Episode-133
காலையிலேயே புறப்பட்டு வெளியே வந்தாள் நிலா.
ருத்ரன் தனது மகனை கொஞ்சி கொண்டிருக்க, போலாமா? என முன் வந்து நின்றாள்.
எங்கே?
விவாகரத்து கேட்டீங்களே? இன்னிக்கே முடிச்சுக்க பார்க்கிறேன். அதான் புறப்பட்டு வந்துட்டேன்.
ருத்ரனின் பார்வை கூறாக அவள் மீது படிய, மகனை தூக்கி கொண்டவன் வெளியே வெயிட் பண்ணு கொடுத்திட்டு வரேன் என உள்ளே சென்று வந்தான்.
நிலா மற்றும் ருத்ரன் இருவர் மட்டும் புறப்பட்டார்கள். எதுவும் பேசி கொள்ளவில்லை. கார் நேராக கோர்ட் சென்றது. அங்கே அதற்கு முன் கவின் மற்றும் கீதா இருவரும் நின்றிருந்தார்கள்.
என்னாச்சு? போய் ரெண்டு மாசம் தானே ஆகுது? அதுக்குள்ள திரும்பி வந்துட்டீங்க என கவுன்சிலர் கேட்க..
இல்ல ஒத்து வரல!! என்றாள் வயிற்றை நீவி கொண்டே..
கவுன்சிலரின் பார்வை அவளது வயிற்றில் படிய, உன் லவ்வரரோட குழந்தையா? உன் புருஷன பிடிக்கலையா?
அது என்னோட குழந்தை என தோல் மேல் கைகளை போட்டான் ருத்ரன்.
நிலாவின் உதட்டுக்குள் சட்டென சிரிப்பு தோன்ற அதை வெளிக்காட்டி கொள்ளாமல் பார்த்தாள்.
அப்புறம் என்ன தம்பி விவாகரத்து வாங்குற? என சலித்து கொண்டே கேட்டார்.
நான் வற்புறுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டேன் மேடம். என்னோட பொண்டாட்டி மேடம் ரொம்ப பெரிய இடத்து மேடம். அதாவது மினிஸ்டர் தங்கச்சி. அவங்களோட தகுதிக்கு நம்ம கொஞ்சம் கம்மி அதனால தான்.. என்றான் ருத்ரன்.
அச்சச்சோ அப்போ உன்னை வற்புறுத்தி குழந்தை பெத்தானா? சண்டாளன் என கவுன்சிலர் கொந்தளித்து கொண்டு கேட்க .
இல்ல இல்ல நீங்க நினைக்கிற போல இல்ல. என்னோட விருப்பத்தின் பேரில் தான் இந்த குழந்தை என சொல்லி விட்டாள் நிலா.
ருத்ரனின் உதட்டுக்குள் புன்னகை மிளிர்ந்தது. வெளிக்காட்டி கொள்ளாமல் நின்றான்.
அப்புறம் எதுக்கு கண்ணு டைவர்ஸ் வாங்குற? மாமியார் கொடுமையா? நங்கையா கொடுமையா? நாத்தனார் கொடுமையா? என லிஸ்ட் போட்டார் கவுன்சிலர்.
இல்ல அதெல்லாம் இல்ல என உடுக்கையை போல தலையாட்டினாள்.
அப்போ வேற என்னமா பிரச்னை? என நொந்து போய் பார்த்தார்.
பிரச்னையே இல்லாம அதை ஒரு பிரச்னையா எடுத்து பேசி பிரச்னை பண்ணிட்டு இருக்குறது தான் இவங்களோட குடும்ப பிரச்னை என நேர்த்தியாக பேசினாள் கீதாஞ்சலி.
ஹாங் என கவின் அவளை பார்க்க, ருத்ரன் அனைத்துமே புரிந்தது போல நின்றான்.
நிலா எதுவும் பேசாமல் மவுனமாக நிற்க, என்னடா இது ஒரே குழப்பமா இருக்கு? என கண்ணாடியை கழட்டினார் கவுன்சிலர்.
மேடம் பிரச்னை என்னன்னா? என ருத்ரன் ஆரம்பிக்க…
பிளீஸ் உங்களுக்கு என்ன பிரச்னைன்னு கேட்க மாட்டேன். அந்த பிரச்னை அப்டின்ற வார்த்தையை விட்டு பேசுங்க. அதுவே எனக்கு பெரிய பிரச்னையா இருக்கு என்றார்.
நிலா கண்ணக்குழி தெரிய சிரித்து விட.. அய்யோ நானும் உங்களை போல பேச ஆரம்பிச்சுட்டேனே என தலையை சொரிந்தவர். உங்களை பார்த்தால் சண்டை போட்டு பிரியுர போல எனக்கு தோணவே இல்ல. உங்களுக்குள் சண்டை இருக்கிற மாதிரி எனக்கு கொஞ்சம் கூட தெரியல என்றார்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள, நிலா சட்டென நீதிபதியை பார்த்து, எனக்கு விவாகரத்து வேணும் என்றாள் மீண்டும்.
ஒரு பெரு மூச்சை விட்டபடி அவர்களை பார்த்த கவுன்சிலர், மதியம் லஞ்ச் முடிச்சிட்டு வாங்க அது வரைக்கும் உங்களுக்கு நேரம் தரேன் இன்னொரு முறை யோசிச்சுக்கோங்க என்று அனுப்பி வைத்தார்.
தேங்க்ஸ் என இருவரும் வெளியே வந்தார்கள். ருத்ரன் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருக்க, அவ்விடத்தில் சட்டென பரபரப்பு கூடியது.
என்னாச்சு? என ருத்ரன் சுற்றிலும் பார்க்க, மாஸ்க் அணிந்து கொண்டு காரில் இருந்து நேர்த்தியாக இறங்கினான் சர்வேஷ்வரன்.
எதுக்கு இவரு என்னை முறைச்சு பார்க்கிறார். என நிலா ருத்ரனை பார்த்து கொண்டிருக்க, எஸ்கியூசுமி என அருகில் வந்து நின்றது ஆறடி உருவம்.
சட்டென திரும்பி பார்த்தாள் நிலா. சைத்ரேஷ் பாவா!! என திக்கி திணறி நிலா அழைக்க..
நான் சைத்ரேஷ் இல்ல சர்வேஸ்வரன் என கண்கள் சிரிக்க மென்மையாக பார்வையை வீசினான்.
சொ.. சொல்லுங்க என நிலா திக்கி பேசினாள்.
பாவா சொன்னாரா? I mean சூர்யா..
ஹாங்..
I meant சூர்ய பிரகாஷ். அதான் உங்க டாடி. கல்யாணத்தை பத்தி சொன்னாரா? என கேட்டான் சர்வேஷ்.
என்னாச்சு தீரா? என கீதா கேட்க..
இவன் யாரு? இங்கே வந்து வழிஞ்சிட்டு நிக்கிறான். கன்னடத்தில் இவனுக்கு பொன்னே கிடைக்கலையா? வந்துட்டான் பெரிய ஹீரோ flower மாதிரி.. என முனகி கொண்டு நின்றான்.
நிலா சட்டென ருத்ரனை பார்க்க, மேடம் அங்கே என்ன பார்க்குறீங்க? என்னை எதுக்கு வேணாம்னு சொன்னீங்க? பிடிக்கலையா என்ன?
இப்போ என்ன தீரா உனக்கு பிரச்னை? என கீதா சொல்ல..
அந்த creature தான் எனக்கு பிரச்னை. என்ற ருத்ரன் வேகமாக பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுத்தான்.
அதுக்கில்ல எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.
அது எனக்கு பிரச்னை இல்லை. இப்போ கூட நியாபகம் இருக்கு. தாரா சித்தி வீட்டுக்கு வரும்போது குட்டி வயசுல உங்களை மீட் பண்ணியிருக்கேன். குரு பிரகாஷ் பாவா வீட்டுக்கு வந்த போது நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து விளையாடி இருக்கோம். நீங்க உங்களுக்கு நியாபகம் இல்ல போல.. என்றான் சர்வேஷ்.
நிலா ருத்ரனது பக்கம் பதற்றத்துடன் பார்த்தவள் கண்களில் சட்டென வேதனை பரவ.. அவனையே பார்த்தாள்.
சர்வேஷ் சட்டென திரும்பியவன் அங்கு நின்று கொண்டிருக்கும் கீதாவை பார்த்து கையசத்தான்.
கீதா அவன் எதுக்கு உனக்கு கை அசைக்கிறான். கேடு கெட்ட பொறுக்கி. என வாய்க்கு வந்த படி முணகினான்.
அவரு என்னோட எக்சு அண்ட் ex பாஸ்.. என கீதா அவர்களின் பக்கம் செல்ல, கையை பிடித்து தடுத்து நிறுத்தினான் ருத்ரன்.
ஹலோ பாஸ் அனுப்பி வைங்க என சர்வேஷ் சொல்ல.. வேகமாக சிகரெட்டை இழுத்தான் ருத்ரன்.
கீதா தயங்கியபடி சர்வேஷ் பக்கம் சென்றாள். ருத்ரன் தலையை கோதி கொண்டே சிகரெட்டை புகைத்தான்.
அந்த நேரம் பார்த்து இதழ் போன் செய்ய..
சொல்லு என பிடிப்பில்லாமல் கோபத்துடன் பேசினான் ருத்ரன்.
என்னாச்சு உன்னோட குரலே சரி இல்லையே? என இதழ் கேட்க..
அந்த நடிகன் வந்திருக்கான்.
யாரு?
வேற யாரு? அது தான் பவானி கார்பரேட், சித்தார்த் கிருஷ்ணா பையன். நிலாவை கல்யாணம் பண்ணிக்க வந்திருக்கான்.
அதுக்காக நீ எதுக்கு டென்ஷன் ஆகுற? நான் இப்போவே வரேன். என வேகமாக புறப்பட்டாள் இதழ்.
உங்க விருப்பப்படி நீங்க இருக்கலாம். நான் உங்களை எந்த விசயத்திலும் கட்டாய படுத்த மாட்டேன் என சர்வேஷ் சொல்லி கொண்டிருக்கும் போதே, இதழ் வந்து சேர்ந்தாள்.
கீதா எந்த இடத்துல இருக்கீங்க? என இதழ் போன் செய்ய..
ஹே வந்திருக்கியா? என கீதா அதிர்ச்சியுடன் சர்வேஷ்வரனை பார்க்க..
ம்ம் ருத்ரன பார்க்கணும்.. இந்த நேரம் அவன் கூட நான் இருக்கணும் என்றவள் அங்கு வந்த தோரணை கீதாவை வாயை பிளக்க செய்தது. ஹிப் curve பட்ட வர்த்தனமாக தெரிய, தளர்வாக பின்னிய ஜடையில் இருந்து சில முடி கற்றைகள் அவளது நெற்றியை தழுவ ஆசையாக பிரிந்து கொத்து கொத்தாக தொட்டு மீள, அதை காதுக்கு ஒதுக்கியவள் சுற்றிலும் தேடினாள். அப்பொழுது தான் முதுகு தெரிந்தது. ஆள் காட்டி விரல் அளவுக்கு மட்டுமே பின்னால் ஜாக்கெட் இருக்க.. இடையுடன் பின்னழகு முதுகு அழகில் நடுவில் ஜடை மறைந்திருந்தது.
கரும்பச்சை நிற ஜார்ஜெட் பிலைன் சாரி.. கண்ணுக்கு மை, காதில் குடை ஜிமிக்கி.. கழுத்தை இறுக்கி ஒரு கருப்பு கயிறு கட்டியிருக்க, கையில் கலகலக்கும் கண்ணாடி வளையல் என அந்த இதழ் மச்சம் மின்னி கொண்டிருக்க, ருத்ரனை பார்த்து விட்டாள்.
ருத்ரன் அவளை புருவம் உயர்த்தி பார்க்க, ஆர் யூ ஓகே என அருகில் நெருங்கி சென்றாள்.
கவின் எட்சில் கூட்டி விழுங்கி கொண்டே சர்வேஸ்வரனை பார்க்க, நிலாவின் கண்கள் கலங்கி போனது. இதழின் தோற்றத்தை பார்த்து,
ருத்ரன் அவளை பார்த்ததும் ஒரு நொடி ஸ்தம்பித்து விட்டான். ஆர் யூ ஓகே என ஓடி சென்று அணைத்து கொண்டாள்.
நிலாவின் கண்ணில் நீர் கொட்டியது. சர்வேஷ் கண்களோ சிவப்பேரி இருக்க..
ப்ரோ நீ பேசாம வீட்டுக்கு கிளம்பேன். என கவின் கைகளை பிடித்து இழுத்தான்.
ருத்ரன் பெரு மூச்சுடன் அவளை விட்டு விலகியவன் கையை பிடித்து கொண்டான். அவளது கர்சீப் கொண்டு வாயை துடைத்து விட்டாள் இதழ்.
இன்னொரு சிகரெட்டை ருத்ரன் எடுக்க, ஹே வேணாம். சொல்றத கேளு தீரா என பிடுங்கி வீசினாள் இதழ்.
ஒரே ஸ்ட்ரஸ்சா இருக்கு என தலையை பிடித்தான் ருத்ரன்.
வீட்டுக்கு வந்ததும் சரியா போயிடும். நீ கம்முன்னு உட்காரு. என கையை பிடித்து அருகில் அமர வைத்து கொண்டாள்.
ருத்ரன் அவளின் முடி கற்றையை காதில் ஒதுக்கி விட..
What happen நிலா? சர்வேஷ் பார்வை நிலாவின் மீது படிந்தது.
ஒண்ணுமில்ல..
உங்களுக்கு ஒரு துணையா கண்டிப்பாக நான் இருப்பேன். என்னை நம்பலாம். எதுக்கும் வற்புறுத்த மாட்டேன். என அவளின் கையை பிடித்தான் சர்வேஷ்.
நிலாவின் கண்களில் நீர் கொட்ட, சர்வேஷ் கர்சீப் நீட்டினான். வாங்கி துடைத்து கொண்டாள்.
உள்ளே வர சொல்றாங்க என கவின் கூற, ஒரு பக்கம் ருத்ரன், இதழ்.. இன்னொரு பக்கம் சர்வேஷ், நிலா.
ருத்ரனோ கைகளை இறுக்கி மடக்க, தீரா ப்ச் என அவனது கைகளை பிரித்து விட்டாள் இதழ்.
நிலா தலையை குனிந்து கொண்டு முன்னாள் சென்று விட, ருத்ரனை இழுத்து அணைத்தவள். ஜெயிச்சு வா!! கட்டிக்கணும் என அழுத்தி கூறினாள்.
எதிரில் சர்வேஷ்.
தொடரும்..