ஈகோ பிடிச்சவனின் இதய தேவதை 33

by Pradhanya kuzhali
235 views

Epi -33 

சேர்மன் அறையின் பிரம்மாண்டமான தேக்கு மரக் கதவை மெதுவாகத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் சாவித்ரி. அறையெங்கும் ஏசியின் குளுமையையும் தாண்டி, சத்யமூர்த்தியின் பிராண்டட் மற்றும் பிரத்யேக வாசனை திரவியம், அறைக்குள் நுழைந்ததுமே மூக்கைத் துளைத்தது பெண்ணவளுக்கு.

அறையில் போடப்பட்டிருந்த பிரதான சுழல் நாற்காலியில் ஆள் இல்லாமல் இருக்க, “எங்கே ஈகோ பிடிச்சவன்?” எனப் பார்வையைச் சுழல விட்டாள் சாவித்ரி. வலதுபக்கம் இருந்த ராயல் வெல்வெட் சோபாவின் ஒரு பக்கம் கறுப்பு நிற கோட்-சூட், தூக்கி எறியப்பட்டது போலக் கிடந்தது.

சாவித்ரி பார்வையைக்கூராக்கிப் பார்த்தாள். அங்கே ஆளுமையான மனிதன் வலுவிழந்து, கண்கள் குழிவிழுந்து சோர்ந்து படுத்துக் கிடந்தான் சத்யமூர்த்தி. கடுமையான காய்ச்சலின் தகிப்பில் அவனது மூச்சுக்காற்று சூடாக வெளிவந்து கொண்டிருந்தது.

கதவு திறக்கும் சத்தம் ஏதோ கனவில் கேட்பதைப் போல இருந்தது. பெண்ணவளின் பாதச் சுவடுகள் மெல்ல அறையில் ஒரு சிறிய ஓசையைக் கொடுக்க, சத்யமூர்த்தி மெல்லக் கண் விழித்துப் பார்த்தான்.

அவனுக்கு எதிரில் அழகான, ஒயிலாக, கைகளில் சில கோப்புகளை ஏந்தி, காந்தக் கண்களில் அப்பட்டமான தவிப்பை மறைத்துக் கொண்டு சாவித்ரி நிற்பதைக் கண்டதும் அவனது இதயம் ஒரு நொடி திடுக்கிட்டது. ஆனால், அடுத்த விநாடியே மறுபுறம் திரும்பிக் கொண்டவன்,

“உங்களோட higher officials அறைக்குள் வரும்போது பெர்மிஷன் கேட்டு வரத் தெரியாதா? Inform பண்ணாம வந்திருக்கீங்க.. but knock பண்ணிட்டு வரணும்னு கூடவா தெரியாது உங்களுக்கு?” என ‘ஹக் ஹக்’ என்று இரண்டு முறை இருமினான்.

தான் பலவீனமாக இருப்பதை இந்த நொடி கூட அவளிடம் எள்ளளவும் வெளிக்காட்டிக்கொள்ளக் கூடாது என்பதில் அவன் தீவிரமாக இருந்தான். அவளைக் கண்டுகொள்ளாமல், சோஃபாவிலிருந்து தன் அசாத்திய உயரத்தோடு விறைப்பாக எழுந்து நேராகத் தன் சுழல் நாற்காலியில் வந்து அமர்ந்தான். காய்ச்சலின் நடுக்கத்தைத் தன் பற்களைக் கடித்து அடக்கியபடி, தன் கதிர்வீச்சுப் பார்வையால் அவளை ஊடுருவினான்.

“ம்ம்.. கேட்ட கேள்விக்கு பதில்?” எனத் தன் சிம்மக் குரலை அசாத்தியக் கம்பீரத்தோடு ஒலிக்க முயன்றான். ஆனால், அந்த வறண்ட குரலில் இருந்த கரகரப்பு அவனுக்கு ஒரு தடுமாற்றத்தைக் கொடுத்தது.

சாவித்ரி அவனது இந்த வீண் வீம்பையும் அதிகாரத் தொனியையும் பார்த்து உள்ளுக்குள் மெலிதாகச் சிரித்துக் கொண்டவள், அவனது அசைக்க முடியாத ஈகோவுக்குப் பின்னால் இருக்கும் அப்பாவியானவனை அவளது கூர்மையான புத்தி துல்லியமாகக் கணித்திருந்தது. அவனருகே மெல்ல அடிமேல் அடி வைத்து வந்தவள், கையில் இருந்த ஃபைல்களை மேசை மேல் வைத்தவள், “இந்த ப்ராஜெக்ட் ஃபைல்ல உங்க சைன் வேணும் சார். அதுக்காகத்தான் வந்தேன்,” என்றாள்.

சத்யமூர்த்தி எதையும் பேசாமல் கோப்புகளை வாங்கிப் புரட்டிப் பார்த்தவன், கையொப்பமிட்டு அவளிடம் நீட்டினான்.

சாவித்ரி கைகளைக் கட்டியபடி அவனைப் பார்த்தாள்.

“ப்ச்” என உச்சி கொட்டியபடி மேஜையின் மேல் வைத்தவன் தடுமாற…

“என்னாச்சு? நேருக்கு நேர் பார்த்து file கொடுங்க, வாங்கிட்டுப் போறேன். என்னமோ பொய் சொல்ற மாதிரி எதிரில் இருக்கவங்ககிட்ட eye contact வைக்க மாட்டிக்கிறீங்க?” எனக் கேட்டாள்.

“வந்த வேலை முடிஞ்சதில்லை, கிளம்புங்க,” எனச் சத்யமூர்த்தி உறுதியாகச் சொல்லிவிட்டு, சுழல் நாற்காலியில் வேறு புறம் திரும்பிக் கொண்டான். ஒரு சில நிமிடங்கள் கழித்துப் போய்விட்டாளா என்று பார்க்கத் திரும்பியவன் அதிர்ந்து போனான். அவனுக்கு முன்னால் நின்றிருந்த சாவித்ரி, சட்டென்று அவனது பதிலை எதிர்பார்க்காமல், தன் மென்மையான, குளிர்ந்த கரங்களை அவனது சுடுகின்ற நெற்றியில் பதித்தாள்.

சத்யமூர்த்தி அதிர்ச்சியுடன் திடுக்கிட்டு, “சாவித்ரி! கையை எடுங்க…” என அவளது கையைத் தட்டிவிட,

சாவித்திரியின் கண்கள் அப்பட்டமாக விரிந்தது. “என்னாச்சு உங்களுக்கு? உடம்பு நெருப்பா கொதிக்குது. இந்த நிலைமையிலயும் உங்களுக்கு இந்த அநாவசிய ஈகோவும் அதிகாரமும் தேவையா?” என அவள் கேட்டுக்கொண்டே போக… அவன் பார்வையோ தாழ்ந்தே இருந்தது. “வாங்க ஹாஸ்பிடல் போலாம், உங்களுக்கு ரெஸ்ட் தேவை…” என அவள் அழைக்க, “ப்ச்” என கையைத் தட்டி விட்டவன், “சொன்னா புரியாதா? How dare you touch me?” எனக் கோபத்தில் கத்தியிருந்தான்.

சத்யமூர்த்தியின் கண்கள் காய்ச்சலில் கலங்கியிருந்தது. விஷ்வாவின் நினைவில் உருகும் இவள், எதுக்கு தன் மேல் இத்தனை உரிமை எடுத்துக் கொள்கிறாள் என்கிற ஆதங்கமும், ‘அவள் என் தம்பியின் காதலி’ என்ற தவறான புரிதலும் அவனது நெஞ்சை முள்ளாகக் குத்தியது.

“நீங்க என்னையும் விஷ்வாவையும் பத்தி என்ன அசிங்கமா அஸ்யூம் (Assumption) பண்ணி வச்சிருக்கீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும். அந்த அரைகுறைப் புத்தியை அப்படியே புதைச்சு எரிச்சிடுங்க. எனக்கும் விஷ்வாவுக்கும் நடுவுல நீங்க நினைக்கிற மாதிரி எந்த விடயமும் இல்லை. விஷ்வா எனக்கு தேங்க்ஸ் சொன்னார் விவானைப் பார்த்துக்கிட்டதுக்கு… அவ்ளோதான். அண்ட் கோமாவில் இருந்து எழுந்துக்க உதவி செஞ்சதுக்கும் நன்றி சொன்னார்,” என்ற சாவித்ரி கைகளைக் கட்டிக்கொண்டு, “உங்க தம்பியையும் என்னையும் சேர்த்து வச்சுப் பார்க்கிற அளவுக்கு ஈகோ பிடிச்ச மூளை யோசிக்குது, அப்படித்தானே?” என்று அவனைப் பார்த்தாள்.

“அப்போ அந்த சந்துரு?” எனக் கரகரத்த குரலில் சத்யமூர்த்தி கேட்க…

“Seriously?” எனக் கண்களை விரித்து அவனைப் பார்த்த சாவித்ரி, “ம்ம்.. நீங்களே செக் பண்ணுங்க சந்துருவோட CV-ய… அவன் என்னை விட 2 years சின்ன பையன்,” என்றாள் முறைத்துக்கொண்டு.

சத்யமூர்த்தி அடுத்த நொடி அமைதியாகிப் போனான். என்ன பேசுவது என்று தெரியவில்லை. சாவித்ரி மெல்ல அவனது அருகில் நெருங்கினாள். அவன் தடுமாறியபடி இருக்க, “eye contact வரலையே? Eye-ல என்ன பிரச்னை சத்யமூர்த்தி சாருக்கு?” எனக் குழைவான குரலில் அவனது மோவாய் பற்றி நிமிர்த்தினாள்.

“Nothing, நீங்க போகலாம்,” எனக் கையைத் தட்டி விட்டிருந்தான் சத்யமூர்த்தி. அவனது முகத்தில் தடுமாற்றமும் தவிப்பும் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. ரோஜா முதன்முறையாக ஒரு ஆடவனின் மேல் பதிக்கிறாள் என்றால் அது சத்யமூர்த்தி மட்டுமே. இதுவரை அவள் எந்தப் பெண்ணையும் நிமிர்ந்து பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை… அவனது வயது முதிர்வு என்பது ஒயின் போலப் போதையைத் கொடுக்கிறது அவளுக்கு.

வயது முதிர்வு என்பதை அவள் வெறும் எண்களாகவும், சீரான திறமையான செயல்பாட்டினை, அதாவது maturity திறனைத்தான் பார்க்கிறாள்.

“வாங்க ஹாஸ்பிடல் போகலாம்…” எனச் சாவித்ரி அழைக்க…

“நான் பார்த்துக்கிறேன்,” என்றான் எடுத்த எடுப்பில்.

“எப்போ வீட்டுக்கு வரீங்க?”

“எனக்குத் தெரியும் எப்போ வரணும்னு,” என்று வெடுக்கெனக் கூறினான்.

“கடவுளே!” எனப் பெருமூச்சை விட்ட சாவித்ரி, “இதுக்கு மேல் என்ன பண்ணட்டும்? எல்லாத்தையும் explain பண்ணி சொல்லிட்டேனே?” எனச் சத்தமான குரலில் அவள் கேட்டுவிட, “எனக்கு எதுவும் புரியல, நீங்க கிளம்புங்க,” என மீண்டும் கூறினான்.

“ஏன் போகணும்? போக முடியாது… எதுக்கு கன்னத்தைப் பிடிச்சீங்க?” எனச் சாவித்ரி விடாப்பிடியாகக் கேட்டாள்.

“தெரியாமப் பிடிச்சுட்டேன், போதுமா? Leave me alone!” என்று கடுமையான குரலில் கத்தினான்.

சாவித்ரி சாதாரண பார்வையுடன், “ஓகே, நான் போறேன்,” என்றவள், அனைத்து கோப்புகளையும் எடுத்துக்கொண்டு அவன் பக்கம் வந்தவள், “உங்களுக்கு என்னை பிடிச்சிருக்குன்னு நினைச்சேன். அதானே தெரியுது உங்களுக்கு என்னை பிடிக்கலன்னு… சரி, ஒரு நல்ல பையனா தேடிக்கிறேன், ஒன்னும் பிரச்னை இல்ல,” எனச் சிறிய குரலில் அவன் காது படவே பேசினாள்.

அவள் இரண்டு எட்டுகள் வைப்பதற்குள், “Yes, I adore you, I desire you, I can’t be without you. ஆனால் இது ஒத்து வராது, என்னோட age…” என்று அவன் தடுமாற… அவனருகில் நெருங்கியவள், “You didn’t grow old. You matured,” என்றவள், ஒரு நொடி நிறுத்தி, “like fine wine,” என்று அவனது வறண்ட உதடுகளைப் பார்த்தாள்.

“உண்மையா சொல்றியா, பொய் சொல்றியா?” என அவளின் அருகில் நெருங்கினான். சாவித்ரி அவனது அருகில் நெருங்கியவள் ஒரு தவிப்பான மூச்சுடன், “நீங்க இங்கிலீஷ்ல சொன்னது எனக்கும் புரியல, அதைத் தமிழ்ல சொல்லுங்க… நீங்க கேட்ட கேள்விக்கு நான் தமிழ்ல பதில் சொல்றேன்,” என்றாள்.

சத்யமூர்த்தியின் கைகள் தானாக அவளின் இடையைப் பற்றி இழுத்தது. ‘ஹக்’ என அவனை ஒட்டி நின்றாள். தேகம் இரண்டும் உரசிக்கொள்ள, சாவித்ரி சத்யமூர்த்தியின் அருகிலேயே இருக்கத் தவம் புரிய நினைத்தாள். அவனோ அவளின் கன்னம் பற்றி, “எப்பவும் வேணும்னு தோணுது… நீ வேணும்னு தோணுது, பக்கத்தில இருக்கணும்னு தோணுது. நீ அடிச்சது வலிக்கல… மத்தவங்ககிட்ட நெருக்கமா இருந்தால்தான் வலிக்குது,” என்றான்.

“நான் கேட்டது இது இல்லையே?” என அவனது முகத்தைப் பார்த்தாள். இருவரும் ஒட்டி இருந்தார்கள். சாவித்ரி அவனது உதட்டுக்கு அருகில் வந்தாள்.

“பிடிச்சிருக்கு…” என்று சத்யமூர்த்தி ஒற்றை வார்த்தையில் முடிக்க…

“எனக்கும் பிடிச்சிருக்கு… இந்த ஈகோ பிடிச்சவனை,” என்றாள்.

இருவரும் ஒத்திசைந்து கொடுக்கும் முத்தம் எவ்வளவு இன்பமாக இருக்குமோ, அந்த இணக்கமும் இன்பமும் உல்லாசமும் இதோ அனுபவிக்க ஆயத்தமானார்கள்.

சத்யமூர்த்தி இன்று அத்தனை சோர்வாக இருந்தாலும், அதைவிட அழகாக இருந்தான். ஒயிட் shirt மற்றும் சாண்டல் பாட்டம். சாவித்ரி அவனது சட்டை காலரைப் பற்றி இழுத்து முத்தமிட்டாள். சத்யமூர்த்தி முத்தமிட்டுக்கொண்டே அவள் மேலேயே மயங்கிச் சரிந்தான்.

நெஞ்சமெல்லாம் பதட்டத்தில் நடுங்கியது பெண்ணவளுக்கு. “கதிர்!” என்று C-ப்ளாக் அதிரக் கத்தினாள். அரக்கப்பரக்க கதிர் உள்ளே ஓடி வந்தான்.

“பாசுக்கு fever அதிகமா இருக்கு. Rehydration ஆகி இருக்கும், weak-ஆக இருக்கார். வாங்க, உடனே ஹாஸ்பிடல் போலாம், தூக்குங்க!” என உத்தரவிட்டாள். அந்த இடமே பரபரப்பானது. சத்யமூர்த்தி ஹாஸ்பிடல் போகும் வழியிலேயே கண் விழித்துக்கொண்டான். “ஒண்ணுமில்ல, வண்டிய ஸ்கூலுக்கு விடு கதிர்,” என எழுந்திருக்க முயன்று, நெற்றியைத் தேய்த்துக்கொண்டு கூறினான்.

“இல்ல பாஸ், நம்ம ஹாஸ்பிடல் போயிட்டு வந்திடலாம்,” என அவனிடம் திட்டு வாங்கிக்கொண்டே கூட்டிச் சென்றான். டாக்டர் அவனைத் திட்டித் தீர்த்து, “என்ன சார், 9 branch ‘little steps day care’, ‘விஷ்வா விகாஸ் primary ஸ்கூல்’ நடத்துறீங்க. நீங்களே இப்படி careless-ஆக இருந்தா உங்க ஸ்கூலுக்கு வர்ற parents-க்கு நல்லா குழந்தைகளைப் பார்த்துக்கோங்க அப்டின்னு யாரு advice பண்ணுவா?” என்று சரமாரியாகக் கேட்டார்.

சத்யமூர்த்தி பதில் பேசாமல் அமர்ந்திருந்தான். ORS drink குடிக்க வைத்து, அவனுக்குத் தேவையான மாத்திரைகளைக் கொடுத்த டாக்டர், “வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோங்க சார்,” என்றார்.

அவ்வளவுதான், சத்யமூர்த்தி கோபமாக முறைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டிருந்தான். “என்னாச்சு பாஸ்?” என கதிர் வேகமாக நடந்தான். “ஒன்னும் ஆகல…” என முகத்தைத் தூக்கிக்கொண்டு வேகமாகப் கிளம்பியிருந்தான்.

கதிர் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. இருவரும் நேராகப் பள்ளிக்குச் சென்றார்கள். சாவித்ரி அவளது பணியை வழக்கம் போலத் தொடர்ந்து கொண்டிருந்தாள். ஆனால் மற்ற அனைத்து ஊழியர்களும், “சத்யமூர்த்திக்கு என்ன ஆச்சோ, ஏது ஆச்சோ?” எனப் பதட்டத்தில் இருந்தார்கள். அவர்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டு இருந்தார்கள்.

சத்யமூர்த்தி நேர்த்தியாக வந்து இறங்கியதும் குழுவாக நின்று பார்த்தார்கள். “இங்கே என்ன வேடிக்கை? வேலை செய்யாம என்ன பண்றீங்க எல்லாரும்?” என கடுமையான குரலில் கர்ஜித்தான். அவ்வளவுதான், தெறித்து ஓடியிருந்தார்கள் அனைவரும்.

சாவித்ரி அடக்கப்பட்ட சிரிப்புடன் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள்.

“சாவித்ரி!” எனச் சத்தமிட்டு அழைத்தான் சத்யமூர்த்தி. அவனது கண்களில் குறும்பு தெரிந்தது.

“எஸ் சார், சொல்லுங்க?” என அவனுக்குச் சளைக்காமல் பதில் கொடுத்தாள்.

“அந்த அபாகஸ் file எடுத்துட்டு வாங்க…”

“அது கதிர் கிட்ட இருக்கு சார்!” என அவனுக்கு ஈடுகொடுத்தாள். அங்கு நடக்கும் கபட நாடகத்தை அறியாமல் அனைத்து ஊழியர்களும் பயத்துடன் சத்யமூர்த்தியை நோக்கினார்கள்.

கதிர் திடுக்கிட்டுச் சாவித்திரியைப் பார்க்க, சத்யமூர்த்தி பிடரி முடியைக் கோதிவிட்டபடி, “மேடமோட file-அ கொடுத்து அவங்களையும் அனுப்புங்க,” என்றுவிட்டு வேகமாகச் சென்றான், சிறிய காந்தப் புன்னகையுடன்…

அடுத்த அரை மணி நேரத்தில் பள்ளி முடிந்தது. அவள் இன்னும் வந்த பாடில்லை… அனைவரும் கிளம்பி ஒவ்வொருவராகச் செல்ல, சத்யமூர்த்தி துடிப்புடன் கீழே இறங்கியவன் அவள் சென்றுவிட்டாளா என்று பார்க்க, சாவித்ரி அவனை கண்களால் “வெளியே வெயிட் பண்றேன்,” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

சத்யமூர்த்தி தலையைக் கோதிக்கொண்டு உதட்டுக்குள் உற்சாகப் புன்னகையைப் படரவிட்டு, அவனது காரை ஓட்டிக்கொண்டு வெளியேறினான்.

சாவித்ரி மெதுவாக நடந்து சென்று கொண்டிருக்க, அவளின் அருகில் சென்று நிறுத்தியவன் கண் இமைக்கும் நொடியில் உள் இழுத்துக்கொண்டு நேராக அவனது அப்பார்ட்மெண்ட்க்குப் பறந்தான்.

“காய்சல் இப்போ எப்படி இருக்கு?” எனத் தொட்டுப் பார்த்தாள். அனல் தெரிந்தது.

“சத்யமூர்த்தி…?”

தொடரும்…

You may also like

Leave a Comment