Episode-132
ஹே என்கெஜ்மென்ட் பண்ணனுமா? இல்ல நேரடியா கல்யாணத்தை வச்சுக்கலாமா? என ருத்ரன் இதழிடம் கேட்க..
விவாகரத்து வாங்காம எப்படி கல்யாணம் பண்ண முடியும்? எனக்கு இந்த நிமிசம் கூட கல்யாணம் பண்ணிக்க ஓகே டா தீரா என இதழ் மச்சம் மின்ன கூறினாள் இதழினி.
அப்படியா? இதை பத்தி நிலா கிட்ட கேட்டு பாரு! என ருத்ரன் கூற..
அதெப்படி நான் கேட்க முடியும்? இருந்தாலும் என்னோட தங்கச்சி வாழ்க்கைய பறிக்கிறத நினைச்சா கொஞ்சம் கஷ்டமா இருக்கு தீரா? நீயே போய் அவள் கிட்ட சீக்கிரமா விவாகரத்து கேட்கிறயா? போ டா என அனுப்பி வைத்தவள் இரண்டு குட்டிகளையும் பார்க்க சென்றாள்.
கும்!! என தொண்டையை சிறும்பி கொண்டு அறைக்குள் நுழைந்தான் ருத்ரன்.
கண்களை வேகமாக துடைத்து கொண்டு பார்த்தாள் நிலா.
அழுதியா? என்ன? என ருத்ரன் கேட்க..
நான் எதுக்கு அழ போறேன். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என்றாள் நிலா.
ஓ அந்த நடிகன் கூட அவ்ளோ போனா? சொல்லவா வேணும் பணமும் பணமும், தகுதியும் தகுதியும் ஒண்ணு சேர போகுது. என்றான் ருத்ரன் எகத்தாளமாக..
கண்டிப்பா இல்ல!! நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க போறது இல்ல.
எனக்கு அது தேவையில்லாத ஒண்ணு. என்ற ருத்ரன். தலையை கோதியபடி பார்த்தான்.
நிலா அமைதியாக இருந்தாள்.
டெலிவரி எப்போ? என வயிற்றை பார்த்து கொண்டு கேட்டான்.
இன்னும் அஞ்சு மாசம் இருக்கு. என வயிற்றை நீவி கொண்டு கூறினாள்.
அப்படியா என யோசித்தான்.
என்னாச்சு? என நிலா அவனை பார்க்க, இல்ல கல்யாணத்துக்கு லேட் ஆகுது. அதுக்கு தான் கேட்டேன். நானும் எத்தனை நாளைக்கு தனியா இருக்க? என் கூட துணைக்கு ஆள் வேணும்ல.. மனசை பகிர்ந்துக்க, என்னில் பாதியாக.. எனக்கே எனக்காக… ஒரு ஆள் வேணும். அதுக்கு தான் கேட்டேன்.
கட்டிக்கோங்க என தலுதலுத்த குரலில் கூறினாள் நிலா.
யாரை? உன்னையா? விருப்பமே இல்லாம தானே என்னை கல்யாணம் பண்ண? மேடம் தகுதி என்ன? என்னோட தகுதி என்ன? நான் ஒரு காமுகன். மோசமானவன். திருடன். பொறுக்கி. பொம்பள பொறுக்கி. என ருத்ரன் சொல்லி கொண்டே செல்ல..
போதும் என கையை காட்டி தடுத்தாள் நிலா. இன்னும் கண்களில் நீர் கோர்த்து கொண்டது.
நீ தானே கட்டிக்க சொன்ன? அதுக்கு பதில் சொன்னேன்.. தெரிஞ்சே படு குழியில் விழ முடியுமா என்ன? என கேட்டான் ருத்ரன்.
கண்டிப்பா முடியாது. இப்போ உங்களுக்கு என்ன வேணும் விவாகரத்து தானே! நாளைக்கே தரேன். ஆனால்..
என் குழந்தைகளை உன்னை நம்பி தர முடியாது. பிடிவாத குணம் அதிகாமாகிடும். கூடவே பணத்திமிர் இதெல்லாம். என்றான் ருத்ரன்.
யாருக்கு பிடிவாத குணம்? எனக்கா? எனக்கா? என நிலா கத்தி விட்டாள்.
உனக்கு தான் பின்ன எனக்கா? என கேட்டவன். விவாகரத்து நாளைக்கே தர முடியுமா?
அப்போ நான் இங்கிருந்து கிளம்பிடுவேன்.
கூடாது. என ருத்ரனின் குரல் உயர்த்தி ஒலிக்க..
நான் போவேன்.
கூடாது.
இது என் குழந்தை! ஓகே உங்களுக்கு இவன் தானே வேணும் என் வயித்துல இருக்கவன் தானே வேணும். கண்டிப்பா உங்க கிட்ட கொடுத்திடுவேன். எனக்கு தீரன கொடுத்திடுங்க.
ஹாங் என ருத்ரன் அவளை பார்க்க, அதாவது ரவுத்ரன சொல்றேன். அவனுக்கு பேர் மாத்தணும். ஏற்கனவே ஒருத்தனையே இங்கே சமாளிக்க முடியல. அவனும் என நிலா ருத்ரனை பார்க்க..
யாரை சமாளிக்க முடியல!! என அருகில் நெருங்கினான்.
பிளீஸ்!! என முகத்தை திருப்பி கொண்டாள் வேறு புறம்..
சொல்லு கேட்டதுக்கு பதில் சொல்லு! டெய்லி அப்படியே என்னை சமாளிச்சு தள்ளிட்ட! உனக்கு என்னை பழி வாங்கவே நேரம் சரியா இருக்கும். என்னை என்னடி சாமாளிச்ச?
நான் சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க. ஒரு அம்மாவாக உங்களை மாமியால சமாளிக்க முடியல. என் பையனும் அப்படி தீரன் சூரன் அப்டின்னு பேர் வச்சிட்டு வந்தால் நான் எப்படி சமாளிப்பேன் அதை சொன்னேன். என்றாள் மெல்லிய குரலில்..
அப்போ நான் அவ்ளோ மோசமானவன். அதை தான சொல்ற? தப்ப உணர்ந்து பக்கத்தில் வந்ததுக்கு தான் செருப்ப சாணில முக்கி அடிச்சியே!! அப்புறம் என்ன? கூடவே என்னை காமுகன் அப்டின்னு பட்டம் கொடுக்க கங்கணம் கட்டிக்கிட்டு வயித்துல உருவாக்கிட்டு இருக்க ஒண்ணை.. இன்னும் வேற என்ன வேணும்? என்றான் ருத்ரன்.
நான் தான் காரணம். அதான் வளர்த்துக்க நினைக்கிறேன். என நிலா கூற..
எதுக்கு மேடம் உங்களுக்கு இடைஞ்சல்.. இன்னொரு கையாணம் பண்ணிக்கும் போது என் குழந்தை உன்னோட ஆத்துக்கார்க்கு இடைஞ்சலா இருக்குமே? அதென்ன உலகத்துல எல்லாரும் புள்ளைய கொடுத்திட்டு போயிட்டான் பெத்த தாய் தான் பார்த்து வளர்க்கிறா? அப்டின்னு.. அந்த வழக்கை நான் மாத்த போறேன். என் குழந்தைகள் ரெண்டு பேரையும் நானே வளர்க்க போறேன். என்றான் ருத்ரன்.
நான் கல்யாணம் பண்ணிக்க போறதில்ல என் குழந்தைய நான் வளத்துக்குறேன். என்றாள் நிலா.
ருத்ரன் அவளை எதுவும் பேசாமல் அமைதியாக பார்த்தான்..
என்ன அப்படி பார்க்கிறீங்க? என நிலா கேட்க,
அன்னிக்கு ஒருத்தன ஹைதராபாத் ஏர்போர்ட்டில் இருந்து அழைச்சிட்டு வந்து அவனை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னி என் கிட்ட சொன்னதா நியாபகம். அப்போ அது எந்த கணக்குல சேரும்? முதல்ல உன்னோட சங்கதி தான் என்ன?
அது நான் என தயங்கினாள் நிலா.
அதற்கு மேல் அவன் எதுவும் கேட்கவில்லை. அமைதியாக நின்றான்.
எனக்கு தூக்கம் வருது. நீங்க போங்க!! என முதுகு காட்டினாள்.
முதுகுல என்ன ஏதோ வட்டமா இருக்கு? என ருத்ரன் கேட்க..
எங்கே என பின்னால் கைகளை கொண்டு சென்றாள்.
இதோ இங்கே இருக்கு? ரொம்ப பெருசா இருக்கு. உள்ளே இருக்கு கொஞ்சம் சிவப்பா இருக்கு? என ருத்ரன் கூறி கொண்டே அப்படியே ஹாயாக நின்றான். எங்கே என பதட்டத்துடன் அவள் தொட முயற்சி செய்து கொண்டே திரும்ப, அங்கே ருத்ரன் வேடிக்கை பார்த்து கொண்டு நின்றான்.
என்ன பண்றீங்க? தொட்டு காட்டுங்க!!
நானா? நான் எப்படி? என ருத்ரன் அப்பாவியாக கேட்க.. முறைத்து பார்த்தவள். வேகமாக கண்ணாடியின் பக்கம் செல்ல.. ஹே இரு இரு தொட்டு காட்டுறேன். என்றவன் மெல்ல கைகளை கொண்டு சென்றான். இங்கே இந்த இடத்துல என பறந்து விரிந்த முதுகில் அவனது கைகள் அங்கும் இங்கும் படற விட்டான்.
போ போதும்!! என அவன் கைகளை பிடித்து கொண்டாள்.
நிறைய இருக்கு! நீ தான தொட சொன்ன? எல்லாத்தையும் தொட்டு காட்டுறேன் என்றவன் கைகள் உள்ளே சென்றிருக்க.. மூச்சு வாங்க நின்றாள் நிலா. அவளது பெரிய படுகுழி பாழும் குழி அவன் தான். சுவற்றில் ஒட்டி முகத்தை திருப்பினான்.
அவள் மூச்சு வாங்க நிற்க, அடி பாதத்தில் இருந்து வயிற்று பகுதி பெண்மை, நெஞ்சம் இரண்டு என அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் ஒரு காந்த சக்தியும் ஒரு மின்சாரமும் ஒரே நேரத்தில் பாய உள்ளுக்குள் ஒரு அதிர்வலை.. வெட்கம் கெட்ட தேகம்.. கூடவே கேடு கேட்ட உதடுகள், ஊன்கள் உடல் சதைகள்… கூடவே அவனது நகல் உள்ளுக்குள்..
அப்படியே தடவியபடி எவ்வளவு நேரம் நின்றார்கள் என தெரியவில்லை. அவன் எப்பொழுது சென்றான் எனவும் தெரியவில்லை. வந்தான் தடவினான் சென்று விட்டான்.
இதோ நாளைக்கும் வருவான் விடுதலை வாங்கி சிறை செய்ய..
தொடரும்..