அன்பானவன் அடங்காதவன் அசாராதவன்

by Pradhanya kuzhali
220 views

EPI 156

அக்கா எப்போ அக்கா வருவ? நான் பாத்ரூம்ல ஓவர் டைம் பார்க்க வேண்டியதா இருக்கு. நிமிசத்துக்கு ஒரு தடவை உன்ற ரெண்டு பையனும் பிஸ் அடிச்சிட்டே இருக்கானுங்க பன்னீர் தெளிப்பான் மாதிரி. அதை விட இந்த நிலா ரொம்ப பண்றா அவனுங்க மோசன் போனதும் அதை க்ளீன் பண்ணா தான் உள்ளேயே விட்ரா!! தனியா ஒரு ஓஸ் பைப் செட் பண்ணிட்டேன் இவனுங்களோட பட்டக்ஸ கழுவ..  எதுக்கு கா twins குட்டி போட்ட? தூங்கி அஞ்சு நாளாகிது குப்புற படுத்து குடிச்ச பாலையெல்லாம் கக்கிட்டு இருக்கான் சாகி.. எனக்கு ராத்திரியா பகலா அப்டின்னு கூட தெரிய மாட்டிக்கிது என்னோட டியூட்டி ஓவர் டைம்மா ஓடுது கா!! இங்கே எத்தனை செல் டவர் இருக்கு. அங்கே ஏறி உங்க காதலை சொல்லிக்கலாமே? ஈபிள் டவர் முன்னாடி போய் தான் காதலை சொல்லனுமா? என மயக்கத்தில் பேசினான் ருத்ரன். 

அட பார்த்துக்கோ டா இன்னும் ரெண்டு நாள்.. என்றான் சத்ய தேவ். 

மாமா நாளாவது குட்டியெல்லாம் பிளான் பண்ணிட்டு வந்திடாதீங்க இத்தோட நிறுத்துங்க என்றான் ருத்ரன் அதற்குள் போன் கட் ஆனது. 

சக்தி என்னோட தம்பி பாவம் டா!! எனக்கு குட்டீஸ பார்க்கணும் போல இருக்கு. என்றாள் ரிதம். ம்ம் போலாம் என நேராக பாரிஸ் சென்றார்கள்.  காதல் நகரம்!

பாரிஸின் இரவில், எஃபில் டவர் மின்மினிப் பூச்சிபோல் மின்னியது. சத்யதேவ் ரிதமை நகரின் மையத்தில் உள்ள மிகப் பெரிய ஜெயண்ட் வீலுக்கு (Giant Wheel) அழைத்துச் சென்றான்.  ஐஃபில் டவரின் முன்னால் நிற்கும் Giant Wheel-இன் மிக உச்சியில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தார்கள்.  சிறிய பெட்டி போன்ற கோண்டோலா மேலே ஏறத் தொடங்கியது. நகரம் சிறியதாகத் தெரிய ஆரம்பித்தது. அது மேலே, உச்சியில் நிற்கையில், கீழே உள்ள பாரிஸ் நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது, ஒரு வண்ணக் கோலம் போல.

சத்யதேவ் ஒரு சின்ன பெட்டியை எடுத்தான். உள்ளே ஒரு வைர மோதிரம்.  

அவன் மண்டியிட்டான்.  

“ரிதம்…நான் என் காதலை உன் கிட்ட சொல்லவே இல்லை. ‘லவ் மேரேஜ்’ ஆசைப்பட்ட உனக்கு, இத்தனை வருஷத்துக்கு அப்புறம், உலகமே நம்ம காலடியில் இருக்கும் இந்த இடத்தில, நான் உன்னை என் காதல் மனைவியா ஏற்றுக்கிறேன்.” என்னை உன் காதலனா ஏத்துக்கிறியா? இனிமே நான் உன் boyfriend, உன் lover, உன் எல்லாமுமா இருப்பேன். மறுபடியும் ஒரு தடவை என்னை கல்யாணம் பண்ணிக்கோ.”  

ரிதம் அழுதாள். சிரித்தாள். அவன் தோளில் சாய்ந்து “ஆய் யு ஸ்டூபிட்! ஏற்கனவே என் புருஷன்தானே நீ?” என்றாள். 

கேட்டதுக்கு பதில் சொல்லு டி!! 

“சத்யதேவ்… நான்… எஸ்! ஐ வில்! எத்தனை தடவை கேட்டாலும் நான் உன்னையேதான் கல்யாணம் பண்ணிப்பேன். ஐ லவ் யூ சத்யதேவ்,” என்று அவள் கண்ணீருடன் சிரிக்க, அவன் மோதிரத்தை அவளது விரலில் அணிவித்தான்.

அடுத்த நொடி, அவள் அவனை அணைத்துக்கொண்டாள். அவன் அவளது தலையைக் கோதி, அவளை இறுக்கிப் பிடித்துக்கொண்டான். அந்தக் கோண்டோலா சுழன்று இறங்க ஆரம்பித்தது. ஆனால், அவர்களின் காதல் பாரிஸ் ஆகாயத்தில் சுழன்று, உச்சியிலேயே நின்றிருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள் தயக்கமே இல்லாமல் உதடுகள் இரண்டும் தன்னிச்சையாக ஒட்டி கொண்டது. நீண்ட நேர முத்தம். Giant Wheel கீழிறங்கும் போது அவர்கள் உதடுகள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டிருந்தன.  

பாரிஸ் முழுக்க அவர்களது மூச்சுக் காற்று பரவியது. 

****

ஒருவழியாக பாரிஸ் பயணம் முடித்து வீடு வந்து சேர்ந்தார்கள். முத்தங்கள் மட்டுமே இருவருக்கும் நடுவில்.. அடுத்த கட்டத்துக்கு செல்ல சத்ய தேவ் விரும்பவில்லை. 

நல்ல வேளை மாமா நீங்க வந்தீங்க!! என ருத்ரன் இரண்டு குட்டிகளையும் மாமனிடம் ஒப்படைத்து விட்டு மாமனார் வீட்டில் இரண்டு வாரம் செட்டிலாகி விட்டான். 

வீட்டில் இருக்கும் அணைத்து குழந்தைகளுக்கும் மொட்டையடித்து காது குத்தும் விழா செய்ய முடிவெடுத்தார்கள். ரவுத்திரனுக்கு இன்னும் காது குத்தவில்லை. அதே போல துகில், ஆதி, சாகி என அனைவருமே வரிசையாக இருந்தார்கள். இரண்டு ட்ரிப் தமிழ்நாடு சென்றார்கள் ருத்ரனின் குல தெய்வ கோவிலுக்கு சென்று நிதின் மற்றும் நிவாஷ் மடியில் அமர வைத்து ரவுத்திர மாறன், இன்ப வேதவன் என இருவருக்கும் மொட்டையடித்து காது குத்தினார்கள். 

அப்படியே ஈரோடு சென்று துகிலன், தேவ் ஆதித்யா, தேவ் சாஹித்யா என மூவருக்கும் ருத்ரனின் மடியில் வைத்து காது குத்தினார்கள். அந்த விழாக்களுக்கு மிதுன் தேவ்வின் வருங்கால மாமனார் வீடு மற்றும் இதழினியின் வருங்கால மாமியார் வீட்டார்கள் வந்து கலந்து கொண்டார்கள். 

துகில் ரவுத்திரனுடன் விளையாடினான். ணா ணா!! என துகில் பின்னால் சுற்றினான். 

அண்ணா இல்ல டா மாமா!! மாமா சொல்லணும். என ருத்ரன் சொல்லி கொடுத்து கொண்டிருக்க, மறுபடியும் முதலில் இருந்தா? எதுக்கு டா தீரா உன் பையனுக்கு உன்னை போல ஹாபிட் சொல்லி கொடுக்கிற? என் அண்ணன் கூட நீ அட்டை பூச்சியா ஒட்டிட்டு இருக்க போல.. துகில் கிட்ட ரவுத்திரன் ஒட்டிட்டு இருக்கணுமா? என கேட்டான் மிதுன். 

ருத்ரன் சிரித்து கொண்டே, ஆமாம் மாமா எல்லாம் உங்களுக்கு பொண்ணு பிறக்கிற வரைக்கும் தான் துகில் கூட இருப்பான் என் பையன் என்றான். 

அதுக்கு பிறகு? என மகி சிரித்து கொண்டே கேட்க.. 

அப்புறம் என் பையன் மிதுன் மாமாவோட பொண்ணு பின்னாடி சுத்த விடுவேன். என்றான் ருத்ரன். 

டேய் இன்னும் கையானமே ஆகல டா அதுக்குள்ள என் குழந்தை கல்யாணம் வரைக்கும் யோசிக்கிற யார்ரா நீ என்னும் ரீதியில் பார்த்தான் மிதுன். 

இன்ப வேதவனுக்கு ஒன்பது மாசம் முடிந்திருந்தது. நிலா ருத்ரனை முறைத்து பார்த்தாள். 

என்னடி? என அருகில் வந்தான் ருத்ரன். 

ஒரு வருஷம் பக்கத்துலயே வர மாட்டேன்னு சொன்னீங்க.. 

என்னாச்சு? என ருத்ரன் நெற்றியை பிடித்து கொண்டு கேட்க.. 

நிலா உதட்டை பிதுக்கி கொண்டு கதை ஆரம்பிச்சதுல இருந்து நான் மாசமா மட்டும் தான் இருந்திருக்கேன் என கேவி அழுதாள் நிலா. 

ஹே அப்படி பார்த்தால் எங்க அக்கா ட்வின்ஸ் பெத்து போட்டிருக்கா. அவள் முதல் அத்தியாயத்திலயே கன்சீவ் டி செல்ல குட்டி! பட்டு குட்டி, பட்டு நூலு! பட்டாம்பூச்சி என கெஞ்சினான் ருத்ரன். 

இதை நான் எப்டி போய் வெளியே சொல்லுவேன். என நிலா அவனை முறைத்து பார்க்க.. 

சொல்லாத மறைச்சு வை என அசால்ட்டாக பதில் கூறினான் ருத்ரன். 

வயிறு வளருமே? ஏற்கனவே மணல் வரி போல இருக்கு வயிறு என உதட்டை புதுக்கினாள் நிலா. 

நீ வயிற பார்க்கிற.. ஆனால் நான் twin tower பார்க்கிறேன். வீணை குடைத்தை பார்க்கிறேன். இப்போ தாண்டி நிலா நீ இன்னும் பாலீஷ் ஆவிட்டே வர என மேலும் மேலும் பேசி சிவக்க வைத்தான் ருத்ரன். 

ச்சீ அறிவே இல்லையா உங்களுக்கு.. 

அதெல்லாம் இருக்கு உன்னை பார்த்தால் எப்டி ஸ்லிப் ஆகுறேன்னு எனக்கே தெரியல டி என்றான் ருத்ரன். 

ஹான் இருக்கும் இருக்கும் என கோபத்துடன் பார்த்தாள். 

நிலா இந்த முறை என்ன செய்வியோ ஏது செய்வியோ! அழகான குட்டி பொண்ணா அப்டியே என் மம்மில ஒரு ஸ்பூன், என்னோட அக்கா ரிதம்ல ஒரு ஸ்பூன் அப்டி கொஞ்சம் இந்த பக்கம் நிலாவில் நாலு ஸ்பூன் அப்டியே என்னை போல அரை ஸ்பூன் சேர்த்து கலக் கலக் கலக் கலக்கி ஒரு தேவதைய பெத்து போட்டு ரிட்டயர்ட் வாங்கிக்கோ என்றான் ருத்ரன். 

நிலா அவனை முறைத்து பார்த்தாள். என்னடி இன்னொன்னு போவோமா? என ருத்ரன் கிண்டலடிக்க.. அவனை அடிக்க கை ஓங்கினாள் கடைசியில அது அணைப்பில் முடிந்தது. அடிக்கிற கை தான் அணைக்கும் என்பது இது தானோ.. 

நிலாவின் காதலன் ருத்ரன் மட்டுமே.. ருத்ரனுக்கு நிலா என்பவள் காதல் நிலா, கல்யாண தேன் நிலா.. இருவரின் காதல் என்றென்றும் தொடரும்.. 

நிலாவை பொருத்தமட்டில் ருத்ரன் மேலிருக்கும் காதல் என்பது இந்த உலகில் ஆக்சிஜன் தீர்ந்து போனாலும் கூட தீராவின் மேல் இருக்கும் காதல் அவளின் மூச்சே அடங்கினாலும் தீராது. சில இடங்களில் அவளின் காதல் வெளிபாட்டில் குற்றம் இருக்கலாம். ஆனால் ருத்ரனிடம் என்றென்றும் காதல் நிலவாக இருப்பாள் தீரா காதலுடன்.. 

தொடரும்..

You may also like

Leave a Comment