மன்னவன் பூங்கொடி மார்பிலே

by Pradhanya kuzhali
485 views

Episode -41

ஊரில் இருக்கும் அனைவரும் பூங்கொடி அன்னத்தை திட்டிய விவரங்களை தான் பேசி கொண்டிருந்தார்கள். 

அக்கா இதை கேலன்? அன்னம் நமக்கு தெரிஞ்சி நல்லவக தான். ஆனாலும் அவங்க அக்கா வாழ்க்கைய பரிச்சது தப்பு தானே! அதான் அவங்களோட பையன் வாழ்க்கை பூங்கொடி கூட.. அதே போல தனத்தோட பிள்ளையும் இஷ்டப்பட்டு கட்டிக்கலையாம். அந்த வேங்கியபாளையம் மனோரஞ்சிதத்துக்கும் தனத்தோட ஊட்டுக்கார்கும் ஒரே வாக்கு வாதம் முத்தி போச்சு! அதனால தான் இத்தனை நாள் மாமனார் வீட்டு படி ஏறாத சிவராமன் ஏறி பொன்னை கட்டிக்க சொல்லி கேட்டிருக்கார். என ஆள் ஆளுக்கு ஒவ்வொன்றை பேசினார்கள். 

நமக்கு எதுக்கு ஊரு பொல்லாப்பு? இல்லன்னா குசலம் பேசுறேன்னு சொல்லிடுவாங்க. வம்பை விலை கொடுத்து நம்ம எதுக்கு வாங்கனும். அதெல்லாம் பெரிய இடத்து விசயம். நாளைக்கு நான் தான் இப்படி சொன்னேனு என்ற ஊட்டுக்காருக்கு தெரிஞ்சது அந்த மனுஷன் ஆட்டம் ஆடிருவாப்டி என கூறி கொண்டு கூட்டம் கலைந்தது. 

என்னடி நடக்குது? என்ன பண்ண? எங்க டி உன்ற புருஷன்? என கேட்டு கொண்டே வந்தார் தனம். 

நான் என்ன மா பண்ணேன்? என பூங்கொடி திரும்ப கேள்வி கேட்டாள். 

என்ன பண்ணியா? அதை நீ தான் சொல்லணும்? என்றவர் பார்வை அங்கே காய்ந்து கொண்டிருக்கும் துணிகளின் மீது படிய, யாரது ஜெயா இருக்காளா? எப்போ வந்தா? என கேட்டார் தனம். 

சித்தி வந்து ஒரு வாரமாகுது. என பூங்கொடி சாதாரணமாக கூற.. 

ஜெயா அந்த நேரம் பார்த்து வந்தவர். என்ன தனம்? பூங்கொடி இப்படி பண்ணிட்டா எல்லார் முன்னாடியும். என வத்தி வைத்தார். 

இதுக்கும் மேலே இங்கே இருந்தால் அது சரிபட்டு வராது. நான் அன்பு வரவரைக்கும் நம்ம வீட்டுக்கு வந்துடுறேன். வாமா போலாம். என்னை இங்கே சித்தி கூட புரிஞ்சுக்கல. என கோபத்துடன் பேசியவள் வேகமாக கிளம்பினாள். 

இல்ல கண்ணு. அப்பா முக்கியமான வேலையா சென்னை வரைக்கும் போயிருக்கார். நான் சொல்றத கேளு. அப்பா வந்ததும் பார்த்துப்போம். இங்கேயே இரு. என தனம் சமாதானம் செய்தார் தன் மகளை.. 

சரி என பூங்கொடி வீட்டுக்குள் சென்று விட.. தனம் பெருமூச்சுடன் நேராக அன்னத்தை பார்க்க சென்றாள். 

ஜெயா பதட்டத்துடன் எங்கே போற? என கேட்க.. 

இதை இன்னும் வளர்க்க சொல்ட்ரயா? பூங்கொடி கொடுமை பண்ற மாதிரி கண்ணோட்டம் வருது. நான் அப்பா கிட்டயும் அன்னம் கிட்டயம் பேசணும் என்று விட்டு உள்ளே சென்றார். 

ஜெயா அங்கு என்ன நடக்கிறது என சென்று பார்க்க, தனம் அன்னத்திடம் அவள் எது செஞ்சாலும் அவளுக்கு பதில் நான் மன்னிப்பு கேட்டுகிறேன். ஏதோ சின்ன புள்ளை செல்லமா வளர்த்துட்டேன். இதை பெரிசு பண்ணாதீங்க பா. என்ற தனம் அன்னத்தின் முன்னால் சென்று அவள் கொஞ்சம் துடுக்கா பேசுவா. ஆனால் எதையும் மனசுல வச்சிக்க மாட்டாள். நான் சொல்றத கேளுங்க என கையெடுத்து கும்பிட்டாள். 

அய்யோ தனம் அப்படியெல்லாம் இங்கே எதுவுமே நடக்கல. நீ எதுக்கு அழுதிட்டு மன்னிப்பு கேட்கிற? எனக்கு அன்பு எப்படியோ அதே போல தான் பூங்கொடியும். நான் எதையும் நினைச்சுகளை. ஒண்ணுக்கு ரெண்டா திரிச்சி பேசுறது தான் இந்து ஊருக்கு வேலை. நான் எதையும் நினைச்சுக்கல நீ வீட்டுக்கு போயிட்டு வா என சமாதானம் செய்தார் அன்னலட்சுமி. 

ஜெயாவுக்கு சப்பென ஆகி விட்டது. சண்டை வரும் அடித்து கொள்வார்கள் வெட்டி கொள்வார்கள் அப்படி இப்படி என ஆயிரம் யோசித்தவளுக்கு ஒன்றுமே நடக்கவில்லை. ஆனாலும் விட்டு பிடிப்போம் என பெட்டியை கட்டியவள் மேனகாவை மட்டும் விட்டு சென்றாள். 

அடுத்த 15 நாட்களில் வேலையை முடித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தான் அன்பு. அனைத்து விடயங்களும் அவனது காதுக்கு எட்டி இருக்க மனமெல்லாம் ரணமாக இருந்தது. எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் வந்து சேர்ந்தான். பூங்கொடி வழக்கம் போல வீட்டுக்கு வந்தவள். அவனை பார்த்ததும் வேகமாக சென்றாள். உள்ளுக்குள் இனம் புரியாத சந்தோஷமும் ஈர்ப்பும் ஒன்று சேர பூரித்து நின்றாள். 

ஆனால் அன்பு செல்வன்? அவன் எந்த உணர்வும் இல்லாமல் பார்த்தான். 

எதுவும் பேசாமல் அவளது அறைக்குள் சென்றவள். பூட்டி கொண்டாள். 

மாமா இந்தாங்க டீ என நீட்டினாள் மேனகா. 

வேணாம் நீ குடி என்று விட்டு நேராக அவளை பார்க்க சென்றான்.

 அன்பு என அன்னம் அழைக்க…

இதோ பத்து நிமிடத்தில் வரேன் மா!! என சொல்லி கொண்டே சென்றான் அன்பு. 

பூங்கொடி கைகளை இறுக்கி மடக்கியபடி அமர்ந்திருக்க, உள்ளே நுழைந்தான் அன்பு. பூங்கொடி எதுக்கு அம்மா கிட்ட அப்படி நடந்துகிட்ட? 

இதை கேட்க தான் வந்திருக்க அப்படி தான!! என்ன வத்தி வச்சா உன் அம்மாக்காரி!! என கோபத்தில் கத்தினாள் ஆக்ரோஷமாக.. 

பூங்கொடி மரியாதையா பேசு! அவங்க என் அம்மா அதை தெரிஞ்சுக்க முதல்ல நான் இப்போ என்ன கேட்டேன் எதுக்கு அப்படி கோபமா நடந்துக்கிடேன்னு தானே கேட்டேன்.  என அன்பு அவள் அருகில் நெருங்க.. 

ஆமா டா அப்படி தான் பேசுவேன்? என்னை பாரபட்சம் பார்க்கிறா உங்க அம்மா! எனக்கு சரியா சாப்பாடு கொடுக்கிறது இல்ல. இங்கே பார்ரா இந்த துணிய பார். எந்த கெதி பண்ணி வச்சிருக்கு உன் அம்மா! 

மரியாதை கொடு என் அம்மாவுக்கு.. 

மரியாதை பெரிய மரியாதை பெரிய மனுசி மாதிரி உன்ற அம்மா நடந்துக்கல சில்ற என அவள் சொல்லி முடிக்கவில்லை அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் அன்பு செல்வன். 

பூங்கொடி கன்னத்தை பிடித்து கொண்டு கட்டிலில் அப்படியே விழுந்திருந்தாள். கண்களில் நீர் கொட்டியது. 

உடலில் ரத்தம் கொதிக்க இதற்கு மேல் ஒரு நொடி கூட இந்த வீட்டில் இருக்க கூடாது என முடிவெடுத்தவள் அடுத்த நொடி புறப்பட்டாள். 

ஹே பூங்கொடி! நான் எதோ கோபத்தில் என அன்பு சொல்ல வர, வேகமாக வெளியே வந்தவள். போதும் இத்தோட எல்லாமே போதும். என வேகமாக வெளியே சென்றாள் பூங்கொடி கண்ணு என சக்கரவர்த்தி அழைக்க.. 

உன் பையன் என்னை அ அடிச்சுட்டான். நான் என்ற அப்பா வீட்டுக்கு போறேன் என அழுது கொண்டே செருப்பு இல்லாமல் நடந்தே சென்றாள். 

என்னடா பண்ண? பாவி என அன்னம் பதறியடித்து கொண்டு கேட்க.. 

அவள் உன்னை மரியாதை இல்லாம பேசினா மா! எனக்கு கோபம் வந்தது அடிச்சுட்டேன் என அன்பு கூற, ஓங்கி கன்னத்தில் அறைந்திருந்தார் அன்னம். 

அம்மா!! என அன்பு செல்வன் பார்க்க, இந்த ஊரில் இருக்குற எல்லாரும் என்னை அசிங்கமா தான் இது வரைக்கும் பேசிட்டு இருக்காங்க அதுக்கு எல்லாரையும் அடிச்சிடுவியா? சொல்லு! சொல்லு டா? உன்ற அப்பா கூட ஒரு அடி யாரையும் கை ஓங்கினது இல்ல. என்னடா இதெல்லாம் என தலை தலையாக அடித்து கொண்டவர். நடந்தது என்னன்னு என்கிட்ட கேட்டியா நீ? சொல்லு கேட்டியா? ஊர் பேச்சை கேட்டு வந்து பொண்டாட்டிய கை ஓங்கி இருக்க? என்ன இதெல்லாம்? என மூக்கை உறிஞ்சியபடி அப்படியே அமர்ந்து கொண்டார் அன்னம். 

அன்பு செல்வன் நிலை தடுமாறி, அம்மா நான் வேணும்னு பண்ணல மா! அது ஏதோ கோபத்தில்.. அப்பா நான் ஏதோ கோபத்தில் என அவன் சொல்ல வர.. சக்கரவர்த்தி எதுவும் பேசவில்லை. 

அன்னம் அழுது கொண்டே, அன்னிக்கு அக்கா வந்தது. என்கிட்ட பேசுச்சி அதை உன்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன். நீ வந்து கொஞ்ச நேரம் கூட இல்ல பாப்பாவும் இப்போ தானே வந்தது? அதுக்குள்ள என்னடா பண்ணிட்ட இப்படி? இப்போ ஊர்காரங்க இன்னும் என்னை காரி துப்புவாங்க என்றவர் கண்களை துடைத்து கொண்டு இனி உன்கிட்ட நான் பேச மாட்டேன். என்னைக்கு பூங்கொடி இந்த வீட்டுக்கு வர்றாளோ அப்போ தான் உன்கிட்ட நான் பேசுவேன் என உள்ளே சென்று விட்டார். 

தனம் சமாதானம் செய்து அவளை அனுப்பி வைக்க திட்டமிட, அன்பு செல்வன் தனது தந்தையை அழைத்து கொண்டு தன்னிலை விளக்கம் கொடுக்க சிவராமனை தேடி சென்ற நேரத்தில் அன்னம் மயங்கி கீழே விழுந்து காலில் நல்ல அடி ஏற்பட்டு விட்டது.

ரொம்ப நல்லாருக்கு என் பொன்னை அடிச்சிட்டீங்கல்ல இதுக்கு தான் உனக்கு கட்டி கொடுத்தேனா? என சிவராமன் கோபத்தில் கொதித்து எழுந்தார். 

அந்த நேரம் வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. கண்ணு அன்பு. அம்மா மாட்டு தொழுவம் பக்கம் மயங்கி கிடக்கிறாங்க பூங்கொடி இப்போ தான் வந்துட்டு போகுது.. உன்ற அம்மாவ அப்படியே விட்டுட்டு போயிடுச்சு கண்ணு என பக்கத்து விட்டு தங்கம்மாள் கூறி விட்டார்.  

அம்மா என வேகமாக வீட்டுக்கு விரைந்தான் அன்பு. 

தொடரும்.. 

You may also like

Leave a Comment