அன்பானவன் அடங்காதவன் அசாராதவன்

by Pradhanya kuzhali
192 views

EPI 146

AAA -146 

இருவரின் பார்வையும் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டது. இரும்பு துகள்கள் எப்படி காந்தத்தை பார்த்தால் ஒட்டி கொள்ளுமோ? அது போல.. அவளை பார்த்தால் சத்ய தேவின் ரத்தத்தில் இருக்கும் இரும்பு காந்தமாக மாறும். அந்த ரத்தமெல்லாம் இதயத்தை நோக்கி பாயவில்லை. அவளை பார்த்து பாய்ந்தது. அவளுக்கும் அப்படித்தான் ஆனால் அதை அனீமியா என கதைப்பாள். உண்மை என்னவெனில் காதல் காந்தவியல்.. 

அதில் தன்னிலைக்கு வந்தது என்னவோ ரிதம் தான் வேகமாக மகனை அணைத்து கொண்டு உள்ளே சென்று விட்டாள். இரவு முழுவதும் மாசி மாச கோடை காற்று வீசி கொண்டிருக்க, ஒருவன் உள்ளமோ பாலைவன அனல் காற்றாக வெப்பத்தை கொடுத்தது. 

இரண்டு வருடத்துக்கு முன்பு அவளை தூக்கி சென்று சேற்று வேசம் போட்டு சேர்ந்து குளித்தான். ஆனால் இந்த முறை இருவரும் எதிரெதிர் திசையில் திரும்பி நிற்கிறார்கள். இணைய துடிக்கும் ஒருவன், மறுக்கும் இன்னொருத்தி.. 

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. மகி உற்சாகமாக கோவிலுக்கு புறப்பட்டார். அங்கே சென்றும் சந்தோசம் நீடிக்குமா?  ( மிதுன், இதழ் காட்சிகள் நான் பொல்லாதவன் கதையில் வரும்) அனைவரும் சென்று சாமியை கும்பிட்டார்கள். 

சாமியிடம் கொண்டு சென்று மகனை காட்டினாள் ரிதம். சத்ய தேவ் என உமா அழைத்தார். 

ஆத்தா என அருகில் சென்றான். உன்ற பொண்டாட்டி பக்கத்துல நில்லப்பா என நிற்க வைத்தார். இருவரும் மகன்களை கையில் வைத்து கொண்டு நின்றார்கள். என்ன தான் சந்தோஷமாக இருந்தாலும். இந்த கோவிலுக்கு மட்டும் வந்துவிட்டால் ரிதமின் நெஞ்சில் பயம் வந்து தங்கி விடும். அவளின் முகத்தில் குப்பென வியர்த்து கொட்டியது. விதியை தேடி வந்து விட்டாள். 

பின்னாடி சாமி மரத்தை சுத்திட்டு வாங்க ரெண்டு பேரும். என்ற உமா, கண்ணு பெரிய பேரனையும் தூக்கிட்டு போங்க என துகிலை இதழ் தூக்கி சென்றாள். 

ரிதம் பயந்தது போலவே குறி சொல்லும் பாட்டி அங்கு அமர்ந்திருக்க, இதயம் படபடக்க தவிர்க்க நினைத்தாள் ஆனால் முடியவில்லை. மூன்று சுத்து முடித்து குழந்தையை எடுத்து சென்று ஆசிர்வாதம் வாங்கினாள்.

குறி சொல்லும் பெண்மணி ரிதமை பார்த்து சிரித்தார். 

எதுக்கு சிரிக்கிறீங்க மா? என கேட்டு கொண்டே வந்தாள் மகி. 

நீயே பாரு என சோளி பரவலையை உருட்டினார். மாமி நான் போறேன் என ரிதம் அவ்விடத்தை விட்டு நகர, 

ஹே நின்னு கேட்டுட்டு போ!! என தடுத்தார் சோளி பெண். 

ரிதம் சொல்றத கேளு! நில்லு என மகி தடுத்து நிறுத்தினார் பதட்டத்துடன். 

சத்ய தேவ் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான். 

நீங்க ரெண்டு பேரும் உங்களோட விதிய கையில சுமந்துகிட்டு இருக்கீங்க. என்றவர் ரிதமை பார்த்து, நீ எவ்ளோ தான் விலக நினைச்சாலும் இந்த வாழ்க்கை உன்னை சேர்த்தி பிடிக்கும். நீ சேர்த்து பிடிக்க நினைச்சா இது சம்பட்டியில அடிச்ச போல கூடிய சீக்கிரத்தில் ஒரு விசயத்தை கொடுக்க போகுது. உன்னோட தாலி பாக்கியம் ரொம்ப கெட்டி. உன் புருஷன நீ வெறுத்து ஒதுக்கினாலும் அவனை தலையில் கொண்டாடும் நாள் கொஞ்சம் தொலைவு தான். சிவன் ( சத்ய தேவ்) கூட சதி (சதி தேவி ) சேர்ந்தால் சக்திக்கு (சக்தி – ரிதம்) பொல்லாப்பு. நீ சதியா இல்ல சக்தியா இருக்க என்று விட்டு சோளியை கலைத்தார். 

ரிதமின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை சிந்தியது. அவள் வேகமாக அவ்விடத்தை விட்டு சென்றாள். 

சத்ய தேவ் தீவிரமாக யோசித்தான். அனைத்து விடையும் கண்டறிய முடியாது. ஆனால் ஆனால் ஒன்றை கண்டறியலாம் வேகமாக வீட்டுக்கு சென்றான். 

ரிதம்!! ரிதம் என கத்தி கொண்டே அறைக்குள் நுழைந்தான். 

என்ன? என அவள் பதில் கொடுக்க.. 

உண்மைய சொல்லு! 

என்ன உண்மை? என ரிதம் அசால்ட்டாக பதில் கொடுக்க.. ஹே சொல்லு டி!! என கத்தினான் சத்ய தேவ். ரிதம் மீண்டும் அமைதியாக இருந்தாள். 

இப்போ நீ சொல்லல!! நான் நான் என வேகமாக கத்தியை எடுத்து கழுத்தில் வைத்து கொண்டான் அவனே!. 

ரிதமின் கண்களில் நீர் கொட்டவில்லை. சொல்றேன் பிளீஸ் என திணறினாள். 

சொல்லு? என சத்ய தேவ் கோபத்துடன் பார்க்க.. எனக்கு ரிதமாக எதுவுமே நியாபகம் இல்ல. நான் சதி தேவியாக தான் துகில சுமந்து பெத்தேன். என்றாள் ரிதம்.  

சத்ய தேவ் வேதனையின் உச்சத்தில் பார்த்தான். தன் மேலேயே வெறுப்பு வந்தது அவனுக்கு. 

( முக்கிய குறிப்பு : சதி தேவி என்பவள் ரிதம் தான். அதாவது அடங்காத அதிகாரா pocket நாவலில் வரும் கதையில் இருந்து சதி தேவி character கதை சுருக்கம் : . சத்ய தேவிடம் ரிதம் காதல் டார்ச்சர் செய்வாள். சத்ய தேவ் தனது காதலை வெளிப்படுத்தவே மாட்டான். ரிதம் தகிடி தத்த வேலைகளை செய்து ரிதம் மற்றும் சத்ய தேவ் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள். இருவரின் வாழ்க்கையும் சீராக போய் கொண்டிருக்கும் வேலையில் ப்ளாக் ஈகிள்ஸ் gang இன்ப ராகவனை பழி வாங்க ரிதமை கடத்தி விடுவார்கள். அந்த நேரம் ரிதம் நான்கு மாத கருவை சுமந்து இருப்பாள். குழந்தை கருசிதைவு ஏற்படும். ரிதம் இறந்து விட்டாள் தீ விபத்தில் என தெரிந்த சத்ய தேவ் பைத்தியகாரன் போல திரிவான். 

ஆனால் ப்ளாக் ஈகிள்ஸ் gang ரிதமை வேறு ஒரு பெண்ணாக மாற்றுவார்கள். ரிதமின் நினைவுகளை மட்டும் அழித்து அல்சைமர் ஷாக் வைத்து அவளை சதி தேவி என்ற பெயருடைய பெண்ணாக புதிய நினைவுகளை ஆழ்நிலை தூக்கத்தில் இரண்டு வருட படுக்கையில் அவளை பற்றிய அனைத்து தகவலையும் புதிதாக மூளைக்கு நியாபக படுத்தி ரிதம் என்பவள் அழிந்து சதி தேவி என்னும் பிராமண பெண்ணாக விழிக்கிறாள் ரிதம். அவளை அரிச்சந்திரன் திருமணம் செய்து கொள்கிறான் திருச்சியில், நிதின் பிரகாஷ் மூலமாக ரிதம் உயிருடன் இருக்கிறாள் என தெரிந்து கொண்ட சத்ய தேவ் அவளை மீட்கிறான். அவள் நினைவுகள் அழிந்து சதி தேவி என்னும் புதிய அடையாளத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாள். அதன் பின் சத்ய தேவின் காதலை புரிந்து கொண்டாள் சதி தேவியாக.. அழிந்த நினைவுகள் திரும்பவும் நினைவுக்கு வரவே இல்லை. அவளது நினைவுகள் மீண்டு வந்தது அனைத்தும் இரட்டை குழந்தைகள் பிறந்ததும் தான் சதி தேவி ரிதமாக மாறி இருக்கிறாள் கிட்ட தட்ட சொல்ல போனால் split personality அந்நியன் போல சத்ய தேவ் காதலுக்கு ஏங்கும் சதி தேவி சத்ய தேவ் மனசுல ரிதம் தான் இருக்காள் அப்டின்னு தெரிஞ்சுகிட்டு மொத்தமாக ரிதமாக மாறி தருணம்.) 

ரிதம் அவனை உறுதியாக பார்த்தவள். எனக்கு  ஆதி பிறந்த நேரம் தான் என்னோட எல்லாமே ஞாபகத்துக்கு வந்துச்சு. ரிதமாக.. என நிறுத்தியவள். சாகி பிறக்கும் போது உன்னோட காதல் சதி தேவி மேலே இருந்ததே? அந்த ஐயர் பொண்ணு சதி தேவி! அவள் அறி சந்திரன் பொண்டாட்டியா இருந்தும் கூட அவளை தூக்கிட்டு வந்து கட்டிக்கிட்டேயே அது நினைப்புக்கு வந்தது. 18 வருஷ ரிதம் காதலை எக்ஸ்பிரஸ் பண்ணாத நீ சதி தேவி கிட்ட மயங்கி நின்னியே அது நியாபகம் வந்துச்சு. அப்போ நீ ரிதமாக இருக்க என்னை லவ் பண்ணவே இல்ல என்னோட creature சதி தேவிய லவ் பண்ணியிருக்க எல்லாமே நியாபகம் வந்துச்சு. என்ற ரிதம் கண்களில் நீர் வழிய, உனக்காக சதி தேவி இந்த நாலு வருடமும் ரிதமாக வாழ்ந்து இருக்கா! எல்லா இடத்துலயும் உனக்கு கொஞ்சம் கூட சந்தேகமே வராத மாதிரி வாழ்ந்த சதி தேவியோட வாழ்க்கை ஞாபகத்துக்கு வந்துச்சு. உன்னால நான் ரிதமா இருக்கேனா? சதி தேவியா இருக்கேனா அப்டின்னு கண்டு பிடிக்க தெரியலல்ல என தீர்க்கமாக கூறியவள். ஒரு புன்னகையை சிந்தி அந்த சதி தேவி உன்னை விட்டு போக காரணம் என்ன தெரியுமா? என கேட்டாள். 

சத்ய தேவ் வருத்தத்துடன் ரிதமை பார்க்க, அவளுக்கு ஜாதக நம்பிக்கை அதிகம். நுனி நாக்கு சமஸ்கிருதம் அவள். என்னை போல நார்த்திகம் இல்லையே என சிரித்தவள் கண்களில் நீர் கொட்ட, நான் ரிதம் சிம்ம ராசி. நீ கன்னி ராசி ஆனால் சதி தேவி மேடம் கன்னி ராசி! அவள் பத்து பொருத்தமும் உன் கூட பொருந்தி இருக்காம். ரெண்டாவது தடவை மேரேஜ்  ஏற்பாடு பண்ண சமயம் நீ அதிவீரா பொண்டாட்டி அம்முவ காப்பாத்தும் போது நீ சாக கிடந்த, அப்போ இருந்து சகுனம் பார்த்ததில் சதி தேவி சக்தி பக்கத்தில இருந்தால் சக்திக்கு நல்லது இல்லன்னு பிரிய பிளான் பண்ணி பிரிஞ்ச சதி தேவி தான் உன்னோட மனசுல இருக்கா. நான் இல்ல நீ அவள் கூட சேர்ந்து துகில, ஆதிய, சாகிய பெத்திருக்க ராஸ்கல் என சட்டையை பிடித்து உலுக்கி கீழே தள்ளினாள். 

ஹே ரிதம் அதுவும் நீ தானடி!! 

நான் இல்ல b* அது நான் இல்ல.. உன்னால என்னையே உணர முடியல.. அவள் நடிச்சிருக்கா? ரிதமாக என்னை நீ… கொன்னுட்ட.. உனக்காக அவள் அரிச்சந்திராவ கொண்ணுறுக்கா? உனக்காக உன்னோட காதலுக்காக அவள் என்னை வெளியே வர விடவே இல்ல. ஆதி பொறக்கும் போது நான் என்ன தெரியுமா நினைச்சேன்? கஜுராஹோல உனக்காக மீட் பண்ண காத்திருந்தேனே? அது தான் டா எனக்கு நினைப்பு வந்தது. 

சத்ய தேவ்..? 

தொடரும்…

You may also like

Leave a Comment