Episode -19
“என்ன பண்ணிட்டு இருக்க?” என பூங்கொடி கேட்டுக்கொண்டே வந்தாள்.
“அது வந்து, மாமாவோட சட்டை கீழே விழுந்துடுச்சு! அதான் எடுத்து வைக்க வந்தேன்,” என்றாள் மேனகா சிரித்துக்கொண்டே.
அந்த சட்டையைக் கொடு” என பூங்கொடி கையை நீட்ட, ஒரு பெருமூச்சுடன் சட்டையைக் கொடுத்தாள் மேனகா. அதை ஆங்கரில் மாட்டி விட்டவள், நேராக படுக்கையின் பக்கம் சென்றாள்.
மேனகாவின் அக்கறையும் பூங்கொடியின் தயக்கமும்
“அக்கா, அப்புறம் எப்படி இருக்க? எல்லாமே ஓகே வா?” எனக் கேட்டுக்கொண்டே அவளின் பக்கம் அமர்ந்தாள் மேனகா.
“ம்ம், எக்ஸாம் அதனால கொஞ்சம் டயர்டா இருக்கு,” என்றாள் பூங்கொடி.
“அக்கா, உனக்கு இங்கே எல்லாமே ஓகேவா?” என மேனகா கேட்க,
“இருந்து தானே ஆகணும். வேற என்ன பண்ண முடியும்?” என்றாள் பூங்கொடி, சும்மா பேச்சுக்காக.
“அப்போ உனக்கு மாமா பிடிக்கலையா? நீங்க ரெண்டு பேரும் இன்னும் சேரவே இல்லையா?” என மேனகா கேட்டுவிட்டாள்.
பூங்கொடி புருவம் சுருக்கி, “என்ன சொன்ன?” எனக் கேட்டாள்.
“இல்ல, அது நீ மாமா கூட சண்டை போடுறியா? இல்ல சண்டை இல்லாம ரெண்டு பேரும் ஜோவியலா இருக்கியா?” எனக் கேட்டாள் மேனகா.
“அப்படியா?” என்றவள், அதற்கும் மேல் எதுவும் பேசவில்லை.
மேனகாவின் பார்வை அந்த இடத்தை ஊடுருவி அலைந்தது. அளந்தது என்று கூறலாம்.
“அக்கா, நீ தூங்கு,” என மேனகா கூற.
“ம்ம், நீயும் வந்து படுத்துக்கோ, வா,” என பூங்கொடி அழைக்க.
“மாமா எந்தப் பக்கம் படுத்துப்பார்?” என மேனகா கேட்டாள்.
“இங்கே, என் பக்கத்தில தான்,” என்ற பூங்கொடி, “சரி, நீ கண்ணை மூடி தூங்கு,” என்றாள்.
பூங்கொடி தூங்கும் வரை மேனகா கண்களை மூடி படுத்திருந்தாள். அவள் தூங்கியதும் மெல்ல விழித்து பார்த்தாள்.
“பொய் சொல்றியா பூங்கொடி! ஒன்னும் பிரச்சனை இல்ல. நீயே மாமாவை விட்டு போறேன்னு எல்லார் முன்னாடியும் சொன்னால் தான் என்னோட ரூட் கிளியர் ஆகும்,” என தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள், இங்கே நானும் மாமாவும் குதூகலத்துடன் கண்களை மூடினாள்.
மாலை வருகையும் உறவுகளின் சந்திப்பும்
மாலை ஐந்து மணிக்கு தனக்கொடி வந்தார். “மேனகா, உங்க அப்பா வந்துட்டாப்டி,” என கூற, “அமுலி, வா சித்தப்பா, அப்பா எல்லாரும் வந்துட்டாங்க,” என அழைத்துச் சென்றாள்.
“ம்ம், வரேன் மா!” என சோம்பல் முறித்துக்கொண்டே சென்றாள்.
பூங்கொடி வரவும், அவளிடம் காபியைக் கொடுத்தான்.
“ம்ம், ஒரு நிமிசம் மாமா! நான் போயிட்டு மூஞ்சி கழுவிட்டு வரேன்,” எனக் கொடுத்துவிட்டுச் சென்றாள்.
சந்தனக்கொடி, ஜெயக்கொடி, மேனகா, தனம், சிவராமன், முத்துசாமி என அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.
அமுலி, “இந்தா,” என அன்பு கொடுக்க, அவனது அருகில் அமர்ந்துகொண்டாள்.
சிவராமன் தொண்டையைக் கனைக்க, அங்கிருந்த அனைவரும் தன்னிலைக்கு வந்தார்கள்.
மேனகா உதட்டைப் பிதுக்கியபடி முணுமுணுத்துக் கொண்டே நின்றிருந்தாள்.
“மாப்ளை,” என முத்துசாமி அழைக்க, “மாமா,” என எழுந்து நின்றான். முருகேசன் அவர்களுடன் சேர்ந்து பூங்கொடிக்கு ஆக்கிப் போடணும். இது பாப்பாவுக்கு சித்தப்பா முறையிலும் உங்களுக்கு மாமா என்ற முறையிலும் அழைக்கிறோம்,” என தட்டை நீட்டினார்கள்.
“அமுலி, வாங்கிக்க கண்ணு,” என சக்கரவர்த்தி கூற.
“மாமா, நீங்களும் பிடிங்க. எனக்கு வெயிட்டா இருக்கும்,” என அன்புவின் கையைப் பிடித்துக்கொண்டவள் அவனுடன் சேர்ந்து வாங்கினாள்.
பூங்கொடி நடந்து கொள்வது அனைத்தும் நடிப்பு என்றாலும், மிகவும் சந்தோஷமாக இருந்தான் அன்பு.
“வந்துடுங்க மாப்ளை,” என முத்துசாமி கூற.
“கட்டாயமா வரோம் மாமா! இப்போ பாப்பாவுக்கு பரீட்சை நடக்குது. அது முடியட்டும், நான் வரும் நேரம் போன் பண்ணி சொல்றேன். ரெண்டு நாளுக்கு முன்னாடியே,” என்றான் அன்பு.
“அப்போ புறப்பட்றோம்,” என அவர்கள் கூற, “ஹான், போயிட்டு வாங்க சித்தி, சித்தப்பா,” என சொல்லி வழியனுப்பி வைத்தாள் பூங்கொடி.
“அப்பா, நான் வரேன்!” என தனக்கொடி கூற.
“டாடி,” என தன் அப்பாவுடன் ஒட்டிக்கொண்டாள் பூங்கொடி.
அன்பு செல்வன் சிரித்தபடி அவர்கள் அறைக்குச் சென்றான். இன்று இரவு இரண்டு ட்ரிப் ஓட்ட வேண்டும். அதனால் வேலைக்கு புறப்பட்டான்.
இரவுப் பேச்சுக்களும் உறக்கமும்
பூங்கொடி போனை நோண்டிக் கொண்டிருந்தாள். அன்பு புறப்பட்டு தயாரானான்.
“எங்கே கிளம்பிட்ட?”
“எனக்கு இன்னிக்கு நைட் டியூட்டி. நான் நாளைக்கு காலையில் வரேன்.”
“அப்போ நைட் நீ வர மாட்டியா? இங்கே இருக்க மாட்டியா?”
“வேலைக்கு போகணும் அமுலி.”
“அமுலின்னு கூப்பிடாத!” என கோபத்தில் கூறியவள், “முன்னாடியே சொல்லி இருந்தால் நான் என்ற வீட்டுக்கு போயிருப்பேன்.”
“எங்கே இருந்தால் என்ன? என் கூட படுத்துக்கற போல பேசுற?” என அன்பு செல்வன் பேச்சுவாக்கில் கூறிவிட,
பூங்கொடி முறைத்து பார்த்தாள். “அய்யயோ, இப்போ என்ன பண்ண போறான்னு தெரியலையே?” என நினைத்தான். ஆனால் அவள் எதுவும் சொல்லவில்லை.
அடுத்த நாள் காலை
அடுத்த நாள் காலை ஆரவாரத்துடன் விடிந்தது. பூங்கொடி வெகுநேரம் உறங்கிக் கொண்டிருந்தாள்.
அன்னம் வாசலையே பார்த்தார். அன்பு களைப்புடன் நுழைந்தான்.
“என்னமா? என்னாச்சு?” எனக் கேட்டுக்கொண்டே வந்தான்.
“அமுலி இன்னும் எழுந்திருக்கலை போல. இதோ இதை கொடுத்திடு. பசிக்கும்!” என கொடுத்தார் பெட் காபி.
“எனக்குக் கூட இப்படி நீ வெயிட் பண்ணதில்லை. ஓவரா பண்ற அன்னம்,” என அன்பு புருவம் சுருக்கி கூற.
“போடா!” என அதட்டி அனுப்பினார் சிரித்துக்கொண்டே.
அவள் ஏசி காற்றில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
“அமுலி, எழுந்திரு,” என அன்பு செல்வன் அழைக்க.
மெல்ல கண்விழித்தவள், “வந்திருக்கியா?” என மீண்டும் தொடர்ந்தாள் தூக்கத்தை. “எழுந்து காபி குடி,” என அன்பு அதை வைத்துவிட்டு குளிக்கச் சென்றான்.
வேகமாக எழுந்தவள் வாய், முகம் கழுவி விட்டு காபியை எடுத்துக்கொண்டே அமர்ந்தாள்.
மணிமேகலை அவளுக்கு அழைக்க.
“என்னடி?” என தூக்கத்துடன் அழைப்பை எடுத்தாள்.
“கிளவுட் டேட்டா பேஸ்ல அந்த பைத்தான்ல ஃபங்ஷன் எனக்கு டவுட்டா இருக்கு. உனக்கு மெயில் பண்ணிருக்கேன். எனக்கு சால்வ் பண்ணி சொல்லி கொடுக்கறயா?” எனக் கேட்டாள் மணி.
“இப்போதான் எழுந்தேன். பத்து மணிக்கு மேலே சொல்றேன்,” என்று விட்டு போனை கட் செய்தாள்.
அம்பு குளித்து முடித்து வந்தவன் தலையை துடைத்தபடி கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தான்.
“டேய், அந்த லேப் டாப்பை எடுத்து கொடு,” என பூங்கொடி கேட்க.
அடுத்த நொடி எடுத்து கொடுத்தான். “ச்ச, இதுல சார்ஜரே இல்ல!!”
“அப்போ என்னோடது யூஸ் பண்ணு!”
“பாஸ்வேர்ட் சொல்லு!!” என பூங்கொடி கேட்க. அன்பு செல்வன் அருகில் வந்து பாஸ்வேர்ட் போட்டு கொடுத்தான்.
அன்னம் தான் டிஸ்ப்ளேயில் இருந்தார். பூங்கொடி முறைத்துப் பார்க்க.
“அய்யோ, முறைக்கிறா?” என வேறு தலை முடியைக் கோதி விட்டபடி திரும்பினான்.
“எதுவும் ஒர்க் ஆக மாட்டேங்குது,” என பூங்கொடி முகத்தைச் சுளிக்க.
“என்னாச்சு? இரு வரேன்,” என அவளின் முன்னால் வந்தவன் லேப் டாப்பை நோண்டி மெயில் சிங்க் செய்து கொண்டிருந்தான்.
சட்டையில்லாத அவன் தேகமும், அவனது சோப்பு வாசனையும் உள்ளுக்குள் ஏதோ செய்ய, அப்படியே சிலை போல அமர்ந்திருந்தாள்.
“இப்போ பாரு, சிங்க் ஆகும்!!” என அன்பு திரும்ப.
“இல்ல, மெயில் ஐடி போட்டு கொடு!! நீயே பண்ணு, வா,” என மீண்டும் அழைத்தாள்.
“ஒரு நிமிசம்,” என அன்பு சட்டையைப் போட்டுக்கொள்ளச் செல்ல.
“டேய், டென்ஷன் பண்ணாத! வந்து செஞ்சு கொடு. அப்புறம் போய் என்னமோ பண்ணு!!” என அதட்டினாள்.
“சரி, வரேன்,” என பெருமூச்சுடன் அன்பு அவளருகில் சென்றவன், “மெயில் ஐடி சொல்லு!! அண்ட் பாஸ்வேர்ட்,” எனக் கேட்டுக்கொண்டே அவனது விரல்கள் கீபோர்டில் விளையாடியது. இருவரும் மிக நெருக்கத்தில் இருந்தார்கள். அவனது தாடி கன்னம் அவளின் கன்னத்தை உரச, சிணுங்கிக்கொண்டே கீழ் உதட்டைக் கடித்தவள் சிலை போல அமர்ந்திருந்தாள்.
“ச்ச, டார்ச்சரா இருக்கே. இதுக்குதான் ரெண்டு வருஷம் கழிச்சு பண்ணியிருந்தால் கொஞ்சம் நல்லாயிருந்திருக்கும். ஆனால் இப்போ அவஸ்தையா இருக்கே,” என தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள் அவன் மேல் சாய்ந்துகொண்டாள் மெய்மறந்து.
“எல்லாமே ஓகே தானே?” என அன்பு அவளை உசுப்பி கேட்க, முறைத்துப் பார்த்தாள் கோபமாக.
“மெயில் சிங்க் பண்ணிட்டேன்,” என அவளை வினோதமாகப் பார்த்தான் அன்பு.
“போடா!!” என சொல்லிவிட்டு நோண்டினாள் லேப் டாப்பை.
அதன் பின் இருவரும் ஒன்றாக சாப்பிட்டார்கள். இரவு கண் விழித்ததால் அவனுக்கு தூக்கம் வர பாயைப் போட்டான்.
“என்ன பண்ற?”
“தூக்கம் வருது.”
“நீ மேலே படு!!” என சொல்லியபடி லேப் டாப்பை நோண்டினாள் பூங்கொடி.
“வேணாம், உனக்கு தூக்கம் வரும்,” என அன்பு கூற.
“பட்ரா!” என்றவள் கோபத்துடன் பார்த்தாள்.
“சரி,” என அன்பு படுத்துவிட்டான். மூன்று மணி நேரம் படித்தாள் என்று சொல்வதை விட, அவனை ஒரு மணி நேரம் சைட் அடித்தாள். பின் என்ன நினைத்தாலோ தெரியவில்லை. கதவை லாக் செய்துவிட்டு அவனுக்கு அருகில் வந்து படுத்தாள்.
அவனது அருகில் மிகவும் நெருக்கமாகப் படுத்துக்கொண்டாள் பூங்கொடி. உதடுகள் மெல்ல விரிந்தது. “இத்தனை அழகா இருக்கானே!! எப்படி? இவனைப் பார்த்தாலே ஏதோ பண்ணுது! முடியல, என்னவோ செய்யுது,” என உணர்வுக் குவியலில் சிக்கித் தவித்தாள்.
அவளின் பக்கம் திரும்பி படுத்தான் அன்பு. கையை எடுத்து வயிற்றில் வைத்துக்கொண்டவள் இன்னும் நெருங்கி ஒட்டிப் படுத்தாள். அன்பு செல்வனின் தனித்துவ வாசனை அவளை இன்னும் ஈர்க்க, மீசையில் தெரியும் அந்த உதட்டை ஏதோவெனப் பார்த்துக்கொண்டாள். அவனது கைகளில் நரம்பு புடைத்துக்கொண்டு தெரிய வருடி பார்த்தான். லட்சணமான முகம். அப்படியே சொக்கியபடி முத்தமிட வந்தாள் அருகில்.
“தலையணை தான் அருகில் இருக்கிறது,” என அன்பு செல்வன் அவளின் மேல் கைகளைப் போட்டு தன்னுடன் இறுக்கினான். அது தலையணை இல்லை, அவளின் அங்க வனப்பு. “எங்கே கை வைக்கிறான் பாவி,” என சொல்லிக்கொண்டவள் அவன் பிடியில் உதட்டைக் கடித்து உணர்வுகளை அடக்கிக்கொண்டாள்.
சட்டென முழிப்பு தட்டியவன் வேகமாக கையை எடுத்துக்கொண்டு அமர்ந்தான்.
“சாரி, சாரி பூங்கொடி. எனக்கு நினைவு தெரியல! தெரியாமல் பண்ணிட்டேன்,” என அன்புவின் முகத்தில் பதட்டம்.
“அப்போ தெரிஞ்சு பண்ணுவியா?” என பூங்கொடி கேட்க.
“சாரி, சாரி,” என வேகமாக ஓடிவிட்டான் அன்பு.
பூங்கொடி கஷ்டப்பட்டு உணர்வுகளை அடக்கிக்கொண்டவள், படிக்க ஆரம்பித்தாள். அனைத்து பேப்பரையும் முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. 20 நாள் விடுமுறை. அனுசுயா அவளை அழைக்க.
“வரேன் டி,” என அன்புடன் வண்டி ஏறினாள்.
அன்பு வீட்டில் விட்டு புறப்பட, “நீ ஊட்டி வரல தான!! அப்போ என்னை எங்க வீட்டில் விடு!!” என கோபத்துடன் கூறினாள்.
“இது தான் உன் வீடு!!”
“இது என்னோட வீடு இல்ல. உன் அம்மா வீடு!”
அன்பு சிரித்துக்கொண்டே, “உன் அம்மா வீடும் இது தான்,” என்றான்.
அவள் வேகமாக நடந்து செல்ல, “சரி வா, நானே விடறேன்,” என தனக்கொடி வீட்டில் இறக்கி விட்டான்.
அவள் முறைத்துக்கொண்டே சென்றுவிட்டாள். அடுத்த நாள் சிவராமன் காரில் அழைத்து ஊட்டியில் விட்டு வந்தார். அனுசுயா ஜெகன் நிச்சய விழாவுக்காக.
யாரைப் பார்த்தாலும் எறிந்து விழுந்தாள் பூங்கொடி.
“எதுக்கு டி இப்படி நடந்துக்கிற?” என மணி கேட்க.
“எனக்கு பிடிக்கல. நான் ரூமுக்கு போறேன்,” என கோபத்துடன் அறைக்குச் சென்றாள்.
அடுத்த நாள் காலை அவளுக்கு அருகில் அன்பு இருந்தான்.
“பூங்கொடி…?”
தொடரும்…
do like and share pradhanyakuzhalinovels