🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
9. ACTION அசுரா (AAA old version) 9
ACTION அசுரா
📖 ACTION அசுரா · Chapter 9 of 13

ACTION அசுரா (AAA old version) 9

  • 21 May 2026
  • 372 reads
  • ☆ No ratings yet
  • 131 min read

EPISODE 226

சைலஜா அவர்களைப் பார்த்ததும் ஓடிச்சென்று சந்தோஷத்துடன் கண்களில் நீர் வழிய அம்மா அப்பா அக்கா அரி ஏன்னா என்று வேகமாக அவளின் உணர்வுகளை வெளிப்படுத்தினாள்.  சத்யதேவ் அவளை ஒரு புன் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“டேய் என்ன விடுடா தேவிமா உன்ன இவன் எதுவும் தொடவில்லை தானே!” என்று பதட்டத்துடன் கேட்டான் அரிச்சந்திரா. 

“இல்ல  நான் உங்க ஆத்துக்காரி என் கண்  முன்னாடி உங்கள எல்லாத்தையும் சுட்டுட்டான் இந்த படுபாவி. என்னால ஒண்ணுமே முடியல நான் கடவுள்டன் வெண்டின்டே இருந்தேன்” என்று கண்களை கண்ணீர் வடிய பேசினாள் சைலஜா. 

“டேய் ஒழுங்கு மரியாதையா எங்களை விட்டுடு இல்ல பின் விளைவுகளை நீ நிறைய சந்திப்ப என்று ஆவேசமாக அரிச்சந்திரா கத்திக் கொண்டிருக்க, பின் விளைவா? அப்போ உங்களுக்கு முன்னாடி ஒரு முன் விளைவு காட்டட்டுமா என்று புன்னகையுடன் கேட்டான். சத்திய தேவ்..

நாங்க என்ன பண்ணோம்னு?  எங்கள  புடிச்சு வச்சிருக்க? ஒழுங்கா விட்டுடுடா!  என்று இன்னொரு பக்கம் அனந்த கிருஷ்ணன் கத்த…  ஸ்ரீதேவி, நித்யா தேவி பதட்டத்துடன் ப்ளீஸ் எங்களை விட்டுடுங்கோ!  நாங்க எதுவுமே பண்ணல என்று அழுது கொண்டே கூறினார்கள். 

லேடி கான்ஸ்டிடபில உள்ள வர சொல்லுங்க என அவனை சுற்றி இருக்கும் காவலர்களிடம்  சொல்லி விட்டு  எதிரில் இருக்கும் சுழல் சாறில் கெத்தாக அமர்ந்தான் சத்யதேவ். இரண்டு பெண் காவலாளிகள் உள்ளே வந்ததும், ” நித்யா தேவி ஸ்ரீதேவி இரண்டு பேரையும் கூட்டிட்டு போய் நான் சொன்ன டெஸ்டையும், கூடவே அதையும் பார்த்து  இருக்கான்னு செக் பண்ணிடுங்க” என்று கூறினான். 

அரிச்சந்திரா  ஆவேசமாக  “டேய் விட்டுடு தேவையில்லாம மோதுற? எங்க பொம்மனாட்டி மேல கைய வச்ச! நாங்க உங்கள சும்மா விடமாட்டோம்! நாங்க யாருன்னு தெரியும்ல என்ன நினைச்சிட்டு இருக்க? எங்க மொத்த கூட்டமும், உங்கள சும்மா விடாது வடகலை தென்கலை” என்று அவன் ஆரம்பிக்க.. 

டேய் வாய மூடுடா என்று காதை குடைந்து கொண்டே கூறினான் சத்தியதேவ். 

அனந்தகிருஷ்ணன் பதட்டத்துடன் அரிச்சந்திராவை பார்க்க,  தேவி என அவன் ஆரம்பிக்க…  சத்யதேவ் சைலஜாவை பார்த்து உனக்கு டைம் முடிஞ்சு போச்சு அங்க அமைதியா உட்காரு பார்க்கலாம் என்று கூற.. 

அரிச்சந்திரன் ஷைலஜாவிடம் தேவி நான் சொல்றத என  பேச வர..

இருங்கோன்னா நான் அவன்கிட்ட பேசி பார்க்கிறேன்.  ப்ளீஸ் உங்களை விட சொல்லி கெஞ்சி பாக்குறேன்.  கண்டிப்பா அவன் விடுவான் என்று சத்தி  அருகில் வந்தவள். 

ப்ளீஸ் எங்கள விட்டுடு நாங்க யாருக்கு என்ன பாவம் பண்ணோம். என் ஆத்துக்காரர் எதுவும் பண்ணல நீ எதுக்கு தேவையில்லாம இவங்கள புடிச்சு வச்சிருக்க என்று அழுதபடி கூறினாள் ஷைலஜா. 

இப்ப நீ வாய மூடிட்டு உட்கார்றியா?  இல்ல நான் வந்து என்று சக்தி எழுந்தான். 

தேவி தேவி இங்கே வா  நீ வந்துடு! என்னை நினைச்சு கவலை படாதே நான் பத்திரமா வந்துடுவேன் எனக்காக நீ காத்திரு என்று கூறிய அரிச்சந்திரா சக்தி பக்கம் திரும்பி  எனக்கு இப்பவே என்னோட வக்கீலை சந்திக்கணும்.. இதை என்னால ஏத்துக்க முடியாது.. நீ எந்த காரணத்துக்காக எங்களை பிடித்து வைத்திருக்கிறான்னு இதுவரைக்கும் நீ சொல்லவே இல்ல. நான் உன் மேல கம்ப்ளைன்ட் பண்ணாம விடவே மாட்டேன். என்று அவன் பேச…

சத்யதேவ் சிரித்தபடி “இன்னும் நல்லவன் மாதிரியே வேஷம் போட்டுட்டு இருக்க? அப்படித்தானே? வண்டவாளம் என் முன்னாடி  தண்டவாளம் ஏறி ரொம்ப நாள் ஆச்சு என்று  கூறினான். 

ஆனந்த கிருஷ்ணனின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை!! சக்தி மூவரையும் பார்த்து  என்ன நீயா வாயை திறந்து சொல்றியா? இல்ல நான் சொல்ல வைக்கட்டுமா? என்று சத்தி  பார்க்க…  நீங்க தப்பா புரிஞ்சு இருக்கீங்க?  என் ஆத்துக்காரருக்கு ஒன்னும் தெரியாது. ப்ளீஸ் அவரை விட்டுடுங்க என்று சைலஜா இன்னொரு பக்கம் அழுதாள்.

சத்திய தேவ்  அவளை கண்டுகொள்ளாமல்  சப் இன்ஸ்பெக்டரை வர சொல்லுங்க கூடவே எனக்கு பிடிச்ச equipments வேணும் என கூற அவர்கள் ஒரு பெட்டியை எடுத்துக் கண்டு அருகில் வந்தார்கள். 

சக்தி நேராக ஆனந்த கிருஷ்ணனின் மனைவியின் அருகில் சென்று அவரின் விரல்களை பிடித்த படி,  இன்ஸ்பெக்டர் சாந்தி  வாங்க இவங்களுக்கு கொஞ்சம் நெய்யில்ல ஆட் பண்ணி விடலாமா?  ஸ்டார்ட் பண்றீங்களா?  என்று கூற…

ஆனந்த கிருஷ்ணன் அரிச்சந்திரா அம்பிகா மூவரும் வித்யா பதட்டத்துடன் சத்யதேவை பார்த்தார்கள். இதோ சார் என  வேகமாக வெளியே இருந்து உள்ளே வந்த சாந்தி,  அம்பிகாவின் அருகில் அமர்ந்து அவர்களின் கையை பிடித்துக் கொண்டவள். ” சார் என்ன விட நீங்க பண்ணா ரொம்ப நல்லா இருக்கும் “என்று கூற..

அப்படியா என்று சிரித்தவன் அந்த பெட்டியை திறந்து பாக்கு வெட்டி போல இருக்கும் ஒரு கட்டிங்  கருவியை  எடுத்தான். 

அதைப் பார்த்ததும் அம்பிகாவிற்கு முகத்தில் முத்து முத்தாக வியர்வை… ”  எனக்கு இந்த மோதிரம் மோதிர விரல நெயில் ஆட் பண்ணனும்.  உங்களுக்கு எந்த விரல் சாந்தி?  என்று சத்யதேவ் கேட்க . 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

ஹான் எனக்கு ஆள்காட்டி விரல் என்று சாந்தி கூற.. 

சரி சரி என்னை எதுவும் பண்ணிடாதீங்க என்று அம்பிகா உளர ஆரம்பித்தாள். 

டேய்என்னடா பண்ணிட்டு இருக்க என்று அரிச்சந்திரன் அம்பிகாவை பேச வேண்டாம் என்பதுபோல சத்தமிட வர…  அப்போ இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளவங்க நெயில் ஆர்ட் நம்ம அனந்த கிருஷ்ணனுக்கும் பண்ணிவிடலாம் என்று உத்தரவிட்டான்.

இன்னொரு இன்ஸ்பெக்டர் வேகமாக வந்தவர் சத்யதேவுக்கு சல்யூட் அடித்து விட்டு அனந்த கிருஷ்ணனின் விரலை பிடித்தார்.  என்ன பண்றீங்க? என்று அனந்த கிருஷ்ணன் பயந்து போக சைலஜா வேகமாக வந்து டேய் நீ என்ன போலீசா?  இல்ல பொறுக்கியா?  எதுக்கு இப்படி கொலைகாரன் மாதிரி என் குடும்பத்தை இப்படி பண்ற? உன்னை சும்மாவே விடமாட்டேன் டா என்று ஆவேசமாக சைலஜா சத்யதேவை அடித்தாள்.

அங்கிருக்கும் அனைவரும் சைலஜாவையும் சத்ய தேவையும் பார்த்தார்கள். 

ம்ம் பண்ணுங்க பாலமுருகன். டைம் வேஸ்ட் ஆகுது.  பாருங்க. எனக்கு அதை பாக்கணும்னு ரொம்ப ஆசை. ஆடு வெட்றதை பாத்ததில்ல.  ஆனால் ஆள வெட்டுறத பாக்கணும்னு ஆசையா இருக்கு. அந்த அளவுக்கு நான் ரொம்ப மோசமானவன் அல்ல.  அதனால விரலை மட்டும் வெட்டுங்க என்று கட்டளையிட்டுவிட்டு சத்யதேவ் கைகளை கட்டிக்கொண்டு நிற்க…

அனந்தகிருஷ்ணனின் அருகில் அமர்ந்த பாலமுருகன் ஒரு பாக்கு வெட்டியை எடுத்து ஆனந்த கிருஷ்ணனின் ஆள்காட்டி விரலில்  மாட்டிவிட்டு சரியாக அழுத்தும் நேரம்.. 

இல்ல இல்ல வேண்டாம்! நான் சொல்றேன் நான் சொல்றேன் என்று ஆனந்த கிருஷ்ணன் கத்த ஆரம்பித்தார். 

 மாமா என்று  கத்தி கொண்டே  சொல்றதுக்கு ஒன்னும் இல்ல எங்களை விட்டுடு இந்நேரம் என்னோட வக்கீல் ஸ்டேஷனுக்கு வந்திருப்பார் என்று அரிச்சந்திரன் கூற…

அப்படியா?  நம்ம ஸ்டேஷன்ல இருந்தா தானே?  என்று சத்தி  அவர்களைப் பார்த்து சிரித்தான்.  என்ன சொல்றான்?  இவன்?  என்ன சொல்கிறான்? என  அரிச்சந்திரன் ஆனந்த கிருஷ்ணன் அம்பிகா என மூவரும் விதிர்வித்து பார்க்க…

 நம்ம இப்போ ஸ்டேஷன்ல.. இல்ல நீங்க மூணு பேரும் உத்தமராசா மாதிரி உங்களை காப்பாற்றுவதற்கு வேற ஒரு ஆளா?  நீங்களே உண்மையா சொல்றீங்களா? இல்லனா வர வைக்கட்டுமா என்று கூறியவன்.. வேகமாக இவங்க மூணு பேரையும் அந்த ஐஸ் கட்டி மேல நிக்க வைங்க என கூறிவிட்டு அமர்ந்தான். 

 சைலஜா வேகமாக அவனை அடிக்க பாய… நீ வேற டென்ஷன் பண்ணிக்கிட்டே இருக்க?  உன்னையும் ஐஸ் மேலே நிக்க வைக்கவா?  என்பது போல சத்தியதேவ் அவளிடம் கேட்க.. 

 என் ஆத்துக்காரர் விட்டுடு என்னைய என்ன வேணாலும் பண்ணிக்கோ! என்று சைலஜா அழுதாள்.‌

 இப்படியே வெகு நேரம் செல்ல இறுதியாக சத்யதேவ் மூவரின் மீதும் மூவரையும் தலைகீழாக கட்டி தொங்கவிட முடிவெடுத்தான். 

 என்னடா பண்ற என்று அரிச்சந்திரா கத்த உங்களை தலைகீழா தொங்கவிடப் போறேன் ரத்தம் கொஞ்சம் கொஞ்சமா மூக்கு வழியா வந்து  நீங்க சீக்கிரம் செத்து போயிடுவீங்க என்று கூறினான். 

 இப்போ உனக்கு என்ன வேணும் என்று அரிச்சந்திரா கேட்க.. 

 எனக்கு என்ன வேணும்ன்னு உனக்கு நல்லா தெரியும்.  அத எல்லாத்தையும் சொல்லிட்டேனா!  இப்பவே உன்னை விட்டுடுவேன் என்று சத்தி சொல்ல..

என்னால சொல்ல முடியாது என்று அரிச்சந்திரன் விடாப்படியாக நின்றான்.

யாரு சொல்றீங்களோ அவங்களுக்கு உடனே விடுதல என்று சத்தி  போட்டு வாங்க முயற்சி செய்ய.. 

 அதில் அம்பிகாவும் ஆனந்த கிருஷ்ணனும் உடனே ஒத்துக் கொண்டார்கள்.  ப்ளீஸ் எங்கள விட்டுட்டு நாங்க எல்லாத்தையும் சொல்லிடுறோம் என்று சொல்ல…

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

 கான்ஸ்டபிள் இவள இளுத்துகிட்டு எட பக்கத்துறைக்கு போங்க கூடவே ஆனந்த கிருஷ்ணன் அம்பிகா இரண்டு பேரையும் இழுத்துட்டு வாங்க என்று அருகில் இருக்கும் இன்னொரு அறைக்கு சொல்ல…

 எதையும் சொல்லிடாதீங்க சொல்றத கேளுங்க  எதையும் சொல்லிடாதீங்க என்ற அரிச்சந்திரா கத்த ஆரம்பித்தான். 

 சைலஜா ஒன்றும் புரியாமல் அரிச்சந்திரனை பார்க்க அவனும் டேய் இவ எங்களுக்கு ரொம்ப முக்கியம்!  நீ இவள வச்சிருந்தாலும் பிடிச்சுட்டு போக ஆள் வந்துடும் என்று கத்தினான். அரிச்சந்திரா. 

ஆனால் பிரச்னை. புரியாமல் சைலஜா பார்க்க..

ஆனந்த கிருஷ்ணனும் அம்பிகாவும் சொன்ன விஷயத்தை கேட்டு சைலஜா உயிர் அற்ற ஜடமாக நின்றாள். சொல்லுங்க என்று சத்தி கேட்க..

இன்னொரு பக்கம் காவலர் குழு அவர்கள் இருவரும் கூறும் அனைத்து விவரங்களையும் ஆடியோ வீடியோவாக ரெக்கார்ட் செய்து கொண்டிருந்தது. 

அம்பிகா அவசர அவசரமாக தண்ணீரை குடித்த தன்னை அசுவாசப்படுத்தி கொண்டவள்.. சத்தியை பார்க்க…  ஸ்ரீதேவி?  நித்யா தேவி?  அவங்க ரெண்டு பேரும் யாரு என்று கேட்டான். 

சைலஜாவின் மனதில் அவங்க ரெண்டு பேரும் எங்க அக்கா!  இது எங்க அம்மா இது எங்கிட்ட தோப்பனார் இதயம் இப்படி லூசு மாதிரி கேட்டுட்டு இருக்கான்? என்று தோன்றியது. 

அம்பிகா ஒரு பெருமூச்சு விட்டபடி ஸ்ரீதேவியும் நித்யா தேவியும் கல்யாணமான பொண்ணுங்க.  அவங்கள நாங்க நினைவுகள் அழிச்சு அவங்களுக்கு வர்ஜுனிட்டி டைட்னஸ் பண்ணி அது கூடவே ரெண்டு வருஷத்துல அவங்கள மொத்தமா எங்க பொண்ணா மாத்திட்டோம்.  இப்போ அவங்கள நம்பிக்கையா சமாதிச்சு  கல்யாணத்தை பண்ணி பிளாக் மார்க்கெட்ல விற்க போறோம். அதுக்காகத்தான் அந்த அக்ரஹாரத்தில் ஃபேமிலியா இருக்குற மாதிரி செட்டப் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது.  என்பதற்காக என அனைத்தையும் கூறினாள் அம்பிகா 

அது என்ன தேவி? என்று சத்தி கேட்க…

  ஒவ்வொரு மூணு வருஷத்துக்கு ஒரு தடவை நாங்க எங்களோட கோட் வேர்டா மாத்திக்கிட்டே இருப்போம்.. இந்த முறை தேவி என்ற பெயரில் முடிகிற பொண்ணுங்கள தான் கப்பல்ல ஏத்தி அனுப்பவும் ஒரு பொண்ணுக்கு நூறு கோடி மொத்தம் மூணு பொண்ணு நான் ஒரு கோடி என்று கூறினால் அம்பிகா மூணு பொண்ணா ஒரு பொண்ணுக்கு நூறு கொடின்னா அப்ப மூணு பொண்ணுக்கு 300 கோடி தானே என்று சத்யதேவ் கேட்க

அது என்ற அம்பிகா எந்தவித தயக்கமும் இல்லாமல் சைலஜாவை பார்த்தவள் இவளுக்கு மட்டும் 200 கோடி இவளுக்கு டிமாண்ட் ஜாஸ்தி அங்க பொண்ணுங்கள விலைக்கி வித்துடுவாங்க.  அந்த எஜமான்க இந்த பொண்ணுங்க கிட்ட ஹாராஸ்மென்ட்டோட வன்புணர்வு பண்ணி அதுல சந்தோஷம் படுறவங்க இருக்காங்க. அதையே அந்த பிளாக் மார்க்கெட்ல வீடியோவா எடுத்து வித்துடுவாங்க இந்த பொண்ணுங்களோட ஆயுட்காலம் அதுங்க உடல்ல இருக்கிற தெம்பு வரைக்கும் தான் சில பொண்ணுங்க ஒரே நாள்ல கூட செத்துடும் இந்த மாதிரி பெரிய பெரிய பணக்காரங்க அவங்களோட வக்கிரமான எண்ணங்களை தீட்டுக்க இந்த பிளாக் மார்க்கெட்டில் பொண்ணுங்கள வாங்கிட்டு போவாங்க என்று கூறினாள் அம்பிகா. 

 சைலஜாவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது . அப்போ அரிச்சந்திரா?  என்று சத்தி  கேட்க.. 

 அவன் தான் இங்க தமிழ்நாட்டுல திருச்சில இந்த மூணு பொண்ணுங்களுக்கும் ரெஸ்பான்சிபிலிட்டி சதி தேவியை அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டதும்  அப்புறம் வித்துடுவான்.. பொண்ண காணோம்னு நாங்க போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு அழுதுட்டு இருப்போம். அந்த பொண்ணு கிடைக்கவே மாட்டா.  அதோட இந்த கேஸும் முடிந்துவிடும்.  எங்க மேல எந்த சந்தேகமும் வராது அப்போ அரிச்சந்திரன் இவளை எதுவும் பண்ண மாட்டானா?  என்று சத்தி கேட்க..

 நாங்க எங்க கிட்ட வர பொண்ணுங்க எந்த பொண்ணையும் தொட மாட்டோம்.  அவங்ககிட்ட ரொம்ப பாசமா பேசி அன்பா நடந்து அவங்கள மொத்தமா எங்க கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்து  சரியான நேரத்தில் வித்துட புரோசஸ் ஆரம்பம் ஆகிடும். என்ற அம்பிகா கூட சரி ஓகே இதுக்கெல்லாம் பாஸ் யாரு?  என்று சத்தியதேவ் கேட்டான்.

 எங்களுக்கு தெரிஞ்ச வரைக்கும் இதெல்லாம் அரிச்சந்திரனுக்கு மட்டும்தான் தெரியும் நாங்க பணத்த வாங்கிட்டு ஆறு வருஷத்துக்கு ஒரு தடவைதான் புது பார்ட்டிய புடிப்போம்.  இப்போ இந்த மூணு வருஷம் கழிச்சு திரும்ப மூணு போடுவோம் எங்களோட வாழ்க்கையை பார்த்து கருத்து அதுக்கப்புறம் மூன்று வருஷம் கழிச்சு தான் மறுபடியும் இறங்குவோம்.  இதுதான் எங்களுக்குள்ள இருக்குற பிசினஸ் டீலிங் என்று அம்பிகா கூறி முடித்தாள்.

சைலஜா அதே இடத்தில் பொத்தென மயங்கி விழுந்தாள்.

சார் என்று சாந்தி சைலஜாவை பார்த்து விட்டு அலற.

  விட்டுடுங்க நமக்கு கேஸ்ல கவனி கவனம் செலுத்துவோம் அவள்  அப்படியே இருக்கிறது தான் நல்லது என்று சத்யதேவ் மேலும் இந்த ஸ்ரீதேவி நித்யாதேவியோட ஹிஸ்டரி என்ன? நீங்க எதுக்கு கல்யாணம் ஆன பொண்ணுங்களையா சூஸ் பண்றீங்க?  அதுக்கு என்ன காரணம்ன்னு தெரிஞ்சுக்கலாமா? என்று சத்யதேவ் கேட்க..

இந்த பொண்ணுங்க எல்லாம் ரொம்ப அழகானவங்க அதுவும் 25 வயசுல இருக்குற பொண்ணுங்க இந்த மாதிரி பேண்டஸியான லஸ்ட்க்காக நிறைய இருக்காங்க.. கல்யாணமான பொண்ணுங்க கிட்ட தான் பண்ணனும்னு ஒரு கூட்டமே இருக்கு.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

சத்ய தேவ் அவர்களிடம் நீங்க போகலாம் என அனுப்பி வைத்தான். 

அவர்கள் இருவரும் சைலஜாவை பார்க்க நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் போகலாம் என்று உங்க தலைவன் கிட்ட இருந்து நீங்க உயிரை காப்பாத்திக்கோங்க இந்த பொண்ணுங்க யாரையும் உங்ககிட்ட தரமாட்டேன் என்று கூறிய கூற ஆனந்த கிருஷ்ணன் சத்யதேவி பார்த்து எப்படி இருந்தாலும் இந்த பொண்ணுங்கள தேடி அந்த ஆள் வருவான் என்று அங்கிருந்து கிளம்பினார்கள். 

அங்கே மயங்கி கிடந்த சைலாஜாவை பார்த்தான் சத்ய தேவ்.. 

வருவான்.. 

EPISODE 227

என்ன சார் அவ்ளோ சீக்கிரத்தில் இவங்கள விட்டிட்டீங்க? என சாந்தி கேட்க, சத்ய தேவ் கூலாக எழுந்து நின்றவன் அவங்க கிட்ட இருக்க நியூஸ் தான் நமக்கு முக்கியம். அவங்க முக்கியம் இல்ல ஃப்ரீயா விடுங்க. அண்ட் அந்த பொண்ணுங்க ரெண்டு பேரும் என்ன பண்றாங்க? என கேட்டவன். குயிக் அவங்க ஃபேமிலி கிட்ட பேசணும் அடுத்த மூவ் சீக்கிரமா பண்ணனும் என சத்ய தேவ் அங்கும் இங்கும் நடந்தான். 

சரிங்க சார் இப்போவே நான் அதுக்குண்டான பிராசஸ் பண்றேன் என சாந்தி அங்கிருந்து கிளம்பி விட்டாள். மயங்கி விழுந்த நிலையில் அப்படியே இருந்தாள் சைலஜா! சத்ய தேவ் உடனே நிதினுக்கு அழைத்தான். 

என்ன டா? சொல்லு? என நிதின் கேட்க..  என்ன பண்ணிட்டு இருக்க? என கேட்டான் சத்ய தேவ். இப்போ சம்பந்தமே இல்லாம எதுக்கு டா இந்த கேள்வி கேட்கிற? என நிதின் கேள்வியுடன் முடிக்க, கேட்டதுக்கு பதில் சொல்லு! என்ன பண்ணிட்டு இருக்க? 

நானா அந்த ஹரிணி ய எப்படி என் வழிக்கு கொண்டு வரலாம்னு யோய்ச்ச்சிட்டு இருந்தேன். அப்போ தான் நீ பண்ண சாகசம்  எல்லாம் எனக்கு தெரிய வந்துச்சு என்றான் நிதின். 

எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனும்? என சக்தி கேட்க, என்ன பண்ணனும்? என நிதின் தீவிரமாக கேட்டான். அவளை இப்போ இருக்க சூழ்நிலைக்கு என்னால தனியா மேனேஜ் பண்ணி பார்த்துக்க முடியாது. நீ வந்து கூட்டிட்டு போ! அவள் உன் மினிஸ்டர் கெஸ்ட்  ஹவுசில் அங்கே பாதுகாப்பா இருக்கட்டும். 

யாரை பத்தி பேசிட்டு இருக்க? என நிதின் கேட்க, டேய் * வான்னு சொன்னேன். என சத்ய தேவ் போனை வைத்து விட்டான். நிதின் பெரு மூச்சை விட்டு மறுபடியும் முதல்ல இருந்து காதல் பண்ண ஆரம்பிச்சிடுச்சுக போல! என உதட்டில் புன்னகை பூத்தது. சக்தி சொன்னதை போலவே கிளம்பினான் நிதின். 

சத்ய தேவ் அதே சுழல் நாற்காலியில் அமர்ந்து கொண்டே போனை நோண்டி கொண்டிருந்தான். அம்பிகா மற்றும் அனந்த கிரிஷ்னன் இருவரும் அவ்விடத்தை விட்டு ஓடினார்கள். இருவரது உடையிலும் டிராக்கிங் டிவைஸ் பொறுத்த பட்டிருந்தது. 

ஒரு சில நொடியில் கண் முன் ராட்சஸ கன்டெய்னர் அவர்கள் இருவரையும் அடித்து தூக்கி விட்டு சென்றது. இதை சத்ய தேவ் திட்டம் தீட்டி செய்ய வில்லை. அரிச்சந்திராவின் பின்னால் இருக்கும் அந்த ஆள் தான் அவர்களை கொன்றுருக்கிறான். இது எதிர்பார்த்தது தான் என சத்ய தேவ் பெரிதாக அலட்டி கொள்ள வில்லை. 

அந்த நேரம் கதவை திறந்து கொண்டு சாந்தி உள்ளே நுழைந்தாள். மே ஐ கம் இன் சார் என கேட்க, ம்ம் என சைகை காட்டினான். சைலஜா அதே இடத்தில் மயங்கி இருக்க, சாந்தி அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு சக்தியின் அருகில் சென்றவள். சார் அந்த அம்பிகா அண்ட் என ஆரம்பிக்க, ப்ச் சாந்தி உங்க கிட்ட நான் எந்த ஒர்க் கொடுத்தேன்? நீங்க எதை பத்தி என் கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க? என அதட்டலுடன் கேட்டான் சக்தி. 

ச.. சாரி சார்! அது அந்த ரெண்டு பொண்ணுங்க மார்பில் எந்த டாட்டுவும் இல்ல அதுக்கு பதிலா இடது கை சப்பையில் இருக்கு. என்றாள். 

என்னன்னு இருக்கு? 

“தேவி”ன்னு இருக்கு சார் என சாந்தி கூற, அப்படியா சரி அவங்க ஃபேமிலி பத்தி எதுவும் விவரம் தெரிந்ததா? என சக்தி கேட்க.. எல்லா ஸ்டேட் கவர்மென்ட் போலீஸ் ஸ்டேஷனுக்கு ம் fax மூலமா போட்டோஸ் share பண்ணி விசாரிக்க சொல்லி இருக்கேன் சார். என்ற சாந்தி அங்கு படுத்துக் கொண்டிருக்கும் சைலஜாவை பார்த்து விட்டு சார் இந்த பொண்ணு ஃபேமிலி.. என கேட்க, மினிஸ்டர் ரிலேசன் இந்த பொண்ணு இப்போ defence மினிஸ்டர் வராரு நீங்க போங்க அவர் வரட்டும் என கூறி அனுப்பி வைத்தான். 

சாந்தி ஒரு பெரு மூச்சை விட்ட படி அவ்விடத்தை விட்டு நகர போக, டாக்டர் ரெடி பண்ணுங்க சாந்தி இவங்களோட மெமரி எப்படி லாஸ் ஆச்சுன்னு தெரிஞ்சுக்கணும் என்றான் சக்தி. 

Ok சார் என அவள் வெளியே சென்று விட்டாள். அங்கு கிளாசில் இருந்த தண்ணீரை எடுத்து மயக்கத்தில் சுருண்டு கிடந்த சைலஜாவின் முகத்தில் அடித்தான் சக்தி. 

சிவ சிவா! என அவளின் உதடுகள் தந்தி அடித்தது. மெல்ல மயக்கத்தில் இருந்து தெளிந்தாள் சைலஜா.  சைலஜா சதி தேவி எழுந்திருங்க போதும் என அதட்டினான். ஜடம் போல எழுந்து நின்றாள் சைலஜா. 

வாங்க போலாம் என அழைத்துக் கொண்டு சக்தி முன்னே நடக்க… அவனை பின் தொடர்ந்தவாறு நடந்தாள் சைலஜா.  அதன் பின்  சக்தி சென்ற அரையானது அரிச்சந்திரா அடைத்து வைத்திருக்கும் இடத்திறகு சென்றான் 

அங்கே ஹரிச்சந்திரா கைகளை கட்டப்பட்ட ஒரு நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்தான்.  அவன் கண்களில் சைலஜாவை பார்த்ததும் மின்னியது.  பேச வர…

 சைலஜா சக்தியின் பின்னாலேயே அந்த அறைக்குள் நுழைய சக்தி அவளின் புறம் திரும்பியவன். நீங்க சொல்றது சரி தான் நான் ஏற்கனவே உங்க ரிளேசன் எல்லாரையும் ரிலீஸ் பண்ணிட்டேன் அந்த அளவுக்கு எனக்கு பிரேசர் இதுக்கு மேலே ஒரு நிமிஷம் உங்களை இங்கே வச்சிருந்தால் எனக்கு தான் ஆபத்து. நீங்க தாராளமா போகலாம் சார். அரிச்சந்திரா உங்கள நான் விடுதலை பண்றதா முடிவெடுத்துட்டேன் என்று அவனது அருகில் நெருக்கினான்.

சைலஜாவின் முகம் அங்கு கட்டப்பட்டிருந்த அரிச்சந்திராவை பார்த்ததும் உள்ளுக்குள் நடுக்கும் ஏற்பட்டது. தேவி தேவி என்று அழைத்த அரிச்சந்திரா உனக்கு தெரியாது டி அவன் கேட்டவன்.பாரு உன்னோட கண்ணு முன்னாடியே நம்ம ஆத்து பொண்பனாட்டி என ஆரம்பிக்க, நேக்கு வேணாம்! நேக்கு நீ வேணாம் என கத்திய படியே நடுங்கினாள் சைலஜா. 

சக்தி அவனது கைகளை அவிழ்த்து விட்டவன். நான் எவ்ளோ பெரிய தப்பு பண்ணிடேன்னு இப்போ தான் புரியுது. நீங்க பெரிய இடம்ன்னு தெரியாமல் மோதி விட்டேன். நான்…  என்னை மன்னிச்சிடுக தேவி மேடம்! நீங்க உங்களோட கணவரை அழைச்சிண்டு போலாம் என கூறினான் சத்ய தேவ். 

இவ்வளவு நாளும் பாசமாக காதல் ததும்ப தெரிந்த அரி சந்திராவின் பார்வை இப்பொழுது விஷம் போல தோன்ற அவனை பார்க்க பார்க்க அருவருப்பாக வந்தது சைலஜாவுக்கு அவள் வேகமாக சக்தியின் பின்னால் போய் நின்றவள் அவனது பின் சட்டையை பிடித்துக் கொண்டாள். 

மேடம் என்ன பண்றீங்க?  உங்க கணவர் அங்கே உங்களுக்காக வெயிட்டிங் சீக்கிரம் அவரை காக்க வைக்காதீங்க! உங்களை தொட்டு தாலி கட்டின ஆத்துக்காரர்! மிஸ்டர் அரி நீங்க தாராளமா கூட்டிட்டு போலாம் என நகர்ந்து நின்றான். 

சைலஜா அவனது கழுத்தில் இருக்கும் தாலியை ஒரு நொடி கூட தாமதிக்காமல் கழுத்தில் இருந்து கழட்டி வீசி எறிந்தவள். பிளீஸ் சார் என்னை உங்க கையால் கூட கொன்னு பத்து பண்ணிடுங்கோ ஆனால் நான் அந்த பாவி கூட போக மாட்டேன்! என கையெடுத்து கும்பிட்டு அழ ஆரம்பித்தாள் சைலஜா. 

அரியின் முகத்தில் எந்த வித வித்தியாசமும் இல்லை மிகவும் சாதாரணமாக அவளை பார்த்தவன். தேவி சொல்றத கேளு; இந்த போலீஸ் காரங்க ரொம்ப  கெட்டவா என்றான். 

சார் பிளீஸ் எண்ணை காப்பாத்துங்க என சைலஜா அழ, அந்த நேரம் பார்த்து கதவு தட்ட பட்டது. சக்தி அரியை பார்த்து விட்டு எதுக்கு அந்த ரெண்டு பொண்ணுங்க தோல் பட்டையில் போட்டிருக்காங்க. அதுக்கு காரணம் என்னன்னு சொல்லு இப்போவே நீ உன்னோட சைலஜாவை கூட்டிட்டு போலாம். எனக்கு இவள் முக்கியம் இல்ல அந்த ரெண்டு பொண்ணுங்க தான் முக்கியம் என்றான் சக்தி. 

இதை கேட்டதும் சைலஜாவின் முகம் கொஞ்சம் பயத்தை தத்தெடுத்துக் கொண்டு சார் என்னை கொன்னுடுங்கோ ஆனால் என்னை அந்த அயோக்கியன் கிட்ட அனுப்பாதீன்கோ என கதறினாள் சைலஜா. 

இதை என்ன நம்ப சொல்றயா? என கேட்டான் அரி. 

நீ நம்பினால் நம்பு இல்லன்னா போ நான் உண்மையை தான் சொல்றேன் எனக்கு எதுவும் தெரியாது என்றவன். கதவதை திறந்து விட்டான். 

அரி சத்யதேவை உற்றுப் பார்த்தவன் அதை சொல்ல முடியாது என்று கூறிவிட சரி சொன்னா என்ன சொல்லணும்னா என்ன? இப்போ நீ சொல்ல போற என்ற சொன்ன சத்தியதே கையில் பாக்க வேண்டிய எடுத்துக் கொண்டான் டேய் இப்பதானடா பவ்யமா பேசின இப்போ மாத்தி பேசுற என்ற ஹரி எட்சிலை விழுங்கிக் கொண்டு பார்க்க…

 நான் கொஞ்சம் அப்படித்தான் அந்நியன் மாதிரி என்றவன் சீக்கிரம் சொல்லு அந்த டாட்டூ எதுக்கு என்ற மீண்டும் மீண்டும் கேட்டான் சத்திய தேவ்.

அது சத்தியமா எனக்கு தெரியாது.. எனக்கு பொண்ணுங்க யாருன்னு மட்டும் தான் போனில்  சொல்லுவாங்க..  அவங்க கிட்ட வந்து டாட்டூ இருக்கிற விஷயத்தை பத்தி சொல்லுவாங்க.. மத்தபடி வேற எதுவும் எனக்கு தெரியாது என்று அதையே திரும்பத் திரும்ப கூறினான்

 சத்யதேவ் ஒரு பெருமூச்சு விட்டு அப்போ நீ கிளம்பலாம் மூணு எண்றதுக்குள்ள இங்கிருந்து ஓடிடு என்று கூற..

 அதே போல கட்டை அவிழ்த்து விட்ட அவன் இருக்க வேக வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடினான் அரிச்சந்திரா ஓடுவதற்கு முன்னால் சக்தியிடம் நீ இந்த மூணு பொண்ணுங்களையும் முக்கியமாக இவள எவ்வளவு காப்பாற்றினாலும் சரி அவன் வந்து தூக்கிட்டு போக தான் போறோம் என்று கூறிவிட்டு ஓடிவிட்டான். 

 அதன் பின் சக்தி தீவிரமாக யோசித்துக் கொண்டே அமர்ந்திருக்க..   விசும்பும் சத்தம் கேட்டது.  பின்னால் சைலஜா என்று கொண்டு இருந்தாள். 

எதுக்கு இங்கே நின்றுருக்காய் உங்க ஆத்துக்காரர் அந்த பக்கம் ஓடிட்டு இருக்கா.?  போகலையா நீங்க? என்ன மாமி என்று உதட்டை பிதுக்கி lகேட்டான் சத்திய தேவ். 

சைலஜா அழுது கொண்டே நின்றாள்.  அவள் என்ன பதில் சொல்வாள்.  போ போ கிளம்பு நீ சொன்ன மாதிரியே உன்னோட தவா ஆத்துக்காரர் தோப்பினர் அக்கா தங்க எல்லாத்தையும் பார்த்தேன் அவங்க கூட போயிடு கிளம்ப இந்த இடத்தை விட்டு காலி பண்ணு என்று சொல்லும் நேரம் 

 நித்தின் பிரகாஷ் அந்த அறைக்குள் நுழைந்து இருந்தான். 

வருவான். 

EPISODE 228

உன்னோட ஆத்துக்காரர பாக்காம சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிச்சியோன்னோ! இப்போ போய்யேண்டி!  உங்க ஆத்துக்காரர் அந்த பக்கம் போறர்.  அது மட்டுமா??  மூச்சை இழுத்து பிடிச்சிண்டு செத்துருவேன்னு சொன்னீங்க மேடம். உங்க பிராண நாதன் அங்கே ஓடிட்டா!  இப்போ ஏன் இங்கே நின்னுட்டு இருக்க?  போ!!  என்று ஆளுமையாக அந்த டேபிளின் மேல் அமர்ந்தான் சத்திய தேவ். 

எதுக்கு என்னை அந்த சாண்டாள பாவி கூட அனுப்ப பார்க்கிறேள்? அவன் கிட்ட டீலிங் பேசுறேள்? என்றாள் சைலஜா. 

அப்போ என்னையும் கொடி தானே திட்டி இருப்ப? சரி தான! என சக்தி கேட்க 

சைலஜா அழுது கொண்டே நின்றவள். மெதுவான குரலில் “என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமோன்னோ!  அப்போ நான்!..  என்று திக்கி திணறி பேச…

ம்ம்ம் சொல்லிருந்தா அப்படியே என்ன நம்பியிருப்ப? என சத்ய தேவ் அவளை பார்த்தான். 

அவள் அழுது கொண்டே என்னை அவர் கூட அனுப்பாதீங்கோ! பிளீஸ் கெஞ்சி கேட்கிறேன். எனக்கு பயமா இருந்தது உங்களை பார்த்ததும்.  அப்புறம் ஏன் நீங்க இப்படி முகம் லட்சணமா வச்சிருக்காம பயமா வச்சிருந்தா நேக்கு பயம் தான் வரும்  என சைலஜா கேட்க..  

அதுவும் சரி தான் இப்போ உன்னோட ஆத்துக்காரர் கூட போக வேண்டியது தானே! இங்கே எதுக்கு நிக்கிற? அவன் உன்னை நல்லா பார்த்துப்பான். 

அப்படியா? நீங்க ஒன்னும் யோக்கிதன் கிடையாது. எதுக்கு நேக்கு முத்தம் கொடுத்தேள்? நோக்கு தான் கல்யாணம் ஆகி ஆத்துக்காரி இருக்காளே! இப்படி கலிகாலத்தில் நான் யாரை நம்புவேன்? என சைலஜாவின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. 

உன்னை தான் நான் வேணும்னு முத்தம் கொடுக்கலன்னு சொல்றேன அப்புறம் என்ன? என சத்ய தேவ் தலையை கோதி கொண்டே அவளை பார்த்தான். 

“ம்ம் நம்பிட்டென். உங்க நோக்கம் ஃபர்ஸ்ட் தப்பு! என்னை நீங்க என்னல்லாம் பன்னேல்?இப்போ கூட சொல்றேன் நேக்கு உங்களை பார்த்தால் கை கால் எல்லாம் நடுங்குது பாத்தேலா? பாத்தேலா? நெஞ்சு படபடான்னு அடிச்சுக்குது! நேக்கு சுத்தமா பிடிக்கல தான்  ஏன்னனா உங்களை பார்த்தால்நேக்கு பயம் குடிச்ச்சிண்டு வாயெல்லாம் சிகரெட் புகை குமட்டிண்டு வருது அக்மார்க் ரவுடி போல இருக்கேள். என்னை நீங்க கொன்னு போட்டாலும் நேக்கு நிம்மதி தான். ஆனால் கடைசியாக ஒன்னு சொல்லிக்கிறேன்.  அந்த பாவிய விட நீங்க நல்லவன்னு உள் மனது சொல்லுது!” என சைலஜா சொல்லி கொண்டிருக்க, 

சரியாக அந்த நேரம் கதவை திறந்து கொண்டு நிதின் பிரகாஷ் நுழைந்தான். 

படாரென கதவை திறந்து கொண்டு நிதின் உள்ளே நுழையவும் அந்த சத்தத்தை  கேட்டத்தும் பொத்தென  மயங்கி விழுந்தாள் சைலஜா. 

டேய் என்ன டா ஆச்சு? என கேட்டுக் கொண்டே நிதின் வந்து நின்றான். சத்ய தேவ் ஒரு பெரு மூச்சை விட்ட படி, அவளை தூக்கிட்டு போயிடு இந்த கேஸ் முடிக்கிற வரை பத்திரமா பார்த்துக்க அதுக்கு அப்புறம் போய் நான் இன்ப ராகவன் கிட்ட ஒப்படைச்சிடரன் என கூறினான். 

டேய் இப்போவே சொன்னால் அவங்க சந்தோச படுவாங்க. என நிதின் கூற.. 

இப்போ சொன்னால் இன்னும் வேதனை அதிகமாகும். என்னோட ஹீரோ ஃபீல் பண்றத என்னால பார்க்க முடியாது. இவளை எந்த நிலையில் மீட்டெடுத்திருக்கோம்ன்னு நினைச்சா அவரு நொந்து போயிடுவார் அதுக்கு தான் சொல்றேன் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் இவளோட நினைவுகள் எப்படி போச்சுன்னு கண்டு பிடிக்கனும் என்றான் சத்ய தேவ். 

நிஜமாவே உன்னை அவளுக்கு அடையாளம் தெரியலையா? நம்ப முடியல பிரதர் என நிதின் மயங்கி கிடக்கும் அவளை பார்த்து கொண்டே கூறினான். 

சக்தி கம்மிய குரலில் என்னை பிடிக்கலயாம் நான் பொறுக்கி மாதிரி இருக்கேன்னு சொல்றா! இவளோட வாய் கொழுப்பு இன்னும் கூட குறையல.. 

பிரதர் அவள் சொன்னதுல என்ன தப்பிருக்கு எருமை மாடு மாதிரி இருக்க டா! உன்னோட முகத்தை கண்ணாடியில் போய் பாரு நீ பேசுறது கூட தெரியல வாய் அசையுதா? அசையலயான்னு கூட கண்டு பிடிக்க முடியல அப்படி தாடி வளர்ந்திருக்கும். சிப்பி தலை மாதிரி இருக்கு. கண்ணு ரெண்டும் சிவந்து போயிருச்சு. இப்படி படு பயங்கரமா முகத்தை வச்சு கிட்டு வந்து நின்னா இவளுக்கு உன்னை எப்படி பிடிக்கும் சொல்லு என கேட்டான் நிதின். 

சக்தி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அவளுக்கு என்னை பிடிக்க வேணாம். நீ அவளை கூட்டி போ! என் கண்ணு முன்னாடி அவளை நான் பார்க்க விரும்பல என்றான். 

நிஜமாவா? என நிதின் கேட்க.. ஆமா அவளை நான் பார்க்க விரும்பல என கூறினான் சக்தி. 

சரி நான் கூட்டி போறேன் என நிதின் தூக்க வர, டேய் நீ போய் கார ஸ்டார்ட் பண்ணு அவளை தூக்கிண்டு ச்ச தூக்கிட்டு வரேன் என்றான். 

என்னால் தூக்க முடியும் டா நீ விலகி என நிதின் நிற்க, இல்ல அவள் முன்ன மாதிரி இல்ல நல்லா தயிர் சாதம், நெய் பருப்பு சாப்பிட்டு தலுக்கா இருக்கா ரொம்ப வெயிட் அவள். அதனால் நான் தூக்கிட்டு வரேன் என சொன்னவன் போடா என விரட்டி விட்டான். 

“த்தூ” என நிதின் சொல்லி விட்டு வெளியே செல்ல, சக்தி சைலஜாவின் அருகில் அமர்ந்தவன். மெல்ல அவளின் முகத்தை பார்த்தான். அவளின் நெஞ்சில் சதி என்று பச்சை குத்தி இருக்கிறாள். அப்போ நான் ஃபாரின்ல இருந்ததில் இருந்து என்னோட ரூமுக்கு வந்து திருட்டு தனம் பண்ணி மயக்கி கட்டி போட்டு சதி வந்திருக்கேன்! டேய் சக்தி நான் சதி வந்திருக்கேன். நீ என் கிட்ட காதலை சொன்னால் சக்திய நெஞ்சில் சுமப்பேன். இல்லன்னா சதியா நீ வர வரைக்கும் காத்திருந்து உயிரை விட்டுடுவென் டா! சக்தி சீக்கிரம் உன்னை என்னோட இதயத்தில் சுமக்க ஆசை இல்லன்னா சதியா காலம் முழுக்க நான்  செத்து வாழணும் என தினமும் ஒரு அசரீரி கேட்டுக் கொண்டிருந்தது. 

கிட்ட தட்ட 5 வருடங்கள் அவனது தூக்கத்தில் சதி தான் முகம் தெரியாமல் பாடாய் படுத்தி கொண்டிருக்கிறாள். சதி என்னும் பெயரில் முகம் காட்டாது காதலை அள்ளி திகட்ட திகட்ட கொடுத்து கொண்டிருந்தாள்  ரிதம் இரவு நேரத்தில்..கனவில். இதை வீணாவின் மூலமாக தெரிந்து கொண்டான் சக்தி. 

சதி என பச்சை குத்திருந்த இடத்தில்  க் என்னும் எழுத்தை விட்டு விட்டு என்னுடைய வாய் வழி காதலை சொல்ல கேட்க காத்திருந்திருக்கிறாள் ரிதம் சதியாக..  ஆனால் நான் என்ன செய்தேன்? அவளை தவிக்க விட்டு திரிந்தேன். இப்பொழுது என்னை சுமந்த இந்த குட்டி இதயம் தன்னையே தொலைத்து வேறு ஒருத்தியாக சைலஜாவாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். என்னோட காதல் என்ன? காதல்? ஆனால்  என் ரிதம் காதல் என நினைக்கையிலே சக்தியின் கண்கள் கலங்கியது. எத்தனை காதலை சுமந்து இருப்பாள்? என் தேவதை! எனது வாழ்க்கையின் அர்த்தமே இவள் தான் உள்ளம் நிறைய இவள் மட்டுமே இருக்கிறாள். இனி அவள் மனதில் இடம் பிடிப்பதை நினைத்தால்? அய்யோ? மலைப்பாக இருந்தது. 

ஒரு முறை தன்னை பிடிக்காது என சைலஜா சொல்லும் போதே உயிர் கருகும் உணர்வு. ஆனால் என் ரிதம் அவளை எத்தனை முறை உதாசீனம் செய்திருக்கிறேன்? அவளின் உண்மையான காதலை நான் உதாசீனம் செய்த பயன் தான் இப்பொழுது என்னையே மருந்து என் முன் இருக்கிறாள் என் ரிதம் என்னும் சைஜா சதி தேவி. 

” மரணத்தை விட கொடுமையானது மறக்க படுவது” என அந்த மொட்டை கடுதாசியில் எழுதிய வார்த்தைகள் இப்பொழுது உண்மையாகி விட கண்களில் நீர் கொட்டியது சத்ய தேவ்க்கு. 

“விதைய அறுக்க போறேன் ” என சொன்னது அப்போ இது தானா எங்களது குழந்தையை கொன்று விட்டானா? எவன் அவன்? எனது கையில் கிடைத்தால் அவனை துண்டு துண்டாக துடிக்க துடிக்க கொள்வேன் என சங்கல்பம் எடுத்துக் கொண்டான் சத்ய தேவ். 

அழகிய கொழு பொம்மை போல இருக்கும் தன் பாதியானவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சத்ய தேவ். 

முத்தம் கொடுக்க வேண்டும். அந்த முத்தம் அவளுக்கு முன் ஜென்ம கதை சொல்ல வேண்டும். என்னை அவள் உணர வேண்டும். அவளுக்கு இனி நான் கொடுக்கும் ஒவ்வொரு முத்தமும் எனது முழு காதலையும் காட்ட வேண்டும் என தனக்கு தானே சொல்லிக் கொண்டான். 

இது அவளது முறை..  ஏற்று கொள்வாலா?  “சைலஜா சதி தேவி” பார்ப்போம் இனி என்ன நடக்கும் என்று. 

அவளை பூ போல தூக்கி கொண்டான் சக்தி. ஊத்து குழி வெண்ணெய் போல இருக்கா சைலஜா. உதடுகள் இரண்டும் ரோஜா மொட்டு வண்ணத்தில் அழகாக இருக்க.. ஆனால் குறை உள்ளுக்குள் குடைந்தது. வேறு என்னவாக இருக்க முடியும்? கண்ணகுலி தான் கொஞ்சம் சிரித்தாலும் அவளை அள்ளி அணைத்து உயிர் கலக்க துடிக்கும் அவனுக்கு. 

ஆனால் இன்று அது இல்லையே! எல்லாம் வில்லன் வேலை. யார் அவன் காத்திருப்போம். 

என்ன டா முத்தம் கொடுத்தியா என நிதின் கேட்க, அசிங்கமா பேசாத என சக்தி கூறினான். 

அப்புறம் வேற என்ன பண்ண? என நிதின் கேட்க..  மூடிட்டு இரு என்றவன் காரில் படுக்க வைத்தான். 

சரி அப்போ நான் கிளம்புறேன் என நிதின் ஏறி கொள்ள, எழுந்ததும் என்னை பத்தி கேட்டுகிட்டே இருப்பா சொல்லு நான் வந்திடுவேன்னு என்றான் சக்தி. 

கண்டிப்பா என நிதின் அங்கிருந்து நகர்ந்தான். 

நிதின் சென்றதும் சத்ய தேவ் முகத்தில் கடுமை பரவ, சாந்தி டாக்டர் வந்தாச்சா? என கேட்டுக் கொண்டே நுழைந்தான். 

புலன்விசாரணை ஆரம்பம் ஆக போகிறது. அடுத்து என்ன நடக்கும்? யார் அந்த வில்லன். 

இந்த மொட்டை கடுதாசியில் வந்த வரிகள் அனைத்தும் ரிதம் க்கு மட்டுமா? அது தான் இல்ல ருத்ரனுக்கு இன்னொரு பங்கு காத்திருக்கு. 

இப்போ கொஞ்ச நாளைக்கு வில்லன் வர மாட்டான்..வரும்போது அதிரடியாக இருக்க போகுது பார்ப்போம் 

வருவான். 

EPISODE 229

நித்தின் மயங்கி இருந்த சைலஜாவை அதே நிலையில் எங்க மினிஸ்டர் கெஸ்ட் ஹவுஸ் அழைத்து வந்திருந்தான். அவளை ஒரு அறையில் படுக்க வைத்து விட்டு அவன் அந்த இடத்தில் இருந்து நகர்ந்தான். நினைவு திரும்பியதும் வெடுக்கென முழித்துப் பார்த்தவள் அந்த இடத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டேன் உள்ளுக்குள் நடுக்கத்துடன் நான் இப்போ எங்க இருக்கேன்?  என்று பதட்டத்துடன் இங்கே சத்தியதேவ் சண்டாளனும் அப்படி இல்லை என்றால் அரிச்சந்திரா க்ராதகன் என இருவரும் எங்கேயாவது இருக்கிறார்களா?  என்று சுற்றிலும் தேடிப் பார்த்தாள். 

அப்போ 420 லிஸ்ட்ல முதல் இடத்துல சத்தியதேவ தான் வச்சிருக்கால அவ விலங்கின மாதிரி தான்..

அவர்கள் கண்ணில் தென்படுவதாக இல்லை.  உள்ளுக்குள் ஒரு நிம்மதி பரவினாலும், நான் எப்படி இங்கே வந்தேன் இது யாரோட வீடு பகவானே என்று நினைத்துக் கொண்டு எழுந்து வெளியே வந்தாள். 

அங்கே சைலஜாவின் கண் முன் வாட்டசாட்டமாக நித்தின் பிரகாஷ் இருந்தான்.  யார் இவா?  அச்சச்சோ!! என்று உள்ளுக்குள் நடுக்கம் பரவ…  யதார்த்தமாக நித்தின் திரும்பவும் நின்று கொண்டிருக்கும் சைலஜாவை பார்த்தான்.உடனே புன்னகையுடன் ரிதம் என அழைத்துக் கொண்டே அருகில் வந்தான். 

என்னோட பேரு சைலஜா சைலஜா சதி தேவி! இப்போ நீங்க என்ன சொல்லி கூப்பிட்டேள்? நீங்க யாரு அந்த ரவுடி போலீஸ் கூட உங்கள நான் பெருமாள் கோவில்ல பார்த்தேனே?  உங்களுக்கும் அவாளுக்கும் என்ன தப்பா எடுத்துக்காதீங்கோ  நேக்கு  பயமா இருக்கு என்று அவள் பின்னால் நகர…

உடனே நித்தின் பிரகாஷ் புன்னகையுடன் சரி சைலஜா நான் அந்த ரவுடி போலீஸ் மாதிரி இல்லம்மா நான் ஒரு சாதாரண ஆள் தான் உங்களில் ஒருவன் தான் அதனால நீங்க என்ன நினைச்சு கவலைப்பட வேண்டாம் இங்க நீங்க பத்திரமா இருக்கலாம் வீட்டை சுத்தி போலீஸ்காவல் எப்பவும் இருந்துகிட்டே இருக்கும் யாரும் உங்களை இங்கிருந்து கடத்திட்டு போக மாட்டாங்க அதனால நீங்க எந்த கவலையும் பட தேவையில்லை அதனாலதான் இங்க கூட்டிட்டு வந்து இருக்கேன் என்று கூறினான். 

இதைக் கேட்டதும் அவளது முகத்தில் நிம்மதி பரவ ஆனால் அலைப்புரும் கண்களில் அப்போ அந்த போலீஸ்காரன் இங்க வர மாட்டோன் தானே?  என்று பதட்டத்துடன் கேட்டாள்.

நித்தின் அவளை கொஞ்சம் அதிர்ச்சி நிறைந்த முகத்துடன் பார்த்தான். சத்தி  சொன்னது சரியே!  அப்போ சத்தி  இவ கண்ணுக்கு பொறுக்கி மாதிரி தெரிகிறானே?  பொறுக்கி எப்படி புருஷனா மாறுவது? ஒன்னும் புரியலையே!  அது அவன் பாடு. இதுக முதல்ல இருந்து ஆரம்பிச்சு அப்பப்பா எங்க கொண்டு வந்து முடிக்கும்? இன்னும் இதை எத்தனை வருஷம் எடுத்துக்குங்க இரண்டும் என்று யோசித்துக்கொண்டு அப்படியே நிற்க சொல்லுங்க ப்ளீஸ் என்று கேட்டாள் சைலஜாவாகிய ரிதம். 

நித்தின் ஒரு பெரும் மூச்சை விட்டு அவன் இங்கு வரமாட்டான் நீ இங்க பாதுகாப்பா இருக்கலாம் யாரும் உன்னை தொந்தரவு பண்ண மாட்டாங்க சரியா என்று சொல்ல ரொம்ப நிம்மதி நீங்க பூஜை அறை இருக்கா என்று கேட்டால் அதுவா எனக்கு தெரியலையே என்று யோசித்தவன். 

சாமி கும்பிடனுமா என்று கேட்டான்..இதெல்லாம் நித்துக்கு ஆச்சரியமாக இருந்தது.. ரிதம் என்பவள் நாத்திகவாதி அவள் எந்த கடவுளையும் பிரார்த்திக்க மாட்டாள்.  ஆனால் இவள் சைவம் கூடவே சாத்வீகம் பேசுறாலே! சாமி கும்பிடறா! 

நான் உங்களுக்காக சாமி போட்டோ வாங்கிட்டு வரேன் இப்போ நீங்க ரெஸ்ட் எடுக்க முடியுமா என்று நித்தின் கேட்க என் பேரு சைலஜா என்று அவள் மறுபடியும் கூறினார் ஆமா மறந்து போயிட்டேன் ஏதோ ஒரு ஞாபகத்துல சொல்லிட்டேன்! உள்ள போங்க டிவி பாருங்க… என்றான். 

சைலஜா அவனிடம் தப்பா நினைச்சுகாதீங்கோ கிச்சன் எங்க இருக்கு? 

உங்களுக்கு என்ன சாப்பிட வேண்டும்? நைட்டுக்கு?  என்று நித்தின் கேட்க…

நானே சமைச்சுக்கலாமா எனக்கு அடுத்தவா சமைச்சா அதுல திருப்தி இருக்காது.

நீங்களே சமைப்பீங்களா? உங்களுக்கு சமைக்க தெரியுமா என்று நித்தின் யோசனையுடன் சந்தேகமாக கேட்க,

நான் நல்லா சமைப்பேன் உருண்டை குழம்பு கடலைக்கறி வெண்பொங்கல் வத்த குழம்பு  சொஞ்சி, திரட்டு பால், பருப்பு உசுலி, என லிஸ்ட் போட்டால் இதெல்லாம் தின்பாங்களா?  ஐயையோ இவ வேற ஒருத்தியா இருக்காலே என்று நினைத்தவன். 

 சரி சரி போய் உருண்டை குழம்பு கொஞ்ச நேரம் கழிச்சு பண்ணுங்க இப்போதைக்கு ரெஸ்ட் எடுக்குறீங்களா உங்களுக்கு ஃபில்டர் காபி வேணுமா நான் போட்டு தரவா என்று சைலஜா கேட்க சரி போய் போடுங்க என்று அனுப்பி விட்டான் நிதின். 

இங்கே சத்யதேவ் மருத்துவருக்காக காத்துக் கொண்டிருந்தவனுக்கு சைலஜாவின் நினைவு வர உடனே நித்தினுக்கு அழைத்தான். 

 என்னடா

 அது அவ என்ன பண்றா என்ன பத்தி கேட்டாளா?  ரொம்ப தொல்லை பண்ணுவா!  என்று சக்தி சொல்ல..

நித்தின் மனதில் அய்யய்யோ இவன் வேற ஃபுல் காதல் மோட்ல இருக்கானே!  அவ வேற இவன் வரலனா ரொம்ப நிம்மதிங்குற அளவில பேசிட்டு போறா! இப்போ நான் இவன்கிட்ட என்னத்த சொல்றது?  என்று யோசித்தான்.

டேய் உன்ன தான் கேட்டுட்டு இருக்கேன் காது கேட்கலையா?  அவ என்ன பத்தி கேட்டாளா? மயக்கத்தில் இருந்து  எந்திருச்சாளா?  என்ன பண்ணிட்டு இருக்கா?  என்று சத்தி  அடுக்கடுக்காக கேள்விகளை கேட்க 

என்னமோ சொன்ன?  அவகிட்ட இருந்து நான் தூரமா இருக்கணும்.  அவள பத்தி நான் இனி நினைக்கவே மாட்டேன்.  அவன் என் கண்ணுல படவே கூடாது…. ம்ம் படவே வேண்டாம்.  அப்படின்னு டயலாக் அடிச்ச?  இப்ப என்ன ம… என்று நிறுத்தி  எதுக்கு பிரதர் கேட்கிறீங்க என்று மரியாதையாக பேசினான் நித்தின் பிரகாஷ். 

சக்தி அதில் கடுப்பாகி மூடிட்டு சொல்லு கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு தேவையில்லாம பேசாத என்று கூற நெத்தின் கொஞ்சம் தாங்கிக் கொண்டே எந்திரிச்சதும் உன்ன பத்தி தான் கேட்டா என்று நித்தின் கூறினான் அதில் சக்தியின் மனதில் கொஞ்சம் தென்றல் வீச தன் செய்தது. 

என்ன கேட்டா என்று சக்தியின் குரல் கொஞ்சம் மாற…

சீ இப்படி ரொமான்டிக்கா குரலை கம்மி   பேசாத அசிங்கமா இருக்கு கேட்கவே நாராசமா இருக்கு.  தயவு செஞ்சு வச்சுடு என்று நித்தின் கூற.. 

 டேய் என்ன கேட்டா என்று அதட்டலுடன் சத்திய தேவ் கேட்டான். 

 அதுவா அது வந்து என்று தயங்கிக் கொண்டு என்ன என்னவோ பேசினான் நித்தின்

டேய் என்ன ஏதோ உளற மாதிரி இருக்கு அவன் நிஜமாகவே கேட்டாளா இல்ல நீயா பில்ட் அப் பண்ணிட்டு இருக்கியா என்று கவலை தோய்ந்த குரலில் கேட்டான் சத்திய தேவ். 

இப்போ நான் சொல்லியே ஆகணுமா என்று நித்தின் கேட்க சத்திய தேவ்க்கு விளங்கிவிட்டது.  அவள் இடுக்கு மடக்காக எதையோ கேட்டிருக்கிறாள.  அதனால்தான் நித்தின் பம்பிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தவன்.

சொல்லு அவ என்ன சொன்னான்னு ஒரு வார்த்தை விடாம சொல்ற.  அப்படி நீ சொன்னனா உன்ன நா ஹரிணி கிட்ட சேர்த்து வைக்க ஹெல்ப் பண்ணுவேன். 

அப்படியா என்று எலும்பு துண்டை பார்த்த நாயைப் போல உள்ளுக்குள் குதுகளித்தான் நித்தின் பிரகாஷ்..

சொல்லு என்ன சொன்னா? என்று சத்தி  கொஞ்சம் அதட்டலுடன் கேட்க..

சொன்னா நீ கொஞ்சம் ஃபீல் பண்ணுவ!!  பரவாயில்லையா!!  சரி விடு சொல்றேன்.. உன் பேர எந்திரிச்ச உடனே… I mean உன்ன பத்தி தான் கேட்டா.  கூடவே அவளோட முன்னாள் புருஷன்…

டேய் என்று சக்தி அதட்ட.. 

டேய்  உன் கண்ணு முன்னாடி தான  வந்து தாலி கட்டினான். சரி அத விடு அவன பத்தி கேட்டா! 

என்ன?  அப்போ அவ மனசுல நான் இல்லையா? 

அய்யய்யோ தப்பா நினைச்சுக்காத நீதான் அவளோட மனசுல ஆழமாக பதிஞ்சிருக்க.. 

அப்படியா என்று சக்தி கொஞ்சம் சந்தோஷமாக கேட்க..

தயவு செஞ்சு என்னை தப்பா நினைக்காத பிரதர்.  உன்னை அவள்  420 லிஸ்ட்ல வச்சிருக்கா.  எந்திரிச்சதும் அந்த சண்டாளன் போலீஸ்காரன் இருக்கானா அப்படின்னு கேட்டா!  என்று நித்தின் கூற..

அந்த பக்கம் அமைதியை நிலவியது..உள்ளம் கனத்து போவதாக உணர்ந்தான் சத்திய தேவ். 

டேய் லைன்ல இருக்கியா என்று நித்தின் கேட்க வேற என்ன சொன்னான் என்று சக்தியின் குரல் கொஞ்சம் மாறி இருந்தது. 

அய்யோ இதுங்க நடுவுல நான் இப்படி மாட்டிக்கிட்டேனே என்று நினைத்தவன் வேற ஒன்னும் சொல்லல என்று கூறினான் . 

டேய் ஒழுங்கா சொல்லு வேற என்ன சொன்னா?  உன்கிட்ட அவ நல்லா பேசுறளா?   உன்னை பார்த்து பயப்படவில்லையா? என்று கேட்டேன்  அந்த சந்தேகமும் பரவியது. 

அது என்னையும் உன்னையும் சேர்த்து பார்த்து இருக்கா!  அதனால என்னையும் போர்ஜெரி லிஸ்ட்ல வச்சிருப்பா போல!  ஆனா உன் அளவுக்கு இல்ல. வந்து நல்லவிதமா தான் பேசினா அதுக்கப்புறம் இப்போ உள்ள போய்ட்டா ஆனா நீ அவ மனசுல கொஞ்சம் 420 போல இருக்க..  இதை எப்படிடா மாத்த போற?  இன்னும் ஒரு யுகத்தை எடுத்து ட்ரை பண்ணுவியா?  சத்தியமா ரொம்ப கஷ்டமா இருக்குது. என்னமோ பண்ண ஹரிணிக்கெல்லாம் இப்படி ஒரு நிலைமை வரல என்று வாய்மொழியாக நிம்மதி பெரு மூச்சை விட்டான் நித்தின். 

அவன் பேச பேசவே அந்த போன் கால் கட் ஆகி இருந்தது. 

நிதின்   ஒரு பெரும் மூச்சை விட்டு சமையல் அறயில் வேலை செய்து கொண்டிருக்கும் ரிதமை பார்த்தான். 

 சரி இவங்க என்னமோ பண்ணட்டும்.  சேர்ந்து இருந்தால் சரி அது அவனோட பாடு மாத்திக்கலாம் என்று நினைத்தான்.

இங்கே சத்தியதேவ் மனம் இன்னும் கனத்து போயிருந்தது அந்த நேரம் பார்த்து மருத்துவர் வர  அவன் வேலையில் தன்னை தானே புகுத்திக் கொண்டு கொஞ்சம் பிஸியாக சுற்றினான்.

டாக்டர் இந்த ரெண்டு பொண்ணுங்க அவங்களையே  மொத்தமா மறந்து இருக்காங்க!  எப்படி அது மெடிக்கல்லி பாஸிபிளா? சடனா சேஞ்ச் வருமா? ஆனா 3 பொண்ணுங்க மொத்தமா அவங்களோட நினைவுகளை இழந்து இருக்காங்க.  அது ரொம்ப மிராக்கல்லா இருக்கு இந்த மாதிரி கொண்டு வர முடியுமா?  என்று கேட்டான் சத்திய தேவ்

டாக்டர் நித்யா தேவி மற்றும் ஸ்ரீதேவி இருவரையும் பார்த்தவர் அது இவங்களோட நினைவுகள் எப்படி அழிஞ்சிருக்கு? எதுவும்  மெடிசன் கொடுத்து பண்ணி இருக்காங்களா?  இல்ல ஏதாவது ஷாக் அந்த மாதிரி நம்ம செக் பண்ணி பாக்கணும்.  அதுக்கு நிறைய டெஸ்ட் இருக்கு அத முடிச்சிட்டு சைகாட்றிக்கா சோதனை பண்ணி பார்த்தா தான் சார் தெரியும்.. அத பண்ணுனா ரிசல்ட் என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.  கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று கூறியவர் அடுத்தடுத்து நிறைய சோதனைகளை மேற்கொண்டு அதில் ரிப்போர்ட்டையும் செக் செய்து பார்த்தார். 

அதன் பின் அவர்களை ஆழ்நிலை தூக்கத்திற்கு உட்படுத்தி சோதனை செய்தார். ஆனால் அனைத்து பதில்களும் ஜீரோ நெகட்டிவ் என்றுதான் வந்ததே தவிர ஒரு இடத்திலும் கூட பாசிட்டிவாக வரவில்லை..

இப்பொழுது டாக்டருக்கு ஒன்றுமே புரியவில்லை. அடுத்த கட்டத்துக்கு சென்று மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என அவரது வேலையில் பிஸியாக இருந்தார்.

ஆனால் இங்கே திரும்பத் திரும்ப சத்தியதேவின் மண்டைக்குள் மரணத்தை விட கொடுமையானது மறப்பது என்று இந்த வாசகமே ஓடிக் கொண்டிருக்க…  டாக்டரின் அருகில் வந்தவன் நம்மள வேற ஒரு ஆளா உணர வைக்க முடியுமா?  நம்மள மொத்தமா மறக்க வைக்க முடியுமா? டாக்டர் என்று கேட்க.. 

பாசிபில் இருக்கு  கோமாவில் இருக்கும் போது இல்லனா ஒருத்தங்க ஆழ்நிலை தூக்கத்துல வச்சு… நீங்க இன்னொரு ஆளுன்னு மூளை பதிவில இருக்க எல்லா நினைவுகளையும் அழிச்சிட்டு வேற ஒருத்தவங்களா நம்ம வைக்கிற முறை இது.  ஆனா இதுக்கு வருஷக்கணத்துக்கு எடுத்துக்கும்.  குறிப்பிட்டு சொல்லப்போனால் இரண்டு வருஷம் இல்லனா மூணு வருஷம் என்று கூறினார் டாக்டர். 

இதை கேட்டதும்.  சத்திய தேவ் அப்படியே அதிர்ச்சியுடன் நின்றான். 

சத்ய தேவ் transformation நாளை 

வருவான். 

EPISODE 230

மருத்துவர் சொன்ன விசயத்தை கேட்டதும் சத்ய தேவ் நம்ப முடியாத தோரணையில் பார்த்தான். எப்படி? இது எப்படி? என உள்ளுக்குள் ஆயிரம் கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தது. 

இந்த ரெண்டு பொண்ணுங்க நினைவுகளை கரன்ட் சாக் வச்சு சோதனை செஞ்சு பார்க்கலாம். என அவர் நகர போக, டாக்டர் அவங்களுக்கு நியாபகம் திரும்ப வரவே வராதா? என சக்தி கனத்த இதயத்துடன் கேட்டான். 

மருத்துவர் ஒரு பெரு மூச்சை விட்ட படி அது டிரீட் பண்ணா தான் சார் தெரியும். இது ரெண்டு வகையா இருக்கு கிட்ட தட்ட அம்னீஷியா மாதிரி அந்த லெவல்ல இருக்கவங்களுக்கு நம்ம கொஞ்சம் கொஞ்சமா நினைவுகளை நியாபக படுத்தி கிட்ட தட்ட ஒரு வருடத்தில் தீவிரமாக முயற்சி பண்ணா நினைவுகள் வந்திடும் என்றார். 

அப்போ இன்னொன்னு? என சக்தி கேட்க… மருத்துவர் தயங்கி விட்டு சி மிஸ்டர் இது பப்ளிக்கா சொல்ல கூடாது. சொல்றேன் வாங்க என அழைத்து வந்த மருத்துவர். மூளையின் படத்தை வரைந்து சைக்காட்ரிக் டேர்ம் தான் இது. நம்ம மூலையில் இரண்டு வகையான நினைவுகள் இருக்கும் ஒன்னு குறுகிய கால நினைவுகள் நீண்ட கால் நினைவுகள், அதே போல subconscious memery or mindன்னு ஒன்னு இருக்கு. ஒருத்தங்கள ஆழ் நிலை தூக்கத்துக்கு உட்படுத்தி பிறப்பில் இருந்து இந்த நிமிடம் வரைக்கும் படி படியா எல்லாத்தையும் சொல்லி மாற்றும் முறை.. மோஸ்லி இதை யாரும் பன்றதில்லை இதுல நிறைய ஆள்மாறாட்டம், ஏமாற்றம் திருட்டு நடக்குது. சட்டத்துக்கு புறம்பான ஆராய்ச்சி இது. ஆனால் மெடிக்கல் டேர்ம்ல குற்ற வாளிகள் கிட்ட இருந்து உண்மையை வர வைக்க இதை நாங்க பண்ணுவோம் என்றார். 

அப்போ இதுக்கு அர்த்தம் என்ன? என சத்ய தேவ் கேட்க..

உங்க கிட்ட நீங்க வேற ஒரு ஆள்ன்னு நம்ப வச்சு அவங்கள மாற்றி இருந்தால் மீட்பது என நிறுத்தினார். 

கஷ்டம் அப்படி தானே டாக்டர். 

அது தெரியல சத்ய தேவ். முதலில் செக் பண்ணா தான் தெரியும் என்றார். 

அப்போ அந்த நினைவுகளை நம்ம நியாபக படுத்த முயற்சி செஞ்சா என்ன நடக்கும்? அவங்களுக்கு நியாபகம் வர வாய்ப்பு இருக்கா? என கேட்டான் சக்தி. 

அம்னீஷியா மாதிரி இருந்தால் கொஞ்சம் கொஞ்சமா எதுவும் நியாபகம் இருக்கும்.. ஆனால் அதை விட்டு வேற எதுவும் பண்ணி இருந்தால் என இழுத்தார் டாக்டர். 

சொல்லுங்க டாக்டர் என சத்ய தேவ் அவரின் அருகில் சென்றான். 

“நியாபகம் வர வைக்க முயற்சி செஞ்சா அவங்க சீரியஸ் கண்டிசன்கு போயிடுவாங்க…” 

புரியல 

சார் ஒபனா சொல்ல போனால் பூமியில் பிறந்த புது மனிதர்கள் மாதிரி. அதனால் அவங்களுக்கு எதுவும் ஞாபகத்துல இருக்காது நம்ம ஞாபகத்துல வர வைக்க முயற்சி பண்ணலாம் அதுக்கு ப்ராசஸ் இருக்கு ஆனா அது ரொம்ப கஷ்டமானது ரொம்ப கஷ்டத்தை தாங்க வேண்டி இருக்கும் என்று கூறி முடித்தார் மருத்துவர். 

இதைக் கேட்டதும் சத்திய தேவுனுக்கு என்ன சொல்வது என்று ஒன்றும் புரியவில்லை.  அதைவிட இதயத்தை ஏதோ ஒன்று தாக்கியது போல உணர்ந்தான்.  “பூமியில் பிறந்த புது குழந்தை மாதிரியா? அப்போ எல்லாமே மறந்திருக்குமா?? எல்லாமே???  அவளுக்கு என்ன ஞாபகம் இருக்காது!  எப்பவுமே இருக்காது! என் மேல அவ வச்சிருந்த காதல்…  அது மொத்தமா அழிஞ்சு போயிருக்கும். என்று உதட்டை கடித்துக் கொண்டான் கண்கள் கலங்கி போனது. 

சத்தியதேவ் அப்படியே ஒரு பக்கம் அமர்ந்தான் இப்பொழுது பார்த்த சைலஜா சதி தேவியின் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக அவனது மனதிலும் எண்ணத்திலும் பரவ தொடங்கியது.  முதன்முதலாக அந்த  ஏடிஎம் வாசலில் அவளைப் பார்த்தது அவளது மருண்ட விழிகள் படபடப்புடன் அடித்துக்கொண்டது. ஓரிடத்தில் கூட நான் ஞாபகம் வரவே மாட்டேனா? என்று நினைக்க நினைக்க சத்திய தேவுக்கு ஏதோ உள்ளுக்குள் ரணமாக உணர்ந்தான்.  இப்பொழுது செத்துவிடலாம் போல தோன்றியது.. அந்த அளவுக்கு பழிவாங்க எவன் இருக்கிறான்?  யார் இதற்கெல்லாம் காரணம்?  என்று இன்னொரு பக்கம் அவனது தலை சூடாக ஆரம்பித்தது. ” இப்படியே விடக்கூடாது கண்டுபிடிக்கிறேன் கண்டுபிடிச்சு மொத்தமா கருவறுக்கிறேன்” என்று சபதம் போட்டுக் கொண்டான். 

நித்யா தேவி மற்றும் ஸ்ரீதேவி இருவரையும் பரிசோதித்து விட்டு வந்த டாக்டர் சத்திய தேவிடம் இவர்களுக்கு டெம்பரவரி மெமரி லாஸ் தான்.  ஷாக் ட்ரீட்ல எல்லாம் தெரிஞ்சுடுச்சு என்று கூறினார். 

என்ன சொல்றீங்க?  அப்போ இவங்களுக்கு எல்லாம் ஞாபகம் இருக்கா என்று கேட்டான். 

ஆமா இவங்களுக்கு வந்து எல்லாமே ஞாபகம் இருக்கு இவங்களோட நினைவுகள் குறுகிய கால நினைவுகள் மட்டும் தான் அழிச்சிருக்காங்க.  இவங்களோட குடும்பம்,  இவங்களுக்கு கல்யாணம் ஆனது,  எல்லாமே  ஞாபகம் இருக்கு மொத்தத்துல சொல்லப்போனா இவங்க ரெண்டு பேரும் சேஃப் என்று கூறினார். 

அப்போ இன்னொரு பொண்ணும் இருக்கா அவளையும் செக் பண்ணிடுங்க என்று கூற தாராளமா ஒரு பிரச்சனையும் இல்ல கண்டிப்பா என்று கூறினார் டாக்டர் ஓகே என்று அவரது வேலையில் ஈடுபட்டார். 

சத்யதேவ் டாக்டரை மினிஸ்டர் கெஸ்ட் ஹவுஸ்க்கு அழைத்துச் சென்றான் அவர் அங்கு செல்லும்போது பரிசோதிக்க தேவையான அனைத்து உபகரணங்களையும் எடுத்து சென்றிருந்தார். 

என்ன பண்ணிட்டு இருக்கா தூங்கிட்டு தானே இருக்கா என்று சத்தி கேட்க…

ஆமா இப்பதான் ஆழ்ந்த தூக்கத்துக்கு போனா டாக்டர் கொடுத்த அந்த தூக்க மாத்திரையை அவளோட சாப்பாட்டில் நான் கலந்துட்டேன்.  இப்போ நீங்க வரலாம் என்று நித்தின் கூற,  அவர்கள் சரியாக சென்றார்கள். 

சைலஜாவாக மாறி இருக்கும் ரிதமின் தலையில் ஹெல்மெட் பொருத்தப்பட்டு நிறைய டியூப்புகள் மற்றும் வயர்கள் ஒரு கம்ப்யூட்டர் டிஸ்ப்ளேவில் இணைக்கப்பட்டிருந்தது.  கொஞ்சம் கொஞ்சமாக ஷாக் வைக்கப்பட்டது.  நித்தின் அதை பார்க்க முடியாமல் வெளியே சென்று விட்டான் சத்தியத்தை ஒரு ஓரமாக நின்று என்ன நடக்கிறது என்று பார்த்தான். 

டாக்டர் ரிதமிடம் மெதுவாக உங்களோட ஹாய் ரிதம் நான் மித்ரன் அங்கில் பேசுறேன். நீங்க குட்டி பொண்ணா இருக்கும் போது கனடாவில் மிதுன் கூட வளந்தீங்க?  சரிதானே?  என்று மெதுவாக கேட்டார்.

டாக்டர் உடனே ரிதமின் முகத்தில் கொஞ்சம் சுருக்கம் ஏற்பட்டு நான் ரிதம் இல்ல.  என்னோட பேரு சைலஜா சத்யதேவி மித்துன் யாரு? நான் அறி  நித்யா ஸ்ரீதேவி அவா கூட தான் நான் விளையாண்டேன்.  நீங்க யாரு மித்ரன் அங்கிளா?  எனக்கு அப்படி யாரையுமே தெரியாதே என்று கூறினாள் ரிதம். 

டாக்டர் அடுத்ததாக சரி உங்களுக்கு ரொம்ப பிடிச்ச சாப்பாடு எது எனக்கு திருட்டு பல் ரொம்ப பிடிக்கும்? என்ன புன்னகையுடன் அவளது முகம் மாறியது கண்கள் மென்மையாக மூடப்பட்டிருந்தது. 

உடனே டாக்டர் எனக்கு மட்டன் பிரியாணி பிடிக்கும் உங்களுக்கு பிடிக்குமா தலப்பாக்கட்டு பிரியாணி என்று டாக்டர் ஆரம்பிக்க அபச்சாரம் அபச்சாரம்  நான் அசைவம் சாப்பிட மாட்டேன்.  இப்பொழுது நெற்றி சுருங்கி போனது. 

சரி அப்புறம் நீங்க என்ன படிச்சு இருக்கீங்க உங்க அம்மா அப்பா உங்களை எப்படி பார்த்துக்கிட்டாங்க?  உங்களுக்கு சத்யதேவன யாராவது நினைவில் இருக்கா?  என்று கேட்க…

சத்தியதேவ், சத்யதேவ் யாரு? எனக்கு  தெரியல..நான் பசங்க கூட பேசமாட்டேன் என்னோட தோப்பனார் திட்டுவா அதைவிட அரிக்கு பிடிக்காது என்று கூறினாள் ரிதம். 

இன்னும் எவ்வளவு கொடுமையை தாங்க வேண்டும் என்பது போல் இருந்தது சத்தியதேவுக்கு. அரிய பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?  அவர உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா?  என்று கேட்டார் சைக்காட்ரிஸ்ட். மருத்துவர். 

ஹரி சின்ன வயசுல இருந்து என் கூட வளர்ந்தவன் அவன எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா அப்பப்போ அவன் சரி இருக்காது என்று முகம் சுருங்கியது. 

என்ன பண்ணுவான்? என்று மெதுவாக மருத்துவர் கேட்க.. 

என் பக்கத்துல வருவான் நான் அம்மாகிட்ட போய் சொல்லுவேன். அப்புறம் என்ன நடக்கும் என்று மருத்துவர் கேட்க.. 

என்ன கட்டிப்பிடிச்சுபான். முத்தம் கொடுப்பான்.  எனக்கு சுத்தமா பிடிக்காது என்று கூறினாள்.  ரிதம் உடனே வேகமாக வந்த சத்தி. 

அப்புறம் எதுக்கு அவனை கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்ட என்று கேட்க… 

டாக்டர் அவரை முறைத்து போங்க சக்தி  இது தப்பு!! அவங்களுக்கு ஏதாவது ஆயிடும் இப்படி  கேட்கக்கூடாது.  நடுவுல டிஸ்டர்ப் பண்ண கூடாது.  என்று தடுத்து….

நிறுத்த ரிதமின் முகம் பதட்டத்தில்  அப்படியே சுருங்கி போனது. அவளது முகத்தில் மாற்றம் தெரிய…  சாரி காம் டவுன் அமைதியா இருங்க இப்ப நீங்க தூங்கிட்டு இருக்கீங்க.  இப்போ உங்களுக்கு வயசு 15 ஆகுது ஸ்கூல் படிச்சிட்டு இருக்கீங்க எந்த ஸ்கூல்ல படிச்சீங்க என்று மருத்துவர் கேட்க நானா நான் ஸ்ரீதேவி அக்கா கூட திருச்சில சாஸ்தா மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல படிச்சேன் என்று கூறினாள்.  கண்களை மூடிக்கொண்டே. ஆழ்நிலை தூக்கத்தில். 

உங்க அப்பா பேர் என்ன என்னோட அப்பா பேரு ஆனந்த கிருஷ்ணன் அப்போ அம்மா பேரு அம்பிகா உங்க பாட்டி பேரு தாத்தா பேரு இன்று வரிசையாக சைக்காட்ரிஸ்ட் மருத்துவர் கேட்க அம்புஜம் பாட்டி என்றாள் ரிதம். 

உங்களோட பேரு நான் தன் ஏற்கனவே சொன்னேனே என்று அவரது முகம் சுருங்க மறுபடியும் சொல்லுங்களேன் நான் உங்க அப்பா அனந்தகிருஷ்ணனோட நெருங்கின பிரண்ட் என்று கூறினார் சைக்காடிஸ்ட் மருத்துவர். 

 என்னோட பேரு சைலஜா என செல்லமா தேவின்னு கூப்பிடுவா.  சில பேரு சைலஜா அப்படின்னு கூப்பிடுவா.  சில பேரு ஷைலுன்னு கூப்பிடுவா.  என்னையும் எங்க அக்காகளையும் சேர்த்து எங்கள தேவினு கூப்பிடுவாங்க. 

இதற்கு மேல் இந்த கொடுமைகளை எல்லாம் சத்திய தேவனுக்கு பார்க்க சுத்தமாக பிடிக்கவில்லை.  வேகமாக வெளியே சென்றுவிட்டான். அவனது கண்கள் கலங்கி இருந்தது என்னோட ரிதம் கிடையாது வேற ஒருத்தி சைலஜா சைலஜாவா வாழ்ந்துட்டு இருக்கா. 

இப்படியே இரண்டு மணி நேரம் கேள்விகள் பதில்கள் என மாறி மாறி  கேட்டுக் கொண்டிருந்தார்  மருத்துவர். அதன்பின் வெளியே வந்தார். 

நித்தின் பிரகாஷ் சத்யதேவிடம்  டாக்டர் வந்தாச்சு என்று கூறினான் கண்களை உதட்டை கடித்து துக்கத்தை அடக்கிய சத்யதேவ் டாக்டரை பார்த்து எதுவும் நினைவு வந்துச்சா?  என்று கேட்டான். 

இல்ல அவங்க இப்போ சைலஜா சதி தேவி மொத்தமா அவங்களோட எல்லா நினைவுகளையும் அழிச்சுட்டாங்க.. வேற ஒரு பொண்ணா அவங்கள மாற்றி இருக்காங்க.  கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் இது நடந்திருக்கும்.  மொத்தமா அவங்க இப்போ சைலஜா சக்தி தேவையா தான் உங்க முன்னாடி இருக்காங்க. ஆனா தயவு செஞ்சு அவங்ககிட்ட எதையும் ஞாபகப்படுத்துற மாதிரி நடந்துக்காதீங்க.  அவங்க ரொம்ப பலவீனமா இருக்காங்க.. பயந்து போய் இருக்காங்க. அந்த அரிச்சந்திரன் அவன் ரொம்ப மோசமான கேரக்டர்ன்னு நினைக்கிறேன்.  ரொம்ப ஹராஸ்மென்ட்டோட நடந்திருக்கான். இவங்க பயத்துல தான் அவன கல்யாணம் பண்ணிக்க ஒத்துகிட்டு இருந்திருக்காங்க என்று கூறினார் மருத்துவர். 

 இதை கேட்க கேட்க சக்திக்கு இன்னும் வெறி ஏறியது. இனி அவங்கள பாசமா கவனிச்சுக்கோங்க எந்த பிரச்சனையும் வராது.  தூங்கி எந்திரிச்சிட்டா நான் அவங்கள கேட்டது எதுவும் நினைவில் இருக்காது. அதேபோல அவங்க சொல்றது எல்லாமே உண்மைன்னு தான் மெஷின் சொல்லுது. . ஆனா அதெல்லாம் பொய்யின நமக்கு தெரியும்.. அவங்க ஆழ் மனதில் இருந்து வந்த உண்மைகள். ஒன்னும் பிரச்சனை இல்ல கொஞ்சம் கொஞ்சமா சரியாகிவிடலாம்.  ஒருவேளை உங்களுக்கு ஞாபகம் வரதா இருந்ததுனா.  அது 15 வருஷம் கழிச்சு வரலாம் 20 வருஷம் கழிச்சு வரலாம்.  ஆக்சிடென்ட்டலஆ ஞாபகம் வரலாம். நாளைக்கு கூட  எது வேணாலும் நடக்கும்.  அது எல்லாம் அவங்களோட மனநிலையை பொறுத்து தான் நடக்கும்.  வாய்ப்புகள் இருக்கு 100% ஞாபகம் வராதுன்னு நான் சொல்லல. வரும் ஆனா அதுக்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கும்.  நேரத்தை விட,  நாட்கள்,  வாரங்கள்,  மாதங்கள் வருடங்கள் அப்படின்னு இருக்கு கவலைப்படாதீங்க.  சீக்கிரம் அவங்க சரியாகி விடுவாங்க.  அதுதான் நமக்கு வேணும் நினைவுகள் முக்கியம் கிடையாது என்று கூறினார் மருத்துவர். 

நித்தின் பிரகாஷ் மருத்துவரை அனுப்பி வைக்கச் செல்ல…  நீ அவ கூட இரு நான் கிளம்புறேன் என்று சத்தியதேவ் அவ்விடத்தை விட்டு சென்று விட்டான். 

நித்தின் பிரகாசுக்கு சக்தியை பார்க்க பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது. 

சைலஜாவாக மாறி இருக்கும் ரிதம் நித்தின் பிரகாஷை முழுமையாக நம்பினால் ஆனாலும் ஒரு தயக்கம் இருக்கத்தான் செய்தது அவன் உண்டு அவன் வேலை உண்டு என இருப்பதால் பெரிதாக அவளுக்கு இங்கு பயமும் பதற்றமோ இல்லை எல்லா நாட்களும் நன்றாகவே சென்றது. 

அப்பொழுதுதான் சத்யதேவ் வந்து சேர்ந்தான் நீங்க யாரை பாக்கணும் உங்களுக்கு யார் வேணும் என்று வீட்டுக்குள் நுழைந்தவனிடம் கேட்டாள் சைலஜா.

நான் என் தம்பிய பாக்கணும் நினைத்தின் பிரகாஷ் என்று சக்தி கூற…‌

ஒரு நிமிடம் என திடுக்கிட்டு  நின்றவள்.  இந்த குரலை நான் இங்கேயும் கேட்டு இருக்கேன்!  என்று திரும்பிப் பார்க்க..

அது அவன் தான் சண்டால பாவி!!  சண்டாளனா?  இப்படி இருக்கிறான் என்று சைலஜா ஒரு நிமிடம் திடுக்கிட்டாள். 

முகத்தில் அடர்ந்து வளர்ந்து இருந்த தாடி அனைத்தும் கிளீன் ஷேப் செய்யப்பட்டு பலபளப்பாக இருக்க,  அவனது தலை சரியான அளவில் திருத்தம் செய்து  போலீஸ் கட்டிங்கில் ஜொலித்துக் கொண்டிருந்தது.  மீசை அளவாக இருக்க, கண்கள் மட்டும் சிவந்து இருந்தது உதடுகள் இப்பொழுது தான் தெரிந்தது. கீழ்  உதடு  கொஞ்சம் கருத்து போய் இருக்க,  கழுத்தில் ஒரு தங்க செயின்  புதுசாக இணைந்திருந்தது.  என்ன இவ்வளவு தெய்வ கடாட்சமா இருக்கான்!! இது நிஜமா அவன் தானா இல்ல நம்ம கண்ணுக்கு தான் இப்படி தெரியுதா?  சிவ சிவா என்று கூறிக் கொண்டே இமை வெட்டாமல் நின்றாள் சைலஜா. 

ஹலோ என்று அவள் மீது புன்னகையை அவள் அவன் உதடுகளில் புன்னகையை படர விட்டு கொஞ்சம் வர சொல்றீங்களா என்று மென்மையாக அழைத்தான்.

இந்த ராட்சசனுக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா? பெருமாளே நேக்கு மயக்கமே வந்துடும் போல இருக்கே என்று பதட்டத்துடன் அமர்ந்தாள் சைலஜா. 

இனி சத்தியதேவின் காதல் வேட்டை தொடரும்.. 

வருவான்

EPISODE 231

சத்ய தேவ் போனை எடுத்துக் கொண்டு நேர்த்தியாக பேச ஆரம்பித்தான். வந்துடுறேன் ஒன்னும் பிரச்னை இல்ல. அடுத்த கட்ட வேலையை ஆரம்பிங்க என சொல்லி முடித்த படி காக்கி சட்டையில் எதிரில் உள்ள நீள்விருக்கை சோபாவில கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன். ஹே நான் கெஸ்ட் ஹவுசில் இருக்கேன் நீ என்ன பண்ணிட்டு இருக்க? சீக்கிரம் வா டா! என அழைத்தான் தமயனை. 

இதோ வந்துட்டேன். என வெளியே வந்தான் நிதின். சத்ய தேவ் நிமிர்ந்து பார்க்க அங்கே ரிதம் இல்லை. எங்க இங்கே தான என் கண்ணு முன்னாடி இருந்தா! இப்போ எங்கே போயிட்டா? என சுற்றிலும் தேடினான். சமையலறையில் டீயின் வாசம் வந்தது. 

ஓ என் பொண்டாட்டிக்கு சமைக்க கூட தெரியுமா? மறந்து போயிட்டேனே! என நினைத்தான் சத்ய தேவ். என்ன டா எதோ யோசனையில் இருக்க? என்னை பார்க்க வந்தியா? இல்ல உன் சதிய பார்க்க வந்தியா? என கேட்டான் நிதின். 

டேய் டேய் உன்னை தான் உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். எங்கே பார்க்கிற? என நிதின் மீண்டும் மீண்டும் கேட்க…

சொல்லு என்ன? என சக்தியின் பார்வை சமையல் அறை பக்கம் இருந்தது. 

எதுக்கு வந்த? 

“ஹான் நீ அவள் கிட்ட சொல்லு”

என்னன்னு? 

நிதின் பிரகாஷ் முக்கியமான வேலையா டெல்லி போறான். 

டேய் நான் எங்க அப்படி சொன்னேன்? இப்போதைக்கு எனக்கு பெருசா எந்த வேலையும் இல்ல என நிதின் கூற..  

உனக்கு வேலை இருந்தால் என்ன? இல்லன்னா என்ன? அவள் கிட்ட சொல்லு. என்றான் சக்தி. 

அப்படி சொன்னா என்ன நடக்கும்? 

சத்ய தேவ் சலித்து கொண்டே பார்த்தவன். மடையா! அவளை என் கிட்ட அனுப்பிடு. அது ரொம்ப தற்செயலா இருக்கணும் என்றான். 

அவளை வச்சு என்ன பண்ண போற? உன்னை பார்த்தாலே தெரிச்சு ஓடுறா! 

ஓ அப்படியா? சரி அப்போ நீயும் இப்படி தனியா இரு. நான் ஹரிணிய வர வைக்க நினைச்சேன். 

நிதின் சலித்த முகத்துடன் நீ வர வச்சா அவள் என்னை நிக்க வச்சு என் முன்னாடி மண்டி போட்டு மன்னிப்பு கேட்பாளா? என்ன? போடா என்றான். 

டேய் என்ன டா இப்படி சென்சாரா பேசுற? ச்சீ வெட்கமா இல்லையா? என சத்ய தேவ் கேட்க..

அய்யயோ என நிதின் கண் மூடி திறந்தவன். சாரி பிரதர் என சமாளித்து கொண்டே பார்த்தான். 

ரொம்ப காஜியா சுத்துற நீ! இதெல்லாம் ஒன்னும் சரி இல்ல. என சக்தி கூற.. 

என்ன பண்ண சொல்ற? அவளை பார்த்து ரெண்டு வருசம் ஆகுது. வழிய போனால் முகத்தில அடிக்கிற மாதிரி கதவை சாத்துறா! எத்தனை முறை தெரியுமா நான் அவங்க வீட்டுக்கு போனேன். 

ராம் கீதா ரெண்டு பேரும் என்ன சொல்றாங்க? 

அவங்களுக்கு அவள் மேலே கோபம். எனக்கு தான் சப்பொட் பண்றாங்க.. என சோகமாக கூறிய நிதின் உடனே டேய் உன் கிட்ட ஒரு விசயம் உன் பொண்டாட்டி என்னமா சமைக்கிறா தெரியுமா? அய்யோ ஆந்திரா ஸ்பெசல் பிசிரட்டி பண்ணுனா டா! வேற லெவல், கோங்குரா சட்னி அய்யோ நினைக்க நினைக்க எட்சி ஊருது நாக்கு என கூறிய நிதின் பிரகாஷ். அவளுக்கு நினைவு மறந்ததும் ஒரு விதத்தில் நல்லத்துக்கு தான் என நிதின் சொல்ல..

சத்ய தேவ் வேகமாக அருகில் வந்து அவனது கழுத்தை நெறித்தான். டே மூச்சு முட்டுது மகி மா கிட்ட சொல்லுவேன். உன்னை டேய் நிறைய புரோடெக்ட் ரிலீஸ் பண்ற கடமை இருக்கு டா! விடு டா! என நிதின் கூற.. 

தமார் என பாத்திரங்கள் உடையும் சத்தம் கேட்டது. என்ன என நிதின் சத்ய தேவ் திரும்பி பார்க்க, சத்ய தேவ்வை பார்த்ததும் பொத்தென்று டி டிரேவை கை தவற விட்டவள். கூடவே மயங்கி சரிந்தாள். 

என்ன ஆச்சு? என நிதின் அமர்ந்து கொண்டிருக்க, சத்ய தேவ் அவளை பூ போல கையில் ஏந்திக் கொண்டவன். படுக்கை எங்கே இருக்கு? என கேட்டுக் கொண்டே சென்றான். 

தெரிஞ்சுகிட்டே கேட்பான் திமிரு பிடித்தவன். என நினைத்த நிதின் யோசித்து கொண்டிருக்க, இங்கே சத்ய தேவ் அவளை படுக்கையில் கிடத்தி வைத்த கண் வாங்காமல் முகத்தை பார்த்தான். 

“அழகா இருக்க டி! எப்போ என்னை பிடிக்கும்னு சொல்லுவ? என்னோட ரெண்டு பெட்ஸ் என அவளின் கழுத்துக்கு கீழ் பார்த்தவனது எண்ணங்கள் இறுதியாக ரிதம் சொன்ன வார்த்தைகள் காதில் ஒலித்தது. ஹே நீ அப்பா ஆக போற டா! என ரிதம் சொன்னது திரும்ப திருப்ப கேட்க. அவளின் வயிற்றில் முகம் புதைத்தான் சத்ய தேவ். அவளின் பெல்லி வயிறு ஈரமானது. சத்ய தேவ் கண்களில் ஈரம். அழுதிருக்கான். சீக்கிரமா எனக்கு ரிதம் வேணும். பாப்பா வேணும் டி என நெற்றியில் அழுத்தி முத்தமிட்டு எழுந்தான். 

நிதின் அதே இடத்தில் அமர்ந்திருக்க, “கல்யாணம் பண்ணிக்கோ நிதின்” என சக்தியின் குரல் கேட்டது. 

என்ன விளையாடி பார்க்கிறாயா? அவள் கூட சேர்த்து வைக்கிறேன்னு சொன்ன? என நிதின் இயலாமையுடன் கூற..  

முதல்ல நீ மூவ் ஆகு மத்ததெல்லாம் தானா நடக்கும் என்று கூறினான் சத்தி 

 என்ன சொல்ற என்று நித்தின் கேட்க

 நீ கல்யாணத்துக்கு ரெடியாகு பிரம்மாண்டமா கல்யாணம் பண்ணிக்கோ! நீ நெனச்சது நடக்கும் அதே போல அவகிட்ட போய் கெஞ்சிட்டு இருக்காத!  உன்ன தேடி தான் அவ கெஞ்சனும்!  உன்னை தேடி வரணும்!  என  சக்தி திரும்பிப் பார்த்தான் தன் தமையனை. 

அவ வருவாளா என்று ஏக்க பார்வையுடன் நித்தின் பார்க்க…

வரட்டும்…  வரலனா உனக்கு அவள் வேண்டாம்.  என் தம்பிய வேணான்னு சொல்லிட்டு போயிட்டால்ல. அவ உனக்கு வேண்டாம்.

டேய் எனக்காக வேணும் என்று நித்தின் கூற.. 

ச்ச  அலையாத! நான் சொல்றத செய் என்று கூறிவிட்டு வெளியே சென்றான் சக்தி. 

 சரி இவள  எப்போ கூட்டிட்டு போற? என்ற நித்தின் கேட்க.. 

முதல்ல நீ அவகிட்ட பேசு  பேசிட்டு என்ன சொல்றான்னு சொல்லு என்று சொல்லிவிட்டு சத்யதேவ் கிளம்பி விட்டான். 

ரிதம் மயக்கத்தில் இருக்க மாலை பேசிக் கொள்ளலாம் என்ற விட்டு விட்டான் நித்தின் பிரகாஷ். 

அவள் தோட்டத்து பக்கம் இயற்கை பார்த்து ரசித்து கொண்டு இருக்க.. 

 உன்கிட்ட கொஞ்சம் பேசணும் சைலஜா என்று அழைத்தான். 

 என்ன சொல்லுங்க மினிஸ்டர் சார் என்ற ரிதம் திரும்ப கேட்க.. 

அது எனக்கு இங்க வேலை முடிஞ்சிடுச்சு.  இப்ப நான் கிளம்புறேன். 

 அப்படியா சரிங்க சார் ஒன்னும் பிரச்சனை இல்ல என்று சைலஜா கூற.. 

ஓகே ஆனா நீ என்ன பண்ண போற?

நான் இங்கேயே ஒரு ஓரமா தங்கிக்கிறேன்.  இங்கே ரொம்ப பாதுகாப்பா இருக்கு என்ற கூறினாள் சைலஜா. 

 அது அப்படி இல்ல… நீ வந்து  சத்யதேவ் கூட..   அவன் கூட நீ போகணும். 

 சைலஜா அதிர்ச்சியுடன் யார் அது சத்தியதேவ் என்ற கேட்க

விளையாடுறியா உன்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்தான். அவன்தான் சத்தி  என்று நிதின்  கூற..

 அவள் ஒரு சில நொடிகள் அமைதியாகிவிட்டாள்.  நிதின்  பெருமூச்சியை விட்டு என்னாச்சு உனக்கு? அவன் கூட போக பிடிக்கலையா?  நீ நினைக்கிற மாதிரி எங்க அண்ணா கெட்டவன் கிடையாது. அவ ரொம்ப நல்லவன்.  என்ற நித்தின் பிரகாஷ் கூறிக் கொண்டிருக்க.. 

 அது அப்படி இல்ல எனக்கு அவர பார்த்தா ரொம்ப பயமா இருக்கு ரொம்ப ரொம்ப பயமா இருக்கு என்ற பாவமாக கூறினாள் சைலஜா. 

இதுல பயப்பட என்ன இருக்கு?  அவன் பேயா?  பூதமா இப்போ நல்லா தான் இருக்கும் நீ பயப்படாதே, நீ என் கூட இருக்குறத விட அவன் கூட இருப்பது தான் பாதுகாப்பு புரியுதா என்ற நித்தின் கேட்க.. 

 சைலஜா அமைதியாக நின்றாள். 

 சரி இப்ப நான் என்ன பண்ணட்டும் நீ என் கூடயே வந்துடுறியா என்ற நிதின் கேட்க.. 

 இல்ல நான் யாருக்கும் தொந்தரவு கொடுக்க விரும்பல நீங்க அவர்கிட்டயும் என்னை கொண்டு போய் விட்டுடுங்க.  நான் ஏதாவது ஒரு ஆசிரமத்துல சேர்ந்துக்கலாம்னு இருக்கேன் என்று கூறினாள் சைலஜா..

நிதின் அதற்கு மேல் எதுவும் பேச வில்லை. வீட்டுக்குள் சென்றான். 

என்ன சொன்னா? என சத்ய தேவ் கேட்க.. 

சொல்லியே ஆகணுமா? என நிதின் கேட்டான். 

அவள் என்ன சொன்னாலோ அதை ஒன்னு விடாமல் என் கிட்ட சொல்லு. சொல்ற என சக்தி கூற..

அவள் ஆசிரமத்தில் சேர்ந்துக்க போறாளாம்! என் கிட்ட சொல்றா! என நிதின் கூற.. 

சத்ய தேவ்வின் முகம் சடுதியில் மாறி கவலையை தத்தெடுத்து கொண்டது. 

டேய் லைன்ல இருக்கியா? என நிதின் கேட்க.. 

அவளை அவங்க வீட்ல கொண்டு போய் விட போறேன் டா. 

அவங்க வீடுன்னா புரியல. டேய் மலை மாடு அவள் உன்னோட பொண்டாட்டி என நிதின் கூற.. 

இல்ல என் பொண்டாட்டி அப்படின்ற வார்த்தைக்கு அடையாளமா எதுவும் இல்ல. இனி அவள் இன்ப ராகவன் பொண்ணு. என்னோட… என நிறுத்திய சக்தி. 

இனி அவள் இன்ப ராகவன் பொண்ணு அவ்ளோ தான். புரொபர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் அரேஞ்ச் பண்ணி தயாரா இருக்கேன். நாளைக்கு இவளை கொண்டு போய் வுட்ரன் என சொல்லி விட்டு போனை வைத்தான் சத்ய தேவ். 

அடுத்து என்ன நடக்க போகுதோ என நிதின் பிரைவேட் ஜெட் விமானத்தில் அவளை பெங்களூர் அழைத்து செல்ல அனைத்தும் தயார் ஆகினார்கள். 

எங்கே போறோம் என சைலஜா கேள்வி கேட்க… மேல இருந்து கீழே தள்ளி விட்டுடுவேன். கேள்வி கேட்காத என்றான் நிதின் 

என்னாச்சு மினிஸ்டர் சார். இத்தனை பேச்சு வாங்க வேண்டி இருக்கு என ரிதம் கேட்க .

அமைதியா வா! அங்கே போனதும் அது என்ன இடம்புனு…  தெரியும் 

சத்ய தேவ்..?

அவர்களை பார்த்ததும் இப்பொழுது சைலஜாவாகிய ரிதம் என்ன செய்வாள்.  

அடுத்து என்ன நடக்கும்? 

வருவான். 

EPISODE 232

“ஹலோ”

என்ன திடீர்னு போன் பண்ணி இருக்க என்று மிதுன் தேவ் கொஞ்சம் ஆச்சரியமாக கேட்டான். 

 நீ உடனே விவேகா இன்ப ராகவன் வீட்டுக்கு போயிட்டேன் எனக்கு கால் பண்ணு என்று கூறிவிட்டு போனை வைத்தான் சத்ய தேவ். 

மிதுன் தேவா ஒன்றும் புரியாமல் எதுவுமே சொல்லாம மொட்டையா போயிட்டு போன் பண்ணுன்னு சொல்லிட்டானே என்று யோசித்துக் கொண்டே சென்றான் முதல் தடவையாக சத்திய தேவ் வீட்டுத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து பேசுகிறான் பெரிதாக அவர்கள் இருவருக்குள் பேச ஒன்றுமில்லை என்றாலும் மித்தன் தெய்வகா மிகவும் கவலை தன் அண்ணனின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்ற வருத்தம் அதைவிட ரிதம் அவள் இல்லை என்பதை அவனால் இன்று வரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே வீட்டுக்குள் சென்றவன் நீ சொன்ன மாதிரி வந்துட்டேன் என்று போன் செய்து சத்யதேவிடம் கூறினான் மிதுன். 

ஓகே குட் இங்க ரிதம் கண்ண குழி தெரியிற மாதிரி சிரிக்கிற அவங்க வீட்ல இருக்க எல்லா போட்டோஸையும் நீ எடுக்கிற. 

புரியலடா நீ என்ன சொல்ற என்று மிதுன் மீண்டும் கேட்க. 

 நான் சொல்றது புரியலையா அவளோட கண்ணுக்குழி தெரியிற மாதிரி வீட்ல போட்டோஸ் அண்ட் ரூம்ல இருக்கிற எல்லா போட்டோஸையும் முதல்ல எடுத்துடு. அதுக்கப்புறம் சாரி அது ஆப் சாரி இந்த மாதிரி டிரஸ்ஸஸ் இன்னும் பத்து நிமிஷத்துல அங்கு வரும் அதையெல்லாம் வாங்கி நீ அவளோட அறையில அடுக்கிரு 

 புரியல எதுக்கு இந்த டிரஸ் எல்லாம் நான் எடுக்கணும். 

டேய் அந்த டிரஸ் வரும் நான் ஆர்டர் பண்ணி இருக்கேன் அதை வாங்கி வீட்டுக்குள்ள வச்சிடு இன்று சத்ய தேவ் கூறினான். 

இதையெல்லாம் எதுக்கு பண்ற என்று மிதின் கேட்க.. 

நான் சொல்றத மட்டும் செய், அவளோட பெஸ்ட் சின்ன சின்ன டிரஸ் எல்லாமே எதுவும் அவளோட ரூம்ல இருக்க கூடாது.  இப்பவே எல்லாத்தையும் ரிமூவ் பண்ணிடு வீட்ல எங்கேயுமே கண்ணுக்குழி தெரியிற மாதிரி இருக்கிற போட்டோஸ் அது ராகவ் விவேகா ருத்ரன் யார் கூடவும் இருக்கக்கூடாது. எல்லா போட்டோசையும் எடுத்துட்டு எனக்கு போன் பண்ணு. என்று சொல்லிவிட்டு சத்தி  வைத்து விட…

தன் அண்ணன் சொன்னதைப் போலவே அவளது உடைகள் அனைத்தையும் ஒரு துணியில் கட்டி மொத்தமாக வெளியே எடுத்து வந்தான். அதைப்போல பத்து நிமிடங்களில் சத்தி  சொன்ன பார்சல் வந்து சேர்ந்தது.  புதிய ஆடைகள் புடவை பாவாடை தாவணி மற்றும் இப்பொழுது சைலஜாவாக மாறி இருக்கும் ரிதம் என்னென்ன உடுத்துவாளோ அத்தனையையும் கொண்டுவந்து அந்த ஆர்டரில் வந்திருந்தது.  அது அனைத்தையும் அவளின் அறையில் அடுக்கி வைத்தான் மிதுன் தேவ். 

அவனுக்கு குழப்பமாக இருந்தது.  எதுக்கு இவன் இதையெல்லாம் செஞ்சிட்டு இருக்கான்?  கேட்டா நம்மள திட்டுவான். அவன் சொல்றத பண்ணிட்டு போயுடுவோம் என அனைத்தையும் அப்புறப்படுத்தி விட்டான்.  அதன் பின் தன் அண்ணனுக்கு போன் செய்தான்.

நீ சொன்ன மாதிரி எல்லாத்தையும் கொண்டு வந்துட்டேன்.  இப்போ இதையெல்லாம் என்ன பண்ண சொல்ற?  என்று மித்துன் கேட்க

இது எல்லாத்தையும் எரிச்சிடு அப்படி இல்லன்னா ஆசிரமத்துல கொடுத்திடு என்று சத்யதேவ் கூற… 

என்ன விளையாடறியா உன் மனசுல என்னடா நெனச்சிட்டு இருக்க என்று மிதுன் பேச வர.. 

நான் சொல்றத மட்டும் செய் தேவையில்லாம எதையும் என்கிட்ட கேள்வி கேட்காதே என்று சத்தி அதட்டலுடன் கூறினான். 

உனக்கு மனசாட்சி இருக்கா என்னோட ரிதம் அவ பயன்படுத்தின எல்லாத்தையும் எரிச்சு போட சொல்ற? அவ இல்லங்கிறதையே என்னால தாங்க முடியல ஆனால் நீ ஒரு நாளைக்கு எப்படிடா இப்படி பேச முடியுது என்று மிதுன் கண் கலங்க கூறினான். 

சொல்றத மட்டும் செய் எதையும் கேள்வி கேட்காத என்னோட தம்பியா இருந்தா தட்ஸ் இட் என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.

 மித்துனுக்கு எரிக்க மனம் வரவில்லை அதனால் அது அனைத்தையும் எடுத்துக்கொண்டு சத்தியதேவ் ரிதம் இருவரும் வாழ்ந்த வீட்டில் கொண்டு சென்று வைக்கலாம் என்று நினைத்தவன். அது அத்தனையையும் எடுத்துக்கொண்டு  அப்பார்ட்மெண்டுக்கு வந்தான்.

அங்கு அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது சத்தியதேவ் வீட்டுக்குள் இருக்க டேய் நீ எங்க இருக்கியா? என்று தன் அண்ணனை பார்த்தவன்.  ஒரு நிமிடம் அமைதியாக சாந்தமாகினான்..

ஏனென்றால் சத்யதேவ் முன்பு போல் இல்லாமல் இப்பொழுது முடியை திருத்தம் செய்து பழைய சத்திய தேவாக கண்முன் வந்து நிற்க… 

அண்ணா என  வேகமாக அருகில் சென்ற மிதன் சக்தி என்று அழைத்துக் கொண்டே கண்களில் பாசம் பொங்க அணைத்துக் கொண்டான். 

சத்யதேவ் எதுவும் பேசாமல் அமைதியாக அதை ஏற்றுக் கொண்டான். அதன் பின் இங்கே எதுக்கு வந்த என்று கேட்க என்னால அவளோட டிரஸ் எல்லாம் எரிக்கவும் முடியாது. ஆசிரமத்துக்கு தானம் பண்ண சொன்ன!  அதை நான் நார்மலாவே பண்ணிட்டு தான் இருக்கேன்.. ரிதமோட பொருட்களை கொடுக்கிறதுக்கு எனக்கு மனசு வரல. என்று கண்களில் நீர் கோர்க்க கூறினான் மித்ன்.

எதுக்குடா அழற?

என்னால நம்ப முடியலடா மனசு வலிக்குது.  என்று மிதுன் கலங்கியவன்.  உன் முன்னாடி காட்டிக்க கூடாதுன்னு  தான்…  எனக்கு இப்ப கூட…..  நீ ரொம்ப பாவம்டா சக்தி என்று மிதுன் சொல்ல.. 

ஆமா கடைசியா சொன்ன பாரு அது உண்மைதான் நான் பாவம்தான் என்று சத்தி  சிரித்துக் கொண்டே கூறினான். 

சரி ஓகே இது எல்லாத்தையும் நான் எடுத்து வச்சிக்கிறேன்.  இப்போ விவேகா எங்க இருக்காங்க? என்று கேட்டான்.

அவங்க நம்ம வீட்ல தான் இருக்காங்க நிலா தான் அம்மாவையும் மாமியையும் பார்த்துக்கிறா என்று மித்துன் கூற.. 

அப்படியா நாளைக்கு அவங்கள கூட்டிட்டு போய் ஏதாவது காரணம் சொல்லி வீட்ல விட்டுடு. 

 யார் வீட்ல 

இன்பர்ராகவன் வீட்டில் என்று சத்தி  சொல்ல..

நீ என்னதான்டா பண்ணிட்டு இருக்க?  ஒண்ணுமே புரியல என்ற மிதுன் பார்த்தான். 

சொல்றத மட்டும் செய் என்று சொல்லிவிட்டு தன் தம்பியை அனுப்பி வைத்தான் சத்யதேவ். 

அதன்பின் இன்ப ராகவனுக்கு அழைத்தான்.  என்ன திடீர்னு எனக்கு போன் பண்ணி இருக்கீங்க சார் என்று இயல்பாக பேசினார். வயதில் பெரியவர். அவனைவிட அனைத்தையும் பார்த்தவர். 

அது இப்போ சாரு எங்க இருக்காரு என்னோட ஹீரோ என்று சத்யதேவ் இயல்பாக பேச.. 

இன்ப ராகவன் திருக்கிட்டு போய் அமைதி ஆனார் என்ன எதுவும் பேச மாட்டேன்றீங்க மாமா நான் தான் சக்தி பேசுறேன் என்று பதில் அளித்தான். 

என்னாச்சு உனக்கு மரியாதையாக கூப்பிடுற என்று இன்பா கேட்க என்னோட மனசுல எப்பவுமே உங்களுக்கு மரியாதை தான் அது என்ன நடந்தாலும் சரி ஆதங்கத்தில் அப்படி எலலாம் பேசிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க இன்று சக்தி கூறினான் சரி கேசலாம் எப்படி போயிட்டு இருக்கு நான் இங்க ரொம்ப டைட் கேட்டு உள்ள மாட்டிகிட்டேன் டா அதனாலதான் உன்ன பாக்கறதுக்கு வர முடியல என்று இன்பா கூட பரவால்ல அது ஒன்னும் பிரச்சனை இல்ல இப்போ நீங்க எங்க இருக்கீங்க நான் பெங்களூர்ல தான் இருக்கேன். 

உங்ககிட்ட கொஞ்சம் பர்சனலா பேசணும் பேசலாமா என்று சக்தி கேட்க.. 

என்ன விஷயம் எதுவும் பிரச்சனையா அவளுக்கு ஒன்னும் இல்லையே என்று இன்பா கேட்க

சத்திய தேவ் ஒரு நிமிடம் அதிர்ச்சியாக்கினான்.  யாரைப் பத்தி கேக்குறீங்க? 

அதுதான் ருத்ரனுடைய அம்மா அவ நல்லாதான இருக்கா. பிரச்சனை இல்லையே. கூட நிலா பார்த்துக்கறா போல என்று கரிசனத்துடன் பேசினார் இன்பா. 

அதில் ஒரு நிமிடம் பிரமித்து தான் போனான் சத்தி. 

என்னடா அமைதியா இருக்க? படபடப்பா இருக்கு.  சொல்லி தொலை பிரஷர் சுகர் எல்லாம் வந்துரும் போல என்று இன்பா சொல்ல.. 

சத்தி சிரித்துக் கொண்டே உங்களுக்கு அவங்க மேல இருக்கிற அந்த அஃபெக்சன் கொஞ்சம் கூட குறையல இல்ல.  நீங்க வேற லெவல் மாமா என்று சக்தி கூறினான். 

இருந்து என்ன பண்றது?  நான் தான் அவளுக்கு வேண்டாமே!  என்ன தூக்கி போட்டு போயிட்டாளே! எப்போ கூட இருக்கணுமோ அப்போ என்ன விட்டுட்டு போயிட்டாளே!  என்று இன்பா விரக்தியுடன் கூறினார்.

சரி சரி இப்போ எதுக்காக இதை பத்தி பேசிகிட்டு?  நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.. 

என்னடா கேட்கிற நீ ஏன் இன்னைக்கு டிஃபரண்டா வீடியோ பண்ற என்று இன்பா கேட்க

அது ஒன்னும் இல்ல சரி இப்போ பர்சனலா பேசலாமா? 

அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லல்ல பஸ்ட் அதை சொல்லு என்று மீண்டும் விவேகாவை பற்றியே கேட்க.. 

 அவங்க நல்லா இருக்காங்க அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல போதுமா? 

சரி என்ன விஷயம் சொல்லு என்று கேட்டார். 

நான் இங்க உங்களோட  பெரிய வீட்ல இருக்கேன்.  வர முடியுமா? 

 உடனே என்னால கஷ்டம் நீ வேணா எங்க ஸ்டேஷன் வாயேன் என்று இன்பா அழைக்க.. 

 இல்லல்ல நீங்க எனக்காக ப்ளீஸ் வீட்டுக்கு வாங்க.  அந்த முக்கியமா போன் ஆன்ல இருக்கணும். என்கிட்ட பேசுங்க பேசிட்டே வாங்க என்று கூறினான்.

சக்தி என்னடா இப்படி பிஹவ் பண்ற குடிச்சு இருக்கியா என்று இன்பா கேட்க…

 குடிக்கலாம்.. பார்ட்டி பண்ணலாம் பஸ்ட் நீங்க வீட்டுக்கு வாங்க என்று விடாப்பிடியாக நின்றான் சத்யதேவ்.

சரி நான் வீட்டுக்கு வந்துட்டு உன்ன பாக்குறேன் அப்புறமா என்று இன்பா வைக்க போக.. 

 ஹலோ இன்ப ராகவன் இப்போ நீங்க வீட்டுக்கு வரணும் தட்ஸ்  இட் என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தான் சத்திய தேவ். 

என்னாச்சு உனக்கு என்று நினைத்துக் கொண்டே போனை வைத்தால் இன்பா சக்தி சொன்னது போலவே வீட்டுக்கு விரைந்தான் வீடு அருகில் வரவும் போன் செய்த நீ சொன்ன போலவே வந்துட்ட என்ன விஷயம் என்று கேட்க உள்ள போங்க போன் ஆன்லயே இருக்கட்டும் என்று கூறினான் சக்தி. 

இந்த பக்கம் மிதுன் தேவ் விவேகாவை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து வந்தான். என்னடா மிதுன்? இங்க எதுக்கு என்ன கூட்டிட்டு வந்த?  எனக்கு இங்க இருக்க பிடிக்கல!  மூச்சு அடைக்குது என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போ என்று விவேகா கூறிக்கொண்டே ஆவேசமாக வெளியே வந்தார். 

ஒரு பக்கம் இன்பராகவன்… இன்னொரு பக்கம் விவேகா என இருவரும் வந்துவிட.. 

மாமா என்று இன்னொரு ஃபோனில் ருத்ரன் அழைத்தான். 

வந்துட்டியா என்று சக்தி செய்தியை தட்டி விட.. 

நீங்க எங்க இருக்கீங்க உங்கள பாக்கணும் என்று ருத்ரன் கேட்க.. 

நீ வீட்டுக்கு வந்துட்டல்ல

ஆமா என்று இன்பாவுக்கு பின்னால் ருத்ரனும் நுழைந்தான். 

ஒரு பக்கம் விவேகா,  நடுவில்  இன்பா, நுழைவு வாயிலில் ருத்ரன் என அனைவரும் வந்திருக்க… 

ரவிச்சந்திரன் வசுமதி கங்கா என்று அவர்களும் இன்னொரு பக்கம் வந்து சேர்ந்தார்கள். 

இதெல்லாம் உங்க வேலை தானா நீங்க இன்னும் திருந்தலல்ல என்னத்த நிரூபிக்கிறீங்க?  எதுக்கு என்னை வர சொன்னீங்க என்று விவேகா ஆவேசமாக பேச… 

என்ன டா இது? என இன்பா கேட்க..  

சக்தி இன்பாவின் காதுகளில் மாமா இப்போ ரிதம் உங்க கண்ணு முன்னாடி வந்தா என்ன பண்ணுவீங்க என்று கேட்க.. 

இன்பாவுக்கு புரிந்து விட்டது அப்போ அவ உயிரோட இருக்காளா?  என்று உள்ளுக்குள் இதயம் வேகமாக அடித்துக் கொள்ள.. 

சக்தி என்னடா சொல்ற இது பொய்யில்லையே இந்த நிமிஷம் பொய் இல்லையே என்று இன்பா கண்களில் நீர் கோர்க்க கேட்டார். 

உண்மை தான் மாமா.  அவ வரா ரிதமா  இல்ல சைலஜா சதி தேவியா வரா உங்களோட பொண்ணு!  இனிமே சைலஜா!! மாமா உங்க பொண்ணை உங்க கிட்ட ஒப்படைச்சிட்டேன். நான்  போன் வைக்கிறேன் என்று சக்தி கட் செய்யவும்.. 

நித்தின் பிரகாஷ் பலத்த பாதுகாப்புடன் அவனது கார் அணிவகுத்து வீட்டுக்கு முன் நுழைவு வாயிலுக்கு முன் வரவும் சரியாக இருந்தது. 

அவள் வந்து விட்டாள். 

விவேகா ஆவேசமாக இன்பாவின் அருகில் பேச வர இன்ப அடித்து பிடித்து நுழைவு வாயில் பக்கம் ஓடியவர்.  கேட்டை இறுக்கிப்பிடித்துக் கொண்டு நின்றார். 

நிதின் பிரகாஷ் முன்னே இறங்கி..  சைலஜாவின் பக்கம் வந்து கதவை திறந்து விட்டான் மையிட்ட விழிகளுடன் நீண்ட கூந்தல் அதே முகம் கோபுர பொட்டு விவேகாவின் மூக்கு அவளது உதடுகள் கண்களில் இன்பாவின் தேடல் ஆனால் கண்ண குழி இல்லை. 

இதோ கண்ணுக்கு முன் இன்பா விவேகாவின் காதல் சின்னம் இறங்கிவிட்டாள் சைலஜா சதி தேவி.  

So finally ரிதம் வீட்டுக்கு வந்துட்டா! ஆனால் சதி தேவியா… அடுத்து என்ன நடக்கும்? 

கதை சீக்கிரமா முடியாது. இது long content so stay tuned “அடங்காத அதிகாரா”  

வருவான்… 

EPISODE 233

அங்கிருக்கும் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். நிதின் பிரகாஷ் கார் கதவை திறந்து விட மையிட்ட விழிகளில் தன்னை சுற்றி இருக்கும் அனைவரையும் யாரோ எவரோ என்னும் பாவனையுடன் பார்வையை படற விட்டுக் கொண்டே இறங்கினாள்.  

வசுமதி, ரவிச்சந்திரன், கங்கா என அனைவரும் தலை கால் புரியாமல் பிரமித்து பார்த்துக் கொண்டிருக்க, ருத்ரன் திரும்பி “அக்கா ” என கலவையான உணர்வுகளுடன் பார்த்தான். 

இன்பா நுழைவு வாயில் கம்பியை பிடித்த படி தன் மகளை கண்களில் நீர் கசிய பார்த்தார். காதலின் சாட்சியாக கடவுள் கொடுத்த பரிசு அவள். தன் கையை மீறி சென்று விட்டதே என அவர் ஒவ்வொரு நாளும் செத்து பிழைத்தார் என்று சொல்லலாம். இன்று அந்த வரத்தை உயிர் கொடுத்து கண் முன் நிறுத்தி இருக்கிறான் சத்ய தேவ். இதை அவனால் மட்டுமே செய்ய முடியும். 

விவேகா ஒன்றும் புரியாமல் நுழைவு வாயிலை தாண்டி வந்தாள். அங்கே அறுவம் என நினைத்தவள் இப்பொழுது உருவமாக கண் முன். ரிதம்! ரிதம்! ரிதம் வந்து விட்டாள். விவேகா கண்களில் நீர் வழிய என் பொண்ணு வந்துட்டா என மூச்சு வேகமாகியது. என் பொண்ணு வந்துட்டா! ரி.. ரிதம் வந்துட்டா என அழுது கொண்டே இன்ப ராகவனின் பக்கம் திரும்பினாள் விவேகா. 

இன்பாவின் பார்வை மொத்தமும் ரிதமின் மேல் இருக்க, ரிதம்!!

ரிதம்.. 

ரிதம்.. 

ரிதம். மா!! 

என் சின்ன குட்டி!! என ஆள் ஆளுக்கு அவளை அழைத்துக் கொண்டு அருகில் நெரிங்கினார்கள். 

ரிதம் நிதினை பார்த்து இவங்க எல்லாம் யாரு? என்னை எதுக்கு ரிதம்ன்னு கூப்பிடுறாங்க? என சைலஜா கேட்க.. 

இவங்க தான் உன்னோட குடும்பம். அந்த அரிச்சந்திரன், அனந்த கிருஷ்ணன் உன்னை கடத்த்திட்டு போயி நினைவுகளை அழிச்சி உன்னை விற்க பார்த்திருக்காங்க. அந்த விசயம் உனக்கு தெரியும் தானே! சத்ய தேவ் சொன்னானா? இதை பத்தி? என கேட்டான் நிதின். 

அப்போ என்னோட குடும்பத்தை அவரு கண்டு புடிச்சிட்டாரா? என சக்தியை பற்றி கேட்டாள் சைலஜா. 

அதுக்கு அவசியம் இல்ல. தமிழ் நாட்டில் ஜாயின்ட் கமிஷனர் பொண்ணு தான் நீ! உன்னோட பேரு ரிதம் என்றான் நிதின். 

அப்படியா என ரிதம் அவர்களை பார்த்தாள். என்ன பேசுவது என தெரிய வில்லை. விவேகாவுக்கு அதீத சந்தோசத்தில் மயக்கமே வந்து விட்டது. அவளை ருத்ரன் தூக்கி கொண்டு வீட்டின் பக்கம் சென்றான். 

அவங்களுக்கு என்னாச்சு? என சைலஜா கேட்க..  அவங்களுக்கு உன்னை பார்த்ததும் சந்தோசத்தில் மயக்கம் வந்திடுச்சு! உள்ளே போ அவங்க தான் உன்னோட அம்மா! பேரு விவேகா என்றான் நிதின். 

ரிதம்! என் தங்கமே! என ரவி சந்திரன், வசுமதி அருகில் வந்தார்கள். 

இவங்க உன்னோட தாத்தா, பாட்டி உன் அப்பா சொந்தம் என்றான். 

அவர்களை பார்த்து புன்னகை சிந்தியவள் நமஸ்காரம் பண்ணுங்கோ என காலில் விழுந்தாள் சைலஜா. அவளுக்கு வேறு என்ன செய்வதென தெரிய வில்லை. இது உன் அம்மாவோட அம்மா என கங்காவை காட்டினான். கஞ்சாவை பார்த்ததும் காலில் விழுந்தாள். 

“இல்ல சின்ன குட்டி நீங்க எழுந்திருங்க” என அவர் நெட்டி முறித்து விட்டு நீங்க இங்கேயே நில்லுங்க.. நான் உள்ளே போயிட்டு உடனே வரேன் என அரக்க பறக்க வீட்டுக்குள் ஓடினார் கங்கா. 

அவரது கண்களில் சந்தோசமும் வருத்தமும் சேர்ந்து சரிந்து தள்ளியது கண்ணீர் துளிகள். ஆழம் கரைத்து எடுத்து வந்தவர் திருஷ்டி கழித்தார். 

சைலஜா அவருக்கு வணக்கம் வைத்தாள். இன்பா அதே இடத்தில் நின்று கொண்டிருந்தார். நிதின் சைலஜாவிடம் இது உன்னோட அப்பா! இன்ப ராகவன் என கூற, அப்பாவா! என சைலஜாவின் பார்வை இன்பாவின் மீது நிலைத்து நின்றது. 

சைலஜா இன்பாவை பார்த்து கொண்டே அருகில் சென்றவள். அப்பா ஆசிர்வாதம் பண்ணுங்கோ என காலில் விழுந்தாள். பேபி என்ன இது எழுந்திரு! டாடிக்கு இதெல்லாம் பிடிக்காது என்றவர் தன் மகளின் கையை பிடித்து தேம்பி அழ ஆரம்பித்தார். 

இவ்வளவு நேரமும் அங்கிருக்கும் அனைவரையும் வினோதமாக பார்த்துக் கொண்டிருந்த சைலஜா. இப்பொழுது இன்பா அழ ஆரம்பித்ததும் அது நெஞ்சை எதோ அழுத்தி பிசைவது போல இருக்க, அவள் கண்களில் காரணமே இல்லாமல் நீர் சுரந்தது. உதடுகள் துடிக்க நடுங்கி அழுத இன்பா மகளிடம் சாரி பேபி I’m extremely sorry.. என இன்னும் அழுதார். 

ஹே நீ எதுக்கு அழற? என நிதின் ஆச்சரியமாக கேட்க, I don’t know why அவரு அழரத என்னால பார்க்க முடியல! நேக்கு அழுகை வருது என கூறினாள் சைலஜா. 

நிதின் அந்த சூழலை மாற்றும் பொருட்டு நீ உங்க தாத்தா பாட்டி கூட உள்ளே போ நான் இவர் கிட்ட பேசிட்டு உள்ளே வரேன் என்றான். 

கங்கா, வசுமதி, ரவிச்சந்திரன் என மூவரும் ரிதமை பார்த்தபடி நின்றார்கள். நானும் உங்க கூட வரேன்! என அவர்களுடன் சேர்ந்து கொண்டு உள்ளே சென்றாள். 

இது DNA ரிப்போர்ட்.. ருத்ரனுக்கும் ரிதம் ஐ மீன் இப்போ சைலஜாவாக இருக்க உங்க பொண்ணுக்கும் எடுக்க பட்ட டெஸ்ட் இதுல ரிதம் தான் உங்க பொண்ணுன்னு உறுதி ஆகிடுச்சு அண்ட் அவளோட கண்ணாகுளி உங்க ஃபேமிலி முத்திரைய பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டாங்க என்றான் நிதின். 

நீ எதுக்கு இதை எக்ப்லைன் பண்ணிட்டு இருக்க? சத்ய தேவ் எங்க? என இன்பா அதிகாரமாக கேட்டார். 

அது அவனுக்கு முக்கியமான வேலை! அதான் என நிதின் சமாளிக்க.. 

 முக்கியமான வேலையா? என் பொண்ணை விட? உண்மையான ரீசன் சொல்லிடு. அவன் எங்கே? அவன் உடனே வந்தாகனும்! சீக்கிரம் வர சொல்லு. 

இதோ இப்போவே சொல்றேன் நீங்க போங்க நான் அவனை கூட்டிட்டு வரேன் என நிதின் சொல்ல.. ஹே எங்கே போற? வா உள்ளே வா! அவனை போன் பண்ணி வர சொல்லு இப்போ வந்தாகணும் என நித்தினை கையுடன் அழைத்து சென்று விட்டார். 

பிளீஸ் என்னை விடுங்க! நான் மகி சித்தி வீட்ல இருக்கேன். 

சத்ய தேவ் இங்கே வந்தால் தான் உன்னை ரிலீஸ் பண்ணுவேன்! என இழுத்து சென்று விட்டார். 

டேய் சக்திஈஈஈ! என நிதின் முனகி கொண்டே இன்பாவுடன் வீட்டுக்குள் சென்றான். 

அங்கே வீட்டில் இருக்கும் ரிதமின் படங்கள் அனைத்தையும் ருத்ரன் காட்டி கொண்டிருந்தான். விவேகா சைலஜாவின் அருகில் வந்து அமர்ந்தவர் கையை பிடித்துக் கொண்டார் கெட்டியாக… ரிதம் என அழைத்து முகம் முழுக்க முத்த மழை பொழிந்து ஆவேசமாக அணைத்துக் கொண்டார். 

சைலஜாவுக்கு இது ஒரு வித புது அனுபவமாக இருந்தது. இது போல அம்பிகா அவளை கொஞ்சியதும் இல்லை பார்த்து கொண்டதும் இல்ல..  ஆனால் இங்கே அது அத்தனையும் தலைகீழாக நடக்கிறது. அம்பிகா அங்கே அனைத்து வேலையையும் சைலஜா, ஶ்ரீதேவி, நித்தியா என மூவரிடமும் சொல்லி மாடு போல வேலை வாங்குவாள். தனக்கு ஒரு தம்பி இருக்கிறான். அம்மா அப்பா , தாத்தா பாட்டி, அம்மாவின் அம்மா என நிறைய சொந்தகள் இருக்கிறார்கள். என யோசித்து கொண்டிருந்தாள். 

மித்துன் விவேகாவை விட்ட அடுத்த நொடியே சத்ய தேவ் சொன்னதை போல பக்கத்து வீட்டு சுவர் ஏறி குதித்து சென்றிருந்தான்..அதனால் அவனுக்கு ரிதம் திரும்பி வந்தது எதுவும் தெரியாது. 

உனக்கு என்ன வேணும் சொல்லு  என சைலஜா கூறி இருக்கிறாள். 

என்பராக அவனின் கவனம் மொத்தமும் சைலஜாவின் மேல் அதாவது தனது மகளின் மேல் இருந்தாலும் நித்தின் பிரகாஷை வைத்த கண பார்த்துக் கொண்டிருந்தார். 

அவனது மனதில் இப்போ இந்த இறால் மீசை எதுக்கு என்னைய பாத்துட்டு இருக்க அப்போ அவன் வராம என்ன விட மாட்டார் போலையே இப்போ நான் என்ன பண்றது என்று தீவிரமாக யோசித்தவன் சத்திய தேவுக்கு அழைத்தான். 

நான் போன் கால் வருது நான் பேசிட்டு வந்துடறேன் என்று நித்தின் பிரகாஷ் எழுந்து செல்ல போக..  .

 எங்க போற எங்கேயோ பேசு என்று இன்பா முட்டுக் கொடுத்தார். 

ஹலோ கொஞ்சம் விடுறீங்களா இது ஆஃபீஸில் போன். நான் அப்படி கிச்சன் பக்கம் போகலாமா விடுவீங்களா ப்ளீஸ் என்று நித்தின் கூற போ என்று செய்கை காட்டினார். 

ஹலோ டி மயிர புடுங்கி ஒழுங்கா இங்க வந்துரு என்று நித்தின் எடுத்ததும் கொந்தளித்த படி பேச…

 இப்போ உனக்கு என்னடா பிரச்சனை என்று என சத்தியதேவ் கேட்டான்

 என்ன பிரச்சனையா? உன்னோட மாமனாரு என்ன விட மாட்டேன்ராரு என்றார். 

நான் உன்கிட்ட என்னடா சொன்ன அங்க இருந்து கிளம்புனுதான் சொன்னேன் உனக்கு இன்னும் அங்க என்ன வேலை என்று சத்தியதேவ் பற்களை கடித்த படி கேட்க.. 

டேய்  மலை மாடு நான் எப்பயோ கிளம்ப ரெடி தான் அதுக்குள்ள என்ன கைய புடிச்சு வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்துட்டாரு.  நீ வந்தா தான் அவர் என்ன ரிலீஸ் பண்ணுவாராம் ஒழுங்கா வந்து தொலைஞ்சிடு! 

நான் தான் வரமாட்டேன்னு சொல்லிட்டேனே அப்புறம் எதுக்கு என்னை கூப்பிடுற என்று சக்தி கூற அது எதுக்குடா என்கிட்ட சொல்றீங்க இது உனக்கும் உங்க மாமனாருக்கும் உள்ள குடும்ப பிரச்சனை தனிப்பட்ட பிரச்சனை அதுக்கு சென்ட்ரல் கவர்ன்மெண்ட் மினிஸ்டர் நான் என்னடா பண்ணுவேன் என்று நித்தின் கேட்க.. 

என்னால வர முடியாது நீ என்னமோ பண்ணு என்று சத்தியதேவ் போனை வைத்தான் . 

  டேய் இர்ரா டே இர்றா!! என இன்னொரு பக்கம் நித்தின் கத்தினால் அதற்குள் போன் கட் ஆனது இப்போ என்ன பண்றது இவரு விடாக்கண்டனா என்ன புடிச்சு வச்சிருக்காரு இந்த நாய் வரவே மாட்டேன்னு சொல்றானே! என மீண்டும் அழைத்தான் நித்தின்.

எதுக்குடா மயிறு திரும்பத் திரும்ப கூப்பிடுற என்று சக்தி கேட்க

நான் சொன்னாலும் சொல்லல நாளும் அவர் உனக்கு மாமனார் தானா அவ உன் பொண்டாட்டி தான் செத்துப் பொழச்சி வந்தாலும் சரி,  நினைப்ப மறந்து வந்தாலும் சரி,  சைலஜாவா இருந்தாலும் சரி , ரிதமா இருந்தாலும் சரி,  அது என்னது சதி தேவியா?  அதுவா இருந்தாலும் சரி, எப்படி இருந்தாலும் அவன் உன் பொண்டாட்டி தான்.. அத இனிமே யாராலயும் மாற்ற முடியாது.. மூடிட்டு ஒழுங்கா வந்து சேரு!  என்ன ரிலீஸ் பண்ணுங்க டா.. 

சத்யதேவ் போனை கட் செய்து விட்டு இன்பாவுக்கு அழைத்தவன் நான் முக்கியமான வேலையா தமிழ்நாட்டில் இருக்கேன் முடிச்சுட்டு வரேனே என்று கூற

அவ வீட்டுக்கு வந்து இருக்கா அது தெரியும்தானே உனக்கு அங்க என்ன வேலை என்று இன்பா சொல்ல.. 

அதுக்கு இல்ல இப்ப நான் அங்க வந்து என்ன பண்ண போறேன் என்று எட்டனின்றி ஒவ்வொரு பதிலும் ஒட்டாமல் பேசினான் சத்திய தேவன என்னடா நினைச்சுட்டு இருக்க? அவ வீட்டுக்கு வந்துட்டா.. 

சத்யதேவ் கொஞ்சம் அமைதியாகி பின்  அவ எல்லாத்தையும் மறந்து வந்து இருக்கா இப்போ நான் அவளோட புருஷன் கிடையாது. அதாவது அவளுக்கு நான் நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டது எதுவும் ஞாபகத்துல இருக்காது. 

சத்திய தேவ் நீ பேசறது எதுவும் சரியில்ல என்று இன்பா கூற… மாமா ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட்! உங்க பொண்ணுக்கு என்ன பார்த்தாலே பிடிக்கலையா நான் ரவுடி பயலாட்டம் தெரிகிறானா!  நான் அவளுக்கு வேண்டாமா என்று கூறினான். 

 இதை யார் சொன்னது என்று இன்பா கேட்க

அவ தான் சொன்னா!  போதுமா இன்னும் வேற என்ன விளக்கம் வேணும்?  அவ எனக்கு கிடைச்சு கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு மேல ஆக போகுது.  நான் எல்லா டெஸ்டும் எடுத்து அவளோட நினைவுகள் எல்லாத்தையும் திரும்பவும் கொண்டு வர முடியுமான்னு.  செக் பண்ணி பாத்துட்டேன்.  ஆனா நம்மளோட எதிரி பிளான் பண்ணி தான் நினைவுகளை அழிச்சிருக்கான்.. உங்களுக்கு ஒரு பேப்பர்ல மொட்டை கடுதாசி வந்ததே!  உயிர  அறுக்க போறேன்… மரணத்தை விட கொடுமையானது மறப்பது.  அது இதுதான்.  அவ எல்லாத்தையும் மறந்துட்டா. இப்ப புரியுதா?  அதனாலதான் நான் வரல.  அவ உங்க பொண்ணாவே இருக்கட்டும்.. அவளுக்கு நீங்க அவளுக்கு பிடிச்ச மாதிரி ஒரு பையனை கல்யாணம் பண்ணி வைங்க. 

 முக்கியமா அவ  அசைவம் கிடையாது அவ சுத்த சைவம் மொத்தமா நம்ம ரிதம் எப்படி இருந்தாலும் அதுக்கு கண்ணாடி மாதிரி எதிர்ப்பதமா அவள ரெண்டு வருஷமா அவளோட நினைவுகளை மொத்தமா அழிச்சு புதுசா சைலஜாவா மாற்றி இருக்காங்க.  அதனால அவளோட மனசும் புதுசு. எல்லாமே புதுசு அம்மா அப்பாவை ஏத்துக்கிற மாதிரி என்னைய ஏத்துக்கணும்னு கட்டாயம் இல்ல.  அவளோட நினைவுகள்ள நான் ஒரு பர்சன்ட் கூட கிடையாது.  நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்கு புரிஞ்சி இருக்குன்னு நினைக்கிறேன் என்று கூறினான். 

இன்பா கோபமாக ராஸ்கல் என் கண்ணு முன்னாடி ஒன்னும் half and hour ல வர இல்லன்னா நான் வருவேன் என சொல்லி விட்டு போனை வைத்தார். 

வருவான். 

EPISODE 234

சக்தி பேசிய அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த இன்பா அவன் கடைசியாக சொன்ன விஷயத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மிகவும் கோபமாக “ராஸ்கல் என் கண்ணு முன்னாடி இன்னும் half and hour ல வர இல்லன்னா நான் வருவேன்!” என சொல்லி விட்டு போனை வைத்தார். 

நித்தின் பிரகாஷ் ஒரு பெருமூச்சு விட்டபடி எப்ப தான் இவங்க எல்லாம் சமாதானம் ஆவாங்க?  அடுத்து என்ன நடக்கும்?  இவ வேற ஒரு பக்கம் எல்லாத்தையும் மறந்துட்டு சுத்திட்டு இருக்காளே!  என்று நினைத்தவன்.  சைலஜாவின் அருகில் சென்று “சரி ஓகே நான் கிளம்புறேன்!” என்று கூறினான். 

கிளம்புறீங்களா எங்க போறீங்க? திரும்ப எப்ப வருவீங்க? என்று பதட்டத்துடன் ரிதம் அதாவது சைலஜா பார்க்க… 

அவளை தீவிரமாக பார்த்தவன் ஹே நீ நினைக்கிற மாதிரி நான் சிங்கிள் கிடையாது.  எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு.  அதுக்கப்புறம் என் மேல சாஃப்ட் கார்னர்லாம் வச்சுட்டு இருக்காத என்று கூறினான். 

இப்படி வேற நினைச்சுட்டு இருக்கீங்களா நீங்க எனக்கு நிறைய உதவி பண்ணி இருக்கேன் அதுக்காக தான் கரிசனமா கேட்டேன்! நீங்க போயிட்டு வாங்கோ என்று சைலஜா கூற.. 

உனக்கு எங்க கம்பார்டபிள் தானே என்று நித்தின் கேட்டான். 

நேக்கு  தெரியல ஆனாலும் புடிச்சிருக்கு!  மனசுக்கு நிம்மதியா இருக்கு.  அவர பார்க்கும்போது எனக்கு ஒரு பாதுகாப்பான இடத்துக்கு வந்த ஒரு ஃபீல் கொடுக்குது என்று இன்பாவை பார்த்து கூறினாள் சைலஜா. 

நித்தின் பிரகாஷ் சந்தோசமாக “இந்த ஒரு விஷயத்துல தான் நீ அப்போ இருந்து இப்போ வரைக்கும் மாறவே இல்லை” என்று கூறினான். 

என்ன என்று சைலஜா அதிர்ச்சியுடன் கேட்க…  ஆமா உனக்காக உங்க அப்பாவ ரொம்ப பிடிக்கும்.  உங்க அப்பா செல்லம் நீ.  உங்க அப்பா உனக்காக எத வேணாலும் பண்ணுவாரு.  நீ வச்சது தான் இந்த வீட்ல சட்டமே!  அந்த அளவுக்கு உன் மேல அவ்ளோ பாசம்! உங்க அப்பாவுக்கு.  உங்க அப்பா உனக்காக உங்க அம்மாவையே எதிர்த்தவர். அவங்க ரெண்டு பேருக்கும் டைவர்ஸ் என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க… 

என்ன பேசிட்டு இருக்க என் பொண்ணு கிட்ட என்று மிரட்டும் தோரணையில் வந்து நின்றார் இன்ப ராகவன். 

அத நான் கிளம்புறேன் போயிட்டு வரேன்னு சொல்ல வந்தேன் சைலஜா பத்திரமா இருந்துக்கோ என்ற அவன் நகர… 

கடைசி வரைக்கும் உன் அண்ணகாரன் இங்க வர மாட்டான்ல என்று இன்பா அவனது சோல்டரை அழுத்தி பிடித்தார். 

அதுக்கு ஏன் என்னோட சப்பையை இப்படி அழுத்தி பிடிக்கிறீங்க? என்ன ஹாஸ்பிடல்ல படுக்க வச்சிடாதீங்க!  நான் எங்க டாடி கிட்ட சொல்லுவேன்.  கூடவே எங்க சித்தப்பா கிட்டயும் சொல்லுவேன் என்று நித்தின் சொல்ல.. 

நீ யாரை வேணாலும் கூட்டிட்டு வாடா என்று இன்பா மிரட்டும் தொனியில் கூற.. 

ஆள விடுங்க சாமி என்று ஓடிவிட்டான் நித்தின் பிரகாஷ். 

ருத்ரன் ஒரு பக்கம் சத்திக்கு விடாமல் அழைத்துக் கொண்டிருக்க..

 இன்னொரு பக்கம் நிலா, “சித்தி விவேகா அத்தை அங்க போனாங்களே! இன்னும் வரலையே! என்னாச்சு?  என்று கேட்க…

 தெரியலை தங்கம்  நானும் அதுதான் யோசிச்சிட்டு இருக்கேன்!  மிதுன் என்னடா?  எதுக்கு அங்க கூட்டிட்டு போன? என்று  பேசிக் கொண்டிருக்கவே அவர்களது வாட்ஸ் அப் கம்யூனிட்டியில் ரிதம் வந்திருந்த போட்டோ அனைத்தும் சடசடவென்று இறங்கியது. 

 மிதுன் லேப்டாப்பை தட்டிக் கொண்டே எனக்கு தெரிலமா உன் பையன் தான் அங்க கொண்டு போய் விட சொன்னான் என்று கூறினான். 

 என்ன என்ற மகி, இதழினி , நிலா , சூர்யா என அனைவரும் மிதுனை பார்த்தார்கள்.

இப்போ எதுக்கு எல்லாரும் என்னை இப்படி ஷாக்கா பாக்குறீங்க?  என்ற மிதுன் கேட்க.. 

இதை ஏன்டா என்கிட்ட சொல்லவே இல்ல!  அவன் எப்படி இருக்கான்?  என்ன பேசினான் உன்கிட்ட? என்று சூர்யா கேட்க.

மகி கண்களில் நீர் கோர்க்க அருகில் வந்தவர். நீ வீட்டுக்கு வர சொல்லலாம்ல்ல என கூறினார். 

 அவன் இங்கதான் இருக்கான் மா!  அந்த வீட்ல.. 

 எந்த வீட்ல?

அதுதான் நீங்க ரெண்டு பேரும் நம்ம சாந்தி நகர் அபார்ட்மெண்ட்ல இருக்கான் என்று கூற.. 

மகி உடனே எழுந்தவர்.என்னங்க  நம்ம இப்பவே ஒரு எட்டு போயி சக்தியை பார்த்துட்டு வந்துடலாம்! இங்கே வீட்டுக்கு கூப்பிடலாம்.  என் கையால சமைச்சு என் பிள்ளைக்கு ஊட்டி எத்தனை நாளாச்சு?  நாலா? வருஷ கணக்கா இருக்கும். என்று அழுது கொண்டே கூறினார். 

அம்மாஆ! டாடிஇஇ! என்று சொல்லிக் கொண்டே இதழ் வேகமாக ஓடி வந்தாள்.

என்ன விஷயம் பாப்பா எதுக்கு இத்தனை பதட்டம்?  என்று சூர்யா கேட்க.

அண்ணி!!..  விவேகா மாமி… இல்ல அது  ரிதம்!!  ரிதம் அண்ணி வந்துட்டா!  அண்ணி!  என்று கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

அனைவரும் ஒன்றும் புரியாமல்  பதட்டத்துடன் பார்க்க மகி என்ன சொல்ற என்று கேட்க.. 

 மிதுன் எழுந்து கொண்டு என்ன ஆச்சு என்ற ஆளாளுக்கு வந்தார்கள்.” போன்ல குரூப்ல போட்டோ வந்திருக்கு” என இதழ் ஆனந்த கண்ணீருடன் நீட்ட… மிதுன் அதை எடுத்து பார்த்தான். அவன் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது ஒரு கையில் துடைத்த படி தடுமாறி எழுந்தவன் போலாம் இப்போவே போய் பார்க்கலாம் மகி என கரைந்தான். 

எங்கே போறீங்க? யாரை பார்க்க போறீங்க என கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் வந்தான் சத்ய தேவ். 

சக்தி என மகி தடுமாறி எழுந்தவர் வேகமாக ஓடி சென்று அணைத்துக் கொண்டார். மா போதும் அழ வேணாம். என அணைத்துக் கொண்டு முதுகை வருடினான். சத்ய தேவ் நிஜமாவே ரிதம் வந்துட்டா! நம்ம போய் பார்க்கலாம் டா! என சூர்யா கூற.. ஆமா சக்தி என மகியும் கூறினார். 

இந்த வீட்டில் இருந்து யாரும் அவளை பார்க்க போக கூடாது. 

ஏன்? நான் ஏன் பார்க்க போக கூடாது? என மித்துன் வந்து நின்றான். 

தன் அம்மாவிடம் இருந்து விலகி நின்று அனைவரையும் பார்த்த சத்ய தேவ். சரி என்னை மீறி என்னோட பேச்சை மீறி போயிட்டு வாங்க. நான் கேட்கல என அவன் அறைக்கு சென்றவன் பூட்டிக் கொண்டான். 

அடுத்த சில நொடிகளில் மொத்த பட்டாலமும் கிளம்பியது. ஒருத்தியை தவிர… நிலா செல்ல வில்லை. அவன் ருத்ரன் இருக்கும் வீட்டுக்கு செல்ல கூடாது அதை விட ரிதம் மீண்டும் உயிருடன் வந்தது மிகவும் நிம்மதி. ஒரு அரை மணி நேரம் கழித்து சத்ய தேவ் சிகரெட் பிடிக்க எண்ணி வெளியே வந்தான். அவன் நினைத்ததை போலவே யாரும் இல்லை. 

சிகரெட்டை பற்ற வைத்து இழுத்தான். அண்ணா! என குரல் கேட்க.. 

சிகரெட்டை உடனே அணைத்து விட்டு திரும்பியவன் நீ போகலயா பாப்பா! 

நீ சொன்னால் காரணம் இருக்கும் னா நான் போகல! அது இருக்கட்டும் இந்த பழக்கத்தை எப்போ விட போற? என நிலா பேசிக் கொண்டிருந்தாள். 

இங்கே அரக்க பறக்க ஓடி வந்தார்கள் அனைவரும். இன்னொரு பக்கம் சிவன்யா, பவன்யா, வெற்றி, மை விழி, கார்த்திக், தேஜு, நிவாஸ் என அனைவரும் வந்தார்கள். 

ரிதம் என அழைத்த படி வேகமாக உள்ளே நுழைந்தான் மிதுன். அவளின் முகத்தை காண தவித்து போயிருந்தார்கள். அவள் திரும்ப வந்ததில் மகிழ்ச்சி.. ஆனால் யாரை எதிர் பார்த்து இன்பாவும், ருத்ரனும் காத்திருந்தார்களோ! இன்னும் அவன் வந்த பாடில்லை. 

இவா எல்லாம் யாரு? என பதட்டத்துடன் அனைவரை பார்த்ததும் கேட்டாள் சைலஜா. மகி அவளின் அருகில் நெருங்கி ரிதம்! நான் மாமி டா உன்னோட மாமி! இது உன்னோட மாமா! என மகி சந்தோசத்துடன் அழுதார். 

அக்கா அழாதீங்க என விவேகா சொல்ல, பார்த்தியா அறிவு நான் சொன்னது போல என் மருமகள் உயிரோட இருந்திருக்கா! எனக்கு நம்பிக்கை இருந்தது. கடவுள் என்னை கை விடல.. என மகி சொல்லி கொண்டிருக்க, ரிதம் என மித்துன் அவளின் கையை பிடித்து கொள்ள, வேகமாக கையை தட்டி விட்டவள் விவேகாவின் பின்னால் ஒரு வித பயத்துடன் ஒளிந்து கொண்டாள். 

ரிதம்! ரிதம்! அண்ணி! ரிதம்! கண்ணுக்குட்டி என நாலு பக்கமும் சைலஜாவை அழைத்தார்கள் அனைவரும்.. அதில் உடல் வியர்க்க தலை சுற்றி பொத்தென மயங்கி சரிந்தாள் சைலஜா. 

என்னாச்சு? என கங்கா, வசுமதி, விவேகா என அனைவரும் பார்க்க, எல்லாரும் சுத்தி சுத்தி பேசினதில் மயங்கிட்டா போல என சிவனியா கூற, என்னாச்சு என கேட்டுக்கொண்டே அருகில் வந்தார். 

என் பொண்ணுக்கு என்னாச்சு? டாக்டரை பார்க்கலாம்! மிதுன் நீ உடனே நிலாவை கூட்டிட்டு வா! என விவேகா சொல்ல, ஆமா மிதுன் நீ போடா! என சொல்ல.. இதழ் உடனே நான் போயி பாப்பாவை கூட்டிட்டு வரேன் என போன் செய்து கொண்டே நகர்ந்தாள். 

வந்ததில் இருந்து உட்கார்ந்து கிட்டே இருக்கா அவளுக்கு ரெஸ்ட் தேவை கொஞ்ச நேரம் தூங்கட்டும் என ரவி சொல்ல, அதுவும் சரி தான் என அவளது அறைக்கு மிதுனே தூக்கி சென்றான். மொத்த பட்டாலமும் மேலே சென்றது. 

என்ன டா இன்பா? ரிதம் மிதுனோட கைய தட்டி விடுறா? என சூர்யா கேட்க.. .

அவளுக்கு பழசு எல்லாம் மறந்து போச்சு. உங்க யாரையும்…. ஈவன் என்னையே அவளுக்கு நினைப்பு இல்ல என இன்பா கூற, என்ன டா சொல்ற? இதனால் தான் சத்ய தேவ் எங்களை போக வேணாம்னு சொன்னானா? என உளறி விட்டார் சூர்யா. 

“என்ன? அவன் உங்க வீட்டில் இருக்கானா?” என இன்பா சூர்யாவின் சட்டையை பிடிக்க, ஆமா டா! ஆனால் எங்களுக்கு இந்த விசயம் தெரியாது என சூர்யா கூற, ருத்ரன் திரும்ப திரும்ப சக்திக்கு அழைத்தான். 

அவன் வீட்டில் தான் இருக்கான் போய் அவனை இங்கே கூட்டிட்டு வா ருத்ரன். அவன் அதையும் மீறி வர மாட்டேன்னு நிண்ணா கைய காலை கட்டி தூக்கிட்டு வா என இன்பா தன் மகனை அனுப்பி வைத்தார். 

சிங்கத்தை புலி கட்டி தூக்கிட்டு வர முடியுமா? புலி அங்கே போயி என்ன பண்ண போகுதோ? நிலாவை பார்த்து புளி சோறு சாப்பிடாமல் இருந்தால் சரி! 

ருத்ரன் மனதில் இந்த மாமா ஏன் இப்படி நடந்துக்கிரார் என நினைத்த படி அவன் வந்து சேர்ந்தான். 

அண்ணா இப்போவே அம்மா நிலாவை வர சொன்னாங்க என இதழின தூறிகா சொல்லி கொண்டிருக்க,…. பெங்களூரில் இருக்க பெஸ்ட் டாக்டர் எல்லாம் அவங்களுக்கு தெரியும். வர சொல்லு. ஆனால் நிலா வர மாட்டாள் என சக்தி கூற… 

மாமா என அழைத்துக் கொண்டு வந்தான் ருத்ரன். அவனது பார்வை அருகில் துவண்ட கொடி போல இருந்த நிலாவின் மீதும் தான் பட்டது. பார்க்கவே பாவமாக இருந்தாள் நிலா. அந்த பக்கம் சென்ற பார்வையை கஷ்ட பட்டு ஒழுங்கு படுத்தினான் ருத்ரன். 

தீரா என இதழ் அழைக்க, நீ விடு லிப்சு நான் பேசுகிறேன் என அவளை அனுப்பி வைத்தான். நிலா சக்தியிடம் அண்ணா நான் என் ரூமுக்கு போறேன் என வேகமாக அங்கிருந்து அவள் தங்கி இருக்கும் அறைக்கு சென்று பூட்டி கொண்டாள். 

சக்தி அவனரை பக்கம் திரும்ப, மாமா! உங்களை தான் பார்க்க வந்தேன். வாங்க வீட்டுக்கு போலாம். என ருத்ரன் அழைக்கக் 

சக்தி…? 

இங்கே ரிதம் எனப்படும் சைலஜா  கண் விழித்ததும் அவளை சுற்றி மொத்த பட்டாளமும் இருந்தது. 

வருவான். 

EPISODE 235

நீங்க எல்லாம் யாரு?  என்ற பாவனையைப் போல சைலஜா அவளை சுற்றி நின்று கொண்டிருக்கும் அனைவரையும் பார்த்தும் திகைத்தாள். 

ரிதம் ரிதம் என்று அவர்கள் அழைக்க.. 

இங்கே சத்தியதேவ் ருத்ரனிடம் இப்போ அவ ரிதம் இல்ல சைலஜா என்று கூறினான். 

ரிதம் என்னடி ஆச்சு எப்படி இருக்க நீ? எங்கள ஞாபகம் இருக்கா நாங்க எவ்வளவு தவிச்சு போயிட்டான் தெரியுமா? இந்த ரெண்டு வருஷமா எங்க எல்லாருக்கும் உன்னோட நியாபகம் தான்!  நாங்க சரியா சந்திக்கிறது கூட இல்ல!  என்ற சிவன்யா சொல்ல.. 

இங்கே சத்தியதேவ் ருத்ரனிடம் “அவளுக்கு என்ன மறந்து போச்சு!  என்னை மட்டும் இல்லை… உங்க எல்லாரையும் ஈவன் உங்க அம்மா, உங்க அப்பா,  எல்லாரையும் அவளுக்கு மறந்து போச்சு! யாருமே நினைவில் இல்லை”  என்று கூறினான். 

ருத்ரன் சத்ய தேவை பார்த்து ‘ அதுக்கு என்ன மாமா பண்ண முடியும்?  சரி ஏதோ நடந்தது நடந்து போச்சு.  நீங்க ஏன் அவளை பார்க்க வராம இருக்கீங்க! வாங்க” என்று அழைத்தான். 

நான் தான் சொல்றேன் தான! அவளுக்கு என்ன பிடிக்காது. ப்ளீஸ் என்ன கம்பெல் பண்ணாத.  உங்க அக்காவை நான்  உங்க அப்பா கிட்ட அவரோட பொண்ண  பத்திரமாக ஒப்படைத்துவிட்டேன்.  இதுக்கு மேல நீங்க பாருங்க…

இப்படி சொன்னா என்ன மாமா அர்த்தம் என்ற ருத்ரன் கேட்க நான் என்ன பண்ண முடியும்?  சொல்லு என்று சத்தி கேட்டான்.

அங்கே நிலா இல்லை என்பதை தெரிந்து கொண்ட சத்திய தேவ். ஒரு சிகரெட்டை பற்ற வைத்து ஊதி தள்ள ஆரம்பித்தான். 

ஒரு பெரும் மூச்சைவிட்ட ருத்ரன், ”  மாமா இது கொஞ்சம் கூட சரியில்ல!”  என்று அடுத்து பேச வர..

டேய் ராஸ்கல் எங்க இருக்க?  என்று வீடு அதிரும்படி சத்தம் கேட்டது. 

 வேறு யார் இன்பராகவன் தான் வந்துவிட்டார் மருமகனை தேடி…

இவர் வேற இங்க வந்துட்டாரா? அய்யோ! என  நினைத்த சத்தியதேவ் .   சிகரெட்டை மொத்தமாக இழுத்துக் கொண்டு  அதை சுவற்றில் அழுத்தி அணைத்துவிட்டு திரும்பினான். 

உன்னோட மனசுல என்ன நினைச்சுடடு இருக்க?  என்று கேட்டபடி இன்பா அவனது கழுத்தை அழுத்தி பிடித்தார். 

டாடி என்ன பண்றீங்க? என இன்னொரு பக்கம் ருத்ரன்  பிடிக்க வர… 

சத்திய தேவ் அவனை வேண்டாம் என்பது போல் கை அசைத்தவன். உங்களுக்கு நான் சொல்றது புரியலையா?  உங்க பொண்ணுக்கு என்ன பிடிக்கலையாம்!  உங்களுக்கு பிடிச்ச என்ன பிரயோஜனம்?  நீங்க இன்னொரு பொண்ண பெத்துருந்திருக்கலாம் என்று கிண்டலாக பேசினான். 

 தேவையில்லாம பேசாத சத்ய தேவ்!! ஒழுங்கா வா!  இப்போ ஞாபகம் இல்லையென்றால் என்ன? இனி  ஞாபகப்படுத்து… எல்லாத்தையும் என்று கூறினார் இன்பா. 

சத்யதேவி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…  அங்கு ருத்ரன் நின்று கொண்டிருப்பதை பார்த்த இன்பா இங்கிருந்து போ என்பது போல் கையசைக்க…

அவன் எதுவும் பேசாமல் சென்று விட்டான்.  தனக்கும் தன் அப்பாவுக்கும் நடுவில் ரகசியம் இல்லாமல் போனாலும் கூட, இங்கே   என்றாலும் சத்திய தேவ் மற்றும் இன்பாவிற்கும் நடுவில் ஆயிரம் விஷயம் இருக்கும்.  அதை இருவரும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள்.  அந்த அளவுக்கு அவ்வளவு ஒற்றுமை.  கிட்டத்தட்ட தன்னுடைய வாரிசாக இன்பா சத்யதேவை அறிவித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.  அந்த அளவுக்கு சத்திய  பிடிக்கும் அவருக்கு. 

இவ்வாறு நினைத்துக் கொண்டே ருத்ரன் கீழே வர அங்கே வெளியில் நிலா நின்று போனை நோண்டிக் கண்டிருந்தாள்.. 

சக்தி அடுத்த சிகரெட்டை பற்ற வைக்கப் போக…  இதோட நிறுத்திக்க..   இனி நீ சிகரெட் பிடிச்சா உன்ன என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது!  கழுத்தை திருப்பி கொன்னுடுவேண்டா!  என் பொண்ணுக்காக விட்டு வச்சிருக்கேன் என்று இன்பா கூற..

இன்பாவை எதிர்த்து பார்த்தவன் பற்றவைத்து வாயில் வைத்துக் கொண்டான். 

அதில் கோபமானவர் சத்யதேவ் பக்கம் நெருங்கி பிடிக்க வர.. 

உங்களுக்கு என்னதான் பிரச்சனை?  ஒரு நிமிஷம் இருங்க கடைசியா இத ஒன்னு மட்டும் ஆச தீர பிடிச்சுக்கிறேன்.  ப்ளீஸ் என்று சத்தியத்தை சொல்ல இன்பா காத்திருந்தார். 

இங்கே ருத்ரன் எதையும் கண்டுகொள்ளாமல் கொஞ்ச தூரம் செல்ல..

ஒரு நிமிஷம்!!  நிற்க முடியுமா மிஸ்டர் ருத்ரன் இன்ப ராகவன் என்ற அழைத்தாள் நிலா. 

 கைமுஷ்டியை இறுக்கி  மடக்கியவன்.  உஃப்  என ஊதி கொண்டே மெதுவாக அவள் புறம் திரும்பினான்.  எதுவும் பேசவில்லை

நிலா பேச ஆரம்பித்தாள். உங்க அம்மாவை பத்திரமா குணப்படுத்தி கொடுத்துட்டேன்.  இப்போ உங்க அம்மா பூரண குணமாயிட்டாங்க.  அடுத்து உங்க அக்காவை எங்க அண்ணன்!!  என்னோட அண்ணன்!! உங்க  வீட்டுக்கு கொண்டு வந்து கொடுத்துட்டான்.  உங்க குடும்பத்துல உங்க அப்பாவுக்கு வந்த மிரட்டலில் தான்  எங்க அண்ணனோட வாரிசு அழிஞ்சு போச்சு!  அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.  அதனால இனிமே இந்த குத்தி கிழிக்கிற வார்த்தையை,  என்கிட்ட அடுத்த முறை பேசினீங்க? அடுத்து என்னோட செயல் காட்டும் நா யாருன்னு!  நான்  தேன் நிலா சூரிய பிரகாஷ்.. உங்கள பாக்க பாக்க எனக்கு அப்படியே கொளுத்தி போடணும் போல இருக்கு.” என்று வாய்க்குள் முனகினாள்.

பெரிய வேலுநாச்சி!  பெரிய ஜான்சிராணி! நீ அவங்க அளவுக்கு எல்லாம் ஒர்த் இல்ல.. CID சகுந்தலா! தமிழிசை!! வானதி சீனிவாசன்!! நிர்மலா சீதா ராமன்  வந்துட்டா விளக்கம் கொடுக்குறதுக்கு? இந்த லிஸ்டில் சேர்க்கலாம். இவளோட பெயருக்கெல்லாம் ரைமிங் வேற ஒரு கேடு?  தேன் நிலா!! தேன் நிலா… ச்ச ஹனிமூன் பேர வச்சுக்கிட்டு என சொல்ல வந்தவன் நாக்கை கடித்த படி எதுவும் சொல்லாமல் அமைதியாக சென்று விட்டான். 

ஏனென்றால் நியாய தர்மம் அனைத்தும் ருத்ரனுக்கும் தெரியும்.  அவள் மீது தப்பில்லை என்று இப்பொழுது ஊர்ஜிதம் ஆகி இருந்தது.  இதற்கு முன்னாலும் தெரியும். ஆனால் அவளை கஷ்டப்படுத்த வேண்டும்.  இப்பொழுது கஷ்டப்படுத்தினால் அவளது வீரம் படை அண்ணன் கூட்டம் சுற்றி வளைத்து கும்மி எடுத்து விடுவார்கள்.  மேலே ஏற்கனவே சத்திய தேவ் என்பவன்  ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறான். 

எதுக்கு இங்கேயே நின்னுட்டு இருக்கீங்க?  ஒன்னு அப்படின்னு சொன்னது இந்த பாக்கெட் மொத்தமும். அதுவும் இது பாரின் பிராண்ட்.  எனக்கு ரொம்ப பிடிக்கும் ப்ளீஸ் என்று சத்தி  கேட்க… 

டேய் என்னடா நெனச்சிட்டு இருக்க? என்று இன்பா முறைத்துப் பார்க்க.. 

சத்யதேவ் அவருக்கு முதுகு காட்டி அந்த ஒரு பீஸ் மட்டும் மொத்தமாக உள்ளெழுத்து வெளியிட்டு சுவற்றில் அழுத்தி அணைத்தவன். 

சொல்லுங்க!!  நான் பண்ணதுல என்ன தப்பு இருக்கு?  என்று கேட்க…

இப்போ எதுக்கு அவ கிட்ட இருந்து நீ விலகி போற? அதுக்கு பதில் சொல்லு!! எனக்கு சரியான விளக்கம் கொடு! நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்! என்று கூறினார். 

உங்களுக்கு என்ன தெரிஞ்சாகணும்? தெரியாத மாதிரி கேட்காதீங்க!  அவளுக்கு என்னை  சுத்தமா மறந்து போச்சு! அதுக்கு மேல நான் என்ன பண்ண முடியும்?  என்று சத்தி கேட்க..

இன்பா அவனை முறைத்துப் பார்த்தவர்.  உன் மனசுல என்னடா நினைச்சுட்டு இருக்க?  இப்போ என் பொண்ணு புது ஜென்மம் எடுத்து வந்து இருக்கா!  இப்பவும் என் பொண்ணு தான்  உன் பின்னாடி சுத்தணும்!  நீ உடனே வந்து ஒட்டிக்குவ!  இதுக்கு முன்னாடி அவ ரிதாமா இருந்தப்ப இதையே தான பண்ண!  அவ்வளவு பெரிய இடத்துலயும் எவ்வளவு கஷ்டப்படுத்தி இருப்ப?  அவ உன் பின்னாடி என்ன லவ் பண்ணு?  லவ் யூ சொல்லு!  லவ் யூ சொல்லுன்னு!  எப்படி கெஞ்சி இருப்பா?  எவ்வளவு சுத்த விட்ட?  உன் பின்னாடி என் பொண்ணு சுத்தணும்?  ஆனா என் பொண்ணு பின்னாடி நீ சுத்த மாட்டியா?  என்று ஆதங்கத்துடன் கேட்டார் இன்பா. 

மாமா  ஒரு பொண்ணோட அப்பா பேசுற பேச்சா இது?  என்று சத்தி  கேட்க.. 

டேய் உண்மைய சொல்லு!!  மனசார சொல்லு உனக்கு அவ வேண்டாமா?  இப்ப சொல்லு!  நான் இனி ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டேன்.  போயிட்டே இருப்பேன்.  இனி டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் சொல்லுடா!  நான் போறேன் என்று இன்பா கேட்க..

நானா வேண்டான்னு சொல்றன்? அவ தான் என்ன வேண்டான்னு சொல்றா!  என்ன பாத்தா பிடிக்கலையாம்! அது என்னமோ சொன்னாலே? ஹான்  சண்டாளன் மாதிரி இருக்கேனாம்!  அரக்கன் மாதிரி இருக்கேனாம்! சொல்றா!  என்கிட்டயே சொல்றா!  இப்ப கூட அவளோட கொழுப்பு அடங்க மாட்டேங்குது!  என்ன பொண்ணு பெத்து வச்சிருக்கீங்க? என்று சக்தி சொல்ல…

அவனது கழுத்தை இறுக்கி பிடித்தார் இன்பா நானும் புடிப்பேன்!  சரி  என்ன பண்றது? என்னோட அப்பாவோட பிரண்டா போய்ட்டீங்களே! அப்டின்னு  விடுகிறேன் என்று சக்தி சொல்ல…

கழுத்தை நசுக்கி அழுத்தி பிடித்து  தூக்கினார். 

ஐயோ இல் இல்ல மாமா! நான் தப்பா சொல்லிட்டேன் நீங்க எங்க அப்பாவோட  பிரண்டு இல்ல. நீங்க என்னோட மாமனார் போதுமா?  என்று மூச்சை இழுத்து பிடித்தபடி இரும்பிக் கொண்டே சக்தி பதிலளிக்க.. 

அவ்வளவு தூரம் வந்துட்ட!  எங்களை தூரம் தள்றயா?  ராஸ்கல்?  உன்னை என்ன பண்ணனும் தெரியுமா?  ஏன்டா அவளை கண்டுபிடிச்சத முன்னாடியே சொல்லல? என்று இன்பா கேட்க..

நான் சொல்லி இருந்தா நீங்க…..  தாங்கி இருக்க மாட்டீங்க என்னாலையே….  என்று ஒரு நிமிடம் அமைதியாகிவிட்டான்.

அதன் பின் மாமா அவளுக்கு என்ன பிடிக்கல அவளுக்கு பிடிச்ச மாதிரி ஒரு பையனை கல்யாணம் பண்ணி வச்சிருங்க..  என்று சக்தி கூற…

அப்போ நீ என் பொண்ணு பின்னாடி சுத்த மாட்ட!  நீ அவ்ளோ பெரிய ஆளா டா?  சரிடா நான் அவளுக்கு என்று இன்பா சொல்ல வர.. 

அய்யோ என அங்கும் இங்கும் நடந்தவன். அவளை எப்படி உஷார் பண்றதுன்னு எனக்கு தெரியல! முன்ன கூட கறி மீன் எல்லாம் சாப்பிடுவா!  அதை சமைச்சு கொடுத்து உஷார் பண்ணேன்.  இப்போ பிராமினா வந்து நிக்கிறா. அது மட்டுமா கொஞ்சம் சத்தமா பேசினா கூட  பொசுக்குனு மயங்கி விழுகிறா! என்னை  பார்த்தாலே மயங்கி விழுறா! அவளை நான் எப்படி? டிரை பண்ணி முதலில் இருந்து ஆரம்பிச்சு? உங்களுக்கு புரியுதா?  ஒரு புருஷனா எனக்கு மட்டும் ஆசையா என்ன?  என் பொண்டாட்டிய விட்டு விலகி இருப்பதற்கு?  என சக்தி வருத்தத்துடன் கூற..

அதற்கு நீதான் ஸ்டெப் எடுக்கணும். அவளோட சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்.  என் பொண்ண பத்திரமா எனக்கு மீட்டு கொடுத்திருக்க.  உன்னால மட்டும் தான் அவளை பத்திரமா பாதுகாத்துக்க முடியும்.  பாதுகாக்க முடியும்.. நான் வேற ஒருத்தர்கிட்ட என் பொண்ண கொடுக்க முடியாது.  சத்தி உனக்காக ஒன்னும் நீ கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்.  எனக்காக மறுபடியும்  நீ பண்ணிக்க.  என் பொண்ணு சந்தோஷமா இருக்கணும்.  பாதுகாப்பா இருக்கணும்.  அதுதான் எனக்கு வேணும்.  என்று இன்பா கடைசியாக சொல்லிவிட்டு செல்ல.. 

அவளை நான் பார்க்க வரல எனக்கு கொஞ்சம் டைம் வேணும்!  அவ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும்.  அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அவள எங்க வீட்டுக்கு வரவைங்க! நான் ட்ரை பண்றேன். என்றவன் பெரு மூச்சை விட்ட படி… இன்னொரு  அவதாரம் எடுக்கணுமா?  எடுக்கிறேன்!  வேற வழியில்லை என்ற சக்தி சொல்ல.. 

அதை கேட்ட இன்பா   சிரித்துக் கொண்டே  சென்றார். 

வருவான். 

EPISODE 236

 இப்போதைக்கு அவளை நான் பார்க்க வரல எனக்கு கொஞ்சம் டைம் வேணும்!  அவ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும்.   என்ற சக்தி மீண்டும் அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அவள எங்க வீட்டுக்கு வரவைங்க! நான் ட்ரை பண்றேன். என்றவன் பெரு மூச்சை விட்ட படி… இன்னொரு  அவதாரம் எடுக்கணுமா?  எடுக்கிறேன்!  வேற வழியில்லை என்ற சக்தி சொல்ல.. 

அதை கேட்ட இன்பா   சிரித்துக் கொண்டே  சென்றார். 

சைலஜாவின் அருகில் சென்ற விவேகா நீ தூங்கு அப்புறமா கீழே போலாம் என்று கூற….

 அவள் அங்கிருக்கும் அனைவரையும் பார்த்துவிட்டு சரி என்றாள். 

 மிதுன் தேவ்  வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க..  “இவன் ஏன் நம்மளே பாத்துட்டு இருக்கான்? நம்ம கை பிடிக்கிறான்.  இவன் மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கான்? என்று நினைத்தவள்.  இனி அம்மா கூடயும் அப்பா கூடவும் இருக்கணும்.  இத்தனை பேர் கிட்ட நான் பேசிட்டு இருந்தேனா?  இவங்க எல்லாம் என்னோட க்ளோஸ் பிரண்ட்ஸா?  எல்லாமே என்னோட வாழ்க்கையில என்ன நடந்ததுன்னு எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்?  என்ற நினைத்தபடி தூங்கினாள். 

விவேகா மதியின் கைகளைப் பிடித்துக் கொண்டு இப்படி அவளுக்கு எல்லாமே மறந்து போகணும். நான் நினைச்சு கூட பாக்கல அக்கா என்று அழுதார்.

சரி சரி வருத்தப்பட வேண்டாம் அவ உயிரோட வந்ததே எனக்கு ரொம்ப சந்தோஷம்.  நீ அழுது உடம்பை கெடுத்துக்காத!  ஒன்னும் கவலைப்படாதே!  ரிதம் நம்ம வீட்ல இருக்கா இது போதாதா?  இத்தனை நாள் நமக்கு பட்ட கஷ்டத்துக்கு, கடவுளுக்கே கண்ணீரு  வந்திருக்கும் போல,  அதனால தான் ரிதம் மறுபடியும் கிடைச்சுட்டா!  என்று விவேகாவை அணைத்துக் கொண்டவர்.  நாங்க போயிட்டு வரோம் என்று எழுந்தார். 

 சிவன்யா பவன்யா இதழ், நிவாஸ், தேஜு, மை விழி, கார்த்திக், மிதுன் தேவ், சூரிய தேவ் என அங்கிருக்கும் அனைத்து உறுப்புடிகளும் கிளம்பினார்கள்.

ரவிச்சந்திரன் வசுமதி இருவரும் சூர்யாவிடம் நீ ஒன்னும் கவலைப்படாதே சூர்யா! எங்க பேத்தி வந்துட்டா!  கொஞ்சம் கொஞ்சமா அவ சுயநினைவுக்கு வரட்டும்,  நம்ம காத்திருக்கலாம் என்று கூற…  விவேகாவும் மகியிடம் எல்லாமே சரியாகி வரட்டும் கா!  அதுக்கப்புறம் நம்ம நினைச்ச மாதிரியே சக்திக்கும் ரிதமுக்கும் மறுபடியும் எல்லாரையும் அழைத்து பேசின மாதிரி கல்யாணம் பண்ணி வைக்கலாம்.  அதுக்கப்புறம் எந்த பிரச்சனையும் வராதுன்னு எனக்கு தோணுது என்று சொன்னாள். 

 சரி பார்க்கலாம் நான் வரேன் என்று  மகி ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே நகர… அக்கா தப்புதான் அவளை நான் இங்க கூட்டிட்டு வந்தது.  நீங்க….  அது என்று விவேகா தடுமாற,  எங்க இருந்தா என்ன?  அவளை நீ பத்திரமா பாத்துக்க மாட்டியா? முதலில் அவள்   உன்னோட பொண்ணு. அதுக்கு அப்புறம் தான் எனக்கு மருமகள் என்று மகி சிரித்துக்கொண்டே விடைபெற்றார். 

அக்கா  நான் நாளைக்கு அவளோட வீட்டுக்கு கூட்டிட்டு வரேன் என்று விவேகா கூற…

மகி புரியாமல் பார்த்தார்.  அங்க உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்!  இனி எல்லாமே அவ தெரிஞ்சுக்கணும். உங்களோட நம்பிக்கைதான் என்ன உயிரோட கொண்டு வந்துச்சு. அவ என்னைக்கா இருந்தாலும் , உங்க வீட்டு பொண்ணு தான்.  நீங்க போயிட்டு வாங்க என்று அனுப்பி வைத்தாள். 

அந்தப் பட்டாளம் அனைத்தும் நேராக இங்கே மக்கியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் சத்யதேவ் அவர்கள் வரும்போது கிச்சனிலிருந்து வெளியே வந்தான் யாரும் சத்திய தேவன் முகத்தை பார்க்கவில்லை மெதுவாக வீட்டுக்குள் நுழைய நிலா அவன் பின்னால் அண்ணா என்று அழைத்துக் கொண்டே கப்பை நீட்டினாள். 

இதையெல்லாம் என்கிட்ட தராத பாப்பா இவங்க கிட்ட குடு போயிட்டு பூரிச்சு போய் வந்திருப்பாங்க என்று கூறினான் சத்திய தேவ்..

சக்தி கண்ணா என்று மைவிழி அழைக்க நீங்க எதுக்கு சித்தி இங்க வந்தீங்க?  அங்க போய் என்ன நடந்தது?  நல்லா பேசுனாங்களா ரிதம் மேடம்?  என்று அவர்கள் அனைவரையும் பார்த்தான்.

மகி நேராக சென்று பூஜை அறை சென்றார் மிகவும் சந்தோஷமாக இருந்தது. கடவுளே என் மருமகளை திரும்பி கூட்டிட்டு வந்துட்ட.  ரொம்ப சந்தோஷம்…. இனிமே எல்லாமே சரியாகிவிடும்.  ரொம்ப நன்றி.. சீக்கிரம் நான் குலதெய்வ கோயிலுக்கு கூட்டிட்டு வந்து அங்கேயே கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று வேண்டிக் கொண்டார்.

வேண்டுதலை நிறைவேற்ற ஆயத்தமானார் உடனடியாக கல்யாணம் நடக்குமா? முதலில் அவள் காதலிப்பாளா இன்னும் எத்தனை ப்ராசஸ் இருக்கிறது பார்ப்போம்! 

என்ன நிலா பாப்பா கைல சக்தி என்னடா காபி டீ போட்டிங்களா என்று எதுவுமே தெரியாதது போல பர்ஃபார்மன்ஸ் செய்தார் சூரியதேவ். 

நீங்க எதுவுமே தெரியாத மாதிரி என்கிட்ட நடிக்கிறீங்க.  என்ற பாவனையுடன் சத்தியதேவ் தன் தந்தையை பார்க்க,  இப்ப என்னாச்சு?  அது எப்படி அவளை பார்க்க முடியாமல் விட முடியும்?  நீ சொன்னா நாங்க கேட்கணுமா?  அவ இந்த வீட்டு பொண்ணு.  அவளுக்கு மறந்து போச்சுன்னா அதுக்கு இந்த வீட்டு பொண்ணு இல்லன்னு  ஆகிடுமா? என்னைக்கும் அவ உன்னோட பொண்டாட்டி தான்.. நாங்க போய் பாத்துட்டு தான் வந்தோம். உன்ன மாதிரி எங்களால் இருக்க முடியாது. என்று காட்டமாக பேசினார் சூர்யா. 

சக்தி அவருக்கு எந்த பதிலும் சொல்லாமல் கோப்பையை எடுத்துக்கொண்டு அவனது அறைக்கு சென்று விட்டான். அந்த மொத்த படையும் அங்கேயே டேரா போட்டது. 

ரிதம் உயிருடன் வந்ததை நினைத்து அவர்கள் அனைவரும் சந்தோஷமானார்கள். கூடவே இதயன் இனியா வந்து சேர்ந்து கொண்டார்கள் இப்போ எப்படி ரிதம்க்கு எல்லாத்தையும் ஞாபகம் வர வைக்கிறது? என அனைவருக்கும் இந்த யோசனையாக தான் இருந்தது. 

இந்த பக்கம் கங்கா பசுபதி உற்சாகத்துடன் சமைத்துக் கொண்டிருக்க இன்பராகவன் வீட்டுக்குள் நுழைந்தார்.

சத்திய தேவ் ஏற்கனவே சொல்லி இருந்தான் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு வேண்டும்.  அவளை மிகவும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.  இனி என்றதால் அதற்கு தகுந்தார் போல அனைத்து பாதுகாப்பையும்,  பலப்படுத்தும் முனைப்பில் ஈடுபட்டவர். மொத்த வேலைகளையும் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். 

ருத்ரன் ஒரு பக்கம் அமர்ந்து போனையும் நோண்டிக்கொண்டிருந்தான். இன்பாவை பார்த்ததும் டாடி மாமா என்ன சொன்னாரு எப்போ வராராமா? எதுவும் ஒத்து வந்தாரா என்று கேட்டபடி எழுந்தான். 

அவன் என்னோட மருமகன் நான் சொல்றது தான் கேட்பான் என்னோட சத்தி என்று   பெருமையாக கூறினார்.

நான் ஒன்னும் தடுக்கல வச்சுக்கோங்க என்று பார்த்தவன் மீண்டும் அவனது வேலையை தொடர்ந்தான்.

 இன்ப ராகவன் மெதுவாக மேலே சென்றார் தன் மகள் ரிதமின் அறையை நோக்கி அங்கே விவேகா இருப்பாள் என்று அவருக்கு தெரியாது.

அறையில் மெதுவாக நுழைந்தவர் உறங்கிக் கொண்டிருக்கும் மகளைப் பார்த்தார் அங்கே விவேகா இன்பாவை பார்த்ததும் எழுந்து கொண்டாள்.  இன்பா அவளின் அருகில் வந்து மகளின் பாதங்களை மெதுவாக வருடிவிட்டவர். நல்லாருக்கா என் பொண்ணு. திரும்பவுன் எனக்கு கிடைச்சுட்டா என்று நிம்மதியுடன் வெளியே வந்தார். 

அங்கே இருக்கும் டேபிள் மேஜை கட்டில் போன்ற விவேகாவை ஒரு உயிர் அற்ற பொருளாக பார்த்து விட்டார் போல எதுவுமே பேசாமல் வெளியே வந்தார். 

இதை முற்றிலும் விவேகா எதிர்பார்க்கவில்லை.  ராகவ் என்று அழைத்தபடி வெளியே வந்தாள். அவளுக்கு எந்த பதிலும் கொடுக்காமல் இன்பா நின்று விட… ராகவ் என்று கண்களில் நீருடன் விவேகா இன்பாவை பின்னால் இருந்து அணைத்து கொண்டாள். அதற்கு இன்பா எந்த எதிர்வினையும் புரியவில்லை.  அப்படியே நின்றவர் . எதுவும் பேசவும் இல்லை.

 அவ இல்லாத உலகத்தை என்னால அனுபவிக்க முடியல.  என்னால அந்த நிதர்சனத்தை ஒத்துக்க முடியல. அதனால தான் எல்லாத்தையும் பண்ணிட்டேன். ப்ளீஸ் எதையும் பெருசா எடுத்துக்க வேண்டாம் ராகவ்.  என்று சொல்லிக் கொண்டே விவேகா இன்பாவின் முன்னாள் வந்து நின்றாள். 

இன்ப அதற்கு எதுவும் சொல்லாமல் ஒரு சில நொடிகள் பார்த்தவன்.  அந்த இடத்தை விட்டு நகரப் போக…  “ராகவ் ப்ளீஸ் என் கூட பேசு என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணு.”  என கைகளை பிடித்தபடி அவர்களது அறைக்கு இழுத்துச் சென்றாள். 

இன்பாவின் வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட வரவும் இல்லை.  அவன் அவளின் பேச்சுக்கு அவளின் செயலுக்கு எந்த எதிர்வினையும் புரியவில்லை. அவனது முகம் இறுகி இருந்தது. அவர்களின் அறைக்குள் வந்ததும் விவேகா பாய்ந்து அணைத்துக் கொள்ள ப்ச் என விலகினான் இன்பா. 

ராகவ் என அழுது உடைந்த குரலில் விவேகா ஏக்க விழிகளுடன் பார்க்க… இன்பா கடைசியாக வாய் திறந்தான் சாதாரண தொனியில் எதிரில் இருப்பவளை பார்த்து, மாறியது ஒரே விஷயம் தான் ரிதம் அவளுக்கு ….என் பொண்ணுக்கு எல்லாம் மறந்து போச்சு அதுதான் இந்த இடத்தில் மாறி இருக்கு.  மத்த எதுவும் மாறல  வார்த்தைக்கு இன்னும் அழுத்தம் கூட்டியவர்.. மத்த எதுவும் இங்க மாறல புரியும் என்று நினைக்கிறேன் என்றார்..

ராகவ் என விவேகா மீண்டும் அழைத்துக் கொண்டே பேச வர… உங்ககிட்ட எந்த எஸ்பிளநேஷனும் நான் கேட்க விரும்பல என் பொண்ணு இப்போ கிடைச்சிட்டா ஆனா என் வாழ்க்கை தொலைஞ்சது தொலைந்தது தான் அது தொலைஞ்ச மாதிரியே இருக்கட்டும் இன்னொரு விஷயம் நல்லா தெரிஞ்சுக்கோங்க நீங்க என் பொண்ணுக்கு அம்மா அப்படின்ற காரணத்துக்காக மட்டும் தான் வெளிய உங்ககிட்ட பேசுவேன். நீங்க இருக்க இடத்தில சாகுற வரைக்கும் என்னோட கடைசி மூச்சு வரைக்கும் நான் இருக்க மாட்டேன். நான் போலீஸ்காரன் சொன்னத செய்வேன் என்று விட்டு நகர்ந்தார் விவேகா அழுது கொண்டே அமர்ந்தவள். அவனது கால்களை கட்டி அணைத்துக் கொண்டாள். 

இன்பா அதற்கெல்லாம் மசியும் ஆள் போல தெரியவில்லை.  மீண்டும் பேச ஆரம்பித்தான்.  என்னைக்கு நீ இத்தாலியிலிருந்து மறைஞ்சு என்ன விட்டு போனன்னு எனக்கு தெரிஞ்சதோ? அன்னைக்கே என் மனசுல இருந்து போயிட்ட! ஆனால்  திரும்ப உன்னை நான் ஏத்துக்க ஒரே காரணம்.  என் பொண்ணு அதே தான் இப்பவும் சொல்றேன்.  இப்போ உன்னை ஏத்துக்காதது காரணமும் என் பொண்ணு தான்!  உண்மையான காதல் எது தெரியுமா?  அது சத்யதேவ் காதல்!  பாத்துக்கோ!  அவன் என் பொண்ணை  எந்த அளவு லவ் பண்றான்னு?  என் பொண்ணு நினைவில் அவன்  இல்லைன்னதும்,  அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுன்னு  சொல்றான்.  அவனைப் பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு.  இந்த அளவுக்கு அவன் என் பொண்ணை லவ் பண்றான். இன்னொரு பார்வையில என் பொண்ண நெனச்சு எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு எனக்கு கிடைக்காத காதல்….. என்று நிறுத்திவிட்டு எனக்கு கிடைக்காத ஒரு உண்மையான காதல் என் பொண்ணுக்கு கிடைச்சிருக்கு.  அதுல அவ அதிர்ஷ்டசாலி…..  இனி தொலைஞ்சத  என்னைக்கும் தேடி எடுக்க முடியாது.  அப்படியே தேடி எடுத்தாலும் அது மேல இருக்க சுவாரசியம் குறைந்து போய்விடும்.  போதும் இனிமே நம்ப என்னன்னா என்ன அப்படின்ற உறவில் இருப்போம். அதுவே நல்லதுன்னு  நினைக்கிறேன் என்று அவளின் கையை விலக்கிவிட்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்துவிட்டார் இன்பா. 

விவேகா விற்கு மிகவும் மழைப்பாக இருந்தது வார்த்தைகள் அனைத்தும் உள்போல குத்தியது தப்பு அவள் செய்த தப்பு அனைத்தும் கண் முன் வந்து தோன்றியது. 

ஆனால் இதற்கு மேல் இன்பாவை எப்படி சமாதானம் செய்வது என்று உள்ளுக்குள் பெரிய போராட்டமே முத்தி போனது..

அது ஒரு பக்கம் இருக்க சைலஜாவை மகியின் வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்தார். 

மகி, இதழ் பரதநாட்டிய கிளாசில் இருக்க உரம் மாற்றுதலுக்காக அங்கேயும் அழைத்துச் சென்று அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வரலாம் என்று நினைத்தார். 

 இப்படி அனைத்தும் படிப்படியாக நடந்து கொண்டிருக்க ருத்ரன் இந்த இரண்டு நாள் கழித்து ஊருக்கு செல்ல முடிவெடுத்தான். தம்பி என்று ருத்ரனை அழைத்துக் கொண்டிருந்தாள். 

சரியாக தூங்கும் நேரம் வரும்போது இன்பா ஒவ்வொரு நாளும் இந்த வீட்டை விட்டு கிளம்பி விடுவார் விவேகா இருக்கும் இடத்தில் இருக்கக் கூடாது என்ற விஷயத்தில் மிகவும் முனைப்பாக இருந்தார். 

இங்கே இதழ் மற்றும் மகி இருவரும் ஜாதி இதழ் மகிசதி தட்ட இதழ் நடனமாடிக் கொண்டிருந்தால் வழக்கம்போல விவேகா இன்பா சைலஜாவை மதியின் வீட்டுக்கு அழைத்து வர டிவியில் பாடல் ஓடிக்கொண்டிருந்தது. 

நானும் ஆடுறேன் மாமி என்று சொல்லிக் கொண்டே புடவையை சரி செய்த சைலஜா.  மருதாணி வைத்து சிவந்த கால்களுடனும், அசையும் கை முத்திரைகளுடன்  மை பூசிய விழிகளில் காலில் சலங்கையைக் கட்டிக் கொண்டு ஆட ஆரம்பித்தாள் சைலஜா. 

மஹி ஒரு பக்கம் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்க…  இன்னொரு பக்கம் இதழ் சைலஜா இருவரும் மாறி மாறி ஆடிக்கொண்டிருந்தார்கள். 

டிவியில் பாடல் போடவும் சத்தியதேவ் நுழைவு வாயிலில் வந்து அவளின் ஆட்டத்தை பார்க்கவும் சரியாக இருந்தது. 

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா…

நான் கண்ணாடிப் பொருள் போலடா…

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா…

நான் கண்ணாடிப் பொருள் போலடா…

அந்த நதியின் கரையை நான் கேட்டேன்…

அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்…

அந்த நதியின் கரையை நான் கேட்டேன்…

அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்… என வரிகளில் சுழன்று சைலு ஆடிக்கொண்டிருந்த வேலையில்… 

இறுதியில் உன்னைக் கண்டேன்…

இருதயப் பூவில் கண்டேன்…

இறுதியில் உன்னைக் கண்டேன்…

இருதயப் பூவில் கண்டேன்…

 என பாவனையுடன் அசைந்து ஆடி கொண்டிருந்தவள் முன் சத்ய தேவ்..

சைலஜா…?  

வருவான்…

EPISODE 237

இறுதியில் உன்னைக் கண்டேன்…

இருதயப் பூவில் கண்டேன்…

இறுதியில் உன்னைக் கண்டேன்…

இருதயப் பூவில் கண்டேன்… என கண்களில் ஆயிரம் மொழி கதைக்க, இடை நளினமாக அசைந்து வளைய, விரல்கள் முத்திரையை காட்டிக் கொண்டே தை தா என சைலஜாவின் பாதங்கள் சத்தத்துடன் ஆடியது.  அழகாக நீண்ட கூந்தல் விரிய அவளின் தலையில் சூடி இருந்த பூக்கள் சிதற முகமெல்லாம் புன்னகையுடன் ஆடிகொண்டிருந்தவள் முன் வந்தான் சத்ய தேவ். 

சைலஜா வின் ஆட்டத்தை பார்க்க விவேகாவுக்கு ஒரு பக்கம் வருத்தமாகவும் இன்னொரு பக்கம் என் பெண் கிடைத்து விட்டாளே என சந்தோசமும் இருக்க தான் செய்தது. 

ரிதமுக்கு பரத நாட்டியம் வராது. அவள் மேற்கத்திய நடனமான பெலட் டான்ஸ் தான் ஆடுவாள். ஆனால் பரத நாட்டியம் எப்படி இவ்வளவு நேர்த்தியாக ஆட முடியும்? எப்படி இது? என்ற கேள்வி தான் திரும்ப திரும்ப விவேகாவின் சிந்தையில் தோன்றியது. 

சைலஜா பாடலை மனதில் பதித்து ஆடியவள் திடீரென வேக மூச்சுடன் நின்றாள். இதயம் படபடக்க வியர்த்து கொட்டியது. என்ன ரிது என்னாச்சு? ஏன் நின்னுட்ட ஆடு மா! என மகி ஒரு பக்கம் கேட்க..  அவள் திரும்பாமல் நின்றாள். 

அம்மா சைலஜா சொல்லுங்க அப்போ தான் தெரியும் என இதழ் அவளை பார்த்து என்னாச்சு சைலு? என கேட்ட படி பார்வை வந்த திசையை பார்த்தாள் இதழ். 

அங்கே சத்ய தேவ் நின்று கொண்டிருக்க, அம்மா அண் என இதழ் ஆரம்பிக்க, மேடம் எப்டி இருக்கீங்க சதி தேவி! என கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான். 

அடுத்த நொடி மயங்கி சரிந்தாள் சைலஜா. 

அய்யோ நம்ம முகத்தை பார்த்ததும் மயக்கமா? இவள் கிட்ட நாம பேச கூட இல்லையே! என சக்தி அதே இடத்தில் நின்றான். 

அய்யோ என்னாச்சு? ரிதமுக்கு என கேட்டுக்கொண்டே விவேகா மகி இருவரும் அவளின் அருகில் வந்தார்கள். இதழ் தண்ணீரை எடுத்து வர கிச்சன் ஓடினாள். 

சக்திக்கு கோபமாக வந்தது. அவன் அதே இடத்தில் நின்று கொண்டிருக்க, சக்தி என்ன டா பார்த்திட்டு இருக்க? வந்து தூக்கு என மகி கட்டளையிட.. எதுவும் சொல்லாமல் அருகில் வந்தவன் அவளை தூக்கி கொண்டு இப்போ எங்கே போடணும்? சொல்லுங்க என உருமலுடன் கேட்டான். 

கீழே இருக்க ரூம்ல படுக்க வை! இந்த பொண்ணு ஏன் இப்படி பண்றா? நல்லா தானே இருந்தாள். பொடுக்குன்னு மயங்கி விழுந்துட்டா என மகியும் விவேகாவும் பதட்டத்துடன் ரிதமை பார்த்தார்கள். 

மா தண்ணி தெளி என இதழ் நீட்ட..  மெல்ல நீரை தெளித்து விட்ட மகி அவளிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே ரிதம் ரிதம் என அழைக்க..  அவளிடம் பெரிதாக எந்த அசைவும் இல்லை. 

அதன் பின் மகி மெதுவாக ரிதம் மாமி சொல் பேசுகிறேன்டா என்னாச்சுடா உனக்கு எழுந்திரு என்று கன்னத்தில் தட்டியபடி பார்க்க சத்தியதேவ் மனதில் இப்போ அவ கண்ணு முன்னாடி நான் இருந்தனா மறுபடியும் மயங்கி விழுவா பாதகத்தி என்ற நினைத்தவன். அந்த அறையை விட்டு வெளியே வந்தான். 

கண்விழித்ததும் சைலஜாவின் முன்னால் சத்திய தேவ் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவள்.  ஒரு பெரும் மூச்சைவிட்ட படி சிவ சிவா என்றாள்.

என்ன ஆச்சு?  திடீர்னு மயங்கி விழுந்துட்ட!!  சரியா சாப்பிடறது இல்லையா? என்ன விவேகா இது என மாகியின் பார்வை விவேகா மீது கோபமாக செல்ல… அய்யோ  மாமி வேணா அம்மாவை திட்டாதீங்கோ என்றாள் சைலஜா.

சரி அதை விடு தங்கம் உனக்கு பிடிச்ச சிக்கன்,  மட்டன் அப்புறம் நண்டு என்று மகி அடுக்கிக் கொண்டே செல்ல… 

 அபச்சாரம் அபச்சாரம் என்று சைலஜா முகத்தை சுளித்தாள். 

இதழ் மெதுவான குரலில் மா அவளுக்கு பழசு மறந்து போச்சு. அவள் இப்போ சைவம் மா! என கூற, மகியின் முகம் ஒரு மாதிரி ஆகிப்போனது. 

சைலஜா அபச்சாரம் என கூறியதும் இங்கே  சத்திய தேவுக்கு கடுப்பாக வந்த. இவளை இருக்கட்டும் வச்சிருக்கிறேன்.  என்று நினைத்துக் கொண்டான். 

இங்கே மகி அவளிடம்  சாரி தெரியாம சொல்லிட்டேன்!  நீ சைவம்னு எனக்கு மறந்து போச்சு மா!  என மகி கூற..

விவேகா ஷைலஜாவின் கையைப் பிடித்தபடி என்னாச்சு?  நீ காலைல நல்லா தானே சாப்பிட்ட?  உனக்கு பிடிச்சது தான செஞ்சு கொடுத்தேன்.  என்னை விட நீ நல்லா சமைக்கிற!  நல்லா தானே சாப்பிட்ட!  என்னம்மா ஆச்சு?  ரிதம் குட்டி என்று அழைக்க… 

அம்மா அம்மா  நான் அந்த சண்டாள பாவிய  பார்த்தேன் என்று கூறினாள் சைலஜா. 

நிஜமாவா?  யாரது?  எவன் வீட்டுக்குள்ள வந்தா?  யாராவது வந்தாங்களா? அய்யோ  உன்ன கடத்திட்டு போனவனா?  என்று மகி,  விவேகா இருவரும் பதட்டத்துடன்  மாறி மாறி கேட்க… 

 கடத்திட்டு போனவன் யாரு? அதெல்லாம் தெரியாது.  ஆனா அந்த போலீஸ்காரன் சண்டாள பாவி என்றாள் சைலஜா. 

யாரது? சொல்லு மா இப்போவே உங்க டாடிய வர சொல்றேன் என மகி கேட்க.. 

இல்ல மாமி அவன் எனக்கு பிரம்மையில் வந்து தொல்லை பண்றான். நாசக்காரன். என்றாள் சைலஜா. 

யாரை சொல்றா? என அவர்களுக்கு ஒன்றும் புரிய வில்லை. விவேகா உடனே அப்போ வீட்டுக்கு போலாமா ரிதம் என்று கேட்க.. 

 மகி அவளிடம் அவ கொஞ்ச நேரம் இங்க ரெஸ்ட் எடுக்கட்டும்.  நீ தூங்கி ரெஸ்ட் எடு சாமி.  நீ  டான்ஸ் ஆடினதில் களைச்சு போயிருப்ப.  வா விவேகா நம்ப வெளிய வெயிட் பண்ணலாம். வா வெளியே போலாம். அவ இங்க ரெஸ்ட் எடுக்கட்டும்.  உனக்கு ஓகே தானே  சாமி என்று மகி கேட்க.. 

சரிங்க மாமி என படுத்துக்கொண்டாள் சைலஜா.  இதழ் மற்றும் மகி விவேகா மூவரும் வெளியே சென்றார்கள்.  அம்மா இங்கே   அண்ணா? என இதழ் கேட்க.. 

அவன் மேலே ரூமுக்கு போயிருப்பான். எப்போ தான் எல்லாம் மாறுமோ! என மகி நினைத்த படி சென்றார். 

விவேகா ஓரிடத்தில் அமர்ந்து கொண்டவள் மனம் ஆயிரம் எண்ணத்தில் மூழ்கி இருந்தது. அதில் பாதி தன் மகள். இன்னொன்று மகளை வயிற்றில் கொடுத்தவன் இன்ப ராகவன். 

கதவு சாத்தும் சத்தம் கேட்டது. அம்மா என அழைத்த படி அவள் திரும்ப உள்ளம் பதைத்தது. எதிரே சத்ய தேவ் கெத்தாக நின்று கொண்டிருந்தான். அவளை முறைத்தவாறு. சைலஜாவின் இதயம் வேக வேகமாக துடிக்க ஆரம்பித்தது. 

அவளின் மனதில் சாண்டால பாவி இங்கே எப்டி வந்தான்? என நா வறண்டு போனது. 

சாண்டால பாவின்னு யாரோ என்னை திட்டி கிட்டே இருக்க பீலா இருக்கே! யாரது என சுற்றிலும் ஆள்காட்டி விரலை நீட்டி யோசித்து பார்த்தவன். விரல் சைலாஜாவை நோக்கியது. 

“அய்யோ பெருமாளே!”

பெருமாள் திருப்பதியில் ரொம்ப பிசியா இருக்காரு! அவருக்கே லட்டு பிரச்னை இதுல நீயும் பிரச்னை பண்ண போறியா என்ன? என சொல்லிக் கொண்டே சத்ய தேவ் ஒவ்வொரு அடிகளாக அவளை நோக்கி வந்தான். 

இல்ல சார்! நான் எதுக்கு உங்களை போய் அப்படி சொல்ல போறேன்? நீங்க எங்கே இங்க வந்தேள்? என வியர்வை வடிய எழுந்து நின்றாள் சைலஜா. 

அடடே என்ன ஒரு ஆச்சரியம் இன்னும் மயக்கம் வரவே இல்ல. என்னாச்சு? ஏன் மயக்கம் வரல? என சக்தி அவள் புறம் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான். 

இல்ல அது அது வந்து என கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. 

ஹே என்ன டி உன்னை பண்ணேன்? இப்போ எதுக்கு வாட்டர் ஃபால்ஸ் ஓபன் பண்ற? ஹான்! என அருகில் வந்து விட்டான். இருவரின் தேகமும் தழுவி கொள்ள வில்லை. ஆனால் நெருக்கம் அதிகமாக இருந்தது. 

அது அது வந்து என உதடுகள் தந்தி அடித்தது. 

என்னை பார்த்ததும் எதுக்கு மயங்கி விழுந்த? உன்னை இப்படி கட்டி பிடிச்சேனா? என வாய் மொழியாக கூறிய சக்தி அவளை அணைத்துக் கொண்டான் ஆவேசமாக. 

ஹக் என துள்ளினாள் சைலஜா. உள்ளுக்குள் எது எதோ தோன்றியது. விடுங்கோ பிளீஸ் என சைலு காற்றுக்கே போகாத குரலில் கூற, 

சொல்லு டி எதுக்கு மயங்கி விழுந்த இப்படி முத்தம் கொடுத்து கடிச்சனா! நீ மயங்கி விழ  ஹான்? என கேள்வியாக தொடுத்த சத்ய தேவ் அதை செயலிலும் காட்டி இருந்தான். 

சைலஜா தலையை பின்னால் இழுத்து கொண்டு செல்ல, கழுத்தை அவன் புறம் இழுத்த சக்தி அவளின் உதட்டில் வளைத்து பிடித்து முத்தமிட ஆரம்பித்தான். 

அவள் பின்னால் நகர்ந்து கொண்டே உதட்டை மீட்க போராட, இங்கே அவள் திமிர திமிர உதட்டை கவ்வி கடித்து இழுத்தான் சத்ய தேவ். அத்தோடு நில்லாமல் இடையை வளைத்து பிடித்தான். 

அவளது மொத்த பலத்தையும் திரட்டியவள். அவனை இரு கை கொண்டு விலக்கினாள்.மூச்சு வாங்க அவனை பார்த்தவள். ஹே உன்னை என்ன பண்ணுவேன் தெரியுமா டா நோக்கு. இப்போவே என் தம்பி கிட்ட சொல்டுறேன் என் தோப்பனார். உன்னை விட பெரிய போலீஸ் டா! இரு செத்த பொரு இப்போ உடனே ருத்ரன் வருவான். என அவளின் போனை எடுத்தாள். 

ஒரு நிமிசம் ஒரு நிமிசம் யாரை சொன்னீங்க? என சக்தி கேட்க.. 

என் தம்பியாக்கும் அவன் பலசாலி! வருவன்! என்னை தொட்டு முத்தம் கொடுத்துட்டு போனால் நான் சும்மா விடுவேனாக்கும் இப்போ பாரு டா சண்டாலா! உன்னோட பிராணன் என் கையில் தான்! பத்து பண்ண போறேன் என சொல்லிய படி போனை எடுத்து அழைத்தாள் ருத்ரனுக்கு. 

சதி தேவி மேடம்! சதி மேடம்! சைலஜா மேடம்! மேடம் மூதேவி இல்ல இல்ல சதி தேவி மேடம். பிளீஸ் எனக்கு பயமா இருக்கு நான் தெரியாம பண்ணிட்டேன். பரிகாரம் சொல்லுங்கோ என சக்தி கூற, 

உன்னை விடமாட்டேன் டா! என்றவள். சீக்கிரம் வா மாமி வீட்டுக்கு. என் கைய பிடிச்சு இளுத்திட்டான். என சைலஜா அனைவரையும் கூட்டி விட்டாள்..

வருவான். 

EPISODE 238

உன்னை விடமாட்டேன் டா! என்றவள். சீக்கிரம் வா மாமி வீட்டுக்கு. என் கைய பிடிச்சு இழுத்தள்ள!! நோக்கு சரியான பாடம் புகட்டாம விடல.. நான் சைலஜா சதி தேவி இல்ல. நீ எதுக்கு இங்கே வந்த? என் தோப்பனார் வரட்டும். 

சத்யதேவ் அவனது முகத்தை மாற்றிக் கொண்டே ஐயோ சதி தேவி!!  வேண்டாம்! எனக்கு ரொம்ப பயமா இருக்கு.  ப்ளீஸ்.. யார்கிட்டயும் சொல்லாத என்று நடுங்கினான். 

 “நீ தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் நான் கண்டிப்பா சொல்லுவேனாக்கும்!  எவ்வளவு தைரியம் இருந்தா எங்க மாமி வீட்டுக்கு வந்து,  தைரியமா அவங்களோட கெஸ்ட் ரூம் வந்து,  இங்கே எனக்கு நீ இந்த மாதிரியான காரியத்தை பண்ணிருப்பாய். உன்னோட மனசுல என்ன நெனச்சின்ருக்காய்? உன்ன சும்மா விடமாட்டேன்! திருச்சியில் நேக்கு தைரியம் இல்ல. ஆனால் இங்கே நேக்கு எவ்வளவு பேர் இருக்காங்கோ  தெரியுமா?” என சொன்னவளின் முகத்தில் ஒரு பக்கம் பயம் தாண்டவம் ஆடியது. இப்பொழுது கூட சத்ய தேவ் என்றால் அவளுக்கு பயம். உடனே வேகமாக அவளின் போனை எடுத்துக் கொண்டாள். அடுத்த நொடி ருத்ரனுக்கு அழைப்பு சென்றது. 

“ஹலோ!”

“ஹலோ சொல்லு  ரிதம்”

“என்ன இது பழக்கம் பெரியவள உன்னை விட மூத்தவளை சைலஜான்னு பெயர் சொல்லி கூப்பிடுற?”

“சரி சொல்லுங்க அக்கா” என்றான் ருத்ரன். 

நீ உடனே மாமி வீட்டுக்கு வந்துரு இங்க ஒருத்தன் என் மேல கை வச்சுட்டன் என்று உதடுகள் நடுங்க கூறினாள். 

 “ப்ளீஸ் சொல்லாதீங்க நான் பாவம்” என்று சத்திய தேவ் உதட்டை பிதுக்கிக் கொண்டே அவளிடம் கூறினான். 

இதோ உடனே வரேன் என்று பனை வைத்து விட்டு வேகமாக மகியின் வீட்டை நோக்கி கிளம்பினான் ருத்ரன். 

நீ என்ன பண்ணாலும் கண்டிப்பா உன்ன நான் விடமாட்டேன் என்று நடுக்கத்திலும் தைரியமாக பேசினாள் ரிதம். 

சத்யதேவ் ஒரு பெருமூச்சு விட்டபடி “அப்போ நீங்க கண்டிப்பா சொல்லியே தான் தீர்வேளோ!”

“Definitely”

“அப்படின்னா நான் இன்னும் கொஞ்சம் தப்பு பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்று வேகமாக சத்தி  அவளின் அருகில் வந்தவன் மோக பார்வையுடன் தன் நினைவுகளை மறந்த மனைவியை பார்த்தான். 

“என்ன பண்ண போறேல்?” 

சத்யதேவ் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பெரிய தப்பு பண்ண போறேன் என்று கண்களை பூனை போல சிமிட்டியவன். அவளின் அருகில் நெருங்கி சுவற்றில் ஒட்டினான் சைலஜாவை. 

வேக மூச்சு எடுக்க “விட்டுடுங்கோ!  விட்டுடுங்கோ!” என கத்தினாள் சைலஜா. 

அது எப்படி விட முடியும் சைவ கொழுப்பு கொஞ்சம் ஜாஸ்தியா தான் இருக்கு அத எடுக்க தோணுது எடுத்துடலாமா என்று மோவாயை அவன் பக்கம் எடுத்தவன் மீண்டும் முத்தமிட ஆரம்பித்தான். 

உடலில் உள்ள செல்கள் அனைத்தும் இந்த ஒற்றுதலுக்கும் ஒட்டுதலுக்கும் அடிமையானது. பளிங்கு முகம் சிவக்க, நீண்ட பின்னல் முடியில் சூடியிருந்த பூக்கள் கசங்க, தேவதை போல தனக்கு முன்னாள் இருப்பவளை ஆட்கொள்ள நினைத்தான் சத்ய தேவ். 

முத்தங்கள் இல்லை கடக்க அவனது விரல்கள் நேராக அவளின் வயிற்று பகுதிக்கு சென்றது. அவளை படுக்கையில் தள்ளியவன். புடவை விளக்கி முத்தமிட ஆரம்பித்தான்..கொஞ்சம் அல்ல நிறைய..  அதே இடத்தில் முத்தங்கள் நீண்டு கொண்டிருந்தது. புரியாத புதிராக அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். எதற்கு இப்படி செய்கிறான்? இவன்? என தோன்றியது. 

சட்டென கோபத்துடன் அவனது தலையை உயர்த்தி பார்த்தாள். கண்களில் நீர். அவளின் வயிற்றிலும் அவனது கண்ணீர் துளிகள் பட்டு அவ்விடம் சிலிர்த்து போனது. 

“எதற்கு அழுகிறான்? என்ன செய்தேன்? என நினைத்தவள் மனதில் அய்யோ சண்டாலனுக்கு ஏற்கனவே விவாஹம் முடிஞ்சிடுத்தே!”  என நினைத்தவள். வேகமாக அவனிடம் இருந்து விலக போராடினாள். 

அவளின் இரண்டு கைகளையும் அவனது கைகளால் பூட்டு போட்டுக் கொண்டவன் உதட்டில் ஆழ்ந்த முத்தமிட்ட சாரி குட்டி என் செல்லம் நீங்க உங்கள வரவிடாமல் கஷ்டப்படுத்திட்டேன். இனி அப்படி எப்பவும் நடக்காது அதுக்கு காரணமானவர்களையும் நான் சும்மா விடமாட்டேன். என்ன மன்னிச்சிடுங்க.  என்று மானசீகமாக தனது இறந்த வாரிசிடம் மன்னிப்பு கேட்டான். 

அதற்குள் ருத்ரன் அறையின் கதவை வேகமாக தட்ட…  ஐயோ நேக்கு பயமா இருக்கு என்று சைலஜாவின் முகத்தை பார்த்தவன் எதுக்கு என்னை மாட்டி விட்டேன் நேக்கு படபடப்பா அடிச்சுக்கிறது. 

உனக்கு தான் ஏற்கனவே திருமணம் ஆயிடுத்து அப்புறம் எதுக்கு என்கிட்ட இப்படி நடந்துக்கிறேன் உங்க வீட்ல பொம்மனாட்டிக்கு நீங்க துரோகம் பன்றெல். This is not fair என்றவள். தன்னையும் மீறி தனது வயிற்றை தொட்டுப் பார்த்தவள் அவனது கண்ணீர் விரல்களில் தெரிய எதுக்கு அழுதேல் என்று மெதுவான குரலில் கேட்டாள். 

அக்கா அக்கா என்று அழைத்துக் கொண்டே ருத்ரன் ஒரு பக்கம் கதவை தட்ட முதல்ல கதவை திறங்கோ எனக்கு ரொம்ப பயமா இருக்கு அக்கான்னு கூப்பிடறாளா அது உன்னோட தம்பியா? 

“இதெல்லாம் தப்பு பண்றதுக்கு முன்னாடி யோசிக்கணும் எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன் தெரியுமா?  உங்கள நான் சும்மா விட முடியாது! இதுக்கு மேல” என்று வேகமாக கதவை திறந்தவள் “ருத்ரன் இங்க பாரேன் இவா!  என்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தா!” 

யாருக்கா என்று எதிரில் இருக்கும் சத்யதேவை பார்த்தான் இதோ இவர் தான் என்று ருத்ரன் மீண்டும் கூற சக்தி சிக்னல் கொடுக்கவும்,  அங்க யார் இருக்கா?  என்று கேட்டான். 

 “இதோ இங்கு நிற்கிறாளே ஆறடி சிலை  மாறி!  என்ன கடிச்சு முழுங்கிடுவா போல!” என்று மீண்டும் கூறினாள் சைலஜா.

எங்க அக்கா இருக்காங்க எனக்கு யாரையுமே தெரியலையே என்று ருத்ரன் மீண்டும் கூட அப்போ எனக்கு தான் இப்படி தோணுதா இல்லையே இங்கே தான் இருந்தாரு என் கண்ணு முன்னாடி இருக்காரே உன்ன பார்த்து பயப்படுகிறார்! நல்லா பாரு என்று சைலஜா பதட்டத்துடன் கூற…

அக்கா நீ ஏதோ தூங்கி எந்திரிச்சு இருக்கன்னு நினைக்கிறேன்.  உனக்கு கற்பனையா இருக்கு.  அங்க யாருமே இல்ல.  நீயே பாரு அங்க யாரு இருக்கா? 

ஐயோ பெருமாளே!  என் கண்ணுக்கு தெரியிறாளே?  அப்போ அது அருவமா இருக்குமா? 

அப்படின்னா என்ற ருத்ரன் கேட்க…

அதுதாண்டா துஷ்ட சக்தி  நேக்கு வேற ரொம்ப பயமா இருக்கு. அந்த போலீஸ்காரன் ரொம்ப ரொம்ப மோசமானவன் கெட்டவன் என்று சைலஜா கூற…

ஏன் அப்படி என்ன பண்ணாரு?  சொல்லு சும்மா விட மாட்டேன் நானு என்று ருத்ரன் கேட்க

அது வந்து என  சைலஜா தயங்கிக் கொண்டே கூற வர…

சத்தியதேவ் அவளிடம் சைகை கொடுத்தான்.  சொன்னா முத்தம் கொடுப்பேன் என்று காற்றில் கண்ணடித்து முத்தமிடுவது போல் உதட்டை குவித்தவன்.  கடித்து விடுவேன் என்பது போல் பற்களை அசைத்தான். 

“அக்கா நீ கவலைப்படாத அநியாயத்துக்கு எதிரான துஷ்ட சக்தியே நீ இங்க இருந்து போx என  ருத்ரன் சிரிப்பை அடக்கிக் கொண்டே கூற “இல்லடா தம்பி   நேக்கு ரொம்ப ரொம்ப பயமா இருக்கு.”

அதற்கு மேல் சத்யதேவ் அவளின் அருகில் வந்தவன் இறுக்கி அணத்து “நான் போயிட்டு வரேன் நான் யாரு கண்ணுக்கும் தெரிய மாட்டேன் உன்னோட கண்ணுக்கு மட்டும் தான் தெரிவேன் இன்னைக்கு நைட்டு வரேன் நம்ம ரெண்டு பேரும் கட்டி பிடிச்சின்டு தூங்கலாம் உனக்கு பயமே இருக்காது.. துஷ்ட சக்தி போயிடும் சரியா?  பயப்படாதே” என்று கன்னத்தில் முத்தமிட்டு கழுத்தை கடித்தான். 

“எல்லாம் என் நேரம் இதையெல்லாம் பாக்கணும்னு எழுதி இருக்கு” என்று ருத்ரன் நினைக்க அவனை எட்டி உதைத்தான் சத்ய தேவ். 

சத்யதேவ் அவ்வாறு சொன்னதும் சைலஜாவிற்கு இன்னும் பயம் வர மயங்கி சரிந்தாள். 

எப்ப பாரு மயங்கி விழு இருடி உன்னை என்ன பண்றேன்னு பாரு என்று நினைத்தவன் அவளைப்போல படுக்கையில் கிடத்தி விட்டு வெளியே வந்தான். 

ருத்ரன் வெளியே செல்ல…  அடேய் இருடா என்று அருகில் வந்தவன்.  என்னடா உன் மனசுல என்ன நெனச்ச.. 

 மாமா நீங்க ரொம்ப டூ மச்சா போறீங்க பாவம் எங்க அக்கா அட பாசத்தை பொங்கி வழியுது உங்க அக்காவுக்கு..

“எதுக்கு மாமா ஏமாத்தறீங்க. அவ எவ்ளோ கஷ்டமா இருக்கு!  இந்த மாதிரி புடவை கட்டிட்டு முடி நீளமா அதுவும் அவ முகத்துல கன்ன குழி இல்லாம இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு வேற ஒரு பொண்ணு மாதிரி தெரியுது” 

இதெல்லாம் உங்க அப்பா கிட்ட சொல்லு அவர்தான் இவளை லவ் பண்ணுனேன்னு என்கிட்ட ரெகமெண்டேஷன் பண்ணிட்டு போயிருக்காரு எனக்கெல்லாம் ஒன்னும் விருப்பமில்லை!  நம்மள  ஆயிரம் பொண்ணு சுத்தி வருது.  அதுல யாராவது ஒருத்தர பிக் பண்ணிக்கலாம்னு இருந்தேன்.

மாமா என்று ருத்ரன் குரலை உயர்த்த…  என்னடா என்று சத்தி  பார்த்தான்.

அது எப்படி நீங்க எங்க அக்கா விட்டுட்டு வேற ஒருத்தியை பார்க்கலாம் நான் விட்டுடுவேன் நான் எதுக்கு இருக்கேன் உங்கள சும்மா விடமாட்டேன். 

 என்ன பண்ணுவ என்று சக்தி கேட்க யாரும் உங்களை நெருங்க விடமாட்டேன் எங்க அக்கா மட்டும் தான் இனி உங்களுக்கு பொண்டாட்டி…

சத்யதேவ் பெருமூச்சு விட்டபடி குடும்பம் மொத்தமும் ஒரு டைப்பா சுத்துங்க என்று சொல்லிக் கொண்டே அவனது அறைக்கு சென்று விட்டான். 

சைலஜா குழப்பத்துடன் இருந்தாள்.  நிஜமாவே அந்த சண்டாளன். என் பக்கத்துல வரவே இல்லையா அதெல்லாம் கனவா இல்லையே நனவா இருந்துச்சு எப்படி எப்படி சாத்தியமாகும் பெருமாளே என்று நினைத்துக் கொண்டே சுற்றினாள். 

மாலை நித்தின் பிரகாஷ் அழைத்தான் என்ன என்று கண்களை திறக்க முடியாமல் பதிலளித்தார்.  சத்யதேவ் உறங்கிக் கொண்டிருந்தான். அது அவன நித்தினுக்கு பொறுக்கவில்லை எழுப்பி விட்டான். 

“டேய் எங்க இருக்க?” 

 “நான் வீட்ல இருக்கேன்”

நான் வந்து கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் என்று நித்தின் கூற.. 

ரொம்ப சந்தோஷம் கங்கிராஜுலேசன் தாராளமா பண்ணிக்கோ பொண்ணு பார்த்தாச்சா? 

அதுக்கு தான் உன்ன கூப்பிட்டேன் உடனே வீட்டுக்கு வா எங்க பெங்களூரா என்று சத்தி  கேட்க இல்ல ஹைத்ராபாத் வா! 

என்னால இப்ப வர முடியாது நான் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன்..

 நீ இப்ப வர அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தான் நித்தின் பிரகாஷ்.

சத்யதேவ் இங்கே ஹைதராபாத் கிளம்பி நித்தின் பிரகாஷின் நிச்சய வேலைகள் அனைத்தையும் செய்து கொண்டிருக்க…

இந்த பக்கம் சைலஜாவின் பாதுகாப்பின் விபரீதம் புரியாமல் அவள் மகிவுடன் சேர்ந்து கொண்டு நாட்டிய அரங்கேற்றம் செய்ய அடுத்த பிரச்சினை அங்கே வந்தது சத்யதேவ் வருவானா அவளை காக்க..

வருவான். 

EPISODE 239

அதுக்கு தான் உன்ன கூப்பிட்டேன் உடனே வீட்டுக்கு வா எங்க பெங்களூரா என்று சத்தி  கேட்க

இல்ல ஹைத்ராபாத் வா! 

 டேய் என்னால இப்ப வர முடியாது நான் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன்..

 நீ இப்ப வர அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தான் நித்தின் பிரகாஷ்.

சத்யதேவ் ஒரு பெருமூச்சுடன் எழுந்து அமர்ந்தவன் எதுக்கு என்ன இவன் இப்படி டார்ச்சர் பண்றான்?  என்று நினைத்தபடியே அவனுக்கு மீண்டும் அழைத்தான். 

ஹலோ டேய் கிளம்பிட்டியா என்ற நித்தின் பிரகாஷ் கேட்க…

எருமை மாடே, இப்பதானே சொன்ன?  இனிமேதான் கிளம்பனும்.. அண்ட் சொல்றது கேளு,  நான் நைட்டு தூங்கிட்டு மார்னிங் நேரத்திலேயே கிளம்பி வந்துடறேன். என்றான் சக்தி. 

மலமாடு தனியா தூங்குறதுக்கு இங்க வரலாம்ல்ல என்று நித்தின் பிரகாஷ் கூற…

நான் எதுக்கு தனியா தூங்க போறேன்?

பின்ன? 

நான் இன்னைக்கு நைட்டு அவ கூட தூங்க போறேன்!! 

 எவ என்று நித்தின் பிரகாஷ் கேட்க…

 வேற யாரு சைலஜா கூட தான்.

எப்படி எல்லாமே ஞாபகம் வந்துடுச்சா? என்று நித்தின் பிரகாஷ் கேட்டான்.

ஞாபகம் வருதோ வரலையோ இன்னைக்கு நைட் நான் அவ கூட தான் தூங்க போறேன்.. சோ நான் மார்னிங் வரேன் கண்டிப்பா வருவேன்.. எத்தனை நாள் உன்கூட இருக்குன்னு சொல்லு!  அத்தனை நாளும் இருக்கிறேன். எனக்கு  ஆர்டர் வாங்கிடு உன்கூடவே இருக்கேன் சரியா என்றான் சத்தி. 

சரி ஓகே என்று போனை வைத்தான் நிதின் பிரகாஷ். 

அதன்பின் சத்யதேவ் இரவு உணவையும் முடித்துவிட்டு வெளியே கிளம்பினான். 

 என்னடா சக்தி வந்ததும் வராததுமா கிளம்பற என்று மகி சூர்யா என அனைவரும் கேட்க…

வர மகி நீங்க  தூங்குங்க என்று சொல்லிவிட்டு இரவு உடையில் மாறியவன் ஃபோனை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினான் இன்பாவின் வீட்டுக்கு… 

என்ன செய்வது என்று யோசித்தவன் முதலில் இன்பாவுக்கு அழைத்தான்.

எங்க இருக்கீங்க மாமா நான் எங்க இருப்பேன் வீட்லதான் அப்படியா சரி என  போனை வைத்தவன் சக்தி. பின்பக்கம் வழியாக சுவர் ஏற குதித்து,  பைப்பை பிடித்த ஏறி மேலே அவளது அறைக்கு வந்து சேர்ந்தான் சத்திய தேவ். 

சைலஜாவின் அறையில் வெளிச்சமாக இருந்தது இந்நேரத்துல தூங்காம என்ன பண்ணிட்டு இருக்கா என்று மெதுவாக எட்டிப் பார்த்தான் சக்தி. 

படுக்கையறை சுத்தம் செய்த படி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தால் உள்ளே சென்று குளித்து வந்தவள். உடையை மாற்றிக் கொண்டு பொட்டு வைத்து திருநீற்றை வைத்துக்கொண்டு எதிரில் சாமியை கும்பிட ஆரம்பித்தாள். 

 இவளுக்கு என்னதான் ஆச்சு என்னை விட ரொம்ப ரொம்ப ஓவரா பண்றாளே என்று நினைத்தவன் அவளை பால்கனி கதவின் ஸ்கிரீனில் பின்னாடி இருந்து நின்று கொண்டு ரசிக்க ஆரம்பித்தான் சக்தி.. 

சிறிது நேரம் கழித்து போனை எடுத்தவள் யாருக்கும் அழைத்தாள் சத்திய தேவின் புருவங்கள் இடிங்கியது. 

ஹலோ அப்பா என்று சைலஜா அழைக்க… “என்ன பேபி இன்னும் தூங்கலையா நீங்க” என்று குரல் கூர்மையாக கேட்டது  சத்யதேவுக்கு…

அவன் உள்வாங்கிக் கொண்டான் அவனது தன் மாமனாரின் குரலை….. 

நான் சாப்பிட்டேன் நீங்க சாப்டீங்களா நீங்கதான் நைட்டு வரலையே வேலை அதிகமா இருக்கா என்று சைலஜா கேட்க..

 சக்தி யோசிக்க ஆரம்பித்தான்.  அப்போ மாமா வரவே இல்லையா எதுக்கு என்கிட்ட பொய் சொன்னாரு கண்டுபிடிக்கிறேன் என யோசித்துக் கொண்டான். 

 இங்கே சைலஜா சிறிது நேரம் இன்பாவிடம் பேசிவிட்டு தூங்குங்கோ குட் நைட் அப்பா என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

எல்லாமே ரெடி சிவ சிவா என கடவுளை பிரார்த்தித்து விட்டு கட்டிலின் பக்கம் வந்தவள்.  படுத்துக்கொண்டாள்.  அனைத்து விளக்குகளையும் ஆப் செய்து விட்டு,  ஒரே ஒரு விளக்கை ஆன் செய்தாள். அந்த வீட்டைச் சுற்றிலும் குறிப்பிட்ட இடத்தில் போலீஸ் காவல் போட்டு இருந்தார் இன்பா. 

ஒரு சிறிது நேரம் இருக்கும் அவள் மேல் ஆண் வாசனையும் அதனுடன் சேர்ந்து ஒரு பெரிய கால் அவளது காலின் மேல் விழுந்தது. 

என்ன இது பெருமாளே என்று வேண்டிக் கொண்டே நெளிந்த  சைலஜா திரும்பி படுக்க… 

ஒரு கை  அவளின் நெஞ்சுக்குளியே அனைத்து படி போடப்பட்டது. 

அய்யோ என்று நெண்டிக் கொண்டே கையை தூக்கிப் போட்டாள். அதன் பின்  இன்னும் கிடுக்கு பிடி கொடுத்து அவளை அணைத்து கழுத்தில் முகம் போதை தான் சத்தி. 

என்ன இது இப்படி கனவு வருதே என்று நம்பியபடி பெருமூச்சு விட்டவள்.  திரும்பிப் படுக்க அப்பொழுதுதான் அவனைப் பார்த்தாள்.. அது அவன் தான்!!….  சண்டாளன்!…  சண்டாள பாவி!…  இங்கே என் படுக்கையில் என்ன பண்றன்?  என்று உள்ளுக்குள் படபடப்பாக இருக்க பெருமூச்சு வாங்கியபடி அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சைலஜா.

கைகளைத் துழாவியபடி  பார்க்க அருகில் சைலஜா இல்லை என்று ஒற்றை கண்ணால் திறந்து எதிரில் இருப்பவளை பார்த்தான்..

மூச்சு வாங்க,  முத்து முத்தாக வியர்வை முகத்தில் பரவி இருக்க,   அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்  சைலஜா.

உதட்டுக்குள் சிரிப்பை அடக்கியவன்.  என்ன?  படுக்காமல் என்ன பார்த்துட்டு இருக்க? படுடி என்று ராகமாக அழைத்தான் சத்திய தேவ்..

மாட்டேன் என்பதுபோல உடுக்கை மண்டையை ஆட்டியபடி அவள் எழுந்து கொள்ள முயற்சி செய்ய…

நான் உன் கனவில் இருக்கேன் டி!!  நான் நெனச்சா உன்னை  என்ன வேணாலும் பண்ண முடியும்.. இன்னிக்கு கூட பார்த்தல்ல… உன் தம்பி உன்  பலசாலியான தம்பி  முன்னாடி உன்ன நான் கட்டிப்பிடிச்சேன்!  முத்தம் கொடுத்தேன்! கழுத்துல கடிச்சேன்! ஞாபகம் இருக்கா?  இப்ப மட்டும் நீ என் பக்கத்துல படுக்கல!  உன்னை மொத்தமா முழுங்கிடுவேன்!  ஓகேவா? என்று கண்ணடித்தபடி பார்த்தான் சத்திய தேவ். 

அப்போ நீ கனவா என்று கண்களை படபட என்று சிமிட்டியபடி அவனிடம் கேட்டாள் சைலஜா. 

அவளை இழுத்து அருகில் போட்டுக் கொண்ட சத்யதேவ் ஏன் கனவுல நான் பக்கத்துல வந்தா உனக்கு ஓகேவா என்று அவனது மூச்சு அவளை எக்குத்தப்பாக சிலிர்க்க வைத்தது.

ஒரு பெருமூச்சியை விட்ட சைலஜா நீ முதல் தடவையா என் கனவுல வரெள்!! எல்லா தடவையும் தான் வரேல்!  கனவுல சாப்டா என்னிடம் நடந்து கொள்ரெள். நேர்ல தான் என்கிட்ட கோபமா நடந்துக்குரெள்! எனக்கு பயமா இருக்கு தெரியுமா?  ரொம்ப ரொம்ப என்று சைலஜா கூற… 

இது புது தகவலாக இருந்தது சத்திய தேவுக்கு… 

என்ன சொன்ன?  கனவில் வந்தால் உன் கிட்ட நான் சாப்ட நடந்துக்குறேனா? எத்தனை தடவை நான் கனவுல வந்த சொல்லு பார்க்கலாம்?  தெரிஞ்சுக்கிறேன்? 

எப்பவும் நீங்க கனவுல வருவெல் உங்களுக்கு தெரியாதா?  என்று சைலஜா கேட்க…

சொல்லேண்டி தெரிஞ்சுக்கிறேன் என்று சத்திய தேவ் மீண்டும் கேட்டான். 

சைலஜா தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்க…

அப்போ அந்த பேக்கரி கிட்ட என்ன பாக்குறதுக்கு முன்னாடியே நாமும் கனவுல வந்தேனா!  என்று சத்தி  கேட்க…

ஆமா என்று அதிர்ச்சி இல்லாமல் கூறினாள் சைலஜா. 

ஆனால் இந்த முறை சத்திய தேவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

என்ன சொல்ற நெஜமாவா என்று சக்தி அதிர்ச்சியுடன் கேட்டான். 

பெருமாள் சத்தியமா!!  நீங்க வந்தேள்?!

வந்து நான் என்ன பண்ணன்? என்று சக்தி கேட்க

அந்த ஒரு நொடி ஷைலஜா நடுங்க ஆரம்பித்தாள்.

சொல்லு டி தெரிஞ்சா தானே அடுத்த தடவை நான் உன் கனவுல வரமாட்டேன் என்று சக்தி கூற.. 

இல்ல நீங்க வரணும் ஆனா நேர்ல மட்டும் சண்டால பாவியா வரக்கூடாது!  என்னடி உளர என்று சக்தி கேட்க….

சைலஜா கண்கள் பிரிய கோர ஆரம்பித்தால் கிட்டத்தட்ட எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து நீங்க என் கனவுல வரேல்!  ஆனா அந்த கனவுல நான் வேற மாதிரி இருக்கேன் தெரியுமா?  என்று அவனை கூர்மையாக பார்த்தாள். 

எப்படி என சக்தி கேட்க…

அது என் முகம் வித்தியாசமா இருக்கும்! 

வித்தியாசமா? அப்டின்னா  என சக்தி கேட்க.. 

நான் இந்த மாதிரி மடிசாரும் தாவணி பாவாடையும் கட்டி இருக்க மாட்டேன்.. அதுக்கு பதிலா இந்த சினிமாவுல வர டிரஸ் மாதிரி போட்டு இருப்பேன்.  வெஸ்டர்ன் வியர் போல என்று கூறினாள்  சைலஜா.

சத்யதேவியின் கண்கள் விரிந்தது.  அப்புறம் என்று அவளின் கையைப் பிடித்துக் கொண்டான். 

அதுக்கப்புறம் என்னோட கன்னத்துல குழி விழும் என் தோப்பனார் போல…. நீங்க அங்கேயே முத்தம் கொடுப்பீங்க என்று அவளை முகம் வெட்கமாக சிவந்தது. 

ஏன் உன் கனவுல வந்தேன்?  நீ யோசித்து இருக்கலாமே என்ற சக்தி கூற.. 

நான் யோசிச்சேன் ஆனா அப்போ அவனும் கனவுல வந்தான்.

எவன் என்ற சக்தி கேட்க

அரிச்சந்திரா என்ன கட்டிக்க பார்த்தான். எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு நீங்க அவன கனவுல அடிச்சேள்! 

ஆனா காலையில எந்திரிச்சா என் பக்கத்துல அரிச்சந்திரா இருப்பான். அப்போ எனக்கு தோணும் கனவு பொய்யின்னு என்ன அரிச்சந்திரா அன்பா பாத்துக்கிட்டான். எனக்கு ஒண்ணுமே புரியல!  அதே போல உங்களுக்கு தான் கல்யாணம் ஆயிடுத்தே!! நீங்க எப்படி இன்னொரு பொம்மனாட்டி கனவில் வர முடியும் என்று சைலஜா கூறினாள். 

சரி அவன் உன்னோட கனவுல உன்னை எப்பயாவது தொந்தரவு பண்ணி இருக்கானா என்று கேட்டதும் செயலஜாவின் முகம் முத்து முத்தாக வியர்க்க ஆரம்பித்தது. 

 அவள் நடுங்கினால்

நான் பக்கத்துல இருக்கேன் டி சொல்லு

 நீங்க காலையில வந்து என்னை மிரட்ட மாட்டீங்களே, நான் நீ நெனச்சா மட்டும் தான் உன் பக்கத்துல இருப்பேன் என்று சக்தி கூற

அப்படியா நான் எப்பவும் உங்கள தான் நினைச்சுட்டு இருக்கேன் என்று அவள்  கூற.

ஆனால் இது இரவில் கனவில் நடக்கும் விஷயம் என்று தான் கூறினாள். 

 காலையில் அவள் என்ன நினைத்தாலும் சத்திய தேவன் மீது பயம் வந்துவிடுகிறது இதிலிருந்து சக்தி சைலஜாவை எப்படி மீட்க போகிறான்? 

 அப்பொழுது கனவில் வரும் அத்தனையும் ரிதம் அவள் ரிதமாக இருக்கும்.  அத்தனை விஷயத்தையும் கனவு காண்கிறா என்றால் அதற்கு அர்த்தம் என்ன

வருவான்

EPISODE 240

“அப்படியா நான் எப்பவும் உங்கள தான் நினைச்சுட்டு இருக்கேன்! ஏன்னா அந்த அரிச்சந்திரா என் பக்கத்துல வந்தானா! எனக்கு ரொம்ப பயமா இருக்கும். அப்ப நீங்க தான் என்ன அவன்கிட்ட இருந்து காப்பாத்துவேள்!” என்று கூறினாள் சைலஜா. ஆனால் இது இரவில் கனவில் நடக்கும் விஷயம் என்று தான் கூறினாள். 

ம்ம் என்று பற்களை கடித்த படி அவனது முகம் மாறியது. அச்சோ முகம் எல்லாம் சிவந்து போச்சே! என்று கூறியவள்.

அருகில் இருக்கும் தண்ணீரை எடுத்து இத்தனை கோபம் உடம்புக்கு நல்லது இல்ல தண்ணி குடிங்கோ என்று நீட்டினாள்..

அவளின் கைகளில் இருக்கும் தண்ணீரை வாங்கி அருகில் வைத்தவன் அவளை ஒரே பிடியில் எழுத அவனது மார்புக்கு மேல் போட்டுக்கொண்டு இறுக்கமாக அணைத்தான். 

நான் சொல்றதை கேளுங்கோ நீங்க வர வர காலையில என் கண்ணு முன்னாடி வரானே அந்த சண்டாளன் மாதிரி நடந்துக்கிறேள். என சைலஜா அவனிடம் வாய்மொழியாக கூறினாள். 

சத்யதேவ் அவளது அவளது மோவாயை நிமிர்த்தி தன்னை பார்க்குமாறு செய்தவன் எதுக்கு நீ என்ன பார்த்ததும் அப்படி பயப்பட்ட அதுக்கு காரணம் என்ன என்று கேட்டான். 

ஏன்னா என்று அவளுக்கு நடுக்கம் ஏற்பட்டது.

என்னாச்சு சொன்னாதானே தெரியும்? நீ வா சொல்லு நான் இனிமே அந்த சண்டாளன உன்  கண்ணு முன்னாடி  வராத மாதிரி பண்ணிடுறேன்.

ஏன்னா அவன் குடிக்கிறான் சிகரெட் எவ்வளவு படிக்கிறான் தெரியுமா? அதைவிட அவனோட முகத்தைப் பார்த்தா பயமா இருக்கும். அவன் எந்த வீட்டில் தெரியுமா இருந்தன்? ஒருத்தர் சுருக்கு கயிறு போட்டுக்கிட்டா! அந்த வீட்ல இருந்தான்! அப்போ அவன் பேய் தானே என்று மையிட்ட கண்களை உருட்டி உருட்டி பேசினாள்.  சைலஜா என்னும் ரிதம். 

சத்தி சலித்துக் கொண்டான்.  “நானே தான் காலையில கண்ணு முன்னாடி வர அப்புறம் எதுக்கு இவளுக்கு என் மேல எத்தனை பயம் என்ன நடந்ததுன்னு தெரியலையே?”  என்று யோசித்தவன்… “இத நம்ம நினைக்கிறதை விட அவ கிட்டயே கேட்கணும்” என அவளிடம் மெதுவாக “நானே தானே காலையில உன் முன்னாடி வரேன்.  அப்புறம் எதுக்கு உனக்கு இத்தனை பயம்?  என  கேட்டான் வாய்மொழியாக….

நேக்கு தெரியல… உங்களை பார்த்தால் எனக்கு படபடப்பாக இருக்கு. பயமா இருக்கு. நெஞ்சு வேகமா துடிக்கிது! வேர்த்து கொட்டறது. என்னை விடுங்கோ!! மூச்சு முட்டறது என முக்கி கொண்டே கூறினாள் சைலஜா. 

அவளை அருகில் கிடத்தியவன். அவளின் மேல் ஒட்டிக்கொண்டு வேகமாக முத்தம் கொடுக்க  ஆரம்பித்தான். அந்த முத்தங்கள் மிகவும் வேகமாக மிக மிக வேகமாக இருக்க அதில் திணறிப் போனவள் அவனிடமிருந்து விலகுவதில் குறியாக இருந்தாள். 

உனக்கு நடந்ததை நீ சொல்லிட்ட எனக்கு எப்படி தெரியுமா இருக்கு உன்னை பார்த்ததும் எடுத்து வச்ச இப்படி முத்தம் கொடுக்கணும் போல தோணுது வேகமா கட்டிக்கணும் போல தோணுது என்று கூறியவன் அவளை வளைத்து பிடித்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான். தொட மட்டும இல்லாமல் மெல்ல மெல்ல அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து முத்தமிட்டவன் கைகள் அவளின் தேகத்தில் அலைந்தது. 

சைலஜாவிற்கு இந்த உணர்வை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை உள்ளுக்குள் மிகவும் பதட்டமாகவும் இருந்தது.  இதிலிருந்து தன்னை உடனடியாக விடுவித்துக் கொள்ளவும் தோன்றவில்லை. இப்படி ரெண்டும் கெட்டான் நிலையில் அவள் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பது….  தெரியாமல் சத்தியதேவ் அவளின் இடைய வருடி கொண்டே அவளது பிரத்தியேகமான வெண்ணிலா ஐஸ்கிரீம் பிளேவர் வாசனை நாசியை தொலைக்க அப்படியே தூக்கத்தில் தொலைந்து போனான் ஒரு சில நொடிகளிலேயே. 

சைலஜா இன்னொரு பக்கம் திணறிக் கொண்டிருந்தால் எப்படி இவனிடமிருந்து விடுபடுவது? பகலில் பக்கத்தில் வந்தால் மிகவும் பதட்டமாக இருக்கிறது ராத்திரி பக்கத்தில் வந்து இப்படி கட்டி கொள்கிறான். ஆனால் இவனை ஏன் என்னால் விலக்கத் தோன்றவில்லை. அதற்குக் காரணம் இவன் கேடு கெட்டவன் இல்லை. கொஞ்சம் மட்டும் தான் கெட்டவன். என நினைத்தவள் அவளது மார்பின் மீது உறங்கிக் கொண்டிருக்கும் சத்யதேவை பார்த்தால் “உன்ன எப்படி பொம்மனாட்டிக்கு பிடிக்கும்?  உன் முகம் முழுக்க தாடியா இருந்துச்சு!  கண்ண பாக்க பயமா இருந்துச்சு!  அது கூடவே பக்கத்துல வந்தாலே கெட்ட வாட!  குடிக்கிறது, சிகரெட் பிடிக்கிறது,  உதடு எல்லாம் கருத்து போயிடுத்து!!  எப்படி ஒருத்தி வருவா?  அதைவிட வந்ததும் அவள தூக்கிட்டு போயிருவேன்!  அவளை அதை பண்ணுவேன்!  இதை பண்ணுவேன்னு மிரட்டுற!  அதைவிட உன் பக்கத்துல வந்தாலே என்னுடைய இதயம் பயங்கரமா துடிக்கறது. சொல் பேச்சு கேட்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறது. என்ன பண்ணுவேன் சண்டாளா! அதை விட என மெதுவாக கண்ணை மூடியவளுக்கு முதன் முதலாக  சத்திய தேவ் சைலஜாவை  நடு இரவில் பாத்ரூம் சென்று வந்த நேரத்தில் அவளை கையுடன்  பிடித்து முத்தமிட்ட காட்சிகள் நினைவுக்கு வந்தது.

தேக நரம்புகள் ஒவ்வொன்றும் வேகமாக வெடிக்கும் அளவுக்கு அவனது முத்தமும் அவனது பிடியும் உள்ளுக்குள் பூகம்பமே உருவானது அப்படியே அவனை அணைத்துக் கொண்டே அங்கிருந்து சென்றுவிட வேண்டும். அந்த அனைத்திலும் மொத்தத்திலும் அத்தனை பாதுகாப்பு… அதைவிட வேகம் ஆவேசம் என அனைத்தும் ஒரு சேர அவளை ஆட்டிப்படைக்க சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் திடீரென்று சத்யதேவ் அன்று உன்கிட்ட என்னடி சொன்ன என்று அதட்டினால் அப்பொழுது தான் தெரிந்தது அது தாடி வச்சு சண்டாளன்னு. உடனே உள்ளுக்குள் நடுக்கம். 

அவன் பக்கம் இழுத்தவன் ரிதம் சாரிடி அன்னிக்கி நான் உன் கூட வந்திருக்கணும் தப்பு பண்ணிட்டேன்… ரிதம்…. இராவடி… என உளறிக் கொண்டே சைலஜாவை இறுக்கி அணைத்துக் கொண்டான் மெதுவாக கண்ணை முழித்து பார்த்தவளுக்கு சத்யதேவ் கலங்கி அழுவது நன்றாகவே தெரிந்தது. 

 இப்பொழுது சத்யதேவ் ஆழ்நிலை தூக்கத்தில் இருக்கிறான் அவனை எப்படி எழுப்பினாலும் எழ மாட்டான். ரிதம் அவனை விட்டு எப்பொழுது சென்றாலும் அதிலிருந்து இதுவரை தூக்கம் இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறான் அவனுக்கு restless leg syndrome என்னும் ஒரு வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தான். அது சைலஜாவிற்கு தெரியாதே! எப்பொழுதாவது அவனுக்கு ஆள் நிலை தூக்கம் வரும் அப்பொழுது மட்டுமே சிறிது நேரம் உறங்கிக் கொள்வான் அவனது கண்கள் மிகவும் இரத்த சிவப்பாக இருப்பதற்கு காரணம் மன அழுத்தமும் தூக்கமின்மையும் தான். 

எதுக்கு அழறீங்க என்று மெதுவான குரலில் அவள் கேட்க நீ எதுக்கு என்னை விட்டுப் போன ரிதம்!!  ரிதம்!! ரிதம்!!  ரிதம்!!  என்று மூச்சுக்க 300 முறை கூறியிருப்பான். 

சைலஜாவிற்கு அவன் மீண்டும் மீண்டும் ரிதம் என்று சொல்வது ஏனோ பிடிக்கவில்லை இங்கு இருக்கும் அனைவரும் தன்னை ரிதம் ரிதம் என்று அழைக்கிறார்கள். 

அது சுத்தமாக பிடிக்கவில்லை அதற்கு காரணம் இப்பொழுது அவள் முழுதாக சைலஜாவாக இருக்கிறாள். அவளது சிந்தை செயல் அனைத்தும் ரிதம் இல்லை சைலஜா தான் ஆனால் அனைவரும் அவளை ரிதம் என்று அழைப்பது மிகவும் வேதனையாக இருந்தது. 

ரிதம் ரிதம் என்ன விட்டு போயிடாத டி! ராவடி என்ன விட்டு போடாத எனக்கு நீ வேணும் இனிமே உன்ன விட்டு என்னால இருக்க முடியாது என்று குடிபோதையில் உளறுவது போல அவளை இறுக்கி அணைத்தபடி நீ பக்கத்துல வேணும்டி நீ இல்லாம எனக்கு தூக்கம் வராது ஏன்னா நீ தாண்டி என்னோட நிம்மதி! ரிதம் உனக்கு என்ன வேணும் நான் உன்ன லவ் பண்ணனும்.. அத சொல்லணும் அவ்வளவு தானே!!  என்னோட உயிரில் நீ தாண்டி இருக்க!! நான் செத்தா கூட  ரிதம் தான் எனக்குள்ள இருப்ப!  அது எப்பவுமே மாறாது. இனி உன்ன விட மாட்டேன் ரிதம் எனக்கு வேணும்.. ரிதம் இப்போ சொல்றேன் கேட்டுக்கோ ஐ லவ் யூ ஐ லவ் யூ டி உன்னை உயிருக்கு உயிரா நேசிக்கிறேன் என்னோட உயிரே நீதானடி!! என சொல்லியவன் அப்படியே உறங்கிப் போனான். 

சைலஜாவின் சிந்தைக்குள் ரிதம் ஓடிக் கொண்டிருந்தால் இந்த ரிதம் யாரு இவளை பத்தி தெரிஞ்சுக்கணும் நான் ரிதமா என்னோட உள்ளுக்குள்ள ரிதம்ன்னு நான் என்னிக்குமே கேள்விப்பட்டதில்லையே! எனக்குள்ள இருக்கிற உணர்வுகள் என்ன சைலஜாவா தானே வெளிப்படுத்துது ஏன் எனக்கு மட்டும் ரிதம் ஞாபகம் இல்ல அதுக்கு அர்த்தம் என்னவா இருக்கும்?  முதல்ல ரிதம் யாருன்னு தெரிஞ்சுக்கணும் என அவனிடமிருந்து மிகவும் கஷ்டப்பட்டு விலகிப் படுக்கப் போராடினால் ஆனால் அது நடந்த பாடில்லை இவன் கனவில் நம்மள எப்படி கட்டிண்டு இருக்கான்? இவன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கான் எதுக்கு இப்படி பினாத்திட்டு இருக்கான்?  இதுல வேற முத்தம் வேற கொடுக்கிறான்.. கனவுங்குறனால நான் தோப்பனார கூப்பிடல….முழிச்சா இவனை கண்டிப்பா தோப்பனார் கிட்ட சொல்லணும் என்று கண்களை மூடி உறங்க ஆரம்பித்தது அந்த முட்டாள் பெண்.. 

சைலஜா தொங்கிய சிறிது நேரத்திலேயே அவளது கனவை மொத்தமாக ஆக்கிரமித்தால் ரிதம் கண்ணக்குழியுடன் சத்தியதேவுடன் அவள் கட்டியணைத்து முத்தமிட்டுக்கொண்டே அவனுடன் ஒட்டிக்கொண்டே திரிவது என அனைத்தும் மங்கலாக தோன்றியது. 

 ஆனால் அது இன்னொரு பெண் அது ரிதமாக இருந்தாலும், உறுதியாக  தான் இல்லை…  தான் சைலஜா என்று மட்டுமே என  அவளுக்கு எல்லா இடத்திலும் தோன்றியது.  அதற்கு காரணம் இரண்டு வருடங்களாக அவளிடம் ஹிப்னாட்டிசம் நடந்திருக்கிறது.  தன்னை இன்னொரு பெண்ணாக முழுவதுமாக மாற்றி இருக்கிறான். அரிச்சந்திராவின் பாஸ்….

அந்த கனவில் தன்னைப் போன்ற முக ஜாடை மற்றும் கண்ணுக்குள்ளே உள்ள ஒருத்தி கட்டி அணைத்துக் கொண்டு சத்திய தேவனுடன் குறைவது தோன்றியது அப்பொழுது சைலஜாவின் எண்ணத்தில் ஒருவேளை உண்மையாவே ரிதம்ன்னு ஒருத்தி இருந்திருக்கணும்…   எதோ ஒரு விபத்தில் அந்த பொண்ணு செத்ததும்,  அந்த இடத்துல என்ன கூட்டிட்டு வந்துட்டாங்க ஏன்னா நான் அந்த பொண்ணு மாதிரியே இருக்கேன்!  அப்போ நான் சைலஜா தான் ரிதம் செத்து போயிட்டா என்னோட அம்மா அப்பா எங்க என்று யோசிக்க ஆரம்பித்தாள். சைலஜா!! 

இனி சைலஜா முழுவதுமாக ரிதமை பற்றி தெரிந்து கொள்ளப் போகிறாள். 

அடுத்த நாள் காலையில் அவள் துங்கி எழும்போது சத்யதேவ் அவளின் அருகில் இல்லை இந்த சண்டாளன் கனவுல வந்து நமக்கு இப்படி முத்தம் கொடுத்து விடுகிறான். என சலித்து கொண்டே கீழே வந்தாள். 

சத்யதேவ் ஹைதராபாத் கிளம்பி விட்டான் நித்தின் பிரகாஷ் நிச்சயத்திற்கு…

வருவான். 

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!