EPISODE 1
கல்யாணத்துக்கு இன்னும் மூன்று நாட்கள்.. நீண்ட நாள் கழித்து மிகப்பெரிய திருமணம்.. அனைத்து வேலைகளும் தடபுடலாக நடந்து கொண்டு இருந்தது. முக்கியமான ஆட்கள் இன்னும் வர வில்லை. யாரு அந்த முக்கியமான ஆளு? ஒரு நிமிடம்!. ஒரு நிமிடம்!. இங்கே யாருக்கு கல்யாணம்? வாங்க நம்ம இந்த கதைக்குள் போலாம்! ம்ம் கதைன்னு சொல்றத விட ஏய் சண்டக்காரால இருந்து மொத்த ஆளும் சூர்ய தேவ் வீட்டுக்கு வந்திருக்காங்க..
சரி சரி யாரு டா அவ்ளோ பெரிய முக்கியமான ஆள்? இந்த கல்யாணத்துக்கு வர காத்து இருக்காங்க?
வேற யார் நம்ம dev team and devil team தாங்க..
“அவன் வேணும்னு பண்றான்! பிளான் பண்ணி என்னோட போனை எடுக்க மாட்டிக்கிறான். நான் போன் பண்ண மாட்டேன்! என்னால் அவனை கூப்பிடவே முடியாது!” என கோபத்துடன் சினத்துடன் மிதுன் தேவ் கத்த டேய் மிதுன் கொஞ்சம் மெதுவா பேசு என் காது வலிக்குது அப்டின்னு நான் புலம்புறேன்.
“ அண்ணா இப்போ நீ சொல்றயா நான் இதழ் கிட்ட சொல்லவா?” என சிவன்யா போனை எடுக்க.. .
“ஹே சிவி!” இரு.. என மிதுன் தேவ் தயங்கி நின்றான்.
சிவன்யா, அண்ணா பண்ணு!.
மிதுன் கடுப்புடன் அவனுக்கு அழைத்தான். சிங்கம் இறங்கினா காட்டுக்கு விருந்து இவன் வேட்டைக்கு என லியோ படத்தின் பாடல் ஒலிக்க போனை எடுத்தான் அவன்? எவன் அவன்? Bloody sweet ருத்ரன் என்னும் ரவுத்திரன்.. சுருக்கமாக சொல்ல போனால்.. “தீரன்!”
“Hello!”
நான் மிதுன் தேவ் speaking!..
ருத்ரன், பேசிட்டு போ எனக்கு எதுக்கு போன் பண்ண? என்று மிடுக்குடன் குரல் கேட்டது.
மிதுன், ஹே அவன் வருவான்னு நீ தானே சொன்ன? இன்னும் த்ரீ டேஸ் தான் இருக்கு! மகி என்னை கேட்கிறாள். தாத்தா வேற ரொம்ப எதிர் பார்த்து கொண்டு இருக்காங்க! நீ எப்போ வர போறான்? அதே போல நீ எப்போ வருவ?
அது முடியாது!.
மிதுன் தேவ் கொஞ்சம் சூசகமாக சரி விடு நான் இப்போவே குக்குவுக்கு போன் பண்ணி சொல்றேன்.
ருத்ரன், ஹே இரு என்னோட பார்ட்னர் ஆன் தி வே!. ஆமா டெவில் டீம் ராட்சாசன் மிஸ்டர் நிதின் பிரகாஷ் வந்தாச்சா? அந்த ராட்சஸி அடங்காதவள் ரிதம் வந்தாச்சா?
மிதுன் கடுப்புடன் ஹே என் அண்ணாவை தப்பா பேசாத!. சிவி பாரு!.
சிவன்யா, ருத்ரன்! வாட் ஈஸ் திஸ்..
ருத்ரன், சரி சரி! உங்க மெம்பர் வந்தததும் கால் பண்ணுங்க!. நாங்க கன் மாதிரி இருப்போம்!. என போனை வைத்து விட்டான்.
மிதுன் கடுப்புடன் அய்யோ irritating.. என கடுப்புடன் அமர்ந்திருக்க..
நிவாஸ் உள்ளே வந்து கொண்டே “அண்ணா வரலயா?”
சிவன்யா, இனி தான் என சொல்லி கொண்டு இருக்கும் போதே பவா உள்ளே நுழைந்தாள். அவளுடன் இனியா வந்தாள்.. அவன் பின்னால் வெற்றி மாறன் வந்தான். நேராக மிதுனை பார்க்க..
தன் தம்பி கண் அசைக்க மிதுன் , ஹே சுவீட்டு!. என சத்தமிட பவன்யா, அமைதியா இருங்க இல்ல சக்தி அண்ணா கிட்ட சொல்லுவேன் .
மிதுன், ஹே இங்கே வாடி!. மாமாவுக்கு ஒரு கிஸ் கொடுக்குற..
வெற்றி, மிதுன் ப்ரோ விடேன் அவள் இப்போ தான் 12 th exam முடிச்சு இருக்கா டென்ஷனா இருப்பா!.
அவள் எங்கே படிக்கிரா? பராக்கு தான் பார்த்து கொண்டு இருக்கா! என சொல்லி கொண்டே இதயன் உள்ளே வந்து நேராக தன் அத்தை மகன்கள் மிதுன் தேவ், நிவாஸ், வெற்றி அருகில் போய் நின்றான்.
வெற்றி, என்ன மிதுன் அண்ணா நம்ம டீம் ல எல்லாமே present ஆனால் அங்கே காத்து வாங்குது அதுவும் sweet மேல ஈ கூட உட்கார போகுதே.. என சொல்லி கொண்டே இருக்க
அந்த நேரம் சத்தம் கேட்டது. சலங்கை சத்தம் கேட்டது மெல்லிய பதுமையாக மருண்ட விழிகளுடன் உள்ளே நுழைந்தாள். நிலா! கண்ணகுழி ஒரே ஒரு முறை தெரிந்தது.
மிதுன், நிவா உன் தங்கை!..
நிவாஸ் கண்கள் கூர்மையாக தனியா வந்தியா?
நிலா மெல்லிய குரலில் காட்ஸ் கூட தான் வந்தேன்!.
சரி போ என கூறினான்.
நிலா நேராக இனியா அருகில் போய் நின்றாள்.
ஹே நிலா எதுக்கு நிவா மாமாவை பார்த்து இத்தனை பயம்!.
நிலா, தெரியல பயமா இருக்கு!.
வெற்றி, என்ன இன்னும் காத்து தான் வாங்குது ஸ்வீட் மேல..
பவன்யா, டேய் ஓவரா வாய் பேசுற வீட்டுக்கு வா உன்னை என்ன செய்கிறேன் பார்!
ஹே போடி .. … ஒழுங்கா இரு சிவி அவள் என்னை திட்டி கொண்டே இருக்கா!.என வெற்றி சொல்ல..
சிவன்யா, ஹே எப்போ உங்க gang வரும் என சொல்ல..
அந்த நேரம் ஆரடி காற்றாக உள்ளே வந்தான். ருத்ரன்! பள்ளி கல்வி துறையில் பயிற்சியில் இருக்கிறான். பெரிய வேலை..
வாத்தி கமிங்! அ ஆ இ ஈ… என வெற்றி கிண்டல் செய்ய நிவாஸ் கண்ணகுளி தெரிய சிரித்தான்.
ருத்ரன் பார்வை அவர்கள் பக்கம் இல்லை நேராக பவன்யா அருகில் சென்றான்.
பவன்யா அவனை பார்த்ததும் கட்டி கொண்டு கன்னத்தில் முத்தம் பதிக்க..
வெற்றி, ஹே பவா தள்ளி போடி! அவனை ஹக் பண்ணாத! ஹே டாடி கிட்ட சொல்லுவேன் டி!.
ருத்ரன், பவா இங்கே ஒரு கிஸ் இந்த கண்ணம் கேட்குது! டி!.
பவா அவன் கன்னத்தில் முத்தம் பதிக்க இனியா சிரித்து கொண்டே பார்த்தாள்.
நிலா பார்வை ருத்ரன் மீது இருந்தது. தீரு எவ்ளோ மிஸ் தெரியுமா!.
ருத்ரன், இனி மிஸ் ஆகாது பேபி!. என அவளுடைய அண்ணன் தம்பி பட்டாளத்தை கண் அடித்து கொண்டே பார்த்தான்.
மிதுன் கைகளை மடக்கி கொண்டே பார்த்தான்.
ருத்ரன், சரி என்னோட பார்ட்னர்க்கு கால் பண்றேன்!.
வெற்றி, அண்ணா ஆட்டம் ஸ்டார்ட் பண்ணுவோம்! என சொல்லி கொண்டே music பிளேயர் தட்டி விட ராவடி!. ராவடி!. என பத்து தலையில் இருந்து பாடல் ஒலிக்க வேணும் என்றே மிதுன் அதிகரித்தான்.
ருத்ரன் அவனை முறைத்து கொண்டே போனை எடுத்து கொண்டு partner எங்கே இருக்க?
“சென்னை சென்ட்ரல்!” ஆன் தி வே!.. என்று மென்மையான குரல் வேற யார் சத்ய தேவ் குரல் தான்.. இறங்கி கொண்டே எதிரில் உள்ளவளை பார்த்தான்.
அவளும் அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.
ருத்ரன் போனில் மாமா சீக்கிரம் வா! உன்னை பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு? Devil team-ல எல்லாரும் present!. தெரியுமா!.
சத்ய தேவ், வரேன் வரேன்! இனி ஆட்டம் தான்!.
எதிரில் உள்ள பெண்.. stranger!. என கண்கள் மிளிர அவனை பார்த்து கொண்டு இருந்தாள்.
சத்ய தேவ், கண்ணை சிமிட்டி விட்டு tell me mis stranger என நகர்ந்தான்.
அவளுடைய பொருட்களை எடுத்து கொண்டு see you!..கிளம்பி வெளியே வர கொஞ்சம் எட்டும் தூரத்தில் கார் நின்றது.
சத்ய தேவ் போனை எடுத்து இன்னொரு எண்ணுக்கு டயல் செய்து ஹனி வந்துட்டேன்!
ஹரிணி காக்கி சட்டையில் இல்லாமல் தாவணி பாவாடையில் கண்ணுக்கு குளிர்ச்சியாக அவனை பிக் அப் செய்ய வந்து இருந்தாள்.
அவனை பார்த்து கொண்டே இருக்க..
சத்ய தேவ், என்ன அப்படி பார்க்கிற..
சக்தி இங்கேயே உன்னை கிஸ் கூட பண்ணிடுவேன்!
அவ்வாறு சொல்லிவிட்டு அவனைப் பார்க்க சத்யதேவியின் முகம் மாறியது.
என்னாச்சு சக்தி?.
சத்ய தேவ், என்னாச்சுன்னு உனக்கு தெரியாதா? என்று கடுமையான குரலில் பேச ஆரம்பித்தான்.
ஹரிணி அவளது கூந்தலை ஒரு பக்கம் போட்டுக் கொண்டு சக்தி என்ன ஆச்சுடா?
சத்யதேவ் கொஞ்சம் கடுமையான வார்த்தைகளில் “டோன்ட் கால் மீ சக்தி! ஐ அம் சத்யதேவ்!..என்று கூறினான்.
ஹரிணி இப்போ இன்னும் அத மறக்கவே இல்லையா ?
சத்தியத்தை உதட்டை கடித்துக் கொண்டே மறக்கிற மாதிரியான விஷயமா நடந்து இருக்கு என்ன மறக்க சொல்ற நீயே சொல்லு என்று கேட்டான் ஹரிணி அவனது கைகளை கோர்த்துக்கொண்டேன்.
சாரி சத்யதேவ் அப்போ உன்னை எப்படி கூப்பிடட்டும்?
நீயும் என்னை ஹனின்னு கூப்பிடு கல்யாணம் பண்ணிக்கலாமா என சத்ய தேவ் கேட்க..
ஹரிணி சிரித்துக்கொண்டே நான் உன்னை விட பெரியவ!. அது தெரியுமா!.. இப்போ யார் கூட கடலை போட்டுட்டு வந்த…
சத்தியதேவ் திடுக்கிட்டு நானா? உன்ன தவிர நான் யார் கிட்ட பேச போறேன்!
ஹரிணி, டேய் நடிக்காதடா! உன்னை பார்த்து எவளாவது பேசாமல் இருப்பாளா? அவ்ளோ டப் கொடுக்கிற..சொல்லுடா!.
அது stranger என்று கூறினான்.
ஹரிணி, ஸ்ட்ரேஞ்சர் தான் ஆனால் அது masculine gender-? feminine gender-ஆ?
Stranger அவ்ளோ தான்! சும்மா கேட்காத!. என்று சொல்லிக் கொண்டு இருவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள்.
அவர்கள் வெளியே வரவும் நித்தின் பிரகாஷ் கார் வரவும் சரியாக இருந்தது. நித்தின் பிரகாஷ் தான் ரிதமை அழைக்க வந்திருந்தான்.
அப்போ ரிதம் யார் கூட பேசிட்டு இருந்தாள்? இங்கே எங்கே ரிதம் வந்தாள்?
என்ன டா சம்மந்தமே இல்லாம story போகுதே அப்டின்னு new readers நினைச்சு இருப்பீங்க.. அதுக்காக இப்போ அறிமுகம்..
வசந்தன் மற்றும் கலை வாணி இருவரும் வயது முதிர்ந்த தம்பதிகள். கடைசியாக தன் பேரன் பேத்தி பெயர் சூட்டி விழா எடுத்த பின் சில குடும்ப சூழல் காரணமாக வீட்டில் எந்த ஒரு நல்ல நிகழ்ச்சிகளும் நடக்க வில்லை.. அவருடைய பேரன் சத்ய தேவ் மொத்த குடும்பத்தையும் பிரிந்து சென்று விட்டான். கதையின் போக்கில் உங்களுக்கே புரியும்!.
இதழ் பெரிய பெண் ஆனதற்கு சென்னையின் இருந்து பெங்களூர் கிளம்பி செல்ல வரும் வழியில் ஒரு பெரிய விபத்து நடந்து விட்டது. அதை பற்றி இப்பொழுது வேண்டாம்.
சூர்ய தேவ் – மகிழினி தம்பதிக்கு மூன்று பசங்க.. சத்ய தேவ் ( சக்தி), மிதுன் தேவ், இதழினி..
இன்ப ராகவன் – விவேகா தம்பதிக்கு ரிதம் மற்றும் ருத்ரன் என்னும் இரண்டு பிள்ளைகள்..
ஆதி – வெண்பாவுக்கு யவனிகா, யுவதிகா மற்றும் அதிரூபன் என மூன்று பிள்ளைகள்.
சூரிய பிரகாஷ் – தேஜூ தம்பதிக்கு நிதின், நிவாஸ், நிலா பிள்ளைகள்..
கார்த்திக் – மை விழி தம்பதிக்கு சிவன்யா, பவன்யா, வெற்றி மாறன்.. மூன்று பிள்ளைகள்..
உதயன் – தாரா தம்பதிக்கு இதயன், இனியா என இரண்டு பிள்ளைகள்..
இதுல மகிழினி, மை விழி, தேஜூ மூவரும் அக்கா தங்கைகள் அவர்களுடைய ஒரே சகோதரன் உதயன் இவர்களை வைத்து தான் இந்த கதை..
இவங்க மட்டும் தானா? இல்ல இன்னும் நிறைய சஸ்பென்ஸ் இருக்கு!. நீங்க எதிர் பார்க்காத திருப்பம் இருக்கு!
Finally வந்துட்டேன்..
நீங்க எதிர் பார்த்த அளவுக்கு இருக்கா? சொல்லிட்டு போங்க!.
ராகவ் darling வருவான்.. விவேகா வருவா! எல்லாரும் வருவாங்க!
யாருக்கு யார் ஜோடி அப்டின்னு நீங்க ஒரு guess பண்ணி வச்சு இருப்பீங்க! Comment பண்ணுங்க!.
உங்க comment வந்தால் தான் story எழுதுவேன் இல்லனா? எழுத மாட்டேன்!.
வருவான்!.
நாளைக்கு மீட்டிங் பார்க்காத சில பேர் பார்த்து கொள்ள போறாங்க…
Comment பண்ணுங்க ratings konjam like share pannunga..
EPISODE 2
சத்ய தேவ் மற்றும் ஹரிணி இருவரும் வீட்டுக்கு அருகில் வந்து விட்டார்கள். ஹரிணி அவனிடம் “சத்ய தேவ் பேசாமல் வேலைய விட்டு உன் கூட ரிப்போட்டர் ஆகிடவா! எவ்ளோ டென்ஷன் தெரியுமா! உனக்காக தான் இந்த வேலையில் இருக்கேன்!”
சத்ய தேவ் அவளின் கையை மெதுவாக பிடித்து கொண்டே “ ஹனி அடி வாங்க போற! ஒழுங்கா ஒர்க் பாரு!”
ஹரிணி, “டாடி திட்டுறாங்க! எனக்கு மாப்ளை பார்க்க போறாங்க! அதுக்குள் வேலையை விட சொல்லி இருக்கார்!”
சத்ய தேவ் அதே இடத்தில் நின்றான்.
ஹரிணி, “என்ன டா அப்படியே நின்னுட்ட?”
சத்ய தேவ் கோபமாக முகத்தை வைத்து கொண்டு “என்னை விட்டு வேற ஒருத்தனை நீ கட்டிக்க போறியா!”
ஹரிணி, சத்யா என அருகில் நெருங்கியவள் அவன் கன்னத்தில் முத்தம் பதிக்க..
சத்ய தேவ் “ஹே ஒரு லாங் கிஸ் கொடு! இந்த ஒரு வருட பிரிவை அந்த கிஸ் இல்லாம ஆக்கனும்!.”
ஹரிணி அவனை இரு புருவம் உயர்த்தி பார்க்க..
சத்ய தேவ் அவளின் கையை பிடித்து அழைத்து சென்றான்.
ரிதம் மற்றும் நிதின் இருவரும் கிட்ட தட்ட வீட்டை நெருங்கி காரில் வந்து கொண்டு இருந்தார்கள். நிதின் அவனுடைய முகத்தை மறைக்க மாஸ்க் போட்டு இருந்தான்.
ரிதம் திரும்பி கொண்டே “பாதுகாப்பு அதிகமா இருக்கு! அப்புறம் நீ எதுக்கு என்னை பிக் பண்ண வந்த? மித்துவ அனுப்பி இருக்கலாமே!”
நிதின் கொஞ்சம் கடுமையான குரலில் மிதுன்க்காக தான் உன்னை பிக் பண்ண வந்தேன்!.
ரிதம், ஓ ஓகே!.
நிதின், “எதுக்கு மிதுன விட்டு போன? அப்படி என்னத்தை பாரின்ல போய் இந்த ரெண்டு வருசம் படிச்ச! உனக்கும் வேணும் என்றால் இங்கே இருக்க டாப் யூனிவர்சிட்டில இதழ் கூட சிவி கூட படிச்சு இருக்கலாம்! நான் உனக்கு எல்லாம் அரெஞ் பண்ணி இருப்பேன்! After all போலீஸ் IPS ஆக ஓவர் பில்ட் அப்!”
ரிதம் கோபமாக after all IPS ஆ! நான் போலீஸ் வாரிசு!.. என் டாடி யாருன்னு தெரியும் தானே! இன்னொரு தடவை இதை பற்றி பேசாத! என அவள் சொல்ல..
நிதின் அவளின் அருகில் நெருங்கி நீட்டியை விரலை மடக்கி காட்டி என் கிட்ட ஓவர் சீன் போடாத! மிதுன்க்காக மட்டும் தான்! உன் கூட பிரென்ட்ஆ இருக்கேன்!.
ரிதம், நான் கூட அந்த சக்திய ரிவெஞ் பண்ண தான் உன் கூட இருக்கேன்! அவ்ளோ தான்! என சொல்லி கொண்டு இருக்கும் போதே அப்பார்ட்மெண்டின் நுழைவு வாயில் வந்தது.
ரிதம் அப்படியே இன்பா போல முறுக்கி கொண்டு இறங்க.. நிதின், ஹே வந்து உன் பேக் எடுத்திட்டு போ!.
ரிதம், நீ தானே பிக் பண்ண வந்த அப்போ எடுத்திட்டு வாடா! என இருவரும் சண்டையிட்டு கொண்டே வந்தார்கள்.
சரியாக லிஃப்ட் அருகில் வர அப்பொழுது தான் சத்ய தேவ் மற்றும் ஹரிணி இருவரும் லிஃப்ட் உள்ளே சென்றார்கள்.
சத்ய தேவ் உள்ளே சென்றதும் ஹரிணியை பார்க்க..
ஹரிணி அவனை கட்டி கொண்டாள். அவனும் கட்டி கொண்டு அவளின் முகத்தை திரும்பி பார்த்து கொண்டு இருக்க..
ரிதம் லிஃப்ட் பட்டனை அழுத்தவும் ஒரு முறை ஓபன் ஆக யாரோ ஒரு காதல் ஜோடி ஒட்டி கொண்டு இருப்பது போல இருக்க..
ச்ச.. ச்ச! இங்கே வெயில் ஹாட்டுன்னு பார்த்தால் அதை விட couple ஹாட் அதிகமா இருக்கே! என திரும்பி கொண்டாள்.
ஹரிணி திரும்பி ஹே லிஃப்ட் ஓபன்ல இருக்கு யாரும் பார்க்க போறாங்க!.
சத்ய தேவ், இப்போ க்ளோஸ் பண்றேன் நீ கிஸ் கொடு!. என கூற..
ஹரிணி அவளுடைய வலது கைப்ஐந்து விரல்களையும் முத்தம் போல குவித்து அவனுடைய உதட்டில் குவியல் விரல்களை வைத்து கொண்டே உதட்டில் முத்த சத்தம் கொடுத்து கண்களை மூடி கொண்டே நின்றாள்.
சத்ய தேவ் அவள் அருகில் வருவாள் என தயாராக இருக்க.. அவனுடைய இதழில் ஹரிணியின் இதழ் வராமல் விரல் குவியல் மட்டுமே இருந்தது. ஏமாற்றம் அடைந்து கண்களை திறந்து அவன் பார்த்தான்.
ஹரிணி, போதுமா சத்யா!.
சத்ய தேவ், என்ன டி நீ! ஹனி!. லிப் லாக் எப்போ தருவ!.
ஹரிணி, அது எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் டா வா வீடு வந்திடுச்சு என அவனை கைகளை அணைத்து கூட்டி செல்ல..
This is not fair ஹனி என பின்னால் சென்றான்.
ஹரிணி சிரித்து கொண்டே சத்யா! ச்சீ கீப் சைலன்ட் என சொல்லி கொண்டே கதவின் மணி அடிக்க..
கதவு திறந்ததும் தாவி கொண்டு ருத்ரன் ஹரிணிய தள்ளி விட்டு மாமா என அணைத்து கொண்டான்.
இங்கே நிதின், அந்த லிஃப்ட்ல போக வேண்டியது தானே!. இதுல பாரு ஒவ்வொரு floorம் open ஆகி போகுது!..
ரிதம், இதயமே இல்லாத நீ எல்லாம் அந்த லிஃப்ட் ல போக கூடாது.
நிதின், உனக்கும் தான் டி!. என இருவரும் முறைத்து கொண்டே அவர்களுடைய தளத்தில் இறங்கினார்கள்.
ஒழுங்கா வாய மூடு! எப்டி இப்படி பேசிட்டே இருக்க.. என நிதின் கூற..
ரிதம், உனக்கு இன்னும் ஏழு ஜென்மம் எடுத்தாலும் ஒருத்தி திரும்பி பார்க்க மாட்டாள். போடா!.
போடி!. என இருவரும் சண்டை செய்து கொண்டே வந்து சேர்ந்தார்கள்.
நிதின், காலிங் பெல் அடி டி! என சொல்ல..
ரிதம் கடுப்புடன் காலிங் பெல் தட்டினாள்.
முடியை ஒரு பக்கம் போட்டு கொண்டே ஹரிணி தோரணையுடன் கதவை திறக்க..
“டிஸ்கஸ்டிங்” என முனுமுனு சத்தம். வேறு யார் இருவரும் தான்! ரிதம் மற்றும் நிதின்!.
மித்து என ஒரு சத்தம்..
சத்ய தேவ் திரும்ப போக.. ராட்சஸி வந்துட்டா!. என ருத்ரன் கூறினான்.
சத்ய தேவ், எப்டி இருக்கா உன் உடன் பிறப்பு! என அவன் கேட்க..
ருத்ரன், devil கூட்டத்தில் இருக்காள் ராட்சஸி மாதிரி தான்! நீங்க இன்னும் அவளை பார்த்தது இல்ல தானே!.
சத்ய தேவ், அவள் முகம் மைண்ட்ல இல்ல..
ருத்ரன், I think சின்ன வயசுல அந்த பிரச்னைக்கு முன்னாடி பார்த்தீங்க? அப்புறம் அந்த நிதின், மிதுன், ரிதம் பாரின்ல இருந்து வரும் நேரம் அதுக்கு முன்னாடியே நீங்க போயிட்டீக. நீங்க ஃபாறின் ரிட்டர்ன் ஆன நேரம் அவள் ரெண்டு வருடம் படிக்க போயிட்டா! நான் அப்போவே என் அம்மா கிட்ட சொன்னேன்! பணம் வேஸ்ட் மா அவள் IPS ஆக எதுக்கு பாரின் போகனும்? அவள் பிக்நிக் போவா! படிக்க மாட்டாள் என சொன்னேன்! எல்லாம் அவளோட அப்பா உச்ச கட்ட ஆட்டம்.. மிஸ்டர் இன்ப ராகவன் ஓவர் பில்டப் கொடுத்து அவளுக்கு இன்னும் ரெக்கைய கட்டி அனுப்பி வச்சிட்டாரு பர்ட்சை மட்டும் ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணி வந்து எழுதிட்டு போறா! நெஸ்ட் வீக் mains result வர போகுது! அவள் pass ஆகலன்னா விஸ்வா மாமாவுக்கு கட்டி வைக்க சொல்லிடுவேன்!
சத்ய தேவ், நல்ல முடிவு!. என சொல்லி சிரித்து கொண்டே திரும்பினான்.
அந்த நேரம் ரிதம் முதுகு காட்டி கொண்டே நின்றாள்.
சத்ய தேவ் கண்கள் அவளை பார்க்க இங்கே மிதுன், நிதின் ப்ரோ dev team மிஸ்டர் சத்ய தேவ் finally வந்தாச்சு!. என சொல்லி கொண்டே அவனை பார்க்க..
நிதின் மற்றும் ரிதம் இருவர் பார்வையும் சத்ய தேவ் இருக்கும் பக்கம் திரும்ப சத்ய தேவ் பார்வை சிலையானது.
ரிதம் உதடுகள் நீயா?
சத்ய தேவ் உதடுகள் நீயா? என சொல்லி கொண்டார்கள்.
ருத்ரன், மாமா அவளை devil போல சாக் ஆகி பார்க்கிற!. அப்படி தானே இருக்காள்.
சத்ய தேவ், பெருசா ஒன்னும் இல்ல என அவன் பார்வை நிதின் மீது சென்றது.
மிதுன், என்ன டி ரித்து அவனை முறைத்து பார்க்கிற?
ரிதம், நிஜமாவே இவன் இவன் தான் சக்தி யா!.
மிதுன் , ஆமா! என்ன ஆச்சு என நிவாஸ் கேட்க..
அந்த நேரம் கதவு தட்ட பட்டது. அவள் வந்து விட்டாள்.
அனைவர் பார்வையும் கதவில் இருக்க.. ருத்ரன் நான் தான்! என வேகமாக கதவை திறந்தான்.
அவள் இதழில் நச்சென மச்சம் மின்ன கூந்தல் இடை தொட கொஞ்சம் குட்டையாக கைகளில் கேக் எடுத்து கொண்டே தீரா என சிரித்து கொண்டே கண்களை சிமிட்டினாள். இதழின தூரிகா..
ருத்ரன், மச்சத்துக்கு உவமை சொல்ல சொன்னால் உன் உதட்டை தான் டி சொல்வேன்! என கூறி கொண்டு இருக்க..
இதழ், சரி டா மச்ச கண்ணா! என கூறி கொண்டே நின்றாள்.
மிதுன், இவனை! டேய் யாரு!.
நான் வந்துட்டேன்!. என இதழ் தலையை எட்டி பார்க்க..
சத்ய தேவ், குக்கு! என அழைத்து கொண்டே கதவுக்கு அருகில் செல்ல நிதின் தூரி என அழைத்து கொண்டே சென்றான்.
ருத்ரன், மாட்டி கிட்ட டி இப்போ என்ன பண்ணுவ!.
இதழ், இந்த கேக்கை பிடி என அவன் கையில் திணித்து விட்டு கைகளை றக்கை போல் நீட்டினாள்.
சத்ய தேவ் அவளை அணைக்க நிதின் பிரகாஷ் கூட அணைக்க சென்றான். இருவரையும் இரு புறம் அணைத்து கொண்டாள்.
மிதுன், நானு!. என அவனும் சென்றான். அனைவரும் வெளியே செல்ல..
ரிதம், நிலா, சிவன்யா, பவன்யா, இனியா, ஹரிணி, என அனைவர் பார்வையும் ஆடவர்கள் மீது இருந்தது.
வெற்றி, சுவீட்டு வரியா நான்! உன்னை ஹக்கி பண்ணிக்கவா!.
சத்ய தேவ் குரல் கொஞ்சம் சத்தமாக யாரை ஹக் பண்ணனும்? என கணீர் குரல் ஒலிக்க..
இனியா சிரித்து கொண்டே மாமா! அது வந்து என அவள் சிரித்து கொண்டே வெற்றியை பார்த்தாள்.
வெற்றி, வேண்டாம் டி! சொல்லாத என கண்களால் கெஞ்சினான்.
நிதின், தூரி உன்னை வீடியோ காலில் பார்க்கிற அளவுக்கு நாங்க ஆகி விட்டோமா! ஒரு நாள் சிவி கூட வீடியோ கால் பேசி இருக்கலாமே!
இதழ், என்னோட எல்லா அன்னாவையும் ஒரே இடத்தில் நேருக்கு நேர் பார்க்க ஆசை பட்டேன்! அதுக்கு தான் உங்களை கஷ்ட பட்டு நம்ம தாத்தா – அம்மாச்சி மணி விழாக்கு வர வச்சு இருக்கேன் இப்போ அதை பற்றி பேசலாமா!
மிதுன், பேசு!
இதழ், அதுக்கு முன்னாடி என அவளின் பார்வை சத்ய தேவ் மற்றும் நிதின் மேல் இருக்க.
ரிதம் நகத்தை கடித்து கொண்டே சத்ய தேவை பார்த்தாள்.
ஸ்ட்ரேஞ்சர்!
ஸ்ட்ரேஞ்சர்!
ஸ்ட்ரேஞ்சர்!
ஸ்ட்ரேஞ்சர்! என சொல்லி கொண்டே அவளின் நினைவு அப்படியே நேற்று லண்டன் ஃப்ளைட் ஏறிய நாளுக்கு சென்றது.
எக்ஸ்கியூஸ் மி! கொஞ்சம் பார்த்து போங்க என சத்ய தேவ் மேலே sorry அந்த பெயர் தெரியாத ஆள் மீது மோதி கொண்டே ரிதம் சென்றாள்.
அந்த பயணம் விமானத்தில் பறந்து அதிவிரைவு ரயிலில் பயணம் செய்து இருவரும் பேசி சிரித்த அந்த தருணம் இப்பொழுது….?
தொடரும்..
இந்த அடங்காத அதிகாரா கதை சில readers க்கு புரியாமல் இருக்கும் நீந்துகின்ற வெண்ணிலா! சண்டைக்காரா படித்து வந்து படியுங்கள்.
Comment pannunga ratings konjam like share pannunga..
உனக்கும் எனக்கும்” my new novel new journey compitition story read panni பாருங்க .
EPISODE 3
ஸ்ட்ரேஞ்சர்!
ஸ்ட்ரேஞ்சர்!
ஸ்ட்ரேஞ்சர்!
ஸ்ட்ரேஞ்சர்! என சொல்லி கொண்டே அவளின் நினைவு அப்படியே கொஞ்சம் பின்னால் செல்ல.. ரிதம் பார்வை சத்ய தேவ்வை தலை முதல் கால் வரை மேய இன்னும் உள்ளுக்குள் கோபம் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. கொஞ்ச நேரத்துக்கு முன் அந்த அந்த லிஃப்ட் உள்ளே! லிஃப்ட் உள்ளே ரெண்டு பேரு என நினைத்தவள் பார்வை அப்படியே ஹரிணி மீது சென்றது.
ரிதம் கைகளை இறுக்கி மடக்கி திறந்தாள். உஷ்ன மூச்சை வெளி விட்டு கொண்டே போய் சோபாவில் அமர்ந்தாள். ரிதம் நினைவுகள் அனைத்தும் இரண்டு நாட்களுக்கு முன் லண்டன் விமான நிலையத்தில் அவள் ஏறிய நாளுக்கு சென்றது.
அந்த இடம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்க.. ஒரு லாவண்டர் வண்ண இறுக்கி பிடித்த டாப் கூடவே அதில் அவளுடைய இடை கொஞ்சமே தெரிய பாட்டம் ஜீன் கொஞ்சம் கெண்டை கால் வரை இருந்தது. மொத்த கூந்தலையும் அள்ளி பன் போல் உட்சியில் கொண்டை போட்டு இருந்தாள். அவளின் கண்ணகுளி எப்பொழுதும் ததும்பி கொண்டே இருக்க அதை உரச கொஞ்சம் குட்டி துண்டு முடிகள் அவளின் காதுகளையும் கூடவே கன்னத்தையும் விரட்டி விரட்டி மோதி கொண்டு இருந்தது. அழகான முகம் கொஞ்சம் கூட ஒப்பனை இல்லை. இதில் அவள் விவேகாவை ஒத்து இருக்கிறாள். நெஞ்சை புடைத்து கொண்டு நேர் கொண்ட பார்வையுடன் நடந்தாள். இதில் அவள் இன்ப ராகவனை ஒத்து நடந்தாள். இருபத்தி ஐந்தில் இப்பொழுது தான் அடி எடுத்து வைத்து பத்து நாட்கள்.. அவள் தான் ரிதம் இன்ப ராகவன்..
அவள் தான் ரிதம் ஒரு கையில் ட்ராலியை தள்ளி கொண்டு அதை லக்கேஜ்ல தள்ளி விட்டு அவளுடைய சின்ன பேக் தோலில் மாட்டி கொண்டு போர்டிங் பாஸ் செக் அப் என அனைத்தையும் எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தாள். பிளைட் ஏறுவதற்கு முன் ஏற்றி செல்லும் பஸ்ஸில் ஏறியவள் வாகனம் கொஞ்சம் சேக் ஆக அவளுக்கு முன்னால் இருப்பவர் மேல் மோதி விட பஸ் சரியாக விமானத்தின் அருகில் வந்து நிற்கும் நேரம் கொஞ்சம் அவள் கையை உயர்த்தி கம்பி பிடிக்கும் நேரம் இடை கொஞ்சம் தெரிய அதை சரி செய்யும் பொருட்டு அவள் கை விட அந்த நேரம் பஸ் சேக் ஆகி நிறுத்த.. அவள் பிடிக்க கிரிப் இல்லாமல் முன்னால் இருப்பவன் மேல் மோதி விட்டு எதுவும் கண்டு கொள்ளாமல் கடந்து விட்டாள்.
அனைவரும் ஃப்ளைட் ஏறினார்கள். ரிதம் அவளுடைய இருக்கையை பார்த்து சென்றவள் தன்னுடைய சின்ன பேக் எடுத்து மேலே வைத்து விட்டு திரும்ப இந்த முறை மீண்டும் பின்னால் வந்தவர் மீது மோதி விட்டாள். இந்த முறை அவர் பொறுமையாக இல்லைம்..
“ஹலோ எக்ஸ்கியூஸ் மி!” என்று அந்த ஆடவன் கேட்க.
வாட்? என கூலாக திரும்பினாள்.
அந்த ஆடவன் பேச வர… அந்த நேரம் அவளுக்கு போன் வந்தது.
“Dimple ஃப்ளைட் ஏறியாச்சா?” என கொஞ்சம் முதிர்ந்த குரல்…
“தாத்து நான் ஏறிட்டேன் மும்பை ரீச் ஆனதும் கால் பண்றேன்!” என சொன்னவள். கட் செய்து வாட் மிஸ்டர்?
அந்த ஆடவன், நானும் வந்ததில் இருந்து ரெண்டு தடவை தெரியாமல் நடந்து இருக்கும்ன்னு விட்டால் நீங்க இப்போ கூட என் மேல் மோதி என் காலை மிதிச்சு இருக்கீங்க! அட்லீஸ்ட் ஒரு பார்கிவ் கேட்கலாமே!.
ரிதம், இப்போ என்ன நீ ஒன்னும் குறைந்து போகளையே நல்லா தானே இருக்க! போ மிஸ்டர்!..
அப்போ நானும் மோதவா? என அவனும் கேட்டான்!.
ரிதம் தெனாவெட்டாக மோதித்தான் பரேன் டா!.
டா வா?
ஆமா டா!..
என்னோட மோதலுக்கு ஒர்த் இல்ல! என அவளை முறைத்து கொண்டே அவனுடைய சீட்ட பார்த்தான்.
ரிதம், ஹே கம் அகைன்!.
போடி!..என சொல்லி விட்டு அமர்ந்து கொண்டான்.
யூ!. என பார்க்க இருவரும் அருகருகே! மீண்டும் ஒரு முறைப்பு! உன்னோட பக்கத்தில் நானா? என ஆடவன் கடுப்பாகி திரும்பி கொண்டான்.
ரிதம், போடா! ராஸ்கல் என நினைத்து முனகி கொண்டே அமர்ந்தாள். அந்த எட்டு மணி நேர பயணத்தில் இருவரும் முறைப்பு மட்டும் தான் பரிமாறி கொண்டார்கள். அதை விட அந்த ஆடவனை அங்கு இருக்கும் விமான பணிப்பெண்கள் அத்தனை கவனிப்பு அந்த ஆடவன் யாரு?
ரிதம், எங்கே பார்த்தாலும் ஜொல்லு ஊற்றி கொண்டு திரியுராலுங்க! வேற ஆளே கிடைக்கலயா! என அவள் முனகி கொண்டே வந்தாள்.
இந்திய நேரப்படி அதிகாலை நான்கு மணிக்கு ஏறிய பயணம்.. ஒன்பது மணி நேரம் கழித்து வந்து சேர்ந்தார்கள்.
ரிதம் இறங்கியதும் அவளுடைய லக்கேஜ் பார்த்து எடுத்து கொண்டு வந்து அமர்ந்தவள் தன் தாத்தாவுக்கு போன் செய்து சொல்லி விட்டு தன் அம்மாவுக்கு அழைத்தாள்.
ஹே பேபி எனக்கு சென்னை ஃப்ளைட் டிக்கெட் சென்ட் பண்ணு!.
விவேகா, இந்த நேரத்தில் எந்த பிளைட்டும் இல்லையே உனக்கு லோக் மானி திலக் LTT express ல சென்னை சென்ட்ரல் புக் பண்ணேனே! உன்னோட டாடி சொல்லலயா?
வாட் தி ஹெல்? என்ன நினைத்து கொண்டு இருக்க நான் போய் எப்படி டிரெயின்ல? என்ன விளையாடி கொண்டு இருக்கியா? என்ன டி நினைத்து கொண்டு இருக்க?
விவேகா டென்ஷன் ஆகி என் கிட்ட குதிக்கும் வேலை வைத்து கொள்ளாத வெளுத்து போடுவேன் ராஸ்கல்! உன் அப்பன் கிட்ட பேசிக்கோ! அப்புறம் இந்த சட்டை பேன்ட் இது மாதிரி லோ ஹிப் தெரியுற ட்ரெஸ் போட்டுட்டு நீ வந்தது தெரிந்தது. கண்ணம் பளுக்கும் டி! ஆல்ரெடி ருத்ரன் உனக்கு டிக்கெட் சேர் பண்ணிருக்கான். கிளம்பி வந்தால் வா அப்படி இல்லன்னா மறுபடியும் படிக்க போயிடு! இந்த போலீஸ் வேலை எல்லாம் வேணாம்!
ரிதம் அதே இடத்தில் அமர்ந்து கொண்டு உதட்டை கடித்து கொண்டு கடுப்புடன் இருந்தாள். அவள் போன் வைத்த அடுத்த நொடி மீண்டும் அழைப்பு! டிம்பிள்!..
ரிதம், டாடி! அவள் என்னை திட்டிட்டா! டிரெயின்ல வர ஒன் டே எப்டி வர முடியும்? எனக்கு கம்பார்ட் இல்ல! எதுக்கு டாடி அவளை கல்யாணம் பண்ணீங்க! அப்போவே என் கிட்ட நீங்க கேட்டு இருக்கலாம்! நான் வேற ஆப்ஷன் கொடுத்து இருப்பேன்! எனக்கு ட்ரெஸ் போட கூட independent இல்லையா! அதை விட 3rd ac புக் பண்ணி இருக்கா! First கிளாஸ் புக் பண்ணி இருக்கலாம். அவள் என்னை potrait பண்றா டாடி!
லிசன் பேபி! என் டிம்பிள்! அவள் பட்டி காடு! எதோ உன் டாடிய ஏமாற்றி விட்டாள். நீ அழாத செல்லம்! டாடி உனக்காக புதுசா ரெண்டு டாட்டாய்ஸ் கூடவே டாபர் டாக் வாங்கி வச்சு இருக்கேன்! அக்வெரியம் போல new fish இன்னும் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு வேனாவா என்று இன்ப ராகவன் தன் பெண்ணை கொஞ்சி கொண்டு இருந்தான்.
இன்பா இப்படி பேசி கொண்டு இருக்க அவனுக்கு பின்னால் ருத்ரன், தீரா மா நீ போலீஸ்காரனை கல்யாணம் பண்ணல! ஒரு வேட்டைகாரணை கட்டி இருக்க ஆமை, முயல், டாபர் டாக், வேற என்ன ஃபிஷ், எப்டி மா! இப்போ டாங்கி ஒன்னு லண்டனில் இருந்து வருது ஒரு நாள் டிரெயின்ல வந்தால் கரைந்து விடுவாளா? என சொல்லி கொண்டே விவேகா கிட்ட ஆ வாங்கி கொண்டே அவனுடைய அமர்ந்து கொண்டே தன் தந்தையை பார்த்தான்.
எதிரில் இருந்த ஸ்மைலி பந்துகளை போர்சாக எடுத்து அவன் மேல் இன்பா வீச அது பிய்த்து கொண்டு கீழே விழுந்தது.
ராகவ்! என விவேகா அழைக்க…
இன்பா, விவேகா! என கொஞ்சம் கடுமையாக அழைத்தான். .
விவேகா, என்னங்க இது இப்படி பையன் மேல என பற்களை கடித்து கொண்டு மரியாதையாக அழைத்தாள்.
இன்பா, அவனை வாய மூடிட்டு போக சொல்லு இங்கே என் முன்னாடி வாய் பேச கூடாது. இது என்னோட வீடு! என்னோட சம்பாத்தியம்! அவன் இன்னும் ஸ்கூல் வாத்தி அதுல டிரையினி பீரியட்ல தான் இருக்கான்! இல்ல இப்போவே இவனை தூக்கி விடுவேன்!.
ருத்ரன், மா பயமா இருக்கு! நடுங்குது பாய்! என தன் தந்தையை முறைத்து விட்டு கிளம்பி விட்டான்.
ரிதம், டாடி! டாடி!.
இன்பா தன் பெண்ணின் குரல் கேட்டதும் கண்ணகுளி தெரிய சிரித்து கொண்டே பேபி டாடிக்காக வாங்க..
ரிதம் கொஞ்சம் அசுவாச படுத்தி கொண்டே ஒன்லி உனக்காக மட்டும் டிம்பிள் என சொல்லி விட்டு போனை வைத்தவள். முதலில் ac ஹால் புக் செய்து ஓய்வு எடுத்து விட்டு உணவு உண்டு உடை மாற்றி கொண்டு ஃப்ரெஷ் ஆகி டிக்கெட்டை பார்த்தவள். அந்த நேரத்துக்கு ஏற்ப காட்கோபரில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் கிளம்பினாள்.
இரவு ஏழு மணிக்கு அவளுக்கு டிரெயின் வந்ததும் கடுப்புடன் முனங்கி கொண்டே வீட்டுக்கு வந்து உங்களை என்ன செய்கிறேன் பாருங்க! நான் நேரா வீட்டுக்கு வரல.. மிதுன பார்க்க போறேன்! Irritating என சொல்லி கொண்டே ஏறினாள்.
அவளுடைய சீட் அருகில் வந்ததும் பெட்டியை அடியில் போட்டு அமர்ந்து கொண்டாள். கண்களை மூடி அமர்ந்து இருந்தாள்.
எக்ஸ்கியூஸ் மி இது என்னோட சீட்! என குரல்.. அடடே Rac side upper ரிதம் lower அவன்..
ரிதம் மெதுவாக கண் விழிக்க.. அவன்?
எதுக்கு என்னை ஃபாலோ பண்ணிட்டு இங்கே வந்த?
இப்படி தப்பா நினைக்காதீங்க! எனக்கு கண்ணு நல்லா தெரியும்!
ரிதம், யூ!
ஆடவன், ஹலோ இது Rac நீ தான் என் கூட வர ஆளா?
ரிதம் அவளுடைய டிக்கெட்டை பார்த்து விட்டு இல்ல எனக்கு மேலே!.
ஆடவன், அப்டியா ஒகே அப்போ மேலே ஏறிக்கோ இது R ac!.
ரிதம், அப்டியா சரி ஓகே என சொல்லி கொண்டே அவள் மெதுவாக மேலே ஏறிட தடுமாறி கீழே சரிய..
போச்சு! என அவமானத்துடன் அவள் தடுமாற அவள் கீழே விழாமல் ஆடவன் அவளை பிடித்து கொண்டான். கண் இமைக்கும் நொடி தான்! அவள் கீழே இருந்தாள்.
பார்த்து! கொஞ்சம் கவனம் வேணும்!
ரிதம், தேங்க்ஸ் ஸ்ட்ரேஞ்சர்
யுவர் வெல்கம் ஸ்ட்ரேஞ்சர்!. என ஆடவனும் சொல்ல.. ரிதம் கண்ணகுளி இரண்டும் ததும்ப கொஞ்சம் சிரித்தாள்.
அந்த நேரம் அந்த ஆடவனுடைய இருக்கையில் பாதி சொந்தக்காரர் வந்தார்.
அந்த ஆடவன் கனிவாக பேசி விட்டு அமர்ந்து கொள்ள… ஆடவனுடன் கூட வரும் பயணி பூனேவில் இறங்கி கொள்வார். டிக்கெட் பெங்களூர் வரை போட்டு இருந்தார்.
ரிதம் இந்த முறை மெதுவாக கவனத்துடன் மேலே ஏறி கொண்டாள். அவர்களுக்கான படுக்கை விரிப்புகள் கொடுக்க பட்டது.
அந்த ஆடவன் அருகில் இருக்கும் பயணிக்கு கொடுத்து விட்டு டிரெயின் கதவுக்கு அருகில் போய் நின்று கொண்டே தன் வீட்டு நியபகத்தில் குடும்ப படங்களை பார்த்து கொண்டு இருந்தான்.
அந்த நேரம் போன் வந்தது. ஹலோ டாடி!.
சூர்யா, சத்ய தேவ் எங்கே இருக்க? உன்னை யாரு டா டிரெயின்ல வர சொன்னது? அவசர வேலைன்னு போயிட்ட! மகி உன்னோட நினைப்பு தான்! பிளைட்ல வந்து இருக்கலாமே!
சத்ய தேவ் சிறு அமைதிக்கு பிறகு அது எப்படி வந்தாலும் நான் வீட்டுக்கு வர மாட்டேன்! மை விழி சித்தி வீட்டுக்கு தான் போவேன் என உங்களுக்கு தெரியாதா!
சூர்யா, சத்ய தேவ் இன்னும் என்ன பிடிவாதம்! உங்க வசந்து தாத்தாவுக்கு மணி விழா நீங்க எல்லாரும் ஒற்றுமையா சேர்ந்து க்ரூப் போட்டோ பிடிக்கணும் என சொல்லி இருக்கார்! அவ்ளோ பெரிய ஆக்சிடன்ட் நடந்ததுக்கு அப்புறமும் அவர் மனசுல நீ தான் இருக்க..
சத்ய தேவ், டாடி! போதும்! நான் தான் வரேன்னு சொல்லிட்டேன் தானே! வருவேன்! ஆனால் நம்ம வீட்டுக்கு வர மாட்டேன்!
சூர்யா எதுவும் பேச வில்லை.
சத்ய தேவ், நீங்க என்னை புரிந்து கொள்ள வில்லையா டாடி!.
சூர்யா, இல்ல சத்ய தேவ்! என் பையன் பற்றி எனக்கு தெரியும்!
அது என் டாடி! .
சூர்யா, சரி சீக்கிரம் வா! உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்க எனக்கு ஆசையா இருக்கு!
சத்ய தேவ், ராம் மாமா கிட்ட பேசுங்க!
சூர்யா சிரித்து கொண்டே போன் வைத்து விட்டான்.
சத்ய தேவ் மென்னகையுடன் அந்த இயற்கை காட்சிகளை பார்த்து கொண்டே வந்தான்.
அவன் திரும்பி கதவை திறக்க அந்த நேரம் ரிதம் கதவை திறக்க முயற்சி செய்தாள்.
சத்ய தேவ் விட அவள் திறந்து வெளியே வந்தவள். சாரி என சொல்லி கொண்டே ரெஸ்ட் ரூம் சென்று விட்டு திரும்பினாள்.
சத்ய தேவ் நின்று கொண்டு இருக்க..
ஹே ஸ்ட்ரேஞ்சர்!.
சத்ய தேவ் திரும்பி பார்த்தான்.
தூங்கலயா?
ரெண்டு பேர் எப்படிங்க அதுல தூங்க முடியும் அவரு என்னை விட பெரியவர் இட்ஸ் ஓகே அவரே தூங்கட்டும்!
ரிதம், ஓகே! என கைகளை கழுவி விட்டு சேனிடைசர் மற்றும் மாஸ்க் என அனைத்தும் போட்டு இருக்க..
சத்ய தேவ் சிரித்தான்..
எதுக்கு சிரிக்கிற?
சத்ய தேவ், இது தான் மேடம் க்கு ஃபர்ஸ்ட் டைம் போல டிரெயின் ட்ராவல்!
ஆமா! என ரிதம் கூற..
எனக்கு டிரெயின் ட்ராவல் பிடிக்கும்!.. என இருவரும் பேச ஆரம்பிக்க ரிதம் அதே இடத்தில் நின்று பேச ஆரம்பித்தாள்.
பேச பேச பேசி கொண்டே இருக்க தோன்றியது. பூனே வரை பேசினார்கள். அதன் பின் அந்த பயணி இறங்கி கொள்ள..
சத்ய தேவ், எனக்கு தூக்கம் வருது! என சொல்லி கொண்டே செல்ல..
ரிதம், ஸ்ட்ரேஞ்சர்!.
ம்ம்!
நான் உங்க சீட் ல தூங்கவா! நீங்க என்னோட!
சத்ய தேவ் சிரித்து கொண்டே வாங்க! என சென்றான்.
ரிதம் படுக்கையை மாற்றி அவளுக்கு தயார் செய்து கொடுத்து விட்டு அவன் மேலே ஏறி படுத்து கொண்டான்.
இந்த பயணம் ஏனோ உதட்டுக்குள் இனித்தது.
அடுத்த நாள் காலை அவளுக்கு முன் எழுந்து சுத்தமாக ஃப்ரெஷ் ஆகி இருந்தான்.
ரிதம் 11 மணி வரை தூங்கி கொண்டு வந்தாள்.
சத்ய தேவ், எப்படி இவளுக்கு இப்படி தூக்கம்! மோசன், யூரின் எல்லாம் வராதா! என அதிசயித்து பார்த்தான். பொண்ணுங்க இப்படி தான் போலயே ஹரிணி, இதழ், பவா, நிலா, இனியா, சிவி கூட இப்படி தான்! என அவன் காலையிலேயே enthusiasm நிறைந்து இருந்தான்.
ரிதம் காதுகளில் கேளா, நாஸ்டா, மிட்டா தஹி, பாணி பாட்டில் என சத்தம் கேட்க மெதுவாக கண்களை திறந்தாள்.
ஆறடி ஆண் மகன்! கொஞ்சம் கூட தேவையில்லாத சதை இல்லை. அடர்ந்த புருவம் அந்த கைகள் ம்ம்! அவன் கேசம்! அவனது குரல்! கண்கள்! இந்த கண்கள் ஏன் பழக்கப்பட்ட கண்கள் போல இருக்கிறது. அவனை பார்த்தால் வம்படியாக சண்டையிட தோன்றுகிறது. அவனது பொறுமை இது வரை எந்த ஆண்களிடமும் பார்த்தது இல்லை.. மிதுன் தேவ் அதிகார பாசம் மட்டும் தான் அவனிடம், நிதின் அவன் மனிதனே இல்லை வேற்று உலக வாசி! எதோ வேறு உலகத்தில் பயணிக்க வைக்கிறான். என வைத்த கண் வாங்காமல் இன்ச் இஞ்சாக அளந்து கொண்டு இருந்தாள். ஒன்னுமே பண்ணாம மெல்ட் பண்றான்! என நினைத்தவள்..
இப்பொழுது நனவு உலகத்தில் தன் எதிரில் அந்த ஹரிணியுடன் ஒட்டி கொண்டு இருப்பவனை பார்த்தாள்.
தொடரும்…
EPISODE 4
இதழ் அனைவரையும் பார்த்து “ஓகே அண்ணாஸ் அண்ட் அக்காஸ் இப்போ எதுக்காக உங்க எல்லாரையும் இங்கே வர வைத்து இருக்கேன்? அதுக்கு காரணம் உங்களுக்கே தெரியும்! நம்ம வீட்ல நிறைய பங்ஷன் நடந்தாலும் அதுல சத்ய தேவ் அண்ணா இருக்க மாட்டான். அவன் வரும் பங்ஷன்க்கு நிதின் அண்ட் மிதுன் அண்ணா வர மாட்டான்!”
வெற்றி, “அடுத்து பேசு கா! எல்லாரும் முறைக்கிராங்க!”
இதழ் கடுமையான பார்வையில் அனைவரையும் பார்த்து கொண்டு “இப்போ நான் இங்கே இருக்கணுமா! இல்ல கிளம்பவா?” என தன் அண்ணன்கள் அனைவரையும் பார்த்தாள்.
இருவரும் அமைதியாக பார்க்க.. இதழ் கொஞ்சம் அசுவாச படுத்தி கொண்டு “நம்ம தாத்தா அம்மச்சிக்கு 60th மேரேஜ் மணிவிழா நடக்க இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு! அதனால்..!” என அவள் பேச வர..
உடனே ருத்ரன்… அது!. என ஆரம்பிக்க..
இதழ், “டேய் நீயும் இதே ஃபேமிலி தான்! கொஞ்சம் சட் பண்ணு!.”
“இதென்னா புரியல.. உனக்கு நான் என்னன்னு சொல்லு!”என ருத்ரன் அவளை பார்க்க..
மிதுன் கோபத்துடன் “ ரித்து உன் தம்பி வாய் வெத்தலை பாக்கு போட்டுக்கும் ஒழுங்கா கம்முன்னு இருக்க சொல்லு டி!”
இதழ் சிரித்து கொண்டே “கீப் சைலன்ட்! அதனால் எல்லாரும் இந்த பங்ஷன்ல இருக்கணும்! அண்ட் நம்ம அவங்களுக்கு பெஸ்ட் மோமன்ட் கிரியேட் பண்ணி தரணும்! ஓகே வா!..” என அனைவரையும் பார்த்தாள்.
நிதின் மற்றும் சத்ய தேவ் பார்வை இரண்டும் மோதி கொண்டு இருக்க..
ஹரிணி, சத்யா! விடு! என கைகளை பிடித்து கொண்டாள்.
இதழ், “நான் கேட்டதுக்கு பதில் வரல..!”
ருத்ரன், “எனக்கு கல்யாணத்துக்கு ஓகே!”
மிதுன் வேகமாக அவன் அருகில் பாய செல்ல..
சத்ய தேவ் பார்வை அவன் மீது ஆல விழுந்தது.
மிதுன், “எதுக்கு டா முறைக்கிற? அவன் வாயை மூடிட்டு இருக்க சொல்லு!”
ரிதம், “மிதுன் நீ போய் அவனை அடி! எப்போ பாரு திமிர் பேச்சு தான்!”
நிதின் சாதாரணமாக சேர்க்கை அப்படி தானே இருக்கு..
ரித்து சிரித்து கொண்டே “கரெக்ட் நிதின்! ” என அவர்களை பார்த்தாள்.
இதழ், “சிவி அக்கா வா நம்ம கிளம்பலாம்! எனக்கு நாளைக்கு டெமோ செமினார் இருக்கு! முதன் முதலாக வைவா அட்டேன் பண்ண போறேன்! அதுக்கு சில கேஸ் எடுத்து படிக்கணும் நீ தானே அந்த லாயர் கிட்ட ஜுனியரா இருக்க எனக்கு கொஞ்சம் கரெக்சன் பாரு! ”என அழைத்தாள்.
குக்கு! என சத்ய தேவ் அழைக்க..
“யாரும் என் கிட்ட பேச வேணாம்! நீங்க எப்போவும் மாற மாட்டீங்கன்னு தெரிந்து போச்சு என்னோட B.A.BL ல ஒரு நாள் கூட லீவ் போடாமல் எல்லா நாளும் படித்து வந்த நான் இத்தனை நாள் கழிச்சு உங்க எல்லாரையும் ஆசையா பார்க்க வந்தேன்! போதும்! எப்படியோ போங்க.. சிவி அக்கா வா போலாம்!.” என இதழ் கூறி கொண்டே நடந்தாள்.
சிவன்யா மற்றும் இதழினி இருவரும் வக்கீல்கள்.. சிவன்யா தன் லாயர் law படிப்பை முடித்து விட்டு ஜுனியராக ஒரு பிரபல வக்கில்கிட்ட சேர்ந்து இருக்கிறாள்.
இதழ் law கல்லூரியில் படித்து கொண்டு இருக்கிறாள். இருவரும் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறார்கள். ஒன்றாக தான் இருக்கிறார்கள்.
நிதின், தூரி!.. என அழைக்க..
“வேணாம்! கூப்பிட வேணாம்! ”என அவள் திரும்பி கொண்டாள்.
சத்ய தேவ், “குக்கு” என அழைக்க..
போதும்!.. என இதழ் சொல்ல..
“சரி பிரச்னை நடக்காது! போதுமா! நான் வருவேன்!.” என சத்ய தேவ் மற்றும் நிதின் இருவரும் ஒரே நேரத்தில் கூறினார்கள்.
இதழ், “நான் இல்ல நாங்க வருவோம்! அப்டின்னு சொல்லணும்!”
“சரீ நாங்க! போதுமா இப்போ என்ன பண்ணனும்!”
இதழ் சிரித்து கொண்டே திரும்பி “டான்ஸ் ஆட போறோம்!”
நிதின், “எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு தூரி நான் டெல்லி போகனும்! அதனால் இதையெல்லாம் நீ பார்த்துக்க மிஸ்டர் சத்ய தேவ் செய்வாரே! ஒரு ஓட்டை சேனல் அது பேர் என்ன?”
மிதுன், “WW tv world wide TVல reporter!”
“ரிதம் அவன் காதுகளில் என்ன சொல்ற அப்போ இவன் போலீஸ் இல்லையா!”
ஹரிணி அவர்கள் அனைவரையும் முறைத்து பார்க்க..
ருத்ரன் கோபமாக “மிதுன் உன் வாய கிழிச்சிடுவேன். என் மாமா பற்றி தப்பா பேசாத! ”
நிதின், “மாமாவா?”
மிதுன், “ஹே என்ன டி உன் தம்பி முறை மாறி கூப்பிடுறான்! என்னை தான மாமா சொல்லணும்! ”
சத்ய தேவ் பார்வை இப்பொழுது ரிதம் மீது இருக்க அவள் வாயில் உள்ள வார்த்தைகள் அப்படியே சிக்கி கொண்டது தடுமாறி கொண்டே நின்றாள்.
மிதுன், அதை விடு அவனோட கூஜா யார் தெரியுமா?
நிவாஸ் ரிதம் அருகில் வந்து நின்று “யுவதிகா மற்றும் யவனிகா!.. உன்னோட ஆதித்யா சித்தப்பா பொண்ணுங்க! தான் மிஸ்டர் சத்ய தேவ்க்கு அசிஸ்டன்ட்ஸ்..!”
சத்ய தேவ் அவர்கள் பேச்சை காதில் போட்டுக் கொள்ளாமல் “இதழ் நீங்க ஆடுங்க அண்ணா பாட்டு செலக்ட் பண்ணி தரேன்! ”
ருத்ரன், “மாமா நீயும் ஹரிணி அக்காவும் ஒரு டான்ஸ்!.”
இனியா,“ நானும் நிலா அக்காவும் ஆட போறோம்!”
இதழ், “இந்த பக்கம்! யாரு!. ஆட போறீங்க!.”
ரிதம்,“ நானும் நிதின் கூட ஆட போறேன்! ”
சிவன்யா, “அண்ணா தான் வரலயே!.”
நான் சொன்னால் நிதின் வருவான்! என ரிதம் பார்க்க.. அவன் சரி என்பது போல தலை ஆட்டினான்.
நிதின், நான், மிதுன், ரிதம் மூணு பேரும்!.
சிவன்யா, நானும் இதயன் கூட ஆட போறேன்!
ருத்ரன், அப்போ நானும் இதழ் பாப்பாவும்…
பவன்யா, தீரா!. என அழைக்க..
ருத்ரன், நானும் பவா பேபியும்!.
வெற்றி, ஹே நீ சோலோ பண்ணு அவன் கூட ஆடாத! என கூற..
அனைவரும் பாடல் செலக்ட் செய்து கொண்டு இருக்க.. நிதின் அவனுடைய வேலையாக கிளம்பி விட்டான்.
ஹரிணி மணி பார்த்தாள். சத்ய தேவ், என்ன டி!
இல்ல எனக்கு டூட்டி க்கு டைம் ஆச்சு இங்கே கோட்ரஸ்ல தான் ஸ்டே பண்ணி இருக்கேன்! நெக்ஸ்ட் வீக் பெங்களூர் போயிடுவேன் ஒரு கேஸ் விசயமா வந்தேன்!
சத்ய தேவ், நான் ட்ராப் பண்ணவா!..
இல்ல வேணாம்! நீ பேசிட்டு இரு எல்லாரும் உன்னை கேட்டு கிட்டே ஆசையா இருக்காங்க! நீ இரு என சொல்ல..
சத்ய தேவ், உன்னை கீழே வரைக்கும் வந்து விடுகிறேன்!
ஹரிணி, இனி இந்த finger chip கிஸ் கூட இல்ல பார்த்துக்கோ!
சத்ய தேவ் கடுப்புடன் இரு டி உனக்கு இருக்கு! நான் டாடி கிட்ட ஆல்ரெடி சொல்லிட்டேன்! டாட் உன் அப்பா கிட்ட பேச போறாங்க!.
ஹரிணி புன்னகை முகத்துடன் அப்போ நிச்சயம் முடியட்டும் தரேன்!
சத்ய தேவ் எல்லாமே நீ தான் தரணும் என கண் அடித்தான்.
ஹரிணி அவனை இடையில் கிள்ளி விட்டு ஓடி விட்டாள்.
ஒருவர் கண்கள் இதையெல்லாம் பார்த்து கோபத்தில் சிவக்க.. ஆனால் இதயம் மட்டும் இரத்த வெள்ளத்தில் அறுபட்டது போல துடித்து கொண்டு இருந்தது.
மிதுன் அருகில் வந்த ரிதம் அவன் மேல் அமர்ந்து கொண்டாள்.
மிதுன் அவளின் முகத்தை பார்த்து என்ன ஆச்சு? உன் முகம் சரி இல்லையே!
ரிதம் அவன் தோலில் சாய்ந்து எனக்கு வீட்டுக்கு போகனும் டாடிய பார்க்கணும்! கிலம்பவா!
மிதுன் அவளின் மோவாயை பிடித்து என்ன ஆச்சு டி!
நான் வீட்டுக்கு போகனும்! நீ ட்ராப் பண்ணுவியா? மாட்டியா?
மிதுன், சரி வா போலாம்! என அவன் எழுந்து கொண்டான்.
ருத்ரன் அவர்கள் இருவரையும் பார்த்து ஹே எங்கே போற?
மிதுன் outing போறோம் என அழைத்து சென்று விட்டான்.
அவர்கள் இருவரும் போவதை அனைவரும் பார்த்து கொண்டு இருக்க.. அவர்கள் சென்ற அடுத்த நொடி வேகமாக வெற்றி, சிவன்யா, இதயன், நிவாஸ் அனைவரும் சத்ய தேவை கட்டி கொண்டார்கள்.
சத்ய தேவ் புன்னகையுடன் அமர்ந்து இருக்க..
நிவாஸ், மிஸ் யூ அண்ணா!
வெற்றி, என் கிட்ட பேசவே மாட்டிக்குற! என கூறினான்.
சத்ய தேவ் அனைவரின் கைகளையும் கோர்த்து பிடித்து எப்டி பேச உங்க கம்மெண்டர் ரொம்ப டெரர் பீஸ் அது மட்டும் இல்லாமல் deffence மினிஸ்டர் நிதின் பிரகாஷ், அப்புறம் இன்னொருத்தர் மிதுன் தேவ் அவர்கள் dev corporation M.D நான் சாதாரண reporter! நீங்க எல்லாம் பெரிய ஆளு!.
அவர்கள் அனைவரும் அடித்து பிடித்து விளையாடினார்கள். ஆனால் ருத்ரன், பவன்யா, இனியா, நிலா யாரும் அவர்களிடம் முகம் கொடுத்து பேச வில்லை சத்ய தேவ் அனைவரையும் மன்னிக்கலாம் ஆனால் நிதின் மற்றும் ரிதம், மிதுன் செய்வதை மன்னிக்க அதற்கு துணை நிற்பவர்களை இவர்கள் மன்னிக்க மாட்டார்கள்.
இங்கே ரிதம் நேராக தாத்தாவின் வீட்டுக்கு சென்றாள்.
மிதுன், ஹே நாளைக்கு மார்னிங் வருவேன்! டி!. இங்கேயே பிக் பண்ணிப்பேன்! .
ரிதம் சோர்வுடன் நலன் வீட்டுக்கு வந்திடு டா!
மிதுன் கடுப்புடன் அங்கே உன் டாட் இருப்பார்! நான் வரல! எனக்கும் அவருக்கும் எப்போவும் ஆகாது!
ரிதம் சிரித்து கொண்டே விவேகா அங்கே தான் இருக்கா!
மிதுன், அவளை உன் டாடி இல்லாத நேரம் போய் பார்த்து கொள்வேன் புதுசா ரவால பொங்கல் டிரை பண்ணி இருக்கா அதை சாப்பிட கூப்பிடுறா!..
ரிதம் கடுப்புடன் நல்ல வேலை நான் இங்கேயே சாப்பிட்டு போயிடுவேன்! அவள் சாப்பாடு எல்லாம் மனுசன் சாப்பிட முடியாது!
மிதுன் சிரித்து கொண்டே அப்போ உன்னோட டாடி?
ரிதம் சட்டென கோபமாக மித்து என கத்தினாள்.
மிதுன் அதற்குள் பறந்து விட்டான்.
ரிதம் உள்ளே செல்ல ரவிசந்திரன் ஒரு சேரில் அமர்ந்து கொண்டு டீவி பார்த்து கொண்டே அப்படியே நியிஷ் பேப்பர் படித்து கொண்டு இருந்தார்.
“தாத்து!”
ரவி திரும்பி பார்க்க அதற்குள் அவள் ஓடி வந்து அருகில் அமர்ந்து கொண்டாள்.
ரவி கன்னகுளி புன்னகையுடன் தங்கம்! பயணம் எப்படி இருந்தது?
ரிதம் அவர் கையை பிடித்து கொண்டு அதுக்கு முன்னாடி உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்கணும்? என் கிட்ட நீங்க பதில் சொல்லும் நேரம் வந்திடுச்சு!
என்ன டா? என்ன தங்கம்?
ரிதம், நான் ஜெர்மனியில் படிக்க வேணாம் என இந்தியா வந்த நேரம்! அப்போ நடந்த சில fightல உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்டேனே நியாபகம் இருக்கா?
என்ன ரிதம் தாத்தாவுக்கு நினைப்பு இல்ல..
ரிதம் அவரின் முகத்தை பார்த்து பொய் பொய் சொல்லாதீங்க! இப்போ சொல்லல.. நான் வரவே மாட்டேன்!
ரவி ஒரு பெரு மூச்சை விட்டு சொல்லுடா தங்கம் என்ன?
ரிதம், நான் ஏன் மம்மி டாடி மேரேஜ் போட்டோவில் இருக்கேன்? சிவி பவா மம்மி டாடி மேரேஜ்ல யாரும் இல்லையே!. ஆதி , வெண்பா, அப்புறம் சரவணன் மாமா சுபா அத்தை மேரேஜ் போட்டோல பரணி அத்தான் இல்லையே! அதிதி, வருண் மாமா கல்யாணத்தில் கூட விஸ்வா மாமா இல்லையே! அப்போ நான் மட்டும் எதுக்கு இருக்கேன்! அது தப்பா தாத்தா!
ரவி தன் பேத்தியின் முகத்தை பார்த்தார். இல்ல டா மா! தப்பு இல்ல..
ரிதம், அந்த சக்தி கையில் மகி மாமியும் அந்த நிதின் டாடி சூர்ய பிரகாஷ் ரெண்டு பேரும் இருப்பதை போல ஒரு போட்டோ நான் பார்த்தேன் தாத்தா! அதை தான் நான் அவன் கிட்ட கேட்டேன்! இதுல நான் என்ன தப்பு பண்ணேன்!
ரவி கொஞ்சம் அவளை சமாதானம் செய்யும் பொருட்டு இல்ல டா அது தப்பு இல்ல… அது misunderstanding..
ரிதம், நிதின் சொன்னது சரி தானே! என்னையும் அவனையும் எல்லாரும் வேற மாதிரி பார்க்கிறார்கள். எனக்கு உண்மை தெரிந்து ஆகனும் தாத்தா! சத்ய தேவ் வீட்டை விட்டு பாரின் படிக்க போனதுக்கு காரணம் எல்லாரும் இல்லையாம் நான், மிதுன், நிதின் தானாம்! இதுல நான் என்ன தப்பு பண்ணேன்! டெல் மி தாத்தா!
ரவி, யார் மேலயும் தப்பு இல்ல! எல்லாமே misunderstanding தங்கம்!
ரிதம், எனக்கு உண்மை தெரிந்து ஆகனும்
ரவி…?
தொடரும்…
சண்டைக்காரா மாதிரி இது இல்ல! So இது வேற!
EPISODE 5
ரிதம் தன் தாத்தாவின் அருகில் சென்று எனக்கு உண்மை தெரிந்து ஆகனும் என சொல்ல..
ரவி சந்திரன் ஒரு பெரு மூச்சை விட்டு சண்டைக்காரா கதையை அவரோட மாடுலேசன்ல வேற மாதிரி சொல்லி முடித்து விட்டு அவளை பார்த்தார்.
ரிதம் ஒரு பெரு மூச்சை விட்டு அப்போ தப்பு யார் மேல? எல்லாம் விவேகா மேல தான்!
உன் அப்பாவை விட்டு கொடுக்க மாட்டியே! அவனும் தான் காரணம் சரவணன், சுபா ரிஜிஸ்டர் பண்ணும் போது உங்க அம்மாவை வர சொல்லி யாருக்கும் தெரியாமல் அவளை கல்யாணம் பண்ணி இருக்கான். அது தப்பு இல்லையா! அதனால் அவங்க கல்யாணம் last-ஆ தெரிந்தது. அப்புறம் நீயும் உன் அம்மாவும் இந்தியா வந்ததும், வசு உன்னோட கங்கா அம்மாச்சி ரெண்டு பேரும் எல்லாருக்கும் invite பண்ணி grand ஆ கல்யாணம் பண்ண ஆசை பட்டாங்க அதான் பண்ணோம் அதுல நீ இருக்க! இதுல தப்பு ஒன்னும் இல்லையே! அவ்ளோ தான் என கூறினார்.
ரிதம் இப்போ கூட குற்ற உணர்வு இல்லாமல் அப்போ அந்த சக்தி மேல தான தப்பு இருக்கு! என வீம்பு பிடித்தாள்.
ரவி தன் பேத்தியின் தலையை நீவி விட்டு “அப்படி இல்ல டிம்பிள்! உன் அப்பன் மாதிரி சொன்னதை திரும்ப சொல்ல கூடாது! சத்ய தேவ் பாவம்! அவன் சூர்யா மாமா, மகி மாமிய விட்டு சின்ன வயசுலயே தனியா போயிட்டான். அதுக்கு காரணம் நீ பண்ண சின்ன தப்பு தான் நம்ம சொல்ற விஷயத்துக்கு முன்னாடி இடம் பொருள் ஏவல் இருக்கணும் டா!”
“அப்போ நான் தப்பா தாத்தா!”
எல்லா தப்பும் உன் மேல இல்ல! மகி மாமி misunderstanding பண்ணிகொண்டார்கள். அப்புறம் அந்த மிதுன் வாலு இருக்கானே அவனும் over possessive ல இப்படி பண்ணிட்டான்.
ரிதம் சரி என்று எதோ தலை ஆட்டினாள். ஆனால் கடைசியாக அங்கே இருந்து செல்லும் போது இல்ல தாத்தா! சத்ய தேவ் தப்பு! அவன் தப்பு! என கூறி விட்டு சென்றாள்.
ரவி சந்திரன் ஒரு பெரு மூச்சை விட்டு அப்படியே அவள் பாட்டி புத்தி! அவளுக்கு பிடிச்ச மூணு காலில் இன்னும் நிக்கிறா! ஒன்னும் சொல்றதுக்கு இல்ல! என சொல்லி விட்டு அவர் விட்டு விட்டார்.
ரிதம் மனம் ஆயிரம் காரணம் சொன்னாலும் ஒப்ப வில்லை. அவள் தன் வீட்டுக்கு கிளம்பினாள். விவேகா சோபாவில அமர்ந்து கொண்டு டீவி பார்த்து கொண்டே ஆதியிடம் போன் பேசி கொண்டு இருக்க..
சட சட என டிராலி உருட்டும் சத்தம் அதன் கூடவே டக் டக் என அவளின் நடை சத்தம் காதுகளில் கேட்க அடாவடியாக உள்ளே நுழைந்தாள்.
விவேகா ஒரு நிமிடம் திரும்பி பார்த்து விட்டு ஆதி நான் அப்புறம் கால் பண்றேன். என வைத்து விட்டு திரும்ப அதற்குள் கால் மேல் கால் போட்டு கொண்டு விவேகாவுக்கு எதிரில் ரிதம் போனை நோண்டி கொண்டே அமர்ந்தாள்.
“ஹே கால் மேல் கால் போடாத! காலை எடு!”
மாட்டேன்! போ எனக்கு டீ போட்டு கொண்டு வா! சுகர் கம்மியா! ஓடு!
விவேகா அவளை பார்த்து நான் உன் அம்மா கொஞ்சம் மரியாதை கொடுக்கிறயா!
ரிதம் தன் அன்னையை பார்த்து இதுக்கு முன்னாடி கொடுக்கும் லிஸ்ட்ல இருந்த ஆனால் இப்போ தர முடியாது. போ! என சொல்லி கொண்டு இருக்கவே வெளியே டக் டக் ஓசை!
அவன் ஸாரி சாரி இனி அவர் இன்ப ராகவன் வந்து விட்டார்.
ரிதம் தன் அன்னையை பார்த்து போ எனக்கும் டாடிக்கும் சேர்ந்து கொண்டு வா கூடவே சால்ட் பிஸ்கட் வேணும்! கங்கா அம்மாச்சி வீட்டில் செஞ்ச நொ மைதா பிஸ்கட் கொண்டு வா!
விவேகா டென்ஷன் ஆகி அடுத்து பேச வர.. டிம்பிள்!. ரிதமா!. என அழைத்து கொண்டே உள்ளே வந்தான்.
டாடி! ஐ love you crore டாடி!. என எழுந்து தன் தந்தையை கதி கொண்டாள். நெஞ்சில் முகம் புதத்து கொண்டாள். டாடி டாடி! இங்கே என்ன சொல்லுது! என இண்பாவின் இதயத்தில் காது வைக்க..
இன்பா விவேகாவை பார்த்து கொண்டே “ம்ம் ரிதம் தான்! உன்னை நினைக்கும் போது இந்த ரிதம் சத்தம்! கேட்குது டிம்பிள்! ”என கண்ணகுளி சினுங்காமல் ஒரு பார்வையை பார்த்தான்.
அவ்ளோ தான் பொண்டாட்டிய ஆல்ரெடி மயக்கி மடக்கி வைத்து இருப்பவன் இப்பொழுது ஒரே வார்த்தையில் தன் பெண்ணுக்கு தகப்பனாகவும் தனக்கான பெண்ணுக்கு நல்ல காதல் கணவனாகவும் அவனுடைய perform சிறப்பாக செய்து விட்டான்.
விவேகா கொஞ்சம் கொஞ்சல் முறைப்புடன் அந்த இடத்தை விட்டு வேகமாக சமையலறை சென்று விட்டாள்.
இன்பா மனதில் அவ்ளோ தான் மெல்ட் ஆகிடுச்சு என சிரித்தான்.
என்ன டாடி!
ஒன்னும் இல்ல தங்கம் டாடி உனக்கு சர்ப்ரைஸ் வச்சு இருக்கேன்!.
ரிதம் இன்பாவை அழைத்து கொண்டு சோபா வந்து அமர்ந்தாள். அதை விடுங்க டாடி நம்ம எப்போ பெங்களூர் போக போறோம்!
இன்பா, அதை உன் அம்மா கிட்ட கேளு! அந்த ருத்ரன் டிரெய்னிங் முடியும் வரை வர மாட்டேன் என சொல்லி விட்டாள். அவனை பார்த்தியா?
ரிதம், பார்த்தேன்! என்னை டென்ஷன் பண்றான்! அவனை எங்கேயாச்சு அப்போவே குட்டியா இருக்கும் போது applicationல விற்க சொன்னேன் நீங்க தான் கேட்கல!
இன்பா இதை கேட்டதும் கண்ணகுளி தெரிய சிரித்து விட்டு சரி அப்புறம் சத்ய தேவ் வந்திருக்கானா? நீ பார்த்தியா? பேசினயா?
ரிதம் பேச வருவதற்குள்.. இவள் கிட்ட சத்ய தேவ் பேசுவானா? பொண்ணுங்க கிட்ட தான் பசங்க பேசுவாங்க! இவள் எல்லாம் பொண்ணா! நான் அந்த நிதின் கூட சேரவே கூடாதுன்னு சொன்னேன்! இவளோட சேர்க்கை எல்லாம் நான் சொல்றதுக்கு எதிரா தான் பண்ணிட்டு இருக்கா! என கப்பை கொடுக்க
ரிதம் வேகமாக அதை தள்ளி விட்டாள். விவேகா கோபமாக ஹே! என குரலை உயர்த்த..
இன்பா இதை சமாளிக்கும் பொருட்டு விடு அவள் தெரியாமல் செய்து விட்டாள் போல..
விவேகா, உன் … என பற்களை கடித்து கொண்டு உங்க பழக்கம் அப்படியே அவளுக்கு வந்து இருக்கு! இன்னொரு தடவை எதுவும் உடைத்தால் நான் உங்க ரெண்டு பேரையும் வீட்டை விட்டு துரத்தி விடுவேன்!
ரிதம் கால் மேல் கால் போட்டு கொண்டு தன் தந்தை குடித்த கப் வாங்கி ஒரு சிப் குடித்து கொண்டே நீ வீட்டை விட்டு வெளியே போ! என் டாடி! யாருன்னு தெரியும் தானே! உன் டாடி வீட்டுக்கு போடி! டிம்பிள் இவள் வெறும் உப்மா செய்து போட்டு வசுமாக்கு சுகர் வர வைப்பாள்..
இன்பா, வந்திடுச்சு சுகர்..
ரிதம் கொஞ்சம் சாக் ஆகி அதே தான் டாட் இவளை டைவர்ஸ் பண்ணிடுங்க! நான்.. என பேச வர.
சமையலறையில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டது.
என்ன ரிதம் செல்லம்! இப்படி பேச கூடாது.
ரிதம், பாரு பாரு அவள் மட்டும் வெசல் உடைக்கிறா! நான் உடைத்தால் தப்பா?.
விவேகா வெளியே வந்து நான் உன்னை இங்கே வரவே சொல்லல.. அண்ட் யாரும் பிடிக்காமல் இங்கே இருக்க வேணாம்! நீங்க தான் என்னை தேடி வரீங்க! எனக்கு என் பையன் இருக்கான். என் பையனை சிங்கம் புலி கூட கம்பேர் பண்ண மாட்டேன். அவன் ஒரு நல்ல மனுஷன்! நான் பார்த்ததில் எனக்கு பிடிச்ச எனக்கு சொந்தமான மூனாவது நல்ல மனுஷன்! So சட்டு புட்டுன்னு இடத்தை காலி பண்ணுங்க!.
ரிதம் அதற்கு மேல் டாடி வாங்க டாடி! நம்ம இப்போவே போலாம்! இந்த நிமிடமே போலாம்!
ஹோ விடுதலை என சொல்லி கொண்டே ருத்ரன் உள்ளே நுழைந்தான்.
அவன் வந்ததும் விவேகா அங்கு இருக்கும் மனிதர்களை மறந்து தீரா! வாங்க உள்ளே வாங்க! என அழைத்து அமர வைத்து அவனுக்காக சுக்கு காபி போட்டு கொடுத்து எடுத்து வந்தவள் பக்கத்தில் அமர்ந்து அப்புறம் சத்ய தேவ் எப்டி இருக்கான்! வீட்டுக்கு கூட்டி வர வேண்டியது தானே!
ருத்ரன் கொஞ்சம் புருவ எள் மச்சம் மின்ன மாமா இப்போ பிசி மா! என சொல்லி கொண்டு இருக்க..
ரிதம், see டாட்! See!.
ஆமா டிம்பிள்!. என சொல்லி கொண்டு அவர்கள் இருவரும் பார்த்தார்கள்.
ருத்ரன், மா உட்காருங்க எதுக்கு எப்போவும் இவ்வளவு வேலை செய்றீங்க! ஒரு maid வைக்கலாமா?
இன்பா, துணி வாசிங் மெஷின் துவைக்கிது! வீடு அப்போ அப்போ உன் கங்கா அம்மாச்சி வந்து க்ளீன் பண்ணிட்டு போறாங்க! மோஸ்ட்லி சாப்பாடு என் மம்மி வந்து எனக்கு பிடிச்சது பண்ணிட்டு போறாங்க! அதை எல்லாம் தொண்டை வரைக்கும் ரெண்டு பேரும் சாப்பிட்டு முழுகி ஏப்பம் விட்டு அவள் ஒரு டீ போட்டதுக்கு maid வைக்க சொல்றான்! அவன் முகத்தை பார்த்தாலே.. என இன்பா சொல்ல வர்..
ரிதம், எஸ் டாடி! எனக்கு அவனை பார்த்தாலே அடிக்க தோணுது! என பேசிக் கொண்டு இருக்க..
இருவரும் முறைத்து கொண்டே அவர்கள் பக்கம் திரும்பினார்கள்.
ருத்ரன், மா சக்தி மாமா உனக்கு ஒரு டிஷ் பண்ணி கொடுத்து இருக்கான்!
விவேகா ஆவலுடன் சத்ய தேவ் சமைக்கிரானா?
ருத்ரன் புன்னகையுடன் மாமா கிட்ட இருந்து நிறைய கத்துக்கணும்.
ரிதம் எட்டி பார்க்க..
ருத்ரன், இது எல்லாம் மனுசங்க சாப்பிடும் சைவம்! மிருகம் சாப்பிடும் அசைவம் இல்லை.
விவேகா சிரித்து கொண்டே அதை ருசி பார்த்தாள். சப்பு கொட்டினாள். ம்ம் கொடுத்து வச்சவங்க! அவன் கையில் சமைத்து சாப்பிட… என இன்னொரு வாய் சாப்பிட்டாள்.
ருத்ரன், சத்ய தேவ் மாமா வேகன் மா! என கூற..விவேகா ஆசை மற்றும் ஆவலுடன் Owe என்று கூறி கொண்டே ருத்ரண்ணுக்கி ஒரு வாய் ஊட்டி விட்டாள்.
இன்பா அவளின் வந்து புருவம் தூக்கி எனக்கு?… என கேட்க..
விவேகா அவனுக்கு உணவு எடுக்க போவதற்குள் ருத்ரன் ஒரு ஸ்பூன் எடுத்து “இந்தாங்க! இதில் தேவையான அளவு எடுத்துக்கோங்க உங்களுக்கும் கொடுத்தாங்க!”
விவேகா இன்பனை கண்டு கொள்ளாமல் சிரித்து கொண்டே சாப்பிட்டாள்.
ரிதம், டாடி! அது வேணாம்! நான் வசு மா கிட்ட எல்லாமே ஃபிஷ், காடை, நண்டு எல்லாம் சொல்லி இருக்கேன் இப்போ நம்ம சாப்பிடலாம்! அது வேணாம் என இழுத்து கொண்டு சென்று விட்டாள்.
அடுத்ததாக அந்த மணிவிழாவில் அனைவரையும் சந்திக்க இருக்கிறோம்! அப்பொழுது கதை விறு விறுப்பாக போக போகிறது.
தொடரும்..
இன்னிக்கி epi எப்டி இருந்தது?
EPISODE 6
அந்த அமைதியான இரவு வானில் நட்சத்திரங்கள் மின்னி கொண்டு இருக்க.. காக்கி உடையில் கம்பீரமான தோற்றத்தில் இருந்தான். அவன் கண்கள் மூடி இருந்தது. ஹே சக்தி!. என அழைக்க.. புருவம் இரண்டும் சுருங்கியது.
டோண்ட் கால் மி சக்தி ரைட்!. ஐம் சத்ய தேவ்! என கம்பீர குரலில் முனுமுனுத்தான். ஆனால் கண்கள் மூடி கொண்டு இருந்தது.
ஓகே ஓகே ரிலாக்ஸ் என சொல்லி கொண்டே அருகில் வந்தவள். அவன் இதழோடு இதழ் கோர்த்து ஒரு ஆழ்ந்த முத்தம்.“ உன்னை எவ்ளோ மிஸ் பண்றேன் தெரியுமா! உன்னோட கண்ணுக்கு நான் தெரியலயா சக்தி”
“டோண்ட் கால் மி சக்தி! எத்தனை தடவை சொல்றேன்! ” என சத்ய தேவ் மீண்டும் புருவத்தை சுருக்கி கொண்டே கூறினான்.
ஹே நான் உன்னை சக்தி ன்னு தான் கூப்பிடுவேன்! ஏன்னா நான் உன்னோட சதி! எப்போவும் நான் உன்னோட சதி தான்!” என அவள் கூறினாள்.
சத்ய தேவ் விழிமணிகள் இரண்டும் உருண்டு கொண்டே யோசிக்க…
அவள் மீண்டும் மேல் உதடு கீழ் உதடு என கவ்வி பிடித்து இழுத்து கொண்டாள். அதன் பின் கொஞ்சம் இடைவெளி விட்டு மூச்சு வாங்கி கொண்டே “உன்னோட சதி வந்து இருக்கேன்!” என கூறி கொண்டே அவன் மேல் முழுவதுமாக விழுந்தாள்.
சத்ய தேவ் அவளின் இடையை இரும்பு கரத்தில் பிடிக்க ஒரு சிணுங்கல்… அவன் இதழ்கள் வளைந்து கொண்டே மெதுவாக அவளுடைய முகத்தை பார்க்க அவனது விரல்கள் அவளின் இதழ் வருடி கொண்டே மூக்கு கண்ணம் கண்கள் என எல்லா இடங்களுக்கும் சென்று மெதுவாக ஹே உன்னோட முகத்தை காட்டு டி! என கண்களை திறக்க.. அந்த நேரம் அவனது போன் அலாரம் அடிக்கவும் சரியாக இருந்தது. கண்களை திறந்தவனுக்கு அது கனவாக இருந்தது.
கண்களை கசக்கி கொண்டே திறந்தான். ச்ச இது கனவா? எப்டி இப்படி கனவு ரியலஸ்டிக்கா இருக்குமா! என தனக்கு அருகில் பெண் இருக்கிறாளா? ச்ச எப்! எப்படி! “இந்த சதி” இவளை எத்தனை நாள் தேடுவது! ஆனால் இந்த அளவுக்கு ஒரு கனவு வரவே இல்லையே! அவள் கனவு தான்!. ம்ம் இதை விட பெட்டர் ஹனி கொடுப்பா! என சிரித்து கொண்டே தலையை கோதியவன் வெளியே வந்து காலை வேலையை ஆரம்பித்தான்.
“பாதாம் கொட்டையில் இருந்து தயாரித்த பாதாம் பால் அதில் ஒரு டீ!” என்ன டா இது? எல்லார் mind voiceம் இப்படி தான் இருக்கும்! சத்ய தேவ் வேகன் அதற்கு அர்த்தம் வேகன் உணவு பழக்கத்தில் விலங்குகளில் இருந்து கிடைக்கும் பொருட்கள் எதையும் உண்ண மாட்டார்கள். ஜீவ காருண்ய ஒழுக்கம்! தாவர த்தில் இருந்து கிடைக்க கூடிய உணவு பொருட்கள் மட்டுமே சாப்பிடுவார்கள். மட்டன், சிக்கன், பறப்பது, ஓடுவது, நீந்துவது அதில் பசு , கோழி அதில் இருந்து கிடைக்கும் பால், முட்டை, பனீர் வெண்ணெய், நெய் என எதுவும் சாப்பிட மாட்டான்.
சத்ய தேவ் அதை முடித்து விட்டு தன் தங்கைகள் அனைவருக்கும் சமைக்க ஆரம்பித்தான். அனைவரும் உமா நட்ராஜ் தங்கி இருந்த வீட்டில் இருக்கிறார்கள். மிதுன் கூட அங்கு தான் இருக்கிறான். உமா நட்ராஜ் ஈரோட்டில் இருக்கிறார்கள். சூர்யா மற்றும் மகி, கார்த்திக், மை விழி என அவர்கள் அனைவரும் வசந்தன் வீட்டில் இருக்கிறார்கள்.
இங்கே இன்பா காலையில் நேரமே எழுந்து விவேகா அருகில் வந்து படுத்து கொண்டு பேபி! பேபி!.
“ராகவ் என்னை தூங்க விடு தொந்தரவு பண்ணாத!” என விவேகா திரும்பி கொண்டாள்.
இன்பா அவளின் முகத்தை திருப்பி அந்த மூணு ஆள்ன்னு நேற்று சொன்னியே அது யாரு? எழுந்து பதில் சொல்லு டி!
போடா!
“ஹேய் விவேகா இப்போவே மாமிக்கு கால் பண்றேன்! என் மாம் அவங்களையும் வந்து இங்கே பத்து நாள் ஸ்டே பண்ண சொல்லுவேன்!”
விவேகா, என்ன டா நீ! என எழுந்து அகர்ந்தவள் அவனை முறைத்து பார்க்க..
இன்பா, ம்ம் சொல்லு!
விவேகா எழுந்து பாத் ரூம் செல்ல வெளியே தாளம் தட்டினான். அதன் பின் அவள் வெளியே வர பூனை போல பின் தொடர்ந்தான்.
சொல்லு! சொல்லு!.
விவேகா அவனுக்கு பிளாக் டீ மற்றும் சுக்கு காபி ருத்ரணுக்கு, மற்றும் அந்த ராவடி ரிதம்க்கு இஞ்சி டீ, கூடவே விவேகாவும் இஞ்சி டீ இதுல மட்டும் தான் இவங்க ரெண்டு பேரும் ஒத்து போவார்கள்.
இன்பா அவள் கழுத்தை பின்னால் இருந்து அழுத்தி பிடித்து சொல்லு! என மணல் வரி போல் கொஞ்சம் துவண்டு இருக்கும் இடையில் கைகளை கொண்டு சென்றான்.
விவேகா பிளாக் டீ எடுத்து சூடு வைக்க.. ராட்சஸி! என அவள் கன்னத்தை கடித்தான்.
என் டாடி! அப்புறம் என் மாமாச்சி அப்புறம் எனக்கு பிறந்த என் பையன் இவங்க மூணு பேர் தான் அந்த மூணு ஆண்பிள்ளை! என அவனை பார்த்தாள்.
அப்போ நாலாவது? என இன்பா கேட்க..
சேர்க்கணுமா!.
இன்பா, ம்ம் என கண்ணை சிமிட்டி கொண்டே பார்த்தான்.
விவேகா, மிம்மம் என ஒரு சிப் குடித்து விட்டு அந்த நாலாவது ஆள் ஆதித்யா!.
இன்பா, what the hell?
விவேகா, இந்தா பிடி!. என முன்னாள் நடந்து செல்ல..
இன்பா அவளை பின் தொடர்ந்து கொண்டே இத்தனை நாள் கல்யாண வாழ்க்கையை இப்படி! இப்படி ஸ்பாயில் பண்ணிட்ட!.
விவேகா, ஏன் லிஸ்ட்ல உன்னை எதிர் பார்த்தியா?
இன்பா கோபம் கொண்டு சோபாவில் போய் அமர்ந்து கொண்டான்.
விவேகா, டேய் போய் உன்னோட பொண்ணை எழுப்பி விடு! கொடு! இந்தா டீ!
இன்பா மீசையை முறுக்கி கொண்டே அவளை கண்டு கொள்ளாமல் விரைப்புடன் திரும்பி கொண்டான்.
விவேகா கடுப்புடன் போடா! என சொல்லி கொண்டே வெகு நேரம் நின்றாள்.
இன்பா அவள் கொடுத்த பிளாக் டீ கூட எடுத்து கொள்ள வில்லை. செய்தி தாளை புரட்ட ஆரம்பித்தான்.
விவேகா ஒரு பெரு மூச்சை விட்டு தீரா என அழைக்க..
மாம் ஐம் ரெடி! என சொல்லி கொண்டே காலையில் உடற்பயிற்சி மற்றும் குளியல் கூடவே கடவுளை வணங்கி விட்டு தெய்வ கடாட்சமாக வந்து நின்றான்.
விவேகா தன் மகனுக்கு நெட்டி முறித்து காலையில் உன் முகத்தில் விழித்தால் தான் எனக்கு விளங்கும் குட்டி அழகா!
ருத்ரன் கண்கள் சிரிக்க சரி மாம் இன்னிக்கு சாட்டர் டே நான் போய் ஒரு அரங்கேற்றம் பண்ணிட்டு வந்து மணி விழா கிளம்புகிறேன்! நாளைக்கு நான் சத்ய தேவ் கூட ஸ்டே பண்ணிக்குவென்! என கூற..
ஒரு எழன சிரிப்பு சத்தம் கேட்டது.
ருத்ரன் திரும்பி பார்க்க.. விவேகா அவன் முகத்தை பார்த்து கையில் ஏந்தி நீ ஒன்னும் குடிக்க போகல ஆட்டம் போட போகல என் பையனை இங்கே இருக்கும் எல்லாரை விட ஒழுக்கமா வளர்த்து இருக்கேன். நீ பரத நாட்டியம் ஆடுவதை யார் தப்பு சொல்லுவா! நீ குட்டி பிரபு தேவா! என் உயிர் டா! சில பேர் மீசைய முறுக்கி மிரைக்குறத ஆண்மையா சொல்றாங்க! நீ என்னோட ஆண்பிள்ளை டா! நீ போயிட்டு வா தங்கம்.
ருத்ரன் சரி மாம் என கிளம்பி விட்டான்.
விவேகா இன்பாவை முறைத்து விட்டு வேகமாக ரிதம் அறைக்கு சென்றாள்.
ஹே ரிதம் எழு! இந்தா பெட் காபி! அச்சோ டீ!. மாற்றி சொல்லிட்டேன் போதுமா! இஞ்சி டீ தான் எழுந்து குடி! என சொல்லி கொண்டே ஜன்னலை திறந்து விட்டாள்.
ஆனால் படுக்கையில் எந்த ஒரு அசைவும் இல்லை.. விவேகா கொஞ்சம் அதட்டி கொண்டே என்ன டி எழுந்து குடி ஆரி போச்சுன்னா? மறுபடி புது டீ போட மாட்டேன்! எழு என அதட்டி கொண்டே விவேகா ரிதம் மேல் அடித்தாள்.
ஒரு நிமிடம் விவேகா திடுக்கிட்டு ஹே ஹே ரிதம்! என போர்வையை விலக்க.. அங்கே தலையணை அடுக்கி வைக்க பட்டு இருந்தது. ரிதம் இல்லை..
டேய் ராகவ் என விவேகா கத்தினாள்.
இன்பா கொஞ்சம் அலட்டி கொள்ளாமல் டிம்பிள் இங்கே வா நம்ம வசு மாம் வீட்டுக்கு போலாம்!
விவேகா கோபத்துடன் டேய் அவள் இங்கே இல்லை வெறும் பில்லோ தான் இருக்கு உன்னை மாதிரியே ஊர் சுற்றி கொண்டு இருக்காள். இப்போ எங்கே போனாலோ! அய்யோ! போன் பண்ணு டா! .
இன்பா எழுந்து கொண்டு உனக்கு கண்ணு தெரியல போய் கண்ணாடி போட்டு தேடு என் பொண்ணு அங்கே தான் இருப்பா! என சொல்லி கொண்டே அவன் அவளின் அறைக்குள் செல்ல..
விவேகா, பாரு நாயே பப்பி நாயே அவள் இங்கே இல்லை!
இன்பா பார்த்து விட்டு உடனே ரிதம் எண்ணுக்கு அழைக்க போக அதற்குள் இதழ் அழைத்தாள்.
ஹலோ குக்கு! ரிதம்! என இன்பா கேட்க வர..
இதழ் குட் மார்னிங் மாமா நைட்டே ரிதம் இங்கே தாத்தா வீட்டுக்கு வந்துட்டா! இப்போ தூங்கிட்டு இருக்கா!
இன்பா சிரித்து கொண்டே அப்டியா? யாரு அவளை பிக் அப் பண்ண வந்தது? என கேட்க.
ரிதம் படுக்கையில் இருந்து முழித்து சொல்லாத டி என கூற வர.. அதற்குள் இதழ் சிரித்து கொண்டே மிதுன் அண்ணா தான் மாமா அவளை பிக் அப் பண்ணி கிட்டான்.
இன்பா சிரித்து கொண்டே அப்டியா சரி என மனதில் சூர்யா உன் பையன்! என பற்களை கடித்து கொண்டு குக்கு அந்த குட்டி குட்டன் கிட்ட போனை கொடு!
இதழ், மாமா அண்ணா ஆபீஸ் போயிட்டான்! என சொல்ல.. ரிதம் போனை பிடுங்கி டாடி!.
இன்பா சிரித்து கொண்டே டிம்பிள் ஒன்னும் இல்லை டிம்பிள் நீ பாரு! என போனை வைத்தான்.
ரிதம் கடுப்புடன் ஹே இதழ் என்ன டி எதுக்கு டாடி கிட்ட மாட்டி விட்ட..
இதழ் சிரித்து கொண்டே மாமா எதுவும் சொல்ல மாட்டார்கள். என சொல்லி விட்டு அவள் வெளியே செல்ல..
ரிதம் உடனே இதழ் கிட்ட ஹே எனக்கு இஞ்சி தட்டி டி போட்டு கொண்டு வா!
இதழ் போய் நீயே போடு! என அவள் குளிக்க சென்று விட்டாள்.
இன்பா இங்கே இரண்டாவது காலில் சத்ய தேவ்க்கு அழைத்தான்.
ஹலோ குட் மார்னிங் ஹீரோ! ஒரு சின்ன பேவர்!
சத்ய தேவ், சொல்லுங்க மாமா! என கூறினான்.
இன்பா, ரிதம் என சொல்ல வர.. விவேகா போனை வாங்கி சத்ய தேவ் கண்ணா!..
Vv baby! என பேச ஆரம்பித்தான்.
அதற்குள் ரிதம் வெளியே எழுந்து வந்தாள். ஹே மித்து எனக்கு டீ போட்டு தாடா என சொல்லி கொண்டே வந்து நின்றாள்.
சத்ய தேவ் குரல் வந்த பக்கம் திரும்ப.. .
ரிதம் பார்வை அவன் மீது…?
தொடரும்…
EPISODE 7
இங்கே சத்ய தேவ் சமைத்து முடித்து கைகளை கழுவி கொண்டே விவேகா கிட்ட பேசி கொண்டு இருந்தான்.
விவேகா அவனிடம் ஒரு நாள் தீராவும் இருக்க வீட்டுக்கு வாயேன்!
இன்பா, என்ன டி அவனுக்கு சொல்லி தர…
சத்ய தேவ் சிரித்து கொண்டே அத்தை! ஏன் மாமா கூட அதுக்குள் சண்டையா?
விவேகா இன்பனை கண்டு கொள்ளாமல் அது அப்படி இல்ல அந்த ரிதம் அவள் சொன்னதுக்கு நான் சாரி டா!
சத்ய தேவ் உடனே அதை விடுங்க அத்தை! ருத்ரன் எங்கே? நான் ப்ரேக் பாஸ்ட் செய்து இருக்கேன். அப்புறம் அங்கே தாத்தா வீட்டுக்கு போகனும்! என சமாளித்தான்.
விவேகா புன்னகையுடன் அவன் கோவிலுக்கு போயிருக்கான். வர சொல்றேன்..
சத்ய தேவ் அவளிடம் அத்தை நீங்க மாமா ரெண்டு பேரும் வரனும்!
விவேகா கண்டிப்பா நாளைக்கு வருவோம்! உன்னை நேரில் பார்க்கணும் போல இருக்கு!.
ம்ம் சரிங்க அத்தை என பேசி விட்டு போனை வைத்தான்.
இங்கே விவேகா போனை அவனிடம் நீட்ட…
இன்பா, எனக்கு அந்த போன் வேணாம்!
விவேகா, டேய் இது உன் போனு!..
நீ தொட்டது எனக்கு வேணாம் போடி என அவர்கள் அறைக்கு பக்கம் திரும்பினான்.
விவேகா ராகவ்! என்ன டா இது! அவன் பின்னால் சென்றாள்.
இங்கே ரிதம் ஹே மித்து எனக்கு டீ போட்டு தாடா என சொல்லி கொண்டே வந்து நின்றாள்.
சத்ய தேவ் குரல் வந்த பக்கம் திரும்ப.
ரிதம் கூட அவனை தான் பார்த்தாள்.
அவன் ரிதமை கண்டு கொள்ளாமல் சமையல் வேலையை தொடர..
ரிதம் நேராக சமையல் அறை பக்கம் சென்றாள்.
ம்ம் அப்படியே எனக்கு ஒரு டீ போடு!.
சத்ய தேவ் கண்டு கொள்ளாமல் அவன் வேலையை பார்த்தான்.
ஹே உன்னை தான் டீ போடு!.
சத்ய தேவ் அவளை திரும்பி பார்த்தான்.
ரிதம் அவனுக்கு எதிரில் நின்று கொண்டாள்.
சத்ய தேவ் அனைத்து உணவையும் தயார் செய்து முடித்து விட்டு நெட்டி முறித்து கொண்டே திரும்ப…
ரிதம் அவனை கை கட்டி நின்று கொண்டு வழி மறித்தாள்.
சத்ய தேவ் உச்சி கொட்டி கொண்டே இன்னொரு பக்கம் நகர…
ரிதம் அந்த பக்கமும் நகர்ந்தாள். சத்ய தேவ் புருவம் நெருக்கி கொண்டே நகரு! நான் போகனும்!
ரிதம் அவனை மேலும் கீழும் பார்த்தவள். எனக்கு டீ போட்டு கொடு அப்போ தான் விடுவேன். போடா போய் போடு!.
சத்ய தேவ் ச்ச!. நகரு டி!.
டியா!. ம்ம் சொல்லிக்க டா! போ போய் டீ போடு! இல்ல நான் போலீஸ் ஆகி உன்னை பணிஷ் பண்ணுவேன்! எதோ மாமா மாமிக்காக உன்னை விடுறேன்!. என ரிதம் கூறிட ..
அவன் நகர பார்த்தான். ரிதம் அவன் அருகில் நெருங்கி டேய் போடு!.
சத்ய தேவ் அவளை முறைத்து பார்க்க என்ன முறைக்கிற போ! என சொல்ல..
வேறு வழி இல்லாமல் சத்ய தேவ் டீ போட ஆரம்பித்தான்.
ஹே சக்கரை கம்மியா போடு! எனக்கு ஸ்வீட் பிடிக்காது!. என ரிதம் சொல்ல அவன் முறைத்து கொண்டே போட்டு கப் அண்ட் சாசரில் ஊற்றினான்.
ரிதம் அவனை இஞ்ச் இஞ்சாக அளவெடுக்க ஆரம்பித்தாள்.
எடுத்துக்க.. என சொல்லி கொண்டே திரும்பினான்.
டேய் எடுத்து கொடு!.
சத்ய தேவ் அவளை உஷ்ன மூச்சுடன் பார்த்தான்.
என்ன கண்ணு சிவக்குது!.. போய் கப் எடு!.
ஓவரா பண்ற டி! என அவன் சொல்ல..
ரிதம் உதட்டை சுளித்து கொண்டு நீ தான் டா! நீ தான்!
சத்ய தேவ், எடுக்க முடியாது என்ன பண்ணுவ! போடி!. என நகர
ரிதம் இரண்டு பக்கமும் நகர்ந்தாள். நீ எடுத்து கொடுக்காமல் நான் விட மாட்டேன்!
யாரு டி நீ? உன்னை ருத்ரன்க்காக மாமாக்காக விடுறென்! வந்துட்டா! உன் முகத்தை பார்த்தாலே எனக்கு இரிடேட் ஆகுது!
ரிதம் புருவம் உயர்த்தி கொண்டே அவன் முன்னால் ஒவ்வொரு அடிகளாக வைத்தவள். அது தான் எனக்கும் வேணும்! நீ நிம்மதியா இருந்தால் எனக்கு பிடிக்காது! உன்னை டார்ச்சர் பண்ணனும்! நான் யூனிஃபார்ம் போட்டு உன்னை என்ன செய்கிறேன் பாரு டா! Ww dot com TV சேனல் திவால் பண்ணாம ஓய மாட்டேன்.
சத்ய தேவ் கொஞ்சம் புன்னகையுடன் ம்ம் காத்திருக்கேன்! போடி!
ரிதம் அவன் முன் சென்று அந்த டீயை எடுத்து ஒரு சிப் செய்தவள். ச்ச கேவலமா இருக்கு! என சிங்க்கிள் ஊற்ற செல்ல ..
சத்ய தேவ் கைகளை பிடித்தான். என்ன பண்ற?
ரிதம் கோபத்துடன் யூ ப்ளடி ராஸ்கல்!. என கையை விடுவிக்க..
சத்ய தேவ் கொஞ்சம் அழுத்தி பிடித்தான்.
ஹே ச்சீ கைய எடு!. எதுக்கு என்னை தொட்ட! தள்ளி போடா! என அப்படியும் இப்படியும் ஆடினாள்.
சத்ய தேவ் கடுப்புடன் நீ அழகின்னு நினைப்பா? உன்னை பார்த்து மயங்கும் ஆள் நான் இல்லை! எனக்கு food waste பண்ணா பிடிக்காது! ஒழுங்கா அதை குடிக்கிற!
ரிதம் எழன புன்னகையுடன் கண்ணகுளி வளைய நீ இந்த டீ போட்டதுக்கு எவ்ளோ பே பண்ணனும் சொல்லு!
சத்ய தேவ் எது செய்தாலும் அதுக்கு பணம் கொடுத்து விடுவ!. ம்ம் இன்ப ராகவன்க்கு இப்படி ஒரு பொண்ணா? ச்ச! டிஸ்கஸ்டிங்!.. என கையை எடுத்து கொண்டே அந்த கப்பை வாங்கினான்.
ரிதம் mister vegan! Mister stranger!. என அவள் வேண்டும் என்றே சிரிக்க..
சத்ய தேவ், mis stranger இது பாதாம் மில்க் ல போட்ட டீ so cow milk இல்ல போடி! என்று கூறினான்.
ரிதம் இன்னும் சிரித்து கொண்டே என்னோட மிச்சத்தை( எட்சில்) தானே குடித்து இருக்க.. என சொல்லி விட்டு அவள் வெளியே செல்ல போக..
சத்ய தேவ் அவளின் கூந்தலில் உள்ள ரப்பர் பேன்டை பிடித்து இழுக்க ரிதம் சட்டென திரும்பினாள். .சத்ய தேவ் அவளை சுவற்றில் தள்ளி அருகில் நெருங்கியவன். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பார்த்தான்.
என்ன டா! அதுக்குள் மயங்கிட்டியா? உனக்கு தான் எப்போவும் வித்தியாசமா தானே செய்ய பிடிக்கும்! உன்னை விட எல்லாத்துலயும்! என ஹரிணி பற்றி அவள் சொல்ல ஆரம்பிக்க..
சத்ய தேவ் அந்த நொடியே அவளிடம் இருந்து விலகி கொண்டு “ உன் கிட்ட மயக்கமா! Comedy ஹஹஹ அது என்னோட கனவில் கூட வராது! போடி!” என சொல்லி விட்டு வேகமாக அவன் அறைக்கு சென்று விட்டான்.
ரிதம் அப்படியே கண்களை மூடி அதே இடத்தில் ஒரு சில நிமிடம் நின்றாள். அவன் தொட்ட இடத்தை தொட்டு பார்த்தாள். நாடி வேகமாக துடிக்க நாசி நிறைந்தது. I hate you!. I hate you bottom of the heart! என சொல்லி விட்டு வெளியே வந்தாள்.
அனைவரும் வசந்தன் வீட்டுக்கு கிளம்பினார்கள். ஹரிணி வந்து விட்டாள். சத்ய தேவ்க்கான உடையையும் சேர்த்து எடுத்து வந்தாள்.
ரிதம் ஒரு இடத்தில் முடி விரி கோலத்துடன் அமர்ந்து இருக்க…
சிவன்யா அவளை பார்த்து கொண்டே இப்போ எதுக்கு இப்படி இருக்க? சீக்கிரம் கிளம்பு!
ரிதம் மீண்டும் படுக்கையில் படுத்து கொண்டு எனக்கு குளிக்க தோணல இதுவே கம்பார்ட் தான்! இப்படியே வரவா!
இத்தனை சோம்பேறி தனம் ஆகாது என சொல்லி கொண்டே இதழ் உள்ளே வந்தாள்.
ரிதம் அவளின் உடையை பார்த்து விட்டு ஹே சூப்பரா இருக்கு! உன்னோட ட்ரெஸ் எனக்கு வேணும்! இப்போவே கொடு!
இதழ் அப்டியா இது சக்தி அண்ணா வாங்கி கொடுத்தான். வேணுமா!
ரிதம், எனக்கு மிதுன் வாங்கி கொடுப்பான். மித்து! டேய்! நைட் முழுக்க கேம் விளையாடுற!. இப்போ தூங்கிட்டு இருக்க!. வாடா! என வாய்ஸ் மெசேஜ் அனுப்பி விட்டாள்.
அப்படியே அரை மணி நேரம் சென்றது. ரிதம், ஹே lips போ போய் அவனை கூட்டி வா! நான் குளிச்சிட்டு வரேன்!
சிவன்யா, போ குக்கு!
இதழ் தன் அண்ணனை எழுப்ப சென்றாள்.
ரிதம் குளித்து முடித்து வாட்ரோப் உடையில் அமர்ந்து இருக்க..
மிதுன் கண்களை தேய்த்து கொண்டே வந்தவன். ரித்து இதுவே நல்லா இருக்கு இதையே போட்டுக்க..
ரிதம் முறைத்து கொண்டே பார்க்க..
மிதுன், இப்போ போய் வாங்க டைம் ஆகும் நீ வா அம்மா கிட்ட நிறைய சாரி இருக்கு ரெடி மேட் ப்ளவ்ஸ் வாங்கி தரேன் போய் மேட்ச் பண்ணிக்கலாம். என உடை மாற்ற சொன்னான்.
ரிதம் மற்றும் இதழ் , சிவி என அனைவரும் வெளியே வர.. சத்ய தேவ் மற்றும் ஹரிணி இருவரும் வந்தார்கள்.
சத்ய தேவ பார்த்ததும் நிலா, பவா, என அனைவரும் அண்ணா செம்ம அழகா இருக்க.. எப்டி? இந்த ட்ரெஸ்ல.. என சொல்லி கொண்டு இருக்கும் போதே யவனி மற்றும் யுவதி இருவரையும் அழைத்து கொண்டு ருத்ரன் வந்தான்.
சார் என அழைத்து கொண்டே சத்ய தேவ்கு ஆதித்யாவின் பெண்கள் இருவரும் விஸ் செய்தார்கள்.
ருத்ரன், மாமா இன்னிக்கி மாஸ்! இந்த ட்ரெஸ் வேற லெவல்!
ரிதம் பார்வை ஹரிணி மீது இருந்தது. கரும் பச்சை வண்ண புடவை அவன் அவன் தான் சத்ய தேவ் வேஷ்டி சட்டையில் மீசையை முறுக்கி விட்டு கொண்டே ஒரு கையால் வேஷ்டி பிடித்து கொண்டே ஹரிணியை கை கோர்த்து கொண்டு நின்றான்.
ரிதம் பார்க்கும் இடம் எல்லாம் பற்றி கொள்ளும் போல!
சத்ய தேவ் அனைவரையும் சாப்பிட அழைத்தான்.
ரிதம் மிதுனுக்காக காத்திருந்தாள். சிவன்யா சாப்பிடுபவர்கள பார்க்க
சத்ய தேவ், சிவி வா டா வந்து சாப்பிடலாம்!
சிவன்யா ரிதமை பார்த்தாள்.
போறியா சிவி! என குரல் கேட்டது. வேறு யார் நிதின் தான்!
சிவன்யா எழுந்து கொண்டு இல்லன்னா நாம கிளம்பலாம்! என எழுந்தார்கள். சிவி, மிதுன், நிதின் என அனைவரும் கிளம்பினார்கள்.
நிதின் சத்ய தேவை பார்த்தான்.
இதழ் தொண்டையை கனைக்க…
அவரவர் வேலையை பாத்து கொண்டு அனைவரும் வசந்தன் வீட்டில் வந்து இறங்கினார்கள்.
அடுத்து கல்யாணம் இருக்கு.. கூடவே நிச்சயம் ஒன்னு இருக்கு!
தொடரும்..
EPISODE 8
சத்ய தேவ் ஹரிணி யவனிக்கா, யுவதிகா, பவன்யா, ருத்ரன் என அனைவரும் அவர்களது காலை உணவை முடிக்க…
ருத்ரன் காரில் வந்திருந்தான். பவன்யா அவனிடம் “தீரா நீயும் நானும் ஒன்றாக போலாமா?”
ருத்ரன் சிரித்துக்கொண்டே “ஓகே பவா ஒன்னும் பிரச்சனை இல்ல தங்கச்சிங்க இருக்காங்க நம்ம எல்லாம் ஒட்டுக்கா போலாம்! மாமா நீங்க எப்படி வர போறீங்க? என்று சத்திய தேவை பார்த்து கேட்க..
ஹரிணி நானும் அவனும் ஒண்ணா வருவோம் என்று கைகளை கோர்த்துக் கொண்டாள்.
பவன்யா, கார்ல எப்படி ஒண்ணா வர முடியும்? என்று கேட்க..
உடனே ஹரிணி, புல்லட்டில் வர போறோம்!..
ருத்ரன் மாமா என்று கொஞ்சம் ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி கலந்து அழைக்க..
ஹரிணி ருத்ரா கண்ணு வைக்காதடா! முதல் தடவை இப்படி நாங்க சேர்ந்து வர போறோம்! எவ்வளவு வருஷம் ஆச்சு தெரியுமா ? அவன் படிக்கும்போது நான் ஜெர்மன்ல கூட என்னை கார்ல தான் கூட்டிட்டு போவான்! பைக்ல இதுவரைக்கும் நாங்க ரெண்டு பேரும் வந்ததே கிடையாது! தெரியுமா?
உடனே பவன்யா சிரித்துக் கொண்டே அப்புறம் என்ன இனி கல்யாணத்துக்கு அப்புறம் ரெண்டு பேரும் ஜாலியா போங்க ! இங்கே பார்க்கிற எல்லாத்துக்கும் தான் வயித்தெரிச்சலா இருக்கு போகுது!..
மிதுன் சில பொருட்களை எடுக்க வீட்டிற்கு வந்தவன் காதில் இந்த அனைத்து விஷயங்களும் கேட்டது. கூடவே ரிதம் வந்திருந்தாள்.
மிதுன், ஹே கேட்டியா? அவங்க ரெண்டு பேரும் புல்லட்ட போறாங்களாம்!.
ரிதம் வெம்பி கொண்டே அவங்க எதுல போனா நமக்கு என்ன? நீ வா!
மிதுன், அதுவும் சரி தான் நான் உன்னை தூக்கிட்டு போகட்டுமா?
ரிதம் சிரித்து கொண்டே என்னை எதுக்கு நீ தூக்கிட்டு போற? உன்னை யார் கல்யாணம் பண்ணிக்கிறாங்களோ, அவங்கள தூக்கிட்டு போ!..
மிதுன் புருவத்தை நெருக்கிக் கொண்டு நம்ம ரெண்டு பேரும் தானே கல்யாணம் பண்ணிக்க போறோம்!.. என்று கேட்டான்.
ரிதம், கல்யாணம் அது ஒராமா இருக்கட்டும்! அந்த ரெண்டு பேப்பர அரியர் வச்சு இருந்தியே அதை பாஸ் பண்ணியாடா?
மிதுன் உடனே தன்னை சரி செய்து கொண்டே அறியரா ? நானா? அதெல்லாம் எப்பவோ பாஸ் பண்ணிட்டேனே!.
ரிதம் சிரித்துக் கொண்டே உன்னை பத்தி எனக்கு தெரியாதாடா? மிதுன்! போயும் போயும் அந்த EVS ல போய் அரியர் இன்னும் எழுதிட்டு இருக்க.. அத பாஸ் பண்ணியா ? இல்லையா?
மிதுன் கொஞ்சம் குரலை உயர்த்திக் கொண்டே நான் எவ்வளவு தான் ட்ரை பண்றது? எல்லாத்தையும் டிஸ்டிநேசன் வாங்கி இருக்கேன்! ஆனா இந்த EVS மட்டும் என்னால முடியல.. எக்ஸாம் ஹால்ல ரொம்ப தூக்கம் வருதுடி! என்று கூறினான்.
ரிதம், அப்போ எப்படி இந்த பிசினஸ் எல்லாம் தேவ் கார்ப்பரேட்- டோட M.D… C.E.O அப்டின்னு சொல்லிக்கிற! மாமா உன்ன அப்படியே விட்டுட்டாரா?
மிதுன் கொஞ்சம் முகத்தை விர்என வைத்துக்கொண்டு அவர் இன்னும் அப்படித்தான் சொல்லிட்டு இருக்காரு! நான் அவரோடு பேச்சை எல்லாம் பெரிசா எடுத்துக்க மாட்டேன்! அவரோட சொத்துல எனக்கும் தான் ஈக்குவல் ரைட்ஸ் இருக்கு. சோ அதுல இருந்து தேவ் கார்ப்பரேட்ஸ் நான் எடுத்துக்கிட்டேன்! என்னோட இஷ்டப்படி நான் பண்ணிட்டு இருக்கேன்.
ரிதம் சிரித்து கொண்டே மாமா உனக்கு வெளியில் ஒரு கேபின் போட்டு கொடுத்திருக்காராமா? உள்ளேயே விடமாட்டாராமா? அப்படியா?
மிதுண் கொஞ்சம் உடையை சரி செய்து கொண்டு “ஆமா அங்க போய் யாரு வேலை பார்க்குறா? அங்க எல்லாரையும் பார்த்தா எனக்கு இரிடேடிங்கா இருக்கு! அதுவும் அவர் பேசும்போது எனக்கு கடுப்பா இருக்கு! நான் மகி கிட்ட சொல்லிட்டேன் உன்னோட நாட்டியாலயா, அப்புறம் டிராயிங் சேர்ஸ் எல்லாம் எனக்கு தான் சொல்லிட்டேன்டி!”
ரிதம், உனக்கே எல்லாமா? உனக்கு முன்னாடி ஒருத்தர் பிறந்து இருக்காரு அவருக்கு?
மிதுன், அவனை பத்தி உனக்கு என்ன? அவன பத்தி இப்ப எதுக்கு நம்ம நினைக்கணும்? வா நாம போலாம்! இந்த புல்லட் ட்ராவல ஏதாவது பண்ணி ஆகணுமே! என்று நினைத்துக் கொண்டிருக்க..
நித்தின் கால் செய்தான்.
உடனே மிதுன் படபடவென்று போன எடுத்தான். ப்ரோ சொல்லுங்க!
நித்தின், எல்லாருக்கும் இங்கே தாத்தா வெயிட்டிங்!. எல்லாரையும் வர சொன்னாரு!. என்று கொஞ்சம் கம்பீரமான குரலில் பேசினான்.
ப்ரோ எல்லாரும் கிளம்பிட்டாங்க..
நித்தின் வேண்டுமென்று உங்க அண்ணா கிளம்பிட்டாரா? என்று கேட்டான் .
மிதுன் தேவ், அதை ஏன் ப்ரோ கேட்கிற.. அந்த கொடுமைய என்னால் பார்க்க சகிக்கல!.
உடனே ரிதம் போன் வாங்கி, சக்தி புல்லட்டில் வரப்போறான். கூட ஒருத்தி இருக்காளே!
உடனே அவளிடம் போன் வாங்கி மிதுன், ஹரிணி! சத்ய தேவ் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து சீன் போட்டுட்டு வராங்க!. என்று கூறினான்.
நிதின் பக்கம் அமைதி ஆனது.
என்ன பேச்சையே காணோம்! ப்ரோ இருக்கீங்களா?
நிதின், சரி நீ சீக்கிரம் வா என்று சொல்லி ஃபோனை வைத்தான்.
மிதுன் மற்றும் ரிதம் இருவரும் உள்ளே சென்று மகிழினி சொன்ன அனைத்து லிஸ்டில் இருக்கும் பொருட்களை எடுத்துக்கொண்டு கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது ரிதம் மிதுனிடம், நீ என்னை கல்யாணம் பண்ணனும் என நினைக்கிறாயா?
மிதுன், ஏன் நான் உன்னை கட்டிக்க கூடாதா? எனக்கு என்ன குறைச்சல்? என்றான்.
ரிதம், நான் உன்ன என்னோட பார்ட்னர் அளவுக்கு பார்த்ததில்லை!.
மிதுன் , பார்ட்னராக என்ன பண்ணனும்? உனக்கு ஒரு கிஸ் கொடுக்கட்டுமா? அப்ப முடிவு பண்றியா? என்று அருகில் வந்தான்.
ரிதம் அருகில் உள்ள மனக்கட்டையை தூக்கியவள். என்ன? என்னடா இப்ப வந்து கொடு பார்க்கலாம்! என்று அவளிடம் இன்பராகவன் கொஞ்சம் தென்பட்டான்.
மிதுன், எனக்கும் உன்ன அந்த அளவுக்கு இதுவரைக்கும் வச்சு பார்க்கல! ஆனா நீ எப்பவும் என் கூட இருக்கணும்! அந்த மாதிரி இருந்தா போதும்! நீ இல்லாம என்னால இருக்க முடியாது! சின்ன வயசுல இருந்து உன் கூட வளர்ந்து பழகிட்டேனா! நீ இல்லாம என்னால இருக்க முடியாது டி!..
ரிதம் அவனை பாசத்துடன் பார்த்து கட்டிக் கொண்டாள். அவன் கன்னத்தில் முத்தம் பதித்து சத்தியமா மிதுன் உன்ன விட்டு என்னாலையும் இருக்க முடியாது! நம்ம எண்ணம் ஒரே மாதிரி இருக்குல்ல.. இது ஏன் மத்தவங்களுக்கு புரிய மாட்டேங்குது?
மித்துன், அவர்கள் அப்படித்தான்! கிடக்கிறாங்க விடு! என்று அவளுடைய உச்ச தலையில் முத்தம் பதித்தான். (இருவர் மனதிலும் சபலம் இல்லை ஒன்றாக பிறந்து வளர்ந்து இருக்கிறார்கள் அல்லவா) அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்கள்.
ரிதம் காரில் வரும்போது மிதுன் அவளிடம் “நீயே என்னை கட்டிக்கோன்னு கெஞ்சுனா கூட நான் உன்னை கட்டிக்க மாட்டேன் டி! என்று கூறினான்.
ஏன்டா என்று மூக்கு விடைக்க திரும்பி பார்த்தாள்.
உன்னை எல்லாம் எவன் அடக்குவான்? நீ டெய்லியும் 12 மணிக்கு எந்திரிக்கிற! நல்லா சாப்பிடுற, அதுவும் அசைவமா சாப்பிடுற! கறிக்கடைக்காரன தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்… என மிதுன் சொல்ல..
ரிதம் அந்த கவலையை நீ விடு உனக்கு எந்த நாட்டு இளவரசி வருகிறாள் என பார்க்கிறேன் டா! என இருவரும்
வசந்தன் வீடு மிகவும் அழகாக அலங்கரிக்க பட்டு இருந்தது. நாளை மணிவிழா வீட்டிலேயே நெருங்கிய உறவினர்களை அழைத்து செய்ய முடிவு எடுத்து இருந்தார்கள்.
அனைவரும் வந்து சேர்ந்தார்கள் ருத்ரன் காரில் இருந்து இறங்க.. பவன்யா எவனிக்கா யுவதிக்கா என அவர்கள் பட்டாளத்துடன் வர அப்பொழுது தான் நிலா காரில் வந்து சேர்ந்தாள்.
அவள் வந்ததும் உடனே நிவாஸ் வந்துவிட்டான். என்ன உன்னோட பின்னாடி ஒரு கார் தான் வருது? எப்பவும் ரெண்டு கார் வருமே? நான் உன்னை எவ்வளவு கவனமா சொல்லி இருக்கேன்!
நிலா பயந்து கொண்டே அண்ணா சாரி அண்ணா அந்த கார் வழியிலேயே ரிப்பேர் ஆயிடுச்சு!. அதனாலதான் என்று பயந்து கொண்டே கூறினாள்.
நிவாஸ், என்ன? ரிப்பேர் ஆயிடுச்சா? இப்பவே அவங்க எல்லாத்தையும் வேலை விட்டு தூக்குறேன்! என்று போனை எடுத்துக் கொண்டே கம்பீரக் குரலில் பாதி வழியில் காரில் உள்ளவர்கள், கார ஓட்டியவர்களையும் வேலையை விட்டு தூக்கினான் .
நிலா கொஞ்சம் திக்கிக்கொண்டே இதுக்கு எதுக்கு வேலை விட்டு தூக்குறீங்க?
நிவாஸ் உன்னோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம் புரியுதா? உள்ள போ! என்றும் மிரட்டினான்.
மகிழினிக்கு இன்று மிகவும் சந்தோஷமாக இருந்தது. தன்னுடைய மகன் வரப் போகிறான் என்று குதூகலத்துடன் இருக்க…
அதைவிட மைவிழி உற்சாகத்துடன் நின்று கொண்டிருந்தாள். ஏனென்றால் சத்யதேவுக்கு எப்பொழுதும் மைவிழியை ஒரு படி அதிகமாகவே பிடிக்கும்! தன்மை பெற்றது மட்டும் தான் தன்னுடைய தாய் , அவள் எப்பொழுதெல்லாம் தன்னை கை விடுகிறாலோ இதுவரை தன்னை உதாசீனம் செய்தால் கூட மைவிழி பக்கத்தில் இருந்து அவனுக்கு உறுதுணையாக தன் மகள் மகன்களைப் போலவே பார்த்துக் கொள்வாள்.
ஆனால் சத்ய தேவ் இப்பொழுது ஹரிணியுடன் வந்து நிற்க மைவிழிக்கு கொஞ்சம் இதில் விருப்பமில்லை. ஏனென்றால் ஹரிணி அவனைவிட ஒரு வருடம் பெரியவள் அதனால் கொஞ்சம் முகத்தை தூக்கி கொண்டு தூக்கி வைத்துக்கொண்டு நின்றிருந்தாள்.
மகிழினி ஒரு பக்கம் சத்யதேவை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தேஜு மற்றும் spr இருவரும் வந்திருந்தார்கள். Spr எப்பொழுதும் போல் சத்யதேவை பார்த்தான்.ஏனென்றால் spr-க்கு இப்பொழுது தான் சத்திய தேவ் சூரியதேவ் போல இல்லை, அந்த மிதுன் தேவ் தான் அப்படியே சூர்யாவை போல இருக்கிறான்.
தேஜூ சத்ய தேவ்வை இயல்பாக பார்த்தாள். ஏனென்றால் அவனுடைய பழக்கவழக்கங்கள் அத்தனையும் உதயனைப் போலவே இருக்கும். ஒருவரிடமும் முகத்தை சுளித்து பேசவே மாட்டான். அனைவரிடமும் மிகவும் இயல்பாக பேசுவான், பழகுவான் அந்த குணம் தேஜுவிற்கு மிகவும் பிடித்துப் போனது.
தேஜுவை சத்ய தேவ்க்கு பிடிக்கும் இருவரும் இறங்கி..
வர ராம் மற்றும் கீதா ஒரு பக்கம் நின்று கொண்டிருந்தார்கள்.
கீதாவிற்கு ஒரு மகன் ஆதவ்! அதாவது ஹரிணிக்கு ஒரு தம்பி அவனது பெயர் ஆதவ் அவன் இனியா மற்றும் இதயனுடைய செட் அதாவது அவர்களுடைய வயதை ஒத்தவன். இப்பொழுதுதான் 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு கல்லூரியில் சேரப் போகிறான்.
எல்லாம் இப்படி இருக்க ராம் முகம் மிகவும் சோகமாக இருந்தது.
கீதா, என்ன நடந்து போச்சு! எதுக்கு இப்படி முகத்தை வச்சு இருக்க..என்று கேட்டுக் கொண்டிருக்க..
ராம், ஹரிணியை விட சின்ன பையன் டி என்று வருத்தப்பட்டார் .
கீதா , சச்சின், தனுஷ் என்று ஆரம்பிக்க..
உடனே ராம், சரி எனக்கு இதில் சம்மதம் தான் போதுமா! என்று கூறிக் கொண்டிருந்தார்.
இந்த பேச்சுக்கள் அனைத்தும் நித்தின் காதுகளில் விழுந்தது. அவன் சத்யதேவயும் ஹரிணியும் பார்த்துவிட்டு அப்படியே அவனையே பார்த்துக் கொண்டான்.
சத்திய தேவ் பட்டு வேஷ்டி சட்டையில் இருக்க ஹரிணி கரும்பச்சை வண்ண பட்டுப்புடவையில் மிகவும் சாதாரணமாகவும் சிம்பிளாகவும் இருந்தாள்.அவ்வளவு அழகு… ஜோடி பொருத்தம் அப்படி இருந்தது.
ஆனால் நித்தின் கோட் சூட்டில் நின்று கொண்டிருந்தான். அப்பொழுது தான் அவனுக்கு தெரிந்தது . இந்த பங்ஷன்க்கு வேஷ்டி சட்டை தான் போடணுமா? இது தெரியாம போச்சே! என் முன்னாடி அவன் இப்படி வந்து நிற்கிறானே என்று உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தான்.
சத்யதேவ் யாரையும் கண்டு கொள்ளவில்லை நேராக மைவிழியின் அருகில் சென்று சித்தி என்று அழைத்து அணைத்து கொண்டான் .
கார்த்திக் வந்து நிற்க டாடி என்று அவனையும் கட்டிக் கொண்டான்.
கார்த்திக் மிகவும் சந்தோஷமாக அப்படியே உங்க அம்மா போலவே என்று ஆரம்பிக்க..
மை விழி முறைத்துக் கொண்டே என்ன? என்ன சொல்ல வந்தீங்க? என்று கேட்க..
ஒன்னும் இல்ல என்று அமைதியாகி விட்டான்.
மைவிழி சிரித்துக் கொண்டே சத்யதேவை பார்த்து எனக்கு ரொம்ப சந்தோஷம்! இனி எதுக்காகவும் நீ போக கூடாது புரியுதா! என் பக்கத்திலேயே இருக்கணும்… அதுதான் எனக்கு வேணும்!..
சத்தியதேவ், இனிமேல் உங்களை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்! என்று கூறினான்.
ஹரிணி சிரித்துக் கொண்டே அத்தை என்று கூற மைவிழி..
ஹரிணி செல்லம் என்று கூறினார் அதன் பின் சத்ய தேவ் கார்த்திகை பார்த்து டாடி எங்கே? என்று கேட்டான்.
உங்க அப்பா உள்ள இருக்காங்க என்று கூற அனைவரும் வீட்டை நோக்க..
அவர்கள் அந்த நேரம் சத்தியதேவ், சித்தி ஒரு நிமிஷம் என்று சொன்னவன் நேராக ராம் மற்றும் கீதா அருகில் சென்று சாஷ்டாங்கமாக காலில் விழுந்து என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா!. கீத்து அத்தை என்று படுத்து விட்டான்.
இதைக் கேட்டதும் கீதா என் செல்ல மருமகனே என்று கூற..
ஹரிணிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது . ஆனால் தன் தந்தையை தயக்கத்துடன் பார்த்தாள்.
கீதா ராமை அதட்டிக்கொண்டு என்ன பார்வை? ஆசிர்வாதம் பண்ணி என் மருமகனை எழுப்பி விடு! என்று கூறினாள்.
ராம் கொடுமை பண்ற டி என்று சத்திய தேவை எந்திரி சக்தி உன்னை எனக்கு எப்பவும் பிடிக்கும்! இப்பவும் புடிக்கும் என்ன ? இப்போ என் மருமகனா வரப்போற சந்தோஷம் என்று கூறினார்.
சத்யதேவ் ராமை உடனே கட்டி ஒரு நிமிடம் தூக்கி கொண்டான் .
டேய் என்னடா பண்ற? இறக்கி விடுடா! கீதா சொல்லு என்று ராம் சொல்ல அங்கே அனைவரும் சிரித்தார்கள்.
சத்ய தேவ் , இது போதும் மாமா! நான் உங்கள உங்க பொண்ண இப்படி தூக்கி வச்சு பாத்துக்குவேன்! என்று கூறினான்.
அங்கு இருப்பவர்களும் ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆதவ், போதும் மாமா என்று கூற …
சத்ய தேவ் நேராக வந்து ஆதவ் கன்னத்தில் முத்தம் பதித்தான்.
மாமா!.. என்று ஆதவ் அப்படியே நிற்க..
ஹரிணி, சத்ய தேவ் என்னடா பண்ற?. என்று கேட்க..
உன்னோட தம்பி உன்ன போலவே இருக்கான் அதான் என்று முத்தம் கொடுக்க..
கீதா அவனைப் பார்த்து , ஹே ராம் பார்த்தால் எப்படி என் பொண்ண நேசிக்கிறான் பாத்தியா? இந்த மாதிரி ஒரு பையனை எங்கேயாவது தேடுனா கிடைக்குமா? என்று கூறினாள்.
எனக்கும் சந்தோஷம்தான் போதுமா போலாமா என்று அனைவரும் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.
நித்தின் பிரகாஷ் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான். தேஜு உள்ளே போக sprரின் பார்வை நித்தின் பிரகாஷ பார்க்க…
நிதின் கடுப்புடன் உள்ளே வரேன் போங்கப்பா என்று அதட்டலுடன் கூறிக் கொண்டே நின்றான்.
அதன் பின்பு தான் மிதுன் ரிதம் அனைவரும் வார அவர்களுடன் உள்ளே சென்றார்கள்.
அங்கு இருக்கும் அனைவரும் சத்யதேவ் மற்றும் ஹரிணி இருவரையும் பார்த்துக் கொண்டிருக்க.. வசந்தனை வீல்சேரில் கலைவாணி தள்ளிக்கொண்டே வந்தார். அவர் உடல் நலத்தில் நன்றாக இருக்கிறார். ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் ஒரு சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கார் ஆக்சிடெண்டில் வசந்தனுக்கு ஒரு கால் போய்விட்டது. விபத்தில் ஒரு கால் போனதால் அவர் வீல்சேரில் வருகிறார்.
சிவன்யா இதழினியிடம் ஆமா இங்கே என்ன நடக்குது? நாளைக்கு தானே நம்ம தாத்தாவுக்கும் அம்மாச்சிக்கும் கல்யாணம் நடக்க போகுது! இன்னைக்கு என்ன பங்க்ஷன்? என்று கேட்க அவர்களின் அருகில் ரிதம், மிதுன், நித்தின் பிரகாஷ் மூவரும் நின்று கொண்டிருந்தார்கள்
இதழ் சிரித்துக்கொண்டே சக்தி அண்ணாவுக்கும் ஹரிணிக்கும் இன்னைக்கு எங்கேஜ்மென்ட்! இனிமே நமக்கு ஹரிணி ஃபேமிலி பிரென்ட் மட்டும் இல்ல! நமக்கு அண்ணியாக போறாங்க என்று சந்தோஷத்துடன் கூறினாள்.
இதைக் கேட்டதும் டிஸ்கஸ்டிங்!..
அது யாருக்கு? நாளைக்கு பாக்கலாம்?
தொடரும்…
EPISODE 9
இதழ் சிரித்துக்கொண்டே சக்தி அண்ணாவுக்கும் ஹரிணிக்கும் இன்னைக்கு எங்கேஜ்மென்ட்! இனிமே நமக்கு ஹரிணி ஃபேமிலி பிரென்ட் மட்டும் இல்ல! நமக்கு அண்ணியாக போறாங்க என்று சந்தோஷத்துடன் கூறினாள்.
இதைக் கேட்டதும் டிஸ்கஸ்டிங்! என்று ஒரு குரல் இது சத்யமா நிதின், ரிதம் இல்லை…( என்னடா இப்படி ஆகி போச்சு readers mind) twist தான்
மிதுன் தான்!..
நிதின் கைகளை இறுக்கி மடக்கி கொண்டே கொண்டே “என்ன டிஸ்கஸ்டிங்!” என பற்களை கடித்து கொண்டே கேட்டான்.
மிதுன் அவனுக்கு அருகில் வந்து இதழ் காதுக்கு கேட்காமல் இருக்க சத்ய தேவ்க்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னா மகி அவனை வீட்டுக்கு கூட்டி வர சொல்லி டாட் கிட்ட சொல்லி இருக்கா? சோ என்னால் அதுங்க ரெண்டும் வீட்டுக்கு வரத ஏற்று கொள்ள முடியாது.
நிதின் அப்படியா? மகி மனசு மாறிட்டாளா?
மிதுன் அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டே பாரு ப்ரோ அங்கே மகி ரியாக்ஸன பாரு! கிலோ கணக்கில் சந்தோசம்!
அங்கே நின்று கொண்டு இருக்கும் சத்ய தேவ் – ஹரிணி மற்றும் மகி என பார்த்தான்.
மிதுன் சுற்றிலும் பார்த்து கொண்டே ஹே ரித்து என்ன அமைதியா இருக்க எதுவும் பேசு!
ரிதம் தன்னை சரி செய்து கொண்டே என்ன சொல்றது? வாழ்த்துக்கள் சொல்லவா?
மிதுன் கடுப்புடன் என்ன டி நீ? அவங்க ஐகானிக் பேர் மாதிரி ரொம்ப கொடச்சலா சீன் போடுவான். ஏற்கனவே அவனை பத்தி தான் மூச்சுக்கு முன்னூறு தடவை எப்போவும் அவரு (சூர்ய தேவ்) அவன் புகழ் தான் பாடுவாரு! இப்போ அந்த ஹரிணி வந்துட்டா அவனை உட்கார வச்சு ஒரு பக்கம் குக்கு, இன்னொரு பக்கம் மகி இன்னொரு பக்கம் ஹரிணி, அப்புறம் அவரு ( சூர்ய தேவ்) என ஒரே கூத்து கொடுமையா இருக்கும்.. எதாவது பண்ணி இந்த கல்யாணத்தை நிறுத்த முடியுமா? இதே ஐகானிக் ஜோடி நம்ம டெவில் கேங் ல இருந்தால் கூட நல்லா இருக்கும்!..
ரிதம் கடுப்புடன் சத்ய தேவை பார்த்தாள்.
மிதுன், ப்ரோ பேசாமல் நீ கூட கல்யாணம் பண்ணிக்க…
நிதின், யாரை?
மிதுன் சுற்றிலும் பார்வையை சுழட்டி ம்ம் இனியா மட்டும் தான் மாமா பொண்ணா இருக்கா! வேற யாரு? என யோசித்து கொண்டே ஹான் ரிதம் இருக்காளே!
ரிதம் திடுக்கிட்டு காமெடி பண்ணாத!.. என சொல்ல..
அந்த நேரம் நிதின் உடனே ஒருவருக்கு போன் செய்தான்.
ஹலோ நான் நிதின் ஸ்பீகிங்!.
அண்ணயா! எப்டி இருக்கீங்க? என அந்த பக்கம் குரல் கேட்டது.
நிதின் விசயங்களை சுருக்கமாக சொல்ல..
உடனே கனிரா சிரித்து கொண்டே அது அண்ணயா! நாளைக்கே நான் வரேன்! அந்த ரிதம் அவளை என்கேஜ் பண்ணிடு!.
நிதின் சந்தோச முகத்துடன் பண்ணவா பாப்பா!
கனிரா, ஒரே கல்லில் மூணு மாங்கா அண்ணயா!..
நிதின் சிரித்து கொண்டே கனி நம்ம சித்தப்பாவுக்கும் அப்பாவுக்கும் இதை செய்து சர்ப்ரைஸ் பண்ணனும்!
கனிரா அப்படியே கவ்யா மற்றும் குரு பிரகாஷ் கிட்ட இருக்கும் அத்தனை தகிடு தத்தமும் சேர்ந்து டன் அண்ணயா இனிமே தான் சம்பவமே இருக்கு! என்று சொல்லி வைத்தாள்.
வசந்தன் மற்றும் கலை வாணி இருவரும் புன்னகையுடன் இருக்க..
மகி தன் மகனை பார்த்து கொண்டு இருந்தாள்.
ஹரிணி அவனிடம் சத்ய தேவ்! சத்ய தேவ்! என மெதுவாக அழைக்க
சத்ய தேவ் அவளின் கை விரலை வருடி கொண்டே என்ன?
ஹரிணி தயங்கி கொண்டே அத்தை டா! ஒரு வார்த்தை பேசு! பிளீஸ்! எனக்காக..
சத்ய தேவ் கைகளை விட்டு விட்டான்.
ஹரிணி, இன்னும் அதை நினைத்து கொண்டு இருக்கியா? என்னால தானே ஸ்டார்ட் ஆச்சு!.
சத்ய தேவ் அவளின் காதோரம் அவங்களுக்கு “என்னை விட மிதுன் முக்கியம் அதை விட மினிஸ்டர் சாருக்கு தெரிந்த விசயத்தை கூட என் கிட்ட காட்டிக்க நினைக்கல அதை விட அந்த ரிதம் அவளுக்கு எல்லாம் தெரிந்து இருக்கு! நான் யாரு? அவங்களுக்கு நான் யாரு? பிளீஸ் என்னோட மோட் ஸ்பாயிள் பண்ணாத டி!”
ஹரிணி, அது சின்ன வயசில நடந்தது டா! இப்போ உனக்கு கல்யாணம் ஆக போகுது நம்ம அவங்க கூட தான் இருக்க போறோம்!
சத்ய தேவ், நான் வேணும் என்றால் அவங்க தான் என் கிட்ட வந்து பேசணும்! பேச சொல்றயா! என இரு புருவம் தூக்கினான்.
ஹரிணி நேராக மகி அருகில் சென்று அத்தை என கட்டி கொண்டாள்.
மகி சிரித்து கொண்டே என்ன சொல்லி கொடுத்தாரு? சாரு!. .
ஹரிணி சிணுங்கி கொண்டே அத்தை! சத்ய தேவ் பேரை மட்டும் கூப்பிடுங்க! அவன் ஓடி உங்க கிட்ட வந்திடுவான்! என்று ஆர்வத்துடன் பார்த்தாள்.
மகி உதட்டை கடித்து கொண்டு துக்கத்தை அடக்கியவள்.. நான் அவனை அடிக்க உரிமை இல்ல! அவனை பேச உரிமை இல்ல! ஆனால் இப்போ சத்ய தேவ்ன்னு சொன்னால் எல்லாத்தையும் தூக்கி போட்டு வருவானா? உன்னை யாரை கேட்டு கல்யாணம் பண்றான்? என் கிட்ட ஒரு வார்த்தை சொன்னானா? என்றாள்.
ஹரிணி முகம் வாடி போக அப்போ பிடிக்கலயா?..
மகி சிரித்து கொண்டே ஹே ஹரிணி நீ தான் என்னோட முதல் தேவதை! எனக்கு ரொம்ப சந்தோசம்! ஆனால் அவன் பேசிய விசயம் தப்பு தான்! அவனே வந்து அம்மா ன்னு ஒரு வார்த்தை கூப்பிடட்டும் ஓடி வருவேன்.
ஹரிணி, அப்புறம் எதுக்கு அவனை? என ஆரம்பித்தவள் நிறுத்தி கொள்ள.
மகி, என் பையனை ஆசையா பார்த்து பெருமை பட எனக்கு உரிமை இருக்கு! நான் பார்ப்பேன்! போ போ அவன் உன்னை தான் பார்க்கிறான். என அனுப்பி வைத்தாள்.
ரிதம் சிரித்து கொண்டே அங்கு நடக்கும் காட்சிகளை பார்த்து கொண்டு இருந்தாள்.
அந்த நேரம் தான் சூர்யா நிச்சய மோதிரத்துடன் வந்தார். இப்போ புரொமோஷன் time மருமகள் எடுக்க போறாங்க அதனால் மரியாதை கொடுக்க வேணும்.
அந்த நேரம் தாரா மற்றும் உதயன் வந்தார்கள். அவர்களை பார்த்ததும் கலை வாணி முகத்தை தூக்கி கொண்டு திருப்பி கொண்டாள்.
தாராவுக்கு மிகவும் குற்றஉணர்வு.. தன் கணவனை இதற்கு எல்லாம் நீ தானே காரணம் என்பது போல பார்த்தாள். ஆம் அன்னிக்கு நேமிங் செரமனி முடிந்து பெங்களூர் போனவர்கள் அங்கேயே இருந்து கொண்டார்கள்.
உதயன் தாராவை அனுப்பவே இல்லை. கலை மனதில் தாரா தன் மகனை பேரன் பேத்தி என குடும்பமாக பிரித்து கூட்டி போய் தன்னை தவிக்க விட்டு விட்டாள் என்று பதிந்து போனது.
சூர்யா மோதிரங்கள் இருவருக்கும் மாறி மாறி கொடுக்க..
நம்ம வீட்டில் அண்ணா கல்யாணம் இப்படி செளிபிரேசன் இல்லாமல் நடக்குதே! முன்னாடியே சொல்லி இருந்தால் பிரிபேர் ஆகி இருக்கலாமே மகி சித்தி! என நிதின் கூறினான்.
மிதுன் அதில் அதிர்ச்சி ஆகி கடுப்புடன் ப்ரோ என அழைக்க..
தேஜூ முறைத்து கொண்டே பார்த்தாள்.
நிதின் யாரையும் கண்டு கொள்ள வில்லை நேராக அவர்களின் முன் சென்றான்.
சூர்யா அமைதியாக பார்க்க தேஜு உடனே அருகில் வந்து என்ன நிதின் பண்ற?
நிதின், மா நான் என்ன பண்றேன்! என்னை எல்லாரும் தப்பா தான் பார்க்கிரீங்க! மகி சித்திக்கு தெரியும்! சித்தி நான் சொல்வதில் தப்பு இருக்கா!
மகி ஒரு பெரு மூச்சை விட்டு புன்னகையுடன் இல்ல நிதின் கண்ணா! என்றாள்.
ஹரிணி திகைப்புடன் சத்ய தேவ பார்க்க.. அவன் அமைதியாக நின்றான்.
நிதின், ம்ம் தூரி! என அழைக்க இதழ் புன்னகையுடன் வந்தாள்.
அண்ணா!
நிதின், நீ அன்னிக்கு மோதிரம் எடுத்து கொடு நான் அண்ணாவுக்கு எடுத்து கொடுக்கிறேன்! மிதுன் குயிக் நீ போட்டோ எடு! தாத்தா நான் சொல்றது சரி தானே!
வசந்தன் புன்னகையுடன் பார்த்து தலை அசைத்தார்.
மிதுன் கடுப்புடன் வந்து நின்றான். அதற்குள் தாம்பூல தட்டுகள் வரிசையாக அடுக்கி வைக்க பட்டது.
நிதின் சிரித்து கொண்டே அண்ணா!
சத்ய தேவ் பார்க்க..
அன்னிக்கி மோதிரம் போடு என்று கண் சிமிட்டினான்.
சூர்ய தேவ் மிதுன் கைகளில் இருந்து போன் வாங்கி போட்டோ எடுக்க ஆரம்பிக்க..
ரிதம் நேராக மகி அருகில் சென்று நின்று கொண்டாள்.
மாமி!
மகி, அழகி! எப்போ வந்த?
ரிதம் , சாரி மாமி! நான்!
மகி அவளின் கை கோர்த்து நீ என்ன தப்பு பண்ண! சாரி கேட்க கூடாது. நீ நான் தூக்கி வளர்த்த பொண்ணு! என் ரிதம் தப்பு பண்ண மாட்டாள். .
ருத்ரன், மாமா என் கிட்ட கொடுங்க என போட்டோ எடுக்க ஆரம்பித்தான்.
சூர்யா ஹரிணி அருகில் நின்று கொள்ள கீதா சத்ய தேவ் அருகில் நின்றாள். மொத்த குடும்பமும் சந்தோசத்தில் திளைக்க..
ரிதம், இல்ல மாமி நான் தப்பு பண்ணிட்டேன்! என்று சொல்ல..
சத்ய தேவ் ஹரிணியின் நீண்ட விரல்களில் மோதிரம் போட்டு விட்டான். அதன் பின் ஹரிணி சிரித்து கொண்டு சந்தோசத்துடன் சத்ய தேவ் விரலுக்கு போட்டு விட்டாள்.
மகி, எல்லாம் நல்லதுக்கு தான்! நீ feel பண்ணாத தங்கம்! .
ரிதம் புன்னகையுடன் மாமி எனக்கு உங்க கேரளா சாரி அண்ட் டார்க் கிரீன் பிளவ்ஸ் வேணும்! கட்டி விடுவீர்களா! இப்போவே!
மகி, அது வீட்டில் இருக்கே!
ரிதம் புன்னகையுடன் எடுத்து வந்துட்டேன். என சொல்லி கொண்டே இருவரும் நிச்சய விழாவை பார்த்தார்கள். இருவரும் மாலையை மாற்றி கொண்டு ஜோடியாக ராம் மற்றும் கீதா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்.
ரிதம் மற்றும் மகி என அங்கு இருப்பவர்கள் அனைவரும் பார்வையும் சத்திய தேவ் மற்றும் ஹரிணி மீது இருந்தது.
இப்பொழுது இருவரும் வந்து சூர்யா மற்றும் மகி இடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் .
அதனால் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க சத்திய தேவ் நேராக ஹரிணியின் கைகளைப் பிடித்துக் கொண்டு மகியை நோக்கி நடந்தான்.
மகிழ் அதே பார்வையுடன் நின்று கொண்டிருந்தாள். ரிதம் அவர்கள் இருவரையும் இயல்பாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
சத்ய தேவ் அவர்களின் அருகில் சென்று ஒரு நிமிடம் நின்றவன். ஹரிணியின் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டே மகி மற்றும் ரிதம் இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அருகில் மைவிழி கார்த்திக் இருவரிடமும் போய் ஆசீர்வாதம் வாங்கினான்.
அங்கு இருக்கும் அனைவரும் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து பார்த்துக் கொண்டிருக்க..
மை விழிக்கு உச்சகட்ட சந்தோஷம் என்னோட பையன்! என்னோட பையன்! நீ! நீ! என் பையன்டா நீ என்னோட தேவதை ஹரிணி! நீ என் வீட்டு மருமகள்! என்று சந்தோஷமாக இருவரையும் கட்டி அணைத்துக் கொண்டு தன் தங்கையை கேவலமாக ஒரு பார்வை பார்த்தாள்.
தொடரும்..
EPISODE 10
சத்ய தேவ் நேராகச் சென்று மைவிழியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட..
அவளுக்கு அவ்வளவு சந்தோஷம் இந்த சந்தோஷத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவனை அவள் தன்னுடைய பிள்ளைகள் போலத்தான் வளர்த்தாள். அதைவிட ஒரு படி மேலாக அதிக பாசம் கொட்டி வளர்த்திருக்கிறாள். தவறு என்றால் அதை சுட்டிக் காட்டுவாள். அவன் சரி என்றால் அவனை ஏற்றுக் கொள்வாள். அந்த மாதிரி ஒரு குணம் தான்!
ஆனால் மகிழினி சத்ய தேவை உதாசீனம் செய்வது மைவிழிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
சூர்யா எந்த வெளிப்பாடும் இல்லாமல் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு தன் தன் மனைவிக்கு சார்பாக பேசுவதா? தன் மகன் சார்பாக பேசுவதா? என்று ஒன்றும் புரியவில்லை.
இதில் எல்லாம் அவன் பெரிதாக தலையிட மாட்டான். அவனுக்கு ஆயிரம் பிரச்சனைகள் அலுவலகத்தில் இருக்கிறது. குடும்பம் என்றால் பிரச்னை இருக்க தான் செய்யும்.
மகிழினி மற்றும் ரிதம் இருவரும் சத்யதேவ் மற்றும் ஹரிணியை பார்த்துக் கொண்டிருக்க..
ருத்ரன் இந்த சூழலை சரி செய்யும் பொருட்டு இதழை கண்காட்டினான்.
என்ன டா பண்ண சொல்ற? என இதழ் கேட்க..
மாலை! மாலை! என கை காட்டினான்.
உடனே இதழ், சரி அண்ணா போதும் ரெண்டு பேரும் மாத்தி மாலை போட்டுக்கோங்க வாங்க! ஹரிணி அண்ணி !வாங்க அண்ணி! என்று அழைத்தாள்.
அதன் பின் சத்ய தேவ் மற்றும் ஹரிணி இருவரும் சோபாவிற்கு முன் வரவழைக்கப்பட்ட அங்கிருந்த மாலையை எடுத்து இருவரும் சந்தோஷத்துடன் மாற்றிக் கொண்டார்கள். இருவரையும் சோபாவில் அமர வைத்தார்கள்.
மகிழினிக்கு அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. அதனால் நேராக உள்ளே அறைக்கு செல்ல ரிதம் அவளை பின்தொடர்ந்து சென்றாள்.
மாமி! மாமி!..
மகி கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு என்ன ரிதம்! என்று கேட்க..
மாமி எனக்கு அந்த புடவையை கட்டி விடுறேன்னு சொன்னீங்கல்ல! இப்போ கட்டி விடுங்க!.
உடனே மகி கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்து அவளை அழைத்துக்கொண்டு அந்த கேரளா சேரியை அழகாக கட்டிவிட்டார்.
ரிதம், மாமி இதுக்கு என்ன ஜடை போடுவது? எனக்கு தெரியலையே? என்று அண்ணாந்து பார்த்து கேட்க..
மகிழினி சிரித்துக்கொண்டு நான் உனக்கு பின்னி விடவா?..
ரிதம், அதுவா? அப்படி பண்ணா மித்து பையனுக்கு பிடிக்காது!
மகிழினி அடேங்கப்பா அவனுக்கு புடிச்சா தான் ஜடை பின்னிக்குவியா? அவன் வேண்டாம்னு சொன்னா?
ரிதம், அவனுக்கு பிடிக்காததை நான் எப்ப செஞ்சிருக்கேன்?
சரி நான் உனக்கு free hairலேயே ஒரு ஜடை போட்டு விடுறேன். என்று அமர வைத்து அவளுக்கு அழகாக முடி எடுத்து கிளிப் போட்டுவிட்டு பூக்களை வைத்து விட்டு பார்த்தாள்.
ரிதம் மாமி எப்படி இருக்கேன்?என்று கேட்க..
மகிழினி ரிதமுடய இடையை சரி செய்து கொண்டே அழகா இருக்க! அப்படியே மெழுகு சிலை மாதிரி இருக்கடி!என் தங்கம் என்று நெட்டி முறித்தார்.
ரிதம் வேண்டும் என்றே உன்னோட மருமகளை விட நான் நல்லா இருக்கேனா?
அது யாரு என்னோட மருமகள்? என்று மகிழினி கேட்க..
ரிதம், சும்மா நடிக்காதீங்க மாமி! அதுதான் ஹரிணியை சொல்றேன்! அவளை தானே உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்! என்னை எல்லாம் பிடிக்குமா?
மகிழினி கொஞ்சம் கோபத்துடன் எப்போ பாரு உங்களுக்குள் சண்டை தானா? எனக்கு உன்னையும் பிடிக்கும், அவளையும் பிடிக்கும்!
ரிதம் கோபத்துடன் மாமி நீங்க ஒரத்தர தான் சொல்லணும். அது நானா மட்டும் தான் இருக்கணும்! நீங்க யாரை சொல்லுவீங்க! என்று பக்கத்தில் நெருங்கினாள்.
என்ன? என அவளை திடுக்கிட்டு பார்த்தார்.
ரிதம், ஆமா மாமி உங்களுக்கு என்னை மட்டும் தான் பிடிக்கனும்! யாரையும் பிடிக்க கூடாது!..
மகி சிரித்துக் கொண்டே “சரி எனக்கு உன்ன மட்டும் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும் போதுமா! என்று சொல்ல..
ரிதம் கண்ணகுளி தெரிய சிரித்து கொண்டே மாமி பொட்டு ஓகேவா? என்று கேட்டாள்.
மகிழினி அவளை அமர வைத்து ஒரு பொட்டு வைத்து அதற்கு மேல் கொஞ்சம் சந்தனம் கீழே அழகாக குங்குமம் வைத்து விட்டார்.
ரிதம் தன்னை தானே பார்த்து கொண்டு இருக்க..
மகி, ஒரு ஜிமிக்கி தோடு இருக்கு போட்டுக்கிறியா? மாமா வாங்கி கொடுத்தாங்க!.
ரிதம், இல்ல மாமி! மாமா உங்களுக்கு தான் வாங்கி கொடுத்து இருப்பாங்க! நீங்களே வச்சுக்கோங்க என்று கூற..
மகிழினி, அதனால் என்ன டி நீ போட்டாலும் ஒன்னு தான்! நீயே வச்சுக்கோ! என்று அவளை அமர வைத்து அழகாக வெள்ளை மற்றும் பச்சை கற்கள் பதித்த மயில் தோகையை விரித்துக் கொண்டிருக்கும் அதற்கு கீழ் ஜிமிக்கி தொங்குவது போல ஒரு டிசைனில் ஜிமிக்கி தோடு பார்க்கவே மிகவும் அழகாக இருந்தது.
மகிழினி அதை ரிதமுக்கு போட்டு விட்டாள். இந்த டிரஸ் காம்பினேஷனுக்கு இந்த தோடு செம்ம அழகா இருக்குடி! அடுத்து உனக்கு தானே கல்யாணம்!.
ரிதம் போங்க மாமி!. என்றாள்.
மகி, ரிதம் கொஞ்சம் அப்படியே அந்த ஜன்னல் கிட்ட நில்லு தங்கம் என்று சொல்ல..
ரிதம் போய் அங்கே நின்றாள்.
மகி, அந்த புடவையை சரி செய்யுமா! இங்க ஹிப்பு தெரியுது பாரு!..
ரிதம், தெரிஞ்சா தெரியட்டுமா மாமி! என்று கூறினாள்.
மகி சிரித்துக் கொண்டே பேட் ஹாபிட் பிச்சு யாரு பார்வை எப்டி இருக்கும்னு தெரியாது. மற்றவங்க மனசை நம்ம வான்டடா சஞ்சல பட வைக்க கூடாது சரி பண்ணு! என்று கூற..
ரிதம், ஒகே மாமி என சரி செய்து கொண்டே நின்றாள்.
மகிழினி அழகாக போனில் நிறைய போட்டோக்களை எடுத்தவள். அதை அப்படியே விவேகாவிற்கு அனுப்பி வைத்தாள்.
ரிதம் ஓகேவா மாமி எல்லாமே சரியா இருக்கா? இப்ப நான் வெளியே போகலாமா?
மகிழினி போலாம் என்று சொல்ல..
ரிதம், வாங்க மாமி நம்ம ரெண்டு பேரும் போகலாம்! யார் என்ன சொன்னா நமக்கு என்ன? என்று மகியின் கையை கட்டிக்கொண்டு சின்ன சின்ன சீண்டல் செய்து அவளை சிரிக்க வைத்துக் கொண்டே கூட்டிச் சென்றாள்.
அங்கே கலகல என சிரிப்பு சத்தம் கேட்க மகியின் சிரிப்பாக இருக்கிறதே என சூர்யா வெடுக்கென திரும்பி பார்த்தான். வசந்தன், உதயன், மிதுன், நிதின் என அனைவரும் பார்க்க… சத்ய தேவ் மற்றும் ஹரிணி என சிரிப்பு சத்தம் கேட்டு திரும்பினார்கள்.
ரிதம், மாமி! மாமி! நான் சொல்றது சரி தானே! என சொல்ல..
மகி கண்ணில் நீர் வழிய போதும் ரித்து சிரிக்க முடியல தங்கம்! என கூறினார்.
ருத்ரன் எடுத்த போட்டோவை பார்த்து கொண்டு இருக்க.. இதழ், மற்றும் பவா இருவரும் ஒரே நேரத்தில் தீரா! என அழைக்க..
என்ன என்னோட ரெண்டு டோலியும் ஒரே நேரத்தில் கூப்பிடுறீங்க! என சிரித்து கொண்டே கேட்டான். அவன் தலை போனில் கவிலுந்து இருந்தது.
இதழ், தீரா என உடையில் கிள்ள..
ஹே வலிக்குது டி! என சினுங்கினான்.
பவா, தீரு உன் அக்கா பொண்ணா மாறிட்டா!.
என்ன? பொண்ணா? என ருத்ரன் நிமிர்ந்து பார்க்க.. .அங்கே ரிதம் கேரளா சாரியில் கேரள நாட்டு கிளி போல தோரனையுடன் வந்து கொண்டு இருந்தாள்.
சத்ய தேவ் பார்வை தன் அம்மா மீது மட்டும் ஒரு முறை பார்த்தது. அதற்கு மேல் அவன் நேராக அமர்ந்து கொண்டான்.
ஹரிணி அவளை பார்த்து விட்டு ரிதம் அழகா இருக்கா டா!
சத்ய தேவ்,இருக்கட்டுமே! அவளோட அழகு! உன்னோட சிரிப்பு கூட போட்டி போட முடியாது. என் ஹனி தான் எனக்கு பேரழகி! எனக்கு நீ மட்டும் தான் அழகா தெறியுற! என்று கூறினான்.
ஹரிணி வெட்கத்துடன் முடியல சக்தி!. என்று கூற..
சத்ய தேவ், கம் அகைன்! என புருவத்தை தூக்கினான்.
ஹரிணி முகத்தை சுளித்து கொண்டு சாரி சத்யா! சாரி! போதுமா!
சத்ய தேவ் அவள் கைகளை வருடி தடவி கொண்டே எனக்கு விரல் குவிப்பு இல்லாம இந்த லிப் அதோட pair லிப் கூட ஒட்டிக்கணும்! அந்த மாதிரி தான் நீ ஃபர் கிவ் கேட்கணும்! என இரு புருவம் தூக்கினான்.
ஹரிணி யின் பேச்சுகள் அனைத்தும் காற்றில் கரைந்து போக கண்ணம் இரண்டும் சிலிர்த்து கொண்டு எழுந்தது.
சத்ய தேவ், என்ன டி ஒன்னு தரேன்னு சொல்லு இல்ல தர மாட்டேன்னு சொல்லு! இப்படி அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்!. ம்ம்..
அதற்கு மேல் அங்கே இரண்டு உயிர்களால் இந்த காட்சியை இன்னும் கொஞ்ச நேரம் பார்த்தால் கூட கொலை நடக்கும் போல சூழ்நிலை இருக்க…
அந்த நேரம் சரியாக ஹரினிக்கு கால் வந்தது.
சத்ய தேவ் அவளின் போனை பார்த்து விட்டு ஹே சொல்லு! டி!
ஹரிணி, இரு டா போன் பேசிட்டு சொல்றேன். என காதில் வைத்தாள். . ஹலோ!.
ஹரிணி! என்று கம்பீர குரல் கேட்க.
மரியாதை கொடுக்கும் பொருட்டு எழுந்து நின்றாள். எஸ் சார்! என்று பழக்க தோஷத்தில் சல்யூட் அடிக்க…
சத்ய தேவ் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
ஹரிணி அங்கிருந்து கொஞ்சம் தள்ளி வந்தவள். சொல்லுங்க சார்!..
உங்களுக்கு முக்கியமான பெரிய கேஸ் சீக்கிரம் சாட் அவுட் பண்ணனும். அக்யூஸ்ட்ட கோர்ட்டில் ஹேன்ட் ஓவர் பண்ணனும்! அதுக்கு முக்கியமான டீடெயில்ஸ்அ கேதர் பண்ண நீங்க டெல்லி போகணும்! அதை இன்ஃபார்ம் பண்றதுக்கு தான் கால் பண்ணேன்!
நான் பாக்குற இன்னொரு கேச முடிக்க சென்னை அனுப்புனீங்க அது இப்போ தான் ஃபைனல் ஆச்சு! இப்போ நான் பெங்களூர் போய் ஜாயின் பண்ணனும் சார்! என்று ஹரிணி கூற .
உயரதிகாரி, எல்லாம் எனக்கு தெரியு மா! இப்போ அதை விட்டுடுங்க! நீங்க நேரா டெல்லியில் தான் போய் இன்பார்ம் பண்ணனும்! சோ போங்க! கேஸ் டீடெயில்ஸ் எல்லாம் உங்களுக்கு ஆல்ரெடி மெயில் பண்ணி இருக்கேன்! உங்களோட அசிஸ்டன்ட் டெல்லியில் இருப்பாங்க! அவங்களோட ஜாயின் பண்ணிக்கோங்க! உங்கள வேற டிபார்ட்மெண்டுக்கு ஷிஃப்ட் பண்ணிட்டாங்க! என்று கூறினார்.
ஹரிணி , சார் நான் நாளைக்கு ஜாயின் பண்ணுமா! நாளைக்கு சண்டே! என்னால முடியாது சார்! எனக்கு இப்போ பிளைட் டிக்கெட் இல்ல என்று காரணங்களை அடுக்க..
ஹரிணியின் உயர் அதிகாரி, “ஒன்னும் பிராப்ளம் இல்ல, உங்களுக்கு நாளைக்கு மதியம் ட்ரெயின் மா பிளைட் டிக்கெட் அவைலபில் இருக்கு ஆல்ரெடி உங்களுக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சு! சோ நீங்க நாளைக்கு மதியம் கிளம்பலாம் தானே!”என்று மறுமுனையில் குரல் கேட்டது.
ஹரிணிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
ஓகே சார் நான் கிளம்புறேன் என்று கூறினார்.
நீங்க இனிமே இன்ஃபார்ம் பண்ற ஹயர பார்த்ததும் எனக்கு கால் பண்ணுங்க! அவங்க உங்கள பிக்அப் பண்ண வருவாங்க! கேஸ் டீடெயில்ஸ் எல்லாம் எடுத்து கொஞ்சம் படிச்சிட்டு போங்கம்மா! என்று கூறி விட்டு வைத்து விட்டார்.
சத்தியதேவ் அவளின் முகச்சுணக்கங்களை பார்த்துக்கொண்டே அருகில் வந்தான்.
என்னடி ஆச்சு என்று கேட்க..
அது எனக்கு முக்கியமான வேலையா டெல்லி போகனும் சத்யா!..
சத்ய தேவ் எதுவும் பேசாமல் அவளைப் பார்த்தான்.
ஹரிணி உடனே அவனுடைய கைகளை கோர்த்துக்கொண்டே நான் இப்போவே வேலையை ரிசைன் பண்ணிடவா? உன் கூட நான் வந்து ரிப்போர்ட்டரா ஜாயின் பண்ணிக்கிறேன்! நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒர்க் பண்ணலாம். இது வேணாம்டா! உன்னை விட்டு என்னால இருக்க முடியாது.
சத்ய தேவ், அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. இந்த கேஸ போய் நீ முடிச்சிட்டு வா! உன்ன நம்பி அனுப்பி இருக்காங்கல்ல, கண்டிப்பா உன்னோட திறமைக்கு கிடைச்சா ஒரு அங்கீகாரம் தான்! அப்படித்தான் ஒவ்வொரு பிரச்சனையும் நம்ம எடுத்துக்கணும்!
ஹரிணிக்கு போகவே மனசு இல்லை சத்யதேவியை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சத்ய தேவ் அவளின் தோள்பட்டையை அணைப்பது போல் பிடித்துக் கொண்டே எதுக்கு டி ஃபீல் பண்ற? நாளைக்கு ஒரு நாள் இருக்குல்ல, நாளைக்கு நம்ம நல்லா என்ஜாய் பண்ணலாம், டைம் ஸ்பென்ட் பண்ணலாம், நாளைக்கு தாத்தாவுக்கு அம்மாச்சிக்கும் மணிவிழா! அதுல ஜாலியா இருப்போம்!..
ஹரிணி நாளைக்கு மதியம் எனக்கு பிளைட்..
சக்திக்கு ஒரு நிமிடம் கஷ்டமாகவும் இருந்தது. அவன் வேறு வழியில்லாமல் அவளுக்கு அதை காட்டக்கூடாது என்று அதனால் என்ன? இப்போ இருந்து நமக்கு டைம் இருக்குல்ல. சோ விடு! என்று அவளை சமாதானப்படுத்தினான்.
ஹரிணி ஐ வாண்ட் கிஸ் யூ இப்போவே!. என கையைப் பிடித்து இழுத்துச் செல்ல..
ஒரு நிமிடம்…!.
தொடரும்..
EPISODE 11
ஹரிணி சத்ய தேவ்விடம் ஐ வாண்ட் கிஸ் யூ இப்போவே!. என கையைப் பிடித்து இழுத்துச் செல்ல.. அவன் கொஞ்சம் திடுக்கிட்டு என்ன டி! அவள் பின்னால் சென்றான்.
ஒரு நிமிடம்! அண்ணி! என சத்தம் கேட்டது.
அவர்கள் இருவரும் நான்கு அடிகள் தான் வைத்து இருப்பார்கள். உடனே திரும்பி பார்க்க..
அங்கே இதழ் சிரித்து கொண்டே நின்று இருந்தாள்.
ஹரிணி அவளை பார்த்து கொண்டே உடனே சத்ய தேவ்வை ஏக்கத்துடன் பார்த்தாள்.
“சத்ய தேவ் அண்ணா! அண்ட் பெட்டர் ஆஃப்! ரெண்டு பேரும் வாங்க தாத்தா ஃபேமிலி போட்டோ எடுக்க கூப்பிடுராங்க!” என்று நிதின் வந்தான்.
சத்ய தேவ் பார்வை நிதின் மீது இருக்க..
நிதின் மீண்டும் “தூரி நான் எதுவும் தப்பா சொல்லிட்டனா? உங்க அண்ணாவுக்கு என்னை பிடிக்கல போல! இப்போ கூட.. அப்படி தான் என்னை சின்ன வயதில் இருந்ததை போலவே தப்பா நினைக்கிறாங்க! சத்ய தேவ் அண்ணா! இட்ஸ் ஓகே!”
இதழ் பார்வை சத்ய தேவ் மீது திரும்பி அண்ணா! என கொஞ்சம் கோபத்துடன் அழைத்தாள்.
சத்ய தேவ் ஒரு பெரு மூச்சை விட்டு குக்கு நான் வரேன்!
நிதின், தூரி பெட்டர் ஆஃப்!
ஹரிணி நிதின் பிரகாஷை முறைத்து பார்க்க சத்ய தேவ் அவளின் கைகளை பிடித்து கொண்டு சென்றான்.
நிதின் இதழ் கிட்ட தூரி இன்னிக்கு முழுக்க நம்ம அண்ணா அப்புறம் உன்னோட எதிர்கால அண்ணி கூட தான் டைம் ஸ்பெண்ட் பண்ணனும் ஒரு நொடி கூட பிரிய கூடாது. எத்தனை வருஷம் கழிச்சு சத்ய தேவ் அண்ணா வந்திருக்காரு! அதனால் அவர் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணனும்! ஓகே வா!.
இதழ் சந்தோசத்துடன் சிரித்து கொண்டே அண்ணா நிஜமாவா சொல்றீங்க? அப்போ உங்களுக்கு சக்தி அண்ணா மேல கோபம் இல்லையா! அவர் கிட்ட இனி சண்டை போட மாட்டீங்க தானே!
நிதின் புன்னகையுடன்“ நீ, அண்ணா(சக்தி), மிதுன் மூணு பேரும் என்னோட மகி பொம்மாயி சித்தி பசங்க உங்களை நான் எப்டி அந்நியமா நினைப்பேன். நெட் என்னோட உயிர் தூரிகா!”
இதழ் அவனுடைய கைகளை அணைப்பது போல நடந்தவள். இன்னிக்கி நான் ரொம்ப ரொம்ப ஹேப்பி தெரியுமா! என ஹாலுக்கு வந்தார்கள்.
அனைவரும் வரிசையாக நிற்க சத்ய தேவ் பக்கத்தில் ஹரிணி நின்றாள். ருத்ரன், ரிதம், யவனிகா, யுவதிகா, ஆதவ் என அவர்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்கள்.
நிதின் மிதுனை பார்க்க.. உடனே அவன் என்ன ஹரிணி எப்டி நம்ம ஃபேமிலில வர முடியும்? இன்னும் அவங்களுக்கு கல்யாணமே ஆகலயே! என்றான்.
ராம் இந்த வார்த்தைகளை கேட்டதும் ஹரிணி வா! அவங்க எடுக்கட்டும்.. என்று கூற!
சூர்ய தேவ் கோபத்துடன் மகி அவன் கண்ணம் பழுக்க போகுது ஒழுங்கா வாய மூடிட்டு நிக்க சொல்லு! நான் கொலை கூட பண்ண தயங்க மாட்டேன்.
மகி மிதுன பார்க்க..
சத்ய தேவ் ஹரிணி கைகளை பிடித்து கொண்டு வா ஹனி இதுல நிக்க வேணாம்! என்று அழைக்க..
வசந்தன் உடனே சக்தி கண்ணா!. .
தாத்தா! நான் சத்ய தேவ் என்று அதிகார குரலில் கூறினான்.
நிதின், என்ன மிதுன்! அவங்க உனக்கு அண்ணி! நம்ம குடும்பம்! மரியாதை கொடு!
ராம் ஹரிணியின் கைகளை பிடித்து கொள்ள..
மாமா!. விடுங்க! அவங்க வந்து நிக்கட்டும்!
ராம் திடுக்கிட்டு மாமா வா என நித்தினை பார்க்க..
நிதின் சத்ய தேவ் அருகில் வந்து அண்ணா நீங்க நில்லுங்க! என கூறினான்.
தேஜு கடுப்புடன்“ ஹே sp உன் பையன் என்ன பண்றான்! எதுவும் பிளான் பன்றானா? எதுக்கு இப்படி ஓவரா பேசுறான்!”
Sp புருவம் நெருக்கி கொண்டே எனக்கு என்ன டி தெரியும்!
தேஜு கோபமாக ஹே சொல்லு டா! எப்போவும் நாலு வார்த்தை தான் பேசுவான். இன்னிக்கி இத்தனை வார்த்தை பேசுறான். சொல்லு என்ன பண்ண போறான்!
Sp அவளை பார்த்து சத்தியமா! எனக்கு தெரியாது டி!. என் பையனை குறை சொல்றது தான் உன்னோட வேலை!
தேஜூ பற்களை கடித்து கொண்டே உன்னோட மொத்த தகிடு தத்தமும் சேர்ந்து பிறந்து இருக்கான்.
உடனே sp இறும்பி கொண்டே இப்படி பொய் சொல்லாத! உன்னோட தகிடு தத்தம் வஞ்சனை எல்லாமே அவன் கிட்ட இருக்கு! என் பொண்ணு நிலாவை பாரு! அவள் தான் என்னை போல பிறந்து இருக்கா!
தேஜு அவனை திரும்பி பார்த்து விட்டு நிலா! ரொம்ப சைலன்டா இருக்கா! அது தான் பயமா இருக்கு! மொத்தத்தில் உன்னோட மூணு பசங்களையும் நினைச்சு எனக்கு கருக்கு கருக்குண்ணு தான் இருக்கு!
நம்ம பசங்க! புரியுதா! எல்லாத்துக்கும் நீ தான் காரணம்! என்று spr அவளின் கன்னத்தை வருட வர..
எல்லாரும் கொஞ்சம் நேரா நில்லுங்க என்று சத்தம் கேட்டது.
தேஜு அவனுடைய கையை தட்டி விட்டு நேராக நின்று கொண்டாள்.
சத்ய தேவ் கைகளை ஹரிணி கெட்டியாக பிடித்து கொண்டு சத்யா! இப்போ நீயும் நானும் குடும்ப போட்டோவில் சேர்ந்து நிக்கிரோம்! இன்னும் கொஞ்ச நாளில் நம்ம ஆபிஸியலி together ஆகிடுவோம். அப்புறம் உன்னோட தாலி என் கழுத்தில் இருக்கும்! அந்த மொமன்ட்டுக்காக வெயிட் பண்றேன்.
சத்ய தேவ் , நான் அன்னிக்கி நைட் நடக்க போற மொமன்ட்டுக்கு கிட்ட தட்ட 28 வருசமா வெயிட் பண்றேன்.
ஹரிணி உடல் சிலிர்க்க திரும்பி அவனை பார்த்தாள்.
ஹரிணி கொஞ்சம் தரயா!. என்று சத்ய தேவ் பார்க்க..
அவள் அவனுடைய இடையில் கிள்ள..
ஸ்ஸ என்ன டி! என்று சிணுங்கினான்.
இன்னும் கொஞ்ச நாள் அப்புறம் நிறைய தருவேன்! என இரு புருவம் தூக்கினாள்.
சத்ய தேவ் அவளை முறைத்து கொண்டே திரும்ப…
என்ன டா! முறைக்கிர!..
என்னை உசுப்பேற்றி விட்டு இப்போ உனக்கு ரொம்ப நல்லா இருக்குமே! என சலித்து கொண்டான்.
ஹரிணி சிரித்து கொண்டே அவனை பார்க்க..
சத்ய தேவ், அப்படி என்ன டி இதுல உனக்கு சந்தோசம்! என்று கூற..
ஹரிணி, ஒரு விடயம் சொல்லவா!
என்ன? என்று கடுகடுப்புடன் பேசினான்.
ஹரிணி மெதுவான குரலில் அப்போ தான் கியூரியாசிட்டி அதிகமா இருக்கும்! அந்த நினைப்பு! அது! சொன்னால் புரியாது! நீ கண்ணை மூடி யோசி!
சத்ய தேவ் கண்களை மூட..
சக்தி! நான் சதி!. என்று கேட்டது. காலையில் கனவில் கொடுத்த முத்தம் எல்லாம் நினைவுக்கு வந்தது.
அந்த நேரம் ரிதம் மகியை பார்த்து கண் அசைத்து விட்டு சூர்யா மற்றும் மிதுன் இருவருக்கும் கிளம்புகிறேன் என சொல்லி விட்டு யவனிகா மற்றும் யுவதிகா இருவரையும் அழைத்து கொண்டு சென்று விட்டாள்.
சத்ய தேவ் வெடுக்கென கண்களை முழித்து பார்த்தான்.
ஹரிணி கொஞ்சம் திடுக்கிட்டு என்ன நினைச்ச? இப்படி வெடுக்குண்ணு முழிக்கிற!
நத்திங் டி! என்று இருவரும் பேசி கொண்டு இருக்க
பவன்யா மற்றும் ருத்ரன், இதழ், இனியா என அனைவரும் அவர்களை பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்கள்.
ஹே என்ன எல்லாரும் நம்மள பார்த்து சிரிக்கிறாங்க! என ஹரிணி கேட்க..
அவர்களை சுற்றி இருந்த மொத்த குடும்பமும் களைந்து அவரவர் சாப்பிட சென்று விட்டார்கள். சத்ய தேவ் ஹரிணி மட்டும் அதே இடத்தில் நின்று கொண்டு இருந்தார்கள்.
ஹரிணி சத்ய தேவ் கைகளை விட அவன் இறுக்கி பிடித்து கொண்டு என்ன டி ஆச்சு?
எல்லாரும் என்னை பார்த்து சிரிக்கிராங்க! எனக்கு I feel shy!
சத்ய தேவ் அவளின் முகத்தை பார்த்து உன்னோட கண்ணம் ப்ளஷ் ஆகி இருக்கு! அப்படியே ரோஸ் பெட்டல் போல இருக்கு! இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்க..
இங்கே நிதின் கொஞ்சம் கடுப்புடன் என்ன மிதுன் யாருக்கு கால் பண்ணிட்டு இருக்க!
மிதுன் கொஞ்சம் டென்ஷனாக வேற யார் ரித்து தான் ப்ரோ இப்படி என்னை விட்டு போயிட்டா!
நிதின், எங்கே போனா! வருவா! விடு!
இல்ல ப்ரோ! வீட்டுக்கு போயிட்டா!
சரி விடு ஈவ்னிங் வருவா! நான் கூட்டி வரேன்! என சொல்லி விட்டு அவனை உள்ளே அழைத்து சென்றான்.
யவனிகா ரிதமை பார்த்து அக்கா! நாங்க பாஸ் கிட்ட சொல்லாமல் வந்துட்டோம்!
ரிதம் முறைத்து கொண்டே யாரு டி உங்களுக்கு பாஸ்? அவன் எல்லாம் ஒரு ஆளா? இரு இப்போவே உங்க ரெண்டு பேரையும் வெண்பா சித்தி கிட்ட சொல்லி என்ன செய்கிறேன் பார்!
யுவதிகா, அக்கா நாங்க என்ன பண்ணோம்!
ரிதம் , காலேஜ் படிக்கிற வேலையை மட்டும் பார்க்க வேண்டியது தானே! எதுக்கு அவன் கிட்ட வேலைக்கு சேர்ந்தீங்க!
அவர்கள் இருவரும் பேச வர..
ரிதம் கோபத்துடன் வாயை மூடு பிச்சு போடுவேன்! எதுவும் பேச கூடாது. என அழைத்து சென்றாள்.
ஆதி டூட்டியில் இருந்தான் வெண்பா வீட்டில் இருக்க சித்தி! சித்தி!
அட ரித்து குட்டி!
ரிதம் உள்ளே சென்றதும் கால் மேல் கால் போட்டு அமர..
வெண்பா, ஹே தங்கம் அப்படியே உங்க அம்மா போல இருக்க!..
ரிதம், சித்தி! என்ன இது! எதுக்கு இவளிங்க ரெண்டு பேரையும் வேலைக்கு அனுப்பி வச்சீங்க!
ஏன் உனக்கு என்ன? என்று ஒரு குரல் கேட்டது.
ரிதம் புருவம் நெருக்கி கொண்டே திரும்பி பார்க்க அங்கே விவேகா நின்று கொண்டு இருந்தாள்.
ஹை விவி மா! என யவனிகா யுவதிகா இருவரும் அவள் அருகில் போய் நின்று கொள்ள..
வெண்பா உடனே வெளியே வந்து விவேகா இப்போ எதுக்கு இப்படி சிடு சிடு என குழந்தை கிட்ட பேசுற!
விவேகா, நீ கம்முன்னு இரு! ஹே கால் மேல் கால் போடாத எடு!
மாட்டேன்!
வெண்பா, விடு விவேகா!
விவேகா கோபத்துடன் அவள் கிட்ட என்ன பழக்கம் இருக்கு பாரு வீட்டுக்கு என ஆரம்பிக்க..
ரிதம் வேகமாக எழுந்தவள். பாய் சித்தி என சத்தத்துடன் நடந்து வெளியே வந்தாள்.
வெண்பா, என்ன விவேகா! உன்னை அண்ணா கிட்ட சொல்றேன்! இரு!
விவேகா, ஒரு நிமிடம் இரு ரிதம் என வெளியே வர…
ரிதம் காரை எடுத்து கொண்டு வேகமாக ஓட்டி கொண்டு சென்றாள்.
ஹே எங்கே டி போற!
ரிதம் யார் பேசுவதையும் கண்டு கொள்ள வில்லை. அத்தனை கோபம் ஆத்திரம் , அகங்காரம் என கரையை கடக்க காத்து கொண்டு இருந்தது.
அந்த நேரம் ருத்ரன் கால் செய்தான். தீரா மா அவள் வந்து விட்டாளா!
விவேகா, ஹான் தீரா ஆனால் காரை எடுத்து கொண்டு கோபமா போறா!
ருத்ரன், விடுங்க மா அவள் தாத்தா வீட்டுக்கு போவா! நீங்க அவளோட அப்பா கிட்ட சொல்லுங்க! என சொல்லி வைத்து விட்டான்.
தாத்து! தாத்து! என வீடே அதிரும் படி கத்தினாள்.
ரவி, என்ன டா! பொண்ணு! தாத்தாவுக்கு நல்லா காது கேட்குது! என் தங்க பொண்ணுக்கு என்ன ஆச்சு? அடடே புடவையில் இன்னிக்கி தேவதை மாதிரி இருக்கீங்களே! என ஆச்சரியத்துடன் பார்த்தார்.
தாத்து என முகம் எல்லாம் கோபம் வருத்தம், ஏமாற்றம், அழுகை என உப்பி கொண்டே எனக்கு இப்போ கொஞ்சம் குடிக்கணும்! பிளீஸ் தாத்து! அந்த கலெக்சன் எங்கே இருக்கு என சொல்லி கொண்டே தன் தாத்தாவை கட்டி கொண்டாள்.
ரவி கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே என்ன ஆச்சு! Pretty girl க்கு அவங்க அழ மாட்டாங்களே! இன்னிக்கி என்ன ஆச்சு?
ரிதம் கண்கள் சிவக்க “தாத்து எனக்கு இங்கே ஹார்ட் பெயினா இருக்கு! ஹேண்டில் பண்ண முடியல! Heart அ வெளியே துடிக்க துடிக்க எடுத்து வீசனும் போல இருக்கு! நான் இந்த உலகத்தில் இருக்கும் எல்லாரையும் வெறுக்கிறேன் தாத்து!”
ரவி…?
தொடரும்..
EPISODE 12
தாத்தா இப்போவே எனக்கு வேணும்! எங்கே இருக்கு! இதுக்கு மேல் இதை ஹாண்டில் பண்ண முடியல.. சொல்லுங்க! என வேகமாக அங்கு இருக்கும் ஒவ்வொரு அறையிலும் நுழைய ஆரம்பித்தாள்.
ரவி, ரிதம்! பொண்ணு நீ யாரையும் லவ் பன்றயா? அது அந்த ராஸ்கல் ரவுடி சூர்யா பையனா!
தன் தாத்தாவின் கேள்வியில் திடுக்கிட்டு நின்றவள். ஒரே ஒரு நிமிடம் நின்று விட்டு மீண்டும் வேகமாக தாத்து எங்கே இருக்கு? சொல்லுங்க! எனக்கு வேணும்!
ரவி அவளிடம் அப்போ தாத்தா கிட்ட சேர் பண்ண தோணலயா! இட்ஸ் ஓகே விடு! நீ குடிச்சா! உன் அம்மா திட்டுவா! வேணாம் தங்கம்! நாளைக்கு அங்கே பங்ஷன் இருக்கு தானே! அதுக்கு நீ போகனும் தானே! இன்னிக்கு வேணாம்!
ரிதம் நேராக தாத்தாவின் அருகில் வந்தவள் அவரின் மடியில் தலை வைத்து படுத்து கொண்டாள்.
ரவி எதுவும் பேசாமல் அவளின் தலையை வருடி விட்டு கொண்டே இருக்க..
ரிதம் கண்ணீரை உள் இழுத்து கொண்டு நான் யாரையும் லவ் பண்ணல… இப்போ எனக்கு மோட் சுவிங்ஸ்! அதுக்கு காரணம்! அந்த விவேகா! கூடவே ருத்ரன், கூடவே ஹரிணி, கூடவே சத்ய தேவ் அந்த சக்தி!. இவங்க யாரையும் எனக்கு பிடிக்கல..
ரவி சரி சரி என் தங்க பொண்ணு எதுக்கு அழனும் நான் பார்த்து கொள்கிறேன். என் தங்கம்! இதுக்கு காரணம் அந்த சூர்யா பையன் தான!.
ரிதம், மாமா கோல்ட்!..
ரவி, இல்ல டி தங்கம் அந்த மிதுன் தானே!
ரிதம் எழுந்து தன் தாத்தாவின் முகத்தை பார்த்து அய்யோ! தாத்தா உங்களுக்கு நியாபக மறதி அதிகமா இருக்கு! மித்து பையன் இல்ல! அவன் என்னை கஷ்ட படுத்த நினைக்கவே மாட்டான்.
ரவி சாரி தங்கம் தாத்தாவுக்கு நியாபாக மறதி தான் என்ன பண்றது வயசு அதிகம் ஆகுது கிழவன் ஆகி விட்டேன்.
தாத்து! என்று அவரின் தோல் மேல் சாய்ந்து கொண்டாள்.
அந்த நேரம் இன்பா உள்ளே வந்தான். ரித்து! டிம்பிள் பேபி!. என அழைக்க..
ரிதம் தன் தாத்தாவின் காதில் நான் ட்ரிங்க் கேட்ட விசயத்தை டாடி கிட்ட சொல்லாதீங்க! ரிதம் பிராமிஸ்!. என்று கைகளை நீட்ட…
நான் ரவி promise சொல்ல மாட்டேன் போதுமா!
ம்ம் என் தாத்து என சொல்லி விட்டு நேராக இன்பாவை போய் அணைத்துக் கொண்டாள்.
என்ன டா டிம்பிள் இப்படி கண்ணு எல்லாம் சிவந்து கடக்கு! என்ன ஆச்சு? அந்த மிதுன் எதுவும்!..
டாடி! என அதட்டினாள்.
யார் காரணம்? சொல்லு பேபி!..
ரிதம் உதட்டை பிதுக்கி கொண்டே “பேபி தான் காரணம்! அவளை இப்போவே இப்போவே உடனே போன் பண்ணி கங்கா அம்மாச்சி வீட்டுக்கு அனுப்பி விடுங்க! நமக்கு வசு மா இருக்காங்க!”
சரி சரி உடனே சொல்றேன்!
சொல்லுங்க டாடி!
இன்பா போனை எடுத்து அவளுக்கு டயல் செய்தான்.
ரிதம் மூக்கை அவனுடைய சட்டையில் துடைக்க கைக்குட்டையை எடுத்து அவனே துடைத்து விட்டான்.
ரவி புன்னகையுடன் சிரித்து கொண்டே பார்க்க அழைப்பு ஏற்க பட்டது.
விவேகா, ஹே பப்பி நாயே! ராகவ் நான் ஆதி வீட்டில் இருக்கேன்.
ரிதம் தன் தந்தையை முறைத்து பார்க்க..
ரவி சந்திரன் உதட்டை மடித்து கொண்டே சிரிக்க ஆரம்பித்தார்.
உடனே இன்பா கொஞ்சம் கோபத்துடன் ஹே மரியாதை கொடுத்து பேச உங்க வீட்டில் சொல்லி கொடுக்கலயா? என்ன டி உன் மனசுல நினைத்து கொண்டு இருக்க!
ராகவ்!
இன்பா, ச்சீ வாய மூடு! நான் ஒழுங்கா இப்போவே ரிதம் கிட்ட மன்னிப்பு கேளு அவள் உன்னை மன்னித்தால் மட்டும் தான் நான் உன்னை வீட்டுக்குள் சேர்ப்பேன்!
ரிதம், டாடி! அவள் என ஆரம்பிக்க..
விவேகா கோபத்துடன் அப்படியா! ஹேய்!
இன்பா, சாட் ஆப் என்ன வளர்ப்பு? இது!
விவேகா கோபத்துடன் ரிதம் பிரின்ஸஸ் என்னை மன்னிக்க வேணாம்! அண்ட் பிரின்ஸசுடைய அப்பா இன்ப ராகவன் மகாராஜா உத்தரவை என்னால் கேட்க முடியாது.
ரிதம், டாடி அவளை போக சொல்லுங்க!
இன்பா ரவியை பார்க்க அவர் கண்ணாடியை கழட்டி கொண்டே இன்பாவை புன்னகையுடன் பார்த்தார்.
இன்பா ஒரு பெரு மூச்சை விட்டு “ நீ உங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வா!”
ரிதம், டாடி அவளை நீங்க ரெஸ்ட் எடுக்க அனுப்பி விடுவது போல இருக்கு! நீங்க போலீஸ் கெத்தா சொல்லுங்க!.
இன்பா வேறு வழி இல்லாமல் “நீ வீட்டை விட்டு உங்க அம்மா வீட்டுக்கு போ! கொழுப்பு அதிகம் ஆகி போச்சு!”
விவேகா, “ரொம்ப சந்தோசம்! பாய்! இனி என் காலில் விழுந்து கெஞ்சினால் கூட திரும்பி வர மாட்டேன்! ”என சொல்லி போனை வைத்தாள்.
இன்பா தன்னை சரி செய்து கொண்டு சொல்லிட்டேன்! உனக்காக!
ரிதம், என் டாடி! எப்போவுமே பெஸ்ட்! உங்களுக்காகவுன் தான் அவளை நான் போக சொன்னேன்!
ரவி, இவனா! உங்க அம்மாவை விட்டு அவனால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது!
ப்பா! என்று இன்பா கத்தினான்.
அந்த நேரம் பார்த்து ரிதம் போன் அழைக்க.. ரவி அதை பார்த்து ரிதம் பாரு உன்னை யாரோ கூப்பிட்டு கொண்டே இருக்காங்க! பேசிடு! வைப்ரெட் ஆகிட்டே இருக்கு!
ரிதம் யாரது என புடவையை தூக்கி கொண்டே நடக்க..
இன்பா, டிம்பிள் இன்னிக்கி ரொம்ப pretty யா இருக்க! யாரு வியர் பண்ணி விட்டா!. உன் அம்மாவா!
ரிதம், அவளுக்கே சாடி கட்ட தெரியாது. எனக்கு மகி மாமி கட்டி விட்டாங்க! இங்கே பாருங்க இந்த ஸ்ட்ரட் கூட மகி மாமி எனக்காக போட்டு விட்டாங்க! என சொல்லி கொண்டே போனை பார்க்க மிதுன் என இருந்தது.
ரிதம் உடனே போனை எடுத்து கொண்டு எட்ட சென்றாள்.
இன்பா தலையை பிடித்து கொண்டே அமர..
ரவி சிரித்து கொண்டே நான் கூட வசுவை இப்படி எல்லாம் அனுப்பியது இல்ல டா! ஆனால் நீ! வேற லெவல் fun பண்ற! ம்ம் என்ஜாய் பண்ணு!.
என்னை பார்த்தால் உங்களுக்கு சிரிப்பா இருக்கா! எதுவும் ஐடியா சொல்லுங்க டாடி!
நான் எதுக்கு கொடுக்கணும்! நீயே பேஸ் பண்ணிக்க.. .
டாடி! என்று அவன் கொஞ்சம் அதட்டல் கலந்த கோபத்துடன் அழைக்க..
நைட் உன் கிட்ட முக்கியமாக பேசணும் வந்திடு!
முடியாது!
அப்போ என்னமோ பண்ணு! என்று சொல்லி விட்டு அவருடைய அறைக்கு சென்று விட்டார்.
இன்பா அப்படியே அமர்ந்து நகத்தை கடித்து கொண்டே விவேகா எண்ணுக்கு அழைத்தான்.
இங்கே ரிதம் கொஞ்சம் கடுப்புடன் என்ன டா மித்து!
மிதுன் பேச வர அதற்குள் அவனது போனை வாங்கி ஹே நாங்க ரெண்டு பேரும் உங்க தாத்தா வீட்டுக்கு வெளியே இருக்கோம்! உடனே வா போலாம்! என நிதின் கூறினான்.
ரிதம் கொஞ்சம் பதட்டத்துடன் ஹே என் டாடி இருக்காங்க! உங்களை பார்த்தால் அவ்ளோ தான் ஒழுங்கா ஓடி போயிடுங்க!
நிதின் கொஞ்சம் கடுமையான குரலில் இப்போ நீ வரல நாங்க உள்ளே வருவோம்! மிதுன் வா!
ரிதம் நின்ற இடத்தில் குதித்து கொண்டே டேய் டேய் வராதீங்க! வராதீங்க டா! சொல்றத கேளுங்க!
அப்போ நீ வெளியே வா!
ரிதம் அங்கே இருக்கும் இடத்தில் உள்ள கண்ணாடியை பார்த்தவள். அவளுடைய கூந்தலை சரி செய்து கொண்டே என்னை எதுக்கு வர சொல்ற நிதின்! அங்கே நடக்கிற டிராமா எல்லாத்தையும் என்னால் பார்க்க முடியல…
மிதுன் போனை ஸ்பீக்கரில் போட்டு எக்சாக்ட்லி எனக்கும் அதே தான்! கொஞ்சம் கூட இருக்க பிடிக்கல…
நிதின் கொஞ்சம் கடுமை நிறைந்த குரலில் அப்படி உன் மனசை ஹர்ட் பண்ண விட மாட்டேன். உடனே மிதுன், ரித்து உன் கிட்ட ஒரு விசயம் ஹரிணி அவளுக்கு நாளைக்கு மதியம் ஃப்ளைட் டெல்லி போறா! வரதுக்கு ஒரு ஆறு மாசம் ஆகலாம்! அதுக்கு மேல கூட ஆகும்! நிதின் அண்ணா நினைச்சா முடியும்
ரிதம் சரி இப்போ நான் என்ன பண்ணட்டும்! எதுக்கு என்னை கூப்பிடுறீங்க!
மிதுன் அவளிடம் நீ வெளியே வா! என்னால் அங்கே இருக்க முடியல… நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் டான்ஸ் ஆட போறோம்! அது நியாபகத்தில் இருக்கா இல்லையா!
ரிதம், நான் வந்தே ஆகணுமா!
நிதின் , சரி வர வேணாம்! நீ வீக் அதுவும் அவங்க ரெண்டு பேர் முன்னாடி! என அவளை தூண்டி விட்டு இட்ஸ் ஓகே! நாங்க கிளம்புகிரோம். என சொல்லி விட்டு அவர்கள் கிளம்ப செல்ல..
ரிதம் உடனே பற்றி கொண்டவள். ஹே நான் வரேன்! வரேன்! என சொல்லி கொண்டே வந்தாள்.
இன்பா அவள் முகத்தில் உள்ள புன்னகையை பார்த்து விட்டு டிம்பிள் அழகா இருக்கு! பிரின்ஸஸ் எங்கே கிலம்புறீங்க?
அது டாடி! நான் சூர்யா மாமா வீட்டுக்கு போயிட்டு வரேன்.
இப்போ தானே வந்த? அங்கே இருந்தால் அந்த மிதுன் உன் கூட எப்போவும் சுற்றி கொண்டே இருப்பான். நீ வீட்டில் வந்து ரெஸ்ட் எடு நாளைக்கு போகலாம்.
இல்ல டாடி! அது எனக்கு ஒரு டான்ஸ் பெர்ஃபார்ம் இருக்கு! என ரிதம் சொல்லி கொண்டு இருக்க..
இங்கே நிதின், மிதுன்!
ப்ரோ! .அவளை வெளியே வர சொல்லி கத்தி குரல் கொடு அப்போ தான் வருவா!
ஹே ரிதம்! ரித்து! வெளியே வா!. என்ன டி பண்ணிட்டு இருக்க…
இன்பா புருவம் நெருக்கி கொண்டே திரும்பி பார்க்க…
ரிதம் அய்யோ இவனை! என தலையில் கை வைத்தவள். டாடி டாடி பிளீஸ் பிளீஸ்! என தன் அப்பாவின் கன்னத்தில் முத்தம் பதித்து விட்டு வேகமாக வெளியே ஓட..
இன்பா அவளின் பின்னால் வந்தான்.
ரிதம், மித்து டாடி! டா! டேய் டாடி வராரு! வண்டிய திருப்பு!
இன்பா, டேய் குட்டி குட்டா!. அடிங்க ராஸ்கல் உன்னை
மிதுன் வேகமாக காரில் ஏறியவன். உன் அப்பா என்ன டி ஓவர் விறப்பா இருக்காரு! விவி பேபி எப்டி தான் சமாளிஃபை பன்றாலோ!. என்று கூரியவன். பாய் அங்குள்! என்று கூற…
ரிதம், டேய் பிச்சு!. நிதின் வண்டிய எடு!. என்று சொல்ல..
இன்பா, ரிதம் அங்கே போயிட்டு சூர்யா கிட்ட போனை கொடு!
மிதுன், ஏன் ரித்து உன் அப்பா போனில் பாலன்ஸ் இல்லையா?
ரிதம் முறைத்து பார்க்க…
மிதுன், சும்மா just for fun! என சொல்ல…
இங்கே இன்பா போகும் காரை பார்த்து கொண்டு நின்றான்.
அந்த நேரம் ருத்ரன் கால் செய்தான்.
இன்பா புருவம் நெருக்கி கொண்டே இவன் எதுக்கு கால் பண்றான்! என காதில் வைக்க..
ஹலோ! யாரு? என்று இன்பா வேண்டும் என்றே கூற!..
ருத்ரன்…?
தொடரும்…
நாளை ரவி, இன்பா நம்ம ரிதம் யாரையோ லவ் பண்றா?
இன்பா,…?
EPISODE 13
அந்த நேரம் ருத்ரன் கால் செய்ய உடனே இன்பா பதிலை ஏற்று ஹலோ யார் பேசறது? என வேண்டும் என்றே கேட்டான்.
நான் V. ரவுத்திரன் சன் ஆஃப் விவேகா வாசுதேவன்.. என இன்பாவுக்கு சளைக்காமல் கூறினான்.
இன்பாவுக்கு ஒரு நிமிடம் என்ன பேசுவது என தெரிய வில்லை. உடனே தன்னை சரி செய்து கொண்டு தப்பா சொல்றன்னு நினைக்கிறேன். அவள் விவேகா இன்ப ராகவன். நாட் வாசு தேவன்!. என்று கூறினான்.
நார்த் இந்தியால தான் கல்யாணம் ஆனதும் கணவன் பெயர் பொண்ணுக்கு பின்னாடி மாற்றி கொள்வார்கள். இங்கே தமிழ் நாட்டில் அந்த பழக்கம் இல்லை. எங்க அம்மாவுடைய எல்லா சர்டிஃபிகேட் ஈவன் திருமண பதிவுல ( மேரேஜ் ரிஜிஸ்டர்ல) கூட v.விவேகா தான் இருக்கு! என்று பெரு மூச்சை விட்டவன். உங்களை மாதிரி தேவையில்லாத விடயத்தை பேச நான் போன் பண்ணல முக்கிய விசயம்!
என்ன டா? ராஸ்கல்! என இன்பா கடுமையான குரலில் கேட்க..
ருத்ரன் தீவிரமாக ww dot tv news channel உங்களுடையது தானே! அதில் தானே சக்தி மாமா ஒர்க் பண்றாங்க! நீங்க தானே மாமாவை அதுல ஒர்க் பண்ண சொன்னீங்க?
உடனே இன்பா திடுக்கிட்டு அமைதியாக யோசிக்க..
ருத்ரன், நீங்க யோசிக்க வேணாம்! இதை சத்ய தேவ் சொல்லல! நானே கண்டு பிடிச்சேன். என்று கூறினான்.
இப்போ என்ன வேணும்? எதுக்கு போன் பண்ண? அதை முதலில் சொல்லு! என்று இன்பா கேட்க..
ருத்ரன் அதே கடுமையான தொனியில் எனக்கு ஒன்னும் உங்க கிட்ட பேச இஷ்டம் இல்ல உங்களோட அடங்காத பொண்ணு இருக்காளே அவள் யவனிகா, யுவதி ரெண்டு பேரையும் எதுக்கு சத்ய தேவ் கிட்ட ஒர்க் பண்றீங்க? அப்டின்னு மிரட்டி இருக்கா! அது மட்டும் இல்லாமல் சத்ய தேவ் மாமாவை அந்த நிதின், அந்த ராஸ்கல் மிதுன் முன்னாடி பெரிய போலீஸ் ஆகுறேன்னு பில்ட் அப் விட்டு கடைசியில் வெறும் இந்த வேலைக்கு போக தான் அந்த பேச்சு பேசினாயா அப்டின்னு அவங்க கூட சேர்ந்து கிண்டல் பண்ணி இருக்கா! இதை தீரா மா கேட்டதுக்கு அவங்களை மரியாதை இல்லாமல் பேசி இருக்கா! Finally இத்தனை பண்ண அவளை தூக்கி கொஞ்சுற நீங்க என் தீராமாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி இருக்கீங்க!
இன்பா, அவள் தீராவுடைய அம்மாவா ஆகரதுக்கு முன்னாடி எனக்கு பொண்டாட்டி!
ருத்ரன், இதை சொல்றதுக்கு மட்டும் தான் நீங்க லாயக்கு! உங்களை போய் எப்டி என் மம்மிக்கு பிடிச்சது? நீங்க ஏமாற்றி கட்டி இருக்கீங்க!
இன்பா கோபமாக மைண்ட் யுவர் வேர்ட்ஸ்.. என மிரட்ட..
அதையே தான் நானும் சொல்றேன். திங்க் யுவர் வேர்டஸ் அண்ட் நான் அண்ட் என் அம்மா கங்கா அம்மாச்சி வீட்டுக்கு போவோம்! என்னோட டிரேயினிங் முடிந்ததும். அம்மாவை பெங்களூர் கூட்டி போவேன். இதை சொல்றதுக்கு தான் கால் பண்ணேன். மிஸ்டர் இடியட் இன்பா! என சொல்லி விட்டு போனை வேகமாக கட் செய்தான்.
இன்பா தலையை கோதி கொண்டே அதே இடத்தில் நின்றான். இப்படி இந்த வாய் லா பாயிண்ட் பேசுவான் என எதிர்பார்க்க வில்லை. கரப்பான் பூச்சி போல பிறக்கும் போது நெண்டி கொண்டு இருந்தான். ஆனால் இன்னிக்கி என்ன வாய் பேசுறான். எல்லாம் அவள் அம்மா க்காரி கொடுக்கும் இடம் தான் அதனால் தான் ஆட்டம் ஜாஸ்தி போடுறான். என நினைத்து கொண்டு பெரு மூச்சை விட்டவன் நேராக கங்காவுக்கு போன் செய்து கொண்டே கிளம்பினான்.
கங்கா விவேகாவிடம் பேசி கொண்டு இருக்க..
இன்பா லைனில் வந்து விட்டான். ஹே தம்பி டி! என்று கங்கா சொல்ல..
உனக்கு தம்பி இல்லையே ஒரே ஒரு அண்ணன் தானே!
கங்கா முறைத்து கொண்டே ஹே மாப்பிள்ளை டி!
விவேகா கடுப்புடன் இப்போ எதுக்கு மா அவனை மாப்பிளைன்னு சொல்லிகிட்டு இருக்க.. அவனும் அவன் ஆளும்! நான் உன் பேச்சை கேட்டு இருக்கணும்! இந்த லவ் பண்ணி இருக்க கூடாது. அவசர பட்டிட்டென் மா! அவங்க அம்மா stranger ஆ இருந்த அப்போ ரொம்ப நல்லவங்க மாதிரி தான் இருந்தாங்க! ஆனால் மாமியார் ஆனதும் டெரரா இருக்காங்க!
கங்கா, ஹே வாய மூடு! என்ன பேசிட்டு இருக்க? உன்னை வச்சு தாங்கி கொண்டு இருக்காங்க! உனக்கு என்ன குறை! நான் கூட இப்படி ஒரு மாப்பிள்ளைய பார்த்து கட்டி இருக்க முடியாது. ரெண்டு பிள்ளைய பெற்று அதுங்களுக்கு கல்யாண வயசு வந்திடுச்சு இப்போ போய் இதை பேசுற! என மிரட்டி கொண்டு இருக்க..
அதற்குள் இன்பா அவள் பேசிய அனைத்தையும் கேட்டு கொண்டே வந்து நின்றான்.
விவேகா எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டாள்.
கங்கா உடனே எழுந்து கொண்டு வாங்க மாப்பிள்ளை! உள்ளே வாங்க! எதுவும் சாப்பிடுங்க! நான் டீ போட்டு எடுத்திட்டு வரேன் என உள்ளே ஓடினார்.
இன்பா அவளின் பேச்சை முழுவதும் கேட்டு விட்டான். அந்த கடுப்பில் முகம் எல்லாம் விரைப்புடன் இருந்தது. இவளுக்கு என்ன குறை வச்சேன்! கொழுப்பு ஓவரா இருக்கு! அதுவும் இங்கே வந்தால் ஜங்குண்ணு அவங்க அம்மா வீட்டுக்கு வரது தான் காரணம். இவளை பெங்களூர்ல கொண்டு போய் தள்ளுரேன். முக்கியமா அந்த சின்ன நாய்( ருத்ரன்) அவனை இவள் கிட்ட இருந்து பிரித்தால் சரியா போயிடும் என நினைத்து கொண்டே அமர்ந்து இருந்தான்.
விவேகா அழுது கொண்டே அமர்ந்து இருந்தாள். “என்னையும் அந்த கடங்கார ராகவையும் பிரிக்க தான் அந்த ராவடிக்காரி இருக்காள்! அவளுக்காக என்னை போக சொல்ல அவனுக்கு தைரியம்! எனக்கு என் பையன் போதும்! அந்த இராவடிக்காரியும் வேணாம்! அவளோட அப்பனும்… என நிறுத்தி விட்டு யாரும் வேணாம்!”
இன்பா நேராக அவள் இருக்கும் அறைக்குள் நுழைந்தான். விவேகா அவளுடைய அப்பா வாங்கி கொடுத்த வீட்டில் இருக்கிறாள். அவர்கள் அனைவரும் குடும்பமாக இருந்த வீடு!
க்கும்!..
அவள் கண்ணை துடைத்து கொண்டு நேராக அமர்ந்தாள்.
இன்ப ராகவன், நாளைக்கு மகி வீட்டில் ஃபன்க்ஷன் இருக்கு! சூர்யா நம்ம ரெண்டு பேரையும் இன்வைட் பண்ணி இருக்கான். நீ கிளம்பி இரு! உன்னை கூட்டி போக வரேன்! போயிட்டு இங்கேயே வந்து விட்டு விடுகிறேன்.
விவேகா வேறு எங்கோ பார்த்து கொண்டு என்னை தீரா பிக் அப் பண்ணிப்பான். உங்களுக்கு சிரமம் வேணாம். உங்க வேலையை நீங்க! என சொல்லி கொண்டு இருக்கவே அந்த அறையின் கதவை தாழ் போட்டு கொண்டே கையை உதறி கொண்டு அருகில் ஒவ்வொரு அடிகலாக வந்தான்.
என்ன? என்ன சொன்னீங்க மேடம்! என கடுமையாக பேச..
விவேகா, யாருக்கும் பயப்படும் அளவுக்கு நான் இல்ல.. நாளைக்கு தீரா வருவான்.
இன்பா, இப்போ எதுக்கு இத்தனை பிடிவாதம்!
விவேகா உதடு துடிக்க அவனை பார்த்தவள். உனக்கு அவள் தானே முக்கியம்! ஓவர் செல்லம் கொடுத்து கெடுத்து வச்சு இருக்க? போ! உன் பொண்ணு இருக்கும் இடம் தான் உனக்கு சொர்க்கம் போடா!
மாமி! விவேகா என்னை போடா சொல்றா!. என இன்பா அவளின் அருகில் நெருங்கி வர..
விவேகா, அவனை முறைத்து கொண்டே போயிடு..
நான் எதுக்கு போவேன்! இது என் மாமி விடு நீ போடி!
விவேகா மூக்கு விடைக்க அவனை பார்த்து கொண்டு இருந்தாள்.
இப்போ எதுக்கு அப்படி பார்க்கிற!
விவேகா உதடு துடிக்க நீ வேனா பாரு! அவளால் உனக்கு பெருசா ஆப்பு காத்திட்டு இருக்கு! அன்னிக்கி நான் சொன்னதை நினைத்து பார்ப்ப!
இன்பா அவளின் அருகில் நெருங்கி தாடையை பிடித்து உன்னை இப்போ கூப்பிட வரல! நீ இங்கேயே கட டி! இத்தனை வருஷ கல்யாணம் வாழ்க்கையை ஒரே நிமிடத்தில் பேசி முடித்து விட்ட.. என் பொண்ணு சொல்றது சரி தான்! நீ இங்கேயே இரு எத்தனை நாள் வேணாலும் இரு! உன் காலில் வந்து நான் கெஞ்சுவேன்னு மட்டும் கனவு காணாத! நாளைக்கு வரேன்! ரெடியா இரு!.
விவேகா, தீரா! என சொல்ல வர.
இன்பா அவளின் கீழ் உதட்டை விரல் கொண்டு கிள்ளியவன்.“ நீ என் கூட தான் வர! என் பேச்சை மீறின! அடுத்த முறை உங்க அம்மா வீட்டுக்கு இப்படி வந்து குதித்து கொண்டு இருக்க முடியாது. உன்னை பெங்களூர்ல லாக் பண்ணிடுவேன். என்று இரண்டடி வைத்தவன் பின்னால் திரும்பி அருகில் வந்து மேல் உதட்டை அவன் இதழ் கொண்டு கடித்து இழுத்தவன். மூச்சுக்கு முன்னூறு தடவை அவனோட (ருத்ரன்) பேரை சொல்ற! ம்ம் இருக்கட்டும் உன் கிட்ட இருந்து அவனை எப்படி பிரிக்கிறேன் என பார்த்துட்டே இரு டி!”
கங்கா கிச்சனில் இருக்க மாமி கிளம்புறேன்.
தம்பி டீ!
கொடுங்க என வாங்கி சுட சுட இரண்டு மிடுக்கு குடித்து விட்டு நாளைக்கு வரேன். என சொல்லி கிளம்பி விட்டான்.
விவேகா அப்படியே படுக்கையில் படுத்து கொண்டாள்.
இங்கே ரிதம் மற்றும் மிதுன், நிதின் மூவரும் ஒன்றாக புன்னகையுடன் உள்ளே வந்தார்கள்.
பவன்யா வந்துட்டா! இவளை போய் கூட்டிட்டு வர ரெண்டு கூஜா வேற! ஏன் டா தீரா உன்னோட அக்கா ஓவர் சீனா இருக்கா!
ருத்ரன், அது அப்படி தான் பவா! அவள் அவங்க அப்பா மாதிரி வெறும் வெட்டி சீனு! திமிர் பிடித்தவளால் என் மம்மி இப்போ அம்மாச்சி வீட்டுக்கு போய்ட்டாங்க!
ஹரிணி திடுக்கிட்டு என்ன ஆச்சு? என கேட்க..
சத்ய தேவ், என்ன ருத்ரா?
ருத்ரன் ஒரு பெரு மூச்சை விட்டு ஆமா மாமா! என அனைத்து விசயமும் கூறினான்.
சத்ய தேவ், தீவிரமாக மாமா நிஜமாவே அத்தய அனுப்பட்டீங்களா? மாமா அப்படி எல்லாம் பண்ண மாட்டாரே!
நிஜம் தான் மாமா! என பேசி கொண்டு இருக்க..
இதழ், ஹலோ எவரி ஒன் நாளைக்கு யார் டான்ஸ் ஆட போறீங்க? யார் பாட்டு பாட போறீங்க!
நிதின், நான், மிதுன், ரிதா மூணு பேரும் கம்மா கம்மா கலாவதி! மாங்கல்யம் தந்துநா ஆட போறோம்! ஓகே வா!
ரிதம் முடியை காதுக்கு ஒதுக்கி கொண்டே நான் உன் கூட ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச் கேப்பு விஜய் சாங் ஆட நினைச்சேன்.
அப்டியா! நானும் வரேன்! என மிதுன் வந்தான்.
ருத்ரன், ஹே லிப்ஸ் நீ நான்! அண்ட் பவா!
ஹரிணி சத்ய தேவ் கைகளை கோர்த்து கொண்டு நாங்க பாட போறோம்! என்ன பாட்டு பாடலாம்!
சத்ய தேவ், நாளைக்கு சொல்றேன்! உனக்கும் எனக்கும் தெரிந்த பாட்டு தான்! என கண் அடித்தான்.
நித்த்தின்!. என சிணுங்கி கொண்டே ரிதம் அவனை பார்க்க..
மிதுன், அண்ணா இருக்கான்! நீ விடு டி!. என சொல்லி கொண்டு இருக்க.
சிவன்யா, சரி ராஜா ராணி விளையாடலாமா?
பவன்யா, ஹே அது வேணாம்! ஹைடன் சிக் விளையாடலாம்.
நான் வரல.. என சத்ய தேவ் சொல்ல..
இதழ், அண்ணா வா ஜாலியா இருக்கும். நிதின் அண்ணா! மிதுன் அண்ணா! வெற்றி எல்லாரும் விளையாடலாம் பிளீஸ் என அனைவரும் பேசி கொண்டு இருக்க….
ஹரிணி, சத்யா! ஜாலியா இருக்கும் வா! என அழைக்க.. அனைவரும் சா!.. பூ!. தீரி!. என அனைவரும் கலந்து கொள்ள.. முதலில் அவுட் ஆனது மிதுன் தான்!.
இங்கே இன்பா நேராக வசுமதியை பார்க்க சென்றான்.
என்ன டா!.. ராகவ்!. என காலை நீட்டி கொண்டே அசரிக்கையாக அமர்ந்து இருந்தார்.
ஒன்னும் இல்ல என வசுமதியின் காலை பிடித்து விட ஆரம்பித்தான்.
ராகவ் நெட்டி எடுத்து விடு! என விரல்களை காட்டிட.. எல்லாம் செய்தான்.
வசுமதி, உன் பொண்டாட்டி! எங்கே?
இன்பா, மா அவள் மாமி வீட்டுக்கு போயிட்டா! அதனால் நாளைக்கு ஒரே ஒரு போன் கால் உங்க போனில் இருந்து போனால் போதும் ஓடி வருவா! அடங்க மாட்டிக்கிறா!
வசுமதி, இப்போ கூட சண்டை தானா!.
எல்லாம் அந்த அவனால் தான்! அடங்க மாட்டிக்கிறான்.
நீ இதை விட இருந்த? என சொல்லி கொண்டே ரவி வந்தார்.
எதுக்கு பா வர சொன்னீங்க?
கொஞ்சம் உள்ளே வா!..
வசுமதி, ஏன் எனக்கு ரகசியம் தெரிய கூடாதா?
ரவி, சொல்றேன் டி! ரிதம் யாரையோ லவ் பண்றா!
வாட்? என அதிர்ச்சியாக இன்பா எழுந்தான்.
ரவி, உன்னை மாதிரியே வந்து குடிக்க ஒயின் கேட்கிறாள். மனசு வலிக்குதாம்! ஹேண்டில் பண்ண முடியல அப்டின்னு அழுது கொண்டே ஒரே ஆர்ப்பாட்டம். அதை அப்படியே விவேகா மேல காட்டி அவளை வீட்டை விட்டு அனுப்பி விட்டுட்ட!.
இன்பா எழுந்து கொண்டு யார் அவன்? என டென்ஷன் ஆகிட..
ரவி, அது சூர்யா பையன் அப்டின்னு எனக்கு தோணுது!
இன்பா, அந்த குட்டி குட்டனா!..
ரவி, அவனா இருந்தால் ஓகே அந்த சூர்ய பிரகாஷ் பையன் நிதினா இருந்தால் என்ன பண்ணுவ? விவேகா உன்னை பிரிச்சு மேயிந்து விடுவா!
இன்பா, ப்பா நீங்க சூர்யா பையன்னு தானே சொன்னீங்க?
ரவி, டேய் தத்தி அவன் பேரும் சூர்யா தானே! என்னன்னு பாரு! லவ் சொல்லல போல!.
இன்பா தலையை பிடித்து கொண்டு அமர..
வசுமதி, என்ன ராகவ்!
விவேகா மாம்! எப்டி ஹான்டில் பண்ணுவேன்! அவளை!..
தொடரும்..
EPISODE 14
இங்கே அவர்கள் அனைவரும் ஹைடன் சிக் விளையாடலாம் என முடிவெடுக்க..
சத்ய தேவ், எனக்கு 30+ ஆக போகுது இந்த வயசுல இந்த விளையாட்டு தேவையா! என்று கேட்டு கொண்டு இருந்தான்.
இதழ் சிணுங்கி கொண்டே அண்ணா வா பிளீஸ் அண்ணா!
ருத்ரன், மாமா சொல்றது சரி தான்! நீ என்னை விட பெரியவ எதுக்கு டி இந்த வயசில உனக்கு விளையாட்டு! மாமா அத்தை எல்லாரும் அங்கே பங்ஷன் ஹாலில் இருக்க ஒர்க் பார்க்க போயிருக்காங்க பேசாமல் நம்ம எல்லாரும் போய் ஹெல்ப் பண்ணலாம். என்று கூறினான்.
ஹரிணி, சத்யா வாடா! நிஜமாவே ஜாலியா இருக்க போகுது என அவனுடைய உள்ளங்கையை வருடி கொண்டே அழைத்தாள்.
சத்ய தேவ் ஒரு பெரு மூச்சை விட்டு சரி என்றான்.
ரிதம் கொஞ்சம் தீவிரமாக அந்த சக்திய எல்லார் முன்னாடியும் அவமான படுத்த என்ன ஐடியா போட்டு வச்சு இருக்கீங்க! அவன் எல்லார் முன்னாடியும் அப்படியே தலை குனிந்து நிக்கணும்!
மிதுன் கண்களில் தீ பொறி பறக்க ரித்து! என்ன யோசிக்க! மகி அவனை பற்றி நினைச்சாலே வெருக்கணும் அந்த அளவுக்கு எதுவும் பண்ணனும்.
நிதின் தந்திரமாக அந்த அளவுக்கு போக வேணாம்! அவனை பெருசா ஹார்ட்டை டச் பண்ற மாதிரி ஒரு ஹர்ட் பண்ணலாம் போதும்! ஒவ்வொரு தடவை அவன் நம்மள பார்க்கும் போதும் அது நினைவுக்கு வரனும்!
ரிதம், ஹான் நிதின் சொல்றது சரி! மகி மாமி கஷ்ட பட்டால் என்னால் அதை பார்க்க முடியாது. என்று கூறினாள்..
அதன் பின் சரி பிளே பண்ண ரெடியா!
ரிதம், நான் வரல..
நிதின், ரிதம் வரலைன்னா நானும் வரல..
மிதுன், அப்போ நானும் என சொல்ல வர..
இதழ், என்ன ரகசியம்!
நாங்க வரல.. குக்கு!.
மிதுன் அவ்வாறு சொன்னதும் இதயன், வெற்றி, சிவன்யா, நிவாஸ் மூவரும் சேர்ந்து கொண்டு அண்ணா வரலைன்னா நாங்க வரல.. என்று கூறினார்கள்.
இனியா, அவங்க ரொம்ப டூ மச்சா பண்றாங்க தானே! நிவா மாமா, நிதின் மாமா ரெண்டு பேரும் டெவில் போல சொல்றாங்க பாரு! நீ எப்டி கா அங்கே இருக்க!.
நிலா மெதுவான குரலில் நான் ஹாஸ்டல் சேர டாடி கிட்ட சொல்லி இருக்கேன். மம்மி கிட்ட கூட சொல்லி இருக்கேன். எனக்கு வீட்டில் இருக்க பயமா இருக்கு! என்று கூறினாள்.
இனியா, உனக்கு எதுக்கு எடுத்தாலும் பயமா!.
ருத்ரன், பவா உன் தம்பி ஓவரா பண்றான். உன் அக்கா பாரு ஓவர் ஆட்டம்!
பவா, ஹே குக்கு விடு அவங்க வர வேணாம் நம்ம மட்டும் விளையாடலாம்!
அந்த ரிதம் பெரிய மகாராணி! அப்படி தான் பேசுவாங்க!
நிதின், நாங்க வரோம்!..
ரிதம், நிதின் வரான்! நானும் வரேன்! உங்க வேலையை நீங்க பாருங்க! என்றாள்.
இதழ், ஓகே இதை இன்னும் எக்சைட்மெண்ட் ஆக்கிட இந்த வீட்டில் இருக்கும் எல்லா லைட்டையும் ஆஃப் பண்ண போறேன்! என சொல்லி கொண்டே ஹரிணியை பார்த்தாள்.
சத்ய தேவ், என்ன ஹனி! குக்கு உன்னை பார்க்கிறா!..
ஹரிணி சிரித்து கொண்டே மெதுவான குரலில் ஆமா நான் தான் சொன்னேன். ருத்ரன் உன்னை விட்டு ஒரு அடி பிரிய மாட்டிக்கிரான். அந்த நிலா அப்புறம் இனியா உன் கூட தொன தொன என பேசிட்டே இருக்கா! இந்த பவா அதுக்கு மேல.. இவங்களை பார்த்தால் விடிய விடிய பேசிட்டு இருப்பாங்க அதுவும் ருத்ரன் டையர்ட் ஆகவே மாட்டான் போல! நாளைக்கு நான் டெல்லி போயிடுவேன். அதுக்கு தான் இன்னிக்கி உன்னை கிஸ் பண்ணியே ஆகணும் தூங்கும் போது ருத்ரன் உன் பக்கத்தில் வந்து விடுவான். மொத்த படையும் ஹாலில் லைனா படுப்பீங்க! இதுல எனக்கு எங்கே நேரம் இருக்கும்! அது தான்! லைட் ஆஃப் ஆனதும் என் கையை பிடிச்சுக்க.. தனியா போறோம்! கொஞ்சம் மட்டும் இப்போதைக்கு.. ம்ம் இல்ல அதிகமா வேணும்! என்று கண் அடித்தாள்.
சத்ய தேவ் அவளை பார்த்து சிரித்து கொண்டே சரியான கேடியா தான் இருக்க! போலீஸ் திருடி!. என்று இருவரும் சிரித்து கொண்டார்கள்.
ஹரிணி, அப்போ உனக்கு வெனாவா! சரி நான் இப்போவே சொல்றேன்! ஹே குக்கு என்று அழைக்க..
சத்ய தேவ், அவளின் கையை பிடித்து கொண்டே நாங்க ரெடி என்று கூறினான்.
ஹரிணி வெட்க புன்னகையுடன் அவனை பார்த்தாள்.
அனைவரும் சா!.. பூ!.. த்ரி!.. போட்டு பார்க்க கடைசியில் மிதுன் தான் அவுட் ஆனான்.
ஹரிணி மற்றும் சத்ய உற்சாகமாக இருக்க..
மிதுன், சரி எங்கே கவுண்ட் பண்ணனும்?
இதழ் சிரித்து கொண்டே வெளியே போ அண்ணா! நாங்க டோர் கொஞ்சம் சாத்தி வச்சு இருப்போம்! 50 கவுண்ட் பண்ற! என கூறினாள்.
எல்லாம் ரெடியா!
ரிதம், ஹே ஆப்போசிட் டீமை தான் அவுட் பண்ற! சரியா மிதுன்!
நிலா, எனக்கு இருட்டு கொஞ்சம் பயம்! அதனால் நான் அங்கே வெளியே சிட் பண்ணவா!.
நிவாஸ் மற்றும் நிதின் ஒரே நேரத்தில் ஹான் ரொம்ப நல்லது போ போய் உட்காரு! என்று கூற…
சத்ய தேவ், நிலா குட்டி!
அண்ணா! அது!.
என்ன டா மா இது தைரியமா இருக்கணும்! இது ஒரு விசயமா எல்லாரும் இங்கே தான் இருக்கோம்! நீ போல்டா இருக்கணும்! இது என்ன ஹாபிட்! நீங்க டாக்டர்! எப்டி நாளைக்கு பேசன்ட்டை ஹாண்டில் பண்ணுவீங்க!
இனியா, அக்கா வா! ஜாலியா இருக்கும்!
பவா, நானும் வரேன்!. நான் உன் கூட இருக்கேன்! என்று கூற..
ருத்ரன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். அவனுக்கு நிலாவை சுத்தமாக பிடிக்காது. அதுக்கு ஒரு முக்கிய காரணம் அவள் நிதின் தங்கை, அதுவும் அவள் பயப்படுவது போல முகத்தை வைத்து இருப்பது சுத்தமாக பிடிக்காது. இத்தனை வருடங்கள் ஒரே குழுவில் இருந்தால் கூட இருவரும் பேசியது இல்லை.
சத்ய தேவ் சொன்னதை கேட்டதும் சரி என்று நிலா தலை ஆட்டினாள்.
நிதின் அவளை முறைத்து பார்க்க.. சத்ய தேவ் அவளின் தலையை வருடி விட்டு ஓகே லெட்ஸ் பிளே!
ம்ம் ஓகே!
கவுண்ட் பண்ணவா!
இப்போ லைட் ஆஃப் பண்றேன்! என சொல்லி கொண்டே எல்லா விளக்குகளையும் ஆஃப் செய்தாள். வெளியில் வாசலில் மட்டும் அனைத்து விளக்குகளும் எரிந்து கொண்டு இருந்தது.
மிதுன் வெளியே இருந்து எண்ண.. ஆரம்பிக்க..
நிலா, இதழ் அக்கா ரொம்ப இருட்டா இருக்கு! அதனால் குட்டி லைட் மட்டும் போடு கண்டு பிடிக்க முடியாது. இல்லன்னா எங்கேயாவது இடித்து கொள்வோம்!
இதழ் சரி வா! என்று கையை பிடித்து கொண்டு அனைத்து இடங்களுக்கும் குட்டி லைட் மட்டும் போட்டு விட்டு ஓடி ஒளிந்து கொள்ள..
ருத்ரன், ஹே லிப்ஸ் இங்கே என் கூட வாடி! என கையை பிடித்து இழுத்து சென்று விட்டான். நிலா ஒரு இடத்தில் தனியாக நின்று ஒளிந்து கொண்டாள்.
இதழ், தீரா என்ன டா! அங்கே நிலா தனியா இருக்கா!
ருத்ரன், அது எல்லாம் அவள் பார்த்து கொள்வாள். சொல்லு அப்புறம் யாரையும் இன்ட்றஸ்ட்டா மீட் பண்ணியா? லாஸ்ட் few டேஸ் மேடம் கால் பண்ணி எதுவுமே ஷேர் பண்ணலயே!.
இதழ், நான் கூட அதை கேட்கலாம் ல! பிராடு நீ கூட தான் இங்கே என்னை பார்த்தால் மட்டும் தான் பேசுற! டான்ஸ் கிளாசில் கூட யாருண்ணே தெரியாத மாதிரி கண்டுக்கவே மாட்டிக்கிற! என்ன விசயம்!
ருத்ரன், பின்ன அங்கே நான் உன் கிட்ட பேசினால் மற்ற பசங்க கோபித்து கொள்வார்கள் அதான்!
இதழ் ஹஸ்கி வாயிசில் நல்லா நடி! என்று அடிக்க ஆரம்பித்தாள்.
ருத்ரன், dp change பண்ணி இருக்க என்ன விசயம்! யாரையாவது interesting எதுவும்!
இதழ், அப்படியே போட்டு வாங்குறயா ராகவ் மாமா போல போலீஸ் புத்தி அப்படியே இருக்கு! நானே போலீஸ் திருடன் கூட பொழப்பு நடத்தி கொண்டு இருக்கேன்! நீ என ஆரம்பிக்க..
ருத்ரன் தன் தந்தையை பற்றி பேசியதால் போடி மோட் ஸ்பாயில் நான் பவா கிட்ட போறேன்! என நேராக பவன்யா இருக்கும் இடத்துக்கு சென்று விட்டான்.
ஹே சத்யா மேலே போலாம்! என ஹரிணி மெதுவாக அவனை இழுத்து செல்ல..
சத்ய தேவ் இருட்டில் எல்லா இடங்களையும் உற்று பார்த்து கொண்டே வேணாம் கீழே கொள்ளை பக்கம் போலாம் டி என ஹஸ்கி வாய்சில் திரும்ப அருகில் உள்ள கதவில் இடித்து கொஞ்சம் தள்ளாடி கொண்டே அவனுடைய கையை ஹரிணி ஒரு நிமிடம் விட்டாள்.
ஹே ஓகே ஹனி என சத்ய தேவ் அவளின் கைகளை பிடித்தான். அப்படியே அவளை இழுத்து கொண்டு கொள்ளை பக்கம் அழைத்து சென்றான்.
ஹரிணியின் முட்டியை தடவி விட்டு கொண்டே அவளை மேலே அழைத்து செல்ல போக…
ஹரிணி அவனுடைய கையை பிடித்து வேணாம் வா! அங்கே ஸ்டோர் ரூம் போலாம்! என சொல்ல அவளின் கைகளை பூ போல் பிடித்து கொண்டே மெதுவாக அழைத்து சென்றான்.
சத்ய தேவ் சுற்றிலும் பார்வையை சுழற்றி கொண்டே ஒன்னும் தெரியல டி! இப்போ கொடுக்க போறேன்! என்னோட முதல் முத்தம் அப்புறம் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என சொல்லி கொண்டே அவளின் கன்னத்தை பிடித்து முத்தமிட வர..
அவள் அவனிடம் இருந்து விலக பார்க்க.. ஹே விட மாட்டேன் டி! என்னை டெம்ட் பண்ணிட்டு போக பார்க்கிறயா! என don’t லீவ் மி என இடையில கை வைத்து அவன் பக்கம் இழுத்தான்.
அவள் கைகளை கொஞ்சம் விலக்க.. சத்ய தேவ் அவளை பின்னால் இருந்து அணைத்து கழுத்தில் முத்தம் பதித்தான். இவ்வளவு நேரமும் விலகும் எண்ணத்தில் இருந்த அவள் இப்பொழுது வேக மூச்சுடன் திரும்ப..
சத்ய தேவ் அவளின் இதழை கவ்வி கொண்டான். அவள் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து நிற்க.. எப்பொழுதும் மென்மையாக அனைவரிடமும் பேசுபவன் நடந்து கொள்பவன். இன்று அவளின் இதழில் கொடுத்த முத்தத்தில் முரட்டு தனம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக ஆரம்பித்தது. சத்ய தேவ் சுய நினைவில் இல்லை. அவளை பிரிய நினைக்கவே இல்லை.. அவளோ சுவற்றில் துவண்டு விழ ஆரம்பித்தாள். அவனுடைய கைகள் இடைக்கு செல்ல அப்படியே அவன் பக்கம் இழுத்து வருடி பார்த்து கொண்டே கண்ணம் தேய்த்து கழுத்தில் கைகளை கொண்டு சென்றான்.
இங்கே ஹரிணி ம்ம் உன்னோட முத்தம்! அதுவும் முதல் முத்தம்! உனக்காக உனக்கும் முன்னாடியே பிறந்து வளர்ந்து ஹஹஹ என்னையே கொடுக்க காத்து கொண்டு இருக்கேன். சீக்கிரம் தா டா! நீ தரயா இல்ல நான்.. என அருகில் நெருங்க..
ஹரிணியின் இதழ்களுடன் அவன் இதழ்கள் ஒட்டி கொண்டது.
மிதுன் , உள்ளே வந்துட்டேன். கண்டு பிடிக்க போறேன்!
தொடரும்…
EPISODE 15
உனக்காக உனக்கும் முன்னாடியே பிறந்து வளர்ந்து ஹஹஹ என்னையே கொடுக்க காத்து கொண்டு இருக்கேன். சீக்கிரம் தா டா! நீ தரயா இல்ல நான்.. என ஹரிணி அவன் அருகில் நெருங்க..
அதற்குள் அவன் ஹரிணியின் இதழ்களை கவ்வி கொண்டான். ஹரிணி அவனுடைய கழுத்தை வாகாக கட்டி கொள்ள.. அவன் மெது மெதுவாக உதடுகளை தின்று கொண்டு இருந்தான். மெது மெதுவாக முத்தங்கள் அதற்கு நடுவில் ஒற்றுதல் கூடவே இடைவெளி என அவளை மென்மையுடன் கையாண்டு கொண்டு இருக்க…
ஹரிணி அவனுடைய இதழை சுவை அரும்புகளை கொண்டு சுவைக்க.. அவன் மெதுவாக அவளின் முதுகில் கூடவே பின் அழகில் கைகளை படற விட்டான். ஹரிணி சிணுங்கி கொண்டே மூச்சு விட்டு அவன் கன்னத்தில் முகம் வைத்து தேய்க்க..
அவன் ஹரிணியின் முகத்தில் முத்தமிட்டு அவளுடைய கூந்தலில் கைகளை நுழைத்தான். ஹரிணி மெதுவான குரலில் உன் கிட்ட முரட்டு தனத்தை எதிர் பார்த்தேன். ஆனால் நீ என்னை கொஞ்சிட்டு இருக்க.. எனக்கு ஒரு கிஸ் கொடு! என்னால் அதில் இருந்து மீளவே முடியாத படி இருக்கணும் டா! என்று அவள் கூறிட…
அவன் அவளுடைய இதழை விரல் கொண்டு வருடி கொண்டே முத்தமிடாமல் இதழை தொட்டு பார்த்து ரசித்து கொண்டு இருந்தான்.
டேய் சக்தி! கொடு டா! என சிணுங்கி கொண்டே கூறிட.. அடுத்த நொடி அவளை விட்டு விலகி சென்று விட்டான்.
ஹரிணி அவன் முத்தமிடுவான் என காத்து கொண்டு இருக்க.. அங்கே யாரும் இல்லை.. அவள் கைகளை உலாவி கொண்டே தேட..
அங்கே யாரும் இல்லை..
இங்கே மிதுன், உள்ளே வந்துட்டேன் என சொல்லிக்கொண்டே தேட ஆரம்பித்தான். அந்த இடமே இறுட்டாக இருந்தது.
இங்கே சத்ய தேவ் கையில் இருப்பவளை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்க ஆரம்பித்தான். அவனுடைய முரட்டு தனம் கூடி கொண்டே சென்றது. அவளுடைய வதன வாசம்! தலைமகனை மயக்க கொஞ்சம் கொஞ்சமாக அவள் மேல் பிடி இறுகி கொண்டே சென்றது.
சத்ய தேவ், தப்பு பண்ணிட்டேன் டி! ச்ச! இப்போவே உன்னை கல்யாணம் பண்ணி இருக்கணும்! என மூச்சு வாங்க கீழ் இதழை கவ்வி இழுத்தான்.
ஹலோ! நான் வந்துட்டேன்! உங்களை எல்லாரையும் பிடிக்க போறேன்! என சொல்ல..
உடனே சத்ய தேவ் திரும்பி பார்க்க அந்த இடை வெளியில் அவனை விட்டு விலகி மூச்சை பிடித்து கொண்டே சென்று விட்டாள்.
சத்ய தேவ் கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவுக்கு வந்தவனுக்கு இப்பொழுது விபரீதம் புரிந்தது. அவளிடம் அவ்வளவு முரட்டு தனமாக நடந்து கொண்டு விட்டோமே! என்று நொந்து கொண்டே அதே இடத்தில் நின்றான். அவன் நினைவில் எல்லாம் கழுத்தில் பிடித்த அவளின் வாசம்! கைகள் வியர்க்க அவன் பக்கம் திரும்பியது, துவண்டு துவண்டு சத்ய தேவ் மீது அவள் விழுந்தது தான் நினைவுக்கு வந்தது.
ச்ச இப் இப்போ எப்டி ஹரிணி கிட்ட சாரி கேட்பது? என யோசித்து கொண்டே நின்று இருந்தான். அப்படியே மெதுவாக உற்று பார்த்து தேடி கொண்டே சென்றான்.
சரியாக அவன் படிகட்டின் அருகில் வரவும் விளக்குகள் ஒளிறவும் சரியாக இருந்தது.
யார் லைட் போட்டது? என திரும்பி பார்க்க..
மிதுன், சத்ய தேவ் அருகில் வந்து, டேய் நீ தான் அவுட் என்று சொல்ல..
இங்கே என்ன நடக்குது? என கேட்டு கொண்டே மை விழி உள்ளே வந்தாள்.
அந்த நேரம் பின்னால் ஹரிணி நிற்க.. நிதின் மேலே இருந்து இறங்கி வந்தான்.
இனியா சமையல் அறையில் இருந்து வர.. அவளுக்கு பின்னால் வெற்றி மாறன் வந்தான்.
மை விழி கோபத்துடன் வெற்றி! என்று கத்திட..
மா! என அவளின் அருகில் வந்தான்.
மை விழி அவனுடைய காதை இழுத்து திருகி கொண்டே நான் என்ன சொல்லி இருக்கேன்! அவள் கூட பேச கூடாது, சேர கூடாதுன்னு சொல்லி இருக்கேன் தானே! என்ன கிச்சனில் இருந்து அவள் கூட வர.. என்று மிரட்டி கொண்டு இருக்க..
ருத்ரன் எல்லா விளக்குகளையும் ஆன் செய்தான்.
என்ன ஆச்சு? சித்தி! என்று சத்ய தேவ் அருகில் வந்தான்.
அந்த நேரம் உதயன், தாரா இருவரும் வீட்டுக்கு வர..
மை விழி முறைத்து கொண்டு வெற்றியை பார்த்து கொண்டு இருந்தாள்.
இனியா அவளின் அருகில் வந்து அத்தை நாங்க ஹைடன் சிக் விளையாடிட்டு இருந்தோம்! நான் ஃப்ரிட்ஜ் பின்னாடி ஒளிந்து கொண்டு இருந்தேன்! வெற்றி மாமா கிச்சனில் ஒளிந்தது எனக்கு தெரியாது. என்று கூறினாள்.
யாருக்கு யாரு டி மாமா! சாரி மேடம்! இந்த மாமா கூப்பிடும் வேலை எல்லாம் மற்ற பசங்க கிட்ட வச்சுக்க! இனி ஒரு தடவை நீங்க ரெண்டு பேர் ஒன்றாக இருப்பதை பார்த்தேன் நடப்பதே வேற! என்று சொல்லி விட்டு வெற்றியை முறைத்து கொண்டு மை விழி நடக்க..
வெற்றி, மா அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல! என்னை நம்புங்க மா! என பின்னால் சென்றான்.
என்ன ஆச்சு? இனியா என உதயன் குரல் கேட்க…
மை விழி திரும்பி அவளை முறைத்து விட்டு அப்படியே திருட்டு புத்தி! உன் அப்பணை போல! உன் அப்பன் வீட்டுக்கு வரட்டும்! என மிரட்டி கொண்டே சென்றாள்.
இனியா அழுது கொண்டே உதயன் அருகில் சென்று அனைத்து விசயமும் கூற…
தாரா உள்ளே வந்து தன் பெண்ணை கவலையுடன் பார்த்தாள்.
இனியா, டாடி ப்ராமிஸ் டாடி! நான் எதுமே பண்ணல! ஆனால் மை விழி அத்தை என்னை இப்படி பேசிட்டாங்க! அப்படி நம்ம என்ன டாடி பண்ணோம்! என்று விசும்பி கொண்டே கேட்டாள்.
உதயன், விடு அவள் அப்படி தான்! என் பொண்ணு பற்றி எனக்கு தெரியும்! நீ கண்டுக்காத!.
சத்ய தேவ் இனியா அருகில் வந்து, குட்டி மா! என அழைக்க..
நான் உங்களை மாமா சொன்னால் அத்தை திட்டுவாங்களா?
சத்ய தேவ் சிரித்து கொண்டே உனக்கு எப்டி கூப்பிடனுமோ அப்படி கூப்பிடு! அத்தை அவங்க அப்படி தான்! ஆனால் உன் மேல பாசம் அதிகம்! அதை காட்ட மாட்டாங்க! இதுக்கு போய் அழலாமா? மேடம் காலேஜ் படிக்க போறீங்க! இது நல்லா இருக்கா! என்று சமாதானம் செய்தான்.
இனியா, மா மா!
ஓகே டா தங்கம்! என்றான்.
தாரா வருத்தத்துடன் அவர்களின் அறைக்கு செல்ல.. இதயன் தன் அம்மாவின் பின்னால் சென்றான்.
உதயன் அதே இடத்தில் நின்று கொண்டு இருக்க.. மாமு!
ம்ம்!.
அத்தய கன்சோள் பண்ணுங்க! போங்க!
உதயன் திரும்புவதற்கு முன் தன் பெண்ணை பார்த்து இனியா!.
டாடி!
உனக்கு வெற்றிய பிடித்தால் பேசு! தப்பு இல்லை! அவனுக்கும் உன்னை பிடித்து இருந்தால் என் கிட்ட வந்து சொல்லுங்க வெற்றின்னு இல்ல உனக்கு யார் பிடித்தாலும் அப்பா கிட்ட சொல்லு டா தங்கம்!
இனியா, இல்ல பா! உங்களை மாதிரி கேரக்டர்ல எந்த பையனையும் நான் பார்க்கல.. உங்க பொண்ணு தப்பு பண்ணல பா!
உதயன், சரி டா என சொல்லி கொண்டே அறைக்கு சென்றான்.
என்ன ஆச்சு? என கேட்டு கொண்டே நிதின் கீழே இறங்கி வந்தான்.
மிதுன் அவனை அழைத்து கொண்டு பிரச்சனையை சொல்ல ருத்ரன் மற்றும் இதழ் இருவரும் வந்து இனியாவை சமாதானம் செய்தார்கள். ஆனால் எல்லார் மன நிலையும் வெவ்வேறு எண்ணத்தில் மூழ்கி இருந்தது.
ஹரிணி சத்ய தேவ் அருகில் வந்தாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் தயங்கி கொண்டே பார்த்தார்கள். அருகில் வந்ததும் ஒரே நேரத்தில் “சாரி” என்று கூறினார்கள்.
சத்ய தேவ், நீ எதுக்கு என கேட்க வர..
ஹரிணி, நான் தான் சாரி சொல்லணும் நீ எதுக்கு? என ஒரே நேரத்தில் மாறி மாறி கேட்டு கொண்டார்கள்.
சத்ய தேவ் அவனுடைய முரட்டு தனத்தை நினைவில் வைத்து உன் கிட்ட நான் அப்படி நடந்து இருக்க கூடாது. தப்பு என் மேல ஹனி! என்று கூறினான்.
உடனே ஹரிணி, இல்ல நான் சொன்னது தான்! நான் அப்படி! சாரி சத்யா! தப்பு என் மேல தான்! என சக்தி என்று அழைத்ததை நினைவில் வைத்து கொண்டு கூறினாள்.
சத்ய தேவ், இனி கல்யாணம் வரைக்கும் உன் பக்கத்தில் வர மாட்டேன்! என்னோட கண்ட்ரோல் மிஸ் ஆகிடும்! என்று வெட்க கண்கள் மின்ன கூறினான்.
ஹரிணி, ஆனால் எனக்கு இது போதும்! சூர்யா மாமா கிட்ட சொல்லி date குறிக்க சொல்லணும்! உன்னை விட்டு என்னால்! என அப்படியே நிறுத்தி கொண்டே அருகில் நெருங்க..
சத்ய தேவ், வேணாம் டி! நான் அப்பா கிட்ட date fix பன்றத பற்றி கேட்டு சொல்றேன்! நீ பக்கத்தில் வந்த என்னோட முரட்டு தனம்! அது! என தயங்கி கொண்டே பின்னால் நகர்ந்தான்.
ஹரிணி, அதுக்கு வெயிட்டிங்! என கண் அடிக்க..
சத்ய தேவ், நீ இப்போ வீட்டுக்கு கிளம்பு! ஐ மின் உன்னோட கோட்ரஸ்! போ! மார்னிங் வா! இந்த இருட்டு என்னோட எண்ணத்தை மாற்றுது! என்று கூறினான்.
அவள் ஒரு பெரு மூச்சை விட..
இப்படி சிணுங்கி ப்ரீத் பண்ணாத என்று அவளை வெளியே அனுப்பி விட்டான்.
சிவன்யா தன் அம்மாவுக்கு அறிவுரை சொல்ல சென்று இருந்தாள்.
நிதின், நிவாஸ்!..
அண்ணா!
நிலா எங்கே? என்று நிதின் கேட்க..
உள்ளே இருக்கா! தூங்கிட்டா ரிதம் அவள் பக்கத்தில் இருக்கா! என்று நிவாஸ் கூற..
அந்த நேரம் ரிதம் வெளியே வந்தாள். உடையை மாற்றி இருந்தாள். ஒரு டீ சர்ட் கூடவே 3/4 th பேன்ட்! கூடவே மொத்த கூந்தலையும் விரித்து விட்டு எதையோ மறைப்பது போல இரு பக்கமும் பிரித்து கொண்டாள். நேராக இதழ் அருகில் வந்தாள்.
என்ன ரித்து!
ரிதம் காதுகளில் உள்ள காதனியை கழட்டி இதை மாமி கிட்ட கொடுத்திடு!
ருத்ரன், இப்போ எங்கே போற? என்று தன்னுடன் பிறந்தவளின் செய்கையை பார்த்து கேட்க..
ரிதம், உன் கிட்ட சொல்ல அவசியம் இல்லை என்று சொல்லி விட்டு நேராக மிதுன் அருகில் சென்றாள்.
என்ன டி ஒரு மாதிரி இருக்க?
ரிதம், இல்ல மிதுன் இப்போ வீட்டுக்கு போகனும்!
ஏன் என்ன ஆச்சு?
ரிதம், பிளீஸ் போகனும்! கூட்டி போரயா இல்ல நான் நிதின் கிட்ட கேட்கவா!
நிதின் கார் சாவியை எடுத்து கொண்டு ரிதா வா! என அழைத்தான்.
அவள் முகம் ஏந்திய தலை அந்த இடத்தை விட்டு செல்லும் வரையில் நிமிரவே இல்லை..
சத்ய தேவ் ஒரு பார்வை மட்டும் பார்த்து விட்டு நேராக மை விழி அறைக்கு சென்று விட்டான்.
நிதின் காரை எடுத்து ஸ்டார்ட் செய்ய..
ரிதம், எங்க அம்மாச்சி வீட்டுக்கு போ! வழி என அவள் சொல்ல..
நிதின் நேராக கங்கா விவேகா இருக்கும் வீட்டுக்கு சென்றான்.
ரிதம் தலையை குனிந்து கொண்டே இறங்கி கொள்ள..
என்ன ஆச்சு? ஒரு மாதிரியா இருக்க எதுவும் பிரச்சனையா!
ஒன்னும் இல்ல? என்று முடியை காதுக்கு ஒதுக்கினாள்.
நிதின், நாளைக்கு நேரமே கிளம்பி இரு நான் வரேன்!
இல்ல நான் டாடி கூட வந்து விடுவேன்.
நிதின், நாளைக்கு என் சிஸ்டர் கனி வரா! அதுக்கு தான்!
நான் நேரமே வருகிறேன். என சொல்லி கொண்டே உள்ளே ஓடினாள்.
அதன் பின் நிதின் நேராக வேறு ஒரு இடத்துக்கு சென்று ஆள் வீட்டுக்கு சென்று பாதுகாப்பு ஆனதும் கிளம்பினான். அவனுடைய பாதுகாப்பு படைகள் அவனை பின் தொடர்ந்து சென்றது.
ரிதம் கதவை தட்ட..
கங்கா எழுந்து திறந்தாள்.
ரிதம், அம்மாச்சி! பேபி எங்கே?
உள்ளே! என சொல்ல..
ரிதம் நேராக தன் அம்மா இருக்கும் இடத்தில் சென்று அவளின் வயிற்றை கட்டி கொண்டு உறங்க முயற்சி செய்தாள்.
ஆனால்…?
தொடரும்..
EPISODE 16
ரிதம் நேராக தன் அம்மா இருக்கும் இடத்தில் சென்று அவளின் வயிற்றை கட்டி கொண்டு உறங்க முயற்சி செய்தாள்.
ஆனால் தூக்கம் தான் வரவில்லை. கண்களை மூடினால் அவனுடைய வாசம் தான் நாசியை நிறைத்தது. ராஸ்கல்! ராஸ்கல்! என்று உள்ளுக்குள் ஒரு மனம் திட்டினாலும் இன்னொரு பக்கம் அவனுடைய முரட்டு தனம்! ஒவ்வொரு முறையும் ரிதம் துவண்டு சரியும் நேரம் தூக்கி நிறுத்தி அவளுடன் ஒட்டி கொண்டான். நெஞ்சம் விட்டால் அவளின் உடல் கூடை விட்டு துடித்து கொண்டே வெளியே வந்து விடும். அந்த அளவுக்கு இன்று அவளுடைய வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது.
ரிதம் அவளின் உதட்டை வருடி பார்த்தாள். இதழ்கள் மரத்து இருந்தது. Stranger! அவனுக்கு எவ்ளோ தைரியம் இருந்தால் என்னை கிஸ் பண்ணி இருப்பான்? என்று நினைத்தவள் கண்கள் நீரில் கலங்கியது. விடிய விடிய தூக்கமே வர வில்லை. பிரண்டு பிரண்டு படுத்து கொண்டே இருந்தாள்.
அதிகாலையே ஆகி விட்டது. ரிதம் கொஞ்சம் இன்பா போல காச்சு மூச் என்று கத்தினால் கூட அவளுடைய பலவீன நேரத்தில் தந்தையை விட தாயை தேடி வந்து விடுவாள். விவேகா கிட்ட சண்டையே போட்டாலும் இன்பா தான் கெஞ்சி சமாதானம் செய்வான். இங்கே ரிதம் கூட அப்படி தான் சண்டை போட்டால் அதை துடைத்து விட்டு எனக்கு பேபி வேண்டும் என்று வந்து கட்டி கொள்வாள்.
அடுத்த நாள் காலை பரபரப்புடன் விடிந்தது. தலை மகனின் நினைவில் நிறைய தலைவிகள் தூக்கத்தை தொலைத்து எழுந்தார்கள். ஆனால் இங்கே ரிதம் அப்பொழுது தான் தூங்கி கொண்டு இருந்தாள்.
விவேகா காலை 6.30 மணிக்கு முழித்து பார்க்க தன் வயிற்றை கட்டி கொண்டு உறங்குவது போல தெரிந்தது. நிச்சயமாக ருத்ரன் இல்லை அவன் அவளின் கைகளை இல்லையென்றால் கழுத்தில் ஒரு கையை போட்டு கொண்டு தூங்குவான். ஆனால் அவளை மொத்தமாக ஆக்கிரமித்து தூங்குவது இரண்டு ஜீவன்கள் மட்டும் தான் ஒன்று உயிரானவன்! இன்னொன்று அவர்களின் உயிரில் இருந்து வந்த ரிதம்.
விவேகா அனைத்து வித சண்டையையும் மறந்து தன் பெண்ணின் தலையை வருடி கொடுத்து உச்ச தலையில் முத்தம் வைத்தாள்.
ரிதம், பேபி! என்று சிணுங்கி கொண்டே மீண்டும் இறுக்கி கட்டி தூங்கினாள்.
விவேகா, ரித்து எழுந்து உட்காரு! இன்னிக்கு அந்த கல்யாணத்துக்கு போகனும் மறந்து போச்சா! எல்லாரும் நம்மை எதிர் பார்த்து கொண்டு இருப்பார்கள் என்று சொல்லி கொண்டு இருக்க.
ரிதம் கொஞ்சம் கூட அசையவே இல்லை. என்ன ஆச்சு இப்படி தூங்குறா? நமக்கே போட்டியா தூங்குகிறாள்! என் பொண்ணாச்சே! என்று விவேகா கொஞ்சி கொண்டு இருந்தாள். (ஆனால் இன்று இதே உதடுகளில் என் பெண் இல்லை என்று கூற போகிறாள்.)
விவேகா அவளை மெதுவாக படுக்கவைத்து விட்டு வெளியே சென்றாள். மா! அவளுக்கு சூப்பரா டீ அப்புறம் நீங்க செய்த பிஸ்கட் இது எல்லாம் எடுத்து வையுங்க! கொடுக்கணும்! அவள் பசி தாங்க மாட்டாள். அதை விட அதிகமா கோபம் வர பொண்ணுக்கு நிறைய பசிக்குமாம்! என்று சொல்லிக்கொண்டே குளிக்க சென்றார்.
கங்கா, என்ன என் பேத்தி மேல் பாசம் எப்போ பாரு அவளை கடித்து கொண்டு இருப்ப இன்னிக்கி தான் டி பாசமா பேசுற! இப்போவே என் தங்கத்துக்கு டீ போடுறேன் என அதை தயார் செய்தார்.
விவேகா குளித்து முடித்து உடை மாற்றி வெளியே வந்தவள் நேராக தன் அம்மாவிடம் டீ வாங்கி கொண்டு அவளை எழுப்ப சென்றாள்.
விவேகா, ரிதம்! என் ரித்து குட்டி! டிம்பிள் அழகி! உனக்காக சுட சுட இஞ்சி டீ கூடவே no மைதா பிஸ்கட் சீக்கிரம் சின்ன குட்டி! எழு என்று சொல்ல..
என்ன சின்ன குட்டி! எனக்கு அதை கேட்க கோவமா வருது! என்று தலையை சொரிந்து கொண்டே எழுந்து அமர்ந்தாள். அந்த கண்ணகுளி தேவதை! ஹான் தேவதை இல்ல! ஆனால் பார்க்க பார்க்க பார்த்து கொண்டே இருப்பதை போல் தோன்றும் வசீகர அரக்கி!
விவேகா அவளின் மூக்கை பிடிக்க வர..
பேபி டீ! என்றாள்.
விவேகா எடுத்து அவளிடம் நீட்டி கொண்டே என்ன ரித்து மா காலையில் எழுந்ததும் என்ன டென்ஷன்? என்ன உன்னோட தலை முடி எல்லாம் களைந்து இருக்கு! என அருகில் நெருங்க!
ரிதம் திடுக்கிட்டு மா நீ போய் ரெடி ஆகு! உனக்கு முடி நீளமா இருக்கு! என்னோட முடிய நான் பார்த்து கொள்கிறேன். என்று கூறினாள்.
விவேகா அவளை முறைத்து கொண்டே நான் வேண்டாம் வேண்டாம் என சொல்ல சொல்ல என் பேச்சை கேட்காமல் முடியை கட் பண்ணி அதை கலர் பண்ணி சுருட்டி கர்ல் பண்ணி ஆட்டம் போட்ட? இப்போ என்ன டி? என்று திரும்பி கொண்டையை அவிழ்த்தார்.
ரிதம் டீயை ஒரு மிடுக்கு குடிக்கவே சிரம பட்டாள். அவளுடைய உதடுகளில் உள்ள மெல்லிய தோல் எல்லாம் உரிந்து கொண்டு வந்தது. அவளின் இரு உதடுகளையும் நேற்றே ஒருவன் மென்று முழுங்கி மிச்சத்தை வைத்து விட்டு அனுப்பி இருக்கிறான்.
விவேகா, இந்த ஒரு டீ குடிக்க எவ்ளோ நேரம்? என்று திரும்பி பார்த்தார்.
ஒன் ஒன்னும் இல்ல பேபி உதடு கடித்து கொண்டேன்! அதான் டீ குடிக்க முடியல..
விவேகா, சிவந்து இருக்கு! எல்லாம் ஹீட்டு தான்! இந்த பண்ணை கோழி சிக்கன் எல்லாம் சாப்பிடாத! உன் அப்பா கூட சேர்ந்து கொண்டு கண்ட கருமத்தை தின்னு பாரு உதடு எல்லாம்! உனக்கு சூட்ட தூக்கி விட்டு இருக்கு! என்று அருகில் நெருங்க.
ரிதம் வேகமாக எழுந்து கொண்டு மா! எனக்கு செகண்ட் சேனல் அலைக்குது என பாத்ரூம் சென்று விட்டாள்.
விவேகா, சீக்கிரம் எல்லாம் முடித்து விட்டு வெளியே வா! முகூர்தத்துக்குள் அங்க போகனும்! என்று சென்றார்.
ரிதம் உள்ளே சென்று கண்ணாடியை பார்த்தாள். அவளின் இடையில் அவன் அழுத்தி பிடித்த அச்சு! கூடவே இதழ்களில் உள்ள மெல்லிய எரிச்சல் இரவு நினைவுகளை கண்முன் கொண்டு வந்தது. எனக்கு பிடிக்கல! அவனை பிடிக்க கூடாது! கூடவே கூடாது?அவனை நான் ரொம்ப ரொம்ப வெறுக்கிறேன்! என சொல்லி கொண்டே தலையுடன் கண்களை மூடி கொண்டே சவர் திறந்து விட்டாள். அவளின் கழுத்துக்கு பின்னால் அவனுடைய மூச்சு வீசி கொண்டு இருந்தது. சட்டென கண்ணை முழித்து திரும்பி பார்த்தாள்.
ச்ச! ச்ச! No no no! என்று சொல்லிவிட்டு வேகமாக குளித்து முடித்து வெளியே வந்தாள். ரிதம் அவளுக்கு பிடித்த உடையை அணிந்து கொண்டு முடியை காய விட்டு அழகாக தன்னை தயார் படுத்தி கொண்டாள்.
இங்கே இன்பா விவேகாவை பிக் அப் செய்யாமல் நேராக அதை விட தனியாக வசந்தன் கலைவாணி மணி விழா நடக்கும் இடத்துக்கு சென்றான்.
சூர்யா வரவேற்பு இடத்தில் நின்று கொண்டு அனைவரையும் வரவேற்க.
இன்பா நேராக அவன் அருகில் சென்றான்.
சூர்யா, மச்சி என்ன அதிசயம் தனியா வந்து இருக்க எங்கே மேடம்?
இன்பா வருத்தமான மற்றும் குழப்ப மன நிலையில் அவள் வருவா! என்று சொல்லி கொண்டே அருகில் உள்ள சேரில் அமர்ந்து கொண்டான்.
சூர்யா அவனுக்கு அருகில் அமர்ந்து கொண்டு இப்போ என்ன ஆச்சு? சொல்லு! உன் முகம் பத்தாயிரம் கேள்வியை சுமந்து கொண்டு இருக்கு!
இன்பா, ரிதம் யாரையோ லவ் பன்றாலாம்!
சூர்யா கொஞ்சம் திடுக்கிட்டு என்ன சொல்ற? என்றான்.
இன்பா, என் டாடி சொன்னாங்க? சூர்யா பையனை லவ் பன்றாளாம்! .
சூர்யா யோசித்து கொண்டே கண்ணுக்குட்டி அந்த மிதுன் ராஸ்களை லவ் பன்றாலா? அவளை என் கிட்ட கூட்டி வா! தயவு செய்து இதுக்கு ஒத்துக்காத! அந்த நாய் இன்னும் EVS paper அரியர் வச்சுட்டு சுற்றி கொண்டு இருக்கான். என் கிட்ட எதாவ்தும் பேசி திரிக் பண்ணி பணத்தை கறந்து கொண்டு போகிறான்.
இன்பா, டேய் சூர்யா! அது சூர்யா பையன் அப்டின்னா மிதுன் இல்ல!
சூர்யா, சத்ய தேவ் பற்றி சொல்ல வராயா! அவனுக்கும் ஹரினிக்கும் நேற்று நிச்சயம் ஆகிடுச்சு!
இன்பா, டேய் மடையா! அந்த சூர்ய பிரகாஸ் பையன்! அந்த நிதின்! அவனா இருக்குமா! எனக்கு என்னால் இந்த விசயத்தை அக்சப்ட் பண்ணிக்க முடியல! அதை விட விவேகாவை நினைக்க நினைக்க பயமா இருக்கு டா!
சூர்யா, என்ன டா? சும்மா உளறி கொண்டு இருக்காத! முதலில் விசாரித்து கொள்வோம் அப்ரம் முடிவு பற்றி பார்த்து கொள்ளலாம். என்று சொல்ல..
இன்பா பெரு மூச்சை விட்டான். அந்த நேரம் மிதுன் தேவ் யாரிடமோ போன் பேசிக் கொண்டே வெளியே கார் பார்க்கிங் பக்கம் ஜம்மென தயார் ஆகி கொண்டே நடந்து வந்தான்.
அவனை பார்த்த சூர்யா, மச்சி அந்த மிதுன் வரான் இரு கேட்டு சொல்றேன். என்று அவன் பக்கம் திரும்பி டேய் குட்டி குட்டா! ஹே மிதுன்! என்று சத்தமாக அழைத்தான்.
மிதுன் தன்னுடைய ஓர கண்களால் பார்க்க இன்பராகவன் மற்றும் சூரியதேவ் இருவரும் கொஞ்சம் விரைப்பு மற்றும் முறைப்பு கலந்து அமர்ந்து கொண்டு இருக்க..
மிதுன் மனதில் இவங்க ரெண்டு பேரும் எதுக்கு நம்மள இப்படி பாக்குறாங்க? அதுவும் நம்மள கூப்பிடறாங்க? என்னவா இருக்கும்? என்று நினைத்துக் கொண்டே அவன் அதை கண்டுகொள்ளாமல் அடுத்த அடி எடுத்து வைக்க..
இன்ப ராகவன், சத்தமாக டேய் குட்ட கு*சா என்று அழைக்க..
சூரியதேவ் திடுக்கிட்டு என்னடா சொல்ற? என்று திரும்பிப் பார்க்க..
இன்பா, மச்சி நான் ரொம்ப கவலையில டிப்ரஷன்ல இருக்கேன் டா! அதனால டங் ஸ்லிப் ஆகிடுச்சு!
மிதுன் முகத்தை கடுமையாக வைத்து கொண்டு இப்போ இப்போ சொன்னீர்கள்? இப்பொழுது என்ன சொன்னீங்? என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்தான்.
சூரியதேவ், அத ஒரு பக்கம் விடு! உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் கேக்கணும்! என்று சொல்ல..
மிதுன் என்ன விஷயம் என்று கேட்காமல் நேரடியாக நான் சீக்கிரமா அந்த பேப்பரை பாஸ் பண்ணிடுவேன். அதை பத்தி என்கிட்ட பேசாதீங்க? என்று சொல்ல வர..
உடனே சூர்யா, டேய் மூளை இல்லாதவனே! நான் சொல்றத கேளு!
என்ன என்று முகம் உப்பி கொண்டே பார்த்தான்.
சூர்யா, ரிதம் யாரையோ லவ் பண்றா போல உனக்கு தெரியுமா?
இன்ப ராகவன் நேராக அது அந்த நிதின் பிரகாஷ் ஆ?
மிதுன்…?
தொடரும்..
Comment pannunga ratings konjam like share pannunga
EPISODE 17
மிதுன் கோபத்துடன் நான் சீக்கிரமா அந்த பேப்பரை பாஸ் பண்ணிடுவேன். அதை பத்தி என்கிட்ட பேசாதீங்க? என்று சொல்ல வர..
சூர்யா டென்ஷனாகி டேய் மூளை இல்லாதவனே! அது இந்த ஜென்மத்தில் நடக்காது. நான் இப்போ வேற விசயம் கேட்க தான் உன்னை வர சொன்னேன். ரிதம் யாரையாவது லவ் பன்றாளா?
மிதுன் திடுக்கிட்டு புருவம் நெருக்கி கொண்டே என்ன? நான் அவளை லவ் பண்ணலயே!
சூர்யா சிரித்து கொண்டே ஓ அந்த ஆசை வேற உனக்கு இருக்கா! கனவில் கூட இந்த காதல் வராது! உனக்கு! உன்னை யாரு லவ் கேடு வேற பண்ணுவா! தண்டம்! உன்னை காசு கொட்டி படிக்க வச்சேன். என்னை அவமான படுத்த தான் பிறந்து இருக்க! After all அந்த EVS பேப்பர க்ளீயர் பண்ண என்ன டா உனக்கு கேடு! சத்ய தேவ், இதழ் ரெண்டு பேரும் எவ்ளோ புத்திசாலியாக இருக்காங்க! நீ எங்கே இருந்து டா வந்த?
மிதுன் கோபத்துடன் கிராஸ் யுவர் லிமிட்ஸ் எனக்கு ஒன்னும் உங்க கூட இருக்க ஆசை இல்ல! அந்த மகி! அவளுக்காக மட்டும் தான் பொறுத்து போறேன். என் தூரி பாப்பா அடுத்த காரணம்! மற்ற படி உங்களை எனக்கு சுத்தமா பிடிக்கல.. டிஸ்கஸ்டிங்!.
ஹே உன்னை என்று சூர்யா ஆரம்பிக்க..
மிதுன், நான் ஒன்னும் உங்க காசுல படிக்கல.. என் மகி கம்பனி லீட் பண்றா! அண்ட் டான்ஸ் கிளாஸ் பெயின்டிங் கிளாஸ் பணம் எல்லாம் எனக்காக அவள் சம்பாதிப்பது. சோ நீங்க! உங்களுக்கு நியாபக மறதி அதிகம் ஆகி போச்சு போங்க டென்ஷன் பண்ணிகிட்டு! என்று அவன் அடுத்த அடி எடுத்து வைக்க
இன்பா, டேய் நில்லு! என்ன கொழுப்பா! சூர்யாவை மரியாதை இல்லாமல் எதிர்த்து பேசுற! நில்லுண்ணு சொன்னேன்.
மிதுன் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கொண்டு என்ன வேணும்? என்று பார்த்தான்.
இன்பா, ரிதம் அந்த நிதின் பிரகாஷ்! அந்த பையனை லவ் பன்றாளா? உனக்கு அதை பற்றி எதுவும் தெரியுமா?
மிதுன் முகம் புன்னகையில் வளைந்து என்ன சொல்றீங்க? நிஜமாவா? அதனால் தான் முகத்தை ஒரு மாதிரி வைத்து கொண்டு சுற்றுகிராளா! அங்கில் யூ ஆர் அ லக்கி மேன் என் ப்ரோ ரித்து ரெண்டு பேரும் லவ் பண்றது எவ்ளோ ஹேப்பி தெரியுமா? என்று சொல்லி கொண்டு இருக்க..
இன்பா, டேய் அவங்க ரெண்டு பேரும் நிஜமாவே லவ் பன்றாங்களா?
மிதுன் அடுத்து பேச வர..
டாடி என்று ஒரு குரல் மாமா என்று இன்னொரு குரல்.. அது சத்ய தேவ், ஹரிணி தான்!
மிதுன் அவர்களை பார்த்ததும் அந்த இடத்தில் இருந்து நகர செல்ல..
இன்பா டென்ஸனுடன் ஹே நில்லு டா என்று மிதுணை அவர்கள் பக்கம் நிற்க வைத்தார்கள்.
டாடி உங்க கிட்ட முக்கியமா பேசணும்!
சூர்யா சிரித்து கொண்டே சொல்லுங்க சத்ய தேவ், ஹரிணி குட்டி! என்று பார்த்தான்.
சத்ய தேவ் நேராக சூர்யா அருகில் ஹரிணியின் கைகளை பிடித்து கொண்டே வந்தவன். ப்பா நானும் ஹரினியும் சீக்கிரமே கல்யாணம் செய்து கொள்ள முடிவு எடுத்து இருக்கோம்! அதுக்கு தான் நீங்க ராம் மாமா கீதா அத்தை கிட்ட பேசி டேட் ஃபிக்ஸ் பண்ணனும்.
அவ்ளோ தானே பண்ணிட்டா போச்சு என்று சொல்லி கொண்டு இருக்க அந்த நேரம் பாதுகாப்பு படையுடன் பட்டு வேஷ்டி பட்டு சட்டையில் கம்பீரமாக தன் தங்கை கணிராவை அழைத்து கொண்டு நிதின் உள்ளே வந்தான்.
மிதுன் அவனை பார்த்ததும் ப்ரோ என்று திரும்பி செல்ல.
இன்பா, டேய் நிக்கிற இல்ல அப்புறம் மணி இருக்காது.
மிதுன் இரண்டு கண்களை பெரிதாக விரித்து இன்பாவை முறைத்து பார்த்தான்.
நிதின், கணி எனி பிளான்!
கணி அந்த இடத்தை அலசி ஆராய்ந்து விட்டு அன்னயா நான் இருக்கேன். அதுவும் அந்த இன்ப ராகவனை ஈசியா ஏமாற்றி விடலாம். என பேசி கொண்டே அருகில் வந்தார்கள்.
ராம் மற்றும் கீதா இருவருக்கும் சூர்யா காத்து கொண்டு இருக்க அந்த நேரம் விவேகா மற்றும் ரிதம் இருவரும் புக் செய்த ஆட்டோவில் இருந்து இறங்கினார்கள்.
சூர்யா, மச்சி! விவேகா வரா டா! கூடவே உன் பொண்ணு வரா!
ருத்ரன் தன் தாயை அழைக்க வெளியே வந்தான்.
இன்பாவின் பார்வை நிதின் மீது திரும்ப அவன் உள்ளே செல்ல போக…
ஹே நில்லு! என்று அதிகார தொனியில் இன்பா அவனை அழைத்தான். நிதின் வேறு வழி இல்லாமல் அதே இடத்தில் நின்றான்.
விவேகா அங்கு இருககும் இன்பாவ கண்டு கொள்ளாமல் உள்ளே செல்ல போக..
ருத்ரன் தன் தாயை அழைத்து கொண்டு உக்கிர சென்று விட்டான்.
ஆப்பிள் கிரீன் களரில் ஒரு காக்ரா சோலி என ரம்யமாக அழகு தேவதையாக இன்பாவை நோக்கி ரிதம் நடந்து வந்து கொண்டு இருந்தாள்.
மிதுன் நிதின் கிட்ட ப்ரோ நீ லவ் பன்றயா? என்று கேட்க போக..
இங்கே அதற்குள் ராம் மற்றும் கீதா ஆதவ் என மூன்று பேரும் சூர்யாவை நோக்கி வந்தார்கள்.
ராம், என்ன டா சூர்யா?
சத்ய தேவ் மற்றும் ஹரிணி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.
நிதின் பார்வை சத்ய தேவ் மீது இருக்க அவன் நேராக திரும்பி நின்றான்.
சூர்யா, சீக்கிரம் சத்ய தேவ் ஹரிணி ரெண்டு பேருக்கும் கல்யாண டேட் ஃபிக்ஸ் பண்ணனும் அதுக்கு தான். உங்களை கூப்பிட்டேன்.
அங்கே வந்து கொண்டு இருக்கும் ரிதம் காதுகளில் இந்த வார்த்தைகள் எல்லாம் விழ அவள் எந்த சலனமும் இல்லாமல் வந்து கொண்டு இருந்தாள். வந்தவள் நேராக இன்பா அருகில் சென்றாள்.
மிதுன் அவளை பார்த்த அடுத்த நொடி உற்சாகமாக ஹே ரிதம் நீ லவ் பண்றயா?
இன்பா, ரிதம்! இவன் சொல்றது உண்மையா? என்று கேட்க..
அங்கு இருக்கும் அனைவர் பார்வையும் ரிதம் மீது சென்றது.
நிதின் பேச வர.. கணி அவனுடைய கையை பிடித்து கொண்டு கண்களால் சைகை செய்தாள்.
ரிதம் காதுகளில் ஹரிணி, சத்ய தேவ் கல்யாண விசயம் தான் திரும்ப திரும்ப கேட்டு கொண்டு இருந்தது.
மிதுன் அவளின் அருகில் வந்து ரித்து சொல்லு நீ அண்ணாவை லவ் பன்றயா? என்று மின்னும் கண்களில் பார்த்தான்.
ரிதம் அமைதியாக நின்று கொண்டு இருக்க..
அங்கே சத்ய தேவை அழைக்க வந்த ருத்ரன் காதுகளில் மிதுன் பேசி கொண்டு இருப்பது தெரிய வேக வேகமாக விவேகாவிடம் சொல்ல சென்று விட்டான்.
சூர்யா, கண்ணுக்குட்டி! அந்த மிதுன் உன்னை வற்புறுத்தி இப்படி சொல்ல சொல்ரானா? உன் மனசுல வேற யாரும் இருக்காங்களா? டாடி கிட்ட சொல்லு! நீ என் கிட்ட கூட சொல்லு! நான் இருக்கேன்.
ஹரிணி, மாமா டேட் பாருங்க! நாங்க வெயிட் பண்றோம்!
சத்ய தேவ், நான் கார்த்திக் மை விழி சித்தி ரெண்டு பேரையும் வர சொல்றேன். அவங்க விருப்பம் முக்கியம்! என்று சொல்லி கொண்டே அவர்களை அழைத்தான்.
விவேகா கோபத்துடன் அவர்களை நோக்கி வர..
ரிதம் தன் தந்தையை பார்த்து ஆமா டாடி! எனக்கு நிதின் பிடிக்கும்! என்று கூறி விட்டாள்.
மிதுன் அவளை தூக்கியே சுற்றி விட்டான்.
ஹரிணி, சத்யா! ரிதம் அவனை லவ் பண்றா!
கணி, அங்கிள் எங்க அண்ணாவுக்கு பேர் ஆக ரிதம் கொடுத்து வைத்து இருக்கணும் இவள் லக்கி பெல்லோ! என்று உசுப்பி விட்டாள்.
நிதின் நேராக ரிதம் அருகில் சென்றவன் அவளின் கைகளை கோர்த்து கொண்டு அவளுக்கு என்னை பிடிச்சு இருக்கு! நான் எப்போவும் ரிதாவை வேறு ஒருத்தியா நினைத்தது இல்லை. என்னோட ஃப்ரெண்டா இருந்தவள் இப்போ என்னோட பார்ட்னர் ஆக போறா! ஆர் யூ ஹேப்பி பேபி!
இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன். என்று விவேகா கோபத்துடன் வந்தவள் ரிதம் கன்னத்தில் அடிக்க வர..
நிதின் விவேகாவின் கையை பிடித்து தடுத்து நான் வெட்டி பையன் இல்லை. அதே போல் மீசை இல்லாத ஆண் பிள்ளையும் இல்லை. நான் இந்த நாட்டோட முக்கிய மந்திரி! இவள் சொன்னது காதில் விழ வில்லையா? அவளுக்கு என்னை பிடித்து இருக்கு! என்று கர்ஜனை தோரணையில் கூறினான்.
விவேகா இன்பாவின் பக்கம் திரும்பி இப்போ எதுக்கு அமைதியா இருக்கீங்க! இது சரி பட்டு வராது! ஒழுங்கா வேணாம் என சொல்லுங்க! ரிதம் நீ அவனை விட்டு வா!
மிதுன், மாமி பிளீஸ் நிதின் அண்ணா நல்ல கேரக்டர்! என்று சொல்ல..
விவேகா, சூர்யா அண்ணா பிளீஸ்! இவனை கொஞ்சம் அமைதியா இருக்க சொல்லுங்க! என்று சொன்னவள். ரிதம் பக்கம் திரும்பி உனக்கு நான் முக்கியமா இல்லை இவன் முக்கியமா? நீ அம்மா கிட்ட வா ரிதம் சொல்றத கேளு!
நிதின், மிதுன் மகி சித்தியை வர சொல்லு!
உடனே மிதுன் வேகமாக சென்றான்.
விவேகா, என்னங்க! இன்பா! சொல்லு? இது வேணாம் என சொல்லு! இது ஒத்து வராது. உன் பொண்ணு உன்னை அவமானத்தில் கொண்டு தள்ள போறா! சொல்றத கேளு என் பேச்சை கேளு!
மகி, என்ன ஆச்சு அறிவு! என்று மகிளினி வந்து நின்றாள்.
விவேகா, அக்கா பிளீஸ் இவளுக்கு புத்தி மதி சொல்லுங்க! எங்க குடும்பத்துக்கும் நிதின் குடும்பத்துக்கும் இது ஒத்து வராது. உங்க அக்கா பையன் கிட்ட சொல்லுங்க இனி அவன் என் பொண்ணை தொந்தரவு செய்ய கூடாது.
மகி என்ன சொல்வது என்று நின்று கொண்டு இருக்க..
இன்பா நேராக ரிதம் அருகில் வந்து உனக்கு பிடிச்சு இருக்கா! என்று கேட்க.. அந்த இடத்தை சுற்றி சிவன்யா, பவன்யா, நிலா, இனியா, இதயன், வெற்றி, நிவாஸ், இதழ் என அனைவரும் வந்து விட்டார்கள்.
ருத்ரன் தன் அக்காவின் அருகில் வந்து ரிதம்! அக்கா நீ அம்மா சொல்றத கேளு!
நிதின் அவளுடைய தோலை அணைத்த படி அவளுக்கு என்னை பிடித்து இருக்கு! சோ எனக்கு ஓகே!
ரிதம், டாடி! எனக்கு இஷ்டம்! என்று கீழே குனிந்து கொண்டே கூறினாள்.
விவேகா கண்கள் கலங்க அதே இடத்தில் நின்றாள். ருத்ரன் தன் அம்மா அருகில் வந்து அணைத்துக் கொண்டான்.
மிதுன், இங்கே ஐ கானிக் பேர் அண்ணாவும் ரிதமும் தான்!
விவேகா, இன்னையில் இருந்து எனக்கு ருத்ரன் மட்டும் தான் உறவு! உங்க ரெண்டு பேரையும் நான் இதே இடத்தில் வெட்டி விடுகிறேன். என சொல்லி கொண்டே அந்த இடத்தில் இருந்து கிளம்பி விட்டாள். ருத்ரன் தன் அம்மாவின் பின்னால் சென்றான்.
ரிதம் – நிதின்
சத்ய தேவ் – ஹரிணி..
ராகவ் – விவேகா..
தொடரும்…
EPISODE 18
ரிதம் கண்கள் எதிரில் இருக்கும் அந்த ஜோடியை ஒரு முறை பார்த்தது. சத்ய தேவ் மற்றும் ஹரிணி இருவரும் அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க..
சூர்யா தன் நண்பனின் அருகில் வந்து விவேகா சொல்றத கொஞ்சம் கேளு இன்பா! நாளைக்கு என்று ஆரம்பிக்க.
இன்பா கொஞ்சம் சத்தமான குரலில் எனக்கு என் பொண்ணு தான் முக்கியம் அவளுக்காக என்ன வேணாலும் செய்வேன். ரிதம் வாழ்க்கையை அவளுக்கு பிடித்த மாதிரி அமைத்து கொள்ள யார் கிட்டயும் பெர்மிஷன் கேட்க தேவையில்லை சூர்யா என்று சொல்லி விட்டு நிதின் அருகில் வந்தான்.
மகி என்ன செய்வது என்று பார்த்து கொண்டு இருக்க.. நிதின் இன்பாவிடம் எங்களை பிளஸ் பண்ணுங்க மாமா! என்று குனிய செல்ல..
இன்பா அவர்களை பிடித்து கொண்டான். ரிதம், டாடி! என் மேல் உங்களுக்கு கோபம் இல்லையே!
எனக்கு என்ன டா கோபம்? உன்னோட முடிவு எப்போவும் சரியா இருக்கும்! என இன்பா சொல்ல.. அந்த நேரம் இங்கே நடந்த அனைத்து விசயங்களையும் கேள்வி பட்டு தேஜு மற்றும் சூர்ய பிரகாஷ் இருவரும் வந்து கொண்டு இருக்க..
நிதின் நேராக மகி அருகில் சென்றான். சித்தி எனக்கு இங்கே இருக்கும் எல்லாரை விட நீ முக்கியம்! உன்னோட சம்மதம் முக்கியம் நீ சொல்லு நான் சரி தானே!
சத்ய தேவ் மற்றும் ஹரிணியின் பார்வை மகி மீது இருந்தது.
மகி சிரித்து கொண்டே எனக்கு சந்தோசம்! ரொம்ப! ஆனால் விவேகா!
நிதின், அவங்க வருவாங்க! நான் வர வைப்பென். சரி உங்க ப்ளஷ் தான் எனக்கு முக்கியம்.சோ நீங்களும் உங்க ஹஸ்பண்ட் மிஸ்டர் சூரிய தேவ் ரெண்டு பேரும் பிளஸ் பண்ணுங்க!
மகி சூர்யாவை பார்க்க அவனோ வேண்டா வெறுப்பாய் நின்று இருந்தான்.
இன்பா, சூர்யா என் மாப்பிள்ளையை ஆசிர்வாதம் பண்ணு! போடா!
ரிதம் தன் தந்தையை பார்த்தாள்.
சூர்யா மற்றும் மகி இருவரும் ஆசிர்வாதம் செய்தார்கள். ரிதம் , மாமா!.
கண்ணுகுட்டி நான் இருக்கேன் உனக்கு அப்பனுக்கு அப்பனை பார்த்தவன் நான்! உனக்கு எப்போவும் மாமா இருக்கேன் சரியா!
ரிதம் சூர்யாவை அணைத்து கொண்டு மாமு! என்று நீர் கோர்க்க பார்த்தாள்.
ஹே நீங்க சேர நான் தான் டி காரணம் என ஒரு குரல் .
ரிதம் மற்றும் நிதின் இருவரும் ஒரே நேரத்தில் திரும்பி பார்த்தார்கள்.
சூர்யா முனகி கொண்டே மிதுனை பார்த்தான்.
மகி, என்னங்க?
சூர்யா கடுப்புடன் இவனுக்கு மிதுன் அப்டின்னு வச்சதுக்கு பதிலா சூனியம் அப்டின்னு வச்சு இருக்கலாம்.
இங்கே என்ன நடக்குது? நிதின் என்ன டா பண்ற? என்று தேஜூ வந்து அவன் முன் நின்றாள்.
தேஜு கடும் கோபத்துடன் அவனை முறைக்க..
மகி, அக்கா என ஆதரவாக பேச வர .
தேஜு, கொஞ்சம் அமைதியா இரு! இது என் பையன் விவகாரம்!
அதை சொல்ல நீங்க யாரு? என் பொம்மாய கேட்க உங்களுக்கு ரைட்ஸ் இல்ல! அவள் என் சித்தி! என் பொம்மாயி! என்று சொல்லி கொண்டே நிதின் தேஜுவை முறைத்து பார்த்தான்.
என்ன நிதின்? இது நிஜங்கா நூவு தானா? என்று கோபத்துடன் sp வந்தான்.
கனிரா, பெத்த நான்னா அண்ணயா தப்பு இல்ல ரிதம் தான் அண்ணாவை விரும்புகிறாள்.
நிதின், கனி லீவ் இட்.. அண்ட் இந்த விசயத்தில் நீங்க கூட தலையிட கூடாது. யாருக்கும் உரிமை இல்லை. என்று சொல்லி கொண்டே நேராக வசந்தன் மற்றும் கலைவாணி இருவரையும் பார்த்து ஆசிர்வாதம் வாங்க சென்றான்.
மகி தேஜுவிடம் பேச வர அவளோ முறைத்து விட்டு சென்றாள். மை விழி மற்றும் கார்த்திக் இருவரும் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.
அனைத்து இளவட்டமும் ஒவ்வொரு மன நிலையில் இருந்தார்கள்.
சத்ய தேவ் மற்றும் ஹரிணி இருவரின் திருமணத்தையும் ஆறு மாதங்கள் கழித்து வைக்கலாம் என்று முடிவு செய்து விட்டார்கள்.
நிதின் மற்றும் ரிதம் இருவருடைய கல்யாணத்தை இன்னும் ஐந்து மாதங்களுக்குள் வைக்கலாம் என்று கணி தன் அண்ணன் காதுகளில் ரகசியம் கூறினாள். அதே போல் நிதின் சொல்ல..
இன்பா அதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் சரி என்று ஒத்து கொண்டான்.
சூர்யா, என்ன டா இது நீ தானா? எனக்கு கனவில் இருப்பதை போல இருக்கு! வசு மா, ரவி டாடி, சுபா, கங்கா மா, வருண் இப்படி முக்கியமான ஆளுங்க கிட்ட டிஸ்கஸ் பண்ணாம நீ பாட்டுக்கு முடிவு எடுக்கிற? அதை விட முக்கியமா விவேகா எவ்ளோ இம்பார்ட்டென்ட் தெரியுமா? என்று கூற..
இன்பா விறைப்புடன் என் பொண்ணு விருப்பம் தான் முக்கியம் எதுவும் என் கிட்ட சொல்லாத என்று அங்கு நடப்பதை பார்த்து கொண்டு இருந்தான். அவன் ஒரு சூறாவளியை எதிர் கொள்ள வேண்டுமே!.
வசந்தன் மற்றும் கலைவாணியின் மணி விழா ஆசிர்வாதம் என அனைத்தும் முடிய ஹரிணி தன்னுடைய கடிகாரத்தில் மணியை பார்த்து கொண்டே இருந்தாள்.
சத்ய தேவ், என்ன ஹனி சும்மா நேரத்தை பார்த்து கொண்டே இருக்க இதுல பெருசா வித்தியாசம் என்ன இருக்க போகுது! என்று பார்த்தான்.
ஹரிணி அவனுடைய கையை அழுத்தி பிடித்து கொண்டே சத்யா இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு! அதுக்கு அப்புறம் நான் டெல்லி போயிடுவேன். நேற்று நமக்குள் நடந்த அந்த சின்ன நாலு முத்தத்தை நினைத்து கொண்டே இந்த ஆறு மாசத்தையும் ஓட்டி விடுவேன்.
சத்ய தேவ் புன்னகையுடன் அவ்ளோ மிஸ் பண்ணுவியா? என்னை?
ஹரிணி, ஆமா மிஸ் பண்ணிடுவேன் என சொல்லி முகத்தை மிகவும் ஏக்கமாக பாவமாக வைத்து கொண்டாள்.
சத்ய தேவ் அவளின் கையை பிடித்து வாயேன் உனக்காக இன்னொரு தடவை கொஞ்சம் முத்தம்!
ஹரிணி, வேணாம்! அப்புறம் என்னால் உன்னை விட்டு போக முடியாது.
இல்ல ஹனி! நீ போகனும்
ஹரிணி, நான் வேலையை விட்டு நிக்கவா!
அடி வாங்க போற! நீ போலீசா இருப்பது எனக்கு ரொம்ப கர்வம் டி! என அவர்கள் பேசி கொண்டு இருக்க நிச்சய மோதிரங்கள் வரவழைக்க பட்டது.
அனைவர் பார்வையும் நிதின் மற்றும் ரிதம் மேல் இருந்தது. அவள் ஒரு பொம்மை போல இருந்தாள். (பொம்மைக்கு உணர்ச்சிகள் இருக்காதே!) அதே தான்.
வசந்தன் மற்றும் களைவானிக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. மொத்தத்தில் இரண்டு பேரன்கள் கல்யாணத்தை நேரில் பார்க்க ஆசையாக இருந்தது.
அதன் பின் அனைவரும் சாப்பிட சென்றார்கள். இன்பாவுடைய எண்ணுக்கு விடாமல் போன் அடித்து கொண்டே இருக்க… அப்படியே ரிதம், சூர்யா, இதழ், என அனைவருக்கும் மாறி மாறி போன் வர ஆரம்பித்தது.
இன்பா, இதழ்!
மாமா! சொல்லுங்க!. என்று இதழ் அருகில் வந்தாள்.
இன்பா அனைத்து போனையும் அவளிடம் நீட்டி இதை யாரும் எடுக்க கூடாது. அட்டன் செய்ய கூடாது. நான் பார்த்து கொள்கிறேன் என சொல்லி விட்டு ரிதம் அருகில் சென்றான்.
அனைவரும் குழுக்களாக படம் பிடித்து கொண்டார்கள். சத்ய தேவ் முகத்தையே ஹரிணி பார்த்து கொண்டு இருந்தாள்.
என்ன டி ஒரு மாதிரி பார்க்கிற?
எனக்கு பயமா இருக்கு! இத்தனை நாள் இப்படி உன்னை விட்டு போறது அது தான்.
சத்ய தேவ் அவளின் முகத்தை பார்த்து சிரித்து கொண்டே எனக்கும் தான் உன்னை அனுப்ப பிடிக்கல.. ஆனால் என்ன பண்றது?
ஹரிணி அவனை அடித்து விளையாடினாள்.
அதன் பின் சரியாக மூன்று மணிக்கு அவளை ஏர்போர்ட் கொண்டு சென்று விட சத்ய தேவ், பவா, நிலா, ஆதவ், இதழ் என அனைவரும் வந்தார்கள்.
சத்ய தேவ் மனம் இத்தனை நாள் கழித்து மிகவும் பதட்டத்துடன் அவளை பார்த்தான்.
ஹரிணி, டேய் சிரி! எனக்கு கஷ்டமா இருக்கு!..
சத்ய தேவ் ஒரு பெரு மூச்சை விட்டு பேசாமல் என் கூட இருந்திடு!
ஹரிணி அவன் கையை பிடித்து முத்தம் வைத்தவள். இல்ல உனக்காக தான் இந்த போலீஸ் வேலை! அதனால் இந்த வேலையை நான் விட மாட்டேன். ஆறு மாசம் கண்ணை திறந்து மூடுவதற்குள் ஓடி போயிடும் என்று சொல்லி கொண்டே அனுப்பினான்.
ஹரிணி அவன விட்டு பிரிந்து திரும்பி பார்க்காமல் சென்று விட்டாள்.
நிதின் போனுக்கு அவனுடைய காவலாலிகள் என்ற அவள் கிளம்பி விட்ட செய்தியை உடனே தலையை கோதி கொண்டே திருப்தி புன்னகையுடன் நின்றான்.
இன்பா கொஞ்ச நேரம் இருந்து விட்டு கிளம்ப.. மகி ரிதமை இரவு உணவு முடித்து அனுப்பி வைக்கிறேன் என சொல்லி விட்டாள்.
சத்ய தேவ் நேராக விவேகா மற்றும் ருத்ரன் இருவரையும் பார்க்க சென்றான்.
சரியாக மாலை ஆறு இருக்க ரிதம் இன்று நடந்த நிச்சயதார்த்தம் மற்றும் அவளின் கையில் நிதின் போட்ட மோதிரம், அவள் கட்டி இருக்கும் புடவை என அனைத்து விசயங்களையும் யோசித்து கொண்டே டெரஸ் சென்று ஒரு இடத்தில் நின்று தீவிரமாக யோசித்து கொண்டு நின்றாள். அவள் என்ன யோசித்தாள் என்று அவளுக்கே தெரிய வில்லை.
ருத்ரன் வீட்டுக்கு சென்று பேசி விட்டு வந்த சத்ய தேவ் போனை எடுத்து கொண்டு ஹரிணி டெல்லி சரியாக சென்று விட்டாளா? என்று கேட்க டெரஸ் பக்கம் சென்றான்.
வானம் மேக மூட்டத்துடன் காணப்பட.. மெது மெதுவாக மழை துளி விழ தொடங்கியது. ரிதமுடைய கார் கூந்தல் அலை அலையாய் காற்றுடன் சேர்ந்து கவி பாடி கொண்டு இருக்க.. அவள் சிந்தை தான் இந்த உலகத்தில் இல்லையே! மழை கொஞ்சம் கொஞ்சமாக பெய்ய ஆரம்பித்தது.
சத்ய தேவ்க்கு மழை என்றால் மிகவும் பிடிக்கும். அவன் ஹரினிக்கு முயற்சி செய்து கொண்டே என்ன எடுக்க மாட்டிக்கிரா? என்று நெட் ஆன் செய்ய டிங் என்ற ஒலியுடன் ரீச்ட் என்று செய்தி மின்னியது. அவன் உதட்டில் புன்னகை ததும்ப டெரஸ் கதவுகளை திறந்து வெளியே சென்றவன். இரு கைகளையும் நீட்டி மழையை ரசித்தான். மழையின் வேகம் கொஞ்சம் அதிகரிக்க தன்னிலைக்கு வந்தவள் ச்ச! மழை! என்று கடுப்புடன் இன்னொரு பக்கம் இருந்து நுழைவு வாயில் அடைய அந்த இடத்தில் சத்ய தேவ் உடலுடன் ஒட்டிய உடையில் அவனுடைய உடற்கட்டு அழகாக தெரிய மழையில் நனைந்த படி கூந்தலை நீவி கொண்டே கண்கள் கடை இதழ் சிரிக்க ஒரு தேவனை போலவே நின்று கொண்டு இருந்தான்.
ரிதம் அதற்கு மேல் அவனை பார்க்க பார்க்க கோபமும் தாபமும் தான் அதிகரித்தது. வேகமாக நடந்தவள் புடவை தடுக்கி கீழே விழுந்து விட்டாள்.
ஸ்ஸ்ஸ் டாடி! என்று சத்தம் கேட்டது. சத்ய தேவ் திரும்பி பார்க்க அங்கே ரிதம்…
அடுத்து என்ன நடக்கும்?
ரிதம் அப்புறம் நிதின் ரெண்டு பேருக்கும் நிச்சயம் ஆகி போச்சு!
இந்த நிலையில் ஹரிணி டெல்லி கிளம்பி போயிட்டா!
இன்பா வேற ரொம்ப வீரப்பா கூடவே விரைப்பா எல்லாம் செய்து விட்டான். அங்கே எல்லாரும் அவனுக்கு வெயிட்டிங்? முக்கியமா விவேகா! ருத்ரன்.. சோ அடுத்தடுத்து நிறைய twist தான் பார்ப்போம்
தொடரும்..
Coming mondey ல இருந்து ud daily வரும்..
EPISODE 19
ரிதம் வேகமாக நடக்க அந்த மழையால் அவளின் புடவை தடுக்கி அப்படியே கீழே விழுந்தாள். “டாடி” என்று சத்தம் கேட்டது. ரிதம் கஷ்டபட்டு எழ முயற்சி செய்தாள்.
சத்ய தேவ் அவளை நோக்கி சென்றவன். என்ன ஆச்சு? இங்கே நீ மட்டும் தனியா என்ன பண்ற? என கேட்டு கொண்டே அவள் எழ உதவி செய்ய அருகில் சென்றான்.
ரிதம் அவன் முகத்தை பார்க்காமல் அதே இடத்தில் அவள் தடுக்கி அடி பட்டதை மறந்து குத்து காலிட்டு அமர்ந்து கொண்டாள்.
ஹே என்னாச்சு கீழே விழுந்துட்டியா? இங்கே தனியா என்ன பண்ற? என்று உதவி செய்ய அவளின் அருகில் நெருங்கினான்.
ரிதம் என்னை தொடும் வேலைய வச்சுக்காத! உன்கிட்ட நான் எந்த உதவியும் கேட்கல.. உன்னோட வேலைய பாத்துட்டு நீ போ! என்று கைகளை தட்டி விட்டாள். அதற்கு மேல் சத்தியதேவால் எதுவும் பேச முடியாமல் அவன் அந்த இடத்தை விட்டு சென்றான்.
அவன் சென்றதும் ரிதம் எழுந்து நிற்க முயற்சி செய்தாள்.காலில் அனேகமாக ப்ரேச்சர் ஆகிடுச்சு. இப்படி ஆகி போச்சே என்று சுவற்றைப் பிடித்துக் கொண்டு மெதுவாக எழுந்து நிற்க போனவள் கால் சுளுக்கு பிடித்ததால் தவறி கீழே விழச் செல்ல அந்த நேரம் இரும்பு கைகள் அவளின் இடையே தழுவிக் கொண்டது.
ரிதம் கண்களை இறுக்கி மூடி கொண்டே மெதுவாக திறக்க.. அங்கே சத்யதேவ் உனக்கு ஒன்னும் இல்லையே! நல்லா இருக்க தானே? என்று நின்று கொண்டிருந்தான்.
ரிதம் கோபமாக எதுக்கு எதுக்குடா என்ன தூக்கின? நான் அப்படியே கீழே விழுந்தது செத்து இருந்தாலும் நிம்மதியா செத்து இருப்பேன்! நீ!. நீ எதுக்குடா என்னை தொட்ட? என்னை கீழே விடு விட்டுடு என்று வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசினாள்.
சத்தியதேவ் தனது கோபத்தை அடக்கிக் கொண்டு இதுக்கு ரிதம் இப்படி எல்லாம் பேசுற? நான் கீழ பார்த்தேன் வீட்டில் எல்லாரும் அவங்க அவங்களோட ரூம்ல இருக்காங்க. அதனால தான் என்னால யாரையும் கூப்பிட முடியல. நித்தின் வெளியே போய் இருக்கான்னு நினைக்கிறேன். நீ இப்படியே இதே டிரஸ்ஸோட இருந்தா உனக்கு ஜுரம் வந்துடும். மழை ரொம்ப வேகமா வருது வாடி போலாம்! என்று கூறினான்.
ரிதம் முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக் கொண்டு யார டி சொல்ற? இந்த வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காத! முதல்ல கையை எடு என்று அவன் கைகளை தட்டிவிட்டு மெதுவாக சுவரில் சாய்ந்து நின்றாள்.
சத்யதேவ் கொஞ்சம் தன்னை சமன்படுத்திக்கொண்டு யாராயிருந்தாலும் அது துரோகியாகவே இருந்தாலும் கூட அவங்க கஷ்டப்படும்போது ஹெல்ப் பண்ணனும்னு என்னோட இன்பா மாமா சொல்லி இருக்காரு! அதனாலதான் உனக்கு ஹெல்ப் பண்ண வந்தேன். நம்ம ரெண்டு பேருக்குள்ள ஆயிரம் சண்டை இருக்கும். உன்னோட கேங்குக்கும் என்னுடைய கேங்குக்கும் நிறைய சண்டை இருக்கு. ஆனாலும் நீ கஷ்டப்படணும்னு நான் என்னைக்குமே நினைத்ததில்லை. என்று கூறினான்.
ரிதம் அவனை பார்த்து எகத்தாளமாக சிரித்துக்கொண்டே “அடேங்கப்பா இப்படி ஆக்டிங்கா பேசி நீ எல்லாரு முன்னாடியும் நடிச்சு அவங்கள ஏமாத்தலாம். ஆனால் இந்த பேச்சுக்கெல்லாம் உன்கிட்ட நான் ஏமாற மாட்டேன். புரியுதா நீ யாருன்னு எனக்கு தெரியும்டா? என்று சொல்லிக்கொண்டே அவள் அடுத்த அடி எடுத்து வைக்க போக.. கால் நன்றாக பிடித்துக் கொண்டது.
சத்ய தேவ் மீண்டும் அவளின் கையை பிடிக்க வர..
பக்கத்துல வராத! ஒரு தடவை சொன்னா புரியாதா?
சத்ய தேவ், ரிதம் உன்னால கீழ போக முடியாது. ஸ்டெப்ஸ் கொஞ்சம் பெருசா இருக்கு. இது பழைய வீடு உனக்கு ஹெல்ப் பண்ண தாண் டி வந்தேன். நீ ஏன் இப்படி தப்பா நினைக்கிற. என்று கூறினான்.
ரிதம் சிரித்துக்கொண்டேன் ஹான் புரிஞ்சு போச்சு. இப்போ அவ டெல்லி போயிட்டா அத ஃபுல்ஃபீல் பண்றதுக்காக என் பக்கத்துல ஒட்ட வந்திருக்கியா? இது நிதின் க்கு தெரிந்தால் என்ன ஆகும் தெரியுமா? அதை விடு நீ அவன் பக்கத்துல உன்னால நிக்க முடியுமா? நான் அவனுக்கு பொண்டாட்டியாக போறவ! உன்னிடம் வந்து ஹெல்ப் கேட்டனா? உன் வேலையை பார்த்துட்டு போடா ! என்று பேசிக்கொண்டு அடுத்த அடி எடுத்து வைக்க..
சத்ய தேவ் அவளின் முகத்தை பார்த்தான். முகம் வலியில் சிவந்து இருந்தது. அவள் பேசுவதை காதில் போட்டு கொள்ளாமல் உனக்கு ஹெல்ப் பண்ண வந்தேன் பாரு என்ன சொல்லணும்! நீ இன்பா மாமாவோட பொண்ணு அதனால தான் உனக்கு ஹெல்ப் பண்ண வந்தேன். மத்தபடி வேற ஒன்னும் இல்ல நீ என்னை தப்பா நினைக்கிற என்று கூறினான்.
ரிதம், யாருக்கு யாருடா மாமா? எங்க அப்பா உனக்கு மாமாவா? இந்த முறை வச்சு கூப்பிடுற பழக்கத்தை இன்னையோட நிறுத்திடு.. நீ எனக்கு stranger மட்டும் தான்.
அவன் சிரித்துக் கொண்டு உனக்கு முன்னாடியே எனக்கு இன்ப ராகவனை தெரியும். அவர் எனக்கு மாமா தாண்டி! இப்போ என்னடி பண்ணுவ? என்று கேட்டான்.
ரிதம், டி யா? யாருடா உனக்கு உரிமை கொடுத்தது? இந்த டீ சொல்ற வேலையெல்லாம் இங்க வச்சுக்காத! அத அவளோட நிறுத்திக்க.. எங்க அப்பாவ பேர் சொல்லி கூப்பிடும் உரிமைய உனக்கு யாருடா கொடுத்தா? என்று கூறினாள்.
சரி விடு இனி உனக்கு நான் ஹெல்ப் பண்ணல என்று அவன் நகர்ந்தான்.
ரிதம், என் மாமிக்கு இப்படி ஒரு பையனா? நீ ரொம்ப கெட்டவன் டா! அப்படியே ஆளுக்கு தகுந்த மாதிரி நடிப்ப? உன்ன பத்தி எனக்கு தெரியாதா? உங்க அம்மாவையே கேள்வி கேட்டவன் தானே நீ என்று கூறிவிட்டாள்.
அவ்வளவுதான் அந்த நொடி சத்ய தேவ் தன்னிலை இழந்தான். தலைக்கு கோபம் ஏற வேகமாக அவளின் அருகில் வந்தவன் அவளின் தலையை பிடித்து முகத்தில் பளார் என்று ஒரு அரை விட்டான்.
அவளுக்கு சப்தநாடியும் ஒரு நிமிடம் நின்று போனது போல் ஆனது. இதுவரை யாரும் இந்த உரிமையை அவளிடம் எடுத்துக் கொண்டதில்லை. விவேகா ஆயிரம் முறை திட்டினாலும் ரிதமை கைநீட்டி இதுவரை அடித்ததில்லை. இன்ப ராகவன் அதற்கும் மேல் தன் பெண் ஆயிரம் தவறு செய்தாலும், அதை நியாயப்படுத்த பேசுவானே, தவிர மற்றபடி அவளை ஒரு வார்த்தை சொல்லி திட்டியது கிடையாது. அந்த மாதிரி மிகவும் செல்லமாக வளர்ந்தவளை பளார் என்று கன்னத்தில் ஒரு அறை விட்டு விட்டான்.
இப்படி அடிவாங்கியும் கூட ரிதம் சும்மா இருப்பாளா! அவள் யாரு? ராகவ் ஹான் இல்ல இன்பா பொண்ணாச்சே, விவேகாவுடைய ரத்தம் அவளுக்குள்ளேயும் ஓடும் தான..
ரிதம் என்னை அடிக்க உனக்கு யாருடா தைரியம் கொடுத்தது. அந்த அடியை விட உன்கிட்ட.. ச்சீ நீ எப்படி என்னை அடிக்கலாம்? அருவெறுப்பா இருக்கு பக்கத்துல வராத தள்ளிப்போ! என்று ஒவ்வொரு வார்த்தையும் கடித்து துப்பினாள்.
அவள் கன்னத்தில் சத்ய தேவ் அடித்த இடம் அச்சு வார்த்தது போல பட்டை தீட்டி கொண்டு சிவந்து தனியாக தெரிந்தது.
அவளின் பேச்சிலும் செய்கையிலும் தனது நிலை மறந்து இன்னும் அருகில் நெருங்கியவன். என்ன சொன்ன? அருவருப்பா இருக்கா? உன்ன இன்னைக்கு என்ன செய்றேன் பாருடி? என்று சொன்னவன். அவளின் தலையை முடியை அவன் பக்கமாக இழுத்து அவளின் முகத்தை அருகில் கொண்டு வந்தான். அவர்களின் மூக்கு மூக்கும் உரச ஒரு சின்ன இடைவெளி தான் இருந்தது.
ரிதம், ஹே விடுடா! ராஸ்கல்! விடுடா பொறுக்கி நாயே! விடுன்னு சொன்னேன். உன்னை என்ன செய்வேன் பாருடா. நித்தின் வரட்டும் என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க..
அவளின் கீழ் உதட்டை பிடித்து வேகமாக இழுத்தவன் இந்த வாய் தானடி உன்னை இவ்வளவு பேச வைக்குது! விரல் கொண்டு அழுத்தினான்.
முத்தம் கொடுக்க கொடுத்து சிவக்க வேண்டிய இதழை அவனின் விரலால் நசுக்கி சிவக்க வைத்தான். ரிதம் அவனின் மார்பில் அடிக்க ஆரம்பித்தாள்.
தள்ளிப்போ! நாயே ராஸ்கல்! என்று கண்டபடி திட்டியவள். அவனிடமிருந்து விலக போராடினாள்.
சத்ய தேவ் அதோடு விடாமல் அவளை தன் பக்கம் இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான். மழை மிகவும் சடசடவென்று கொட்டிக் கொண்டிருந்தது. அவர்களின் மேல் குளிர்ந்து கொட்டும் மழைநீர் அவர்களை கடந்து செல்லும் போது சூடாக மாறியது. அவர்களின் கோபத்தையும் தாபத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
ரிதம் அவனிடமிருந்து விலக முயற்சி செய்து கொண்டே விடுடா என்று ஓயாமல் கத்திக் கொண்டிருக்க..
அவனுடைய கைகள் அவளின் வதனத்தின் ஊறிக் கொண்டே கண்களை மூடியவன். அவளின் கழுத்து பகுதியில் உள்ள நீரை உறிஞ்சி கொண்டு நித்தினா? நித்தின் பிரகாஷ்! மம்ம் என்னை பார்த்தால் அருவருப்பா இருக்குல்ல.. இருக்கட்டுமே உனக்கு வேணும் டி! நான் தான் இந்த வீட்டோட முதல் பையன்! எனக்கு அடுத்தது தான் அவன்! இப்போ வார்த்தைக்கு வார்த்தை மூச்சுக்கு மூச்சு நித்தின் பிரகாஷ்ன்னு சொல்லிட்டு இருக்க தானே நான் தொட்ட மிச்சம் தாண்டி நீ! பாத்துக்கோ உன்னோட கன்னத்தில் விழுந்த முதல் அரையும் நான் கொடுத்ததாக தான் இருக்கணும். உன்னோட என்று கழுத்தை கடித்தவன். இது போதும்டி இனி ஒவ்வொரு தடவை அந்த நித்தின் உன் பக்கத்துல வந்தாலும் என்னோட நினைப்புதான் வரணும். அருவருப்பா இருக்குதா! இன்னும் இருக்கணும். எனக்கு ரொம்ப சந்தோஷம்! என்ன வாய் பேசுற! உன்னை சாதாரணமா நினைச்சேன் பாருடி! அது தான் பெரிய தப்பு… என்று சொல்லிக் கொண்டே அவளின் கழுத்தில் கடித்தான்.
ரிதம் அவனின் செய்கையில் வாய் விட்டு சிணுங்கி விட்டாள்.
அந்த நொடி ஹரிணியின் நினைவு வர சட்டென அவளிடமிருந்து விலகினான்.
ரிதம் அப்படியே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்று கொண்டிருக்க..
அவளின் முகத்தை பார்க்க கூட முடியாமல் வேகமாக கீழே சென்று விட்டான். மழை நின்றது.
ரிதம் அதே இடத்தில் அப்படியே நின்று கொண்டிருக்க..
இங்கே விவேகா என்ன செய்து கொண்டிருக்கிறாள்?
கங்காவின் வீட்டில் ஒரு இடத்தில் விவேகா அமர்ந்து கொண்டிருந்தாள். அவளின் அருகில் ருத்ரன் இருந்தான்.கங்கா என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு இடத்தில் அமர்ந்து அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்.
அந்த நேரம் வெளியே கார் சத்தம் கேட்டது. ரவிச்சந்திரன் வசுமதி இருவரும் உள்ளே வந்தார்கள்.
கங்கா அவர்களை பார்த்ததும் வாங்க அண்ணா அண்ணி நான் தண்ணி கொண்டு வரேன் உட்காருங்கள் என்று உள்ளே சென்று விட்டார்.
அவர்களைப் பார்த்ததும் விவேகா மரியாதை கொடுக்கும் விதமாக எழுந்து நின்றாள்.
வசுமதி ருத்ரனை பார்க்க..
நேராக ருத்ரன் அம்மம்மா என்று அவரின் அருகில் சென்றான்.
வசுமதி தன் பேரன் தலையை தடவிக் கொண்டே கைகளைப் பிடித்தவர் வருடி கொடுத்துக் கொண்டே ருத்ரா கண்ணா கிளம்பு நம்ம வீட்டுக்கு போலாம்! உங்க அம்மாவ வர சொல்லு!
விவேகா கண்களை துடைத்துக்கொண்டே மாமா நான் அங்க வரமாட்டேன் என்று சொல்ல.
வசுமதிக்கு கோபம் தலைக்கு ஏறியது என்ன சொன்ன? வரமாட்டியா! இப்போ நீ வரணும்! என்று ஆளுமையாக பசுமதி பேசிக் கொண்டிருக்க..
கங்கா வெளியே வந்தார்.
விவேகா, மாமா நான் எங்க வீட்ல இருக்குறதுக்கு எனக்கு உரிமை இல்லையா? என்ன? என்று கூற..
ருத்ரன் வசுமதியிடம் அம்மம்மா உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது! உங்க பையன் என்ன வேலை செய்திருக்கிறார் என்று தெரியுமா? அந்த நித்தின் பிரகாஷுக்கும் ரிதம்க்கும் அம்மா சொல்ல சொல்ல கேட்காமல் ரெண்டு பேத்தையும் சேர்த்து வைக்கிறார். அதைவிட அவங்களுக்கு உடனே நிச்சயம் பண்ணி வச்சுட்டாரு என்று சொல்ல..
விவேகா அதிர்ச்சியுடன் தன் மகனை பார்க்க..
ருத்ரன் ஆமா அம்மா இப்பதான் இதழ் எனக்கு போட்டோஸ் எல்லாம் அனுப்பினாள். நான் உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு யோசித்துக் கொண்டு இருந்தேன்.
விவேகா அடுத்த பேச வர..
வசுமதி, ருத்ரா கார திரும்பி நிறுத்த இப்போ நானும், உங்க அம்மா, தாத்தா எல்லாரும் வர போறோம் என்று கார் சாவியை நீட்டினார்.
ருத்ரன் ரவிச்சந்திரனையும் விவேகாவையும் பார்க்க..
வசுமதி, அங்க என்ன பார்வை வாங்கிட்டு போ கண்ணா என்று அதட்டலுடன் கூறினார்.
ரவிச்சந்திரன் ருத்ரா போடா கண்ணா என்று சொல்ல..
கார் சாவியை வாங்கிக் கொண்டு அவன் வெளியே சென்றான்.
அந்த நேரத்தில் வசுமதி பேச ஆரம்பித்தார்.
நான் என் பேத்தியை இன்னொரு விவேகாவாக பார்க்க விரும்பல என்று வசுமதி நேரடியாக விவேகாவை பார்த்து கூறினார்.
இதை கேட்டதும் விவேகா…?
இன்பா…?
ரிதம்..?
சத்ய தேவ்..?
தொடரும்..
EPISODE 20
நான் என் பேத்தியை இன்னொரு விவேகாவாக பார்க்க விரும்பல என்று வசுமதி நேரடியாக விவேகாவை பார்த்து கூறினார்.
இதை கேட்டதும் விவேகா முதல் அங்கு இருக்கும் அனைவரும் வசுமதியை பார்க்க.. அவர் பேச தொடங்கினார். “ஒரு 26 வருசத்துக்கு முன்னாடி நீ உங்க அம்மா கிட்ட உன்னோட காதல சொல்லி… அதை அவங்க வேணான்னு சொல்லி… அதுக்கப்புறம் நீ லண்டன் போன! அங்கே கனடா, அப்புறம் கடைசியாக அங்கே இருந்து நாலு வருஷம் கழிச்சு திரும்ப வரும்போது ரிதம கூட்டிட்டு வந்த!. அதேபோல ஏன் பேத்தி வரணும்னு நினைக்கிறாயா?
விவேகா கோபமாக “அப்போ நீங்க எங்க அம்மாவ தப்புன்னு சொல்ல வரீங்களா?”
வசுமதி சிரித்துக் கொண்டே இதுதான் உன்கிட்ட இருக்குற பிரச்சனையே! நான் உன்ன பத்தி இங்க பேசிட்டு இருக்கேன். அது புரியுதா? உங்க அம்மாவ நான் என்னைக்குமே தப்புன்னு சொன்னதுல, அவங்க ரெண்டு பேரையும் நல்லா வளர்த்தாங்க.. வருண அதிதிக்கு கட்டிக் கொடுத்து அவன் இப்பவும் நல்லா இருக்கான். நீயும் நல்லா வர வேண்டியவ தான் இப்போ நல்லா தானே வாழ்ந்துட்டு இருக்க! என்ன? நீயா ஒன்னை கற்பனை பண்ணிக்கிட்டு போனதுக்கு யாரும் எதுவும் செய்ய முடியாது. அதே மாதிரி என்னோட பேத்தி போக கூடாதுன்னு நினைக்கிறேன்.
விவேகா, “என்னால ஒத்துக்க முடியாது. அந்த குடும்பத்தை பற்றி உங்களுக்கு தெரியாதா? நமக்கும் அவங்களுக்கும் சுத்தமா ஆகாது. அதைவிட உங்க பையனுக்கும் அந்த குரு பிரகாஷ் SPR ஃபேமிலிக்கும் ஆகவே ஆகாது. அந்த குடும்பத்தில் போய் ரிதம் கல்யாணம் பண்ணிட்டு போறேன்னு சொல்றா! எல்லா இடத்திலும் என்னோட புருஷன் அவங்க வீட்ல பணிந்து கொண்டு போறது எனக்கு வேணாம். அந்த கவ்யா, குரு பிரகாஷ் சூரிய பிரகாஷ், தேஜு யாரையுமே எனக்கு பிடிக்காது. அவங்களுக்கும் நமக்கும் செட்டே ஆகாது.”
வசுமதி சரி இப்போ ஒன்னும் பண்ண முடியாது. நீ வீட்டுக்கு கிளம்பு நம்ம இதை பொறுமையா பேசிக்கலாம். என்று அழைக்க..
விவேகா கைகளை கட்டிக்கொண்டு மாமா என்னால வர முடியாது! உங்க பையன் அவருடைய இஷ்டத்துக்கு எல்லாத்தையும் பண்ணலாம்! அதுக்கு தகுந்த மாதிரி உங்க பேத்தி இருக்கலாம்! ஆனா நான் அப்படி கிடையாது.
வசுமதி சிரித்துக் கொண்டே இத நீ சொல்லலாமா? என்று ஏகத்தாளமாக கேட்டார்.
விவேகாவின் கண்களில் கண்ணீர் வழிய ரவிச்சந்திரன் வசுமதி என்ன பேசிட்டு இருக்க?..
வசுமதி , என்னோட புருஷன் அவங்க முன்னாடி தலைகுனியக் கூடாதுன்னு சொன்னால்ல.. அந்த அளவுக்கு அவன் மேல அக்கறை இருக்கிறவ இங்கே எதுக்கு இருக்கிறா? இத்தனை வருஷம் என் பையன் கூட வாழ்ந்தவளுக்கு என் பையன் என்ன நினைக்கிறான்னு கூட தெரியாதா? அப்படி இல்லாம தான் அவனை தவிக்க விட்டு மூணு வருடம் போயிட்டா!
விவேகா உதடு துடிக்க இப்ப கூட உங்களோட பையனுக்கு தானே சப்போர்ட் பண்றீங்க! என்னை ஒரு பொண்ணா பார்க்க மாட்டீங்களா?
வசுமதி, நீ விவேகா வாசுதேவனா இருந்தா! நான் உன்னை விவேகாவாக பார்த்திருப்பேன். இப்பொழுது நீ விவேகா இன்ப ராகவன் சோ உன்ன என்னோட மருமகளா தான் பார்ப்பேன். என் மருமகள் அப்படின்னா என் பையனுக்கு சாதகமாக தான் என்னால் பேச முடியும்.
விவேகா சிரித்துக்கொண்டே மாமியார் மாமியார் தான்ல்ல என்று விரக்தியாக கூற..
வசுமதி, நான் உனக்கு அம்மா ஆக சொல்றியா? நான் எதுக்கு உனக்கு அம்மாவாகணும். நான் மாமியார் தான்.. என்னோட ராகவ் எது செஞ்சாலும் அது சரியா தான் இருக்கும். பார்க்கிறனடி நீயும் ஒரு பையனை பெத்து வச்சிருக்க.. உன்னோட மருமகள் வரும்போது என்ன பாக்குறண்டி. நீ ருத்ராவுக்கு சப்போர்ட் பண்றியா? இல்ல உன் மருமகளை தூக்கி கொண்டாடுறியான்னு பார்க்கிறேன்! என்று சொல்லிக் கொண்டே முன்னாள் நடந்தார்.
கங்கா விவேகாவின் அருகில் வந்து சண்டை போடாமல் போ விவேகா! இந்த வயசுல இந்த பிரச்சனை தேவையாடி, நான் நல்லபடியா கண்ணை மூடனும்னு உனக்கு ஆசை இல்லையா? என்று சொல்ல..
விவேகா, என்னம்மா பேசிட்டு இருக்க.. என்று அழ ஆரம்பித்தாள்.
கங்கா அவளின் கண்களை துடைத்துவிட்டு அழாமல் போ! மாப்பிள்ளை எது செஞ்சாலும் அது சரியா தான் இருக்கும்.
விவேகா அவனுக்கு சப்போர்ட் பண்ண மட்டும் எல்லாரும் கிளம்பிடுவீங்க? இதுக்காகவே அவனை நான் என்ன பண்றேன் பாருங்க! என்று மனதில் நினைத்துக் கொண்டவள். வசுமதியின் பின்னால் நடக்க ஆரம்பித்தாள்.
ருத்ரன் தன் அம்மாவை பார்க்க.. வசுமதி ஆளுமையாக காரில் ஏறிக்கொண்டவர் ருத்ரா காரை எடு! என்று அதிகாரமாக கூறினார் .
விவேகா எதுவும் பேசாமல் முன் சீட்டில் அமர்ந்து கொள்ள அவர்களின் கார் நேராக வீட்டுக்கு சென்றது.
அவர்கள் வீட்டை நோக்கி நடக்கவே பாடல் சத்தம் வேறு காது கிழித்து கொண்டிருந்தது. இப்பொழுதுதான் மழை விட்டது. ஆனால் இங்கே ஒரு புயலே கிளம்பி கொண்டிருக்கிறதே!
குளிரும் பணியும் என்னை சுடுதே சுடுதே! என்று மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே என்ற பாடல் மிகவும் சத்தமாக அந்த ஹாலில் ஒலித்துக் கொண்டிருந்தது.
ரவிச்சந்திரன் மனதில் இவனையெல்லாம் என்ன பண்றதுன்னு தான் தெரியல! எவ்வளவு பெரிய விஷயத்தை செஞ்சுட்டு, இங்க வந்து அசால்ட்டா மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததேன்னு, பாட்டு வேற இவனுக்கு ஒரு கேடா! இங்க ஒரு புயலே கிளம்பி வந்துட்டு இருக்கே. என்று நினைத்தவர் உள்ளே சென்றார்.
விவேகா கைகளை இறுக்கி மடக்கி கொண்டே பற்களை நரநுறத்துக் கொண்டே அவளது கோபத்தை அனைத்தையும் அடக்கிக் கொண்டே வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தாள்.
இன்பராகவன் அங்கு என்ன நடக்கிறது என்று எதுவுமே தெரியாதது போல் அப்பாவியாக மாம் வந்துட்டீங்களா? கொஞ்சம் தலை வலிக்குது டீ போடுங்களேன்! என்று சொல்ல..
வசுமதி நேராக சோபாவிற்கு சென்று அமர்ந்தவர். உன் பொண்டாட்டி கிட்ட கேளு! எனக்கும் டயர்டா இருக்கு டீ வேணும்!
அப்படியா சரி என்று திரும்ப விவேகா டீ.. இஞ்சி தட்டி போட்டுடு..
விவேகா அங்கே பத்ரகாளியாக நின்று கொண்டிருந்தாள்.
இன்பா, கொஞ்சம் சூடா வேணும்! என்று வேண்டும் என்றே கூறினார்.
“உங்க மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க! யார கேட்டு அவளுக்கு நிச்சயதார்த்தம் பண்ணிட்டு வந்தீங்க!” என்று விவேகா கேட்கவில்லை.. ருத்ரன் கேட்டுக் கொண்டிருந்தான்.
இன்ப ராகவன் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து கொண்டு இருக்க..
ரவிச்சந்திரன் டிவியை ஆப் செய்தார். இப்போ எதுக்கு டிவி ஆப் பண்ணீங்க!. அந்த பாட்டு நல்லா தானே இருக்கு! என்று இன்பா விவேகாவை பார்த்தார்.
உங்க இஷ்டத்துக்கு செய்ய உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது? ரிதம் உங்களுக்கு பொண்ணுன்னா! எனக்கு அக்கா , அம்மாவுக்கு பொண்ணு.. நம்ம தாத்தா எல்லாரும் இருக்காங்க. ஒரு வார்த்தை கேட்க தோணலயா!
இன்பா அவனை உன்னோட தாத்தா நீயே உங்க அம்மா எல்லாரும் நித்தினை கட்டிக்க போறீங்களா என்ன?
ருத்ரன் கோபத்துடன் லூஸ் டாக் விட்டுட்டு இருக்காதீங்க!
இன்ப ராகவன், இங்க இந்த இடத்துல பேசுறதுக்கு உனக்கு எந்த ரைட்ஸ் கிடையாது உங்க அம்மா இருக்கா அவ பேசட்டும் அவ கேள்வி கேட்கட்டும் நான் பதில் சொல்லிக்கிறேன்.
விவேகா பேச வர…
எனக்கு டீ வேண்டும் ராகவ் உன் பொண்டாட்டிய போட்டு எடுத்துட்டு வர சொல்லு! என வசுமதி திருப்பி விட்டார்.
ருத்ரன் பேச வர உடனே விவேகா அவனுடைய கையை பிடித்து வேணாம் என்பது போல தலை அசைத்து விட்டு சமையல் அறை சென்றார்.
ருத்ரன் தன் அம்மாவின் பின்னால் சென்றான். அனைவருக்கும் டீ போட்டு கொண்டு வந்து கொடுத்தார். வசுமதி, ரவி, எடுத்து கொள்ள ருத்ரனுக்கு சுக்கு டீ, என கொடுத்து விட்டு இன்பாவின் அருகில் வந்து தட்டை நீட்டினார்.
யாரும் கண்டு கொள்ளாமல் அவர்கள் வேலையை பார்க்க ருத்ரன் மட்டும் தன் தாய் தந்தை இருவரையும் பார்த்தான்.
டேய் எதுக்கு இங்கே பார்க்கிற? ராஸ்கல்..
ருத்ரன் கோபத்துடன் வேகமாக அந்த டீ குடித்து விட்டு அவன் அறைக்கு சென்று விட்டான்.
வசுமதி, ரவி வா நம்ம சுபா வீட்டுக்கு போலாம் என இருவரும் சிறிது நேரத்தில் கிளம்பி விட்டார்கள்.
விவேகா அவர் முன் தட்டை பிடித்துக் கொண்டிருக்க…
இன்பா நீ குடித்து எனக்கு கொடு..
நீ தானே கேட்ட எடுத்துக்க என்று அதட்டலாக கூறினாள்.
என்னடி புருஷனுக்கு மரியாதை கொடுக்க மாட்டேன்கிற..
விவேகா, அது இன்னும் கொஞ்ச நாளைக்கு தான்! உன்னை டைவர்ஸ் பண்ண போறேன்! என்று மனதுக்குள் நினைக்க..
நீ நினைக்குறதெல்லாம் இங்க நடக்காது. என்று இன்பா வாய்மொழியாக கூறினான்.
விவேகா அந்த டீப்பாயின் மேல் டீ வைத்தவள். அதை எடுத்து பருக ஆரம்பித்தாள்.
உடனே அவளிடம் இருந்து வேகமாக பிடுங்கியவன் குடிக்க ஆரம்பித்தான்.
விவேகா இன்பனை முறைத்து பார்க்க ரொம்ப டேஸ்டா இருக்கு! ம்ம் உன்னோட லிப்ஸ் பட்டு…
செருப்புலயே அடி வாங்குவ வாய மூடிட்டு இரு என்று கூறினார்.
இன்பா, நான் கூட நினைச்சேன் இதுல ஏதாவது உப்பு இல்லை ஏதாவது மிளகா பொடி கலந்து என்னை போட்டு தள்ளிடுவேன்னு!. ஆனா பரவால்ல என்று டீயை குடிக்க ஆரம்பித்தான்.
விவேகா அவன் பக்கம் திரும்பி நீ உன் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்க?
இன்பா, உன்ன தான் நினைச்சுட்டு இருக்கேன்! .
ரெண்டு செருப்பால அடி வாங்க போற..
இன்பா தீவிர முகத்துடன் ரிதம் ஆசைப்பட்டதை நம்ம பண்ணி வைக்கணும் விவேகா! அவ்வளவுதான் அம்மா உன் கிட்ட என்ன சொன்னாங்க?
விவேகா உஷ்ன மூச்சுடன் உங்க அம்மா உனக்கும் மேல இருக்காங்க! அம்மா மாதிரி தானே பிள்ளை இருக்க முடியும்! தாயைப்போல பிள்ளை! நூல போல சேலை! அதே மாதிரி தான் மாமியார்! இந்த மாதிரி ஒரு மாமியாரை நான் பார்த்ததே இல்லை! பயங்கரமா இருக்காங்க ! உன்னை ஏண்டா கல்யாணம்.. என்று அவள் ஆரம்பிக்க…
இன்பா கைகளை மடக்கி கொண்டே மருமகன் எடுக்கிற வயசுல என்கிட்ட அடி வாங்காத டி அது உனக்கு தான் அசிங்கம்.. இந்த மாதிரி டைவர்ஸ் பேச்செல்லாம் இங்க பேசிட்டு இருக்காத! நீ எங்கே போனாலும் அங்க நான் தான் இருப்பேன். அதனால கொஞ்சம் கம்முனு இருக்கியா!..
விவேகா எழுந்து கொண்டே உனக்கு இன்னிக்கி நைட்டு வரைக்கும் தான் டைம் இதுக்கான முடிவு சொல்ற.. அப்படி சொல்லல? நான் டைவர்ஸ் வாங்க தான் போறேன்! அது நடக்கத்தான் போகுது! நீ வேற ஒரு விவேகாவ பார்ப்ப. என்று சொல்லிக் கொண்டே சமையல் அறை சென்றாள்.
அந்த நேரம் ருத்ரன் வேகமாக தடவென்று கீழே இறங்கி வந்தான்.
விவேகா, ரௌத்திரா எங்க போற?
அவன் இன்பாவை முறைத்து கொண்டு என்னால இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது! எனக்கு சுத்தமா பிடிக்கல! நான் சத்யதேவ் மாமாவை பார்க்க போறேன். முக்கியமா நைட் வர மாட்டேன். என்று கிளம்பி விட்டான்.
இன்பா இன்னிக்கி நிம்மதி டா! என்று டிவியை ஆன் செய்தார். எதை பற்றியும் கவலை இல்லை.
இங்கே ரிதம் அதே இடத்தில் இருந்தாள். யாரும் வர வில்லை. சத்ய தேவ் மை விழியின் அறைக்கு சென்று விட்டான்.
அந்த இடமே நிசப்தமாக இருக்க இருட்ட ஆரம்பித்தது. யார் இது குழந்தை என்று குரல்..
அது நாதன்! அவருடன் நிலா இருந்தாள். தாத்தா மண்ணி!. நிதின் அண்ணாவுக்கும் ரிதம் அக்காவுக்கும் நிச்சயம் ஆகிடுத்து.
ரிதம் கண்களை துடைத்து கொண்டே பழைய கம்பீர முகத்துக்கு வந்தாள். நாதன், என்ன ஆச்சு?
எனக்கு காலில் கொஞ்சம் ஃப்ராச்சர் ஆகிடுச்சு! அதான்! நடக்க முடியல இங்கேயே நின்னுட்டுட்டென்.
அச்சோ! அண்ணி என்று அருகில் வந்தவள் அவளின் காலை பார்க்க முழங்கால் சிவந்து இருந்தது. ரிதம் உடல் நடுங்கி கொண்டு இருந்தது.
நிலா, இருங்க இங்கே இருந்து கீழே போக சிரமம் நான் அண்ணாவை கூட்டி வரேன். என கீழே சென்றாள். அங்கே யாரும் இல்லை மிதுன் அண்ணா, நிதின் அண்ணா என்று ஒவ்வொரு அறையையும் தட்டினாள்.
சத்ய தேவ் கதவை திறந்து என்ன ஆச்சு?
நிலா மூச்சு வாங்க அண்ணிக்கு கால் சுளுகிடுத்து கீழே கூட்டி வரனும்! அதான் தூக்க யாரும் இருக்காங்களா அப்டின்னு பார்த்தேன்.
இதழ் எட்டி பார்த்து கொண்டே யாரு கீழே விழுந்தா?
ரிதம் மண்ணி! என்று நிலா கூறினாள்.
சத்ய தேவ் முகம் உடனே மாற குற்ற உணர்வுடன் நின்று கொண்டு இருந்தான். அவளை கட்டி அணைத்து கழுத்தில் எட்சில் படுத்தியது தான் நினைவுக்கு வந்தது.
இதழ், நிதின் அண்ணா எங்கே?
நிலா, அவங்க இங்கே இல்ல கா! என சொல்லி கொண்டே திரும்ப சத்ய தேவ் அவளின் பின்னால் வந்தவன். நான் ஹெல்ப் பண்றேன் என தயங்கி கொண்டே கூறினான்.
நிலா, சீக்கிரம் வாங்க என்று அழைக்க இதழ் மற்றும் சத்ய தேவ் இருவரும் சென்றார்கள் அவர்கள் படுகட்டில் ஏற போக..
சூர்ய தேவ் தன் நண்பன் மகளை தூக்கி கொண்டு கீழே வந்தார். கன்னுக்குட்டி எப்டி மேல போன? பாரு நடுக்கமா இருக்கு! எப்டி கீழே விழுந்த? ஆமா அந்த நிதின் எங்கே? உன்னை தனியா விட்டு எங்கே போனான்.
ரிதம் சூர்யாவின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். எதுவும் பேச வில்லை. பொண்ணு தங்கம்!. என்ன டா ஆச்சு? நிலா அண்ணிய தொட்டு பாரு காய்ச்சல் அடிக்குதா!
ஆமா டாடி அண்ணிக்கு ஃபீவர் அப்புறம் காலில் ஃப்ராக்சர் ஆயிடுத்து. என நிலா கூற.
இதழ், டாடி அண்ணிய உள்ளே கூட்டி வாங்க ட்ரெஸ் செஞ் பண்ணலாம்.
சூர்யா, சரி நான் இன்பா கிட்ட.. என சொல்ல வர.
ரிதம், மாமா வேணாம்! அப்பா கிட்ட சொல்ல வேணாம்! ஆல்ரெடி பிரப்ளாம் டாடி ரொம்ப பாவம். .
சூர்யா சரி என்று வெளியே வந்தான். இதழ் உடை மாற்றி விட வர…
வேணாம் என்று இருவரையும் வெளியே போக சொன்னாள்.
அதன் பின் உடையை கழட்டி விட்டு அவளின் நெஞ்சை தொட்டு பார்த்தவள். அங்கே டாட்டு இருக்கும் இடத்தை வருடியவள் கண்களில் நீர் உருண்டது. அதை துடைத்து கொண்டு வேகமாக உடையை மாற்றி விட்டு கண்ணாடி அருகில் சென்றாள். சத்ய தேவ் கன்னத்தில் அரைந்த இடத்துக்கும் primer, foundation போட்டு மறைத்து விட்டு மெதுவாக கதவுக்கு அருகில் வந்து திறந்து விட்டாள்.
இதழ், ஹே உன்னோட கண்ணம் என வக்கில் மூளை வெளியே காத்து கொண்டு இருக்க..
என்ன கண்ணம்? என்று ரிதம் திரும்ப கேட்டாள்.
இதழ் அவளை உற்று பார்த்து விட்டு ஒன்னும் இல்ல சரி வா என படுக்கையில் படுக்க வைத்தார்கள். நிலா அவளுக்கு முதல் உதவி செய்து காலில் ஸ்ப்ரே செய்து கட்டு கட்டி விட்டாள்.
சத்ய தேவ் வெளியில் எதையோ யோஸ்த்தபடியே நின்றான். அந்த நேரம் ருத்ரன் வந்தான்.
என்ன முடிவு எடுத்து இருக்க? என விவேகா இன்பாவிடம் கேட்டார்.
இன்பா…?
இங்கே சத்ய தேவ்…?
ருத்ரன் ..?
ரிதம்…?
தொடரும்..
EPISODE 21
இப்போ எப்டி இருக்கா? என சூர்யா வெளியே வந்த நிலாவிடம் கேட்க..
அவங்களுக்கு காலில் கொஞ்சம் சுளுக்கு அதுக்கு ஸ்ப்ரே போட்டு ஃபர்ஸ்ட் எயிட் பண்ணிருக்கேன் டாடி!
ஓகே டா உங்க அண்ணன் எப்போ வருவான்?
அது தெரில டாடி மிதுன் அண்ணா, நிதின் அண்ணா, கனி அக்கா எல்லாம் போனாங்க திரும்ப வரல..
சரி இப்போ பார்க்கலாமா?
ம்ம் போங்க டாடி! இதழ் அக்கா உள்ளே இருக்காங்க என கூறி விட்டு அவள் தன் அம்மா அப்பாவை பார்க்க சென்றாள்.
மாமா! என சத்தம் வந்ததும் இதழ் வேகமாக வெளியே வந்தவள். தீரா! ரிதம் அண்ணிக்கு காலில் சுளுக்கு லைட்டா ஃபீவரா இருக்கு!
அண்ணியா? பண்ணின்னு கூப்பிடு சரியா இருக்கும். அவளை பத்தி என் கிட்ட பேசாத இதழ். என சத்ய தேவ் அருகில் சென்றான்.
இதழ் நொந்து கொண்டு ரிதமை எட்டி பார்த்தாள். அவள் கண்களை மூடி இருந்தாள்.
சத்ய தேவ் முகம் தீவிர தடுமாற்றத்துடனும் குழப்பத்துடன் இருக்க..
மாமா! என்ன ஆச்சு? நான் ரெண்டு தடவை கூப்பிட்டேன் நீங்க அப்படியே நிக்கிறீங்க?
சத்ய தேவ் சுற்றிலும் பார்வையை சுழற்றி கொண்டே வெளியே போலாம் வரியா! அங்கே எங்க வீட்டுக்கு?
ம்ம் போலாம்! நாளைக்கு லீவ் போட்டுட்டேன்.
என்ன ஆச்சு? வாத்திக்கு எப்போவும் லீவ் போட மாட்டீங்க இன்னிக்கி என்ன புதுசா! என சத்ய தேவ் கேட்க..
மனசு சரி இல்ல மாமா என வண்டியில் ஏறி அமர்ந்தான். மணி இரவு எட்டு இருக்கும். அரை மணி நேரத்தில் எதுவுமே பேசாமல் இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள்.
என்ன மாமா? உங்க முகம் ஒரு மாதிரி இருக்கு?
சத்ய தேவ் கூர் பார்வையுடன் நீ கோக் கம்பனி கொடுக்கறயா?
என்ன மாமா? என்னயவே குடிக்க கூடாதுன்னு சொல்லுவீங்க இன்னிக்கு என்ன?
தீரா நான் வெறும் கோக் சொன்னேன். டா…
அப்போ நீங்க என ருத்ரன் கேள்வியாக அவனை பார்க்க.
நான் ட்ரிங்க் பண்ண போறேன்.
மாமா! என அதிர்ச்சியுடன் ருத்ரன் கேட்டான்.
கேள்வி கேட்காத தீரா! என உள்ளே சென்றவன் வேகமாக ஒரு ரூமில் இருந்து ஸ்காட்ச் எடுத்து வர..
மாமா இது இது வேணாம். ஒயின் குடிங்க கம்பேரிடிவ்லி ஒயின் ஓகே..
சத்ய தேவ் அதையெல்லாம் அறியும் நிலையில் இல்லை. இல்ல டா தீரா எனக்கு ஸ்ட்ராங்கா வேணும். என கோப்பையில் ஊற்ற ருத்ரன் அதை பிடுங்கி விட்டு ஒயின் பாட்டிலை எடுத்து வந்தான். என்ன மாமா இது புது பழக்கம்?
சத்ய தேவ் திறந்ததும் வேகமாக ஒரே மூச்சில் உள்ளே இறக்கினான்.
என்ன மாமா? எதுக்கு இதை இப்படி குடிக்கிரீங்க? ஹரிணி அக்கா கூட சண்டையா?
நீ எதுக்கு ருத்ரா என்னை மாமா சொல்ற? என கண்ணை மூடி கொண்டே கேட்டான்.
தீரன் சிரித்து கொண்டே இது என்ன கேள்வி? நீங்களும் நானும் ஒரே vibe அதை விட நீங்க சூர்யா மாமா பையன், என்னை விட பெரியவர். எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். நீங்க என்னோட ரோல் மாடல் மாமா! எனக்கு தெரிஞ்சு நீங்க எது செஞ்சாலும் ஒரு நிதானம் இருக்கும் அது உங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டேன்.
அதுக்கு என்னை மாமா சொல்லி கூப்பிடும் அவசியம் இல்லையே!
அவன் புருவம் நெருக்கி கொண்டே என்ன மாமா இன்னிக்கு கொஞ்சம் வேற மாதிரி பேசுறீங்க?
சத்ய தேவ் சிரித்து கொண்டே நான் தப்பு பண்ணிட்டேன் தீரா! ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். உனக்கு தெரிஞ்சா நீ என்னை.. என நிறுத்தினான்.
என் சத்ய தேவ் மாமா எப்போவும் தப்பு செய்ய மாட்டாரு! சும்மா உலராதீங்க! இன்னிக்கு ஹனி அக்கா ஊருக்கு போனதால சோகமா குடிக்கிறீங்களா?
நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு! என கண்ணை கிரக்கத்துடன் மூடி திறந்தான்.
சொல்லுங்க!
நீங்க என்னை விட ரொம்ப பணக்காரங்க? அதனால் நான் இன்பா மாமாவை நான் மாமா சொல்றது உனக்கு பிரச்சனையா இருந்து இருக்கா? என எது எதோ உலரினான்.
என்ன கேள்வி இது? அவர் எல்லாம் ஒரு ஆளு! ரோல் மாடலு! போங்க மாமா!
சரி அதை விடு தீரா விவேகா பத்தி யாரும் தப்பா பேசினால் என்ன பண்ணுவ?
ருத்ரன் உடனே கோபத்தில் எழுந்து நின்று யாரு மாமா தப்பா பேசினா? இப்போவே சொல்லுங்க! நான் அவங்களை என்று நகர்ந்தான்.
சத்ய தேவ், அப் அப்படி தானே உன்னோட அக்கா சொல்லிட்டு இருக்கா!
ருத்ரன் ஒரு பெரு மூச்சுடன் “இதை நினைச்சு தான் குடிக்கிரீங்களா? அவள் எல்லாம் ஒரு ஆளே இல்ல! அவளுக்கு வானத்தில் பறப்பது போல நினைப்பு! இப்போ அந்த டெவில் கேங் தலைவி ஆக போறா எனக்கு தான் தலைவலி வீட்டில் வேற பெரிய பிரச்னை!”
சத்ய தேவ் போதையில் தலையை தொங்கப் போட்டவன். கோல்ட் ஃபிஷ் என்ன சொல்லுது? எப்போ என் கண்ணில் காட்ட போற?
இந்த வார்த்தைகளை கேட்டதும் ருத்ரன் முகம் புன்னகையில் நிரம்பியது. கனவில் மிதக்க ஆரம்பித்தான்.
டேய் என்ன டா பண்ற? டூயட் போகாத!
மாமா! அது வேற லெவல் பீலு அவளோட சலங்கை சத்தம் தான் காதுல கேட்குது! நல்ல வேளை இந்த ரிதம் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க போறா அதுக்கு அப்புறம் நான் வீட்டில் அவளை பத்தி சொல்ல போறேன். ருத்ரன் – தங்கமீனாட்சி எப்டி மாமா! என் கோல்ஃட் ஃபிஷ் இந்நேரம் கொழுக்கட்டை சாப்பிட்டு இருப்பா! முன்ன சின்ன பொண்ணா இருந்தா மாமா! இன்னிக்கு அக்ரகாரமே திரும்பி பாக்குது! அப்படியே அவள் நடந்து வரும் அந்த நடை இருக்கே! ப்பா முடியல மாமா! அவளை பார்த்த அந்த நொடி அப்படியே.. என ருத்ரன் பேச
சத்ய தேவ், ரெண்டு பேரும் சேர்ந்து காதல் கோவிலுக்கு போயிட்டு வாங்க!
சுத்தம் இங்கே இருக்க பிள்ளையார் கோவிலுக்கே அய்யர் ஆத்து மாமி வர மாட்டா! இதுல நான் எந்த கஜிராஹோ கூட்டி போறது.
சத்ய தேவ் எழுந்து ருத்ரனை கட்டி கொண்டு தீரா சாரி நான் வேணும்னு பண்ணல.. அம்மா பத்தி பேசினதும் எனக்கு கோபம் வந்திச்சு! அதான் அடிச்சேன். ஆனால் அதுக்கு நான் எப்டி அந்த மாதிரி செஞ்சேன்? சத்தியமா எனக்கு தெரில தீரா! நான் அங்கே கழுத்தில் கடிச்சு இருக்க கூடாது. அது தப்பு! அது தப் அது தப்பு தானே! என கூற..
“என்ன? மாமா ஹரிணி அக்கா கிட்ட பன்னதை எல்லாம் என் கிட்ட சொல்றாரு? அய்யோ! என உள்ளே அழைத்து சென்றவன். மாமா போதும் போதும் உனக்கு உரிமை இருக்கு நீ என்ன வேணாலும் பண்ணலாம்!”
அதெப்படி தீரா! அது துரோகம் டா! என்னால் டைஜஸ்ட் பண்ண முடியல.. அந்த பார்வை! அந்த கண்ணு! வேகமா மூச்சு என சொல்லி கொண்டே சென்றான்.
ருத்ரன் எப்டி இந்த பெர்சனல் எல்லாம் நான் கேட்பது. என உடனே போனை எடுத்தவன். கோல்ட் ஃபிஷ் என்ற எண்ணுக்கு செய்தி அனுப்ப ஆரம்பித்தான். மாமி என்ன டி பண்ற?
ஏன்னா கால் பண்ணவா! என்று பதில் வர..
அதில் கடுப்பான ருத்ரன் ஹே வந்தனா உன்னை கைமா பண்ணிடுவேன். இந்த ஏன்னா போன்னா சொன்ன அவ்ளோ தான் டி!. என தட்டி விட்டான்.
அப்போ என்ன சொல்லட்டும்! நீங்களே சொல்லுங்கோ!.
ம்ம் உனக்கு தெரியாதா? என்று சிரித்து கொண்டே அனுப்பினான்.
என்னங்க? ரௌத்திரன்! பேசணும் போல தோணுது!
என் மாமனார் எங்கே?
தோப்பணார் கடைக்கு போயிருக்கார், என்று பதில் வர..
ருத்ரன், அப்போ மாமி! என அவன் தட்டி விடும் போதே அழைப்பு வந்தது.
ஹே மீனு! மாமி கூட இல்லையா?
என் அம்மா என்னோட அக்கா வீட்டுக்கு போயிருக்கா! வீட்ல நான் மட்டும் தான் இருக்கேன். நாட்டியம் ஆட தோனித்து அதுக்கு முன்ன என்னோட பூவுக்கும் பொட்டுக்கும் சொந்தகாரர் கிட்ட பேச நினைச்சேன்.
ருத்ரன், ஹே மாமி வீடியோ கால் பண்ணு டி!
போங்கோ!
ஹே மீனா! பிளீஸ் டி!
உன்னை பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு?
நான் குளிக்கல!.
அப்போ உடனே போ அங்கே இருந்து பண்ணு!.
பெருமானே! சிவ சிவா!
ஹே ருத்ரா சொல்லு டி! என அவன் போனில் பிஸி ஆகிட..
சத்ய தேவ், நான் அவளை கட்டிக்கும் போது ஹரினிய கட்டிக்கிட்ட ஃபீல் வந்ததே! ஆனால் அது ஹரிணி இல்ல! அது யாரு? அதை டெய்லி ஃபெல்ட் பண்ண ஃபீல் இருக்கு! ருத்ரா! இப்படி உனக்கு தெரியுமா? முடியல டா!
ருத்ரன், மாமா காலையில் சரி ஆகிடும் கண்ணை மூடி தூங்குங்க நான் இப்போ வரேன் என சொல்லி கொண்டே போனை எடுத்து பேச சென்றான்.
சத்ய தேவ் அவளின் நினைவில் உளறி கொண்டே தூங்கி விட்டான்.
*
சொல்லு என்ன முடிவு பண்ணி இருக்க? என விவேகா கேட்க..
பேபி வீட்ல யாருமே இல்ல! சத்தம் போடாத! அப்புறம் இன்னிக்கி சாரியில் சும்மா ஜம்முன்னு இருந்த? உன்னை பார்த்தால் ஜஸ்ட் 15 மாதிரி இருக்கு! ஆமா எப்போ நீ வயசுக்கு வந்த? என அருகில் நெருங்கினான்.
டேய் ஒழுங்கா நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு! இந்த பக்கத்தில் வரும் வேலையை வச்சுக்கிட்ட.. உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. ரிதம் வாழ்க்கையில் உனக்கு எவ்ளோ உரிமை இருக்கோ அதை விட அதிகமா எனக்கு தான் இருக்கு! சோ ஒழுங்கா நான் சொல்றத கேளு இல்ல பின் விளைவு பெருசா இருக்கும் என்ன? இப்போ உன்னோட முடிவு என்ன?
இன்பா, அதான் பக்கத்தில் வா சொல்றேன் என அவளின் அருகில் நெருங்கினான்.
ராகவ்!. என வீடே அதிரும் படி கத்தினாள்.
இன்பா என்ன முடிவு சொல்ல போறான்?
யார் அந்த தங்க மீனாட்சி? Gold fish?
ரிதம் ரொம்ப அமைதியா இருக்கா?
சத்ய தேவ் என்ன பண்ண போறான்?
அடுத்தடுத்து நிறைய twist..
Stay tuned read..
தொடரும்..
Comment pannunga ratings konjam like share pannunga
EPISODE 22
இன்பா, இப்போ உனக்கு முடிவை சொல்லணும் அவ்ளோ தான.. பக்கத்தில் வா சொல்றேன் என அவளின் அருகில் நெருங்க
ராகவ்!. என வீடே அதிரும் படி விவேகா கத்தின
என்ன விவேகா இப்போ எதுக்கு இப்படி கத்துற? என்று காதை குடைந்து கொண்டே அவளைப் பார்த்தார்.
நீ யங் கப்பில்ஸ்னு நினைச்சுட்டு இருக்கியா? இப்பதான் நமக்கு கல்யாணம் ஆச்சா என்ன? அதெல்லாம் நான் பேசுறதுக்கு இப்போ வரல! இப்போ ரிதமோட வாழ்க்கையில நீ என்ன முடிவு எடுத்திருக்க? அதுக்கு மட்டும் பதில் சொல்லு?
நீ என்ன முடிவை எதிர்பார்க்கிற என்று இன்பா கேட்க..
விவேகா அவரை முறைத்து பார்த்துக் கொண்டே “என்னை மேலும் மேலும் டென்ஷன் ஆக்காத! முடிவ சொல்லிடு! இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது.” என்று கைகளை இறுக்கி மடக்கினார்.
இன்பா நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு!..
நீ சொல்லுன்னு சொல்றனா? என்று விவேகா அதட்ட..
“நான் என்னோட முடிவுல இருந்து பின் வாங்க மாட்டேன். ரிதம்க்கு நிச்சயமானது சரிதான். அவளுக்கு இப்போ 26 வயசு ஆகப்போகுது. அதேபோல அந்த நித்தின் பிரகாஷ் சாதாரணமான பையன் இல்ல. அவன் இந்த நாட்டோட முதல் குடிமகன். அதாவது மினிஸ்ட்ரி ஆஃப் பார்லிமென்ட் அதுல உறுப்பினரா இருக்கான். இந்த மாதிரி ஒரு பையனை என் பொண்ணு கட்டிக்கிறது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? அதேபோல அப்போ நடந்த விஷயத்தை நினைத்துக் கொண்டு அதை இப்போ வரைக்கும் கொண்டுவர பழக்கம் எனக்கு இல்ல. நான் நடந்த உடனே மறந்திடுவேன். அதனால என் பொண்ணு வாழ்க்கை நல்லா தான் இருக்கும்.” என இன்பா பொறுமையுடன் கூற..
அப்போ எனக்கு விவாகரத்து கொடுத்துடு என்று விவேகா அவனைப் போலவே கூறினார்.
இன்பா அவளை உறுத்து பார்த்தார்.
“இந்த பார்க்கிற வேலை, பேசி மயக்குற வேலை, இது எல்லாம் என்கிட்ட வச்சுக்காத, நீ உன்னோட பொண்ணோட கல்யாணத்துல நீ முடிவெடுக்கிற, இதுல தலையிடறதுக்கு நான் யாரு? நான் ரோட்டில் போறவ தானே! எவளோ ஒருத்தி! அதனால நீ சொல்றதும் சரிதான். ஆனால் இந்த ரோட்டில் போறவங்களுக்கு இந்த வீட்டிலயும் உன் பக்கத்துலயும் உன் பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்? அதனால எனக்கு டைவர்ஸ் கொடுத்துடு இதுக்கு மேல உன் கூட என்னால வாழ முடியாது!” என்று விவேகா கூற..
டைவர்ஸ் தானே வேணும்! உனக்கு எது வேணுமோ அதை கொடுக்கிறதுதான் என்னோட முதல் கடமை. நான் கொடுக்கிறேன். என இன்பா கூறினார்.
விவேகாவிற்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
ஓகே என்று அவர் செல்ல போக..
இன்பா அவரின் அருகில் வந்து பின்னால் இருந்து கட்டிக் கொண்டவர். ரிதம் கல்யாணம் முடியட்டும்! அடுத்த நாள் உனக்கு டைவர்ஸ் கொடுத்துடறேன்.
கல்யாணமா? நான் அந்த கல்யாணத்துக்கு வரவே மாட்டேன்.
இன்பா, உனக்கு டைவர்ஸ் வேணும் தான! அப்போ கல்யாணம் வரைக்கும் நீ என் கூட இரு! கல்யாணம் முடிச்சதும் டைவர்ஸ் கொடுத்துடறேன்.
விவேகா இன்பனை தட்டி விட்டு நீ கொஞ்சம் கூட மாறவே இல்லல்ல!..
நான் எதுக்காக மாறனும்? என்று இன்பா கேட்டார்.
விவேகா விரக்தி புன்னகையுடன் நீ அப்படியே இருக்க! நான் தான் உனக்காக மாறிட்டு இருக்கேன்! என்னோட கொள்கைகளை எல்லாம் விட்டுட்டு உன்னை லவ் பண்ணேன். என்னை! என்னை சுயநினைவோட உனக்கு கொடுத்தேன். அது இப்போ தப்புன்னு..
இன்பா விவேகாவின் வாயில் கைவைத்து பொத்தினார். கண்கள் சிவக்க “அதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாத! என்னோட முடிவு என் பொண்ணோட கல்யாணம் முடிஞ்சதும், நான் உனக்கு டைவர்ஸ் கொடுத்துடறேன். அதுவரைக்கும் என் கூட இரு நீ கல்யாணத்துல எந்த விஷயத்திலும் சம்பந்தப்பட வேண்டாம். ஆனா கல்யாணத்துக்கு நீ வரணும். உனக்கு துணையாக ஒருத்தனை கொடுத்து இருக்கேனே! அவனும் வரணும்.”
விவேகா படுத்துக்கொண்டு அழ ஆரம்பித்தார்.
ப்ளீஸ் என் முன்னாடி அழாத! எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல..
“என்னைய எவ்வளவு கட்டுப்படுத்தி வச்சிருக்கல்ல.. உனக்கு என்னை விட அவள்தான முக்கியம்! உன் பொண்ணு! அப்படியே வச்சுக்கோ! நான் நாளைக்கு பெங்களூர் கிளம்புறேன். நீ இங்க இருந்து உன் பொண்ண கட்டி கொடுக்க எல்லா வேலையும் செய்.. கல்யாணத்தப்ப பத்திரிக்கை அனுப்பு! நான் வந்து அட்டென்ட் பண்றேன். அடுத்த நாள் எனக்கு டைவர்ஸ் கொடுத்துவிடு! உன்கிட்ட என்னை கொடுத்த கடனுக்கும் அவளை பெத்த கடனுக்கும் அன்னியோட உங்க ரெண்டு பேரையும் தலைமுழுகுறேன்.” என விவேகா சொல்லி அவனுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டார்.
அப்போ அந்த ருத்ரன் அவனை அடைக்க என்ன பண்ண போற? என்று சாதாரண தொனியில் விவேகாவை பார்த்தார்.
விவேகா வெடுக்கென திரும்ப…
இன்பா, “அவனை நீ தானே ஆசையா பெத்துக்கிட்ட! அதுக்கு நான் தானே உனக்கு வரம் கொடுத்தேன். அதுக்கு எப்படி கடன் அடைக்க போற?”
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க விவேகா இன்பாவை எரிப்பது போல் பார்த்தார்.
“இப்போ எதுக்கு அப்படி முறைக்கிற? நீதானே பெத்த கடனுக்கும் கொடுத்த கடனுக்கும் வட்டியும் முதலுமா அடைகிறேன்னு சொன்ன? அப்போ இவனையும் உனக்கு நான் தானே கொடுத்து இருக்கேன். நான் இல்லாம அவன் உனக்கு எப்படி வந்தான். ரவுத்திரன் என்கிற ருத்திரன் ம்ம் என்னோட அளவுக்கு இல்லைன்னாலும் எதோ கொஞ்சம் ஒட்டுதலோட பிறந்து இருக்கான். என்னை அவமான படுத்த மீஸைய எடுத்திட்டு பரட் நாட்டியம் ஆடிட்டு என் மானத்தை வாங்கிட்டு திரியுறான். ராரா சரசுக்கு ராரா அப்டின்னு இருக்கான். அதை விட பொண்ணு மாதிரி டீச்சர் வேலைக்கு போறான்? காலையில் போயிட்டு சாயங்காலம் ஆறு மணிக்கு வீட்டுக்கு வரான். வாரத்தில் வீக் எண்ட் அது இல்லாம கவர்மென்ட் ஹாலிடே வேற! என்னோட ஒர்ஸ்ட் புரோடெக்ட்!” என இன்பா ருத்ரனை பற்றி அடுக்கி கொண்டே போக..
போதும்! நிறுத்து! என ஆக்ரோஷ குரலில் விவேகா ஒரு கர்ஜனையுடன் பார்க்க..
இன்பா, எதுவும் பேசாமல் அதை விடு உன் கோபம் ஓரமா இருக்கட்டும் அவனை பெரித்த கடனை எப்படி? எப்படி? அந்த கடனை அடைக்க போற?
“ஒரு தடவை!. இனி ஒரு தடவை கூட என் பையன பத்தி நீ ஒரு வார்த்தை பேசக்கூடாது! அவ என்னோட பையன் டா! இனி அடுத்த வார்த்தை என் ருத்ரனை பத்தி ஏதாவது பேசின? உன்னை உன்னோட துப்பாக்கி எடுத்து உன்னை ஆதாரமே இல்லாம உன்னை சுட்டுடுவேன். நீயே சுட்ட மாதிரி ஒரு இமேஜ் கிரியேட் பண்ணி வடுவேன்! விரப்பா செத்து கிடப்ப? உன் நாக்கை வெட்டி வீசிடுவென். இன்ப ராகவன் மைன்ட் யுவர் வேர்டஸ்!. என் பையனை தேடி நாளைக்கு பங்கு போட வருவ டா! நாயே! கிழட்டு நாயே!” என விவேகா கத்த..
இன்பா சிரித்துக்கொண்டே போ பப்பில இருந்து இப்போ கிழட்டு நாய் ஆயிட்டேனா அதுவும் சரிதான் என்ன சொன்ன அவனை நான் பங்கு போடறேனா அவன் அப்படியே இந்தியா பாகிஸ்தான் பார்டர் பங்கு போட வந்துட்டாங்க போடி வந்துட்டா சரி அவனை உனக்கு குடுத்து இருக்கேன் அதுக்கு எப்படி கடன் அடைக்க போற உன்ன விட மாட்டேன் டி என்று கூறினார்.
விவேகா வலியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே என்ன பண்ணனும் சொல்லித்தொலை! என்னோட love positive ப்ராஜெக்ட் உனக்கே குடுத்துடறேன். நீ போட்டு விட்ட எல்லா ஜோல்ஸையும் உனக்கு திருப்பி கொடுத்துடுறேன். உன்னோட பிராபர்ட்டிஸ் எதுவும் எனக்கு வேண்டாம். எனக்கு பெங்களூர்ல இருக்குற வீடு மட்டும் போதும். டைவர்ஸ்ல உன்கிட்ட நான் எதையுமே கேட்க மாட்டேன். என் பையன் எனக்கு எல்லாத்தையும் சம்பாதித்து வாங்கி தருவான். என்று விவேகா லிஸ்ட் போட
இன்பா கன்னத்தில் கை வைத்து விவேகாவை பார்த்துக் ரா ரா சரசுக்கு ரா ரா என்று கூறினார்.
உன் பாட்ட கேக்குற நிலைமையில நான் இல்ல என்று விவேகா மீண்டும் பேச ஆரம்பிக்க..
இன்பா ரா சரசுக்கு ரா ரா என்று மீண்டும் கூற..
உன் பாட்டை கேட்கும் போது என் காதுல ஈயத்த காட்சி ஊத்துனது போல இருக்கு. கொஞ்சம் வாய மூடிக்கிட்டு நான் சொல்றத கேளு! என்று விவேகா கடுமையான சொற்களுடன் மீண்டும் கூற ஆரம்பிக்க..
ரா ரா சரசுக்கு ரா ரா என்று ராகமாக இன்பா பாடினார்.
எனக்கு ஒண்ணுமே என்ன சொல்ற எனக்கு ஒண்ணுமே புரியல என்று நிமிர.. இன்பா பார்வை மாற்றத்துடன் ரா ரா சரசுக்கு ரா ரா என்று விவேகாவின் அருகில் வந்தார்.
இவ்வளவு நேரமும் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் காற்றில் கரைய விவேகா சட்டென தன்நிலைக்கு வந்தவர். எழுந்து நின்று ஒழுங்கா போயிடு! உன்னை கொன்றுவேன். என்று பவுடர் டப்பாவையும், சென்ட் பாட்டிலையும் அடிக்க தூக்கினார்.
பரவாயில்ல கடனை அடைச்சிடு அதுக்கப்புறம் உன்னை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன். பப்பி promise! பச்சை promise!. என இன்பா அருகில் வந்தாச்சு…
விவேகா பின்னால் நகர்ந்து கொண்டே ஹே நான் உன்னை கோர்ட்டில் மீட் பண்ணிக்கிறேன். என் பையன் மேஜர்.
நான் சோல்ஜர் டி! என்று ஒரே பிடியில் விவேகா கட்டிலில்!..
ஹே be serious இன்ப ராகவன்! ஐ ஹேட் யூ!.
நான் கூட இப்போ உன்னை பீட் யூ!. என இன்பா கிஸ் அடிக்க ஆரம்பித்தார்.
ஹே ஹே விடு!. என விவேகா தள்ள..
ம்ம் அதுக்கு தானே ஸ்டார்ட் பண்றேன். என முத்த சத்தம் முரட்டு தனத்தை மீறி பயணம் சென்றது.
விவேகா ஒரு சில நிமிடத்தில் அவன் கட்டுபாட்டில் வந்திருக்க..
இன்பா கோபமும் தாபமும் மேலோங்க மச்ச கன்னியை ஆள தொடங்கினார்.
அவ் அவ்ளோ தான்! இனி இனி!. என மூச்சு வாங்க விவேகா பேச வர..
ச்சில் பேபி! இனி டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். அவனுக்கு இப்போ வயசு என்ன 23 ஆகுது! சோ 23 டைம்ஸ் மட்டும் நான் எல்லாத்தையும் நியாய தர்மம் பார்க்கிறவன். சோ எனக்கு டிசிபிளின் டிக்னிட்டி ரொம்ப முக்கியம்..
விவேகா கோபத்துடன் பார்க்க இதழை கவ்வி இழுத்து ம்ம் 23 வரவும் ரிதம் கல்யாணம் வரவும் சரியா இருக்கும். சோ சரியான நேரத்தில் என் பொண்ணுக்கு விவாகா!. உனக்கு விவாகரத்து தரேன் விவேகா!. என நெற்றியில் முத்தம் பதிக்க..
விவேகா கடை கண்ணில் நீர் வழிந்தது.
இன்பா வழக்கம் போல் விவேகாவின் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டு தூங்க ஆரம்பிக்க.. அவரின் தூக்கம் தொலைந்து போனது.
அடுத்த நாள் அழகாக விடிந்தது. ரிதம் உறங்கி கொண்டு இருக்க அவள் காலையில் என்னன்ன சாப்பிடுவாள் என அனைத்தையும் எடுத்து கொண்டு மகி அறைக்கு வந்தாள்.
தங்க புள்ளை! செல்லம் நைட்டே எதுவும் சாப்பிடல உனக்காக சாப்பிட எடுத்திட்டு வந்து இருக்கேன். என அவளுக்கு பிரஸ் பேஸ்ட் என அனைத்தையும் எடுத்து நீட்ட ரிதம் மெதுவாக எழுந்து அமர்ந்தாள்.
வலிக்குதா?
இல் இல்ல மாமி!. மிதுன் வந்தாச்சா?
மகி சிரித்து கொண்டே அப்போ அவன் மேல அவ்ளோ பாசமா?
ரிதம் கண்ணகுளி தெரிய சிரித்து கொண்டே ஆமா மாமி! மிதுன் தான் எனக்கு முக்கியம் கூடவே நீங்களும் தான்!
ஹான் வந்தாச்சு! மிதுன் அப்புறம் நிதின் ரெண்டு பேரும் தூங்கிட்டு இருக்காங்க. என அவள் ஃப்ரெஷ் ஆக உதவி செய்தார்.
ரிதம் எழுந்து முகத்தை துடைத்து கொண்டு அமர..
மகி, இப்போ கால் வலி எப்டி இருக்கு?
ஹான் ஓகே! இதழ், சிவி, நிவாஸ், இதயன் எல்லாம் எங்கே?
அவங்க எல்லாம் கிலம்பியாச்சு!
பெங்களூர்ஆ என ரிதம் உணவுக்காக வாயை திறக்க..
மகி, ஆமா தங்கம் இன்னிக்கு மன்டே! அதான் காலேஜ் ஒர்க் என எல்லாரும் கிளம்பியாச்சு!
மாமி! என ரிதம் மணியை பார்த்து கத்தினாள்.
என்ன ஆச்சு?
இன்னிக்கி எக்சாம் இருக்கு! காட்! என கத்தினாள்.
இன்னும் எவ்ளோ நேரம் இருக்கு என மகி அவசரத்துடன் எழுந்து கேட்க..
இன்னும் 45 மினிட்ஸ் தான் இருக்கு! மிதுன் என கத்தினாள்.
என்ன டி! எதுக்கு கத்திட்டே இருக்க? என மிதுன் கண்ணை தேய்த்து கொண்டே உள்ளே வந்தான்.
ரிதம் , டேய் இன்னிக்கு எக்சாம்! நிதினை வர சொல்லு! என்னை கொண்டு போய் 1234 institute of technology ல விடுங்க என அவள் கஷ்ட பட்டு எழ..
மிதுன், அட எனக்கு கூட இன்னிக்கி அரியர் எக்சாம் இருக்கு நான் கவலை படுரெனா என்ன? என சொல்லும் நேரம்
பண்ணி மேய்ப்பவனுக்கு படிக்கும் வாசனை எப்டி இருக்கும் என சூர்யா வந்தார்.
ச்ச! என மிதுன் வெளியே செல்ல போக..
அதற்குள் நிதின் வந்து ரிதம் பரிட்சை எழுத அழைத்து சென்றான்.
யவனிகா, பாஸ் பாஸ்! மினிஸ்ட்ரி ஆஃப் பார்லிமென்ட் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வேகமாக கார் ஓட்டி கொண்டே 1234 institute of technology ல கல்லூரியில் நுழைந்தார். அப்டின்னு சுட சுட evening news exclusive ஆ WW. Dot tv ல போடவா! என சத்ய தேவ் க்கு வாய்ஸ் மேசெஜ் அனுப்ப அதை ஆன் செய்து கேட்ட ருத்ரன் சிரித்து கொண்டே இன்ப ராகவன் என் அம்மாவை கஷ்ட படுத்திய உங்களை என்ன செய்கிறேன் பாருங்க.. என யவனிகாவுக்கு definitely be quick என தட்டி விட்டான்.
சத்ய தேவ் அருகில் தன்நிலை மறந்து உறங்கி கொண்டு இருக்க.. செய்தி காட்டு தீ போல பரவியது.
இது ரிதம் மற்றும் நிதின் காதுகளுக்கு சென்று சேர்ந்தது.
இப்போ அடுத்து என்ன நடக்க போகுது? சும்மா இருந்த சங்கை ஊதி விட்ட மாதிரி ருத்ரன் ஒரு வேலையை பண்ணிட்டான்.
விவேகா – இன்பா நடுவில்?
சத்ய தேவ் எழுந்ததும் இது தெரிந்தால்?
மிதுன் தேவ்-க்கு pair வைக்கலாமா? வேணாமா?
தொடரும்…
One request விவேகா – இன்பா ரெண்டு பேரும் இப்போ old couple அவங்களை வந்தார் அவர் இவர் அப்டின்னு மரியாதையா போடவா! சண்டகாரா ல வர மாதிரி வந்தான். சென்றாள் அப்டின்னு மரியாதை இல்லாமல் போடவா
ஒவ்வொரு chapter ம் முழுசா படிச்சிட்டு அடுத்த chapter படிங்க, நடுவில் வேற chapter start பண்ணா story புரியாது. subtitle பார்த்து eagar ஆ உள்ளே வராதீங்க! என்னால் எழுத முடிஞ்ச கற்பனையை தான் உங்களுக்கு எழுதுகிறேன். என்னோட கதையை ரசித்து படித்து comment பண்ற அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி!
EPISODE 23
நிதின் காரை எடுக்க ரிதமை தூக்கி கொண்டு மிதுன் அமர வைத்தான். ஹே இந்த எக்சாமுக்கு போயே ஆகணுமா? அண்ணா தான் மினிஸ்டரா இருக்கானே! எதுக்கு டி ஆடிட்டு இந்த காலை வச்சுட்டு போகணுமா! என்னை பாரு நான் எப்டி கூலா இருக்கேன். என மிதுன் சொல்ல..
நீயும் அவளும் ஒண்ணா என பின்னால் குரல் கேட்டது. ரிதம் கண்ணகுழி தெரிய சிரிக்க ஆரம்பித்தாள்.
நான் எங்கே இருந்து என்ன பேசினாலும், என்னை நோஸ்கட் பண்றதுக்கு கிளம்பி வந்துடுறாரு! இவருக்கு வேற வேலையே இல்லையா? ஆபீஸ் கிளம்பி போக வேண்டியது தானே! எதுக்கு இங்க சுத்திட்டு இருக்காரு! இரிடேட்டிங் டிஸ்கஸ்டிங் என்று மிதுன் தேவ் மனதில் திட்டி கொண்டிருக்க..
உன்னோட மானகெட்ட மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குதடா! மூடிட்டு கிளம்பி பரீட்சை எழுதிட்டு வர வழியை பாரு! இந்தா உன்ன பெத்ததுக்கு தெண்டத்துக்கு பிளைட் டிக்கெட் போட்டு வச்சுட்டேன். கிளம்பி போயி எழுதிட்டு வா! இந்த தடவையாவது பாஸ் பண்ணுவியா? இல்ல இந்த தடவையும் அறியர் வெச்சிட்டு திரும்ப என் மானத்தை வாங்கிட்டு வருவியா? என்று சூர்ய தேவ் திட்ட ஆரம்பிக்க..
மிதுன் தேவ் அவரை முறைத்து விட்டு ரிதம் கிட்ட “ நல்லா எக்ஸாம் எழுதிட்டு வா! கண்டிப்பா நீ ஒரு ஹையர் பொசிஷனுக்கு தான் போவ! பேசாம கலெக்டர் ஆகிடு என்று கூறி கிளம்பி விட்டான்.
ஆமா இதை சிஎம் சொல்லிட்டு போறாரு! வந்துட்டான்.. பெருசா கண்ணுகுட்டி எக்ஸாம் நல்லா எழுதுங்க செல்லம்!..
ஓகே மாமு என்று அவள் கையை அசைத்தாள்.
மிதுன் தேவ் நேராக மகியிடம் சென்றான். அம்மா இவருக்கு வேற வேலையே இல்லையா? எதுக்கு மகி இவரை நீ இங்கே கூட்டிட்டு வந்த? இது நம்ம தாத்தா வீடு! இவரை அவங்க வீட்டுக்கு அனுப்பு! அதேபோல என்னைய ஓவரா பேசிட்டு இருக்காரு! நான் என்ன எல்லா பேப்பர்லயுமா அரியர் வெச்சேன். ஜஸ்ட் ஃபர்ஸ்ட் இயர்ல ஒரே ஒரு EVS மட்டும் தான் அரியர் வெச்சேன். அது கிளியர் ஆகாததுக்கு நான் என்ன மம்மி பண்ண முடியும்? நான் என்னதான் பண்ணட்டும்? எல்லாமே டிஸ்டின்சன் வாங்கி இருக்கேன். ஆனால் அந்த ஒரு பேப்பர்ல மட்டும் என்னால பண்ணவே முடியல!
மகி சிரித்துக்கொண்டே அவனைப் பார்க்க..
மிதுன், இப்போ எதுக்கு டி நீ சிரிக்கிற? அவருக்குத்தான் நீ சப்போர்ட் பண்ணுவியா? நான் எவ்ளோ கஷ்டப்படுறேன் தெரியுமா? எல்லா இடத்திலும் வந்து என்னைய நோஸ்கட் பண்ணிட்டு இருக்காரு!
டேய் கிளம்பிட்டியா? என சூர்யா குரல் கேட்க…
மிதுன் ஒரு நிமிடம் பயந்து சொல்லி வை என பாத் ரூம்க்குள் புகுந்து கொண்டான்.
அவன் சென்றதும் மீண்டும் மகிழினி சிரிக்க ஆரம்பிக்க . சூரியதேவ் உள்ளே வந்தார். எங்கே அவன்?
மகி, அவன் குளிக்கிறான்! சும்மா என் பையனை திட்டிக்கிட்டே இருக்காதீங்க! அவன் எவ்வளவு ஃபீல் பண்றான் தெரியுமா? இனிமேல் இந்த நோஸ்கட் பண்ற வேலையெல்லாம் இங்க வேண்டாம்.
சூர்யா, அவனுக்கு போய் நீ வெக்கமே இல்லாம சப்போர்ட் பண்றியேடி! நீ அரியர் வச்சிருக்கியா? சரி அதை விடு நானும் தான் அரியர் வெச்சேன்! ஆனா நான் அதை படிச்சு முடிக்குறதுக்குள்ளேயே கிளியர் பண்ணிட்டேன். ஆனா இவன் பாரு? எத்தனை வருஷம் ஆகுது தெரியுமா? அந்த நாலு வருஷத்திலேயே முதல் வருஷ பேப்பர இன்னும் வச்சுட்டு இருக்கான். எனக்கு மானம் போகுது தெரியுமாடி?
சரி சரி விடுங்க அவன திட்டாதீங்க. அவன் குழந்தைங்க..
ஆமா எருமை மாடு கனக்கா சுத்திட்டு திரிகிறான். குழந்தையா? ஆபீஸ்ல வந்து அப்படித்தான் fileல செக் பண்ணுடா அப்டின்னு சொன்னால், அதைத் தவிர மத்த எல்லாரோட கேபினுக்கும் போயி அவங்களோட கம்ப்யூட்டர்ல உட்கார்ந்து விளையாண்டு, அவங்க கிட்ட கடலை போட்டுக்கிட்டு திரிகிறான். என் மானத்தை வாங்குறான்! என்று திட்ட ஆரம்பித்தார்.
மகி , போதுங்க விடுங்க அவன் சரியாயிடுவான் என்று சமாளிப்பதிலேயே குறியாக இருந்தார்.
சூரியதேவ் நான் டிக்கெட்டை உனக்கு வாட்ஸ் அப் பண்ணி இருக்கேன். அதை அவனுக்கு சென்ட் பண்ணிடு. போய் தயவு செய்து நல்லா எழுதிட்டு வர சொல்லு நாலு பக்கம் தான் டி எழுதுறான். அவனுடைய பேப்பரை வாங்கி பார்த்தேன். வெறும் நாலு பக்கம் எப்படி மார்க் போடுவாங்க?
மகிழினி என் பையன் எல்லா பேப்பர்லயும் டிஸ்டின்க்ஷன். எல்லா செமஸ்டர் நல்ல மார்க் தான்! அந்த செகண்ட் செமஸ்டர்ல ஏதோ ஒரு துரதிஷ்டவசமாக EVS பேப்பர்ல தூக்கம் வந்துடுது!. ஆமா நீங்க எதுல அரியர் வச்சீங்க? என்று கேட்க?.
நானா எந்த அறியரும் வைக்கல என்று திரும்பினார்..
இருங்க இப்பவே நான் இன்பா அண்ணாவுக்கு போன் பண்ணி கேட்கிறேன். என்று போனை எடுக்க போக..
சூர்யா நான் வந்து அது EVS தான் அறியர் வெச்சேன் என்று சொல்லிக் கொண்டே திரும்பினான்.
மகிழினி சிரித்துக் கொண்டே அதுதான்.. உங்க பையன் உங்கள மாதிரி தான் இருப்பான். நீங்க நாலு வருஷத்துல படிச்சு முடிச்சு வெளிய வரதுக்குள்ள பாஸ் பண்ணிட்டீங்க! என் பையனுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும்! ஆனா பாஸ் பண்ணிடுவான்.
சூர்யா, அதுக்கு நான் அவனோட இடத்துல போய் பட்டாசு தான் வெடிக்கணும். நாயி படுத்து தூங்கிட்டு வருது என்று திட்டினார்.
சரி சரி விடுங்க என்று சமாளித்தவள். வாட்ஸ் அப்பில் அந்த டிக்கெட்டுகளை அனுப்பி வைத்துக் கொண்டே என்னங்க! அவன் எங்க இருக்கான்?
யாரு?
மகி, தெரியாத மாதிரி கேட்காதீங்க! நைட்டு சாப்பிடாமலே போயிட்டான். இப்போ எங்க இருக்கான்னு தெரியல!.. பிள்ளைங்க எல்லாம் கிளம்பி போயிட்டாங்க. போன் பண்ணி கொஞ்சம் விசாரிங்க!..
யார சொல்ற மொட்டையா அவன்னு சொன்னா,எனக்கு என்ன தெரியும்?
என்னங்க நடிக்காதிங்க
சூர்யா, அதுதான் அந்த அராஜககாரன் உள்ளே குளிச்சிட்டு இருக்கான். என்னோட பாப்பா காலேஜ் கிளம்பிட்டா, வேற யார சொல்ற?
மகிழினி, நான் சக்திய பத்தி சொல்லிட்டு இருக்கேன்.
சூர்யா சிரித்துக்கொண்டே சத்திய தேவ்! அவன் நம்ம வீட்ல இருக்கான்.
என்ன ?பெங்களூரு கிளம்பிட்டானா என்று ஆச்சரியமாக கேட்டார்.
இல்ல எங்க வீட்ல இருக்காண்டி நம்ம வீடு!..
மகி, அப்படியா சாப்பிட்டானா?
சூரியதேவ் பெருமூச்சு விட்டுக் கொண்டே இத நீயே போன் பண்ணி ஒரு வார்த்தை கேட்கலாம்ல்ல! நீ மட்டும் தப்பே பண்ணலன்னு சொல்லாத மகி! என் பையன எல்லாரும் முன்னாடியும் மறுபடியும் அரஞ்சி இருக்க! அதுவும் எல்லாரும் முன்னாடியும்! அது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? என்று சூரியத்தில் கேட்க..
மகிழினி உதட்டை கடித்துக் கொண்டே அவன் கேட்ட கேள்வி என்னன்னு உங்களுக்கு புரியுதா?
சூரியதேவ், என் பையன் தப்பா ஒன்னும் கேட்கல! அதுக்கு காரணம் யார் தெரியுமா? உள்ளே குளிச்சிட்டு இருக்கானே அந்த மிதுன் தேவ் அப்புறம் இப்போ மினிஸ்டர்ன்னு சுத்திட்டு இருக்கானே! ஒருத்தன்? அந்த நித்தின் பிரகாஷ்! இவங்க ரெண்டு பேரும் தான் காரணம்! என் பையன எல்லாரும் முன்னாடியும் அவமானப்படுத்தி இருக்காங்க! ஆனா அதை நீ ஒத்துக்கிறியா?
மகிழினி உதடு துடிக்க முகம் எல்லாம் சிலிர்க்க கண்களில் நீர் கோர்க்க அது என்னால கேட்க முடியாது.
சூர்யா கோபத்துடன் ஏன் கேட்க முடியாது?
மகி ,நித்தின் பிரகாஷ் இப்போ வேற ஒரு பையன் கிடையாது. அவன் எங்க அக்காவோட பையன். நான் சத்தியத்தை அடிக்க கார என்று சொல்ல வர..
அந்த நேரம் மிதுன் குளித்துவிட்டு வெளியே வந்தான்.
மகிழினி கண்ணை துடைத்துக் கொண்டே உடனே கீழே செல்ல..
மிதுன், அச்சோ இவரா? அதுக்கு நான் பாத்ரூமிலேயே இன்னும் கொஞ்ச நேரம் இருப்பேனே! என்று பின்னால் திரும்பி போக..
சூர்யா என்னடா மறுபடியும் பாத்ரூம் போற..
இல்ல மூஞ்சிக்கு சோப்பு போட மறந்துட்டேன். மூஞ்சிக்கு சோப்பு போட்டா என்ன? அதுவா உன்னுடைய EVS பேப்பர்ல கேக்கறாங்க! அரியர் இக்ஸாம் எழுத போற நாய்க்கு வாய் மட்டும் நீளம் என்று திட்ட ஆரம்பித்தார்.
மிதுன் தேவ் ஆவேசமாக இதுக்கெல்லாம் உங்களுக்கு இருக்கு! நான் இந்த பேப்பரை பாஸ் பண்ணிட்டு வச்சுக்கிறேனே! எல்லாம் என் நேரம்! இந்த தடவை கண்டிப்பா பாஸ் பண்ணிடுவேன். தூங்க கூடாது! தூங்க கூடாது! என்று சொல்லிக் கொண்டே கிளம்ப ஆரம்பித்தான்.
இங்கே இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு என்று நித்தின் பிரகாஷ் ரிதமிடம் கேட்க..
இன்னும் 15 நிமிஷம் தான் இருக்கு என்று பதட்டத்துடன் கூறினாள்.
நித்தின் பிரகாஷ், நேரத்திலேயே உனக்கு எழுந்து கிளம்ப தெரியாதா? எதுக்கு தான் இப்படி இருக்கியோ? இப்படி ரெஸ்பான்சிபில் இல்லாம இருக்காத? என்று திட்ட ஆரம்பித்தான்.
ரிதம் , அவ்ளோ கஷ்டப்பட்டு ஒன்னும் நீ என்னை கொண்டு போய் விடத் தேவையில்லை. என்னை இங்கேயே இறக்கி விடு..
நித்தின் பிரகாஷ் இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல.. உன்னோட வெட்டி கோபத்தை வச்சு நீ என்ன பண்ண போற? என்று அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தான்.
ரிதம் நான் வேற வழியே இல்லாம தான் உன்ன பிடிச்சிருக்குன்னு சொன்னேன் இன்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
அதே நேரம் நித்தின் பிரகாசும் நானும் வேற வழியே இல்லாம தான் உன்ன கட்டிக்கிறேன்னு சொன்னேன். அவனுக்கு முன்னாடி எனக்கு கல்யாணம் ஆகி இருக்கணும்! அந்த ஒரே ஒரு காரணம் தான் டி! உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல! என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.
அந்த நேரம் சிக்னல் போட ரிதம், ச்ச சிக்னல் வேற போட்டுட்டாங்களே! இப்போ என்ன பண்றது? என்று நகத்தை கடித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.
நித்தின் பிரகாஷ், உங்க அப்பனால கூட இப்போ இந்த சிக்னலை க்ராஸ் பண்ண முடியாது. ஆனா என்னால முடியும்! என்று வேண்டுமென்றே கூறினான்.
என்னடா செய்வ என்று ரிதம் கோபத்துடன் கேட்க..
இப்ப பாரு என்று காரை ஸ்டார்ட் செய்து வேகமாக சிக்னல் என்று கூட பார்க்காமல் ஓட்ட ஆரம்பித்தான்.
அந்த கார் நேராக 1 2 3 4 இன்ஸ்டிடியூட் ஆஃப் எஜுகேஷன் கல்லூரியில் போய் நின்றது.
ரிதம் , என்னடா பண்ணி இருக்க?
நிதின் மரியாதையா கூப்பிடு நான் உன்னோட வருங்கால புருஷன்! என்று கூறினான்.
நீ ஊருக்கே மினிஸ்டரா இருந்தாலும், நான் உன்னை வாடா போடான்னு தான் கூப்பிடுவேன்.
பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்க! பிடிக்கலைன்னா தயவுசெய்து விட்டு போயிடு! என்று கூறினாள்.
நித்தின் பிரகாஷ் எதுவும் பேசாமல் சரி ஒழுங்கா எக்ஸாம் எழுதிட்டு வா! நான் உன்னை பிக்கப் பண்ண இங்கேயே வெயிட் பண்றேன்.
ரிதம் ஆச்சரித்துடன் திரும்பிப் பார்க்க..
நிதின், நீ என்னோட பொறுப்பாச்சே! நான் உன்ன பத்திரமா பாத்துக்கணும்! அதைவிட மகி எனக்காக பேசி இருக்கா! அதனால என் மகிக்காக உன்ன நான் கூட்டிட்டு போறேன்.
ரிதம் அவனைப் பார்த்து எதுவும் சொல்லாமல் உள்ளே செல்ல போக..
இன்னைக்கு ஈவினிங் எனக்கு முக்கியமான ஒர்க் டெல்லி போகணும். அதுக்கப்புறம் ஒன் மந்த் ரொம்ப பிசி அப்போ அப்போ தான் வந்துட்டு போவேன்..அதனால் இன்னிக்கி நம்ம டின்னர் போலாம்..
ரிதம், மனதில் ரொம்ப சந்தோஷம் என்று நினைத்துக் கொண்டாள்.
அந்த நேரம் யவனிக்கா அந்த செய்திகளை சத்ய தேவ்க்கு அனுப்பி விட..
அருகில் அமர்ந்திருந்த ருத்ரன் சரி என்று தட்டி விட்டான்.
சத்திய தேவ் சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்து அமர்ந்தான். தீரா!..
மாமா குட் மார்னிங் என்று சிரித்துக்கொண்டே கூறினான்.
சத்ய தேவ் புருவத்தை நெருக்கிக் கொண்டே என்ன சாரு? இருக்கீங்க ஸ்கூலுக்கு போகலையா?
ருத்ரன், இன்னிக்கி உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ண தோணுச்சு மாமா! அதுதான் என்று கொட்டாவி விட்டான்.
டேய் பொய் சொல்லாத! விடிய விடிய கோல்ட் பிஷ் கிட்ட பேசிட்டு இருந்த தான..
ருத்ரன் நாக்கை கடித்துக் கொண்டே எப்படி மாமா கண்டுபிடிச்ச?
எனக்கு தெரியாதா நீ எப்படியாப்பட்ட ஆள்ன்னு என்று அவளை அனுப்பூர்ல இருந்து இங்க தான் தூக்கிட்டு வாயேன்! பார்ப்போம். நான் அவளுக்கு சமைத்து போடுறேன்.
ருத்ரன், நானா மாமா வர வேணாம்னு சொல்றன். அவதான் அனுப்பூர் அப்படி இல்லன்னா கும்பகோணம் போறா! ஸ்ரீரங்கம் போரா இந்த பக்கம் வரவே மாட்டேங்கிறா!.
சரி சரி லைட்டா தலை வலிக்குது நான் ஒரு சுக்கு டீ போடுகிறேன் என அவன் நகர…
நானும் வரேன் மாமா என்று அவன் சத்திய தேவனுடைய போனை எடுத்து பாக்கெட்டில் போட்டு லாக் செய்தான்.
ருத்ரன் மனதில் இன்னிக்கி மதியம் வரைக்கும் இருந்துட்டா போதும்! எல்லாமே ரெடியாயிடும் அதுக்கப்புறம் யவனியும் யுவதியும் நியூஸ் படிக்க ஆரம்பிச்சுட்டா! எல்லா இடத்திலும் நியூஸ் பிளாஷ் ஆகிடும்! எங்க அம்மாவ கஷ்டப்படுத்தினவர நான் சும்மா விடுவேனா? நான் யாரு ருத்ரன்! விவேகாவோட பையன் என்று சொல்லிக் கொண்டான்.
மதியம் வரை ருத்ரன் சத்யதேவிடமிருந்து பிரியவே இல்லை அவனுடைய ஃபோனில் நிறைய மிஸ்டுகால்கள் வந்து கொண்டே இருந்தது .ஆனால் சத்திய தேவ்டைய போன் ருத்ரனுடைய பாக்கெட்டில் இருந்தது.
சரியாக மாலை தான் போன் நினைவு வர ஆமா என்னோட போன் எங்க? இன்னிக்கி ஒரு இன்ட்ரஸ்டிங் டாஸ்க் பண்ணலாம்னு யவனிகா கிட்டயும், யுவதிக்கா கிட்டயும் சொல்லியிருந்தேனே! என்று சத்திய தேவ் போனை தேட..
என்கிட்ட இருக்கு மாமா என்று பாக்கெட்டில் இருந்து எடுத்து நீட்டினான்.
சத்ய தேவ், இத முன்னாடியே கொடுத்திருக்கலால்ல ருத்ரா என்று போனை வாங்கிக் கொண்டே அதில் அழைப்புகளை பார்க்க..
அந்த நேரம் வீட்டின் கதவு மணி அடித்தது.
ருத்ரன், மாமா நான் போய் திறக்கிறேன் என்று கதவை திறக்க போக..
சத்ய தேவ், அச்சோ டேய் உங்க அப்பா கால் பண்ணி இருக்காரு! உன்ன தேடுறாருனு நினைக்கிறேன். என்று இன்பராகவனுக்கு அழைக்க..
ருத்ரன் கதவை திறக்க அங்கு ரிதம், நிதின் நின்று கொண்டிருந்தார்கள்.
தொடரும்..
Comment pannunga ratings konjam like share pannunga..
உனக்கும் எனக்கும் uploaded read pannunga
EPISODE 24
சத்ய தேவ், ஹலோ மாமா? என்ன விஷயம்? என்று கேட்க…
என்ன சத்யா என்கிட்ட கேக்காம இவ்வளவு பெரிய விஷயத்தை பண்ணி இருக்க? என இன்பா கேட்க..
அவன் புரியாமல் என்ன சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியல!
இன்ப ராகவன் கொஞ்சம் தீவிரமாக இன்னைக்கு நீ வேலை செய்ற அந்த சேனல்ல ஒரு நியூஸ் ரொம்ப டிரெண்டிங்கில் போயிட்டு இருக்கு.. அத பத்தி என்கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு நீ டெலிகாஸ்ட் பண்ணி இருக்கணும்! ஆனால் நீ என்னை கேட்காமல் பண்ணிட்ட!..
என்ன நியூஸ் மாமா? எனக்கு ஒன்னும் புரியல…
நான் காலையில இருந்து உனக்கு எத்தனை தடவை தெரியுமா ட்ரை பண்ணிட்டு இருக்கேன்!
உடனே சத்யதேவ் நீங்க நியூஸ் என்னன்னு சொல்லுங்க மாமா? நான் எந்த இடத்துல தப்பு பண்ணேன். யவனிகாவும் யுவதிகாவும் கவனிச்சுட்டு தான் இருக்காங்க. எதுவா இருந்தாலும் பர்ஸ்ட் எடுத்த உடனே எனக்கு அவங்க சொல்லிட்டு தான் அடுத்த வேலையை செய்வாங்க! இப்போ என்ன ஆச்சு மாமா? என்ன நியூஸ்? என்று கேட்டான்.
இன்பராகவன் , நீயே போய் பாத்துட்டு எனக்கு உடனே கால் பண்ணு! இதை எப்படி சாட் அவுட் பண்றதுன்னு! எனக்கு ஒன்னும் புரியல! என்று சொல்லிவிட்டு போனை வைத்தார் .
சத்ய தேவ் புரியாமல் போனை பார்க்க அந்த நேரம் நீங்க எதுக்கு இங்க வந்திருக்கீங்க? என்று குரல் கேட்டது.
சத்தியதேவ் திரும்பி யார் வந்திருக்கா? என்று கேள்வியுடன் வெளியே வந்தான்.
அங்கே ரிதம் மற்றும்நித்தின் இருவரும் நின்று கொண்டிருந்தார்கள்.
ருத்ரன் அவர்களை பார்த்து உதட்டை கடித்துக் கொண்டு சிரித்தான்.
ரிதம், ஹே உன் மனசுல என்ன நெனச்சிட்டு இருக்க? பெரிய ஹீரோன்னு நினைப்பா? எதுக்குடா இப்படி ஒரு நியூஸ் போட்டு பிரச்சனை பண்ணிட்டு இருக்க! உனக்கு இன்னும் எங்க கிட்ட மோதனுமா?
சத்ய தேவ், என்ன எல்லாரும் ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லிட்டு இருக்கீங்க? அப்படி என்ன நியூஸ்?
நித்தின், சத்ய தேவை எளன பார்வையுடன் “இந்த மாதிரி நியூஸ் போட்டு நீ என் கூட மோதனுமா என்ன? இப்படி மோதி என்னை ஜெயிக்க பாக்குறியா? இவ்வளவு கேவலமான ட்ரிக்கை எல்லாம் எங்கிருந்து கத்துக்கிட்டேன்னு தான் தெரியல! ஐ திங்க் அது உங்க டாடி தான!.
ரிதம் மாமாவை பத்தி தேவையில்லாம பேசாத! வந்த வேலையை பாரு என்று அவள் சொல்ல..
நிதின் அவளின் கையை பிடித்துக் கொண்டான்.
ருத்ரன் கோபத்துடன் என்ன? இப்போ இங்க வந்து எதுக்கு சத்தம் போட்டுட்டு இருக்கீங்க? அதுதான் தெரிஞ்சு போச்சுல்ல! உங்க வேலைய பாத்துட்டு கெளம்புங்க!..
சத்ய தேவ், அப்படி என்ன நியூஸ்? என்று உள்ளே சென்று பார்க்க..
“மினிஸ்டர் கார் போக்குவரத்து விதி மீறல்? உள்ளே இருந்தது மினிஸ்டரா? வேறு யாராக இருக்க கூடும்!” என பரபரப்பு தலைப்புகளில் செய்திகள் ஓடி கொண்டிருந்தது.
சத்யதேவ், இது எப்படி?
ரிதம் அப்படியே நடிக்காதடா! உன்னோட ரத்தத்திலேயே நடிப்பு ஊறி இருக்கே! என்னமா ஆக்ட் பண்ற? இதையெல்லாம் க மத்தவங்க வேணா நம்பலாம்! ஆனா நான் நம்ப மாட்டேன்!
சத்ய தேவ், சத்தியமா எனக்கு தெரியாது!.. யவனிகா, யுவதி அவங்க ரெண்டு பேரும் என்னை கேக்காம எந்த நியூஸையும் போட மாட்டாங்க! இது எப்படி வந்தது? என்று சொல்ல..
ருத்ரன், மாமா நான் தான் பண்ணேன்!.
அந்த இடத்தில் சத்ய தேவ் அமைதியாக இருந்தான். எதுக்கு இப்படி பண்ண என்று அவன் கேட்கவில்லை.
ரிதம், இதுக்கெல்லாம் காரணம் நீதானடா! ச்சீ! எனக்கு போய் இப்படி ஒரு தம்பியா? வெக்கக்கேடு உன்னைய!..இரு நான் இப்பவே டாடி கிட்ட சொல்றேன்! என்று போனை எடுத்து அவள் கால் செய்யப் போக…
சத்யதேவ், அவன் பண்ணதுல என்ன தப்பு? அது சரி தான்! நீ காரை ஸ்பீடா ஓட்டிட்டு போனியா? என்று நிதினை பார்த்து கேட்டான்.
ஆமா கூட்டிட்டு போனேன்! இப்போ அதுக்கு என்ன? என்று அசராமல் பதிலளித்தான்.
அப்போ இந்த நியூஸ்ல எந்த தப்பும் இல்லையே! எல்லாம் சரியா தான் இருக்கு! நீங்க உங்க வேலைய பாத்துட்டு கெளம்புங்க! என சத்ய தேவ் கூற..
ரிதம் அவனை ஷாக்காக பார்க்க, நித்தின் எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
உன் மனசுல என்னடா நினைச்சிட்டு இருக்க? இன்னும் எங்கள பழி வாங்கிட்டு இருக்கியா? உனக்கு வெக்கமா இல்ல? நல்லா பார்த்துக்கிட்டே இரு டா எண்ணி இன்னும் ஒரு மாசத்துக்குள்ள நான் காக்கி சட்டையோட முன்னாடி வந்து நிற்கிறேன்! வந்து உன்னை என்ன செய்றேன் பாருடா! WW dot சேனலை ஒன்றும் இல்லாமல் ஆக்கல என் பேரையே நான் மாத்திக்கிறேன். என ரிதம் ஆவேசத்துடன் சொல்லி கொண்டிருக்க..
ருத்ரன், அப்போ இப்போவே அஸ்ட்ராலஜி பார்க்க ஆரம்பிக்கிறேன். பண்ணி மேயிக்கிர மாதிரி ஒரு பேர் செலக்ட் பண்றேன். அக்கா!
நித்தின் அவளின் கைகளை பிடித்து விடு ரிதா! அவனுடைய கேரக்டர் இது தான் உனக்கு தெரியும்ல!. என சொல்லி விட்டு ருத்ரனை பார்த்து சரி மச்சான மட்டும் நம்ம வழிக்கு கொண்டு வந்துருவோம்!
ருத்ரன், ஹே யாரு உனக்கு மச்சான்! என சண்டைக்கு வர…
ரிதம், நிதின் நீ எதுக்கு அவனை மரியாதையா சொல்ற? அவன் பாரு மீசை கூட இல்ல..
ருத்ரன் சண்டைக்கு செல்ல சத்ய தேவ் கைகளை பிடித்து கொண்டான்.
நிதின், உன்னோட தம்பி ரிதா! நான் உன்னை எவ்வளவு விரும்புறேன்னு உனக்கு தெரியாது. உன்னை சார்ந்த எல்லாத்தையும் நான் அவ்வளவு விரும்புறேன்! என்ன மச்சான்? தெய்வ மச்சான்! இப்படி பண்ணிட்டீங்க!. என்று கேட்க..
மாமா தயவு செய்து இவங்கள வீட்டை விட்டு தொரத்து! எனக்கு எரிச்சலா இருக்கு!
சத்தியதேவ் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..
ரிதம் இனிமே பாருடா உன்ன என்ன செய்கிறேன்? என்று சொல்லிக் கொண்டே இருந்தால் இருவரையும் முறைத்து விட்டு கிளம்பினாள்.
நித்தின் அவளின் பின்னால் டின்னர் போலாம்! வெயிட் பண்ணு ரிதா என்று ஓடினான் .
சத்தியதேவ் இவ்வளவு நேரமும் தன் முன்னால் கொதித்துக் கொண்டிருந்தவளை பார்த்தான். இவள் தானா? அன்று சினிங்கி தன்மேல் விழுந்தாளே! ஆனா ஒரு விஷயம் மட்டும் இவகிட்ட மாறவே இல்லை! அந்த நியாயமே இல்லாத கோபம் தான்! இவளை எல்லாம் எப்படி வளத்திருப்பாங்க? பெரிய கின்னஸ் சாதனைதான் என்று பார்த்துக் கொண்டிருக்க..
ருத்ரன், சாரி மாமா என்னால தான்!.. உனக்கு.. இவ்ளோ பெரிய பிரச்சனையும்!
சத்ய தேவ், ஆமா என்னை கேட்காம ஏண்டா ருத்ரா இப்படி பண்ணுன?
ருத்ரன், சரி அத விடுங்க! நீங்க போன் பண்ணி அவளோட அப்பா கிட்ட சொல்லிடுங்க! இதுக்கு காரணம் நான் தானே!..
சத்ய தேவ் ,யாரோட அப்பா கிட்ட? என்று கேட்க ..
இப்போ ஒருத்தி ஆடிட்டு போனாலே! ஒரு ராவடிக்காரி! அவங்க அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லிடுங்க! என ருத்ரன் சென்று அமர..
டேய் அவர் உனக்கும் அப்பா தான்!.
எனக்கு அவர் அப்பா கிடையாது! எனக்கு எங்க அம்மா மட்டும் தான்! என் அம்மா எனக்கு மட்டும் தான் அம்மா என்று விரைப்புடன் கூறினான்.
சத்யதேவ் சிரித்துக்கொண்டே சரி விடு! என்று இன்பராகவனுக்கு கால் செய்தான்.
என்ன சத்யதேவ் இதை எப்படி சால்வ் பண்றது?
சத்ய தேவ், மாமா அதுல என்ன தப்பான விஷயம் இருக்கு?
இன்ப ராகவன், அதுல ரிதம் நித்தின் பிரகாஷ் இன்வால்வ் ஆகி இருக்காங்க டா!.
சத்யதேவ் அதே மிடுக்குடனும் கம்பீரத்துடனும் அதனால இப்போ என்ன மாமா? அவன் நித்தின் பிரகாஷ்! தப்பு பண்ணி இருக்கான்! நியூஸ் சரி தான்! அதுக்கு அவங்க பதில் சொல்லி ஆகணும். மினிஸ்டரா இருந்தால் அவன் இந்த நாட்டுக்கு உதாரணமா இருக்கணுமே தவிர, இந்த மாதிரி சைல்டிஸ்சா தப்பு பண்ண கூடாது! இவனுக்கெல்லாம் யாரு இந்த பதவியை கொடுத்தது?
இன்ப ராகவன், அப்போ நீ மாத்த மாட்டியா? என்று விரைப்புடன் கேட்க..
மாத்த மாட்டேன் மாமா!
இன்பா, நான் எல்லாத்தையும் டெலிட் பண்ணுவேன்!..
சத்ய தேவ், பண்ணிக்கோங்க மாமா! நான் புதுசா சேனல் ஆரம்பிச்சு, இதை மறுபடியும் டெலிகாஸ்ட் பண்ணுவேன். என்று தைரியமாக கூறினான்.
இன்பராகவன் அதன்பின் எதுவுமே பேசவே இல்லை .
சத்ய தேவ், தப்பு… தப்பு தான் மாமா! இனிமே பண்ண கூடாதுன்னு அதுக்குண்டான பிராசஸ பண்ண சொல்லுங்க! அது மட்டும் இல்லாம அவன் எவ்வளவு பெரிய இடத்துல இருந்துகிட்டு அசால்டா பாதுகாப்பு இல்லாமல் வெளியே வந்து இருக்கான்? அது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா? என்று சத்ய தேவ் கூறிக் கொண்டிருக்க..
இன்பராகவன் அமைதியாக இருந்தார்.
சத்ய தேவ், நீங்க தப்பா நினைச்சுக்கிட்டாலும் எனக்கு கவலை இல்லை மாமா! நீங்க எதுக்காக என்னைய இத ஆரம்பிக்க சொன்னீங்கன்னு உங்களுக்கும் தெரியும்! எனக்கும் தெரியும்! அந்த வேலையை நான் சரியா செஞ்சிட்டு இருக்கேன்! அதனால இதுல வேற எதுவும் சொல்ல மாட்டேன். இந்த தப்பை இன்னொரு தடவை நடக்காம பாத்துக்க, உங்க வருங்கால மாப்பிள்ளை கிட்டயும் உங்க பொண்ணு கிட்டயும் சொல்லுங்க! என வைத்து விட்டான்.
உடனே கைத்தட்டல் சத்தம் கேட்டது.
சத்ய தேவ் திரும்பி பார்க்க.. என் மாமா! மாமா நீ! கிரேட் மாமா! இப்படி இருக்கணும்! சத்தியதேவ்னா நெருப்பு மாமா! இன்ப ராகவனையே அப்படியே பந்தாடிட்ட மாமா! லவ் யூ மாமா! என்று ருத்ரன் முத்தமிட்டான்.
டேய் என்னடா பண்ற? என்று கேட்க..
ருத்ரன், சும்மாவா எங்க சக்தி மாமா! என் மாமா கொக்கா!…..இங்கே இல்ல ரிதமா! நித்தினா! என் சத்யதேவ் மாமா ஆல்ரவுண்டர் என்று கேட்டான்..
சத்யதேவ் சிரித்துக்கொண்டே சரி விடு இப்போ முக்கியமான டாஸ்க் ஒன்னு பெண்டிங்ல இருக்கு.. என்று யவனிகாவுக்கு போன் செய்தான் .
ஹலோ சார் என்று அழைக்க..
இப்போது என்ன பண்ணனும்னு தெரியும்தானே?
தெரியும் சார் என்று அவர்கள் இருவரும் தயாராகினார்கள்.
இன்று மற்றும் நேற்று முக்கியமான நிகழ்வுகள் அனைத்தையும் தொகுத்து அக்கா தங்கை வழங்குகிறார்கள். ஒரு டிஃபரண்டான டாக் ஷோ போல!.
“செய்திகள் வாசிப்பது செய்தி வாசிப்பது உங்கள் யுவன், யுவதி” இது தான் அந்த ஷோவின் தலைப்பு!..
யவனி மற்றும் யுவதி இருவரும் அழகாக புடவையை கட்டிக் கொண்டு, மிதமான ஒப்பனையில் கேமராவீடியோ ஃபிளாஷ் லைட் வெளிச்சத்தில் அவர்களுடைய வீட்டில் ஒரு பக்கத்தில் ஸ்டுடியோ அமைத்திருந்தார்கள்.
அந்த இடத்திற்கு சென்று செய்திகள் வாசிப்பது உங்கள் யுவன் யுவதி என்று இருவரும் சொல்லி அந்த நிகழ்ச்சி ஆரம்பமானது.
அது நேற்றிலிருந்து இன்று வரை நடந்த மிகவும் முக்கியமான விஷயங்களை பற்றி உரையாடுவது. அவர்கள் இன்று பேசிய செய்திகளில் அதிகமாக நிதின் பற்றிய செய்திகள் நிறையவே இருந்தது. அது youtube-ல் இப்போதைக்கு ட்ரெண்டில் சென்று கொண்டிருக்கிறது.
ஏனென்றால் அவர்கள் இருவரும் அக்கா தங்கைகள் அதேபோல அவர்களுடைய அந்த குரல்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் செய்திகளை முடித்துவிட்டு வெளியே வர.. அதை சத்ய தேவ் ரெக்கார்டிங் செய்து அவர்களுடைய சேனலில் டெலிகாஸ்ட் செய்தான்.
அந்த நேரமே அவர்களுக்கு போன் வந்தது. நிறைய மெசேஜ்களும் செய்திகளும் ஒவ்வொரு நாளும் வரும். சத்திய தேவனுடைய குழுக்களில் இதுதான் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த யுவன் யுவதியின் இந்த டாக் ஷோ தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக ஒவ்வொரு இடங்களிலும் ஓடிக் கொண்டிருக்கும். அந்த அளவுக்கு அந்த இரட்டை சகோதரிகள் பெயர் வாங்கி கொடுத்திருக்கிறார்கள். இந்த டாக் ஷோவின் காரணமாக அவர்களுடைய விஷுவல் கம்யூனிகேஷன், மாஸ் மீடியா படிப்பிலும் அவர்களுக்கு ஒரு நல்ல மதிப்பு இருந்தது. அவர்கள் வெளியே வந்ததும்..
விவேகா புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார்..
விவிமா என்று அவர்கள் சிரித்துக் கொண்டே வர இருவரையும் உப்பு வைத்து சுற்றி போட்டவர். என் அழகு குட்டி 2 பேரும் சூப்பரா பேசினீங்கடி! என் தங்கம்! நான் சொல்ல போராடுற விசயத்தை நீங்க பேசி விட்டீர்கள். இதுக்கெல்லாம் சத்ய தேவ் தான் காரணமா? என்று விவேகா கேட்க..
இல்லம்மா இதுக்கு காரணம் நான் தான் என்று ருத்ரன் சொல்லிக்கொண்டே வந்தான் திரும்பி பார்க்க..
வெண்பா, என்னடா ருத்ரா இப்படி ஒரு வேலை பண்ணி இருக்க?இவளுங்களை கொம்பு சீவி விடாத! ரொம்ப மோசமான பிள்ளைங்க என்று யவனிகா மற்றும் யுவதி இருவரையும் வெண்பா திட்டிக் கொண்டிருக்க..
ருத்ரன், போங்க சித்தி பாப்பா ரெண்டு பேரும் இன்னைக்கு சூப்பர் சம்பவம் பண்ணி இருக்காங்க!
அந்த ராவடிக்காரி என்னம்மா ஆடிட்டு இருக்கா என்று சொல்லிக் கொண்டிருக்க..
விவேகா, என்னடா ஆச்சு என்று கேட்க?
ருத்ரன், அம்மா அந்த காருக்குள்ள ஐ மின் அந்த நித்தின் பிரகாஷ் ரூல்ஸ் பிரேக் பண்ணி எதுக்கு தெரியுமா போனான்?
எதுக்கு டா?
ருத்ரன், உங்களோட பொண்ணு இருக்காளே! ரிதம் இன்பராகவன்! அவளுக்கு கால்ல கொஞ்சம் சுளுக்கு, IPS மெயின்ஸ் எழுத கொண்டு போய் விடுவதற்கு தான் அப்படி போயிருக்கான்.
விவேகா, அப்படியா!
ருத்ரன், ஆமா அதனால தான் நான் எல்லாரும் முன்னாடியும் நியூச போட்டு விட்டுட்டேன்! என்று சொல்லவும்..
பின்னால் இதுக்கு காரணம் நீதானா? இந்த மாதிரியான கேவலமான விஷயத்தை என்னோட இரத்தம் பண்றது, எனக்கு அவமானமா இருக்கு! என்று ஒரு குரல் கேட்டது.
யவனிகா மற்றும் யுவதிகா பயந்து கொண்டே உள்ளே ஓடி ஒளிந்து கொண்டார்கள். இன்பராகவன் வருகிறானே! அதுவும் அவனுடைய பெண்ணை பற்றி தான் இப்பொழுது செய்திகளை வாசித்து விட்டு வந்தார்கள்.
ருத்ரன் எதுவும் பேசாமல் போய் சோபாவில் அமர்ந்து கொள்ள.. விவேகா அவனுக்கு அருகில் அமர்ந்து கொண்டாள்.
இன்ப ராகவன் என நீதான் இதை பண்ணியா? அப்போ சத்யதேவ் காரணம் இல்லையா?
ருத்ரன், ஆமா நான் தான் பண்ணேன்! இப்போ என்ன? என்ன பண்ண போறீங்க? அந்த நித்தின் பிரகாஷ் எவ்வளவு கேவலமானவன்னு பாத்துக்கோங்க! என்று சொல்ல..
இன்ப ராகவன் கைகளை மடக்கிக் கொண்டே விவேகாவை பார்த்தான்.
விவேகா கண்டு கொள்ளாமல் இருக்க
இன்பா சிரித்துக்கொண்டே என் பொண்ணுக்காக ரூல்ஸ்சயே பிரேக் பண்றான்னா? அவன் எவ்ளோ என் பொண்ண லவ் பண்ணுவான்? அது உங்களுக்கெல்லாம் எங்க புரிய போகுது! லவ் பண்ணவங்களுக்கே அதெல்லாம் புரியாம இருக்குதே! என்று விவேகாவை பார்த்தான்.
விவேகா, சரி வாடா ருத்ரா நம்ம கிளம்பலாம்!..
அம்மா நான் ஆதி சித்தப்பாவை பாத்துட்டு வரேன்.
விவேகா, அவன் இன்னைக்கு டூட்டிக்கு இப்பதான் கிளம்பினான். நம்ம நாளைக்கு நாளைக்கு ஊருக்கு போகும் போது பார்க்கலாம் என்று சொல்ல..
வெண்பா அண்ணா உட்காருங்க என்று அழைக்க ..
இன்பா, யவனிகா யுவதி இரண்டு பேரையும் வர சொல்லுமா?
ருத்ரன், அம்மா ஒரு நிமிஷம் இரு என்று அங்கேயே நின்று கொண்டான்.
யவனி மற்றும் யுவதி இருவரும் தயங்கிக் கொண்டே வெளியே வந்தார்கள்.
இன்ப ராகவன் அவர்களை அழைத்து இருவருக்கும் கைகளை கொடுத்தான். அவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க…
நியூஸ் எனக்கு வருத்தம் தான்! ஆனா அத நீங்க சொல்லி இருக்கீங்க, தப்ப சுட்டிக்காட்டுவது தப்பு கிடையாது! அது என் பொண்ணு பண்ணா என்ன? யார் பொண்ணு பண்ணா என்ன? ஆனா உங்களோட டாக் ஷோ ரொம்ப சூப்பரா இருந்தது! கீப் இட் அப் குட்டீஸ்.. என இன்பா சொல்ல..
தேங்க்ஸ் பெரியப்பா என்று அவர்கள் கூறினார்கள்.
என்ன பெரியப்பாவா? என்று அதிர்ச்சியுடன் இன்பா எழுந்து நிற்க..
ருத்ரன் , நீங்க உங்களை 20 வயசு பையன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா? உங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆகப்போகுது! இங்கே சீன் கிரியேட் பண்ற வேலை எல்லாம் வச்சிட்டு இருக்காதீங்க! கிளம்புங்க!
டேய் உன் வேலை ம* என்று இன்பா சொல்ல வர.
விவேகா, ருத்ரா நீ தேவையில்லாம எதுக்கு பேசி எனர்ஜி வேஸ்ட் பண்ற வா? நான் உனக்கு சமைச்சு தரன்..நம்ம சாப்பிட்டு தூங்கலாம். நாளைக்கு பெங்களூர் கிளம்பனும்.
இன்பா, ஆமா போ அவ விருந்து வைப்பா? அந்த நாறிப்போன உப்புமாவை ரசிச்சு சாப்பிட கிளம்பிட்டாங்க.
விவேகா, என்னோட உப்புமாவை கேவலமா பேசிட்டல்ல இதுக்காகவே உனக்கு டைவர்ஸ் தரேன்! என கோபமாக பார்க்க…
போடி என்று இன்பா பார்த்தார்.
வெண்பா, அப்போ உப்மா எங்க அண்ணனுக்கு பிடிக்காது! அப்படி தானே!
இன்பா, ஆமா!
வெண்பா சிரிக்க..
என்ன மா சிரிக்கிற?
வெண்பா, பொய் சொல்லாத ன்னா இந்த உப்மாவை சண்டை போட்டு மித்ரன் கிட்ட இருந்து பிடுங்கி சாப்பிட்ட அதெல்லாம் மறந்து போச்சா!
இன்பா அருகில் இருக்கும் டிஃபன் பாக்ஸை எடுத்து ஓபன் செய்து. இது என்ன உன் புருஷனுக்கு செஞ்சு கொண்டு வந்தாலோ!. .
வெண்பா சிரித்து கொண்டே மாமன் பையன் மேல பாசம்! அதான்! என ஸ்பூன் நீட்டினாள்.
இன்பா மெல்லிய புன்னகையுடன் விவேகா ஆதிக்கி கொடுத்ததை சாப்பிட ஆரம்பித்தார்.
வெண்பா சிரித்து கொண்டே உள்ளே சென்று விட இன்பா சத்ய தேவ்க்கு அழைத்தார்.
ஹலோ சொல்லுங்க மாமா! என்ன விஷயம்? என்று எப்பொழுதும் போல் சாதாரணமாக பேசினான்.
இன்பராகவன், எனக்கு இத்தனை வயசு ஆகியும் , கொஞ்சம் அந்த பழைய நினைப்பிலேயே நான் இன்னும் துடிப்போடு இருக்கிறேன்ன்னு தோணுது!
சத்ய தேவ், அப்போ விவி பேபி கிட்ட எக்ஸ்பிரஸ் பண்ணுங்க! என சிரித்தான்.
இன்பா, உன் அத்தை என்னை கொல்ல வெயிட் பண்றா!
சத்ய தேவ், எப்டி கன்வின்ஸ் பண்ண போறீங்க?
அதுக்கு நான் அவள் கையாள சாகனும்!
சத்ய தேவ், என்ன மாமா?
இன்பா, ஜஸ்ட் கிட்டிங்! ஹான் நீ சரியாதான் பண்ணி இருக்க! நான் தப்பு தான் சத்யா!..
சத்ய தேவ் சிரித்துக் கொண்டே என் மாமா எப்பயும் தப்பு கிடையாது! நீங்க ஒன்னு சொல்றீங்கன்னா அதுக்கு பின்னாடி ஒரு காரணம் இருக்கும்! எனக்கு தெரியும் மாமா!.
இன்பராகவன் எனக்கு உண்மையாவே சந்தோஷமா இருக்கு! அந்த சூர்யா வுக்கு இப்படி ஒரு ஒர்த் புரொடெக்ட் எனக்கு உன் அப்பனை பார்த்து பொறாமையா இருக்கு!
அப்படி எல்லாம் இல்ல மாமா!
சரி உன் கிட்ட ஒரு மிசன்!..
சத்ய தேவ், சொல்லுங்க மாமா நான் அடுத்து எனக்கு என்ன ஒர்க்?
இன்பராகவன் தீவிரமாக இப்போ நீ நாளைக்கு பெங்களூர் கிளம்பிடு! இனிமே அந்த சீக்ரெட் ப்ராஜெக்ட் தான்?..
சத்யதேவ் சரிங்க மாமா நான் நாளைக்கே கிளம்புறேன். என் போன் வைத்தான்.
அடுத்த நாள் இங்கே ருத்ரன் விவேகா பெங்களூர் கிளம்பி அவர்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். ருத்ரனுக்கு ட்ரைனிங் பீரியட் முடிந்து விட்டது. இனி அடுத்து போஸ்டிங் தான். அவன் அதை சென்ட்ரல் கவர்ன்மெண்ட் டிஆர்பி நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட் போன்றவற்றை எழுதி வேலையை வாங்கப் போகிறான். இது அவனுடைய ஆசை அதற்கு விவேகா முழு சப்போட்.
சத்ய தேவும் பெங்களூர் கிளம்பிவிட்டான். அனைத்து கூட்டமும் இப்பொழுது பெங்களூர் செல்கிறது.
சத்யதேவ் இப்பொழுது மைவிழி மற்றும் கார்த்திக் இருவரும் வாழ்ந்த வீட்டுக்கு தான் செல்கிறான். கார்த்திக் மூன்று பிள்ளைகளும் கொஞ்சம் பெரிதானதும் சூர்யா மற்றும் மகிழினி வாங்கி இருக்கும் வில்லா , அந்த லைனில் கார்த்திக் குடும்பமும் வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார்கள்.
இப்பொழுது அந்த வீடு காலியாக இருப்பதால் சத்ய தேவ் எப்பொழுதும் அங்கு தான் போய் தங்குவான்.
விவேகா மற்றும் இன்ப ராகவன் இருவரும் எலக்ட்ரானிக் சிட்டி பக்கத்தில் அவர்களுடைய சொந்த வில்லாவில் இருக்கிறார்கள்.
ப்ரோ என மிதுன் கட்டிகொள்ள…
நிதின், இது கொஞ்சம் பெரிய ப்ராஜெக்ட்! ஒர்க் கொஞ்சம் அதிகமா இருக்கு! நான் நடுவுல டைம் கிடைக்கும்போதெல்லாம் வந்துட்டு போறேன்.
சரி ப்ரோ!.. இப்போ லவ்வர்ஸ் கான நேரம் நான் அங்க தள்ளி போறேன் என்று மிதுன் நகர…
ரிதம், இவன் வேற?
நித்தின் ரிதமின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.
ரிதம் சிரித்துக்கொண்டே பத்திரமா போயிட்டு வா!..
நிதின், உனக்காக ஒரு கிப்ட் வாங்கி வச்சிருக்கேன்.
என்ன அது என்று ஆச்சரியமாக கேட்டாள்.
நம்ம சிவி வீட்டு அப்பார்ட்மெண்ட் கிட்ட உங்க வீடு இருக்கே! அங்க நீ போய் பாத்துட்டு, எனக்கு கால் பண்ணு!..
ரிதம் ஆச்சரியமாக என்ன கிப்ட்? சொல்லிட்டு போ?
நிதின், ரிதா நீ அங்க போய் பார்த்துட்டு எனக்கு கால் பண்ணு!.. என அவளுக்கு டாட்டா சொல்லி அவளை கட்டி அணைத்து வழி அனுப்ப, அவளும் கட்டி அணைத்து வழி அனுப்பினாள்.
மிதுன் கை அசைக்க நிதின், மிதுன்!..
அண்ணா!
நிதின், நீ இப்போ ரிதம், நிவாஸ், தூரி, சிவி, பவா! இனியா, இதயன், வெற்றி, நிலா எல்லாரையும் பத்திரமா பார்த்துக்க எதுவா இருந்தாலும் கால் பண்ணு! நான் வரேன் என நிதின் கிளம்பினான்.
மிதுன் வழி அனுப்பி வைத்து விட்டு இருவரும் சென்றார்கள்.
ரிதம் நேராக நித்தின் என்ன கிப்ட் வச்சிருப்பான்? என்று அப்பார்ட்மெண்ட் லிஃப்ட்ல வர..
சத்ய தேவ் அப்பொழுதுதான் வீட்டுக்குள் நுழைந்தான்.
அவள் மேலே வந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்க்க..
ஒரு நிமிடம் சந்தோசம்? அங்கே அவ்வளவு மீன்கள்! அக்வேரியத்தில் இருப்பது போல விதவிதமாக இருக்க..
ரிதம் தன்னை மறந்து ஊ!..என்று கத்தி விட்டாள்.அந்த மீன்களை கொஞ்சி கொண்டே நீ ரொம்ப அழகா இருக்கடி அழகி! என பார்க்க..
அதே நேரம் ஒரு குட்டி நாய் அவளின் காலை நக்கியது. அச்சோ! குட்டி பப்பி கூடவா! என ரிதம் கொஞ்ச பால்கனி பக்கம் ஏதோ சத்தம் கேட்டது.
உடனே பால்கனி பக்கம் சென்றாள். அங்கே நிறைய லவ் பேர்ட்ஸ் மற்றும் வீட்டில் வளர்க்கக்கூடிய செல்ல பிராணிகள் மொத்தமும் அங்கு இருந்தது.
ரிதம் ஆசை தீர கொஞ்சிக் கொண்டே சந்தோஷமாக இருந்தாள்.உடனே நிதுனுக்கு மெசேஜ் செய்து கொண்டிருக்க..
அந்த குட்டி நாய் ரிதமை சுற்றியது. ஹே குட்டி நம்ம வாக்கிங் போலாமா? என்று கதவை திறந்து கொண்டு வெளியே வர.
அந்த நேரம் கார்த்திக் மைவிழி வீட்டின் வெளியே ஒரு சின்ன தீப விளக்கு விளக்கு எரிந்து கொண்டிருக்க
ரிதம், சிவன்யா இந்த வீட்டுக்கு வந்திருக்காளா? அவள் தனியா வந்திருப்பா போலயே! என்னன்னு கேட்போம்! என காலிங் பெல் அடித்தாள்..
அதற்குள் நாய் குட்டி அதனுடைய சங்கிலியில் சுற்றி கொள்ள கீழே குனிந்து அதை எடுத்து விடவும்…
சத்ய தேவ் கதவை திறந்து யாரு என கேட்க…
கீழே ரிதம்… நீயா?
சத்ய தேவ், நீ!. இங்கே?
தொடரும்..
Comment pannunga ratings konjam like share pannunga
உனக்கும் எனக்கும் படிச்சு பாருங்க பிடிக்கும்.
EPISODE 25
சத்ய தேவ் கதவை திறந்து யாரு என கேட்க…
ரிதம் தன்னுடைய நாய் குட்டியை கொஞ்சி கொண்டே நீயா? நீ இங்கே என்ன பண்ற?
சத்ய தேவ் சத்தம் வந்த இடத்தை பார்த்தவன். நீ! நீ எங்கே இங்கே வந்த?
ரிதம் அவனை முறைத்து பார்த்து நாய் குட்டியை தூக்கி கொஞ்சியவள். சிவி இருக்கா ன்னு நினைச்சு வந்தேன். பட் நீ இருப்பன்னு தெரிஞ்சிருந்தால் நான் இங்கே வந்திருக்க மாட்டேன். என சொல்லி விட்டு வேகமாக நாயை கூட்டி கொண்டு வாக்கிங் சென்றாள்.
சத்ய தேவ் உள்ளே சென்றவன். அன்னிக்கு அவள் கிட்ட தப்பா நடந்திட்டோம்! அதுக்கு அவள் கிட்ட சாரி கேட்டிடுலாம் என வெளியே சென்றான்.
ரிதம் அந்த நாய் குட்டியை கொஞ்சி கொண்டே சொசைட்டி பார்க்கை ஒரு வட்டம் அடித்து விட்டு வெளியே இருக்கும் சூப்பர் மார்கெட்டில் நாய் குட்டி சாப்பிடுவதற்கு தேவையான உணவுகளை வாங்கினாள். அந்த குட்டி குரைத்து கொண்டே ரிதமை வட்டமடித்தது.
ரிதம் கண்ணகுளி தெரிய சிரித்தவள். குட்டி பேபி உனக்கு ஒரு பேர் வைக்கணுமே! என்ன வைக்கலாம்? ஹான் நாளைக்கு மித்து பையன், சிவி, நிவா, வெற்றி எல்லார் முன்னாடியும் உனக்கு நேமிங் செரமணி பங்ஷன் வச்சு கொண்டாடனும்! என சொல்லி கொண்டே அந்த நாய் குட்டியை கொஞ்சி கொண்டே அவளுடைய அப்பார்ட்மென்ட்டுக்கு வந்தாள்.
சத்ய தேவ் அவள் வரும் வரை காத்திருந்தான். ரிதம்!. என அழைக்க..
அவள் கண்டு கொள்ளாமல் கதவை திறந்து உள்ளே செல்ல..
ரிதம் நில்லு! உன் கிட்ட கொஞ்சம் பேசணும்! என ஒரு வித தயக்கத்துடன் நின்றான்.
உன் கிட்ட பேச எனக்கு ஒன்னும் இல்ல.. சோ போ!.
சத்ய தேவ், ஹே அன்னிக்கு மழையில் மாடியில் உன் கிட்ட அப் அப்படி! என அவன் நினைவுகள் ஒரு நிமிடம் அங்கே செல்ல..
ரிதமின் உடல் எங்கும் சாக் அடித்தது போல ஒரு உணர்வு! அவள் உதட்டை கடித்து உணர்வை அடக்கியவள். ஹே என்ன? டிராமா கிரியேட் பண்ணிட்டு வந்து நிக்கிறயா! உன் கிட்ட பேச நான் தயாராக இல்ல.. என கதவை சாத்த போக..
சத்ய தேவ், சாரி! என்னை மன்னிச்சிடு! அன்னிக்கு உன் கிட்ட..
ச்ச! டிஸ்காஸ்டிங்! அதை திரும்ப திரும்ப எதுக்கு பேசுற?
சத்ய தேவ் மிகவும் பணிவுடன் “எனக்கும் புரியுது. நீ நிதின்க்கு சொந்தமானவள். உன் கிட்ட நான் அப்படி நடந்து இருக்க கூடாது. நான் பண்ணது தப்பு எதோ ஒரு கோபத்தில் பண்ணிட்டேன். பிளீஸ் ஃபர்கிவ் மி ரிதம். ”
“ஓ பார்கிவ் பண்ணனுமா? உன்னோட பார்கிவ்ல எனக்கு என்ன profit இருக்கு சொல்லு! அப்படி இல்லாம தான் என்னையும் என்னோட நிதினையும் மாட்டி விட்டியா? யாரு டா நீ! உன்னை பார்க்க பார்க்க ச்சீ! உன் கிட்ட பேசி என்னால் டைம் வேஸ்ட் பண்ண முடியாது. எனக்கு ரொம்ப பசிக்குது. என் குட்டி பப்பிக்கும் ரொம்ப பசி சோ என்னை டிஸ்டப் பண்ணாத!” என அவள் உள்ளே செல்ல போக..
ஹே ரிதம் ஒரு நிமிசம் நான் உனக்கு சமைச்சு எடுத்து வரவா!
ரிதம் புருவம் நெருக்கி கொண்டே என்ன? சமைக்க போறியா?
ஹான்! நான் தான் தப்பு பண்ணிட்டேன். அதுக்காக உனக்கு சமைச்சு தரேன். என சத்ய தேவ் அவளை பார்க்க..
ரிதம், அப்டியா! மிஸ்டர் ஜீவ காருன்ய ஒழுக்க சீலரே நான் அசைவ பிரியை so மட்டன் பிரியாணி, அண்ட் சிந்தாமணி சிக்கன், அப்புறம் தண்ணி குழம்பு அண்ட் காடை ரோஸ்ட் அப்புறம் பச்சை புளி ரசம், இரத்த பொரியல் இது எல்லாம் மகி மாமி கையில் சாப்பிட்டது. சோ இதை எல்லாம் நீ செஞ்சு கொடு நான் பார்கிவ் பண்றேன்.
சத்ய தேவ் அவளை பேச்சற்று பார்த்தான்.
ரிதம் கண்ணகுளி தெரிய சிரித்து கொண்டே என்ன மிஸ்டர் அப்படியே ஆஃப் ஆகிட்டிங்க? என்ன ஆச்சு? என கையை கட்டி கொண்டே கேட்டாள்.
சத்ய தேவ், நான் அது!..
ரிதம் சிரித்து கொண்டே என் கிட்ட இருக்குற பெட்ஸ்க்கு கீழே எதாவது லிவிங் beings இருந்தால் அதுக்கு கீழே தான் உன்னை வச்சு பார்ப்பேன். நீ டைப் டைப்பா நடிப்ப டா! உன்னை பத்தி எனக்கு தெரியாதா! என்ன? போ போய் உன் வேலை dash-அ பாரு! என்று கதவை சாத்திட செல்ல .
சரி இது எல்லாமே செய்து தரேன். எப்போ செய்யணும்? இப்போ உடனே வேணுமா! என சத்ய தேவ் கேட்க.
உடனே ரிதமுக்கு புரை ஏறியது. என்ன? என்ன சொன்ன?
சத்ய தேவ், செஞ்சு தரேன். நான் பண்ணது தப்பு! என்னோட தவறை மாற்ற முடியாது. ஆனால் அதை மறக்க வைக்க முடியும். அது தான்! உனக்கு செஞ்சு தரேன். அதுக்கு அப்புறம் உன்னை கழுத்தில் கடித்த கில்ட் feel எனக்கு இருக்காது. என தீவிரமாக கூறினான்.
ரிதம் கைகளை இறுக்கி மடக்கி அவளுடைய உணர்வுகளை கட்டு படுத்தி கொண்டே நாளைக்கு காலையில பண்ணி தா! என்று சொல்லி வெடுக்கென கதவை சாத்த..
சத்ய தேவ், அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி! என்னை மன்னிச்சிடுங்க இறைவா என வேண்டி கொண்டே பூஜை அறை சென்றவன் நாளை அசைவ உணவை அவளுக்கு சமைத்து கொடுக்க போகிறோமே என்று மிகவும் துக்கத்துடன் திருநீற்றை எடுத்து அவனுடைய நெற்றியில் பட்டை போட்டு ஜீவ காருண்ய ஒழுக்கத்தை படிக்க ஆரம்பித்தான்.
நீ சொன்ன மாதிரியே அவளுக்கு பிடிச்சதை கிப்ட் பண்ணிட்டேன். இப்போ அடுத்து என்ன பண்ணனும்? என நிதின் தன்னுடைய தங்கை கனியிடம் கேட்டான்.
கணி சிரித்து கொண்டே இப்போதைக்கு இது போதும் அண்ணயா! அவள் உங்களை கண்டுக்க மாட்டாள். உங்க ஒர்க்ல கான்சன்ட்றெட் பண்ணுங்க!
நிதின் கொஞ்சம் பதட்டத்துடன் எனக்கு இதில் முன் அனுபவம் இல்ல கனி! நான் எப்டி?
கனி, உங்களுக்கு நான் இருக்கேன். எல்லாம் தன்னால் நடக்கும்! எதுக்கும் கவலை பட வேணாம்! இந்த official project and personal project ரெண்டையும் வெற்றிகரமாக முடிச்சிட்டு தான் நம்ம ஊருக்கு வரனும்.
நிதின், no நடுவில் கொஞ்சம் ஊருக்கு போகனும். எனக்கு மிதுனை பார்க்காமல் இருக்க முடியாது. அவனை நான் இப்போ கூட மிஸ் பண்றேன். என் கூடவே அவனை செக்கரட்ரில போட எவ்வளவோ டிரை பண்ணேன். ஆனால் அந்த சூர்ய தேவ் விடல… அதே போல என் மகிய பார்க்காமல் என்னால் இருக்க முடியாது. நான் இல்லாத நேரம் அந்த சத்ய தேவ் மகி கிட்ட வந்து சேர்ந்து கொண்டால் அதை என்னால் டைஜஸ்ட் பண்ண முடியாது.
கனி கொஞ்சம் தீவிரத்துடன் சரி சரி நான் சொல்றேன். அதுக்கு ஆப்ட்டா நீங்க போய் பார்த்திட்டு வாங்க என டெல்லியில் அவர்களுடைய இல்லத்துக்கு சென்றார்கள்.
ஹே என்ன டி ஒரு தடவை கூட போன் பேச மாட்ற இப்போ கூட மேசேஜ் தான் பண்ற? என சத்ய தேவ் ஹரிணியிடம் கேட்க..
ஹரிணி களைப்புடன் எனக்கு ரொம்ப டயர்ட் சத்யா! இங்கே அலைச்சல் அதிகம்! அடிக்கடி எங்கே பார்த்தாலும் திருட்டு போலீஸ் station எல்லாம் நம்ம ஊர் போல இல்ல.. இது யூனியன் டெர்ரிடெர்ரி அதனால் கேஸ் ஒவ்வொரு ஸ்ட்டேஷனா ஜம்ப் ஆகி கை மாத்தி போய் கிட்டே இருக்கு இங்கே யாருக்கு பவர் இருக்குன்னு தெரிஞ்சுக்கவே ரொம்ப டைம் ஆகும் போல!
சத்ய தேவ், எனக்கும் மனசு எதோ போல இருக்கு நீ பேசாமல் வந்திடு! உன்னை பார்க்கணும் போல இருக்கு!
ஹரிணி, அது முடியாது. நாளையில் இருந்து என்னோட ஒர்க் ஸ்டார்ட் ஆக போகுது. நாளைக்கு மீட்டிங் இருக்கு! இப்போ நான் நினைச்சாலும் வர முடியாது. சத்யா!
சரி எனக்கு புரியுது! நீ ஒர்க் பாரு நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.
ஹரிணி, அதுக்குன்னு போன் பண்ணாம இருக்காத! டெய்லி உன் மெஸேஜ் தான் எனக்கு பூஸ்ட் என்று கூறினாள்.
சத்ய தேவ் புன்னகையுடன் சரி பண்றேன் என் ஹனி!
ஹரிணி கொஞ்சம் உள்ளே போன குரலில் அன்னிக்கு நைட் அந்த ஹைடன் சிக் மேஜிக் மாதிரி இருந்தது. நீயும் நானும் ஒண்ணா ஜாலியா இருந்த அந்த மொமன்ட் அதை நினைக்க நினைக்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு!
சத்ய தேவ், எனக்கும் தான் என்று கூறியவன் நினைவில் ரிதம் வாசனை மழையுடன் உள்ளே மீன் முள் போல குத்த உடனே அமைதி ஆகி விட்டான்.
அவன் அமைதியை பார்த்து சாரி சத்யா! இதை நியாபக படுத்தி இருக்க கூடாது. லவ் யூ சத்யா! என சொல்லி விட்டு போனை வைக்க.. மீ டூ என்று கூறி வைத்தவனுக்கு மனம் எல்லாம் குற்ற உணர்வாக இருந்தது.
அந்த நேரம் அடுத்த கால் சூர்யா அதன் பின் இதழ், பவா, இனியா, நிலா என அனைவரும் கான்ஃப்ரன்ஸ் போட்டு பேசி விட்டு வைக்க விடு பட்ட ருத்ரன் சத்ய தேவ்க்கு தனியாக அழைத்தான்.
மாமா!
மம் தீரா!
இப்போ எங்கே இருக்கீங்க? என ருத்ரன் கேட்க..
நான் பெங்களூர் என்று கூறினான்.
நானும் வந்துட்டேன் மாமா! NET படிக்க போறேன்.
சூப்பர் தீரா! என கூறிய சத்ய தேவ் அவனிடம் தயங்கி கொண்டே தீரா உன் கிட்ட ஒரு விசயம் கேட்கணும்?
என்ன மாமா?
சத்ய தேவ், நீ ஒரு பொண்ணை கிஸ் பண்ணிருக்கியா!.
மாமா! நீங் எதோ சொன்னீங்க அது எனக்கு ராங்கா..
சத்ய தேவ், சாரி தீரா அதாவ்து ரெண்டு பொண்ணை கிஸ் பண்ணிருக்கயா?
நானா! மாமா! என்ன மாமா இது கேள்வி! நான் என்னை போய் இப்படி ஒரு கேள்வி! நான் என்னோட கோல்ட் ஃபிஷ் அ கூட கிஸ்! அது மூணு தடவை தான் கிஸ் பண்ணி இருக்கேன். ஆனால் நிறைய பொண்ணு? இதை போய் என்னை பார்த்து கேட்கிறீங்க? உங்க தம்பி மிதுன் கிட்ட கேளுங்க! எங்கே பார்த்தாலும் பொண்ணுங்க கூட தான் இருக்காப்ல! அவளுகளும் வந்து வழிய வழிய பேசுறாலுங்க! என ருத்ரன் கேட்டு கொண்டே போக..
சத்ய தேவ், உனக்கு தெரியுமா தெரியாதா?
ருத்ரன், அதை விடுங்க ஆமா நீங்க என்ன இதை பத்தி கேட்கிறீங்க? அப்போ ஹனி அக்காவை தவிர யாரை கிஸ் பண்ணீங்க? இதை நான் சும்மா விட மாட்டேன். மாமா! எங்கே இருக்கீங்க வரேன் இப்போவே வரேன்.
டேய் டேய் இரு டா! அது கனவில் ஒருத்தி எப்போ பாரு கிஸ் பண்ற மாதிரியே வருது! என சத்ய தேவ் சொல்ல..
அதற்கு ருத்ரன்…?
தொடரும்..
Comment pannunga ratings konjam like share pannunga
EPISODE 26
டேய் டேய் இரு டா! அது கனவில் ஒருத்தி எப்போ பாரு கிஸ் பண்ற மாதிரியே வருது! என சத்ய தேவ் சொல்ல..
என்ன? என்ன மாமா சொல்றீங்க? அது ஹரிணி அக்கா தான? என ருத்ரன் சொல்ல…
சத்ய தேவ் ஒரு பெரு மூச்சை விட்டு இல்ல டா ருத்ரா! அவள் அவள் பேரு சதி!
என்ன சதியா? என ருத்ரன் கேட்க..
ஆமா! டா!
மாமா நீ எங்கேயோ போயிட்ட? அவளை நேரில் பார்த்தயா? ஹனி அக்காவுக்கு தெரியுமா? என ருத்ரன் கேட்க..
இல்ல டா!..
பொய் சொல்லாத மாமா! ஒரு பொண்ணா இல்ல நிறைய பொண்ணா கனவில் என்ன நடந்தது? என ருத்ரன் சிரித்தான்.
டேய் நான் எவ்ளோ சீரியஸா சொல்லிட்டு இருக்கேன் உனக்கு சிரிப்பா இருக்கா!.
ருத்ரன் சிரித்து கொண்டே மாமா அது wet dreams உங்களுக்கு தெரியாதா?
டேய் ருத்ரா! என்ன டா அடி மட்டம் வரைக்கும் போயிருக்க?
ருத்ரன், மாமா நான் வரவா? எதுவும் intrest ஆ!
ருத்ரா! என் என்ன சொல்ல வர? நீ சொல்ற சுதியே தெரில!. என சத்ய தேவ் கேட்க..
மாமா! நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல, அது வந்து உனக்கு பொண்ணுங்க சைக்காலஜி சொல்லி கொடுக்க நினைச்சேன். நாளைக்கு வரவா?
நாளைக்கா? நீ எக்சாம்க்கு பிரிபேர் பண்றேன்னு சொன்ன என சத்ய தேவ் கேக்க..
மாமா நான் எல்லாம் புக்கே கரைச்சு குடிச்சவன். நீ சொல்லு மாமா! நான் இப்போ கூட வரேன். அனாடமி கூட..
டேய்!.
மாமா! இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சா தான் நாளைக்கு ஹெல்ப் பண்ணும் என ருத்ரன் கூற..
டேய் போதும் போதும் எனக்கு தூக்கம் வருது.
மாமா ஒருவேளை தூக்கம் வரலைன்னா? என தீரா சொல்ல..
டேய் நீ ரொம்ப ரொம்ப ஓவரா போற? நான் வைக்கிறேன்.
மாமா மாமா! இரு ஒரு வேளை தூக்கம் வரலைன்னா நீ ஹனி அக்கா கிட்ட போன் பேசு! அப்புறம்..
போதும்! போதும்! என சத்ய தேவ் போனை வைத்தான்.
சத்ய தேவ் படுக்கையில் படுத்து கொண்டே நாளைக்கு அந்த அசைவ உணவை ரிதமுக்கு செய்து கொடுப்பதை நினைத்து அவனுக்கு மிகவும் கவலையாக இருந்தது. அதை விட இப்போது ருத்ரன் சொன்னது தான் மீண்டும் மீண்டும் தோன்றியது. கண்ணை மூடினான். ரிதம் மழையில் நனைந்து கொண்டு நின்றதும் அவளின் பார்வையும் அவளின் வாசமும்! ச்ச! இது ஏன் இப்படி தோணுது! அவளை நான் இப்படி சபலமா நினைக்கிறேனே! ச்ச! ஏன் இப்படி தோணுது! அவளை அவளை நான் இனி தங்கச்சியா நினைக்க போறேன். என படுக்கையில் உருண்டு படுத்தான்.
(என்ன தங்கச்சியா? கொடுமை எல்லாம் என் நேரம்)
அடுத்த நாள் கொஞ்சம் பரபரப்புடன் விடிந்தது. சத்ய தேவ் ஒரு விவகாரமான விசயத்தை செய்ய போகிறான். அதற்கு இப்போவே அடிக்கல் நாட்டும் விதமாக சிக்கன், மட்டன், மீன் என அதனுடன் அந்த பொருளையும் வாங்கி வந்தான்.
தன் ஆத்தா உமாவுக்கு போன் செய்து எப்படி அசைவ குழம்பு செய்ய வேண்டும்? என அனைத்தையும் கேட்டு குறிப்பு எடுத்தான்.
என்ன தங்கம் அப்போ கறி இன்னில் இருந்து சேர்த்துக்க போறியா! என உமா கேட்க .
இல்லங் ஆத்தா நியூஸ் சேனல்க்கு டாக்குமென்றி பண்ணனும்! அதுக்குதாங்க கேட்டேன். என சத்ய தேவ் பணிவுடன் கூற…
உமா கொஞ்சம் கவலையுடன் என்ன தங்கம்! சரி ஓகே ஒரு வேளை மனசு மாறினால் ஊருக்கு வாங்க ஆத்தா உங்களுக்கு எல்லாமே செஞ்சு தரேன். என கூற
சரிங்க ஆத்தா! தாத்தாவை கேட்டென்னு சொல்லுங்க நான் உங்களை பார்க்க வரேன். என போனை வைத்தான்.
அதன் பின் அனைத்து உணவையும் மனதை கல்லாக்கி கொண்டு கழுவி அதற்குண்டான பொருள் அனைத்தையும் தயார் செய்ய ஆரம்பித்தான்.
மணி பார்த்தான். ஒன்பதை கடந்து இருக்க அய்யோ காலையில் இது அத்தனையும் செய்ய முடியாது. அதனால் மதியம் சாப்பிட சொல்லிடலாம். எதுக்கும் அவள் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திடலாம். என சத்ய தேவ் ரிதமின் வீட்டு கதவை தட்டி காலிங் பெல் அடித்தான்.
வெகு நேரம் கழித்து கதவு திறந்தது. அது சாரி மா! மணி ஒன்பது தாண்டிடுச்சு! அதனால் மதிய சாப்பாடா செஞ்சிடவா! இதெல்லாம் புதுசா சமைக்கிறென் அதனால் கொஞ்சம் பதட்டமா இருக்கு என சொல்ல..
அவள் கண்ணை தேய்த்து கொண்டே சரி நீ செஞ்சிட்டு சொல்லு அண்ட் முக்கியமா உப்பு கறி தண்ணி சூப் வரும் போது சொல்லு நான் அதை குடிக்க வரேன். பாதி கதவை திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டியவள். அவன் சொன்ன விசயத்தை கேட்டதும் நன்றாக கதவை திறந்து சொல்ல
சரி மா என அடுத்து பேச வந்தவன் அவளுடைய உடையையும் தோரணையையும் பார்த்து சட்டென திரும்பி கொண்டான்.
ரிதம் கழுத்து இன்னும் கொஞ்சம் இறக்கத்துடன் ஒரு கை இல்லாத பனியன். முட்டிக்கு மேல் ட்ரவுசர்ஸ் மட்டும் தான் அணிந்து இருந்தாள்.
ரிதம் திடுக்கிட்டு ஹே இப்போ எதுக்கு திரும்பி போற?
ஒன்னும் இல்ல மா! என சத்ய தேவ் உள்ளே சென்று கதவை சாத்தி கொண்டான்.
ரிதம் கோபத்துடன் எதுக்கு இப்போ புதுசா மா! வந்து எல்லா வார்த்தையிலும் ஒட்டி வருது? இவனை? என கடுப்புடன் கதவை அடைத்து மீண்டும் படுக்கையில் விழுந்தவள். தூக்கத்தை countinue செய்தாள்.
அதன் பின் மதியம் 11.30 க்கு எழுந்தாள். கஷ்ட பட்டு ப்ரஷ் செய்தாள். நல்லா சுட சுட ஒரு பிளாக் காபி கிடைச்சா நல்லா இருக்குமே! ஹான் இப்போதைக்கு நமக்கு ஒரு அடிமை சிக்கி இருக்கான். இப்போ நம்ம எதுக்கு காபி குடிக்கணும். ஒரு டம்லர் சூப் குடிப்போம் என முகத்தை கழுவி கொண்டு அவளுக்கே அடங்காத முடியை தூக்கி சுருட்டி உச்சந்தலையில் கொண்டை போட்டவள். தன் அப்பாவுக்கு கால் செய்து பேச ஆரம்பித்தாள்.
இங்கே சத்ய தேவ் மூக்கில் மாஸ்க் போட்டு கொண்டு அனைத்தையும் தயார் செய்தான். அந்த நேரம் போன் வந்தது. வேற யார் ருத்ரன் தான்!
சொல்லு டா தீரா! இப்போ தான் தூங்கி எழுந்தியா?
மாமா! யாரை பார்த்து என்ன பேசுறீங்க? நமக்கு ஆறு மணிக்கு மேல படுக்கையில் இருக்க முடியுமா? சொல்லுங்க! நான் ஆறு மணிக்கு எழுந்து காலையிலேயே கோவிலுக்கு போயிட்டு எட்டு மணிக்கு என் அம்மா செஞ்ச வெண்பொங்கல், மெது வடை சாப்டன். இப்போ தூக்கம் வர கூடாதுன்னு உங்களுக்கு கால் பண்ணேன்.
அப்படியா என்ன விசயம்?
ருத்ரன் அங்கிருந்து எட்ட வந்தவன். மாமா அந்த சதி பத்தி சொன்னீங்களே நேத்து நைட்டு கூட கனவில் வந்தாங்களா?
சத்ய தேவ், இப்போ சொல்லியே ஆகணுமா?
மாமா! பிளீஸ்! சொல்லுங்க! எனக்கு எப்படி புரண்டாலும் கோல்ட் ஃபிஷ் மட்டும் தான் வரா! ஆனால் உங்களுக்கு ஒரு பொண்ணு வந்து முத்தம் கொடுக்குது! அப்படியே போன் நம்பர் கேளுங்க
ஏன்?
ஒரெட்டு போய் ரதியா? சதியான்னு பாத்திட்டு வந்திடுவோம்!
சத்ய தேவ் சிரித்து கொண்டே அடுத்த முறை கேட்டு சொல்றேன். என கூற
அந்த நேரம் காலிங் பெல் அடித்தது.
ருத்ரன், மாமா நீ free யா வரவா?
சத்ய தேவ் திடுக்கிட்டு இல்ல டா தீரா நான் இன்னிக்கி ரொம்ப பிஸி நம்ம நாளைக்கு மீட் பண்ணலாம். உங்க டாடிய பார்க்க வரனும்.
ஹான் வாங்க! அவரு இங்கே தான் எங்கேயாவது ஓரமா இருப்பாரு! பார்த்திட்டு போங்க! என போனை வைத்தான்.
இங்கே சத்ய தேவ் கதவை திறக்க அங்கே ரிதம் இருந்தாள்.
என்ன டா பண்ற? உன்னை பார்த்தால் மன்னிப்பு கேட்கிற மாதிரி தெரியல..
சத்ய தேவ், இல்ல மா சாரி மா! என்ன மா வேணும்? என முதுகை காட்டி பேச ஆரம்பித்தான்.
ரிதம், என்ன டா பண்ற? திரும்பி நிக்கிற?
உங்களுக்கு என்ன வேணும் மா?
ரிதம், சூப்பு ரெடியா? அதை குடிக்க வந்தேன்.
இதோ மா! என அவன் உள்ளே செல்ல ரிதம் அவன் பின்னால் சென்றாள்.
அங்கே டீப்பாயில் உள்ள பொருளை பார்த்ததும். என்ன கலர் கலரா இருக்கு? இது இதை எங்கேயோ பார்த்திருக்கேனே? என ரிதம் அந்த டீப்பாயின் மீது இருந்த அனைத்தையும் போட்டோ எடுத்து கூகிள் லென்சில் சர்ச் செய்ய அதில் வந்த ரிசல்ட்!.
Oh f*.. என மூக்கு விடைக்க கோபம் ஏறியது. அப்படி என்னவா இருக்கும்? உடனே ரிதம் கோபத்தை கட்டு படுத்தி கொண்டு திரும்ப சத்ய தேவ் தரையை பார்த்து கொண்டே அவளின் அருகில் வந்து சூப் பவுளை நீட்டினான்.
நீ எனக்கு மட்டும் தான் சமைக்க போறியா? இல்ல உன் தொங்கச்சிகள் அந்த நிலா, பவா கூடவே அந்த ருத்ரன் நாய் எல்லாம் வர போகுதா!
இல்ல மா உனக்கு மட்டும் தான்! என சத்ய தேவ் கூறினான்.
ரிதம் டென்ஷனாகி என்ன டா? வார்த்தைக்கு வார்த்தை மா சொல்ற?
ஒரு மரியாதைக்கு மா!.
ரிதம் கடுப்புடன் நான்சென்ஸ்
இல்ல ரிதம் அது அப்படி இல்ல மா!. என சத்ய தேவ் சொல்ல வர..
ரிதம், டேய் இமிடியட்டா அந்த “மா” அதை கட் பண்ற? என்று திட்டி கொண்டே சூப் கிண்ணத்தை எடுத்து கொண்டு அவளின் வீட்டுக்கு சென்றாள்.
சத்ய தேவ் அவள் சென்றதும் கதவை அடைத்தான்.
ரிதம் ஒன்றும் புரியாமல் என்ன ஒரு மார்க்கமா சுத்துறான். இவன் நடவடிக்கை கொஞ்சம் கூட சரி இல்லையே! என உடனே சிவன்யாவுக்கு அழைத்தாள்.
சொல்லு டி?
ரிதம், எனக்கு எனக்கு ஒரு டவுட்டு?
என்ன?
அது ஒன்னும் இல்ல நிதின், மிதுன், வெற்றி நிவாஸ் எல்லாம் வருஷத்தில் ஒரு நாள் மட்டும் உனக்கு கிப்ட் வாங்கி தருவாங்கலே அது கையில் கூட நீ இதழ் எல்லாம் எதுவோ கட்டி விடுவீங்க அது என்ன?
ராக்கி கயிரா? என சிவி கேட்க.
அதே தான்! சரி அதை ஒரு பையன் brother sister ரிலேசன்ஷிப் இல்லாத ஒரு பொண்ணுக்கு கட்டினால் என்ன அர்த்தம்?
இதை கேட்டதும் சிவன்யா சிரிக்க ஆரம்பிக்க..
ஹே சொல்லு டி? எனக்கு இதெல்லாம் தெரியாது. நான் அந்த ருத்ரனுக்கு கட்டினதே இல்ல! சொல்லு டி! எனக்கு குழப்பமா இருக்கு! என ரிதம் கேட்க..
சிவன்யா சொல்ல வர..
உடனே இதழ், அக்கா நான் சொல்றேன். ஹே ரிதம் அந்த பையன் அந்த தெரியாத stranger பொன்னை தங்கையாகவோ அக்காவாகவோ அந்த ராக்கி கட்டி விட சொல்லி சகோதர சகோதரி ஆக போறாங்கன்னு அர்த்தம்! என கூற..
What the f* என ரிதம் வீடே அதிரும் படி கத்தினாள்.
ஹே காது கூசுது! என சிவன்யா பேச வர.. ரிதம் போனை கட் செய்தாள்.
இதழ் உதடு மச்சம் மின்ன சிரிக்க..
எதுக்கு பாப்பா சிரிக்கிற? என சிவி கேட்க..
இதழ், இது கூட தெரியாமல் சுத்திட்டூ இருக்கா! அப்போ யாருக்கோ ரிதம் ராக்கி கட்டி விட போறா?
நெவர் நெவர் நெவர்!. அய்யோ! என ரிதம் அங்கும் இங்கும் நடக்க ஆரம்பித்தாள்.
இவனை பேசாமல் கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிடலாமா? அய்யோ என ரிதம் புலம்பி கொண்டிருக்க..
அந்த நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டது.
இவனை இன்னிக்கி எதுவும் பண்ணியே ஆகணும்! என ரிதம் கதவை திறக்க சென்றாள்.
தொடரும்..
EPISODE 27
இவனை பேசாமல் கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிடலாமா? அய்யோ என ரிதம் புலம்பி கொண்டிருக்க.. அந்த நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டது. அவனா தான் இருக்கும்! இவனை இன்னிக்கி எதுவும் பண்ணியே ஆகணும்! என நினைத்துக் கொண்டே ரிதம் கதவை திறக்க..
அங்கே சத்ய தேவ் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் ரிதமுக்கு கோபம் வர அதை வெளிக்காட்டி கொள்ளாமல் என்ன விஷயம்? என்று கேட்க.. அதுக்கு அவன் “ அது சாப்பிட எல்லாமே ரெடியாயிடுச்சு உன்ன கூப்பிடறதுக்கு தான் வந்தேன்” ன்னு சொன்னான்.
நீ போ நான் வரேன்! என்று ரிதம் கதவை அடைத்து விட்டு அவள் எல்லா வேலையும் முடித்து விட்டு புன்னகையுடன் வர, இங்கே சத்ய தேவ் உணவுகளை எடுத்து வைத்தான். உள்ளே வரலாமா? என கேட்க..வாங்க என்று மரியாதையுடன் அவன் ஒரு சொம்பு தண்ணீருடன் அவள் முன் நீட்ட…
அவள் அதை வாங்காமல் “இந்த ஐட்டம் எல்லாத்தையும் தனி தனியா ஹாட் பாக்ஸில் போட்டு பேக் பண்ணி எனக்கு வீட்டுக்கு கொண்டு வந்து வை நான் சாப்பிட்டுக்கிறேன்.” என அவள் சொல்லி விட்டு வீட்டுக்கு கிளம்ப.
ரிதம் சொன்னதைப் போலவே அவன் அனைத்து உணவுகளையும் தனித்தனியாக ஹாட் பாக்ஸில் எடுத்து வைத்து பேக் செய்து அவளின் வீட்டின் கதவைத் தட்டினான். அவள் திறக்க.. “நீ சொன்ன மாதிரி செஞ்சுட்டென்!” என அவன் சொல்ல..
“ஹான் எல்லாத்தையும் உள்ளே போய் வை”சொல்லிக் கொண்டே அவள் சோபாவில் அமர்ந்து கொள்ள..
சத்யதேவ் அனைத்தையும் டைனிங் டேபிளின் மீது வைத்தான். “இப்ப நீ கிளம்பலாம்!” என்று சொன்னவள். அவன் வெளியே சென்றதும் கதவை அப்படியே விட்டுவிட்டு நேராக சமையலறை சென்றாள்.அங்கு இருக்கும் உணவுகளை ஒரு தட்டில் எடுத்து முதலில் பிரியாணி, அதன் பின் கொஞ்சம் சாதத்தில் தண்ணி குழம்பு ஊற்றி பிசைந்து அது கொஞ்சம், ரத்த பொரியல், சிக்கன் என அனைத்தையும் அந்த தட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வைத்து கைகளை கழுவி விட்டு “சக்தி உனக்கு ராஜ விருந்துடா எப்படி இருக்குதுன்னு டேஸ்ட் பார்த்துட்டு நீ ரிதம் கிட்ட சொல்லணும்! சரியா?” என அந்த பிளேட்டை எடுத்துக் கொண்டு பால்கனியில் கட்டப்பட்டிருந்த பப்பி நாய்க்குட்டியின் அருகில் வந்தாள்.
பப்பி வாசத்தைப் பிடித்து “என்ன இவ கையில ஏதோ சூப்பரான ஐட்டம் இருக்குது போலயே!” என்று நாக்கை தொங்கப் போட்டான்.
ரிதம் சிரித்துக்கொண்டே “பார்த்தியா சக்தி உனக்காக உங்க அண்ணன் சக்தி சமைச்சு கொண்டு வந்திருக்கான். இது எல்லாத்தையும் சாப்பிட்டு டேஸ்ட் பாரு! ஒரு வேலை உனக்கு எதுவும் ஆகலைன்னு வச்சுக்க, நான் சாப்பிடுறேன்!” என்று சொல்லிவிட்டு சக்தி என்று பெயர் வைக்கப்பட்ட நாய்குட்டிக்கு சாப்பிட வைத்தாள்.
“என்னடா சக்தி? அப்படியே பாக்குற! உனக்கு தான் எல்லாமே சாப்பிடுங்க! செல்லம், என் தங்க பட்டு தானே ! சக்தி கண்ணா சாப்பிடுங்கடா!” என்று சிரித்துக் கொண்டே கொஞ்சியவள். கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அவனையே பார்த்தாள். அந்த சக்தி என்கிற குட்டி பப்பியோ பாவமாக அந்த உணவுகள் அனைத்தையும் மோந்து பார்த்துவிட்டு ஒருவாய் சாப்பிட்டு உடனே ரிதமை பார்த்தது.
ரிதம் புருவத்தை நெருக்கிக் கொண்டே “என்ன ஆச்சு? என் சக்தி குட்டிக்கு? எதுக்கு இப்படி மோந்து பாத்துட்டு பின்னாடி போறீங்க? ” என்ன ஆச்சு? என்று கேட்க.. அந்த குட்டி பப்பி பாவமாக ரிதமை பார்த்தது. “அப்போ உங்க அண்ணன் என்னை எதுவும் பண்றதுக்கு இதில் ஏதாவது கலந்து இருக்கானா? அவனோட புத்தி அப்படித்தான்! உன்கிட்ட இருக்கிற நன்றி கூட அவங்க கிட்ட இல்ல பாத்தியா? என் கிட்ட மன்னிப்பு கேட்கரெண்ணு சொல்லிட்டு என்னென்ன வேலை பார்த்து வச்சிருக்கான்? பாத்தியா?” என்று கூறினாள்.
பாவம் அந்த குட்டி பப்பி இப்பொழுது என்ன செய்யும்? அது அப்படியே நம் பார்த்துக் கொண்டிருக்க, ரிதம் இத என்ன பண்ணலாம்? ஹான் எல்லா சாப்பாட்டையும் நான் டஸ்ட் பின்ல கொட்டிடறேன். என்று சொல்லிக் கொண்டு திரும்பி பார்க்க, அங்கே கோப கண்களுடன் சத்தியதேவ் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். ரிதம் அவனை கண்டுகொள்ளாமல் நேராக கிச்சன் செல்ல , “உன்னோட மனசுல என்னடி நெனச்சிட்டு இருக்க?” என்று உள்ளே அவளை நோக்கி வந்தான். “என்ன நினைக்க சொல்ற?” என்று ரிதம் கேட்க,
“எதுக்குடி நான் சமைச்சு கொடுத்த எல்லாத்தையும் கீழ கொட்ட போறேன்னு சொல்ற? இத முன்னாடியே சொல்லி இருக்கலாமே! உனக்காக நான் காலையில ஆறு மணிக்கு போய் அந்த மாமிசத்தை வாங்கிட்டு வந்து, கஷ்டப்பட்டு சமைத்து கொண்டு வந்து கொடுத்தா, நீ அதை கொட்ட போறேன்னு சொல்றியா? ” என்று அவனுக்கு கோபம் தலை தூக்க,
ரிதம் அலட்சிய பார்வையுடன் “இப்போ என்ன பண்ண சொல்ற? ஆமா எனக்கு பிடிக்கல! அதனால நான் கொட்ட போறேன்! உனக்கு என்னடா உன் வேலையை பார்த்துட்டு போ!” என்று கூறினாள்.
என்ன? என்னை வேலைய பாத்துட்டு போகவா? நான் வேலை பொழப்பில்லாம தான் உனக்கு செஞ்சு கொடுத்தேனா? எதுக்கு இப்படி நடந்துக்கிற? என்று சத்ய தேவ் கேட்க..
ரிதம் சிரித்துக்கொண்டே “எனக்கு என்ன தெரியும்? அதுல ஏதாவது கலந்து என்னை ஏதாவது பண்ணிட்டேனா? நான் என்ன பண்ண முடியும் ?அதனாலதான் நீ சமைச்சு வச்சத முதலில் என் பப்பிக்கி கொடுத்து செக் பண்ணேன் அது பேக் அடிகிது! அப்போ நிச்சயமா இதுல எதுவும் கலந்திருப்ப? நான் எதுக்கு சாப்பிடணும்?” என்று கூறினாள்.
சத்யதேவியின் கோபம் எல்லை மீற, அவள் பிரியாணியை எடுத்து டஸ்பின்ல கொட்ட கரண்டியை எடுத்தாள். அதை நன்றாக கிளறி விட்டு பிரியாணியை எடுத்து கொட்ட போக, சத்தியதேவ் அவள் கைகளை பிடித்தான். ஏ கையை விடு! என்று தட்டி விட..
“என்னடி பண்ற? அதுல நான் என்னத்த கலந்திருப்பேன் என்று நீ நினைக்கிற அந்த மாதிரி எல்லாம் நான் எதையும் கலக்கலடி!”-ன்னு சத்ய தேவ் சொல்ல,
“உன்னோட புத்தி ரொம்ப கேவலமான புத்தி டா! உன்ன நான் மன்னிப்பேன்னு நினைச்சியா? உன்னை ஏதாவது செஞ்சு கஷ்டப்படுத்துவதற்கு தான், இந்த மாதிரி பண்ணேன்! எப்படி அதோ அங்கே பால்கனியில படுத்திருக்கான் பாரு சக்தி! அவனுக்கே உன்னோட சாப்பாடு பிடிக்கல! அப்படின்னா பார்த்துக்கோ! அப்போ கண்டிப்பா நீ ஏதோ கலந்து இருக்க! உன்ன பத்தி எனக்கு தெரியும்டா!” என்று ரிதம் சொல்லிக் கொண்டே போக,
அவளின் கன்னத்தில் அடிக்க கை ஓங்கினான். என்னடா அடிக்க வர? கைய ஒடச்சு போடுவேன் நாயே! என்று ரிதம் திட்ட,
“யாரடி உனக்கு நாய் நீதான்டி! ஹான் அத சொல்ல கூட உனக்கு அருகதை இல்லை, நான் எவ்வளவோ, என்னோட கோபத்தை கட்டுப்படுத்திக்கிட்டு உன்கிட்ட ரொம்ப நல்லவிதமாக பேசினால், நீ ரொம்ப ரொம்ப ஓவரா போற, உன்னோட மனசுல என்னடி நினைச்சுட்டு இருக்க,” என்று சத்ய தேவ் கூற..
உன்னோட மனசுல என்னடா இருக்கு? இதுல ஏதோ நீ கலந்து இருக்க? என்னைய என்ன செய்ய பிளான் பண்ண? என்று கேட்க..
உன்னை எதுக்கு நான் ஏதாவது செய்யணும்? என்று அவன் கேட்க,
நடிக்காதடா! எனக்கு தெரியும்! நீ என்னை ஏதோ பண்றதுக்கு தான், இதுல கலந்து இருக்க! நான் சுயநினைவோட இருக்கும்போது உன்னால என்னை எதுவும் பண்ண முடியாது! அதனால ஏதாவது கலந்து கொடுத்து பண்ண பார்க்கிறதுக்கு தானே இதெல்லாம் செஞ்சுட்டு வந்து கொடுக்கிற என்று ரிதம் சொல்ல,
எதுக்கு நான் உன்னை ஏதாவது பண்ண போறேன்? என்று சத்ய தேவ் அதிர்ச்சியுடன் அவளை பார்க்க, ரிதம் சிரித்துக் கொண்டே“ நீ ஒரு கோழைன்னு எனக்கு தெரியும்டா! அதனாலதான் இந்த மாதிரி குறுக்கு புத்தி எல்லாம் உனக்கு அதிகமா இருக்கு! நிதின் கூட நேரா மோதாமல் அவனை பத்தி நியூஸ் ல போட்ட அப்போவே உன்னை பத்தி நான் தெரிஞ்சுக்கிட்டேன். நீ எவ்ளோ பெரிய கோழை-ன்னு” என்று இன்னும் புகையை கிளப்பி விட்டாள்.
அவ்வளவுதான் சத்ய தேவ்க்கு கோபம் மீற அவன் இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை.
ரிதம் மீண்டும் அந்த பிரியாணியை எடுத்து கொட்ட வர..
சத்யதே அவளின் கையில் இருந்து அந்த பாத்திரத்தை பிடுங்கி மேஜையில் வைத்தவன். நேராக வெளியே சென்றான். “ஹப்பா! போயிட்டான்” அவள் மீண்டும் பாத்திரத்தை எடுக்க போக,
சத்ய தேவ் அவளின் கையை இழுத்துக்கொண்டு படுக்கைக்கு சென்றான். என்னடா பண்ற? என்று அவள் கேட்க வர..
இன்னிக்கி உன்னை சும்மா விட மாட்டேன் டி! என்ன சொன்ன? நான் உனக்கு கோழையா? என்னை அவ்வளவு கேவலமா நினைச்சுட்டு இருக்கியா? என்று கோபத்துடன் அவளை படுக்கையில் தள்ளினான்.
டேய் விடு! அவள் திட்டி கொண்டே பார்க்க நான் உன்னை இன்னிக்கு சும்மா விட மாட்டேன் டி! என்று அவளின் கழுத்தை அழுத்திப் பிடித்தவன். அருகில் நெருங்கினான். சக்தி என்ன பண்ற? என்று கேட்டுக்கொண்டே அவள் நகர போக..
சத்தியதேவ் அவளின் இரு கைகளையும் அழுத்தி கோர்த்து பிடித்தான். இதழுக்கு அருகில் வந்தவன், உதட்டில் முத்தமிட ஆரம்பித்தான். கவ்வி இழுத்து கடித்தவன், என்ன சொன்ன நான்! நான் உனக்கு கோழையா! ஹான்! ஆன்சர் மி யூ இடியட்! என்ன டி நினைச்சுட்டு இருக்க? என மீண்டும் உதட்டை கவ்வி பிடித்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய கைகள் அவளின் இடையை பிடித்து நசுக்கியது. அவளின் வாசம் இன்னும் இன்னும் எதையோ தேட தூண்ட அவளின் இடையில் அழுத்தி கடித்தான். இப்போ பேசு டி! பேசு! என்று கடிக்க ஆரம்பித்தான். அவளின் கொண்டை அவிழ்ந்து விட அவனுடைய கைகள் அவளின் கார் குழலில் இறுக்கி பிடிக்க வலியில் ஸ்ஸஸ் என்று துடித்தாள்.
ரிதம் கண்ணை மூடி கிடக்க அவளின் வலியை ரசித்தவன். மீண்டும் உதட்டில் வண்மையுடன் முத்தமிட்டான். அவனுடைய முகம் அப்படியே அவளின் கழுத்தில் கடிக்க அடுத்ததாக அவன் அவளின் கழுத்துக்கு கீழே முன்னேற.. ஹே ரிதம் அவன் பார்க்க போறான்? என மூளை எச்சரிக்கை கொடுக்க வெடுக்கென கண்ணை திறந்தவள். அவனை முழு சக்தி கொண்டு தள்ளி விட்டாள்.
ரிதம் மூச்சு வாங்கி கொண்டே என்னை என்ன பண்ற? இதுக்கு தான் பிளான் போட்டு வந்தியா?
தொடரும்..
EPISODE 28
சத்ய தேவ் அசுர வேகமாக அடுத்த கட்டத்துக்கு முன்னேற ஹே ரிதம் அவன் பார்க்க போறான்? என அவளின் மூளை எச்சரிக்கை கொடுக்க வெடுக்கென கண்ணை திறந்தவள். அவனை முழு சக்தி கொண்டு தள்ளி விட்டாள்.
ரிதம் மூச்சு வாங்கி கொண்டே என்னை என்ன பண்ற? இதுக்கு தான் பிளான் போட்டு வந்தியா? என தூக்க பட்ட உடையையும் கை நழுவிப் போன டாப்பையும் சரி செய்து கொண்டே கூந்தலை பின்னால் போட்டு கொண்டு அவனை பார்த்தாள்.
சத்ய தேவ் கைகளை இறுக்கி கொண்டே எழுந்து அமர்ந்தவன். அவளை பார்த்து கொண்டே இருந்தான்.
“என்ன டா? என்ன அப்படி பார்க்கிற? அப்போ இதை தான் பிளான் பண்ணி இருக்க! உன்னோட அற்ப புத்தி எனக்கு தெரியும் டா சண்டாளா!”
“ஹே வாயை அடக்கு டி! இனி பேசின!”என சத்ய தேவ் அடுத்து சொல்ல வர..
“என்ன அடிக்க போறியா! வா வந்து அடி வாடா! உனக்கெல்லாம் நான் பயந்து போவேன்னு நினைச்சியா!”என ரிதம் கூறினாள்.
“ச்சீ! என்னோட மாமாவுக்கு இப்படி ஒரு பொண்ணா! உன்னை பார்க்கவே ஆத்திரமா இருக்கு! நான் அடிச்சா நீ செத்து போயிடுவ டி” அதான் என்னை கட்டு படுத்திட்டு இருக்கேன்.
ரிதம் உறுதியுடன் “நீ அடிச்சா நான் சாக மாட்டேன். நான் உயிரோட தான் இருப்பேன் நீ எவ்ளோ அடிச்சாலும் நான் நல்லா தான் இருப்பேன். நீ ஓவரா அடிச்சா நீ தான் செத்து போவ!” என்று சம்மதமே இல்லாமல் பேசினாள்.
சத்யதேவ் பற்களை கடித்துக்கொண்டு “எவ்வளவு தைரியம் இருந்தா அந்த நாய்க்கு என் பெயர் வச்சு கூப்பிடுவ? உன்னை எல்லாம் எதுவும் பண்ண முடியல! அந்த வருத்தத்துல இருக்கேன் என்று கூறினான்.
ரிதம் சிரித்துக்கொண்டே “உன்னை பார்த்தால் வருத்தத்தில் இருக்கிற மாதிரி எனக்கு தெரியலையே! வந்து வந்து என்னை என்னலாம் பண்ற? என்னடா நினைச்சுட்டு இருக்க? இதுக்கெல்லாம் உனக்கு நான் நித்தினை வைத்து கண்டிப்பா தண்டனை கொடுப்பேன்! வெக்கமே இல்லாம உன்னோட ஆம்பளத்தனத்தை என்கிட்ட காட்டுறியா?” என்று கூறினாள்.
சத்யதேவ் கோபமாக அவளை பார்த்தவன். “இப்படி எல்லாம் பண்றது எதுக்குன்னு நினைச்சுட்டு இருக்க? உன்ன நான் ஒவ்வொரு தடவை இப்படி நெருங்கும் போதும் உன் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் நித்தின் வந்து உன்கிட்ட நெருங்கும்போது அப்ப நீ தவிக்கணும் டி!”
அப்போ இனிமேல் உன்னை கேவலமா, கழுவி கழுவி ஊத்தினாலும், உன்னை ரொம்ப மட்டமா பேசினாலும் ,வந்து இப்படி தான் செய்வியா! என்று கேட்டாள்.
சத்ய தேவ் சிரித்துக் கொண்டே “நீ அந்த நாயை விட ரொம்ப கேவலமானவ! அதனால இனிமே உன் பக்கமே வரமாட்டேன்! நீ! உன்னை எப்படி சொல்றது? நீ என்னமோ பண்ணிக்கோ! இனிமே உன்ன என் வாழ்க்கையில பார்க்கவே கூடாதுன்னு நினைக்கிறேன் டி! நான் எவ்வளவு பொறுமையா என் கோபத்தை கட்டுப்படுத்திட்டு இருக்கேன். ஆனா நீ அதை ஸ்டிமுலேட் பண்ற மாதிரியே தான் ஒவ்வொரு தடவையும் பேசுற! நீ உன்ன ஒரு மனுஷ ஜென்மமாகவே நான் நினைக்கல! அதனால இனி ஒரு நிமிஷம் கூட உன் கிட்ட வந்து எப்பவும் பேசவே மாட்டேன்! அதை பத்தி நினைக்கவும் மாட்டேன். என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.
ரிதம் அவன் பின்னாலேயே சென்றாள். கதவை சாத்தி விட்டு வந்திருக்கிறான். கதவை திறந்து கொண்டு சத்ய தேவ் கோபமாக அவனுடைய வீட்டுக்கு சென்று அடைத்தான்.
அவன் சென்றதும் கதவை சாத்தியவள். வேகமாக கைகளை கழுவிக்கொண்டு கிச்சனுக்குள் ஓடினாள். ஒரு பெரிய தட்டை எடுத்து அதில் அந்த பிரியாணியை வைத்து, அதன் பின் ரத்த பொரியல், சிக்கன் என சத்யதேவ் என்னென்ன செய்தானோ. அதை முழுக்க நிரப்பி கொண்டு வெளியே வந்தவள் வாசனையை இழுத்து கொண்டே, நேராக பால்கனி பக்கம் சாத்த வந்தாள்.
ரிதம் சக்தி என்று பெயரிடப்பட்ட நாய்க்குட்டியை பார்த்து ஹாய் சக்தி! என்று கன்னக்குழி தெரிய சிரித்தவள். என்னடா உன்னால சாப்பிட முடியலையா? என்று கேட்டாள்.
அந்த குட்டி பப்பியோ அவளை நிமிர்ந்து பார்க்க..
என்னடா அப்போ வயிறு முழுக்க பெடிகிரி நம்பி போச்சா! அதனாலதான் இதெல்லாம் சாப்பிடலையா? சரி விடு இதை அப்படியே மூடி வைத்துவிடுகிறேன். உன்னோட பெடிகிரி எல்லாம் வெளியே வந்ததுக்கப்புறம், சாப்பிடு! என்று சிரித்துக் கொண்டே பால்கனி அடைத்தவள்.
டிவியை போட்டு “எண்ணமே ஏ உன்னால!” என்ற ஆல்பம் சாங் மற்றும் senorita, சாங் என அவளுடைய பிளே லிஸ்ட் போட்டு கேட்டு கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள்.
“டேய் உன் கைக்கு ஒரு தங்க காப்பு அப்படி இல்லன்னா தங்கத்திலேயே ஒரு கிளவுஸ் செஞ்சு போடணும்! அப்படி செஞ்சிருக்கடா! சக்தி நாயே! F* you, ரத்தம், சிக்கன், பிரியாணி, நல்லி நாசமா இருக்கு டா! ”என்று உச்சி கொட்டிக் கொண்டு ஒவ்வொரு விரலையும் நன்றாக வாயில் விட்டு ரசித்து சாப்பிட்டாள்.
ஐயோ செம்மையா இருக்கு! டெய்லியும் இந்த மாதிரி கிடைச்சா சூப்பரா இருக்கும்! என்று பெருமூச்சு விட்டவள். கடைசியாக சாதம் வெள்ளை சாதம் போட்டு பச்சை புளி ரசத்தை ஊற்றிக்கொண்டு வந்தாள். வாசனை ஆளை தூக்குதடா! டேய் சக்தி எங்கேயோ போயிட்டடா பாவா! அந்த ரசம் உச்சி கொட்டுதே! எங்க கங்கா ஆச்சி செய்யறத விட சூப்பர்! என்ற சொல்லிக் கொண்டே மொத்தத்தையும் சாப்பிட்டு தட்டை கண்ணாடி போல் பளபளவென்று ஆகிவிட்டாள்.
அந்த அளவுக்கு ருசித்து சாப்பிட்டவள் அனைத்தையும் ஜலதரையில் எடுத்து போட்டு மீதி இருக்கும் உணவுகளை பத்திரப்படுத்தினாள்.
இப்போ ஒரு ஸ்வீட் பீடா, ஐஸ்கிரீம், ஒரு க்ளாஸ் கோக் இருந்தா இன்னும் நல்லா இருக்கும்! என்று ஏப்பம் விட்டாள்.
அந்த சத்தத்தை கேட்டு சக்தி (குட்டி பப்பி) எழுந்து அவளை பார்த்தது.
என்ன சக்தி பாக்குற கண்ணை நோண்டுடுவேன்! இப்படி எல்லாம் கண்ணு வைக்கக்கூடாது! சரியா? என்று மிரட்டினாள்.
“ஏன் டி இப்படி டார்ச்சர் பண்ற? நீ மட்டும் நல்லா வக்கனையா சாப்பிட்ட? அப்படின்னு என்னை பார்த்து கேக்குறியா டா? உன் அண்ணன் செஞ்ச இனி செய்யர சாப்பாடு எனக்கு மட்டும்தான்! எப்பவும் அதுல எனக்கு மட்டும்தான் உரிமை இருக்கு! புரியுதா? நீ தான் பெடிகிரி சாப்ட்டல்ல, கண்ண மூடி தூங்கு!”என்று கூறினாள்.
சத்ய தேவ் வீட்டிற்கு வந்ததும் சமையலறையை சுத்தமாக துடைத்து, கிளீன் செய்தவன், வீட்டையே கூட்டி தண்ணீர் ஊற்றி கழுவி டெட்டால் போட்டு, திரும்பவும் ஒருமுறை துடைத்து எடுத்தான். அதன் பின் தலைக்கு குளித்து வெளியே வந்தவன், நேராக பூஜை அறைக்கு சென்று நெற்றியில் விபூதி பட்டையை போட்டுக்கொண்டு, மீண்டும் ஜீவ காருண்யத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தான் .
முன்னால் இருந்த வள்ளலார், போட்டோ முருகன், சிவன் ,பார்வதி விநாயகர் பெருமாள், என்று அனைத்து கடவுள்களையும் பார்த்தவன். என்னை மன்னிச்சிடுங்க! நான் இதை எப்படி செஞ்சேன்னு, எனக்கே தெரியல? என்ன ரொம்ப கோபப்படுத்தி பேசுறா! என்னால அத தாங்கிக்கவே முடியல! இனிமேல் அவ பக்கமே நான் தலை வச்சு படுக்க மாட்டேன்! நான் நினைச்சது வேற இங்க நடந்தது வேற! ஒவ்வொரு தடவையும் இப்படித்தான் நடக்குது! என்னை மன்னிச்சிடுங்க என்று ஜீவகாருண்யத்தை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்று படிக்க ஆரம்பித்தான்.
அவன் காலையிலிருந்து இன்னும் கொஞ்சம் கூட சாப்பிடவில்லை. அத்தனை பசி அப்படியே படித்துக் கொண்டிருந்தவன்.“ சாமியை வேண்டி நான் ரொம்ப பெரிய பாவம் பண்ணிட்டேன், இந்த மாமிசத்தை சமைச்சுட்டேன், இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சிடுங்க! இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்! என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டு வெளியே வந்தவன். வெறும் தண்ணீரை வயிறு முழுக்க குடிக்க எண்ணி சமையலை சென்றான்.
அந்த நேரம் ருத்ரனிடமிருந்து போன் வந்தது. ஹலோ சொல்லு ருத்ரா! என்று சத்திய தேவ் கேட்டான்.
மாமா உன் கிட்ட முக்கியமான விஷயம்!
என்னடா சொல்லு! என்று சுரத்தே இல்லாத குரலில் பதில் அளித்தான்.
அது ஒண்ணுமில்ல நான் வீட்டுக்கு வெளியே தான் இருக்கேன். கதவை திற என்று கூறினான்.
என்ன என்று அதிர்ச்சியுடன் சத்ய தேவ் கேட்க..
என்ன மாமா ஷாக் ஆகி கேக்குற! நான் வெளியே தான் வெயிட் பண்றேன். கதவ திற என்று கூறினான்.
சத்ய தேவ் வேகமாக அடித்துப் பிடித்து வந்தவன்..கதவை திறக்க ஒரு கட்டப்பையுடன் ருத்ரன் நின்று கொண்டிருந்தான்.
இந்த நேரத்தில் என்று சத்ய தேவ் கேட்டான்.
ருத்ரன் வேகமாக உள்ளேன் நுழைந்து, “வீட்ல இருக்கவே முடியல மாமா! ரொம்ப போர் அடிக்குது! சும்மாவே இருக்கனா! அதுதான் இதுக்கு மேல முடியாம உன் கிட்ட சொல்லாமலேயே கிளம்பி வந்துட்டேன். என்ன வீடு பக்தி மனமா வீசுது? என்ன பண்ணீங்க? சாமி தானே கும்பிட்டுட்டு இருந்தீங்க” என்று கேட்டான்.
ஆமா என்று ஒற்றை வார்த்தையில் சத்திய தேவ் பதிலளித்தான்.
சரி அத விடு மாமா, ஆமா என்ன சமைச்ச? என்று கேட்டான்.
நான் எதுவும் சமைக்கல
சரி உங்களுக்காக அம்மா மோர் குழம்பு, பொரியல், சாம்பார் எல்லாம் செஞ்சாங்க! அதான் உங்களுக்கு கொண்டு வந்து கொடுக்க வந்தேன் மாமா என்று கூறினான்.
சத்யதேவ் ஆச்சரியமாக புருவத்தை தூக்கிக் கொண்டு இதெல்லாம் அத்தை செஞ்சு கொடுத்தாங்களா? என்று கேட்டான்.
அம்மா தான் நல்லா சமைப்பாங்கன்னு உங்களுக்கு தெரியாதா? வாங்க சாப்பிடலாம்! என்று சொல்லிக் கொண்டே கதவை சாத்த வந்தான்.
ஏய் உங்க அக்கா இங்க தான் இருக்கா! உங்க வீட்ல இருக்கா என்று ரிதம் பற்றி கூறினான்.
அவ எங்க இருந்தா என்ன? என்று ருத்ரன் திரும்பி அனைத்தையும் தலைவாழை இலையில் எடுத்து வைக்க, சத்திய தேவ் முகம் அமைதியாக இருந்தது.
என்ன மாமா? உங்க முகமே சரியில்ல! என்ன ஆச்சு? அவ உங்ககிட்ட வம்பு பண்ணாளா? நீங்க யார்கிட்டயும் பிரச்சனை பண்ண மாட்டீங்களே! அவளுக்கு தான் அந்த புத்தி! அப்படியே அவங்க அப்பா புத்தி !என்று திட்டிக் கொண்டே அனைத்தையும் எடுத்து வைத்தான்.
சத்ய தேவ் தயங்கி கொண்டே ருத்ரா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் டா!
என்ன மாமா?
இது ரிதம் மேட்டர்! என சத்ய தேவ் சொல்ல..
என்ன விஷயம் என்று ருத்ரன் கேட்டான்.
தொடரும்..
EPISODE 29
சத்ய தேவ் தயங்கி கொண்டே ருத்ரா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் டா!
என்ன மாமா?
இது ரிதம் மேட்டர்! என சத்ய தேவ் சொல்ல..
என்ன விஷயம்? என கேட்டுக்கொண்டே அனைத்து உணவுகளையும் ருத்ரன் எடுத்து வைத்தான்.
சத்ய தேவின் பார்வை உணவின் மீது இருக்க.. ருத்ரன் ஒரு தலை வாழ இலையில் சைவ உணவுகள் அனைத்தும் எடுத்து வைத்தான்.
சத்யதேவ் ருத்ரனிடம் தீரா! மோர் குழம்பா? நான் தான் வேகன்னு உனக்கு தெரியும்ல அப்புறம் இது என்ன? எப்டி டா சாப்பிடுவது.
தெரியும் மாமா அதனால தான் இது தேங்காய் பால் எடுத்து, அதுல லெமன் ஜூஸ் போட்டு, செஞ்ச மோர் குழம்பு. நல்லா இருக்கும் ட்ரை பண்ணுங்க. என்று கூறினான்.
சத்ய தேவ் புருவத்தை சுருக்கி கொண்டே ஆமா இதெல்லாம் விவேகா அத்தை தான் செஞ்சாங்களா? என்று மீண்டும் கேட்டான்.
பின்ன? வேற யாரு செய்வா? என்ன மாமா சந்தேகம்? சரி அதை விடுங்க இப்போ நான் கொடுக்கிறத சாப்பிடுவீங்களா? மாட்டீங்களா? இத்தனை கொஸ்டின் கேக்குறீங்க? அந்த ரிதம் அவங்க அப்பா மாதிரியே கேட்கிறீங்க! என்ற ருத்ரன் கூறினான் .
அது ஒன்னும் இல்ல இன்னொரு விஷயம் என சத்ய தேவ் பேச வர..
மாமா பேசுனது போதும் போய் கை கழுவிட்டு வாங்க! சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க! என்று கூறினான் .
தீரா try to understand me! நான் சொல்றதை கேளுடா! உங்க அக்கா என்று சொல்ல வர..
அவளை பத்தி அப்புறம் பேசிக்கலாம்! முதல்ல நீங்க ஹேண்ட் வாஷ் பண்ணிட்டு வாங்க! என்று கூறினான்.
சத்ய தேவ் கைகளை கழுவிக் கழுவி விட்டு வந்து அமர்ந்தவன். உணவுகள் அனைத்தையும் வாசனை நுகர்ந்து பார்த்தான். பரீட்சையமான பழக்கப்பட்ட உணவுகளின் வாசம்!
அதை பார்த்த தீரன் சரி இப்போ சொல்லுங்க மாமா! அவ என்ன பண்ணா? என்று கேட்க..
சத்யதேவ் பருப்புக்கு சாம்பாரில் பிசைந்து ஒரு வாய் வைத்தவன். அதை மெதுவாக கண்களை மூடி, அசை போட்டு அதன் சுவையை, வாசத்தை நாசியில் நிறைத்து முழுங்கி விட்டு அவனை பார்த்தான்.
என்ன சொன்ன?
அதான் மாமா! அந்த ராவாடி என்ன பண்ணா? என்ன ஆச்சு என்று கேட்க..
ஒன்னும் இல்ல என மீண்டும் அடுத்தடுத்து உணவுகளை சாப்பிட ஆரம்பித்தான்.
அப்பாடா எப்படியோ மாமா சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க என்று நினைத்தவன்.
சிறிது நேரம் சாப்பிடும் வரை பொறுமையாக இருந்தான். மாமா! சொல்லுங்க? அவ என்ன பண்ணா? என்று கேட்க..
சத்யதேவ் ருத்ரனை பார்த்து உங்க அக்கா! ஒரு நாய்க்குட்டி வாங்கி இருக்கா!
அவ்ளோ தானா! அவளே ஒரு நாய் தான்! இனம் இனத்தோடதானே சேரும். அவள் நாயா பிறக்க கூட லாயக்கு இல்ல! இது தான் பெரிய விசயமா? நான் கூட என்னமோ ஏதோ பயந்துட்டேன் என்று ருத்ரன் கூறினான்.
சத்ய தேவ் அடுத்த உணவுகள் என பொரியல், கூட்டு, புளிக்குழம்பு மற்றும் மோர் குழம்பு என அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு கொண்டே விசயம் நாய் குட்டி இல்ல அந்த குட்டி நாயுடைய பேரு!
என்ன சொல்றீங்க?
அவ அந்த நாய்க்குட்டிகளுக்கு சக்தியின் பெயர் வச்சிருக்கா..
இதை கேட்டதும் ருத்ரனுக்கு புரை ஏறிட சத்ய தேவ் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து நீட்டினான்.
ருத்ரன் தலையை தட்டி கொண்டே என்ன மாமா சொல்றீங்க? சக்தியா? உங்க பேர வச்சிருக்காலா? சத்ய தேவா? என்று கேட்டான்.
ஆமா என்று உணவுகளை மெதுவாக அசைபோட்டான்.
அவள? அவளுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்? அவ அப்படித்தான் மாமா அவளோட கேரக்டர் ஃபுல்லா அவங்க அப்பா மாதிரியே இருக்கும். கொஞ்சம் கூட டிசிப்ளினே கிடையாது! இதை சும்மாவே விடமாட்டேன்! என ருத்ரன் வேகமாக அவனுடைய வீட்டை நோக்கி செல்ல போக..
டேய் விடு விடு ருத்ரா இது bad habit என சத்ய தேவ் தடுத்தான்.
எதோ உங்க வார்த்தைக்காக இப்போதைக்கு விடுரென். ஆனாலும் அவளை சும்மா விட மாட்டேன். அப்புறம் வேற ஏதாவது பிரச்சனை பண்ணினாளா? என்று ருத்ரன் கேட்க .
அவ்ளோ பெருசா ஒன்னும் இல்ல என்று சத்ய தேவ் தயங்கிக்கொண்டே கூறினான்.
சரி மாமா விடுங்க! பார்ப்போம் ஆனால் சும்மா விடமாட்டேன் என்று அமர்ந்தவன். முக்கிய விசயம் அப்புறம் ஐட்டம் இந்த விருந்து எப்படி இருக்கு? எல்லாமே டேஸ்ட்டா இருக்கா? என்று ஆர்வத்துடன் கேட்டான்.
ஹான் ஓகே என்று பதில் அளித்து ஒரு மணி நேரம் அதை முழுதும் சாப்பிட நேரம் எடுத்து கொண்டான்.
அனைத்தும் சாப்பிட்டு முடித்து சுத்தம் செய்து இலையை மடித்து குப்பை கூடையில் போட்டு கைகளை கழுவிக்கொண்டு சோபாவுக்கு வந்தான்.
அப்பொழுது ருத்ரன் யாரிடமோ சிரித்துக்கொண்டே மெசேஜ் செய்யு..
என்ன மீனாட்சி கிட்டயா பேசிட்டு இருக்க? என அருகில் அமர்ந்தான்.
சக்தி வந்ததும் வேகமாக போனை ஆஃப் செய்து வைத்தவன். இல்ல மாமா என்று சிரித்து சமாளித்தான்.
அப்புறம் இன்பர்மேஷன் எல்லாத்துக்கும் கொடுத்தாச்சா? என்று கடுமையான பார்வையுடன் கேட்டான்.
என்ன மாமா சொல்றீங்க? என ருத்ரன் தெரியாததை போல சமாலித்தான்.
சரி இதை யார் சமைச்சது? என்று கடுமையான குரலில் கேட்டான்.
அம்மா தான் மாமா என்று ருத்ரன் கூற..
தீரா! என்னை பாருடா! என் கண்ண பாத்து சொல்லு! இதை யார் சமைச்சா? என்று கேட்ட
இத வந்து மகி மாமி தான் செஞ்சாங்க! என்று கூறி விட்டான்.
சக்தி எதுவும் பேசாமல் அமைதியாக பால்கனி பக்கம் சென்றான்.
ஒரு சில நிமிடங்கள் கழித்து ருத்ரன் தலையை கோதி கொண்டே பால்கனி பக்கம் வந்தவன். மாமா பிளீஸ் என்று தோள்பட்டையை பிடித்தான்.
சொல்லு எதுக்கு பிளீஸ்!
என்ன மாமா? ஏன் மாமா மகி மாமி மேல இப்படி கோவமா இருக்கீங்க? மகி மாமி உங்க மேல எவ்வளவு பாசம் வெச்சிருக்காங்க தெரியுமா? ஏதோ எப்பவும் நடந்த விஷயத்தை இன்னும் நினைச்சுட்டு இருக்கீங்க? சரி அதை விடுங்க! ஆனா மகிமாமிய இப்படி ஒதுக்குவது நல்லா இருக்கா? எங்க அம்மா போல தான் மகிமாமியும்! எங்க அம்மாவை விட மகி மாமி உங்க மேல ரொம்ப பாசம் வெச்சிருக்காங்க! என்று கூறினான்.
சத்யதேவ் சிரித்து கொண்டே அத்தைக்கு உன் மேல ரொம்ப பாசம் என கூறினான்.
ருத்ரன் ஒரு பெரு மூச்சை விட்டு என் அம்மாவுக்கு என் மேலே நிறைய பாசம் இருந்தாலும் அதே அளவுக்கு அந்த ராவடி மேல இருக்கு.
என்ன சொல்ற? என்பது போல சத்ய தேவ் பார்வை இருக்க.
ம்ம் ஆமா! ரிதம் கிட்ட திட்டிட்டே இருந்தாலும் அவள் மேல என் அம்மாவுக்கு ரொம்ப பாசம்! அதே போல தான் மிஸ்டர் இன்ப ராகவன் மேல அதை விட பாசம். என் விவி மா அங்கே இருந்து அவரை விட்டு வரவே மாட்டாங்க! அவரும் விடவே மாட்டாரு! அதே போல தான் மகி மாமிக்கு உங்க மேல பாசம்.
சத்ய தேவ் ஒரு கசந்த புன்னகை சிந்தியவன். அதை எக்ஸ்பிரஸ் பண்ற இடத்துல எக்ஸ்பிரஸ் பண்ணிடனும்!! பண்ணாம வச்சு இப்படி மறச்சு செய்யணும்னு, என்ன அவசியம் வந்தது? என்று கடுமையான குரலில் கேட்டான்.
அது அப்படி இல்ல மாமா மாமிக்கு என்ன சூழ்நிலையோ? நமக்கு என்ன தெரியும்? அப்போ என்ன நடந்ததுன்னு. என நிருத்தியவன். நான் நான் என்ன பண்ண முடியும் என்று கூறினான்.
அப்போ என்ன நடந்ததுன்னு முழுசா சொன்னாதானே தெரியும்! நீங்க.. அத பத்தி யாருமே பேச மாட்டேங்கிறீங்களே? என்று ருத்ரன் கேட்க..
சில விஷயங்கள் தெரியாம இருக்கிறது நல்லது. தீரா இதை இத்தோட விட்டுடு. என சத்ய தேவ் உள்ளே சென்றான்.
மாமா ஒரு தடவை, ஒரே ஒரு தடவை நீங்க…
என்ன?
அதான் மாமி எப்படியோ இருந்துட்டு போகட்டும்! நீங்க ஒரே ஒரு தடவை உங்க வீட்டுக்கு வந்துட்டு போங்களேன்! சூர்யா மாமா எவ்வளவு தூரம் சொல்றாங்க தெரியுமா? ஒரே ஒரு தடவை வந்துட்டு அட்லீஸ்ட் வீக் என்ட்லையாவது போகலாம்ல்ல! எத்தனை தடவை உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கேன்? அவங்க உங்களை எதிர்பார்த்துட்டு இருக்காங்க! நீங்க அத்தையை விடுங்க, ஆனால், மாமாவுக்காக நீங்க ஒரு தடவை வீட்டுக்கு வரலாமே! என கேட்டான்.
சத்ய தேவ் பெருமூச்சு விட்டு அங்கே தான் தேவ் கார்ப்பரேசன் M.D மிதுன் தேவ் இருக்காரே. அவர் இருக்கிற இடத்துக்கு நான் போகவா? நீயே சொல்லு? என்று கேட்டான்.
நான் எல்லா நாளும் போக சொல்ல மாமா! அட்லீஸ்ட் வீக்லி டூ டேஸ் மட்டும் சாட்டர்டே சண்டே அவங்க ஸ்பென்ட் பண்ணலாமே! சூர்யா மாமாவுக்கும் உங்க கூட இருக்கணும்னு, ஆசையா இருக்கும்ல! இன்னும் எவ்வளவு நாள்? ஐ மின் ஹரிணி அக்காவுக்கும் உங்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சுன்னா, நீங்க ரெண்டு பேரும் தனியா தான வந்துடுவீங்க! மகி மாமி என்ன தப்பு வேணாலும் பண்ணி இருக்கட்டும்! அவங்க உங்க அம்மா தானே! நீ ஏன் மாமா இப்படி இருக்கீங்க? என்று பொறுமையாக எடுத்து கூறினான்.
சத்ய தேவ் ப அவனை பார்த்து புன்னகைத்தான்.
என்ன மாமா சிரிக்கிறீங்க? வேற ஏதாவது பேசுங்க! பதில் சொல்லுங்க! என்று கேட்க..
என்னை விட சின்ன வயசு! மிஸ்டர் ருத்ரன்! ஆனால் இவ்வளவு பொறுமையா எனக்கே அட்வைஸ் பண்ற அளவுக்கு, பெரிய ஆளா வந்துட்டாரு! ஆனாலும் அவருடைய அட்வைஸ் சரியா தான் இருக்கு!.
அதனால?..
ருத்ரன் சிரித்து கொண்டே மாமா கிண்டல் பண்ணாதீங்க! பதில் சொல்லுங்க!
சரி மிஸ்டர் ரவுத்திரன் பேச்சை நான் கேட்கிறேன் என்று கூறினான்..
இதை கேட்டதும் ருத்ரன் அவனை கட்டி கொண்டான்.
டேய் என்ன டா பண்ற? தீரா! வுடு டா! லீவ் மி டா! என சத்ய தேவ் அப்படியே நிற்க ..
ருத்ரன் சிரித்து கொண்டே இது பாசம் மாமா! என்னோட வார்த்தையை நான் சொல்றதை நியாயமா கேக்குறது, நீங்களும் தீராமாவும் மட்டும் தான். அதுக்கப்புறம் எங்க கங்கா அம்மாச்சி, வருண் மாமாச்சி! என்று அவன் விடாமல் கட்டி அணைத்துக் கொண்டே சொல்ல..
சத்திய தேவனுக்கு ஒரு புதிதாக பழக்கப்பட்ட பிரத்தியேகமான ஒரு வாசனை வந்தது.
என்ன இந்த வாசனை இத எங்கேயோ நான் feel பண்ண மாதிரி இருக்கே! என்று யோசித்தவனுக்கு, கொஞ்ச நேரத்திற்கு முன் ரிதம் அவன் அருகில் வந்த போது அவளை கட்டி அணைத்து முத்தமிட்ட போது இருந்த அதே வாசனை! ச்ச அக்காளும், தம்பியும் ஒரே மாதிரி இருக்காங்களே! என்று வேகமாக சத்யதேவ் அவனை விட்டு விலகினான்.
என்ன மாமா ஆச்சு? என்று ருத்ரன் கேட்க..
ஒன்னும் இல்ல என்று சத்ய தேவ் சமாளித்தான்.
சரி அப்போ என்ன முடிவெடுத்து இருக்கீங்க?
சரி வரேன் இவளோ தூரம் ருத்ரன் சார் சொல்லி இருக்காரு அதை கேட்காமல் இருப்பேனா?
அப்போ நாளைக்கு தான் சாட்டர்டே சண்டே! சோ அப்போ இப்பவே கிளம்பலாமா என்று ருத்ரன் கேட்டான்.
போலாம் போலாம் இன்னைக்கு வேணாம்! நாளைக்கு காலைல தான் வருவேன்!
அப்படியா சரி ஓகே! ஆனால் அதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு! ருத்ரன் கூற…
என்ன சர்ப்ரைஸ் என்று சத்ய தேவ் கேட்டான்.
கொஞ்ச நேரம் இருங்க நான் போயிட்டு வந்துடறேன் என்று வேகமாக ருத்ரன் கிளம்பினான்.
எங்கடா கிளம்புற? பேசலாம்னு சொன்ன? உடனே கிளம்புற? சக்தி அவன் பின்னால் செல்ல..
இருங்க மாமா நான் போயிட்டு வந்துடறேன் என்று ருத்ரன் வெளியே சென்றான்.
ஒரு இரண்டு மணி நேரம் இருக்கும். மாலை 6:00 மணி ஆனது.
பாதாம் பாலில் ஒரு டீ போட்டவன் ருத்ரனுக்கு அவனுக்கு பிடித்த ஸ்ட்ராங் டீ போட்டுக் எடுத்து வந்தான்.
எங்கே இருக்கான்? இந்த ருத்ரன்? என உடனே அவனுக்கு கால் செய்தான்.
ருத்ரா எங்கடா இருக்க? என்று கேட்க..
இதோ வந்தாச்சு மாமா சர்ப்ரைஸ்!
எங்கே டா?
மாமா கொஞ்சம் கதவை திறந்து வெளிய வாங்க என்று அழைக்க..
என்ன இவன்? என்ன பண்ணிட்டு இருக்கான்? என்று கதவை திறந்தான்.
அங்கே ஒரு பெண்ணின நாய் குட்டி பப்பி இருந்தது. அதை பிடித்துக் கொண்டு ருத்ரன் நின்று கொண்டிருந்தான்.
என்னடா இது? என்று சத்திய தேவின் பார்வை அந்த நாய்க்குட்டியின் மீது செல்ல..
இதுதான் மாமா எங்க அக்கா ரிதம்! ஹே ஹலோ சொல்லு ரிதம்! மாமாவுக்கு ஹாய் சொல்லு!
சத்ய தேவ் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தான்.
என்ன அப்படி பாக்கறீங்க? இந்த நாய்க்குட்டி பேரு ரிதம் சோ இதுக்கு நம்ம ரிதம் அப்டின்னு பேரு வச்ச செலிப்ரேட் பண்ண போறோம்! ராவடிகாரிய! அவள சும்மா விடக்கூடாது. அவள பழிவாங்கியே தீரனும்! அதனால இந்த நாய்க்குட்டிய நீங்க வளர்க்கிறிங்க! என்ன சொல்றீங்க? என்று ருத்ரன் கேட்க..
வேண்டாம் டா தீரா! அவள் பண்ணுனா நம்மளும் பண்ணனுமா?
மாமா இப்படி நீங்க அம்மாஞ்சியா இருக்கறதுனால தான்! அவ உங்கள ரொம்ப ரொம்ப கேவலமா பேசுற! நானா இருந்தனா அவ பல்ல தட்டி கைல கொடுத்து இருப்பேன்! ருத்ரன் கோபத்துடன் கூறி கொண்டிருக்க..
ஐயோ நான் பண்ண வேலையை உன்கிட்ட நான் எப்படி சொல்லுவேன்? இந்த நாய்க்குட்டியை தூக்கிட்டு அவ முன்னாடி போனா! அவ என்ன கடிச்சு கொதர கூட சான்ஸ் இருக்கே! ஒரு பொண்ணா இருக்குற அவளுக்கே இவ்வளவு திமிரு இருக்கும்போது, பையனா இருக்குற! நான் ஏன் அமைதியா இருக்கணும்? நான் அவகிட்ட இனி எந்த சவகாசமும் வச்சுக்க மாட்டேன். என நினைத்து சத்ய தேவ் அவனிடம்
ஆனால் இந்த நாய்க்குட்டி நம்ம வளக்கணும்னு எழுதி இருக்கறது கடவுள் தான். அவரு தான் நம்மகிட்ட அனுப்பி இருக்காரு. அதனால நான் இந்த நாய்க்குட்டிய பத்திரமா வளர்ப்பேன்! என கூறினான்.
ருத்ரன் சிரித்து கொண்டே அப்போ வளக்கிரீங்க தானே!
சத்ய தேவ் அழகாக சிரித்து கொண்டே சரி வளர்த்திட்டா போச்சு! இப்போ உள்ளே கூட்டிட்டு வா என்று கூற..
அந்த நாய்க்குட்டி இருவரையும் மாறி மாறி பார்த்தது.
ருத்ரன் சிரித்துக்கொண்டே ரிதம் மாமா! மாமா சொல்லு! உன்னோட மாமா டி! என்று கூற சத்யதேவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
உடனே சத்ய தேவ் என்னடா இப்படி எல்லாம் சொல்ற?
கம்முனு இருங்க மாமா ரிதம் வாங்க உள்ள போலாம்.. என ஒரு அடி வைத்தவன். அப்படியே செல்லாமல் ரிதம் வீட்டின் கதவை தட்டினான்.
தீரா! என்ன டா என திரும்பி பார்க்க அங்கே ருத்ரன் ரிதம் வீட்டின் கதவை தட்டி நின்று கொண்டிருக்க..
டேய் வம்பை விலை கொடுத்து வாங்கறது தான் அக்கா தம்பி வேலை வாடா! என வேகமாக ரிதம் கதவை திறப்பதற்குள் ருத்ரனை இழுத்து சென்றான்.
மாமா விடுங்க அவள் கிட்ட இந்த நாய் குட்டி ரிதமை காட்டியே ஆகணும்! என ருத்ரன் சிலுப்பி கொண்டிருக்க..
டேய் கம்முன்னு வாடா…
தொடரும்..
EPISODE 30
மாமா விடுங்க அவள் கிட்ட இந்த நாய் குட்டி ரிதமை காட்டியே ஆகணும்! என ருத்ரன் சிலுப்பி கொண்டிருக்க..
டேய் கம்முன்னு வாடா… என ரிதம் வெளியே வருவதற்குள் இருவரும் உள்ளே சென்று சத்யதேவ் கதவை அடைத்தான்.
யாரது? என்று தலையை சொரிந்து கொண்டு தூக்க கலக்கத்துடன் எழுந்து வெளியே வந்தாள்
ஆமா அந்த சத்ய தேவ் செஞ்ச சாப்பாடு எல்லாத்தையும் ஒரு கட்டு கட்டிக்கிட்டு ரிதம் அப்படியே போய் படுத்து தூங்கிட்டா! யாருடா அது? எவன்டா அது? நல்ல கிஸ் அடிக்கிற சீன்ல வந்து எழுப்பி விட்டுட்டானுங்க! அவன் மட்டும் என் கையில கிடைச்சான்! சட்னி தான்! என்று கோபமாக ரிதம் பேசினாள்.
அந்த இடத்தில் யாருமே இல்லை! ஒரு சில நிமிடங்கள் நின்று வேடிக்கை பார்த்தாள். யாரும் இல்ல! ஒருவேளை நம்ம கனவுல வந்திருப்போமோ? என்று நினைத்துக் கொண்டு மீது மீண்டும் கதவை அடைத்து உள்ளே சென்று தூக்கத்தை தொடர்ந்தாள்.
இங்கே சத்திய தேவ் அந்த ரிதம் எனும் குட்டி நாய்க்கு கொஞ்சி விட்டு பால் ஊற்றி வைத்தான். அதன் பின் டெட்டால் போட்டு கை கழுவிக் கொண்டிருந்தான்.
மாமா என்ன பண்ணிட்டு இருக்கீங்க? என்று ருத்ரன் கேட்க..
ஆமாண்டா நாய்க்குட்டி மேல நிறைய ஜேம்ஸ் இருக்கும். நீயும் வா வந்து கை கழுவு என்று அழைக்க..
ஆனாலும் நீங்க ரொம்ப சுத்தமா இருக்கீங்க மாமா! என்று ருத்ரன் கூறினான்.
இதுல கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்கணும் நம்ம நம்மளோட சுத்தத்தில் கவனமா இருக்கணும். அதே போல நாய் குட்டியோட சுத்தமா நமக்கு ரொம்ப முக்கியம் இது குழந்தை குட்டி போல தெரியுது. என்று சத்ய தேவ் கேட்க..
ஆமா இது குட்டி குழந்தை மாதிரி நல்லா இருக்குல்ல என்று ருத்ரன் ஆசையாக அந்த நாய்க்குட்டியை பார்த்தான்.
பாசம் ஓவரா வைத்திருக்க போல! நீயே எடுத்துட்டு போய்! வளர்த்து என்று சத்யதேவ் சொல்ல..
இல்ல மாமா இத நீங்க தான் வளர்த்தனும் அவள பழிவாங்கியே ஆகணும் என்று ருத்ரன் கூறினான்.
அந்த நாள் மிகவும் இனிமையாக முடிந்தது. அடுத்த நாள் சனிக்கிழமை ருத்ரன் சத்யதேவுடன் சூர்யாவின் வில்லா வீட்டுக்கு அழைத்து சத்ய தேவை அழைத்து வருவதாக கூறினான்.
இந்த விஷயம் 10 நிமிடங்களில் தேவ் கேங் மற்றும் டெவில் கேங் என அனைவருக்கும் பரவியது.
நிஜமாவா? இது உண்மையா? என வீட்டுக்கு போறானா.
எப்படி போறான்? யார் சொல்லிப் போறா? என்று மாறி மாறி அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
ரிதம் இரவும் கூட சத்யதேவ் சமைத்த உணவு அனைத்தையும் மறுபடியும் சூடு செய்து வயிற்றை நிரப்பி கொண்டு தூங்கினான்.
மொத்தத்தில் அந்த நாள் அவளுக்கு மிகவும் இனிமையாக இருந்தது. அவளுக்கு மாறி மாறி போன் கால்கள் அடிக்க தொடங்கியது.
என்ன இன்னும் போனை எடுக்க மாட்டேங்கிறா? இவளுக்கு விஷயம் தெரியுமா தெரியாதா? என்று மிதுன் தேவ் மீண்டும் மீண்டும் அழைத்தான்.இவ என்னதான் பண்றாளோ? குறட்டை விட்டு தூங்கிட்டு இருப்பான்னு நினைக்கிறேன். தூங்குறதுக்கு மட்டும் தான் லாய்க்கு! என்று மிதுன் திட்டிக்கொண்டே சரி அவளை நேரிலேயே போய் பாத்துட்டு வந்துடலாம். என்று நேராக ரிதம் இருக்கும் வீட்டிற்கு சென்றான்.
இங்கே சக்தி மற்றும் ருத்ரன் இருவரும் சூர்யாவின் அந்த மிகப்பெரிய விழாவுக்கு வந்து சேர்ந்தார்கள்.
சத்தியத்தைவிற்கு இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. எப்படி இந்த வீட்டுக்குள்ள நான் போய் தான் ஆகணுமா?என்று வீட்டின் கேட்டை பார்த்துக் கொண்டு நின்றான்.
இங்கே உள்ள மகி பரபரப்புடன் வேலை செய்து கொண்டிருந்தார். தூரிகா! தூரிகா என்று அழைத்துக் கொண்டு அவள் வேலை செய்து கொண்டிருக்க..
என்னம்மா என்று இதளினி தூரிகா வந்தாள்.
சரி அவன் வந்துட்டான்னா? இந்த ஆரத்திய எடுத்துடு என்று இதழ் கைகளில் திணித்தார்.
ஏன்? அதை நீ செஞ்சா என்ன? குறைஞ்சு போயிடுவியா என்று சூர்யா கேட்டார்.
அது வந்து அப்படி இல்ல என்று தயங்கிக் கொண்டே நின்றார்.
நீ எப்பவுமே திருந்த மாட்டடி! திருந்தாத ஜென்மம் என்று சொல்லிவிட்டு எங்க உன்னோட அருந்த வாலு! உன்கூட ஒட்டிக்கொண்டு திரிவானே! என்ற மிதுன் தேவை பற்றி சூர்யா கேட்க..
அவன் காலையிலேயே கொஞ்சம் வெளியே போய்ட்டான் என்று மகி கூறினாள்.
இதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை! படிக்கிறானா? இல்லையோ? டிப் டாப்பா கிளம்பி போயிடுறான். என் பணத்தை செலவழிப்பதற்காகவே பொறந்திருக்கான். என்று சூர்யா திட்டினார்.
ஏய் என்னடி பண்ற? அந்த ஆரத்தி எடுத்துட்டு வரதுக்கு இவ்வளவு நேரமா? என்று ருத்ரன் இதழினுக்கு போன் செய்தான்.
ஆமா நான் ஆரத்தி எடுப்பது பற்றி உனக்கு எப்படி தெரியும்? என்று அவள் கேட்க..
ஐயாவுக்கு எல்லாமே தெரியும்! நான் சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக தான் சக்தி மாமா இங்க வராங்க! நீ சொல்லி கூட வரல அதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா?
என்ன?
எனக்கு எவ்வளவு பவர் தெரியுமா? என்று ருத்ரன் இதழினிடம் கூறினான்.
எவ்வளவு பவர் ஒரு கிலோ இருக்குமா? என்று அவளும் கிண்டல் அடித்தாள்.
இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல டி! சரி சரி சீக்கிரமா மாப்பிள்ளையும் மச்சானும் வெயிட் பண்றோம்லல என்று ருத்ரன் பருத்திவீரன் பட பாணியில் கூற..
இதழ் புருவம் நெருக்கிக்கொண்டே யாருக்கு யார் மாப்ள? யாருக்கு யாரு மச்சான் சொல்லு? என்று கேட்க..
நீ எடுத்துட்டு வாடி சொல்றேன் என்றான்.
என்னடா இது ரொம்ப டூ மச்சா இருக்கு பாப்பா ஆரத்தி எல்லாம் எடுத்துட்டு வருது. என்று சத்தியதேவ் கேட்க..
மாமா இது சரித்திரம் தெரியுமா? அதனாலதான் பாருங்களேன்! இப்போ நம்ம சுத்தி நல்ல சக்தி மட்டும் தான் இருக்கு! இதழ் ஒரு குட்டி சக்தி! சூர்யா மாமா நல்ல சக்தி! மகி அத்தை இன்னொரு நல்ல சக்தி! அவ்வளவுதான் பாருங்க! என்று சொல்ல..
ஆமா இந்த வீட்டு ஓனர் சார் எங்கே? என சத்திய தேவ் தன் தம்பியை பற்றி கேட்க..
உங்களுக்கு தெரியாதா என்ன? இனம் இனத்தோட இந்நேரம் போய் சேர்ந்து இருக்கும்ன்னு நினைக்கிறேன் என்று ருத்ரன் கூறினான்.
என்னடா சொல்ற என்று சக்தி கேட்க..
வேற யாரு? அதான் அந்த ராவடிகாரிய பார்க்க இந்நேரம் தேவ் கார்ப்பரேசன் M.D போயிருப்பார்.
அண்ணா நான் கூப்பிட்டு வராம, இப்போ இந்த தீரா பையன் கூப்பிட்டதும் வர! அவன் மாப்பிள்ளை மச்சான்னு சொல்கிறான், என்ன விஷயம்? என்று இதழ் கேட்டு கொண்டே மஞ்சள் நீரை நெற்றியில் வைத்து விட்டாள்.
ருத்ரன் முடியை ஒதுக்கிக்கொண்டு எனக்கு? என்று காட்ட..
போடா என்று கூறினாள்.
இதழ் கையைப் பிடிக்க வந்தான்.
சக்தி சிரித்துக்கொண்டே என்ன விளையாட்டு? என்று கேட்க..
பாருங்க மாமா இவ எனக்கு வைக்க மாட்டேங்கிறா? நாளைக்கு எப்படி இந்த வீட்டுக்கு வரது! நான் தானே மாப்பிள்ளை! சொல்லுங்க மாமா! உங்க தங்கச்சி கிட்ட! என்று கிண்டல் அடித்தான்.
என்னன்னா இவன் சொல்றான்? என்று இதழ் ஷாக் ஆகி பார்க்க..
அவன் உன்னை கிண்டல் பண்றான். என்று கூறிக்கொண்டே சத்ய பார்க்க..
நீ என்னடி வைக்கிறது நானே வச்சிக்கிறேன். என்று ருத்ரனே நெற்றியில் வைத்து கொண்டான்.
ருத்ரா இருடா உன்ன பத்தி நான் போலீஸ் மாமா கிட்ட சொல்றேன். என்று இதழ் கூற..
நீ யார் கிட்ட வேணாலும் சொல்லிக்க எனக்கு பயம் இல்ல, போடி! வந்துட்டா குட்டச்சி! என்று சொல்லிக்கொண்டு சத்யதேவ் கைகளை கோர்த்துக்கொண்டு உள்ளே நடந்தான்.
ஆமா என்ன உன் பின்னாடி ஒரு குட்டி வருது! என்று இதழ் சொல்ல..
அதுவா இது என்னோட அக்கா என்று ருத்ரன் கூறினான்.
அக்காவா என்று சத்ய தேவ் இதழ் இருவரும் ஷாக் ஆகி பார்க்க..
என்னடா வேலை பண்ணி வச்சிருக்க எதுக்குடா குட்டிய இங்கே தூக்கிட்டு வந்த? நானே டெய்லி வீட்டுக்கு போய் பார்த்திட்டு அதுக்கு food வச்சுட்டு வருவேனே! என சத்ய தேவ் கூறினான்.
ருத்ரன் புருவம் சுருக்கிக்கொண்டே என்ன மாமா? அங்க ரிதம் அக்காவ விட்டுட்டு வந்தா, அவளுக்கு பயமா இருக்கும். அதனாலதான் நான் இங்க கூட்டிட்டு வந்தேன்! இப்போ இங்க ஓரமா கட்டி போட்டு விடலாம்! அவளுக்கு வீகன் எல்லாம் வேண்டாம் மாமா! சாதாரண பசும்பால் ஊத்துனாவே ரிதம் அக்கா குடிச்சுக்குவா! ஒன்னும் பிரச்சனை இல்ல! என்று கூறினான்.
இதை கேட்டதும் இதழ் ருத்ரனின் அருகில் வந்து டேய் என்னடா சொல்ற? என்று ருத்ரனின் காலை சுற்றிய அந்த குட்டியை தூக்கிக்கொண்டு இது பெயர் என்ன? அக்கா! அக்கான்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்ற? என்று கேட்க..
ருத்ரன் சிரித்துக்கொண்டே இது பேரு ரிதம்! என்னோட அக்கா என்று கூறினான்.
இதழ் வாயை பிளந்து பார்க்க..
சத்ய தேவ் நெற்றியை தேய்த்து கொண்டே நின்றான். ஆமா எப்பதான் வீட்டுக்குள்ள வரப்போற? இதுக்காக நான் இன்னும் எத்தனை வருஷம் காத்திருக்கட்டும்? என்று சூர்யாவின் குரல் கேட்டது.
டாடி என்று புன்னகையுடன் சக்தி திரும்பினான். மாமா என்று கண் அடித்து கொண்டே ருத்ரன் பார்த்தான்.
அப்பா என்று இதழ் அதிர்ச்சியுடன் பார்த்தாள். அவள் கையில் உள்ள நாய்க்குட்டியை பார்த்துவிட்டு என்ன பப்பியை வச்சிருக்க? இதழ் குட்டி! என்னடா கைல? என்று கேட்க..
அப்பா இதோட பெயர் என்ன தெரியுமா? என்று சிரிப்பு கொஞ்சம் சீரியஸ்னஸ் என இரண்டும் இதழ் கலந்து சூர்யாவை பார்க்க..
ருத்ரன் சிரித்துக்கொண்டே நானே சொல்றேண்டி.. மம்மம் மாமா இதோட பேரு ரிதம்! எப்படி அழகா இருக்குல்ல! ஆனா பாருங்களேன் உங்க பிரண்டு மாதிரியும், உங்க பிரண்டோட பொண்ணு மாதிரியும், இதுக்கு கன்னத்தில் எல்லாம் குழு விழுகாது! என்று ருத்ரன் கூறினான்.
இதை கேட்டதும் சூர்யாவிற்கு சிரிப்பு வர என்னடா பண்ணி வச்சிருக்க? இது மட்டும் உங்க அப்பனுக்கும், உங்க அக்காவுக்கும் தெரிஞ்சது? ரெண்டு பேரும் தாண்டவமே ஆடுவாங்க! என்று சூர்யா கூறினார்.
தெரிஞ்சா தெரியட்டும் மாமா! இன்னொரு விஷயம் தெரியுமா அந்த ரிதம் ராவடிக்காரி! என்ன காரியம் பண்ணி இருக்கா தெரியுமா? அவ ஒரு நாய்க்குட்டி வச்சிருக்கா! அதுக்கு என்று ருத்ரன் சொல்லவர..
சத்யதேவ் அவளின் கையைப் பிடித்து அழுத்தி கொஞ்சம் சும்மா இருடா! வந்ததும் ஆரம்பிச்சிட்டியா! படபட படபடன்னு பேசிக்கிட்டே இருக்கீங்க !என்று இருவரையும் சேர்த்து சத்ய தேவ் கூறினான்.
என்ன மாமா! நான் ஒரே ஒரு ஆள் தான என்று ருத்ரன் கூற..
ஆமா இல்ல தெரியாம டங்கு ஸ்லிப் ஆயிடுச்சு. உள்ள போலாமா என்று பற்களை கடித்துக் கொண்டே கேட்டான்.
சரி சரி வாங்க என்று சூர்யா அந்த நாய்க்குட்டியை பார்த்தான்.
போச்சு இதுக்கு என்ன குதிக்க போறாளோ உங்க அக்கா! என்று மனதில் நினைத்துக் கொண்டான் அனைவரும் உள்ளே சென்றார்கள்.
*
இது பேரு சத்யதேவ்! நல்லா இருக்கா? என்று ரிதம் கொட்டாவி விட்டுக்கொண்டே மிதுன் தேவை பார்த்தாள்.
மிதுன் சிரித்துக்கொண்டே சூப்பரா இருக்குடி! இந்த ஐடியா! ஏன் எனக்கு தோணல! நீ ரொம்ப பிரில்லியன்ட் டி! ரிதம் பேபி என்று கூறினான். ஆமாம் ஆமா எதுக்கு காலங்காத்தால கிளம்பி வந்து இருக்கா என்ன விஷயம் என்று ரிதம் கேட்டால் மிதுன் இப்பொழுது தீவிரமாக உனக்கு ஒரு விஷயம் தெரியுமா உன் தம்பி இருக்கானே!
ரிதம் சாதாரணமாக என்ன? அவனுக்கு என்ன? எங்கேயாவது போய் விழுந்துட்டானா? அடிப்பட்டுடிச்சா! இல்லை? எவளையாவது கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டானா? என்று கேட்டாள்.
அப்படியெல்லாம் ஒன்னும் நடக்கல! அதைவிட பெரிய சம்பவம் நடந்துச்சு! என்று மிதுன் கூறினான்.
அப்படி என்ன விஷயம் நடந்தது? என்று ரிதம் கேட்க..
சத்தியதேவ அவன் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டான்.
சாந்தி அப்பார்ட்மெண்ட்ஸா என்று ரிதம் கேட்க..
நம்ம வீடு டி! அங்க வில்லா இருக்கே! எலக்ட்ரானிக் சிட்டி வந்துட்டாண்டி! என்று மிதுன் கூற..
என்ன என்று ரிதம் ஷாக்காக எழுந்து அமர்ந்தாள்.
ஆமா இப்போ எங்க அம்மா கூட சத்ய தேவ் சேர போறான். நான் மாட்டிக்குவேன்னு தோணுது! நான் பொய் சொன்னது மட்டும் அம்மாவுக்கு தெரிஞ்சது! அவ்வளவுதான் என்று மிதுன் கூறினான்.
ரிதம் தீவிரமாக நீ என்ன பொய் சொன்ன? நீ சொல்றதே எனக்கு புரியலையே ? என்று அவன் அருகில் வர..
மித்துனுக்கு இப்பொழுது தான் உண்மை உரைத்தது. அச்சச்சோ இத்தனை வருஷம் மறச்சது இவளுக்கு தெரிஞ்சா? பெரிய பிரச்சினையாகிடுமே! அப்புறம் ரிதம் நம்ம கிட்ட பேசவே மாட்டாளே! நித்தின் அண்ணா சொன்னத மறந்துட்டேனே! என்று நினைத்தவன்.
“இல்லை இல்லை சும்மா சொன்னேன்! அதாவது அங்க வந்து அம்மா கூட அவன் சேர்ந்துட்டான்னா? அப்புறம் அவன் ஹீரோவாகிடுவான்! நாம எல்லாருமே டம்மி ஆகிடுவோம்டி! அத தான் சொல்ல வந்தேன்!” என்று மிதுன் பேச்சை மாற்றினான்.
இந்த விஷயம் நித்தினுக்கு தெரியுமா? என்ற ரிதம் கேட்க..
இல்ல அண்ணாவுக்கு தெரியாது! அவனுக்கு மட்டும் தெரிஞ்சா? இதை எப்படி எடுத்துக்குவான்னு தெரியல! அவனுக்கு மகிய விட்டு பிரிஞ்சு அவ்வளவு தூரம் போய் இருக்கிறது. ரொம்ப கஷ்டமா இருக்கும்! இப்போ சத்யதேவ் அம்மா கிட்ட போய்ட்டானு தெரிஞ்சா? இன்னும் நித்தின் அண்ணாவாள அங்க வேலையை செய்ய முடியாது! திரும்பி கூட வந்துடுவான்! அவன் எவ்வளவு பெரிய வேலையில இருக்கான்! என்னையும் ட்ரை பண்ணி அதுல ஜாயின் பண்ண தான் சொல்றான்! அந்த சூரியா என்னை விட மாட்டேங்குறாரு என்று மிதுன் கூறினான்.
சரி விடு விடு அவனை அங்கிருந்து துரத்தலாம்! என்று ரிதம் கூற..
எப்படி என்று மிதுன் கேட்க..
இதோ இந்த குட்டி சக்தி நமக்கு ஹெல்ப் பண்ணுவான் என்று ரிதம் கண்ணடித்தாள்.
அப்படியா என்று சிரித்துக் கொண்டே அந்த பப்பியை தூக்கிக் கொண்டவன்.
சரி நீ குளிச்சிட்டு வரியா போலாம்! என்று கேட்க..
போடா சும்மா எதுக்கு தண்ணி வேஸ்ட் பண்ணனும்! ரெண்டு நாளுக்கு ஒரு தடவை தான் குளிக்கணும்னு டாக்டர் சொல்லி இருக்காங்க! அதனால வா கிளம்பலாம் என்று கொண்டையை போட்டுக் கொண்டே வர..
மிதுன் அவளை பார்த்து அட்லீஸ்ட் பிரஷ்ஷாவது பண்ணிட்டு வாடி! எதுக்குடி இப்படி சூர கழுதையா இருக்க! என்று மிதுன் சொல்ல..
எனக்கு என்ன குறைச்சல்! இப்ப இப்படி கண்ணடிச்சா கூட பத்து பசங்க என்ன பின்னாடி என் பின்னாடி சுத்துவாங்க என்று ரிதம் கூறினாள்.
அப்படியா? ஆனா நீதான் நித்தின் அண்ணாவை லவ் பண்றேன்னு சொல்லி இருக்க!! நிதின் அண்ணா ஒன்னும் உன் பின்னாடி சுத்தலையே! என்று மிதுன் கேட்டான்.
அப்படியா அப்போ அதுக்கு இப்ப என்னடா பண்ணனும்னு சொல்ற? என்ன என்னோட அழகை சந்தேகப்படுறியா? பெட்டு வச்சுக்கலாமா? யாரை கவுக்கணும்னு சொல்லு! ஃபிராக்ஷன் செகண்ட்ல கவுக்குறன்! என்று ரிதம் கூறினாள்.
உடனே மித்துன் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு அவ்வளவு கட்ஸ்ல இருக்கிறியா? அழுக்கு மூட்ட! என்று கூற
யாரடா அழுக்கு மூட்டைன்னு சொன்ன? நான் அழுக்கா இருந்தா கூட அழகு தான்! பொண்ணுங்க அழுக்கா இருக்கும்போது தான் ரொம்ப அழகா இருப்பாங்க! தெரியுமா ? சொல்லு பெட்டு வச்சுக்கலாமா? அப்படி நான் பெட்ல ஜெயிச்சா! பெனால்டி இருக்கு! அதே பெட்ல நீ ஜெயிச்சா உன்னோட பெனால்டிய அக்ஸப்ட் பண்ணிக்கிறேன். என்ன டா சொல்லு! என ரிதம் கேட்க..
ஓ இவ்வளவு தூரம் வந்துட்டியா? சரி டி பெட்டு வச்சுக்கலாம்! நான் சொல்ற ஆள நீ ஃப்லோட் பண்ணனும்! அவனா உன்கிட்ட வந்து லவ் யூ சொல்லணும்! Bet வச்சுக்கலாமா? என்று கூறினான்.
ரிதம் கைகளில் சொடக்கு எடுத்துக் கொண்டே யாரை வச்சுக்கலாம் விஷ்வா மாமா! அப்படி இல்லன்னா? பரணி மாமா வேற யாரு என்று யோசித்தாள்.
அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே என்னடி உங்க வீட்டு ஆளுங்களா சொல்ற? அதுவும் உங்க மாமா பசங்கல சொல்ற? என்னைய ஏமாத்துறியா என்று மிதுன் கேட்டான்.
ரிதம் கோபமாக அவனை பார்த்த சரி நீயே சொல்லு யாரு! என்று கேட்க..
யார சொல்றது என்று மிதுன் யாரை சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்க..
சரி சீக்கிரமா கிளம்பலாம் அங்கு என்ன நடக்குதுன்னு பார்பபோம்! போகும்போது அப்படியே ஒரு பெரிய ஐஸ் கேக் வாங்கிட்டு போலாம்! ஏன்னா இந்த குட்டி பப்பிக்கு சத்யதேவ் அலைஸ் சக்தின்னு பெயர் வைக்க போறோம்! என்று ரிதம் கண்ணக்குழி தெரிய சிரித்தாள்.
சரி வா போகலாம் என்று அவர்கள் இருவரும் வீட்டை சூர்யாவின் வீட்டை நோக்கி சென்றார்கள்.
இங்கே சத்யதேவ் உள்ளே வந்ததும் அமைதியாக சோபாவில் அமர்ந்து கொண்டான்.
சமையலறையில் இருந்து அவள் எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மா இப்போ எதுக்கு எட்டி பாக்குற? பக்கத்துல தான் போய் பாரேன்! நம்ம அண்ணா! உன் பையன் தானே !என்று இதழ் தன் அம்மாவை பார்த்து கேட்டாள்.
வேணாம் நான் போய் பார்த்து, உங்க அண்ணன் கிளம்பி போயிட்டானா? நானா அவன கூப்பிட்டேன்? என்று மகி சமைத்துக் கொண்டே இதழினிக்கு பதில் அளித்தார்.
அம்மா உனக்கு மனசாட்சி இருக்கா? நீ தான தீரா கிட்ட சொல்லி அண்ணாவை கூட்டிட்டு வர சொன்ன. இப்போ மாத்தி மாத்தி பேசுற! அப்பா சொல்ற மாதிரியே தான் நீ இருக்க! ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு மாதிரி பிஹேவ் பண்ற! உன்னை எப்படி அப்பா வச்சு சமாளிச்சாங்க! என்று கேட்டாள்.
வாய மூடிட்டு போறியா என்று மகிழினி மிரட்டினார்.
ஓவரா பண்ற இரு நான் டாடி கிட்ட போய் சொல்றேன். டாடி என்று கத்திக்கொண்டு இதழ் சூர்யாவின் அருகில் வந்தாள்.
அனைத்து உணவுகளும் தயார் செய்யப்பட்டது. ஆமா ஏன் மாதிரி ஒக்காந்துட்டு இருக்க! வீட்ட சுத்தி தான் பாரேன் டா! இது உன்னோட வீடு என்று சூர்யா கூறினார்.
இல்ல டாடி பரவால்ல என்று ஒற்றை பதிலளித்தான்.
என்னடா சத்தியதேவ் பதில் எல்லாம் ஒன்னு ஒன்னா வருது! ருத்ரா என் பையனுக்கு என்னத்த சொல்லி கொடுத்த? உங்க அப்பா மாதிரியே ஒரு வார்த்தைக்கு ஒரு பதில் சொல்றான். என்று சூர்யா கேட்டார்.
அட ஏன் மாமா! நான் ஒன்னும் மிஸ்டர் இன்பராகவன் மாதிரி சீன் எல்லாம் போட மாட்டேன்! பேசறதா இருந்தா பேசுவேன்! அவருதான் எல்லாத்துக்கும் முன்னாடி ஒரு மாதிரி பேசிட்டு அப்புரம் தனியா கூட்டிட்டு போய் இன்னொரு நியாயமும் பேசுவாரு. அந்த பழக்கமெல்லாம் எனக்கு கிடையாது நான் எப்பவுமே ஸ்ட்ரெயிட் பார்வேர்ட் என்று ருத்ரன் பெருமையாக விவேகாவை பற்றி பேசிக் கொண்டிருந்தான்.
அப்படியா என்று சூர்யா சிரித்து கொண்டே கேட்டார். உன் அப்பன் அம்மா ரெண்டு பேரும் எவ்ளோ கேடின்னு எனக்கு மட்டும் தானே தெரியும். என நினைத்தார்.
மகிழினி இதெல்லாம் கேட்டு சிரித்துக்கொண்டே ஸ்டார்ட்டாக சில ஸ்நாக்ஸை எடுத்து வைத்தார். அதனுடைய வாசம் சூர்யா மற்றும் அங்கு இருக்கும் அனைவரின் முக்கையும் துலைக்க எத்தனை வருஷம் கழிச்சு செஞ்சு போடுறா! நான் எத்தன தடவ இதையெல்லாம் கேட்டிருப்பேன்! எனக்கு செஞ்சாளா! இன்னிக்கி அவ பையன் வந்ததும் பாசம் பொத்துக்கிட்டு வருது! எப்படியோ அந்த குட்டி குட்டன் இங்க இல்ல.. இல்லனா? இன்னும் சீன் போட்டு திரிவாங்க! நல்லவேளை! என்று அந்த பதார்த்தங்களை ஒன்றை எடுத்து சூர்யா சாப்பிட ஆரம்பிக்க…
மாமி என்று ஒரு சத்தம் கேட்டது அந்த குரலே சொன்னது ரிதம் வந்துவிட்டாள்.
ருத்ரன் சத்யதேவை பார்த்து மாமா அக்கா வந்துட்டா! அப்போ கேக் வெட்டலாமா? என்று கேட்டான்.
ஏன்டா நீ வேற என்று சத்ய தேவ் பார்க்க..
அப்போ இன்னைக்கு பயங்கர கச்சேரி இருக்கும் போலையே செம்ம என்டேர்டைன்மென்ட் என்று இதழினி கூறினாள்.
என்ன பெருசா கச்சேரியை கண்டுபிடிச்சிட்ட என்று மகிழினி சொல்ல..
அம்மா! ரிதம் வந்திருக்கா? என இருவரும் உள்ளே நுழைய..
அங்கே இதழினியின் கையில் குட்டி பப்பி இருந்தது.
சரிங்க அத்தை மாமா நம்ம கேக் வெட்டலாம்! முக்கியமா வந்த விஷயத்தை மறந்துட்டேன்! சத்தியதேவ் மாமா புதுசா நாய்க்குட்டி வாங்கி இருக்காரு! என்ன பெயர் வைக்கலாம்னு சீட்டு குலுக்கி பார்த்ததுல ரிதம்னு வந்துடுச்சு! அதனால இப்போ கேக் வெட்டலாம்! என்று பதார்த்தங்களை தள்ளி வைத்துவிட்டு கேக்கை எடுத்து வைத்தான்.
சூர்யா, இதழினி, சத்தியதேவ் , மகிழினி என அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க..
ரிதம் மிதுனை முறைத்துப் பார்த்தாள்.
ஏய் சத்தியமா இத பத்தி எனக்கு தெரியாதுடி? என்று அவன் சொல்ல..
ரிதம் கோபத்துடன் நின்றாள்.
அப்பொழுது வொவ் வொவ் என்று இரண்டு நாய்க்குட்டிகளின் சத்தம்..
அடுத்து என்ன நடக்கும்.?
தொடரும்..
EPISODE 31
இதோட பேரு ரிதம்! Bitch.. அதாவது பெண் நாய்!. என ருத்ரன் கூறினான்.
ரிதம் மிதுனை முறைத்துப் பார்த்தாள்.ஏய் சத்தியமா இத பத்தி எனக்கு தெரியாதுடி? என்று அவன் சொல்ல..
ரிதம் கோபத்துடன் நின்றாள். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றாள்.
அப்பொழுது வொவ் வொவ் என்று இரண்டு நாய்க்குட்டிகளின் சத்தம்..
சூர்யா மிதுணை முறைத்து விட்டு கண்ணு குட்டி வா வா! என்ன காலையில் நேரமே எழுந்துட்ட போல! என உள்ளே அழைத்தார்.
மாமா! அவனை வீட்டை விட்டு வெளியே அனுப்புங்க! இரு டா ராஸ்கல் உன்னை இப்போவே டாடி கிட்ட சொல்றேன். என உடனே ரிதம் தன் தந்தைக்கு கால் செய்தாள்.
சொல்லிக்கோ! என அவன் கேக் எடுத்து வைத்தான்.
டேய் தீரா பிரச்னை வேணாம் விடு டா! என சத்ய தேவ் சொல்ல..
என்ன மாமா நீங்க உங்க பேரை போய் அந்த பப்பிக்கு வச்சிருக்கா! அவளை எப்படி சும்மா விட முடியும். என கொஞ்சம் சத்தத்துடன் கூறினான்.
வாட்? என இதழ், சூர்யா அவர்களை பார்க்க..
ஆமா மாமா! அவள் அந்த நாய் குட்டிக்கு சத்ய தேவ் அப்டின்னு வச்சிருக்கா! அதான் நான் இந்த bitch-க்கு ரிதம்ன்னு பேர் வச்சேன். என ருத்ரன் கூறினான்.
மா! அவன் வேணும்னு பண்றான்! என மிதுன் மகி அருகில் வந்தான்.
ருத்ரன் சூர்யா பக்கம் திரும்பி மாமா வாங்க மாமி வாங்க! கேக் வெட்டலாம் என அழைக்க..
மகி சத்ய தேவை பார்த்து கொண்டிருந்தார்.
சத்ய தேவ் மகியை பார்க்காமல் தவிர்த்து தீரா எனக்கு ரெஸ்ட் எடுக்கணும் வா போலாம் என அழைக்க..
மகி மாமி! வாங்க கேக் வெட்டலாம்! என்னோட பப்பி காதுல நீங்க தான் சத்ய தேவ் அப்டின்னு பேர் வைக்கணும்! என ரிதம் அழைக்க…
கண்ணு குட்டி என்ன இது? என சூர்யா கேட்க..
மாமா இதுக்கு காரணமே மீஸ்டர் WW tv chief editor தான் தயவு செய்து அவரை கம்முன்னு இருக்க சொல்லுங்க! அதை விட என் கிட்ட சாரி கேட்கணும்!
ஹேய்! என ருத்ரன் சண்டைக்கு வர..
உடனே சத்ய தேவ் அவளை முறைத்து பார்த்து விட்டு தீரா கேக் வெட்டலாம் எடுத்து வை! என கூறினான்.
மாமா! என ரிதம் கத்த..
சத்ய தேவ் என்ன டா இது என சூர்யா கேட்க..
அட போங்க மாமா! இப்போ தான் சக்தி மாமா சாரி சத்யா மாமா fire ஆகி இருக்காரு!
மாமி என ரிதம் கத்தி மிதுன் கேக் எடுத்து வை என மகி பக்கத்தில் சென்றாள். மிதுன் கேக் எடுத்து வைக்க..
தங்க புள்ளை சொல்றது கேளு வேணாம் ரிதம் என மகி சொல்ல..
முடியாது மாமி! என அழைத்து மெழுகு வர்த்தி ஏற்றினாள்.
மிதுன் அவன் கைகளில் அந்த சத்ய தேவ் நாய் குட்டியை வைத்திருக்க..
இங்கே ருத்ரன் கையில் ரிதம் பப்பி நாய் குட்டி இருந்தது. அவன் வேண்டும் என்றே happy birthday to you ரிதம் பப்பி! May God bless you ரிதம்! என கத்த ஆரம்பித்தான்.
மாமா என ரிதம் சினுங்க… ஹே இப்போ பாரு டி! என மிதுன் பாட ஆரம்பித்தான். Happy birthday sakthi.. happy birthday sathy dev.. may god bless you.. சத்ய தேவ் என கத்தினான்.
ருத்ரன் அவனை கண்டு கொள்ளாமல் மாமா நீங்க சூர்யா மாமாவுக்கு ஊட்டுங்க..
சத்ய தேவ் கேக் துண்டை எடுத்து இல்ல ஃபர்ஸ்ட் நாய் குட்டிக்கு தான் கொடுக்கணும்!
அது நாய் இல்ல மாமா! ரிதம் சொல்லுங்க மூணு தடவை! என ருத்ரன் சொல்ல..
அதற்கு முன் ரிதம் மிதுன் கைகளில் இருக்கும் நாய் குட்டியை வாங்கி சத்ய தேவ் , சத்ய தேவ்! என மூன்று முறை கூறினாள்.
மாமா! என்ன பண்றீங்க? சீக்கிரம் என ருத்ரன் சொல்ல..
சத்ய தேவ் சொல்லாமல் நீயே வை அந்த பேரை நான் சொல்ல விரும்பல.. என ருத்ரன் கிட்ட கூறினான்.
ஹே லிப்ஸ் நீ வை டி! என நீட்டினான்.
ரிதம் சத்ய தேவை முறைத்து பார்த்தாள். பேர் சொல்ல விருப்பம் இல்லையா! என்னோட பேர் எப்டி பிடிக்கும்? இதுவே அந்த b*ஹரிணி இருந்தால் ஒளுகிட்டு திரிவான். F* you cheater.. என முனகி கொண்டே நின்றாள்.
எனக்கு தெரியாது. என இதழ் நகர.. சூர்யா மாமா நீங்க வையுங்க என ருத்ரன் நீட்டினான்.
ரிதம் சூர்யாவை பார்த்து மாமா! அவ்ளோ தானா! உங்க கண்ணு குட்டி பேரை வைக்கிரீங்க! என பார்த்தாள்.
டாடி நீங்களே பேர் வையுங்க என சத்ய தேவ் கூறினான்.
மாமா! என ஒரு பக்கம் ரிதம் அழைக்க. டாடி என இன்னொரு பக்கம் சத்ய தேவ் அழைத்தான்.
டாடி!… மாமா!.. டாடி!. மாமா மாமா.. டாடிடி! என இருவரும் அழுத்தி அழுத்தி அழைத்தார்கள்.
கேக்கு தருவீங்களா மாட்டீங்களா? என ஸ்பூன் வைத்து கொண்டு இதழ் பார்த்தாள்.
அப்பா! என சத்ய தேவ் பார்க்க…
மாமா! என ரிதம் பார்த்தாள்.
என்ன சத்ய தேவ் கண்ணா? என குரல் கேட்க..
அங்கே விவேகா உள்ளே வந்தார். அத்தை என அழைக்க வந்தவனுக்கு ரிதம் எந்த உருமையில அத்தை சொல்ற என்ற கேள்வி நினைவு வர.. விவி வாங்க என அழைத்தான்.
விவேகாவின் பின்னால் இன்ப ராகவன் வந்தார். அவளின் பார்வை சத்ய தேவ் மீது மட்டும் தான் இருந்தது. ரிதம் பக்கம் கண் அசைவு கூட இல்லை..
ரிதம் தன் அம்மாவை பெரு மூச்சுடன் பார்க்க..
சொல்லு சத்யா என்ன ஆச்சு? என கேட்க.. தீரா மா நான் சொல்றேன். என அனைத்து விடயமும் கூறினான்.
இதை கேட்டதும் விவேகா சிரித்து விட்டு அவ்ளோ தான! நான் பேர் வைக்கிறேன். என அவள் சொல்ல .
டாடி என்ன இது! நாண் சென்ஸ் மிசஸ் விவேகா என் பேரை அசிங்க படுத்துறாங்க! என ரிதம் தன் தந்தையின் பக்கம் சென்றாள்.
விவேகா அந்த குட்டி பப்பியை தூக்கி கொஞ்சி நான் சுய நினைவோட பண்ண பெரிய என ஆரம்பித்தாள்.
அறிவு என மகி அழைக்க…
விவேகா பெரு மூச்சை விட்டு சரி எப்படியோ போகட்டும்! மனுசங்கள விட மிருகம் நன்றியோட இருக்கும்ன்னு சொல்லுவாங்க! அதனால் ரிதம் ரிதம் ரிதம் என அந்த பப்பியின் காதில் கூறினாள்.
இதை கேட்டதும் ரிதம் உதட்டை கடித்து சோகமாக இன்பாவை பார்த்தாள்.
ருத்ரன் சிரித்து கொண்டே ஹான் சூப்பர் மா! என அவன் பேசி கொண்டிருக்க.. அவனுடைய பின் மண்டையில் ஒரு அடி! ஸ்ஸ் ஆ!.
வாய அடக்கு! என்ன ஓவரா பேசுற! ராஸ்கல் என இன்பா கூற
மாமா! என சத்ய தேவ் அழைக்க..
விவேகா திரும்பி இன்பனை முறைத்து பார்த்தார். இன்பா நேராக சூர்யாவின் அருகில் சென்று டேய் மச்சி! நீ domestic animal ஆ இல்ல wild animal ஆ என வேண்டும் என்றே கேட்க
நானா! நான் மனுசன் டா!. என சூர்யா கூற..
இன்பா விவேகாவை பார்த்து கொண்டே மிருகம் ரொம்ப விசுவாசம் காதலோட இருக்கும் டா சூர்யா! அதனால் நான் வெளியே alpha male animal
அப்போ வீட்ல என சூர்யா கேட்க..
வீட்ல.. என் இழுத்து கொண்டே வீட்ல.. நான் நான் வந்து டொம்மஸ்டிக் அனிமல்! காலை சுத்தும் அணிமல புரிஞ்சுக்க மாட்டிக்கிராங்க டா! என இன்பா கூறினான்.
மகி இதை கேட்டு உதடு கடித்து சிரிக்க.. மிதுன் ஆச்சரியமாக பேச்சுல கண்ணுல அசைவுல எல்லாமே பிளார்ட் தான்! என நினைத்தான்.
டாடி என்ன சொல்லிட்டு இருக்கீங்க? நீங்க சொல்றது! ஒண்ணுமே புரியலயே! அப்போ நீங்க அனிமலா! என ரிதம் கேட்டாள்.
விவேகா உஷ்ண மூச்சுடன் முறைத்து பார்த்தாள். பார்த்து அண்ணா! என மகி சொல்ல..
சூர்யா சார்! கொஞ்சம் பத்ரம்!. ஏன்னா வீட்டு அனிமல் ஸ்லம்… அதாவது தெரு நாய் ஆகிட போகுது. கூடிய சீக்கிரத்தில் ஆகிடும்! என கூறினாள்.
சூர்யா இதை கேட்டு சிரிக்க.. டேய் அவள் ரொம்ப ஓவரா போறா! கொஞ்சம் வாய அடக்க சொல்லு! இல்ல அவளை நான் சும்மா வுட மாட்டேன்.
என்ன பண்ணுவ? என சூர்யா கேட்க..
சரி சரி எனக்கு கேக் வேணும்! என இதழ் கேட்க..
ஹே போடி என ரிதம் சொல்லி விட்டு டாடி அவனை கேளுங்க..
இன்பா திரும்ப..
வெட்டினால் தான் நல்லாருக்கும் இந்தா இதழ் என அனைவருக்கும் கட் செய்து கொடுத்தார்.
அறிவு வா! உள்ளே வா மதியம் என்ன சாப்பிடுற? என அழைத்து செல்ல..
மிதுன் இதழ் கிட்ட கேக்கை வாங்கி இதை சாப்பிடு! அது சைவ கேக்!..
குக்கு அது டர்ட்டி இதை சாப்பிடு என ருத்ரன் கொடுத்தான்.
சத்ய தேவ் கையில் ரிதம் என்னும் பெயர் வைத்த நாய் குட்டி அவனை பார்த்து கொண்டே தலையை ஆட்டி அவன் மடியில் செல்லமாக படுத்து கொண்டது.
ரிதம் கையில் இருக்கும் சத்ய தேவ் நாய் குட்டியை முத்தம் வைத்து கொஞ்சினாள்.
என் தங்கம்! என் அழகா என ரிதம் கொஞ்ச இன்பா அதை பார்த்து ரசித்தான்.
சத்ய தேவ் அமைதியாக இருக்க..
ருத்ரா சத்ய தேவ மேலே கூட்டி போ! ரைட்ல இருக்க செகன்ட் ரூம்! என அனுப்பி வைத்தார்.
ஹே கண்ணில் எதோ ஒட்டி இருக்கு! என்ன இது என இதழ் ரிதமை துடைத்து விட..
அதுவா நான் தூங்கி எழுந்து அப்படியே வந்துட்டேன். என ரிதம் கூறினாள்.
இதை கேட்டதும் விவேகா இன்பாவை முறைக்க..
அவன் சமாளித்து கொண்டே என்ன டிம்பிள் உன் அம்மா மாதிரி கெட்ட பழக்கத்தில் இருக்க! தண்ணி எல்லாம் மிச்சம் பண்ண வேணாம். உன் அப்பா பணக்காரன் என கூற..
ச்சீ நாயே! என விவேகா கூற..
தூரி ரிதமுக்கு ட்ரெஸ் எடுத்து கொடு! தங்க புள்ளை ஃப்ரெஷ் ஆகி வா! என மகி அனுப்பி வைத்தார்.
ரிதம் நாய் குட்டியை தூக்கி வந்து தன் தந்தையுடன் கொடுத்தவள். டாடி பத்ரம் என கொடுக்க அந்த நாய் இன்பா பக்கம் தொத்து கால் போட முயற்சி செய்தது.
ருத்ரன் வீடு மொத்தத்தையும் சுற்றி காட்டி விட்டு கடைசியாக மேலே மாடிக்கு அழைத்து சென்றான்.
சத்ய தேவ் மேலே அந்த இடத்தை சுற்றி பார்த்து எது டாடி ரூம்? என கேக்க..
என்ன மாமா இது கேள்வி! உங்க வீடு! இப்படி பொக்குண்ணு பேசாதீங்க!.
எப்டி இருந்தாலும் நான் புதுசு தான..என சத்ய தேவ் கூறினான்.
இது டூ மச் மாமா என பேசி கொண்டே மேலே சென்றான்.
ருத்ரன் அறைக்கு அருகில் வரவும் அவனுக்கு போன் வந்தது.
மாமா! அப்படியே போங்க! பேப்பர் சப்மிசன் பண்ணேன்! அங்கே இருந்து போன் வருது பேசிட்டு வரேன் என அவன் நகர..
சத்ய தேவ் அங்கிருக்கும் அறையை நோட்டம் விட்டு கொண்டே போக சூர்யா மற்றும் மகி அறை இருந்தது. அதில் எந்த மாற்றமும் இல்ல…
சாந்தி நகரில் அவர்களின் வீட்டில் இருக்கும் அத்தனை படங்களும் அப்படியே அறையில் இருந்தது. மகி சிறு வயது சத்ய தேவை தூக்கி முத்தமிடும் படங்கள். மற்றும் இதழ் தவழ்ந்து இருப்பது போல ஒரு படம், இதழ் மகி இருவரும் இளவரசி உடையில் இருப்பது போல படங்கள், இன்னொரு பக்கம் அந்த குட்டி குட்டன் உதட்டை பிதிக்கி கொண்டு கோபத்துடன் நிற்பது என அனைத்தையும் பார்த்தான்.
அப்படியே அடுத்த அறைக்கு செல்ல அது மகியின் ஓவிய அறை! அந்த அறையில் இருந்த ஓவியங்களை பார்த்தான். எல்லாமே அவன் தான்! வகை வகையாக நிறைய படங்கள். ஆனால் முகம் மட்டும் முழுமை அடைய வில்லை. சத்ய தேவ் மென் புன்னகையுடன் அடுத்த அறைக்கு சென்றான்.
அது அந்த குட்டி குட்டன் அறை கசகசவென இருந்தது. அதன் பின் ஸ்டோர் ரூம்! தான் இருந்தது. அப்போ என சுற்றி பார்க்க அதற்கு எதிர் திசையில் இரண்டு அறை!.
ஓ அங்கே தான் எனக்கு ரூம் இருக்கா! என கதவை துறந்து உள்ளே சென்றான்.
மேஜையின் மீது சலங்கை இருக்க.. அந்த அறையின் வண்ணம் லைட் பிங்க் பேபி பிங்க் நிறத்தில் இருக்க..
சத்ய தேவ் எதிரில் மாட்டபட்ட படத்தை பார்த்தான். இதழ் அரங்கேற்றத்த்ல் முத்திரை காட்டி அழகாக சிரிக்கும் படம் இருக்க.. ஓ இது குக்கு ரூம் என நினைத்து அவன் அந்த படத்தை அவனுடைய போனில் போட்டோ எடுக்க வர..
“உன்னை என்னை மெல்ல தான் தைத்து வைத்து கொள்ள தான் நிலவு வரும் அந்தி நிலவு வரும்” ( உள்ளம் கேட்குமே படத்தில் இருந்து முதன் முதலாய் ஒரு மெல்லிய) என பாடி கொண்டே ரிதம் சொட்ட சொட்ட ஈரத்துடன் ஹே எனக்கு ட்ரஸ் டைட்டா வேணும் டி! என துண்டை கட்டி கொண்டே வெளியே வந்தாள்.
சத்ய தேவ் திரும்ப…
டேய் ராஸ்கல்!.
தொடரும்..
EPISODE 32
ரிதம் சொட்ட சொட்ட ஈரத்துடன் ஹே எனக்கு ட்ரஸ் டைட்டா வேணும் டி! என துண்டை கட்டி கொண்டே வெளியே வந்தாள்.
அங்கே அறையில் சத்ய தேவ் இருக்க கேமரா ஆட்டோ செட்டிங்கில் சக் சக் என்று கிளிக் சத்தம் கேட்க.. என்ன இவள் குரல் கேட்குது என அவள் பக்கம் திரும்ப அங்கே ரிதம் சொட்ட சொட்ட சில்வர் பேப்பர் சுற்றிய சிக்கன் பீஸ் போல நின்றாள்.
சத்ய தேவ் கஷ்ட பட்டு எட்சிலை விலுங்கியவன். நான் போற இடத்துக்கு அவள் வராலா? இல்ல அவளை ஃபாலோ பண்ணி நான் வரேனா? இவளை பார்க்கவே கூடாதுன்னு நினைச்சா வந்து நிக்கிறா! இனி இவளை அவாய்ட் பண்ணனும் என நினைத்தவன்.
ரிதம் பார்வை அவளின் மார்பை பார்த்தது. நல்ல வேளை டாட்டு தெரியல! இந்த சீட்டர் இங்கே என்ன பண்றான்? ராஸ்கல்! என நினைத்தவள். அவனை பார்த்து ஹே ஹே வெட்கம் கெட்டவனே! கேமரால என்னை போட்டோ எடுக்க வந்தியா!
இது உன் ரூம் இல்ல! உனக்கு வெட்கம் இருக்கா டி! என திரும்பி கொண்டான்.
ரிதம் அவன் அருகில் வந்து போனை பிடுங்கி கொண்டு அவனை வெளியே தள்ளி கதவை சாத்தினாள்.
சத்ய தேவ் திடுக்கிட்டு ஹே போனை தாடி! என கதவை தட்ட..
நான் உன்னோட ஹிஸ்டரி செக் பண்ணிட்டு தரேன் போடா! என கூறி கொண்டே பீரோவில் இருந்து உடையை எடுத்தாள்.
ஹே தா? தாடி! என சத்ய தேவ் கேட்டு கொண்டிருக்க..
அந்த நேரம் மாமா என சத்தம் வேறு யா? ருத்ரன் தான்!
இவன் வேற வந்துட்டானே! என மலுப்பிவது போல முகத்தை வைத்து கொண்டவன். இது இது யார் ரூமு! என சத்ய தேவ் மலுப்பினான்.
இதுவா இது குக்கு ரூம் தான்! ஹான் உங்க ரூம் அது! இந்தாங்க உங்களுக்காக சுக்கு காபி என கொடுத்தான்.
அப்டியா சரி என இதழ் அறையை ஒரு பெரு மூச்சுடன் கடந்தார்கள்.
இங்கே உள்ளே ரிதம் அவனுடைய போனை மேய்ந்து அதில் உள்ள அவளின் அனைத்து படங்களையும், அதாவது அனைத்து என்றால்? அதற்கு அர்த்தம் இப்பொழுது சத்யதேவ் போனில் ஆட்டோ க்ளிக் ஆகி இருந்த படங்கள் அனைத்தையும் டெலிட் செய்தாள்.
ஆனால் அதுல ஒரு சின்ன மாற்றம்!
ஒரே ஒரு படத்தை மட்டும் விட்டு விட்டாள். அதை ஜூம் செய்து பார்த்தாள். அனைத்து படங்களையும் ஜூம் செய்து அதில் அவள் அவனையே பார்த்துக் கொண்டிருப்பது போல் ஒரு படத்தை மட்டும் விட்டு வைத்து திருப்தி பட்டு கொண்டவள். சரி இது ஒன்னு மட்டும் இருக்கட்டும்! என விட்டு விட்டாள். அவளுக்கு பிடித்த உடையை தேர்வு செய்து போட்டு கொண்டாள். சத்ய தேவ் போனை அவளுடைய பேண்ட் பாக்கெட்டில் போட்டு கொண்டாள்.
கண்ணாடியில் தன்னை பார்த்தவள். கண்களை மூடி அப்படியே பின்னோக்கி சில காட்சிகளுக்கு சென்றாள். “ம்ம்.. stranger to cheater.!” என கண்ணகுளி சுளுக்கும் அளவுக்கு சிரித்தாள். அப்படியே படுக்கையில் விழுந்தாள். அவளின் கைகள் இடைக்கு சென்றது. “நேற்று இங்கு தானே முகத்தை வைத்திருந்தான்!” என ரிதமின் இதயம் ரிதமிக் அதிகமானது.
என்ன மாமா உங்க ரூம் எப்டி இருக்கு? என ருத்ரன் கேட்டான்.
ஹான் சுக்கு காபி சூப்பரா இருக்கு! என சத்ய தேவ் கூறினான்.
மாமா! என அவன் அதட்ட.. என்ன டா தீரா!. என அவன் திடுக்கிட்டு பார்த்தான்.
நான் உங்க கிட்ட என்ன கேட்டேன்? நீங்க என்ன பதில் சொல்லிட்டு இருக்கீங்க?
என்ன கேட்ட? ஹான் இந்த ரூம் குட்! என்றான்.
ருத்ரன் கொஞ்சம் மெதுவான குரலில் உங்களுக்கு ரொம்ப சிரமமா இருக்கா? இங்க நான் வற்புறுத்தி கூட்டிட்டு வந்தது தப்பு தான்! என்னை மன்னிச்சிடுங்க மாமா! எனக்காக நீங்க இங்க வந்திருக்க வேண்டாம்! உங்களுடைய முழு மனசோட நீங்க வந்திருக்கணும்! என்று கூறினான்.
சத்ய தேவ் சிரித்துக்கொண்டே “அப்படி இல்ல! எனக்கு இங்க வரணும்னு இதுவரைக்கும் தோனுனதுல்ல! இப்போ வந்துட்டேன்! சோ இது நடக்கணும்னு இருக்கு! நடந்துடிச்சு! சோ வருத்தப்படுவதற்கு ஒன்னும் இல்ல! நான் ஹேப்பியா தான் இருக்கேன்! என் டாடி கூட ஸ்பெனட் பண்ண, எனக்கு டைம் கிடைச்சிருக்கு! ஜஸ்ட் நான் தனியா இருப்பேன்! இப்போ டாடி கூட அப்பப்போ பேசலாம்!”என்று கூறினான்.
ருத்ரன் அசையாமல் சத்திய தேவை பார்த்துக் கொண்டிருந்தான்.
இப்போ எதுக்குடா இப்படி பாக்குற? என்ன ஆச்சு? என்று சத்ய தேவ் கேட்டான்.
சரி என்னமோ என்று இருவரும் பொதுவாக நிறைய பேசினார்கள்.
இப்போ நெக்ஸ்ட் என்ன மாமா வொர்க்? உங்களுக்கு? ஃப்ரீயா இருக்க மாதிரி தோணுதே! என சிரித்துக் கொண்டே கேட்டான்.
சத்தியத்தை தீவிரமான முகத்தை வைத்துக்கொண்டு ஒரு ரெண்டு மூணு டாக்குமென்டரி இருக்கு! ஆக்டர் பத்தி ஒரு சில டாகுமென்டரி, கூடவே மணிப்பூர் மேகாலயா அந்த சைடு பழங்குடி மக்கள் அவங்களோட வாழ்க்கை முறை அத பத்தி ஒரு பெரிய ஆர்டிகள் இருக்கு! சோ நான் நிறைய ஜர்னல்ஸ்ல ட்ரை பண்ணி! அங்க பப்ளிஷ்க்கு கேட்டு இருக்கேன்! என்று கூறினான்.
ருத்ரன் சத்ய தேவை ஆச்சரியத்துடன் பார்த்து குட் மாமா உங்களோட டிசிஷன் கரெக்ட்டா இருக்கு! இந்த www வச்சுட்டு ஒண்ணுமே பண்ண முடியாது! பேசாம நீங்களே சொந்தமா ஒன்னு ஆரம்பிங்க! என்று கூறினான்.
சத்திய தேவ் அவனை முறைத்தவன் எப்போ பாரு உங்க அப்பாவை எதிலயாவது கொண்டு வந்து நுழைச்சிடுற? என்னடா அப்படி உனக்கு? அவர் உன்னை என்ன பண்ணாரு? என்று கேட்டான்.
ருத்ரன் முகத்தை சுழித்துக்கொண்டே போங்க மாமா! அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல! எனக்கு அவரைப் பார்த்தாலே இரிடேடிங்கா இருக்கும்!.
சக்தி ஆச்சரியத்துடன் பார்த்து “அது எப்படி இரிடேடிங்கா இருக்கும்? எனக்கு என்னோட டாடி ரொம்ப பிடிக்கும்! அவர்தான் என்னோட ரோல் மாடல்! என்னோட டாடி தான் எனக்கு ரொம்ப ரொம்ப பெஸ்ட்! என்று கூறினான்.
ருத்ரன் அவனைப் பார்த்து உங்களுக்கு மட்டும்தான் சூர்யா மாமாவை புடிச்சிருக்கு! உங்களோட தம்பிக்கு மாமாவ புடிக்கலையே! என்று கேட்டான்.
அதுவும் சரி தான்! ஆனால் குக்குவுக்கு டாடி தான் ரொம்ப பிடிக்கும். எனக்கு என்னுடைய டாடி தான் பெஸ்ட் என்று கூறினான்.
ருத்ரன் சிரித்துக்கொண்டே உங்களுக்கு டாடின்னா எனக்கு மம்மி! எனக்கு விவேகா தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் !எங்க அம்மா தான் ரொம்ப ரொம்ப பெஸ்ட்! எல்லா இடத்திலும், எனக்காக எங்க அம்மா இருப்பாங்க! என்று கூற..
இதை கேட்டதும் சத்யதேவ் முகம் மாறியது.
ருத்ரன் அவனுடைய முகத்தை பார்த்து சாரி மாமா! அது நான் வந்து இன்று தயங்க வர
சத்ய தேவ் சிரித்துக்கொண்டே இதெல்லாம் நான் எப்போதோ கடந்துவிட்டேன்! என்று கூறினான்.
மாமா அத்தை நீங்க நினைக்கிற மாதிரி இல்ல மாமா! என்று சொல்ல வர..
போதும் இதை பத்தி பேசி எனக்கு போர் அடிக்குது. சில இன்டர்வியூ ரெக்கார்டிங் இருக்கு அதை டாக்குமெண்ட் பண்ணனும்! இப்போ நீ என் கூட இருக்கியா? இல்ல கீழே போறியா!
நான் கீழ போல என்னோட ப்ரோபலை கொஞ்சம் பில்ட் பண்ணனும்! அதனால காலேஜஸ்க்கு ரெஸ்யூம் கொடுக்கலாம்னு இருக்கேன்! காலேஜ்ல லட்ச்சரரா ஜாயின் பண்ணலாம்னு ஐடியா இருக்கு! மாமா என்று கூறினான்.
சூப்பர் கூல் என்று சத்ய தேவ் கூறிக்கொண்டு அவனுடைய பேக்கிலிருந்து லேப்டாப் எடுத்து படத்தை பார்க்க ஆரம்பித்தான்.
*
என்ன முகம் ரொம்ப கவலையா இருக்கு? என அடுப்படியில் மகி விவேகாவை பார்த்து கேட்க..
என்ன கா பண்ண சொல்றீங்க? என் வாழ்க்கை முழுக்க கவலை தான் இருக்கு! என கூறினார்.
என்ன டி இப்படி பேசுற? காலையில் சாப்ட்டியா? என்ன ஆச்சு? அவ்ளோ வருத்தம்? ரிதம் அவளுக்கு பிடித்த பையன கல்யாணம் பண்ணிக்க போறா? இதுல உனக்கு என்னடி பிரச்சனை வந்தது? நீ மட்டும் சாதாரண ஆளா? உனக்கு பிடிச்ச ஆள நீ சாதித்து, உன் வீட்டையே விட்டு, உன் ஊர விட்டு, உன் மாநிலத்தை விட்டு, இந்தியாவையே நாலு வருஷம் விட்டு உன்னோட காதலை சுமந்து பெத்துருக்க நீயே இந்த மாதிரி இருக்கும்போது, உன் பொண்ணு அவனுக்கு பிடிச்சவன கல்யாணம் பண்ணிக்கிறதுல என்ன தப்பு? என்று மகி கேட்டார்.
விவேகாவின் முகம் இன்னும் குழப்பத்திலும் பயத்திலும் தான் இருந்தது அது எப்படிக்கா? அது என்னால எப்படி ஒத்துக்க முடியும்? என்று கேட்டார் .
மகி அவளை பார்த்து இது என்ன கேள்வி? எப்படி ஒத்துக்க முடியும்னா? நீயா அவன் கூட வாழ போற! என்று சிரித்துக் கொண்டே கேட்க..
அக்கா என்னக்கா! என அருகில் உள்ள ஹாட் பாக்ஸை விவேகா திறந்தார்.
மகி அவளைப் பார்த்த இங்கே பாரு விவேகா!. நித்தின் என்னோட அக்கா பையன்! ரொம்ப நல்ல பையன்! நீ என்ன குறை அவன் கிட்ட கண்டுபிடிச்ச? ஏன் இப்படி தயங்குற? உனக்கு என்ன பயம்? என்று கேட்டார்.
எனக்கு அந்த குரு பிரகாஷ் வீட்டை சுத்தமா பிடிக்காது. அதனாலதான் அந்த நித்தினை பார்த்தா ரொம்ப ஆரோகன்ட்டா இருக்கு! காதல் கல்யாணம் இப்ப நல்லா தான் இருக்கும்!
அப்புறம் என்னாகும் என்று ஆண் குரல் கேட்டது.
விவேகா திரும்பி பார்க்காமல் அக்கா எனக்கு இது குழம்பு ஊத்து என்று காலையில் வைத்த இட்லியை எடுத்து தட்டில் போட்டு நீட்ட..
மகி திரும்பி பார்க்க அங்கே இன்பா இருந்தார். அண்ணா நீங்களா எதுவும் வேணுமா என்று கேட்க வர…
காதல் கல்யாணம் இப்ப நல்லா தான் இருக்கும்! அப்புறம் என்ன ஆகும்? சொல்லு டி! நானும் போனால் போகுது, போனா போகுதுன்னு ,பொறுமையா இருந்தா, ஓவரா பேசுற? ஏன் டி உன்ன கல்யாணம் பண்ணிட்டு அப்படியே நடுத்தெருவில விட்டுடேனா? செங்கல் சூலைக்கு வேலைக்கு அனுப்பினனா? இல்ல! உன்ன கொடுமை பண்ணுனனா? மகாராணி மாதிரி தானே வச்சிருக்கேன்! என்னோட கம்பெனிக்கு, என்னோட குடும்பத்துக்கே உன்ன ராணியாதான வச்சு பாத்துட்டு இருக்கேன். எவ்வளவு கொழுப்பு இருந்தா இப்படி எல்லாம் பேசுவ? என்று இன்பா கேட்க..
விவேகா உதடு துடிக்க அந்த இடத்திலிருந்து அப்படியே தட்டை வைத்து விட்டு எழுந்து செல்ல போக..
மகி அவளின் கைப்பிடித்து எங்க போற? சாப்பிட்டு போ! என்று கூறினார்.
இல்ல நான் போறேன் நான் கிளம்புறேன் என்று அவள் நகர..
இன்பா ஒரு பெருமூச்சு விட்டு “மகி நீயே சொல்லுமா! ஒருத்தவங்கள வந்து பிடிச்சிருக்குன்னு என் பொண்ணு வந்து சொல்லும்போது, அவங்கள நான் எப்படி நிராகரிக்க முடியும்? அப்படி இவள் சொல்ற மாதிரி நான் வேணாம் அப்டின்னு சொல்லிட்டா? ரிதம் என் கிட்டி நிராகரிக்கறதுக்கான காரணத்த கேட்டால்? நான் என்ன சொல்லுவேன்? என்னோட கௌரவம்னு சொல்லுவேனா? அது நல்லா இருக்குமா? இந்த காலத்துல எந்த பொண்ணு பையணாவது் நான் இவங்கள லவ் பண்றேன்! நாங்க நல்ல நிலையில் புரிதலோடு இருக்கோம்! எங்களுக்கு கல்யாணம் பண்ணி வையுங்க! நாங்க இப்படி செட்டில் ஆகிறோம்! அப்டின்னு யாராவது வந்து சொல்றாங்களா? அப்படி சொல்லி அவங்க பேரன்ட்ஸ் கல்யாணம் பண்ணி வைக்கலைனா? தப்பு… அந்த பேரண்ட் மேல தான்! அந்த பையன் பொண்!ணு மேலையும் எந்த தப்பும் இல்லை இவ்வளவு ஏன் இவ போய் அவங்க வீட்ல சொன்னதுக்கு அவங்க அம்மா ஒத்துக்கல! அதேபோல நான் ஏன் இருக்கணும்! என் பொண்ணு ஒரு நல்ல பையனை தானே கட்டிக்கிறேன்னு, வந்து நின்னா! அது தப்பா!” என்று இன்பா கேட்டார்..
விவேகா தலை குனிந்து கொண்டே நிற்க..
மகி ஒரு பெருமூச்சை விட்டு இருவரையும் பார்த்தவர். இப்போ உனக்கு மாப்பிள்ளை நித்தின்கிறது தான் பிரச்சனையா? சொல்லு? நான் எங்க அக்கா மாமா கிட்ட சொல்றேன்! இதை நிறுத்திடலாம்!
விவேகா கொஞ்சம் தயக்கத்துடன் அப்படி எலலாம் இல்லைங்க அக்கா என்று கூற..
மகி ஒரு பெருமூச்சு விட்டு உன்னோட பிரச்சனையை தெளிவா சொல்லு! அதுக்கு தீர்வு நான் சொல்றேன்!
விவேகா மகி முகத்தை பார்த்து கல்யாணம் என்ற விசயம்? என்னை பொறுத்த வரைக்கும், கல்யாணம் ஆயிரம் காலம் பயிறுன்னு சொல்லுவேன்! என் பொண்ணு ஒரு அடங்காதவ, அவளோட குணம் ஒன்றுமே சரியில்ல! அது எல்லாமே எனக்கு தெரியும்! அவளுக்கு தகுந்த பையன் நித்தின் இல்லை! அதுதான் என்னோட வருத்தம்!
என்ன சொல்ற?
விவேகா தீவிரமாக ரிதம் ரொம்ப கோபக்காரி, அவசரக்காரி, பொறுமை இல்லாதவ! அவளை பொறுமையா பாதுகாக்கிற ஒருத்தன் வேணும்ன்னு நான் நினைக்கிறேன். அந்த மாதிரி பையன் நித்தின் இல்லை! என் பொண்ணு மேல வளத்தவங்கள விட, நான் பத்து மாசம் என்னோட காதலையே அவளா நினைச்சு சுமந்து இருக்கேன். எனக்கு அவ மேல நிறைய பாசம் இருக்கு! அவளோட குணத்தை நான் என்ன தான் மாத்த நினைச்சாலும், பரம்பரை குணம் என்று இன்பாவை பார்த்தவர்.
ஓ அப்டியா என இன்பா புருவம் நெருக்கி அவளை பார்க்க..
விவேகா அதன் பின் மகியை பார்த்து “இந்த பரம்பரை குணம் அது நாயோட வால நிமித்த முடியாதது, குரங்கு புத்தி எல்லாமே இருக்கு! நான் என்ன பண்ண முடியும்? அதனாலதான் எனக்கு பயம்! அந்த வாழ்க்கை நல்லபடியா போனா! ஓகே! நடுவுல முடிஞ்சிருச்சுன்னா? அதை என்னால தாங்கிக்க முடியாது! என் பொண்ணால என்னோட மாமியார் வீட்டுக்கு ஒரு களங்கம் வரக்கூடாதுன்னு நினைக்கிறேன். என்று கூறினார்.
கை தட்டும் சத்தம் கேட்டது. அது இன்பா தான்!..
இப்போ எதுக்குடா கை தட்டுற? என்னடா உனக்கு வேணும்? உன்ன பார்த்தாலே… ச்ச! எனக்கு எரிச்சலா இருக்கு! என்று விவேகா வார்த்தைகளை கடித்து துப்ப…
இன்பா புருவம் தூக்கி மகி பாத்தியா இந்த அடங்காதத்தனம்! அவசரத்தனம்? அதிகமா வாய் ஆடுறதனம்! இது எல்லாம் ரிதம்க்கு எங்கிருந்து வந்திருக்க்கு பாரு! எல்லாமே பரம்பரைன்னு சொன்னாலே? இங்க பரம்பரை என்னோட ஜெனிடிக்ஸ் கோட் ரொம்ப குவாலிட்டியா இருக்கும்! சோ இந்த குரங்கு புத்தி எல்லாமே இவ கிட்ட இருந்து தான் என் பொண்ணுக்கு வந்திருக்கு! Bad habit! கெட்ட பழக்கம் எல்லாமே வந்து இருக்கு! என்று கூறி முடித்தார்.
விவேகா கைகளை மடக்கிக்கொண்டு இன்பாவை பார்க்க..
மகி ஒரு சின்ன சிரிப்புடன் உங்க ரெண்டு பேரையும் எப்பவுமே மாற்ற முடியாது! என்ற விவேகாவின் கையைப் பிடித்தவர்.
நீ கவலைப்படாத இந்த கல்யாணத்துல என்ன நடந்தாலும், அதுக்கு நான் பொறுப்பு! ரிதம் ரொம்ப நல்ல பொண்ணு! அவ ஸ்கூல் பொண்ணு மாதிரி! சின்ன சின்ன சேட்டை செய்வா! ஆனா அவளோட மனசு ரொம்ப ரொம்ப குழந்தை போல! எதையுமே வச்சுக்க மாட்டா. உன்னோட பயம் எனக்கு நல்லாவே புரியுது. எங்க அக்கா தேஜு நிறைய சூது நிரைஞ்சவ! கெட்டவ தான்! அது எனக்கே தெரியும்! எங்க சூர்யா மாமாவும் அதேபோலத்தான்! ஆனா அது அப்போ may be அதை நினைச்சு பயப்படுற? எனக்கு நல்லாவே புரியுது! ஆனா நிதின் அப்படி இல்ல! அவன் ரொம்ப நல்ல பையன்! எங்க அண்ணன் உதயன் மாதிரி! அதனால நீ கவலைப்படாதே! என்று மகிழினி கூறினார்.
என்ன என்னோட பேரு அடிபட்ற மாதிரி இருக்கு! என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்திற்கு சூரிய தேவ் வந்தார்.
இன்பா வேண்டுமென்று அது நீ இல்ல! மகிழினியோட மாமா! என்று கூற..
விவேகா இன்பாவை முறைத்து பார்த்தார்.
மகி கொஞ்சம் நெற்றியை தேய்த்துக் கொண்டே அண்ணா என்று அழைக்க..
யாரு என்று சூர்யாவின் குரல் மாறியது. அதை மகி கிட்ட கேளு என்ன மகி என்று இன்பா சிரித்தார்.
அது யாருமில்லைங்க நான் எல்லாமே சமைச்சுட்டேன்! உங்க பையன கூப்பிடுறீங்களா? சைவம் அசைவம் என்று கூறினார்.
சூர்யா மகிழினி பக்கம் நெருங்க..இன்பா வெளியே சென்றார், அண்ணா என்று மகிழ் அழைக்க.. சமாளி தங்கச்சி என்று சிரித்துக் கொண்டே விவேகாவை பார்த்துக் கொண்டே அவளின் அருகில் நெருங்க.. வெடுக்கென விவேகா உள்ளே சென்று தட்டில் போட்டு வைத்திருந்த இட்லி குழம்பு என இரண்டையும் எடுத்துக்கொண்டு டைனிங் டேபிள் சென்றுவிட்டார்.
இன்பா சிரித்துக் கொண்டே எப்படி இவள்? நான் பார்த்தது வரைக்கும் அப்படியே இருக்கா! காலையில வச்ச இட்லி.. அதை மதியம் சாப்பிடற பழக்கம், அப்புறம் உப்புமா சாப்பிடுற பழக்கம், தண்ணி குடிக்காமல் சுத்துறது வேற, கிச்சடிய கண்ட நேரம் சாப்பிடறது, வெண்பொங்கல நைட்டு டிஸ்டா சாப்பிடுவது! இதுதான் செய்கிறா? இவள போய் எனக்கு எப்படி பிடிச்சது? என்று விவேகாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஹலோ சார் என்று ஒரு குரல் மிதுன்தேவ்…
என்ன டா! குட்ட கு**…
என்ன என மிதுன் கோபத்துடன் பார்க்க..
ஹே இல்ல குட்டி குட்டன்! டங்க் ஸ்லிப் ஆகிடுச்சு! என இன்பா கூற..
மிதுன் தேவ் முறைத்துக் கொண்டே இருக்கட்டும் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம்! என்று கூறினான்.
என்ன? இது? புதுசா! நீ எல்லாம் என்கிட்ட வந்து பேசுற! என்று கேட்க..
அது ஒன்னும் இல்ல உங்களோட ஃப்லோட்டிங் ரொம்ப நல்லா இருந்துச்சு! என்று சிரித்துக்கொண்டே மிதுன் கூறினான்.
இன்பா அதிர்ச்சியுடன் பார்க்க..
அதுதான் இப்போ ஆண்ட்டியை கரெக்ட் பண்ணிட்டு இருந்தீங்களே! என்று மிதுன் கூற..
ஆண்ட்டியா? யாருடா உனக்கு ஆண்ட்டி? என்று இன்பா கேட்க..
வேற யாரு விவேகா தான்! அவங்க ஆன்ட்டி தானே! 45 + பிளஸ் கரெக்ட் தானே என்று கூறினான்.
இன்பா மிதுனை முறைத்துக் கொண்டே நீ குட்டி குட்டன் இல்ல டா.. அதுக்கு முன்னாடி நான் ஒன்னு சொன்னேனே! குட்டி கு…. டேஷ்… என்று கூற
ஹலோ மிஸ்டர் நீங்க ரொம்ப ஓவரா பேசுறீங்க? நான் விவேகாகிட்டயும், மகி கிட்டையும் சொல்லுவேன் என்று கூறினான்.
இன்பா சிரித்துக் கொண்டே அவ என்னைக்குமே என்னோட காதலி தான்! உனக்கு என்னை பத்தி என்ன தெரியும்? உங்க அப்பன் கிட்ட கேளு! அப்படி இல்லன்னா சத்ய தேவ் கிட்ட என்னை பத்தி கேளு! வந்துட்டான்! விவேகா உனக்கு ஆன்டியா? அவள் எவ்ளோ யங் தெரியுமா! என் பேபிய ஆன்டி சொல்றயா? உனக்கு! உன்னை… பாருடா எந்த பொண்ணும் உன்னை திரும்பி பாக்க மாட்டா இது என்னோட சாபம் என கூற..
மிதுன் தேவ்…?
அன்று இரவு மகி – நிதினுக்கு போன் செய்தார்.
தொடரும்..
EPISODE 33
இன்பா அவன் அருகில் வந்து காதை திருக..
ஹலோ விடுங்க.. என மிதுன் கையை எடுத்து விட…
விவேகா உனக்கு ஆன்டியா? அவள் எவ்ளோ யங் தெரியுமா! என் பேபிய ஆன்டி சொல்றயா? உனக்கு! உன்னை… பாருடா எந்த பொண்ணும் உன்னை திரும்பி பாக்க மாட்டா இது என்னோட சாபம் என இன்பா கூற..
உங்க சாபம் எல்லாம் எனக்கு பலிக்காது! என்னை பத்தி உங்களுக்கு தெரியாது! அதை மிஸ்டர் சூர்ய தேவ் கிட்ட கேளுங்க.. என மிதுன் உடையை சரி செய்து காதை தேய்த்து கொண்டே பார்த்தான்.
அப்டியா அந்த EVS பேப்பர் கிளியர் பண்ணிட்டியா? என இன்பா கேட்டார்.
அது என்று மிதுன் தயங்க..
பயங்கரமான ஆளா இருக்கியே! இரு உங்க அப்பன் கிட்ட இதை வச்சு உன்னை திட்டு வாங்க வைக்கிறேன் என சூர்யாவை அழைக்க செல்ல..
அதற்குள் மிதுன் வெளியே ஓடி விட்டான். இன்பா சுற்றிலும் பார்வையை சுலட்டிவிட்டு யாரும் இல்லை என தெரிந்து கொண்டவர். விவேகா கிட்ட வம்பிலுக்க சென்றார்.
என்ன பண்றீங்க கைய எடுங்க என மகி சொல்ல..
ஹே எதுக்கு டி அந்த spr பத்தி நினைக்கிற? என்ன துளிர் விட்டு போச்சா!
அச்சோ! முருகா என்ன பேசுறீங்க? நான் எதுக்கு அவரை நினைக்க போறேன். அவரு பேர் spr இல்ல.. sp.. நான் அறிவு கிட்ட ரிதம் நிதின் கல்யாணத்தை பத்தி பேசிட்டு இருந்தேன்.
சூர்யா முறைத்து கொண்டு அவளை பார்க்க.. மகி அருகில் சென்று நிஜம் தான்! இங்கே என்னை பாருங்க! என் தேவ் தவிர! நான் வேற யாரை நினைப்பேன் சொல்லுங்க!
அப்போ நைட்டு ஜாதிக்காய் பவுடர் போட்டு பால் வேணும்! என மஹியை இறுக்கி சூர்யா அணைக்க..
என்ன? உங்களுக்கு இங்கிதம் இருக்கா! நம்ம பையனுக்கு கல்யாணம் ஆக போகுது!
சூர்யா கடுப்பாகி யாரை உன் பையன்னு சொல்ற? அந்த நிதின் இல்ல தெரியும் தான!.
இல்ல நான் உங்க பையனை சொல்றேன். சக்தி பத்தி சொல்லிட்டு இருக்கேன்.
ஹான் சக்தி இல்ல சத்ய தேவ்! என சூர்யா சொல்ல..
மகி எதுவும் பேசாமல் அனைத்தையும் தயார் செய்து மூடி வைத்து சாப்பிடும் பிளேட் எடுக்க..
என்ன டி? நான் கேட்டதுக்கு பதில காணோம்! வேணும் மகி! என சூர்யா சினுங்க.. மகி எதுவும் பேச வில்லை. அவர் பெரு மூச்சை விட்டு எனக்கு வயசு ஆகிடுச்சு தான் ஆனாலும் என்னோட மனசு உன்னை கல்யாணம் பண்ணி ஆறுமாதம் கழிச்சு நமக்கு நடந்த அந்த முதல் இரவு தான் நியாபகத்தில் வருது! இளமை ஊஞ்சல் ஆடுது டி! பிளீஸ் டி! என கெஞ்ச.
அப்போ எதுக்கு ஜாதிக்காய் பொடி என இரு புருவம் தூக்கினார். அது கொஞ்சம் அதெல்லாம் சொல்ல முடியாது. இன்னிக்கு நைட் எனக்கு வேணும் அவ்ளோ தான் சொல்லிட்டேன். ரெடியா இரு என முகத்தில் சந்தோசத்துடன் வெளியே சென்றார்.
இந்த மனுசனுக்கு இதே வேலை! நம்ம என்ன பதினாறு வயசா! இல்ல பதினெட்டு வயசா ஒட்டிக்கிட்டு திரிய என அனைத்தையும் உணவு மேஜைக்கு எடுத்து வர.. மகி வருவதை பார்த்து இன்பா அவளிடம் இருந்து எழுந்து சென்றார். விவேகா முறைத்து பார்த்து கொண்டே சாப்பிட…
அண்ணா டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போல என மகி சிரிக்க..
என்ன டிஸ்டர்ப் நீ வேற மா! என இன்பா சமாளித்தார்.
சூர்யா இன்பா கிட்ட கண் கட்ட! மச்சி நீ தான் டா என்னோட உயிரு என இருவரும் பூனை போல பதுங்கி கொண்டே சென்றார்கள்.
என்ன கா ரெண்டு பேரும் எங்கே போறாங்க!
மகி சிரித்து கொண்டே வேற எதுக்கு குடிக்க தான்! என கூற..
இதைக் கேட்டதும் விவேகாவுக்கு கோபம் வர.. அவர் முணுகி கொண்டே எவ்வளவு கொழுப்பு இருக்கும்! இந்த நாய் இப்படி குடிக்க அலையறானே! நம்ம கிட்ட உத்தமன் மாதிரி வசனம் பேசினான். வெட்கம் கெட்ட நாய்!; என்று திட்ட..
இப்போ எதுக்கு அறிவு அண்ணாவை திட்ற? எல்லா ஆம்பளைங்களும் இதே போல தான்! அவங்க என்ன டெய்லியுமா குடிக்கிறாங்க? எப்பவாச்சும் ஒரு தடவ தானே! அக்கேஷனல் டிரிங்கிங் பத்தி நம்ம கேட்க கூடாது. அதை நம்ப தடுத்தா நமக்கு தெரியாம நிறைய வேலை செய்வாங்க! இது எல்லாம் சாதாரணம் என்று அட்வைஸ் கூறினார்.
*
இங்கே இதழ் சத்தியதேவ்னுடைய நாய்க்குட்டியையும், ரிதம் அவளுடைய நாய்க்குட்டியையும் அழைத்துக் கொண்டு வாக்கிங் சென்றார்கள்.
எங்க அண்ணாவுடன் நாய் குட்டி ரொம்ப அழகா இருக்குல்ல! என்று இதழ் சொல்ல..
அதைக் கேட்டு கன்னக்குழி தெரிய சிரித்த ரிதம்.. ஹே அது கேர்ள் அவ்ளோ அழகு இல்ல! உனக்கு கண்ணு தெரியுமா? இல்லையாடி? உலகத்திலேயே மிஅனிமல்ஸ்ல வந்து ரொம்ப ரொம்ப அழகான அனிமல்ஸ் எல்லாமே masculine தான் பாத்துக்கோ! என்னோட சத்ய தேவ் எவ்வளவு அழகா இருக்கான்னு? ஆறு மாச குட்டி! என்று தன்னுடைய நாய்க்குட்டியை கொஞ்சினாள்.
இதை கேட்ட இதழ் வாய் விட்டு சிரிக்க இப்போ எதுக்குடி பல்ல காட்டுற? என்று ரிதம் அவளை முறைத்தாள்.
இதழ் சிரிப்பை அடக்கி இல்ல! என் அண்ணா அழகா இருக்கான்னு நீ சொல்ற! அதுவும் உன்னோட வாயில் இருந்து அழகா இருக்கான்னு, சொல்றேல்ல! எங்க அண்ணாவை நீ பாகிஸ்தான் தீவிரவாதி மாதிரி பார்ப்ப! இப்போ அதை நினைச்சு சிரிப்பு வந்துடுச்சு! என்று கூறினாள் .
இதைக் கேட்டதும் ரிதம் நெற்றியை தேய்த்து கொண்டே நீ தப்பா புரிஞ்சுகிட்ட பார்த்துக்கோ! நித்தின் தான் ரொம்ப அழகு தெரிஞ்சுக்கோ! டிபன்ஸ் மினிஸ்டர் வெட்ஸ் ரிதம் IPS தெரிஞ்சுக்கோ! என்று வார்த்தைக்கு வார்த்தை கூறினாள்.
அடேங்கப்பா எனக்கு நித்தின் அண்ணாவையும் ரொம்ப பிடிக்கும்! நிதின் அண்ணா அழகுதான்! யாரு இல்லன்னு சொன்னது? என்று இதழ் கூறினாள்.
ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் வச்சு!; நல்லா சமாளிக்கிற டி! என்று ரிதம் கூற..
இதழ் நீ சிரித்துக்கொண்டே எல்லாருமே எனக்கு ரொம்ப குளோஸ்! ரொம்ப ஃபேவரட்! நான் யாரையும் எதிரியாவே நினைத்ததில்லை! அவங்க எல்லாருமே என்னோட செல்லம்… ஹான் இல்ல இல்ல தப்பா சொல்லிட்டேன்! நான் அவங்களுக்கெல்லாம் செல்லம்! என்று கூறினாள்.
என்னமோ செல்லம் என்று ரிதம் தன்னுடைய நாய்க்குட்டியை தூக்கி மடியில் வைத்து கொஞ்சி.. அழகா! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! என்று சொல்ல..
இதழ் சிரித்துக் கொண்டே ரிதம் நீங்களும் ரொம்ப அழகா இருக்கீங்க! என்று அந்த நாய்க்குட்டியின் காதை பிடித்து ஆட்ட..அது பாவமாக இதழை பார்த்தது.
நான் அழகா இருக்கேன்னு எனக்கே தெரியும் என்று ரிதம் சிரித்துக்கொண்டே இதழினியை பார்க்க..
ஹே நான் உன்ன சொல்லல டி! இந்த ரிதம சொன்னேன்! என்று கூறினாள்.
இதை கேட்ட ரிதம் இதழினியின் காதை பிடித்து திருக வர எனக்கு வலிக்கும்! Oh! ஸ்ஸ் நீ நித்தின் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கிறதுனால! உன்னை அண்ணி என்று கூப்பிடலாம்ன்னு இருந்தேன். ஆனா நீ என்ன காத புடிச்சு திருகிற அதனால உன்ன கூப்பிட மாட்டேன் போடி! என்று கூறினாள் .
ரிதம்! ரித்து! என்று கத்திக் கொண்டே மிதுன் வந்தான்.
டேய் உன் தங்கச்சி அந்த நாய்க்குட்டிய பார்த்து ரிதம் ன்னு சொல்லி கூப்பிடுறா என்று சிணுங்கி கொண்டே கூறினாள்.
என்ன குக்கூ! இது என்ன பழக்கம்! ரிதம் நித்தின் அண்ணாவுக்கு மனைவியாக போறவ! நீ எப்படி அந்த நாய்க்குட்டிய ரிதம்ன்னு கூப்பிடலாம்! என்று மித்துன் கேட்டான்m
அண்ணா அவ என் காத புடிச்சி திருகுறா! அவ மட்டும் கையில வச்சிருக்க நாய்க்குட்டியை சத்ய தேவ்ன்னு சொல்றா! அண்ணாவை எப்படி அவ சொல்ல முடியும்? என்று இதழ் தன் அண்ணனுக்காக சண்டைக்கு வந்தாள்.
டேய் பாரு அவன் என்ன சொல்றான்னு? நான் என்ன தப்பு பண்ணிட்டேன்? என்று ரிதம் மித்துனை பார்த்தாள்.
மிதுன் இதழ்கிட்ட “ஆமா குக்கு ரிதம் மேல எந்த தப்பும் இல்லை! நீதான் தப்பு பண்ணி இருக்க!”
அண்ணா நீ ஒண்ணுமே சரியில்ல! நீ ரொம்ப மோசம்! என்று இதழ் வெடுக்கென சொல்ல..
அவர்கள் மூவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்க..
அந்த நேரம் இதழுக்கு போன் வந்தது.
ஹலோ என்று போனை எடுக்க..
மூன்று பேரும் வாங்க சாப்பிடலாம் என்று மகி கூறினார்.
சரி என்று இதழ் முன்னால் நடக்க..
என்னடி எதுவும் சொல்லாமல் போற இன்று ரிதம் கேட்க..
அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க என்று கூறினாள்.
ரிதம் உதடுகளை எச்சில் படுத்திக் கொண்டு இன்னிக்கி மாமி நிறைய ஐட்டம் செஞ்சிருக்காங்க! எல்லாமே நமக்கு பிடிச்சது என்று மித்துனை பார்த்தாள்.
அவனும் சிரித்துக்கொண்டேன் வா சாப்பிடலாம்! என்று நாய்க்குட்டியை தடவிக் கொண்டே மூவரும் உள்ளே சென்றார்கள்.
மகி போனில் ருத்ரனுக்கு அழைத்தார். ஹலோ மாமி என்னாச்சு! போன் பண்ணி இருக்கீங்க? என்று கேட்க..
சாப்பாடு ரெடி இரண்டு பேரும் வரீங்களா? என்று கேட்டார்.
இருங்க மாமி மாமா கிட்ட கேட்டு சொல்றேன்! என்று சத்திய போனை கட் செய்தான்.
மாமா மாமி சாப்பிட கூப்பிடறாங்க போலாமா என்று கேட்க..
இப்போ வேண்டாம் அம்மா என்று சொல்லி உதட்டை கடித்தவன்.
அப்பா, மாமா, விவி பேபி, பாப்பா எல்லாரும் சாப்பிடட்டும் அதுக்கப்புறம் நாம போகலாம் என்று கூறினான்.
ருத்ரன் உடனே மகிக்கு போன் செய்ய ஆவலுடன் போன எடுத்தார்.
சொல்லுடா வாங்க என்று மகி அழைக்க
அத்தை நானும் சத்ய தேவ் மாமாவும் நீங்க எல்லாரும் சாப்பிட்டதும், வரோம் இப்போ நீங்க சாப்பிடுங்க! என்று கூறினான்.
இதை கேட்டதும் மகிக்கு பொக்கென ஆகிவிட்டது.
உடனே இதழினிக்காக காத்திருந்தார். அம்மா நான் ரெடி!! என்று இதழ் வர . தூரி இங்க வா.. .. வந்து கை கழுவு நாய்க்குட்டியை தூக்கினியா? என்று கேட்க..
ஆமாமா நான் இப்பதான் டெட்டால ஹேண்ட் வாஷ் பண்ணிட்டு வந்தேன். என்று இதழ் கூற..
பரவாயில்ல இங்க வா! என்று அழைத்து சிங்கிள் தண்ணீரை கொடுக்க..
அவள் மீண்டும் கை கழுவ..
உடனே மகி அவளிடம் தூரி மேல போயி உங்க அண்ணனையும், ருத்ரனையும் கூட்டிட்டு வா! என்று கூறினார்.
ஒரே வீட்ல இருந்து கிட்டு என்னை அனுப்புறீங்க என்று அவள் புருவத்தை தூக்கிக் கொண்டு கேட்க..
நீதான் நம்ம வீட்ல சின்ன பொண்ணு ஓடியாடி! எல்லாத்தையும் செய்யணும்! போ என்று சொல்ல..
அண்ணாவை நான் போன் பண்ணி கூப்பிடுறேன் என்று போனை எடுத்தாள்.
மகி நெற்றியை தேய்த்துக் கொண்டே உங்க அண்ணன் வர மாட்டேன்னு சொல்லிட்டான்! அதனால நீ போய் சேர்ந்து சாப்பிடலாம்ன்னு கூப்பிடு! நீ கூப்பிட்டா அவன் கண்டிப்பா வருவான். அவனை கீழே கூட்டிட்டு வாடி பொண்ணு! என்று மகிழினி கூறினார்.
இதழினி சிணுங்கி கொண்டே நான் எத்தனை தடவை மேலே ஏறி இறங்கட்டும்? எனக்கு கீழ ஒரு ரூம் குடுங்கன்னு! நான் உங்ககிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன்! என்று கூறினாள்.
மகிழினி சிரித்துக் கொண்டே “சரி விடு உன்னை கட்டி கொடுக்க போற வீட்டில லிப்ட் வச்ச மாதிரி நான் அப்பாகிட்ட சொல்றேன். அப்படி ஒரு மாப்பிள்ளைக்கு உன்னை கல்யாணம் பண்ணி கொடுத்துடறேன்! நீ லிஃப்ட்லயே ஏறி இறங்கலாம்! உனக்கு கால் வலிக்காது! போடி தங்கம்!” என்று அனுப்பினார்.
மகிழினி சத்ய தேவ் வருவதற்காக காத்திருந்தார். அதற்குள் உணவு மேஜை சுற்றி அனைவரும் அமர்ந்து கொள்ள..
விவேகா சூர்யாவிற்கு, மிதுனுக்கு அவளுக்கு என பரிமாறினார்.
இன்பா மற்றும் ரிதம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள.
சூர்யா சிரிக்க மிதுன் தட்டை பார்த்து என்ன டார்லிங் எனக்கு மட்டும் வைக்கிறீங்க? அங்கிளுக்கு வைக்கலையா? என்று மட்டும் கேட்டான்.
டேய் என்ன அங்கிள்னு கூப்பிடுற வேலை வச்சுக்காத நான்! என சொல்ல வர..
ஆமா சரிதான் ரிடையர்ட் ஆக என விவேகா ஆரம்பிக்க..
எத்தனை வருஷம் டி இருக்கு சொல்லுடி என்று என் இன்பா சண்டைக்கு வர..
மிதுன் சிரிக்க ஆரம்பித்தான்.
உடனே இருடா குட்டி குட்டா உன்னை எப்படி மாட்டி விடுகிறேன்? என்று மட்டும் பாரு என்று நினைத்துக் கொண்டு“ சூர்யா உன்னோட இரண்டாவது பையன் என்ன பண்றான்? அந்த என்விரான்மென்டல் சயின்ஸ் பாஸ் பண்ணிட்டானா? என்று கேட்க..
சூர்யா முறைத்துக் கண்டே மித்துனை பார்த்தார்.
அந்த நேரம் மகி வேகமாக உணவு மேட்சைக்கு வர
அக்கா என்ன ஆச்சு என்று விவேகா கேட்க…
ஒன்னும் இல்ல நீ உட்காரு நான் பரிமாறன்! என்று சொல்ல..
சத்தியதேவ் மற்றும் ருத்ரன், இதழ் வந்தார்கள்.
இதழினி நடுவில் இருக்க ஒரு பக்கம் சத்யதேவ் மற்றும் ருத்ரன் இருவரும் அமர்ந்து கொள்ள..
இன்பா அசைவம் எல்லாமே இருக்கு! உனக்கு என்ன வேணும் என்று மகி இதழினியை பார்த்து கேட்க..
சத்திய தேவ் தயக்கத்துடன் அமர்ந்திருந்தான்.
சூர்யா மகியை முறைத்து விட்டு சத்ய தேவ் உனக்கு எல்லாமே சைவம் தான்! அதென்ன நீ எதோ நீ சாப்பிடுறியே? அது அதோட! அது என்னடா? நியாபகம் வரல.. என்ன இதழ் அதோட பேர் என்ன?
வீகன் டாடி என்று இதழ் கூற..
சூர்யா அவனிடம் அதுதான்! அது மாதிரி தான் உங்க அம்மா சமைச்சு வச்சிருக்கா! அதை சாப்பிடு!
சத்யதேவ் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
மகி அவனுக்கு ஆசையாக பரிமாற வர..
தீரா நானே போட்டுக்குவேன் எனக்காக யாரும் சேவ் பண்ண வேண்டாம்! என்று வெடுக்கென கூறினான்.
மகி எடுத்த கையை அப்படியே பின்னால் கொண்டு செல்ல..
மாமி எனக்கு வேணும்! நீங்க எனக்கு போடுங்க! என்று சத்ய தேவை ரிதம் முறைத்தாள்.
இன்பா தன் பெண்ணை பெருமையாக பார்க்க…
மகி ஆசை ஆசையாக அனைத்தும் செய்தவர். வருத்தத்துடன் தான் அந்த விருந்து முடிந்தது.
விவேகா, இன்பா, இதழ், சூர்யா அங்கிருக்கும் அனைவரும் திருப்தியாக சாப்பிட..
மகி மட்டும் எதையுமே சாப்பிடவில்லை. சூர்யா கைகளை துடைத்துக்கொண்டே என்னடி சாப்பிடாம இருக்க? என்று கேட்க…
சாப்பிட்டதே வயிறு நெறஞ்ச மாதிரி இருக்கு என்று கூறினார்.
நீ சொல்றது புரியல அது எப்படி? சாப்டா வயிறு நிறையம்? நீதான் சாப்பிடவே இல்லையே ? என்று சூர்யா கேட்க..
மகி சிரித்துக்கொண்டே இல்லைங்க எல்லாத்தையுமே! சமச்சனா! அது என்னமோ மூஞ்சில அடிச்ச மாதிரி இருக்கு! எனக்கு எதுவும் வேண்டாம்! என்று ஒரு சொம்பு தண்ணீரை குடித்தார்.
ரிதம் மகி சொல்வதை எல்லாம் கேட்டுவிட்டு சக்தியை முறைத்து பார்த்தாள்.
அவனுடைய போன் சிணுங்க அதை எடுத்து பார்க்க..
ஹரிணி என்று இருந்தது.
எப்படி என் கிட்ட இருந்து போன் வாங்குறேன்னு பார்க்கிறேன் டா? எங்க மாமியவே நீ கஷ்டப்படுத்துறியா? உன்னை யாருடா இங்க வர சொன்னது? என்று ரிதம் வாயில் முனகி கொண்டே போய் இன்பாவின் அருகில் அமர்ந்தாள்.
அந்த நேரம் அதன் பின் மாலையாகி விட சத்தியத்தை ருத்ரனிடம் இந்த ரெண்டு நாள் மட்டும் என்கூட ஸ்டே பண்றியா? என கேட்க…
இன்பா கம்பீரத்துடன் விவேகாவை பார்க்க..
விவேகாவின் மனதில் நீ பக்கத்தில் மட்டும் வந்து பாரு! நாயே உன்ன வெளியில அடிச்சு தொரத்தல! என் பேரு விவேகா வாசுதேவனே கிடையாது. என்று நினைத்துக் கொண்டு தீரா நீ வீட்டுக்கு வா என்று அழைக்க..
ரிதம் இன்பாவிடம் டாடி நான் வீட்டுக்கு வரவா? கேட்க…
இதை கேட்டதும் விவேகா முறைத்துக் கொண்டே அப்போ நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன். தீரா என கொண்டு போய் விடுகிறாயா? என்று விவேகா கேட்க..
உடனே இன்பா சிரித்துக் கண்டே டிம்பில் நீ இன்னிக்கி இங்கேயே இதழ் கூட ஸ்டே பண்ணிடு! அவ மண்டே ஹாஸ்டல் போய்டுவா! நீ நேரா உன்னோட பெட் இருக்க வீட்டுக்கு போயிடு! மேல இருக்குற போர்ஷன் காலியா தான் இருக்கு! அங்க ஸ்டே பண்ணிக்கோ! நம்ம வீட்டுக்கு வந்தா உனக்கு வெறும் உப்புமா தான் கிடைக்கும்! இல்லன்னா நீ மகி மாமி வீட்டிலேயே ஸ்டே பண்ணிக்கோ! என்னடா சூர்யா என்று கேட்க..
ஆமா கண்ணுகுட்டி நீ இங்கே இருந்திடு என்று சூர்யா கூறினார்.
விவேகா அவனை முறைத்து தள்ள..
போடி என்று இன்பா கள்ள சிரிப்புடன் நின்றார்.
சரி நான் இன்னைக்கு இங்கேயே இருந்துடுறேன்! மகி மாமி நம்ம ரெண்டு பேரும் படுத்துக்கலாமா? என்று கேட்க..
சத்தியதேவ், மிதுன் தேவ், ருத்ரன், இதழினி, சூர்யா என அனைவரும் ரிதமை பார்த்தார்கள்.
விவேகா அவளை பார்த்துவிட்டு அப்படியே இன்பாவை முறைக்க..
ஐயோ வேணாம் கன்னுகுட்டி மாமிக்கு நைட் எலலாம் கெட்ட கெட்ட கனவா வரும்! நீ பக்கத்துல படுத்தா தேவையில்லா பயம் தான்! நீ குக்குக் கூடயே தூங்கு!
உடனே இன்பா சிரித்துக்கொண்டே சூர்யா கொஞ்சம் வழியுதடா! தொடச்சுக்க உன் பையனுக்கு கல்யாணம் ஆகப்போகுது! என்று கூற..
சூர்யா புருவத்தை தூக்கி கொண்டே விவேகா பேசாம நீயும் மகியும் இந்த பெட்ரூம்ல படுத்துக்கோங்க! நானும் ராகவ் சாரும் மேல போறோமே! என்று சொல்ல..
இல்ல இல்ல ஒன்னும் பிரச்சனை இல்ல வீட்டுக்கு தனியா விட்டுட்டு வந்துட்டோம்! அதனால நாங்க கிளம்பனும்! என்று இன்பா கூறினார்.
இதை கேட்டதும் மகி சிரிக்க.
விவேகா அவனை முறைக்க …
சூர்யா நமட்டு சிரிப்புடன் ராகவ் இடியட் வழியுது கொஞ்சம் தொடச்சுக்க! உன் பொண்ணுக்கு கல்யாணம் ஆகப்போகுது! என்று கூறினார்.
நீங்க எல்லாரும் என்ன பேசிட்டு இருக்கீங்க? என்ற ரிதம் கேட்க..
என்னடா பண்ணி வச்சிருக்க? உன்னோட ப்ராடக்ட் ரொம்ப!… எதுவும் தெரியுமா? தெரியாதா? என்று சூர்யா கேட்க..
சத்தியதேவ் மெதுவான குரலில் ருத்ரா வா மேலே போலாம் எனக்கு டாக்குமெண்ட் ஒர்க் இருக்கு! என்று அழைக்க..
அனைவரும் சிட்டாக பறந்தார்கள்.
ரிதம் சத்யதேவை முறைத்துக் கொண்டே நடந்தாள்.
அந்த நேரம் ருத்ரனுக்கு ஹரணி அழைக்க..
ருத்ரன் போனை பார்த்து மாமா என்ன ஹரிணி அக்கா எனக்கு கால் பண்ணி இருக்காங்க? உங்களோட போன் எங்க? நீங்க இன்னும் பேசலையா? என்று கேட்க..
நாளை:
ஹே போனை கொடு டி!..
முடியாது போடா!..
சத்ய தேவ்க்கு இப்பொழுது தான் போனின் நினைவு வந்தது.
இங்கே மகி நித்தினுக்கு அழைத்தார்.
தொடரும்..
EPISODE 34
ஹரிணி இரண்டு மூன்று முறை சத்தியதேவுக்கு அழைத்தவள். அவன் போன் எடுக்கவில்லை என்று தெரிந்ததும் “என்னாச்சு இத்தனை தடவ கூப்பிடுறேன் போனே எடுக்கலையே? என்ன பண்றான்? என்னோட நினைப்பு இருக்கா? இல்லையா? என்று மீண்டும் அழைத்துப் பார்த்தாள். ஆனால் கால் சென்று கொண்டே இருந்ததே தவிர எடுக்கவில்லை.
சரி நம்ம வேற யார் கட்ட கேட்கலாம் ருத்ரன் கிட்ட கேட்போம். அவனுக்கு தெரியும் என்று உடனே ஹரிணி ருத்ரனுக்கு அழைத்தாள்.
ருத்ரன் போனை பார்த்து“ என்ன? ஹரிணி அக்கா நமக்கு கால் பண்ணி இருக்காங்க? ஒரு வேலை மாமா போன் எடுக்கலையா?” என்று நினைத்தவன். மாமா உங்களோட போன் எங்கே? என கேட்டுக்கொண்டே காலை அட்டென்ட் செய்தான்.
சத்யதேவ் என்ற ருத்ரனை பார்த்தவன். என்னடா தீரா என்று கேட்க..
ஒரு நிமிஷம் என்று கைகளை காட்டி விட்டு ஹவ் ஆர் யூ அக்கா? எப்படி இருக்கீங்க? வேலையெல்லாம் எப்படி போகுது? என்று கேட்டான் .
சக்தி கிட்ட பேசினியா என்று கேட்க
நான் மாமா கூட தான் இருக்கேன்! நாங்க எல்லாம் இங்க சூர்யா மாமா வீட்டில் இருக்கோம் என்று கூறினான்.
இதை கேட்டதும் ஹரிணிக்கு ஒரு பக்கம் சந்தோஷம் இன்னொரு பக்கம் ஆச்சரியமாகவும் இருக்க. என்ன சொல்ற? தீரா என்று சிரித்து கொண்டே கேட்டாள்.
ஆமா நான் தான் கம்பெல் பண்ணி கூட்டிட்டு வந்தேன்! என்று கூறினான்.
உடனே சத்ய தேவ் அருகில் வந்து போன்ல யாரு? என்று கேட்க..
அவன் ஹரிணி அக்கா என்று சொல்லவும் வேகமாக போனை வாங்கியவன். “என் ஞாபகம் இருக்கா? இல்ல மறந்துட்டியா? ருத்ரனுக்கு கூப்பிட்டிருக்க?” என்று கேட்டான்.
ஹரிணி அவனுடன் கொஞ்சம் விளையாட பொய் கோபம் கொண்டு அத நான் தான் கேக்கணும்? சாருக்கு என்னைய ஞாபகம் வச்சுருக்கீங்களா? இல்ல! மறந்துட்டீங்களா?
இதை கேட்டதும் சத்ய தேவ்க்கு மிகவும் குற்ற உணர்ச்சியாக இருக்க.. இன்னொரு பக்கம் தூக்கி வாரி போட்டது. அவன் அமைதியாக இருந்தான்.
ஹரிணி மீண்டும் ஹலோ சத்யதேவ்! என்று அழைக்க..
ஹான் என்று ஒற்றை பதிலளித்தான்.
சத்யா என்று ஹரிணி கொஞ்சலுடன் அழைத்தாள்.
சொல்லு ஹனி என்று தடுமாற்றத்துடன் பதிலளித்தான்.
நான் உனக்கு எத்தன தடவ தெரியுமா கால் பண்ணேன்? ஆனா நீ தான் போன எடுக்கல! இப்ப கூட எடுக்கல! அதுதான் நீ எங்கே இருக்க? ஏதாவது வேலையா வெளியே போயிட்டியான்னு, தெரிஞ்சுக்கறதுக்காக, ருத்ரனுக்கு கூப்பிட்டேன்! அவன் தான் இந்த விஷயத்தை எல்லாம் சொன்னான். என்று கூறினாள்.
சத்யதேவ் ஒரு பெருமூச்சை விட்டு ஃபோன் வந்து சைலன்ட்ல ரூம்ல இருந்தது. அதனால நான் கவனிக்கல! சாப்பிடுறதுக்கு கீழே வந்தேன்! கொஞ்ச நேரம்! இன்பா மாமா கிட்ட பேசிட்டு அப்படியே இருந்துட்டேன்! என்று கூறினான் .
ஹரிணி சிரித்து கொண்டே இட்ஸ் ஓகே விடு!
சரி இன்னைக்கு எனக்கு கொஞ்சம் ஃப்ரீ! அதனாலதான் இந்த நாலஞ்சு நாள் பேசாதத, இன்னிக்கி பேசலாம்னு உனக்கு கால் பண்ணேன்! அப்புறம் சாரு சூர்யா மாமா வீட்டுக்கு வந்துட்டீங்க போல? என்று கேட்க..
ஆமா என்று பதிலளித்தான்.
அந்த நேரம் இங்கே ரிதம் இதழினியின் அறைக்கு வந்தவள். இன்னும் என்ன? அந்த ரெண்டு நாய்களையும் காணமே? என்று எட்டிப் பார்த்தாள்.
ருத்ரன் மட்டும் வந்தான். அவள் சுற்றிலும் பார்த்து கொண்டே என்னடா உன்னோட ஆள காணோம்! என்று கேட்க..
அதை எதுக்கு நீ கேக்குற? என்று எரிச்சலாக எரிந்து விழுந்தான்.
ஓவரா பண்ணாத மூஞ்சியும் மொகரையும் பாரு! என்று ரிதம் திட்ட..
உன்ன அக்கான்ற மரியாதைக்காக விட்டு வைக்கிறேன்! இல்லனா.. உன்ன என்ன பண்ணுவேன் தெரியுமா? என்று ருத்ரன் தலையில் கொட்ட வர..
நீ கைய வெச்ச நான் இப்பவே டாடி கிட்ட சொல்லுவேன்! என்று கூறினாள்.
ஆவுன்னா இதை சொல்லிடு போ என்று அவன் அறைக்குள் நுழைந்தான்.
ரிதம் சுற்றிலும் பார்த்துக் கொண்டே இவன் என்ன பண்றான்? என்ன காணோமே?! என்று அப்படியே மெதுவாக படிக்கட்டின் பக்கம் வர..
அவன் எதிரில் உள்ள பால்கனியில் நின்று போனில் பேசிக் கொண்டிருந்தான்.
யார் போன்ல பேசுறான்? இதோ இப்ப போறானே இந்த தம்பி திமிர் புடிச்சவனுடைய ஃபோனில் பேசுவான்ன்னு நினைக்கிறேன். யார் கிட்ட பேசுவான்! அவளா தான் இருக்கணும்! அந்த ஹரிணி என்று பற்களை கடித்துக் கொண்டே கூறினாள்.
சத்ய தேவ் சிரித்துக் கொண்டே அவளிடம் பேச..
ரிதமுக்கு அதை பார்த்து எரிச்சலாக வந்தது. வேக வேகமாக இதழினியின் அறைக்குள் புகுந்தவள். கதவை சாத்தினாள். என்ன பண்றது? ஏதாவது பண்ணனும்? இதுக்கு ஏதாவது பண்ணியே ஆகணும்? என்று நினைத்தவள். சத்ய தேவ் போனை எடுத்து அதில் அவள் உபயோகிக்கும் அந்த பெக்குலியர் பிராண்ட் ரோஜா வாசனை திரவியத்தை ஸ்ப்ரே செய்ய ஆரம்பித்தாள். கிட்டத்தட்ட அதோட விலையை சொல்லணும்னா ஒரு லட்சத்தி சொச்சம்! ஆமா அவ யூஸ் பண்ற பர்ஃப்யூமோட விலை ! ஒரு லட்ச ரூபா! அந்த வாசனை திரவியத்தை அவளின் மேல் நான்கு, ஐந்து முறை ஸ்பிரே செய்தவள். கூடவே சத்யதேவினுடைய போனில் எக்கச்சக்கமாக ஸ்பிரே செய்து மொத்தமும் அந்த வாசனை திரவியத்தை நிரப்பி வைத்தாள்.
அந்த போனை யார் எடுத்தாலும் ஏன் அருகில் வந்தாலே அந்த வாசனை திரவியம் தான் மூக்கையும் ஆளையும் துளைக்கும்! அந்த அளவுக்கு அதனுடைய வாசம் ஸ்ட்ராங்காக இருக்கும்!
அனைத்து வேலைகளையும் செய்து முடித்துவிட்டு, ஒரு பெருமூச்சை விட்டவள் போனை எடுத்து அவளுடைய பாக்கெட்டில் போட்டுக்கொண்டாள்.
அந்த நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டது. வந்துட்டாளா? என்று உடையை சரி செய்து கொண்டே கதவை திறந்தாள்.
இதழினி உன்ன என்று தயங்கிக்கொணடே மூக்கை இரண்டு முறை தேய்த்தாள்.
என்னடி என்று ரிதம் கேட்க..
ஆமா ரூம்ஸ் என்ன ஒரு வாசனை அடிக்குது? ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே! என்று இதழ் கேட்க..
அதுவா நைட்டு தூங்க போறதுக்கு முன்னாடி பர்ஃபியும் போட்டுட்டு தான் தூங்குவேன்! என்று ரிதம் கூற..
இதுல ஒன்னும் குறைச்சல் இல்லடி! குளிக்கிறத தவிர பர்பியும் போட்டுட்டு தூங்குற! என்னதான் பன்றியோ? உன்னை எல்லாம் எப்படி மாமி!.. ரொம்ப பாவம்! என்று கூற..
வாய மூடுடி என்று அவளை தள்ளிவிட்டு படுக்கையில் பரப்பிக் கொண்டு படுத்தாள்.
அண்ணி முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்! உன்ன அம்மா கூப்பிட்டாங்க! என்று கூற..
யாரு விவேகாவா? என்று ரிதம் கேட்க..
இல்ல என்னோட அம்மா கூப்பிட்டாங்க போ! உடனே போ! என்று சொல்ல.
சரி என்று ரிதம் மகியை தேடிச் சென்றாள்.
இங்கே மகி வெளியே உள்ள தோட்டத்தில் போன் பேச..
சூர்யா அந்த இடத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
ஹலோ என்று மகி கூறவும் பொம்மாயி மகி சித்தி என்று சந்தோஷமான குரலில் நிதின் அழைத்தான்.
இதை கேட்டதும் சிரித்துக்கொண்டே ஆமா? எப்படி இருக்க? உன்னோட ஞாபகமா இருந்தது! அதனாலதான் போன் பண்ணேன்! என்று மகி கூறினார்.
நித்தின் சந்தோஷமாக எனக்கென்ன சித்தி! நான் சூப்பரா இருக்கேன்! என்று கூறினான்.
அப்படியா சரி ரிதம் கிட்ட பேசினியா என்று கேட்க..
நிதின் தயங்கிக்கொண்டே இந்தப் பக்கம் வஸ்ட் பார்டர்ல பிராப்ளமா இருக்கு! அதனால நான் அந்த வேலையிலும், ட்ரைபல்ஸ் பக்கம் இன்னும் கொஞ்சம் பிரச்சனையா இருக்கு! அதனால நான் ரொம்ப பிசியா இருக்கேன்! சித்தி! என்று நிதின் கூறினான்.
மஹி பொறுமையாக அவன் பேசுவதை புரிந்து கொண்டு நீ சொல்றதெல்லாம் எனக்கு புரியுது. ஆனா நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறீங்க! அப்போபப்போ பேசலாம் தானே! என்று கேட்டார்.
நித்தின் இஷ்டமே இல்லாமல் வேறு வழி இல்லாமல் அதை மகிகிட்ட காட்டிக் கொள்ளாமல் சரி சித்தி! நான் இனிமேல் அவளுக்கு டெய்லி போன் பண்றேன். எனக்கும் அவளை விட்டு பிரிஞ்சு வரதுல கொஞ்சம் கூட இஷ்டமே இல்ல! அவளுக்கு பிடிச்ச எல்லாத்தையும் வாங்கி கொடுத்துட்டு, மனசே இல்லாமல் தான் வந்தேன்! அப்பப்போ வந்து அவளை பாக்கணும்னு தோணுது! இந்த ஒர்க்கு பர்டன்ல, அவளை பத்திரமாவும் பார்த்துக்கணும் இல்லையா? என்று கூறினான்.
மகி சிரித்துக்கொண்டே ஆமா எனக்கு இதுதான் வேணும்! நீங்க ரெண்டு பேரும் ஹாப்பியா இருக்கணும்! என்று கூறினார்.
நித்தின் சரி என சொல்லிவிட்டு மகிழிடம் அப்புறம் நீங்க சாப்டீங்களா சித்தி? மிதுன் என்ன பண்றான்? அவர் என்ன பண்றாரு? தூரி வந்திருக்காளா? என்று கேட்டான்.
எல்லாரும் இங்க சாப்பிட்டாச்சு! தூரி வந்திருக்கா! மிதுன் சாப்பிட்டு தூங்க போயிட்டான்! நானும் சித்தப்பாவும் இங்கே தோட்டத்து பக்கம் இருக்கோம் என்று கூறினார்.
சரிங்க சித்தி அப்புறம் என்று பேச வர..
உடனே மகி கொஞ்சம் தீவிரமாக அவனிடம்“ உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்!” என்று கூறினார்.
சொல்லுங்க சித்தி என்ன விஷயம் என்று நித்தின் கேட்க..
உனக்கு ரிதம பிடிச்சிருக்கு தானே! என்று கேட்டார் .
நித்தின் கொஞ்சம் முகம் சுருக்கிக்கொண்டே என்ன கேட்கிறீங்க? என்று கேட்டான்.
அதாவது உனக்கு ரிதமை பிடிச்சிருக்கு தானே! இதுல எந்த பிரச்சனையும் வராதே! என்று கேட்டார்.
நித்தின் ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு எதுக்கு சித்தி இப்படி கேட்கிறீங்க?
இல்ல எனக்கு தோணுச்சு எனக்கு உன்னோட வாழ்க்கை ரொம்ப முக்கியம்! மிதுன் சொல்றதுக்காகவும் ,மத்தவங்க சொல்றதுக்காகவும், நீ கல்யாணம் பண்ணிக்க கூடாது! அவளுக்கு.. ரிதமுக்கே உன்ன பிடிச்சிருந்தாலும், உனக்கு பிடிக்கணும் இல்லையா? என்று மகி அவனிடம் கேட்டார்.
நிதின் ஒரு பெருமூச்சியை விட்டு “நான் ரிதம், மிதுன் நாங்க மூணு பேரும் சின்ன வயசுல இருந்து ஒண்ணா வளர்ந்தோம்! நான் அவளை லவ் எல்லாம் பண்ணல! ஆனா ஃபேமிலில life பார்ட்னரா வந்தா நல்லா இருக்கும்னு எல்லாரும் சொன்னாங்க! அதேபோல எனக்கும் அவகிட்ட பெருசா எந்த பிரச்சனையும் இல்ல! அவளுக்கு என்ன பிடிச்சிருக்குறது! ரொம்ப சந்தோஷம்! அதனால நான் ஓகே சொல்லிட்டேன்! இதுல நான் ஏதாவது தப்பு பண்ணேன்னா சித்தி?” என்று நித்தின் சூசகமாக கேட்டான்.
மகி ஒரு நிமிடம் திடுக்கிட்டு அப்போ உனக்கு ரிதம பிடிக்கலையா? என்று கேட்டார்.
நித்தின் பொறுமையாக “நான் பிடிக்கலைன்னு சொல்லவே இல்லையே சித்தி! எனக்கு ரிதம் பிடிக்கும்! அவளும் நானும் சின்ன வயசுல இருந்து ஒண்ணா வளர்ந்து இருக்கோமே! எனக்கு அவ கிட்ட எந்த பிரச்சனையும் இல்லை! என்னோட தாட்ஸும், அவளோட தாட்சும் கிட்டத்தட்ட ஒரே போல இருக்கும்! பிடிக்கும் மீன்ஸ் அது காதல் இல்ல.. பிடிக்கும்ங்கிறது வேற! காதல் என்ற விசயம் வேற! ஒருத்தர் மேல காதல் எப்ப வேணாலும் வரலாம்! சரி தானே சித்தி” என்று கேட்டான்.
மகி ஒரு பெருமூச்சை விட்டு இப்போ கடைசியா என்ன சொல்ல வர?! என்று கேட்டார்.
நித்தின் சாதாரணமாக அவளுக்கு என்னை பிடிச்சிருக்கு! அதனால எல்லாரும் சம்மதத்தொட கல்யாணம் பண்ணிக்க போறோம்! என்று சொல்லி முடித்தான்.
மகி எதுவும் பேசாமல் இருக்க அந்த நேரம் மாமி என சொல்லிக் கொண்டே ரிதம் வந்தாள்.
சரி நீ சந்தோஷமா இருக்கணும் அவள பத்திரமா பாத்துக்க தானே என்று கேட்டார்.
நித்தின் இத கேட்கணுமா சித்தி! அவ என்னோட சரிபாதி ஆக போறவ! அவ மேல எனக்கு இப்ப காதல் வரலன்னாலும் கல்யாணத்துக்கு அப்புறம் வரலாம்! எனக்கு தெரிஞ்ச பொண்ணு அவ்ளோதான் சித்தி என்று கூறினான்.
மகி ஒரு பெருமூச்சியை விட்டு சரி ரிதம் இங்கதான் இருக்கா! பேசு என்று போனை கொடுத்தார்.
சரி கொடுங்க நானே அவளுக்கு கூப்பிடலாம்னு இருந்த நீங்களே கூப்பிடீங்க. என சமாளித்தான்.
போன்ல யாரு என்ற ரிதம் கண்ணக்குழி தெரிய சிரித்துக் கொண்டே கேட்க..
நித்தின் இருக்கான் பேசு என்று கூறினார்.
நித்தின் என்ற பெயரை கேட்டதும் ரிதம் முகம் மாறி போக..
என்னாச்சு என்று மகி கேட்டார்.
ஒன்னும் இல்ல மாமி என்று மகியின் கன்னத்தில் முத்தம் கொடுத்தவள். போனை வாங்கி ஹே நித்தின் ரொம்ப ரொம்ப தேங்க்யூ டா என்று கூறினாள்.
உனக்கு அந்த பெட் எல்லாமே புடிச்சிருக்கா? என்று கேட்டான்.
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அந்த குட்டி பப்பி ரொம்ப க்யூட் தெரியுமா? என்று சந்தோஷமாக அவள் பேசிக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்து மகி திருப்திப்பட்டு கொண்டே சூர்யாவின் பக்கத்தில் வந்தார். தூங்கப் போலாமாடி என்று சூர்யா கையை பிடித்து இழுக்க..
மகி ரிதம திரும்பி பார்த்தார்.
ஒன்னும் பிரச்சனை இல்ல நம்ம வீடு சேஃப்தான்! அவ போன் பேசிட்டு இருக்கா! இப்போ டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்! உள்ள போலாம் !என்று மகியை அழைத்துச் சென்றார்.
அவர்கள் சென்ற ஒரு சில நிமிடங்களில் நித்தின் மற்றும் ரிதம் இருவரும் ஒரே நேரத்தில்“ சரி எனக்கு தூக்கம்!” என்று நிறுத்திவிட்டு இருவரும் அமைதியாகினார்.
“என்ன? ”என்று ரிதம் மற்றும் நித்தின் ஒரே நேரத்தில் சொல்ல..
“சரி இரு நானே பேசுறேன்!” என்று மறுபடியும் இருவரும் ஒரே நேரத்தில் பேசினார்கள்.
இருவரும் பெரும் மூச்சை விட்டு “நான் தூங்க போறேன் போன வைக்கிறேன்!” என்று சொல்லி போனை கட் செய்தார்கள்.
ஏனென்றால் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை எல்லாம் இங்கு கிடையாது.
அதன் பின் ரிதம் நேராக உள்ளே சென்றாள்.
இங்கே அப்பொழுதுதான் ஹரிணி சத்ய தேவ் கிட்ட “எனக்கு ஒரு முத்தம் கொடுக்கிறாயா?” என்று கேட்டாள்.
இப்போவே வா இது ருத்ரன் போன் என்று அவன் உலகத்தையே மறந்து பேசிக் கொண்டிருக்க..
அப்போ உன்! உன்னோட போன எடுத்துட்டு வாடா! என்று ஹரிணி சிணுங்கி கொண்டே கேட்டாள்.
இதையெல்லாம் கேட்டதும் ஒருத்தி ருத்ரகாளியாக மாறிக்கொண்டிருந்தாள். அவள் அப்படியே ரிவர்ஸ் அடித்து நேராக கிச்சனுக்குள் சென்றாள்.
இதழ் அவளை தேடிக்கொண்டே என்ன? இப்போ கிச்சன்ல என்ன பண்ண போற அண்ணி! உனக்கு தான் எந்த வேலையும் தெரியாதே! என்று இதழ் கேட்க…
இப்பதான் மாமி சொன்னாங்க! தூங்க போறதுக்கு முன்னாடி எல்லாருக்கும் பால் கொடுக்கணுமாம்!! அதனால பாலை காய்ச்சுறேன்! என்று கூற..
அப்படியா அப்போ சக்தி அண்ணாவுக்கு பாதாம் பால் காய்ச்சணும். என்று சொல்ல
ரிதம் எதையும் கண்டுகொள்ளாமல் நின்றாள்.
அனைவருக்கும் முக்கால் கிளாஸ் பாலை காய்ச்சி ஊற்றி அதில் வாசத்துக்காக பொடியை தூவி விட்டு கூடவே அவளுடைய சில வேலைகளையும் செய்தாள்.
என்ன செஞ்சா? அது இப்போதைக்கு உங்களுக்கு தேவையில்லை!
இதழ் பாலை எடுத்துக் கொண்டு செல்ல போக..
ஹே இத எடுத்துட்டு மித்துனுக்கும் அந்த ருத்ரனுக்கும் கொடுத்திடு! நான் இதை மகி மாமிக்கும் ,சூர்யா மாமாவுக்கும் கொடுத்துட்டு வரேன்!
சரி என்று இதழ்களை எடுத்துச் செல்ல போக அதற்குள் ரிதம் அவள் வேலையை சிறப்பாக செய்து கைகளை தட்டி இல்லாத மீசையை முறுக்கி விட்டாள்.
நேராக மகி அறையின் கதவை தட்ட..
என்னடி யாரடி இந்த நேரத்துல கதவை தட்ரா என்று சூர்யா சினுங்க..
இருங்க என்று கதவைத் திறந்தார்.
என்ன இந்த நேரத்துல? என்னடா? தங்க புள்ள என்று மகி கேட்க..
அதுவா ஒன்னும் இல்ல மாமி இதழ் தான் தூங்க போறதுக்கு முன்னாடி எல்லாரும் பால் குடிக்கணும்னு சொன்னா! அதனாலதான் நான் சொல்ல சொல்ல போட்டு கொடுத்துட்டா! எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல! இதை என்ன மாமி பண்றது!! என்று கேட்டாள்.
பாலா எனக்கு வேணும் என்று சூர்யா வாங்கிக் கொண்டார்.
இதில் சரி டா டா மாமி! டாட்டா மாமு! என்ற அவள் ரிதம் கிளம்பி விட்டாள்.
அந்த நேரம் கொடுத்துட்டியா என்று இதழ் கீழே வர..
கொடுத்தாச்சு இது உனக்கு என்று ரிதம் கொடுக்க.
அதை வாங்கிக் கொண்டே இரு நான் சக்தி அண்ணாவுக்கு நான் கொடுத்துட்டு வந்துடறேன்! என்று நேராக இதழ் சத்யதேவ் பக்கம் சென்றாள்.
அவனும் அதை வாங்கி அவளிடம் போன் பேசிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக குடித்தான்.
நீ எதுக்கு இன்னும் வெயிட் பண்ற குடி டி! என்று இதழை பார்த்து ரிதம் சொல்ல..
நம்ம ரூமுக்கு போயிட்டு உன் கிட்ட பேசிட்டு குடிக்கிறேன் என்று இருவரும் இதழினியின் அறைக்கு சென்றார்கள்.
இதழ் கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக்கொண்டே பேசிட அப்புறம் என்ன ஆச்சு? என்று ரிதம் சிரித்துக் கொண்டே அவளிடம் கதை கேட்டாள்.
சரி எனக்கு ரொம்ப தூக்கம் வருது நான் தூங்குறேன் என்று அனைத்து விளக்குகளையும் ஆப் செய்ய…
குட் நைட் குக்கூ என்று ரிதமும் படுத்துக் கொண்டாள்.
அந்த நேரம் சத்ய தேவ் இதழினியின் அரை கதவை தட்டினான்
வந்துட்டியா டா வாடா வாடா!
தொடரும்..
EPISODE 35
ஹே தூரி! ஹலோ! வக்கீல் மேடம்! என ரிதம் அவளை உலுக்க… தூரிகா எப்போதோ தூக்கத்துக்கு சென்று விட்டாள். அவளை பார்த்து கண்ணக்குளி தெரிய சிரித்த ரிதம்! ஒரு பெரு மூச்சை விட்டு ஹான் இந்த மிதுன் என்ன பண்றான்? என மெதுவாக அறையில் இருந்து வெளியே வந்தவள். அந்த பக்கம் செல்ல..
மிதுன் போனில் கேம் விளையாடி கொண்டே உறங்கி இருந்தான். அப்படியே அவள் சத்ய தேவ் அறைக்கு வந்தாள். புத்தகத்தை படித்து கொண்டிருந்த ருத்ரன் அப்படியே தூங்கி இருந்தான்.
ரிதம் தள்ளி குதித்த படி எதுக்கும் சூர்யா மாமா! மகி மாமி என்ன பன்றாங்கன்னு ஒரெட்டு போய் பார்த்திட்டு வருவோம் என சென்றாள்.
ஹே கிஸ் கொடு டி! என சொல்லி மகியின் அருகில் வந்த சூர்யா அப்படியே நெற்றியில் முத்தம் பதித்து எனக்கு தூக்கமா வருது டி! காலையில் நேரத்தில் டிரை பண்ணுவோம்! என குறட்டைக்கு சென்று விட்டார். காலையில் இருந்து வேலை செய்த அலுப்பில் மகி தன் கணவனை கட்டி கொண்டே உறங்கி போனார். எல்லாரோட பால் கிலாசும் காலி! அப்போ எல்லாரும் full மட்டை!
கிங் டா! ரிதம் கிங்கு டா என பாட்டு பாடி கொண்டே இதழ் அறைக்கு வந்து கதவை சாத்தி விட்டு ரிதம் சத்ய தேவ் போனை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள்.
எல்லாமே சாமி படங்கள்! அதன் பின் அவனுடைய வேலை தொடர்பான படங்கள். அவனுடைய படம் எதுவும் போனில் இல்லை. ஒரே ஒரு போட்டோ அது சின்ன வயதில்.. ரிதம் கலக்கத்துடன் அந்த படத்தை பார்த்தாள்.
கள்ளம் கபடம் இல்லா சிரிப்புடன் சூர்யா மற்றும் மகி இருவருடணும் சின்ன வயது சத்ய தேவ்! அந்த கண்கள் அவனுடைய கண்கள்! அதை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.
ஒரு பெரு மூச்சை விட்டு தலை கோதி கொண்டே அந்த படத்துக்கும் ஜூம் செய்தாள். உள்ளுக்குள் கூடவே கொஞ்சம் ஏமாற்றம், வெறுப்பு, கோபம் என அனைத்தும் வந்து சேர்ந்தது.
*
சத்யா!..
ம்ம்.. என சத்ய தேவ் ஒற்றை பதில் அளிக்க..
ஹே அன்னிக்கு கிஸ் கேட்ட! இன்னிக்கி அமைதியாக இருக்க! உன்னோட போனுக்கு வரட்டா! என ஹரிணி கேட்க..
ருத்ரன் என் கூட தான் இருக்கான். நீ கொஞ்சம் வெயிட் பண்ணு டி! நான் என்னோட போன்ல இருந்து உனக்கு கால் பண்றேன் என சத்ய தேவ் போனை வைத்தான்.
நேராக சத்ய தேவ் கொட்டாவி விட்டு கொண்டே இதழ் அறையை தாண்டினான். ஓ சிவ சிவா! இவள் தான போனை வச்சிருக்கா! என நினைத்தவன். அதே இடத்தில் ஒரு சில நிமிடம் நின்றான்.
சரி கதவை தட்டி கேட்கலாம். என தட்டினான்.
ரிதம் பழைய நினைவுகளை நினைத்து கொண்டிருக்க கதவு தட்டும் சத்தம் கேட்டது. சட்டென சுய நினைவுக்கு வந்து சேர்ந்தாள். ஒரு சின்ன சிரிப்புடன் வந்துட்டான் டா! ம்ம் வாடா! வாடா! என நினைத்து கொண்டே எழுந்தாள்.
உடையை சரி செய்து கொண்டே கதவை திறக்க சென்றாள்.
சத்ய தேவ் தன் தங்கையை பார்த்தவன். புருவம் சுருக்கி போனை கொடு! என கையை நீட்டினான்.
ரிதம் அவனை இஞ்ச் இஞ்சாக பார்த்தாள். ஆனால் சத்ய தேவ் பார்வை துளி கூட ரிதம் மேல் இல்லை! F* எவ்ளோ தைரியம் என்னை பார்க்காமல் இருக்கானே! நான் அழகா இல்லையா! கண்ணியம்! கடமை! கட்டுபாடா? பொடலங்கா! என நினைத்தவள். அவனை பார்க்க..
சத்ய தேவ் இமை தரையை பார்த்து கொண்டே கை நீட்டியது.
ஏனோ ரிதமுக்கு அவனிடம் விளையாட தோன்ற வில்லை. அவனிடம் போனை கொடுத்தாள்.
சத்ய தேவ் எதுவும் சொல்லாமல் திரும்ப.. க்கும்..
அவனுடைய அறை கதவை திறக்காமல் முதுகு காட்டி நின்றான்.
இந்த வீட்டுக்கு நீ புதுசு ஆனால் நான் அப்படி இல்ல! அதே போல! உன்னோட useless டாக்கிங் எல்லாம் பேசி மகி மாமியை கஷ்ட படுத்தாத! அதுக்கு நீ அனுபவிப்ப! உன் தங்கச்சி ரூமுக்கே அவளை பார்க்க போனாலும் நாக் பண்ணிட்டு உள்ளே போகனும்! இந்த பேசிக் சென்ஸ் தெரிஞ்சுக்க.. ஹரிணி உன்னை கட்டிக்க போறவ அவள் ரூம்க்குளே போக உனக்கு பெர்மிஸன் கேட்க தேவையில்லை. ஆனால் மற்ற யாரா இருந்தாலும், ஜஸ்ட் நாக் பண்ணு! முக்கியமா, இந்த வீடு உனக்கு புதுசு ஆனால் இந்த வீடு எனக்கு இன்னொரு வீடு போல! என்னோட எல்லா மெமரியும் இங்கே தான்! என சொல்லிவிட்டு கதவை அடைத்து கொண்டாள்.
சத்ய தேவ் போனை எடுத்து கொண்டே நேராக ருத்ரன் தூங்கி கொண்டிருந்த அறையில் இருக்கும் பால்கணி பக்கம் சென்றவன். ஹரினிக்கு அழைத்தான்.
அப்பாடி வந்திட்டியா! லவ் யூ! சத்யா! என்னமோ தெரியலை உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் டா!. என ஹரிணி கூறினாள்.
ஆமா என்ன பெர்ஃப்யூம் போட்டிருக்க வாசம் அடிக்குது! என சத்ய தேவ் கேட்க..
நானா? டேய்! இங்கே நான் போட்டிருக்க பெர்ஃப்யூம் வாசம் அங்கே எப்டி அடிக்கும்! அந்த அளவுக்கு என்னை நினைச்சிட்டு இருக்கியா? என ஹரிணி வெட்கத்துடன் கேட்க…
சத்ய தேவ் கையில் இருக்கும் போனை பார்த்தான். அந்த போனின் மேல் வாசனை அவனுக்கு மூக்கை துளைத்தது. இது ரிதம் உடையில் அவளுடைய வீட்டுக்கு செல்லும் போது அடிக்கடி இந்த வாசனை அடிக்கும் ஆனால் இவ்வளவு ஸ்ட்ராங் இல்லை. ஆனால் இன்று அவனது நாசியை களவாடி கொண்டிருக்க..
சத்யா! என ஹரிணி மீண்டும் அழைத்தாள்.
சொல்லு?..
என்ன டா சொல்லு சொல்ற? ஹனி சொல்லி தானே கூப்பிடுவ? ஆமா என்னாச்சு எதுவும் மைன்ட் அப்சட் ல இருக்கியா? உன்னோட பேச்சு சரி இல்லையே என கேட்க..
அது எனக்கு இப்போ கொஞ்சம் தூக்கம் வருது டி! நான் நாளைக்கு கால் பண்ணவா! என சத்ய தேவ் கேட்டான்.
ஹரிணி பக்கம் அமைதியாக இருக்க … சத்ய தேவ் தன்னை சரி செய்து கொண்டு சரி பேசலாம்! முத்தம் தரேன்னு சொன்னியே! என கேட்க வர..
இல்ல வேணாம்! நீ போய் தூங்கி ரெஸ்ட் எடு! மார்னிங் பேசலாம்!.
இல்ல! ஹனி! எனக்கு இப்போ ஓகே பேசலாம்! என கூறினான்.
ஹரிணி ஒரு பெரு மூச்சை விட்டு இல்ல சத்யா நீ போய் தூங்கு! நானும் தூங்க போரன்! நாளைக்கு பேசலாம்! என கூறினாள்.
என் மேல கோபம் இல்லையே! என சத்ய தேவ் அவளிடம் கேட்க..
ஹரிணி சிரித்து கொண்டே ஆமா கோபம் தான்! நிறைய கோபம் இருக்கு! அதுக்கு என்ன பண்றது!
என்ன கோபம்! சொல்லு! நான் அதை சரி பண்ண பார்க்கிறேன்! என சத்ய தேவ் ஒரு வித கவலையுடன் கூறினான்.
ஹரிணி சிரித்து விட்டு குரல் மெதுவாக எனக்கு இன்னிக்கு உன்னோட நினைப்பு ரொம்ப ரொம்ப தோணுச்சு! அதான் கால் பண்ணேன்! ஆனால் சாருக்கு தான் தூக்கம் வருதே!
இதை கேட்டதும் சத்ய தேவ் உதட்டில் மெல்லிய புன்னகையுடன் இல்ல ஹனி! என்னை பார்கிவ் பண்ண மாட்டியா? என கேட்டான்.
ஹான் பண்றேன்! எனக்கு இன்னிக்கு நீ வேணும்! அன்னிக்கு நீ கொடுத்த முத்தம் அது வேணும்! I want you! என பேசி கொண்டிருக்க.. அவளுடைய கதவு அழைப்பு மணி ஒலித்தது.
இதையெல்லாம் கேட்டவனுக்கு என்ன பேசுவது என தெரிய வில்லை. அவன் அவளின் பேச்சை உள் வாங்கி கொண்டிருந்தான்.
சத்யா ஒரு நிமிசம் என கூறினாள்.
ஹான் என அவன் காத்திருந்தான். மேம் ராத் கி சோனே கி before milk என நீட்டினார். அந்த பணியாள்! அவள் ஒரு புன்னகையுடன் வாங்கி கொண்டாள்.
ஹரிணி உள்ளே வந்ததும் போனை எடுத்து பேச ஆரம்பித்தாள். சத்யா! என அழைக்க.
சொல்லு டி! என பதில் கொடுத்தான்.
நான் வந்துட்டேன்! இன்னிக்கு என்ன சாப்பிட்ட! என கேட்டாள்.
நான் நிறைய டிஷ் சாப்பிட்டேன். நீ என்ன சாப்பிட்ட!. என சத்ய தேவ் கேட்டான்.
நானா! நான் வேற என்ன veg தாலி தான்! எனக்கு நாக்குக்கு நல்லாவே இல்ல! எனக்கு நல்லா நாண் வேஜ் சாப்பிட தோணுது! வீட்டுக்கு வர ஆசையா இருக்கு! டாடிய மிஸ் பண்றேன்! கூடவே அம்மா சமையல்! என ஹரிணி கூறினாள்.
நீ ஒர்க் முடிச்சிட்டு வா! நான் உனக்கு சமைச்சு தரேன்! என சத்ய தேவ் கூறினான்.
மிஸ்டர் சத்ய தேவ் தான் வீகன் ஆச்சே! எப்படி எனக்கு சமைச்சு தருவாரு? என கேட்க…
சத்ய தேவ் பேச்சற்று போனான்! ரிதம் சொன்ன அதே வார்த்தைகள். உள்ளுக்குள் புரளியை கிளப்பியது. ஏனோ அடுத்த வார்த்தை பேச முடிய வில்லை.
ஹலோ! ஹலோ மிஸ்டர்! ஹே சத்யா லைன்ல இருக்கியா? என அவள் கேட்டு கொண்டே அருகில் இருக்கும் பாலை பார்த்தாள்.
ஹான்! அத்! அதனால் என்ன? உனக்கு சமைச்சு தரேன்! என தயக்கமாக கூறினான்.
ஹரிணி இதை கேட்டு சிரித்து கொண்டே அப்படி எல்லாம் கொடுமை பண்ண மாட்டேன்! என்னோட புருஷனை! ஒகே வா!
ஹான்!
சரி ஃபர்ஸ்ட் நைட் பால் கூட பாதாம் பால் தானா? என ஹரிணி கேட்க..
எனக்கு பாலே வேணாம் நீ குடி டி! என சத்ய தேவ் கூறினான்.
ஹரிணி அந்த பாலை எடுத்து கொண்டே உனக்கு வேணாமா!
நான் இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி குடிச்சேன்.
அப்டியா! இப்போ நான் குடிக்க போறேன்! என சொல்லி பாலை எடுத்து குடித்தாள்.
சத்ய தேவ் நான்கு முறை கொட்டாவி விட்டவன் தூக்கம் தாங்காமல் ஹனி நான் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன்! வெயிட் பண்றயா? என கேட்க..
என்னாச்சு? என ஹரிணி கேட்டாள். எனக்கு தூக்கம் வருது டி! உன் கிட்ட இன்னும் பேசிட்டே இருக்க தோணுது! அதனாலே நான் ஃபேஸ் வாஷ் மட்டும் பண்ணிட்டு வரேன். இரு என சென்றான்.
அதற்குள் ஹரிணி அந்தப் பணியாள் கொடுத்துவிட்டு சென்ற பாலை குடித்து முடித்து வைத்தவள் சத்தியதேவ்க்காக காத்திருந்தாள்.
இப்போ நீ பிரெஷா இருக்கியா? உனக்கு ஓகேவா? என்று ஹரிணி கேட்டாள்.
உன் மூஞ்ச கழுவிட்டேன் டி இப்போ கொஞ்சம் நல்லா இருக்கு!
அப்புறம் முன்ன என்ன சொன்ன? எனக்காக சமைச்சு தருவியா? என்று கேட்டாள்.
ஆமா என்று ஒற்றை பதிலளித்தான்.
ஹரிணி படுக்கையில் பொத்தென விழுந்தவள். இதையெல்லாம் நான் இங்கே இருக்கும்போது சொல்ற! நம்ப ரெண்டு பேரும் பக்கத்துல இருக்கும்போது சொன்னியா? அட்லீஸ்ட் நான் தான் தள்ளி போனாலும் நீ தான் என்கிட்ட கொஞ்சம் கசகசாவை ட்ரை பண்ணி இருக்கலாம்ல! என்று ஹரிணி கூறினாள்.
கசகசாவா I think opiyum poppy seeds அதை தான சொல்ற? அதுல என்ன பண்ண முடியும்! ஹான் அதை பாலில் சோக் பண்ணி! முகத்தில்!. என சத்ய தேவ் சொல்லி கொண்டே செல்ல..
சத்யா! என சிணுங்கி கொண்டே கூறினாள்.
என்ன டி! நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா? இன்று சத்ய தேவ் கேட்க..
டேய் நான் அந்த கசகசா சொல்லல லவ்வ பத்தி பேசிட்டு இருக்கேன்.
லவ்வா? என்று சத்ய தேவ் கண்களை சொக்கி கொட்டாவி விட்டு கொண்டே கேட்டான்.
ஹரிணி பெருமூச்சை விட்டு இன்னிக்கு நீ ரொம்ப புது மாதிரியா! என்கிட்ட பேசுற? என்னோட சத்யா! இப்படி எல்லாம் பேச மாட்டானே! என்கிட்ட இருக்கும்போது மட்டும் ரொம்ப என்தூசியாஸ்டிக்கா இருப்பான்! ஆனால் இப்போ பேசிட்டு இருக்க சத்ய தேவ் வேற மாதிரி இருக்கானே! என்று கூறினாள்.
இதை கேட்டதும் வெடுக்கென முழித்து இல்லடி! என்ன ஹனி இப்படி சொல்ற? நான் எப்பவும் போல தான் இருக்கேன்! என்று கூறினான்.
எப்பவும் போலவா! இருக்க? சரி நான் என்ன பேசினேன்! சொல்லு பார்க்கலாம்! என்று கேட்டாள்.
அதுதான் கசகசாவை பத்தி சொன்ன! இப்போ நீ எந்த கசகசாவை பத்தி சொல்றன்னு எனக்கு புரிஞ்சிடுச்சு! என்று மெதுவான குரலில் கூறினான்.
ஹரிணி சிரித்துக் கொண்டே அப்படியா? இந்த மரமண்டைக்கி இதெல்லாம் புரியுதா?. சரி நான் எந்த கசகசா சொன்னேன்? சொல்லு! பாக்கலாம்! என்று கேட்க..
சத்தியதேவ் எச்சிலை கஷ்டப்பட்டு விழுங்கி நான் உனக்கு கிஸ் பண்ணனும்! முத்தம் கொடுக்கணும்!
ரெண்டும் ஒன்னு தாண்டா..
சாரி அதுதான் முத்தம் கொடுக்கணும் உன்னோட தலையை கோதிவிடணும்! உன் மூக்கோட மூக்கை உரசனும்! அதுக்கப்புறம் என்று அவன் சொல்லிக் கொண்டே செல்ல..
ம்ம் கொட்டியவள் கொஞ்சம் கொஞ்சமாக தூங்க ஆரம்பித்தாள்.
அதுக்கப்புறம் உன்னோட முடியில மொத்த வாசத்தையும் நான் எடுத்துக்குவேன். அதுக்கப்புறம் அப்படியே கழுத்துக்கு வருவேன்! என்று ம்ம் கொட்டியவள் அப்படியே உறங்கி போக அதற்கு மேல் அவனால் அடுத்து போக முடியவில்லை.
சத்திய தேவ் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க. சத்யா என்று தூக்க கலக்கத்துடன் அழைத்தாள்.
என்ன டி கழுத்துக்கு அப்புறம் என்று சொல்ல வர..
சாரிடா சத்யா என்னன்னு தெரியல! எனக்கு ரொம்ப ரொம்ப தூக்கம் வருது! என்று கண்களை தேய்த்தாள்.
என்னடி இப்போதான் ஒரு மாதிரி சரியா வந்தேன்! அதுக்குள்ளாட்டி இப்படி சொல்லிட்ட! என்று கேட்டான்..
சாரிடா ப்ளீஸ்டா சத்யா என்று கெஞ்சலுடன் கேட்டாள்.
சரி போ என்று அவன் கட் செய்ய போக..
வேண்டாம் இரு என்று கூற..
என்ன அதுதான் உனக்கு தூக்கம் வருதே!
அப்போ உனக்கு வரலையா?.என்று ஹரிணி கேட்க..
எனக்கும் தான் வருது ஆனா உன்கிட்ட பேசறதுக்காக நான் என்னையே கண்ட்ரோல் பண்ணிட்டு இருந்தேன்! என்று கூறினான்.
இதைக் கேட்டதும் ஹரிணி சிரித்துக் கண்ட்ரோல் பண்ணியா? என்கிட்ட நீ எதையுமே கண்ட்ரோல் பண்ண கூடாது. எப்பவா இருந்தாலும், எதுவா இருந்தாலும் சொல்லிடனும்! என்று இரு பொருள் கூறினாள்.
அதை சத்யதேவ் அறியும் நிலையில் இல்லை
சரி சொல்லு என்று கேட்க..
என்ன?
எனக்கு ஒரு லவ் யூ சொல்லிட்டு, ஒரு லாங் கிஸ் குடு பாக்கலாம்!
அவன் சிரித்து கொண்டே நான் உன்ன காதலிக்கிறேன் என்று கூறினான்.
ஹா ரொம்ப இந்த வார்த்தை எனக்கு அப்படி இருக்கு என்று ஹரிணி சொல்ல..
சத்தியதேவ் சிரித்துக் கொண்டே சரி நீ சொல்லு!! அதுவும் நீ என்ன சத்யான்னு கூப்பிடுவியே! அது ரொம்ப ரொம்ப பிடிக்கும் டி! சொல்லு என்று கேட்க..
சத்யா என்று அழைத்தாள்.
காதலை சொல்லு! என்று சத்ய தேவ் கேட்க.
நான் உன் காதுல.. காதுக்கு பக்கத்துல, என் மூச்சு காத்து உரச, ஐ லவ் யூ சத்யா என்று கூறினாள்.
இருவரும் பெரும் மூச்சை எடுத்துக் கொண்டார்கள்.
சரி நான் போன வைக்கவா? என்று கேட்டாள்.
வெக்க வேணாம் பேசலாமா என்று சத்யதேவ் கேட்டான்.
அது எனக்கு என்னனே தெரியல ரொம்ப தூக்கம் வருது சத்தியா அப்படியே விழுந்துடுவனாற்றுக்கு என்று கூற..
சரி சரி எனக்கு ரொம்ப தூக்கம் வருது நான் மார்னிங் பேசவா! ஒரு அஞ்சு மணிக்கு நான் ரெடியா இருப்பேன்! போன் பண்ணவா? என்று கேட்டான்.
அஞ்சு மணிக்கு நீ ரெடியா இருப்ப என்னால 5:00 மணிக்கு எந்திரிக்க முடியாது. நாளைக்கு லீவு தான் இருந்தாலும் கொஞ்சம் அன்ஆபீஸியல் வொர்க் இருக்கு என்று கூறினாள்.
சரி ஓகே பாய் மார்னிங் கால் பண்றேன். என்று கட் செய்தவன். அச்சோ முத்தம் கொடுக்க மறந்துட்டேனே! என இருவரும் நினைத்தார்கள். சரி ரொம்ப தூக்கம் தூங்கட்டும் அடுத்த போன்ல கொடுத்துபோம் என வேகமாக படுக்கையில் இங்கே சத்ய தேவ் சரிய! டெல்லியில் ஹரிணி அவள் படுக்கையில் விழுந்து தூங்க ஆரம்பித்தாள்.
இரவு நடு சாமத்தை எட்டி இருக்க டக் டக் என்ற சத்தத்துடன் வந்தவன் ஷூவை கழட்டி விட்டு மெதுவாக அவளின் அறை கதவை திறந்தான்.
தேவதை போல உறங்கி கொண்டிருந்தாள். ஹான் அப்படி இல்லை. உறங்க வைக்க பட்டாள். அருகில் சென்றான். இந்த இரவில் அந்த சின்ன லைட் வெளிச்சத்தில் அவள் முகம் சொக்கி தூங்க அறையின் கதவை சாத்தி விட்டு கைகளை உதறி நெட்டி முறித்து கொண்டே அருகில் வந்தான்.
அந்த படுக்கையில் அமர்ந்தான். அவளுக்கு போர்வை போர்த்தி விட்டவன். அதில் அவனையும் புகுத்தி கொண்டான். அருகில் இருக்கும் தித்திப்பான தேனை பார்த்தான். அவள் முகத்தை அருகில் பார்க்க ஆசை! அவன் நெஞ்சில் அவள் புதைந்து தூங்க வேண்டும் என்று பேராசை! அவளின் உதட்டில் முத்தம் கொடுத்தான்.
ஒன்று என்று ஆரம்பித்தான். ஆனால் ஒன்றோடு முடியுமா! எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது! அதனால் கணக்கில்லாமல் கொடுத்து கடித்தும் கொண்டான். எல்லாமே மென்மையாக! அவளின் அங்கங்கள் இரண்டும் எட்டி பார்த்து கொண்டிருக்க.. இவனும் கொஞ்சம் எட்டி பார்த்தான்.
*
அதே நடு சாமம் அவன் கனவில் அது (கனவா? நிஜமா?) சதி வந்திருக்கேன் டா!..
யார் நீ என சத்ய தேவ் கைகளை வீசி கேட்டு கொண்டே பிடிக்க வர..
சதி யாரு! உனக்கு தெரியாதா?
தெரியாது! நீ யாருன்னு சொல்லு! என சத்ய தேவ் அவளை துறத்தினான்.
உண்மையான புராண சதி யாருன்னு தெரியும் தான! சொல்லு என சிரித்து கொண்டே ஓடினாள்.
சத்ய தேவ் அமைதியாக அதே இடத்தில் நிற்க..
சதி திரும்பி பார்த்து விட்டு என்ன சக்தி! என்னை தெரியலையா?
சத்ய தேவ் அவளின் குதிரைவால் கூந்தலை பார்த்தவன். அதை பிரிக்க கைகள் பரபரக்க பராசக்தி சிவனோட முதல் மனைவி சதி! தன்னோட கணவன் மீது உயிரை விட காதல் வைத்திருந்தாள். ஒரு சூழ்நிலையில் சிவனை பற்றி தவறாக பேசியதை கேட்க முடியாமல் நெருப்பில் விழுந்து உயிரை விட்டாள். உடல் கூட கிடைக்காமல் அது பல்லாயிரம் துகள்களாக இந்த பூமியில் விழுந்தது. அவள் தான் சதி என சத்ய தேவ் கூறினான்.
இதை கேட்டதும் சதி சிரித்து விட்டு அப்போ சக்திக்கும் சதிக்கும் என்ன சம்மந்தம்? என கேட்டாள்.
சத்ய தேவ் தீவிரமாக இது என்ன கேள்வி இதுக்கு பதில் சொன்னா? நீ உன்னோட முகத்தை காட்டுவியா? என கேட்டான்.
நீ சொல்லு அதை அப்புறம் பார்க்கலாம் என சதி கூறினாள்.
சத்ய தேவ் ஒரு பெரு மூச்சை விட்டு சதியின் உருவா தான் சக்தி அதாவது பார்வதி சிவனை திருமணம் செய்து கொண்டார்கள்.
அப்டியா என சிரிப்பு சத்தம் கேட்க..
நீ கேட்டதை சொல்லிட்டேன் உன் முகத்தை காட்டு என அவளின் கூந்தலை பிடித்து இழுக்க அவன் கையில் ரப்பர் பேண்ட் மட்டும் தான் கிடைத்தது.
சக்தி என்னை உன்னால பிடிக்க முடியாது டா! நீ சொன்னது சரி! ஆனால் உனக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? அதுக்கு பதில் சொல்லு என் முகத்தை காட்டுறேன்! உனக்காக நான் என் வாழ்க்கை முழுசும் காத்திருக்கேன் டா! என் சக்திக்காக! நீ என்னோட சக்தி! என சிரித்து கொண்டே ஓடினாள்.
இல்ல எனக்கு என் மனசுல ஹரிணி இருக்கா! என சத்ய தேவ் என்னும் சக்தி சொல்ல..
சதி ஒரு நிமிடம் நின்றாள்.
நீ புரிஞ்சுக்க வராத! எனக்கு ஹரிணி இருக்கா அவளுக்கு துரோகம் பண்ண முடியாது!
அப்போ என்னோட முத்தம் என சதி கேட்க.
முத்தமா! அது நீயா கொடுத்தது. அதுல எனக்கு எந்த உணர்வும் இல்ல நீ சதி இல்ல மோகினி! இனி இப்படி வந்து என்னை தொந்தரவு செய்யாத!
சிரிப்பு சத்தத்துடன் வந்த வார்த்தைகள் அனைத்தும் இப்பொழுது உள்ளே இருந்து அவனிடம் அப்போ இனி நான் வர கூடாதுன்னு நினைக்கிற தானே சக்தி!
ஆமா!
என்னோட முகம்! முத்தம்! கொஞ்சல் கெஞ்சல்! சக்தி – சதி ரகசியம் உனக்கு தெரிய வேணாமா?
வேணாம்! நீ வர வேணாம்!
அப்போ இனி நான் வர மாட்டேன். நீயா என்னை கூப்பிடும் வரை நான் வர மாட்டேன்.
போறேன் சக்தி! உன்னோட சதி போறா! இனி வர மாட்டா! என சென்று விட்டாள்.
சதி! சதி! சதி! யாரு டி நீ? என சத்ய தேவ் கைகள் இறுக்கி மூடினான்.
நாளை பார்ப்போம்!
தொடரும்..
அந்த சதி யாருன்னு நினைக்கிறீங்க? ஹனி பக்கத்தில நிதின் பிரகாஷ் தான!
அடுத்து என்ன நடக்குமோ! இனி சதி வர மாட்டா!
பார்ப்போம்
EPISODE 36
அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது. அனைவரும் நீண்ட நேரம் தூங்கிக் கொண்டிருந்தார்கள். எப்படி இவ்வளவு நேரம் தூங்கினேன்? என்ன ஆச்சு? என்று அசரிக்கையாக மகிழினி எழுந்திருக்க காலை 8 மணி ஆனது.
அவர் வேகமாக சமையலறை சென்றவர். வேலையை ஆரம்பித்தார்.
சூர்யா அவளை தேடி கொண்டே ஏ வந்ததும் வேலைய ஆரம்பிச்சிட்டியா? நைட்டே நீ சாப்பிடாம தூங்கிட்ட! உட்காரு நான் உனக்கு டீ போட்டு எடுத்துட்டு வரேன்! இன்னிக்கு என்ன சமைக்கலாம்? என்று கேட்க..
அந்த நேரம் மகிழின்க்கு போன் வந்தது. ஹலோ மகி கேட்க.. சித்தி என கோரசாக அழைத்தார்கள்
ஹலோ யாரது கூட்டமா கத்துறீங்க? சிவன்யா அப்புறம் நிவா குட்டி அப்புறம் நிலா!.. ஹான் வேற யார் இருக்கீங்க? என்று கேட்க..
நானும் தான் இருக்கேன் பவா! நான் பவா என்று அவளும் கூற..
என்ன விஷயம் என்று மகி கேட்டார்.
என்ன விஷயம்! ஒன்னும் இல்ல என அவர்கள் கோரஸ்ஸாக கூற.. அப்போ அவ்ளோதானா என்று மகி கேட்க..
அது இல்ல! என அனைவரும் அமைதி ஆகிட.. மகி சிரித்துக்கொண்டே எனக்கு உங்களை எல்லாம் பாக்கணும் போல இருக்கு வரிங்களா? எனக்கு இனியா ஞாபகமா இருக்கு! உங்க கூட இருக்காளா?
இல்ல இனியாவ அம்மாச்சி தாத்தா கூட இருக்கா.. என்று கூற
அப்படியா சரி எப்போ வரீங்க? என கேட்டார்.
இல்ல சித்தி உங்களுக்கு இனியாவையும், இதயனையும் பார்க்கணுமா? என நிவா கேட்டான்.
ஆமா எனக்கு ஞாபகமா இருக்கு! மாரனோட அம்மா மை விழி தான் என் அண்ணன் புள்ளைங்கள திட்டிட்டாலே! அதனால எனக்கு அவங்க ஞாபகமா இருக்கு என்று கூறினார்.
இதை கேட்டதும் வெற்றி மாறன் நொந்து கொண்டு எனக்கு அம்மாவை நினைச்சா பயமா இருக்கு மகி மா! என்று கூற..
அவளை நினைச்சு நீ எதுக்குடா பயப்படுற? அவ எல்லாம் ஒரு ஆளே இல்லை! சரி எல்லாரும் கிளம்பி வாங்க என்ன சாப்பிடுறீங்க? நிலா குட்டிக்கு என்ன வேணும்? என மகி கேட்க..
எனக்கு வெஜ் வேணும்! என கூறினாள்.
ஹான் உன் சத்ய தேவ் அண்ணா இங்கே தான் இருக்கான்! வாங்க செஞ்சுட்டா போச்சு! என மகி சொல்ல..
அப்படியா! என அனைவரும் கேட்டார்கள். ஆமா என மகி கூற உடனே வரோம் என அனைவரும் கிளம்ப..
இங்கே சூர்யா கத்தி கொண்டிருந்தார். என்ன? எதுக்கு கத்திட்டு இருக்கீங்க?
எல்லாருக்கும் நீ வேலை செஞ்சு ஆக்கி போட்டால் உனக்கு உடம்புக்கு என்ன ஆவரது! அவங்க கிட்ட சொல்ல மாட்டியா? கை வலி காலு வலின்னு சொல்லு ஓடச்சு போடுறேன் என சூர்யா கூறினார்.
சரி சரி போய் கறி எடுத்திட்டு வாங்க! என மகி சொல்லி கொண்டே உள்ளே செல்ல..
நான் எதுக்கு போகனும்! எங்கே அந்த அறியர் நாயை வர சொல்லு! எட்டு மணிக்கு ஒரு பையனுக்கு என்ன தூக்கம் வேண்டி கடக்கு! என சூர்யா நேராக மிதுன் அறைக்கு சென்றார்.
மிதுன் நன்றாக காலை பரப்பிக் கொண்டே தூங்க..
டேய் எழுந்திருடா என்று அவன் கன்னத்தில் அடித்தார்.
மிதுன் கண்ணத்தை தேய்த்துக்கொண்டு யாரது என்று கெட்ட வார்த்தை பேச வந்தவன். சட்டென தன் தந்தையை பார்த்ததும் சாரி என்று தயங்கிக் கொண்டு எழுந்து அமருந்தான்.
இன்னும் என் காதுல என்னென்ன எல்லாம் கேட்க வேண்டியது இருக்கோ! எல்லாம் என் நேரம்! சரி எந்திரிச்சு போயி உன்னோட வான் கறி வாங்கிட்டு வா! என சூர்யா கூறினார்.
என்ன கறி என்று கேட்டான்.
என்ன கறின்னு சாருக்கு ஒண்ணுமே தெரியாது! என்று சூர்யா முறைத்து பார்க்க..
இப்படி திடுதிப்புன வந்து தூங்கிட்டு இருக்கிற பையன புடிச்சு, அடிச்சு கறி வாங்கிட்டு வா! அப்டின்னா என்ன கறி அப்டின்னு தான் கேப்பாங்க என்று மிதுன் கூறினான்.
ஆட்டுக்கறி, காட, மீன் இறால் எல்லாத்தையும் வாங்கிட்டு வா!
எனக்கு வாங்க தெரியாது என்று மித்துன் கூறினான்.
அப்போ திங்க தெரியுமா? தின்னு என்ன பிரயோஜனம்டா நீ பண்ணி வச்சிருக்க?. அந்த ஒரு பேப்பரை எப்பதான் கிளியர் பண்ண போற? என்னால ஒரு இடத்துக்கு கூட போய் தலை காட்ட முடியல! எல்லா பிசினஸ் மேன் பொண்ணுங்களும் உன்ன பத்தி தான் கேக்குறாங்க! அரியர் பாஸ் பண்ணிட்டானான்னு, இதுல வேற பாதி பேரு அலையன்ஸ் வேற கேக்குறாங்க! எல்லாம் என்னால நிமிர்ந்து பதில் பேச முடியல என்று சூர்யா கூறினார்.
என்ன கல்யாணமா என்று மித்துன் கொஞ்சம் சிரிப்புடன் சூரியாவை பார்க்க.
சூர்யா முறைத்துக்கொண்டே “கனவுல கூட நினைக்காத! உனக்கு அந்த கன்றாவி வேற பண்ணி வைக்கணுமா? முதல்ல பரிட்சையை பாஸ் பண்ணி, நான் செய்யற வேலையிலிருந்து கொஞ்சம் வாங்கி செய்ய கத்துக்கடா! நாயே! எந்திரிச்சு வா முதல்ல மூஞ்சையும் நாற வாயையும் கழுவு!”என்று வெளியே வந்தார்.
மிதுன் வருத்தத்துடன் என்னை பார்த்தா மட்டும் இவருக்கு எங்க இருந்துதான் கோபம் வருதுன்னு தெரியல! எல்லாம் என்னோட நேரம்! இந்த ஊர்ல வந்து கஷ்டப்பட வேண்டியதா இருக்கு! இதுவே நான் கனடாவில் இருந்திருந்தனா! எவ்ளோ நல்லா இருக்கணும்! இப்பவே நான் வருண் மாமாக்கு போன் பண்ணி நான் கனடா கிளம்பலாம்னு இருக்கேன்! இனி ஒரு நிமிஷம் கூட என்னால இங்க இருக்க முடியாது! என்று கண்டதை யோசித்துக் கொண்டே கீழே வந்தான்.
மகி அவன் முகத்தை பார்த்து மித்துக்குட்டி என்று அழைக்க..
போமா என்று சோர்வுடன் சோபாவில் அமர்ந்தான்.
என்னாச்சு தங்கத்துக்கு ஏன் முகம் வாடி போய் இருக்கு என்று கேட்க..
எல்லாம் அவராலதான் நான் உன்கிட்ட எவ்வளவு படிச்சு படிச்சு சொன்னேன்! இங்க எல்லாம் இருக்க வேண்டாம்! அவர் என்னை எவ்வளவு கஷ்டப்படுத்துறார். தெரியுமா? அஞ்சறிவு ஜீவன கூட எல்லாரும் நல்லா நடத்துவாங்க! ஆனால் என்னை அதைவிட கேவலமா நடத்துறாரு! என்று வருத்தத்துடன் கூறினான்.
சரி சரி என் தங்கம் என்று நெற்றியில் முத்தமிட்டவர்.
நான் பார்த்துக்கிறேன் விடு! நம்ம உமா ஆத்தாகிட்ட சொல்லிடலாமா?.என்று கேட்க..
போமா நீ வேற உன்னையே ஒரு ஈசியா சமாளிச்சு விடுவார். என்னை மித்துன் கூறினான்.
உடனே மகி அவன் முகத்தைப் பிடித்து தலையை வருடிக் கொண்டே“ நீ ஒன்னும் கவலைப்படாதே ரொம்ப பண்றாரா?”
ஆமா மகி என சிணுங்கி கொண்டே கூறினான்.
சரி நீ ஒன்னும் கவலைப்படாத! இனி நீ தேவ் கார்ப்பரேஷன் போக வேண்டாம்! என்று மகி கூறினார்.
இதை கேட்டதும் மிதுன் புருவம் நெருக்கி வேற எங்கே போகட்டும்?
மகி அவனுடைய உச்சந்தலையில் முத்தம் பதித்த நீ நம்மளோட கேமிங் கம்பனி போ! அங்க போயிட்டு அதோட ஒர்க் பாரு! புதுசா எதுவும் கிரியேட் பண்ண முடிஞ்சா டிரை பண்ணு! இப்போ படிப்ப தேவையாக அளவுக்கு இருந்தால் போதும்! என் பையன் டாப்பர்ன்னு எனக்கு தெரியும்! அந்த ஒரு பேப்பர் அவனுக்கு வரல! கொலை குத்தம் பண்ணிட்டு வரலையே! அவர் வரட்டும் நான் பாத்தபேப்பன்! நீ என்னோட கேமிங் அப்ளிகேஷன் ஒர்க் பாரு! ப்ரமோஷன் கொடுக்கலாம்! இல்லனா புதுசா எல்லாரையும் கேதர் பண்ணி நீ கேமிங் கம்பெனியை ஸ்டார்ட் பண்ணு! அம்மா உன் கூட இருக்கேன். எதுக்கு நீ கவலைப்படுற? என்று அவர்கள் இருவரும் கொஞ்சி குலாவிக் கொண்டிருக்க..
அந்த நேரம் சத்தியதேவ் மேலே இருந்து கீழே வந்தான். மகி மிதுன் தேவை கொஞ்சவது பார்த்துக் கொண்டே கீழே வந்தான்.
மிதுன் சத்யதேவ் வருவதை தெரிந்து கொண்டவன். மகி எனக்கு ரொம்ப லோன்லியா இருக்கு தெரியுமா! என்று தன் தாயின் இடையை கட்டிக்கொண்டான்.
என் தங்க புள்ள இனி நான் அவரை என்ன பண்றேன்னு பாரு! நீ கவலைப்படாத என்று கூற..
அப்பொழுது தான் சத்ய தேவ் நேராக கிச்சன் பக்கம் செல்வதை பார்த்து மகி உடனே விலகி செல்ல போக..
மகி இன்னும் கொஞ்ச நேரம் என மிதுன் சொல்ல..
மிதுன் விடு! நான் கிச்சன்ல அம்மாவுக்கு வேலை இருக்கு என்று சொல்ல..
கொஞ்ச நேரம் இரு மகி என்று இறுக்கிப்பிடித்தான்.
போடா என்று தள்ளிவிட்டு வேகமாக சத்ய தேவ் பின்னால் கிச்சனுக்கு சென்றார்.
இதை பார்த்த மிதுன் மனதில் இவனால தான்! எல்லாமே இவன் தான்! ஓவரா பண்றான்! இவன் எல்லாம் எதுக்கு இங்க வந்தான்? இது என்னோட வீடு! என்று நினைத்தவன். சோகமாக அமர்ந்திருந்தான்.
அந்த நேரம் நித்தின் பிரகாஷிடம் மிதுன் தேவ்க்கு போன் வந்தது. ஹலோ ப்ரோ! என சுறத்தே இல்லாத குரலில் பதிலளித்தான்.
என்ன உன்னோட குரல்ல பிரிஸ்கே காணோமே! என்னாச்சு என்று நிதின் கேட்க..
அதுவா ஒன்னும் இல்ல ப்ரோ! என்ன விஷயம்? நீ என்ன பண்ணிட்டு இருக்க? என்று மிதுன் கேட்க..
நீ விஷயத்தை சொல்லு! உன்னோட குரல் சரியில்லையே என்று நிதின் மீண்டும் கேட்டான்.
மிதுன் தயங்கிக் கொண்டே அந்த சக்தி இங்க இருக்கான்!
நித்தின் புருவம் சுருக்கி கொண்டே என்ன சொல்ற? என்று கேட்க..
மிதுன் பெரு மூச்சை விட்டு அதான் சத்தியதேவ் எங்க வீட்டுக்கு வந்துட்டான்!.
இதை கேட்டதும் நிதின் எழுந்து நின்றவன். வீட்டுக்கு வந்துட்டானா?. புரியல! இப்போ அவன் எங்கே இருக்கான்? என்று கேட்க..
மிதுன் விளக்கமாக கூறி முடித்தான். நித்தின் ஒரு நிமிடம் அமைதியாக இருக்க..
என்ன ப்ரோ அமைதியா இருக்க? எதுவும் பேசு! என்று கூற..
எனக்கு இப்போ உடனே மகிய பாக்கணும் போல இருக்கு!
இதை கேட்டதும் மிதுன் சிரித்துக் கொண்டே ப்ரோ சீக்கிரம் வா! ப்ரோ! என்னால இங்க ஒண்ணுமே சமாளிக்க முடியல! இந்த மகி வேற அந்த சத்ய தேவ் பக்கம் சாய்ரா! அது கூடவே இந்த சூர்யா எப்ப பார்த்தாலும் என்னை திட்டிக்கொண்டே இருக்காரு! ப்ரோ!.. அது மட்டுமா! ருத்ரன் இங்கே வந்து ஸ்டே பண்ணிட்டான்! இதுக்க எல்லாத்துக்கும் காரணம் அவன் தான் ப்ரோ!.
நான் இப்போ உடனே வரேன். நீ ஒன்னும் கவலைப்படாத என சொல்லி போன் வைத்தான்.
இங்கே சத்யதேவ் என்ன செய்கிறான்? என்று கிச்சனில் வந்து மகி எட்டிப் பார்த்தார்.
உடனே அவன் பாத்திரத்தை பார்த்துக் கொண்டு அப்படியே நிற்க..
இதெல்லாம் சைவம் மட்டும் புழங்குன பாத்திரம் என்று மகி காட்ட…
அதை பார்த்ததும் அவன் எதுவும் பேசாமல் அதில் இருந்து ஒரு பாத்திரத்தை எடுத்து எடுத்துவிட்டு ஃப்ரிட்ஜை திறந்தான்.
மகி ஃப்ரிட்ஜில் இருந்து பாதாம் பாலை காட்டி கூற..
சத்யதேவ் தன் அன்னையை கண்டு கொள்ளாமல் இஞ்சி எடுத்து கொஞ்சம் சீவி அதனுடன் நீர் சேர்த்து கொஞ்சம் லெமன் புளிந்து விட்டு டீ தயார் செய்தான்.
அதற்கு மேல் மகி எதுவும் பேசாமல் நேராக சோபாவில் போய் அமர்ந்து கொண்டார்.
சக்தி அதை எடுத்துக்கொண்டு நேராக அவன் அறைக்கு சென்றான்.
அப்பொழுதுதான் சூர்யா கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார்.
மிதுன் ஓரிடத்தில் உட்கார்ந்து போனில் கேம் விளையாடிக் கொண்டிருக்க..
அந்த நேரம் மகிக்கு கார்த்திக் போன் செய்தார்! ஹலோ மாமா என்று அழைக்க..
எல்லாரும் அங்க கிளம்பி வராங்க போல! உனக்கு ரொம்ப வேலையா இருக்குமா! என்று கேட்டார்.
ஆமாம் மாமா ஆனா அதெல்லாம் ஒன்னும் பெருசில்ல! எனக்கு பிள்ளைகளை பார்க்கணும் போல இருக்கு! என்று மகி சொல்ல..
நான் வேணா வரட்டுமா? இங்கே இருந்து அரை மணி நேரம் தானே! நான் வந்து உனக்கு சமைக்கிறதுக்கு ஹெல்ப் பண்ணுகிறேன்.
வேண்டாம் மாமா அவ திட்டுவா! ரொம்ப ஓவரா தான் பண்றா! அன்னைக்கு இனியா குட்டிய திட்டிருக்கா! எனக்கு இந்த விஷயம் தெரியவே தெரியாது! எப்படி மாமா அவளை சமாளிக்கிறீங்க? என்று மகி சொல்லிக் கொண்டிருக்க..
அத விடு நான் வரேன் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். பேசி முடித்து மகி போனில் வேலை செய்து கொண்டே “மிதுன் எனக்கு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வாயேன்! தாகமா இருக்கு!”
இதோ போற மகி என்ற கேம் விளையாடிக் கொண்டிருந்தான்.
சூர்யா அப்பொழுது கீழே இருக்கும் படுக்கை அறை பக்கம் சென்றவர். ஒரு சில நிமிடம் கழித்து வெளியே வந்தார்.
மிதுன் டேய் தண்ணி தாகமா இருக்கு! போய் எடுத்துட்டு வாடா! என்று மீண்டும் மகி சொல்ல…
இதோ போறேன் மகி அவ்ளோ தான் போறேன் என அப்பொழுதும் அவன் உட்கார்ந்து கொண்டு கேம் விளையாடிக் கொண்டே இருந்தான்.
சூர்யா வெளியே வந்தவர் நேராக சோபாவின் அருகில் சென்று அமர்ந்து சத்யதேவ் என்று உரக்க அழைத்தார்.
அந்த சத்தத்தை கேட்டு மிதுன் ஒரு முறை தன் தந்தையை பார்த்து விட்டு மீண்டும் விளையாடினான்.
டாடி என்று சக்தி மேலே இருந்து கீழே வந்தான்.
எனக்கு தண்ணி வேணும் எடுத்துட்டு வா என்று சொல்ல..
சக்தி வேகமாக கிச்சன் சென்றவன். இரண்டு கிளாஸ் எடுத்து வந்து “ இது ஹாட் வாட்டர்! இது கூல் வாட்டர்! உங்களுக்கு எது டாடி வேணும்?”என்று மேஜையின் மேல் வைத்தான்.
நான் எடுத்துக்கிறேன்! நீ போப்பா! என்று சூர்யா கூற..
சத்ய தேவ் மேலே சென்று விட்டான்.
அவன் சென்ற ஒரு சில நொடிகளில் டேய் அடங்காதவனே என்று சூர்யா அழைக்க…திடீரென மிதுன் திரும்பி பார்த்தான்.
தண்ணி டா! என மகி மீண்டும் சொல்ல..
மிதுன் வேகமாக அம்மா இதோ தண்ணி எடுக்க என்று எழுந்து செல்ல…
டேய் நில்லடா! இங்க என்ன நடக்குதுன்னு தெரியல? சத்ய தேவ் இப்போ வந்தது தெரியுமா என்று கேட்டார்.
அது வந்து இருங்க நான் தண்ணி கொண்டு வரப் போறேன்! என்று மிதுன் செல்ல..
சூர்யா அவனை முறைத்து விட்டு மகி உனக்கு என்ன தண்ணி வேண்டும் பாரு இது கூல் வாட்டர்! ஹாட் வாட்டர்! என் பையன் சிட்டா போய் எடுத்து வந்து இருக்கான். இப்ப தெரியுதா தவிச்ச வாய்க்கு கூட இந்த நாய் தண்ணி கொடுக்காது! சத்ய தேவ் இடத்துக்கு யாராலும் வர முடியாது! இந்த நாய பத்தி இப்போ உனக்கு புரியுதா? என்று சூர்யா சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
மகி அந்த தண்ணீரை எடுத்து குடித்து கொண்டே போனில் கவனம் செலுத்த.. மிதுன் ஹே அதை குடிக்காத இரு டி! என வேகமாக மகியிடம் இருந்து பிடுங்கினான்.
என்ன டா பண்ற? என மகி கேட்க..
மிதுன் தண்ணீரை எடுத்து நீட்டினான்.
எனக்கு வேணாம் டா நான் குடிச்சிட்டென். என மகி சொல்ல..
நீ எப்படி குடிக்கலாம்! அவன் கொடுத்திடுக்கான்! என மிதுன் கோபத்தில் கத்த..
அதனால் என்ன தண்ணி எல்லார்க்கும் பொது! என மகி சொல்ல..
போடி நீ அவர் கூட சேர்ந்து என்னை கஷ்ட படுத்தி பேசுற! என வேகமாக அறைக்கு சென்றான்.
மகி அவனை சமாதானம் செய்ய மேலே செல்ல போக!
ஹே போய் சமைக்கும் வேலையை பாரு!
இல்லங்க அவன்! என சொல்ல வர..
போன்னு சொன்னேன்! என சூர்யா அதட்ட உடனே மகி சமையல் அறை சென்றார்.
ஹே எப்போ டி எழுந்திருப்ப? சீக்கிரம் அண்ணி எழுந்திரு என இதழ் சொல்லி கொண்டிருக்க..
ரிதம் மெதுவாக கண்ணை தேய்த்து கொண்டே அமர்ந்தாள்.
ரித்து! என இதழ் அதிர்ச்சியுடன் அழைக்க..
ம்ம் என ஒற்றை பதில் அளித்தாள்.
உன் அண்ணி உன்னோட உன்னோட கண்ணு! என இதழ்….?
நிதின் வர போறான்! மொத்த படையும் வர போகுது! அடுத்து நிதின் – ஹரிணி காட்சிகள்
பார்ப்போம்! இந்த காதல் சடுகுடு என்ன நடக்குமோ!
தொடரும்..
EPISODE 37
ரிதம் மெதுவாக கண்ணை தேய்த்து கொண்டே அமர்ந்தாள்.
ரித்து! என இதழ் அதிர்ச்சியுடன் அழைக்க..
ம்ம் என ஒற்றை பதில் அளித்தாள்.
அண்ணி உன்னோட உன்னோட கண்ணு! என இதழ் கேட்க..
என்னாச்சு! எனக்கு கண்ணு நல்லா தானே இருக்கு! என குத்து காலிட்டு அமர்ந்தாள்.
இதழ் கண்ணாடியை எடுத்து வந்து காட்டினாள். “இங்கே பாரு! என்ன ஆச்சு? உன்னோட கண்ணு எவ்ளோ சிவப்பா இருக்கு! என்ன ஆச்சு நைட்டு நல்லாத்தானே இருந்த! திடீர்னு உன் கண்ணு எப்படி சிவந்து போச்சு!”
தெரில! ஓகே நான் வீட்டுக்கு போறேன்! என எழுந்தாள்.
இரு சிவி அக்கா, நிவாஸ் அண்ணா, பவா, நிலா, இனியா, இதயன் எல்லாரும் வராங்க! இன்னிக்கி ஜாலி என கூறினாள்.
ஓகே ஆனால் எனக்கு வீட்டுக்கு போகனும்! நான் ரவி தாத்தா வீட்டுக்கு போறேன்! எனக்கு இங்கே பிடிக்கல என வேகமாக பாத் ரூமில் நுழைந்து குளித்து முடித்து கீழே வந்தாள்.
என்னாச்சு இவளுக்கு? முகமே சரி இல்லையே! இவள் எப்போ எப்படி மாருவான்னு நமக்கு என்ன தெரியும்? என இதழ் கீழே சென்றாள்.
ரிதம் குளித்து முடித்து வெளியே வந்தவள் அவளுடைய முடியை பன் கொண்டை போட்டு உடையை மாற்றி கொண்டே நேராக இன்பா வுக்கு அழைத்தாள்.
டாடி!
என்ன பேபி!.
எனக்கு ஃப்ளைட் டிக்கெட்டை போடுங்க! நான் தாத்தாவை பார்க்க போறேன்! என ரிதம் கூற..
என்னாச்சு! அப்போ பெட் எல்லாம் food இல்லாம இருக்குமே!..
அது மிதுன் பாத்துக்குவான்! என்னோட பப்பிய வந்து பிக் அப் பண்ணிக்கோங்க! நான் தாத்தா கிட்ட போகனும்! என சொல்லி விட்டு போன் கட் செய்தாள்.
அடுத்த நொடி அவளுக்கு டிக்கெட் புக் செய்ய பட்டது.
ரித்து! என மகி அழைக்க.. மாமி என மகி அருகில் வந்து கட்டி கொண்டவள். ஓகே நான் போறேன் மாமி!
அடி வாங்க போற! என்ன பழக்கம்! என மகி கேட்க..
ரிதம் அவரின் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு ஓகே ஒகே ஜஸ்ட் கூல் மாமி!.
என்ன ஆச்சு? கண்ணு சிவந்து கடக்கு! என்ன ரிதம்!
நத்திங் மாமி! மிதுன் எங்கே? என கேட்க…
அவன் உள்ளே எனக்கு லெமன் ஜுஸ் போட உள்ளே போயிருக்கான்.
சத்ய தேவ் சமைத்து கொண்டிருக்க.. ருத்ரன் ஒரு பக்கம் அமர்ந்து மீனாட்சி கிட்ட மெசேஜ் செய்து கொண்டிருந்தான். மிதுன் ஒரு பக்கம் நின்று ஜுஸ் போட்டு கொண்டிருக்க..
மித்து! இந்தா கீ என அவனுடைய பாக்கெட்டில் போட்டாள்.
ருத்ரன் எதையும் கண்டு கொள்ளாமல் திண்டில் அமர்ந்து கொண்டு அவனுடைய வேலையை செய்ய… சத்ய தேவ் சமைப்பதில் நாட்டமாக இருந்தான்.
ஹே என்ன டி சாவி கொடுக்குற? எங்கே போற? என மிதுன் கேட்க..
நான் எனக்கு தாத்தாவை பார்க்கணும்! வசு மா நினைப்பா இருக்கு! சோ போறேன்! பாய் அப்புறம் பப்பிய டாடி வந்து பிக் அப் பண்ணிப்பாங்க! நீ அப்பப்போ வீட்டை போய் பார்த்துக்க.. போறேன்!
ஹே இரு டி! இன்னிக்கி நிதின் அண்ணா உனக்கு போன் பண்ணானா?
நைட் பேசினேன்! நான் வீட்டுக்கு போய் பேசிக்கிறேன்! பாரு!.
என்ன? அண்ணா இன்னிக்கி உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வந்திருக்கான். என குனிந்து கொண்டே சொன்னவன். அவளின் முகத்தை பார்க்க கண்கள் சிவந்து இருந்தது.
ஹே ரித்து! வாட் ஹாப்பன் பேபி! உன்னோட கண்ணு! என்ன ஆச்சு? என மிதுன் அவளின் முகத்தை பிடித்து கேட்க..
நத்திங் நான் கிளம்புறேன்! என ரிதம் சொல்ல.. அந்த நேரம் அவளின் போனுக்கு டிங் என மெசேஜ் வந்தது.
டிக்கெட் நல்ல வேலை வந்திடுச்சு! நான் போறேன் டா!
ஹே அண்ணா வராண்ணு சொல்றேன் தானே! இரு! உன் கண்ணுக்கு என்னாச்சு!
ருத்ரன் நிமிர்ந்து தன் அக்காவை பார்த்தான். ரிதம் கண்கள் சிவந்து இருக்க..
அக்கா என்னாச்சு! என ருத்ரன் கேட்க..
ரிதம் அவனை முறைத்து விட்டு ஓகே பாய்! என மிதுன் கிட்ட சொல்லி திரும்பியவள். நிதின் கிட்ட நான் போன்ல பேசுகிறேன். சென்னை வரட்டும்! என கிளம்பி விட்டாள்.
போடி! கேட்டால் சீன் போடுறா! கண்ணு என்ன ஆச்சு? என தன் அம்மாவுக்கு போன் செய்தான்.
சத்ய தேவ் நாய் குட்டிக்கு உணவு வைக்க வெளியே வர ரிதம் தன் பப்பியை கொஞ்சி முத்தமிட்டாள். பப்பி நான் போறேன்! டாடி பார்த்திப்பாங்க யார் கூடவும் சேர கூடாது! சமத்து குட்டியா இருக்கணும்! கேர்ள்ஸ் பக்கம் திரும்பவே கூடாது டெய்லி உனக்கு வீடியோ கால் பண்றேன் அழகா! என முத்தமிட்டாள்.
அவள் கொஞ்சுவதை பார்த்த சத்ய தேவ்கு ஒரு பக்கம் சிரிப்பாக அவளின் பொறுமை அமைதி அனைத்தும் வாயில்லா ஜீவன் மேல் தான் வைத்திருக்கிறாள். நன்றாக தெரிந்து கொண்டான்.
சத்ய தேவை பார்த்து அவனுடைய நாய் குட்டி மெதுவாக சத்தம் கொடுக்க..
சத்ய தேவ் அவனுடைய நாய் குட்டிக்கு மற்றும் ரிதம் நாய் குட்டிக்கு பாலை ஊற்றி வைக்க அவன் வந்த அடுத்த நொடி வேகமாக அந்த இடத்தில் இருந்து எழுந்து கொண்டாள்.
சத்ய தேவ் புருவம் சுருக்கி அவளை பார்க்க முகத்தை திருப்பி கொண்டு நடந்தாள். அந்த பப்பி சத்ய தேவ் நாய் குட்டி ரிதம் போகும் திசையை சின்ன குரலுடன் கத்தி தன் முதலாலியை அழைக்க..
ரிதம் மிதுணுக்கு போன் செய்து மித்து நம்ம பப்பிக்கு சாப்பாடு கொடு டா! பிளீஸ்!
ஹே இப்போவே வச்சு உனக்கு பிக் அனுப்புவேன் பாரு என வேகமாக வெளியே வந்து சத்ய தேவ் வைத்ததை எடுத்து வீசி விட்டு மிதுன் வைத்து போட்டோ எடுத்து அனுப்பினான்.
சத்ய தேவ் முறைத்து விட்டு உள்ளே சென்றான்.
அங்கே ருத்ரன் தன் அம்மாவிடம் என்ன மா தெரிலயா? எனக்கும் தெறில முகத்தை ஒரு மாதிரி வச்சிட்டு போறா! கண்ணு ரெட் மாதிரி இருக்கு! என கூறினான்.
நீ விடு நான் ரவி தாத்தா கிட்ட சொல்லி வைக்கிறேன் என போன் வைத்தார்.
என்ன ஆச்சு தீரா! என சத்ய தேவ் கேட்க..
தெரில மாமா! எப்போவும் சண்டை போட்டுக் கிட்டே இருப்பா! ஆனால் இன்னிக்கி அமைதியா போறா! அவள் சண்டை போடுறது எனக்கு பழகி போச்சு இப்போ சைலன்ட்டா போறா! என்னமோ ஒரு மாதிரி இருக்கு! என ருத்ரன் கூறினான்.
அவ்ளோ பாசம் வச்சிருக்கியா என்ன?
அது தெரில! நீங்க சொல்றது சரி தான்! என் மம்மி எல்லாமே சரியா சொல்ற மாதிரி தான் இருக்கும்! ஆனால் கடைசியில் ரிதம் டாடி சொல்றது தான் ஒர்க் அவுட் ஆகும்! அவர் சொல்றது சரி தான், என் அக்கா அவளுக்கு பிடிச்ச ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க போறா! இதுல நான் எதுக்கு கோப படனும்! என்னோட கோபம் அர்த்தமில்லாத ஒன்னு! ரிதம் செய்யறது எல்லாம் கோபத்தோட வெளிப்பாடாக இருந்தாலும், அவளோட விஷயத்துல அவ கரெக்டாதான் இருப்பா! அவ செய்யும் போது அதை உணரல்லைனாலும் அது தப்புன்னு தெரிஞ்சா, அடுத்த நிமிஷம் அதை விட்டுடுற ஒரு நல்ல குணம் அவளுக்கு இருக்க! ஆனா அவ இருக்கிற இடம் தான் சரியில்லை! என்று கூறினான்.
சத்யதேவ் ருத்ரனுடைய தோல் மேல் தட்டி எல்லாமே சரி ஆயிடும் விடு என்று கூறினான்.
ருத்ரன் ஒரு பெரும் மூச்சை விட்டு அது அப்படி இல்ல மாமா ரிதம் எப்பவுமே அவளோட முகம் இப்படி இருந்து பார்த்ததே இல்ல எப்ப பாரு அம்மா கிட்ட பிரச்சனை பண்ணிட்டு இருப்பா அப்படி இல்லன்னா அவங்க அப்பாவும் அம்மாவும் அவளும் சேர்ந்து சிரிச்சுட்டு இருப்பாங்க இன்னைக்கு பொக்குன்னு போறா ஏதோ போல இருக்கு ஒருத்தங்க எப்ப பாரு துரு துருனு இருந்துட்டு திடீர்னு அவங்க அமைதியா இருந்துட்டா அந்த அமைதியை நம்மால் தாங்க முடியாது எங்க அக்கா அது போல..
இவ்வளவு பாசம் வச்சிருக்கியே அவ கிட்ட வெளிப்படுத்தலாம்ல்ல என்று கேட்டான்.
ருத்ரன் சிரித்துக்கொண்டே “அது அப்படி இல்ல மாமா அவகிட்ட போய் நான் என்ன பேசட்டும்? எனக்கு சிரிப்பா இருக்கு! அவளுக்கும் எனக்கும் வித்தியாசம் வருஷம்! எனக்கு ஒரு மாதிரி!.. அதைவிட எங்களுக்குள்ள சண்டை போடுறதே, எனக்கு பேசுற மாதிரி! தான் எப்பவும் அவ அப்படி இருக்கறதா! எனக்கு ஓகே கம்பார்ட் ஜோன்!” என்றான்.
சரி ஓகே என்று சத்ய தேவ் அவனுடைய வேலையை பார்க்க.. அந்த நேரம் அவனுக்கு சில அரசியல்வாதி, மற்றும் எழுத்தாளர்களுடனான நேர்காணலுக்கு பதிவு செய்திருந்தான். அங்கிருந்த அவனுக்கு போன் வந்தது.
மாமா உங்களுக்கு போன் என்று ருத்ரன் நீட்ட..
அதை வாங்கி ஹலோ! சொல்லுங்க.. என்று பேசினான்.
நாளைக்கே ரெடி சார் நோ பிராப்ளம் என்று சொல்லி வைத்தவனுக்கு அந்த ரோஜா வாசனை திரவியம், மூக்கை துளைத்தது.
அந்த ஒரு ஒரு சில நிமிடங்கள் சத்ய தேவ் ரிதம் கிட்ட அத்து மீறல் எடுத்துக்கொண்ட அந்த நினைவு கொஞ்சம் கொஞ்சமாக வர.. அவளுக்கு முத்தமிட்டது அவளுடைய வாசம்! என அனைத்தும் கண் முன் தோன்றி மறைந்தால் பரவாயில்லை! அவனுக்கு சிந்தையில் தோன்ற செயலில் தடுமாற்றம் வர ஆரம்பித்தது. ஒரு நிமிடம் தான்! அந்த ஒரு நிமிடத்தில் உடலெல்லாம் ஏதோ செய்தது!
சத்ய தேவ் தடுமாறிக் கொண்டே நின்று இருக்க..
மாமா! மாமா! என ருத்ரன் அழைக்க.. சத்ய தேவ் சட்டென திரும்பினான்.
என்னாச்சு மாமா எதுவும் பிரச்சனையா? என ருத்ரன் கேட்க..
சத்ய தேவ் வெளியே வந்து நான் அது நான் ஒரு நிமிசம் தீரா எல்லாமே ஹாஃப் பண்ணிடு நான் வரேன்! என அவனுடைய அறைக்கு சென்றான்.
அவன் அனைத்தையும் ஆப் செய்து விட்டு வெளியே வர..
சத்ய தேவ் நேராக அவனுடைய அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டான். வேக மூச்சுடன் கண்களை மூடி தலையை கோதியவனுக்கு அவள் அமைதியாக சென்றது தான் நினைவில் தோன்றியது. அவள் முகத்தை பார்க்காமல் இருந்ததே நல்லது! சிவ சிவா! இந்த எண்ணம் கெட்ட எண்ணம்! வேணாம்! என பால் கணி பக்கம் சென்றான்.
ஒரு சில நிமிடங்கள் நடந்தவன். குளித்து முடித்து வெளியே வந்து தியானம் செய்ய ஆரம்பித்தான். மனசை ஒரு நிலை படுத்தனும்! என அவன் இப்படி இருக்க.. நிதின் வந்திறாங்கினான்.
ரிதம்…?
தொடரும்..
EPISODE 38
மதியம் போல ரிதம் தன் தாத்தாவின் வீட்டுக்கு வந்து விட்டாள்.
நீ எதுக்கு தனியா வந்த? நான் பரணிய ஏர்போர்டுக்கு அனுப்பி இருப்பேனே? என வசு சொல்ல..
இட்ஸ் ஓகே மா! நம்ம வீட்டுக்கு வழி தெரியாதா? ஆமா தாத்து எங்கே? என கேட்டு கொண்டே அறைக்கு செல்ல..
ரிதம்! என ரவி வெளியே வந்தார்.
தாத்து மிஸ் யூ! என ஓடி வந்து கட்டி கொண்டாள்.
ஆமா உன் அம்மா என்ன எதுவும் பிரச்னை பன்றாளா? என் கிட்ட சொல்லு நான் பார்த்துக்கிறேன்? என கேட்டு கொண்டே வசு அவளுக்கு ஜுஸ் எடுத்து வர உள்ளே சென்றார்.
எதுவும் சண்டை போட்டியா? கண்ணு சிவந்து கிடக்கு! விவேகா பிரச்னை பண்ணாளா? வசு கிட்ட மாட்டி விட தான் வந்தியா? என ரவி கேட்டார்.
நான் ஃபர்ஸ்ட் ஆப் ஆல் அவங்க கூட இல்ல! எனக்கு நிதின் அப்பார்ட்மெண்ட் முழுக்க pets, கூடவே பப்பி, birds, அப்புறம் fish எல்லாமே வாங்கி கொடுத்திருக்கான். டாடி என்னையே மேலே இருக்கும் வீட்டுக்கு போக சொல்லிட்டார்! நான் ரொம்ப ஹாப்பி தாத்து என ரிதம் கூறினாள்.
ரவி கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே இதை வாய் மட்டும் தான் சொல்ற மாதிரி இருக்கு! உன் முகத்தில் நிறைய கவலை இருக்க மாதிரி தெரியுதே? என்ன விசயம்? என கேட்டார்.
எனக்கென்ன தாத்து கவலை!. என ரிதம் கூறி கொண்டே சோபாவில அமர்ந்தாள்.
வசு ஜுஸ் அவளிடம் நீட்டி விட்டு மேடம் நேரா இங்கே வந்தீன்களா? இல்ல உன் அப்பனை மாதிரி கங்கா வீட்டுக்கு உங்க அம்மாச்சிய பார்த்துட்டு வந்தீங்களா? என கேட்டார்.
குழந்தை கிட்ட என்ன மதி பேசுற? என ரவி சொல்ல..
ஆக்சுவலா நான் எதுக்கு அங்கே போகனும்! எனக்கு எல்லாரை விட தாத்து வசு மா தான் ரொம்ப முக்கியம்! என ரிதம் கூறினாள்.
வசு சிரித்து விட்டு சரி நைட்டுக்கு என்ன வேணும்? என கேட்க..
நேத்து தான் மகி மாமி வீட்ல full ஆ பொலந்து கட்டிட்டு வந்தேன். அதனாலே எனக்கு சிம்பிளா எதுவும் வேணும்! ஹான் பிசிபெல்லாபாத் பப்படம் வேணும்! என கூறினாள்.
இதை உன் அம்மா தான் சூப்பரா செய்வா? என ரவி சொல்ல..
வசுமதி வெளியே எட்டி பார்த்து எனக்கும் செய்ய தெரியும்! உனக்கே நான் செஞ்சு தரேன் தங்கம்! என சென்றார்.
வசு மா! எனக்கு ரசம் உருளைக்கிழங்கு பொரியல் வேணும்! செஞ்சிடுங்க என சொல்லி விட்டு அறைக்கு சென்றாள்.
ரவி தன் பேத்தியை பார்த்து விட்டு என்ன வசு அவள் முகம் சரி இல்லையே! உன் பையன் என்ன சொன்னான்?
ராகவ் எதுவுமே சொல்லலங்க! என வசுமதி வெளியே வந்தார்.
ரிதம் வெளியே வந்து நான் நல்லாருக்கென்! பீரியட்ஸ் டிப்ரசன் மோட் ஸ்விங்! நீங்க டாடி கிட்ட போன் பண்ணி எதையும் கேட்க வேணாம்! என சொல்லி கொண்டே வெளியே கிளம்பினாள்.
எங்கே போற? என வசுமதி கேட்க..
ஃபர்ஸ்ட் உங்களை பார்த்தாச்சு இப்போ அம்மாச்சிய பார்த்திட்டு நைட்டு சாப்பிட வரேன் என சென்றாள்.
ரவி கண்ணகுளி தெரிய சிரிக்க.. இப்போ எதுக்கு சிரிக்கிரீங்க? என வசுமதி கேட்டார்.
ஒன்னும் இல்ல!
எனக்கு தெரியும்! அவள் உங்களை மாதிரி இருக்கா!
என்னை மாதிரியா? என ரவி கேட்க.. ஆமா நீங்க இப்படி தானே என் அப்பா வீட்டையும் உங்க வீட்டையும் மெயின்டைன் பண்ணுவீங்க! ஆனால் ராகவ் அப்படி இல்ல அவன் எங்க அம்மா வீட்டு பக்கம் தான்! அதே போல தான் ருத்ரன் விவேகா வீட்டு பக்கம் மட்டும் தான் ஒட்டி இருக்கான். அப்படியே ராகவ் போல இருக்கான். ரிதம் உங்களை போல இருக்கா!
ம்ம் தெரிஞ்சா சரி! உன் புள்ளை குணம் தானே அவனுக்கும் வரும்! என அவர் பதில் சொல்ல..
சரி சரி நான் போய் ரசம் வைக்கிறேன் என சமையலறை சென்று விட்டார்.
*
சின்ன குட்டி! என கங்கா அழைக்க..
அம்மாச்சி! எத்தனை முறை சொல்றது அப்படி கூப்பிடாதீங்க! எனக்கு பிடிக்கல…
வேற என்ன கூப்பிடட்டும்! எனக்கு நினைப்பு இல்ல தங்கம்! என கங்கா கூறினார்.
எனக்கு பசி! சோ அரிசி பருப்பு சோறு வேணும். கூடவே பப்படம், பிக்கில் வேணும்! என கூறினாள்.
அவ்ளோ தான செஞ்சிட்டா போச்சு! என கங்கா உள்ளே செல்ல.. ரிதம் நேராக சோபாவில புரண்டு கொண்டே இருந்தாள்.
பொண்ணு! என்ன ஆச்சு? பிரண்டு பிரண்டு படுக்கிற? என கங்கா அருகில் வந்தார்.
எனக்கு தலை வலிக்குது மாச்சி! தூக்கமே இல்ல! என சொல்ல
சரி இங்கே வா என முக்காலி போட்டு அவளை கீழே அமர வைக்க குத்து காலிட்டு அமர்ந்து கொண்டாள். கங்கா அவளின் தலைக்கு எண்ணெய் வைத்து சிடுக்கு எடுத்து சீவி இதமாக முடியை பிடிக்க..
அம்மாச்சி நீங்க தலை வாரி விடுறதுக்கு கூட உங்களுக்கு தங்க வளையல் வாங்கி கொடுக்கணும் தெரியுமா? லவ் யூ அம்மாச்சி! என ரிதம் கண்களை மூடி சொல்ல…
சரி சரி அப்புறம் வாங்கி கொடுக்கலாம்! எனக்கு கல்யாண சோறு போடு! உன்னோட பாப்பாவை நான் குளிக்க வைக்கிற பாக்கியம் இருந்தால் போதும்! என கங்கா சொல்ல…
மாச்சி போ எனக்கு சீவ வேணாம்! என முறைத்தாள்.
சரி சரி இனி சொல்ல மாட்டேன் வா! இப்படி கொண்டை போட்டால் வீட்டுக்கு ஆகாது பொண்ணு! தலை வாரி பின்னிக்க கண்ணு! என பதமாக பின்ன!
அம்மாச்சி சொர்க்கமா இருக்கு! என பின்ன பின்ன கங்காவின் மடியில் மயங்கி போனாள்.
கங்கா சிரித்து விட்டு தலையணை எடுத்து கொண்டு வந்து போட்டு அவளின் தலையை எடுத்து வைத்து விட்டு சமைக்க சென்றார்.
விவேகா போன் செய்து ரிதம் பற்றி விசாரிக்க..
என் பேத்தியை கஷ்ட படுத்துர டி! என கங்கா, முதல் வசுமதி வரை அனைவருமே இதை தான் கூறினார்கள்.
விவேகா ஒன்றும் புரியாமல் அப்படியே அமர்ந்திருக்க…
எதுக்கு இப்படி முகத்தை வச்சிருக்க! உன் பக்கத்தில் வரலாம்ன்னு வந்தால் இப்படி மோட் ஸ்பாயில் ஆகி போச்சு! என இன்பா கூறினார்.
பக்கத்தில் வர வேலையை கொஞ்சம் நிருத்திட்டு உன் பொண்ணு எதுக்கு அங்கே போனால் அப்டின்னு கொஞ்சம் பார்க்கிறயா? எல்லாரும் என்னை திட்டுறாங்க!
இன்பா ஒரு பெரு மூச்சை விட்டு அவள் யார் கிட்டயும் சொல்ல மாட்டாள். உன்னை மாதிரி அமுக்கு கள்ளியா இருக்கா! அவளுக்கு யார் ஹெல்பும் தேவையில்லை. அவளோட பிரச்சனைய தனியா face பண்ணி என் dimple சரி பண்ணிக்குவா சோ நீ கவலை படாதே! என கூறினார்.
ரிதம் சோம்பல் முறித்து கொண்டே தூங்கி எழுந்தவள். மனம் இப்பொழுது நன்றாக இருந்தது. அம்மா இடத்தை முழுமை ஆக்கும் இன்னொரு அம்மா அம்மாச்சி தான்! அவள் கங்கா வீட்டில் அரிசி பருப்பு சாதம் அப்பளம் என சாப்பிட்டு கொண்டிருக்க வருண் வந்தார்.
“சின்ன குட்டி!”
மாமாச்சி! அய்யோ அப்படி கூப்டாதீங்க!! எனக்கு பிடிக்கல! என அவள் எண்ணெயில் விழுந்த கடுகு போல வெடித்து சிதறினாள்.
கங்கா சிரித்து கொண்டே டேய் அப்படி கூப்பிடாத! ரிதம் சொல்லு சின்ன குட்டிக்கு பிடிக்கல!
“அம்மாச்சி!”
வருண் சிரித்து விட்டு சரி சாப்பிடு! என கூறினார்.
என்ன டா இந்த பக்கம்! என கங்கா கேட்க..
அது ரிதம் தனியா வசு மேம் வீட்டுக்கு போவா! அதான் அப்படியே உங்களையும் பார்த்திட்டு கூட்டிட்டு போலாம்ன்னு வந்தேன்! என ரிதமை அழைத்து கொண்டு வருண் கிளம்பினார்.
ரிதம் அங்கே சென்று வசு ஊட்ட ரசம் உருளைக்கிழங்கு பொரியல் சாப்பிட்டு கொண்டே ஊஞ்சலில் ஆடினாள்.
என்ன மேடம் ஜடை எல்லாம் பலமா இருக்கு!
அம்மாச்சி போட்டு விட்டாங்க! நான் எப்டி இருக்கேன் வசு மா! அழகா இருக்கேனா?
என் பேத்தி தேவதை! என்ன கொஞ்சம் திமிர்! அவ்ளோ தான்! என ரவி சிரித்து கொண்டே கூற..
திமிர் அதிகமாவே இருக்கணும் ரிதம்! நம்ம யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை!
அதான் என் வசு மா! எனக்கு வயிறு full! நான் டாடி கிட்ட பேசிட்டு தூங்க போறேன்! என கிளம்பினாள்.
அவள் சென்றதும் என்னங்க? இவள் நிஜமாவே லவ் பன்றாலா? இல்ல நம்ம தப்பா புரிஞ்சுகிட்டோமா? இவள் கிட்ட லவ்கு உண்டான எந்த அறிகுறியும் தெரியலயே? என வசுமதி கேட்க…
ரவி தீவிர முகத்துடன் அவள் லவ் பண்றா? கூடவே எதையோ மறைக்கிரா? உன் பையன் தவிக்கிற மாதிரி அவள் மனசுல என்னமோ வச்சுக்கிட்டு அதை எக்ஸ்பிரஸ் பண்ண முடியாம தவிக்கிரா? அது லவ்வா இல்லாம கூட இருக்கலாம்! லவ்வா கூட இருக்கலாம்! என்ன நடக்குதுன்னு பார்ப்போம்!
*
அடங்காத அதிகாரா another ( hero introduction)
இரவு பத்து மணியை தொட்டிருந்தது. அந்த பரபரப்பான பெங்களூர் ஹே வே சாலையில் குடி போதையில் ஸ்ருதி காரை ஓட்ட அவளுடைய பாட்டி!
ஸ்வீட்டி மெதுவா போ! ஸ்லோ டா! என சொல்ல..
போங்க பாட்டி! என சொல்லி கொண்டே அவள் செல்ல அந்த பக்கம் தூங்கி கொண்டிருந்த இரண்டு நாய் மீது காரை ஏற்றி கொன்றவள். அதே வேகத்தில் எதிரில் உள்ள ஒரு காரின் மீது மோதினாள்.
ஸ்ருதி என உரக்க கத்தினாள். அவளின் பாட்டி!
அந்த இடத்தில் போலீஸ் ஜீப் ஹாரன் சத்தம் கேட்க..
ஸ்ருதி நீ போலீஸ் ஜீப் மேல மோதி இருக்க! போலீஸ் வறாங்க என்ன கேர்ள் பண்ணி வச்சிருக்க! என அவளின் பாட்டி பதட்டத்துடன் காரில் இருந்து இறங்க!
ஹலோ உங்களுக்கு கொஞ்சமாவது சென்ஸ் இருக்கா? உன் அப்பான் வீட்டு ரோடுண்ணு இப்படி இஸ்டத்துக்கு வருவீர்களா? என பேசி கொண்டே வந்த அந்த போலீஸ் கார் ஜன்னலில் தெரிந்த முகத்தை பார்த்ததும் மேடம் என பின்வாங்கினான்.
இதை என் பேத்தி தெரியாமல் பண்ணிட்டா! நீங்க இதை.. என சொல்ல வர.. .
கார் இடிச்சதுக்கு fine மட்டும் போடுங்க! வேற எதுவும் பண்ண வேணாம்! பெருசா நாங்க எதும் பண்ணல! என அந்த வயது முதிர்ந்த பெண்மணி கூறினார்.
உடனே சரி என அவர் வண்டியின் எண்ணை போட்டு fine generate செய்ய அந்த நேரம் அந்த பெண் மணி பண கட்டு எடுத்து நீட்டி இதுல எவ்ளோ இருக்கோ fine போட்டு மீதிய நீ tip ஆ வச்சுக்க.. என சொல்லி விட்டு வண்டியை எடுக்க சொன்னார்.
இந்த காசை என்ன பண்றது என பார்க்க.. அதற்குள் ஸ்ருதி காரை ஓட்ட.. அது வேகமாக இன்னொரு காரின் சைடு கண்ணாடியை உடைத்து விட்டு பறந்து விட்டது.
அய்யோ! சிட் என போலீஸ் அதிகாரி அதே இடத்தில் நின்று கத்த.. அவருக்கு எதிரில் இவ்வளவு நேரம் நடந்த அணைத்து விசயத்தையும் அதாவ்து ஸ்ருதிஅந்த நேரம் நாயை அடித்து இரத்தம் தெறித்த காரையும், காரில் இருந்த பாட்டியையும் போலீஸ்காரர் என மூவரையும் ஃபோட்டோ எடுத்து கொண்டது. அந்த லோக்கல் நியூஸ் சேனல்.. அதனுடன் கூடவே சமூக வலை தளங்களில் பதிவிட காரின் எண்ணை வைத்து சர்வேஷ்! இது சினி ஸ்டார் சர்வேஷ் காரு! இது அவங்க பாட்டி! அப்போ உள்ளே குடிச்சிட்டு கார் ஓட்டனது சர்வேஷ் என செய்தி பரவ ஆரம்பித்தது.
அடுத்த நொடி அந்த போலீஸ் அதிகாரிக்கு செய்திகள் வர.. பெரு மூச்சை விட்டு உடனே சினி ஸ்டார் சர்வேஷிடைய பெர்சனல் அசிஸ்டன்ட்க்கு போன் செய்தார்.
ஹலோ யாரு? என அசிஸ்டன்ட் கேட்க..
நான் டிராபிக் போலீஸ் சார் KA **** இந்த கார் சர்வேஷ் சாருது தானே!
ஆமா! என்ன ஆச்சு? என அசிஸ்டன்ட் கேட்கவும், அங்கிருக்கும் ஆட்கள் சமூக வளைதளத்தில் பரவிய செய்தியை கொண்டு வந்து காட்டினார்கள்.
இது இன்னிக்கு ஸ்ருதி மேம் எடுத்திட்டு போன கார் என மனதில் நினைத்த அந்த அசிஸ்டன்ட் சொல்லுங்க சார் என கேட்க..
சார் இப்போ ஒன்னும் பண்ண முடியாது. கார் மேல கேஸ் போட்டு தான் ஆகணும்! நீங்க மார்னிங் ஸ்டேசன் வந்து தான் ஆகணும்! நீங்க போலீஸ் ஜீப்ப இடிச்சது கூடவே இன்னொருத்தர் கார் கண்ணாடியை உடைச்சிட்டு போனது, கூடவே ப்ளூ கிராஸ் complaint எல்லாமே பதிவாகி இருக்கு! இதை சோசியல் அக்டிவிஸ்ட் என்ன பண்ணுவாங்கன்னு தெரில.. அந்த cctv footage ல பதிவாகி இருக்கு!
“ஓகே நான் பார்த்துக்கிறேன்!”
“சார் இது கோர்ட்க்கு போக கூட சான்ஸ் இருக்கு!”
நான் பார்த்துக்கிறேன் மார்னிங் வரேன்! என வைத்தான்.
அந்த ஹோட்டல் அறை வரை சென்றவனால் அதற்கும் மேல் கதவை தட்ட முடிய வில்லை. அந்த அளவுக்கு சர்வேஷ் அசிஷ்டண்டுக்கு தைரியம் இல்லை.
ஹே ஈஸ்வர்! I want more please baby! என கெஞ்சி குலைந்து கொண்டே சர்வேஷ் மேல் உருகி கொண்டே நின்றாள். இரவு கால மோகினி “தித்யா” வளர்ந்து வரும் மாடல் அழகி!
யார் அந்த சர்வேஷ்? என்கிற சர்வேஷ்வரன்..
கதவு வரை வந்தவன் வேறு வழி இல்லாமல் சைத்ரேஷ் சாருக்கு சொல்லிடலாம்! என அசிஸ்டன்ட் சைத்ரேஸ்வரனுக்கு அழைத்தான்.
யார் இந்த சைத்ரேஷ்வரன்?
இந்த சார்களுக்கும் இந்த கதைக்கும் என்ன சம்மந்தம்?
ஹோட்டல் அறையில் என்ன நடக்குது? ஸ்ருதி யாரு? அந்த வயது முதிர்ந்த பெண் யாரு?
இந்த கேள்விக்கு எல்லாமே பதில் நாளைக்கு பார்ப்போம்!
தொடரும்..
EPISODE 39
இன்று ஷூட்டிங் முடித்து விட்டு கிளம்ப மணி பதினொரு மணியை கடந்திறுந்தது. எப்பொழுதும் இரவு கேளிக்கை பப் மது கூடவே மாது என அதில் முங்கி எழுந்தால் தான் அந்த நாள் சர்வேஷ்வரனுக்கு முழுமை அடையும். ஆனால் ஐயா பெண்களை தேடி செல்வதில்லை. எல்லா பெண்களும் சர்வேஷ்வரனை சுற்றி வருவார்கள். அந்த அளவுக்கு வசீகர அழகுடன் இருப்பான்.
சரி சரி இந்த சர்வேஷ் என்னும் சர்வேஷ்வரன் எப்படி இருப்பான். ஒரு சின்ன அறிமுகம் ஆண்களுக்கு மீசை, தாடி, கண்கள் என அழகும் ஆளுமையும் நிறைந்து இருக்கும் என்று நீங்கள் கேள்வி பட்டு இருப்பீர்கள். ஆனால் சர்வேஷ்வரன் நாசி அவ்வளவு அழகாக இருக்கும். அது தாங்க மூக்கு! ஒட்டாத புருவங்கள், நெருக்கமான ஒட்டிய தாடி மீசையுடன், அந்த தொண்டையில் இருக்கும் அதாவது குரல் வளை மிகவும் அழகு அவன் மதுவை பருகி விழுங்கும் அழகிலேயே மதுக்காள் அவன் மடியில் விழுவார்கள்.
அவனுக்கு நீண்ட விரல்கள். ஒரு ஆணுக்கு அவனுடைய கை கால் முட்டியை தொட வேண்டும். அதாவது ஆறடி ஆண் மகன், அவனுடைய கை நீளம் தொடையின் முட்டியை தொட்டு இருந்தால் அவன் தான் சரியான ஆண் மகன் (that means கொஞ்சம் தமிழ் நூல்களை புரட்டும் போது இந்த தகவல் கிடைத்தது அதை என்னுடைய ஹீரோ சாரி anti hero க்கு கொடுக்கிறேன்.) ஹான் இந்த அளவுக்கு அழகும் ஆண்மையும் கொட்டி கிடக்கும் வளர்ந்து வரும் நாயகன் இளம் நாயகன் சர்வேஸ்வரன்! அவன் நடித்த ஒரே படத்தில் சாண்டல் வுட் பிளாக் பஸ்டர் ஹிட்! பள்ளி மாணவன் to கல்லூரி மாணவன் காதல் கதை! இப்பொழுது நான்காவது படத்தில் நடித்து கொண்டிருக்கிறான்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழியிலும் வெளியாக இருக்கிறது. இவன் தான் சர்வேஷ்வரன்! பெண்களை மாதுவாக மட்டும் தான் அவனுக்கு பழக்கம்! அதையும் இரவிலேயே முடித்து கொள்வான். யாரிடமும் பேச மாட்டான் அதிகமாக… வெட்டு ஒன்று துண்டு இல்லாமல் பேசுவான். அந்த அளவுக்கு திமிர் பிடித்தவன். சொல்லலாம். எல்லாம் இருக்கிறது. அதனால் துமிரும் அதிகமாகவே இருக்கிறது.
இன்று ஷூட்டிங் முடித்து நேராக வீட்டுக்கு வரும் வழியில் காரில் வருகிறேன் என தித்யா காத்திருக்க.. இல்ல வேணாம் என வேண்டும் என்றே கூறினான். அவனின் மோகன ராகத்தை புரிந்து கொண்ட மங்கை சிணுங்கி கொண்டே சரி நான் உன்னோட ஹோட்டலில் உன்னோட ரூமுக்கு வெளியே வெயிட் பண்றேன் என தித்தியா சொல்ல..
I say no! No means no! என சொல்லி கொண்டே ஹோட்டல் வந்து சேர்ந்தான்.
பிளீஸ் ஈஸ்வர்! இன்னிக்கி பிளீஸ் ஒரே நாள்! நான் உன் கிட்ட ரெக்வஸ்ட் பண்ணி கேட்கிறேன். ஜஸ்ட் அது பெட் மட்டும் தான்! அதுக்கும் மேல ரிலேசன் ஷிப் வேணாம்!
ஓ நான் உன் கூட ரிலேசன் ஷிப்ல இருக்கணும் அப்டின்னு இந்த எண்ணம் வேற உனக்கு இருக்கா! என எலனமாக கேட்டான்.
Swore ஈஸ்வர்! எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்ல! உனக்கு அது பிடிக்காதுன்னு தெரியும்! பிளீஸ் என கெஞ்சி கொண்டே நின்றாள்.
சர்வேஷ் வெடுக்கென போனை கட் செய்தான்.
தித்யா தெரிந்து கொண்டாள். அவன் ஒத்து கொண்டான். அவனுடன் பழகுவது போல செய்தி வரவும் தான் ஒரு பெரிய பாரின் பிராண்ட்க்கு பிராண்ட் அம்பாசிடர் மற்றும் வியாபார தூதுவர் ஆகி இருக்கிறாள். அதனால் படுக்கையுடன் முடித்து கொள்ளும் உறவில் மட்டும் தான் அவனுக்கு நாட்டம்! அதனால் அதுவும் அவளுக்கு நன்றாகவே இருந்தது.
சர்வேஷ் ஹோட்டல் வந்து இறங்கினான். நேராக கோட்டை கழட்டி அதை ஒரு கையில் மாட்டி கொண்டே மெதுவாக சுவிங்கம் வாயில் மென்று கொண்டே ஆங்கில பாடலை முணுமுணுத்து கொண்டே வந்தான்.
தீத்யா அறைக்கு வெளியில் நிற்பதை கூட கண்டு கொள்ள வில்லை. அறையின் உள்ளே சென்றான். அவன் அழைப்பான் என காத்திருந்தாள். கதவு திறந்தது. அவள் ஓரடி எடுத்து வைக்க..
உன்னை வர சொன்னனா? என அவன் குரல் அறையில் எதிரொலிக்க..
சாரி ஈஸ்வர் என அதே இடத்தில் நின்றாள்.
ம்ம் உள்ளே வந்து டோர் லாக் பண்ணு! என கால் மேல் கால் போட்டு கொண்டு போனை மேயிந்து do not disturb என செட்டிங் செய்தான். அவன் சொன்னது தான் தாமதம் வேகமாக உள்ளே வந்து சோபாவில அவளின் ஹேன்ட் பேக் போட்டவள் வேகமாக குளியலறை சென்று குளித்து முடித்து அவனுடைய பெர்ஃப்யூம் எடுத்து அடித்து கொண்டாள். குளித்து முடித்து துண்டுடன் வெளியே வந்தாள்.
சர்வேஷ் காலை ஆட்டி கொண்டே ஹாயாக போன் நோண்ட.. தீத்யா தயக்கத்துடன் அவன் மடியில் அமரலாமா வேணாமா? என அருகில் நின்றாள். அவனுடைய கடைக்கண் பார்வை தன் மேல் படாதா? என அவள் இருக்க..
போனை அருகில் வைத்து விட்டு உடலை முறுக்கி சோம்பல் முறித்தவன் கண்கள் மெதுவாக அவள் உடலை பார்க்க வில்லை. முதலில் கண்களை பார்த்தது. இரு புருவம் தூக்கி என்ன என்பதை போல கேட்டான்.
தீத்யா அவன் அருகில் வந்து சட்டையில் கை வைக்க தட்டி விட்டான்.
சாரி ஈஸ்வர்! நான் தொடலாமா? என கேட்டாள்.
நீ என்னிடம் கேட்கவும் கூடாது. உனக்கு நான் சொல்லவும் மாட்டேன் என்பது போல தான் அவனுடைய குணம்! அவளை படுக்கையில் தள்ளி சட்டையை பார்த்தான்.
தீத்யா வேகமாக ஒவ்வொரு பட்டனையும் கழட்டி விட்டாள். அவனுடன் இருக்கும் ஒவ்வொரு ராத்திரியும் இன்னும் நீல வேண்டும் என்பதை போல தோன்றும்! அந்த அளவுக்கு அதிகாரமாக இருப்பான். அதில் விழுந்தது இவள் மட்டும் இல்லை. எண்ணிலடங்கா மாதுக்கள் ஏராளம். யாசித்து வரும் பெண்களிடம் இஸ்ட பட்டால் மட்டுமே எடுத்து கொள்வான். அவனாக எந்த பெண்ணிடமும் போய் நின்றதில்லை.
அவள் உதட்டில் முத்தமிட வர.. அவளின் முகத்தை திருப்பி கழுத்தில் முகம் புதைத்தான். பெண்ணின் வாசம் வர வில்லை. அவனுடைய வாசனை திரவியத்தின் மணம் வீச.. அங்கத்தை கைகளில் தொட்டு விரல் வருடி இறுதி கட்டம் அடுத்து அடுத்து என வந்தான்.
ஒரு சில நிமிடம்.. இன்னும் கொஞ்சம் முன்னும் பின்னும் அந்த புனைவு வெறும் புனைவகாக மட்டுமே போனது. முடிந்து விட அருகில் படுத்து கொண்டு போன் நோண்டி கொண்டே புருவம் நெருக்கினான். சரியாக தீத்யா வேகமாக எழுந்து கொண்டாள். இத்தோடு அவனை விட்டு செல்ல விருப்பம் இல்லை.
அவனிடம் யாசிக்க அவளின் கைகள் சென்றது. அவளை ஒரு பார்வை பார்த்தான். Do it என விட்டு விட்டான். அவள் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தாள். உடல்கள் குலுங்கி ஆட்டம் காண உணர்வு அடங்க இரண்டாவது முறை முடியும் பொருட்டு தான் சர்வேஷ்சின் அசிஸ்டன்ட் தயக்கத்துடன் நின்றான்.
இந்த நேரத்துல கதவ தட்டுனா? சர்வேஸ் சாரு நம்மள கொல்றதுக்கு கூட வாய்ப்பு இருக்கு! இப்போ என்ன பண்றது? என்று நின்றவனுக்கு சைத்ரேஸ்வரன் ஞாபகம் வந்தது.
இது ஒரு வழி தான் இருக்கு! உடனே இந்த ஸ்ருதி மேம் பண்ண விஷயத்தை நம்ம சைத்ரேஸ் சார்கிட்ட சொல்லிடனும்! என்று போனை எடுத்து சைத்ரேஸுக்கு அழைத்தான்.
மறுபுறம் கனிவான கம்பீரமான ஆண் குரல்“ ஹலோ சொல்லுங்க” என்று கேட்டான்.
யார் அந்த சைத்ரேஸ் ?
அப்படியே சர்வேஸ்வரனுக்கு எதிரானவன். மிகவும் கனிவான குணம்! சர்வேஷ் வர்ணனை இங்கே பொருந்தும் ஆனால் அனைத்தும் கனிவுடன் வர்ணித்தால் எப்படி இருக்குமோ!!அப்படியே ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் ஒரே போல முகத்தை உடையவர்கள்! அதாவது இருவரும் ஐடெண்டிக்கல் டுவின்ஸ்!
ஆண்களுக்கு உண்டான கம்பீர தோற்றம்! அவனது மூக்கு அவ்வளவு அழகாக இருக்கும்! எத்தனை பெண்கள் தான் அவனை திரும்பிப் பார்க்காமல் இல்லை! இதுவரை அவன் எந்த பெண்ணையும் திருப்பிப் பார்த்ததில்லை என்று சொல்ல முடியாது! யார் அவனைப் பார்த்தாலும் அவனது உதட்டில் ஒரு சின்ன சிரிப்பு! எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்! ஆறடி ஆண் மகன், அவனுடைய கைகள் தொடை வரை இன்னும் நீண்டிருக்கும். சர்வேஸ்வரன் எப்படியோ அதே தோற்றத்தை உடையவன். சைத்ரேஸ்வரன்!
ஆனால் கனிவான முகம் கொள்ளை கொள்ளும் அழகு! அண்ணன் நடிகன் என்றால், தம்பி பிசினஸ் மேன்! ஆனால் வெளியுலகத்திற்கு இப்படி ஒரு அழகான இரு ஆண்மகன்கள் இருக்கிறார்களா? என்று தெரியாது.
சர்வேஸ்வரனை தான் அனைவருக்கும் தெரியும் அந்த பிசினஸ் உலகில் மட்டுமே சைத்ரேஸ்வரன் அனைத்து வேலையும் செய்வான். நியாயமானவன்! ஒழுக்கமானவன்! அன்பானவன்! அறிவானவன்! நிறைய படித்தவன்! பண்பானவன்! பாங்கானவன் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்! அந்த அளவுக்கு நல்ல குணத்தை கொண்டவன்! தான் சைத்ரேஸ்வரன்! ரொம்ப அம்மா செல்லம்! அதைவிட அப்பா செல்லம்! முக்கியமா சர்வேஸ்வரன் மாதிரி சைத்ரேஷு இல்ல அவன் ஒருவனுக்கு ஒருத்தி பாலிசி! சரி வாங்க.. இப்ப நம்ம கதைக்குள்ள போகலாம்!
சர்வேஸ்வரனின் அசிஸ்டன்ட் சைத்ரேஸுக்கு போன் செய்து விபரங்களை கூற..
“இப்போ அந்த கார யார் எடுத்துப் போனது? என்று கேட்டான்.
சார் அது ஸ்ருதி மேம் தான்! கூடவே உங்க பாட்டிமாவும் என்று கூறினான்.
அப்படியா இப்போ அண்ணா எங்க இருக்கான்? என்று சைத்ரேஸ் கேட்டான்.
அவர் வந்து ஹோட்டல்ல இருக்காரு! என்று தயங்கிக் கொண்டே அசிஸ்டன்ட் பதில் அளிக்க..
ஹோட்டல்லையா நான் உடனே வரேன்! என்று சொல்ல…
சார் அது ஹோட்டல்ல! அவர்! அவர்! என்று தயங்கிக் கொண்டே நிற்க..
யார் இருக்கா? என்று சைத்து கேட்டான்.
அது தீத்யான்னு நினைக்கிறேன் என்று அசிஸ்டன்ட் கூற..
தித்யா என்னும் பெண்ணுடன் தகாத உறவில் இருக்கிறான் என்று கேட்டதுமே சைத்ரேஸ் முகம் சங்கடமானது! இப்படி இருக்கான்? என்று நினைத்தவன்.
சரி இது யாருக்கும் தெரிய வேண்டாம்! இந்த பிரச்சனையை எப்படி சரி செய்யணுமோ? அதை பாக்குறேன் நீங்க கிளம்புங்க! மத்தத காலையில் பார்த்துக்கொள்ளலாம்! என்று கூறினான்.
சைத்ரேஸ் நேராக போன் மற்றும் லோக்கல் நியூஸ் அனைத்தையும் எடுத்து பார்க்க..
சர்வேஸ்வரனின் கார் KA@#* என்று அந்த காரின் நம்பர் பிளேட் தெரிய அனைத்து இடங்களிலும் செய்தி பரவி கிடந்தது.
இதை எப்படி டேக்கல் பண்றது? டாடிக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்! என்று சைத்ரேஸ் நினைத்துக் கொண்டிருக்கவே.. அவர்களுடைய அப்பாவிடம் இருந்து போன் வந்தது.
ஹலோ என்று கடுமையான குரல்..
டாடி அது வந்து என்று சைத்ரேஸ் தயங்க..
எல்லாமே எனக்கு தெரியும்! என்ன பண்றது? என்னோட மொத்த துரதிஷ்டமா சேர்ந்து பொறந்து தொலைத்திருக்கிறான்! எல்லாம் என்னோட நேரம்! என்று அவனுடைய அப்பா சொல்லவும்..
இதை கேட்டதும் சைத்ரீஸ் கோபமாக அப்படியெல்லாம் சொல்லாதீங்க டாடி!அண்ணா போகல இது ஸ்ருதியும் பாட்டிமாவும் தான் போயிருக்காங்க? என்று கூற..
அவங்க போனா இவனோட காரை எதுக்கு எடுத்துக் கொடுக்கணும்? அது நம்ம ஃபேமிலிக்கு மட்டுமே உண்டான நம்பர் பிளேட்ன்னு தெரியாதா? யார கேட்டு கொடுத்தான்?.இந்த பிரச்சனை எல்லாம் யாரு டாக்கல் பண்றது? அவன் என்ன நினைச்சுட்டு இருக்கான்? ஒரு நாலு படம் பண்ணிட்டா அவ்வளவு பெரிய ஆளா? சேர்க்கை சரியில்ல! எல்லாம் என்னை சொல்லணும் என்று அவர் கோபத்துடன் கொந்தளித்துக் கொண்டிருக்க..
சரி ஓகே டாடி நோ ப்ராப்ளம்! நீங்க டென்ஷன் ஆகாதீங்க! எல்லாத்தையும் சரி பண்ணிட்டு நான் உங்களுக்கு கால் பண்றேன்!!ப்ளீஸ் டாடி என்று சைத்ரேஸ் பேசிக் கொண்டிருக்க..
எல்லாம் உன்னால டா! நீ அவனுக்கு பண்ற சப்போர்ட்டுக்கு கண்டிப்பா! உன்ன அவன் ஒரு இடத்தில் போய் நிக்க வைக்க போறான்! அப்ப தெரியும்! அவன் யாருன்னு? ஆனா நீ திருந்தவே மாட்ட! அந்த ஜென்மத்துக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்க? என்று அவர் கோபமாக சொல்ல..
டாடி! அப்படி பேசாதீங்க டாடி! அண்ணாவுக்கு எதுவுமே தெரியல! அண்ணாவோட குணத்த பத்தி உங்களுக்கு தெரியாதா? என்று சைத்ரேஸ் தன்னுடன் ஒட்டி பிறந்தவனுக்காக பரிந்து பேசிக் கொண்டிருக்க… அரை மணி நேரத்தில் அவன் முன்னாடி வந்ததுனால, உனக்கு அவன் அண்ணா இல்ல! அக்காடிங் டு சயின்ஸ்! நீதான் அவனுக்கு அண்ணன்! சரி என்னமோ பண்ணி தொல! என்று கடுகடுவென பேசிக்கொண்டிருந்தார்.
டாடி ப்ளீஸ் டாடி என்று சைத்ரேஸ்.. என பேச
ஒரு சில நிமிடங்கள் அமைதியானது! டாடி என்று சைத்ரேஷ் அழைக்க..
தன் குரலை சரி செய்து கொண்டே சாப்டியா என்று கேட்டார்.
இதை கேட்டதும் சைத்ரேஸ் சிரித்துக் கொண்டே நான் சாப்பிட்டேன் டாடி!அம்மா நீங்க பாப்பு எல்லாம் ஓகேவா என்று கேட்டான்.
எல்லாம் ஓகே சரி காலையில உன்ன பாக்கணும்! அம்மா கேட்டுகிட்டே இருக்கா! என்று கூறினார்.
சரிங்க டாடி மார்னிங் நான் அந்த பிரச்சனை எல்லாம் முடிச்சுட்டு நைட்டு டின்னருக்கு வீட்டுக்கு வந்துடறேன். என்று சொல்லிவிட்டு சைத்ரேஸ் ஃபோனை வைத்தான்.
ஒரு சில நிமிடங்கள் கழித்து தீத்யாவே சோர்வு தாங்காமல் தள்ளிப் படுத்தாள். ம்ம் கிளம்பு! என்று ஆதிக்கமான குரல்.
தீத்யா சோர்வுடனே எழுந்தவள். வேகமாக ஒரே ஒரு போட்டோ ப்ளீஸ் என்று கேட்க..
சர்வேஷ் அவளை முறைத்தான்.
சரி இந்த பெர்ஃபியுமை போட்டோ எடுத்துக்கட்டுமா? என்று கேட்டாள்.
கைகளை உதறிவிட்டு அவன் பாத்ரூம் செல்ல.
அவன் சென்று விட்டானா என பார்த்து அந்த படுக்கை அறையையும் வாசனை திரவியம் பாட்டிலையும் சேர்த்து எடுத்துக்கொண்டு வேகமாக உடை அணிந்து கொண்டு அவனுக்காக காத்திருந்தாள்.
இன்னும் என்ன என்று அதட்டலுடன் கேட்டான்.
ஒன்னும் இல்ல நான் உனக்கு இதுவரைக்கும் இத்தனை தடவை love making…
What what come again!.
இல்ல இது அது இந்த need பண்ணியும் ஒருதடவை கூட உனக்கு உதட்டில் முத்தம் கொடுத்ததில்லை! எனக்கு ஆசையா இருக்கு ஈஸ்வர்! ஒரே ஒரு தடவை என்று அவள் அருகில் வர..
அவன் கடுமையான பார்வை வீசினான்.
சரி சரி ஓகே டென்ஷன் ஆகாத நான் கிளம்புறேன் பாய் பேபி என்று சொல்லிக் கொண்டே வெளியே செல்ல..
இரு என்று அவனுடைய வாலட்டிலிருந்து சில பணத்தாள்களை எடுத்து நீட்டினான்.
என்ன பேபி இது என்று கேட்க
சித் கேவலமாக அவளை பார்த்து சிரித்தவன். வாங்கிக்க செலவுக்கு ஆகும்
அதற்கு தீத்யா வெக்கமெல்லாம் படவில்லை..
அவனிடமிருந்து வாங்கிக் கொண்டாள்.
நேராக கிளம்பி விட்டாள்.
சர்வேஸ்வரன் நன்றாக குளித்து முடித்து வருவதற்குள் படுக்கை விரிப்புகள், மற்றும் அறை மாப் போட்டு துடைக்க பட்டது. அவன் வெளியே வந்தது. சுத்தமான அறை அவனை வரவேற்க.. படுக்கைக்கு வந்து உறங்க ஆரம்பித்தான்.
அடுத்த நாள் காலை அனைத்து செய்தித்தாள்களிலும் இந்த கார் ஆக்சிடென்ட் பற்றி இருக்க….
அந்த நம்பர் பிளேட் நிறைய பேர் கவனத்தை ஈர்த்தது.
மினிஸ்டரா இருக்க நிதின் அதை ஒரு பக்கம் பார்க்க.. ரிபொட்டாரா இருக்க சத்ய தேவ் கூட பார்த்தான். ஆல்ரெடி போலீசா இருக்க ஹரிணி கண்ணிலும் பட.. போலீஸ் ஆக போகிற ரிதம் கண்ணில் கூட அந்த செய்தி பட்டது.
அக்! அக்கா இன் இங்கே பாரேன்! நாய் குட்டிகள் மேலே க கார் போயிருக்கு என உதடுகள் திக்கி துடிக்க இதழ் சிவன்யாவிடம் கூறினாள்.
இவர்கள் கண்ணில் பட்ட அந்த நம்பர் பிளேட் வக்கீல்களான சிவன்யா மற்றும் இதழ் கூட அதை பார்த்தார்கள்.
Twist ஆரம்பம்!
தொடரும்..
EPISODE 40
அக்! அக்கா இன் இங்கே பாரேன்! நாய் குட்டிகள் மேலே க கார் போயிருக்கு என உதடுகள் திக்கி துடிக்க இதழ் சிவன்யாவிடம் கூறினாள்.
பார்த்தேன்! என அமைதியாக அவளுடைய அறைக்கு உள்ளே சென்றாள்.
எப்படி இந்த மனுசங்க? இப்படி இருக்காங்க! இவன் எல்லாம் ஒரு நடிகனா? ச்ச என இதழ் திட்டி கொண்டிருக்க..
மனுசனே இருந்தாலும் அப்படியே அடிச்சு தூக்கிட்டு போற சமூகம் தான் இங்கே இருக்கு! என அங்கே சுவரில் மாட்ட பட்டிருந்த தந்தை பெரியார், சட்டப் மேதை டாக்டர் அம்பேத்கர் படங்களை சிவன்யா பார்த்தாள்.
அது வெனா சரி தான் கா! இப்படி தானே என்னை பார்க்க வரும் போது! தாத்தா என திக்கி கொண்டே இதழ் நிற்க…
பாப்பா! விடு இதுக்கு தான் உன்னை நான் இந்த வக்கில் போலீஸ் இதுக்கு நடுவில் இருக்க வேணாம் அப்டின்னு சொன்னேன்! பாப்பா! எதுவும் இல்லை! எதையும் நினைக்காத! நீ எதுக்கும் காரணம் இல்ல. புறியதா? என சிவன்யா அவளின் தலையை வருடி முகத்தை பார்க்க..
இதழ் கண்கள் சிவந்து கண்ணீருடன் நின்றாள்.
ஹே பாப்பா! நீ அழுதன்னு நிதின், சக்தி அண்ணாவுக்கு தெரிஞ்சது அவ்ளோ தான்! என சிவி சொல்ல..
இதழ் கண்ணை துடைத்து கொண்டு நான்! எனக்கென்ன! நான் நல்லாருக்கேன். அந்த நாள் மட்டும் வராமல் இருந்து இருந்தால் நான் இந்நேரம் படிச்சு முடிச்சு உன்னை போல ஆகி இருப்பேன்! ரெண்டு வருசம் வீட்லயே இருந்தேனே!
அதனால் என்ன உன்னோட அந்த பயத்தையும் டிப்ரசனையும் மகி சித்தி, தீரா ரெண்டு பேரும் நாட்டியம் ஆடி உன்னையும் ஆட வச்சு சரி பண்ணிட்டாங்க! இப்போ அதை பத்தி நினைக்காத! நீ மட்டும் இப்படி ஃபீல் பண்றது சூர்யா டாடிக்கு தெரிஞ்சா என்ன ஆகும்! சக்தி அண்ணா இப்போ தான் வீட்டுக்கு வந்திருக்கான். தாத்தாவும் அம்மாச்சியும் கூட அதையெல்லாம் மறந்து இப்போ எல்லாரும் ஹாப்பியா இருக்கோம்! அதை நினை பாப்பா! என சிவி கட்டி கொண்டாள்.
சரி என இதழ் நேராக கீழே வந்தாள். ஆனால் கள்ளம் கபடம் இல்லா சிரிப்பை உதிர்க்கும் இந்த உதடுகளுக்குள் துடிப்பு மறைந்து இருக்கிறது. பார்ப்போம்!
சத்ய தேவ் திங்கள் காலையில் கிளம்பி தயாராக இருந்தான். சரி டாடி நான் கிளம்புறேன்! என சொல்ல..
மகி அவனை தான் பார்த்து கொண்டிருந்தார். மகியை நிதின் பார்த்தான்.
வா மாமா! போலாம்! என தீரா அழைக்க நாய் குட்டியை தூக்கி கொண்டு சத்ய தேவ் இதழ், சிவி, பவா, நிலா, நிவாஸ், என அனைவரையும் பார்த்து விட்டு கிளம்பினான்.
நிம்மதி எப்படியோ வந்த நாய் இங்கேயே தங்காம கிலம்புது! என மிதுன் நிம்மதி பெரு மூச்சுடன் நிற்க..
மகி உடனே உள்ளே சென்று விட்டார். மாமா நெக்ஸ்ட் வீக் வரோம்! என சொல்லி கொண்டே வண்டியில் கிளம்பினான்.
சத்ய தேவ் சென்ற அடுத்த நொடி அத்தனை இள வட்ட கூட்டமும் சிட்டாக பறந்தது.
நிதின் கொஞ்சம் விரைப்புடன் நிவாஸ்…
அண்ணா!
நிலாவை கொண்டு போய் விட்டுடு நான் போகும் போது சிவி, தூரிகா ரெண்டு பேரையும் விட்டு விடுரென்.
சரிங்க அண்ணா! என நிவாஸ் கிளம்பினான்.
நிலா அனைவருக்கும் டாட்டா சொல்லி விட்டு கிளம்பினாள்.
பாப்பா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் சாப்பிட்டு வரேன்! என மகி பின்னால் சென்றான்.
சூர்யா ஆபிஸ் கிளம்பி வெளியே வர மிதுன் போனை நோண்டி கொண்டிருக்க..
டேய் அடங்காத வனே!
ப்பா! என எழுந்து நின்றான்.
கிளம்பு இன்னிக்கு உனக்கு வேலை இருக்கு! நான் கொஞ்சம் conference போகணும்! நீ எல்லா fileம் படிச்சு சைன் போடுற! உனக்கு எதுவும் டவுட் இருந்தால் ராம் ஆங்கிள் கிட்ட கேளு! என கூறினார்.
சரி!
என்ன சரி கிளம்பி வாடா! என சூர்யா அதட்ட..
மிதுன் பெரு மூச்சை விட்டு சிணுங்கி கொண்டே கோபமாக அழுத்தி அழுத்தி நடந்து உள்ளே சென்றான்.
பவன்யா பார்த்து சிரிக்க.. சிவி உதட்டை கடித்து சிரிப்பை அடக்கினாள். இதழ் எதோ போல அமர்ந்திருக்க..
குக்கு! குக்கு! என சூர்யா இதழ் அருகில் வந்து குக்கு! என அழைக்க…
பாப்பா! டாடி கூப்புடுறாங்க! என சிவன்யா அதட்டினாள்.
டாடி! என இதழ் வெடுக்கென திரும்பினாள்.
என்ன முகம் சரி இல்லையே! ஹே மகி! என சூர்யா கொஞ்சம் சத்தமாக அழைக்க.
என்னங்க என மகி ஓடி வந்தார்.
என்ன? பாப்பாவுக்கு வேலை வச்சியா? என சூர்யா தலையை வருடி கொண்டே கேட்டார்.
இல்ல டாடி அம்மா எதுவும்.. எதுவும் சொல்லல்லை
என்ன ஆச்சு தூரி! என மகி கேட்க.
நீ ரெண்டு நாள் லீவ் போட்டு வீட்ல இரு! அப்புறம் படிச்சிக்கலம் குக்கு! ஹே மகி அவளை கவனி! என சூர்யா தலை வருடி முத்தம் பதித்தார்.
டாடி! நான் நல்லாருக்கேன்! அண்ணா வந்ததும் போய்ட்டாங்க! அது தான் வேற ஒன்னும் இல்ல! என இதழ் சொல்ல…
அவ்ளோ தானா! வருவான்! ரவுத்ரன் சொல்லிருக்கான். சத்ய தேவ் எப்போவும் நம்ம கூட வர மாதிரி பண்ணிடுவான் நீ கவலை படாத குக்கு! இப்படி முகத்தை வச்சிட்டு நீ படிக்க போனால் உன்னோட நினைப்பு தான் எனக்கு இருக்கும்? வேலையே ஓடாது! என்ன டா பொண்ணு! உன்னை ஹாஸ்டல் அனுப்பவே எனக்கு சுத்தமா பிடிக்கல! என சூர்யா சொல்ல..
டாடி! டாடி போதும்! நான் இருக்கேன்! நீங்க ஆபீஸ் போங்க! என சிவன்யா கூறினாள்.
இதை கேட்டதும் இதழ் சிரிக்க.. என் பேரழகி! எப்போவும் சிரிச்சிட்டு ஹாப்பியா இருக்கணும்! சரியா! என சூர்யா அவளின் முகத்தை பார்த்தார்.
ஓகே டாடி! என இதழ் சொல்ல..
இந்த சிரிப்பு! இதுக்கு தான்! நான் ஓடி உழைக்கிறேன். இது உன்னோட முகத்தில் என்னை விட அதிகமா கொடுக்கும் ஒருத்தனுக்கு தான் கட்டி கொடுப்பேன். என சூர்யா சொல்ல…
ப்பா போதும் போயிட்டு வாங்க! நான் ஈவ்னிங் வீடியோ கால் பண்றேன்! என இதழ் கூறினாள்.
இல்ல நைட்டு நான் உன்னை ஹாஸ்டலில் வந்து ரெண்டு பேரையும் பார்க்கிறேன். என சிவன் யா தலையை பாசத்துடன் வருட.. .
பவன்யா ஓரிடத்தில் நின்று இருந்தாள். பவா குட்டி! உன்னோட மூன் ஸ்டார் ஈவன்ட் நடத்தும் பேங்ஷன்க்கு தான் மதியம் வர போறேன்! அப்போ என் தங்க புள்ளைய கொஞ்சிக்கிரென். என சூர்யா சொல்ல..
பவன் யா சிரித்து கொண்டே டன் டாடி என கூறினாள்.
டேய் வழந்தா மண்டி இன்னுமா வர! என சூர்யா கத்த…
நான் வந்துட்டேன் என மிதுன் கூறினான்.
இருவரும் ஆபிஸ் கிளம்ப! மிதுன் தன் தாயை பார்த்து கொண்டிருக்க..
டேய் நீ KG போகல நாயே! ஆபிஸ் போக போற? என சூர்யா அவனை முன்னால் நடக்க விட்டான்.
எதை பண்ணாலும் குத்தம் கண்டு பிடுங்க! என கோபத்துடன் காரில் ஏறினான்.
டேய் நீ ஒட்டாத! நான் தான் ஓட்டுவேன். என சூர்யா காரை ஓட்டி கொண்டே தன் மகள் தேவதைகளையும் தன் உயிர் தேவதையையும் பார்த்து விட்டு கிளம்பினார்.
பொம்மாயி! என நிதின் அழைக்க..
என்ன நிதின்! ரிதம பார்க்க கிலம்பலயா? என மகி கேட்க..
எனக்கு பசிக்குது! ஊட்டி விடுங்க நான் கிளம்புறேன்! என நிதின் சொல்ல..
மகி சிரித்து கொண்டே உன் பையனுக்கு சோறு ஊட்ட வேண்டிய நேரத்தில் உனக்கு ஊட்டனுமா! எப்போ அந்த கொடுப்பணை கொடுக்க போறீங்க? என கேட்டு கொண்டே வந்தார்.
அவ்ளோ தானா! நெக்ஸ்ட் இயர் கண்டிப்பா நீங்க தான் என்னோட பொண்ணுக்கு ஊட்டி விடுவீங்க! என நிதின் சொல்லி கொண்டே ஒரு வாய் வாங்கி கொண்டான்.
அதெப்படி! First சித்தி சத்ய தேவ் அண்ணா பையனுக்கு தான் ஊட்டும்! என பவன்யா வந்தாள்.
ஹான் பெத்து கொடுக்கட்டும்! யாரு வேணாம்னு சொன்னது என சிவன்யா கூற..
வாலுங்களா! அடி வாங்க போறீங்க மறுபடியும் சண்டையா! வெளுத்து போடுவேன் என மகி மிரட்டி கொண்டே நிதிணுக்கு உணவு ஊட்டி விட்டார்.
நிதின் சாப்பிட்டு முடித்து அவரின் முந்தியில் துடைத்தவர். மகி! என அழைக்க..
மகி உதட்டை துடைத்து விட்டு என்ன நிதின் குட்டி! என் நிதின் குட்டி மினிஸ்டர் பெருமையா இருக்கு! என சொல்ல..
நிதின் அவரின் கையை பிடித்து கன்னத்தில் வைத்தவன். எனக்கு உங்களை விட்டு போக மனசே இல்ல. நியாபகமா இருக்கு!
என் தங்கம் என மகி நெட்டி முறித்து உள்ளே சென்று சாமி திரு நீற்றை எடுத்து இட்டு விட்டார்.
ஓகே சித்தி போயிட்டு வரேன் என நிதின் தன் செல்ல தங்கைகளை அழைத்து கொண்டு கிளம்ப..
பவன்யா மகியை அழைத்து கொண்டு மூன் ஸ்டார் ஈவன்ட் ஒர்க்குக்கு அழைத்து சென்றாள்.
நிதின் இருவரையும் காலேஜ் விட்டு சிவன்யாவிடம் தூரிக்கு என்ன ஆச்சு என கேட்டான்.
ஒன்னும் இல்ல அண்ணா!
எதுவா இருந்தாலும் சொல்லு பாப்பா! என நிதின் அதட்ட..
அவளுக்கு அந்த ஆக்சிடன்ட் நியாபகம் வந்திடுச்சு என சிவன்யா சொல்ல…
பத்திரமா பார்த்துக்க எதுவா இருந்தாலும் போன் பண்ணு! சித்தப்பா சொன்னது தான் எல்லாத்துக்கும்! நீங்க கஷ்டமா இருந்தால் எங்களால் நிம்மதியா இருக்க முடியாது. எல்லாத்துக்கும் முடிவு நிச்சயம் இருக்கு! என கூறி அனுப்பி வைத்தான்.
சரி என சிவன்யா கிளம்பினாள்.
*
நிதின் அங்கிருந்து நேராக ரிதமை பார்க்க சென்றான். வழக்கம் போல் மேடம் என்ன பண்ணுவாங்க! தூங்கிட்டு தான் இருந்தாங்க!
ஒரு படையுடன் வந்து இறங்கினான். எங்கு சென்றாலும் பத்திரிகைக்காரர்கள், நியூஸ் ரிப்போர்ட்டர்ஸ், கூடவே பிளாக் கேட்ஸ், ப்ளூ கேட்ஸ், அது மட்டுமா மினிஸ்டரின் பிரத்தியேக காவலாளிகள், என அனைவரும் வந்து விடுகிறார்கள்.
அதுவே ஒரு பக்கம் நித்தினுக்கு எரிச்சலாக இருக்கும். அவன் உடனே தன்னுடைய சித்தப்பா குரு பிரகாஷுக்கு அழைத்தான்.
சித்தப்பா என அழைக்க..
என்னடா நிதின் குட்டி என்று உடனே பதிலளித்தார்.
எனக்கு இந்த மினிஸ்டர் பதவியில் இருப்பதற்கு சுத்தமா பிடிக்கல! இவங்க எல்லாம் என்னை ரொம்ப சுத்திக்கிட்டே இருக்காங்க!;நான் நிம்மதியா எங்கேயும் போயிட்டு வரவே முடியல! என்று கூற..
இதுக்கெல்லாம் யாரும் கோவம் படுவாங்கலா? என்னடா ? நம்ம பெரிய இடத்தில் இருக்கும் இப்படி எல்லாம் பேசக்கூடாது! நிதின் கண்ணா என்று குரு பிரகாஷ் கூற
நித்தின் அமைதியாக இருக்க
சரி இப்போ நீ எங்க இருக்க? என குரு பிரகாஷ் கேட்க
நான் ரிதம பார்க்க வந்திருக்கேன் என்று கூறினான்.
அவங்க அப்பனுமா இருக்கான்! என்று குரு பிரகாஷ் கேட்க..
இல்ல அவங்க அவங்க பெங்களூர்ல இருக்காங்க நான் சென்னையில அவங்க தாத்தா வீட்டுக்கு வந்து இருக்கேன்! அவ அங்கே தான் இருக்கா! என்று நிதின் கூறினான்.
சரி ஓகே பத்திரமா இரு! நான் வர பார்க்கிறேன். கனீரா உன் கூட தான் இருக்கா என்று கேட்க..
ஆமா சித்தப்பா அவ டெல்லியில் இருக்கா ஒரு வேலையை விஷயமா நான் ரிதம பாத்துட்டு போலாம்னு வந்தேன்! என்று நித்தின் கூறினான்.
சரி ஓகே பத்திரம் என்று குரு பிரகாஷ் ஃபோனை வைத்தார்.
வழக்கம் போல் ரவிச்சந்திரன் பேப்பர் படித்துக் கொண்டிருக்க வீட்டுக்குள் கதவை தட்டிக் கொண்டு நித்தின் நின்றான்.
உள்ளே வாப்பா என்று கண்ணாடி மூக்குக்கு தள்ளிக்கொண்டே அழைத்தார்.
அங்கே வசுபதி வர
தாத்தா, பாட்டி என்று இருவரிடமும் ஆசீர்வாதம் வாங்க
பரவால்ல நல்ல பையனா இருக்கியே? என்று ரவிச்சந்திரன் சொல்ல..
நான் எங்க சித்தி மகி ஓட வளர்ப்பு என்று நித்தின் கூறினான்.
வசுமதி சிரித்துக் கொண்டே சரி ரிதம் மேல தூங்கிட்டு இருக்கா என்று சொல்லm.
நான் போய் அவளை பார்த்துக்கிறேன் போலாமா என்று கேட்டான்.
போய் பாருப்பா இன்று இருவரும் அமர்ந்து கொண்டார்கள்.
வசுமதி உள்ளே சென்று ராகவுக்கு போன் செய்து நித்தின் வந்த விஷயத்தை கூறினார்.
ஓகே ஒன்னும் பிரச்சனை இல்ல அவன் போனதும் எனக்கு கால் பண்ணுங்க! மா! என்று இன்பா போனை வைத்து விட்டார்.
ரிதம் தூங்கிக் கொண்டிருக்க எப்ப டி எந்திரிக்கப் போற? என்று கடுமையான குரல் கேட்டது.
யாரு? அம்மா! பேய்! Fuck you என்று ரிதம் எழுந்து அமர்ந்தாள்.
என்ன திடீர்னு என்ன பாக்க வந்திருக்க என்று ரிதம் கேட்க..
நான் உன்னை பார்க்க வர கூடாதா! என்று நித்தின் கேட்டான்.
ஒன்னும் இல்ல! என்னால நம்ப முடியல! என்று ரிதம் கூறினாள்.
அங்கிருந்த தலையணையை எடுத்து ரிதம் மேல் தூக்கி போட்டான்.
சரி என்ன விஷயம் என்று ரிதம் கேட்க..
ஒன்னும் இல்ல என்று அருகில் உள்ள நியூஸ் பேப்பரை பார்த்தான்.
இந்த நியூஸ படிச்சியா என்று நித்தின் கேட்க
இல்ல என்று ரிதம் சொல்ல..
நித்தின் அவளை கண்டிக்கும் விதமாக அதிக பிரசிங்கித்தனமா எந்த விஷயத்தையும் பண்ணிட்டு இருக்காத! பத்திரமா இரு! உன்னோட உன்ன எல்லாரையும் பத்திரமா பாத்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு! சரியா? என்று நித்தின் கூறினான்.
நான் என்ன அதிகபிரசிங் தனமா பண்ண போறேன்! என்று ரிதம் கேட்க..
நடிக்காத உன்ன பத்தி எனக்கு தெரியும்! பத்திரமா இரு எந்த பிரச்சனைலயும் போய் சித்திக்காதே! நமக்குன்னு நேரம் வரும் புரியுதா!
இப்படியே எத்தனை வருஷம் சொல்லிட்டு இருக்கீங்க? மிதுன், நீ, சிவன்யா, பவன்யா, முக்கியமா இதழ் எல்லாரும் கஷ்டப்படுறத என்னால பாக்க முடியாது. என்று ரிதம் கூற..
நித்தின் அவளின் கையில் பிடித்து ஒரு வருடி விட்டு அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல! நாங்க நல்லா இருக்கோம். அமைதியா எல்லாத்தையும் மூவ் பண்ணனும்! நம்ம மோத போறது சின்ன இடம் இல்ல! இது எங்க அப்பாவுக்கு தெரிஞ்சாலும் ரிஸ்க் தான்! உங்க அப்பாக்கு தெரிஞ்சாலும் ரிஸ்க! முக்கியமா யாருக்கும் தெரிய கூடாது! இந்த சக்தி பார்த்தானா என்னன்னு தெரியலையே?என்று நித்தின் யோசிக்க..
ரிதம் அவனைப் பார்த்து சிரித்தாள்.
என்ன சிரிக்கிற.. என்று அவளை பார்த்தான்.
நீங்க இந்த ஒரு விஷயத்துல மட்டும் தான் ஒத்துமையா இருக்கீங்க! என்று ரிதம் கூறினாள்.
நித்தின் புருவத்தை நெருக்கிக் கொண்டே ஆயிரம் சண்டை எங்க நடுவுல இருந்தாலும், அவன் என்னோட மகி சித்திக்கு பையன்! எனக்கு அவனை பிடிக்கலைன்னா கூட எந்த இடத்திலும் அவனை விட்டுக் கொடுக்கணும் ன்ற அவசியம் இல்லை!
பாருடா என்ற ரிதம் கண்ணக்குழி தெரிய சிரிக்க..
நல்லா சாப்பிடு ரெஸ்ட் எடு போஸ்டிங் கூடிய சீக்கிரத்துல, உன்னை தேடி வரும்! என்று கூறினான்.
நீ ஒன்னும் எனக்கு வாய்ப்புகளை பிச்ச போடணும்னு அவசியம் இல்ல! என்னோட திறமைக்கு தான் எனக்கு வேலை கிடைக்கணும்! என்று ரிதம் உறுதியாக கூறினாள்.
போடி உன் திறமைக்கு தான் வேலை உனக்கு எதுக்கு நான் ஹெல்ப் பண்ணுவேன்னு கனவில் கூட நினைக்காத.
போடா தயவு செய்து கிளம்பு என்று ரிதம் கூற
சரி வா வந்ததுக்கு உன் கூட சாப்பிட்டு அதை போட்டோ எடுத்து மகிக்கு அனுப்பனும் என்று நித்தின் கூறினான்.
அப்போ நீ எனக்காக பாக்க வரல மாமிக்காக தான் பார்க்க வந்தியா என்று ரிதம் கேட்க
ஆமா உன்னை கல்யாணம் பண்ணிக்க காரணமே மிதுன் மட்டும்தான் என்று நித்தின் கூறினான் .
நானும் உன்னை கல்யாணம் பண்ணிக்க காரணமே மிதுன் தான் என்று அவளும் கூற..
போடி என்ற நிதின் சொல்ல
போடா என்று இருவரும் சொல்லிக்கொண்ட கீழே வந்தார்கள்.
தொடரும்.
EPISODE 41
ஆமா உன்னை கல்யாணம் பண்ணிக்க காரணமே மிதுன் மட்டும்தான் என்று நித்தின் கூறினான் .
நானும் உன்னை கல்யாணம் பண்ணிக்க காரணமே மிதுன் தான் என்று அவளும் கூற..
போடி என்ற நிதின் சொல்ல
போடா என்று இருவரும் சொல்லிக்கொண்ட கீழே வந்தார்கள்.
வசுமதி அவர்கள் இருவரை பார்த்ததும் ரெண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா? சாப்பிடுறீங்களா? என்று கேட்டார்.
உடனே நித்தின் வசுமதியை பார்த்து “பாட்டி அவளுக்கு காலைல தூங்கி எந்திரிச்சதும் டீயும் அதுக்கப்புறம் நோ fat நோ மைதா பிஸ்கட் தான் சாப்பிடுவா! அது இருக்கா! எனக்கு மீள் வேணாம்! நானும் அதையே குடிக்கிறேன்” என்று கேட்டான்.
உடனே ரிதம் அவனை ஆச்சரியமாக பார்த்து “என்ன இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்க? நீ மிதுன் கிட்ட தானே கேட்ட!” என்று நித்தினுடைய காதை கடித்தாள்.
ஆமா இது பெரிய விஷயமா? தெரியும்! தெரியும்! இது கூட தெரிஞ்சு வச்சுக்க மாட்டேன்னா! என்ன? நான் தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேனே! என்று நித்தின் அவளை திரும்பி பார்த்தான்.
உள்ளுக்குள் திக் என்று இருக்க ரிதமுக்கு வியர்க்க தொடங்கியது. “என்ன இப்படி எல்லாம் பார்க்கிறான்? எல்லாமே தெரிஞ்சு வச்சிருக்கான்? கண்டுபிடிக்கிறான்! முன்ன விட இப்போ பக்கத்துல எல்லாம் வந்து உட்கார்றானே! ஐயய்யோ! இவன எப்படி துரத்துவது? நாளைக்கு கழுத்துல தாலி கட்டிட்டா? என்ன பண்ண? ” என்று ரிதம் யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.
“என்ன ஒரு மாதிரி மூஞ்ச வச்சுட்டு உக்காந்துட்டு இருக்க! உன் முகத்தை பார்க்க சகிக்கல!” என்று நித்தின் கூறினான் .
“நீ பாக்காத” என்று தள்ளி அமர்ந்தாள். “இப்போ எதுக்கு தள்ளி உட்காருர? பக்கத்துல வா! உன் கூட ஒரு செல்பி எடுக்கணும்!” என்று இருவரும் அருகில் வந்து அவள் மேல் கைப்படாமல் இரண்டு மூன்று போட்டோக்களை கிளிக் செய்தான்.
“இதை என்ன பண்ற?” என்று ரிதம் கேட்க..
“நான் இப்போ ஸ்டோரில வைக்கப் போறேன்!”என்று நித்தின் கூற..
என்ன? என்று ரிதம் கொஞ்சம் பதட்டத்துடன் கேட்க..
நிதின் அவளைப் பார்த்து “பிடிக்காதோ! அப்போ கண்டிப்பா வைப்பேன்! உன்னை எல்லாருக்கும் இன்ரோ கொடுக்கலாம்னு இருக்கேன்!” என்று சொன்னவன்.
போனை எடுத்து அவனுடைய தனிப்பட்ட வாட்ஸ் அப் குரூப்பில் ஸ்டேட்டஸ் வைத்தான். அவர்களுடைய குடும்பம் பெருசா ஜெய் ஆகாஸ் வருன் மற்றும் தாரா என அனைவரும் பார்க்கும் படி வைத்தான்.
ரிதம் பதட்டத்துடன் கைகளை நெட்டி எடுத்துக் கொண்டவள். “இவன் ஸ்டேட்டஸ் வெச்சா? எனக்கு என்ன? நான் பயப்படனுமா? நான் ரிதம்! அதுவும் இவனுக்காக நான் எதுக்கு பயப்படனும்? இவன் ஸ்டேட்டஸ் வெச்சா! முதல்ல எனக்கு என்ன? எனக்கு நம்பிக்கை இருக்கு! எப்படியும் இந்த கல்யாணம் நடக்காது!” என்று சொல்லிக் கொண்டால்
அவளுடைய இன்னொரு மனமோ “இதை டாடி கிட்ட சொன்னா அவரே கல்யாணத்தை நிறுத்திடுவார்ல்ல! தேவையில்லாம நீ எதுக்கு எல்லாரையும் கூப்பிட்டு அசிங்கப்படணும்! டாடிக்கு தான அவமானம்! ”என்று ரிதம் மனம் கூறியது.
இதை கேட்ட அவளது மூளையோ “அது அப்படி இல்ல! நம்ம டாடி கிட்ட சொல்லி கல்யாணத்தை நிறுத்தினா! உடனே இந்த விவேகா எனக்கு வேற யாரையாவது கல்யாணம் பண்றதுக்கு பிளான் போடுவா! அதை எப்படி டேக்கல் பண்றது? எப்படியாவது, கஷ்டப்பட்டு, இந்த கல்யாணத்தை நிறுத்திட்டா! ஒரு ரெண்டு மூணு வருஷத்துக்கு கல்யாணத்தை பற்றியே வீட்ல பேச மாட்டாங்க! அதுக்குள்ள மலையேறின சாமி மலை இறங்குச்சுனா கட்டிக்கலாம்!”
“அப்படி இல்லன்னா என்ன பண்ணுவ?” என்று மனம் கேட்க..
நான் இப்படியே இருந்திடுவேன்! எனக்கு யாரும் வேண்டாம்! என்று ரிதம் கூறினாள்.. அப்போ அவன் ஹரினியை கல்யாணம் பண்ணிக்கிட்டா? என்று அறிவு கூற..
கல்யாணம் பண்ணிக்கிட்டா பண்ணிக்கட்டும்! என மூளை கூறியது.
பண்ணிக்கிட்டு குழந்தை கூட பெத்துட்டு வா!
பெத்துக்கட்டும்.. என மூளை சொன்னது.
நீ அப்படியே இருக்க போற! என மனம் கேட்க..
“நான் அப்படியே இருக்கேனே! ஒன்னும் தப்பில்லை! நான் பண்ண பாவம்! என்ன சுத்துது! ஆனா என் வாழ்க்கையில இன்னொருத்தன்… அப்படி என்னால் நினைச்சு கூட பார்க்க முடியாது! அவன் மட்டும்தான்!” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.
ரிதம் உன்னோட கவனம் எங்க இருக்கு? உன்னோட பாட்டி கையில டீ ,பிஸ்கட் வச்சிட்டு நின்னுட்டு இருக்காங்க! என்று நிதின் கூற..
வசு மா என்று வாங்கிக் கொண்டாள்.
வசுமாவா என்று நித்தின் கேட்க..
ஆமா நான் பாட்டி சொல்ல மாட்டேன்! என்று கூற..
அப்போ நானும் வசு மா சொல்லலாமா? என்று வசுமதியை பார்த்தான்.
தாராளமா என்று வசுமதி சிரித்தார்.
ஆனால் அவருடைய கண்கள் நித்தின் பிரகாஷின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருந்தது. அதை நிதின் கவனிக்க தவறவில்லை.
அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடிக்க நித்தின் ரிதம் கைகளை பிடித்துக் கொண்டவன். வாயேன் என்னை சென்ட் ஆஃப் பண்றதுக்கு! என்று அழைக்க..
ஏன் உனக்கு போக தெரியாதா? என்று ரிதம் கேட்டாள்.
இதுதான் எனக்கும் வேணும் என்று நிதின் உள்ளுக்குள் நினைத்தவன்.
சரி நான் போயிட்டு வரேன் என்று கூறிவிட்டு வசுமதி மற்றும் ரவிச்சந்திரன் இருவரிடமும் கூறினான்.
ரவிச்சந்திரன் ரிதமை பார்த்து “செண்ட் ஆஃப் பண்ணிட்டு வா! டிம்பிள் என்று கூற..
அவனுக்கு போக தெரியும் தாத்து என்று கூறினாள்.
விடுங்க தாத்தா என்ற நிதின் கிளம்பினான்.
அவன் வெளியே வந்ததும் அந்தப் படைகள் அனைத்தும் கிளம்ப.. அனைவருக்கும் சுவாரசியமான செய்திகள் முன்னாள் காவலர் முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி வசுமதியின் மகன் க்ரைம் பிரான்ச் டிஎஸ்பி டிஜிபி இன்ப ராகவன் அவர்களின் வீட்டுக்கு மினிஸ்டர் நித்தின் பிரகாஷ் வந்து சென்றார். என்ன நடந்திருக்கும் என்று அனைவரும் அதைப் பற்றி கொஞ்சம் விவாதிக்க தொடங்கினார்கள்.
சரி இப்போதைக்கு இது போதும் என்று நினைத்தவன். காரில் ஏறி விட்டு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் அனைத்தையும் பார்த்தான்.
முதலில் பார்த்தது பவன்யா என்று தெரிந்து கொண்டதும்.. நித்தினுக்கு சந்தோஷமாக இருந்தது. அப்போ கண்டிப்பா என் பொம்மாயி பார்த்திருப்பாங்க! இது போதும் அடுத்த கட்ட வேலையை நாம ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான்! என்று கைகளில் தாளம் தட்டிக் கொண்டே கண்களை மூட அவளுடைய உதடுகள் தான் அவனுடைய சிந்தைக்கு வந்தது! அதற்கு கீழ் அன்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு முகடுகளும் அவனையும் மீறி உள்ளுக்குள் எதோ செய்ய..
“இப்போ சிம்பத்தி கிரியேட் பண்ண வேண்டிய நேரம்!” என்று நித்தின் புன்னகைத்துக் கொண்டே தலையை கோதினான்..
தன் பேத்தியை வைத்த கண் வாங்காமல் வசுமதி பார்த்துக் கொண்டிருக்க.
என்ன சும்மா அப்படி பாக்கறீங்க? என்று கேட்க..
உனக்கு நித்தின சின்ன வயசுல இருந்தே தெரியுமா? என்று கேட்க
ரிதம் எப்பொழுதும் போல் எனக்கு தெரியும் வசுமா நாங்க கனடாவில் இருக்கும்போது, நான் மித்து, நித்தின் நாங்க மூணு பேரும் தான் விளையாடுவோம். எல்லா இடத்துக்கும் நானும் மித்தனும் போயிடுவம்! ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ணுவோம் !என்று வார்த்தைக்கு வார்த்தை நித்தின விட்டு மித்துன் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தாள்.
ரிதம் பேசுவதை கவனித்து விட்டு வசுமதி அப்படியே ரவிச்சந்திரனை பார்க்க…
அவரும் புன்னகைத்துக் கொண்டே பேப்பர் படித்தார். சரி நீ எப்போ புவா சாப்பிடுவ? என்று
அது வந்து நான் நைட் சாப்பிடுறேனே! இப்போ எனக்கு கங்கா மாச்சிய பாக்கணும் போல இருக்கு! நான் கிளம்பவா என்று கேட்டாள்.
வசுமதி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு “இப்போ எதுக்கு அங்கே போற? அதுதான் உனக்கு என்ன வேணும்னாலும் நான் செஞ்சு கொடுப்பேனே!”என்று கேட்க..
அப்படி இல்ல அங்க போனா கங்கா மாச்சி எனக்கு தலை சீவி விடுவாங்க! நான் அப்படியே தூங்குவேன்! ஜாலியா இருக்கும் அம்மாச்சியும் தனியா இருக்காங்கல்ல என்று கூற..
அப்போ நாங்க ரெண்டு பேரும், இங்க தனியா இருக்கோமே! அது உனக்கு தெரியலையா? என்று வசுமதி கேட்டார்.
சரி என்று அவள் மேல செல்ல போக..
வா உனக்கு மசாஜ் செஞ்சு தல சீவி விடவா என்று வசுமதி கேட்டார்.
உடனே ரவிச்சந்திரன் இரும்பிக் கொண்டே இருவரையும் பார்க்க..
என்ன இருமல் என்று வசுமதியை அதற்றினார்.
அந்த கங்கா அம்மா மாதிரி யா ரும் வேலையே செய்து பாத்துக்கவே முடியாது! என்று ரவிச்சந்திரன் கூற..
என்ன? என்ன? பாத்துக்க முடியாது? என்ன பேசிட்டு இருக்கீங்க? ரவி என்று வசுமதி குரலை உயர்த்தினார்.
ஆமா நீ என்னத்த பாத்துக்கிட்ட! சுபா குழந்தை பிறந்து இங்க வந்தப்ப நீயா பார்த்த? முழுக்க முழுக்க சுபாவ தேவகி தான் பாத்துக்கிட்டாங்க! நீ என்ன பண்ண? உனக்கு வேலைக்கு போறதுக்கு, என்கிட்ட சண்டை போடறதுக்கு மட்டும் தான் டைம் இருக்கும்! என்னடி நீ செஞ்சிருக்க? என்று ரவிச்சந்திரன் குரலை உயர்த்த..
இனிமேல் உங்களுக்கு எதுவுமே செய்ய மாட்டேன்! என்று வசுமதி ரிதமை பார்த்து நீயும் வரப்போறியா இல்ல? என்னை விட்டுட்டு போக போறியா என்று கேட்டார்.
வசு மா எனக்கு யாரும் முக்கியம் இல்ல! நீங்க மட்டும் தான் முக்கியம் இதோ வரேன்! என்று மேலே சென்றவள்.
பிரஷ் செய்துவிட்டு முகத்தை கழுவி விட்டு அப்படியே வந்தாள்.
வசுமதி அவளை உட்கார வைத்து மசாஜ் செய்ய! அப்போ உனக்கு உங்க கங்கா அம்மாசி தான் பிடிக்குமா! என்று கேட்டார்.
எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும்! அவங்களை எல்லாம் எனக்கு பிடிக்கும்! அதுவும் அவங்க அதை விவேகவோட அம்மா! என்று பொய் கூற..
ரவிச்சந்திரன் வசுமதியை பார்த்துர் உன் மனசுல குழந்தை நினைச்சுட்டு இருக்கியா? இதுக்கு போய் போட்டி போட்டுட்டு இருக்க பொறாமை புடிச்சவளே! என்று கூறினார்.
உங்க வேலைய நீங்க பாருங்க என்று அதட்டி விட்டு முடியை பிடித்து நன்றாக மசாஜ் செய்து மெதுவாக பின்னி விட்டார்.
ரிதம் வசுமதியின் கைகளைப் பிடித்து முத்தம் வைத்து சொர்கமா இருக்கு வசுமா! நீங்க வேற லெவல் தெரியுமா! இந்த மாதிரி எனக்கு யாருமே பின்னி கொடுத்ததில்லை! விவேகா கூட எனக்கு பின்ன மாட்டானா?! பாத்துக்கோங்க! அவளோட ஜடையை பிண்ண மாட்டா! எப்பவுமே கொண்டை தான் போட்டுக்கிட்டு இருப்பாளாம்! எனக்கே கங்கா மச்சி தான் சொன்னாங்க! என்று உருட்டுகளாக உருட்டிக் கொண்டிருந்தாள்.
அப்படியா என்று ரவிச்சந்திரன் கேட்க..
ஆமா தாத்துர் எப்பவும் குளிக்கவே மாட்டா! என்று சொல்ல..
வசுமதி சிரித்துக் கொண்டே நீ குளிச்சிட்டியா என்று கேட்டார்.
நானா? நான் இப்பவே போய் குளிக்கிறேன்! என்று மேலே ஓடி விட்டாள்.
வசுமதி சிரித்துக் கொண்டே அவளை பார்த்தார்.
*
அடுத்த நாள் இங்கே சத்யதேவ் அவனுடைய நேர்காணல் அனைத்தையும் முடித்தவன் இன்று இதழினியின் முகம் கொஞ்சம் சோகமாக இருக்க… அதை காலையிலேயே நோட் செய்தான். அதனால் அவளை பார்த்துவிட்டு வரவேண்டும். என்று திட்டமிட்டான்.
எப்படியும் இன்னிக்கி டாடி போயிருப்பாங்க சோ, பாப்பாவ நம்ம நாளைக்கு போய் பார்த்துக்கலாம் என்று நினைத்தான்.
அடுத்த நாள் மாலை ஒரு நாட்டியம் அரங்கேற்றம் பெங்களூரில் உள்ள பழமையான கோவிலில் இதழ்னிக்கும் ருத்ரனுக்கும் நடக்க இருக்கிறது. இருவரும் தனித்தனியாக அரங்கேற்றம் செய்ய போகிறார்கள்..
அவள் ருத்ரன்க்கு போன் செய்தாள். அரங்கேற்றம்னு சொல்ற? எப்படி உனக்கு இது தெரிஞ்சது? என்று கேட்டான்.
திடீர்ன்னா! திடீர்னு தான்! உனக்கு விருப்பப்பட்டா வந்து ஆடு! இல்லன்னா போடா! என்று இதழ் கூற..
உன் பேச்சை ஒண்ணும் சரியில்லையே! இந்த ரெண்டு மூணு நாளா ரொம்ப டிஃபரண்டா இருக்க! என்ன விஷயம்?
ஒரு விஷயமும் இல்லை எனக்கு ரொம்ப மனசு எல்லாம் ஒரு மாதிரி இருக்க, அதனால அரங்கேற்றம் பண்ணனும் டான்ஸ் ஆடணும்னு தோணுச்சு. வீட்ல ஆடுனா அம்மா கண்டுபிடிச்சிடுவாங்க! அதனால கோவில் அரங்கேற்றம் பண்ணா எனக்கு கொஞ்சம் திருப்தியா இருக்கும்! நீ என் துணைக்கு வரதா இருந்தால் வா! இல்லன்னா போடா! என்று கூற..
சரி நான் வரேன் என்று அவனும் கிளம்பினான். இந்த செய்தி சத்திய தேவ்க்கு எனக்கு தெரிந்தது. அவனும் தன் தங்கையின் அரங்கேற்றத்தை பார்க்க கிளம்பினான்.
அழகாக மயில் வண்ண நிறத்தில் அந்த நாட்டிய உடையை அணிந்து கொண்டு அவளுடைய இடுப்புக்கு கீழ் இருக்கும் முடியை நன்றாக பின்னி நாட்டியத்திற்கு தேவையான ஒப்பனைகள் ஆபரணங்கள் என அனைத்தையும் போட்டுக்கொண்டு அந்த அரங்கேற்றத்திற்கு கிளம்பினாள்.
சிவன்யா மாலை அவளுடைய அறைக்கு வர அங்கே இதழ் இல்லை!
எங்கே போனா? என பதட்டத்துடன் அவளுக்கு போன் செய்ய போக அவளே போன் செய்தாள்.
அக்கா! என இதழ் பதிலளிக்க
எங்கே இருக்க? என சிவன்யா கேட்க..
“அக்கா நான் கோவிலில் அரங்கேற்றம் பண்ண வந்திருக்கேன். என் கூட தீரா இருக்கான்! என்னாச்சு? அதான் உனக்கு நானே போன் பண்ணேன்!”
“ஒன்னும் இல்ல சும்மா!”
அக்கா அந்த கேஸ் என்னாச்சு? இன்னைக்கு ஆஜரானாங்களா என்று கேட்க..
சிவன்யா புருவத்தை சுருக்கிக் கொண்ட இப்போ எதுக்கு அந்த விஷயத்துல ஓவரா இன்ட்ரஸ்ட் காமிக்கிற? நேத்தே நான் உன்ன அத பத்தி மறக்க சொன்னேன்! என்ன பாப்பா? என்று கேட்க
ஒன்றும் இல்லக்கா சும்மா கேட்டேன்! நான் இப்போ ரொம்ப தைரியசாலி என்று இதழ் சொல்ல..
உடனே சிவன்யா தீவிரத்துடன் அந்த கேஸ் வாய்தா நாளைக்கு அவன் கோர்ட்டுக்கு வரான்னு நினைக்கிறேன்!
அப்படியா இதழ் கேட்க…
சிவி சலித்துக் கொண்டே எப்படியும் அதை அவங்க ஈஸியா டேக்கில் பண்ணிடுவாங்க! இன்னொரு விஷயம் தெரியுமா? என்று சிவன்யா சொல்ல..
என்னக்கா என்று இதழ் அவளின் வார்த்தைகளை கவனித்தாள்..
அந்த சர்வேஸ்வரன் நம்ம அவனோட கேஸ் அந்த கோர்ட்ல நடந்துட்டு இருக்கு ஆனா அது இல்லாம அவன் ஷூட்டிங் எடுக்கணுமா? அதுக்கு பர்மிட் பர்மிஷன் போட்டு பக்கத்திலேயே செட்டு போட்டு அங்க சீன் எல்லாம் எடுக்கிறதா இருக்கான்! என்று சிவன்யா கூறினாள்.
ஓ அது வேறயா நாளைக்கு நம்ம பார்க்கலாம் என்றவள் ஃபோனை வைத்துவிட்டு அதன் பின் நாட்டியத்திற்கு தயாரானாள்.
அந்த கோவிலுக்கு வழக்கம் போல சாமி கும்பிட சைத்ரேஸ் தன்னுடைய அடையாளத்தை மறைத்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தான். அப்பொழுதும் அவனுக்கு ஒரு சில காவலாளிகள் கூட்டத்தில் கூட்டத்தோடு கலந்து அவனுடன் இருந்தார்கள்.
அவன் சாமி கும்பிட்ட விட்டு சரியாக பிரகாரத்தைச் சுற்றி வரும் அந்த நேரம் அங்கே இதழினி அரங்கேற்றம் நடந்து கொண்டிருந்தது.
தொடரும்..
EPISODE 42
சாத்வீக அபிநயம்!! அவளின் இதழ் மச்சம்;
சைத்ரேஷ்வரன் சாமி கும்பிட்டு கொண்டே சரியாக பிரகாரத்தைச் சுற்றி வரும் அந்த நேரம் அங்கே இதழினி அரங்கேற்றம் நடந்து கொண்டிருந்தது.
அவன் பிரகாரத்தை அமைதியான மனநிலையில் சுற்றிக்கொண்டு வர.. அந்த கர்நாடக இசையின் சங்கீதம் அவன் காதுகளில் ஒலிக்க ஆரம்பித்தது. அதிகமாக இந்த சினிமா துறையில் சைத்ரேஸுக்கு சுத்தமாக ஆர்வம் இல்லை, பாடல் கேட்பது, எல்லாம் அவனுக்கு பிடிக்காது. ஏனென்றால் அவனுடைய அம்மாவுக்கு பாடல் கேட்பது, சினிமா போன்ற எதுவும் பிடிக்காது. அவளுக்கு ஆடவும் தெரியாது. பாடவும் தெரியாது. அதனாலயே சைத்ரேஸுக்கு அவனுடைய அம்மாவின் குணத்துக்கு ஒத்தவன். அதனால் அனைத்தையும் தவிர்த்து கடவுளையே எண்ணி நடந்து கொண்டிருந்தான்.
உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகள் காரணமாக உடலில் ஏற்படும் மெய்ப்பாடுகளை உடல் மொழிகளால் வெளிப்படுத்துவது சாத்வீக அபிநயமாகும்.
இந்த மெய்ப்பாடுகளை தான் நவரசம் என்று சொல்வார்கள். மொத்தத்தில் இந்த அபிநயம் மொத்தம் ஒன்பது சுவையா பிரிக்கப்படுது. அதுல அச்சம் , வீரம் , இழிப்பு , அற்புதம், இன்பம் அவலம், நகை ,கோபம், நடுநிலை ,இதெல்லாம் அடங்கும் இந்த வகையான 9 நயத்தையும் நம்மளோட உடல் மொழியால் நாட்டியத்தோட உணர்த்தணும்.
இதழினியுடைய மை பூசிய கண்கள் அவளின் கொடியிடை மற்றும் உடல் அசைவு உடல்நிலை கை முத்திரை அவளுடைய முக பாவம் ஆகியவற்றில் நளினத்தையும் , நயத்தையும் அபிநயமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.
அவள் எடுத்த நடனம் சாத்வீக அபிநயம். நமக்கு திடீரென்று பயம் ஏற்படும் போது உடல் நடுங்கி வியர்த்து அப்படியே கண்களில் அந்த பயத்தை வெளிப்படுத்தும் நாட்டிய பாடலையும் அந்த சாத்விக நயனத்தையும் தேர்வு செய்து அழகாக ஆடிக்கொண்டிருந்தாள்.
பாடலின் இசை மட்டுமே காதில் ஒலித்துக் கொண்டிருக்க… நாட்டியத்தின் முக்கிய கட்டம் வர அனைவரும் கைகள் தட்டும் சத்தம் கேட்டது.
அப்பொழுதும் அவன் நிற்க வில்லை. சைத்ரேஷ் நடந்து கொண்டே செல்ல.. அங்கிருக்கும் ஒரு சிலர் கன்னடத்தில் அனைவரும் நல்லா ஆடி இருக்கா!; அந்த பொண்ணோட கண்ணு ஒரு நிமிஷத்துல… எனக்கே! பயத்தை கொடுத்துருச்சு ! அந்த அளவுல அந்த பொண்ணோட நயம் இருந்தது. இந்த மாதிரி டான்ச நான் பார்த்ததே இல்லை! இதுக்கு முன்னாடி இங்கே அரங்கேற்றம் நடந்திருக்கா! எந்த ஊரு? இங்கே நடக்கும் பூஜை பாஜனைக்கு இன்னொரு முறை அரங்கேற்றம் பண்ண வைக்கணும்! என பேசி கொண்டிருக்க.. அப்பொழுதும் சைத்ரேஸ் நிற்கவில்லை நடந்து கொண்டே சென்றான்.
அவனது கவனம் முழுவதும் பிரகாரத்தை சுற்றுவதில் தான் இருந்தது. சரியாக அந்த நேரம் அவனுக்கு முன்னால் கொஞ்சம் தூரத்தில் சலங்கை சத்தம் கேட்டது. மெதுவாக ஒவ்வொரு அடிகளாக பொறுமையாக வந்தவன். அவளும் பொறுமையாக வந்தாள். இருவரும் முச்சந்தியில் சந்திக்க வேண்டும்.
அந்த மாதிரியான நிகழ்வு சைத்ரேஷ் இருக்கைகளையும் கூப்பி சிவ.. சிவா.. சிவ..சிவா என சொல்லிக் கொண்டே வந்தவன். எதிரில் அவள்… அவள் இதழினி கையில் உள்ள வளையலை சரி செய்து கொண்டே தலையை தாழ்த்தி… நடந்து வந்து கொண்டிருந்தாள்.
“ஒரு நிமிடம் ஆணவனுக்கு மூச்சு முட்டியது அணங்கே பெண்ணவளின் விஜயத்தில் !” ( அணங்குதல் என்றால் ஒலித்தல், விரும்புதல், அஞ்சுதல், வருத்துதல் என்று பொருள்)
“ஒற்றை நாட்டியத்தில் சாத்விக நயனத்தில் அஞ்சுதல், வருத்துதல் என மொத்தத்தையும் சலங்கை ஒலியாலும் ஆடி அரங்கேற்றம் செய்தவள். குனிந்த தலையுடன் கொள்ளை அடித்தாள். ஈஸ்வரனை சைத்ரேஷ்வரனை!”
சைத்ரேஷ்க்கு அவளின் முகத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. முதன்முதலாக ஒரு பெண்ணின் முகத்தை பார்க்க வேண்டும்! என்று ஆசை தோன்றியது. அவனது பாதை தடைப்பட்டது.
இதழினி நேராக அருகில் இருக்கும் சத்திர மடத்துக்கு சென்றாள். பிரகாரத்தை சுற்றி வந்தவனுடைய சிந்தை செயலிழந்து அதை இடைநிறுத்தி அவனுடைய பாதை நேராக அவள் பக்கம் திரும்பினான்.
நேராக இதழினியின் பின் சென்றான். அந்த சலங்கை ஒளியில் ஜல் ஜல் எனும் ஓசைக்கு பதிலாக ஒரு மெல்லின இடயுடன் நடை புது நாட்டியமாக தோன்றியது. அத்தனை அழகாக இருந்தாள்.ஆனால் அவளுடைய முகத்தை பார்க்க முடியவில்லை.. ஆனால் விடாமல் நேராகச் சென்றான்.
ஏன் அவளோட முகத்தை பார்க்க தோணுது? எதுக்கு நாம இப்ப பின்னாடி போயிட்டு இருக்கோம் என்று நினைத்தவன்.
ஹே சைத்ரேஷ் என்ன இது? என்று மண்டைக்குள் அறிவு அவனை அழைக்க.. சட்டென தன்னிலைக்கு வந்தவன். திரும்பினான்.
ஹலோ எக்ஸ்கியூஸ் மீ என்று அழைத்தாள்.
நம்மளை தான் கூப்பிடறாளா? என்று ஆர்வத்துடனே திரும்பிப் பார்த்தான்.
ஆனால் சைத்ரேஷின் பாதுகாவலர்களின் ஒருவனைத் தான் அவள் அழைத்திருக்கிறாள்.
What மேம் என்று கேட்க..
if you don’t mind இந்த பாட்டிலை திறந்து கொடுக்க முடியுமா என்று கன்னடத்தில் கேட்டாள்.
அந்த காவலாளி வாங்கி புது பாட்டிலின் முடியை கழட்டி கொடுத்தார்.
அவளது கையில் உள்ள அந்த சிவப்பு நிற மருதாணி யின் வாசம் சைத்ரேஷின் நாசியை நிறைத்தது.
அவளது முகத்தில் உள்ள ஒப்பனையை கலைக்க போகிறாள். சைத்ரேஷ் திரும்பிப் பார்த்தான்.
அந்த பாதுகாவலர் அதை கழட்டி கொடுக்க அதை வாங்கிக் கொண்டு அந்த மட சத்திரத்திற்கு முன்னால் அமர்ந்தவள் . முதலில் காதில் உள்ள காதணிகள், அதன் பின் தலையில் வைத்த நெத்திச்சுட்டி, ஆரம், நெக்லஸ், ஒட்டியானம் என அனைத்தையும் ஒவ்வொன்றாக கலட்ட ஆரம்பித்தாள்.
அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவளுடைய ஒவ்வொரு ஆபரணத்தையும் கழட்டும்போது இதழினியின் முகத்தில் சின்ன முக சுணக்கம் கூட பார்க்க மிகவும் அழகாக இருந்தது. தலையில் இருந்து ஒவ்வொரு ஹேர் பின்னையும் கழட்ட அவளுக்கு வலி ஏற்படும் நேரம் முகத்தில் சினுங்க சுருக்க அதை பொறுத்து கொள்ளும் பொருட்டு உதட்டை கடித்து கொண்டே அவள் செய்யும் பாவனை கொள்ளை அழகு! இப்பொழுது சலங்கை கழற்றுவதற்கு முன் கண்ணை மூடி இரண்டு நிமிடங்கள் முணுமுணுத்தவள். மீண்டும் கண்ணை திறந்து சலங்கையை கழட்டி வைத்தாள்.
இதை பார்ப்பதற்கு சைத்ரேஷுக்கு ஒரு வண்ண ஓவயம் அதில் இருக்கும் வண்ணங்களை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வைப்பதை போல் இருந்தது. அவ்வளவு எழில் ஓவியமாக அந்த மடத்தின் முன்னால் அமர்ந்திருந்தாள். இன்னும் ஓவியத்தின் அழகு கூட குறையும் ஆனால், இவளின் அழகு!
எதுக்கு ஆயில் என அவனுடைய அறிவு கேட்க அவள் அதற்கு பதில் சொல்லும் பொருட்டு கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயை எடுத்து கண்ணில் பூசி அவளின் மை பூசிய இரண்டு கண்களையும் துடைத்து கள்ள மாவு தேய்த்து முகத்தை கழுவினாள்.
முகத்தை கழுவி துடைக்க அவளின் உதட்டில் மச்சம் எடுத்துக்காட்டியது.. மச்சம் இருப்பதால் இதழ் அழகா! இல்லை அவளின் இதழில் இருப்பதால் அந்த மச்சத்துக்கு இத்தனை அழகா? என பட்டி மன்றம் நடத்தலாம்.
பெயர் என்ன என கேட்கலாமா? என யோசித்து கொண்டிருக்கும் நேரம் அவளின் போன் ஒலித்தது. ஹே தீரா எங்கே டா இருக்க? என அவள் பேச அப்போ நீ என் டான்ஸ் பார்க்கலயா டி பிராடு என ருத்ரன் கிட்ட தமிழில் பேசி கொண்டிருந்தாள்.
தமிழ்! தமிழ்! தமிழ்! இவள் அம்மா ஊரு! என இன்னும் பூரித்து போனான். சைத்ரேஷ்! உள்ளுக்குள் பேரானந்தம். இப்போ நம்ம எதுக்கு ஓவரா எக்ஸிட்மென்ட் ஆகுறோம் என்று நினைத்தவன்.. நடந்து செல்ல மீண்டும் அவளை பார்க்க தோன்றியது. சரியாக அந்த நேரம் திரும்ப.. அவனுக்கு சர்வேஸ்வரனின் பர்சனல் அசிஸ்டன்ட் கிட்ட இருந்து போன் வந்தது!
என்ன ஆச்சு? இன்னிக்கும் கால் பண்றான்? என்று நினைத்துக் கொண்டே போனை எடுத்தவன்.
சொல்லுங்க! என்று கேட்க..
சார் ஒரு பிரச்சனையாகி போச்சு!
மறுபடியும் பிரச்சனையா? என்று சைத்ரேஸ்க்கு சலிப்பாக இருந்தது. என்னாச்சு? என்று கேட்டான்.
அது அந்த தீத்யா கூட..
என்னாச்சு? அண்ணா என்ன பண்ணான்?
அது அவங்க சார் கூட இருந்தாங்களே!
அதுல என்ன பிரச்சனை? என்று சைத்ரேஷ் புருவம் நெருக்கிக்கொண்டே கேட்க..
அது இல்ல சார் அவங்க அந்த அறையில் இருந்து போட்டோஸ் எடுத்து இருக்காங்க!
அத கேட்டதும் உடனே சைத்ரேஸ் திடுக்கிட்டு அதுல அண்ணா இருக்கானா? என்று கேட்டான்
இல்ல சார் ஆனா பாதி பேருக்கு அது அந்த அறைனு சர்வேஷ் சார்துதான் அப்படின்னு தெரிஞ்சிருச்சு! அது சோசியல் மீடியாவுல இப்போ பரவிட்டு இருக்கு! என்று தாங்கிக் கொண்டே கூறினான்.
சைத்ரேஷுக்கு நிம்மதி தேடி வந்த இடத்தில் இவ்வளவு நேரமும் நன்றாக போய்க் கொண்டே இருந்த நேரத்தில்… திடீரென டென்ஷன் ஆனது. என்ன சொல்றீங்க?. என வேகமாக சோசியல் மீடியா பக்கம் சென்றான்.
நீங்களே பார்த்திட்டு சொல்லுங்க சார்! என அவன் காத்திருக்க…
தீத்யா அவளுடைய பக்கங்களில் அந்த அறையில் ஒரு ஆண் உபயோகப்படுத்தும் வாசனை திரவியத்தை கையில் வைத்துக்கொண்டு அந்த கை மற்றும் களைந்த படுக்கை என எடுத்து பதிவிட்டு இருந்தாள்.
இதை எல்லாம் என்ன பண்றதுனே தெரியல! ஐயோ என்று சைத்ரேஷ் டென்ஷனாக ஹலோ!
சார் என அசிஸ்டன்ட் அழைக்க..
சொல்லுங்க என்று அவன் பேச ஆரம்பித்தான்.
இப்போ என்ன சார் பண்றது என்று அசிஸ்டென்ட் பிரபு கேட்க..
நான் ஏதாவது பண்ணி அந்த போஸ்டை எல்லாம் ரிமூவ் பண்ண டிரை பண்றேன்! அப்படி பண்ணா இன்னும் தெரியுமே! நான் என்ன பண்ணட்டும்? என்று சைத்ரேஸ் கேட்டான் .
சார் நீங்க ஒரு தடவை சர்வேஷ் சார் கிட்ட பேசுங்க.. இது மாதிரியெல்லாம் என்று சொல்ல வர..
உன்னால பேச முடியுமா என்று சைத்ரேஷ் கேட்டான்.
சார் அது வந்து என்று தயங்க சரி போன வை நான் ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கிறேன்! என்று சைத்ரேஷ் போனை வைத்துவிட்டு பின்னால் திரும்பி பார்த்தான். அங்கே அவள் இல்லை.. அவன் பெரு மூச்சை விட்டு கிளம்பினான்.
ருத்ரன் போன் செய்து அவளை வர சொல்ல அங்கிருந்து எப்போதோ இதழ் எழுந்து சென்று விட்டாள்.
அனைத்து நகைகளையும் வாங்கி பெட்டியில் அடக்கியவன். உன்னை பார்க்க சக்தி மாமா வந்திருக்காங்க? என்று ருத்ரன் கூற..
அண்ணா வா! என்று திடுக்கிட்டு பார்த்தாள்.
என்னாச்சு பார்க்க வர கூடாதா! என்று ருத்ரன் கேட்க..
ஒன்னும் இல்ல என்று சமாளித்து விட்டு அவள் செய்து கொண்டிருக்கும் வேலையை தொடர..
அப்புறம் எதுக்கு ஷாக்கா கேட்கிற? நேத்து முகத்தை தொங்க போட்டுட்டு வந்தியேமா! மாமா புலம்பி தள்ளுறாரு! என்று ருத்ரன் சொல்ல..
இன்னொரு பக்கம் சத்யதேவ் அவர்களின் அருகில் வந்து நின்றான். குக்கூ என்று அழைக்க..
அண்ணா என்று சிரித்துக் கொண்டே திரும்பினாள் .
என்னாச்சு நாட்டியம் ஆடி இருக்க? என்ன பிரச்சனை? என்று கேட்டான்.
ஒன்னும் இல்லன்னா! சும்மா தோணுச்சு! கோயில்ல ஆடும்போது, மனசுக்கு கொஞ்சம் நல்லா இருக்கும்! அதனால தான் என்று இதழ் கூற
அப்படியா என்று புருவத்தை நிறுத்தி கேட்டான். நிஜமாகவே அவ்ளோதான்!
வேற ஒன்னும் இல்ல? நிஜமா சத்ய தேவ் அண்ணா என்று இதழ் சொல்ல..
சரி வா உன்ன கொண்டு போய் சிவன்யா கிட்ட விடுறேன் என்று கூறினான்.
சரி என முகத்தை கழுவி அந்த மயில் வண்ண பரத நாட்டிய உடையை மாற்றிவிட்டு சாதாரண உடைக்கு வந்தவள். ஜடையை பிரித்து கொண்டையிட்டுக் கொண்டே… வந்தாள்.
சத்யதேவ் மற்றும் இதழ் முன்னால் நடக்க எனக்கும் வெயிட் பண்ணுங்க.. நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன்! என்று சாமி கும்பிட்டுக் கொண்டு காலில் உள்ள சலங்கையை கழட்டி பெட்டியில் வைத்தான்.
அவனும் நன்றாக உடையணிந்து அப்படியே தன்னுடைய அழகான டிரான்ஸ்பர்மேஷனுக் ருத்ரன் ரௌத்திரனாக மாறி வெளியே வந்தான்.
இதழினி கொஞ்சம் சந்தோஷமாக அண்ணா அங்க போலாமா? எனக்கு அது வேணும்! இது வேணும்! என்று கேட்டுக் கொண்டே மூவரும் ஜாலியாக வந்தார்கள்.
சத்யதேவியின் பார்வை இதழின் மீது இருக்க.. ருத்ரனும் அதை கவனிக்க தன் செய்தான்..
ஒரு வழியாக அவளை ஹாஸ்டலில் கொண்டு வந்து விடவும், சரி அண்ணா இன்னைக்கு நான் ஃபுல்லா சாப்பிட்டேன்! பயங்கர டயர்டா இருக்கு! என்று உடலை வளைத்தவள். நான் போய் தூங்குறேன்!; கால் எல்லாம் வலிக்குது! என்று கூறிக்கொண்டே உள்ளே சென்றாள்.
வீட்டுக்கு வரியா நான் உனக்கு சுடுதண்ணி வச்சு கொடுக்கிறேன்! கால பதமா பிடித்து விடவா? என்று சத்திய தேவ் கேட்க..
ஒன்னும் பிரச்சனை இல்ல! தூங்கி எழுந்தா சரியா போயிடும்! நாளைக்கு கோர்ட்ல முக்கியமான ஒரு கேஸ் இருக்கு! அதுக்கு கண்டிப்பா போகணும்! அதனால நான் போறேன் பாய் என சிரித்துக் கொண்டே உள்ளே சென்று விட்டாள்.
சத்யதேவ் மற்றும் ரௌத்திரன் இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
என்ன மாமா குக்குவ போலீஸ் பார்வை சாரி அப்படி பார்த்தீங்க? என்னாச்சு எதுவும் பிரச்சனையா? என்று கேட்க..
அவளோட முகம் ஒரு மாதிரி நிஜமாகவே பயமா இல்லையா? என்று சத்யதேவ் கேட்டான்.
புரியல மாமா! அவ அந்த நயனத்தை தானே ச்சூஸ் பண்ணி ஆடுனா! என்று கூறினான்.
இல்ல ருத்ரா அவ கொஞ்சம் டிஃபரண்டா இருக்க மாதிரி எனக்கு தோணுது! என்று சொன்னவன். நீ அவகிட்ட பேசுறியா? எல்லாத்தையும் உன் கிட்ட ஷேர் பண்ணுவாளா? என்று சத்திய தேவ் கேட்க..
என்ன மாமா? எனக்கு அப்படி தோணல? அவ தான் எனக்கு போன் பண்ணி, நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஆடலாமா? அப்படின்னு கூப்பிட்டா! அதனால தான் நானும் வந்தேன்! என்று ருத்ரன் பதில் அளித்தான்.
சரி ஓகே நீ அவளை கொஞ்சம் கண்காணி டா! எதைய வாய தொறந்து அவ சொல்ல மாட்டா! அதுதான் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு! மறுபடியும் பயபட்டு அவளுக்கு எதுவும் ஆகுடுச்சுன்னா! இன்னும் சிவியர் ஆகிடுவா!
அதெல்லாம் ஒன்னும் நடக்காது மாமாn உங்களுக்கு சிவன்யா பத்தி தெரியாதா? அக்கா ரொம்ப போல்டு மை விழி மாமி மாதிரியே! அதனால இதழினி அங்க சிவன்யா அக்கா கூட இருப்பது தான் சேப்! அதேபோல அந்த பழசை எல்லாம் மறக்கணும்னா, அவ கொஞ்சம் தைரியமா இருக்கணும்! அது சிவன்யா அக்கா கூட இருந்தா மட்டும் தான் அவளுக்கு அதெல்லாம் பேஸ் பண்ண கத்துக்குவா! என்று ருத்ரன் கூறினான்.
சரி ஓகே என்று சத்ய தேவ் கூறினான்.
மாமா உங்ககிட்ட இன்னொரு விஷயம்!
என்ன? என்று சத்ய தேவ் கேட்க..
அந்த நியூஸ பாத்தீங்களா? என்று ருத்ரன் கேட்டான்.
எந்த நியூஸ் என்று சத்திய தேவ் ஒன்றுமே தெரியாதது போல் கேட்டான்.
ருத்ரன் அமைதியாக இருக்க..
ஏன் நீ அதை நோட் பண்ணிட்டு இருக்கியா? என்று சத்திய தேவ் கேட்டான்.
இல்ல சும்மாதான் கேட்டேன் என்று ருத்ரன் கூறினான்.
இது மாதிரி ஆயிரம் செய்தி வரும்! போகும்! அது எல்லாம் நம்ம பெருசா எடுத்துக்க கூடாது! ஆனா நடக்க வேண்டிய விஷயம் நடந்தே தீரும்! யாரால மாற்ற முடியும்? என்று சத்திய தேவ் கூற..
என்ன மாமா சொல்றீங்க என்று ருத்ரன் கேட்க.
ஒன்னும் இல்ல என்ற அவன் நேராக வீட்டுக்கு சென்று விட்டான். ருத்ரன் அவனுடைய வீட்டுக்கு சென்று விட்டான்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது இதழினி தன்னையே கொஞ்சம் தைரியப்படுத்திக் கொண்டு கிளம்பினாள்.
இன்னிக்கு அவன பாக்க போறேன் அந்தப் பாவியை பார்க்க போறேன் பழி வாங்காம விடமாட்டேன். எங்க தாத்தா! எங்க அம்மாச்சி! நான்… என உதட்டை கடித்தவள். கூடிய சீக்கிரத்தில் எல்லாமே மாறும்! பழி வாங்காம விடவே மாட்டேன். என்று நினைத்துக் கொண்டாாள்.
இங்கே சர்வேஷ் வேட்டை மானை பார்க்க போகிறான். முதலாம் சந்திப்பு நாளை நடக்க போகிறது.
பார்ப்போம்!
யாருக்கு யாரோ!
தொடரும்..
EPISODE 43
அந்த கோர்ட் வாசலில் அனைத்து இடங்களும் பரபரப்பாக இருந்தது நிறைய பாதுகாப்புகள் மற்றும் போலீஸ் என கூட்டமாக இருக்க… இன்னொரு பக்கம் ஷூட்டிங்கு உண்டான வேலையும் நடந்து கொண்டிருந்தது.
அவர் வரப்போறாரு! சர்வேஷ் வந்துட்டாரா? என்று கேட்டுக் கொண்டிருக்க..
ஒரு ஃபாரின் காரில் வெண்ணை போல் வழுக்கிக்கொண்டு அந்த நீதிமன்றத்தின் முன்னால் வந்து நின்றது. முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு சில பாதுகாப்பு படைகளுடன், காரில் இருந்து ஒருவர் கதவை திறந்து விட… ஆறடி ஆண் மகனும் அசராத தோற்றத்தில் கம்பீரத்துடன் கண்ணாடி அணிந்து வெளியே வந்தான்.
அவனது அம்மாவை போல அந்த கண்ணாடி!; எப்படி என்றால்? இந்த சர்வேஸ்வரன் அவ்வப்பொழுது முகத்தை பாவமாக வைத்துக் கொள்வதற்கு மட்டும் கண்ணாடியை பயன்படுத்துவான்.
அதற்காகத்தான் இந்த கண்ணாடி! அந்த நேரம் அவனது போன் அலறியது.
ஃபோனை எடுத்து பார்க்க ஸ்ருதி என்று இருந்தது. எடுத்து காதில் வைத்தான்.
ஹலோ!
அண்ணா! சாரி அண்ணா! எல்லாமே என்னால தான்ல்ல என்று அழுகை குரல் கேட்டது.
சர்வேஷ் கொஞ்சம் புருவத்தை சுருக்கி கொண்டு நீ என்ன baby பண்ண? ஒரு பிரச்சனையும் இல்லை! இதெல்லாம் நமக்கு சாதாரணம்! எத்தனையோ நாய் வண்டியில் அடிபட்டு சாகுது, ஆனா அந்த நாய் சர்வேஸ்வரனுடைய கார்ல மோதனத இவனுங்க பிரபலமாக்கி நியூஸ் ஆக்குறானுங்க! நீ விடு பேபி இதெல்லாம் எனக்கு சாதாரணம்! என்று கூறினான்.
அண்ணா இல்லன்னா! பெரியப்பா திட்டி இருப்பாரு! வீட்டுல எல்லாருமே என்னை திட்டுறாங்க! என்று வருத்தத்துடன் கூறினாள்.
அதுக்கு எல்லாம் நீ கவலைப்படாதே! நீ எதையும் ஒரி பண்ணிக்காத!
எப்படி அண்ணா கவலை படாமல் இருக்க சொல்றீங்க? என அவள் கேட்க..
சர்வேஸ்வரன் சிரித்துக் கொண்டே யாருக்கும் நம்ம கவலைப்பட கூடாது! நம்மளோட பாதையில நம்ம போயிட்டு இருக்கணும்! எத்தனை கேஸ் வேணாலும் நடக்கட்டும்! அண்ணா நான் நடத்துறேன்! நீ ஃப்ரீயா கார் ஓட்டு! என்று கூறினான்.
உனக்கு வருத்தம் இல்லையே என்று ஸ்ருதி உண்மையான வருத்தத்துடன் தான் கேட்டாள். ஏனென்றால் அவளுக்கு சர்வேஸ்வரனை மிகவும் பிடிக்கும்!
இல்ல பேபி!
எனக்கு இப்ப கூட வருத்தமா தான் இருக்கு! எனக்கு தூங்கி எந்திரிச்சதும் தான் எல்லாமே ஞாபகம் வந்தது . குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாது தப்புதான! என மீண்டும் சுத்தி கவலையுடன் சொல்ல..
நீ கவலை படாத என கூறினான். தன்னுடைய சித்தப்பாவின் பெண் ஸ்ருதியிடம் மட்டும் தான் இந்த கனிவான பேச்சு! மற்றபடி வீட்டில் இருக்கும் சைத்ரேஸ் மற்றும் இமையா இருவரிடமும் அவன் பேசவே மாட்டான்.
சைத்ரேஸ் தான் வழிய போய் பேசி அவனுக்கு உண்டான விஷயத்தை கேட்டு செய்வான். ஆனால் சர்வேஸ்வரன் கோடு போட்டு “நில்” என்று சொன்னால் சைத்ரேஸ் அந்த கோட்டுக்குள் நிற்பான். அந்த அளவுக்கு தன் அண்ணன் மேல் பாசம்.
இது எல்லாம் சுத்தமாக அவர்களின் அம்மா அப்பாவிற்கு பிடிக்காது தான். ஆனால் சைத்ரேஸ்வரன் சிறுவயதிலிருந்தே அவனுடைய அம்மாச்சியால் வளர்க்கப்பட்டதால் இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்!!என்று அவர் சொல்லி சொல்லி வளர்த்ததால், சைத்ரேஸ்வரனுக்கு சர்வேேஷின் மீது மரியாதை பாசம் என அனைத்தும் அதிகம்.
சரி இப்பொழுது சர்வேஸ்வரனின் மீது வழக்கு தொடுதிருப்பது யார்? என்று பார்த்தால் அந்த வக்கீல் சமூக ஆர்வலர் சர்வேஸ்வரனின் அவனுடைய குடும்பத்தில் இருந்து நிறைய ரகசிய செய்திகள் வெளி வராமல் இருக்கிறது. வழக்கறிஞர் அந்த வழக்கறிஞர் சமூக போராளி அவருக்கு அவருடைய மகன் பத்திரிக்கையும் வைத்து நடத்துகிறார். இந்த கர்நாடகாவில் போதைப்பொருள் போன்ற சில பிரச்சனையான விஷயங்கள் அனைத்தும் சர்வேஸ்வரனுடைய குடும்பத்தின் பின்னணியில் இருந்து தான் மறைமுகமாக நிறைய இடத்தில் வருகிறது. என்று செய்திகள் வந்து கொண்டே இருக்கும்.
அதாவது சைத்ரேஷனுடைய குடும்ப தொழில் மற்றும் பிசினஸ் அனைத்தையும் அவன் தான் பார்த்துக் கொள்கிறான். அவனுடைய அப்பாவுடன் சேர்ந்து பார்த்துக் கொள்கிறான். சர்வேஸ்வரன் நடிப்பு தொழிலில் இருக்கிறான். ஆனால் இந்த மாதிரியான கடத்தல் வேலைகள் மற்றும் போதை பொருள் உண்டான எந்த வேலையும் சைத்ரேஸ்வரனின் தொழிற்சாலையிலோ எங்கேயும் அந்த மாதிரியான செய்திகள் வந்தது கிடையாது. ஆனால் எப்படி இது நடக்கிறது? என்று ஒன்றும் புரியவில்லை. அது ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க..
இங்கே அந்த வழக்கறிஞர் பத்திரிகையின் முன்னிலையில் சர்வேஸ்வரனின் மீது வழக்கு பதிவு செய்தார். குடித்துவிட்டு கார் ஓட்டியது, மற்றும் ப்ளூ கிராஸிலிருந்து ஒரு வழக்கு இரண்டு வழக்குகள் ஓடிக்கொண்டிருந்தது.
இதழ் மற்றும் சிவன்யா இருவரும் அந்த நீதிமன்றத்தில் ஒரு பக்கம் அமர்ந்திருந்தார்கள்.
இன்னிக்கி கேஸ் எப்படி போகுமோ? என்று இதழ் கைகளை சொடக்கு எடுத்துக் கொண்டே கேட்க..
சிவன்யா அலட்சிய பார்வையுடன் எப்படியும் அவன் இதிலிருந்து தப்பிச்சிடுவான்!
என்னக்கா சொல்ற? என்று இதழ் திரும்பி பார்க்க..
ஆமா என்ன இது கையில் மருதாணி எல்லாம் வச்சிருக்க! நெத்தியில குங்குமம்! நாம என்ன படிக்கிறோம் என்று தெரியுமா ? என்று சிவன்யா கேட்டாள்.
இதழ் உடனே “ அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல! இது என்னோட நம்பிக்கை அதனால தான் நாத்திகத்தையும் ஆன்மீகத்தையும் ஒட்டுக்கா ட்ராவல் பண்றேன்! நான் எங்க சக்தி அண்ணா மாதிரி” என்று கூறினாள்.
இதை கேட்ட சிவன்யா சிரித்துக்கொண்டே இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை! சரியான பயந்த சண்டக்கோழிடி நீ!! என சிவன்யா கூறினாள்.
நான் ஒன்னும் இல்ல என்ற முடியை காதுக்கு ஒதுக்கிக் கொண்டு அந்த கருப்பு நிற கோட்டில் மிகவும் அழகாக இருந்தாள்.
வழக்குகள் ஆரம்பிக்கப்பட்டது.
வழக்கு எண் என்று எப்பொழுதும் போல் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் நீதிமன்றம் இப்பொழுது சர்வேஸ்வரனின் கார் விபத்தை , கார் அத்துமீறலை, கோர்ட்டின் முன் கூட்டி இருக்கிறார்கள்.
வழக்கை தொடர்பவர் பாஸ்கரன்… அப்புறம் குற்றவாளி கூண்டில் சர்வேஸ்வரன் வந்து நிற்க..
அவனுடைய வக்கீல் முகமது அவர் குற்றத்தில ஈடுபட்டதற்கான ஆதாரம் இருந்தாலும், இந்த தப்பு முழுசா ப்ளூ கிராஸ் மேல தான் சொல்ல வேண்டும் யுவர் ஹானர் என்று சர்வேஷனுடைய வழக்கறிஞர் கூறினார்.
என்ன சொல்றீங்க என்று அரசு தரப்பு வக்கீல் பாஸ்கரன் கேட்க..
ப்ளீஸ் என்று சர்வேஷின் வழக்கறிஞர் முகமது பேச ஆரம்பித்தார் .
யூ ப்ரோசீட் நீதிபதி கூறி விட
முகமது ஆரம்பித்தார் இந்த வழக்குல ப்ளூ கிராஸ்ல இருந்து சரியா இந்த சுற்று வட்டார பகுதியில் இருக்கிற நாய்கள், அனைத்தையும் கூட்டிட்டு போயி அதுக்கு உண்டான கருத்தடை மற்றும் அந்த நாய்கள் எண்ணைக்கையை கட்டுப்படுத்த கருத்தடை போன்ற எந்த ஒரு விஷயத்தையும் இந்த அரசு மேற்கொள்ளல! அதே போல தினந்தோறும் எத்தனையோ நாய்கள் செத்து குவியுது! ஆனா அதோட மொத்த பழியையும், இப்படி ஏதாவது ஒரு செலிபிரிட்டி வண்டியை எடுத்துட்டு வரும்போது, தெரியாம மோதிட்டா கூட, அந்த பழியெல்லாம் அவர் மேல தான் வந்து விழுகுது யுவர் ஹானர்!
உடனே பாஸ்கரன் objection யுவர் ஹானர் என்று பாஸ்கரன் பேச வர..
ப்ளீஸ் யுவர் ஆனர் நான் என்னோட கருத்தை முழுமையாக சொல்லிடுறேன் என்று முகமது கூற
நீதிபதி முகமதுவை பேச சொன்னார் .
நடுவுல ஹைவேல போயிட்டு இருக்கும்போது இந்த மாதிரி நாய் மேல வண்டி அடிச்சதுக்காக, நாயை காப்பாற்ற வண்டியை நிறுத்தினால், பின்னாடி வர வண்டிக்கும், முன்னாடி போய்க்கொண்டிருக்கிற வண்டிக்கும், ஆக்சிடென்ட் நடக்குறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு! சோ மொத்த தப்பும் ப்ளூ கிராஸ் மேல தான்! இந்த அரசு அதுக்குண்டான நடவடிக்கை எடுக்கணும்.
பாஸ்கரன் எழுந்து மிஸ்டர் சர்வேஷ்வரன் குடிச்சிட்டு வண்டி ஓட்டி இருக்கிறார். என ஆரம்பிக்க..
இந்த காலத்துல ஏ ஐ மற்றும் வீடியோ மார்பிங் ஆயிரம் உலாவிக்கிட்டு இருக்குது. இங்க எதிர் தரப்பு வக்கீல் சமூக ஆர்வலர் மிஸ்டர் பாஸ்கரன வச்சு நான் கூட இப்ப கூட என்னால ஒரு fake வீடியோவை வெளியிட முடியும்! மார்பிங் அப்படி இப்படின்னு, இப்போ ஏற்கனவே வல்லரசான இந்த இந்திய நாட்டுல இது சகஜமா நடந்துகிட்டு இருக்கு! என்று முகமது கூறிவிட்டு அமர்ந்தார்.
பின்குறிப்பு:( இந்த கதை இப்பொழுது பயணம் செய்வது போலத்தான் இருக்கும் ஆனால் நான் எழுதும் போது இந்தியா வல்லரசு ஆகி விட்டது அப்படின்னு எழுதி இருக்கேன்)
இதையெல்லாம் கேட்டதும் பாஸ்கரன் எழுந்து சிரித்துக்கொண்டேு நல்ல கபட நாடகம் போட்டு இருக்காங்க! ஒரு நாய் மேல இடிச்சதுனால இந்த கேஸ விட்டுட்டா கூட, இதுக்கு முன்னாடி நாலு கேஸ் நடந்திருக்கு! அதுல முதல் கேஸ் என்ன ஆச்சுன்னே தெரியல! அது அப்படியே மூடி மறைச்சுட்டாங்க! கையும் களவுமா அதே இடத்துல பிடிச்சா கூட இவங்க தப்பிச்சு போயிடுறாங்க! இது நல்லதுக்கு இல்லை! இந்த உலகத்துல நீதி செத்துகிட்டு இருக்கு! என பேச
உடனே முகமது எழுந்து இந்த நீதியை காப்பாற்றுவதற்காக தான் எங்க சர்வேஸ்வரன் இப்பொழுது நீதி சம்பந்தமான படங்களை நடிக்க ஆரம்பிச்சு இருக்காங்க! அதே போல ப்ளூ கிராஸ்ல அவரோட பணத்தை வைத்து இரண்டு வண்டிய தானமாக கொடுத்திருக்காரு! இதையெல்லாம் நாங்க பெருமைக்காக சொல்ல விரும்பலை யுவரானார். நீங்கதான் இதுக்கான கரெக்டான தீர்ப்பை வழங்கணும்! என்று சொன்னதும்..
சிவன்யா வெறுப்புடன் பார்த்தாள்.
இதழினியின் முகம் அதற்கும் மேலாக கருத்து போயிருந்தது.
இப்படியாகி போச்சே என்று அவள் முணுமுணுக்க..
இப்படித்தான் நடக்கும் என்று எனக்கு தெரியும் என்று சிவன்யா கூறினாள்.
இல்லக்கா எனக்கு நம்பிக்கை இருக்கு நீதிபதி என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் என்று அவர்கள் கவனம் அங்கு இருக்க..
உடனே நீதிபதி , சர்வேஸ்வரன் அவர் தரப்பில் உள்ள நியாயங்களை எடுத்து வைத்து சொன்னது ஒருவகையில் அரசுக்கு எதிராக இருந்தாலும், அதையும் அரசு சிந்திக்க தான் வேண்டும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு நாய்களை அடித்து வாகன விதிகளை மீறிய வழக்கில் ஆறு மாத சிறை தண்டனை அப்படி இல்லை என்றால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வழங்கி இந்த கோர்ட் தீர்ப்பளிக்கிறது. என்று கூறிவிட்டு எழுந்தார்.
பாஸ்கரன் கையை முறுக்கிக்கொண்டு எழுந்து நிற்க..
சர்வேஸ்வரன் அந்த இடத்தில் இருந்து இறங்கி நேராக முகமதுவின் அருகில் சென்று… இந்த இடத்திலேயே ஷூட்டிங் வச்சுக்கலாமா?
இதை கேட்டதும் பாஸ்கரன் அவனை முறைத்துக் கொண்டிருக்க அவரே எதிர் தரப்பு வக்கீலா இருந்தா நல்லா இருக்கும்! என் படத்துக்கு அவரோட ஃபீலிங்ஸ் ரொம்ப எக்ஸ்பிரஷனோட கண்டிப்பா ஹிட் அடிக்கும்னு தோணுது! அவர் நடித்து கொடுப்பாரா? என்று சர்வேஸ்வரன் ஏகத்தாளமாக கேட்டான்.
இதை கேட்டதும் பாஸ்கரன் முகம் மாற அவர் தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டே நின்று கொண்டிருந்தார்.
சார் நம்ம போலாம் கேசு முடிஞ்சிடுச்சு என்று சர்வேஸ்வரன் முகமது இருவரும் வெளியே வந்தார்கள்.
சிவன்யா எழுந்து முன்னாள் செல்ல இதழ் தன் அக்காவின் பின்னால் ஓடினாள்.
என்ன கா நீங்க சொன்ன மாதிரியே இப்படி ஆகிப்போச்சு என்று வருத்தத்துடன் கூற..
நான் தான் சொன்னேன்ல இது இப்படித்தான் முடியும்! என்று சிவன்யா கூற..
என்னக்கா பண்றது?
நான் அந்த பாஸ்கரன பத்தி ஃபுல்லா விசாரிச்சு இருக்கேன் அவர் கிட்ட ஜூனியரா செய்றதுக்கு எவ்வளவு அவர் எனக்கு வாய்ப்பே கொடுக்கல என்ற சிவன்யா கூறினாள்.
இப்போ நாம என்ன பண்றது? நாம எதுக்கும் இன்னொரு தடவை நாம இந்த சர்வேஸ்வரனை எதிர்க்கிறோம் அப்படின்னு சொல்லி பேசி பார்க்கலாம்! அக்கா என்று இதழ் சொல்ல..
அப்படி பர்பஸோட போனா அவர் நம்மளை ஏத்துக்குவாரான்னு தெரியலையே என்ற சிவன்யா சொல்ல..
அக்கா நீ ட்ரை பண்ணி பார்த்தியா? நீதான் யார்கிட்டயும் இரண்டாவது தடவை ட்ரை பண்ணி பாக்க மாட்டியே! எனக்கெல்லாம் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல! நான் போய் ட்ரை பண்றேன் என்று இதழினி போக..
சிவன்யா ஒரு பெருமூச்சை விட்டு இரு பாப்பா நானும் வரேன் என்று இருவரும் பாஸ்கரனை சந்திக்கச் சென்றார்கள்.
பாஸ்கரன் கோபத்துடன் வெளியே செல்ல சார் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.
என்னம்மா இன்று சிடுசிடப்புடன் திரும்பினார்.
இந்த கேஸ்?
என்ன என்னை திட்ட வந்து இருக்கீங்களா? அந்த சர்வேஸ்வரன்- ஓட ஃபேன்ஸா நீங்க எல்லாம்?.என்று அவர் கடுகடுப்புடன் பேசிக்கொண்டே செல்ல..
இல்ல சார் எங்களுக்கு அவரை எதிர்க்கனும் என்று சிவன்யா கூறினாள்.
இதழ், ஆமா சார் எனக்கும் என்று கூற..
என்ன சொல்றீங்க? என்று பாஸ்கரன் அவர்களை பார்க்க..
அந்த இந்த மாதிரியான நாலு கேஸ்ல அவன் பண்ண அராஜகத்தை எப்படியாவது வெளியே கொண்டு வரணும், இதுக்கு ஏதாவது சொல்யூஷன் இருக்குமா சார் ? நான் உங்ககிட்ட ஜூனியரா சேரனும்னு எனக்கு ஆசை! என்று இதழ் வாயை விட
பாஸ்கரன் அவர்கள் இருவரையும் மேலும் கீழும் பார்த்து அப்போ என்கிட்ட ஜூனியரா சேரனும்னு இப்படி ஒரு விஷயத்தை புடிச்சுகிட்டு வந்து பேசுறீங்களா? இதுக்கு பேசாம அந்த முகமது கிட்ட போய் நீங்க ஜூனியரா சேர்ந்துக்கோங்க! இந்த பகட்டுக்கும் புகழுக்கும் மயங்குற ஆள் இந்த பாஸ்கரன் கிடையாது.
சிவன்யா கொஞ்சம் கோபமாக அப்படி நினைச்சிருந்தா நான்க உங்க வந்து இப்படி வந்து பேசி இருக்க மாட்டோம்! நாங்களும் சமூகத்துக்காக போராடனும் தான் நினைக்கிறோம்! உங்களுக்கு விருப்பம் இருந்தா சேர்த்துக்கோங்க!! எங்களோட திறமையா எப்படி நிரூபிக்கணும்னு எங்களுக்கு தெரியும்!. என்ற t திரும்ப பாஸ்கரன் நடக்க ஆரம்பித்தார்.
இதழினி சார் ப்ளீஸ் சார் ஒரு வார்த்தை ஒரு சான்ஸ் குடுங்களேன்! இது நீதி கிடைக்கிற இடம் தானே! வாய்மையே வெல்லும் என்று சொல்லி இருக்கீங்களே! இவ்வளவு பேசியும் உங்களோட வாய்மை வெல்லச்சா!!எங்களுக்கு ஒரு சான்ஸ் குடுங்களேன்! நான் இப்பதான் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்! என்று கூற
யாருக்கு கீழ நீங்க ஜூனியர்ரா இருக்கீங்க? என்று பாஸ்கரன் நின்றான் சிவன்யாவின் கையைப் பிடித்து இழுத்து வந்த இதழினி “நாங்க வளர்மதி மேடம் கிட்ட தான் … அது எங்க அக்கா ஒர்க் பண்றா! என்று சொன்னதும்..
பாஸ்கர் புருவங்கள் ஆச்சரியமாக வளைந்து அவங்க ரொம்ப பிரில்லியன்ட் ஆச்சே! அவங்க கிட்டயே நீங்க கண்டினியூ பண்ணலாமே! ஏன் என்கிட்ட வந்தீங்க? என்று கேள்விகளை கேட்டார்.
அவங்க இந்த மாதிரியான கேஸ் எல்லாம் இம்பார்ட்டன்ஸ் கொடுக்கிறது இல்லையே! அவங்க கிட்ட இருந்தால் கிரிமினல் லாயர் பட்டமும் பணமும் கிடைக்கும். ஆனால் எங்களுக்கு பணம் முக்கியம் இல்ல. எங்களுக்கு நியாயம் தான் முக்கியம். என்று சிவன்யா கூற..
அதில் ஆச்சரியமடைந்த பாஸ்கரன் இது என்னால ஒண்ணுமே பண்ண முடியாதுமா! நானும் இந்த பீல்டுக்கு வந்து கிட்டத்தட்ட என்னோட அனுபவத்துக்கும் திறமைக்கும் எத்தனையோ கேசுகல பாத்து இருக்கேன்! இந்த 15 வருஷத்துல.. இவன் குறிப்பா இந்த சர்வேஸ்வரன் உடைய பேமிலில ஒரு கேஸ் கூட என்னால வாதாடி ஒரு நியாயம்! இந்த மக்களுக்கு வாங்கி கொடுக்க முடியல! அத்தனை சாலை விதிமீறல்களையும், அத்தனை கொலைகளையும் அவன் பண்ணிக்கிட்டு இருக்கான். எப்படி பண்ணாலும் உயிர் உயிர் தானமா என்று கூறினார்.
அதேதான் சார் இன்று இதழினி பேச..
எனக்கு நான் வெறுத்துப் போயிட்டேன்!! எனக்கு சரியான ஆதாரம் இதுல கிடைக்கல! ஆதாரம் வச்சு தானே பேச முடியும்! என்று பாஸ்கரன் கூற..
ஆதாரத்தை நாங்க கொண்டு வரோம்! உங்களால நடத்த முடியுமா என்று சிவன்யா கேட்டாள்.
என்ன சொல்றீங்க என்ற பாஸ்கரன் புருவத்தை நெருக்கி கொண்டே வெளியில போய் பேசலாமா என்று இருவரும் அங்கிருந்த காபி ஷாப்புக்கு சென்றார்கள்.
அவள் மேலோட்டமாக சில விஷயங்களை குடும்ப விஷயங்களை தவிர்த்து ஒரு அவுட்லைன் கொடுக்க..
அப்படியா அப்போ நெஜமாவே நீங்க ரிஸ்க் எடுக்க போறிங்களா? என்று பாஸ்கரன் கேட்டார்.
எங்களுக்கு ஆதாரம் எங்க கிடைக்கும்னு மட்டும் சொல்லுங்க! மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்று சிவன்யா கூற..
பாஸ்கரன் ஒரு பெருமூச்சை விட்டு இந்த சர்வேஸ்வரன் ஃபேமிலில ஒரு ரகசியம் இருக்கு! இவங்க குடும்பத்துல இருக்குற ஆளுங்க குணம் இவனை மாதிரி இல்ல! இந்த சர்வேஸ்வரனுக்கு ஒரு தம்பி இருக்கான். அவன் ரொம்ப நியாயமானவன்னு சொல்லிக்கிறாங்க! ஆனா இதுவரைக்கும் அவனுடைய தம்பிய வந்து இந்த வெளி உலகத்துக்கு அவங்க அறிமுகப்படுத்தியது கிடையாது! அதேபோல பிசினஸ் எல்லாம் அந்த இவனோட தம்பிதான் பார்த்துக்கிறான்!
அவனோட பெயர் என்னவென்று இதழ் கேட்க..
பாஸ்கரன் சிவன்யாவின் கண்களை பார்த்து நிஜமாவே அவங்களோட பெயர் என்னவென்று உனக்கு தெரியா? என்று கேட்க..
சிவன்யா மெதுவாக புன்னகை செய்தவள் சைத்ரேஸ்வரன் என்று கூறினாள்.
ஆமா பாஸ்கரன் சிரித்துக்கொண்டே உண்மையாகவே உன்ன என்னோட ஜூனியரா வந்தால் நல்லா தான் இருக்கும்ன்னு எனக்கு தோணுது!
இப்ப நாங்க என்ன பண்ணனும் என்று இதழினி கேட்க..
அந்த அவங்களோட பிசினஸ்ல இருக்குற ஒரு குற்றத்தை மட்டும் பிடிச்சு அந்த சர்வேஸ்வரனோட தம்பி அவனோட வாயை மட்டும் ஓபன் பண்ணா, இவன் வலுவா மாட்டிக்குவான்! ஆனா இது சஸ்பென்சா பண்ணனும்! பண்றது யாருன்னு தெரியாதபடி பண்ணனும்! உங்களோட நேம் நான் எப்பவுமே வெளியே கொண்டு வரமாட்டேன்! நான் எப்படிப்பட்ட ஆள் என்று உங்க அக்காவுக்கு தெரியும்! என்று பாஸ்கரன் சிவன்யாவை பார்த்து கூறினார் .
அப்போ நாங்க எப்படி போறது என்று கேட்க உன் பேர் என்ன என்று இருவரையும் கேட்டார்.
சிவன்யா, இதழின தூரிகா என்று சொல்ல..
பாஸ்கரன் சிரித்துக்கொண்டே உன் பேரு தாரணி உன் பேரு துவாரகா என்று கூறினார்.
என்ன சார் சொல்றீங்க இன்று சிவன்யா கேட்க
நீங்க யாருன்னு அவனுக்கு தெரியக்கூடாது!
நீங்க எங்க safety பத்தி நினைக்கிறீங்களா எங்களை மாட்டி விட பிளான் பண்றீங்களா? என சிவன்யா கேட்டாள்.
நான் அவங்க குடும்பம் அவனால நான் என்னோட பையன் டிராக்ல இன்புயூஸ் ஆகி அவன் பைத்தியமாகுற நிலைமைக்கு போயி செத்து இருக்கான். அதனால பழிவாங்கணும்னு தான் நான் இந்த சமூக ஆர்வலர்ல இருந்து என்னோட டார்கெட்ட ஸ்டார்ட் பண்ணேன். என்று பாஸ்கரன் கூறினார் .
அப்போ எங்களை கண்டுபிடிக்க மாட்டானா சார் என்று பாஸ்கரன் சிவன்யா கேட்க
நீங்க வக்கீல், சோ இந்த கோட்டுக்கு ஒரு மரியாதை இருக்கு! வாய்மையே வெல்லும் அதே சமயம் சூதும் கவ்வும்! நீங்க சைலன்டா உள்ள நுழைந்து உங்களுக்கு உண்டான விஷயத்தை எடுக்கலாமா? ஆனாலும் ஆனாலும் நீங்க இதை பண்ண வேண்டாம் என்று கூறி எழுந்தார்.
என்ன சார் சொல்றீங்க வேண்டாமா? என அவர்களும் எழுந்து கொள்ள..சொல்லுங்க சார் என்ன விஷயம்?
ஒரு ரெண்டு பொண்ணுங்கள நான் அவனோட இடத்துக்கு அனுப்புறது எனக்கு சேஃபா தோனல! இவ ரொம்ப மோசமானவன்! அதேபோல வெளியில சொல்ற அந்த சைத்ரேஸ்வரன் எப்படியாப்பட்ட ஆள் அப்டின்னு நமக்கு தெரியாது! அதனால எப்படி உங்கள நான் அனுப்ப முடியும்? நீங்க என் பொண்ணுங்க மாதிரி சொல்ல போனா பேத்திஙக வயசுல இருக்கீங்க! என்னோட இந்த போராட்ட குணம் என் மொத பையனுக்கு பிடிக்காதனால தான், நீ என்னமோ பண்ணிக்கிட்டு இரு அப்படின்னு அவனோட பத்திரிக்கையிலேயே இந்த சர்வேஸ்வரன உயர்த்தி பேசி, நிறைய போடுறான்! ஆனா என்னால் அப்படி இருக்க முடியல! எனக்கு இறந்து போன என் பையன் மேல தான், அவனும் என்னோட உயிர்! இந்த டிரக் அதுதான் என் பையனை அழிச்சது. இதுக்கு நியாயம் கிடைக்கனும்!! என்று தான் நான் போராடிட்டு இருக்கேன்.
மனிதாபிமானத்துக்காக போராடுவோம்! நீங்க எங்களை மதிச்சு சொல்லிட்டீங்கல்ல! இதை எப்படி தாக்கல் பண்ணனும்னு, எங்களுக்கு தெரியும்! நீங்க கவலைப்படாமல் போயிட்டு வாங்க… என சிவன்யா சொல்ல..
பாஸ்கரன் புன்னகைத்துக் கொண்டு ஒரு பெருமூச்சு விட்டவர். அது நடக்குமா மா? ஆமா எனக்கு என்னமோ அப்படியெல்லாம் நடக்கும் என்று நம்பிக்கை இல்லை! நானும் இந்த வயசான காலத்துல என்னால முடிஞ்ச வரைக்கும் போராடுறேன்! நடக்கலையா அதை ஏத்துக்கிட்டு நான் பார்த்துக்கிறேன். ஆனால் நீங்க போகாதீங்க மா! நீங்க என்னோட ஜூனியரா ஜாயின் பண்ணிக்கலாம்! என எழுந்து சென்று விட்டார்.
அதே இடத்தில் இதளினி மற்றும் சிவன்யா இருவரும் அமர்ந்திருந்தனர்.
ஏன் கா அந்த பேர் தெரிந்த விஷயத்தை என்கிட்ட சொல்லவே இல்ல!! என்று இதழ் கேட்க..
எந்த விஷயம் என்று சிவன்யா கேட்டாள்.
இந்த அரக்கனுக்கு ஒரு தம்பி இருக்கின்ற விஷயத்தை சொல்லவே இல்ல என்று இதழ் சொல்ல..
சிவன்யா சிரித்துக்கொண்டே நீ நேத்து அந்த சர்வேஸ்வரன கோவில பாக்கறதுக்காக தான் அரங்கேற்றமே பண்ண விஷயத்தை நீ ஏன் பாப்பா என்கிட்ட சொல்லல?
இதழினி ஒரு நிமிடம் சொடக்கு எடுத்துக் கொண்டே பயத்துடன் தன் அக்காவை பார்த்தாள்.
என்ன நெனச்சிட்டு இருக்க நான் கண்ண மூடிட்டு இருப்பேன்ன்னு நினைச்சுட்டு இருக்கியா? என்னால இந்த கேஸ்ல இன்வாழ்வு ஆகி இப்போவே என்னால ஜெயிக்க முடியும்! அவன் மட்டும்தான் இந்த பெங்களூர்ல பெரிய கொம்பு வச்ச ஆளா? நானும் பெரியவ தான்! என்னோட அண்ணா டிபன்ஸ் மினிஸ்டர்! என்னோட இன்னொரு அண்ணா பேமஸ் பத்திரிக்கையோட சீஃப் எடிட்டர்! எங்க அப்பா மாறன் கம்பெனி- ஓட எம்டி! என்னோட பெரியப்பா தேவ் கார்ப்பரேஷன்-ஓட எம்.டி , தேவ் கார்ப்பரேஷன் ஓட வருங்கால வாரிசு என்னோட மித்துன் அண்ணா! என்னோட அத்தை நடிகை! என்னோட மாமாச்சி தாரா கம்பெனிஸோட எம்டி! இவ்ளோ பேக்ரவுண்ட் இருக்க என்னால அவனை ஈசியா எதிர்க்க முடியும்! ஆனா அவனை அவனை… என சிவன் யா வின் கண்கள் சிவக்க பார்த்தாள். .
என்ன கா? என ஒரு வித பயத்துடன் இதழ் பார்க்க..
நாம யாரு? நம்மல இந்த நிலைக்கு கொண்டு வந்தது யாரு அப்டின்னு அவன் தேடி தவிக்கணும்? அவனை யாருன்னே தெரியாத அளவுக்கு தரமட்டம் பண்ணனும்! அதுதான் என்னோட ஆசை! என்னோட அடையாளத்தை மறைச்சிட்டு தான் நானே பண்ணலாம்னு நினைச்சேன்! அதுக்குள்ள இவரும் அத தான் சொல்றாரு!
என்னக்கா சொல்ற ஏன் கா ரிஸ்க் எடுக்குற அதுவும் இதுல உனக்கு என்ன சம்மதம் இருக்கு! என்னால தான் எல்லாமே என்று இதழ் கேக்க..
ரிஸ்கா பாப்பா! நீ தான் நம்ம வீட்ல சக்தி அண்ணாவையும் நித்தின் அன்னாவையும் சேர்த்து வைக்கும் பாலமே!! அதைவிட நம்ம தாத்தா அம்மாச்சியோட வீடு! நாம எப்படி சந்தோஷமாக இருப்போம்? உனக்கு தெரியும் தானே! நம்ம தாத்தாவுக்கு அந்த ரெண்டு காலும் போனதுக்கு காரணமே அந்த ராஸ்கல் தான்!; அவன நான் சும்மா விடுவேனா? அதேபோல மகிழ் சித்தியை பற்றி உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? அதைவிட எனக்கு பல மடங்கு தெரியும்!; டெய்லியும் நான் மகி; சித்தி கிட்ட போன் பேசுவேன். ஒவ்வொரு தடவ பேசும் போதும் அவங்களோட மனசுல மறைமுகமாக வருத்தம் இருக்கும்! அவங்களோட மனசுல ஒரே ஒரு எண்ணம் தான், நம்ப அப்பாவுக்கு நம்மளோட வீட்டுக்கு வரும்போது அந்த பங்க்ஷன்ல பிரச்சனையாகி இரண்டு கால் போயிடுச்சேனு! மகி மா நினைக்காத நாளே இல்ல!! கலைவாணி அம்மாச்சி பற்றி உனக்கு தெரியாத. அவங்க எவ்வளவு நொடிஞ்சு போயிட்டாங்க தெரியுமா? அவன நான் சும்மா விடமாட்டேன்!! நீ அவனால உன்னையே மறந்து ரெண்டு வருஷமா பயத்துல பைத்தியக்காரி மாதிரி திரிஞ்சியே! அதை மறந்துட்டியா? உன்னை கொஞ்சம் கொஞ்சமா ருத்ராவும் மகி மாவும் தானே நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தாங்க! எத்தனை டாக்டர்ஸ் பார்த்திருப்போம்!! சூர்யா அப்பாவை பற்றி உனக்கு என்ன தெரியும்? ஒவ்வொரு நிமிஷமும் உன்னையே தான் திங்க் பண்ணிக்கிட்டு இருக்காங்க! அதனால தயவு செய்து நீயா போய் எந்த விஷயத்திலும் மாட்டிக்காத! அவனை நான் பழி வாங்குவேன் வாங்கியே தீருவேன் என்று சிவன்யா கூறினாள்.
அக்கா வேண்டாம்!
அப்புறம் ஏன் நீ அங்க போன? எதுக்கு அந்த சர்வேஸ்வரன பாக்கறதுக்கு தான போன!
இதழ் முகம் வாடி குற்ற உணர்வில் தவித்து கீழே குனிந்து கொண்டாள்.
அந்த சர்வேஸ்வரன் எங்க போவான்? என்ன பண்ணுவான்? எல்லாமே தெரியும்! அவன கிட்டத்தட்ட இந்த நாலு வருஷமா நான் பாலோ பண்ணிட்டு இருக்கேன்! ஆனா ஒரே ஒரு விஷயம் தான் எனக்கு தெரிய மாட்டேங்குது! ஆபீஸ்லயும் எல்லா நாளும் இருக்கான்!!நடிக்கவும் செய்யறான்.
அந்த இடத்துல தான் எனக்கு கொஞ்சம் ஜெர்க் அடிக்குது! ஆனால் கூடிய சீக்கிரத்தில் எல்லாத்துக்கும் பதில் கிடைக்கும். என சிவன்யா கூறினாள்.
அடுத்து என்ன கா பண்ண போறோம்! என இதழ் கேட்க..
என்ன? என்ன பண்ண போறோமா! வெளுத்து போடுவேன். இதுக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல படிக்கிற வேலையை பாரு! என சிவன்யா எழுந்தாள்.
அக்கா! என இதழ் கெஞ்ச
Criminal court கிட்ட தான் வளர்மதி மேம் கேஸ் நடக்குது! அங்கே எனக்கு வேலை இருக்கு வா போலாம்! என கூறினாள்.
இருவரும் நடந்து செல்லும் வழியில் ஹரினியின் தம்பி ஆரவ் பள்ளி விடுமுறையில் இருக்கிறான். அவனும் வக்கீலுக்கு படிக்க போகிறான். B.A.B.L லில் சேர வந்தவன். இதழை பார்த்து விட்டு போவதற்காக போன் செய்தான்.
முக்கிய காரணம் சிவன்யா மற்றும் இதழ் இருவருக்கும் மகி உணவு செய்து கொடுத்திருக்கிறார். அதற்காக தான்..
ஹலோ குக்கு அக்கா!
போனில் யாரு என சிவி கேட்க.. ஆதவ் என இதழ் கூறினாள்.
சொல்லு டா தம்பி!.
அக்கா மகி அத்தை உங்களுக்கு லச் கொடுத்து விட்டாங்க! நான் இங்கே கோர்ட் கிட்ட கேட்டில் தான் வெயிட் பண்றேன்!
என்ன? என சிவன்யா கேட்க லஞ்ச்.. அம்மா கொடுத்திருக்காங்க!
அந்த நேரம் சிவன்யாவுக்கு போன் வர.. சரி வாங்கிட்டு வா பாப்பு நான் முன்னாடி போறேன்! என அவள் செல்ல.
கிளாப் போர்ட்!… 3…2… 1 ஆக்சன் ஹீரோயின் சீன் என டைரக்டர் ஷூட் செய்து கொண்டிருக்க
இதழ் அவளுடைய வக்கீல் கோட்டை கழட்டி கையில் பிடித்து கொண்டே அந்த போனி டெயில் குதிரை வால் முடியை நீவி கொண்டே உதட்டை கடித்து கொண்டு இன்று நடந்த கேஸ் பற்றி யோசித்து கொண்டே வந்தாள்.
சீனை உன்னிப்பாக கவனித்து சரி பார்த்து கொண்டிருந்த டைரக்டர் இவங்க தான் ஹீரோயினா? இல்லையே! ஹீரோயின் அனிகா தானே! இது யாரு? சைட் ஆர்டிஸ்ட்டா? சைட் ஆர்ட்டிஸ்ட் இத்தனை அழகா இருக்கா! சூஸ் பண்ணும் போது தப்பா செலக்ட் பண்ணிட்டோமோ! என பார்க்க..
அருகில் கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே எதேட்சையாக டீவியை பார்த்த சர்வேஷ் கண்களுக்கு எள் மச்சம் மின்னும் உதடுகளுக்கு focus வைக்க பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மூக்கு என மேலே செல்ல..
டைரக்டர் கட் கட் யாரு பா என கத்த வர..
வாயை பொத்தி இறுக்கினான்.. சர்வேஷ்..
தொடரும்..
EPISODE 44
சீனை உன்னிப்பாக கவனித்து சரி பார்த்து கொண்டிருந்த டைரக்டர் இவங்க தான் ஹீரோயினா? இல்லையே! ஹீரோயின் அனிகா தானே! இது யாரு? சைட் ஆர்டிஸ்ட்டா? சைட் ஆர்ட்டிஸ்ட் இத்தனை அழகா இருக்கா! சூஸ் பண்ணும் போது தப்பா செலக்ட் பண்ணிட்டோமோ! என பார்க்க..
அருகில் கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே புருவத்தை சுருக்கி கொண்டு ஸ்கிரிப்ட்டை பார்த்துக் கொண்டிருந்த சர்வேஷ் மனதில் அந்த ஹீரோயின் “அனிகா அவளோட ஃபுல் அண்ட் ஃபுல் ஃபேஸ் பார்த்தால் பிளாஸ்டிக் சர்ஜரி ஆப்ரேஷன் தான்! அவள் கூட நடிக்கிற இடத்துக்கு வந்துட்டேன். ஆவுன்ன்னா கன்றாவியா எதோ பண்ணிட்டு வராளுங்க! அவளை விட ஒருத்தி அழகா? அழகுக்கு இங்கே எவனுக்கு அர்த்தம் தெரியுது?” என்று நினைத்துக் கொண்டு எதேட்சையாக டீவியை பார்த்த சர்வேஷ் கண்களுக்கு எள் மச்சம் மின்னும் உதடுகளுக்கு focus வைக்க பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மூக்கு என மேலே செல்ல..
இது அழகு! அந்த உதடே கிளாமரா இருக்கு! என சர்வேஷ் கண்ணாடியை கழட்டி கொண்டே display பக்கம் அவளின் உதடுகளை வருடி பார்க்க..
டைரக்டர் கடுப்புடன் எழ கட் கட் யாருப்பா சீனுக்குள்ள என கத்த வர..
வாயை பொத்தி இறுக்கினான்.. சர்வேஷ்..
டைரக்டர் ஒரு வித பயத்துடன் திரும்பி பார்க்க.. சர்வேஷ் கண்கள் அவளின் உதட்டில் இருந்து முக்கோண மூக்கின் மேல் சென்றது. அடுத்ததாக அப்படியே கண்கள் பார்க்கும் நேரம் மொத்தமாக இப்பொழுது திரையில் அந்த மாச்சத்துக்கு சொந்தக்காரி மறைந்து அனிகா கோபத்துடன் வந்து நின்றாள்.
மேம் என்னாச்சு என ஷுட்டிங் யூனிட் மற்றும் டச் அப் அசிஸ்டன்ட் டைரக்டர் வர..
இதழ் கூட்டத்தை பார்த்து சைடில் விலகி கொண்டு சாரி என கண் இமைக்கும் நொடியில் அங்கிருந்து சென்று விட்டாள்.
சார்! என டைரக்டர் திணரலுடன் திரும்பி பார்க்க அங்கே சர்வேஷ் இல்லை. எங்கே அவள் என எழுந்து நிமிர்ந்து முன்னால் ஓடினான். அனைத்தையும் இரண்டு கண்களையும் சிமிட்டும் நொடியில் நடந்து விட்டது. இதழ் முகத்தை கேமராவால் எடுக்க முடிய வில்லை. சூரியனுடைய செங்குத்து கதிர்கள் அவளின் முகத்தில் பட்டு கிளார் அடிக்க அவளின் இதழை மட்டும் தான் பார்க்க முடிந்தது.
எங்கே போனா? என சுற்றிலும் பார்க்க அங்கே ஆளையே காணோம்! அவள் நேராக ஆதவ் இருக்கும் பக்கம் சென்று விட்டாள்.
போனை எடுத்துக் கொண்டு ஹலோ ஆதவ் எங்கடா இருக்க? என்று பேசிக்கொண்டே அவளுடைய கருப்பு கோட்டையும் கழட்டினாள். அதற்கு முன் வக்கீல் கோட் கழட்டி கையில் வைத்திருந்தவள். இப்பொழுது கருப்பு கோட்டையும் கழட்டி கையில் வைத்திருக்க.. இதழினியின் பின்புறம் மட்டுமே சர்வேஸுக்கு தெரிந்தது.
அவள்தான் எள் மச்சம் இருக்கும் பெண் என்று தெரியாது! சர்வேஷ் அவளின் முகத்தையும் பார்க்கவில்லை.. அவன் நெற்றியை தேய்த்துக் கொண்டே அந்த இடத்தை சுற்றிலும் பார்த்துக் கொண்டிருக்க..
ஆதவ் இதழினியிடம் அக்கா இதுல உனக்கு, சிவன்யா அக்காவுக்கும், லஞ்ச்.. அத்த குடுக்க சொன்னாங்க! மிச்சம் வைக்காம சாப்பிட சொன்னாங்க! நேத்து நீ சரியா சாப்பிடலையாம்! என்று சொன்னவன். ஒரு நிமிஷம் இரு நான் அத்தைக்கு போன் பண்ணி தரேன்! என்று போன் எடுக்க…
டேய் நானே அம்மாகிட்ட பேசிக்குவேன். நீ இப்ப கால் பண்ணி தரணுமா?
இருக்கா அப்புறம் என்னை அத்தை கேள்வியா கேட்டுக்கிட்டே இருப்பாங்க என்று நீட்டினான்.
அதை வாங்கி அம்மா என்று அழைக்க..
எல்லாத்தையும் சாப்பிடு, சாப்பிட்டு தயவு செய்து உங்க அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லுடி! அவர் என்னை கேட்டு குடைஞ்சுக்கிட்டே இருக்காரு! என்று மகி கூறினார்.
சரி என்று புன்னகையுடன் போனை வைத்ததும், சிவன்யாவிடம் இருந்து இதழுக்கு போன் வந்தது.
அக்கா என்று அழைக்க ..
லன்ச் வாங்கிட்டியா?! இப்போ எங்க இருக்க? இன்னும் ஆளையே காணோம்? என்று அழைக்க..
அக்கா நான் இந்த பக்கம் தான் இருக்கேன்! இப்பதான் வாங்கினேன்!
சரி நீ அந்த பக்கம் வரவேண்டாம்! ஷூட்டிங் நடந்துட்டு இருக்கு! ரொம்ப கூட்டமா இருக்கு! அதனால நீ சுத்திக்கிட்டு அந்த ஆலமரம் இருக்கு பாத்தியா, அந்த ரூட் வழியா வா! என்று சிவன்யா சொல்ல..
அவள் ஆதவை வழி அனுப்பி வைத்துவிட்டு வேறு வழியாக சிவன் யாவை பார்க்கச் சென்றாள்.
அந்த நாள் சிவன்யா, இதழ் என இருவருக்கும் கலவரத்துடன் முடிய…
ஆனால் ஒருவனுக்கு மிகவும் எதிர்பார்ப்புடனும் உத்வேகத்துடன் முடிந்தது. யார் அவ? பாக்கணும்! அவளை பார்க்கணும்! அவளோட உதடு என்னா கிளாமர்! ச்ச! ச்ச! ச்ச! நினைக்கவே ஸ்ஸஸ்ஸ் அவ முகம்! அவ மூக்கு! அவளோட கண்ணு! அதை பார்க்க முடியல முகத்தை பார்க்க முடியல!…. F*… பெண்களை நிமிர்ந்து பார்க்காத கண்களை கொண்ட சர்வேஸ்வரனுக்கு முதன் முதலாக ஒரு சறுக்கல் ஏற்பட்டது. இந்த இதழில் என்று கூட கூறலாம்m அவனுடைய சிந்தையில் இந்த உதடு கிளாமரா இருந்தா கூட ஒவ்வொரு தடவையும் அந்த உதடு கூடவே இன்னொரு ஜோடி உதடு உரசும்போது ஒட்டாத இதழ்கள் ஒட்டிக்கொண்டு, அது முத்தமா பிறக்கணும்! அவள் எனக்கு மொத்தமா கிடைக்கணும்! அந்த ஒரு நாள்!… ஒரு நாள்!.. நினைக்கவே f* என்று கண்களை மூடி அவள் தூரத்தில் வந்த அந்த ஷூட்டிங் டிஸ்ப்ளே காட்சிகளை மனதில் ஓட்டி பார்த்தான். நளினமான இடை , நல்ல நடை கூடவே நீண்ட கூந்தல், முகம் பார்க்க முடியவில்லை, எல்லாம் இந்த சூரியனால் வந்தது. சாரி சூர்யாவால் வந்தது. அதாவது சூரிய கதிர்கள் சோ அந்த சூரிய தேவனுக்கே பிடிக்கவில்லை. போலும் அவளது முகத்தை இவனிடம் காண்பிக்க..
என மொத்தமாக அவளை பற்றி நினைத்துக் கொண்டிருந்தான். சர்வேஸ்வரன்!
இங்கே அதே நேரத்தில் வழக்கு சுமூகமாக முடிந்ததை பற்றி பெருமூச்சு விட்ட சைத்ரேஸ்வரன். இனிமேலாவது இவன் எந்த பிரச்சினைக்கும் போகாம இருந்துட்டா! நல்லது! என அமர்ந்தவனுக்கு இதழினியின் முகம் நினைவுக்கு வந்தது. அவளோட கண்ணு! ப்பா! அவளோட மூக்கு! ஹான் என தலையை கோதி கொண்டே அவளோட இதழ் அதுல இருக்குற மச்சம்… இருக்கிறதிலேயே ஈர்ப்பு நிறைந்த வார்த்தையை என்னை கேட்டால் முத்தம் இல்லை! அவளோட உதடு மட்டும்தான்! அந்த உதட்டை விட அந்த மச்சம்!! என்று அவன் ஒரு கனவில் இருந்தான்.
உலகத்திலேயே அன்பின் வெளிப்பாடு முத்தம் ஆனால் அந்த முத்தம் ரொமான்டிக்கான வோர்ட் இல்ல.. உதடு தான் ரொமான்டிக் வேர்ட்! ஏன்னா தாய்க்கும் சேர்க்கும் இருக்கிற முத்தம்? பாசம் முத்தம்!, கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கிற முத்தம்? அந்நியோன்ய முத்தம், காதல் முத்தம்! பாச முத்தம்! ஆனா, காதலனுக்கும் காதலிக்கும் இருக்கிற முத்தம்? ஏக்கம் முத்தம், காதல் முத்தம்! இந்த இடத்தில அவளோட உதடு யார் கூட சேருதோ அது இன்னும் ஈர்ப்பான விசயமா மாறும்!
சைத்ரேஸ்வரன் தலையை கோதி கொண்டே “இதுல அவளோட உதட்டோடு உதடு பொருத்தி காதலனுக்கும் காதலிக்கும் இருக்கிற ஏக்க முத்தமாகவும், காதல் முத்தமாகவும் மாறி, அதிலிருந்து கணவன், மனைவியா அன்னியோன்ய முத்தமாகவும் , காதல் முத்தமாகவும், கூடவே பாசம் முத்தமாக, அவள் என் கருவை சுமந்து, என்னோட குழந்தைக்கும் எனக்கும் சேர்ந்து பாச முத்தமாக, அரவணைக்கும் முத்தமாக மாறனும்! அந்த இதழில்!” என்று பூரித்துக்கொண்டே கவிதையாக எழுதிக் கொண்டிருந்தான். தமிழில்! “ஆனால் இது சாத்தியமாகுமா? அவளுக்கு விருப்பம் இருக்குமா? முதலில் அவளை பத்தி தெரிஞ்சுக்கணும்! ஆனால் அதுக்கும் முன்னாடி விதின்னு ஒன்னு இருந்தால் அதுவே என் கண்ணில் அவளை காட்டும்!” என நினைத்து கொண்டான்.
இது எங்கே போய் முடியுமோ! பார்ப்போம்!
அடுத்து எப்போ இதழ் – சர்வேஸ் or இதழ் – சைத்ரேஷ் மீட்டிங் எப்டின்னு பார்க்கலாம்.
அதற்குள் சிவன்யா தருணிகாவாகவும், தூரிகா துவாரகா வாகவும் மாறும் processல இருந்தார்கள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் மறைமுகமாக இந்த வேலையை செய்து கொண்டிருந்தார்கள்.
சரி இப்போதைக்கு இவங்க introduction story flow போதும்! இனி story flow ல எல்லாரும் மாறி மாறி வருவாங்க! ஒரு அடங்காத( சர்வேஷ்) அதிகாரா( சைத்ரேஷ்) பார்த்தாச்சு இப்போ அடங்காத (நிதின்) அதிகாரா ( சத்ய தேவ் பார்ப்போம்)
“அவ மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கா? இஷ்டத்துக்கு போயி அங்க உக்காந்துகிட்டு, நாய்க்குட்டிய யாரு பாவனை பார்த்து எல்லாம் செய்யறது? எப்போ தான் வருவாளாமா?!கேட்டு சொல்லு ருத்ரா!” என்று விவேகா கூறிக்கொண்டே நாய்க்கு பாலை வைத்தார்.
அந்த குட்டி சத்ய தேவ் விவேகாவை நன்றாக வாசம் பிடித்து அடையாளம் கண்டு கொண்டதால் காலை சுற்றி சுற்றி வந்து நக்கியது. இப்பொழுது கொஞ்சம் வளர்ந்து இருக்க வவ் வவ் என கத்தியது.
அத பத்தி நான் யார்கிட்டமா கேட்க முடியும்? நீங்களே அவர்கிட்ட கேட்டுக்கோங்க என்று சொல்ல..
“நானா? நான் எப்படி உங்க அப்பன் கிட்ட… என்னால பேச முடியாது! அவன் இல்லாத கம்பி கட்டுற ஞாயத்தை எல்லாம் சொல்லிட்டு திரிவான்!” என்று சொல்லிக் கொண்டிருக்கவே
க்கும்.. என குரலை உறுமும் சத்தம் கேட்டது.
இன்பா வரும் அரவத்தை கேட்டதும், உடனே விவேகா எதுவும் பேசாமல் சமையலறை பக்கம் செல்ல…
ருத்ரன் உதடு கடித்து சிரித்தான்.
“இப்போ எதுக்குடா சிரிக்கிற? பல்ல தட்டி கைல கொடுத்துடுவேன்! என்ன நினைச்சிட்டு இருக்க? ஹே என்ன டி அப்படியே அந்த பக்கம் போற? ஒண்ணுமே சமைக்கிறது இல்ல! இப்போ என்னமோ சமைச்சு ஓஞ்சி கலச்சவளாட்டம் அப்படியே சமையல் கட்டு பக்கம் போற! என்னடி? அம்மாவும் மகனும் என்னை பற்றி என்ன பேசிட்டு இருந்தீங்க? ”என்று இன்பா கேட்க…
இவர பத்தி பேசுற அளவுக்கு அவ்ளோ பெரிய ஆள் செளிபிரெட்டி இல்லைன்னு சொல்லுங்கம்மா! நான் குட்டி பப்பியை வாக்கிங் கூட்டிட்டு போறேன் என்று அவன் தூக்கிக்கொண்டு வெளியே சென்றான்.
டேய் நீ படிக்கிறியா? இல்லையா? ஆக்சுவலா நீ என்னதான் பண்ணிட்டு இருக்க? என் காச கறியாக்குரியா என்று இன்பா கேட்க..
ருத்ரன் முறைத்துக் கொண்டே திரும்பியவன். உங்களோட 10 பைசா காசுல நான் ஒன்னும் வாங்குறது இல்ல! அதுல படிக்கிறதும் இல்ல? எனக்கு ஸ்டிரைபண் வருது! அதுல தான் நான் படிச்சேன்! மெரிட்ல தான் எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கேன்! உங்களோட காசு நான் எதையுமே எடுத்துக்கல! அப்படியே தேவைப்பட்டால் எங்க அம்மாக்கு, நான் கொடுக்கிற அளவில இருக்கேன்! அதனால உங்க காசு எனக்கு வேண்டாம்! அதே போல உங்களை மாதிரி உங்க சொத்தை எடுத்து உங்க லவ்வர் பேருக்கு மாத்தி எழுதல.. என கூற..
தீரா என விவேகா கத்த..
“மாம்! அவரு தேவையில்லாம பேசுறாரு!வேணும்னா உங்க பொண்ணுக்கு ஒரு லட்ச ரூபா போட்டு பர்ஃபியூம் வாங்கி கொடுங்க! இல்லனா பெட்டர் ஒரு பிளைட் கூட வாங்கி கொடுங்க! அவ அங்கேயும் இங்கேயும் தூங்கிட்டு பறந்துட்டு திரியட்டும்!”என்று சென்று விட்டான்..
விவேகா சிரித்துக்கொண்டே வெளியே வர..
என்னடி இதையெல்லாம் நீ தான் சொல்லிக் கொடுத்தியா? எப்படி பேசிட்டு போறான் பாரு!!
விவேகா அவனை முறைத்துக் கொண்டு “நான் எதுக்கு சொல்லிக் கொடுக்கணும்? பார்த்தாலே தெரியுது! அவளுக்கு சாதாரண சென்டுக்கு ஒரு லட்ச ரூபா போட்டு வாங்கி கொடுத்திருக்க! உனக்கு காசு இருக்கிரதாள நீ இதையெல்லாம் பண்ணிட்டு இருக்க! உனக்கு மேல அவ பொறந்திருக்கா! அவ கட்டிக்க போற இடத்துல இந்த நித்தின் நல்லா மாட்டிக்கிட்டான்! சொத்தையே அவளுக்கு எழுதி வச்சாலும் அவளுக்கு பத்தாது! தூங்கிட்டு தான் இருப்பா! என்று சொல்ல..
நீ மட்டும் என்ன பண்ண? எப்ப பாரு தூங்கிட்டு தான் இருக்க! இன்று இன்பா கூற..
விவேகா புருவத்தை நெருக்கி கொண்டு என்ன சவுண்ட் எல்லாம் ஓவரா இருக்கு? நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்னு நீ ஆடிட்டு இருக்கியா? என்று கேட்க..
யாரடி நீ? உன்னோட சம்மதத்துக்காக நான் காத்துக்கிட்டு இருக்கேனா? போடி! என கூறி கொண்டே இன்பா கிச்சன் சென்றேன்
அவளுக்கு மட்டும் டீ போட்டுக் கொண்டு வந்து குடித்துக் கொண்டிருந்தாள்m எனக்கு டீ என்று கேட்க ..
உனக்கா? நக்கு என்று சொல்லிக் கொண்டே அவள் டீயை குடித்துக் கொண்டிருக்க..
இன்பா வேகமாக வந்து அவள் கையில் உள்ள கப்பை பிடுங்கி கொண்டு குடிக்க ஆரம்பித்தான்.
ஏய் தள்ளி உட்காரு! என் பையன் வரப்போறான்! இன்று விவேகா சிடுசிடுக்க..
யார் வந்தா இப்போ என்ன ? நான் பக்கத்துல வந்ததனால தாண்டி அவன் வந்திருக்கான்! அது தெரியுமா? என்று இன்பா அவளை இடிக்க..
உனக்கு எப்போ பாரு இதே வேலை தானா? இதையேதான் நினைச்சுக்கிட்டு இருப்பியா? என்று விவேகா கூற…
உன்ன பார்த்தா தான்! எனக்கு அப்படி தோணுது! என்று பாவமாக இன்பா சொல்ல..
நாயே உனக்கு… வேமாசுசொ இல்ல!; உன் பொண்ணுக்கு கல்யாணம் ஆக போகுதடா!
அதனால இப்ப என்ன? ஃபாரின்la எல்லாம் நிறைய குழந்தை பெத்துகுறாங்க!!நீயும் நானும் போயிடலாம்! ரிதம்க்கு குழந்தை பிறக்கும் போது அவளும் நம்ம குழந்தையை சேர்த்து வளர்ப்பா ஒரு பொண்ணு! வசுதாரணி இன்னும் பெண்டின் இருக்கு!
விவேமா அவனை முறைத்துக் கொண்டே ஒரு மாமியாரை சமாளிக்க முடியல! இதுல புதுசா இன்னொரு வசுவா! நான் உன்ன… உனக்கு ஃபேமிலி பிளானிங் பண்ணாம போயிட்டேன்! அது தான் பெரிய தப்பு! என்று கூற..
ஃபேமிலி பிளானிங்கா என்று இன்பா பார்க்க..
ஆமாண்டா! ஆமா என்ன நினைச்சுட்டு பக்கத்துல வந்துட்டு உக்காந்துட்டு இருக்க? டைவர்ஸ்.. டைவர்ஸ் தாண்டா! தள்ளிப்போ என்று விவேகா எழுந்து செல்ல…
இருடி உன்னை உன்ன வரேன்! அடக்கணும்! என்று அவளை அழைத்துக் கொண்டு ஆபீஸ் ரூம் சென்றான்.
ஹே பின்னாடி வராத! டேய் போடா என்று செல்ல .
நான் வருவேன் என்று அவளை இழுத்துக் கொண்டு ஆபீஸ் ரூம் சென்று கதவை அடைத்தான்.
ஒரு பத்து நிமிடங்கள் கழித்து ஆஃபீஸ் ரூமில் இருந்து இன்பா பிரிஸ்காக வர விவேகா சோறுடன் வெளியே வந்தார்.
என்ன டி எப்டி?
க்கி கும்!.. என சொல்லி கொண்டே சென்றாள்.
அப்போ வாடி என மீண்டும் கையை பிடித்து இழுத்து செல்ல..
ஹே ஹே! என விவேகா கத்த.. அந்த நேரம் ருத்ரன் சத்தம்!
மா எங்கே இருக்கீங்க? என சத்தம் வந்தது இன்பா கடுப்புடன் இவனுக்கு கரடி என்று பெயர் வைத்திருக்கலாம். நல்ல நேரத்தில வந்து இடையில புகுந்து பிரச்சனை பண்ணுவதையே பொழப்பா வச்சிருக்கான்! என்று இன்பா சொல்ல..
விவேகா அவனை முறைத்து டேய் இது சாயங்காலம் ஆகப்போகுது! என்று சொல்ல..
எப்போ ஆனா என்ன ? இவனுக்கு அறிவு இருக்காது! ஒரு கப்பில்ஸ் இருக்கும்போது வீட்டில் வந்து டிஸ்டர்ப் பண்றான்! இவனுக்கு எல்லாம் எந்த பொண்ணு செட் ஆகும்? என்று இன்பா கூறினார்.
உனக்கே இந்த சுமார் மூஞ்சி நான் செட் ஆகும் போது என் பையன் அழகன் டா! அதுவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல கருமுட்டையிலிருந்து உருவாகி இருக்கான்! அதனால அவனுக்கு தேடி வந்து பொண்ணு வரும் தெரியுமா? உன்ன மாதிரி இல்ல! நீ எந்த பெண்ணையுமே பார்க்க மாட்டேன்னு சீன் போட்டு என்னை மடக்குன? என் பையன் அப்படி கிடையாது! ஓபன் டைப் பிடிச்சிருக்குன்னா போய் பிடிச்சிருக்குன்னு தைரியமா சொல்லுவான்! உன்ன மாதிரியெல்லாம் இல்லை! என்று விவேகா சொல்ல..
இருடி உன்னை ஆஃபீஸ் ரூமுக்கு தூக்கிட்டு போறேன் என்று இன்பா சொல்ல..
போடா என்ற விவேகா நகர..
க்கும் முன்னு சொல்றியா?! உன்னை என்ன பண்றேன் பாரு! புதுசா லுப்ரிக்கன்சும், ஸ்பிரேவும் வாங்கிட்டு வரேன்!
விவேகா அவனை அதிர்ந்து பார்க்க.. எப்ப பண்ணா என்ன? ஆறிலிருந்து அறுபது வரை மோகம் குறையாது. நீ என்னை நாலு வருசம் விட்டு கனடா போயிருக்க அதுக்கு இன்னும் மூணு வருஷம் பெண்டின் இருக்கு! இன்பா கூறினார்.
*
இங்கே டெல்லியில் கொஞ்சம் பரபரப்புடன் இருக்க.. என்னாச்சு? என கேட்டு கொண்டே ஹரிணி வந்தாள்.
கனிரா கொஞ்சம் கடுப்புடன் எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? எப்டி மினிஸ்டர் செக்யூரிட்டிய இப்படி வச்சிருக்கீங்க? என் அண்ணாவுக்கு எதாப்து ஆச்சு! உங்களை என்ன பண்ணுவேன்னு தெரியாது! இன்னும் 24 மணி நேரத்தில் என் அண்ணா இங்கே பத்திரமா வந்தாகனும்! என கத்தி கொண்டிருந்தாள்.
என்ன ஆச்சு? எங்கே போனார்!
நீ யாரு டி என கோபமாக கனி சொல்ல..
ஹரிணி பற்களை கடித்து கொண்டு பார்த்தாள்.
ஹரிணியின் ஹயர் ஆபிசர் மினிஸ்டர் சார் ட்ரைபல் பீப்பிள் பார்த்திட்டு அப்படியே பார்டர் போன இடத்தில் அந்த பக்கம் மழை சரிஞ்சு போன இடத்தில் மேற்பார்வை பார்க்க போன இடத்தில் மிஸ்ஸிங் என கூறினார்.
என்ன டி அப்படியே காப்பாத்திற மாதிரி கேட்கிற?உனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குமே என கனி சொல்ல..
ஹரிணி திரும்பி கொண்டு ஓகே சார் இப்போ என்ன பிளான் வச்சிருக்கீங்க? என கேட்க
என் அண்ணாவுக்கு மட்டும் எதுவும் ஆச்சு உன்னை சும்மா விட மாட்டேன்! என கனி பேசி கொண்டிருந்தாள்.
ஹரிணி அவள் பேசுவதை தவிர்த்து அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என பிளான் செய்து கொண்டு அவளுடைய போலீஸ் ஃபோர்சுடன் சென்றாள்.
அங்கே ரெடி? அண்ணா அவள் வரா! என மெஸேஜ் தட்டி விட்டாள்.
நாளைக்கு ரிதம் come back… கூடவே இதழ் சைத்ரேஷ் அ சந்திக்க செல்கிறாள்.
தொடரும்…
EPISODE 45
ஐ.பி.எஸ் இங்க இருந்து கிளம்பிட்டாங்க! அங்க தான் வர போறாங்க! இனி உன்னோட ஆட்டத்தை ஆரம்பி அண்ணா! என்று மெசேஜை தட்டி விட்டாள்.
“அங்க பிரச்சனை எந்த அளவுல இருக்கு? அதே போல பார்டர் பக்கம் மழை ரொம்ப அதிகமா இருக்கா? இந்த டைம்ல எப்படி மிஸ் ஆவாங்க? எனக்கு ஒன்னும் புரியலையே? அவ்ளோ வீக்கா நம்மளோட செக்யூரிட்டி கார்ட்ஸ் இருக்காங்களா? அந்த குரூப்போட ஹையர் ஆபிசர் சென்ட்ரல் கவர்மென்ட் ஃபோர்ஸ் தான! இப்படி கேர்லஸ்ஸ் போறதுக்கு சான்சே இல்ல! எனக்கு ஒன்னும் புரியல!” என்று ஹரிணி சொல்லிக்கொண்டே சென்றாள்.
“அது அப்படி இல்ல மேம் இந்த மினிஸ்டரோட தங்கச்சி எப்பவுமே இதே போல தான்! இங்கே ஒர்க்காக சார் வந்தாலே, கூட அவங்களையும் கூட்டிட்டு வந்துடு வாரு! ஒவ்வொரு தடவையும் ஏதாவது பிரச்சனை பண்ணிட்டு தான் போவாங்க! இந்த தடவை ஒரு பெரிய பிரச்சனை நடக்குது!” என்று ஹரிணியின் கூட பணிபுரியும் அவளுக்கு கீழ் உள்ள அதிகாரிகள் கூறினார்கள்.
“இந்த டெல்லி கவர்மெண்ட் பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது! நான் எல்லாம் ஸ்டேட் கவர்மெண்ட்ல தான் ஒர்க் பண்ணி இருக்கேன்! இதுதான் என்னோட ஃபர்ஸ்ட் பெரிய ஆபரேஷன்! இப்போ தைரியமா இறங்க போறேன்!”
அதில் உள்ள ஒரு பெண் அதிகாரி “ அந்தப் பக்கம் கொஞ்சம் பாதுகாப்பு எல்லாம் கொஞ்சம் மோசம் மோசமா இருக்குமே! அது நேபால் பார்டர்! அது மட்டும் இல்லாம அந்த பக்கம் ரெட் லைட் ஏரியா ரொம்ப அதிகம்! பொண்ணுங்க தனியா போறது கொஞ்சம் ரிஸ்க்கு! லேடிஸ் மோஸ்ட்லி போலீஸ் கூட யாருமே அந்த பக்கம் போக மாட்டாங்க! இப்போ நீங்க போறது!” என்று அவர் தயங்கிக் கொண்டிருக்க..
“இந்த நாட்டோட முதல் குடிமகனை காப்பாத்த போறோம்! இப்படி எல்லாம் பேசக்கூடாது! நம்மளால எல்லாம் முடியும்! நம்ம தான் மினிஸ்டர் காப்பாத்தணும் அவர்கிட்ட இருந்து அவரோட போன ட்ராக் பண்ணுங்க! ஜிபிஎஸ் டிராக்டர்… யார் யார் போனாங்களோ அந்த பக்கம் இருந்தா இங்க இருந்து ஒரு போர்ஸ் கிளம்பி போகட்டும்! நானும் அவங்க கூட போறேன்! ”என்று ஹரிணி கிளம்பினாள்.
“மேம் இது நீங்க நினைக்கிற மாதிரி இல்ல! கான்ஃபிடன்சியலா தான் நான் வச்சுக்கணும்! இதை வெளியே சொல்ல முடியாது ஹையர் ஆபீஸியல் கிட்ட மட்டும் சொல்லலாம்! அப்படியே அவங்க கிட்ட சொன்னாலும், நம்மள தான் திட்டுவாங்க! இதை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு தெரியல! நான் போர்ஸ் கிட்ட வேணா சொல்லி பாக்குறேன்! இத நம்ப சுமூகமா யாருக்கும் தெரியாம, ரகசியமா முடிக்கணும்!” என்று கூறினார்கள் .
அதன் பின் அங்கிருந்து அனைவரும் கிளம்பினார்கள்.
இங்கே டாக்குமென்டரி விஷயத்துக்காக ட்ரைபல் மேற்குப் பக்கத்தில் இருக்கும் சில பழங்குடியின மக்கள் வாழும் இடத்திற்கு சத்திய தேவ் சென்றிருந்தான். அந்தப் பக்கம் எல்லா இடத்திலும் மழை வெள்ளமாக இருக்க.. அவன் ஒரு பக்கம் அங்கு “அரசினுடைய அனைத்து சலுகைகளும், அனைத்து திட்டங்களும் வருகிறதா?! இங்கு அரசு பணியாளர்கள் எப்படி வேலை செய்கிறார்கள்? இங்கு இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?” என அதைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தான்.
அந்த இடத்தில் வெள்ளம் மற்றும் மக்கள் மழையினால் அவதிப்பட்டு கொண்டிருக்க.. அதாவது அவர்களை வெள்ளத்தில் இருந்தும் மழையிலிருந்தும் காப்பாற்ற உதவிகளை செய்ய இறங்கிவிட்டான். டாக்குமென்டரி அடுத்த பட்சமாக இருக்கட்டும். மக்களுக்கு இப்பொழுது உதவி தான் தேவை என்று இறங்கிவிட்டான்.
இரண்டு மூன்று நாட்கள் அவனிடமிருந்து எந்த போனும், செய்தியும் இல்லை.
மகிழினி இங்கு விசாரித்துக் கொண்டே இருந்தாள்.
என்னங்க அவன் போன் பண்ணானா? எப்படி இருக்கான்? எங்கே போயிருக்கான்? என்று கேட்க
அவன் ஏதோ டாக்குமென்டரி விஷயமாக ஊருக்கு போயிருக்கா!
எந்த ஊரு என்று கேட்க..
நார்த் சைடு தான் என்று சூர்யா கூறினார்.
அதுதான் அங்கே எங்கே? என்று சொல்ல.
தெரியலையே போகும்போது சொல்லிட்டு போகலையே! தீராவுக்கு தான் தெரியும் என்று சூர்யா கூறினார்.
நீங்க எல்லாம் எதுக்கு அப்பாவா இருக்கீங்க? என்று மகிழினி கேட்க..
நீயெல்லாம் எதுக்குடி அம்மாவா இருக்க என்று சூர்யா கேட்டார்.
என்கிட்ட சொல்லிட்டு போனா அவனுக்கு என்ன? என்கிட்ட சொல்லவே மாட்டிக்கிறானே! முதலில் என் கிட்ட பேசினால் தானே! என அவரின் கண் கலங்க உடனே இருவரும் சண்டை இட ஆரம்பித்தார்கள்.
மிதுன் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அமர்ந்து நன்றாக போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான். அவனுக்கு இது மட்டும்தான் பொழப்புm காலையில் எழுந்து கொள்வான் . மகி விதவிதமாக வக்கனையாக சமைப்பதை நன்றாக சாப்பிடுவான். அதன் பின் ஆபீஸ் போய் அங்கிருக்கும் டோலிகளுடன் சிரித்து பேசி அவர்களை சிவக்க வைத்து விட்டு, அப்படியே சூர்யாவிடம் கொஞ்சம் வசைகளை வாங்கிக் கொண்டு, நான்கு பைல் , டாக்குமெண்டை சரிபார்க்கிறேன் என்று நேரத்தை செலவிடுவான்.
அதே போல் மாலை வீட்டிற்கு வந்து மகி ஏதாவது பலகாரம் செய்து வைத்திருந்தால், அதை உள்ளே தள்ளி கொண்டு ஒரு பனியன் ட்ராக் போட்டுக்கொண்டு டிப்டாப்பாக சோபாவை ஆக்கிரமித்து, கேம் விளையாடுவான் டிவி பார்ப்பான். ஆன்லைனில் விளையாடுவான் இதே வேலைதான் ராஜபோக வாழ்க்கை.. இரவு நன்றாக உண்டு விட்டு இதற்கு இடையில் ரிதம் இருந்தால், அவளுடன் கதைத்து நிறைய ஹோட்டல் சென்று ரெஸ்டாரண்ட் சென்று சாப்பிடுவார்கள், அப்படி இல்லை என்றால் மகி கிட்ட இஷ்டத்திற்கு அசைவம் செய்ய சொல்லி நன்றாக சாப்பிடுவான்.
விவேகா வீட்டில் இந்த அசைவம் எல்லாம் அவ்வளவாக கிடைக்காது. ஏனென்றால் விவேகாவுக்கு அதெல்லாம் கொஞ்சம் செய்ய தெரியாது. ஆனால் அவளால் முடிந்த அனைத்தையும் செய்வாள். அதனால் ரிதம் அதிகமாக இருப்பது மகியின் வீட்டில் தான். மைவிழி வீட்டுக்கு சென்றாlle கார்த்திக் வக்கனையாக சமைத்து போடுவான். அங்கேயும் ஆக்கிரமிப்பு செய்து விடுவார்கள்.
ஆனால் sprரின் வீட்டுக்கு செல்லவே மாட்டார்கள். தேஜுவை கண்டால் எல்லாருக்கும் கொஞ்சம் பயம். அதனால் அங்கு மட்டும் அவர்களுடைய சேஷ்டைகளை செய்ய மாட்டார்கள்.
தாராவின் வீட்டிற்கு அவர்கள் அதிகமாக சென்று பழக்கம் இல்லை. ஏனென்றால் சின்ன வயதில் இருந்தே சின்ன வயதிலிருந்தே உதயனை தாரா பிரித்து கூட்டி சென்று விட்டாள். என்று சிறுவயதிலிருந்து கலைவாணி அனைத்து பிள்ளைகளுக்கும் ஆழமாக பதிய வைத்து விட, தாரா மற்றும் உதயன் இருக்கும் வீட்டிற்கு செல்ல மாட்டார்கள்.
ஆனால் அங்கு இன்னொரு பட்டாளம் செல்லும் சைத்ரேஷ் மற்றும் இமையா செய்வார்கள். அவர்களை பற்றிய அறிமுகம் இனியா மற்றும் இதயனுக்கு தெரியும் அம்மா உறவுகளையும் நட்புக்களையும் இங்கே அத்தையின் வீட்டு உறவுகளுக்குள் கொண்டு வந்தால், அது தன் அம்மாச்சி கலைவாணிக்கு பிடிக்காது. என்று அவர்கள் எதைப் பற்றியும் பேச மாட்டார்கள் அந்த உறவை அப்படியே அங்கேயே வீட்டிற்குள் முடித்துவிட்டு வந்து விடுவார்கள்.
அங்கு கோவிந்த் இருப்பார். அவர் எப்பொழுது பார்த்தாலும் மிதுனை துருவி துருவி கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார். ஏனென்றால் சூர்யா மற்றும் கார்த்திக் குழந்தைகளை கோவிந்துக்கு பிடிக்காது. மட்டம் தட்டிக் கொண்டிருப்பார்.
ஆனால் சூரிய பிரகாஷின் வாரிசுகளை அவருக்கு பிடிக்கும். ஏனென்றால் அவர்கள் எல்லாம் தெலுங்கு காரக் கூட்டம். நம்ம எல்லாம் தமிழ் ஆளுங்கப்பாm அது நமக்கு இப்ப தேவையில்ல! இப்படி இருக்க அப்படியே ஒரு நான்கு நாட்கள் ஆகிப் போனது.
மகி சரியாக சாப்பிடாமல் தூங்காமல் சதா தன் மகனை நினைத்து ஏங்கி கொண்டிருந்தார். ஹரிணிக்கு போன் செய்து அவளிடம் விசாரிக்கலாமா என்றால் அவள் போனை எடுப்பதில்லை இதைப் பற்றி கீதாவிடம் விசாரித்து பார்க்க அவள் வேலையாக டவர் இல்லாத இடத்தில் மாற்றிக் கொண்டாள் என்று அவர்களும் சொல்லிவிட மதிக்கு என்ன செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை.
*
இது ஒரு பக்கம் இப்படி போய்க்கொண்டிருக்க.. அந்த நேரம் தன் இதழினி கஷ்டப்பட்டு ஆள் அம்பை பிடித்து, சைத்ரேஷின் பிசினஸ் உலகுக்குள் நுழைய ஒரு அப்பாயிண்ட்மென்ட்டை வாங்கி இருந்தாள்.
ஹப்பா அவனை எப்படியோ பாக்க போறோம்? உள்ள போய் அந்த சைத்ரேஷ் யாரு? அவன் நல்லவனா? கெட்டவனா? என்று தெரிந்து, அந்த சர்வா ராட்சசன், அரக்கனோட மொத்த முகத்திரையும் கிழிச்சு, அவனுக்கு தகுந்த தண்டனை கூடவேஅவன அசிங்கப்படுத்தி பழிவாங்கியே தீரணும். நம்ம தைரியமா இருக்கணும்! என்று மனதை தேற்றிக்கொண்டு நேராக பெங்களூரில் இருக்கும் மிகப்பிரம்மாண்டமான கட்டிடத்திற்கு வெளியில் நின்றாள்.
ஒரு பெருமூச்சை விட்டு வாசல மிதிக்கும் நேரம் அவளுடைய போன் அடிக்க ஆரம்பித்தது.
*
அது சிவன்யா தான்!;
அக்கா வேற போன் பண்றாளே?! எதுக்கு பண்றா? ஒரு வேலை கண்டுபிடித்து இருப்பாலோ? என்று பயந்து கொண்டே போனை எடுத்தாள்.
ஹலோ பாப்பா என்று சிவன்யா அழைக்க..
சொல்லுக்கா என்று சாதாரணமாக குரலை மாற்றிக் கொண்டு கூறினாள்.
நீ உடனே வீட்டுக்கு வா!
என்ன விஷயம் என்று இதழ் கேட்க..
சிவன்யா புருவத்தை நெருங்கிக் கொண்டே இப்போ நீ கோர்ட்லியா இருக்க?
என்று கேட்டால் கோர்ட்டு வாசல்ல நின்னுட்டு இருக்கேன்! இப்போ உள்ள போக போறேன்! என்று கொஞ்சம் பொய் கூற..
“ உங்க வீட்டுக்கு போயிட்டு இருக்கேன் நீ உடனே வீட்டுக்கு கிளம்பி வா!”
எங்கே கா என்று அவள் கேட்க..
சீக்கிரம் வா என்று சிவன் என் போனை வைத்தாள்.
இதழினி இவ்வளவு தூரம் வந்தது கூட அவளுக்கு பெரிதாக தெரியவில்லை. அந்த இடத்தை விட்டு வேகமாக சென்றவள். ஒரு பெரும் மூச்சை விட்டு அந்த இடத்தை பார்த்தாள். திரும்ப வருவேன்! கண்டிப்பா வருவேன்! என்று சொல்லிக் கொண்டே ஒரு ஆட்டோ பிடித்து தன் வீட்டை நோக்கி கிளம்பினாள்.
மகி தினமும் என்ன செய்து கொண்டிருக்கிறான்? ஒரு போனும் வரவில்லையே? என்று அனைத்து மகன் மகள்கள் என அனைவருக்கும் போன் செய்து சக்தி போன் செய்தானா? உங்களிடம் பேசினானா? என மகி கேட்டு கேட்டு இன்று அவளுக்கு மயக்கம் வந்து பொத்தென விழுந்து விட்டாள்.
அவளை தூக்கிக்கொண்டு நேராக படுக்கையறை சென்றவர். முகத்தில் தண்ணீர் தெளித்து என்ன டி ஆச்சு? என்று கன்னத்தை தட்டினார்.
எனக்கு இப்பவே சக்திய பாக்கணும் இன்று அழ ஆரம்பித்தார்.
மிதுன் கோபமாக உள்ளே வந்தவன் உனக்கு என்ன பைத்தியமா மகி புடிச்சிருக்கு?! அவன் தான் வர மாட்டேங்குறானே! அவனை எதுக்கு நினைச்சுட்டு இருக்க? கம்முனு இருக்க மாட்டியா? அவனை நினைச்சு நினைச்சு இப்போ உன் உடம்பு தான் கெட்டுப்போச்சு! என்னதான் நினைச்சுட்டு இருக்க? என சொல்லி கொண்டிருக்க..
எல்லாம் உன்னால தாண்டா ராஸ்கல் என்று சூர்யா மிதுன் தேவை திட்ட ஆரம்பித்தார்.
நான் என்ன பண்ண? எல்லாம் அவனால அவன்தான் பெரிய தொல்ல! இப்போ எங்க அம்மாவுக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சு! உங்க ரெண்டு பேர்ட்டையும் சும்மா விடமாட்டேன்! என்று மிதுன் தேவ் தேவையில்லாமல் கத்திக் கொண்டிருந்தான்.
அந்த நேரம் சூர்யா அவனை அடிக்க எகிற கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா என்று எழுந்து நின்றவள் மகி பொத்தின மறுபடியும் கீழே விழுந்தாள்.
டாடி சித்திக்கு என்ன ஆச்சு? என்று ஒரு பக்கம் சிவன்யா பவன்யா வெற்றி என அனைவரும் ஓடி வர..
வேகமாக வந்த நிலா சித்தி என்று அவளை செக் செய்ய ஆரம்பித்தாள்.
நிவாஸ் என்னாச்சு சித்திக்கு? இப்பவே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாமா! என்று அருகில் வந்து தூக்க வர..
நான் பார்க்கிறேன் என்று நிலா செக் செய்தாள்.
சூர்யாவை மித்துனை முறைத்து கைகளை மடக்கிக் கொண்டிருக்க டாடி என சொல்லிக் கண்டே இதழினி வந்தாள்.
சூர்யா எதுவும் பேசாமல் நின்று கொண்டிருக்க தீரா அதன் பின் வந்தான். என்னாச்சு மாமா! என கேட்டு கொண்டே வந்தான்.
மகி அவனை பார்த்ததும் எழுந்து தீரா தீரா! என அழைக்க…
ருத்ரன் அவரின் அருகில் சென்றான். என்ன அத்தை!
மகி கண்களில் நீர் கோர்க்க சக்தி ய வர சொல்லு! அங்கே என் பையன் எப்டி இருக்கானோ? என அழுது கொண்டே அவள் அவன் கையை நீட்ட..
அருகில் நிலா.. இன்னொரு பக்கம் சூர்யா அவனிடம் பக்கத்தில் போடா! அவள் சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு மயங்கி விழுகிறாள். இப்போ நிலா ட்ரிப்ஸ் போட போறா! என கூற..
ருத்ரன் மகியின் கையை பிடித்து அத்தை ஒன்னும் இல்ல மாமா சீக்கிரம் வந்துடுவாங்க!
இல்ல டா நியூஸ் ல என்னென்னமோ சொல்றாங்க எனக்கு பயமா இருக்கு! இப்போ அவன் பேசினால் கூட போதும்! நான் தாக்கு பிடிச்சுப்பென்! அவனை பார்க்கணும்! என கூறினார்.
நிலா தலையை குனிந்து கொண்டே எழுந்து வெளியே செல்ல சூர்யா பின்னால் சென்றார்.
பொண்ணு என்னாச்சு?
சித்தி வீக்கா இருக்காங்க! ஒரு பிளட் டெஸ்ட் எடுக்கணும்! பல்ஸ் ஏறி ஏறி லோவா இறங்குது…இப்போ உடனே ஹாஸ்பிடல் ஷிப்ட் பண்ணனும்! என நிலா கூறினாள்.
நிலா பேசுவதை கேட்டு கொண்டு வந்தவன் கொஞ்சம் கடுமையான குரலில் அதுக்கு ஒன்னும் அவசியம் இல்ல என சொல்லி கொண்டே ருத்ரன் வந்தான்.
என்ன டா தீரா!
மாமா! அத்தை சாப்பிட்டால் பல்ஸ் கூடிக்கும். Electrolyte watar கொடுத்தால் சரி ஆகுமா! என பார்த்தான்.
ம்ம் கொடுக்கலாம்! பட்..
மாமா! அங்கே போனால் அத்தை ரொம்ப பயப்படுவாங்க எதை பண்ணாலும் டாக்டர் மேடம் இங்கேயே பண்ணட்டும்! அத்தை ய எங்கேயும் கூட்டி போக வேணாம்! என சொல்லி கொண்டே உள்ளே சென்ற தீரா சக்கரை மற்றும் உப்பு கலந்து தண்ணீரில் கலக்கி மகி கிட்ட இதை சத்ய தேவ் குடிக்க சொன்னான் என கொடுக்க அவள் வாங்கி குடித்தாள்.
இதையெல்லாம் மிதுன் தேவால் பார்க்க முடிய வில்லை. உடனே எழுந்து வேகமாக வெளியே சென்றான்.
மித்து என்ன பண்ற?
மகிக்கு உடம்பு சரி இல்லை! என கூற..
வாட் என எழுந்தவள். அனைத்து விவரங்களையும் கேட்டு கொண்டே உடனே கிளம்பினாள்.
நீ வந்து என்ன பண்ணுவ! எங்க அம்மா கேட்க மாட்டாள். அவளுக்கு முதல் பையன் தான் முக்கியம்! வீம்புக்கு இருக்கா என மிதுன் வருத்தத்துடன் கொடுக்க..
நான் வரேன்! என கிளம்பி கொண்டே சத்ய தேவ் எண்ணுக்கு முயற்சி செய்தாள். அவள் எடுக்க வில்லை உடனே யவனிகா மற்றும் யுவதிகா என இருவரிடமும் தொடர்பு கொண்டு பேசி சத்ய தேவ் விவரத்தை வாங்கினாள்.
ருத்ரன் செயல் பாடுகளை ஆரம்பிக்க அதற்கு முன் ரிதம் அனைத்தையும் செய்தாள்.
ருத்ரன் இன்பா கிட்ட பேசி சத்ய தேவ் பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்ய ரிதம் நேரடியாக சத்ய தேவ் கிட்ட பேசினாள்.
ஹலோ.. ஒரு கடுமையான மற்றும் மென்மை கலந்த குரல்
நான் ரிதம் பேசுறேன்..
தொடரும்..
Comment pannunga ratings konjam like share pannunga
Ini பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
Follow the Pradhanya Kuzhali புதினங்கள் channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaVXuDh4Y9lmPhtHc52J
EPISODE 46
ரிதம் சத்ய தேவ்வின் எண்ணுக்கு முயற்சித்து கொண்டே இருக்க எடுக்க வில்லை. உடனே அடுத்து என்ன செய்ய என யோசித்து கொண்டே யவனிகா மற்றும் யுவதிகா என இருவரிடமும் விசாரித்தாள்.
ஹலோ அக்கா என அவர்கள் அழைக்க..
ஆமா அந்த சக்தி எங்க போயிருக்கான்? எந்த இடத்தில இருக்கான்?! நீங்க எப்போ பேசினீங்க? என்று தொடர்ச்சியாக கேள்விகளை கேட்டுக் கொண்டே ஏர்போர்ட் வந்து சேர்ந்தாள்.
நானா? நாங்க பாஸ் கட்ட பேசி கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு மேல இருக்கும்!!என்று யவனிக்கா கூறினாள். என்ன ஒரு நாளா? என்று ரிதமின் புருவம் முடிச்சு போட..
அவளுடைய மனதில் அப்போ இந்த ரெண்டு நாள்ல பேசி இருக்கான்? ஆனா மகி மாமி கிட்ட போன் பண்ணி பேசுறதுக்கு , அவனுக்கு என்ன கேடு? என்று அவளுக்கு இன்னும் கோபம் ஏறியது.
அக்கா என்று எவனிகா அழைக்க ..
சரி இப்போ அவன் கிட்ட பேசணும்! ஏற்பாடு பண்ணுங்க என்று ரிதம் கூற..
பாஸ் வந்து ரெண்டு நாளைக்கு முன்னாடி, அங்க மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவங்கள காப்பாற்றுவதற்காக,c ரொம்ப பிசியா இருந்தாங்க! அத சொல்றதுக்கு தான் எங்களுக்கு கால் பண்ணாங்க!
ரிதம் கோபத்துடன் ஹேய் நான் சொல்றதை கேளு! நீங்க என்ன பண்ணுவீங்களோ? ஏது பண்ணுவீங்களோ? எனக்கு அது தெரியாது! இன்னும் உங்களுக்கு ஒரு மணி நேரம் டைம்! அதுக்குள்ள, அவன் கிட்ட பேசுறதுக்கு ஏற்பாடு பண்றீங்க! இல்லனா? இந்த ரிதம் யாருன்னு நான் உங்களுக்கு காட்ட வேண்டி வரும்! என்று மிரட்டினாள்.
யவனிகா மீண்டும் பேச வர அவளை யுவதிகா தடுத்து அக்கா இப்படி சொன்னா? எப்படிக்கா? என்று கொஞ்சம் பதட்டத்துடன் பேச.
ரிதம் கோபத்தில் உங்களுக்கு விஷயம் தெரியுமா? அவனோட அம்மாவ கவனிக்காம, அவன் விட்டுட்டு போயிட்டான் ! அவங்க ஹாஸ்பிடல்ல icu போற அளவுக்கு வந்துருச்சு! அதனால தான் நான் பேசணும்னு சொல்றேன்! நீங்க எந்த விஷயத்தையும் சொல்லாதீங்க! அவனை எனக்கு மட்டும் ஒரு மணி நேரத்துக்குள்ள, எனக்கு என்னன்னு தெரிஞ்சாகணும்! என்று ர கூறிவிட்டு போனை வேகமாக கட் செய்ய
அக்கா அக்கா ஒரு நிமிஷம் என்று இருவரும் சொல்ல..
என்ன என்றதும்..
அது பாசை காண்டாக்ட் பண்றதுக்கு, அங்க இருக்குற ஒரு ரிப்போட்டர் கிட்ட பேசினா பாஷை ஈஸியா காண்டாக்ட் பண்ணலாம்! என்று கூறினார்கள்.
அப்போ அதை உடனே பண்ணுங்க! என்று சொல்ல..
நாங்க அவங்க கிட்ட பேசிட்டு உங்களுக்கு ஒரு மணி நேரம் கழிச்சு சொல்றேன்!; என்று சொன்னதும்..
ரிதம் நேராக சென்னை டு பெங்களூர் பிளை ஒரு மணி நேரத்தில் வந்து இறங்கினாள்.
அவள் வந்ததும் அவளுடைய போனில் மிஸ்டு கால்கள் இருக்க..
உடனே யவனிகாவுக்கு அழைக்க போக அதற்குள் அவளே அழைத்திருந்தாள்.
சொல்லு என்று கேட்க
ஒரு நம்பரை உங்களுக்கு சென்ட் பண்றேன்! இதுக்கு போன் பண்ணுங்க!! நீங்க உடனே பாஸ் கிட்ட பேசலாம்! இப்போ அவங்க எப்படி இருக்காங்க?! என்று கேட்டாள்.
அதற்குள் விதம் போனை கட் செய்து விட்டு அந்த நம்பருக்கு அழைத்தாள்.
அந்த பக்கம் ஹிந்தி கொனே என்று கேட்க..
ஹலோ ஐ வான்ட் ஸ்பீக்கிங் டு மிஸ்டர் சத்தியதேவ் ப்ளீஸ் இன்பார்ம் என்று கூற.
அவர் கொஞ்சம் தூரமா இருக்காரு! கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடுறேன். என்று அவன் சொல்ல
இட்ஸ் எமர்ஜென்சி ப்ளீஸ் என்று ரிதம் கெஞ்சிடா ஓகே என்று கட் செய்தான்.
அடுத்த அரை மணி நேரத்தில் சத்ய தேவ் அந்த எண்ணில் இருந்து அழைத்தான்.
ஹலோ என்று கடுமையான குரலில் ஒரு மெல்லிய குரல்..
இப்போ எங்க இருக்க? நீ ஏன் போனை எடுக்கல? மூணு நாலு நாள் ஆகுது! உயிரோட தான் இருக்கியா ?!
இதுக்கு தான் கால் பண்ணியா? யார் நம்பர் கொடுத்தது? இது உன்னோட அப்பாவுக்கு கூட தெரியாதே! டென்ஷன் பண்ற? எனக்கு நிறைய வேலை இருக்கு! என வைக்கப்போக..
நில்லு ஆக்சுவலா இந்த விஷயத்தை உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல! என்று தயங்கினாள்.
என்ன விஷயம் என்று சத்தியதேவ் கேட்க..
அது வந்து மகி மாமி இப்போ ஹாஸ்பிடல்ல இருக்காங்க இட்ஸ் கிரிட்டிக்கல் பிளட் லெவல் லாஸ் ஆகி 4 point வந்துடுச்சு!
வாட் என்று அவன் அதிர்ந்தான்.
ஆமா கிட்டத்தட்ட நீ போனதுல இருந்து அவங்க சாப்பிடாம டிஹைட்ரேஷன் ஆகி கூடவே உடம்புல ரத்தம் குறைந்து இப்போ ஐசியூல இருக்காங்க!
என்ன சொல்ற என்று அவனுக்கு தூக்கி வாரி போட்டது.
நீ இப்போ உடனே சூர்யா மாமா கூட போன் பண்ணி கேட்டுக்க!! ஆனா நீ நேர்ல வந்து பேசி பார்த்தா நல்லா இருக்கும்னு தோணுது! போன் பண்ணி அவங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நான் நினைக்கிறேன். என்று ரிதம் அத்தனையும் பொய்யாக சுத்தினாள்.
இப்போ எப்படி இருக்காங்க என்று அவனுடைய குரல் அப்படியே மாறியது.
அதுதான் நான் சொல்றேன்லல அவங்க ரொம்ப கிரிட்டிக்கல் கண்டிஷன்ல இருக்காங்க! நீ வரலைன்னா மாமி என்று இழுக்க..
எனக்கு எங்க அம்மாவை விட இங்க நிறைய உயிர்கள் இருக்கு! அவங்கள காப்பாத்தணும் கூடவே அவங்களோட பையன், பொண்ணு கணவர், எல்லாரும் இருக்கறதுனால! அவங்க குணமாகி வந்துடுவாங்க! அதனால நீ ஒன்னும் கவலைப்படாதே! என்று போனை வைத்தான்.
அவன் வைத்த அடுத்த நொடி ரிதம் ஆத்திரமும் கோபமும் வர கத்த முடியாமல் கைகளை இறுக்கி மடக்கினாள்.
போனை தூக்கி விசிறி அடித்தாள்.
எவ்வளவு திமிர்? வரமாட்டேன் என்று சொல்கிறானே? இவனை என்று பற்களை நரநரத்தாள். கல் மண் மாதிரி இருக்கிறான். I will kill you damit.. என சொன்னவள்.
என்ன செய்வது என்று தெரியவில்லை. மிகவும் இறுகிய மனதுடன் மகியை பார்க்க சென்றாள்.
அங்கே ருத்ரன் மற்றும் இன்பா, விவேகா என அனைவரும் இருக்க..மைவிழி கார்த்திக் அவர்களும் வந்து சேர்த்தார்கள். சூரிய பிரகாஷ், தேஜு என ஒட்டுமொத்த குடும்பமும் அங்குதான் இருந்தது .
என்னடா ஆச்சு? என்று இன்பா ஒரு பக்கம் கேட்டுக் கொண்டிருக்க..
சூரிய பிரகாஷ் தவிப்புடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தார். நிலா பொண்ணு சித்திக்கு இப்போ எப்படி இருக்கு?? என்று கேட்க
இப்போ கொஞ்சம் பரவாலப்பா!
சூரிய பிரகாஷ் உடனே தேஜு! டாக்டர் வர சொல்லு! அவளை இங்கே வந்து பார்க்கட்டும்! ஹாஸ்பிடல்லாம் கூட்டிட்டு போக வேண்டாம்! மகி பயந்துடுவா! என்று கூறினான்.
சரியாக அந்த நேரம் மருத்துவர்கள் வந்து அவளை செக் செய்ய..
ஏதோ பதட்டமாக உடனே சூர்யாவை அழைத்தாள்.
என்னங்க? என்னங்க? என்று கவலையான குரலில் அழைக்க..
என்னமா என்று சூர்யா அருகில் வந்தார்.
நான் செத்துப் போய்டுவனா? எனக்கு பயமா இருக்குங்க? நான் சத்திய பார்ப்பனா? மாட்டனா? அவன் என்ன பாக்க வருவானா? என்று நடுக்கத்துடன் பேசினார்.
அனைத்தையும் செக் செய்துவிட்டு டாக்டர் சூர்யாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
அனைத்து சிவன்யா, நிவாஸ்,வெற்றி என பிள்ளைகளும் அவளை நினைத்து மிகவும் மன வருத்தத்துடன் நின்று கொண்டிருந்தார்கள்.
ரிதம் வேகமாக அங்கு வந்து சேர்ந்தாள்.
மாமி என அழைத்துக் கொண்டே உள்ளே வர
இன்பா அவளை தடுத்தார்
இரு டிம்பிள் உள்ளே மாமா உள்ள இருக்காங்க என்று சொல்ல..
அவள் கைகளை பிசைந்து கொண்டே இப்போ மாமி எப்படி இருக்காங்க? பரவாயில்லையா என்று பதட்டமான குரலில் கேட்டாள்.
டாக்டர் உள்ள இருக்காங்க! செக் பண்ணிட்டு இருக்காங்க! என்று இன்பா கூறினார்.
மஹி சூர்யாவின் கையை பிடித்துக் கொண்டிருந்தார்.
அவளுக்கு கை நடுக்கமாக இருந்தது.
உடனே டாக்டர் வெளியே வர..
நிலா மகியின் அமர்ந்திருந்தாள்.
டாக்டர் வெளியே வந்ததும் அவங்க கிட்டத்தட்ட நாலஞ்சு நாளா சரியான தூக்கம், சாப்பாடு இல்லாமல் இருக்கனால, பாடி ரொம்ப வீக்கா இருக்கு! அவங்களுக்கு நிம்மதியான தூக்கம் வேணும்!;ட்ரிப்ஸ் இறங்கிட்டு இருக்கு! அதனால கொஞ்சம் கொஞ்சமா தெம்பு வரும்! அதே போல பக்கத்துல பிரஷர் செக் ஓடிட்டே இருக்கு! மத்தபடிக்கு வேற எந்த பிரச்சனையும் இல்ல! சுகர் லெவல் ரொம்ப லோவா இருக்கு பீபியும் லோவா இருக்கறதுனால நிறைய தடவை மயக்கம் வரும்! அதனால கொஞ்சம் பக்கத்துல இருந்து பாத்துக்கோங்க! கொஞ்சம் கூட ஸ்ட்ரென்த் இல்ல பாத்துக்கோங்க!! ஹாஸ்பிடல் ஷிர்க் பண்ணிறலாமா என்று கேட்டார்.
அதுக்கு நீடு இருக்கா என்று சூரிய பிரகாஷ் கேட்க..
அவனைப் பார்த்ததும் பயந்த டாக்டர் அப்படியெல்லாம் இல்ல சார் இங்கேயே வச்சு ட்ரீட் பண்ணலாம்! ஆனால் சீரியஸா இருக்கறதுக்கு ஒன்னும் இல்ல!
சீரியஸ் ஆயிடுச்சின்னா என்ற சொல்லவர.. சூரிய பிரகாஷ் கேட்க..
அதெல்லாம் எங்க மாமிக்கு சீரியஸ் ஆகாது! நீங்க போங்க நாங்க பார்த்துக்கிறோம். என்று ரிதம் கூறிவிட்டு வேகமாக உள்ளே சென்றாள்.
டாக்டர் இரண்டு நார்ஸ் மற்றும் ஒரு டியூட்டி டாக்டரை விட்டு சென்றார்.
அனைவரும் வெளியே அமர்ந்திருக்க
ரிதம் நேராக மகி யின் அருகில் நிலாவை பார்த்து நீ வெளியே போ என்று கூற..
என்ன என்று நிலா பார்க்க
வெளிய போனு சொன்னேன் என்று ரிதம் அதட்டினாள்.
உடனே நிலா வெளியே செல்ல..
மாமா நீங்களும் போங்க என்று ரிதம் கூறினாள்.
சூர்யா கலக்கமான முகத்துடன் தன் மனைவியை பார்த்துவிட்டு வெளியே சென்றார்.
கதவை சாத்திவிட்டு வந்ததும் ரிதம் மகியின் கைகளை பிடித்து மாமி நான் இப்போதான் சத்யதேவ் கிட்ட பேசினேன். பிராமிஸ் மாமி என நம்ப மாட்டீங்களா? என்ற சங்கு கழுத்தை பிடித்து சத்யம் செய்தாள்.
நிஜமாவா உன்கிட்ட அவன் எப்படி பேசினான்? என்று சொல்ல
நீங்க வேணா கேளுங்க! என சத்ய தேவ் கிட்ட போன் செய்த கதையை போனில் ரெக்கார்டு மற்றும் எடிட்டிங் செய்த விசயத்தை காட்டினாள். ரிதம் சத்ய தேவ் கிட்ட வீட்டுக்கு வா அத்தைக்கு உடம்பு சரியில்லை என்று சொன்ன விஷயம், அதன் பின் அம்மாவுக்கு ரொம்ப உடம்பு முடியலையா? என்று அவன் சொன்ன வார்த்தைகள்! அதன் பின் போன் கட் ஆனது! போல் எடிட் செய்து வைத்திருந்தாள்.
நிஜமாவே சத்தி பேசினானா? நிஜமாவே பேசினானா? என்று மகியின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட தொடங்கியது!
மாமி நெஜமா மாமி இப்போதான் நான் பேசினேன்! அவன் சேபா இருக்கானாமா! May be அவன் நாளைக்கு வருவான்னு நினைக்கிறேன். ஏன்னா அங்க நிறைய பேரை காப்பாத்தணும்ல்ல அதுவும் அது பழங்குடி ட்ரைபல் இருக்கிற ஏரியா அதனால சின்ன குழந்தைங்க, பெரியவங்க, எல்லாரையும் காப்பாத்துற பொறுப்பு! அதனால எப்படி விட்டுட்டு வர முடியும்! அதனாலதான் சத்திய தேவ் வரல! அவனை பத்தி உங்களுக்கு தெரியாதா? அவன் ஒரு எறும்புக்கு கூட துரோகம் நினைக்க மாட்டான்! அதனால அந்த வொர்க்ல இருக்கான்! நீங்க கவலைப்படாதீங்க நான் சத்தியமா பேசினேன். நீங்க நம்ப மாட்டீங்களா? நான் வேணா டாடி மேல சத்தியம் பண்ணவா? இல்ல என் மேல.? இல்ல மிதுன் மேல சத்தியம் பண்ணவா? என்று மாறி மாறி சொல்ல..
நான் நம்புறேன் என்று மகிவ்உண்மையாகவே கூற..
அந்த நேரம் ருத்ரன் வேகமாக வந்து நான் மாமா கிட்ட இப்பதான் பேசினேன்.
மாமா கூடிய சீக்கிரம் வந்துடுவாங்க என்று சொல்ல..
ரிதம் அவனை கண்டுகொள்ளாமல் மாமி இப்போ நீங்க கொஞ்சம் சாப்பிடுறீங்களா? அவன் ஆமா வந்து உங்களை திட்டினால் கூட ஆச்சரியப்படுறதுக்கு இல்ல.. என்று கூறிக்கொண்டே அவளுக்காக உணவுகளை கிச்சனிலிருந்து எடுத்து வந்தாள். சூடாக இருக்க ஊதி கொண்டே மாமி இதை ஃபுல்லா சாப்பிடணும்! இந்த பௌல சத்ய தேவ்க்கு போட்டோ எடுத்து அனுப்ப சொன்னான்? அவனுக்கு அங்க இருந்து எப்படி நீங்க இருக்கீங்க அப்படின்ற எண்ணம் தான்! ரொம்ப தவிச்சிட்டு இருக்கான்! அவசர அவசரமா கிளம்பி வந்தா அதுவும் பயமா இருக்குல்ல மாமி! என பொறுமையாக ரிதம் எடுத்து சொல்ல..
ரிதம் தங்க புள்ள அவ வந்திருப்பானா ? என்று உதடுகள் நடுங்க மகி கேட்க..
வந்திடுவான் மாமி! நீங்க என்ன நம்பலையா பாருங்க!
அப்படியா?
சரி நீங்க சாப்பிடுங்க என்று கைகளை கழுவிக்கொண்டு மொத்த உணவையும் ஊட்டி விட்டாள். இப்போ ஏதாவது டிரிப் டேப்லெட் போடணுமா? ஏய் நிலா என்று கத்தினாள்.
நிலா வேகமாக ஓடி வர இப்போ மாமிக்கு ஏதாவது டேப்லெட் இருக்கா? என்று கேட்க..
எதுவும் இல்ல அதுக்கு பதிலா தான் டிரிப்ஸ் ஓடிட்டு இருக்கு! இப்போ சித்தி நல்லா தூங்குனா சரியா போயிடும்! என்று கூற
மாமி நீங்க படுத்துக்கோங்க என்று சொல்ல…
நீ இங்கேயே இரு என்று ரிதம் கைகளை மகி பிடித்துக் கொண்டார்.
சரி நான் இங்கே இருக்கேன் என்று மகியின் கைகளை அழுத்தி கொடுக்க..
ருத்ரன் அவளை முறைத்து விட்டு வெளியே சென்றான்.
என்னடா ஆச்சு? உங்க அக்கா சாப்பாடு எடுத்துட்டு போனாலே சாப்பிட்டாளா? என்று சூர்யா கலக்கத்துடன் கேட்க
சாப்டாச்சு! அத்தை இப்போ தூங்க போறாங்க!;
என்ன? என சூர்யா கேட்க..
ஒரு பவுல் ஃபுல்லா ஃபினிஷ் பண்ணிட்டாங்க என்று ருத்ரன் கூறினான்.
அப்படியா என சூரியா முதல் அங்கிருக்கும் அனைவருக்கும் ஆச்சரியம் தான். ஏனென்றால் கிட்டத்தட்ட இன்று நாள் முழுவதும் அவள் சாப்பிட மாட்டேன்! இதுவும் வேண்டாம்! இந்த ட்ரிப்சை கழட்டுங்கள்! என்று பிடுங்கி போட்டுக்கொண்டு இருந்த மகி
இப்பொழுது ரிதம் சொன்னதும் எப்படி கேட்கிறாள்? என்று அனைவருக்கும் ஒரே யோசனையாக இருந்தது.
எப்படி கா இது நடந்து இருக்கும்? என்று சிவன்யாவிடம் இதழ் கேட்க..
அவ ஏதாவது ட்ரை பண்ணி இருப்பா! என்று சிவன்யா கூற..
நல்லவேளை அம்மா சாப்பிட்டாங்களே அதுவே போதும் என்று இதழ் கூறினாள்.
சூர்யா அங்கிருக்கும் சூரிய பிரகாஷ் கார்த்திக் என அனைவரையும் பார்த்து “அதுதான் அவளுக்கு சரியாயிடுச்சுல்ல நீங்க எல்லாம் கிளம்புங்க! ”என்று கூறினார்.
ஏன் நாங்க இருக்கக் கூடாதா என்று ஒரே சமயத்தில் கார்த்திக் மட்டும் சூரிய பிரகாஷ் இருவரும் கேட்க..
இருவரையும் சூர்யா முறைத்து பார்த்தார்.
தேஜு எதுவும் சொல்லாமல் சோபா பக்கம் போய் அமர
கார்த்திக் “நான் சத்யதேவ் வரவரைக்கும் இங்கதான் இருப்பேன் என்று அவரும் இன்னொரு பக்கம் போய் அமர்ந்து கொண்டார்.
மைவிழி சாதாரணமாக என்ன மாமா? இவன பத்தி உங்களுக்கு தெரியாதா? என்று நேராக படுக்கைக்கு சென்று விட்டார்.
சித்திக்கு இப்படி இருக்கு? நீங்க பாட்டுக்கு தூங்க போறீங்க! என்று பவனியா மற்றும் வெற்றி இருவரும் அழைக்க..
அவதான் உங்க எல்லார் முன்னாடியும் சீன் கிரியேட் பண்ணனும்னு, இப்படி பண்ணிட்டு இருக்கா! அதை எதுக்கு நான் பாக்கணும்? என் பையனை பற்றி எனக்கு தெரியும். அவன் எனக்கு மட்டும் தான் கட்டுப்படுவான். என் பையன் வரும்போது வருவான்! இவ சொன்னதுக்காக எல்லாம் கிளம்பி வரமாட்டான்!. என் சத்தியதேவ பத்தி எனக்கு தெரியும்! என்று சொல்லிக் கொண்டே மை விழி செல்ல..
சிலருக்கு சிரிப்பதா இல்லை அழுவதா என்று ஒன்றும் புரியவில்லை..
என்னடா உங்க அம்மா இப்படி பேசிட்டு போறா என்று இன்பராகவன் வெற்றியை பார்த்து கேட்க..
பயமா இருக்கு மாமா என்று அவனும் நடுங்கினான்.
இன்பா சிரித்துக் கொண்டே மச்சி!
உடனே அவரை பார்த்து பயமா இருக்குடா என்று சூர்யா கூறினார்.
பயப்படாதடா என் பொண்ணு இருக்கா! மகி சீக்கிரம் சரியாயிடுவா! என் பொண்ணுக்கு அவளை எப்படி பக்குவமா எடுத்து சொல்லணும்னு, தெரியும்! அவ ரொம்ப டேலண்ட் மச்சி! அப்படியே என்னை மாதிரியே என இன்ப கூறினார்.
இப்போ இந்த பாராட்டு பத்திரம் வாசிக்கிற நேரமா? ஏண்டா கடுப்பு கிளப்பிக்கிட்டு இருக்க! என்று சூர்யா கூறினார்.
அந்த நாள் முழுவதும் அனைவரும் தூங்கவே இல்லை ஏனென்றால் சூர்யாவிற்கு இன்னும் கவலையாகி போனது.நான் செத்துடுவேனா என்று மகி சொன்னது ஹார்ட் அட்டாக் வராத குறை தான்.
ஆனால் மகி ரிதம் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணை மூடி தூங்க முயற்சி செய்தார்.
என்ன மாமி ஏன் நீங்க தூங்க மாட்டிக்கிறீங்க? ஏன் கண்ணை உருட்டிக்கிட்டே இருக்கீங்க? என்ன பிரச்சனை? என ரிதம் கேட்க..
எ எனக்கு பயமா இருக்கு ரித்து..
என்ன பயம் மாமி? சத்ய தேவ் வருமா உங்களோட சக்தி சீக்கிரம் உங்க கூட வந்து சேரு சேருவான். நீங்க கவலைப் படாதீங்க அதுக்கு நான் கேரண்டி! என்று சொன்னவள் உங்களுக்கு சில விஷயம் தெரியாது! என்று கூறினாள்.
என்ன விஷயம் என்று மகி கேட்டார்.
சக்தி( சத்ய தேவ்) நானும் நாங்க ரெண்டு பேரும் அந்த சண்டையெல்லாம் வராததுக்கு முன்னாடி நான் சக்தி சக்தின்னு கூப்பிட்டு பின்னாடியே போவேன். நான் பக்கத்துல வந்தா போதும் சக்தி அப்படியே என்னோட ஜடைய புடிச்சு இழுத்து ரப்பர் பேண்ட் எடுத்து பாக்கெட்ல போட்டுக்குவான் என்று கண்ணக்குழி தெரிய சிரித்தவள். காதலுடன் கூறிக் கொண்டிருந்தாள்.
அப்புறம் இன்று மகி கொஞ்சம் சிரித்துக் கொண்டே கேட்க
அப்புறம் சக்தி கொடு எனக்கு பேண்ட் குடு! இல்லன்னா நான் மகிமாமி கிட்ட சொல்லுவேன். அப்படின்னு பின்னாடி சுத்திட்டு இருப்பேன்! அவன் நீ பாலோ பண்ணி வா அப்டின்னு நீ இன்னும் கொஞ்சம் நட , அப்படின்னு என்னை நடக்க வச்சுக்கிட்டே இருப்பான்! என்று சத்ய தேவ் பற்றி பொளந்து கட்டிக் கொண்டிருந்தாள்.
இதையெல்லாம் கேட்ட மிதுன் தேவ்க்கு எரிச்சலாக வந்தது? எவ்வளவு பொய் சொல்றா பாரு! என்று மிதுன் தேவ் நினைத்துக் கொண்டிருந்தான்.
மகி மெதுவாக கண்ணை மூட..
அதுக்கப்புறம் உங்களுக்கு ஒரு சீக்ரெட் சொல்லவா? என்று ரிதம் கேட்க
என்ன சீக்ரெட் என்று
ரிதம் சிரித்து கொண்டே நானும் அம்மாவும் நாங்க ரெண்டு பேரும் கஜிராஹோ போனோமே!
சரி அப்போ என்ன ஆச்சு?
ரிதம் , அப்போ டாடி சத்யதேவ கூட்டிட்டு வந்தாங்க! நானும் சத்யதேவும் பார்த்துக்கொண்டோம்? ஆனால் டாடியும் விவேகாவும் பாத்துக்கல!
.என்ன சொல்ற என மகி ஆச்சரியமாக கேட்க..
ஆமா இது எதுவுமே விவேகாவுக்கு தெரியாது. சூர்யா மாமாவுக்கு கூட தெரியாது. இது எங்களுக்குள்ள இருக்கிற ரகசியம்! சக்தி எங்கிட்ட சொல்லிட்டான் யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு , சொல்லிட்டான்! இத்தனை வருஷம் கழிச்சு இந்த விஷயத்தை நான் உங்ககிட்ட தான் மாமி சொல்றேன். என்று ரிதம் கூறினாள்.
அப்படியா என்று விடிய விடிய சக்தி பொறாமை தான் ஓடிக் கண்டிருந்தது
மாமி சின்ன வயசுல கூட நீங்க சத்திய பத்தி சொல்லுவீங்களே! நம்ம கனடாவில் இருக்கும் போது! எல்லாமே எனக்கு ஞாபகம் இருக்கு தெரியுமா! என்று ரிதம் அவனைப் பற்றி அனைத்தையும் சொல்ல..
சத்திய பற்றி ரிதம் சொல்வதைக் கேட்க மகியின் முகம் ஆச்சரியத்தில் வளைந்தது.
என்ன ரிதம் எல்லாத்தையுமே ஞாபகம் வச்சு இருக்கிற? என் தங்க புள்ள? என்று சொல்ல..
ஆமாம் மாமி! எனக்கு எல்லாமே மைண்ட்ல ஸ்டோர் ஆயிடும்! அதுவும் நீங்க சொன்ன விஷயத்தை நான் எப்பவுமே மறக்கமாட்டேன்.! உங்களை எனக்கு அவ்வளவு பிடிக்கும்? என்று ரிதம் கூற..
அப்படியா என மகி ஆசையுடன் ரிதம பார்த்தார்.
நீங்க ஒரு கதை கூட சொன்னீங்கல்ல அது கூட எனக்கு நியாபகம் இருக்கு என்று ரிதம் மெதுமெதுவாக கதை சொல்ல சொல்ல..
அதைக் கேட்டுக் கொண்டே மகி தூங்கிப் போனார்.
ரிதம் மதியின் கைகளை வருடி கொண்டே அவளின் கண்களில் அப்படியே கண்ணீர் ஊற்றெடுக்க ஆரம்பித்தது. அவள் மௌனமாக அழுது கண்ணை துடைக்க.. கண்கள் எல்லாம் சிவந்து போனது. அந்த இடத்தில் நடக்க ஆரம்பித்தாள்.
அவளது நெஞ்சை வருடி கொண்டே மாமி! நான் எப்பவுமே உங்கள விட மாட்டேன்! உங்கள எனக்கு அவ்ளோ பிடிக்கும்! நீங்க எப்பவுமே எனக்கு மட்டும் தான் மாமி! என சொல்லிக் கொண்டாள்.
ஏனென்றால் மகிக்கு கூட அந்த அளவு ரிதமை பிடிக்கும்! தன்னுடைய சிவன்யா பவன்யாவை போன்று தான் ரிதமையும் நடத்துவார்.
ரிதம் என்றால் மகிக்கு உயிர் அவளை அங்கிருந்து இங்கு கூட்டி வந்து இன்பாவின் குடும்பத்தில் சேர்ந்ததே மகிதான். அதனால் ரிதம் மிக்க மகிழ்ச்சி அவ்வளவு பிடிக்கும்! இப்படியே இருக்க..
அடுத்த நாள் ஆரவாரத்துடன் பல பரபரப்புடன் விடிந்தது.
சரியாக 11 மணிக்கு வந்து சேர்ந்தான். அந்த பார்டரில் இருந்து அப்படியே ஜார்க்கண்டில் இருக்கும் ராஞ்சிக்கு பிளைட்டில் இருந்து பெங்களூர் வந்து சேர்ந்தான்.
ஆனால் அவன் ராஞ்சிக்கு வருவதற்கே பல போராட்டங்களை தாண்டி தான் வந்தான். நேராக வீட்டுக்கு வந்தவன். உடனே ருத்ரனுக்கு கால் செய்தான்.
ஹாஸ்பிடல் போக மனம் இல்லை அத்தனை கவலை ஆனால் வெளியே காட்டி கொள்ள வில்லை.
ஹலோ மாமா நீங்க போன் எடுத்துட்டீங்களா? எத்தனை தடவை உங்களுக்கு கூப்பிட்டேன் தெரியுமா? என்று ருத்ரன் பேசிக் கொண்டிருக்க..
உடனே சத்யதேவ் ஆமா எந்த ஹாஸ்பிடல் என்று கேட்டான்.
ஹாஸ்பிடல் இல்ல மாமா மாமி வீட்லதான் இருக்காங்க!
வீட்லயா என்று சத்தியத்தை கேள்வியுடன் அப்படியே அதே இடத்தில் நிற்க..
ஆமாம் மாமா வீட்லதான் ரெண்டு ஸ்டாப் நர்ஸ் கூட டியூட்டி டாக்டர் எல்லாரும் இருக்காங்க.. சீக்கிரம் வாங்க மாமா! என்று சொல்ல..
யாருடா என சத்திய தேவா என்று போனை வாங்கி சத்யதேவ் சீக்கிரம் வாடா என்று சூர்யா அழைக்க..
இதையெல்லாம் கேட்க கேட்க மித்துனுக்கு எரிச்சலாக வந்தது. ச்ச இங்கே இருந்துக்குவான். ஒருவேளை மைவிழி சித்தி சொன்ன மாதிரியே இந்த மகி அவனுக்காக கூட நடிப்பா! என்று மனதில் நரநுறுத்துக் கொண்டான்.
சத்ய தேவ் சிரு அமைதிக்கு பின் வரேன் டாடி என்று மௌனமாக கூறியவன் நேராக்க வீட்டுக்கு வந்தான்.
அவன் வந்ததும் மகி இருக்கும் அறைக்கு சென்றான். ரிதம் கைகளை பிடித்து கொண்டு மகி தூங்கி கொண்டிருந்தார்.
ரிதம் அருகில் இருக்கும் மேஜையில் அப்படியே சாய்ந்து கொண்டிருந்தாள். இருவரையும் பார்த்தான் தொண்டையை சிரமினான்.
ரிதம் சட்டென எழுந்து பார்க்க..
அங்கே சத்யதேவ் நின்று கொண்டிருந்தான்.
அவனை பார்த்ததும் வேகமாக வெளியே சென்றாள்.
சத்தி மீண்டும் தொண்டையைக் கனைத்தான். ஆனால் மகி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.
நேராக சக்தி தன் அம்மாவின் பாதத்துக்கு அருகில் சென்று அமர்ந்தவன். மெதுவாக பாதங்களை பிடித்து விட ஆரம்பித்தான்.
அவன் கைகள் பட்டதும் அந்த நொடி அவள் வெடுக்கென கண்ணை திறந்து மகி சந்தோசத்துடன் சக்தி என்று அழைக்க வர
டாடி என்று கர்ஜனையான குரலில் சத்ய தேவ் அழைத்தான்.
சூர்யா பதட்டத்துடன் உள்ளே ஓடி வந்தார். என்னடா என்று அழைக்க..
இப்போ என்ன ஆகிப்போச்சு? எதுக்கு பயம்? நான் குத்துக்கல் மாதிரி உயிரோட தான் இருக்கேன்! எனக்கு எதுவும் ஆகாது! என்ன நெனச்சு யாரும் பயப்பட வேண்டாம்! எனக்கு தொல்லை கொடுக்காமல் இருக்கணும்னு நினைச்சா, தயவுசெய்து மூணு வேலையும் நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க! அதை விட்டுட்டு இந்த தேவையில்லாத உடம்ப வருத்திகிட்டு, உடம்ப கெடுத்துக்கடா நான் வரவே மாட்டேன்! என்று கூறினான்.
மகி எழுந்து அமர முயற்சி செய்ய டாடி என்று மீண்டும் அழைத்தான்.
ஏய் கொஞ்ச நேரம் படுத்துகிட்டு தான் இரென் டி எதுக்குடி இப்படி எல்லாம் பண்ணுவ என்று சூர்யா கூற
சத்யதேவ் மகியின் அருகில் உள்ள சேரில் அமர்ந்து அவளுடைய கையை பதமாக பிடித்து விட்டவன். நெற்றியில் முத்தமிட்டான்.
மதியின்bஉதடுகள் துடிக்க கண்ணில் நீர் வழிந்து கொண்டிருந்தது. கண்ணை துடைத்து விட்டவன்.
டாடி எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் ரெஸ்ட் எடுக்கணும் மேல போறேன். என்று சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டான்.
சூர்யா ஒரு பெருமூச்சு விட்டு பாத்திட்டியா? உன் பையன் உன் பக்கத்துல வந்துட்டான்! இப்ப சந்தோஷமா என்று சொல்ல..
மகி எழுந்து நான் எதுவும் சமைக்கிறேன் சாப்பிடாமல் ஓடி வந்திருப்பான்.
வாய மூடிட்டு தயவுசெய்து படுடி என்ன டென்ஷன் பண்ணாத! என்று வெளியே வந்தார்.
உடனே அங்கிருக்கும் அனைவரும் ஒரு எட்டு வந்து பார்க்க இப்பொழுது தான் மகியின் முகத்தில் சிரிப்பே வந்தது.
இன்பா விவேகா சூரிய பிரகாஷ் கார்த்திக் மைவிழி தேஜு என அனைவரும் அவளை வந்து பார்த்துவிட்டு செல்ல..
அந்த நேரம் தான் தாரா, உதயன் அவசர அவசரமாக ஓடி வந்தார்கள்.
சூர்யா ஒரு பெருமூச்சுவிட்டு போய் பாருங்க..
என்ன மாமா என உதயன் அழைக்க..
உன் தங்கச்சி அடங்காதவளை வச்சுக்கிட்டு நான் என்ன பண்றதுன்னு எனக்கே தெரியல என்று சூர்யா சலித்துக் கொண்டார்.
அவர்களும் ஒரு சில நிமிடங்கள் பார்த்துவிட்டு உதயன் அவளிடம் கடிந்து கொண்டு கிளம்பி விட சிவண்யா , நிவாஸ், நிலா, பவன்யா , வெற்றி இதழ் என அனைத்து பட்டாளங்களுக்கும் விடிய விடிய தூக்கமே இல்லை.
அதனால் அவர் அவர்கள் ஆங்காங்கே சோபாவில் சேரில் படிக்கட்டில் என அங்கங்கே படுக்க.
எல்லாரும் உள்ள போய் தூங்குங்க நான் பிரேக்ஃபாஸ்ட் வெளியில சொல்லிடுறேன் என்று சொல்ல என்று சூர்யா அந்த வேளையில் பிஸியாக இருக்க..
ருத்ரன் சத்ய தேவ் அறையில் கண்ணை திறக்க முடியாமல் தூங்கிக் கொண்டிருந்தான்.
அந்த இடம் மிகவும் அமைதியாக இருந்தது அந்த நேரம் சத்தியதேவ் ரிதம் எங்கு இருக்கிறாள்? என்று தேடிச் சென்றான்.
அவள் அந்த ஓவிய அறையில் நின்று கொண்டிருக்க.
அவளுக்கு அழைத்துக் கொண்டே வந்தான். அவளின் போன் தான் சுக்கு நூறாக உடைந்து இருந்தது.
சத்ய ஓவிய அறையில் கதவு திறந்திருக்கவும் எட்டிப் பார்க்க அவளுடைய போனிடைல் தெரிந்தது.
உள்ளே சென்றான் சக்தி என்று அழைத்துக் கொண்டே ரிதம் திரும்ப அவளது கன்னத்தில் பளார் என ஒரு அரை விட்டான்.
தொடரும்..
இன்னிக்கு episode எப்டி இருந்தது? சொல்லிட்டு போங்க?
ஏய் சண்டைக்காரா கதை மற்றும் நீந்துகின்ற வெண்ணிலாவில் கடைசி நூறு அதித்தியாயம் பிடித்து விட்டு இந்த கதைக்கு வாருங்கள். அப்பொழுது புரியும் இது இரண்டாம் பாகம்
புரியாதவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாட்ஸ் அப் சேனலில் நாளை விளக்க உரை கொடுக்க படும்
EPISODE 47
ரிதன் எங்கிருக்கிறாள்? என்று வேக வேகமாக இதழினியின் அறைப்பக்கம் சென்றவன்.
அங்கு அவள் இல்லாமல் போகவே அந்த இடத்தை சுற்றி பார்த்து கொண்டே அவளுக்கு போன் செய்தான். ஆனால் போன் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது. என்று வந்து கொண்டிருந்தது.
சத்ய தேவுடய கண்கள் எல்லாம் சிவந்து போனது.ஏற்கனவே நான்கு நாட்கள் தூக்கமில்லை. அவள் சுற்றிய உருட்டில் இப்பொழுது அந்த பார்டரில் இருந்து போராடி ராஞ்சிக்கு வந்து, அதன்பின் பிளைட்ல இருந்து இங்கு வந்து சேர்வதற்குள் அவனுக்கு ஒரு உலகப்போரே உள்ளுக்குள் ஓடியது. அத்தனையும் அடக்கிக் கொண்டு வந்தான்.
ஆனால் மகி இங்கே வீட்டில் இருப்பதை பார்த்ததும், தேவையில்லாமல் தன்னை வேண்டும் என்று அழக்களித்து இருக்கிறாள். ரிதம் என்னும் ராவடி! அவன் மிதுன் அறை பக்கம் சென்று கொண்டே நகர.. அங்கே அடுத்ததாக மகிழினியின் ஓவிய அறை கொஞ்சம் திறந்திருக்க சட்டென திரும்பி பார்த்தான்.
அந்த இடத்தில் அவள் நின்று கொண்டிருந்தாள். கதவை கதவை லைட்டாக திறக்கவும்.. காலடி சத்தம் கேட்டது.
ரிதம் சட்டென திரும்பி பார்த்தாள்.
அங்கே சத்யதேவ் உக்கிரமாக அவளை பார்த்தான்.
சக்தி என்று அழைத்துக் கொண்டு ரிதம் அவனிடம் பேச வர..
பளார் என்று ஒரு அரை.. பளார்! அந்த சத்தம் காதை அடைக்க அந்த அரையை தாங்கிக் கொள்ள அவளுக்கு தெம்பு இல்லை. பொத்தென சுருண்டு கீழே விழுந்தாள்.
அந்த அரையின் வீரியம் அவ்வளவு ஆக்ரோஷமாக இருந்தது. அன்று மழையில் முத்தம் கொடுத்த போது அறைந்து இருக்கிறான். அந்த அரை கூட அவ்வளவு வீரியம் இல்லை! ஆனால் இந்த அறை அவளுக்கு காய்ச்சலை கூட வர வைக்கும்! அந்த அளவுக்கு அவனுடைய கைகளே எரிச்சலின் தகித்துக் கொண்டிருக்க..
அப்போ ரிதமின் கன்னம் என்னவாகும்? அந்த பட்டு போன்ற கன்னத்தில் சிவப்பு ஏறி கன்னம் சிவந்து போனது. ஒரு பக்க கண்ணும் சிவக்க, உதட்டை கடித்துக் கொண்டு, அதே எந்த உணர்ச்சியும் காட்டாமல் எழுந்து நின்றாள்.
அவன் அடித்த அரையில் அவளுடைய கொண்டையில் இருக்கும் ரப்பர் பேண்ட் தெறித்து விட முடி அவிலுந்து தொங்கியது. அவள் எழுந்து கொண்டே உஷ்ண மூச்சுடன் சத்தியதேவை பார்க்க..
சத்யதேவ் கடுமையான முகத்துடன் “இன்னொரு தடவை இந்த விளையாடுற வேலையை, என்கிட்ட வச்சுக்காத! அப்புறம் உன்னோட உயிர் இருக்காது! கழுத்தை திருகி போட்டுட்டு போயிட்டே இருப்பேன்! என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்.
அவன் சென்றதும் அவள் வேகமாக மாடியில் இருந்து இறங்கி வந்தவள். மெதுவாக மகியின் அறையை எட்டிப் பார்த்தாள்.
மகி அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
சூர்யா உணவை வாங்க சென்றிருக்கிறார் என்று நன்றாக தெரியும். அதனால் நேராக அவளுடைய பெட் இருக்கும் அப்பார்ட்மெண்டுக்கு விரைந்தாள்.
சத்யதேவுக்கு கோபம் அடங்கவில்லை! எவ்வளவு திமிர் இருக்கும்? என்னென்ன சொன்னாள்? என்னை பதைக்க வைத்தாலே? ஐ ஹேட் யூ பாட்டம் ஆப் த ஹார்ட்! என்று ஒவ்வொரு வார்த்தையும் கடுமையாக கூறினான். அவனுடைய கோபத்தில் தலைவலியே வந்து சேர்ந்தது. இந்த அளவுக்கு அவன் கோபப்பட்டதே கிடையாது. எதில் விளையாடுவது! என்று அவளுக்கு அறிவு இருக்காதா? என்று அவன் நொந்து போனான்.
ரிதம் நேராக வீட்டுக்கு சென்றாள். ஒரு டார்க் வயலட் கலர் ஷர்ட், அதற்கு பிளார்சோ அணிந்திருந்தாள். சத்ய தேவ் அடுத்ததில் அவளின் ஒரு காதில் தோடு கூட சிதறி போயிருந்தது. வைரக் கற்கள் பதித்த சின்ன தோடு, அது ஒரு காதில் மட்டும் தான் இருக்கிறது.
ரிதம் அவளுடைய செல்ல பிராணிகள் இருக்கும் வீட்டிற்கு வந்தவள். வேகமாக சுற்றிலும் பார்த்தாள். இன்பா தினமும் ஒரு ஆளை வைத்து அந்த பூனை, மீன்கள் ,பறவைகள் என அனைத்துக்கும் உணவு வைத்து பத்திரமாக பார்த்துக்கொள்ள பணியாளை போட்டு இருந்தான். வழக்கம் போல வீடு மிகவும் சுத்தமாக இருந்தது. அவள் பெருமூச்சை விட்டு படுக்க செல்ல..
அந்த நேரம் ரவிச்சந்திரன் அழைத்தார். அந்த டேபிளின் மீது இருக்கும் போன் எடுத்து ரிதம் பேச ஆரம்பித்தாள்.
த்தாத்து! உங்களுக்கு எப்டி தெரியும்? நான் இங்கே இருக்கேன். எப்டி தெரியும்?
ரவி சிரித்து கொண்டு என் பேத்தி பத்தி எனக்கு தெரியும் சூர்யா வீட்டுக்கு தானே போறேன்னு சொன்ன? இப்போ அந்த பொண்ணு எப்படி இருக்கா? நல்லா இருக்காளா? ஒன்னும் பிரச்சனை இல்லையே? சத்யதேவ் வந்தானா? என்று கேட்க..
ஆன்! நான் வீட்டுக்கு வந்துட்டேன்.. அப்புறம் டாடி விவேகா எல்லாரும் அங்கே வந்து பார்த்துட்டு போயிட்டாங்க.. இப்போ மாமி கொஞ்சம் பரவால்ல! என்று உடைந்த குரலில் கூற..
என்ன குரலை ஒன்றும் சரியில்லையே என்று ரவிச்சந்திரன் கேட்க..
எப்ப பார்த்தாலும் உங்களுக்கு சந்தேகம் தானா? நான் நல்லா தான் இருக்கேன்! எனக்கு தூக்கமா வருது! விடிய விடிய என்னால தூங்க முடியல, நான் தான் மகி மாமிய பக்கத்தில் இருந்து பார்த்துகிட்டேன். அதனால எனக்கு ரொம்ப தூக்கம் வருது தாத்து என்று போனை கட் செய்து படுக்கையில் பொத்தென விழுந்தாள்.
ஆனால தூக்கம் தான் வருவேன் என முரண்டு பிடித்தது உடலெல்லாம் சூடு பரவ ஆரம்பித்தது. காய்ச்சல் வந்துவிட்டது. அவனுடைய கோபத்தை அவளால் தாங்க முடியவில்லை. இத்தனை ஆதிக்கமாக ஒருவனுக்கு கோபம் வருமா? அப்போ என்னோட கோபம் எல்லாம்? என்று ரிதம் அவளையே கேட்டுக் கேட்டுக்கொண்டாள். “ அப்போ நான் கோபப்படுறது, எந்த லிஸ்டில் வந்து சேரும்? என்று ரிதம்வுக்கு தோன்றியது.
„அதெல்லாம் கோபமே கிடையாது! அவனோட கோபம் தான் உண்மையான கோபம்! அது! என்று அவளுக்கு அந்த நேரத்திலும் உடலெல்லாம் சிலிர்த்து கொண்டது. கண்களில் நீர்.. உதட்டை அழுத்தி கடித்தாள். அப்போ அவனோட மொத்த கோபமும் என் மேலல்ல! என்று கண்ணுக்குழி மெதுவாக சிரித்தது.
கன்னம் வீங்க தொடங்கியது. தலை பாரமாக ஆரம்பித்தது. வேகமாக டிவி பார்க்கலாம் என்று வெளியே வந்தாள்.
டிவியை ஆன் செய்ய யூடியூப் சென்றாள். “ஏதோ மோகம் ஏனோ தாகம் நினைக்கலையே!” என்று பழைய பாடல் ஓடிக்கொண்டிருந்தது.
இதெல்லாம் அந்த தாத்து வேலை தான் என்னோட ஐடியிலேயே லாகின் பண்ணி! இந்தப் பாட்டையெல்லாம் பார்க்கிறாரே? என்று கடுப்புடன் மாற்றச் செல்ல.. அடுத்து “என் கண்மணி என் காதலி” என அடுத்து ஆன் ஆக.. அதற்கு முன் ஓடிய பாடல் என்னவோ செய்தது. உடனே அந்த பாடலை போட்டு விட்டாள்.
ஏனோ அந்த பாடல் அவளுக்கு என்னென்னவோ செய்தது! வைத்த கண் வாங்காமல் கண்களை கண்களை மூடிக்கொண்டே, அப்படியே சோபாவில் சாய்ந்தவளுக்கு, அந்த பாடல்கள் பாடலின் வரிகள், காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. உடல் ஒரு சில நிமிடத்தில் காய்ச்சலில் கொதிக்க ஆரம்பித்தது. அவளால் அதற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை. ஏனென்றால் காய்ச்சலில் இருக்கும் போது வீட்டில் இருக்கும் விலங்குகள் பறவைகள் கிட்ட இருந்து இன்பெக்சன் பரவும் என்பதால் , மேலே இருக்கும் அவளுடைய அப்பார்ட்மெண்ட் வீட்டிற்கு இன்னொரு அப்பார்ட்மெண்டுக்கு கிளம்பினாள்.
அந்த வீடு கூட வழக்கம்போல் அதுவும் மிகவும் சுத்தமாக இருந்தது. பாவம் இவளால் இன்பாவுக்கு தான் நிறைய வேலை! இரண்டு அப்பார்ட்மெண்டையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்! அதேபோல், ரிதம் அந்த வீட்டு விலங்குகளையும் செல்ல பறவைகளையும் பராமரிக்க மாட்டாள். ஆனால் இன்ப ராகவன் அனைத்தையும் பராமரிக்க வேண்டும். அவள் நேராக மீண்டும் சோபாவில் போய் படுத்து தலையணை வைத்து படுத்துக்கொண்டவள். ஏசியை அதிகப்படுத்தி விட்டு, அங்கிருக்கும் டிவியில் அதே பாடலை ஒலிக்க விட்டாள்.
ஏதோ மோகம் ஏனோ தாகம். என ஓட .
ரிதமின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. உதடுகள் டைப் அடிக்க ஆரம்பித்தது. அந்த நேரம் மீண்டும் போன் அடிக்க..
ஹலோ என்று நடுங்கிய குரலில் பேசினாள்.
ஆமா இந்த பாட்டெல்லாம் நீ கேக்குற! என்ன ஆச்சு? என்று ரவிச்சந்திரன் கேட்டார்.
தாத்து என்ன வேலை பண்ணி வச்சிருக்கீங்க? எதுக்கு தாத்து! என்னோட ஜிமெயிலை லாகின் பண்ணி, இந்த சாங்ஸ் எல்லாம் கேக்குறீங்க? என்று தன்னுடைய நடுக்கத்தை மறைத்து பேசினாள்.
அது நானும் ட்ரெண்டிங்கில் இருக்கணும் அதான் நீ என்னென்ன கேட்டுட்டு இருக்கான்னு தெரிஞ்சுக்க தான் நான் உன்னோட ஜிமெயிலில் லாலின் பண்ணி கேட்டேன். என்று ரவிச்சந்திரன் கூறினார்.
சரி என்னமோ பண்ணுங்க என்று சொல்லிவிட்டு தூங்க தொடங்கினாள்.
அந்த ஒரு நாள் முழுவதும் கண்ணம் வீங்கி பழுத்துப் போனது.. சிவந்து அவளால் வாய் கூட திறக்க முடியவில்லை. அப்படி ஒரு அடி! அவள் எதிர்பார்த்து இருக்க வில்லை! இந்த அளவுக்கு அவனுடைய கோபத்தை அதுவும் நான் தாங்கிக் கொள்கிறேன்! அதை நினைக்கவே மிகவும் கர்வமாக இருந்தது! அவனுடைய காதலில் ஹரிணி இருந்தாலும் கூட, கோபத்தில் ரிதம் இருக்கிறாள்! அப்போ அவளை விட என் மேல தான அவனுக்கு கோவம் அதிகமா இருக்கும்? அப்போ நான் அவனுக்கு எவ்வளவு இம்பார்டன்ட்? என்று சொன்னவளின் கண்களில் நீர் வற்றாமல் ஓடிக் கொண்டிருந்தது.
சத்யதேவுக்கு அந்த நாள் முழுவதும் ரிதம் என் நினைப்பு வரவே இல்லை! கோபம் மட்டும் தான் வந்தது. அத்தனை கோபம்! அதற்கு அடுத்து வரும் பிரச்சனையை சத்திய தேவ் யோசிக்கவே இல்லை. அப்படியே ஒரு நாள் கழித்து.. மகி நார்மலாக..
சத்யதேவ் மீண்டும் கிளம்பி அவனுடைய அப்பார்ட்மெண்ட் சென்று விட்டான்.
ருத்ரன் நாய்க்குட்டியை கொண்டு வந்து விட்டுச் செல்ல வர..
அப்பொழுதுதான் விவேகா அவனுக்கு அழைத்தார்.
சொல்லுமா என்று ருத்ரன் பதிலளிக்க..
அப்படியே ஒரு எட்டு உங்க அக்கா எப்படி இருக்கான்னு கொஞ்சம் பாரு? என்று கூற..
எனக்கு வேற வேலை இல்ல! ஏன் அவர் சொல்ல சொன்னாரா? அக்கறை இருந்தா அவரே வந்து பார்க்க வேண்டியது தானே! எதுக்கு என்ன பார்க்க சொல்றீங்க? என்று ருத்ரன் கடுப்பாக பேசினான்.
விவேகா ஸ்பீக்கரில் போட்டு இருக்க.. அவன் பேசியது அனைத்தையும் கேட்டு இன்பாவிற்கு கோபம் வர..
டேய் ராஸ்கல் எனக்கும் நேரம் வரும் அப்ப உன்னை பார்த்துக்கிறேன் டா என்று போனை கட் செய்தார்.
என்ன ஆச்சு என்று சத்திய தேவ் கேட்க அதுதான் அதன் அடங்காதவ கிட்டத்தட்ட ரெண்டு நாளா போனே எடுக்கல! கடைசில அம்மாவும் அவரும், மகி அத்தைய பார்க்க வரும்போது, தான் அவள் அங்கே இருந்தாள். ஆனால் அத்தை சரியானதுக்கப்புறம், அவளை ஆளையே காணோம்! மகி மாமி கூட என்கிட்ட ரிதம் பத்தி கேட்டாங்க! ஆனா அவ எங்கன்னு தெரியல! என ருத்ரன் சொல்ல…
அது உங்க தாத்தா வீட்டுக்கு போய் இருப்பா என்று சத்தியதேவ் கொஞ்சம் நம்பிக்கையில் கூற ..
வசுமாவும் எங்க கிட்ட தான் கேட்டாங்க! அதே போல மகி மாமி அவள் மேல அவளோ உருக்கம்! அவள் போன் எடுக்களால போல! கேட்டுட்டே இருந்தாங்க! என ருத்ரன் கூறினான்.
அப்போ எங்க போனான்னு தெரியலையா? என்று சத்திய தேவ் கேட்க..
அவளை பத்தி நமக்கு எதுக்கு மாமா? எங்கயாவது தூங்கிட்டு இருப்பா! அவளுக்கு வேற வேலை என்ன? சரியான கொழுப்பு! ஆமா அவ எப்படி உங்ககிட்ட பேசினா? நானும் எவ்வளவு முயற்சி பண்ணி பார்த்ததேன் ஆனால் இன்பராகவன் என்கிட்ட எதுவுமே சொல்லல! என்று ருத்ரன் சொல்ல.
சத்யதேவ் கோபமாக “இனிமேல் அவரைப்பற்றி, மரியாதை இல்லாம பெயர் சொல்லி கூப்பிடாத! உனக்கு அவர பத்தி என்ன தெரியும்?” என கேட்க..
சரிங்க மாமா என அமைதி ஆகி விட்டான்.
சத்தியதேவ் நேராக உள்ளே செல்ல..
சொல்லுங்க மாமா! அவ உங்களை எப்படி காண்டாக்ட் பண்ணா? என ருத்ரன் திரும்பி திரும்பி கேட்க..
அவன் பெருமூச்சியை விட்டு யவனிகா கிட்ட நம்பர் வாங்கி இருக்கா! அங்கிருந்து எனக்கு போன் வந்தது ரிப்போர்ட்டர் கொடுத்தார்! நான் பேசினேன்! அது வேற வேலை இருக்கு! இன்னும் அந்த டாக்குமெண்ட்டோட ஒர்க் எல்லாம் நிறைய இருக்கு. ஆர்டிகல் ரெடி பண்ணனும்!
அப்படியா இது எனக்கு தோணாம போச்சே! என்னோட மண்டையில, அவரு மட்டும் தான் இருந்தாரு! ஆனா நான் எவ்ளோ கெஞ்சி பார்த்தும் உங்களை பத்தி அவர் சொல்லவே இல்ல! என்று ருத்ரன் கூறினான்.
சத்திய தேவ் கொஞ்சம் சிரித்துக்கொண்டே நான் கிளம்பி வருவேன்னு அவருக்கு மெசேஜ் பண்ணிட்டு தான் வந்தேன். என்று கூறினான்.
அப்படியா என்று ருத்ரன் அதிர்ச்சியுடன் பார்க்க..
ஆமா என்று சக்தி தலையசைத்தான்.
சரிங்க மாமா எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புறேன் காலேஜ்ல ஜாயின் பண்ணிட்டேன். என்று புன்னகையுடன் ருத்ரன் கூறினான்.
அப்படியா எந்த காலேஜ்? என்று கேட்க..
அந்த காலேஜின் விவரங்களை கூறினான்.
இதை கேட்டதும் சத்யதேவ் சிரித்துக் கொண்டே என்ன திடீர்னு காலேஜ்ல ஜாயின் பண்ணி இருக்க? என்கிட்ட படிக்கிறன்னு சொன்ன?! இன்னிக்கு காலேஜ் ஜாயின் பண்ணி இருக்க? என்று கேட்க..
அது ரெண்டு வருசத்துக்கு மட்டும் படிக்க போறேன்.. என ருத்ரன் முகத்தில் புன்னகை..
அப்போ மீனாட்சி வந்தாச்சா? என்று கேட்டான்.
ஆமா மாமா ஜாயின் பண்ணிட்டா! இனிமே பக்கத்திலேயே பார்த்துக்க வேண்டியதுதான்! நான் இனிமேல் ரொம்ப பிஸி மாமா! என்று ருத்ரன் கூற..
சரி சரி ஒரு நாள் மீட் பண்ணலாமா என்று சத்யதேவ் கேட்க..
இது என்ன மாமா கேள்வி? நான் எங்க அம்மாவுக்கு இன்ட்ரோ கொடுக்க போறேன்! அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்னு இருக்கேன்! என்று ருத்ரன் கூறினான்.
அப்படியா ஓகே என்று சொல்ல
சரி அப்போ நீங்க நானு எங்கம்மா நம்ம மூணு பேரும் மீட் பண்ணலாம். உங்களுக்கு அவள ரொம்ப பிடிக்கும். எங்க அம்மாவுக்கும் தான்! ஹான் அதே மாதிரி தான் நல்லா சமைப்பா மாமா! நாளைக்கு தான் மேடம் வர போறாங்க சோ நான் கிளம்பனும்.
டிரயினா?
நாளைக்கு தான் அவளை போய் கூட்டிட்டு வரணும்! என்று கூறினான்.
எங்க இருந்து கூட்டிட்டு வர போற?
அனுப்பூரில் இருந்து ஜங்ஷன் வந்துருவா! அங்கிருந்து ஃபர்ஸ்ட் ஏசி புக் பண்ணி இருக்கேன்! என்று ருத்ரன் கூற..
இதை கேட்டதும் சத்ய தேவ் புருவத்தை தூக்கிக்கொண்டே ஃபர்ஸ்ட் ஏசியா? அப்போ ரெண்டு பேரும் ஒரே கம்பார்ட்மெண்ட்டா? இல்ல ஒரே சீட்டா? இல்ல ஆர் ஏசியா? என்று இரு பொருள் பட பலவிதமாக கேட்க..
1ac ல Rac இல்ல மாமா!
நீயும் அவளும் share பண்ணா Rac தானே!
ருத்ரன் முகத்தில் அத்தனை சந்தோசம்! அவ எனக்கு தானே சொந்தமாக போறா! என்னால மீனாட்சி இல்லாம இருக்கவே முடியாது! என்று கூறினான்.
சரி போயிட்டு வாங்க மாப்ளை! தங்கச்சி பத்ரம்..
சும்மா அவள் கூட டைம் ஸ்பென்ட் பண்ணவே முடியல! எப்பவாச்சும் ஊருக்கு போகும்போது அந்த பங்க்ஷன்ல தக திமி தா ஆடுவா! அப்பதான் அவள பார்க்க முடியும்! இப்போ நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு! அவளை எனக்கு கொடுப்பார்களா அப்டின்னு கொஞ்சம் பயமா இதுக்கு!
எதுக்கு அப்படி நினைக்கிற? கவலை படாமல் போயிட்டு வா!
ம்ம் சரி மாமா! என சிரித்து கொண்டே இனிமே நான் gold fish அ மிஸ் பண்ணவே மாட்டேன்! என்று ருத்ரன் கூறினான்.
ரொம்ப சந்தோஷம் என்று சத்தியதேவ் சொல்ல..
சரிங்க மாமா நான் கிளம்புறேன்! என்று ஒரு புன்னகை உதிர்த்துவிட்டு ருத்ரன் கிளம்பி விட்டான்.
ருத்ரன் கிளம்பிய அடுத்த நொடி வேகமாக சத்ய தேவ் வெளியே வந்தவன். எதிரில் இருக்கும் பிளாட்டை பார்த்தான். கதவைத் தட்டினான். எந்த ஒரு அரவமும் தெரியவில்லை.
நேராக கீழே இறங்கி பால்கனி பக்கம் சென்றான். அவளின் வீட்டை நின்று பார்த்தான். அங்கே அவள் வந்ததற்கான சுவடு எதுவும் இல்லை. இப்போ என்ன பண்றது? என்னாச்சுன்னு தெரியலையே?ரொம்ப கோபமா அடிச்சிட்டேனோ? என்று அவள் அவளைப் பற்றி நினைத்து கொண்டே வீட்டுக்கு வந்தான்.
அவனுடைய அப்பார்ட்மெண்ட் வர அப்பொழுது ஒரு பணிப்பெண் வந்து கதவை திறந்து உள்ளே சென்றார்.
அக்கா! என அழைக்க..
என்ன என திரும்பி பார்த்தார்.
அவரிடம் விசாரிக்க “அந்த பொண்ண மேல இருக்கிற அப்பார்ட்மெண்ட்ல இருக்கு! என்று கூறவும்..
சரி நீங்க பாருங்க என சொல்ல பணிப்பெண் உள்ளே சென்று விட்டார்.
சக்தி வேகமாக மேலே சென்றான்.
கதவை தட்ட அவளால் எந்திரிக்கக்கூட முடியவில்லை..
மெதுவாக இருந்து கொண்டே பனிப்பெண் தான் வந்திருக்கிறாள். என்று நினைத்து கதவை திறந்தவள். உதடுகள் டைப் அடிக்க கண்ணை கூட முழிக்க முடியாமல் “அப்படியே எனக்கு சாப்பிட ஏதாவது செஞ்சு கொடுக்க முடியுமா?” என்று குரல் உடைந்து கேட்டாள்.
கன்னம் கண்கள் எல்லாம் வீங்கி மூடி இருந்தது. அப்படி அவளை பார்ப்பதற்கு நெஞ்சில் வாள் கொண்ட அறுப்பது போல சத்தியதேவுக்கு இருந்தது.
சட்டென உள்ளே வந்தவன். அவள் தள்ளாடிக் கொண்டு விழப்போக அவளை பிடித்தான்.
நெருப்பாக கொதித்துக் கொண்டிருந்தாள். அவளது உடையில் கூட அத்தனை சூடு..
ஹே என்று அதட்ட ப்ளீஸ் என்ன? விட்டுடு உன்னோட ஹெல்ப் எனக்கு தேவையில்லை! என்று கூற..
சத்யதேவ் கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு நீ பண்ணதுக்கு நான் எப்பவும் மன்னிக்க மாட்டேன்! எனக்கு உன்னை பார்த்தால் வெறுப்பா இருக்கு டி! கொஞ்சம் நஞ்சமா பண்ணி இருக்க? என்ன வேலை பண்ணி இருக்க? நீ கடைசியா பண்ணத மட்டும் என்னால டைஜஸ்ட் பண்ணிக்க முடியல! என்ன நான் வார்த்தை சொன்னடி? சாதாரணமா அப்படியே வார்த்தைகளை அள்ளி வீசற! என்னடி நினைச்சுட்டு இருக்க ? கொஞ்ச நேரம் விட்டா எங்க அம்மா போய் சேர்ந்திடுவாங்கன்னு சொல்ற? என்று சொல்ல..
ரிதமின் கண்கள் கலங்க.. அந்த கண்ணீர் சூடான அந்த நீர் அவனுடைய கைகளை நினைத்தது.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அப்டின்னு படிச்சிட்டு உணர்வுகளை அடக்க தெரியாத மிருகம் டா நீ! இனி அதை படிக்காத பாவம் வந்து சேரும்!
ஹேய்!.
ரிதம் அவனது கயை தட்டி விட்டு பெற்ற தாயை கஷ்ட படுத்தும் நீ வீகன் இல்ல.. உனக்கு என்ன ஜீவகாருண்ய ஒழுக்கம் தெரியும்! நீ இன்னும் கொஞ்சம் நேரம் வராமல் இருந்திருந்தால், மகி மாமி சாகரத்தை விட கொடுமையான நிலைக்கு போய் இருப்பாங்க! என்று கூற..
சத்தியதேவ் அவளின் கழுத்தை இறுக்கி பிடிக்க ரிதம் ஒரு புன்னகையை உதிர்த்து கொண்டே பார்வையை, வேறு பக்கம் திருப்பிக்கொண்டு மகிமாமி உன்ன நெனச்சு பைத்தியமாக போறாங்க! கடைசில நீ அதுல தான் கொண்டு போய் தள்ள போற! என்று கூறிவிட்டாள்.
சத்யதேவ் சட்டென அவளை விட்டு விலக..
என்ன நினைச்சுகிட்டு இருக்க? நான் சொல்றத உன்னால ஏத்துக்க முடியலையா? நீ பைத்தியமாடா? நீ யாருடா? ஆனா நான் எவ்வளவு சொன்னாலும் உனக்கு புரியாது போ! கல்நெஞ்சகாரா! I think நீ சைக்கோ! உனக்கு கோபம் கண்ணு மண்ணு தெரியாம வருது! அதை அடக்க தான் இப்படி சைவம் சாப்பிட்டு, எது எதோ பண்ணி நடிக்கிற? எனக்கு தெரிஞ்சு போச்சு! என கூறினாள்.
இதை கேட்டதும் சத்ய தேவ்க்கு வியர்த்து வழிய இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அவன் அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்.
*
இங்கே பார்டரில் என்ன நடக்கிறது?
ஹரிணியின் குழுக்கள் தனித்தனியாக பிரிந்து அனைத்து இடங்களிலும் தேடி மழையில் நனைந்து நொந்து கொண்டே சுற்றியது.
இன்னும் நித்தின் பற்றிய எந்த தகவலும் அவளுக்கு கிடைக்கவில்லை. அப்படியே இருக்க இரண்டு நாட்கள் கழித்து அவன் ஒரு மலை கிராமம் பக்கம் இருப்பதாக செய்தி வந்தது.
நேராக அங்கே செல்ல.. அங்கிருக்கும் மக்களை அனைவரையும் காப்பாற்றி விட்டு அங்கே ஓரிடத்தில் தங்கி இருந்தான்.
அவனை பார்த்ததும் ஹரிணி வாக்கி டாக்கியில் ஃபோர்ஸ் வர இங்பார்ம் செய்து விட்டு அவன் பக்கம் சென்றாள்.
ஆனால் நித்தின் பிரகாஷ் உண்மையாகவே அவர்களை காப்பாற்ற தான் சென்று இருந்தான்.
ஏனென்றால் இது அவனுடைய அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடியது. அரசியல் வாழ்க்கையில் பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்பது தான் குரு பிரகாஷ் மற்றும் சூரிய பிரகாஷின் ஆசை, அதனால் தான் அனைவரையும் காப்பாற்றினான்.
இங்கிருக்கும் விஷயத்தை ஹரிணி எப்படியோ கண்டுபிடித்து வந்துவிட்டாள். அவள் அவனுடைய அருகில் சென்றவள்.
சார் என்று அழைக்க சட்டென திரும்பி பார்த்தான்.
அவனுடைய பதவிக்கு மரியாதை நிமித்தமாக சல்யூட் செய்து விட்டு நீங்க எங்க இங்க? என்று கேட்க..
அவளின் ஒரு வார்த்தை நித்தின் அவள் பக்கம் ஊடுருவி பார்த்தான். தூக்கம் இல்லாமல் கலைந்த ஈர பத முடிகள், அவளின் முகத்தில் குளிரில் சிலிர்த்து கொள்ள.. அவளின் குளிரில் கொஞ்சம் நடுங்கி கொண்டிருந்தது. ஆர்ப்பாட்டம் இல்லாத அழகியாக இருந்தாள். ஆனால் முகம் எப்பொழுதும் போல் பிரகாசமாக இருந்தது.
சார்! என ஹரிணி மீண்டும் அழைக்க..
நீங்க மிஸ்ஸிங்ன்னு உங்க தங்கச்சி ரொம்ப பயந்துட்டாங்க! அதுவும் இது சீக்ரெட் மிஷன் உங்கள பத்திரமா மீட்டுக் கொண்டு போக தான் நான் வந்தேன்! என்று ஹரிணி கூற..
உன்னை யாரு இங்க தனியா வர சொன்னது? இது எவ்வளவு டேஞ்சர்ன்னு உனக்கு தெரியுமா? என்று நித்தின் கேட்க..
அதைவிட உங்கள காப்பாற்றுவது எங்களுக்கு ரொம்ப முக்கியம். அதனாலதான் வந்தேன் சரிங்க சார் வாங்க கிளம்பலாம்!இவங்களுக்கு உண்டான நிவாரண நிதிகள் அனைத்தும் கவர்மெண்ட் பாத்துக்கும், இப்போ உங்களை பத்திரமா கூட்டிட்டு போய் சேர்க்க வேண்டியது! எங்களோட பொறுப்பு! என்று ஹரிணி அழைக்க..
இப்போ வர முடியாது..
ஹரிணி அவனைப் பார்த்து இந்த இடம் அவ்வளவா சேஃப் கிடையாது! ஏன்னா இங்க இந்த இன்டீரியர்ல நிறைய நக்சலைட் தீவிரவாதிகள் சுத்திட்டு இருக்கிறதா எங்களுக்கு தகவல், அதனால் உங்களை பத்திரமா கொண்டு போய் சேர்க்கணும்! ப்ளீஸ் வாங்க!
நான் சொல்றத புரிஞ்சுக்க! இன்னும் ஒரு நாளில் , இன்னிக்கு சாயந்திரம் கூட என்னை தேடி வந்துடுவாங்க! ஆனா இங்க இருந்து போக வேண்டாம் என்று நித்தின் எவ்வளவோ எடுத்து கூறினான்.
ஆனால் ஹரிணி அதைக் கேட்கவில்லை.
நீ போ நான் வரமாட்டேன் என்று நித்தின் கூற..
நீங்க வந்து தான் சார் ஆகணும் என்று அவன் பின்னால் சென்றாள்.
நித்தின் கடுப்புடன் சுற்றிக் கொண்டிருக்க..
ஹே நித்தின் இப்போ வர போறியா? இல்லையா? என்று ஹரிணி அழைக்க..
சட்டென நித்தின் திரும்பி பார்த்தான்.
நான் எத்தனை தடவை சொல்றது! வான்னு சொல்றேன்ல! தீவிரவாதிகள் நிறைய பேர் இருக்காங்க நீதான் மினிஸ்டர்ன்னு தெரிஞ்சா உன்ன தூக்கிட்டு போய் என்ன வேணாலும் பண்ணுவாங்க!
என்னை அவ்வளவு வீக்கா நெனச்சியா? எத்தனை பேர் வந்தாலும் அசால்டா அவங்களோட கழுத்து திருப்பி போட்டுட்டு போவேன். என அவன் அவர்களை கவனிக்க சென்று விட்டான்.
அப்படியே மதியம் சென்றது.
நிதின் என்று அழைத்தாள்.
நித்தின் ஒரு பெருமூச்சியை விட்டு அடங்க மாட்டல்ல நான் சொல்றதை நீ கேட்க மாட்டியா?
நான் சொல்றதை நீ கேளு நான் என்கிட்ட வாக்கி டாக்கி இருக்கு அது மூலமா நான் காண்டாக்ட் பண்ணிக்குவேன்! இங்கிருந்து நாம கொஞ்சம் கொஞ்சமா மூவ் பண்ணா தான் நம்ம சேஃபான இடத்துக்கு போக முடியும்! நான் உன்னை டெல்லி கொண்டு போய் விடணும்! என்று ஹரிணி கூற..
நித்தின் சிரித்துக்கொண்டே என்னை நீ!… என்னை டெல்லி கொண்டு போய் விட போறியா? என்று கேட்டான்.
ஏன் என்னை சாதாரணமா நினைச்சுட்டு இருக்கியா? நான் உன்ன விட ரெண்டு வயசுக்கு மூத்தவ என்று ஹரிணி கூற..
அப்போ இதுல இருந்து என்ன சொல்ல வர? உன்னால எல்லாமே முடியும்? என்று சொல்ல வரியா?
அவள் நெஞ்சை நிமிர்த்தி கொண்டே ஆமா! என்னால எல்லாமே முடியும்! என்று ஹரிணி கூற..
அப்படியா சரி ஓகே உன் கூட நான் வரேன்! சப்போஸ் உன்னால என்னை சரியா கொண்டு போய் விட முடியலன்னா? என்ன பண்ணுவ? உன்ன நான் காப்பாத்த வேண்டியதுதா போச்சுன்னா? அப்போ என்ன பண்ணுவ? என்று நித்தின் கேட்டான்.
இது என்ன ரப்பிஷா இருக்கு! என்று ஹரிணி சொல்ல..
யாரு? நான் சொல்றது அப்படி இருக்கா? என்று நித்தின் கேட்க..
ஹரிணி எகத்தாள பார்வையுடன் ஆம்பளைன்னா ரெண்டு கொம்பு வெச்சி இருக்கியா? என்ன? என்று கேட்க..
கொம்பெல்லாம் இல்லை வால் இருக்கு! பிடிக்கறயா என்று நித்தின் இரு பொருள் பட பேசினான்.
ச்சீ என்று ஹரிணி திரும்ப..
அடேங்கப்பா நான் சொல்றதுதான் உனக்கு ரொம்ப கெட்ட வார்த்தை மாதிரி தோணும்! இதுவே அவனா இருந்தா பின்னாடியே போவ பிட்சு மாதிரி! என்று நித்தின் வெளிப்படையாகவே சத்ய தேவ் பற்றி கூறினான்.
ஹேய் என்று ஹரிணி அவனை அடிக்க வர..
என்னடி என்று நித்தின் அசராமல் அவளைப் பார்த்தான்.
தொடரும்..
பார்ப்போம்..
இன்னிக்கு epi epdi இருந்தது? சொல்லிட்டு போங்க..
EPISODE 48
சத்யதேவ் அவளுடைய அப்பார்ட்மெண்டில் இருந்து வேகமாக அவனுடைய வீட்டுக்கு வந்து விட்டான். அவனது கோபத்தை உண்மையாகவே கட்டுப்படுத்த முடியவில்லை. வேகமாக குளியலறை சென்று கிட்டத்தட்ட அரை மணி நேரம் குளித்தான்.
தன்னுடைய கோபத்தை அசுவாசப்படுத்தி கொண்டு நேராக சாமி அறைக்கு வந்தான்.அந்த வள்ளலாரின் படத்தையும் சிவன், பார்வதி முருகன் என அனைத்து கடவுள்களின் திருவுருவ படங்களையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த ஜீவகாருண்ய அருட்பெருஞ்ஜோதி புத்தகத்தை திறந்தவனுக்கு ரிதம் சொன்ன வார்த்தைகள் தான் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.
ஆமாம் கோபம்! தீர்க்க முடியாத கோபம்! கட்டுப்படுத்த முடியவில்லை. ஏன் இப்படி? நான் ஆனேன்? எனக்கே தெரியவில்லை! அவள் சொல்வது போல் எல்லாம் வேஷம் தானா? அது சத்யதேவியின் மனதுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். வேறு யார் யாருக்கு தெரியும்! அத அப்புறம் பார்க்கலாம்.
ஒரு மணி நேரம் கழித்து தன்னை சரி செய்து கொண்டு கழுத்தில் ருத்ராட்சத்தை எடுத்து போட்டுக் கொண்டான். இன்னும் கோபத்தை கட்டுப்படுத்தணும்! இது நல்லதுக்கு இல்ல! நான் எவ்வளவுதான் முயற்சி பண்ணாலும், இந்த கோபத்தை கட்டுப்படுத்த முடியலையே! என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு கழுத்தில் போட்டுக் கொண்டான்.
கொஞ்சம் கொஞ்சமாக அமைதியானவன் சிவப்பு அரிசியை வறுத்து பொடி செய்து தண்ணீர் கலந்து மணமாக ஒரு கஞ்சியை தயார் செய்தான். காய்ச்சலில் கொதித்துக் கொண்டிருக்கிறாள். நாக்குக்கு உறைப்பாக அதில் உப்பை கலந்து, நேராக அவளுடைய அப்பார்ட்மெண்டுக்கு மேலே சென்றான்.
அந்த பணியால் வீட்டை சுத்தம் செய்துவிட்டு, ரிதம்காக கஞ்சி செய்து கொடுத்துவிட்டு கிள போகும்போது ரிதம் சில நான்கு 500 தாள்களை கொடுத்து, “ இந்த விஷயம் உங்களுக்குள்ளே இருக்கணும்! எனக்கு காய்ச்சல்ன்னு யாருக்கும் தெரியக்கூடாது!”
இல்லம்மா சார் கிட்ட சொல்லிடவா? என்று அவர் கேட்க..
சொல்லக்கூடாதுன்னு சொன்னேனா என்று ரிதம் அதட்டினாள். அந்த பணியால் தயங்கி கொண்டே பணம் வேண்டாமா!
பரவால்ல வாங்கிக்கோங்க உங்க குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கி கொடுங்க என்று கைகளில் வலுக்கட்டாயமாக திணித்துவிட்டு அனுப்ப..
அந்த பணியாள் அவளை பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டு கிளம்பினாள். ஒரு சில நொடிகளில் ரிதம் டேபிளுக்கு வந்து சுடுநீரை கொஞ்சம் பருகி விட்டு அந்த கஞ்சியை எடுத்து முகர்ந்து பார்த்தாள்.
பிடிக்கவில்லை வேறு வழியில்லாமல் ஒரு சிப் செய்த அந்த நொடி கதவு தட்டும் சத்தம் கேட்டது.
காலிங் பெல் விடாமல் அடித்துக் கொண்டிருந்தது.
இப்போதான வந்தாங்க? என்னாச்சு? என நினைத்துக் கொண்டே கதவைத் திறக்க.. சத்ய தேவ் நின்று கொண்டிருந்தான்.
இப்போ நீ எதுக்கு திரும்பத் திரும்ப வர என்று கேட்க
உனக்கு ரொம்ப காய்ச்சலா இருக்குல்ல! அதனால உனக்கு சிவப்பு அரிசி கஞ்சி செய்து கொண்டு வந்து இருக்கேன்! இது ரொம்ப ஹெல்த்துக்கு நல்லது! கொஞ்சம் குடி உன்னுடைய காய்ச்சல் கொறஞ்சிடும்! அதேபோல உன்னோட கண்ணனுக்கு, கண்ணத்துக்காக வீக்கம் குறைய அளிங்மெண்ட் ஃபீவர் சரியாக டேப்லெட் எல்லாமே கொண்டு வந்து இருக்கேன். என்று வீட்டுக்குள் ஒரு காலை வைத்துக் கொண்டும், வெளியே ஒரு காலையும் வைத்துக்கொண்டு கூறினான்.
எங்கே அவள் கதவை சாத்தி விடுவாளோ என்று தான்..
உன்னோட எந்த உபகாரமும் எனக்கு தேவையில்லை! என்று ரிதம் கூற
ப்ளீஸ் நான் சொல்றத கேளு! இப்போ நீ சரியில்ல! தயவு செய்து கொஞ்சம் சாப்பிடு! என்று சொல்லிக் கொண்டு அவளைத் தாண்டி உள்ளே சென்று மேஜைக்கு வர கிண்ணத்தில் உள்ள கஞ்சியை பார்த்தான்.
ஓ உங்களோட சர்வெண்ட் செஞ்சு கொடுத்தாங்களா என்று கேட்டான்.
அவள் எந்த பதிலும் சொல்லவில்லை..
ரிதம் ப்ளீஸ் வா என்று அழைத்தான்.
ரிதம் எதுவும் பேசாமல் சோபாவில் அமர்ந்து அந்த கஞ்சியை பார்த்தாள்.
ஏதோ மூக்கிற்கு கொஞ்சம் உணத்தியாக இருக்க உதட்டை எச்சில் படுத்திக் கொண்டு கஞ்சியை பார்த்தாள்.
எடுத்துக் குடி நல்லா இருக்கும் உனக்காக நான் செஞ்சிருக்கேன்!
இந்த வார்த்தைகள் அவளுக்கு காதில் ஈயத்தை காட்சி ஊற்றுவது போல இருந்தது. அவனுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் எரிச்சலாக இருந்தது .
ரிதம் சத்யதேவையை முறைத்துக் கொண்டே பார்த்தாள் .
சரி குடி என்று சொல்ல வேறு வழியில்லாமல் எடுத்துக் குழு குடிக்க ஆரம்பித்தாள்.
ஒரு வாய் வைக்கவும் வலி தாங்க முடியாமல் இடது கண்ணில் இருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.
என்னாச்சு கண்ணு கண்ணீர் வருது!
இதை கேட்டதும் ரிதம் சத்யதேவை முறைத்தாள்.
அவனுடைய அடி அந்த அளவுக்கு அவளும் பூகம்பத்தையே ஏற்படுத்தியிருந்தது.
அந்த கஞ்சியை கூட வாய் திறந்து குடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவனுடைய அடி இருந்தது.
சத்தியதேவ் அவளின் கஷ்டத்தை பார்த்து உள்ளே சென்று ஸ்பூன் எடுத்துக் கொண்டு வந்து நீட்டினான்.
அதை வாங்கியவள் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க ஆரம்பித்தாள்.
சத்ய தேவ் ஆயின்மென்ட் எடுத்து இத இத கன்னத்துல தடவிக்கோ என்று கூறினான்.
ரிதம் அவனை மேலும் கீழும் பார்த்தாள்.
என்ன ஆச்சு என்று சத்ய தேவ் கேட்க
அவன் கேள்விகளுக்கு அவள் எந்த பதிலும் சொல்லவில்லை..
சத்யதேவ் அவளிடம் தயங்கிக் கொண்டே “நான் அவ்வளவு கோபமா நடந்துக்குறேனா? என்னோட கோபம் ரொம்ப மூர்க்கத்தனமாக இருக்கா? என்று கேட்டான்.
ரிதம் அவனை முறைத்து பார்த்தாள்.
ப்ளீஸ் கேட்பதற்கு பதில் சொல்லு! ஒரு செல்ப் அனலைசிங்காக தான் கேட்கிறேன் என்று சத்திய தேவ் கூற
ரிதம் அவனை ஆராயும் பார்வை கொண்டு ஆக்சுவலா நீ உன்னோட ஒரிஜினல் ஃபாம் அதுதானே! சத்திய தேவ் ஒரு மிருகம்! கரெக்டா?
இதைக் கேட்டதும் சத்யதேவ்க்கு உள்ளுக்குள் பதட்டமானது. தன்னுடைய பதட்டத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல்..
அப்படி எல்லாம் இல்ல! எனக்கு கொஞ்சம் தான் கோபம் வரும் என்று கூற
பொய் சொல்லாத உனக்கு ஓவர் கோபமா இருக்கு! சம்திங் எங்கேயோ ஏதோ நடந்திருக்கு! நீ எங்கேயும் எதிலயும் இருக்க மாட்ட! வீட்டில் function அப்போ நீ தான் கடைசியில் வந்திட்டு முதல் ஆளா போவ? அப்படி என்ன வேலை செஞ்சிட்டு இருக்க? நீ எப்பவுமே காணாமல் போனவன் லிஸ்ட்ல தான் இருக்க? என்ன மறைக்கிற? சொல்லு! என ரிதம் கேட்க..
சத்ய தேவ்..?
* @ # @*
உன்னால என்ன பத்திரமா கூட்டிட்டு போக முடியலைன்னா? நீ என்ன பண்ணுவ? என்று கேட்க..
இந்த வேலையை விட்டுடறேன் என்று எடுத்த எடுப்பில் ஹரிணி கூற..
நித்தின் சிரித்துக்கொண்டே நீ வேலையை விட்டா அதுல எனக்கென்ன பிரச்சனை! போ! அது உனக்கு இன்னும் வசதியா இருக்கும்! அவன போய் கட்டிக்க! என்று கூறினான்.
இப்போ உனக்கு என்னதான் பிரச்சனை? எதுக்கு இப்படி பேசிட்டு இருக்க? சொந்த விசயத்தை இதில் கொண்டு வராத! என்று ஹரிணி கூறினாள்.
எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல! நீ என்னை பத்தி ஏன் கவலைப்படுற? உன் வேலையை பார்த்துட்டு போடி! என்று கூறினான்..
இந்த டீ சொல்ற வேலையெல்லாம், இங்க வச்சுக்காத நித்தின்! நான் உங்க அண்ணனோட பொண்டாட்டியாக போறவ! என்று ஹரிணி கூற..
நித்தின் அவளின் அருகில் நெருங்கி இடுப்பை வளைத்து பிடித்தவன். “இப்போ அவனுக்கு பொண்டாட்டி ஆயிட்டியா என்ன? எப்படி.. எப்படி? ஹான் ரொம்ப சாப்டா முத்தம் கொடுக்கக் கூடாது! அப்படியே பிடிச்சு ரொம்ப அரக்கனா மாறி முத்தம் கொடுக்கணும்! அப்படித்தானே! இப்போ கொடுக்கவா? ”என்று கேட்டான்.
இதை கேட்டதும் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை உடல்கள் எல்லாம் அதிர உதடு துடிக்க கண்ணெல்லாம் கலங்கி போனது. என்ன சொன்ன? அப்போ ஒட்டு கேட்டியா? என்று ஹரிணி அவனை விலக முயற்சித்து கொண்டே பார்த்து கேட்க
ஆமா ஒட்டு கேட்டேன் அவன் கூட கொஞ்சி குழைய தானே அன்னைக்கு கரண்ட்டையே கட் பண்ண? என்று அருகில் வந்தவன் அவளை இதழோடு இதழ் உரசினான்.
“ச்சீ! உனக்கு அறிவு இருக்கா! சத்ய தேவ் சொல்லும் போது கூட நான் உன்னை அவ்ளோ மோசமா நினைக்கல! ஆனால் நீ ச்சீ! எவ்ளோ கீழ்தனமாக நடந்திருக்க! ஆமா! நான் அவன் கூட கொஞ்சி குழைய தான் லைட் ஆப் பண்ணேன்! நானும் அவனும் எங்கேஜ்ட்! எங்களுக்குள் ஆயிரம் இருக்கும்! உனக்கென்ன டா!” என அவனுடைய கழுத்தை பிடித்து இறுக்கி கொண்டே அவளுடைய அவன் உரசிய உதட்டை எதோ அசிங்கத்தின் மீது உதடு பட்டது போல துடைத்தாள்.
நிதின் பிரகாஷுக்கு உள்ளுக்குள் அத்தனை கோபம் அகங்காரம் அத்தனையும் தோன்றியது. ஆனால் அது எதையுமே வெளி காட்டி கொள்ளாமல் அவளை விட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்.
ஹரிணி அதே இடத்தில் நின்றவள் மீது மெல்லிய மழை துளி தூர ஆரம்பித்தது. உள்ளுக்குள் அனலாக தகித்துக் கொண்டிருந்தது. ஹரினிக்கு எப்பொழுது சத்ய தேவை பார்ப்போம் என இருந்தது. இந்த வேலையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்! அவனோட இருக்க வேண்டும். வேலையே இல்லாமல் போனால் என்ன? குடும்பத்துடன் செட்டில் ஆக வேணும் என நினைத்து கொண்டாள்.
இப்படியே சிறிது நேரம் செல்ல… அவள் தன் சொந்த விருப்பு வெறுப்பை தள்ளி வைத்து விட்டு நேராக அவன் பக்கம் சென்றாள். சார் வாங்க போலாம்! இங்கே இருப்பது safe இல்ல உங்களை பத்ரமா கொண்டு போய் சேர்க்கணும்.
உன்னோட வேலைய பார்த்திட்டு போ! என் முன்னாடி நிக்காத! என கடுமையாக கூறினான்.
இப்படியே அவனிடம் வழியே சென்று வா!; போலாம்! கிளம்பனும்! மழை வேற அதிகமா வர ஆரம்பிச்சிடுச்சு! உங்கள பத்திரமா கொண்டு போய் சேர்க்கணும்! என்று பலமுறை ஹரிணி சொல்லியும், நிதின் பிரகாஷ் அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை.
ஒரு கட்டத்தில் சோர்ந்து போனாள். கிட்டத்தட்ட இந்த ஆபரேஷனை கையில் எடுத்ததிலிருந்து அவளுக்கு தண்ணி கூட குடிக்க நேரமில்லை. பட்டினியாக தான் இருக்கிறாள். ஓரிடத்தில் ஒய்ந்து அமர்ந்து கொண்டாள்.
அவள் சோர்வுடன் அமர்ந்து இருக்கவும், அங்கிருக்கும் ஒரு சின்ன சிறு பிள்ளைகளிடம் ஒரு இரண்டு பிரட் கொடுத்து அவளிடம் நித்தின் அனுப்பினான்.
அந்த குழந்தை குடை பிடித்துக் கொண்டே அவளிடம் கொடுக்க சிரித்துக்கொண்டே வாங்கியவள்.. தண்ணீர் கிடைக்குமா? சாரி பானி! என்று கேட்க..
அச்சா செல்லன்கா! அந்த குட்டி பெண்ணின் பின்னால் சென்றாள். அவர்களுக்கு கொஞ்சமாகத்தான் ஹிந்தி பேசினார்கள்.
ஏனென்றால் அது பழங்குடியின இனம், அங்கு அதிகமாக அவர்களுடைய மொழியில் தான் பேசிக் கொள்வார்கள்.
ஒரு இடத்திற்கு சென்று அந்த பிரட் துண்டுகள் இரண்டையும் சாப்பிட்டவர் தண்ணீர் குடித்தால் கொஞ்சம் தேவலை என இருந்தது. தண்ணீர் குடித்து தன்னை அசுவாச படுத்தியவள். இயற்கை அழைப்பை முடித்து விட்டு தன்னை முகம் கழுவி கொண்டு நிதின் இருக்கும் பக்கம் வந்தாள்.
மாலை நான்கு மணிதான் ஆனால் எல்லாம் இருட்டு கட்ட ஆரம்பித்தது. ஹரிணி மீண்டும் அவன் பக்கம் சென்றாள்.
நித்தின் நான் சொல்றதை கேளு! எவ்வளவு தூரம் சொல்றது? இங்கு இருக்கிறது டேஞ்சர்! என்று அவள் சொல்ல..
நித்தின் பிரகாஷ் அவளை எகத்தாளமாக பார்த்தவன். “நான் சொல்றது உனக்கு புரியலையா? இங்க நீ சொல்ற மாதிரி தீவிரவாதிகள் இருந்தாலும், நாம இப்போ இந்த இடத்தை விட்டு போனோம்னு வச்சுக்க , டேஞ்சர் உனக்கும் எனக்கும் தான்! இது ரொம்ப இன்டீரியர் பிலேஸ்ல இருக்கு! நானே பார்டர்ல இருக்குற ஆர்மி ஆபீஸர்ஸ், சோல்ஜர்ஸ் எல்லாரையும் பார்த்துட்டு வர வழியில தான், அங்கேயே ஒரு சம்பவம், அதிலிருந்து தப்பிச்சு தான் இந்த இடத்துக்கு வந்தேன். நீ இப்போ மறுபடியும் இங்க இருந்து போய் அவனுங்க கிட்ட மாட்டணும்னு சொல்ற! நான் இங்கே இருக்கிறது இந்நேரம் அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்!”
ஹரிணி சலித்துக் கொண்டே அதைத்தான் நானும் சொல்றேன்! நாம இங்க இருந்து கொஞ்சம் கொஞ்சமா மூவ் ஆகலாம்! என்று மீண்டும் கூற..
நீ பைத்தியமா? நான் தான் சொல்றேன்ல்ல இப்போ இவங்களோட கூட்டத்தோடு கூட்டமாக இருக்கிறது தான் எனக்கு பாதுகாப்பு! நானே போய் அவங்க கைல சிக்க முடியாது! ஏன் தான் வந்து என்னை டார்ச்சர் பண்ற? என்று நித்தின் கூறினான்.
உன்ன ரெண்டு நாளுக்குள்ள கொண்டு வந்து ஒப்படைக்கனும்னு எனக்கு உத்தரவு! இப்ப நான் அவங்க பேச்சை தான் கேட்க முடியும்! நான் சொல்றது புரியுதா என்கூட வா! என்று அவள் கூறினாள்.
ஒருவேளை நீ என்னை கொண்டு போய் ஆபத்துல தள்ளிட்டேனா? ஏன்னா உன்னோட மனசுல என் மேல முழுக்க முழுக்க வெறுப்பு மட்டும்தான் இருக்கு! அதுவும் நீ அந்த சத்திய தேவ்க்கு சொந்தமானவ! என்னை கொண்டு போய் வேணும்னே மாட்டிவிட்டு, போட்டு தள்ள பிளான் பண்ணி இருந்தா? நான் என்ன பண்ண முடியும்? என்று கேட்டான்.
ஹரிணி அவனை ஆச்சரியமாக பார்த்தவள். அந்த அளவுக்கு கொடூர எண்ணமெல்லாம் சத்யதேவிற்கும் இல்ல, எனக்கும் இல்லை, அவன் ரொம்ப சாதுவான பையன்! என்று கூற..
இதை கேட்டு நித்தின் சிரித்துக்கொண்டே சாதுவா? அவனோட இன்னொரு முகத்தையும், இன்னொரு பக்கத்தையும், பத்தி உனக்கு ஒண்ணுமே தெரியாது! அவனை சாதரணமா நினைச்சுட்டு இருக்க என்று கூறினான்.
என்ன? உனக்கு என்ன தெரியும்? அவன பத்தி!.. உனக்கு என்ன தெரியும்! என்று கேட்க
ஆமா ஆமா! ஒன்னும் இல்ல என நித்தின் சமாளித்தான்.
அப்படி சத்திய தேவ்க்கு இன்னொரு பக்கம் இருக்கா? என்ன? யோசிங்க.. சரி இப்போ கதைக்கு வரலாம்.
என்னால உன்கூட வர முடியாது! என்று மீண்டும் கூறினான்.
ஹரிணி ஒரு பெருமூச்சை விட்டு “ப்ளீஸ் நான் சொல்றத நம்பு, நான் உன்ன பத்திரமா கொண்டு போய் விட்டுடுவேன்!” என்று கூற..
ஒருவேளை உன்ன நான் காப்பாத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றால் என்ன பண்ணுவ? என்று கேட்டான்.
நீ என்னை காப்பாற்றாத! விட்டுட்டு போயிடு என்று ஹரிணி எடுத்த எடுப்பிலேயே கூற..
அப்படியெல்லாம் உன்ன என்னால விட்டுட்டு போக முடியாது! என்று நித்தின் கூறினான்.
ஏன் இந்த ப்ரொபஷனல் லைஃபை பொருத்தவரைக்கும், இப்போ நான் இங்க ஒரு போலீசா நின்னுட்டு இருக்கேன். உன்னை நான் பத்திரமா காப்பாத்தணும், உனக்காக ப்ரொபஷனலா என்னோட உயிர் கூட கொடுப்பேன். நீ இந்த நாட்டுக்கு முக்கியமான ஒரு இடத்துல இருக்க ராணுவ ஆயுதப்படைக்கு நீ தான் தலைவன். உன் மேல தான் எல்லாரு கவனமும் இருக்கும்! அதனாலதான் உன்னை பத்திரமா கொண்டு போய் விடும்ன்னு, நான் முயற்சி பண்றேன்! என்று ஹரிணி கூறினாள்.
இதை கேட்டதும் நித்தின் தீவிரமான முகத்தை வைத்துக்கொண்டு “நீ எனக்காக உயிர் கொடுக்க வேண்டாம்! அதுவும் ப்ரொபஷனலா கொடுக்க வேண்டாம்! ஆனால் பர்சனலா குடுப்பியா?” என்று ஆர்வமாக கேட்டான்.
பர்சனலா? என்ன பர்சனல்? என்று ஹரிணி கேட்க..
நித்தின் ஒரு பெருமூச்சு விட்டு “எனக்கு சத்திய தேவ் கிட்ட இருக்குற எல்லா பெஸ்ட்டும் எனக்கும் வேணும்னு நான் நினைப்பேன்!”
அதுக்கு! என்ன? இப்போ என்ன சொல்ல வர? என ஹரிணி கேட்க..
“வேர்ல்டு பாப்புலேஷன்ல அதுவும் குறிப்பாக இந்தியாவில் ஒரு புள்ளி விபரம் என்ன சொள்ளுதுன்னா? 50s, 60sக்கு முன்னாடி இருக்கிற பெண்கள் நிறைய பேர் அந்த சென்சுரில நிறைய பேர் கல்யாணத்துக்கு அப்புறமும் சரி அவங்களோட வாழ்நாள் காலம் ரொம்ப கம்மியா இருந்ததாம்! ஆனா after 2K kids க்கு அப்புறம் பெண்களோட வாழ்க்கை… அதாவது ஆண்களை கம்பேர் பண்ணும்போது பெண்களுக்கு வயசு அதாவது அதிக வயசோட வாழ்வார்களாம்! அதுலயும் கூட பெண்களுக்கு ரொம்ப மெச்சூரிட்டி அதிகமா இருக்குமாம்? எல்லாரையும் பொறுத்து போகிற பக்குவமும் ஜாஸ்தி!” என நிதின் கூறினான்.
இதையெல்லாம் எதுக்கு என் கிட்ட சொல்லிட்டு இருக்க? என ஹரிணி கேட்க..
நிதின் கொஞ்சம் சிரித்து கொண்டே “ஆமா இது எல்லாமே இருக்க ஒருத்தி அவன்கிட்ட இருக்கா! அதிக வாழ்நாள் காலம், கூடவே அதிக மெட்சுறிட்டி இருக்க ஒருத்தி! சோ அது எனக்கு சின்ன வயசுல இருந்தே பிடிக்கல! அதை எப்படியாவது என்கிட்ட கொண்டு வரணும்ன்னு எனக்கு ஆசை!”
ஹரிணி புரியாமல் பார்க்க..
நான் சொல்றது உனக்கு புரியலையா? இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா? என்று நித்தின் கேட்டான்.
நீ என்ன சொல்ற? என்று ஹரிணி கேட்க..
நிதின் அவள் பக்கம் இரண்டடி வைத்து நெருங்கி அவனுடைய மூச்சு காற்று உரச “பெருசா ஒன்னும் சொல்ல மாட்டேன்! அவனை விட்டு, நீ என் கூட வந்துடு! Yes (ஆர்) Yes! ரெண்டே ரெண்டு பதில்தான்! நீ எனக்கு ப்ரொபஷனல் ஆகவும் உயிரை கொடுக்க வேண்டாம்! நான் உன்னை உனக்கு உயிர் கொடுக்கிறேன்! என்று கூறினான்.
என்ன ?என்று அவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அதிர்ச்சியுடன் பார்க்க..
நிதின் தீவிரமாக முகத்தை வைத்து கொண்டு “சின்ன வயசுல எனக்கு அவ்வளவா எதுவும் தெரியல! ஆனா நீ பெரிய பொண்ணு ஆனதுக்கப்புறம் உன்னோட ஹிப்பு! அதாவது ஆண் இந்த மொத்த ஆம்பள.. masculine male ஜெனெண்டருக்கு particular -ஆ பொண்ணுங்ககிட்ட இருக்கிற ஃபர்ஸ்ட் அட்ராக்சன் என்ன தெரியுமா? ஹிப் தான்! அப்புறம் பின்னாடி இருக்க back பின்னழகு.. அந்த ஹிப் தான் தன்னோட சந்ததிய சுமக்கறதுக்கு சரியா இருக்கும்! அதை தான் மொத்த male சமூகமும் ஒரு பொண்ணு கிட்ட ஆயிரம் கண்ணா ஆராஞ்சு தேடி அலையும்! பாரு அதே போல உன்னோட ஹிப் கச்சிதமா! இருக்கு!”
ஹரிணி அதிர்ச்சி மாறாமல் அவனை பார்த்து கொண்டிருக்க…
நிதின் ஒரு பெரு மூச்சை விட்டு “ஆனால் பாரு அந்த மாதிரி structure ல என் பக்கத்தில் நீ இருக்க.. ஆனால் நீ சத்ய தேவ் பக்கம் இருக்க! உன்கிட்ட இத பத்தி நிறைய தடவை அப்ரோச் பண்ணனும்னு நெனச்சேன்! ஆனா நீ அந்த Dog கிட்ட இருக்கியே! என்னால எப்படி அப்ரோச் பண்ண முடியும்! இப்படி ஒரு situation எனக்கு மறுபடியும் அமையாது. சோ அதுக்கு தான் இப்போ அதுக்கான ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு! உன்கிட்ட எக்ஸ்பிரஸ் பண்றேன்! வேற ஒன்னும் இல்ல நீ என் கூட வந்திடு! I mean உன்னோட வயிற்றில் என் baby!” என்று சாதாரணமாக கூறினான்.
இதை கேட்டதும் ஹரிணிக்கு உள்ளுக்குள் ரத்தம் கொதிக்க.. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சூடு பரவ அவன் கன்னத்தில் மாறி மாறி அறைய ஆரம்பித்தாள்.
ஒவ்வொரு அடிக்கும் அவனது முகம் புன்னகையில் தான் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.
அவளின் கை எரிச்சல் ஆக உதறி கொண்டே “என்னடா ஓவரா பேசிட்டு இருக்க! நீ வந்தா வா! வராட்டி போ! எனக்கு என்ன? இந்த வேலையும் வேணாம்! ஒன்னும் வேணாம்! என்று வேகமாக முன்னாள் நடக்க ஆரம்பித்தாள்.
நித்தின் பிரகாஷ் சிரித்துக்கொண்டே “பார்த்தியா இத சொன்னதுக்கே இவ்ளோ கோவம் வருது! அப்போ நடந்தா எப்படி இருக்கும்? ஒவ்வொரு நிமிஷமும் ஒரு கேம்ல நெக்ஸ்ட் லெவல் நெக்ஸ்ட் லெவல் மாதிரி இருக்கும்! நான் சொல்றதை கேளு! அவன் உனக்கு வேண்டாம்! நீ என் கூட வந்துடு! உன்னை கஷ்ட படுத்தி கட்டாய படுத்த மாட்டேன்! வா டி! பங்காரம்!” என்று மறுபடியும் கூறினான்.
ஹரிணியின் மனதில் அவனை நினைத்து மிகவும் பயமாக இருந்தது. அவன் சொல்வது முற்றிலும் புதிதாக இருந்தது. ஆனால் சிறுவயதில் இருந்து நித்தின் அவளை ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே இருப்பான்! அது அந்த பார்வையின் அர்த்தம் என்னவென்று தெரியவில்லை! இப்பொழுது தான் தெரிகிறது, அவன் தன்னை சொந்தமாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான்! “ச்சே!” என்று அவள் வெறுத்தாள்.
நித்தினுக்கு சின்ன வயதிலிருந்து ஹரிணியை மிகவும் பிடிக்கும்! சில குழந்தைகள் அதை வெளிப்படுத்தாது சிறு வயதிலிருந்து முகத்தை கடுமையாகவும் தீவிரமாகவும் வைத்திருக்கும். குழந்தைக்கு அதனுடைய அடி ஆழத்தில் இருக்கும் , ஆசைகளும் விருப்பங்களும் அப்படியேதான் இருக்கும். எப்பொழுதும் மாறாது! ஹரிணிய மிகவும் பிடிக்கும். அவளிடம் பேச முயற்சிப்பான். ஆனால் ஹரிணி பேசுவது பழகுவது களுக் களுக் என்று சிரிப்பது எல்லாமே ஒருவனுடன் மட்டும் தானே! அது சத்தியதேவ் தான்! ஆனால் அவனுடைய ஏக்கத்தையும் தவிப்பையும் எப்படி வெளிப்படுத்துவது என தெரியாமல் தன்னிடமும் பேசும்படி நிறைய வெளிப்படுத்தி இருக்கிறான். ஆனால் அதெல்லாம் சண்டைகளாக தான் போய் முடியும்.
அன்பை ஆளுமையாக பெற முடியாது என்பது நித்தினுக்கு தெரியவில்லை.
இப்பொழுது கூட அவனுடைய மனம் அந்த சிறு குழந்தையாக பிடிவாதத்தில் தான் இருக்கிறது சில வயது இளம் 27 வயதில் இருக்கும் ஒரு ஆண் மகனுக்கு ஐந்து வயது குழந்தையிடம் இருக்கும் பிடிவாதத்தை கொண்டிருக்கிறான்.
ஹரிணி அவளுடைய பாதையில் சென்று கொண்டே இருந்தாள். மலைப்பகுதிகள் காடுகள் என அடுத்தடுத்து மக்கள் நடமாட்டம் துளி கூட இல்லை. தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக மழையின் அளவு அதிகரிப்பதால் தரையின் நீர்மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே இருந்தது.
ஹரிணி எதையும் பொருட்படுத்தவில்லை அவளுக்கு இங்கிருந்து செல்ல வேண்டும். அவ்வளவுதான்! நிதின் அவளுடைய பாதுகாப்புக்காக பின் தொடர்ந்தான். இருவரும் மழையில் நனைந்து கொண்டே சென்றார்கள். இருட்டு கட்டிக் கொண்டிருந்தது. அவளிடம் இருக்கும் டார்ச் லைட்டை வைத்து வழியில் சென்று கொண்டிருந்தாள்.
அவள் எங்கு நின்றாலும் நித்தினும் ஒவ்வொரு இடத்திலும் நின்று கொள்வான். இப்படியே இரவு 10 மணியை கடந்திருந்தது.
அந்த நேரத்தில்தான் மழை விடாமல் மிதமாகத்தான் பெய்து கொண்டிருந்தது. ஆனால் அதற்கு மேல் முன்னேற வழியில்லை. அவள் மீண்டும் ஏதோ ஒரு உத்வேகத்தில் இங்கிருந்து சென்று ஆக வேண்டும் என்று நடக்க
நிதின் அவளுடைய கையைப் பிடித்தான் எங்கடி போற?
இந்த டி சொல்ற வேலையை வச்சுக்காத முதல்ல கையை எடு! உன்ன பாக்கவே எனக்கு அருவெறுப்பா இருக்கு? உன்னோட நினைப்பு ரொம்ப ரொம்ப கேவலமா இருக்கு! உனக்கு நான் சொந்தம் இல்லாதவ! அத மனசுல வச்சுக்கோ! இந்த மாதிரி ட்ரை பண்ற வேலையெல்லாம் இங்க வச்சுக்காத! என்று அவனை தள்ளிவிட்டாள்.
நிதின் சிரித்துக் கொண்டே என்ன? நீ வேற ஒருத்தருக்கு சொந்தமானவளா? அப்படியா?
ஆமாண்டா நான் சத்ய தேவ்க்கு சொந்தமானவ! உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? நான் உன்னை விட ரெண்டு வயசுக்கு பெரியவ! உன் மனசுல என்ன நெனச்சிட்டு இருக்க? என்று ஹரிணி கேட்க..
உடனே நித்தின் சிரித்துக்கொண்டே அவனுக்கும் உனக்கும் ஒரு வயசு வித்தியாசம்! அவனயே நீ ஏத்துக்கும் போது! என்னையும் ஏன் ஏத்துக்க கூடாது! உனக்கு உனக்கு அவன பத்தி தெரியாது! சொல்றதை கேளு! என்று நித்தின் மீண்டும் கூறினான்.
ஹரிணி கோபமாக பற்களின் நறநறுத்துக் கொண்டே நீயும் சத்தியும் ஒன்னுல்ல என்று கூறினாள்.
இதை கேட்டதும் நித்தின் சிரித்துக்கொண்டே நீதான்டி என்னை புரிஞ்சு வச்சிருக்க! நானும் அவனும் ஒண்ணு இல்ல! அவன் வேற? நான் வேற! கரெக்டு தான். இப்போதான் நம்ம பேச ஆரம்பிச்சோம்! பாத்தியா அதுக்குள்ள என்ன பத்தி நல்லா புரிஞ்சுகிட்டயே? என்று கூறினான்.
டேய் உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு? தயவு செய்து என்னை விடு! உன் பேச்சு எனக்கு சுத்தமா பிடிக்கல! உன்னை எனக்கு பிடிக்கல! என்னை விட்டுடு என்று அவள் நடக்க..
கையைப் பிடித்தவன் அவனுக்கும் உனக்கும் ஒரு வயசு வித்தியாசம் அவனையே நீ ஏத்துக்கும் போது என்னையும் ஏன் கன்சிடர் பண்ணக்கூடாது.
ஹரிணி கோபத்தில் மீண்டும் அவனை அடிக்க ஆரம்பித்தாள். தள்ளி விட்டாள்! அவள் கண்களில் கண்ணீர் வர உதடு துடிக்க படபடத்துக் கொண்டே நான் சத்திய தேவ்க்கு சொந்தமானவ! என சத்ய தேவ் போட்டு விட்ட மோதிரத்தை காட்டினாள்.
அந்தக் கையில இருக்க மோதிரம் வேணா உன்ன சத்யதேவனுக்கு சொந்தமானவளா காட்டும்! சொல்லும்! ஆனா?..
ஆனால் ஆனால் என்ன? என்று புருவத்தை சுருக்கி கொண்டு கேட்டாள்.
நித்தின்….?
தொடரும்..
EPISODE 49
ரிதம் மிகவும் கஷ்டப்பட்டு அவளுடைய வீக்கமான கன்னத்தைத் தாங்கிக் கண்டு மெதுவான குரலில் சத்தியதேவிடம் நீ எப்பவுமே காணாமல் போனவன் லிஸ்ட்ல தான் இருக்க? என்ன மறைக்கிற? சொல்லு! என கேட்க..
இதை கேட்டதும் சத்யதேவின் முகம் மாறி ஒரு நிமிடம் பதட்டமானது.
ரிதம் வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க..
தன்னை சரி செய்து கொண்ட சத்திய தேவ் “அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல! நான் எப்பவும் போல தான் இருக்கேன்! என்னோட வேலை அந்த மாதிரி!”
நீ என்ன வேலை பண்ணிட்டு இருக்க? என்று ரிதம் கேட்க..
சத்தியதேவ் மென்னகை சிந்தியவன்..
என்னை பத்தி எதுக்கு இத்தனை ஆராய்ச்சி பண்ற? என் மேல உனக்கு என்னதான் அவ்ளோ கோவமோ! என்று அப்படியே பேச்சை மாற்றினான்.
ரிதம் அந்த சிவப்பு கஞ்சியில் கவனத்தை செலுத்தியவள். மெதுவான குரலில் நீ எங்க விவேகாவையும் என் டாடியையும் ஓடிப்போனவர்கள் தானே சொன்ன! அவங்களுக்கு கல்யாணம் ஆகாமலேயே நான் தப்பா பொறந்துட்டேன்னு, நீதான சொன்ன? இல்லன்னு சொல்லப் போறியா? என்ன? என்று ரிதம் கேட்டாள்.
உங்க அம்மா அப்பாவை பத்தி பேசினதுக்காக தான் எனக்கும் உனக்கும் சண்டை வந்துருச்சுன்னா? நீ நினைக்கிற? உண்மையான காரணம் உனக்கு நல்லாவே தெரியும்? என்று சத்யதேவ் கூறினான்.
ரிதம் உஷ்ணம் மூச்சை வெளிவிட்டு “இப்ப நான் என்னத்த தப்பா சொல்லிட்டேன்! ஆமா நான் தான் உன்னை பத்தில் எல்லாருக்கும் தெரிய படுத்தினேன். நீ மகி மாமி, நிதின் அவங்க டாடி ரெண்டு பேரையும் தப்பா பேசின? உன்னோட போன்ல நான் மாமியையும் அந்த நிதினோட அப்பாவையும் பார்த்தேன்! அவங்க ரெண்டு பேரும் கல்யாண ட்ரெஸ்ல உக்காந்துட்டு இருந்தாங்க! அதை பத்தி நீ எல்லாரும் முன்னாடியும் தப்பா தான பேசினதும் மட்டும் இல்லாமல் நேரா போய் மகி மாமி மேல சந்தேக பட்டு இருக்க?”
சத்யதேவ் அவள் கண்களை பார்த்து “அந்த போட்டோ எப்படி என்னோட போன்ல வந்ததுன்னு, எனக்கு தெரியாது! அதேபோல எங்க அம்மா கிட்ட நான் கேட்டேன்! அதை சண்டைன்னு எப்படி சொல்ல முடியும்? இதை நீங்களா உருவாக்கிட்டீங்க! அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! அதை வைத்து தானே இன்னும் வரைக்கும் என்னை கெட்டவனா ப்ரொஜெக்ட் பண்ணிட்டு இருக்கீங்க!” என்று கூறினான்.
ரிதம் ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்துவிட்டு மொத்தத்தையும் குடித்து முடித்தவள். அதன் பின் சுடுநீரை குடித்துக் கொண்டிருந்தாள் .
சத்யதேவ் ஒரு பெருமூச்சை விட்டு“ எனக்கு மிதுன், நித்தின் அவங்க எல்லாம் என்னை பத்தி சொன்னது கூட எனக்கு பெருசா படல! ஆனா நீ! நீ சொன்னது தான் I can’t.. என்ன தான் இருந்தாலும் உனக்கு மிதுன் நிதின் தானே first prefere and முக்கியம்! அது மட்டும் இல்லாமல் ரெண்டு பேரும் இப்போ லவ்வர்ஸ் நாளைக்கு பார்ட்னர்ஸ்! இப்போ வரைக்கும் அந்த வருத்தம் எப்பவும் எனக்கு மாறல !
அப்போ இதெல்லாம் எதுக்கு பண்ணிட்டு இருக்க? நீ அடிச்ச அடிக்கி உபகாரம் செய்றியா? என்று ரிதம் கேட்க..
சத்திய தேவ் சிரித்துக் கொண்டே கஷ்டப்படுறது, யாராயிருந்தாலும்! அவங்களுக்கு உதவி செய்யணும்! என்பதுதான் என்னுடைய எண்ணம்! நீ இன்பா சாரோட பொண்ணு! மிஸ்டர் இன்பராகவனோட பொண்ணு! அதனால கூடவே மனிதாபிமானமும் சேர்ந்து, உனக்கு ஹெல்ப் பண்றேன்! என்று கூறினான்.
அது என்ன இன்பராகவன் சாரு பின்னாடி எப்படி மரியாதை வந்துச்சு? என்று ரிதம் கேள்வியாக அவனைப் பார்த்து கேட்க..
சத்யதேவ் கிண்ணங்களை எடுத்துக் கொண்டவன். நம்ம தராதரம் என்னன்னு நமக்கு தெரியும்! நாங்க எல்லாம் முறை வச்சு உங்க குடும்பத்தை கூப்பிட முடியுமா? நீங்க ரொம்ப பெரிய ஆளு? என்று கூறிவிட்டு வெளியே சென்றான்.
ரிதம் க்கு மிகவும் அவன் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வேண்டும் என்று புரிஞ்சா சரி அந்த மரியாதையோட எப்பவும் நடந்துக்க என்று கூறினால்
சத்தியதேவ் அதற்கு பதில் சொல்லாமல் “உன் மேல இருக்கிற அந்த வருத்தம் என்னைக்கும் மாறாது! நான் செய்யாத தப்புக்கும், செய்யாத விஷயத்துக்கும், இந்த அவமானத்தை சுமந்து கொன்டு இருப்பதற்கு ரெண்டு பேர் காரணம்! ஒன்னு நீ!
இன்னொன்னு!
மிஸ்ஸஸ் மிஸஸ் சூர்யா என்று தன் தாயைப் கூறி விட்டு சென்று விட்டான்.
அவன் சென்றதும் ரிதமின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டத் தொடங்கியது. சத்தியமா அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமே இல்ல சக்தி! என்னை twist பண்ணிட்டாங்க சக்தி! என்று அழுது கொண்டே “ஆனால் உன்கிட்ட இருந்து நான் நிறைய வெறுப்பு தான் எதிர்பார்க்கிறேன்! நீ என்னை வெறுக்கணும்! அதைவிட வாழ்க்கை ஃபுல்லா நீ என்னை வெறுத்துகிட்டே இருக்கணும்! அதுக்கு நான் உன் கூட இருக்கணும்! கடைசில நான் சாகும்போது ஆவதும் நீ உன் வாயால என்ன பிடிச்சிருக்குன்னு சொல்லணும்! எனக்காக மட்டும் சொல்லணும்! இந்த ரிதம்! இவள்!” என்று நினைத்துக் கொண்டாள்.
அப்படியே நேராக படுக்கையறைக்கு சென்றவள். படுத்துக்கொண்டாள் அனைத்து காட்சிகளும் பின்னோக்கிச் சென்றது.
ஒரு குட்டி ஃப்ளாஷ்;
வழக்கம் பல் போல் அனைத்து குடும்பங்களும் ஒன்று சேர்ந்து உற்சாகமாக இதயன், இனியா இருவரின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாட மொத்த குடும்பமும் ஒன்றாக கொண்டாட்டத்துடன் இருந்தது.
சத்தியதேவ் வழக்கம் போல் ஹாஸ்டலில் இருந்து வந்திருந்தான். அந்த நேரம் தான் அந்த சம்பவம் நடந்தது .
என்ன நடந்தது ? என்று தெரியவில்லை..
ரிதம் அந்த இடத்தில் பிரச்சனை நடக்கும் இடத்தில் ரிதம் இல்லை சத்யதேவ் மிதுன் ஹரிணி அவர்கள் மூவரும் தான் இருந்தார்கள்.
சத்யதேவியின் போனில் மகிழினி மற்றும் தேஜுவின் கணவர் சூரிய பிரகாஷ் இருவரும் சேர்ந்து மனக்கோளத்தில் மணமேடையில் அமர்ந்திருப்பது. போன்று புகைப்படங்கள் இருக்க அங்கிருந்துதான் பிரச்சனை ஆரம்பித்தது.
சத்திய தேவ் மற்றும் ஹரிணி இருவரும் அந்த படத்தை பார்த்துக் கொண்டிருக்க..
ஹரிணி இது எப்படி வந்ததின்ன்னு தெரில! எனக்கு பயமா இருக்கு! என சத்ய தேவ் கூறி கொண்டிருக்க…
அங்கே இருந்த நித்தின் என்ன சொன்னார்களோ தெரியவில்லை சண்டை பெரும் பிரச்சனையாக மாற சத்யதேவ் நித்தின் பிரகாஷை அடித்து விட்டான்.
நித்தின் சுருண்டு விழ… மிதுன் வேகமாக ஓடி வந்தவன். உதடு துடிக்க நித்தினை தூக்கி கொண்டான்.
ஹரிணி பதட்டத்துடன் என்னடா பண்ற நான் தான் பொறுமையா இருக்க சொல்லி சொன்னேனே! இத நம்ம சூர்யா மாமா கிட்டயும் மகி அத்தை கிட்டயும் பேசி இருக்கணும்! நீ எதுக்குடா அடிச்ச? என்று சத்ய தேவ் கிட்ட கேட்டு கொண்டிருக்க…
சத்தியதேவ்க்கு அப்பொழுதும் கூட கோபம் அடங்கவில்லை.. அவனது கண்களில் தீப்பொறி மட்டும் தான் பறக்க நிற்க
மிதுன் நித்தின விட்டு வேகமாக அம்மா! சித்தி! தாத்தா! என்று கத்திக் கொண்டே வெளியே ஓடினான். அந்த நேரம் ரிதம் அந்த பக்கம் வர…
நித்தின் மீண்டும் சத்திய தேவ் கிட்ட என்ன சொன்னான்? என தெரியவில்லை! சத்திய வேகமாக வந்து நித்தினை மறுபடியும் அடிக்க ஆரம்பித்தான்.
ஹரிணி பதட்டத்துடன் வந்து நித்தின் மற்றும். சத்திய தேவ் இருவரையும் பிரித்து விட..
ரிதம் அந்த இடத்தில் வந்துவிட்டாள்.
அந்த நேரம் பார்த்து நித்தின், “ ரிதம் அன்னைக்கு எப்படி உங்க அப்பாவையும் உங்க அம்மாவையும் பத்தி தப்பா பேசினான்! அதேபோல! அதேபோல.. இப்போ மகி மாமி பத்தி பேச ஆரம்பிச்சுட்டான். அதை ஏன் அப்டின்னு கேட்க போன என்னை அடிக்கிறான். அவனோட போன்ல பாரு! எல்லாத்தையும் கூட்டிட்டு வா!” என்று சொல்லிக் கொண்டே மயங்கி விட்டான்.
ரிதம் சத்ய தேவ்வை ஒருவித கேவலமாக பார்த்துக் கொண்டிருக்க..
ஹரிணி பதட்டத்துடன் அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ரிதம்! நீ போய் பெரியவங்களை கூட்டிட்டு வா! சத்யதேவ் எதுவுமே பண்ணல! என்று அவன் பக்கம் நின்றாள்.
இன்னொரு பக்கம் ரிதம் என்னால முடியல என்று நித்தின் கூற..
கூடவே பின்னால் இருந்து மகி மற்றும் கலைவாணி என அனைவரும் அங்கு வந்து சேர..
நிதின் நிலையை பார்த்து வேகமாக மகி அடிக்க வந்தார்.
கலைவாணி பிடித்துக் கொள்ள… அந்த பஞ்சாயத்து நேராக அனைவரும் முன்னணி முன்னிலைக்கும் சென்றது நித்தின் அழகாக ட்விஸ்ட் செய்து விட்டான்.
அனைவரும் அந்த இடத்தில் நின்று கொண்டிருக்க.. அந்த இடத்திற்கு குரு பிரகாஷ் வந்து சேர்ந்தான். எப்படி அவன் எங்க வீட்டு பையன அடிக்க முடியும்? இது என்ன? அண்ணா! நிதினுக்கி ஏற்கனவே உடம்பு சரி இல்லை! எப்டி அவனை கண்ட நாய் எல்லாம் அடிக்க முடியும்? என்ன பண்ணுவீங்களோ! ஏது பண்ணுவீங்களோ! அந்த சத்யதேவ் நித்தின் கிட்ட மன்னிப்பு கேட்கணும்! அண்ணா இங்க என்ன நடக்குது? என்று அதிகாரம் செய்ய ஆரம்பித்தான்.
நித்தின் கண்கள் சொக்க அங்கு ஒரு வீல் சேரில் அமர வைக்கப்பட்டான். அவனுக்கு கைகள் கட்டு போடப்பட்டிருந்தது.
சத்தியதேவ் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருக்க..
சூர்யா அவன் அருகில் சென்று “என்னடா சத்யதேவ் இப்படி ஆச்சு என்னடா ஆச்சு? பிரச்சனை என்னன்னு சொல்லுங்க? நான் பாத்துக்குறேன்! உன்னை எல்லாரும் திட்டுறாங்க! என்று சொல்ல..
சத்தியதேவ் அந்த விஷயத்தை எப்படி சொல்வது என்று தாங்கிக் கொண்டே நின்றான். பதில் பேசவே இல்லை!
உடனே சூர்யா ஹரிணி பக்கம் திரும்பி என்ன ஆச்சு ஹரிணி நீ மாமா கிட்ட சொல்லுங்க என்று கேட்க..
அவளும் எதுவும் சொல்லவில்லை அமைதியாக சத்திய தேவை பார்த்தாள்.
இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை குரு பிரகாஷ் கத்திக் கொண்டிருக்க..
நித்தின் பிரகாஷ் மெதுவாக கரகரத்த குரலில் “சத்யதேவோட போன்ல ஒரு போட்டோ இருக்கு! அது உண்மையா பொய்யா? அப்டின்னு அவன் என்கிட்ட கேட்டான். நான்!.. எனக்கு தெரியாது அப்படின்னு சொன்னேன்! அதுக்கு தான் என்ன இப்படி அடிச்சிட்டான்! அன்னைக்கு கூட ரிதம் கிட்ட கூட கேளுங்க!”
இதைக் கேட்டதும் கோபமாக இப்ப கூட அவன் பொய் சொல்றான்! டாடி! அவன் ரொம்ப மோசமானவன்! என்று அவன் ஆவேசத்துடன் சத்யதேவ் கூறிக் கொண்டிருக்க.
அப்படி என்னதான் நடந்தது? எதுக்கு அவனை அடிச்ச? என்ன போட்டோ! என்று சூர்யா கேட்க..
சத்தியதேவ் போனை எடுத்து இதுதான் டாடி! இது மகி இது அந்த நித்தினுடைய அப்பா! இவங்க ரெண்டு பேரும் எப்படி சேர்ந்து இருக்காங்க? நான் எங்கே டாடி இருந்தேன்! என அவன் கேட்க..
சூர்யாவுக்கு என்ன பதில் சொல்வது என தெரிய வில்லை. உடனே சூர்யா சமாளிக்கும் பொருட்டு நீ சின்ன பையன்! சத்ய தேவ் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல… என கூற..
சத்ய தேவ் நேராக தன் அம்மாவிடம் சென்று இந்த போட்டோ எப்டி வந்ததுண்ணு தெரியாது! ஆனால் மகி இதுக்கு என்ன காரணம்? இது என்ன போட்டோ இதுக்கு பதில் சொல்லு? இதில் இருக்கிறது நீயா? என்று அனைவரின் முன்னிலையிலும் கேட்க..
அந்த நேரம் மித்துன் ரிதமை அழைத்து வந்திருந்தான் . “ரிதம் பதில் சொல்லுவா? ஏற்கனவே ரிதம் கிட்ட விவேகா அத்தையை பத்தியும் இன்பா மாமாவை பத்தியும் தப்பா பேசி இருக்கான்! இந்த சத்திய தேவ்! வேணும்னா அதை பத்தி ரிதம் கிட்டயே கேளுங்க! என்று சொல்ல..
அவளும் போட்டோ விஷயத்தை தான் நித்தின் கேட்கிறான் என்று நினைத்து… ஆமா அப்படித்தான் சொன்னான் என்று கூறிவிட்டாள்.
அனைவரின் பார்வையும் சத்திய தேவ் மீது திரும்ப அவனும் தன் அம்மாவை பார்த்து“ இந்த ஃபோட்டோவில் இருக்கிறது! நிதின் தானே? நீ எப்படிம்மா இந்த இடத்துக்கு போன? என்னை ஏன் மா போன? இந்த நாலு வருஷம் எதுக்குமா என்னை விட்டு பிரிஞ்சிருந்த? அப்போ இது எல்லாமே உண்மைதானா! எதுக்குமா என்னையும் அப்பாவையும் விட்டுப்போன?” என்று ஆயிரம் கேள்வி தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டிருக்க..
சூர்யா சத்யதேவை தடுத்த அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சத்ய தேவ் என தடுத்து கொண்டிருக்க..
மகி சத்தியதேவ்ன் அருகில் வந்து கொஞ்சம் கெஞ்சிக் கொண்டே “நான் சொல்றேன் உள்ளவா சத்ய தேவ்! அம்மா சொல்றத கேளு சக்தி கண்ணா! உள்ள வா! நான் அம்மா உனக்கு விவரமா சொல்றேன்! வாடா எதுக்கு இப்படி நித்தின்ன அடிச்ச? பாவம் தானே! நித்தின் உன் தம்பி தான! இப்படி அடிச்சு இருக்கலாமா? இது தப்புதான உனக்கு இந்த பிரச்சனைக்கு நான் உள்ளவா பதில் சொல்றேன். என்று அழைக்க..
சத்யதேவ் மஹியின் கைகளை தட்டி வட்டு எனக்கு இப்போ இங்கேயே சொல்லுங்க இப்போ இங்கே என்னோட உண்மை தெரியணும்! என மூர்க்கமாக ஆவேசத்துடன் கத்தினான்.
சத்ய தேவ் என மகி மீண்டும் கையை பிடிக்க வர…
சொல்லுங்க! உண்மைய சொல்லுங்க அப்போ இந்த போட்டோவில் இருக்கிறது யாரு? எனக்கு தெரிஞ்சு ஆகணும்? இந்த நாலு வருஷம் இவங்க எங்க இருந்தாங்க ? யார் கூட இருந்தாங்க? என்று வேகமாக கேட்டுவிட்டான்.
இப்படி சத்யதேவ் அவளுடைய கையைப் பிடித்து கேட்க மகி கோபமாக என்ன வார்த்தைடா சொல்லிட்ட? என்று சத்தியத்தை கன்னத்தில் அனைவரும் முன்னாலும் அறைந்து விட..
அப்பொழுதுதான் உள்ளே வந்த மைவிழியின் கண்ணில் இது பட மீண்டும் மைவிழி கோபமாக எல்லார் முன்னாடியும் பையன அடிச்சிட்டியா என்று மகி என் கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள்.
சூர்யா அவர்களை தடுக்க..
சத்தியதேவ் அப்பொழுது கூட அசராமல் மகின் முன்னால் வந்த நின்றவன் அப்போ இதுல இருக்கிறது நீங்கதான?
இது நான் தான் என்று மகி கூற
அப்போ நித்தின் யாரு? உங்க என்று அடுத்த வார்த்தை வாயில் இருக்கும் போதே மகி மீண்டும் அறைய!
இன்பா அதற்கு முன்னாலேயே ரிதம் மற்றும் விவேகா ருத்ரன் என அனைவரையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று விட்டான்.
சத்யதேவ் கேட்ட ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னால் நித்தின் தான் ஏற்கனவே இந்த அனைத்து கேள்விகளையும் சத்யதேவ் கிட்ட சொல்லி தன் அம்மா மகி என்னும் அளவில் உருவாக்கி வைத்திருந்தான்.
ஆனால் இது எதையும் அறியாமல் இருப்பது மூன்று பேர் ஒன்று ஹரிணி, சத்யதேவ், ரிதம் நித்தினின் சூழ்ச்சிகள் எதுவும் தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு மிதுன் நிற்பது நித்தின் பக்கத்தில் தான்.
இவ்வளவு பெரிய விஷயம் நடந்ததும் அனைவருக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. சூர்யா சத்யதேவை அழைத்துக் கொண்டு செல்ல..
மகி சத்யதேவை அடித்து விட்டோமே என்ற துக்கத்தில் இருந்தாள்.
சத்யதேவ் அதற்கு மேல் அங்கு படிக்க மாட்டேன். இந்த வீட்டில் யார் முன்னாலும் வரமாட்டேன். யாரும் என்னை நம்பவில்லை. என்று சொல்லிவிட்டு மொத்தமாக இந்தியாவையே காலி செய்து இருந்தான். அதற்குப்பின் அவனுடைய ஆறாம் வகுப்பு முதல் காலேஜ் படிப்பு வரை ஃபாரினில் தான்… அவன் எப்பொழுது வருவான் எப்பொழுது செல்வான். என்று யாருக்குமே தெரியாது. அப்படியே வந்தாலும் மைவிழி வீட்டுக்கு வருவான். சூர்யா இதழ் என அக்கா தங்கைகள் அனைவரையும் பார்த்துவிட்டு ஹரிணியுடன் நேரம் செலவழித்து விட்டு சென்று விடுவான்.
மகியின் கண்ணில் அவன் படவே இல்லை. அவன் முதன்முதலாக அனைவரையும் பார்க்க வந்தது. வசந்தன் மற்றும் கலைவாணி இருவரின் அறுபதாம் நாள் திருமணத்திற்கு தான்.. அப்பொழுது தான் சத்யதேவ் அனைவரையும் சந்தித்தான். அதுவரை இந்தியா பக்கமே அவன் வரவில்லை அவனுடைய வேலை எங்கு என யாருக்குமே தெரியாது
அதே நேரத்தில் ஒவ்வொரு பரிமாணத்தில் சத்தியதேவ் ,ஹரிணி, நித்தின் பிரகாஷ், ரிதம் நால்வரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போ இதுல தப்பு யார் மேல? அது இதுல குள்ளநரி வேஷம்? இதில் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டது ரிதம்! பலியாக்க பட்டவன் சத்ய தேவ்! இதில் பாவப்பட்டவனாக தன்னை அனைவரின் முன்னாலும் காட்டிக்கொண்டது நித்தின் பிரகாஷ்! மொத்தத்தில் குடும்பத்திற்குள் என்று வந்துவிட்டால் நித்தின் பிரகாசுக்கு எப்பொழு எப்பொழுதுமே சத்தியதேவை பிடிக்காது.
அதற்கு அடுத்தடுத்த சந்திப்புகளில் ரிதம் மற்றும் சத்யதேவ் , ஹரிணி ,நித்தின் , சிவன்யா பவன்யா என இரண்டு குழுக்களாக பிரிய ஒவ்வொருவரும் அவரவர் குழுக்களுக்கு மட்டும் தான் சப்போர்ட் செய்ய இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வன்மம் வளர்ந்து. அந்த வெறுப்பு இன்று வரை நிற்கிறது.
இதில் ரிதம் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் இது அனைத்தையும் செய்தது நித்தின் பிரகாஷ் தான் என்று பின்னால்தான் தெரிந்து கொண்டாள்.
அதற்காக சத்திய தேவ் அனைவரின் முன்னாலும் மகி கிட்ட அப்படி கேட்டது நியாயம் இல்லையே? அவளுக்கு அந்த இடத்தில் என்ன நடந்தது? என்று இதுவரை தெரியாது. ஆனால் நித்தின் பிரகாஷ் அனைவரின் உள் மனதில் சத்யதேவ் மிகவும் கெட்டவன்! அவனை நாம் பழிவாங்க வேண்டும்! என்று மிதுன் ரிதம் இருவரிடமும் உருவாக்கி வைத்திருந்தான்.
அதனால் சிறுவயதிலிருந்து ரிதமுக்கு சத்யதேவியின் மேல் ஒரு பேச வேண்டும், பழக வேண்டும், அவனுடன் சிரிக்க வேண்டும் , செல்ல வேண்டும் என்ற ஆயிரம் ஆசை இருந்தாலும், அந்த மாய வலையில் இருந்தவளுக்கு சத்யதேவியின் பக்கத்திலேயே செல்ல மாட்டாள். ஹரிணி சத்யதேவுடன் இருப்பது சுத்தமாக ரிமுக்கு பிடிக்காது.
மிகவும் காய்ச்சலில் தகித்துக் கொண்டிருந்தவளுக்கு, நெற்றியில் இதமாக கொஞ்சம் பற்று போட்டுவிட்டு கன்னத்தில் அந்த ஆயின்மென்ட்டை தடவிக் கொண்டிருந்தான்.
வேறு யார் ? காவிய தலைவன் சத்யதேவ் தான்! அவள் எதுவுமே கூறவில்லை. உதட்டை கடித்து படித்துக் கொண்டிருந்தாள். முனகல் சத்தம், ஒரே அனத்தல், காய்ச்சல் கொதித்துக் கொண்டிருந்தது. அவளுடைய பாதத்திற்கு தண்ணீரைத் தொட்டு தேய்த்துக் கொண்டிருந்தான்.
இப்படி காய்ச்சல் கொதிக்குதே! ஆனா நீ பண்ணது, நீ பேசுனது ரொம்ப ரொம்ப தப்பு! என்று சத்திய தேவ் நினைத்துக் கொண்டு அவளுக்கு அனைத்து பணிவிடைகளையும் செய்தான்.
அத்தனை காய்ச்சல்.. மெதுவாக அவளை எழ செய்து, ஹே ரிதம் இந்த டேப்லெட் போட்டுக்கோ? எந்திரி! என்று அழைக்க..
அவள் அப்படியே கிடந்தாள். எந்திரிச்சு நிறைய தண்ணி குடி! அப்பதான் யூரின் நிறைய போனால் தான் ஃபீவர் கம்மியாகும்! இப்படி நகராம தூங்கிட்டு இருக்க! என்று அவளின் கன்னத்தை தட்டினான்.
ஆனால் அப்பொழுதும் ரிதம் அவனுடைய எந்த பேச்சுக்கும், பதில் சொல்லவும் இல்லை அதை கண்டு கொள்ளவும் இல்லை. காய்ச்சலில் படுத்து கொண்டு இருந்தாள்! இரவு முழுவதும் அவளின் அருகில் அமர்ந்து பற்றை மாற்றி வைத்து கொண்டு அவளை கவனித்தான்.
அதேபோல் அவளுடைய கன்னத்திற்கு ஆயின்மெண்ட் தடவி விட்டான். அடுத்த நாள் காலை காய்ச்சல் முற்றிலுமாக குறைந்திருக்க.. அவளுக்கு தெர்மாமீட்டர் வைத்துப் பார்த்தான். என்று கன்னத்தை தொட வந்தவனுக்கு..
“என்னை தொடாதேடா”என்று அவள் அன்று கூறியது நினைவில் வந்தது.
உடனே கையை எடுத்துக் கொண்டவன்.
இப்போ உனக்கு காய்ச்சல் எப்படி இருக்கு என்று சத்யதேவ் கேட்க..
ரிதம் கண்ணை மூடி கொண்டே “இப்போ எதுக்கு இங்க ஓவரா பர்பாமென்ஸ் பண்ணிட்டு இருக்க! நான் உன்கிட்ட கேட்டனா? என்னை பார்த்துக்க சொல்லி!”
இந்த இடத்துல யாரா இருந்தாலும் நான் இங்கதான் இப்படி தான் பண்ணி இருப்பேன்! என்று சத்ய தேவ் சொல்ல..
இதை கேட்டதும் சிரித்துக்கொண்டே “ அப்போ மகி மாமி இப்படி தான் கஷ்டப்பட்டாங்க! அவங்க மேல உனக்கு பாசம் இல்லையா?”
அது எனக்கும் அவங்களுக்கும் இருக்கிறது! ஆயிரம் விஷயம்! இருக்கும் அதுக்கு நடுவுல நீ யாரு? உன்னோட வேலைய மட்டும் பாக்குறியா? என்று சத்திய தேவ் கூறினான்.
அதே போல தான் நானும் சொல்றேன்! நான் எப்படி கஷ்டப்பட்டால் உனக்கு என்ன? நீ உன்னோட வேலைய பாத்துட்டு போ! என்று ரிதம் கூற
உடனே சத்யதேவ் அவளைப் பார்த்து நான் உனக்காக இது செய்றேன்னு நீ நெனச்சிட்டு இருக்கியா? இன்பராகவன் சாருக்கும் விவேகா மேடம்காகவும், அண்ட் உன் கூட பொறந்த ருத்ரன் அவனுக்காகவும் செஞ்சிட்டு இருக்கேன்! அவங்க எல்லாம் குட் சவ்ல்… நீ பேட் சவுல்லா இருந்தா கூட… உயிர் அப்படின்னா அதுக்கு உதவனும்! அதுதான் வள்ளலார் சொல்லி இருக்காரு ! எந்த உயிரையும் துன்பப்படுத்தக் கூடாது! என்று கூறினான்.
அப்படியா என்று ரிதம் அவனைப் பார்த்தாள்.
அப்படித்தான் என்று சத்யதேவ் சொல்லிக் கொண்டே எழுந்தான்.
இப்போ நீ பூரணமா குணமடைந்துவிட்ட அதனால நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடு! என்று அவன் நகரச் செல்ல..
சரி இதுக்கு எவ்வளவு சார்ஜ் என்று கேட்டாள்.
என்ன என்று சத்தியதேவ் அவளை பார்க்க
ஆமா இப்போ நீ எனக்கு இத்தனை பணிவிடை செஞ்சிருக்கியே? இதுக்கு பணம் கொடுக்கணும் தானே! சும்மா ஹெல்ப் யார் பண்ணுவாங்க? அதுதான் நீ இன்ப ராகவனுக்காகவும், விவேகா இன்ப ராகவனுக்காகவும், ருத்ரன் இன்ப ராகவனுக்காகவும் தானே மெனக்கெட்டு விடிய விடிய என்னை பார்த்து கொண்டிருக்க! சோ நான் ரிதம் இன்ப ராகவன் உனக்கு திரும்ப ஏதாவது செய்யணும் தானே! என அவள் நாக்கில் கொக்கி போட்டாள்.
சத்திய தேவ் ஒரு பெருமூச்சு விட்டு “எனக்கு எதுவும் வேண்டாம்! நீ குணமானது போதும்! ஆனால் உன்னோட விளையாட்டு பேச்சை நான் மறக்கவும் மாட்டேன்! உனக்கு கொடுத்த அரைக்காக நான் என்னைக்குமே வருத்தப்பட மாட்டேன்! என கோபமாக கூறினான்.
இந்த அடியை மகி மாமிய நினைச்சு தானே கொடுத்த? நான் அவங்கள சொன்ன அந்த வார்த்தைக்காக தான அடி கொடுத்த! அப்போ அந்த அளவுக்கு பாசத்தை வச்சுக்கிட்டு, எதுக்குடா இப்படி இருக்க? போய் பேசி தொலைய வேண்டியது தானே! என்று ரிதம் கடுப்புடன் கூற..
நான் எதுக்கு பேசணும்! அவங்க என்கிட்ட பேசட்டும்! சாதாரணமா இல்ல எல்லாரும் முன்னாடியும் பேசணும்! அவங்க பேசுவாங்களா? என்று சத்திய தேவ் கேட்டான்.
டேய் அவங்க உன்னை விட பெரியவங்க! நீ சகித்துக் கொண்டு போ! ஒன்னும் தப்பு இல்ல! நீ மட்டும் எந்த தப்பும் பண்ணலன்னு சொல்லிட்டு இருக்காத! என்று ரிதம் சொல்ல..
இதை எனக்கு நீ சொல்றயா? உங்க அம்மா கிட்ட நீங்க பேசிநீங்களா மேடம்! என சத்ய தேவ் கேட்டான்.
அது உனக்கு தேவையில்லை! என ரிதம் திரும்பி கொள்ள..
நான் தான் சொல்றேன்ல்ல அதுல நீ தலையிடாதே! இதுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! சரி நித்தின் பிரகாஷ் எப்படி இருக்காரு? பேசினியா? என்று அக்கறையாக தன் பெரியம்மா மகனை பற்றி சத்தியதேவ் விசாரித்தான்.
ரிதம் அவனை மேலும் கீழும் பார்த்து என் வருங்கால புருஷன பத்தி உனக்கு என்ன அக்கறை? என்று கூறினாள்.
அதுதான் எல்லா உயிர்கள் மேலயும் எனக்கு ரொம்ப அக்கறை! அவன் ஏதோ பார்டர்ல வேலையா போயிருக்கிறதா எனக்கு நியூஸ் வந்தது! இப்போ அவன் இப்படி இருக்கான்? பேசுனியா? என சத்ய தேவ் கேட்க..
அந்த நாய் எங்கே இருந்தால் எனக்கு என்ன? என நினைத்தவள். “ நான் பேசல! வேலையில இருக்குறவங்கள டிஸ்டர்ப் பண்ண கூடாதுல! அப்புறம் மிஸ்ஸஸ் சத்தியதேவ் எப்படி இருக்காங்க? அதாவது கூடிய சீக்கிரத்துல மிசஸ் சத்யதேவா ஆகப் போறாங்க, எப்படி இருக்காங்க? என்று ரிதம் கேட்டாள்.
அவளுக்கு என்ன? அவ நல்லா இருக்கா! என்று ஹரிணி பற்றி நினைத்ததும் அவனுடைய முகத்தில் ஒரு சின்ன பிரகாசம் தோன்றியது.
அப்படியா என்று கைகளை இறுக்கி மடக்கினாள்.
சரி நீ ரெஸ்ட் எடு என்று அவன் திரும்பி செல்ல போக ஒரு நிமிஷம் இங்க வா என்று அழைத்தாள்.
என்ன? எதுவும் வேணுமா? இன்னும் ஃபீவர் வருதா? அதுக்கு தான் உங்க டேப்லெட் போடுன்னு சொன்னேன்! நீ தான் என் பேச்சைக் கேட்கவே இல்லை! என்று சத்திய தேவ் சொல்லிக் கொண்டே அருகில் வந்தான்.
இன்பா வா இங்க பக்கத்துல வா என்று அழைக்க..
என்ன சொல்லு! என்று சத்திய தேவ் கேட்க..
இஙக வந்து உட்காரு என்று கூறினாள்.
என்னம்மா என்று சொல்லிக் கொண்டே சத்யதேவ் அவளின் அருகில் வந்து அமர்ந்தான்.
எனக்கு காய்ச்சல் அடிக்குதாண்னு தொட்டுப் பாரு என்று ரிதம் சொல்ல
அவன் அருகில் வந்து நெற்றியை தொட வந்தான்.
ஹே அங்கே இல்ல!
இங்க என்று கழுத்தை காட்டினாள்.
அதுக்கு அவசியம் இல்ல இந்த தெர்மாமீட்டரை எடுத்து வாயில் வைத்தால் தெரியும்! ஆ காட்டு என்று அவள் வாயின் முன் நீட்ட..
அந்த தெர்மாமீட்டரை வாங்கி அருகில் போட்டவள். அவனுடைய சட்டையை அப்படியே அவள் பக்கமாக இழுத்து..
இழுத்து!..
இழுத்து!..
உதட்டில் முத்தமிட ஆரம்பித்தாள்.
ஆம் அவன் உதட்டில் அவளுடைய முதல் முத்தத்தை கொடுக்க..
அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன செய்கிறாள்? இவள் நமக்கு முத்தம் கொடுத்துட்டு இருக்காளா? நமக்கு முத்தம் கொடுக்கிறா? என்று அவன் மூச்சு வேகமாக.. ஒன்றும் புரிய வில்லை.
அதற்குள் ரிதம் மேல் உதடு கீழ் உதடு நான் என அவளுடைய சூடான இதழ்கள் அவனுடைய குளிர்ந்த இதழ்களின் மேல் பட்டு அனைத்து நரம்புகளும் மின்சாரம் தாக்கி முட்டி மோதி சின்னாபின்னமாகி போக..
அடுத்து…? என்ன நடக்கும்
தொடரும்..
EPISODE 50
எனக்கு காய்ச்சல் அடிக்குதாண்னு தொட்டுப் பாரு என்று ரிதம் சொல்ல
அவன் அருகில் வந்து நெற்றியை தொட வந்தான்.
ஹே அங்கே இல்ல!
இங்க என்று கழுத்தை காட்டினாள்.
அதுக்கு அங்கே தொடனும்ன்னு அவசியம் இல்ல! இந்த தெர்மாமீட்டரை எடுத்து வாயில் வைத்தால் தெரியும்! ஆ காட்டு என்று சத்ய தேவ் அவள் வாயின் முன் நீட்ட..
அந்த தெர்மாமீட்டரை வாங்கி அருகில் போட்டவள். அவனுடைய சட்டையை அப்படியே அவள் பக்கமாக இழுத்து.. அவனுடைய உதட்டில் முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள்.
அவனுடைய முதுகு கொஞ்சம் வளைந்து அவனுடைய கழுத்தை ரிதமின் கைகள் சுத்தி இருந்தது.
ரிதம் மிகவும் பொறுமையாக மேல் உதடு கீழ் உதடு, மேல் அன்னம் கீழ் அன்னம், அவனுடைய குளிர்ந்த நா, இவளின் வறண்ட உதடு பிடித்து கொண்டது. உலக பெரு வெடிப்பு கொள்கை யை அவனது உதட்டில் நடத்தி கொண்டிருந்தாள். அவளுக்கு தேவையான நீர் சத்தை உறிஞ்சு கொண்டிருக்க..
இவள் என்ன பண்றா? இப்போ நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்! என அவனுடைய உடல் சூடாகி கொண்டே இருக்க அவனது ஆண்மை விழிக்கும் நேரத்தில் கூடவே சத்ய தேவ்வின் அறிவும் விழித்து கொண்டது.
வேகமாக அவளிடம் இருந்து விலக செல்ல முற்பட ரிதம் மெதுவாக கண்ணை திறந்து கொண்டு அவனை பார்த்தாள். இயல்பாக..
என்ன? என்ன பண்ற டி? என சத்ய தேவ் மேல் மூச்சு வாங்க அவளை பார்க்க..
ரிதம் உதட்டை மடித்து அவனுடைய சுவையை உள் இழுத்து கொண்டு புருவம் நெருக்கியவள். “அதுவா சின்ன வயசுல நீ எனக்கு ஹெல்ப் பண்ணா கடைசியாக ஹெல்ப் முடிச்சதும் முத்தம் கேட்பியே! அதான். இப்போ எனக்கு சமைச்சு கொடுத்திருக்க விடிய விடிய முழிச்சு பார்த்து கிட்டதுக்கு தான் இந்த முத்தம்! உனக்கு இன்னொரு முத்தம் வேணுமா?” என அசால்ட்டாக கேட்டாள்.
சத்ய தேவ் அவளை கோபமாகவும் தவிப்புடனும் பார்க்க..
என்ன? அப்படி பார்க்கிற? எனக்கு உன் மேல கோபம் எல்லாம் குறையல! பட் சின்ன வயசுல இருந்த சத்ய தேவ் கொஞ்சமே கொஞ்சம் தெரிஞான் அதான்! அவனுக்காக இந்த முத்தம்! என ரிதம் கூறினாள்.
ஹே நான் பெரியவன் ஆகிட்டேன். எப்டி டி? இப்படி முத்தம் கொடுக்கலாம்? அறிவு இருக்கா? உனக்கு நிதின் கூட கல்யாணம் ஆக போகுது! என சத்ய தேவ் நொந்து கொண்டு கூற..
உனக்கு கூட தான் ஹரிணி கூட கல்யாணம் ஆக போகுது! அன்னிக்கு நீ என்னை பழி வாங்க தானே முத்தம் கொடுத்த? ஆனால் உன்னை மாதிரி நான் கெட்டவள் இல்ல, ரொம்ப நல்லவ! அதான் நீ பண்ண ஹெல்புக்கு உனக்கு முத்தம் கொடுத்தேன்! எப்போவும் நீ தானே கேட்ப கன்னத்தில்? என ரிதம் ஒன்றுமே தெரியாத பச்சை குழந்தை போல கூறினாள்.
என்னது? என்ன டி? கதை கட்டுற? இப்படி தான் மிதுன், நிதின் அல்லாருக்கும் கொடுப்பியா? அறிவு கெட்டவளே! என சத்ய தேவ் அவளை முறைத்து கொண்டே கேட்டான்.
அப்போ நீயும் எல்லாரையும் பழி வாங்க முத்தம் தான் கொடுப்பியா? நிதின பழி வாங்க எனக்கு எதுக்கு முத்தம் கொடுத்த? அவனுக்கே கொடுக்க வேண்டியது தானே!
சத்ய தேவ் அவளை முறைத்து பார்த்தான்.
ரிதம் நன்றாக படுத்து கொண்டு சரி சரி போகும் போது கதவை சாத்திட்டு போயிடு! என உதட்டை மீண்டும் வட்டமடித்து கொண்டு அவள் கண்களை மூடினாள்.
சத்ய தேவ் என்ன சொல்வான்? ஒன்றும் பேச முடிய வில்லை.அவளை துரத்தி அடிக்க பட்ட மனதில் முத்தம் கொடுத்து மீண்டும் வந்து அமர்ந்து கொண்டாள். அவளை பார்த்தாலே என்ன என்னவோ செய்கிறது.
இப்படியே எவ்ளோ நேரம் இருக்க போற? போ! என்னை என்ன எல்லாம் பண்ண? அதுக்கு உன்னை பழி வாங்க தான் முத்தம் கொடுத்தேன். நீ எப்டி ஹரிணி பக்கத்தில் போனாலும் என் நியாபகம் தான் உனக்கு வரனும்! நீ கஷ்ட படனும்! என் டாடி பத்தி எல்லார் முன்னாடியும் நீ சொல்லி, எல்லாரும் சிரிச்சத நான் மறக்க மாட்டேன். என ரிதம் கண்களை மூடி கொண்டே கூறினாள்.
சத்ய தேவ்க்கு அவள் பேசுவது எதுவும் கேட்க வில்லை .ஹரிணி என்னும் ஒருவள் இருப்பதை கூட மறந்து போக செய்ய விட்டாள்.
அவன் எதுவும் பேசாமல் வேகமாக அவளுடைய வீட்டை விட்டு சென்றான்.
அவன் சென்றதும் எழுந்து அமர்ந்து முத்தத்தை நினைத்து உற்சாக படுத்தி கொண்டாள். இனி அவள் அந்த ஹரிணி! அவளை நீ எப்டி நினைப்ப? என்னை மீறி உனக்குள் அவள் எப்டி வருவா? போடா! போ! உங்க பல வருச காதல் கதையை கசக்கி எப்டி பிரிக்கிறேன்னு பாரு மிஸ்டர் சத்ய தேவ்! இல்ல சக்தி! என சொல்லி கொண்டே அவள் நிம்மதியாக தூங்க ஆரம்பித்தாள்.
*
அந்தக் கையில இருக்க மோதிரம் வேணா உன்ன சத்யதேவனுக்கு சொந்தமானவளா காட்டும்! சொல்லும்! ஆனா?.. என நிதின் நிறுத்தினான்.
ஆனால்! ஆனால் என்ன? என்று புருவத்தை சுருக்கி கொண்டு கேட்டாள்.
நிதின் எதுவும் பேசாமல் அமைதி ஆகி விட.. ஹரிணி அடுத்த அடி எடுத்து வைக்க இடி மின்னலுடன் ஒரு சத்தம்.
ஹரிணி அதே இடத்தில் கண்களை மூடி அமர்ந்து கொண்டாள்.
நிதின் அவளின் அருகில் சென்று வா! வா போலாம் அந்த பக்கம் rock பாறை இருக்கு! அங்கே விடியும் வரை இருந்திட்டு காலையில் போகலாம்! வா! என அழைத்து சென்றான்.
உன் கூட வர மாட்டேன்! நான் செத்து கூட போவ்வென் ஆனால் உன் கூட வர மாட்டேன். போடா! என கதறினாள்.
நிதின் அசால்ட்டாக என் கூட இருக்கிறதே உனக்கு சாகுற மாதிரி தானே இருக்கும் வா என அவளை இழுக்க..
எழுந்து கொள்ளவே இல்லை! அப்படியே இருந்தாள்.
நிதின் அதற்கு மேல் பொறுமை இல்லாமல் அவளை அலேக்காக தூக்கி தோல் மேல் போட்டு கொண்டான் கை கால்கள் இரண்டையும் துள்ளி கொண்டே இறக்கி விடு டா! இறக்கி விடு! என அவள் பின்னால் அடித்து அவனுடைய தோல் பட்டையை கடிக்க..
நிதிணுக்கு அதெல்லாம் பெரிதாக எந்த உணர்வையும் கொடுக்க வில்லை அவளது இடுப்பு பின் பக்கம் அவனுடைய தலையை மோதி கொண்டிருக்க.. ஏனோ இனம் புரியா உற்சாகம்! இந்த இடை! இவள்! இடையின பெண்ணினம் எனக்கு சொந்தம் என நினைத்து கொண்டான். அவளை பாறை பக்கம் கூட்டி சென்றான். அந்த இடம் மிகவும் இருட்டாக இருக்க..
அவளை ஒரு இடத்தில் அமர வைத்து விட்டு அவனிடம் இருக்கும் லைட்டர் கொண்டு தீ மூட்ட முயற்சி செய்தான். அவள் டார்ச் லைட் அடித்து கொண்டே அங்கிருந்து செல்ல போக!
ஹே நீ மட்டும் அடுத்த எட்டு வச்ச? இப்போ இங்கே ஒரு அரங்கேற்றம் நடக்கும்! என கொஞ்சம் கடுமையாக அவன் சொல்ல.. லைட்டரை அழுத்தி பிடித்து கொண்டே கூறினான்.
ஹரிணி கொஞ்சம் பயந்து அவனை பார்த்தாள். அந்த இடத்தின் ஓரத்தில் இருந்து அவளிடம் டார்ச் வாங்கி கொண்டவன். அந்த பாறையின் பக்கத்தில் ஈர மில்லாத சுள்ளி கிடைக்கிறதா? என தேடி பார்த்து கொஞ்சம் எடுத்து வந்து ஒரு இடத்தில் பற்ற வைத்தான்.
ஹரிணி நடுங்கி கொண்டே அந்த நெருப்பு அருகில் வந்து கைகளை கொஞ்சம் இத படுத்தி கொள்ள..
ஹே இந்த பக்கம் வா! என அவளை பிடித்து இழுத்தான்.
கைய எடு டச் பண்ணாத!
என்னமோ பண்ணிக்கோ! எங்கே வேணாலும் போய் உட்காரு! இங்கே நிறைய snake இருக்கு! அதோ அங்கே பாரு தண்டர் வரும் போது அந்த snake இந்த நேரத்தில் என்ன வேலை பண்ணிட்டு இருக்குன்னு பாரு என நிதின் கூறினான்.
அந்த மழையில் பாம்புகள் இரண்டும் பின்னி கொண்டு கொடியில் சுற்றி கொண்டிருக்க.. அதை பார்த்த ஹரினிக்கி எதோ போல் ஆகுட அந்த பாம்பை பார்த்து பயந்தவள். நேராக நிதின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.
ஹரிணியை வைத்த கண் வாங்காமல் நிதின் பார்த்து கொண்டிருக்க..
ஹே இப்போ எதுக்கு என்னை பார்க்கிற! என்னை பார்க்காத! அருவருப்பா இருக்கு!
இருக்கட்டும்! என்னோட எண்ணம் என்னன்னு உனக்கு தெரியும்! என்னை பத்தியும் உனக்கு தெரிஞ்சு போச்சு! இதுக்கு மேல நான் எதுக்கு நல்லவன் மாதிரி நடிக்கணும்! நானும் எவ்ளோ நாளைக்கு தான் நல்லவன் மாதிரி நடிக்கிறது சொல்லு! அதான்! இனி டிரை பண்ணிக்கிட்டே இருக்க போறேன்! என நிதின் கூறினான்.
ச்சீ! என்ன டிரை பண்ண போற? நீ என்ன பண்ணாலும் எதுவும் நடக்காது! போடா! என திரும்பி கொண்டாள்.
நிதின் ஒரு பெரு மூச்சை விட்டு உன்னோட கல்யாணம் வரை டிரை பண்ணுவேன்! அதுக்கு அப்புறம் கூட டிரை பண்ணுவேன்! நீ எப்போ என்னை தேடி வந்தாலும் உன்னை ஏத்துக்க நான் ரெடி தான்! என கூறினான்.
உன் அப்பா மாதிரி அப்படியே இருக்க? மகி அத்தை பின்னாடி என அவள் சொல்ல வர..
உடனே அவன் கோபமாக அருகில் வந்து என் டாடி கிட்ட இருந்து தான் அந்த சூர்யா மகி பொம்மைய பிரிச்சுட்டாரு! இல்லன்னா மகி என் மம்மி! என அவளின் கழுத்தை பிடிக்க வந்தான்.
ஹரிணி கொஞ்சம் பதட்டத்துடன் அவனுடைய கையை பார்த்து உதடுகள் குளிரில் நடுங்கிய படி இருக்க..
ஏன் டி என்னை புரிஞ்சுக்க மாட்டின்ற? உன்னை எனக்கு எவ்ளோ பிடிக்கும் தெரியுமா? என கோபத்தில் சொன்னவன். அவளின் அருகில் வந்து நான் என்ன பண்ணா உனக்கு பிடிக்கும் சொல்லு! உனக்காக என்ன வேணாலும் பண்ணுவேன். என நிதின் கூறினான்.
நீ தலை கீழா நின்னாலும் உன்னை எனக்கு பிடிக்காது போடா! என அவள் சொல்ல அந்த நேரம் தான் அவளின் அருகில் ஒரு பாம்பின் மேல் கால் வைக்க போக..
ஹே பாம்பு டி! என கூறினான்.
ஹரிணி அலட்சியத்துடன் கடிக்கட்டும் போடா! என அவள் அடுத்த அடி வைக்க போக..
ஸ்ஸல் என சத்தத்துடன் அவளின் காலை பதம் பார்க்க வர கண் இமைக்கும் நொடியில் நிதின் அதை தூக்கி இருந்தான்.
நிதின் என்ன பண்ற? என அவள் பயத்துடன் நடுங்க..
இன்னும் கொஞ்சம் விட்டால் உன்னை கடிச்சு இருக்கும் என நிதின் அதை வீச போக அந்த பாம்பு அவனுடைய கையை பதம் பார்த்தது.
ஸ்ஸ் என நிதின் முனக..
அய்யோ! என பதட்டத்துடன் வந்தாள். நிதின் அந்த பாம்பை வீசி விட்டு வேகமாக அந்த இடத்தை வாய் கொண்டு உறிஞ்சி கீழே துப்பினான். அந்த இடத்தை சுற்றிலும் பார்க்க.
என்ன வேணும்? சொல்லு! என பதட்டத்துடன் கேட்டாள்.
ஒரு கயிறு வேணும்! நாட் டைட்டா போடணும் இல்லன்னா! இரத்தத்தில் பரவ ஆரமிக்கும்.. என மீண்டும் வாய் வைத்து உறிஞ்சி துப்பினான்.
ஹரிணி அவள் வைத்திருந்த சின்ன கத்திய வைத்து சட்டையில் இருந்து கட் செய்து அவனிடம் நீட்ட!..
கட்டு டி! என கையை நீட்டினான். நடுங்கி கொண்டே கட்டிய ஹரிணி அவளின் தலையில் போட்டிருந்த ரப்பர் பேண்ட் எடுத்து கையில் போட்டு விட்டாள்.
உன்னோட சட்டைய கழட்டி அங்கே போடு!.
என்ன? என ஹரிணி அதிர்ச்சியுடன் பார்க்க..
ட்ரெஸ் முழுக்க ஈரம் நான் தான் செத்து போயிடுவேன் நீ உயிரோட இருக்கணும்! நீ நல்லா இருக்கணும்! கழட்டி காய வை! என நிதின் கூறினான்.
ஹரினிக்கு பதட்டமாக இருக்க.. வேகமாக சட்டையை கழட்ட போனவள் மாட்டேன் என கூறி விட்டாள்.
சரி என அமைதியாக அதற்கு மேல் அவன் எதுவும் பேச வில்லை.
ஹே நிதின்! நிதின்!. என அவள் அழைக்க.
எனக்கு தூக்கம் வருது என கண்ணை சொக்க ஆரம்பித்தான்.
ஹே நிதின்! No பாம்பு கடிச்சா தூங்க கூடாது. அய்யோ முழி முழி என பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.
நிதின் கண்ணை தேய்த்து கொண்டே அவளை பார்க்க .
நிதின்! ஹே நிதின்! என அவனுடைய கன்னத்தை தட்டினாள்.
ம்ம் சொல்லு! பங்காரம்! என கூறினான்.
இதெல்லாம் அவளுக்கு என்ன செய்வது என ஒன்றுமே புரிய வில்லை. வேறு வழி இல்லாமல் நீ முழி! அப்போ உனக்கு நிஜமாவே ஒரு சான்ஸ் தரேன்! என்னை டிரை பண்ண நீ உயிரோட இருக்கணும் தானே!
என்ன என அவன் கொஞ்சம் விழித்து கொண்டு என்ன சொன்ன? என கேட்க..
ஆமா இன்னிக்கி விடிய விடிய நீ தூங்கவே கூடாது! அப்டின்னா உன் கூட date பண்ண எனக்கு ஓகே! என பற்களை கடித்து கொண்டு வேறு வழி இல்லாமல் கூறினாள்.
Dating ஆ! Super!. என சொக்கி கொண்டே அவளை பார்த்தான்.
ஆமா! என மருகி கொண்டே கூறினாள்.
சரி இப்போ நம்ம இன்றோ கொடுப்போம்! ஃபர்ஸ்ட் நீ என ஹரிணி சொல்ல..
உன்னை பத்தி நான் சொல்றேன். என்னை பத்தியும் நானே சொல்றேன் என அவளிடம் சொல்ல ஆரம்பித்தான். “உனக்கு பிங்க் ரொம்ப பிடிக்கும், ராம் ஆங்கிள் அப்டின்னா கொஞ்சம் பயம், கீதா ஆண்டி உன் கிட்ட ரொம்ப close.. உன்னோட லுக் அப்படியே கீதா ஆண்டி போல.. உனக்கு சத்ய தேவை ரொம்ப பிடிக்கும் அதனால் தான் IPS officer ஆகி இருக்க! உனக்கு பிடிச்ச ஆக்டர் த்ரூவ் விக்ரம், சாரா அலிகான், ஜான்வி கபூர் தான் உன்னோட ஃபாவரட் ஹீரோயின்ஸ். Non veg உனக்கு ரொம்ப பிடிக்கும். Favourite place venice, Paris and sydney!” என அவளை பற்றி அனைத்தையும் சொல்ல சொல்ல ஹரினிக்கு என்ன பேசுவது என தெரிய வில்லை.
நிதின் கொஞ்சம் கண்கள் சொக்க என்னை பத்தி சொல்ல பெருசா ஒன்னும் இல்ல! எனக்கு மிதுன் கூட ஹார்ஸ் ரைடிங் போறது பிடிக்கும். நான், ரிதம், மிதுன் நாங்க மூணு பேரும் ட்ரிங்க் பண்ணுவோம் அந்த moment பிடிக்கும், தூறிகா என் கூட டைம் spent பண்ண எனக்கு ஆசை என் சின்ன குட்டி பாப்பாவுக்கு ஒரு நாள் முழுக்க ஷாப்பிங் கூட்டி போக ஆசை, சிவன்யா அண்ட் பவன்யா கூட அவங்க native போன இடம் பிடிச்சு இருந்தது. இப்போ இந்த மினிஸ்டர் பதவி சுத்தமா பிடிக்கல.. எனக்கு இயல்பா தொல்லை இல்லாம மகி பொம்மை பக்கத்தில் அவங்கள பார்த்து கிட்டே மகி பொம்மை கூட டைம் spent பண்ணனும்! அந்த மாதிரி ஒரு வாழ்க்கை வேணும். என் தாத்தாவை ரொம்ப பிடிக்கும். கூடவே என்னோட எல்லா moment ம் நீ என் கூட இருக்கணும் என சொக்கி விழுந்தான்.
அவள் அமைதியாக இருக்க.. அவன் நிலையை பார்த்து ஹே நிதின் நிதின் என கன்னத்தை தட்டி எழ வைத்தாள்.
சாரி சாரி ஹரிணி! என்ன சொல்லிட்டு இருந்தேன்! ஹான் எனக்கு உன்னை சின்ன வயசில இருந்து பிடிக்கும்! நான் நீ நம்ம ரெண்டு பேரும் கைய பிடிச்சிட்டு வாக் போக ஆசை நீ ஒவ்வொரு தடவையும் சத்ய தேவ் கூட போகும் போது நான்! என நிறுத்தி மீண்டும் விழுந்தான்.
ஹே ஹே நிதின் என அவனை அணைப்பது போல அருகில் வந்தாள்.
வாக்கி டாக்கியை எடுத்து யாரிடமாவது பேச முடியுமா என முயற்சி செய்ய.. அந்த நேரம் ஒருவர் தொடர்பு கொண்டு நாங்க வந்துட்டு இருக்கோம் மேம் என சொல்ல..
ஹரிணி நிதின் கண்ணைத்தை தட்டி விட்டு கொண்டே பாம்பு கடித்த விசயத்தை சொல்ல..
எங்கே இருக்கீங்க இப்போவே வரோம் என அவர்களின் குழு வேகமாக சம்பவ இடத்துக்கு செல்ல ஆயத்த மானார்கள். கூடவே மருத்துவ குழுவையும் அழைத்து கொண்டார்கள்.
ஹரிணி பதட்டத்துடன் நிதின் அருகில் வந்து தட்டி அவனை உலுக்கி கை கால்களை தேய்த்து விட்டு வேக் அப்! ஹே வேக் அப் என மிரட்ட..
நிதின் முனகி கொண்டே சென்றான். ஒரு சில நிமிடங்களில் கண்ணை சுழற்றி கொண்டே எழுந்தவன். தண்ணி தண்ணி! ஹரிணி எனக்கு தண்ணி வேணும்! பிளீஸ் என கெஞ்ச ஆரம்பிக்க..
இல்ல நிதின் no! தண்ணி குடிக்க கூடாது. என அவள் தள்ளி விட மழை பெய்யும் பக்கம் எழுந்து செல்ல முற்பட்டட்டான்.
நிதின் சொல்றத கேளு என கையை பிடித்து அவள் இழுத்து அமர வைக்க..
நிதின் அவளுடைய கழுத்தை பிடித்து தண்ணி வேணும் டி! எனக்கு இப்போ தண்ணி வேணும்! என கத்த..
ஹரிணி நான் நான் தண்ணிக்கு எங்கே போவேன்! இது infection ஆகிடும்! பிளீஸ் கொஞ்சம் பொறுத்துக்க நான் ஸ்க்வாடுக்கு சொல்லிட்டேன். நல்ல வேளை முன்ன கொடுத்த தகவலின் அவங்க பாதி தூரம் வந்துட்டாங்க! பிளீஸ் கொஞ்சம் பொறுத்துக்க என சொல்லி கொண்டிருக்க..
பிளீஸ் டி! சாகர மாதிரி இருக்கு! எனக்கு தண்ணி வேணும்! என நிதின் கண்கள் கலங்கி போக..
பிளீஸ் சொல்றத கேளு! என ஹரிணி சொல்ல..
அவன் அதற்குள் உறங்கி விட்டான்.
நிதின்! டேய் என அவள் உலுக்க ஆரம்பித்தவள். இவனை முழிக்க வைக்க என்ன பண்றது? அய்யோ என அவள் உலுக்க ஆரம்பிக்க
அவன் உடல் குளிரில் நடுங்க தொடங்கியது. அய்யோ இது வேறயா? என நொந்து கொண்டு அவன் கன்னத்தில் அடித்தாள்.
ஹே நிதின்! நிதின் என இரண்டு பக்கமும் அடிக்க..
நிதின் மெதுவாக கண் விழித்து பார்த்தான்.
ஹரிணி அவனுடைய நடுக்கத்தை குறைக்க நெருப்பில் கை காட்டி கன்னத்தில் வைக்க..
நிதின் அவளை இன்னும் நெருங்கி அமர்ந்தான். அவளுக்கும் இப்பொழுது வெப்பம் தேவை பட்டது.
நிதின் கண்ணம் அவள் பக்கம் உரச! ஹரிணி அவனை திரும்பி பார்த்தாள். சட்டென இருவரின் சூடான மூச்சு காற்றும் ஒருவரின் மேல் உரச.. நிதின் கண்களை மெலிதாக திறந்து கொண்டே அவளின் உதட்டை பார்த்தவன் கண்ணம் பிடித்து முத்தமிட ஆரம்பித்தான்.
ஹரிணி கைகளை இறுக்கி மடக்கி கண்ணை சுருக்கி அவனை தள்ளி விட முயற்சி செய்து தள்ளி விட..
I want more! அப்படி இல்லன்னா தண்ணி கொடு! Thirst ஆ இருக்கு.. என மீண்டும் அருகில் வந்து அவளின் உதட்டில் ஒட்டி கொண்டு தேவையான அளவு தாகத்தை போக்கி கொண்டான்.
அவன் கைகள் அவளின் இடையை பிடிக்க.. ஹரிணி கண்களில் கண்ணீருடன் அருவருப்பாக உதட்டை கடித்து கொண்டு பொறுத்து கொண்டாள்.
I know உனக்கு பிடிக்கல! எனக்கு நீ வேணும் ஹரிணி! இந்த முத்தம் உனக்கு எதையுமே நியாபக படுத்தலயா? மறந்து போச்சா! என உலர ஆரம்பித்தான்.
என்ன சொல்கிறான்? இவன் என்ன சொல்கிறான்? என ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு ஒரு சில நிமிடங்களில் முத்தத்தை விட்டு விலகி அப்படியே சரிந்தான்.
நிதின் நிதின் என அவனை அடிக்க ஆரம்பித்தாள்.
ஹே என வேறு வழி இல்லாமல் அவனுடைய இதழை இரத்தம் வரும் வரை கடிக்க..
வலியில் வெடுக்கென எழுந்து அமர்ந்தான்.
நிதின் என சொல்லி கொண்டே கையை பிடித்த ஹரிணி சொடக்கு எடுத்து விட்டாள். அவனை முடிந்து வரை முளிக்க வைத்து பத்திரமாக பார்த்து கொண்டிருக்க..
கிட்ட தட்ட நான்கு மணி நேரம் கழித்து அந்த குழு வந்து சேர்ந்தது..ஹரிணி துப்பாக்கியில் சுட்டு சத்தத்தின் மூலமாக தாங்கள் எங்கு இருக்கிறோம் என காட்டிட..
வேகமாக மயக்க நிலையில் இருந்த நிதினை மீட்டு கொண்டு மருத்துவ குழு முதலுதவி செய்து தயாராக இருந்த ஹெலி காப்டரில் பறந்து சென்றார்கள்.
நிதின் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு ICUவில் இருக்க கனிரா அங்கும் இங்கும் பதட்டத்துடன் அண்ணனுக்கு என்ன ஆகுமோ! என பயத்தில் நடந்து கொண்டிருக்க..
ஹரிணி ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தாள்.
தொடரும்.