Epi 1
விவேகா அவளுடைய நீண்ட கூந்தலை காற்றில் பறக்க விட்டு சல்வார் சுடிதார் அணிந்து கொண்டு அதற்கேற்ற அளவான அழகாக தயாராகி பேருந்து நிறுத்தத்தில் காத்து கொண்டிருக்க ஆதி அவளை ஆஃபீஸ் பஸ்சில் எற கதவு திறக்கிறான் அந்த பஸ்சில் software solutions என நினைத்து கொண்டு ஏறினாள்
ஆனால் அது போலீஸ் ஜீப்ஆக மாறி காவல் நிலையம் கமிஷனர் ஆஃபீஸ் போய் நிற்கிறது.
ஆதி……….ஆதி…..ஆதி…..
என கத்திகொண்டே எழுந்தாள். அது கனவு தான் என்று அப்போது தான் தன்னிலைக்கு வந்தாள்
வானம் செவ்வானம் ஆக மெதுவாக சூரியன் தன் தேர் குதிரைகளை வலம் வர தயராக்கினான் அதி காலை 5.30 மணி இருக்கும்
இங்கு விவேகா எழுந்து உட்கார்ந்து கண்களை தேய்க்க அப்போது தான் தெரிந்தது அது கனவு என்று வந்தாள்
விவேகா-எதுக்கு வருண் இந்நேரத்தில் அலாரம் வச்சு என்ன இங்க ஓட விட்டு சாவடிக்கிற (வருண் விவேகாவின் அண்ணன்)
வருண்- எனக்கு கம்பெனி க்கு ஆள் இல்ல மா அது தான்
விவேகா- நீ அதிதி க்கு போன் பண்ணி ரெண்டு பேரும் ஓடி practise பண்ணுங்க இல்லனா அப்டியே ஓடிடுங்க
வருண்-விவேகா அடி வாங்க போற
விவேகா-பின்ன என்ன டா நீ IPS ஆக நான் ஏன் டா ஓடனும்
வருண்-சரி நீ வீட்டுக்கு போ
விவேகா-sorry டா அண்ணா என கூறி இருவரும் running முடித்து விட்டு
வந்து coffee குடித்து விட்டு குளித்து முடித்து ஒப்பனை செய்து முடித்தாள் விவேகா
அவனது அண்ணன் வருண் அவளை காலேஜ் பேருந்து நிற்கும் இடத்திற்கு வந்தாள் விவேகா
மைதிலி- என்ன விவி (விவேகா அதை சுருக்கி )ஒரு மாறி இருக்க
விவேகா-இல்லை (என்பது மைதிலி) லிதி நான் நல்லா இருக்கேன் என சொல்லி பேருந்து ஏறி
காலேஜ் வந்தவுடன் விவேகா தன்னுடைய குரும்புகளை ஆரம்பித்தாள். ஆனால் அவள் மனதில் ஏதோ நடக்க போகுது என கொஞ்சம் தடுமாற்றம் தான்
விவேகா introduction
பெயருக்கு ஏற்றது போல் அறிவானவள் ,
மா நிறம், பேரழகி இல்லை ஆனால் அழகி தான் அன்பான கண்களுக்கு மட்டும் , அவள் கண்களுக்கு மேல் ஒரு மச்சம் இருக்கும் மிகவும் வசீகர முகம் கொண்டவள்.
அவள் பெயர் விவேகா,
அப்பா-வாசுதேவன்,
அம்மா-கங்கா,
அண்ணன்-வருண்
அப்பா
அவள் 12 ம் வகுப்பு பொது தேர்வு நடக்கும் போது இறந்து விட்டார் அம்மா கங்கா படித்து இருப்பதால் அப்பாவின் வேலையில் சேர்ந்து கொண்டார்
விவேகாவின் குடும்பத்திற் க்கு எல்லாமே அவர் தாய் மாமன் செல்வம் ஆதித்யாவின் அப்பா தான் எல்லாமே
ஆதித்யாவின் அக்கா அதிதியை தான் வருண் போலீஸ் வேலை வாங்கி கொண்டு திருமணம் செய்ய போகிறான்.
ஆம் அவள் BE IT second year படிக்கிறாள் counselling la join பண்ணிருக்கா 2nd year ஸ்டார்ட் ஆகி 2 months ஆக போகுது
இவள் வகுப்பறைக்கு வரவும் உள்ளே ஆதி அவனினு டய இடத்தில அமர்ந்து தன்
பட்டாளங்களிடம் பேசிக்கொண்டு இருந்தான்.
இவளை கண்டதும்
ஆதித்யா – விவேகாவின் மாமன் மகன். மிகவும் அன்பானவன் பார்த்தால் sight அடிக்கலாம்
ஆதித்யா-ஹேய் தேன் மிட்டாய் என்னாச்சு
விவேகா-ஒன்னுமில்லை ஆதி என அவள் இடத்திற்கு வந்தாள்.
அவள் சக வகுப்பு தோழிக்கு பிறந்தநாள் என்பதால் அனைவருக்கும் இனிப்பு கொடுக்க அதை கைகளில் வைத்து பார்த்து கொண்டு இருந்தாள் விவேகா
ஆதி- விவி என்னாச்சு என் செல்லத்துக்கு
ஆ காட்டுங்கள்
விவி-போடா
ஆதி-ஆ காட்டு டீ சீன் போடாத நான் லிதி கு கொடுத்திடுவேன்
விவி-என்ன அது சொல்லு
ஆதி-தேன் மிட்டாய்
விவி-ஆ காட்டி வாங்கி கொண்டு அவள் இயல்பு நிலைக்கு திரும்ப
இதை இரு கண்கள் வெறுப்புடன் பார்த்து கொண்டு இருந்தது அது யாரும் இல்லை
நம் -யாழினியாள் அவளுக்கு ஆதி மேல் காதலோ காதல் ஆனால் அவன் விவேகா மைதிலி தவிர மாணவிகளிடம் யாரிடமும் பேசமாட்டான்
First period பெல் அடிக்க
வந்து விட்டான் நாயகன்
அவன் mufty யில் வந்திருந்தான் . அவனுக்கு பின்னால் எப்போதும் போல் ஒரு இரண்டு காவலர்கள் வந்தனர் ஆனால் அனைவரும் mufty அவர்கள் வெளியே நிற்க இன்பா மட்டும் உள்ளே சென்றான்
தக் டக் டக் டக் என ஷூ ன் ஓசை கேட்க வந்து விட்டான் இன்பராகவன் IPS
இன்பா- hello students, gud morning all of you
நான் straight to the point க்கு வரேன்
இந்த காலேஜ் ல இருந்து அதிகமா campus interview ல நெறைய பேர் job கு
போயிருக்காங்க so அதனால government exam க்கு coaching கொடுத்து உங்களை civil service exam க்கு தயார் படுத்த போகிறோம்.
காலேஜ் management ல இதை பத்தி உங்களுக்கு அப்புறம் circular வரும்
இன்பா-final ஆ யார் யாருக்கு willing இருக்கு அப்டின்னு சொல்லுங்க
any doubt அப்டின்னாலும் கேட்கலாம் என்று கூற
கிளாஸ் இல் அனைவரும் எழுந்து நின்றனர் ஒருத்தியை தவிர அது நம்ம விவேகா
இன்பா-m.v என்னோட பேச்சு கேட்டு எல்லாம் ok சொல்லிற்காங்க இவ என்னடானா சாதாரணமா உட்கார்த்துகிட்டு இருக்கா இவளை இவளை என விவேகா வின் மேல் எழுந்த கோபத்தை அடக்கிகொண்டே
வெளியே சென்று மீண்டும் உள்ளே வந்தான் இன்பன்
இன்பன் -ஹே girl என கூப்பிட்டான் கணீரென
அனைத்து மாணவர்களும் திரும்ப ஆதிடம் பேசிக்கொண்டு இருந்தாள் விவேகா
கண்ணுகினியாள்-sir anything important கூப்பிடீங்க
இன்பா-ஆம் யாரோ ஒருத்தர் வில்லிங் இல்லன்னு சொன்னாங்களே அவங்கள department க்கு வர சொல்லுங்கள் that’s all
கண்ணுகினியாளுக்கு ஒரே சந்தோஷம் விவேகவை சுத்தமாக பிடிக்காது அவளுக்கு
Ok sir என கூறும் முன் சென்று விட்டான் .
இனியாள்-விவேகா உன்னை department வர சொன்னாங்க
விவி- எதுக்கு
இனியாள்-நீ dismiss னு நெனைக்கிறேன்
விவி-ஓ அப்படியா சரி ok என எழ
ஆதி-நானும் வரேன்
மைதிலி-நானும் வரேன்
என கூற விவேகா வேண்டாம் என்று சொல்லி விட்டு செல்ல போக
ஆதி-ஒரு தேன் மிட்டாய் எடுத்து விவிக்கு ஊட்டி விட்டான்
அவள் வருகிறளா என கதவை பார்த்தவன் அவள் வராதது தெரிந்து வெளியே செல்ல
அங்கு விவியோ தேன் மிட்டாய் எடுத்து வாயில் போட்டு சுவைத்தவாறு இவன ஒரு பார்வை பார்த்து விட்டு HODஅறைக்குள் சென்றாள்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவள் அவனை ஒரு பார்வை கூட பார்த்து ஒரு வணக்கம் கூட சொல்லாமல் ஆதி என கத்த
ஆதி-what happen டீ
விவேகா-தனது கட்டைவிரலை உயர்த்தி காமித்து அவன் அருகில் சென்று அன்ன நடை இட்டாள்.
இன்பன்-கால் மேல் கால் போட்டு வெளியே அமர்திருக்க வெளியே HOD ஓடி வந்து
Sir அந்த பொண்ணு என விவேகா கூறியதை கூற ஒரு நிமிடம் அவள் மேல் இன்னும் கோபம் கூட தன்னுடைய மீசையை முறுக்கி விட்டு நீங்க போகலாம் என கூறி விட்டு அவன் சென்றான்.
இங்கு இனியாள் ரெக்கை கட்டாத குறை தான் அவள் பேரழகி தான் அதனால் தான் இன்பனை பார்த்தவுடன் விழுந்து விட்டாள்.
கண்ணுகினியாள்-இனியா , இன்பா பேர் பொருத்தமே செம்மையா இருக்கு எப்படியாவது இன்பாவிடம் நல்ல பேர் வாங்கி ஒட்டி கொள்ள வேண்டும் என்று மன கோட்டையில் இருந்தாள்
ஆனால் இவள் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று
விவேகாவிற்கு போலீஸ் என்றால் சுத்தமாக பிடிக்காது வீட்டில் ஒருவனே படாத பாடு படுத்துகிறான் இன்குமா தொடர்கிறது என்று தான் வேறொன்றும் இல்லை
ஆதி-அவளுக்கு அப்படியே opposite அவனுக்கும் IPS ஆக வேண்டும் என்ற கனவு தான் ஆனால் இந்த விவேகாவினால் தான் அவளுக்காக இங்கு படிக்கிறான் .
ஆதிக்கு விவேகாவை மிகவும் பிடிக்கும் அத்தை மகள் வேறு ஆனால் இவர்களுக்குள் இருப்பது நட்பு மட்டுமே
இப்போது விவேகா முன்பை விட மிகவும் சந்தோசமாக வர இருகண்கள் கோபமாக பார்த்து கொண்டு இருந்தது அது
யாழினியாள், கன்னுகினியாள் இரட்டைகுழந்தைகள் யாளினிக்கு சுத்தமாக விவேகா,மைதிலியை பிடிக்காது
விவி அவளோட இடத்திற்கு வந்துஅன்றைய அனைத்து பாடங்களையும் படித்து விட்டு மாலை வீட்டுக்கு திரும்பினாள்.
வருண்-அவள் வந்த உடன் அவன் வேலையை ஆரம்பித்து விட்டான்
விவேகா-இவளுக்கு அய்யோ என இருந்தது
என் என்றால் அவன் IPS பாஸ் பண்ண வேண்டும் என்பது தான் லட்சியம்
அதை முடித்து ஆதியின் அக்கா அதிதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும்
விவேகவிடம் சீவில் சர்வீஸ் எக்ஸாம் iPS
பற்றி கூறுவது படிப்பது revise செய்வது தான் வேலைஇந்த வருனுக்கு
அதனால் பயிற்சிக் காக அதனால் அவள் இதில் இப்போது தேர்வு வைத்தாலும் முதலிடம் வருவாள் அந்த அளவிற்கு மாற்றி வைத்துள்ளான் அவன் அண்ணன் வருண்
ஆதி- மனதில் இந்த இன்பா வ எங்கேயோ பார்த்த மாறி இருக்க அதை பற்றி யோசிக்க
அவனுக்கு முகம் சற்று வியர்க்க தொடங்கியது
ஆம் அன்றுமெரினாகடற்கரையில் இந்த விவேகா அந்த இண்பாவை கிழி கிழி என தொங்கவிட்ட காட்சி தோன்றியது ஆனால் இருவருக்கும் நியபகம் இல்லை என்பது சிறு நிம்மதி தந்தது
விவேகாவிற்கு இரவெல்லாம் தூக்கம் வர வில்லை அந்த கனவை பற்றியே நினைத்து கொண்டு இருந்தாள் .
மனதில் அதி காலையில் கண்ட கனவு பலிக்கும் என்பார்களே ஒரு வேளை அது நடக்குமோ
யாரிடம் கூறுவது இந்த ஆதியிடம் கூறினால் நம்மை பங்கம் செய்து கிண்டல் செய்வான் என்ன செய்ய என்று யோசித்தவள் அப்படியே நித்திரைக்கு சென்றாள்
இங்கு இன்பாவோ என்னை எதிர்த்து ஒருத்தி இருக்கிறாளே அதுவும் அந்த HOD கூறியது அவன் காதுகளில் மீண்டும் மீண்டும் கேட்க
என்னை அவமான படுத்தி விட்டாளே. என்று அதேயே நினைத்து கொண்டு இருந்தவன் உனக்கு நாளைக்கு இருக்கு என்று கருவினான்
ஆனால் ஆதி நினைத்தது நாளைக்கு மாறிவிடும்என்பது விதி விளையாட்டு இங்கு மூவரும் ஆளுக்கு ஒன்றை நினைத்து கொண்டு தூங்கினர்
மூவர் இல்லை நால்வர் அந்த நான்காவது நபர் யார் என்பதை நாளை பார்க்கலாம்
Follow me சப்போர்ட் me நண்பிஸ் நன்பாஸ் பிரதன்யா
Epi 2
ஹே சுபா என்ன உனக்கு தூக்கம் வா ஜாக்கிங் போலாம் என வலுக்கட்டாயமாக தன் அக்காவை இழுத்து கொண்டு பார்க்கில் நுழைந்தான் இன்பா IPS
அங்கு இவன் வருவதற்காகவே பல பெண்கள் இன்பா நானும் ips எக்ஸாம் கு படிக்கிறேன் நான் எக்ஸாம் எழுத்திட்டேன் நான் result காக வெய்ட் பண்றேன் என பல பெண்கள் அவனை வட்டமிட
மித்திரன்….. என ஒரேய முறை கம்பீரமாக கூற அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.
சுபத்ரா- இன்பனின் அக்கா சோப்ட்வேர் கம்பெனி வச்சிருக்கா
ரவி சந்திரன்-அதையே கம்பெனி சுபா அப்பா செல்லம் சோ அதனால software
இன்பனின் அம்மா-வசுமதி IPS
சோ- அதனால இன்பம் ips அம்மா செல்லம் ஆனால் இன்பன் மிகவும் கட்டுப்படுவது அக்கா சுபத்ரா தான்
சுபா-என்னடா இன்பா ரொம்ப கோவாமா இருக்க போல என்னாச்சு டா
இன்பா-அது ஒன்னும் இல்ல சுபா
சுபா-இப்போ சொல்றியா இல்லயா
இன்பா-சுபா நேத்து students motivating section க்கு காலேஜ் போயிருந்தேன் அங்க ஒரு பொண்ணு என்று இடை நிறுத்தினான்.
சுபா-என்னாச்சு சொல்லு
மித்ரன்-அதை நான் சொல்றேன் சுபா இன்பா civil service exam ல யார் யாருக்கு வில்லிங் இருக்கு யார் யார் அட்டெண்ட் பண்ணுவீங்க அப்டின்னு இன்பா கேட்கவும் class full ஆ நின்றார்கள்
சுபா-அதுல என்ன problem
மித்ரன்-அதுல ஒரு பொண்ணு மட்டும் வில்லிங் இல்ல னு சொல்லிடுச்சு
சுபா-சிரித்து கொண்டே சரி இதுல என்ன problem
மித்ரன்-அதை இன்பா தான் உருவாக்கிணான்
அந்த பொண்ண டெபார்ட்மெண்ட் ல சொல்லிட்டான்
சுபா-இன்பா வை முறைத்து கொண்டே அப்புறம்
மித்ரன்-அங்க தான் சிக்கல் அந்த பொண்ணு hod கிட்ட நான் படிக்க வந்தது IT அதுக்கு என்ன qualification க்கு தான் வேலைக்கு போக படிக்க வந்தேன் . மத்தவங்க மாறி இஷ்டத்துக்கு வேலை செய்ய வரல சார் அப்டின்னு சொல்லிடுச்சு
சுபா- விழுந்து விழுந்து சிரிக்காத குறை தான்
இன்பா-என்ன சுபா நீயும் சிரிக்கிற
சுபா-அந்த பொண்ணு சொன்னது கரெக்ட் தான பரவாயில்லை இன்பா உன்னை எதுக்க கூட ஒரு பொன்னு இருக்கலா
உன் பின்னாடி சுத்துர பொண்ணுங்கள தான் நான் பாத்திருக்கேன் ஆனால் இந்த பொண்ணு அப்டி இல்ல போல
மித்ரன்- நீ வேற சுபா அந்த பொண்ணு இவனை பார்க்கவே இல்ல தெரியுமா என்று அவனும் சேர்ந்து சிரிக்க
இன்பராகவன் IPS பெயருக்கு ஏற்றாற் போல் மிகவும் கம்பீரமான தோற்றம் தான்
அவனுடைய பார்வை அது பெண்களை மயக்கும் எதிரிகளை பயம் கொள்ள செய்யும்
அவனுடைய அந்த அளவான என்று சொல்வதை விட அழகான மீசை கூர் மூக்கு
சிரித்தால் கன்னத்தில் குழி விழும் ஆனால் அவன் சிரிக்க தான் மாட்டான்
விவேகாவை விட பேரழகன் தான் இது வரை பல பெண்களை சந்தித்து இருக்கிறான் ஆனால் இவனை அலட்சியம் செய்த முதல் பெண் விவேகா தான்
இன்பா-நான் அவளை என்ன பண்றேன்னு பாருங்க என்று கூற
சுபா-இல்ல இன்பா அந்த பொண்ணு சின்ன பொண்ணு அவளுக்கு என்ன தெரியும் அதனால விடு என்று கூற
இன்பா-நான் உனக்காக விடறேன் என்று கூறி விட்டு மனதில் நீ என்கிட்ட தப்பிக்க முடியாது டி என்று நினைத்து கொண்டான்.
அடுத்து இம்பனுக்கு மிக முக்கியமான கேஸ் மற்றும் டெல்லி ல சில வேலைகள் இருந்ததால் அவன் வேலை காரணமாக பிஸி ஆகி விட்டான்.
இன்பா வந்து சென்ற பணிகளுக்காக இப்போது அவனுக்கு பதிலாக வசுமதி வந்தார். இன்பனின் அம்மா வந்தார் அவருக்கு விவேகாவை மிகவும் பிடித்து போனது.
வசுமதி வந்ததாலோ என்னவோ விவேகா எல்லா பயிற்சி களிலும் கலந்து கொண்டாள் அன்று IT club innaguration chief கெஸ்ட் ஆக வசுமதி IPS மற்றும் இன்பராகவன் இருவரும் வர
முதலிலேயே வசுமதி வரவும் யாருமே வசுமதி கிட்ட பேச பயப்படும் நேரம் மிகவும் தைரியமாக தன்னை வெளிப்படுத்திய விவேகாவை வசுமதி கு மிகவும் பிடித்து போனது
விவேகா-இன்பனை பார்த்த விவேகா வசுமதி கிட்ட
விவேகா-மேடம் யாரு இவரு பேரில் மட்டும் இன்பம் இருந்தா போதுமா முகத்தில் எப்பவுமே கோபம் தான் மேடம் சரியான angry bird என்று கூற
வசுமதி-சரி மா நான் அவர் அம்மா கிட்ட சொல்லட்டுமா
விவேகா- வேண்டாம் மேடம் இவரே angry bird னா அவங்க அம்மா women angry bird ஆ இருப்பாங்க அப்டின்னு சொல்லிட்டு இவரை பத்தி நமக்கு எதுக்கு மேடம்
நெஸ்ட் என்னோட performance நீங்கள் பாத்துட்டு எப்டி இருக்கு னு சொல்லுங்க என்று ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள் விவேகா
வசுமதி-என் பையன பத்தியும் என்ன பத்தியும் டீஸ் பண்ணிட்டு போறியா எங்க relation ship தெரிஜதுக்கு அப்புறம் நீ தான் விவேகா feel பண்ண போற என்று நினைத்து சிரித்து கொண்டாள்
இன்பா-அம்மா என்று ஆசையாக அழைக்க
வசுமதி-ராகவ் இங்க வந்து உட்கார என்று கூற அமர்ந்து கொண்டான் (இன்ப ராகவன் சுருக்கி) ராகவ்
இன்பா-அவர்களுடைய நடனம் வரும் சமயம் அவனுக்கு போன் வந்தது அதனால் அவன் பேச வெளியே செல்ல
விவேகா வும் கண்ணுகினியாள் லும் வந்தனர் பரத நாட்டிய உடையில்
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ
என்னைவிட்டு பிரிவதில்லை
—
சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக
இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால்
பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ
என்று விவேகா வும் , கண்ணுகினியாளும் ஆடும்போதே வந்தவன்
ஒரு நிமிடம் அவள் விவேகா வின் கண்களில் தொலைதான் இன்பராகவன்
அது ஒரு நிமிடம் தான் அடுத்த நிமிடம் தன்னை கேவலமாக பேசி விட்டாள் என்ற எண்ணம் தான் மனம் முழுவதும் இன்பாவிற்கு
இரவும் பகலும் வந்தாலும் நாள் என்பது ஒன்றல்லோ
கால்கள் இரண்டு கொண்டாலும் பயணம் என்பது ஒன்றல்லோ
இதயம் இரண்டு என்றாலும் காதல் என்பது ஒன்றல்லோ
—
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
—
அன்றில் பறவை இரட்டைப் பிறவி ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
பிரியாதே விட்டுப் பிரியாதே
கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி ஒரு விழி அழுதால் மருவிழி
இன்பாவிற்கு என்ன தான் அப்படி நினைத்தாலும் மை பூசிய அந்த கண்ணில் அவனை தொலைதான்
அவனையே வைத்த கண் வாங்காமல் தன்னுடைய நாயகனாக நினைத்து ஆடி கொண்டு இருந்தாள் கண்ணுகினியாள்
இன்பா விவேகாவை பார்க்க விவேகாவோ யாரையோ பார்த்து ஆடி கொண்டு இருப்பது தெரிய அது யார் என்று திரும்பி பார்க்க அங்கு ஆதி தான் இருந்தான்
இன்பாவிற்கு ஆதியின் மேல் ஏனோ வெறுப்பாக இருந்தது. ஆடி முடித்து வணக்கம் சொல்லி சென்றனர்
ஆதி-தேன் மிட்டாய் செம்மையா ஆடுன டி உன்னோட கண்ணு வேற level தெரியுமா
விவேகா-சும்மா சொல்லாத டா அவ்ளோ சீன் எல்லாம் இங்கு எனக்கு இல்லை என்று பணிவாக பேசினாள்
இன்பா- அம்மா இனிமே நானே காலேஜில் coaching கொடுக்கிறேன் நீங்கள் ஆஃபீஸ் ஒர்க் பாருங்க மா
வசுமதி-பரவாயில்லை ராகவ்
இன்பராகவன்-அம்மா நான் சொல்றேன் தான ஒரு கேஸ் விஷயம் நான் mufty ல பாக்கறேன்
வசுமதி-ok as your wish i dont interfare your thing
இன்பா-ok மா
அடுத்து விழா முடியவும் அனைவரும் கிளம்பினர் .
இன்பா விவேகாவிற்காக தான் காத்து கொண்டு இருந்தான் அவளை திட்ட வேண்டும் என்பதற்காக ஆனால் நடந்ததோ வேறு
இன்பா- இவனை கடந்து சென்றவளை hey girl என்று ஒரு குரல் அவள் நிற்கவே இல்லை
இன்பா-ஏய் பொண்ணே என்று கூப்பிட திரும்பி பார்த்தாள்
விவேகா- என்ன கூப்பிடீங்களா சார் என திரும்ப ஆமாம் என்று தலை அசைத்தவன் என்ன பேச என்று தெரியாமல்
இன்பா- whats your name என்று கேட்க
விவேகா-மனதில் வசு மேடம் தான coaching க்கு வர போறாங்க அப்படின்னு நினைத்து என்னோட பேரு அறிவு மணி என்று கூற
இன்பா-இன்பாவுக்கு அறிவு மணியா என்று முகம் ஒரு மாறி ஆக அதற்குள் ஆதி
ஆதி-தேன் மிட்டாய் என்னடி பண்ற சீக்கிரம் வா வீட்டுக்கு போகலாம் என ஆதி ஏதோ bag ல போட்டு கிட்டே சத்தம் வர வில்லை என்று திரும்பி பார்க்க
அங்கு இன்பா நின்றிருதான் அவனை பார்த்த ஆதி அருகில் வந்து ஒரு wish பண்ணிட்டு விவேகா வின் கைகளை பிடித்து கொண்டு ஓடி விட்டான் நடக்க வில்லை
இன்பா-தேன் மிட்டாயா அது கூட நல்லா இருக்கு அறிவு மணியா இப்டி ஒரு பெயரா என்று நினைத்து கொண்டே சென்று விட்டான்
வீட்டுக்கு வந்தவனிடம் வசுமதி
வசு-ராகவா ஏன்டா முகத்த எப்பவும் கோபமா வச்சிருக்க கொஞ்சம் சிரிக்கலாமே
இன்பா-என்னமா இத்தனை நாள் இல்லாமல் புதுசா இன்னிக்கு சொல்றீங்க
வசுமதி-இல்ல சும்மா தான்
இன்பா-பொய் சொல்லாதீங்க மா என்ன விஷயம்
வசுமதி-இல்ல டா காலேஜ் ல ஒரு பொண்ணு dance ஆடுச்சே
இன்பா-யாரு மா முகம் fulla make up ஆ இருந்த பொண்ணா என்று கேட்க அந்த பொண்ணு இல்ல இன்னொரு பொண்ணு அவ
இன்பா-நம்பாமல் அவள் நம்மை பற்றி கேட்டாளா என்று கொஞ்சம் ஆச்சரியம் ஆக அவ என்ன கேட்டா கேட்க
வசுமதி-விவேகா கூறியதை சொல்ல
இன்பாவிற்கு மேலும் கோபம் வந்தது அந்த பொண்ணு
இன்பா-அவ பேரு கூட ஏதோ அறிவு என்று அவன் முழுதும் கூறும் முன்
வசுமதி-அவ பேரு விவேகா வாசுதேவன் என்று கூற
இன்பாவிற்கு அதை கேட்டு இன்னும் கோபம் வந்தது நம்மிடமே பொய் சொல்லி இருக்கிறாளே இவளுக்கு என்ன துணிச்சல் என்று தனக்குள் பேசிக்கொண்டு தன் அறைக்கு வந்தான் இன்ப ராகவன்
இன்பாவின் நினைவில் விவேகாவின் கண்கள் தான் நியாபகம் வந்தது
கை வசம் வார்த்தைகள் இல்லையடி
உன் கண்களை பார்க்கும் பொழுது என்று கவிதை எல்லாம் தோன்றியது
இது என்ன மாதிரியான உணர்வு என்று தெரியவில்லை இன்பாவிற்கு
அடுத்த நாள் எப்போதும் போல சந்தோஷமாக வந்த விவேகாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது
Epi 3
அடுத்த நாள் மிகவும் சந்தோஷமாக சில குரும்புகளை செய்து கொண்டே காலேஜ் சென்றவளுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
விவேகா அவளது வகுப்பறையின் உள்ளே நுழையும் முன்
அங்கே மிகவும் மிடுக்காக அவன் செய்த உடற்பயிற்சிகளின் பயனாக உடல் முறுக்கு ஏறி கம்பீரமாக தன்னுடைய போன் நோண்டி கொண்டு இருந்தான் இன்பராகவன்
அவனை பார்த்ததும் விவேகாவிற்கு தூக்கி வாரி போட்டது
இன்பாவின் இந்த தோற்றத்தை பார்த்து அசந்து தான் போனாள் விவேகா
இவள் வந்து நின்ற அரவம் கேட்டு மிகவும் கம்பீரமான குரலில்
இன்பா-why are you standing என்று கேட்க
விவேகா-அவளுக்கு என்ன சொல்ல என இருக்க பின்னாடி
ஆதி-அவளுக்கு பின்னால் may i come in சொல்லு என மெதுவாக கூற
விவேகா-may i come in sir என கேட்க
இன்பா-yes come in என்று கூற
விவேகா-ஒரே ஓட்டமாக கடைசி இருக்கையில் போய் அமர்ந்து கொண்டாள்.
ஆதியும் பின்னால் வந்து அவன் அமரும் இடத்தில் அமர்ந்து கொண்டான்.
விவேகா-மைதிலி நான் இன்னிக்கு செத்தேன்
மைதிலி-என்ன ஆச்சு விவேகா
விவேகா-இல்ல டி நேத்து என்று கூறுவதற் க்குள்
இன்பா-எல்லா students யும் ground ல assembly ஆகுங்க சில practise இருக்கு இந்த one week fulla என்னோட கிளாஸ் தான்
நான் தான் வந்து கிளாஸ் எடுப்பேன் உங்கள் டெபார்ட்மெண்ட் ல இருந்து யாரும் வர மாட்டாங்க என்று கூறினான்
விவேகா-விவேகா போச்சு நம்மள வச்சு செய்ய போறான் அவ்ளோ தான் என்று மனதில் நினைத் து கொண்டாள்
இன்பா-நான் கிளாஸ் எடுக்கும் போது யாரும் பேச கூடாது . தூங்கற மாறி இருந்தால் கிளாஸ் விருப்பம் இல்லை அப்டின்னு வெளிய போகலாம் அப்டின்னு கனவுல கூட நினைக்க வேண்டாம்
நெஸ்ட் week நடக்கிற mock டெஸ்ட் ல தான் உங்களை உங்க capacity wise பிரிக்க போறோம்
இன்பா-சரி வாங்க போகலாம் என்று அவன் நடக்க அவன் பின்னால் அனைத்து மாணவர்களும் நடந்து சென்றனர்
விவேகாவிற்கு நிம்மதியாக இருந்தது நம்மை மறந்து விட்டான் என்று நினைத்து கொண்டு மைதானத்திற்க்கு செல்ல
இன்பா-இவளுக்கு தான் காத்து கொண்டு இருந்தான் விவேகாவை பார்த்து
நீ 10 மினிட்ஸ் late ஆ வந்திருக்க அதனால ground 5 times சுத்திட்டு வந்திடு என்று கூறினான்.
விவேகா-அவனை முறைத்து கொண்டே நான் department போய் hod ய meet பண்ணிக்கறேன் என்று கூற
இன்பா-அவள் அருகில் வந்து நான் யாருன்னு உனக்கு தெரியுமா atleast எனக்கு respect இல்லனா கூட பரவாயில்லை
இந்த ips க்கு ஒரு மரியாதை கொடுக்கணும் னு உனக்கு தோணால ம்ம்ம்ம்
இன்பா-இது தான் first and last warning உனக்கு வில்லிங் இருந்தாலும் இல்லனாலும் வந்து தான் ஆகணும்
Are you hear my words
விவேகா-ok sir என்று தன் பட்டாளங்களுடன் சேர்ந்து கொண்டாள்
இன்பா-அவனுக்கு இப்போது தான் நியாபகம் வந்தது அவளுக்கு punishment கொடுத்தது பற்றி சரியான கேடி டீ நீ என்று மனதில் நினைத்து கொண்டான்
மித்ரன்-எல்லா students ம் alphabet ல அவங்க name படி நில்லுங்கள் இப்போது இன்பா சார் ஸ்டார்ட் பண்ணுவாரூ என்று கூற
மைதிலிக்கும் ,விவேகாவிற்கும் என்ன செய்ய என்று தெரியவில்லை.
அங்கு மித்ரன் இருப்பது பார்த்து
ஆதி-விவேகா நான் தான் டி பிரஸ்ட்
விவேகா-அப்போ ஒரு ஐடியா நீ பின்னாடி வந்திடு
ஆதி- ஏய் அவரு என்ன பார்த்தாலே முறைகராரு எனக்கு பயமா இருக்கு
விவேகா-ஆதி நீ அவரை பார்த்து பயப்படுரியா அங்க நம்ம அம்மாச்சி ஊருல நம்ப எவ்ளோ கெத்து னு உனக்கே தெரியும் தான
ஆதி-விவி அது அங்க இங்க இன்பம் இல்ல அவரு கோபம் எனக்கு பயமா இருக்கு டி
விவேகா-நீ வர மாட்ட தான சரி விடு என்று கூற
ஆதி-அவள் அதன் பின் பேச வில்லை என்று உணர்ந்தவன் சரி வந்து தொலையுறேன்
தயவு செஞ்சு இப்டி மூஞ்ச வச்சு இருக்காத டி
விவேகா-சிரித்து கொண்டே என்னோட ஆதி மாமா தான் எப்பவும் best என்று கூற
பின்னாடி இதை பார்த்து கொண்டு இருந்த யாழினி க்கு பத்தி கொண்டு வந்தது
ஆதி பின்னாடி விவேகாவிற்கு நேர் மாணவர்கள் வரிசையில் நின்று கொண்டு அவளிடம் பேசி கொண்டே இருக்க
அப்போது அங்கு வந்த இன்பா விவேகாவை தேட அவளோ கடைசியில் நிற்க
இன்பா தன்னுடைய மீசையை முறுக்கி கொண்டே
இன்பா-ம்ம்ம் என்று தொண்டையை கணைக்க ஆதி அமைதி ஆனான் அவள் அப்போதும் திரும்ப வில்லை
மறுபடியும் ம்ம்ம் என்று சிறும்ப அவள் திரும்பி பார்க்க
இன்பா-நேத்து என்கிட்ட உன்னோட name அறிவு மணி அப்டின்னு தன சொன்ன இப்போ இங்க நின்னுட்டு இருக்க என்று கூற
ஆதிக்கு சிரிப்பு வந்து விட்டது தன்னை அடக்கி கொண்டு அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தான்
விவேகா- என்னோட name அறிவு என சொல்லி முடிப்பதற்குள்
இன்பா-பொய் சொன்ன அப்படினா 10 டைம்ஸ் ground சுத்தனும் ok வா
விவேகா-இல்ல sir என்னோட name அது தான் நீங்கள் சொன்னது தான் இப்போ என்ன முன்னாடி நிக்கணும் அவ்ளோ தான நீங்கள் போங்க நான் பின்னாடியே வரேன் பாருங்க
இன்பா- வாடி வா என்று நினைத்து கொண்டான் இனி உனக்கு இருக்கு டி என்ன tease பண்ற ம்ம்ம்
விவேகா வேறு வழி இல்லாமல் முன்னால் போய் நின்று ஆதியை பார்க்க அவனும் முன்னால் வந்து நின்று கொண்டான் இவளுக்கு நேராக
இன்பா-இன்பாவிற்கு ஆதியை பார்க்க சுத்தமாக பிடிக்கவில்லை நீ எதுக்கு இப்போ முன்னாடி வந்த என்று கேட்க
என்னோட name ஆதி அதனால தான் என்று கூற
இன்பா-அப்போ நீ time waste பண்ணிருக்க 5 times ground சுத்தனும் நீ என்று இன்பா கூற
விவேகா-என்னோட name அறிவு மணி இல்ல விவேகா என்று இன்பாவிடம் உண்மையை கூறி விட்டாள்
அப்போ நீயும் சுத்து என்று அனைவர் முன்பும் கூற அவள் முகம் வாடி போனது
விவேகா-ரொம்ப thanks sir என்று கூறி கொண்டே இருவரும் ground சுத்த ஆரம்பித்தனர்.
விவேகா-sorry ஆதி என்னால தான் ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு என்று கேட்க
ஆதி-ரொம்ப ஓவரா பண்றாரு எல்லா முன்னாடி உன்ன திட்டி விட்டார் அவரோட பதவி காக respect பண்றேன் அப்டின்னு கூற
விவேகா-தனக்காக எதையும் செய்யும் ஆதியை நினைத்து தன் உயிர் நண்பனை தன் மாமன் மகன் அவளுக்கு ஒரு நிமிடம் சிலிர்த்து தான் போனது
விவேகா-ஆதி எனக்காக ஒரு பாட்டு பாடேன்
ஆதி-அவளை முறைக்க
விவேகா-இப்போ பாட போறியா இல்ல என்று மூச்சு வாங்க கூற
ஆதி-சொல்லு என்ன பாட்டு
விவேகா-எனக்கு ராஜ ராஜ சோழன் அந்த சாங் பிரஸ்ட் 4 lines மட்டும் பாடு 4 டைம்ஸ்
ஆதி-ராஜ ராஜ சோழன் நான் என்னை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே என்று பாட
விவேகா-இன்னும் soundaa
ஆதி-சத்தமாக பாட
விவேகா-இன்னும் சத்தமா
ஆதி-சத்தமாக பாட
விவேகா மெதுவாக நின்றாள் சிரித்தாள் அவனும் சிரித்தான் இவர்கள் பாடல் அங்கு இன்பாவிற்கு மிகவும் கோபமூட்டியது
ஆதி-இப்போ யார் நியாபகம் வந்தது
விவேகா-இப்போது அழுது கொண்டே அப்பா க்கு இந்த பாட்டு ரொம்ப புடிக்குமாம் காலை ல tv நான் போடும் போதும் இது ஓட அம்மா அழுதங்க என்னால தாங்க முடியலை
அது தான் இங்க யாருமே இல்லை எனக்கு இப்போ அப்பா நியாபகம் அதிகமாக இருக்கு என விவேகா அழ
ஆதிக்கு-கண்கள் வியர்த்தது உடனே அவன் சரி நீ ரெஸ்ட் ரூம் போய்ட்டு வா 5 rounds finish நாம்ப போய் join பண்ணிக்கலாம்
விவேகா ரெஸ்ட் ரூம் போய் fresh up ஆகி வெளிய வர இன்பன் நின்றிருந்தான்.
விவேகா தன் அப்பாவை நினைத்து கொண்டே இன்பா அங்கு இருக்கிறான் என்பதை கவனிக்க வில்லை.
அவள் அவனை தாண்டி நடந்து செல்ல இன்பா முதன் முறையாக அவளின் பெயரை அழைக்கிறான்
இன்பா-விவேகா
விவேகா- அவனை பார்க்க சொல்லுங்க சார் என்று கூட முடிக்க வில்லை அவள் கைகளை பற்றினான்.
விவேகாவிற்கு அவன் ஒரு பிடி அவளின் மணி கட்டு மிகவும் வலித்தது
விவேகா- சார் என்ன பண்றீங்க என்னோட கைய விடுங்க
இன்பா-விட முடியாது அப்டின்னு சொன்னா நீ என்ன பண்ணுவ என்று தன் ஒற்றை புருவத்தை தூக்கினான்
விவேகா- இப்போ கைய விட போறீங்களா நான் டெபார்ட்மெண்ட் ல சொல்லட்டுமா என்று அவனை எரிக்கும் பார்வை பார்த்தாள்
இன்பா-என்னன்னு சொல்லுவ டெபார்ட்மெண்ட் ல ம்ம்ம்
இன்பா-அவனை என்ன பாட்டு பாட சொன்ன
விவேகா- யாரை
இன்பா-பொய் சொல்லாத
விவேகா- ஆதி ய சொல்றிகளா
இன்பா-நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரல
விவேகா- ராஜ ராஜ சோழன் நான் இப்போ அதுக்கு என்ன இப்போ நீங்கள் எதுக்கு என் கைய புடிசீன்க
இன்பா-நான் அப்டி தான் டி பிடிப்பேன் எதுக்கு அவனை பாட சொன்ன
விவேகா-அதை உன்கிட்ட சொல்லனும் னு அவசியம் இல்ல என் கைய முதலில் விடு டா என்று இன்பனை மரியாதை இல்லாமல் கூறி விட்டாள்
இன்பா -இன்பாவிற்கு கோபம் தலைக்கு ஏறியது என்னடி என்ன மரியாதை இல்லாம கூப்பிடற
விவேகா-ஆமா டா நான் அப்டி தான் கூப்பிடுவேன் . முதலில் என்னோட கைய விடு
இன்பா-நான் டி போட்டு கூப்பிட்டா உடனே நீ டா சொல்லிடுவியா
விவேகா-நான் சொல்லிடுவேன் இப்போ அதுக்கு என்ன முதலில் என் கையை விடு
நான் கண்ணாடி மாறி நீ என்ன காட்டுரியோ அதை நான் உனக்கு திருப்பி காட்டுவேன் என்று கூற
இன்பா-அவள் கூறியது தான் தாமதம் அவளின் இரு கைகளையும் தன் ஒரு கையால் பிடித்தவன்,
இன்னொரு கையினை அவளது இதழ்களுக்கு அருகில் இதழ்களை வருடி கொண்டே
இது காலேஜ் அப்டிங்கறது னால உன்ன சும்மா விடுறேன் டி அந்த ஆதி கூட சேர்ந்து சுத்துரத நான் பார்த்தேனு வை
என்று அவள் உதடுகளை வலிக்கும் படி தட்டி விட்டான்.
விவேகாவிற்கு அவன் அருகில் வர இதயம் வேகமாக துடித்தது.
விவேகாவிற்கு மிகவும் அதிர்ச்சி யாக இருந்தது
இவன் என்ன செய்கிறான் என்ற கோபம் விவேகா ஓங்கி இன்பாவின் கன்னத்தில் ஒரு அரை விட்டாள்
Review பண்ணுங்க , ஸ்டோரி எப்டி இருக்கு அப்டின்னு கமெண்ட் பண்ணுங்க dears
Epi 4
விவேகா இன்பனை ஓங்கி அரைய அது அவனுக்கு ஒரு எறும்பு கடிப்பது போல் கூட இல்லை இன்பாவிற்கு
விவேகா கண்களில் கண்ணீரை கண்டதும் தான் அவனுக்கு நாம் என்ன செய்தோம், செய்கின்றோம் என்று தெரிய அவன் அவளை விட்டான் .
விவேகா-இது தான் நீங்க coaching கொடுக்கிறதா இப்போ உங்களுக்கு தெரியல நீங்கள் எல்லாம் ஒரு police ஆஃபீஸ்ர் னு சொல்லிட்டு திரியாதிங்க
என்ன எந்த மாறி பொண்ணு னு நெனைசீன்க நீங்கள் நெனைக்கிற மாறி பொண்ணு நான் இல்ல என்று கூறினாள்
இன்பா- விவேகா பேசுவதை கேட்டு கொண்டு இருந்தானே தவிர பதில் பேச வில்லை
விவேகா தன் மணிக்கட்டை பார்க்க அது அச்சு பதிய கண்ணி போயிருக்க அதை தொட்டு பார்த்து கொண்டே அவனை பார்க்க
அப்போது மைதிலி அங்கு வந்தாள்
மைதிலி-விவேகா என்னாச்சு உன்னை ஆதி தேடினான் அதான் நான் பார்க்க வந்தேன் என்று கூறி கொண்டே வந்தாள்
அப்போது தான் அங்கு இன்பா இருப்பது பார்க்க சார் என்று கூப்பிட
விவேகா-தங்களுக்குள் நடந்த எதையும் வெளியே காட்டாமல் வா மைதிலி போகலாம் என்று கூற
இன்பா-நான் சொன்னது உன் நியாபகத்தில் வச்சுக்கோ என்று கூற விவேகா அவனை திரும்பி பார்த்து முறைத்து கொண்டே சென்று விட்டாள்.
மைதிலி-என்னடி அவரு சொன்னாரு
விவேகா-அது ஒன்னும் இல்ல டி இனி பொய் சொல்ல கூடாதுன்னு சொன்னாரு என்று துக்கம் தொண்டை அடைக்க கூறினாள்
மித்ரன் இன்பனை கூப்பிட வில்லை ஆனால் கூட்டி வருகிறேன் என்று வலுக்கட்டாயமாக கண்ணுகினியாள் சென்றாள்.
இவ்வளவு நேரம் விவேகாவை பார்த்த பார்வை மாறியது இன்பனுக்கு
கண்ணுகினியாள்-சார் உங்களை மித்ரன் சார் கூப்பிட்டாரு என்று கூற அவன் அவளை அலட்சியம் செய்து விட்டு முன்னே நடந்தான்
இன்பாவிற்க்கு அவன் மேலே கோபம் வந்தது இன்பா(m. v)-நீ என்னை பண்ணிட்டு வந்திருக்கேன் உனக்கு புரியுதா அவ யார் கூட இருந்தால் உனக்கு என்ன . அவங்க என்ன பாட்டு பாடினாள் உனக்கு என்ன நீ வந்த வேலைய பாரு இது brainy
ஆனால் மனமோ அவ யார் கூடயும் நெருக்கமா இருக்க கூடாது என் கூட மட்டும் தான் இருக்கணும் என்று மனம் கூற
எனக்கான ஒன்னு
நான் யாருக்கும் விட்டு தர மாட்டேன் ,
தட்டி பறிக்கவும் தயங்க மட்டேன்
Brainy- அவ ஏன் உன் கூட நெருக்கமாக இருக்கணும் உன்னோட partner ips ஆ இருக்கணும் அப்டிங்கறது தான உன்னோட ஆசை
விவேகா IPS படிக்கல அப்படின்னா என்ன பண்ணுவ
மனசு-நான் படிக்க வைப்பேன்
Brainy-அவ ஆதியை love பண்றான்னு நெனைக்கிறேன்
மனசு-அப்டி இருக்காது, இருக்கவும் கூடாது
பார்க்கலாம் என்ன நடக்குது னு
இன்பா-விவேகாவின் அதரங்களை தொட்ட விரல்களை பார்த்தவனுக்கு முதல் முறையாக தன்னவளை தீண்டியது நீண்டு கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்ற சிரித்து கொண்டான்.
மித்ரன்- இன்பாவும் , கண்ணுகினியாளும் சேர்ந்து வர அதுவும் இன்பா சிரித்து கொண்டே வர அந்த கன்னகுளி அழகாக இருந்தது
அதை கண்ணுகினியாளும் கண்டு கொண்டாள் .
கண்ணுகினியாள்-தன்னோடு வருவதால் தான் சிரித்து கொண்டே வருகிறான் என்று மனதில் ஆயிரம் காதல் கோட்டைகளை கட்டினாள் .
பின் இன்பா மித்ரனின் அருகில் சென்று நின்றான்.
மதிய உணவு இடைவெளி வந்தது. இன்பா விவேகாவை தேட வில்லை அவனுக்கு தெரியும் அவள் மிகவும் கோபமாக இருப்பாள் என்று
ஆதி-என்ன விவேகா ஒரு மாதிரி இருக்க என்னாச்சு டி
விவேகா-ஆதி எனக்கு fever வர மாறி இருக்கு வீட்டுக்கு போலாமா
ஆதி-என்ன திடீரென fever என்று அவன் தொட்டு பார்க்க அவளுக்கு வியர்த்து கொட்டியது
விவேகா-எங்க வீட்டுக்கு வேணாம் வருண் படிப்பான் நான் disturb பண்ணல அம்மாவும் ஆஃபீஸ் போயிடுவாங்க
அதனால நான் உங்க வீட்டுக்கு வரவா
ஆதி-அடி மக்கு இது என்ன கேள்வி அது உங்க மாமா வீடு உனக்கு இல்லாத உரிமையா சரி ஈவினிங் காலேஜ் bus ல போகலாம்
விவேகா-அழுது கொண்டே இப்போவே வீட்டுக்கு போகலாம் என சிறு குழந்தை போல் சொல்லவும்.
ஆதி செல்வத்திற்கு போன் செய்து வர வைத்து வீட்டுக்கு டெபார்ட்மெண்ட் ல letter எழுதி கொடுத்து விட்டு அனுப்பி வைத்து விட்டான்
மதியம் வகுப்பில் பாடம் எடுக்கலாம் என்று அனைவரும் அவர்கள் வகுப்பறை சென்றனர்
மித்ரனும் இன்பாவும் வகுப்பறை சென்றனர் IT, டெபார்ட்மெண்ட் இல்லாமல் CS, EEE, MEC, CIVIl என அனைத்து மாணவர்களும் ஒரு ஆடிட்டோரியும் அதில் assemble ஆக மித்ரனும் இன்பாவும் சென்றனர்.
மித்ரன் தான் வந்த வேலை என்னவோ அதை ஆரம்பித்தான் பாடம் முதலில் சோசியல் சயின்ஸ் சட்டங்கள் political science எடுக்க ஆரம்பித்தான்.
இன்பாவுக்கு எங்கே அவள் என்று தேட ஆரம்பிக்க அவள் இல்லை
இன்பா-மித்ரன் எல்லா டெபார்ட்மெண்ட் லயும் எல்லாரும் வந்திருக்கங்களான்னு ஒரு check பண்ணிடு இல்ல நம்ப தான் ரெஸ்பான்சிபிலிட்டி
மித்ரன்- அந்தந்த கிளாஸ் represendative கிட்ட கேட்க அதை மாணவர்கள் கொடுக்க அதை இன்பன் வாங்கி பார்த்தான்.
அதில் IT ல விவேகா வர வில்லை என்று தெரிந்து கொண்டவன்
இன்பா-IT ல ஒரு girl afternoon absent என்னனு கேளு என்று மித்ரனிடம் கூற
மித்ரன்-IT ரெப் யாரு என்று கேட்க கண்ணுகினியாள் நிற்க உங்க கிளாஸ் ல ஒரு பொண்ணு மிஸ்ஸிங் என்னாச்சு
ஆதி-எழுந்து அவளுக்கு fever அதனால வீட்டுக்கு போய்ட்டா என்று கூற
இன்பாவுக்கு ஒரு பக்கம் மனசு வேதனை இன்னொரு பக்கம் கோபம் அதை எதுக்கு இவன் சொல்றான் இவனுக்கும் அவளுக்கு என்ன சம்மதம் என்று மூளை கேள்வி கணைகள் தொடுத்தது.
மித்ரன்-சரி ok lets go to the கிளாஸ்
இன்பா-அய்யோ இன்பா நீ waste ஒரு பொண்ண எப்டி handle பண்றதுன்னு கூட உனக்கு தெரியல நீ எத்தனை case எத்தனை aquest பாதிருப்ப ஒரு ips னு சொல்ல உனக்கு கேவலம் டா அவ சொன்ன மாதிரி
அவளுக்கு கைய புடிச்சதுக்கே fever வந்திடுச்சே என்று மனசு சொல்ல
மனது-நீ கைய மட்டுமா புடிச்ச என்று கூற
Brain- I cannot control my self என்று மனதுக்குள் கூறி கொண்டான்.
இன்பா-எனக்கு ஒரே தலைவலியா இருக்கு மித்ரன்
நான் கெளம்பறேன் நீ முடிச்சுட்டு வந்திடு என்று அவனை விட்டு சென்று விட்டான்.
மித்ரனுக்கு ஏதோ சரி இல்லை என்று தோன்றியது ஆனால் அவன் அப்புறம் பார்த்து கொள்ளலாம் என்று விட்டான்
வீட்டுக்கு வந்த விவேகாவிற்கு இன்பா சொன்ன அனைத்தும் காதில் கேட்டு கொண்டே இருக்க அவள் நேராக குளியலறை சென்று இன்பா தொட்ட இடங்களை நன்கு சோப்பு போட்டு குளித்தாள்.
விவேகா-மனதில் அவனை நாம் என்ன செய்தோம்
நமக்கு படிக்க விருப்பம் இல்லை என்று கூறினோம் .
அவன் வர மாட்டான் என நினைத்து தான் பெயர் தவறாக கூறினேன் ஆனால் அதற்காக ஒரு பெண்ணிடம் இப்படி நடந்து கொள்ளலாமா.
அனைவரும் இருக்கும்போது ஒரு விதமாக நடந்து கொள்கிறான்
என்னிடம் மட்டும் ஏன் நான் அவ்வளவு அழகு கூட இல்லையே நான் உண்டு என் வேலை உண்டு என்று தானே இருக்கிறேன்.
ஒரு வாரம் வருவேன் என்று சொல்கிறானே எப்படி சமாளிப்பது அதுவும் ஆதியிடம் பேச கூடாது என்று சொல்ல இவன் யார் இவனுக்கு என்ன உரிமை இருக்கிறது
பேசாமல் ஒரு வாரம் லீவுபோட்டுக்கொள்ளலாம் என்று இவள் யோசிக்க இவளை பார்த்த நிமிடத்தில் இருந்து விவேகாவை படித்தவனுக்கு இவள் யோசிப்பது தெரிந்ததோ என்னவோ
சரியான திட்டத்தை கைகளில் வைத்து இருந்தான் இன்பராகவன் ஒன்று அல்ல இரண்டு திட்டங்கள்
இங்கு விவேகா
இதை யாரிடம் சொல்வது என்று யோசித்து வந்தவள் படுக்கையில் படுத்தாள்.
விவேகாவிற்கு தூக்கமே வர வில்லை அவன் வருடிய உதடுகளை இவள் தொட்டு பார்க்க ஒரு நிமிடம் மின்சாரம் பாய்வது போல இருந்தது.
இன்பா இறுக்கி பிடித்த கைகள் இன்னும் வலி தர அவன் மேல் வன்மத்தை வலுக்கட்டாயமாக வளர்ந்து கொண்டாள்.
மாலை ஆறு மணிக்கு வந்த ஆதித்யா இவளை காண வந்தான் அவள் உறங்கி கொண்டு இருப்பது தெரிய வெளியில் செல்ல
விவேகா விழித்தாள் .
விவேகா-ஆதி வந்துட்டியா என்று எழுந்து அமர்ந்தாள்
ஆதி-விவேகா என்னாச்சு மா அந்த இன்பா உன்ன ஏதாவது திட்டினாரா
விவேகா-இல்ல ஆதி அப்டி ஒன்னும் இல்ல அப்பா நியாபகம் அதிகமாக வந்திடுச்சு அது தான் வேற எதுவும் இல்ல
ஆதி-நம்பலாமா
விவேகா-sure எனக்கு தேன் மிட்டாய் வேணும்
ஆதி-அவன் bag ல இருந்து ஒன்று எடுத்து அவள் வாயில் போட்டான்
விவேகா-நான் நாளைக்கும் வரல நீ மட்டும் போ
ஆதி-நீ ஸ்கூல் கும் காலேஜ் ல இவ்ளோ நாள் ஒரு time கூட லீவு போட்டது இல்லையே இப்போ என்ன நாளைக்கு லீவு போடறேன்னு சொல்ற
விவேகா-எனக்கு கொஞ்சம் 3 டேஸ் problem என்று கூற
ஆதி-புரிந்து கொண்டவனாக சரி ரெஸ்ட் எடு என்று வெளியே சென்று விட்டான்
விவேகாவிற்கு அப்பாடா என்று இருந்தது
வெளியே சென்ற ஆதி அவளுக்கு இஞ்சி தட்டி நாட்டு சக்கரையில் டீ போட்டு எடுத்து வந்து கொடுக்க
விவேகாவிற்கு கண்ணீரே வந்து விட்டது
விவேகா-ஆதி உனக்கு என் மேலே எவ்ளோ பாசமா
ஆதி- உனக்கு என் மேலே இருக்கறது விட உன் மேல நான் பாசம்
நீ என்னோட தேன் மிட்டாய்
விவேகா-நாளைக்கு உன்னோட wife வந்தா அப்போ இவ்ளோ பாசம் காட்டுவியா
ஆதி-நீ உன் புருஷன் வந்தா இவ்ளோ பாசம் காட்டுவியா
விவேகா-எப்பவும் மாறாது
ஆதி-நீ மாறினால் கூட என் பாசம் மாறாது என்று அவன் கூற
விவேகாவிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.இப்போது அவள் மன நிலை சற்று நன்றாகவே இருந்தது இன்பா அவள் நினைவுக்கு வரவில்லை.
சரி ஆதி மற்றும் விவேகாவின் பாசம் எப்படியானது என்றால்
ஆதியிடம் செல்வம் சிறு வயதிலேயே
செல்வம்-ஆதித்யா
ஆதி-அப்பா
செல்வம்-ஆதி நீ விவேகாவை நீ தான் பார்த்து கொள்ள வேண்டும்
ஆதி-எதுக்கு அப்பா நான் பார்த்துக்கனும்
செல்வம்-எப்டி என்னோட கங்கா தங்கை உன்னோட அத்தையை எப்டி பார்த்து அவளை அவளுக்கு தேவையான அனைத்தும் செய்கிறேனோ அது போல் விவேகாவை நீ பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும்
செல்வம்-ஏன் என்றால் விவேகா தான் நம் வீட்டின் கடைக்குட்டி செல்ல பெண்
ஆதி- அப்பொழுது இருந்து இன்று வரை ஒன்றாக தான் இருக்கிறார்கள் ஆதி அவன் பள்ளி படிப்பு மட்டும் english mediyum 10 த் to 12th மட்டும் பிரிந்தனர்
விவேகா- அரசு பள்ளியில் தான் படித்தாள் அவள் அப்பா 12 th படிக்கும் போது இழக்காமல் இருந்து இருந்தால் அவள் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் வாங்க வேண்டியது
ஆனால் மொழி பாடத்தில் மட்டும் மதிப்பெண் குறைந்து விட்டது physics, chemistry, maths, ல 185 க்கு மேல biology மொழியில் ல மட்டும் வெறும் தேர்ச்சி மதிப்பெண் தான்
விவேகா அடுத்த நாள் காலேஜ் செல்ல வில்லை இன்பாவுக்கு தெரியும்
வீட்டுக்கு வந்த இன்பாவிற்கு அவளுடைய நினைவுகளாக தான் இருந்தது.
ஆனால் விவேகாவுக்கு fever னு அவன் சொன்னானே அவளுக்கு என்ன ஆகி இருக்கும் எப்படி இருப்பாள் என்று கவலை படிய இருந்தான்.
விவேகா என்னை தவறாக நினைத்து கொள்வாளா என்ற எண்ணம் வேறு அவனை பாடாய் படுத்தியது.
இவன் வந்தது முதல் இவன் முக மாற்றங்களை படித்தவளாய் சுபா இன்பனை பார்த்து கொண்டு இருந்தாள்.
சுபா-என்ன இன்பா கண்டுக்கவே மாட்டிங்குற என்ன புதுசா சிரிக்கிற என்ன விஷயம்
இன்பா- நீ எப்போ வந்த சுபா நான் office டென்ஷன் ல இருந்தேன் வேற எதுவும் இல்லை
சுபா-பொய் சொல்லாத யாரவது propose பண்ணங்களா , இல்ல dating போறியா எனக்கு தெரியாமல்
இன்பா-அதெல்லாம் இல்ல சுபா என்னை பார்த்தாலே எல்லார்க்கும் பயம் என்னோட மனசு யாருக்கு புரியும் என்று சோகமாக விவேகாவை கூறினான்.
சுபா-ஏன் டா இவ்ளோ சோகம் நீ ok னு ஒரு வார்த்தை சொன்னா எத்தனை பொண்ணுங்க love பண்ண ரெடியா வருவாங்க
இன்பா-அது சரி தான் ஆனால் எனக்கு புடிச்ச மாறி ஒரு பொண்ணு என்று அதற்கும் மேல் ஏதும் கூற வில்லை
சுபா-இந்த அளவுக்கு நீ feel பண்ண வேண்டாம் பொண்ணுங்கள மென்மை யாக நடத்தனும் உன்ன புரிந்து கொள்ள உனக்கு புடிச்ச மாறி கண்டிப்பாக ஒரு பொண்ணு வருவா
இன்பா-சுபா சொன்னத கேட்டவன் தான் தவறாக விவேகாவிடம் நடந்து கொண்டோம் என்று நினைத்தவன் தன் மனதில் உள்ளதை மென்மையாக அவளுக்கு புரிய வைக்க வேண்டும் என்று தூங்க சென்றான்
அதனால் அடுத்த நாள் ஒரு முடிவோடு காலேஜ் சென்றான். இங்கு விவேகாவின் அம்மாவிற்கு காலேஜ் இல் இருந்து கால் வந்தது.
காலேஜ் இல் இருந்து என்ன சொல்லி இருப்பார்கள். அடுத்து இன்பாவின் நகர்வுகள் என்னவாக இருக்கும், ஆதியிடம் இன்பனை பற்றி கூறுவாளா விவேகா
அடுத்த பகுதியில் பார்க்கலாம்
Epi 5
விவேகா ஆதியின் வீட்டுக்கு வந்தது பற்றி செல்வம் தன் தங்கையிடம் போனில் கூற கங்கா பதறினாள்.
செல்வம்-கங்கா விவேகா நல்லா தான் இருக்கிறாள் வருண் படிக்கிறான் நீ ஆஃபீஸ் போற அவளுக்கு தனியா இருக்கற மாறி இருக்கும் னு இங்க வந்துட்டா நீ கவலை பட வேணாம்
அதான் உன்னோட மருமக அதிதி பாத்துக்குவா என கூறினார்
கங்கா-சரி அண்ணா அவளை பாதுகோங்க என்று கூறி விட்டு வைத்தாள்.
அடுத்த நாள் காலை 7 மணிக்கு காலேஜ் ல இருந்து போன் வந்தது கங்காவிற்கு
கங்கா உடனே செல்வத்துக்கு கால் செய்தாள்
கங்கா-அண்ணா இன்னிக்கு விவேகா காலேஜ் க்கு புதுசா correspondent வராங்கலாம் அதனால compulsary எல்லாரும் காலேஜ் வரணும் னு எனக்கு விவேகா கிளாஸ் madem போன் பண்ணாங்க
செல்வம்-சரி நான் விவேகாவை காலேஜ் அனுப்பி வச்சிடறேன்
கங்கா-அண்ணா சாயங்காலம் இங்கே வந்திடட்டும் அவ கிட்ட சொல்லுங்க
செல்வம் விவேகவிடம் கூற இன்று வேறு வழி இல்லை என்று ஆதியுடன் கிளம்பினாள்
விவேகாவும், ஆதியும், IT block வர அவர்களின் கிளாஸ் இன்ச்சார்ஜ் தீபா
தீபா-விவேகா, ஆதித்யா கிளாஸ் க்கு சீக்கிரம் போங்க correspondent ஒவ்வொரு கிளாஸ் க்கும் rounds வராங்க
விவேகா-ok மேம் என்று கூறி உள்ளே போக
தீபா-விவேகா நேத்து லீவு போட்டியே லீவு லெட்டர் எடுத்து கிட்டு டெபார்ட்மெண்ட் வா 1 st period முடிஞ்சதுக்கு அப்புறம்
விவேகா-ok மேடம் என்று கூறி விட்டு கிளாஸ் ரூம் செல்ல
அங்கு அனைத்து மாணவர்களும் பேசி கொண்டு இருந்தனர் .
விவேகா உள்ளே வர மைதிலி மட்டும் ஏன் வரவில்லை நீ என்று விசாரித்தாள்.
அடுத்து சிறிது நேரத்தில் தீபா கிளாஸ் இல் நடத்தி கொண்டு இருக்க
வகுப்பறையில் முன்னால் மேடம் என்று
IT dpt h o d கூப்பிட திரும்பி பார்க்க ஹலோ students என்று கூற அனைவரும் எழுந்து நின்றனர்.
HOD- நம்ப new correspondent பொறுப்பு
மிசஸ் வசுமதி ரவிசந்திரன் என்று கூற அவர் உள்ளே நடந்து வந்தார்.
அனைவரையும் பார்த்து ஸ்நேகமாக புன்னகைத்து சில வார்த்தைகள் பேசி விட்டு விவேகாவை பார்த்து ஒரு சிறு தலை அசைப்புடன் சென்றார்
விவேகாவின் மனநிலை அப்படியே வானில் பறப்பது போல இருந்தது .
விவேகா-ஆதி நான் கூட பயந்து போய்ட்டேன் டா ஆனால் வசுமதி மேடம் தான் புதுசா வந்தவுங்க அப்படின்னு தெரிஞ்சதும் எனக்கு ரொம்ப சந்தோஷம் என்று கூறினாள்
ஆதி-ஆமா டீ எனக்கும் சந்தோஷம் தான் அவங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கலாம்.
விவேகா-ஆதி ஒரு தேன் மிட்டாய் வேனும் அவள் கேட்க ஒன்றை எடுத்து அவள் கையில் கொடுத்தான்
யாழினி. இதை பார்த்து கொண்டு இருக்க அவளை சீண்ட ஆதி மாமா ஊட்டி விட மாட்டியா என்று கேட்க
ஆதி-அவள் வாயில் போட மைதிலி எனக்கு என்று கேட்க அவளுக்கும் ஊட்டி விட்டான்.
விவேகா நல்ல மன நிலையில் இருந்தாள் அவள் இன்பனை மறந்து விட்டாள் என்றே சொல்லலாம்.
ஆதி-விவேகா எனக்கு ஊட்டி விட மாட்டியா என்று கொடுக்க
விவேகா அவன் வாயில் எடுத்து போட்டு விட்டு திரும்ப இவர்களது பாசபிணைப்பை இன்பா பார்த்து விட்டான்
விவேகாவுக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை தன்னுடைய இடத்திற்கு வந்தவள் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.
தீபா இன்பனை பார்த்துவிட்டு
தீபா-sir you carry on என்று கூறி கிளம்ப
விவேகா-இது தான் சமயம் என்று மேடம் என்ன கூப்பிடீங்க தான என்று கூற
தீபா-ஆமாம் விவேகா வா dept போலாம் என்று கூறவும்
விவேகா-ஒரு note pen எடுத்து கொண்டு இன்பனை தாண்டி சென்றாள் அவனை பார்க்க வில்லை
இன்பா வகுப்புக்கு சென்று பாடம் நடத்த ஆரம்பித்தான்
இன்பா -மனதில் எப்படியும் நீ இங்க தான் வந்தாகனும் விவேகா என்று நினைத்து சிரித்து கொண்டான்.
தீபா-நீ லெட்டர் எழுதி முடிச்சுட்ட தானே go to the class என்று கூற
விவேகா-வேறு வழி இல்லாமல் தன் வகுப்பு நோக்கி சென்றாள்.
மனதில் என்ன செய்ய காத்திருக்கிறானோ என்று நினைத்து கொண்டு கிளாஸ் க்கு சென்றாள்.
வெளிய நிற்க விவேகா may i come in கேட்கவே இல்லை அப்படியே நின்று கொண்டு இருந்தாள்.
ஆதி-கண்களில் கேட்டு உள்ளே வா என சைகை செய்ய
விவேகா-கண்களால் இல்ல என்று கூற அதில் கோபமானான் இன்பா
அப்போது ஒரு ஆஃபீஸ் staff
இங்கே விவேகா அப்டிங்கறது என்று அவளிடமே கேட்க அது நான் தான் என கூற
ஸ்டாப்-உன்னை வசுமதி மேடம் வர சொன்னாங்க மா
விவேகா-அப்பாடா தப்பித்தோம் என்று ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள்
விவேகா-may i come in மேடம்
வசு-உள்ளே வா மா கிளாஸ் எல்லாம் எப்டி போகுது
விவேகா-அது ஏன் மேடம் கேட்கறீங்க நானே உங்கள் கிட்ட சொல்லலாம் ன்னு இருந்தேன் நீங்களே வந்துட்டிங்
வசு-என்ன விஷயம் சொல்லு மா என்று கூற
விவேகா-அது வந்து மேடம் என்று அவள் வாய் திறக்க
இன்பா-அம்மா யார் கிட்ட பேசிட்டு இருக்கீங்க என்று கூறி கொண்டே உள்ளே நுழைந்தான் இன்பராகவன்
விவேகாவிற்கு இங்கு என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை . அவள் சிலையாக நிற்க
வசு-சொல்லு விவேகா என்ன ஆச்சு என கேட்க
விவேகா-ஒ ஒ ஒன்னும் இல்ல மேடெம் நான் கிளம்புறேன் என்று கூற
வசு-சரி நீ போ மா நான் உன்கிட்ட அப்புறம் பேசறேன் என்று கூற
விவேகா வெளியே வந்தாள்.
வசு-எதுக்கு டா திடீரென இப்டி இந்த பதவி எல்லாம் அப்படியே உங்க மாமா வீட்டு காரஙகி பார்க்கட்டுமே எனக்கு இருக்க வேலைக்கு இது அதிகம் டா
இன்பா-அம்மா இது சும்மா இங்க indirect ஆ நம்ப காலேஜ் மேலே நிறைய complint இருக்கு அத கண்டு பிடிக்க தான் வேற எதுவும் இல்ல நீங்கள் கிளம்புங்க
வசு-நம்ப ரெண்டு பேரும் ஒண்ணா வீட்டுக்கு போகலாம் lunch க்கு வா
இன்பா-சரி மா என்று அவள் சென்று இருப்பாளோ என்று வேக நடையிட்டான்
அவன் நினைத்தது போலவே மெதுவாக நடந்து சென்றாள் விவேகா
இன்பா-எங்க அம்மா வ என்ன சொல்லி மயக்கி வச்சிருக்க என்று ஒரு குரல் கேட்க
விவேகா-நான் ஒன்னும் சொல்லல அவங்க தான் கூப்பிட்டாங்க என்று மிகவும் பவ்யமாக பதில் அளித்தாள்.
இன்பா-ஏன் ரெண்டு நாள் காலேஜ் வரல
விவேகா-நேத்து மட்டும் தான் வரல மனதில் இவன் கிட்ட எதுக்கு நாம்ப மரியாதை கொடுத்து பேசணும் என்று தோன்ற
வம்பு செஞ்சா பாத்துக்கலாம் இனி சும்மா இருக்க கூடாது என்று அவள் இன்பாவின் முகத்தில் அறைந்த இடத்தை பார்க்க
இன்பா அவளை படித்தவனாக நீ அடிச்சது எனக்கு ரொம்ப வலி தெரியுமா
விவேகா-அவனை ஏக்கமாக பார்க்க
இன்பா-இங்க வலிக்குது விவேகா என்று அவன் இதயத்தை காட்ட
அதில் கடுப்பானாள் விவேகா எதுவும் பேசாமல் நடக்க
இன்பா- ஏன் வரல விவேகா காலேஜ் க்கு
விவேகா- எனக்கு fever அதான் வரல
இன்பா-பொய் சொல்லாத உன்ன பார்த்தால் fever மாறி தெரியலையே
விவேகா- கொஞ்சம் குறல் உயர்த்தி நான் எதுக்கு உங்க கிட்ட சொல்லனும் என்று கூற
இன்பா- இப்போ நீ சொல்லி தான் ஆகணும் இந்த காலேஜ் என்னோடது இப்போ நீ யார் கிட்டயும் என்ன போய் கப்லைன்ட் பண்ண முடியாது .
விவேகா- அவனை பார்த்து முறைக்க
இன்பா-நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லவே இல்லை நீ
விவேகா-என்ன சொல்லனும்
இன்பா-சிரித்து கொண்டே அவள் அருகில் வந்தவன் ஏய் விவேகா நீ என்னை தான நெனைச்சுக்கிட்டு இருந்த
விவேகா-நான் எதுக்கு உங்களை நெனைகனும் இவள் அவனை கண்டு கொள்ளாமல் இருக்க
விவேகாவின் மனதில் உன்ன நல்லா புரிந்து வைத்து இருக்கிறான் டி
இன்பா-நீயும் ஆதியும் என்ன relation உங்களுக்கு
விவேகா-ஆமா ஆதி மாமா என்னோட மாமா பையன்
ஆதி IPS க்கு படிக்கிறான் அவன் IPS ஆனவுடன் எனக்கு கல்யாணம் தான் என்று விவேகா வேண்டும் என்றே கூறினாள்
அப்போது தான் இன்பா இனி நம்மை சீண்ட மாட்டான் என்று நம் பின்னால் சுத்த மாட்டான் என்று
அவ்ளோ தான் மறுபடியும் கோபம் வந்து விட்டது இன்பாவிற்கு
விவேகா அவன் நடக்கும் திசையில் நடந்தவள் நாம் எங்கு போகிறோம் என்று தன்னை அறியாமல் இன்பாவின் பின்னால் நடந்தவள் இப்போது இன்பாவின் ஆஃபீஸ் ரூம் க்கு அருகில் வந்து விட்டாள்.
சுற்றும் முற்றும் பார்த்தவள் உடனே நான் ஏன் இங்கு வந்தேன்
அங்கு இருந்து செல்ல ஒரு அடியை எடுத்து வைக்க
அவள் இன்பாவின் கை வளைவுக்குள் இருந்தாள்
விவேகாவை சுவற்றோடு ஒட்டியவன்
இன்பா-விவேகா முன்ன ஏதோ சொன்னியே இப்போ repeat பண்ணு
விவேகா- பிலீஸ் என்ன விடு plesae பிலீஸ் நான் தெரியாம சொல்லிட்டேன் please
இன்பா- சொல்லு ன்னு சொன்னேன்
விவேகா-please விடு விடு என்று அவனை தள்ள
இன்பா-என் பின்னாடி எத்தனை பொண்ணுங்க சுத்தறாங்க தெரியமா டி
உனக்கு என்று விவேகாவின் தாடையை பற்றியவன்
இன்பா-உன்ன பார்த்தால் தான் டி என்னால என்ன கண்ட்ரோல் பண்ண முடியல
IPS ஆகிடு டி நான் உன்னை தூக்கிட்டு போய்டுறேன்.
விவேகா- நீங்கள் சொல்றதுக்கு என்ன அர்த்தம்விவேகா-வார்த்தைகள் தந்தி அடிக்க அவள் வாய் திறப்பதற்குள்
அவள் இதயம் அப்படியே வெளியே குதித்து விடும் போல இருந்தது
இன்பா -அவள் உதடுகளை நெருங்கினான் அவள் கண்களை இறுக்க மூடி கொண்டாள் .
விவேகா அவனை தள்ளி விடுகிறேன் என்று நினைத்து தள்ளாமல் அவன் சட்டயை பிடித்து கொண்டு இருந்தாள்
இன்பாவிற்கு ஒன்று மட்டும் தெரிந்தது.
அவன் எதுவும் செய்ய வில்லை
என்று உணர்ந்தவள் அவனை தள்ளி விட்டு விவேகா-நான் IPS ஆக மாட்டேன் .
உனக்காக நான் ஏன் ஆகணும் என்னோட கனவு தான் எனக்கு முக்கியம்
உங்க status வேற என்னோட status வேற
நான் middle கிளாஸ்
உங்க பக்கத்துல நிற்க கூட
எனக்கு தகுதி இல்ல
அதனால தயவு செஞ்சு என்ன விட்டுட்டு .
உங்க status ஏற்ற மாறி பொண்ண பார்த்து IPS படிக்க வச்சு தூக்கிட்டு போங்க
என்று கூறி விட்டு ஓடி விட்டாள் விவேகா
Episode 6,
அங்கிருந்து ஓடி வந்த விவேகா நேராக ரெஸ்ட் ரூம் சென்றாள்.
இன்னும் ஒரு நிமிடம் இன்பாவின் எதிரில் இருந்தால் கூட அவனிடம் விழுந்து இருப்பாள்.
விவேகா-மனதில் இது என்ன மாதிரியான உணர்வு என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது .
இனி இன்னொரு முறை இன்பனை பார்த்தால் உன்ன விரும்புறேன் அப்டின்னு சொல்லிடுவியா விவேகா
அந்த எண்ணம் உன்னோட மனசுல எப்போதும் வர கூடாது
அவர் வேற நான் வேற அவர் பக்கத்தில் நிற்க கூட உனக்கு தகுதி இல்ல விவேகா
இனி அவரை avoid பண்ணா தான நம்மள சீண்டுவார் . இனிமே நாம் அவர் முன்னாடி நம்ம weak ஆ இருக்கோம் னு காட்டக்கூடாது.
விவேகா இவ்வாறெல்லாம் தன்னை தானே சமாதானம் செய்து ஒரு முடிவுடன் வெளியில் வந்தாள்.
அப்போது morning interval நேராக தன் வகுப்பறைக்கு சென்றவள் எதுவுமே நடக்காதது போல முகத்தை வைத்து கொண்டாள். விவேகாவின் மனம் மிகவும் கனமாக இருந்தது.
இங்கு இன்பாவோ விவேகா சொன்னது தான் யோசித்து கொண்டு இருந்தான்.
ஆனாலும் மனம் ஏற்றுக்கொள்ள வில்லை . எனக்காக இதை கூட செய்ய மாட்டாளா.
இன்பாவின் மனமோ-நீ IPS ஆகறது கடையில் போய் ஒரு chocolate வாங்கறது மாதிரி சொல்லிட்டு இருக்க இன்பா
அது உனக்கு வேனும் னா ரொம்ப ஈசி அவ ஒரு சின்ன பொண்ணு டா நீ நெனைக்கிற மாறி அவ ஏன் நெனைகனும் .
இன்னொரு முக்கிய விஷயம் என்ன அப்படின்னா நீ தான் விவேகா பின்னாடி சுத்துற அவளுக்கு என்ன பிடிக்குமோ அது தான் நீ try பண்ணனும் .
உன் பின்னாடி சுத்துற பொண்ணுங்க உனக்கு என்ன பிடிக்கும் னு அதை try பண்றாங்க.
முதலில் விவேகாவை உன் பின்னாடி சுத்த வை பார்க்கலாம்.
இன்பா-விவேகாவுக்கும் என்ன பிடிச்சிருக்கு அவளை நான் நெருங்கும்போது என்னை தடுக்கவே இல்லையே
மனசு- அவ உன்ன பிடிச்சிருக்கு னு வார்த்தையில் சொல்லனும் இன்பா அதுக்கு நீ என்ன பண்ணலாம் ன்னு யோசி தயவு செய்து இந்த IPS ஆ தூர போடு என்று கூற
இன்பா அதற்கான திட்டத்தை வகுக்க ஆரம்பித்தான்.
ஆதி -விவேகா எங்க போன நீ
விவேகா-வசு மேம் என்னை வர சொன்னாங்க அதனால தான் பார்க்க போனேன்.
ஆதி-சரி உன்னோட முகம் என்ன ஒரு மாறி சோகமா இருக்கு
விவேகா-ஏய் நான் happy யா இருக்கேன் ஆதி ஒரு தேன் மிட்டாய் வேனும் ஊட்டி விடு
ஆதி-நீ ஏதோ ரொம்ப டிபரெண்ட் ஆ behave பண்ற விவி
விவேகா-உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் எப்டி சொல்றதுன்னு தெரியல
ஆதி-என்ன விஷயம் சொல்லு
விவேகா-அது அது வந்து நம்ப library போலாம் அங்க சொல்றேன் வா
ஆதி-இல்ல இங்கேயே சொல்லு
விவேகா-கொஞ்சம் தனியா பேசணும் ஆதி
இப்போ interval முடிய போகுது விவேகா
ஆதி-அப்போ lunch ல போலாம்
விவேகா-நான் இப்போவே சொல்லனும் ஆதி
அப்போ சொல்லு என ஆதி கூற
அப்போ வெளிய வா steps க்கு என அவன் கைகளை பிடித்து இழுத்து சென்றாள்
விவேகா-ஆதி அந்த இன்பா என் கிட்ட
ஆதி-உன் கிட்ட என அவன் கோபப்பட
விவேகா-அவன் கைகளை பிடித்து கொண்டு அவரு என்னை விரும்புகிறேன் ன்னு சொல்றாரு டா
என்று ஆதி பற்றி கூறியது இன்பா அவளிடம் நெருங்கியது விடுத்து மற்ற விஷயங்களை கூறினாள்
ஆதி-விவேகாவை பார்த்து எனக்கு தெரியும் விவி
விவேகா-அவனை அதிர்ச்சி யாக பார்த்தாள் என்ன ஆதி சொல்ற
ஆதி-நீ என் கிட்ட சொல்ல மாட்ட அப்படின்னு நினைச்சேன்
விவேகா- உன் கிட்ட சொல்லாம நான் வேற யார் கிட்ட சொல்லுவேன் ஆதி எது நடந்தாலும் உன் மேல இருக்க இந்த bonding எப்பவும் மாறாது டா
ஆதி-எனக்கு ரொம்ப சந்தோஷம்
விவேகா-உனக்கு எப்டி தெரியும்
ஆதி- நீ dance ஆடுன தான அப்போ வச்ச கண் வாங்காமல் உன்னையே தான் அவரு பாத்தாரு
அப்புறம் நான் உன்கிட்ட கிலோஸ் ஆ இருக்கிறது அவருக்கு பிடிக்கல போல
விவேகா-அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ஆதி நீ இந்த விஷயம் பத்தி என்ன நினைக்கிற
ஆதி- இது நீ முடிவு எடுக்க வேண்டிய ஒன்னு நான் என்ன சொல்ல என்று கூற
விவேகா- ஆதி இந்த காலேஜ் அவங்களோடது ஆதி வசு மேம் அவரோட அம்மா என்னோட தகுதிக்கு இது அதிகம் இன்பாவோட பக்கத்தில் நிற்க கூட எனக்கு தகுதி இல்ல
ஆதி-இந்த காலேஜ் அவங்களோடதா
ஆதி- நீ சொல்றது சரி தான் உன்னோட முடிவு எதுவா இருந்தாலும் நான் உன் கூட இருப்பேன் விவேகா
விவேகா-ஆதி
எனக்கு அவர் மேல இன்டெர்ஸ்ட் இல்ல டா அப்புறம் முக்கியமான விஷயம்
ஆதி- என்ன அது
விவேகா-உனக்கு இந்த விஷயம் தெரிஞ்ச மாதிரி காட்டிகவேண்டாம்
ஆதி- ok எனக்கு உன்ன பார்த்தால் கர்வமா இருக்கு விவி
என்ன ஒரு பொண்ணு approach பண்ணி இருந்தால் கூட நான் உன்கிட்ட சொல்லி இருப்பேனா அப்டின்னு தெரியல டி
ஆனால் நீ என்ன உயர்வா நெனைக்கிற என் தேன் மிட்டாய்
விவேகா-உன்கிட்ட சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு releaf ஆஅ இருக்கு
ஆதி-சரி வா நாம்ப கிளாஸ் க்கு போகலாம் என்று இருவரும் சென்றனர்.
அவர்கள் வகுப்பிற்க்கு சென்றனர் .
வகுப்பில் மித்ரன் வகுப்பு எடுத்தான். விவேகாவிற்கு பாடத்தில் கவனம் இல்லை அவள் எண்ணம் முழுக்க இன்பா மட்டுமே இருந்தான்.
இன்பா மதிய உணவை வசுமதியுடன் சாப்பிட்டான். ஏதோ பெயருக்கு சாப்பிட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.
பின் இன்பா மற்ற வகுப்புகளை combine செய்து நடத்தினான் விவேகாவின் வகுப்பிற்கு செல்லவும் இல்லை அவளை பார்க்கவும் இல்லை
இன்று ஒரே ஒரு முறை அவளிடம் பேசி விட வேண்டும் என்று நினைத்தவன் . தன் அம்மாவை வீட்டுக்கு அனுப்பி
இன்பா-அம்மா நான் மித்ரனுடன் வருகிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தான்.
ஆஃபீஸ் staff கிட்ட correspondent வர சொன்னதாக விவேகாவை வர சொன்னான் இன்பன்
Last hour நடந்து கொண்டு இருக்க விவேகாவை correspondent வர சொன்னதாக அவர் வந்து கூற
விவேகா-மைதிலி நீ bag எடுத்து கிட்டு என்னோட பஸ் நிக்கற இடத்துக்கு வந்திடு இப்போ 15 மினிட்ஸ் தான் இருக்கு
ஆதி அம்மா வீட்டுக்கு வர சொல்லிட்டாங்க நான் வீட்டுக்கு போறேன்
மைதிலி-சரி விவி நீ போ நான் எடுத்து கிட்டு வரேன்.
ஆதி-வீட்டுக்கு போய்ட்டு கால் பண்ணு உன்கிட்ட பேசணும் angry பத்தி என்று ஆதி சிரிக்க
விவேகா-அடிங்க என்று அவள் சொல்லி விட்டு மித்ரனிடம் சொல்லி விட்டு சென்றாள்
Correspondent அறைக்கு வெளியே ஸ்டாப் கிட்ட சொல்ல
ஸ்டாப்-உள்ளே போ மா என்று கூற
இன்பா சூழல் இருக்கையில் விவேகாவிற்கு முதுகு காட்டி அமர்ந்து இருக்க
விவேகா-மேடம் திரும்பாதிங்க please
உங்க கிட்ட நான் sorry கேட்கணும் உங்க முகத்தை பார்க்க எனக்கு கஷ்டமா இருக்கு
நான் சொல்ல வந்தது சொல்லிடறேன் அன்னைக்கு club innoguration அப்போ
நான் தெரியாமல் இன்பா சாரை angry bird னும்
அவரோட அம்மா நீங்கன்னு எனக்கு தெரியாமல் உங்களை women angry bird னு சொல்லிட்டேன் .
எனக்கு தெரியாது அவர் தான் உங்க பையனு நீங்க தான் அவரோட அம்மா ன்னு அதனால
sorry
I’m extremely sorry என்று கண்களை மூடி தன் இரண்டு கைகளாலும் காதுகளை பிடித்து கொண்டு விவேகா மன்னிப்பு கேட்க.
இன்பாவிற்கு சிரிப்பு ஒரு பக்கமும் இவளை மிஸ் பண்ணிடாத இன்பா என்று மனம் ஒரு பக்கம் கூற
விவேகா-என்ன எதுவும் சொல்ல மாட்டிங்கிறாங்க என கண்களை திறக்க
அங்கு இன்பா இவளை பார்த்து சிரிப்பு அடக்கி கொண்டான்
அப்போதும் அவன் முகம் சிரித்த முகமாக தெரிய அந்த கன்ன குழியை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தாள் விவேகா
விவேகா-மனதில் செம்மையா இருக்கானே என்று நினைத்தவள் . அவனையே பார்க்க
இப்போது இன்பா பேசினான்.
இன்பா-உன்னோட வழிசல் கொஞ்சம் துடைத்து கொள் என்று கூற
விவேகா-சட்டென்று தன்னிலைக்கு வந்தவள் எனக்கு ஒன்னும் வழியல மேடம் எங்க என்னை வர சொன்னதாக சொன்னாங்களே
இன்பா- இருக்கையில் இருந்து எழுந்தவன் அம்மா வீட்டுக்கு போய்ட்டாங்க
விவேகா-அப்போ நீங்கள் பொய் சொன்னிங்களா
இன்பா-நான் எதுக்கு பொய் சொல்லனும் நானும் இங்க correspondent தான் u got it
விவேகா-சரி ok நான் கிளம்புறேன்
இன்பா-நான் இப்போ என்ன சொன்னேன் நானும் தான் head ok வா
விவேகா-அப்போ எதுக்கு என்னை வர சொன்னீங்க
இன்பா-உன் கிட்ட பேச தான் அப்போ என்ன angry bird னு எங்க அம்மா கிட்ட சொல்லிருக்க
விவேகா-அது நான் தெரியாமல் சொல்லிட்டேன் sorry
இன்பா-அதுக்கு புனிஷ்மெண்ட் தரவா
விவேகா-அதை நான் வசு மேடம் கிட்ட வாங்கிக்கிறேன் நீங்கள் எதுக்கு வர சொன்னீங்க அதை first சொல்லுங்க எனக்கு bus க்கு time ஆச்சு
இன்பா-சரி நான் straight to the point க்கு வரேன் . என்று கூறி கொண்டே விவேகா அருகில் வந்தான். வந்து நின்றவன்
உனக்கு என்னை புடிக்கல.
நீ என்னை விரும்பல அப்படிதானே
விவேகா-மனமோ இல்ல பிடிக்கும் னு சொல்லு என்று கூற
அவள் உதடுகளோ விரும்பல என்று கூறினாள்.
மனது-அவனை யாரவது பிடிக்காது என்று கூறுவார்களா .
இன்பா-சரி ok நான் உன்னை இனி disturb பண்ண மாட்டேன்.
இனி உன்கிட்ட official னா மட்டும் தான் பேசுவேன்.
உன் பக்கத்தில் கூட வர மாட்டேன்.
உன்ன பார்க்க மாட்டேன்.
விவேகா கண்களில் சோகம் ஆனால் மறைத்து கொண்டாள்.
அப்புறம் coaching class வர மாட்டேன் அப்டின்னு சொல்ல கூடாது நீ எனக்கு ஒன்னும் special இல்லையே எல்லா ஸ்டுடெண்ட்ஸ் மாதிரி தான் நீயும் got it
இன்பா-நீயா எப்போ என்கிட்ட வந்து இன்பா அப்டின்னு என் பேர சொல்லி கூப்பிடற வரைக்கும் நான் உன்கிட்ட பேச மாட்டேன்.
Ok நீ இப்போ போகலாம் என்று முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் கூறினான் இன்பா.
விவேகாவின் இதயம் வெடித்து விடுவது போல வலி தன் உதடுகளை மடித்து கடித்து கொண்டு உணர்வுகளை அடக்கி
விவேகா-ok சார் thank you என்று கூறி ஓடிவிட்டாள்.
அவள் சென்ற திசையை பார்த்தவன்.
இன்பா-ஏன் டி இப்டி உன்னையும் கஷ்ட படுத்தி என்ன இப்டி கொல்ற என்று கூறி கொண்டான்.
இன்பா தன்னுடைய போன் எடுத்து கால் செய்துகாலேஜ் தொடர்பான சில வேலைகளை கொடுத்தான்.
இன்பா-விவி பேபி நான் உன்னை எப்படியும் பார்த்துடுவேன்
நீ தான் என்ன பார்க்காமல் ஏங்கி போக போற அப்டி நீ ஏங்கினால்
தான் டி உனக்கு என்னோட அவஸ்தை என்னனு உனக்கு புரியும்.
கமெண்ட் பண்ணுங்க, ratings கொடுங்க , if you like the story touch the like heart , share it
Episode 7,
தன் பேருந்தில் ஏறியவள் எப்படி வீட்டுக்கு சென்றாள் என்றே அவளுக்கு தெரிய வில்லை விவேகாவின் காதுகளில் இன்பா சொன்னது கேட்டு கொண்டே இருந்தது.
தன் வீட்டுக்கு வந்தவள் நேராக முகம் கை கால் கழுவி விட்டு மாடி மச்சுக்கு சென்று விட்டாள்.
ஒரு இடத்தில் அமர்ந்தவளுக்கு இன்பாவின் மீதே மனம் சென்றது. விவேகா மனதில்
ஏன் டா என்னை இப்டி torture பண்ற
நானா உன் பின்னாடி சுத்துனேன்
நீயா வந்த என்ன பத்தி கப்லைன்ட் பண்ண
அப்புறம் என்னை நெருங்குன
இப்போ உன்னை disturb பண்ண மாட்டேன் அப்டின்னு போற என்று இன்பனை நினைத்து அழுதாள் விவேகா.
இன்பா உன் பக்கத்தில் இருந்தால் எனக்கு அது என்ன உணர்வு அப்டின்னு சொல்ல தெரியல i cannot define to explain in my words என்று கூறி அழுதாள்
தன்னை ஒரு வாறு சரி செய்த விவேகா தன் கண்களை துடைத்து கொண்டு சரி விவேகா
இது இப்படியே முடியட்டும்.
அது தான் உனக்கு நல்லது என்று மனதில் இதுவும் கடந்து போகும் என்று சொல்லி விட்டு கீழே வந்தாள்.
அங்கு வருண் அமர்ந்து இருந்தான் . விவேகா தன் கவலைகளை கொஞ்சம் மனதில் தள்ளி விட்டு
விவேகா-வருண் என்னாச்சு டா
வருண்-preliminary result வந்திடுச்சு விவேகா
விவேகா-அவன் முக வாட்டம் பார்த்து சரி விடு நெஸ்ட் time பார்த்துக்கலாம்
வருண்-விவேகா நான் pass பண்ணிடேன்
விவேகா-அண்ணா அண்ணா என்று கண்களில் ஆனந்த கண்ணீர் வந்து விட்டது அப்பா மட்டும் இருந்தால் எப்டி இருக்கும் என்று சந்தோஷம் சோகம் ஒரு வாறு sera அழுது விட்டாள்
வருண்-நீ எதுக்கு விவேகா அழற என தன் தங்கையை அணைத்து கொண்டான்
விவேகா-சரி உன்னோட அதிதி கிட்ட சொல்லிட்டியா
வருண்-ம்ம்ம் சொல்லிட்டேன் அவ ஆதி கூட வீட்டுக்கு வரேன் அப்டின்னு சொல்லி இருக்கா
விவேகா-அண்ணா super அண்ணா எனக்கு என்னை சொல்றது அப்டின்னே தெரியல என்று தன் அண்ணனுடன் நேரத்தை செலவிட்டாள்.
சிறிது நேரம் கழித்து கங்கா வர அவள் ஆஃபீஸ் ல இருக்கும்போதே கூறி விட்டான் மிகவும் சந்தோசமாக வந்தாள்.
ஆதியும், அதிதியும் வந்தனர்
ஆதி-மாமா super மாமா congaratulations
வருண் -thanks ஆதி என்று கூறி அவன் அதிதியை பார்க்க
அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி கங்கா சமையல் அறை சென்று விட்டாள்.
ஆதியும், விவேகாவுக்கு மாடிக்கு சென்று விட்டனர்.
வருண்- அதிதியை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.
என்ன அதி மா எதுவும் பேச மாட்டிங்குற
அதிதி-ஒன்னும் இல்ல மாமா என்று வெளியில் ஓடினாள்
வருண்-அவள் பின்னால் போய் அவள் கைகளை பிடித்து கொண்டு தன் பக்கம் அவளை திருப்ப
அதிதி-மாமா விடுங்க என்று அவள் வெட்கத்தில் நெளிய
வருண்-அதி மா நான் பாஸ் பண்ணதுக்கு எதுவும் சொல்லவே இல்லை ஒரு wish கூட பண்ணல நீ என்று வருண் விலக
அதிதி-மாமா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று அதிதி தன் கைகளை வருண் கன்னம் மீது வைத்து ஒரு முத்திரை பதித்து விட்டாள்.
மாமா இது தான் என்னோட wish என்று அவன் கைகளை தன் கழுத்தில் மாலையாக போட்டு கொண்டாள்
வருண்-அதி மா நீ develop ஆகிட்ட
அய்யோ என்னால எப்டி உன்ன பார்க்காமல் இருக்க போறேனோ
அதிதி- நீங்கள் mains பாஸ் பண்ண நான் காத்துகிட்டு இருக்கேன்
என்னோட பெயர் துடிக்குது மாமா
வருண்-எதுக்கு செல்லம் என்று சொல்லிக்கொண்டே அவள் ஒவ்வொரு விரல்களுக்கும் முத்தம் வைத்தான்.
அதிதி-எப்போ நான் அதிதி வருண் ஆவேன்னு தான்
வருண்- இந்த time மாமா கண்டிப்பாக ஆகிடுவேன் என்று கூறி இவ்ளோ நாள் எனக்காக காத்து இருந்த
இந்த கொஞ்ச நாள் மட்டும் எனக்கு wait பண்ணு டா என்று கூறி அவளை விடுவித்தான்.
அதிதி போய் தன் அத்தையுடன் சேர்ந்து கொண்டாள். வருண் அவளுக்காக ஏதாவது வாங்க வேண்டும் என்று கடைக்கு சென்று விட்டான்.
இங்கு ஆதித்யா, விவேகா
ஆதி-என்ன விவி வந்தது ல இருந்து அமைதியாவே இருக்க
விவேகா-நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ஆதி
ஆதி-உன்னோட voice ல ரெண்டும் கலந்து இருக்குதே
விவேகா-ஆதியின் தோளில் சாய்ந்து கொண்டு இன்பா சொன்ன அனைத்தும் கூறினாள்.
ஆதி-நிஜமாவே அவரு இப்டி எல்லாம் பேசுவாரா எனக்கு அதை நினைக்கும்போதே எனக்கு உலக அதிசயத்துல ஒன்னு அப்டின்னு தோணுது விவி என்று சிரித்தான்
விவேகா-அவளுக்கு கோபம் வர சட்டென்று எழுந்தவளை
ஆதி-விவி sorry sorry விடு என்று அவளை அமர வைத்து விவேகா நான் ஒன்னு சொல்லட்டுமா
விவேகா-ம்ம்ம் சொல்லு
ஆதி-நீ அவரை விரும்பர தான
விவேகா-என்ன உளற்ற அப்டி எல்லாம் ஒன்னும் இல்ல ஆதி
ஆதி-பொய் சொல்லாத விவேகா நீ தான் உளர்றஉன் கண்ணுல அப்பட்டமாக தெரியுது
விவேகா- இல்ல ஆதி நான் வேற அவரு வேற டா இது சாத்தியம் இல்ல டா
ஆதி-உன்னை நீயே இப்டி சொல்லி கஷ்ட படுத்திக்கற
விவேகா-ஆதி எப்டி டா பார்த்த ஒரு 4 நாள் ல இப்டி தோணும். என்னை பத்தி என்ன தெரியும் . அவரு என்ன ஏது இது எதுவம் தெரியாமல் எப்டி
ஆதி- ஆதி சிரித்து கொண்டே பார்த்தவுடன் தோன்றுவது தான் காதல் அப்டின்னு நான் சொல்ல மாட்டேன் . ஒவ்வொருத்தர் கும் ஒவ்வொரு மாதிரி
இன்பா சார்க்கு உன்னை பார்த்ததும் love at first sight ஆ இருக்கு
இதுவே வருண் மாமா க்கு அதிதி வேற ஒருத்தர்க்கு சொந்தமாக போறா
அப்படின்னு தெரியும் போது அதிதி மேல் இருந்த அன்பு காதல் ஆ மாறிடுச்சு அவ்ளோ தான் விவி
விவேகா-ஆதி அது எப்டி வேணா இருக்கட்டும் எனக்கு இது வேண்டாம்
ஆதி-நீ வேண்டாம் ன்னு சொன்னாலும் இன்பா விட மாட்டாரு இனிமே தான் இருக்கு நீயே போய் அவர் கிட்ட பேசற மாறி அவரு உன்ன மாத்திடுவாரு
விவேகா-அது நடக்காது
ஆதி-எனக்கு என்னமோ இந்நேரம் அவரு அதுக்கான வேலைய start பண்ணிருப்பாரு அப்டின்னு நெனைக்கிறேன்
விவேகா-எனக்கு அவ்ளோ சீன் இல்ல ஆதி அப்படி எல்லாம் நடக்காது
ஆதி-கண்டிப்பாக நடக்கும் ம்ம்ம்ம் என்று ஒரு பெரு மூச்சு விட்டவன்
உனக்கு ஒரு angry bird சிக்குன மாதிரி எனக்கும் ஒரு scatcy bird இல்ல இன்னொரு angry bird ஏதாவது வந்தால் பரவாயில்லை
என்று அழுத்து கொண்டான்.
விவேகா-முதலில் நீ IPS பாஸ் பண்ணு love bird பறந்து வரும் என்று கூறினாள்.
ஆதி-கண்டிப்பாக IPS ஆகிடுவேன் என்று ஒரு உத்வேகத்துடன் இருந்தான்.
ஆதி சொன்னது போலவே இன்பா அதற்கான வேலைகளில் இறங்கினான். விவேகாவின் வகுப்பறை, அவள் வரும் பேருந்து,அப்புறம் IT block ல எல்லாம் கேமரா வைக்க சொல்லி இருந்தான்.
அதன் footage களை இவனது personal போன் ல எப்போ வேணும்னாலும் எடுத்து பார்க்கிற மாதிரி செட் செய்து இருந்தான்.
இன்பா-விவேகா நாளைக்கு நீ வேற ஒரு இன்பாவ பார்க்க போற பேபி என்று சிரித்து கொண்டான்.
ஆதியும், அதிதியும் கிளம்ப
வருண்-அதி மா வாங்கிக்கோ உனக்கு பிடிக்கும் னு நான் lolly pop, diary milk வாங்கிட்டு வந்து இருக்கேன்.
அதிதி-ரொம்ப thanks மாமா என்று வாங்கி கொண்டாள்.
விவேகா-வருண் எனக்கு ஒரு chocolate வாங்கி தந்தியா
நீ உன்னோட future க்கு இப்போவே வாங்கி தர கால கொடுமை
அதிதி-இந்தா விவேகா என்று கொடுக்க
விவேகா-வேணாம் அதிதி அப்புறம் உன்னோட future என்னை புரட்டி எடுத்திடும்
நீயே சாப்பிடு அதி மா என்று வருண் கூறுவது போல கிண்டல் செய்தாள்
கங்கா- என்ன விவேகா அடி வாங்க போற அதிதியை அண்ணி னு கூப்பிடு வருண் அண்ணா ன்னு கூப்பிடனும்
ஆதியை கூட நீ மாமா ன்னு தான் கூப்பிடனும் நீ ஒன்னும் சின்ன குழந்தை இல்ல. என்று அதட்டினாள்
ஆதி-அத்தை விவேகா வ திட்டாதீங்க அவ சின்ன பொண்ணு
கங்கா-எல்லாம் நீ கொடுக்கிற இடம் தான் ஆதி என்று பேசி விட்டு அவர்கள் வீட்டுக்கு கிளம்பினர்.
விவேகா இரவு முழுவதும் அவனையே அவன் தான் இன்ப ராகவன் அவனையே நினைத்து கொண்டு அவன் சொன்ன வார்த்தைகள் நினைத்து அழுது கொண்டே தூங்கி விட்டாள்.
அடுத்த நாள் காலை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன நிலையில் எழுந்தனர். விவேகாவோ இந்த சூழல் எப்படி எதிர்கொள்வோமோ என்று யோசித்து கொண்டே காலேஜ் கிளம்பினாள்.
இன்று அவளுடைய பேருந்து தான் காலேஜ் க்கு முதலில் வந்தது .
அதனால் உடனே தன் வகுப்பறைக்கு சென்றவள் போய் அவளது இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
அடுத்து மைதிலி வந்தாள் வகுப்பு ஆரம்பிக்க ஒரு முக்கால் மணி நேரம் இருந்தது. ஆதி வந்தான் .
ஆதி-ஓய் தேன் மிட்டாய் என்று கூப்பிட
விவேகா-தன் கண்களை துடைத்து கொண்டு desk இல் தலையை வைத்து படுத்து இருந்தவள் தலையை தூக்கி பார்த்தாள்.
ஆதி-லூசு ஏன் டி இப்டி முகத்தை வச்சிருக்க
விவேகா-நான் நல்லா தான் இருக்கேன் என்று கூறி அவனிடம் இயல்பாக பேச முயற்சித்தாள்
ஆதி-உங்க அண்ணி உனக்காக உனக்கு பிடிச்ச கத்தரிக்காய் பிரட்டல் செஞ்சு கொடுத்திருக்காள் இந்தா சாப்பிடு என ஸ்பூன் கொடுக்க
விவேகா-எனக்கு வேண்டாம்
ஆதி-நீ எப்படியும் காலையில் சாப்பிட்டு இருக்க மாட்ட ஒழுங்கா சாப்பிடு என கூற
விவேகா-சரி நீ ஊட்டி விடு
ஆதி-நீயே சாப்பிடு டி இல்லனா
உங்க டூத் paste ல உப்பு இருக்கா அப்டின்னு கேட்கிற மாதிரி
உன்னோட angry bird பறந்து வந்து என்னை தான் பங்கம் பண்ணுவாறு டி
விவேகா- அப்படினா எனக்கு வேண்டாம் விடு
ஆதி-சரி இரு ஊட்டி தொலையுறேன் . என்று ஸ்பூன் ல ஒவ்வொரு வாயாக ஊதி ஊதி ஊட்டி கொண்டு இருந்தான் ஆதி.
இன்பா என்ன பண்றா என்னோட டார்ஜிலிங் என்று அவனுடைய போன் ல பார்க்க
சாப்பிட அமர்ந்த இன்பா சாப்பிடாமல் எழுந்து காலேஜ் க்கு அவசரமாக கிளம்பினான்.
அடுத்து என்ன நடக்கும் மறக்காமல் ratings போடுங்க, கதை பிடித்து இருந்தால் இதயத்தை தொடுங்க, share பண்ணுங்க
Episode 8,
இன்பா அவனது வீட்டில் சாப்பிட அமர்ந்ததும் விவேகா காலையில் பேருந்தில் என்ன செய்தாள், என்று பார்த்து விட்டு அவன்
இன்பா-மனதில் விவி நீ ஒரே நாளில் என்னை நினைத்து நினைத்து ஒல்லி ஆன மாதிரி தெரியுது டி என்று மனதில் சிரித்து கொண்டான்
இல்லை உண்மையாகவே சிரித்தான். வசுமதி கமிஷனர் ஆஃபீஸ் க்கு கிளம்பியவள். இன்பா சிரித்து கொண்டு இருப்பதை பார்த்து.
வசுமதி -ராகவ் என்ன ரொம்ப ஹாப்பியா இருக்க போல அம்மாவுக்கும் சொன்னால் நானும் சிரிப்பேன்.
இன்பா-nothing மா
வசுமதி-இரண்டு இட்லி எடுத்து அவளது தட்டில் வைத்து கொண்டு இன்பாவுக்கும் வைத்து கொண்டே
வசுமதி-அந்த பொண்ணு சொன்னது correct தான்
இன்பா- whose
வசுமதி-அது தான் விவேகா சொன்னாள்
நீ ஒரு angry bird தான் இப்போ தான் சிரிச்ச உன்னோட கன்ன குழி எவ்ளோ அழகா இருந்தது தெரியுமா
இப்போ பாரு உன் முகம் angry bird மாறி தான் இருக்கு
இன்பா- என்னை மட்டுமா சொல்லி இருப்பாள் உங்களையும் ஏதாவது சொல்லி இருப்பாளே என்று அவன் உளற
வசு-உனக்கு எப்டி தெரியும்
இன்பா-அப்போது தான் தன்னிலைக்கு வந்தவன் இல்ல மா அந்த பொண்ண காது திருகி ஏன் அப்டி சொன்ன அப்டின்னு நீங்க கேட்க வேண்டியது தானே
அதை விட்டு அந்த girl ku support பண்றீங்க.
வசு- இன்பா உளறியதை மறந்தவள் அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு தெரியுமா bold ஆ பேசுவா அவ ஒரு சுட்டி பொண்ணு டா கள்ளம் கபடம் இல்லாமல் எல்லார் கிட்டயும் பழகுவா
இன்பா- ஓ அப்படியா மா என்று மனதில் என்னையும் கள்ளம் கபடம் இல்லாமல் மயக்கிட்டா என்று மனதில் நினைத்தான்.
வசு-அந்த SPR corperation investigation என்னாச்சு ராகவ்
இன்பா-அம்மா அவங்க பக்காவா எல்லா document யும் maintain பண்றாங்க மா
நான் police ஆஃபீஸ்ராக அந்த SPR காலேஜ் குள்ள போக முடியாது அப்டின்னு தான்
இந்த கரெஸ்பாண்ட்டெண்ட் பதவி வேற ஒன்னும் இல்ல மா
வசு-நானும் என்னோட service ல எவ்ளோ கேஸ் பார்த்து விட்டேன் ஆனால் இது ஒன்னு தான் என்னால tackle பண்ண முடியல ராகவ்
இன்பா-விடுங்க மா பார்த்து கொள்ளலாம் என்று
விவேகா இந்நேரம் காலேஜ் வந்திருப்பாள் என்ன செய்கிறாள் என்று பார்க்கலாம் என்று இன்பா saved videos பார்க்க அதில் கோபம் அவனுக்கு ஏறியது
ஆதி,விவேகாவுக்கு உணவு ஊட்டும் காட்சி தான் அது
இன்பா எழுந்து செல்ல
வசு-என்னாச்சு ராகவ் இப்போ ஏன் சாப்பிடாமல் பாதியில போற.
இன்பா-அம்மா எனக்கு important work இருக்கு நான் கிளம்புறேன் என்று கூறி தனது காரில் வேகமாக சென்றான்.
விவேகா சாப்பிட்டு முடித்து விட்டு அவள் தன்னை கொஞ்சம் சரி செய்து கொண்டாள்.
அனைத்து மாணவர்களும் அவர்கள் வேலையில் இருக்க.
விவேகா தண்ணீர் குடித்து கொண்டே ஆதி கிட்ட
விவேகா-ஆதி காலைல வருண் mains க்கு ரெடி ஆக டெல்லி போகணும் னு சொன்னான் டா அதுக்கு amount கொஞ்சம் அதிகமாக செலவு ஆகும் னு சொன்னான்
ஆதி-அத்தையை அப்பாகிட்ட கேட்க சொல்லலாம் தானே விவி
விவேகா-இல்ல ஆதி அதுக்கு பணம் ரெடி பண்ணியாச்சு ஆனால்
ஆதி-ஆனால் என்ன
விவேகா-எனக்கு காலேஜ் fees கட்ட amount என்ன பண்றது அப்டின்னு தெரியல நான் அம்மா கிட்ட சொல்லல ஆதி
ஆதி-நான் அப்பா கிட்ட சொல்லட்டுமா
விவேகா-இல்ல உனக்கு கட்டணும் ஏற்கனவே மாமா தான் எங்களுக்கு எல்லாம் செய்யறாங்க
ஆதி-விடு கண்டிப்பாக ஏதாவது நடக்கும் என்று யோசித்தவன் .
Super idea
விவேகா- என்ன சொல்லு
ஆதி- first அதுக்கு department போகணும்
விவேகா notice board போய் பார்க்கலாம் ஏதாவது competition notification இல்லனா வேற காலேஜ் ல ஏதாவது price money இருக்க மாதிரி conduct பண்ணாங்கனா
விவேகா- ஆதி என்று சந்தோஷமாக அவள் ஆதியின் கைகளை பிடித்து கொண்டு வா நம்ப இப்போவே டெபார்ட்மெண்ட் போலாம் என்று கூறி அவனை இழுக்க
ஆதி-ஏய் இன்னும் 15 மினிட்ஸ் தான் இருக்கு staff வந்திடுவாங்க
விவேகா-சீக்கிரமா போய்ட்டு வந்திடலாம் வா டா என்று அவனை தர தர என இழுத்து சென்றாள்.
ஆதி சொன்னது போலவே talent examSPR institution ல conductபண்றதுக்கான ஒரு circular அப்புறம் inter college காம்பிடிஷன் cultural ல ஒரு circular இருக்க
விவேகா அதை பார்த்து படித்து விட்டு குதித்தாள் .
Department ல name எப்போ கொடுக்கணும் என்று கேட்க
Staff-இப்போ ஒவ்வொரு கிளாஸ் க்கு staff வந்து வாங்கி கொள்வதாக கூற இருவரும் வகுப்பறை சென்றனர்.
ஏற்கனவே இன்பா அங்கு கைகளில் ஒரு ஸ்டிக் வைத்து சுழற்றி கொண்டே அந்த மேசை மீது கெத்தாக அமர்ந்து இருந்தான்.
விவேகா இன்பனை பார்த்ததும் ஆதியின் பின்னால் போய் நின்று கொண்டாள். நேற்று அவன் சொன்னது அனைத்தும் அவள் நினைவுக்கு வந்தது.
ஆதி- போச்சு டி angry bird நெருப்பா கொதிக்கிறாரு போய் may i come in கேளு டி
விவேகா-ஆதி நீ கேளு
ஆதி-நம்ப ரெண்டு பேரும் சேர்ந்து கேட்கலாம் டி
விவேகா- சரி
ஆதி- நான் 123 சொல்றேன் 3 னு சொல்லும்போது கேட்ரு டி
விவேகா-ok
ஆதி-123 என்று கூறி விட்டு may i come in என்று அவன் மட்டும் கூற விவேகா கேட்க வில்லை
இன்பா- yes come in என்று அவன் அவர்களை பார்க்காமல் கூற
ஆதி-விவேகாவை முறைத்து கொண்டே உள்ளே செல்ல இவளும் அவன் பின் செல்ல
இன்பா-stop it என்று கூற இருவரும் நிற்க
ஆதி-சார் என்று கூற
இன்பா-கண்ணுகினியாளை பார்த்து அவளை சுருக்கமாக இனியாள் என்று கூற
இனியாள்-இன்பாவின் கடை கண் பார்வை நம் மீது படாதா என்று பார்த்து கொண்டு இருந்தவள் முகமெல்லாம் புன்னகையுடன்
சொல்லுங்க சார் என்று கூற
இன்பா-எனக்கு ஒரு voice தான் may i come in அப்டின்னு கேட்டது உங்களுக்கு
இனியாள்-ஆமா சார் ஆதி மட்டும் தான் கேட்டான் என்று கூற
மைதிலி-போச்சு நல்லா மாட்டிகிட்ட விவேகா இவர் வேற ஒரு form ல வந்திருக்காறே என்று இயலா நிலையில் அவளை பார்க்க
இன்பா-அப்போ யாரு கேட்காமல் வந்தது என்று தன் போனில் அவளை பார்க்க
விவேகா-திரு திருவென முழிக்க
ஆதி-சார் அவ கேட்டா ஆனால் கொஞ்சம் sound மெதுவாக கேட்டது. என்று விவேகாவுக்கு support செய்தான்.
இன்பா- ஆதி i will kill you என்று மனதில் நினைத்தவன் ஓ அப்படியா எனக்கு கேட்கவே இல்ல என்று அவன் காதுகளை தேய்த்தவன்
இன்பா- சரி ok நீ இங்க first bench ல உட்காரு அந்த girl போய் மறுபடியும் போய் excuse கேட்டு உள்ளே வரட்டும்.
ஆதி-விவேகாவை முறைத்தான்
விவேகா வேறு வழி இல்லாமல் வெளிய சென்று இன்பனை பார்த்து
விவேகா-may i come in sir என்று கூற
இன்பா-கேட்கல இன்னும் sound ஆ
விவேகா-may i come in sir
இன்பா-இன்னும் sound ஆ
விவேகா-may i come in sir என்று கோபமாக கொஞ்சம் சத்தமாகவே கூறினாள்
இன்பா-yes come in மிஸ் என்று இனியாளை பார்க்க
இனியாள்-அந்த girl name விவேகா
இன்பா- what ever என்று கூறி உள்ளே வர சொன்னான்
விவேகாவுக்கு மிகவும் கோபமாக வந்தது. அவள் இடத்தில் அமர போனவளை
இன்பா -ஹலோ girl மிஸ் என்று விவேகாவை பார்க்க விவேகா இன்பனை பார்த்தாள்
இன்பாவே தொடர்ந்தான்
இன்பா-நீ கிளாஸ்க்கு may i come in அப்டின்னு சொல்லாம வந்தது. நெஸ்ட் போய் திரும்பவும் excuss கேட்டு உள்ள வந்தது னால இப்போ first hour ல 5 மினிட்ஸ் waste ஆகிடுச்சு
இன்பா இனியாளை பார்த்தான்
இன்பா- so என்ன பண்ணலாம் இனியாள் நீங்க சொல்லுங்க என்று கேட்க
கண்ணுகினியாள்- விவேகாவை பார்த்தவள் இந்த hour full ஆ நிக்க வச்சிருங்க சார்
இன்பா-smart move ok
மிஸ் மிஸ் விவேகா name கரெக்டாஆ
ஆதி-ஆதிக்கு என்ன செய்ய என்று புரியவில்லை விவி இப்போ என்னால ஒன்னும் பண்ண முடியாது டி என்று அவன் முதல் வரிசையில் இருந்து கொண்டு அவளை பார்க்க
விவேகா இன்பாவை முறைத்து கொண்டு நின்றாள்.
இன்பா-மிஸ் விவேகா are you hear
விவேகா- சொல்லுங்க சார் என்று துக்கம் தொண்டையை அடைக்க கூறினாள்
இன்பா-நீங்க இந்த hour நில்லுங்கள் என்று கூறி அவன் நடத்த ஆரம்பித்தான்.
மைதிலி-ஏன் விவேகா இப்டி பண்ற முன்னாடியே வந்திருக்கலாம் தான
விவேகா-விடு லிதி இதெல்லாம் ஒரு விஷயமா இன்னும் எவ்ளோவோ பார்க்க வேண்டி இருக்கு என்று கூறினாள்.
இன்பா நடத்துவதை கோபத்திலும் , துக்கத்திலும் கைகள் நடுங்க எடுத்து எழுத ஆரம்பித்தாள்.
விவேகாவின் கண்களில் கண்ணீர் எப்போது கீழ விழுவேன் என்று நின்று கொண்டிருந்தது.
இன்பா(m. v) mind voice- விவேகா பேபி அன்னைக்கு இதே மாதிரி தானே நீயும் அந்த ஆதியும் ராஜ ராஜ சோழன் நான் பாட்டு பாடுனிங்க இது அதுக்கான revenge பேபி
இன்னிக்கு அவன் ஊட்டி விடுறான் நீ சாப்பிடற அதனால் தான் ஆதியை place மாத்தி உட்கார வச்சேன் டி
இப்போ நீ எதுக்கு நிக்கற அப்படினா நான் நிக்கிறேன் அதனால தான்
நீ கோவப்படும்போது கூட ரொம்ப அழகா இருக்க டி உன்னோட திமிரு தான் உன் பக்கம் என்னை இழுத்தது டி என்னோட டார்ஜிலிங்
அந்த hour முடிந்து போக விவேகா இன்பாவை கேட்க வில்லை அவளே அமர்ந்து கொண்டாள்
இன்பாவும் எதுவும் கூற வில்லை அவனுக்கு தெரியும் விவேகா அவன் மேல் கோபமாக இருப்பாள் என்று
விவேகா-அவனை idiot இன்பா , idiot இன்பா , இடியட் இன்பா, irritating idiot என்று திட்ட
மைதிலி-என்னடி அவரை இப்டி திட்டுற என்று கூற
இன்பாவுக்கு புரை ஏறியது
இனியாள்-சார் இந்தாங்க கொஞ்சம் தண்ணி குடிங்க என்று கொடுக்க
இன்பா- விவேகாவை பார்த்து கொண்டே யாரோ என்னை இடியட் இன்பா அப்டின்னு திட்டுறாங்க
என்று இனியாளிடம் தண்ணீர் வாங்கி குடித்தான்.
விவேகாவை பார்த்து என்னை மட்டும் இப்போ பக்கத்தில் வந்து இடியட் இன்பா அப்டின்னு திட்டி இருந்தாங்கனா அவங்கள அப்படியே
இனியாள்- என்ன சார் பனிஷ்மெண்ட் பண்ணுவீங்க என்று கேட்க
இன்பா விவேகாவை பார்த்து கொண்டே தன் உதட்டை துடைத்தான். விவேகா கண்டு கொண்டாள். அவன் என்ன சொல்ல வருகிறான் என்று
இனியாள்-சார் நீங்க சொல்றது எனக்கு ஒன்னும் புரியல
இன்பா-கொஞ்சம் சத்தமாக புரியரவங்களுக்கு இந்நேரம் புரிந்து இருக்கும். என்று மட்டும் கூறினான்
விவேகாவுக்கு-இதயம் வேகமாக துடிக்க அவள் படப்படப்பாக இருந்தாள்.
ஏய் சண்டைக்காரா என்னை சாவடிக்கிற டா என்று மனதில் கூறி கொண்டாள்.
Episode 9,
இன்பா விவேகாவை பார்த்து கொண்டே புரியரவங்களுக்கு புரிந்து இருக்கும் என்று அவளை பார்த்து கொண்டு இருந்தவனுக்கு திடீரென அவனுக்கு ஒரு ஆஃபீஸ் ல் இருந்து போன் வர அவன் ஸ்டுடெண்ட்ஸ் கிட்ட
இன்பா-excuse me என்று கூறி விட்டு வெளியே சென்று பேச போனான்.
விவேகாவிடம் மைதிலி அவளை படாத பாடு படுத்தி கொண்டு இருந்தாள்.
மைதிலி-விவி எப்படி டி நீ இங்க பேசினது அங்க அவருக்கு எப்படி கேட்டது என்று கேட்டு கொண்டே இருந்தாள்.
விவேகா-லிதி ஏன் டி இப்படி torture பண்ற அவரு மாறி
மைதிலி-சொல்லு டி பிலீஸ்
விவேகா-அவரு இன்பராகவன் IPS ஆஃபீஸர் டி நெறைய அக்யூஸ்ட் எல்லாம் பார்திருப்பாரு லிதி அதனால lip reading தெரிஞ்சு இருக்கும் வேற ஒன்னும் இல்ல டி
மைதிலி-ஓ அப்படியா சரி ok ஆனால் எனக்கு இன்னொரு சந்தேகம்
விவேகா-இப்போ என்ன டி சந்தேகம் என்று சலுப்பாக கேட்டாள்.
மைதிலி-இல்ல விவி அவரு ரொம்ப terror piece னு கேள்வி பட்டிருக்கேன். ஆனால் இப்போ நீ சொன்னதுக்கு அவரு எதுவுமே சொல்லாம போய்ட்டாரே அது எப்படி
விவேகா-அது நீ அவர் கிட்ட தான் லிதி கேட்கணும் என்று அவள் கூறும் நேரம் இன்பா உள்ளே வந்தான்.
இன்பா-sorry guys என்று கூறி கொண்டே அடுத்த topic நடத்த ஆரம்பிக்க அப்போது சரியாக கிளாஸ் க்கு வெளிய IT டெபார்ட்மெண்ட் ல இருந்து கிளாஸ் uncharge ம், hod யும் வந்தனர்.
இன்பா கிளாஸ் நடத்தி கொண்டு இருக்க அவர்கள் இன்பாவிடம் எப்படி கேட்டு உள்ளே வருவது என்று பயந்து கொண்டு இருந்தனர்.
தீபா-hod சார் கேளுங்க சார் கிளாஸ் குள்ள போலாம்
Hod-தீபா அவரை பார்த்தாலே பயமா இருக்கு ரெண்டு வார்த்தை தான் பேசுவார் ஆனால் அதுவே போதுமானதா இருக்கும்
தீபா-இப்போ என்ன பண்றது interval ல வரலாமா என்று இருவரும் அவர்களுக்குள் பேசி கொண்டு இருக்க
இன்பா-come in என்று கம்பீரமான குரலில் கூற இருவரும் உள்ளே வந்தனர்.
விவேகா(m. v)- இந்த இடியட்ட பார்த்து எல்லாரும் இப்படி நடுங்கி போராங்க இவரு மைதிலி சொல்ற மாறி terror pieceஆஅ
ஆனால் நம்ம கிட்ட அப்டி இருக்க மாட்டிக்கிறாரே.
மனசு-அப்படினா என்ன meaning ன்னு உனக்கு தெரியுமா அவரு உன்கிட்ட மட்டும் தான் அப்படி நடந்துகிறாரு நீ அவருக்கு special டி
Brainy-மண்ணாங்கட்டி அப்படி இல்லை விவேகா அவர் உன்னை பழி வாங்குகிறார்
விவேகா-உதடுகள் இருக்கும் நீ சொல்றது சரி தான் என்னோட அறிவே
விவேகா, ஆதி க்கு தான் எதுக்கு வந்து இருக்கிறார்கள் என்று தெரியுமே அதனால் அவர்கள் முகத்தில் பிரகாசம் துள்ளலாகஅமர்ந்து இருந்தனர்.
Hod தனது தைரியத்தை வரவழைத்து கொண்டு பேச ஆரம்பித்தார்.
போட்டிகளின் விவரங்களை கூறி முடித்தவுடன் spr institution க்கு exam க்கு participate பண்றவங்க வில்லிங் இருக்கவங்க name சொல்லுங்க என்று கூற
தீபா-சொல்லுங்க ஸ்டுடெண்ட்ஸ் நான் note பண்ணிக்கிறேன் என்று கூற
ஆதி எழுந்து நின்று அவனது name கொடுத்தான், அடுத்து கண்ணுகினியாள் எழுந்து கொடுக்க ,
ஆதி வருவதாக கூற உடனே யாழினியும் அவளது பெயர் கொடுக்க , அடுத்து மைதிலி கொடுத்தாள்.
இன்பா அங்கு என்ன நடக்கிறது என்பதை தன் போனில் பார்த்து கொண்டு இருக்க
விவேகா எழுந்து அவளுடைய name கொடுத்தாள்.
HOD-ஸ்டுடெண்ட்ஸ் அப்படியே உங்க 12 th mark சொல்லுங்க 1000 க்கு மேல இருக்கனும் என்று கூறவும் விவேகாவின் முகம் வாடி போக அவள் அமர்ந்து கொண்டாள்.
இப்போது இன்பா அவளை பார்த்து ஏளன புன்னகை ஒன்றை வீச சுருக்கு என்று விவேகாவுக்கு கோபம் வந்தது.
விவேகா-இவன் முன்னாடி நம்ப அவமான பட்டு விட்டோமே கிருஷ்ணா என்று தன் இஷ்ட தெய்வத்தை நினைத்து செல்லம் ஏதாவது magic பண்ணு கிரிஷ் என்று நினைத்தாள்
யாழினி-இனியாள் இவள் 12 த் ல என்னை விட கம்மி just pass ஆன இந்த விவேகா எல்லாம் இந்த கிளாஸ் ல இந்த infrastructure படிக்கிறா இந்த காலேஜ் க்கு தான் அழுக்கு என்று கூறினாள்.
விவேகா வேண்டியது அந்த கண்ணபிரானுககு கேட்டதோ என்னவோ
தீபா-சார் main subject engineering cut off தான் spr காலேஜ் ல இருந்து mention பண்ண சொன்னாங்க என்று hod கிட்ட கூற
விவேகா இப்போது love you little krishna மேலே பார்த்து ஒரு முத்ததினை வீசினான்
Hod-sorry ஸ்டுடெண்ட்ஸ் உங்க cut off சொல்லுங்க என்று கேட்க
இப்போது ஆதி அவனது cut off பெர்ஸண்டஜ், விவேகாவின் பெர்ஸண்டஜ் கூற .
இன்பா-ம்ம்ம் interesting என்று வெளிப்படையாகவே கூறினான்.
விவேகா இன்பாவை கண்டுகொள்ள வில்லை
இப்போது தீபா ஒரு முறை அந்த name list வாசித்தாள்.
ஆதி, விவேகா, கண்ணுகினியாள், சிவா, மைதிலி.
தீபா-sorry யாழினி உன்னோட cut off க்கு நீ எழுத போக முடியாது என்று கூற யாழினி க்கு மிகவும் அவமானமாக இருந்தது.
இன்பாவிடம் சொல்லி கொண்டு தீபாவும , hod யும் கிளம்பினர்.
விவேகா, ஆதியை எட்டி எட்டி பார்த்து பேச முயர்ச்சிதாள், ஆதியும் அது போல தான் பின்னாடி திரும்பி கொண்டே இருந்தான்.
இன்பா ஒரு கணக்கு board ல போட்டு விட்டு முன்னால் பார்க்க ஆதி விவேகவிடம் பேசி கொண்டு இருக்க இந்த முறை
இன்பா-ஹலோ என்று ஆதியை கூப்பிட எழுந்து நின்றவன் இந்த sum solve பண்ணு என்று கொடுக்க அனைவரும் மிகவும் பயமாக பார்த்து கொண்டு இருந்தனர்.
ஆதி சென்றவன் கட கட வென அந்த sum போட்டு முடிக்க இன்னொரு கஷ்டமான sum அது இந்த முறை prelimis க்கு வந்தது.
இன்பா-இதையும் solve பண்ணு என்று கூற ஆதி கொஞ்சம் தடுமாற விவேகா தனது desk இல் தலை வைத்து கொண்டாள்
அப்பொழுது தான் இன்பா கூப்பிடுவான் என்று விவேகா நினைத்தது போல
இன்பா-ஒரு chalk piece எடுத்து அவள் மேல் வீச எல்லாரும் pin drop silent இல் இருந்தனர்.
இன்பா பேசினான் -last bench ல first girl stand up என்று கூற
விவேகா-எழுந்தவள் முகத்தை கொஞ்சம் திமிராக வைத்து கொண்டாள்.
இன்பா-get out in my class என்று கோபமாக கூற
விவேகா-வெளியே போய் நின்று கொண்டாள்
இன்பா-இனியாள் நீங்க வந்து solve பண்ணுங்க என்று கூற அவள் போய் ஆதி ஆரம்பித்த அதையே step இல் நிறுத்த
இன்பா அந்த ஸ்டுடெண்ட்ஸ் அனைவரையும் முக்கியமாக ஆதியை திட்ட வாய் எடுக்க
விவேகா-சார் என்று கூப்பிட
இன்பா-வெளியில் அவளை கோபமாக பார்க்க what என்று கேட்க
விவேகா-நான் solve பண்ணட்டுமா
இன்பா-அவள் மேல் இருந்த கோபத்தில் நீயா இது ஒன்னும் விளையாட்டு இல்ல உன்னோட விளையாட்டு இங்க என் கிட்ட காட்ட வேணாம்
எந்த இடத்தில் எப்படி நடந்துக்கணும் ன்னு கொஞ்சம் கூட உனக்கு அறிவே இல்ல என்று திட்ட
விவேகா-அவனை எதிர்த்து உள்ளே வந்தவள் கட கட என்று அந்த கணிதத்திற்கு உண்டான brief expain solution போட்டு முடித்து விட்டு போய் மீண்டும் வெளியே நின்று கொண்டாள்.
இன்பா-ஒரு நிமிடம் அதிர்ச்சியானான் no கமெண்ட்ஸ் என்று கூறினான்.
ஆதி-சார் விவேகா போட்டது correct தான
இன்பா-ம்ம்ம் perfect என்று கூற
உடனே ஆதி கைகளை தட்டினான். இப்போது அனைத்து மாணவர்களும் கைகள் தட்டினர் வேறு வழி இல்லாமல் கண்ணிகினியாளும்,யாழினியும் தட்டினர்
கண்ணுகினியாள்-m. v)நம்ப கஷ்ட பட்டு இந்த இன்பாவோட மனசுல இடம் பிடிக்கலாம் னு பவ்ர்த்தால் இப்டி மொத்த காரியத்தையும் பாழ் பண்ணிட்டாலே இந்த விவேகா இவள ஏதாவது பண்ணனும். என்று மனதில் நினைத்து கருவினாள்.
Interval பெல் அடிக்க இவள் உள்ளே வந்தவள் இன்பாவை ஒரு பார்வை கூட பார்க்க வில்லை நேராக தன் இடத்திற்கு போய் அமர்ந்து கொண்டாள்.
அங்கு உள்ள மற்ற மாணவர்களுக்கு வெளியே செல்லலாமா இல்ல வேண்டாமா என்று இருக்க
இன்பா-கிளாஸ் டிஸ்மிஸ் என்று சத்தமாக கூற interval செல்பவர்கள் வெளியே சென்றனர்.
பசங்க அனைவரும் விட்டால் போதும் என்று ஓடி விட்டனர் , பொண்ணுங்க பாதி பேர் சென்றனர்.
இன்பா மித்ரனுக்கு போன் செய்து அவனை வர சொன்னான்.
இப்போது வகுப்பில் மைதிலி, ஆதி, சிவா, விவேகா மட்டுமே இருந்தனர்.
ஆதி-விவி super டி என் செல்லம் என்று அவன் கூற
விவேகா- இப்போ தான் மனசு லேசா இருக்கு ஆதி ஒரு தேன் மிட்டாய் ஊட்டு என்று கேட்க
ஆதி-தேன் மிட்டாய் காலி ஆகிடுச்சு அதனால நேத்து அதிதி எனக்கு diary milk வாங்கி தந்தாள் இந்தா என்று நீட்டினான்.
விவேகா-எனக்கு பிடிக்காது இருந்தாலும் இப்போ sweet சாப்பிட்டே ஆகணும் கொடு என்று அந்த diary milk பிரித்து சாப்பிட ஆரம்பித்தாள்.
பரவாயில்லை சும்மா சொல்ல கூடாது இன்பமா sorry இனிப்பா taste ஆ இருக்கு இந்த situation க்கு ஏற்ற sweet தான்
விவேகா-மைதிலி இந்தா ஒரு bite
மைதிலி-இன்பாவின் அந்த கோப பார்வையில் விவேகாவிடம் எனக்கு வேணாம் டி நீயே சாப்பிடு என்று கூறியவள்
சிவாவிட கண்களால் ஜாடை செய்து சிவா அண்ணா library போலாம் வரையா என்று கூற
விவேகா-சிவா இங்கேயே இரு இப்போ பிரேக் முடிய போகுது என்று கூறினாள்
சிவா-இல்ல விவேகா இன்னும் கொஞ்ச நேரம் நான் இங்க இருந்தேனு வை நான் அவ்ளோ தான் நான் rest room போறேன் என்று அவன் கிளம்பி விட
மைதிலி-மனதில் சிவா நீ எஸ்கேப் ஆகிட்டியா என்று அமைதியாக பயத்துடன் அமர்ந்து இருந்தாள்.
ஆதிக்கு இன்பாவின் மேல் பயம் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ள வில்லை
ஆதி-விவி எப்டி அந்த sum போட்ட என்று கேட்க
விவேகா-எல்லாம் உன் மாமா தான் காரணம் என்று அந்த diary milk ஐ சாப்பிட தெரியாமல் சாப்பிட்டாள். ஆதி புரிந்து கொண்டான். வருணை தான் விவேகா கூறுகிறாள் .
ஆதி விவேகா போட்ட அந்த கணிதத்தை பார்த்து தன் note ல் போட்டு கொண்டு இருக்க
விவேகா -ஆதி நான் போய் hand வாஷ் பண்ணிட்டு வரேன் மைதிலி வா போலாம் என்று கூற
மைதிலி இன்பாவை பார்க்க
இன்பா-போக கூடாது என்று கண்களால் மிரட்ட
மைதிலி-விவி நீ போ நான் பின்னாடியே வரேன் என்று கூற
விவேகா இன்பாவை இப்போதும் அலட்சியமாக கடந்து சென்றாள்.
இன்பா-m. v )brainy அவளை ஏதாவது செஞ்சே ஆகணும் மனசு வேண்டாம் இன்பா முட்டாள் மாறி ஏதாச்சும் செய்யாத டா என்று கூற
இன்பா மித்ரனுக்கு போன் செய்ய
இன்பா-எங்க டா இருக்க
மித்திரன்-நான் steps ல ஏறிட்டு இருக்கேன் அவ்ளோ தான் வந்துட்டேன்
இன்பா-நீ அங்கேயே இரு நான் வரேன் நான் இப்போ என்ன சொல்றனோ அதே மாதிரி நீ என் கிட்ட பேசணும் ok வா
இன்பா முன்பே விவேகாவை விரும்புவதாக கூறி இருந்தான்.
என்று இன்பா மித்ரனிடம் அனைத்தும் சொல்லி கொடுத்தான்.
மித்ரன்-ஏய் இன்பா அவளை ஏன்டா இப்படி வெறுபேத்துற
இன்பா-மச்சி அவ என்னை love பண்றா டா ஆனால் சொல்ல மாட்டிங்குரா மச்சி நான் சொல்றத கேட்பியா மாட்டியா
மித்ரன்- நான் கேட்க மாட்டேன் ன்னு சொன்னா நீ விடவா போற சீக்கிரம் வா
விவேகா இன்பாவை நினைத்து கொண்டே கைகளை கழுவியவள் தன் உதடுகளுக்கு அருகில் உள்ள கரையை துடைக்க மறந்து விட்டாள்.
இன்பா-போன் பார்க்க அவள் படிகளுக்கு அருகில் வருவது தெரிந்தது. மித்ரனுக்கு signal கொடுக்க
மித்ரன்-என்ன மச்சி ஒரு பொண்ணு கிட்ட தண்ணி எல்லாம் வாங்கி குடிச்சியாமா
இதை கேட்ட விவேகா அப்படியே அவர்கள் இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று கேட்க நின்று விட்டாள்.
இன்பா-ஆமா மித்திரன் அந்த பொண்ணு என்னை வச்ச கண்ணு வாங்காமல் பார்த்துகிட்டு இருக்கா டா எனக்கு uncomfortable ஆ இருக்கு
மித்ரன்- நீ அவளை செல்லமா கூப்பிடறதா பசங்க சொன்னாங்க என்ன மச்சி அவ பேரு
இன்பா-அவ பேரு கண்ணுகினியாள் நான் short ஆ இனியாள் னு கூப்பிடறேன் cute ஆ இருக்கு தான
மித்திரன்- என்னடா லவ் பண்றியா
இன்பா- தெரியல மித்ரன் எனக்கு பிடிச்ச பொண்ணு பின்னாடி நான் சுத்தி அவ கிட்ட கேட்டேன் அவ முடியாது போடா அப்டின்னு சொல்லிட்டா டா
அதனால ஒரே confuse ஆஅ இருக்கு என்ன பண்றது அப்டின்னு தெரியல
மித்ரன்- அப்போ இனியாள் வந்து உன்ன லவ் பண்றேன்னு சொன்னா நீ என்னடா பண்ணுவ
இன்பா- Ok தான் மச்சி எனக்கு பேர் பொருத்தம் பாரு
இன்பா, இனியாள் மித்ரன் அந்த பெயர் கேட்கும்போதே இன்பமா இனிப்பா இருக்கு தான என்று கூறும் போதே
இதற்கும் மேல் கேட்க முடியாமல் கண்களில் கண்ணீர் முட்டி நிற்க மேலே வந்தாள் விவேகா.
இன்பா-அவளை பார்த்து மிஸ் விவேகா நில்லுங்க என்று கூற
விவேகா-எதுவும் பேசாமல் நின்றாள்
இன்பா- இந்தாங்க என்று அவனது கை குட்டை கொடுத்து தொடச்சுகோங்க
உங்க உதட்டுக்கு பக்கத்தில் சாக்கலேட்டு ஒட்டி இருக்கு என்று அருகில் வர அவன் கைகளை தட்டி விட்டாள்.
இன்பா- அவள் முன்னாடி போய் நின்று அவள் உதடுகளை துடைத்து கொண்டே நீங்க தான என்னை இடியட் இன்பா அப்டின்னு சொன்னது என்று அவள் கையில் தன் கைக்குட்டையை வைத்தான்.
விவேகா-நான் சொல்லல please leave me
இன்பா-எனக்கு lip reading தெரியும் மிஸ் விவேகா
விவேகா- நான் சொல்லனும் னு நினைத்தால் நேராக பார்த்து சொல்லிடுவேன் எனக்கு என்ன பயம்
இன்பா-அப்போ சொல்லு பார்க்கலாம்
விவேகா- irritating idiot என்று கூறி விட்டு ஓட
இன்பா-விவேகா உனக்கு இருக்கு டி என் கையில் மாட்டின அவ்ளோ தான் என்று அவளுக்கு கேட்கும் படி கூற
Episode 10,
இன்பா-அப்போ சொல்லு பார்க்கலாம் என்று இன்பா கூற
விவேகா- irritating idiot என்று கூறி விட்டு ஓட
இன்பா-விவேகா உனக்கு இருக்கு டி என் கையில் மாட்டின அவ்ளோ தான் என்று அவளுக்கு கேட்கும் படி கூற
மித்ரன்-ம்ம்ம்ம் என்று தன் தொண்டையை கணைக்க
இன்பா-அவள் சென்றதும் அந்த விறைப்பு வந்து விட்டது
மித்திரன்-மச்சி இது நீ தானா , இங்க என்ன நடக்குது, நான் கனவில் இருக்கிறேனா என்னை ஒரு கில்லு கிள்ளு டா
இன்பா- என்ன காலேஜ் ல போய் decipline இல்லாமல் மச்சி அப்டின்னு கூப்பிடற நீயெல்லாம் ஒரு போலீஸ் ஆஃபீஸ்ரா என்று இன்பா அவன் முகத்தை கடுகடுப்புடன் காட்ட
மித்திரன்-எனக்கு ஒரே நாளில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்காத டா என்னால தாங்க முடியாது. எப்படி மச்சி இப்படி மாறின அவளை பார்க்க உள்ள புகுந்து வேலை பார்த்து இருக்க
இன்பா தன்னுடைய sunglass போட்டுக்கொண்டே மிடுக்காக இங்க என்ன நடந்தது ன்னு நீ இப்படி உலறிக்கொண்டே இருக்க
மித்ரன்- அந்த விவேகா பொண்ணு என்று கூற எங்கே எங்கே என இன்பா தேட போதும் நீயாவதும் இவ்ளோ தூரம் வந்திருக்க எனக்கு அதுக்கு கூட கொடுத்து வைக்கல டா
அந்த விவேகாவ சும்மா விட மாட்டேன் அப்டின்னு சொன்னதுக்கு meaning இது தானா அந்த பொண்ணு பின்னாடி cat மாறி follow பண்ற
இன்பா-யாரு சொன்னா நான் பூனை ன்னு நான் ஒரு புலி டா அவ என்னோட மான்
மித்ரன்-நீ புலி தான் ஆனால் அது அவளை பார்க்கறதுக்கு முன்னாடி இப்போ தான் உன்னோட மானை பார்க்க புலி பூனை வேஷம் போட்டு இருக்கீங்களே
இன்பா-சரி விடு விடு என்னோட டார்ஜிலிங் என்ன பண்றான்னு பார்க்கலாம்
மித்ரன்-ஆனால் ஒரு விஷயம் மச்சி உன்னை அடக்க விவேகா தான் மச்சி சரியான ஆளு என்று கூறி கொண்டே இருவரும் நடந்தனர்.
வகுப்புக்கு வந்த விவேகா தன் இடத்தில் அமர்ந்து ஆதியிடம் நடந்ததை அழுது கொண்டே கூற
ஆதி விவேகாவை பார்த்து சிரித்தான்
விவேகா-ஆதி why are you laughing என்னை பார்த்தால் எப்படி தெரியுது உனக்கு
ஆதி-அவரு உன்னை டீஸ் பண்ணி இருக்காரு என்று மேலும் சிரிக்க
விவேகா-மனதில் இடியட் உனக்கு இருக்கு ஏதோ கொஞ்சம் மனசு மாறுச்சு ஆனால் உன்னை எப்டி சுத்த விடுறேன் என்று நீ பாரு என்று அவள் மனதில் கூறிக்கொண்டாள்.
ஆனால் விதி யாரை விட்டது பின்னாளில் விவேகா தான் இன்பாவின் பின்னால் சுத்த போகிறாள் .
விவேகா-ஆதி நாளைக்கு வருண் டெல்லி போறான் நாளைக்கு காலேஜ் க்கு லீவு போடலாமா.
ஆதி-ok போடலாம் first department ல letters க்கு sign வாங்கணும்.
சரி என்று இருவரும் உணவு இடைவெளியில் சாப்பிட்டு விட்டு letter எழுதி sign வாங்க செல்ல
தீபா-இந்த 1 week இன்பா சார் தான் இன்ச்சார்ஜ் அவங்க கிட்ட வாங்கிகோங்க என்று கூற
ஆதி-அவ்ளோ தான் லீவு கிடைக்காது விவேகா என்று கூற
விவேகா-கண்டிப்பாக கிடைக்கும் வா போகலாம் என்று அவள் இன்பாவின் அறைக்கு கூட்டி செல்ல
அங்கு மித்ரன், இன்பா இருவரும் அமர்ந்து இருந்தனர்.
விவேகா -ஆதி இப்போ உன்னோட letter க்கு மட்டும் sign வாங்கு அப்புறம் நான் சொல்லும்போது வாங்கிடு
ஆதி-may i come in sir என்று கூறி உள்ளே கேட்க அவனை வர சொல்ல letter காட்டி லீவு போடனும் கொஞ்சம் personal work என்று கூறி மித்ரன் கிட்ட sign வாங்கி கொண்டு வெளியே வந்தான்.
ஆதி-விவி நீ வாங்கலயா
விவேகா-எனக்கு வேண்டாம் ஆதி நான் fever ன்னு லீவு போட்டுக்கிறேன்
ஆதி-சரி வா போலாம் என்று வகுப்புக்கு செல்ல அடுத்து அனைவரையும் காலேஜ் ground க்கு வர சொன்னார்கள்.
மாணவர்களுக்கு என தனியாக சில பயிற்சி மாணவிகள் க்கு தனியாக சில பயிற்சிகள் முடித்து கடைசியில் time செட் running போட்டி வைக்க
ஆதி,அபி cs, சிவா ece, மதன் eee இவர்கள் மிகவும் குறுகிய நேரத்தில் ஓடி வந்தனர்.
மாணவிகள் விவேகா, வாணி eee, மலர் ece , கீர்த்தி biotech இவர்கள் முன்னனி வகித்தனர்
கண்ணுகினியாளுக்கு இந்த ஓடும் திறமை எல்லாம் இல்லை.
மித்ரன் -ஸ்டுடெண்ட்ஸ் 10 மினிட்ஸ் break என்று கூற
மைதிலி-விவேகா செம்ம டி உன்னோட timing
விவேகா-அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல டி நான் எப்பவும் போல தான் ஓடினேன்
ஆதி தண்ணீர் குடித்து முடித்து விவேகாவிடம்
ஆதி-மாமா training போல angry bird அப்படியே freeze தெரியுமா
மைதிலி-யாரு என்று கேள்வியாக பார்க்க
ஆதி-விவி மைதிலி கிட்ட மட்டும் பட்டும் படாமல் சொல்லிடு டி
விவேகா-யோசித்தவள் நீயே சொல்லு என்று கூற லிதி ஆதி சொல்ற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல நீ நம்பாத இது ஒரு use less matter
ஆதி-லிதி நம்ப இன்பா சார்க்கு விவி மேலே காதலோ காதல்
மைதிலி-என்னடா சொல்ற என்று அவள் அதிர்ச்சி ஆகி கேட்க
ஆதி- ம்ம்ம் ஆமா யாருக்கும் தெரிய கூடாது நீ விவியோடgirl bestie , நான் boy bestie so keep in secret
மைதிலி- சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை ம்ம்ம் எனக்கு அவரை பார்த்தாலே பயமா இருக்கு அவரு பின்னாடி எத்தனை பொண்ணுங்க சுத்தறாங்க . என்று அனைத்து மாணவிகளையும் பார்த்தவள். அனைத்து மாணவிகளும் இன்பனை தான் பார்த்து கொண்டு இருந்தனர்.
ஆதி ஆனால் அவரு நம்ம விவி பின்னாடி சுத்துறாரா எனக்கு ரெண்டு தோணுது.
ஆதி- என்ன அது
மைதிலி-எனக்கு ரொம்ப happy தான் ஆனால் உன்னை தான் அவர் விரும்புறார் னு இந்த பொண்ணுங்களுக்கு தெரிஞ்சா எப்படி இருக்கும் முக்கியமா அந்த கண்ணுகினியாள் அவள் இன்பா சாரை பார்ப்பதே சரி இல்ல
ஆதி-இன்னொரு விஷயம் என்ன
மைதிலி- அவள் சிரித்து கொண்டே நான் இன்பா சார் விவேகா கிட்ட எப்படி பேசராறு அப்டின்னு பார்க்கணும் ஆதி இது தான் என்னோட ஆசை.
ஆதியை, மைதிலியை பார்த்து விவேகா
விவேகா-மைதிலி நான் எல்லாம் விரும்பல அந்த இன்பா அவன் என்னை பழி வாங்குறான் நான் அவனை எல்லார் முன்னாடியம் அவமானம் படுத்திட்டேன்னு வேற ஒன்னும் இல்ல
மைதிலி-அப்போ நீ அவரை love பண்ணலையா
விவேகா- பண்ணல
மைதிலி-அப்போ நான் try பண்ணலாம் னு இருக்கேன். அவருக்கு கன்னத்தில் பாரு கன்னகுழி எல்லாம் இருக்கு ஆனால் அவரு சிரிச்சு தான் பார்த்தது இல்லை என்று கூறியவுடன்
விவேகாவுக்கு அன்று இன்பா அவளை பார்த்து சிரித்தது நினைவு வந்தது தன்னை மீட்டவள்.
விவேகா-ஏய் லிதி உன் கண்ணுக்கு அவன் மட்டும் தான் தெரியுறானா . பக்கத்தில் பாரு மித்திரன் சார் எவ்ளோ handsome ஆ இருக்காரு என்று கூற
ஆதியும், மைதிலியும் சிரித்து கொண்டே
ஆதி-இதுக்கு பேர் என்ன மைதிலி
மைதிலி-சிரித்து கொண்டே இதுக்கு பேரு லவ் இல்ல ஆதி possessiveness என்று கூற
விவேகா-மண்ணாகட்டி என்று கூறி ஆதியிடம் இருந்து அந்த வாட்டர் பாட்டிலை வாங்கியவள் திரு திரு என முழித்து கொண்டே கொஞ்ச தூரம் தனியாக சென்று விட்டாள்.
மித்ரன்- இன்பா விவேகா செம்மையா ஒடுறா டா செம்ம தலேண்ட்
இன்பா-no use மித்திரன் அவ எனக்கு opposite ல தான் இருக்கா
மித்ரன்-ம்ம்ம் உனக்கு opposite ல இருந்தால் தான் மச்சி அவளை காந்தம் மாறி இழுக்க முடியும்.
இன்பா-correct தான் என்று அவளை பார்த்து கொண்டே பேச
மித்ரன்- மச்சி இங்க இருக்க எல்லா girls ம் உன்னை தான் sight அடிக்கிறாங்க . நீ விவேகாவை மாட்டி விட்டுடாத டா
இன்பா-இல்ல டா உன்னையும் ஒரு பொண்ணு sight அடிக்குது ஒரு பொண்ணு முறைத்து பார்க்குது பாரு
மித்ரன்-ஆவலாக யாரு என்னை பார்க்கிறார்கள் என கேட்க
இன்பா-அது தான் என்னோட டார்ஜ்ளின் கூட ஒரு girl இருப்பாளே அவ தான்
மித்ரன் -அவளை தேடி கொண்டே சரி என்னை யாரு முறைத்து பார்க்கிறார்கள். என்று கேட்க
இன்பா- நீ police னு போய் வெளிய சொல்லாத டா வெண்பா தான் உன்னை முறைத்து பார்க்கிறாள்.
மித்திரன்-போச்சு இன்னிக்கு நான் அவ்ளோ தான் என்று தன் இயல்பு நிலைக்கு வந்தவன் ஆனாலும் மைதிலியை மனதில் ஒரு படம் பிடித்து கொண்டான்.
காலேஜ் முடிய அனைவரும் கிளம்பினர். ஆனால் இன்பாவுக்கு விவேகா நாளை வரமாட்டாள் என்று தெரியாது.
இன்பா வீட்டுக்கு சென்றதும் விவேகா இன்று முழுவதும் செய்த குரும்புகளை பார்த்து கொண்டே கடைசியில் அந்த படிகளில்
விவேகா கண்ணீர் முட்டி இயலாமல் நிற்கும் காட்சியை பார்த்து அவனுக்கு பாவமாக இருந்தாலும்
இன்பா-மனதில் ஏன் டி கேடி இப்படி possesive ஆ இருக்க என் மேல எனக்கு அப்டியே பறக்கிற மாறி இருக்கு நானும் உன்னை விரும்புறேன் மட்டும் சொல்லி இருந்தால் இப்போ எப்டி இருக்கும் தெரியுமா.
உன்னை அப்படியே அள்ளிக்கிட்டு வந்திருப்பேன். என்னோட டார்ஜிலிங் i miss you நீ என்னை miss பண்ணுவியா.என்று தன்னவளின் நினைவில் உறங்கி போனான்.
அடுத்த நாள் விவேகா காலேஜ் வர வில்லை என்பது அவன் காலேஜ் போனவுடன் தான் தெரிந்தது.
ஆதியும் வரவில்லை என்று தெரிந்தவுடன் dpt ல சொல்லி வீட்டுக்கு போன் இவனே செய்தான் அருகில் மித்ரன் இருந்தான்.
அழைப்பு ஏற்றது கங்கா தான் அனைவரும் ஆதி குடும்பமும் விவேகா வீட்டில் தான் இருந்தனர்.
மித்ரன்-ஹலோ விவேகா வீடு தான
கங்கா-ஆமாம் சார்
மித்ரன்-இன்னுக்கு விவேகா காலேஜ் வரல அவங்க inform பண்ணல அது தான்
கங்கா- அம்மா என்ன பண்றீங்க அங்க அதிதி, ஆதி, நான் எல்லாம் வெய்ட் பன்றோம் சீக்கிரம் வாங்க மா மாமா கூப்பிடறாங்க என்று கத்தி கொண்டே வந்தாள்
இங்கு போன் மித்ரன் speaker ல போட்டு இருந்தான்
கங்கா-உன் காலேஜ் ல இருந்து போன் பண்ணேறுகாங்க நீ லீவு க்கு inform பண்ணல நீயே சொல்லு
விவேகா-dept ல தான் கால் பண்ணிருகாங்க ன்னு நினைத்து கொண்டு கொடு மா நான் பேசுகிறேன். என்று போன் வாங்கியவள்
குரலை மாத்தி கொண்டு
விவேகா-சார் என்று மிகவும் சோர்ந்த குரலில் எனக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல fever என்று இரும்பி கொண்டே கூற
மித்ரன்-சிரித்து கொண்டே ஹாஸ்பிடல் போனியா மா
விவேகா-இரும்பி கொண்டே இப்போ கிளம்புறேன் சார் அப்புறம் நீங்க நியூ staff ஆ உங்க voice நான் கேட்டது இல்லையே .
இன்பாவுக்கு கோபம் கோபமாக வந்தது
மித்ரன்- ஆமா ரெண்டு நியூ staff மா நீங்கள் காலேஜ் வந்தால் தெரியும் என்று கூற
விவேகா-ok சார் எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் நாளைக்கு லீவு லெட்டர்ஓட வந்திடறேன் என்று வைத்து விட்டாள்.
மித்ரன் இன்பனை பார்த்து சிரித்து கொண்டே மச்சி விவேகா சரியான கேடி டா என்று கூற
இன்பா-மனதில் அந்த ஆதியோட family யா சேர்ந்து நீ enjoy பண்றியா உனக்கு நாளைக்கு இருக்கு டி
Episode 11,
மித்ரன் இன்பனை பார்த்து சிரித்து கொண்டே மச்சி விவேகா சரியான கேடி டா என்று கூற
இன்பா-மனதில் அந்த ஆதியோட family யா சேர்ந்து நீ enjoy பண்றியா உனக்கு நாளைக்கு இருக்கு டி
என்று நினைத்தவன் விவேகா இல்லாமல் அந்த வகுப்புக்கு செல்ல இன்பாவுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
ஆனாலும் ஒரு hour மட்டும் கிளாஸ் எடுத்தான் அதற்கு மேல் முடியாதவனாக வந்து விட்டான்.
இன்பாவுக்கு அவன் அம்மா வசுமதி அழைத்தார்.
வசு-ராகவ்
இன்பா-சொல்லுங்க மா
வசு-இங்க junction ரயில்வே ஸ்டேஷன் க்கு ஆந்திர மினிஸ்டர் ஏதோ ஒரு personal work ஆ வருகிறார் அதனால seccurity அதிகமாக தேவை அதனால இங்கு visit and charge எடுத்துக்க நீ வந்தால் பரவாயில்லை என்று கூற
இன்பா-அம்மா நானும் மித்ரனும் வரோம் என்று கூறி போன் வைத்தான் ஆனால் அவனுக்கு தெரியவில்லை இன்பாவின் நாயகி அவனை பார்க்க வருகிறாள் என்று
மினிஸ்டர் மதியம் 4 மணிக்கு வருவதால் அந்த இடம் முழுவதும் மிக பாதுகாப்பாக இருந்தது.
இன்பா விவேகாவை நினைத்து கொண்டே checking பண்ற இடத்துக்கு பக்கத்தில் நின்று இருக்க
மித்ரன் -இன்பனை பார்க்க வேகமாக ஓடி வந்தான். மச்சி மச்சி என மூச்சு வாங்க கூற
இன்பா-என்ன டா நானே செம்ம டென்ஷன் ல இருக்கேன் பேசாம போய்டு என்று கூற
மித்ரன்-அது விவேகா விஷயம் சரி மச்சி விடு என்று கூற
இன்பா-முகத்தில் உடனே பிரகாசம் என்னடா சொல்லு என்று கேட்க
மித்ரன்-இப்போ தானே என்னை பங்கம் பண்ண போ நான் சொல்ல மாட்டேன்
இன்பா-பிலீஸ் மச்சி சொல்லு டா
மித்ரன்-உன்னோட கேடி இங்க வந்திருக்கா
இன்பா-எங்க டா
மித்ரன்-உள்ள platform போய்ட்டா மச்சி return வருவா டா
இன்பா-super மச்சி அவ return வரும்போது இங்க cheking க்கு அனுப்பி வை மச்சி
மித்ரன்-டேய் என்னடா பண்ண போற இங்க அவ ஏதாச்சும் பண்ணிட போற
இன்பா-நான் சொல்றத செய் im your higher ஆஃபீஸ்ர்
இன்பா -மனதில் வாடி செல்லம் என்று நினைத்து கொண்டான்.
ஆதித்யா, அதிதி, விவேகா மூவரும் வருணை டெல்லி ட்ரைனில் அனுப்பி வைக்க வந்திருந்தனர்.
ஆதித்யாவும், விவேகாவும் கொஞ்சம் எட்ட நிற்க
அதிதி-வருணை பார்த்து கொண்டு அழ
வருண் அவளை அருகில் இழுத்தவன்
வருண்-அதி மா என்ன குட்டி பொண்ணு மாறி அழரீங்க மாமா போய்ட்டு சீக்கிரமே வந்திடுவேன்.
அதிதி வருணை பார்த்து குமுறி அழ
வருண் அதிதி கையை எடுத்து ஒரு முத்தம் பதித்து நான் வரும்போது IPS ஆ தான் வருவேன் அதி மா
நான் வந்தவுடன் நம்ம ரெண்டு பேருக்கும் நேரா கல்யாணம் தான் ok வா என கண்களை துடைத்து விட்டான்.
அதிதி-சரி மாமா என்று தன் கண்களை துடைத்து கொண்டாள்.
இப்போது விவேகா-வருண் உங்க romance முடிஞ்சு போச்சா இல்ல இன்னும் balance இருக்கா சொன்னீங்கனா நான் போய் பாப் corn வாங்கிட்டு வந்திடுவேன்.
வருண்-விவேகா அடி வாங்க போற நீ
விவேகா-உனக்கு உன்னோட அதி மா மட்டும் தான் கண்ணுக்கு தெரியுவாங்க தங்கை னு உனக்கு என்னை நியாபகம் இருக்குமா
வருண்-அது தான் உன் பின்னாடி ஓயாமல் வீடு, காலேஜ் னு உன்னை பார்த்து கொள்ள என்னோட மச்சான் இருக்கானே எனக்கு என்ன கவலை
ஆதி-ஆமாம் மாமா மச்சான் எங்கே போனாலும் விவி ய follow பண்றாரு இல்ல விவி என்று இரட்டை அர்த்தத்தில் பேச விவேகா கண்டு கொண்டாள்.
விவேகா தன்னவனை சுற்றியும தேட ஆதி
ஆதி-உன்னோட முகத்தில் ஒரே ஆவலா இருக்க போல விவி என்று கூற
விவேகா-என்ன ஆதி லூசு மாதிரி உளருர என்று பேச்சை மாற்றினாள்
ட்ரெயின் வந்து விட வருண் இவர்களிடம் இருந்து விடை பெற்றான்.
அதிதி-அழ விவேகா தான் சமாதானம் செய்தாள்.
ஆதி மூன்று alpenlepe lolly பாப் எடுத்து கொடுக்க விவேகா அதிதிக்கு ஊட்டி விட்டாள்.
பின் மூவரும் வர டிக்கெட் entry டிக்கெட் செக் செய்ய விவேகா, ஆதியை formalities காக செக் செய்ய கூட்டி வந்தனர் .
அவர்களது விவரங்களை வாங்கும் இடத்தில் இன்பா நின்று கொண்டு இருந்தான்.
விவேகா-அவனை பார்த்து விட்டாள் பார்த்ததும் அசந்து தான் போனாள் இன்று இன்பா காக்கி உடையில் கம்பீரமாக அந்த coolers உடன் கெத்தாக மிடுக்காக நின்று கொண்டு இருந்தான்.
அந்த கண்கள் அதை பார்க்கும் போது ஒரு நிமிடம் விவேகாவுக்கே உள்ளுக்குள் ஒரு நடுக்கம் தான் வந்தது.
அருகில் உள்ள லேடி constable கிட்ட அந்த பெண்ணை இங்க வந்து deatails எழுதி கொடுத்து விட்டு entry டிக்கெட் வாங்கிட்டு போக சொல்லுங்க அவங்க வச்சு இருக்க டிக்கெட் செக் பண்ணிட்டு num note பண்ணிக்கோங்க.
என்று இன்பா கூற அந்த பெண்ணோ yes சார் என்று ஒரு salute வைத்து விட்டு
பொண்ணே அங்க போமா உன்னோட details எழுதிட்டு கிளம்பு மா என்று கூற
இன்பா சொன்ன இடத்திற்கு விவேகா வேறு வழி இல்லாமல் சென்றாள்.
இன்பா அங்கு நின்று கொண்டு இருக்க அவனிடம் உள்ளே வரலாமா என்று கேட்க இன்பா அவளை பார்த்து ஒரு சிறு தலை அசைப்பு தான்
விவேகா-இப்போது அவனை பார்த்து பயந்து போனாள் மிகவும் கம்பீரமாக இருக்கும் அவன் தோற்றம் இப்போது இந்த காக்கி உடையில் அவளுக்கு புதியவனாக தோன்றினான்.
விவேகா-எங்க என்னோட டீடெயில்ஸ் எழுதனும் என்று பவ்யமாக கேட்க
இன்பாவிற்கு சிரிப்பு வந்து விட்டது .
இன்பா-என்ன மேடம் ரொம்ப பவ்யமாக இருக்கீங்க fever அதிகம் ஆகிடுச்சோ
விவேகா-திரு திருவென முழிக்க
இன்பா-டீடெயில்ஸ் இங்க வந்து எழுதிட்டு போங்க என்று அவன் உள்ளங்கை காட்ட விவேகா தயங்கி நின்றாள்.
விவேகா-வே விளையாடதிங்க சார் சீக்கிரம் சொல்லுங்க
இன்பா-இப்போ நீ வரையா நான் வரட்டுமா என்று கூற
விவேகா அவன் அருகில் சென்றாள்
இன்பா-இப்போ எழுது என்று அவன் கைகளை நீட்ட அதை பிடித்து கொண்டாள் அவளது கை பூ போல இருந்தது.
விவேகா -கண்களை அங்கும் இங்கும் அலை பாய விட்டு எழுத ஆரம்பிக்க யோசித்து யோசித்து குட்டி குட்டி எழுத்துக்களாக எழுதினாள்
விவேகாவின் கைகள் இன்பாவின் கைகளுக்குள் குட்டியாக இருந்தது
இன்பா-வாயில என்னடி தம் அடிகிறியா
விவேகா-இது சாக்கலேட்டு என்று பயந்து கொண்டே கூற
இன்பா-என்னடி என்னை விட்டு விட்டு நீ மட்டும் chocolate சாப்பிடற
விவேகா-நான் அது வந்து என உளற
இன்பா-எனக்கு வேனும் உன்னோட சாக்கலேட்டு எடுத்து எனக்கு ஊட்டு பார்ப்போம்.
விவேகா-என்ன என்று திகைக்க
இன்பா-இப்போ ஊட்ட போறியா இல்லயா
விவேகா-அது என்னோட மிச்சம்( எச்சில் என்பதை கூறுகிறாள்)
இன்பா-அந்த மிச்சம் தான் எனக்கு வேனும் எடுத்து கொடு டி இல்ல நானே எடுக்கப்படுமா
விவேகா-அவளுடைய லொல்லி பாப் எடுத்து இன்பாவுக்கு ஊட்ட அதை அவன் வாங்கி கொண்டான்.
இன்பா-உன்னோட லாலி பாப் ரொம்ப taste ஆ இருக்கே உன்னோட என்று நிறுத்த
விவேகா- என்னோட என்று அவள் புருவத்தை சுருக்க,
இன்பா- nothing நீ இப்போ போகலாம் நாளைக்கும் காலேஜ் க்கு லாலி பாப் வாங்கிட்டு வர
விவேகா- நீங்களே கடையில் போய் வாங்கிகோங்க
இன்பா- என்ன வாய் ரொம்ப அதிகமா பேசற உன்னை இங்கேயே கேடி லிஸ்ட் ல புடிச்சு வச்சிருட்டா
விவேகா-சரி நான் வாங்கிட்டு வரேன் எழுதி முடிச்சுட்டேன் கிளம்பவா
இன்பா-ம்ம்ம்
விவேகாவுக்கு அவன் அருகில் இருக்கும் போது இதயம் வேகமாக துடித்தது. ஆதியும் அதிதியும் விவேகவுக்காக காத்து கொண்டு இருக்க இவள் சென்றாள்.
அதிதி-விவேகா என்னாச்சு டி இப்படி மூச்சு வாங்க ஓடி வர கை எல்லாம் நடுங்குது போலிஸ் பார்த்து பயந்துட்டியா என்று அவளுக்கு தண்ணீர் எடுத்து கொடுக்க அதை விவேகா வாங்கி குடித்தாள்.
விவேகா-ஆதி எனக்கு fever வர மாறி இருக்கு வா வீட்டுக்கு போலாம் என்று கூற அனைவரும் வீட்டுக்கு கிளம்பினர்.
இன்பா-இந்த chocolate ,sweet இதெல்லாம் பிடிக்காது ஆனால் அவள் சாப்பிட்டாள் என்பதால் அவளை சீண்டும் எண்ணத்தில் தான் சாப்பிட்டான். ஆனால் இன்பாவுக்கு தன்னவளிடம் இருந்து வந்ததால் என்னவோ மிகவும் பிடித்து போனது.
இன்பா-மனதில் டார்ஜ்லிங் இன்னிக்கு உனக்கு தூக்கமே வராது டி இன்னிக்கு full ஆ என்னையே நினைச்சு சுத்த போற என்று நினைத்து கொண்டே அந்த லாலி popஐ சுவைத்தான்.
மித்ரன்- இன்பா என்னடா பண்ணுன விவேகா அப்படியே பயந்துகிட்டே போறா
இன்பா-நான் ஒன்னும் பண்ணுல மச்சி என்று அந்த lolly pop எடுத்து சாப்பிட
மித்ரன்- full form ல தான் இருக்க போலவே என்று அவன் சிரிக்க
இன்பா-மித்ரன் போய் எனக்கு இப்போ alpenlebe வாங்கிட்டு வாடா சாப்பிடனும் போல இருக்கு
மித்ரன்- என்ன என்னடா சொன்ன நான் போய் lolly pop ஆ
இன்பா-நான் உன்னோட higher ஆஃபீஸர் தெரியும் தானே do what i say
மித்ரன்- எல்லாம் என்னோட நேரம் போய் தொலையுறேன்
இன்பா- what
மித்ரன்- போறேன் என்று அவன் கிளம்பினான்
இன்பா-விவேகா எழுதியதை தன் போனில் ஒரு போட்டோ எடுத்து கொண்டு அதற்கு ஒரு முதத்தினை கொடுத்தான்
வீட்டுக்கு வந்த விவேகாவோ இன்பாவின் நினைவுகளில் தான் இருந்தாள்.
விவேகா-மனதில் நான் சாப்பிட்ட மிச்சம் எடுத்து சாப்பிடுகிறானே இந்த இன்பாவின் செய்கையால் நம் மனம் அவன் பின்னாடி போகுதே என்று நினைத்து கொண்டவள்
இன்பாவின் கைகளை பிடித்து எழுதிய தருணம் நினைத்து பார்க்க அந்த கைகள் ஒரு இரும்பு போல இருக்க என்னை எதுக்கு இப்படி தொல்லை பண்றான்.
அந்த police uniform ல செம்மையா இருந்தான் அப்டியே சிங்கம் சூர்யா மாதிரி இருந்தானே.
விவேகா கண்களை மூட அவன் கன்னகுழி தெரிய சிரிக்கும் அந்த முகம் தான் வருகிறது.
விவேகா-எனக்கு தூக்கமே வர மாட்டிங்குதே இந்த இடியட் நாளைக்கு என்ன செய்ய காத்திருக்கிறானோ.
Episode 12,
விவேகா கண்களை மூட இன்பா கன்னகுழி தெரிய சிரிக்கும் அந்த முகம் தான் வருகிறது.
விவேகா-எனக்கு தூக்கமே வர மாட்டிங்குதே இந்த இடியட் நாளைக்கு என்ன செய்ய காத்திருக்கிறானோ
விவேகா புரண்டு புரண்டு படுத்தவள் அவளது பாடங்களை எடுத்து படிக்க ஆரம்பித்தாள் . இன்பாவின் நியாபகம் தான் .
பின் இப்படியே 3 மணிக்கு மேல் தான் தூங்கினாள்.
கங்கா-விவேகா எழுந்திரு மா சீக்கிரம் காலேஜ் க்கு time ஆச்சு bus stop க்கு நீ இன்னைக்கு நடந்து தான் போகனும்
விவேகா எழுந்திரு டி அடுத்து அடி வாங்க போற வருண் இருக்கும் போது 6 மணிக்கு எழுந்திடுவ இன்னிக்கு மணி 7.15 ஆகிடுச்சு காலேஜ் பஸ் போய்டும் டி என்று அம்மா கூறவும் வேகமாக எழுந்தவள்
மணியை பார்க்க அது 7.20 என காட்ட
விவேகா-இடியட் எல்லாம் உன்னால தான் டா என்று கூற
கங்கா-நான் உனக்கு இடியட் மாதிரி தெரியறேனா உன்னை அப்படியே விட்டு இருக்கனும் வீட்டில் இருந்து இன்னிக்கு எல்லா வேலையும் நீ தனியா செஞ்சு இருக்கனும்.
விவேகா-அம்மா sorry மா உங்களை சொல்லல ஒரு கனவு கண்டேனா அத தான் sorry மா என் செல்லம்
கங்கா- சரி விடு சீக்கிரம் கிளம்பு இன்னிக்கு நீ நடந்து தான் bus ஸ்டாப் போகனும்
விவேகா-அய்யோ இன்னும் 1 hour தான் இருக்கு அம்மா காலையில் எனக்கு சாப்பாடு வேணாம் சாப்பிட்டால் time ஆகிடும் என்று கூறிக்கொண்டே குளியலறை சென்றவள் குளித்து முடித்து இன்று ஊதா நிற சுடியை போட்டுகொண்டு எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமல் பொட்டு மட்டும் வைத்து கொண்டு தன் அம்மாவை ஜடை போட சொல்லி அரை மணி நேரத்தில் அரக்க பறக்க கிளம்பினாள்.
அப்போது தான் லீவு லெட்டர் நியாபகம் வர ஒரு நோட்டில் அம்மாவின் கையெழுத்து வாங்கி கொண்டு வெளியே செல்ல.
கங்கா-விவேகா ID card மறந்து கிட்டு போற டி என்று கூற
விவேகா-உள்ளே வந்து ID card எடுத்து கொண்டு வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல சொல்ல காலை மதியம் இரு வேளைக்கும் உணவு கொடுத்த அம்மாவிற்கு ஒரு முத்தம் வைத்து விட்டு வேக நடையிட்டாள்.
இவள் செல்லவும் பேருந்து வரவும் சரியாக இருந்தது.
உள்ளே சென்றவள் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு அம்மா தந்த காலை உணவை திறக்க அதில் இருந்ததை பார்த்து அழுகாத குறை தான்
விவேகாவின் அம்மா இரண்டு இட்லி கொஞ்சம் வெண்பொங்கல் அம்மா உன்னை என்ன பண்றது எல்லாமே தூக்க மாத்திரை item ஆஅ இருக்கே
என்று நினைத்து கொண்டு ஒரு இட்லி தூக்க மாத்திரை மட்டும் சாப்பிட்டு இரண்டு ஸ்பூன் வெண்பொங்கல் சாப்பிட்டவள்
Tiffin box ஐ பசங்க கிட்ட கொடுக்க அவர்கள் காலி செய்து box ஐ தந்தனர் அங்கு தன் இடத்தில் சாய்ந்தவள் தான்
காலேஜ் வந்தது கூட தெரிய வில்லை அப்படி ஒரு தூக்கம் தூங்கி கொண்டு இருந்தாள்.
பஸ்சில் ஒவ்வொருவராக இறங்க அப்போது விவேகா சீட் அருகே வெளியில் ஒரு குரல் கேட்டது.
விவேகா, விவேகா காலேஜ் வந்திடுச்சு கொஞ்சம் வெளியே வா மா
விவேகா கண்களை தேய்த்து கொண்டே எழுந்து சுற்றி பார்க்க ஹலோ மேடம் இங்க என்று வெளியே குரல் கேட்க திரும்பி பார்த்தவள்
விவேகா-ஹாய் டீச்சர் என்று சொல்லி கீழ இறங்கி அந்த பெண் அருகில் வந்தாள்.
அந்த teacher வேறு யாரும் அல்ல வெண்பா தான்
வெண்பா-2 nd year cs டெபார்ட்மெண்ட் தான்
வெண்பா-என்ன மேடம் அப்படி ஒரு தூக்கம்
விவேகா-இல்ல teacher night சரியா தூங்கல வேற ஒன்னும் இல்ல
வெண்பா-இந்தா ஒரு லொல்லி பாப் வாங்கிக்கோ என்று கொடுக்க
விவேகா-என்னடி lolly பாப் மயமா இருக்கு
வெண்பா-அதை ஏன் டி கேட்கற ஒரு லூசு தான் வாங்கிட்டு வர சொன்னிச்சு என்று பைகள் திறந்து காட்ட
விவேகா-என்னது dozen ஆ வச்சிருக்க என்று கூற
வெண்பா-நான் தான் சொன்னேனே ஒரு லூசு வாங்கிட்டு வர சொன்னிச்சு அப்டின்னு
விவேகா-மனதில் இன்பா நியாபகம் வர வெண்பா எனக்கு ஒரு 4 மட்டும் கொடு டி
வெண்பா-உனக்கு எதுக்கு டி
விவேகா-இல்ல டி உன்னை ஒரு லூசு வாங்கிட்டு வர சொன்ன மாதிரி என்னை ஒரு இடியட் வாங்கிட்டு வர சொன்னிச்சு
வெண்பா-சரி இந்தா என்று கொடுத்து விட்டு அப்புறம் பார்க்கலாம் என்று இருவரும் அவர்கள் block சென்றனர்.
விவேகா கிளாஸ் க்கு வர அங்கு பாதி மாணவர்கள் ஏற்கெனவே வந்து இருந்தனர்.
விவேகா-ஆதியை தேட இன்னும் அவன் பேருந்து வர வில்லை
மைதிலி -என்ன விவேகா ஏன் நேத்து வரல என்று கேட்க
விவேகா-இல்ல லிதி அண்ணா ஊருக்கு போனான் சோ
மைதிலி-நேத்து என்ன என்ன நடந்தது என்று அனைத்தும் கூறினாள்.
ஆதி இப்போது வந்தான்.ஆதி-என்ன விவி night தூங்களையா ஒரே சோர்வா இருக்க மாறி இருக்கு உன்னோட முகம்.
விவேகா-அப்படியெல்லாம் இல்ல ஆதி காலைல வெண்பொங்கல், இட்லி அம்மா torture சாப்பிடுன்னு அதனால
விவேகா-ஆதி எனக்கு ஒரு உதவி செய் செல்லம் இந்த லீவு லெட்டர் மட்டும் எழுதி தா டா
ஆதி-சரி கொடு என்று வாங்கி எழுத ஆரம்பித்தான்.
விவேகாவுக்கு கொஞ்சம் சோக்கையாக இருக்க அப்படியே டெஸ்க் ல தலை வைத்து கொண்டே கண்களை மூட சொர்க்கம் போல் இருந்தது
First hour மித்ரன் வந்தான் அதனால் அவள் அவனிடம் பொய் நாடகம் போட்டு உறங்கி விட இதை எல்லாம் இன்பா அவனுடைய இடத்தில் இருந்து சிரித்து கொண்டே பார்த்தான்.
இன்பா-நெஸ்ட் ஹௌர் நான் தான் டி டார்ஜிலிங் வருவேன்
உன்னை வந்து பார்த்து கொள்கிறேன் என்று உற்சாகமாக இருந்தான்
அந்த hour முடிந்தது விவேகாவுக்கு தெரிய வில்லை அந்த இட்லி வேலை காட்ட ஆரம்பித்து விட்டது.
எல்லோரும் கத்தி பேசி சிரித்து கொண்டு இருக்க இன்பா உள்ளே வந்தான் . அவன் பார்வை தன்னவளை தான் தேடியது
அனைவரும் இன்பனை பார்த்தவுடன் pin drop silent ஆக இருந்தனர்.
இன்பா-நான் நேத்து என்ன சொல்லி கொடுத்தேனோ அதை revise பண்ணுங்க 10 மினிட்ஸ் இப்போ கொஞ்ச நேரம் கழிச்சு previous year question bank இருக்கு அதை பார்க்கலாம் என்று கூற அனைவரும் சரி அவர்கள் வேலைய பார்க்க.
மைதிலி-விவேகா எழு டி 2 nd hour ஸ்டார்ட் ஆகிடுச்சு என்று கூற அவள் ஆழ்ந்த நித்திரையில் இருக்க
இன்பா-விவேகாவின் இடத்திற்கு வந்து விட்டான்.
ஆதி-எழுப்பு என்று மைதிலி கிட்ட சிக்னல் கொடுக்க அவள் மாட்டேன் என தலை ஆட்டினாள்.
இன்பா அந்த ஸ்டிக் ல அவளது டெஸ்க் ல இரண்டு தட்டு தட்ட
விவேகா-கோபமாக டேய் எல்லாம் உன்னால தான் டா இடியட் என்று கொஞ்சம் சத்தமாக கூறி விழிக்க
அனைவரும் அவளை திரும்பி பார்க்க இடியட் ஆதி என்று கூறி முடித்தாள்.
இன்பா-மனதில் நடிக்கிறியா பேபி என்று நினைத்தவன் போய் face வாஷ் பண்ணிட்டு வாங்க மிஸ் என்று மைதிலியை பார்க்க
மைதிலி-விவேகா சார் அவ பேரு என்று கூறினாள்
ஆதி-இது உலக மகா நடிப்பு டா சாமி என்று நினைத்து கொண்டான்.
விவேகா-ok சார் என்று கூறி விட்டு ஒரே ஓட்டமாக ஓடினாள் திரும்பி வந்தவள் இந்த முறை உள்ளே வரலாமா என்று கேட்டு விட்டு தன் இடத்தில் போய் அமர்ந்து கொண்டாள்.
இன்பா-நடத்த ஆரம்பித்தான் அவள் கண்கள் தூக்கத்தால் சொக்குவதை பார்த்தவன் விவேகாவின் செயலில் சொக்கி போனான்
இப்படியே விட்டால் சரி வராது என நினைத்தவன்.
இன்பா-ஸ்டுடெண்ட்ஸ் night வேற மினிஸ்டர் வராங்க அப்டின்னு எனக்கு work லோட் அதிகமாக இருந்தது அதனால சரியா தூங்கவே இல்ல. இப்போ ஒரு மாறி சோர்வா இருக்கு ஏதாவது chocolate வச்சு இருக்கீங்களா என்று கேட்டான்.
கண்ணுகினியாள்-சார் நான் diary milk வச்சிருக்கேன் இந்தாங்க என்று கொடுக்க
இன்பா-இவ்ளோ பெரிய chocolate என்னால சாப்பிட முடியாது இனியாள் வேற
விவேகா-லிதி இந்தா இதை அவன் கிட்ட கொடு என்று கோபமாக கொடுக்க
மைதிலி-அய்யோ எனக்கு பயமா இருக்கு டி நீயாச்சு அவராச்சு என்று கூற இப்போது ஆதியை பார்த்தாள்.
ஆதி-அந்த லொல்லி பாப் வாங்கியவன் சார் இந்தாங்க என்று கொடுக்க
இன்பா-மறுப்பு ஏதும் சொல்லாமல் வாங்கி கொண்டான். அப்போது இன்பா விவேகாவை பார்த்து கொண்டே உன்னோட name என்ன
ஆதி-என்னோட name ஆதித்யா
இன்பா-ம்ம்ம் ஆதித்யா இந்த chocolate ok not bad
விவேகா- இட்லி , வெண்பொங்கல் சாப்பிட்டது தண்ணீர் தாகம் எடுக்க கொஞ்சம் தண்ணீர் குடிக்கலாம் என்று வாட்டர் பாட்டிலை open செய்து குடிக்க போக
இன்பா-
விவேகாவை பார்த்து கொண்டே
நேத்து இதே மாறி ஒரு lolly pop சாப்பிட்டேன் ஆதி அதோட taste வேற level என்று கூற
விவேகா -விவேகாவிற்கு தண்ணீர் தலைக்கு ஏறியது ரொம்பவும் புரை ஏற மைதிலி என்னாச்சு விவேகா பார்த்து கூடி என்று கூற அவளுக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை.
இன்பா-உங்க friend க்கு தண்ணி கூட குடிக்க சொல்லி தரணும் போல மிஸ் விவேகா உங்க நினைப்பு எங்கே இருக்கு என்று அவன் குறும்பாக அவளை பார்த்து கூற
விவேகா-ஒன்னும் இல்ல சார் என்று முறைத்து கொண்டே கூறினாள்.
இன்பா-உங்களுக்கு தூக்கம் வருதா நான் வேனும் னா உங்களுக்கு lolly பாப் தரட்டுமா
அனைவரும் அதிர்ச்சியாக அவனை பார்க்க இன்பா-நான் ஆதி கிட்ட வாங்கி தரட்டுமா என்று கூறினான்.
விவேகாவுக்கு வியர்த்தது இவன் ஏன் இப்படி அனைவர் முன்பும் நடந்து கொள்கிறான்.
பின் இன்பா போய் நடத்த ஆரம்பித்தான் அடுத்து மோர்னிங் interval வர விவேகா பெல் அடித்ததும் தலை கவிலக்க
இன்பா-நேத்து யாரு காலேஜ் வரலையோ அவங்க இப்போ என்னோட place க்கு வந்து பாருங்க என்று கூறி விட்டு சென்றான்
ஆதி-விவேகா இன்னிக்கு நல்லா மாட்டிக்கிட்ட என்று கூற
விவேகா-இவன் வேற காலையில் இருந்து ஒரு மார்க்கமாவே சுத்துறானே என்று மனதில் நினைத்தாள்.
மைதிலி-போடி அவரு உன்னை தான் கூப்பிட்டாரு என்று கூற
விவேகா- போ be cool little க்ரிஷ் என்னை காப்பாத்து என்று கிளம்பினாள்
Episode 13,
விவேகா-இவன் வேற காலையில் இருந்து ஒரு மார்க்கமாவே சுத்துறானே என்று மனதில் நினைத்தாள்.
மைதிலி-போடி அவரு உன்னை தான் கூப்பிட்டாரு என்று கூற
விவேகா- போ விவேகா be cool little க்ரிஷ் என்னை காப்பாத்து என்று மனதில் சொல்லி கொண்டே கிளம்பினாள்.
விவேகா இன்பாவின் அறையை அடைய அங்கு மித்ரன் தான் இருந்தான். இன்பா வரவே இல்லை
விவேகா-சார் இந்த லீவு letter இன்பா சார் கிட்ட கொதிடுறீங்களா
மித்ரன்-எனக்கும் இதுக்கும் எந்த சம்மதமும் இல்ல மா நீ அவர் கிட்டயே கொடுத்திடு என்று கூற
விவேகா-ok சார் என்று ஒரு இடத்தில் ஓரமாக நின்று கொண்டாள்.
உள்ளே வரலாமா சார் என்று ஒரு குரல் கேட்க அது விவேகாவுக்கு மிகவும் பழக்கப்பட்ட குரல் போல் இருந்தது.
மித்ரன் -யாரு என்று பார்க்க
அவள் உள்ளே வந்து விட்டாள்.
மித்ரன்- உன்னை யாரு உள்ள விட்டது
வெண்பா-இருக்கும் டா உனக்கு இருக்கும் என்று மித்ரனுடைய ஸ்டிக் எடுத்து கொண்டு அவனை மிரட்ட ஆரம்பித்தாள். யாருக்கு lolly pop வாங்கி கொடுத்து கரெக்ட் பண்ண பிளான் பண்ற. எனக்கு IT ல பெரிய ஆள தெரியும் ஏதாவது வேளை பண்ணி இருந்த அப்டின்னு தெரிஞ்சது நீ அவ்ளோ தான் மவனே
வெண்பாவே தொடர்ந்தாள் என்னடா இந்த ஒரு வாரமும் IT dept லயே சுத்தி கிட்டு cS dept மட்டும் அந்த கீர்த்தனா, சாதனா வ கொச்சிங் கிளாஸ் க்கு அனுப்பி வச்சுட்டு உனக்கு என்னடா இங்க வேலை அவளுக ரெண்டு பேரும் நடத்தியே சாவடிக்கிறாலுக
மித்ரன்-ஏய் ஒழுங்க கிளாஸ் க்கு போடி என்று கூற
விவேகா-டீச்சர் இங்கே என்ன நடக்குது என்று கேட்க
வெண்பா-விவி நீ இங்கே என்ன பண்ற
அப்போது தான் இன்பா வந்தான். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று நின்று பார்த்து கொண்டு இருந்தான்
விவேகா-நான் லீவு லெட்டர் கொடுக்க வந்தேன் டீச்சர் நீங்கள்
வெண்பா-காலையில் சொன்னேன் தான ஒரு லூசு சாக்கலேட்டு அப்டின்னு அது இவன் தான்
மித்ரன்-வெண்பா அடி வாங்க போற நீ
வெண்பா- இரு டா உன்னை என்னோட சரவணன் அண்ணா கிட்ட சொல்றேன்
விவேகா-டீச்சர் மித்ரன் சார் உங்களுக்கு யாரு
வெண்பா- அய்யோ இவன் அவ்ளோ ஒர்த் இல்ல இது என்னோட அண்ணன் எனக்கு ரெண்டு அண்ணா
ஒருத்தன் IT பைத்தியம், இன்னொருத்தன் police பைத்தியம் இதுக ரெண்டும் சேர்ந்து என்னை இந்த காலேஜ் ல வந்து தள்ளிடுச்சு என்று வெண்பா கூற
விவேகா-அண்ணாவா என்று பின் எனக்கு IT பைத்தியம் தான் பிடிக்கும் என்று இயல்பாக பேச
வெண்பா-விவி அப்படின்னா நீ என்னோட சரவணன் அண்ணவா marriage பண்ணிகிரியா இவனுங்க என்னை தொல்லை பண்ண மாட்டானுக
விவேகா-பேச வருவதற்குள் பின்னாடி இருந்து ஒரு குரல் கேட்டது
இன்பா-வெண்பா என்ன மா பண்றீங்க
வெண்பா-அண்ணா சும்மா தான் இந்த மித்ரன ரெண்டு தட்டு தட்டிட்டு போலாம் னு வந்தேன். இவன் என்னை dozen ஆ lolly pop வாங்கிட்டு வர சொல்லி இங்க IT girls யாரையோ route விடறான். அது தான் மிரட்டி வைக்கலாம் னு
மித்ரன்-மனதில் எல்லாமே இவன்(இன்பா)செயல் ஆனால் நான் வாங்கி கட்டிக்கறேன் என்று கூறிக்கொண்டான்
வெண்பா-விவி உன்னை ஒரு இடியட் lloly pop வாங்கிட்டு வர சொன்னதுன்னு என்கிட்ட சொன்னயே அந்த இடியட் கிட்ட கொடுத்துடியா
ரொம்ப வம்பு பண்ணா சொல்லு நான் எங்க இன்பா அண்ணா கிட்ட சொல்றேன் .
விவேகா-அய்யோ இவன் வேற நம்மள முறைத்து பார்கிறானே என்று
விவேகா-டீச்சர் அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல என்று சமாளிக்க
மித்ரன்-அது என்ன டீச்சர் னு கூப்பிடற
வெண்பா- விவேகா அவன் கிட்ட சொல்லாத டி
மித்ரன்-இப்போ சொல்லு மா
விவேகா-அது ஒன்னும் இல்ல சார் வெண்பாவுக்கு காக்க காக்க அன்பு செல்வன் மாறி ஒரு husband கிடைக்கணும் அப்புறம்
ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாலே பாட்டில் ஜோதிகா மாரி வெண்பா டீச்சர் job க்கு போகனுமாம் என்று சிரித்து கொண்டே கூறினாள்.
மித்ரன்-இரு வெண்பா இத நான் சரவணன் கிட்ட சொல்றேன்
வெண்பா-விவி என்னை போய் இப்படி இவன் கிட்ட கோர்த்து விட்டுட்டு நிக்கிற என்று கூறியவள் போடா லூசு என்று ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள்.
இன்பா -மித்ரனுக்கு சிக்னல் கொடுக்க அவன் ம்ம்ம் enjoy என்று கூறி வெண்பா என்று கூறி கொண்டே வெளியில் சென்றான்.
விவேகா- அய்யோ பார்க்கிறானே பார்க்கிறானே என்று நினைத்து கொண்டவள் க்ரிஷ், க்ரிஷ் என்று மனதில் கூறி கொண்டாள்.
இன்பா-ம்ம்ம்ம் என்று தொண்டையை சரி செய்து என்ன கையில்
விவேகா-லீவு லெட்டர்
இன்பா-ok அது சரி ஏன் நேத்து வரல
விவேகா-எனக்கு fever அது தான் வரல
இன்பா-நீ ரயில்வே ஸ்டேஷன் வரதுக்கு முன்னாடியா இல்ல அதுக்கு அப்புறமா
விவேகா-என்ன சொல்வது என்று முழித்தாள்
இன்பா-ம்ம்ம் answer me
விவேகா-fever அவ்ளோ தான் என்று அவள் கொஞ்சம் திமிராகவே கூற
என்னை சுத்தி இருக்க எல்லாரையும் தெரிஞ்சு வச்சிருக்க எப்டி டி
விவேகா-எனக்கு வெண்பாவ முன்னவே தெரியும்
இன்பா-என்ன கிளாஸ் ல தூங்கி வழியுற என்ன ஆச்சு night என்ன பண்ணுன
விவேகா-இல்ல fever அது தான் சரியா தூங்கல
இன்பா-நீ பொய் தான சொல்ற உன் முகத்தை பார்த்தாலே தெரியுது டி
விவேகா-என்ன டி போட்டு பேசறீங்க சும்மா சொல்லிட்டே இருக்கீங்க
இன்பா-பாரு டா செல்லத்துக்கு கோவமெல்லாம் வருமா என்ன
விவேகா-எனக்கும் கோபம் வரும்
இன்பா-அப்புறம் வெண்பா கிட்ட என்னை இடியட் னு சொல்லி இருக்க எங்க அம்மாவே என்னை திட்டனது இல்ல உனக்கு தெரியுமா
விவேகா-அவனை பார்க்க
இன்பா- யாரும் என்கிட்ட எடுத்துக்காத உரிமை உனக்கு தந்து இருக்கேன் அப்படின்னா இதுக்கு என்ன அர்த்தம் சொல்லு விவேகா
விவேகா-எனக்கு எப்படி தெரியும் என்று அவள் கண்கள் கீழே அங்கும் இங்கும் அலைபாய விவேகாவின் கண்களுக்கு மேல் உள்ள மச்சம் மிகவும் வசீகரமாக இருந்தது
இன்பா- அப்புறம் உனக்கு IT னா பைத்தியமா அவ கிட்ட சொல்ற
விவேகா-ஆமா எனக்கு IT தான் எனக்கு பிடிக்கும் அது தான் என்னோட dream
இன்பா-அப்போ வெண்பா அண்ணவா கல்யாணம் பண்ணிக்க போற
விவேகா-எதுவும் பேசாமல் இருந்தாள்.
இன்பா-ம்ம்ம் பதில் சொல்லு டி
விவேகா- அ அப்டி எல்லாம் இல்ல
இன்பா-அவள் அருகில் வந்து night என்ன தான நினைச்சு கிட்டு இருந்த
விவேகா-இல்ல இல்லவே இல்லை
இன்பா-பொய் சொல்லாத டி எனக்கு தெரியும் நீ யாரு என்ன ன்னு
விவேகா- இந்தாங்க லீவு லெட்டர் வாங்கிகோங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று நகர
இன்பா-அவள் கைகளை பிடித்தவன் கொஞ்சம் இழுக்க அவன் மேலே போய் முட்டி நின்றாள்.
விவேகா- அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை கைய விடுங்க நான் போகனும்
இன்பா-என் கண்ணை பார்த்து சொல்லிட்டு போடி என்று அவள் முகத்தினை நிமிர்த்தினான்
விவேகா அவள் தைரியத்தை திரட்டி அவனை பார்க்க இன்பா கன்னகுழி தெரிய மெலிதாக சிரித்தான்.
விவேகா-அய்யோ இப்படி கன்னகுழி தெரிய சிரிச்சு தான் என்னோட தூக்கமே போச்சு என்று மனதில் நினைக்கிறோம் என்று வாய்மொழியாக கூற
இன்பா-என்ன சொன்ன நீ இப்போ என்று அவன் அவளிடம் கேட்க
விவேகா-நான் ஒன்னும் சொல்லவே இல்லையே
இன்பா-அப்போ நீ night full ஆ என்னை தான் நினைச்சு கிட்டு இருந்திருக்க என்று அவளை சுவரில் சாய்த்தவன்.
விவேகாவின் அந்த ஒப்பனை இல்லாத முகத்தை பார்த்து அந்த கண்களுக்கு மேல் உள்ள மச்சத்தினை தொட்டு பார்த்தவன். அப்படியே அவள் திருத்தப்படாத புருவத்தை வருடினான்.
அவள் புருவத்தினை சுருக்க அதில் சுண்டி விட்டான். அவள் கண்களை பார்க்கும்போது அன்று dance ஆடும்போது கண்ணுக்கு மை வைத்து இருந்தது நினைவு வந்தது
விவேகா-விடுங்க என்ன பண்றீங்க பிலீஸ் leave me என்று அவள் அங்கும் இங்கும் அசைய
இன்பா- இப்படி ஓயாமல் பேசற உன்னோட உதட்டுக்கு பூட்டு போடணும் டி
விவேகா-நீங்களும் தான் ஓயாமல் பேசறீங்க உங்களுக்கும் தான் நான் பூட்டு போடனும் என்று அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் கூற
இன்பா-இன்னும் அகலமாக சிரித்தவன் ஓ நீயுமா அந்த நாள் எப்போ வரும் னு நான் wait பண்றேன் விவி என்று கூறி கொண்டே அவள் உதடுகளை வருட விவேகாவுக்கு மின்சாரம் தாக்கியது.
சட்டென்று விலகியவன் நாளைக்கு உன்னோட கண்ணுக்கு மை வச்சுட்டு வா எனக்கு பார்க்கனும் போல இருக்கு
விவேகா- அவன் விலகியது கூட தெரியாமல் அங்கேயே நின்று இருக்க அவன் கூறியதை கேட்டவள்
விவேகா-நானா
இன்பா-நீ தான்
விவேகா- கண்ணுக்கு மை வைக்கணுமா
இன்பா-ம்ம்ம் ஆமா
விவேகா-எனக்கு make up பண்றது எல்லாம் புடிக்காது
இன்பா- நீ மை வச்சுட்டு தான் நாளைக்கு வருவ பார்க்கலாமா
விவேகா- chance ஏ இல்ல
இன்பா- let see baby நாளைக்கு பார்க்கலாம் டார்ஜிலிங்
விவேகா-ok let see
இன்பா-விடுங்க போகனும் போகனும் னு இங்க ஒரு பொண்ணு சொல்லிட்டு இருந்தது மிஸ் விவேகா ஆனால் அந்த பொண்ணால என்னை விட்டு போக மனசே இல்ல போல என்று அவன் சிரிக்க
விவேகா-யாரு என்று யோசிக்காமல் கோபம் கொள்ள
இன்பா-சிரித்து கொண்டே போய் கண்ணாடி ல பாரு அது யாருன்னு என்று ஒரு lolly pop எடுத்து அவன் சாப்பிட ஆரம்பித்தான்.
விவேகா- அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு ஓடி விட்டாள்.
நேராக அவள் கிளாஸ் க்கு வந்தாள். போய் அவளது இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
ஆதி- ஓய் மேடம் என்னாச்சு
விவேகா-ஒன்னும் இல்லை என்று கூறினாள்
மைதிலி-என்னடி முகமெல்லாம் சிரிப்பா வந்து நிக்கிற
விவேகா-ஒன்னும் இல்ல டி என்று கூற
மைதிலி-ஏய் விவேகா சொல்லு டி என்னை நடந்துச்சு
விவேகா-மைதிலி உன்கிட்ட ஒன்னு கேட்கணும் டி
மைதிலி-சொல்லு டி
விவேகா-இல்ல வேண்டாம் நான் ஆதி கிட்ட கேட்கிறேன் அவன் தான் கரெக்டா சொல்லுவான்
விவேகா-ஆதி உன்கிட்ட ஒன்னு கேட்கணும்.
Episode 14,
ஆதியை பார்த்து விவேகா
விவேகா- உன்கிட்ட ஒன்னு கேட்கணும் ஆதி
ஆதி-என்ன விஷயம் சொல்லு
விவேகா-அன்னிக்கு நான் dance ஆடினேன் ல
ஆதி-ஆமா கண்ணோடு காண்பதெல்லாம்
விவேகா-அப்போ நீ என்னை பார்த்து என்னவோ சொன்னியே
ஆதி-என்ன சொன்னேன்
விவேகா-யோசி டா பிலீஸ்
ஆதி- என்ன இன்னிக்கு different behave பண்றீங்க மேடெம்
விவேகா-நீ ஒன்னும் சொல்ல வேணாம் போ என்று முகத்தை திருப்பி கொள்ள
ஆதி-விவி இரு என்று யோசித்து ஆஅ அன்னிக்கு நீ அழகா dance ஆடின அப்டின்னு சொன்னேன்
விவேகா-அப்புறம் என்று கண்கள் மின்ன கேட்க
ஆதி அவளையே பார்த்து கொண்டு அவ்ளோ தான் டி
விவேகா- நீ கண்ணுல மை னு சொன்னியே அத சொல்லு
ஆதி-சிரித்து கொண்டே ம்ம்ம் உன்னோட கண்ணுக்கு மை அழகா இருக்கு அப்டின்னு சொன்னேன்
விவேகா-நிஜமாவே அழகா இருக்கா
ஆதி-பூனை குட்டி போல் கேட்கும் அவளை பார்த்து ஆமா டி அழகி என்று கூற
மைதிலி-இத என்கிட்ட கேட்டா நான் சொல்ல மாட்டேனா உன்னோட அந்த கண்ணுக்கு மேலே இருக்க மச்சம் ரொம்ப அழகு தெரியுமா என்ன பண்றது அந்த மாறி ஒரு birth mark எனக்கு இல்லையே
விவேகா- நிஜமாவா
ஆதி-ஆமா விவி அந்த மச்சம் அதிதி கும் இருக்கு தான
விவேகா-ஆமாம்
மைதிலி-இதை கேட்க ஆதி கிட்ட தான் கேட்பேன் அப்டின்னு ஒத்த காலில் நிற்காத குறை தான் என் கிட்ட கேட்டால் நாங்க சொல்ல மாட்டோமா
விவேகா-அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல
மைதிலி-எப்படி இருந்தாலும் அவனை விட்டு தர மாட்டியே
விவேகா-ஆமாம் அவன் என்னோட ஆதி
ஆதி-அவ என்னோட விவி என்று கூற மைதிலி முகத்தை திருப்பி கொண்டாள்.
ஆதியும் விவேகாவும் ஒரு சேர நீ எங்களோட லிதி என்று கூற மைதிலி விவேகாவை கட்டி கொண்டாள்.
இவர்கள் இவ்வாறு ஒற்றுமையாக இருப்பதை பார்த்து இனியாள், யாளினிக்குன்மிகவும் எரிச்சலாக இருந்தது.
இனியாள்-யாழினி என்ன அவ ரொம்ப சந்தோஷமா இருக்கா
யாழினி-அதே தான் டி எனக்கும் என்னோட ஆதி கிட்ட எப்டி கொஞ்சி கிட்டு இருக்கானு பாரு அந்த விவேகா என்னை விட அழகா இருக்காளா
இனியாள்-அவ எல்லாம் ஒரு மூஞ்சி அவளுக்கு cream வாங்க காசு இல்லாம தான் make up பண்ணாம வரா
யாழினி- இன்னொரு விஷயம் இனியா அந்த police ரெண்டு பேரும் கிளாஸ் ல இவள வச்சு செய்யுறாங்க டி அன்னிக்கு உன்னோட இன்பா இவளை எப்டி question கேட்டாரு ன்னு பார்த்த தானே.
எல்லா dpt girls ம் பேசிக்கிறாங்க IT ல யாரோ ஒரு பொண்ண அவருக்கு புடிச்சு இருக்கு ன்னு எனக்கு என்னமோ அது நீ தான் ன்னு நெனைக்கிறேன்.
அது மட்டும் உண்மையா இருந்தது இந்த காலேஜ் ல யே நம்ப தான் famous அப்புறம் இது உன்னோட காலேஜ் ஆகிடும் . என்று கனவு கோட்டை காட்டினாள் யாழினி இவளின் பேச்சு இனியாளுக்கு தேன் வந்து பாய்வது போல இருந்தது.
கண்ணுக்குகினியாள்- நீ சொல்றது கண்டிப்பாக நடக்கும் ஆனால் எங்கேயோ ஏதோ இடிக்குது இந்த இன்பா ஏதோ பண்றாரு அதை கண்டு பிடிக்கனும் என்று கூறினாள்.
வழமை போல் அனைத்து வகுப்புகளும் செயல் பட்டது வழக்கத்திற்கு மாறாக இன்று விவேகா மிகவும் சந்தோஷமாக இருந்தாள்.
ஆனால் இந்த சந்தோஷம் நாளை போய் விடும் என்று அவள் அறியவில்லை.
மாலையில் அனைவரும் சந்தோஷமாக வீடு திரும்பினர். விவேகா வீட்டுக்கு வந்தவள் தன் அண்ணன் வருண் க்கு போன் செய்து பேசி விட்டு அவள் அம்மாவுடன் சேர்ந்து கொண்டாள்.
பக்கத்து வீட்டில் பூஜா என்று இவள் வயதுடைய பெண்ணுடன் ஜாலியாக பொழுதை கழித்தாள்.
விவேகா-பூஜா உன்கிட்ட ஒன்னு கேட்கணும்
பூஜா-சொல்லு விவேகா
விவேகா-நாளைக்கு எனக்கு இந்த காஜல் வச்சு விடறயா என் friends எல்லாம் என்ன கேட்டாங்க
பூஜா-சிரித்து கொண்டே விவேகா இதை கேட்கணுமா நீ நாளைக்கு வா தலைக்கு குளிச்சுட்டு வா உனக்கு ஜடை போட்டு உன்னை எப்டி ரெடி பண்றேன்னு மட்டும் பாரு
விவேகா-பூஜா அந்த அளவுக்கு வேண்டாம் டி எனக்கு make up எல்லாம் பண்ண பிடிக்காது
பூஜா-நான் அவ்ளோ பண்ண மாட்டேன் உன்னை பத்தி எனக்கு தெரியாதா quietly simple ஆஅ பண்ணி விடறேன்
விவேகா-சரி டி என்று சந்தோஷம் மன நிலையில் அடுத்த நாளுக்காக காத்து கொண்டே நேற்று சரியாக தூங்காத காரணத்தால் தன் அம்மாவை கட்டி கொண்டே உறங்கி போனாள்.
சூரியன் இதோ வந்து விட்டேன் என்று விரைவில் விடிந்தது. இன்று விவேகா நேரமாக எழுந்தாள்.
தலைக்கு குளித்து ஒரு மயில் பச்சை வண்ண சுடி எடுத்து கொண்டு குளித்தவள் தன்னுடைய காலை பணிகள் அனைத்தும் செய்து விட்டு தலையை துவட்டி கொண்டே
விவேகா-அம்மா நான் பூஜா கிட்ட போய் ஜடை போட்டு வரேன் என்று கூறி விட்டு அவளிடம் சென்றாள்.
பூஜா b.sc chemistry 2 nd year அதனால் அவளும் கல்லூரி கிளம்பி கொண்டு இருந்தாள். விவேகாவை பார்த்ததும்
பூஜா-ஒரு 5 நிமிடம் விவேகா என்று சில பொருள் எடுத்து வந்து விவேகாவுக்கு அழகாக கொஞ்சம் free hair மாதிரி மேல மட்டுமே பின்னி ஒரு அழகான hair ஸ்டைல் போட்டு விட்டாள்.
பிறகு அதிக ஒப்பனை இல்லாமல் ஒரு make up அந்த கண்களுக்கு காஜல் , மஸ்கரா போட்டு விட
பூஜாவின் அம்மா-பூஜா இந்தா உனக்கு என்று ஒரு இலை தண்டில் கோற்கப்பட்ட ஒரு சரம் கொடுக்க
விவேகா-பூ எல்லாம் எதுக்கு என்று விவேகா கூற வருவதற்குள்
அம்மா-விவேகா அடி வாங்க போற நல்ல நாள் இப்டி பேச கூடாது இது மகிழம் பூ பூஜா வச்சு விடு என்று கொடுக்க
விவேகா-மகிழம் பூவா என்று அதை வாங்கி தொட்டு பார்த்து முகந்ர்தாள். அதன் பெயர் வாசனை விவேகாவுக்கு இன்பாவின் நியபகங்களை கொடுக்க பூஜாவிடம் வைத்து விடு என்று சந்தோஷ முகமாக கூறினாள்.
பூஜா-முடிஞ்சது விவேகா இங்க திரும்பு என்று கூற விவேகா திரும்பினாள்.
பூஜா அம்மா- விவேகா கண்ணு அம்மா கிட்ட சொல்லி சுத்தி போட சொல்லு டா மா என்று நெட்டி முறித்தாள். உன்னோட கண்ணு அழகா இருக்கு.
விவேகா-அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல மா நான் வரேன் என்று முகமெல்லாம் புன்னகையாக தன் வீட்டுக்கு சென்றாள்.
கங்காவிற்கு விவேகாவை பார்த்ததும் நிம்மதி ஏன் என்றால் அவள் அப்பா போனதில் இருந்து தன்னை எல்லோர் முன்பும் இயல்பாக காட்டிக்கொள்ள சுட்டி பெண் போல் இருக்கும் அவள் மனதில் சோகம் தான்
ஆனால் இன்று நீண்ட நாள் கழித்து முகமெல்லாம் புன்னகையுடன் வந்தாள் விவேகா
கங்கா-விவேகா இங்க வா
விவேகா-அம்மா என்று கூறி கொண்டே வந்தாள்
கங்கா-அவளுக்கு ஒரு முத்தம் பதித்தாள்
விவேகா-என்ன மா திடீரென முத்தம் எல்லாம் என்று அம்மாவை அணைத்து கொண்டே கூற
கங்கா-இன்னிக்கு என் பொண்ணு ரொம்ப அழகா இருக்காளே என்று கூற
விவேகா-அம்மா போமா என்று கூறி விட்டு காலை உணவு சாப்பிட்டு விட்டு அம்மாவிடம் சொல்லி விட்டு காலேஜ் க்கு கிளம்பினாள்.
விவேகா-காலேஜ் bus ல எறியவுட அங்கு இருந்த பசங்க எல்லாம் விவேகாவை பார்த்து
என்னடா இன்னிக்கு பயங்கரமா மழை பெய்யும் னு நெனைக்கிறேன். இன்னிக்கு தான் விவேகா பையன் get up ல இருந்து பொண்ணா மாறி இருக்கா என்று கிண்டல் செய்தனர்
அதில் ஒருவன்-விவேகா செம்மையா இருக்க விவேகா நான் உன்னோட eye க்கு fan என்று கூற
விவேகா-அடிங்க போங்க டா என்று இன்பா எல்லாம் உன்னால தான் டா எல்லாம் என்னை கிண்டல் பண்றாங்க என்று புலம்பி கொண்டே காலேஜ் வந்தாள்.
விவேகாவின் வகுப்பில் அனைவரும் வந்திருக்க இவள் வரும் தோரணை பார்த்து இவள் வகுப்பு தோழர்கள் எல்லாம் அதிசயமாக பார்க்க மாணவிகள் எல்லாம் கொஞ்சம் பொறாமையாகவே பார்த்தனர்.
யாளினிக்கு தான் அய்யோ என்று இருந்தது இனியாளுக்கு சொல்லவே தேவையில்லை வெறுப்பு தான்.
யாழினி-என்னடி இனியாள் இவ இப்படி வந்திருக்கா எல்லாரும் உன் பின்னால் சுத்துவானுக இப்போ அவளை பார்கிறானுக அந்த அளவு கூட make up பண்ணல ஆனாலும்
இனியாள் – அந்த விவேகா ஒரு மார்க்கமா தான் சுத்துரா
யாழினி-விடு இனியாள் அவளை இன்னிக்கி ஏதாவது செய்தே ஆகணும் என்று இருவரும் கருவிக்கொண்டனர்.
ஆதி- விவேகாவை பார்க்க
ஆதி-ஏய் விவி இதுக்கு தான் நேத்து மை பத்தி கேட்டியா என்று சிரித்து கொண்டே கூற
விவேகா- ஏய் ஆதி நீயும் என்னை கிண்டல் பண்றியா என்று உதட்டை சுளிக்க
ஆதி-விவி இன்னிக்கு நீ தேவதை மாரி இருக்க விவேகா இப்போ மட்டும் angry bird உன்னை பார்த்தால் அப்டியே பிளாட் தான்
விவேகா- போடா இன்னிக்கு friday அப்டின்றதால தான் இப்படி வந்தேன் வேற ஒன்னும் இல்ல என்று கூறினாள்.
ஆதி-உன்னோட கண்ணு வேற level விவி கண்ணுக்கு மையா இல்ல மைக்கு கண்ணா அப்டின்னு ஒரே confuse ஆ இருக்கு அழகி டி நீ என்று கூற கூட மைதிலி சேர்ந்து கொண்டாள்
அதற்குள் மித்ரன் கிளாஸ் க்கு வந்தான். அவன் விவேகாவை பார்த்து விட்டு கிளாஸ் எடுத்து கொண்டே இன்பாவிற்கு போன் செய்தான்.
இன்பா-சொல்லு டா என்ன விஷயம்
மித்ரன்-மச்சி விவேகா
இன்பா-விவேகாவுக்கு என்ன என்று பதட்ட பட
மித்ரன்-இரு நான் உனக்கு போட்டோ அனுப்பறேன் என்று கூறி அவளை அப்படியே ஒரு போட்டோ எடுத்து இன்பாவிற்கு அனுப்பி விட்டான்.
இன்பா-போட்டோ பார்க்க
மித்ரன்- போன் செய்தான்
இன்பா-ஏய் எதுக்கு டா என்னை disturb பண்ற first போன வை
மித்ரன்-உன் வேலை முடிஞ்சதும் என்னை கழட்டி விட்டுடுவியே என்று கூறி வைத்து விட்டான்.
இங்கு இன்பாவோ அய்யோ டார்ஜிலிங் இன்னிக்கு செம்மையா இருக்கியே டி என்கிட்ட நேத்து வச்சுட்டு வர மாட்டேன் அப்டின்னு சொல்லிட்டு இன்னிக்கு சும்மா செம்மையா இருக்காளே
உன்னை இப்படி என்னோட போன் ல பார்க்கும்போதே இவ்ளோ உன் கண்ணு அழகா இருக்கே நேரில் உன்னோட அந்த கோவபார்வை உன்னோட அந்த முறைப்பு என்னை அப்படியே ஈற்குமே டார்ஜிலிங்
எனக்கு தெரியும் டி என்னை உனக்கு பிடித்து இருக்குன்னு அதை மட்டும் நீ வெளிப்படையாக சொல்லிட்ட இந்த இன்பாவோட வேலையே உன்ன இன்பமா பார்த்துக்கொள்வது மட்டும் தான் என்று தன் வீட்டில் விவேகாவை நினைத்து கொண்டு இருக்க
இப்போது சுபாவும், வசுமதியும் அவன் கன்ன குழி தெரிய சிரிப்பது பார்த்து .
இருவரும் ஒரு சேர-இன்பா இது நீ தானா என்ன இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க போல
இன்பா-ஆமாம் மாம் , சுபா என்று அவளை தூக்கி சுத்தினான் .
சுபா-என்னனு சொல்லு டா
இன்பா-நான் ஈவினிங் வந்து சொல்றேன்
வசு-சரி சாப்பிட்டு போ
இன்பா-எனக்கு வேண்டாம் மா
வசு-ராகவ் அடி ஒழுங்கா சாப்பிடு
இன்பா-அப்போ ஊட்டி விடுங்க என்று மனமும் வயிறும் நிறைய சாப்பிட்டு விட்டு சென்றான்.
Episode 15,
இன்பா வீட்டில் இருந்து கிளம்பி நேராக காலேஜ் சென்றான்.
ஆதி-என்ன விவி இது என்ன பூ
விவேகா- இது ஒரு பூ தான்
மைதிலி-ஏய் எனக்கு தெரியும் இது மகிழம் பூ இதோட வாசம் சூப்பர் ஆ இருக்கும்
ஆதி- இதுல ஏதோ ஒரு உள் குத்து இருக்க மாறி இருக்கே என்று சிரித்து கொண்டே கூற
விவேகா-ஒன்னும் இல்ல என்று தன் வெட்க உணர்வுகளை மறைத்து கொண்டாள்
ஆதி-இல்ல கண்ணுக்கு மை, கொஞ்சம் free ஹேர் ஸ்டைல், அதை விட மகிழம் பூ இந்த தரிசனம் யாருக்கோ வெய்ட் பண்ற மாறி இருக்கு
எங்கேயோ match ஆகுற மாறி இருக்கே என்று ஆதி கிண்டல் செய்தான்.
அப்போது காலேஜ் ஆஃபீஸ் ரூமில் இருந்து விவேகாவின் வகுப்புக்கு ஒரு பணியாளர் பெயர் பட்டியலுடன் வந்தார்.
மித்ரன் வகுப்பு எடுத்து கொண்டு இருக்க அந்த பணியாளர் அவனிடம் கேட்டு உள்ளே வந்து பேச ஆரம்பித்தார்.
ஹலோ ஸ்டுடெண்ட்ஸ் நான் கூப்பிடற பேர் எல்லாம் எழுந்து ஆஃபீஸ் ரூம் வாங்க என்று கூற
சிவா, வெங்கட், சௌந்தர், சூர்யா, தியா, விவேகா என்று கூறி விட்டு கிளம்ப என்னவாக இருக்கும் என்று சிறு பதட்டதோடு கிளம்பினார்கள்.
அங்கே ஆஃபீஸ் ரூமில் billing செக்ஷன் ல ஒரு பெண் அமர்ந்து கொண்டு நீங்க எல்லாம் இந்த sem க்கு உண்டான எந்த ஒரு fees ம் pay பண்ணல பாதி பேர் pay பண்ணி இருக்கீங்க நெஸ்ட் week மட்டும் தான் time அதுக்கு அப்புறம் fine start ஆகிடும் என்று கூறி பின்
ஒரு 5 மினிட்ஸ் வெய்ட் பண்ணுங்க யார் எவ்ளோ பெண்டிங் ன்னு நான் சொல்றேன் என்று கூறி அனைவரும் குறித்து கொண்டனர்
சிவா-விவி உனக்கு பெண்டிங் கொஞ்சம் அதிகமாக இருக்கு
விவேகா-பார்த்துக்கலாம் விடு என்று கூறி பின் அனைவரும் கவலையான மனநிலையில் வகுப்பறை கிளம்பினர்
விவேகா- நான் rest room போவதாக கூறி செல்ல
தியா அங்கு நடந்த அனைத்து விஷயமும் யாழினி கிட்ட கூற இது தான் நல்ல தருணம் என்று யாழினி, இனியாள், பூரணி மூவரும் ரெஸ்ட் ரூம் சென்றனர்.
உள்ளே சென்றதும் யாழினி ஆரம்பித்தாள்
யாழினி-இனியாள் தியா க்கு fees பெண்டிங் ன்னு சொன்னா அதனால் தான் ஆஃபீஸ் ரூம் கூட்டிட்டு போய் சொல்லி இருக்காங்க டி
பூரணி-ஆமா டி இங்க சில பேருக்கு fees கட்டவே வழி இல்ல இதுல make up ஒன்னு தான் கேடு
யாழினி-ஆமாம் நீ சொல்றது கரெக்ட் தான் இதுக எதுக்கு இங்க படிக்கணும் ஏதாச்சும் டிப்ளமோ அப்டி இல்லனா வேலைக்கு போக வேண்டியது தானே கூட்டி பெருக்க
இனியாள்-அப்டி இல்ல டி இந்த காலேஜ் ல கொஞ்சம் பணம் இருக்க பசங்களா பார்த்து அவளுகளோட வலையில் விழ வச்சு அப்டியே கல்யாணம் பண்ணி settle ஆகறதுக்கு தான் இங்கே வந்திருக்காங்க .
நம்ம மாதிரி அவளுக பணக்கார குடும்பத்தில் பிறக்கல சோ இந்த மாதிரி பணக்காரங்க ஆகிடலாம் னு தான்
சரி வா நமக்கு எதுக்கு தேவை இல்லாத வேலை போகலாம்.
இவர்கள் கூறியது அனைத்தும் கேட்டு கொண்டிருந்த விவேகாவுக்கு மனம் முழுவதும் ரணமாக இருந்தது. சரியாக அந்த நேரம் மோர்னிங் interval க்கு 10 நிமிடம் இருக்க
விவேகா கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு இருக்க நேராக CS block சென்றாள். வெண்பாவை பார்க்க இவள் இறங்கி செல்லவும் இன்பா மேலே செல்லவும் சரியாக இருந்தது . ஆனால் இருவரும் பார்த்து கொள்ள வில்லை
இன்பா மாணவர்கள் பயன்படுத்தும் படிக்கட்டில் சென்றான் . விவேகா மாணவிகள் பயன்படுத்தும் படிக்கட்டில் சென்றாள்.
விவேகா நேராக வெண்பாவின் வகுப்புக்கு செல்ல அங்கு இருந்த அனைத்து மாணவர்களும் விவேகாவை யே வைத்த கண் வாங்காமல் அவள் கண்களையே பார்த்து கொண்டு இருந்தனர்.
சரியாக interval bell அடிக்க விவேகா வெண்பாவை அழைத்து கொண்டு ரெஸ்ட் ரூம் சென்று அவளை கட்டி கொண்டு அழுதாள்.
வெண்பா-என்னாச்சு விவி ஏன் அழற என்னைக்கும் இல்லாமல் இன்னிக்கு சும்மா தேவதை யா இருக்கீங்க மேடெம் என்று அவளை சமாதானம் செய்ய
விவேகா-வெண்பா எனக்கு இந்த make up எல்லாம் remove பண்ணனும் நீ தான் face வாஷ் வச்சு இருப்பியே எடுத்து கிட்டு வா என்று கூற
வெண்பா-ஏய் லூசு ஏன் டி இப்டி பண்ற நல்லா தானே இருக்கு
விவேகா-நீ போய் எடுத்து கிட்டு வா என்று கூற வென்பா எடுத்து வந்தாள் முகத்தை கழுவிய விவேகா பின் வெண்பாவை torture செய்து சாதாரண ஜடை போட்டு எப்போதும் போல ஒரு குட்டி பொட்டு வைத்து கொண்டு
விவேகா-நான் இங்கே வந்தது பத்தி யார் கிட்டயும் சொல்ல கூடாது மித்ரன் அண்ணா கிட்ட வீட்டில் போய் உலரிக்கிட்டு இருக்காத என்று கூறினாள்.
வெண்பா-என்னாச்சு டி உனக்கு ஏன் டி ஏதோ மாரி பேசற
விவேகா-நான் சொன்னது உன்னோட நியபகத்தில் இருக்கட்டும் வெண்பா என்று கூறி கொண்டே அவளது block சென்றாள் விவேகா.
வெண்பா அவள் வகுப்புக்கு வர அனைத்து மாணவர்களும் ஏய் வெண்பா இப்போ ஒரு பொண்ணு வந்ததே
வெண்பா-புருவம் சுருக்கி யாரு வந்தா என்று கேட்க
பசங்க-அது தான் அந்த கண்ணழகி எந்த dept
வெண்பா- அவள பத்தி உங்களுக்கு தெரியாது புரட்டி எடுத்திடுவா
பசங்க-அதை நாங்கள் பாதிருக்கிறோம் நீ சொல்லு
வெண்பா-IT dept
பசங்க-code word accepted என்று அவளை ஒரு முறை சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டனர்.
விவேகா நேராக வகுப்புக்கு வந்து அவளது இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.
ஆதி-விவேகா என்னாச்சு ஏன் இப்படி மாறிட்ட
விவேகா- ஒன்னும் இல்ல ஆதி சும்மா தான் என்று தன் கவலைகள் அனைத்தும் மறைத்து இயல்பாக இருப்பது போல் காட்டி கொண்டாள்.
மைதிலி-விவி என்னாச்சு டி ஏன் எல்லாம் திடீரென chage பண்ணிட்ட
விவேகா-இல்ல லிதி எனக்கு பிடிக்கல அது தான் என்னை நான் feel பண்ணல வேற ஒரு பொண்ணு மாறி எனக்கு தோணிச்சு அது தான்
ஆதி கண்களால் லிதிக்கு கண்ஜாடை செய்து அமைதியாக இருக்க சொன்னான்.
ஆதி-விவேகா ஆஃபீஸ் ரூம் ல fees பத்தி சொன்னதா சிவா சொன்னான்
விவேகா-ஆமா ஆதி இனிமே அந்த compition க்கு ரெடி ஆகறது தான் என்னோட முழு targetம் என்று தண்ணீர் குடித்து தன்னை சாதாரண மாக இருப்பது போல் காட்டிக்கொண்டாள்.
அடுத்த hour ஆரம்பிக்க இன்பா தன்னவளை பார்க்க ஆவலாக வந்தான். ஆனால் அவன் கண்டது விவேகாவின் கலையிழந்த முகம் தான் கண்கள் முழுவதும் சோகம் உயிர்ப்பு இல்லாத பார்வை தான்.
இன்பாவுக்கு என்ன பேச என்று புரியவில்லை சில நிமிடம் கழித்து தன்நிலைக்கு வந்தவன்.நாளைக்கு mock test சோ அதுக்கு prepare ஆகுங்க எல்லா students கும் lunch break ல model question bank கொடுப்பாங்க .என்று கூறினான்.
பின் அனைத்து மாணவர்களும் அவர்கள் நடத்திய பகுதியை போட்டு பார்க்க , படிக்க ஆரம்பித்தனர்.
இன்பாவுக்கு இருப்பு கொள்ள வில்லை .மனதில் காலையில் நன்றாக தானே இருந்தாள் . இப்போது என்ன ஆனது என்று மனம் முழுவதும் பாரமாக இருந்தது.
இன்பா-வைத்த கண் வாங்காமல் விவேகாவையே பார்த்து கொண்டு இருந்தான். ஆனால் விவேகா அவனை ஒரு பார்வை கூட பார்க்க வில்லை.
இரண்டு hours ம் இப்படியே செல்ல அவனும் விவேகா பார்ப்பாளா என்று ஒரு முடிவோடு இருக்க அவளோ இனி எது நடந்தாலும் தன் மனதை கட்டு படுத்தி கொண்டு இருந்தாள்.
உணவு இடைவேளை வந்தது. அனைவரும் என்ன செய்ய என்று அமர்ந்து இருக்க
இன்பா-முகத்தில் கடுமையுடன் கிளாஸ் டிஸ்மிஸ் என்று கூற அனைவரும் மிகவும் பயத்துடன் சென்றனர் இந்த முறை யாழினி, இனியாள் கூட பயந்து விட்டனர்.
இன்பாவுக்கு தன்னவளின் இந்த பாராமுகம் அலட்சியம் கோபத்தை ஏற்படுத்த தான் கொஞ்சம் கடுமையுடன் பேசினான் ஆனால் விவேகா அப்போதும் அசரவில்லை
விட்டால் போதும் என்று அனைவரும் கிளம்ப ஆதி, மைதிலி க்கு இது சரியாக படவில்லை.
விவேகா-ஏய் வா என்று மைதிலி ய எல்லாரும் போறாங்க என்று கூறி கொண்டே அவளது lunch box எடுத்து கொண்டு கிளம்பினாள்.
மைதிலி ஆதியை பார்க்க அவன் மறுப்பாக தலை அசைக்க
மைதிலி- விவி இரு டி தோ வரேன் ஏதோ தேடுவது போல் பாவனை செய்தாள். விவி நீ முன்னாடி போ நான் பின்னால் வருகிறேன் என்று கூறினாள்.
விவேகாவின் கால்கள் தானாக தன் மனம் போன போக்கில் நடந்தாள்.
விவேகா IT meeting hall தாண்டி செல்ல போக ஒரு வழிய கரம் விவேகாவை மீட்டிங் ஹாலுக்குள் இழுத்து கொண்டு சென்றது.
அது இன்பாவே தான் விவேகாவும் எதிர்பார்த்தது தான் இன்று ஒரு முடிவோடு பேசி விட வேண்டும் என்று அவனோடு உள்ளே சென்றாள்.
இன்பா விவேகாவை சுவற்றில் சாய்த்து
இன்பா -விவேகா என்னாச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க என்னை பார்க்கவே மாட்டிங்குற
விவேகா-நான் நல்லா தான் இருக்கேன் சார் first கொஞ்சம் தள்ளி போங்க என்னை விடுங்க நான் போகனும்.
இன்பா-நான் உன்கிட்ட நேற்று என்ன சொன்னேன் நீ கண்ணுக்கு மை வச்சுட்டு வா எனக்கு பார்க்கனும் போல இருக்கு அப்டின்னு ஏன் டி நீ வச்சுட்டு வரல
விவேகா- நீங்கள் சொன்னா நான் ஏன் செய்யனும் , பிலீஸ் leave me
இன்பா- என்னடி சும்மா போகனும் போகனும் ன்னு சொல்ற ஒரு மாதிரி பேசற any thing problem
விவேகா-ஆமா எனக்கு problem தான்
இன்பா-என்ன problem சொல்லு
விவேகா-எனக்கு நீங்கள் தான் problem பிலீஸ் என்னை விடுங்க
விவேகா அவ்வாறு கூறியதும் இன்பாவின் பிடி இறுகியது. என்ன டி சொல்ற என்னால உனக்கு என்ன problem
விவேகா-நீங்கள் என் கிட்ட என்ன சொன்னீங்க
இன்பா-என்ன சொன்னேன் என்று அவள் கைகளை வருடினான்
விவேகா-நானா உங்க கிட்ட வந்து பேசற வரைக்கும் நீங்கள் என்ன disturb பண்ண மாட்டேன் அப்டின்னு சொன்னீங்க
இன்பா- நீ வார்த்தை ல சொன்னால் தான் நீ என்னை விரும்பர அப்டின்னு தெரியுனுமா
விவேகா- அப்படி ஒன்னும் இல்ல அது எப்போதும் நடக்காது எனக்கு உங்களை பிடிக்கல தயவு செய்து என்னை disturb பண்ணாதீங்க உங்களை நான் கெஞ்சி கேட்டு கொள்கிறேன். என்று கூறி விட்டு இன்பாவின் கைகளை தட்டி விட்டு கதவு வரை சென்றாள்.
இப்போது இன்பா அவளை வன்மையாக தன் புறம் இழுத்தான்.
Episode 16,
இப்போது இன்பா அவளை வன்மையாக தன் புறம் இழுத்தான்.
இன்பா விவேகாவை தன் பக்கம் இழுத்தவன் அவளது முகவாய் பற்றி இப்போ சொல்லு டி
விவேகாவின் கண்கள் அங்கும் இங்கும் சுழல எப்போது விழுவேன் என்று கண்ணீர் கண்களில் நின்று கொண்டிருந்தது.
இன்பா-சொல்லு டி இப்போ சொல்லு என் கண்ணை பார்த்து சொல்லு டி
விவேகா- எனக்கு விருப்பம் இல்ல உ உ உங்களை பிடி பிடிக்கல .போதுமா இப்போ விடுறீங்களா
இன்பா-நீ பொய் சொல்ற விவேகா உன்னை பத்தி எனக்கு தெரியும்
விவேகா-என்னை பத்தி உங்களுக்கு ஒன்னும் தெரியாது.
இன்பா-ஏன் டி உனக்கு என்னாச்சு நேத்து வரைக்கும் நல்லா தான இருந்த வீட்டில் ஏதாவது பிரச்சனையா காலேஜ் ல ஏதாவது problem ஆ என்கிட்ட சொல்லு டி
விவேகா-எனக்கு எந்த problem ம் இல்ல அப்படியே இருந்தாலும் நான் எதுக்கு உங்க கிட்ட வந்து சொல்லனும் எனக்கு ஆதி இருக்கும் போது
இன்பா அவளை பார்த்து சிரித்தான்.
இன்பா-பரவாயில்லை விவி பேபி improvement ஆகிட்ட நீ இப்படி சொன்னா நான் கோபப்பட்டு உன்னை விட்டு விடுவேன் அப்டின்னு நெனைச்சியா
எனக்கு உன்னை பத்தியும் தெரியும் அந்த ஆதி பத்தியும் தெரியும் எனக்கு நீ அவன் கூட உரிமையா பழகறது தான் எனக்கு பிடிக்காது மற்ற படி அவன் எப்பவும் உன்னை தப்பான கண்ணோட்டம் கொண்டு பார்த்தது இல்லை விவேகா நீயும் அப்படி தான் so இந்த மாதிரி useless reason ஆ யோசிச்சு உன்னோட brain க்கு வேலை கொடுக்கறது நிறுத்து.
இப்படி நீ பேசினால் எனக்கு temptation ஆ இருக்கு அது கோபத்தால் இல்ல உன்னால தான் டி
விவேகா-நான் சொன்னேனா உங்க கிட்ட
இன்பா-i know டி
விவேகா-எனக்கு அவன் மேலே கொஞ்சம் interest இருக்கு
இன்பா-விவேகாவின் இடையை பற்றி பொய் சொல்லாத டி act பண்ணாத உன்னோட reason im not satisfied
விவேகா-என்ன சொல்லலாம் என்று யோசிக்க பின் எனக்கு police ன்னா சுத்தமா பிடிக்காது.
இன்பா-ஆனால் எனக்கு உன்னை தான் ரொம்ப பிடிக்கும் என்று அவளின் கன்னத்தை வருடினான்.
விவேகா-நான் IPS ஆக மாட்டேன்
இன்பா-ok நான் உன்னை எப்படியும் IPS ஆக்கிடுவேன்.
விவேகா-கோபாமாக ஆகமாட்டேன்
இன்பா-நான் உன்னை ஆக்கிடுவேன்
விவேகா- இந்த ஆண்பிள்ளைகளோட புத்தியே உங்க எண்ணத்தை திணிப்பது தானே கண்டிப்பாக நான் ஆக மாட்டேன்.
இன்பா-சிரித்து கொண்டே im impressed நீ lawyer ஆகி இருக்கலாம் பேபி
விவேகா-வேகமாக என்னை விட்டு தள்ளி போங்க என்று கூற
இன்பா-நான் உன்னை எனக்கு சொந்தம்மாக்கினதுக்கு அப்புறம் உன்னோட பெயரில் நீ IPS ஆகாமலே மிசஸ் விவேகா இன்பராகவன் IPS ஆக்கிடுவேன் என்று உதடுகளை குவித்து ஒரு முத்த குறியீட்டை காட்டினான்.
இன்பா-நான் இன்னும் உன்கிட்ட நெறைய எதிர்பார்த்தேன் பேபி still im waiting டார்ஜிலிங் என்று கூற
இப்போது விவேகா-நீங்க வேற status நான் வேற ஸ்டேட்டஸ் , அப்புறம் நீங்கள் என்னை விட ரொம்ப வயசு அதிகம் என்று கூறினாள்
இன்பா-ஏய் ஏன் டி இப்படி தேவை இல்லாத காரணம் கண்டு பிடித்து நீயே உன்னை கஷ்ட படுத்திக்கிற
விவேகா-இதுக்கு மேலே முடியாது என்று நினைத்தவள் பிலீஸ் என்னை விட்டு விடுங்கள். என்று கூற
இன்பா- எனக்கு உன்னை விட ஒரு 6 years தான் டிபரெண்ட் இன்னொரு விஷயம் நீ சின்ன பொண்ணு இல்ல இப்போ நீ என் வயசு பத்தி சொன்னதுக்கு நான் உன்கிட்ட எல்லை மீறி இருந்தேன்னு வை உன்னால என்னை தாங்கி இருக்க முடியாது டி
ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன் நீயா என்னை தேடி வருவ விவேகா நான் உன்னை வர வைப்பேன் நான் இல்ல என்னோட love உண்மையானது.
இன்பாவே தொடர்ந்தான்-நான் உங்களை காதலிக்கிறேன் இன்பராகவன் அப்டின்னு நீயே என்னை தேடி வந்து சொல்லுவ டி என்று கூறி விட்டு விவேகாவின் கண்களில் உள்ள கண்ணீரை தன் kerchief கொண்டு துடைத்தான். பின் அங்கிருந்து அவளை பார்க்காமல் சென்று விட்டான்.
விவேகா இப்போது உடைந்து அழுதே விட்டாள். அவளின் மனதில் நம்மை இவ்ளோ புரிந்து வைத்து இருக்கிறாரே எப்படி இதை சமாளிப்பது. உனக்கு நான் வேண்டாம் இன்பா உங்கள் தகுதிக்கு நான் அந்த வார்த்தை சொல்ல கூட உரிமை இல்லை .
எனக்கு வயசு ஒரு விஷயம் இல்லை இன்பா ஆனால் எனக்கு உன்னோடு வாழ தகுதி இல்லை என்று நினைத்து கொண்டே சாப்பிட சென்றாள்.
விவேகா எந்த கவலையாக இருந்தாலும் உணவில் காட்ட மாட்டாள் அவளது அப்பா சொல்லி கொடுத்த பழக்கம் . இந்த ஒரு வேளை உணவு இல்லாமல் எத்தனை பேர் கஷ்ட படுவார்கள் என்ற எண்ணம் தான்.
இன்பா நேராக தன் ரூமிற்கு வந்தான் அவனை பார்த்த மித்ரன்
மித்ரன்-என்னாச்சு டா ஒரு மாதிரி இருக்க
இன்பா சுருக்கமாக கூறினான் .
மித்ரன்-இன்பா என்னடா சொல்ற என்று மிகவும் வருத்தம் கொண்டு பேச
இன்பா-இன்னிக்கு மோர்னிங் ல இருந்து afternoon வரை என்ன நடந்தது அப்டின்னு தெரிஞ்சுகனும்
மித்ரன்-இந்தா லேப்டாப் என்று கொடுக்க அதில் இன்பா பார்க்க ஆரம்பித்தான்.
இன்பா-மித்ரன் ஒரு ஸ்டாப் கிளாஸ் க்கு வந்து கூட்டி போறாங்க என்ன விஷயம்
மித்ரன்-இரு நான் போன் போட்டு கேட்கிறேன் என்று கூறி மச்சி fees பெண்டிங் ஸ்டுடெண்ட்ஸ் வர சொல்லி இருக்காங்க அப்புறம் விவேகா க்கு கொஞ்சம் அதிகமா இருக்கு
இன்பா-என்னடா சொல்ற செம் ஸ்டார்ட் ஆகி இப்போ தான் 2 months ஆகுது அதுக்குள்ள fees கட்டனுமா இப்படி ஒரு rules யாரு போட்டது இதை immediate ஆ சரி செய்யனும் என்று கூறி விட்டு
இன்பா அந்த video வ பார்க்க தொடர்ந்தான்.
இன்பா-மித்ரன் இங்க பாரு டா விவேகா wsah ரூம் உள்ளே போகும்போது கூட நல்லா தான் இருக்கா அவளோட face ஆ பாரு
மித்ரன்-ஏய் அங்க பாரு டா இந்த 3 girls உள்ள போய்ட்டு return எவ்ளோ சந்தோஷமா வராங்க விவேகா எங்கே இன்னும் வரல
இன்பா-இரு நான் fast ல வைக்கிறேன் என்று போட அவள் மிகவும் சோக முகத்துடன் கீழே சென்றாள்
மித்ரன்-என்னாச்சு டா அவ எங்க போயிருப்பா அவ கீழ போகும்போது தான் நீ மேலே வந்த என்று கூற
இன்பா-மீதி videos இவ்ளோ தான் நான் cam set பண்ணேன்
மித்ரன்-அப்போ காலேஜில் camera இருக்கும் தான அதுல பார்க்கலாம். என்று இருவரும் அந்த காலேஜ் கேமரா ரூம் க்கு சென்றனர்.
மித்ரன்- அவ எங்க டா போறா
இன்பா- IT dept nearஆ civil, cs ,mech
மித்ரன்-mech பாரு
இன்பா-அங்கே போகல டா
மித்ரனும் , இன்பாவும் ஒரு சேர வெண்பா என்று கூறி cs போட அவர்கள் நினைத்தது போல் விவேகா அங்கு தான் சென்றாள்.
மித்ரன்-வாடா வெண்பா வ போய் பார்க்கலாம்
இன்பா-என்னடா வெண்பா கிட்ட நான் போய் எப்டி என்ன பேசறது
மித்ரன்-ஏய் வாடா நான் கேட்கிறேன் என்று கூறி இருவரும் cs dept சென்றனர் ஒரு staff கிட்ட கூறி வெண்பாவை வர சொல்ல
வெண்பா-வேகமாக சாப்பிட்டு முடித்து விட்டு dept சென்றாள்.
அங்கு மித்ரனும், இன்பாவும் இருக்க
வெண்பா-மனதில் இவனுங்க எதுக்கு இங்கே வந்திருக்கானுங்க என்று நினைத்து கொண்டே
என்னடா மித்ரன் இப்போ தான் என்னை பார்க்கணும் னு தோனிச்சா சொல்லு என்று கூறி கொண்டே அருகில் வந்தாள்.
மித்ரன்-வெண்பா செல்லம் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் டா
வெண்பா-என்னடா இன்னிக்கு என் மேலே பாசம் வழியுது
மித்ரன்- வெண்பா மா அந்த பொண்ணு இங்கே உன்னை எதுக்கு பார்க்க வந்தாள்
வெண்பா-எந்த பொண்ணு
மித்ரன்-IT dept ல உனக்கு ஒரு friend இருக்கா தானே அவ தான்
வெண்பா- யாரு யாருமே வரலேயே என்று அவள் சமாளிக்க
மித்ரன்-இப்போ பொய் சொல்லாத விவேகா உன்னை பார்க்க வந்தாள் தானே
வெண்பா-இல்ல அண்ணா அந்த பொண்ணு அவ்ளோ கிலோஸ் இல்ல கிளாஸ் hour ல அவ எதுக்கு வரனும் நீயே சொல்லு
இன்பா-CCTV footage ல இருக்கு அது எப்படி
வெண்பா-அண்ணா sorry நான் சொல்லிடறேன் விவேகா ஒரு மாதிரி வந்தாள் என்னை கட்டி பிடித்து அழுது இந்த makeup remove பண்ணனும் னு சொன்னா
நான் ஏன் டி அப்டின்னு கேட்டேன் நீ செய்விய மாட்டியா என்று என் கிட்ட கேட்க நான் help பண்ணேன் ஜடை போட்டு விட்டேன்
அப்புறம் விவேகா போகும்போது என்கிட்ட மித்ரன் கிட்ட யாரு கிட்டயும் என்னை பத்தி சொல்லாத அப்டின்னு சொல்லிட்டு போய்ட்டா அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல
மித்ரன்-சரி நீ போ கிளாஸ் க்கு
வெண்பா-அண்ணா ஏதாவது problem ஆ விவேகா ரொம்ப நல்ல பொண்ணு எனக்காக அவளை விட்டு விடுங்கள்
மித்ரன்-i say go to your class
வெண்பாவும் வெளியே செல்ல அவள் வகுப்பு தோழர்கள் கொஞ்சம் சத்தமாக
பசங்க-ஏய் வெண்பா அந்த கண்ணழகி பெயர் என்ன சொல்லு
வெண்பா-போங்க டா
பசங்க-ஏய் சொல்லு பிலீஸ் நாங்கள் இப்போ IT dept போறோம் வெண்பா
வெண்பா-மனதில் நீங்கள் இன்னிக்கு அவ்ளோ தான் என்று நினைத்து அவ பெயர் விவேகா என்று கூற
பசங்க அனைவரும் விவேகா என்று ஒரு சேர கூறும் நேரம் இன்பாவும், மித்ரனும் வெளியே வர
அவர்களை கண்டு கொள்ளாமல் தங்களுக்குள் மச்சி வாடா போய் அவளை பார்த்து விட்டு வரலாம் என்று கிளம்பினர்.
மித்ரன்-இன்பனை பார்த்து you creats heavy competition மச்சி
இன்பா-அதை காதில் போட்டு கொள்ள வில்லை அவன் IT dept செல்ல அந்த பட்டாளங்கள் அங்கு விவேகாவை பார்க்க காத்து கொண்டு இருக்க
இன்பா-boys என்று கோபம் நிறைந்த குரலில் கூற
பசங்க-யார் என்று பார்க்க இன்பா கோபத்தின் மறு உருவமாக நின்று கொண்டிருந்தான் அவர்கள் என்ன சொல்வது என திரு திருவென முழிக்க
இன்பா- what are you doing? Which department என்று கூற
பசங்க-சார் கொஞ்சம் IT library க்கு வந்தோம் அசைன்மெண்ட் work ஆஅ
இன்பா-ground floor என்ற ஓரே வார்த்தை தான் ஒரு ஒருவன் கூட அங்கு இல்லை ஓடி விட்டார்கள்.
மித்ரன்-மச்சி இப்போ என்னடா பண்ண போற
இன்பா-அந்த 3 girls அவங்க விவேகா கிட்ட ஏதும் சொல்லி இருப்பாங்க அதனால தான் அந்த லூசு இப்படி என்னையும் சுத்த விடுறா கண்டு பிடிக்கிறேன்.
மித்ரன்- இன்பா நாளைக்கு ஒரு நாள் தான் டா நம்ப காலேஜ் வருவோம்
இன்பா-சிரித்து கொண்டே இல்ல டா SPR காலேஜ் குள்ள போக ஒரு Oppertunity கெடைச்சு இருக்கு so இனி அந்த காலேஜ் போற வரை இங்க தான்
இது விவி க்கு தெரியாது
மித்ரன்-சரி ok டா
இன்பா-என்னோட நிம்மதியே உன்னால தான் டி போச்சு
Episode 17,
இன்பா-என்னோட நிம்மதியே உன்னால தான் டி போச்சு என்று மனதில் நினைத்து கொண்டவன் முதலில் தன் அம்மாவிற்கு போன் செய்தான்.
வசுமதி- சொல்லு ராகவ்
இன்பா-அம்மா இங்க காலேஜ் ல management ல பெரிய fault மா
வசுமதி-என்னாச்சு ராகவ்
இன்பா-நடந்த விஷயம் கூற தேவையான தகவல் மட்டும் கூறினான்
வசுமதி-இதை கேட்டு மிகவும் கோபபட்டார் ராகவ் விடு டா எங்க அண்ணா கிட்ட பேசி நாளைக்கே இதுக்கு solution கொண்டுவறேன்
இன்பா-சரி மா என்று வைத்து விட்டான்.
மித்ரன்-சரி வாடா சாப்பிடலாம்
இன்பா-நான் வரல டா என்று மிகவும் வலி நிறைந்த குரலில் கூற
மித்ரன்-விடு மச்சி உன்னோட டார்ஜிலிங் உனக்கு நிச்சயமாக கிடைப்பாள் நான் என்னால் முடிஞ்ச help பண்றேன் டா என்று கூற இன்பா அணைத்து கொண்டான்
இப்போது மித்ரன்-அப்போ எக்ஸாம் monday வச்சுக்கலாம் டா நாம்ப போய் சொல்லிட்டு வரலாம் டா
இன்பா-மித்ரன் எல்லா கிளாஸ் கும் போய் சொல்லு last ஆ விவேகா கிளாஸ் க்கு போய் சொல்லிக்கலாம்.
இனிமே தான் இன்பாவோட game start ஆகுது என்று கூறியவன் அவளுடைய வகுப்புக்கு அந்த நாள் செல்லவே இல்லை எங்கே மீண்டும் சென்றால் விவேகாவின் பாராமுகம் அவனுக்கு மனம் மிகுந்த வலி தரும்.
அனைத்து மாணவர்களும் அடுத்த நாள் அந்த தேர்வுக்காக காத்திருந்தனர். விவேகாவும் அந்த SPR college compition ல கலந்து கொண்டு வெல்ல வேண்டும் என்று அவளுடைய அனைத்து கோபமும் கவலையையும் படிப்பில் வெறியாக படித்தாள்.
மாலை கங்கா வருவதற்கு முன்னவே வீட்டிற்கு சென்றவள் . தன்னை இயல்பாக காட்டிக்கொண்டாள்
விவேகா,அம்மா நான் படிக்கிறேன் என்று கூறி உள்ளே சென்றவள் தான் அவளது புத்தகம் ஒன்று எடுத்து அதில் வைத்து இருந்த அந்த பூவை அந்த மகிழம் பூ எடுத்து முகர ஆரம்பித்தாள் அந்த படித்த பேதை
விவேகா,மனதில் எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் இன்பா உன்னை மட்டும் தான் எனக்கு பிடிக்கும் நான் உன்கூட சேர வேணாம் இன்பா நான் கண்ணனோட மீரா மாறி உன்னை நினைத்து கொண்டே வாழ்திடுவேன். என்று கண்ணீர் சிந்தினாள்.
இன்னும் நீ ஒரு நாள் தானே வருவ உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியாதே no problem இந்த பூ இருக்கே இதோட வாசம் அது நீ தான் என் பக்கத்தில் இருக்கிற மாதிரி எனக்கு company கொடுக்கும் என்னோட sweet என்று கூறி பின் படிக்க ஆரம்பித்தாள்.
இங்கு இன்பாவோ தன் வீட்டிற்கு மிகவும் சோகமாக கண்களில் உயிர்ப்பு இல்லாமல் வந்தான்.
அவன் வருவதற்காகவே சுபா காத்து கொண்டு இருந்தாள் .
சுபா-என்னடா எதுக்கு காலைல என்னை தூக்கி எல்லாம் சுத்துன என்று முகமெல்லாம் புன்னகையுடன் வந்தாள்.
இன்பா-ஒன்னும் இல்ல சுபா என்னை கொஞ்சம் தனியா விடு பிலீஸ் என்று வருத்தத்துடன் அவன் அறைக்கு சென்றான்.
சுபா-மனதில் இந்த 6 days ஆஅ டிபரெண்ட் ஆஅ behave பன்றானே எப்பவும் விறைப்பா சுத்துவான் ஆனால் இந்த ஆறு நாளும் சந்தோஷமா இருந்தான் இப்போ என்ன ஆச்சு என்று இன்பாவுக்கு ஒரு கிண்ணம் pine apple கேசரி எடுத்து கொண்டு அவன் அறைக்கு சென்றாள்.
சுபா-இன்பா உள்ளே வரட்டுமா
இன்பா-வா சுபா
சுபா-உனக்கு பிடிக்கும் அப்டின்னு நான் pine apple கேசரி பண்ணினேன்
இன்பா-அதை வச்சுட்டு போ அக்கா என்றான்
சுபா-என்ன தான் உனக்கு பிரச்சனை இன்பா சொன்னா தானே எனக்கு தெரியும்.
இன்பா-சுபா எப்டி சொல்றது அப்டின்னு தெரியல
சுபா- இப்போ சொல்ல போறியா இல்லயா நான் போறேன்.
இன்பா- சுபா என்னோட friend அவன் பேரு விஸ்வா அவன் ஒரு பொண்ண லவ் பண்ணினான். அந்த பொன்னும் லவ் பண்ணுச்சு விஸ்வா சொல்லிட்டான் நான் உன்னை தான் கட்டிப்பேன் விரும்புறேன் அப்டின்னு ஆனால் அந்த பொண்ணு நீங்கள் வேற ஸ்டேட்டஸ் நான் வேற ஸ்டேட்டஸ் உங்களுக்கு நான் தகுதி இல்ல அப்டின்னு அவளோட காதலை மறைத்து விஸ்வா வை ரொம்ப கஷ்ட படுத்தி கிட்டு இருக்கா சுபா
இதை கேட்ட சுபாவிற்கு ஒரு நிமிடம் இதயத்தில் வலிப்பது போல் உணர்ந்தாள். அவளும் இதே காரணத்தால் தான் வெண்பாவின் அண்ணன் சரவணனால் நிராகரிக்க பட்டிருக்கிறாளே
சுபா-ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள் தன்னை சரி செய்து கொண்டு இன்பா உன்னோட friend லவ் பண்ற பொண்ணு உண்மையாகவே விஷ்வா வை விரும்புகிறாளா
இன்பா-ஆமா சுபா அவ கண்ணுல நான் பார்த்தேன் அக்கா
சுபா-அப்படினா விஷ்வா அந்த பொண்ணு கிட்ட ஆண் ஆதிக்கம் இல்லாமல் அவளிடம் கொஞ்சம் மென்மையாக அவனோட காதல் பத்தியும் இந்த தகுதி, ஸ்டேட்டஸ் எல்லாம் தேவையில்லாத ஒன்னு அப்டின்னு prove பண்ணனும் என்று கூறினாள். எவ்ளோ நாள், மாசம், ஏன் வருஷம் கூட ஆகலாம் ஆனால் புரியவைக்கனும் இன்பா
இன்பா-சற்று கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்தவன் சரி சுபா கொடு என்று அதை வாங்கி கொண்டு சுபாவை அனுப்பினான்.
சுபா சென்றதும் அவன் கதவை தாளிட்டு அவனுடைய போனில் இன்று விவேகா காலையில் பஸ் ல இருந்து பின் அந்த2 ஹௌர் videos எடுத்து பார்த்து கொண்டே அந்த கேசரியை சாப்பிட்டான்.
இன்பா-விவேகா சத்தியமா செம்மையா இருக்க டி அந்த கண்ணு அந்த மச்சம் என வருடிக்கொண்டே இதழ் பதித்தவன் அய்யோ முடியலயே என்று அவள் இதழுக்கு வந்தவன் எப்போ டி என்னை பூட்ட போற
ஆனாலும் சும்மா சொல்ல கூடாது உனக்கு உடம்பு முழுக்க திமிரு டி time வரட்டும் கூடிய சீக்கிரம் வரும் நான் வர வைப்பேன் என்னோட age பத்தி பேசரயா அதுக்கு இருக்கு
உன்னை ஓயாமல் யோசிக்கிற இந்த மூளைக்கு ஒரு புத்தி கலங்குற முத்தம் கொடுக்கணும் அதுக்கு அப்புறம் உன்னால பேசவே முடியாது டி கேடி என்று அவளை நினைத்து கொண்டே உறங்கிப்போனான்
இங்கு சுபாவிற்கு சரவணன் நினைவுகள் தான் அவள் பள்ளி பருவத்தில் இருந்தே சரவணனை காதலிக்கிறாள். அவனும் இவளை விரும்புகிறான் ஆனால் சொன்னது இல்லை . தன்னவனின் நினைவில் அவள் நித்திரைக்கு சென்றாள்.
அடுத்த நாள் சீக்கிரம் விடிந்தது இன்று இன்பா சுபா கூறியது போல தன்னை தயார் படுத்தி கொண்டான். இன்று மிகவும் அழகாக blue ஜீன், white shirt, ஒரு கையில் வாட்ச் என்னையும் போட்டு கொள் என்பது போல இன்னொரு கையில் சுபா வங்கிகொடுத்த பிளாட்டினம் காப்பு அந்த coolers வேற level , அவனது கழுத்தில் எப்போதும் இருக்கும் மெல்லிய chain இன்று மிகவும் அழகாக அந்த சட்டையில் முதல் ஒரு பட்டன் மட்டும் கழன்று இருக்கும் அதில் அந்த செயின் இவனது நிறத்திற்கு மின்ன police என்பதால் அவனது இடுப்பில் அந்த police முத்திரை பதித்த பெல்ட் இன்று விவேகாவை தன் வலையில் விழ வைப்பதற்காகவே இந்த dimention .
இன்பா தன்னை ஒரு முறை பார்த்து திருப்தி அடைந்தவன். விவி பேபி im waiting for your expression என்று காலேஜ் க்கு கிளம்பினான்.
விவேகா மறுபடியும் சோக கீதம் வாசித்து கொண்டே தன்னுடைய காலேஜ் க்கு வந்தாள்.இவள் தான் முதலில் வகுப்பு வந்து சேர்ந்தாள்.
தன்னுடைய இடத்தில் எப்போதும் போல் அமர்ந்து கொண்டு இன்னும் வகுப்புக்கு யாரும் வர வில்லை என்று உறுதி செய்தவள் அந்த மகிளம் பூ வாசத்தை தன்னால் முடிய உறிஞ்சி கொண்டாள்.
இப்போது அனைவரும் வர ஆரம்பித்தனர் காலையில் படிக்க ஆரம்பித்து விட்டாள்.
ஆதி-விவி எப்போ வந்த
விவேகா-நான் தான் ஆதி first என்று படிக்க ஆரம்பித்தாள்
ஆதி-ஏய் இந்தா lolly பாப் என்று கொடுக்க
விவேகா-அதை பார்த்ததும் இன்பாவின் நியாபகம் வர வேண்டாம் என்று மூளை சொன்னாலும் மனம் வாங்க சொல்ல வாங்கி கொண்டாள்.
மைதிலி-ஆதி இப்போ யார் வருவா
ஆதி-மித்ரன் சார் தான் 1 hour
மைதிலி- சரி ok என்று அவளும் படிக்க ஆரம்பித்தாள்.
மித்ரன் வகுப்பறைக்கு வந்தவன் monday தான் எக்ஸாம் அதனால் கொஞ்சம் டென்ஷன் இல்லாமல் இருங்க ஸ்டுடெண்ட்ஸ் என்று கூற
இனியாள்-சார் நீங்கள் வந்துருகிங்க இன்பா சார் வரலையா
இனியாள் அப்படி கூறியதும் விவேகா தன் கவனத்தை மித்ரன் என்ன சொல்கிறான் என கவனிக்க தெரியல மா என்று மித்ரன் விவேகாவை பார்த்து கொண்டே கூறினான்.
இன்று இனியாள் விவேகா நேற்று வந்தது போல் தன்னை make up அதிகமாக செய்து கொண்டு வந்தாள் ஆனால் யாரும் அவளை கண்டு கொள்ள வில்லை ஏன் என்றால் எப்போதும் இவள் ஒப்பனையுடன் தான் இருப்பாள்.
விவேகா-மனதில் என்ன இவர் நம்மை பார்த்து கொண்டே கூறுகிறார் ஒரு வேளை இந்த வெண்பா, இன்பா யாராவது சொல்லி இருப்பார்களோ என்று நினைத்து கொண்டே தன் புத்தகங்கள் பார்க்க
அப்போது வந்தான் இன்பன் அந்த அவனின் காலடி ஓசைகளே சொன்னது அவன் வந்து கொண்டு இருக்கிறான் என்று
விவேகாவின் வகுப்பறைக்கு உள்ளே வந்தவன் அவனது தோரணை கண்டு அனைவரும் ஆ என இன்பாவ பார்க்க ஆனால் விவேகா அவனை ஒரு பார்வை கூட பார்க்கவில்லை.
மைதிலி-ஏய் அங்கே பாரு டி
விவேகா- எங்கே பார்க்க சொல்ற
மைதிலி-அவளது முகத்தை திருப்பி காட்ட விவேகா ஒரு நிமிடம் இன்பா வை தன் மனதில் நிறைத்து கொண்டாள்
விவேகா-மைதிலி கைகளை தட்டி விட்டவள் இப்போ என்ன டி அங்கே fashion ஷோ வா நடக்குது
மைதிலி-போடி இன்னிக்கு இன்பா சார் செம்மையா இருக்காரே ம்ம்ம் யாருக்கு கொடுத்து வைத்து இருக்கோ என்று வாய் விட்டு கூறினாள்.
விவேகா-அவளை முறைக்க
மைதிலி-இப்போ எதுக்கு என்ன முறைக்கிற போ போ என்று கூற
இனியாள்-சார் இன்னிக்கு சூப்பர் ஆ இருக்கீங்க என்று எழுந்து கூற
இப்போது விவேகாவிற்கு இனியாள் மீது கோபம் வர இன்பாவின் மீது அளவு அதிகமான கோபம் வந்தது
மைதிலி-நான் நினைச்சேன் விவி இனியாள் சொல்லிட்டா என்று கூற
விவேகா -இப்போது அவள் கண்களில் கண்ணீர் வந்து விட்டது
விவேகா-மனது இவன் மனசில் என்ன நினைத்து கொண்டு இருக்கிறான் இங்கே என்ன சுயம்வரமா நடக்குது எல்லா girls ம் இவனையே பார்க்கிறார்கள் அதுவும் அந்த இனியாள் அவனை தின்பது போல பார்கிறாளே என்று கண் கலங்க அதை கை குட்டையில் துடைத்து கொண்டாள்.
இன்பா-ரொம்ப thanks இனியாள் நீங்களும் இனிக்கு அழகா இருக்கீங்க என்று கூற கிளாஸ் மொத்தமும் இண்பாவை தான் பார்த்தது
இன்பா-மனதில் விவேகா இது சும்மா கொஞ்சம் தான் டி அழு நல்லா அழு உனக்கு திமிரு டி உன்னை
Episode 18,
இன்பா-மனதில் விவேகா இது சும்மா கொஞ்சம் தான் டி அழு நல்லா அழு உனக்கு திமிரு டி உன்னை என்று அவன் நினைத்து கொண்டு இருக்க.
மித்ரன்-இன்பா பின்னாடி ரொம்ப வருத்த பட போற டா அவ ரொம்ப tension ஆ இருக்கா டா
இன்பா-அது இவளுக்கு தேவை தான் இவள சும்மா விட கூடாது டா என்ன பண்ணலாம் என்று யோசித்தவன்
இன்பா-மித்ரன் combine கிளாஸ் வெச்சிடலாம் டா அப்போ இன்னும் tension ஆவா மச்சி இப்போவே வந்து என்னை கட்டிப்பா டா
விவேகா தண்ணீரை குடித்து தன்னை சமன் செய்தவள்.
விவேகா-மனதில் அவனை நினைக்காதே விவேகா அவன் இங்கே வரவே இல்லை அப்டின்னு நினைச்சுக்கோ.
விவேகா -இப்போது கவனம் முழுவதும் தன் படிப்பு அந்த போட்டிக்கு தயார் செய்தாள் இன்னும் 4 நாட்கள் தான் உள்ளது.
மித்ரன்-எல்லாம் ஆடிட்டோரியும் வாங்க combine ஆ எல்லா dept சேர்ந்து revise பண்ணுங்க என்று கூறியதும் மாணவர்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது எல்லா dept பொண்ணுங்களும் வருவாங்க
அனைவரும் சந்தோச மன நிலையில் கிளம்ப விவேகாவுக்கு ஏதோ தோன்றியது
விவேகா-இந்த idiot காரணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டானே என்று நினைத்து கொண்டு அவள் முன்னே கிளம்ப ஆதியும் சிவாவும் கொஞ்சம் பின்னே வந்தனர்.
ஆதியின் மீது திடீரென ஒருவன் வந்து மோத ஆதி சற்று நிதானித்து நின்றான்.
ஆதி-பார்த்து வர மாட்டீங்களா இப்படி தான் மேல் வந்து இப்படி இடிப்பீங்களா
அந்த பையன்-sorry bro ஒரு பேய் என்னை துரத்தி வருது அது கிட்ட இதை கொடுதிடுங்க என்று கூறி அவன் ஓட
பின்னால் அவள் அவனை துரத்தி கொண்டே வந்தாள். ஆதி அதை பார்க்க அது ஒரு foregion author book cs dept அட்டை பக்கம் கிழிய லேசாக ஆதி அதை திறக்க அது முழுவதும் கிழிந்து விட்டது.
ஏய் எங்கடா ஓடுற உன்னை சும்மா விட மாட்டேன் என்று கூறி கொண்டே வர அங்கு ஆதியும் சிவாவும் நின்று இருந்தனர்.
அந்த பெண்-ஹலோ அண்ணா இங்க ஒரு பிசாசு ஓடி வந்ததே பார்த்தீர்களா அவள் யாரும் இல்லை அது வெண்பாவே தான்
ஆதி-இல்ல பாப்பா இதை என் கிட்ட கொடுத்து விட்டு அவர் போயிட்டாரு இது lite ஆ கொஞ்சம் கிழிந்து போச்சு
அந்த பெண்-என்னடா சொல்ற கிழிஞ்சு போச்சா இது எவ்ளோ rate தெரியுமா
ஆதி- டா வா இப்போ தான் அண்ணா அப்டின்னு கூப்பிட்ட இப்ப டா சொல்ற
வெண்பா -நான் அப்படி தான்டா கூப்பிடுவேன் உனக்கு என்னடா மரியாதை என் என்னோட புக்கு காஸ்ட்லி தெரியுமா
ஆதி -அதுக்கு என்னை என்ன பண்ண சொல்ற அந்த பையன் குடுத்துட்டு போகும்போது புக்கு கிழிஞ்சு தான் இருந்தது
வெண்பா- போச்சு போச்சு எனக்கு தெரியாது இந்த புக்குக்கு உண்டான அமௌன்ட் நீதான் தரணும்
ஆதி- நான் எதுக்கு தருவேன் நான் தரமாட்டேன்
வெண்பா- எந்த டிபார்ட்மென்ட் நீ
ஆதி -நான் எந்த டிபார்ட்மென்ட் இருந்தா உனக்கு என்ன
வெண்பா- சொல்லுடா
ஆதி- இவ்வளவு தைரியமா உனக்கு நான் ஐடி டிபார்ட்மெண்ட்
வெண்பா -எனக்கு ஐடி டிபார்ட்மெண்ட்ல ஆள் இருக்கு உன்னை எப்படி என்ன பண்றேன்னு பாரு
ஆதி -பாக்கலாம் பாக்கலாம் என்று
வெண்பா விடம் பேசி முடித்து ஆதியும் சிவாவும் ஆடிட்டோரியம் சென்றனர்
சிவா-மச்சா அவ என்னா வாயி பாரு டா ரொம்ப மோசம்
வழக்கம்போல் மைதிலியும் விவேகமும் கடைசியாக அமர்ந்திருக்க
அவர்கள் எங்கே அமர்ந்திருக்கிறார்கள் என்று பார்த்து அந்த வரிசையில் மாணவர்கள் பக்கமாக ஆதியும் சிவாவும் அமர்ந்துகொண்டனர்
வெண்பா மிகவும் கோபமாக ஆடிட்டோரியம் சென்றாள் அவளைக் கண்ட விவேகா
விவேகா -வெண்பா இங்க வாடி என்ன ஆச்சு நீ ரொம்ப அப்செட்டா இருக்க மாதிரி இருக்கு
வெண்பா -ஆமாடி நான் ஒரு பிசாசு பார்த்துட்டு வந்தேன் இங்க பாரு என்னோட புக்கு மொத்தமும் கிழிச்சு வச்சுட்டான்
விவேகா-அப்படியா யாரது சொல்லு அவன ஒரு வழி பண்ணியது
வெண்பா- உன்னோட டிபார்ட்மென்ட் தாண்டி
விவேகா-என்னோட டீச்சர் கே தொல்லை கொடுக்கிறார்களா விடு அவனை ஒரு வழி பண்ணிடலாம்
அனைத்து மாணவர்களும் அவரவர்கள் டிபார்ட்மெண்ட் வாரியாக அமர்ந்திருக்க சாதனாகீர்த்தனா மித்ரன் மூவரும் வந்தனர் இன்பாவை மட்டும் காணவில்லை
மித்ரன் -ஸ்டூடண்ட்ஸ் ஒரு நிமிஷம் எல்லாரும் ஒரு பேப்பர்ல இந்த one week கிளாஸ் உங்களுக்கு usefulலா இருந்ததா நீங்க அதுல ஏதாவது learn பண்ணிங்களா அப்படிங்கற விஷயத்தையும் Feed back ஆ எழுதி கொடுங்க
மித்ரன் -ஒரு டென் மினிட்ஸ் டைம் தரேன்
அனைத்து மாணவர்களும் மாணவிகளும் எடுத்து எழுத ஆரம்பித்தனர்
இங்கு விவேகாவும் அந்த பேப்பரை வைத்துக்கொண்டு அதில்சொல்வதற்கு எதுவும் இல்லை என்று எழுதி வைத்தாள் அதை English இல் மறுபடியும் no comments simply என எழுதினாள்
மைதிலி -ஏய் என்னடி எழுத நீதான் ரொம்ப நல்லா எழுதுவ ப்ளீஸ் எனக்கும் கொஞ்சம் காட்டு டீ நான் உன்ன பார்த்து எழுதுகிறேன்
விவேகா- நீயே own ஆ எழுதுடி நான் உனக்கு காட்ட மாட்டேன்
மைதிலி- விவி விவி ப்ளீஸ் காட்டு
விவேகா- பார்த்துக்கொள்
மைதிலி -அதைப்பார்த்த உடன் அவளுக்கு மயக்கம் வராத குறைதான்
மைதிலி -விவேகா என்னடி இப்படி எழுதி வச்சி இருக்க
அனைத்து மாணவர்களும் எழுதிக்கொண்டிருக்கும் போது இன்பன் வந்தான்
அவனை பார்த்ததும் அனைத்து மாணவிகளும் ஏய் செம்மையா இருக்காரு டி இவரு நமக்கு வந்திருக்கலாம் IT டெபிட் போட்டாரு
விவேகா-இன்பா அங்கு இருப்பதாகவே பொருட் படுத்த வில்லை
அவன் வந்த சிறிது நேரத்தில் ஆபீஸ் ரூம் இருக்கிறது ஒரு ஆஃபீஸ்ர் ஆப் வந்தார்
அலுவலக பணியாளர் -சாரி பார் தே இன்கன்வெனியன்ஸ் ஸ்டூடண்ட்ஸ் உங்களுக்கு பீஸ் கட்ட இன்னும் இந்த செமஸ்டர் முடியும் வரை கால அவகாசம் இருக்கிறது
எனவே அனைத்து மாணவர்களும் அவர்களது கல்லூரி கட்டணங்களை முடிந்தவரை சீக்கிரம் கட்டுமாறு மேனேஜ்மென்ட் கலந்து பேசி இந்த முடிவினை எடுத்துள்ளது என்று கூறிவிட்டு அந்த அலுவலகப் பணியாளர் சென்றார்
விவேகா இதைக் கேட்டவுடன் மிகவும் சந்தோஷப்பட்டாள் உடனே ஒரு சேர ஆதியின் விவேகவும் பார்த்துக்கொண்டனர்
இன்பா -மனதில் இவளுக்காக நாம் என்னவெல்லாம் செய்கிறோம் ஆனால் நம்மை ஒரு பார்வை பார்க்கிறாளா என்று மனதில் நினைத்துக் கொண்டான்
இன்பா -மித்ரன் எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்காங்க
மித்ரன்-எல்லாரையும் feed back எழுத சொல்லி இருக்கிறேன். நீ தானே என்கிட்ட சொன்ன
சாதனா-மித்ரன் சார் கலெக்ட் பண்ணட்டுமா
மித்ரன்-நீங்கள் போன dept மட்டும் வாங்குங்க நாங்கள் தனியாக வாங்கிக்கொள்கிறோம்
கீர்த்தனா-ok சார் என்று கலெக்ட் செய்தனர்
இப்போது சாதனா- shuffle செய்து ஒரு 5 feed back எடுத்து அனைவர் முன்னால் படித்தாள் அதில் மாணவிகள் தங்களுக்கு இன்பா, மித்ரன் வர வில்லேயே என்று வருத்த பட்டு எழுதி இருந்தனர்.
இப்போது மித்ரன் அனைத்தும் கலெக்ட் செய்தான். பின்னால் விவேகா அமைதியாக படித்து கொண்டு இருந்தாள்.
மாணவர்கள்-சார் சாதனா மேம் மாறி நீங்களும் shuffle பண்ணி ஒரு 5 feed back படித்து காட்டுங்கள் சார்
மித்ரன்-அதே போல் 5 feed back எடுக்க
இன்பா – மித்ரன் ஸ்டுடெண்ட்ஸ் யாரையாவது படிக்க சொல்லு என்று கண்ஜாடை செய்ய
மித்ரன்-last row last girl என்று கூற அனைவரும் யார் என்று திரும்ப அது மைதிலி
இன்பா-keep silence என்று ஒரு வார்த்தை தான் அனைவரும் pin drop silent ல இருந்தனர்
மைதிலி என்ன செய்வது என்று தெரியாமல் திரு திருவென முழிக்க
மித்ரன்-please read பண்ணுங்க மைதிலி என்று புன்னகையுடன் கூறினான்
மைதிலி- அந்த feed back படிக்க வெறும் காற்று தான் வந்தது .
இன்பா-மிஸ் மைதிலி அந்த feed back ஆ உங்க பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் பொண்ணு கிட்ட கொடுங்க என்று கூற
அது யார் என்று மாணவர்கள், மாணவிகள் அனைவரும் பார்க்க CS டெபார்ட்மெண்ட் பசங்க ஒரு சேர ஓகோ ஓ ஓ என்று கத்தினார்கள்
வெண்பா-இவனுங்க வேற நேரம் காலம் புரியாமல் போச்சு நல்லா வாங்கி கட்டிக்கொண்டு போராணுக நமக்கு என்ன என்று விவேகாவை பார்த்தாள்
இன்பா-கொஞ்சம் sound ஆ படிங்க மிஸ் விவேகா.
விவேகா-ok சார் என்று கோபம் நிறைத குரலில் கூறி படிக்க ஆரம்பித்தாள்
விவேகா-பிரஸ்ட் feed back சொல்வதற்கு ஒன்றும் இல்லை no கமெண்ட்ஸ் simply என்று படித்தாள்
மித்ரன்-முகம் மாறியது அனைத்து மாணவர்களும் சிரித்தனர்
மித்ரன்- இங்க கொடுங்க ஒரு நிமிடம் நான் படிக்கிறேன் என்று வாங்க அதில் அப்படி தான் இருந்தது
விவேகா-சார் last ஆ simply க்கு அப்புறம் என்ன வரும் என்று கேட்க பசங்க waste என்று கூற விவேகா வாய் விட்டு சிரித்தாள்
மைதிலி-ஏன் டி நீயே இப்படி போய் voluntry யா மாட்டிகற
மித்ரன்-யார் இப்படி feed back கொடுத்தது என்று கேட்க அனைவரும் silent ஆனார்கள்
இன்பா-விடு மித்ரன் அது யாருன்னு மட்டும் எனக்கு தெரியட்டும்
அதில் ஒரு மாணவி-சார் என்ன பண்ணுவீங்க
இன்பா-விவேகாவை பார்த்து கொண்டே என்ன பண்ணுவேணா அவங்கள கை, கால் ரெண்டும் கட்டி ஒரு ரூம்க்கு தூக்கிட்டு போய்
விவேகாவுக்கு மிகவும் படப்படப்பாக இருந்தது அவன் பேசும் போது கண்களை மூடி கொண்டாள்.
இன்பா- நான் அப்புறம் சொல்றேன் எப்படி பழி வாங்க போறேன்னு
இன்பா-நெஸ்ட் feed back read பண்ணுங்க
விவேகா-அடுத்து வந்த feed back ல நல்லா தான் இருந்தது அந்த last feed back பிரித்த உடனே கண்டுகொண்டாள் அது யாருடையது என்று அந்த hand writing
விவேகா ஒரு நிமிடம் அதை எடுத்து படித்து பார்த்தவள் . அந்த இனியாளயும் இன்பாவையும் முறைத்தாள்.
இன்பா-படிங்க என்று கூற
விவேகா-தயங்கினாள்.
இன்பா-என்னாச்சு படிங்க ஏன் இப்படி தயங்குறீங்க
விவேகா-இல்ல சார் இது உங்களோட personal feed back நான் எப்டி படிக்கறது
இன்பா-ஒரு ஏளன புன்னகை சிந்தியவன் அது உங்களுக்கு இப்போ தான் தெரியுதா no comments simply அந்த feed back படிக்கும்போது சொல்லி இருக்கலாம் தான
விவேகாவுக்கு இப்போது என்ன செய்வது என்று புரியாமல் முழித்தாள்.
இன்பா-ம்ம்ம் read பண்ணுங்க
இப்போது மாணவ மாணவிகள் அனைவரும் read it read it என்று கூற விவேகா படிக்க ஆரம்பித்தாள்.
அந்த feed back content
Hi சார் இந்த one week கிளாஸ் ரொம்ப நல்லா போச்சு நாங்க நெறைய learn பண்ணோம் . மித்ரன் சார் சூப்பரா கிளாஸ் எடுத்தார்.
இன்பா சார் உங்களை பத்தி சொல்லனும் அப்படின்னா நீங்கள் தான் என்னோட என்று விவேகா நிறுத்த
இன்பா- ம்ம்ம்ம் continoue பண்ணுங்க
விவேகா- நீங்கள் தான் என்னோட crush உங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் . என்று கூறும்போது அவள் குரல் கொஞ்சம் நடுக்கம் கண்டது.
நான் IPS க்கு prepare பண்ணலாம் ன்னு முடிவு பண்ணிட்டேன். Exam க்கு ரெடி ஆனதும் எல்லர் முன்னவும் உங்கள் கிட்ட வந்து உரிமையா நான் propose பண்ணுவேன் . விவேகா மீண்டும் நிறுத்த
இன்பா- ம்ம்ம் im impressed please contioue
விவேகா-i madly என்று கூறி நிறுத்தியவள் அவ உங்களை love பண்றாளாம் என்று கூறி இன்பாவின் கைகளில் அனைத்து feed back ம் கொடுத்து விட்டு தன் இடத்தில் அமர்ந்து கொண்டாள்
இங்கு கண்ணுகினியாள் மிகவும் அந்திரத்தில் பறப்பது போல் உணர்தவள் மனதில் அந்த feed back அந்த விவேகா படித்து கேட்பது மிகவும் உற்சாகமாக உணர்ந்தாள்.
மைதிலி- ஏய் அதுல யார் எழுதுனது அப்படின்னு name இருக்கா
விவேகா-மைதிலி லூசு feed back ல name mention பண்ண மாட்டார்கள் உனக்கு தெரியாதா
மைதிலி- அய்யோ ஆமா நான் மறந்துட்டேன் அந்த பொண்ணுக்கு ரொம்ப தைரியம் தான்
விவேகா-shut your mouth லிதி
மைதிலி-இப்போ நான் என்ன சொல்லிட்டேன் அப்டின்னு கோபபடற உனக்கு jealous ஆ இருக்கா
விவேகா-மைதிலி கழுத்தை நெறிப்பது போல் கைகள் கொண்டு போக
வெண்பா-இன்பா சார் அந்த simply waste எழுதிய fellow ஆ என்ன பண்ண போறீங்க அப்டின்னு சொல்லவே இல்ல பாதியில் நிறுத்தி விட்டிர்கள் we are eagarly waiting
விவேகா-மனதில் விவேகா உன்னோட எதிரி வெளிய இல்ல டி உன் கூட தான் சுத்துதுங்க என்று தலை மேல் கை வைத்தாள்.
மைதிலி-விவி நீ finish என்று அவள் அருகில் வந்து சொல்லி சிரித்தாள்.
இன்பா-விவேகாவை பார்க்க
Episode 19,
வெண்பா-இன்பா சார் அந்த simply waste எழுதிய fellow ஆ என்ன பண்ண போறீங்க அப்டின்னு சொல்லவே இல்ல பாதியில் நிறுத்தி விட்டிர்கள் we are eagarly waiting
இன்பா -விவேகாவை பார்த்து கொண்டே அந்த fellow ஆ கையையும் காலையும் கட்டி அப்படியே தூக்கிட்டு போய்
வெண்பா- ஜெயில் ல போட்டுடுவீங்களா
இன்பா-waste of time
விவேகா -தன் தலையை குனிந்து கொண்டு தன் கண்களை அங்கும் இங்கும் அலை பாய விட்டாள் அய்யோ கண்டு பிடித்து இருப்பானோ என்று கொஞ்சம் பயந்து ஓர கண்ணால் பார்த்து கொண்டு இருந்தாள்
பசங்க-அந்த person க்கு செம்ம guts தான் என்று கூற
மித்திரன்-சார் அது IT dept ல தான் எழுதி இருக்காங்க
இன்பா-ம்ம்ம் இனியாள் நீங்கள் சொல்லுங்க அது யாரா இருக்கும்
இனியாள்-I dont know சார்
மித்ரன்- யாரு கிட்ட கேட்கலாம் விவேகா நீங்கள் சொல்லுங்க
மைதிலி-விவேகா நீ இன்னிக்கு ஸ்வாஹா
விவேகா-சார் என்று கூறி கொண்டே எழுந்து நின்றாள்
மித்ரன்- நீங்க guess பண்ணுங்க
இன்பா- நீங்கள் guess பண்ண வேணாம் அவங்கள நான் என்ன பண்ணட்டும் னு சொல்லுங்க
விவேகா- அமைதியாக இருக்க
இன்பா- அப்போ நீங்கள் தான் அதை
விவேகா-அந்த பொண்ணு பாவம் விட்டிடுங்க ஏதோ தெரியாமல் எழுதி இருக்கும்
இன்பா-அது girl ஆ உங்களுக்கு எப்டி தெரியும் என்று ஒரு புருவத்தை தூக்கினான்
விவேகா- அது நான் என்று உலறிக்கொண்டே ஆதி யை பார்க்க
ஆதி- உன்னை என்ன பண்றது எப்போ பார்த்தாலும் அவர் கிட்ட போய் மாட்டிக்கோ என்று மனதில் நினைக்க
விவேகா கண்களில் பிலீஸ் என்று கெஞ்ச
இன்பா- இன்பாவிற்கு கடுப்பாக இருந்தது .
ஒரு குரல் கேட்டது அது நான் தான் சார் எழுதினேன்
அந்த ஆடிட்டோரியும் முழுவதும் அது யார் என்று பார்க்க அது ஆதி தான்
வெண்பா-மனதில் இவனா இவன் எழுதி இருப்பான் என்று நினைத்து கொண்டாள்
இன்பா- இங்கே வா என்று கூற
மாணவிகள்-அய்யோ இவன் கூட cute ஆ இருக்கானே என்று ஜொள்ளு விட
யாழினி-ஆதி டார்லிங் அந்த விவேகா தான் எழுதி இருப்பா அதனால் தான் நீ அவளை save பண்ண வந்துட்ட என மனதில் நினைத்தவள்
யாழினி-இனியாள் அது எழுதியது அந்த விவேகா தான் அதனால் தான் ஆதி எழுந்து நிக்கிறான் நீ ஏதாவது செய் என்னோட ஆதி க்கு punishment எதுவும் வர கூடாது
இனியாள்-சார் அது யார் ன்னு எனக்கு தெரியும்
இன்பா-அது ஆதி தான் ன்னு அவரு சொல்லிட்டார்
இனியாள்- இல்ல சார் அது விவேகா தான் என கூற
வெண்பா , மைதிலி, சிவா மாணவர்கள், மாணவிகள் அனைவரும் அதிர்ச்சி யாக பார்த்தனர் .
இன்பா-இது அவ்ளோ பெரிய விஷயம் இல்ல இனியாள் நான் handle பண்ணிக்கிறேன் sit down please
ஆதி இன்பாவின் அருகில் வர மிகவும் பயந்து கொண்டே ஒரு வித படபடப்புடன் நின்றான்
ஒரு 5 நிமிடம் அமைதியாக இன்பா அவனை பார்த்து கொண்டு இருந்தான் . அந்த சூழ்நிலை மிகவும் இறுக்கமாக இருக்க
இன்பா-clap your hands ஸ்டுடெண்ட்ஸ் என்று கூற ஒரு நிமிஷம் கழித்து அனைவரும் கைகளை ஒரு புரியாத நிலையில் தட்டினர்.
விவேகா வுக்கு என்ன செய்ய என்று இருந்தது ஆதியை பார்த்து கொண்டே நின்று இருந்தாள்.
இன்பா- ஆதி யின் தோளில் கைகளை போட்டு கொண்டே முன்னே அழைத்து வந்தவன் மிகவும் கம்பீரமான குரலில் இப்போ நான் உங்களை ஏன் clap பண்ண சொன்னேன் அப்டின்னு உங்களுக்கு எல்லாம் ஒரே குழப்பம் தானே
நானே சொல்றேன் என்று இன்பா விவேகாவை பார்த்து கொண்டே -நாம் என்ன யோசிக்கிறோம் என்று இன்பா தன்னுடைய விரலை பொறியில் சுட்டி காட்டி
நாம் இங்கு என்ன யோசிக்கிறோம் இங்கு என்ன நினைக்கிறோம் என்று தன் இதயத்தை தொட்டு காட்டி என்பதை யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படுத்த ஒரு தைரியம் வேண்டும் .
இடம் பொருள் ஏவல் அறிந்து சொல்ல துணிவு வேண்டும் . மற்றவருக்காக நாம் என்ன நினைக்கிறோம் என்பதை கூறாமல் அவர்களுக்கு பயந்து இருப்பது கோழை தனம் என்று கூற
இந்த முறை மாணவர்கள் அனைவரும் ஆதியின் துணிவு புரிந்து கொண்டு கைகளை தட்டினர்.
மாணவிகள்-ஏய் செம்ம டி அவன் name ஆதி ன்னு சார் சொன்னாரு அவன் hero தான் டி என்று அவர்களுக்குள் பேசி கொண்டனர்.
யாளினிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது என்னோட டார்லிங் என்று மனதில் புரித்தாள்.
இன்பா- உன்னோட aim என்ன
ஆதி-IPS ஆகணும் சார்
இன்பா- welldone IPS ஆக முதல் தகுதியே தைரியம், தன்னம்பிக்கை தான் நிச்சயமாக நீ IPS ஆகிடுவ my advance congratulations என்று கூறி அவனை ஸ்நேகமாக அணைத்து இது தான் என்னோட பனிஷ்மெண்ட் என்று கூறினான்
ஆதி- மனதில் விவி செல்லம் உன்னால நான் ஹீரோ ஆகிட்டேன் என் தேன்மிட்டாய் என்று முகமெல்லாம் புன்னகையுடன் சென்று அமர்ந்தான்.
மைதிலி-விவி இது உன்னோட list ல யே இல்லையே என்று முதல்வன் பட dialogue கூற
விவேகா-உன்னை கொலை பண்ண போறேன் டி என்று கூறினாள்.
விவேகா-சார் நான் உட்காரலாமா என்று கேட்க வருவதற்குள்
பசங்க-சார் இதுவே ஒரு girl ஆ இருந்தால் என்ன பண்ணி இருப்பீங்க என்று கேட்க
இன்பா-அவங்களுக்கும் பனிஷ்மெண்ட் தான் என்று கூற
அனைவரும் இன்பாவையே பார்க்க விவேகாவுக்கு ஒரு நிமிடம் வியர்த்து போனது.
இன்பா- நான் தான் சொன்னேன் தான கை , கால் , கட்டி கிளாஸ் ரூம் கூட்டிட்டு போய் ஒரு வாரம் full ஆ
மாணவர்கள்-full ஆ
இன்பா- அந்த one week நான் எடுத்த எல்லா கிளாஸ் ம் மறுபடியும் எடுப்பேன் dont thinking over imagination
விவேகாவுக்கு இப்போது தான் உயிர் வந்தது போல இருந்தது எப்போது பார்த்தாலும் இந்த இடியட் thinking கொஞ்சம் புரியாத புதிர் தான் என்று மனதில் நினைத்து கொண்டாள்.
விவேகா-தன் தைரியம் ஒன்று திரட்டி சார் என்று அழைக்க
இன்பா-அவளை பார்க்கவே இல்ல
மித்ரன்-சொல்லு மா
விவேகா-சார் நான் உட்காரட்டுமா என்று கேட்கும் நேரம் சரியாக மோர்னிங் இன்டெர்வல் பெல் அடிக்க
மித்ரன்-அது உன் இஷ்டம் மா என்று கூறி கொண்டு இன்பாவின் அருகில் போய் அமர்ந்து கொண்டான்.
மைதிலி-சிரித்து கொண்டே விவி இங்க நீ தான் டி ரொம்ப bright ஆ இருக்க
விவேகா-ஏன் டி என்று முறைத்து கொண்டே கேட்க
மைதிலி-எழுந்து தூரமாக சென்று உனக்கு தான் பெரிய பல்பு என்று கூறி விட்டு ஓடி விட்டாள்
விவேகா-லிதி நீ மட்டும் கையில் மாட்டின நீ என் கிட்ட கைமா தான் என்று அவளுடைய இடத்தில் அமர்ந்து கொண்டாள்
மித்ரன்-மச்சி அந்த feed back ஆதி தான் எழுதினானா
இன்பா-இல்ல டா அது விவேகா hand writing டா
மித்ரன்-அப்புறம் ஏன் டா ஆதி வந்தான்
இன்பா- அவளை காப்பாற்ற தான்
மித்ரன்-ஆதி அவளை love
இன்பா-never அப்படி இல்ல மச்சி chance ஏ இல்ல
மித்ரன்-யார் மனசுல என்ன இருக்கு அப்டின்னு யாருக்கும் தெரியாது டா அது தான்
இன்பா-நான் இவ மனசுல என்ன இருக்கு அப்டின்னே கண்டு பிடிக்க முடியவில்லை
மித்ரன்- ஆனால் ஒன்னு டா விவேகா chance ஏ இல்ல
இன்பா-நான் ஒன்னு நினைச்சா அவ வேற ஒண்ணா வந்து நிக்கிறா டா இவள நான் pick up பண்றதுக்குள்ள ………. நினைச்சாலே தலை சுத்தது மச்சி
மித்ரன்- இன்பா நீயா இப்படி பேசற நீயே இப்படி பேசலாமா
இன்பா-என்னடா பண்றது அடங்க மாட்டிங்குரா மச்சி
மித்ரன்-let see wait and வாட்ச்
இங்கு வெண்பா விவேகாவை தேடி வந்தாள் .
வெண்பா-விவி உனக்கும் எங்க அண்ணவுக்கும் any problem
விவேகா-எந்த அண்ணா
வெண்பா-ஏய் மித்ரன் தான்
விவி-இல்ல டீச்சர் எந்த problemம் இல்ல
வெண்பா-அப்போ ok என்று அவள் பேச ஆரம்பித்தாள் விவேகா அந்த boy எழுந்து வன்தானே
விவேகா-யாரு டி
வெண்பா- அது தான் seen போட்டானே
விவேகா-சீன் ஆஅ
வெண்பா- no comments simply waste
விவேகா-யாரை சொல்ற நீ என்று கூற ஆதி வெண்பாவின் பின்னால் நின்று கொண்டான்
வெண்பா- அது தான் இன்பா அண்ணா கூட அவனை கூட்டிட்டு போய் முன்னால் நிக்க வைத்தார்கள் அவன் தான்
விவேகா-ஓ ஆதியா சொல்லு
வெண்பா-அந்த fellow தான் அவன் என்று கூறும் நேரம்
ஆதி-தேன் மிட்டாய் என்ன பண்ற என்று கூற
வெண்பா பின்னால் திரும்பி பார்த்தாள்.
விவேகா-வாங்க ஹீரோ சார் என்று கூற
ஆதி-நீ எதுக்கு பேய் கிட்ட எப்போ பேச ஆரம்பிச்ச
வெண்பா-விவேகா இந்த பிசாசு எதுக்கு உங்கிட்ட பேசாறான்
விவேகா- please என்னை விடுங்க இப்போ தான் நான் ஒரு idiot கிட்ட இருந்து தப்பித்தேன்
ஆதி-செல்லம் இந்தா உனக்கு diary milk இன்னிக்கு நம்ப வீட்டுக்கு வந்திடு டி
வெண்பா-விவி இவன் எதுக்கு உன்னை டி போட்டு கூப்பிடறான் . நீயும் அமைதியாக இருக்க அவ எதுக்கு டா உன் வீட்டுக்கு வரனும் லூசு
விவேகா- டீச்சர் அவன் என்னோட மாமா பையன் அவனும் நானும் ஒரே கிளாஸ் அவனும் நானும் எல்லாமே ஒன்னு தான்
வெண்பா-அதிர்ச்சியில் பார்க்க
ஆதி-அவ என்னோட தேன் மிட்டாய் புரியுதா
வெண்பா- எதுவும் பேச வில்லை அமைதியாக இருக்க
ஆதி-ரொம்ப ரொம்ப thanks டி இன்னிக்கு உன்னால தான் எல்லாம்
வெண்பா-என்ன சொல்றான் அவன் உன்னை இப்படி கொஞ்சிறான்
விவேகா-அந்த no கமெண்ட்ஸ் simply waste எழுதியது நான் தான் டி
வெண்பா-நீயா !!!!!!!!!
ஆதி-அவளே தான் என்று கூறி விட்டு அவன் விவி நான் place க்கு போறேன்
விவேகா- என்னாச்சு டி
வெண்பா-இது மட்டும் எங்க அண்ணா க்கு தெரிஞ்சா அவ்ளோ தான் டி நீ
விவேகா-நீ யாரை சொல்ற
வெண்பா-நான் இன்பா அண்ணவ பத்தி சொல்றேன் என்று கூறும்போதே இன்பா விவேகாவின் பின்னால் நின்று கொண்டு இருந்தான்
விவேகா- இன்பா ன்னு வச்சு இருக்க கூடாது கோபா இல்ல துன்பா , முறைபா, விறைப்பா அப்டின்னு வச்சு இருக்கணும் அவன் முகத்தை பார்த்தாலே எனக்கு நிரம்ப disturb ஆகுது
வெண்பா-ஏய் போதும் டி
விவேகா-எப்படியோ ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு தான் teacher நான் மனசுல நெனைச்சத எழுதி கொடுத்து விட்டேன் என்று கூறி கொண்டே அந்த diary milk open செய்து ஒரு கடி கடித்தாள் .
வெண்பா- டீச்சர் உனக்கு வேணுமா
இன்பா-எனக்கு வேனும் என்று பின்னால் இருந்து ஒரு குரல் கேட்க
வெண்பா-விவேகா எனக்கு முக்கியமா வேலை இருக்கு நான் போறேன் என்று கிளம்பினாள்
விவேகா-திரும்பாமல் நிற்க
இன்பா-ஏய் இப்போ திரும்பல உன்னை கை கால் கட்டி என்னோட வீட்டுக்கு தூக்கிட்டு போய்டுவேன் டி
Episode 20,
இன்பா-ஏய் இப்போ திரும்பல உன்னை கை கால் கட்டி என்னோட வீட்டுக்கு தூக்கிட்டு போய்டுவேன் டி
விவேகா தன்னை சுற்றும் முற்றும் பார்த்தவள் யாரும் இல்லை கொஞ்சம் மாணவர்கள் தான் இருந்தனர் என்பதை அறிந்து கொஞ்சம் திமிராகவே அந்த diary milk சுவைத்து கொண்டே திரும்பினாள்.
விவேகா-சொல்லுங்க சார் என்னாச்சு என்று கேட்க
இன்பா- உங்க performance சூப்பர் அதை சொல்லிட்டு போலாம் ன்னு தான் வந்தேன்
விவேகா-நீங்கள் என்ன சொல்லறீங்க அப்டின்னு எனக்கு புரியலயே
இன்பா-ஹீரோயின் ஒரு ஆபத்தில் இருக்கும்போது ஹீரோ அப்படியே ஹீரோயின இன்னிக்கு ஆதி உன்னை save பன்னாரு தானே அத சொன்னேன்.
இன்பா-ம்ம்ம்ம் deep love தான் போல
விவேகா- விவேகாவுக்கு தன்னையும் ஆதியையும் இப்படி பேசுவது சங்கடமாக இருந்தது உங்களுக்கு propose பண்ண இந்த ஆடிட்டோரியும் ல என்னை தவிர ஆயிரம் பொண்ணுங்க இருக்கும் போது எனக்கு ஒருத்தன் அதுவும் ஒரே ஒருவன் என்னோட ஆதி வரமாட்டானா. எனக்கே எனக்காக மட்டும்
இன்பா-கண்டிப்பாக மிஸ் விவேகா உங்களுக்கு தான் நான் thanks சொல்லனும்
விவேகா- தன் உதடுகளை துடைத்து கொண்டே இன்னொரு கடி கடித்து ம்ம்ம் எதுக்கு என்று கேட்க
இன்பா-அந்த ஒரு proposal நீங்கள் படிச்சிங்களே எனக்கு eagar ஆ இருக்கு
விவேகாவின் முகம் மாறியது . அவள்-என்ன சார் உங்களுக்கு eager ஆ இருக்கு என்று கேட்க
இன்பா-அந்த girl எனக்கு propose பண்றேன் , IPS ஆகறேன் ன்னு எனக்கே எனக்காக மட்டும் சொன்னா அதுக்காக தான் நீங்கள் அதை படிச்ச அந்த tone வேற level
விவேகா -no mention that திங் என்று diary milk சாப்பிடுவதை நிறுத்தினாள்
இன்பா-ஒரு சின்ன help பண்ண முடியுமா
விவேகா-தன் குழல் கற்றை முடியை காதுக்கு பின் ஒதுக்கி கொண்டே என்ன help
இன்பா- அது ஒன்னும் இல்ல அந்த girl IT dept தான் அதுவும் உங்கள் கிளாஸ் தான் அது யார் அப்டின்னு கண்டிப்பா உங்களுக்கு தெரியும் கொஞ்சம் யாருன்னு சொன்னிங்க அப்படினா கொஞ்சம் நல்லா இருக்கும்
விவேகா-தன் புருவங்கள் இரண்டும் முடிச்சு போட தெரிந்து என்ன பண்ண போறீங்க
இன்பா- என்னோட தேவதை எனக்காக யோசிக்கிறவள் யாரு அப்டின்னு தெரிஞ்சுக்கதான்
விவேகா-எனக்கு எப்படி தெரியும்
இன்பா-பொய் சொல்லாதீங்க மிஸ் விவேகா பிலீஸ் சொல்லுங்க என்று கண்கள் மின்ன கேட்டான்
விவேகா-என்ன மிஸ் மிஸ் னு சொல்லறீங்க என்று ஒரு ஏக்கமாக கேட்டாள்.
இன்பா-நீ i mean நீங்கள் என்ன என்னோட lover ஆ, better half ஆஅ fiencee ஆஅ இல்ல என்னோட wife ஆ உங்களை உரிமையோட கூப்பிட நான் யாரு சொல்லுங்க மிஸ் விவேகா என்று அழுத்தி கூறினான்.
விவேகா- அமைதியாக இருந்தாள்
இன்பா- என்னோட guess correct அப்படின்னா அது அந்த sweety தான
விவேகா-யாரு என்று புருவத்தை கோப முடிச்சு போட
இன்பா-அது இனியாள் தான் அப்டின்னு என் மனசு சொல்லுது என்று தன் இதயத்தை வருடினான்
விவேகா-அதிர்ச்சியில் உறைந்து பின் எதுவும் காட்டாமல் sweety, இனியாள் ம்ம்ம் கரெக்ட் தான் உங்களுக்கு பொருத்தமான ஜோடி தான் என்று துக்கம் தொண்டை அடைக்க கூறினாள்.
இன்பா- அவளின் நிலை கண்டு உள்ளே ஒரு பக்கம் இன்பாவிற்கு தன்னவளின் நிலை சோகத்தை தான் கொடுத்தது
இன்பா-ம்ம்ம் always you are a brave girl
விவேகா- no thanks for your compliment என்று தன் உணர்வுகளை கட்டுப்படுத்த தன் உதடுகளை கடித்து கொண்டாள்
இன்பா-மனதில் அவள் உதடுகளை கடிக்கும் போது அதன் அருகில் ஒட்டி இருந்த அந்த சாக்கலேட்டு இன்பாவுக்கு அய்யோ டெம்ப்ட் பன்றாளே என்று ஒரு நிமிடம் தன்னிலை மறந்து போனது அவள் முன்னால் இரண்டு அடிகளை எடுத்து வைத்தான்.
பின்னால் இருந்து ஒரு குரல் கேட்க இன்பா அப்படியே நின்றான். அப்போது தான் தன்னிலைக்கு வந்தான்.
மித்ரன்-இன்பா என்ன பண்ற
இன்பா-கொஞ்சம் investigation மச்சி என்று அவன் பேச வரும்போது விவேகா அந்த இடத்தை விட்டு வேகமாக rest ரூம் ஓடி விட்டாள்.
மித்ரன்-என்னடா பண்ண அவ இப்படி ஓடுறா
இன்பா-கொஞ்சம் tempt பண்ணி வச்சிருக்கேன் மச்சி வா போலாம்
மித்ரன்-ஏன் டா இப்படி பண்ற பாவம் டா அவ
இன்பா-பாவமா அவளா கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு live show ஓடுச்சே நீ பார்க்கல ஹீரோ ஹீரோயின problem ல இருந்து save பண்ணது அதுக்கு தான் எனக்கு எப்படி இருந்ததோ அதே மாதிரி அவளும் feel பண்ணனும் மச்சி
மித்ரன்-இன்பா ரொம்ப பண்ணாத டா அப்புறம் உன்னை நிஜமாவே hate பண்ண ஆரம்பிக்க போறா
இன்பா-இல்ல டா சும்மா சீண்டி விட்டு இருக்கேன் வேற ஒன்னும் இல்ல
விவேகா- அழுது கரைந்தவள் நீ எனக்கு வேண்டாம் என்று நினைத்து கொண்டு தன்னை சரி செய்து கொண்டு இப்போது வேறு விவேகாவாக வந்தாள்.
விவேகா தன் இடத்திற்கு வந்து அமர்ந்தவள் எப்போதும் போல் தன் குரும்புகளை ஆரம்பித்தாள்.
மதிய உணவு வேளை வந்தது அவள் வெண்பாவுடன் உணவு உண்ண சென்றாள்.
விவேகா-டீச்சர் உனக்கும் ஆதி கும் fight ஆ என்னாச்சு
வெண்பா-அந்த பிசாசு தான் என்னோட book ஆ கிழிச்சு வச்சுட்டான்.
விவேகா- அப்படி எல்லாம் பேசாத டி அவன் ரொம்ப நல்ல பையன் தெரியுமா அவன் என்னோட blood டி
வெண்பா-நீ மாமா பையன் அப்டின்னு தானே சொன்ன இப்போது
விவேகா-அடி லூசு நானும் அவனும் ஒரே blood group உண்மையாகவே நான் ஒரு கோர்வையா சொன்னேன்
வெண்பா- சரி போய் தொலையட்டும் உனக்காக அவனை விடறேன் என்று இருவரும் சாப்பிட்டனர்
வெண்பா-விவி உன்கிட்ட ஒரு matter டி
விவேகா-ம்ம் சொல்லு ஆனால் ஒரு condition
வெண்பா-what
விவேகா-அந்த idiot rascal பத்தி மட்டும் கேட்காத நான் சொல்ல விரும்பல
வெண்பா-correct ஆ கண்டு பிடித்து விட்டாளே என்று நினைத்தவள். யாரது எனக்கு தெரியாது என்று கூறி எங்க கிளாஸ் boys உன்னை intro கொடுக்க சொல்லி என்னை torture பண்றானுக
விவேகா-புன்னகை முகமாக ம்ம்ம் சூப்பர் interesting ok done இன்னிக்கு சிறப்பான தரமான சம்பவங்கள் காத்து கொண்டு இருக்கிறது.
வெண்பா-உனக்கு ok வா
விவேகா-ஏய் இப்போவே போலாம் எனக்கு stomac full என்று சிரித்து கொண்டே ஆடிட்டோரியும் வெண்பாவும், விவேகாவும் சென்றனர்.
வெண்பா-ஏய் என்னடி ரொம்ப eagar ஆ இருக்க
விவேகா-சும்மா தான் கொஞ்சம் revenge எடுக்க வேண்டிய நேரம் வந்திடுச்சு என்று அவள் ஆடிட்டோரியும் உள்ளே வர
வெண்பா-ஏய் guys ஹரி, நிதிஷ், கார்த்திக், சதீஷ், அபி எல்லாம் இங்கே வாங்க டா
கார்த்திக்-வெண்பா என்னாச்சு
வெண்பா- விவேகா கிட்ட intro கொடு அப்டின்னு torture பண்னீங்க இப்போ சரி போங்க என்று அவள் பேசிக்கொண்டு இருக்கும் போது இன்பாவும், மித்ரனும் உள்ளே வந்தனர்
அபி-sorry sorry வெண்பா வா என்று அழைத்து கொண்டு விவேகாவின் opposite ல மாணவர்கள் அமர்ந்து இருக்கும் இடத்தில் அவர்கள் அமர்ந்து கொண்டனர் .
விவேகா ஓர கண்ணால் இன்பா எங்கு இருக்கிறான் என்று பார்த்து விட்டு சிரித்த முகமாக அமர்ந்து இருந்தாள்.
சதீஷ்- வெண்பா intro கொடு அவ கிட்ட
வெண்பா-sorry விவி இது அபி, சதீஷ், கார்த்திக் என்று அங்கு அமர்ந்து இருக்கும் அனைவர் பெயரும் கூறி இவங்க எல்லாம் என்னோட கிளாஸ் mate உன் கிட்ட பேசணும் அப்டின்னு ஒரே torture
விவேகா- சிரித்து கொண்டே ஹாய் அபி, கார்த்திக், நிதிஷ், ஹரி இதை நீங்கள் direct ஆ என் கிட்ட வந்து பேசி இருக்கலாம்
அபி-உங்க செல்ல பேரு விவி யா
விவேகா-ம்ம்ம்ம் உங்க பேரு கூட cute ஆ இருக்கு
சதீஸ்-ஏன் என்கிட்ட பேச மாட்டீங்களா
விவேகா-அப்படி இல்ல சதீஷ் ஏன் முகத்த கோபமா வச்சு இருக்கீங்க கொஞ்சம் சிரிக்கலாம் தானே உங்க கன்ன குழி வேற லெவெளுங்க
சதீஷ்-சிரித்தான் im impressed விவி
இங்கு இன்பாவுக்கோ இருப்பு கொள்ள வில்லை what earth is going on என்று நெருப்பில் தகித்தான்.
ஹரி- உங்க personal num கிடைக்குமா
வெண்பா-ஏய் this is two much
இன்பா-ஏன் நமக்கு இது தோன்றவே இல்ல அவ மொபைல் வச்சு இருப்பாளா
விவேகா-எதுக்கு மொபைல் ல பேசணும் ஹரி என் கிட்ட மொபைல் இல்ல டெய்லி library வாங்க அப்படி இல்லனா ஈவினிங் bus க்கு பேசிக்கிட்டே போகலாம்
நிதிஷ்-உங்க பஸ் num என்ன
விவேகா-அது என்ன வாங்க போங்க உரிமையா நீ வா போ அப்படி இல்லைனா விவி ன்னு கூப்பிடுங்க B20A
நிதிஷ்-ம்ம்ம்ம் சூப்பர் விவி
Last one question என்று அனைவரும் ஒரு சேர கூற
விவேகா-என்ன சொல்லுங்க
நீங்க single ஆ என்று கேட்க
வெண்பா-சோலி முடிஞ்சது என்று நினைத்தவள் பயந்து கொண்டே விவேகாவை பார்க்க
பின்னால் இருந்து மிகவும் கோபமாக அழுத்தமாக காலடி சத்தத்துடன் ஒரு குரல் கேட்டது
இன்பா-what earth is going on?lunch break முடிஞ்சு 5 seconds ஆகுது என்ன இங்க வெட்டி பேச்சு என்று கூறி கொண்டே மாணவர்கள் அருகில் வர
விவேகா-B20A ok என்று தன் கட்டை விரலை உயர்த்தி காட்ட அந்த மாணவர்கள் சிட்டாக அவர்கள் இடத்திற்கு சென்றனர்
வெண்பா-sorry டி அவனுக கொஞ்சம் ஆர்வ கோளாறு ல அப்டி கேட்டுடானுக
விவேகா-it s ok டீச்சர் நான் எதுவும் நெனைக்கல
இன்பா-இது உன்னோட வேலை தானா என்று முகத்தில் கடுமையுடன் கேட்க
வெண்பா-என்ன அண்ணா நீங்கள் சொல்றது எனக்கு புரியல எல்லா students ம் வராங்க நான் place க்கு போறேன் என்று கூறி செல்ல
விவேகாவுக்கு சிரித்து சிரித்துகண்களில் கண்ணீர் வந்து விட்டது சிரித்து சிரித்து அவள் சிரிக்கும்போது அவ்வளவு அழகாக இருந்தாள்.
இன்பா -மனதில் உன் bus num B20A வா யாரு உன்னை வந்து பார்க்கராணுக அப்படின்னு பார்க்கிறேன் டி
Episode 21,
இன்பா -மனதில் உன் bus num B20A வா யாரு உன்னை வந்து பார்க்கராணுக அப்படின்னு பார்க்கிறேன் டி
இன்பா இதை பற்றி யோசித்து கொண்டு இருக்க விவேகா விழுந்து விழுந்து சிரித்து கொண்டு இருந்தாள்.
அப்போது மைதிலி அங்கு வர அவளை பார்த்து
விவேகா-லிதி இங்கே fire சர்வீஸ் க்கு போன் பண்ண சொல்லு டி யாரையாவது
மைதிலி-பதட்டதோடு என்னாச்சு விவேகா
விவேகா-கொஞ்சம் கருகுற வாசனை வருது என்று சிரித்து கொண்டே கூற
இன்பா-மிஸ் மைதிலி என்ன வெட்டி பேச்சு டூ யூர் ஒர்க்
மைதிலி-இங்கே என்ன நடக்குது அப்டின்னு யோசித்து கொண்டே அமர்ந்தாள்.
இப்போது விவேகாவின் மனநிலை மிகவும் நன்றாக இருந்தது.
மித்ரன்-இன்பா இப்போ அந்த பொண்ணு என்ன பண்ணுச்சு அவளை நீ திட்டுற
இன்பா-ஒரு பார்வை பார்த்தான் , அதை வைத்தே அவன் மிகவும் கோபமாக இருக்கிறான் என்று மித்ரன் எதுவும் பேச வில்லை
மாணவர்கள் அனைவரும் அவர்கள் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டனர். அங்கு சூழல் மிகவும் இறுக்கமாக இருந்தது. இன்பா விவேகா பேசியதேயே நினைத்து கொண்டு இருந்தான்.
இன்பா- மனதில் இப்படி குட்டி குறும்பு செய்து எல்லாரையும் மயக்கி வச்சு இருக்காளே இவள என்ன பண்றது ரொம்ப work அவுட் பண்ணனும் போலயே என்று யோசித்தவன்
நீ சிரிச்சா அவ்ளோ அழகு டி ஆனால் அந்த சிரிப்பு என்னை நினைச்சு வந்ததாக தான் இருக்கனும் என்று நினைத்தவன்.
இன்பா- மித்ரன் நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது இப்போ விவேகா முன்னாடி முதல் இடத்தில் என்னை பார்க்கிற மாறி உட்கார வை டா இது என்னோட ஆடர்
மித்ரன்-ரெகுவஷ்ட இல்ல ஆடர் ஆ உனக்கு போய் ஹெல்ப் பண்றேன்னு சொன்னேன் பாரு என்னை சொல்லனும் டா
இன்பா- இப்போ செய்ய போறியா இல்ல நாளைக்கு dutyக்கு ஸ்டேஷன் போறியா
மித்ரன்-இவ்ளோ வந்ததுக்கு அப்புறம் நான் ஸ்டேஷன் க்கு போறேன்
இன்பா- மைதிலி
மித்ரன்- இல்ல நான் இப்போவே உன்னோட ஆடர் முடிக்கிறேன் என்று எழுந்து அனைவரையும் பார்த்து கொண்டே பின்னால் வந்தான்.
இன்பா வைத்த கண் வாங்காமல் விவேகாவை பார்த்து கொண்டு இருக்க
விவேகா எதேட்ச்சையாக நிமிர இன்பா இவளை பார்ப்பதை கண்டவள் உடனே கீழ குனிந்து கொண்டாள்.
விவேகா-மைதிலி ஏய்
லிதி- ம்ம்ம் சொல்லு டி
விவேகா- அவன் என்னை பார்கிறானா அப்டின்னு பார்த்து சொல்லு டி
லிதி-யாரு டி
விவேகா- அவள் பென்சில் எடுத்து அவள்புத்தகத்தில் கிறுக்கியவள் ஏய் அவன் தான் இடியட்
லிதி- சிரித்து கொண்டே அப்படி ஒரு name நான் கேள்வி பட்டது இல்லையே
விவேகா-உன்னை கொலை பண்ண போறேன்
லிதி- இரு இரு டென்ஷன் ஆகாத நான் பார்த்து சொல்றேன் என்று பார்க்க
விவேகா-ஏய் என்னாச்சு
மைதிலி-ஏய் என்னை முறைத்து பார்க்கிறார் டி
விவேகா-எங்கே நிஜமாவா என்று இவளும் நிமிர்ந்து பார்க்க அருகில் மித்ரன் நின்று கொண்டு இருந்தான்.
மித்ரன்-அங்க என்ன தெரிகிறது என்று கேட்க
மைதிலி-அது ஒன்னும் இல்ல டி இப்போ முறைக்கில என்று கூற
விவேகா-லூசு லூசு என்று அவளுக்கு signal கொடுக்க
மித்ரன்-இப்போ ரெண்டு பேரும் படிக்காமல் ஒரே அரட்டை ம்ம்ம்
விவேகா-இல்ல சார்
மைதிலி-ஆமா சார்
மித்ரன்- மைதிலி யை பார்க்க
மைதிலி-சார் நான் இவ சொன்னதுக்கு ஆமா சொன்னேன் என்று கூற உள்ளுக்குள் சிரித்தவன் .
மித்ரன்-விவேகா எழுந்திரு மா
விவேகா- சிரித்த முகமாக வெளியே அனுப்ப போறீங்களா சார்
மித்ரன்-நீ materials எடுத்து கொண்டு முன்னாடி போய் உட்காரு போ
விவேகா- நானா முன்னாடியா சார் மைதிலி ய உட்கார வச்சிடுங்க சார் பிலீஸ்
மித்ரன்- நீ தான் போகனும் னு எனக்கு ஆடர் போ மா
விவேகா- இது அவனோட வேலையா என்று மனதில் நினைத்தவள் சார் என்னோட சரித்திரத்தில் நான் முன்னாடி உட்கார்ந்தது இல்ல எனக்கு பிடிக்காது பிலீஸ் சார்
மித்ரன்- விவேகா நீ போய் தான் ஆகணும் வேற வழி இல்ல என்று கூற
விவேகா-இன்பனை முறைத்து கொண்டே எழுந்து அவள் படிக்க தேவையான புத்தகம் எடுத்து கொண்டு சென்றாள்.
விவேகா வந்து அமர போக அந்த வரிசையில் அவள் மட்டும் தான் இருந்தாள் அருகில் யாரும் இல்லை என்பதை பார்த்து அமர்ந்து கொள்ள அவள் நிலை கண்டு இன்பா
இன்பா- மிஸ் வெண்பா என்று கூப்பிட
வெண்பா- சார் என்று எழ
இன்பா- இங்க முன்னாடி வந்து உட்காருங்க
வெண்பா-அங்கு விவேகாவை பார்த்து விட்டு வந்து அருகில் அமர்ந்தாள்.
இன்பா இப்போதும் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டே இருந்தான் .
வெண்பா- ஏய் இங்க என்ன நடக்குது
விவேகா-எனக்கு எப்டி தெரியும் என்று கூறி கொண்டே அவளுடைய கற்றை முடிகளை காதுக்கு பின் ஒதுக்கி கொண்டே அந்த பென்சில் வைத்து ஏதாவது எழுதி கொண்டே அந்த உதடுகள் துடித்து கொண்டே எதையாவது முணுமுணுத்து கொண்டே இருந்தாள்.
வெண்பா- என்னடி இன்பா அண்ணா உன்னை முறைச்சு பார்க்கிறார்
விவேகா அவன் பார்கிறானா என பார்க்க இவன் வைத்த கண் வாங்காமல் பார்க்க விவேகா ஏதாவது செய்ய வேண்டுமென்று
விவேகா- மித்ரன் சார் இந்த கணக்கு புரியவில்லை கொஞ்சம் சொல்லி கொடுகிறீங்களா
மித்ரன்- ம்ம்ம் எது கொடு மா என்று வாங்கி பார்த்து கொண்டு அதை அவளுக்கு விளக்கினான்
இன்பா- உங்களுக்கு ஏதாவது doubt இருந்தால் என் கிட்ட கேட்கலாம் என்று பயம் படுத்தும் குரலில் கூற சொன்னது தான் தாமதம் உடனே வந்து விட்டாள் இனியாள்.
விவேகா அவனை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ள வில்லை அவள் சரியான தருணத்திற்காக காத்து இருந்தாள்.
இன்பாவிற்கு அருகில் மாணவிகள் கூட்டம் இருப்பதை பார்த்ததும் விவேகா சிட்டாக பறந்து விட்டாள் அவளுடைய இடத்திற்கு
மாணவிகளுக்கு ஒவ்வொரு கணக்கும் விவரிக்க விவேகா என்ன செய்கிறாள் என்று இவன் பார்க்க அவளோ ஜாலியாக கடைசியில் போய் அமர்ந்து கொண்டு ஆதி கூட அரட்டை அடிக்க ஆரம்பித்து விட்டாள்.
இன்பா-இவள என்று மனதில் நினைத்து கொண்டு கீர்த்தனா, சாதனா கிட்ட சொல்லி கொடுக்க சொல்லிவிட்டு அமர்ந்து கொண்டான்
ஆதி- விவி angry bird ரொம்ப angry யா இருக்காரு டி
விவேகா- அவன் angry யா இருந்தால் எனக்கு என்ன என்று அவளுடைய வேலைய ஆரம்பித்தாள்
மைதிலி-ஆதி அங்கே பாரு எல்லா girls ம் உன்னையே பார்த்து ஏதோ அவங்களுக்குள்ள பேசிகிறார்களே அங்க பாரு
விவேகா- ஹீரோ சார் எனக்கு ஒரு ஆட்டோகிராப் கிடைக்குமா என்று இவள் ஓட்டினாள்.
அப்போது ஆஃபீஸ் ரூமில் இருந்து ஒரு circular வந்தது .
அனைத்து மாணவர்களிடம் வரும் திங்கள் friend ship day celebration அதனால girls treditional dress அப்புறம் singing, dancing , mime show, சில போட்டிகள் சொல்லி சென்றனர் . இந்த function க்கு முதல் முறையாக நம்ப கரெஸ்பாண்ட்டெண்ட் வர போறாங்க என்று சொல்லி சென்றார்.
இதை கேட்டு அனைவரும் சந்தோஷ மனநிலைக்கு சென்றனர் .
சாதனா- ஸ்டுடெண்ட்ஸ் நாங்க திங்கள் தான் லாஸ்ட் டே உங்க celebration எப்டி இருக்கு அப்டின்னு பார்த்து விட்டு தான் போவோம் என்று கூறினர்
இதை கேட்ட விவேகாவுக்கு ஒரு நிமிடம் சந்தோஷ மன நிலை இருந்தாலும் ஒரு புறம் சோகம் தான் ஆனால் வெளியில் காட்டி கொள்ள வில்லை
விவேகா-அவன் இங்கு வரவே வேண்டாம் டி brainy
அவனை அதுக்கு அப்புறம் பார்க்க முடியாது டி மனசு
விவேகா-brainy அவன் வர வேண்டாம் என்று உதடுகள் சேர்ந்து கொண்டது.
மாலை ஆக காலேஜ் முடியும் நேரம் வர அனைவரும் கிளம்பினர்.
விவேகா- வெண்பா இன்னிக்கு நீ என் பஸ் கிட்ட போ
வெண்பா- எதுக்கு டி நீ எங்கே போற
விவேகா-நான் ஆதி கூட போறேன்
வெண்பா- நான் எதுக்கு உன் பஸ் கிட்ட போகனும்
விவேகா- சிரித்து கொண்டே உன்னோட மித்ரன் அண்ணா அங்க இருப்பாங்க அவங்க கிட்ட விவேகா ஆதி கூட பஸ் ல போய்ட்டா அப்டின்னு சொல்லிடு
வெண்பா-நான் எதுக்கு சொல்லனும்
விவேகா-நான் சொல்றத செய் போ போ மெதுவா போ என்று கூறி விட்டு விவேகா B75 ஆதி பஸ் க்கு சென்றாள்.
இங்கு இன்பா அவளை ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டு ஒரு rounds வர அவளின் பஸ் num அருகில் நின்று கொண்டான் கூட மித்ரனும் இருக்க
வெண்பா – மனதில் ஆமா இவனுங்க எதுக்கு விவி சொன்ன மாறி நிக்கிறானுக என்று அருகில் சென்றாள்
மித்ரன்-ஏய் என்ன டி பஸ் க்கு போ உனக்கு இங்கே என்ன வேலை
வெண்பா-ஏய் அதை நான் கேட்கணும் டா இது விவேகா பஸ் உனக்கு என்ன வேலை
மித்ரன்-நான் சும்மா rounds வந்தேன்
இன்பா- எங்கே உன் friend
வெண்பா-அவ ஆதி வீட்டுக்கு போறேன்னு சொன்னா அதனால B75 பஸ் side போய்ட்டா
மித்ரன்- வாய் விட்டே சிரித்தான்
வெண்பா-எதுக்கு டா சிரிக்கிற
மித்ரன்-ஒன்னும் இல்ல
வெண்பா-இதை எதுக்கு அவ உன்கிட்ட சொல்ல சொன்னா அப்டின்னு தான் எனக்கு தெரியல மித்ரன் என்று இன்பா வை பார்க்க
இன்பாவின் முகம் பாறையாக இருந்தது
வெண்பா-சிரித்து கொண்டே அண்ணா something something
மித்ரன்-இன்பாவுக்கும் அவளுக்கும்
இன்பா- shut up
மித்ரன்- மச்சி நீ அவளை வச்சு செய்யல டா அவ தான் உன்னை வச்சு செய்யறா என்று கூற
அந்த நேரம் B75 பஸ் இவர்களை கடந்து போக
விவேகா- பேருந்தில் இருந்து வெண்பா bye have a nice day என்று கூறி விட்டு சிரித்து கொண்டே அவள் பஸ் கடந்தது.
Episode 22,
இன்பாவுக்கு என்ன செய்ய என்று இருந்தது இப்படி பன்றாளே ஒரு நாள் சீண்டலனா கூட துளிர் விட்டு போகுது மேடம் க்கு
இந்த முறை எப்பவும் நீ என்னோட நினைப்புல சுத்துற மாறி கண்டிப்பாக ஏதாவது பண்ணனும் டி கேடி என்று மனதில் இன்பா நினைத்து கொண்டான்.
இங்கு வீட்டுக்கு வந்த விவேகா மிகவும் சந்தோஷமாக இருந்தாள். ஆதி, அதிதி, விவேகா மூவரும் வருண் கிட்ட video கால் பேசி விட்டு மூவரும் கதை பேசி சிரித்து விளையாடினர்.
அதி மா நீ ஒன்னும் சின்ன குழந்தை இல்ல டா அடுத்து உனக்கு கல்யாணம் ஆக போகுது கொஞ்சம் விளையாட்டு தனமா இருக்காத என்று விவேகா அவளை கிண்டல் செய்ய ஆதியும் சேர்ந்து கொண்டான்.
அடுத்த நாள் sunday நன்றாக பொழுது போனது மாலை கங்கா, விவேகா இருவரும் அவர்கள் வீட்டுக்கு கிளம்பினர்.
விவேகா வீட்டுக்கு வந்தவுடன் வெண்பா கங்காவின் எண்ணுக்கு போன் செய்தாள்.
வெண்பா சொல்லடி இப்ப போன் பண்ணி இருக்க
ஒன்னும் இல்ல விவேகா நாளைக்கு என்ன டிரஸ் போட்டு வர அப்படின்னு கேட்கிறதுக்கு தான் போன் பண்ணேன்.
நாளைக்கு நான் எப்பவும் போல சுடிதார் போட்டுட்டு வருவேன் ஏய் நாளைக்கு டிரடிஷனல் டிரஸ் சொன்னாங்க தானே
வெண்பா நான் எல்லாம் அந்த ட்ரெஸ் எல்லாம் போட்டுட்டு வர விரும்பலை யாருடி தாவணி பாவாடை எல்லாம் கட்டிட்டு வருது
என்னடி இப்படி சொல்ற எப்பவும் நீ தான் ஒவ்வொரு டைமும் இந்த one year ல டிரடிஷனல் டிரஸ் தாவணி பாவாடை போட்டுட்டு வா அப்படின்னு என்கிட்ட சொல்லுங்க என்று வெண்பா
இன்னைக்கு என்னடான்னா வேண்டாம் அப்படின்னு சொல்ற ஏதாவது பிரச்சனையா என்று அவள் கேட்க
அப்படி எல்லாம் ஒன்னுமில்ல வெண்பா சும்மாதான் என்றால் விவேகா
விவேகா எனக்கு தெரியாது கண்டிப்பா நீ நாளைக்கு வந்து தாவணி பாவாடை கட்டிட்டு வர்ற
அப்புறம் அன்னிக்கு வந்தியே கண்ணழகி மாதிரி free hair ல சும்மா தேவதை மாதிரி வந்த தானே அது மாதிரி வர புரியுதா
அப்படி எல்லாம் வர முடியாது என்று விவேகா கூற
நான் சொன்னது கேட்பியா மாட்டியா
டீச்சர் புரிஞ்சுக்கோ
டீச்சர் அப்படி எல்லாம் வர முடியாது
சரி விடு நான் சொன்னா கூட கேக்க மாட்ட இல்ல நானும் தாவணி பாவாடை எல்லாம் கட்டிட்டு வரமாட்டேன் என்று வெண்பா கூற
டீச்சர் ப்ளீஸ்டி சொல்றது கேளுடி
விவி நான் சொல்றதை நீ கேட்பியா மாட்டியா
டீச்சர் புரிஞ்சுக்கோடா ப்ளீஸ்
நான் நானெல்லாம் உனக்கு பெரிய ஆளா நான் சொல்றதை நீ கேட்பியா என்ன இதுவே அந்த ஆதி சொன்னா நீ கேட்ப
இப்ப என்ன உனக்கு நான் நாளைக்கு தாவணி கட்டி வரனும் அவ்வளவுதான சரி நான் கட்டிட்டு வந்து தொலையறேன் சரியா
ஓகே நாளைக்கு mock test க்கு படிக்கணும்
நாளைக்கு நம்ம காலேஜ்ல பார்க்கலாம் என்று விவேகா போனை வைத்தாள்
வெண்பா உடனே அருகில் இன்பா விடம் போதுமா அண்ணா அவ தாவணி பாவாடை நாளைக்கு கட்டிட்டு வருவா
ஓகே டா செல்லம்
அண்ணா எனக்கு ஒரு டவுட்டு உங்களுக்கு எப்படி தெரியுது அவ வந்து நாளைக்கு தாவணி பாவாடை கட்டி வர மாட்டா அப்டின்னு,
உனக்கு தெரியாது வெண்பா அவ சரியான கேடி அதுவும் நான் இருக்கேன்ல அதனால் அவ ரொம்ப சீன் போடுவா என்றான் இன்பா
அடுத்தநாள் போல் இது வழமையாக அழகாக விடிந்தது விவேகா வெண்பா சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தவள் சரி
இன்னைக்கு ஒருநாள் தானே அதுவும் அவள் கேட்டுகிட்டே இருக்கா ஆசையாக கேட்கிறாள் இதெல்லாம் ஒரு மேட்டரா அப்படின்னு நெனச்ச விவேகா
பூஜா கிட்ட போய் தாவணி பாவாடை கட்டி அதே போல் அன்று எப்படி இருந்தளோ அழகாக தன்னை தயார்செய்துகொண்டாள்
அந்த kajal, மஸ்கரா வ பார்த்து விவேகா மனதில் நீ வேண்டாம் உன்னை நான் வச்சுட்டு போனா எனக்கு problem தான் என்று அவள் கண்ணுக்கு மட்டும் வைத்துவிட்டு வரல
கம்பத்து பொண்ணு பாடலில் சண்டைக்கோழி ல வர கீர்த்தி சுரேஷ் மாறி இருந்தாள் விவேகா
ஆனா மகிழம்பூவை போதும் என்ற அளவுக்கு முகர்ந்து அத மட்டும் பின்னாடி ஜடையில வச்சிக்கிட்டா மிகவும் சந்தோசமாக காலேஜ் சென்றாள்.
காலையில் வகுப்பறைக்கு சென்றவர்கள் அங்கு அனைத்து மாணவர்களும் வேகமாகவும் மிகவும் பதட்டமாகவும் படித்துக் கொண்டிருந்தனர்
இவள் நேராக மைதிலியுடன் போய் தன்னை ஐக்கியமாக்கி கொண்டு அவளும் தேர்வுக்காக படித்துக் கொண்டு இருப்பாள் என்று நீங்கள் நினைப்பீர்கள்
ஆனால் விவேகா எதையும் படிக்கவில்லை அவள் குரும்புகளை ஆரம்பித்தாள் சும்மா எப்பவும் போல ஜாலியா கம்ப்யூட்டர் லேப் வந்து எல்லாருடனும் போனாள் போய்
சைலன்டா வந்த எல்லாரும் அவங்க அவங்க சிஸ்டம் ல உட்கார்ந்து இருந்தாங்க
மித்ரன், சாதனா ,கீர்த்தனா எல்லாரும் ஏற்கனவே சிஸ்டத்திலிருந்து கொஸ்டின் பேப்பர் அப்லோட் பண்ணி விட்டார்கள்
அந்த வெப்சைட்டில் போய் எந்த டிபார்ட்மென்ட் , ஸ்டுடெண்ட்ஸ் name , year இதையெல்லாம் டைப் பண்ணி கொஸ்டின் ஆன்சர் click பண்ணனும் அவ்ளோ தான்
இவள் இவளோட சிஸ்டத்துல உட்கார்ந்து இவளோட டீடைல்ஸ் எல்லாம் அப்லோட் பண்ணிட்டு ஆன்சர் டைப் பண்ண ஆரம்பிச்சா கிளிக் பண்ண ஆரம்பிச்சாள்
கட கட கடன்னு விவேகவோட விரல்கள் நடனம் ஆடியது அந்த தட்டச்சில் மொத்தம் 150 மதிப்பெண்,
விவேகாவுக்கு அதில் இருக்கிற எல்லா question கும் answer தெரியும், அவளுக்கு தெரியல அப்படினா தான் ஆச்சர்யம் அவளுக்கு எல்லாம் இரண்டு வருடம் வருண் prepare பண்றேன் அப்டின்னு விவேகாவ பாடாய் படுத்தி விட்டான்.
இந்த இந்த ரெண்டு வருஷத்துல அவள அந்தளவுக்கு ட்ரெயினிங் கொடுத்து வைத்திருகிக்கிறான் .
அடுத்து டெஸ்ட் எல்லாம் முடிச்சுட்டு அப்படி சிஸ்டம் ல உட்கார்ந்து இருந்தாள். ஆதிக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தாள் ஆதி முடிச்சதும் இவங்க ரெண்டு பேரும் அவங்க கிளாஸ்க்கு போயிட்டாங்க.
விவேகா ஆதியிடம் – நீ இன்னிக்கு singing ல participate பண்ணு டா
விவி நான் போய் எப்படி
ஏய் சும்மா நடிக்காத அதிதி சொன்னா நீ ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன் அத்தை பெத்த பூங்குயில தேடி வாடுறேன் இந்த பாட்டு daily போட்டு நீ ஒரே அலப்பறை பண்ற அப்டின்னு அவள் சொன்னா
அது நம்ப வீடு விவி இது காலேஜ் நான் எல்லாம் பாட மாட்டேன்
நீ மட்டும் இன்னிக்கு பாடல நான் என்ன பண்ணுவேன் தெரியுமா
என்ன பண்ணுவ என்று ஆதி கூற
இப்போ நீ பாட மாட்ட சரி விடு நான் வெண்பா கிளாஸ் போறேன் அங்க அபி, சதீஷ், நிதீஷ், ஹரி இருக்காங்க அவங்க கிட்ட சொல்றேன் இப்போ அவங்க தான் என்னோட best friends என்று கூற
விவி இதுக்கு எல்லாம் காரணம் அந்த பிசாசு தான என்று ஆதி வெண்பாவை நினைத்து கூற
நீ பாட போறீயா இல்லயா நீ மட்டும் பாடுன எல்லா girls ம் உன் பின்னாடி தான் எனக்கு கெத்தா இருக்கும் தெரியுமா என்று விவேகா மின்னும் கண்களில் கூற
அவனா சரி நீ ஆசை படர அப்டின்னு பாடறேன் வேற ஒன்னும் இல்ல ok வா
டேய் டேய் நடிக்காத டா girls னு சொன்னதும் தானே நீ சரி அப்டின்னு சொன்ன என்று விவேகா சொல்ல இருவரும் சிரித்து பேசி கொண்டே சென்றனர்.
இந்த mock test result ஈவினிங் celebration ல வந்திடும் அதனால் அனைத்து மாணவர்களும் மிகவும் கவலையாக இருக்க இவர்கள் இருவர் மட்டும் சந்தோஷமாக இருந்தனர்.
இன்பா இன்று தன் அம்மாவோடு நேராக function க்கு வந்திடலாம் என்று அவன் அம்மாவுடன் காலேஜ் சென்றான்.
இன்பா இன்று white shirt, காக்கி pants அந்த police belt, அந்த coolers , என்றும் சவரம் செய்யப்பட்ட முகம் கூர்மையான கண்கள் என்று சும்மா இன்னிக்கு எப்போதும் போல் இல்லாமல் கூட கம்பீரம், அழகு என்று இருந்தான் இன்று அந்த மீசையை முறுக்கி விட்டிருந்தான்
இன்று அவன் விவேகா எப்படி வந்திருக்கிறாள் என்று நேராக பார்க்க வேண்டும் என்று தன் போன் ல கூட பார்க்க வில்லை.
இங்கு கார்ல இன்பா அந்த SPR case டீடெயில்ஸ் நான் கொஞ்சம் prepare பண்ணி இருந்தேன் அதோட பேப்பர் இதுல இருக்கு என்று ஒரு கோப்பு எடுத்து இன்பாவிடம் கொடுத்து இருவரும் பேசிக்கொண்டே காலேஜ் வந்தனர்.
நேராக பேசிக்கொண்டே விழா நடக்கும் இடத்திற்கு வசுமதி போக இன்பா அந்த கோப்புகளை எடுத்து வைத்து விட்டு வருவதாக கூறி இருக்க வசு முன்னே சென்றார்.
அங்கு அனைத்து துறை தலைவர்கள் காலேஜ் principal, பேராசிரியர் பட்டாளம் என அனைவரும் வசுமதிக்காக காத்து கொண்டு இருக்க இவள் சென்றவுடன் நிகழ்ச்சி தொடங்கியது .
வசுமதி சென்று நிகழ்ச்சி ஆரம்பித்து இன்னும் இன்பா வரவே இல்லை . அவனுக்கு ஒரு முக்கியமான வழக்கு தொடர்பாக ஒரு போன் வர அதில் பிஸி ஆகி விட்டான்.
இங்கு விவேகா , ஆதி, வெண்பா, சிவா, இனியாள், வெறு துறை சார்ந்த மாணவர்கள் அந்த பாட்டு போட்டிக்காக மேடைக்கு
அருகில் செல்ல முதலில் இனியாள் பாடினாள்,
அடுத்து தாரா தோழா தோழா பாடினாள்,
சிவா வெண்மேகம் பெண்ணாக உருவானது என்ற பாடல் பாட ,
நிதீஷ் அம்மாடி உன் அழகு செம்ம தூளு என்ற பாடலை விவேகாவை பார்த்து கொண்டே பாடினான்
விவேகாவை வசுமதி அழைத்தார் .
என்ன வாயாடி என் கிட்ட வந்து பேசவே இல்லை
அப்படி இல்ல மேம் என்று ஒரு வணக்கம் கூறி விட்டு ஒரு மன்னிப்பு கேட்க
வசு சிரித்தாள் விவேகா நீ உண்மைய தானே சொன்ன நான் எதுவும் நினைக்கல விடு இனி எப்போதும் போல என்கிட்ட பேசணும் ok வா
விவேகா கண்கள் மின்ன ok மேம் என்று கூறி விட்டு நகர போக என்ன வாயாடி இன்னிக்கு மேடம் செம்மையா இருக்கீங்க என்று கூற
விவேகா சிரித்து கொண்டே நிற்க ஆண்ட்டி நான் தான் அவளை இப்படி வர சொன்னேன் என்று வெண்பா கூற
ஓ நீ தான் விவேகா வோட தோழியா அது தான் விவேகா இந்த வாய் அடிக்கிறா உன்கிட்ட இருந்து தான் வந்திருக்கும் போல என்று வெண்பாவை கிண்டல் செய்தாள்.
வசுமதி- விவேகா நீங்கள் ரெண்டு பேரும் போய் மித்ரன், இன்பாவ கூட்டிட்டு வரீங்களா இன்னிக்கு import meeting நான் இப்போ கமிஷனர் ஆஃபீஸ் போகனும்
விவேகா-நான் பாடறது கேட்டு விட்டு தான் நீங்கள் போகனும் என்று இவள் மிரட்ட
வசு – ம்ம்ம் வாயாடி என்னையே மிரட்டுற சரி நீங்கள் போய் கூட்டிட்டு வாங்க என்னோட மொபைல் வேற கார் ல இருக்கு வரும்போது அதை எடுத்து கிட்டு வர சொல்லுங்க
இதை பார்த்து கொண்டு இருந்த இனியாலுக்கு மிகவும் க்ரோதமாக இருந்தது
விவேகா-டீச்சர் நீ போய் ரெண்டு பேரையும் கூட்டி வா நெஸ்ட் இப்போ ஆதி பாட போறான் நான் கேட்கணும்
ஏய் aunty உன்னையும் தானே சொன்னாங்க ஒழுங்க வா இல்ல நான் போய் சொல்லவா
சரி விடு சீக்கிரம் வா ஆதி ஸ்டார்ட் பண்ணிடுவான் என்று அவளை இழுத்து சென்றாள் விவேகா .
ஆளுக்கு ஒரு திசையில் பார்க்க சென்றனர் வெண்பா முதலில் மித்ரனை பார்த்தவள் அவனுடன் செல்ல இவ்ளோ மித்ரன் எங்கே இன்பா எங்கே என்று தேட கண்டு விட்டாள் இண்பாவை
விவேகா -மனதில் இவனையா நாம் பார்க்க வேண்டும் அது மித்ரன் சாரா இருந்தால் இந்நேரம் நாம் போய்ருக்கலாம் என்று மெதுவாக இன்பாவின் அருகில் சென்றவள்
அண்ணிக்கு வேற ரொம்ப சீண்டி விட்டுட்டோமே இன்னிக்கு ஏதாவது சேட்டை பண்ணுவானோ என்று நினைத்து கொண்டே சென்றவள் .
சார் என்று அழைக்க இன்பா காதில் போன் வைத்து கொண்டே திரும்பி அவளை பார்க்க அசந்து விட்டான்.
ஆனால் முகத்தில் எதுவும் காட்ட வில்லை . அவன் போனில் பேசிக்கொண்டே இருக்க
சார் உங்களை வசு மேம் வர சொன்னாங்க என்று அவள் கூறி விட்டு நகர போக
விவேகாவின் கைகளை பிடித்து தன் புறம் இன்பா இழுத்தான் .
Episode 23,
இன்பா போன் பேசி கொண்டு இருப்பதை தூரத்தில் இருந்து பார்த்தவள்.
இந்த முறை அவள் மனதும் மூளையும் சேர்ந்து கொண்டு செம்மையா இருக்கானே அந்த மீசை வேற முறுக்கி விட்டு இருக்கான்
இந்த படத்தில் வர ஹீரோ எல்லாம் இவன் முன்னாடி கால் தூசு தான் அந்த கண்ணு அதுல எப்பவும் கோபம் தான் அந்த clean சவே முகம் அதில் கன்னம் வைத்து உரசி பார்ப்பது போல நினைக்க இப்போதே மின்சாரம் பாய்ந்தது.
அந்த உதடு வேற level அப்புறம் அந்த கன்ன குழி அதுல இப்போ தான் விழுந்து ஒரு வழியா கொஞ்சம் எழுந்து இருக்கிறேன்.
இப்போது அவள் மனம் இப்போ மறுபடியும் விழட்டுமா விவேகா என்று ஆசையாக கேட்க brainy இப்போ நீ விழுந்த அப்புறம் எப்போதும் எழ முடியாது டி
என்று மூளை சொன்னதை கேட்டு அவள் வலுக்கட்டாயமாக தன் மனதை மாற்றி கொண்டு
சார் உங்களை வசு மேம் வர சொன்னாங்க என்று அவள் கூறி விட்டு நகர போக
விவேகாவின் கைகளை பிடித்து தன் புறம் இன்பா இழுத்தான் .
இழுத்த வேகத்தில் அவள் அவன் மேல் மோத போக அதற்குள் தடுமாறி தன்னை நிலை படுத்தி கொண்டு நின்றவள்.
அவர்கள் இருவரை சுற்றி யாராவது இருக்கிறார்களா என்று பார்க்க அவள் இருப்பது கிட்டதட்ட car parking ஷெட் அங்கு இவர்களை தவிர யாரும் இல்லை .
Function நடக்கும் இடத்திற்கு கொஞ்சம் தூரத்தில் கார் பார்க்கிங் இருந்தது. இவள் இன்பனை பார்க்க அவனோ இவளை உச்சி முதல் பாதம் வரை கண்களில் ஒரு அளவெடுத்தவன்.
விவேகாவின் கைகளை மட்டும் விட வில்லை அவனின் பார்வை விவேகாவுக்கு ஒரு சங்கடத்தை கொடுத்தது.
சார் என் கைய விடுங்க என்று இவள் கூற வர அவன் தன் புருவத்தில் விவேகாவை மிரட்ட இவள் அப்படியும் இப்படியும் தன் கைகளை உருவி கொள்ளும் முயர்ச்சியில் இருந்தாள்.
சரி இன்னும் 1 மணி நேரத்திற்கு பிறகு நாங்க மீட்டிங் ல இருப்போம் என்று கூறி போன் வைத்த இன்பா.
அவளிடம் பேச போக இந்த முறை மித்ரன் கால் செய்தான் . பிலீஸ் கைய விடுங்க என்று அவனை பார்க்காமல் இவள் கைகளில் கவனம் செலுத்த
வசு மேடம் போன் கார் ல இருக்கு அதை எடுத்து கிட்டு வா என்று கூறி மித்ரன் வைத்தான்.
இன்பா அவளை பார்த்து மிகவும் கொஞ்சம் அந்த கம்பீரமான குரலில் அம்மா போன் உள்ள இருக்கு எடு அதை என்று அவள் கைகளை விடுவிக்க
அவளோ நீங்களே எடுத்து வாங்க நான் போறேன் என்று அவள் இரண்டு அடி எடுத்து வைக்க இன்பாவோ இரண்டே எட்டில் அவளை இழுத்து காருக்கு உள்ளே தள்ளினான்.
ஏய் என்ன பண்றீங்க விடுங்க எனக்கு time ஆச்சு ஏன் இப்படி என்னை torture பண்றீங்க என்று அவள் சொல்ல இன்பாவோ மிகவும் நிதானமாக நானா? நீயா? என்று சொல்ல ,
விவேகா அவனை கோபாமாக பார்த்தவள் அங்கு இருந்து செல்ல இவள் பக்கம் இருக்கும் கதவை திறக்க போக அதை இன்பா லாக் செய்து இருந்தான் .
நன்றாக அமர்ந்து அவள் என்ன செய்கிறாள் என்று வைத்து கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.
அந்த நேரம் அங்கு ஆடிட்டோரியதில் ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன் அத்தை பெத்த பூங்குயில தேடி வாடுறேன் என்று ஆதி பாட,
விவேகா ஆவலாக ஆடிட்டோரியம் இருக்கும் திசையை பார்க்க யார் இந்த பாட்டு பாடுறது என்று இன்பா கேட்க ,
வேற யாரு ஆதி தான் பாடுறான் என்று கூறி அவள் நான் miss பண்ணிட்டேன் ஆதி என்று முழுதாக கூட சொல்ல வில்லை .
கோபாமான இன்பா அவளை இழுத்தவன் விவேகாவின் முகவாய் பற்றி தன் முகத்திற்கு நேராக கொண்டு வந்து விவேகாவின் இரு கைகளையும் தன் ஒரு கையில் பிடித்து இன்னொரு கையை அவள் கழுத்தை பிடித்து அவள் கண்களை பார்த்து இப்போ என்ன சொன்ன miss பண்ணயா.
நானும் தான்டி உன்னை miss பண்ணேன் என்று அவள் இதழில் தன் முதல் முத்ததினை பதித்தான். விவேகாவுக்கு இங்கு என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை இன்பா அவளது இதழ்களில் தனக்கு தேவையான அளவை தண்டனையை அவள் மேல் உள்ள உரிமையையும் நிலை நாட்டிகொண்டு இருக்க அந்த தண்டனை நீண்டு கொண்டே இருக்க இன்பா தன்னிலை மறந்து அவளுள் கரையும் நேரம்
விவேகாவின் பெண்மை விழித்து கொள்ள சட்டென்று அவனை வேகமாக தள்ளி விட்டவள்.
அவனை கோபமாக மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை முறைத்து கொண்டே தன் உதடுகளை தொட்டு துடைத்தவள் .
அவன் முகத்தில் அரைய போக அவள் கைகளை பற்றியவன் ஒவ்வொரு விரல்களுக்கும்ம் முத்தம் வைத்து கொண்டே miss பண்றேன் டி
நான் உன்னை ரொம்ப miss பண்றேன் என்று கூற அவன் செய்கையில் கோபத்தில் கண்களில் கண்ணீர் வந்து விட்டது .
ஏய் நீ என்னை என்ன பண்ற அப்டின்னு உனக்கு தெரியுதா டா முதலில் என்னை விடு டா என்று உடல் நடுங்க அழ ஆரம்பிக்க.
என் முன்னாடி யார் கிட்டயாவது கொஞ்சி பேசிட்டு இருந்த
அப்புறம் நான் பக்கத்தில் இல்லாமல் வேற யார் கூடவும் தேவையில்லாமல் advantage
நீயும் எடுக்க கூடாது அவங்களும் உன்னை நெருங்க கூடாது
எனக்கு மட்டும் தெரிஞ்சுது நீ எங்கே இருக்க அப்டின்னு பார்க்க மாட்டேன் உன்னை தூக்கிட்டு வந்து என்று நிறுத்தியவன் .
நானும் சின்ன பொன்னு அப்டின்னு பார்த்தால் நீ ரொம்ப over ஆ பண்ற டி ஒழுங்கா படிக்கிற வேலைய மட்டும் தான் பார்க்கிற புரியுதா என்று கார் கதவின் லாக் release செய்தவன் .
மீண்டும் அவளை இழுத்து இந்த முறை அவள் மச்சம் இருக்கும் கண்ணுக்கு முத்தம் வைத்து இப்போ miss பண்றேன் ஆனால் என்னோட life ல உன்னை miss பண்ண மாட்டேன் .
நீ எனக்கு தான் , you are mine என்று கூறி அவளை விட்டான். அவள் அழுது கொண்டே ரெஸ்ட் ரூம் ஓடி விட்டாள்.
அவள் சென்றதும் தான் அவன் தன்னிலைக்கு வந்தான்.
இன்பாவின் மனசு டேய் நீ அவளை கிஸ் பண்ணிட்ட டா அவ பயந்து போய்ட்டா டா.
brainy இன்பா first kiss எப்டி இருந்தது என்று கேட்க ,
ஏய் அவளுக்கு என்ன ஆச்சு அப்டின்னு போய் பாரு டா
இன்பா நீ கொஞ்சம் தப்பு பண்ணிட்ட டா பாவம் அவ என்று மனம் கூற
நீ தானே சொன்ன இனி அவ உன் நினைப்புல தான் சுத்துவா டா என்று brainy கூறினாலும் மனம் அவள் எதுவும் தன்னை பற்றி தவறாக நினைத்து விட கூடாது அவளுக்கு எதுவும் ஆக கூடாது என்று மனம் பதைக்க
உடனே தன் அம்மாவின் போன் எடுத்து கொண்டு ஆடிட்டோரியம் கிளம்பினான். அங்கு தன் அம்மாவை பார்த்து மொபைல் கொடுத்து விட்டு அருகில் ஒரு 5 நிமிடம் அமர்ந்தவன் மனம் மிகவும் சஞ்சலனாக இருக்க
உடனே வெண்பாவை வெளியே அழைத்தான்.
வெண்பா அவ எங்க அண்ணா விவேகா உங்களை பார்க்க தான் வந்தாள் இன்னும் வரவே இல்ல அண்ணா . என்று கூற
சரி அவ எங்க இருக்கா அப்டின்னு கொஞ்சம் தேடு மா என்று இன்பா கூற
இருவரும் ஒன்றாக சேர்ந்து தேட கடைசியில் ரெஸ்ட் ரூம் பக்கம் அவள் தன்னிலை இழந்து கால் போகும் போக்கில் நடக்க
விவேகா என்று வென்பா அவள் அருகில் செல்ல தன்னை சுதாரித்து கொண்டு ம்ம்ம் சொல்லு டி என்று கொஞ்சம் கவலையாக கூற
என்னாச்சு டி நீ தானே பாடுறேன் அப்டின்னு வந்த இப்போ என்னாச்சு இங்கே என்ன பண்ற என்று அவள் பேசிக்கொண்டே செல்ல அவளோ வெண்பா எனக்கு தலை வலிக்குது டி please என்று கூறி விட்டு
நேராக தன் வகுப்புக்கு போய் தன் bag எடுத்து கொண்டு காலேஜ் பஸ் ல ஏறிக்கொண்டாள்.
இன்பாவுக்கு முதல் முறை மிகவும் குற்ற உணர்வு அதிகமாக இருக்க தன்னவள் அருகில் இருக்க வேண்டும் என்று மனது மிகவும் வேதனை தந்தது. அவள் முன்னால் செல்ல வில்லை
போச்சு டா இன்பா இனி அவ நம்ப கிட்ட pesa மாட்டா டா உனக்கு அந்த ஆசை வேற இருக்கா இனி உன் முகம் கூட பார்க்க மாட்டாள். என்று மிகவும் மனம் வருந்தினான்.
இங்கு அந்த function முடிய அனைவரும் கிளம்பினர் . இப்போது வசுமதி அதற்கு முன்பே காருக்கு வந்தவள் இன்பாவிடம் மீட்டிங் time ஆகுது கிளம்பலாம் என்று உள்ளே சென்று அமர்ந்து கொள்ள
இன்பாவோ மனதில் தன்னவளின் நினைவுகளோடு மிகவும் கட்டாய புன்னகையுடன் கார் எடுத்தான். வசுமதி அவனிடம் அந்த மீட்டிங் பற்றி பேசிக்கொண்டே போனவள் திடீரென அங்கு அருகில் கீழ இருந்த பூவை கையில் எடுத்து
இன்பா இது எப்படி இங்கே வந்தது என்று அவனிடம் கேட்க அம்மா அது என்ன என்று இன்பா கேட்டான்.
வசுமதி சிரித்து கொண்டே அந்த பூவை முகர்ந்து இது மகிழம் பூ இன்பா உனக்கு இந்த பூ தெரியாது அப்டின்னு நெனைக்கிறேன்.
ம்ம்ம்ம் நியாபகம் வந்திடுச்சு இது அந்த வாயாடி வச்சு இருந்தாள் . அம்மா யாரு அது என்று அவன் கேட்க அது தான் விவேகா என்று அவள் கூற இன்பாவின் முகம் சோகத்தை தத்தெடுத்து கொண்டது.
ஆனால் வசுமதி next சொன்ன விஷயம் கேட்டு இன்பாவின் முகத்தில் அவ்வளவு இன்னது என்று சொல்ல முடியாது ஒரு உணர்வு அது என்னவாக இருக்கும்
Next episode க்கு வெய்ட் பண்ணுங்க மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க பிலீஸ் ratings கொடுதிடுங்க
Episode 24,
ஆனால் வசுமதி அடுத்து சொன்ன விஷயம் கேட்டு இன்பாவின் முகத்தில் அவ்வளவு இன்னது என்று சொல்ல முடியாது ஒரு உணர்வு .
வசுமதி அவனிடம் எங்க அப்பா அதுதான் உங்க தாத்தா ரவிச்சந்திரன் அதிகம் ரொம்ப விரும்புவது கிருஷ்ண அவதாரம்
அதனால தான் உனக்கு ராகவன் அப்டின்னு எங்க அப்பா வச்சாறு
அதை பார்த்து உங்க தாத்தா சரியான சிவனடியார் அதனால வெறும் ராகவன் வேண்டாம் ன்னு இன்ப ராகவன் அப்டின்னு வச்சாறு
இன்பா ஏன் மா அதுக்கு என்ன காரணம் என்று அவன் கேட்க
அவள் சிரித்து கொண்டே
“மடல் பெரிது தாளை,
மகிழ் இனிது கந்தம்”
என்று அவள் கூற
இன்பா வாட் என்று கேட்க வசுமதி சிரித்து கொண்டே
மிக சிறிய பூ அப்டின்ற காரணதுக்காக இந்த பூவை ஒதுக்க கூடாது .
இந்த மகிழம் பூ உன்னோட பெயர் மாறி மிகவும் வாசத்தையும் மனதுக்கு மகிழ்ச்சியையும் தர கூடியது .
இது சிவ புராணத்தில் ஒரு சிறு பகுதியில் வரும்
அதாவது மகிழம் பூ அடிங்கறது இன்பத்தை குறிக்க கூடிய சொல் அப்டின்னு அர்த்தம்.
இந்த பெயரை முதலில் சுபாவுக்கு தான் வைக்கனும் ன்னு எங்க அப்பாவுக்கும் உங்க தாத்தாகும் சண்டை அப்புறம்
நான் தான் அடுத்த குழந்தை க்கு வச்சுக்கலாம் அப்பா, மாமா சண்டை வேணாம் அப்டின்னு சொன்னேன் .
உன் பேரோட அர்த்தம் சொல்லி உங்க தாத்தா தான் பெயர் வைத்தார் எனக்கு அது என் கண்ணுக்குள்ள இருக்கு என்று கூற
ம்ம்ம் அவ எதுக்கு இங்கே சார் குள்ள வந்தா என யோசனையில் வசு கேட்க ,நீங்கள் தானே போன் எடுத்து வர சொன்னதா அந்த girl சொன்னா
வசு-ஆமா ராகவ் நான் மறந்து போய்ட்டேன். அவ என்கிட்ட சண்டை வேற போட்டா என்னோட பாட்டு கேட்டதும் தான் போகனும் னு ஆனால் அதுக்குள்ள அவள காணோம்
இன்பாவுக்கு இப்போது புரிந்தது மனதில் அப்போ
என்னை நினைச்சு தான் பூ வச்சுட்டு வந்தியா டி கேடி என்று நினைத்தவன் இப்போது தெளிவடைந்தான்.
இன்பா மனதில் என்னை நெனைச்சுக்கிட்டு இதெல்லாம் பண்ணு டி ஆனால் கொஞ்சம் வாய திறந்து உங்களை விரும்புறேன் அப்டின்னு உன்னால சொல்ல முடியாது அப்படி தானே நான் சொல்ல வைக்கிறேன் டி.
முதலில் உன் மனசுல இருக்க தேவையில்லாத எண்ணத்தை விரட்டனும் என்று தெளிந்த மன நிலையோடு மீட்டிங் சென்றான்.
அவன் அம்மா இறங்கியதும் இதோ வருகிறேன் என கூறி விட்டு விவேகாவின் தலையில் இருந்து விழுந்த பூவை எடுத்து பத்திரபடுத்தி கொண்டான்.
இங்கு வீட்டுக்கு வந்த விவேகாவிற்கு ஆதி கால் செய்தான். என்ன பாட சொல்லிட்டு நீ எங்கே டி போன வீட்டுக்கு கூட என்கிட்ட சொல்லாமல் வந்துட்ட
அவளோ இல்ல ஆதி ,வசு மேடம் எனக்கு கொஞ்சம் ஒர்க் கொடுத்து இருந்தாங்க அப்புறம் வர time ஆகிடுச்சு அப்டியே பஸ் ல ஏறிட்டேன்.
நிஜமாவே தான் சொல்றியா இல்ல என்று கூற வர இதுல என்ன பொய் இருக்கு என்று கூறியவள் ம்ம் என்ன பண்ற என இயல்பாக பேச முயற்சி செய்தாள்.
இன்னும் ஒரு நாள் தான் விவி இருக்கு அந்த டெஸ்ட் க்கு அதனால கொஞ்சம் படி டி.
ஆதி இதை நீ எனக்கு சொல்லனுமா நான் பார்த்து கொள்கிறேன் என பேசி விட்டு கங்காவிடம் அம்மா நான் படிக்கிறேன் என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டாள்.
கங்கா மனதில் என்ன இவ ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருக்காளே ஒரு நாள் நல்லா இருக்கா ஒரு நாள் கோபமா இருக்கா இந்த பொண்ணு இவள புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று நினைத்து விட்டு தன் வேலையை பார்க்க சென்று விட்டாள்.
உள்ளே வந்த விவேகாவுக்கு ஒரே அழுகையாக வந்தது. அவள் உதடுகளை தொட்டு பார்த்தவள் இன்பா சொன்ன அனைத்து விஷயமும் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது.
என் மனசுல என்ன இருக்கு அப்டின்னு நீ தெரிஞ்சுக்க வேண்டாம் இன்பா இன்னிக்கு என்ன பண்ணி வச்சு இருக்க தெரியமா .
நிச்சயமாக எனக்கு தெரியும் உன்னோட தகுதிக்கு நான் ஏற்றவள் இல்லை ஆனால் நீ வேற ஒரு பொண்ண தான் நீ கல்யாணம் பண்ணுவ அப்போ இது அவளுக்கு நீ உண்மயா இருக்கனும் டா. என் கூட இப்படி இருந்தால் நீ அவளுக்கு செய்யற துரோகம்
உனக்கும் எனக்கும் காதல்,கல்யாணம் அப்டிங்கறது தண்ணீர் ல எழுதி வைப்பது போல அது எப்போதும் நடக்காது.
இதெல்லாம் பார்த்தால் எனக்கு காலேஜ் போகவே ரொம்ப பயமா இருக்கு உன்னை நான் எப்படி தள்ளி வச்சாலும் நீ வந்திடற என்று நினைத்தவள் .
இனி நான் தனியாக இருக்க மாட்டேன் யார் கூடவது சேர்ந்து தான் போகனும் வரனும் என்று இரவு முழுவதும் அவன் நினைவில் உளன்று தவித்தாள்.
இன்பாவும் அதே போல் தான் முதன் முறையாக தன்னவளிடம் உரிமை எடுத்து கொண்ட பூரிப்பு தான் அவளை இழுத்து அணைத்து கொடுத்த முத்தம் தான் நினைவில் இருந்தது .
இன்பாவுக்காக அவள் வைத்து வந்த பூவை பார்க்க அவனுக்கு அவள் அருகில் வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது.
அவன் மனதில் டார்ஜிலிங்
நீ எப்போ டி என் பக்கத்தில் வருவ உன்னை அணைச்சு உன்னை அப்டியே என்னோட நெஞ்சில் உன் தலை இருக்கனும்
உன்னோட கூந்தல் வாசத்தை அப்டியே நான் உள்ளே இழுத்து கொண்டு தூங்கனும் எப்படி இருக்கும் என்று நினைக்க
முதலில் அவ உன்கிட்ட இனி பேசாவே மாட்டாள் அந்த அளவுக்கு ஒரு வேலைய பார்த்து வச்சிருக்க.
நீ வந்து விவேகா என்னோட நெஞ்சில் வந்து அணைச்சு படுத்துக்கோ டி அப்படின்னு சொன்னவுடன் அவ இதோ வரேன் இன்பா அப்டின்னு நினைச்சு கிட்டு இருக்கியா கண்டிப்பாக அவ வர மாட்டா டா.
கண்டிப்பாக வருவா இந்நேரம் அவளுக்கு நான் கொடுத்த கொஞ்ச முத்தம் chemical reaction ஆ start பண்ணிருக்கும் சிரித்து கொண்டே கூற
அவ விருப்பம் இல்லாமல் நீ அவ மேல உரிமை எடுத்ததுக்கு கூட chemical reaction start ஆகி இருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக உன்னை விட்டு அவ தள்ளி போய்டுவா இனி உன் பக்கமே வர மாட்டா.
ம்ம்ம் அதையும் பார்க்கலாம் காதல் என்றால் ஊடல், வெறுப்பு,பாசம் , அன்பு எல்லாம் இருக்கும் எனக்கு அவளோட மொத்த கோபமும் வேனும் மொத்த பாசமும் வேனும் வெறுப்பு கூட அதே போல தான் என்று ஒரு முற்று புள்ளி வைத்து விட்டு
அவனது போன் ல இன்று அவள் முதல் முறை கொஞ்சம் பெரிய பெண்ணாக இருக்கும் படங்கள் வருடி கொண்டே முத்தம் வைத்து உறங்கி போனான்.
விவேகாவுக்கு காலேஜ் செல்லவே விருப்பம் இல்லை அவளுக்கு தெரிந்து விட்டது. இனி அவன் நம்மை விட மாட்டான் என்று ஆனாலும் படிப்பு தான் முக்கியம் என்று காலேஜ் க்கு கிளம்பினாள்.
ஆனால் இன்று அவள் நினைத்தது போல் இன்பா வரவில்லை அவளுக்கு மனது நிம்மதியாக இருந்தது .
நாளை SPR institution க்கு compition ல பங்கேற்க நன்கு தன்னை தயார் படுத்தி கொண்டனர் அங்கு செல்லும் மாணவர்கள் .
மொத்தம் இரண்டு நாட்கள், ஒரு நாள் தேர்வு மற்றொரு நாள் அந்த extra curricular compition.அடுத்த நாளுக்காக அனைவரும் காத்திருந்தனர்.
அன்று இரவு ஒரு software companies அனைத்தும் இணைந்து நடத்தும் get to gether இதில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று சுபாவின் அப்பா கூறியதால் இதில் பங்கேற்க சுபத்ராவும், இன்பாவும் சென்றனர்.
RV solutions ரகுவின் company அதுதான் (நீந்துகின்ற வெண்ணிலா) ரகுவின் ஒரு branch யை சரவணன் வெண்பாவின் அண்ணன் தான் இங்கு இருந்து பார்த்து கொள்கிறான்.RV solutions சார்பில் வெண்பாவும் , சரவணனும் வந்து இருந்தனர்.
இதில் இன்னொரு முக்கியமான நபர் அது கண்ணுகினியாள், யாளினியாள் அவர்களின் ஒரே அண்ணன் வினய்குமார் infinite solutions company வைத்து இருக்கிறான் .
இந்த பார்ட்டி க்கு இவர்கள் அனைவரும் வருகை தர இனியாளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சரவணனோ சுபாவை ஒரு பார்வை கூட பார்க்க வில்லை.
சுபாவுக்கு இது முன்பே தெரியும் அவனை பார்க்க கூடாது என்பதற்காக தான் அவள் வர வேண்டாம் என்று இருந்தாள். அவளது அப்பா எது சொன்னாலும் கேட்கும் பெண் அதனால் வந்தாள்.
இனியாள் விடாமல் இன்பாவிடம் பேச போக இன்பா அவனது கோப பார்வையில் பயந்து விட்டாள்.
யாழினி-என்னாச்சு இனியாள்
இனியாள்-ஒன்னும் இல்ல டி இங்க ஒரு மாறி நடந்து கொள்கிறார். காலேஜ் ல ஒரு மாறி இருக்கிறார்.
யாழினி-விடு எல்லாம் சரி ஆகிடும் என்று அவளை தேற்றினாள்.
இனியளின் அண்ணன் வினய் குமார் வைத்த கண் வாங்காமல் சுபாவை பார்த்து கொண்டு இருந்தான். இங்கு அதை பார்த்த சரவணனுக்கு கோபம் அதிகமாக வந்தது.
இன்பா நேராக வெண்பாவிடம் இந்த போன் ல இருந்து ஒரு கால் பண்ணு வெண்பா அவனை மேலும் கீழும் பார்த்தவள்.
இன்பாவுக்கு தன்னவளின் குரல் கேட்க வேண்டும் என்று தோன்றியது.
என்ன அண்ணா என்னாச்சு என்று அவள் கேட்க அவளுக்கு பண்ணு வென்பா என்று கூற
இன்பாவின் எண்ணில் இருந்து வெண்பா அழைக்க மறு முனையில் விவேகா வே தான்
ஹலோ
ஹலோ சொல்லு டி
சும்மா தான் கால் பண்ணேன் என வெண்பா கூற
இது என்ன புது நம்பர் ல கூப்பிடற
இல்ல இதுல தான் இனிமே உன்னை அடிக்கடி கூப்பிடுவேன் என்று இன்பனை .முறைத்து கொண்டே கூறினாள்.
நாளைக்கு compition க்கு வரயா
ம்ம் வருவேன் விவி ,அப்புறம் உன்கிட்ட ஒரு விஷயம் அன்னிககு ஏன் அப்டியே போய்ட்ட
இன்பாவுக்கு அவள் என்ன கூறுவாள் என்று ஆவலாக இருந்தது.
ஏய் சொல்லு டி என்று வெண்பா கேட்க
அவளோ ஒன்னும் இல்ல டீச்சர் எனக்கு உடம்புக்கு முடியல, மனசு சரி இல்ல என்று இதுக்கும் மேல் என்னை பத்தி பேசறதா இருந்தால் மட்டும் என்கிட்ட பேசு
தேவையில்லாத விஷயங்களை பத்தியும் தேவையில்லாத persons பத்தியும் என்கிட்ட பேசாத வெண்பா.
இன்பாவுக்கு இதை கேட்டு இதயம் மிகவும் வலிப்பது போல் உணர்ந்தான். மனதில் நான் உனக்கு தேவையில்லாத ஆளா எவ்ளோ தைரியம் டி உனக்கு இதுக்கு எல்லாம் சேர்த்து உனக்கு இருக்கு டி
என்னடி சொல்ற நான் யாரை பத்தி பேச போறேன்
போதும் உன்னோட அகிட்டிங் வெண்பா இது உன்னை யாரு இப்படி பேச சொன்னங்களோ அவங்களுக்கு இது புரியும் என்னோட வழியில் இனி வர வேண்டாம் .
என்று கூறி போன் cut செய்தாள். வெண்பா அவனை பாவமாக பார்த்தாள். அண்ணா என்று அழைக்க
விடு வெண்பா மா என்று தன் கவலையை மனதில் மறைத்து இன்பா பேசினான்.
என்னோட வழியில் இனி வர வேண்டாம் . என்று சொன்ன விவேகா தானாகவே இந்த இரண்டு நாளில் இன்பாவை தேடி செல்ல போகிறாள் என்று அவளுக்கு தெரியவில்லை
Episode 25,
போதும் உன்னோட அகிட்டிங் வெண்பா இது உன்னை யாரு இப்படி பேச சொன்னங்களோ அவங்களுக்கு இது புரியும் என்னோட வழியில் இனி வர வேண்டாம் .
என்று சொல்லி போன் வைத்தாள்.
இன்பாவுக்கு இதை கேட்டதும் மனது மிகவும் வேதனையாக இருந்தது.
வெண்பா, அண்ணா என்ன பண்ண போறீங்க அவ இப்படி பேசறாளே.
விடு மா நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறியவன் அவளுடன் நின்று கொண்டு இருந்தான்.
இனியாள் தனது அண்ணனின் செய்கை பார்த்து மனதில் ஒரு திட்டத்தை தீட்டினாள்.
அவள் அண்ணனிடம் வினய் உனக்கு அந்த சுபத்ரா வ பிடிச்சு இருக்கா டா.
இனியாளை பார்த்து ஆமா இனியாள் எனக்கு அவள பிடிக்கும் அவ மட்டும் எனக்கு சொந்தம் ஆகிடா அவளோட company எனக்கு கிடைத்து விடும்
அதுவும் இல்லாமல் அந்த இன்பா போலீஸ் நம்ப மற்ற பிஸ்ன்ஸ் க்கு எந்த பிரோப்ளேம் மும் இருக்காது. என்று கண்கள் மின்ன சொல்ல
அவளோ அண்ணா நாங்க படிக்கிற காலேஜ் கூட அவங்களோது தான் அந்த வசுமதி மேடம் தான் கரெஸ்பாண்டேன்ட் எனக்கு அந்த இன்பாவ ரொம்ப பிடிக்கும் அண்ணா என்று சாதுவாக தன் விருப்பத்தை தன் அண்ணாவிடம் வெளிப்படுத்தினாள்.
அப்போது வெண்பாவை அழைக்க வந்த சரவணன் இவர்கள் பேசுவதை எதர்ச்சியாக கேட்டு விட்டான்.
வினய்-நீ கவலை படாத வெண்பா ஒரே கல்லில் நாம் 4 பறவை அடிக்க போகிறோம் எனக்கு அந்த சுபா வேண்டும் அவளால் அந்த கம்பனி கிடைத்து விடும் .
என்று இவர்கள் சுபாவை பற்றி பேசுவதை கேட்டதும் சரவணனுக்கு மிகவும் ஆத்திரமாக வந்தது.
சரவணன் மனதில் இது நடக்க கூடாது என்னோட சுபா நல்ல இடத்தில் தான் வாழ வேண்டும் இந்த பண கவுரவ பேய்களிடம் சிக்க கூடாது என்று நினைத்தவன் அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்து கொண்டான்.
சரவணன் வெண்பாவை அழைக்க செல்ல தன் அண்ணனை கண்டதும் வெண்பா இன்பனை சார், வாங்க, போங்க என்று அழைத்தாள்.
அவன் தூரத்தில் இருந்து வருவது தெரிந்தவன் வெண்பாவிடம் இன்னும் அவன் மாற வில்லையா நாங்களும் உங்களை போல தானே இருக்கிறோம் இவனுக்கு என்ன வந்தது உன்னை மிரட்டி இப்படி சொல்ல சொன்னனா. என்று இன்பா கேட்க
அவளோ அண்ணா அவரு எப்போதும் மாற மாட்டார் விடுங்கள் எனக்காக என்று அவள் இண்பாவை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தாள்.
இன்பா அவளிடம் சில பேர் எப்போதும் மாற மாட்டார்கள் வெண்பா,
அந்த கேடி கூட என்னை இது சொல்லி தான் அவோய்ட் பண்றா .
அண்ணா அவ எப்போதும் அப்படி தான் ஆனால் அவளுக்கு உங்களை ரொம்ப பிடிச்சு இருக்கு அப்டின்னு நெனைக்கிறேன்.
அது எனக்கு தெரியும் வெண்பா என்னை என்ன பண்ண சொல்ற அடங்க மாட்டிங்குறா
விடுங்க அண்ணா பார்த்து கொள்ளலாம் என்று இருவரும் பேசி கொண்டு இருக்க இதை தூரத்தில் இருந்து பார்த்த இனியாள் தவறாக புரிந்து கொண்டாள்.
இந்த இன்பா அவரு வெண்பா வ விரும்பிகிறாரா என்று நினைத்தவள் இதை ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.
அனைவரும் பார்ட்டி முடிந்து வீட்டுக்கு சென்றனர். ஆனால் மூவர் சில திட்டங்களோடு சென்றனர்.
அடுத்த நாள் பொழுது அழகாக விடிந்தது விவேகா வேகமாக காலேஜ் க்கு கிளம்பியவள் தன் அப்பாவின் படத்தில் ஒரு முத்தம் பதித்து
இன்னிக்கு நான் தான் பா ஜெய்க்கனும் அப்டின்னு வேண்ட மாட்டேன
எனக்கு பீஸ் கட்ட மட்டும் அமெண்ட் கிடைக்கணும்
என்று தன்னுடைய நியாயமான கோரிக்கை வைத்து பின் தன் இஷ்ட தெய்வ கிரிஷ்ணாவுக்கு சில அப்ளிகேஷன் போட்டு விட்டு கிளம்பினாள்.
ஆனால் அவளுக்கு தெரியவில்லை ஒவ்வொரு நாளும் புது புது விடியல் சில மனிதர்கள் அவள் வாழ்வில் வந்து விடுகின்றனர்.
விவேகா காலேஜ் க்கு சென்றவுடன் அவளது இடத்தில் அமர்ந்து கொண்டு மனதை ஒரு நிலை படுத்தி கொண்டு இருந்தாள்.
அந்த தேர்வுக்கு செல்லும் அனைத்து மாணவர்களும் தயாராக இருந்தனர். காலேஜ் பஸ் ல அனைத்து மாணவர்களும் ஏறிக்கொள்ள அப்போது வெண்பா கடைசியில் வந்தாள் . விவேகாவிடம் பேச வில்லை.
வெண்பா அவளை பார்ப்பதை தவிர்த்தாள். ஆதியோ என்ன விவி இன்னிக்கு பேய் உன்னை விட்டு தனியா இருக்கா
அவளோ என் மேல் கோபமா இருக்கா ஆதி என்று போன் உரையாடல் மட்டும் கூறினாள்.
ம்ம்ம் போன் ல பேசற அளவுக்கு டெவெலப் ஆகிடுச்சா என்று சிரித்து கொண்டே கூறினான்.
அப்போது பேருந்து ஓட்டுநர் திடீரென வண்டியை நிறுத்த அனைவரும் என்ன ஆனது என்று தங்களுக்குள் பேசி கொள்ள அப்போது பேருந்தின் உள்ளே அவன் வந்தான்.
ஆதியின் மனதில் angry bird அதாவது இன்பா தான் வருவார் என்று நினைத்த வேலை வந்தது இன்பா இல்ல அருண் சக்ரவர்த்தி
வென்பா அவனை பார்த்ததும் தலை குனிந்து கொண்டாள் . அருணுக்கும் அவளுக்கும் ஏழாம் பொருத்தம் தான்
யார் இவன் ??????? என்று உங்கள் அனைவருக்கும் ஒரே கேள்வியாக இருக்கும் .
அவன் வேறு யாரும் அல்ல வசுமதி தங்கை , வென்மதி, சக்ரவர்த்தி மகன் தான் இது அவனுடைய தாத்தாவின் காலேஜ் தான் அதனால் சரி சில இளவட்டங்களுடன் சுற்றலாம் என்று வந்து விட்டான்.
இவனும் இன்பா படித்த அதே டெல்லி iit தான் இப்போது கடைசி வருடம் ப்ரொஜெக்ட் என்று வந்து விட்டான்.
அவன் எப்படி இருப்பான் என்று நீங்கள் அனைவரும் யோசிப்பீர்கள்.
அப்படியே இன்பாவின் எதிர் பக்கம் இன்பாவின் அழகு, அறிவு , திறமை இருந்தாலும் அவனை போல் இல்லாமல் அனைவருடனும் ஒட்டி கொள்வான்.
இவனை கண்டதும் அனைவரும் அவனும் அந்த IQ டெஸ்ட் க்கு தான் வருகிறான் என்று கண்டு கொள்ள வில்லை.
ஆனால் இவனை பார்த்தால் சாதாரண ஆள் போல் தெரிய வில்லை என்று வைத்த கண் வாங்காமல் அனைவரும் பார்க்க ஆனால் ஆதியும், விவேகாவுக்கு அரட்டை அடித்து கொண்டே வந்தனர்.
வெண்பா தன்னை மறைத்து கொண்டு படிக்க ஆரம்பித்தாள். இப்போது அருண் அனைவரையும் பார்த்து பேசினான்.
ஸ்டுடெண்ட்ஸ் நானும் இங்க டெஸ்ட் எழுத வந்து இருக்கிறேன் என்று கொஞ்சம் களாய்க்காலம் என்று நினைத்து பேச அனைவரும் கவனிக்க வழக்கம் போல விவேகா இவனை பாராமல் ஆதி கிட்ட பேச
அருண் அவளை பார்த்து என்ன girl எல்லாம் sincere ஆ படிக்கிறாங்க நீ மட்டும் ஒரே ஜாலியா வர என்று கேட்க
நான் ஏன் பயப்படனும் என்னதான் படித்து கரைத்து குடித்தாலும்
அங்கு என்ன தோணுதோ
அதை தான் செய்ய முடியும்
எனக்கு future பத்தி கவலை இல்ல
i love to live present )(ஐலவ் டூ லிவ் ப்ரசென்ட்).
என்று கூற ஆதி மீ டூ என்று கூறி
இருவரும் ஒரு ஹைபை போட்டு கொண்டனர்.
அவர்கள் இருவருக்கும் அருண் யார் என்று தெரியாது.
அருண் விவேகாவை பார்த்து கொண்டே ஐயம் இம்ப்ரெஸ்ட் என்று கூறினான்.
விவேகா அவனை கண்டு கொள்ள வில்லை எப்போதும் ஒருவர் நம்மை அலட்சியம் செயும் போது தான் அவர்கள் மேல் நமக்கு ஒரு சொல்ல முடியாத உனர்வு தோன்றும் இல்லை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மன நிலை இருக்கும் .
அருண் மனதில் அவளை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.
SPR காலேஜ் ஆப் இன்ஸ்டிடுசன் வர அனைவரும் இறங்கினர் விவேகா ஆதி கூட இறங்கினாள் .
பின் வெண்பாவுக்கு காத்திருந்தாள் விவேகா இவளை தாண்டி செல்ல
ஏய் டீச்சர்
ஏய் மிஸ்
பிலீஸ் மிஸ்
Sorry டீச்சர் ரெண்டு அடி கூட அடிங்க ஆனால் பேசாமல் மட்டும் இருக்க வேணாம் என்று கூற
வெண்பா அவளை பார்த்து தேவை இல்லாமல் தேவை இல்லாத பெர்சன் என் கிட்ட பேசி உங்கள் time வாஸ்டெ பண்ண வேணாம் மிஸ் விவேகா .
ஏய் இப்போ கூட நீ அவன் பக்கம் தான் இருக்க நான் உனக்கு முக்கியம் இல்ல போ என்று அவள் முகம் தூக்கி கொள்ள
நான் யாரு பக்கமும் இல்ல நீ ரொம்ப ஓவரா பண்ற சரி இல்ல
நான் சரி இல்லயா நான்
அவன் என்னை என்ன பண்ணினான் தெரியுமா உனக்கு தெரிஞ்சா நீ இப்படி பேச மாட்ட
அவரு எப்போதும் எந்த தவறும் செய்ய மாட்டாரு
ஓ அப்படியா அவன் என் கைய புடிச்சு இழுத்து என்று கூற
வெண்பா இழுத்து என்று கேட்க
இதுக்கும் மேல் எப்படி சொல்ல என்று விட்டு விட்டாள்.
வெண்பாவுக்கு விவேகாவின் முகம் பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்க
அவரு தெரியாமல் செய்து இருப்பார் நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கட்டுமா என்று வெண்பா கேட்க
சரி விடு என்று கூற சிரிங்க விவி பிலீஸ் என்று இருவரும் ஒட்டி கொண்டு செல்ல இப்போது அருண் வெண்பாவை கண்டு விட்டான்.
மிஸ் வெண்பா என்று மிகவும் பணிவுடன் ஒரு குரல் கேட்க யார் என்று இருவரும் திரும்பி பார்க்க அது அருண் தான்
நீயா?????
ம்ம்ம் நானே தான் எப்டி இருக்கீங்க என்று கூறி விவேகாவிடம் அருண் நான் வெண்பாவோட ரொம்ப கிலோஸ் friend என்று சிரிக்க
விவேகா வெண்பாவை பார்க்க அவளோ அருணை பார்த்தாள்.
அவன் முறைக்க
விவேகா முன்பு சண்டை போட்டால் நன்றாக இருக்காது என்று ஆமாம் என்றாள் வெண்பா.
இவர்கள் வருவதற்கு முன்பே இன்பா spr காலேஜ் வந்து விட்டான். தன்னை காலேஜ் கரெஸ்பாண்டேன்ட் என்று கூறி சில ப்ரோசிஜர் முடித்து இவர்களுக்காக காத்து இருந்தான் .
எல்லாரும் வந்து விட இன்னும் விவேகாவை காண வில்லேயே என்று அவளை தேடி கொண்டே வந்தவன்.
அவர்கள் அருகில் வர அப்போது தான்
அருண் அவளிடம் உங்கள் பேர் என்ன என்று கேட்க
என்னோட பேர் விவேகா
அவனோ nice name என்று கூறி தன் தலையை கோதி கொண்டே அவளை பார்த்து
நைஸ் டூ மீட் யூ என்று கைகளை நீட்ட அந்த நேரம் இன்பா , விவேகாவிடம் அருண் கைகளை நீட்டும் காட்சி கண்டு கோபம் வர
இங்கே என்ன நடக்குது என்று ஒரு உறைய வைக்கும் குரலில் கேட்டு கொண்டே அவர்கள் அருகில் இன்பா வந்தான்.
அருண் அவனிடம் நீங்க இங்கே என்ன பண்ரீங்க ???????
Episode 26,
அருண் அவனிடம் நீங்க இங்கே என்ன பண்ரீங்க ??????? என்று இண்பாவை பார்க்க
இந்த புதியவன் (அருண்)ஏன் இன்பாவிடம் பேசுகிறான் என்று யோசனையாக பார்த்தாள்
இன்பாவோ நேராக வெண்பாவின் அருகில் வந்தான்.
நீட்டிய கைகளை மீண்டும் விவேகாவை பார்த்து ஹலோ im அருண் சக்ரவர்த்தி என்று அவன் சொல்ல
விவேகா கைகளை நீட்ட போக வெண்பா அவளிடம்
எந்த dept என்ன year அப்டின்னு கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும் என்று
பொய் சொல்ற யாரையும் விவேகாவுக்கு பிடிக்காது .
அப்புறம் ரொம்ப பணக்காரங்கள பார்த்தால் சுத்தமாக பிடிக்காது. என்று வெண்பா கூற
இப்போது விவேகா தன் கைகளை பின்னால் எடுக்க போக
நான் வெண்பாவோட dept தான் 4 year என்று கூறி அருண் மீண்டும் கைகளை நீட்ட போக
விவேகா இன்பா இருப்பது தெரியும் ஆனால் அவன் முகத்தை பார்க்க அவளுக்கு தோன்ற வில்லை .
அன்று அவன் சொன்ன வார்த்தைகள் நினைவு வர இரு கைகளையும் சேர்த்து
வணக்கம் சீனியர் என்று கூற
வெண்பாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
இன்பாவோ அவனிடம் நான் தான் கரஸ்பாண்டெண்ட் உன்னோட ID கொஞ்சம் தர முடியுமா என்று பயமான குரலில் கூற
வெண்பா மனதில் நல்லா மாட்டின டா நீ என்று ஒரு குத்தாட்டம் போட்டாள்.
இப்போது அருணுக்கு என்ன செய்வது என்று புரியாமல் இருக்க
ம்ம்ம் சீக்கிரம் கொடு என்று இன்பா அதட்ட அந்த நேரம்
ஆதி விவி சீக்கிரம் வா என்ன பண்ற என கூற இவள் இன்பனை ஒரு பார்வை கூட பார்க்க வில்லை சீனியர் அப்புறம் பார்க்கலாம் என்று ஓடி விட்டாள்.
அருண் இன்பனை பார்த்து ப்ரோ என்ன இப்படி பண்ணிட்டிங்க எனக்கே இப்போ தான் ஒரு பொண்ணு மேல இன்டெர்ஸ்ட் வந்திருக்கு அதுக்குள்ள அந்த வெண்பா ராட்சசி, நீங்கள் ரெண்டு பேரும் என்னோட முதல் முயற்சி ய இப்படி பன்னீடீங்க
இன்பா இப்போது பேசினான்
அவ பின்னால் சுத்துற வேலை வச்சுக்காத
என்று அங்கு இருந்து நடந்து கொண்டே
அப்புறம் நாளைக்கு காலேஜில் உன்னை நான் பார்க்க கூடாது .
அது ஒன்னும் உங்க காலேஜ் இல்ல அதுல என்னோட மம்மி க்கு உரிமை இருக்கு அதனால நான் காலேஜ் வருவேன்.
இதுக்கும் முன்னே அவ மேல எனக்கு பெருசா இன்டெர்ஸ்ட் இல்ல இப்போ நீங்கள் சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு
அவ உங்களுக்கு தங்கை மாறி ப்ரோ என்று அவன் சொல்ல இன்பாவுக்கு சரியான கோபம் வர நின்று
அவனை மிரட்டல் பார்வையில் பார்க்க
அருண் அசராமல் இப்போ நீங்கள் எதுக்கு காலேஜ் ல சுத்துறீங்க உங்கள் IPS வேலைக்கு போக வேண்டியது தானே என்று கூற
இன்பா அவனை அருகில் அழைத்து அவனது கைகளை முறுக்கினான்.
அவன் வலியால் வேணாம் அண்ணா வேணாம் என்று கத்த நான் சொன்னதை நல்லா புரிஞ்சுக்கோ புரியுதா என்று கூறி விட்டு அந்த தேர்வு நடக்கும் இடத்திற்கு சென்றனர்.
இன்பா வருவதை பார்த்த ஆதி
அவளிடம் ஏய் என்னடி இன்னிக்கு
உன்னோட ஆள் ரொம்ப சூடா இருக்காரு என்று கிண்டல் செய்ய
ஷட் அப் ஆதி என்று இன்பாவ பார்க்காமல் அவள் வேலையில் கண்ணாக இருந்தாள்.
அவளுக்கு உள்ளுக்குள் ஒரே நடுக்கமாக இருந்தது விவேகாவால் இன்பாவின் கண்களை பார்க்க முடியவில்லை.
அவன் கொடுத்த முத்தங்கள் தான் அவளுக்கு நினைவு வந்தது அவளுக்கு உடல் எல்லாம் சிலிர்த்து போனது.
இன்பாவின் ஒரு பார்வையே அவள் அவனிடம் கரைய போதுமானதாக இருந்தது. தன் கண்களை படபடக்க அப்படியே ஆதி பின்னால் ஒளிந்து கொண்டாள்.
இன்பா மனம் இப்போ தான் இன்பா அவளுக்கு கெமிக்கல் ரியாக்சன் நடக்குது அப்டின்னு நான் நெனைக்கிறேன் டா .
உன்னை பார்த்தால் அவளுக்கு வெட்கம் வருது போல
இன்பா brain அவளுக்கு வெட்கமா அது அவளுக்கு அந்த பீலிங் இருக்குமா
அவ சரியான கேடி
ம்ம்ம்ம்ம் பார்க்கலாம் இன்னும் எவ்ளோ தூரம் தான் போவானு என்று
யோசித்து தன்னவளை நினைத்து உருகியவன்.
அதற்குள் தேர்வு எழுதும் அறைக்கு வர சொல்ல அனைவரும் கிளம்பினர்.
விவேகாவுக்கு ஒரே ஒரு முறை தன்னவனை பார்க்க வேண்டும் என்று தோன்ற யாரும் அறியா வண்ணம் ஒரு பார்வையில் அவனை மனம் முழுவதும் நிறைத்து கொண்டாள்.
உள்ளே சென்றவள் எந்த ஒரு சலனமும் இல்லாமல் அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதி கொடுத்து விட்டு வேகமாக வெளியே வர
அங்கு அருண், இன்பனை தவிர யாரும் இல்லை.
இப்போது விவேகா என்ன செய்வது என்று நின்று கொண்டு இருக்க
அப்போது பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது.
விவே குட்டி என்று சொல்ல இன்பாவும் , அருணும் திரும்பி பார்த்தனர்
அப்போது அருணுக்கு வீட்டில் இருந்து அவன் அம்மா அழைக்க இண்பாவை முறைத்து கொண்டே போன் அட்டெண்ட் பண்ண சென்றான்.
அந்த புதியவன் விவேகாவின் அருகில் வந்து அவள் கையை எடுத்து தன் உள்ளங்கை யில் வைத்து கொண்டு,
அவள் தலையை வருட இங்கு இன்பாவுக்கு உள்ளே எரிமலை வெடித்தது.
உடனே வேக நடையிட்டவன் அவள் அருகில் சென்று அந்த புதியவன் கைகளை தட்டி விட்டு அவளை தன் பக்கம் இழுக்க
அந்த புதியவன் யாரு டா நீ உன்னை யாரு இங்க விட்டது என்று வாய்க்கு வந்தது பற்றி பேச
இன்பாவோ மைன்டு யுவர் லாங்வெஜ் என்று அவன் கம்பீரமாக கூறி விட்டு விவேகாவை ஒரு கோப பார்வை பார்க்க விவேகாவோ என்ன செய்ய என்று முழித்தாள்.
ஏய் கைய விடு டா விவே அவன் யாரு குட்டி
நீ யாரு டா அவ கிட்ட பேச என்று இன்பா கூற
அப்போது விவேகா அவரு என்னோட ராஜ் அத்தான் என்று கூற
இன்பா அப்போதும் அவளை அவன் நெருங்க விட வில்லை.
அதுதான் என்னோட குட்டி சொல்லி விட்டாளே இப்போ நகரு டா ஸ்லம் டாக் என்று கூறி .
விவேகாவின் அருகில் வர இன்பா அவளை விட வில்லை என்னை விடாம இருக்க நீங்கள் யாரு முதலில் என்று கூறி முடிப்பதற்குள்.
இன்பா அருகில் இருந்த கண்ணாடி மலர் குடுவையை அழுத்தி பிடிக்க
இப்போது இன்பாவின் கைகளில் ரத்தம் வேக நடை இட்டு அவ்விடத்தில் இருந்து சென்று விட விவேகாவுக்கு இண்பாவை நினைத்து மிகவும் கவலையாக இருந்தது .
இவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் இன்பாவ என்ன செய்வது கையில் வேறு காயம் அய்யோ எப்படி வலிக்கும் அவனுக்கு என்று ஒரு நிமிஷம் கண்கள் கலங்கியது.
நானும் கேட்க கூடாதா என்று சொல்லி கொண்டே ஆதி அந்த இடம் வர இப்போது ராஜுக்கு மிகவும் கோபம் வந்தது.
ராஜ் உங்க அம்மா வீட்டில் எல்லாம் நல்லா இருக்காங்க தானே என்று
அவள் அருகில் நெருங்க ஆதி ஏய் அவ பக்கம் போகாத டா
ராஜுவோ ஆதியை பார்த்து அவள் எனக்கு சொந்தமாக வேண்டியவள் கூடிய சீக்கிரம் அது நடக்கும்.
ஆதி அவனை பார்த்து மிரட்டும் தோரணையில் அது உன் கனவில் கூட நடக்காது டா என்று அவள் கைகளை பற்றி வேகமாக இழுத்து சென்று விட்டான்.
ராஜ் மனதில் ஆதி நான் உன்னை சும்மா விட மாட்டேன் டா என்று கருவிக்கொண்டான்.
யார் இவன் இவனுக்கு இந்த காலேஜ் ல என்ன வேலை
ராஜ் ( அப்பா வாசுதேவன் அக்கா மகன்) விவேகாவின் அத்தை சித்ரா வின் மகன் .
ராஜ் இந்த SPR காலேஜ் ல தான் CS dept ல ஒர்க் பண்றான்
விவேகாவுக்கு இப்போது என்ன செய்வது என்று புரியவில்லை.
இன்பாவின் கண்ணில் கோபம் கையில் ரத்தம் போக ஆதி அவனுக்கு முதலுதவி செய்ய போக அதற்கு முன் இனியாள் செய்து கொண்டு இருந்தாள்.
ஆனால் இனியாளுக்கு என்ன நடந்தது என எதுவும் தெரியாது அவன் கைகளில் ரத்தம் பார்த்ததும் அவன் மனதில் இடம் பிடிக்க வேண்டும் அவனை நெருங்க வேண்டும் என்று அவள் ஓடி ஓடி உழைத்தாள்.
விவேகாவும் இதை கண்டாள் மனதில் யாரோ கத்தி வீசியது போல வலி இன்பா அவள் பார்க்கிறாள் என்பதை கண்டு கொண்டான் ஆனால் எதுவும் பேச வில்லை
இன்பாவின் மனதில் இனி நாம் அவளிடம் செல்ல கூடாது
அவளே நம்மிடம் வரட்டும் வரா விட்டாலும் அவளிடம் செல்ல கூடாது
நாளை மறு நாள் இந்த கேஸ் விஷயமாக வந்து விட்டு இனி அவள் கண்ணில் படவே கூடாது என்று நினைத்து கொண்டான்.
இன்பா மனதில் என்னை பார்த்து யார் என்று கேட்கிறாளே இவளுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் யார் யாரோ இவள் கைய பிடிக்க வருகிறார்கள் .
இவளும் அனைவரிடமும் பேசுவாள் ஆனால் என்னை பார்த்தால் இவளுக்கு எப்படி தெரிகிறது.
என்னை சுத்த விடுற நீ உனக்கு இருக்கு டி இவ்ளோ நாள் நானும் உன்னை கொஞ்சம் குறைவா நினைச்சுட்டேன் டி.
ஆனால் என்னை பார்த்து யார் ன்னு கேட்கிறாய் வெய்ட் அண்ட் வாச் இந்த முறை நீ தான் என்னை தேடி வருவ என்று மனதில் நினைத்தவன் .
இப்போது கிளம்பி விட்டான் விவேகாவை ஒரு பார்வை கூட பார்க்க வில்லை . அவள் மனமோ ஒவ்வொரு நிமிடமும் துடித்து போனது
நாளை மறு நாள் அந்த பாட்டு போட்டி , நடன போட்டிக்கு தன்னை எப்படி தயார்படுத்தி கொள்வது என அவளுக்கு தெரிய வில்லை.
அந்த நாளும் வந்தது இன்பா மிகவும் கடுமை மாறாமல் spr காலேஜ் ல அவனுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் மித்ரனோடு சேமிக்க ஆரம்பித்தான்.
இப்போது விவேகாவின் மனது உலை கலன் போல கொதித்தது .
இங்கு இனியாள் வெண்பாவை தான் இன்பா விரும்புகிறான் என நினைத்து அதற்கு சில வெண்பாவை அவமான படுத்தும் திடங்களோடு காலேஜ் வந்தாள்.
முதலில் பாட்டு போட்டி நடக்க நிறைய காலேஜ் ல இருந்து நிறைய மாணவிகள் மாணவர்கள் வந்து பாடினர். இப்போது இவர்கள் முறை வந்தது.
இனியாள் இப்போது பாடினாள்
கண்ணழகா.. காலழகா..
பொன்னழகா.. பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
பெண் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா
சொல்கிறேன்
உன்னுயிர் சேர்ந்திட, நான் வழி பார்க்கிறேன்.
இமமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை என்று இண்பாவை பார்த்து கொண்டே பாடி முடிக்க அரங்கமே ஒரு நிமிடம் கை தட்டலில் ஆடியது
அடுத்து விவேகா என்று கூப்பிட விவேகா சென்று பாட ஆரம்பித்தாள்
இன்பா அப்படியே உரைந்தான் அந்த இடமே மிகவும் அமைதி கடலில் மூழ்கியது
Episode 27,
அடுத்து விவேகா என்று கூப்பிட விவேகா சென்று பாட ஆரம்பித்தாள்
துக்கம் தொண்டையை அடைக்க இந்த இரண்டு நாட்கள் அவள் மனதில் இருந்த அத்தனை சோகமும் எழுத்துக்களாக மாறி பாட ஆரம்பித்தாள்
இன்பா அப்படியே வைத்த கண் வாங்காமல் அவளையே பார்க்க அது அவளுக்கு தெரியவில்லை
அவளது குரல் அந்த பாடலுக்கு மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது .
ஒரு நிமிஷம் அனைவர் .மனமும் சோகத்தில் மூழ்கியது இது
அந்த வரிகளின் தாக்கமா
அவள் குரலின் தாக்கமா என்று புரிய வில்லை
அந்த இடமே மிகவும் அமைதி கடலில் மூழ்கியது.
அது என்ன பாடல் கவிஞர் நா.முத்துக்குமாரின் அழகான ஒரு படைப்பு.
விவேகா பாட வேண்டும் என்று தேர்வு செய்த பாடலோ வேறு ஆனால் இன்று நடந்த நிகழ்வில் அவளை அழைத்ததும் அவள் கண்களை மூடி கொள்ள இந்த கவிதை வரிகளே தோன்றியது.
இதயம் இந்த இதயம்
இன்னும் எதனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ
ஆசை தூண்டிலில் மாட்டிக்கொண்டு
இது தத்தளித்து துடிக்கிறதே!
விவேகாவுக்கு இன்பாவின் மேல் காதல் தான் ஆனால் அவனுக்கும் அவளுக்கும் இருக்கும் பொருத்தம் அதை நினைக்க கூட அவளுக்கு தகுதி இல்லை
எவ்வளவு தான் இன்பனை நினைக்காதே என்று அவளது அறிவு கூறினாலும் அவளது மனம் அவனை தான் தேடுகிறது
உள்ளுக்குள்ளே துடிக்கும் சிறு இதயம்
எத்தனையோ கடலை இது விழுங்கும்
இண்பாவை நினைத்து நினைத்து அவள் மெழுகாக உருகுகிறால்
இன்பா மட்டுமே இருந்தான் அந்த இறுதி வரி பாடி முடிக்கும் போது அவள் கண்களில் கண்ணீர் வர அப்போது பாடல் பாடி முடித்து இருந்தாள்.
அந்த அரங்கமே ஒரு நிமிஷம் அமைதியில் நிறைந்தது. அவள் கண்களை திறக்க ஒரு நிமிஷம் அனைவரும் அமைதி காக்க
விவேகா அங்கு இருந்து நகர்ந்து போகும் நேரம் அந்த பாட்டு போட்டி நடுவரில் ஒரு பெண் எழுந்து கைகளை தட்டினாள்.
இப்போது அனைவரும் எழுந்து கைகளை தட்டினர் விவேகா வேகமாக அழுது கொண்டே ரெஸ்ட் ரூம் ஓடி விட்டாள்.
அவள் பின்னால் வெண்பாவும், மைதிலியும் சென்றனர் அனைத்து போட்டிகளின் முடிவும் மாலை தான் தெரியும் .
இங்கு மித்ரன் இன்பாவிடம்,
ஏய் என்னாச்சு டா அவளுக்கு அழுது கிட்டே போறா உங்களுக்கு க்குள் ஏதாவது சண்டையா
இன்பாவோ இல்ல மித்ரன் இனி நான் அவ பின்னாடி சுத்த மாட்டேன் .
என்னை பார்த்து யாரு அப்டின்னு கேட்டுடா டா இனி என்னால முடியல டா
மித்ரனோ என்ன டா இப்படி சொல்ற
இல்ல மித்ரன் அவளுக்கு நான் ரொம்ப இடம் கொடுத்து விட்டேன் இனி பாரு அவளுக்கு இருக்கு நானும் அவ சின்ன பொண்ணு அப்படின்னு தான் எதுவும் சொல்லல இனிமே என்னால முடியாது.
இந்த பேச்சு இதோட போதும் என்று வாய் மொழியில் தான் கூறினான் ஆனால் மனம் ரணமாக கொதித்தது.
என்ன வார்த்தை டி என்னை பார்த்து நீ கேட்டுட்ட என்னோட வலி உனக்கு வரனும் டி என்று நினைத்து கொண்டு அடுத்த வேலைக்கு இருவரும் சென்றனர்.
அடுத்து மதிய வேலை முடிந்து நடன போட்டி ஆரம்பித்தது விவேகா சாப்பிடவே இல்லை.
வெண்பாவும், மைத்திலியும் எவ்வளவு சொல்லியும் மறுத்து விட்டாள். அனைத்து காலேஜ் இல் இருந்தும் மாணவ மாணவிகள் ஆடினர்.
இவர்கள் காலேஜ் ல முதன்முதலில் கண்ணுகினியாள் , யாளினியாள், சில தோழிகள் சேர்ந்து ஆடினர்.
அவர்கள் ஆடிய பாட்டினை கேட்கவும் இந்த முறை வெண்பாவுக்கு ஒரே அழுகை தான் .
உடனே விவேகா என்னாச்சு டி ஏன் அழர என்று தன் கவலை மறைத்து கொண்டு கேட்க வெண்பா கூறினாள்
விவி இந்த பாட்டு நான் தான் சூஸ் பண்ணி சோலோ பர்பாம் பண்ணலாம் னு இருந்தேன் அதுக்குள்ள உங்க dpt பொண்ணு இதை ஆடிடுச்சு என்று அழுது கொண்டே கூற
விவேகாவுக்கு ஒரு யோசனை வந்தது அழ வேண்டாம் டீச்சர் என் கிட்ட ஒரு idea இருக்கு என்று அவள் கூற
வென்பா அதிர்ச்சி ஆனாள் அவள்
விவி இந்த spr காலேஜ் ல தமிழ் சாங் ஆட மாட்டாங்க டி தெலுங்கு சாங் ஆடினால் தான் price money கிடைக்கும் endru கூற
விவேகா- வாடி பார்த்து கொள்ளலாம் நம்ப மூணு பேரும் சேர்ந்து ஆடுறோம் யாரு நமக்கு போட்டி ன்னு பார்க்கலாம்
அந்த இனியாள் எப்போதும் இப்படி தான் நான்சென்ஸ் என்று வெண்பாவை அழைத்து அவளுக்கு ஒரு ஆண் வேடம் சும்மா அடையாளம் தெரியாதது போல போட்டு மாஸ்க் தீம் போல விவேகா வெண்பாவுக்கு மாஸ்க் போட்டு விட்டாள்
இப்போது அவள பார்க்க உண்மையாக ஒரு ஆண் போலவே இருந்தது .
உடனே மைதிலி ஒரு வெஸ்டர்ன் உடையில் வந்தாள் .
விவேகா எப்போதும் போல பரதநாட்டிய உடையில் வர
வெண்பா அவளை பார்த்து கண்ணுக்கு மை இடு விவி என்று கூற
அவளோ இல்ல வெண்பா வேணாம் நான் வைக்கல என்று கூற
வெண்பாவும், மைதிலியும் அடி லூசு பரத நாட்டிய ட்ரெஸ் போட்டு கண்ணுக்கு மை இடாமல் இருந்தால் அது நல்லா இருக்காது என்று கூறி விவேகாவை வலுக்கட்டாயமாக மை இட்டு காத்து இருந்தனர்
இனியாள் சாய் பல்லவி , வருண் தேஜா நடித்த வச்சிண்டே மெல்லா மேல்லக வச்சிண்டே பாட்டுக்கு ஆடி விட்டு இன்று நமக்கு தான் பரிசு என்று குதுகலமாக வந்தனர்.
இறுதியாக மைதிலி குழு என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கூற
வெண்பா ஆண் வேடத்தில், நடுவில் நிற்க விவேகா ஒரு புறம், மைதிலி ஒரு புறமும் நின்று கொண்டனர் .
நீ நாதஸ்வரம்
போல வந்த நீ
நாதஸ்வரம் போல
வந்த நாபி கமலம் நானா
என்று வெண்பாவின் அருகில் வந்து மைதிலி வெண்பாவை ஆடவனாக நினைத்து இழுத்து ஆட அங்கு உள்ள அனைத்து மாணவர்களும் ஒரே கத்தல் விசில் சத்தம் கொடுக்க
என்று விவேகா அங்கு உள்ள அணைவையும் தன் விழிகளால் கிட்டு அழகாக மயில் போல் ஆட
வளையபட்டி தவிலே
தவிலே ஜீகல்
என்று வெண்பா மைத்திலியை இழுத்து ஆடி அவளை தன் கை கொண்டு சுழற்றி விட அவள் கொஞ்சம் சுத்தும் நேரத்தில்
அட ஜிமிக்கிபோட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே
என விவேகாவை சீண்டி கொண்டே ஆடினாள்
அதில் கோபமான மைதிலி வெண்பாவை தன் புறம் இழுக்க வென்பா அவளை
உன் கண்கள்
ரெண்டும் கல்யாணி
உன் சிாிப்போ சிந்து
பைரவி என்று
பாட அதனை பார்த்து விவேகாவுக்கு கோபம் வர இப்போது வெண்பா விவேகாவை சமாதானம் செய்ய
சிந்து பைரவி என்று பாடி இருவரையும் தன் கை வளவுக்குள் கொண்டு வந்து
நீ பாா்க்கும் போது
பாக்ய ஸ்ரீ என்று மைதிலி யையும்
கொஞ்சும் போது
நீலாம்பாி என்று விவேகாவையும் பார்த்து பாடி கொண்டே ஆடினாள் வெண்பா
ஜில்லுங்குதே உங்க ஊரு
சிரபுஞ்சியா என்று விவேகாவுகாவும் மிதிலயும் ஒரு சேர வெண்பாவை இழுத்து ஆட
அதில் குஷியான வெண்பா
உங்க ஊரு கல்பாக்கமா
நரம்பெல்லாம் முறுக்கேறுதே
ஏன்டி இவர்களின் இடையை கிள்ளி ஆட
இன்பாவுக்கு விவேகாவை பார்த்து காலையில் பார்த்தவளா இவள் சரியான நடிப்பு கள்ளி கேடி என்று அவள் ஆடிய அந்த நடனத்தை தன் போனில் வீடியோ எடுத்து கொண்டான்.
பின் அந்த அரங்கத்தை பார்க்க மொத்த கூட்டமும் இவளை தான் பார்த்தது அதை பார்த்து இன்னும் விவேகாவின் மேல் கோபம் அதிகமாக வந்தது
நீ கை கால் முளைச்ச
மத்தளமா என் ஹாா்மோன் செய்யுது
சேட்டையம்மா இறுதியாக வெண்பா இருவர் கன்னத்திலும் முத்தம் வைத்து ஒரு வணக்கம் சொல்லி செல்ல
இவர்கள் ஆட ஆட மாணவர்கள் பின்னால் அப்படி ஒரு சத்தம் கொண்டு விசில் அடித்து ஆடினர் .
இவர்கள் மூவரும் இறங்கும் நேரம் அனைவரும் ஊஊ ஓய்ய் ஓ ஓ ஓ என்று கத்தி தங்கள் மகிழ்ச்சி வெளிப்படுத்த
வெண்பா கீழே வந்து விவேகாவை இழுத்து முத்தம் வைத்து கட்டி அணைக்க அதை பார்த்து
இன்பாவுக்கு ஆத்திரம் தான் மனதில் இவன் யார் புதிதாக என்று நினைக்க
அப்போது வெண்பா மாஸ்க் கழட்ட அப்போது தான் அவனுக்கு
ஒரு நிமிஷம் வென்பா வின் மேல் இன்பாவுக்கு பொறாமையாக இருந்தது என்னை தவிர எல்லார் கிட்டயும் கொஞ்சு என்று மனதுள் நினைத்து கொண்டு நின்றான்.
இவர்கள் ஆடிய ஆட்டம் பார்த்து அனைத்து மாணவர்களும் சந்தோசமாக இருக்க ஆனால் இனியாளுக்கு இப்போதும் மனதில்
தனக்கு தான் முதல் பரிசு என நினைத்து கொண்டு இருந்தாள்.
மாலை ஒரு 4 மணி இருக்கும் அனைத்து மாணவர்களும் வெற்றியாளர் யார் , எந்த காலேஜ் என்று அறிவிக்கும் நேரம் வர
நடனம், பாட்டு , நாடகம், பெஸ்ட் performer என்ற நான்கு தகுதியிலும் SPR காலேஜை விட இன்பாவின் காலேஜ் முதலில் வந்து பரிசுகள், காசோலை பரிசுகள் என்று வெற்றி பெற்றது.
நடனத்தில், சோலோ சாங், பெஸ்ட் perform என்று மூன்றிலும் விவேகா பரிசு பெற அங்கு இருந்த மற்ற காலேஜ் மாணவர்கள் முன் ஒரு ஹீரோயின் ஆக மாறி விட்டாள்.
ஆனால் எப்போதும் போல சாதாரணமாகவே இருந்தாள். இதை எல்லாம் ராஜ் தூரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருந்தான் .
மனதில் நான் உன்னை மிஸ் பண்ண மாட்டேன் குட்டி என்று கூறி கொண்டான்.
இதை எல்லாம் வாங்கி கொண்டு அவள் மேடையில் இருந்து கீழ வர
அப்போது வந்தான் குரு பிரகாஷ் ரெட்டி SPR காலேஜ் கரெஸ்பாண்டேன்ட் வர இன்பாவுக்கு ஒரு நிமிஷம் ஏதோ சரி இல்லை என்று மனது தோன்றியது.
குரு பிரகாஷ் 6 அடி உயரம் , கூர்மையான பார்வை அவன் சிரிப்பு ஒரு மாய புன்னகை அது ஒரு படு குழி என்பது இன்பாவுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.
குரு விவேகாவின் அருகில் வந்தவன் அவளை மீண்டும் மேடைக்கு அழைக்க அவள் திரு திரு வென முழித்தாள்.
குருவின் பின்னால் தேஜ ஸ்ரீ வந்து அவன் அருகில் ஏதோ கூற குரு இண்பாவை திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு மேல சென்றான்.
பொதுவாக பேசிவிட்டு பின் விவேகாவை பார்த்து இந்த காலேஜ் ல
ஒரே ஒரு பொண்ணு தான் எங்க SpR ஆ இம்ப்ரெஸ் பண்ணுச்சு அது இப்போ நடந்த மாறி இருக்கு அதுக்குள்ள 4 வருஷம் ஓடிடுச்சு. ஆனால் இதுல ஒரு முக்கிய விஷயம் அந்த brave girl எங்க காலேஜ்
இவ்ளோ நாள் கழிச்சு எங்க SP அதே மாதிரி ஒரு பொண்ணு bold ஆ இருக்கலா அவளை நம்ப காலேஜ் ல சகல வசதி படிப்போட படிக்க வைக்கணும் ன்னு எங்க அண்ணா ஆசை படுகிறார்கள்.
உங்களுக்கு வர விருப்பமா மிஸ் விவேகா வாசுதேவன் என்று குரு கேட்க அந்த அரங்கம் முழுவதும் விவேகாவை பார்க்க அவளோ இன்பாவ பார்க்க அவன் முகம் பாறையாக இருந்தது.
உடனே ராஜ் விவேகாவின் கைகளை கோர்த்து கொண்டு அவள் நிச்சயம் வருவாள் சார் என்று கூற வருவதற்குள் ஆதி அவளை இழுத்து சென்றான்.
குரு நிச்சயமாக உங்களை போல் உள்ள திறமைசாலிகளுக்கு என்றும் sprஇன்ஸ்டிடுசன் கதவுகள் எப்போதும் திறந்து இருக்கும் என்று கூறி விட்டு தேஜு கூட கிளம்பினான்.
விவேகாவின் மனதில் ஏதோ தவறாக நடக்க போகிறது என்று மனம் சொல்லி கொண்டே இருக்க அவள் ஆதி கூட கிளம்பினாள்.
அவள் நினைத்தது போல நடக்க போகிறது அவளுக்கு இல்ல அது இன்பாவுக்கு
என்ன நடக்கும்??????
Episode 28,
விவேகா அந்த இடத்தை விட்டு ஆதியுடன் காலேஜ் பஸ் க்கு சென்று அனைத்து மானவர்களுடனும் அமர்ந்து கொண்டாள்.
இன்பாவின் மனதில் அந்த குரு பேசிய வார்த்தைகளே திரும்ப திரும்ப கேட்டு கொண்டு இருந்தது.
நாம் எதற்கு இங்கு வந்தோம் என்று அவன் கண்டு பிடித்து இருப்பான்.
ஆனால் குரு விவேகாவை பார்க்கும் பார்வையை நினைத்தவனுக்கு அப்படியே குருவை ஒரு துப்பாக்கியால் நெற்றி பொட்டில் சுட வேண்டும் போல இருந்தது.
இன்பாவுக்கு ஏதோ நினைவு வந்தது ஏதோ ஒரு பெண்ணை பற்றி பேசினானே யார் அந்த பெண் என்று இன்பாவின் போலீஸ் மூளை யோசித்தது.
அதற்குள் காலேஜ் பஸ் ல அனைவரும் கிளம்ப தயாராக இருக்க அப்போது இன்பா அனைத்து மாணவர்களும் வந்து விட்டார்களா என்று ஒரு ஆசிரியர் விட்டு ஒரு முறை சரி பார்க்க சொல்லி விட்டு கீழ நின்று கொண்டு இருந்தான்.
அப்போது பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது.
என்ன இன்பராகவன் சார் இப்போ IPS ஆ யோசித்து கொண்டு இருக்கிறீர்கள் போல என்று ஒரு ராஜ தோரணையில் இண்பாவை நோக்கி நடந்து வந்தான். குரு பிரகாஷ்
இன்பா முகத்தில் இப்போது எந்த உணர்ச்சியும் இல்லாமல்
என்ன பண்றது மிஸ்டர் குரு பிரகாஷ் ரெட்டி
இப்போ தான் இந்த காலேஜ் ல கரெஸ்பாண்டெண்ட் ஆ வேற இருக்கிறேனா உங்க அளவுக்கு என்னால் எதையும் யோசிக்காமல் செய்ய முடியாதே
குரு இன்பாவ உருத்து பார்த்து நீங்கள் பேசாமல் இந்த காலேஜ் ல எதுவும் செய்யலாம் தானே என்று அவமானம் செய்தான்.
இன்பாவுக்கு கோபம் வந்தாலும் ஆனால் வெளி காட்ட வில்லை. அப்போது திடீரென பஸ் ல உள்ள சக்கரம் காற்று இல்லாமல் இருக்க அந்த பஸ் ஓட்டுநர் வந்து
இன்பாவிடம் சார் திடீரென பஸ் பஞ்சர் ஆகிடுச்சு
அப்புறம் பிரேக் பிரோப்ளேம் ஆகிடுச்சு நல்ல வேலை நான் கண்டு பிடிச்சுட்டேன் சார்
இப்போ என்ன செய்ய என்று கேட்க குரு இப்போது ஒரு அசுர புன்னகை செய்தான்.
அந்த புன்னகை மிகவும் சத்தம் இல்லாமல் இருந்தாலும் கூட பஸ் இன்னும் ஏன் கிளம்பவில்லை என்று மாணவர்கள் ஜன்னலில் பார்க்க
இப்போது குரு அங்கு உள்ள அவனின் பாதுகாவலர் கிட்ட நம்ப காலேஜ் பஸ் வேணாம் ஸ்கூல் பஸ் போதும் அதை இன்பா சார் கிட்ட கொடுத்திடலாம்.
உச்சி கொட்டி பாவம் என்று கூற அந்த நேரம் வசுமதி அவளுடைய கார்ல வர இப்போது
இன்பா உங்க ஹெல்ப் க்கு ரொம்பவும் நன்றி
வந்த எங்களுக்கு போக தெரியும் மிஸ்டர் குரு
ஆனால் உங்க வழி தான் சரி இல்ல போல கொஞ்சம் பார்த்து போங்க என்று கூறிவிட்டு இன்பா வசுவிடம் சென்றான்.
குரு அவனை ஒரு எரிக்கும் பார்வை பார்த்து விட்டு சென்றான்.
இன்பா அனைத்து மாணவர்களும் கீழ இறங்க அதில் மாணவிகள் அதிகமாக இருக்க இன்பாவின் காரில் மாணவிகளும் மாணவர்கள் அவுட் பஸ் ல போவதாக கூற அவர்களோடு காலேஜ் ஆசிரியர் ஒருவரை அனுப்பி வைத்தான்.
இனியாள் இன்பா கூட செல்ல வேண்டும் என்பதற்காக அவன் காரில் எறிக்கொண்டாள்.ஆனால் மித்ரனும் , இன்பாவும் தான் இனியாள் காரில் ஏறினான் ஏன் என்றால் மைதிலி வசுமதி காரில் வர பயமாக இருக்கிறது என்று கூறி இதில் எறிக்கொண்டாள்.
இப்போது விவேகாவும், வெண்பாவும் வசுமதி யின் சொந்த காரில் இருந்தனர் .
விவேகாவுக்கு ஏனோ இதில் வர விருப்பம் இல்லை அதில் இன்பா இருக்கிறான் . இந்த கார் அவர்கள் குடும்பத்தினுடையது அதனால தன்னை குறுக்கி கொண்டு அமர்ந்து இருந்தாள்.
இப்போது இருவர் வாகனம் ஒவொன்றாக கிளம்பியது. வசு விவேகாவிடம்
என்ன வாயாடி ரொம்ப அமைதியாக இருக்க இன்னேரம் பொறிஞ்சு தள்ளி இருப்ப என்னாச்சு
ஒன்னும் இல்ல மேடம் என்று கூற வெண்பாவோ ஆண்ட்டி இன்னிக்கு செம்ம ஜாலி யா இருந்தது விவேகா செம்ம டான்ஸ், பாட்டு எல்லா price யும் விவேகாவுக்கு தான் என்று சந்தோஷமாக கூறினாள்.
வசு இப்போ உன்னோட தோழி இப்போ கூட பேசவே இல்ல என்னாச்சு என்று கேட்க விவேகா அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல மேடம் என்று கூற
வெண்பாவோ ஆண்ட்டி இவ மதியம் சாப்பிடவே இல்ல காலையிலும் எதுவும் சாப்பிடல என்று கூற
அவளோ இல்ல மேடம் இவ சும்மா சொல்றா எனக்கு கொஞ்சம் சோர்வா இருக்கு மேடம் வேற ஒன்னும் இல்ல.
வசு ஏய் பொய் சொல்லாத விவேகா என்று காரை ஒரு ரெஸ்டாரண்ட் , பேக்கரி ஓரம் நிறுத்த
விவேகாவோ இல்ல மேடம் எதுவும் வேண்டாம் நான் வீட்டுக்கு போகனும் நான் நல்லா இருக்கேன் எனர்ஜி யா இப்போ பாருங்கள்
என அவள் கூற வசுமதி வண்டியை நிறுத்தி அவளுக்கு தேவையான உணவுகளை வாங்கி கொடுக்க,
அப்போது அந்த நேரம் ஒரு கேஸ் தொடர்பாக அரசு மருத்துவமனை செல்ல வேண்டி போன் வர அவள் இப்போது இன்பனை அழைத்தாள்.
விவேகா சாப்பிட்டு கொண்டே வசு எப்படி இன்பாவிடம் பேசுகிறார் என்று பார்த்து கொண்டு இருந்தாள்.
வசு இன்பாவிடம் – ராகவ் எனக்கு கேஸ் விஷயமா gh போகனும் இப்போ நீ வந்து கார் எடுத்து கிட்டு போ எனக்கு இப்போ jeap வருது டா
அவன் சரி மா என்று கூறி வைத்தவன் அந்த காரில் இருந்து இறங்கி நேராக தன் அம்மாவை நோக்கி வந்தான்.
என்னாச்சு மா இங்க வண்டிய நிறுத்தி இருக்கீங்க
இல்ல பா கொஞ்சம் ஸ்னாக்ஸ் வாங்கினேன் சரி நீ கார் எடுத்து கிட்டு போ இன்னும் 5 மினிட்ஸ் ல jeap வந்திடும்
உடனே அவன் சரி மா என்று கூறி காரை கிளப்பினான்.
விவேகா மறந்தும் அவன் இருக்கும் பக்கம் திரும்ப வில்லை இன்பாவும் அதே போல் தான்
வெண்பா தான் இவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு முழித்தாள்.
வெண்பாவே மௌனத்தை களைத்தாள் . அவனிடம் அண்ணா என்னோட டான்ஸ் எப்டி இருந்தது
அவனோ ம்ம்ம் சூப்பர் வெண்பா உன்னோட டேஸ்ட் நல்லா இருக்கு மா
உடனே வெண்பா அண்ணா அந்த பாட்டு விவி சூஸ் பண்ணா என்று கூற இன்பா இப்போது எந்த பதிலும் கூற வில்லை
வெண்பா என்ன அண்ணா கமெண்ட் எதுவுமே சொல்ல மாட்டிகிறீங்க
அவனோ இதுக்கு கமெண்ட் பண்ண நான் யாரு மா என்னோட வேலை என்னவோ நான் அதை செய்யுறேன் என்று கூற விவேகாவுக்கு கண்கள் கலங்கியது.
அதற்குள் காலேஜ் வர வெண்பா விவேகாவிடம் சொல்லி விட்டு நேராக அவளது பஸ் க்கு போனாள் அதற்கு முன்பே பாதி பஸ் கிளம்பி போய் விட்டது.
மித்ரன் இவர்கள் வருவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே வந்து விட்டான். இப்போது விவேகா அங்கு உள்ள வாட்ச் மேன் கிட்ட B25, B16, போயிடுச்சா என்று கேட்க
போய்டுச்சு மா B20A உன்னோட பஸ் தான் இன்னிக்கு முதலில் போச்சு .
விவேகா அவரிடம் B75 போயிடுச்சா என்று ஆதியின் பஸ் பற்றி கேட்க
நீங்கள் உள்ளே வரும்போது தான் அது வெளியே போச்சு என்று கூற இப்போது என்ன செய்வது என்று அவள் யோசித்து கொண்டு இருந்தாள்.
அப்போது மித்ரன் அங்கு வர அவனிடம் சென்றவள் சார் என்று அழைக்க
ம்ம்ம் சொல்லு விவேகா
சார் எனக்கு 50 ருப்பே தர முடியுமா நாளைக்கு நான் வெண்பா கிட்ட கொடுத்திடறேன்
ஏய் இவ்ளோ தான இரு என்று பார்க்க அவனிடம் இருந்தது. ஆனால் இன்பாவும் விவேகாவும் சண்டையில் இருக்க இவர்களை சேர்க்கும் எண்ணம் தோன்ற
இல்ல மா என்கிட்ட 500 ஆ இருக்கு இந்தா என்று கொடுக்க
அய்யோ வேணாம் சார் என்று இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்க அப்பொழுது அங்கு இன்பா வந்தான்.
மித்ரன் வா கிளம்பலாம் என்று கூற இல்ல டா இந்த பொண்ணுக்கு காலேஜ் பஸ் போயிடுச்சு அதனால் அவுட் பஸ் க்கு அமெண்ட் கேட்குது என் கிட்ட இல்ல
உன்கிட்ட இருக்கா என்று கேட்க இன்பா மித்ரனிடம் உடனே என்கிட்ட இல்ல வா நம்ப போகலாம் என்று கூற
விவேகா இப்போ இன்பனை பார்த்தாள் மனதில் கல் நெஞ்சக்காரா என்று நினைத்து கொண்டாள்.
மித்ரன் கிட்ட விவேகா சார் என்னை பஸ் ஸ்டாப் ல மட்டும் விடுங்க நான் போயுகிறேன் என்று கூற
ம்ம்ம் சரி மா என்று வா போகலாம் என்று அவளை அழைக்க அப்போது வசு மதி அழைத்தாள்.
மித்ரன் போகும்போதே போனில் recent கால் ல யாருக்கோ மிஸ்ஸ்ட் கால் கொடுக்க உடனே அவனுக்கு அழைப்பு வந்தது.
உடனே மித்ரன் அவளிடம் விவேகா ஒரு நிமிஷம் மா import கால் என்று தள்ளி போய் பேசுவது போல பாவனை செய்து விட்டு
உடனே வந்து அவளிடம் விவேகா நான் பஸ் ஸ்டாப் வழியா போகல மா நான் ஓப்போசிட் ல போறேன் இப்போ எனக்கு import வேலை இருக்கு என்று கூறி கொண்டு இருக்கும்போதே இன்பா அங்கு வந்தான்.
மித்ரனை பார்த்து வா டா போலாம் என்று கூற அவனோ இன்பா இந்த பொண்ண பஸ் ஸ்டாப் ல விடு எனக்கு முக்கியமான வேலை இருக்கு நான் போகனும் என்று அவன் நிற்காமல் கூறி கொண்டே சென்று விட்டான்.
இன்பா அவளிடம்
என்னை நீங்கள் stranger ஆ நினைச்சு வரலாம்
நான் உங்களுக்கு stranger தான்
என்னோட நண்பன் சொன்னதுனால் உங்கள ட்ராப் பண்றேன் என்று கூற
இப்போது விவேகாவுக்கு கண்ணீர் முட்டி கொண்டு வந்தது
அவள் மனதில் நீ வேனும் னு அவனை கஷ்ட படுத்திட்ட டி
இப்போ பாரு நீ தான் ரொம்ப ரொம்ப கஷ்ட படுற என்று நினைத்து கொண்டு அதே இடத்தில் நின்றாள்.
இன்பா தன் கார் எடுத்தவன் அவள் அருகில் வந்து நிறுத்த விவேகா எதுவும் பேசாமல் பின் இருக்கையில் ஏறி கொண்டாள் இன்பாவும் எதுவும் சொல்ல வில்லை.
விவேகாவின் வீடு கொஞ்சம் தூரம் அதனால் ஆதி வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தாள்.
இன்பா எதுவும் பேச வில்லை விவேகா வெளியே வேடிக்கை பார்ப்பது போல ஓர கண்ணால் அவனையும் விடாமல் பார்த்து கொண்டே வந்தாள்.
இன்பாவும் இதை கவனிக்க தவற வில்லை. மனதில் எவ்ளோ திமிர் டி உனக்கு இருக்கட்டும் .
நீயா நானா அப்டின்னு பார்க்கலாம் டி என்று நினைத்தவன்
சாலையை பார்த்து கொண்டே வர அப்போது அங்கு மிகவும் கூட்டமாகவும் பரபரப்பாகவும் இருக்க
அவன் தன் கார் நிறுத்தி விட்டு என்ன என்பது போல் பார்த்தவன் வெளியே இறங்கி விசாரிக்க
அங்கு ஏதோ தீ விபத்து உள்ளே ஒரு அம்மாவும் மகளும் இருக்கிறார்கள் என்று கூற உடனே இன்பா தீ அணைப்பு க்கு பிரத்யேகமாக கூறி விட்டு விவேகாவை ஒரு முறை பார்த்து விட்டு கொஞ்சம் வெய்ட் பண்ணு நான் வரேன் என்று கூற
அவளோ அங்கு இருக்கும் சூழல் பார்த்து விட்டு ஒரு நிமிஷம் பயம் வந்துவிட்டது
வேணாம் நீங்கள் போக வேணாம் தீ அணைப்பு அவங்க வரட்டும் நீங்கள் போகவேண்டாம் என்று அவள் பயந்து கொண்டே கூற அவளின் இந்த உண்மையான முகம் கண்டு இன்பா நீ கார் குள்ள போ நான் வரேன் என்று அவளை பார்த்து சொல்லி விட்டு அவன் அந்த இடத்திற்கு விரைந்தான்.
நேரம் செல்ல செல்ல விவேகாவுக்கு நடுக்கம் வந்து விட்டது மனதில் பயம் கவலை எல்லாம் ஒரு சேர வர அவள் மனதில்
எதுவும் ஆக கூடாது கிரிஷ் என்று அழுது கொண்டே வேண்டி கொண்டு இருந்தாள் அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்க இப்போது தீ அணைப்பு வந்து விட்டது அந்த தாயும் மகனும் முதலில் ஒரு பக்கம் வழியாக வர இன்பனை மட்டும் காணவில்லை.
அவள் சுற்றி பார்க்க எங்கும் அவன் இல்லை விவேகா இன்பாவ பற்றி தீ அணைப்பு வீரர்களிடம் கூற அவர்களும் ஒரு முறை உள்ளே பார்க்க அப்போது நெருப்பு இன்னும் அதிகமாக இருந்தது அதனால் அவர்களால் பார்க்க முடியவில்லை.
இப்படியே ஒரு 10 நிமிஷம் கடந்து இருக்கும் அவளுக்கு அந்த 10 நிமிடம் ஒவ்வொரு யுகமாக இருந்தது.
விவேகா அந்த இடத்தை சுற்றி சுற்றி அழுது கொண்டு இருக்க அப்பொழுது பின்னால் அவன் கையில் ஒரு குட்டி பெண்ணை தூக்கி கொண்டு அவர்களின் பெற்றோர் கிட்ட கொடுக்க
அந்த குட்டி பெண் வாஸ் ரூம் போய் இருப்பை தெரியாமல் அவளது பாட்டி வெளிய வாஷ் ரூம் ல விட்டு வெளிய வந்து விட்டனர் குழந்தை இறந்து விட்டது என்று நினைத்து அழுது கொண்டு இருந்தனர்.
குழந்தை தன் தாயை பார்த்ததும் ஓடி போய் கட்டி கொண்டது. சார் ரொம்பவும் நன்றி எங்க அம்மாவுக்கு காது கேட்காது இங்கே வந்தவுடன் தான் எங்கள் பொண்ண உள்ளே விட்டு வந்தது சொன்னாங்க என்று அந்த குட்டி பெண் தந்தை இன்பாவின் காலில் விழுந்தே விட்டார்.
இது எதுவும் அறியாமல் விவேகா அவனை நினைத்து அழுது கரைந்து அங்கும் இங்கும் அவனை தேட
இன்பா நேராக அவளிடம் வந்தான் அவள் பரி தவிப்பு பார்த்து அவள் கஷ்டம் பார்த்து அவனுக்கு ஒரு பக்கம் மிகவும் வருத்தம் இருந்தாலும் எனக்காக இப்படி கவலை படிகிறாளே என்று சந்தோஸம் தான்
அவளின் பின்னால் இருந்து மிஸ் விவேகா போலாமா என்று குரல் கேட்க அவள் பின்னால் திரும்ப அங்கு இன்பா அவளை பார்த்து கொண்டே நின்றிருந்தான்.
அந்த ஒரு நிமிஷம் விவேகா அவனை திரும்பி பார்த்தவள்
Episode 29,
அவளின் பின்னால் இருந்து மிஸ் விவேகா போலாமா என்று குரல் கேட்க
விவேகா பின்னால் திரும்ப அங்கு இன்பா அவளை பார்த்து கொண்டே நின்றிருந்தான்.
அந்த ஒரு நிமிஷம் விவேகா அவனை திரும்பி பார்த்தவள்.
இன்பனை தலை முதல் கால் வரை பார்த்தவள் வேகமாக அவன் அருகில் வந்து மறுடியும் ஒரு முறை பார்த்து விட்டு
நேராக காருக்குள் போய் அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.
இன்பா மனதில் இப்போ கூட உன்னோட உணர்ச்சியை கட்டு படுத்திக்கிட்டு போற ம்ம்ம் என்று நினைத்தவன் கார் அருகில் செல்ல
அப்போது தான் அவள் அழுது கொண்டு இருப்பது தெரிய போய் ஒரு வாட்டர் பாட்டிலை வாங்கி கொண்டு பின் இருக்கை கதவை திறந்து அமர்ந்தவன் விவேகாவிடம்
மிஸ் விவேகா என்று வாட்டர் பாட்டிலை நீட்ட அவளோ இதற்கும் மேல் பொறுக்க முடியாமல் அவனை அணைத்து கொண்டாள்.
இன்பாவுக்கு அப்போது தான் தெரிந்தது அவளின் உடல் நடுக்கத்தில் இன்பனை நினைத்து தேம்பி தேம்பி அழுதாள்.
உங்களுக்கு ஒன்னும் இல்லையே என்று இன்பாவின் முகம் , கை, கால் ,தலை என அனைத்து பகுதியும் தொட்டு பார்த்து ஏதாவது தீ காயம் இருக்கிறதா என பார்க்க
உங்களுக்கு ஒன்னும் இல்லை தானே என்று பதட்டத்தில் திரும்ப திரும்ப கேட்க
எனக்கு ஒன்னும் இல்ல டி
நான் நல்லா இருக்கேன்
என்று கூற அப்போதும் அவள் விட வில்லை இன்பாவின் கைகளை நேற்று அந்த கண்ணாடி உடைந்த அந்த பகுதியை தொட்டு பார்த்து கண்ணீர் சிந்தினாள்.
இப்போது இன்பா
உனக்கு நான் யாரோ தானே
எனக்கு என்ன நடந்தால்
உனக்கு என்ன
என்று கேட்க இன்பாவின் வாயின் மேல் கைகளை வைத்து வேண்டாம் என்று தலை ஆட்டினாள்.
விவேகாவின் இந்த தவிப்பினை பார்த்தவனால் அவளை விட்டு போக முடியவில்லை.
அந்த மை பூசிய கண்கள் அழுது அழுது மை கரைந்து விட்டது.
சரியான உணவு , தூக்கம் இல்லாமல் கண்கள் முகம் எல்லாம் அவளின் அந்த கலை இழந்த முகம் அதை கண்டவன்
விவேகாவை இழுத்து அவள் கண்களில் முத்தம் வைத்து , நெற்றி, கன்னம் என முத்தம் வைத்தான்.
இன்பா அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து அங்கே முத்தமிட்டு மீண்டும் இதழில்
அவளின் இதழில் வந்து சிறை செய்தவன் அவளை பார்த்து கொண்டே ஒரு ஆழ்த்தி முத்தமிட
விவேகா அவன் சட்டையை இறுக்கி பிடித்து கண்களை மூடி கொண்டாள் இன்பாவில் கரைய ஆரம்பித்தாள்.
அவளுக்கு இது என்ன மாதிரியான உணர்வு என்று தெரியவில்லை ஆனால் இன்பா அருகில் வேண்டும் அவனுடைய தீண்டல் அவளுக்கு அவன் இருக்கிறான் அருகில் என்ற உணர்வு வேண்டும்.
அந்த இதழ் முத்தம் நீண்டு கொண்டே போக விவேகாவுக்கு மூச்சு முட்டியது. அவள் நெற்றியோடு தன் நெற்றி உரச இருவரும் மூக்கு உரச மூச்சு வாங்கினர்.
அவள் இப்போது பதட்டம் இல்லாமல் இயல்பாக இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டவன் தன்னவள் என்னும் உரிமையில் மீண்டும் விவேகாவின் இதழின் மேல் மையல் கொண்டான்.
அவளும் அவனை தடுக்க வில்லை விவேகாவால் இன்பா இல்லாமல் இருக்க முடியாது என்று தெரியும் அவளும் அவனோடு இசையஇதழில் ஒரு ஆழ்ந்த முத்தமிட்டான் மிகவும் மென்மையாக முத்தமிட்டான்
இதற்கும் மேல் முடியாது என்று அவளை விலக்கி அந்த தண்ணீர் பாட்டிலை கொடுத்து விட்டு கீழே இறங்கி விட்டான்
விவேகா கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலைக்கு வந்தவள் இன்பனை பார்க்க மிகவும் சங்கடமாக உணர்ந்தாள்.
இன்பா சிறிது நேரம் கழித்து மெல்லிய புன்னகையுடன் உள்ளே காரை ஸ்டார்ட் செய்ய வந்தான். பஸ் ஸ்டாப் தாண்டி போக அவள்
சார் இங்கேயே இறக்கி விடுங்கள் என்று மிகவும் மெதுவாக தலை குனிந்து கொண்டே கூற
இன்பா சிரித்து கொண்டே உன்னோட வீட்டில் விட்டு விடுகிறேன் என்று கூற
வேணாம் வேணாம்
நான் இப்போ ஆதி வீட்டுக்கு போறேன்
எங்க வீட்டுக்கு போக கொஞ்சம் லேட் ஆகும் time ஆகிடுச்சு என்று அப்போதும் முகத்தை நிமிராமல் விவேகா கூறினாள்.
சரி ஆதி வீடு எங்கே ன்னு சொல்லு நான் அங்கே உன்னை ட்ராப் பண்றேன்
விவேகா ஆதி முகவரியை கூறினாள். இன்பாவின் முகத்தை பார்க்கவில்லை
இன்பா இப்போது மிகவும் சந்தோஷமாக இருந்தான் வேகமாக விவேகாவை ஆதி வீட்டுக்கு அருகில் கொண்டு விட்டவன் அவளை பார்த்து
உங்கள் வீட்டுக்கு போய்ட்டு எனக்கு கால் பண்ணு என்று கூற
உங்கள் num எனக்கு தெரியாது என்று விவேகா அவனை பார்த்து கூற
இன்பா இருபுருவத்தையும் தூக்கி நிஜமா
என்று கேட்டு
சரி நீ பண்ண வேணாம் என்று கூறி விட்டு அவன் கிளம்ப போக
விவேகா அவனை பார்த்து பண்றேன்
நான் இப்போது போகட்டுமா
இன்பா வேண்டாம் என்று கூற
விவேகா கண்கள் மின்ன அவனை பார்த்து கொண்டு இருக்க
இப்போது இன்பா சிரித்து கொண்டே போடி டார்ஜிலிங் என்று கூற
அவள் தலையை குனிந்து சிரித்து கொண்டே ஓடி விட்டாள்.
இன்பா மிகவும் சந்தோஷமாக தன் வீடு நோக்கி சென்றான்.
விவேகாவுக்கும் அதே மன நிலை தான் ஆதி வீட்டுக்கு சென்றாள் அங்கே ஆதி , அதிதி கூட பேசி கொண்டு இருக்க
விவேகா ஆதி என்று அழைத்து கொண்டே சந்தோச மன நிலையில் வர ஆதி அவளிடம் முகம் கொடுத்து பேச வில்லை.
விவேகா அவனை பார்த்து என்னாச்சு டா ஏன் இப்படி என்னை avoid பண்ற
ஆதி செல்லும் வழி எல்லாம் அவனை கேட்டு கொண்டே செல்ல அப்போது ஆதியின் அம்மா தேவி ஏன் டா அவ கிட்ட இப்போ பேசாமல் போற என்னாச்சு விவேகா மா என்று கேட்க
அவளோ தெரியல அத்தை என்று கூற அப்போது செல்வம் உள்ளே வந்தார் உடனே விவேகா அவள் மாமாவிடம் சென்று
அப்பொழுது அதிதி கங்காவிற்கு போன் செய்து விவேகா இங்கே வந்த விஷயம் கூறினாள்
மாமச்சி ஆதி என்கிட்ட பேசாமல் போறான் என்று கூற செல்வம் அவனை பார்த்து என்ன ஆதி என்னோட சின்ன குட்டிய கஷ்ட படுத்தர என்று கேட்க
ஆதி விவேகாவை பார்த்து கொண்டே அப்பா அவ என்ன பண்ணா அப்டின்னு அவ கிட்ட கேளுங்க இது அத்தை க்கு மட்டும் தெரிஞ்சா அவ்ளோ தான் நான் வருண் மாமா கிட்ட சொல்லட்டுமா விவி என்று அவளை பார்க்க
விவேகா புரியாமல் முழித்தாள். பிலீஸ் எனக்கு புரியவில்லை என்ன அப்டின்னு சொல்லு ஆதி
அப்பா அந்த தேவராஜ் விவேகா கிட்ட என்று கூற உடனே செல்வம், அதிதி, தேவி என அனைவருக்கும் கோபம் வந்தது.
உடனே விவேகா அத்தை நான் எதுவும் பண்ணல அவர் தான் என்கிட்ட பேச வந்தார் நான் பேசவே இல்லை அதற்குள் ஆதி வந்து என்ன கூட்டி கிட்டு வந்துட்டான் வேற ஒன்னும் அங்கே நடக்கவே இல்லை.
செல்வம் விவேகாவை பார்த்து சின்ன குட்டி உனக்கு நான் சொல்லி ஒன்னும் தெரிய தேவை இல்லை.
உன்னோட சித்ரா அத்தை உன்னோட பாட்டி தாத்தா எல்லாம் கங்காவை உங்கள் அப்பா இறந்த பிறகு எப்படி நடத்தினார்கள் என உனக்கே தெரியும்.
உன்னோட மனச மாத்தி உங்க அப்பா உங்களுக்கு வாங்கி வச்சு இருக்க வீடு அப்புறம் உங்கள் தாத்தா சொத்து உனக்கு பிரியும் அதயும் நீ தேவராஜ் ஆ கல்யாணம் பண்ணா கிடைக்கும்.
அப்டின்னு தான் உன் மனசு மாற்ற இப்படி பண்றாங்க என்று கூறினார்.
விவேகா செல்வத்தை பார்த்து மமாச்சி இல்ல என்னோட மனசுல அப்படி ஒரு எண்ணம் எப்போதும் இருந்தது இல்லை ராஜ் அத்தான் என்கிட்ட பேச வந்தாங்க அவ்ளோ தான்
செல்வம் உனக்கு புரிஞ்சா சரி குட்டி என்று இதை பற்றி கங்காவிடம் பேச வேண்டும் என்று நினைத்து கொண்டார்.
இப்போது விவேகா மீண்டும் ஆதியை சுற்றி வர ஏய் ரொம்ப பண்ணாத டா என்று அவள் ஒரு கட்டத்தில் நின்று கொண்டாள்.
உடனே ஆதி அவளை பார்த்து நீ தான் ரொம்ப பண்ற டி அவரு பாவம் தெரியுமா
அவளோ யாரு என கேட்க
அவனோ அதுதான் உன்னோட angry bird என்று கூறினான்.
நான் என்ன பண்ணேன் என்று விவேகா தன் வெட்கம் மறைத்து அவனிடம் கேட்க
நீ அந்த ராஸ்கல் கிட்ட பேச போனதுனால் தான் அவர் கை ல கண்ணாடி பட்டு ரத்தம் வந்தது.
உன் பின்னாடி அவர் எப்படி சுத்துராறு ஆனால் நீ அவரை ரொம்ப கஷ்ட படுத்தர
நான் மட்டும் அவர் இடத்தில் இருந்தால் போடி அப்டின்னு சொல்லிட்டு போய் கிட்டே இருப்பேன்.
விவேகா ஆதி ய பார்த்து ஆமாம் ஆதி கொஞ்சம் பாவம் தான் சரி இனி இப்படி செய்ய மாட்டேன் என்று அவள் கூறினாள்.
ஆதி அவளை பார்த்து இப்போ என்ன சொன்ன நீ அவரு பாவமா
விவேகா சிரித்த முகத்தோடு ம்ம்ம் ஆமாம் பாவம் கொஞ்சம் பாவம் அவ்ளோ தான்
ஆதி அவளிடம் அப்படின்னா ok வா
விவேகா அப்படியெல்லாம் இல்ல கொஞ்சம் கன்சிடெர்( consider) பண்றேன் என்று கூறினாள்.
நீ இன்பா சாரை கஷ்ட படுத்தியதுக்கு தான் நான் வீட்டில் சொன்னேன்.
இரு நான் ராஜ் ராஸ்கல் பத்தி அத்தை கிட்ட சொல்றேன் நீ அத்தை கிட்ட அடி வாங்கணும் விவேகா
அதை வீடியோ எடுத்து உன்னோட angry bird க்கு அனுப்பினால் எப்படி இருக்கும் என்று ஆதி சிரித்து கொண்டே கூற அவனை அடிக்க துரத்தினாள் விவேகா.
இதை பார்த்து கொண்டு இருந்த செல்வமும், தேவியும் வேறு ஒரு சந்தோச கணக்கு போட்டனர். ஆனால் அது விவேகா, ஆதி க்கு கவலையான கணக்கு
இங்கு வீட்டுக்கு வந்த இன்பா இன்று நடந்தது அனைத்தும் நினைத்து அவனுக்கு என்ன செய்ய என்று அவனால் அவனை கட்டுபடுத்த முடியவில்லை .
இன்பாவை சுற்றி அவளின் வாசனை தான் விவேகா இன்னும் கொஞ்சம் நேரம் உன்கிட்ட இருந்தேனா உன்னை அப்படியே இங்கே தூக்கிட்டு வந்து இருப்பேன் டி
உன்னோட எல்லாமே எனக்கு சொந்தம் டி
இன்னிக்கு அந்த பாட்டு எப்டி பாடின தெரியுமா
அந்த டான்ஸ் அப்படியே என்னை இழுத்து போகிற உன்னோட அந்த கண்ணு
என்னால என்னை கண்ட்ரோல் பண்ண முடியல ஆனால் நீ அப்படியே கண்ட்ரோல் பண்ணிக்கிற எப்படி உன்னால முடியுது கேடி டி நீ
அந்த முத்தம் அது இன்னும் எனக்கு வேனும் டி எப்போ உன்னை நான் இங்கே தூக்கிட்டு வரது
Episode 30,
அந்த முத்தம் அது இன்னும் எனக்கு வேனும் டிஎப்போ உன்னை நான் இங்கே தூக்கிட்டு வரது
என்று அவன் நினைத்து கொண்டு இருக்கும் போதே போன் வந்தது .
இன்பாவுக்கு ஒரே ஆவலாக இருந்தது விவேகா தான் போன் செய்து இருப்பாள் என்று நினைத்து கொண்டே எடுக்க அது மித்ரன் கிட்ட இருந்து வந்தது.
இன்பா காதில் வைத்தவன் டேய் என்ன விஷயம்?
அவனோ என்னடா என்கிட்ட கேட்கிற நீ தான் சொல்லனும் .
நான் என்ன சொல்லட்டும்?
ஏய் சும்மா ஆக்ட் விடாத ,விவேகாவை பத்தி சொல்லு
உனக்காக நான் கஷ்ட பட்டு பிளான் பண்ணேன் தெரியுமா!??
இன்பா அதிர்ச்சியாக என்னடா சொல்ற !!!
ம்ம்ம் ஆமா நான் தான் காலேஜ் வந்ததும் விவேகா பஸ் கிளம்ப வச்சேன்
ஏன் டா அப்படி செஞ்ச?
பின்ன என்ன டா அவ முகத்தை பார்க்கவே முடியல அப்படியே சோககீதம் !
நீ அப்டியே அவ மேல இருக்க கோபத்தை என் மேல காட்டுர நீ கோபகீதம்
அதனால தான் என்னால முடியல
இன்பா சிரித்து கொண்டே
ஓ இதெல்லாம் உன் வேலை தானா!!
ஏய் நடிக்காத அவ உன்கிட்ட பேசினாளா அதை சொல்லு டா முதலில்
ம்ம்ம் பேசினா மச்சி என்னோட life ஸ்மூத் ஆ போகுது டா.
நீ வெண்பாவுக்கு ஒரு அண்ணனா அப்டின்னு எனக்கு தெரியாது மச்சி?
ஆனா விவேகாவுக்கு நீ ஒரு நல்ல அன்னன் டா என்று கூறினான்.
அப்போது விவேகாவின் num அன்னிக்கே save பண்ணி வச்சு இருந்தான் அது செகண்ட் கால் ல காட்ட
இன்பா வேகமாக மச்சி i வில் கால் back லேட்டர் என்று கூறி
விவேகாவின் num அட்டெண்ட் செய்ய அதில்
மூச்சு வாங்கி கொண்டே ஹலோ
இன்பா அவளிடம்
first நீ relax ஆகிட்டு அப்புறம் பேசு
அவள் சிறிது நேரம் கழித்து ஹலோ
ம்ம்ம் சொல்லுங்க மிஸ் விவேகா
அவள் கோபம் கொண்டு நான் வந்துட்டேன் போன் வைக்கிறேன் என்று சொல்ல இப்போது வேகமாக நடந்து கொண்டே பேசினாள் அதனால் மூச்சு வாங்கியது
அவள் பேச்சில் கோபம் கண்டவன்
விவி பேபி நீ பேச கூட வேணாம் அப்டியே போன் காதில் மட்டும் வை டி
ஏன்? என்று அவள் கேட்க
சும்மா தான் டி
இப்போ சொல்ல போறீங்களா இல்லயா
நான் சொல்றது மட்டும் செய்
அதுதான் நான் வீட்டுக்கு வந்துட்டேன் போன் வைக்கிறேன் அவ்ளோ தான
நீ வைக்க வேணாம் பிலீஸ் டி
கொஞ்ச நேரம் அப்படியே இருந்தாள்
ம்ம்ம் இப்போவது சொல்லுங்க
அது ஒன்னும் இல்ல விவேகா நீ breath பண்ற ஸ்டைல் எனக்கு பிடிச்சு இருக்கு டி என்று இன்பா கூற
என்ன????
நீ மூச்சு விடறது எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு அப்டின்னு சொன்னேன் என்று இன்பா கூற
நீங்கள் சொல்றது எனக்கு புரியல
நீ என்னை இடியட் னு சொல்லாத டி
நீ தான் இடியட் என்று அவன் கூறினான்.
சரி ok நான் வைக்கட்டுமா
இப்போ எங்கே இருக்க
நான் மச்சு மேல இருக்கேன்
வாட்???
இல்ல மாடி மேல இருக்கேன்
எப்போ இங்க வர போற
எங்கே வரனும் என்று அவள் சிரித்து கொண்டே கேட்க
இங்கே என்கிட்ட என் பக்கத்தில் என்று அவன் பேச போக அதற்குள்
போதும் போதும் நிறுத்துங்க
நான் வர மாட்டேன்
அப்போ நானே வந்து உன்னை தூக்கிட்டு போயிடுவேன்
நான் வர மாட்டேன் நான் எதுக்கு உங்கள் கூட வரனும்
ஏய் ரொம்ப நடிக்காத டி
நான் எதுக்கு நடிக்கணும் சரி விடுங்க போதும்
சரி உங்க அம்மா தேட மாட்டார்களா
நான் வெண்பா கிட்ட பேசறேன்னு சொல்லி தான் வந்தேன்
நீ எதுக்கு பொய் சொன்ன இன்பா கிட்ட பேசறேன்னு சொல்ல வேண்டியது தானே
அப்புறம் எங்க அம்மா என்னை அவ்ளோ தான்
நீ எதுக்கு பயப்படுற என் கிட்ட மட்டும் தான் நீ வாய் ரொம்ப சீன் போடாத டி
அப்படின்னா ok நான் வைக்கிறேன்
ok வை டி
கொஞ்சம் நேரம் கழித்து உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்
என்ன சொல்லுங்க மிஸ் விவேகா
பிலீஸ் சொல்லுங்க என்று சிணுங்க
ம்ம்ம் சொல்லு
நீங்கள் நாளைல இருந்து காலேஜ் வர மாட்டீங்களா.
வர மாட்டேன் என்று அவன் கொஞ்சம் சீண்ட நினைத்து கூற
விவேகா சோகமாக சரி ok என்று போன் வைக்க போனவள் ஏதோ நினைவு வந்தவளாய்
எதுக்கு நான் கால் பண்ண அப்போ அமைதியாகஇரு அப்டின்னு சொன்னீங்க
இடியட் னு எதுக்கு திட்டினீங்க
நான் ரொம்ப brave தெரியுமா நீங்க தான் இடியட் என்று அவள் கூற
ஹே டார்ஜிலிங் இன்னிக்கு ஈவினிங் என்ன நடந்தது அப்டின்னு யோசிச்சு பாரு
நான் உன்கிட்ட சொன்னதுக்கு அர்த்தம் புரியும் என்று கூறியவன்.
மிஸ் யூ டி என்று சொல்லி வைத்து விட்டான்.
விவேகாவுக்கு அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் இன்பா சொன்னதை யோசித்து பார்த்தாள்.
விவேகா இன்பா என்ன சொன்னான் என்று யோசிக்க இன்னக்கு ஈவினிங் என்ன நடந்தது
இன்பா கூட கார் ல வந்தோம் அப்புறம் அந்த fire accident அப்புறம் என்று
அங்கே நிறுத்தியவள் இருவரும் மூக்கு உரச மூச்சு வாங்கியது நினைவு வர
ஒரு நிமிஷம் மின்சாரம் தான் தாக்கியது
இந்த இன்பா இருக்கானே
அய்யோ இவனுக்கு என்ன எல்லாம் தோணுது
இவன
இவன ஒன்னும் பண்ண முடியாது
இப்படி என்னை சீண்டி விட்டு போய்ட்டானே என்று அதை நினைத்து கொஞ்சம் நேரம் சிரித்து விட்டு தன் உதடுகளை வருடி கொண்டே கீழ சென்றாள்.
அடுத்த நாள் காலை மிகவும் சீக்கிரமே வந்தது விவேகா தன் காலேஜ் க்கு சென்றாள் வழக்கம் போல் அனைத்து வகுப்புகளும் ஆரம்பிக்க அப்படியே மோர்னிங் இடைவேளை வர
அப்போது அருண் நேராக cs dept சென்று வெண்பா வை பார்க்க காத்து இருந்தான். அருணை கண்ட வெண்பா ஒரு ஏளன பார்வையில் அவனை கடந்து செல்ல வெண்பாவை பார்த்து
காயா ? பழமா? சொல்லு டி
உன்கூட யாரு டா friend ஆ இருப்பா நான் காய் போடா first என்று கூற
அருண் அவள் பின்னால் ஏய் பிலீஸ் டி பிலீஸ் டி என்று கெஞ்சி கொண்டே சென்றான்.
இப்போ நீ இப்படியே போலோ பண்ணுன நான் சரவணன் அண்ணா கிட்ட சொன்னேன் வை
நீ அவ்ளோ தான் ஏற்கனவே நீ என்னை டீஸ் பண்ணதுக்கு என்னாச்சு அப்டின்னு தெரியும் தானே
ஏய் இல்ல டி நான் நிஜமாவே எல்லாத்துக்கும் சாரி டி பிலீஸ் பழமா
தயவு செஞ்சு போடா எல்லாரும் என்னை பார்த்து கிட்டே இருக்காங்க போடா என்னுடைய இமேஜ் டேமேஜ் ஆகுது டா
இதுல என்னோட அன்புசெல்வன் IPS(காக்க காக்க) இருக்க கூட சான்ஸ் இருக்கு
வெண்பா நீ பழம் சொல்லாமல் நான் விட மாட்டேன் டி என்று ஒரு கட்டத்தில் சொல்ல
சரி நான் உன்கூட பழம் எல்லாம் இல்ல இப்போ உனக்கு என்ன வேணும் அதை சொல்லு
இல்ல என்னை மன்னித்து விடு டி நான் விளையாட்டு க்கு தான் உன்னை டீஸ் பண்ணேன்
அது உனக்கு இவ்ளோ மனசு கஷ்ட படுத்தும் னு எனக்கு தெரியாது டிசாரி
உடனே வெண்பா உன்னோட மன்னிப்பை நான் consider பண்றேன் அதுக்கு முன்ன நீ வந்த விஷயம் என்ன
அது ஒன்னும் இல்ல வெண்பா அந்த IT dept விவேகா அவள் கூட அவ friend ஷிப் வேனும் டி
எதுக்கு உனக்கு அவ friend ஷிப்
எனக்கு அவளை பிடிச்சு இருக்கு கொஞ்சம் try பண்ணலாம் னு இருக்கேன் டி
வெண்பா அவனை பார்த்து
நீ அவள மறந்து விடு
அருண் அவளுக்கு அல்ரெடி ஆள் இருக்கு
அதுவும் இல்லாமல் நீ என்கூடவே ஸ்டேட்ஸ் பார்த்து பேசரவன்
அவளை பார்த்து ஆள் இருக்கா யாரு அது
வெண்பா மனதில் இண்பாவை பற்றி கூற முடியாமல் ஆதி பற்றி கூறினாள்.
அருண் சிரித்து கொண்டே மாமா பையன் தானே அதை நான் பார்த்து கொள்கிறேன்.
நீ என்கூட இருந்தால் எனக்கு அது போதும்
வெண்பா மனதில் எப்படி அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே டேஸ்ட்
என்னால எதுவும் பண்ண முடியாது இன்பா அண்ணா என்னை மன்னித்து விடு என்று மனதுக்குள் சொல்லி கொண்டவள்
சரி ok நான் சொன்னால் நீ கேட்க மாட்ட சரி வா இப்போ என்ன பண்ணனும்.
இப்போ நாம்ப நேரா அவ dept போறோம் அப்டியே அவளை கூட்டிகிட்டு food court போறோம்
ஒரு நிமிஷம் அவ food court எல்லாம் வர மாட்டா
அப்புறம் அவ எங்கே தான் போவா
அவ லைப்ரரி போவா அப்புறம் லேப் ல இருப்பா
பிலீஸ் வெண்பா எப்படியாவது food court போலாம் டி நீ நினைச்சா முடியும்.
அவளோ நீ நெனைக்கிற மாறி நீ டெல்லி ல பார்த்த பொண்ணுங்க மாறி அவள நினைக்க வேண்டாம்.
வெண்பா என் செல்லம் நான் உனக்கு ice cream வாங்கி தரேன் அப்புறம் உனக்கு டைரி மில்க் எல்லாம் வாங்கி தரேன் வாடி
வெண்பா அவனை பார்த்து
நீ அடங்க மாட்ட அருண் வா போகலாம் என்று அவர்கள் இருவரும் IT டெபிட் போனார்கள்.
அங்கே விவேகா , ஆதி கூட பேசி மைதிலி யை சீண்டி கொண்டே இருக்க அப்பொழுது அங்கே வெண்பா அருண் கூட வந்தாள்.
வெண்பா வை பார்த்த விவேகா டீச்சர் இங்கே என்ன பண்றீங்க என்று கேட்க
இல்ல விவி சும்மா தான் உன்னை பார்க்கலாம் ன்னு வந்தேன் எப்டி இருக்க
ஏய் நான் நல்லா தான் இருக்கேன் வெண்பாவின் பின்னால் வந்த அருணை பார்த்து
ஹாய் சீனியர் இங்கே என்ன பண்றீங்க என்று கேட்டு கொண்டே ஆதி அருகில் அமர்ந்து அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.
இப்போது வெண்பா அருணை பார்க்க அவன் முகம் உடனே கோபத்தை தத்து எடுத்து கொண்டது.
உடனே தன்னை சரி செய்து கொண்டவன் விவேகா வாங்களே இப்போ நம்ப அப்படியே ஜாலியாக foodகோர்ட் போலாம்.
அவளோ sorry சீனியர் நான் அங்கே எல்லாம் போனது இல்ல. Time ஆகிடுச்சு நெஸ்ட் லேப்
வெண்பா இப்போது மறுபடியும் அருணை பார்க்க அப்போது சிவா வேகமாக ஆதி கிட்ட ஏய் இன்பா சார் bio tech டெபிட் ல ஏதோ ஒரு வேலையா இருக்காரு டா என்று மெதுவாக கூற
விவேகா உடனே அருண் கிட்ட சரி வாங்க சீனியர் நம்ப போகலாம் என்று வெண்பா, விவேகா, அருண் மூவரும் கிளம்ப
ஆதி விவேகாவை பார்த்து
விவி ம்ம்ம் code word accepted என்று சிரித்தான்
விவேகா அவனை பார்த்து அடிங்க என்று சொல்லிவிட்டு சந்தோஷமாக சிரித்து கொண்டே சென்றனர்.
Bio tech dept அடுத்து தான் food court அருண் விவேகாவிடம் பேசி கொண்டே வர அவளும் அவனிடம் பேசி கொண்டே சென்றாள்.
வெண்பா சிறிது தூரத்தில் இன்பா இவர்களுக்கு எதிர் திசையில் வருவதை பார்த்தவள் அருண் கிட்ட
டேய் அருண் அங்கே பாரு டா இன்பா சார் என்று கூற போடி என்று அவன் தீவிரமாக விவேகாவின் பேச்சில் தன் கவனம் செலுத்த
இப்போது இன்பா அருகில் வந்து விட்டான்
அருண் !!!!
என்று இன்பா கூப்பிட
விவேகா திரும்பி பார்த்தாள்.
Episode 31,
விவேகாவுடன் அருண் பேசிக்கொண்டே வர bio டெக் ப்ளாக் ல இருந்து வெளியே வந்தான் இன்பா.
முதலில் வெண்பா அவனை பார்த்து விட்டு அருணிடம் கூறினாள்.
அவனோ ஏய் என்னை டிஸ்டர்ப் பண்ணாத டி என்று விவேகாவின் பேச்சை ரசித்து கொண்டே வர
இன்பா அவர்கள் மூவரும் வருவதை பார்த்து விட்டான்.மிகவும் அழுத்தமான காலடிகளுடன் அவர்களுக்கு அருகில் சென்றவன்
அருண்!!!! என்று அழைக்க உடனே விவேகாவும் அருணும் திரும்பி பார்த்தனர்.
இன்பா விவேகாவை பார்க்கவே இல்லை நேராக அருணை பார்த்து
சித்திக்கு கால் பண்ணட்டுமா என்று மிரட்டல் தோரணையில் கூற
விவேகா இங்கு என்ன நடக்கிறது என்று ஆச்சரியமாக பார்த்தாள்.
சீனியர் யார் இவரு சித்தி ன்னு சொல்றாரு என்று விவேகா கேட்க
அவனோ இன்பாவை முறைத்து விட்டு
இல்ல விவேகா டியர்
இவர் என்னோட அண்ணா என்று கொஞ்சம் பாவமாக கூறினான்.
வாட் டிட் யூ சே ?
டியர் ஆஅ
யாரு உனக்கு டியர்
ப்ரோ பிலீஸ் ப்ரோ என்று அவன் கெஞ்ச
விவேகா அருணை முறைத்து கொண்டே ஏன் சீனியர் இப்படி என் கிட்ட பொய் சொன்னீங்க
Sorry விவேகா பிலீஸ் என்கிட்ட பேசாமல் மட்டும் இருக்காத என்று அவன் மிகவும் பாவமாக கூற
விவேகா இன்பனை கண்டுகொள்ளாமல் அதனால் என்ன விடுங்கள் சீனியர் என்று கூற
இன்பா அவளை முறைத்தான்.
விவேகா மனதில் இடியட் அந்த இனியாளை வச்சு என்னை எப்டி டென்ஷன் பண்ண அதுக்கு revenge கொடுக்கவே இல்ல டா
அதுக்கு தான் இது
சரி வாங்க சீனியர் போலாம் என்று அவர்கள் இருவரும் செல்ல வெண்பாவுக்கு என்ன செய்வது என்று இருந்தது.
நீங்கள் இந்த காலேஜ் இல்ல தானே
ஆமா விவேகா ப்ரொஜெக்ட் காக வந்து இருக்கிறேன் நான் டெல்லி ல படிக்கிறேன் .
சரி ok வாங்க என்று செல்ல
இன்பா மனதில் எவ்ளோ தைரியம் டி உனக்கு என் முன்னாடி அவன் உன்னை டியர் ன்னு கூப்பிடறான்
நீயும் பார்த்து கொண்டே சும்மா நிக்கிற என்று நினைத்தவன்
திரும்பி பார்க்க வெண்பா அங்கு இருந்து செல்ல ஆரம்பித்தாள்.
வெண்பா அவன் ஏதாவது உன்கிட்ட சொன்னானா
ஆமா அண்ணா அருண் விவேகாவை என்று கூறி நிறுத்தி கொண்டாள்
இது அவளுக்கு தெரியுமா
இல்ல அண்ணா விவேகாவுக்கு தெரியாது
இப்போ நீ எங்கே போற
நான்
நான் வந்து கிளாஸ் க்கு போறேன்
வா நம்ப food கோர்ட் போலாம்
என்று இன்பாவும், வெண்பாவும் food கோர்ட் சென்றனர் அங்கு இருந்த மாணவிகள் அனைவரும் இன்பாவின் அழகில் மயங்கி தான் போனார்கள்.
அதை விவேகாவும் பார்க்க தவரவில்லை
விவேகா என்று அவன் பேச வருவதற்குள் இன்பா அவன் அருகில் வந்து அமர்ந்தான்.
இப்போது மீண்டும் விவேகாவிடம்
விவேகா டியர் நீ யாரையாவது லவ் பண்றியா என்று கேட்க
விவேகாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை .
வென்பா
ஏன் சீனியர் திடீரென இப்படி கேட்கறீங்க
இல்ல gk அதுக்கு தான்
நான் வீட்டில் பார்க்கிற பையன தான் கல்யாணம் பண்ணிக்குவேன்.
நமக்கு எல்லாம் இந்த லவ் marriage செட் ஆகாது senior ஒரே தலைவலி என்று அவள் கூற
அப்படினா உன்னை கல்யாணம் பண்ணனும் னா உங்க அம்மா பின்னாடி சுத்தனும் போல
ம்ம்ம் அப்படி கூட வைத்து கொள்ளலாம்
என்று அந்த டைரி மில்க் சாக்கலேட்டு உதடுகளை மீற சாப்பிட்டவளை இன்பா பார்வையில் சாப்பிட்டான்.
சரி ok சீனியர் time ஆகிடுச்சு கிளாஸ் க்கு போகனும் நெஸ்ட் லேப் என்று கூற
சரி வா விவேகா நானும் உன்கூட வரேன் நான் IT சம்மன்தாமாக தான் ப்ரொஜெக்ட் செலக்ட் பண்ணிருக்கேன் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு டியர்
ம்ம்ம் அவ்ளோ தானே வாங்க சிறப்பாக செஞ்சிடலாம்.
அருண் இரு டியர் நான் பில் pay பண்ணிட்டு வந்திடறேன்.
நான் நடந்து முன்ன போறேன் நீங்கள் வாங்க என்று விவேகா கிளம்பினாள்.
இன்பா அவள் பின்னால் சென்றவன்
ஹே கேடி
என்று கூப்பிட அவள் திரும்பவே இல்லை. இப்போ மட்டும் நீ நிக்கல அப்புறம் ஏதாவது நடந்தால் நான் பொறுப்பு இல்ல டி என்று சொல்லி கொண்டே செல்ல
விவேகா வேக நடையிட்டவள் சில மாணவி கூட்டங்களுடன் கலந்து கொண்டாள்.
பின்னால் திரும்பி இன்பாவ பார்த்து
போடா இடியட்
என்று சொல்லி நேராக அவள் கிளாஸ் க்கு சென்றாள்.
இன்பா நீ தனியா மாட்டு டி அப்போ இருக்கு என்று அவன் bio டெக் டெபிட் சென்றான்.
அங்கு HOD யை பார்த்து ஜெனெடிக்ஸ் தொடர்பாக செமினர், மற்றும் ஒரு conference நடத்த வேண்டும் என்று அதை பற்றி டிஸ்க்ஸ் செய்து இறுதியில் .
SPR research சென்டர் ல இருந்து
Dr.ரங்கநாதன் MBBS , genetic research gold medalist அவரை chief guest ஆக அழைக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.
அந்த வேலையில் மிகவும் பிசியாக இருந்தான் விவேகாவை அவன் கண்டுகொள்ளவே இல்லை .
இன்னும் இரண்டு நாட்களில் conference எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டான்.
ஆதி என்ன விவி angry bird இந்த பக்கமே காணோம் இப்போ எல்லாம் bio டெக் dept ல தான் எப்போதும் இருக்கிறாராம்.
அவளோ அவன் எங்கு இருந்தால் எனக்கு என்ன அவன் ஒரு ஷாடிஸ்ட் என்று கண்ட படி திட்டினாள்.
(இந்த கதையில் வரும் அனைத்தும் கற்பனையே இது முழுக்க கற்பனை ஆகும் )
இந்த conference எதுக்காக அப்படின்னா SPR ல illegal ஆ ஜெனடிக் research செய்து பெண்ணின் கரு முட்டைகளை சேமித்து அதில் கிறோமோசோம் களில் மாற்றம் செய்து அதனை மிகவும் அதிகமான ஒரு egg விலை கோடிகளில் ஏற்றுமதி செய்வதே ஆகும்
அதிக iQ உடைய குழந்தைகளை அதிக புத்தி கூர்மை உடைய குழந்தைகள் உருவாக்குவதே இந்த ரேசச் இதை secret ஆக கண்டறிய தான் இன்பா காலேஜ் பொருப்பேற்று அதன் மூலம் இதை கண்டறிந்து அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.
ஒரு குழந்தை பிறப்பு என்பது இயற்கை நமக்கு அளிக்கும் பரிசு குழந்தை இல்லாமல் எத்தனையோ பேர் கஷ்ட படுகிறார்கள் அதற்கு மட்டும் பயன்படும் வகையில் ஆராய்ச்சி செய்தால் நல்லது.
ஆனால் இயற்கைக்கு புறம்பாக அதில் மாற்றம் செய்வது அது அழிவை ஏற்படுத்தும்.
இந்த ஒரு வாரமும் வேலையில் மிகவும் பிசியாக இருந்ததால் விவேகாவை அவன் கண்டு கொள்ள வில்லை.
அதனால் இன்று அவளை பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் கிளம்பினான்.
இன்று அனைவருக்கும் லேப் அதனால் லேப் ல அவள் சிஸ்டம் ல இருக்க மதியம் உணவு இடை வேளை வந்தது.
இன்பா அவள் எங்கே இருக்கிறாள் என்று தேட இறுதியில் அவள் லேப் ல இருப்பது தெரிய அங்கே சென்றான்.
இனியாள் விவேகாவை பார்த்து அவள் தோழிகள் கிட்ட இவளுக்கு மட்டும் தான் எல்லாம் தெரிவது போல ரொம்ப ஸீன் போடுறா
இப்போ கூட எல்லாரும் இவள் ரொம்ப டேடிக்காட்டிவ் ன்னு சொல்லனும் னு ஆக்ட் விடுறா நம்ப போலாம் வாங்க டி என்று அனைவரும் கிளம்பினர்.
விவேகாவின் கவனம் முழுவதும் அந்த ப்ரோக்ராம் மேல இருந்தது மைதிலி அவளை சாப்பிட அழைக்க அவள் நீ வெளியே வெய்ட் பண்ணு நான் வரேன் என்று கூறி முடிவுக்கு வந்து விட்டாள்.
இன்பா லேப் அருகில் வர அங்கு மைதிலி யை பார்த்து
அவள் எங்கே
விவேகா உள்ளே சார்
சரி நீ கிளம்பு விவேகா வருவா என்று கூறி உள்ளே சென்றான்.
மைதிலி ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள்.
அவள் அருகில் இன்பா வர அவள் கண்டுகொள்ளாமல் தன் வேலையில் கண்ணாக இருந்தாள்.
விவி பேபி என்று கூப்பிட அவள் அப்போதும் திரும்பாமல் இருக்க
இன்பா அவள் அருகில் சென்று ஏய் என்னடி பண்ற உன்னை பார்க்க நான் ஓடி வந்தால் நீ என்னடா னா அந்த கம்ப்யூட்டர் ல focus ஆ இருக்க என்று அவளை இழுக்க
அவள் இவ்வளவு நேரம் செலவழித்து செய்த மொத்த ப்ரோக்ராமும் ஒரே நிமிஷத்தில் அழிந்து போனது.
விவேகா இன்பாவின் கையை தட்டி விட்டவள் அறிவே இல்லயா உங்களுக்கு நான் பண்ண மொத்த ப்ரோக்ராமும் erase ஆகிடுச்சு இதை நான் save mode ல கூட போடவே இல்ல
என்னோட எல்லா ஒர்க் யும் waste உங்களை யாரு இங்கே வர சொன்னா என்று வாய்க்கு வந்த படி அவனை திட்ட
இன்பாவுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது இவளுக்கு நம் மேல் பிரிவு துயரம் இல்லை நாம் தான் இவளை நினைத்து கொண்டு இருக்கிறோம் என்று நினைத்தவன்.
இன்பா விவேகாவை இழுத்து அருகில் உள்ள இருக்கையில் அமர வைத்தவன் அவள் சிஸ்டம் ல அமர்ந்து கடகடவென erase செய்த அனைத்தும் கொண்டு வந்தவன்.
இவனுக்கு என்ன தெரிய போகிறது என்று சாதரணமாக அமர்ந்தவள் அவன் வேகத்தை பார்த்து ஒரு நிமிஷம் வாயடைத்து போனாள்.
அவள் முடிக்காத மீதியையும் அனைத்தும் போட்டு இறுதியில் அனைத்தையும் ஒரு முறை சரி பார்த்தான் பின் அவளை பார்த்து
சரியா அப்டின்னு செக் பண்ணிகோங்க
மிஸ் விவேகா என்று கூறி
இன்பா எழுந்து நின்று
அவள் பதிலுக்காக காத்து இருந்தான்.
அவள் அதனை பார்த்து விட்டு திக்கி திணறி கொண்டே எல்லாம்
எல்லாம் சரியா இருக்கு
விவேகாவை பார்த்து இனிமே நான் உன்னை தேடி வந்தால் என்ன கேளு டி இனி நான் உன்னை தேடி வர மாட்டேன் என்று கோபமாக கூறி
இன்பா மிகவும் கோபமாக அந்த இடத்தை விட்டு செல்ல ஒவ்வொரு அடிகளாக அழுத்தமாக நடந்தான்
Episode 32,
விவேகாவை பார்த்து இனிமே நான் உன்னை தேடி வந்தால் என்ன கேளு டி இனி நான் உன்னை தேடி வர மாட்டேன் என்று கோபமாக கூறி
இன்பா மிகவும் கோபமாக அந்த இடத்தை விட்டு செல்ல ஒவ்வொரு அடிகளாக அழுத்தமாக கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
இப்போது விவேகாவுக்கு ஒன்றும் புரியவில்லை அய்யோ போறானே அதுவும் கோபமா போறான் என்று இன்பாவின் பின்னால் ஓடினாள்.
ஆனால் அதற்குள் இன்பா வெளியே வந்து விட்டான். வேக வேகமாக படிகளில் இறங்கி அவன் செல்ல விவேகா அவனிடம் மன்னிப்பு கேட்டு விட வேண்டும் என்று அவளும் வேகமாக செல்ல
அப்பொழுது அங்கு அருண் வந்தான்.
ஹே விவேகா டியர் ?
விவேகா அப்படியே நின்றாள்.
சொல்லுங்க சீனியர் என்று
இன்பனை பார்க்க அவன் திரும்பியும் பார்க்க வில்லை நிற்கவும் இல்லை அவன் சென்று விட்டான்.
ஹே வா போய் லஞ்ச் சாப்பிடலாம் என்று அவளை கூப்பிட
இல்ல சீனியர் எனக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கு
எதுவா இருந்தாலும் பரவாயில்லை வா டியர் என்று அவள் கைகளை பிடித்து இழுத்து செல்ல விவேகாவுக்கு என்ன செய்ய என்று தெரியாமல் அவன் பின்னால் சென்றாள்.
அருண் அவள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லி கூட கேட்காமல் அவளுக்கு ஆர்டர் செய்ய பெயருக்கு கொஞ்சம் சாப்பிட்டாள்.
அவள் நினைவு முழுவதும் இன்பாவின் மேல் தான் இருந்தது.
இவனை எப்படி சமாதானம் செய்வது நிஜமாவே நம்ப மேல் கோபமா இருக்கானே.
சாப்பிட்டு முடித்து லேப் க்கு செல்ல போக அருணும் இவளோடு லேப் வந்து விட்டான்.
லேப் ல அனைவரும் விவேகாவையும் , அருணையும் தான் பார்த்து கொண்டு இருந்தனர்.
சீனியர் எல்லாரும் என்னை ஒரு மாதிரி பார்க்கிறார்கள் நம்ப நாளைக்கு மீட் பண்ணலாம் இப்போ போங்க பிலீஸ் என்று அவள் கெஞ்ச அதில் மயங்கியவன்.
சிரித்து கொண்டே நாளைக்கு பார்க்கலாம் என்று கிளம்பினான்.
விவேகா வேகமாக தனது சிஸ்டத்த்திற்கு வந்தவள் ப்ரோக்ராம் staff கிட்ட காட்ட ok மா என்று கூற
அப்போது bio டெக் டெபிட் ல இருந்து இருவர் வந்து இருந்தனர்.
இந்த கிளாஸ் ல டான்ஸ் ஆடின பொண்ணுங்கள சார் வர சொன்னாரு என்று கூப்பிட விவேகாவுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது .
அவள் மனதில் நம்மிடம் பேச தான் அழைக்கிறான் என்று கிளம்ப கூட இனியாளும் வந்தாள்.
உள்ளே வரலாமா சார்
என்று இனியாள் தான் கேட்டாள்
சார் நீங்கள் வர சொன்னதாக சொன்னாங்க
இவர்கள் நேராக அங்கு செல்ல இன்பா விவேகாவை பார்க்காமல்
மித்ரன் நான் உன்கிட்ட என்ன சொன்னேன் மிஸ் இனியாளை தான் வர சொன்னேன்
இப்போ எதுக்கு இங்கே ரெண்டு பேர் வந்து இருக்காங்க
அந்த person ஆ கிளம்ப சொல்லு என்று முகத்தில் அடிப்பது போல் பேச
இந்த இனியாள் முன்பு இவன் நம்மை அவமானம் செய்து விட்டானே என்று இவள் நிற்க
இனியாள் அவளை பார்த்து சிரித்து கொண்டே
ஹே கிளம்பு சொல்றது காதில் விழவில்லை.
விவேகா இப்போது மித்ரனை பார்த்து முறைத்து விட்டு சென்றாள்.
இவள் எதுக்கு நம்மை பார்த்து முறைக்கிறாள். இவனே இவளை வர சொல்லிவிட்டு இப்போது இவனே கிளம்ப சொல்கிறான்.
மறுபடியும் இதுங்க ரெண்டும் சண்டை போட்டுகிச்சா அய்யோ இப்போ இதுங்கள ஒன்னு சேர்க்க நம்ப ஒர்க்அவுட் பண்ணனும் போல
இனியாள் நீங்கள் கொஞ்சம் வெளியே வெய்ட் பண்ணுங்க நான் கூப்பிடறேன் என்று மித்ரன் சொல்ல அவள் வெளியே சென்றாள்.
அவள் சென்றதும் கதவை லாக் செய்தவன் இன்பாவ பார்த்து
இப்போ என்ன டா பிரச்சனை?
இன்பாவோ ஒன்னும் இல்ல மச்சி.
சொல்லு விவேகா முகத்தில் தான் தெரியுதே
இன்பா நடந்ததை கூற மித்ரன் அவனிடம்
நீ அவ கிட்ட நான் உன்னை தேடி வர மாட்டேன் அப்டின்னு சொன்ன
ஆமா
அப்புறம் இப்போ எதுக்கு டா அவளை இங்கே நான் கூப்பிட்டதா வர சொன்ன
இல்ல மச்சி எனக்கு அவள பார்க்கனும் போல தோணிச்சு அது தான்
சரி அதுக்கு அவ எதுக்கு என்னை முறைக்கிறாள்.
அதை நீ அவ கிட்ட தான் கேட்கணும் எனக்கு நெறைய வேலை இருக்கு அந்த இனியாளை ஈவினிங் வரைக்கும் இங்கேயே இருக்க வை அதுக்கு அப்புறம் அவளை அனுப்பிடு அந்த girl க்கு இங்கே எந்த workம் இல்ல
என்று அவன் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லி conference ஹால் சென்று அங்கு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு கிளம்பினான்.
இன்று ஆதி காலேஜ் வரவில்லை அதனால் வீட்டுக்கு சென்று அவனுக்கு போன் செய்து இன்று நடந்த விஷயம் அனைத்தும் கூற
ஆதி விவேகாவின் மேல் கோபம் கொண்டான்
விவேகா இதை நீ தான் சரி செய்யனும் எனக்கு தெரியாது என்று அவன் போன் வைத்து விட்டான்.
இப்போது என்ன செய்யலாம் என்று யோசித்த விவேகா இன்பாவுக்கு கால் செய்யலாம் என்று அவனுக்கு போன் செய்ய
இன்பா முதல் அழைப்பில் அவள் தான் அழைக்கிறாள் என்று பார்த்தவன் சிரித்து கொண்டே கைகளில் எடுத்து வைத்தான் ஆனால் அழைப்பு எடுக்க வில்லை.
இரண்டாவது முறையும் முழுவதும் அழைக்க அப்பொழுதும் எடுக்க வில்லை.
விவேகாவின் மனதில் இன்பா நீ இப்போது மட்டும் எடுக்கல அப்புறம் இனிமே நான் உனக்கு கால் செய்யவே மாட்டேன் என்று மூன்றாவது முறை இன்பாவுக்கு அழைக்க
இன்பா இந்த முறை அழைப்பை எடுத்தான்.
ஹலோ
ஹலோ
Whose திஸ் என்று இன்பா வேண்டும் என்றே கேட்க
விவேகா மனதில் இப்போ யாருன்னு நீ கேட்கற அன்னிக்கு மட்டும் என்கிட்ட கொஞ்சி கொஞ்சி பேசின இடியட், ஷடிஸ்ட்
ஹலோ என்று கூற வர
அதற்குள் இன்பா
அம்மா யாரோ எனக்கு wrong கால் பண்ணி சும்மா என்ன டிஸ்டர்ப் பண்றாங்க யாருன்னு கேளுங்க என்று இவன் சும்மா பேச விவேகா வேகமாக போன் வைத்து விட்டாள்.
உன்னை சும்மா விட மாட்டேன் டி
இது கொஞ்சம் தான்
உன்னை எப்படி torture பண்றேன்னு மட்டும் பாரு
திமிரு அதிகமா போச்சு
விவேகா இப்போது அதிதி க்கு போன் செய்தாள்.
அதி இப்போ யார் கிட்ட பேசின
நான் மாமா கிட்ட தான் பேசிட்டு இருந்தேன் சொல்லு விவி என்ன திடீரென எனக்கு கால் பண்ணி இருக்க
இல்ல அதி ஒன்னும் இல்ல சும்மா தான் உன்கிட்ட பேசலாம் ன்னு
சொல்லு விவி என்ன விஷயம்
அது ஒன்னும் இல்ல அதி நீ வருண் கிட்ட சண்டை போட்டா எப்படி சமாதானம் செய்வ
அதை எதுக்கு நீ கேட்கிற
நீ சொல்லு first என்று விவேகா கேட்க
நான் மாமாக்கு எதுவும் சமைச்சு கொடுப்பேன்
இப்போ எதுக்கு நீ இதை கேட்ட
இல்ல நான் மைதிலி கிட்ட சண்டை போட்டேன் சோ அது தான் சரி நான் வைக்கிறேன் .
என்று போன் வைத்தாள் விவேகா
அதிதி உடனே ஆதி கிட்ட
ஏய் உனக்கும் விவேகாவுக்கும் சண்டையா
அவளை பத்தி பேசாத அதி என்று
அவன் செல்ல அவள் சிரித்து கொண்டே சென்றாள்.
இங்கு விவேகா அவனுக்கு நாம் என்ன சமைத்து கொடுப்பது எனக்கு என்ன தெரியும் என்று அவள் யோசிக்க
நமக்கு உப்மா தான் செய்ய தெரியும் அதுவும் நானும் அப்பாவும் சேர்ந்து அம்மாவுக்கும் வருணுகும் செய்வோம்
சரி ok நாளைக்கு ஒரு உப்மா வ செஞ்சு கொண்டு போய் அவனுக்கு கொடுக்கலாம் சமாதானம் ஆவனா
முரண்டு பிடிச்சா போடா இடியட் ன்னு சொல்லிட்டு வந்திடனும் என்று நினைத்து கொண்டவள் காலையில் நேரமே எழுந்து உப்மா செய்தாள்.
சீக்கிரமே காலேஜ் கிளம்பினாள்.
இங்கு மித்ரன் இன்பனை அழைக்க அவன் வீட்டுக்கு சென்றான்.
அங்கு சாப்பிட உப்மா சுபா செய்து வைத்தாள் அதை பார்த்து
சுபா எனக்கு உப்மா பிடிக்காது அப்டின்னு உனக்கு தெரியும் தானே அப்புறம் எதுக்கு பண்ண எனக்கு வேணாம் என்று வேகமாக காலேஜ் கிளம்பினான்.
மித்ரன் அவனிடம் இப்போ எதுக்கு டா இப்படி டென்ஷன் ஆகுற சாப்பிடாமல் வந்துட்ட
நம்ப food கோர்ட் ல போய் சாப்பிடலாம் என்று இன்பா கூறி அவர்கள் இருவரும் காலேஜ் சென்றனர்.
முதலில் காலேஜ் வந்த விவேகா இன்பாவின் அறைக்கு வெளியே வெண்பாவுடன் காத்து இருந்தாள்.
மித்ரன் வெண்பா கிட்ட கண்களால் என்ன என்று கேட்க அவள் ஒன்னும் இல்ல என்று கூற
இன்பா விவேகாவை கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றான்
இன்பாவும், மித்ரனும் அவர்கள் அறைக்கு உள்ளே செல்ல விவேகா
உள்ளே வரலாமா சார் என்று மித்ரனை பார்த்து கேட்க
உள்ளே வா மா விவேகா என்று மித்ரன் சிரித்து கொண்டே அவளை உள்ளே வர சொன்னான்.
என்ன மா சொல்லு
இல்ல சார் வெண்பா தான் சொன்னா எப்போதும் நீங்கள் மோர்னிங் சரியா சாப்பிட மாட்டீங்க அப்டின்னு
அதனால என்று மித்ரன் கேட்க
உங்களுக்காக நானே செஞ்சு எடுத்து வந்து இருக்கிறேன்.
வெண்பா அவளிடம் ஏய் நான் எப்போ டி சொன்னேன் உன்கிட்ட என்று அவள் காதுக்கு அருகில் சொல்ல
Shut up என்று கூறி
மறக்காமல் சாப்பிடுங்கள் என்று இன்பனை பார்த்து கொண்டே கூறி வெளியே செல்ல போக
ஆனால் இன்பா இவளை பார்க்க வில்லை
ஆமா அந்த இன்னொரு box ல
யாருக்கு? உனக்கா?
இல்ல சார் அது ஆதி கும் , சீனியர் கும் என்று கூற
அங்கு இருந்து ஒரு புத்தகம் பறந்து வந்து விவேகாவின் மேல் விழ
அவள் வெளியே ஓடி கொண்டே மறக்காமல் மீதம் வைக்காமல் சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு ஓடினாள்.
இன்பா கோபத்தில் அமர்ந்து கொண்டு இருக்க மித்ரன் விவேகா என்ன செய்து கொண்டு வந்து இருக்கிறாள் என்று திறந்து பார்த்தான்.
அவன் அதிசயமாக இண்பாவை பார்க்க என்ன டா அப்படி பார்க்கிற அவ என்ன செஞ்சு கொண்டு வந்து இருக்கிறாள் என்று இன்பா எட்டி பார்க்க
மித்ரன் இன்பனை பார்த்து சிரித்து கொண்டே
மச்சி நீ அவ்ளோ தாண்டா என்று சிரிக்க முடியாமல் சிரித்தான்.
Episode 33,
மித்ரன் இன்பனை பார்த்து சிரித்து கொண்டே
மச்சி நீ அவ்ளோ தாண்டா என்று சிரிக்க முடியாமல் சிரித்தான்.
என்னடா ஏன் இப்படி சிரிக்கிற என்று அவன் அருகில் வந்து விவேகா செய்து கொண்டு வந்த உணவை பார்க்க
இன்பாவுக்கு மனதில் இவ பிளான் பண்ணி பண்றாளா! இல்ல தானா நடக்குதா! என்று யோசிக்க.
மித்ரன் ஒரு வழியாக சிரித்து முடித்து
சரி இன்பா கொடு
எனக்கு ரொம்பவும் பசிக்குது நான் சாப்பிடறேன்.
அவ எனக்கு தான் கொடுத்துட்டு போனா
அது எப்படி உனக்கு தெரியும் என்று மித்ரன் கேட்க
இல்ல அவ என்ன தான் டா பார்த்து சொன்னா
இப்போது மீண்டும் சிரித்தவன் சரி இன்பா நீயே சாப்பிடு என்று அவன் கையில் ஸ்பூன் கொடுக்க
இன்பா ஸ்பூன், உப்மா என இரண்டையும் மாறி மாறி பார்த்தான்
மித்ரன் வாய் விட்டே சிரித்தான்
மச்சி விவேகா வேற level டா
உன்னை இன்ச் இன்ச் ஆ புரிந்து வைத்து இருக்கிறாள்.
இன்பா அந்த உப்மாவை எடுத்து ஒரு வாய் சாப்பிட்டவன் .ஒரு நிமிஷம் உறைந்து தான் போனான்.
வேர்க்கடலை சட்னி,
பொட்டு கடலை சட்னி,
சர்க்கரை,
இது மூன்றும் குட்டி குட்டி box ல தனி தனியாக விவேகா வைத்து இருந்தாள்.
அந்த உப்மா
அதை முதலில் கொஞ்சம் நெய் விட்டு மிதமான அரோமா வரும் வரை வறுத்து
பின் முந்திரி, வேர்க்கடலை அதையும் நெய்யில் வறுத்து,
தேவையான பொருங்களை அளவாக சேர்ந்தவள்
இறுதியில் கொஞ்சம் லெமன் மூன்று சொட்டு , சர்க்கரை கால் ஸ்பூன் இது அவளுடைய அப்பா சொல்லி கொடுத்தது .
அப்போது தான் உப்மா மிகவும் மிருதிவாகவும் சுவையாகவும் இருக்கும் என்று செய்து இருக்கிறாள்.
அதை சாப்பிட்ட அவனுக்கு நிஜமாவே பிடித்து இருந்தது அந்த சட்னி காம்பினேஷன் வேற level.
எதையும் தாளிப்பு இல்லாமல் கொடுத்து இருந்தாள்.
இன்பா சாப்பிடுவதை பார்த்த மித்ரன் ஒரு வாய் சாப்பிட்டவன்.
பரவாயில்லை டா நல்லா தான் செய்து இருக்கிறாள். என்று அந்த சட்னி கொஞ்சம் சுவைக்க போக
இன்பா அவன் கையை தட்டி விட்டவன்.
அவ எனக்காக செஞ்சு கொண்டு வந்து இருக்கிறாள்.
நான் தான் சாப்பிடுவேன் என்று அவன் சாப்பிட
இரு நான் சுபாவுக்கு போன் பண்ணி சொல்றேன்
போடா என்று இன்பா ரசித்து ரசித்து எனக்காக செய்து இருக்கிறாள் என்று நினைத்து சாப்பிட்டான்.
அவன் சாப்பிட்டு முடித்ததும் நேராக இன்று நடக்கும் conference ஹாலுக்கு சென்றான்.
அனைத்தும் தயாராக இருக்க மாணவர்கள், மாணவிகள் என அனைவரும் கூடி இருந்தனர் நிகழ்ச்சி தொகுப்பாளர். அழகாக அனைவரையும் வரவேற்றார்.
பின் இன்பாவுக்கு கால் வர அவன் எடுத்து பேச அப்போது அங்கு வந்தார் Dr.ரங்கநாதன் அவருடன் தேஜ ஸ்ரீ வந்தாள்
இருவரையும் வரவேற்ற பின் அவர்களுக்கான இடத்தில் அமர வைத்தனர்.
நன்றாக தான் சென்று கொண்டு இருந்தது ஆனால் இன்பாவுக்கு அந்த உப்மா வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது.
என்ன தான் ஆச்சு?
வேற என்ன இன்பாவால் கண்களை திறக்கவே முடியவில்லை அந்த அளவு தூக்கம் அப்படியே சொக்கியது.
அது உப்மா வா இல்ல தூக்க மாத்திரையா என்று இருந்தது.
மித்ரன் அவன் காதுக்கு அருகில் வந்து என்ன இன்பா உன்னோட கேடி கிட்ட மயங்கிட்ட போல
எப்படியோ நான் அதை சாப்பிடல இல்ல நான் தூங்கியே விழுந்து இருப்பேன்.
அவனை பார்த்து shut up என்று கூறி அவன் தன்னை கண்ட்ரோல் செய்து கொண்டான்.
தேஜூவை பார்த்த இன்பா மித்ரன் கிட்ட
மித்ரன் இந்த பொண்ணு யாரு அப்டின்னு டீடெயில்ஸ் கொஞ்சம் கலெக்ட் பண்ணு டா
இன்பா இந்த பொண்ணு chemistist சேமிஸ்ட்ரிஸ்ட் SPR ரெசேர்ச் centre ல இருக்கு டா.
ரங்கநாதன் பொண்ணு டா
வேற டீடெயில்ஸ் இருக்கா இந்த பொண்ணு பத்தி
கண்டு பிடிக்கலாம் விடு நான் சொல்லி வச்சு இருக்கேன்.
இப்போது conference ல ஒரு 15 மினிட்ஸ் இடைவெளி விட அப்போது வெண்பா வந்தாள்.
அவள் நேராக மித்ரன் கிட்ட ஒரு தண்ணீர் பாட்டிலை கொடுக்க
அவனோ எதுக்கு என்பது போல் கேட்க
விவி தான் கொடுக்க சொன்னா ரொம்ப தண்ணி தாகமா இருக்கும் உப்மா சாப்பிட்டால்
அப்புறம் இந்தா சாக்கலேட்டு
இது எதுக்கு என்று இன்பா கேட்க
ரொம்ப தூக்கம் வருமாம் அதுக்கு தான் என்று வெண்பா கூற
மித்ரன் சிரித்தான்.
அது ரெண்டும் எடுத்து இன்பா கிட்ட கொடுத்து
விவேகாவுக்கு என் மேல ரொம்ப அக்கறை டா என்று மித்ரன் கூற
அவன் அந்த தண்ணீர் bottle கொண்டு அவனை ஒரு அடி வைத்தான்.
வெண்பா மித்ரனை பார்த்து அப்போ உப்மா இன்பா அண்ணாவுக்கு தான் செஞ்சு கொண்டு வந்தாளா என்று கேட்க
ஆமா வெண்பா,
இன்பா ரொம்ப கொடுத்து வச்சவன் டி
ஆமா தானே என்று கொஞ்சம் எட்ட நின்று சொல்ல
வெண்பாவும் சிரித்து கொண்டே சூப்பர் என்று சொல்லி விட்டு ஓட
இன்பா மனதில் விவேகா உன்னை என்ன பண்றேன்னு பாரு டி என்று சொல்லிவிட்டு
அடுத்த செக்ஷன் ஆரம்பித்தது
என்னடா எல்லாம் சரியாக போய் கொண்டு இருக்கிறது ஏதாவது ட்விஸ்ட் இல்லாமல் இருக்கே என்று இன்பா நினைத்து கொண்டு இருக்கும்போது அந்த conference இறுதியில் தான் அது நடந்தது.
நாதன் இன்பனை மேடைக்கு வருமாறு அழைத்து இந்த நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் மாணவர்கள் பங்களிப்பு அதை கூறி இறுதியாக இன்பாவின் கைகளில் ஒரு inviation கொடுத்தார்.
இன்னும் இரண்டு நாள் கழித்து நீலா மருத்துவமனையில் மிக பெரிய blood donation கேம்ப் ஏற்பாடு செய்து இருப்பதாக mike ல சொல்லிவிட்டு
அந்த இன்விடேஷன் ல SPR காலேஜ் ல IT, CS , டெப்பார்ட்மெண்ட் நடத்தும் பேப்பர் ப்ரெசென்டஷன், expo ல
இந்த காலேஜ் மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் சிறப்பு விருந்தினராக வசுமதி அவர்களின் பெயரும் அதில் இடம் பெற்றது.
இன்பாவும் இது போல எதிர்பார்த்து இருந்தான். அவனும் மறுக்காமல் வாங்கி கொண்டான்.
அவ்வளவு தான் நன்றாக முடிந்தது அவர்களை வழி அனுப்ப செல்லும்போது தேஜு இன்பனை ஒரு அழுத்த பார்வை பார்த்து விட்டு சென்றாள்.
இன்பாவுக்கு அவளை பார்க்க ஏதோ வித்தியாசமாக தோன்றியது.
அங்கு இருந்து நேராக அவர்கள் ஆஃபீஸ் ரூம் க்கு சென்றவர்கள் கொஞ்சம் நேரம் அமர்ந்து இருக்க
சிறிது நேரத்தில் உணவு இடைவெளி வந்தது மித்ரன் இன்பனை அழைத்து கொண்டு food கோட் செல்ல
அங்கு அவர்கள் கண்ட காட்சி அருணுக்கும், ஆதிக்கும் நடுவில் விவேகா அமர்ந்து இருந்தாள்.
மித்ரனுக்கு இன்பனை ஏன் இங்கு கூட்டி வந்தோம் என்று இருந்தது.
விவேகாவுக்கு இன்பா இங்கு வந்தது தெரியாது.
ஒரு பக்கம் அருண் அவளுக்கு பரிமாறினால் இன்னொரு பக்கம் ஆதி ஊட்டி விடுகிறான்.
இன்பாவுக்கு இருப்பு கொள்ள வில்லை எவ்ளோ தைரியம் இவளுக்கு இதுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும்.
என்று அருணை பார்த்து நான் அவ்ளோ சொல்லியும் அவ பின்னாடி சுத்துரான் இவன் உன்னை நான் சித்தி கிட்ட எப்படி மாட்டி விடறேன் அப்டின்னு மட்டும் பாரு டா என்று சிறு பிள்ளை தனமாக யோசித்தான்.
அப்போது தான் விவேகா அங்கு இன்பா இவளை முறைத்து பார்ப்பதை பார்த்தவள் சட்டென்று எழுந்து நிற்க
அருண் அவள் கைகளை பிடித்து அமர வைக்க விவேகா மனதில் அய்யோ இப்போ தான் கொஞ்சம் அவனை calm பண்ண try பண்ணி கொஞ்சம் சரி செய்து வைக்க போனால்
அதற்குள் இவனுக ரெண்டு பேரும் சேர்ந்து எனக்கு மொத்தமா ஆப்பு வச்சுடானுக
இன்பா அதை பார்த்து விட்டு உடனே வேகவேகமாக வெளியே நடந்து சென்று விட்டான்.
இங்கு நடந்தது எதையும் கண்டு கொள்ளாமல் நமக்கு சோறு தான் முக்கியம் என்று மைதிலி சாப்பிட்டு கொண்டு இருக்க
அதை பார்த்து மித்ரனுக்கு சிரிப்பு வந்தது இவள் சரியான சாப்பாட்டு ராமி யா இருப்பா போல என்று அவன் அவளை ரசித்து கொண்டு இருக்கும் நேரம்
மித்ரனுக்கு இன்பா கிட்ட இருந்து போன் வந்தது
நான் மட்டும் சந்தோஷமா இருந்தால் இவனுக்கு பிடிக்காதே என்று
இதோ வருகிறேன் இன்பா என்று அவன் சென்றான்.
மதியம் இன்பா சரியாக சாப்பிட வில்லை. மாலை ஆனது மித்ரன் ஒரு வேலையாக ஆஃபீஸ் ரூம் சென்று இருக்க
இன்பா அந்த நாதன் சொன்ன விஷயம் அனைத்தும் வசுமதி கிட்ட கூறி விட்டு உள்ளே வந்தான்
விவேகா tiffin box எடுத்து செல்ல இவர்கள் அறைக்கு வந்தாள் box கழுவாமல் இருக்க அருகில் உள்ள sink ல இவள் கழுவி கொண்டு இருக்க இதை அறியாமல் இன்பா அவனது இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டான்.
விவேகா அவனை பார்த்து சந்தோஷத்தில் சார் என்று அழைக்க
இன்பாவுக்கு அது யார் என்று அவனுக்கு தெரியுமே உடனே அவன் வேகமாக எழுந்து வெளியே செல்ல நடந்தான்.
அதை பார்த்த விவேகா உடனே அவனை பிடிக்க எண்ணிஇன்பாவின் வேகத்திற்கு அவள் ஓடினாள்
அவன் முன்னால் போய் நின்று இரண்டு கைகளையும் நீட்டி தடுப்பது போல வழி மறித்து அவனை பார்க்க
இன்பா உடனே விவேகாவின் கைகளை தட்டி விட்டு கதவு அருகில் செல்ல போக மறுபடியும் அவன் முன்னால் போய் நின்றாள்.
இப்போது இன்பா பேசினான்.
ஒழுங்கா கைய எடு ட நான் போகனும்.
Sorry sorry பிலீஸ் பிலீஸ் நான் வேணுன்னு பண்ணல என்று விவேகா அலட்சியமாக நடந்து கொண்டது சொல்லி அவள் கெஞ்ச
இப்போ கைய எடுக்கிறியா இல்லயா டி
எடுக்க முடியாது போடா என்ன செய்வ நான் தான் sorry சொல்றேன் தானே அப்புறம் என்ன உனக்கு
என்ன டா ன்னு சொல்ற
உனக்கு உடம்பு முழுக்க திமிரு டி
நீ எதுக்கு டா என்னை டி போட்டு கூப்பிடற அதனால தான் நான் உன்னை டா போட்டு சொல்றேன் இனிமேலும் சொல்லுவேன்.
நீ என்ன சொன்னாலும் நான் திருப்பி சொல்லுவேன்.
என்ன செஞ்சாலும் திருப்பி செய்வ
ஆமாம் டா என்று அவள் கூற
இன்பா அவளை நெருங்கியவன் விவேகாவை கதவில் அழுத்த
ஏ என்ன பண்ற நான் சும்மா சொன்னேன்
பிலீஸ் என்னை விடு
இவ்ளோ பேசுன உனக்கு பனிஷ்மெண்ட் கொடுக்கணும்
வேணாம் வேணாம் என்னை விட்டுவிடு
அதெப்படி டி உன்னை நான் விடுவேன் நீயே உன் வாய் கொடுத்து மாடிக்கிட்ட
முதலில் தள்ளி போடா உப்மா எப்டி இருந்தது என்று அவனை தள்ளி விட்டு கேட்க
என் கிட்ட கேட்டா எனக்கு எப்டி தெரியும் நீ மித்ரன் க்கு தானே கொடுத்த
ஹே பொய் சொல்லாதீங்க
நீங்கள் தான் சாப்பிட்டிங்க எனக்கு தெரியும்
இல்ல எனக்கு உப்மா பிடிக்காது
பொய் சொல்லாதீங்க
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது அப்படின்னு எங்க அம்மச்சி சொல்லுவாங்க. என்று அவள் சொல்லி கொண்டே கதவின் அருகில் செல்ல
அவளின் கைகள் பிடித்து அவன் புறம் இழுத்தவன்.
இப்போ எனக்கு கிடைக்கும் என்று அவன் அவள் இடையை வருட
அது கிடைச்சா என்ன கிடைக்க வில்லை என்றால் எனக்கு என்ன
முதலில் என்னை விடு என்று அவள் கூற
அதெப்படி உன்னை விட முடியும் டி
இப்போ நான் அதை எடுத்துக்க போறேன்
எ ஏ என்ன
என்ன
எடுத்துக்க போற
வெய்ட் அண்ட் வாட்ச்
என்று கூறியவன் அவள் முகத்திற்கு அருகில் வந்து அவள் உதடுகளை வருட விவேகாவின் மொத்த சக்தியும் அப்படியே ஒரு நிமிடம் காணாமல் போனது.
அவள் கைகள் கொண்டு தடுக்க முயல
இன்பா அவளை பார்த்து
ஏய் என்ன டி பண்ற என்று அவள் காதுக்கு அருகில் வந்து அவன் சொல்ல
நான் தான் உன்கிட்ட sorry கேட்டேனே அப்புறம் எதுக்கு இப்படி பண்ற
Episode 34,
விவேகாவின் முகத்திற்கு அருகில் வந்து அவள் உதடுகளைஇன்பா வருடினான்
விவேகாவின் மொத்த சக்தியும் அப்படியே ஒரு நிமிடம் காணாமல் போனது.
அவள் கைகள் கொண்டு தடுக்க முயல,
விவேகாவை சுவற்றில் ஒட்டியவன் அவள் காதுக்கு அருகில் வந்து மென்மையாக ஊதினான்.
விவேகா அவன் சட்டையை இறுக்கமாக பிடித்து கொள்ள அவளை பார்த்து சிரித்தவன்.
அவளிடம் இன்னிக்கு உப்மா செஞ்சு என்னை
நீ தூங்க வச்சதுக்கு,
நீ இன்னிக்கு night ful ஆஅ தூங்கவே கூடாது டி
என்று கூறியவன் அவளின் கன்னத்தில் கொஞ்சம் வளர்ந்த சவரம் செய்யாமல் இருக்கும் அவன் கன்னத்தை வைத்து உரசினான்.
விவேகாவுக்கு சிலிர்ப்பாக இருந்தது. இன்பா இரு கன்னங்களில் மாறி மாறி முகத்தை வைத்து உரசினான்.
விவேகா அவள் கண்களை மூடி கொள்ள
இன்பா அவளிடம்
பேபி open your eyes என்று கூற விவேகா கண்களை திறக்கவே இல்லை.
ஏய் கண்ணை திற டி என்று அவளோடு இன்பா இன்னும் ஒட்டி கொள்ள,
விவேகா மெதுவாக கண்களை திறக்க அவன் அவளின் இதழை சிறை செய்தான். அடுத்த நிமிடம் மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.
இன்பாவின் கைகள் விவேகாவின் பின் தலையில் இருக்க விவேகாவின் கைகள் தானாகவே இன்பாவின் கழுத்தில் மாலையாக கோர்த்து கொண்டது.
ஒரு ஆழ்ந்த முத்தம் கொடுத்து அவளை விலக்க
அவளுக்கு மூச்சு வாங்கியது.
இன்பாவை பார்க்க கூட விவேகாவால் முடியவில்லை. அவள் தலையை குனிந்து கொண்டே அவளுடைய box எடுத்து கொண்டு செல்ல போக
மீண்டும் இன்பா அவளை இழுக்க
விடுங்கள் என்று அவள் கூற
பாருடா உனக்கு shy கூட வருமா என்று இன்பா கிண்டல் செய்ய
விவேகா அப்போதும் நிமிர வில்லை
மீண்டும் அவளை இழுத்து கண்கள் முகம் கன்னம் என முத்தமிட்டவன்.
டார்ஜிலிங் அருண் கூட தேவையில்லாமல் வச்சுக்காத டி
அது எனக்கு பிடிக்கல
அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல
அவரு எனக்கு சீனியர் அவ்ளோ தான் என்று அவள் கூற
நான் சொல்றத மட்டும் கேளு புரியுதா
என்று அவளின் கழுத்தில் முகம் புதைத்து ஒரு முத்தமிட்டு அவளை விட
அவள் குனிந்து கொண்டே ஓடி விட்டாள்.
இன்பா சிரித்து கொண்டே அவனது வேலைய பார்க்க
விவேகா நேராக தன் வகுப்புக்கு வந்தவள் சிறிது நேரத்தில் பெல் அடிக்க அவள் கிளம்பினாள்.
வீட்டுக்கு வந்தவள் இன்பனை நினைத்து கொண்டே எல்லாவற்றையும் செய்தாள். நீண்ட நேரம் கண்ணாடி முன் நின்று தான் எப்படி இருக்கிறோம் என்று தன்னை ரசித்தாள்.
இங்கு கண்ணுகினியாள் தன் அண்ணனுடன் பேச காத்து கொண்டு இருந்தாள்.
வினய் நீ எப்போ டா அந்த இன்பா அக்காவ ok பண்ணுவ
No டென்ஷன் my sweety இன்னும் ரெண்டு நாள் ல ஒரு பார்ட்டி வருது அதுல சுபா அவங்க அப்பா கலந்து கொள்கிறார்.
அதில் marriage ப்ரொபோசல் பத்தி பேசலாம் ன்னு இருக்கேன்.
அண்ணா சீக்கிரம் பண்ணு வெண்பா அப்டின்னு ஒரு பொண்ணு இன்பா பின்னாடி சுத்துரா
நீ விடு டா அந்த இன்பா உனக்கு தான் அவங்க கம்பெனி கூட உனக்கு தான்
எனக்கு கம்பெனி வேணாம் அண்ணா காலேஜ் தான் வேனும்.
இங்கு விவேகாவுக்கு அவள் இன்பாவின் கைகளை பிடித்து கொண்டு நடந்து செல்ல திடீரென ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இனியாள் இன்பனை பார்த்து சிரித்து அவனோடு கைகளை கோர்க்க வருகிறாள்.
இன்பா இனியாளை கண்டதும் விவேகாவை விட்டு இனியாளிடம் செல்கிறான்.
அந்த கைகளை உதறி கொண்டு செல்லும் காட்சி விவேகாவின் மனதை சுக்கு நூறாக உடைப்பது போல இருக்க அந்த நொடியே அவள் சட்டென்று
போகாத!
போகாத டா! என்று பதட்டத்தில் பார்க்க அப்பொழுது தான் தெரிந்தது அது கனவு என்று
விவேகா நேரத்தை பார்க்க மணி நள்ளிரவு 12.30
நேரத்தை பார்த்தவள் மனதில் தன்னவனிடம் பேச வேண்டும் என்று தோன்றியது.
உடனே வெளியே சென்று பார்க்க அவளது அம்மா தூங்கி கொண்டு இருந்தாள்.
விவேகா அம்மாவின் போன் எடுத்து கொண்டு அறையின் உள்ளே வந்தாள்.
அவள் மனதில் போன் பண்ணலாமா வேணாமா என்று ஒரு பட்டிமன்றம் நடத்தி போன் பண்ணலாம் என்று முடிவு எடுத்தி கால் செய்தாள்.
இவள் செய்த முதல் அழைப்பில் போன் எடுத்தவன்.
ஹலோ என்று விவேகா சொல்ல
ம்ம்ம் சொல்லு டி
என்னை நினைச்சு நினைச்சு தூக்கம் வரலையா என்னோட விவி பேபி க்கு
இல்ல என்னோட ஹெல்ப் தேவை படுதா
சிறு அமைதிக்கு பிறகு
அப்படியெல்லாம் இல்ல என்ன பண்றீங்க
நானா இப்போ தான் கனவில் உன்னை அப்படியே என்று இன்பா சொல்ல
இவள் என்னை என்று பொய் கோபம் கொண்டு பேச
சரி விடு டி வேணாம் இப்போ டார்ஜிலிங் எதுக்கு எனக்கு போன் பண்னிங்க
சும்மா தான் என அவள்
பொய் சொல்லாத டி என இன்பா கூற
உங்கள் கிட்ட ஒன்னு கேட்கணும்
ம்ம்ம் கேளு
என்னை விட்டு போய்டுய்வீங்களா
லூசு நான் எதுக்கு உன்னை விட்டு போவேன்.
உனக்கு கொடுக்க வேண்டியது நெறைய இருக்கு டி
உன்னை பழி வாங்க போறேன்
உன்னை அணு அணுவா என்று இன்பா நிறுத்த
என்ன சொல்லறீங்க
ம்ம்ம் ஆமா
நீயே என்னை விட்டு போ அப்டின்னு சொன்னாலும்
நான் உன்னை விட்டு போக மாட்டேன்.
ஏன் என்று விவேகா கேட்க
எனக்கு சொல்ல தெரியல நீ எனக்கு வேனும்
உன்னை அப்டியே என்று அவன் ஆரம்பிக்க
போதும்
போதும்
எனக்கு தூக்கம் வருது
இதுல மட்டும் கரெக்ட் ஆ இரு என்று இன்பா மனதில் நினைத்தவன்.
ஹே போன் வைக்காத டி
எனக்கு தூக்கம் வருது காலைல காலேஜ் ல மீட் பண்ணலாம்.
விவி பிலீஸ் வைக்காத டி
இப்போ என்ன என்று விவேகா சிணுங்க
ஒரு கிஸ் கொடு பார்க்கலாம்.
உடனே அவள் திடுக்கிட்டு என்ன
So what
I want kiss you baby என்று அவன் கூற
எனக்கு அப்படின்னா என்னனு தெரியாது
நான் cut பண்றேன் என்று விவேகா கூற
இப்போ மட்டும் நீ போன் வச்சா
நான் உங்க வீட்டுக்கு வந்திடுவேன்
நான் சொன்னால் கட்டாயம் செய்வேன் டி
நான் கொஞ்சம் கூட expect பண்ணல
என்ன
நீங்கள் இவ்ளோ வாய் பேசுவீங்க அப்டின்னு தான்
ம்ம்ம்
நானும் தான் எல்லாம் உன்னை பார்கிறதுக்கு முன்னாடி
காலேஜில் மட்டும் அப்டியே விரப்பா சுத்துறீங்க என்கிட்ட இவ்ளோ வாய்
எல்லாரும் என்னோட டார்ஜிலிங் ஆக முடியுமா அவ சரியான முட்டாள்
நானா என்று அவள் கோபம் கொள்ள
ம்ம்ம் ஆமா நீயே தான்
எப்படி
நீ அப்டியே topic change பண்ணா நான் உன்னை விட்டு விடுவேன் அப்டின்னு நெனைகிரியா
ஒழுங்கா ஒரு கிஸ் கொடு டி
நான் போலீஸ்காரன் டி என் கிட்ட உன்னோட act எல்லாம் நடக்காது டி கேடி
அய்யோ கண்டு பிடித்து விட்டானே endru நினைத்தவள்
இல்ல நான் எப்டி அது தப்பு என்று இவள் நாணம் கொண்டு கூற
அப்போ நான் தரேன் நீ வாங்கிக்கோ
எனக்கு வேணாம் என்று இவள் கூற
ம்ம்ம் ம்ம்ம்ம் நல்ல நடிப்பு
ரொம்ப ஸீன் போடாத டி
நானா நான் என்ன ஸீன் போடறேன்
ஆமா நீ ஸீன் தான் போடற
எப்படி என்று விவேகா கேட்க
இன்பா சிரித்து கொண்டே கொஞ்சம் காதலாக
நான் கிஸ் கொடுக்கும்போது அப்டியே உன்னோட கண்ணை மூடி அப்டியே என்னோட சட்டையை இறுக்கமா பிடிச்சு இன்னும் வேனும் அப்டிங்கறது மாறி enjoy பண்ணிட்டு
இப்போ என்கிட்ட வேணாம் ன்னு பச்சை பொய் சொல்ற ம்ம்ம் என்று இன்பா சொல்ல
நா
நான்
அது வந்து அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல எனக்கு தூக்கம் வருது நான் வைக்கிறேன் என்று அவள் வைத்து விட்டாள்.
இப்போ இனி உனக்கு தூக்கமே வராது டி என்று இன்பா அவளை நினைத்து கொண்டே உறங்கி போனான்.
இன்பா நினைத்தது போலவே விவேகா அவனை நினைத்து கொண்டே
எல்லாம் உன்னால தான் டா என்னோட தூக்கம் போச்சு
ஒரு குட்டி பொன்னு கிட்ட என்ன பேசனும்னு உனக்கு தெரியாதா
இப்போ பாரு அவ மனசு உன்னை தேடுது உன்கிட்ட பேசணும் போல இருக்கு என்று அவனை நினைத்து கொண்டே தூக்கம் வராமல் தவித்தாள்.
அடுத்த நாள் யாருக்கு என்ன வைத்து இருக்கிறது என்று சொல்ல வேகமாக விடிந்தது.
விவேகா காலையில் எழுந்து காலேஜ் க்கு நிம்மதியாக தயாராகி கிளம்பினாள்.
இனி ஒரு வாரம் இன்பா காலேஜ் வர வில்லை அவனுக்கு முடிக்கப்படாத கேஸ் இருக்க அதனால் வர வில்லை.
ஆனாலும் காலை விவேகா பஸ் காக காத்து இருந்து அவளை bus ல ஒரு பார்வை பார்த்து விட்டு செல்வான்.
அதே போல் மாலையும் அவள் பஸ் கிளம்பும் நேரம் சரியாக காலேஜ் வந்து விடுவான். விவேகாவை பார்த்து ஒற்றை கண் சிமிட்டி விட்டு தான் செல்வான்.
விவேகாவும் அவனை ரசிக்க தான் செய்தாள்.
இப்படியே ஒரு வாரம் செல்ல அந்த வினய் பார்ட்டியில் இன்பாவின் அப்பா கிரிஷ்ணகுமார் கிட்ட நல்ல பெயர் வாங்கி அவளை பிடிக்கும் என்றும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் என்றும் கூற
இன்பாவின் அப்பா பெண் பார்க்க வாருங்கள் என்றும் கூறி விட்டார். இதை கேட்டதும் மிகவும் சந்தோஷமாக இருந்தாள் கண்ணுகினியாள்.
அடுத்த நாள் வருண் கிட்ட இருந்து கால் வந்தது mains ல பாஸ் பண்ணி விட்டதாகவும் , நேர்காணல், பயிற்சி வகுப்புகள் இருக்கு
அது சென்னையில் நம் மாநிலத்தில் நடை பெறும் என்று கூறி அவன் ஊருக்கு கிளம்ப இதை கேட்டு விவேகா சந்தோஷதில் திளைத்தாள்.
ஆனால் இது கொஞ்ச நேரம் தான் என்று அவளுக்கு தெரியவில்லை இனியாள் ஒரு புதிய புயலாக இன்பா விவேகா காதலில நுழைய போகிறாள் .
Episode 35,
அடுத்த நாள் வருண் கிட்ட இருந்து போன் வந்தது.
அவன் அம்மாவிற்கு போன் செய்து தேர்வில் வெற்றி பெற்றது மட்டும் கூறினான்.
சர்தார் வல்லபாய் படேல் நஷனால் போலீஸ் அகாடமி
இன்னும் 11 மாதம் பயிற்சி அதை முடித்து தான் வேலை கிட்ட தட்ட ஒரு வருடம் ஆகும் என்று கூறி வைத்தான்.
ஆனாலும் விவேகாவிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது தன் அண்ணன் ஒரு வழியாக அவன் கனவை அடைய போகிறான் என்று உற்சாகமாக காலேஜ் சென்றாள்.
இங்கு spr இன்ஸ்டிடியூட் ல
குரு அந்த தலேண்ட் iQ எக்ஸாம் எழுதிய மாணவர்களின் மதிப்பெண் , அவர்கள் எவ்வளவு நேரம் சீக்கிரம் முடித்த அந்த time பார்க்க அதில்
ஆதி, விவேகா,
bio டெக் ல தாரா ,
cs ல வெண்பா, சுரேஷ், இவர்கள் தான் அதிகம் அதாவது மிகவும் குறைவான நேரத்தில் முடித்து இருந்தனர்.
குரு தேஜு கிட்ட
தேஜு இந்த ஆராய்ச்சி செய்து இதுல profit அதாவது donate பண்ற egg வச்சு bussiness பண்றது இதுல நெறைய பணம் கிடைக்கும் ஆனால் என்ன இது அன்னையா க்கு தெரியாது.
ஏதோ அந்த பொம்மாயி விஷயத்தில் மட்டும் தான் பண்ணி இருக்கேன் அப்டின்னு என்னை விட்டு இருக்கிறார்.
பேசாமல் நீ எனக்கு வதினா வா வந்து இருக்கணும் தேஜு உன்னோட இடத்தில் அவள்
எனக்கு தமிழ் பொண்ணுங்கள சுத்தமா பிடிக்காது என்று குரு சொல்ல
தேஜு மனதுள் ஒரே சந்தோஷமாக இருந்தலும் ஆனால் அவள் அதை வெளி காட்டி கொள்ள வில்லை.
நான் இவ்ளோ பெரிய விஷயம் பண்றேன்னு தெரிஞ்சா நான் அவ்ளோ தான் என்று குரு சொல்லி கொண்டு இருக்கும் போதே உள்ளே வந்தார். நாதன்
அவர் தான் தேஜுவின் அப்பா , ரெசேர்ச் fellow நீங்கள் எதற்கும் கவலை பட வேண்டாம் குரு அப்படி ஏதாவது என்றால்
நான் தான் அனைத்தும் பொறுப்பு என்று சொல்ல நானே அனைத்து பொறுப்புகளையும் ஏற்று கொள்கிறேன்.
எது நடந்தாலும் என் தேஜுவை மட்டும் நன்றாக பார்த்து கொள்ளுங்கள் அவள் தான் என்னுடைய உயிர்
குரு- தேஜு என் பொறுப்பு என் அண்ணனுக்காக தான் நான் இந்த ஆரயிச்சிக்கு ஒப்பு கொண்டேன் இப்போது என் அண்ணன் நிதின் கூட சந்தோஷமாக இருக்கிறான்.
நிதின் என்ற பெயரை கேட்டதும் நாதன் முகத்தில் கலவையான உணர்வு.
ஆனால் தேஜு முகத்தில் சோகம் மட்டுமே இருந்தது.
குரு-சரி uncle இப்போது அடுத்து இவர்கள் sample தான் நாம் எடுத்து செக் செய்ய போகிறோம்.
ஏற்பாடு செய்கிறேன் என்று அங்கு இருந்து நகர்ந்தான்,
விவேகா காலேஜ் வந்தவுடன் அங்கு அடுத்த வாரம் SPR காலேஜ் ல நடக்க போற expo க்கு எல்லாரும் என்ன பண்றது அப்படின்னு அவர்களுடைய பாணியில் செய்து கொண்டு இருந்தனர்.
ஆதி விவேகாவிடம்
விவி நீ SPR காலேஜ் க்கு வர வேணாம் எதுலயும் கலந்து கொள்ள கூடாது.
ஏன் ஆதி என்று விவேகா கேட்க
அவன் முகம் சட்டென்று கோபமாக மாறியது.
விவேகாவை உற்று பார்த்தவன் உன்னோட இஸ்டம் என்று கூறி அவன் தள்ளி செல்ல
ஹே பிலீஸ் பிலீஸ் கோபமாகாத
நான் ராஜ் அத்தான் கிட்ட பேச மாட்டேன்
என்ன அவனை அத்தான் ன்னு
நீ கூப்பிடற
அவனும் அவனோட முகமும்
உன்னை வருண் மாமா கிட்ட சொல்லனும் டி
ஹே பிலீஸ் இந்த ஒரு தடவை மட்டும் நான் கலந்து கொள்கிறேன் .
தேவை இல்லை விவி உன்கிட்ட பேச மாட்டேன் என்று அவன் செல்ல இவள் கெஞ்சி கொண்டே சென்றாள்.
சரி ok நான் போகல விடு என்று அவள் சோகமாக கூற
ஆதி அவளை பார்த்து இப்போ தான் நீ என்னோட விவி என்று அவன் அவளை கொஞ்ச
இதை எல்லாம் தூரத்தில் இருந்து அருண் பார்த்து கொண்டு இருந்தான்.
இன்பா காலேஜ் வந்தான் . அவன் நேராக விவேகாவை பார்த்து கண்களில் தன் அறைக்கு வர சொல்ல
இவளும் சென்றாள்.
சொல்லுங்க எதுக்கு வர சொன்னிங்க என்று விவேகா கேட்க
இன்பா சில கோப்பை புரட்டி கொண்டே
விவேகா நீ அந்த SPR காலேஜ் க்கு expo க்கு போறியா என்று இன்பா கேட்க
இவள் மிகவும் சோகமாக போலாம் னு தான் என்று முழுவதும் அவள் கூற வருவதற்குள்
இன்பா வேகமாக அந்த கோப்புகளை மூடி வைத்தவன்
நீ போக வேணாம் அப்டின்னு சொல்ல தான் உன்னை வர சொன்னேன்.
விவேகா அவனை ஆச்சர்யமாக பார்க்க
நீ போக வேணாம்
ம்ம்ம் உங்கள் எல்லார்க்கும் என்ன ஆச்சு என்று அவள் சொல்ல
யாரு நீ சொல்றது எனக்கு புரியவில்லை
இல்லை சார் ஆதி கூட என் கிட்ட இப்போ தான் அங்கே போய் கலந்து கொள்ள கூடாது அப்டின்னு சொன்னான்.
இன்பா அவளை பார்த்து ஏன் என்று புருவம் தூக்க
விவேகா இன்பாவ பார்த்து என்னோட அத்தை பையன் அங்கே தான் ஒர்க் பண்றாரு அவரை ஆதி க்கு பிடிக்காது .
அன்னிக்கு கூட ஒரு waste fellow உன் கைய என்று நிறுத்தி அன்னிக்கு நீ என்னை யாரு ன்னு கேட்ட தானே என்று கொஞ்சம் கோப பார்வையில் பார்க்க
விவேகா அவள் காதுகளை பிடித்து கொண்டு நான் வேனும் ன்னு தான் சொன்னேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று பாவமாக முகத்தை வைத்து கொள்ள
இன்பா அவளை பார்த்து மனதில் சிரித்து கொண்டே இப்படியே மயக்கு டி என்னை என்று நினைத்தவன்.
ம்ம்ம்ம்
அப்புறம் நான் கொஞ்சம் வேலையா ஆந்திரா போறேன் இந்த ஒரு வாரம் தான் வருவேன்
Training அகாடமி போறீங்களா என்று அவள் கண்கள் மின்ன கேட்க
இதெப்படி உனக்கு தெரியும்.
இல்ல நான் சும்மா guess பண்ணேன்.
நீ மட்டும் இப்போ ips ஆகுறேன் ன்னு சொன்னா super ஆ இருக்கும் டி
ரெண்டு பேரும் சேர்ந்து அங்கே ரோல் மாடல்லா போலாம். என்று இன்பா கூற
விவேகாவுக்கு சட்டென்று கோபம் வர நீங்கள் வேற ஒரு மாடல் book பண்ணிக்கோங்க என்று அவள் கிளம்ப போக
விவி நான் சும்மா சொன்னேன்,
என்று அவளை இழுத்து சரி நேத்து,
நான் கேட்டதை கொடுக்காமல் போன் வச்சுட்ட,
என்று இன்பா சொல்ல
அதை அப்புறம் பேசிக்கொள்ளாலாம் என்று இன்பனை விட்டு விலக
நீ அப்புறம் பேசிக்கோ எனக்கு இப்போ வேனும் என்று அவள் அதரங்களில் மென்மையாக ஒரு முத்தம் பதித்தான்.
விவேகா இப்போது இன்பாவ பார்த்து உனக்கு வேற வேலையே இல்லயா எப்போ பார்த்தாலும் என்னை சீண்டிக்கிட்டே இருக்க.
அது தான் என்னோட வேலை என்று அவளை பார்த்து ஒற்றை கண் சிமிட்டினான்.
அவளை மடியில் அமர்த்தி அப்புறம் எப்போ 143 சொல்ல போற என்று இன்பா விவேகா கிட்ட கேட்க
யாருக்கு எதுக்கு என்று அவள் கூற
எனக்கு தான்
உங்களுக்கு 143 சொல்லனும் அவ்ளோ தான 143
சத்தியமா முடியல டி
அப்போ I Hate You
என்ன என்று இன்பா கேட்க
ம்ம்ம் ஆமா நீங்கள் தானே கேடீங்க 143 இதுவும் 143 தான் i hate you
நானும் உன்னை ரொம்ப i hate you என்னை torure பண்ணதுக்கு மென்டல் ஆவும் பிசிக்கல வும் இதுக்கு உன்னை நான் எப்படி பழி வாங்கிக்குறேன் ன்னு மட்டும் பார்
சரி ok உனக்கு இருக்கு என்று அவளை விட
அவள் இன்பாவின் அருகில் வந்து i miss you என்று கூறி இதுவும் 143 தான்
என் பின்னால் சுத்துன ஒருத்தர் என்கிட்ட 143 சொல்லவே இல்லையே
நான் எப்டி சொல்ல முடியும்
நான் யாரையும் விரும்பல என்று சொல்லி விட்டு ஓடி விட்டாள்.
ஆனால் அவளுக்கு தெரிய வில்லை இனி அவள் வெறுக்க போகிறாள் இன்பாவை
இங்கு சுபத்ரா சரவணனுக்காக காத்து இருந்தாள்.
சரவணன் வந்ததும் அவனுக்கு பிடித்த உணவுகளை ஆடர் செய்தாள்.
எதுவும் வேணாம் மிஸ் சுபத்ரா என்று அவன் மிக கடுமையாக பதில் கூற
சுபத்ரா அவனை பார்த்து
ஏன் சரவணன் இப்படி என்னை torture பண்ற
நான் உங்களை என்ன சொன்னேன் சுபா உங்களை நான் எப்டி torture பண்ண முடியும்.
இப்போது அவள் அழ சரவனனால் பார்த்து கொண்டே இருக்க முடிய வில்ல
இப்போ ஏன் இப்படி பண்றீங்க
சுபா அவனை பார்த்து
எனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து இருக்கிறார்கள் அது தான் இறுதியாக உன்னிடம் ஒரு வார்த்தை கேட்கலாம் என்று வந்தேன்.
உன்னோட மனசில் நான் இல்லயா சரவணன்
என்னை உனக்கு பிடிக்காதா என்று மிகவும் கலங்கி போய் அவள் பேச
சரவணன் அலட்சியமாக ஒரு பார்வை சிந்தி இல்ல சுபா உங்களை எனக்கு sorry
நீங்கள் என்னோட மனசில் இல்ல என்று பொய்யாக ஒரு புன்னகை சிந்தி அந்த இடம் விட்டு எழ செல்ல
சுபா அவனை பார்த்து அவர் பெயர் வினய் என்று கூற அவன் ஒரு நிமிடம் நின்றான்
பின் சுபாவை பார்த்து வாழ்த்துக்கள் என்று கூறி கட கட வென்று அந்த இடத்தை விட்டு நேராக ரெஸ்ட் ரூம் செனறு விட்டான்.
சுபத்ரா அவளுடைய நிலைய கண்டு அவள் ஒரு வலியால் வெற்று புன்னகை சிந்தி சென்றாள்.
சரவணன் மனதில் சுபா மட்டுமே எப்போதும் இருப்பாள் இது அவனுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.
இங்கு ஆதி விவேகா கிட்ட பேசியதை பற்றி நினைத்து அருண் மனதில் நெருப்பாக இருந்தது.
என்னோட விவேகா spr காலேஜ் போக அவன் கிட்ட permission கேட்கிறாள்.
அவளுக்கு நீ என்ன கொடுக்கறது நான் கூப்பிட்டு போறேன் என்று அருண் சொல்லி கொண்டான் ஆனால் இந்த ஒரு விஷயம் இன்பா விவேகா காதலை எப்படியோ புரட்டி போட போகிறது.
Episode 36,
என்னோட விவேகா spr காலேஜ் போக அவன் கிட்ட permission கேட்கிறாள்.
“அவளுக்கு நீ என்ன கொடுக்கறது,
நான் கூப்பிட்டு போறேன்” ,
என்று அருண் மனதில் சொல்லி கொண்டான்.
இன்பா அவள் சொல்லியதை நினைத்து கொண்டு இருந்தான்.
என்கிட்ட லவ் யூ சொல்ல மாட்டா ,ஆனால் அவ கிட்ட நான் மட்டும் சொல்லனுமா.
ஐ மிஸ் யூ ன்னு சொல்லிட்டு போறாளே!
நிஜமாவே என்னை மிஸ் பண்ணுவாளா?
இவ என்ன சொல்ல வரா என்று நினைத்து சிரித்து கொண்டே அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
விவேகாவுக்கு இப்போது வேறு வழி இல்லை சரி என்று அவள் வகுப்புக்கு கிளம்பினாள்.
இன்பா சரியாக மதியம் கிளம்பி விட்டான் செல்வதற்கு முன் விவேகாவை பார்த்து விட்டு செல்லலாம் என்று நினைத்தவன் அவளை வெண்பாவ விட்டு அழைத்து வர சொல்ல
வெண்பாவுடன் விவேகா வர அவளிடம்
ஏய் விவேகா” உனக்கும் இன்பா அண்ணாக்கும் என்ன விஷயம் “…..என்று எதுவுமே தெரியாதது போல கேட்க
ஏ! என்ன!!!!
ஒன்னும் இல்லையே !என்று விவேகா நாணம் கொண்டு பேச
ஒன்னும் இல்லயா!
இல்ல,
என்கிட்ட சொல்ல ஒன்னும் இல்லயா?
என்று வெண்பா அவளை கட்டம் கட்டினாள்.
பிலீஸ் சும்மா வாடி என்னை கொஸ்டின் பண்ணாத, என்று இருவரும் பேசிக்கொண்டே செல்ல
அங்கு இன்பா இவர்களுக்கு காத்து இருந்தான்.
வெண்பா உடனே மித்ரனை பார்க்க செல்வதாக கூறி நழுவிக்கொண்டாள்.
அவன் இவளை பார்க்க
விவேகா வேறு எங்கோ பார்த்து கொண்டு இருந்தாள்.
இன்பா அவள் அருகில் வந்து
ஏய் கேடி உன்னோட குட்டி குறும்பு எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு நல்லா படிக்கணும் புரியுதா.
அப்புறம் முக்கியமான விஷயம்
யாரையும் இம்ப்ரெஸ் பண்ணிட்டு இருக்காத
விவேகா இண்பாவை வினோதமாக பார்க்க
எனக்கு தெரியும் நீயா யார் கிட்டயும் போய் பேச மாட்ட இருந்தாலும் கொஞ்சம் பொண்ணு மாறி நடந்துக்கோ
என்று சொல்லி அவளை அன்பாக இழுத்து அணைத்து கொண்டான்.
விவேகாவின் உச்சந்தலையில் ஒரு முத்தம் பதித்து விட்டு
அப்புறம் முக்கிய விஷயம் ஆதி கூட தான் நீ இருக்கணும் அவன் சொல்ற பேச்சு கேளு தேவையில்லாமல் யார் கிட்டயும் வச்சுக்காத
அப்புறம் இந்த அருண் பையன் கூட சேர்ந்து சுத்தாத எனக்கு மட்டும் எதுவும் தெரிந்தது நீ என்கிட்ட அவ்ளோ தான் என்று அவளை இழுத்து அவள் கண்ணுக்கு முத்தம் பதித்தவன்
சரி நீ போகலாம் என்று கூற இப்போது தான் விவேகாவுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
அவனிடம் நீங்கள் நிஜமாவே வர மாட்டிங்களா
ம்ம்ம் ஆமா
சரி care ful ஆஅ இருங்க
என்று தன் உணர்வுகளை கட்டு படுத்தி கூறியவள் வேகமாக அங்கு இருந்து சென்று விட்டாள்.
இன்பாவும் நேராக தன் வீட்டுக்கு வந்தான்.
விவேகா காலேஜ் ல சோகமாக சுத்தி கொண்டு இருக்க அதை பார்த்து ஆதி
என்னடி ரொம்ப சோகமா இருக்க
இல்ல ஆதி நான் நல்லா தான் இருக்கேன் என்று
அவள் குரலில் சுரதே இல்லாமல் பதில் கூற
அப்போது அங்கே அருண் வந்தான்.
விவேகாவை பார்த்து
செல்லம் லைப்ரரி போலாம் வரயா
இப்போவா வேணாம் சீனியர் அப்புறம் போலாம்
நீ வந்தால் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்து இருக்கு என்று ஆதியை ஒரு பொருட்டாக நினைக்காமல் அவள் கைகளை பிடித்து அழைத்து சென்றான்.
ஆதி மனதில் இவன் விவி கிட்ட ஓவர் அட்வான்டேஜ் எடுத்து கொள்கிறானே
என்று நினைத்து கொண்டே அவன் வகுப்புக்கு சென்று விட்டான்.
அங்கே லைப்ரரி வந்த இருவரும் விவேகா புத்தகம் எடுத்து கண்களை உருட்டி உருட்டி பார்த்து தேடி கொண்டு இருக்க
அருண் விவேகாவின் அழகை ரசிக்க ஆரம்பித்தான்.
சொல்லுங்க சீனியர் ஏதோ பேசணும் அப்டின்னு சொன்னேங்க
அது ஒன்னும் இல்ல விவி செல்லம் நாளைக்கு spr ல expo இருக்கு நீ வரியா
விவேகா மனதில் இன்பாவும், ஆதியும் மாறி மாறி வந்தனர்.
வேணாம் சீனியர் ஆதி வேணாம் னு சொல்லிட்டான்.
வா நம்ப போய்ட்டு வரலாம்
அங்கே போனா நிறையவே கற்று கொள்ளலாம்
சரி விடு உனக்காக தான் எல்லாம் பண்ணேன் சரி உன் இஷ்டம் என்று அவன் செல்ல போக
இன்பா ஊருக்கு செல்கிறான் என்று நினைத்தவள்.
அவளுக்கு இந்த expo ல கலந்து கொள்ள மிகவும் ஆசை அதனால
அருணை பார்த்து உங்களுக்காக ok என்று இவள் கூற அருண் அவளை தவறாக புரிந்து கொண்டான்.
அடுத்த நாள் வசுமதி இன்பாவிடம்
நீயும் வா ராகவ்
என்னால தனியாக அந்த காலேஜ் க்கு செல்ல ஒரு மாதிரியாக இருக்கிறது என்று கூற
இன்பா சரி என்று ஒத்துக் கொண்டான்
இவர்கள் இருவரும் அங்கு வருகிறார்கள் என்று விவேகாக்கு தெரியாது
அருண் od தொடர்பான லெட்டர் அனைத்தையும் விவேகாவுக்கு தயார் செய்து விட்டான்
ஆதியிடம் நான் காலேஜ் வரவில்லை என்று வீட்டிலே போன் செய்து சொல்லிவிட்டு
காலேஜ் பஸ்ஸில் இருந்து இறங்கிக் கொண்டாள்
அவள் அருணுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்
அருண் ஒரு காரில் வந்து இறங்கினான்.
இன்று மிகவும் அழகாக வந்து இறங்கினான் அவனை ஒரு நிமிடம் பார்த்த விவேகாவுக்கு இன்பாவ பார்ப்பது போல தோன்றியது.
அருண் மனதில் தன்னை இப்படி பார்க்கிறாள் அவளுக்கும் நம்மை பிடித்து இருக்கிறது போல என்று நினைத்தவன்.
செல்லம் நீ படிச்சு முடி உன்னை அப்புறம் எனக்கு சொந்தம் ஆக்கி கொள்வேன் என்று மனதில் நினைத்து கொண்டே அவள் அருகில் வர
அப்போது தான் சுய நினைவுக்கு வந்தவள் அருணிடம் இயல்பாக பேச ஆரம்பித்தாள்.
அருண் அவளிடம் காரில் ஏற சொல்ல அவள் தயங்கினாள்.
செல்லம் no fear வா நம்ப காலேஜ் போகலாம் என்று சொல்ல
விவேகாவுக்கு இன்பா சொன்னது நியாபகம் வந்தது
இல்ல சீனியர் நம்ப bus ல போகலாம் பிலீஸ் எனக்காக என்று அவள் கெஞ்ச சரி என்று ஒப்பு கொண்டான்.
இருவரும் காலேஜ் போய் இறங்கினர் ஏற்கனவே ஒரு ppt க்கு தயார் செய்து இருந்தாள் விவேகா
அதில் கலந்து கொண்டு சிறப்பாக தான் சொல்ல வந்த கருத்துக்களை கூறி அங்கு நடந்த அனைத்து நிகழ்விலும் மிகவும் உற்சாகமாக கலந்து கொண்டாள்.
இதை ஒரு ஜோடி கண்கள் பொறாமையாக பார்த்து கொண்டு இருந்தது.
இறுதியில் சிறப்பு விருந்தினராக அழைத்து வந்தவர்கள் அனைத்தும் பார்வையிட்டு கொண்டே வர
விவேகா அங்கே இன்பனை எதிர் பார்க்க வில்லை அதே போல் அருணும் எதிர் பார்க்க வில்லை.
ஒரு நிமிடதில் இன்பாவின் பார்வை மாறுதல் கண்டவளுக்கு உள்ளே நடுக்கம் எடுத்தது. கூட அருண் நிற்பது இன்னும் நடுக்கத்தை கொடுக்க,
வசு அவர்கள் அருகில் வந்து
நம்ப காலேஜ் சார்பில் நீ வந்தாயா வாயாடி என்று கேட்க
விவேகா பயந்து கொண்டே ஆ.ஆம் மேடம்
சரி ok மா என்று வசு பார்வை அருணை பார்த்து
ஏன் டா அருண் டெல்லி ல இருந்து வந்த பின் ஒரு தடவை கூட என்னை வந்து பார்க்கனும் னு உனக்கு தோணாலயே
இல்ல மாம் நான் கொஞ்சம் ப்ரொஜெக்ட் ல பிஸி நான் ஈவ்னிங் வரேன் பிலீஸ் கோவபடாதிங்க என்று அருண் வசுமதி ய சமாதானம் செய்தான்.
அருண் வசு மா நான் ப்ரொஜெக்ட் விஷயமா இந்த expo க்கு விவேகாவை கூட்டி வந்தேன் என்று அருண் கூற
அவ்வளவு தான் இன்பாவுக்கு இன்னும் கோபம் உண்டாக
அம்மா எனக்கு இம்போர்ட் ஒர்க் இருக்கு நான் கிளம்புறேன் என்று வேக வேகமாக சென்றான்.
வசு விவேகாவிடம்
எப்டி மா வந்தீங்க
வசு மா நாங்கள் அவுட் பஸ் ல வந்தோம் என்று அருண் கூற
சரி வா அருண் நான் உன்னை ட்ராப் பண்றேன் விவேகா நீயும் வா மா
அவனோ மாம் இன்னும் கொஞ்ச நேரம் பெஸ்ட் எந்த காலேஜ் ன்னு சொல்லி சேர்ட்டிபிகேட்டே கொடுப்பாங்க அதை நானும் விவேகாவும் வாங்கணும்
நீங்கள் ப்ரோ கூட போங்க நாங்கள் அப்டியே பார்த்து கொள்வோம் என்று அருண் விவேகா கூட வெளிய செல்ல திட்டம் தீட்ட
இல்ல அருண் நீ எல்லாம் கலெக்ட் பண்ணு நான் விவேகாவை கூட்டி செல்கிறேன் என்று வசு அவளை அழைத்து காலேஜ் ல விடுவதாக கூறி கூட்டி சென்றாள்
இங்கு இன்பாவுக்கு மிகவும் கோபமாக இருந்தது.
நான் அவ்ளோ சொல்லியும் என் பேச்சை கேட்காமல் அவனோடு வந்து இருக்கிறாளே இவளுக்கு எவ்வளவு திமிர் என்று அவன் மனம் உலை கலன் போல வெந்து கொண்டு இருக்க
அப்போது அங்கே வசு வந்தாள். விவேகா தன் தலையை குனிந்து கொண்டே நிற்க
உள்ளே ஏறி உட்காரு மா
அம்மா இப்போ எதுக்கு “இந்த girl அ நம்ப கார் ல ஏற சொல்லறீங்க?
ராகவ் அடி வாங்க போற நீ ,
“மேடம் நானே காலேஜ் போய்டுவேன்,
நீங்கள் கிளம்புங்க “என்று விவேகா சொல்ல
“அம்மாஇங்கே எப்டி வந்தார்களோ,
எப்டி போகனும் னு தெரியும் தானே”,
வசு இன்பாவிடம் ,
“நான் சொல்றத மட்டும் செய் “
அம்மா…….
வசு அவனை முறைக்க , உடனே அவன் எதுவும் பேசாமல் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
விவேகா வசுமதி கிட்ட வேணாம், வேணாம் என்று சொல்ல சொல்ல அவள் அழைத்து சென்றாள்.
இன்பாவுக்கு இப்போது மிகவும் வெறுப்பாக இருந்தது.
இவளுக்கு எவ்வளவு தைரியம் நாம் தவறு செய்து விட்டோம் . அருண் கூட அதிகமாக வைத்து கொள்ள வேண்டாம் என்று சொல்லி விட்டு வந்தேனே ,
அதை விட இந்த காலேஜ் க்கு வர கூடாது னு சொன்னேன் ஆனால் இப்படி என் பேச்சை மதிக்காமல் வந்து இருக்கிறாள் என்று நினைத்து கொண்டே காரை வேகமாக ஓட்டினான் .
வசு அவனிடம் ராகவ் ஸ்லோவா போடா என்று சொல்ல அப்போது தான் தன்னிலைக்கு வந்தவன்.
எதுவும் பேச வில்லை, கொஞ்சம் மெதுவாக வேகத்தை குறைத்தான்.
ராகவ் இங்கயே நிறுத்து நான் கமிஷனர் ஆஃபீஸ் போகனும் .
மேடம் நானும் இங்கேயே இறங்கி போய்க்கறேன்.
விவேகா நீ காலேஜ் போய்ட்டு அங்கே ஆஃபீஸ் ரூம் போன் ல இருந்து கால் பண்ற ok வா
ராகவ் நீ அவள பத்திரமா காலேஜ் ல இறக்கி விட்டு வா, எனக்கு இப்போ ஒரு இம்போர்ட் மீட்டிங் இருக்கு
அவன் எதுவும் பேச வில்லை, வசு தெரிந்து கொண்டாள் அவன் மிகவும் கோபமாக இருக்கிறான். என்று
ராகவ் புரியுதா,
ம்ம்ம் என்று காரை கிளப்பினான்.
கார் மிகவும் வேகமாக சென்று கொண்டு இருந்தது விவேகாவுக்கு இப்போது என்ன செய்ய என்று தெரியவில்லை.
ஆனால் அவளுக்கு தெரிந்து விட்டது இவன் நம் மேல் மிகவும் கோபமாக இருக்கிறான் என்று
விவேகா அவனை அழைத்தாள்.
சார்….?.
Episode 37,
ஆனால் விவேகாவுக்கு தெரிந்து விட்டது இன்பா நம் மேல் மிகவும் கோபமாக இருக்கிறான் என்று
விவேகா அவனை அழைத்தாள்.
சார்….?.
இன்பாவுக்கு வந்தது கோபம் காருக்கு வேகம் கூட்டினான். விவேகாவினால் அவளை நிலை படுத்தி கொண்டு அமர முடியவில்லை அவளுக்கு அழுகைகயாக வந்தது.
கண்களை இறுக்க மூடி கொண்டாள் எதுவும் பேச வில்லை.
இன்பா அவளை rear வியூ கண்ணாடி வழியாக பார்க்க அவள் மிகவும் பயந்து போய் இருக்கிறாள் என்று தெரியவும் கொஞ்சம் காருக்கு வேகம் குறைந்து சமநிலையில் காரினை பயணித்தான்.
பின் கல்லூரி வந்ததும் காரினை நிறுத்தியவன்
தன் அம்மாவிற்கு போன் செய்து அவளிடம் நீட்ட அவள் என்ன என்று பார்க்க
அவனது கோபமான பார்வையே விவேகாவுக்கு பதில் கூறியது
வாங்கி பேசு என்று
விவேகா போன் வாங்கி காதில் வைத்தவள் .
மறுமுனையில் ராகவ்
“அவளை காலேஜ் கூட்டி கொண்டு விட்டாயா”?
மேடம் நான் விவேகா பேசறேன்,
சார் என்னை காலேஜ் ல கொண்டு வந்து விட்டு விட்டார் .
என்று இன்பாவ ஒரு ஏக்க பார்வையில் பார்த்து விட்டு போனை மீண்டும் இன்பாவிடம் கொடுத்தாள்.
இன்பா அவளை பார்க்காமல் அவள் கைகளில் இருந்து போன் வாங்கியவன்.
அம்மா இனி எனக்கு என்ன வேலை இருக்கு நான் வீட்டுக்கு போறேன்
என்று மிகவும் அழுத்தம் கொண்டு வார்த்தைகளை உதிர்த்து விட்டு இவளை காணாமல் சென்று விட்டான்.
விவேகாவுக்கு தான் என்ன செய்ய என்று ஒன்றும் புரியவில்லை .
அவள் கண்களில் கண்ணீருடன் நேராக அவள் வகுப்புக்கு செல்ல அப்போது மதிய உணவு இடைவெளி
ஆதி சிவா, மைதிலி கூட அரட்டை அடித்து சிரித்து கொண்டு இருக்க இவளை கண்டதும் அமைதியாக ஒரு பதட்டம் கொண்டு அவள் அருகில் வந்தவன்.
விவேகா என்னாச்சு
அவள் ஒன்றும் இல்லை என்று கூற
உன்னோட முகமே சொல்லுது என்னாச்சு அப்டின்னு சொல்லு
ஆதி !!! என்று அழுது கொண்டே அவனை அணைத்து கொண்டாள்.
ஏய் லூசு என்னாச்சு முதலில் அதை சொல்லு,
இன்னிக்கு லீவு அப்டின்னு தானே,
என் கிட்ட சொன்ன இப்போ எப்டி காலேஜ் வந்த?
“நான் சொன்னா நீ என்கிட்ட பேச மாட்ட” என்று அழுது கொண்டே அவனிடம் இருந்து விலகி நேராக அவள் இடத்திற்கு வந்தாள்.
இப்போ நீ சொல்ல போறியா இல்லயா !!!
இப்போ” நீ சொல்லல நான் இப்போ வருண் மாமாவுக்கு கால் பண்ணி சொல்லிடுவேன்”.
“அத்தை கிட்ட சொல்லிடுவேன் “
விவேகா அவனை பார்த்து உன்கிட்ட தனியா பேசறேன் பிலீஸ் என்னை ஒரு 5 நிமிடம் தனியா விடு
ஏய் நீ சொல்றத பார்த்தால் பெருசா ஏதோ மறைக்கிற மாறி இருக்கு
இப்போவே சொல்லு டி என்று கோபம் கொண்டு அருகில் வர
இப்போது மைதிலியும், சிவாவும் வெளியே சென்று விட்டனர்.
விவேகா அவர்கள் சென்றவுடன் ஆதியை பார்த்து
ஆதி !
ம்ம்ம் சொல்லு, விவி” என்னாச்சு ஏன் டி இப்படி அழற”
இன்பா இனி வர மாட்டார் காலேஜ்க்கு என்று விம்மி கொண்டே சொல்ல
ஆதி தன்னை சமன் செய்தவன்,
இதுக்கு தான் நீ அழுகிறாயா” அவரு ப்ரொபஸ்ஸோர் இல்ல” ,”அவரு போலீஸ் அவருக்கு வேலை இருக்கும் இதுக்கு போய் அழலாமா”
அது இப்போ பிரச்சனை இல்ல, என்று விவேகா கூற
வேற என்ன என்று பொறுமையாக ஆதி தன் இடத்தில் அமர்ந்து கொண்டு அவளை பார்க்க
நான் சொன்னா நீ என்கிட்ட பேச மாட்டேன் அப்டின்னு சொல்ல கூடாது
அது நீ சொல்றது பொறுத்து இருக்கு என்று ஆதி கூற
இல்ல அப்டின்னா நான் சொல்ல மாட்டேன்
ஆதி அவளை பார்த்து,
பின்னாடி நீ பண்ணது எனக்கு தெரிஞ்சா அவளோ தான் பரவாயில்லையா
என்று முகத்தை தீவிரமாக வைத்து கொண்டு கேட்க,
நான்…., நானு….,
நீ அதுக்கு அப்புறம் என்ன சொல்லு
நான் அருண் கூட என்று விவேகா திக்கி திணறி
நீ அருண் கூட என்ன என்று கோபமாக கேட்க ,
நானும் அருணும் SPR காலேஜ் போனோம் அவரோட ப்ரொஜெக்ட் விஷயமா அதில் கலந்து கொண்டோம்.
என்று விவேகா கண்களை மூடி கொண்டு விவேகா வேகமாக கூற
ஆதிக்கு அதை கேட்டு மிகவும் கோபம் வந்தது ஆனால் ஆதி அவளை திட்ட வில்லை.
விவேகா கண்களை திறந்து அவனை பார்க்க அவன் அவளை எதுவும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்து இருந்தான்.
எதுவும் நடக்காதது போல
“நீ மதியம் சாப்பிட்டியா? என்று இயல்பாக கேட்க
விவேகா அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.
கண்களில் கண்ணீர் கரைகளுடன் அவனை பார்த்து
என்ன ஆதி எதுவும் சொல்ல மாட்டிங்குர என அவனை பார்த்து கேட்க
என்ன விவேகா நான் சொல்லட்டும்,
இதில் சொல்ல என்ன இருக்கு, என்று கொஞ்சம் விலகி செல்லும் விதமாக பேச
விவேகா அவன் அருகில் வந்து மண்டியிட்டு ஆதி கைகளை பிடித்து கொண்டு
பிலீஸ் ஆதி எதுவும் சொல்லு
இல்லனா திட்டு
இல்ல என்ன அடி
தயவு செய்து இப்படி எதுவும் நடக்காதது போல என்கிட்ட இயல்பா பேசுற மாறி என்ன கொல்லாத
அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல விவேகா பிலீஸ் எழு என்று அவன் கூற
ஆதி பிலீஸ் என்கிட்ட எப்போதும் போல உரிமையா பேசு டா பிலீஸ்
நான் எப்போதும் போல தான் பேசறேன் விவேகா
“நீ என்னை பேசி கொல்லுற “ஆனால் “அவரு என்கிட்ட பேசாமல் கொல்லுகிறார் “என்று அழுது கரைந்தாள்.
ஆதி விவேகாவை பார்த்து யாரு என்று கேட்க
அது தான் அவர் தான்
இன்பா சாரா என்று ஆதி கேட்க
ம்ம்ம் ஆமா என்று இன்னும் விசும்ப
என்ன பண்ணுன சொல்லு கேட்ப்போம் என்று ஆதி சொல்ல
இன்பா கூறிய அனைத்தும் கூறினாள். அருணை பற்றியும் கூறினாள்.
ஆதி அவளை பார்த்து ஒரு வெற்று புன்னகை சிந்தியவன்.
இப்போ என்ன பண்ண போற விவேகா என்று கேட்க
அவள் மீண்டும் அழுது கொண்டே அவனை பார்த்து இட வலமாக தலை அசைத்தாள்.
உனக்கு நல்லா வேனும் இவ்ளோ தூரம் அவரு சொல்லியும் ஆடிக்கிட்டு போன தானே இப்போ நல்லா அனுபவி அப்டின்னு நான் சொல்ல மாட்டேன் .
நீயே உன்னோட பிரச்சனையை சரி செய் என்று அவன் கூறி விட்டு ஆதி எழுந்து சென்று விட்டான்.
விவேகா அழுதாள்
அழுதாள்
அழுது கொண்டே இருந்தாள்.
ஆதி விவேகாவை கண்டு கொள்ளவே இல்லை ஆனால் அவள் அழுவது அவன் மனதுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது ஆனால் இப்போது சமாதானம் செய்தால் மீண்டும் அந்த தவறினை செய்வாள் என்று விவேகாவின் போக்கில் விட்டு விட்டான்.
தவறு செய்தால் நிச்சயம் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
விவேகாவின் அழுது கரைந்த முகத்தை பார்த்த யாளினிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
ஆதி அவளை சமாதானம் செய்ய வில்லை என்பது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
அவள் இப்போ தான் டார்லிங் நீ என்னோட ஆதி எப்படியும் உன்னை நான் சொந்தமாக்கிடுவேன் i love you ஆதி டார்லிங் என யாழினி மனதில் சந்தோஷமாக இருந்தாள்.
இப்படியே இரண்டு நாள் கடந்தது விவேகா இப்படியே அழுது சரியான சாப்பிடாமல் அவளுக்கு காய்ச்சல் வந்து விட்டது.
இன்பா இதை எல்லாம் அவன் போனில் அவள் காலேஜ் ல் என்ன செய்து கொண்டு இருக்கிறாள் என தன் போனில் பார்த்து கொண்டு இருந்தான்.
இது தாண்டி உனக்கு தண்டனை நான் உன்னை கொஞ்சினால் தானே நீ மிஞ்சுகிறாய்.
இப்படியே ஒரு ஆறு மாதம் என்னை நினைத்து நீ சுத்து டி என்று நினைத்தவன்
இப்போது இன்பாவின் கோபம் அருண் மேல் திரும்பியது.
உன்னை முதலில் ஏதாவது செய்யனும் டா என்னோட விவி பேபி க்கும் எனக்கும் இப்போ சண்டை வர நீ தாண்டா காரணம் என்று நினைத்தவன்
இன்பா அதற்க்கான வேலையில் இறங்கினான்.
இங்கு சுபா சரவணனை நினைத்து கொண்டே அவர்களின் அழகான பள்ளி பருவ நினைவுகளில் சரவணனையும் அவளையும் தேடினாள்.
சரவணன் அப்பாவும் , வசுமதியும் ஒரே போலீஸ் ஸ்டேஷன் ஒன்றாக பணி புரிபவர்கள்.
போலீஸ் என்பதால் காவலர் குடிஇருப்பில் தான் வசுமதி குடி பெயர்ந்தாள். என்ன தான் சொத்து பணம் அனைத்தும் இருந்தாலும் தன் உயிர் போல அவளுக்கு போலீஸ் வேலை
இதனால் வசுக்கும் இன்பாவின் அப்பா கிருஷ்ணாவுக்கும் சின்ன சின்ன பிரச்சினை சிறு வயதில் இருந்தே வரும் இதனால் தான் இன்பா தான் திருமணம் செய்யும் பெண் போலீஸ் அதிகாரியாக இன்பாவுக்கு நிகராக இருக்க வேண்டும் என்று அப்போதே முடிவு எடுத்தான்.
சரவணன், இன்பா, மித்ரன், சுபா என இவர்கள் நால்வரும் ஒரே பள்ளி கூடம் தான் கான்வென்ட் பள்ளி
எப்போதும் இன்பா, மித்ரன் தான் உயிர் நண்பர்கள், சரவணன் இவர்கள் மூவரை விட பெரியவன் ஆனால் மூவருடனும் நல்ல ஒற்றுமை
சுபா 10 த் படிக்கும் போது அங்கு உள்ள மாணவிகள் அனைவரும் சரவணனை விரும்பி காதல் கடிதம் எழுதி சுபாவிடம் கொடுத்து சரவணன் கிட்ட கொடுக்க சொல்லுவார்கள்.
அப்பொழுது தான் முதல் முறையாக சரவணன் மீது அவளுக்கு ஒரு இனம் புரியாத உணர்வு தோன்றியது.
வேறு பெண்ணை சரவணன் விரும்பினால் தன்னோடு பேச மாட்டான் தான் ஒரு மூன்றாவது நபர் ஆகி விடுவோம் என்று அவள் சரவணனுக்கு கொடுக்கும் அனைத்து கடிதங்களையும் படித்து கிழித்து விடுவாள்.
ஒரு நாள் சரவணனை எப்போதும் அண்ணா என்று அழைக்கும் அவள் சரவணன் என்று அழைக்க ஆரம்பிக்க
அவன் என்ன சுபா என்னை அண்ணா ன்னு தானே கூப்பிடுவ இப்போ பேரு சொல்லி கூப்பிடற
ஏன் நான் கூப்பிட கூடாதா இன்பா உங்களை சரவணன் என்று தானே கூப்பிடுகிறான் நான் கூப்பிட கூடாதா என்று அவள் கூற
சரி சுபா நீ எப்படி வேண்டுமானாலும் என்னை கூப்பிடு என்று சிரித்து கொண்டு கூறி விட்டே கடந்து சென்று விட்டான்.
சுபா யாரை நினைத்து கொண்டு இருக்கிறாளோ அதே போல் தான் சரவணனும் தன்னுடைய முதல் காதல் சுபாவின் நினைவுகளை மனதில் இருந்து எடுத்து திருப்ப ஆரம்பித்தான்.
அருண் ஆல் வர போகும் பிரச்சனை என்ன?
சரவணனனும் சுபாவுகும் நடுவில் என்ன நடந்தது?
இன்பாவை எவ்வாறு விவேகா சமாதானம் செய்வாள்?
இதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிங்க dears by குழலி
Episode 38,
சரவணனனுக்கு நன்றாகவே தெரியும் சுபா அவனை விரும்புகிறாள் என்று அவனுக்கு வரும் அனைத்து கடிதங்கள் அனைத்தும் படித்து பார்த்து கோபம் கொண்டு அதனை கிழித்து எரிவதை சில முறை அவன் பார்த்து இருக்கிறான்.
அவள் பள்ளிக்கு வரும் தோரணையில் தன்னையும் மீறி வைத்த கண் வாங்காமல் சுபாவை எப்போதும் ரசித்து கொள்வான் ஆனால் இது யாருக்கும் தெரியாது.
சுபா குட்டி பூனை போல அவள் சரவணனை சுற்றி சுற்றி வந்து கொண்டே இருப்பாள்.
எல்லாம் நன்றாக தான் போய் கொண்டு இருந்தது . அப்போது வெண்பா சிறு பெண் சரவணன், மித்ரன், வெண்பா , அவளது அம்மா தேவகி மூவரையும் தவிக்க விட்டு அவளது கணவன் இறந்து விட்டார்.
அப்போது சரவணன் 12 ம் வகுப்பு முடித்து மதிப்பெண் வெளியீடுகாக காத்து கொண்டு இருந்தான்.
அப்போது திடீர் என அவனது அப்பா தவறி விட்டார் என கூறவும் சரவணனுக்கு உதவி என்று யாரும் அருகில் இல்லை.
இன்பாவின் அம்மா வசு ஒரு முக்கிய கேஸ் விஷயமாக செல்ல, இன்பாவையும், சுபாவையும் அவளது தந்தை வீட்டில் விட்டு சென்று விட்டார்.
இப்போது போலீஸ் குடியிருப்பில் இன்னும் ஒரு மாதத்தில் காலி செய்ய சொல்ல இப்போது மொத்த குடும்ப பொறுப்பும் சரவணன் மேல் விழுந்தது.
சரவணன் இப்போது நொந்து போனான் வீட்டை காலி செய்ய வேண்டும் தன் தங்கையை படிக்க வைக்க வேண்டும் என்று அனைத்து பொறுப்பும் அவன் மேல் விழுந்தது.
தன் அப்பா இருக்கும்போது அவர்களை சுற்றி உள்ள பார்வை ஒரு நல்ல நிலையில் இருந்தது . தன் அப்பா இறந்த உடன் அருகில் இருப்பவர்கள் பார்வை, ஒதுக்கம், தகுதி என அனைத்தும் பங்கு போட்டு கொண்டது.
இன்பாவின் அத்தை மித்ரன் மிகவும் நெருக்கமாக இன்பாவோடு இருப்பது பார்த்து முதன் முறையாக அவர்களின் எள்ளல் பேச்சுகளை கேட்டவன்.
சரவணன் தன்னை தானே ஒரு முறை மதிப்பீடு செய்து கொண்டான். அன்றில் இருந்து இன்று வரை அனைத்து இடங்களிலும் தகுதிக்கு தான் முதல் இடம் தகுதி இல்லாத மனிதன் எதன் மீதும் ஆசை பட கூடாது என்று சரவணன் வலுக்கட்டாயமாக தன்னை மாற்றி கொண்டான்.
படித்து கொண்டே பகுதி நேர வேலை செய்து மித்ரனை எப்படியோ போலீஸ் ஆக்கி விட்டான். இப்போது எந்த இடத்தில் இருந்து துரத்த பட்டார்களோ அதே இடத்தில் அந்த காவலர் குடியிருப்பு பகுதியில் தன் தம்பியின் மூலம் நுழைந்தான்.
சரவணன் குறிக்கோள் தன் தங்கை, தாய், தம்பி மூவரையும் நன்றாக பார்த்து கொள்ள வேண்டும்.
சரவணன் மனதில் ,” நீ எனக்கு வேணாம் சுபா “நீ என்கூட இருந்தால் கஷ்ட படுவ “
ஆனால் உன்னோட வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கனும் அந்த வினய் உனக்கு வேணாம் வேறு நல்ல பயனை நீ கல்யாணம் செய்து கொள்.
என்று சுபாவின் நினைவில் உளன்றான்.
இங்கு விவேகவோ நீ எனக்கு வேனும் ராகவ் நான் செஞ்சது தப்பு தான் உன் பேச்சை கேட்டு இருக்க வேண்டும் என்று அந்த காய்ச்சலிலும் நினைத்து கொண்டு இருந்தாள்.
ஆதி நேராக விவேகாவின் வீட்டுக்கு வந்து விட்டான்.
இதற்கும் மேல் விட்டால் இன்னும் அவள் உடைந்து விடுவாள் என்று நினைத்தவன் மனம் கேட்காமல் வந்து விட்டான்.
விவேகா படுக்கையில் கண்களை மூடி கொண்டு அழுது கொண்டு இருக்க
ஆதி அவன் அத்தையிடம் கொஞ்சம் சுடு கஞ்சி, தண்ணீர் வாங்கி கொண்டு அவளை பார்க்க சென்றான்.
அருகில் சத்தம் வரும் அரவம் கேட்டு கண்களை திறக்க விவேகாவின் முன் ஆதி நின்று கொண்டு இருந்தான்.
விவேகா அவனை பார்த்து முகத்தை திருப்பி கொள்ள
இப்போது ஆதி பேசினான்
ஏய் தேன் மிட்டாய் நீ செஞ்ச வேலைக்கு நான் தான் உன் மேல செம்ம கோபத்தில் இருக்கேன்
அப்புறம் நான் தான் கோவித்து கொள்ள வேனும் நீ இல்ல
என்று விவேகாவின் படுக்கைக்கு அருகில் உள்ள chair ல அமர்ந்தான்.
அப்போதும் விவேகா திரும்பவே இல்லை
இப்போ நீ ரெஸ்பான்ஸ் பண்ணல அப்புறம் இனி நான் பேசவே மாட்டேன். என்று ஆதி பொய் கோபம் கொண்டு நகர
அவள் அப்பொழுதும் திரும்ப வில்லை.
சரி நான் கிளம்புறேன் என்று அவன் எழ போக
விவேகா இப்போது அவனை பார்த்து
கிளம்பு போ என்று அழ
ஆதி அவள் அருகில் வந்து அமர்ந்து கண்களை துடைத்து விட்டு
லூசு இந்தா தண்ணி குடி என் கூற
விவேகா விசும்பி கொண்டே தண்ணீர் வாங்கி குடித்தாள்.
ஆதி ஒரு ஸ்பூன் கொடுத்து அந்த கஞ்சியை குடிக்க சொல்ல
அவள் வேண்டாம் என தலை அசைக்க
இப்போ என்னாச்சு டி
நீ எனக்கு ஊட்டு என்று விவேகா கூற ஆதி மனதில்
இவளை ஒன்னும் சொல்ல முடியாது எல்லாம் சேட்டை என்று நினைத்து கொண்டு ஊட்டி விட்டான்.
இங்கு இன்பாவுக்கு மனம் கொஞ்சம் சரி இல்லை ஏன் என்றால் அவனுடைய டார்ஜிலிங் இரண்டு நாள் காலேஜ் வர வில்லை
இன்பா கிளம்பிய பின் இரண்டு நாள் சோக ரேகையுடன் வந்த விவேகா இப்போது அடுத்த இரண்டு நாள் காலேஜ் வர வில்லை.
இப்போது அவளிடம் பேசினால் எல்லாம் வீண் என்று நினைத்தவன் வெண்பா வீட்டின் எண்ணுக்கு அழைத்தான்.
ஹலோ என வெண்பா சொல்ல
வெண்பா மா நான் தான் இன்பா பேசறேன்
ம்ம்ம் சொல்லுங்க, அண்ணா என்ன காத்து இந்த பக்கம் வீசுது
இன்பா , என்னாச்சு அவளுக்கு என்று கேட்க
யாரு அண்ணா என வெண்பா வேண்டும் என்றே கேட்க
அது தான் உன்னோட IT friend க்கு
தெரியலையே அண்ணா ஏதாவது பிரச்னையா
அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அவ ரெண்டு நாள் காலேஜ் வரல என்னாச்சு அவளுக்கு நீ தானே அவளோட ரொம்ப நெருக்கம் அது தான்
எனக்கு தெரியல அண்ணா நான் வேணா conference போடட்டுமா நீங்களே அவ கிட்ட பேசுங்க
வேணாம், வேணாம்
நீ conference போடு ஆனால் நான் line ல இருக்கேன்னு அவளுக்கு தெரிய கூடாது.
ஓ சண்டையா உங்களுக்கு அவளுக்கும்
ம்ம்ம் அப்படி கூட வச்சுக்கலாம்
சரி இப்போ கால் பண்ணு தப்பி தவறி நான் இருக்கேன்னு மட்டும் சொல்லிடாத பிலீஸ் மா
நீயே கால் பண்ணி பேசற மாறி பேசு
ம்ம்ம் ok அண்ணா
வெண்பா விவேகாவின் அம்மா போன் க்கு கால் செய்து இன்பா லைனை இணைத்தாள்.
ஹலோ அம்மா நான் வெண்பா பேசறேன்.
ம்ம்ம் சொல்லு மா இரு நான் விவேகா கிட்ட கொடுக்கிறேன் என்று கங்கை கூறியவள்.
ஆதி …ஆதி இந்தா விவேகா friend பேசறா போய் அவ கிட்ட கொடு பா
ம்ம்ம் கொடுங்க அத்தை என்று ஆதி வாங்கி கொண்டு அதில் உள்ள பெயரை பார்த்து கடுப்பானான்.
டீச்சர் என்று பதிவு செய்து இருந்தாள் விவேகா.
காதில் வைத்தவன்
ஏய் பேய் நீ எதுக்கு என்னோட விவி க்கு கால் பண்ற
டேய் பிசாசு அவ என்னோட friend இப்போ நீ எதுக்கு அவ வீட்டில் இருக்க வாய மூடிட்டு ஒழுங்கா விவேகா கிட்ட போன் கொடு டா
அவ கிட்ட கொடுக்க முடியாது
ஏய் நான் அவ கிட்ட பேசனும் என்று வெண்பா கூற
அவளுக்கு உடம்பு சரி இல்லை அதுக்கு காரணமே நீ தான்
நான் என்ன காரணம் நான் என்ன பண்ணேன் என்று வெண்பா கேட்க
நீங்கள் எல்லாம் விவி கிட்ட பேசரதால் தான் விவிக்கு இப்போ இந்த நிலை
யாருன்னு கொஞ்சம் தெளிவா சொல்லு என வெண்பா கேட்க
ஆமா நீ , அந்த அருண் அப்புறம் உன்னோட அண்ணா என்று ஆதி கூற
அந்த நேரம் அவன் பேசிய மொத்தமும் கேட்ட இன்பா தன் தொண்டையை சிறும்ப
ஆதி அப்படியே உறைந்தான் அவன் மனதில் அய்யோ இன்பா சாரும் line ல இருகாரா
ஆதி அமைதியாக இருக்க
ம்ம்ம்ம் பேசுங்கள் மிஸ்டர் ஆதி என வெண்பா சிரித்து கொண்டே கூற அவன் அமைதியாக இருந்தான்.
இப்போது இன்பா பேசினான் ஆதித்யா என்று அழைக்க
ஒரு நிமிடம் அதிர்ந்த ஆதி தயங்கி கொண்டே
சொ
சொல்லுங்க
என்று கூற வெண்பா விழுந்து விழுந்து சிரித்தாள்.
நான் இப்போ line ல இருக்கேன்னு அவளுக்கு தெரிய கூடாது
You got it my words
ம்ம்ம் ok சார்
நீ எப்போதும் போல இயல்பாக பேசற அப்புறம் speaker ல போடு என்று இன்பா கூற
ஆதி அவன் சொன்னதை அப்படியே செய்தவன் விவேகா இருக்கும் அறைக்கு வந்து
விவேகா உன்கிட்ட பேய் பேசறாங்க என்று கூற விவேகா தன் தலையை பிடித்து கொண்டே
யாரு ஆதி அது என்று போன் வாங்கி பார்த்தவள் அதில் டீச்சர் என இருக்க
“ம்ம்ம் சொல்லுங்க டீச்சர், என்ன விஷயம்” என்று மிகவும் சோர்ந்த குரலில் அவள் பேச
இன்பாவுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
“என்னோட டார்ஜிலிங் வாடின பூ மாறி ஆகி விட்டாளே”.
என்று நினைத்தவன் அவள் பேசுவதை கேட்க தொடங்கினான்.
விவி நீ ரெண்டு நாளா காலேஜ் வரல அது தான் என்னாச்சு அப்டின்னு கேட்கலாம் னு தான் போன் பண்ணேன்.
இல்ல கொஞ்சம் உடம்பு சரி இல்ல வேற ஒன்னும் இல்ல டி
இப்போ எப்டி இருக்க
ம்ம்ம் ok
சரி உடம்ப பார்த்துக்கோ
ம்ம்ம்
எப்போ காலேஜ் வருவ
எனக்கு காலேஜ் வர புடிக்கல நான் discontinoued பண்ணலாம் ன்னு இருக்கேன் என்று அவள் கூற
என்ன டி சொல்ற என்று ஆதி, வெண்பா என இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இன்பாவுக்கு பெரிய அதிர்ச்சி தான்???
Episode 39,
எனக்கு காலேஜ் வர புடிக்கல நான் discontinoued பண்ணலாம் ன்னு இருக்கேன் என்று அவள் கூற
என்ன டி சொல்ற என்று ஆதி, வெண்பா என இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இன்பாவுக்கு இப்போ என்ன சொல்வது என்று ஒரு நிமிடம் எதுவும் தோன்றவில்லை.
ஏன் என்றால் அவன் அதிர்ச்சியில் இருந்தான்.
விவேகாவை பார்த்து ஆதி என்ன சொன்ன இப்போ காலேஜ் விட்டு நிக்கிறியா.
ம்ம்ம் ஆமா ஆதி எனக்கு காலேஜ் வர பிடிக்கல
ஆதி அவளை பார்த்து உன்னோட விருப்பத்தை யாரும் இங்கே கேட்கல புரியுதா ஓவர்ஆ ஸீன் போடாத டி
நான் எதுக்கு ஸீன் போடணும் நான் நிஜமாவே தான் டா சொல்றேன் அங்கே வந்தால் எனக்கு தேவையில்லாத விஷயம் எல்லாம் நியாபகம் வரும்.
அதுக்கு நான் என்ன பண்ண முடியும் இப்போ வந்து சொல்ற
எனக்கு எப்போ தோணுதோ அப்போ தான் சொல்ல முடியும்.
ஓ இந்த அளவுக்கு பேசறீங்க மேடெம் ம்ம்ம் இருக்கட்டும்
எனக்கு உன்கிட்ட கேட்க ஒரு கேள்வி இருக்கு
ம்ம்ம் என்ன ஆதி என இரும்பிக்கொண்டே விவேகா கேட்க
அது ஒன்னும் இல்ல என்கிட்ட இந்த காலேஜ் தான் நீ சேரனும் ஆதி இல்ல நான் உன்கூட எப்போதும் பேச மாட்டேன் அப்டின்னு யாரோ சொன்னாங்க
இப்போ சொன்னவங்களுக்கு நியாபகம் இருக்குமா அப்டின்னு எனக்கு தெரியல ஆனா எனக்கு நியாபகம் இருக்கு என்று ஆதி அவள பார்த்து கொண்டே கூற
விவேகா இப்போது நீ சொல்றது சரி தான் ஆதி எப்படியும் எனக்கு அம்மா கல்யாணம் தானே செய்ய போறாங்க அதுக்கு எதுக்கு நான் படிச்சுட்டு என்று அவள் சொல்ல
இவ்ளோ நேரம் அமைதியாக இருந்த வெண்பா
விவேகா கிட்ட அப்போ நீ full feesவும் pay பண்ணிடுவியா
நானா நான் எதுக்கு full fees கட்டணும் டீச்சர் என்று வெண்பாவிடம் கேட்க
ம்ம்ம் ஆமா காலேஜ் ஆ பாதியில் discontinoue பண்ண full fees pay பண்ணனும் உனக்கு தெரியாதா விவேகா
அவள் கொஞ்சம் யோசித்தவள் இதெல்லாம் ஒரு காலேஜ் ஆ இவ்ளோ fees வாங்குகிறார்கள்
எல்லாம் கொள்ளைகாரர்கள் என்று விவேகா சொல்ல
சரி நீ அப்புறம் திட்டிக்கோ மா இப்போ என்ன பண்ண போற ஏன் இந்த திடீர் முடிவு என்று விவேகா கூற
அது அது ஒன்னும் இல்ல விடு என்று ஆதியை பார்க்க அவன் முறைத்து கொண்டே இவளை பார்த்து கொண்டு நின்று இருந்தான்.
சரி எப்டி pay பண்ண போற உன்னை இங்கே ரொம்ப பேரு ரொம்ப ரொம்ப மிஸ் பண்ண போறாங்க என்று வெண்பா இன்பனை நினைத்து கொண்டு கூற
என்னை யாரும் மிஸ் பண்ண மாட்டாங்க எனக்கு தெரிஞ்சு ஒரே ஒருத்தர் தான் என்னை ரொம்ப மிஸ் பண்ணுவாங்க என்று விவேகா கூற
யார் அது என்று வெண்பா ஆவலாக கேட்க இன்பாவுக்கும் இப்போது அவள் என்ன சொல்ல போகிறாள் என்று மனதுள் தோன்றியது
இன்பா அவன் மனதில் டேய் அவ உன்னை பத்தி தான் சொல்ல போறா என்று brainy சொல்ல
இல்ல இன்பா கண்டிப்பா அவ உன்னை பத்தி சொல்ல மாட்டா
ஏன் என்றால் அவள் காலேஜ் ல இருந்து நின்று கொள்கிறேன் என்று கூறுவது அதற்கு முழு காரணமே நீ தான் என இன்பாவின் மனம் கூற
அவன் மனம் கூறியது போலவே விவேகா ஆதியை பார்த்து கொண்டே
நீ தானே ஆதி என்னை மிஸ் பண்ணுவ என்று கூற
இப்போது வெண்பாவுக்கு , இன்பாவுக்கும் மிகவும் கோபம் வந்தது.
வெண்பா வேகமாக அவன் அவன் தான் உன்னை மிஸ் பண்ணுவானா நான் எல்லாம் இல்லயா என்று அவளோ ஆதங்கம் கொண்டு கூற
இல்ல டீச்சர் அப்படி இல்ல
ஆதி விவேகாவை பார்த்து உனக்கே தெரியும் தானே டி அதனால் இப்படி உளறி கிட்டு இருக்காத
நான் இருக்கேன் உனக்கு
நம்ப ரெண்டு பேரும் ஜாலியாக காலேஜ் போகலாம் .
இல்ல ஆதி நான் வசு மேடம் கிட்ட ஹெல்ப் கேட்டு காலேஜ் விட்டு நின்றுவேன் என்று அவள் விடாமல் பேச
இந்த உரையாடல் கேட்டு இன்பா தன் போன் கட் செய்தான், வெண்பாவும் வைத்து விட்டாள்
ஆதி விவேகாவை பார்த்து ஏய் விவேகா நான் இப்போ உடனே வருண் மாமாவுக்கு போன் செஞ்சு உன்னை பத்தி சொல்றேன் இரு என்று அவன் கூற
விவேகாவோ அவனை பார்த்து மிகவும் இயல்பாக அட போ ஆதி நான் எதுக்கு காலேஜ் ல இருந்து நிற்க போறேன். 100% வருகை பதிவோட காலேஜ் ல இருந்து வெளிய வர தான் எனக்கு ஆசை என்று அவள் கூற
ஆதி அவளிடம் அப்புறம் எதுக்கு டி இப்போ இப்படி பேசின நான் உண்மை ன்னு ஒரு நிமிடம் நினைத்தேன் தெரியுமா என்று அவன் சொல்ல
விவேகா அவனை பார்த்து சிரித்து கொண்டே இல்ல ஆதி அந்த இடியட் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ஊருக்கு போய்ட்டான்
இப்போ நான் பேசின விஷயம் கண்டிப்பாக இந்த வெண்பா போய் அவன் கிட்ட சொல்லுவா அதுக்கு தான் என்று அவள் ஜாலியாக ஆதி யை பார்க்க
அவனுக்கு தான் இப்போ என்ன சொல்வது என்று தெரிய வில்லை ஆதி மனதில்
விவேகா இதை போய் அந்த பேய்(வெண்பா) சொல்ல தேவையில்லை டி அவரே நீ பேசின அத்தனையும் கேட்டு இருப்பார்.
எனக்கு இப்படி ஒரு நிலையா உன் கிட்ட இப்போ எதுவும் சொல்ல முடியாது
இப்போ நீ நல்லா மாட்டின இனி நீ அவரை சமாதானம் செய்ய ரொம்ப கஷ்ட பட போற என்று சிரித்தவாறே ஆதி கிளம்பினான்.
இங்கு இன்பாவோ எவ்ளோ தைரியம் இவளுக்கு என்னை விட்டு போகனும் னு நெனைக்கிறாளா
நீ எப்டி discontinoue ஆகற அப்டின்னு நானும் பார்க்கிறேன் டி உன்னை என்ன செய்யறது நானு
இனி உன்னை பார்க்க நான் ஆறு மாதம் வெய்ட் பண்ணனுமா என்று நினைத்தவன் எங்கே போவ டி எங்க அம்மா கிட்டபோய் ஹெல்ப் கேட்பியா இரு இதுக்கு எல்லாம் சேர்த்து மொத்தமா உனக்கு இருக்கு என்று நினைத்தவன்.
விவேகா ஆதியை தான் மிஸ் பண்ணுவேன் எ ன்று கூறியது அவன் மனதை மிகவும் வருத்தமடைய செய்தது.
இன்பா அவன் தலையை வேகமாக கோதி கொண்டவன் அவனது உதடுகளை கடித்து கொண்டான்.
விவேகா இன்பாவ ஒரு வழி செய்கிறேன் என்று நினைத்தாளே தவிர அவள் தான் அவனை நினைத்து ஏங்கி போனாள்.
விவேகாவுக்கு இன்பனை எப்படியாவது சமாதானம் செய்ய வேண்டும் என்று தோன்றியது.
உடனே அடுத்த நாள் காலேஜ் சென்றவள் நேராக வெண்பாவை பார்க்க சென்றாள்.
வெம்பா இவளை கண்டு கொள்லாமல் செல்ல விவேகா அவள் பின்னால் சென்று
Sorry செல்லம்
பிலீஸ் செல்லம்
என்னோட பட்டு குட்டி என்று அவள் பின்னால் கொஞ்சி கொண்டே செல்ல
நீ யாரு மா நான் உனக்கு யாரோ தானே போ அந்த பிசாசு தானே உனக்கு முக்கியம்
போ மா பிலீஸ் என்று வெண்பா கூற
இல்ல வெண்பா நான் சொன்னதை நீ அவன் கிட்ட சொன்னியா
யாரு
அவன் தான்
அது தான் யாரு
நீ என்ன சொல்ற எனக்கு புரியவில்லை
ஏய் நடிக்காத டி அது தான் இன்பராகவன் கிட்ட சொன்னியா னு கேட்டேன்
எங்க அண்ணா பேர முழுசா சொல்ற அளவுக்கு தைரியமா உனக்கு
ம்ம்ம் ஆமா என்று விவேகா கூறியவள் டீச்சர் பிலீஸ் டி சொன்னியா
ம்ம்ம் ஆமா சொன்னேன் இப்போ அதுக்கு என்ன
என்ன சொன்னாரு என்று ஆவலாக விவேகா கேட்க
அவரு உன் மேல செம்ம கோபத்தில் இருக்காரு என்றாள் வெண்பா
கோபத்தில் இருக்கானா அப்போ என் கிட்ட பேச மாட்டானா
எனக்கு தெரிஞ்சு வாய்ப்பே இல்ல விவி என்று வெண்பா கூறினாள்
இப்போ என்ன டி பண்றது என்று முகம் வாட விவேகா கேட்க
வெண்பா அவளை பார்த்து மனதில் சிரித்து கொண்டே ம்ம்ம் ஒரு யோசனை இருக்கு டி
விவேகா என்ன என்பது போல் கண்கள் மின்ன கேட்க
நீ surrender ஆகிடு டி என்று விவேகா சொல்ல புரியாமல் முழித்தாள்.
வெண்பா அவளை பார்த்து நீ அவரை convince பண்ண ஏதாவது செய் டி
என்ன செய்யறது என்று விவேகா கேட்க
அது எப்டி எனக்கு தெரியும் நீ தான் ஏதாவது யோசிக்கணும் எப்படி convince பண்றது அப்படின்னு யோசி
நீ காலேஜ் விட்டு வெளியே போற ஐடியா ஏதாவது வைத்து இருக்கிறாயா
விவேகா அவளை பார்த்து நான் சும்மா சொன்னேன் டி அப்போதாவது மனது மாறி என்னிடம் பேசி விடுவார் என்று தான் நான் அப்டி சொன்னேன்.
ஆமா நீ என்னை பத்தி அவன் கிட்ட என்ன சொன்ன என்று விவேகா கேட்க
நான் உன்னை பத்தி என்று கொஞ்சம் எட்ட நின்றவள் நீ பேசிய எல்லாம் பதிவு செய்து அனுப்பி வைத்தேன் என்று சொல்லி கொண்டே வெண்பா ஓட
விவேகாவுக்கு அவ்ளோ தாண்டா இனி இன்பா நம்ப கிட்ட பேசவே மாட்டானே என்று அவள் அந்த இடத்தில் சிலை போல் நிற்க
வெண்பா சிரிது தூரம் சென்றவள் விவேகா பின்னால் வர வில்லை என்று தெரிந்து கொண்டு மீண்டும் அவள் அருகில் சென்று அவள் தோள்களின் மேல் கைகளை போட்டு கொண்டாள்.
விவேகா முதலில் உனக்கும் அவருக்கும் என்ன தான் பிரச்சனை என்று வெண்பா கேட்க
அவள் எல்லாம் கூறினாள்.
ஏன் டி இப்படி செஞ்ச என்று வெண்பா கேட்க சீனியர் தான் கூப்பிட்டாரு அதனால் தான் நான் போனேன் என்று மிகவும் சோகமாக விவேகா கூற
வெண்பா அவளை பார்த்து ரொம்ப கஷ்டம் டி உனக்கு அவரை பத்தி தெரியாது அவரு சொன்னத follow பண்ணலனா அவருக்கு சுத்தமாக பிடிக்காது.
ஒரு friend ship ஆ இருந்தால் கூட கட் பண்ணிட்டு போய்ட்டே இருப்பாரு அவரை சமாதானம் செய்வது உன்னோட சாமர்த்தியம் தான் என்று வெண்பா கூற
அதையும் பார்க்கலாம் வெண்பா என்று கூறி அவளிடம் பேசி விட்டு நேராக அவள் வகுப்புக்கு வந்தவள்.
முதல் முறையாக மைதிலி கிட்ட இருந்து போன் வாங்கி இன்பாவின் எண்களை போட்டு காதில் வைத்தாள்.
மறுமுனையில் போன் எடுக்க பட்டது உடனே விவேகா
இன்பா ஹலோ whose this
ஹலோ நான் விவேகா பேசறேன்
Episode 40,
இன்பாவுக்கு போன் வர அதனை பார்த்தவன் சற்று யோசித்தான். ஏன் என்றால் இது அவனுடைய personal எண்
அதனால் இந்த எண்ணை யாருக்கும் தர மாட்டான் மிகவும் நெருங்கிய நண்பர்கள் அவனுடைய குடும்பம் அம்மா, அப்பா, சுபா அவ்வளவே
இன்பா அதனை எடுத்து காதில் வைத்து
ஹலோ whose this என்று கேட்க மறுமுனையில்
ஹலோ நான் விவேகா பேசறேன். என்று அவள் சொல்ல
இன்பாவுக்கு ஒரு பக்கம் கோபமாகவும் ஒரு புறம் சந்தோச மன நிலையில் இருந்தான்.
ஆனால் எதுவும் பேசவில்லை.
விவேகா மனதில் இன்னும் நம் மேல் கோபத்தில் தான் இருக்கிறான் எதுவும் பேச மாட்டிங்குறான்.
பிலீஸ் எதுவும் பேசுங்க இல்ல என்னை திட்டுங்க என்று அவள் சொல்ல அப்போதும் அமைதியாக அவள் பேசுவதை மட்டுமே இன்பா கேட்டானே தவிர பதில் பேச வில்லை
விவேகா உங்களோட இந்த அமைதி என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது நான் தெரிஞ்சு தான் தப்பு பண்ணேன் அதுக்கு தண்டனை கொடுங்க
அதை விட்டு இப்படி பேசாமல் என்னை கொல்றீங்க
அவள் நேற்று வெண்பாவிடம் கூறிய அனைத்து விஷயமும் நியாபகம் வர
ஹலோ யாரு நீங்கள்
எனக்கு விவேகா அப்படின்னு யாரையும் என்று அவன் கூற
ஓ உங்களுக்கு தெரியாது அப்படி தானே ஆனால் எனக்கு தெரியுமே நீங்கள் IPS ஆஃபீஸர் தானே
ம்ம்ம் ஆமா அதான் உங்களை தெரியாது அப்டின்னு சொல்லிடனே பிலீஸ் போன் வைங்க.
பிலீஸ் என்னால் வைக்க முடியாது
இப்போ நீ வைக்கல உன்னை சைபர் crime ல ஏதாவது ஒரு கேஸ் ல தூக்கிட்டு வந்திடுவேன்.
போதும் பிலீஸ் sorry
என்னை மன்னித்து விடுங்கள் நான் கெஞ்சி கேட்கிறேன் தெரியாமல் செய்து விட்டேன்.
தெரியாமல் செய்த தவறுக்கு தான் மன்னிப்பு தெரிந்தே செய்வது மன்னிக்க முடியாத குற்றம்
இப்போ என்ன சொல்ல வரீங்க மன்னிக்க முடியுமா இல்ல முடியாதா என்று விவேகா கேட்க
மன்னிக்க முடியாது டி என்று இன்பா கூற
விவேகா மனதில் என்னை டி போட்டு சொல்ல மட்டும் உனக்கு உரிமை இருக்கா டா என்று நினைத்தவள்
நீங்கள் என்னை மன்னிக்கும் வரை நானும் விட மாட்டேன் என்று சொன்னவள்
Sorry சார் என்று ஒருமுறை கூறி போன் வைக்க
இன்பா தனக்குள் சிரித்து கொண்டான். என்ன பண்ணுவா என்று நினைத்து கொண்டே அவன் வேலைய பார்க்க சென்றான்.
விவேகா அவளுடைய வேலையை ஆரம்பித்தாள்.
என்ன செய்திருப்பாள்????
ஒன்றும் இல்லை அவனுடைய எண்ணுக்கு செய்தி அனுப்புவது தான் அந்த வேலை
Sorry சார் என்று விவேகா
மைதிலி, ஆதி, வெண்பா வீட்டில் அவளுடைய அம்மாவின் போன் அதிதி , செல்வம் போன் என எல்லார் போனிலும் மாற்றி மாற்றி வாங்கி
Sorry சார்
Sorry சார்……
.
…….. . Sorry சார் என அனுப்பி கொண்டே இருந்தாள்.
இன்பாவுக்கு செய்தி வந்த வண்ணம் இருந்தது ஒரு கட்டத்தில் இன்பாவுக்கு இருக்கும் வேலை பழுவில் இந்த செய்தி வர வெண்பாவுக்கு போன் செய்து விவேகாவிடம் கொடுக்க
விவேகா சந்தோசமாக தான் வாங்கி காதில் வைத்தாள்
ஆனால் இன்பா மிகவும் கோபமாக இன்னொரு தடவை எனக்கு செய்தி அனுப்புன அவ்ளோ தான்
என்று மிகவும் கோபமாக கூறி போன் வைக்க விவேகாவின் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.
இப்படியே மூன்று மாதம் ஓடி விட்டது விவேகாவுக்கு செம் தேர்வுகள் முடிவடைந்து அவள் வீட்டில் இருந்தாள்.
இன்பாவுக்கு இப்போது அவளிடம் பேச வேண்டும் என்று மிகவும் தோன்றியது அன்று அவன் திட்டியதில் இருந்து அவள் ஒரு செய்தி கூட அனுப்ப வில்லை.
விவேகாவுக்கு இன்பாவின் நினைவுகள் தான் எப்போதும் அந்த மகிழம் பூவை புத்தகத்தில் இருந்து எடுத்து தேவையான அளவுக்கு அதன் வாசத்தினை உள் இழுத்து கொள்வாள்.
அந்த பூவை பார்த்து ஏன் டா இப்படி என்னை கொடுமை பண்ற,
” நான் உண்டு என் வேலை உண்டு”
அப்டின்னு இருந்த என்னை இப்போ பழி வாங்குகிறாயா.
இடியட் இடியட் என்று கூறி இன்னும் பயிற்சி வேண்டுமோ என்று வடிவேலு பாணியில் கூறியவள் மீண்டும் போன் எடுத்து செய்தி அனுப்ப ஆரம்பித்தாள்.
இப்போது நிறைய அனுப்ப வில்லை ஒரு நாளைக்கு மூன்று வேளையும் ஒரு முறை sorry சார் என்று இவள் அனுப்ப ஆரம்பிக்க
இங்கு இன்பாவுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. காலையில் அவன் எழுவதே அந்த செய்தியை படிக்க தான்
Sorry சார் என்பது இன்பாவுக்கு தித்திப்பாக இருந்தது.
அதும் தன்னவளிடம் இருந்து வரும் செய்தி அதனை பார்த்து விட்டு மிகவும் உற்சாகமாக பயிற்சி வகுப்புக்கு கிளம்புவான்.
ஆனால் விவேகா ஒரு படி மேலே சென்று விட்டாள். அவள் என்ன தான் செய்தாள்.
இந்த செம் விடுமுறையில் அவள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க சூப்பர் மார்க்கெட் சென்ற போது கங்காவிற்கு காத்து இருந்தாள் எல்லா பொருங்களையும் வாங்கி கொண்டே அம்மா வருகிறார்களா என பார்க்க இவளின் பின்னால்
வாயாடி இங்கே என்ன பண்ற என்று குரல் கேட்க
விவேகா திரும்பி பார்க்க அங்கு வசுமதி நின்றுகொண்டு இருந்தார்.
அவள் சிரித்து கொண்டே மேடம் எப்டி இருக்கீங்க
அம்மா இங்க வரேன் அப்டின்னு சொன்னாங்க அது தான் அம்மாக்கு வெய்ட் பண்றேன் என இவள் காத்து கொண்டிருக்க
போன் பண்ணு மா என்று வசு சொல்ல
என்கிட்ட மொபைல் இல்ல மேடம் என்று அவள் சொன்னாள்.
இந்தா என்னோட மொபைல் ல பண்ணிட்டு கொடு நான் அந்த பக்கம் கொஞ்சம் பொருள் எடுக்க வேண்டும் என்று வசு unlock செய்து போன் தர
விவேகா முதலில் தன் அம்மாவுக்கு போன் செய்தவள்
அவளுடைய அம்மா இன்னும் வர 15 நிமிடம் ஆகும் என்று கூற
இவள் போன் எடுத்து கொடுக்கலாம் என்று செல்லும் முன் யோசித்தவள்
நேராக செய்தி அனுப்பும் பகுதி சென்று
sorry சார்,
Sorry இன்பா,
Sorry ராகவ் , என்று இறுதியில்
Ones again sorry என்று அனுப்பி விட்டு செய்தி சென்றவுடன் அதை sent box ல இருந்து delete செய்து விட்டு ஒரு முறை எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்த்து விட்டு
அந்த போனில் உள்ள முகப்பு படம் இன்பா விறைப்பாக காக்கி சட்டையில் இருப்பது போல் இருக்கும் படத்தை வருடி விட்டு
விவேகா தன் மனதில் சிரித்து கொண்டவள் வசு கிட்ட போன் கொடுத்து
அம்மா அருகில் வந்து விட்டார்கள் மேடம்
நான் அம்மாவை அழைக்க செல்கிறேன் என்று கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
இங்கு இன்பாவுக்கு செய்தி வர அதனை படித்தவன் அவள் தான் என்று தெரிந்து கொண்டான். அதுவும் இந்த முறை வித்தியாசமாக செய்திகள் இருந்தது.
ஆனால் அது ஒரு நிமிடம் தான்
இப்போது எந்த எண்ணில் இருந்து அழைத்து இருக்கிறாள் என்று பார்த்தவன் ஒரு நிமிடம் அதிர்ந்து போனான்.
இது நிஜமா இல்லை மாறி வந்து இருக்கிறதா என தன் கண்களை ஒரு நிமிடம் தேய்த்து கொண்டு பார்க்க அது வசுமதி எண் தான்
ஏய் கேடி நான் கூட உன்னை சாதாரணமா நினைச்சேன் டி ஆனால் நீ
நீ எங்க அம்மா போன் ல இருந்து
என்னை சமாதானம் செய்ய செய்தி அனுப்பி இருக்க
உனக்கு தைரியம் தான் டி
இருக்கட்டும்
இருக்கட்டும் உனக்கு நேரில் இருக்கு டி என்று நினைத்து கொண்டு அவன் கிளம்பினான்.
ஆனால் விவேகா கிட்ட பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் இன்னும் அவளை சுற்ற விட வேண்டும் என்று நினைத்து கொண்டான்.
ஆனால் அவனுக்கு தெரியவில்லை பின்னாடி இன்பா தான் கஷ்ட பட போகிறான்.
போன செம் க்கு உண்டான கட்டணங்கள் அனைத்தும் அந்த போட்டியில் வெற்றி பெற்ற பணத்தில் இருந்து கட்டி விட்டாள்.
இப்போது காலேஜ் க்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் இருந்தது கங்கா, விவேகா இருவரும் இந்த இரண்டு நாட்கள் ஆதி வீட்டுக்கு சென்று அங்கு இருந்து முதல் நாள் ஆதியுடன் சேர்ந்து காலேஜ் செல்லலாம் என்று முடிவெடுத்தாள்.
இரண்டு நாட்களும் நன்றாகவே சென்றது. வருண் கிட்ட ஒரு நாளைக்கு ஒரே ஒரு முறை தான் போன் வரும் இப்போது அதுவும் அவன் செய்ய வில்லை.
விவேகா காலேஜ் முதல் நாள் செல்வதால் வருனுக்கு அழைத்தாள்.
வருண் 2 nd செம் இன்னிக்கு ஆரம்பிக்குது நான் காலேஜ் போய்ட்டு வரேன் டா என்று அவள் கூற
அவன் சரி போய்ட்டு வா மா என்று மிகவும் மெதுவாக கூற அதற்குள் பின்னால் இருந்து
ஹலோ மிஸ்டர் வருண் இங்க என்ன பண்றீங்க இது தான் நீங்கள் பயிற்சி எடுக்கிற லட்சணமா என்று
போலீஸ் புராணம் மிக கடுமையாக ஆரம்பித்தான் இன்பா வருண் அப்படியே விள விளத்து போனான்
Sorry சார் என்று அவன் கூற இப்படி யாருக்கும் தெரியாமல் பேசியதற்கு உங்களுக்கு தண்டனை இருக்கு என்று கூற இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த விவேகாவுக்கு சுல் என்று கோபம் ஏறியது.
உடனே போன் வைத்தவள் ஆதி கூட காலேஜ் கிளம்பினாள்.
அங்கு காலேஜ் சென்று அவளுடைய இடத்தில் அமர்ந்து கொண்டு மைதிலிகாக காத்துகொண்டு இருந்தாள்.
அப்போது யாழினி, கண்ணுகினியாள் அவர்களுடைய தோழி பட்டாளங்கள் கூட மிகவும் சந்தோஷமாக வகுப்பு வந்தார்கள்.
அவர்கள் பேசுவது நன்றாகவே விவேகாவுக்கு கேட்டது.
பூரணி இனியாளை பார்த்து
ஹே இனியாள் இனி இந்த காலேஜ் உங்களுக்கு சொந்தமா என்று கேட்க
இல்ல அப்படி எல்லாம் இல்ல என்று அவள் புன்னகை முகமாக சொல்ல
யாழினி அவர்களை பார்த்து நீ சொல்வது சரி தான் பூரணி இந்த காலேஜ் கூடிய சீக்கிரம் என்னோட அக்காவுக்கு சொந்தம் ஆக போகுது
எங்க அண்ணா வினய் இன்பா சார் அக்காவ கல்யாணம் செய்ய போறான்
அடுத்து இனியாள் என்று அவளை பார்த்து சிரிக்க அந்த சிரிப்பின் அர்த்தம் இங்கு நடப்பது எல்லாம் பார்த்து கொண்டு இருந்த விவேகாவுக்கு நன்றாகவே புரிந்தது.
மனதை யாரோ கத்தி கொண்டு குத்துவது போல விவேகாவுக்கு இருந்தது.
Episode 41,
இன்பாவின் அக்காவை இனியாளின் அண்ணன் திருமணம் செய்ய போகிறான் என்று அவர்களுக்குள் பேசியதை கேட்ட விவேகாவுக்கு அப்போதே ஒரு மாதிரியாக இருந்தது.
அதன் பின் யாழினி கூறிய விஷயம் கேட்டு விவேகாவுக்கு மனது மிகவும் கஷ்டமாக இருந்தது.
அவள் மனதில் ஓ எனக்கு மட்டும் இப்படி தான் நடக்குமா அன்று நாம் கண்ட கனவு பலிக்குமோ என்று அவள் மனது கனத்து கிடக்க
பின் அனைத்து மாணவர்களும் வகுப்பறைக்கு வர ஆசிரியர்கள் அனைவரும் வந்து பாடம் எடுக்க ஆரம்பித்தனர்.
ஆனால் விவேகாவின் மனது மட்டும் இங்கு இல்லை அந்த யாழினி கூறியதே மனதில் மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டு இருந்தது.
அவள் மனது நீ தகுதிக்கு மீறி ஆசை பட்டு விட்டாய் இன்பாவின் மீது உனக்கு உள்ள எண்ணம் தேவையில்லாத ஒன்று இது இப்படியே முடியட்டும். என்று அவள் மனது, brainy என அனைத்தும் விவாதம் செய்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தாள்.
ராகவ் எனக்கு உன்னோட மன்னிப்பும் வேண்டாம்
நீயும் எனக்கு வேண்டாம் என்று அவள் மனதில் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டாள்.
இதை பற்றி ஆதி கிட்ட கூட சொல்ல வில்லை. மனம், முகம் என அனைத்தும் கவலை சோகம் என நிறைந்து இருந்தது.
மாலை வீட்டுக்கு வந்தாள் விவேகா அவள் புத்தகம் வைக்கும் இடத்திற்கு சென்று அந்த மகிழம் பூ வைத்து இருக்கும் புக் எடுத்து
நீ இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த இனியாளுக்கு சொந்தமாக போகிறாய் தானே
இனி நான் உன்னை நினைத்து கொண்டு இருந்தால் அது தவறு என்று அந்த புத்தகத்தை பழைய பொருள் இருக்கும் இடத்தில் போய் வைத்து விட்டாள்.
விவேகாவின் மூளை யோசித்து இதை செய் என்று சொன்னாலும்
மனதில் இண்பாவை எப்படியும் நினைத்து கொண்டு சுற்றி திறிந்தாள்.
இப்படியே இரண்டு மாதம் கடந்தது. இங்கு இன்பாவுக்கு வேலை பளு அதிகமாக இருந்தது அப்படி இருந்தாலும் கூட விவேகா எதுவும் செய்தி அனுப்பி இருக்கிறாளா என்று பார்க்க தவற வில்லை.
இன்பாவுக்கு விவேகாவை பார்க்க வேண்டும் அவளை அள்ளி அணைக்க வேண்டும் என்று தோன்றியது.
அந்த நேரம் இங்கு விவேகாவின் வீட்டில் புது பிரச்சனை ஒன்று முளைத்தது.
விவேகாவின் அப்பாவின் வீட்டில் இருந்து அவளது அத்தை தேவராஜ்ன் அம்மா சித்ரா
அம்மா நம்ம தம்பி பையன் வருண் போலீஸ் தேர்வு ல பாஸ் ஆகிட்டான் மா
சீக்கிரமே அந்த செல்வம் மகளை கல்யாணம் பண்ணிக்க போரானாம் கங்கா கிட்ட நிறைய பணம் இருக்கு மா
நம்ப தம்பி இறந்த பணம் எல்லாம் வச்சு இருக்கா மா
விவேகாவின் பாட்டியோ இப்போ என்ன பண்ண சொல்ற சித்ரா
அம்மா இப்போ அவங்க இருக்க வீடு தம்பி உன்னோட பேர் சேர்த்து தான் வாங்கி இருக்கான் அதனால நீ போய் கேளு மா கொஞ்சம் பணம் அப்படி இல்லனா அந்த வீட்டில் பங்கு கேளு
அது எப்டி சித்ரா நான் கேட்பேன் வருண் நம்ப குடும்ப ஆண் வாரிசு அவன் தாண்டி
அய்யோ அம்மா நான் சொல்றது மட்டும் செய் மா அந்த கங்கை
எதுவும் தர மாட்டேன் அப்டின்னு சொன்னா நம்ப விவே குட்டிய கேட்போம்
தம்பி சின்ன வயசுல விவே குட்டிய ராஜ் க்கு கட்டி தர போறேன் அப்டின்னு தான் சொன்னான்
அது விவே குட்டிய கங்கா ராசு க்கு தர மாட்டா இப்போ அவ ரொம்ப மாறிட்டா
அவளோட எண்ணம் என்னோட ரெண்டு வாரிசையும் அந்த செல்வம் வீட்டுக்கு கொடுக்க தான் அவளோட பிளான்
சித்ரா இது தான் சமயம் என்று அம்மா இது தான் நல்ல சமயம் ஒன்னு விவே குட்டிய ராஜுக்கு தர சொல்லு மா இல்லனா உன்னோட பங்கு கேளு என்று தன் கெட்ட எண்ணத்தை நிறைவேற்ற தயாரானாள்.
விவேகாவின் வீட்டுக்கு கங்கா எப்போது வீட்டுக்கு வருவாள் என்று பார்த்து வைத்து குடும்பத்தோடு சித்ரா சென்றாள்.
இது எதுவும் ராஜுக்கு தெரியாது அவன் அவனது காலேஜ் தொடர்பாக மிகவும் வேலையாக இருந்தான்.
கங்கை மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வரவும் அங்கு தன் மாமியார், மாமனார் தன் கணவனின் அக்கா என அனைவரையும் பார்க்க,
இப்போது அவர்களை ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் வெளியில் போ என்று சொல்ல முடியாது என்று அவர்களை உள்ளே அழைத்தாள்.
ம்ம்ம் கங்கா என்று அவள் பேச ஆரம்பிக்க அப்போது விவேகா வந்தாள் .
இவர்களின் சூழ்ச்சி முகம் எதுவும் விவேகாவுக்கு தெரியாது வந்து அவளது அத்தையை கட்டி அணைத்து கொண்டாள்.
சித்ராவிற்கு என்ன தான் பணம் முக்கியமாக இருந்தாலும் தன் தம்பி பெற்ற பெண் என்று அவள் மேல் பாசம் தான்.
விவேகா தன்னை சுத்த படுத்தி கொள்ள உள்ளே செல்ல
இது தான் நல்ல தருணம் என்று சித்ரா அவள் வந்ததற்கு உண்டான நோக்கம் அனைத்தும் கூற
கங்காவுக்கு உடனே கோபம் தலைக்கு ஏறியது
உங்க நாடகம் எல்லாம் என்கிட்ட வேண்டாம் , அவரு எங்களுக்கு வாங்கி கொடுத்த இந்த வீடு நிலம் எல்லாம் என்னோட வருனுக்கு தான் சொந்தம்
அப்புறம் இன்னொரு விஷயம் நான் விவேகாவை யாருக்கு வேணும்னாலும் கொடுப்பேனே தவிர உங்களுக்கு கட்டி கொடுக்க மாட்டேன்.
இதை கேட்ட சித்ரா என்னோட தம்பி தான் ஆசை பட்டான் அவனோட வார்த்தைக்கு நீ மதிப்பு கொடுக்க மாட்டிங்குர
என்னோட தம்பு உயிரோட இருந்தால் இப்படி நடக்குமா என்று அவள் கங்காவின் மனதை காயப்படுத்த
கங்கா அவர்களை பார்த்து அவருக்கு மதிப்பு கொடுத்து தான் அவரோட அம்மா, அப்பா அவரோட பாச அக்கா உங்களை நான் மதித்து வீட்டுக்குள்ள கூட்டி வந்து இருக்கிறேன்.
இல்ல என்று கங்கா நிறுத்த உடனே இதை கேட்ட அனைவருக்கும் கோபம் வந்தது குறிப்பாக சித்ரா கொதித்தாள்.
ஓ இந்த அளவுக்கு பேச வந்துடியா இப்போ முடிவா என்ன சொல்ற விவே குட்டிய தர முடியுமா முடியாதா
முடியாது இப்போ வாசல் அந்த பக்கம் இருக்கு என்று கூற இரு டி உனக்கு இருக்கு இந்த வீட்டில் எங்க அம்மாவுக்கு சம பங்கு உரிமை இருக்கு
மேலும் சித்ரா தொடர்ந்தாள் உன்னோட பிளான் எனக்கு தெரியும் டி உன் அண்ணன் பயனையும் பொன்னயும் விவே கும், வருனுக்கும் கட்டி வச்சு ஆட்டம் போடலாம் ன்னு பார்க்கிரியா.
ம்ம்ம் ஆமா அப்டியே வச்சுகோங்க நான் வருணை அதிதிக்கு அப்டின்னு எப்பவோ முடிவு பண்ணிட்டேன்.
அப்புறம் விவேகாவுக்கு ஆதிய கட்டி வைக்கணும் னு எனக்கு தோணல
ஆனால் இப்போ நீங்களே சொல்லி ஒரு நல்ல விஷயம் செஞ்சு இருக்கீங்க. ஆதிக்கு தான் விவேகாவை கட்டி கொடுப்பேன்.
நிச்சயமாக கல்யாணதுக்கு கூப்பிடுவேன் நீங்கள் தான் முன்ன நின்னு அவங்கள வாழ்த்தனும் என்று கங்கா சொல்ல
உன்னை என்ன பண்றேன்னு மட்டும் பாரு டி என்று சித்ரா சொல்லி விட்டு தன் அம்மா அப்பா வை அழைத்து கொண்டு சென்று விட்டாள் .
கங்கா உடனே தன் அண்ணணுக்கு போன் செய்து நடந்த விஷயம் அத்தனையும் கூறினாள்.
செல்வம் உடனே வருவதாக கூற
வேண்டாம் அண்ணா
அவர்கள் சென்று விட்டனர் என்று கங்கா சொல்ல
இல்ல மா எனக்கு மனசுக்கு ரொம்ப பட படப்பா இருக்கு நானும் ஆதியும் வந்து உன்னையும் சின்ன குட்டியையும் கூட்டி வந்திடடுமா
இல்ல அண்ணா இன்னிக்கு ஒரு நாள் விடு அண்ணா நாளைக்கு நானே அங்கே வந்திடறேன்.
செல்வம் கங்கா கிட்ட இதுக்கு தான் நான் அப்போவே சொன்னேன் அம்மாவை கூட்டி வரலாம் உனக்கு துணையாக இருக்க ஆனால் நீ தான் வேண்டவே வேண்டாம் அப்டின்னு சொல்லிட்ட
இப்போ என் மனசு பதருது என்று செல்வம் கூற அண்ணா போதும் விடு அண்ணா நான் நாளைக்கு வந்து உன்னை பார்க்கிறேன் என்று சொல்லி கங்கா வைக்க
கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் போன் வர அது செல்வம் தான்
கங்கா கதவுகளை நல்லா பூட்டி இரு மா என்று ஒரு முறைக்கு பல முறை கூறி தான் போன் வைத்தார்.
விவேகா தன்னை ரேபிரேஷ் செய்து கொண்டு வெளியில் வரும் நேரத்தில் அவர்கள் பேசிய அனைத்து உரையாடலும் கேட்டு விட்டாள்.
இப்போது தான் அவள் மாமச்சி சொன்னது புரிந்தது.
அவள் பாதியிலே மீண்டும் சென்று விட்டாள் ஆதியை பற்றி அவர்கள் கூறியது கங்கா பதில் சொன்னது எதுவும் விவேகாவுக்கு தெரியாது.
அடுத்த நாள் காலேஜ் முடிந்து நேராக விவேகா ஆதியின் வீட்டுக்கு சென்று விட்டாள். கங்காவும் வேலை முடிந்து அண்ணாவின் வீட்டுக்கு வந்து விட்டாள்.
இப்படியே நாட்கள் வாரங்களாக நகர அந்த நாளும் வந்தது ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்தது அதை பிரித்து படித்து பார்த்ததும் கங்காவின் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.
விவேகா என்ன என்பது போல் அவள் வாங்கி படித்து விட்டு அம்மா இப்போ என்ன செய்ய என்று கேட்க
வா நாம்ப மாமா வீட்டுக்கு போகலாம் என்று கூறி வேகமாக ஆதி வீட்டுக்கு இருவரும் சென்று செல்வம் கிட்ட அந்த நோட்டீஸ் காட்ட
செல்வம் ஒரு வழக்கறிஞர் கிட்ட போகலாம் என்று அங்கு செல்ல அவரோ
“நீங்கள் மேல் முறையீடு இல்லை” அவர்கள் மேல் வழக்கு எப்படி தொடுத்தாலும்
இது இந்த பெண்ணின் கணவர் தெளிவாக
இந்த சொத்தில் தன் தாய்க்கு பங்கு இருக்கிறது என்று
இதுல இருக்கு அதனால் நீங்கள் வீட்டை காலி செய்யும் நிலை வரும் என்று கூற அண்ணா எல்லாம் போச்சு என்று அழ ஆரம்பித்தாள்.
நீ கவலை படாதே பொண்ணு நான் இருக்கேன் உனக்கு நீ இப்படி ஓடஞ்சு போனா என்ன பொண்ணு என்று செல்வம் பேச
அவள் என்ன செய்வது என்று இருக்க நீ நம்ப வீட்டுக்கு எல்லா பொருளும் எடுத்து வந்துடு
இல்ல அண்ணா பெண் எடுக்கும் வீட்டில் நான் எப்படி தங்குவது என்று அவள் சொல்ல முதலில் நீ எனக்கு தங்கை அப்புறம் தான் என் சம்மந்தி என்று செல்வம் கூறினார்.
அண்ணா இருந்தாலும் இந்த விஷயங்களை நான் வருண் கிட்ட சொல்றேன் . இது அவனுக்கு தெரிய வேண்டும் என்று கங்கா கூறினாள்.
இங்கு இன்பாவை ரவிச்சந்திரன்( இன்பாவின் அப்பா) வீட்டுக்கு வருமாறு அழைத்து இருந்தார்.
Episode 42,
ரவிசந்திரன் சுபாவின் திருமணம் பற்றி பேச இன்பனை அழைக்க இன்பாவிடம் முழு விவரம் பேச அழைத்தார்.
அவருக்கு இன்பாவிடம் கூற விருப்பம் இல்லை சுபாவுக்காக தான் இவ்வளவு தூரம் இறங்கி வந்து இருக்கிறார்.
இன்பாவுக்கும் ரவிசந்தரனை பிடிக்கும் ஆனால் வெளியே காட்டி கொள்ள மாட்டான். ரவிக்கு போலீஸ் என்றால் சுத்தமாக பிடிக்காது தன் பேச்சை கேட்காமல் வசுவின் பேச்சை கேட்டு போலீஸ் ஆனது தான் ரவிக்கு கோபம்.
மற்ற படி இன்பனை அவருக்கு மிகவும் பிடிக்கும் அவனுக்கு ரவியின் மூளை கணினி அறிவு மிகவும் அதிகம் கூடவே வசுவின் மூளை போலீஸ் புத்தி.
இன்பா தன் அப்பாவிடம் நான் இன்னும் ஒரு மாதம் கழித்து வருகிறேன் அப்போது பேசிக்கொள்ளாலாம்.
இப்போது சுபாவின் திருமணத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என்று வசு கூறியது போல் கூற ,
ரவி வழக்கம் போல் கோபம் கொண்டு இவர்கள் மும்பை கிளை ஆஃபீஸ் பார்க்க சென்று விட்டார்.
இங்கு ட்ரைனிங் நடக்கும் இடத்தில் மித்ரன் வருண் கிட்ட அடுத்து என்ன என்ன பயிற்சிகள் எவ்வளவு மதிப்பெண் வாங்க வேண்டும் எவ்வாறு தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்று பேச அவனை தேடி செல்ல
இப்போது அங்கு உள்ள பொது தொலை பேசியில் தன் வீட்டில் இருந்து போன் வந்து இருப்பதாக வருண் செல்ல அவன் பேசி கொண்டு இருப்பதை மித்ரன் கேட்டு விட்டான்.
போன் உரையாடல்
என்னமா ஆச்சு?
ஏன் அம்மா அழுகுறீர்கள்? என்று பதட்டம் கொண்டு கேட்க
கங்கா அனைத்து விவரங்களையும் கூற இப்போது என்ன செய்ய போகிறீர்கள் அம்மா
மாமா வீட்டுக்கு போக வேண்டாம் அம்மா ஏற்கனவே நமக்கு எல்லாம் மாமா தான் செய்கிறார்.
சின்ன குட்டி என்ன சொன்னா என்று விவேகாவை பற்றி கேட்க வாடகை வீட்டுக்கு செல்லலாம் என்று விவி கூறியது சொல்ல
அம்மா சின்ன குட்டி சொன்னது போலவே செய்து விடுங்கள் இன்னும் எனக்கு 5 மாதங்களில் காவலர் குடியிருப்பு கிடைத்து விடும் அம்மா அதன் பின் நாம் அங்கு சென்று விடலாம்.
நீங்கள் எதற்கும் கவலை பட கூடாது உங்களுக்கு நான் இருக்கிறேன் நீங்கள் கவலையாக இருந்தால் சின்ன குட்டி மிகவும் ஏங்கி விடுவாள்.
இப்போது பயிற்சி பாதியில் என்னால் விட்டு வர முடியாது என்று அவன் கூற
அம்மா பத்திரம் அம்மா அடிக்கடி என்னால் பேச முடியாது நான் வந்த உடன் அந்த வழக்குகள் என்ன என்று ஒரு கை பார்த்து விடலாம்.
அம்மா பத்திரம் என்று வருண் தழுதழுத குரலில் கூறி போன் வைத்தவன். ஒரு நிமிடம் கண் கலங்கினான்.
வருண் திரும்பியவுடன் அங்கு மித்ரன் இவனுக்காக காத்து கொண்டு இருக்க அவனை மரியாதை நிமித்தம் கொண்டு வணக்கம் வைத்து
மித்ரன் கிட்ட சொல்லுங்க சார் என்று கேட்க
அவனோ இந்த பயிற்சி விவரங்களை பற்றி உன்னிடம் பேச வந்தேன் வருண் என்று அவன் இயல்பாக பேச
சரி சார் நீங்கள் சொல்வது போலவே அடுத்து என்னை தயார் படுத்தி கொள்கிறேன் என்று அவன் கூறி செல்ல போக
இப்போது மித்ரன் வருண் கிட்ட
உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை என்றால் உன்னோட கஷ்டத்தை என்னிடம் கூறலாம் என்று ஒரு ஆறுதல் கொண்டு பேச,
வருண் சார் என்று ஒரு நிமிடம் தன்னை நிலை படுத்தி கொண்டு கங்கா கூறிய விஷயம் சுருக்கமாக கூற
மித்ரன் வருணை பார்த்து எனக்கும் அப்பா இல்லை வருண் என் அண்ணன் தான் எல்லாமே உனக்கு ஒரு தங்கை இருப்பது போல் எனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள்.
நாங்களும் இந்த மாதிரி ஒரு சூழலில் இருந்து தான் வந்து இருக்கிறோம் நீ கவலை பட வேண்டாம் உனக்கு என்னால் முடிந்த உதவிகளை நிச்சயமாக நான் செய்வேன் என்று மித்ரன் கூற
வருனோ நீங்கள் இப்படி பேசுவதே எனக்கு மிகவும் ஆறுதல் ஆக இருக்கிறது உங்களுக்கு சிரமம் வேண்டாம் சார் நான் பார்த்து கொள்கிறேன் என்று கூற
நீ அப்படி சொல்ல கூடாது நான் இருக்கிறேன் உனக்கு என்று அவனிடம் பேசி விட்டு இன்பனை பார்க்க மித்ரன் சென்றான்.
மித்ரன் இன்பா கிட்ட அனைத்து விஷயமும் கூற இன்பா மிகவும் கோபமாக இது ஒன்னும் நம்ப பிரச்சனை இல்லை அதை வருண் சரி செய்து கொள்வார் நீ கவலை பட வேண்டாம் என்று தன் அப்பாவின் மேல் இருந்த கோபத்தை காட்ட
அந்த பக்கம் எதிர்பாராமல் வந்த வருண் கேட்டு விட்டான் . இன்பா என்றால் வருண்க்கு மிகவும் பயம்
இன்பா வருண் கேட்டு விட்டதை பார்த்து விட்டு எதுவும் நடக்கவில்லை என்பது போல் கடந்து செல்ல
வருண் மித்ரனை பார்த்து சார் நீங்கள் உதவி செய்கிறேன் என்று சொன்னதே எனக்கு செய்வதே எனக்கு போதும் என்று கூறி விட்டு அவன் சென்று விட்டான்.
மித்ரனுக்கு இன்பாவின் மேல் மிகவும் கோபமாக வந்தது அதனால் மித்ரன் இன்பா கிட்ட பேசவே இல்ல
என்னதான் இன்பா அப்படி கூறி விட்டு சென்றாலும் இந்த batch ல மிகவும் துடிப்பாக செயல் படுவது வருண் தான் அதனால் இன்பா அவனிடம் கடுமையாக நடந்து கொண்டான்.
இப்படியே இரண்டு நாள் சென்றது விவேகா ஆதி வீட்டில் இருந்து காலேஜ் சென்றாள்.
இந்த இரண்டு நாளும் மித்ரன் இன்பா கிட்ட பேசவே இல்லை இன்பா மித்ரன் கிட்ட வழிய சென்று பேச மாட்டான்.
தன் அம்மா கிட்ட சொல்ல இப்போது வீடு அவன் பயிற்சி ல இருக்கும் போது தர முடியாது என்று சொல்லி பின் என்னோட வீடு எனக்கு கொடுத்த குடியிருப்பு இருக்கு அந்த வருனுக்கு வேலை கிடைக்கும் வரை அதில் அவன் குடும்பம் தங்கட்டும் என்று சொல்ல
இப்போது இன்பா மித்திரன் கிட்ட பேச செல்ல அவன் அலட்சியம் செய்தான்.
மச்சி ஓவரா ஸீன் போடாத புரியுதா
சார் உங்களுக்கு இப்போ என்ன வேண்டும் என்று மித்ரன் வேண்டும் என்று பேச
உனக்கு அவ்ளோ தான் மச்சி அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது
இப்போ என்ன அந்த வருண் குடும்பம் தங்க வீடு வேண்டும் அவ்ளோ தான நான் அம்மா கிட்ட சொல்லி எப்பவோ தயார் செய்து விட்டேன்.
அது எங்க அம்மாவுக்கு கொடுத்த குடி இருப்பு வருண்க்கு போஸ்டிங் கிடைத்ததும் அவன் சென்று விட வேண்டும் அவனிடம் நீ சொல்லி விடு என்று இன்பா சொல்லி வெளியே செல்ல
மித்ரனோ இடியட் இன்பா என்று சொல்லி அவனை அணைத்து கொள்ள
இன்பா இப்போது கோபமானான்.
ஏ என்னடா என்னை இடியட் ன்னு சொல்ற mind யூர் ஒர்ட்ஸ் என்று கூற
ஓ நான் கூப்பிட கூடாது ஆனால் உன்னோட கேடி கூப்பிடலாம் அப்டி தானே என்று மித்ரன் சிரித்து கொண்டே கூற
டேய் நீ வேற அவ எனக்கு மெஸ்ஸேஜ் பண்ணி இப்போ ரெண்டு மாசம் ஆகுது எனக்கு பார்க்கனும் போல இருக்கு அவளை சீண்டி என்று கூறி நிறுத்த
மித்ரன் ஆச்சரியம் ஆகி இப்போது என்ன சொன்ன என்று அவன் இன்பாவின் அருகில் வர
நான் ஒன்னும் சொல்லல டா எனக்கு அவளை பார்க்கனும் போல இருக்கு அப்டின்னு சொன்னேன் என்று இன்பா சமாளிக்க
ஹே ஹே பொய் சொல்லதா டா நீ என் கூட தானே இருக்க ஆனால் எனக்கு தெரியாம எல்லா வேலையும் பார்க்கிற நான் தான் இப்படியே சுத்தி கிட்டு இருக்கேன் என்று அவன் வருத்தம் கொண்டு பேசினான்.
இன்பா தன் உணர்வுகளை மறைத்து கொண்டு நீ நினைக்கிற மாறி எதுவும் இல்ல மித்ரன் என்று பேச்சை மாற்றும் விதமாக
இப்போ அந்த வருண் கிட்ட போய் அவங்கள அம்மா, பாதுகாவலர் யாரோ அவர்களை அழைத்து கொண்டு அம்மாவை போய் பார்க்க சொல்லு டா என்று கூற
மித்ரன் சரி என்று சொல்லி விட்டு நேராக வருணை பார்க்க சென்றான்.
இன்பா கூறிய அனைத்து விஷயம் கூறி இது இன்பா தான் உதவினான் நீ இப்போது பயிற்சி ல இருக்கிறது தல உன்னிடம் கடுமையாக நடந்து கொள்கிறான் நீ கவலை பட வேண்டாம் என்று அணைத்து ஆறுதல் கூற
வருண் நன்றியுடன் மித்ரனை பார்த்தான். இன்பா அங்கு வந்து இப்போ என்ன பண்ற வருண் உனக்கு யாரும் காத்து கொண்டு இருக்க மாட்டார்கள் என்று அதட்ட அவன் பயந்து கொண்டே சென்று விட்டான்.
வருண் நேராக தன் வீட்டுக்கு அழைத்து வசுமதிய பார்க்க கங்கா, செல்வம் இவர்களை போக சொல்ல விவேகாவை வீட்டில் விட்டு செல்லுங்கள் அழைத்து செல்ல வேண்டாம் என்று கூறினான்.
அதே போல் செல்வமும் , கங்காவும் வசுமதிய பார்க்க சென்று இருந்தனர்.
வசு கங்காவை பார்த்து கவலை பட வேண்டாம் அம்மா உன் மகன் நல்ல புத்திசாலி உங்களை காப்பாற்ற அவன் இருக்கிறான் என்னுடைய குடியிருப்பு அதில் நீங்கள் தங்கி கொள்ளுங்கள்.
வருனுக்கு வேலை கிடைத்ததும் அவனுடைய குடியிருப்பு க்கு நீங்கள் சென்று விடலாம் என்று கூற
ரொம்பவும் நன்றி மேடம் என்று செல்வமும், கங்காவும் கூறினர்.
செல்வத்துக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது ஏன் என்றால் தன் தங்கை இங்கு காவல் குடியிருப்பில் இருந்தால் சித்ராவால் எதுவும் தொல்லை செய்ய முடியாது ஆண் துணை இல்லாமல் கூட பாதுகாப்பாக இருக்கலாம்.
உடனே வீட்டுக்கு வந்து மிகவும் சந்தோஷமாக செல்வம் அங்கு நடந்தது பற்றி கூற இப்போது விவேகாவுக்கு தூக்கி வாரி போட்டது.
என்ன இப்போது அவன்(இன்பா) வீட்டில் போய் தங்க போகிறோமா . அவன் அங்கு இல்லை என்றாலும் கூட எப்போது வந்தாலும் அவன் வீடு அருகில் இருக்கும் அடிக்கடி சந்திக்க வேண்டிய சூழல் வருமே
இப்போது அம்மாவிடம் வேண்டாம் என்று கூட சொல்ல முடியாதே நாம் ஒன்று நினைத்து விலகி சென்றால் நம்மை எப்படியும் அவனோடு இணைத்து விடுகிறது.
இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று இவள் யோசித்து கொண்டு இருக்க
ஆதி அவள் அருகில் வந்து
விவி இப்போவே நீ மாமியார் வீட்டுக்கு போற
ம்ம்ம் ஜாலி தான் என்று கிண்டல் செய்ய விவேகா அவனை பார்த்து முறைத்தாள்.
இப்போது வெண்பா பேருந்தில் தான் செல்ல வேண்டும் அதனால் முன்னவே அவளிடம் நான் அங்கு இருக்கிறேன் என்று இன்பாவிடம் சொல்ல கூடாது என சொல்லி விட வேண்டும் என்று
விவேகா வெண்பாவை பார்க்க சென்று அவள் சொல்ல நினைத்த அனைத்தும் கூற வெண்பா
சத்தியமாக நான் எதுவும் இன்பா அண்ணாவிடம் கூற மாட்டேன் என்று உண்மையாகவே கூறினாள்.
விவி எனக்கு ரொம்பவும் சந்தோஷம் தெரியுமா இனி நீயும் நானும் ஒரே பஸ் பக்கத்தில் வீடு ஜாலி தான் என்று விவேகாவை கட்டி அணைத்து கொள்ள
ஏ டீச்சர் திரும்பவும் சொல்றேன் இது மட்டும் அவனுக்கு உன்னால் தெரிந்தது அப்டின்னு எனக்கு தெரிஞ்சது அப்புறம் நம்ப friend ship கவுந்து விடும் என்று மிரட்டல் விட்டு செல்ல
வெண்பா மனதில் நான் சொல்ல மாட்டேன் விவேகா ஆனால் இன்பா அண்ணா ரொம்ப சுலபமாக உன்னை கண்டு பிடித்து விடுவார் என்று கூறினாள்.
விவேகாவின் குடும்பம் காவலர் குடியிருப்பு க்கு குடி பெயர்ந்து ஒரு மாதம் ஆனது வருண் ஒரு மூன்று மாத பயிற்சி வகுப்புக்கு சென்று விட்டான்.
இப்போது மித்ரன், இன்பா இருவரும் வீடு திரும்பினர்
இன்பா ஆவலாக விவேகாவை பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டு செல்ல
அதே போல இன்னொருவரும் விவேகாவை பார்க்க வேண்டும் என்று ஊர் திரும்பினான்.
யார் அது????
விவேகா இன்பாவின் மீதான எண்ணத்தை மாற்றி கொள்வாளா???
அடுத்து என்ன நடக்கும்????
தொடரும்….
Episode 43,
விவேகா காவலர் குடியிருப்புக்கு வந்தவுடன் வெண்பா எப்படி விவேகாவுக்கு நெருக்கமான தோழியாக இருக்கிறாளோ, அதே போல் தேவகியும், கங்காவும் மிகவும் நெருக்கமாகி விட்டனர்.
இப்படியே ஒரு மாதம் செல்ல வாரம் ஒரு முறை இல்ல என்றால் இரண்டு முறை செல்வம், அதிதி இவர்கள் இருவரையும் பார்க்க வந்து விடுவர்.
இன்பா மற்றும் வசுவின் மேல் கோபம் கொண்டு ரவி மும்பை போய் விட தன் அப்பாவை சமாதானம் செய்ய சுபா மும்பை கிளம்பினாள்.
இன்பாவும், மித்ரனும் வீட்டுக்கு வரும் அந்த நாள் மிகவும் மித்ரனுக்கு முக்கியமான நாள்.
அது வேறு ஒன்றும் இல்லை அன்று தான் வெண்பாவின் பிறந்த நாள் . அவள் செய்யும் அலப்பறைக்கு அளவே கிடையாது.
சரவணன் அவளை தலையில் தூக்கி வைக்காத குறை தான் அந்த அளவுக்கு ஒரு அண்ணன் தங்கை பாசமலர் படமே ஓட்டலாம்.
இந்த முறையும் அதே போல் அலப்பறை செய்ய ஆரம்பித்தாள்.
விவேகா வெண்பாவை வீட்டுக்கு அழைத்து கங்காவிடம் சொல்லி வெண்பாவுக்கு பிடித்த சில உணவு வகைகள் செய்து சாப்பிட வைத்தாள்.
அம்மா எல்லாம் சூப்பர் அம்மா என்று ரசித்து ருசித்து உண்டாள்.
கங்காவிடம் வெண்பா அம்மா பேசாமல் விவேகாவுக்கு பதிலாக நான் இங்கு இருந்தால் இப்படி ருசியாக தினமும் நன்றாக சாப்பிடலாம்.
என்ன செய்ய எல்லாம் அவன் செயல் என்று கூற
அப்போது அங்கே வந்த ஆதி இதை கேட்டு இந்த பேய் உங்களுக்கு வேண்டாம் அத்தை நம்ப விவேகா இருக்கும் இடத்தில் இந்த பேயா அப்புறம் நீங்கள் தான் ரொம்ப கஷ்ட படனும் அத்தை என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தான்.
ஆதி என்ன பா நீ போய் இப்படி பேசலாமா வெண்பா ரொம்ப நல்ல பொண்ணு டா இப்படி எல்லாம் பேச கூடாது இன்னிக்கு வெண்பாவுக்கு பிறந்த நாள் கண்ணா
ஆதி அவளை பார்க்க உடனே அவள் சோகமாக முகத்தை வைத்து கொண்டு விடுங்க மா இனி நான் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று கூறி எழ
உடனே ஆதியை பார்த்து கங்கை ஆதி வெண்பா கிட்ட மன்னிப்பு கேளு பிறந்த நாள் அதுவுமா பிள்ளை முகம் வாடி போச்சு பாரு என்று சொல்ல
அத்தை பேச்சை தட்டி கழிக்காமல் ம்ம்ம் சரி அத்தை என்று கூறியவன்.
Sorry என்று சொல்ல
அம்மா அவங்க என்னை முறைக்கிறார்கள் என்று சொல்ல
அத்தை இல்ல அந்த பொண்ணு பொய் சொல்லுது
ஆதி என்று கங்கை கொஞ்சம் அழுத்தி கூற
என்னை மன்னித்து விடு மா என்று ஒரு கும்பிடு போட்டு அவன் விவேகாவை பார்க்க சென்றான்.
விவேகாவுக்கு இப்போது மிகவும் குழப்பமாக இருந்தது . எல்லாம் அவனால் தான் அவன் தான் இன்பா
நினைக்க கூடாது,
நினைக்க கூடாது,
மறக்க வேண்டும் என்று இன்பாவ நினைத்து கொண்டு இருந்தாள்.
ஆதி அவள் அருகில் வந்து என்ன தேன் மிட்டாய் மாமியார் வீடு எல்லாம் பிடிச்சு இருக்கா ஒன்னும் பிரச்சனை இல்லையே என்று அவன் கிண்டல் செய்ய
விவேகா அவனை பார்த்து முறைத்தாள்.
இப்போ எதுக்கு முறைக்கிற என்ன நடந்தது அப்டின்னு சொல்லு அப்போ தானே எதுவும் பண்ண முடியும்.
அது ஒன்னும் இல்ல ஆதி உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் என்று அவள் ஆரம்பிக்கும் நேரம் வெண்பா வர அவள் அமைதியானாள்.
ஆதியும் புரிந்து கொண்டான் வெண்பா இருப்பதால் எதுவும் பேச முடியாது அப்புறம் பேசி கொள்ளலாம் என விட்டு விட்டான்.
வெண்பா அங்கு ஆதி இருப்பதை மறந்து விவேகா இப்போ நீ போய் ஒரு சூப்பரா தாவணி பாவாடை எடுத்து கட்டிக்கோ
நீயும் நானும் கோவிலுக்கு போலாம் இன்னிக்கு எனக்கு ரொம்ப சந்தோஷம் ஆன பிறந்த நாள் என்று கூற
ஏன் டி இப்படி பண்ற அதெல்லாம் வேணாம் டி பிலீஸ் எனக்கு bore அடிக்குது நீ மட்டும் போய்ட்டு வா என்று விவேகா சொல்ல
இப்போ நீ என் கூட வரல
அப்புறம்!
அப்புறம்!
நான்
நீ எங்க அண்ணா என்று ஹஸ்கி வொய்ஸ் ல சொல்ல
விவேகா சிணுங்கி கொண்டே போ
நான் பின்னாடி வரேன் என்று இரு கைகளையும் எடுத்து கும்பிட்டு போட்டு
அவள் தாவணியை தேட அன்று முதன் முதலில் இன்பா அவளை இழுத்து முத்தம் கொடுத்த போது,
அவள் அணிந்து இருந்த தாவணி அலமாரியில் இருக்க அதனை பார்த்து விட்டு,
இந்த தாவனியால் தான் நமக்கு வினையே வந்தது என்று அவன் கூறிய அனைத்தும் அவளுக்கு நியாபகம் வந்தது.
உன்னை நான் ரொம்ப மிஸ் பண்றேன் டி !
உன்னை என்னோட life ல மிஸ் பண்ண மாட்டேன்!
நீ எனக்கு தான் !
என்று அவன் கூறிய வார்த்தைகள் விவேகாவுக்கு இப்போது கூட உடல் எங்கும் மின்சாரம் பாய்ந்தது.
நான் உனக்கு இல்ல,
நீ எனக்கு வேண்டாம்
என்று சொல்லி அந்த நினைவில் இருந்து தன்னை மீட்டு கொண்டாள்.
இன்று ஊதா வண்ணத்தில் மிகவும் எளிமையாக ஒரு தாவணியில் வந்தாள் .
கங்கா ஆதி கிட்ட கண்ணா இவங்க ரெண்டு பேரையும் கோவிலுக்கு கூட்டி போ பா என்று சொல்ல
ஆதி சரி என்று மூவரும் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றனர்.
அங்கு சாமி கும்பிட்டு விட்டு வீடு திரும்பும் நேரம் ஆதி வெண்பா கிட்ட
Sorry வெண்பா என்று கூறியவன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று சொல்ல,
அதற்கு அவள் சிரித்து கொண்டே நன்றி என்று கூறினாள்.
பின் மூவரும் நடக்க சிறிது நேரம் கழித்து வெண்பா ஆதி கிட்ட
நீ எப்போதும் போல என்னை பேய் அப்டின்னு கூப்பிடு ஆதி என்று கூற
அவன் ஏன் என்று கேள்வியாக பார்க்க
இல்லை இப்படி நீ என்கிட்ட பேசறது செயற்கை யாக இருக்கு என்று வெண்பா கூறினாள்.
Ok ஆனால் பேய் வேணாம் என்று ஆதி சொன்னான்
பின்ன எப்டி கூப்பிடுவ
ம்ம்ம் உனக்கு ராட்சசி சரியான பேரு என்று சொல்ல
மீண்டும் இருவரும் சண்டையை ஆரம்பித்தனர்
அவன் ராட்சசி என்று சொல்ல
இவளோ பிசாசு என்று சொல்ல இப்படியே மூவரும் காவலர் குடியிருப்பு நுழைவு வாயிலுக்கி வந்தனர்.
விவேகா இவர்கள் சண்டை போடுவதை பார்த்து சிரித்து கொண்டே வந்தாள்.
வெண்பாவின் போனுக்கு கால் வந்தது ஆதி வீட்டுக்கு செல்வதாக கூறி அவன் கிளம்ப இப்போது விவேகாவும், வெண்பாவும் மட்டுமே இருந்தனர்.
வெண்பா போன் எடுத்து பேச மறு முனையில் வசுமதி தான் அழைத்து இருந்தார்.
வெண்பா மா இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் செல்லம் என்று சொல்ல
ரொம்ப thanks aunty என்று இவள் கூற
ம்ம்ம் வீட்டுக்கு வாயேன் நான் மட்டும் தான் இருக்கேன் உனக்காக பரிசு வாங்கி வைத்து இருக்கிறேன் என்று சொல்ல
வெண்பா வசுமதி கிட்ட இல்ல ஆண்ட்டி நானும் விவேகாவும் இருக்கோம் அது தான் என்று கூற
வசுமதி அவளையும் கூட்டி வா வந்து கொஞ்ச நேரம் இருந்து விட்டு போங்க சுபா மும்பை போயிட்டா uncle ஆ பார்க்க
இன்பா ஈவினிங் தான் வருவேன் அப்டின்னு சொல்லிட்டா சரி விடு மா நீ பாரு என்று அவள் சொல்ல
இல்ல ஆண்ட்டி நான் இப்போது நானும் விவேகாவும் வருகிறோம் என்று சொல்லி வைத்து விட்டாள்.
அவள் பேசிய அனைத்தும் விவேகா கிட்ட சொல்ல
ஏய் நான் எப்டி அவங்க வீட்டுக்கு வரது என்று விவேகா சொல்ல
ஏய் ரொம்ப ஸீன் போடாத இப்போ நீங்கள் இருக்க வீடு சின்ன வயசுல இன்பா அண்ணா வளர்ந்த வீடு
இப்போ silent ஆ வர கொஞ்ச நேரம் இருக்கலாம் அப்புறம் எங்க வீட்டுக்கு கிளம்பி விடலாம்.
இல்ல முடியாது அப்படி இப்படி அப்டின்னு ஸீன் போட்ட நான் நிரம்ப டென்ஷன் ஆகிடுவேன்.
இப்போது விவேகா வாய் திறக்க போக
உடனே வெண்பா இப்போ நீ என்ன கேட்க போற அப்டின்னு எனக்கு நல்லா தெரியும் இன்பா அண்ணாவும், மித்ரனும் ஈவினிங் தான் வருவாங்க அப்டின்னு வசு ஆண்ட்டி இப்போ என் கிட்ட சொன்னாங்க
இப்போ எந்த பிரச்சனையும் இல்ல தானே என்று வெண்பா கேட்க
விவேகா இட வலமாக தலை அசைத்தாள்.
சரி வா போகலாம் அவங்க இருக்கும் இடம் வேற மாறி இருக்கும் என்று அங்கு உள்ள வசதிகள் வீட்டின் அமைப்பு இவற்றை பற்றி சொல்லி கொண்டு செல்ல விவேகா ம்ம்ம் கொட்டினாள்.
வசுமதி வீடு வந்தது வெண்பா இயல்பாக உள்ளே செல்ல விவேகா தயங்கி கொண்டே நிற்க வெண்பா அவளது கைகளை பிடித்து உள்ளே அழைத்து சென்றாள்.
அங்கே வசு சோபாவில் அமர்ந்து இருந்தவள் இவர்களை பார்த்ததும் புன்னகை கொண்டு உள்ளே அழைத்து வீட்டு பணி பெண் கிட்ட ஏதோ ஒன்றை எடுத்து வர சொல்ல
அந்த பெண் முதலில் இருவருக்கும் தண்ணீர் கொடுக்க அதை குடித்து விட்டு விவேகா அமைதியாக இருக்க
என்ன மேடம் இன்னிக்கு அமைதியாக இருக்கீங்க உங்கள் பேச்சையும் வெண்பா பேசறேன் அப்டின்னு சொல்லிட்டாளா. என்று வசு மதி அவளை கிண்டல் செய்ய இல்லை மேடம் சும்மா தான் என்று சமாளிதாள்.
அதற்குள் அந்த பணிப்பெண் கைகளில் ஒரு வட்ட வடிவ பிறந்த நாள் கேக் ஒன்று எடுத்து வந்தாள்.
பின் வசுமதி வெண்பாவுக்கு சில பரிசுகள் கொடுக்க ஆண்ட்டி வேணாம் சரவணன் திட்டுவான் என்று சொல்ல
வசு உடனே அதை நான் பார்த்து கொள்கிறேன் எ ன்று சொல்லி இது உன் அப்பாவின் சார்பில் (வசுவும் வெண்பாவின் அப்பாவும் ஒரே batch இருவரும் நல்ல தோழமை ) அவன் என்னிடம் சொல்லுவான் உன்னை பார்த்தால் அவன் அம்மாவின் நியாபகம் வருமாம் என்று அவள் சொல்ல
இப்போது வென்பா விவேகா இருவரும் கண் கலங்கினர் சரி விடு வாயாடி எப்போதும் உன் அப்பா உன் அருகில் இருப்பார் என்று சொல்லி
வா இது உனக்கு பிடித்த கேக் தானே என்று சொல்லி வந்து இதனை வெட்டு என்று சொல்ல விவேகா, வசு, பணிப்பெண் அனைவரும் பாட்டு பாட வெண்பா கேக் வெட்டி முதலில் வசு விற்கு ஊட்ட
வசு இவளுக்கு ஊட்டினாள் அடுத்து அங்கு இருந்த பணி பெண்களுக்கு கொடுக்க அனைவரும் வாங்கி கொண்டு அவர்கள் வேலைய பார்க்க செல்ல
இப்போது விவேகாவுக்கு வெண்பா ஊட்ட அவள் முகத்தை திருப்பி கொண்டாள்.
செல்லம் பிலீஸ் மா என்று வெண்பா ஊட்ட விவேகா முதலில் கேக் துண்டை வாங்கி அவளுக்கு ஊட்டி விட்டு பின் வெண்பாவின் மூக்கில் கொஞ்சம் கேக் கிரீம் எடுத்து பூச
வெண்பா விவேகாவுக்கு பூச இதை பார்த்து வசுமதி சிரித்து கொண்டு இருந்தாள். மனதிலும் சரி குடும்பத்தில் சரி ஆயிரம் கவலை அவளுக்கு ஆனால் அவள் இந்த நிமிடம் மறந்து சிரித்தாள்.
இப்போது இருவர் முகமும் கேக் கிரீம் தான் இருந்தது.
வசு இருவரையும் பார்த்து சிரித்து கொண்டே போய் முகம் கழுவி வாருங்கள் என்று சொல்ல வெண்பா வேகமா உன்னை வந்து பார்த்து கொள்கிறேன் என்று மீண்டும் விவேகா முகம் கழுத்து என பூசி ஓட
டீச்சர் என்று அழுத்தி கூறியவள் அப்படியே நிற்க வசு விவேகாவை பார்த்து அது என் பொண்ணோட அறை அங்கே போய் முகம் கழுவி வா மா என்று சொல்ல
விவேகா வசுவை பார்த்து சரி என்று சொல்லி சுபாவின் அறைக்கு அவள் உள்ளே செல்லவும் இன்பா உள்ளே வரவும் சரியாக இருந்தது.
வசு அந்த கேக் box எடுத்து கொண்டு சமையல் அறைக்குள் சென்றாள் .
இன்பா தன் ஷிஸ் கழட்டி விட்டு உள்ளே சென்றவன் சுற்றும் முற்றும் பார்க்க ஒரு பணிப்பெண்
தம்பி அம்மா சமையல் அறையில் இருக்கிறார்கள் என்று சொல்ல
நான் பிரேஷ் ஆகி விட்டு அம்மாவை வந்து பார்க்கிறேன் என்று இவன் சென்றவன் சுபாவின் அறையை கடந்து சென்றவன்.
ஒரு நிமிடம் யோசித்தவனாக மீண்டும் சுபாவின் அறைக்குள் வந்து உள்ளே பார்க்க
இன்பாவுக்கு இது கனவா இல்லை நிஜமா என்று தெரியவில்லை .
மனமோ நீ அவளையே நினைத்து நினைத்து இப்போது எங்கே பார்த்தாலும் விவேகா உன் கண்ணுக்கு தெரிகிறாள்.
Brain இல்ல இன்பா இது அவள் தான் நீ அருகில் சென்று அவளை தொட்டு பார் இல்லை என்று ஏதோ சொல்ல போக
ஸ்டாப் இட் நான் பார்த்து கொள்கிறேன் என்று இன்பா சுபாவின் அறையின் உள்ளே வந்தவன் .
ஒவ்வொரு அடிகளாக எடுத்து வைத்து அருகில் வர
விவேகாவோ வெண்பா தான் வந்து இருக்கிறாள் என்று நினைத்து கொண்டு ஏய் இங்கே பாரு டி அந்த கிரீம் போகவே மாட்டிங்குது
என்னோட முகம் எல்லாம் ஒரு மாறி இருக்கு கிரீம் எல்லாம் கிளீன் பண்ணாலும் அது கம் மாறி இருக்கு
எல்லாம் உன்னால தான் டி உன்னை என்ன செய்கிறேன் என்று பார் என்று விவேகா தன் கன்னம் துடைத்து கொண்டு
என்ன டி எதுவும் பேச மாட்டிங்குற என்று விவேகா திரும்ப அவள் இன்பாவின் மார்பில் முட்டி நின்றாள்.
இன்பா என்னை கன்வின்ஸ் பண்ண எங்க வீட்டுக்கே வந்துட்டியா! !!
இதை நான் எஸ்பக்ட் பண்ணல டி ! என்று
இன்பா விவேகாவை இன்னும் நெருங்கி செல்ல ….?
தொடரும்…..
Episode 44,
என்ன டி எதுவும் பேச மாட்டிங்குற
என்று விவேகா திரும்ப அவள் இன்பாவின் மார்பில் முட்டி நின்றாள்.
இன்பா அவளிடம் என்னை கன்வின்ஸ் பண்ண எங்க வீட்டுக்கே வந்துட்டியா! !!
இதை நான் எஸ்பக்ட் பண்ணல டி ! என்று விவேகாவை இன்னும் நெருங்கி செல்ல
இப்போது விவேகாவுக்கு யாழினி கூறியது நினைவில் வர
முதலில் என்னை விட்டு தள்ளி நில்லுங்க
நான் ஒன்னும் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டு வரல என்று கூறி அவள் கோப பார்வை கொண்டு அவனை தள்ள,
விவேகாவின் முயற்சி தோல்வி ஆனது.
நான் சொல்றது உங்களுக்கு புரியுதா இல்லையா நகருங்க பிலீஸ் என்று அவள் கோப பார்வையில் சொல்ல
சரி ரொம்ப ஸீன் போடாத டி
நான் உன்னை மன்னித்து விட்டேன் என்று இன்பா சொல்ல
விவேகாவோ,” உங்களோட மன்னிப்பும் எனக்கு வேண்டாம்” ,”நீங்களும் எனக்கு வேண்டாம் “என்று அவள் சொல்ல நினைத்து கூற வர
நீங்களும் எனக்கு என்று விவேகா கூறும்போதே அடுத்து அவள் என்ன சொல்வாள் என்று இன்பாவுக்கு முன்னவே தெரியும் .
விவேகா அந்த வார்த்தையை முழுவதும் கூட கூறி முடிக்க வில்லை இன்பா அவளது உதடுகளை தன் வசமாக்கினான்.
இந்த நான்கு ஐந்து மாதங்கள் தந்த பிரிவு மொத்தமும் இந்த ஒரு முத்தத்தில் சரி செய்ய நினைத்தான்.
முத்தம் நீண்டு கொண்டே சென்றது விவேகாவினால் இண்பாவை விலக்க முடியவில்லை.
விவேகா தன் கைகளை கொண்டு அவனை தள்ள முயல அது முடியாமல் போனது.
அவனது இந்த செயலால் அவளது உடலில் சக்தி எல்லாம் வடிந்து விட்டது.
இன்பா வலுக்கட்டாயமாக அவள் இரு கைகளையும் எடுத்து அவனே தன்னுடைய தோளில் மாலையாக போட வைத்தான்.
ஒரு கட்டத்தில் விவேகா கண்கள் சொருக அப்படியே அவனுள் கரைந்து தான் போனாள்.
அவளது இடையை முதன் முறையாக தன் ஒரு கை கொண்டு வருடினான்.
இன்பாவின் முத்தம் தீவிரம் அடைந்தது அந்த கேக் வாசம் விவேகாவின் மேல் இருந்து வருவது போல அவளை மொத்தமும் விட்டால் சாப்பிட்டு இருப்பான்.
இவனது மூச்சு காற்றை அவளுக்கு கொடுத்து இப்படியே இந்த முத்தம் ஒரு ஐந்து நிமிடம் சென்றது .
இப்போது இன்பா அவளை விலக்க அவளுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை அப்படியே நின்றாள்.
இன்பா அவளை அருகில் இழுத்து அணைக்க விவேகா அவனை தள்ளி விட்டாள்
இன்பா அவளை பார்த்து
” போதும் டி டார்ஜிலிங்”,
நான் உன்னை ரொம்ப சுற்ற விட்டு விட்டேன் sorry டி என்று அவள் கழுத்தில் முகம் புதைக்க
விவேகாவோ அவனை விட்டு தள்ளி இருப்பதிலேயே கூறியாக இருந்தாள்
இப்போ என்னடி ஆச்சு!
ஏன் இப்படி பண்ற?
நான் உன்னை எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா?
என்று இன்பா சொல்ல விவேகா அவனிடம் இருந்து விலகி எனக்கு அப்படி எதுவும் இல்ல இனி என்னை இப்படி சீண்டுற வேலையெல்லாம் வச்சுக்க வேணாம்.
அப்புறம்” நீங்கள் நான் படிக்கிற காலேஜ் correspondent “,
நான் அங்கே படிக்கிற ஒரு சாதாரண மாணவி அவ்ளோ தான் உங்களுக்கும் எனக்கும் புரியுதா என்று அவள் செல்ல போக
இன்பா இவ்வளவு நேரம் அவள் பேசுவதை இரு புருவத்தை தூக்கி கேட்டு விட்டு இறுதியில் அவள் கிளம்பும்போது அவள் கைகளை தன் புறம் இழுக்க
விவேகா தன்னை நிதானபடுத்தி கொண்டு அவனை பார்த்து முறைத்து
என் கைய முதலில் விடுங்க என்று அவள் கூற
இன்பா அவளை பார்த்து மெலிதாக புன்னகை சிந்தி அப்படியே அவளை பார்க்க
நான் சொல்றது புரியுதா? இல்லையா? என் கைய விடுங்கள், நான் போகனும்.
அப்படியெல்லாம் உன்னை விட முடியாது என்று இன்பா இயல்பாக சொல்ல
இப்போ விட போறியா இல்லயா என்று விவேகா மரியாதை இல்லாமல் பேச
இன்பா விவேகாவை இப்போது அவளை கொஞ்சம் வலிமை கொண்டு அவள் அருகில் இழுக்க
இப்போது விவேகா அவள் இன்பாவின் மேல் முட்டி நின்றாள்.
இன்பா விவேகாவின் இடையை வருடி என்னை ரெஸ்பெக்ட் இல்லாமல் கூப்பிட உனக்கு உரிமை இருக்கு அது எப்போதும் உனக்கு மட்டும் தான்
ஆனால் அதை கூப்பிட வேண்டிய நேரம் இது இல்ல என்று அவள் உதடுகளை வருடி அவன் விரலால் ஒரு முறை தட்டி விட்டான்.
விவேகாவின் உதடுகள் இப்போது மருத்து போனது போல் இருந்தது. இன்பாவின் அருகாமை அவளை ஏதோ செய்தது.
அவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கீழே பார்க்க என் கிட்ட ஒரு தடவை வந்து விட்டால் அவ்ளோ தான் திரும்ப உன்னால என்னை விட்டு போக முடியாது .
உன்னோட use less காரணத்தை தூக்கி தூர போடு இதுக்கு மேல நான் சும்மா இருக்க மாட்டேன் உனக்கு புரியும் ன்னு நெனைக்கிறேன். என்று இன்பா சொல்ல
இப்போது தன்னிலைக்கு வந்த விவேகா எனக்கு இஷ்டம் இல்லை என்னை விட்டு விடுங்கள் என்று அவள் அவனை பார்த்து கூற
இஷ்டம் இல்லயா என்று அவன் அவளை பார்த்து கன்னகுழி தெரிய சிரிக்க
விவேகா இண்பாவை ரசித்தாலும் அதை வெளியில் காட்டி கொள்ளாமல் உன்னோட காமெடி சென்ஸ் ரொம்ப அதிகமா இருக்கு என்று இன்பா அவளை கிண்டல் செய்ய
விவேகா அவனை பார்த்து நான் உங்க கிட்ட சீரியஸ் ஆ சொல்லிட்டு இருக்கேன் நீங்கள் சிரிக்கிரீங்களா ?
நீங்கள் என்ன பண்ணா எனக்கு என்ன நான் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லி விட்டேன் என்று அவள் இன்பனை விட்டு செல்ல
விவேகா உனக்கு இஷ்டம் இல்லனா ஒன்னும் பிரச்சனை இல்ல நாம்ப பேசி சரி செய்து கொள்ளலாம்.
“உன் மனசுல ஏதாச்சும் என்னை விட்டு போலாம் “அப்டின்னு,
” ஏதாவது பிளான் பண்ண”
அப்புறம்,
“விளைவு ரொம்ப மோசமா இருக்கும் டி “
அவள் இன்பா சொல்வது கேட்டாலும்
கேட்காதது போல் சென்று விட்டாள்.
இன்பாவுக்கு இங்கு வந்து அவளை பார்த்து விட்டோம் என்று மனதுள் ஒரு புறம் சந்தோஷமாக இருந்தாலும் அவள் பேசிய பேச்சு இன்பா மனதில் மிகவும் வருத்தமாக இருந்தது.
விவேகா எதுவும் நடக்கவில்லை என்பது போல முகத்தை வைத்து கொண்டு கீழ வர வெண்பா இவள் வருவதற்காக காத்து இருந்தவள்.
ஏய் விவி மதியம் சாப்பிட்டு விட்டு போக சொல்றாங்க ஆண்ட்டி என்று சொல்ல
விவேகா அவள் அருகில் வந்து இப்போவே நான் வீட்டுக்கு போகனும் வா போகலாம் என்று சொல்ல
ஹே நீ அதை வசு ஆண்ட்டி கிட்ட சொல்லு அவங்க தான் சொன்னாங்க
ஹே எனக்கு தெரியாது இப்போ வரயா இல்லை நான் போகட்டுமா என்று அவள் வாசல் வரை செல்ல
இப்போது இன்பா பிரேஷ் ஆகி விட்டு கீழ வந்தவன் விவேகா வெளியே செல்வதை பார்த்து அம்மா என்று கொஞ்சம் சத்தத்துடன் கூப்பிட
விவேகா அங்கேயே நின்றாள் திரும்பி பார்க்க இப்போது வசு சமையல் அறையில் இருந்து வெளியே வந்தவள்.
இன்பா வந்து விட்டாயா எப்போ வந்த என்று வசு அவனை பார்த்து கேட்க இன்பா யாரை பார்க்கிறான் என்று வெளியே பார்க்க
அங்கு விவேகா வெளியே செல்ல போக வசு உடனே விவேகா என்று அழைக்க
விவேகா அங்கேயே நின்றவள் மெதுவாக திரும்பி பார்க்க
மேடம் என்று தயங்கி கொண்டு அவள் நிற்க
என்னமா என் கிட்ட சொல்லாம கிளம்பி போற என்று சொல்ல
இல்ல மேடம் என்று தன் கைகளை பிசைந்து கொண்டே கூற
வசு வெளியே சென்று அவள் கைகளை பிடித்து உள்ளே அழைக்க
மேடம் வீட்டில் அம்மா தனியாக இருப்பாங்க நான் வீட்டுக்கு போகனும் என்று சொல்ல
வெண்பா உடனே விவி உங்க அம்மா ஆதி வீட்டுக்கு போயிட்டங்களாம் இப்போ தான் போன் பண்ணாங்க என்று அவள் சொல்ல
விவேகா வசு கிட்ட மேடம் அப்போ நான் எங்க மாமச்சி வீட்டுக்கு போகனும் என்று சொல்ல
வாட் என்று இன்பா சொல்ல
விவேகா அவனை பார்க்காமல் எங்க மாமா வீட்டுக்கு போகனும் என்று சொல்ல
ம்ம்ம் இவ எந்த ஊரா இருப்பா இந்த மாறி ஸ்லாங் எல்லாம் நான் கேட்டதே இல்லையே என்று இன்பா மனதில் நினைத்து கொண்டான்.
வெண்பா விவேகாவை பார்த்து விவேகா ஈவினிங் வரைக்கும் என் கூட தானே இருப்பேன் அப்டின்னு அம்மா கிட்ட சொல்லிட்டு வந்த இப்போ என்ன கிளம்பி போற என்று அவள் கூற
வசு இப்போது வா மா அது தான் வெண்பா இங்கே தானே இருக்கா நீ எதுக்கு இப்போ தயங்குற இங்க யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க வா என்று அவள் கைகளை பிடித்து அழைத்து செல்ல
விவேகா வெண்பாவை பார்த்து முறைத்து கொண்டே இரு டி உன்னை வச்சுக்கறேன் என்று அவள் அருகில் வந்து சொல்ல
போடி என்று அவள் பழிப்பு காட்டினாள்.
இன்பா இப்போது எதுவும் காட்டிகொள்ளாமல் சோபாவில் அமர்ந்து கொண்டு அவனுடைய போன் நோண்டி கொண்டு இருக்க
வசு வெண்பா கிட்ட ,வெண்பா மா ராகவ் க்கு கேக் கொடுக்கல என்று சமையல் அறையில் இருந்து கொண்டே கேட்க
வெண்பா இன்பாவ பார்த்து அண்ணா உங்களுக்கு கேக் எடுத்து வருகிறேன் என்று அவள் எழுந்து செல்ல
வெண்பா நான் இப்போ தான் கேக் சாப்பிட்டேன் எனக்கு வேணாம் என்று இன்பா விவேகாவை பார்த்து கொண்டே சொல்ல
விவேகாவோ அய்யோ இவன் அமைதியாவே இருக்க மாட்டானா என்று அவள் கண்களை அங்கும் இங்கும் அலை பாய விட்டு தன் கூந்தல் கற்றை முடிகளை ஒதுக்க
வெண்பா இன்பாவ பார்த்து அண்ணா எப்போ சாப்பிடீங்க எனக்கு தெரியாதே என்று அவள் சொல்ல
இன்பா அவளிடம் அந்த கேக் என்ன flavour அப்டின்னு சொல்ல வெண்பா அண்ணா நிஜமா சாப்பிடீங்களா
ம்ம்ம் நிஜம் தான்
விவேகா இன்பனை பார்க்கவே இல்லை அவன் புறம் திரும்பவே இல்லை.
சாப்பிடும் நேரம் வந்தது வசு மூவரையும் அழைக்க, வெண்பா முதலில் அமர்ந்து கொள்ள,
வெண்பாவின் அருகில் விவேகா அமர்ந்து கொள்ள,
விவேகாவின் அருகில் இன்பா அமர அவள் எழுந்து நின்றாள்.
வெண்பா அவளை பார்த்து ஏய் என்னாச்சு உடக்காரு என்று சொல்ல வசு சமையல் அறையில் இருந்து வெளியே வந்தவள் விவேகா நிற்பதை பார்த்து
என்னாச்சு மா உட்காரு என்று சொல்ல வேறு வழி இல்லாமல் அவள் அமர
மாம் உங்க கெஸ்ட் அ நான் கடித்து விழுங்கி விட மாட்டேன் மா ஓவரா பண்றாங்க என்று இன்பா சொல்ல
ராகவ் என்று அதட்ட பெரிய ட்ராமா குயின் மா அந்த girl ஸீன் create பண்றாங்க என்று சொல்ல
ராகவ் வீட்டுக்கு வந்தவங்க கிட்ட இப்படி தான் பேசுவியா உன்னோட எல்லா characters ம் அப்டியே உங்க அப்பா மாறி இப்போ ரொம்ப கோவம் வேற என்று வசு சொல்ல
விவேகா மனதில் ம்ம்ம் இவனையும் திட்ட ஆள் இருக்கு என்று மெலிதாக சிரித்தாள்.
அனைவருக்கும் வசு பரிமாற வெண்பா சாப்பிட்டு விட்டு உடனே ஆண்ட்டி செம்ம வேற level பேசாமல் நான் இங்கே இருந்தால் நல்லா இருக்கும் வகை வகையா சாப்பிடலாம் என்று சொல்ல
விவேகா அடி பாவி இந்த ஒரு dialogue வச்சு எல்லாரையும் உன் கை குள்ள போட்டுகிற
காலையில் என் அம்மா கிட்ட இதை தானே டி சொன்ன என்று அவள் காதுக்கு அருகில் வந்து சொல்ல
வெண்பா “விடு விடு கண்டுகாத,
“நமக்கு சோறு தான் முக்கியம் “.
இப்போது மூவரும் சாப்பிட்டு கொண்டு இருக்க இன்பா மனதில் இவளை இப்போ எதுவும் செய்யனும் என்று
இன்பா அவன் வேலைய ஆரம்பித்தான்.
தொடரும்….
Episode 45,
“நமக்கு சோறு தான் முக்கியம் “.
இப்போது மூவரும் சாப்பிட்டு கொண்டு இருக்க இன்பா மனதில்
நானும் வந்ததில் இருந்து பார்க்கிறேன் இவ ரொம்ப ரொம்ப ஓவரா சீன் போடறாளே இவளை சும்மா விட கூடாது ஏதாவது செய்தே ஆகணும் இன்பா என்று அவன் மனதில் சொல்லி கொண்டு இருக்க
அவன் மனமோ டேய் இவ்ளோ நேரம் அவளை சும்மா விடல டா நீ என்ன பண்ணுன அப்டின்னு உனக்கே தெரியும் என்று விவேகாவுக்காக பேச
Brain நீ சொல்றது சரி இன்பா அவ இன்னிக்கு முதன் முதலில் உன் வீட்டுக்கு வந்து இருக்கிறாள் அவளை நன்றாக கவனித்து அனுப்ப வேண்டும்.
அனைவரும் சாப்பிட்டு கொண்டு இருக்க விவேகாவின் இடையில் இன்பா ஒரு கையில் கிள்ளி விட்டு எதுவும் நடக்காதது போல் அவன் சாப்பிட
அவன் கிள்ளிய வேலையில்
அய்யோ ! அம்மா!
என்று சொல்லி விவேகா இன்பனை முறைக்க முடியாமல் மனதுள்
இடியட்!
இடியட் !
தண்ணீர் எடுத்து ஒரு டம்ளர் முழுவதும் குடிக்க
இப்போது வசு அவளை பார்த்து என்னாச்சு மா என்று கேட்க
விவேகா தன் முகத்தை இயல்பாக வைத்து கொஞ்சம் மிளகாய் சாப்பிட்டு விட்டேன் அது தான் மேடம்
காரமாவா இருக்கு அதுக்கே உன்னோட உதடு இப்படி சிவந்து போச்சே என்று கேட்க
இப்போது இன்பா மெலிதாக புன்னகை செய்தான்.
விவேகாவுக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை.
தன் உதடுகளை தொட்டு பார்த்தவள் அது எல்லாம் இவன் இவனால் தான் என மனதில் நினைத்து கொண்டு இருக்கும் வேலையில்
உனக்கு பிடிச்சு இருக்கா , நல்லா இருந்ததா என்று இன்பா கேட்க
விவேகா இப்போது அதிர்ந்து இன்பனை பார்க்க
இன்பா அவளை பார்த்து இரு புருவத்தை தூக்கி கேட்க
வசு இப்போது எப்படி இருக்கு சொல்லு மா
என்னோட சமையல் பத்தி எதுவும் நீ சொல்லவே இல்லை என்று கேட்க
இப்போது ம்ம்ம் சொல்லுங்க!! மிஸ் விவேகா,
அம்மா கேட்கிறார்கள் தானே என்று அவளை பார்த்து ஒரு கண் சிமிட்டினான்.
இப்போது விவேகா மனதில் அய்யோ இப்போ நான் என்ன சொல்றது நான் நல்லா இருக்கு அப்டின்னு சொன்னா
இவன் வேற முத்தம் கொடுத்து நல்லாஇருக்கா அப்டிங்கர அர்த்தம் கொண்டு பேசுகிறான்
இப்போ நான் நல்லா இல்லை அப்டின்னு சொன்னா வசு மேடம் என்னை சாப்பாடு நல்லா இல்லை என்று நினைப்பார்கள் என்று இவள் தன் தட்டில் கோலம் போட
ம்ம்ம் சொல்லு விவேகா உனக்கு பிடிக்கலையா
விவேகா வசுவ பார்த்து மேடம் நீங்கள் சூப்பரா சமைக்கிறீர்கள் உங்க சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்ல
வசு இப்போது புன்னகைத்தாள்.
இப்போது விவேகா வெண்பா என்ன செய்கிறாள் என்று பார்த்தால் அவள் நன்றாக ஒரு வெட்டு வெட்டி கொண்டு இருந்தாள்.
அனைவரும் அமைதியாக சாப்பிட்டு கொண்டு இருக்க இன்பா விவேகாவின் கைகளை கோர்த்து கொண்டான்.
விவேகா இவன் வேற ஒரு மாதிரி சுத்திட்டு இருக்கானே என்று அவள் தன் கைகளை எடுத்து கொள்ள முயல
ஆனால் இன்பா எதுவும் செய்யாதது போல அவன் பொறுமையாக சாப்பிட்டு கொண்டு இருந்தான்.
விவேகாவுக்கு மிகவும் பயமாக இருந்தது வசு பார்த்து விட்டால் என்ன ஆகும் என்று அவளுக்கு ஒரு நிமிடம் வியர்வையே வந்து விட்டது.
வசு இப்போது சமையல் அறைக்கு ஒரு பொருள் எடுத்து வர எழுந்து போக
விவேகா அவனிடம் கைய விடுங்க பிலீஸ் என்று அவள் வாய் மொழியாகவே சொல்ல
இன்பா அவளை யாரோ என்பது போல பார்க்க சரியாக அந்த நேரம் வசு வர
இன்பா கிட்ட அவள் ஏதோ கேட்டது தெரிய அம்மா இந்த girl க்கு கொஞ்சம் ரசம் வேணுமாம் என்று சொல்ல
விவேகா இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் ஆ ஆமா மேடம்
ரசம் சூப்பர் ஆ இருக்கு கொஞ்சம்
எனக்கும் எப்படி செய்யறது அப்டின்னு சொல்லித்தாங்க என்று சமாளிக்க
வசு மிகவும் சந்தோஷமாக இந்தா விவேகா நல்லா சாப்பிடு மா வசு அவளுக்கு பரிமாறினாள்.
இப்போது வசு சிரித்து கொள்ள என்னாச்சு ஆண்ட்டி விவேகா ரசம் கேட்டது அவ்ளோ காமெடி இல்லையே என்று சொல்ல
வெண்பா அடி என்று வசு சொல்ல
ஆண்ட்டி சொல்லுங்க எதோ விஷயம் இருக்கு அந்த ரசத்தில் ம்ம்ம் எனக்கு ஆர்வமா இருக்கு என்று சொல்ல
அது ஒன்னும் இல்லை மா நான் முதன் முதலில் இன்பாவின்அப்பா வீட்டுக்கு கல்யாணம் ஆகி வரும்போது இன்பா பாட்டி தான் சமையல் அப்போ எனக்கு அவ்வளவா சமைக்க வராது
என்னை பார்த்து எல்லாரும் போலீஸ்காரி இவ நம்ப பையனுக்கு சமைச்சு போடுவாளா அப்படி இப்படி ன்னு கண்ட படி பேச ஆனாலும் என் மாமியார் எனக்கு ஆதரவாக இருக்க அப்போ தான் நான் அவரிடம்
விவேகா சொல்வது போல அன்று நான் என் மாமியார் கிட்ட சொன்னேன் என்று வசுமதி சொல்ல
இப்போது வெண்பா மனதுள் சிரிக்க இங்கு விவேகாவுக்கு வியர்க்க தொடங்கியது.
இல்ல மேடம் எனக்கு நல்லா சமைக்க தெரியும் நானும் என்னோட அப்பாவும் சேர்ந்து அம்மாவுக்கும் அண்ணாக்கும் செய்து தருவோம் .
வாரத்தில் எங்க வீட்டில் 7 நாளும் நானும் அப்பாவும் தான் இரவு உணவுக்கு என்று அவள் சொல்ல
வெண்பா அவளை பார்த்து அப்படி என்னடி சமைப்ப என்று கேட்க
வேற என்ன உப்மா தான் என்று சொல்ல இப்போது இன்பாவுக்கு புரை ஏறியது.
வசுமதி வாய் விட்டே சிரித்து விட்டாள் . விவேகா கேள்வியாக ஏன் மேடம் இப்படி சிரிக்கிறீங்க
அது ஒன்னும் இல்ல எங்க வீட்டில் சில பேருக்கு
உப்மா அப்படினா சுத்தமா பிடிக்காது.
வெண்பா விவேகாவை பார்த்து கொண்டே ஆண்ட்டி நீங்க வேற
விவேகா உப்மாவுக்கு இங்க நெறைய fans இருக்காங்க என்று அவள் சொல்ல
அப்படியா அந்த அளவுக்கு செய்து விடுவாயா என்று ஆச்சர்யம் நிறைந்த குரலில் என்று வசு கேட்க
ம்ம்ம் ஆமா மேடம் நாங்க middle கிளாஸ் family வகை வகையாக சமைத்து சாப்பிட எங்களுக்கு நேரமும் இருக்காது பணமும் இருக்காது .
சாப்பிட்டால் போதும் மேடம் அவ்ளோ தான் என் i mean எங்கள் வாழ்க்கை என்று சொல்ல
வசுமதி க்கு இதை கேட்டு கஷ்டமாக இருந்தது. இன்பா விவேகாவின் கைகளை மென்மையாக பிடித்து கொள்ள
சரி ok மா அப்படி என்ன மாயம் செய்து உப்மா செய்கிறாய் என்று எனக்கு நீ சொல்லி தா நானும் try பண்றேன் என்று வசு சொல்ல
வேண்டாம் மேடம் என்னோடது அவ்ளோ நல்லா இருக்காது என்று விவேகா சொல்ல
அப்போ நீ எனக்கு செய்து தர மாட்டியா என்று கேட்க
ம்ம்ம் நான் உங்களுக்கு நிச்சயமாக ஒரு நாள் செய்து தருகிறேன் என்று விவேகா கூறி தன் கைகளை கழுவ எழுந்து செல்ல இப்போது இன்பா அவள் கைகளை விட்டுவிட்டான்.
விவேகா sink ல கைகளை கழுவி விட்டு அங்கு இருந்த கண்ணாடியை பார்க்க
அந்த நேரம் இன்பா வர விவேகா அவனை பார்த்து விட்டு கோபமாக செல்ல போக
இன்பா அவளது கையை ஒரு கையால் பிடித்து கொண்டே கழுவி விட்டு அவளது முந்தில கைகளை துடைத்து விட்டு அவளை நெருங்கி அவளது கண்களில் ஒரு இதழ் பதிக்க அருகில் வர
விவேகா இன்பனை தடுக்க அப்பொழுது இன்பா அவளை முறைக்க அவள் அவன் கைகளை உதறி விட்டு செல்ல இரண்டே எட்டில் அருகில் விவேகாவை இழுத்தவன்.
ஹே நான் உன்கிட்ட நல்லவனாக இருக்க try பண்றேன்
என்னை கெட்டவனா மாத்திடாத டி
நீ தாங்க மாட்ட
அப்புறம் நீ ரொம்ப கஷ்ட படுவ
என்று சொல்லி விவேகாவின் அந்த மச்சம் இருக்கும் கண்ணுக்கு முத்தம் வைத்தவன் .
அவளை விட்டு சென்று விட்டான்.
விவேகாவுக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை அவள் மனம் இன்பா தூரத்தில் இருந்தால் எப்போது அருகில் வருவான் என்று சொல்லும்
இன்பா அருகில் இருந்தால் அவனது சீண்டலுக்கு இவள் தான் பலிஆடு அவளை ஏதாவது செய்து கொண்டே இருப்பான்.
இப்போது மனம் மெல்ல மெல்ல அவன் பக்கம் போக
விவேகா என்ன செஞ்சு கிட்டு இருக்க விவேகா
அவன் இப்படி தான் பேசி உன்னை மயக்கி விடுவான் .
நீ ஆல்ரெடி இன்பா அப்டிங்கற கிணற்றில் விழுந்து விட்டாய் .
இல்லை இல்ல நான் விழ வில்லை நான் அவனிடம் இருந்து தூரம் செல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.
அவள் வெளியே வர வசுவும் , வெண்பாவும் பேசி கொண்டு இருக்க இன்பா அவர்களை பார்த்தவாறு அமர்ந்தவன் தன் போன் நோண்டி கொண்டு இருந்தான்.
விவேகா நேராக வந்து வெண்பாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.
அப்போது வெளியே இருந்து வசு மாம் எங்கே இருக்கீங்க என்று கேட்க
அங்கு யாரது என்று விவேகாவும், வெண்பாவும் திரும்பி பார்க்க அங்கு அருண் உள்ளே வந்தான்.
உடனே அங்கு வெண்பா, இன்பா , அமர்ந்து இருக்க வசு சாப்பிட்டு கொண்டு இருக்க அருண் கண்களுக்கு விவேகா மட்டுமே தெரிந்தாள்.
அருண் அவளையே பார்த்து கொண்டு வருவதை பார்த்த இன்பாவுக்கு மிகவும் ஆத்திரம் கோபாமாக வந்தது.
இன்பா மனதில் இவனை நாம் மறந்து விட்டோமே இவனுக்கு தர வேண்டியது நிறைய உள்ளது.
அருண் அவளிடம் கை அசைத்து விட்டு நேராக வசு கிட்ட போய் விவேகாவை பார்த்து கொண்டே பேசி விட்டு பின் இவர்கள் அருகில் வர
“ஹே டியர் இங்கே என்ன பண்ற “, “நான் நாளைக்கு காலேஜ் ல உன்னை பார்க்கலாம் ன்னு நினைத்தேன்” .
ஆனால்” நீ இங்க இருப்ப அப்டின்னு எஸ்பக்ட் பண்ணல டியர்”!
விவேகா இன்பனை கண்டு கொள்ள வில்லை அது ஒன்னும் இல்ல சீனியர் இன்னிக்கு வெண்பாவுக்கு பிறந்த நாள் அது தான் நான் அவ வீட்டுக்கு வந்தேன் .
அவ என்னை இங்க கூட்டி வந்து விட்டாள் என்று சொல்ல
வெண்பா happy birth day டி என்று அருண் முன்னவே அவளுக்கு பரிசு வாங்கி வைத்து இருந்தான்.
இந்தா வெண்பா என்று ஒரு சதுர வடிவில் உள்ள box கொடுக்க அதில் அவளுக்கு பிடித்த டார்க் சாக்லேட்டு இருந்தது.
Thanks அருண் உன்னோட அன்புக்கு எனக்கு ஒன்னு போதும் என்று அதில் இருந்து ஒன்று மட்டும் எடுத்து கொண்டாள்.
இங்கு இன்பா அருண் என்ன செய்கிறான் என்று தன் போனில் front கேமரா on செய்து பார்த்து கொண்டு இருந்தான்.
அருண் இப்போது விவேகா அருகில் வந்து டியர் இந்தா உனக்கு பெல்ஜியம் சாக்லேட்டு என்று ஒரு இதய வடிவில் உள்ள box ல கொடுக்க
விவேகா அதனை சதாரணமாக தான் எடுத்து கொண்டாள் .
அதை வாங்க போக அதற்குள் இன்பா வந்து அனல் வீசும் பார்வையில் விவேகாவை பார்த்து விட்டு அருண் புறம் திரும்பி
அருண் வா இந்த சாக்லேட்டு நம்ப தாத்தா வுக்கு ரொம்ப பிடிக்கும் வா நம்ப தாத்தாவை பார்க்க செல்லலாம் என்று சொல்ல
தாத்தா என்ற பெயர் கேட்டதும் அருணுக்கு தூக்கி வாரி போட்டது.
ப்ரோ நான் எதுக்கு தாத்தா வ பார்க்க வரனும் நீங்கள் போய்ட்டு வங்கா நான் வரல என்று அவன் சொல்ல
இன்பா வேகமாக மாம் நானும் அருணும் தாத்தாவை பார்க்க செல்கிறோம் என்று சொன்னவன் விவேகாவை பார்த்து முறைத்து விட்டு
உனக்கு இருக்கு டி என்று மனதில் நினைத்து கொண்டு புருவம் சுருக்கி அவள் முகத்தை மிரட்டும் தொனியில் பார்த்து விட்டு சென்றான்.
விவேகா அவன் முறைப்பு பார்த்து உள்ளே நடுக்கம் இருந்தாலும் அதை வெளியில் காட்டி கொள்ள வில்லை.
வெண்பா அவளிடம் ஏய் என்னாச்சு உனக்கு அண்ணா இருக்கும்போது அருண் கிட்ட சாக்லேட்டு வாங்குற நீ , அவன் உன்னை டியர் ன்னு சொல்றான் நீயும் எதுவும் பேசாமல் அவனிடம் பேசி கொண்டு இருக்கிறாய்.
உன் மனதில் என்ன நினைத்து கொண்டு இருக்கிறாய் என்று வெண்பா அவளிடம் கேட்க
நான் என்ன செய்தேன் உன் அண்ணா இருக்கும்போது நான் ஏன் அருண் கிட்ட பேசாமல் இருக்கணும் என்று விவேகா கேட்க
இன்பா அண்ணாவுக்கு கோபம் வரும் எல்லாம் உன்னால் தான் என்று வெண்பா சொல்ல
என்னால் என்ன?
ஹே நடிக்காத டி ….
தொடரும்…..
Episode 46,
இன்பா அண்ணாவுக்கு கோபம் வரும் எல்லாம் உன்னால் தான் என்று வெண்பா சொல்ல
என்னால் என்ன?
ஹே நடிக்காத டி ..
விவேகா அவளைப்பார்த்து நான் எதுக்கு நடிக்கணும்
நீ பண்றது சரி இல்ல விவேகா அப்படின்னு வெண்பா சொல்ல
ஆமா உனக்கு இங்க என்ன நடக்குது அப்டின்னு தெரியுமா என்றாள் விவேகா
எனக்கு தெரியும் டி
உனக்கு ஒன்னும் தெரியாது வெண்பா உன்கிட்ட நான் இதை தெளிவாக சொல்கிறேன் ஆனால்
இன்று வேணாம் நான் நாளைக்கு சொல்றேன் நம்ப bus ல போகும் போது என்று கூறினாள் விவேகா
ம்ம்ம் சரி ok நானும் வெய்ட் பண்றேன் என்று வெண்பா விட்டு விட்டாள்.
கொஞ்ச நேரம் வசுமதி கிட்ட பேசி விட்டு இருவரும் வெண்பா வீட்டுக்கு சென்றனர் .
வெண்பா கிட்ட விவேகா ஏய் நான் இங்கு தான் இருக்கிறேன் என்று
மித்ரன் சார் கிட்ட சொல்லிடாதே
அப்புறம் அவர் அவன் கிட்ட சொல்லி விடுவார் என்று சொல்ல
ஏய் உனக்கு திமிர் அதிகம் டி எங்க அண்ணா உனக்கு சார்
ஆனால் இன்பா அண்ணா மட்டும் உனக்கு அவன் இவன் அப்டின்னு பேசுற
அப்புறம் கேட்டா நான் நாளைக்கு சொல்றேன் அப்டின்னு ஸீன் போடுற
உடனே விவேகா அவள் சொல்வதை யோசித்தாள்
ம்ம்ம் வெண்பா சொல்வது சரி தான்
இன்பாவின் மேல் நமக்கு எந்த உரிமையும் இல்லை
என்று சொல்லும்போது இதயம் வலித்தது.
சரி நீ சொல்வது சரி தான் இன்பா சார் கிட்ட சொல்லி விட போகிறார் என்று உடனே திருத்தி கொண்டு பேச
வெண்பாவுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது ஏன் டி இப்படி பண்ற
உனக்கு புரியாது வெம்பா என்று அவள் சொல்லிவிட்டு தேவகி என்ன செய்கிறாள் என்று பார்க்க சென்று விட்டாள் விவேகா.
இங்கு இன்பா அருணை அழைத்து கொண்டு வசுவின் அப்பாவை பார்க்க வந்து இருந்தனர்.
ப்ரோ பிலீஸ் நான் இப்படியே ஓடி விடுகிறேன் வேணாம் ப்ரோ என்று அவன் கெஞ்சி கொண்டே வர
இன்பா அவனை பார்த்து நான் உன்கிட்ட என்ன சொன்னேன் என்று அழுத்தமாக கேட்க
அருண் யோசித்தவன் நீங்கள் ஒன்னும் சொல்லவே இல்லையே
உடனே இன்பா அவனை இழுத்து கேட் அருகில் கூட்டி செல்ல
அருண் ப்ரோ நீங்கள் காலேஜ் பக்கம் வர கூடாது அப்டின்னு சொன்னீங்க என்று சொல்ல
நீ வந்தால் என்ன வரவில்லை என்றால் எனக்கு என்ன அந்த girl ஆ கூட்டி கிட்டு நீயே கரெஸ்பாண்டெண்ட் sign போட்டு வேற காலேஜ் கூட்டி போயிருக்க என்று சொல்ல
அய்யோ கண்டு பிடித்து விட்டாரே என்று அருண் நினைக்க
இன்பா அவனை பார்த்து அந்த girl க்கு எதுவும் ஆகி இருந்தால் அதற்கு நீ பொறுப்பு இல்ல எங்க மாம் தான் பொறுப்பு
ஒரு one day od க்கு போய் straight ஆ கரெஸ்பாண்டெண்ட் sign யாராவது இதை நம்புவார்களா.
இதை மட்டும் நான் தாத்தா கிட்ட , அப்புறம் சித்தி அவங்க கிட்ட வேணாம் சித்தப்பா கிட்ட சொல்லட்டுமா என்று மிரட்டல் விட
அருண் sorry ப்ரோ இனி இப்படி எல்லாம் செய்ய மாட்டேன் என்று அவன் நழுவ
அருண் நான் உனக்கே அண்ணன் டா இப்போ நீ தாத்தாவை பார்த்து விட்டு தான் போகனும் என்று உள்ளே இன்பா அழைத்து சென்றான்.
அருணும் இன்பாவும் தாத்தாவை பார்த்து விட்டு கிளம்பும் போது அருண் எதுவும் நடக்கவில்லை என்பது போல் இன்பா கூட வர
இன்பா அவனை பார்த்து எப்டி அருண் நீ இப்படி போய் நம்ப குடும்பத்தில் வந்து பிறந்தாய்
அவரு அவ்ளோ திட்டு உன்னை திட்டுகிறார் நீ எதுவும் நடக்கவில்லை என்பது போல் மிகவும் சந்தோஷமாக இருக்கிறாய் என்று இன்பா தொடர்ந்து பேச
அருண் ப்ரோ இது நீ தானா எப்போதும் ரெண்டு வார்த்தை தான் பேசுவ இன்னிக்கு இவ்ளோ பேசுற யார் கூட சுத்துற என்று கேட்க
ஹே நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு முதலில்
அருண் இன்பனை பார்த்து அது secret ப்ரோ என்று சொல்லி விட்டு வேடிக்கை பார்க்க
சரி நான் உன்னை வீட்டில் கொண்டு விடுகிறேன் என்று இன்பா சொல்ல
இல்லை ப்ரோ நான் டியர் ஆ என்று தன் நாக்கை கடித்து கொண்டு வெண்பாவை பார்க்க போகனும் அவளுக்கு இன்னிக்கு birth day அதனால தான் என்று சொல்ல
இன்பா அருணை பார்த்து
ok அருண் ஈவினிங் இன்னிக்கு சரவணன் வெண்பாவுக்கு birth day அப்டிங்கிறதால் சீக்கிரம் வந்து இருப்பான்
வா உன்னை நான் வெண்பா வீட்டில் விட்டு விடுகிறேன் என்று சொல்ல
ப்ரோ ஸ்டாப் தி கார் நான் நாளைக்கு காலேஜ் ல மீட் பண்ணிக்கிறேன் என்று சொல்லி அவன் விட்டால் போதும் என்று ஓடி விட்டான்.
இன்பா நேராக அவன் வீட்டுக்கு சென்று அவன் அம்மாவிடம் கொஞ்ச நேரம் பேசி விட்டு நேராக தன் அறைக்கு செல்லாமல் சுபாவின் அறைக்கு சென்றான்.
ஏன் என்றால் முதல் முறையாக அவளை அவன் வீட்டில் பார்த்த இடம் அல்லவா .
இன்பா மனதில் விவி எனக்கு மட்டும் நீ இல்லனா அவ்ளோ தான் டி
நீ தான் என்னோட பலவீனம் டி
உன்னை என்னால் விட்டு இருக்க முடியாது பேபி
நீ என்னோட பக்கத்தில் எப்போதும் இருக்க வேண்டும்
நீ இப்படி என் கிட்ட நடந்து கொள்வது
என்னால் என்னோட வேலையில் கவனம் செலுத்த முடியல டி
நான் மட்டும் உன்னை எனக்கு சொந்தமாக்கி பக்கத்தில் வைத்து கொண்டாள் நிம்மதியாக இருக்கும்.
நான் எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் என்னோட வேலைய செய்வேன் பேபி
இன்னும் கொஞ்ச நாள் ஏன் கூடிய சீக்கிரம் உன்னை உனக்கே தெரியாமல் என்னோட name ல join பண்ணிடுவேன் டி
அப்போ தான் எனக்கு நிம்மதி என்று இன்பா அவன் நினைத்ததை நடத்த திட்டம் தீட்டினான்.
இப்படி பேசும் இன்பா அவளை சீக்கிரமே தூக்கி எறிந்து பேச போகிறான் அதுவும் அவனுக்கு தெரிந்தே செய்ய போகிறான்.
இன்பா அவளை நினைத்து கொண்டே சிறிது நேரம் இருந்தவன் வெண்பா சொன்னது நியாபகம் வர வெண்பாவின் பிறந்த நாளுக்கு அவளது வீட்டுக்கு செல்லலாம் என்று போய் அதற்காக தன்னை தயார் படுத்தி கொண்டான்.
ஏன் என்றால் விவேகா அங்கு தானே இருக்கிறாள் அவளையும் பார்க்க வேண்டும் அங்கு சரவணன் இருப்பதால் சந்தேகம் வராமல் ஈவினிங் செல்லலாம் என்று முடிவு எடுத்தான்.
மாலை ஆறு மணி இருக்கும் இன்பா மித்ரன் வீட்டுக்கு செல்ல மித்ரன் அவனை பார்த்து
என்ன மச்சி நான் உன்னை எப்போவோ எதிர்பார்த்தேன் நீ என்னடானா இவ்ளோ லேட்டா வந்து இருக்க என்று கிண்டல் செய்ய
இன்பா வந்ததும் அவனை முறைத்து விட்டு நேராக தேவகி கிட்ட போய் கொஞ்ச நேரம் பேசி விட்டு மித்ரன் அருகில் வந்து சுற்றியும் பார்க்க
என்னடா உன்னோட கேடிய தேடுகிறாயா என்று மித்ரன் கேட்க
சரவணன் வந்து விட்டானா என்று கேட்க
இல்லை மச்சி அவன் வர இன்னும் 1 ஹௌர் ஆகும் என்று சொல்ல
இப்போது இன்பாவுக்கு நிம்மதி
ஏய் இதை நீ எனக்கு போன் ல சொல்லி இருந்தால்
நான் அவ கூட சேர்ந்து இங்கே வந்து இருப்பேன் என்று சொல்ல
அவ கூட சேர்ந்து வந்து இருப்பியா ?
என்னடா சொல்ற ?”அவ உங்க வீட்டுக்கு வந்தாளா “!என்று மித்ரன் ஆவலாக கேட்க
ஆமா மச்சி என்று cool ஆ பதில் சொன்னான்
ஏய் நீ காலேஜ்லயே அவளை சும்மா விட மாட்ட
இன்பா அவனை பார்த்து அப்படி எல்லாம் இல்லை டா
நீ பொய் சொல்ற இன்பா நீ தான் என்கிட்ட சொன்ன
சரி காலேஜ் ல அப்படி இருந்தாலும் வீட்டில் அம்மா இருக்காங்க டா அப்படி எல்லாம் இல்லை என்று இன்பா சமாளிக்க
உடனே மித்ரன் இதை பீச் ல யாரவது பொறி சாப்பிடுவாங்க அவங்க கிட்ட சொல்லு உன்னை பத்தி எனக்கு தெரியாதா
அவ ஒரு கேடி நீ போலீஸ் சரியான பொருத்தம் தான் என்று அவன் சொல்ல
அது தான் உனக்கு தெரியுது தானே
அப்போ இதை பத்தி இனி பேசாதே என்று சொல்லி விட்டு இப்போ எங்கே இருக்கா ? என்று இன்பா கேட்க
அவ வெண்பா கூட உள்ளே இருக்கா என்று மித்ரன் கூறினான்.
சரி இப்போ அவளை வெளியே வர வை டா
இன்பா இது சரி இல்லடா நீ மட்டும் என் கண்ணு முன்னாடி இப்படி பண்ற நான் மட்டும் இன்னும் single ஆ இருக்கேன் அப்டின்னு உனக்கு வருத்தம் இல்லயா மச்சி
Dont worry கவலை படாதே மித்ரன் நாளைக்கு நம்ப காலேஜ் போலாம் அங்கே போய் நீ கமிட் ஆக try பண்ணு என்று இன்பா கூறினான்.
நீ சொல்றது சரி தான் இப்போது காலேஜ் ல நமக்கு என்ன வேலை இருக்கு என்று மித்ரன் கேட்க
இல்ல மச்சி சும்மா ஒரு ride மாறி காலேஜ் ஸ்டுடெண்ட்ஸ் ம் ஏதவதும் தவறான வழியில் இந்த பெட் மேட்ச், bike ரேஸ், online ரம்மி இந்த மாதிரி ஏதாவது இதை பத்தி கமிஷனர் ஆஃபீஸ் ல ஒரு ரிப்போர்ட் சப்மிட் பண்ணனும்.
நமக்கு இன்னொரு தடவை spr காலேஜ் போற சான்ஸ் கெடைச்சு இருக்கு மச்சி
அப்டியே போய்ட்டு அந்த குரு ஏதோ ஒரு பொண்ணு பத்தி சொன்னானே
அது யாரு எந்த batch செட் அந்த பெண்ணுக்கும் இந்த கேஸ் கும் எதுவும் தொடர்பு இருக்கா
அப்டின்னு கண்டு புடிக்கனும் மச்சி
அந்த தேஜு அவ கிட்ட பேசணும் மச்சி அவ மட்டும் அப்ருவர் ஆனால் கிலோஸ் மச்சி அந்த குரு பிரகாஷ்
அன்னிக்கு விவேகாவ அவன் பார்த்த பார்வையே சரி இல்லை டா எனக்கு அப்போவே அவனை சுட்டு தள்ளணும் போல இருந்தது.
சரி சரி போதும் நான் ஹாப்பி மோட் ல இருக்கேன் டா என்னை டென்ஷன் பண்ணாத விடு அவளை வெளியே வர வை என்று சொல்ல
வெண்பா இங்க வா என்று மித்ரன் அழைக்க
என்னடா என்று வெண்பா வெளியே வர அங்கு இன்பனை பார்த்து விட்டு
புரிந்தது மன்னா என்பது போல்
அவள் விவேகாவை அழைக்க வெளியே வந்தவள் அங்கு இன்பனை பார்க்க அவன் இவளை பார்த்து இரு புருவத்தை தூக்க
இவள் உடனே முறைத்துவிட்டு உள்ளே செல்ல போக
தேவகி அங்கு வந்து
விவேகா அம்மா எப்போ வருவாங்க நீ சொன்னாயா என்று கேட்க
இப்போது வெண்பா சிரிக்க விவேகாவுக்கு தூக்கி வாரி போட்டது.
அவள் இல்லை அம்மா அவங்க எங்க மமாச்சி வீட்டுக்கு போயிட்டாங்க வெண்பாவுக்கு கால் பண்ணி சொன்னாங்க என்று விவேகா சொல்ல
ஓ அப்படியா வெண்பா நீ அவங்கள கூப்பிட்டாயா இல்லயா
அம்மா நான் கூப்பிட்டேன் இன்னிக்கு ஆஃபீஸ் லீவு அதனால இவங்க மாமா நாங்க கிளம்பியதும் வந்து கூப்பிட்டு போயிட்டாங்க மா என்று சொன்னாள்.
சரி மா என்றவள் இன்பனை பார்த்து இன்பா இந்தா இது உனக்கு பிடிக்கும் தானே நானே செய்தேன் என்று
மெது வடை தேங்காய் சட்னி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொடுக்க அவன் ரொம்ப thanks ஆண்ட்டி என்று வாங்கி கொண்டான்
மித்ரன் க்கு பிடித்த அவல் பாயசம் நாட்டு சக்கரை போட்டு செய்தது அதை கொடுக்க மித்ரன் வாங்கி குடிக்க
வெண்பா தேவகியை பார்த்து அம்மா என்ன நீ இன்னிக்கு உனக்கு நான் தான் பிறந்தேன் நீ எதுக்கு அவனுக்கு பாயசம் செஞ்சு கொடுத்த என்று சொல்ல
இன்பா மெலிதாக புன்னகை செய்ய, விவேகா வாய் விட்டே சிரித்து விட்டாள்.
இன்பா அவள் சிரிப்பது பார்த்து ரசிக்கதவரவில்லை
இங்கு மித்ரன் ஏய் ஒழுங்கா உன் வேலைய பாரு அம்மா எனக்கு செஞ்சு தந்தா உனக்கு என்ன டி என்று இருவரும் சண்டை போட
அப்போது பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது அது யார்
சரவணன் தான் என்னாச்சு வெண்பா குட்டி இப்போது எதுக்கு சண்டை போடுறீங்க என்று கேட்க
சரவணனை பார்த்து மித்ரன் அமைதியானன்
எப்போ வந்த என்று அழுத்தமாக மித்ரனை பார்த்து கேட்க
காலையில் என்று மித்ரன் கொஞ்சம் பயந்து கொண்டே சொல்ல
சரவணன் இப்போது இன்பனை பார்த்து விட்டு எதுவும் சொல்லாமல் கிளம்பி முகம் கழுவ சென்றான்.
வெண்பா மித்ரனை பார்த்து டேய் இப்போ நீ நல்லா மாட்டின இனி என் அண்ணன் வந்து விட்டான் என்று வெண்பா சொல்ல
ஏய் போடி நான் உன்னை காலேஜ் ல பார்த்து கொள்கிறேன் என்று சொல்ல
விவேகாவுக்கு தான் அதிர்ச்சி இது முதல் அதிர்ச்சி
இன்பா விவேகாவை பார்த்து சிரித்து கொண்டான்.
மித்ரன் இப்போது இன்பா கிட்ட ???
டேய் அந்த வருண் குடும்பம் உங்கள் வீட்டுக்கு குடி வந்தாங்க தானே வா இன்பா ஒரு முறை அவங்க அம்மா தங்கை எப்டி இருகாங்க அப்டின்னு பார்த்து விட்டு வந்து விடலாம் என்று சொல்ல
இப்போது வெண்பா மனதில் மாட்டி கிட்ட டி விவேகா என்று சிரிக்க
விவேகாவுக்கு இது இரண்டாவது அதிர்ச்சி???
Episode 47,
மித்ரன் இன்பாவிடம் வருண் குடும்பத்தை சந்திக்க வேண்டும் என்று கூறியவுடன் விவேகாவுக்கு தூக்கி வாரி போட்டது.
வெண்பா அவளை பார்த்து சிரிக்க விவேகா முகத்தை தீவிரமாக வைத்து கொண்டு இருக்க உடனே மித்ரன் அதை பார்த்து விட்டு
என்னாச்சு விவேகா உன்னோட முகம் ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்கு எதுவும் பிரோப்ளேமா என்று கேட்க
ஒன்னும் இல்ல சார் என்று சொல்ல உடனே அங்கு வந்த தேவகி
என்னமா அவனை போய் சார் அப்டின்னு சொல்ற நீ சரவணனை அண்ணா அப்டின்னு தானே சொல்ற இவனையும் அண்ணா அப்டின்னு கூப்பிடு மா என்று தேவகி சொல்ல
உடனே இப்போது அவள் சரி அம்மா என்று சொல்லி விட்டு இல்லை அண்ணா என கஷ்ட பட்டு சொல்ல
ம்ம்ம் நல்ல பொண்ணு நீ தான் இவளும் இருக்காளே கொஞ்சம் கூட மரியாதை தெரியாதவ என்று வெண்பாவை திட்ட
உடனே அவள் என்னை திட்ட வில்லை என்றால் தூக்கம் உனக்கு வராதே saddist தேவகி என்று சொல்ல
எல்லாம் சரவணன் கொடுக்கிற இடம் டி உனக்கு என்று
இப்போது தேவகி விவேகாவை பார்த்து மித்ரன் இன்பா ரெண்டு பேரும் ஒரே வயசு தான் மாசம் வித்தியாசம் மட்டும் தான் மித்ரன் ஒரு மாசம் சின்ன பையன் மா
நீ இன்பாவை கூட அண்ணா அப்டின்னு கூப்பிடலாம் இது நம்ம வீடு தானே என்று சொல்ல
இப்போது வெண்பா, மித்ரன், இன்பா மூவரும் சேர்ந்து
அண்ணவா !!!
என்று சொல்ல விவேகாவுக்கு ஒரே சிரிப்பது தான் வாய் இரு கைகளால் மூடி கொண்டு தன்னை கட்டு படுத்தி கொண்டு
ம்ம்ம் சரி மா நீங்கள் சொல்வதை நான் மீறவே மாட்டேன் என்று சொல்ல
இப்போது மித்ரன் வாய் விட்டு சிரித்தான்.
தேவகி அங்கு இருந்து சமையல் அறைக்கு செல்ல
இன்பாவுக்கு மிகவும் கோபமாக வந்தது.
அண்ணா அய்யோ அண்ணா நம்மள அப்படி கூப்பிட்டா என்னோட காது அதை நான் கேட்டா அந்த நிமிடம் என்று யோசிக்க
விவேகா அவனை பார்த்து அண்ணா என்று சொல்ல வர இன்பா அவளை பார்த்து முறைக்க
இப்போது இன்பா வாய் மொழியாகவே கூறினான்.
ஏய் இப்போ மட்டும் நீ கூப்பிட்ட உன்னை கொன்றுவேன் டி என்று விவேகாவை பார்த்து சொல்ல
மித்ரன் அண்ணா உங்க போன் கொடுங்க நான் வீட்டுக்கு கால் பண்ணனும் என்று கேட்க
மித்ரன் சிரித்து கொண்டே இந்தா மா தங்க்ச்சி என்று நீட்ட வாங்கி கொண்டு வெளியே செல்ல
வெண்பா இன்பனை பார்த்து
அண்ணா நீங்கள் கவலை பட வேணாம் இந்த பிராமண பொண்ணுங்க எல்லாம் அவங்க கணவர அண்ணா அப்டின்னு தான் கூப்பிடுவாங்க
சோ நீங்கள் அப்படி எடுத்துகொங்க என்று சொல்ல
இன்பா வெண்பாவை பார்த்து சிரித்தான்.
மித்ரன் வெண்பாவை ஏய் நீ எனக்கு தங்கையா இல்ல இவனுக்கு தங்கையா அவனோட காதலுக்கு பச்சை kodi தூக்கி கிட்டு சுத்துற
ஏய் போடா உனக்கு எல்லாம் காதல் இல்ல கல்யாணம் கூட நடக்காது நீ இப்படியே தான் சுத்துவ என்று இருவரும் சண்டையை ஆரம்பிக்க
இன்பா விவேகாவை பார்க்க வெளியே சென்றான்.
விவேகா அங்கு சென்றவள் தன் அம்மாவுக்கு போன் செய்து அம்மா எப்போ வருவீர்கள் என்று கேட்க
நான் வர late ஆகும்
சாவி அங்கு உள்ள பூ ஜாடியில் வைத்து இருக்கிறேன் நீ வீட்டுக்கு போ நான் வந்து விடுகிறேன் என்று சொல்ல சரி என்று போன் வைத்தாள்.
அவள் சரி நான் போறேன் என்று சொல்லி அவள் போன் வைத்து விட்டு திரும்ப அங்கு இன்பா இவளை கோபமாக பார்க்க
விவேகா இன்பா அருகில் சென்று அண்ணா என்று சொல்லி பின் சிரித்து கொண்டே
கிட்ட கொடுத்து விடுங்கள் (அண்ணா_ கொடுத்து விடுங்கள்)
என்று போன் நீட்ட இன்பா போனோடு அவளையும் சேர்த்து இழுத்தவன்
இப்போ சொல்லு டி என்று சொல்ல
அண்ணா என்று ஆரம்பிக்கும் முன் அவளது கீழ் உதட்டை கைகளில் இழுத்தவன்
சொல்லு டி
வலிக்கும் படி அவள் உதடுகளை கிள்ளினான்.
விடுங்கள் சார் எனக்கு வலிக்குது என்று பேச முடியாமல் பேச
உடனே அவன் உனக்கு வாய் வர வர ரொம்ப அதிகமா போச்சு
விவேகா முதலில் வாய அடக்கு டி இல்லை நான் அடக்க வேண்டியது வந்திடும்
பிலீஸ் இப்போ என்ன நான் உங்களை அண்ணா அப்டின்னு கூப்பிட கூடாது
அவ்ளோ தானே சார்
நான் எதுக்கு உங்களை அண்ணா ன்னு கூப்பிட போறேன்
எனக்கே கூட பிறந்த ஒரு அண்ணன் இருக்கும்போது
நான் எதுக்கு சார் உங்களை அண்ணா அப்டின்னு கூப்பிடனும்
என்று வார்த்தைக்கு வார்த்தை வேண்டும் என்றே அண்ணா என்று விவேகா சொல்ல
அதில் கடுப்பான இன்பா ஓ வார்த்தை ஜாலமா என்று
அவள் இதழ்களை வருட விவேகாவோ இன்பாவின் முகத்தை பார்க்க முடியாமல் தவித்தாள்.
என்னை விடுங்கள் சார் நான் போகனும் என்று அவள் கொஞ்சம் திக்கி திணற சொல்ல
விவி பேபி நான் இன்னிக்கு காலைல தான் இந்த லிப்ஸ் ஆ கவனித்தேன்
இப்போ அதை கவனிக்கணும் னு அந்த லிப்ஸ் சொல்லுது டி என்று அவன் மயக்கும் குரலில் சொல்லி கொண்டே இதழ் வருடி பின் சுண்டி விட
விவேகாக்கு இப்போது வலிக்க தன்னிலைக்கு வந்தவள் அவனை பார்த்து தள்ளி போங்க என்று சொல்ல
இனி என்கிட்ட தேவையில்லாமல் ஏதாச்சும் சீண்டி பார்த்த அப்புறம் உன்னை மொத்தமாக கவனித்து விடுவேன் டி என்று சொல்லியவன் அவளை விட
விவேகா அவனின் வார்த்தைக்கு உண்டான அர்த்தம் என்ன என்று புரிந்து கொண்டவளாய் அவன் முகத்தை பார்க்க முடியாமல் கீழ குனிந்து கொண்டே ஓடி விட்டாள்.
உள்ளே சென்ற விவேகா நேராக வெண்பா கிட்ட போய்
ஏய் சீக்கிரமே கேக் வெட்டு நான் கிளம்பனும்.
வெண்பா அவளை முறைத்து ஏய் இது உனக்கே ஓவரா இல்லயா இங்கே இருந்து ரெண்டு ப்ளாக் தள்ளி இருக்க வீட்டுக்கு இவ்ளோ ஸீன் போடாத டி
ஏய் மெதுவா பேசு அவருக்கு காதில் விழ போகுது என்று அவள் சொல்ல
இங்கு சரவணன் தன்னை சுத்த படுத்தி கொண்டே வந்து அவனுடைய ஒரு டைரி யை எடுத்தவன் அதில் இருந்த புகைபடத்தை ஏக்கம் கொண்டு வருடியவன் அதற்கு ஒரு இதழ் பதித்தான்.
அது சுபாவின் பள்ளி கால புகைபடம் என்னோட தேவதை என்கூட இருந்து கஷ்ட பட வேணாம் சுபா எனக்கு நிறைய பொறுப்பு கடமை இருக்கு சுபா
நான் உன்னை எப்போதும் நேசிப்பேன் சுபா நீ எனக்காக உன்னோட விலைமதிப்பு அதிகமான கண்ணீரை சிந்த கூடாது சுபா நீ உங்கள் வீட்டில் எப்படி ஒரு இளவரசி போல இருந்தாயோ
நீ கல்யாணம் பண்ணி போற இடத்தில் ராணி மாறி இருக்கணும் சுபா என்று அதனை வருடி மீண்டும் ஒரு இதழ் பதித்து தன் இயல்பு நிலைக்கு திரும்பி வெளியே வந்தான்.
அங்கு அனைவரும் இருக்க வெண்பா போய் தன் அண்ணனை கட்டி கொண்டாள். அண்ணா இப்போ கேக் வெட்டலாமா என்று சொல்ல
சரி வெண்பா குட்டி என்று அவன் சொல்ல கேக் கொண்டு வந்து மித்ரன் எல்லாம் செட் செய்ய வெண்பா சந்தோஷ மன நிலையில் கேக் வெட்ட அனைவரும் கைகளை தட்ட
முதல் துண்டு எடுத்து தன் அண்ணனுக்கு ஊட்ட
சரவணன் நீ அம்மாவுக்கு முதலில் ஊட்டு மா என்று சொல்ல இந்தா தேவகி என்று அவள் பெயர் சொல்லி அழைத்து ஊட்டி விட
தேவகி அந்த துண்டு வாங்கி வெண்பாவுக்கு ஊட்ட பின் சரவணனுக்கு வெண்பா ஊட்ட அடுத்து மித்ரன், அடுத்து இன்பா கடைசியில்
விவேகா என்று ஊட்ட விவேகாவுக்கு இவர்களை பார்த்து வருண் நியாபகம் வர கண் கலங்கினாள்.
வருண் நான் உன்னை இப்போ ரொம்ப மிஸ் பண்றேன் தெரியுமா நீ சீக்கிரமே வா வருண் என்று மனதில் சொல்லிக்கொண்டாள்.
சரவணன் இன்பனை பார்த்து என்ன சார் எப்படி இருக்கீங்க என்று கேட்க
தேவகி இவனை திருத்த முடியாது என்று நினைத்து கொண்டு சமையல் அறைக்கு சென்று விட்டாள்.
நான் ரொம்ப நல்லா இருக்கேன் சரவணன் சார் என்று இவனும் சொல்ல
விவேகா அவர்கள் பேசுவதை ஆச்சர்யம் ஆக பார்த்து கொண்டு இருந்தாள்.
உடனே வெண்பா சரவணன் கிட்ட ஏன் அண்ணா இன்பா அண்ணா கிட்ட இப்படி பேசுகிறாய் என்று இன்பாவின் அருகில் போய் அமர்ந்து கொண்டு கேட்க
உடனே சரவணன் சுபாவை நினைத்து கொண்டே வெண்பாவை பார்த்து
வெண்பா குட்டி உனக்கு இந்த உலகத்தை பத்தி தெரியாது
இங்கே நமக்கு என்ன தகுதி இருக்கு அப்டின்னு தான் பார்த்து பழகும் தகுதியை பொறுத்து தான் மரியாதை எல்லாம் என்று சரவணன் சொல்ல
அதில் இருந்த அர்த்தம் யாருக்கு புரிந்ததோ இல்லையோ விவேகாவுக்கு நன்றாக புரிந்தது.
உடனே அவள் சரவணன் கிட்ட
ம்ம்ம் அண்ணா நீங்கள் சொல்றது உண்மை தான்
தகுதி இல்லை அப்படின்னா ஆசை வச்சா நம்ப தான் முட்டாள் அண்ணா என்று இவள் இன்பனை நினைத்து சொல்ல
சரவணன் சூப்பர் விவேகா மா
நீ தான் நான் என்ன நினைக்கிறேன் அப்டின்னு சரியா சொல்ற
சரியாக புரிந்து வைத்து இருக்கிறாய் கொஞ்சம்
வெண்பாவுக்கு அறிவுரை சொல்லு மா என்று சொல்ல இன்பா உடனே அங்கு இருந்து கோபமாக எழுந்து சென்றான்.
விவேகா இதை தாங்கி கொண்டாள் இப்போது விவேகா , சரவணன் இருவருமே இன்பா சென்றது பார்த்து
ஒரே நேரத்தில்
நீ எனக்கு வேண்டாம் இன்பா என்று விவேகாவும்,
நீ எனக்கு வேண்டாம் சுபா என்று சரவணனும் நினைத்து கொண்டனர்.
மித்ரன் சரவணனை முறைத்து விட்டு இன்பாவின் பின்னால் சென்றான்.
இன்பா பிலீஸ் டா சரவணன் சொன்ன எதுவும் மனசில் வைத்து கொள்ளாதே அவனை பற்றி தான் உனக்கு தெரியுமே என்று மித்ரன் அவனை சமாதானம் செய்ய
உடனே இன்பா அவனை பார்த்து மித்ரன் எனக்கு சரவணன் சொன்னது கஷ்டமா இல்லை டா
அவ
அவ என்னை தூக்கி எறிந்து பேசிகிறாளே
என்னை நினைத்து தான் டா அவ பேசினாள் அது தான் என்னால தாங்க முடியல மச்சி என்று அவன் வருந்தி கூற
மித்ரன் ஆதரவாக அவன் தோள்களில் கைகள் போட்டு கொள்ள
இன்பா அவனிடம் டேய் அன்னிக்கு ஒரு நாள் எனக்கு அவ போன் பன்னாடா
ம்ம்ம் சொல்லு
போன் பண்ணி என்னை விட்டு போக மாட்டீங்களே அப்டின்னு கேட்டா மச்சி
நான் சொன்னேன் நீயா என்னை விட்டு போ அப்டின்னு சொன்னாலும் நான் உன்னை விட மாட்டேன் டி என்றவன்
நான் அவ கிட்ட சொல்லாமல் வந்ததுக்கு அத்தனை தடவை sorry sorry ன்னு மெஸ்ஸேஜ் பண்ணுனா டா
இப்போ நான் அவ கிட்ட பேச போனா
நான் ஸ்டுடெண்ட்
நீங்கள் கரெஸ்பாண்டேன்ட்
எனக்கு உங்கள பிடிக்கல
அப்டின்னு சொல்றா டா நிமிஷத்துக்கு நிமிடம் பச்சோந்தி மாறி மாறி பேசுரா மச்சி என்னை ரொம்ப கஷ்ட படுத்துரா டா
என்று மிகவும் கனத்த குரலில் இன்பா சொல்ல சரி விடு பார்த்து கொள்ளலாம். என்று கூறி சமாதானம் செய்தான்.
இங்கு விவேகாவை வெண்பா ஒரு அறைக்கு அழைத்து சென்று கதவை பூட்டி திட்டி தீர்த்தாள்.
விவேகா அழுது கொண்டே வெண்பாவை பார்த்தாள்.
எதுக்கு டி எங்க அண்ணாவை இப்படி கஷ்ட படுத்துரா என்று கேட்க
இங்கே இன்பாவும் மித்ரனும் காவல் குடி இருப்பு முன் கேட்டை அடைந்தனர்.
அங்கு கங்கா கிட்ட சித்ரா வந்து அவளை இஸ்டதுக்கு பேச அதை கண்ட இன்பா தன் கவலையை ஒதுக்கி விட்டு நேராக அங்கு என்ன பிரச்சனை என்று பார்க்க சென்றான்.
இங்க என்ன சத்தம் என்று கணீர் குரலில் கேட்க இருவரும் திரும்பி பார்க்க
மித்ரன் யார் நீங்கள் எங்கு குடி இருக்கிறீர்கள் என்று கேட்க
கங்கை எல்லாம் சொல்லாமல் மேலோட்டமாக சொல்ல
இன்பா கங்கா அருகில் வந்து அப்போ வருண் அம்மா நீங்கள் தானா ஆண்ட்டி என்று கேட்க ஆமா தம்பி
இவங்க வருண் அத்தை எங்கள் மேல் கேஸ் போட்டு இருக்காங்க என்று கண் கலங்க ஏய் என்னடி என்னை பத்தி கப்லைன்ட் பண்றியா
சார் இவ சரியானவள் என்று சித்ரா ஏதோ சொல்ல வர இன்பா அவரை பார்த்து முறைத்து
இன்னொரு தடவை நான் உங்களை இவங்க கிட்ட தொல்லை பண்றதை பார்த்தேன் என்று அழுத்தமாக மிகவும் மெதுவாக கோபம் கொண்டு பேச
அப்புறம் நீங்கள் ஜெயிலுக்கு போக வேண்டியது தான் ஏதாவது ஒரு கேஸ் ல உங்களை உள்ளே தள்ளி விடுவேன் என்று இன்பா சொல்ல
இல்ல இன்பா இவங்கள வரதட்சணை கொடுமை ல கைது செய்து விடலாம் என்று மித்ரன் சொல்ல
சித்ரா வேகமாக சார் என்று கூற வர ம்ம்ம் போ என்று கைகளை அசைத்தான் இன்பா உடனே அவள் தட்டு தடுமாறி வேகமாக நடை போட்டு சென்று விட்டாள்.
கங்கை இன்பாவ பார்த்து ரொம்பவும் நன்றி தம்பி என்று சொல்ல
பரவாயில்லை ஆண்ட்டி வாங்க உங்களை வீட்டில் விட்டு விடுகிறேன் என்று அழைத்து சென்றான்.
விவேகா வெண்பா கிட்ட இருந்து எதுவும் பேசாமல் கிளம்புறேன் என்று சொல்லி வெளியே வர அவர்கள் வீடு இருக்கும் பகுதிக்கு கொஞ்சம் தூரத்தில் அவள் நடந்து வர அங்கு இன்பாவும், மித்ரனும் கங்காவிடம் பேசி கொண்டே செல்ல
அதை பார்த்து அய்யோ இப்போது என்ன செய்வது என்று அவள் அப்படியே நின்றாள்…?
தொடரும்…
Episode 48,
இன்பாவும் மித்ரனும் கங்காவிடம் பேசி கொண்டே வந்தனர்.
ஆண்ட்டி உங்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் எங்க கிட்ட சொல்லுங்க வருண் ரொம்ப நல்ல பையன் உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம் சீக்கிரம் அவன் போலீஸ் ஆகிடுவான் .
இன்னும் ஒரு 4 மாதம் தான் அதன் பின் வருண் வந்து விடுவான் என்று மித்ரன் சொல்ல இன்பா கங்காவை உற்று பார்த்து கொண்டே வந்தான்.
அப்போது தூரத்தில் வேறு ல் வழியாக வந்து கொண்டு இருந்த விவேகா இன்பா ,மித்ரன்,கங்கா மூவரும் பேசி கொண்டு வருவதை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனாள்.
பின் கங்கா வீட்டின் அருகில் வர இன்பா அவரிடம் சரி ஆண்ட்டி பத்திரமாக இருங்கள் என்று சொல்லி விட்டு இன்பனும் மித்ரனும் கிளம்ப
விவேகா ஒரு இடத்தில் மறைந்து கொண்டாள்.
டேய் மித்ரா அந்த ஆண்ட்டி யோட கண்ணை பார்த்தியா டா என்று கேட்க
டேய் லூசு ஏன் டா இப்படி என்று மித்ரன் அவனை திட்ட போக
உடனே இன்பா ஏய் ஸ்டுபிட் அவங்க கண்ணை பார்த்தால் அவ கண்ணு மாறி இருக்கு டா
டே உனக்கு விவேகா பேய் புடிச்சு இருக்கு டா என்று மித்ரன் சொல்ல
இன்பா உடனே சரி அதை விடு அவங்க கண்ணுக்கு மேல ஒரு மச்சம் இருந்தது டா அது அவளுக்கும் இருக்கு டா
மித்ரன் இன்பனை பார்த்து இப்படி ரொம்ப அவ மேல பைத்தியமா சுத்தாத இன்பா அப்புறம் உனக்கு தான் கஷ்டம் அவளை விட்டு ஒரு நிமிடம் கூட உன்னால பிரிய முடியாது.
அதுவும் தவிர அவள் போற போக்கை பார்த்தால் உன்னிடம் இருந்து என்று மித்ரன் சொல்ல வருவதை அப்படியே நிறுத்தினான்.
ம்ம்ம் சொல்லு மித்ரன் அவள் என்னை விட்டு போய் விடுவாளா
அப்படி
அப்படி இல்ல இன்பா அவ behaviour பாரு
கிட்ட தட்ட அவ தின்கிங் சரவணன் மாறி இருக்கு டா
அவளோட எண்ணத்தில் இருந்து அவ எப்போதும் மாற மாட்டா டா
இன்பா சிரித்து கொண்டே இருக்கட்டும் எனக்கு அவ வேனும் மித்ரன்
எப்டி டா இதை பண்ண போற
வெய்ட் அண்ட் சீ மித்ரன் அவளால் என்னை விட்டு இருக்க முடியாது டா
பாரு அவ பின்னாடி நான் எப்டி சுற்றினேனோ அது போல அவ என் பின்னால் சுத்துவா
நான் அவளை revenge பண்ணனும்
அப்டின்னு நான் சொல்ல வில்லை
மித்ரன் i cannot எஸ்பிரேஸ் இன் மை ஒர்ட்ஸ் என்று இன்பா கூறினான்.
இன்னொரு விஷயம் டா அவளால் என்னை விட்டு இருக்க முடியாது டா
ஆனாலும் இப்படி பேசி என்னையும் கஷ்ட படுத்தி அவளையும் கஷ்ட படுத்தி கொள்கிறாள் என்று மேலும் தொடர்ந்தவன்.
சீக்கிரமே அவளை நான் என்று நிறுத்தி விட்டு சரி நான் வீட்டுக்கு போறேன் என்று இரண்டு அடிகள் நடந்தவன்.
மீண்டும் மித்ரன் கிட்ட டேய் அவ வீட்டுக்கு எப்டி போவா என்று இன்பா கேட்க
மித்ரன் இன்பனை பார்த்து என்னடா இன்பா இப்படி இருக்க அவ மேல உனக்கு அவ்ளோ இஷ்டமா என்று கேட்க
இன்பா அவனை பார்த்து உனக்கு லவ் வந்தால் தெரியும் டா அதோட அவஸ்தை என்னன்னு
அதுக்கு எனக்கு கொடுபனை இருக்கா அப்டின்னு தெரியலையே என்று மித்ரன் சொல்லி
அவங்க மாமா வீட்டில் இருந்து வந்து கூட்டி போவங்க போல என்று சொல்ல இன்பா கிளம்பினான்.
விவேகா நேராக தன் வீட்டுக்கு சென்றவள் அம்மாவிடம் பேசி விட்டு நேராக போய் உடைகளை மாற்றி அந்த உடையை இரண்டு நிமிடம் பார்த்தவள் அதை அழுக்கு கூடைக்குள் போடாமல் மடித்து அலமாரியில் எடுத்து வைத்தாள்.
இந்த உடையில் தான் இன்பா அவளுக்கு இன்பாவின் நினைவுகள் அதிகம் தந்து இருக்கிறது கண்ணீர் சில துளிகள் காதல் சில துளிகள்
அடுத்த நாள் யாருக்கும் காத்திராமல் விடிந்தது.
சுபா அவளது அப்பாவை சமாதானம் செய்து விட்டு வீட்டுக்கு அழைக்க நான் அடுத்த வாரம் வருகிறேன் நீ வீட்டுக்கு போ மா என்று ரவிச்சந்திரன் அனுப்ப
சுபா வெளியே மிகவும் சந்தோஷ மன நிலையில் முகத்தை வைத்து கொண்டு உள்ளே மருகினாள்.
அவள் சரியாக விமான நிலையம் இருந்து வீட்டுக்கு கிளம்பும் நேரம் வர அப்போது சரவணன் போன் செய்ய தன் கண்களை துடைத்து கொண்டு மிகவும் சந்தோஷ மன நிலையில் போன் எடுத்து
ஆசையாக ஹெலோ என்று சொல்ல வில்லை
சுபா தாயின் பாசத்துக்கு ஏங்கும் குழந்தை போல சந்தோச குரலில் சரவணா என்று கூப்பிட
அவன் இதை எதிர்பார்க்க வில்லை . சுபா உன்கிட்ட பேசனும் இப்போ எங்கே இருக்க
சுபா ஆவலாக நீ எங்கே இருக்க அப்டின்னு சொல்லு நான் வருகிறேன் சரவணா என்று சிரித்து கொண்டே பேச
இல்ல நீ சொல்லு சுபா நான் வருகிறேன் என்று சரவணன் கூற
சுபாவுக்கு இப்போது இது கனவா இல்லை நிஜமா என்று தோன்ற
நான் ஏர்போர்ட் ல இருக்கேன் என்று சொல்ல
அப்போ நீ பக்கத்தில் ஒரு ரெஸ்டாரண்ட் ல போய் வெய்ட் பண்ணு அதோட name எனக்கு நார்மல் மெஸ்ஸேஜ் பண்ணு நான் உடனே வரேன் என்று சொல்ல
ம்ம்ம் சரி சரவணன் என்று அவள் சந்தோஷ மன நிலையில் அருகில் உள்ள ஒரு உணவகுகித்தில் அவனுக்காக காத்து இருந்தாள்.
அவளது நாயகன் வந்து விட்டான் formal shirt, நெருக்கமான புருவங்கள் கூர் நாசி அளவான மீசை தாடியுடன் அது தான் அவனுக்கு மிகவும் அழகு
அந்த தாடியை இரண்டு மூன்று முறை மீசையோடு சேர்த்து அதை தடவி கொண்டு இருப்பது அவ்வளவு அழகு
சரவணன் சிரிக்கும் போது அந்த கண்கள் முதல் அந்த முகம் முழுக்க ஒரு பாசிட்டிவ் vibration தான் ஆனால் அது என்று நடக்காத ஒன்று
இப்போது அவன் சிரிக்கும் சிரிப்பு உயிர்ப்பு இல்லாத ஒன்று
அவன் வருவதை இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தாள் சுபத்ரா .
அவன் அவள் அருகில் எதிராக உள்ள இருக்கையில் போய் அமர்ந்து
அவளை ஒரு நிமிடம் தனக்குள் நிறைத்து கொண்டவன்.
ம்ம்ம்ம் என்று தன் தொண்டை சரி செய்ய அப்பொழுது கூட தன்னிலை க்கு சுபா வரவில்லை.
சுபா என்று அவன் அழைக்க அப்பொழுது தான் தன்னிலைக்கு வந்தவள்
சரவணன் வந்து விட்டாயா என்று புன்னகை முகம் கொண்டு அவனை பார்க்க
ம்ம்ம்
என்ன சாப்பிடற நான் ஆடர் பண்றேன் என்று கேட்டான்.
சுபா அமைதியாக அவனை பார்க்க இப்போது சரவணன் அவளுக்கு பிடித்த சில வகை உணவுகள் ஆடர் செய்ய
அதற்கு முன்பே சரவணனுக்கு பிடித்த சில உணவுகளை சுபா ஆடர் செய்தாள்.
சுபா மனதில் என்னை பற்றி இவ்ளோ தெரிந்து வைத்து கொண்டு நடிக்கிறானே ஸ்டுபிட் சரவணா என்று சிரித்து கொண்டாள்.
சரவணன் அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்து இருந்தான்.
எங்கே அவள் பாதியில் எழுந்து விட்டால் அவளுக்கு பசிக்கும் என்ற எண்ணம் சரவணனுக்கு
சுபா சாப்பிடுவதை அவளுக்கு தெரியாத வாறு ரசித்தான் .
இப்போது சுபா அவனை பார்க்க எதுக்கு என்னை வர சொன்ன சரவணா என்று கேட்க
நீ சாப்பிடு அப்புறம் சொல்றேன் என்று காத்திருந்தான்.
இருவரும் சாப்பிட்டு முடிக்க வைட்டர் பில் எடுத்து வர அதை அவளுக்கு முன் வாங்கியவன் பணம் செலுத்தி விட்டு
சுபா என்று கூப்பிட
ம்ம்ம் சொல்லு சரவணன்
உன்னோட கல்யாணம் விஷயமா பேசணும் என்று அவன் சொல்ல
இப்போது சுபா கண்கள் மின்ன அவள் அவன் கைகளை பிடித்து கொள்ள
சரவணன் அவள பார்த்து என்ன பண்ற சுபா
அவள் சிரித்து கொண்டே நீ தானே சரவணன் நம்ம கல்யாணம் விஷயம் ன்னு சொன்ன
நீ இப்படி மாறுவ அப்டின்னு நான் எதிர்பார்க்கல என்று அவன் கைகளை இறுக்கமாக பிடித்து கொள்ள
சுபா நான் உன்னோட கல்யாணம் பத்தி அப்டின்னு சொன்னேன்
இந்த வார்த்தையை கேட்டு சுபா அவன் கைகளை இன்னும் இறுக்கமாக பிடித்து கொண்டாள்.
இப்போது கைய விடு சுபா
நான் விட மாட்டேன் என்று அவள் கண்களில் கண்ணீர் கோர்க்க
சரவணன் சொல்ல வந்ததை கூற தொடங்கினான்.
அந்த வினய் சரி இல்ல நான் அவனை பத்தி விசாரித்து விட்டேன் உனக்கு அவன் பொருத்தம் இல்லை அதனால் இன்பா கிட்ட சொல்லிவிடு என்று சில பைலை வினய் பற்றிய விவரங்கள் இருக்கும் டாகுமெண்ட் நீட்ட
சுபா அதை வாங்கி அருகில் உள்ள டஸ்ட்பின் ல போட்டவள்.
இப்போது அவன் கையில் இருந்து அவள் கைகளை எடுத்து கொண்டு சரவணனை பார்த்து
நான் யாரை கல்யாணம் பண்ணா உனக்கு என்ன
உன்னோட வேலைய பாரு போ என்று சொல்ல
சுபா அவனை நீ கட்டிகிட்டா உன் வாழ்க்கை நல்லா இருக்காது
என் life பத்தி அக்கறை பட நீ யாரு
நீயும் நானும் சின்ன வயசுல ஒன்னா வளந்தோம் அந்த அக்கறை தான் நீ நல்லா இருக்கணும்.
உங்க அக்கறை எனக்கு தேவை இல்லை மிஸ்டர் சரவணன் என்று அவள் வேகமாக ரெஸ்ட் ரூம் பக்கம் செல்ல
சரவணனுக்கு மிகவும் கவலை ஒரு புறம் பயம் ஒரு புறம்
சரவணன் அவள் பின்னால் வேகமாக சென்றான்
சுபா என்ன பண்ற நீ என்று சொல்ல
அவள் அழுது கொண்டே அங்கு நின்று அழுதாள்.
இப்போ எதுக்கு இப்படி அழற என்று அவன் சுபாவின் அருகில் செல்ல
உடனே அவள் சரவணனை அணைத்து கொண்டாள் இது முதல் அணைப்பு
ஏன் சரவணன் என்னை இப்படி torture பண்ற அதுக்கு பதிலா நீ என்னை கொன்று விடு நான் உன்னை எவ்ளோ விரும்புறேன் தெரியுமா
உன்னோட தேவையில்லாத கற்பனை எல்லாம் தூக்கி தூர போடு என்று அவள் கண்ணீர் சரவணன் சட்டையை நனைத்தது.
சுபாவை சற்று விலக்கியவன் சுபா என்ன பேசுற நான் உன்னை விரும்பல அப்டி ஒரு எண்ணம் எனக்கு உன் மேல் எப்போதும் இருந்தது இல்லை என்று அவன் சொல்ல
சரி ok நான் உன்னை விரும்புறேன் இப்போது சரி அப்டின்னு சொல்லு நம்ப கல்யாணம் பண்ணிக்கலாம் .
சும்மா தேவை இல்லாத விஷயத்தை பேசாதே சுபா
அவள் அவனை ஏக்கமாக பார்த்து விட்டு தன் கண்களை துடைத்து கொண்டு
நான் வினய தான் கல்யாணம் பண்ணிக்குவேன் அவன் என்னை என்ன செய்தாலும் எனக்கு கவலை இல்லை
நான் செத்து இப்போது என்று தன்னுடைய வாட்ச் பார்த்து5 நிமிடம் ஆச்சு
இனி நான் உயிர் இல்லாத ஒரு ஜடம் மட்டும் தான் என்று சொல்ல
சரவணனுக்கு கோபம் வர அவள் கன்னத்தில் ஒரு அரை விட்டான்.
சுபா அவனை பார்த்து சிரித்தவள்
உன்னோட அரவணைப்பும் எனக்கு கிடைத்து விட்டது
உன்னோட கோபம்
உன்னோட பாசம்
எல்லாம் எனக்கு கிடைத்து விட்டது
ஒன்றை தவிர உன்னோட காதல் அது எனக்கு கிடைக்கும் ஆனால் அப்போது நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு வேக வேகமாக நடையிட்டாள்.
சரவணன் அவள் சென்ற பின் ஒரு நிமிடம் கண் கலங்கினான்.
என்ன இவ இப்படி சொல்லி விட்டு போறாளே எதுவும் செய்து கொள்வாளா
சுபா i love you
நான் உன்னை எவ்ளோ அவைட் பண்றேனோ அதை விட 100 மடங்கு எனக்கு வலிக்கும் டி
நான் உன்னை எவ்ளோ நேசிக்கிறேன் தெரியுமா நீ என்னோட எல்லாம் என்னோட துன்பததில் என்னை மீட்டு எடுக்கும் என்னோட தேவதை டி நீ என்று மனதில் நினைத்து கொண்டான்.
சரவணன் இதை பற்றி இன்பாவிடம் பேச வேண்டும் என்று நினைத்து கொண்டு அவளை அடித்த கைகளை அங்கு இருந்த ஒரு சுவற்றின் மீது அடித்து கொண்டான்.
இங்கு விவேகா தன்னுடைய பேருந்தில் ஏறி அமர்ந்து கொள்ள வெண்பா அவள் அருகில் வர வில்லை கோவித்து கொண்டு வேறு இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
விவேகாவும் அதை கண்டு கொள்ள வில்லை இருவரும் காலேஜ் செல்ல விவேகா நேராக தன் வகுப்புக்கு சென்று ஆதிக்காக காத்து இருந்தான்.
ஆதி வந்ததும் நேராக அவனை அழைத்து கொண்டு லைப்ரரி பக்கம் சென்று யாழினி சொன்ன விஷயம் கூற
ஆதி விவேகாவுக்கு தான் ஆதரவாக பேசினான்.
பின் அவள் வெண்பா தன்னிடம் சண்டை போட்டது பற்றி சொல்ல ஆதி இப்போது நேராக அவள் வகுப்புக்கு சென்று
வெளியே நின்று அவளுக்காக காத்து இருந்து பின் வகுப்பில் வெண்பா என்று அழைக்க
அங்கு உள்ள மாணவிகள் அனைவரும் ஆதியை பார்த்து இது அவன் தானே அன்னிக்கு ஆடிட்டோரியம் ல நம்ப clap பண்ணோமே
செம்மையா இருக்கானே என்று மாணவிகள் அனைவரும் ஆதியை பார்க்க
வெண்பா அவள் வகுப்பை ஒரு முறை சுற்றி பார்க்க மாணவர்கள் கோபம் கொண்டு அவனை பார்க்க மாணவிகள் கொஞ்சம் வழிசல் கொண்டு பார்க்க
உடனே அவள் வேகமாக வெளிய சென்று இப்போது எதுக்கு இங்கே வந்த என்று கேட்க
ஆதி அவளிடம் நீ கொஞ்சம் common லைப்ரரி வா என்று கூற இவள் என்னவாக இருக்கும் என்று கேள்வியான முகத்தோடு சென்றாள்.
??????
தொடரும்…..
Episode 49,
ஆதி வெண்பாவிடம்
நீ கொஞ்சம் common லைப்ரரி வா
என்று கூற
இவள் என்னவாக இருக்கும் என்று கேள்வியான முகத்தோடு சென்றாள்.
அங்கு விவேகா அழுது கொண்டு இருந்தாள்.
ஆதியை பார்த்து விவேகா
நீ எதுக்கு ஆதி இவங்களை இங்க கூட்டி வந்த என்று வெண்பாவை பற்றி கேட்க
உடனே ஆதி வெண்பா கிட்ட
அவ கிட்ட நீ என்ன சொன்ன என்று ஆதி கேட்க
நான் எதுவும் சொல்லல அவ செய்யறது துளி கூட சரி இல்லை என்று வெண்பா சொல்ல
இப்போது விவேகா பேசினாள்.
எங்க கிளாஸ் ல கண்ணுகினியாள் உனக்கு தெரியுமா
ம்ம்ம் தெரியும் இப்போ அதுக்கு என்ன இப்போ
விவேகா யாழினி கூறிய அனைத்தும் கூறி விட்டு பின்
ஒருத்தரை விரும்ப தகுதியும் வேனும் தைரியமும் வேனும் எனக்கு ரெண்டும் இல்லை அதனால எனக்கு வேண்டாம் இது இப்படியே முடியட்டும் என்று விவேகா சொல்லிவிட்டு
பின் இறுதியில் அன்னிக்கு நான் உன்னை பார்க்க வந்தேனே எனக்கு make up remove பண்ண சொல்லி
அப்போ அவங்க என்ன பேசி கொண்டார்கள் அப்டின்னு தெரியுமா என்று அழுது கொண்டே வெண்பாவை பார்க்க
ஆதி அவளிடம் ஓ அப்போ என்னாச்சு இத்தனை விஷயம் என்கிட்ட மறைச்சு இருக்க விவி நீ
இங்கு அருண் விவேகாவை பார்க்கலாம் என்று வர அப்பொழுது ஆதியும் , வெண்பாவும் லைப்ரரி பக்கம் செல்வதை பார்த்து அவனும் செல்லலாம் என்று செல்ல
அப்பொழுது அருணின் அம்மா வென்மதி போன் செய்ய அவரிடம் பேசி விட்டு அருண் லைப்ரரி செல்ல
விவேகா இறுதியில் பேசிய பேச்சுகள் அவனுக்கு கேட்டது.
இப்போது விவேகா சொல்ல ஆரம்பித்தாள். பீஸ் கூட கட்ட வழி இல்லை இப்படி make up பண்ணி ஆள மயக் என்று நிறுத்தி அழுது கொண்டே ஓடி விட்டாள்.
ஆதிக்கு இதை கேட்டதும் மனது மிகவும் வலித்தது. அவன் வெண்பாவை முறைத்து விட்டு விவி நானும் வரேன் டி என்று சென்று விட்டான்.
வெண்பாவுக்கு இவ்வாறு நடந்து இருக்கும் என்று அவள் நினைக்க வில்லை.
வெண்பா மனதில் அய்யோ பாவம் அவள் நானும் தேவை இல்லாமல் திட்டி விட்டேனே என்று அவள் வருத்தம் கொண்டு திரும்ப
அங்கு அருண் கோபமாக முகம் கொண்டு வெண்பா அருகில் வர இப்போது வெண்பாவுக்கு தூக்கி வாரி போட்டது.
அய்யோ இவனா
இவன் எவ்வளவு நேரம் இங்கு இருக்கிறான் என்று தெரியவில்லையே எதுவும் கேட்டு இருப்பானோ என்று இவள் நினைத்து கொண்டு இருக்க
ஹே வெண்பா என்னோட விவேகா டியர் ஆ யாரு இப்படி மனசு கஷ்டபடுத்தி பேசியது என்று கேட்க
இப்போது நிம்மதி பெரு மூச்சு விட்டவள். அது ஒன்னும் இல்ல அருண் நீ விடு வா நம்ப போகலாம் என்று அழைக்க
அருண் வெண்பா கிட்ட விவேகா குடும்பத்தில் ரொம்ப கஷ்டமா டி அவங்க அப்பா என்ன பண்றாங்க
விவேகாவுக்கு அப்பா இல்ல
அம்மா மட்டும் தான்
ஒரு அண்ணா அவங்க வீட்டில் கொஞ்சம் இப்போ கஷ்டம் என்று வெண்பா சொல்ல
அருண் இப்போது ஒரு முடிவுக்கு வந்தான்
விவேகா டியர் !”நீ பீஸ் கட்ட வேண்டாம்”
” நான் இருக்கேன் உனக்கு”
என்று மனதில் கூறிக் கொண்டான்.
அதற்கான வேலையும் ஆரம்பித்தான்.
இங்கு கிளாஸ்க்கு வரும்முன் விவேகா நேராகச் ரெஸ்ட் ரூம் சென்று தன்னுடைய முகங்களை கழுவிக் கொண்டு
எதுவுமே நடக்காதது போல் வந்து வகுப்பறையில் அமர்ந்தாள்.
ஆதி அவளின் பின்னால் ஓடி வந்தவன் அவள் இருக்கும் நிலை கண்டு மனது கஷ்டமாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டு அவளை தொந்தரவு செய்யாமல் அந்த இடத்திற்கு வந்து அமர்ந்து கொண்டான்
அங்கு வகுப்பறையில் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருந்தனர்
ஏனென்றால் யாழினி அவர்களது குடும்பத்தில் புதிதாக ஒரு தொழிலை தொடங்கியுள்ளனர்
அந்த சாக்லேட் பேக்டரி அதில் பிரத்தியேகமாக சில சாக்லேட்டுகள் தயாரிக்கப்படுகின்றது.
Candy ஸ்டிக் தான் அந்த சாக்கலேட்டு lolly பாப் போல
யாழினி ஆதி வந்ததை பார்த்து மிகவும் சந்தோஷமாக அவள் அந்த ஒரு பத்து வகையான சுவை உடைய சாக்லேட் எடுத்துக்கொண்டு ஆதியின் அருகில் வந்து அவனிடம் நீட்ட அவன் யாழினியின் ஒரு கோபப்பார்வை கொண்டு பார்த்தான்.
யாழினி அவனிடம் முகம் சிவக்க
ஆதித்யா இந்த சாக்கலேட்டு எங்க factory ல பிரத்தியேகமாக youngsters க்கு எங்க அண்ணா ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க.
பிலீஸ் டேஸ்ட் பண்ணி சொல்லு நான் அதை செலக்ட் பண்ணிக்கிறேன் என்று யாழினி சொல்ல
ஆதியோ எனக்கு வேணாம் பிலீஸ் leave me alone என்று சொல்ல
பிலீஸ் ஆதி பிலீஸ் என்று யாழினி மயக்கும் குரலில் கேட்க
ஆதி அவனது மேஜையில் ஓங்கி ஒரு தட்டு தட்டினான் அந்த வகுப்பறையே பின் ட்ராப் silent ஆனது
யாழினி என்று இனியாள் கூப்பிட அக்கா என்று அழுது கொண்டே ஓடி விட்டாள்.
சரியாக அந்த நேரம் வகுப்பாசிரியர் உள்ளே வந்தார். அனைவரும் அவர்கள் இடத்தில் போய் அமர்ந்து கொண்டனர்.
இப்படியே இரண்டு நாள் சென்றது இன்பா வர வில்லை விவேகாவுக்கு எப்போதும் போல் அவன் நினைவுகளை சுமந்து கொண்டு சுற்றி திரிந்தாள்.
அடுத்த நாள் இன்பா மித்ரனோடு வந்தான். நேராக ஒவ்வொரு வகுப்பும் செக் செய்து விட்டு இறுதியில் இவள் வகுப்புக்கு வந்தவன் விவேகாவை முறைத்து பார்க்க அவளும் முறைத்தாள்.
இனியாள் மிகவும் சந்தோஷமாக சார் என்று அழைக்க இன்பா ஸ்நேகமாக புன்னகைத்தான்.
அவர்கள் வந்ததற்கு உண்டான நோக்கம் சொல்லி அனைவர் bags எல்லாம் செக் செய்ய எல்லாம் candy ஸ்டிக்களாக இருந்தது.
மித்ரன் மாணவர்களை பார்த்து என்ன இவ்ளோ ஸ்டிக் இருக்கு என்று கேட்க இனியாள் அவளுடைய புகழ் பாட ஆரம்பித்தாள்.
விவேகா தன் தலையை பிடித்து கொண்டு அமர இன்பா விவேகாவை பார்த்து கொண்டு எனக்கு ஒரு candy ஸ்டிக் தர மாட்டீங்களா என்று கேட்க
இனியாள் முகமெல்லாம் புன்னகையுடன் சில வகை சுவை உடைய ஸ்டிக்ஸ் நீட்ட அதில் இருந்து ஒன்றை எடுத்து வாயில் வைத்தவன்.
இனியாளை பார்த்து ம்ம்ம் டேஸ்ட் good நான் இப்படி ஒரு candy டேஸ்ட் பண்ணதே இல்ல
நீங்கள் வைத்து இருந்தால் கூட சாப்பிடலாம் என்று சொல்ல அனைவரும் இனியாள் கிட்ட இருந்து வாங்கி சாப்பிட அதில் பசங்க பாதி பேர், சிவா , ஆதி, மைதிலி, விவேகா இவர்கள் மட்டும் எதுவும் சாப்பிட வில்லை.
மித்ரன் விவேகா அருகில் வந்து என்ன மா நீ சாப்பிட வில்லையா என்று கேட்க
அதற்கு விவேகா இந்த costly யான candy எனக்கு வேணாம் சார்
என் கிட்ட இருக்க சாக்கலேட்டு எனக்கு போதும் என்று சொல்லி அவள் ஒரு தேன் மிட்டாய் எடுத்து வாய்க்குள் போட்டு கொள்ள
அப்போ எனக்கு தர மாட்டியா என்று மித்ரன் கேட்க
விவேகா புன்னகை முகமாக இந்தாங்க என்று ஒரு ஆரஞ்சு சிவப்பு வண்ண மின்னும் தேன் மிட்டாய் நீட்ட
மித்ரன் அதை எடுத்து வாயில் போட்டு கொண்டான்.
எப்டி இருக்கு என்று விவேகா கேட்க
விவேகாவின் இந்த கனிவான முகம் அந்த மிட்டாயின் சுவை உண்மையாகவே அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது.
அவன் மனதில் நீ அப்டியே சரவணன் xeorox விவேகா
செம்ம மா எனக்கு இன்னும் கிடைக்குமா என்று மித்ரன் விவேகாவிடம் பேசி கொண்டு இருப்பது இன்பாவுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது.
மித்ரன் என்று அவன் அழைக்க வகுப்பு மொத்தமும் மித்ரனை பார்த்தது வந்த வேலைய பாருங்க என்று சொல்ல
விவேகா இன்பனை ஒரு பார்வை கூட பார்க்க வில்லை.
இன்பா மனதில்
நீ அவ்ளோ அழுத்தக்காறியா டி
என்னை பார்க்கவே மாட்டிங்குற
இதுக்கு எல்லாம் நான் தான் காரணம்
அவ்ளோ செல்லம் கொடுத்து வைத்தது தான் தவறு
நீ தனியா என் கிட்ட மாட்டு டி
அப்போ இருக்கு உனக்கு என்று அவளை அனல் கண்களை கொண்டு பார்த்து விட்டு சென்றான்.
மித்ரன் இன்பா கிட்ட அந்த மிட்டாய் சாப்பிட்டு கொண்டே
இன்பா நிஜமாவே சூப்பரா இருக்கு டா
உனக்கு வேணுமா நான் அவ கிட்ட வாங்கி வந்து தரட்டுமா
என்று கைகளில் இரண்டு தேன்மிட்டாய் வைத்துக்கொண்டு இருந்த மித்ரன் ஒன்றை எடுத்து வாய்க்குள் போட்டுக் கொண்டான்
அதை பார்த்த இன்பா அந்த இன்னோரு தேன்மிட்டாய் பார்த்து
ஹே மித்ரன் அதை எனக்கு தா என்று கேட்க
போடா நான் என்னோட sisy கிட்ட வாங்கினேன் என்று சொல்ல
என்ன என்று இன்பா கேட்க
அவ என்னுடைய தங்கை அது தான் செல்லமா சுருக்கி sisy என்று சொன்னேன்
இனி அவளை நீ தொல்லை பண்ணுன அப்புறம் என்னுடைய இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி வரும் என்று அந்த தேன் மிட்டாய் எடுத்து வாயில் போட போக
அதை பிடுங்கி இன்பா அவனது வாயில் போட்டு கொண்டான்.
ஜூசி யா இருக்கு ம்ம்ம் நல்லா தான் இருக்கு என்று இன்பா மனதில் விவேகாவின் அதரங்கள் தான் நினைவுக்கு வந்தது.
அவனை பார்த்து சிரித்து கொண்டே மச்சி உன்னை பார்த்தாலே அவள் அனல் பார்வையில் பார்க்கிறாள்
என்னடா பண்ண போற
இன்பா மித்ரனை பார்த்து அவளை எப்படி கூல் பண்ணனும் னு எனக்கு தெரியும் டா என்று ஒரு தந்திர புன்னகை சிந்தினான்.
Candy ஸ்டிக் பெரிய அளவில் வெற்றி அடைந்து வளர தொடங்கியது.
இங்கு spr காலேஜ் ல IT , CS conference நடக்க இன்விடேஷன் அனைத்து காலேஜ்க்கும் கொடுக்க
விவேகா அங்கு செல்ல வேண்டும் என்று od வாங்க செல்ல HOD அன்னிக்கு லீவு
அதனால் யார் யார் போரங்களோ மொத்தமாக principal கிட்ட sign வாங்க போக
அங்கு இன்பா ப்ரின்சிபால் ரூம் ல அவருடன் பேசி கொண்டு இருக்க வெளிய விவேகா,ஆதி , தீபக், இனியாள் , cs ல இருந்து சதீஷ், வெண்பா, காவ்யா இருக்க
இன்பா மாணவர்களை முதலில் பாருங்கள் அப்புறம் நம்ப பேசிக்கொள்ளாலாம் என்று சொல்ல
அவரும் மாணவர்களை அழைக்க உள்ளே செல்ல அங்கு கால் மேல் கால் போட்டு கொண்டு மிகவும் கம்பீரமாக இன்பா தன் போன் நோண்டி கொண்டு இருக்க
விவேகா இவனை பார்த்ததும் உச்சி கொட்டினாள் . மனதில் இவன் எதுக்கு இங்கு வருகிறான் இவனுக்கு வேலையே இருக்காதா என்று நினைத்து கொண்டு இருக்க
முதல்வர் என்ன வேனும் எதுக்கு வந்தீர்கள் என்று கேட்க அனைவரும் வந்த காரணத்தை சொல்ல
ஒரு நிமிடம் இன்பா விவேகாவை பார்த்து முறைத்து விட்டு மீண்டும் தன் வேலையில் கவனம் செலுத்தினான்.
அவர் sign போட்டு கொடுக்க அதை வாங்கி கொண்டு அவர்கள் வகுப்புக்கு சென்றனர் .
இன்பா இப்போது விவேகாவை correspondent வர சொல்வதாக சொல்ல விவேகா கிளம்பி சென்றாள்.
உள்ளே வரலாமா என்று கேட்க
பதில் மட்டும் come இன்
எதுக்கு வர சொன்னிங்க சார் என்று அவள் கேட்க
ஒரு முடிவோடு தான் இருக்க ம்ம்ம்
நீங்கள் சொல்றது புரியல
என்னை பார்த்தாலே உனக்கு சுத்தமா பிடிக்கல ம்ம்ம்
எந்த பதிலும் இல்லை
நான் எது செய்ய கூடாது அப்டின்னு சொல்லிட்டு போனேனோ
அதை இப்போ செயுற ம்ம்ம்
இன்டெரெஸ்டிங்
எனக்கு அப்டியே ஓப்போசிட் ல போக ரெடி ஆகிட்ட
அப்டி தான டி
அவள் கீழ குனிந்து பார்க்க
இனிமே தான் டி உனக்கு இருக்கு என்னோட feeலிங்ஸ் ஆ உதாசசினபடுத்திட்ட தானே
இனி நீ வேற ஒரு இன்பாவ பார்க்க போற டி என்று சொல்லி விட்டு
Get out என்று கனத்த குரலில் சொல்ல அவள் அப்படியே ஓடி விட்டாள்.
அருண் அவன் வேலைய ஆரம்பித்தான் அவள் fee structure எடுத்து management சீட் ல விவேகாவுக்கு இனி வரும் எல்லா sem க்கும் fees இல்லாமல் பண்ணிட்டான்.
அது இன்பாவுக்கு தெரிய வருமா ?
விவேகா மனது மாற்றி கொள்வாளா?
அடுத்து பழி வாங்கும் படலமா ????
தொடரும்…
Episode 50,
அருண் அவன் வேலைய ஆரம்பித்தான் காலேஜ் ல உள்ள அனைவருக்கும் அருண் , இன்பராகவன் , வசுமதி, கிருஷ்ணன் (வசு அப்பா) இவர்களை நன்றாக தெரியும் .
அருண் ஆஃபீஸ் ரூம் ல விவேகாவுக்கு செம் பீஸ் இந்த ஒரு செம் amount pay பண்ணி விட்டு அவள் வந்து கேட்டால் management decision அப்டின்னு சொல்லிடுங்க என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
இன்பா அவளை திட்டியது தான் விவேகாவுக்கு நினைவில் இருந்தது . அவள் இன்பனை சென்று பார்த்து வந்ததில் இருந்து எதுவும் சாப்பிட வில்லை.
அடுத்த நாளும் காலையில் எதுவும் சாப்பிடாமல் இன்பா கூறியதை நினைத்து கொண்டு அழுது கொண்டே காலேஜ் சென்றாள்.
காலேஜ் சென்றவுடன் அங்கு ஒரு பேருந்தில் spr காலேஜ் செல்பவர்கள் ஏறி கொள்ள இவளும் எறிக்கொண்டாள் .
விவேகா வெண்பாவிடம் இன்னும் பேசவே இல்லை.
எப்போதும் துள்ளி துள்ளி ஆட்டம் போடுபவள் நேற்று இன்பனை சந்தித்து விட்டு வந்ததில் இருந்து இப்படி ஆகி விட்டாள்.
அந்த காலேஜ் சென்றதும் விவேகாவிடம் ஆதி
விவி நீ சாப்பிடயா
ம்ம்ம் சாப்பிட்டேன் ஆதி என முதல் முறை சாப்பாடு விஷயத்தில் பொய் கூறினாள்.
அவளைப் பார்த்து முறைக்க விவேகா எனக்கு பசி எடுக்க வில்லை ஆதி என கூறி விட்டு அவனிடம் சில திட்டுகள் வாங்கி கொண்டு உள்ளே சென்றாள்.
அங்கு இன்பாவும் மித்ரனும் காலேஜ் இன்ஸ்பெக்ஷன் க்கு வந்து காலேஜ் அனைத்தும் தேட எதுவும் கிடைக்க வில்லை.
விவேகா வந்து இருப்பதை பார்த்த ராஜ் ஓடி சென்று விவே குட்டி என்னடா அத்தான் கிட்ட பேசாமல் போற என்று அவள் கைகளை பிடிக்க
அப்போது தான் இன்பா அங்கு வந்தான் விவேகாவின் கைகளை அவன் பிடித்து இருப்பது இன்பாவுக்கு கோபத்தை தான் தந்தது.
இந்த முறை விவேகா அவனை பார்த்து முறைத்து இனி நான் உங்களை எப்போதும் அப்படி சொல்லி கூப்பிட மாட்டேன்.
ஏன் டா இப்படி பேசற என்னுடைய தேவதை இப்படி அழலாமா என்று விவேகாவின் கன்னத்தை எந்த போக
விவேகா ராஜை பார்த்து முறைத்து விட்டு உங்களை போய் நான் நம்பினேன் பாருங்கள் அது என்னுடைய தவறு தான்
எங்க மமாச்சி அப்போவே சொன்னாங்க ஆனால் உங்கள் மேல எனக்கு நம்பிக்கை இருந்தது.
ஆனால் இப்போ என்று விவேகா கோபபார்வை பார்க்க
ராஜ் ஏன் விவே இப்படி நடந்து கொள்கிறாய் என்று அவன் கேட்க
இன்னும் சொல்ல என்ன இருக்கு
அது தான் நீங்கள் மொத்தமா செய்து விட்டீர்களே என்று விவேகா சொல்ல
ராஜ் புரியாமல் விழித்தான். இப்போ என்ன எனக்கு ஒன்னும் புரியல அப்படின்னு சொல்ல
விவேகா அவனை பார்த்து நீங்கள் அத்தை கிட்ட கேளுங்க நான் சொல்ல விரும்பல என்று சொல்லி அவள் இரண்டு அடிகள் முன்னே வைக்க
ராஜ் அவளின் கைகளை பிடிக்க உடனே நேற்று மதியத்தில் இருந்து சாப்பிடாமல் இருந்தது விவேகாவுக்கு மயக்கம் வர விவேகா கீழ மயங்கி சரிந்தாள்.
கொஞ்சம் எட்ட நின்று இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த இன்பா அவள் மயங்கி விழுந்தது பார்த்து ஓடி வர
அங்கு ராஜ் விவேகாவை தன் நெஞ்சோடு அணைத்து பதட்டத்தில்
விவே குட்டி எழு டா என்னாச்சு என அவள் முகத்தை ஏந்தி தட்டி பார்க்க
விவேகாவுக்கு அசைவே இல்லை ,
அவன் விவேகாவின் நெற்றியில் இதழ் பதிக்க போக
அந்த நேரம் சரியாக இன்பா வந்தான்.
ஹே மிஸ்டர் என்ன பண்ற அவளுக்கு என்ன ஆச்சு என்ன பண்ண என்று சொல்லி கொண்டே விவேகாவை அவளிடம் இருந்து வாங்க போக
டேய் யாரு டா நீ அவ என் மாமா பொண்ணு அவளை என் கிட்ட இருந்து நீ எதுக்கு டா வாங்க வர போடா என்று ராஜ் சொல்ல
இன்பா எதுவும் சொல்லாமல் அவளை அவனிடம் இருந்து வாங்கி அணைத்த வாறே தூக்கி சென்றான்.
இன்பாவின் மனதில் பயம் , பதட்டம், என்னாச்சு இவளுக்கு என அவளை பார்த்து
விவி பேபி எழு டி
என்னாச்சு என சொல்லி கொண்டே செல்ல
ராஜ் வேகமாக அவன் அருகில் சென்று யாரு டா நீ அவளை என் கிட்ட கொடு என்று அடிக்கும் தோரணையில் கூற
இன்பா அவனை பார்த்து அவ என்னோட காலேஜ் ல தான் படிக்கிறாள்.
இப்போ அவ என்னோட பொறுப்பில் தான் இந்த காலேஜ் வந்து இருக்கிறாள்.
அதனால இப்போ அவ என் பொறுப்பு
இவ்ளோ நேரம் என்னை பேச வைத்த உனக்கு இருக்கு டா நான் வந்து உன்னை பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி கொண்டே
கார் அருகில் செல்ல மித்ரன் அங்கு வர டேய் வண்டிய ஹாஸ்பிடல் விடு டா என்று சொல்லி பின் இருக்கையில் ஏறி கொள்ள
மித்ரன் கார் எடுத்தான் இன்பா அவளை நெஞ்சோடு அணைத்தவாறு
அவள் கன்னத்தை தட்டி பார்க்க விவேகா கண்களை திறக்கவே இல்லை.
அவளின் இதழ் நோக்கி குனிந்து ஒரு முத்தம் கொடுத்தான்.
அப்பொழுது தான் அவள் முகத்தை பார்க்க அழுது அழுது கண்கள் எல்லாம் சிவந்து இருந்தது.
உதடுகளில் ஈரம் இல்லாமல் வறண்டு தூக்கம் இல்லாமல் கரு வளையம் என முகமெல்லாம் வாடி கிடந்தாள்.
இன்பா அவள் அவளது முகத்தை வருடியவன் ஏன் டி இப்படி பண்ற என்று அவளை தன் நெஞ்சோடு அணைத்து கொள்ள
மருத்துவமனை வந்தது இன்பா இறங்கி அவளை தூக்கி கொண்டு emergency வார்ட் செல்ல
டாக்டர் செக் செய்கிறேன்
நீங்கள் வெளியே வெய்ட் பண்ணுங்க
என்று சொல்ல அவன் அங்கும் இங்கும் பதட்டம் கொண்டு நடந்து செல்ல
மித்ரன் இன்பனை பார்த்து அவளுக்கு ஒன்னும் ஆகாது டா நீ கவலை பட வேண்டாம் என்று அவன் சொல்லும்போது
டாக்டர் வெளியே வர இன்பா அவரிடம் என்ன ஆச்சு என்று கேட்க இன்பாவின் பதட்டத்தை பார்த்து சிரித்து கொண்டே
சார் டோன்ட் ஒர்ரி அவங்க சரியாக சாப்பிடாமல் இருந்ததால் மயங்கி விழுந்தார்.
அவங்களுக்கு எதுவும் ஆக வில்லை இன்னும் கொஞ்ச நேரத்தில் கண் விழித்து விடுவார்கள்.
நல்லா சாப்பிட சொல்லுங்க என்று கூறி விட்டு அவர் செல்ல இன்பாவுக்கு நிம்மதியாக இருந்தது ஆனாலும் அவள் மேல் மிகவும் கோபம் தான்
மித்ரன் இன்பாவின் அருகில் வர அவன் அவளை போய் ஒரு பார்வை பார்த்து விட்டு டேய் நான் காலேஜ் போறேன்
ஆதி , மைதிலி ரெண்டு பேரையும் அனுப்பி வைக்கிறேன்.
நான் தான் அவளை தூக்கி இங்க வந்து சேர்த்தேன் அப்டின்னு அவளுக்கு தெரிய வேணாம் மச்சி என சொல்லிவிட்டு மித்ரன் பதிலுக்கு கூட காத்திருக்காமல் சென்று விட்டான்.
மைதிலி, ஆதி வர அப்போது தான் விவேகா கண் விழித்தாள்.
நான் எப்படி இங்க வந்தேன் என்று அவள் கேட்க
மித்ரனோ நானும் ஆதியும் தான் உன்னை இங்க கூட்டி வந்தோம் நீ மயங்கி விழுந்து விட்டாய் என்று சொல்ல
விவேகா ஏக்கமாக கதவுகளை பார்க்க அந்த பார்வையின் அர்த்தம் மித்ரனுக்கு புரிந்தது.
என்ன sisy பார்க்கிற ம்ம்ம் உன்னோட என்று கூற அவள் கண்களை அகல விரிக்க தோழி மைதிலி கூட வந்து இருக்கிறாள் என்று சொல்ல முகம் வாடி போனது.
ஆதி அவளிடம் இனி நீயும் நானும் ஒன்றாக காலேஜ் போலாம் நீ சாப்பிடவே இல்லை அப்டின்னு டாக்டர் சொன்னாங்க .
நீ வீட்டுக்கு வா டி உன்னை அப்பா கிட்ட சொல்றேன் என்று ஆதி சொல்லி விட்டு அவளை வீட்டுக்கு அழைத்து சென்றான்.
மித்ரன் இன்பாவிடம்
டேய் நீ சொன்னது சரி தான் டா
விவேகா உன்னை எப்படி தேடினாள் தெரியுமா?
இன்பா எந்த ஒரு உணர்ச்சியும் வெளிக்காட்டாமல் எனக்கு தெரியும் டா அவ என்னை தேடுவான்னு அது தான் நான் வந்துட்டேன்.
ஏன் டா இன்பா அவ இப்படி பண்றா
வேற என்னடா திமிரு தான் இதுவே அவ என் பின்னால் சுற்றி நான் இப்படி அலட்சியம் செய்தால் என்னை ஏமாற்றுபவன் அப்டின்னு சொல்லுவாங்க
ஆனால் அவ என்னை எப்படி சுற்ற விடுகிறாள் நீயே பாரு
அவள் இப்படியே இருக்கட்டும் மச்சி அப்போ தான் என்னோட கஷ்டம் புரியும்
எங்க வீட்டுக்கு வந்த ராஜ் தன் அம்மா சித்ராவிடம் அம்மா என்னாச்சு மா என்ன பண்ணிங்க என்று கேட்டான்
சித்ரா திருதிருவென முழித்த அவள்
நான் என்ன பண்ண நான் ஒன்னும் பண்ணலியே
அம்மா பொய் சொல்லாதீங்க மா
என்ன நடந்ததுன்னு
எனக்கு எல்லாம் இப்ப சொல்லுங்க
இல்ல
இங்க என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது அவ்வளவு தான்
சித்ரா இப்பொழுது பயந்துகொண்டே ஒன்னுமில்ல
ஒன்னுமில்ல
அம்மா இப்போ சொல்லுங்க
அம்மா எனக்கு எல்லா விஷயமும் தெரியும்
விவேகா என்கிட்ட எல்லாமே சொல்லிட்டா
இப்ப நீங்க சொல்லல அவ்வளவுதான்.
சித்ரா கூறிய விஷயத்தை கேட்டார் அதற்கு இனிமேல் வேகமாக கிடைக்க மாட்டாள் என்று தெரிந்து கொண்டான்.
இருந்தாலும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்று ராஜ் மனதில் கூறிக் கொண்டான்.
ராஜ் சித்ராவிடம் அம்மா நீ என்ன செய்வீர்களோ தெரியாது
இந்த கேஸ் எல்லாம் இன்னும் ஒரு ரெண்டு வாரத்துக்கு உள்ள
நீங்க வாபஸ் வாங்குறீங்க
வாங்கணும் அவ்வளவுதான் சொல்லிட்டேன்
ராஜ் அப்படி செய்ய முடியாது என இப்ப ஏதாவது செஞ்சா நம்ம அம்மாச்சி மேல எல்லா தப்பும் திரும்பிடும் அதனால வந்து எதுவும் செய்ய முடியாது.
எனக்கு தெரியாது மா நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ இன்னும் உனக்கு மூணு மாசம் தான் டைம் என்று சொல்லிவிட்டு ராஜ் சென்றான்.
இங்கு விவேகா ஆதியின் வீட்டிற்கு வந்தவுடன் ஆதி ,அதிதி, செல்வம், தேவி ,கங்கா என அனைவரும் அவளை நடுவில் நிற்க வைத்து சரமாரியாக திட்டினார்கள்.
ஆதி கங்கா விடம் அத்தை தேவா விவேகாவும் நானும் இங்கிருந்து சேர்ந்தே காலேஜ் போறோம்
அவளை நாங்க பாத்துக்குறோம்
நீங்க போயிட்டு வாங்க
ஒரு வாரம் கழிச்சு நான் விவேகாவைஅங்க கூட்டிட்டு வரேன்.
இல்ல ஆதி நான் அம்மா கூட போகிறேன் என்று அவள் கூறினாள்
ஏனென்றால் அங்கு சென்றால் தான் இன்பாவை எப்படியாவது பார்த்துவிட முடியும்
மறைந்துகொண்டு எங்கிருந்தாவது அவனை பார்த்து விட வேண்டும்
என்று அவள் தன் அம்மாவிடம் செல்ல முடிவெடுத்தாள்.
ஒரு நிமிஷம் சின்ன குட்டி என்று செல்வம் அவளை அழைக்க
என்ன மாமச்சி
நீ ஒன்னும் கவலைப்படாத சின்ன குட்டி
ஆதி எல்லாம் என்கிட்ட சொன்னான்
நீ என்ன கஷ்டமா இருந்தாலும்
மாமா நானும் கூட இருக்கேன்
இந்த மாதம் 15 ஆம் தேதிக்குள்ள
உனக்கு இந்த செம் பீஸ் நான் கட்டிடுவேன் அமௌன்ட் உன்கிட்ட கொடுக்கிறேன்
நீ கவலைப்படாம காலேஜ் போய் நல்லா படிக்கணும் சரியா
அம்மா கஷ்டப்படுறாங்க,
அப்பா இல்ல,
வருண் அங்க படிச்சுக்கிட்டு இருக்கான்,
அப்படின்னு நீ எந்த எதுவும் மனசுல போட்டு குழப்பிக்க கூடாது
நீ பாட்டுக்கு படிக்கிற
மாமா நான் உங்க கூட இருக்கேன்
எந்த கஷ்டமும் உங்களுக்கு வராது
அதனால நல்ல படிச்சு நல்ல வேலைக்கு போகணும்
அதுதான் மாமாவுக்கு பெருமை என்று கூற விவேகா வை பார்த்து கூற
விவேகா கண்களில் கண்ணீருடன் மாமாச்சி என்று கட்டிக்கொண்டாள்
கங்காவும் ஒருபக்கம் ஆனந்த கண்ணீர் சிந்தினாள்.
இந்த 15 நாட்களும் விவேகா சாப்பிட்டாளே தவிர அரைமனதுடன் ஏதோ பெயருக்கு சாப்பிட்டாள்.
காலேஜ் சென்று கொண்டிருந்தாள்
இன்பா மறந்தும் இவளை காண வரவில்லை
இப்படி இவள் கஷ்டப்பட்டால்தான் நம் அருமை புரியும் என்று
அவன் இவள் முன்னாடி வரவே இல்லை.
விவேகா என்பவை காணாமல் ஏங்கினாள் என்று சொல்லலாம்.
அந்த நாளும் வந்தது இன்பா
ஒரு கல்லூரி பணியின் காரணமாக
காலேஜில் அவனது அறையில் இருக்க
விவேகா பீஸ் கட்ட ஆபீஸ் ரூம் சென்றாள் ஆபீஸ் ல விசாரிக்க
அங்கிருந்த பணியாளர்
உனக்கு பீஸ் இல்லமா நோடியூ !
உனக்கு இந்த செம் நோடியூ என்று கூற
நான் இப்பதான் பீஸ் கட்ட வந்து இருக்கேன்!
நீங்கள் என்ன சொல்லறீங்க?
இல்ல மா உனக்கு நோடியூஸ் தான்
யாரு எனக்கு நோடியூஸ் போட்டது என்று அவள் கேட்க,
அதுவந்து,
அதுவந்து,
என்று,
அந்த பணியாளர் தயங்க,
இப்ப சொல்ல போறீங்களா இல்ல!
நான் கரஸ்பாண்டன்ட் லெட்டர் எழுதி கொடுக்குமா?
அது வந்து கரஸ்பாண்டன்ஸ் தான் கொடுக்க சொன்னாங்க,
கரஸ்பாண்டன்ட் மேடமா???
யார் சொன்னாங்க சொல்லுங்க?
என்று விவேகா கேட்க,
கரஸ்பாண்டன்ஸ் சார் தான் சொன்னாரு என்று அந்தப் பணியாளர் கூற,
விவேகா மனதில் முதலில் வந்த நபர் இன்பா தான்,
அவனை காண கோபத்துடன் சென்றாள்.
இன்பாவின் அறைக்கு வெளியே நின்றவள் உள்ளே வரலாமா என்று கேட்க
Yes come in என்று இன்பா சொன்னான் அவளை பார்த்து அவனுக்கு ஆச்சரியம் தான் ஆனால் வெளியில் காட்ட வில்லை.
ம்ம்ம் சொல்லுங்க மிஸ் விவேகா என்று அவன் கேட்க
விவேகாவுக்கு இப்படி கூப்பிடுவது கோபம் வரும் என்று தான் கூறினான்.
இதுக்கு என்ன அர்த்தம் உங்களை யார் எனக்கு பீஸ் கட்ட சொன்னது என்று கூறி
இந்தாங்க உங்க பணம் என்று அவன் மேசையில் வைக்க
ஒரு 10 மினிட்ஸ் வெளிய வெய்ட் பண்றீங்களா மேடம் என்று கூறியவன்.
அவள் வெளியே சென்றதும் விசாரிக்க அது அருண் என்று தெரிய வர
அப்புறம் அவனை பார்த்து கொள்கிறேன் என்று
இன்பா முதலில் உன்னை கவனிக்கிறேன் டி
விவேகாவை உள்ளே அழைத்தான்.
தொடரும்…..
Episode 51,
அருண் தான் விவேகாவின் காலேஜ் fees கட்டினான் என்று தெரிந்துகொண்ட
இன்பாவுக்கு அருண் மீது மிகவும் கோபமாக வந்தது.
இன்பாவின் மனதில் அருண் உன்னை அப்புறம் கவனித்துக்கொள்கிறேன்
முதலில் இவளை கவனிக்கவேண்டும் என்று கூறிக் கொண்டான்.
இன்பா விவேகாவை வெளியே போகச் சொன்னதும் அவள் சென்றவுடன் இப்போது அவள் மனது மிகவும் நிம்மதியாக இருந்தது
ஏனென்றால் இந்த நாட்களில் ஒரு முறையேனும் அவனை பார்க்க மாட்டோமா என்று ஏங்கி இருந்தால் பெண்ணவள்
இப்பொழுது அவனைப் பார்த்துவிட்ட சந்தோஷத்தில் இருந்தாள் விவேகா
மிஸ் விவேகா அப்படின்னு என்னை கூப்பிடுகிறாயா அந்த அளவுக்கு நான் உனக்கு ஆகிவிட்டேனா
விவேகாவின் brain நீதானடி அவன் கிட்ட இருந்து தள்ளி போகனும்ன்னு நினைச்ச இப்ப என்ன அவன் பக்கம் சாய்கிறாய்
நான் என்ன பண்ணட்டும் என்னோட அறிவே அவனை பார்த்தாலே என்னோட என்னோட மனசு அப்படியே அவன் மேல சாயுது
என்னோட கண்ணு அவனோட பார்வைக்காக ஏங்குது
இவ்வளவு ஏன் நீயே அவன பார்த்த உடன் வேலை செய்ய மாட்டேங்குற
உனக்கு தெரியும் தானே என்னோட அறிவே
என்று கூறியவள் தன்னைத் தானே நொந்து கொண்டாள்
அங்குமிங்கும் நடந்து கொண்டே இன்பாவின் அழைப்புக்காக காத்திருந்தாள் விவேகா
இன்பா இப்போது அவளை அழைக்க இது வரையில் அவன் மேல் அலைபாய விட்டிருந்த எண்ணங்களை மீண்டும் மனதில் அடைத்துக்கொண்டாள்.
சொல்லுங்க சார் என்று அவனை பார்க்க
இன்பா அவளை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு
உன்னோட செம் fees நான் கொடுக்கவில்லை என்று கூறினான்.
விவேகாவுக்கு ஒரு புறம் அதிர்ச்சி ஒரு புறம் துக்கம் தொண்டையை அடைத்தது.
இன்பா அவள் கண்களில் தெரிந்த வலி நிறைந்த ஏமாற்றம் நிறைந்த பார்வையை கவனிக்க தவறவில்லை.
அவள் தன்னை மீட்டுக்கொண்டு அப்போ அது யாரு எனக்கு ஆஃபீஸ் ரூம் ல நீங்கள் தான் அப்டின்னு சொன்னங்களே
இன்பா விவேகாவை ஒரு அலட்சிய பார்வையில் மிஸ் விவேகா அவங்க R.இன்பராகவன் அப்டின்னு சொன்னாங்களா என்று கேட்க
இவள் கனத்த இதயத்துடன் இல்லை என்று தன் தலையை இட வலமாக ஆட்டினாள்.
இன்பா ஒரு நிமிடம் அவளது எதிர்வினையை பார்த்து ஒரு ஏளன புன்னகை செய்தவன்.
அப்புறம் எப்டி நான்தான் அப்டின்னு நினைச்சு என்னை தேடி வந்த இதுக்கு என்ன காரணம் என்று இன்பா அவனது இரு புருவங்களை தூக்க
விவேகா வலியான பார்வையில் இன்பாவ பார்க்க
ம்ம்ம் answer மீ என்று சொல்ல
விவேகா கீழ தரையை பார்க்க
இன்பாவின் மனமோ டேய் அவ பாவம் டா போய் அவளை கனவின்ஸ் பண்ணு டா
இப்படி நினைச்சு நினைச்சு ஒவ்வொரு முறையும் அவளுக்கு நான் இடம் கொடுக்கிறதால் தான் என் கிட்ட இவ்ளோ தைரியமா பேசரா
என்னை கஷ்ட படுத்திட்டு போறா அவளுக்கு இது கொஞ்சம் கம்மி தான் என்று நினைத்தவன்.
இன்பா தன் தொண்டையை சிறும்ப அவனை நிமிர்ந்து பார்த்தாள் விவேகா.
இப்போது அவன் அவளை பார்க்காமல் ஒரு பைலை எடுத்து சரி பார்த்து கொண்டே
உன் பின்னாடி டியர் டியர் ன்னு ஒருத்தன் சுத்திட்டு இருக்கானே அவன் தான் உனக்கு fees கட்டி இருக்கான்.
விவேகா அவனை பார்த்து சீனியரா என்று சொல்ல
I dont know அவன் சீனியர் ஆ இல்ல ஜூனியர் ஆ ன்னு என்று இன்பா தன் வேலையில் கவனமாக இருக்க
விவேகா அவனை பார்த்து நான் யாருக்கும் கடனாளியாக இருக்க விரும்பல எனக்காக யாரும் கொடுக்க வேண்டாம் .
நான் சீனியர் கிட்ட இந்த பணத்தை கொடுக்கணும் என்று அவள் சொல்லி பணத்தை எடுத்து கொண்டு செல்ல
இன்பா ஒரு நிமிடம் என்று தன் பைலை மூடி வைத்து விட்டு விவேகாவை பார்க்க
விவேகா நீங்களே பணத்தை கொடுத்து விடுகிறீர்களா என்று அவள் கேட்க
இன்பா தன் காதுகளை தேய்த்து கோண்டே இப்போ என்ன சொன்ன
நான் நீங்கள் கொடுத்து விடுகிறீ என்று அவள் சொல்லி முடிக்க வில்லை
அது இல்லை அதுக்கு முன்னாடி ஏதோ சொன்னியே என்று இன்பா கேட்க
விவேகா நியாபகம் வந்தவளாய் நான் யாருக்கும் கடனாளியாக இருக்க விரும்பல என்று அவள் சொல்ல
இன்பா மனதில் மாடிக்கிட்ட டி பேபி என்று நினைத்தவன்.
அப்போ நீ யாருக்கும் கடனாளியாக இருக்க விரும்பல அப்படி தானே என்று கேட்க
ம்ம்ம் ஆமா என்று அவள் புருவ முடிச்சு போட கோபத்தில் சொல்ல
இன்பா அவளை பார்த்து
சரி எனக்கு கொடுக்க வேண்டியது கொடுத்து விட்டு போ
உங்களுக்கு நான் என்ன கொடுக்கணும்
உங்க கிட்ட நான் பணம் எதுவும் வாங்க வில்லையே என்று விவேகா சொல்ல
நல்லா யோசி என்று அவன் அவளை பார்க்க
அவள் சிறிது நேரம் யோசித்தவள் இல்லை உங்கள் கிட்ட இருந்து நான் எதுவும் வாங்க வில்லை என்று விவேகா சொல்லி விட்டு திரும்ப
என்னோட 75 கிஸ், 5 ஹக்ஸ் கொடுத்து விட்டு போடி என்று சொல்ல
விவேகா இரண்டு அடிகள் எடுத்து வைத்தவள் இதை கேட்டு அப்படியே நின்றாள்.
ஹே திரும்பு டி என்று இன்பா அழைக்க
விவேகா அதிர்ச்சியாக சார் இப்போ நீங்கள் ஏதோ சொன்னீங்க அது என் காதில் சரியா கேட்கல
இன்பா தன் தலையை கோதி கொண்டே நான் கொடுத்த கிஸ் , ஹக் , எல்லாம் திருப்பி கொடுத்து விட்டு போ என்று சொல்லி கொண்டே அவனுடைய மீசையை முறுக்கி விட்டு
விவேகாவை ஒரு பார்வை என்ன என்பதை போல் பார்க்க
அவள் திருதிருவென முழிக்க
என்னடி நான் சொல்றது புரியுதா இல்லயா
நா…
நான்…
நான் கொடுக்க மாட்டேன் என்று அவள் சொல்ல
அப்போ நீ பணத்தை கொடுக்க கூடாது என்று இன்பா அந்த சூழல் நாற்காலியில் நன்றாக சாய்ந்து கொண்டு சொல்ல
நான் ஏன் பணம் கொடுக்க கூடாது என்று அவள் கேட்க
நீ என் கிட்ட மட்டும் வாங்கினது தர மாட்ட ஆனால் அவன் கிட்ட பணம் போய் கொடுப்ப
இதுல எனக்கு தான் லாஸ் என்று இன்பா சொல்ல
உங்களுக்கு லாஸ் ஆ எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் உண்மையா போலீசா
உங்களை பார்த்தால் எனக்கு போலீஸ் மாறி தெரியல பேசாமல் நீங்கள் ஸ்கிரிப்ட் writer அது மாதிரி ஜாப் க்கு போகலாம் என்று விவேகா அவனிடம் சொல்ல
இன்பா அவளை பார்த்து முறைத்தவன்.
ஹே சும்மா இந்த கம்பி கட்டுற கதை எல்லாம் என்கிட்ட வேணாம்.
விவேகா அவனை பார்த்து
யாரு நானா இல்ல நீங்களா என்று அவள் சொல்ல
உடனே இன்பா நீ எனக்கு கொடுக்க வேண்டியது கொடுக்காமல் நீ என்கிட்ட தப்பிக்கலாம் அப்டின்னு மட்டும் நீ நினைக்காதே
நீ எனக்கு கொடுக்கல அவ்ளோ தான் என்று இன்பா சொல்ல
விவேகா ஒரு பெரு மூச்சு விட்டவள். தன் கண்களை மூடிக்கொண்டு பின் சிறிது நேரம் கழித்து இன்பனை பார்த்தவள்
மொத்தம் 71 கிஸ் தானே என்று அவனை பார்த்து சொல்ல
அடி பாவி அப்போ எல்லா கிஸ் எண்ணி இருக்கியா என்று இன்பா அவளை பார்த்து சொல்ல
உங்க மனசு ஒரு வெட்கம் கெட்ட மனசு என்கிட்ட 4 கிஸ் அதிகமா சொல்லறீங்க என்று இவள் சொல்ல
ஹே நானா இல்ல நீயா
நான் சும்மா ஒரு கெஸ் ல 75 ன்னு சொன்னேன் ஆனால் நீ எல்லா கிஸ் யும் எண்ணி இருக்க
உனக்கு தான் டி வெட்கம் கெட்ட மனசு என்று இன்பா கூறினான்.
இப்போது விவேகா அவனை பார்த்து அய்யோ விவேகா நீயா உன் வாய கொடுத்து மாடிக்கிட்டாயே என்று நினைத்து அவனை பார்க்க
சரி ok வந்து கொடு வா என்று சொல்ல
அவள் இன்பனை பார்த்து
எதுக்கு என்னை இப்படி torture பண்றீங்க என்று சொல்ல
ஹே நீ தான் டி என்னை torture பண்ற என்று அவன் சொல்லி இரண்டே எட்டில் அவளை அருகில் இழுத்தவன் அவளை மடியில் அமர வைத்தவன்.
இப்போது விவேகாவை பார்க்க அவள் நான் இன்னிக்கு மொத்தமும் கொடுத்து விடுகிறேன் என்று சொல்ல
அப்புறம் உனக்கு தான் டி கஷ்டம் நான் ஏதாவது உன்னை என்று இன்பா நிறுத்த விவேகா அவனிடம் இருந்து எழ போக
ஹே எங்க போற என்று மீண்டும் அவளை இழுத்து அவன் மடியில் அமர்த்தி கொண்டு விவேகாவை இறுக்க அணைத்து கொண்டான்.
விவேகா ஏதோ சொல்ல வர அவள் மனதை படித்தவனாக அவளிடம் அன்னிக்கு fire அச்சிட்டேன்ட் ல
நீயா என்னை வந்து ஹக் பண்ணது டி என்று அவளின் காதுக்கு அருகில் சொல்ல
இதை கேட்டு விவேகாவுக்கு கண்ணீர் வந்து விட்டது.
இன்பா அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்ணில் உள்ள கண்ணீர் துடைத்து விட்டு அவள் மன நிலையை மாற்றும் விதமாக
ஹே நான் உனக்கு கிஸ் பண்ணும் போது feeling ஆ கொடுத்தேன் டி அது போல தான் நீ எனக்கு கொடுக்கணும் இல்லை அதை நான் reject பண்ணிடுவேன் என்று சொல்ல
அப்புறம் எப்போ எல்லாம் கேட்கிறேனோ அப்போ எல்லாம் வந்து கொடுக்கணும்
நான் போலீஸ்காரன் என்னை ஏமாத்தனும்ன்னு நெனைச்ச அப்புறம் உன்னை தூக்கிடுவேன் என்று அவளை பார்த்து இன்பா குறும்பாக சொல்ல
விவேகா அவனை பார்த்து முறைத்தவள் 71 கிஸ் க்கு மேல ஒன்னு கூட தர மாட்டேன் என்று சொல்ல
இன்பா மனதில் அதுக்குள்ள உன்னை எனக்கு சொந்தமாக்கிடுவேன் டி என்று சந்தோஷம் கொண்டு
ம்ம்ம் ok தர வேணாம்
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் நீ ஒரு வேலை என்னை ஏமாத்திட்டு வேற ஒருத்தன் கூட கல்யாண மேடை வரையில் போலாம் அப்டின்னு நினைக்காத
நான் அங்கேயும் வருவேன் என்னோட லாஸ் என்னை ரொம்ப affect அபக்ட் பண்ணிடுச்சு என்று அவன் சொல்ல விவேகா அவனை பார்த்து முறைத்தாள்.
சரி டென்ஷன் ஆகாத உன்னோட first கிஸ் கொடு பார்க்கலாம் என்று சொல்ல
விவேகா கொஞ்ச நேரம் தலையை குனிந்து கொண்டு இருந்தவள் நிமிராமல் இருக்க
விவி பேபி im waiting சீக்கிரம் நான் இப்போ கிளம்பனும் என்று சொல்ல
விவேகா அவன் கன்னகுழி அருகில் வந்து அவள் முதல் முத்ததினை கொடுக்க
இன்பா அவளை பார்த்து????
தொடரும்…..
Episode 52,
விவி பேபி im waiting சீக்கிரம் என்று இன்பா அவளிடம் சொல்ல
விவேகாவுக்கு நாணம் ஒரு பக்கம் அவளை வாட்டியது.
இன்பாவின் முகத்திற்கு அருகில் வந்து அவன் கன்னகுழியில் தன் முதல் முத்தத்தினை பதித்தாள்.
அவளுக்கு நீண்ட நாள் ஆசை தான் இன்பாவின் கன்னகுழி மிகவும் பிடிக்கும்.
ஏன் என்றால் அதில் தானே விழுந்து இருக்கிறாள்.
அவள் முத்தம் கொடுத்து விட்டு எழ போக
ஹே என்ன இது!
என்று இன்பா விவேகாவை பார்த்து கேட்க
இன்னும் 70 கிஸ் தான் உங்களுக்கு கொடுக்கணும் என்று அவள் சொல்லி விட்டு செல்ல போக
இன்பா எழுந்து
அவளை சூழல் நாற்காலியில் அமர வைத்து
அவன் கீழ குனிந்து அவள் முகத்தை நெருங்கி
இப்போது அவன் விவேகாவிடம்
You cheating me என்று சொல்லி இப்போ கொடு டி என்று அவள் முகவாய் பற்ற
விவேகாவின் கண்கள் அங்கும் இங்கும் அலை பாய நான் ஒன்னும் cheating பண்ணல
எ…..
என்…..
என்னை விடு நீ…. என்று அவள் உதடுகள் தந்தி அடிக்க சொல்ல
விவேகா உன்னோட கண்ணு
அப்டியே பட்டர் பிளை( butterfly) மாறி
எதுக்கு இப்படி அடிக்குது என்று
மெதுவான குரலில் சொல்ல
அவள் எந்த பக்கமும் நகர முடியாமல் அவனையும் பார்க்க முடியாமல் சிரமப்பட
இன்பா அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் பார்க்க தவறவில்லை.
“பேபி இப்போ நான் என்ன பண்ணட்டும்” என்று கொஞ்சம் மெதுவாக அவள் காதுக்கு அருகில் சொல்ல
பிலீஸ் என்னை விடு
நான் போகனும் என்று வேக மூச்சு எடுக்க சொல்ல
விவேகாவின் மூச்சு காற்றில் எல்லாம் இம்பாவின் வாசம் தான்.
இப்போ உன்னை விடுகிறேன் நான் கூப்பிடும் போது நீ வரனும் என்று சொல்லிவிட்டு அவளை விடுவிக்க அவள் அவன் முகத்தை பார்க்க முடியாமல் ஓடி விட்டாள்.
அவள் அருகில் இருக்கும்போது பூவை விட மென்மையான முகத்தையும் சிரிப்பையும் கொண்டு இருந்தவன் அவள் சென்று ஒரு நிமிடம் கூட ஆக வில்லை.
உடனே தன் போன் எடுத்து முக்கியமாக இன்று பேசியே ஆக வேண்டும் என்று அந்த முக்கிய நபருக்கு போன் செய்தான்.
அது வேறு யாரும் இல்லை கிருஷ்ணன் தான் (வசுமதியின் அப்பா முன்னாள் ராணுவவீரன் )
ஓய்வு பெற்றவர்.
விவேகா படிக்கும் காலேஜ் அவருடையது தான்
ஹலோ old man
Tell me my boy என்று அவர் மிகவும் கம்பீரமான குரலில் சொல்ல
நான் ரொம்ப கோவமாக இருக்கிறேன்
What happen ? வாட் ஹாப்பன்
என்ன சொல்றது இந்த அருண் என்று அவன் நிறுத்தி கொள்ள
கிருஷ்ணன் இன்பாவிடம்
நீ சொன்னதுனால தான் அன்னிக்கு நான் அவனை திட்டினேன் ராகவ்
அவன் என்னோட செல்ல பேரன் டா
இப்போது இன்பா மிகவும் கோபமாக அப்போ நான் யாரு
இப்போது உனக்கு என்ன வேணும் என்று தாத்தா கேட்க
இன்பா அவன் தாத்தாவிடம் அந்த fellow என்ன பண்ணிருக்கான் அப்டின்னு உங்களுக்கு தெரியுமா என்று கோபம் கொள்ள
அவரோ ராகவ் டோன்ட் பி ஆன்க்ரீ
நான் ஒரு army மேன்
நானே calm ஆ உன்கிட்ட பேசறேன்
உனக்கு எதுக்கு இவ்ளோ கோபம் கொஞ்சம் பொறுமையா பேசணும்
இல்ல நான் போன் வைத்து விடுவேன்
தன் தவறை உணர்ந்த இன்பா- sorry தாத்தா
என்று தன்னை ஒருவாறு சரி செய்து கொண்டு
அந்த அருண் காலேஜ் ல ஒரு girl க்கு od அவனே sign (சைன்) போட்டு வெளிய கூட்டிட்டு போயிருக்கான்
Bluddy fool
And நெஸ்ட் அவன் ….
அவன்….
ம்ம்ம் அவன் இப்போ என்ன பண்ணுனான்
அவன் என்று வேக மூச்சு எடுத்த இன்பா
அவன் அதே girl க்கு செம் fees full ஆ management donation list (மேனேஜ்மென்ட் டொனேஷன்)ல add பண்ணிட்டான் தாத்தா என்று இன்பா கோபம் கொண்டு சொல்லியவன்.
அவர் என்ன கூற போகிறார் என்னும் ஆவலில் இருக்க
இன்பாவின் தாத்தா இதை கேட்டு சிரித்து விட அவனுக்கு சட்டென்று கோபம் வந்தது.
Old man என்று இன்பா பற்கள் கடித்து கொண்டு சொல்ல
ராகவ் இதுல உனக்கு என்ன பிரச்சனை
எனக்கா
எனக்கு பிரச்சனை தான் அவன் எதுக்கு இப்படி செய்யுறான்.என்று இன்பா கேட்க
அதற்கு தாத்தா,
அவன் அந்த பொண்ண impress பண்ண try பண்றான் i think he fall in love with her
(ஐ தின்க் ஹி ப்பால் இன் லவ் வித் ஹர்)
Never என்று இன்பா சொல்ல
உனக்கு என்ன என்று அவர் கேட்க
அது கூடாது அந்த girl க்கு என்று இன்பா நிறுத்தி கொள்ள
உடனே கிருஷ்ணன் சிரித்து விட்டு
சரி சரி கூல் my boy மை பாய்
Im just kidding you (அயம் ஜஸ்ட் கிட்டிங் யு)என்று அவர் சொல்ல இப்போது கொஞ்சம் நிதானத்திற்கு வந்த இன்பா அவரிடம்
நாளைக்கு நீங்கள் காலேஜ் வாங்க
ஐ வான்ட் சம்தின்ங் டு டெல் யு என்று இன்பா கூற சரி என்று அவர் போன் வைத்தார்.
விவேகா இன்பாவிடம் இருந்து வந்தவள் அவன் நினைவில் மனதுக்குள் சிரித்து கொண்டே வர ஒரு வாரம் கூட இவனை பார்க்காமல் பேசாமல் இருக்க முடியல
அதுக்குள்ள இவனும் ஏதாவது மேஜிக் பண்ணி என்கிட்ட வந்து ஒட்டி கொள்கிறானே சரியான இடியட் இன்பா என்று சந்தோஷ முகத்துடன் வகுப்புக்கு வந்தாள்.
நேராக தன் இடத்திற்கு வர மைதிலி விவேகாவை பார்த்து
இங்க கண்ணு கூசர மாறி லைட் அடிக்குதே யாரது வரது என்று கேட்க
ஹே அடிங்க என்ன ஓவரா பேசற லிதி அவ்ளோ தான் சொல்லிட்டேன்.
ஆதி விவேகாவை பார்த்து இந்த உடனடியான இன்பத்துக்கு யார் காரணம் விவி என்று பொடி வைத்து அவன் பேச
யார் காரணம்
யாரும் இல்லையே என்று அவள் திக்கி பேச
இந்த மாதிரி இருக்கவங்க கூட friend ஆ இருக்க கூடாது லிதி
அவங்க கொஞ்சம் எப்டி சொல்றது
திடீரென ரொம்ப சோகமா இருப்பார்கள் அதுக்கும் நம்ப கூட இருக்கணும் ,
திடீரென சிரிப்பங்க அதுக்கும் நம்ப சிரிக்கணும் ,
திடீரென கோபமா இருப்பார்கள் நாமும் கோபமா இருக்கணும்.
மைதிலி ஆதி ய பார்த்து இப்போ என்ன தான் சொல்ல வர ஆதி
அவங்க கொஞ்சம் மென்டல் டீஸ்ஆடர் என்று சொல்ல
மைதிலி அவனிடம் எனக்கு புரியல ஆதி
மைதிலி லூசு அவங்களும் லூசு என்று ஆதி சொல்லி சிரிக்க
ஆதித்யா என்று விவேகா அவனை அடிக்க ஏய்
ஏய் வலிக்குது டி விடு
ஹே விடு டி என்று ஆதி அவளிடம் சொல்லி கொண்டு இருக்க
இதை பார்த்து யாழினி மனம் நெருப்பில் எரிந்தது
அங்கு வந்த அருண் இதை பார்த்து அவனால் முடிய வில்லை .
அருண் மனதுள் முதலில் இந்த ஆதியை உன் கிட்ட இருந்து பிரிக்கனும் டி என்று மனதில் கூறிக்கொண்டான்.
Candy ஸ்டிக் மிட்டாய் மிகவும் பிரபலம் அடைந்தது மெலினா ஜார்ஜ் மிகவும் பிரபலமான நடிகை வளர்ந்து வரும் முன்னணி கதாநாயகி
இந்த சாக்கலேட்டு விளம்பரத்திற்கு மெலினா நடித்த அந்த விளம்பரம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது.
அதையே போல் அந்த சாக்கலேட்டு சுவை வகைகள் அதிகமாக காலேஜ் செல்லும் மாணவ மாணவிகள் இலவட்டம் மத்தியில் பிரபலமானது.
அடுத்த நாள் கிருஷ்ணன் காலேஜ் வந்து இறங்கினார். இவர் வருவதற்காகவே காத்து கொண்டு இருந்தான் இன்பா
அவர் உள்ளே செல்ல அங்கு உள்ள அனைத்து ஊழியர்கள் எல்லாம் இவரை வணங்கி விட்டு செல்ல இவர் ஒரு சிறிய தலை அசைப்புடன் சென்றார்.
இவர் நேராக கரெஸ்பான்டெண்ட் அறைக்கு செல்லும் வழியில் விவேகா ஒரு மிகப்பெரிய புத்தகம் எடுத்து கொண்டு வந்து அங்கு உள்ள இருக்கையில் அமர்ந்தவள் அதனை படித்து கொண்டு இருக்க
இன்பாவின் தாத்தாவிற்கு வீட்டில் இருந்து போன் வர அதை பேசிக்கொண்டே அந்த இடத்தை சுற்றி பார்க்க
விவேகா அருகில் இருந்த தண்ணீர் பிடிக்கும் tap ல இருந்து தண்ணீர் ஒழுக அதை முதலில் நன்றாக திருகி விட்டு அமர்ந்து இரு பக்கங்களை புரட்ட
சில மாணவர்கள் மீண்டும் தண்ணீர் பிடித்து விட்டு சரியாக tap திருகாமல் விட மீண்டும் அது சொட்டி கொண்டே இருக்க
விவேகா மறுபடியும் போய் அதனை திருகி விட்டு இரண்டு பக்கங்களை புரட்டினாள்.
கிருஷ்ணன் முதலில் சாதாரண மாக எடுத்து கொள்ள பின் அவள் ஓவ்வொரு முறையும் அவ்வாறு செய்வது அவரை விவேகாவின் மீதான எண்ணத்தை மதிப்பு கூடியது.
விவேகாவின் செயலை பார்த்து ஒரு சின்ன சிரிப்புடன் சென்று விட்டார்.
கிருஷ்ணன் கரெஸ்பாண்டெண்ட் அறைக்கு வர அங்கு இன்பா அமர்ந்து இருந்தான்.
தன் தாத்தாவ பார்த்ததும் எப்போதும் போல் ஒரு salute செய்து விட கிருஷ்ணன் அவனை அணைத்து கொண்டார்.
ம்ம்ம் சொல்லு ராகவ்
என்ன பிரச்சனை என்று கேட்க இன்பா அருண் செய்த எல்லா விஷயமும் கூற
அவர் சிரித்து கொண்டே சரி நான் பார்த்து கொள்கிறேன் நீ கவலை பட வேணாம் என்று சொல்லியவர்.
இன்பாவ பார்த்து உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்.
ம்ம்ம் தாத்தா
அப்புறம் என்ன அடிக்கடி காலேஜ் பக்கமாகவே சுத்தற என்னாச்சு
அது ஒன்னும் இல்ல தாத்தா சும்மா தான்
ஹே பொய் சொல்லாத நான் crime branch ல 5 years ஒர்க் பண்ணேன்.
Just a miracle நடந்தது
my girl என்னோடவள ஆ பார்த்து விட்டேன் தாத்தா.
அவர் ஒரு கேள்வியாக IPS ஆ அந்த பொண்ணு
இல்ல அவ மிசஸ் இன்பராகவன் IPS என்று அவன் சொல்ல
கிருஷ்ணன் சட்டென்று சிரித்து விட்டார்.
வசுவுக்கு தெரியுமா
இல்ல மாம் கிட்ட சொல்ல எனக்கு கொஞ்சம் பயம் ன்னு சொல்ல தெரியவில்லை ஆனால் ஒரு மாறி இருக்கு
நீங்கள் தான் என்னோட best friend so என்று அவன் கூறினான்.
Love at first sight யாரு நீயா இல்ல என்னுடய பேத்தியா (விவேகாவை)
நான் தான் தாத்தா அவ பின்னாடி சுத்துறேன் என்னை சுற்ற விடுகிறாள்.
வாட் !!!!!??????
என் பேரனை சுற்ற விடுகிறாளா யார் அந்த brave girl
நீயா ராகவ் இது i cant believe it என்று இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது
கிருஷ்ணனை பார்க்க காலேஜ்ல சில பொறுப்பில் இவர் வைத்த ஆட்கள் வர
உடனே அவர் வெளியே சென்று பேசி கொண்டு இருக்க
இங்கு விவேகா ஒரு லெட்டர் எழுதி அதை ஆஃபீஸ் ரூமில் கொடுத்து கொஞ்சம் சத்தத்துடன் பேசி கொண்டு இருக்க
அங்கே என்ன சத்தம் என்று கிருஷ்ணன் கேட்க
அங்கு வந்த ஒரு நிர்வாகி கிரிஷ்ணன் கிட்ட சார் அந்த பொண்ணு tap ல இருந்து தண்ணி வந்ததுக்கு எங்கள் மேல் complient பண்ண வந்திடுச்சு
உடனே கிருஷ்ணனுக்கு அது யார் என்று தெரிந்தது
உடனே கேரிஷ்ணன் ஆட்கள் ஐயா இந்த பொண்ணுக்கு தான் நம்ப சின்ன சார் fees வேண்டாம் அப்டின்னு மாத்தி போட்டாரு என்று அவர் சொல்ல
அப்பொழுது வெளியே வந்த இன்பா அதை கேட்டு கொண்டு வர
கிருஷ்ணன் இன்பாவிடம் ராகவ் இந்த பொண்ணுக்கு தான் அருண் fellow fees pay பண்ணி இருக்கான்.
Im excited , she is adorable
அருண் fees pay பண்ண பொண்ணு
அவ தான் என்னுடய future
மிசஸ்.இன்பராகவன் IPS என்று கோபமாக சொல்ல
இப்போது கிருஷ்ணனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க
Old man அருண் my girl பின்னாடி தான் சுத்துரான் என்று சொல்ல
கிருஷ்ணன் இப்போது இன்பா அருகில் வந்து சரி விடு என்று சிரித்து கொண்டே அவ மிசஸ் இன்பராகவன் ips தான் என்னோட பேத்தி தான்
Ok my boy பிலீஸ் cool
விவேகா அந்த லெட்டர் எடுத்து கொண்டு இன்பனை பார்க்க வர
அவனது தாத்தா உள்ளே இருக்க இவன் வெளியே நிற்க
மிஸ்டர் இடியட் இன்பா உங்கள் காலேஜ் ல tap கூட ஒழுங்கா இல்ல
என்ன பண்றீங்க நீங்கள் என்று அந்த லெட்டர் பார்த்து கொண்டே வர
அங்கு இன்பாவும், கிருஷ்ணனும் திரும்பி பார்க்க?????
விவேகா நிமிர்ந்து அங்கு இருவர் நிற்பதை பார்த்து????
தொடரும்……
Episode 53,
விவேகா இன்பா வெளியே நின்று கொண்டு இருப்பதை பார்த்து பேசிக்கொண்டே வந்த பின்னால் இருந்து குரல் கேட்கவும் விவேகா சட்டென்று நிற்க
அங்கு இன்பா இவளை தான் பார்த்து கொண்டு இருந்தான். கிருஷ்ணன் அவள் என்ன பேச வருகிறாள் என்பதை ஆர்வமாக கேட்க வரும்போது விவேகாவின் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது.
டியர் இங்க என்ன பண்ற உனக்கு ஒரு surprice இருக்கு என்று சொல்லி கொண்டு வர
விவேகா இன்பாவுக்கு ஒரு 10 அடி தொலைவில் இருக்கும் போதே அருண் வந்து விட்டான்.
விவேகாவுக்கு மனதில் நாம் இன்பனை பற்றி பேசியது தெரிந்து இருக்குமோ என்று இவள் நினைக்க நல்ல வேளை அப்படி எதுவும் நடக்க வில்லை.
விவேகாவின் அருகில் வந்த அருண் அவள் கைகளை பிடித்து கொண்டு
டியர் இங்கே மெலினா ஜார்ஜ் ஒரு ஷாப் ஓப்பனிங் க்கு வந்து இருக்கிறார்கள் வா நம்ப போகலாம் என்று அழைக்க
அவனை பார்த்து சீனியர் ஒரு நிமிடம் இந்த லெட்டர் இன்பா சார் கிட்ட கொடுத்து விட்டு வருகிறேன் என்று அவள் செல்ல போக
அப்டி என்ன இது உனக்கு என்று பிரித்தவன் அதில் உள்ளதை படித்து பார்த்து சிரித்து விட்டு அவளை பார்த்து
அந்த tap சரி இல்லை அப்படினா
நமக்கு என்ன விவேகா
இந்த பொது சேவையை அப்புறம் செய்து கொள்ளலாம் வா டியர்
என்று அந்த லெட்டர் எடுத்து அவன் மடித்து வைத்து அவள் கையை பிடித்து அழைத்து செல்ல இப்போது இன்பா , விவேகா என இருவருக்குமே கோபம் வந்தது.
இங்கு இன்பா கோபத்தில் அறையின் உள்ளே செல்ல கிருஷ்ணன் அவனை பார்த்து சிரித்து கொண்டே
ராகவ் அந்த பொண்ணுக்கு heavy compition போலயே என்று சொல்ல இன்பா முறைத்தான்.
சரி சரி கோபப்பட வேண்டாம் இடியட் இன்பா என்று சொல்லி அருணை நான் பார்த்து கொள்கிறேன்.
அந்த பொண்ணு உன்னை தான் விரும்புகிறாள் உன்னை சுற்ற விடுகிறாள் இப்போவே நீ காதல் சடுகுடு விளையாடிக்கொள் என்று சிரிக்க
இன்பா அவரை பார்த்து தாத்தா என அழைக்க சரி டென்ஷன விடு போய் பேத்திய கூட்டி வா நான் பார்க்கனும் என்று அவர் சொல்ல
இன்பா விவேகா என்ன செய்கிறாள் என்று பார்க்க அதிர்ந்து தான் போனான் ஒரு நிமிடம்.
விவேகா அருண் கைகளை தட்டி விட்டவள். சீனியர் நீங்கள் பண்றது சரி இல்லை .
என்னை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் எனக்கு பொதுசேவை செய்து ஸீன் create பண்றது என்னோட வேலை இல்ல
நான் ஒன்னும் ஹீரோயின் இல்ல ரோஜா செடி நடுவது , நாய்குட்டி ய காப்பாற்ற, இதெல்லாம் பண்றதுக்கு எனக்கு நேரம் இல்ல
அப்புறம் இன்னொரு விஷயம் தண்ணீர் எவ்ளோ முக்கியம் தெரியுமா.
நான் வர பட்டிக்காட்டில் பிறந்த பொண்ணு உப்பு தண்ணீர் கூட நாங்க காசுக்கு தான் வாங்கி அதை பயன்படுத்துவோம் .
எங்கள் ஊரில் போர் கூட போட முடியாது அவ்ளோ பாறை இருக்கு அதனால தண்ணீர் க்கு ரொம்ப கஷ்டம்
அந்த தண்ணியோட கஷ்டம் என்னன்னு எனக்கு தெரியும்.
RO, pure it, மினரல் வாட்டர் குடிக்கிற உங்களுக்கு என்னோட கஷ்டமும் புரியாது என்னை பத்தி உங்களுக்கு ஒன்னும் தெரியாது.
அருண் அவளை வைத்த கண் வாங்காமல் நின்று பார்த்து கொண்டு இருந்தான்.
விவேகா அவனை பார்த்து,
எனக்காக எதுக்கு நீங்கள் fees pay பண்ணனும் உங்களுக்கு நான் யாரு ஒரு friend கூட நான் இல்லை.
நீங்கள் வெண்பாவுக்கு friend அதனால தான் உங்கள் கிட்ட நான் பேசினேன்.
இந்த மாதிரி நீங்கள் எனக்கு fees கட்டினது ஆதிக்கு தெரிஞ்சது அவ்ளோ தான் நான்
உங்கள் பணத்தை நான் வந்து கொடுத்து விடுகிறேன்
என்று சொல்லியவள் மீண்டும் கடைசியில் அவனை ஒரு பார்வை பார்த்து
உங்கள் மனசு கஷ்ட படுகிற மாதிரி பேசி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.
என்று கூறி விட்டு அவள் செல்ல அருணுக்கு மனம் மிகவும் கவலையாக இருந்தது.
இதையெல்லாம் கேட்டு கொண்டு இருந்த இன்பாவுக்கு மனதில் மிகவும் சந்தோஷமாக இருந்தது.
இனி அவள் பின் இவன் சுற்ற மாட்டான் என்று நினைத்தான். ஆனால் அது விதியின் கைகளில் தான் உள்ளது.
அருண் அவள் சொல்லிய அனைத்து வார்த்தைகளையும் நினைத்து பார்த்தவன் கடைசியில்
“உங்களுக்கு நான் யாரு” என்று விவேகா கூறிய வார்த்தையில் வந்து நின்றான்.
விவேகா நான் உனக்கு யாரு அப்டின்னு உன் வாயிலேயே சொல்ல வைக்கிறேன் டி சீக்கிரமே நீ விவேகா அருண் ஆக போற டி என்று ஒரு தந்திர புன்னகை சிந்தி விட்டு
அந்த வேலையெல்லாம் முடித்து விட்டு தான் இனி நான் உன்னை வந்து பார்ப்பேன். I miss you dear, i love you என்று சத்தமாகவே சொல்ல
இன்பா அருண் அருகில் வரவும் அவன் லவ் you என்று சொல்லவும் சரியாக இருந்தது. சட்டென்று கோபம் தலைக்கு ஏற அருணை பிடித்து இன்பா தன் தாத்தாவை பார்க்க அழைத்து சென்றான்.
இன்பா மனதில் நானே இன்னும் அவ கிட்ட i லவ் யூ சொல்லல ஆனால் இவன் சொல்கிடறானே அதுவும் என்னோட டார்ஜிலிங் கிட்ட
அருண் இன்பனை பார்த்து உங்களுக்கு என்ன பிரச்சனை எதுக்கு என் கிட்ட இப்படி நடந்து கொள்கிறீர்கள்.
உன்கிட்ட நான் என்ன சொன்னேன் அவ பின்னாடி சுத்தாதே அப்டின்னு சொன்னேன் தானே
நீ பண்றது கொஞ்சம் கூட சரி இல்லை பார்த்து கொள்.
நீங்கள் சொல்வது சரி தான் நான் செய்தது கொஞ்சம் கூட சரி இல்லை நான் அதை சரி செய்கிறேன் என்று அவன் விவேகாவை பற்றி நினைத்து சொல்லி விட்டு சென்றான்.
இன்பா தன் தாத்தாவை பார்க்க சென்றான்.
எங்கே ராகவ் “ambitious girl ” வரலையா
இல்ல தாத்தா நான் அவளை வீட்டுக்கே உங்களையும் என்னோட darls யும் பார்க்க கூட்டி வருகிறேன்.
Darls ஆ கேட்டேன்னு சொல்லுங்க
அவ உன் மேல் கோபமாக இருக்கிறாள் ராகவ்
தாத்தா எப்படி darls ஆ cool பண்ணனும்னு எனக்கு தெரியும் .
யார் அந்த darls அது வேற யாரும் இல்லை (கிருஷ்ணனின் மனைவி பூம்பாவை தான் )
(இன்பாவின் பாட்டி பூம்பாவை )
கிருஷ்ணன் சிரித்து கொண்டே சரி நான் கிளம்புறேன்” இடியட் இன்பா ” என்று அவர் சொல்லி எழ
எப்போதும் முகத்தை கடுமையாக வைத்து கோபம் கொள்ளும் இன்பா இன்று கன்னகுளி தெரிய மெலிதாக புன்னகை சிந்த
அவர் மனதில் இந்த சந்தோஷம் எப்போதும் என் பேரனுக்கு இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டார்.
இங்கு விவேகா தன் வகுப்புக்கு வந்தவள் மனம் கொஞ்சம் கோபம் கொஞ்சம் கவலையாக இருந்தது.
அவள் மனதில் இன்பா சொன்னது தான் நினைவில் இருந்தது அவனிடம் அதிகம் வைத்து கொள்ளாதே என்று அதை அவள் சாதாரணமாக தான் எடுத்து கொண்டாள்.
ஆனால் அருண் fees கட்டியது அவளுக்கு சரியாக படவில்லை. அதனால் தான் இன்று இப்படி பேசி விட்டாள்.
மாலை ஆனது விவேகா வழக்கம் போல் தன்னுடைய பேருந்தில் எறிக்கொண்டாள்.
வெண்பா இன்று வர வில்லை அப்படியே வந்தாலும் இருவரும் பேசி கொள்வது இல்லை என்று அந்த பஸ் ல வரும் அனைவருக்கும் தெரியும்.
பஸ் ல உள்ள மாணவர்கள் வேண்டும் என்றே கிண்டல் செயும் நோக்கத்தில் கேட்க அவளும் அவர்களுடன் சேர்ந்து கொஞ்ச நேரம் பேசி விட்டு தன் இருக்கைக்கு வந்து அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு வந்தாள்.
இன்பா மாலை ஆனதும் தன்னவளை பார்த்து விட்டு செல்லலாம் என்று நினைத்து B20A பஸ் அருகில் செல்ல அவள் அங்கு இல்லை
உடனே அவன் தன் போனில் saved வீடியோ எடுத்து பார்க்க கிட்ட தட்ட ஒரு மாதத்திற்க்கு மேல் விவேகா பஸ் இல் வரவில்லை என்று தெரிந்து கொண்டவன்
ஆதி பஸ் ல போயிருப்பாளா என்று பார்க்கலாம் என
இன்பா திரும்பும் நேரம் விவேகா B 72 ல ஜன்னல் ஓரம் சாய்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு போவதை பார்த்தவன்.
இவள் ஏன் இதில் செல்கிறாள் இது நம் வீட்டுக்கு செல்லும் வழியில் போகும் பஸ் தானே என்று நினைத்தவன்.
இன்பா வேகமாக தன் கார் எடுத்து கொண்டு அந்த பஸ்யை பின் தொடர ஆரம்பித்தான்.
விவேகா அவன் நினைத்தது போலவே காவலர் குடியிருப்பு அருகில் உள்ள நிறுத்தத்தில் இறங்கி
மெதுவாக எதையோ யோசித்து கொண்டு நடந்து செல்ல இன்பா அவளுக்கு முன்னே போய் கொஞ்ச தூரத்தில் வண்டியை நிறுத்தி விட்டு இவள் வருகைக்காக காத்து இருந்தான்.
அவள் கைகளில் மிகப்பெரிய IT துறை சார்ந்த புத்தகம் தூக்க முடியாமல் தூக்கி கொண்டு bag ஒரு பக்கம் மாட்டி கொண்டு அன்ன நடையில் (அனைவரையும் இல்லை இன்பாவை) மயக்கி கொண்டே வந்தாள்.
அவள் சாதரணமாக தான் வந்தாள் இன்பாவுக்கு அப்படி தோன்றுகிறது போலும்.
இவன் காருக்கு அருகில் வரவும் அவளை அழுங்காமல் காரின் உள்ளே இழுத்தவன் lock செய்தான்.
உடனே இவள் பதட்டம் கொண்டு அய்யோ யாரு டா நீ என்று பேச வர இன்பா விவேகாவின் வாயை தன் கைகளால் அடைத்து
ஹே நான் தான் டி கத்தாத என்று இன்பா அவளிடம் சொல்லவும் தான் தன்னிலைக்கு வந்தவள்.
தன்னை சமன் செய்து கொண்டு விவேகா இன்பனை பார்த்து
நீங்கள் என்ன பண்றீங்க
இன்பா அவளை இரு புருவம் தூக்க
அதை நான் தான் டி உன்கிட்ட கேட்கணும் என்று இன்பா சொல்ல
கொஞ்சம் யோசித்தவள் அது ஆமா
நான்
நான் ம்ம்ம்ம் வெண்பாவை பார்க்க வந்தேன்
இன்பா அவள் கைகளில் உள்ள புத்தகம் வாங்கி அருகில் உள்ள இருக்கையில் வைத்தவன்.
அப்போ நீ தினமும் வெண்பாவ பார்க்க வரியா
விவேகா அவனிடம் இல்லயே இன்னிக்கு தான் வந்தேன் .
இன்பா விவேகாவின் கைகளை தன் கையில் எடுத்து தன் கையில் வைத்தவன்
அப்போ நீ எந்த பஸ் ள் வீட்டுக்கு போற
விவேகா B20A ல தான் என்று பொய் சொல்ல
இன்பா வெடுக்கென்று அவள் விரல்களில் சொடுக்கு எடுத்தவன்.
அவளை பார்த்து நான் போலீஸ் டி என்று சொல்ல
அவன் சொடுக்கு எடுக்க விரல் வலிக்க
ஸ்ஸ்ஸ்ஸ் வலிக்குது என்று விவேகா சிணுங்க
சொல்லு டி நீ 1 month ஆ பஸ் ல வராதே இல்லயே என்று கேட்க
விவேகாவுக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை.
திருதிருவென முழித்தவள்
விவேகாவின் மனது விவேகா எதுவும் செய் டி இல்லை அவன் எல்லாம் கண்டு பிடித்து விடுவான் என்று நினைத்தவள்.
முகத்தை பாவமாக வைத்து கொண்டு எங்க வீட்டில் கொஞ்சம் பிரச்சனை அதனால நான் ஆதி வீட்டில் இருந்து வருகிறேன்.
அப்புறம் ம்ம்ம் சரவணன் அண்ணா கிட்ட ப்ரொஜெக்ட் type பண்ண ஒர்க் கேட்டு இருக்கேன் அதனால தான் ஈவினிங் மட்டும் B72 ல வரேன் என்னை நம்ப மாட்டியா நீ என்று கேட்க
இன்பா சிரித்து கொண்டே அப்போ தினமும் ஈவினிங் நம்ப வீட்டுக்கு வர பஸ் ல தான் வரையா
விவேகா ஒரு நிமிடம் அதிர்ந்து
ந ……
நம்ப வீடா…..
அது தான் உன்னோட husband வீடு என்று இன்பா சொல்ல
அய்யோ நானே இவனுக்கு எஸ்ட்ரா டீடெயில்ஸ் கொடுத்து விட்டேனே என்று மனதில் நொந்து கொண்டவள்.
என்ன husband ஆஅ!!!
நான் இப்போ தான் குட்டி பொண்ணு எனக்கு கல்யாணம் ஆகுல.
அப்போ கூடிய சீக்கிரமே பண்ணிட வேண்டியது தான் என்று இன்பா சொல்ல
நான் உன்னை கட்டிக்க மாட்டேன் என்று தன் புத்தகங்கள் எடுத்து கொண்டு விவேகா கிளம்ப போக
அவள் கழுத்தில் உள்ள ID card யை இன்பாவின் பக்கமாக இழுக்க விவேகா இன்பாவின் மேல் விழுந்தாள்.
ஹே ?????
தொடரும்….
Episode 54,
நான் எல்லாம் உன்னை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று விவேகா சொல்லி விட்டு தன் புக்ஸ் எடுத்து கொண்டு செல்ல
இன்பா அவளது id card யை தன் பக்கமாக இழுக்க விவேகா நிலை தடுமாறி அவன் நெஞ்சில் விழ
ஹே என்ன பண்றீங்க என்று அவள் கேட்க
நான் இன்னும் பேசி முடிக்கவே இல்ல
நீ அப்டியே போற என்று
இன்பா அவள் id card ல உள்ள முகவரி , பெயர், பிறந்த தேதி என அனைத்தும் பார்க்க
இவள் நகர
இன்பா அவள் கழுத்தை இழுக்க
மீண்டும் விவேகா நகர்வது
இன்பா அந்த ரோப் இழுப்பது என செய்ய
இப்போ என்ன பண்ற நீ என்று அவள் விவரங்களை மறைக்க
இன்பா அவளை பார்த்து சிரித்தவன் ஹே இத நீ hide பண்ணா எனக்கு எதுவும் தெரியாது அப்டின்னு நெனைச்சியா
ஹே பிலீஸ் விடு என்று அவள் சொல்ல
பேபி இன்னிக்கு எனக்கு ஒரு ஹக், அப்புறம் கிஸ் கொடுத்து விட்டு போ
உடனே விவேகா யோசித்தவள்
என்னை torture பண்ற டா நீ என்று வாய் மொழியாகவே சொல்ல
இன்பா கன்னகுழி தெரிய சிரித்தவன் அதுக்கு தான் டி உனக்கு முன்னவே நான் பிறந்து இருக்கிறேன்.
இடியட் என்று சொன்னவள் ம்ம்ம் என்று அதட்டி கன்னத்தை காட்டு
என்ன கன்னமா அங்க வேணாம் லிப் ல கொடுக்கிற இன்னிக்கு
லிப்ஸ் ஆஅ
அதெல்லாம் முடியாது என்று விவேகா முகத்தை திருப்ப
டார்ஜிலிங் இதை நான் shy அப்டின்னு எடுத்துகட்டுமா. என்று இன்பா சிரிக்க
ஹே இது பப்ளிக் place டா , அதுவும் போலீஸ் க்வேட்ரெஸ் இங்க போய் ஏன் இப்படி பண்ற
எப்படி உனக்கு இப்படி எல்லாம் தோணுது
நான் போலீஸ் தானே இது அவ்ளோ பெரிய விஷயம் இல்ல டி என்று சொல்லிக்கொண்டே அவளை நெருங்க
ம்ம்ம் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல என்று விவேகா சொல்ல
விவி ….
விவி…
பேபி….
சொல்லு
நான் கொடுத்ததை நானே எடுத்துக்காவா டி
விவேகா அவனை கேள்வியாக பார்க்க
புரியல அப்டின்னு முகத்தை வைத்து நடிக்காத
அவள் அமைதியாக இன்பா முகத்தை பார்க்க
என்னமோ பண்ணு என்று அவள் முழுவதும் சொல்லி முடிக்கும் முன்னே அவளை திருப்பி இன்பா விவேகாவின் இதழை ஆக்கிரமித்தான்.
விவேகாவுக்கு இது இன்ப அவஸ்தையாக இருந்தது.
அவள் தன் கண்களை மூடிக்கொண்டு அவனுள் கரைந்து போனாள்.
கொஞ்சம் கூட அவளை விடவே இல்லை பின்னந்தலையை சாய்த்து அவன் அவளிடம் கொஞ்சம் வன்மையாக முத்தமிட
விவேகாவுக்கு இன்பாவின் தீவிரம் தாங்க முடியாமல் அவனை தள்ளி விட்டாள்.
அவள் அவன் மார்பில் கோபம் கொண்டு அடிக்க
ஹே அடிக்காத டி வலிக்குது எனக்கு என்று அவள் விரல்கள் பிடித்து முத்தமிட
விவேகாவின் மொத்த சக்தியும் வடிந்து விட்டது.
விவேகா இன்பாவிடம்
ஹே உனக்கு எப்டி டா இதெல்லாம் தெரியும்
எங்கே கத்து கிட்ட இப்படி கிஸ் பண்ண நெறைய movie பார்ப்பியோ
இல்ல இதே வேலையா சுத்தறியா
லூசு லூசு,
தப்பு தப்பா பேசாத டி
பின்ன எப்டி தெரியும் என்று அவள் கேட்க
இன்பா விவேகாவை பார்த்து
உன்கிட்ட தான் கத்துக்கிட்டேன் என்று இன்பா சொல்ல
விவேகா புரியாமல் முழித்தாள்.
ம்ம்ம் ஆமா பேபி நீ தான் என்னோட
உன்னோட IT மொழியில் சொல்லனும் னா
நீ தான் என்னோட சிஸ்டம்
அப்படி இல்லனா நான் input பேபி
விவேகா அப்போ out put என்று கேள்வியாக கேட்க
இன்பா சிரித்து கொண்டே உனக்கு ok அப்படினா out put வர நான் ரெடி என்று இன்பா அவளின் வயிற்றை பார்த்து சொல்ல
பேபி ok வா என்று சிரித்து கொண்டே பேச
Ridiculus அய்யோ அய்யோ என்று விவேகா அவள் காதுகளை பொத்தி கொள்ள
ஹே ரொம்ப ஓவரா பண்ணாத என்று இன்பா சொல்ல
சரி இதோட 69 கிஸ் இன்னும் தரனும் நோட் பண்ணிக்கோ என்று விவேகா சொல்ல
ஹே ridiculus தின்க் என்று இன்பா கூறினான்
உடனே கோபம் கொண்ட விவேகா நீ தான் ரொம்ப அபத்தமா பேசுற ridiculus
இன்பா அவளிடம் ரெண்டும் ஒன்னு தான் டி
முதலில் கார் door unlock பண்ணு என்று சொல்ல
வர வர மரியாதை எல்லாம் ரொம்ப குறையுது டி என்று இன்பா சொல்லி கொண்டே கார் door open செய்ய
விவேகா வெளியே சென்றவள்
சட்டென்று உடனே மீண்டும் வந்து கதவுகளை lock செய்து கொண்டாள்.
ஏன் அவள் உள்ளே வந்தாள்????
அது வேற ஒன்னும் இல்லங்க
கங்காவும் , தேவகியும் இவர்கள் கார் இருக்கும் இடத்தில் கொஞ்ச இடைவெளியில் பேசி கொண்டே கார் நோக்கி நடந்து வந்தனர் .
அவர்கள் தூரத்தில் இருக்கும்போதே கண்டு கொண்ட விவேகா சட்டென்று உள்ளே காருக்குள் வந்து விட்டாள்.
என்ன விவேகா என்னாச்சு என்று அவள் முகத்தில் உள்ள பதட்டத்தை பார்த்து இன்பா கேட்க
இப்போது விவேகா என்ன சொல்வது என்று தெரியாமல் திருத்திருவென முழித்தாள்.
ஹே சொல்லு என்னாச்சு என்று இன்பாவின் முகம் மாற
உடனே அவள் அவனிடம்
ஹே ராகவ் ஹக் தர
சொன்னயே அதுக்கு தான் வந்தேன்.
அவளின் ராகவ் என்கிற அந்த வார்த்தையில் அவளிடம் தஞ்சம் அடைந்தவன்.
ஹே இப்போ என்ன சொன்ன
விவேகா அப்படியே வெளியில் நோட்டம் விட்டு கொண்டே
ஹக் என்று ஒரு வார்த்தையில் பதில் அளிக்க
ஹே அதுக்கும் முன்ன என்னை எப்டி கூப்பிட்ட என்று இன்பா கேட்க
அவள் இதில் என்ன இருக்கிறது என்று ராகவ் என்று சொல்ல
இன்பா அவள் சொல்லியது தான் தாமதம் இழுத்து இதழ் பதிக்க
இவள் இங்கு என்ன நடக்கிறது என்று தன் கண்களை அகல விரித்தாள்.
அவளை விடுவித்தவன் எதுக்கு அப்படி கூப்பிட்ட என்று கேட்க
விவேகா வெளியில் பார்த்து கொண்டே பதட்டம் கொண்டு இல்ல
எனக்கு உன்னை அப்படி கூப்பிட தான் ரொம்ப பிடிக்கும்
என்று அவள் இருந்த பதட்டத்தில் உண்மையை உளற
இன்பா வெளியில் பார்க்கும் முகத்தை தன் பக்கம் திருப்பி
ஏன் எதுக்கு உனக்கு அப்படி கூப்பிட பிடிக்கும் என்று கேட்க
அம்மா நீ வெளிய எதுக்கு மா வந்த
அதுவும் தேவகி அம்மா கூட வந்திருக்க
இப்போ என்னால வெளியவும் வர முடியாது உள்ளே
இந்த இடியட் வேற லவ் மோட் ல full form ல இருக்கானே என்று மனதில் நினைத்தவள் புருவ முடிச்சு போட
இன்பா இவளை காதலாக பார்க்க
அய்யோ பார்கிறானே
பார்கிறானே
நம்ப சும்மா இருந்தவனை டெம்ப்ட் பண்ணி விட்டு விட்டோமே.
இப்போ இவன் கிட்ட நம்ப பதட்டத்தில் என்ன சொன்னோம் என்று அவள் brainy, மனசு இரண்டு கிட்டயும் கேட்க
நானே சொல்கிறேன் என்று இன்பா
ஹே விவி
பேபி வாட் ஹப்பன் என்று அவள் தோள்களை பற்றி கேட்க
ம்ம்ம் ஒன்னும் இல்ல
ஒன்னும் இல்ல என்று தேவகி, கங்காவை வெளியே பார்த்து கொண்டே சொல்ல
இன்பா இவள் எங்கு பார்க்கிறாள் என்று திரும்ப
விவேகா மனது இன்னிக்கு நீ கிலோஸ் என்று சொல்ல
Brainy ஹே எதுவும் செய் அவன் உங்கள் அம்மாவை பார்த்து விட்டால் அவ்ளோ தான்
உடனே ராகவ் எங்கே பார்க்கிற என்று அவன் முகத்தை திருப்ப
இன்பா அவளை பார்க்க அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தியவன் .
விவேகா உனக்கு எப்டி தெரியும் என்று கேட்க
அவ்ளோ எ…..
என்ன தெரியும்…..
என்று விவேகா அவனை கேள்வியாக பார்க்க
இல்லடி எனக்கு ராகவ் அப்டின்னு கூப்பிட்டா ரொம்ப பிடிக்கும்
எல்லாரும் இன்பா அப்டின்னு கூப்பிடுவாங்க ஆனால் என்னோட மாம், மாம் பேமிலி மட்டும் தான் ராகவ் னு கூப்பிடுவாங்க என்று அவன் சொல்ல
விவேகாவுக்கு இப்போது இன்பாவின் பார்வையில் இப்போது அவளை தொலைத்தவள்.
அவன் பேச்சில் சொக்கி போக இன்பா அவளை பார்த்து அப்புறம் முதன் முதலில் ராகவ் அப்டின்னு நீ தான் கூப்பிட்டு இருக்கிறாய் என்று சொல்ல
மறுபடியும் ஒரு முறை கூப்பிடு விவி என்று சொல்ல
அவள் படபடக்கும் விழிகளில் நாண முகம் கொண்டு ராகவ் என்று அவளுக்கே கேட்காத குரலில் சொல்ல
ஹே கொஞ்சம் sound ஆ சொல்லு டி
ராகவ் என்று சொல்ல
இன்பா அவளின் இதழை பார்க்க தன்னை அறியாமல் விவேகா கண்களை மூடி கொள்ள அவள் எதிர் வினை கண்டு பூரித்தவன் அவள் இதழில் வண்டு தேன் எடுப்பதை போல் அவளை மென்மையாக கையாள விவேகா அவனை இறுக்கமாக பிடித்து கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து அவளை விடுவிக்க விவேகாவுக்கு நாணம் அவளால் இன்பாவை பார்க்க முடியவில்லை.
சிறிது நேரம் கழித்து தன்னிலைக்கு வந்தவள் அங்கு வெளிய அம்மா போய் விட்டாரா என பார்க்க அங்கு யாரும் இல்லை .
உடனே இன்பனை பார்க்காமல் கீழ குனிந்து கொண்டே
ந…
நான் போனும்
என்று சொல்லி புத்தகங்கள் எடுத்து கொண்டு அவள் கதவை திறக்க போக
இன்பா அவளை பார்த்து விவி என் முகத்தை பார்த்து சொல்லிவிட்டு போடி என்று சொல்ல
பிலீஸ் கதவை திற என்று குனிந்து கொண்டே சொல்ல
இன்பா சிரித்து கொண்டே சரி போ என்று unlock செய்ய ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள்.
அவள் சென்றவுடன் இயல்பாக கடுமை முகத்துக்கு வந்தவன் தன் கார் எடுத்து நேராக கமிஷ்னர் ஆஃபீஸ் ஒரு கேஸ் விஷயமாக சென்றான்.
அவன் வேலைய முடித்து விட்டு தன் போன் பார்க்க அப்போது சுபாவிடம் இருந்து சில தவற விட பட்ட அழைப்புகள் வர அதை பார்த்தவன் .
சுபாவுக்கு அழைத்தான்
ம்ம்ம் சொல்லு சுபா
sorry கொஞ்சம் ஒர்க் ல பிஸி என்று இவன் சொல்ல
சரி விடு இன்பா இந்த வீக் end ல வினய் பேமிலி ய மீட் பண்ண போறோம் தானே அதுக்கு ஷாப்பிங் வந்தேன் .
ஓ அப்படியா நீ எங்கே இருக்க நான் வரேன் என்று கேட்டு இன்பா அந்த மாலுக்கு சென்றான்.
அவனுக்கு தெரியவில்லை இன்பாவின் வழியில் புதிதாக இன்னொருத்தி நுழைய போகிறாள்!!!
யார் அவள்?????
தொடரும்….
Episode 55,
சுபாவின் போன் அழைப்பு பார்த்து விட்டு அவளுக்கு போன் செய்து பேசியவன். அவள் எங்கு இருக்கிறாள் என்று கேட்டு விட்டு அங்கு உடனே கிளம்பினான்.
அங்கே சுபா இருக்கும் இடத்தின் லொகேஷன் இன்பாவுக்கு share செய்ய உடனே இன்பா அங்கு சென்றான்.
இவன் அங்கு செல்ல சுபா அங்கு சில பொருட்கள், ஆடைகள் என மனம் போன போக்கில் வாங்கினாள்.
ஆம் சுபாவின் தந்தை கூறியதால் தான் வினய் குடும்பத்திற்கு எதுவும் வாங்க வேண்டும் என்று வந்தாள்.
இன்பா சுபாவை பார்க்க அவள் முகத்தை பார்த்தே ஏதோ சரி இல்லை என்று நினைத்து அவளிடம் பேச சென்றான்.
என்ன சுபா ஏன் ஒரு மாதிரி இருக்க
ஒரு வலி நிறைந்த புன்னகை சிந்தியவள்
நான் நல்லா இருக்கேன் இன்பா.
எனக்கு என்ன!
சுபா உனக்கு இதில் விருப்பம் இல்லயா அப்பாவுக்காக தான் ஒத்து கொண்டாயா.
அப்படி இல்ல அப்பா எனக்கு எது செய்தாலும் அது சரியாக தான் இருக்கும்
அதை விடு என்று அவள் செல்ல போக
இன்பா தன் அக்காவின் கைகளை பிடித்தவன்
அக்கா வேணாம் அப்படின்னாசொல்லு
நான் அப்பா கிட்ட பேசட்டுமா
இல்லை உனக்கு யார் மேலாவது விருப்பம் இருக்கா என்று கேட்க
இல்ல இன்பா எனக்கு ரொம்ப சந்தோஷம் தான் என்ன உங்களை விட்டு அவங்க வீட்டுக்கு நிரந்தரமாக போக போகிறேன்.
அதை நினைத்து தான் எனக்கு கஷ்டமா இருக்கு டா
நீ ஏன் இப்படி நெனைக்கிற அப்படியெல்லாம் நான் விட மாட்டேன் என்று இன்பா சொல்ல
உடனே சுபா தன் கவலைகள் மறைத்து சிரித்து கொண்டே
சரி வா உன்னோட முகத்தை கொஞ்சம் சிரிக்கிறது போல வைத்து கொள்
அப்போ தான் உன்னை நாலு பொண்ணுங்க பார்க்கும் டா
என்னை யாரும் பார்க்க வேணாம் என்று இன்பா சொல்ல
ம்ம்ம் மறந்தே போய் விட்டேன்
அந்த வினய் தங்கைகள் ரெண்டு பேரு அவங்க பெயர் கூட யாளினியாள், கண்ணுகினியாள் ன்னு அவங்க உன்னை பத்தி கேட்டாங்க டா
அதுவும் அந்த கண்ணுகினியாள் அந்த girl உன்னோட போன் num கேட்டது
சுபா ஒரு விஷயம் நல்லா புரிந்து கொள் எனக்கு அந்த girl எல்லாம் சுத்தமா பிடிக்காது
உன்னோட relation ஆக போறாங்க ok
ஆனால் அதுக்காக நீ என்னோட num எல்லாம் கொடுத்து கிட்டு இருக்காத
எனக்கு irritating ஆ இருக்கு என்று இன்பா சொல்ல
என்ன இன்பா அவ்ளோ வெறுப்பா உனக்கு girls மேல
அப்படியெல்லாம் இல்ல எனக்கும் பிடிக்கிற மாதிரி பொண்ணு எனக்காக எங்கேயாவது பிறந்து இருப்பாள் என்று இன்பா விவேகாவை நினைத்து கன்னகுளி தெரிய சிரித்து சொல்லி கொண்டு இருக்கும்போதே
அங்கு வந்தாள் கவ்யா சத்தியமூர்த்தி மினிஸ்டர் சத்தியமூர்த்தி பொண்ணு BE final year
அழகு தேவதை தான் கூடவே திமிர் என்று சொல்ல முடியாது.
திமிர் தேவதை தான் கூடவே அழகு ஆண்கள் பார்த்த உடனே மயங்கும் தோற்றம் கொண்டவள்.
அங்கே இன்பாவும், சுபாவும் ஷோப்பிங் செய்ய வந்து இருந்தாள்.
தனியாக இல்லை சில காவலாளிகள் கூடவே வந்து இருந்தனர்.
சில பணியாளர்கள் அவள் வாங்கும் பொருட்கள் வாங்கி வைத்து கொண்டு போக இருந்தனர்.
அடுத்து சுபா அழகு சாதன பொருட்கள் வாங்க அந்த branded கடைக்குள் நுழைய அப்போது இன்பாவுக்கு போன் கால் வர சுபாவிடம்
நீ உள்ளே போ சுபா நான் பேசி விட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு அவன் போன் எடுத்து வெளியே பேசி கொண்டு இருக்க
சுபா உள்ளே சென்று சில பொருட்கள் வாங்கினாள்.
கவ்யாவின் பணியாளர்
மேடம் ஒரு போலீஸ் உங்க கிட்ட ப்ரோமோஷன்க்கு அப்பா கிட்ட பேசி recomand பண்ண வருவாரு அப்டின்னு ஐயாவோட PA இப்போ சொன்னாங்க
அவரு கிட்ட நீங்கள் என்ன வேலையாக இருந்தாலும் வாங்கி கொள்ளுமாறு சொல்ல
ம்ம்ம் சரி என்று அவள் அந்த பொருள் compact, mac product, primer, nail polish , சில வண்ணங்கள் என எடுத்து கொண்டு இருக்க
உடனே இன்பா போன் பேசி முடித்தவன் உள்ளே சுபாவை பார்க்க நிதானமாக ஒவ்வொரு அடிகளாக அழுத்தமான காலடியில் நடக்க
கவ்யா ஒரு நிமிடம் யாரது என்று பார்க்க ஒரு நிமிடம் அவளுக்கு இந்த உலகம் சுற்றுவது நின்றது அவளுக்கு மட்டும் தான்
அவன் பார்வை கத்தி போல் இருக்கிறதே, அவன் புருவம் ஏன் இப்படி முகத்தை கடுமையாக வைத்து இருக்கிறான்.
இன்பாவின் முருக்கேறிய கைகள், திடமான உடற் கட்டு
அந்த நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை அது ஆளை சாய்த்து விடும்.
அவன் அதரங்கள் அவ்ளவு அழகு அதை விட அந்த கன்னகுளி எவ்ளோ அழகு இப்படி ஒருவனை நான் பார்த்ததே இல்லயே என்று இன்பா என்னும் கடலில் கவ்யா மூழ்க
இப்படி ஒரு பெண்ணை நாம் ஈர்த்து கொண்டு இருக்கிறோம் என்று தெரியாமல் இன்பா நடந்து வர
இன்பாவுக்கு உலகம் எப்போதும் போல் சுற்றி கொண்டு தான் இருந்தது.
இன்பா அருகில் வருவது தெரிந்து தன்னிலைக்கு வந்தவள் அவனது இடுப்பில் உள்ள அந்த போலீஸ் பெல்ட் பார்த்து விட்டு அந்த பணியாள் சொன்ன போலீஸ் இவன் தான் என நினைத்து கொண்டு
கவ்யா அவனை பார்த்து
நீங்கள் தான் என்னை பார்க்க வந்த போலீசா என்று பேச வர
இன்பா இவள் யார் என்பதை போல் பார்த்து விட்டு சென்றான்.
கவ்யாவிற்கு என்னவோ போல் ஆகி விட்டது. இப்போது அவளுக்கு சட்டென்று கோபம் வர
ஹே நான் பேசி கொண்டே இருக்கிறேன்
நீ மதிக்காமல் செல்கிறாய்
என்று அவள் சொல்லி கொண்டே அவன் வேகத்திற்கு நடக்க இன்பா அப்போதும் அவளை கண்டு கொள்ள வில்லை.
சரியாக அந்த நேரம் ஒரு பணியாள் மேடம் அந்த போலீஸ் வந்து விட்டார் அது இவர் தான் என்று சொல்ல
கவ்யா திரும்பி பார்க்க விகாஸ் என்பவன் நின்று கொண்டு இருந்தான்.
மேடம் நான் தான் விகாஸ் உங்களுக்கு என்ன வேலை செய்யனும் ன்னு சொல்லுங்க எல்லாம் நான் செய்கிறேன்.
எனக்கு ஐயா கிட்ட சொல்லி ப்ரோமோஷன் க்கு கொஞ்சம் உதவி செயுங்கள் மேடம் என இவன் பேச
கவ்யாவிற்கு இன்பாவின் அலட்சியம் அவளை என்னவோ செய்தது.
விகாஷை பார்த்து வெளியே காத்திரு என்று சொல்லியவள் அங்கு இருக்கும் ஆளுயர
கண்ணாடியில் தன் தோற்றம் ஒரு முறைக்கு இரண்டு முறை பார்த்து
நான் நன்றாக தானே இருக்கிறேன் என்னை ஒரு பார்வை கூட பார்க்காமல் சென்று விட்டானே.
யார் இவன் என்று மனதுள் இவள் இன்பாவ பற்றி நினைத்து கொண்டு இருக்க
இன்பா சுபா இருக்கும் இடத்திற்கு செல்ல அங்கு அனைத்தும் அழகு சாதன பொருட்கள், காதணிகள், வளையல்கள், கழுத்துக்கு மணிகள் , என பலவகை இருக்க
இன்பா சுபாவின் அருகில் நின்று அதை எல்லாம் வினோதமாக பார்த்து கொண்டு இருந்தான்.
சுபா இன்பா இது எப்படி இருக்கிறது
அது அழகா
இது ok வா என கேட்க
இன்பா அவன் மனதில் விவேகாவுக்கு இதெல்லாம் வாங்கி கொடுத்தால் எப்டி இருக்கும்
இதெல்லாம் போடாமலே என்னோட டார்ஜிலிங் தேவதை தான் என நினைத்து அவன் சிரிக்க
சுபா அவனிடம் என்ன இன்பா சிரிக்கிற என்ன விஷயம் என்று கேட்க
ஒன்னும் இல்ல அக்கா என்று அவன் சமாளித்து அந்த இடத்தை சுற்றி பார்க்க
அப்போது கண்களுக்கு வைக்கும் காஜல் , மை , மஸ்கரா, products எல்லாம் இருக்க
அதை பார்த்து கொண்டே அருகில் சென்றவன் top brand தனது போனில் net ல தேட அந்த branded பொருள் இருக்க அதனை பார்த்து வைத்து கொண்டான்.
சுபா எல்லாவற்றையும் வாங்கி விட்டு பில் போட்டு வெளியே செல்ல இன்பா அவளிடம் சுபா நீ போ நான் வருகிறேன் என்று சொல்லி உள்ளே சென்று அவன் பார்த்து வைத்த அனைத்தும் வாங்க
அதை அப்போது கடையின் உள்ளே வந்த கவ்யா பார்த்து விட்டாள்.
இப்போது ஒரு மெலிந்த சிரிப்புடன் அந்த பொருள்களை வாங்கி கொண்டு இருக்கும் அவனை பார்க்க கவ்யாவிற்கு அவன் கைகளுக்குள் நாம் இருந்தால் எப்படி இருக்கும் என்று விபரீத ஆசை தோன்றியது.
இன்பா அதை எல்லாம் வாங்கி விட்டு பணம் செலுத்தி விட்டு இவளை ஒரு பொருட்டாக கூட பார்க்காமல் சென்று விட்டான்.
இப்போது கவ்யாவிற்கு கோபம் தான் அவன் என்ன வாங்கினான் என்று அந்த கடை பணியாளி கிட்ட விசாரிக்க அவர் அவன் வாங்கியது என்ன என்று சொல்ல
அவள் மனதில் உன் மனதில் நான் தான் இருக்க வேண்டும் எனக்கு மட்டும் தான் நீ வாங்கி கொடுக்கணும்.
நீ என் காலடியில் என்னை பூஜிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு அவனை பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள்.
கவ்யா அவள் வேலையை ஆரம்பித்து விட்டாள்.
வீட்டுக்கு வந்த இன்பாவுக்கு ரெக்க மட்டும் தான் இல்லை எப்போது அடுத்த நாள் வரும் என்று காத்து கொண்டு இருந்தான்.
வீட்டில் இன்று அனைவரும் இருந்தனர் வசுமதி, ரவிச்சந்திரன், இன்பா, சுபத்ரா என மொத்த குடும்பமும் இருந்தது எப்போதும் போல அனைவரும் சாப்பிட்டு முடிக்க
ரவி வசுவிடம்
மதி இந்த வீக் end ல வினய் பேமிலி ய நம்ப மீட் பண்ண போறோம்
ம்ம்ம் சரிங்க என அவள் சொல்ல
இன்பா இங்கு இருந்தால் தானே விவேகாவின் நினைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பூன் ல சாப்பிட்டு கொண்டு இருக்க
ரவி பேசுவதை கவனிக்காமல் இன்பா சாப்பிடுவதை பார்த்து உடனே ரவிக்கு கோபம் வர
மதி நான் சொல்றது புரியுதா இல்லயா என்று கோபத்தில் கொஞ்சம் சத்தமாகவே சொல்ல
தன் கணவர் யாரை பார்த்து சொல்கிறார் என பார்த்த வசுமதி
ராகவ் அப்பா சொன்னது புரியுதா இல்லயா என்று வசு அவன் அருகில் சொல்ல
உடனே இன்பா சுபா கிட்ட உன் அப்பா என்ன சொன்னார் சொல்லு என்று கேட்க
ஹே அவரு உனக்கும் அப்பா தான் ஓவரா பேசாதே டாட் உன்னை தான் பார்க்கிறார்.
உடனே ரவி தன் தொண்டை சிறும்ப
ம்ம்ம் சொல்லுங்க என்று இன்பா சொல்ல
ரவி தான் சொல்ல வந்த விஷயம் கூற
Ok நான் வரேன் என்று சொல்லி விட்டு அவன் தண்ணீர் குடித்து விட்டு தன் அறைக்கு செல்ல
அங்கே மூவர் அப்படியே அமர்ந்து இருந்தனர் அது ரவி, சுபா, வசு தான்
எப்போதும் ரவி கிட்ட சண்டை போட்டு எதுவும் பிரச்சனை செய்யும் இன்பா இன்று சரி என்று சொல்லவும் ஒரே ஆச்சரியம் தான் மூவருக்கும்.
இப்போ தான் உன் பயனுக்கு புத்தி வந்து இருக்கு போல என்று ரவிச்சந்திரன் கன்ன குழி தெரிய ஒரு ஏளன புன்னகை சிந்தி விட்டு சென்றார்.
வசு , சுபா இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.
இங்கே தன் அறைக்கு வந்த இன்பா விவி பேபி இது உனக்கு தான் டி
நான் வாங்கி இருக்கேன்
நாளைக்கு இதை வச்சுட்டு வந்து
என் முன்னால் வந்து நிற்கும் காட்சி கண்ணுக்குள் இருக்கு டி
அந்த கண்ணு விவேகா உன்னோட மச்சம் அது எப்டி இருக்கும் தெரியுமா
இப்போ உன்கிட்ட பேசியே ஆகணுமே
அப்போ தான் நீ நாளைக்கு ரெடி யா வருவ
அப்புறம் நான் என்று குறும்பாக புன்னகை செய்து தன் போன் எடுத்தான் இன்பா????
தொடரும்….
விவேகவுக்காக அவள் காதலை எப்படியும் பெற்று அவளோடு சேர துடிக்கும் இன்பராகவன்?????
இன்பராகவனை தன் காலடியில் தன் பின்னால் சுற்ற வேண்டும் என்று நினைக்கும் கவ்யா இவள் என்ன செய்ய காத்து இருக்கிறாள்????
இதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிங்க review கொடுங்க
Episode 56,
இப்போ உன்கிட்ட பேசியே ஆகணுமே
அப்போ தான் நீ நாளைக்கு ரெடி யா வருவ
அப்புறம் நான் என்று குறும்பாக புன்னகை செய்து தன் போன் எடுத்தான் இன்பா.
முதலில் வெண்பாவுக்கு போன் செய்ய நினைத்தவன் ஏதோ ஒரு யோசனையாக
இன்பா மனதில் வேணாம் டா அவ குட்டி பொண்ணு அதுவும் நமக்கு குட்டி தங்கை மாறி அவளுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது என்று நினைத்தவன்.
என்ன செய்யலாம் என்று யோசிக்க அப்பொழுது தான் விவேகா ஆதி num ல இருந்து அன்னிக்கு I’m sorry அப்டின்னு மெஸ்ஏஜ் செய்தது நினைவு வர
எப்படியும் விவேகா ஆதி வீட்டில் இருந்து தான் வருகிறாள் அதனால் ஆதிக்கு கால் செய்யலாம் என நினைத்து அவன் எண் எடுத்து டயல் செய்தான்.
ஆனால் ஆதி போனில் விவேகா இன்பா num பதிவு செய்ய வில்லை.
அழைப்பு எடுக்கப்பட
ஹலோ ……..என்று ஆதி
ஹலோ .. .. ஆதித்யா
ஆமா நான் ஆதித்யா தான் பேசறேன் நீங்கள் யாரு இது புது num என கேள்வியாக கேட்க
மறுமுனையில் இருந்து மிகவும் கொஞ்சம் கம்பீரமான குரலில்
I’m இன்பராகவன் speaking என்று சொல்ல
இப்போது ஆதிக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை அவன் உரைந்தான்.
Are யூ hear ஆதித்யா …..
ச …..சார் …
சொல்லுங்க சார்
அவ என்ன பண்றா, என்று இன்பா கேட்க
ஆதி ஒரு சில நிமிடம் கழித்து பின் ,
விவேகா வெளிய இருக்கா சார்,
அத்தை கூட இருக்கிறாள்.
அவ கிட்ட போன் கொடு,
சார்……!!!!
அவ. ….
” நான் உங்களுக்கு போன் பண்ண சொல்றேன் சார்”
ம்ம்ம் உடனே பண்ண சொல்லு ,
Ok சார் ,என்று ஆதி சொல்ல
இன்பா போன் வைத்து விட்டான்.
இன்பா போன் வைத்தவுடன் ஒரு 5 நிமிடம் அப்படியே அமர்ந்த ஆதி பின் விவேகாவுக்கு தன் அத்தை எண்ணுக்கு கால் செய்தான்.
அத்தை விவேகா கிட்ட கொடுங்க
விவேகா இந்தா ஆதி போன் பண்ணி இருக்கான்.
சீக்கிரம் பேசு கொஞ்ச நேரத்தில் வருண் போன் பண்ணுவான்.
ம்ம்ம் சரி மா என்று கூறி
போன் வாங்கி கொண்டே வெளியே சென்றவள்.
ம்ம்ம் சொல்லு ஆதி
விவி நீ angry bird க்கு கால் பண்ணி பேசு
விவேகா அவனிடம் கேள்வியாக நான் எதுக்கு டா அவன் கிட்ட பேசணும்
ஹே அவர் எனக்கு இப்போ கால் பண்ணி உன் கிட்ட போன் கொடுக்க சொன்னாரு டி
என்னடா சொல்ற என்று அதிர்ச்சியில் கேட்க
ம்ம்ம் ஆமா
நீ அவர் கிட்ட இங்கே இருந்து வரேன் அப்டின்னு சொல்லி வச்சியா?
எனக்கு அது தெரியாது !
விவேகா இன்னும் அதிர்ச்சியில் !
ஆதி அவன் கிட்ட உண்மை எதுவும் உளரினாயா ?
இல்ல நான் எதுவும் சொல்லல சரி time ஆகுது நீ பேசு
அப்படி இல்ல திரும்பவும் அவரு எனக்கு கூப்பிட்டாலும் கூப்பிடுவார் என்று கூறி போன் வைக்க
விவேகா யோசனையுடன் இப்போ என்ன செய்ய என்று யோசிக்கும் போதே வருண் கால் செய்து விட்டான்.
இங்கு இன்பா விவேகா அழைப்பாள் என்று காத்திருந்தான்.
10 நிமிடம் ஆனது
15 நிமிடம் ஆனது போலீஸ் என்றால் பன்சுவாலிட்டி முக்கியம் தானே
இவள் என்ன செய்கிறாள் எவ்ளோ நேரம் காத்திருப்பது.
பேசாமல் அவளுக்கு ஒரு போன் வாங்கி தந்து விடு என்று மூளை கூற
இன்னும் லவ் ப்ரொபோஸ் கூட பண்ணல நீ
இப்போவே இது too மச்
மனமோ நீ ப்ரொபோஸ் மட்டும் தான் டா பண்ணல ஆனால் மற்ற எல்லாம் பண்ற என்று சொல்ல
இன்பா ஒரு புன்னகை சிந்தினான்.
ப்ரொபோஸ் பண்ணுனா அவ accept பண்ணுவாளா இல்லை என்னை ஏமாற்றி விடுவாளா.
அதுவும் இல்லாமல் நீ வாங்கி கொடுத்தா
அவ வாங்க மாட்டா ரொம்ப ஸீன் போடுவா என்று மூளை சொல்ல
உதடுகள் ம்ம்ம்
இவ சரியான கேடி ரொம்ப பண்ணுவா
நீ அவளை straight ஆ உனக்கு சொந்தமாகிட்டு தான் ப்ரொபோஸ் பண்ணனும் டா இல்லை அவ உன்னை ஏமாற்றி விடுவாள்.
என்னோட நிலமை ரொம்ப மோசம்!
நான் ரொம்ப பாவம்
இவளுக்காகக நான் காத்திருக்கிறேன்.
பசங்க தான் ஏமாத்துவாங்க அப்டிங்கறது ரொம்ப பொய்யான ஒன்னு.
இந்த பொண்ணுங்க தான் விட்டு போறாளுக.
நான் ஒரு ips ஆஃபீஸர்
நான் போய் இவளுக்கு பய பட வேண்டியதா இருக்கே எல்லாம் என்னோட நேரம்
எத்தனை பொண்ணுங்க என் பின்னால் சுத்தி இருப்பாங்க
அவங்கள நான் அலட்சியம் செய்தேன்
ஆனால்
இப்போது என்னை அலட்சியம் செய்தவள் பின்னாடி நான் சுத்துறேன்.
ஆனாலும் என்னோட டார்ஜிலிங் தேவதை என்று சிரித்து கொண்டான்.
இங்கு விவேகா அவள் அம்மாவிடம் இருந்து வருண் கிட்ட பேசி போன் வாங்க படாத பாடு பட்டாள்.
பின் விவேகா போன் வாங்கி அவள் அண்ணனிடம்
வருண் உனக்காக அதி மா காத்துகிட்டு இருப்பாள் டா நீ இப்போ உன்னோட பாசத்தை ஓரம் கட்டி வை
அவ கிட்ட பேசு என்று சொல்ல
வருண் என்ன விவேகா இப்போதெல்லாம் என் கிட்ட சரியா பேச மாட்டிங்குற என்று சொல்ல
“இல்ல அண்ணா நீ தான் ரொம்ப பிஸி
எனக்கு உன்னை பார்க்கனும் போல இருக்கு வருண்” என்று சொல்ல,
சரி விவேகா நீ feel பண்ண வேணாம் இன்னும் ஒரு ஒரே மாசம் தான் அப்புறம் போஸ்டிங் தான் நீ கவலை படாதே மா என்று சொல்ல
அண்ணா ஆதி செகண்ட் லைன் வரான் நீ அதி கிட்ட பேசு என்று சொல்லி வைக்க வருண் வைத்து விட்டான்.
உடனே விவேகா இன்பாவுக்கு அழைத்தாள்.
அவள் கால் செய்ய முதல் அழைப்பில் அந்த மணி ஒலி ஆரம்பிக்கும் போதே போன் எடுத்தான்.
என்ன பண்ண நீ இவ்ளோ நேரம் நான் உனக்காக 20 மினிட்ஸ் ஆ வெய்ட் பண்றேன்.
நீ எதுக்கு ஆதி க்கு கால் பண்ண
அவன் num என்கிட்ட இருந்தது
இன்னும் ரெண்டு num இருந்தது
இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ போன் பண்ணாமல் இருந்து இருந்தால்
நான் அதில் கூப்பிட்டு இருப்பேன் டி என்று இன்பா சொல்ல
ஹே அப்படி எல்லாம் போன் பண்ணாதிங்க அது எங்க மமாச்சி num
இது மட்டும் தெரிஞ்சா நான் அவ்ளோ தான் எங்க அம்மா என்னை அவ்ளோ தான்
இன்பா அவளிடம் என்ன தெரிஞ்சா பிரச்சனை சொல்லு என்று
அவள் என்ன சொல்வாள் என ஆவலாக கேட்க
விவேகா அப்போ நம …. என்று நிறுத்தியவள்
.ம்ம்ம் சரி ok ஒன்னும் இல்லை
இப்போ எதுக்கு போன் பண்ண சொன்னீங்க
இப்போ என்ன சொல்ல வந்த அதை சொல்லு டி
நான் ….
நான் என்ன சொன்னேன்?
நம்ப அப்டின்னு சொன்னியே என்ன அது டார்ஜிலிங்
ம்ம்ம் ஆமா சொன்னேன்
என்ன சொன்ன என்று காதில் ஹெட் செட் போட்டு இருந்த இன்பா அந்த mike அவன் மிக அருகில் வைத்து பேச
விவேகாவுக்கு அவன் காதுக்கு அருகில் பேசுவது போல இருந்தது.
உடனே அவள் ஹே இப்போ எதுக்கு இவ்ளோ பக்கத்தில் வந்து பேசுறீங்க
இன்பா நான் எப்படி உன் பக்கத்தில் வர முடியும் நான் எங்க வீட்டில் இருக்கிறேன் டி
என்று கூறிய இன்பா சிரித்தான்.
விவேகா மனதில் இவன் நம்ப காதுக்கு பக்கத்தில் பேசுற மாதிரி இருக்கே என்னை இப்படி கொடுமை பன்றானே.
தன்னிலைக்கு வந்தவள் சரி சொல்லு இப்போது எதுக்கு கால் பண்ண
ம்ம்ம் அது ஒன்னும் இல்ல நாளைக்கு நீ நல்லா தலைக்கு குளிச்சு பிரேஷ் ஆஆ காலேஜ் வா
இவ்ளோ தானா இதை சொல்ல தான் போன் பண்ண சொன்னாயா?
ம்ம்ம் அப்போ மேடம் என்ன நெனைசீன்க
நான் ஒன்னும் நெனைக்கில
ஹே சொல்லிட்டு போடி
நான் எதுவும் உனக்கு தரட்டுமா
ஒன்னும் தேவையில்லை என்று அவள் சொல்ல
ஹே நீ தானே சொன்ன நான் ரொம்ப பக்கத்தில் இருக்க மாதிரி இருக்கு அப்டின்னு
நீ என்னை நினைச்சு feel பண்ற அது தான் உனக்கு இப்படி தோணுது டி
மண்ணாகட்டி அப்படி எல்லாம் நீ தின்க் பண்ணாத
நான் ஒன்னும் உன்னை நினைத்து கொண்டு இல்ல புரியுதா
ம்ம்ம் பார்க்கலாம் டி
நீ இன்னும் எவ்ளோ நாள் தான் பொய் சொல்லிட்டு சுற்ற போறன்னு
சரி ok நீ போய் தூங்கு இனி நான் ஆதிக்கு தான் கால் பண்ணுவேன்
வெண்பா குட்டி பொண்ணு அவளை சங்கட படுத்த கூடாது.
ஹே அப்போ நான் யாருடா
நானும் குட்டி பொண்ணு தான்
ஹே என்னாச்சு டா பேசு
நீ என்று சிரித்தவன் ஒன்றும் சொல்லாமல் போன் வைக்க
விவேகா மீண்டும் அழைக்க
இன்பா சிரித்து கொண்டே அழைப்பு ஏற்றான்
ம்ம்ம் சொல்லு டி
முதலில் நீ சொல்லு டா
என்ன சொல்லனும்
வெண்பா குட்டி பொண்ணு அப்டின்னு சொன்ன
அப்போ நானு ….
ம்ம்ம் நீ இதை night ful ஆ யோசி காலையில் நான் சொன்ன மாறி பிரேஷ் ஆ தலைக்கு குளிச்சு ரெடி ஆகி வா
அப்படி நான் வந்தால் சொல்லுவிங்களா
ம்ம்ம் என்று அவன் சிரிக்க
சரி ok என்று விவேகா போன் வைத்தாள்.
மீண்டும் இன்பா அவளுக்கு அழைத்தவன்.
பேபி இன்னொரு இம்போர்ட் விஷயம்
ம்ம்ம் சொல்லுங்க
பேபி நான் முதல் முறை உன்னை பார்த்த போது போட்டு இருந்த ட்ரெஸ்
i mean அந்த சுடி wear பன்னிட்டு வரியா.
விவேகா இன்பாவிடம்,
எனக்கு நியாபகம் இல்ல சார் என்று பொய் சொல்ல
ஹே ஓவரா act பண்ணாத
நான் எதுக்கு நடிக்கணும்
நிஜமாவே உனக்கு நியாபகம் இல்லயா
பக்கா
நிஜமாவே
அப்போ ok your wish , miss you டார்ஜிலிங் என்று சொல்லி அவன் போன் வைக்க
விவேகா இன்பனை முதன் முதலில் பார்த்த நினைவு நியபகத்திற்க்கு சென்றாள்.
முதலாம் ஆண்டு படிக்கும் போது ஒரு உறவினர்கள் வீட்டு விஷேசம் முடிந்து
அருகில் மெரினா கடற்கரை செல்லலாம் என்று ஆதி, அதிதி, வருண், விவேகா நால்வரும் போக
கங்கா, செல்வம், தேவி மூவரும் வீட்டுக்கு கிளம்பினர்.
வருண் , அதிதி இருவரும் கைகள் கோர்த்து கொண்டு மிகவும் மெதுவாக நடந்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து மெதுவாக பேசி கொண்டு வர
விவேகா, ஆதியிடம் ஹே வா ஆதி இவங்க ஒரு லவ் ஸ்டோரி இப்போதைக்கு முடியாது நம்ப போய் அந்த தண்ணீரில் கால் வைக்கலாம் என்று சொல்ல
சரி வா என்று இருவரும் கைகளை கோர்த்து கொண்டு அங்கே போய் கால்களை தண்ணீரில் வைத்து போக ஒரு வேகமாக அலை வர விவேகா தடுமாறி கடல் நீரில் விழுந்து விட ஆதி சிரித்தான்.
உடனே கோபம் கொண்டு போடா நான் போறேன் என்று இவள் கிளம்ப பின்னால் வருண் , அதிதி வர
இவன் அவள் விழுந்தது பற்றி அவர்களிடம் சொல்ல அவர்கள் சிரித்தனர்.
விவேகா வேக வேகமாக நடந்து சென்று கொண்டே தன் மீது இருந்த அந்த கடற்கரை மணல் தட்டி விட்டு கொண்டே ஆதியை திட்டி கொண்டே செல்ல
அப்போது எதிரில் இன்பராகவன் போன் பேசிக்கொண்டே வந்தான்.
இன்று காலை சுபத்ரா கடற்கரைக்கு போகலாம் இன்பா
எனக்கு இந்த ப்ரொஜெக்ட் முடிக்க ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆ இருக்கு
அப்பா கண்டிப்பாக வர மாட்டாரு,
அம்மாவுக்கு duty பிலீஸ்
நீயாவது என் கூட வாயேன்
உனக்கு boy friends யாராவது இருந்தால் கூட்டி போயேன் சுபா
சுபா அவனிடம் boy friend எப்டி டா எனக்கு கிடைக்கும் அம்மா போலீஸ், தம்பி ips அப்டின்னு கேட்டாலே சிஸ்டர் ன்னு சொல்லிடராங்க என்று இவள் சொல்ல சரி சுபா நான் வருகிறேன் என்று சொல்லி இன்பா mufty ட்ரெஸ் ல ஸ்டேஷன் ல இருந்து கிளம்பினான்.
சுபா எங்கு இருக்கிறாள் என்று கேட்க போன் பேசிக்கொண்டே வர விவேகா கீழ தன் உடையில் அந்த கடல் மணல் எல்லாம் தட்டி விட்டு கொண்டே ஆதியை திட்டி கொண்டே இன்பராகவன் மேல் மோதி விட்டாள்.
விவேகா நிமிர்ந்து இன்பாவ பார்க்க
இன்பா அவளை பார்க்க
விவேகா மனதில் யார் இவன் என்று ஒரு நிமிடம் தடுமாறிய மனதை சரி செய்து
இன்பனை பார்த்து சார் உங்களுக்கு கண் இல்லயா எதுக்கு என் மேல மோதுனீங்க
அதை நான் கேட்கணும் ஓவரா ஸீன் போடாத என் மேல மோதனும் ன்னு பிளான் பண்ணி மோதி இருக்க உன்னை பார்த்தாலே தெரியுது என இன்பா சொல்ல
விவேகாவுக்கு கோபம் ஏறியது
ஹே என்ன பேசுற ஒழுங்கா பேசு
உன் மேல நான் வந்து வேணும்னு மோதினேனா
அப்படி எல்லாம் நடக்கவே நடக்காது.
உன் முகத்தை கண்ணாடி ல போய் பார்த்தியா ஒரு முறை பார்த்துக்கோ irritating idiot
என்ன சொன்ன நீ என்று இன்பாவுக்கு கோபம் வர
அவன் விவேகாவை பார்த்து உன்னை பார்த்தால் fish மார்க்கெட் ல fish கடை வைத்து இருக்கும் ஒரு லேடி மாதிரி நீ இருக்க என்னை பார்த்து நீ இடியட் ன்னு சொல்றியா
சரியான திமிர் டி உனக்கு என் மேல மோதியதுக்கு ஒரு sorry கேட்டியா என்று இன்பா சொல்ல
நான் நானு fish மார்க்கெட் ஆஅ என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பேசியவளை
விவேகா அவனிடம் உனக்கு fish விக்கிற பொண்ணு தான் டா வருவா
உன் முகத்தை பார்த்தால் அது கூட சந்தேகம் தான்
மனசுல பெரிய சிங்கம் சூர்யா அப்டின்னு உனக்கு நினைப்பா இடியட் டிஸ்க்ஸ்டிங் என்று கூறி அவள் செல்ல போக
இன்பா அவள் அருகில் போய் பேச போக சரியாக சுபா போன் செய்தாள்.
போடி போ fish மார்க்கெட்
நீ பெரிய மிஸ் universe அப்டின்னு உன் மனசுல நினைத்து கொண்டு இருக்கிறாயா
உன் பின்னால் யாராவது சுற்றினால் அவன் மாதிரி ஒரு பாவம் யாருமே இல்ல
என்ன வாய் டி உன்னோடது என்று சொல்லி அவன் செல்ல
ஹே என்னடா சொன்ன என்று இவள் பேச போக அதற்குள் அங்கே வந்த ஆதி அவளை இழுத்து கொண்டு சென்று விட்டான்.
விவேகா அதனை நினைத்து சிரித்து கொண்டு இருந்தாள்.
இன்பாவும் நினைத்து கொண்டு இருக்கிறான் அது என்ன???
இன்பாவுக்கு இந்த முதல் சந்திப்பு நினைவு இருக்குமா?
கவ்யா என்ன செய்கிறாள் ???
அதனை அடுத்த எபிசோட் ல பார்க்கலாம்
தொடரும்…..
Episode 57,
விவேகா இன்பாவை முதன் முதலில் சந்தித்த நிகழ்வினை யோசித்தவள் மனதில் “இடியட் உனக்கு நியாபகம் இருக்குமா? இல்லை மறந்து இருப்பாயா?
பார்க்கலாம்.. நாளைக்கு நீ சொல்றதுல தான் இருக்கு என்று அவள் இன்பாவ நினைத்து கொண்டு உள்ளே சென்றாள்.
இங்கு சத்தியமூர்த்தி வீட்டில் கவ்யா இன்பாவை பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரித்தவள். தன் தந்தையை பார்க்க சென்றாள். அப்பா…. அப்பா…
என்று சொல்லிக்கொண்டே தன் தந்தையின் அலுவலக அறைக்குள் சென்றாள். அங்கு சத்தியமூர்த்தி தன் மகளின் குரலினை கேட்டு அவருக்கு இருந்த வேலையை ஒதுக்கி வைத்து விட்டு என்னமா! காவ்யா…
அப்பா!….என்னோட பெயர் கவ்யா,
ஏன் பா இப்படி தப்பா சொல்லறீங்க?
சாரி மா … கவ்யா என்ன விஷயம் எப்பவும் என்னோட செல்லம் நானா (அப்பா)அப்டின்னு கூப்பிடுவீங்க இப்போ அப்பா அப்டின்னு கூப்பிடுறீங்க உங்க சுந்தர தெலுங்குக்கு என்னாச்சு,
நானா!!! என்று அதட்ட ,
ம்ம்ம்.. சொல்லு கவ்யா மா என்ன விஷயம் என்னாச்சு என்னோட பொண்ணுக்கு ,
அப்பா இன்பராகவன்….
இன்பராகவன் IPS ஆஅ! …..
என்று சத்தியமூர்த்தி ஒரு வித பதட்டம் கொண்டு கேட்க, ஏன் பா இப்படி பதட்ட படுகிறீர்கள்.” எனக்கு அவரை பிடித்து இருக்கு, நான் அதை சொல்ல வந்தேன் ,எனக்கு இன்பராகவன் வேனும் பா”
ஏன் மா உனக்கு இந்த விபரீத ஆசை அவனை பத்தி உனக்கு தெரியாது மா அவன் வழியில் நாம் தலையிடாமல் இருந்தால் நமக்கு நல்லது அவன் நம் மேல் கண் வைத்து விட்டால் என்னோட மொத்த சாம்ராஜ்யம் எல்லாம் அழிந்து விடும் கவ்யா மா.
அப்பா எனக்கு அவன் வேனும் என்னோட பெட் டெட்டி மாறி என்னை சுற்றி சுற்றி வரனும் பா நீங்கள் எனக்காக எதுவும் செய்வீர்கள் தானே, கவ்யா உனக்கு அவனை பற்றி தெரியாது மா
அப்பா எனக்கு அவன் வேனும் அவ்ளோ தான் நீங்கள் சரின்னு சொல்றவரைக்கும் நான் என்று அவளுடைய போராட்ட ஆயுதத்தை கையில் எடுக்க போக ,
சரி சரி மா இதுல நான் என்ன பண்ணனும் என்று அவர் தன் மகளின் பக்கம் பேச அப்பா உங்கள் சம்மதம் மட்டும் எனக்கு போதும் அவனை எப்படி என் பின்னாடி சுற்ற விடணும் அப்டின்னு எனக்கு தெரியும் பா என்று சொல்லி கொண்டே கவ்யா தன் அப்பாவை அணைத்து கொண்டாள்.
சத்தியமூர்த்தி வாஞ்சையாக தன் மகளின் தலையை வருடியவர் கவ்யா மா நான் ஒன்னு மட்டும் சொல்றேன் அந்த இன்பராகவன் சாதரணமாக எந்த வேலையும் செய்யாதது போல் தான் தெரியும் ,ஆனால் அவனோட பிளஸ் பாயிண்ட் அது தான் அப்படியே இருப்பவன் திடீரென பொறி வைத்து பிடித்து விடுவான்.
இது எதிரிகளுக்கு மட்டும் இல்ல அவனோட எல்லா நகர்வும் ரொம்ப துல்லியமாக இருக்கும், கொஞ்சம் ஜாக்கிரதை மா, எதுக்கும் ஒரு முறை யோசி மா, என அவர் கூற அப்பா நீங்கள் சொல்ல சொல்ல தான் எனக்கு அவன் மேல் ஆர்வமா இருக்கு, ஆனால் உங்கள் பொண்ணு பற்றி உங்களுக்கு தெரியாதா ?
சரி மா, அவன் நம் பக்கம் இருந்தால் நன்றாக தான் இருக்கும் ஆனால் அது நடக்குமா, அப்பா இந்த கவ்யாவோட ஆட்டம் இனி தான் ஆரம்பம் அவன் எப்படி நம்ப பின்னால் எப்படி ஒரு பூனை மாறி என் பின் சுற்ற வைக்கிறேன் என்று பாருங்கள் என்று ஒரு தந்திர புன்னகை சிந்தி அவள் வேலைய ஆரம்பிக்க சரியான தருணம் எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தாள்.
அடுத்த நாள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடியல் கொடுக்க சீக்கிரமே விடிந்தது.
விவேகா அந்த ஆடை அலமாறிக்கு சென்றவள் இன்பனை கடற்கரையில் அவள் பார்க்கும் போது அணிந்து இருந்த உடை, இன்பா முதன் முதலில் காலேஜ் வந்த போது அணிந்த உடை இரண்டும் எடுத்து பார்த்துவிட்டு அந்த உடைகளை பார்த்து இப்போ எதை நான் போடுவது இல்ல விவேகா, அவனை “முதலில் நீ காலேஜ் ல பார்த்த உடையை நீ போட்டுகொண்டு போடி, அவன் என்ன செய்கிறான் என்று ஒரு டெஸ்ட் பண்ணி பார்த்திடலாம் என்று அழகாக தலைக்கு குளித்து பின்னலிட்டு முகத்துக்கு எந்த ஒப்பனையும் இல்லாமல் எப்போதும் போலவே கிளம்பி காலேஜ் பஸ் நிற்கும் இடத்துக்கு சென்றாள்.
பேருந்து வரும் இடத்தில் மாணவர்கள் அனைவரும் நிற்க அங்கு வெண்பாவும் நின்று கொண்டு இருந்தாள். விவேகாவை பார்த்ததும் கொஞ்சம் தன் முகத்தை திருப்பி கொள்ள அதை பார்த்து விவேகாவுக்கு இப்போது என்ன செய்வது என தெரியவில்லை.
அவளும் தேவை இல்லாமல் பேசி இருகிக்கிறாளே இப்போது விவேகாவே அவளை சமாதானம் செய்ய வெண்பாவின் அருகில் சென்று” டீச்சர்”…..
அவள் திரும்பவில்லை…
இப்போது விவேகா அவள் தோள்களில் கைகளை போட “மேம் பிலீஸ் என்னை விட்டு போங்க”
வெண்பா சாரி டி! பிலீஸ் …..
அய்யோ என்ன சொல்லறீங்க மேடம் நான் எப்படி உங்களை!…. நான்!…. நீங்கள்!…. என்ன தவறு செய்தீர்கள்? விவேகாஅவளிடம்
வெண்பா ஓவரா பண்ணாத டி, பிலீஸ் என்னை மன்னித்து விடு, இதுக்கு மேல ஸீன் போடாத, அப்புறம் நான் நிரம்ப டென்ஷன் ஆகிடுவேன் டி,
ஹே உன்னோட மன்னிப்பு எனக்கு ஒன்னும் தேவை இல்லை என்று அவள் சொல்லவும் சட்டென்று விவேகா தள்ளி செல்ல
“ஹலோ மேடம் ஒரு நிமிடம் “
என்ன என்பதை போல விவேகா அவளை பார்க்க ,
வெண்பா மிகவும் சாதாரண தொனியில் அந்த ஆதி என் கிட்ட மன்னிப்பு கேட்டா நான் உன்னை மன்னித்து விடுவேன்.
விவேகாவுக்கு தூக்கி வாரி போட்டது.” ஹே என்னடி சொல்ற, என்னோட ஆதி உன்னை என்ன பண்னான் ?”
என்ன! உன்னோட ஆதியா !நான் இப்போவே உன்னை இன்பா அண்ணா கிட்ட சொல்லட்டுமா? உன்னோட முழு விவரமும், அதாவது இப்போ நீ எங்கே இருந்து காலேஜ் வரேன்னு ம்ம்ம் …..எப்டி வசதி .
அவன் கிட்ட நீ சொல்ல மாட்ட நீ என்னோட நண்பி என்று சில பனி கட்டிகள் எடுத்து விவேகா வெண்பாவின் தலையில் வைக்க இப்போது வெண்பா ஹே அவன் என் கிட்ட மன்னிப்பு கேட்கணும் அப்போ தான் நான் உன்னை மன்னிப்பேன் என்று அவள் உறுதியாக இருந்தாள்.
பேருந்து வந்தது விவேகா ஒரு வித கவலை மன நிலையில் காலேஜ் சென்றாள். வெண்பா அவளை சீண்டும் விதமாக தான் அப்படி கூறினாள்.
விவேகா மிகவும் சோகமாக தன் வகுப்பு வந்து அமரவும், உடனே ஆதி அவளை பார்த்து, என்ன என்னோட தேன் மிட்டாய் இவ்ளோ சோகமா இருக்கா!
ஆதி இப்போது அவன் bag ல இருந்து ஒரு பாக்ஸ் முழுவதும் தேன் மிட்டாய் எடுத்து அவள் அருகில் போய் அமர்ந்து ஒரு மிட்டாய் எடுத்து வாயில் போட
அவள் அதனை சாப்பிட்டு கொண்டே ஆதியை பார்க்க ம்ம்ம் சொல்லு டி இப்போ என்ன ஆச்சு
ஆதி…. வெண்பா என் கிட்ட பேச மாட்டிங்குரா டா, சரி விடு விவி பார்த்துக்கலாம் இங்கே தானே இருப்பா
அவ பேசல அப்டின்னு இவ்ளோ பீல் பண்ணாத விடு பார்த்து கொள்ளலாம்.
என ஆதி கூற தனக்காக அவன் மன்னிப்பு கேட்க கூடாது என்று விவி ஆதியிடம் எதுவும் சொல்ல வில்லை.
இரண்டு வகுப்பு நன்றாகவே சென்றது அடுத்து காலை இடைவெளி வர ஆதி , சிவாவை அழைத்து கொண்டு cs ப்ளாக் வெண்பாவை காண சென்றான்.
அங்கு அவன் வரும் தோரணையில் மாணவிகள் அனைவரும் அவனையே பார்க்க அவன் யாரையும் கண்டு கொள்ளாமல் வெண்பாவின் வகுப்புக்கு சென்றான்.
சிவாவிடம் அவளை வெளியே வர சொல்லுமாறு கூற அவள் வர வில்லை உடனே ஆதி வகுப்பு வாசலில் வெண்பா என்று அழைக்க அவளை தவிர மொத்த வகுப்பும் ஆதியை பார்க்க
வெண்பா இப்போது ஆதியை திரும்பி ஒரு முறை தான் பார்த்தாள் அவளுக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை.
வகுப்பு அமைதியாக இருக்க ஆதி அவளை பார்த்து சாரி, என்று சொல்லி விட்டு சிறிது அடிகள் சென்றவன் பின் மீண்டும் வந்து என்னோட விவி கிட்ட பேசு என்று சொல்லி கிளம்பி விட்டான்.
சதீஷ், அபி, ஆகாஷ், ரிஷி அனைவரும் ஹே யாரு வெண்பா அவன் எங்க ஆள பத்தி சொல்லிட்டு போறான்.
உடனே மாணவிகள் அனைவரும் ஹே என்ன வெண்பா உங்கிட்ட வந்து அந்த ரோமியோ சாரி சொல்லிட்டு போறான் நீ எதுவும் ….. என்று இழுக்க
ஹே வாய மூடுங்கள் அபி அவன் விவேகாவோட மாமா பையன் ரெண்டு பேரும் ஒரே கிளாஸ் என்னோட friend அவ்ளோ தான் என்று சொல்லி இவள் நகர்ந்தாள்.
ஆதி நேராக வகுப்புக்கு செல்ல அங்கே விவேகா மைத்திலியின் மேல் சாய்ந்து கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்.
சிறிது நேரத்தில் வகுப்பு ஆரம்பிக்க அவளது கிளாஸ் இன்சார்ஜ் உள்ளே வந்து ஆதி, கண்ணுகினியாள், சயின்ஸ் டே க்கு என்ன ப்ரோக்ராம் பண்றது அப்டின்னு ப்ரின்சிபால் மீட்டிங் இருக்கு hod சார் போயிட்டாரு நீங்கள் ரெண்டு பேரும் போங்க அப்டியே 3rd year ரெப் கூட போய் கூட்டிட்டு போங்க என சொல்ல ஆதியும், இனியாள் இருவரும் கிளம்பினர் அங்கு cs ல இருந்து வெண்பா சதீஷ் என ஒவ்வொரு துறை தலைவர்கள் மாணவர்கள் இருவர் என அமர்ந்து இருக்க வெண்பா ஆதியை பார்க்க அவன் இவளை ஒரு முறை கூட பார்க்க வில்லை.
இங்கு விவேகா வகுப்பில் கவனம் செலுத்த அப்பொழுது அழுத்தமான காலடியில் இன்பா நிதானமாக உள்ளே வர தீபா சட்டென்று வகுப்பு எடுப்பதை நிறுத்தி விட , யூ கேரி ஆன், நான் ஒரு ரௌண்ட்ஸ் வந்தேன் என சொல்ல தீபா பயந்து கொண்டே வகுப்பு எடுக்க ஆரம்பித்தாள்.
விவேகா அவனை ஒரே ஒரு முறை பார்த்தாள் அப்புறம் பாடத்தில் கவனம் செலுத்துவது போல பாவனை செய்தாள்.
அவன்….
தொடரும்….
இனி தொடர்ந்து படியுங்கள் டெய்லி update பண்றேன் அப்படியே உங்களோட கமென்ட்க்கு I’m eagerly waiting 😊
Episode 58,
விவேகா பாடத்தில் கவனம் செலுத்துவது போல் நடிக்க இன்பா அவளை பார்த்து விட்டு உள்ளுக்குள் நடிக்கிறியா பேபி என்று நினைத்தவன்.
மாணவர்கள் பக்கம் திரும்பி அங்கு உள்ள சில மாணவர்களை முடி திருத்தம் செய்யாமல் , கைகளில் வண்ண கயிறுகள் ,ரௌடி போல கழுத்து செயின் போட்டு இருந்த மாணவர்கள் அருகில் சென்று இன்பா ஒரு பார்வை பார்க்க அந்த மாணவர்கள் தானாகவே அனைத்தும் பயந்து கொண்டு கழட்டி இன்பா நிற்கும் மேஜையில் வைக்க அதை பார்த்து மாணவிகள் தங்களுக்குள் சிரித்து கொண்டு இருந்தனர் .
மைதிலி அவளிடம்” ஹே இன்னிக்கு சார் செம்மையா இருக்காரு டி, எல்லா பொண்ணுங்களும் இன்பா சாரை வைத்த கண் வாங்காமல் சயிட் அடிக்கிறாங்க பாரு! “
விவேகா ஒரு முறை அந்த வகுப்பறை சுற்றி அவள் கண்களை போக விட மைதிலி சொன்னது போல தான் இருந்தது. அவளுக்கு கோபம் இவன இவன் எதுக்கு இப்படி வந்து ஸீன் போடுறான் என்று அவள் இன்பாவ திட்ட,
மைதிலி , ஹே தீப்ஸ் கூட சார சயிட் அடிக்குது என்று தீபா மேடம் பற்றி கூற இடியட் உன்னை என்ன பண்றது என்று இவள் அவனை முறைத்து பார்த்தாள்.
அப்போது மைதிலி அருகில் அமர்ந்து இருந்த மீனா அவளிடம் மைதிலி நல்ல வேலை டி, இப்போ அந்த இனியாள் இங்கே இல்லை இருந்தா அப்டியே சார் கிட்ட இன்னிக்கு “நீங்கள் ரோம்ப அழகா இருக்கீங்க” அப்டின்னு சொல்லி ஒரு நாடகம் போட்டு இருப்பாள் நல்ல வேலை என்று அவள் சொல்ல,
ஆமா மீனா சரியான ஸீன்காரிகள் என்று இருவரும் பேசி கொண்டு இருக்க இதை கேட்டு விவேகா இன்னும் கோபமானாள்.
இடியட் இன்னிக்கு மட்டும் நான் வைக்கும் டெஸ்ட் ல நீ fail ஆகு அப்புறம் உனக்கு இருக்கு டா என்று விவேகா தன் பற்களை நரணரத்து கொள்ள,
அப்பொழுது இன்பா கடைசி வரிசையை பார்த்து கொண்டு இருக்க மைதிலி விவியிடம் ஹே விவி இப்போ சார் உன்னை கூப்பிடுவார் பாரு என்று சொல்ல,
இன்பா கூப்பிட்டான் ஆனால் அது மைதிலியை தான்,
மைதிலி…..
விவி சிரித்து கொண்டு அவர் உன்னை தான் கூப்பிடுகிறார் போ என்று சொல்ல,
மைதிலி சத்திய சோதனை! அய்யோ இப்போ எதுக்கு இவரு நம்மள கூப்பிடுகிறார். ஓ!!! இவ இவ்ளோ நேரம் அவரை முறைத்து பார்த்ததுக்கு நம்மள கூப்பிடுகிறாரே என இவள் எழுந்து நிற்க,
இன்பா அந்த மேஜையில் உள்ள வண்ண கயிறுகள், செயின் அனைத்தும் எடுத்து கொண்டு என்னோட அறையில்போய் வை மா.
ஓ… ஓகே சார் என்று இவள் அதனை அள்ளிக்கொண்டு இன்பாவின் அறைக்கு சென்றவள் அதை வைத்து விட்டு அருகில் உள்ள இருக்கயை பார்த்தாள்.
மித்ரன் இருக்கை தான் அது, அவர் இன்று வர வில்லை என்று சொல்லிக்கொண்டே இன்பா வெளியே நிற்க,
சார்…
என்று பதட்டம் கொண்டு பேசியவள் அந்த பொருள் எல்லாம் இவனுடைய இடத்தில் வைத்து விட்டு வெளியே செல்ல
மைதிலி ….. என இன்பா கூப்பிட
சொல்லுங்க சார் ….என்று பயந்து கொண்டே அவள் அவனை பார்க்க நான் லன்ச் சாப்பிட்டு விட்டு கிளம்பிடுவேன் நீ போ மா என்று சொல்ல ,
அவளுக்கு ஒன்னும் புரியவில்லை மைதிலி சரி என்பதை போல் தலை ஆட்டி விட்டு ஓடி விட்டாள்.
இன்பா உடனே மித்ரனுக்கு அழைத்தான். ம்ம்ம் சொல்லு டா நீ மட்டும் என்னை விட்டு ஜாலியாக இருக்க இன்னிக்கு காலேஜ் போய் எண்ஜோய் பண்ற, நான் பாரு இந்த ரெண்டு கேசும் ரொம்ப இழுக்குது மச்சி எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு டா என்று மித்ரன் அழுத்துக்கொள்ள
இன்பா அவனிடம், “நான் இப்போ ஒரு விஷயம் சொன்னேன்னு வை நீ முழுசா பைத்தியம் ஆகிடுவ மித்ரன்”
நீ முதலில் சொல்லு எப்போதும் என்னை பிரச்சனை ல கொண்டு விடுவது தான் உன் வேலை என, இப்போது இன்பா மைதிலியை பற்றி சொல்ல மித்ரனுக்கு ஒன்றும் தலை கால் புரிய வில்லை.
டேய் என்னடா சொல்ற நிஜமாவா!
ப்ரோமிசா மச்சி ,
அந்த girl க்கு உன் மேல கொஞ்சம் இன்டெர்ஸ்ட் மச்சி
நான் ரொம்ப ஹாப்பி மச்சி என்னையும் ஒரு பொண்ணு திரும்பி பார்த்து இருக்கு இதுக்கு எல்லா விவேகாவாள தான்
ஹே என்ன சொன்ன அவளா அவ எப்டி காரணம் அவளுக்கு கிரெடிட்டு நீ எப்படி கொடுக்கலாம் என இன்பா கோபம் கொள்ள
ஹே போடா நீ என்னோட சிஸ் பின்னால சுற்றுனதால தான் விவேகா மூலமாக தான் அவ எனக்கு கெடைச்சு இருக்கா மச்சி
ஹே அவ உன்னோட இடத்தை தான் பார்த்தா அதனால் ஓவரா இமாஜினட் பண்ணிகாத,
அதை நான் பார்த்து கொள்கிறேன் போடா என்று மித்ரன் சந்தோஷத்தில் போன் வைத்தான்.
இங்கு மைதிலி தனது வகுப்புக்கு வந்து அமர எல்லோரும் அவளிடம் இன்பாவ பற்றி கேட்க அவள் ஒரு புன்னகை மட்டுமே பதில் அளித்தாள்.
விவேகா எதுவும் கேட்காமல் அமைதியாக அவள் வேலையில் இருக்க ஹே எப்டி டி நீ அவருகிட்ட பேசுற பயமா இருக்கு அவரை பார்த்தாலே எனக்கு பயத்தில் பேச்சு வர மாடிங்குது விவி.
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல லிதி உன்னோட மனசுல பயம்ன்ற கண்ணோட்டம் கொண்டு நீ பார்க்கிறாய் அதனால உனக்கு இப்படி தோணுது
அய்யோ வேணாம் வேணாம் நீ சொல்லாத எனக்கு இப்போ கூட கை கால் எல்லாம் நடுங்குது.
ம்ம் சரி விடு என்று விவேகா சொல்லி விட்டு அவள் அடுத்த வகுப்புக்குகாக காத்து இருந்தாள்.
விவி எனக்கு ஒரு டவுட்டு
என்ன அது
அவரு என்கிட்ட நான் லஞ்ச் சாப்பிட்டதும் கிளம்பி விடுவேன் அப்படினு சொன்னாரு ஆனால் எதுக்கு என்கிட்ட சொன்னாரு அப்படினு ஒரே குழப்பமா இருக்கு டி
விவேகாவுக்கு ஏன் இப்படி சொன்னான் என விளங்கியது. இடியட் என மனதில் திட்டியவள்.
நீ விடு விதி என்று கூறி பா பாடத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.ஆதி அந்த வகுப்பு முடிந்து மதிய இடைவேளைக்கு தான் வந்தான்.
விவேகா அவனருகில் அமர்ந்து கொண்டு ஹே ஆதி வா சாப்பிட போகலாம் என்று அவன் கைகளை பிடித்து அழைத்து சென்றாள்.
விவேகாவின் இயல்பான நடைவடிக்கையைப் பார்த்த பின் தான் ஆதி அவள் இயல்பாக இருக்கிறாள் என்று உறுதி படுத்தி கொண்டு சந்தோஷ மனநிலையில் சாப்பிட சென்றான்.
விவேகா வேகமாக சாப்பிட்டு விட்டு நேராக இன்பாவை பார்க்க சென்றாள்.
உள்ளே வரலாமா என கேட்டு சென்றாள்
ம்ம்ம்ம் ….
ஆமா நேத்து எதுக்கு நீ வெண்பா வ குட்டி பொண்ணு அப்படினு சொன்ன
அப்போ நானு!
நீ ! நீ ! என்று இன்பா கண்ணகுளி தெரிய சிரிக்க
இப்போ எதுக்கு டா சிரிக்கிற
விவேகா நீ குட்டி பொண்ணு இல்ல, இப்போ நீ பெரிய பொண்ணு டி, நீ என்னை லவ் பண்ற, அப்புறம் கல்யாணம் இப்டி பெரிய பொறுப்பு உனக்கு வர போகுது,
என்ன லவ் ஆ ஆ…..
நானா !
நீ தான்…..
உன்னை!
ம்ம்.. என்னை தான்…..
‘இப்படி எல்லாம் நினைச்சுகிட்டு சுற்றி கிட்டு இருக்காத ராகவ்’
அப்போ இல்லையா!
இல்ல… என்று அவள் சொல்ல ,
ம்ம் சரி ஓகே என்னோட கிஸ் எல்லாம் கொடுத்திடு நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.
ம்மம் பார்க்கலாம் என கூறியவள் இப்போ எதுக்கு வர சொன்ன நீ
ஆமா எதுக்கு இவளோ ஹன்ட்சமா காலேஜ் வந்த நீ
நானா!! மம்ம் நான் அப்படி தான் வருவேன் உனக்கு என்ன டி?
எனக்கு என்ன?
எனக்கு ஒன்னும் இல்லையே!
உன்னை எல்லா பொண்ணுங்களும் பார்க்கிறார்கள்.
பார்த்தால் உனக்கு என்ன, நீ தான் என்னை லவ் பண்ணல அப்டின்னு சொல்லிட்டியே என்று அவளை பார்த்து கூறியவன்.
சிரித்து கொண்டே உனக்கு ஜலஸ்ஸா இருக்கா!
எனக்கா…
நான் எதுக்கு பொறாமை படனும் எனக்கு என்ன டிஸ்கஸ்டிங்…
அவளது இந்த சிறுபிள்ளை தனமான கோபத்தை ரசித்தவனாய் ,
அவளை அருகில் இருந்த மேஜயின் மீது அமர வைத்தான்.
என்னை விட்டு தள்ளி போ…. இடியட் என விவேகா அவளை பார்த்து கோபத்ததோடு பார்க்க,
ஹே எதுக்கு இப்படி கோபப்டுகிராய் நீ
பேபி என்னாச்சு இன்னிக்கு செம்மயா இருக்க டி ,என்று இன்பா அவள் அருகில் வந்து அவளது கூந்தலின் வாசத்தினை உள்ளே தேவையான அளவு இழுத்து கொண்டான்.
இது தான் நம்ப முதன் முதலில் பார்த்த போது நீ போட்டு இருந்த டிரஸ் ஆ….
ம்ம் என்று அவள் தலையை குனிந்து கொண்டே சொல்ல விவேகா அந்த கடற்கரையில் பார்த்த நிகழ்வு மட்டுமே மனம் முழுவதும் இருந்தது.
பேபி உன்னோட முகத்தில் எதோ எதிர்பார்த்து கிடைக்காதது போல இருக்கே என்ன விஷயம்
மண்ணாங்கட்டி….. ஒன்னும் இல்லை , சாடிஸ்ட், இடியட் என்று அவனை வாய்மொழியாக திட்டி விட்டு
நான் கிளம்புகிறேன். என அவள் சொல்லி கதவு வரை செல்ல அவள் கூந்தல் ஜடயை பிடித்து பின்னால் இழுத்தவன் அவளை சுவற்றில் சாய்த்து அவளுடைய அதரங்களை வருடி விட்டு தாமதிக்காமல் இதழ் யுத்தத்தினை ஆரம்பித்தான்.
“ராகவ் என்னை விடு டா” என்று இவள் கொஞ்சம் மெதுவான குரலில் சொல்ல அவனோ “உன்னை முதன் முதலில் பார்க்கும்போதே உன்னை எதாவது செய்யணும் அப்டின்னு எனக்கு தோணிச்சு டி”
அதுவும் “என்னை நீ பார்க்காமல் போன அந்த பார்வை”
“அந்த ஒரு பார்வை அது தாண்டி, என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிடுச்சு” என்று கிறக்கமான குரலில் கூறியவன் அவள் கழுத்து பகுதியில் முத்தம் வைத்து ஒரு சிறிய பல் தடத்தினை செய்ய
விவேகா அவன் செய்கையில் ஒரு நிமிடம் மெதுவாக ஸ்ஸ்ஹ.. என்று கத்தியே விட்டாள்.
அது வலியில் வந்ததா இல்ல இன்ப வேதனையா என தெரியவில்லை கண்களை மூடிக்கொண்டு அவனுள் கரைந்து போனாள்.அதற்குள் அவன் மீண்டும் அவள் இதழ்களை கவ்வினான்.
தொடரும்….
Episode 59,
இரு ஜோடி இதழ்களும் இரண்டு நிமிடம் ஒட்டிக்கொண்டு பிரிய மனமில்லாமல் தவிக்க விவேகா அவனுடைய தீவிரத்தன்மை தாங்காமல் அவனை விலக்கினாள்.
விவேகா அவனை கோபக் கண்களால் பார்த்து கொண்டே அவன் கடித்த இடத்தில் தடவி விட்டு ஹே அறிவு இருக்கா டா என்று அதனை தேய்த்து விட்டு கொண்டே சொல்ல அவன் அவளை அருகில் இழுத்து அதனை தேய்த்து விட்டு கொண்டே பொய் சொன்னா இப்படி தான் டி… அது மட்டும் இல்லாமல் எப்படியும் இந்த இடத்தை கமிங் சூன் ல நான் தான் டேஸ்ட் பண்ண போறேன் அதான் இப்போவே எப்படி இருக்கு அப்படின்னு பார்த்தேன்.
என்ன….
ம்ம்ம்ம் விவேகா இட்ஸ் வெறி டேஸ்ட் .
என்று அவன் சொல்ல அவள் முகத்தை கோபமாக வைத்து கொண்டு இருந்தாலும் உள்ளுக்குள் இதயம் வேக வேகமாக துடித்தது இன்பாவின் மொழிகள் எப்போதும் அவளுக்கு ஒரு சிலிர்ப்பு கொடுக்கத்தான் செய்தது.
ஆர் யூ ஆங்ரி டார்ஜ்லிங்…
தன் நாணத்தை மறைத்துக்கொண்டு விவேகா,
அதென்ன எப்போ பார்த்தாலும் நீ என்னை டார்ஜிலிங் அப்படினு கூப்பிடற
நான் சொன்னால் நீ கோப பட கூடாது
முதலில் நீ சொல்லு அப்புறம் பார்க்கலாம்
உன்னை பார்த்தாலே எனக்கு ஹில்ஸ் ஸ்டேஷன் போகனும் போல இருக்கு டி…
அப்டின்னா போயிட்டு வா …
உன் கூட நீயும் நானும், உனக்கு ஓகே னா நான் இப்போவே ரெடி தான் என்று அவள் அருகில் வர
ஹே அங்கேயே நில்லு …
சரி சரி ஓகே நான் இங்கேயே இருக்கேன் நான் அப்போவே சொன்னேன் நீ கோவப்படுவன்னு நீ தான்….
டேய் உனக்கு வேற எதுவுமே பேச இருக்காதா…
என்னை உன்கிட்ட வேற என்ன டி பேச சொல்ற…
பேச நிறைய இருக்கு உன்னை பற்றி சொல்லலாம் இல்லை பொதுவாக எதுவும் பேசலாம்ஆனால் நீ தான் எப்போதும் அதுலயே தான் இருக்க ரொம்ப மோசம் ராகவ் நீ
நான் ஒன்னும் மோசம் இல்ல எங்கே தொடங்கினாலும் முடிவு அது தான் பேபி
விவேகா அவள் காதுகளை பொத்திக்கொண்டு போதும்! போதும்! இதுக்கு மேல பேசாதே நான் கிளம்புறேன்.
ஹே ஒரு நிமிடம் என்று இன்பா அவளுக்காக வாங்கியது எடுத்து அவளிடம் கொடுக்க,
விவேகா ஆச்சரியமாக என்ன இது!
இது என்னோட முதல் பரிசு என்னோட டார்ஜிலிங்க்கு….
என்னடா கண் மை வாங்கி வந்து இருக்கிறாய்..
அது தானே இந்த கேர்லஸ்கு எப்போதும் குறை கண்டு பிடிப்பது தான் வேலை போல…
அப்போ எனக்கு முன்னாடி எத்தனை பொண்ணுக்கு நீ வாங்கி கொடுத்து இருக்க இது தான் உன் வேலை போல
ஹே நான் போறேன் என்று அவள் கோபமாக திரும்ப பிளீஸ் போகாத டி… உனக்காக நான் ஆசையாக வாங்கினேன் .ஒரு தடவை எனக்காக பிளீஸ் ..என்று அவன் கெஞ்ச
இந்த இன்பா விவேகாவுக்கு புதிது அவன் கெஞ்சல் மொழிகள் அதற்கு மேல் கேட்க முடியாமல் எனக்கு பிடிச்சு இருக்கு என்று சொல்லி எடுத்து கொண்டு இவள் செல்ல ஹே பேபி நாளைக்கு ஈவ்னிங் நான் உன்னை கண் மையில பார்க்கணும்
என்ன…
பிளீஸ் டி எனக்கு ஒரு முக்கியமான கேஸ் இருக்கு அதனால் நான் கோயம்புத்தூர் கிளம்புறேன்.
அப்போ இனி வர மாட்டியா நீ
இல்ல வருவேன் ஆனால் அடிக்கடி என்னோட டார்ஜிலிங் அ பார்க்க வர முடியாது தானே
நீ வர வேண்டாம் டா எனக்கு தான் தேவை இல்லாமல் தொல்லை அவஸ்த்தை எல்லாம்
ம்ம் ம்ம் அப்போ ஓகே நாளைக்கு பார்க்கலாம்.
நான் குவாட்ரஸ் கு வெளிய வெயிட் பண்ணுவேன் நீ வர ஓகே
ம்ம்ம் ஓகே என்று மனம் தானாக இன்பாவை நாடி சென்றது.
ஆனால் இது கொஞ்ச நாட்கள் தான் அதற்காக தான் இவர்களை பிரிக்க தான் வந்து விட்டாளே. கவ்யா இனி சுவாரஸ்யதிர்க்கு பஞ்சம் இருக்காது.
இன்னும் சில காலத்தில கதையின் தலைப்புக்கு ஏற்ப இருவரும் இன்பா சண்டைக்காரனாக மாற விவேகா இன்பாவின் சண்டைக்கோழி யாக மாறப்போகிறாள்.
விவேகா வெளியே சென்றதும் இன்பா உன்னோட முகம், மனம் எதை எதிர்பார்க்குது அப்டின்னு எனக்கு தெரியும் விவி ஆனால் உனக்கு அது உடனே கிடைச்சா நல்லாதான் இருக்கும் நீ நினைக்கிற ஒரு எதிர்பார்ப்பு இன்னிக்கி கிடைத்து விடும்.
இன்னொன்று என்னோட புரோபோசல் கண்டிப்பாக உன்னை நான் கூடிய சீக்கிரம் புரோபோஸ் பண்ணுவேன் டி டார்ஜ்லிங்… நீயும் ரொம்ப ஏங்கி தான் போற ம்மம் பரவாயில்லை என்று அவனுடய வேலையை பார்க்க சென்றான்.
விவேகா சிரித்து கொண்டே தன்னுடைய வகுப்புக்கு வந்து இன்பா கொடுத்ததை அவளுடைய பைகளில் வைத்து கொண்டு அவனை நினைத்து பூரித்து கொண்டு இருக்க அங்கே வெண்பா வந்தாள்.
ஹலோ மேடம் உள்ளே வரலாமா
விவேகாவின் முகம் மாறியது உடனே அவள் அவனை பார்த்து என்னோட ஆதி உன் கிட்ட வந்து மன்னிப்பு கேட்க மாட்டான் இதுக்கு சரியா அப்டின்னா மட்டும் என் கிட்ட பேசு
ஹே நடிக்காத அவன் தான் காலையில் வந்து என்கிட்ட மன்னிப்பு கேட்டான் அதனால் தான் நான் சரின்னு உன் கிட்ட பேச வந்தேன்.
என்ன சொன்ன ஆதி உன்கிட்ட சாரி கேட்டானா…
ம்ம்ம்…
உடனே விவேகா ஆதியை பார்க்க கிளம்ப ஹே நான் சும்மா சொன்னேன்
நீ என்னோட விவி அதனால் தான் என்று வெண்பா ஆதி வந்தது இவளுக்கு தெரியாது போல் என்று இப்போது தெரிந்து கொண்டாள்.
என்ன மேடம் ரொம்ப ஜாலியா இருக்கீங்க சொன்னால் நானும் சிரிப்பேன்.
ஹே நான் உன் கூட பேச மாட்டேன் டி . ஏன் விவி …
உனக்கு என் கிட்ட பேசணும் அப்டின்னு தோனவே இல்லை.
ஹே ஐ ஃபீல் கில்ட்டி எனக்கு உன் கூட பேசாமல் கஷ்டமா இருந்தது தெரியுமா.
நிஜமா..
பக்கா…
ம்ம் அப்போ சரி என்று விவேகா இன் முகம் கொண்டு அவளுடன் சிரித்து பேசி விளையாடி கொண்டு இருந்தாள்.
டீச்சர் …
சொல்லு டி…
சீனியர் …
என்ன …
இல்ல சீனியர் பற்றி எதுவுமே பேச மாட்டிங்கிற…
இப்போ என்னாச்சு அதை சொல்லு விவேகா என்று வெண்பா கேட்க
விவேகா அன்று நடந்த அனைத்தும் கூறினாள். அருண் காலேஜ் போயிட்டான் விவி நீ பேசியது சரி தான் அவன் கிட்ட நீ அதிகம் வைத்து கொள்ளாதே.
ஹே என்னடி நீயும் அந்த இடியட் மாதிரி பேசுற பாவம் டி நான் கொஞ்சம ஓவரா சீனியர் கிட்ட பேசி விட்டேன்.
சரி விடு இப்போ கொஞ்ச நாளக்கு அந்த அருண் தொல்லை எனக்கு இல்ல பா என வெண்பா சொல்ல ஹே நான் அருண் சீனியர் கிட்ட சாரி கேட்கணும் .
இப்போ நீ அவனை விட்டு இப்போ உன்னோட விஷயத்துக்கு வரயா
என்ன என்னோட விஷயம்
ஹே நடிக்காத டி
உன்னோட “இடியட் என்கிற இன்பா” மற்றும் “இண்பாவின் இதய ராணி விவேகா “பற்றி கொஞ்சம் சொல்லு ,
ஹே நீ தான் அப்படி சொல்லி கிட்டு இருக்கணும் என்னோட அண்ணன் அப்டின்னு தண்டோரா போடுற அவன்.. அவன்…
என்ன அவரு…
ஒன்னும் இல்லை விடு…
ஹே சொல்லு,
அவன் என்கிட்ட இன்னும் ஒரு லவ் யூ கூட சொல்லல
வெண்பா அவளிடம் ,அப்போ சொன்னா உடனே ஓகே சொல்லி விடுவாயா ?
ஹே அது என்னோட இஸ்டம்..
அப்போ இப்போ நீங்கள் ரெண்டு பேரும் எந்த ஸ்டேட் ல இருக்கீங்க ?
அது அது எனக்கு தெரியல .
ஹே நீங்கள் லவ் மட்டும் தான் சொல்லிகல மற்ற படி ஒரே லவ் மோட் ல தான் சுற்றி கிட்டு இருக்கீங்க
யாரு சொன்னா அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல
யாரு சொல்லணும் அது தான் உன்னோட முகத்தில் பல்ப் எரியுதே.
ஹே ஹே இது எல்லாம் நீ பேசறது சரி இல்லை என்று இருவரும் பேசி கொண்டு இருக்க ஆதி , சிவாவுடன் உள்ளே வந்தான்.
வெண்பா அவனை பார்த்து விட்டு என்ன பேசுவது என்று தெரியாமல் உடனே நான் கிளம்புறேன் டி என்று சொல்லி போக விவேகா ஒரு நிமிடம் என்று ஆதியுடன் பேச ஆதி வெண்பாவின் பக்கம் திரும்பவே இல்லை.
விவேகா வெண்பாவை வெளியில் கொண்டு வந்து விட வந்தவள் ஹே டீச்சர் எனக்கு ஒரு உதவி
என்ன…
இல்லை என்று மழுப்பி கொண்டே விவேகா நெளிய
வெண்பா அவளிடம் இதை எல்லாம் என் அன்னகிட்ட வெட்க பட்டு காட்டு இப்போ விஷயத்துக்கு வா
ஹே என்று அவள் காதை பிடித்து திருகியவள் எனக்கு நாளைக்கு இவெனிங் கொஞ்சம் இந்த காஜல் மட்டும் வைத்து விடுகிறாயா. என கண்களை மூடிக்கொண்டு விவேகா கூற
வெண்பா அவளை பார்த்து சிரித்து கொண்டு ம்மம் எங்கே பார்த்தாலும் ஒரே காதல் கோட்டையா இருக்கே
சரி வா இதையும் உனக்கு செய்கிறேன்.
ஹே எனக்கும் காலம் வரும் இரு டி அன்பு செல்வன் அன்புசெல்வன் அப்டின்னு சொல்லிட்டு இருக்கியே வரட்டும் அப்போ உன்னை நான் வச்சு செய்கிறேன். என விவேகா சொல்ல
விவேகாவின் பின்னால் ஆதி வர வெண்பா விவி கிட்ட உன்னை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கு டி. என்று சொல்லி ஆதியை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றாள்.
அவள் சொல்லி விட்டு சென்றது விவேகாவுக்கு புரியவில்லை ஆனால் ஆதி புரிந்து கொண்டான்.
விவேகா ஆதியை பார்த்து நீ போய் அவ கிட்ட சாரி கேட்டியா….
இல்ல டி..
ஹே பொய் சொல்லாதே.
இல்ல விவி நான் … நான் போய் தேவை இல்லாமல் எதுக்கு கேட்கணும்.
உனக்காக அப்டின்னா சொல்லு நான் இப்போவே போய் கேட்டு வரேன்.
எனக்காக நீ யார் கிட்டயும் எதுவும் யாசிக்க கூடாது.
புரியுதா…
அப்போ எனக்காக நீ… என ஆதி அவளிடம் கேட்க உனக்காக நான் எதுவும் செய்வேன்.
எது வேண்டுமானாலும் செய்வாயா?
ம்ம் கண்டிப்பாக செய்வேன்.
சரி நான் உன்கிட்ட கேட்பேன் கேட்க வேண்டிய சூழல் வரும்போது அப்போ செய் என்று சொல்ல
ம்ம் சரி என்று இருவரும் வகுப்புக்கு சென்றனர்.
இங்கு கவ்யாவின் வீட்டில் அவள் தன் தந்தைக்கு தொலை பேசியில் அழைத்தாள்.
அப்பா ….
சொல்லு மா…
இந்த வினய் இருக்கானே இப்போ கூட உங்க கிட்ட அந்த சாக்லெட் பேக்டரிகு உங்க பின்னாடி சுற்றி கொண்டு இருந்தானே.
ம்ம்ம்ம் செம்ம காசு பார்க்கிறான் மா
அது எனக்கு தேவையில்லை பா அந்த இன்பாவோட அக்காவ நாளைக்கு மீட் பண்ண போறான்.
அவளை தான் கல்யாணம் பண்ணிக்க போறான்.
அதனால….
ம்ம் நீ என்ன சொல்ல வர அப்டின்னு எனக்கு புரியுது.
இப்போ அந்த மீட்டிங்க்கு நீ போகனும் அவ்ளோ தானே
ம்ம் ஆமா அப்பா ….
நான் பார்த்து கொள்கிறேன் நீ அதற்கு ரெடி ஆகு டா
ம்ம் ஐ லவ் யூ டாடி….
என கூறிய கவ்யா தன்னை தயார்படுத்தி கொண்டாள்.
இன்பா நாளைக்கு நீ என்னை தவிர்க்கவே முடியாது டா என்று கூறி அவள் அறையில் உள்ள ஆளுயர இன்பாவின் புகைபடத்தை பார்த்து கூறினாள்.
ஆனால் இன்பா நாளைக்கு விவேகாவை தவிர்க்க போகிறான்….
தொடரும்…..
Episode 60,
விவேகா அன்று மாலை ஆதி வீட்டுக்கு சென்றவள் ஆதி, அதிதி , ஆதியின் சித்தி மகள் பனிமலர், முகிலன் இருவரும் வந்து இருக்க அவர்களுடன் விளையாடி கொண்டு சந்தோஷ மனநிலையில் தன் பொழுதை கழித்தாள்.
அடுத்த நாள் மதியம் போல் அதிதி கிட்ட தலைக்கு குளித்து விட்டு ஜடை போட சொல்லி தன் வீட்டுக்கு கிளம்பினாள்.
வார இறுதி இரண்டாம் சனிக்கிழமை அதனால் காலேஜ் விடுமுறையில் இருக்க கங்கா, விவேகா இருவரும் தங்கள் வீட்டுக்கு வந்ததும் இவள் வென்பாவை பார்க்க சென்றாள்.
இன்பா என்ன செய்கிறான் என்று பார்த்து விடுவோம்.
அவன் காலையில் முதலில் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் சென்று அங்கு சிலருடன் பேசி இந்த ஒப்புதல் பெற இன்பா ஒரு மாதம் இறங்கி வேலை பார்த்து இருக்கிறான்.நீலா மருத்துவமனையை ஆய்வு செய்ய ஒப்புதல் கடிதம் வாங்கி கொண்டு சாதனா, விகாஸ், இன்பா கூடவே ஹெல்த் இன்ஸ்பெக்டர் மற்றும் இன்னும் இரண்டு காவலாளிகள் என அந்த மருத்துவமனை முழுவதும் எதுவும் ஆதாரம் கிடைக்குமா என்று தேட ஒன்றும் கிடைக்க வில்லை.
இந்த ரெய்டு விஷயம் கேள்வி பட்டு தேஜு ஹாஸ்பிடல் வந்தாள்.
நேராக டீன் சீட்டுக்கு சென்றவள் இன்பாவை பார்க்க வருமாறு அழைத்தாள். அவன் உள்ளே வந்ததும் இருக்கையில் அமர சொன்னவள் ஒரு சிரு அமைதிக்கு பின் பேசினாள்.
மிஸ்டர் இன்பராகவன் என்ன நடக்குது இங்கே…
ஏன் உங்களுக்கு தெரியாதா மிஸ் நாதன்
ம்ம் தெரிஞ்சு இப்போ என்னால என்ன பண்ண முடியும்.
முதலில் ரெய்டு வர பர்மிட் லெட்டர் காட்டுங்க
இன்பா அதை அவளிடம் கொடுக்க அதை பார்த்து சிரித்தவாறே
நீங்க மூன்று சௌத் ஸ்டேட் கேபிடல் க்கு போய் தேடினாலும் எதுவும் கிடைக்காது.
இன்பா எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவளை பார்க்க ஐ மின் பெங்களூர், ஹைதராபாத் சொன்னேன் மிஸ்டர் நீங்கள் ரொம்ப டைம் வேஸ்ட் பண்றீங்க.
இனி உங்க இஷ்டம் என்று சொல்லி அவனை பார்க்க அதற்குள் பின்னால் குரு வருவது தெரிய தேஜு உடனே தன் பேச்சை மாற்றினாள்.
இனி இந்த தேவை இல்லாத வேலை எல்லாம் வேணாம் இன்பா…
உடனே குரு உள்ளே வந்தவன் நேராக தேஜு அருகில் உள்ள சேர் இழுத்து போட்டு கொண்டே ஒரு ஏளன பார்வை பார்த்தவன்.
தேஜு நம்ப சார் வெறும் கையோடு தான் போவாரு எதுவும் கொடுத்து அனுப்பலாமா. என்று சொல்லி கொண்டே குரு இன்பாவின் முன் ஒரு கோப்பு நீட்ட அதை இன்பா பார்த்தவன் அவனை பார்க்க
குரு சிரித்து கொண்டே ம்ம் பிளீஸ் ஓபன் பண்ணுங்க…
பயப்பட வேண்டாம் எல்லாம் சந்தோஷமான விஷயம் தான் ….. எனக்கென்ன பயம் என்பது போல்
இன்பா அதை ஓபன் செய்து பார்த்தவன் ஷாக் ஆகி விட்டான். அந்த மருத்துவமனை முதல் தர சான்றிதழ் அதுவும் இன்பா வந்து ஆய்வு செய்து எல்லாம் சரியாக இருக்கிறது என்று அவன் மொத்த குழு கையொப்பம் மற்றும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் சீல், இவர்கள் வந்தது முதல் பதிவு செய்யப்பட்ட வீடியோ என அனைத்தும் காட்ட இன்பாவுக்கு மிகவும் கோபம் தீ போல் எரிந்தது.
இன்பா ஆவேசமாக எழுந்து வெளிய செல்ல, தேஜு மீண்டும் உன்னோட வேலையை நான் சொன்ன இடத்தில் போய் காட்டு மிஸ்டர்…. இன்பாராகவன் என சொல்ல அவன் வேகமாக கிளம்பினான்.
வசுமதி இண்பாவுக்கு கால் செய்ய அங்கு நடந்த எல்லாம் இன்பா சொல்ல
சரி விடு ராகவ் நீ இதில் அவசர பட கூடாது கொஞ்ச பொறுமையாக யோசி பா
நீ உடனே வீட்டுக்கு வா
இல்ல மாம் எனக்கு கொஞ்சம் ஸ்ட்ரெஸ் ஆ இருக்கு நான் தாத்தா வ பார்க்க போறேன்.
அப்பா சொன்னது நியாபகம் இருக்கு தானே டோண்ட் பர்காட் ….
ம்ம் ஓகே மாம்…
என அவன் நேராக கிருஷ்ணனை பார்க்க சென்றான்.
இங்கு விவேகா வெண்பாவின் வீட்டுக்கு சென்று அவளுடன் சிரித்து பேசி கொண்டே விளையாடி கொண்டு இருந்தாள். மாலை மணி 4 இருக்கும் உடனே வெண்பாவ அழைத்து கொண்டு தன் வீட்டுக்கு சென்று முதன் முதலில் கடற்கரையில் இன்பாவை பார்த்த உடையை போட்டு கொண்டு
அம்மா நானும் வெண்பாவும் கோவிலுக்கு செல்கிறோம் என்று சொல்லி கிளம்பி வெண்பாவின் வீட்டுக்கு வந்தனர்.
வெண்பா அவளிடம் என்ன டி நீ முன்னாடி போட்ட ட்ரெஸ் நல்லா தானே இருந்தது. இப்போ எதுக்கு மாற்றினாய்!
சும்மா டீச்சர்.
ஹே அப்டின்னா எதோ விஷயம் இருக்கு!
ஒன்னும் இல்ல.
இப்போ சொல்லு டி இல்ல….
சரி சொல்லி தொலையுறேன். என்று விவேகா முதன் முறை இன்பா விவேகா சந்திப்பு பற்றி சொல்ல ,
ஹே சரியான கேடி டி நீ
ம்ம் எப்போ பார்த்தாலும் என்னையே சொல்லு அவனுக்கு நான் நியாபஹம் இல்ல டி .
இன்னிக்கி அவன் மட்டும் என்னை கண்டு பிடிக்கல
என்ன டி பண்ணுவ?
ம்ம்ம்ம் முதலில் உன்னை சீப்பு எடுத்து சும்மா அடி பின்னிடுவென்
வெண்பா அவளை பார்த்து சிரிக்க
சீப்பு . …. ம்ம் சீப்பு தான் இப்போ அடிக்கவா என வெண்பாவ சீப்பில் அடிக்க அவள் உண்மையாகவே வலியில் ஓடினாள்.
விவேகா உன்னோட ஆயுதம் ரொம்ப மோசம் சத்தியமா ரொம்ப வலிக்குது டி .
இது எப்படி உனக்கு தெரியும்….
வெற யாரு எல்லாம் என்னோட அம்மி தான் எங்க அம்மா இதுல தான் என்னை அடிச்சு மிரட்டுவாங்க…
வெண்பா அவள் அடித்த இடத்தை தேய்த்து கொண்டே இன்பா அண்ணாவுக்கு என்ன பனிஸ் பண்ணுவ.
அவனுக்கும் இதுல தான் அடி போடுவேன் அவன் வச்சு இருக்க லத்திய விட இது பயங்கரமா வலிக்கும் என இருவரும் பேசி சிரித்து கொண்டு
ஒரு வழியாக விவேகா அவன் வாங்கி கொடுத்த பொருளை வெண்பா கிட்ட கொடுக்க அவள் அதை வாங்கி பார்த்தவள்
விவி சூப்பர் டி…
இது ரொம்ப காஸ்ட்லி வாட்டர் ப்ரூஃப்
சீக்கிரம் வா உனக்கு வைத்து விடுகிறேன் என சொல்லி வெண்பா அழகாக வைத்து விட
விவேகா அதனை வைத்து கொண்டு வென்பாவ பார்க்க அவள்
ஹே சும்மா சொல்ல கூடாது சும்மா செம்மையாக இருக்க ….
ம்ம்ம் என்ன சொல்ல ஏது சொல்ல கண்ணோடு கண் பேச வார்த்தை இல்ல
போதும் வெண்பா ரொம்ப ஓவரா இருக்கு.. என்று சொல்லி கண்ணாடியில் தன்னை பார்க்க இப்போது இன்பா அவள் முன் இருந்தால் அவன் அணைப்பு முத்தம் இரண்டும் அவளுக்கு கிடைத்து இருக்கும் அதை நினைத்தவளுக்கு ஒரு நிமிடம் நாணம் குடி கொண்டது.
ஒரு நூறு முறை வெண்பாவிடம் கேட்டு இருப்பாள்.
டீச்சர் அழகாக இருக்கேனா…
ம்ம்
டீச்சர் அழகாக இருக்கேனா…
டீச்சர் அழகாக இருக்கேனா…
டீச்சர் அழகாக இருக்கேனா…
ம்ம் ம்ம் என்று சொல்லி சளித்து விட்டாள் வெண்பா
போதும் டி நம்ப தரிசனத்துக்கு போவோம் வா
நம்ப இல்ல விவேகா நீ தான் என்று அவளை கிண்டல் செய்து கொண்டே இன்பாவை பார்க்க இருவரும் சென்றனர்.
வெண்பா, விவேகா இருவரும் 4.30 மனிக்கு அங்கு போய் நின்றனர்.
இங்கு இனியாள், யாழினி, வினய், அவர்கள் அப்பா சுதாகர், அம்மா சாந்தி, சுபா, வசுமதி, ரவிசந்திரன் அனைவரும் அந்த ரெஸ்டாரண்டில் அமர்ந்து இருக்க வினய் ஸ்டாட்டர் ஆடர் செய்தான்.
ரவி வசுவிடம், மதி உன் பையன் எப்போ வருவான் என் பேச்சை கேட்க கூடாது அப்டின்னு குறிக்கோள் எதுவும் வைத்து இருக்கிறானா.
இல்லங்க அவன் ஆன் தி வே பிளீஸ் கோபப்பட வேண்டாம் ரவி எனக்காக பிளீஸ்
என்னமோ செய் என்று பொதுவாக சில விஷயம் பேசி கொண்டு இருக்க வினய் சுபாவை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.
அவள் அந்த வெஜ் கான் சூப் ஒவ்வொரு சிப் எடுத்து கொண்டே மெனு கார்டை பார்த்து கொண்டு இருந்தாள்.
வசு இன்பாவுக்கு கால் செய்து வர சொல்ல அவன் அவசரத்தில் காக்கி உடையில் வந்து விட்டான்.
ஒரு நிமிடம் …
ஒரு நிமிடம்…
இப்போது மணி என்ன 6.00
அப்போ விவேகா என்ன செய்கிறாள்.
அங்கே சென்று பார்த்து விடுவோம். 4.30 மணிக்கு வந்த இருவரும் அந்த குடியிருப்புக்கு எதிரில் உள்ள காவலர் பயிற்சி மைதானம் சென்று கைகள் கோர்த்து கொண்டு ஒரு முறை சுற்றி வந்தனர்.
பின் விவேகா இன்பா வருகிறானா என வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள். மணி 5.00 இன்னும் கொஞ்சம் 5.15 இன்னும் சிறிது நேரம் மணி5.30 இன்னும் இன்னும் மணி இப்போது 6.00 விவேகாவின் கண்களில் கண்ணீர் கோர்த்து கொண்டது.
ஹே விவேகா போகலாம் டி 2.30 மணி நேரம் ஆகி விட்டது இல்ல டீச்சர் இன்னும் கொஞ்ச நேரம் என கூறி காத்து கொண்டு இருந்தாள்.
இப்போது இன்பா காக்கி உடையில் அங்கு வர சுபா அவனோடு சென்று அவனுக்கு அவள் எடுத்து வைத்த உடையை போட்டு வர சொல்ல அவன் உடையை அணிந்து கொண்டு வரவும் அங்கே கவ்யா வரவும் சரியாக இருந்தது.
ரவிக்கு இந்த மாதிரி குடும்ப நிகழ்வில் ஃபோன் வைத்து நோண்டி கொண்டு இருப்பது , பேசுவது சுத்தமாக பிடிக்காது.
வினய் கவ்யாவை சுபாவின் குடும்பத்திற்கு அறிமுகம் செய்து கொண்டு இருந்தான். இன்பா அவளை கண்டு கொள்ளாமல் சுபாவின் அருகில் அமர்ந்து கொண்டு அவளிடம் பேச ஆரம்பித்தான்.
வினய் இன்பாவிடம் சினேகமாக ஹாய் மிஸ்டர் இன்பராகவன் …. ஹாய் மிஸ்டர் வினய் நைஸ் டூ மீட் யூ …. என சொல்லி கொண்டே இப்போது இனியாள் ஹாய் ஸார் யூ லுக் ஹன்ட்சம் … ம்ம் என்ற பதில் மட்டுமே
கவ்யா வினயை பார்க்க அவன் பார்வையை புரிந்து கொண்டவனாய் . சுபா இது கவ்யா மினிஸ்டர் சத்தியமூர்த்தி பொன்னு எனக்கு சாக்லேட் ஃபேக்டர்க்கு ஹெல்ப் இவங்க தான் பண்ணினாங்க.
சுபா ஸ்னேகமாக புன்னகை செய்து அவளிடம் சில வார்த்தைகள் பேச அவளது பார்வை இன்பாவ ஒவ்வொரு நிமிடமும் தீண்டி செல்ல சுபா அதை கண்டு கொண்டாள்.
சுபா இன்பாவிடம் , இன்பா உன்னை மினிஸ்டர் பொன்னு அப்படியே விட்டால் விழுங்கி விடுவாள் போல
சுபா எனக்கு ரொம்ப தலை வலி சோ எனக்கு ஒரு பிளாக் காபி சொல்லு எனக்கு காலையில் இருந்து ஒரே டென்ஷன்
அந்த கவ்யா உன் கிட்ட இப்போ பேச போறான்னு நினைக்கிறேன்
அதுக்கு நான் என்ன பண்ணட்டும் அவளுக்கு அவ்ளோ சீன் இல்ல சுபா, இவென் நான் அவ ஃபேஸ் கூட இன்னும் பார்க்க வில்லை எனக்கு இப்போ வேற வழி இல்லாமல் தான் இங்கே வந்தேன் டிஸ்கஸ்டிங்
அப்போ இனியாள் அவ இவளுக்கே கொஞ்சம் டஃப் கொடுக்குறா இன்பா
நாட் இன்ட்ரஸ்ட் சுபா டைம் வேஸ்ட்….
அப்போ எதாச்சும் ஒரு பொன்னு பற்றி சொல்லு டா போர் அடிக்குது..
இப்போது விவேகாவின் நினைவு வர ஓ காட் !
வாட் ஹப்பன் இன்பா ?
பேபி…. என மனதில் நினைத்த இன்பா சுபா டைம் என்ன என உடனே எழுந்து நிற்க அங்கு இருந்த அனைவரும் இண்பாவை தான் பார்த்தனர்.
ஹே இன்பா என்ன இது உட்காரு என சொல்லி மணி இப்போ 7.15 இப்போ என்னாச்சு டா….
போச்சு என்னோட பேபி வெயிட் பண்ணிட்டு இருப்பாளே என இன்பாவின் முகம் வாடி தவித்து போனது.
தன் அக்காவின் உதவியை நாடினான். சுபா பிளீஸ் எதுவும் செய் நான் இப்போ கிளம்பியே ஆகனும் பிளீஸ்..
என்னாச்சு டா உன் முகம் எல்லாம் ஒரு மாறி இருக்கு
நீ இப்போ நான் சொல்றத செய், எனக்கு முக்கியமா வேலை இருக்கு பிளீஸ் …
என்னடா இப்படி கெஞ்சுற என்ன விஷயம்…. என்னமோ ஒரு ஹயர் ஆபீஸர பார்க்க போற மாறி பில்ட் அப் கொடுக்குற….
இவங்க அதுக்கும் மேல சுபா பிளீஸ் அக்கா …..
சரி இல்லையே என் தம்பி எதோ பெருசா பன்ற மாறி இருக்கே?
இப்போ மட்டும் நீ எதுவும் செய்யவில்லை நான் எழுந்து கிளம்பி கொண்டே இருப்பேன் அப்புறம் உங்க டாடி ரொம்ப டென்ஷன் ஆகிடுவார் பரவாயில்லயா.
ஹே இரு இன்பா அடி வாங்க போற நீ நான் என்ன பண்ணட்டும் என்று அவள் தன் அப்பாவிடம் பேசினாள்.
ரவி கோவமாக இன்பாவை பார்க்க இன்பா யாரோ பார்க்கிறார்கள் என்பது போல் பார்த்தான்.
சுபா அவனிடம் ம்மம் ஓகே என்று சிக்னல் காட்ட
இன்பா சரியாக எழுந்து செல்லும் நேரம் அங்கிள் என்னோட கார் இன்னிக்கி எடுத்து வரல இப்போ கொஞ்சம் ஸ்டடி விஷயமா வீட்டுக்கு போகனும்;
இப் யூ டோண்ட் மைண்ட், அவரை என்ன ட்ராப் பண்ண சொல்றீங்களா …. என ரவி, வினய் இருவரையும் மாறி மாறி பார்த்தாள் கவ்யா.
இப்போது இன்பா எதோ கூற வர வினயிடம் ரவி ஓகே மிஸ்டர் வினய் உங்களுக்காக கண்டிப்பாக செய்வேன் என்று சொல்ல இப்போது வேறு வழி இல்லாமல் இன்பா சுபாவை பார்க்க அவள் கெஞ்சுவது போல் முகத்தை வைத்து கொண்டாள்.
இரிட்டேடிங் என்று அவன் முகத்தை கோவமாக வைத்து கொண்டு பேபி சாரி டி
விவேகா மிஸ் யூ டி நான் ஏப்படி உன்னை கன்வின்ஸ் பன்றது என்று யோசித்து கொண்டே இன்பா செல்ல
விவேகா என்ன செய்கிறாள் ????
கவ்யா என்ன செய்ய போகிறாள்????
தொடரும். ..
I’m eagerly waiting for your comments please comment it the story , how story going on… Please if you like just touch the heart 💖
Episode 61,
கவ்யாவை அழைத்து செல்வதாக இன்பாவின் அப்பா மற்றும் வினயிடம் கூறியதும் அவனுக்கு மிகவும் கோபம் வந்தது காலையில் இருந்து இன்று எதுவுமே அவனுக்கு சரியாக நடக்கவில்லை என்ற கடுப்பில் முகத்தை கடுமையாக வைத்து கொண்டு அங்கு இருந்த அனைவரிடமும் சொல்லி விடைபெற்றான்.
கவ்யா சாதித்து விட்ட பூரிப்பில் அவன் பின்னால் நடக்க அவன் வேகத்துக்கு அவலால் ஈடு கொடுகக முடியவில்லை.
ஹலோ இன்பராகவன் கொஞ்சம் மெதுவா நடக்கரீங்களா; என்னால இதுக்கு மேல் ஓடி தான் வர முடியும்..
இன்பா அவளை பார்த்து முறைத்தவன். கொஞ்சும் மெதுவாக நடந்து காருக்கு அருகில் இருவரும் வர முதலில் தனது கார் எடுக்க சென்றவன் பின் எதையோ யோசித்தவனாய் போலீஸ் ஜீப் எடுத்து கொண்டு அங்கு அருகில் வேலை செய்பவர்களிடம் கார் சாவியை இந்த மேஜை எண்ணில் கொடுக்கும் படி சொல்லி விட்டு இப்போது அந்த ஜீப் வளைத்து அவள் அருகில் வந்து நிறுத்தினான்.
முன்னால் ஏற வந்தவளை மேடம் ஐ யம் ஜஸ்ட் ய டிரைவர், சோ ….
கவ்யாவுக்கு சுறுக்கு என்று கோவம் ஏறியது இவ்வளவு நேரம் அவன் கார் சாவியை பணியாள் கிட்ட கொடுத்தது. இப்போது இப்படி பேசுவது என எல்லாம் இவள் அருகில் இருப்பதால் தான் செய்கிறான் என தெரிந்து கொண்டாள்.
அவள் எதுவும் பேசாமல் பின் இருக்கைக்கு போய் அமர்ந்து கொண்டாள்.
ஹே உன்னோட ஆட்டியூட் என்கிட்டயே காட்டுகிறாயா.
இரு டா இந்த கவ்யா யார் என்று நான் உனக்கு காட்டுகிறேன். என நினைத்துக் கொண்டாள்.
இன்பா தன் போன் எடுத்து சத்தியமூர்த்தி வீடு எது என்று கூகிள் போட்டு மிகவும் சீக்கிரமாக கொண்டு போய் விடும் வழியை தேர்ந்தெடுத்து வேகமாக காரினை அதுவும் சைரன் போட்டு செலுத்த ஆரம்பித்தான்.
எதற்கும் அவளிடம் ஒரு முறை கேட்டு விடலாம் என்று மேடம் எங்கே போகனும்….
ம்ம் எங்க வீட்டுக்கு கொண்டு விடுங்க என்று சொல்லியவாரே கால் மேல் கால் போட்டு கொண்டு நன்றாக சாயிந்து அமர்ந்து கொண்டாள்.
இன்பா தன் பெர்சனல் ஃபோன் எடுத்து பார்க்க அதில் வெண்பாவின் சில தவற விட்ட அழைப்புகள் இருக்க டார்ஜிலிங் இன்னிக்கு செம்ம கோபத்தில் இருப்பா போலயே என நினைத்தவன்.
வெண்பாவின் எண்ணுக்கு அழைத்தான். ஹே விவேகா, அண்ணா கூப்பிடராங்க நான் எடுத்து பேசட்டுமா…
கண்களில் கண்ணீருடன் அவள் அமைதியாக இருக்க வென்பா எடுத்து காதில் வைத்தாள்.
இப்போது மென்மையான முகம் கொண்டு ஹலோ …
ஹலோ அண்ணா…
இப்போது விவேகா வேகமாக ஃபோன் வாங்கியவள். இப்போ எதுக்கு போன் எடுத்த நீ இடியட் என அழும் குரலில் சொல்ல,
இன்பா சாரி பிளீஸ் ஸாரி என சொல்ல
இங்கு கவ்யா அவன் யாருக்கோ போன் செய்தது இப்போது மென்மையாக முகத்தை வைத்துக் கொண்டு பேசுவது என அனைத்தும் கவனித்து கொண்டு தான் இருந்தாள்.
இப்போ நான் என்ன செய்யனும் அதை மட்டும் சொல்லு நீ
ஐ நோ தவறு என் பேரில் தான் பிளீஸ் என இவன் கெஞ்ச
விவேகாவுக்கு அழுகை தான் வந்தது. பிளீஸ் நான் இப்போ கூட வொர்க் ல தான் இருக்கேன் என்னை நம்ப மாட்டிங்களா….
சரி உன்னோட வொர்க் பாரு நான் வீட்டுக்கு கிளம்புறேன்.
அப்போ மீட்டிங்……
வேண்டாம் இன்பா பிளீஸ் லீவ் மீ அலோன் என
இப்போது காரை நிறுத்தி விட்டு சட்டென்று கீழ இறங்கியவன்.
பேபி பிளீஸ் டி …
எனக்காக இன்னும் கொஞ்ச நேரம் பிளீஸ் நானே உன்னை வீட்டில் கொண்டு விடுகிறேன்…
என் மேலே தான் தவறு இன்னும் 20 மினிட்ஸ் என சொல்ல
இல்லை நீ வர வேண்டாம் இன்பா என்னோட முகம் நல்லாவே இல்லை…
இது தன்னால் தான் என நினைத்தவன் என்ன டி என்னை இன்பான்னு கூப்பிடற….
இனி இப்படியே உன்னை கூப்பிடுறேன் ராகவ் வேண்டாம் எனக்கு என அழ
பேபி பிளீஸ் லாஸ்ட் சான்ஸ் இன்னும் 20 நிமிடம் நான் அங்க இருப்பேன் என சொல்லி பிளீஸ் என சொல்லி வைத்தவன்.
வேக வேகமாக காருக்கு வந்து கவ்யாவிடம் சாரி சொல்லி வேக வேகமாக ஓட்டினான்.
இப்போது கவ்யா அவள் ஆட்டத்தை ஆரம்பித்தாள். சரியாக அவர்கள் வீடு இருக்க 1 கிலோ மீட்டர் தொலைவில்
இன்பராகவன் ஐ யம் எக்ஸ்ட்ரீம்லீ சாரி இப்பொ தான் நியாபஹம் வந்தது வீட்டில் யாரும் இல்லை எல்லாரும் பீச் ஹவுஸ் ல இருக்காங்க…
சோ… என அவள் கூலாக சொல்ல
இப்போது முதல் முறையாக அவளை பார்த்த இன்பா அவள் எண்ணம் சரி இல்லை அப்புறம் சுபா சொன்னது முதல் முறை அவளை மாலில் சந்தித்தது என அனைத்தும் நியாபகம் வர
ம்ம் ஓகே என்று எந்த ஒரு சலனமும் இன்றி காரை திருப்பி பீச் ஹவுஸ் பக்கம் செல்ல இப்போது இன்பாவின் எதிர் வினை கண்டு ஹே இது தான் டா உன் கிட்ட எனக்கு பிடித்து இருக்கு…
ம்ம் இன்டர்ஸ்டிங் …. என மனதில் நினைத்துக் கொண்டாள்.
சிறிது தூரம் சென்றதும் தன் அப்பாவிற்கு போன் செய்து பேசி விட்டு இன்பாவிடம் அவள் எதுவும் சொல்ல வில்லை சத்தியமூர்த்தியே இன்பாவுக்கு நேரடியாக கால் செய்து மீண்டும் முன்பு சென்ற அவர்கள் வீட்டுக்கு கொண்டு வந்து விட சொல்ல இப்போது இது முதல் முறை என தன் கோபத்தை கட்டு படுத்தி கொண்டு தன் தலையை கோதியவன் சரி என்று வைத்து விட்டு மீண்டும் அவளை முன்பு சென்ற இடத்தில் கொண்டு போய் விட சென்றான்.
இன்பா மனதில் அடக்க முடியாத கோபம் ஆனால் இதில் அப்பா, சுபா இருவரும் சம்மந்தபட்டு இருக்கிறார்கள். என தன் கோபத்தை கட்டு படுத்தி கொண்டு சென்றான்.
கவ்யா ஜாலியாக போனில் டாம் அண்ட் ஜெர்ரி பார்த்து சிரித்து கொண்டே வந்தாள். வீடு வந்ததும் மிகவும் மெதுவாக கீழ் இறங்கியவள்.
ம்ம் உங்க டிரைவிங் ஸ்கில் சூப்பர் என சொல்லி விட்டு மெதுவாக நடந்து அவனுக்கு கை அசைக்க திரும்ப அந்த வண்டி அங்கு இல்லை.
யூ… இது ஆரம்பம் தான் டா … என்னை டென்ஷன் பண்ணாமல் இருந்ததால் நான் உன்னை என் மடியில் வைத்து கொஞ்சுவேன்… இல்ல, நீயா வந்து என்கிட்ட கெஞ்சுவது போல் செய்வேன் டா ;அது தான் இந்த கவ்யா…
யாரு கிட்ட நீ கொஞ்சி பேசிக்கிட்டு இருந்த அதை முதலில் கண்டு பிடிக்கணும் என்று நெட்டி முறித்து கொண்டே உள்ளே சென்றாள்.
உள்ளே சென்றவள் இன்னும் இம்பாவை பற்றிய விவரங்கள் விசாரிக்க ஆட்களை தயார் செய்தாள்.
இந்த முறை இன்பா நிச்சயம் வருவான் என்று அரை மணி நேரம் காத்திருந்தார்கள்.
இந்த முறை வெண்பாவுக்கே கோபம் வந்து விட்டது. சாரி விவி அண்ணா இப்படி செய்வான் அப்டின்னு எதிர்பார்க்கவில்லை டி. வெண்பா வருத்தபடுவதை பார்த்து, விடு டி நான் வீட்டுக்கு போறேன் அம்மா தனியாக இருப்பாங்க. அவனை சீப்பு ல அடி பின்னிடலாம் என்று பொய்யாக சமாதானம் வெண்பாவுக்கு கூறினாள்.
ஏன் என்றால் அன்று கடற்கரையில் பார்த்தது நியாபகம் வருமா என மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள்.
சரி என்று முகத்தை கழுவி கொண்டு வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல சொல்ல தேவகி சாப்பிட வைத்து அனுப்பி விட வெண்பா விவேகாவை வீட்டுக்கு போய் விட்டு விட்டு வந்தாள்.
சரியாக வெண்பா வீட்டின் உள்ளே செல்லும் நேரம் இன்பா ஜீப் ல இருந்து இறங்கி வந்தான்.
வெண்பா அவள் என…. கேட்க
இன்பா அவனை பார்த்து முறைத்து விட்டு அவள் வீட்டுக்கு இப்போ தான் போனாள்.
நீங்க இப்படி பண்ணுவீங்க அப்படின்னு நான் நினைக்கவே இல்லை அண்ணா பாவம் விவேகா ஆசையாக உங்களை பார்க்க கிட்ட தட்ட 4.30 ல இருந்து வெயிட் பண்றா
அட்லிஸ்ட் ஒரு போன் பண்ணி முன்னவே சொல்லி இருக்கலாம். நான் வருத்தபட கூடாது அப்படின்னு என்னை சமாதானம் பண்ணிட்டு போயிருக்கா.
இன்பா எதுவும் பேசவில்லை. அவன் முகத்தை பார்க்க மிகவும் சங்கடமாக இருக்க சரி விடுங்க இனி இப்படி செய்ய வேணாம். என்று இப்போது இன்பாவ சமாதானம் செய்தாள்.
வெண்பா அவள போட்டோ எடுத்தயா இப்போது அண்ணா…. ம்ம் எடுத்தேன் இந்தா… என அவனிடம் போன் கொடுக்க அதை அவன் வாட்ஸ் அப் ல அவன் எண்ணுக்கு அனுப்பிக் கொண்டான்.
ஓ என்னோட ஃபிஷ் மார்க்கெட்காரியா வந்து இருக்கிறாள் என இவன் வாய் மொழியில் கூற
ஓ இது உங்களுக்கு நியாபகம் இருக்கா !
உன்கிட்ட சொன்னாளா! என ஆச்சர்யம் கலந்த குரலில் கேட்டான் ஓ அப்படினா அப்போதில் இருந்து என்னை நினைத்துக் கொண்டு இருக்கிறாள் என மனதில் ஒரே சந்தோஷம் தான்
ம்ம் எல்லாம் சொன்னா…
நான் நேற்றே இந்த ட்ரெஸ் போட்டு வருவாள் அப்படின்னு எக்ஸ்பெக்ட் பண்ணேன்…. அவ தான் சரியான கேடியாச்சே…. எப்போதும் என்னை சுற்ற விடுவதுல தான் கண்ணாக இருக்கிறாள்…..
அப்போ இந்த முறை நீங்க அவ்ளோ தான்….
ஏன் வெண்பா?
ம்ம் ஆமா எப்போதும் அவ தான் உங்களை சுற்ற விடுவா ஆனால் இன்னிக்கு என்று சிரித்து கொண்டே வெண்பா அவனை பார்க்க
நீங்க இப்போ சுற்ற விட்டு இருக்கீங்க அதனால் மேடம் ரொம்ப டென்ஷன் ல தான் வீட்டுக்கு போனாங்க …
இனி உங்க பாடு… அவள நீங்க எப்படியோ சமாளிச்சுகோங்க இப்போ என்னோட போன் கொடுங்க என்று கேட்க அவன் அவளது போன் கொடுத்தான்.
சரி அண்ணா நான் வீட்டுக்கு போறேன்…
வெண்பா….
என்ன அண்ணா என பார்க்க..
அவளை எப்படி கன்வின்ஸ் பன்றது?
வெண்பா சிரித்துகொண்டே அண்ணா டோண்ட் ஃபீல் உங்ககிட்ட அவளால் கோபமா இருக்கவே முடியாது.
என்ன சொல்ற வெண்பா.
ம்ம் ஆமா ஏன்னா நீங்க தான் அவளோட வீக்நஸ் என்று சொல்லி அவள் உள்ளே செல்ல இந்த வார்த்தை இன்பா எதுவோ சாதித்தது போல் தோன்ற வைத்தது.
இருந்தாலும் இன்பா மனது அவள் எப்படி வருத்தம் கொண்டு இருந்திருப்பாள் என தோன்ற இவன் வீட்டுக்கு திரும்பும் நேரம் ரவிச்சந்திரன், சுபா, வசுமதி மூவரும் உள்ளே நுழைய அங்கு இன்பா நின்று கொண்டு இருப்பதை பார்த்து
சுபா என்னடா இப்படி அப்பா கிட்ட மாட்டிகிட்டயே… என பாவமாக பார்க்க ரவி வசுவிடம், மதி உன் பையன் ப்ரெண்ட பார்க்க தான் இவளோ முக்கிய மீட்டிங் கேன்சல் பண்ணிட்டு வந்து இருக்கான். கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா பாரு… எல்லாம் நீ கொடுக்கிற செல்லம் என் பொன்னு பாரு… நான் கோடு போட்டால் கூட தாண்ட மாட்டா… என்று எளனமாக சொல்லி விட்டு கண்ணகுழி தெரிய சிரித்து விட்டு சுபாவை அழைத்து கொண்டு சென்று விட்டார்.
வசுமதி கொஞ்சம் வருத்ததோடு இன்பாவா பார்க்க இன்பா அந்த கன்னகுளி தெரிய சிரித்து கொண்டே என்ன மாம் அவருக்கு வேணுமாம்…
ராகவ் நீ எவ்ளோ பொறுப்பான பையன்னு எனக்கு தெரியும் ஆனால் அப்பா விஷயத்தில் மட்டும் ஏன் பா இப்படி நடந்துக்கற.
மாம் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அவருக்கு என்னை மட்டும் குறை சொல்லனா தூக்கம் வராது அப்புறம் பிரஸர் கூட அதிகம் ஆகிடும் சரி ஆசை பட்டு கன்டென்ட் கண்டு பிடிச்சு திட்டி விட்டு தான் போவாரு நீங்க வாங்க மாம் என்று தன் அம்மாவை அழைத்து சென்றான்.
இன்பாவின் இந்த திடீர் சந்தோஷத்துக்கு என்ன காரணம் ???
விவேகா என்ன செய்கிறாள்??
கவ்யாவின் அடுத்த நகர்வுக்காக காத்திருங்கள்…
இன்பா எப்படி விவெகாவை சமாதானம் செய்ய போகிறான்!!
தொடரும்….
கமென்ட் பண்ணுங்க அப்படியே ratings பிளீஸ் போடுங்க நன்றி
Episode 62,
I Love You விவேகா
தன் கணவர் தன் மகனை திட்டியதும் வசு இன்பாவிடம் இது பற்றி பேச உடனே அவன் கூறிய பதிலில் சற்று ஆச்சர்யம் அடைந்தாள்.
என்ன ராகவ் காலையில் உன்னோட பேச்சு ஒன்னும் சரி இல்லை இப்போ ரொம்ப அக்டிவா இருக்க என்ன விஷயம்….
ஒன்னும் இல்ல மாம்
மாம் எனக்கு ஒரு டவுட்டு
என்ன ….
எப்டி மாம் இவர கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க….
ஹே அடி ,என்ன டா ஓவரா பேசுற ;உன் கிட்ட தான் இப்படி பேசுகிறார் என்னை எப்படி பார்த்து கொள்வார் தெரியுமா….
நீ பிறந்ததில் இருந்து கூட நல்லா தான் இருந்தாரு அப்புறம் தான் இப்படி உன் கிட்ட நடந்து கொள்கிறார்.
மாம் அவருக்கு கொஞ்சம் ஜலஸ் மா…
நீங்க என் மேல் பாசமாக இருப்பது அவருக்கு பொறாமை….
அது சரி தான் ராகவ் எப்போதும் பொண்ணுங்க அப்பா கிட்ட ரொம்ப க்ளோஸ் ஆ இருப்பாங்க…. பசங்க அம்மா கிட்ட க்ளோஸ் ஆ இருப்பாங்க….
உன்னை பார்த்தால் அவருக்கு கொஞ்சம் பொறாமை ஆனால் என்னை விட அவருக்கு உன் மேல அவ்ளோ பாசம் தெரியுமா…
இல்ல மாம் நான் நம்ப மாட்டேன்….
ஹே நீ உங்க தாத்தா வீட்டுக்கு போனா அப்பாவோட சின்ன வயசு ஃபோட்டோ பாரு ராகவ்….
ஏன் மா ….. வசு சிரித்து கொண்டே
அப்பாவே என் கிட்ட சொல்லி இருக்காரு நீ அப்படியே அவர மாதிரியே இருக்கன்னு
சான்சே இல்ல மாம்
டேய் உன் கண்ணக்குழி போதும் டா நீ அப்பா மாதிரியே இருக்க ஆதாரம்….
ம்ம் போதும் போதும்….
நான் என்னோட ரூம்க்கு போறேன் என்று தன் அம்மா சொன்ன அனைத்து விஷயமும் அவன் மூளையில் பதிவு செய்து கொண்டான்.
விவேகா என்ன செய்து கொண்டு இருக்கிறாள்.
வீட்டுக்கு சென்ற விவேகா கண்களில் முதல் முறை ஏக்கம் நீ … நீ …. என்னை ஏமாற்றி விட்டாய்…
போடா ஃபிராடு….
இனி உன் கிட்ட நான் பேசவே மாட்டேன் நீ ஃபெயில் ஆகிட்ட உனக்கு என்னோட மனசுல இடம் இல்ல….
இன்பா அவனுடய அறைக்கு சென்றதும் விவேகாவின் புகைபடத்தை பார்த்ததும் அருகில் இருந்தால் அள்ளி அணைத்து கொண்டு இருக்கலாமே என மனம் ஓலம் இட்டது.
மிஸ் பண்ணிட்ட டா இப்போ எப்டி அவள சமாதானம் பன்றது.
இதுக்கு எல்லாம் காரணம் அந்த மினிஸ்டர் பொன்னு தான் …
அவ ரொம்ப டென்ஷன் பண்ணிட்டா இல்லனா விவி பேபிய நான் மீட் பண்ணி இருப்பேன் இந்நேரம்….
அய்யோ எல்லாம் போச்சு….
இதுக்கு அந்த மினிஸ்டர் பொன்னு அவள ரீவெஞ் பண்ணனும் என்று நினைத்தவன்.
இப்போ என்னோட பேபிகிட்ட பேசலாம் என்று ஆதிக்கு போன் செய்தான்.
தூங்கி கொண்டு இருந்த ஆதி யார் என்று பாரத்தவன் இண்பாவிடம் பேசி விட்டு வேகமாக தன் அத்தைக்கு கால் செய்தான்.
விவேகா போன் எடுத்தவள்
ம்ம் சொல்லு ஆதி என்ன இப்போ கால் பண்ணி இருக்க
ஹே விவி இப்போ உன் ஆன்க்ரி ஃபேர்ட் க்கு கால் பண்ணி பேசு
நான் …நான் அவனுக்கு கால் பண்ண மாட்டேன் நீ வை
ஹே வைக்காத டி அப்புறம் மறுபடியும் எனக்கு தான் கூப்பிடுவார்.
ஹே இப்போவ செகண்ட் கால் பன்றாரு டி பிளீஸ்
நான் அவன் கிட்ட பேச மாட்டேன் போடா நீ முதலில் போன் வை…
ஹே ஒரு நிமிடம்.. நீ இப்போ பேசல நேரில் வருவேன்னும், நீ விவேகாவ உங்க வீட்டுக்கு வெளிய கூட்டி கிட்டு வா, அப்படின்னு சொன்னாரு இப்பொ நான் என்ன செய்யட்டும்…
ம்ம் சரி பண்ணி தொலையுறேன்…
இவன….
ஹே ஆதி அவன எனக்கு கால் பண்ண சொல்லு..
ஹே என்னடி நான் எப்டி சொல்லட்டும்…
ஹே சொல்லு டா
நல்லா பண்ற டி நீ லவ் நான் தான் உங்களுக்கு நடுவில் மாட்டி கொண்டு முழிக்கிறேன்.
ஹே நானா லவ்வா போடா …
ஹே பச்சை பொய் சொல்லிட்டு திரியாத டி
நீ அவனை எனக்கு கால் பண்ண சொல்லு டா என்று கூறியவள்.
இன்பாவின் அழைப்புக்காக காத்து இருந்தாள். அடுத்த நிமிடமே இன்பா அழைத்தான்.
அவன் அழைப்பதை தன் கண்ணத்திலl கைகள் வைத்துக் கொண்டு பார்த்தாள்.ஆனால் ஃபோன் எடுத்து பேச வில்லை.
அடுத்த அழைப்பு அப்போதும் எடுக்க வில்லை
மூன்றாவதாக அழைத்தான் இந்த முறை கைகள் தானாகவே ஏற்க சென்றது.
தன் கைக்கு ஒரு அடி வைத்தாள். அடுத்து நான்காம் முறை இப்போது மனம் கேட்காமல் எடுத்து அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.
ஹலோ ஹூஸ் திஸ்….
ஹலோ நான் இன்பராகவன் பேசறேன் பிளீஸ் சாரி டி பேபி பிளீஸ்
எனக்கு அப்டி யாரையும் தெரியாதே யார் நீங்க இவளோ மிஸ்டு கால் கொடுக்கரீங்க
ஹே விளையாடாத பேபி, பிளீஸ் ஸாரி
ஹலோ நீங்க எதுக்கு என் கிட்ட ஸாரி கேட்கறீங்க
யாரு நீங்க யாரோ ராங் நம்பர் எனக்கு இன்பராகவன் அப்படின்னு யாரையும் தெரியாது பிளீஸ் போன் வைங்க என அவள் கட் செய்ய மீண்டும் இன்பா அழைத்தான்.
டார்ஜிலிங் பிளீஸ் சாரி டி…. ஹலோ நீங்க இப்படியே பேசுனீங்கனா என்னோட மித்ரன் அண்ணா கிட்ட போலீஸ் ல சைபர் கிரைம் ல தூக்கிட்டு போக சொல்லிடுவேன்.
இதை கேட்டு இன்பாவுக்கு அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை.
ஹே டூ மச் விவேகா என் மேல் தப்பு தான் சாரி டி
ஹலோ யார் சார் நீங்க சும்மா டென்ஷன் பண்ணிகிட்டு…. அம்மா யாரோ எனக்கு ராங் கால் பண்றாங்க மா என அவள் சொல்ல
இன்பா திமிரு டி நான் பேசியதை எனக்கு அப்படியே திருப்பி பேசுற ம்மம் எல்லாம் என்னோட நேரம் ம்ம் என்ன பண்றது என்று பேச ஆரம்பித்தான்.
விவி பிளீஸ் டி…
ஹே ஃபோனை வை …. முதலில், எனக்கு தலை வலிக்குது என விவேகா சொல்ல
இப்போது சட்டென்று ஐ லவ் யூ ..
இப்போது விவேகாவுக்கு என்ன சொன்னான் இங்கு என்ன நடக்கிறது இல்ல நம் காதுகளுக்கு தான் தவறாக கேட்டு விட்டதா என்று ஒரு நிமிடம் உறைந்தாள்.
இப்போது இன்பா சிரித்து கொண்டே ஹலோ என்னடி எதுவும் பேச மாட்டிங்குற
ஹான்…. என்ன சொன்ன நீ ….
நான் என்ன சொன்னேன் ….
ஹே இப்போ என்னடா சொன்ன….
இன்பா அவளின் தவிப்பை பார்த்து இங்கு அவன் தவித்தான்.
டென்ஷன் பண்ணாத சொல்லு டா …
விவேகா நீ என் கிட்ட பேசிட்ட டி
ராகவ் இப்போ என்ன சொன்ன?
நான் உன்கிட்ட என்னடி எதுவும் பேச மாட்டிங்குர அப்படின்னு சொன்னேன்
நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் நான் வைக்கிறேன்..
ஐ லவ் யூ….
ஐ லவ் யூ விவேகா
இப்போது கொஞ்சம் வெட்கம் ,புன்னகை அந்த மூன்றெழுத்து மந்திரம் கேட்டு அவள் இதயம் பந்தய குதிரையை போல் துடித்தது. நாணம் என அனைத்தும் ஒன்று சேர விவேகா மனதுக்குள் சிரித்தாள்.
நீ சொல்றது எனக்கு கேட்கல ஹலோ என்று அவள் சொல்ல
இவனும் விடாமல் லவ் யூ…
கேட்கல ராகவ்… விவேகாவுக்கு இன்பா அந்த மூன்று வார்த்தைகளை சொல்வது கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது.
இன்பாவின் மனதில் வெண்பா சொன்னது தான் நினைவுக்கு வந்தது.
ஐ மிஸ் யூ டி, ஐ ம் சாரி டி ….
இப்போது கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்தவள் இப்போது மீண்டும் கோபமாக பேசினாள்.
நீ சொன்னது எதுவும் என் காதில் விழவில்லை சரியா….
ம்ம் ஓகே மேடம்….
ஹே நான் உன் மேல் ரொம்ப கோபமா இருக்கேன் .
அதுக்கு நான் என்ன செய்யட்டும்
என்ன….
இப்போ என்ன சொன்ன நீ
நான் என்னடி சொன்னேன் தப்பா எதுவும் சொல்லலையே டி …
நீ இடியட் டா …
நான் என்ன சொன்னேன் இப்போ எதுக்கு கோப படற நீ …
ஆமா நீ என்னை கன்வின்ஸ் பண்ண என் கிட்டயே ஐடியா கேட்கரயா…
விவேகா நான் உன்னை நேரில் கன்வின்ஸ் பன்னட்டுமா….
ஹே இனி என்னை நேரில் பார்க்கவே கூடாது டா இது தான் உனக்கு பனிஸ்மெண்ட்…
போடி இதெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன். இனி என்னால உன்னை பார்க்காமல் இருக்க முடியாது.
அது எப்படி பார்த்த கொஞ்ச நாளில் இப்படி உன்னால பேச தோணுது.
விவேகா நடிக்காத போதும் டி… ந …நானா , நான் என்ன நடிக்கிறேன்.
என்னை முதல் முறையாக நீ எங்கே பார்த்த சொல்லு என்று இன்பா அவளிடம் கேட்க
நானா நான் எங்கே பார்த்தேன் எனக்கு நியாபகம் இல்லையே….
ஹே உன்னோட கேடி வேலை எல்லாம் என் கிட்ட வேண்டாம் நேரில் மட்டும் உன் பக்கத்தில் இருந்தேன்னு வை….
அப்புறம் உன்னை….
ஹே நான் ஃபோன் வச்சிடுவென்…
நான் உன்னை காலேஜ் ல தான் பார்த்தேன். போதுமா என வேண்டும் என்றே பொய் கூறினாள்.
எப்படியும் இந்த பொண்ணுங்க வாயில் உண்மை அப்படின்ற ஒன்னு வரவே வராது நானே சொல்றேன்.
விவேகா ஆவலாக மம் என்ன சொல்ல போற நீ….
நான் உன்னை முதன் முதலில் மெரீனா பீச் ல ஆப்பிள் கிரீன் கலர் லாங் ட்ரெஸ் ல இருந்த ; உன்னோட தலைல ஒரே ஒரு ரெட் ரோஸ் அது கொஞ்சம் வாடி இருந்தது.
அப்புறம் ஃப்ரீ ஹேர் மாதிரி ஸ்டைல் அப்புறம் உன்னோட முகத்தில் ஒரு குட்டி பொட்டு,
எல்லாரும் குங்குமம் நெற்றியில் தான் வைத்து இருப்பாங்க; நீ மட்டும் உன்னோட கழுத்தில் வைத்து இருந்த….
ம்ம் அப்புறம் உன்னோட ட்ரெஸ் கடல் தண்ணி ல நினைஞ்சு போச்சு , மம் அப்புறம் உன்னோட செப்பல்ல ஃபுல்லா மணல் அது உன் பின்னாடி ட்ரெஸ் ல எல்லாம் நிறைய ஒட்டி இருந்தது. உன்னோட இடை வரை மணல் தான்.
என்னோட கெஸ் படி பார்த்தால் அன்னிக்கு நீ உன்னோட மாம் என்னோட அத்தை கிட்ட இதுக்கு திட்டு வாங்கி இருப்ப…
ம்ம் அதை விட முக்கியமான விஷயம் உன்னோட இடது கண்ணத்தில் குட்டியா முகபரு கொஞ்சம் ரெட் ஆ இருந்தது அதை கிள்ளி விட்டு இருப்ப சரியா!
அன்னிக்கு மணி 4.30 , வியாழக்கிழமை, வருடம், மாதம் என கூரியவன் இன்னொரு முக்கிமான விஷயம் “இன்னிக்கு தான் அந்த நாள் உன்னை நான் முதன் முதலில் சந்தித்து ரெண்டு வருஷம் , நான்கு மாசம் ஆகுது”….
என்று கூறியவன் மறுமுனையில் எந்த சத்தமும் வராமல் இருப்பதை பார்த்து
ஹே பேபி லைன் ல இருக்கியா ….
ஹலோ ஃபிஷ் மார்கெட் ….
ம்ம் என்ற ஒரு பதில்…. இன்பா சிரித்துகொண்டே நான் சொன்னது சரியா!
எனக்கு தெரியாதுங்க நீங்க வேற யாரையும் பார்த்து நான் அப்டின்னு சொல்லிட்டு இருக்கீங்க…
எனக்கு நியாபகம் இல்லையே..
இந்த திடீர் மரியாதை இன்பாவுக்கு புது இரத்தம் பாய்வது போல இருந்தது. ஹே விவி என்னடி மரியாதை எல்லாம் பலமா இருக்கு….
எது உண்மை அப்படின்னு உன் முகத்தைப் பார்த்து நான் சொல்லி இருப்பேன். மிஸ் பண்றேன் டி ரொம்ப… என ஹஸ்க்கி டோனில் சொன்ன இன்பாவுக்கு அவளின் நாண முகம் மட்டுமே தோன்றியது.
ம்ம் சரி நீ எப்போ என்னை பார்த்த சொல்லு பார்க்கலாம்….
நான்….
நான்….
ம்ம் நீ தான்…
நான் உங்களை காலேஜ் ல பார்த்தேன்.
ஹே நிஜமா….
ம்ம் அ.. ஆமா என்று திக்க …..
ம்ம் இப்போ நீ….
தொடரும்….
Comment please… Ratings please please, touch the heart as your wish dears……
Episode 63,
இன்பா அவளிடம், நீ எப்போ என்னை பார்த்த சொல்லு பார்ப்போம்….
நான் உங்களை காலேஜ் ல தான் முதலில் பார்த்தேன்.
ஹே பொய் சொல்லாதே…
நானா நான் எதுக்கு பொய் சொல்லணும்.
ம்ம் சரி ஓகே … அது நீ இல்லை
என்ன நான் இல்ல…
ஆமா நான் எதுக்கு உன் கிட்ட சொல்லனும்..
ஹே சொல்லுங்க…
நான் என்னோட ஃபிஷ் மார்கெட்ட ரொம்ப மிஸ் பண்றேன்…
விவேகாவுக்கு உள்ளுக்குள் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்க அவள் உடல் எல்லாம் ஒரு நிமிடம் சிலிர்த்து போனது.
வாட் ஹப்பன்…
ஒன்னும் இல்லை…
உன்கிட்ட ஒன்னும் இல்லையா….
அப்போ நான் ஒன்னு தரட்டுமா ….
ஹே ஃபிராடு…
அது நீ தான் டி …
நான் என்ன நீங்க தான் ….
உன்கிட்ட நிஜமா ஆப்பிள் கிரீன் ல நான் சொன்ன ட்ரெஸ் இல்லையா …
நீ மட்டும் இப்போ இல்ல அபடின்னு சொல்லிட்ட இனி நான் உன் பக்கமே வர மாட்டேன்.
ஏன் ?
முதலில் நீ சொல்லு
நீங்க சொல்லுங்க…
ஹே சொல்லு டி…
சிறு அமைதிக்கு பின் அது …
அது நான் தான்….
ம்மம் அப்படி வா வழிக்கு.. இப்போ நீங்க சொல்லுங்க ஏன் என் பக்கத்தில் வர மாட்டேன் அப்டிண்ணு சொன்னீங்க…
அது என்னோட ஃபிஷ் மார்கெட் தான் எனக்கு வேணும் அதனால தான்…
நிஜமாவே இவளோ என்னை நீங்க அப்சர்வ் பண்ணுனீங்களா …
ம்ம் இன்னும் நிறைய அப்சர்வ் பண்ணேன் டி..
ம்ம் சொல்லுங்க..
எனக்கு அப்போவே உன்னை டார்ஸ்லிங் கூட்டிட்டு போகணும் அப்படின்னு தோணிச்சு டி….
ஹே யூ…. இடியட் உன்னை ….
விவேகா …
ம்ம் நீ என்னை ரெஸ்பெக்ட் பண்ணி இப்போ கூப்பிட்ட பாரு அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு டி….
அப்போ இனி அப்படியே கூப்பிடவா …
இல்ல இதுவும் எனக்கு பிடிச்சு இருக்கு …
என்ன ராகவ் இன்னிக்கு ரொம்ப ஒரு மார்க்கமா பேசுற…
ஹே உங்கிட்ட இப்படியே பேசிகிட்டே இருக்கணும் போல இருக்கு டி…
ஹே எனக்கு தூக்கம் வருது டா…
பச்சை பொய் …
அய்யோ கண்டு பிடித்து விட்டானே என நினைத்தவள் இல்ல ராகவ் கொஞ்சமா தூக்கம் வருது.
ம்ம் அது…
அப்புறம்….
அப்புறம் என்ன …
அப்புறம் ஒன்னும் இல்ல டா …
விவேகா ….
ம்ம் …
ஐ ம் ரியலி சாரி டி ….
சரி விடு ஓகே….
அப்புறம் நாளைக்கு மீட் பண்ணலாமா…
நாளைக்கு மீட் ஆ அதெல்லாம் முடியாது. ஹே நீ வர எனக்கு உன்னை பார்க்கனும் போல இருக்கு.
நான் எதுக்கு உன்னை பார்க்கனும் … எனக்கு அப்டி எல்லாம் தோணல..
அப்போ நீ வர மாட்ட
ஆமா ….
சரி விடு நான் திரும்ப 5 மந்த்ஸ் களிச்சு தான் வருவேன் .
ஹே என்ன சொல்ற …
ம்ம் ஆமா இனி எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு.
சரி நான் முயற்சி பண்றேன்…
அப்போ நீ வந்திடுவ நம்ப முதன் முதலில் வெளிய போக போறோம் செம்ம ஹேப்பி டி
ஹே என்ன …
நான் உன்னை பார்க்க மட்டும் தான் வருவேன் வெளியே வர மாட்டேன்.
ஹே இனி நீ என்னோட ஆளு காட் இட்
எப்படி என்று அவள் கேட்க அதான் உன் கிட்ட லவ் யூ சொல்லிட்டேனே..
இதை என்னால் ஏறறுக்கொள்ள முடியாது .
விவி நீ டிவி ல வர மாதிரி உனக்கு லவ் சொல்லனும் அப்டின்னு நினைக்கிறாயா அது ரீல் இது ரியல் அது படத்துல மட்டும் தான் நல்லா இருக்கும்.
இந்த பசங்க ரொம்ப மோசம்…
ஹே எங்களால் இவளோ தான் எக்ஸ்பிரஸ் பண்ண முடியும் டி
எங்க அப்படினா …
எல்லா பசங்களும் தான் …
ஹே நீ வேஸ்ட் ராகவ் …
இப்போ என்ன உனக்கு டிவி ல வர மாதிரி லவ் சொல்லனுமா…
நீ ஒன்னும் செய்ய வேண்டாம் போ ..
நீ என்கிட்ட எதுவும் சொல்லல புரியுதா…
விவி சாரி டி உன்னை நான் இம்ப்ரஸ் பண்றேன் பாரு ..
நீ சொல்றத வேணாம்! வேணும் அப்டின்னு சொல்லவும் எனக்கு உரிமை இருக்கு…
உன்னை நான் சொல்ல விட்டால் தானே …
என்ன பண்ணுவ நீ…
அதுக்கு நீ நேரில் இருக்கணும்…
ம்ம் போதும் நீ எங்க படிச்ச நான் டெல்லி ல படிச்சேன். உன்னோட மேஜர் தான் ஹே சூப்பர் டா…. அன்னிக்கு நீ புரோகிராமிங் பண்ண பாரு வேற லெவல் ராகவ் உன்னோட அறிவு சூப்பரா வேலை செய்து டா எனக்கும் சொல்லி தருகிறாயா. என்ன பேபி நான் உனக்கு சொல்லி தரனம்எ அப்டின்னு அவசியம் இல்ல நீ என் கூட இருந்தாலே நீ எல்லாம் கற்று கொள்ளலாம்…. இன்னும் நிறைய டெக்னிகல் ட்ரிக்ஸ் எல்லாம் இருக்கு….. விவேகாவும் இன்பாவும் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை ஆனால் இருவரும் விடிய விடிய பேசினார்கள். அவளுடன் பேசியவன் விடிந்து மணி 5.30 அதிகாலையில் தான் போன் வைத்தனர்.
ஹே ராகவ் உன் கூட சேர்ந்து நான் ரொம்ப கள்ள தனம் செய்ய ஆரம்பித்து விட்டேன். என்று நினைத்து கொண்டே படுக்கையில் படுத்து தூங்க ஆரம்பித்தாள்.
ஆனால் அவளுக்கு தூக்கம் தான் வர வில்லை . போனுக்கு சார்ஜ் போட்டவள் வெளியே வந்து பார்க்க தன் அம்மா அசந்து தூங்கி கொண்டு இருக்க தன் அம்மாவுடன் போய் கட்டிகொண்டு உறங்க முயற்சி செய்தாள்.
அப்படியே கொஞ்ச நேரம் படுத்து இருந்தவள் கொஞ்ச நேரத்தில் உறங்கி போக கங்கா எழுந்து வீட்டு வேளை செய்து முடித்து சமைத்து விட்டு இவளை எழுப்ப
ம்ம் அம்மா டீ
போய் ப்ரஷ் பண்ணு
இல்ல எனக்கு அப்படியே வேணும் பிளீஸ் இன்னிகு ஒரு நாள் மட்டும் பிளீஸ்
கங்கா அவளுக்கு டீ கொடுத்து விட்டு வேகமாக குளித்து விட்டு கிளம்ப அம்மா…
ம்ம் என்று அவள் தன் தலையை பின்னிக்கொண்டே கேட்க , மாமச்சி வீட்டுக்கு போராயா….
இல்ல நானும் அண்ணாவும் கொஞ்சம் வக்கில பார்க்க போறோம் அடுத்து எப்போ கோர்ட் க்கு போகணும் , என்ன பேசணும் எவ்ளோ பணம் அப்டின்னு கேட்க தான் இன்னிக்கு சண்டே அதனால் தான் என சொல்ல
அப்போ நானு….
நீ இப்போவே கிளம்பு ஆதிய வந்து கூட்டி போக சொல்றேன்.
இன்பா சொன்னது நினைவு வர இல்ல மா நான் வெண்பா வீட்டுக்கு போறேன். நீ எப்போ வருவ…. நான் வரும்போது போன் பண்றேன்…
ம்ம் சரி ஓகே…
ம்ம் அப்புறம் இன்னொரு விஷயம்
சொல்லு மா
ஆமா நைட் நீ போன் பேசிட்டு இருந்ததாயா?
விவேகா வுக்கு இப்போது தூக்கி வாரி போட்டது…
அய்யோ என நினைத்தவள் ஒரு நிமிடம் முகம் எல்லாம் வியர்க்க விறுவிறுக்க ஆமா மா….
யாரு கிட்ட பேசின…. என அம்மாவின் முறைப்பு மட்டும் தான் முகத்தில் சந்தேகம் இல்லை என்பதை தெரிந்து கொண்டவள்.
அம்மா தூக்கத்தில் தெரியாமல் வென்பாவுக்கு கால் போயிடுச்சு அப்புறம் கால் கட் பண்ணி இந்நேரத்தில் என்னாச்சு என பதறி போன் செஞ்சா மா….
வேற ஒன்னும் இல்ல
நீ வேணும் னா செக் பண்ணிக்கோ…
சரி சரி நான் தண்ணி குடிக்க எழுந்தேன் அப்போ பேச்சு சத்தம் கேட்க நீ யார் கிட்டயும் போன் பேசி நான் பாரத்தது இல்ல… வருண் வீட்டில் இருந்தால் நீ தான் திட்டு வாங்குவ இப்போ எல்லாம் சரியா பேச மாட்டிங்குற அப்டின்னு சொன்னான் என்னாச்சு டி….
அம்மா ஒன்னும் இல்ல மா
அவ்ளோ தான் இன்னும் ரெண்டு மாசம் தான் இந்த செம் அடுத்து 3இயர் ஃபீஸ் பிராக்டிகல் எல்லாம் இருக்கு ஃபீஸ் கட்டணும் இதெல்லாம் வருண் கேட்பான் அப்புறம் இந்த டென்ஷன் தான் வேற ஒன்னும் இல்ல வருண் வருத்த படுவான்.
ம்ம் சரி சரி என்ன பண்றது நம்ப சூழ் நிலை இப்படி ஆகி போச்சு இந்த வீடு மட்டும் இப்போ கிடைக்கில நம்ப மொத்த சுமையும் என் அண்ணாவுக்கு தான் என்று கண்களில் கண்ணீர் கொண்டு மறைத்து மம் சரி நான் கிளம்பி விட்டேன்.
நீ போயிட்டு சீக்கிரம் வீட்டுக்கு வந்து விடு அங்கே தேவகி அக்காவுக்கு நம்ப சிரமம் கொடுக்க கூடாது.
ம்ம் சரி மா என்று சொல்ல கங்கா வேகமாக வெளியே கிளம்பி போனாள்.
கதவை தாழிட்டு தன் குடும்ப கஷ்டம் நினைத்து பார்த்த விவேகாவுக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது.
நீ தெரியாமலே எனக்கு ஹெல்ப் பண்ணி இருக்க ராகவ் அதுக்கு உன் கிட்ட நான் நன்றி சொல்லனும் ஆனால் என் மனசுல ஒரே குழப்பமா இருக்கே
நான் இப்போ என்ன செய்து கொண்டு இருக்கிறேன். இது சரி தானா என்னோட எண்ணம் இப்போ அதில் நீ மட்டும் தான் இருக்க
சரி இன்னைக்கு உன் கிட்ட இது பற்றி பேசனும் ராகவ் நான் செய்யறது சரியா…
விவேகா இப்போது தயாரானவள் நேராக சோர்ந்த முகத்தோடு வெண்பாவின் வீட்டுக்கு சென்றாள்.
அங்கே வீட்டில் மித்ரன் , சரவணன், என அனைவரும் இருக்க வீட்டுக்கு சென்றதும் என்ன தங்கச்சி காலை தரிசனம்…
சும்மா தான் சார் என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தாள்.சரவணன் மித்ரனை முறைக்க இப்பொ எதுக்கு என்ன இவன் முறைக்கிரான்….
அண்ணா என்று சரவணன் கிட்ட பேச ஆரம்பித்தாள். ம்ம் சொல்லு மா எனக்கு எதுவும் டேட்டா என்ட்ரி மாறி ஒர்க் கிடைக்குமா..
சரவணனுக்கு இப்போது விவேகா கேட்டது. அவனையே அவன் பார்ப்பது போல் இருந்தது. மித்ரன் மனதில் அய்யோ போச்சு இவ லேடி சரவணா தான் இனி இவன் வேற ஓவரா சீன் போடுவான்… என்று சொல்லி உள்ளே சென்று விட்டான்
என்ன மா எதுவும் பிரச்சினையா …
ம்ம் ஆமா அண்ணா கொஞ்சம் ஃபீஸ் கட்ட பணம் தேவை படுது…
அம்மா, அண்ணா ரெண்டு பேருக்கும் இப்போ கஷ்டம் என்று ஏக்க முகம் கொண்டு பேச
ம்ம் நாளையில் இருந்து இவேனிங் 2 hours காலையில் 2 hours வீட்டில் லேப் டாப் இருக்கா நான் ரெடி பண்ணிக்குவென் அண்ணா.
இல்லனா சொல்லு மா பார்த்துக் கொள்ளலாம்.
ம்ம் நன்றி அண்ணா…
என்று வெண்பாவுடன் ஒட்டி கொண்டாள்.
மித்ரன் இன்பாவுக்கு போன் செய்து விவேகா வீட்டுக்கு வந்த விஷயம் கூற மம் இப்போ வந்துடுவேன் என சொல்லி தண்ணவளை காண கிளம்பி விட்டான்.
விவேகா தன் மனதை மாற்றி கொள்வாளா?
இல்லை இன்பாவின் காதல் அவளின் மனதை மாற்றுமா….
தொடரும்….
Comment please… Ratings please please dears thank you..
Episode 64,
இங்கே இன்பா அவளிடம் பேசி முடித்து விட்டு நேராக உடற் பயிற்சி செய்யும் அறைக்கு செல்ல அங்கு தன் அப்பா இருப்பதை பார்த்து விட்டு இவரா! எப்படியும் நம்மை எதுவும் சொல்வார்,என்று நினைத்தவன் அப்படியே திரும்பி செல்ல போக,
ரவி அவனை பார்த்து விட்டார். ம்ம் ம்ம் என்று தொண்டையை கணைக்க இன்பா திரும்பி பார்த்தான்.
ரவிக்கு இன்பாவின் முகமே சொன்னது அவன் முகம் தூக்கம் இல்லாமல் இருந்தாலும் முகம் எல்லாம் ஒரு உற்சாகம் சந்தோஷ உணர்வு ரவி, என்ன IPS சார் இன்னிக்கு கொஞ்சம் லேட்டா வந்திருக்கீங்க….
ஒரு சிறு அமைதிக்கு பிறகு இன்பா எங்கோ பார்த்து கொண்டு,கொஞ்சம் தூங்கி விட்டேன்..
ரவி அவனை பார்த்து ஒரு சின்ன புன்னகை உன் அம்மா கிட்ட போய் சொல்லு அவ நம்புவா.. என சொல்ல
உடனே இன்பா ஆமா நான் தூங்கல…
நைட் ஃபுல்லா என்னோட கேர்ள் பிரண்ட் கிட்ட போன் பேசிட்டு இருந்தேன்..
இப்போ போதுமா…
இதை நான் நம்ப மாட்டேன் என்று ஒரு ஏளன புன்னகை சிந்தினார்.
இன்பாவுக்கு உடனே கோபம் வந்தது …
ஏன்….
உன்னை ஒரு பொன்னு லவ் பண்ணுமா அந்த பொண்ணு ஒரு அன்லக்கி பெல்லோ…
உடனே இன்பா அங்கு இருந்த கதவினை வீடே அதிரும் படி சாத்தி விட்டு கிளம்ப வேண்டும். என்று நினைத்தான். ஆனால் தன் கைகளை கோபமாக மடக்கி கொண்டு கிளம்பினான்.
அவன் சென்றதும் ரவி முகத்தில் புன்னகை யாரு பா நம்ப பையன லவ் பன்றது. இது சந்தோஷ புன்னகை தான் உடனே ரவி வழக்கம் போல் அன்றாட உடற் பயிற்சி செய்து கொண்டு இருக்க வசு இஞ்சி , நாட்டு சக்கரை சேர்த்து டீ போட்டு தன் கணவனை தேடி வந்தாள்.
ரவி என்று அழைக்க … இப்போது புன்னகை முகத்தோடு திரும்பினார்.
ம்ம் சொல்லு மதி… என்ன ரவி காலையிலயே என்னோட பையன டென்ஷன் பண்ணிட்டீங்க . நேற்றே அவன திட்டி இப்போ மறுபடியும் எதோ சொல்லி இருக்கீங்க பிள்ளை முகமே சரி இல்ல நைட்டு எல்லாம் ராகவ் சரியா தூங்கல…
உன் பையன் சரியா தூங்களையா… அவன் ஜாலியா என்ஜாய் பன்றான்….
ரவிக்கு இதை கேட்டு சிரிப்பு வந்தது அதை அடக்கி கொண்டு ஓ இன்னும் இன்பா மதிக்கிட்ட லவ் பத்தி சொல்லல போல சரியான கேடி என் பையன் என் கிட்ட அவளுக்கு முன்னாடியே சொல்லிட்டான் ம்ம் பரவாயில்லை அவன் என் பையன் என்று நினைத்தவர்.
ரவி… ரவி..
ம்ம் சொல்லு மதி
ஏன் இப்படி அவன கஷ்ட படுத்துறீங்க…
அடியே மதி… என்று வசுமதியை தன் அருகில் இழுத்து அணைக்க …
ரவி என்ன பண்றீங்க. ராகவ், சுபா யாராவது வர போறாங்க தள்ளி போங்க என்று வசு நாண முகம் கொள்ள
வந்தால் வரட்டும் என் பொண்டாட்டி நான் கொஞ்சுவேன்….
வசு ரவியின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். மதி இன்பா கொஞ்சம் வித்தியாசமா பிஹாவ் பண்றான்.
நீ என்ன நினைக்கிற…
ம்ம் ஆமாங்க..
இப்போ முன்ன மாறி இல்ல அழகா சிரிக்கிறான் தெரியுமா….
அப்படியே எனக்கு உங்களை பார்ப்பது போல் இருக்கு…
திடீென்று கோபம், அப்புறம் தீவிரமா எதையோ யோசிக்கிறான்.
உனக்கு எப்போதும் அவன் நினைப்பு தான் நீ என்னை பார்க்கனும் அப்படின்னா சொல்லு நான் உன்னை வந்து பார்க்கிறேன் அதை விட்டு அவனை பார்த்தால் என்னை மாதிரி இருக்கு அப்டின்னு சொல்லாத புரியுதா…
உடனே வசுமதி சிரிக்க …
இப்போ எதுக்கு டி சிரிக்கிற … இல்ல நேற்று ராகவ் இப்படி தான் நீங்க எப்படி பேசினீங்களோ அதே மாதிரி தான் பேசினான்.
போதும் போதும் உன் மகன் புராணம் என்று இருவரும் சுபாவின் கல்யாணம் பற்றியும் வினய் பற்றியும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
ரவிக்கு இன்னும் சுபாவின் கல்யாணம் பற்றியும் பெரிய கனவு இருந்தது என்ன தான் இன்பாவை பிடிக்காதது போல் காட்டி கொண்டாலும் இன்பா சொல்வது சரி தான் எதற்கும் சுபாவின் தனிப்பட்ட விருப்பம் பற்றி கேட்க வேண்டும் என்று நினைத்து கொண்டார்.
இங்கு சுபா தன் காதல் மன்னனை பற்றி தான் நினைத்து கொண்டே தன் தலையணையில் கவலையையும் கூடவே கண்ணீரையும் மறைத்து கொண்டு வெளியே சென்றாள்.
இன்பா இன்று ஒரு வெள்ளை நிற சட்டை, ப்ளூ ஜீன்ஸ், கருப்பு நிற கூலர்ஸ், கழுத்தில் மின்னி கொண்டு இருக்கும் அந்த தங்க செயின் என இன்று மிகவும் அழகாக இருந்தான்.
தன்னை தானே ஒரு முறை கண்ணாடியில் பார்த்து விட்டு விவேகா உன்னோட பக்கத்தில நான் தான் டி சரியான பொருத்தம் என நினைத்து கொண்டவனாய்,
போன் எடுத்தவன் தன் தாத்தா கிருஷ்ணன் எண்ணுக்கு அழைக்க,என்ன மேன் எனக்கு கால் பண்ணி இருக்க…. ஓல்டு மேன் டுடே நான் அண்ட் மை கேர்ள் கூட வீட்டுக்கு வரலாம் னு இருக்கேன்…
இஸ் திஸ் ட்ரூ….
யெஸ் தாத்தா இன்னிக்கு இப்போ என்னோட கேர்ளா வர போறா….
எப்படி டா….சூப்பர் ராகவ் யூ…. இப்போ தான் நீ
மை பாய்… வசுவுக்கு இது தெரியுமா … என அவர் கேட்க,
No தாத்தா பட் டாடிக்கு தெரியும் …
ம்ம் இன்டர்ஸ்டிங் ….
நானும் பாவையும் வெயிட்டிங் இப்போவே போய் நான் சொல்றேன்…
வேணாம் தாத்தா நானே டார்ல்ஸ சர்பிரைஸ் பண்றேன்…
ம்ம் சீக்கிரம் வா நான் என்னோட பேத்திய பார்க்க வெயிட்டிங்….
ம்ம் வரோம் என்று போன் வைத்தவன் நேராக மீண்டும் தன்னை ஒரு முறை பார்த்து கொண்டு கீழ இறங்கி வந்தான்.
அதுவும் உற்சாகமாக கண்ணக்குளி தெரிய சிரித்து கொண்டே கனவில் மிதந்து கொண்டு வந்தான்.
ம்ம் ம்ம் என்று ரவி சுபாவுக்கு சைகை காட்ட சுபா இன்பனை பார்த்து ஹே என்ன இன்பா காலைல கிளம்பி விட்டாய். கொஞ்சும் ஒர்க் சுபா…. ம்ம் ரவி செய்தி தாள்களில் இருந்து கண் எடுக்காமல் எல்லாமே கிரீன் லைஸ் (பச்சை பொய்கள்) ஆ இருக்கு…
இதை கேட்ட இன்பா உச்சி கொட்ட…
இருவர் பார்வையும் மோதி கொண்டது.
சுபா உன் அப்பா கிட்ட சொல்லி வை திஸ் ஸ் டூ மச்…
என்ன நான் சொன்னேன் மை ஏஞ்சல் என்று கண்ணகுளி தெரிய ரவி சிரிக்க…
டாடி என்ன டாடி பாவம் இன்பா நீங்க அவனை ரொம்ப கஷ்டப் படித்துறீங்க…
அக்கா நீ ஒன்னும் கேட்க வேண்டாம்…
ஒரு நிமிடம்… என தன் போனில் இருந்து ஒரு போட்டோ எடுத்து ரவி முன்பு காட்டிய இன்பா இப்போது அவன் முறையானது (கண்ணகுழி சிரிப்பு).
ஹே ராஸ்கல்….
அது நான் இல்ல … அப்போ நானா….
சரி இப்போது என்னோட மாம் கிட்ட நான் கேதர் பண்ண விஷயத்தை சொல்லட்டுமா….
ரவிக்கு ஒரு புறம் சிரிப்பு ஒரு புறம் கோபம்..
இப்போ என்ன வேனும் உனக்கு ….
உங்களுக்கு தெரியாதா…
சரி நான் எதுவும் சொல்ல மாட்டேன் அது உன்னோட லைப்…
அப்போ நானும் சொல்ல மாட்டேன் இது உங்க லைப்…
ஓகே பாய்… சுபா என்று அவன் கிளம்பினான்.
டாட் என்ன நடக்குது இங்கே இன்பா என்ன சொல்லிட்டு போறான்…
ஒன்னும் இல்ல சுபா ….
பிளீஸ் டாட் எனக்கு சொல்லுங்க…
ரவி சிரித்து கொண்டே உன் தம்பி என்னை பிளாக் மைல் பண்ணிட்டு போறான்…
எதுக்கு டாட் அந்த போன் ல என்ன இருந்தது…
ரவி, அதில் நான் காலேஜ் படிக்கும் போது என் கூட படிச்ச மலர் அப்டின்னு ஒரு பொன்னு படிச்சா,அந்த பொண்ணுக்கு என் மேல் கொஞ்சம் இன்டர்ஸ்ட் சுபா அப்போ எனக்கு தெரியாது ;இப்போ ரீசன்ட்டா ஒரு மீட்டிங் ல மலர் அவர் ஹஸ்பண்ட், மகன், மகள் எல்லாம் தற்செயலா மீட் பண்ணோம் அப்போ மலர் அந்த போட்டோஸ் ல நானும் அவளும் பேசிக்கொண்டு இருப்பது போல் இருக்கு அதை இந்த ராஸ்கல் கண்டு பிடிச்சு இப்போ என்னை மிரட்டி விட்டு போகிறான்.
சுபா சிரித்து கொண்டே இது அம்மாவுக்கு தெரியுமா….
ம்ம் அதெல்லாம் தெரியும்….
நான் இப்போ தான் மதியை சமாதானம் பண்ணி வச்சு இருக்கேன்…
ஆனாலும் இன்பா சரியான கேடி மா…
சுபா தன் அம்மா வருவதை பார்த்து விட்டு டாட் அந்த மலர் எப்டி இருப்பாங்க..
ம்ம் அப்போ செம்மையா இருப்பா மா இப்போ என்று ரவி சொல்ல வர
அப்போ செகண்ட் மேரேஜ் க்கு ரெடி ஆகிட்டீங்க போல..
சுபா ரவியை பார்த்து சிரிக்க உடனே ஹே மதி நீ எப்போ வந்த….
இப்போ எப்டி இருக்காங்க …..
யாரு மதி என்று ஒன்றுமே தெரியாதது போல் கேட்க…
அதுதான் உங்க flower…
யாரு மதி அது… எனக்கு அப்படி யாரையும் தெரியாதே; உனக்கு யாரையும் தெரியுமா செல்லம், என்று சுபாவின் அருகில் போய் ரவி அமர்ந்து கொள்ள …
உடனே சுபா எழுந்தவள் டாட் நான் போறேன் அம்மாவை நீங்களே சமாளிச்சுகோங்க….
என சிரித்து கொண்டே அவள் அறையின் பக்கம் செல்ல ஏஞ்சல் என்னை விட்டு போகாத உன் அம்மா பார்க்கிறதை பார்த்தால் என்னை ஜெயில் ல போட்டு விடுவாள் போல …
இன்பா நேராக மித்ரன் வீட்டுக்கு சென்றான். ஹே மச்சி என்னடா இன்னிக்கு செம்மையா இருக்க என்று கேட்டு கொண்டே மித்ரன் அவனை அழைக்க
ஹே எங்கடா என் பேபி ….
தங்கச்சி உள்ள இருக்கு என்று சொல்லி கொண்டே இருவரும் உள்ளே செல்ல அங்கு வெண்பா, விவேகா இருவரும் அமர்ந்து டிவி பார்த்து கொண்டு இருந்தனர்.
இன்பா வரும் தோரணையை பார்த்து வெண்பா, ஹே அங்கே பாரு…
ஹே போடி என்னோட டார்லிங் இன்ட்ரோ என்று விவேகாவின் கவனம் எல்லாம் அந்த விஜய் தேவர கொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி படத்தில் அவள் கவனம் இருக்க
உடனே ஹே விவேகா அண்ணா….
ஹே நீ வேனா அண்ணா சொல்லிகோ எனக்கு எப்பவுமே டார்லிங் தான் என்ன கண்ணு அய்யோ மயக்குறானே …
ஹே அங்கே பாரு டி…பிளீஸ் அமைதியா இரு என்னோட டார்லிங் அய்யோ செம்ம …. என்று இவள் சொல்ல…
வெண்பா சொல்லியும் தன்னை கவனிக்காமல் அப்படி என்ன பார்த்து கொண்டு இருக்கிறாள் என இன்பா பார்க்க உடனே அவன் முகம் கோபத்தில் சிவந்தது.
எவ்ளோ திமிர் இவளுக்கு, இரு டி உன்னை என்ன செய்கிறேன் என்று பார்….
என்னை பார்க்காமல் டிவி ல பார்த்து கொண்டு இருக்கிறாயா ம்ம் என்று இவன் நினைக்க
வெண்பா வலுக்கட்டாயமாக விவேகாவின் முகத்தை ஹே ஆர்வம் அங்கே பாரு என காட்ட…
இப்போது விவேகா இன்பாவை….
தொடரும்….
Episode 65,
விவேகா வெண்பாவுடன் சேர்ந்து அர்ஜுன் ரெட்டி படம் பார்த்து கொண்டு இருக்க அதில் ஹீரோ இன்ட்றோ வரவும் இமைக்க மறந்தவலாய் விவேகா டிவியில் தன் முழு கவனம் செலுத்தியவள்.
அவன் வந்ததும் இங்கு இருந்து கொண்டே சில பறக்கும் முத்தங்களை வீசும் நேரம் இன்பா அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்து கொண்டே உள்ளே வர
வெண்பா இண்பாவ பார்த்து ஹே விவேகா அண்ணா டி …
ஹே போடி அது என் டார்லிங் என்று சொல்லி டிவியில் அர்ஜுன் ரெட்டியை ரசிக்க
இப்போது இன்பா அவளை முறைத்து கொண்டே அவள் எதிரில் உள்ள சோபாவில் அமார்ந்தவன் பார்க்கிறாளா… என்று பார்க்க ஒரு உமி அளவும் திரும்ப வில்லை இப்போது வெண்பா அவளின் முகத்தை வலுகட்டாயமக ஹே ஆர்வம் கொஞ்சம் அங்க பாரு டி…. என திருப்ப அப்போது தான் அங்கு இன்பா வந்ததை உணர்ந்தவள் ஹிஹிஹி…. என்று மெதுவாக சிரித்து கொண்டே அவனை பார்க்க அவனோ அவளை முறைத்தான்.
இன்பா முறைபதை பார்த்த விவேகா போடா இடியட்… நான் என்னோட அர்ஜுன் ரெட்டி ய பார்த்து கொள்கிறேன் என்று மீண்டும் டீவியில் கவனம் செலுத்த இன்பா மனதில் என்னை பார்காமல் நீ டீவி பார்த்து கொண்டு இருக்கிறாயா இரு டி.. என்று டிவியை ஆப் செய்தான்.
விவேகா ஹே .. பிளீஸ் என்று வெண்பாவை பார்க்க எனக்கு தெரியாது பா என்று அவள் பார்க்க சரி ஓகே என்று விட்டு விட்டாள்.
தன்னைச் சுற்றி யாரும் இருக்கிறார்களா என பார்தவன் ஹே வா போகலாம் என கங்களால் கூப்பிட…. இவள் நான் வர மாட்டேன் என்பது போல் தலை ஆட்டினாள்.
அவன் வேகமாக எழுந்து வெளியே சென்று விட விவேகா வெண்பாகிட்ட சொல்லி விட்டு சில கிண்டல் கேலிகளை வாங்கிக் கொண்டு வெளியே சென்றாள்.
சுற்றியும் தேடி பார்த்தவள் சரி வெளியே எப்போதும் அவனது கார் நிற்கும் இடததுக்கு செல்ல அங்கு வழக்கம் போல கார் நின்றது ஆனால் அதில் இன்பா இல்லை.
எங்கே போயிருப்பான் இந்த இடியட் என்று இவள் தேடிக்கொண்டே வர இன்று புது காரில் அவளை உள்ளே இழுத்து போட்டு கொண்டான்.
ஒரு நிமிடம் விவேகா பயந்து போனாள். ஹே ஹே.. என்று அவள் சொல்ல அந்த கைகளின் பிடிப்பே சொன்னது அது தன்னவன் தான் என்று அவள் கண்களை மூடிக்கொண்டு இரு கைகளையும் தலைக்கு கொடுத்து பிடித்து கொண்டாள்.
அவளை அமர வைத்தவன் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்க்க அவள் திரும்பியபாடில்லை.
இண்பாவும் காத்திருந்தான் இவளும் எவ்வளவு நேரம் தான் இப்படியே இருப்பாள் என இன்பா அவளை ரசித்து கொண்டு இருக்க, ஏனோ இவ்வளவு நாள் சாதாரணமாக இருந்த இதயம் இப்போது வேகமாக துடிக்க , உள்ளங்கை வியர்க்க இன்பா இருக்கும் எதிர் புறம் திரும்பி அமர்ந்து கொண்டாள்.
ஆனால் கண்களை மட்டும் திறக்க வில்லை. இன்பா சிரித்தவன் அவள் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டான்.
அவளின் தோள்களின் மேல் கைகளை போட்டு கொள்ள இவள் சிணுங்கினாள். இப்போது இன்பா ஹே இந்த பக்கம் திரும்பு… அப்போதும் அவள் அமைதியாக இருக்க பேபி இப்போ நீ திரும்பல நான் வண்டிய டார்ஜ்லிங் விட்டுவிடுவேன் உனக்கு ஒகே வா…..
விவேகா இந்த வார்த்தைகளை கேட்டு வேணாம், வேணாம்…. அவள் திரும்பி அவனை பார்க்காமல் அவனது ஷர்ட் பார்த்து விரல்களில் சொடுக்கி நெட்டி எடுத்து கொண்டு இருக்க,
இன்பா அவள் கைகளை பிடித்தவன் ஹே என்ன பாரு டி…. விவேகா அப்படியே இருந்தாள்…. இப்போது கடுப்பான இன்பா அந்த டிவி ல தெலுங்கு படத்துல வர பெல்லோ வ அப்படி பார்க்கிற ஏன் டி இப்போ என்னை பார்க்கமாடிங்குற…
அய்யோ டென்ஷன் பன்றானே, இன்னிக்கு வேற எனக்கு இவன பார்க்கவே ஒரே ஷையா இருக்கே ….. என மனதில் நினைத்தகொண்டு இருக்க…
இப்போது வேறு வழி இல்லாமல் அவள் முகத்தை நிமர்ந்தி இன்பாவ ஒரு பார்வை பார்க்க அவன் இரு புருவங்களையும் தூக்கி அந்த மயக்கும் புன்னகையில் பார்த்தான்.
விவேகா விழுந்து விடாதே …. என்று கூறிக் கொண்டு உடனே வேறு புறம் திரும்பி கொண்டாள்.
இப்போது அவள் நிலை என்ன என்பதை தெரிந்தும் தெரியாதது போல் அவன் நடிக்க ஆரம்பித்தான். ஹே பேபி என்னாச்சு இன்னிக்கு கொஞ்சம் எதோ சரி இல்ல போல ஃபீவர் வந்துடுச்சா…
அது அதெல்லாம் ஒன்னும் இல்ல … இல்லயே எதோ சம்திங் என்று அவள் நெற்றியில் இன்பா கைகளை வைக்க இப்போது இதயம் துடிக்கும் சத்தம் இன்பாவுக்கே கேட்டது…
ஹே பேபி போச்சு எல்லாம் முடிஞ்சது .. இப்போது அவள் அவனை பார்த்து என்னாச்சு.. அவ்ளோ தான் இனி ஒன்னும் பண்ண முடியாது டி… ஹே என்ன புரியுற மாறி சொல்லு… உனக்கு அது வந்திடுச்சு … என்ன … அது தான் இப்போ இதயம் வேகமா துடிக்குதா… ம்ம் ஆமா என்று பயந்து கொண்டே அவள் கேட்க , கை , கால் எல்லாம் வியர்க்குதா… இல்ல எனக்கு உள்ளங்கை மட்டும் தான் வியர்க்குது என்று பயந்து கொண்டே இவள் சொல்ல இன்பா உள்ளுக்குள் சிரித்தவன் அப்போ கன்ஃபார்ம் டி அதே தான் இனி பிளாட் தான்.. இப்போது விவேகா கண்களில் கண்ணீர் கோர்க்க என்ன ராகவ் எனக்கு என்னாச்சு எதுவும் டிசீசா… அப்போ நான் இன்னும் எவ்ளோ நாள் இருப்பேன்… என கண்ணீர் வெளியே எட்டி பார்க்க இதற்கு மேல் முடியாது என்று இன்பா சிரித்து விட்டான்.
ஹே எதுக்கு இப்போ சிரிக்குற சொல்லு… நான் செத்தாலும் உன்னை யாரு கூடயும் சேர விட மாட்டேன் … உன்னை யார் கூடவும் சேர விடமாட்டாள் விவேகா என்று அழுது கொண்டே சொல்ல
இன்பா ஒரு நிமிடம் டி… என சிரித்து சிரித்து தன்னை கட்டு படுத்தி கொண்டு உன்னை என்று மீண்டும் மீண்டும் சிரிக்க ஹே நான் ரொம்ப அழுதுருவேன்….
அடியே தத்தி உனக்கு ஒன்னும் இல்ல.. என்று மீண்டும் சிரிப்பை அடக்கிக் கொண்டு நான் யாரு கூடவும் சேர விரும்பல, ஐ ம் ஜஸ்ட் கிட்டிங் யூ…. என்று சிரித்துக் கொண்டே சொல்ல
இடியட் என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவன் மார்பில் அடித்தாள். பேபி பிளீஸ் சத்தியமா வலிக்குல டி.. ஆனால் எனக்கு வயிறு வலிக்குது சிரிச்சு சிரிச்சு என்னால முடியல….
நான் ரொம்ப டென்ஷனா இருக்கேன், என்னை டென்ஷன் பண்ணாத போயிடு… சரி சரி நான் சிரிக்கல என்று மீண்டும் சிரிப்பை அடக்கிக் கொண்டு சிரிக்க இப்போ எனக்கு ரீசன் சொல்லு இல்ல நான் இப்போவே கிளம்பி விடுவேன். என கதவு திறக்க போக சரி சரி இனி சிரிக்கல …
இப்போ சொல்லு … என்ன சொல்லட்டும் என்று இன்பா அவளை அருகில் இழுக்க.. ஹே முதலில் சொல்லு அப்புறம் யோசிக்கிறேன்… என்ன சொல்ல நீ சொல்றது புரியல… ஹே நடிக்காத டா.. இப்போ எனக்கு நடக்கறது உனக்கு எப்படி தெரியும் அதை சொல்லு…
ஓ அதுவா அது பெரிய விஷயம் இல்ல டி ஹே நீ முதலில் சொல்லு அதை நான் முடிவு பண்ணிகிரேன். நான் சொன்னா நீ இல்லை அப்டின்னு பொய் சொல்லக் கூடாது.
ம்ம் பக்கா.. உண்மைய ஒத்துகணும் ஹே சொல்லு முதலில் …
விவேகா யூ ஃபால் இன் வித் மீ.. வாட் ..
ஐ மின் யூ ஃபால் இன் லவ் வித் மீ நீ என்னை லவ் பண்ற … அதனால் தான் உனக்கு இப்படி இப்படி சிம்டம் எல்லாம் வருது…
விவேகா இல்லை என்று எதோ சொல்ல வர இடை நிறுத்தியவன் போதும் போதும் நிறுத்து டி எனக்கு தெரியும் இப்போ என்ன சொல்ல போற அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அது தானே …. ஒகே நீ என்னமோ சொல்லு உண்மை என்னன்னு உனக்கு நல்லாவே தெரியும்.
விவேகா இதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் சரி பார்த்தாச்சு தானே நான் கிளம்பறேன்…
ராகவ் டோர் அன்லாக் பண்ணு நான் வீட்டுக்கு போகனும்… இன்பா அவளை இழுத்து தன் மார்பின் மேல் போட்டு கொண்டவன் அவள் முகத்தைப் பற்றி விவேகா ஐ லவ் யூ டி… என்று கூறியவன் அவள் இதழில் மூழ்கினான். அவள் அவன் மார்பை பிடித்து கொண்டு கண்களை மூடி அவனுள் கரைந்தாள்.
இப்போது அவளை விடுவித்தவன் அவள் கண்களுக்கு , நெற்றி, கன்னம் என அனைத்து இடங்களுக்கும் கொடுத்து விட்டவன் அவள் முடிகளை காதுக்கு பின் ஒதுக்கி ம்ம் நல்ல பொண்ணு … என்று சொல்லி சீட் பெல்ட் போட்டு விட்டு மீண்டும் இதழில் ஒரு முத்தம் பதித்து காரை எடுத்தான்.
சிறிது நேரம் கழித்து தன்னிலைக்கு வந்தவள் கார் செல்வதை பார்த்து ராகவ் எங்க கூட்டி போற….
சும்மா ஒரு ரவுண்ட் டி … என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா… இல்ல என்று யோசிக்காமல் பதில் சொன்ன அவளை பார்த்து அன்னிக்கு அந்த அருண் கூட செமினார் போன நீ அப்போ என்னை விட அவன் மேல் உனக்கு நம்பிக்கையா என முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு கேட்க ,
இப்போது எப்படி அவனை சமாதானம் செய்வது என யோசித்தாள். ராகவ் உன் மேல் நம்பிக்கை இருந்ததால் தான் நான் சீனியர் கூட அந்த எக்ஸ்போ க்கு போனேன்.
எப்படி .. ஏன்…
அது அது வந்து ஹான் சீனியர் உன்னோட தம்பி தானே….
ம்ம் நல்லா பேச கத்துகிட்ட டி…
பின்ன உன்னை எப்டி சமாலிக்கிறது என்று கூறியவாறே அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடிக்க அவள் தண்ணீர் ஒவ்வொரு சிப் முழுங்குவதை பார்த்து காரை நிறுத்திய இன்பா..
ஹே என்னாச்சு என்று இவள் இரு புருவத்தை தூக்க…
இன்பா…. ???
தொடரும்….
Episode 66,
இன்பா அவள் தண்ணீர் குடிப்பதை பார்த்து காரை நிறுத்த இவள் வாயில் நீர் வைத்துக் கொண்டே என்ன என்பது போல் பார்க்க இன்பா சீட் பெல்ட் கழட்டி விட்டவன் அவள் அருகில் வந்து அதரங்களில் இருந்து இவன் நீரை எடுத்து கொண்டான்.
விவேகவுக்கு இங்கு என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை. யூ இடியட்…. என்ன டா வேனும் உனக்கு… சாரி டார்ஜ்லிங் ஐம் தேர்ஸ்டீ ….
அய்யோ நீ வர வர ரொம்ப பண்ற என்று ஜன்னல் பக்கம் திரும்பி கொண்டு உள்ளுக்குள் சிரித்தாள்.
மேடம் கொஞ்சம் என்ன பார்த்து சிரிக்கலாம்… நானா… நான் ஒன்னும் சிரிக்கல … நான் கோவமா இருக்கேன்… ஹே நடிக்காத டி …
இப்போது இன்பா அவள் கைகளை எடுத்து பிடித்து கொண்டே கார் ஓட்டினான். கிருஷ்ணன் போன் செய்ய ஆன் தி வே… என்று கூறி வைத்தான்.
ஹே எங்க கூட்டி போற நீ … இன்பா அவளை முறைக்க … சரி சரி டென்ஷன் வேணாம் உன்னோட கோபம் எனக்கு பிடிக்கல…. உடனே அவன் கண்ணகுளி தெரிய சிரிக்க … இப்படியே சிரிச்சு மயக்கு டா என இவள் மனதில் நினைக்க… இப்படியே பேசி என்னை மயக்கு டி என்று வாய்மொழியாக சொல்ல… ஹே நீ தான் … நான் என்ன டி… நீ தான் சிரிச்சு மயக்குற.. அப்போ நீ மயங்கிட்டியா என இன்பா கேட்க ம்ம் ஆமா… இப்போது அவன் வார்த்தை தூண்டிலில் மாட்டிகொண்டவள்… இன்பாவா பார்த்து இல்ல ராகவ் நான் மயங்குல…. ம்ம் நம்பிட்டேன்…. அய்யோ என்று அவள் தலையில் கை வைத்து கொண்டாள்.
விவேகா எதாவது செய்து கொண்டும் பேசி கொண்டும் வந்தாள். இன்பா அவளை ரசித்து கொண்டே வந்தான். அவளை எதாவது சொல்லி சீண்டுவது கோபமூட்டுவது அப்புறம் சமாதானம் செய்வது என ஒரு அரை மணிநேரத்தில் கிருஷ்ணன் வீட்டின் முன் கார் நிற்க.
முதலில் இறங்கிய இன்பா அவள் புறம் வந்து கார் கதவை திறக்க அவள் பயந்து கொண்டே இறங்கினாள். அவளின் முக மாறுதலை கண்டவன் ஹே லூசு நான் உன் கூட இருக்கேன் எதுக்கு உன்னோட முகம் இப்படி மாறுது என்று அவளை அணைத்து கொண்டான்.
ஹே பயமா இருக்கு இது யார் வீடு… இது எங்க மாம் வீடு ஹே வசு மேம் உள்ள இருக்காங்களா. ஹே நான் போறேன் டா … என்ன மேடமா…. என்ன வாடா போடா ஆனால் என்னோட மாம் உனக்கு மேடம், ம்ம் அவள் கைகளை பிடித்து அணைக்க… ஹே பிளீஸ் என்னை கொண்டு போய் ஆதி வீட்டில் விடுங்க ஸார்… இன்பா சிரித்தவன் என்னடி அதுக்குள் மரியாதை கொடுக்குற… சார் பிளீஸ் உங்க அம்மாவ பார்த்தால் எனக்கு நிறைய பயம் பிளீஸ் என்று இவள் கெஞ்ச…
ஹே பிளீஸ் கூல் எப்பவும் போல கூப்பிடு நீ… இல்ல சார் என்னை வீட்டில் கொண்டு என அவள் பேச வர அவளின் இந்த முகம் அவனுக்கு ஒரு இனம் புரியாத கஷ்டதை கொடுத்தது.
இங்கே என்னோட மாம் இல்ல… இது என்னோட மாம் ஐ மின் தாத்தா வீடு… வா போகலாம்… நான் வரல என்னை வீட்டில் விடுங்க என்று கண்களில் கண்ணீர் கோர்க்க இப்போது இம்பாவுக்கு கோபம் வந்தது. விவேகா என்று அழுத்தமாக அழைக்க
சாரி சாரி கோபப்படாதிங்க சார்.. இவன் கோபமாக திரும்பி நிற்க… இப்போது விவேகா அவன் அருகில் வந்து சார்… இப்போ உன்னை வீட்டுக்கு கொண்டு போய் விடனும் அவ்ளோ தான காரில் ஏறு….
ஒரு சிறிது நேரம் யோசித்தாள்.. ம்ம் சரி வாங்க போய் பார்க்கலாம்… அப்போதும் இன்பா கோபமாக இருக்க , விவேகா அவன் அருகில் சென்று ராகவ் சார் பிளீஸ் … இப்போது அவள் கைகளை தட்டி விட்டு கார் கதவினை திறக்க , டேய் ராகவ் ஓவரா பண்ணாத வா போகலாம்… இப்போது அவளை இழுத்து அணைத்து நெற்றியில் முத்தம் வைத்தவன்.
விவேகா இந்த மாதிரி இன்னொரு முறை இப்படி உன் முகம் எல்லாம் இப்படி பண்ணாத என்னால உன்னை இப்படி பார்க்க எனக்கு இங்கே வலிக்குது டி… என்று இதயத்தை காட்ட… ம்ம் நீ சொல்லுவ டா … உனக்கு என்ன எனக்கு தான் பிரச்சனை… என்ன பிரச்சனை என்று அவன் கேட்க , ம்ம் நீ எதோ பெருசா எனக்கு ஒரு ஆப்பு வைப்பது போல் எனக்கு தோணுது டா…
எப்பவும் உன்னோட பார்வை இப்படி தப்பா தான் இருக்குமா போடி லூசு… ஆமா எப்டி இப்போ மனசு மாறுன என்று இன்பா கேட்க முழுசா நெனைஞ்சதுக்கு அப்புறம் முக்காடு எதுக்கு அது தான் … அப்போ நீ ஒத்துக்கற..
ம்ம் கனவு காணாத ராகவ் நான் உன்னை கழட்டி விட்டு விடுவேன்.இப்போது அவள் உதடுகளை பிடித்து திருகியவன் ஹே இதுக்கு நான் ரிடர்ன் போகும் போது கவனிக்கிறேன். வா உள்ளே போகலாம் என்று அவள் தோள் மேல் கை போட்டு கொண்டு அழைத்து செல்ல கையை எடு முதலில் , ஹே இது என் தாத்தா வீடு..
அவங்க வசு மேம் கிட்ட சொள்ளிடுவாங்களா ராகவ் எனக்கு பயமா இருக்கு டா… இன்பா அவள் கைகளை பிடித்து நடந்து கொண்டே ம்ம் சொள்ளிடுவாங்க .
அவள் அதே இடத்தில் அடுத்த அடி எடுத்து வைக்காமல் இருக்க இப்போது இன்பா அவளை பூ போல் தூக்கி கொண்டான். ஹே விடு டா நான் இப்படியே போயிடறேன்… பிளீஸ் கீழ விடு ராகவ் இப்போ எதுக்கு டா தூக்கின…
பேபி இப்போ நான் சொல்றத கேளு நான் எங்க மாம் கிட்ட மாம் விவேகா தான் என்னை லவ் டார்ச்சர் பண்ணா மாம் அப்டின்னு சொல்லிடுவேன்.
ஹே பிளாக் லைஸ் .. பிளாக் லைஸ் இது என்று அவள் சிணுங்கி கொண்டே இறங்க முயற்சிக்க என்னடி இது ….
கருப்பு பொய் … லூசு நான் உன்னை டிரன்ஸ்லேட் பண்ண சொல்லல….
இறக்கி விடு நீ என் பின்னால் சுற்றி டார்ச்சர் பன்னிட்டு என்னை சொல்றியா அது தான் பிளாக் லைஸ்…
அண்ட் ஒன் திங்க் எனக்கு லூசுனு சொன்னா பிடிக்காது.
அப்போ இனி சொல்ல மாட்டேன் … சாரி பேபி…
உன்னோட சாரி எனக்கு வேணாம் பிளீஸ் என்னை இறக்கி விடு…
சரி அப்டியே சொல்லு நான் தான் உன் பின்னாடி சுத்துனேன்..
இப்போ அதுக்கு என்ன என்று அவள் இதழ்களில் குனிந்து இன்பா முத்தம் கொடுக்க வர,
க்கும்… என்று ஒரு சத்தம் கேட்க இன்பா யார் என்று திரும்பி பார்க்க அது கிருஷ்ணன் தான் விவேகா இன்பாவிடம் ஹே இறக்கி விடு ….
இந்த ரணகளத்துலயும் உனக்கு முத்தம் தேவை தானா… ஹே இறக்கி விடு டா என இன்பாவின் காதுக்கு அருகில் சொல்ல
ஓல்டு மேன்…. விட விவேகா இன்பாவுக்கு பின்னால் நின்று கொண்டாள்.
இன்பா அவள் கைகளை பிடித்து கொண்டான்.
குட் மார்னிங் சார் என்று விவேகா சொல்ல, இன்பா விவேகாவிடம் வாட் ஸ் திஸ்… தாத்தான்னு சொல்லு
ஸாரி சார்… விவேகா சரியா உங்க பேரு…
ம்ம் சரி தான் சார்…
விவேகாவை இன்பா முறைத்து அவள் கைகளை விட …
ராகவ் பிளீஸ் டென்ஷன் ஆக வேணாம்…
அவ சின்ன பொன்னு…
கிருஷ்ணன் சிரித்து கொண்டே காலேஜ் ல தான் சார் இப்போ வீட்டில் நீங்க என்னை காலேஜ் ல பார்த்து இருக்கீங்களா….
இல்ல என்பது போல் தலை அசைத்தாள்.
அப்போ தாராளமாக தாத்தானு கூப்பிடலாமே
விவேகா மா என்னை தாத்தான்னு கூப்பிட மாட்டீங்களா…
நானா.. நான் எப்டி… என்று இவள் யோசிக்க பின்னால் பூம்பாவை வந்தாள்.
க்கும்.. டார்ல்ஸ் என்று இன்பா அருகில் செல்ல நீ வர வேணாம்..
விவேகா தானே ம்ம் என்று தலை ஆட்டினாள்….
அப்போ வாங்க உள்ள போலாம் அழகா இருக்க டா மா நீ ….
தேக்ஸ் ….
வசு மேம் அம்மா, அப்பாவா என்று கேட்க
கிருஷ்ணன் சிரித்து கொண்டே வசுமதி எங்க பொன்னு…
உடனே விவேகா அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டாள்.
ம்ம் எப்போதும் சந்தோஷமா இருக்கனும் மா…
விவேகா உடனே தலை குனிந்து கொண்டாள்.
உள்ளே வா மா….
விவேகா இன்பாவை பார்க்க அவன் கண் அசைத்தான்.
அட வா மா என்ன பயம் இங்கே யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க…
இது உன்னோட வீடு, இப்போது விவேகா இன்பாவை பார்க்க அவனை எதுக்கு பார்க்கிறாய்.அவன் ஒரு வேஸ்ட் பெல்லோ நீ வா மா… என அவளை அழைத்து கொண்டு பூம்பாவைஉள்ளே கூட்டி சென்றனர்.
கிருஷ்ணன் இன்பாவை பார்த்து ககும்… டெல் மீ…. இப்போ வரும்போது என்ன பண்ண…. சோ வாட், அவளை தூக்கி கிட்டு வந்தேன் நீங்க கொஞ்சம் லேட்டா வந்து இருக்கலாம்… ஏன்…. ஒரு கிஸ் போயிடுச்சு ஓல்டு மேன்…. ஹே ராஸ்கல்… எப்படி அந்த கேர்ள் இப்படி மாற்றினாள்… இட்ஸ் மிராக்ள் என்று புன்னகைத்தார்…. இன்பா இதை கேட்டு கண்ணகுளி தெரிய சிரித்தான்.
இன்பா இவள் எல்லாரையும் சீக்கிரம் ஓட்டி விடுகிறாளே. என மனதில் நினைத்துக் கொண்டு இவனும் உள்ளே சென்றான்.
விவேகாவுடன் நன்றாக பாவை பேசி பழகி விட்டார். வீட்டின் உள்ளே சென்றதும் நேராக சாமி கும்பிடும் அறைக்கு அழைத்துச் சென்று அவளுக்கு தலையில் மல்லிகை பூ வைத்து விட்டு நெற்றியில் குங்குமம் வைத்து விட்டார்.
இன்பா தன் பாட்டியை பார்த்து கொண்டே இருந்தான். இவளை அமர வைத்து கைகளை பிடித்து கொண்டு பேச விவேகாவும் பாவையுடன் நெருக்கமானாள்.
நம்ம காலேஜ் ல தான் படிக்கிராயா. ம்ம் ஆமா அம்மச்சி சாரி சாரி தெரியாமல் கூப்பிட்டு விட்டேன் என்று விவேகா சொல்ல
அவள் நெற்றியில் முத்தமிட்டு நல்லா இருக்கு நீ இப்படியே கூப்பிடு மா…. இங்கே சில பேரு என்னை மறந்து விட்டார்கள் நீயும் அப்படி பண்ண மாட்ட தானே
ம்ம் பண்ண மாட்டேன்… இன்பா பாவையிடம் பேச வர… யாரும் என் கிட்ட பேச வேணாம்… பார்க்க வேணாம்… இனி என் பேத்தி வருவா…
என்னை பார்க்க உன் அம்மா, நீ ,சுபா, அந்த அருண், சிபி, வருணி, இளவழகன் யாருக்குமே நான் நியாபகம் இல்ல தானே நீ வந்தால் உன் தாத்தாவை மட்டும் பார்த்து விட்டு போகிறாய் என்று சோகமாக பேச
நானும் உங்க தாத்தாவும் இங்கே தனியாக இருக்கோம் என்று வருத்தப்பட்டு பேச
சாரி, சாரி டார்ல்ஸ் அதுக்கு தான் உனக்காக மட்டும் தான் நான் விவேகாவ கூட்டி வந்து இருக்கிறேன் .
என் மேல் எதுக்கு இவ்லோ கோபம்…
இப்போ நீ பேசல அப்புறம் ….
இப்போது சிரித்து கொண்டே கிருஷ்ணன் மை பாய் நீ கூட்டி வரல, அப்படினா நான் அருண் கிட்ட சொல்லுவேன்….. உடனே விவேகா திடுக்கிட்டு பார்க்க, நீ அவனோட ஜூனியர்ன்ன எங்கிட்ட சொல்லி இருக்கான் என்று பேச்சு மாற்றினார்.உடனே இன்பா கோபம் கொள்ள
அம்மச்சி பாவம் இன்பா ஸார் விட்டு விடுங்கள் . சிறிது நேரம் கழித்து உனக்காக தான்.
ம்ம் என்னை ஆசையா அம்மச்சி னனு கூப்பிடற உன்னை பார்த்தால் எனக்கும் உன்னை செல்லமா கூப்பிடனும் போல் இருக்கு…
இன்பா பாவையின் கைகளை பிடித்து உங்களுக்கு எப்டி கூப்பிட தோணுதோ அப்படி கூப்பிடுங்க…
ராகவ் நீ ஒன்னும் சொல்ல வேணாம். நான் விவேகாவை குட்டி பொன்னு மம் வேணாம் இது நல்லா இருக்கு சின்ன குட்டி ஒகே வா
இன்பா இதை கேட்டு சிரித்தான் சின்ன குட்டியா. . குட்டி சாத்தான் அப்டின்னு கூப்பிடுங்க இல்ல குட்டி கேடி….
விவேகா முறைக்க, ராகவ் என்ன என் முன்னாடியே அவளை கஷ்ட படுத்துறியா…
விடுங்கள் அம்மச்சி….. உடனே பாவை,விவேகா மா நான் அவனை விடுகிறேன். ம்ம் ரொம்ப தேங்க்ஸ் அம்மச்சி.. டார்ல்ஸ் இவ பேசறது எனக்கு ஒன்னும் புரியல …
குட்டி கூப்பிடற மாறி தான் கூப்பிடனும் நீங்க தான் இப்படி கூப்பிடரீங்க…
இதை எல்லாம் பார்த்து கொண்டே கிருஷ்ணன் செய்திதாளை வாசித்து கொண்டும் விவேகா மற்றும் பாவையை பார்த்து கொண்டு இருந்தார்.
ம்ம் போதும் போதும் அவ புராணம்…
தொடரும்….