உயிரே-5
அன்புவோட முகம் கோபத்துல சிவந்திருச்சு. “சந்தானம்! உனக்கு வேலையில கொஞ்சம் கூட அக்கறையே இல்லையா? நான் பேபிய கூட்டிட்டு வரச் சொன்னா, யாரையோ கூட்டிட்டு வந்து நிறுத்தியிருக்க… நான்சென்ஸ்!”ன்னு கத்தினான்.
சந்தானம் பதறிப்போய், “பாஸ்… என்ன சொல்றீங்க?”ன்னு புரியாம கேட்டான்.
அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்குறத கவனிக்காம, செவ்வந்தி, “சரிங்க, நான் கிளம்புறேன்”னு சொல்லிட்டு நகரப் போனா.
அந்தக் குரலைக் கேட்டு அன்பு செல்வன் பட்டெனத் திரும்பிப் பார்த்தான். அங்கே செவ்வந்தி நின்னுட்டு இருந்தா. அவளப் பார்த்ததும் ஒரு நிமிஷம் அப்படியே உறைஞ்சு போனான்.
சந்தானம் பதட்டமா, “மேடம் ப்ளீஸ் மேடம்!”னு கெஞ்சினான்.
செவ்வந்தி அவனை முறைச்சா. அவளோட முகம் கோபத்துல இருக்கமா இருந்துச்சு.
“மேடம், பாஸ் உங்கள ‘பேபி’ன்னு நினைச்சுட்டாரு! மத்தபடி ஒன்னும் இல்ல. தப்பா நினைக்காதீங்க ப்ளீஸ் மேம்!”
அப்பதான் அன்புவுக்கு நிலைமை புரிஞ்சது. தன்னை உடனே சரி செஞ்சுகிட்டு, ஒரு தர்மசங்கடமான புன்னகையோட, “சாரி…”ன்னு சொல்லிக்கிட்டே ரெண்டு காதையும் பிடிச்சு, கண்ணாலயே ‘மன்னிச்சுடு’ன்னு கெஞ்சினான்.
செவ்வந்தி அவனை ஒருதடவை முறைச்சுட்டு, முகத்தை டக்குனு திருப்பிக்கிட்டா.
அப்ப அங்க வந்த சிவயர், “செவ்வந்தி! இந்த வாரமே உன்ன ஆள காணோமே! வா டா கண்ணு!”ன்னு பாசமா கூப்பிட்டாரு.
“சாமிக்கு பூ போடப் போறாங்க சாமி! அதான் கொல்லையம்மன் கோவிலுக்கு தினமும் போறேன்,”னு பணிவா சொன்னா செவ்வந்தி.
“அப்படியா! ரொம்ப நல்லது! உன் கைராசி, இந்த கட்டிடம் எந்தத் தடங்கலும் இல்லாம நல்லபடியா முடியும் பாரு டி!”
இதைக் கேட்டதும் அவளோட உதட்டுல ஒரு சின்ன மென்னகை பூத்துச்சு.
“ம்ம்… உனக்கு சொல்லித் தரணுமா என்ன? எல்லாமே தெரியுமே! வா வா!”ன்னு கூப்பிட்டாரு ஐயர்.
அவளும் ஐயர் பக்கத்துல போய், துப்பட்டாவ ஒரு பக்கமா ஒதுக்கிப் போட்டுட்டு, பூஜைக்குத் தேவையான எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பிச்சா.
செவ்வந்தி அவ்வளவு நேர்த்தியா ஒவ்வொரு வேலையையும் செய்யுறத, அன்பு செல்வன் வெச்ச கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டே இருந்தான்.
ஐயர் சொல்லச் சொல்ல, அஞ்சு குடம் தண்ணிய மேற்குப் பக்கமா எடுத்து வெச்சா. உடனே அன்பு அவ பக்கத்துல போய், “நான் உதவி செய்யுறேன்,”னு சொல்லிக்கிட்டே, “சாரி!”ன்னு மெதுவா சொன்னான்.
“ஒன்னும் தேவையில்லை!”ன்னு முறைச்சுக்கிட்டே அந்தப் பக்கம் திரும்பினா அவ.
ஐயர், ஒன்பது செங்கற்களை தெற்கு வடக்கா அடுக்கி வைக்கச் சொல்ல, அங்கேயும் அன்பு தானா போய் நின்னான்.
“இப்போ எதுக்கு இங்க வந்து நிக்கிறீங்க?”ன்னு எரிச்சலா கேட்டா செவ்வந்தி.
“தம்பி நீங்கதான் இன்ஜினீயர் சாரோ?”ன்னு ஐயர் கேட்டாரு.
“ம்ம்… ஆமாங்க!”
“அப்போ இந்தக் குழந்தைகூட சேர்ந்து அந்தக் கல்லை எடுத்து வையுங்களேன்!”
இதைக் கேட்டதும் அன்பு முகத்துல ஒரு கள்ளப் புன்னகை. சந்தானம் இதையெல்லாம் ஒரு மாதிரி அதிர்ச்சியா பார்த்துட்டு இருந்தான்.
“இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க!”ன்னு முணுமுணுத்துகிட்டே கேட்டா செவ்வந்தி.
“ஹேய்… இல்ல!”ன்னு சமாளிச்சான்.
ஐயர் தலைவாழை இலையை விரிச்சு, ரெண்டு பக்கமும் குத்துவிளக்கு வெச்சு, “செவ்வந்தி, இதுக்கு திரி போட்டு ஏத்தி வைம்மா!”ன்னு சொன்னாரு. அவளும் அவர் சொன்ன மாதிரியே குத்துவிளக்கை ஏத்தி வெச்சா.
இலைக்கு நடுவுல விநாயகரை வெச்சு, பூஜை பொருட்களை எல்லாம் எடுத்து வைக்கச் சொன்னாரு ஐயர்.
“சரி, இந்த மனையோட சொந்தக்காரர் யாரும் இருக்காளா?”
“இல்ல சாமி, இது எங்க சார் ஓட பிரைவேட் ப்ராஜெக்ட்!”னு சந்தானம் சொன்னான்.
“ம்ம்… அப்போ மனை குடும்ப உறுப்பினர்கள்ல யாரு பாலக்கால் போடணும்? யாரு நிக்கிறீங்க?”
சந்தானம் பேச வர்றதுக்குள்ள அன்பு முன்னால போய் நின்னான்.
செவ்வந்தி ஓரமா ஒதுங்கி நின்னுக்கிட்டா. அன்பு ஐயரைப் பார்த்து, “நான் மட்டும்தானா சார்? வேற யாரும்?”னு கேட்கும்போதே, அவனோட பார்வை இயல்பா செவ்வந்தி பக்கம் போச்சு.
“சந்தானம்! சொல்லுங்க!”
சந்தானத்துக்கு இங்க என்ன நடக்குதுன்னே புரியல. “மேம்… வாங்க!”
“நீங்க போங்க!”
“மேம் ப்ளீஸ்!”
“செவ்வந்தி! வாடா மா!”ன்னு ஐயரே கூப்பிட்டாரு.
“ம்ம்… வரேன் சாமி!”ன்னு சொல்லிக்கிட்டே அன்புவை முறைச்சுட்டு, அவன் பக்கத்துல வந்து நின்னான்.
“ரெண்டு பேரும் வடக்கு பார்த்து நில்லுங்கோ!”
அவங்க ரெண்டு பேரும் திரும்பி நின்னாங்க. பூஜைகள் ஒவ்வொன்றாக நடந்தன. ஐயர் சொல்லச் சொல்ல, அன்பு எல்லாத்தையும் செஞ்சான். மொத்தத்துல, பாலக்கால் நடுற பூஜை எந்தத் தடங்கலும் இல்லாம நல்லபடியா முடிஞ்சது.
ஐயர் எழுந்து, “எல்லாமே நல்லதா நடக்கும்!”னு ஆசீர்வாதம் பண்ணாரு.
அன்பு ரெண்டு 500 ரூபாய் தாளை எடுத்து சந்தானத்துக்கிட்ட கொடுக்க, அவன் அதை தாம்பூலத் தட்டுல வெச்சு ஐயர்கிட்ட நீட்டினான்.
“செவ்வந்தி!”
“சாமி!”
“நீ வாங்கிக் கொடும்மா!”
“சாமி?!”
“வாடா!”
செவ்வந்தி சந்தானத்தோட கையில இருந்து அதை வாங்கி, ஒரு சின்னப் புன்னகையோட ஐயர்கிட்ட நீட்டினாள்.
அவர் அதை நெத்தியில ஒத்திக்கிட்டு, “நல்லது,”ன்னு வாங்கிட்டு, “அப்போ நான் விடைபெறுகிறேன்,”னு சொல்லிக் கிளம்பிட்டாரு.
அவர் போனதும், அன்பு செல்வன் அவளை ஒரு வார்த்தைகூடக் கண்டுக்காம, காரை எடுத்துட்டு சர்ருனு கிளம்பிட்டான். அத செவ்வந்தியும் பார்த்தா.
அதுக்கப்புறம் அவளும் கிளம்ப, சந்தானம் அவ பக்கத்துல வந்து, “ரொம்ப தேங்க்ஸ் மேடம்!”னு சொன்னான்.
“ம்ம்… இட்ஸ் ஓகே,”ன்னு சொல்லிக்கிட்டே காதோரமா முடி வழிஞ்சத ஒதுக்கிக்கிட்டா.
“வாங்க மேடம், உங்க கடையில கொண்டுபோய் விடுறேன்.”
இதைக் கேட்டதும் அவளுக்கு கோபம் வந்துருச்சு. “அது கடை இல்ல, நர்சரி! அப்புறம், உங்க உதவி எனக்குத் தேவையில்லை. நான் நடந்தே போயிக்குவேன்,”னு உதட்டைச் சுழிச்சுக்கிட்டே நடக்க ஆரம்பிச்சா.
“மேடம், அவ்ளோ தூரம்!”
“ரொம்ப தூரமில்ல, வெறும் அரை கிலோ மீட்டர்தான்! நீங்க உங்க வேலையப் பாருங்க!”னு சொல்லிட்டு வேகமா நடந்தா.
சந்தானம் திரும்பிப் பார்த்தா அங்க அன்பு இல்ல. ‘அதுக்குள்ள கிளம்பிட்டாரா! அவரு ரேஞ்சுக்கு இவளைப் பார்ப்பாரா? ம்ம்… சும்மா சொல்லக்கூடாது, அழகாத்தான் இருக்கா!’ன்னு செவ்வந்திய நினைச்சுக்கிட்டே தலைய கோதி விட்டுட்டு நடந்தான்.
செவ்வந்தி அவளோட துப்பட்டாவை சரி பண்ணிக்கிட்டே மனசுக்குள்ள புலம்பினா. ‘ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம போய்ட்டான். திமிர் பிடிச்சவன்!’
“க்கும்…”ன்னு பின்னால ஒரு சத்தம். ஆனா அவ கண்டுக்காம போனா.
இப்ப யாரோ பின்னால வர்ற மாதிரி ஒரு உணர்வு. அவ வேகமா நடக்க ஆரம்பிச்சா.
“ஹேய்! இவ்வளவு வேகமா நடக்குறது என் மேல உள்ள கோபத்திலயா?”ன்னு கேட்டுகிட்டே அன்பு செல்வன் அவளுக்கு சமமா நடந்தான்.
அவ டக்குனு நின்னு, அவனைப் பார்த்து, “இப்போ எதுக்கு என் பின்னாடி வர்றீங்க?”ன்னு கேட்டா.
“பேபி என் மேல ரொம்ப கோவமா இருக்குற மாதிரி தெரிஞ்சது. அதான் பாத்து ஒரு சாரி கேட்டுட்டுப் போலாம்னு வந்தேன்.”
“திரும்பவும் அதையே சொல்றீங்க! என் பேரு செவ்வந்தி! அப்புறம், உங்களுக்கு உதவி பண்ணியிருக்கேன், ஒரு தேங்க்ஸ் கூட சொல்லத் தோணலையா?”
அன்பு தலையைக் கோதிக்கொண்டே, “தேங்க்ஸ் சொன்னா அதோட முடிஞ்சுடும்! அப்புறம் பேச எதுவும் இருக்காது. அதான் சொல்லல!”
அவளுக்கு ஒன்னும் புரியல. “என்ன சொல்றீங்க?”
“ம்ம்… இட்ஸ் ஓகே விடுங்க! இப்போ தேங்க்ஸ் வேணுமா? என் இதயத்துல இருந்து… தேங்க்ஸ் சோ மச்!”னு ஒத்தப் புருவத்தை உயர்த்திச் சொன்னான்.
அவளோட நடை கொஞ்சம் மெதுவாச்சு. “இது கேட்டு வரக் கூடாது இன்ஜினீயர் சார், தானா வரணும்!”
“இப்போ மேடம் எங்க போறீங்க?”
“நான் என்னோட நர்சரிக்குப் போறேன்!”
“வாங்களேன், நான் டிராப் பண்றேன்!”
“இல்லைங்க, பக்கம்தான்!”
“சரி ஓகே, ஸீ யூ!”ன்னு சொல்லிக்கிட்டே அவன் கார் இருந்த பக்கம் போனான்.
‘அவ்ளோதானா! ஒரு மரியாதைக்காகக் கூப்பிட்டுருக்கான். ச்சே!’ன்னு அவ தன்னைத்தானே நொந்துகிட்டு நடந்தா.
ஆனா அவன் என்ன நினைப்புல இருக்கான்னு அவளுக்குத் தெரியல. அவ காதுல கார் வர்ற சத்தம் கேட்டுச்சு. ஆனா அவ திரும்பிப் பார்க்கல.
கார் அவ பக்கத்துல வந்து நின்னுச்சு. அன்பு ஒரு சின்னப் புன்னகையோட ஜன்னல் வழியா அவளைப் பார்த்து, “வாங்க மேம்!”
“இட்ஸ் ஓகே!”
“எனக்குத் தனியா, அதுவும் இந்தக் காலை நேரத்துல போகப் பயமா இருக்கு. நீங்க வந்தா கொஞ்சம் தைரியமா, கூடவே பயம் இல்லாம போவேன். வாங்க!”
செவ்வந்தி அவனை ஆச்சரியமாப் பார்த்தா.
“ம்ம்… வாங்க மேம்!”னு கண்ணைச் சிமிட்டி அழகாக் கேட்டான்.
செவ்வந்தி சிரிச்சுக்கிட்டே கார்ல ஏறுனா.
அன்பு மீசையை நீவி விட்டுக்கிட்டே அவளைப் பார்த்தான். “ம்ம்… போலாம்!”னு சொன்னான். அவ தன்னோட துப்பட்டாவால நெத்தியில வழிஞ்ச வியர்வையைத் துடைச்சுக்கிட்டா.
உடனே அன்பு ஏ.சி.யை ஆன் பண்ணான்.
“ஏ.சி. வேணாம்!”
“என்ன ஆச்சு?”
“எனக்கு ஏ.சி. அலர்ஜி!”
‘ஓ காட்! டேமிட்! இவ வேணாம்டா!’ன்னு அவனோட மூளை சொல்லுச்சு. ‘வேணும்!’னு மனசு தறிகெட்டுத் துடிச்சது. ‘அறிவு! உன்னால இந்தக் பட்டிக்காட்டுல பத்து நிமிஷம் கூட ஏ.சி. இல்லாம இருக்க முடியாது. கூலிங் குறைவா இருந்தாலே சண்டைக்குப் போவ! இவளுக்காக ஏ.சி.யை ஆஃப் பண்றியா?’
‘இல்ல, வேணும்! தட்ஸ் ஆல்! இவ என் சொத்து!’ன்னு அவனோட உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரைக்கும் ஒரு சிலிர்ப்பு ஓடுச்சு.
அன்பு செல்வன் நினைப்பது நடக்குமா? பெரிய சாமிக்கு இந்த விஷயம் தெரிந்தால் என்ன ஆகும்?
தொடரும்…
do like and share pradhanyakuzhalinovels