அன்பானவன் அடங்காதவன் அசாராதவன்

by Pradhanya kuzhali
210 views

EPI 149

AAA -149 

இல்ல டிம்பிள் அழ வேணாம் செல்லம் எதுவும் பண்ணலாம். இல்லடா நீ அழ கூடாது. பசங்க ரெண்டு பேரையும் விட்டு வந்துட்ட!! நீ? முதல்ல நீ தைரியமா இருக்கணும். அப்போ தான் நம்ம இதை சரி பண்ண முடியும். என்றார் இன்பா. 

ரிதம் வேகமாக கண்களை துடைத்து கொண்டவள். நான் டாக்டரை பார்க்கணும் கூட்டிட்டு போங்க பா!! என்றாள். 

நான் டாக்டரை பார்க்க தான் போறேன். வா போலாம் என பின்னால் குரல் கேட்டது. அங்கே நிதின் நின்றிருந்தான். 

எதுவும் பேசாமல் டாக்டரின் முன்னால் அமர்ந்திருந்தாள் ரிதம். 

நிதின் குரலை சரி செய்தபடி, எப்போ டாக்டர் எங்க அண்ணாவுக்கு டிஸ்சார்ஜ் என கேட்டான். 

இன்னும் மூணு நாள் oservation ல இருக்கணும் மினிஸ்டர் சார். அதுக்கு பிறகு தான் டிஸ்சார்ஜ் பண்றதாக யோசிக்கணும். அவருக்கு டாக்டர் சிட்டிங் இருக்கு. அவருக்கு தலை வலிக்க கூடாது. அதெல்லாம் செக் பண்ணிட்டு தான் அனுப்புவோம் என்றார் மருத்துவர். 

டாக்டர் எப்போ அவருக்கு பழைய நினைவுகள் திரும்பும்? என ரிதம் கேட்டாள். 

அது கொஞ்சம் கஷ்டம் என்றார் மருத்துவர். 

என்ன சொல்றீங்க? என அதிர்ச்சியுடன் நிதின் கேட்க.. 

அவரோட நினைவுகள் எப்போ வேணாலும் முழுமையாக போகலாம். தன்னை தானே யாருன்னு கூட கேட்பார். மூளை ஆக்சிடன்ட் ஆனதுல கொஞ்சம் சுருங்கி போயிருக்கு என்றார். 

ரிதம் தீவிரமான பாவனையுடன், அப்போ இதுக்கு என்ன தான் தீர்வு என கத்தி விட்டாள். 

நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன். பக்கத்தில இருந்து பார்த்துக்கோங்க. செக் அப் கூட்டிட்டு வாங்க. அவரை ஹேப்பியா வச்சுக்கோங்க. May be சரியாக வாய்ப்பிருக்கு அதுவும் வெறும் 10% தான் என கூறிவிட்டார். 

கண்களை மூடி திறப்பதற்குள் மூன்று நாட்கள் ஓடியிருக்க, சத்ய தேவ் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டான். 

அப்பா!! எனக்கு எத்தனை வயசு என கண்ணாடியில் முகத்தை பார்த்துகொண்டு கேட்டான் சத்ய தேவ். 

உனக்கு 35 என்றார் சூர்யா. சத்ய தேவ் தலையை பிடித்தபடி அமர்ந்து கொண்டான். 

சக்தி என அழைத்து கொண்டே ஹரிணி வந்தாள். அதே நேரம் ரிதமும் அவனை பார்க்க அறைக்குள் நுழைந்தாள். சக்தி என அழைத்து கொண்டே.. 

யார் நீங்க? என சத்ய தேவ் கேட்க.. 

இவள் ரிதம் நான் ஹரிணி என்றாள் ரிதம். 

ஹரிணி!! ஹரிணியா? என ரிதமை பார்த்தவன் பாத்ரூம் போயிட்டு வரேன் என வேகமாக தலையை பிடித்து கொண்டு சென்றான். 

ஹே எதுக்கு ரிதம் உன்னை நீயே   ஹரிணின்னு சொன்ன? என்ன try பண்ற நீ? என்னை எதுக்கு ரிதம்ன்னு சொன்ன? என்று கோபத்துடன் பார்த்தாள் ஹரிணி. 

நீ எதுக்கு அவனை பார்க்க இங்கே வந்த? என்று கேட்டு கொண்டே வந்தான் நிதின். 

உன் பொண்டாட்டிய முதல்ல இங்கிருந்து கூட்டிட்டு போ!! என்ன பண்ண நினைக்கிறா? அவள் எதுக்கு என் புருஷன பார்க்க வரா!! அவன் என்னோட சத்ய தேவ். என்ற ரிதம் ஹரிணியை பார்த்து, ஹே வெளில போ!! என்றாள் கோபத்துடன்.. 

ஹே நான் போக மாட்டேன் என ஹரிணி சொல்லி கொண்டிருக்கும் போது வெளியே வந்த சக்தி, நீங்க எல்லாரும் யாரு? என கேட்டான். 

சக்தி நான் ஹரிணி என்றாள் கண்களில் நீருடன்.. 

ஹரிணி என வேகமாக அவளை அணைக்க வந்தான் சத்ய தேவ். 

டேய் அவள் என் பொண்டாட்டி டா!! என நடுவில் நிதின் வந்து நின்றான். 

சீரியஸ்லி!! ஹரிணி நீயா என்னோட ஹரிணி? என்னோட ஹரிணிக்கு கல்யாணம் ஆகிடுச்சா? என்று அதிர்ச்சியுடன் தலையை பிடித்து கொண்டான் சத்ய தேவ். 

என்ன நடக்குது? எதுக்கு இந்த ரூம்ல இத்தனை பேர் இருக்கீங்க எல்லாம் வெளியே போங்க என கேர் நர்ஸ் வந்து அவனுக்கு தண்ணீரை எடுத்து கொடுத்தவள். சில மாத்திரைகளை கொடுத்து சாப்பிட வைத்தாள். 

சத்ய தேவ் அப்படியே படுக்கையில் படுத்து கொண்டான். மூவரும் வெளியே வந்து விட, வீட்டை விட்டு வெளியே போடி! என கத்தியிருந்தாள் ரிதம். 

இது என் சின்ன மாமியார் வீடு. நான் வருவேன் டி! என ஹரிணி ஒரு பக்கம் கோபமாக கூறினாள். 

அவர்கள் இருவரும் சண்டை போடும் சத்தம் கேட்டு அனைவரும் வந்தார்கள். 

என்ன நடக்குது? ரெண்டு பேரும் குமுடிபூண்டி சண்டை போட்டுட்டு இருக்கீங்க? என மிதுன் கேட்க..

அது குமுடி புடி சண்டை!! என திருத்தினான் ருத்ரன். அவனது கையில் சாகி குட்டி.. 

இன்பா துகிலுடன் வந்தார். சூர்யாவின் கையில் ஆதி. என எங்கே எல்லா பக்கமும் குழந்தை சத்தமாக இருந்தது. 

ஹரிணி ஆர்கியு பண்ணாத சொல்றத கேளு! என நிதின் தடுக்க.. என்னமா ஆச்சு? என மகி ரிதமை விலக்கினார். 

மாமி இப்போ சக்திக்கு குட்டி வயசு நினைப்பு தான் இருக்கு. ஹரிணியை வரவேணம்னு சொல்லுங்க மாமி. என்ற ரிதம் நேராக சூர்யாவின் அருகில் சென்று மாமா சொல்லுங்க. சக்தி கிட்ட இவள் எதுக்கு பேசுறா? இவள் லவ் கண்டென்ட் பண்ண வந்திருக்கா! என கொந்தளித்தாள் ரிதம். 

ருத்ரன் தனது அக்காவை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்தான். 

இதெல்லாம் கேட்டுட்டு நான் உயிரோட இருக்கணுமா? கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்த ருத்ரனுக்கு ரெண்டு பேர் அடிச்சிக்கிறாங்க. இன்னிக்கு என் அண்ணனுக்கு கல்யாணமாகி குட்டி போட்ட ரெண்டு பேர் அடிச்சிக்கிறாங்களே! Oh god beautiful oh god beautiful illa full and fully ஓர வஞ்சனை பண்றீங்க god. இந்த வீடு முழுக்க குழந்தை சத்தம். அது போதாத குறைக்கு இவளுங்க வேற சண்டை போடுறாலுங்க.. கால கொடுமை காலகிரியா!! என வாய் மொழியாக புலம்பி விட்டான் மிதுன் தேவ்.

மகி என்ன சொல்வது என தெரியாமல் பார்த்து கொண்டிருந்தார். 

ஹரிணி!! வா போலாம் என பற்களை கடித்து கொண்டு பேசினான் நிதின். 

நான் எதுக்கு போவேன். நான் போக மாட்டேன். சக்தி கூட பேசிட்டு தான் வருவேன் என விடாப்பிடியாக அமர்ந்து கொண்டாள் ஹரிணி. 

ஹே ஒழுங்கா போயிடு என ரிதம் முன்னால் வந்தாள். 

உனக்கு பயம்!! அதான ஒருவேளை சத்ய தேவ் என்னை விரும்புறேன்னு சொல்லிட்டா உன்னால டைஜஸ்ட் பண்ணிக்க முடியாது அது தானே!! என ஹரிணி கூறி கொண்டிருக்க.. 

ஹரிணி this is too much என இன்பா கோபத்துக்கு வந்து விட்டார். 

இப்போ மட்டும் உங்களுக்கு கோபம் வருதா? உங்க பொண்ணு சக்திய ஒரு மனுஷனா கூட மதிக்கல அப்போ எங்கே போயிருந்தீங்க மிஸ்டர் இன்ப ராகவன் என்ற ஹரிணி மகியின் பக்கம் திரும்பி, அத்தை நீங்க சக்திக்கு வேற பொன்னை பாருங்க. அவனுக்கு துளி கூட இவள் பொருத்தம் இல்ல. சரியான ஆட்டக்காரி இவள். ஊர் நாட்டு பொண்ணா பாருங்க. அவனுக்கு தான் நினைவுகள் அழிஞ்சு போச்சில என ஹரிணி சொல்லி கொண்டிருக்க.. 

ஹே ஹரிணி!! என சொடக்கு போட்டு அழைத்தாள் ரிதம். 

என்னடி!! 

I love சக்தி. சக்தி loves ரிதம். ரிதம் மனசுல சத்ய தேவ் தான் இருக்கான். அவனோட மனசுல நான் தான் இருக்கேன். எங்க ரெண்டு பேருக்கு நடுவில் யாரும் வர மாட்டாங்க. என்னோட அப்பா அம்மா மாமா மாமி ஈவன் என்னோட பசங்களும் அதில் அடங்கும்.  ஆமா நான் அவனை டார்ச்சர் பண்ணுவேன். இப்போ என்னடி? அவன் என்னோட பொருள். இப்போ என்ன உனக்கு? இங்கேயே இருப்பியா? இருந்துக்கோ!! 

ஹான் உன் பொருள்? அவன் கடையில வாங்கிட்டு என ஹரிணி பேச வர.. 

அவனுக்கு எதுவும் ஞாபகத்துக்கு வர வேணாம். நான் முதல்ல இருந்து லவ் பண்ணுவேன். 

ஓ நீ பண்ணதுக்கு பேர் லவ்வா? 

அவனை லவ் பண்ண நீ ஒன்னும் சொல்லி கொடுக்க வேணாம். உன்ற பொழப்ப பாரு ஆத்தா இல்லனா இங்கேயே இருந்து நான் லவ் பண்றத பாரு என்றவள். வீல் வீல் என கத்தி கொண்டிருக்கும் மகன்களை தூக்கி கொண்டு பால் கொடுக்க சென்று விட்டாள். 

அனைவரும் ரிதமை பார்த்து கொண்டிருக்க, ஹே ரித்து இது உண்மையா? அவனை நீ லவ் பண்ணியா? என கேட்டு கொண்டே பின்னால் சென்றான் மிதுன். 

சாரி மிதுன். நான் உன்னோட அண்ணனை சின்ன வயசுல இருந்தே லவ் பண்ணேன். இப்போவும் பண்ணிட்டு இருக்கேன். எனக்கு உன்னை பிடிக்கும் ஆனால் உனக்கும் முன்னாடி எனக்கு சக்திய தான் புடிக்கும் என்று விட்டு சென்றாள் ரிதம். 

தொடரும்..

You may also like

Leave a Comment