் ஓட்டுறேன், நீ பின்னாடி போ,” என வீரா உத்தரவிட, எதுவுமே பேசாமல் பின்னால் சென்றுவிட்டான் சரவணன். சீதா காரின் பக்கம் வந்து நின்றவள், எங்கே ஏறுவது என்று தெரியாமல் நின்றிருந்தாள். வீராவின் கத்தி போன்ற பார்வை அவளைக் கிழிக்க, சரவணன் சுதாரித்துக்கொண்டு, “முன்னாடி உட்காருங்க சீதா,” என்று கூறினான்.

“அய்யோ…” என்று பயத்துடன் கார் கதவைத் திறந்தவள் ஏறி அமர்ந்து கொண்டாள். கார் ஒரு நிசப்தமான குகையைப் போல இருந்தது. வீரா ஸ்டீயரிங்கைப் பிடித்திருந்த விதமே ஒரு தனி அழகு. அவனது கையில் இருந்த நரம்புகள் புடைக்க, அவன் காரைச் செலுத்திய வேகம் அவனது மனநிலையைப் பிரதிபலித்தது.

“வலிக்குதா?” – அமைதியைக் கிழித்துக்கொண்டு வீராவின் குரல் கேட்டது.

சீதா திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். “இ… இல்ல சார். பரவாயில்லை.”

“நான் சொன்ன மாத்திரைகளைச் சரியா சாப்பிடணும்.”

இருவருக்குள்ளும் ஒரு அமைதி தோன்ற, சரவணன் தர்மசங்கட நிலையில் வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தான்.

“ஹான், கண்டிப்பா சாப்பிடுவேன், கவலை வேண்டாம். என்னால எந்தப் பிரச்சனையும் வராது சார்,” என்றாள்.

“ம்ம்… அப்புறம் அந்தத் தடம் மறையுற வரைக்கும் நீ அதுக்கு ஏத்த போல டிரஸ் பண்ணிக்க,” என்றான் வீரா.

“சரிங்க சார்… ஆனா… எதுக்காக எனக்கு இவ்வளவு செய்றீங்க? என்னை சந்தேகப்படுறதா தானே சொன்னீங்க?” எனத் தயங்கியபடி கேட்டாள் சீதா.

வீரா காரைச் சட்டென்று ஓரமாக நிறுத்தினான். அவளை நோக்கித் திரும்பி, “நீ என் சந்தேகப் பட்டியல்ல (Suspect list) தான் இன்னமும் இருக்கிற,” என்றான்.

அவனது அந்தப் பார்வை அவளைப் பஸ்பமாக்கிவிடுவது போல இருந்தது. சீதாவுக்கு அவனிடம் ஒரு ஈர்ப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை. அவன் ஒரு வேட்டைக்காரன் என்று தெரிந்தும், அந்த வேட்டைக்காரனின் குகைக்குள் இருக்கவே அவளது மனம் ஏங்கியது. அதெல்லாம் ஒரு நொடி தான்!

கார் மீண்டும் நகரத் தொடங்கியது. வெளியே மழை தூறத் தொடங்கியிருக்க, காருக்குள் இருந்த அந்த மௌனம் அவர்களுக்குள் ஒரு புதிய பந்தத்தை எழுதிக் கொண்டிருந்தது.

அதன்பின் சீதா தன் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தாள். ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓயாமல் வேலை செய்து கொண்டிருந்தாள். சீதா ஒரு மென்மையான தென்றல் போன்றவள்; யாருக்கும் தீங்கு நினைக்காத வெள்ளை உள்ளம். தன் அம்மாவின் மருந்துச் செலவுக்கும், தம்பியின் படிப்புக்கும் ஓடி ஓடி உழைக்கும் ஒரு சாதாரணப் பெண். வியர்வைத் துளிகள் அரும்பிய நெற்றியும், பயத்தில் படபடக்கும் பெரிய கண்களும், எப்போதுமே ஒருவிதமான சோகமும் அமைதியும் கலந்த முகமும் அவளுக்கே உரித்தானது. ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரிய ஹீரோயின்களுக்கு மேக்கப் போட்டாலும், அவளது இயற்கை அழகு யாரையும் ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைக்கும்.

நேற்றைய சம்பவம் தன் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடுமோ என்ற பயம் அவளை வாட்டியது. “அவர் சொன்னது போல நான் சிட்டியை விட்டுப் போக மாட்டேன். அந்தத் தப்பை நான் செய்யவே இல்லைன்னு கடவுளுக்குத் தெரியும்,” எனத் தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.

ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறதே? 

வீரா வாழ்க்கையில் இனி சீதா நிரந்தர அத்தியாயமாக இருக்க போகிறாள் பார்ப்போம். 

தொடரும்.. 

You may also like

Leave a Comment