மன்னவன் பூங்கொடி மார்பிலே

by Pradhanya kuzhali
357 views

Episode-56 

அமுலி என சொல்லி கொண்டே அறைக்குள் நுழைந்தான் அன்பு. புடவையை கட்டி கொண்டிருந்தவள் சட்டென மேலே போர்த்தி கொண்டாள் எதுவும் பேசாமல்.. 

அமுலி என மீண்டும் ஆரம்பித்தான். 

வீட்ல எல்லாரும் இருக்காங்க. அதனால பேச வந்திருக்கீங்க ரைட். அதுக்கு எந்த அவசியமும் இல்ல. எந்த இடத்தில எப்டி நடந்துக்கணுன்னு எனக்கு தெரியும். கவலை படாதீங்க என்றவள் கண்களில் நீர் கோர்க்க, அதை உள்ளே இழுத்து கொண்டவள். ஒரு பெரு மூச்சுடன் அஞ்சு நிமிஷம் இருந்துட்டு நீங்க வெளியே போங்க என்றாள். 

பூங்கொடிக்கு அவனது நினைவுகள் தினமும் வாட்டி வதைத்தது. அதிக பாசத்தை யாரிடமும் காட்டமாட்டாள். அப்படி வைத்து விட்டால் அதிகம் பாதிக்கப்படுவது அவள் தான். ஆனாலும் அன்பு செல்வனின் எண்ணங்கள் அவளை கொன்று குவித்தது. ஒவ்வொரு நாளும் அவனது நினைப்பு வாட்டி வதக்கியது. 

அமுலி!! என அவளின் தோல் பட்டையில் கை வைத்தான் எப்படியாவது அவளை சமாதானம் செய்து விடவேண்டும். என்ற முனைப்பில் இருந்தான். பூங்கொடி இல்லாமல் அவனால் இருக்க முடியவில்லை என்பது தான் காரணம். 

பிளீஸ் கைய எடு!! என பற்களை கடித்து கொண்டு தட்டிவிட்டாள். 

நான் சொல்றத முதல்ல கேளு? என அன்பு பேச வர, அவளோ சுத்தமாக காதில் போட்டு கொள்ளவில்லை. 

அமுலி என அவளின் நெற்றியில் முத்தம் பதிக்க முற்பட்டான். 

அவன் கன்னத்தில் அறையை கையை ஓங்கி கொண்டு பார்த்தாள். 

அமுலி நான் சொல்றத கேளு திவ்ய பாரதிக்கும் எனக்கும் நடுவில் ஒன்னும் இல்ல என அன்பு செல்வன் அனைத்தையும் கூற..

இதை எதுக்கு சார் என்கிட்ட சொல்றீங்க? நீங்க யாரு கூட போனாலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. என்றவள் அவ்விடத்தை விட்டு நகர, கையை பிடித்து இழுத்தவன் சுவற்றில் ஒட்டி உதட்டில் முத்தமிட வந்தான். 

வேகமாக அவனை தள்ளி விட்டவள் முகத்தை மூடி அழுதாள். 

அமுலி சொல்றத கேளு!! என அன்பு செல்வன் சமாதானம் செய்ய முற்பட, 

அய்யோ உங்களுக்கு ஏன் புரியல? நான் தான் உங்களை சந்தேகபட்டிருக்கேன். உங்க அம்மாவை எடுத்து எரிஞ்சு பேசியிருக்கேன். நான் ராட்சசி அரக்கி. என்னோட எண்ணங்கள் செயல்கள் எல்லாமே கேவலம். உங்க கூட இருக்க ஒரு தகுதி வேணுமில்லையா? அந்த திவ்ய பாரதி எனக்கு மேக் அப் பண்ணிவிட வந்தபோதே உங்க மேலே இருக்க விருப்பத்தை என்கிட்ட சொன்னா! உங்களுக்கு நம்ப முடியலனா மணிமேகலை கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க. அது கூட இப்படி காக்கி சட்டையில் இறுக்கி படிச்ச சட்டை பேன்ட், சந்தனம் திருநீறு கூடவே ஆளை தூக்கும் பெர்ஃப்யூம் இதெல்லாம் போட்டுக்கிட்டு ஹீரோ போல கெத்தா நீங்க பஸ்ல ஏறி தோரணையா டிக்கெட் கொடுக்கவும், உங்க இடத்துல உரிமையா திவ்ய பாரதி உட்கார்ந்து எல்லார் முன்னாடியும் ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கறத பார்க்க ரெண்டு கண்ணு போதாது. 

ப்ச் பூங்கொடி நீ நினைக்கிற போல எதுவும் இல்ல. என அன்பு கூற..

அச்சோ நான் எதுக்கு உங்களை நினைக்க போறேன். நீங்க ரெண்டு பேரும் தாராளமா அப்படி இருக்கலாம். எந்த தப்புமே இல்ல. சொல்ல போனால் உங்க பஸ்ல வர எல்லாரோட நேயர் விருப்பமும் அது தான். அச்சோ நேயர் இல்ல. உங்க பேசன்ஜர்ஸ் விருப்பம். பார்க்கவே கண்ணு தவம் கிடைக்கணும். எனக்கு தான் புத்தி மழுங்கி போயிடுச்சு. நான் தான் தப்பு தப்பா யோசிக்கிறேன். என்றவள் வெளியே போ என கதவை காட்டினாள். 

அவள் பேசுவது அத்தனையும் பொறுமையாக கேட்டவன். அருகில் நெருங்கி, இப்போ நான் என்ன பண்ணனும்னு சொல்லு, பண்றேன். அதுக்காக இப்படி எல்லாம் பேசாதடி நீ நினைக்கிற போல ஒன்னுமே இல்ல. திவ்யா மேலே அப்படி எனக்கு எந்த எண்ணமும் இல்ல. என அன்பு செல்வன் தன்னை விளக்க முற்பட்டான். 

உன்னை பிடிக்காம தான் கட்டிக்கிட்டேன் அது உண்மை தான். அந்த ஒரு விசயம் மட்டும் தான் உனக்கு தெரியும். எனக்கு உன்னை பத்தின இன்னொரு பார்வை இருக்கு. எல்லாரும் லவ் பண்ணிட்டு பிரிவாங்க. நான் என நிறுத்தியவள். எனக்கு உன்னை நிஜமாவே புடிக்கும் கல்யாணத்துக்கு முன்னாடி.. புடிக்கும்னா கட்டியணைச்சு லவ் காதல் அப்படி இல்ல. 

அன்பு செல்வன் அவளை தவிப்புடன் பார்த்தான். அருகில் நெருங்க நெருங்க பின்னால் செல்கிறாளே என்று. 

“உங்க பஸ் வரும்போதெல்லாம் எல்லாரும் உன்னை ஆஹா ஓஹோ அப்டின்னு பேசும் போது எட்டி பார்த்திருக்கேன். அவங்களை போல.. உன்னோட பார்வை உன்னோட முகம் கண்ணு காது மூக்கு கண்ணக்குழி இப்படி நான் ஏதோ ஒரு விசயத்துல தடுமாறி விழுந்திருக்கேன். ஆனால் உள்ளுக்குள் சின்ன வயசில இருந்து வீட்ல சொல்லி கொடுத்துட்டாங்க. நீ ஆகாதவன் உன்னோட உறவு ஆகாத உறவுன்னு.. அதே கண்ணோட்டத்தில் பார்த்தேன். நீ பண்ற எல்லாமே தப்புன்னு தோணுச்சு. அதுக்கு நான் என்ன பண்ணட்டும் சொல்லு? எனக்கு அப்படி தான் சொன்னாங்க. ஆனால் அதையும் மீறி உன்னை கட்டிக்கிட்டதும், உன்னை நான் என்னோட பொருள் மாதிரி நினைச்சுக்கிட்டேன். எனக்கு பிடிச்ச விசயம் நீ!  என்னோட பொருள் நீ” 

இப்பவும் நான் உன்னோட பொருள் தான் அமுலி நான் சொல்றத கேளு என அன்பு செல்வன் பேச வர, 

நீ எனக்கு சொந்தமான பொருள் இல்ல வேணாம் அன்பு செல்வன். உன்னை நான் நிறைய இடத்தில உடைச்சு போட்டுட்டேன். நமக்குள்ள புரிதல் ஜீரோ. இந்த கல்யாண வாழ்க்கை எனக்கு நிறைய கத்து கொடுத்திடுச்சு என்றாள் பூங்கொடி சத்தமாக.. 

என்னடி பேசுற? என்ன ஒடிச்சு போட்டுட்டேன்னு சொல்ற? 

நான் உன்னை விரும்பினேன். பைத்தியகாரதனமா போதுமா? எனக்கு நீ யார் கூட நெருக்கமா இருந்தாலும் பிடிக்காது. அது உன்னோட அம்மா அப்பாவாக இருந்தாலும் சரி. ஆனால் நீ? என பூங்கொடி அடுத்து பேச வர.. கதவு தட்டும் சத்தம் கேட்டது. 

நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில் ஒரு மண்ணும் இல்ல. என சொல்லிவிட்டு கண்களை அழுத்தி துடைத்து கொண்டவள் வேகமாக கதவை திறந்தாள்.

கண்ணு புறப்படனும் கோவிலு பூசைக்கு நேரமாச்சு. மகிழ் வேந்தன் – சவுந்தர்யா ரெண்டு பேரும் வந்திடுவாங்க. அங்கே தாலி பிரிச்சு நீ தான் கண்ணு போட்டு விடனும் வாங்க வாங்க என அன்னம் அழைத்தார். 

இதோ போலாம் அம்மாச்சி என பூங்கொடி முன்னாள் நடந்தாள். 

அன்பு செல்வன் பெருமூச்சுடன் பார்த்தான். எப்படி இதை சரி செய்வது என புரியவில்லை. முதல் திவ்ய பாரதியிடம் இது பற்றி பேச வேண்டும் என நினைத்தான். 

அனைவரும் கோவிலுக்கு புறப்பட்டார்கள். மகிழ் சரியாக அவளிடம் பேசுவதில்லை. இருவரும் நேராக கோவிலுக்கு சென்றார்கள். இன்று தேவதை போல ஜொலித்தாள் சவுந்தர்யா. உள்ளுக்குள் ஏதோ ஒருவகையில் நிம்மதி பரவியது. அதற்கு காரணம் மிகவும் பாதுகாப்பான உணர்வு இந்த இரண்டு வாரத்தில் தோன்றியது. நிம்மதியான தூக்கம், சாப்பாடு தங்க இடம் இது தானே ஒரு மனிதனுக்கு அத்தியாவசிய தேவை. 

எல்லாம் ரெடியா சித்தி!! நீ தான் ஆசிர்வாதம் செய்யணும். அவங்க ரெண்டு பேரையும் என சொல்லி கொண்டே வந்தார் தனக்கொடி. 

அனைவரும் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டார்கள். தழைய புடவை கட்டியிருந்தாள் சவுந்தர்யா. சாமி கும்பிட்டு திரும்பும் இடத்தில் தீப்பந்தம் சுற்றி பற்ற வைத்து கொண்டிருந்தார்கள். சவுந்தர்யாவின் பின்பக்கம் இது நடந்து கொண்டிருக்க, மெல்ல எண்ணெய் பட்டு பற்ற வைக்கும் போது அவளது முந்தியில் தீ பிடித்தது. கொஞ்சமாக… கருகும் வாசனை வரவும் சட்டென திரும்பி பார்த்தான் மகிழ். 

சவுந்தர்யா கண்ணை மூடி கொண்டிருந்ததால் கவனிக்கவில்லை. அதை கண்ட மகிழ் வேகமாக அருகில் நெருங்கி தன் கைகளால் நெருப்பை அணைத்தான். 

என்னமோ ஏதோ என அனைவரும் திரும்பி பார்க்க, வாயில் விரல் வைத்து அமைதியாக இருக்கும் படி சைகை செய்தவன் அவளின் அருகில் ஒட்டி நின்றான். 

பின்பக்கம் நகர முயற்சி அவனது திண்ணிய மார்பில் முட்டி நின்றாள். அங்கே பாரு அர்ச்சனை தட்டு என கையில் பணத்தை திணித்து போட வைத்தான். இதயம் படபடக்க நின்றாள் சவுந்தர்யா. அவன் மீது கோபம் நிறையவே வந்தது. இங்கு வந்து என்ன காரியம் செய்கிறான். ராஸ்கல் இவன் மேல் நல்ல அபிப்ராயம் வைக்கவே கூடாது என்று. 

சாமி கும்பிட்டு கடை தெருவுக்கு சென்றார்கள். திவ்ய பாரதியும் அங்கு வந்திருந்தாள் பூங்கொடியை பார்க்க.. 

ஹே பூங்கொடி என புது தாவணி பாவாடையில் கல்லூரி படைகளுடன் மணிமேகலை வந்தாள். ஹே வீட்டுக்கு வாங்கடி என தன் நண்பர்களை அழைத்து கொண்டிருந்தவளின் பின்னால் அன்பு செல்வன் வந்து நின்றான். 

தோழிகள் யாரும் அவனிடம் பேசவே இல்லை. என்னாச்சுங்க வீட்டுக்கு வாங்க. விருந்து சாப்பிட்டு போலாம் என அன்பும் அழைத்தான். 

மணிமேகலை சமாளிக்கும் பொருட்டு, அண்ணா அங்கே தனம் அத்தை கூப்பிடுராக உங்களை என அனுப்பி வைத்தவள். என்னடி அண்ணன் கூப்பிடுறாங்க யாரும் பேசவே இல்ல. என கடிந்தாள். 

என்ற மச்சிய அழ வச்சுட்டார் உன்ற அண்ணன். எங்க மச்சி பேச சொன்னா தான் நாங்க பேசுவோம் என அனைவரும் முறைத்து கொண்டு பார்க்க, சட்டென சிரித்து விட்டாள் பூங்கொடி. 

மா இங்கே தாலி பிரிச்சு கோர்க்க வேணாம் ரொம்ப கூட்டமா இருக்குது. என மகிழ் வேந்தன் விவரமாக கூற.. அனைவரும் சரியென சக்கரவர்த்தியின் வீட்டுக்கு புறப்பட்டார்கள். 

பூங்கொடி தனது அப்பாவை பார்த்தவள். ஹே வாங்க எல்லாரும் அங்கே என் வீட்டுக்கு போலாம். என்று அனைவரையும் அழைத்து சென்று விட்டவள். சக்கரவர்த்திக்கு அழைத்து எதோ ஒரு காரணத்தை அடித்து விட்டாள். 

என்ன நடக்குது எங்கே கூட்டி போறீங்க? என சவுந்தர்யா எறிந்து விழுந்தாள். 

இந்த புடவைய மாத்திட்டு வெளியே வா நான் வெயிட் பண்றேன் என சென்று விட்டான் மகிழ். 

இந்த ஆளுக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு என கோபத்துடன் பார்த்தவள் புடவையை கட்டாமல் அமர்ந்திருக்க, திவ்யாபாரதி வந்தாள் வீட்டுக்குள். 

என்னடி அப்படியே இருக்க? வா புடவை கட்டி விடறேன் என இழுத்து போய் அழகாக கட்டி விட்டாள். 

புடவை கட்டுறத நினைச்சா மலைப்பா இருக்கு என சோர்வுடன் நின்றாள் சவுந்தர்யா. 

பெரிய வீட்டுக்கு அழைத்து வந்தான் மகிழ். அனைவரும் உற்சாகத்துடன் இருந்தார்கள். அன்னம் தான் அனைத்தையும் முன் நின்று செய்தார். 

பாப்பா இருந்திருக்கலாம் என அன்னம் சொல்ல, அங்கே மேனகாவுக்கு ஆக்கி போடுறார் மாப்ளை. அதனால அமுலி பாப்பா அங்கே போயிடுச்சு. என்றார் சக்கரவர்த்தி. 

நான் போய் கூட்டிட்டு வரேன் ஜெயா அக்காவை என நேராக அன்பு வீட்டுக்கு புறப்பட்டான். இரவு முளைப்பாரி இருக்கிறது. வீட்டில் அனைவரும் எடுத்து வந்து சாமியை சுற்றி விட்டு வாய்க்காலில் விடுவார்கள். கண்டிப்பாக பூங்கொடியை அழைத்து வருவேன் என விடாப்பிடியாக சென்றான். ஆனால் அவள் வருவாளா? 

அப்போ மனோகரன பிளான் பண்ணி போட்டு பஸ்ல ஏத்தி தள்ளிட்டு அந்த பஸ் ஓனரயே கட்டிக்கிட்ட சவுந்தர்யா என கையை பிடித்து இழுத்தான் புஷ்பராஜ். 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment