அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
437 views

Episode-117


ரெண்டாவது கல்யாணத்தை கிராண்டா பண்ண முடியாது சிம்பிளா பண்ணிக்கலாம் உனக்கு ஓகே தானே? என கேட்டான் சத்யதேவ்.

தேவ் எனக்கு நீங்க போதும். ஆனால் முதல் மனைவி இருக்கும் போது ரெண்டாவது கல்யாணம் பண்றது உங்களுக்கு பிரச்னை வராதே? என சந்தனா அவனை பார்த்தாள்.

எனக்கும் கொஞ்சம் யோசனையா தான் இருக்கு. என சத்ய தேவ் கூறி கொண்டிருக்க அவனது கன்னத்தில் அறைந்தார் மகி.

அத்தை!! என சந்தனா அழைத்து கொண்டே அருகில் வர..

என்ன நடக்குது இங்கே? என்னடா பண்ற? நானும் போனா போகுதுன்னு விட்டால் நீ ஓவரா பண்ற? கொழுப்பா? என மகி கேட்க..

சத்ய தேவ் ஒரு பெருமூச்சுடன் ரிதம் அவளாக இல்ல சைலஜாவா இருக்கா. அவளோட புருஷன் அரிச்சந்திரன் அப்டின்னு சொல்றா! நான் எப்படி மா அவள் கூட வாழ முடியும்? சொல்லுங்க? என் பையனுக்கு அம்மா வேணும்.

அம்மா தேவையே இல்ல. நான் தான் உன்னை வளர்த்தேனா? அப்பா கிட்ட தானே வளர்ந்த? அதே போல அவனும் வளரட்டும். என மகி கோபத்துடன் கூற..

அவனுக்கு அம்மாவா சந்தனா இருப்பா! எனக்கு அவளை பிடிச்சிருக்கு என்றான் சத்ய தேவ்.

அப்போ வீட்டை விட்டு போ!! என மகி உறுதியுடன் கூற..

என்னால ரிதம இந்த நிலைமையில் விட்டு போக முடியாது. நான் இங்கே தான் இருப்பேன். என்றான் சத்ய தேவ்.

மகி வேகமாக அவனை கன்னாபின்னாவென அடிக்க.. ஆன்டி நான் வெளியே போயிடுறேன் தேவ் என்னோட தேவ் அவரை எதுவும் பண்ணாதீங்க!! என அழுதாள் சந்தனா.

சந்தனா நில்லு நான் சொல்றேன் நில்லு என அவனது கையை பிடித்தான் சக்தி.

நீ போக மாட்டாள்ல நான் போறேன் என்னங்க போலாம். ரிதம கூட்டிட்டு போலாம் என மகி விடாப்பிடியாக கூற..

முடியாது ரிதம அனுப்ப மாட்டேன் என சக்தி மீண்டும் கூற..

வப்பாட்டி வச்சு வாழும் அளவுக்கு வந்துட்டல்ல உன்னை பெத்ததுக்கு வயிறு பத்தி ஏறியது டா!! என்ற மகி அவ்விடத்தை விட்டு சென்று விட்டார் மொத்த குடும்பமும் காலி செய்தார்கள்.

ரிதம் மொட்டையடித்தபடி இருந்தாள். மகி அவளின் நிலையை பார்த்து மயங்கியே சரிந்தார்.

யார் இப்படி பண்ணது? என மிதுன் சூர்யாவிடம் கேட்க..

நான் தான் பண்ணேன். முடி சடை பிடிச்சு போச்சு. கையில் நகம் அழுக்கு குளிக்காமல் இருந்தாங்க அதான் மொட்டையடிச்சி விட்டேன். என்றாள் சந்தனா.

உன்னை யாரு டி இப்படி பண்ண சொன்னது? என மிதுன் அவளின் கன்னத்தில் அறைய.. பொத்தென்று கீழே விழுந்தாள் சந்தனா.

மிதுன் உன்னை கொண்ணுடுவேன் என சொல்லி கொண்டே வந்த சத்ய தேவ். எதுக்கு டா அவளை அடிச்ச? என அடிக்க நீ யாரு டா என மிதுன் கன்னத்தில் ஓங்கி அரை விட்டவன் கழுத்தை நெறிக்க ஆரம்பித்தான் சத்ய தேவ்.

மிதுன விடு சத்ய தேவ் என சூர்யா வேகமாக தட்டி விட.. சந்தனா வேகமாக எழுந்து விடுங்க தேவ் பிளீஸ் என இரும்பி கொண்டே கூறினாள்.

நான் ரிதம கூட்டிட்டு போறேன். இனி உனக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. நீ யார் கூட என்ன கூத்து வேணும்னாலும் பண்ணு என்று விட்டு சூர்யா மொத்தமாக புறப்பட்டார்.

சத்ய தேவ் அதே இடத்தில் அமர்ந்து விட்டான். சந்தனா அவளின் அருகில் சென்றவள். அவனது தலையை வருடி விட்டாள்.

எல்லாரும் என்னை விட்டு போய்ட்டாங்க சந்தனா. நான் எல்லா வைத்தியமும் பண்ணி பார்த்துட்டேன் ரிதம் சரியாகல! நான் என்ன பண்ணுவேன் என சக்தி அழுதே விட்டான்.

விடுங்க தேவ். ஒரு நாள் அவங்க புரிஞ்சுக்குவாங்க என அணைத்து கொண்டாள்.

எனக்கு ரொம்ப தனிமையா இருக்கு!! என்னால முடியல! நானும் எவ்வளவு போராடட்டும் என சத்ய தேவ் நிமிர்ந்து சந்தனாவை பார்த்தான்.

இல்ல நான் இருக்கேன் என சந்தனா அவனை இறுக்கி அணைத்து கொண்டாள். இருவரும் அப்படியே மோன நிலையில் இருந்தார்கள்.

இப்படியே ஒருவாரம் சென்றது. சந்தனா எதுவும் பேசாமல் அவனுக்கு உணவு பரிமாறி கொண்டிருக்க… கல்யாணம் பண்ணிக்கலாமா? என சத்ய தேவ் கேட்க..

ம்ம்!! என்றாள் சந்தனா..

அப்போ வா பண்ணிக்கலாம் என சத்ய தேவ் அவனது கழுத்தில் இருக்கும் செயினை அவளின் கழுத்தில் போட்டு விட்டான் சந்தனா விழி விரிய அவனை பார்க்க..

தாலிய விட இந்த செயின் ஒரு படி மேலே!! என சத்ய தேவ் கூற..

சந்தனா அவனது நெஞ்சில் முகம் புதைத்து கொண்டவள் இறுக்கமாக கட்டி கொண்டாள் கண்ணீருடன்.. 

Love you தேவ் எனக்கு உங்களை பார்த்ததும் அவ்ளோ பிடிச்சு போச்சு!! என சந்தனா கூற..

ம்ம் என என அவளின் நெற்றியில் முத்தமிட்டான் சக்தி.

அதற்குள் ஸ்டேசனில் இருந்து அழைப்பு வர.. சனா எனக்கு லேட் ஆகுது. நான் கிளம்புறேன் ஈவினிங் டின்னர் வெளிய போலாமா? இல்ல வீட்லயா முடிவு பண்ணு பண்ணிட்டு எனக்கு கால் பண்ணு mis you என உதட்டில் முத்தமிட்டு விலகினான்.

சனாவா? அதென்ன சனா?

நீ தான் செல்லமா? என சத்ய தேவ் சிரித்து கொண்டே கூற..

வீட்டுக்கு வாங்க!! இன்னிக்கி சமைச்சு வக்கிறேன் என சந்தனா வழியனுப்பி வைக்க..

ம்ம் என புறப்பட்டான். அவனது ரிங் டோன் பார்த்த முதல் நாளே உன்னை பார்த்த முதல் நாளே வேட்டையாடு விளையாடு படத்தின் பாடலை சந்தனாவுக்கு வைத்திருந்தான். அந்த ரிங் டோன் கேட்டதும் இன்னும் அவன் மேல் பைத்தியமாக இருந்தாள் வேட்டையாட..

இரவு வந்தது உணவை முடித்தவன். இன்னிக்கு என சத்ய தேவ் ஆரம்பிக்க.. முதல் இரவு!  என சந்தனா கூற..

உனக்கு ஓகேவா? என சத்ய தேவ் கேட்டான்.

ம்ம் எனக்கு உங்களை அவ்ளோ பிடிக்கும். ஆனால் ஃபர்ஸ்ட் நைட் செட் அப்ல பண்ணா தான் நல்லாருக்கும். என்றாள் சந்தனா.

அதுக்கென்ன பண்ணிட்டா போச்சு என அவள் பட்டு புடவை அவன் வேஷ்டி சட்டையில் என வந்து சேர்ந்தார்கள் இருவரும் சத்ய தேவ் உள்ளே அமர்ந்திருக்க சந்தனா மனதில் இப்படியே நான் சத்ய தேவ் கூட ஆசையோட வாழனும். எனக்கு தான் சத்ய தேவ். எனக்கு மட்டும் தான் அவன். இந்த ராத்திரி. இந்த ஒரு ராத்திரி அதன் பிறகு சத்ய தேவ் எனக்கு மட்டும் தான் முழுமையா சொந்தாமிடுவான் இனி ப்ளாக் ஈகிள எதுவும் பண்ண சொல்ல கூடாது. ரிதம் சந்தோசத்தையே அவள் கிட்டிருந்தூ பரிச்சிட்டேன். இன்ப ராகவனுடய மருமகன் இனி எனக்கு புருஷன். இனி நாங்க சந்தோஷமா இருக்கணும்னா ப்ளாக் ஈகிள் நடுவில் வரக்கூடாது என முடிவெடுத்தாள்.

உள்ளே சென்றாள். அவள் வந்ததும் பால் கொடுத்தாள்.

சத்ய தேவ் அவளை அமர வைத்து, நான் தப்பு பண்ணிட்டேன்னு தோணுது எனக்கு கில்ட் பீல் இருக்கு சனா.

அய்யோ தேவ் அப்படி நினைக்க வேணாம். எல்லாமே நல்லதுக்கு என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க என காலை தொட்டு கும்பிட்டாள்.

ம்ம் என்ன பார்மாலிட்டி என கட்டி கொண்டவன் அவளின் கழுத்தில் முத்தமிட்டான். மோகம் பற்றி கொண்டது. அவளுக்கு.. நீண்ட முத்தங்கள் சந்தனாவின் உதடுகள் அவனது உதட்டில் ஒட்டி கொண்டது. உனக்கு ஓகே தானே என முத்தமிட்டு கொண்டே கேட்டான் சத்ய தேவ்.

ம்ம் நான் இதுக்கு தான் காத்திருந்தேன். என சந்தனா கூற…

சட்டென கரண்ட் கட் ஆனது..

அடுத்தநாள் ஆரவாரத்துடன் விடிய.. முழு திருப்தியுடன் வெளியே வந்தாள் சந்தனா.

இப்படியே தினமும் அவளை கொண்டாடினான் சத்ய தேவ். அதன் பலன் அவளின் வயிற்றில் கரு.

என்னாச்சு என அங்கும் இங்கும் நடந்தான் சத்ய தேவ்.

கன்சிவா இருக்கேன் என சந்தனா வெட்கத்துடன் சொல்ல..

சனா என அவளை அணைத்து கொண்டவன் நெற்றியில் முத்தமிட்டான்.

அப்போ செக் அப் போலாமா? என சக்தி கேட்க..

மூணு மாசம் ஆகட்டும் தேவ் என சந்தனா புன்னகையுடன் கூற..

இனி கொஞ்சம் கவனமா இரு சனா! வீட்டு வேலைக்கு ஆள் வைக்கலாமா? என சக்தி கேட்க..

இல்ல நான் மேனேஜ் பண்ணிப்பேன் தேவ் என உதட்டில் முத்தமிட்டாள் சந்தனா.

அவளின் வயிற்றை வருடி கொடுத்தான் சத்ய தேவ்.

சரி மூணு நாள் லீவ் போட்டு உன் கூட இருக்கிறேன் என சத்ய தேவ் கூற..

இல்ல இப்போ ஆபீஸ் போங்க செக் அப் நேரத்தில் லீவ் வேணும். என சந்தனா கூற..

அப்படியா? எனக்கு உன்கூட இருக்கணும் போல இருக்கு டி! என கெஞ்சினான்.

இல்ல நீங்க புறப்படுங்க! முதல்ல வேலை அப்புறம் தான் நான் என முத்தமிட்டு அனுப்பினாள்.

எனக்கு விட்டு போக மனசே இல்ல என சத்ய தேவ் அவளை பிடிக்க…

இல்ல போங்க தேவ் என சந்தனா அனுப்பி வைத்தாள்.


என்னாச்சு? என நிதின் அவசர அவசரமாக ஆபிசுக்குள் நுழைந்தான்.

அவள் கன்சிவா இருக்கா!! என சத்ய தேவ் வாயை கழுவி கொண்டே கூறினான்.

ஹே சூப்பர் நான் அப்பாவாக போறேன் என நிதின் உற்சாகத்துடன் கூற..

வந்து வந்து கிஸ் பண்றா!! அருவருப்பா இருக்கு என சத்ய தேவ் டிஸ்யூ கொண்டு துடைத்து கொண்டே இருந்தான்.

இந்த முறை பொண்ணா இருக்கணும் என நிதின் சொல்லி கொள்ள..

இந்த முறை நான் தான் ஜெயிப்பேன் என்றான் சக்தி.

எப்டி? என நிதின் கேட்க..

சந்தனாவுக்கு முன்னாடி ரிதம் கன்சிவா இருக்கா!! கண்டிப்பா பொன்னு தான் என்றான் சத்ய தேவ்.

பார்க்கலாம் டா என நிதின் கூற..

அவளுக்கு வளைகாப்பு நடத்தனும். பேசா பண்ணிடலாம் என நிதின் கூற..

என்னோட கெஸ் சரியா இருந்தால் இந்த. மூணு நாளில் ஒரு  மீட் இருக்கு. ஆனால் யாரு வருவாங்கன்னு தெரியல. ஆனால் வளைகாப்புக்கு அவளோட உறவுகள் வரும் பிளாக் ஈகில் வரலாம். துட்சாதனன் வரலாம். சனாதனன் கூட வர chance இருக்கு. என்றான் சத்ய தேவ்.

நம்ம பிளானை எப்போ எக்சிகியூட் பண்றது? வளைகாப்பு ஓகே தான? என நிதின் கேட்க..

குழந்தை பிறக்கட்டும் அப்புறம் பண்ணுவோம் சம்பவத்தை.. என்றான் சத்ய தேவ்.

தொடரும்..

You may also like

Leave a Comment