மன்னவன் பூங்கொடி மார்பிலே

by Pradhanya kuzhali
316 views

Episode-61 

என்னாச்சு? என மகிழ் அவளை பார்க்க, இல்ல நெற்றியில வேர்வை..  என தயக்கத்துடன் தொட்டு காட்டியவள். புடவை முந்தியை எடுத்து துடைக்க வந்தவள் தயங்கியபடி இருக்க.. 

மகிழ் தோள் பட்டையில் துடைத்து கொண்டே சவுந்தர்யாவை பார்த்தவன். நீ இயல்பா இரு சவுந்து!  நான் உன்னை எதுக்குமே கட்டாயப்படுத்த மாட்டேன். என உணவில் கவனம் செலுத்தியவன். உதடுகள் உச்சி கொட்டி சாப்பிட்டது ரசித்து ருசித்து.. 

எப்படி இருக்கு? என ஆசையுடன் கேட்டாள். 

கல்யாண விருந்து கை பக்குவம் உனக்கு. நல்லா நாக்குக்கு ருசியா இருக்குது என ரசித்து சாப்பிட்டான். 

உங்களுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுங்க. எனக்கு கொஞ்சம் சமைக்க தெரியும் என வெட்கத்துடன் கூறியவளை புன்னகையுடன் பார்த்தவன். உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு. மாசமா இருக்க புள்ளைக்கு பிடிச்சது எல்லாம் வாங்கி கொடுக்கணும் செஞ்சு போடணும். திருப்தியா நிறைவா பார்த்துக்கணும் என்றான் மகிழ். 

எனக்கா? என தயங்கியபடி சவுந்தர்யா பார்க்க.. 

உனக்கு தான்! ரசத்தில் சாப்பிட்டவன் டம்ளரில் ஊற்றி குடித்தான். எப்டி இத்தனை டேஸ்ட்டா இருக்கு? 

அது தக்காளிய தண்ணியில் வேக வச்சு நல்லா கரைச்சு சீரகம் மிளகு தூக்கலா அரைச்சு பூண்டு தட்டி போட்டு செய்யணும். இன்னும் நல்லாருக்கும். அப்பா சமைக்கும் போது பார்த்திருக்கேன். என்றாள் சவுந்தர்யா. 

சரி சொல்லு என்ன வேணும்? என கையை கழுவி விட்டு சட்டை காலரில் உதட்டை துடைத்து கொண்டு அவளருகில் வந்தவன். கையை வேட்டியில் துடைத்து கொண்டு பார்த்தான். 

அப் அப்புறம் சொல்றேன்!! என வேகமாக வெற்றிலை தட்டை எடுத்து வந்தாள். 

அடேங்கப்பா? வெத்தலை கூடவா!! 

பிடிக்காதா? என தயக்கத்துடன் கேட்டாள் சவுந்தர்யா. 

பிடிக்குமே!! என சொல்லி கொண்டு அமர்ந்தவன் தட்டை வாங்க.. 

இல் இல்ல நான் மடிச்சு தரேன் என மெதுவாக காம்பை கில்லி பாக்கு சுண்ணாம்பு வைத்து அழகாக மடித்து அவனிடம் நீட்டினாள். 

மகிழ் மெல்ல குனிந்து வாய்க்கு அருகில் நீட்ட தயக்கத்துடன் வாயில் வைத்தவள். சட்டென எழுந்து கிச்சன் பக்கம் சென்றாள். 

பிடரி முடியை கோதி விட்டபடி மகிழ் கிச்சனில் நுழைந்தான். 

என்னாச்சு சவுந்து? 

ஒன் ஒண்ணுமில்ல என்றாள் மங்கிய குரலில்.. 

சொன்னா தானே தெரியும்? என்றவன். சட்டென நினைவு வந்தவனை போல “அது சாரி சவுந்து நான் அப்படி செஞ்சிருக்க கூடாது. உன்கிட்ட கையில வெத்தலைய வாங்கி இருக்கணும்.” என கூறினான் குற்ற உணர்வுடன்..

அவனது பக்கம் திரும்பி கையை பிடித்து கொண்டவள். எனக்கு பயமா இருக்கு என கண்களில் நீர் கோர்க்க பார்த்தவள். அவனை அணைத்து கொண்டாள். 

என்ன பயம்? என முகத்தை நிமிர்த்தி கேட்டான் மகிழ். 

எங்கே நான் உங்க கூட நெருக்கமா இருந்தால் என்னை நீங்க தப்பா நினைச்சுட்டா என்ன பண்றது? புருஷன முழுங்கிட்டு இப்படி இன்னொருவன் கூட நெருங்கி என சவுந்தர்யா சொல்ல வர உதட்டின் மேல் விரல் வைத்த மகிழ், என்ன பேசிட்டு இருக்க நீ? எப்படி நீ என்னை அந்த அளவுக்கு சீப்பா நினைக்கலாம். என்னைக்கும் உன்னை பத்தி நான் நினைச்சது இல்ல. உனக்கு கொஞ்சம் டைம் எடுக்கும். அது தேவையும் கூட என கூறினான் மகிழ் அவளது முடியை காதில் ஒதுக்கி விட்டு கொண்டே.. 

சவுந்தர்யாவின் கண்களில் நீர் வழிந்தது. மகிழ் அவளது நெற்றியில் முட்டி, என்னைக்கும் நான் அப்படி நினைக்கவே மாட்டேன். நீ என் பொண்டாட்டி. நீ வேற நான் வேற இல்ல. எனக்கு நீ ரொம்ப ஸ்பெஷல் எப்பவும். என்னோட கடைசி மூச்சு இருக்க வரைக்கும் என கூறி அவளின் கையில் முத்தமிட்டான். 

அவள் வெட்கத்தில் சிணுங்கினாள். சவுந்தர்யா உன்னை எனக்கு எவ்ளோ பிடிக்கும் தெரியுமா? இந்த கண்ணு? உன்னோட முகத்துல ஒரு தெய்வீகம் இருக்குமா!! என அவன் கூறி கொண்டிருக்க, வேக மூச்சுடன் அவனை பார்த்தவள் படுக்கையறை சென்று விட மகிழ் அவளின் பின்னால் சென்றான். பித்து பிடித்து. தவறு இல்லையே பிடிக்கலாம். 

சவுந்து என ஆசையுடன் அழைத்தவன் அவளின் நெற்றியில் முத்தமிட, மூச்சு வாங்க பெண்ணவள் அவனை நோக்க தயங்கினாள். மகிழ் கொஞ்சம் பதட்டத்துடன் காணப்பட்டான். அவளை மிகவும் மென்மையாக கையாள வேண்டும் என நினைத்தான். மிகவும் மென்மையாக, உதட்டை கவ்வி கொண்டது அந்த கம்பீர மீசைக்குள் ஒளிந்திருக்கும் அதரங்கள் இரண்டும். 

இது மோகம் என நினைப்பது முட்டாள் தனம். முழு மனதுடன் காதல் பரிமாற்றம். மகிழ் அவளின் விரல்களுக்கு முத்தமிட்டான் கன்னத்தில் முத்தமிட்டான் கோடி முறை, அவளது உடலில் இருக்கும் அனைத்து செல்களும் மகிழுக்காக ஏங்கி துடித்தது. 

மகிழின் கையை பற்றி முத்தமிட்டாள். 

என்னாச்சு? என நெற்றி முட்டினான். 

அன்னிக்கு என் புடவையில் நெருப்பு பட்டதை அணைக்கும் போது உங்களுக்கு வலிச்சிருக்கும் தானே!! ஆனால் நீங்க அதை பத்தி என்கிட்ட காட்டிக்கவே இல்லையே? என வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டாள். 

மேடம் என் மேலே கோபம் அதான் நான் சோகம் என கிண்டலுடன் மகிழ் கூற, அவனை பொய் கோபத்துடன் முறைத்தாள்.

பிராமிஸ் டி!! என கண்ணை சிமட்டினான் மகிழ். 

ஹான் நம்பிட்டேன் என்றவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். 

என்னாச்சு? என கையை பிடித்து கொண்டு கேட்டான். 

எனக்கு இங்கே தலை வச்சு தூங்க வேணும்? என அவனது நெஞ்சாக்கூட்டை காட்டினாள். 

இரண்டு கைகளையும் விரித்தான் மகிழ் ஆசையுடன்.. 

சவுந்தர்யா அவனை அணைத்து கொண்டாள். இருவரும் அப்படியே படுத்து கொண்டார்கள். அவனது நெஞ்சு கூட்டின் கத கதப்பில் கண்களை மூடி உறங்கியே விட்டாள் சவுந்தர்யா. மகிழை திருமணம் செய்த பின்பு தான் அவளுக்கு நிம்மதியான தூக்கமே வந்தது. மனோகரன் வீட்டில் இல்லா நேரத்தில் புஷ்பராஜ் அவ்வப்பொழுது வந்து தின்பது போல பார்ப்பான். குளிப்பதை கூட எட்டி பார்ப்பான். ஒரு வித பயத்திலேயே சுற்றி திரிந்தாள். நிம்மதியில்லாத வாழ்க்கை. ஆனால் இப்பொழுது அப்படி இல்லை. மகிழ் வேந்தனின் கையணைப்பில் உறங்குகிறாள் பாதுகாப்புடன். 

இருவரும் எழுந்து கொள்ள மதியம் ஆனது. இப்படியே அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினான் மகிழ். முத்தங்கள், இறுக்கமான அணைப்பு அவன் கைவலைவுக்குள் எப்பொழுதும் இருக்க வேண்டும் என இப்படியே அவர்களின் வாழ்க்கை இனிமையாக சென்றது. கஷ்ட பட்டது எல்லாமே போகட்டும் இனிமே இனிமை மட்டும் தான். 

சதீஸ் பாரின் கிளம்பி இருந்தான் அவனை வழியனுப்ப மொத்த குடும்பமும் கோயம்பத்தூர் சென்றது. சதீசின் பார்வை மேனகாவின் மேல் இருக்க..

பேசாம இங்கேயே இருந்திடுவோமா? எல்லாரும் ஜோடி ஜோடியாக இருக்காங்க. நம்ம மட்டும் தான் தனியா அங்கே போய் கஷ்ட பட போறோம் என மனதுக்குள் தோன்றியது. 

மகிழ் வேந்தன் முறைத்து கொண்டே, நீ டேரா போட்ட! அவள் காரி துப்பிட்டு போயிடுவா! ஒழுங்கா போய் சம்பாதிச்சுட்டு திரும்பி வா! கிளம்பு பொழப்ப பாரு. என்றான். 

எல்லாம் என் நேரம் டா!! என நொந்து கொண்டே கிளம்பியவன் நேராக மனோரஞ்சிதம் பக்கம் சென்று, மா அவளை பத்திரமா பார்த்துக்க. அவங்க வீட்டுக்கு அனுப்பாத!! என்னை பத்தி நல்ல விசயம் நிறைய சொல்லு டெலிவரிக்கு வரேன் என அறிவுரை கூறி விட்டு சென்றான் சதீஸ். 

சிரித்தபடி அனைவரும் வழியனுப்பி வைத்தார்கள். மேனகாவுக்கு இப்பொழுது தான் சதீசின் மீது ஒரு பிடிப்பு ஏற்பட்டது. 

முருகேசன் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. ஜெயாவுக்கு தன் இரண்டு மகள்கள் மட்டுமே முக்கியம். அவர் அப்படியே சக்கரவர்த்தி வீட்டில் தங்கி விட்டார். 

***

இதோ பூங்கொடி அனுசுயாவின் கல்யாணத்துக்கு தோழிகளின் பட்டாளத்துடன் வந்து சேர்ந்தாள். 

அனைவரும் உற்சாகமாக இருந்தார்கள் பூங்கொடி தான் அறையிலேயே முடங்கி கிடந்தாள். மணிமேகலை விழுந்து வாரி கொண்டு வந்தாள்.

ஹே அமுலி அமுலி என கத்தி கொண்டே, ப்ச் என்னடி என முகத்தை சுளித்தபடி கேட்டாள் பூங்கொடி. 

அன்பு அண்ணா வந்திருக்கார். அதான் உன்கிட்ட சொல்ல வந்தேன். என மூச்சு வாங்கி கொண்டு பார்த்தாள் மணி. 

எவன் வந்தால் எனக்கு என்ன? என பூங்கொடியின் வாய் தான் சொல்லியது ஆனால் உள்ளுக்குள் அன்பு மேல் அம்புட்டு ஆசை அவளுக்கு. 

உன்கிட்ட சொல்ல வந்தேன் பாரு என்னை அடிக்கணும் போடி என சென்று விட்டாள் மணிமேகலை. 

பூங்கொடியின் போன் அலறியது. தனக்கொடி அழைத்திருந்தார். 

சொல்லு மா!!

உன்ற புருஷன் கிட்ட சமாதானம் ஆகிட்டியா? என தனக்கொடி கேட்க, 

நான் சண்டை போட்டதை பத்தி உன்கிட்ட சொன்னனா? என பற்களை கடித்தபடி கேட்டாள் பூங்கொடி. 

அவளது மனதில் ஒருவேளை “இந்த அன்பு சண்டை விஷயத்தை தண்டோரா போட்டுட்டானா? அதுவும் நம்மள பத்தி?” என உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்து. 

இதை சொல்லி தான் தெரியனுமா? உன்னோட முகமே காட்டி கொடுக்குதே! என தனக்கொடி கூறி விட, பூங்கொடி கோபமாக தன் அன்னையிடம் எப்டி நீ அன்னம் கூட சேர்ந்த? திடீர்னு உன்னோட தம்பி எப்படி? உனக்கு அவ்ளோ பிடிச்சு போனான்? உன்னோட மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? நீ தானே அவங்களை பரம எதிரி கெட்டவங்க அப்டின்னு சொல்லி வளர்த்த? அப்புறம் எப்படி அந்தர் பல்டி அடிக்கிற என கோபத்துடன் கேட்டாள். 

தப்பு என் பேரில் தான் என உடைந்த குரலில் பேசினார் தனக்கொடி.  அவர் மேலும், பிரியா சடங்கு அன்னிக்கு உன்ற புருஷன் கிட்ட அன்னம் சித்தி பிரியா சடங்குக்கு சீர் தட்டில் வைக்க இருந்த பணத்தை எடுத்து உனக்கு கைக்கி பிரேஷ்லெட் வாங்கி கொடுக்க சொல்லி சொன்னுச்சு. அப்போவே எனக்கு ரொம்ப குற்ற உணர்வா இருந்தது. உன் மேலே என்ற சித்திக்கு அத்தனை பாசம் டி! என்ற தம்பிய பத்தி எனக்கு தெரியும். கண்டிப்பா அவன் உன்னை தவிர்த்து எந்த பொன்னையும் ஏறெடுத்து பார்க்க மாட்டான். இப்படி எல்லா விசயத்திலையும் பார்த்தேன். என் தப்பு எனக்கு தெரிஞ்சது. அதான் நான் மாறிட்டேன். ஜெயக்கொடி மேலேயும் தப்பு சொல்ல முடியாது. அவங்கவங்க சூழ்நிலை தான் தப்பு செய்ய வைக்கிது என பெரு மூச்சுடன் கூறியவர். நீ அவன் கூட ஒற்றுமையா இருக்கணும். டெய்லி ஒரு வார்த்தை என்ற சித்திக்கு போன் போட்டு பேசு டி!! என உருக்கமாக கூறினார். 

இப்போவே கொடு அம்மாச்சி கிட்ட பேசறேன் என பூங்கொடி கூற, நான் நம்ம வீட்ல இருக்கேன் டி!! என்றார். 

அப்போ நானே பேசறேன் என போனை வைத்து விட்டு பூங்கொடி அன்னத்துக்கு அழைத்தாள். 

தொடரும்.. 

You may also like

Leave a Comment