அன்பானவன் அடங்காதவன் அசாராதவன்

by Pradhanya kuzhali
219 views

EPI-145 

சூர்யா புறப்பட்டு கொண்டிருக்க சத்ய தேவ் மகனை தோளில் போட்டு ஆற்று படுத்தி கொண்டிருந்தான். 

இதழ் அருகில் வந்தவள். அண்ணா சாகிய என்கிட்ட கொடு என வாங்கி முத்தமிட்டவள் குளிக்க வைக்க தூக்கி சென்று விட்டாள். அவளுக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும். 

சத்ய தேவ் லேப் டாப்பை எடுத்து வைத்தவன். நோண்ட ஆரம்பித்தான். கூலிங் கிளாசுடன் டிப் டாப்பாக இறங்கி வந்தான் மிதுன். 

டேய் இங்கே வா என சத்ய தேவ் அழைக்க, என்னடா? லேப் டாப் வச்சிட்டு இருக்க? பாறை முழுங்கி மாதிரி காக்கி சட்டையில் திரிவ? என்னாச்சு? என கேட்டான் மிதுன் கெத்தாக.. 

வேலைய ரிசைன் பண்ணிட்டேன். அப்பா கூட பிஸ்னஸ் பார்த்துக்களானு இருக்கேன். என சத்ய தேவ் சொல்லி கொண்டே லேப் டாப்பை திருப்பியவன். இதை கொஞ்சம் எக்ஸ்ப்ளைன் பண்ணு என்றான். 

இதுவா? இதை நீ உன்னோட செல்ல அப்பா கிட்ட கேளு என மிதுன் எழுந்தான். 

டேய் நாயே? எதுக்கு அந்த ரா பிச்சை கண்ணாடி? என சத்ய தேவ் கேட்டான். 

ஹலோ எனக்கு கல்யாணம் ஆக போகுது. இனிமே நான் தனி ஆள் இல்ல. என் பின்னாடி.. 

உன் பின்னாடி டாடி!! என சத்ய தேவ் அடக்கப்பட்ட சிரிப்புடன் கூற, வேகமாக திரும்பினான் மிதுன். 

சூர்யா வேஷ்டியை மடித்து கட்டி கொண்டு போனில் பேசி கொண்டிருந்தார். 

ரிதம் நாங்க ரெடி! என சொல்லி கொண்டே துகிலுடன் வந்தார் இன்பா. நிலாவும் புறப்பட்டு வந்திருந்தாள். ருத்ரன் நேராக சத்ய தேவ் முன்னாள் வந்தவன் மாமா கிளம்புலயா? என கேட்டான். 

எங்கே? என சக்தி கேட்க.. 

அம்மா இவனை புடி என சொல்லி கொண்டே வந்தாள் ரிதம். 

ஆதி கண்ணா!! அம்மாச்சி கிட்ட வாங்க என விவேகா குட்டி அழகனை தூக்கி கொண்டார். 

என்ன மாமா? எங்கேன்னு கேட்கிறீங்க? நம்ம எல்லாரும் ஊருக்கு போக போறோம். மிதுன் மாமாவுக்கு பண்ணு பார்க்க போறோம். இதழுக்கு ஒரு இளவரசனை பார்க்க போறோம் நீங்க வரலையா? என ருத்ரன் கேட்டான். 

ருத்ரன் உனக்கு வாய் நீளமா இருக்கு. அது பண்ணு இல்ல பொண்ணு டா!! என்று பற்களை கடித்தான் மிதுன். 

இங்கே பிஸ்னஸ்ச யார் பார்த்துக்குவா? என சத்ய தேவ் தனது தம்பியை பார்க்க, அதெல்லாம் பார்த்துக்கலாம். வாங்க மாமா என ருத்ரன் அழைத்து கொண்டிருக்க, சத்ய தேவின் பார்வை ரிதமின் மீது பட்டது. 

ரிதமும் வரா என்றான் ருத்ரன். சத்ய தேவ் அப்படியே இருக்கையில் சாய்ந்து கொண்டிருக்க, சாஹியை தூக்கி கொண்டு வந்தாள் இதழ். 

எங்க வீட்டு ராஜகுமாரன் ரெடி ஆகிட்டார். அழகு பையன்? என இதழ் தனது அண்ணனின் முன்னால் காட்ட, புன்னகையுடன் மகனை கையில் ஏந்தினான் சத்ய தேவ். 

சக்தி போலாமா? என சூர்யா அழைக்க, நான் எனக்கு இங்கே வேலை இருக்கு பா? நம்ம கம்பனி ரெண்டையும் இனி நான் பார்த்துக்கிறேன். என்றான் சத்ய தேவ். 

ரிதம் கொஞ்சம் கூட சளைக்காமல் அதே இடத்தில் அப்படியே நின்று கொண்டிருந்தாள்.

நீ வரலையா? என இன்பராகவன் கேட்டார். 

எப்படி சக்தி மூணு பேரையும் தனியா ரிதம் பார்த்துக்குவா? அவளே வரேன்னு சொல்லிட்டா உனக்கு என்ன பிரச்னை? வரதுக்கு? என்று மகி கேட்க.. 

சரி என புறப்பட்டான் சத்ய தேவ். 

அப்புறம் என்ன போலாமா? என்று சொல்லி கொண்டே வந்தான் நிதின். 

அட வா நிதின் குட்டி. நாங்க எல்லாரும் ரெடி போலாமே? என அனைவரும் புறப்பட்டார்கள். 

என்னங்க நம்ம ரெண்டு பேரும் ஒரு காரில் போலாம் என நிலா சொல்லி கொண்டிருக்க, அவ்விடத்துக்கு வந்த நிதின், நீ சித்தப்பா கூட பிரண்ட் சீட்ல போ! இல்லன்னா ஹரிணி கூட வா! இப்போ நான், மாப்ளை, மிதுன், எல்லாரும் ஒட்டுக்கா வர போறோம் போ என அதட்டினான் நிதின். 

இதை கேட்டு ருத்ரன் தடுத்து விடுவான் என்னும் தொனியில் நிலா அதே இடத்தில் நின்று கொண்டிருக்க, அவனோ எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான். 

சரி அண்ணா என அரை மனதுடன் புறப்பட்டாள் நிலா. ஒரு பட்டாளமே கிளம்பியது. சத்ய தேவ் , நிதின், ருத்ரன், மிதுன் என நான்கு பேரும் ஒரே காரில் புறப்பட்டார்கள். 

பெங்களூரில் இருந்து அஞ்சு மணி நேர பயணத்துக்கு பிறகு ஈரோடு வந்து சேர்ந்தார்கள். 

ஈரோட்டில் இருந்து ஊருக்கு செல்ல வேண்டும். நிதின் கார் ஓட்டி கொண்டிருக்க, மகனுக்கு பவுடர் பாலை கலக்கி பால் ஊட்டி கொண்டிருந்தான் சக்தி. 

ருத்ரன் தனது மருமகனை பார்த்து, அழகா இருக்கான் மாமா அப்டியே உங்களை போல.. என்னோட பையன பார்த்தால் எனக்கு என்னமோ பிடிக்கல.. தெலுங்கு வாடை அடிக்குது. 

என்ன சொன்னீங் மாப்ளை? சரியா கேட்கல? என நிதினின் பார்வை ருத்ரனின் மீது பட்டது. 

அய்யோ என இருந்தது ருத்ரனுக்கு. சத்ய தேவ் அடக்கப்பட்ட சிரிப்புடன் ருத்ரனை பார்க்க, மாமா இல்லைங் இப்போ தான் என் பையன் ரொம்ப லட்சணமான முகத்துல தெரியுறான். பியர்ஸ் போடாமலே லட்சணம் என சமாளிதான்.

அவனை நாங்க வளர்க்கலாம்னு இருக்கோம் என்றான் நிதின். 

ரொம்ப சந்தோசம் என சொல்லிய ருத்ரன் தனது அக்காள் மகன் சாஹித்யாவை வாங்கி தொட்டு பார்த்தான். 

சத்ய தேவ் வெளியே செல்லும் காரை பார்க்க, என்னடா ஆச்சு? எதுக்கு இப்படி முகத்தை வச்சிருக்க? என நிதின் தனது அண்ணனை பார்த்தான். 

எனக்கென்ன? நான் நல்லாருக்கேன். என சத்ய தேவ் எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் கூறினான். 

நீ சொல்றது பொய்ன்னு எனக்கு நல்லா தெரியுது தம்பி. ஒழுங்கா உண்மைய சொல்லு. அவள் உன்கிட்ட பிரச்னை பண்றா அது தானே? என நிதின் சத்ய தேவை பார்த்தான். 

சத்ய தேவ் அமைதியாக இருக்க, அதற்குள் வீடு வந்து சேர்ந்தார்கள். 

உமா உற்சாகத்துடன் இருந்தார். ரிதம் இறங்கியதும் ராஜ மரியாதை கொடுக்கப்பட்டது. மூன்று தடவை ஆரத்தி எடுத்தார்கள். 

பூ போட்டு வரவேற்றார்கள்  ரிதமின் கண்ணக்குழி ததும்பியது. இன்பாவுக்கு அதற்கு மேல் மரியாதை.. 

என்னாச்சு அத்தை? உங்க பேரன் அங்கே இருக்கான். என்னை கொஞ்சிட்டு இருக்கீங்க? அப்புறம் உங்க பையனுக்கு பொறாமை வந்திடும். என்றார் இன்பா சிரித்து கொண்டே.. 

இப்படி ஒரு தங்க பொன்னை பெத்திருக்க ராசா!! எங்க வீட்டு மருமகள் எங்க குடும்பத்தை விருத்தி பண்ணியிருக்குது. பட்டு கம்பளம் விரிச்சா கூட தப்பில்ல ராசா என்றார் உமா. 

சூர்யா பெரிதாக எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. இன்பா அருகில் நெருங்கி “கொஞ்சம் சிரி சூர்யா” 

இதுல என்னடா சிரிக்க இருக்கு? எனக்கு வயசு ஆகிட்டே போகுது. என்றார் சூர்யா. 

அத்தை இந்தாங்க என மகி குழந்தையை நீட்டினார். 

கண்ணு பூசணி எடுத்திட்டு வா என மூன்று கொள்ளு பேரனையும் சேர்த்து, சத்ய தேவ், மிதுன் தேவ், நிலா, ருத்ரன், நிதின் ,ஹரிணி, ரிதம் இதழ் என அனைவரையும் சுற்றி போட்டார்கள். 

அனைவருக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. நிலா பொண்ணு இதழ் பாப்பு என இருவரையும் அழைத்த உமா, உங்க ரெண்டு பேரோட பொன் குழந்தைகளை நீங்க அண்ணன் வீட்டுக்கு தான் கட்டிக்கொடுக்கணும். அப்போ தான் வழிவழியா குடும்ப உறவு பலப்படும் என்றார். 

நிலா ருத்ரனை பார்க்க, மிதுன் உமாவின் அருகில் வந்து, ஆத்தா நீங்க பொண்ணு பார்த்தேன்னு சொன்னீங்களே! காட்டுங்க உடனே வேலைய ஸ்டார்ட் பண்ணிடுறேங்க என்றான். 

உமா களுக்கென சிரித்து விட, அதுக்கு சரி பட்டு வருவியா நீ? என சூர்யா கேவலமாக பார்த்து விட்டு சென்று விட்டார். 

இதழ் எதுவும் பேசாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். ரிதமுக்கு சாமரம் வீசுவது தான் குறையாகி போனது. 

சத்ய தேவ் பெரிதாக எதையும் கண்டுகொள்ளவில்லை. 

நிலா ருத்ரனுடன் வாக்கிங் சென்றாள். ஹே நீயே நடக்க வேண்டியது தான? நான் துகில் கூட விளையாட போறேன் என்றான் ருத்ரன். 

நிலா முறைத்து பார்க்க, ருத்ரன் கையை கெட்டியாக பிடித்து கொண்டான். 

சரி சொல்லுங்க ஒருவேளை உள்ளே இருக்குறவங்க பையனா இருந்தால் ஒரு பொண்ணு பெத்துக்கலாமா? என கேட்டாள் நிலா. 

ருத்ரன் சுற்றிலும் திரும்பி பார்த்தான். 

என்ன பார்க்குறீங்க? என நிலா சுற்றிலும் பார்த்தாள். 

இது spr பொண்ணா? நிதின் நிவாஸ் தங்கச்சிக்காரியா? அழகு பொம்மாயா அப்டின்னு பார்க்கிறேன். நட்ட நடு ரோட்டுல ஒரு அழகான வயசு பையன் கிட்ட வந்து என்ன கேள்வி கேட்கிற? ஹான் என இடுப்பில் கை வைத்து கொண்டு கேட்டான் ருத்ரன். 

வேணம்னா போடா!! என நிலா முன்னால் நடந்தாள். 

அய்யோ நிலா குட்டி லட்சணமா தெலுங்கு வாடை வராம பியர்ஸ் குட்டி போல ஒரு பொண்ணு வேணும் டா! என பின்னால் ஓடினான் ருத்ரன். 

நிதின் ஹரிணி இருவரும் மகளை கொஞ்சி கொண்டிருக்க, துகில் இன்பாவின் கையில் இருந்தான். ரிதம் ஒரு திசையில் தேவ் ஆதித்யாவை வைத்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சத்ய தேவ் தனது மகன் தேவ் சாஹித்யாவை வைத்திருந்தான். 

(இங்கே கூட கதைய முடிக்கலாம் தான், கதை படி ஆதி ரிதம் கூட இருப்பான். சாஹி சத்ய தேவ் கூட இருப்பான்) Happy ending வேண்டும் வாசகர்களுக்காக மட்டுமே அடுத்த 5 பாகங்கள் அதாவது ஒப்புக்கு சேர்த்து வைத்தல்) 🤣🤣🤣

தொடரும்..

You may also like

Leave a Comment