அத்தியாயம் -97
நிலா என்ன நடக்குது? இந்த நாய் எப்படி இங்கே வந்தான்? டேய் என முன்னால் வந்தான் நிவாஸ்.
நிதின் கோபத்துடன் இன்னொரு பக்கம் அவன் கழுத்தை பிடித்து நெருக்க..
மச்சான்ஸ் சொல்றத கேளுங்க! உங்க பொண்டாட்டி முன்னாடி வாங்கி கட்டிக்காதீங்க! என்னடா பண்ணுவ? என நிதின் அடிக்க பாய, வேகமாக இருவரையும் தள்ளி விட்டான் ருத்ரன்.
இருவரும் தங்களை நிலை படுத்தி கொண்டு தள்ளாடியபடி நிற்க.. “ஹரிணி அக்கா முன்னாடி நீங்க அவமான பட வேணாம்னு நான் நினைக்கிறேன்.” ருத்ரன் அவர்களை துச்சமாக பார்த்து விட்டு சட்டையை சரி செய்தவன்.
“நிலா சொல்லு டி!!” என அதட்டினான். நிலா!! என spr அழைக்க.. மா நான் அவர் கூட போறேன். என்றாள் நிலா. அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்க, கூட்டிட்டு போயிடு தீரா என ஹரிணி தன் மகனின் முதுகை தட்டி விட்டு கொண்டே வந்தாள்.
கண்மணி வயிற்றை பிடித்து கொண்டு நின்றிருக்க, ஹரிணி உள்ளே போடி என நிதின் கத்தினான். ஹரிணி அவனை சிவந்த விழிகளில் பார்த்தாள். ருத்ரன் வெற்றி களிப்புடன் spr, நிதின், நிவாஸ் முன்னால் நிலாவின் தோல் மேல் கையை போட்டு வளைத்து பிடிக்க..
அவளோ கைகளை தட்டி விட்டாள். நிலா உன்னை ப்ளாக் மெயில் பண்ணானா? மிரட்டினானா? சொல்லு பாப்பா! என நிவாஸ் வர..
இப்போ போறேன். ப்ரோபெர் டைவர்ஸ் வாங்கிட்டு வரேன் என்றாளே பார்க்கலாம். ருத்ரன் அவளை அடக்கப்பட்ட கோபத்துடன் பார்க்க.., டேய் என் தங்கச்சிய வற்புறுத்தி கூட்டி போறயா? வெட்கம் கெட்டவனே? என நிதின் முன் எட்டுகள் வைக்க..
ருத்ரன் அவர்களை பார்த்து வில்ல தனமாக சிரித்தவன். ஆமா வற்புறுத்தி தான் கூட்டிட்டு போறேன். ப்ரோபெர் டைவர்ஸ் இந்த ஜென்மத்தில் இல்ல இனியும் இல்ல ஆனாலும் பாருங்க! அவள் என் கூட வரமாட்டேன்னு சொல்லவே இல்லையே! என SPR முகத்தை பார்த்து கூறினான். நிலா கண்களில் நீர் கோர்க்க நின்றாள்.
SPR கோபத்துடன் முன்னால் வர, ருத்ரன் அவளை இறுக்கி அணைத்தபடி, அவர்களின் முன்னால் சொடக்கு போட்டவன். பெரிய மனுஷன்! என் பொண்டாட்டிக்கு அப்பான்ற காரணத்துக்காக உங்களை… என்று நிறுத்தியவன். மாமி முன்னாடி என் கிட்ட வாங்கி கட்டிக்காதீங்க!! என்றான்.
SPR ஒரு நொடி தயங்கி நின்றார். டேய்!! என நிலா பொங்கினாள். தன் தந்தையை அனைவர் முன்னும் அவமான படுத்துகிறானே. நிதின் அவனது துப்பாக்கியை எடுக்க..
ருத்ரன் ஒரு பெரு மூச்சுடன் தேஜு பக்கம் திரும்பி, மாமி உங்க பேரன்கள் அப்பா இல்லாம கஷ்ட படனுமா? என கேட்டான். என்னை கொல்லுவியா ராஸ்கல் என நிதின் டிரிக்கர் செய்ய.. பிளான் நல்லாருக்கே!! நீங்க என்னை கொன்னா நீங்களும் தான் சாவீங்க!! என்றான் ருத்ரன்.
என்னடா பண்ணுவ? என நிவாஸ் முன்னால் வர.. டேய் நீங்க ரெண்டு பேரும் சின்லயே இல்ல! போய் உங்க பொண்டாட்டிங்க கூட வாழ பாருங்க!! என்றான் ருத்ரன் சாதாரணமாக..
நிலா, தேஜு, கண்மணி என மூவரும் அதிர்ச்சியுடன் ருத்ரனை பார்த்தார்கள். டா என்று சொல்கிறான். சர்வ சாதாரணமாக…
இந்த ருத்ரன். உங்க பொண்டாட்டி முன்னாடி அவமான பட நீங்க ரெடி அப்டின்னா எனக்கு பிரச்னை இல்ல. உங்களுக்கு என்ன ம** டா மரியாதை கொடுக்கணும்? மூடிட்டு நில்லுங்க. நான் என் மாமனார் கிட்ட பேசிக்கிறேன் என்றவன் SPR பக்கம் திரும்பி நான் இப்போ குடும்பஸ்தன் ஆகிட்டேன். பாருங்க எனக்கே ரெண்டு குழந்தை!! என்றான் .
அனைவரும் புரியாமல் பார்க்க, நிவாஸ் கோபத்துடன் பார்த்தீங்களா பா! இவன் நல்லவன்னு கல்யாணம் பண்ணி வச்சீங்க! வேற எங்கேயோ செட் அப் பண்ணி இருக்கான்.
அய்யோ முட்டாள் மச்சான்! புரியாமல் பேசிட்டு இருக்காதீங்க!! நான் குழந்தைன்னு சொன்னது இதோ இந்த வளர்ந்த குழந்தைய என நிலாவை கூறினான்.டேய் நீ ரொம்ப ஓவரா போற!! என நிதின் பற்களை கடிக்க.. அதுக்கும் மேலேயும் போவேன் என்றான் சளைக்காமல்..
நிலா அவனது பிடியில் இருந்து விலக போராட.. பாருங்க!! என்னோட பெரிய குழந்தை எப்டி அடம் பண்றான்னு.. என்றவன்
என் செல்லம்ல என் தங்கம்ல என நிலாவின் நெற்றியில் முத்தமிட்டான். கண்மணி வாயை பொத்தி கொண்டு பார்க்க.. நிலாவும் அதே பதட்டத்துடன் பார்த்தாள். இவன் இந்த அளவுக்கு extreme செல்வான் என யாரும் நினைக்கவில்லை.
ருத்ரன் என தேஜு அழைக்க..
மாமி உங்க பொன்னை ரொம்ப குழந்தையா வளர்த்துட்டீங்க!! சூது வாது தெரியல! ஆனால் கவலை படாதீங்க நான் பார்த்துக்கிறேன். என்றவன் அவளை அணைத்தபடி முன்னால் நடந்தான்.டிவோர்ஸ் நோட்டீஸ் வரும் என நிதின் கூற.. அட போங்க மக்கு மச்சான் என சென்று விட்டான் ருத்ரன்.
அனைவரும் ஸ்தம்பித்து நின்றார்கள். உங்க பொண்ணு நிஜமாவே அவனை விரும்பி இருக்காளா! நம்மளை நல்லா ஏமாத்திட்டா!! எல்லாம் உங்களால டாடி!! அவன் எவ்ளோ பண்றான்? இதை இப்படியே சும்மா விட கூடாது. என நிவாஸ் கொந்தளித்து கொண்டே பேச..
நிதின் சோர்வுடன் தன் தம்பியை பார்த்தான். SPR எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டார். கண்மணி ஒரு பெருமூச்சுடன் அவளரைக்கு சென்றாள்.
***
டேய் என்னடா அவனை இன்னும் காணோம்? என ராகேஷ் பதற்றத்துடன் நடந்தான். வருவான் மச்சி!! என்றான் கிஷோர். இவன் கூட வந்தாலே ஆபரேசன் தியேட்டர் வெளியே இருக்க மாதிரி திக் திக்குன்னு இருக்கு. என ராகேஷ் கூற, அனந்து கூட ஆமோதித்தான்.
நம்ம எதுக்கும் ரெடியா இருக்கலாம் டா!! என்றான் கிஷோர்.
உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? என நிலா உடைந்த குரலில் கேட்க..
நிறைய இருக்கு!! இதை சொல்றது? Bed ரூம்மா இருந்தால் சொல்றத விட உன்னை feel பண்ண வச்சிருப்பேன். என்றான் சர்வ சாதாரணமாக…
ச்சீ!! நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரியலையா? நீங்க பண்ற எல்லாத்துக்கும் பின்னாடி ரொம்ப அனுபவிப்பீங்க! உங்களை நான் சும்மா விட மாட்டேன்.
ம்ம் சும்மா விடாத!! என்ன வேணாலும் பண்ணு! ஆனால் என் கூட என் பக்கத்தில் இருந்து பண்ணு! No problem. எல்லாத்துக்கும் நான் ரெடி தான் என்றான் ருத்ரன்.
நிலா அதிர்ச்சியுடன் அவனை பார்க்க.. இப்படி சும்மா சும்மா freeze ஆகுற ரியாக்ஷன் கொடுக்காத!! என அவனது கைகள் தோல் பட்டையில் இருந்து இடைக்கு இறங்கியது. கைய எடுங்க அருவருப்பா இருக்கு!! அப்படியா!! என்று அழுத்தமாக விரல்களை எங்கோ கொண்டு சென்றான்.
நிலாவின் கண்களில் நீர் வழிய.. வீட்டுக்கு வாடி உனக்கு இருக்கு என கோபத்துடன் விலகினான். டேய் வந்துட்டான் டா!! என கிஷோர் கூற.. நான் கூட செத்துட்டானோன்னு நினைச்சேன். வந்துட்டான். என ராகேஷ் கூற..
இது மட்டும் அவன் காதுல கேட்டது உன்னை அவன்…என அனந்து கூற..
டேய் பின்னாடி உட்காருங்க என காரில் ஏறியவன் கதவை அவளுக்கு திறந்து விட்டான். ஹாய் டாக்டர் என கிஷோர், ராகேஷ், அனந்து, சேத்தன் என்று அனைவரும் பேச வர.. ருத்ரன் முறைத்து பார்த்தான் அனைவரையும்.
டேய் ஏறுங்க டா இல்லன்னா விட்டுட்டு போயிடுவான் என சேத்தன் கூற.. தடாலடியாக அனைவரும் பின்னால் ஏறி கொண்டார்கள். நிலாவின் கண்ணீர் மூக்கின் நுனியில் சொட்டி கொண்டிருக்க, அதை துடைத்து விட்டவன். வாய கெஞ்சிட்டு இருக்காத! இப்போ ஒன்னும் குடி முழுகி போகல!! நான் சொல்றத மீறி அழுத! விளைவுகள் பின்னாடி மோசமா இருக்கும் என்றான்.டேய் எதுக்கு டா இப்படி ஹார்ஷா பேசுற? ருத்ரன் ரிவர் வியூ மிரர் வழியாக பார்த்தபடி அடுத்த வார்த்தை பேசினீங்க!! வெளியே தள்ளிட்டு போயிடுவேன். என கூறி விட்டு வண்டி ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.
இதோ ஏர்போர்ட் வந்தாகிவிட்டது. ராகேஷ், அனந்து, சேத்தன், கிஷோர் என அனைவரும் ரயில்வே ஸ்டேசனில் இறங்கி கொள்ள முயற்சி செய்ய, எதுக்கு டா இறங்குறீங்க? இப்போ என்ன கழட்ட போறீங்க? லீவ்ல தானே இருக்கிங்க. என் பையனுக்கும் என் பொண்டாட்டியையும் பத்திரமா கூட்டிட்டு போகணும். அதுக்கு பாடிகார்ட் வேணும். அதுக்கு? என சேத்தன் கேட்க.. மூடிட்டு வாங்க டா!! என முன்னால் நடந்தான்.
புரியலையா? நம்ம பாடி கார்ட் வேலை பார்க்கனுமாம். அதை தான் சொல்றான். என ராகேஷ் முன்னாள் நடந்தான்
.ம்ம் கழுதைக்கு வாக்கபட்டா கணச்சு தான் ஆகணும். டேய் நம்மையே இப்படி அதிகாரம் பண்றான். இவன் கூட அந்த டாக்டர் பொண்ணு ரொம்ப கஷ்டம். என பேசி கொண்டே சென்றார்கள்.
இதோ பெங்களூர் வந்து சேர்ந்தார்கள். மச்சான்! நாங்க போலாமா? வீடு வரையும் வந்து விட்டு போங்க!! என்று விட்டு நிலாவை அணைத்தபடி வண்டியில் ஏறினான்.
அவர்கள் வீடு வந்து சேர காலை எட்டு மணியானது. இன்பா போன் பேசியபடி வர வெளியே கார் சத்தம் கேட்டது. தீரா நாங்க என நண்பர்கள் ஆரம்பிக்க..
ம்ம் கிளம்புங்க!! ஈவினிங் மீட் பண்ணலாம் என பொடனியுடன் சாத்தி அனுப்பி வைத்தான். ஹே அவன் வந்துட்டான். என இன்பா கூற.. மா என்று கத்தினான் ருத்ரன்.
கண்டிப்பா அவங்க நிலாவை விட்டிருக்க மாட்டாங்க. இவன் என்ன பண்ண போறானோ? என இன்பா கூறி கொண்டே நெற்றியை நீவினார். விவேகா பதற்றமாக வெளியே சென்றார். ராகவ்!! என உற்சாக குரலில் மீண்டும் உள்ளே வந்தவர் கிச்சன் சென்று ஆரத்தி தயார் செய்ய போக.. அதற்குள் ருத்ரன் அவளுடன் உள்ளே வந்து விட்டிருந்தான்.
எப்டி டா? என இன்பா கேட்க..
நிலா குழந்தையுடன் கீழே இருந்த படுக்கை அறைக்கு வேகமாக சென்று விட்டாள்.
ருத்ரன் நிம்மதி பெரு மூச்சுடன் ஷோபாவில் அமர்ந்தான். விவேகா உற்சாகத்துடன் நிலாவின் அறைக்குள் சென்றார்.
டேய் எப்டி டா? என இன்பா கேட்க..
ருத்ரன்..?
தொடரும்..